இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு

பிறப்பு

சிறுவயது நிகழ்வுகள்

சிறுவயது நிகழ்வுகள்

image92

சிறுவயது நிகழ்வுகள்

சிறுவயது நிகழ்வுகள்

சிறுவயது நிகழ்வுகள்

image93

அகநாட்டம்

சிறுவயது நிகழ்வுகள்

அறிவுத்தாகம்

image94

அறிவுத்தாகம்

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

அறிவுத்தாகம்

image95

தீவிர தியானப் பயிற்சி

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

image96

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

image97

life history of vivekananda in tamil

ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்பு

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

image98

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

image99

துன்ப நாட்கள்

ஸ்ரீராமகிருஷ்ணரின் பயிற்சிமுறை

காளி ஆட்கொள்கிறாள்

image100

காளி ஆட்கொள்கிறாள்

ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்

காளி ஆட்கொள்கிறாள்

image101

குருதேவரின் நோய்

ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்

ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்

image102

ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்

ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்

ஸ்ரீராமகிருஷ்ணர் மறைகிறார்

image103

LIFE HISTORY OF SWAMI VIVEKANANDA IN TAMIL

மடத்து வாழ்க்கை

எல்லா உயிர்களுக்கும் சேவை

மடத்து வாழ்க்கை

image104

மடம் உருவாகுதல்

எல்லா உயிர்களுக்கும் சேவை

மடத்து வாழ்க்கை

image105

Having a big sale, on-site celebrity, or other event? Be sure to announce it so everybody knows and gets excited about it.

எல்லா உயிர்களுக்கும் சேவை

எல்லா உயிர்களுக்கும் சேவை

எல்லா உயிர்களுக்கும் சேவை

image106

Are your customers raving about you on social media? Share their great stories to help turn potential customers into loyal ones.

Promote current deals

Promote current deals

எல்லா உயிர்களுக்கும் சேவை

image107

Running a holiday sale or weekly special? Definitely promote it here to get customers excited about getting a sweet deal.

Share the big news

Promote current deals

Share the big news

image108

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

Promote current deals

Share the big news

image109

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

Site Content

Detail your services

Display real testimonials

Announce coming events

image110

If customers can’t find it, it doesn’t exist. Clearly list and describe the services you offer. Also, be sure to showcase a premium service.

Announce coming events

Display real testimonials

Announce coming events

image111

Having a big sale, on-site celebrity, or other event? Be sure to announce it so everybody knows and gets excited about it.

Display real testimonials

Display real testimonials

Display real testimonials

image112

Are your customers raving about you on social media? Share their great stories to help turn potential customers into loyal ones.

Promote current deals

Promote current deals

Display real testimonials

image113

Running a holiday sale or weekly special? Definitely promote it here to get customers excited about getting a sweet deal.

Share the big news

Promote current deals

Share the big news

image114

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

Promote current deals

Share the big news

image115

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

Site Content

Detail your services

Display real testimonials

Announce coming events

image116

If customers can’t find it, it doesn’t exist. Clearly list and describe the services you offer. Also, be sure to showcase a premium service.

Announce coming events

Display real testimonials

Announce coming events

image117

Having a big sale, on-site celebrity, or other event? Be sure to announce it so everybody knows and gets excited about it.

Display real testimonials

Display real testimonials

Display real testimonials

image118

Are your customers raving about you on social media? Share their great stories to help turn potential customers into loyal ones.

Promote current deals

Promote current deals

Display real testimonials

image119

Running a holiday sale or weekly special? Definitely promote it here to get customers excited about getting a sweet deal.

Share the big news

Promote current deals

Share the big news

image120

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

Promote current deals

Share the big news

image121

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

Site Content

Detail your services

Display real testimonials

Announce coming events

image122

If customers can’t find it, it doesn’t exist. Clearly list and describe the services you offer. Also, be sure to showcase a premium service.

Announce coming events

Display real testimonials

Announce coming events

image123

Having a big sale, on-site celebrity, or other event? Be sure to announce it so everybody knows and gets excited about it.

Display real testimonials

Display real testimonials

Display real testimonials

image124

Are your customers raving about you on social media? Share their great stories to help turn potential customers into loyal ones.

Promote current deals

Promote current deals

Display real testimonials

image125

Running a holiday sale or weekly special? Definitely promote it here to get customers excited about getting a sweet deal.

Share the big news

Promote current deals

Share the big news

image126

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

Promote current deals

Share the big news

image127

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

பிறப்பும் இளமையும்

பிறப்பும் இளமையும்


புவனேசுவரியின்  பிரார்த்தனை


நான் பிறக்க வேண்டும் என்பதற்காக என் தாயும் தந்தையும் வருடக்கணக்காக நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார்கள். குழந்தைக்காக பெற்றோர் பிரார்த்திக்கவேண்டும். 


சட்டங்களை வகுத்த  சான்றோரான மனு, பிரார்த்தனையால் பிறந்தவன் ஆரியன்” என்று ஆரியனுக்கு விளக்கம் கூறுகிறார். பிராத்தனையின்றிப் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் மனுவின் கருத்துப்படி முறைகேடாகத் தோன்றியதே என்கிறார் சுவாமி விவேகானந்தர்.


தேவைகள் ஏற்படும் போது தான் பிரார்த்தனை பிறக்கிறது. குழந்தை வேண்டும் என்ற பெற்றோரின் இதய தாகம் பிரார்த்தனையாக எழுந்து கனிந்து, அதன் பலனாக இந்த உலகிற்கு வருபவன் மேலானவனாகத் திகழ்வான். 


புவனேசுவரியும் ஆழ்ந்து பிரார்த்தனை செய்தார். சிவபெருமானிடம் மாறாத பக்தி கொண்ட அவரைத் தஞ்சம்  அடைந்தார். முதல் குழந்தை ஆணாகப் பிறந்தாலும் அது வாழக்கொடுத்து வைக்கவில்லை. தொடர்ந்து பிறந்த நான்கும் பெண்கள். 

எனவே ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஏக்கத்தைச் சிவபெருமானிடம் முறையிட்டார். ஒரு வருடம் சோமவார விரதம்  கடைபிடித்தார்.(திங்கட் கிழமை தோறும் உபவாசம் இருந்து சிவபெருமானிடம் பிரார்த்தனையும் அவருக்கு விசேஷ பூஜைகளும் செய்தல்) காசியில் வசித்த தமது அத்தை ஒருவரிடம் காசியிலுள்ள வீரேசுவர சிவனுக்குத்  திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 

இவ்வாறு ஒருவருடம் தொடர்ந்து ஜபம், பூஜை, ஜபாராயணம் என்று தவ வாழ்க்கை வாழ்ந்தார்.(வீரேசுவர சிவன்-இது பிரபலமான விசுவநாதர் கோயில் அல்ல. கங்கை கரையிலுள்ள மற்றொரு கோயில்)

ஒரு நாள் பகல் முழுவதும் பிரார்த்தனையிலும்  பூஜையிலும் செலவிட்ட புவனேசுவரிக்கு  இரவில் கனவு ஒன்று வந்தது. 

அதில் சிவபெருமான் தியான நிலையில் ஆழ்ந்திருந்தார். திடீரென்று அவரிடமிருந்து ஒளி வெள்ளம் பெருகியது. அது திரண்டு வந்து புவனேசுவரியை முழுக் காட்டியது. 

புவனேசுவரியின் மனம்  சொல்லொணா ஆனந்தத்தில் திளைத்தது. அப்போது சிவபெருமான் எழுந்தார். எழுந்தவர் ஓர் ஆண்குழந்தையாக ஆனார்.

 எம்பெருமான் எனக்கு மகனாகப் பிறக்கப்போகிறாரா? எனது பிரார்த்தனையை  இவ்வாறு நிறைவேற்றப் போகிறாரா? பக்தர்களின் இதயபூர்வமான பிரார்த்தனையை பகவான் இப்படித்தான் பூர்த்தி செய்வாரா? பிரபோ, சிவபெருமானே! என்று ஓலமிட்டது புவனேசுவரியின் உள்ளம்.


அந்த வேளையில் தூக்கம் கலைந்தது.தூக்கம் கலைந்த பின்னும் அந்த ஒளி வெள்ளம் தம்மைச் சூழ்ந்திருப்பதைக்கண்டார் புவனேசுவரி.

 இவ்வாறு இதயம் கனிந்த பிரார்த்தனைகளின் பலனாக தெய்வீக சய்கல்பத்தின் விளைவாக க் கருத்தரித்தார்.


யுக நாயகர் தோன்றுகிறார்


புவனேசுவரி,1863 ஜனவரி12-ஆம் நாள் திங்கட்கிழமை காலை (கிருஷ்ண சப்தமி திதி, தனுர் லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம்) 6 மணி 33 நிமிடம் 33 வினாடியில் ஓர்  அழகிய ஆண்மகவை ஈன்றெடுத்தார் அவர். அது சூரியஉதயத்திற்கு ஆறு நிமிடங்கள் முன்னதாக இருந்தது. அன்று மகர சங்கராந்தி நாள். 


சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்குவதற்கான உத்தராயணப் புண்ணிய நாள். தமிழகத்தில் சூரியனை வழிபடுகின்ற பொங்கல்  நன்னாள் அது. 


காசி வீரேசுவர சிவ பெருமானின் அருளால் பிறந்த குழந்தையாதலால் புவனேசுவரி அவனுக்கு வீரேசுவரன் என்று பெயரிட்டார்கள். அதையே சுருக்கி”பிலே” என்று செல்லமாக அழைக்கலாயினர். பின்னாளில் நரேந்திர நாத் என்ற பெயர் வழங்கலாயிற்று.சுருக்கமாக நரேன் என்று அழைத்தனர்.


செல்லப்பிள்ளை


 குழந்தைப்பருவம் இனிமையாக அமையப்பெறுவது ஒரு சிறந்த வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் ஆகிறது. எந்தக்குழந்தையும் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளைதான். 

ஆனால் நீண்ட நாட்கள்தவம் செய்து பிரார்த்தனை செய்து ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் இடம் தனி.அப்படிப்பிறந்தவன் நரேன். எனவேஅவன் செல்லப்பிள்ளையாக இருந்ததில்  வியப்பொன்றும் இல்லை. தனது அழகாலும், துறுதுறுப்பாலும் , துடுக்குத்தனங்களாலும் காண்போர் அனைவரையும் கொள்ளை கொண்டான் அவன். 


அத்ததைமார், சித்திகள், உறவினர், பக்கத்துவீட்டுக் காரர்கள், என்று யார் வந்தாலும் அவர்களுடன்  ஒட்டிக்கொள்வான். அவனுடன் விளையாடவும் அவனைச் சீராட்டவும் வீட்டில் உறவுக்குழந்தைகள், நண்பர்களின் குழந்தைகள் என்று பலர் இருந்தனர். அவனுக்காக விளையாட்டுச் சாமான்களும் ஏராளம் இருந்தன.

மிருகங்களிடமும் பறவைகளிடமும் மிகுந்த பரிவு காட்டினான் நரேன். குரங்கு, ஆடு மயில், புறா, வெள்ளெலிகள் என்று பல்வேறு பிராணிகளை வாங்கி அளித்திருந்தார் விசுவநாதர். 


அங்கே ஒரு மிருகக்காட்சி சாலையே இருந்ததென்று தான் சொல்லவேண்டும். அவன் தன் கையாலேயே அவற்றைக் குளிப்பாட்டுவான். அவற்றிற்கு உணவு ஊட்டுவான், கொஞ்சி மகிழ்வான். பசுக்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம். விசேஷ நாட்களில் பெரியவர்கள் பசுவை வழிபடும்போது அவனும் பசுவிற்குப் பொட்டிட்டு வணங்குவான்.சற்று வளர்ந்த பிறகு, அவன் சவாரி  செய்ய ஒரு குதிரைக்குட்டியையும் வாங்கி அளித்தார் விசுவநாதர்.


தன் வீட்டில் உள்ள வண்டியோட்டியை மிகவும் நேசித்தார்  நரேன். நேசித்தான் என்று மட்டுமல்ல, பின்னாளில் வண்டியோட்டியாக ஆக வேண்டும் என்பது அவனது பிள்ளைக்கால லட்சியமாகவும் இருந்தது. வண்டியோட்டியின் தலைப்பாகையும், சீருடையும், சாட்டையும், அவனது  சொடுக்கில் பாய்தோடும் குதிரைகளும் நரேனின் கண்களுக்கு அரியபெரிய விஷயங்களாகத் திகழ்ந்தன.குதிரைகளை  அவன் மிகவும் நேசித்தான். மிகச்சிறந்த குதிரைகளை வாங்குவேன், ஊரிலுள்ள மிகச்சிறந்த வண்டிகளை வாங்குவேன், மிகவும் துணிச்சல் வாய்ந்த வண்டியோட்டியை வைத்துக் கொள்வேன்” என்றெல்லாம் சொல்வான் அவன்.


மழலைக்குறும்புகள்


துடுக்கு, குறும்பு, சுட்டித்தனம் அனைத்தும் கலந்த ஒரு துறுதுறு குழந்தை நரேன். எப்போதும் பரபரப்பும் படபடம்புமாக இருப்பான் அவன். தொடர்ந்து சில நிமிடங்கள் அவனால் அமைதியாக இருக்கஇயலாது. 

அமர்வதும் எழுவதுமாக இருப்பான். வேறு எதுவும் செய்ய இயலாவிட்டால் விஷமம் செய்வான். அவனைக் கட்டுப்படுத்துவது சாதாரணமான காரியம் அல்ல. எந்தக் கண்டிப்பும் அவனை அடக்க முடியாது. 


புவனேசுவரி சலித்துப்போய், சிவபெருமானே பிள்ளையாக ப் பிறக்கவேண்டும் என்று வரம் கேட்டேன். அவரோ தன் பூதங்களில் ஒன்றை அனுப்பி வைத்துவிட்டார் ” என்று கூறுவார். அவன் அடங்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி ”சிவ சிவ ” என்று கூறியபடி, தலையில் குளிர்ந்த நீரைக் கொட்டுவது- அப்படியே பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவான்.


 அவனது குறும்புகளால் அலுத்துப்போகின்ற புவனேசுவரி சிலவேளைகளில் , இதோ பார் பிலே? இப்படி போக்கிரிப்பிள்ளையாக வளர்ந்தாயானால் சிவபெருமான் உன்னைக் கயிலாயத்தில் அனுமதிக்க மாட்டார்” என்று கூறுவாராம்.அப்போது அடங்கி விடுவான். 


சிவபெருமானிடம், அப்பா, சிவபெருமானே! இனி மேல் இப்படிச்செய்ய மாட்டேன், இந்த முறை மட்டும் மன்னித்துவிடு, என்று வேண்டியும் கொள்வானாம். ஆனால் வேண்டுதலுடன் சரி, குறும்பு? அது தொடரவே செய்தது.

சகோதரிகள் இருவரையும் ஒரே வழியாக்கி விடுவான் நரேன். அவர்களுக்கு அத்தனை தொல்லைகளையும் கொடுத்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி தொருவோர சாக்கடையில் இறங்கி நின்று கொள்வான். அவர்கள் கட்டாயம் சாக்கடையில் வந்து தன்னைப் பிடிக்க மாட்டார்கள் என்பது அவனுக்குத்தெரியும். சாக்கடையில் நிற்பது மட்டுமல்ல அங்கிருந்து சேற்றை வாரி அவர்கள் மீது இறைத்து,  இப்போது பிடியுங்கள் பார்க்கலாம் என்று அவர்களைச் சீண்டி அழகு காட்டவும் செய்வானாம். அவனைப்பராமரிக்க மட்டும் இரண்டு பணிப்பெண்களை வைத்திருந்தேன் என்று பின்னாளில் புவனேசுவரி கூறினார்.


தட்டில் இனிப்பை வைத்து குழந்தைகள் அனைவருக்குமாகக்கொண்டு வருவார்கள் நரேனின் பங்கிற்கு ஒன்று கிடைக்கும்  அதை எடுத்து சுவைத்துப்பார்ப்பான். நன்றாக இருந்ததென்றால்  தான் சுவைத்ததில் மீதியை அந்தத்தட்டில் இருக்கின்ற இனிப்பு முழுவதிலும் தூவிவிடுவான்.பிறகு எல்லாம் எச்சிலாகிவிட்டது இனி இதை யார்  சாப்பிடுவார்கள் என்று கேட்டுவிட்டு , குறும்புக் கண்ணால் அனைவரையும் பார்ப்பான் அவன் நினைத்தது தான் நடக்கும். யாரும் அதைத்தொட மாட்டார்கள். வேண்டுமட்டும் தின்பான் அவன்.


ஆரம்பகல்வியும் ஆன்மீகத்தின் விதையும்


 தாயின் மடியில் தான் குழந்தையின் கல்வி ஆரம்பமாகிறது. தாய் கொண்டுள்ள நற்பண்புகளும் நல்ல லட்சியங்களும்  தாய்ப்பாலுடன் குழந்தைக்குக் கல்வியாக அமைகின்றன. தாய் ஒரு குழந்தையை  வளர்க்கும் விதம் அவனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் மிக முக்கிய ப் பங்கு வகிக்கிறது. நரேனின் தாய் அவனுக்குக் கொடுத்த கல்வி ஈடிணையற்றது.வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்குக் கடமைப்பட்டுள்ளேன் என்று பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறுவதுண்டு.


தேவதேவியர், முனிவர்கள், அவர்களது தியாக வரலாறுகள், காவிய நாயகர்கள் என்று இந்திய க் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைக் கதைகள். வாயிலாகவும், பாடல்கள் வாயிலாகவும் புவனேசுவரியிடமிருந்து பெற்றான் நரேன். குறிப்பாக, அவர் சொல்லிவைத்த ராமாயண, மகாபாரதக்கதைகள் அவனது மனத்தில் நீங்கா இடம் பெற்றனஃ தனது பாட்டி மற்றும் அவரது தாயாரிடமிருந்தும் பல்வேறு பாகவதக் கதைகளையும் கேட்டான் அவன்.


அந்த நாட்களில் தெருப்பாடகர்கள், உணவைப் பிச்சை யேற்றுப்பெறுகின்ற அதே நேரத்தில் வரலாற்று உண்மைகளையும் தத்துவங்களையும் வீரக் கதைகளையும் எளிய நாடோடிப் பாடல்களாகப் பாடிச்செல்வார்கள். எழுதப்படிக்கத் தெரியாத கிராமவாசிகளுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் இந்தப் பாடல்கள் ஆரம்பக் கல்வியின் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்ந்தன. சிலவேளைகளில் தனியாகவும் சிலவேளைகளில் கூட்டமாகவும், கண்ணனின் அலங்காரத்துடனும், தேவியின் படத்தைக்கைகளில் ஏந்தியும் வருகின்ற அவர்களை நரேனுக்காகவே  அழைத்து, தங்கள் வீட்டின் முன்னால் பாடச்சொல்வார் புவனேசுவரி, பாடி ஆடுகின்ற அவர்களின் முன்பு ஆடாமல் அசையாமல் அமர்ந்து கண்டும் கேட்டும் மகிழ்வான் நரேன். வீட்டில் தினமும் பிற்பகல் வேளையில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் வாசிப்பார்கள். அந்த வேளைகளிலும் குறும்புகள் அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து கேட்பான்.


கதை கதையாம்


இப்படிக்கேட்ட கதைகளைத் தம்பி தங்கையருக்குக்கூறி அவர்களை மகிழ்விப்பான். எல்லோரும் ஒரே இடத்தில் தான் படுப்பார்கள். முதலில் நரேன் பிறகு மகேந்திரன் , சகோதரியர், பாட்டி, தாய் என்று படுத்திருப்பார்கள். ( அந்த நாட்களில் பூபேந்திரர் பிறக்கவில்லை. அவர் சுவாமி விவேகானந்தருக்குச் சுமார் பதினாறு வயது நடந்தபோது தான் பிறந்தார்)நரேன் சிலவேளைகளில் தலையணையில் முகத்தைப்புதைத்தபடி குப்புறப்படுத்திருப்பான். மகேந்திரன், ”அண்ணா ஒரு கதை சொல்”  என்று கேட்டால் போதும், உடனே நிமிர்ந்து படுத்துக் கொண்டு ஆரம்பிப்பான்.


கைகளின் நிழல் சுவரில் விழும் படிச்செய்து, அதில் பல்வேறு உருவங்களைக் காட்டுவதிலும் நரேன் கைதேர்ந்தவனாக இருந்தான். அவனது தம்பி தங்கையர் எப்போதும் அவனிடம் இதனைச்செய்து காட்டுமாறு கேட்பது வழக்கம். உடனே ஒரு விளக்கை எடுத்துக்கொள்வான். அதன் ஒளி சுவரில் படுமாறுவைத்துக்கொள்வான். பிறகு கைகளை விளக்கிற்கும் சுவருக்கும் இடையில் வைத்து வளைத்தும் பிணைத்தும் துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி, கணபதி, பறக்கும் வௌவால், குதிரையில் செல்லும் வீரன் என்று பல வடிவங்களைக்காட்டுவான். இதில் நரேன் திறமை சிறப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் பார்ப்பவர்கள் தங்கள் கற்பனைத் திறனையும் கொஞ்சம் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.


முதல் அகவுணர்வுநிலை


தாயிடமிருந்தும் தெருப்பாடகர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் கேட்ட ராமாயணக்கதையும்  ராமர் –சீதை லட்சியங்களும் நரேனின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தன. பூஜையறையில் தேவ தேவியர் முன்பு பெரியவர்கள் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட போது, நரேனுக்குத்தானும் அது போல் தியானம் செய்ய வேண்டும் என்று ஆவல் எழுந்தது. 


எனவே நண்பன் ஹரியுடன் சென்று ஒரு சீதாராமர் பொம்மையை வாங்கினான். வீட்டில் பொதுவாக ஆள் நடமாட்டமில்லாத மாடியறை ஒன்றைத்தேர்ந்தெடுத்துக் கொண்டான். உள்ளே சென்று அறையைத் தாழிட்டுக்கொண்டு அந்தப் பொம்மையை வைத்து, அதன் முன்பு கண்களை மூடிக்கொண்டு இருவரும் அமர்ந்தனர். நீண்ட நேரம் அவர்களைக் காணாததால் இருவர் வீட்டிலும் தேடத் தொடங்கினர். பல இடங்களிலும் தேடிய பிறகு அந்த அறைக்கு வந்து சேர்ந்தனர்.


கதவைத் தட்டிப்பார்த்தனர். எந்தப் பதிலும் இல்லை. எனவே உடைத்துத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.வெளியில் கசமுச வென்ற சத்தங்களும், கதவைத்திறப்பதற்கான முயற்சிகளும் எழுந்ததை ஹரிகேட்டான். அவர்கள் தாழ்ப்பாளை உடைத்து கதவைத் திறந்ததும் அவன் எழுந்து ஓடிவிட்டான்.நரேன் மட்டும் தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான். எவ்வளவோ அழைத்தும் அவன் எழவில்லை. உலுக்கித்தான் அவனைச் சுய நினைவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது. கண்களைத்திறந்த அவன், ஏன் என்னைத்தொந்தரவு  செய்கிறீர்கள்? என்னைத் தனியாக விட்டுவிடுங்கள்” என்றான். 


வழக்கத்திற்கு மாறான  வற்புறுத்தலும் அழுத்தமும் அவனது குரலில் தொனித்தது. ஒரு வகையான திகைப்புடன் அவனை விட்டு விட்டுச் சென்றனர். நரேனின் தியானம் வயதுக்கு மீறிய ஒரு செயலாக அவர்களுக்குப்பட்டது. இந்த நிகழ்ச்சி நரேன் அகவுணர்வில் ஆழ்ந்திருக்கின்ற  திறம் பெற்றிருப்பதைக் காட்டுகின்ற முதல் நிகழ்ச்சியாகும். அப்போது அவனுக்கு ஏழு வயது.


ஒருவனுக்கு ஒருத்தி என்று ராமர் கொண்டிருந்த லட்சியமும், ஒரு லட்சிய மனைவியாக வாழ்ந்த சீதையின் சித்திரமும் நரேனின் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இத்தகைய லட்சிய வாழ்க்கையில் ஈடுபடுவதே மிகவுயர்ந்த லட்சியம் என்று அவன் நம்பினான்.ஆனால் ஒரு நாள் வண்டியோட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வண்டியோட்டி திருமண வாழ்க்கையிலுள்ள சிரமங்களையும் கஷ்டங்களையும் கதை கதையாகக்கூறினான். கடைசியில் திருமண வாழ்க்கையே பயனற்றது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டான். 


அப்படியானால் நரேனின் சிந்தனை சுழன்றது. ராமரும் திருமணம் செய்தவரல்லவா! பயனற்றதான திருமணத்தை ஏற்றுக்கொண்ட அவரை நான் எப்படி வழிபடுவது?என்று அவனுக்குத்தோன்றியது. அதன் பிறகு அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. ஓவென்று அழுதவாறே ஓடிச்சென்று தாயின் மடியில் படுத்துக்கொண்டு தன் பிரச்சனையைக்கூறினான். அதனால் என்னப்பா! நீ ராமனை வணங்கவேண்டாம், சிவபெருமானை வணங்கலாமே! அவர் தியாக மூர்த்தி அல்லவா! என்று சமயோசிதமாகப் பதில் கூறினார். இந்தப் பதில் நரேனுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஓடோடிச்சென்றான், மாடியறையில் வைத்திருந்த சீதாராமர் சிலையைத்தூக்கிப் போட்டு விட்டான்.


மறுநாளே சிவபெருமான் சிலை ஒன்றை வாங்கி சீதாராமர் சிலை இருந்த இடத்தில் வைத்து மலர்கள் சமர்பித்து அதன் முன்னால் கண்களை மூடியபடி அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். ஒன்றை எடுத்துக்கொண்டால், அதில் முற்றிலுமாக ஆழ்ந்து ஈடுபடுவது என்பது அந்தச் சின்ன வயதிலேயே அவனிடம் இயல்பாக இருந்தது.


சீதாராமர் சிலையைத்தூக்கி எறிந்தாலும் நரேனுக்கு ராமாயணத்திலும், ராமர் சீதை லட்சியங்களிலும் , ஆஞ்சநேயரிடமும் இருந்த ஈடுபாடு மறையவில்லை. பக்கத்தில்எங்கே ராமாயணம் வாசித்தாலும் தவறாமல் அங்கே போவான் . ஒரு நாள் ராமாயண வாசிப்பின் போது பண்டிதர் ஒருவர், ஆஞ்சநேயர் வாழைத்தோட்டங்களில் வாழ்வதாக கூறினார். இது நரேனின் பிஞ்சு மனத்தில் ஆழப் பதிந்தது. அவன் நேராக அந்தப் பண்டிதரிடம் சென்று , ஐயா! நீங்கள் சொல்வது உண்மைதானா? வாழைத் தோட்டத்திற்குப்போனால் ஆஞ்சநேயரைக் காண முடியுமா? என்று கேட்டான். சிறுவனுக்கு ஏதாவது பதில் சொல்லி வைக்க வேண்டுமே என்று அந்தப் பண்டிதர், கட்டாயமாக! நீ போனால் அவரைக்காணலாம்.  போய்த்தான் பாரேன் என்றார்.


வீட்டிற்குத் திரும்பும்போது அருகில் வாழைத்தோட்டம் இருப்பது நரேனுக்கு நினைவுக்கு வந்தது. எனவே நேராக வாழைத்தோட்டத்திற்குச்சென்றான், அங்கே ஆஞ்சநேயருக்காகக் காத்திருந்தான். நீண்ட நேரம் இருந்தான். ஆஞ்சநேயர் வரவில்லை. தளர்ந்த மனத்துடனும் வாடிய முகத்துடனும் வீடு திரும்பினான். அவனது நம்பிக்கை குலைந்து விடக்கூடாதேஎன்று புவனேசுவரி, ஆஞ்சநேயர் ஏதாவது அவசரவேலையாக வெளியே போயிருக்கலாம். அதனால் தான் அவரை நீ பார்க்க முடியவில்லை, என்று அவனைத்தேற்றினார். தாயின் பதில் நரேனுக்கு ஆறுதலாக இருந்தது.

மற்றொரு நாள் யாரோ ஒருவர், நம் ஒவ்வொருவரின் செயல்களையும் கடவுள் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறியதைக்கேட்டான் நரேன்.உடனே படுக்கையறைக்கு ஓடிச்சென்று படுத்துக்கொண்டு கூரையையே பார்த்தான். கூரை இப்போது திறக்கும், அதில் கடவுளின் முகம் தெரியும்” என்று எண்ணினான் அவன்.

துறவியரிடம் நாட்டம்


காவி அணிந்த துறவியர் நரேனைமிகவும் கவர்ந்தனர். கையில் எது கிடைத்தாலும் அவர்களுக்குக்கொடுத்து விடுவான். வேறு எதுவும் கிடைக்காவிட்டால் உடுத்திருக்கின்ற துணியையே கொடுத்துவிடுவான். கேட்டால். அவர்களுக்குத்தேவை, என்னிடம் இருந்தது, கொடுத்தேன். என்பானாம். 

விசுவநாதரின் தாராளமான மனம் காரணமாக வீட்டில் துறவியர் பலர் வந்து போவதுண்டு. துறவியர் வந்தால் நரேனை ஓர் அறையில் அடைத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் வீட்டில் எதுவும் மிஞ்சாது. ஆனால் அறையில் அடைத்தாலும் ஜன்னல் வழியாகப்பொருட்களைத்துறவியருக்காக எறிந்து விட்டு ஆனந்தத்தில் குதிப்பான். 


பள்ளியில் படிக்கும்போது புதிதாகச்சேர்கின்ற மாணவனிடம் சென்று அவனது முன்னோரைப்பற்றி கேட்பான். குறிப்பாக அவனது தாத்தா, யாராவது துறவியாகியிருக்கிறாரா என்று விசாரிப்பான். அப்படி யாராவது ஆகியிருப்பது தெரிந்தால் அந்த மாணவனிடம் நெருங்கிப் பழகுவான் அன்பு காட்டுவான்.

 சிலவேளைகளில் நரேனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் கைரேகை பார்த்துக்கொள்வார்கள். எல்லாம்  விளையாட்டு தான்! நரேன்  தான் கைரேகை நிபுணர்! தன் கையிலுள்ள ஏதாவது ரேகை ஒன்றைக்காட்டி , இதோ பாருங்கள், இந்த ரேகை இருப்பதால் நான்  துறவியாவேன் என்பான். இப்படித் தம்மிடம் தாத்தா ஒருவர் கூறியிருப்பதாகவும் தெரிவிப்பான். நரேன் , நீ துறவியானால் நாங்களும் துறவிகளாகி விடுவோம். என்று நண்பர்கள் கூறுவார்கள். அந்த அளவிற்கு நண்பர்களின் மனத்தில் இடம் பிடித்திருந்தான் அவன்.


நரேன் தனது பாட்டனாரான துர்க்கா  பிரசாதின் சாயலை  ஒத்திருந்தான். பாருங்கள், நானும் ஒரு நாள்  என் தாத்தாவைப்போல்  சன்னியாசி ஆகிவிடுவேன் என்று தன் நண்பர்களிடம் கூறுவான்.


எல்லா தெய்வங்களிலும் நரேனுக்கு மிகவும்  பிடித்திருந்தது சிவபெருமானைத்தான் . அனைத்தையும் துறந்து, தியாகத்தின் வடிவமாக அவர் வீற்றிருப்பது அவனது  மனத்தை மிகவும் கவர்ந்தது. சில வேளைகளில் அவனும் துணிகளை எல்லா ம் கழற்றி எறிந்துவிட்டு, கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு திரிவான். புவனேசுவரியின் மனத்தை  இது நெருடும். எங்கே இவனும் இவனது தாத்தாவைப்போல் துறவியாகி போய்விடுவானோ! என்று கவலை கொண்டார் அவர். நரேன் என்ன இது? இது என்ன கோலமடா? என்று கேட்டார். நான் சிவனாகிவிட்டேன். பார், நான் சிவனாகிவிட்டேன். நானே சிவன், என்றான் நரேன். அவன் தெரிந்து சொன்னானோ, தெரியாமல் சொன்னானோ! ஆனால் மிகவும் உயர்நிலை மந்திரமான நானே சிவன்( சிவோஹம்) என்பதை அந்தக் குழந்தைப் பருவத்திலேயே சொன்னான் அவன்.


நான் துறவியாக இருந்தேன்!


மாடியறையிலுள்ள சிவபெருமானின் முன்னால் சென்று அமரும் போதெல்லாம் நரேனுக்குத் தன் தாயார் அடிக்கடி கூறுகின்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். தமது பூதங்களில் ஒன்றை சிவபெருமான் வெளியில் துரத்திவிட்டதாகவும்   அந்தப்பூதம் தான் தான் என்றும் அவர்  குறிப்பிட்டது அவனை மிகவும் சிந்திக்கச்செய்தது. அப்படியானால் நான் ஏதோ குறும்பு செய்ததற்காக ஏதோ தவறு செய்ததற்காக  சிவபெருமான் என்னை அனுப்பிவிட்டாரா?  என்று அவன் மனத்தில்  சந்தேகமும் தவிப்பும் எழும், உடனே தாயிடம் ஓடிச்சென்று, அம்மா ஏனோ தெரியவில்லை. 

நான் எப்போதோ துறவியாக இருந்திருப்பேன்  என்று தோன்றுகிறது. தவறுகள் செய்யாமல், குறும்புகள்  செய்யாமல் இருந்தால் சிவபெருமான் மீண்டும்  என்னை ஏற்றுக்கொள்வாரா? என்று கேட்டான். அதற்கு  புவனேசுவரியும் ஆம்” என்று பதில் அளித்தார். ஆனால் நரேனின் கேள்வி புவனேசுவரியின் மனத்தை உறுத்தியது. இவனும் சிவபெருமானை நாடி, துறவியாகி விடுவானா? என்ற சிந்தனை அவருள் எழுந்தது. அப்படி நடப்பதற்கில்லை. அது பற்றியெல்லாம் சிந்திக்கின்ற வயது இவனுக்கில்லை என்று தெளிந்தார் அவர்.


விவரிக்க இயலாத ஆனந்தம் பெற்றேன்.


துறவில் நாட்டமும் சிவபெருமானிடம் ஈடுபாடும் அதிகரிக்க அதிகரிக்க நரேன் மாடியறையில் சிவபெருமானின் முன்பு தியானத்தில் அமர்வதும் அதிகரித்தது. வீட்டுப்பெரியவர் ஒருவர் ஒரு நாள் அவனிடம் நெடுங்காலம் தியானம் செய்தால் தலைமுடி வளர்ந்து, சடை விழுந்து , நீண்டு, ஆலம் விழுதுகளைப்போல் அப்படியே பூமிக்குள் செல்லும், என்று கூறினார். உடனே நரேன் சென்று தியானத்தில் அமர்ந்தான். அவ்வப்போது  பின்னால் திரும்பி தலைமுடி பூமிக்குள் செல்கிறதா என்று பார்த்துக்கொண்டான். அப்படி எதுவும் நடக்கவில்லை. உடனே தாயிடம் ஓடிச்சென்று ஏன் அப்படி நடக்கவில்லை என்று கேட்டான். அதற்கு புவனேசுவரி ஒரு நாளில் அப்படி நிகழ்வதில்லை. அதற்குப் பல மாதங்களும் பல வருடங்களும்  ஆகும் என்று பதில் கூறினார். 


நரேனின் தியானப் பயிற்சி தொடர்ந்தது, சில நேரங்களில் அவன் தன்னையும் மறந்து தியானத்தில் ஆழ்வது உண்டு. ஒரு நாள் நண்பர்களுடன் தியானம் செய்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அங்கே கருநாகப்பாம்பு ஒன்று வந்துவிட்டது.பாம்பைக் கண்டதும் நண்பர்கள் பஞ்சாகப் பறந்து விட்டனர். ஓரிருவர் தள்ளி நின்று அவனை அழைத்தனர். நரேன் அசையவில்லை. ஓடிச்சென்று வீட்டினரிடம் விவரம் தெரிவித்தனர். அவர்கள் மேலே சென்று பார்த்தால் நரேன் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் பாம்பு படமெடுத்தபடி  நின்று கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் திகைத்து நின்றபோது, தெய்வாதீனமாக, பாம்ப தானாகவே போய்விட்டது. அப்பொதும் அசைவின்றியே அமர்ந்திருந்த நரேனின் அருகில் ஓடிச்சென்று அவனை உலுக்கி எழுப்பினர். பாம்ப வந்தும் ஏன் ஓடவில்லை? என்று அவனிடம் கேட்டனர். அதற்கு அவன், நான் பாம்பைப் பார்க்க வில்லை. அது வந்தது எனக்குத் தெரியவும் செய்யாது. விவரிக்க இயலாத ஆனந்தத்தை நான் என் மனத்தில் அனுபவித்துக்கொண்டிருந்தேன் என்று கூறினார்.


MAIN PAGE

image128

சிறுவயது நிகழ்வுகள்

ஆரம்பக்கல்விஆறாம் வயதில் நரேனை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பினார்கள். அது திண்ணைப்பள்ளி. முதல் நாளன்று புதிய வேட்டி அணிந்து கொண்டான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தாங்கள் அமர்வதற்கான ஆசனத்தைத் தாங்களே கொண்டு செல்லவேண்டும் நரேனும் சிறிய பாய் ஒன்றை கையில் வைத்துக்கொண்டான். மெல்லிய மூங்கிலால் ஆன பேனா ஒன்றும் கொண்டு சென்றான். அது தொலைந்து விடாதிருக்க, இடுப்பில் நீண்ட ஒரு கயிற்றை கட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு முதல் நாள் பள்ளி செல்லும் மாணவர்களுக்கே உரிய கம்பீரத்துடன் பள்ளிக்குச்சென்றான் நரேன்.


ஆனால் அங்கே ஓரிரு நாட்கள்தான், பாடங்களைப் படிக்குமுன்னரே சக மாணவர்களிடமிருந்து கெட்ட வார்த்தைகள் ஏராளம் கற்றுக்கொண்டான். உடனே அந்தப்பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் பெற்றோர். பிறகு அவனுக்கும்  வீட்டிலுள்ள மற்ற சிறுவர்களுக்குமாக ஓர் ஆசிரியரை வீட்டிலேயே நியமித்தார் தந்தை.அங்கே சக மாணவர்கள் எழுத்துக்களைக் கற்று முடிக்கும் முன்னரே நன்றாக எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டான அவன்.


அவனது நினைவாற்றல் அபாரமானது. ஒரு மறை கேட்டவற்றை அப்படியே அவனால் திருப்பி ஒப்பிக்க முடியும். அவன் பாடம் கேட்கிற விதமும் அலாதியானது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது கண்களை மூடியபடி அசையாமல் அமர்ந்திருப்பான். அல்லது படுத்துக்கொள்வான். அவன் என்ன செய்கிறான் என்பது முதலில் ஆசிரியருக்குப்புரியவில்லை. அவன் தூங்குகிறான் என்று முடிவுகட்டிய அவர் அவனை உலுக்கி எழுப்பி, பாட வேளைகளில் தூங்குவதற்காகக் கடிந்து கொண்டார். ஆசிரியரின் ஏச்சு முழுவதையும் மௌனமாகக்கேட்டுக்கொண்டான் நரேன். பிறகு அன்றைய பாடம் முழுவதையும் ஒரு வார்த்தை பிசகாமல் அப்படியே திருப்பிக்கூறினான். அவனது நினைவாற்றல் அவ்வளவு அபாரமாக இருந்தது. அதிர்ந்துவிட்டார் ஆசிரியர்.


இவ்வளவு சிறு வயதிலேயே இத்தனை புத்திக்கூர்மையையும் நினைவாற்றலையும் நரேனிடம் கண்ட உறவினர் ஒருவர் அவனுக்கு ”முக்த போதம்” என்னும் சம்ஸ்கிருத இலக்கணம், பரம்பரை வரலாறு,துதிப்பாடல்கள், ராமாயணம். மற்றும் மகாபாரதத்திலிருந்து நீண்ட பகுதிகள் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தார். அவன் இரவில் தூங்குவதற்காகப் படுத்திருப்பான்.அப்போது அவர்  அவனது அருகில் அமர்ந்து ” அமரகோசம்” என்ற சம்ஸ்கிருத அகராதியின்  பல பகுதிகளை அவன் மனப்பாடம் செய்ய வைப்பார். சம்ஸ்கிருதத்தில் அவனுக்குத்தணியாத ஆர்வம் ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக இருந்தது.

ஒரு வருடத்தில் நரேன் சம்ஸ்கிருதத்தில் நல்லதேர்ச்சி பெற்றதுடன் ராமாயண, மகாபாரதங்களின் பல பகுதிகளையும் மனப்பாடம் செய்துவிட்டான். ஒருமுறை தெருப்பாடகர் கூட்டம் ஒன்று அவனது வீட்டிற்கு முன்னால் வந்து ராமாயணப் பாடல்களைப்பாடியபோது அதிலிருந்த தவறுகளைச்சுட்டிக்காட்டி அவற்றைத்திருத்தும் அளவிற்குச் சிறுவனான அவனிடம் தேர்ச்சி இருந்தது.


நரேனுக்கு ஆறு வயதாக இருக்கும்போது அவனுடைய தாத்தாவான காளிபிரசாத்  இறக்கும் தறுவாயில் இருந்தார். அந்த வேளையில் குடும்பத்தினர் அனைவரையும் அருகில் அழைத்து மகாபாரதத்தைக்கேட்க விரும்பினார். ஆனால் படிப்பதற்கு யாரும் தயாராகஇல்லை. நரேன் மட்டும் ஓடிச்சென்று அந்தப் பெரிய நூலை எடுத்துவந்தான். தன் மடியில் அதனை வைத்தபடி மெல்லமெல்ல தனது மழலை மொழியிலேயே படித்தான். அக்கா ஹரமணி அவனுடன் சேர்ந்துகொண்டாள். அதில் கருடன் தன் தாயான வினதையைத்தோள் மீது ஏற்றிக்கொண்டு பறக்கின்ற கட்டம் வந்தது. அந்த முதியவரின் ஆவியும் உடம்பை விட்டுப் பறக்கத்தொடங்கியது. அவரது மூச்சு மிகவும் மெதுவாக வரத் தொடங்கியது. இருப்பினும் தன் ஆற்றலையெல்லாம் ஒன்று திரட்டி அவர் மனநிறைவுடன் ”குழந்தாய்” உனக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது” என்று வாழ்த்தினார். சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.


1871-இல் நரேனுக்கு எட்டு வயதாக இருக்கும் போது ஈசுவர சந்திர வித்யாசகரின்  மெட்ரோபாலிடன் பள்ளியில் சேர்த்தார்கள். அன்றைய பள்ளிகளில் அது மிகவும் பிரபலமானது. நரேனின் குடும்பத்தினர் பலரும் அதிலேயே படித்தனர்.


வரலாறு, சம்ஸ்கிருதம் ஆகியவை அவனுக்குப்பிடித்த பாடங்கள், முற்றிலும் பிடிக்காத ஒன்று கணிதம். பெட்டிக்கடைக்காரனுக்கு உரியது கணிதம்.என்று அவனது தந்தை கூறுவாராம். அது அவனையும் பற்றிக்கொண்டது போலும், ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் முற்றிலுமாக மறுத்துவிட்டான் அவன். தாய்மொழி என்ற ஒன்று இருக்கும்போது, அதனை நன்றாக படிப்பதை விட்டுவிட்டு ஏன் அன்னிய மொழியைப்படிக்கவேண்டும் என்பது அவனது வாதம். தாயும் தந்தையும் எவ்வளவோ முயன்றும் அவனைச்சம்மதிக்கச் செய்ய முடியவில்லை.

 முதிய உறவினரான நரசிம்ம தத்தர் அவனை அழைத்துச்சென்று எவ்வளவோ எடுத்துக்கூறிப் பார்த்தார். அவன் மசியவில்லை. பல மாதங்களுக்குப் பிறகு எப்படியோ அவன் அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்டான். ஆங்கில எழுத்துக்களையும் ஆரம்பப் பாடங்களையும் புவனேசுவரியே அவனுக்குக் கற்றுக்கொடுத்தார். ஆனாலும் அவனுக்கு அதில் பெரிய ஈடுபாடு உண்டாகவில்லை. அந்த நாட்களில் ஆங்கில ஆரம்ப நூல்களில் சிறுவர்களின் மனத்தைக் கவர்வதற்கான எதுவும் இல்லாததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்தியர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போன, அவர்கள் இயல்பாகச்செய்கின்ற ஒன்றை ஏதோ பிரமாதப்படுத்தி அவர்கள் எழுதி யிருப்பார்கள். அது அவனுக்கு என்னவோ போலிருந்தது. அது பற்றி பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார்.


நான் முதன்முதலில் ஆங்கிலம் கற்றுக்கொண்ட போது கடமையுணர்வு கொண்ட ஒரு சிறுவனைப்பற்றிய ஆங்கிலக் கதையொன்று படித்தேன். தான் வேலை செய்து பெற்றுவந்த கூலியில் சிறு தொகையைத் தன் தாய்க்குக் கொடுத்தான் அவன். இதைப்புகழ்ந்து நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அது என்ன பிரமாதமோ! இந்துச் சிறுவன்  ஒருவனுக்கு இந்தக் கதையின் நீதி புரியவே புரியாது. ” தனக்காக ஒவ்வொருவனும்” என்ற மேலை நாட்டுக்கருத்தை அறிந்த பின்னரே இப்போது அந்தக்கதை எனக்குப் புரிகிறது.  

                                                                                                                                                                                                                                                                                                                                              சிலரோ அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு, தாய், தந்தை, மனைவி, மக்களைக்கூடத் தவிக்கும் படி விட்டுவிடுகிறார்கள்.இல்லறத்தானின் லட்சியம் ஒரு போதும் ஓரிடத்திலும் இதுவாக இருக்கக்கூடாது.

ஆனால் யார் செய்த பண்ணியமோ ஏன் உலகமே செய்த புண்ணியம் தான் அவன் அந்த  மொழியை ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தான். பின்னாளில் அந்த  மொழிக்கே ஓர் உயிருணர்வை ஊட்டுகின்ற விதத்தில் அதில் வல்லவன் ஆனான்.


நரேன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து அவனுக்கு அஜீரணக்கோளாறு ஆரம்பித்தது. இது நீண்ட காலம் அவனைத்தொந்தரவு செய்தது. எல்லாவற்றையும் முன்புபோல் அவனால் சாப்பிட முடியவில்லை. அஜீரணக்கோளாறுக்குப் பாதகமான சில உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அவனுக்குத்தோன்றியது .உடல் மெலிந்து தோன்றினான். இருப்பினும் அவனது துறுதுறுப்பிலோ வேடிக்கை வினோதங்களிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


நரேன் நுண்ணறிவு படைத்தவன் . அவனுக்கு எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும். சும்மா இருப்பது அவனால் இயலாத காரியம். ஏதாவது ஒன்றைச்செய்து கொண்டிருப்பான் அல்லது செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருப்பான். ஏதோ உள்ளே ஆற்றலின் ஊற்று ஒன்று பொங்கிக்கொண்டே இருப்பது போல் தோன்றும், அந்த அளவிற்கு அவன்  செயல்பட்டுக் கொண்டே இருப்பான். இன்று நாடகக்குழு ஒன்றைத்தொடங்குவான். நாளை நண்பர்களுடன் நாடகம் ஒன்றை நடித்துக் காட்டுவான். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவான். நண்பர்களுக்குப் பட்டப்பெயர்  சூட்டுவதிலும் வல்லவனாக இருந்தான். பொதுவாக நண்பர்களைப் பட்டப்பெயரிலேயே அழைக்கவும் செய்தான்.


விளையாட்டிலும் தீவிரமாக ஆர்வம் காட்டினான் நரேன். ஓடி ஒளிந்து விளையாடுவான். கோலி விளையாடுவதிலும் வல்லவன் அவன். போட்டியில் நண்பர்கள் அனைவருடைய கோலிகளும் ஒவ்வொரு நாளும்  நரேனுக்கு உரியவை ஆகிவிடும். உயரம் தாண்டுதல், ஓட்டம். கபடி, கண்ணாமூச்சி, குத்துச்சண்டை எல்லாம் அவனுக்கு அத்துபடியாக இருந்தது. ஆனால் தவறாமல் தினமும் ஒரு கால் சட்டை கிழிந்துவிடும்! ஒவ்வொரு நாளும் புதிய கால் சட்டை தைத்துக்கொடுப்பது விசுவநாதருக்கு வாடிக்கையாக இருந்தது.


நரேன் சிறு வயதிலேயே விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடுவதை மிகவும் விரும்பினான், வளர, வளர அவனது இந்த விருப்பம் விஞ்ஞானபூர்வமான கருவிகள் செய்வதில் ஆர்வமாக  வளர்ந்தது. எரிவாயுவால் இயங்கும் கருவிகள், பொம்மை ரயில் வண்டிகள், அன்று கல்கத்தாவில் மிகவும் பிரபலமாக இருந்த சோடா(குளிர் பானம்) தயாரித்தல் என்றெல்லாம் ஈடுபட்டான்.


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்


ஏட்டுக்கல்வி எத்தனை பெற்றிருந்தாலும் பெற்றோரிடமிருந்து, பெற்றோரின் வாழ்க்கையிலிருந்து பெறுகின்ற கல்வியே ஒருவனது வாழ்க்கையை வளப்படுத்துகிறது.நரேனும் தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்  கொண்டவை ஏராளம். நல்லொழுக்கம் என்றால் என்ன. அதன் அளவு கோல் எது, வாழ்க்கையின் துன்பங்களால் அலைக்கழிக்கப் படும்போது விடாமுயற்சியுடன் நல்வழியில் வாழ்வது, வாழ்க்கைக்கான மிகச்சிறந்த ஆதாரம் இறைவனே என்று அவரைச்சரணடைந்து வாழ்வது போன்றவற்றையெல்லாம் நரேன் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டான். 


ஒருநாள் புவனேசுவரி நரேனிம், அப்பா என்றும் தூயவனாக இரு. சுய மரியாதையுடன் இரு, அதே வேளையில் பிறரது சுய மரியாதைக்கு மதிப்புக்கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாக, சமநிலை குலையாதவனாக இரு, ஆனால் தேவையேற்படும்போது உன் இதயத்தை இரும்பாக்கிக்கொள்ளவும்தயங்காதே, என்று கூறினார். இவை புவனேசுவரியின்  அனுபவ வார்த்தைகள் அவை, நரேனின் வாழ்க்கையில்  பல நேரங்களில் அவனை வழிநடத்தின. அதனால் தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர், தாயை வழிபடாத ஒருவன்மேன்மை பெற முடியாது. எனது அறிவாற்றல் அனைத்திற்கும் என் தாயே காரணம் என்று கூறினார். 


சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.


நரேனின் பள்ளியிலுள்ள ஆசிரியர் ஒருவர் எதற்கெடுத்தாலும் மாணவர்களை அடிப்பார். ஒரு நாள் அவர் ஒரு மாணவனை  கண்மண் தெரியாமல் அடிக்கத்தொடங்கினார். நரேனால் பொறுக்க முடியவில்லை. ஆனால் சிறுவனாகிய அவன் ஆசிரியரை என்ன செய்யமுடியும்? இயலாமையின் காரணமாக அவனது கோபம் சிரிப்பாக வெளிப்பட்டது. உரத்த குரலில்  சிரிக்கத் தொடங்கினான் அவன். அவனது சிரிப்பைக்கண்ட ஆசிரியரின் கோபம்  அவன் பக்கம் திரும்பியது. எனவே அவனை அடிக்கத்தொடங்கினார். இனிமேல் சிரிக்க மாட்டேன்“ என்று மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்தியபடியே அடித்தார். 


மன்னிப்பு கேட்க நரேன் மறுத்துவிட்டான். கோபம் கண்களை மறைக்க அந்த ஆசிரியர் அவனது காதைத் திருகினார். காதிலிருந்து ரத்தம் வழியத்தொடங்கியது. அப்போதும் மன்னிப்புக்கேட்கவில்லை நரென். பொறுக்க முடியாத கட்டம் வந்தபோது உரத்த குரலில் நிறுத்துங்கள், என்னை அடிக்க நீங்கள் யார்? இனி என்னைத் தொட்டால் அப்போது தெரியும் சேதி, என்று வெடித்தான். இந்த வேளையில் பள்ளி நிர்வாகியான வித்யாசாகர் அங்கே வர நேர்ந்தது. நரேன் அழுதபடியே நடந்தவை அனைத்தையும் அவரிடம் கூறினான். பிறகு புத்தகங்களை எடுத்துக்கொண்டு இனி இந்தப் பள்ளிக்கே வரமாட்டேன், என்று கூறிவிட்டு  வெளியேறத்தொடங்கினான். வித்யாசாகர் அவனை தமது அறைக்குச் சென்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அதே வேளையில் அந்த ஆசிரியரிடம் நீங்கள் மனிதன் என்று நினைத்தேன்,, ஆனால் மிருகத்தைப்போல்  நடந்து கொள்கிறீர்களே! என்று கடிந்துகொண்டார். பள்ளியில் அதன் பிறகு இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுத்தார்.


வீடு சென்ற நரேன் வழக்கம்போல் தன் தாயிடம் நடந்த வற்றைக்கூறி முறையிட்டான். அவனைப்பல்வேறு வழிகளில் சமாதானப்படுத்திய  புவனேசுவரி அவனிடம், இனி பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் நரேன் தனக்கு நடந்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுநாளிலிருந்து வழக்கம்போல் பள்ளிக்குச்சென்றான்.

மற்றொருமுறை வகுப்பில் புவியியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் வரைபடம் ஒன்றைத் தொங்கவிட்டு ஒரு குறிப்பிட்ட நகரத்தைக் காட்டுமாறு நரேனிடம் கூறினார். நரேன் காட்டினான். ஆசிரியர் அதைத்தவறு என்றார்,  அதனை மறுத்து, சரி” என்றான் நரேன். தான் சொல்வதை மறுக்கிறான் என்பதற்காக அவனது கைகளை நீட்டச்சொல்லி பிரம்பால் அடித்தார் ஆசிரியர். அடிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டானே தவிர, தனது பதில் தவறு என்பதை அவன் ஒத்துக்கொள்ளவில்லை. 


சிறிது நேரத்திற்குப் பிறகு புத்தகத்தைப் பார்த்தபோது தனது பதில் தான் தவறு என்பதைக் கண்டார் ஆசிரியர், உடனே நரேனிடம் மன்னிப்புக் கேட்டதுடன், அதன் பிறகு அவனிடம் மிகுந்த  மரியாதையுடனும் பழகினார். இதையும் அப்படியே வந்து தாயிடம் சொன்னான் நரேன். புவனேசுவரி அவனை அணைத்துக்கொண்டு, என் கண்ணே! உன் பக்கம் நியாயம்  இருக்குமானால் நீ எதற்கும் கவலைப்படவேண்டாம். நியாயத்தின் வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக , துன்பம் தருவதாக இருக்கலாம்.ஆனால் நியாயம் என்று நீ கருதுவதைச்செய்வதற்கு ஒரு போதும்  தயங்காதே” என்று கூறினார். இந்த அறிவுரை நரேனின் வாழ்நாள் முழுவதும் ஒரு பாடமாக அமைந்தது. எந்தச் சூழ்நிலையிலும் அவன் இந்தப் பாடத்தை மறக்கவில்லை.


நரேனின் கல்வியில் அவனது தந்தையின் பங்கும் சிறப்பாக இருந்தது. எத்தனையோ பாதகமான சூழ்நிலைகளுக்கு இடையில் தாமும் வளர்ந்து, தம்மைச்சுற்றியுள்ள பலரையும் வாழவைத்துக்கொண்டிருந்தவர் அவர். தமது குழந்தைகளிடமும் அவர் மாறாததொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். சுய மரியாதை வேண்டும், அதே வேளையில் பணிவும் இணைந்து திகழவேண்டும் என்று அவர் விரும்பினார். பிள்ளைகள் தவறுகள் செய்யும்போது, பொதுவாகத் தந்தையர் செய்வது போல் அவர் ஆத்திரப்படுவதோ அடிப்பதோ கிடையாது. 

கண்டபடி ஏசுவதும் அடிப்பதும் குழந்தைகளைத் திருத்தாது என்று உறுதியாக நம்பினார் அவர். ஒருநிகழ்ச்சியைக் காண்போம்.


சாதாரண விஷயங்களுக்கும் நரேன் தாயிடம் சண்டையிடுவான். சாப்பிடும் போது பொதுவாக வங்காளத்தில் தண்ணீர் டம்ளரையும் வலது கையாலேயே எடுத்து குடிப்பார்கள். ஆனால் வலது கை எச்சிலாக இருப்பதால் இடது கையால் அருந்துவதே சரி என்று வாதிட்டான் நரேன். அவன் ஒன்றைச்சொல்ல புவனேசுவரி ஒன்றைச்சொல்ல வாதம் வலுத்தது. கடைசியில் கோபத்தில் தன் தாயைக்கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டான் 

நரேன்.அதைக்கேட்டுக்கொண்டிருந்தார் விசுவநாதர். ஆனால்  அவர் நரேனிடம் கோபதாபங்களைக் காட்டவில்லை., திட்டவில்லை. அவனது தவறைச்சுட்டிக் காட்டுவதற்கு அறிவுபூர்வமான வழி ஒன்றைக் கையாண்டார். நரேன் தன் நண்பர்களைச் சந்திக்கின்ற அறையின் வாசலில் , நரேன் இன்று இன்ன வார்த்தைகளால் தன் தாயைத் திட்டினான் என்று எழுதி வைத்துவிட்டார். நரேனுக்கு அது போதுமானதாக இருந்தது. ஒவ்வொரு முறை நண்பர்கள்   அந்த அறைக்கு வரும்போதும் கூனிக் குறுகினான்அவன். அதன் பிறகு தவறியும் அந்த வார்த்தைகளை அவன் பயன்படுத்தவில்லை.


மற்றொரு நாள் விசுவநாதர் நரேந்திரரிடம், மகனே, எதைக்கண்டும் ஆச்சரியப்படாதே” என்றார். வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கலாம், எத்தனையோ மாற்றங்களைச் சந்திக்கலாம். ஆனால் எதிலும்  ஆச்சரியப்பட்டு நின்றுவிடக்கூடாது. இறைவனின் அரசில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உணர்வுடன் முன்னேறிப்போக வேண்டும். இதுவும்  வாழ்நாள் முழுவதும் நரேனுக்கு வழிகாட்டியாக இருந்தது.

நரேன் தந்தையிடமிருந்து பலவிதமான சமையலையும் கற்றுக்கொண்டான். பல உணவு வகைகளைச்சுவையுடன் சமைப்பான். அவனது சமையலில்  காரம் அதிகமாக இருக்கும், ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்.

வீரமும் விவேகமும்


நரேன் துணிச்சல் மிக்கவன், வீரம் நிறைந்தவன். ஆனால் அந்த வீரம் விவேகத்துடன் கூடியதாக, சமயோசிதபுத்தி நிறைந்ததாக இருந்தது. நண்பன் ஒருவனது வீட்டில் செண்பக மரம் ஒன்று இருந்தது. அதில் நண்பர்களுடன் ஏறி, மரத்தின்  கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடி ஆடுவது நரேனுக்குப் பிடித்த விளையாட்டுகளுள் ஒன்று. செண்பக மலர் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கூறப்படுகிறது.நரேனுக்கும் அந்த மலர்மிகவும் பிடித்திருந்தது. 


அடிக்கடி அந்த மரத்தில் ஏறுவதும் விளையாடுவதுமாக இருந்தான் அவன். இவர்கள் எங்கே விழுந்துவிடுவார்களோ என்று பயந்தார் அந்த வீட்டில் உள்ள தாத்தா ஒருவர். நரேன் ஏறாமல் இருந்தால் மற்றவர்களும் ஏற மாட்டார்கள்.என்று அவருக்குத் தெரியும். அவனை வழிக்குக் கொண்டு வருவது எப்படி? அவனை இதமாக அருகில் அழைத்து, அப்பா அந்த மரத்தில் ஏறாதே, என்றார். ஏன்? என்று கேட்டான் நரேன். அவனுக்கு என்ன காரணம் சொல்வது! பயமுறுத்தி வைப்போம் என்று எண்ணி ய தாத்தா, அப்பா, அந்த மரத்தில் பூதம் ஒன்று இருக்கிறது. இரவில் வெள்ளையாடை உடுத்திக்கொண்டு அது போகும் போது பார்க்க எவ்வளவு பயமாக இருக்கும் தெரியுமா? மரத்தில் ஏறுபவர்களை அது கழுத்தை நெரித்துக்கொன்றுவிடும். என்றார்.


தாத்தா கூறியவை அனைத்தையும் பணிவாக கேட்டுக்கொண்டான் நரேன். அவனை ஏமாற்றி விட்டோம் என்று மனத்திற்குள் சிரித்தவாறே சென்றார் தாத்தா. அவரது தலை மறைந்தது தான் தாமதம்! தடதடவென்று மரத்தில் ஏறி பழையபடியே தொங்கினான் நரேன். தாத்தாவின் கதையில் பயந்து நின்ற நண்பன் ஒருவன் நரேனிடம், நரேன் , தாத்தா இப்போது தானே சொன்னார்! கீழே வந்துவிடு. இல்லாவிட்டால் பூதம் உன்னைக்கொன்றுவிடும். என்று கூறினான். வாய்விட்டுச் சிரித்தான் நரேன். பிறகு கண்களைச் சிமிட்டிக்கொண்டு, முட்டாளே! யாரோ கதை கட்டி விட்டால் உடனே நம்புவதா! தாத்தா சொன்னது உண்மையானால் என்றோ என் கழுத்து  நெரிபட்டிருக்கவேண்டுமே! என்று நண்பனிடம் சொன்னான்.


இந்த நண்பனின் தந்தை நரேனை மிகவும் நேசித்தார். நரேன் பின்னாளில் பெரிய காரியங்களைச்சாதிப்பான் என்று நம்பினார். ஒரு நாள் அவன் வழக்கம்போல் அந்த மரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்போது அவனை அழைத்து வந்து, நீ என்ன, நாள் முழுவதும் இப்படி வீடு வீடாகச்சென்று விளையாடிக்கொண்டு திரிவது மட்டும் தானா? இல்லை படிப்பு ஏதாவது உண்டா? என்று கேட்டார். அதற்கு நரேன், நான் படிக்கிறேன், விளையாடுகிறேன்,  இரண்டையும் செய்கிறேன்” என்றான். 


அவனைச்சோதிப்பதற்காக புவியல், கணிதம் என்று பல பாடங்களில் அவர் கேள்விகள் கேட்டார். கவிதைகளை ஒப்பிக்கச்சொன்னார். தனது உடனடி பதில்களால் அவரைப் பிரமிக்கச்செய்தான் நரேன். அவனை இதயபூர்வமாக ஆசீர்வதித்த அந்தப்பெரியவர் ஆமாம், உன் தந்தை லாகூரில் அல்லவா இருக்கிறார்! இங்கே உனக்கு  யார் பாடம் சொல்லித்தருகிறார்கள்,? என்று கேட்டார். என் அம்மா” என்றான் நரேன். மகனே, நீ மாமனிதனாகத் திகழ்வாய். என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு, என்று ஆசீர்வதித்தார் அவர்.


ஜாதி அது என்ன?


நரேனின் தந்தை வழக்கறிஞர் ஆதலால் வழக்கு விஷயமாக அவரது வீட்டிற்றுப் பலர் வந்து செல்வார்கள். அவர்களில் பல்வேறு ஜாதியைச்சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அந்தக் கால கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு புகைக்குழாய்களை வைத்திருந்தார் விசுவநாதர். இந்த ஜாதி விஷயம் நரேனுக்குப் புரியாத புதிராக இருந்தது. ஒரு ஜாதியினரின் ஹீக்காவில் மற்ற ஜாதியினர் புகைபிடித்தால் என்ன நடக்கும்? கூரை இடிந்து விழுமா, உயிர் போய்விடுமா? என்ன நடக்கும்? விடை காணத்துடித்தான் அவன். ஒரு நாள் தானே சோதித்துப்பார்க்கத் துணிந்தான்.


 யாரும் இல்லாத வேளையில் நேராக அந்த அறைக்குச் சென்றான். ஒவ்வொரு குழாயிலும் ஒரு இழுப்பு இழுத்தான். ஒன்றும் நடக்கவில்லை! அவன் சாகவில்லை! பின் ஏன் இப்படியொரு பாகுபாடு என்று எண்ணியது அவனது மனம். அந்த நேரத்தில் விசுவநாதர் அங்கே வந்து விட்டார். நரேன் இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டார். ஒன்றுமில்லை அப்பா” ஜாதிப்பிரிவினைகளை உடைத்தால் என்ன நடக்கும் என்று பார்த்தேன். ஒன்றும்  நடக்கவில்லை. என்றான் நரேன். வாய்விட்டு சிரித்தார் விசுவநாதர். அழுத்தமாக ஒரு பார்வையை மகன் மீது மகன் மீது பதித்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார். ஜாதிப்பாகுபாடுகளின் பெயரில் மூடநம்பிக்கைகளை அவன் மதிக்கவில்லை.

விசுவநாதரின் கட்சிக்காரரான இஸ்லாமியர் ஒருவரை நரேன் ”மாமா” என்று அழைத்து அவருடன் நெருங்கிப்பழகுவான். அவர் கொடுக்கும் இனிப்புகளையும் சாப்பிடுவான். மற்றவர்கள் இதைக்கண்டு திகைத்து நிற்பார்கள். ஆனால் அவனது தந்தை மட்டும் மகனது செயலைக்கண்டு சிரித்துவிட்டுச் சென்றுவிடுவார்.


தன் உயிரையும் மதியாமல்


பிறர் துன்பத்தில் உதவுவது சிறுவயதிலேயே நரேனின் இயல்பாக இருந்தது. தேவை ஏற்பட்டால் தன் உயிரையும் மதியாமல் அவன் பிறர் நலம் நாடினான்.நரேனுக்கு ஆறு வயது இருக்கும். ஒரு முறை அவன் தன் உறவுச் சிறுவன் ஒருவனுடன் ஒரு திருவிழாவிற்குச் சென்றிருந்தான். அங்கிருந்து சிவபெருமான் பொம்மைகளை வாங்கிக்கொண்டு இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.


கூட்டத்தில் நண்பன் பிரிந்தது போல் தோன்றவே நரேன் திரும்பிப் பார்த்தான்.திரும்பிய நரேனின் கண்களில்  பட்டது. திடீரென்று பாய்ந்து வந்த குதிரை வண்டி ஒன்று. குதிரையின் கால்களில் சிக்க இருந்தான் நண்பன். நரேன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. பொம்மைகளை அப்படியே இடது அக்குளில் திணித்துக்கொண்டு பாய்ந்தோடி, வலது கையால் அவனை இழுத்தபடி புரண்டு விழுந்தான். கூட்டத்தில் இருந்தவர்கள்  திகைப்புடன் நரேனின் செயலைப்பார்த்தனர். 


சிலர் அவனை வாழ்த்தினர்., சிலர் அவனையும் தூக்கி நிறுத்தி முதுகில் தட்டிக்கொடுத்து ஆசீர்வதித்தனர்.. இதனைக்கேள்விப்பட்ட போது புவனேசுவரி மகனின் வீரத்தை மெச்சி ஆனந்தக்கண்ணீர் வடித்தபடியே, ஆம், நரேன் எப்போதும் ஓர் ஆண்மகனாக இரு” என்று கூறினாள்.


மற்றொரு முறை அவன் தெரு வழியாகச்சென்று கொண்டிருந்தான். அந்தத்தெருவில் குதிரை வண்டி ஒன்றில்  ஒரு பெண் பயணம் செய்து கொண்டிருந்தான். திடீரென்று குதிரை கட்டுப்பாடற்று ஓடத்தொடங்கியது. அந்தப் பெண் பயத்தில் அலறினாள்.யாரும் அவளது உதவிக்குச்செல்லவில்லை. நரேன் பாய்ந்து சென்று அந்தக் குதிரையைத்துணிச்சலுடன் பற்றியிழுத்து நிறுத்தி அந்தப்பெண்ணை க் காப்பாற்றினான்.


தலைவன்


நண்பர்கள் குழுவில் நரேன் எப்போதும் தலைவனாகவே இருந்தான். விளையாட்டுகளில் அவன் தான் அரசனாகவும்  நீதிபதியாகவும் இருப்பான். நண்பர்களும் அவனை  அப்படித்தான் காண விரும்பினர். சச்சரவுகள் எழும்போது தீர்வு காண அவர்கள் அவனையே நாடினர். அவனும் இருவர் கருத்துக்களையும் கேட்டு, ஆராய்ந்து , இருவரும்  ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்புக்கூறுவதில் வல்லவனாக இருந்தான்.


நரேனின் அரச சபையே பார்ப்பதற்குக் கண்கொள்ளாதக் காட்சியாக இருக்கும். கீழ்த்தளத்திலிருந்து மாடியில் பூஜையறைக்குச் செல்கின்ற படிக்கட்டுதான்  அரசசபை. முதல் படியில் மன்னனாக அவன் அமர்ந்து  கொள்வான். ஓரிரு படிகள் கீழே மந்திரியும் சேனாபதியும் நின்று கொண்டிருப்பார்கள். இன்னும் கீழ் ப் படிகளில் கப்பம் கட்டும் சிற்றரசர்கள் நிற்பார்கள்.


 அரச சபையின் மற்ற அங்கத்தினர்கள் இன்னும் ஓரிரு படிகள் கீழே அமர்வார்கள். அரச சபை தொடங்கும், ஒருவர்பின் ஒருவராக சிற்றரசர்களும் மற்ற அதிகாரிகளும் வந்து, ரகுகுலதிலக திரிபுவன சக்கரவர்த்தி, தர்மத்தின் காவலன் சக்கரவர்த்தி வாழ்க, வாழ்க! என்று கூறியபடி நரேன்- சக்கரவர்த்தியின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவார்கள். மன்னர் நாட்டு நலன், மக்களின் குறை போன்றவற்றைக்கேட்பார். பிறகு குற்றவாளி கொண்டு வரப்படுவான். குற்றப்பத்திரிகை வாசிக்கப்படும். எல்லாம் கவனமாகக்கேட்ட பிறகு மன்னர், காவலர்களே, இவனது தலையைச் சீவிவிடுங்கள், என்று தண்டனையை அறிவிப்பார். காவலர்கள் வந்து குற்றவாளிகளை இழுத்துச்செல்வார்கள். இந்த மன்னர்” விளையாட்டு நரேனுக்குமிகவும் பிடித்தது.


ஏதாவது ஒன்றை சாதிப்பதற்கும் நண்பர்கள் நரேனையே நாடினர். அவனுக்குப் பதினொரு வயது இருக்கும்போது  இங்கிலாந்தின் போர்க்கப்பல்  ஒன்று கல்கத்தா துறைமுகத்திற்குவந்தது. நண்பர்களுக்கு அதனைக்காண ஆவல். ஆர்வத்துடன் சென்றபோது, சிறுவர்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிடடனர். உள்ளே போக வேண்டும் என்றால் ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் அனுமதி பெறவேண்டும். என்ன செய்வது! நேரடியாக  எல்லோரும் அந்த அதிகாரியை நாடினர். 


அங்கும் பிரச்சனை,! சிறுவர்கள் என்பதால். அதிகாரியைக் காண காவலன் அவர்களை அனுமதிக்கவில்லை. அதிகாரியின் அறை மாடியில் இருந்தது. பார்த்தான் நரேன், பிறர் கவனத்தை அவ்வளவாகக் கவராமல் மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டு ஒன்று பின்புறம் இருந்தது. மெள்ள நழுவி அதன் வழியாக மேலே சென்று அதிகாரியிடம் அனுமதி பெற்றுவிட்டான்.பிறகு எல்லோரும் வரும் வழியாகக்கீழே இறங்கி வந்தான். வாசல் காவலனுக்குக் குழப்பமாகி விட்டது. நீ  எப்படி உள்ளே போனாய்? என்று கேட்டான். நான் மந்திரவாதி அல்லவா, அதனால் தான் ” என்று கண்ணைச் சிமிட்டினான் நரேன்.


கங்கா தேவியிடம் பக்தி


கங்காதேவிக்கு விமரிசையாக நடைபெறுகின்ற விசேஷ பூஜைகளில் ஒன்று மகர சங்கராந்தி, அங்கு கங்கைக்கு விசேஷ பூஜைகள்  செய்து, வழிபட்டு, அதில் புனித நீராடி மகிழ்வார்கள். நரேன் தன் நண்பர்களைத் திரட்டி அந்த விழாவைக்கொண்டாட ஏற்பாடு செய்தான். அங்கும் தலைவனாகவே இருந்தான். தந்தையிடம் அனுமதியும் செலவிற்கான பணமும் பெற்றுக்கொண்டான். தந்தை நியமித்த ஆசிரியரிடமிருந்து கங்கா தேவிமீது பக்திப் பாடல்களைக்கற்றுக்கொண்டான். பூஜை நாளன்று சிறுவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து ஊர்வலமாகப்புறப்பட்டனர். கைகளில் கொடிகளும் மலர்மாலைகளும் ஏந்தி, கங்கா தேவியின் மகிமைகளைப் பாடியவாறு தெருக்கள் வழியாகச்சென்றனர். அது ஓர் அற்புத காட்சியாகத்தான் இருந்திருக்கும்.! நேராகக் கங்கையை அடைந்தனர். பின்னர் ”கங்கையை வழிபடுவோம்” என்ற பாடலைப்பாடி, கொண்டு வந்து மலர்மாலைகளை, தவழ்ந்து செல்லும் கங்கையில் சமர்ப்பித்தனர். காலை வழிபாடு முடிந்தது..


பின்னர் மாலையில் அனைவருமாகச்சென்று வாழைத் தடைகளில் சிறு மிதவைகளைச்செய்து, அதில் தீபங்களை ஏற்றி, கங்கையில் மிதக்கவிட்டு கங்கா தேவியை வணங்கினர். நரேனின் குழுவைப்போல இன்னும் பல்வேறு சிறுவர் குழுக்கள் விட்ட அந்தத் தீபங்களின் வரிசை கங்கை முழுவதும் மிதந்து, அசைந்து அசைந்து தவழ்ந்து சென்ற காட்சி எத்தனை ரம்மியமாக இருந்திருக்கும்!


உடற்பயிற்சிக்குழு


நரேன் தன் நண்பர்களுடன் நாடகக்குழு ஒன்றை அமைத்து பல நாடகங்களில் நடித்தான். ஆனால் சில நாடகங்களுக்குப் பிறகு அவனது தாத்தா கோபத்துடன் இனி வீட்டில் அது கூடாது என்று தடுத்துவிட்டார். நாடகக்குழு கலைந்தது! உடனே வீட்டு முற்றத்தில் உடற்பயிற்சிக்குழு ஒன்றை ஆரம்பித்தான். அது உற்சாகமாக நடைபெற்றது. உறவுச் சிறுவன் ஒருவன் கையை உடைத்துக்கொண்டதுடன் அது முடிவுக்கு வந்தது. 

நரேன் விடவில்லை. நவகோபால் மித்ரர் என்பவர் நடத்திய உடற்பயிற்சிக் கூடத்திற்குச்சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபட்டான். நரேன் மற்றும் அவனது நண்பர்களின் ஆர்வத்தைக் கண்ட நவகோபால் , கூடத்தின் பொறுப்பையே அவர்களிடம் ஒப்படைத்தார்.


ஒரு முறை உடற்பயிற்சிக்காக பெரிய மரக்கட்டை ஒன்றை உயரத்தில் பொருத்த வேண்டிருந்தது. பெரிய மரக்கட்டையைச் சிறுவர்கள் பொருத்துவதைக்காண கூட்டம் கூடியது. தங்களால் இயலாத போது அங்கு நின்ற ஆங்கிலேயே மாலுமி ஒருவனை உதவிக்கு அழைத்தான் நரேன். மாலுமி அந்தக் கட்டையைத் தூக்குவதற்கு உதவிக்கொண்டிருந்த போது திடீரென்று கட்டை நழுவி அவனது தலையில் வீழ்ந்தது. 


தலையிலிருந்து ரத்தம் கொப்பளிக்க அவன் கீழே சாய்ந்தான். அவன் இறந்துவிட்டான் என்று கருதிய கூட்டம்  காணாமல் போயிற்று! நரேனும் ஓரிரு நண்பர்களும் மட்டுமே எஞ்சினர். நரேன் சற்றும் தாமதிக்காமல் தனது வேட்டியின் மூலையைக் கிழித்து அவனுடைய தலையில் கட்டுப்போட்டான். அனைவருமாக அவனை அருகில் உள்ள பள்ளி ஒன்றிற்குத் தூக்கிச் சென்றனர். டாக்டர் ஒருவரை வரவழைத்து அவனுக்கு வேண்டிய சிகிச்சை அளித்தனர். அவன் தேறிய பிறகு, நரேனும் நண்பர்களுமாகப் பணம் சேர்த்து அவனுக்குக்கொடுத்து அனுப்பினர்.


 சிலம்ப வீரன்


 சிலம்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான் நரேன். முகமதிய நிபுணர்கள் பலரிடமிருந்து அவன் பயிற்சி பெற்றான். அவனுக்குப் பத்துவயது. மெட்ரோ பாலிடன் பள்ளியில் நடைபெற்ற சிலம்பப்போட்டி ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. பார்வையாளர்கள்  சலிப்படையத் தொடங்கினர். திடீரென்று நரேன் எழுந்தான். கையில் கம்பை எடுத்துச்சுழற்றியபடி, யார் வேண்டுமானாலும்  தன்னுடன் மோதலாம்.என்று சவால் விட்டான். நரேனின் சவாலை ஏற்றுக்கொண்டு வந்தவன் பெரியவன். பலசாலி, நல்ல பயிற்சி பெற்றவன். இருவர் கம்புகளும் மோதின. அனைவரும் பிரமிக்குமாறு கம்பைச்சுழற்றினான் நரேன். வந்தவர்களால்  நரேனை எதிர்த்து நிற்க  இயலவில்லை. ஒரு கட்டத்தில் நரேனின் ஒரே அடியில்எதிராளியின்  கம்பு இரண்டு துண்டாக ஒடிந்து வீழ்ந்தது. கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பரிசையும், வென்றான் நரேன். நீச்சல் , மல்யுத்தம், தற்காப்புக்கலை, படகோட்டுதல் போன்றவையும் அவனுக்குக்கைவந்த கலையாக இருந்தன.


பரிவு


வேடிக்கையும் வினோதமுமாக இருந்தாலும் கருணையும் பரிவும் அவனது செயல்பாடுகள் அனைத்திலும் மிளிர்ந்தன. உடன் இருப்பவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதை விலக்குவதில் அவன் முன்நின்றான். ஒரு நாள் நரேனும் நண்பர்களுமாகக் கல்கத்தா கோட்டையைக்காணச்சென்றிருந்தனர். அவர்களில் ஒருவன் உடல் வலியால் அவதியுற்றான். மற்றவர்கள் அவனை வேடிக்கை செய்து களித்தனர். அவனை விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டனர். நரேனும் அவர்களுடன் சென்றான். ஆனால் சிறிது நேரத்தில்  அவர்களிடம். அவன் உண்மையிலேயே வலியினால் துன்பப்படுகிறான் என்று தோன்றுகிறது. நீங்கள் முன்னால் செல்லுங்கள் , நான் போய் அவனைக் கவனிக்கிறேன் என்று கூறி திரும்பி வந்தான். அந்தச் சிறுவன் ஜீரத்தினால் தவித்துக்கொண்டிருந்தான். நரேன் அவனுக்கு உதவி செய்து, வண்டி யில் அமர்த்தி வீட்டில் கொண்டு போய்ச்சேர்த்தான்.


 MAIN PAGE 

image129

அகநாட்டம்

துணிச்சல்ஒரு நாள் நரேனும் நண்பர்களும் நவாபின் உயிரியல் பூங்காவிற்கு கங்கை வழியாகப் படகில் சென்றனர். திரும்பி வரும்போது நண்பர்களில் ஒருவன் வாந்தியெடுத்துவிட்டான். படகோட்டிகள் அவர் களிடம் படகைச் சுத்தம் செய்யுமாறு கூறினர். சிறுவர்கள் அதனை மறுத்து, பதிலாக இருமடங்கு கட்டணம் தந்துவிடுவதாகக் கூறினர். ஆனால் படகோட்டிகள் ஒத்துக்கொள்ளவில்லை. சுத்தம் செய்யாமல் இறங்கக்கூடாது என்று பயமுறுத்தினர். 


நரேன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தான். வாக்குவாதமும் தர்க்கமும் நடந்து கொண்டிருந்த போது, மெள்ள நழுவி யாரும் காணாதபடி கீழே இறங்கினான். சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த ஆங்கிலசிப்பாய்களைக்கண்டு அவர்களிடம் தங்கள்  பிரச்சனையை, தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்தான். மெள்ள தன் கைகளால் அவர்கள் கைகளைப்பற்றி அவர்களைப் படகிற்கே அழைத்துவந்தான். சிப்பாய்களைக் கண்ட படகோட்டிகள் சிறுவர்களை விட்டுவிட்டனர்.


நரேனின் துணிச்சலும் திறமையும் அந்தச் சிப்பாய்களை மிகவும் கவர்ந்தது. அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்களுடன் தியேட்டருக்கு வருமாறு அழைத்தனர். நரேன் நாசுக்காக அதனை மறுத்து., அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு நண்பர்களுடன் கிளம்பினான். நரேனுக்கு ப் பதினான்கு வயது இருக்கும். ஒருநாள் நாடகம் பார்க்கச்சென்றிருந்தான். நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது நடிகர்களில் ஒருவரைக்கைது செய்வதற்காக ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் வந்தார். 


அவர் நேராக மேடையில் அந்த நடிகரிடம் சென்று, உன்னைக்கைது  செய்கிறேன்” என்று கூறி அவனை நெருங்கினார். திடீரென்று பார்வையாளர்கள் வரிசையிலிருந்து உரத்த குரல் ஒன்று எழுந்தது. மேடையிலிருந்து இறங்குங்கள், நாடகம் முடிந்த பிறகு நீங்கள் வேண்டியதைச்செய்யலாம். பார்வையாளர்களை இப்படி ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று முழங்கியது அந்தக்குரல். அது நரேன்! ஒருவர் துணிச்சலாகக் கூறியதும் மற்றவர்களும் குரலெழுப்பினர். பெருத்த எதிர்ப்பு எழுவதைக்கேட்டு அந்த அதிகாரி பின் வாங்குவதைத்தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. நாடகம் தொடர்ந்தது. பிறகு அனைவரும் நரேனிடம் வந்து., நன்றாகச்செய்தாய் கொடுத்த பணம் வீணாகாமல் காத்தாய், என்று புகழ்ந்தனர்.


விபத்து


நரேனின் துறுதுறுப்பையும் பரபரப்பையும் காணும் போது அவனுள் ஏதோ ஆற்றல் பொங்குவது போல் இருக்கும் என்று ஏற்கனவே கூறினோம். அது உண்மை.அவனுள் இனம்தெரியாத ஆற்றல் ஒன்று வளர்ந்துவந்தது.அது பற்றி பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறினார், என் குழந்தைப் பருவத்திலிருந்தே என்னுள் ஏதோ ஆற்றல்  ஒன்று வளர்ந்து வருவது போல் நான் உணர்வதுண்டு. அது என்னுள் பரந்து என்னை யும் கடந்து வியாபிக்கத் தொடங்கியது. 


அந்த ஆற்றல்தான் என் பரபரப்பிற்குக் காரணம். ஒரு கணமும் என்னைச்சும்மா இருக்கவிடாமல் இயக்கியது அந்த ஆற்றலே. நான் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.வேலை ஒன்றும் இல்லாவிட்டால் ஏதாவது குளறுபடியோ குறும்போ செய்வேன். இரண்டு மூன்று நாட்கள்  நான் எதுவும் செய்யாமல் தொடர்ந்து சும்மா இருந்தால் எனக்கு ஏதாவது நோய் வரும் அல்லது நான் கட்டுங்கடங்காமல்  போய்விடுவேன். பூகம்பம் ஒன்று என்னுள் குமுறி வெடிக்கக்காத்துக் கொண்டிருப்பது போல், அந்த ஆற்றல் என்னுள் இருந்து கொண்டு ”இதைச்செய், அதைச்செய் ” என்று என்னை ஏதாவது செய்யத்தூண்டிக்கொண்டே இருந்தது.


இவ்வளவு ஆற்றலைத்தாங்க உலகம் தயாராக இல்லை. எனவே ஒரு விபத்தின் மூலம் அதுகட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் நண்பர்களுடன் மாடியில் வந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்தான் நரேன். கல் ஒன்றில் நெற்றி அடிபட்டு ரத்தம் குபுகுபுவென்று பாய்ந்தது. ஏராளம் ரத்தம் சேதமாயிற்று. புண் ஆறுவதற்கு சில காலம் பிடித்தது. தழும்போ நெற்றியில் வலது கண்ணுக்கு மேல் நிரந்தரமாக இருந்தது. இந்த விபத்து பற்றி பின்னாளில் கேள்விப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணர், இந்த விபத்தின் மூலம் நரேனின் ஆற்றல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இல்லாவிட்டால் அவன் உலகையே உலுக்கியிருப்பான்” என்று கூறினார்.


 அகநாட்டம்


அந்தஆற்றல் அவனைப்புறத்தில் பரபரப்பாக  வும்  படபடப்பாகவும் இயக்கியதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை அகத்திலும் ஆழ்ந்து நாடச் செய்தது. அவன் குழந்தையாக இருக்கும் போதே புவனேசுவரி, நான் பிள்ளைவரம் கேட்டேன்” சிவபெருமானோ தமது பூதங்களில்  ஒன்றை அனுப்பிவிட்டார், இப்படி குறும்பு செய்தால் சிவபெருமான் உன்னை மீண்டும் கயிலாயத்தில் அனுமதிக்கமாட்டார்” என்றெல்லாம் கூறுவது அவனது மனத்தில் ஆழப்பதிந்திருந்தது. உண்மையிலேயே தான் கயிலாயத்தில் சிவபெருமானைச்சேர்ந்தவன், ஏதோ தவறு செய்ததற்காக அவர் தன்னைப்பூமியில் அனுப்பிவிட்டார் என்று நம்பினான் அவன். எனவே எப்படியாவது  மீண்டும் சிவபெருமானின் உலகை அடையவேண்டும் என்று தவித்தான். அதற்கு என்ன செய்வது! சிவபெருமானை மீண்டும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தால் சிலவேளைகளில் காலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்தே சுலோகங்களைச்சொல்ல ஆரம்பிப்பான், பகல் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்பான். இவ்வாறு ஏழு வயதிலிருந்தே நடைபெற்றது.


வேடிக்கை வினோதம், பரபரப்பு, உற்சாகம் என்று எவ்வளவு தான் புற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் அவ்வப்போது கூட்டத்தைவிட்டு ஒதுங்கித் தனிமையை நாடுவான் நரேன். அவன் தன் உடம்பைவிட்டு ஏதோ தூரதூரப் பிரதேசங்களில் சஞ்சரிப்பவன் போல் அமர்ந்திருப்பான். விளையாட்டும் கும்மாளமுமாக இருந்த நண்பர்கள்  அந்த நேரத்தில் அமைதியாகி விடுவார்கள். அவனது அருகில் செல்லவும் பயப்படுவார்கள். அகமுகமாக அமர்ந்திருக்கின்ற அவன் திடீரென்று பேசத்தொடங்குவான். நான் ஓர் அரசனாவேன். நான் இதைச்சாதிப்பேன், அதைச் சாதிப்பேன். இதை இப்படிச்செய்ய வேண்டும், அதை அப்படிச்செய்ய வேண்டும், என்றெல்லாம் தொடர்பற்ற ஏதேதோ வார்த்தைகள் அவனது வாயிலிருந்து வெளிப்படும். 


சற்று முன்பு அவன் செய்து கொண்டிருந்தவற்றிற்கும், அவன் இருக்கின்ற சூழ்நிலைக்கும் அந்த வார்த்தைகளுக்கும் எந்தப்பொருத்தமும் இருக்காது. சிறிது நேரத்தில் சுய நிலைக்கு வருவான். அப்போது அவனுக்கு அவ்வளவ நேரம் நடந்த எதுவும் நினைவிருக்காது. எல்லோரும் தன்னை  வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பதைக்காணும் போது, அவன் வெட்கத்தால் தலைகுனிவான். பிலே நல்லவன் தான், நன்றாக ச் சிரிப்பான். களிப்பான், வேடிக்கை வினோதங்கள் செய்வான், ஆனால் ஒரு மரை மட்டும் சிறிது கழன்றுள்ளது. சில நேரங்களில் அவன் புலம்புவது என்னவென்றே யாருக்கும் புரியாது” என்பார்கள் நண்பர்கள்.


நரேன் பிறவியிலேயே தியான சித்தன்” என்று பின்னாளில் கூறுவார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதாவது முந்தைய பிறவிகளில் தீவிர தியானம் செய்து நிறைநிலையைக்கண்ட ஒருவர்  என்பது இதன் பொருள். ஏழு வயதிலேயே தன்னை மறந்து, அருகில் பாம்பு படமெடுத்து ஆடுவதையும் வீட்டினர் குரல் எழுப்புவதையும்  அறியாமல் தியானத்தில் ஆழ்ந்திருக்க வேண்டுமானால் அது சாமான்யமான விஷயம் அல்ல என்பது தெளிவு. நாளாக நாளாக அவனது தியானம்  தீவிரமாகத் தொடங்கியது. நரேனின் தியானம் ஒரு பயிற்சியாக இருக்கவில்லை. நீண்ட காலப் பயிற்சிகளின் மூலம்  அடையத்தக்கதான தியான நிலையை அவன் ஏற்கனவே எட்டியிருந்தான். எட்டு வயதிலேயே அவரால் சமாதி நிலையில் ஆழ்ந்திருக்க முடிந்தது” என்று எழுதுகிறார் சகோதரி நிவேதிதை.


ஒளியில் துயிலும் உன்னத பாலன்


நாள்தோறும் அவன் கண்ட காட்சிகள் ஏராளம்,என், அவன் ஒவ்வொரு நாளும்  இரவில் துயிலும் விதமே அலாதியானது. அவன் படுத்து கண்களை மூடியதும். அவனது புருவ மத்தியில் ஓர் ஒளி தோன்றும். பல வண்ணங்களை அள்ளி இறைத்தபடி அந்த ஒளி படிப்படியாகப்பெரிதாகும்.கடைசியில்  அந்த ஒளித்திரள் வெடித்துச்சிதறி அவனது உடம்பு முழுவதையும் வெண்ணிறத் தண்ணொளியில்  முழுக்காட்டும். அந்த ஒளியில் துயில் கொள்வான். அந்த உன்னத பாலன்! சில வேளைகளில் ஒரு பையன் அவன் முன்தோன்றி ஓர் ஒளிப் பந்தைக் காலால் அடிப்பான். அது உருண்டு அவனை நோக்கிவரும். அருகில் நெருங்கியதும் நரேன் அப்படியே அதில் ஒன்றிவிடுவான். எல்லாம் மறந்துபோகும். சிலவேளைகளிலோ அந்த ஒளி விவரிக்க முடியாத பேரொளியாக இருக்கும். அவன் அதில் நுழைந்து அப்படியே கரைந்து விடுவான்.


தூக்கம் என்றால் எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்றே எண்ணியிருந்தான் நரேன். ஒரு நாள் நண்பன் ஒருவனிடம்  அவனுக்கு இத்தகைய அனுபவம்  வருவதுண்டா என்று கேட்டான். அதற்கு அவன், இல்லை என்றான். உடனே நரேன் அவனிடம், படுத்ததும் தூங்கி விடாதே. சிறிதுநேரம் கவனமாக இரு. நீயும் ஒளியைக்காணமுடியும். என்று அறிவுரையும் கூறினான். ஆனாலும் நண்பன் அத்தகைய அனுபவம் எதையும்  பெறவில்லை. என்று கண்டபோது இது தனது தனி அனுபவம் என்பதைப்புரிந்து கொண்டான். அதன் பிறகு அவன் யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லை.


விளையும் பயிர் முளையிலே!


ஒருவனிடம் எத்தனையோ பண்புகள் இருக்கலாம். எத்தனையோ ஆற்றல்கள்  வெளிப்படலாம். எத்தனையோ திறமைகள் திகழலாம். அவை அனைத்திலும் பின்னிக்கொண்டு, அனைத்தின் ஊடேயும் குறிப்பிட்ட ஒரு பண்பு, ஒரு தனித்தன்மை இழையோடும். அந்தத் தனிப்பண்பே அவன் யார், அவனது வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை நிர்ணயிக்கும். நரேனின் வாழ்க்கையிலும் அந்தச் சிறுவயதிலேயே எத்தனையோ பண்புகள் பொலிவதைக் காண்கிறோம். ஆனால் அவை அனைத்தினுள்ளும் இழைந்து நின்றது ஓர் அக நாட்டம். ஓர் அகத்தேடல். அவனது வயதுடைய மற்ற சிறுவர்கள் வாழ்க்கையைப்புறத்தில் கண்டு மனத்தைப்புற வழிகளில் செலுத்தியபோது நரேன் மட்டும் வாழ்க்கையை அகத்தில் கண்டான். மனத்தை அகத்தில் திருப்பி தியானத்தில் ஈடுபட்டான். புலன்களும். மனமும் புறத்தே போகின்ற இயல்பு பெற்றிருக்க , அபூர்வமாக யாரோ ஒரு விவேகி மரணமிலா பெருவாழ்வை நாடி, மனத்தைப் புறத்திலிருந்து அகத்தில் செலுத்தி ஆன்மாவை அறிகிறான் என்று  பேசுகிறது உபநிஷதம். இளமையிலேயே அத்தகைய விவேகியாகத் திகழ்ந்தான் அவன


வாலிபமும் ஆன்மத்தேடலும்


மனித வாழ்க்கையில் வாலிபம் ஒரு முக்கியப்படி. இந்தப் பருவத்தில் தான் மனிதனிடம் தன்னுணர்வு மலர ஆரம்பிக்கிறது. படைப்பாற்றல், சுய மதிப்பு. இயல்புணர்ச்சிகள் ஆகிய மூன்றும் இந்தப் பருவத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டுகின்றன. இந்த மூன்றையும் சரியாக வளர்த்து கையாளத் தெரிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். இந்த மூன்றிற்கும் அடிப்படையாகஅமைவது தேடல். மனிதன் தேடவேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும் என்று உறுதிகொள்ளவேண்டும். குறிக்கோளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிக்கோளை நோக்கி இந்த மூன்றையும் செலுத்தவேண்டும்.


ஆறு வயதிலிருந்தே நரேந்திரனின் தேடல் அகம் சம்பந்தமாக இருந்ததைக்கண்டோம். சக வயதினர் புறத்தை நாடியபோது நரேந்திரன் அகத்தில் தேடினான். தியானத்தில் ஈடுபட்டான். தெரியாத இடத்திந்நுச் செல்லும்போது கைகாட்டிப்பலகைகள் நமக்கு வழிகாட்டுகின்றன. நாம் அந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். சரியான வழியில்  செல்கிறோம் என்பதை தெரிவிக்கின்றன. அது போல் அக அனுபவங்கள் ஒருவனின் அகத்தேடலுக்குக் கை காட்டிப் பலகைகளாகச்செயல்படுகின்றன. நரேந்திரனின் தினசரி தூக்கமே அத்தகையதோர்  அனுபவமாகத்தான் இருந்தது என்பதைக்கண்டோம். பேரொளித்திரளில்  தூங்கினான் அவன். அது தவிர அவன் பல தெய்வீகக் காட்சிகளும் பெற்றான். அவற்றில் ஒன்று புத்தரின் காட்சி. அதனை சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே கேட்போம்.


புத்தரின் காட்சி


 பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் அறையைத் தாளிட்டுக்கொண்டு நான் தியானம் செய்தேன். மனம் மிக ஆழ்ந்து ஒருமுகப்பட்டது. எவ்வளவு நேரம் அந்த நிலையில் இருந்தேன் என்பது தெரியவில்லை. தியானம் கலைந்த பிறகு ஆசனத்தில் உட்கார்ந்திருந்தேன். அப்போத அந்த அறையின் தெற்குச் சுவரிலிருந்து ஒளிமயமான ஒருவர் தோன்றி என் முன் வந்து நின்றார். அமைதிப்பேருருவான ஒரு துறவி அவர். அவரது முகத்திலிருந்து ஓர் அற்புதப் பேரொளி  பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது. அவரது திருமுகம் சலனங்கள் எதுவுமின்றி சாந்தப்  பெருங்கடலாய்த் திகழ்ந்தது. தலை மழிக்கப் பட்டிருந்தது. கையில் கமண்டலமும் தடியும் ஏந்தியிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல விரும்புபவர் போல்  என்னைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றிருந்தார். 


நான் பேச்சற்று உறைந்துப்போய் அமர்ந்திருந்தேன். திடீரென்று ஒரு விதமான பயம் என்னைப் பிடித்துக்கொண்டது. உடனே வேகமாக எழுந்து, அறையின் கதவைத்திறந்து வெளியே ஓடிவிட்டேன். ஆனால் பிறகு, இப்படி ஓடி வந்தது முட்டாள்தனம். இல்லாவிட்டால் அவர் என்னிடம் ஏதோ சொல்லியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. மறுபடியும் அவரைப்பார்த்தால் பயப்படக்கூடாது. அவருடன் பேச வேண்டும் என்றெல்லாம் பலமுறை நினைத்துக்கொண்டேன்.ஆனால் மீண்டும் அவர் என்னிடம் வரவே இல்லை. ஒரு வேளை அவர் புத்தராக இருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.


இயற்கையுடன் இயைந்து


இயற்கையுணர்வு அனுபவமும் நரேந்திரனுக்கு இளமையில் வாய்த்திருந்தது.சிறு வயதிலிருந்தே இயற்கையின் ஆராதகனாகத் திகழ்ந்தான் அவன்.ஆறுகளும் மலைகளும் நதிகளும் குன்றுகளும் பறவைகளும் மிருகங்களும் அவன் மனத்தில் என்றுமே நீங்காமல் இடம் பெற்றவை. இயற்கையுடன் இயைந்து வாழ்வதை அவன் பெரிதும் விரும்பினான். நாமாக முயற்சி செய்து இயற்கையை ரசிப்பது ஒன்று. ஆனால் சிலவேளைகளில் இயல்பாகவே இயற்கை நமக்கு அளிக்கும் பரிசு போல் தானாகக் கிடைக்கின்ற ஓர்அனுபவம்  ஒன்று உண்டு. அதுவே இயற்கையுணர்வு அனுபவம்.இயற்கையின் அழகைக்கண்டு வியந்து நிற்கின்ற நிகழ்ச்சி அல்ல, இயற்கையின் உணர்வில் ஒன்றி அந்த உணர்வில் திளைக்கின்ற ஓர் அக உணர்வு நிலை அது.


திடீரென்று வருகின்ற விழிப்புணர்வு அனுபவம் அது. ஓர் ஆழ்ந்த அமைதி, அனைத்தின் அடிப்படையும்  ஒன்றாக ஒரே உணர்வுமயமாகத்தோன்றுகின்ற ஓர் அனுபவம், அதில் பிரபஞ்ச வாழ்க்கையின் புதிய திடீரென நம்முன் அவிழ்க்கப்படுகிறது. சலனங்கள் எதுவும் இல்லாத, ஆழ்ந்த அமைதியின் அனுபவம் அது, அங்கே கடந்த காலமும் நிகழ்காலமும் கழன்றுவிடுகின்றன. உணர்வு, நிகழ்காலத்தின் அந்தக் கணத்தில் நிலைபெற்று நிற்கிறது. இலைகளின் சலசலப்பு, பறவைகளின் கீதம், தொலைதூரத்தில் அழுகின்ற குழந்தையின் குரல், வலை பின்னும் சிலந்தி, சாரை சாரையாய் விரையும் எறும்புகள், அனைத்தும்  இந்தப் பிரபஞ்ச நாடகத்தின் ஓர் அங்கமாய்த் திகழ்வதை நாம் தனித்து நின்று ஒரு பார்வையாளனாகக் காண்கின்ற அற்புத அனுபவம் இது, இந்த அனுபவம் பத்த, பதினைந்து நிமிடங்கள் நீடிக்கலாம்.


கவிஞர்கள், தத்துவவாதிகள்., ஆன்மீக மேதைகள். பலர் இளம் வயதில் இத்தகைய அனுபவம் பெற்றுள்ளதைக் காண்கிறோம்.சொல்லப்போனால் இத்தகைய  அனுபவம்  பெற்ற சிலரே படைப்பாற்றலுடன் செயல்படுகின்றனர். அவர்கள் எந்தத் துறையைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்தத்துறையில் அவர்களால் புதுமை படைக்க முடிகிறது.வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, ரவீந்திரநாத் தாகூர்,ஜெஃப்ரீஸ்,வில்லியம் பிளேக் போன்ற சிலர் இந்த இயற்கையுணர்வு அனுபவம் பெற்றவர்களே.வேர்ட்ஸ் வொர்த் தமது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

புல்வெளி கிடந்தது, காடுகள் நின்றன,

நீரோடை பாய்ந்தது

பூமியின் சாதாரணக்காட்சிகள் ஒவ்வொன்றும்

துல்லியமாய்த் தெரிந்தன.

அனைத்தும் எனக்கு ஏதோஅற்புத தேவ ஒளியின்

ஆடை புனைந்து நின்றதாய்த்தோன்றிற்று.

கனவில் புதுமையை மகிமையால் நிறைத்தது

அந்த அற்புதக்காட்சி!

இத்தகையோர் அனுபவம் புத்தருக்கு வாய்த்ததாக அவரது வரலாறு கூறுகிறது.


அவர் அரசைத்துறந்து காட்டிற்குச்சென்றபோது காட்டில்  தாம் சந்தித்த ஆச்சாரியரிடம் அவர் கேட்ட முதல் கேள்வி, ஐயா, சிறுவனாக இருக்கும்போது ஒரு மரத்தடியில் நான் அனுபவித்த அந்த ஆனந்த அமைதி அனுபவத்தை மீண்டும் நான் பெறுவதற்பு உதவ முடியுமா? என்பதாகும்.


இத்தகையோர் அற்புத அனுபவம் நரேந்திரனுக்கும் ஏற்பட்டது. அது 1877. அப்போது நரேந்திரன் தற்போதைய எட்டாம் வகுப்பிற்குச் சமமான அன்றைய மூன்றாம்  நிலையில் படித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனது தந்தை வேலை நிமித்தமாக மத்தியப் பிரதேசத்திலுள்ள ராய் பூரில்  சில காலம் தங்கவேண்டியதாயிற்று.தமது குடும்பத்தையும் அங்கே அழைத்துக்கொள்ள நினைத்தார் அவர். அவர் முதலில் சென்றுவிட்டதால் குடும்பத்தை நரேந்திரன் அழைத்துச்சென்றான்.


 அந்த நாளில் நாக்பூருக்கு அப்பால் ரயில் கிடையாது. எனவே அலகாபாத், ஜபல்பூர் வழியாகக் கட்டை வண்டிகளில் பதினைந்து நாட்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டும். வழி நெடுக எத்தனையோ வன வனாந்தரங்கள், ஜன சஞ்சாரமற்ற பாதைகள்! ஆங்காங்கே கிராமங்கள், வயல்கள், நீர் நிலைகள், மாறிமாறி வரும் இயற்கைக்காட்சிகளையும், மக்களையும் ரசித்துக்கொண்டே மாட்டு வண்டியில் சென்றான் நரேந்திரன்.

அன்று என்னவோ வானமே கழுவி விடப்பட்டது.போல் பிரகாசித்துக்கொண்டிருந்தது. காற்றிலும் ஓர் அதிசயமான தெளிவு இருந்தது.காற்றில் அசைந்து மெல்லொலி எழுப்பிய மரங்களின் இலைகளிலும் கொத்துக்கொத்தாகப் பூத்திருந்த மலர்களிலும் என்றுமில்லாத ஒரு தூய்மையும் பசுமை ஒளியும் ததும்பின. அங்கே கூவித்திரிந்த பறவையினங்கள் எழுப்பிய கீதத்தின் எதிரொலி அலைகள் நரேந்திரனின் உள்ளத்தில் நிறைந்தன. 


இத்தனை அழகுகளுக்கும் எல்லைகட்டிவரையறை செய்தன. சாலையின் இரு புறத்தையும் நெருக்கி நின்ற விந்திய மலையின் ஓங்கிய தொடர்கள்.புள்ளினங்கள் நூறுநூறு சப்த ஜாலங்கள், அவற்றின் இறகுகளில் நூறுநூறு வண்ண ஜாலங்கள். மரங்களிலும் கொடிகளிலும் பூத்துக்குலுங்கிய புஷ்பங்களில் நூறுநூறு நிற பேதங்கள். அவற்றைச்சுற்றி ஜிவ்வென்று ரீங்காரமிடும்தேனீக்களின் இசையில் நூறுநூறு ஸ்வர பேதங்கள். பரம ரசிகனான நரேந்திரனும் ஒரு தேனீயாகி அந்த இயற்கை எழிலில் ஊறும் தேனைப்பருகி கொண்டிருந்தான்.


ஆகா! அத்தனை அழகுகளுக்கும் சிகரம்  வைத்தது போல் அதோ அந்த மலைச்சிகரங்களிடையே அதென்ன அற்புத க் காட்சி! ஒரே சிகரம் பிளந்து இரு சிகரங்களாக நிற்பது போன்ற அந்த இடைவெளியில் எத்தனை பெரிய தேன்கூடு! ஆமாம், எத்தனை பெரியது! அவ்வளவு உயரத்தில் இவ்வளவு பெரிய தேன் தேக்கத்தை எழுப்ப எத்தனைக்காலம் பிடித்திருக்கும்! இவ்வளவு பெரிய கூட்டைக்கட்ட எத்தனை ஆயிரம், பதினாயிரம் தேனீக்கள் உழைத்திருக்கும்! இசைச்சுவையும் இன்சுவையுமே வாழ்க்கையான அந்த உயிரினங்கள் அவ்வளவும் இசைந்து எழுப்பிய அற்புதம் அல்லவா, அந்த மலைச்சிகரத்தில் தொங்கும் பிரம்மாண்டமான தேன்கூடு!


மேலே விரிந்து பரந்த நீல ஆகாயம்! அவற்றை முட்டுவனபோல் நின்றன.அந்த நீலத்திலிருந்து பிரிக்க முடியாத நீலமயமான மலைமுகடுகள்! மலை முகட்டில் சின்னஞ்சிறிய ஜீவராசிகளின் மகோன்னதமான ஒத்துழைப்பு நிறுவிய தனிப்பெரும் அழகான இந்தத்தேன்கூடு! இந்த விரிந்து பரந்த ஆகாயம் எங்கிருந்து வந்தது? அதன் அழகு எங்கிருந்து வந்தது? இந்த உன்னதமான மலைத்தொடர்கள் எங்கிருந்து வந்தன? அவற்றின் அழகு எங்கிருந்து வந்தது? லட்சோப வட்சமான அந்தச் சின்னஞ் சிறு தேனீக்கள்  எங்கிருந்து வந்தன?


 எங்கிருந்து, எங்கேயிருந்து?


நரேந்திரனின் சிந்தனை சுழன்றது.

எங்கிருந்து இந்த அழகுமயமான பெருமைகள் உதித்தனவோ  அங்கேயே ஆழ்ந்து அமிழ்ந்து விட்டான் நரேந்திரன்.

மலரின் மென்மையும் மணமும் இனிமையும், மரங்களின் பசுமையும், கொடிகளின் நளினமும், வண்டினங்களின் அன்பான உழைப்பும், பறவைகளின் தேன் ஒலியும், மலைகளின் மௌனமும், வானத்தின் கம்பீரமும் எந்த ஒரு மகாமதியின் கற்பனையில் உதித்தனவோ அந்த மகாமதியிலேயே மூழ்கிவிட்டான் நரேந்திரன்.

புறவுணர்வை இழந்தான்!


புறவுணர்வை இழந்த அந்த நிலையில் நரேந்திரன் எவ்வளவு நேரம் கட்டைவண்டியில் கிடந்தான் என்று சொல்ல முடியாது. ஆனால் வாசனைக்குளிர் நீரில் நீராடி விட்டுத்திரும்பும் போது உடலில் புதுப்பொலிவு காண்பதுபோல, அழகுப்புனலில் குளித்து உள்ளத்தில் புதுப்பொலிவுடன் நரேந்திரன் கண்விழித்தபோது கட்டைவண்டி ஆடிஅசைந்து பல மைல்கள் கடந்து விட்டிருந்தது.


ராய்ப்பூரில்


அந்த நாட்களில் ராய்ப்பூரில் பள்ளியோ கல்லூரியோ கிடையாது. நரேந்திரன்  வீட்டிலேயே இருக்கநேர்ந்தது.இந்த நாட்களில் தந்தையுடன் நெருங்கிப்பழகினான் அவன். தந்தையும் சிந்தனையைத் தூண்டும் பல விஷயங்களை அவனுக்கு விளக்குவார். அவனுடன் வாதிடுவார். அவனது ஆழ்ந்த அறிவும் வாதிடும் திறனும் வளர்ந்தது.

விசுவநாதரைச் சந்திப்பதற்கு அறிஞர்கள் பலர் அவரது வீட்டிற்கு வருவார்கள். அவர்களுக்கிடையில் நடக்கம் உரையாடல்களில் நரேந்திரன் கலந்து கொண்டு தன் கருத்தையும் கூறுவான். அவனது ஆழ்ந்த அறிவைக்கண்டு அனைவரும் தங்களுக்குச் சமமான ஒருவனாக அவனைக்கருதினர். இது விசுவநாதருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒருமுறை விசுவநாதரின் நண்பரான வங்க மொழிப் பண்டிதர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். 


நரேந்திரன் அவருடன் உரையாடியபோது வங்காள இலக்கியங்களிலிருந்து பல பகுதிகளைக் கூறினான். அதைக்கேட்டு வியந்த அந்தப்பண்டிதர், குழந்தாய், நீ ஒரு பெரிய பண்டிதனாவாய்” என்று ஆசீர்வதித்தார்.


தன்மான உணர்ச்சி மிக்கவன் நரேந்திரன், சிறுவனாக இருந்தாலும் தனது மதிநுட்பத்தை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.  எப்போதாவது அந்த அங்கீகாரம் கிடைக்காவிடில் ஆத்திரம் கொள்வான். தன்னை எதிர்த்தவர்கள்  தன்னிடம் வருத்தம் தெரிவிக்காத வரை அமைதி அடைய மாட்டான். தந்தையின் நண்பர்கள்கூட இதற்கு விதி விலக்கல்ல. விசுவநாதரால் அவனது இந்த நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் அவனிடம் அந்தப்போக்கு தவறு என்பதை எடுத்துக்கூறுவார்.ஆனாலும் அவனது துடிப்பையும் தன்மானத்தையும் கண்டு அவர் மனத்திற்குள் பூரிக்காமலும் இல்லை.


ராய்ப்பூரில் நரேந்திரன் இந்தியாவின் பழம்பெரும் விளையாட்டான  சதுரங்கத்தைக் கற்றுக்கொண்டான். சதுரங்கப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றான். ராய்ப்பூரில் தனது தந்தையிடமிருந்து சமையல் கலையையும் பாரம்பரிய சங்கீதத்தையும் கற்றுக்கொண்டான்.


மீண்டும் பள்ளியில்


இரண்டு வருடங்களுக்குப்பிறகு 1879-இல் விசுவநாதர் கல்கத்தா திரும்பினார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நரேந்திரனை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது பிரச்சனை ஆயிற்று. ஆனால் நரேந்திரனைப் பற்றி அவனது ஆசிரியர்களுக்குத் தெரியும். ஆகவே அவனைப்பள்ளியில் சேரவும், அதே ஆண்டில் நுழைவுத்தேர்வு எழுதவும் அனுமதித்தனர். மூன்று வருடப் பாடங்களையும் ஒரே வருடத்தில் படித்து நரேந்திரன் நுழைவுத்தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றான். அவனைத் தவிர அந்தப் பள்ளியில் யாரும் முதல் வகுப்பில் வெற்றி பெறவில்லை. அதற்காக விசுவநாதர் அவனுக்குக் கைக் கடிகாரம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.


நரேந்திரன் மெட்ரோபாலிடன்  பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காகவும் ஓய்வு பெறும் ஆசிரியர் ஒருவரைக் கௌரவிப்பதற்காகவும் ஒரு விழா நடந்தது. தேசியத் தலைவராக சுரேந்திரநாத் பானர்ஜி அந்த விழாவிற்குத் தலைமை தாங்கினார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர். அவருக்கு முன்னால் பேசுவதற்கு மற்ற மாணவர்கள் தயங்கினர். எனவே நரேந்திரனைப்பேசுமாறு கேட்டுக்கொண்டனர். அவனும்  சம்மதித்தான். ஓய்வு பெறும் ஆசிரியரைப் பாராட்டியும், அவர் ஓய்வு பெறுவதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தைத் தெரிவித்தும்  சுமார் அரைமணிநேரம் அருமையாகப்பேசினான். சுரேந்திரநாத் பானர்ஜி அவனை மிகவும் பாராட்டினார்.


இந்த நாட்களில் நரேந்திரன் ஆங்கிலத்திலும் வங்காள மொழியிலும் சிறந்த இலக்கியங்களைக் கற்றான். உயர் கணிதம், சம்ஸ்கிருதம், நமது நாட்டின் வரலாறு ஆகியவற்றையும் ஆழ்ந்து படித்தான். தேர்விற்குச் சில நாட்கள் முன்புதான் பள்ளிப் பாடங்களைப் படித்தான். நுழைவுத்தேர்விற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் தான் ஜியோமிதியைப் படிக்கவே ஆரம்பித்தான். இரவு பகலாக அமர்ந்து நான்கு நூல்களைக் கற்றுத்தேர்ந்தும் விட்டான்.


கல்லூரி


1880 ஜனவரியில் தமது பதினேழாம் வயதில் நரேந்திரர் பிரசிடென்சி கல்லூரியில் முதற்கலை பிரிவில் சேர்ந்தார். வாலிபம் அவரிடம் துளிர் விடத் தொடங்கியிருந்தது. அழகிய முகம், பரந்த விழிகள், கட்டான உடம்பு என்று யாரையும் ஒரு கணம் நின்றுபார்க்க ச்செய்யும் வாலிபராகத் திகழ்ந்தார் அவர். ஆசிரியர்கள் பெரும் பாலானோரும் ஐரோப்பியர்கள். எனவே மாணவர்கள் ஐரோப்பிய உடையிலோ, சப்கான் அணிந்தோ தான் செல்லவேண்டும். நரேந்திரர் சப்கான் அணிவதையே விரும்பினார். 


சுவிட்சர்லாந்து கைக்கடிகாரம் ஒன்றையும் அணிந்திருந்தார்.

முதலாம்  வருடம் தொடர்ந்து கல்லூரி சென்றார் நரேந்திரர். ஆனால் இரண்டாம் வருடம் மலேரியா கண்டதால் பல நாட்கள் வீட்டில் ஓய்வும் சிகிச்சையும் பெற வேண்டியதாயிற்று. குறித்த நாட்களைவிட அதிகமாக விடுப்பு எடுத்ததால் அந்தஆண்டு அவர் அங்கே தேர்வு எழுத முடியாமல் போயிற்று. ஆனால் ஸ்காட்டிஷ் ஜெனரல் மிஷனரி போர்ட் கல்லூரி அவரை ஏற்றுக்கொண்டு தேர்வு எழுத அனுமதித்தது.

 தீவிரப்படிப்பு, தியானம். போன்றவற்றின் காரணமாக அவரது உடல்நலம் சீர்குலைந்தது.எனவே எஃப்.ஏ தேர்வுக்குச் சில மாதங்கள் முன்பு கயை சென்று, அங்கே ஓய்வெடுத்தார். உடல்நிலை தேறியபின் திரும்பிவந்து பரிட்சை எழுதினார். 1881-இல் எஃப் .ஏ.தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேறினார். அதே கல்லூரியில் 1884-ஈல் பி.ஏ தேறினார். 


ஆங்கிலம், வரலாறு, கணக்கு, நியாயம், மன இயல், தத்துவம் போன்றவை அவரது பாடங்களாக இருந்தன. நியாயத்திலும், தத்துவத்திலும், உயர் கணிதத்திலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். இலக்கியத்திலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆங்கிலத்தில் நல்லதேர்ச்சி பெறுவதற்காக அவர் தீவிர முயற்சிகள் எடுத்துக்கொண்டார். குறிப்பாக ஆங்கிலத்திில் பேசுவதற்கும் வாதங்கள் செய்வதற்கும் நல்ல பயிற்சி மேற்கொண்டார். ஆங்கிலச்சொற்பொழிவில் அவர் கல்லூரி மாணவர்களிடையே தலைவராக விளங்கினார்.


பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது, அதே கல்லூரியில் சட்டத்துறையிலும் நரேந்திரரைச்சேர்த்தார் விசுவநாதர். கூடவே நிமாய்சரண்போஸ் என்ற பிரபல வழக்கறிஞரிடம் உதவியாளராகவும் ஆக்கினார். எதிர்காலத்தில் தம்மைப்பொல் சிறந்த வழக்கறிஞராக நரேந்திரன் வரவேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. தந்தையுடன் உயர்நீதி மன்றத்திற்குச் சென்றுவர ஆரம்பித்தார் நரேந்திரர்.அவரை மேற்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு அனுப்பவும் நினைத்தார் விசுவநாதர்.


இந்த நாட்களில் நரேந்திரரின் திருமணப்பேச்சுகள் தொடங்கின. சிலர் அதிகமாக வரதட்சிணை தர முன் வந்தனர். சிலர், நரேந்திரரின் மேற்படிப்பிற்கு  இங்கிலாந்திற்குத்தேவையான பொருட்செலவை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினர். ஆனால் எதற்கும் கட்டுப்பட விரும்பாத நரேந்திரர் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை.


 MAIN PAGE 

image130

அறிவுத்தாகம்

அறிவுத்தாகம்


நரேந்திரரின் படிப்பு பற்றி அறிந்து கொண்டால் அவரது அறிவுத்தாகத்தின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் எஃப் .ஏ படிக்கும்போது, பி.ஏக்கான பாடங்களைப் படித்து முடித்திருந்தார். பி.ஏ படிக்கும் போது அதற்கும் மேலான நூல்களைப் படித்து முடித்தார். உதாரணமாக எஃப் ஏ. படிக்கும் போது  elphinstone  எழுதிய hi;story of india. Marashman  எழுதிய  History of Bengal போன்ற நூல்கள், நியாயத்தில் JEVONS  எழுதிய Elementary lessons on Logic போன்ற உயர்நிலை நூல்கள்,Whately மற்றும் Mill  எழுதிய நூல்கள் போன்றவற்றைப் படித்தார். இவை எல்லாம் பி.ஏக்கு உரியதும் அதைவிட உயர்நிலைப் பாடங்களும் ஆகும்.பி.ஏ படிக்கும் போது  Green எழுதிய History of England,Allison Philips  எழுதிய history of Europe, Gibbon எழுதிய Decline and Fall of the Roman Empire போன்ற நூல்களைப் படித்து முடித்தார். இதில் கடைசி நூல் நான்கு பகுதிகளை உடையது. இந்த நான்கு பகுதிகளையும் மூன்றே நாளில் படித்து முடித்தார் அவர். 


பின்னாளில் கூட இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஒரு வரிகூட மாறாமல் அவரால் ஒப்பிக்க முடிந்திருந்தது. என்று அவரது சகோதரரான மகேந்திர நாத் கூறியுள்ளார். இந்த நூல்  அவருக்குப் பிடித்த நூல்களுள் ஒன்றாக இருந்தது.

இவை தவிர பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் விரிவாகப் படித்தார். வாழ்நாள் முழுவதும்  அவரைக் கவர்ந்த தலைவராகத் திகழ்ந்தார் நெப்போலியன்.அவரது தளபதியான நேயும் நரேந்திரரை மிகவும் கவர்ந்திருந்தார். நே எப்படி நெப்போலியனின் கட்டளைகளுக்கு எதிர்ச்சொல் கூறாமல் பணிந்தாரோ அத்தகைய பணிவு, உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுபவர்களுக்குத்தேவை என்று பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கூறுவதுண்டு.


தத்துவ நூல்கள்


நரேந்திரர் தமது கல்லூரி நாட்களில் மேலை த் தத்துவங்களையும், ஆழ்ந்து கற்றார். டெகார்டே, ஹ்யூம்,கான்ட், ஃபிஷ்டே. ஸ்பினோஸா,ஹகல், ஷோபனேர், காம்டே, டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆகியோரின் நூல்களைப் படித்தார். ஆனால் இந்த நூல்களை அவர் நேரடியாகக் கற்றிருக்க வாய்ப்பில்லை என்று அவரது வாழ்க்கை வலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான ரோமா ரோலா கருதுகிறார். ஆயினும் அவர்களின் கருத்துக்களை நரேந்திரர் தெளிவாகப்புரிந்து கொண்டிருந்தார் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.


 மேலைத் தத்துவ அறிஞர்களில் ஹெர்பட் ஸ்பென்சரின் கருத்துக்கள் நரேந்திரருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஸ்பென்சரின் ஓர் ஆராதகராகவே நரேந்திரர் விளங்கினார். என்றால் அது மிகையாகாது. அவரது கருத்துக்களால் கவரப்பட்ட நரெந்திரர் அவரது கல்வி என்ற நூலை மொழிபெயர்க்க விரும்பினார். அதற்காக அனுமதி கோரி ஸ்பென்சருக்குக் கடிதம் எழுதினார். அதற்கு மனப்பூர்வமாக அனுமதி அளித்த ஸ்பென்சர் இளம் வயதில் நரேந்திரர் கொண்டிருந்த தத்துவச் சிந்தனைகளை மிகவும் பாராட்டினார். நரேந்திரர் ஸ்பென்சரின் நூலைச் சற்று சுருக்கி மொழிபெயர்த்தார். அது ”சிஷா” என்ற பெயரில் வங்க மொழியில் வெளிவந்தது. பின்னாளில் உபநிஷதங்கள் மற்றும் வேதாந்தத்திலுள்ள கடினமான கருத்துக்களை விளக்கும்போது ஸ்பென்சரின் தர்க்க முறையை அவர் பெரிதும் பயன்படுத்தியுள்ளதைக் காண முடியும்.


இவர்களைத் தவிர ஹேமில்டன், மில், லாக்கே, ப்ளேட்டோ ஆகியோரின் தத்துவங்களையும் விரும்பி ப் படித்தார். ஹேமில்டன் தமது தத்துவ நூலின் இறுதியில் ”மனித அறிவு இறைவனுடைய இருப்பைப் பற்றிச்சுற்றிக் காட்ட மட்டுமே வல்லது, அதன் வேலை அத்துடன்முடிந்து விடுகிறது. இறைவனின் இயல்பை விளக்கிக் காட்டும் ஆற்றல்அதற்கு இல்லை. ஆகையால் இங்கு தத்துவங்கள் முற்றுப்பெறுகின்றன. எங்கு தத்துவங்கள் முற்றுப் பெறுகின்றனவோ அங்கு ஆன்மீகம் தொடங்குகிறது. என்று கூறுகிறார்.ஹேமில்டனின் கடைசி வரிகள் நரேந்திரருக்கு மிகவும் பிடித்தவை.பேச்சில் இடையே அவர் இதனை மேற்கோள் காட்டுவதுண்டு. தியானத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட போதிலும் அவர் படிப்பை விடவில்லை. படிப்பு, தியானம், இசை ஆகியவற்றில் அதிக நேரத்தைச்செலவிட்டார்.


இலக்கியம்


இலக்கியத்திலும் தீவிரமான ஆர்வம் காட்டினார். நரேந்திரர்.சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலுள்ள காவியங்களைப் படித்தார். வங்கமொழியிலள்ள ராமாயணமும் மகாபாரதமும் அவருக்கு அத்துப்படியாக இருந்தன. பல நேரங்களில் பண்டிதர்கள் திணறும்போது நரேந்திரர் அவர்களுக்கு அடியெடுத்துக்கொடுத்துள்ளார்.


ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் , மில்டன், பைரன், வேர்ட்ஸ்வொர்த். ஆகியோரை அவர் விரும்பிப்படித்தார். ஷேக்ஸ்பியரின் Romeo and juliet,Midsummer Night Dream போன்ற நாடகங்களிலிருந்து அவர் பின்னாளில் சொற்பொழிவுகளில் பல மேற்கோள்களைக் காட்டியுள்ளார்.மில்டனின் paradise lost  அவரை மிகவும் கவர்ந்த ஒரு காவியம். ஒரே ஒரு பாவம் தான் உண்டு. அதுவே பலவீனம். நான் சிறுவனாயிருந்த போது மில்டன் எழுதிய ”இழந்த சொர்க்கம்” என்ற கவிதையைப் படித்தேன். அதில் எனக்கு மதிப்பு ஏற்பட்ட ஒரே நல்லவன் சாத்தானே. பலவீனமின்றி எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாவதற்கும்  ஆயத்தமாக இருப்பவன் மட்டுமே மகான். என்று பின்னாளில் அவர் தமது கீதைச் சொற்பொழிவில் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.


நரேந்திரரின் நாட்களில் வங்கமொழி இலக்கியங்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. இருந்த அனைத்தையும் அவர் படித்தார். பரத் சந்திரர் எழுதிய ” அன்னதா மங்கல்“ வித்யா சுந்தர்” போன்ற நூல்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டியுள்ளார். பங்கிம் சந்திரர் மற்றும் தீனபந்து மித்ரரின்  அனைத்து நூல்களையும் ஈசுவர சந்திர குப்தரின் கவிதைகளையும் கற்றிருந்தார். மைக்கேல் மதுசூதனரின் ”மேகநாத வதம்” அவருக்கு  மிகவும் பிடித்திருந்தது. அதிலும் ”ராவணன் ” பாத்திரம் படைக்கப்பட்டிருந்த விதத்தைப் பின்னாளில் அவர் பாராட்டிக்குறிப்பிட்டதுண்டு.

இத்தனை நூல்களை ஒருவர் கற்றிருக்க முடியுமா என்று ஒரு வேளை சந்தேகம் எழலாம். ஆனால் நரேந்திரர் படிக்கும் விதமே அலாதியானது. என்பதை நாம் மறக்கக்கூடாது.


 தாம் படிக்கும் விதத்தை அவரே இப்படிக்கூறுவார்.ஒவ்வொரு வரியையும் படிக்காமல் பத்தியின் முதல் மற்றும் கடைசி வரிகளைப் படிப்பதன் மூலமே மொத்தக்கருத்தையும் என்னால் அறிந்துக்கொள்ள முடிந்தது. இந்தத் திறமை வளர்ந்த உடன் பத்திகளைப் படிப்பதும் தேவையற்றதாகிவிட்டது. பக்கத்தின் முதல் மற்றும் கடைசி வரியைப்  படிப்பதன் மூலமே என்னால் மொத்தக்கருத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர் ஏதாவது புதிய கருத்தினை அறிமுகம் செய்யும் போது அதை நாலைந்து பக்கங்களில் விவரிப்பார். அதிலும் முதல் சில வரிகளைப் படித்த  உடனேயே என்னால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இப்படிப் படித்தால் தான் அவரால் அத்தனை நூல்களைப் படிக்க முடிந்தது.


இசை


இசையில் நரேந்திரர் ஆழ்ந்து மூழ்கினார். ஆழ்ந்த உணர்வு, இனிய குரல், அதற்கு மெருகேற்றும் சங்கீத ஞானம் எல்லாம் இயல்பாகவே அவரிடம் இருந்தன. அதனுடன் தந்தை தந்த ஊக்கமும் சேர்ந்து அவரை ஓர் இசைக்கலைஞராக ஆக்கியிருந்தார். வேணி மாதவ் அதிகாரி, உஸ்தாத் அஹமத்  கான், அவரது சீடர்கள் ஆகியோரிடமிருந்து அவர் சங்கீதம் கற்றார். பிரபல துருபத் பாடகரான ஜ்வாலா பிரசாதிடமிருந்து துருபத் சங்கீதம் பயின்றார். காசி நாத், கோஷாலிடமிருந்து பாயா, தபேலா, பக்வாஜ் ஆகிய இசைக் கருவிகளை வாசிக்கக்கற்றார். துருபத் சங்கீதத்தில் அவர் பெரிய மேதையாகவே  இருந்தார். இவை தவிர கீர்த்தனை, பஜனை, சியாமா சங்கீதம், ராம பிரசாதரின் பாடல்கள், ஆகமணி பாடல்கள், போன்ற வங்க மொழி இசைப்பிரிவுகளிலும் விற்பன்னராக விளங்கினார். இசை மிக உயர்ந்த கலை. அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு அது மிக உயர்ந்த வழிபாடு என்று பின்னாளில் எழுதினார் அவர்.


ஒரு முறை நரேந்திரரின் நண்பன் ஒருவன் தேர்ச்சி பெற்ற பாடகனைப்போல் பாடினான். அதற்கு நரேந்திரர். ராகமும், தாளமும், மட்டுமே இசையாகிவிடாது. ஒரு கருத்தை அது வெளிப்படுத்த வேண்டும். வெறுமனே இழுத்தும் நீட்டியும் பாடப்படும் பாட்டை யாராலும் ரசிக்க முடியாது. பாட்டின் அடிப்படைக்கருத்து பாடுபவனின் உணர்ச்சிகளைத்தூண்ட வேண்டும். சொற்கள் நன்றாக உச்சரிக்கப்பட வேண்டும். ராகமும் தாளமும் பொருந்தவேண்டும். பாடுபவனின் உணர்வுகளைத்தூண்டாத இசை இசையே அல்ல” என்று கூறினார்.


இசை என்பது அவரது இயல்பிலேயே, இதயத்திலேயே ரத்த நாளங்களிலேயே கலந்து விட்ட ஒன்றாக இருந்தது. நல்ல குரல் வளமும் இசை ஞானமும் நிறைந்த அவர் பாடும் போது கேட்போர் மெய்மறந்து போவார்கள்.

இசையில் மட்டுமல்ல, இசையியலிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார் நரேந்திரர்.1887-ஆம் ஆண்டு ஸ்ரீசண்டி சரண் பஸக் என்பவர், ”சங்கீத கல்பதரு“ என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலின் பல பகுதிகளைத்தொகுத்தவர் நரேந்திரரே. அந்த நூலின் அறிமுக உரையில் சங்கீதத்தின் பல அம்சங்களையும் இசைக்கருவியின் தத்துவங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் நரேந்திரர் விவரித்திருந்தார். அந்த நூலின் ஒரு பகுதியான’ஸ்ங்கீத ஸங்க்ரஹம்”  என்னும் அத்தியாயம். இந்தியாவின் பல மொழிகளிலிருந்து தொகுக்கப்பட்ட பக்தி பாடல்களைக்கொண்டிருந்தது. பிற்சேர்க்கையில் அந்தப் பாடல்களை எழுதியவர்களின் வாழ்க்கைச் சரிதம் கொடுக்கப் பட்டிருந்தது. இந்தப் பகுதியையும் நரேந்திரரே எழுதினார்.


பொருள் பொதிந்த பாடல்களைச் சந்த நயத்துடன் இயற்றுவதிலும் நரேந்திரர் தேர்ச்சி பெற்றிருந்தார். நாட்டியத்திலும் சிறந்தவராக இருந்தார். அழகிய உறுதியான உடலும், அகன்று விரிந்த கண்களும், அதற்கு ஏற்ற மனமும், எல்லாவற்றையும் மிஞ்சுகின்ற கற்பனை வளமும் அவரது நாட்டியத்திற்கு மெருகூட்டின. பாடல்களைப் பாடிக்கொண்டே ஆடுவார். அது காண்பவர்களுக்க அரிய விருந்தாக இருக்கும்.


மேதை


புற அலங்காரங்கள் எதையும் அவர் விரும்பவில்லை. முடியை அலங்காரமாக வாரிக்கொள்வது, பலரைக் கவரும் வண்ணம் உடையணிவது போன்றவற்றை அவர் வெறுத்தார்.

தத்துவம், இலக்கியம், இசை ஆகியவை நரேந்திரர் சாதனை படைத்த சில துறைகள் மட்டுமே. இவற்றை நாம் விரிவாகக்கண்டது அவரது மேதை-பரிமாணத்தை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்வதற்காகவே, ஓர் இளைஞனால் இவை எல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் என்பது தான் நரேந்திரரின் வாழ்க்கை நமக்கு அளிக்கும் விடை, இவற்றை அவர் சாதித்தார்.


கல்லூரிப் பாடங்கள் என்ற எல்லையைக் கடந்து இத்தனை துறைகளில் தமது திறமையை வெளிக்காட்டியதாலோ என்னவோ கல்லூரிப் பாடங்களில்அவரது மதிப்பெண்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. அவர் பெற்ற மதிப்பெண்களைச்சற்று பார்ப்போம்.


நுழைவு வகுப்பு (Entrance-1879), ஆங்கிலம்-47, வங்காளம்-76, வரலாறு-45, கணிதம்-38, மொத்தம் 206( முதல் நிலை)

முதல் கலை(F.A.1881) ஆங்கிலம் 46, வங்காளம் 36, வரலாறு 56, கணிதம் 40, நியாயம் ஐம்பதிற்கு பதினேழு, மன இயல் ஐம்பதிற்கு முப்பத்திநான்கு, மொத்தம் 229(இரண்டாம் நிலை)

இளகலை(B.A 1884) –ஆங்கிலம் 56, கணிதம் 61, வங்காளம் 43, வரலாறு 56, மொத்தம் 261( இரண்டாம் நிலை)


நரேந்திரரைப்போன்ற கூரிய அறிவு படைத்த ஒருவர், இப்படி இரண்டாம் நிலை மதிப்பெண்கள் எடுப்பார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் தமது கல்லூரிப்பாடங்களுக்கு மிகக்குறைந்தநேரமே ஒதுக்கினார். அவை அவரது அறிவு தாகத்திற்குப் போதுமானவையாக  இல்லை. எனவே அவற்றைப் பயில்வதை அவர் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. தேர்வுக்கு ஓரிரு மாதங்கள் முன்புவரை அவர் பாடங்கள் எதையும் படிப்பதில்லை. அதன் பிறகு இரவுபகலாகப் பாடங்களைில் மூழ்கியிருப்பார். தேர்வு எழுதுவார்.தேறிவிடுவார்.


பி.ஏ. பரிட்சைக்கு ஒரு மாதம் முன்புவரை தமது பாடங்களில் ஒன்றான, க்ரீன் எழுதிய ஆங்கிலேயர்களின் வரலாறு என்ற நூலை அவர் படிக்கவே இல்லை என்பது மட்டுமல்ல, நூலை வாங்கக்கூட இல்லை. அதன் பிறகு வாங்கினார். இதைப் படித்து முடிக்காமல் அறையை விட்டு வெளியே வருவதில்லை. என்று ஒரு சங்கல்பம் செய்து கொண்டார். மூன்று நாட்களில் படித்து முடித்தார். இப்படித் தீவிரமாகப் படிக்கும்போது இரவில் காப்பி, டீ போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்வார். ஒரு வேளை தூங்க நேர்ந்தால், காலை அசைக்கும் போது எழுந்து கொள்வதற்காகக் காலில் கயிறு ஒன்றையும் கட்டிக்கொள்வார்.


தேர்வில் தேறுவதற்கு எவ்வளவு படிக்கவேண்டுமோ. அவ்வளவு தான் படிப்பார். அதன் பிறகு நேரம் இருந்தாலும் பாடங்களைப் படிக்க  மாட்டார். பி.ஏ. தேர்வு நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து தமது நண்பர்களின் வீட்டிற்குச்சென்றார். அவர்கள் இன்னும் படுக்கையில் இருந்தனர். எனவே வெளியில் நின்று ரவீந்திரநாத் தாகூரின் பாடல்  ஒன்றை உரக்கப் பாடினார்.

 மலைகளே , முகில்களே, மலயமாருதங்களே!

மூலப்பொருள் மகிமை பாடி மகிழுங்கள்!

சூரியர்களே, சந்திரர்களே, சுடர்வீசும் தாரகைகளே!

சத்தியப் பொருள் பெருமை பாடி மகிழுங்கள்!

பாடி மகிழுங்கள், மகிழ்ந்துணர்ந்து பாடுங்கள்!

அப்படி அவர்களை எழுப்பி, அவர்கள் மறுத்தும் கேட்காமல் ஒன்பது மணிவரை பாடியும் பேசியும் காலம் போக்கினார். இப்படி தேர்வை ஒரு பொருட்டாக எண்ணாத நரேந்திரர் பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல!


வாலிபர்


நரேந்திரர் படிப்பிலும், இசையிலும், தத்துவத்திலும்  பெரிய மேதையாகத் திகழ்ந்தார் என்பதற்காக அவர்  எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் என்பது பொருள் அல்ல. அவர் இருக்கம் இடத்தில் வேடிக்கையும் வினோதமும் களிப்பும் கும்மாளமும் குடிகொண்டிருக்கும். இதற்காகவே அவரது நண்பர்கள் அவரை நேசித்தனர். கல்கத்தா அன்றைய இந்தியாவின் தலைநகரம். ஒரு பெரிய நகரத்தில் வாழ்கின்ற ஒரு பணக்கார வாலிபனின் வாழ்க்கை பொதுவாக எப்படி இருக்குமோ அப்படியே நரேந்திரரின் வாழ்க்கையும் இருந்தது. அவரது ஆர்வமும் துடிப்பும் அவருக்குப்பல நண்பர்களைச் சம்பாதித்துத் தந்தன. அவர்கள் இவருடன் இருப்பதை மிகவும் விரும்பினர். 


ஞாயிறோ விடுமுறை நாட்களோ வந்தால் எல்லோரும் கங்கையில் தான் .குளிப்பதும், கும்மாளமுமாக மணிக்கணக்காக நேரம் கழியும், சிலவேளைகளில் வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அத்தனை பேரும் தங்களை அதில் திணித்துக்கொண்டு உரத்த குரலில் பாடி ஆடி கும்மாளமிட்டபடி கல்கத்தா தெருக்களை வலம் வருவார்கள்.நரேந்திரரின் நண்பர்களில் சிலரது ஒழுக்கம் பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் கிடையாது. அத்தகைய நண்பர்களுடன் பழகுவது வீட்டிலும் வெளியிலும் பலருக்குப் பிடிக்கவில்லை.ஆனால் நரேந்திரர் அது பற்றி கவலைப்படவில்லை. அவர் பிறரது வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்தாரே தவிர, பிறரது வாழ்க்கை தம்மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அவர் இல்லை.


நண்பனுக்கு உதவி


 ஜெனரல் மிஷனரி கல்லூரி ஏழை மாணவர்களுக்குத்தேர்வு க் கட்டணத்தையும், கல்விக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வது வழக்கம். அதற்கு, மாணவனின் ஏழ்மை நிலை நிரூபிக்கப் பட வேண்டும். நரேந்திரரின் நண்பன் ஹரிதாஸ் சட்டோ பாத்தியாயர் ஏழை, அவனால் தேர்வுக் கட்டணத்தையும் கல்விக்கட்டணத்தையும் செலுத்த இயலவில்லை. கல்லூரி தலைமை எழுத்தரிடம் பேசி ஹரிதாசின் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய ஏற்பாடு செய்வதாகக்கூறினார் நரேந்திரர்.


அப்போது ராஜ்குமார் என்பவர் தலைமை எழுத்தராகப் பணியாற்றினார். ஒரு நாள் அவரது அலுவலகத்திற்கு நரேந்திரர் சென்று ஹரிதாசிற்காகப் பரிந்து பேசினார். ஹரிதாசினால் கல்லூரி கட்டணத்தைச்செலுத்த இயலாது. நீங்கள் அவனைத்தேர்வு எழுத அனுமதித்தால் அவன் முதல் வகுப்பில்  தேர்ச்சி பெறுவான். இல்லாவிட்டால் அவன் வாழ்வே பாழாகிவிடும். தயவு செய்து அவனைத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என்றெல்லாம் கேட்டுக்கொண்டார். ஆனால் ராஜ்குமார் அதனை ஏற்றுக்கொள்ளாமல், உன்னுடைய சிபாரிசு தேவையற்றது, நீ உன் வேலையை மட்டும் பார். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் அவன் தேர்வு எழுத முடியாது, என்று கூறிவிட்டார். ஹரிதாஸ் மிகவும் வருத்தமடைந்தார். நரேந்திரர் அவரைத் தேற்றி மனச்சோர்வுக்கு இடம் அளிக்காதே, எப்படியாவது நான் இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கிறேன், தைரியமாக இரு, என்று கூறினார்.


அன்று கல்லூரி முடிந்ததும் நரேந்திரர் வீட்டிற்குச் செல்லாமல் ஊரின்  ஒதுக்குப்புறத்தில் இருந்த ஓர் இடத்திற்குச்சென்றார். அபின் முதலிய போதைப்பொருட்கள் புழங்கும் இடம் அது. வழக்கமாக ராஜ்குமார் அந்த இடத்திற்குச் செல்வார். அன்று நன்றாக இருட்டிய பிறகு யாரும் அறியாமல் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார் ராஜ்குமார். திடீரென்று ராஜ்குமாரின் முன்னால் நரேந்திரர் சென்று நின்றார். அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவரைப்பார்த்த ராஜ்குமாருக்குத் திகைப்பு ,நரேந்திரா என்ன விஷயம்? என்று கேட்டார். 

நரேந்திரர் ஹரிதாசின் விஷயத்தைக்கூறினார். கட்டணத்தைத் தள்ளுபடி செய்யாவிட்டால் அபின் பழக்கத்தை  எல்லோருக்கும் தெரியப் படுத்தி விடுவதாகப் பயமுறுத்தினார். பயந்து போன ராஜ்குமார் ஹரிதாசின் கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாகவும், தேர்வு க் கட்டணத்தை மட்டும் ஹரிதாஸ் செலுத்த வேண்டும் என்ற அளவில் ஒப்புக்கொண்டார்.

ஒரு முறை நண்பர் ஒருவர் நரேந்திரரைப்பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்.


நரேந்திரன் பேசுவதைக்கேட்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அதற்காகவே நாங்கள் ஏதாவது ஒரு கருத்தைப்ற்றி பேச்சைத் துவங்குவோம். நரேந்திரன்  தனக்கே உரிய பாணியில் அதனை விளக்குவான். யாராவது அவனது கருத்தை மறுத்துப்பேசினால் அவர்களைத்தனதுவாதத் திறமையால்  திக்கு முக்காடச்செய்வான். எல்லாவிதமான பலவீனங்களையும் அவன் அறவே வெறுத்தான். துணிவையும், திறமையையும் வலிமையையும் மிகவும் வரவேற்றான்... ஒரு முறை நான் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது அவனுக்கு உடல் நிலை சரியில்லை. படுத்தப்படுக்கையாக இருந்தான். ஆனாலும் என்னைக் கண்டவுடன் என்னை வரவேற்கவும் உபசரிக்கவும் முற்பட்டான். நான் எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்கவில்லை. நான் புகைப்பதற்கு ஹீக்காவும் தயார் செய்யத் தொடங்கினான். அவனது அன்பு கரைகாணாததாக இருந்தது.-


அன்றைய சமுதாயம்


இது வரை நாம் கண்டது நரேந்திரர் சந்தித்த வாழ்க்கையின் ஒரு பக்கம்.-அற்புதமான கொள்கைகள் கோட்பாடுகள், உன்னதமான லட்சியங்கள், கவிதை நயம் சொட்டும் இலக்கியங்கள், இறைவனின் வடிவமாகக் கருதப்படும் இசை உலகம். இவை விரித்த சித்திரம் மகோன்னதமானது.ஆனால் நிஜ வாழ்க்கையில் நரேந்திரர் கண்ட சித்திரம் என்ன? 

அது முற்றிலும் மாறானது. இந்தக் கொள்கைகளுடனோ கவிதை நயங்களுடனோ சிறிதும் தொடர்பில்லாதது. நாங்கள் பிறந்த கால சமுதாயம் இழிவானதாக, வெறுப்பூட்டுவதாக, அஞ்சத் தக்கதாக இருந்தது. என்று கூறி அந்தச் சித்திரத்தை விவரிக்கிறார். 


நரேந்திரரின்  சகோதரரான மகேந்திரர், குறிப்பாக நரேந்திரர் வசித்த சிமூலியா பகுதி குடிகாரர்களின் ராஜ்யமாக இருந்தது. மாலை வேளையானால் குடித்துவிட்டுச் சேற்றில் புரள்வார்கள். சிலர். அவர்களைக்கைது செய்ய வரும் போலீசாருக்கும் அவர்களுக்கும் தினசரி சண்டையும் வழக்கும் நடைபெறும். விசேஷ பூஜை நாட்கள் வந்துவிட்டால் ஆடுகளையும் எருமைகளையும் பலியிட்டு அங்கங்கே ரத்தக்களரிகள் காட்சியளிக்கும்.கேட்கச் சகிக்காத கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடுகின்ற பஞ்சாலி, தர்ஜா போன்ற சங்கீதங்கள் விசேஷ நாட்களில் தெருவெங்கும் கேட்கும். இனி தந்திர சாதனை என்ற பெயரில் வெறுக்கத்தக்க, இழிந்த செயல்களைச்செய்து திரிந்த கூட்டம் மற்றொருபக்கம்.


பெண்ணிற்கு எட்டு வயது ஆகியிருந்தால் அவளுக்குத் திருமணம் முடிந்திருக்கவேண்டும். பதினாறு வயதிற்குமெல் ஒருவன் திருமணம் ஆகாமல் இருந்தால் அவன் ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப் படுவான். தங்கள் வீட்டில் ஒரு விசேஷம் அல்லது விழா நடைபெறப்போகிறது என்று பிறரை அழைக்க வருபவனுக்குத்தனது குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் பெயர்  தெரிந்திருக்க வேண்டும். குலம், கோத்திரம் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.அப்போது மட்டுமே அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படும். இது விஷயமாகக் குடும்பங்களுக்கு இடையே எழுகின்ற சண்டைகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.


பட்டாச்சாரியா பிராமணன் இருக்கும் வரிசையில் கோஸ்வாமி பிராமணன் இரக்க மாட்டான். பிராமணர் களுக்கு இடையிலேயே இப்படி ஜாதிப்பிரிவினைகள் என்றால் அவர்களுக்கும் மற்ற ஜாதியினருக்கும் இடையிலுள்ள குழப்பங்களைப்பற்றி என்ன சொல்வது.!


மதம் என்ற பகுதிக்கு வந்தால், அப்படி ஒன்று எங்குமே இல்லை எனலாம். இந்து மதத்திற்கென்று போதிய நூல்கள் இல்லை. ராமாயண, மகாபாரதங்கள் இருக்கவே செய்தன. ஆனால் வேதவேதாந்தங்கள்  போன்ற உயரிய கருத்துக்களைக்கூறுகின்ற நூல்கள் கிடையாது. கீதை, உபநிஷதங்கள் போன்ற வார்த்தைகளைப் பலர் கேட்டதுடன் சரி, அந்த நூல்களைக் கண்டது கூட கிடையாது. ஏதோ ஒரு சில பட்டாச்சாரிய பிராமணர்கள் சண்டி ஓதுவார்கள். சைதன்யரின் நூல்களும் அவ்வளவு பிரபலமாகவில்லை.-சண்டி-(தேவீ மாஹாத்மியம்)


கிறிஸ்தவ மிஷனரிகள்


 இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மிஷனரிகள் ஏராளம் கிறிஸ்தவ நூல்களை அச்சிட்டு வினியோகித்தனர்.சாலை சந்திப்புகளிலும் , சந்தைகளிலும், பொது இடங்களிலும் கூட்டம் போட்டு இந்து தெய்வங்களைப்பழிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தனர். ஒரு நாள் நரேந்திரர் சென்று கொண்டிருந்த சாலையில் இத்தகைய கூட்டம்  ஒன்று நடைபெற்றது. ஒரு மிஷனரி, கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்று சொல்வது தான் பாவம். இத்தகைய மூடநம்பிக்கைகள் நிறைந்தது தான்  இந்து மதம்” என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தார். நரேந்திரரால் பொறுக்க இயலவில்லை. அவர் அதனை எதிர்த்தார். கூட்டத்தில் சிலர் மிஷனரியை ஆதரிக்க, சிலர் நரேந்திரரை ஆதரிக்க பெரும் பிரச்சனையாகிவிட்டது. எங்கே அது ஒரு மதக் கலவரமாக மாறிவிடுமோ என்று பயந்த நேரத்தில் எப்படியோ இரண்டு கூட்டத்தினரும்  தணிந்து அத்தகையதொரு சூழ்நிலையைத் தவிர்த்தனர்


இந்து மதத்தின் உயர்ந்த கருத்துக்களை அறிந்து கொள்வதற்குப்போதிய நூல்கள் இல்லை. அதனால் மிஷனரிகளின் குற்றச்சாட்டுகளை மறுக்க இந்துக்களால் இயலவில்லை. அவர்களால் சொந்த மதத்தை விடவும் முடியவில்லை. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை.


இந்து மதத்தில் பழமை வாதமும் மூடநம்பிக்கைகளும் மலிந்து கிடப்பது உண்மைதான் என்பதை இந்துக்கள் சிலராவது உணரத் தொடங்கியிருந்தனர். ஆனால் அதன் காரணம் என்ன எங்கே தவறு என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. எனவே மதத்தின் மீதே பழியைப்போட்டு பலர் இந்து மதத்திலிருந்தே விலக முற்பட்டனர். சிலர் இந்து மதத்தின்  சில நம்பிக்கைகளை விட்டு, அதே வேளையில் கிறிஸ்தவ மதத்தின் சில கருத்துக்களைப் புகுத்தி ஒரு விதமான ஒரு புதிய நெறியை அளிக்கத் தொடங்கினர். இத்தகைய இயக்கங்களில் முக்கியமான ஒன்று பிரம்ம சமாஜம்.


அன்றைய கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல கடவுள் கொள்கை உருவ வழிபாடு, அவதாரக்கொள்கை குருவின் தேவை முதலிய கொள்கைகளை இந்த சமாஜம் எதிர்த்தது, உருவமற்ற. ஆனால் குணங்களுடன் கூடிய ஒரே கடவுள் கொள்கையை அது ஆதரித்தது. சமுதாயத்திலும் கூட பல சீர்திருத்தங்களைக்கொண்டு வர முற்பட்டது. ஜாதிக் கட்டுப்பாடுகளை நீக்குதல், அனைவருக்கும் சம உரிமையளித்தல், பெண்கள் கல்வி, பெண்களின் திருமண வயது வரம்பை உயர்த்துதல் முதலியவற்றை அது கொள்கைகளாகக்கொண்டிருந்தது.


1828-இல் ராஜாராம் மோகன்ராயால் தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம் மகரிஷி தேவேந்திரநாத் தாகூரால் வளர்க்கப்பட்டது. இவர் தமத கருத்துக்களுக்கு அடிப்படையாக உபநிஷதங்களை ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமலும் பார்த்துக்கொண்டார். அடுத்த தலைவராக வந்தவர் கேசவ சந்திர சேன். இவர் சம்ஸ்கிருதம் பயிலவில்லை.  ஆங்கிலக்கல்வி பெற்றவர். கிறிஸ்தவ மதத்தில் ஈடுபாடு காட்டினார். எனவே ஏசுவை பிரம்ம சமாஜத்தில் புகுத்த முயன்றார். அதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இவர் தமது ஆதரவாளர்களுடன்  இந்திய பிரம்ம சமாஜம் என்ற ஒன்றைத்தோற்றுவித்தார். பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. 


பின்னாளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களின் தாக்கத்தால் கேசவரின் கருத்துக்கள் வெகுவாகமாறின. இந்தப்புதிய  கருத்துக்களுடன் இந்திய பிரம்ம சமாஜம், நவ விதானம் என்ற பெயரில் அறியப் பட்டது. தமது பெண்ணின் திருமண விஷயத்தில் கேசவர் சமாஜ விதிகளை மீறியதால் விஜய கிருஷ்ண கோஸ்வாமி., சிவநாத் சாஸ்திரி போன்ற தலைவர்கள் பிரிந்து சென்று சாதாரண பிரம்ம சமாஜம் என்ற ஒன்றை உருவாக்கினர். நரேந்திரர் இந்தச் சாதாரண பிரம்ம சமாஜ உறுப்பினராக இருந்தார்.


பிரம்ம சமாஜம் சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்களின் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்போதும் புதிய கருத்துக்களை வரவேற்கும் நரேந்திரரும் சமாஜத்தின் கருத்துக்களால் கரவப்பட்டார்.rமாஜத்தின் பிராத்தனைக்கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லத்தொடங்கினார்.சமாஜத்தின் கொள்ளையைத் தாமும் ஏற்றுக்கொண்டார்.அதில் நடைபெற்ற ”நவவிதான்” என்ற நாடகத்தில் ஒரு துறவியாக நடிக்கவும் செய்தார்.


சைவ உணவு


கேசவசந்திர சேன்  மிகச்சிறந்த பேச்சாளர்.தமது வாதத் திறமையினாலும் கூரிய அறிவினாலும் ஆழ்ந்த சிந்தனையாலும் எளிமையினாலும் கம்பீரத்தோற்றத்தினாலும்  பலரைக் கவர்ந்திருந்தார். தாமும் ஒருநாள் அவரைப்போல் ஆக வேண்டும் என்று கூட நரேந்திரர் எண்ணியதுண்டு.

பிரம்ம சமாஜத்தின் அறிவுபூர்வமான அணுகுமுறை ஆரம்ப காலத்தில் நரேந்திரருக்குப் பிடித்திருந்தது. பிரார்த்தனைகளாலும் பக்திப் பாடல்களாலும் தாம் உயர்வுற்றதுபோல்  உணர்ந்தார். உடனே சமாஜத்தின் கொள்கைகளை மிகவும் தீவிரமாகப் பின்பற்றினார். அவற்றில் ஒன்று சைவ உணவு. வங்காளத்தில் பொதுவான உணவான மீனைக்கூட அவர் மறுத்துவிட்டார்.சைவ உணவுகளையே சாப்பிட்டு, நரேந்திரரும் தனது தாத்தாவைப்போல் இந்த உலகத்தைத் துறந்து விடுவானோ என்று பெற்றோர் கவலையில் ஆழ்ந்தார்.


ஒரு நாள் நரேந்திரரின் அக்கா சுவர்ணமயி  நரேந்திரருக்கு உணவு பிரிமாறிக்கொண்டிருந்தாள்.நரேந்திரர் முன்னால்மீன் பொரியலை ஒரு தட்டில் வைத்தாள்.ஆனால் நரேந்திரர் அதை மறுத்து. காய்கறிப்பொரியலைப் பரிமாறுக்கேட்டுக்கொண்டார். உடனே அவள் அந்தத் தட்டை எடுத்துச்சென்று, அதில் இருந்த மீன்களை எடுத்துவிட்டு மீண்டும் நரேந்திரரிடம் வைத்தாள். நரேந்திரருக்கு ஆத்திரம் வந்தது.நரேந்திரருக்கும் சுவர்ணமயிக்கும் வாய்ச்சண்டைவலுத்தது.அப்போது விசுவநாதர் முற்றத்தில் குளித்துக்கொண்டிருந்தார். இவர்களது சண்டையைக் கவனித்த அவர், பதினான்கு தலைமுறைகளாக இவனது முன்னோர்கள் நண்டும் நத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தனர்” இவன் என்னவோ இப்போது பிரம்ம தைத்யன் ஆகிவிட்டானாம்.(பிரம்ம தைத்யன்-பிரம்மதைத்யன் என்றால் இறந்து போன அந்தணரின் ஆவி, இங்கே பிரம்ம சமாஜத்தினதைக்குறிக்கிறது)

மீன் சாப்பிட மாட்டானாம்” என்று கோபமாகக்கூறினார். இருந்தாலும் அவர் நரேந்திரின் விஷயத்தில் குறுக்கிடவில்லை.


 MAIN PAGE 

image131