ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-34
...........................
வெள்ளி, ஜுன் 15, 1883
......................
அமாவாசை கழிந்து பத்தாம் நாள். தசரா பண்டிகை. பக்தர்கள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக தட்சிணேசுவரக் காளி கோயிலுக்கு வந்திருந்தார்கள். அதருக்கும் ம-விற்கும் தசரா விடுமுறை கிடைத்ததால் அவர்களும் வந்திருந்தனர்.
ராக்காலின் தந்தை தம் மாமனாருடன் வந்திருந்தார். ராக்காலின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தார். அவரது மாமனார் முன்பே குருதேவரின் பெயரைக்கேள்விப்பட்டிருந்தார். அவர் ஒரு சாதகர். குருதேவரைத் தரிசிக்க வந்திருந்தார்.
உணவிற்குப் பிறகு குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்திருந்தார். அவ்வப்போது ராக்காலுடைய தந்தையின் மாமனாரைப் பார்த்தார். பக்தர்கள் கீழே அமர்ந்திருந்தனர்.
மாமனார்-
சுவாமி, இல்லறத்தில் இருப்பவர்களால் கடவுளை அடைய முடியுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(புன்முறுவலுடன்)-
ஏன் முடியாது? சேற்று மீனைப்போல் இரு. அது சேறிறில் வாழ்கிறது.
ஆனால் அதன் உடலில் ஒன்றும்சேறு இல்லை. கற்பிழந்தப்பெண்ணைப்போல் இரு.வீட்டு வேலைகளை எல்லாம் அவள் செய்வாள். ஆனால் மனம் கள்ளப் புருஷனை நினைத்துக்கொண்டிருக்கும். இறைவனிடம் மனத்தை வைத்துக்கொண்டு, உலகக் கடமைகள் எல்லாவற்றையும் செய். ஆனால் இது மிகவும் கடினம்.
ஜாடியில் ஊறுகாயும் பானையில் தண்ணீரும் இருக்கின்ற அறையில் விஷஜுர நோயாளியா? அவனது நோய் எப்படி நீங்கும்? ஊறுகாயின் நினைப்பு மனத்தில் எழுந்தாலே வாயில் நீர் ஊறுகிறதே என்று ஒருசமயம் நான் பிரம்ம சமாஜத்தினரிடம் கூறினேன்.ஆண்களும், பெண்களும் தான் உறுகாய்! போகத்தில் ஆசை மனிதனிடம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த இன்ப நாட்டம் தான் தண்ணீர்ப் பானைகள். இந்த ஆசை தணியவே செய்யாது. நான் ஒரு பானை தண்ணீர் குடிப்பேன்” என்று அடம் பிடிக்கிறான் என்றால் நிலைமை மோசமாகி விட்டது.
வாழ்க்கையில் தான் எத்தனை குழப்பங்கள்! இந்தப் பக்கம் போனால் துடைப்பக்கட்டையால் அடிபட்டுச் சாவாய். அந்தப் பக்கம் போனால் விளக்குமாற்றால் அடி வாங்குவாய். இன்னொரு பக்கம் போனாலோ செருப்படி! போதாக்குறைக்கு தனிமையான இடத்தில் அல்லாமல் கடவுளை நினைக்கவும் முடியாது. தட்டான் பொன்னை உருக்கி நகை செய்து கொண்டிருக்கிறான். அந்த வேளையில் அவனை மீண்டும் மீண்டும் கூப்பிட்டால் அவன் பொன்னை எப்படி உருக்க முடியும்? அரிசியில் கல் பொறுக்குகிறாய்? அதைத் தனியாக உட்கார்ந்து செய்ய வேண்டும். அவ்வப்போது அரிசியைக்கையில் எடுத்து சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கிடையில் அவனைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தால் வேலை எப்படி நடக்கும்?
ஒரு பக்தர்-
சுவாமி, அப்படியானால் வழி என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வழி இருக்கிறது. தீவிர வைராக்கியம் உண்டாகுமானால் வழி உண்டு. எது உண்மையற்றது என்று அறிகிறாயோ, அதை அந்தக்கணமே உறுதியுடன் துறந்து விட வேண்டும். நான் ஒரு சமயம் கடுமையாக நோயுற்றிருந்த போது கங்கா பிரசாத் சேனிடம் அழைத்துச்சென்றார்கள். அவர் என்னிடம், மருந்து சாப்பிட வேண்டும். ஆனால் தண்ணீரே குடிக்கக் கூடாது. வேண்டுமானால் மாதுளை ரசம் பருகலாம்” என்று சொன்னார். நான் எப்படித்தான் தண்ணீர் குடிக்காமல் இருக்கப் போகிறேனோ என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் நான், தண்ணீர் குடிக்கக் கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன். நான் பரம ஹம்சம் , வெறும் ஹம்சம் அல்லவே! ராஜ ஹம்சம் ஆயிற்றே! பாலையே குடிப்பேன்!
சிறிது காலம் தனிமையில் வாழ வேண்டும். கண்ணா மூச்சி விளையாட்டில் தாய்ச்சியைத்தொட்டு விட்டால், பிறகு பயமில்லை. பொன்னாகிவிடு, பிறகு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். தனிமையில் வாழ்ந்து பக்தியைப்பெற்றுவிட்டால், இறையனுபூதி பெற்றுவிட்டால் இல்லறத்திலும் வாழலாம்.(ராக்காலின் தந்தையிடம்) அதனால் தான் இளைஞர்களை இங்கு தங்கும் படி கூறுகிறேன். இங்கே சிறிது காலம் தங்கினால் அவர்களுக்கு இறைவனிடம் பக்தி ஏற்படும். அதன் பிறகு அவர்கள் தாராளமாக இல்லறத்தில் வாழ முடியும்.
ஒரு பக்தர்-
இறைவன் தான், எல்லாவற்றையும் செய்கிறார் என்றால், பிறகு நல்லது- கெட்டது, பாவம்-புண்ணியம் என்றெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்? பாவமும் இறைவனின் விருப்பம் தானே!
மாமனார்-
இறைவனின் விருப்பத்தை நாம் எப்படி அறிந்து கொள்ள இயலும்?Thou Great First Cause least under stood என்று போப்பும் கூறியிருக்கிறாரே.!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பாவ புண்ணியங்கள் இருக்கின்றன.ஆனால் இறைவன் அவற்றால் பாதிக்கப் படுவதில்லை. காற்றில் நல்வாசனை, கெட்ட வாசனை என்று எல்லா வாசனைகளும் இருக்கின்றன. ஆனால் காற்று இவற்றால் பாதிக்கப் படுவதில்லை. அது போல் தான் இறைவனின் படைப்பும். படைப்பில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. உண்மையும் உண்டு, உண்மையற்றதும் உண்டு. எத்தனையோ வகை மரங்கள் உள்ளன- சில மாமரங்கள், சில பலா மரங்கள், வேறு சில மரங்களோ வெறும் மரிமாமரங்கள். பாருங்கள், முரடர்களும் தேவைப்படத்தானே செய்கிறார்கள்! எந்தத் தாலுகாவில் குண்டர்கள் குழப்பம் விளைவிக்கிறார்களோ, அங்கே முரடனை அனுப்ப வேண்டும். அப்போது தான் அங்கே நிலைமை சீராகும்.
விஷயம் என்ன தெரியுமா? இல்லறத்தில் ஈடுபடுவதால் மனத்தின் ஆற்றல் செலவழிந்து போகிறது. இவ்விதம் சக்தி வெளிப்படுவதால் மனத்திற்கு ஏற்படும் இழப்பை, துறவு மேற்கொள்வதன் மூலம் ஈடு செய்து விடலாம். தந்தை முதற் பிறவியைத் தருகிறார். உபநயனத்தின்போது இரண்டாவது பிறவி கிடைக்கிறது. துறவு மேற்கொள்ளும் போது இன்னொரு பிறவி வாய்க்கிறது. காமினீ- காஞ்சனம் இரண்டும் தான் தடை. பெண்ணிடம் வைக்கும் பற்று இறை நெறியிலிருந்து நம்மைத் திருப்பி விடுகிறது. எதனால் வீழ்ச்சி அடைந்தோம் என்பதை அவனால் தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை.கோட்டைக்குப்போய்க் கொண்டிருந்தேன். வண்டி இறக்கத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதைக்கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. உள்ளே சென்ற பிறகு தான் எவ்வளவு கீழே வந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. அந்தோ! ஆண்கள் எதையும் புரிந்து கொள்வதற்குப் பெண்கள் விடுவதே இல்லை. என் மனைவி புத்திசாலி என்கிறார் கேப்டன். பேய் பிடித்திருக்கும் ஒருவனுக்கு, தனக்குப்பேய் பிடித்திருக்கிறது என்றவிவரமே தெரியாது” நான் நன்றாகத் தான் இருக்கிறேன்” என்று தான் அவன் சாதிப்பான். ( எல்லோரும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்)
இல்லறத்தில் பயப்பட வேண்டியது காமம் மட்டும் அல்ல, கோபமும் இருக்கிறது. ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தடைகள் ஏற்படுமானால் கோபம் வருகிறது.
ம- நான் சாப்பிடும் போது பூனை ஒன்று மெதுவாக வந்து காலை நீட்டி எனது தட்டிலிருந்து மீன் துண்டை எடுக்க முயலும். நான் அதைத் தடுப்பதில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன்! ஒரு முறை ஓர் அடி கொடு. அதில் என்ன தவறு? இல்லறத்தார் சீற வேண்டுமு். அதற்காக விஷத்தைக் கக்குவது சரியல்ல.யாருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக கோபத்தைக் காட்டத்தான்வேண்டும். இல்லாவிட்டால் பகைவர்கள் வந்து துன்பம் விளைவிப்பார்கள் . ஆனால் துறவி சீற வேண்டியதில்லை.
ஒரு பக்தர்-
சுவாமி, இல்லறத்தில் இருந்து கொண்டு இறைவனை அடைவது மிகவும் கடினம்என்று தான் தெரிகிறது. அப்படி அவரை அடைந்தவர்கள் தான் எத்தனை பேர் இருக்கிறார்கள்? யாரையும் காணவில்லையே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன் அடைய முடியாது? அந்தப் பகுதியில்( காமார் புகூரில்) அப்படி ஒருவர் இருப்பதாகக்கேள்விப்பட்டேன். அவர் ஒரு டெபுட்டி. பெரிய மனிதர். பெயர் பிரதாப் சிங். தானதருமம், தியானம், பக்தி என்று நல்ல குணங்கள் படைத்தவர். என்னை ஒரு தடவை அழைக்கவும் செய்திருந்தார். அத்தகையோர் இருக்கவே செய்கிறார்கள்.
சாதனை செய்வது மிகவும் அவசியம். சாதனை செய்தால் ஏன் நடக்காது? சரியான நம்பிக்கை இருக்குமானால் அதிகமான முயற்சி வேண்டியதில்லை. குருவின் வாக்கியத்தில் நம்பிக்கை வேண்டும்!
வியாச முனிவருக்கு யமுனை நதியைக்கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது கோபியரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும் ஆற்றைக்கடக்க வேண்டும். ஆனால் படகு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே கோபியர் வியாசரிடம், சுவாமி, இப்போது என்ன செய்வது? என்று யோசனை கேட்டனர்.வியாசர் கோபியரிடம், உங்களை நான் அக்கரைக்கு அழைத்துச் செல்கிறேன்.ஆனால் எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா? என்று வினவினார்.கோபியரிடம் பால், பாலேடு, வெண்ணெய் எல்லாம் இருந்தன. வியாசர் எல்லாவற்றையும் உண்டார். பிறகு கோபியர் அவரிடம், சுவாமி, ஆற்றலைக் கடக்கும் விஷயம் என்ன வாயிற்று? என்று கேட்டார்கள். உடனே வியாசர் யமுனைக்கரை ஓரத்தில் நின்று கொண்டு, ஓ யமுனா தேவியே! நான் இன்று உபவாசம் இருப்பது உண்மையானால், வெள்ளம் இரு பகுதிகளாகப் பிரித்து நிற்கட்டும்! நாங்கள் அனைவரும் அந்த வழியாகச் சென்று மறு கரையை அடைகிறோம்” என்று கூறினார். வியாசர் இவ்வாறு சொன்னாரோ இல்லையோ யமுனை நதி இரண்டாகப் பிரிந்து நின்றது. கோபியர் திகைத்து விட்டனர். இதோ, இப்போது தான் வயிறு புடைக்க உண்டார்! எதுவும் சாப்பிடவில்லை என்று சாதிக்கிறாரே! என்று வியப்படைந்தனர்.
இது தான் ஆழ்ந்த நம்பிக்கை. உண்டவன் நான் அல்ல, இதய நடுவில் உறைகின்ற நாராயணனே உணவு உட்கொண்டவர், என்ற ஆழ்ந்த நம்பிக்கை.
ஆதி சங்கரர் பிரம்ம ஞானி என்பது உண்மை தான். ஆனால் ஆரம்பத்தில் அவரிடம் வேற்றுமை பாராட்டும் மனநிலை இருந்தது. அவ்வளவு நம்பிக்கை இருக்க வில்லை. ஒரு சமயம் அவர் கங்கையில் குளித்து விட்டு வந்து கொண்டிருந்தார். ஒரு சண்டாளன் மாமிசத்தைத் தூக்கிக்கொண்டு எதிரே வந்தான். அவனது உடம்பு சங்கரரின் மீதுபட்டு விட்டது. டேய், நீ என்னைத் தொட்டு விட்டாயே! என்று கூறினார் சங்கரர். அதற்கு சண்டாளன், சுவாமி நீங்களும் என்னைத் தொடவில்லை, நானும் உங்களைத் தொடவில்லை.சுத்த ஆன்மா யாரோ அவர் உடல் அல்ல, பஞ்ச பூதங்கள் அல்ல. இருபத்து நான்கு தத்துவங்களும் அல்ல” என்றான். அப்போது சங்கரருக்கு உண்மை விளங்கியது.
ரகுகணன் என்ற மன்னனின் பல்லக்கைச் சுமந்து சென்ற படியே ஜடபரதர் ஆன்ம ஞானம் பற்றி பேசினார். உடனே மன்னன் பல்லக்கை விட்டு க் கீழே இறங்கி வந்து, தாங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு ஜடபரதர், நான் இது அல்ல. இது அல்ல. நான் சுத்த ஆன்மா, என்று கூறினார். தான் சுத்த ஆன்மா என்பதில் ஜடபாதருக்குப் பரிபூரண நம்பிக்கை இருந்தது.
நானே அவன், நான் சுத்த ஆன்மா- இது ஞானிகளின் கருத்து. பக்தர்களோ, இவையெல்லாம் பகவானின் ஐசுவரியம் என்பார்கள். செல்வம் இல்லாவிட்டால் எப்படி ஒரு செல்வந்தரைப் பிரித்தறிய முடியும்? சாதகனின் பக்தியைப் பார்த்து பகவானே அந்தச் சாதகனிடம், நான் எதுவோ, அதுவே நீ” என்று சொல்வாரானால், அப்போது விஷயமே வேறு. அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார், சமையற்காரன் அங்கு வந்து அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு, அரசே, நீங்களும் நானும் சமம், என்று கூறுவானானால் உலகம் அவனைப் பைத்தியம் என்று கூறும். ஆனால் சமையற்காரனின் சேவையைக் கண்டு மகிழ்ந்து அரசனே ஒரு நாள் அவனிடம், அடேய், நீ என்னருகில் வந்து அமர்ந்து கொள். அதில் தவறு எதுவும் இல்லை. நீயும் நானும் சமம்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது சமையற்காரன் அரசனின் அருகில் சென்று அமர்வதில் தவறில்லை. சாதாரண மனிதன், ”நானே” என்று சொல்வது நல்லதல்ல. அலை, தண்ணீரச் சார்ந்தது. தண்ணீர் அலையைச் சார்ந்ததாகி விடுமா என்ன?
உண்மை இது தான். எந்த வழியைப் பின்பற்றினாலும் சரி, மனம் நிலைபெறாமல் யோகம் கைகூடாது. யோகிக்கு மனம் வசப்பட்டிருக்கும். யோகி மனத்திற்கு வசப்பட்டிருக்க மாட்டான்.
மனம் நிலைபெற்றால் பிராணன் நிலை பெறுகிறது. கும்பகம் கை கூடுகிறது. பக்தி யோகத்தின் வாயிலாகவும் கும்பகத்தை அடையலாம். பக்தியினால் பிராணன் நிலை பெறுகிறது.
எந்தன் நிதாயி மதயானை, எந்தன் நிதாயி மதயானை.” என்று பாடிய பாடியே பரவச நிலையை அடையும் போது எல்லா சொற்களையும் உச்சரிக்க இயலாமல் போய் விடுகிறது. யானை, யானை என்று மட்டும் தான் வருகிறது. அதன் பிறகு யா என்று மட்டுமே சொல்ல முடிகிறது. பரவச நிலையில் பிராணன் நிலை பெறுகிறது. கும்பகம் ஏற்படுகிறது.
ஒருவன் தரையைக் கூட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு ஓர் ஆள் ஓடி வந்து இன்னவன் இறந்து விட்டான் என்று கூறுகிறான். இறந்தவன் சொந்தக் காரனாக இல்லாவிட்டால், கூட்டிக் கொண்டிருந்தவன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பான். ஆனால் இடையிடையேஅடக் கஷ்டமே! அவன் இறந்து விட்டானா? பாவம், நல்ல மனிதன்” என்று சொல்லிக் கொள்வான். மறு பக்கம், தரையைக் கூட்டுவதும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் இறந்தவன் சொந்தக் காரனாக இருந்தால், செய்தியைக்கேட்ட அளவில் துடைப்பம் தானாகக் கையிலிருந்து நழுவி கீழே விழ, ஐயோ என்று அலறியபடி கீழே உட்கார்ந்துவிடுவான், அப்போது பிராணன் நிலை பெற்று விடுகிறது. அவனால் எந்த வேலையும் செய்ய முடியாது. சிந்திக்கவும் முடியாது.
பெண்களிடம் கவனித்ததில்லையா? ஒருத்தி ஏதேனும் ஒன்றைக் கண்டோ கேட்டோ வியப்பினால் வாயடைத்துப்போய் நின்றால் பிற பெண்கள் அவளிடம், என்ன பரவசத்தில் ஆழ்ந்து விட்டாயா? என்று கேட்பார்கள். இங்கும் பிராணன் நிலைபெற்று விடுகிறது. அதனால் தான் அவன் வாய் பிளந்து நிற்கிறாள். அவளால் எதுவும் பேச முடிய வில்லை.
ஸோஹம், ஸோஹம், என்று சொல்லிவிட்டால்எல்லாம் ஆகி விடாது. ஞானிக்கென்று சில அடையாளங்கள் உள்ளன. நரேந்திரனின் கண்கள் விசாலமாக, எடுப்பாக உள்ளது. இதோ, இவனுக்கும் கூட நெற்றியும் கண்களும் நல்ல அடையாளங்கள் பொருந்தியதாக உள்ளன.
மேலும், எல்லாரும் ஒரே விதமான நிலையில் இல்லை. மனிதர்களைப் பத்தர்கள், முமுட்சுக்கள், முக்தர்கள், நித்தியர்கள், என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். எல்லோருமே சாதனை செய்ய வேண்டும் என்பதில்லை.
நித்திய சித்தர் என்றும் சாதனை சித்தர் என்றும் இருவகையினர் உண்டு. சிலர் பல சாதனைகளைச் செய்து இறைவனை அடைகிறார்கள். பிரகலாதனைப்போன்ற சிலர் பிறவியிலிருந்தே சித்தர்களாக இருக்கின்றனர். ஹோமா பறவை விண்ணில் வசிக்கிறது. அது இடுகின்ற முட்டை கீழே விழுகிறது. கீழே வந்து கொண்டிருக்கும்போதே பொரிக்கிறது. குஞ்சு வெளியே வந்து, அதுவும் கீழே வந்து கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் ஆகாயத்தில் மிக உயரத்தில் நிகழ்கின்றன.குஞ்சு தரையை நெருங்கி வரவர அதற்கு இறக்கை முளைக்கிறது. அது கண்களைத் திறந்து பார்க்கிறது. தரையில் வந்து மோதினால் சுக்கல்சுக்கலாகச் சிதறி விடுவோம் என்று உணர்ந்து கொள்கிறது. உடனே தாய்ப்பறவை இருக்கும் இடத்தை நோக்கித் திரும்பி, அம்மா எங்கே? அம்மா எங்கே? என்று தேடியவண்ணம் பர பரவென்று உயரக் கிளம்பி பறந்து விடுகிறது.
பிலகலாதன் முதலிய நித்திய சித்தர்கள் சாதனை செய்கிறார்கள். ஆனால் சாதனைகளுக்கு முன்பே அவர்களுக்கு இறையனுபூதி கிடைத்து விடுகிறது. பூசனியும் சுரையும் முதலில் பிஞ்சு விட்டுப் பிறகு பூக்கின்றன. அது போல், (ராக்காலின் தந்தையிடம்) நித்திய சித்தர் தாழ்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் அவர் நித்திய சித்தராகத்தான் இருப்பார். வேறு விதமாக ஆக மாட்டார். அவரை விதை சாணக்குவியலில் விழுந்தாலும், அது அவரைச் செடியாகத் தான் வளரும்!
பகவான் சிலருக்கு அதிகமான சக்தியையும் சிலருக்குக்குறைவான சக்தியையும் அளித்துள்ளார். ஓர் இடத்தில் பெரிய தீபம் எரிகிறது. மற்றோர் இடத்தில் சிறிய தீபம் சுடர் விடுகிறது. வித்தயாசாகரின் ஒரு வார்த்தையிலிருந்தே அவரது அறிவாற்றலின் ஆழத்தை நான் தெரிந்து கொண்டேன். இறைவனின் ஆற்றல் வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது என்று நான் கூறியதற்கு அவர், சுவாமி, அப்படியானால் ஆண்டவன் சிலருக்கு அதிகமான சக்தியையும் சிலருக்குக் குறைவான சக்தியையும் கொடுத்திருக்கிறாரா? என்று கேட்டார். அதற்கு நான், ஆம், நிச்சயமாக. அவ்வாறு ஆற்றலில் ஏற்றத்தாழ்வு இல்லா விட்டால் உங்கள் பெயர் இவ்வளவு பரவக் காரணம் என்ன? உங்கள் கல்வி, உங்கள் தயை இவை பற்றிக்கேள்விப்பட்டு அல்லவா உங்களைக் காண நாங்கள் வந்திருக்கிறோம்? உங்களுக்கு இரண்டு கொம்புகள் ஒன்றும் முளைக்கவில்லையே? என்று கூறினேன். வித்யாசாகர் எவ்வளவு அறிவாற்றல் மிக்கவர்! எவ்வளவு பெயரும் புகழும் படைத்தவர்! என்றாலும் ”ஆண்டவன் என்ன சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவதகவும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறாரா? என்றுசிறு பிள்ளைத்தனமான கேள்வியைக்கேட்டு விட்டார்?
விஷயம் என்ன தெரியுமா? வலையில் முதலில்பெரிய மீன்கள் தான் படும். பிறகு மீனவன் காலால் சேற்றைக் காலால் கலக்கி விடுகிறான். அப்போது சிறு மீன்கள் மேலெழுந்து வருகின்றன. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து பிடித்து விடுவான் அவன். இறைவனை அறியாவிட்டால் உள்ளே உள்ள சிறு மீன்கள் மெள்ள மெள்ள வெளிக் கிளம்ப ஆரம்பிக்கும். வெறும் பண்டிதன் ஆவதால் எதைச் சாதிக்க முடியும்?
...
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-35
...........................
ஞாயிறு, ஜுன் 17, 1883
.........................
பிற்பகல் நேரம். தட்சிணேசுவரக் காளி கோயிலில் குருதேவரின் அறை. குருதேவர் பகலுணவிற்குப் பிறகு சிறிது நேரம் ஓய் வெடுத்தார். அதர், ம- , முதலியோர் வந்து வணங்கினர். தாந்திரிக பக்தர் ஒருவரும் வந்திருந்தார். ராக்கால், ராம்லால், ஹாஸ்ரா, முதலியோர் இப்போது குருதேவருடன் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(பக்தர்களிடம்)
இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதால் இறையனுபூதி ஏன் வாய்க்க க் கூடாது? ஆனால் அது கடினம் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனகர் முதலியோர் ஞானம் பெற்ற பிறகு இல்லறத்தில் ஈடுபட்டனர். என்றாலும் பயம் இருக்கவே செய்தது. பற்றற்று வாழ்கின்ற இல்லறத் தானும் பயப்பட வேண்டியுள்ளது. ஜனகர் ஒரு பைரவியைக் கண்ட போது கலை குனிந்து கொண்டார். பெண்ணைக் கண்டு வெட்கப் பட்டார். அதைக் கண்ட பைரவி, ஜனகரே! உமக்கு இன்னமும் ஞானம் உண்டாகவில்லை என்று தான் தோன்றுகிறது. ஆண்-பெண் வேறுபாடு இன்னும் உம்மிடம் உள்ளதே! என்றாள். கரி வைத்திருக்கும் அறையில் புழங்கும்போது , எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலம் கறை சிறிது படியத்தான் செய்யும்.
இல்லற பக்தர்கள் பட்டாடை உடுத்திக் கொண்டு பூஜை செய்யும்போது பக்திப் பெருக்குடன் இருப்பதைப் பார்க்கிறேன். சாப்பிட்டு முடியும் வரை அதே நிலையைக் காணலாம். அதன் பிறகு பழைய கதை தான். ரஜோ குணம். தமோ குணம் நிறைந்த இயல்பு நிலைக்கு வந்து விடுகிறார்கள்.
சத்வ குணத்தால் பக்தி உண்டாகிறது. ஆனால் பக்தியிலும் சத்வ பக்தி, ரஜோ பக்தி, தமோ பக்தி என்று பிரிவு உள்ளது. சத்வ பக்தி தூய சத்வமாகும். இந்த பக்தி உண்டானால் இறைவனைத் தவிர வேறு எதிலும் மனம் செல்லாது. இந்த பக்தர்கள் உடலைக் காப்பாற்றத்தேவையான அளவு மட்டுமே அதன் மீது மனத்தைச் செலுத்துவார்கள்.
பரம ஹம்சர்கள் இந்த மூன்று குணங்களையும் கடந்தவர்கள். அவர்களிடம் இந்த மூன்று குணங்களும் உள்ளன. என்றாலும் இல்லை. அவர்கள், குழந்தைப்போல், எந்த குணத்தின் பிடியிலும் இல்லை, இந்த பரமஹம்சர்கள் சின்னஞ்சிறு பாலகர்களின் இயல்பைப் பெறுவதற்காக அவர்களைத் தங்கள் அருகில் வர அனுமதிக்கின்றனர். பரமஹம்சர்கள் எதையும் சேகரித்து வைப்பதில்லை. இந்த நியதி இல்லறத்தாருக்கு அல்ல, அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக பொருட்களைச்சேமித்தேயாக வேண்டும்.
தாந்திரிக பக்தர்-
பரமஹம்சர்களிடம் பாவ, புண்ணிய உணர்வு இருக்குமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இதைத் தான் சேகவரும் ஒரு முறைகேட்டார். அதற்கு நான், இன்னும் நான் சொன்னால் உங்கள் சமாஜம்- கிமாஜம் எதுவும் நிற்காது” என்று கூறினேன். அதைக்கேட்டதும் அவர், சுவாமி, அப்படியானால் சொல்லாதீர்கள்” என்றார்.
பாவம், புண்ணியம், என்றால் என்ன தெரியுமா? நல்ல புத்தியையும் தீய புத்தியையும் தருவது இறைவனே என்பதைப் பரமஹம்சர்கள் காண்கிறார்கள். கசப்பு பழங்களும் இனிப்பு பழங்களும் இல்லையா? சில மரங்களில் இனிப்பு பழங்கள், சில மரங்களில் கசப்புபழங்கள், சில மரங்களில் புளிப்பு பழங்கள். இறைவனே சுவையான மாமரத்தை உண்டாக்கி இருக்கிறார். அதே போல் புளிப்பான மரிமாங்காய் மரத்தையும் தோற்றுவித்திருக்கிறார்.
தாந்திரிக பக்தர்-
ஆம் சுவாமி, மலை மீது ரோஜாத்தோட்டத்தைக் காண்கிறோம். கண்ணுக்கெட்டும் தூரம் வரை ரோஜாத்தோட்டம் தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உண்மை, உண்மையற்றது. நல்லது, கெட்டது, பாவம், புண்ணியம் எல்லாம் இறைவனுடைய மாயையின் ஐசுவரியங்கள் என்று பரமஹம்சர்கள் காண்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் மிக உயர்ந்த நிலை. அந்த நிலையில் சங்கங்கள், கூட்டங்கள் நடத்துவது இயலாத காரியம்.
தாந்திரிக பக்தர்-
ஆனால் வினைப்பயன் இருக்கிறதே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம் இருக்கிறது. நல்ல செயல்கள் செய்தால் நல்ல பலன். தீய செயல்கள் செய்தால் தீய பலன். மிளகாயைக் கடித்தால் எரியாமல் இருக்குமா?இவைஎல்லாம் அவருடைய திருவிளையாடல்.
தாந்திரிக பக்தர்-
எங்களுக்கு வழிதான் என்ன? வினைப்பயன் இருக்கிறதே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இருக்கட்டுமே! பக்தர்கள் விஷயமே வேறு.
காசியில் இறப்பவர்கள் பிராமணனாயினும் சரி, விலை மகளானாலும் சரி எல்லோரும் சிவகதி அடைவார்கள். ஹரி நாமத்தையோ, காளி நாமத்தையோ, ராம நாமத்தையோ கூறும்போது, கண்களில் கண்ணீர் பெருகுமானால் சந்தியா வந்தனம், கவசம் முதலிய கிரியைகள் சிறிதும் தேவையில்லை. இவை தாமாகவே விலகி விடுகின்றன. செயல்களின் பலன்களும் அவனிடம் சேர்வதில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனில் நிலைபெற்று நின்றால் பொய்யும் பாவமும் அவனிடம் தங்காது.
தாந்திரிக பக்தர்-
வித்யா- நான் எஞ்சியிருக்கும் என்று சொன்னீர்களே?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், வித்யா- நான் அதாவது நான் ஞானி, நான் பக்தன், நான் தொண்டன் என்று நல்ல. நான் எஞ்சுகிறது. போக்கிரி- நான் ஓடி விடுகிறது. (சிரிப்பு)
தாந்திரிக பக்தர்-
சுவாமி, எங்கள் பல சந்தேகங்கள் தீர்ந்து விட்டன.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆன்ம அனுபூதி உண்டாகும் போது எல்லா சந்தேகங்களும் வலகி விடுகின்றன.
தமோ குண பக்தி மேற்கொள்ளுங்கள். என்ன நான் ராம நாமத்தைச்சொல்கிறேன். காளி நாமத்தைச் சொல்கிறேன். எனக்காவது பந்தமாவது, எனக்காவது வினைப் பயனாவது” என்று கூறுங்கள்.
நம்பிக்கை! நம்பிக்கை! நம்பிக்கை! ராமனே எல்லா மாகி இருக்கிறார். அந்த ராமன் தான் ஒவ்வொருவரிலும் உள்ளார்” என்று ஒரு குரு சீடனிடம் கூறினார். நாய் ரொட்டியைக் கடித்துத் தூக்கிச்சென்றது. அதைக் கண்ட சீடன், ஓ! ராமா! பொறு, பொறு. ரொட்டியில் வெண்ணெய் தடவித் தருகிறேன்” என்று கூறினான். குருவின் வார்த்தை களில் என்ன ஒரு நம்பிக்கை!
உதவாக்கரைகளுக்கு நம்பிக்கை உண்டாவதில்லை. எப்போதும் சந்தேகம் தான். ஆன்ம அனுபூதி கிடைக்காவிட்டால் எல்லா சந்துகங்களும் அகல்வதில்லை.
சுத்த பக்தியில் எந்த ஆசையும் இருக்காது, இந்த பக்தியின் வாயிலாக இறைவனை விரைவில் அடையலாம். அணிமா முதலிய சித்திகள் போன்றவற்றை நாடுவது எல்லாம் ஆசை தான். கிருஷ்ணர் அர்ஜுனனிடம், நண்பா, அணிமா முதலான சித்திகளில் ஒன்று இருந்தாலும் கூட இறையனுபூதி கிடைக்காது” என்றார். இந்த சித்திகளால் சக்தி சிறிது அதிகரிக்கலாம். அவ்வளவு தான்.
தாந்திரிக பக்தர்-
சுவாமி, தாந்திரிக க் கிரியைகள் தற்காலத்தில் பலனளிக்காதது ஏன்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவற்றை முழுமையாகவும் பக்தியுடனும் செய்யாததால் தான்.
குருதேவர் பேச்சை நிறைவு செய்து கூறினார்-
பக்தி தான் சாரம். உண்மையான பக்தனுக்கு எவ்வித அச்சமோ கவலையோ இல்லை. தேவி பராசக்தி எல்லாம் அறிவாள். பூனை எலியைப் பிடிப்பது ஒருவிதம், ஆனால் தன்னுடைய குட்டிகளைப் பிடிப்பது மற்றொரு விதம்.
.......
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-36
...........................
பானி ஹாட்டி அவல் திருவிழா
............................
திங்கள், ஜுன் 18, 1883
..........................
பிற்பகல் ஒரு மணி. பானிஹாட்டி ராஜ வீதியிலுள்ள திருவிழாப் பகுதியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.குருதேவரைத் தரிசிக்க ஏங்கிய மக்கள் நான்கு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்தனர். சங்கீர்த்தனக் கூட்டத்தின் நடுவே குருதேவர் பிரேமைப் பித்து பிடித்தவராக ஆடிக்கொண்டிருந்தார். சைதன்யரே மறுபடியும் அவதரித்து வந்துள்ளாரோ, என்றுசிலர் எண்ணினார். நாலா பக்கங்களிலும் ஹரிநாமம் அலை ஓசை போல் ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் மலர்களும் இனிப்புகளும் மழையாக பொழிந்தன.
நவத்வீப் கோசுவாமி சங்கீர்த்தனம் செய்தவாறு ராகவர் கோயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்தார்.அப்போது குருதேவர் திடீரென்று வேகமாக ஓடி வந்து சங்கீர்த்தனக் கூட்டத்தின் நடுவில் நின்று ஆடலானார்.
ஒரு காலத்தில் ராகவ பண்டிதர் கொண்டாடிய திருவிழா அது. ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதவளர்பிறை பதின் மூன்றாம் நாள் அந்த விழா கொண்டாடப்படும். ரகுநாத் தாஸ் அதனைத் துவக்கினார்.
அதன் பிறகு ராகவ பண்டிதர் ஆண்டு தோறும் அதைக் கொண்டாடினார். நித்தியானந்தர் ரகுநாத் தாஸிடம், ஏ திருடா! வீட்டை விட்டு ஓடிப்போய் திருட்டுத்தனமாக நீ மட்டும் தனியாகப்பேரின்பத்தை அனுபவிக்கிறாயா? இதை எங்கள் ஒருவருக்கும் தெரியாமல் நடத்துகிறாய்!அதனால் உனக்கு ஒரு தண்டனை கொடுக்கப்போகிறேன். இனி நீ அவல் திருவிழா கொண்டாடி பக்தர்களுக்குச்சேவை செய்” என்றார்.
குருதேவர் ஒவ்வொரு வருடமும் இந்தத் திருவிழாவிற்குச் செல்வதுண்டு. இந்த ஆண்டும் ராம் முதலிய பக்தர்களுடன் அங்கே போவதாக இருந்தார். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
ராம், ம-வுடன், காலையிலேயே தட்சிணேசுவரம் வந்துவிட்டார். இருவரும் குருதேவரை வணங்கினர். பிறகு வடக்குவராந்தாவில் அமர்ந்து பிரசாதம் உண்டனர். அதன் பின், தாங்கள் கல்கத்தாவிலிருந்து வந்த வண்டியிலேயே குருதேவரைப் பானி ஹாட்டிக்கு அழைத்துச் சென்றனர். குருதேவருடன் ராக்காலும் பவ நாத்தும் மற்றும் ஓரிரு பக்தர்களும் சென்றனர். ஒருவர் வண்டியின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்தார்.
வண்டி மாகஸின்ரோடு வழியாக டிரங்க் ரோட்டை அடைந்தது. குருதேவர் இளைஞர்களுடன் வேடிக்கை பேசிய வாறு வந்தார்.
பானி ஹாட்டியில் விழா நடக்கும் இடத்தை அடைந்ததும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளைக்கண்டு ராம் முதலியோர் திகைத்து நின்று விட்டனர். அவ்வளவு நேரம் வேடிக்கையாகப்பேசிக்கொண்டு வந்த குருதேவர் திடீரென்று வண்டியிலிருந்து இறங்கி அம்பு போல் பாய்ந்து சென்று கூட்டத்தில் கலந்து விட்டார். அங்குமிங்குமாக தேடிய பிறகு, கடைசியில் அவர் நவத்வீப் கோசுவாமியுடன் சங்கீர்த்தனக் கூட்டத்தில் ஆடிக்கொண்டிருந்ததைக்கண்டனர். இடையிடையே சமாதியிலும் ஆழ்ந்தார். சமாதி நிலையில் அவர் கிழே விழுந்து விடாதிருக்க நவத்வீப் கோசுவாமி அவரைக் கவனமாகத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார். சுற்றிலும் பக்தர்கள் பகவான் பெயரை உச்சரித்துக் கொண்டே குருதேவரை வணங்கி அவருடைய திருவடிகளில் மலரையும் இனிப்பையும் தூவினர். அவரை ஒரு முறையாவது தரிசி்க்க வேண்டும் என்பதற்காகக் கூட்டத்தை இடித்துக் கொண்டு ஆவலுடன் முன்னே சென்று கொண்டிருந்தனர் சிலர்.
அனேகமாக புற உணர்வை இழந்த நிலையில் குருதேவர் ஆடிக் கொண்டிருந்தார். புற உணர்வு வந்ததும் பாட ஆரம்பித்தார்.
குருதேவருடன் மற்றவர்களும் பித்துப் பிடித்தவர்கள் போல் ஆடிக் கொண்டிருந்தனர். சைதன்யரும் நித்தியானந்தரும் தங்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டிருப்பது போன்ற இன்பத்தை அவர்கள் அனுபவித்தனர். குருதேவர் தொடர்ந்து பாடினார்.
சங்கீர்த்தன அலைகள் ராகவர் கோயிலை நோக்கி மிதந்து சென்று கொண்டிருந்தன. சங்கீர்த்தனக்கூட்டம் கோயிலை வலம் வந்து, ராதாகிருஷ்ணரை வணங்கிய பிறகு கங்கைக்கரையிலுள்ள ராதா கிருஷ்ணரின் கோயிலை நோக்கிச்செல்லத்தொடங்கியது. அந்தக்கோயில் சிறியதாகையால் சிலர் மட்டும் தான் உள்ளே போக முடிந்தது. பெரும்பாலோர் கோயிலின் வாசலில் நின்றபடி உள்ளே எட்டியெட்டிப்பார்த்த படி வெளியே நின்றனர்.
ராதாகிருஷ்ணரின் கோயில் முற்றத்தில் குருதேவர் மறு படியும் ஆட ஆரம்பித்தார். கீர்த்தன ஆனந்தத்தால் போதை தலைக்கேறிய நிலை. இடையிடையே சமாதி நிலையை அடைந்தார். மீண்டும் நான்கு பக்கங்களிலிருந்தும் மலர்களும் இனிப்பும் அவரது திருப்பாதங்களில் விழுந்தன.முற்றத்திலிருந்து அவ்வப்போது ஹரிநாம கோஷம் எழுந்தது. அது தெருவில் சென்று கொண்டிருந்த பக்தர்களை அடைந்த போது, அவர்களும் எதிரொலிபோல் ஹரிநாமத்தை முழங்கினர். அருகே கங்கையில் படகில் சென்று கொண்டிருந்த மக்களும் இதைக்கேட்டு உணர்ச்சி வசப்பட்டவர்களாய் ”ஹரி போல்” ஹரிபோல்” என்று கூவத் தொடங்கினார். எங்கும் ஹரிநாம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடலாயிற்று.
அந்த விழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களில் சிலர், இந்த மகானிடம் நிச்சயமாக சைதன்யரின் ஆவேசம் வந்துள்ளது” என்று நினைத்தனர். சிலரோ, இவரே சைதன்யர்” என்று எண்ணினார்.
அந்தச் சிறிய முற்றத்திலிருந்து குருதேவரை பக்தர்கள் மிக எச்சரிக்கையாக அழைத்து வந்தனர். பிறகு அவர் பக்தர்களுடன் மணிசேனின் வீட்டு வரவேற்பு அறையில் வந்து அமர்ந்தார். மணிசேன் குடும்பத்தினரே தற்போது ஆண்டு தோறும் அந்த விழாவிற்கு ஏற்பாடுசெய்கின்றனர். விழா விற்கு குருதேவரையும் அழைப்பார்கள்.
சிறிது நேர ஓய்விற்குப் பிறகு மணிசேனும் அவருடைய குருவான நவத் வீப் கோசுவாமியும் குருதேவரை அறைக்குள் அழைத்துச் சென்று உணவளித்தனர். பின்னர் ராம், ராக்கால் , ம- முதலிய பக்தர்களுக்கு மற்றோர் அறையில் உணவு வழங்கப் பட்டது. பக்த வத்சலராகிய குருதேவர் அங்கே வந்து தாமே பிரசாதம் வழங்கி பக்தர்களை உண்ணச் செய்தார்.
மாலைவேளை, ராக்கால், ராம் முதலிய அன்பர்களுடன் மணிசேனின் வீட்டு விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார் குருதேவர். நவத்வீப் கோசுவாமியும் பிரசாதம் உண்ட பின்னர் சிறிது இளைப்பாறி விட்டு அங்குவந்து குருதேவரின் அருகில் அமர்ந்தார். குருதேவர் வந்த வண்டிக்கு வாடகை கொடுக்க மணிசேன் விரும்பினார். குருதேவர், ராம் முதலியோரைச் சுட்டிக்காட்டி, வாடகையை உங்களிடமிருந்து ஏன் இவர்கள் பெற வேண்டும்? அவர்களும் பணம் சம்பாதிப்பவர்கள் தானே”என்று கூறினார். பிறகு நவத்வீப் கோசுவாமியுடன் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பக்தி கனிந்தால் பாவனை தோன்றும். அதை அடுத்து மகாபாவனை, பிறகு பிரேமை, பிறகு இறையனுபூதி. சைதன்யருக்கு மகாபாவனையும் பிரேமையும் ஏற்பட்டிருந்தது. இந்தப்பிரேமை ஏற்பட்டால் உலகத்தை மறந்து விடுவது இயற்கையே. நாம் மிகவும் நேசிப்பதான சொந்த உடம்பு கூட மறந்து போகும். சைதன்யருக்கு இந்தப் பிரேமை ஏற்பட்டிருந்தது. கடலைப் பார்த்து யமுனை என்று நினைத்துக் கொண்டு அதில் குதித்து விட்டார் அவர்.
சாதாரண மனிதர்களுக்கு மகாபாவனை, பிரேமை ஏற்படுவதில்லை. அவர்கள் பரவச நிலை வரை போகலாம். சைதன்யருக்கு இந்த மூன்று நிலைகளும் ஏற்பட்டிருந்தன. அப்படித்தானே?
கோசுவாமி-
ஆம், சுவாமி, அது உண்மை தான். அகவுணர்வு நிலை. அரையுணர்வுநிலை. புற உணர்வுநிலை ஆகிய மூன்று நிலைகளிலும் அவர் இருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அகவுணர்வு நிலையில் அவர் சமாதியில் ஆழ்ந்திப்பார். அரையுணர்வு நிலையில் அவரால் ஆட மட்டும் முடியும். புற உணர்வு நிலையில் நாம சங்கீர்த்தனம் செய்வார். அப்போது நவத்வீப் கோசுவாமி தன் மகனை அழைத்து வந்து குருதேவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவன் இளைஞன், சாஸ்திரங்கள் படித்து வந்தான். அவன் குருதேவரை வணங்கினான்.
கோசுவாமி-
வீட்டிலேயே சாஸ்திரங்கள் படித்து வருகிறான். இங்கே வேதங்கள் கிடைப்பதே அரிது. மாக்ஸ்முல்லர் மொழி பெயர்ந்து வெளியிட்டதால் மக்கள் படிக்கின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சாஸ்திரத்தை அதிகம் படித்தால் அதுவும் தீங்கு விளைவிக்கும். சாஸ்திரத்தின் சாரத்தை அறிய வேண்டும். அதன் பிறகு நூல்களின் அவசியம் என்ன? சாரத்தைக் கிரகித்த பிறகு இறையனுபூதிக்காக ஆழ்ந்து மூழ்க வேண்டும். இறைவனே உண்மை, உலகம் உண்மையில்லை என்று வேதாந்தத்தின்சாரத்தை தேவி நான் அறியச் செய்தாள். பகவத் கீதையின் சாரம் என்ன? கீதா, கீதா என்று பத்து முறை சொல். தியாகி,தியாகி என்றுவரும். அது தான் கீதையின் சாரம்.
கோசுவாமி-
சரியாக தியாகி என்று வராது. தாகி என்று தான் வரும். ஆனால் பொருள் என்னவோ ஒன்றுதான். இரண்டிற்கும் தாது ”தக்” இதில் ”கஞ்” ப்தர்யயம் சேரும் போது ”தாக்”ஆகிறது. அதில் ”இன்” ப்ரத்யயம் சேரும்போது ”தாகீ” என்று ஆகும். எனவே தியாகி என்றாலும் தாகி என்றாலும் பொருள் ஒன்றுதான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மனிதா, அனைத்தையும் துறந்து , இறைவனை அடைவதற்காகச் சாதனை செய் என்பது தான் கீதையின் சாரம்.
கோசுவாமி-
தியாகம் செய்யும் மனப்பான்மை உண்டாவதில்லையே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நீங்கள் ஒரு கோசுவாமி. உங்களுக்கு கோயில் வேலை உள்ளது. உங்களால் உலகைத் துறக்க முடியாது. நீங்கள் உலகைத் துறந்தால் கோயில் வேலையை யார் செய்வது? நீங்கள் மனத்தளவில் துறக்க வேண்டும். உலகத்திற்கு ஒரு படிப்பினைக்காக இறைவனே உங்களை உலக வாழ்க்கையில் வைத்திருக்கிறார். நீங்கள் ஆயிரம் முயற்சி செய்யுங்கள். உங்களால் துறக்க முடியாது. உலகக் கடமைகளைச் செய்வதற்குரிய மனநிலையையே இறைவன் உங்களுக்கு அளித்திருக்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், என்ன சொல்கிறாய், நீ யுத்தம் செய்யப்போவதில்லையா? நீ விரும்பினாலும் போரிலிருந்து உன்னால் விலக முடியாது. உன் இயல்பே உன்னைப்போரிட வைக்கும்” என்றார்.
ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுடன் பேசியது பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குருதேவர் சமாதியில் ஆழ்ந்தார்.
உடல் அசையவில்லை, கண்கள் இமைக்கவில்லை. மூச்சு விடுகிறாரா இல்லையா என்பது கூட சந்துகமாக இருந்தது. கோசுவாமி அவருடைய மகன் மற்றும் பக்தர்கள் அனைவரும் பேசும் சக்தி இழந்தவர்களாக குருதேவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கொஞ்சம் புறவுணர்வு பெற்ற பின் குருதேவர் கோசுவாமியிடம் கூறினார்.
யோகமும் போகமும் . நீங்கள் கோசுவாமி வம்சத்தைச்சேர்ந்தவர். உங்களுக்கு இரண்டும் உண்டு. இப்போது இறைவனிடம் பிரார்த்தனை மட்டும் செய்யுங்கள்.
எம்பெருமானே, உனது உலகை மயக்கும் மாயையின் ஐசுவரியம் எனக்கு வேண்டாம். எனக்கு நீயே வேண்டுமு். என்று மனமார வேண்டுங்கள். கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார். அப்படியானால் யாரை பக்தன் என்று சொல்வது? யார் இறைவனில் இருக்கிறானோ, யாருடைய மனம், பிராணன், ஆன்மா எல்லாம் இறைவனில் லயித்திருக்கிறதோஅவனே பக்தன்.
குருதேவர் முழுமையாக புறவுணர்வை அடைந்தார். கோசுவாமியிடம், சிலர்எனது இந்த நிலையை நோய் என்று சொல்கிறார்கள். யாருடைய உணர்வால் இந்த உலகமே உணர்வு மயமாக இருக்கிறதோ அவரை நினைப்பதால் யாராவது உணர்வற்றவர்களாக ஆவார்களா என்பது தான் என்கேள்வி, என்று கூறினார்.
விழாவிற்கு வந்திருந்த பக்தர்களை மணிசேன் வழி அனுப்பி வைத்தார்.ஆளுக்கேற்ப சிலருக்கு ஒரு ரூபாயும், சிலருக்கு இரண்டு ரூபாயும் தட்சிணை கொடுத்தார். குருதேவருக்கு ஐந்து ரூபாய் கொடுக்க வந்தார். என்னால் பணம் பெற்று க்கொள்ள இயலாது” என்று கூறினார் குருதேவர். மணிசேன் வற்பறுத்தினார். உடனே குருதேவர், உன் குருவின் மீது ஆணை, என்னை வற்புறுத்தாதே” என்றார். அப்போதும் மணிசேன் விடவில்லை. குருதேவர் சலிப்புற்றுப் போய் ம-விடம் , என்ன, பணத்தைப்பெற்றுக் கொள்ளவா? என்றார். அதற்கு, ம- வேண்டாம், என்ன ஆனாலும் வாங்காதீர்கள் என்றார்.
மணிசேனின் நண்பர்கள் பழம், இனிப்பு முதலியவை வாங்குவதற்கான சாக்கில் அந்தப் பணத்தை ராக்காலிடம் கொடுத்தனர். அதைக் கண்ட குருதேவர் ம-விடம் , நான் அவரது குருவின் மீது ஆணையிட்டு பணத்தை மறுத்து விட்டேன். என் பொறுப்பு தீர்ந்தது. ராக்கால் பெற்றுக் கொண்டுள்ளான். இனி அவன் பாடு என்றார்.
தட்சிணேசுவரத்திற்குத் திரும்புவதற்காக குருதேவர் பக்தர்களுடன் வண்டியில் ஏறிக் கொண்டார். வழியில் மதிசீலின் கோயில் பூந்தோட்டம் இருந்தது. வெகு நாட்களுக்கு முன்பு குருதேவர் ம-வை அந்தக்கோயிலில் உள்ள குளத்தைப் பார்க்க அழைத்துச் செல்லும் படிக் கூறியிருந்தார். அங்குள்ள மீன்களைக் காட்டி கடவுளை உருவமற்றவராக எவ்விதம் தியானம் செய்வது என்பதை விளக்குவதாகச் சொல்லியிருந்தார்.
குருதேவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது. இருந்தாலும் கோயிலைக்காண வண்டியிலிருந்து இறங்கினார். அந்தக்கோயிலில் சைதன்யரின் பூஜை நடந்து வந்தது. குருதேவர் பக்தர்களுடன் தரையில் வீழ்ந்து சைதன்யரை வணங்கினார். மாலைவேளை.
கோயிலின் கிழக்கில் அமைந்துள்ள குளத்திற்கு வந்து அதிலுள்ள மீன்களைக் கண்டார் குருதேவர். அந்தக் குளத்து மீன்களை யாரும் துன்புறுத்துவதில்லை. பொரி முதலியவற்றை நீரில் வீசியதும் மீன்கள் கூட்டங்கூட்டமாக வந்து அவற்றை உண்ணும். அதன் பிறகு பயமற்று ஆனந்தமாகத் தண்ணீரில் இங்குமங்கும் நீந்தித்திரியும்.
குருதேவர்( ம-விடம்)-
இதோ இந்த மீன்கள் எப்படித். திரிகின்றன பார்! சச்சிதானந்தக் கடலில் இந்த மீன்களைப்போல் ஆனந்தமாக சஞ்சரிப்பது( உருவமற்ற கடவுள் தியானம்)
...
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-37
...........................
திங்கள், ஜுன் 25, 1883
...............
மாலை சுமார் ஐந்து மணி . குருதேவர் பலராமின் வீட்டிற்கு வந்திருந்தார். ம-அருகில் உட்கார்ந்திருந்தார். ராக்காலும் உடன் இருந்தார். குருதேவர் பரவச நிலையில் இருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( பரவச நிலையில்)- .இதோ பார். மனமார அழைத்தல் சொந்த உருவத்தைக் காண முடியும். ஆனால் எந்த அளவுக்கு இன்ப நாட்டத்தின் சாயல் இருக்கிறதோ அந்த அளவுக்கு அது தடைப்படுகிறது.
ம- அதில், குதித்துவிட வேண்டும்” என்று சொல்வது உண்டு அல்லவா!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( மகிழ்ச்சியோடு)- அப்படிச்சொல்.
எல்லோரும் மௌனமாக இருந்தார்கள். குருதேவர் மறுபடியும் பேசலானார்.
ம- விடம்) இதோ பார், எல்லோருக்கும் ஆன்த தரிசனம் உண்டாக முடியும்.
ம- உண்மை தான்.ஆனால் இறைவன் ஆட்டு விப்பவர். பாத்திரத்திற்கு ஏற்ப அவர் நம்மைச் செயல் படுத்துகிறார். சிலருக்கு விழிப்புணர்வை அளித்திருக்கிறார். சிலரை அறியாமையில் வைத்திருக்கிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அப்படிஅல்ல, மன ஏக்கத்துடன் அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை நம் மனத்தின் ஆழங்களிலிருந்து வருவதாக இருந்தால் அவர் நிச்சயமாக அதற்குச் செவி சாய்க்கிறார்.
ஒரு பக்தர்-
ஆம், சுவாமி, ”நான்” இருப்பதால் பிரார்த்தனை செய்யத் தான் வேண்டும்
ஸ்ரீராமகிருஷ்ணர்- (ம-விடம்)
படிக்கட்டு வழியாக மாடியை அடைவது போல் லீலையைப் பிடித்துக் கொண்டே நித்தியத்தை அடைய வேண்டும். நித்தியத்தை க் கண்ட பிறகு லீலைக்கு வந்து பக்தியைக் கொண்டு பக்தனாக வாழ லாம். இது நல்ல பக்குவமான வழி.
இறைவனுக்குப் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. ஈசுவர லீலை, தேவ லீலை, மனித லீலை, உலக லீலை என்று அவருடைய லீலைகளும் பல்வேறானவை. பிரேம பக்தியைப்போதிப்பதற்காக யுகந்தோறும் இறைவனே மனிதனாக அவதரிக்கிறார். சைதன்ய தேவரைப்பார்! அவதார புருஷரில் தான் இறைவனின் பிரேம பக்தியை அனுபவிக்க முடியும். இறைவனின் மகிமை அளவற்றது.ஆனால் எனக்கு வேண்டுவதெல்லாம் பிரேமையும் பக்தியும் தான். எனக்கு வேண்டியது பால். பசுவின் மடியிலிருந்து பால் வருகிறது. அவதார புருஷர்கள் பசுவின் மடி போன்றவர்கள்.
நான் அவதரித்திருக்கிறேன். என்னை தரிசித்தால் அது இறைவனை தரிசித்ததே என்று குருதேவர் கூறுகிறாரா? சைதன்ய தேவரைப் பற்றி பேசி தம்மையே குறிப்பால் உணர்த்துகிறாரா?
....................
ஜுன் 1883
.................
வெப்பம் மிகுந்த ஒரு மாலை ப் பொழுது. இருட்ட இன்னும் சிறிது நேரமே இருந்தது. குருதேவர் தட்சிணேசுவரத்தில் சிவாலயங்களின் படிப்பட்டில் உட்கார்ந்திருந்தார். ம-ஐஸ்கட்டி முதலியவை கொண்டு வந்திருந்தார். குருதேவரை வணங்கிவிட்டு அவருடைய திருவடிகளின் அருகில் படிக்கட்டில் உட்கார்ந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)
மணி மல்லிக்கினுடைய பேத்தியின் கணவன் வந்திருந்தான். அவன் ஏதோ ஒரு புத்தகம் படித்தானாம். அதில், ” இறைவன் அப்படி ஒன்றும் பெரிய ஞானி என்றோ, எல்லாம் அறிந்தவர் என்றோ தோன்ற வில்லை. அப்படி இருந்திருந்தால் ஏன் இவ்வளவு துன்பங்கள் இருக்கின்றன. மரணம் வரவே செய்கிறது. ஒரேயடியாகக்கொன்று விடலாமே! அதை விட்டு விட்டு சிறிது சிறிதாக வேதனைக்கு உள்ளாக்கி ஏன் கொல்ல வேண்டும்? நானாக இருந்தால் இதை விட நல்ல உலகத்தைப் படைத்திருப்பேன்” என்று அந்த நூலின் ஆசிரியர் எழுதியிருக்கிறாராம்.
ம- வியப்புடன் அந்த வார்த்தைகளைக்கேட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தார். குருதேவர் தொடர்ந்தார்-
என்னப்பா, இறைவனை நம்மால் அறிய முடியுமா என்ன! நானும் சில வேளைகளில் அவரை நல்லவராகவும், சில வேளைகளில் தீயவராகவும் நினைப்பதுண்டு. அவர் நம்மைத் தமது மாயையுள் வைத்திருக்கிறார். சில சமயம் நம்மை விழிப்புணர்த்துகிறார், சில சமயம் அறியாமையில் மூழ்கச் செய்கிறார். ஒருகணம் அறியாமை நீங்குகிறது. மீண்டும் சுற்றி வளைத்துக்கொள்கிறது. பாசியால் மூடப்பட்டிருக்கும் குளத்தில் கல்லெறிந்தால் சிறிது நேரம் தண்ணீரைப் பார்க்க முடிகிறது. ஆனால் கொஞ்ச நேரத்திற்குள் பாசி மறுபடியும் அசைந்து அசைந்து வந்து தண்ணீரை மூடிக் கொள்கிறது.
உடலுணர்வு இருக்கும் வரை தான் இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, நோய், துயரம், எல்லாம். இவை உடலுக்கு மட்டுமே. ஆன்மாவிற்கு இல்லை. பிரவச வேதனைக்குப்பிறகு குழந்தை பிறக்கிறது. அது போல் உடல் இறந்த பிறகு இறைவன் அவனை நல்ல இடத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும். ஆன்ம ஞானம் கிடைத்து விட்டால் இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு எல்லாம் கனவு போல் தோன்றும்.
நமக்கு என்ன தெரியும்! ஒரு படி பாத்திரத்தில், பத்துப்படி பாலை வைக்க முடியுமா? உப்புப் பொம்மை கடலை அளக்கச் சென்றால்திரும்பி வந்து செய்தி தராது. அது கடலில் கரைந்துவிடும்.
மாலை வந்தது. கோயில்களில் தீபாராதனை தொடங்கியது. குருதேவர்தமது அறையில் சிறிய கட்டிலில் அமர்ந்து தேவியை தியானம் செய்து கொண்டிருந்தார். ராக்கால், லாட்டு, ராம்லால், கிசேரி, குப்தர் முதலிய பக்தர்கள் இருந்தனர். ம- அன்றிரவு அங்கே தங்குவதாக இருந்தார்.
தமது அறைக்கு வடக்கில் உள்ள சிறிய வராந்தாவில் குருதேவர் பக்தர் ஒருவருடன் தனியாகப்பேசிக் கொண்டிருந்தார். தினமும் இரவிலும், அதிகாலையிலும் , சந்தியா வேளையிலும் தியானம் செய்வது நல்லது என்றார். உருவக்கடவுளையும் அருவக் கடவுளையும் எப்படி தியானிப்பது என்பதையும் விளக்கினார்.
சிறிது நேரம் ஆனதும் தமது அறைக்கு மேற்கே உள்ள அரைவட்ட வராந்தாவில் வந்து அமர்ந்தார். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். ம- அருகில் இருந்தார். ராக்கால் முதலிய பக்தர்கள் அவ்வப்போது அறையினுள் போவதும் வருவதுமாக இருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்
இதோ பார், இங்கு யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் எல்லோருடைய சந்தேகங்களும் தீர்ந்து போகின்றன. நீ என்ன சொல்கிறாய்?
ம- ஆம், நிச்சயமாக.
அந்தவேளையில் கங்கையில் வெகு தூரத்தில் படகோட்டி ஒருவன் துடுப்பைத் துளைத்தபடி பாடிக்கொண்டே சென்றான். அந்த இனிய இசை ஓங்கார நாதத்தைப்போல் பரந்த வான்வழியாக கங்கையின் மீது மெல்லத் தவழ்ந்து குருதேவரின் காதுகளில் நுழைந்தது. குருதேவர் பரவச நிலையை அடைந்தார். அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது. ம-வின் கையைப் பிடித்துக்கொண்டு, பார், பார் . எனக்கு மயிர் கூச்செறிகிறது. உடம்பில் கை வைத்துப் பார்” என்றார்.
ஆனந்தத்தினால் மயிர் சிலிர்க்கும் . குருதேவரின் உடலைத்தொட்டுப் பார்த்த ம- திகைத்து நின்றார். ஆனந்தத்திருமேனி! எந்த இறைவன் ஊடும்பாவும் போல் விண்ணிலும் மண்ணிலும்நிறைந்திருப்பதாக உபநிடதம் பேசுகிறதோ. அதே இறைவன் நாத வடிவில் குருதேவரின் திருமேனியை தீண்டி விட்டாரா? இது தான் சப்த பிரம்மமா?
சிறிது நேரம் கழிந்தது. குருதேவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இங்குவருபவர்கள் எல்லாம் நல்ல இயல்பு படைத்தவர்கள். நீ என்ன சொல்கிறாய்?
ம- ஆமாம், சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதர் நல்ல இயல்பு கொண்டவர்.
ம- அதைச் சொல்லவும் வேண்டுமா,
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கள்ளங்கபடமற்ற தன்மை வந்து விட்டால் இறைவனை எளிதில் அடையலாம். நல்ல வழி, தீய வழி என்று இரு வழிகள் உள்ளன. நல்ல வழியில்செல்ல வேண்டும்.
ம-
ஆமாம் சுவாமி, நூலில் ஓர் இழை பிரிந்திருந்தாலும் அது ஊசியின் காதில் நுழையாது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உண்ணும்போது நாக்கில் ஒரு முடி பட்டால் போதும், உணவை அப்படியே துப்பி விடுகிறோம்.
ம-
ஆனால் இறைக்காட்சி பெற்றவனை தீயவர்களின் தொடர்பு ஒன்றும் செய்ய முடியாது என்று நீங்கள் சொல்வது உண்டல்லவா! கொழுந்து விட்டெரியும் நெருப்பில் பச்சை வாழை மரமும் எரிந்து போகும். அது போல் ஞானத் தீயில் எல்லாம் சாம்பலாகி விடும்.
.......
..........
சனிக்கிழமை, ஜுலை 14, 1883
..................
கல்கத்தாவில் அதர்சேனின் வீடு. குருதேவர் அங்கே வந்திருந்தார். ராக்கால், ம- முதலியோரும் வந்தனர். பூஜையறையில் பாடல் நடைபெற்றது. ராஜ் நாராயணன் பாடினார்.
குருதேவர் பாட்டைச்சிறிது கேட்ட போதே பரவச நிலையை அடைந்தார். எழுந்து நின்று கொண்டு, சில வேளைகளில் பாடகருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார். தாமும் புதிதாக சில வரிகளைச்சேர்த்தார். அம்மா, என்னை உன்னிடம் வைத்துக்கொள். அம்மா, என்று பாடியபடியே மீண்டும் சமாதியில் ஆழ்ந்தார். புற உணர்வற்று, மூச்சற்று நின்றார்.
குருதேவர் மறுபடியும் சமாதியில் ஆழ்ந்தார்.
பாடல் முடிந்ததும் பூஜையறையிலிருந்து மாடியிலுள்ள ஓர் அறைக்குச்சென்று பக்தர்களுடன் உட்கார்ந்தார். அப்போது இறைவனைக்குறித்து பலவிதமான பேச்சு எழுந்தது. சில பக்தர்கள் பல்கு நதியைப்போன்றவர்கள். அவர்களிடம் உள்ளே சாரம் இருக்கிறது. ஆனால் வெளியில் எதுவும் தெரிவதில்லைஎன்றெல்லாம் பல கருத்துக்கள் பேசப் பட்டன.
...............................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-38
...........................
சனிக்கிழமை , ஜுலை21, 1883
......................
மாலை சுமார் நான்கு மணி. ராம்லால் மற்றும் ஓரிரு பக்தர்களுடன் குருதேவர் தட்சிணேசுவரத்திலிருந்து வண்டியில் கல்கத்தாவிற்குப் புறப்பட்டார். வண்டி காளிகோயில் வாசலைத் தாண்டிய போது, எதிரே கையில் நான்கு மாம்பழங்களுடன் ம- வந்து கொண்டிருப்பதைக் கண்டார். உடனே வண்டியை நிறுத்துமாறு கூறினார். ம- வண்டி முகப்பில் தலை வைத்து குருதேவரை வணங்கினார்.
குருதேவர் முதலில் அதர்சேனின் வீட்டிற்கும், பிறகு யது மல்லிக் வீட்டிற்கும், கடைசியாக கேலாத்கொஷின் வீட்டிற்கும் செல்வதாக இருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்—(ம-வைப் பார்த்துச் சிரித்தபடியே)-
நீயும் வாயேன், நாங்கள் அதர் வீட்டிற்குப்போகிறோம்.
ம-
அப்படிணே, என்று கூறி வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.ம- ஆங்கிலம் படித்தவர். அவருக்கு முற்பிறவி சம்ஸ்காரம் என்பதில் நம்பிக்கை கிடையாது. இருப்பினும் அதரிடம் நல்ல சம்ஸ்காரங்கள் உள்ளதால் தான் குருதேவரிடம் பக்தி கொண்டிருக்கிறார் என்பதைச் சில நாட்களுக்கு முன்பு குருதேவரிடமே ஒப்புக் கொண்டிருந்தார். வீட்டிற்குச் சென்று ஆலோசித்துப் பார்த்த போது சம்ஸ்கார விஷயத்தில் தனக்கு இன்னமும் முழு நம்பிக்கை உண்டாக வில்லை என்பதை அவர் கண்டார். அதைக் கூறவே ம- இன்று தட்சிணேசுவரம் வந்தார். குருதேவர் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நல்லது, அதரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ம- சுவாமி, அவரிடம் ஆழ்ந்த பக்தி இருக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதரும் உன்னை மிகவும் பாராட்டுகிறார்.
ம- சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு முற்பிறவி சம்ஸ்காரங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.
ம-
எனக்கு முற்பிறவி, முற்பிறவி சம்ஸ்காரம் இவற்றில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இது எனது பக்திக்குத் தடையாக இருக்குமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனது படைப்பில் எது வேண்டு மானாலும் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும். நான் நினைப்பது தான் உண்மை. மற்றவர்களுடைய கருத்துக்கள் பொய்” என்ற எண்ணத்திற்கு உள்ளத்தில் இடம் கொடுக்காதே. பிறகு எல்லாவற்றையும் இறைவனே உனக்குப் புரிய வைப்பார்.
இறைவனின் செயல்பாடுகளை மனிதனால் புரிந்து கொள்ள முடியுமா? அவரது மகிமை எல்லையற்றது. எனவே தான் அதையெல்லாம் புரிந்து கொள்ள முயன்றதில்லை. அவரது படைப்பில் எதுவும் நடக்க முடியும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை மனத்திற்கொண்டு மற்ற எண்ணங்களை நீக்கிவிட்டு அவரையே நினைக்கிறேன்.
இன்று என்ன திதி” என்று அனுமனைக்கேட்டார்கள். அதற்கு அவர், ”நாள், திதி, நட்சத்திரம், எதுவும் எனக்குத் தெரியாது. நான் ராமர் ஒருவரையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.
இறைவனது செயல்கள் எதையாவது நம்மால் புரிந்து கொள்ள முடியுமா என்ன? அவர் நமக்கு அருகில் தான் இருக்கிறார். ஆனால் அறிந்து கொள்ள முடிவதில்லை. கிருஷ்ணர் இறைவனே என்பதை பலராமர் அறியவில்லை.
ம- உண்மை தான் சுவாமி! பீஷ்மரைப் பற்றியும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், ஆம், என்ன சொன்னேன். சொல் பார்க்கலாம்.
ம-
அம்பு ப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் அழுதார். அதைக் கண்ட பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணரிடம், இது என்ன ஆச்சரியம்! நமது பிதாமகர் எவ்வளவு பெரிய ஞானி. இருந்தும் மரணத்தை நினைத்து அழுகிறாரே” என்கிறார்கள். அவர் ஏன் அழுகிறார் என்று அவரையே கேளுங்கள்” என்றார் கிருஷ்ணர். கேட்ட போது பீஷ்மர், இறைவனுடைய செயல்கள் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று அழுகிறேன்! ஓ கிருஷ்ணா! நீ பாண்டவர்களுடன் எப்போதும் இருக்கிறாய், இவர்களை ஒவ்வோர் ஆபத்திலிருந்தும் காப்பாற்றுகிறாய். இருந்தாலும் இவர்களுடைய துன்பத்திற்கு முடிவே இல்லையே, அதை எண்ணித்தான் அழுகிறேன்” என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பகவான் தமது மாயையால் எல்லா வற்றையும் மூடி வைத்திருக்கிறார். நாம் எதையும் அறிந்து கொள்ள அவர் விடுவதில்லை.காமினீ- காஞ்சனம் தான் மாயை. இந்த மாயை யை அகற்றிவிட்டு பார்ப்பவர்களுக்கே அவரைக் காண முடியும். நான் இதை ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருக்கும்போது எம்பெருமான் திடீரென்று எனக்கு ஓர் அற்புத க் காட்சியைக் காட்டினார். காமார்புகூரிலுள்ள ஒரு குளம். அதில் ஒருவன் பாசியைக் கையினால் அகற்றி விட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். தண்ணீர் பளிங்கைப்போல் தெளிவாக இருந்தது. மாயை என்னும் பாசியால் சச்சிதானந்தம் மூடப் பட்டிருப்பது எனக்கு இப்படி காட்டப் பட்டது. பாசியை அகற்றுபவன் தண்ணீர் குடிக்க முடியும்.
கவனமாகக்கேள்! உனக்கு ஒரு ரகசியம் கூறுகிறேன்.
ஒரு முறை சவுக்கு மரத்தோப்பில் வெளிக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அறை ஒன்றின் கதவைப்போன்ற ஒரு காட்சி தோன்றியது. அறையினுள் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை. கத்தியால் கதவில் துளை செய்ய முயன்றேன். முடியவில்லை. துளையிட துளையிட மண் விழுந்து அதனை மூடிக் கொண்டது. கடைசியில் ஒரு துளை உண்டாயிற்று.
இதைக்கூறிவிட்டு குருதேவர் மௌனமாக இருந்தார். மறுபடியும் பேச ஆரம்பித்தார்.
இவை மிக உயர்ந்த கருத்துக்கள். பார்த்தாயா? யாரோ என் வாயைப் பொத்துவது போல் உள்ளது.
இறைவனின் உணர்வால் தான் இந்த உலகம் உணர்வுள்ள தாக விளங்குகிறது. சிறு சிறு மீன்களிலும் கூட இந்த உணர்வு துடிப்பதைச் சில வேளைகளில் காண்கிறேன்.
வண்டி சோபாபஜார் சந்திப்பை அடைந்தது. குருதேவர் தொடர்ந்து பேசினார்.
மழைக் காலத்தில் பூமி தண்ணீரில் ஊறியிருப்பது போல் உலகம் இந்த உணர்வில் ஊறியிருப்பதாகச் சில வேளைகளில் காண்கிறேன்.
இவ்வாறு எவ்வளவோ நான் கண்டிருக்கிறேன். ஆயினும் எனக்கு அகங்காரமும் வருவதில்லை.
ம- சிரித்துக் கொண்டே)-
உங்களுக்காவது அகங்கார மாவது?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கடவுள் மீது ஆணை, எனக்கு அகங்காரம் சிறிதும் இல்லை.
ம-
கிரீஸ் நாட்டில் ஒரு மனிதர் இருந்தார். அவரது பெயர் சாக்ரடீஸ். மனிதர்களில் அவரே அறிவாளி என்று அசரீரி கேட்டது. அவர் திகைத்துப்போனார். நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்து சிந்தித்து அதைப் புரிந்து கொண்டார். பிறகு தமது நண்பர்களிடம், எனக்கு ஒன்றும் தெரியாது. என்பதை நான் மட்டுமே அறிந்திருக்கிறேன். ஆனால் மற்ற ஒவ்வொருவரும் தான் பெரிய அறிவாளி என்று நினைக்கிறார்கள். உண்மையில் எல்லோரும் அறிவற்றவர்கள்” என்று கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இங்கே இவ்வளவு பேர் வரும் அளவிற்கு எனக்கு என்ன தெரியும் என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. வைஷ்ணவ சரண் பெரிய பண்டிதர். அவர் என்னிடம், நீங்கள் கூறுகின்றவை எல்லாம் சாஸ்திரத்தில் உள்ளன. இருந்தும் உங்களிடம் ஏன் வருகிறேன் தெரியுமா? அவற்றை உங்கள் வாயால் கேட்பதற்காகத் தான்” என்று கூறுவார்.
ம- உங்கள் வார்த்தைகள் எல்லாம் சாஸ்திரத்துடன் பொருந்தியிருக்கின்றன. அன்று பானி ஹாட்டியில் நவ த்வீப் கோசுவாமியும் இதைத்தான் சொன்னார். கீதா, கீதா என்று திரும்பத் திரும்பக் கூறினால் தியாகி தியாகி என்று வருகிறது என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் உண்மையில் தாகீ என்றுதான் வரும்.ஆனால் , தாகீ, என்றாலும் தியாகி என்றாலும் ஒரே பொருள் தான், தக் என்ற மூலச்சொல்லிலிருந்து தான் தாகீ என்ற வார்த்தையும் வருகிறது” என்று கோசுவாமி கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பண்டிதரையோ, துறவியையோ அல்லது வேறு யாரையுமோ என்னுடன் ஒப்பிட முடியுமா?
ம- உங்களை இறைவன் தமது கைகளாலேயே உருவாக்கியிருக்கிறார். மற்றவர்களை எந்திரத்தின் மூலம் படைத்திருக்கிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( சிரித்தவாறு ராம்லால் முதலியவர்களிடம்)-
இவன் என்ன சொல்கிறான், கேட்டீர்களா?
குருதேவர் சிறிது நேரம் சிரித்தார். கடைசியில் இறைவன் மீது ஆணை, என்னிடம் சிறிது கூட அகங்காரம் கிடையாது” என்றார்.
ம-
அறிவினால் ஒரு நன்மை கிடைக்கிறது” அதாவது எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஒன்றுமில்லை. என்பதை அது உணரச்செய்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சரி, மிகச்சரி, . நான் ஒன்றுமில்லை, நான் ஒன்றுமில்லை. நல்லது. ஆங்கில வான இயலில் உனக்கு நம்பிக்கை உண்டா?
ம-
அவர்களுடைய நியதிகளின் உதவியுடன் புதியவற்றைக் கண்டு பிடிக்கலாம். யுரேனஸ் என்ற கிரகத்தின் தாறுமாறானப்போக்கைக் கண்டு, தொலைநோக்கி வழியாக ஆராய்ந்தபோது நெப்டியூன் என்று புதிய கிரகத்தைக் கண்டு பிடித்தனர். மேலும், கிரகத்தைப்பற்றியும் முன் கூட்டியே அறிய முடிகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், அது உண்மைதான்.
வண்டி அதரின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. குருதேவர் ம-விடம், எப்போதும் உண்மையில் நிலைத்து நில், அப்போது இறையனுபூதி நிச்சயம், என்று கூறினார்.
ம-
எம்பெருமானே, நான் உன்னை விரும்புகிறேன். உலகை மயக்கும் உன் மாயையில் என்னை மூழ்கடிக்காதே. நான் உன்னையே விரும்புகிறேன்” என்று பிரார்த்திக்குமாறு நீங்கள் நவத்வீப் கோசுவாமியிடம் சொன்னீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், மனத்தின் ஆழத்திலிருந்து இதைச் சொல்ல வேண்டும்.
குருதேவர் அதரிசேனின் வீட்டை அடைந்தார். ராம்லால்,ம-, அதர், மற்றும் ஓரிரு பக்தர்களுடன் அதரின் விருந்தினர் அறையில் சென்று உட்கார்ந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரும் அவரைக் காண வந்திருந்தனர். ராக்காலின் தந்தை கல்கத்தாவில் வசித்து வந்ததால் ராக்கால் அங்கே தங்கியிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(அதரிடம்)-
என்ன, ராக்காலுக்குச் செய்தி அனுப்பவில்லையா?
அதர்-
அனுப்பியாகிவிட்டது!
குருதேவர் ராக்காலைக் காண மிகுந்த ஆவல் கொண்டிருப்பதைக் கண்ட அதர் தன் வண்டியில் ஒருவரை அனுப்பி ராக்காலை அழைத்துவரச் சொன்னார்.
அதர் குருதேவரின் அருகில் உட்கார்ந்து கொண்டார். குருதேவரைக் காண அதர் மிகவும் ஏக்கம் கொண்டவராக விளங்கினார். குருதேவர் வரப்போவது அவருக்குச் சரியாகத் தெரியாது. அதனால் எந்தவித முன்னேற்பாடும் செய்ய வில்லை. இறைவனின் திருவுளத்தால் தான் குருதேவர் அங்கு சென்றார்.
அதர்- நீங்கள் இங்கு வந்து அதிக நாட்கள் ஆகி விட்டன. இன்று நீங்கள் வர வேண்டுமென்று வேண்டிக்கொண்டேன். கண்ணீர் வடித்தேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(மகிழ்ந்தவராய் புன்னகையுடன்)- என்னப்பா சொல்கிறாய்!
இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அறையில் விளக்கு ஏற்றப் பட்டது. குருதேவர் கூப்பிய கைகளுடன் தேவியை வணங்கினார். அவர் மந்திரஜபம் செய்து கொண்டிருப்பது போல் தோன்றியது. அதன் பிறகு இனிய குரலில், கோவிந்தா கோவிந்தா! சச்சிதானந்தா! ஹரிபோல்! ஹரிபோல்! என்நெல்லாம் கூறத் தொடங்கினார். அவரது வார்த்தைகள் அழுதினைத் தெளித்தது போல் இருந்தது. பக்தர்கள் மௌனமாக அந்த நாம அமுதத்தைப் பருகினார்கள்.
ராம்லால் பாட ஆரம்பித்தார்.
அதற்கு மேல் தொண்டையிலே..................ஆகாசத்தில் கரைந்து விடும்” என்ற வரிகளை ராம்லால் பாடும்போது குருதேவர் ம-விடம் கூறினார், இதைக்கேள். இதைத் தான் உருவமற்ற சச்சிதானந்த தரிசனம் என்பார்கள். விசுத்த சக்கரத்தை ப் பிளந்து சென்றால் எல்லாம் வெட்ட வெளி தான்.
ம- ஆம், சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மாயையிலிருந்து தோன்றியவையான உயிர்களையும் உலகத்தையும் கடந்து விட்டால் நித்தியத்தை அடையலாம். சாதத்தைப் பிளந்து சென்றால் சமாதி நிலை கூடுகிறது. ஓங்கார சாதனை செய்யச்செய்ய நாதத்தைப் பிளந்து செல்லலாம். பிறகு சமாதி நிலை ஏற்படுகிறது.
குருதேவருக்குப் பழம், இனிப்பு முதலியவற்றை வழங்கினார் அதர். இன்று யது மல்லிக்கின் வீட்டிற்குப்போக வேண்டுமு்” என்று கூறினார் குருதேவர்.
குருதேவர் யது மல்லிக்கின் வீட்டை அடைந்தபோது எங்கும் நிலவின் ஒளி பரவி விட்டிருந்தது. முதலில் சிம்ம வாகினி தேவியை தரிசிக்க பூஜையறைக்கு அவர் சென்றார். பக்தர்களும் உடன் சென்றனர். மலர்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப் பட்டு தேவி அசாதாரணமான பொலிவுடன் காட்சியளித்தாள். அருகில் புரோகிதர் அமர்ந்திருந்தார்.
தேவியின் திருமுன்னர் விளக்கு ஏற்றப் பட்டிருந்தது. பக்தர் ஒருவரிடம் ஒரு ரூபாயைக் காணிக்கையாக வைத்து தேவியை வணங்குமாறு கூறினார் குருதேவர். கோயிலுக்குச்சென்றால் காணிக்கை செலுத்த வேண்டும் அல்லவா!
குருதேவர் சிம்மவாகினியின் திருமுன்னர் கைகூப்பிய வண்ணம் நின்றார். அருகில் பக்தர்களும் கை கூப்பி நின்றனர். இவ்வாறு தொழுதவாறு குருதேவர் நீண்ட நேரம் நின்றார். என்ன ஆச்சரியம்! அப்படியே சமாதியில் ஆழ்ந்துவிட்டார். கற்சிலைபோல் சலனமின்றி நின்று கொண்டிருந்தார். கண்கள் இமைக்கவில்லை.
வெகு நேரத்திற்குப் பிறகு நீண்ட பெருமூச்சு விட்டார். சமாதி கலைந்தது. ஏதோ போதையில் சொல்வது போல், அம்மா, போய் வருகிறேன்” என்றார். ஆனால் அவரால் நகர முடியவில்லை. அப்படியே பரவச நிலையிலேயே நின்று கொண்டிருந்தார். ராம் லாலிடம் , நீ அந்தப் பாட்டைப் பாடு, நான் சரியாகி விடுவேன்” என்றார்.
ராம் லால் புவனசிவ மோகினியே” என்ற பாடலைப் பாடினார்.
பாட்டு முடிந்தது. குருதேவரும் பக்தர்களும் வரவேற்பறைக்கு வந்தனர். வரும் வழியில் அம்மா, என் இதயத்தில் தங்கு தாயே! என்று ஒரு முறை கூறினார்.
யது மல்லிக் தன் உறவினர்களுடன் வரவேற்பறையில் இருந்தார்.
குருதேவர் பரவச நிலையில் பாடினார்.
பரவச நிலை சிறிது கலைந்ததும் குருதேவர், எனக்கு தேவியின் பிரசாதம் வேண்டும் ” என்றார். சிம்மவாகினியின் பிரசாதம் கொண்டு வந்து குருதேவருக்குக் கொடுக்கப் பட்டது. யது மல்லிக் உட்கார்ந்து கொண்டிருந்தார். அருகில் சில நண்பர்களும் உறவினரும் நாற்காலியில் இருந்தனர். அவர்களில் முகஸ்துதி செய்யும் சிலரும் இருந்தனர்.
குருதேவர் யது மல்லிக்கைப் பார்த்தவாறு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சிரித்துப் பேசினார். பக்தர்களுள் சிலர் அடுத்த அறையில் இருந்தனர்.ம-வும் வேறு ஓரிருவரும் குருதேவரின் அருகில் அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்- (சிரித்தபடியே)-
ஆமாம் நீ ஏன் இந்தக் கோமாளிகளை உடன் வைத்திருக்கிறாய்?
யது(சிரித்தவாறு)-
கோமாளிகளாக இருக்கட்டுமே, நீங்கள் அவர்களை கரைசேர்க்க மாட்டீர்களா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடியே)-
கள் பானையை தூய்மைப்படுத்த கங்கையால் முடியாதே!
யது மல்லிக் சண்டி பாராயணத்திற்கு ஏற்பாடு செய்வதாக குருதேவரிடம் வாக்களித்திருந்தார். நீண்ட நாட்கள் கழிந்த பின்னரும் அதை அவர் நிறைவேற்றவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்னப்பா? சண்டி பாராயணம் என்ன வாயிற்று?
யது-
பல வேலைகள், இது வரை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்- அதெப்படி? ஆண்மகனுக்கு ஒரு வாக்கு அல்லவா! ஆணின் வார்த்தையும் யானையின் தந்தமும் ஒன்று போல். ஆண் மகனுக்கு ஒரு வாக்கு, என்ன சொல்கிறாய்?
யது( சிரித்துக் கொண்டே)-
அதென்னவோ உண்மை தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நீ தந்திரமான மனிதன். கணக்குப் பார்த்து செலவு செய்கிறாய். பிராமணனின் பசுபோல்- குறைவாகத் தீனி தின்ன வேண்டும், அதிகமாக சாணம் போட வேண்டும். குடம் குடமாக ப் பாலும் கறக்க வேண்டும்.( எல்லோரும் சிரித்தனர்)
சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவர் யது விடம் கூறினார். எனக்குப் புரிந்து வி்ட்டது” நீ ராம் ஜீவன் பூரிலுள்ள சிலையைப்போன்றவன்- பாதி சூடு, பாதி குளிர். கடவுளையும் நேசிக்கிறாய், உலகையும் விரும்புகிறாய்.
பிறகு குருதேவர் ஓரிரு பக்தர்களுடன் யதுவின் வீட்டில் இனிப்பு, பழம், பால் முதலியவற்றை உட்கொண்டார். பின்னர் கேலாத் கோஷின் வீட்டிற்குச் சென்றார்.
குருதேவர் கேலாத் கோஷின் வீட்டிற்குச் சென்ற போது இரவுபத்து மணி இருக்கும். வீடும் வீட்டின் பெரிய முற்றமும் விண்ணில் உலவும் வெண்ணிலவின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது. வீட்டில் சென்றதும் குருதேவர் பரவச நிலை அடைந்தார். அவருடன் ராம்லால், ம-, இன்னும் சில பக்தர்களும் இருந்தனர்.
அது பல கட்டுக்களைக் கொண்ட ஒரு வீடு. மாடியில் வராந்தா வழியாகச் சிறிது தூரம் தெற்கே சென்று கிழக்கே திரும்பி, பிறகு வடக்காக க் கொஞ்ச தூரம் சென்றால் வீட்டின் உட்பகுதியை அடையலாம். வீட்டின் இந்தப் பகுதிக்கு வந்தால் பெரிய அறைகளும் முன்பக்கம் ஒரு நீண்ட வராந்தாவும் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாமல் இவை வெறிச்சோடிக் கிடந்தன.
குருதேவரை வடகிழக்கில் உள்ள ஓர் அறையில் உட்கார வைத்தனர். அவர் இன்னும் பரவச நிலையிலேயே இருந்தார். அவரை அங்கே அழைத்திருந்த பக்தர் வந்து வரவேற்றார். அவர் ஒரு வைணவர், உடலில் நாமம் முதலிய சின்னங்கள், கையில் ஒரு ஜபமாலை பை. ஆள் சற்று பழைமவாதி. கேலாத் கோஷின் சம்பந்தி. அவ்வப்போது தட்சிணேசுவரம் சென்று குருதேவரைத் தரிசித்திருக்கிறார். சில வைணவர்கள் கறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் வேதாந்திகளையும் சாக்தர்களையும் நிந்திப்பார்கள். குருதேவர் பேச ஆரம்பித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( வைணவ பக்தரையும் மற்ற பக்தர்களையும் பார்த்து)-
என் மதம் தான் உண்மை. மற்றவர்களின் மதம் தவறு.- இத்தகைய போக்கு நல்லதல்ல. இறைவன் ஒருவனே, இரண்டல்ல, அவரைப் பல்வேறு மக்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கின்றனர். சிலர்காட் என்கின்றனர். சிலர் அல்லா என்கின்றனர். சிலர் கிருஷ்ணன் என்றும், சிலர் சிவன் என்றும், சிலர் பிரம்மம் என்றும் அழைக்கின்றனர். குளத்தில் தண்ணீர் இருக்கிறது. ஒரு துறையில் வாட்டர் என்கின்றனர். இன்னொரு துறையில் ஜலம் என்கின்றனர். மற்றொரு துறையில் பானி என்கின்றனர். இந்துக்கள் ஜலம் என்கின்றனர். கிறிஸ்தவர்கள் வாட்டர் என்கின்றனர். முகமதியர்கள் பானி என்கின்றனர். ஆனால் பொருள் ஒன்று தான். மதம் என்றால் வழி. ஒவ்வொரு மதமும் நம்மை இறைவனிடம் அழைத்துச்செல்கின்ற ஒவ்வொரு வழியாகும். பல இடங்களிலிருந்து பாய்ந்து வருகின்ற நதிகள் கடலில் சங்கமமாவது போல்.
வேதம், புராணம், தந்திரம் எல்லாம் காட்டுவது ஒரே சச்சிதானந்தமே. வேதத்தில் சச்சிதானந்த பிரம்மம். புராணத்தில் சச்சிதானந்த கிருஷ்ணர், சச்சிதானந்த ராமர், தந்திரத்தில் சச்சிதானந்த சிவன். சச்சிதானந்த பிரம்மம். சச்சிதானந்த கிருஷ்ணர், சச்சிதானந்த சிவன்.
எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
வைணவர்-
சுவாமி, நாம் ஏன் தான் இறைவனை நினைக்க வேண்டும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இந்த உணர்வு இருப்பவன் ஜீவன் முக்தன். ஆனால் எல்லோருக்கும் இந்த நம்பிக்கை இல்லை. வெறுமனே வாய் ஜம்பம் தான். இறைவன் இருக்கிறார், அவருடைய விருப்பப்படியே எல்லாம் நடக்கின்றன. என்பதையெல்லாம் உலகியல் மக்கள் கேட்கின்றனர். ஆனால் அதில் நம்பிக்கை வைப்பதில்லை.
உலகியல் மக்களின் இறைவன் எப்படிப்பட்டவர் தெரியுமா? குழந்தைகள் சண்டையிடுகின்றனர், அப்போது கடவுள் பெயரால் சத்தியம் செய்கின்றனர். இது வயதான பாட்டி, அத்தைகள் சண்டை போடும் போது சொன்னதைக்கேட்டு திருப்பிச்சொல்வது, அவ்வளவு தான்.
எல்லோராலும் இறைவனைப் புரிந்து கொள்ள முடியுமா? இறைவன் நல்லவர்களைப் படைத்திருக்கிறார்.
தீயவர்களைப் படைத்திருக்கிறார். பக்தர்களைப் படைத்திருக்கிறார். பக்தர் அல்லாதவர்களைப் படைத்திருக்கிறார். நம்பிக்கை உள்ளவர்களைப் படைத்திருக்கிறார். நம்பிக்கையற்றவர்களை ப் படைத்திருக்கிறார். அவருடைய திருவிளையாடலில் எல்லா விசித்திரங்களும் உள்ளன. அவரது சக்தி சில இடங்களில் அதிகமாக வெளிப் படுகிறது. சில இடங்களில் குறைவாக வெளிப்படுகிறது. சூரிய ஒளி மணலை விட தண்ணீரில் அதிகம் பிரகாசிக்கும். தண்ணீரைவிடக் கண்ணாடியில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கும். உத்தம பக்தன், இடைநிலை பக்தன், சாதாரண பக்தன் என்று பக்தர்களிலும் பல தரங்கள் உள்ளனர். கீதையில் இந்தப் பிரிவுகள் பற்றிச் சொல்லப் பட்டுள்ளது.
வைணவர்-
ஆம், சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவன் உண்டு, மேலே ஆகாயத்தில் அதிக தூரத்தில் அவர் இருக்கிறார்” என்கிறான் சாதாரண பக்தன். இடைநிலை பக்தன். இறைவன் எல்லோரிலும் உணர்வுமயமாக, பிராண வடிவமாக இருக்கிறார், என்பான். உத்தம பக்தனோ, இறைவனே எல்லாமாக ஆகியிருக்கிறார். காண்பதெல்லாம் அவரது வெவ்வேறு உருவங்கள் தான். அவரே மாயை, அவரே உயிர்கள். அவரே உலகம். அவரே எல்லாமாக ஆகியிருக்கிறார். அவரைத் தவிர வேறு எதுவுமே கிடையாது, என்பான்.
வைணவர்-
இத்தகைய நிலை யாருக்காவது கிடைக்குமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனை தரிசிக்காவிட்டால் இத்தகைய நிலை கிடைக்காது. இறைக்காட்சி பெற்றவனா இல்லையா என்பதற்குச் சில அடையாளங்கள் உள்ளன. அவன் சில சமயம் பைத்தியம் பிடித்தவனைப்போல் சிரிப்பான். அழுவான். ஆடுவான், பாடுவான், சில சமயம் குழந்தை யைப்போல் அதாவது, ஐந்து வயதுக் குழந்தையின் நிலையில் கள்ளங்கபடமற்றவனாக , பரந்த மனம் படைத்தவனாக இருப்பான். அவனிடம் அகங்காரம் இருக்காது. அவனுக்கு எதிலும் பற்று இல்லை. எந்தகுணத்தின் பிடியிலும் அவன் இல்லை. எப்போதும் ஆனந்த மயமாக இருப்பான் அவன். இன்னும் சில சமயம் பிசாசைப்போல் இருப்பான். சுத்தம், அசுத்தம் என்ற வேறுபாடு அவனிடம் இல்லை. விதிகள் விலக்குகள் எல்லாம் அவனுக்கு ஒன்றாகிவிடும். சில சமயம் ஜடம்போல் எதையோ பார்த்தபடி இருப்பான். சில சமயம் அவனால் எந்தச் செயலும் செய்ய முடியாது. எந்த முயற்சியிலும் ஈடுபட முடியாது.“
குருதேவர் தமது நிலைகளை எல்லாம் சுட்டிக்காட்டு கிறாரா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( வைணவ பக்தரிடம்)-
நீ, உனது” இது ஞானம், நான்” எனது”- இது அஞ்ஞானம். ” எம்பெருமானே , எல்லாம் செய்பவன் நீ, நான் வெறும் கருவி, உடல், மனம், வீடு, மனைவி, மக்கள், உலகம் எல்லாம் உன்னுடையவை. எதுவும் என்னுடையதல்ல- இது தான் ஞானம்.
ஞானம் இல்லாதவன்- இறைவன் அதோ அங்கே வெகுதொலைவில் இருக்கிறார்” என்கிறான். ஞானியோ, இறைவன் இதோ, இங்கே வெகு அருகில், உள் நின்று வழி நடத்துபவராக இதய நடுவில் இருக்கிறார். மேலும் அவரே பல்வேறு உருவங்களையும் தரித்துள்ளார்” என்று அறிகிறான்.
....................................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-39
...........................
ஞாயிறு, ஜீலை 22, 1883
...............................
பிற்பகல் இரண்டு மணி, தட்சிணேசுவரத்தில் குருதேவரின் அறை. விடுமுறை நாளாதலால் குருதேவரைத் தரிசிக்க பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர். மற்ற நாட்களில் பொதுவாக அவர்களால் வர முடிவதில்லை. அதர், ராக்கால், ம- முதலியோர் பிற்பகல் இரண்டு மணி அளவில் ஒரு வாடகை வண்டியில் காளி கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். பகல் உணவிற்குப் பிறகு குருதேவர் சிறிது ஓய்வெடுத்தார். அறையில் மணிமல்லிக் முதலிய பக்தர்கள் இருந்தனர்.
குருதேவரின் அறைச் சுவர்களில் படங்கள் மாட்டப் பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் பீட்டரை ஏசுநாதரை கைகொடுத்து தூக்கிக் காப்பாற்றும் படம். புத்தரின் ஒரு சிறிய கற்சிலையும் அங்கே இருந்தது.
குருதேவர் கட்டிலில் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார். பக்தர்கள் சிலர் பாயிலும், சிலர் தரையிலும், தடுக்குகளிலும் உட்கார்ந்திருந்தனர். மகா பருஷரும் ஆனந்த மூர்த்தியுமான குருதேவரின் மீதே அனைவரின் பார்வையும் பதிந்திருந்தது.
மழைக்காலம், ஆகையால் புனித கங்கை வெள்ளப் பெருக்கெடுத்து தெற்கு நோக்கி விரைந்து பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். கடலைச்சேர்வதற்குத்தான் அவளிடம் என்னவொரு பரபரப்பு! ஓடும் வழியில் இந்த மகா புருஷருடைய தியான அறையைப் பார்த்ததும், ஒரே ஒரு முறை தொட்டு வணங்கி விட்டு ஓடிக்கொண்டிருந்தாள்.
மணி மல்லிக் அறுபது அறுபத்தைந்து வயதுடையவர். புராதன பிரம்ம சமாஜ பக்தர். சில நாட்களுக்கு முன்பு அவர் காசிக்குப் போயிருந்தார். குருதேவரின் தரிசனத்திற்காக வந்திருந்தார் . காசி பற்றி அவர் குருதேவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மணிமல்லிக்-
வேறொரு சாதுவையும் கண்டேன். புலன்களை அடக்கா விட்டால் ஒன்றும் நடக்காது. வெறுமனே கடவுளே. கடவுளே என்று சொல்வதால் என்ன பயன்? என்று அவர் கூறினார்..
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இவர்களுடைய கருத்து என்ன தெரியுமா? முதலில் சாதனை செய்ய வேண்டும்” சமம், தமம், திதிட்சை எல்லாம் பழகவேண்டும்.இவர்கள் நிர்வாண நிலையை அடைய முயல்கின்றனர். இவர்கள் வேதாந்த வாதிகள், ப்ரஹம ஸத்யம், ஜகத் மித்யை” என்று எப்போதும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இது கடினமான வழி. உலகம் உண்மையல்ல என்றால், நீயும் உண்மையல்ல. இவ்வாறு சொல்பவனும் உண்மையல்ல. அவனுடைய வார்த்தைகளும் கனவு போன்றவை. இவையெல்லாம் சாதாரண மனத்திற்கு எட்டாத விஷயங்கள்.
எப்படி தெரியுமா? கற்பூரத்தைக் கொளுத்தினால் எதுவும் மிஞ்சுவதில்லை. கட்டையை எரித்தால் சாம்பலாவது மிஞ்சும். இறுதியில் ஆராய்ச்சியின் முடிவில் சமாதி நிலை ஏற்படுகிறது. அந்த நிலையில் நான், நீ, உலகம் என்று எது பற்றிய எண்ணமும் இல்லை.
பத்மலோசனர் பெரிய அறிஞர், நான், அம்மா, அம்மா” என்று அரற்றிக்கொண்டிருப்பேன். என்னிடம் அவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவர் பர்துவான் அரசவைப் பண்டிதராக இருந்தார். கல்கத்தாவிற்கு வந்தபோது, காமார் ஹாட்டிற்குப் பக்கத்திலுள்ள தோட்ட வீட்டில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க எனக்கு ஆவல்உண்டாயிற்று. அவரிடம் அகங்காரம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக ஹிருதயனை அனுப்பி யிருந்தேன். அவரிடம் அகங்காரம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். நாங்கள் சந்தித்தோம், இவ்வளவு பெரிய பண்டிதராகவும் அறிஞராகவும் இருந்தும் ராம் பிரசாதரின் பாடல்களை நான் பாடக்கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதார்.
நான் அவருடன் பேசும்போது அடைந்த மகிழ்ச்சியை வேறு யாரிடமும் பெற்றதில்லை. அவர் என்னிடம், பக்தர் களோடு கூடி இருக்க வேண்டும் என்ற ஆசையை விட்டு விடுங்கள். இல்லாவிட்டால் பலவகையான மக்கள் வந்து உங்களைக் கீழே இழுத்து விடுவார்கள்” என்று சொன்னார்.
வைஷ்ணவ சரணின் குருவான உத்சவானந்தருக்கும் இவருக்கும் கடிதம் மூலம் வாதம் ஒன்று நடந்தது. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அதைப் பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சியை என்னிடம் கூறினார். ஒரு சபையில் சிவன் பெரியவரா, பிரம்மா பெரியவரா, என்பது பற்றி பெரிய விவாதம் நடந்தது. கடைசியில் பண்டிதர்கள் அனைவரும் பத்மலோசனரிடம் கேட்டனர். அதற்கு அவர் தமக்கே உரிய வெள்ளை உள்ளத்துடன், எனது முன்னோருள் பதினான்கு தலைமுறையினர் யாரும் சிவனையும் பார்த்ததில்லை. பிரம்மாவையும் பார்த்ததில்லை, என்றாராம். காமினீ- காஞ்சன தியாகம் பற்றி நான் சொல்வதைக்கேட்ட அவர் என்னிடம் ஒரு நாள், ஏன் அவற்றைத் தியாகம் செய்கிறீர்கள்? இது பணம், அது களிமண்” என்று வேறுபாட்டு அறிவு அஞ்ஞானத்தில் இருந்தல்லவா பிறக்கிறது? என்று கேட்டார். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. யாருக்குத் தெரியும்ஐயா? பணம் , காசெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை” என்று கூறினேன்.
ஆணவம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார். ஆண்டவனுக்கு உருவம் உண்டு என்பதை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் இறைவனின் செயலை யார் அறிவார்கள்? ஒரு நாள் எம்பெருமான் ஆத்யா சக்தியின் வடிவில் பண்டிதருக்குக் காட்சியளித்தார். அந்தப் பண்டிதருக்கு நீண்ட நேரம் புற உணர்வே இல்லை. சற்று உணர்வு மீண்ட பிறகு கா, கா(அதாவது காளி, காளி) என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது.
ஒரு பக்தர்-
சுவாமி, வித்யாசாகரைப் பார்த்தீர்களே? அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வித்யாசாகரிடம் புலமை இருக்கிறது. தயை இருக்கிறது. ஆனால் அவருக்கு அகநோக்கு இல்லை. உள்ளே பொன் புதைந்து கிடக்கிறது. அது அவருக்குத் தெரிந்திருக்குமானால், அவரது புறச் செயல்பாடுகள் குறைந்திருக்கும், இறுதியில் எல்லாமே அடியோடு நின்று போயிருக்கும். உள்ளே இதய நடுவில் இறைவன் இருக்கிறான் என்ற விஷயம் தெரிந்திருந்தால் அவரை தியானிப்பதிலேயே மனம் சென்றிருக்கும். பல காலம் பற்றின்றி வேலைகளைச் செய்த பிறகே சிலருக்கு வைராக்கியம் வருகிறது. மனம் இறைவனை நோக்கித் திரும்புகிறது. அவருடன் ஒட்டி உறவாடுகிறது.
வித்யாசாகர் செய்து வருபவை நல்ல காரியங்கள். தயை மிகவும் நல்லது. தயைக்கும் மாயைக்கும் அதிக வேறுபாடு உள்ளது. தயை நல்லது, மாயை நல்லதல்ல. மனைவி, மக்கள், சகோதரன், சகோதரி, தாய் ஈ தந்தை என்று உற்றார் உறவினரை நேசிப்பது மாயை. எல்லா உயிர்களையும் சமமாக நேசிப்பது தயை.
ம- தயையும், ஒரு தளையா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது மிக உயர்ந்தநிலை. பற்றிய விஷயம். தயை சத்வ குணத்திலிருந்து பிறக்கிறது. சத்வ குணத்தினால் காத்தலும், ரஜோ குணத்தினால் படைத்தலும் , தமோ குணத்தினால் அழித்தலும், நிகழ்கின்றன.ஆனால் சத்வம் , ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களையும் கடந்தது பிரம்மம். அது இயற்கைக்கு அப்பாற்பட்டது.
பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தால் எப்படி திருடன் நேர் வழிகளில் செல்வதில்லையோ அது போல் இந்த குணங்களாலும் நேர்வழி எதிலும் செல்ல முடிவதில்லை.
சத்வம், ரஜஸ், தமஸ் மூன்று குணங்களுமே திருடர்கள். ஒரு கதை சொல்கிறேன் கேள்.
ஒருவன் காட்டு வழியாகப்போய் கொண்டிருந்தான். அப்போது மூன்று திருடர்கள் வந்து அவனைப் பிடித்து அவனிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டனர். அவர்களுள் ஒருவன், இவனை விட்டு வைப்பதால் என்ன லாபம்? என்று சொல்லிவிட்டு, வாளை ஓங்கியபடி வந்தான். அப்போது மற்றொருவன், வேண்டாம், இவனைக் கொல்வதால் என்ன பயன்? கைகால்களைக் கட்டி இங்கேயே போட்டு விடுவோம்” என்றான். அப்படியே அவனுடைய கைகால்களைக் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்கள். சற்று நேரங்கழித்து அவர்களுள் ஒருவன் திரும்பிவந்து, ஐயோ பாவம்! பலமாக அடிபட்டு விட்டதா? இதோ , உன் கட்டுக்களை அவிழ்த்து விடுகிறேன்” என்று கூறி கட்டுக்களை அவிழ்த்து விட்டான். பிறகு அவன், வா, உன்னை நெடுஞ்சாலை வரை கொண்டு போய் விடுகிறேன்” என்று சொன்னான். நீண்ட நேரத்திற்குப் பிறகு இருவரும் நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தார்கள்” . அப்போது அந்தத்திருடன், இந்தப் பாதையிலேயே போ, அதோ உன் வீடு தெரிகிறது பார்!என்றான். உடனே அந்த மனிதன் திருடனிடம், ஐயா, நீங்கள் எனக்கு பேருதவி செய்திருக்கிறீர்கள். நீங்களும் என்னுடன் வாருங்கள், என் வீட்டிற்கு வந்து போகலாம்” என்றான். அதற்குத் திருடன், அங்கே வர எனக்குத் தகுதி இல்லை. போலீசுக்குத் தெரிந்து விடும்” என்றான்.
உலக வாழ்க்கை தான் காடு. சத்வம், ராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களும் திருடர்கள். அவர்கள் மனிதனின் உண்மையறிவை அபகரிக்கின்றனர். தமோ குணம் மனிதனை அழிக்க முற்படுகிறது. ரஜோ குணம் சம்சாரத்தில் அவனைக் கட்டி வைக்கிறது. ஆனால் சத்வ குணம் அவனை ரஜஸ் மற்றும் தமோ குணங்களிலிருந்து காப்பாற்றுகிறது. சத்வ குணத்தை ச் சார்ந்திருந்தால் காமம், குரோதம் போன்ற தமோ குணங்களிலிருந்து காக்கப் படுவோம். சத்வ குணம் மனிதனை சம்சாரப் பந்தத்திலிருந்து விடுவிக்கும். ஆனால் சத்வ குணமும் ஒரு திருடன் தான், உண்மையறிவை அதனால் தர முடியாது. மேலான அந்த இடத்தை அடைவதற்கான வழியை அது நமக்குக் காட்டுகிறது. அந்த வழியில் நம்மைச்சேர்த்து , அதோ பார், அங்கே உன் வீடுதென்படுகிறது” என்று கூறுகிறது. சத்வ குணமும் பிரம்ம ஞானத்திலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கிறது.
பிரம்மம் என்ன என்பதைச்சொற்களால் கூற முடியாது. அதை அடைந்தவனாலும் விவரம் சொல்ல முடிவதில்லை. கடலில் கறுப்புத் தண்ணீர்ப் பகுதியை அடைந்த கப்பல்கரைக்குத் திரும்பி வருவதில்லை என்ற பழமொழி ஒன்று உண்டு.
ஒரு சமயம் நான்கு நண்பர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் சுவரால் சூழப்பட்ட ஓர் இடத்தைக் கண்டனர். சுவர் மிக உயரமாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஒருவன் சுவரில் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கு கண்ட காட்சியினால் பிரமிப்புற்று,பேசும் சக்தியை இழந்தவனாக ஹா, ஹா என்று கூறிய படியே உள்ளே குதித்து விட்டான். அவன் எந்த விவரமும் சொல்லவில்லை. சுவரில் ஏறிய அனைவருமே, ஹா, ஹா, ஹா, ஹா! என்று கூவிக் கொண்டே குதித்து விட்டனர். என்றால் விவரம் சொல்வது யார்?
ஜடபாதர், தத்தாத்ரேயர் இவர்களும் தாங்கள் பெற்ற பிரம்ம தரிசனத்தைப் பற்றி எதுவும் கூற முடியவில்லை. பிரம்ம ஞானம் பெற்று, சமாதி நிலை ஏற்பட்டால் பிறகு , நான்” இருப்பதில்லை.ஆகவே தான் ராம்பிரசாதர், மனமே உன்னால் முடியாவிட்டால் ராம்பிரசாதரை உடன் அழைத்துச் செல்” என்று பாடுகிறார். மனம் ஒடுங்க வேண்டும். பிறகு ராம்பிரசாதரும் அதாவது நான்- உணர்வும் ஒடுங்க வேண்டும். அப்போது தான் பிரம்ம ஞானம் கிடைக்கும்.
ஒரு பக்தர்-
சுவாமி, சுகதேவருக்கு பிரம்ம ஞானம் கிடைக்கவில்லையா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சுகதேவர், பிரம்மமாகிய சமுத்திரத்தைப் பார்த்தார். தொட்டார். அவ்வளவே அதில் இறங்கி மூழ்கவில்லை. அதனால் தான் திரும்பி வந்து அவ்வளவு உபதேசங்கள் செய்தார் என்று சிலர் சொல்கிறார்கள் .ஆனால் அவர் பிரம்ம ஞானம் அடைந்த பிறகு உலகிற்கு உபதேசிப்பதற்காக இறங்கி வந்தார், என்று ஒருசிலர் கூறுகிறார்கள். அவர் பரீட்சித் மன்னனுக்கு பாகவதம் உபதேசித்தார். இன்னும் எவ்வளவோ போதனை செய்தார். அதற்காகவே ஆண்டவன் அவருடைய நான்- உணர்வை முற்றிலுமாக ஒடுக்கவில்லை. அவரிடம் வித்யா- நான் சிறிது இருந்தது.
ஒரு பக்தர்-
பிரம்ம ஞானம் அடைந்தால் சங்கம் கூட்டம் எல்லாம் நிலைக்குமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கேசவருடன் ஒரு நாள் பிரம்ம ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கேசவர், இன்னும் சொல்லுங்கள்”என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நான், இதற்கு மேல் சொன்னால் உங்கள் சங்கம் சமாஜம் எதுவும் நிலைக்காது” என்றேன். அப்படியானால் நிறுத்திக்கொள்ளுங்கள் சுவாமி! என்றார் கேசவர்.( எல்லோரும் சிரித்தனர்) அப்போது கேசவரிடம், ”நான் , எனது” என்பது அஞ்ஞானம். அஞ்ஞானம் இல்லாவிட்டால் ”நான் கர்த்தா”” என் மனைவி”, மக்கள், காசு, பணம், புகழ்” போன்ற எண்ணங்கள் வராது என்றுசொன்னேன். அதற்கு கேசவர், ”நான் உணர்வை விட்டு விட்டால் பிறகு ஒன்றுமே மிஞ்சாதே” என்றார். அதற்கு நான், கேசவரே, நீங்கள் நான்- உணர்வை முற்றிலுமாக விட்டு விட வேண்டுமு் என்று நான் சொல்லவில்லை. பழுக்காத- நான் என்பதை விடுங்கள், ”நான் கர்த்தா” என் மனைவி, மக்கள், ”நான் குரு”- இப்படிப் பட்ட அகங்காரம் தான் பழுக்காத- நான். இதை விட்டு விட்டு, பழுத்த- நானாக இருங்கள். அதாவது, நான் இறைவனுடைய கேவகன், நான் அவருடைய பக்தன், நான் கர்த்தா அல்ல, அவரே கர்த்தா என்று இருங்கள்” என்று கூறினேன்.
ஒரு பக்தர்-
பழுத்த- நான் என்ற நிலையில் சங்கம் கூட்டம் முதலியவை இருக்க முடியுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நான் கேசவரிடம், நான் தலைவன். நான் சங்கம் நடத்துகிறேன். நான் மக்களுக்குப் போதிக்கிறேன். இந்த எண்ணம் பழுக்காத – நான்” என்று சொன்னேன். சமயப் பிரசாரம் செய்வது மிகவும் கடினம். இறைவனுடைய ஆணை இல்லாமல் அது முடியாது. அவருடைய கட்டளை வேண்டும். சுகதேவர் , பாகவதம் சொல்வதற்காக ஆணை பெற்றிருந்தார். இறைவனது காட்சியைப் பெற்ற பிறகு யாரேனும் அவரது ஆணையைப்பெற்று பிரசாரம் செய்தால், மக்களுக்குப் போதித்தால், அதில் எவ்விதத் தவறும் இல்லை, அத்தகையவனுடைய நான், பழுக்காத- நான் அல்ல. அது பழுத்த- நான்.
பழுக்காத- நானை விட்டு விடுங்கள். பக்தன் என்ற எண்ணத்தில் தவறு இல்லை” என்று கேசவருக்குச் சொன்னேன். மேலும் அவரிடம், நீங்கள், சங்கம், சமாஜம் என்று உருவாக்குகிறீர்கள். ஆனால் மக்கள் உங்கள் சமாஜத்திலிருந்து பிரிந்து பிரிந்து போகின்றனர்” என்றேன். அதற்கு அவர், உண்மை தான் சுவாமி, மூன்று ஆண்டுகள் இந்த சமாஜத்தில் இருந்துவிட்டு, அந்த சமாஜத்திற்குப்போய் விடுகிறார்கள். அது மட்டுமல்ல, போகும் போது என்னை ஏசவும் செய்கிறார்கள்” என்றார். அதற்கு நான், நீங்கள் மனிதர்களுடைய இயல்பை ஏன் ஆராய்ந்து அறிவதில்லை? யார் வந்தாலும் அவர்களைச் சீடர்களாக ஆக்கிக் கொண்டால் என்ன செய்வது? என்று பதில் சொன்னேன்.
ஆத்மா சக்தியை ஒப்புக் கொள்ளுங்கள் என்று கேசவரிடம் சொல்லியிருந்தேன். பிரம்மமும் சக்தியும் வேறல்ல. யார் பிரம்மமோ அவரே சக்தி. உடலுணர்வு இருக்கும்வரை யில் இரண்டு என்று தோன்றவே செய்யும். பேசத் தொடங்கினாலே இரண்டு வந்து விடுகிறது. கேசவர் பிறகு காளியை ஒப்புக்கொண்டார்.
ஒரு நாள் கேசவர் சீடர்களுடன் இங்கே வந்திருந்தார். உங்கள் லெக்சரைக்கேட்க விரும்புகிறேன்” என்று அவரிடம் சொன்னேன். அவர் முற்றத்தில் அமர்ந்து லெக்சர் செய்தார். பிறகு கங்கைப் படித்துறையில் உட்கார்ந்து கொண்டு எங்களுக்குள் பல பேச்சு வார்த்தைகள் நடந்தன. பகவான் யாரோ அவரே ஒரு வகையில் பக்தனாக இருக்கிறார்” மற்றொரு வகையில் பாகவதமாக இருக்கிறார்” . பாகவதம்- பக்தன்- பகவான் என்று சொல்லுங்கள்” என்றேன் நான். கேசவரும் சீடர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து, பாகவதம்- பக்தன்- பகவான், என்று சொன்னார்கள். குரு- கிருஷ்ணர்- வைஷ்ணவர்” என்று கூறுமாறு சொன்னதும் கேசவர், சுவாமி, இப்பொழுது அவ்வளவு தூரம் வேண்டாம், மக்கள் என்னைப் பழமைவாதி என்று சொல்லி விடுவார்கள்” என்றார்.
மூன்று குணங்களையும் கடந்தவனாக இருப்பது மிகவும் கடினம். இறையனுபூதி பெறாமல் இந்த நிலை ஏற்படுவதில்லை. மனிதன் மாயையின் உலகில் வாழ்கிறான். இந்த மாயை அவன் இறைவனை அறிவதற்கு விடுவதில்லை. மாயை, மனிதனை அஞ்ஞானத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது.
ஒரு சமயம் ஹிருதயன், ஒரு காளைக் கன்றை வாங்கி வந்தான். புல் மேய்வதற்காக அதைத்தோட்டத்தில் கட்டி வைத்திருப்பதை ஒருநாள் கண்டேன். ஹிருதயா, இந்தக் கன்றைத் தினமும் ஏன் அங்கே கட்டி வைக்கிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவன், மாமா, இந்தக் கன்றை கிராமத்திற்கு அனுப்புவேன். பெரியதானால் ஏர் உழும்” என்றான். இதைக் கேட்டதும் நான் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டேன். மாயையின் விளையாட்டு தான் என்ன? காமார் புகூரும் சிகோரும் எங்கே? கல்கத்தா எங்கே? இந்தக் கன்று அவ்வளவு தூரம் போகுமாம்! அங்கே பெரிதாக வளருமாம்! பல நாட்களுக்குப் பிறகு இதை ஏரில் பூட்டுவானாம்! அது ஏர் உழுமாம்! இது தான் உலகம். இது தான் மாயை! என்று எண்ணினேன். நீண்ட நேரத்திற்குப் பிறகே எனக்கு மயக்கம் தெளிந்தது.
குருதேவர் இரவு பகலாக சமாதி நிலையில் ஆழ்ந்துள்ளார். இரவும் பகலும் எப்படி போகிறது என்பதே தெரிவதில்லை. ஏதோ அவ்வப்போது பக்தர்களிடம் இறைவனைப் பற்றி பேசுகிறார்” பாடுகிறார்.
பிறபகல் மூன்று நான்கு மணி இருக்கும். குருதேவர் சிறிய கட்டிலின் மீது பரவச நிலையில் உட்கார்ந்திருந்ததை ம- கண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு தேவியுடன் பேசத் தொடங்கினார். பேச்சின் நடவே, அம்மா, அவனுக்கு ஏன் ஒரு கலை மட்டும் கொடுத்தாய்? என்று கேட்டார். சிறிது நேரம் மௌனமாக இருந்தார் பிறகு அம்மா, புரிந்து கொண்டேன். ஒரு கலையே அவனுக்குப்பேர்தும். அதைக் கொண்டே அவன் உன்னுடைய காரியங்களைச் செய்து முடிப்பான். மக்களுக்குப் போதிப்பான்” என்றார்.
இவ்வாறு குருதேவர் தம் சீடர்களுக்கு சக்தியைக் கொடுக்கிறாரா என்ன? பிறகு மக்களுக்குப்போதிப்பதற்காக அவர்களை இப்போதே தயார் செய்கிறாரா?
ம-வுக்கு அருகில் ராக்காலும் அறையில் அமர்ந்திருந்தார். குருதேவர் இன்னமும் பரவச நிலையிலேயே இருந்தார். ராக்காலிடம், நீ கோபப் பட்டாயே! உனக்கு ஏன் கோபம் மூட்டினேன் தெரியுமா? காரணம் இருக்கிறது. மருந்து சரியாக வேலை செய்வதற்காகத் தான் அப்படிச்செய்தேன். பரு முகம் கூட்டிய பிறகு தான், அது உடையவோ வற்றவோ மருந்து போட வேண்டும்! என்று கூறினார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் பேசினார்.
ஹாஸ்ராவை ஓர் உலர்ந்த கட்டையாகக் கண்டேன். அப்படியிருந்தும் அவன் ஏன் இங்கே இருக்கிறான்? அதற்குக் காரணம் இருக்கிறது. ஜடிலனும் குடிலனும் இருந்தால் தான் விளையாட்டு சிறக்கும்.
(ம-விடம்) தெய்வ வடிவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜகத்தாத்ரி வடிவத்தின் பொருள் என்ன தெரியுமா? உலகைத் தாங்கி க் கொண்டிருப்பவள் என்பது தான். அவள் தாங்கிக் கொண்டிருக்கா விட்டால், அவள் காப்பாற்றா விட்டால், உலகம் விழுந்து விடும், நாசமாகி ப்போகும். மனமாகிய யானையை யாரால் அடக்க முடிகிறதோ அவனுடைய இதயத்தில் ஜகத்தாத்ரி தோன்றுகிறாள்.
ராக்கால்-
மனம் ஒரு மத யானை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதனால் தான் சிம்மவானினியின் வாகனமான சிங்கம் யானையை அடக்கி வைத்திருக்கிறது.
இரவு நெருங்கியது. கோயிலில் தீபாராதனை ஆரம்பமாயிற்று. சந்தியா வேளை. குருதேவர் தமது அறையில் அமர்ந்தபடி தேவ தேவியரின் திரு நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அறையில் தூபம் இடப் பட்டிருந்தது. குருதேவர் கூப்பிய கைகளுடன் சிறிய கட்டிலின் மீது உட்கார்ந்து தேவியைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். பெல்கேரியாவிலிருந்து கோவிந்த முகர்ஜியும் அவருடைய நண்பர்களும் வந்து அவரை வணங்கிவிட்டு, தரையில் அமர்ந்திருந்தனர். ம-வும், ராக்காலும் அங்கே இருந்தனர்.
அறைக்கு வெளியில் நிலவின் ஒளி எங்கும் பரவியிருந்தது.உலகம் அமைதியில் நிறைந்திருந்தது. அறையில் பக்தர்கள் மௌனமாக உட்கார்ந்து குருதேவரின் சாந்தத்திருவுருவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் பரவச நிலையில் இருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த நிலையிலேயே
பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உங்களுக்கு சந்தேகங்கள் இருக்குமானால் எல்லாவற்றையும் கேளுங்கள், பதில் சொல்கிறேன்.
கோவிந்தரும் மற்ற பக்தர்களும் யோசிக்கத் தொடங்கினர்.
கோவிந்தர்-
காளிதேவி ஏன் இந்த உருவத்துடன் காணப் படுகிறாள்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
தொலைவு காரணமாகத் தான். அருகில் சென்றால் எந்த நிறமும் இல்லை. குளத்துத் தண்ணீர் தூரத்திலிருந்து பார்த்தால் கறுப்பாகத் தெரிகிறது. அருகில் சென்று கையில் எடுத்துப் பார்த்தால் நிறமே இல்லை. தொலைவிலிருந்து ஆகாயம்நீல நிறமாகத்தோன்றுகிறது.அருகிலுள்ள ஆகாயத்தைப் பார், எந்த நிறமும் இல்லை. இறைவனை நெருங்குகின்ற அளவிற்கு அவருக்குப்பெயரும் வடிவமும் இல்லை, என்பது புரியும். அவரிலிருந்து சிறிது அகன்றால் மறுபடியும் , ”புல்பூவின் நிறமுடைய என் அன்னை காளி”
காளி புருஷனா, பிரகிருதியா? ஒரு பக்தன் பூஜை செய்தான். அதைப் பார்க்க வந்த மற்றொருவன் தேவியின் கழுத்தில் பூணூலைக் கண்டான்! உடனே அவன், தேவியின் கழுத்தில் பூணூலைப்போட்டிருக்கிறாயே? என்று கேட்டான். அதற்கு பக்தன், தம்பி, நீ தேவியைப்பற்றி தெரிந்து கொண்டாய் போலிருக்கிறது. என்னால் இன்னமும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் புருஷனா பிருகிருதியா என்று நிச்சயமாக என்னால் இன்னமும் அறிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் பூணூல் அணிவித்துள்ளேன்” என்றான்.
யார் காளியோ அவளே பிரம்மம். உருவம் உள்ளவர் யாரோ அவரே உருவம் அற்றவர். யார் குணம் உடையவரோ அவரே குணம் அற்றவர். பிரம்மமே சக்தி. சக்தியே பிரம்மம். வேறுபாடு இல்லை. சச்சிதானந்தமயனும் சச்சிதானந்தமயியும்.
கோவிந்தர்-
யோக மாயை என்று ஏன் சொல்கிறார்கள்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
யோக மாயை என்பது புருஷன் பிரகிருதிஆகிய இரண்டின் சேர்க்கை. நீ காண்பதெல்லாம் புருஷ- பிரகிருதியின் சேர்க்கைதான். சிவ-காளி வடிவத்தைப்பார். சிவன் மீது காளி நின்று கொண்டிருக்கிறாள். சிவன் சவம்போல் விழுந்து கிடக்கிறார். காளி சிவனை ப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதெல்லாம் புருஷ-பிரகிருதி சேர்க்கைதான். புருஷன் செயலற்றவன். அதனால் தான் சிவன் சவம் போல் கிடக்கிறார். புருஷனுடைய சேர்க்கையால் பிரகிருதி படைத்தல், காத்தல், அழித்தல் என்று எல்லாவற்றையும் செய்கிறாள்.
ராதையும் கிருஷ்ணுனும் சேர்ந்திருக்கும் உருவத்தின் பொருளும் இது தான். இந்தச் சேர்க்கைக்காகத்தான் அது வளைந்த நிலையில் உள்ளது. இந்தச்சேர்க்கையைக் காட்டுவதற்காகத்தான் கிருஷ்ணர் மூக்கில் முத்து அணிந்திருக்கிறார். ராதை தன் மூக்கில்நீலமணி அணிந்துள்ளான். ராதையின் வெண்ணிறம் முத்தைப்போல் பிரகாசிக்கிறது. கிருஷ்ணர் நீல நிறம் படைத்தவர். ஆகவே தான் ராதை நீல மணி அணிந்திருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ணர் மஞ்சள் உடையையும் ராதை நீல உடையையும் உடுத்தியிருக்கின்றனர்.
உத்தம பக்தன் யார்? பிரம்ம ஞானம் பெற்ற பிறகு அந்த பிரம்மமே உயிர்களாகவும், உலகமாகவும் இருபத்து நான்கு தத்துவங்களாகவும் ஆகியிருப்பதாகக் காண்பவனே உத்தம பக்தன். முதலில், இது அல்ல, இது அல்ல” என்று ஆராய்ச்சி செய்து மாடியை அடைய வேண்டும். பிறகு மாடி எந்தப் பொருட்களால் கட்டப்பட்டிருக்கிறதோ, அதே செங்கல், சுண்ணாம்பு முதலான பொருட்களால் தான் படிகளும் கட்டப்பட்டுள்ளன என்பதை பக்தன் அறிகிறான். அப்போது பிரம்மமே உயிர்கள், உலகம் ஆகிய எல்லாமாக இருப்பதைக் காண்கிறான்.
வெறும் ஆராய்ச்சியா! சீச்சீ! பயன் இல்லை! (குருதேவர் காறித்துப்பினார்) ஆராய்ச்சி செய்து நான் ஏன் வறண்டு போய் வாழ வேண்டும்? நான், நீ என்பது இருக்கும் வரை இறைவனுடைய திருவடிக் கமலத்தில் சுத்த பக்தி வேண்டும். (கோவிந்தரிடம்) நான் சில வேளைகளில், நீயே நான், நானே நீ” என்றுகூறுகிறேன். சில வேளைகளில் ”நீயே நீ” என்கிறேன். அப்போது ”நான்” என்பதைத்தேடினாலும் கிடைப்பதில்லை.
சக்தி தான் அவதாரங்களாக வருகிறாள். ஒரு சாரரின் கருத்துப்படி ராமரும் கிருஷ்ணரும் சிதானந்தக்கடலின் இரண்டு அலைகள் மட்டுமே.
அத்வைத ஞானத்திற்குப் பிறகு உணர்வு விழித்தெழுகிறது. எல்லா உயிர்களிலும் இறைவன் உணர்வு வடிவில் இருப்பதை அப்போது காண்கிறான். இந்த உணர்வு விழிப்பிற்கு ப் பிறகு ஆனந்தம். அத்வைதம், சைதன்யம், நித்யானந்தம்.
(ம-விடம்) உனக்குச்சொல்கிறேன். த தெய்வ வடிவத்தில் அவநம்பிக்கை கொள்ளாதே. உருவம் இருப்பது உண்மை என்று நம்பு. பிறகு உனக்கு எந்த உருவம் பிடித்திருக்கிறதோ அந்த உருவத்தை தியானம் செய்.
கோவிந்தரிடம்) விஷயம் என்ன தெரியுமா? இன்ப நுகர்ச்சியில் நாட்டம் இருக்கும் வரை இறைவனை அறியவோ காணவோ மனம் ஏங்குவதே இல்லை, குழந்தை விளையாட்டில் ஆழ்ந்து எல்லாவற்றையும் மறந்திருக்கிறது. இனிப்பைக் கொடுத்துக் கூப்பிடு, அதை ஏதோ சிறிது உண்ணும், அவ்வளவு தான். ஆனால் விளையாட்டு பிடிக்காத போது, இனிப்பு பிடிக்காத போது, அம்மாவிடம் போவேன்” என்று சொல்லும். அதன் பிறகு இனிப்பு வேண்டியதில்லை. முன்பின் தெரியாத ஒருவன் வந்து, வா உன்னை அம்மாவிடம் அழைத்துப்போகிறேன்” என்றால் அவனுடன் போகும். யார் இடுப்பில் தூக்கிச் செல்வானோ அவனுடன் தான்போகும்.
இன்ப நாட்டம் போய் விட்டால் இறைவனுக்காக மனம் ஏங்கிப் பரிதவிக்கும். அவரை எப்படி அடைவது என்ற ஒரே சிந்தனை மட்டும் தான் இருக்கும். அந்த நிலையில் இருப்பவனிடம் இறைவனைப் பற்றி யார் எது சொன்னாலும் அவன் அதைக்கேட்பான்.
ம-( தனக்குள்)-
இன்ப நுகர்ச்சியில் நாட்டம் போனால் தான் மன ஏக்கம் வருமாம்!
........................................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-40
...........................
சனிக்கிழமை, ஆகஸ்ட் 18, 1883
.......................
ஸ்ரீராமகிருஷ்ணர் பலராம் போஸின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவதார தத்துவத்தை விளக்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவதார புருஷர்கள் மக்களுக்கு உபதேசிப்பதற்காக பக்திநிலையை மேற்கொண்டு பக்தர்களோடு வாழ்கிறார்கள். மாடியை அடைந்த பிறகு, படிக் கட்டில் ஏறி இறங்குவது போல், மற்றவர்களை மாடியை அடையும் வரை, ஞானத்தை அடையும் வரை, எல்லா ஆசைகளும் அகலும் வரை பக்தி நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆசைகள் அடியோடு மறைந்த பிறகு தான் மாடியை அடைய முடியும். கணக்கெழுதி முடிக்காமல் கடைக்காரன் தூங்க மாட்டான். கணக்கைச்சரி செய்த பின்னரே தூங்கச்சொல்கிறான்.(ம-விடம்) தீவிரமாக முயன்றால் வெற்றி நிச்சயம். குதித்துப் போராடினால் சாதிக்க முடியும்.
நல்லது, கேசவர், சிவநாத், இவர்கள் செய்கின்றவழிபாட்டைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ம- சுவாமி, நீங்கள் கூறுவது போல் அவர்கள் தோட்டத்தையே வர்ணிக்கின்றனர். தோட்டத்தின் சொந்தக்காரனைக் காண்பது பற்றி பேசுவது அரிதாகவே இருக்கிறது. அனேகமாக ஆரம்பத்திலிருந்து முடிவுவரை தோட்டத்தைப்பற்றிய வர்ணனை தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சரியாகச் சென்னாய்! தோட்டச் சொந்தக் காரனைத்தேடிப் பிடித்து அவனுடன் பேச வேண்டும். அது தான் வேண்டியது. இறைவனைக்காண்பதே வாழ்க்கையின் நோக்கம்.
பலராமின் வீட்டிலிருந்து அதரின் வீட்டிற்கு வந்தார் குருதேவர். மாலை வேளைக்குப் பிறகு அதரின் விருந்தினர் அறையில் நாம சங்கீர்த்தனம் செய்து ஆடவும் செய்தார். வைஷ்ணவசரண் கீர்த்தனைகள் பாடினார். அதர், ம-, ராக்கால், முதலியோரும் இருந்தனர்.
பாட்டு முடியும்போது குருதேவர் பரவச நிலை அடைந்தார். ராக்காலிடம் (தம்மைச்சுட்டிக்காட்டி), இங்குள்ள (எனது) விஷயங்கள் ஆடி மாத மழை அல்ல.ஆடி மாத மழை திடீரென்று கொட்டோ கொட்டென்று கொட்டும்.அதே வேகத்தில் நின்றுவிடும். இது (நான்) தானாக பூமியைப் பிளந்துகொண்டு வருகின்ற சிவலிங்கம். மனிதனால் நிறுவப்பட்டதல்ல. அன்று நீ கோபித்துக்கொண்டு தட்சிணேசுவரத்திலிருந்து போய் விட்டாய், அம்மா, இவனது குற்றத்தை மன்னித்துவிடு” என்று தேவியிடம் நான் வேண்டிக்கொண்டேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர் அவதார புருஷரா? தானாக பூமியிலிருந்து தோன்றிய சிவனா?
பரவச நிலையில் இருந்தபடியே அதரிடம், அப்பா, நீ யாருடைய திருநாமத்தைப் பாடினாயோ, அந்த தெய்வத்தையே தியானம் செய்துவா, இவ்வாறு கூறிக்கொண்டே அதருடைய நாக்கைத்தொட்டு தமது விரலால் ஏதோ எழுதினார். இவ்வாறு அதருக்கு குருதேவர் தீட்சை தந்தாரா?
மற்றொரு நாள். தட்சிணேசுவரக்கோயிலில் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அறைக்குக் கிழக்குப் பக்கமுள்ள வராந்தாவில் உட்கார்ந்திருந்தார். ராக்கால், ம-, ஹாஸ்ரா, ஆகியோர் உடனிருந்தனர். தமது இளமைக்கால நிகழ்ச்சிகள் பல வற்றை ஸ்ரீராமகிருஷ்ணர் மெல்லிய குரலில் கூறினார்.
மாலைவேளை ஆகியது. குருதேவர் சமாதி நிலையில் ஆழ்ந்தார். தமது அறையிலுள்ள சிறிய கட்டிலில் அமர்ந்தபடி தேவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அம்மா, இவ்வளவு தடபுடல் எதற்கு? அம்மா, அங்கே நான் போகட்டுமா? நீ கூட்டிச்சென்றால் நான் போவேன் ” என்றார்.
குருதேவர் ஒரு பக்தரின் வீட்டிற்குப்போவதாக இருந்தது. எனவே தேவியின் திருவுளத்தை எதிர்பார்த்து இவ்வாறு கேட்கிறாரா?
குருதேவர் மீண்டும் தேவியிடம் பேசலானார். தமது அந்தரங்க பக்தர் ஒருவரைப் பற்றி அவர் பேசுவது போல் இருந்தது. அம்மா, அவனை நேர்வழியில் செலுத்து, போகட்டும். அம்மா, அவனுக்கு ஒரு கலை மட்டும் ஏன் கொடுத்தாய்?
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு மீண்டும் பேசினார். ஓ! புரிந்து விட்டது. இதிலேயே உன் பணி நடந்துவிடும், அப்படித்தானே!
பதினாறு கலைகளில் ஒன்று இருந்தாலே தேவியின் பணி, அதாவது உலகிற்குப்போதனை செய்வது நடந்துவிடும் என்பதை குருதேவர் கூறுகிறாரா!
மீண்டும் குருதேவர் பரவச நிலையில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே ம- முதலியோருக்கு ஆத்யா சக்தி மற்றும் அவதார தத்துவம் பற்றி கூறினார்.
யார் பிரம்மமோ அவரே சக்தி. அந்த சக்தியையே நான் அம்மா, என்று அழைக்கிறேன். அவர் செயலற்றவராக இருக்கும்போது அவரை பிரம்மம் என்கிறேன். படைத்தல், காத்தல், அழித்தல், போன்ற செயல்களில் ஈடுபடும்போது சக்தி என்கிறேன். இது தண்ணீர் நிலையாக நிற்பதையும் அலையாக எழுவதையும் போன்றதாகும். சக்தியின் திருவிளையாடலே அவதாரம். பிரேம பக்தியைப்போதிப்பதற்காக அவதாரம் நிகழ்கிறது. அவதார புருஷர் பசுவின் மடியைப்போன்றவர். பால், பசுவின் மடியிலிருந்து மட்டுமே கிடைக்கும்.
வயலின் உள்ளே மீன் வந்து சேர்வது போல் இறைவன் மனிதனில் அவதரிக்கிறார்.
வயலின் உள்ளே மீன் வந்து சேர்வது போல் இறைவன் மனிதனில் அவதரிக்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணர், சைதன்யர், ஏசு, போன்ற ஓர் அவதார புருஷரா –ஸ்ரீராமகிருஷ்ணர் என்று பக்தர்களுள் பலர் சிந்திக்கலாயினர்.
...........................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-41
...........................
ம-வுடன்
.....................
ஞாயிறு, ஆகஸ்ட் 19, 1883
........................
பௌர்ணமிக்கு அடுத்த நாள். நண்பகல் வேளை. சற்று முன்பு தான் தட்சிணேசுவரக்கோயிலில் நைவேத்தியம் நிறைவுற்று, தீபாராதனை நடைபெற்றதற்கான நாதசுவர இசை முழங்கியது. கோயிலையும் சாத்திவிட்டனர்.ஸ்ரீராமகிருஷ்ணர் பிரசாதம் உட்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு சிறிய கட்டிலில் அமர்ந்தார். ம- அங்கு வந்து அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார். குருதேவர் ம-விடம் வேதாந்தம் பற்றி பேசத்தொடங்கினார்.
அஷ்டாவக்ர சம்ஹிதையில் ஆன்ம ஞானம் பற்றி பேசப்பட்டுள்ளது. ஆன்ம ஞானிகள் ஸோஹம் அதாவது அந்தப் பரமாத்மா நானே என்கிறார்கள். இது வேதாந்த வாதிகளாகிய சன்னியாசிகளின் கருத்து. இல்லறத்தினருக்கு இந்தப் பாதை சரியல்ல. எல்லா செயல்களிலும் ஈடுபடுகின்றனர். கூடவே, நான் அந்த செயலற்ற பரமாத்மா, என்று கூறுவது எப்படி சரியாகும்? ஆன்மா எதையும் சாராதது என்கின்றனர் வேதாந்திகள். இன்ப துன்பம், பாவ புண்ணியம் இவை எதுவும் ஆன்மாவை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது. ஆனால் உடற்பற்று உள்ளவர்களை இவை பாதிக்க முடியும். புகை, சுவரை அழுக்காக்குகிறது. ஆனால் வானத்தை எதுவும் செய்ய முடியாது. கிருஷ்ண கிஷோர் ஞானிகளைப்போல், நான், க, அதாவது ஆகாசம் போன்றவன், என்பார். அவர் ஒரு பரம பக்தர். அவர் இவ்வாறு சொல்வது பரவாயில்லை. ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது.
ஆனால், நான் முக்தன்” என்ற பாவனை மிகவும் நல்லது. ”நான் முக்தன்” என்று சொல்லிச்சொல்லியே ஒருவன் முக்தனாகி விடுகிறான். ”நான் கட்டுண்டவன்” நான் கட்டுண்டவன்” என்று சொல்லிக்கொண்டே இருப்பவன் கட்டுண்டவனாகவே ஆகிவிடுகிறான். ”நான் பாவி” நான் பாவி” என்று புலம்பிக்கொண்டே இருக்கின்ற உதவாக்கரை தாழ்ந்து தாழ்ந்தே போகிறான். ”நான் இறைவனின் திருநாமத்தைச்சொல்கிறேன்” எனக்கு ஏது பாவம்” எனக்கு ஏது பந்தம்? என்று சொல்ல வேண்டும்.
இதோ பார்! இன்று என் மனம் மிகுந்த வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. தான் மிகவும் உடல் நலம் குன்றியிருப்பதாக ஹிருதயன் கடிதம் எழுதியிருக்கிறான். இது என்ன மாயையா, தயையா?
ம-
என்ன பதிலளிப்பார்? பேசாமல் உட்கார்ந்திருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மாயை எது தெரியுமா? தந்தை , தாய், சகோதரன், சகோதரி மனைவி, மக்கள் என்று உறவினர்களை நேசிப்பது. என்னிடம் தோன்றியிருப்பது எது- மாயையா, தயையா? ஹிருதயன் எனக்கு நிறைய செய்திருக்கிறான். பல சேவைகள் செய்தான். கால் கழுவி இருக்கிறான். கடைசியில் அவனே எனக்கு மிகுந்த துன்பங்களையும் கொடுத்தான். ஒரு சமயம் அவன் செய்த துன்பத்தைப் பொறுக்க முடியாமல் தடுப்புச் சுவரில் ஏறி கங்கையில் குதித்து உயிரைவிடவே போய் விட்டேன். ஆனால் எனக்கு அவன் நிறைய செய்திருக்கிறான். இப்பொழுது கொஞ்சம் பணம் கிடைத்தால் நிம்மதியாக இருப்பான். ஆனால் எந்தப் பெரிய மனிதரிடம் இதைச் சொல்வேன்? யார் இதைச் சொல்லிக்கொண்டு திரிவது?
மாலை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி. சிறந்த பக்தரான அதர் சேனும் பலராமும் வந்தனர். தரையில் உடல் படிய குருதேவரை வணங்கி அமர்ந்தனர். எப்படி இருக்கிறீர்கள்? என்று அவர்கள் குருதேவரை விசாரித்தனர். உடல் நலம் நன்றாக இருக்கிறது. ஆனால் மனத்தில் தான் சிறிய வேதனை” என்றார் குருதேவர். ஹிருதயனின் நோயைப் பற்றி அவர் எதையும் சொல்லவில்லை.
படாபஜாரிலுள்ள மல்லிக் குடும்பத்தினரின் சிம்மவாகினி சிலை பற்றி பேச்சு எழுந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சிம்மவாகினியைத் தரிசிக்க நான் போயிருந்தேன். மல்லிக் குடும்பத்தைச்சேர்ந்த ஒருவரின் வீட்டில் தரிசித்தேன். அது இடிந்த வீடு. அவர்கள் ஏழைகளாகி விட்டிருந்தனர். ஒரு பக்கம் புறா எச்சம், இன்னொருபக்கம் பாசி. அங்குமிங்கும் சுவரிலிருந்து சுண்ணாம்பு பொலபொலவென்று உதிர்ந்தவாறு இருந்தது. மற்ற மல்லிக் இனத்தினரின் வீட்டிற்கு மாறாக இந்த வீட்டில் வறுமை நிலவியது. (ம-விடம்) இதன்பொருள் என்ன? சொல் பார்க்கலாம்.?
ம- மௌனமாக இருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்ன தெரியுமா? எந்த வினையை யார் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதை அவன் அனுபவித்தேயாக வேண்டும். சம்ஸ்காரம், முன்வினைப்பயன் இவற்றை நம்பத்தான் வேண்டும்.
அந்த இடிந்த வீட்டிலும் சிம்மவாகினியின் முகத்தில் தெய்வீகப் பொலிவு மிளிரவே செய்தது. சிலைகளில் தெய்வம் உறைவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
நான் ஒரு முறை விஷ்ணுபூருக்குப் போயிருந்தேன். அரசருக்குப் பல கோயில்கள் உள்ளன. ஒரு கோயிலில் தேவியின் சிலை இருந்தது. தேவியின் பெயர் மிருண்மயி.கோயிலின் அருகில் கிருஷ்ண குளம். லால் குளம் என்றெல்லாம் பல குளங்கள் இருந்தன. குளத்து நீரில் பெண்கள் தலைக்குத்தேய்த்துக் கொள்ளும் வாசனை எண்ணெயின் மணம் வந்தது. எப்படி வந்தது சொல் பார்க்கலாம். எனக்கும் முதலில் தெரியவில்லை. மிருண்மயி தேவியைத் தரிசிக்க வருகின்ற பெண்கள் இந்த வாசனை எண்ணெயை தேவிக்கு அர்ப்பணிப்பார்களாம். குளத்தருகில் எனக்குப் பரவச நிலை ஏற்பட்டது. சிலையைத் தரிசிப்பதற்கு முன்பாகவே இது ஏற்படடது. அந்த நிலையில் குளத்தின் அருகில் மிருண்மயி தேவியின் தரிசனம் கிடைத்தது. இடுப்பு வரை தான் அவளது உருவம் தெரிந்தது.
இதற்கிடையே இன்னும் பல பக்தர்கள் வந்து சேர்ந்தனர். காபூலில் நடந்த அரசியல் கிளர்ச்சி, போர் முதலியவற்றைபற்றிபேச்சு எழுந்தது. யாகூப்கானை நாடு கடத்தி விட்டார்கள் என்று ஒருவர் சொல்லிவிட்டு, குருதேவரிடம் ஆனால் சுவாமி, யாகூப்கான் ஒரு பெரியபக்தன்” என்றுகூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
விஷயம் என்ன தெரியுமா? உடல் எடுத்தாலே சுகதுக்கம் தான். அது இயற்கை. கவி கங்கணன் எழுதிய சண்டியில் காலுவீர் என்பவனைப் பற்றி வருகிறது. அவன் தேவியின் வரத்தினால் பிறந்தவன். ஆனால் அவனும் சிறைக்குப்போக வேண்டியிருந்தது. அவனது மார்பில் கல் ஏற்றப்பட்டது. உடல் தரித்தால் சுக துக்க அனுபவம் இருக்கவே செய்யும். ஸ்ரீமந்தன் பெரிய பக்தன். அவனது தாய் குல்லனாவிடம் தேவி எவ்வளவு கருணை காட்டினாள்! இருந்தும் ஸ்ரீமந்தனுக்கு எவ்வளவு ஆபத்துக்கள் வந்தன! வெட்டுவதற்காக அவனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லக் கூட நேர்ந்தது.
ஒரு விறகு வெட்டி, பராசக்தியின் பரம பக்தனாக இருந்தான். அவன் தேவியின் காட்சியைப் பெற்றான். தேவி அவனிடம் மிகவும் கருணையாக இருந்தாள். எவ்வளவோ கருணை காட்டினாள்!ஆனாலும் விறகு வெட்டும் தொழில் அவனை விடவில்லை. அவன் விறகு வெட்டியே பிழைக்க வேண்டியிருந்தது.
நான்கு கைகளிலும் , சங்கு, சக்கரம், கதை, தாமரை தாங்கிய பகவானைச் சிறைச்சாலையில் தேவகி தரிசித்தாள். இருப்பினும் சிறைச் சாலையிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைக்கவில்லை.
ம- சிறைச்சாலையிலிருந்து மட்டுமா விடுதலை கிடைக்கவில்லை. இந்த உடம்புதான் எத்தனை துன்பங்களுக்கு இருப்பிடமாக இருக்கிறது! அதிலிருந்தே அவள் விடு பட்டிருக்க வேண்டுமே?ஷ ஸ்ரீராமகிருஷ்ணர்-
விஷயம் என்ன தெரியுமா? முன் வினைப் பயனின் அனுபவம். இன்னும் எவ்வளவு நாட்கள் வினைப் பயன்களை அனுபவிக்க வேண்டுமோ அது வரை உடலைத் தாங்க வேண்டியிருக்கிறது. ஒரு குருடன் கங்கையில் மூழ்கினான். பாவங்கள் எல்லாம் அவனை விட்டு நீங்கி விட்டன. ஆனால் குருடுமட்டும் நீங்கவில்லை. ( எல்லோரும் சிரித்தனர்) முன்வினைப் பயன் எஞ்சியிருந்தது. ஆகவே அனுபவிக்க நேர்ந்தது.
ம- ஆம் சுவாமி, எந்த அம்பை எய்து விட்டோமோ அதன் மீத நமக்கு எந்த ஆதிக்கமும் கிடையாது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உடம்பின் சுக துக்கங்கள் எப்படியோ போகட்டும். ஞானமும் பக்தி என்ற சொத்தும் பக்தனிடம் நிலைத்து நிற்கிறது. இந்தச் சொத்து ஒரு போதும் அவனிடமிருந்து விலகுவதில்லை. பாண்டவர்களை எடுத்துக்கொள். எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள்! அத்தனை துன்பங்களிலும் அவர்கள் ஒரு முறைகூட கடவுளை மறக்கவில்லை. அவர்களைப்போன்ற ஞானிகள், அவர்களைப்போன்ற பக்தர்கள் எங்கே இருக்கிறார்கள்?
அப்போது நரேந்திரரும், விசுவநாத உபாத்தியாயரும் வந்தனர். விசுவநாத் நேபாள மன்னரின் வக்கீல். அரச தூதராகவும் பணி புரிந்த அவரை கேப்டன் என்று குருதேவர் அழைப்பது வழக்கம். நரேந்திரருக்கு வயது இருபத்திரண்டு. பி. ஏ படித்துக்கொண்டிருந்தார். அவர் அவ்வப்போது பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் , குருதேவரைப்பார்க்க வருவார்.
அவர்கள் குருதேவரை வணங்கிவிட்டு தரையில் அமர்ந்தனர். குருதேவர் நரேந்திரரைப் பாடும்படி கேட்டுக் கொண்டார். அறையில் மேற்குச் சுவரில் தம்புரா மாட்டப்பட்டிருந்தது. பாடுவதற்காக தபேலாவில் சுருதி கூட்டிக்கொண்டிருந்த நரேந்திரரையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(நரேந்திரரிடம்)-
பார் , அதில் முன் போல் சத்தமில்லை.
கேப்டன்-
அது பூரணமாகி விட்டது. அதனால் தான் சத்தம் இல்லை.( எல்லோரும் சிரித்தனர்)
ஸ்ரீராமகிருஷ்ணர்-(கேப்டனிடம்)- ஆனால் நாரதர் முதலான ரிஷிகள்?
கேப்டன்-
அவர்கள் மற்றவர்களின் துயரத்தைக் கண்டு, அதற்காகத் தான் உபதேசித்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், நாரதர், சுகதேவர் முதலியோர் சமாதி நிலைக்குப் பிறகு இறங்கி வந்தனர்.கருணை காரணமாக, மற்றவர்களின் நன்மைக்காக அவர்கள் பேசினர்.
நரேந்திரர் பாடினார்-
இன்பம் ஆகிய அழுதமே, என்ற வாரத்தைகளைக்கேட்டதும் குருதேவர் ஆழ்ந்த சமாதியில் மூழ்கினார். அவர் கூப்பிய கைகளுடன் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தார். உடம்பு நிமிர்ந்திருந்தது. ஆனந்தமயியின் உருவக் கடலில் மூழ்கியிருந்தார் அவர். வெளியுலக உணர்வு அவரிடம் அடியோடு அற்றுப்போய்விட்டது. மூச்சு விடுகிறாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை. கண்கள் இமைக்கவில்லை. சித்திரம்போல் அசைவற்று அமர்ந்திருந்தார். இந்த உலகத்தை விட்டு வேறு எங்கோ சென்றுவிட்டார் போலும்!
குருதேவரின் சமாதி நிலையைக் கண்டதும் நரேந்திரர் அறையைவிட்டுக்கிழக்கு வராந்தாவிற்குச்சென்றார். அங்கே ஒரு கம்பளி மீது துளசி மாலையும் கையுமாக ஹாஸ்ரா உட்கார்ந்திருந்தார். அவருடன் நரேந்திரர் பேசிக்கொண்டிருந்தார்.
அறை முழுவதும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். சமாதி கலைந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களின் மீது பார்வையைச்செலுத்தினார். நரேந்திரர் காணப்பட வில்லை. தம்புரா மட்டும் தரையில் வைக்கப் பட்டிருந்தது. பக்தர்கள் எல்லோரும் ஸ்ரீராமகிருஷ்ணரை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நெருப்பைமூட்டி விட்டான். இனி அவன் இங்கே இருந்தால் என்ன, போனால் என்ன?( கேப்டன் முதலியோரிடம்) சிதானந்தத்தை மனத்தில் நிறுத்துங்கள். உங்களுக்கு ஆனந்தம் உண்டாகும். சிதானந்தம் இருக்கவே செய்கிறது.ஆனால் ஆவரணம் மற்றும் விஷேபம் காரணமாக மூடப் பட்டிருக்கிறது. உலகில் பற்று எந்த அளவு குறையுமோ அந்த அளவுக்கு இறைசிந்தனை அதிரிக்கும்
கேப்டன்-
கல்கத்தவில் வீட்டை நோக்கிச்செல்லும் அளவிற்கு காசி எட்டிப்போகிறது. காசியை நோக்கிச் செல்லும் அளவிற்கு நம் நாடு நம்மைவிட்டு அகன்று போகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ராதை கிருஷ்ணனை நெருங்கும் அளவுக்கு கிருஷ்ணனின் திருமேனி சுகந்தத்தை அனுபவித்தாள். இறைவனை நெருங்கும் அளவிற்கு நம்மில் பாவனை பக்தி ஏற்படுகிறது. நதி கடலை நெருங்க நெருங்க நீரேற்றமும் நீரிறக்கமும் அதிகரிக்கிறது.
ஞானிகள் உள்ளத்தில் தொடர்ச்சியாக (ஞான) கங்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஞானிக்கு எல்லாமே கனவு போன்றது தான். அவன் எப்பொழுதும் தன் சொந்த நிலையில் நிலைத்திருக்கிறான். ஆனால் பக்தனின் உள்ளத்தில் அது போன்ற தொடர்ச்சியில்லை. அங்கே ஏற்றமும் இறக்கமும் உண்டு. அவன் சிரிக்கிறான், அழுகிறான், ஆடுகிறான். பாடுகிறான். பக்தன் பகவானுடன் விளையாட விரும்புகிறான். சில சமயம் நீந்துகிறான். தண்ணீரில் பனித்துண்டுகள் மூழ்கி மூழ்கி எழுவது போல் சில சமயம் மூழ்குகிறான். சில சமயம் எழுகிறான்.(சிரிப்பு)
ஞானி பிரம்மத்தை அறிய விரும்புகிறான். பக்தனுடைய பகவான் ஆறுஐசுவரியங்கள் நிறைந்தவர், எல்லாம் வல்லவர்.ஆனால் உண்மையில் பிரம்மமும் க்தியும் வேறல்ல.யார் சச்சிதானந்தமோ அவரே சச்சிதானந்தமயி- வைரமும் அதன் ஒளியும்போல். வைரத்தின் ஒளி என்றால் வைரத்தை உணர்கிறோம். வைரத்தை நினைக்காவிட்டால் வைரத்தின் ஒளியை நினைக்க முடியாது.அதே போல் வைரத்தின் ஒளியை நினைக்காவிட்டால் வைரத்தை நினைக்க முடியாது.
ஒரே சச்சிதானந்தம். சக்தியின் வேறுபாட்டில் உபாதி வேறுபாடு உண்டாகிறது. அதனால் பல்வேறு வடிவங்கள்காணப்படுகின்றன. தாராதேவியே” நீயே இவையெல்லாமாக ஆகியிருக்கிறாய்! எங்கே செயல் உள்ளதொ அங்கே சக்தி உண்டு. தண்ணீர் அசைவற்றிருந்தாலும் தண்ணீர்தான். அலைகளாகவும் குமிழிகளாகவும் இருந்தாலும் தண்ணீர் தான். அந்த சச்சிதானந்தமே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்கின்ற ஆத்யா சக்தி. கேப்டன் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும்போதும் கேப்டன் தான், வெள்ளைக் காரனிடம் போகும்போதும் அதே கேப்டன் தான். வெறும் உபாதியில் தான்வேறுபாடு.
கேப்டன்- ஆம்! சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நான் கேசவருக்கு இதைச்சொல்லியிருந்தேன்.
கேப்டன்- கேசவர் ஆசாரத்தை விட்டவர். மனம் போனபோக்கில் வாழ்பவர். அவர் செல்வந்தர், சாது அல்ல.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(பக்தர்களிடம்)—நான் கேசவரைப் பார்க்கச்செல்வதை தடுக்கிறார்.
கேப்டன்- சுவாமி, நீங்கள்போகத்தான் செய்வீர்களா. நான் என்ன செய்ய முடியும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்- (வெறுப்புடன்)- நீங்கள் வெள்ளைக் காரனிடம் போகலாம். அதுவும் காசு பணத்திற்காக. நான் கேசவரைப்பார்க்க போக் கூடாதா? அவர் தெய்வ சிந்தனை செய்கிறார். ஹரிநாமம் சொல்கிறார்! இறைவன்- மாயை, உயிர்- உலகம் ” என்று நீங்களே சொல்வதில்லையா? யார் இறைவனோ, அவரே இந்த எல்லா உயிர்களாகவும் உலகங்களாகவும் ஆகி இருக்கிறார். இவ்வாறு சொல்லிக்கொண்டே குருதேவர் திடீரென்று எழுந்து வட கிழக்கு வராந்தாவிற்குப்போனார்.கேப்டனும் மற்ற பக்தர்களும் அவர் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ம-குருதேவருடன் வராந்தாவிற்கு வந்தார். அங்கே நரேந்திரர் ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டிருந்தார்.ஹாஸ்ரா வறட்டு ஆராய்ச்சி செய்பவர் என்பது குருதேவருக்குத் தெரியும். உலகம் கனவு போன்றது. பூஜை, நைவேத்தியம் எல்லாம் மனப்பிரமை. சொந்த இயல்பைச் சிந்திப்பது மட்டுமே நமது நோக்கம். நானே அவன்” என்றெல்லாம் ஹாஸ்ரா சொல்வார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(புன்முறுவலுடன்)-
என்னப்பா, என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?
நரேந்திரர்(சிரித்தபடி)-
பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி நாங்கள் எவ்வளவோ பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்துக்கொண்டே)- ஆனால் சுத்த ஞானமும் சுத்த பக்தியும் ஒன்றுதான். சுத்த ஞானம் எங்கேஅழைத்துச் செல்லுமோ, அங்கேதான் சுத்த பக்தியும் அழைத்துச் செல்கிறது. பக்தி நெறி மிகவும் சுலபமான பாதை.
(ம- விடம்)- பாருங்களேன்” ஹாமில்டனின் நூலில் படித்தேன். A learned ignorance is the end of philosophy and the beginning of religion என்று எழுதுகிறார் அவர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)
அதன் பொருள் என்னப்பா?
நரேந்திரர்-
தத்துவ சாஸ்திரத்தை ப் படித்தவன் படித்த முட்டாளாகிறான். பிறகு ஆன்மீகம், ஆன்மீகம் என்று தேடுகிறான். அப்போது ஆன்மீக வாழ்வு ஆரம்பிக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்- (சிரித்தவாறே)-
தேங்க்யூ, தேங்க்யூ (சிரிப்பு)
மாலை வேளையாகி விட்டதைக் கண்ட பக்தர்கள் பலர் வீடு திரும்பலாயினர்.. நரேந்திரரும் விடைபெற்றுக் கொண்டார். இரவு நெருங்கியது. கோயில் சிப்பந்திகள் நான்கு பக்கங்களிலும் விளக்கேற்றத் தொடங்கினர். காளி கோயிலையும், விஷ்ணு கோயிலையும் சேர்ந்த பூஜாரிகள் இருவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் விரைந்து சென்று ஆரதி மற்றும் இரவு நைவேத்திய ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும். தட்சிணேசுவர இளைஞர்கள் சிலர்கையில் கோலுடனும், சிலர் தங்கள்உறவினர்களுடனும் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தனர். கங்கைக் கரையில் தடுப்புச்சுவரின் மேல் நடந்து கொண்டே மலர் மணத்தைச்சுமந்துவரும் மாலைக்காற்றை அனுபவித்தவாறே , சிறிய அலைகளோடும் நுரையோடும் வேகமாகப்பெருகிவரும் மழைக்காலக் கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவர்களாய், மக்கள் நடமாட்டம் இல்லாத பஞ்ச வடிப் பகுதியில் நடந்து கொண்டிருந்தனர். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மேற்கு வராந்தாவிலிருந்த வண்ணம் சிறிது நேரம் கங்கையை தரிசித்தார்.
இருள் சூழத்தொடங்கியது. கோயில் சிப்பந்திகள் விளக்கேற்றி விட்டனர்.வேலைக்காரி குருதேவரின் அறையில் விளக்கேற்றி, தூபம் போடத் தொடங்கினாள். இதற்கிடையில் பன்னிரு சிவாலயங்களிலும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு மற்றும் காளி கோயிலிலும் ஆரதி ஆரம்பமாகியது. ஜால்ரா, தாளம், மணி முதலியவற்றின் இனிய கம்பீரம் நாதம் எழுந்தது. ஆம் இனிமையும் கம்பீரமும் தான். அதனுடன் கோயிலை அடுத்து ஓடிக் கொண்டிருந்த கங்கையின் கலகல த்வனியும் கேட்ட வண்ணமிருந்தது.
பௌர்ணமிக்கு அடுத்தநாள்.ஆகையால் சிறிது நேரத்திற்கெல்லாம் நிலவு உதித்துவிட்டது. கோயிலின் பெரிய முற்றத்திலும், பூந்தோட்ட மரங்களின் உச்சியிலும் படிப்படியாக நிலவொளி சூழ்ந்தது. நிலவின் ஆட்சியைக் கண்டு கங்கை அளவற்ற ஆனந்தமடைந்து பொங்கிப் பெருகியோடினாள்.
மாலை ஆரதிக்குப் பிறகு குருதேவர் தேவியை வணங்கினார். பிறகு கையைத் தட்டி ஹரி நாமத்தைப்பாட தொடங்கினார். அறையில் துருவன், பிரகலாதன், ராமர் பட்டாபிஷேகம் , காளி, ராதா கிருஷ்ணர் முதலிய படங்கள் மாட்டப்பட்டிருந்தன. குருதேவர் எல்லா தேவ தேவியரையும் நினைத்து அவர்களின் திருநாமத்தைக்கூறி அவர்களைப்போற்றினார்.
தெய்வ நாமங்களை ஓதியபிறகு கூப்பிய கரங்களுடன் தேவியை தியானித்தார். ஓரிருபக்தர்கள் கங்கைக் கரையிலுள்ள தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தனர். ஆரதி நிறைவுற்ற பிறகு ஒவ்வொருவராக குருதேவரின் அறைக்கு வரத் தொடங்கினர். குருதேவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். ம- அதர், கிசோரிமுதலிய பக்தர்கள் அவருக்கு முன்னால் தரையில் அமர்ந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( பக்தர்களிடம்)
நரேந்திரன், பவநாத், ராக்கால், இவர்கள் நித்திய சித்தர்கள் ,ஈசுவரகோடிகள்.இவர்கள் சாதனை செய்வது என்பது பெயரளவிற்குத்தான். நரேந்திரனைப் பாருங்கள். அவன் யாரையும் பொருட்படுத்துவதில்லை. ஒரு நாள் அவன் என்னுடன் கேப்டனின் வண்டியில் வந்து கொண்டிருந்தான். கேப்டன் நரேந்திரனை நல்ல இடத்தில் உட்காரச்சொன்னார். ஆனால் அவன் கேப்டனைத்திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவன் என்னைக் கூட எதிர்பார்த்திருப்பதில்லை. தனக்கு என்ன வெல்லாம் தெரியுமோ அதைக்கூட அவன் என்னிடம் சொல்வதில்லை. ”நரேந்திரன் ஒரு பெரிய மேதை” என்று நான் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிவேனோ என்று அவன் நினைப்பது ஒரு வேளை அதற்குக் காரணமாக இருக்கலாம். அவனிடம் மாயை மோகமே இல்லை! எந்த பந்தமும் இல்லை! அவன் மிகவும் நல்லதொரு பாத்திரம். பல நற்குணங்கள் ஓரிடத்தில் அமைந்துள்ளன. பாடுகிறான், வாத்தியங்களை வாசிக்கிறான், எழுதுகிறான், படிக்கிறான். அது மட்டுமல்ல, புலன்களையும் வென்றவன். திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறான். நரேந்திரன், பவநாத் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உண்டு. –கணவன் மனைவி போல்,. நரேந்திரன் இங்கு அடிக்கடி வருவதில்லை. அது நல்லது தான். அவன் அதிகமாக வந்தால் நான் என் வசமிழந்து விடுகிறேன்.
...........
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-42
...........................
திங்கள், ஆகஸ்ட் 20, 1883
..................................................
தட்சிணேசுவரக்கோயிலில் குருதேவரின் அறை. நேரம் இரவு சுமார் எட்டு மணி. தமது சிறிய கட்டிலில் கொசுவலைக்குள் அமர்ந்து குருதேவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். ம- தமது நண்பர் ஹரி பாபுவுடன் அங்கு வந்து தரையில் அமர்ந்தார்.
ஹரிபாபு இருபத்தெட்டு வயது இளைஞர். மனைவி இறந்து பதினொரு ஆண்டுகள் ஆகியிருந்தன. மறுமணம் செய்து கொள்ளாமல் தந்தை, தாய், மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார். அவர்கள் பேரில் பேரன்பு கொண்டவராதலால் அவர்களுக்குச்சேவை செய்ய வேண்டி அவர்களுடனேயே வசித்து வந்தார்.
இப்போதெல்லாம் ஹாஸ்ரா குருதேவருடன் வசித்து வந்தார். ராக்காலும் பெரும்பாலும் குருதேவருடனேயே தங்கத் தொடங்கியிருந்தார். எப்போதாவது அதரின் வீட்டிலும் தங்குவதுண்டு. நரேந்திரர், பவநாத், அதர், பலராம், ராம், மனமோகன் , ம- முதலான பக்தர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் குருதேவரைத் தரிசிக்க தட்சிணேசுவரம் வந்து கொண்டிருந்தனர்.
ஹிருதயனுக்கு உடல் நலம் சரியில்லாமல் தனது சொந்த கிராமத்தில் தங்கியிருந்தான். அவன் குருதேவருக்குப் பல சேவைகள் செய்திருக்கிறான். ஹிருதயனின் உடல் நலமின்மை பற்றி கேள்விப்பட்டு குருதேவர் பெரிதும் வருத்த முற்றார். ஹிருதயனுக்கு அனுப்புவதற்காக ஒரு பக்தர் ராம் சட்டர்ஜியிடம் பத்து ரூபாய் கொடுத்திருந்தார். கொடுத்த போது குருதேவர் அங்கில்லை.
பக்தர்கள் நீர் பருகுவதற்கு ஒரு செம்பு வேண்டும் என்று குருதேவர் அந்த பக்தரிடம் கூறியிருந்தார். இன்று அந்த பக்தர் செம்பு வாங்கி வந்திருந்தார்.
பக்தர்கள் வந்து அமர்ந்ததும் குருதேவர் கொசுவலை யிலிருந்து வெளியே வந்தார்.ம- முதலிய எல்லா பக்தர்களும் தரையில் வீழ்ந்து வணங்கினார்கள். கொசுவலை மேலேதூக்கிக் கட்டப்பட்டது. குருதேவர் சிறிய கட்டிலில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கொசு வலைக்குள் தியானம் செய்து கொண்டிருந்தேன். தியானம் என்பது ஓர் உருவத்தைக் கற்பனை செய்வதைத் தவிர வேறென்ன என்று தோன்றியது. உடனே தியானம் செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது.பட்டென்று ஒரு முறை இறைவன் காட்சி தந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். பிறகு, தியானம் செய்வது தான் யார், யாரைத்தான் தியானம் செய்வது” என்றும் எண்ணிக் கொண்டேன்.
ம-
ஆம், சுவாமி , கடவுளே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருப்பதாக நீங்கள் சொல்வதுண்டு. தியானம் செய்பவனும் கடவுள் தான்!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது மட்டுமல்ல, அவர் செய்விக்காவிட்டால் எதுவும் நடக்காது. அவர் தியானத்தில் ஈடுபடுத்தினால் தான் நாம் தியானிக்க முடியும். நீ என்ன சொல்கிறாய்?
ம- உண்மை தான் சுவாமி. உங்களுள் ”நான்” என்பது இல்லை. அதனால் தான் இப்படி ஏற்படுகிறது. எங்கு ”நான்” இல்லையோ அங்கு இந்த நிலை தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆனால், ”நான் தாசன், சேவகன்” என்ற எண்ணம் நல்லது. ”நான் எல்லாவற்றையும் செய்கிறேன்” என்ற எண்ணம் இருக்கின்ற இடத்தில்” நான் சேகவன், இறைவா, நீ எஜமான் என்ற பாவனை மிகவும் நல்லது. செயல்கள் நிகழ்கின்ற நிலையில் எஜமான்-செவகன் பாவனையில் இருப்பதே நல்லது.
பரப்பிரம்மம் எது என்பது பற்றி மணிமோகன் சிந்தித்துக்கொண்டிருந்தார். குருதேவர் அவரை உத்தேசித்துப்பேசலானார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பிரம்ம ஆகாசத்தைப்போன்றது. நெருப்பிற்கு எந்த நிறமும் இல்லாதது போல் பிரம்மத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் சக்தியின் காரணமாக அவர் பலவாக ஆகியுள்ளார். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் சக்தியின் குணங்களே. நெருப்பில் வெண்மையான பொருளைப்போட்டால் நெருப்பு வெள்ளையாகத் தோன்றுகிறது. சிவப்புப்பொருளைப்போட்டால் சிவப்பாகத்தோன்றுகிறது. கறுப்புப்பொருளைப்போட்டால் கறுப்பாகத்தோன்றுகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களையும் கடந்தது பிரம்மம். அது என்ன என்று சொற்களால் கூற முடியாது. அது வாக்கிற்கு அப்பாற்பட்டது.” இது வல்ல” இது வல்ல” என்று விலக்கி வரும்போது எஞ்சுவது எதுவோ, எங்கே ஆனந்தம் இருக்கிறதோ அது பிரம்மம்.
ஒரு பெண்ணின் கணவன் வந்திருக்கிறான். சமவயதுள்ள நண்பர்களுடன் வெளியிலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான். பெண்ணும் அவருடைய தோழிகளும் உள்ளே இருந்து கொண்டு ஜன்னல் வழியாக அவர்களைப் பார்க்கிறார்கள்.தோழிகளுக்குப்பெண்ணின் கணவன் யார் என்று தெரியவில்லை. ஒருவனைச் சுட்டிக்காட்டி, இவனா, உன் கணவன்? என்று கேட்கின்றனர். அவளோ புன்னகைத்தபடி, “இல்லை” என்று கூறுகிறாள். வேறொருவனைக்காட்டி,” இவனா உன் கணவன்?என்று கேட்கின்றனர். அவள் மறுபடியும்” இல்லை” என்கிறாள். மீண்டும் ஒருவனைக் காட்டி, இவனா உன் கணவன்? என்று கேட்கின்றனர். அவள், இல்லை, என்கிறாள். கடைசியாக அவளது கணவனையே சுட்டிக்காட்டி, இவனா உன் கணவன்? என்று கேட்கும் போது அவள் ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. வெட்கத்துடன் பட்டென்று சிரித்து விட்டு மௌனமாகி விடுகிறாள். அவன் தான் அவளுடைய கணவன் என்று தோழிகள் தெரிந்து கொள்கிறார்கள். சரியான பிரம்ம ஞானம் உள்ள இடத்தில் எல்லாம் அமைதி.(ம-விடம்) அது சரி. நான் ஏன் இப்படி வளவளவென்று பேசிக் கொண்டே போகிறேன்?
ம- முற்றக்கொதித்த நெய்யில் பச்சை பூரியைப்போட்டால் அது மீண்டும் கொதித்து களகளவென்று சத்தம் எழுப்புகிறது என்று நீங்கள் சொல்வதுண்டே! பக்தர்களை விழிப்புணர்த்துவதற்காகத்தான் நீங்கள் பேசுகிறீர்கள்.
குருதேவர் ம-விடம் ஹாஸ்ராவைப் பற்றிபேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நல்லவனின் இயல்பு என்ன தெரியுமா? அவன் யாரையும் துன்புறுத்துவதில்லை. யாருக்கும் தொல்லைகொடுப்பதில்லை. ஆனால் சிலருடைய இயல்பு எப்படிப்பட்டது தெரியுமா? அவர்களை விருந்திற்கு அழைத்தால், உட்கார தனியாக நல்ல இடம் வேண்டும் என்பார்கள். இறைவனிடம் உண்மையான பக்தி இருந்தால் கால் ஒரு போதும் தாளம் தவறாது. அவன் வீணாக மற்றவர்களுக்குத் துன்பம் தரமாட்டான்.
மேலும், தீயவர்களின் நட்பு நல்லதல்ல. அவர்களிடமிருந்து தூர விலகி, தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். (ம-விடம்) நீ என்ன சொல்கிறாய்?
ம-
ஆமாம், தீயவர்களின் சேர்க்கையால் மனம் மிகவும் கீழே இறங்கி விடுகிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல் வீரனின் விஷயம் வேறு.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
எப்படி?
ம-
சிறு நெருப்பில் ஒரு சிறிய கட்டையைப்போட்டாலும் அது அணைந்து விடும். ஆனால் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வாழை மரத்தை வெட்டிப்போட்டாலும் நெருப்பு அணையாது. மாறாக வாழை எரிந்து சாம்பலாகிறது.
குருதேவர் ம-விடம் அவரது நண்பரான ஹரிபாபுவைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.
ம-
இவர் தங்களைத் தரிசிக்க வந்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை இழந்துவிட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ஹரியிடம்)
நீ என்ன வேலை செய்கிறாய் அப்பா?
ம- குறிப்பிடும் படியாக எதவும் இல்லை. வீட்டில் சகோதர சகோதரிகள்,தாய், தந்தையருக்கு நல்லசேவை செய்து வருகிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடி)
என்ன இது? பூசணிக்காய் வெட்டும்பெரிசு” ஆக இருக்கிறாயே! நீ இல்லறத்தானும் அல்ல, பக்தனும் அல்ல, இது நல்லதல்ல. சில வீடுகளில் சில ஆண்களைக் காணலாம். இரவும் பகலும் மனைவி மக்களைப்பேணுவதிலேயே காலம் கழிப்பார்கள். அல்லது மக்களைப்பேணுவதிலேயே காலம் கழிப்பார்கள். அல்லது திண்ணையில் உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த இரண்டும் இல்லாவிட்டால் வெறுமனே உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் அவ்வப்போது உள்ளே சென்று பூசணிக்காயை வெட்டிக்கொடுத்துவிட்டுப்போவார்கள். பெண்கள் பூசணிக்காய் வெட்டக் கூடாது. எனவே குழந்தைகளிடம் , பெரிசைக் கூட்டிவா” அவர்கள் வந்து பூசணிக்காயை வெட்டித் தருவார்கள்.” என்று சொல்லியனுப்பி அவர்களை அழைத்துவரச் செய்வார்கள். அவர்களும் வந்து வெட்டிக் கொடுத்துவிட்டுப்போவார்கள். அவர்களின் உபயோகம் அவ்வளவு தான். அதனால் தான் அவர்களுக்கு ”பூசணிக்காய் வெட்டும் பெரிசு” என்று பெயர் வந்துவிட்டது.
நீ இதையும் செய், அதையும் செய். இறைவனின் திருவடித்தாமரைகளில் மனத்தை வைத்து உன் கடமைகளைச் செய். தனியாக இருக்கும்போது பாகவதம், சைதன்ய சரிதம், போன்ற பக்தி நூல்களைப் படி.
இரவு மணி பத்து. நிலவு உதித்து விட்டது. நிலவொளியில் கோயில் கோபுரங்களும் முற்றமம் வெகு அழகாக காட்சியளித்தன. இன்னமும் காளி கோயில் சாத்தப் படவில்லை. ம-, ராம் சட்டர்ஜியுடன் பேசியவாறே ராதா காந்தர் மற்றும் காளி கோயிலுக்குச்சென்று வணங்கினார். குருதேவரின் அறைக்குத் திரும்பி வந்தபோது குருதேவர் தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு பூரிகளும் சிறிது ரவை பாயாசமும் இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு ம-வும் நண்பரும் குருதேவரை வணங்கி விடை பெற்றுக் கல்கத்தாவிற்குத் திரும்பினார்கள்.
...............................................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-43
.............
வெள்ளி, செப்டம்பர் 7, 1883
....................................
தட்சிணேசுவரக்கோயில். குருதேவர் தமது அறையில் சிறிய கட்டிலில் உட்கார்ந்து ம-வுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். ம- தரையில் அமர்ந்திருந்தார். இரவு ஏழரை மணி இருக்கும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அன்று கல்கத்தாவிற்குச்சென்றேன். வண்டியில் போய்க் கொண்டிருந்தபோது, எல்லோரும் கீழ் நோக்கிய பார்வை உடையவர்களாக இருப்பதைக் கண்டேன். எல்லோருக்கும் வயிற்றைப் பற்றிய நினைப்பு தான். அனைவரும் உணவிற்காக ஓடிக் கொண்டிருந்தனர். அனைவருடைய மனமும் காமினீ- காஞ்சனத்திலேயே உழன்று கொண்டிருந்தது. ஏதோ ஓரிருவர் மட்டுமே மேல்நோக்கிய பார்வை உடையவர்களாக, கடவுளிடம் மனத்தைத் திருப்பியவர்களாக இருந்தனர்.
ம-
இந்த நாட்களில் வயிற்றைப் பற்றிய நினைப்பே அதிகரித்து வருகிறது.ஆங்கிலேயரைக் காப்பியடிக்கும் ஆர்வத்தில் மக்களின் மனம் மேலும் மேலும் போகத்தைநாடுகிறது. எனவே தேவைகள் அதிகரித்து விட்டன.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கடவுளைப் பற்றி மேலை நாட்டினரின் கருத்து என்ன?
ம-
அவர்கள் அருவவாதிகள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அந்தக் கருத்து இங்கும் உள்ளதே!
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர். அப்போது குருதேவர் தமது பிரம்ம ஞான அனுபவத்தைப்பற்றி கூறத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வேறுபாடற்ற ஒன்றேயான உணர்வின் (சைதன்யம்) காட்சியை ஒரு நாள் நான் கண்டேன். முதலில் பல மனிதர்கள், மற்றும் பல்வேறு உயிரினங்கள் எல்லாம் தெரிந்தன. அந்தக் கூட்டத்தில் செல்வந்தர்கள், ஆங்கிலேயர்கள், முகமதியர்கள், தோட்டிகள், நாய்கள், முதலியோர் இருந்தனர். நானும் இருந்தேன். நீண்ட தாடியோடு கூடிய ஒரு முகமதியனும் அதில் இருந்தான். அவனது கையில் ஒரு சட்டி, அதில் சோறு இருந்தது. அவன் அதை எடுத்து எல்லோருடைய வாயிலும் ஊட்டினான். நானும் கொஞ்சம் சுவைத்தேன்.
வேறொரு நாள் இன்னொரு காட்சி தெரிந்தது. அதில் மலம், மூத்திரம், சோறு, கறி, மற்ற உணவுப் பொருள்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. திடீரென்று என் உடம்பிலிருந்து ஜீவாத்மா வெளியே வந்து ஒரு நெருப்புச் சுடர்போல் இவை அனைத்தையும் சுவைத்தது. நெருப்புச் சுடர் போன்ற நாக்கை நீட்டி ஒவ்வொன்றையும் நக்கி, ருசி பார்த்தது போல் தோன்றியது. மலம், மூத்திரம், அனைத்தையும் சுவைத்தது. எல்லாம் ஒரே பொருள். இரண்டறப் பிரிக்க முடியாதவை என்பதைக் கண்டேன்.
மற்றொரு காட்சியில், இந்த இடத்திற்கு (எனக்கு) சீடர்கள் உண்டு என்பதையும், அவர்கள் என்னுடையவர்கள் என்பதையும் கண்டேன். மாலை தீபாராதனையின் சங்கும் மணியும் ஒலிக்கும். உடனே மாடிமேல் ஏறி மிகுந்த ஏக்கத்துடன், ஓ, என் பிள்ளைகளே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? வாருங்கள்! உங்களைக் காண்பதற்காக என் உயிர் துடிக்கிறது.” என்று உரக்கக் கூவுவேன். (ம-விடம்) இந்தக் காட்சிகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ம- நீங்கள் இறைவனின் திருவிளையாடல் களமாக இருக்கிறீர்கள்- இவ்வளவு தான் எனக்குத் தெரியும். நீங்கள் எந்திரம்- அவர் உங்களை இயக்குபவர். மற்ற உயிர்களை அவர் எந்திரத்தால் உருவாக்கி இருக்கிறார், உங்களை த் தன் கைகளினாலேயே செய்திருக்கிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைக் காட்சிக்குப் பிறகு ஒருவர்ஆறு ஐசுவரியங்களைப்பெறுவதாக ஹாஸ்ரா கூறுகிறார்.
ம- சுத்த பக்தியைத் தேடுபவர்கள் இறைவனின்ஐசுவரியங்களை விரும்புவதில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஹாஸ்ரா முற்பிறவியில் ஏழையாக இருந்திருப்பான் போலிருக்கிறது. அதனால் தான் ஐசுவரியங்களைக் காண இவ்வளவு ஏங்குகிறார். சமையல்காரனிடம் நான் என்ன பேசினேன் என்பதைச் சிலவேளைகளில் என்னிடம் கேட்பான். பிறகு, நானே கோயில் அதிகாரிகளிடம் பேசி உங்களுக்கு வேண்டியவற்றைத் தரச் சொல்கிறேன்” என்பான்.(ம- பெரிதாகச்சிரித்தார்)
குருதேவரும் சிரித்துக்கொண்டே, இப்படியெல்லாம் அவர் என்னிடம் பேசுகிறார். நான் ஒன்றும் சொல்வதில்லை.
ம-
சுத்த பக்தியை உடையவன் இறைவனின் செல்வத்தைக் காண விரும்புவதில்லை என்று நீங்கள் பல முறை கூறியிருக்கிறீர்கள். அத்தகைய பக்தன் கடவுளை கோபாலனைப்போல் குழந்தையாகப் பார்க்க விரும்புகிறான். ஆரம்பத்தில் கடவுள் காந்தக் கல், பக்தன் ஊசி, இறுதியில் பக்தன் காந்தக் கல்லாகவும் இறைவன் ஊசியாகவும் இருக்கின்றனர். அதாவது பக்தனிடம் பகவான் சிறியவராக ஆகி விடுகிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்- ஆமாம்! உதயவேளை சூரியனைப்போல். அந்த ச்சூரியனை சுலபமாகப் பார்க்கலாம். கண் கூசாது. அது மட்டுமல்ல, கண்ணிற்கு இதமாகவும் இருக்கும். இறைவன் தன் பக்தனுக்காக இனியவனாகி விடுகிறார். தன் மகிமையைக் களைந்துவிட்டு அவன் முன்னால் தோன்றுகிறார்.
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர்.
ம-
இந்தக் காட்சிகள் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அவை பொய்யானால் இந்த உலகம் அதைவிட பொய். ஏனெனில் அறியக் கூடிய கருவியான மனம் ஒன்றுதானே! அத்தகைய காட்சிகள் தூய மனத்தில் தோன்றுகின்றன. உலகப் பொருட்களைச் சாதாரண மனம் காண்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நிலையற்றவை பற்றி நீ இப்போது தெளிவாக அறிந்திருப்பதைக் காண்கிறேன். ஆமாம், ஹாஸ்ரா எப்படி? சொல் பார்க்கலாம்.
ம-
அவர் ஒரு மாதிரியான பேர்வழி,
குருதேவர் சிரித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நல்லது, என்னைப்போல் வேறு யாரையாவது கண்டிருக்கிறாயா?
ம- இல்லை, சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏதாவது பரம ஹம்சர்கள்?
ம-
இல்லை, உங்களுக்கு ஈடு இல்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்துக்கொண்டே)
அறியா மரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
ம- இல்லை சுவாமி!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அப்படி ஒரு மரம் இருக்கிறது. ஆனால் அதைப் பார்த்து, அது என்ன மரம் என்று யாராலும் சொல்ல முடியாது.
ம- அது போல் உங்களையும் அறிந்து கொள்ள வழியில்லை. உங்களை எவ்வளவு தூரம் புரிந்து கொள்கிறானோ அந்த அளவிற்கு ஒருவன் உயர்கிறான்?
ம-
மௌனமாக யோசிக்கத் தொடங்கினார். உதய வேளை சூரியன், அறியா மரம்” என்றெல்லாம் குருதேவர் குறிப்பிடுகிறாரே, இதுவா அவதாரம்? இதுவா மானுட லீலை? குருதேவர் அவதார புருஷரா? அதனால் தான் வீட்டு மாடியில் நின்று கொண்டு தனது சீடர்களை, ஓ! என் பிள்ளைகளே! நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? வாருங்கள், என்று கூவி அழைத்தாரா?
....
ஞாயிறு, செப்டம்பர் 9, 1883
...............................
தட்சிணேசுவரம் , குருதேவர் அறை. குருதேவர் உட்கார்ந்து சிரித்த முகத்துடன் பக்தர்களோடு பேசிக் கொண்டிருந்தார். சாப்பாடு முடிந்து விட்டது. ஒன்று அல்லது இரண்டு மணி இருக்கும். ராக்கால், ம-, ரதன் முதலியோர் தரையில் உட்கார்ந்திருந்தனர். ராம்லால்,ராம் சட்டர்ஜி, ஹாஸ்ரா முதலியோர் இடையிடையே அறைக்குள் வந்து சிறிது நேரம் உட்காருவதும் வெளியே செல்வதுமாக இருந்தனர். ரதன் யது மல்லிக்கின் தோட்ட நிர்வாகி. அவர் குருதேவரிடம் பக்தி உடையவர். குருதேவரைப் பார்க்க அவ்வப்போது வருவதுண்டு. யது மல்லிக்கின் கல்கத்தா வீட்டில் நீலகண்டரின் யாத்ரா நடைபெறுவதாக இருந்தது. குருதேவர் அதைப் பற்றி ரதனிடம் பேசினார்.
ரதன்-
நீங்கள் கட்டாயம் வர வேண்டும். இன்ன நாள் யாத்ரா நடைபெறும் என்று அவர்கள் சொல்லி அனுப்பி யிருக்கிறார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நல்லது, எனக்கும் வர விருப்பம் தான். ஆகா, நீலகண்டர் எவ்வளவு பக்தியுடன் பாடுகிறார்!
ஒரு பக்தர்-
ஆம், சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ரதனைப் பார்த்து)-
பாடும்போதே அவரது கண்கள் குளமாகி விடுகின்றன. (ரதனிடம்) இரவு அங்கேயே தங்கலாம் என்று நினைக்கிறேன்.
ரதன்-
அது மிகவும் நல்லது.
ராம் சட்டர்ஜி முதலியோர் யது மல்லிக்கின் வீட்டில் பாதுகை திருடு போனதைப் பற்றி விசாரித்தனர்.
ரதன்-
யது மல்லிக்கின் வீட்டிலுள்ள கோயிலிலிருந்து சுவாமியின் பொற்பாதுகை திருட்டுப்போய்விட்டது. அதனால் வீட்டில் ஒரே குழப்பம். திருடனைக் கண்டு பிடிக்க ஜாலத்தட்டு உபயோகிக்கப்போகிறார்களாம். எல்லோரும் உட்காரவேண்டும. திருடியவன் பக்கம் அந்தத் தட்டு நகருமாம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்துக்கொண்டே)-
தட்டு எப்படி நகரும். தானாகவா?
ரதன்-
இல்லை, ஒருவன் அதை அழுத்திப் பிடித்திருப்பான்.
பக்தர்- இது ஒருவகை வித்தை. ஏதோ கைத்திறமை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
எந்தத்திறமையால் இறைவனை அடைய முடியுமோ அது வே திறமை. அந்தத் திறமையே திறமை.
இவ்வாறு பேச்சு நிகழ்ந்து கொண்டிருந்தபோது சில பெரிய மனிதர்கள் வந்து குருதேவரை வணங்கிவிட்டு தரையில் அமர்ந்தனர். அவர்களுள் ஒருவரை குருதேவருக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் தாந்திரிக நெறியின் படி பஞ்சமகார சாதனை செய்பவர்கள். குருதேவர் அனைவரிலும் உறைபவர். அவர்களின் போக்கை அறிந்தவர். அவர்களில் ஒருவன் மதத்தின் பெயரால் பாவச் செயல்களைச் செய்து வருவதையும் அவர் கேள்விப் பட்டிருந்தார். அவன் ஒரு பெரிய மனிதரின் இறந்துபோன சகோதரனுடைய மனைவியுடன் முறையற்ற நட்புக்கொண்டு , மதத்தின் பெயரில் அவளுடன் பஞ்சமகார சாதனை பழகுகிறான் என்பதும் அவருக்குத் தெரியும்.
குருதேவர் தன்னை இறைவனின் குழந்தையாகக் கருதுகின்ற சந்தான பாவனையைப் பின்பற்றுபவர். விலை மகள் உட்பட எல்லா பெண்களையும் தாயாகவும், அன்னை பராசக்தியின் பல்வேறு வடிவங்களாகவும் காண்பவர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடி)-
அசலானந்தர் எங்கே? அன்று காளி கிங்கரன் வந்திருந்தான். யாரோ சிங்காமே, அவனும் கூட வந்திருந்தான். (ம- முதலியவர்களிடம்) அசலானந்தரும் அவருடைய சீடர்களும் வேறான பாவனை கொண்டவர்கள். என்னுடையதோ குழந்தையின் பாவனை.
வந்திருந்த பெரிய மனிதர்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்னுடையது சந்தானபாவனை. அசலானந்தர் அவ்வப்போது இங்கு வந்து தங்குவார். நன்றாகக் குடிப்பார். எனது பாவனையைப் பற்றி கேட்ட அவர், தம்முடைய பாவனையை இறுகப் பற்றி பிடித்தவராக என்னிடம், பெண்களுடன் செய்வதான வீரபாவனை சாதனையை நீ ஏன் மறுக்கிறாய்? சிவபெருமானின் ஆணையை மீறுகிறாயா? தந்திர சாஸ்திரத்தைப் படைத்தவர் அவரே அல்லவா? அதில் எல்லா விதமான சாதனைகளும் சொல்லப் பட்டுள்ளன. வீரபாவனை, சாதனையும் அதில் அடங்கியது அல்லவா? என்று கேட்பார். நான் அவரிடம், யாருக்குத் தெரியுமப்பா.! எனக்கு அவை சிறிதும் பிடிக்க வில்லை. குழந்தை நிலை என்னுடையது” என்று கூறினேன்.
அசலானந்தர் தன் பிள்ளை குட்டிகளைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை. என்னிடம், என் பிள்ளைகளைக் கடவுள் காப்பார், எல்லாம் கடவுள் சித்தம்” என்றார். நான் அதைக்கேட்டு மௌனமாக இருந்தேன். இருந்தாலும் எனக்குள், பிள்ளைகளை யார் கவனித்துக்கொள்வார்கள்? பிள்ளை குட்டிகளையும் குடும்பத்தையும் துறந்து விட்டேன், என்று கூறி பணம் சம்பாதிக்க ஒரு வழியோ இது! என்று நினைத்துக் கொண்டேன். இவர் எல்லாவற்றையும் துறந்து விட்டார் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள், நல்ல வருமானமும் வரும்.
வழக்கில் வெற்றி பெறுவது, நன்றாகப் பணம் சம்பாதிப்பது, வழக்கில் வெற்றி பெற்றுத் தருவது, சொத்து தேடித் தருவது- இதற்காகவா சாதனை! இது மகா அற்பத்தனம்!
உணவு, உடை, இருக்க வீடு, கடவுள் சேவை, சாது களுக்கும் பக்தர்களுக்கும் சேவை, எதிரில் வருகின்ற ஏழை எளியோர்களுக்கு உதவுவது- இதெல்லாம் பணத்தினால் செய்யலாம். இவையெல்லாம் பணத் தை நல்ல விதமாக செலவிடுகின்ற வழி. ஆடம்பரத்திற்கும் போகத்திற்கும் உரிய தல்லபணம். புகழைச் சம்பாதிப்பதற்கு உரியதும் அல்ல பணம்.
சித்திகளைப் பெறுவதற்காகவே சிலர் தந்திர நெறியிலுள்ள பஞ்சமகார சாதனை செய்கின்றனர். என்ன அற்ப புத்தி! கிருஷ்ணர் அர்ஜுனனிடம், நண்பா! எட்டு சித்திகளில் ஏதேனும் ஒன்றை நீ அடைந்தால் உனது சக்தி அதிகமாகலாம், ஆனால் என்னை அடைய முடியாது” என்றார். சித்திகள் இருக்கும் வரை மாயை விலகாது, மாயையிலிருந்து அகங்காரமும் திரும்ப வருகிறது. என்ன அற்ப புத்தி! வெறுப்பிற்குரிய இடத்தின் வழியாக மூன்று துளி சாராயத்தைக் குடித்துவிடுவதால் என்ன லாபம் வந்து விடும்? அல்லது ஒரு வழக்கில் ஜெயித்து விட்டால் தான் என்ன நடந்துவிடும்?
…..
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-44
.............
ஞாயிறு, செப்டம்பர் 9, 1883
........................
தட்சிணேசுவரம் , குருதேவர் அறை. குருதேவர் உட்கார்ந்து சிரித்த முகத்துடன் பக்தர்களோடு பேசிக் கொண்டிருந்தார். சாப்பாடு முடிந்து விட்டது. ஒன்று அல்லது இரண்டு மணி இருக்கும். ராக்கால், ம-, ரதன் முதலியோர் தரையில் உட்கார்ந்திருந்தனர். ராம்லால்,ராம் சட்டர்ஜி, ஹாஸ்ரா முதலியோர் இடையிடையே அறைக்குள் வந்து சிறிது நேரம் உட்காருவதும் வெளியே செல்வதுமாக இருந்தனர். ரதன் யது மல்லிக்கின் தோட்ட நிர்வாகி. அவர் குருதேவரிடம் பக்தி உடையவர். குருதேவரைப் பார்க்க அவ்வப்போது வருவதுண்டு. யது மல்லிக்கின் கல்கத்தா வீட்டில் நீலகண்டரின் யாத்ரா நடைபெறுவதாக இருந்தது. குருதேவர் அதைப் பற்றி ரதனிடம் பேசினார்.
ரதன்-
நீங்கள் கட்டாயம் வர வேண்டும். இன்ன நாள் யாத்ரா நடைபெறும் என்று அவர்கள் சொல்லி அனுப்பி யிருக்கிறார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நல்லது, எனக்கும் வர விருப்பம் தான். ஆகா, நீலகண்டர் எவ்வளவு பக்தியுடன் பாடுகிறார்!
ஒரு பக்தர்- ஆம், சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ரதனைப் பார்த்து)-
பாடும்போதே அவரது கண்கள் குளமாகி விடுகின்றன. (ரதனிடம்) இரவு அங்கேயே தங்கலாம் என்று நினைக்கிறேன்.
ரதன்- அது மிகவும் நல்லது.
ராம் சட்டர்ஜி முதலியோர் யது மல்லிக்கின் வீட்டில் பாதுகை திருடு போனதைப் பற்றி விசாரித்தனர்.
ரதன்-
யது மல்லிக்கின் வீட்டிலுள்ள கோயிலிலிருந்து சுவாமியின் பொற்பாதுகை திருட்டுப்போய்விட்டது. அதனால் வீட்டில் ஒரே குழப்பம். திருடனைக் கண்டு பிடிக்க ஜாலத்தட்டு உபயோகிக்கப்போகிறார்களாம். எல்லோரும் உட்காரவேண்டும. திருடியவன் பக்கம் அந்தத் தட்டு நகருமாம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்(சிரித்துக்கொண்டே)-
தட்டு எப்படி நகரும். தானாகவா?
ரதன்-
இல்லை, ஒருவன் அதை அழுத்திப் பிடித்திருப்பான்.
பக்தர்- இது ஒருவகை வித்தை. ஏதோ கைத்திறமை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
எந்தத்திறமையால் இறைவனை அடைய முடியுமோ அது வே திறமை. அந்தத் திறமையே திறமை.
இவ்வாறு பேச்சு நிகழ்ந்து கொண்டிருந்தபோது சில பெரிய மனிதர்கள் வந்து குருதேவரை வணங்கிவிட்டு தரையில் அமர்ந்தனர். அவர்களுள் ஒருவரை குருதேவருக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் தாந்திரிக நெறியின் படி பஞ்சமகார சாதனை செய்பவர்கள். குருதேவர் அனைவரிலும் உறைபவர். அவர்களின் போக்கை அறிந்தவர். அவர்களில் ஒருவன் மதத்தின் பெயரால் பாவச் செயல்களைச் செய்து வருவதையும் அவர் கேள்விப் பட்டிருந்தார். அவன் ஒரு பெரிய மனிதரின் இறந்துபோன சகோதரனுடைய மனைவியுடன் முறையற்ற நட்புக்கொண்டு , மதத்தின் பெயரில் அவளுடன் பஞ்சமகார சாதனை பழகுகிறான் என்பதும் அவருக்குத் தெரியும்.
குருதேவர் தன்னை இறைவனின் குழந்தையாகக் கருதுகின்ற சந்தான பாவனையைப் பின்பற்றுபவர். விலை மகள் உட்பட எல்லா பெண்களையும் தாயாகவும், அன்னை பராசக்தியின் பல்வேறு வடிவங்களாகவும் காண்பவர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடி)-
அசலானந்தர் எங்கே? அன்று காளி கிங்கரன் வந்திருந்தான். யாரோ சிங்காமே, அவனும் கூட வந்திருந்தான். (ம- முதலியவர்களிடம்) அசலானந்தரும் அவருடைய சீடர்களும் வேறான பாவனை கொண்டவர்கள். என்னுடையதோ குழந்தையின் பாவனை.
வந்திருந்த பெரிய மனிதர்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்னுடையது சந்தானபாவனை. அசலானந்தர் அவ்வப்போது இங்கு வந்து தங்குவார். நன்றாகக் குடிப்பார். எனது பாவனையைப் பற்றி கேட்ட அவர், தம்முடைய பாவனையை இறுகப் பற்றி பிடித்தவராக என்னிடம், பெண்களுடன் செய்வதான வீரபாவனை சாதனையை நீ ஏன் மறுக்கிறாய்? சிவபெருமானின் ஆணையை மீறுகிறாயா? தந்திர சாஸ்திரத்தைப் படைத்தவர் அவரே அல்லவா? அதில் எல்லா விதமான சாதனைகளும் சொல்லப் பட்டுள்ளன. வீரபாவனை, சாதனையும் அதில் அடங்கியது அல்லவா? என்று கேட்பார். நான் அவரிடம், யாருக்குத் தெரியுமப்பா.! எனக்கு அவை சிறிதும் பிடிக்க வில்லை. குழந்தை நிலை என்னுடையது” என்று கூறினேன்.
அசலானந்தர் தன் பிள்ளை குட்டிகளைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை. என்னிடம், என் பிள்ளைகளைக் கடவுள் காப்பார், எல்லாம் கடவுள் சித்தம்” என்றார். நான் அதைக்கேட்டு மௌனமாக இருந்தேன். இருந்தாலும் எனக்குள், பிள்ளைகளை யார் கவனித்துக்கொள்வார்கள்? பிள்ளை குட்டிகளையும் குடும்பத்தையும் துறந்து விட்டேன், என்று கூறி பணம் சம்பாதிக்க ஒரு வழியோ இது! என்று நினைத்துக் கொண்டேன். இவர் எல்லாவற்றையும் துறந்து விட்டார் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள், நல்ல வருமானமும் வரும்.
வழக்கில் வெற்றி பெறுவது, நன்றாகப் பணம் சம்பாதிப்பது, வழக்கில் வெற்றி பெற்றுத் தருவது, சொத்து தேடித் தருவது- இதற்காகவா சாதனை! இது மகா அற்பத்தனம்!
உணவு, உடை, இருக்க வீடு, கடவுள் சேவை, சாது களுக்கும் பக்தர்களுக்கும் சேவை, எதிரில் வருகின்ற ஏழை எளியோர்களுக்கு உதவுவது- இதெல்லாம் பணத்தினால் செய்யலாம். இவையெல்லாம் பணத் தை நல்ல விதமாக செலவிடுகின்ற வழி. ஆடம்பரத்திற்கும் போகத்திற்கும் உரிய தல்லபணம். புகழைச் சம்பாதிப்பதற்கு உரியதும் அல்ல பணம்.
சித்திகளைப் பெறுவதற்காகவே சிலர் தந்திர நெறியிலுள்ள பஞ்சமகார சாதனை செய்கின்றனர். என்ன அற்ப புத்தி! கிருஷ்ணர் அர்ஜுனனிடம், நண்பா! எட்டு சித்திகளில் ஏதேனும் ஒன்றை நீ அடைந்தால் உனது சக்தி அதிகமாகலாம், ஆனால் என்னை அடைய முடியாது” என்றார். சித்திகள் இருக்கும் வரை மாயை விலகாது, மாயையிலிருந்து அகங்காரமும் திரும்ப வருகிறது. என்ன அற்ப புத்தி! வெறுப்பிற்குரிய இடத்தின் வழியாக மூன்று துளி சாராயத்தைக் குடித்துவிடுவதால் என்ன லாபம் வந்து விடும்? அல்லது ஒரு வழக்கில் ஜெயித்து விட்டால் தான் என்ன நடந்துவிடும்?
உடல் பணம், இவை நிலையற்றவை. இவற்றிற்காக ஏன் இவ்வளவு தடபுடல்! ஹடயோகிகளின் நிலையைப் பாருங்களேன். உடலை எப்படி நீண்ட நாட்கள் வைத்திருப்பத என்பது தான் அவர்களுடைய எண்ணம். கடவுளைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்குக் கிடையாது. நௌலி, தௌதி என்றெல்லாம் பயிற்சிகள் செய்து வயிற்றைச்சுத்தமாக்குகின்றனர். குழாய மூலம் பாலைக் குடிக்கின்றனர். அதோடு சரி.
ஒரு தட்டான் இருந்தான். ஒரு சமயம் அவனுடைய நாக்கு உள்ளே மடிந்து அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. அதனால் அவன் ஜட சமாதி அடைந்த மனிதனைப்போல் காணப் பட்டான்.
எந்த அசைவும் இல்லை. இப்படி நீண்ட நாட்கள் கிடந்தான். மக்கள் வந்து அவனை வழிபட ஆரம்பித்தனர். பல வருடங்களுக்குப் பிறகு திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாக்கு நேராகிவிட்டது. முன்னைப்போல் அவனுக்குச் சுயநினைவு வந்தது. பிறகு பழையபடி அது தட்டான் தொழிலைச் செய்யத் தொடங்கினான்.
இவையெல்லாம் உடல் பற்றிய விஷயங்கள். இவற்றிற்கும் இறைவனுக்கும் பெரிய தொடர்பு எதுவும் கிடையாது.
சாலகிராமனின் சகோதரனுக்கு எண்பத்திரண்டு ஆசனங்கள் செய்யத்தெரியும். யோக சமாதியைப் பற்றி எவ்வளவோ பேசுவான். ஆனால் மனமோ அடியாழத்தில் காமினீ- காஞ்சனத்தில் மூழ்கியிருந்தது. ஒரு நாள் திவான் மதனபட்டரின் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பத்திரம் கீழே விழுந்தது. அதைக் கண்ட இவன் ஆசையை அடக்க முடியாமல் அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். விழுங்கியும் விட்டான். பிறகு எப்படியாவது வெளியே எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். பத்திரம் வெளியில் எடுக்கப் படவும் செய்தது, இறுதியில் மூன்று வருட சிறைத் தண்டனையும் கிடைத்தது. அந்த மனிதன் ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறியவன் என்றுதான் என் சுத்த புத்திக்குப் பட்டது. கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன். நான் அப்படித்தான் நினைத்தான்.
ஒரு சமயம் சிந்தியைச்சேர்ந்த மகேந்திரபால் ராம்லாலிடம் ஐந்து ரூபாய் கொடுத்தார். அவர் சென்ற பிறகு ராம்லால் இந்த விஷயத்தை என்னிடம் கூறினான். யாருக்காக கொடுத்தார்? என்று கேட்டேன். உங்களுக்காக” என்றான். பால்காரனுக்கு பாக்கி உள்ளது. அதில் கொஞ்சம் தீர்த்துவிடலாம் என்று தோன்றியது. அம்மாடியோவ்! இரவு தூங்கிக் கொண்டிருந்தவன் சடாரென்று துள்ளி எழுந்தேன். நெஞ்சிற்குள் பூனை பிறாண்டுவது போல் ஓர் உணர்ச்சி. உடனே ராம்லாலிடம் சென்று, ராம்லால்! மகேந்திரர் யாருக்காக அந்தப் பணத்தைக்கொடுத்தார். உன் சித்திக்காகவா? என்று கேட்டேன். இல்லை, உங்களுக்குத்தான்” என்றான். அப்படியானால் அந்தப் பணத்தை உடனே திருப்பிக் கொடுத்துவிட்டு வா! இல்லாவிட்டால் எனக்கு நிம்மதி இல்லை” என்று கூறினேன். மறுநாள் விடியற்காலையில் சென்று ராம்லால் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்த பிறகு தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
அந்த ஊரில் பகவதி என்ற எண்ணெய்க்காரி இருந்தாள். அவள் கர்த்தா பஜா சம்பிரதாயத்தைச்சேர்ந்தவள். இந்த சம்பிரதாயத்தினர். பெண்களுடன் சாதனை செய்பவர்கள். ஆண் இல்லாவிட்டால் பெண்களுக்கு சாதனையோ பஜனையோ சாத்தியமில்லை. அந்த ஆணை, ”ராக கிருஷ்ணன்” என்பார்கள். கிருஷ்ணன் கிடைத்து விட்டானா? என்று மூன்று முறை கேட்பார்கள். கிடைத்து விட்டான்” என்று அவளும் மூன்று தடவை பதிலளிப்பாள். பகவதி தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவள். டி எண்ணெய் விற்பவள். எல்லோரும் அவளது காலில் வீழ்ந்து வணங்குவர். அவளது பாததூளியை த் தலையில் தரித்துக்கொள்வார்கள். அதைக் கண்ட ஜமீன் தாருக்கு வந்ததே கோபம்! நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு துஷ்டனை அவளிடம் அனுப்பினார். அவனது பிடியில் பட்டு அவள் கர்ப்பம் தரிக்க நேர்ந்தது.
ஒருநாள் ஒரு பெரிய மனிதன் இங்கே வந்திருந்தான். அவன் என்னிடம் வந்து, நான் வழக்கில் வெற்றி பெற நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டுமு்.உங்கள் பெயரைக்கேள்விப் பட்டு நான் வந்திருக்கிறேன்” என்றான். அப்பா, நீ தவறான இடத்திற்கு வந்திருக்கிறாய், நீ தேடும் மனிதன் நானல்ல, அது அசலானந்தர்” என்று நான் பதில் கூறி அனுப்பினேன்.
யாருக்கு இறைவனிடம் உண்மையான பக்தி இருக்கிறதோ அவன் உடல், பணம் முதலியவற்றைப் பொருட்படுத்த மாட்டான்.” உடலின்பத்திற்காக , பெயர் புகழுக்காக, பணத்திற்காக ஜபமும் தவமும் செய்வதா? இவையெல்லாம் நிலையற்றவை, சில நாட்கள் இருந்து மறையக் கூடிவை” என்று நினைப்பான் அவன்.
வந்திருந்த பெரிய மனிதர்கள் விடைபெற்றுச்சென்றனர். அவர்கள் சென்றதும் குருதேவர் நமட்டுச் சிரிப்புடன், ம-விடம், திருடன் தெய்வீக விஷயங்களைக்கேட்க மாட்டான்” என்றார். (எல்லோரும் சிரித்தனர்)
-ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி ம-விடம்0-
அது சரி! நரேந்திரன் எப்படிப் பட்டவன்?
ம- மிக நல்லவன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், எவ்வளவோ படித்திருக்கிறான்! அது போலவே அறிவும்! அது மட்டுமல்ல. பாடுகிறான். வாத்தியக் கருவிகளை வாசிக்கிறான். மறுபக்கம் பார்த்தால், புலன்களை அடக்கியவன், திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறான்.
ம-
நான் பாவி என்று நினைப்பவன் பாவியாகவே ஆகி றான் என்று நீங்கள் கூறுவதுண்டு. அத்தகையவனால் பிறகு வாழ்க்கையில் முன்னேற முடிவதில்லை. நான் இறைவனின் குழந்தை” என்ற நம்பிக்கை இருந்தால் வெகு விரைவில் முன்னேறி விடலாம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம்! நம்பிக்கை! கிருஷ்ணகிஷோரிடம் தான் என்னவொரு நம்பிக்கை! ஒரு முறை தெய்வ நாமத்தைச் சொல்லி விட்டேன். எனக்காவது பாவமாவது! நான் களங்கமற்றவன் ஆகி விட்டேன்” என்பார் அவர். ஹலதாரியோ, அஜாமிளன் கூட நாராயணனைக்குறித்து தவம் செய்யச்சென்றான். தவம் செய்யாமல் இறைவனுடைய அருளைப்பெற முடியுமா? ஒரே ஒரு முறை நாராயணா என்பதால் என்ன நடந்து விடும்! என்றார். இதைக்கேட்ட கிருஷ்ண கிஷோரின் கோபத்திற்கு அளவில்லை. தோட்டத்திற்கு பூப்பறிக்க வந்த அவர் அங்கிருந்த ஹலதாரியைக் கண்ணெடுத்து க்கூட பார்க்கவில்லை.
ஹலதாரியின் தந்தை பரம பக்தர். குளித்து முடிந்ததும், இடுப்பளவுநீரில் நின்று கொண்டு, ”ரக்த வர்ணம் சதுர் முகம்” என்று மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்யும்போது அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகும்.
கங்கைக் கரையில் அரியதாஹா என்ற இடத்திற்கு சாது ஒருவர் வந்திருந்தார். நாங்கள் அவரைப் பார்க்கப்போவது பற்றி பேச்சு எழுந்தது. உடனே ஹலதாரி, ”பஞ்ச பூதத்தாலான அந்தக் கூட்டைப் பார்த்து என்ன பயன்? என்றார். இதை அறிந்த கிருஷ்ண கிஷோர், என்ன , ஒரு சாதுவைப் பார்ப்பதால் என்ன பயன் என்றா சொன்னார்? யார் கிருஷ்ண நாமத்தைச் சொல்கிறானோ அல்லது ராம நாமத்தைச்சொல்கிறானோ அவனுடைய உடல் உணர்வு மயமானதாகி விடுகிறது. இறைவனும் உணர்வுமயம், அவனது இருப்பிடமும் உணர்வு மயம் என்று அவன் எல்லாவற்றையும் உணர்வு மயமாகவே காண்கிறான். ஒரு முறை கிருஷ்ண நாமத்தையோ, ராமநாமத்தையோ சொல்வது நூறு சந்தியாவந்தனம் செய்த பலனைத் தரும்” என்று கூறினார்.
கிருஷ்ணகிஷோருடைய பிள்ளைகளில் ஒருவன் தன் உயிர் பிரியும் போது ராமநாமத்தை உச்சரித்தான். இதைக் கண்ட அவர், அவன்ராமநாமத்தைச்சொல்லி விட்டான். அவனுக்கு இனி என்ன கவலை- என்றார். ஆகால் எப்போதாவது சில சமயம் அழுவார்- புத்திர சோகம்.
பிருந்தாவனத்தில் ஒரு முறை அவருக்குத்தாகம் எடுத்தது. சக்கிலியனைப் பார்த்து, நீ சிவ நாமத்தைக்கூறு” என்றார். அவனும் சிவ நாமம் சொல்லிக்கொண்டே தண்ணீர் இறைத்துக் கொடுத்தான். ஆசார சீலரான பிராமணர் அந்தத் தண்ணீரைக் குடித்தார். என்ன நம்பிக்கை!
நம்பிக்கை இல்லாமல் செய்கின்ற பூஜை , ஜபம், சந்தியா முதலியவை எந்தப் பலனையும் அளிப்பதில்லை. நீ என்ன சொல்கிறாய்?
ம-
ஆம், சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடி)
கங்கையில் குளிக்க வருபவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்ன வெல்லாமோ வம்பளப்பார்கள். விதவை மாமி சொல்வாள். என்ன சொல்வேன்” நான் இல்லாவிட்டால் பூஜை நடக்காது. ஒரு திரிமுறுக்கக்கூட அவர்களால் இயலாது. இனி கல்யாணமோ ஒன்றோ என்றால் நான் தான் எல்லாம் செய்ய வேண்டும. அப்போது தான் நடக்கும். கட்டிலை அலங்கரிப்பது முதல் காய்கறி வாங்குவது வரை எல்லாம் என் தலையில் தான்.
ம-
ஆம், சுவாமி! இவர்களைக் குற்றம் சொல்லி என்னபயன்? வேறு என்னதான் செய்வார்கள்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)
மாடியில் பூஜையறையில் நாராயண பூஜை நடக்கிறது. பூஜைக்காக நைவேத்தியம் தயாரிப்பது, சந்தனம் அரைப்பது முதலியன நடக்கின்றன.ஆனால் அங்கே இறைவனைப் பற்றிய பேச்சே இல்லை.” என்ன சமைப்பது, இன்று சந்தையில் நல்ல காய்கறி கிடைக்க வில்லையே, நேற்று அந்தக் காய் நன்றாக இருந்தது, அந்தப்பையன் என் ஒன்றுவிட்ட சகோதரன், டேய் , உனக்கு அந்தவேலை இன்னும் இருக்கிறதோ, நான் எப்படியிருக்கிறேன். என் ஹரி இல்லை, என்றெல்லாமான பேச்சுக்கள் தான். பாரேன், பூஜையறையில் பூஜை வேளையில் இப்படிப்பட்ட பேச்சுக்கள்.
ம- ஆம், சுவாமி, பலரும் இப்படித்தான். நீங்கள் சொல்வது போல், இறைவனிடம் அனுராகம் உடையவனுக்கு நீண்ட நாட்கள் பூஜை முதலியவை செய்ய வேண்டுமா?
குருதேவர் தனியிடத்தில் ம-விடம் பேசிக்கொண்டிருந்தார்.
ம-
சுவாமி, இறைவனே, எல்லாமாக ஆகியிருக்கிறார் என்றால் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
எங்கும் நிறைந்தவர் என்ற நிலையில் இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறார். ஆனால் சக்தியில் வேறுபாடு உள்ளது. சில இடங்களில் வித்யாசக்தி, சில இடங்களில் அவித்யா சக்தி, சில இடங்களில் அதிக சக்தி, சில இடங்களில் குறைவான சக்தி. மனிதர்களுக்கிடையில் வஞ்சகர்களும் போக்கிரிகளும் இருப்பதைப் பார்த்ததில்லையா? புலி போன்ற பயங்கர குணமுடையவர்களும் இருக்கின்றனர். இவர்களை நான் வஞ்சக-நாரயணன், புலி நாராயணன் என்று கூறுகிறேன்.
ம-(சிரித்தபடி)-
ஆம், அவர்களை தூரத்திலிருந்து வணங்க வேண்டும். புலி- நாராயணனை அருகில் சென்று கட்டிக்கொண்டால் தின்றுவிடும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனும் அவருடைய சக்தியும், பிரம்மமும் சக்தியும்- இதைத்தவிர, வேறு ஒன்றுமே இல்லை. நாரதர் ராமனைத்துதித்து , ஏ ராமா! நீயே சிவன், சீதை பார்வதி, நீ பிரம்மா, சீதை சரஸ்வதி, நீ இந்திரன், சீதை இந்திராணி , நீயே நாராயணன், சீதை லட்சுமி, ஆண்பாலாக இருப்பதெல்லாம் நீ, பெண்பாலாக இருப்பதெல்லாம் சீதை, என்றார்.
ம-
அப்படியானால் உணர்வுமயவடிவம் என்றால் என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர் சிறிது யோசித்து விட்டு மெதுவாகக் கூறினார்.
என்ன தெரியுமா? தண்ணீரைப்போல்- சாதனை செய்தால் இதையெல்லாம் அறியலாம்.
நீஉருவத்தை நம்பு. நெருப்பும் அதன் சூடும்போல் பிரம்மமும் சக்தியும் ஒன்றே. இரண்டல்ல என்பது பிரம்ம ஞானம் அடைந்த பிறகு தான் தெரியும்.. நெருப்பை நினைத்தால் சூட்டையும் நினைத்தேயாக வேண்டும். சூட்டை நினைத்தால் நெருப்பையும் நினைக்க வேண்டும். பாலும் அதன் வெண்மையும்போல், தண்ணீரும் குளிர்ச்சியும் போல் என்றும் சொல்லலாம்.
ஆனால் பிரம்ம ஞானத்திற்கு ப் பிறகு மற்றொரு நிலை உள்ளது. ஞானத்தை அடுத்து விஞ்ஞானம். யாரிடம் ஞானம் உள்ளதோ, யாருக்குஉணர்வு விழிப்படைந்து விட்டதோ அவரிடம் அஞ்ஞானமும் இருக்கிறது. வசிஷ்டர் தமது நூறு பிள்ளைகள் இறந்தபோது துயரத்தில் ஆழ்ந்தார். அதைப் பற்றி லட்சுமணன் ராமனிடம் கேட்டான். அதற்குராமர்,தம்பி! ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்” என்றார். யாரிடம் ஞானம் உள்ளதோ அவனிடம் அஞ்ஞானமும் இருக்கும். காலில் முள் தைத்தால் மற்றொரு முள்ளால் அதை எடுத்த பிறகு இரண்டாவது முள்ளையும் எறிந்து விட வேண்டும்.
ம-
அஞ்ஞானம், ஞானம் இரண்டையும் எறிந்து விட வேண்டுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், அது தான் விஞ்ஞானத்தின் பயன். யாரிடம் வெளிச்சம் பற்றிய அறிவு இருக்கிறதோ, அவனிடம் இருளைப்பற்றிய அறிவும் இருக்கும். யாருக்கு சுக அனுபவம் உள்ளதோ, அவனுக்கு துக்க அனுபவமும் உண்டு. புண்ணிய அறிவு உள்ளவனிடம் பாவ அறிவும் உண்டு. நல்லதை அறிபவன் கெட்டதையும் அறிகிறான். சுத்தம் என்ற எண்ணம் உள்ளவனிடம் அசுத்தம் என்ற எண்ணமும் உண்டு. ”நான்” என்ற அறிவு உடையவன்” நீ” என்ற அறிவையும் உடையவனாக இருக்கிறான்.
விஞ்ஞானம் என்பது என்ன? இறைவனை ச் சிறப்பாக அறிவது. விறகில் நெருப்பு உள்ளது என்ற அறிவு தான்., என்றநம்பிக்கை தான், ஞானம். அந்த நெருப்பில் சோறு சமைப்பது, உண்பது, அதனால் வலிமை பெறுவது விஞ்ஞானம். இறைவன் இருக்கிறான் என்று உணர்வில் உணர்வது ஞானம். அவருடன் பேசுவது, வாத்ஸல்ய, சக்ய, தாஸ்ய, மதுர பாவனைகளில் அவருடன் கலந்து ஆனந்தம் பெறுவது விஞ்ஞானம். இறைவனே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருப்பதை தரிசிப்பது விஞ்ஞானம்.
கடவுளைக்காண முடியாது என்பது ஒரு சாரரின் கருத்து. யார் யாரைக்காண்பது? நீயே உன்னைப் பார்க்க முடியுமா? கப்பல் கறுப்புத் தண்ணீர் பகுதியை அடைந்தால் திரும்பி வராது. எந்தச்செய்தி தரவும் அதனால் இயலாது.
ம-
நீங்கள் சொல்வது போல், மானுமென்டில், உச்சியில் ஏறிய பிறகு கீழே உள்ள வண்டி, குதிரை, வெள்ளைக்காரி, வெள்ளைக்காரன், கடை, வீடு, வாசல் , ஆபீஸ், போன்ற விவரங்கள் தெரியாது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இப்போதெல்லாம் நான் காளி கோயிலுக்குப்போவதில்லை. இதனால் ஏதாவது கெடுதல் ஏற்படுமா? இவர் இன்னமும் காளி கோயிலுக்குப்போகிறாரே” என்று நரேந்திரன் கூறுகிறான்.
ம-
சுவாமி, உங்களுக்குத் தினமும் புதிய புதிய நிலைகள் ஏற்படுகின்றன. உங்களுக்காவது கெடுதலாவது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஹிருதயனின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. நீங்கள் இரண்டு வேட்டியும் இரண்டு சட்டையும் தந்தால் நாங்கள் அதை ஊரில் அவனுக்கு அனுப்பி வைக்கிறோம்” என்று பக்தர்கள் சேனிடம் கூறினார்கள். சேன் இரண்டு ரூபாய் மட்டுமே கொடுத்தாராம்.இதை என்ன வென்று சொல்வது! அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது! ஆனாலும் பாரேன், இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறார்!
ம- சுவாமி, யார் இறைவனைத் தேடுகிறார்களோ, யாருக்கு ஞானம் பெறுவது நோக்கமாகஇருக்கிறதோ, அவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவன் மட்டுமே உண்மை. மற்ற எதுவும் உண்மையல்ல.
…..
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-45
.............
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 1883
............................
மாலைப்பொழுது. கல்கத்தாவில் அதரின் வீட்டிற்கு வந்திருந்தார் குருதேவர். விருந்தினர் அறையில் அமர்ந்திருந்தார். ராக்கால், அதர், ம-, ஈசான் முதலானவர்களும் அந்தப் பகுதியைச்சேர்ந்த பலரும் இருந்தனர்.
குருதேவர் ஈசானை நேசித்தார். ஈசான் அரசாங்க அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளராக வேலை பார்த்தவர். ஓய்வு பெற்றபிறகு சாதனையிலும் தான தருமங்களிலும் நாட்களை க் கழித்து வந்தார். கங்கைக் கரையில் ஏகாந்தமான இடங்களில் அமர்ந்து இறை சிந்தனையில் ஈடுபடுவார். காயத்ரீ புரச்சரணம் நடத்த எண்ணியிருந்தார். அவ்வப்போது வந்து குருதேவரைத் தரிசிப்பார்.
மேச்சுவாபஜாரிலுள்ள அவரது வீட்டிற்கு குருதேவர் முன்பு ஒரு முறை சென்றிருந்தார். நாள் முழுவதும் அங்கே தங்கியிருந்து நரேந்திரர் முதலிய பக்தர்களுடன் உணவு உட்கொண்டார்.
நரேந்திரர் வருவதாக இருந்தது. ஆனால் அவரால் வர இயலவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ஈசானிடம்)-
நீங்கள் அந்த சிறுவன் கடிதம் அனுப்பியக் கதையைச்சொல்லுங்களேன்.
ஈசான்(சிரித்தபடி)-
நம்மைப் படைத்தவர் கடவுள் என்பதை ஒரு சிறுவன் கேள்விப்பட்டான். உடனே தன் பிரார்த்தனைகளைக் கடிதத்தில் எழுதித் தபால் பெட்டியில் போட்டான். என்ன முகவரி எழுதியிருந்தான் தெரியுமா? சொர்க்கம்( எல்லோரும் சிரித்தனர்)
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடியே)-
பார்த்தாயா! அந்தச் சிறுவனைப்போல் நம்பிக்கை வேண்டும். அப்போது தான் சாத்தியம். (ஈசானிடம்) ஆமாம். செயல்களைத்துறப்பது பற்றிய அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லுங்கள்.
ஈசான்-
இறையனுபூதிக்குப் பிறகு சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தனர். ஒருவன்மட்டும் செய்யாமல் இருந்தான். காரணம் கேட்டதற்கு, எனக்குத் தீட்டு ஏற்பட்டுள்ளது. ஒரு தீட்டு அல்ல, இறந்த தீட்டு, பிறந்த தீட்டு ஆகிய இரண்டு தீட்டுக்கள் ஏற்பட்டுள்ளன. அறியாமை என்ற தாய் இறந்துவிட்டாள். ஆன்ம ஞானம் என்ற குழந்தை பிறந்திருக்கிறது. நான் எப்படி சந்தியாவந்தனம் செய்ய முடியும்? என்றான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆன்ம ஞானம் ஏற்பட்டால் ஜாதி வேறுபாடு மறைந்துவிடுகிறது. அதைப் பற்றியும் சொல்லுங்கள்.
ஈசான் –
ஒரு முறை காசியில் சங்கரர் கங்கையில் குளித்துவிட்டு க் கரையில் உள்ள படிக்கட்டுகள் வழியாக ஏறி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சண்டாளன் நாய்களைக் கூட்டிக்கொண்டு எதிரே வந்தான். அவனிடம், சங்கரர், ஆ, நீ என்னைத் தொட்டுவிட்டாயே! என்றார். இதைக்கேட்ட அவன், வணக்கத்திற்குரியவரே! நானும் உங்களைத் தொட வில்லை. நீங்களும் என்னைத்தொடவில்லை. ஆன்மா எல்லோரின் உள்ளே இருந்து வழி நடத்துவது! அது எதனாலும் மாசடைவதில்லை. கள்ளில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும், கங்கை நீரில் பிரதிபலிக்கும் சூரியனுக்கும் வேறுபாடு உண்டா? என்று கேட்டான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)
சர்வசமய சமரசம், எல்லா மதத்தின் மூலமும் இறைவனை அடைதல்- அதையும் சொல்லுங்கள்.
ஈசான்(சிரித்தபடியே)-
ஹரி, ஹரன் என்ற இரண்டு சொற்களும் ஒரே மூலச் சொல்லை அடிப்படையாகக்கொண்டவை. வித்தியாசமெல்லாம் அதனுடன் வந்து சேரும் மற்ற எழுத்துக்களில் தான். உண்மையில் ஹரியே ஹரன். நம்பிக்கை இருந்தால்போதும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடியே)
சாதுவின் இதயம் எல்லா வற்றையும் விட பெரியது- அதையும் கூறுங்கள்.
ஈசான்-( சிரித்தவாறே)
பூமி எல்லாவற்றையும் விட பெரியது. அதைவிட பெரியது கடல். அதையும் விட பெரியது ஆகாசம்.
ஆனால் மகாவிஷ்ணு தனது ஓர் அடியில் பூமி, ஆகாசம், பாதாளம், என்று மூன்று உலகங்களையும் அளந்து விட்டார். அந்த விஷ்ணுவின் திருப்பாதமோ சாதுவின் இதயத்தில் உள்ளது. ஆகவே தான் சாதுவின் இதயம் எல்லாவற்றையும் விடப்பெரியது.
இதனைக்கேட்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈசான் பாட்பாடாவில் தனிமையில் இருந்து காயத்ரீ புரச் சரணம் செய்ய நிச்சயித்திருந்தார். காயத்ரீ, பிரம்ம மந்திரம் ஆகும். பொருட்பற்று அடியோடு மறையாவிட்டால் பிரம்ம ஞானம் உண்டாகாது. இந்தக் கலியுகத்தில் உயிர் உணவைச் சார்ந்து உள்ளது. அதனால் பொருட்பற்று போகாது. மனம் எப்போதும் உருவம், சுவை, வாசனை, தொடு உணர்ச்சி, ஓசை இந்த விஷயங்களிலேயே உழல்கிறது. ஆகவேகலியுகத்திற்கு வைதீக மதம் ஏற்றதல்ல. என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். யார் பிரம்மமோ அவரே சக்தி. சக்தியை வழிபட்டால் அது பிரம்மத்தை வழிபடுவது தான். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச்செய்யும்போது அவரை சக்தி என்கிறோம். இரண்டும் வேறு அல்ல. ஒன்றுதான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்- (ஈசானிடம்)-
இது அல்ல, இது அல்ல என்று ஏன் கூறி த் திரிகிறீர்கள்? இருக்கிறது” என்பதைத் தவிர பிரம்மத்தைப் பற்றி வேறு ஒன்றும் கூற முடியாது”ராமன் ஒன்றேயானவன்.
நாம் காண்பது, சிந்திப்பது எல்லாமே ஆத்யா சக்தியின் சித்சக்தியின் மகிமை. படைத்தல், காத்தல், அழித்தல். உயிர்கள், உலகம், தியானம் , தியானிக்கப்படும் பொருள், பக்தி, பிரேமை எல்லாம் அவளது மகிமை.
ஆனால் பிரம்மமும் சக்தியும் பிரிக்க முடியாதவை. இலங்கையிலிருந்து திரும்பிய அனுமன் ராமரைத்துதித்து, ராமா! நீயே பிரம்மம். சீதை உனது சக்தி. நீங்கள் இருவரும் பிரியாதவர்கள்” என்றார். பாம்பும் அதன் வளைந்து செல்லும் தன்மையும்போல். பாம்பின் வளைந்து செல்லும் தன்மையை நினைத்தால் பாம்பையும், பாம்பை நினைத்தால் அதன் வளைந்து செல்லும் தன்மையையும் நினைக்க வேண்டியுள்ளது. பாலை நினைத்தால் அதன் நிறத்தை நினைக்க வேண்டியுள்ளது. பாலின் நிறத்தை அதாவது வெண்மையை நினைத்தால் பாலை நினைக்க வேண்டியுள்ளது. தண்ணீரின் குளிர்ச்சியை நினைத்தால் தண்ணீரை நினைக்க வேண்டியுள்ளது. தண்ணீரை நினைத்தால் அதன் குளிர்ச்சியை நினைக்க வேண்டியுள்ளது.
இந்த ஆத்யா சக்தி அல்லது மகாமாயை பிரம்மத்தை மறைத்திருக்கிறது. இந்தத்திரை அகன்றால், எதுவாக இருந்தேனோ, அதுவாக ஆகிறேன்” நானே நீ, நீயே நான்.
மாயை மறைந்திருக்கும் வரை வேதாந்த வாதிகள் கூறுகின்ற ஸோஹம் அதாவது, நான் அந்த பிரம்மம்” என்று சொல்வது சரியாக பொருந்தாது. அலை, தண்ணீரைச் சார்ந்தது. தண்ணீர் அலையைச் சார்ந்தல்ல. மாயை மறைந்திருக்கும்வரை, அம்மா, அம்மா, என்று அழைப்பது நல்லது. ” அம்மா, நீ என் தாய்” நான் உன் குழந்தை. நீ எஜமானி, நான் உன் சேவகன் ” என்ற உறவைக் கொள்வது நல்லது. எஜமான்- சேவகன் உறவு தான் நல்லது. இந்த சேவக பாவனையிலிருந்து சாந்தம், சக்யம் முதலான மற்ற உறவுகள் பிறக்கின்றன. எஜமான் சேவகனிடம் மகிழ்ச்சியடைந்தால், இங்கு வா” வந்து என் பக்கத்தில் உட்கார், நீ எதுவோ அதுவே நானும்” என்பார். ஆனால் வேலைக்காரன் தானாகவே எஜமான் பக்கத்தில் உட்காரப்போனால் எஜமான கோபம் கொள்ள மாட்டாரா?
அவதார லீலை எல்லாம் சித்சக்தியின் மகிமை. யார் பிரம்மமோ அவரே ராமன், கிருஷ்ணன், சிவன்.
.ஈசான்-
ஹரி, ஹரன்- இரண்டும் ஒரே மூலச் சொல்லிலிருந்து பிறந்தவை. வித்தியாசமெல்லாம் வந்து சேரும் எழுத்துக்களைப் பொறுத்து த் தான்.(எல்லோரும் சிரித்தனர்)
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், ஒன்றைத்தவிர இரண்டாவது எதுவும் இல்லை.ஓம் ஸச்சிதானந்த, ப்ரஹம என்கிறது வேதம். ஓம் ஸச்சிதானந்த, க்ருஷ்ண, என்கிறது புராணம். ஓம் ஸச்சிதானந்த, சிவ, என்கிறது தந்திர சாஸ்திரம்.
அதே சித்தசக்தி, மகாமாயை வடிவில் எல்லோரையும் அறியாமையில் ஆழ்த்தி வைத்திருக்கிறாள். முனிவர்கள் ராமனைத் தரிசித்தபோது, ராமா! உலகைமயக்கும் உன்னுடைய மாயையால் எங்களை மயக்கி விடாதே, என்று மட்டும் வேண்டிக்கொண்டதாக அத்யாத்ம ராமாயணம் கூறுகிறது.
ஈசான்-
இந்த மாயை என்பது என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பார்க்கின்ற , கேட்கின்ற, நினைக்கின்ற அனைத்துமே மாயை தான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், காமினீ- காஞ்சனம் தான் மாயையின் திரை.
வெற்றிலை போட்டுக் கொள்வதிலோ, மீன் உண்பதிலோ, புகை பிடிப்பதிலோ, எண்ணெய் தேய்த்துக் கொள்வதிலோ எந்தவிதத் தவறும் இல்லை. இவற்றை மட்டும் விடுவதால் என்ன நடந்துவிடுமு்? காமினீ- காஞ்சனத்தை விடுவது தான் வேண்டியது. அந்தத் துறவு தான் துறவு. இல்லற வாழ்வில் இருப்பவர்கள் அவ்வப்போது தனிமையில் சென்று சாதனை செய்து, பக்தியைப்பெற்று மனத்தளவில் துறக்க வேண்டும். துறவிகள் புறத்துறவு, அகத்துறவு இரண்டையும் மேற்கொள்ள வேண்டும்.
ஜுரம் கண்டவனை, தண்ணீர்க் குடமும் ஊறுகாய் ஜாடியும் இருக்கின்ற அறையிலேயே படுக்க வைத்தால் எப்படி குணமடைவான். அவ்வப்போது தனிமையை நாடிச்செல்ல வேண்டும் என்று கேசவரிடம் கூறினேன்.
ஒரு பக்தர்-
ஐயா, நவ விதான் எப்படி? ஓர் அவியல் போல் அல்லவா தோன்றுகிறது?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சிலர் அதை ஒரு புதிய அமைப்பு என்று சொல்கிறார்கள். அப்படியானால் பிரம்ம சமாஜத்தினரின் கடவுள் என்ன வேறு ஒரு கடவுளா என்று வியக்கிறேன் நான். நவ விதான் புதிய அமைப்பு என்கிறார்கள். இருக்கலாம், ஆறு தரிசனங்கள் இருப்பது போல்ஏதோ ஒன்றாக இருக்கலாம்.
அருவவாதியினரின் தவறு என்ன தெரியுமா? இறைவன் உருவமற்றவர். மற்ற கருத்துக்கள் எல்லாம் பொய்” என்று சொல்வது தான். இறைவன் உருவம் உள்ளவர், அதே போல் உருவம் அற்றவர். இரண்டும் அவரே என்பது எனக்குத் தெரியும். இன்னும் எத்தனையோ விதமாகவும் அவர் இருக்கலாம். அவரால் எல்லாமாகவும் இருக்க முடியும்.
(ஈசானிடம்)அதே சித்சக்தி, அதே மகாமாயைதான் இருபத்து நான்கு தத்துவங்களாக ஆகியிருக்கிறாள். ஒரு நாள் தியானம் செய்து கொண்டிருந்தபோது, என் மனம் ரசிக்கின் வீட்டை அடைந்தது. அவன் ஒரு தோட்டி, இங்கேயே இரு முட்டாளே“ என்று நான் மனத்திடம் கூறினேன்”. அந்த வீட்டில் பலர் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் வெறும் உறைகள், அவர்களுள் ஒரே குண்டலினி, அதே அறு சக்கரங்கள் இருப்பதை எனக்கு தேவி காட்டியருளினாள்.
இந்த ஆத்யா சக்தி பெண்ணா ஆணா? காமார் புகூரில் ராஹாவின் வீட்டில் காளி பூஜை நடந்தது. காளியின் கழுத்தில் பூணூல் அணிவித்திருந்தார்கள். ஏன் தேவிக்குப் பூணூலை அணிவித்திருக்கிறார்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு வீட்டுச் சொந்தக் காரர், தம்பி, நீ தேவியைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். ஆனால் பராசக்தி ஆணா பெண்ணா என்பது எனக்குச் சற்றும் தெரியவில்லை” என்றார்.
அந்த மகா மாயை சிவனை விழுங்கினாள். உள்ளே சென்ற சிவன் , ஆறு சக்கரங்கள் பற்றிய அறிவைப்பெற்றார். பிறகு அவளுடைய தொடை வழியாக வெளியே வந்தார். அதன் பிறகு தான் அவர் தந்திர சாஸ்திரத்தைத்தோற்றுவித்தார் என்று சொல்லப் படுகிறது. அந்த மகா மாயையான சித்சக்தியிடம் நாம் சரணடைய வேண்டும்.
ஈசான்- நீங்கள் அருள் புரியுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
எம்பெருமானே, உனது காட்சியை எங்களுக்குத் தந்து அருள்வாய் என்று வெள்ளை உள்ளத்துடன் பிரார்த்தனை செய். அவரிடம் அழு. இறைவா, என் மனத்தைக் காமினீ- காஞ்சனத்திலிருந்து விலக்கி வை என்று பிரார்த்தனை செய். மேலும் , ஆழ்ந்து மூழ்கு. மேல் மட்டத்தில் மிதப்பதாலோ நீந்துவதாலோ முத்துக்கள் கிடைக்குமா? அதற்கு ஆழ்ந்து மூழ்கிச்செல்ல வேண்டும்.
குருவிடம் உபதேசம் பெற வேண்டும். ஒருவன் பாணலிங்கம் என்ற சிவலிங்கத்தைத்தேடிக் கொண்டிருந்தான்.ஓருவன் அதனிடம், நீ என்ன ஆற்றுக்குச் செல். அதன் கரையில் ஒரு மரத்தைக் காண்பாய். அதற்கருகில் ஒரு சுழி காணப்படும். அதில் குதித்தால் உனக்கு அந்த லிங்கம் கிடைக்கும்” என்று கூறினான். அது போல் குருவிடமிருந்து பாதையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஈசான்-
உண்மை தான் சுவாமி!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சச்சிதானந்தப் பரம் பொருளே குரு வடிவத்தில் வருகிறார். மனித குருவிடமிருந்து தீட்சை பெறுபவர்கள், அவரைச் சாதாரண மனிதராகக் கருதினால் எந்தப் பயனும் இல்லை. அவரை சாட்சாத் தெய்வமாகவே எண்ண வேண்டும். அப்போது தான் மந்திரத்தில் நம்பிக்கை உண்டாகும். நம்பிக்கை ஏற்பட்டாலே எல்லாம் கிடைத்தது போல் தான். தாழ்ந்த குலத்தைச்சேர்ந்தவனான ஏகலைவன் மண்ணினால் குரு துரோணரின் சிலை செய்து, காட்டில்அதன் முன் நின்று வில் வித்தை பழகினான். மண்ணினாலான உருவத்தை உண்மையான குருவாக அவன் பூஜித்தான். அது வே அவனை வில்வித்தையில் தேர்ச்சி பெற்றவனாக்கியது.
பிராமணப் பண்டிதர்களுடன் அதிகமாகக் கலந்து பழகாதீர்கள். அவர்களுடைய நோக்க மெல்லாம் எப்படி இரண்டு காசு சம்பாதிப்பது என்பது தான்.
ஸ்வஸ்த்யயனம் செய்வதற்காக பிராமணர்கள் வருவதைநான் கண்டிருக்கிறேன். தேவீ மாஹாத்மியமோ வேறு எதையோ பாராயணம் செய்வார்கள். ஆனால் பாதிக்கு மேல் பக்கங்களை படிக்காமலேயே புரட்டி விடுவார்கள்”
( எல்லோரும் சிரித்தனர்)
தன்னைச் சாகடித்துக் கொள்ள மிகச் சிறு கத்தி போதும். மற்றவர்களைக் கொல்ல வேண்டுமென்றால் வாள், கேடயம் என்று ஆயுதங்கள் வேண்டும். சாஸ்திரங்களின் அவசியமும் இது தான்.
பல்வேறு சாஸ்திரங்களைப்படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. விவேகம் இல்லாமல் வெறும் புலமையால் எதுவும் நடக்காது. ஆறு தரிசனங்களைப் படித்தாலும் பயன் இல்லை.
தனிமையில் ரகசியமாக அழுது அழுது இறைவனைக் கூப்பிடு. வேண்டியதையெல்லாம் அவர் செய்து தருவார்.
புரச்சரணம் செய்வதற்காக பாட்பாடாவில் ஈசான் ஓலைப் பந்தல் கட்டுகிறார் என்பதை குருதேவர் கேள்விப் பட்டிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ஆர்வத்துடன்)
பந்தல் கட்டி முடிந்து விட்டதா? விஷயம் என்ன தெரியுமா? இது போன்ற விஷயங்களை எவ்வளவு தூரம் பிறர் அறியாமல் செய்கிறோமோ அந்த அளவு நல்லது. சத்வ குணம், உள்ளவர்கள் மனத்திலோ, ஒரு மூலையிலோ , காட்டிலோ, சில சமயம் கொசு வலைக்குள்ளோ தியானம் செய்வார்கள்.
ஈசான் அவ்வப்போது ஹாஸ்ராவை பாட்பாடாவிற்கு அழைத்துச் செல்வதுண்டு. ஹாஸ்ரா ஓர் ஆசாரப் பைத்தியம். அவ்வாறு கூடாதென்று குருதேவர் பலமுறை அவரை எச்சரித்திருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( ஈசானிடம்)
ஒரு விஷயம், ஆசாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்காதீர்கள். ஒரு சாதுவிற்கு அதிக தாகம் எடுத்தது. தோல் பையில் தண்ணீர்கொண்டு சென்ற ஒருவன் அந்த சாதுவிற்குத் தண்ணீர் கொடுக்க முன் வந்தான். உனது பை சுத்தமானதா? என்று சாது அவனைக்கேட்டார். அதற்கு அவன், மகராஜ், எனது பை சுத்தமாகவே இருக்கிறது. ஆனால் உங்கள் பையில் மலம், மூத்திரம் என்று என்னென்னவோ அழுக்குகள் இருக்கின்றனவே! என்னுடைய பையிலிருந்து தண்ணீர் குடித்தால் ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது” என்றான்! அவன் பை என்றது உடல், வயிறு முதலியவற்றை.
இறைவனின் திரு நாமத்தில் நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கை இருந்தால் தீர்த்தத் தலங்களுக்குப் போவது முதலியவற்றின் அவசியமில்லை.
இவ்வாறு கூறிய குருதேவர் பரவசத்தில் ஆழ்ந்தவராய் பாடினார்-
ஈசான் மௌனமாக அனைத்தையும் கேட்டக் கொண்டிருந்தார்.“
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ஈசானிடம்)-
இன்னமும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
ஈசான்- சுவாமி நம்பிக்கை வேண்டும் என்று தான் சொல்லி விட்டீர்களே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சரியான நம்பிக்கையின் மூலம் தான் இறைவனை அடைய முடியும். அனைத்தையும் நம்பினால் இன்னும் விரைவில் நடக்கும். ஆராய்ந்து ஆராய்ந்து தீனி தின்னும் பசு குறைவாகவே பால் தருகிறது. கிடைத்ததை எல்லாம் உண்ணும் பசுவிடம் தான் பால் தாராளமாகச் சுரக்கிறது.
ராஜகிருஷ்ணரின் மகன் ஒரு சம்பவத்தை என்னிடம் சொன்னான். உன் இஷ்ட தெய்வத்தை இந்தச் செம்மறியாட்டிடம் நீ காண்பாய்” என்று ஒருவனுக்கு அருள் வாக்கு கூறப்பட்டது. அதை அவன் நம்பினான். எல்லா உயிர்களிலும் அவரே இருக்கிறார்!
ஒரு குரு தனது பக்தனிடம், ராமரே, எல்லா தேகங்களிலும் வீற்றிருக்கிறார்” என்று கூறினார். பக்தன் அதை அப்படியே நம்பினான்! ஒரு நாய் ரொட்டித் துண்டைக் கௌவிக்கொண்டு ஓடியது. அதைக் கண்ட பக்தன் வெண்ணெய்க் கிண்ணமும் கையுமாக அதன் பின்னால் ஓடியவாறே, ராமா, கொஞ்சம் பொறு, ரொட்டியில் வெண்ணெய் தடவித் தருகிறேன்” என்றான்.
ஆகா, கிருஷ்ணகிஷோருக்கு த் தான் என்னவொரு நம்பிக்கை! ஓம் கிருஷ்ண, ஓம் ராம் என்ற மந்திரங்களை உச்சரித்தால் கோடிசந்தியா வந்தனத்தின் பலன் கிடைக்கிறது” என்பார் அவர், ரகசியமாக என்னிடம், எனக்கு இந்த சந்தியாவந்தனம் முதலியவை பிடிக்கவில்லை. யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றுகூறுவார்.
எனக்கும் அவ்வாறு தோன்றியதுண்டு, தானே எல்லா மாக ஆகியிருப்பதை தேவி எனக்குக் காட்டியிருந்தாள்.ஒரு நாள் சவுக்கு மரத்தோப்பிலிருந்து பஞ்சவடியை நோக்கி வந்து கொண்டிருந்தேன். ஒரு நாய் என்னைப் பின் தொடர்ந்தது. இந்த நாயின் மூலம் தேவி ஏதாவது தெரிவிக்க லாம் என்று தோன்றியது. எனவே பஞ்சவடிக்கு அருகில் சிறிது நேரம் நின்றேன்.
நீங்கள் கூறியது போல் நம்பிக்கையால் எல்லாவற்றையும் அடையலாம்.
ஈசான்-
ஆனால் நாங்கள் இல்லறத்தார் ஆயிற்றே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதனால் என்ன? இறையருள் இருந்தால் நடக்க முடியாதது நடந்தேறுகிறது. ராம்பிரசாதர் ஒரு பாட்டில் இந்த உலகம் ஒரு மாய மாளிகை, என்று பாடினார். இதற்குப் பதிலளிப்பதுபோல் மற்றொருவர் இன்னொரு பாடல் பாடினார்.
ஆனால் முதலில் தனிமையில் ரகசியமாக சாதனைகள் செய்து, இறையனுபூதி பெற்ற பிறகு உலக வாழ்க்கையில் ஈடுபட்டால் ஜனக ராஜாவைப்போல் வாழலாம். இல்லாமல் அது எப்படி முடியும்?
பாருங்களேன், சிவ பெருமானுக்கு முருகன், கணபதி, லட்சுமி, சரஸ்வதி என்று எல்லோரும் இருக்கின்றனர். ஆனாலும் அவர் சில சமயம் சமாதியில் மூழ்கிக் கிடக்கிறார். சில சமயம் ராம் ராம் என்று கூறி நடனமாடிக் கொண்டிருக்கிறார்.…..
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-46
........................
புதன், நவம்பர்-28, 1883
.......................
கேசவருடன் கடைசி சந்திப்பு
....
பிற்பகல் இரண்டு மணி. சர்க்குலர் ரோட்டின் மேற்குப் பக்கம் கேசவந்திர சேனின் வீடாகிய கமலகுடீர் இருந்தது. அதன் கிழக்கே உள்ள நடைபாதையில் ஒரு பக்தர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். யாரோ ஒருவரை அவர் ஏக்கத்துடன் எதிர்பார்ப்பது போல் தோன்றியது. எத்தனையோ பேர் அந்த வழியாகச் சென்றனர். அவர்களையெல்லாம் பார்த்தவாறே உலவிக்கொண்டிருந்தார் அந்த பக்தர்.
கேசவர் நோயுற்றிருந்தார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருந்தது. இம்முறை அவர் பிழைத்தெழுவது சந்தேகம் என்றேபலரும் கூறினர். ஸ்ரீராமகிருஷ்ணர் கேசவரை மிகவும் நேசித்தார். அவரைக் காண தட்சிணேசுவரத்திலிருந்து வருகிறார். அவரை எதிர்நோக்கித்தான் அந்த பக்தர் அங்கே நடந்து கொண்டிருந்தார்.
கமலகுடீருக்கு வடக்கே மங்களவாடி என்ற குடியிருப்புப் பகுதி இருந்தது. பிரம்ம சமாஜத்தினர் பலர் அங்கே வசித்தனர். கமல குடீருக்கு எதிரில் விக்டோரியா கல்லூரி இருந்தது. அங்கு பிரம்ம சமாஜத்தைச்சேர்ந்த பெண்களும், உறுப்பினர்களின் புதல்வியரும் படித்தனர். அந்தக் கல்லூரிக்கு வடக்கே விசாலமான தோட்டத்தின் நடுவே அமைந்த வீட்டில் ஓர் ஆங்கிலேய க் குடும்பம் வசித்து வந்தது. அந்த வீட்டை அந்த வீட்டைப் பார்த்த போது , அந்கு ஏதோ சோக நிகழ்ச்சி நடை பெற்றிருக்க வேண்டும் என்றும- விற்குத்தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்று இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கறுப்பு உடை அணிந்த வண்டிக்காரன் ஒரு சவப்பெட்டி தாங்கிய வண்டியை வீட்டிற்குள் ஓட்டிச் சென்றான். ஓரிரு மணி நேரமாக இந்த ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டிருந்தன.
அழியும் இந்த உடலை உதறிவிட்டு யாரோ போய் விட்டார்கள்- இதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள். எங்கே போய்விட்டார். உடம்பை உதறிவிட்டு எங்கே போகிறார்கள் என்று சுழன்றது பக்தரின் மனம்.
எத்தனையோ வண்டிகள் வடக்கேயிருந்து தெற்கே சென்ற வண்ணமிருந்தன. குருதேவர் வருகிறாரா என்று ஒவ்வொரு வண்டியையும் பக்தர் ஆவலுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். மாலை ஐந்து மணி ஆகியது. குருதேவரின் வண்டி வந்து சேர்ந்தது. அவருடன் லாட்டுவும் ஓரிரு பக்தர்களும் வந்திருந்தனர். ம-வும் ராக்காலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
கேசவரின் வீட்டினர் விரைந்து வந்து குருதேவரை வேற்று மாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விருந்தினர் அறைக்குத் தெற்கு வராந்தாவில் ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது. அந்தக் கட்டிலில் குருதேவரை அமரச் செய்தனர்.
கேசவரின் வருகைக்காக குருதேவர் நீண்ட நேரம் காத்திருந்தார். கேசவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்றும் கேசவரின் சீடர்கள்பணிவான குரலில் தெரிவித்தனர். கேசவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. அதனால் தான் அவருடைய சீடர்களும் வீட்டாரும் அவரை எச்சரிக்கையுடன் கவனித்து வந்தனர். குருதேவரோ கேசவரைப்பார்க்கும் ஆவலில் அமைதி இழக்கத்தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( கேசவரின் சீடர்களிடம்)-
என்னப்பா, அவர் வர வேண்டமு் என்று என்ன அவசியம்? ஏன் நானே உள்ளே சென்று அவரைப் பார்க்கக் கூடாது?
பிரசன்னர்-(பணிவாக)-
சுவாமி, அவரே சில நிமிடங்களில் இங்கு வந்து விடுவார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சரி தான் போங்கள், ஏன் இப்படி குழப்புகிறீர்கள்? நானே உள்ளே போகிறேன்?
குருதேவரின் கவனத்தைத் திருப்புவதற்காக பிரசன்னர் கேசவரைப் பற்றி பேசத்தொடங்கினார்.
பிரசன்னர்-
அவரது நிலை இப்போது அடியோடு மாறி யுள்ளது. தங்களைப்போலவே அவர் தேவியிடம் பேசுகிறார். அம்பிகை பேசுவதைக்கேட்டு சிரிக்கிறார், அழுகிறார்.
உலகின் தாயான அம்பிகையுடன் கேசவர் பேசினார், சிரித்தார், அழுதார் என்பதைக்கேட்டதும் குருதேவர் பரவச நிலை அடைந்தார். அப்படியே சமாதியில் ஆழ்ந்தார்.
அப்போது குளிர்காலம். குருதேவர் பச்சை நிறமுடைய கம்பளிச் சட்டை அணிந்து, அதன் மீது ஒரு சால்வையைப்போர்த்திக் கொண்டிருந்தார். நிமிர்ந்து உட்கார்ந்த நிலை, கண்கள் இமைக்கவில்லை. நீண்ட நேரம் அதே நிலையில் இருந்தார். சமாதி கலைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
மாலை சாய்ந்து இரவு நேரம் வந்தது. குருதேவருக்கு சிறிது புற உணர்வு திரும்பியது. அறையில் விளக்கு ஏற்றப்பட்டது. குருதேவரை அங்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. மிகுந்த சிரமத்தின்பேரில் அங்கே கூட்டிச்சென்றனர். அந்த அறையில் சோபாக்கள், நாற்காலிகள் , அலமாரிகள், க்யாஸ் விளக்குகள் என்று பல்வேறு சாமான்கள் இருந்தன.
குருதேவரை ஒரு சோபாவில் அமரச்செய்தனர். அமர்ந்த வுடனே புறவுலக நினைவிழந்து மீண்டும் பரவச த்தில் ஆழ்ந்தார் அவர். அந்த நிலையிலேயே , சோபாவைப் பார்த்த படி, ஏதோ போதையில் பேசுபவர் போல், இவையெல்லாம் முன்பு செவியமாக இருந்தன. இப்போது இவை எதற்கு? என்று கூறினார். பின்னர் அவர் ராக்காலைப் பார்த்து ராக்கால், நீ வந்திருக்கிறாயா? என்றார்.
பிறகு குருதேவர் வேறு எதையோ கண்டு பேசத் தொடங்கினார்.
இதோ இதோ தேவி! அம்மா நீயும் வந்து விட்டாயா! காசிப் பட்டு புடவையில் எவ்வளவு அழகாகக் காட்சி அளிக்கிறாய்! அம்மா, தொந்தரவு செய்யாதே. உட்கார்! என் அம்மா, உட்கார்!
குருதேவரின் மகா பாவனை நிலை தொடர்ந்தது. அறை ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. பிரம்ம சமாஜ அன்பர்கள் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள். லாட்டு, ராக்கால், ம-, முதலானோர் குருதேவரின் அருகே அமர்ந்திருந்தனர். குருதேவர் பரவச நிலையில் தமக்குத்தாமே பேசினார்.
உடலும் ஆன்மாவும், உடல் பிறந்தது. அது இறக்கும். பழுத்த பாக்கு ஓட்டுடன் ஒட்டாமல் தனியாக இருக்கும். பச்சையாக இருக்கும்போது அதனை ஓட்டிலிருந்து பிரிப்பது மிகவும் கடினம். இறைவனை தரிசித்தால், அவரைப் பெற்றுவிட்டால், ஒருவனுக்கு உடலுணர்வு நீங்கிவிடுகிறது. அப்போது உடலும் ஆன்மாவும் வெவ்வேறு என்ற உணர்வு உண்டாகிறது.
அப்போது கேசவர் வந்தார். அவர் கிழக்கு க் கதவு வழியாக உள்ளே வந்தார். பிரம்ம சமாஜக்கோயிலிலோ, டவுன் ஹாலிலோ சொற்பொழிவு நிகழ்த்திய அவரைப் பார்த்தவர்கள், இப்போது அவரை எலும்பும் தோலுமாகக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரால் நிற்க முடியவில்லை. சுவரைப் பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து வந்தார். மிகுந்த சிரமப்பட்டு நடந்து வந்து சோபாவின் முன்னால் கீழே உட்கார்ந்தார். இதற்குள் குருதேவர் சோபாவிலிருந்து இறங்கி தரையில் உட்கார்ந்து விட்டிருந்தார். கேசவர் குருதேவரைத் தலை தாழ்த்தி வணங்கி, அவரது திருவடிகளில் தமது தலையை வைத்துக்கொண்டு நெடுநேரம் அப்படியே இருந்தார். பிறகு எழுந்து உட்கார்ந்தார். குருதேவர் இன்னும் பரவச நிலையிலேயே இருந்தார். அவர் தமக்குள்ளே ஏதோ முணு முணுத்துக்கொண்டும் தேவியிடம் பேசியபடியும் இருந்தார்.
அப்போது கேசவர், நான் வந்து விட்டேன்” நான் வந்து விட்டேன்” என்று உரத்த குரலில் கூறினார். இவ்வாறு கூறிவிட்டு அவர் குருதேவரின் இடது கையை ஏந்தி மெல்ல தடவிக்கொடுக்கத் தொடங்கினார். குருதேவரோ பரவச நிலையில் தம்மை முற்றிலுமாக இழந்து அமர்ந்திருந்தார். அவர் தமக்குள் பேசுவது போல் எவ்வளவோ பேசினார். பக்தர்கள் மந்திரவசப் பட்டவர்கள் போல் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அந்த அமுத மொழிகளைப் பருகினர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உபாதி இருக்கும்வரை இவர் கேசவர், இவர் பிரசன்னர் , இவர் அமிருதர் என்றெல்லாம் பன்மையுணர்வு இருக்கிறது. பூரண ஞானம் ஏற்பட்டால் எல்லாம் ஒரே உணர்வுமயம் என்ற அனுபவம் உண்டாகிறது. அப்போது, அந்த ஒரே உணர்வுதான் உலகமாகவும் உயிர்களாகவும் இருபத்து நான்கு தத்துவங்களாகவும் ஆகியிருப்பதை அவன் காண்கிறான்.
ஆனால் சக்தி வெளிப் பாட்டில் வேறுபாடு இருக்கவே செய்கிறது. பகவானே எல்லாமாகியுள்ளார் என்பது உண்மை தான். ஆனால் சில இடங்களில் சக்தி அதிகமாகவே வெளிப்படுகிறது. சில இடங்களில் குறைவாக வெளிப்படுகிறது.
வித்யாசாகர் ஒரு முறை என்னிடம், அப்படியானால் இறைவன் சிலருக்கு அதிக ஆற்றலையும், சிலருக்கு குறைவான ஆற்றலையும் கொடுத்திருக்கிறாரா? என்று கேட்டார். அதற்கு நான், ஆமாம், அப்படியில்லாவிட்டால், ஒருவன் ஒன்பது பேரைத்தோற்கடித்து விடுகிறானே! அது எப்படி இயலும்! உங்களைப் பார்ப்பதற்காக நாங்கள் வந்திருப்பதற்கும் என்ன காரணம்? என்று கேட்டேன்.
ஆண்டவனின் லீலை யார் மூலமாக வெளிப்படுகிறதோ அவரிடம் விசேஷ சக்தி காணப்படுகிறது. ஜமீன்தார் எல்லா இடங்களிலும் தங்கலாம். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வர வேற்பறையில் அவரைப்பெரும்பாலும் காண முடியும். பக்தனே பகவானின் வரவேற்பறை. பக்தனின் உள்ளத்தில் திருவிளையாடல் புரிவதை பகவான் விரும்புகிறான். பக்தனின் உள்ளத்தில் அவரது விசேஷ சக்தி வெளிப்படுகிறது. அத்தகைய பக்தனின் அடையாளம் என்ன? பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப் படுகின்ற இடங்களில் இறைவனின் விசேஷ சக்தியின் வெளிப்பாடு உள்ளது.
இந்த ஆத்யா சக்தியும் பரப்பிரம்மமும் பிரிக்க முடியாதவை. ஒன்றைவிட்டு விட்டு மற்றொன்றை நினைப்தென்பது முடியாது. ஒளியும் மாணிக்கமும் போல், மாணிக்கக்கல்லை விட்டு விட்டு அதன் ஒளியை மட்டும் நினைப்பது நடக்காத காரியம். அது போலவே ஒளியை நீக்கி, மாணிக்கக்கல்லை மட்டும் நினைப்பதும் இயலாது. பாம்பும் அதன் வளைந்து வளைந்து செல்லும் இயல்பும், பாம்பை விட்டு விட்டு வளைந்து செல்லும் இயல்பை நினைக்க முடியுமா? வளைந்து செல்லும் இயல்பைத் தவிர்த்துவிட்டு பாம்பை நினைப்பதும் முடியாத காரியம்.
ஆத்யா சக்தி தான் இந்த உயிர்களாகவும் இருபத்து நான்கு தத்துவங்களாகவும் ஆகியிருக்கிறான். அனுலோமம், விலோமம்.
ராக்கால், நரேந்திரன் முதலிய இந்த இளைஞர்களுக்காக நான் ஏன் இவ்வளவு ஏங்குகிறேன்? இவர்களுக்காக இப்படி ஏங்கித் திரிந்தால் எப்போது தான் நீங்கள் பகவானை நினைப்பது? என்று என்னிடம் ஹாஸ்ரா கேட்டான். (கேசவரும் மற்றவர்களும் புன்னகைத்தனர்) எனக்குப்பெரும் கவலையாகி விட்டது.தேவியிடம் சென்று, அம்மா, என் நிலை இப்படி ஆகியதே! இந்த இளைஞர்களுக்காக ஏன் ஏங்குகிறாய் என்று ஹாஸ்ரா கேட்கிறானே! என்று முறையிட்டேன். பிறகு போலாநாத்திடம் இது பற்றி கேட்டேன்.போலாநாத் சொன்னார். மகாபாரதத்தில் இந்த விஷயம் உள்ளது. சமாதியில் நிலைத்த ஒருவர் கீழே வரும்போது எதை ஆதாரமாகக்கொள்வார்? சத்வ குண பக்தர்களைத்தான்! மகா பாரத விளக்கத்தைக்கேட்ட பிறகு தான் நிம்மதி(அனைவரும் சிரித்தனர்)
ஹாஸ்ராவைக் குற்றம் சொல்வதற்கில்லை. சாதக நிலையில் இருக்கும் போது.” இது அல்ல, இது அல்ல” என்று ஆராய்ச்சி செய்து முழுமனத்தையும் இறைவனிடம் செலுத்த வேண்டும்.ஆனால் சித்த நிலையில் விஷயமே வேறு, இறைக் காட்சிக்குப் பிறகு அனுலோம விலோமம். வெண்ணெய் எடுக்க வேண்டுமானால் முதலில் அதை மோரிலிருந்து பிரித்தாக வேண்டும். வெண்ணெய் எடுத்த பிறகு, மோரிலிருந்து தான் வெண்ணெய், வெண்ணெய் சேர்ந்தது தான் மோர் என்பதை அறிந்து கொள்கிறோம். அது போல் இறைவனே அனைத்துமாக ஆகியிருக்கிறார். என்பதை த் திட்ட வட்டமாக உணர்கிறோம். சில இடங்களில் அதிகப் பிரகாசம், சில இடங்களில் குறைவான பிரகாசம்.
கடல் பொங்கினால் கரையெங்கும் ஒரே தண்ணீர்மயமாக இருக்கும். முன்பு, சுற்றி வளைந்து நெளிந்து செல்லும் நதியின் வழியாகப் படகைச் செலுத்தினால் தான் கடலை அடைய வேண்டும்.இப்போதோ, வெள்ளப் பெருக்கில் எங்கு பார்த்தாலும் தண்ணீர். எனவே படகை நேராகச்செலுத்தி கடலை அடைந்துவிடலாம்.
வயல் அறுவடையாகி விட்டால், வரப்பு வழியாகச்சுற்றி வளைத்துச்செல்ல வேண்டிய அவசியமில்லை, குறுக்கே நடந்து சென்றுவிடலாம்.
இறைவனை தரிசித்த பின்னர் அவரை எல்லாவற்றிலும் காணலாம். மனிதனிடம், அதிலும் சத்வ குண பக்தர்களிடம், அதாவது காமினீ- காஞ்சன நாட்டம் அடியோடு இல்லாதவர்களிடம் அவரது வெளிப்பாடு அதிகமாக உள்ளது.( எல்லோரும் மௌனமாக இருந்தனர்) சமாதி நிலையடைந்த ஒருவர் இறங்கி வந்தால் தனது மனத்தை எங்கே வைப்பார்? அதனால் தான் காமினீ- காஞ்சன நாட்டம் இல்லாத, சத்வ குண பக்தர்களின் சேர்க்கை தேவையாக உள்ளது. இல்லாவிட்டால் சமாதி நிலையை அடைந்தவர்கள் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வார்கள்!
யார் பிரம்மமோ அவரே ஆத்யாசக்தி, செயலற்றிருக்கும் போது அவரை பிரம்மம் என்றும் புருஷன் என்றும் சொல்கிறோம். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில் ஈடுபடும்போது அவரை சக்தி என்கிறோம். பிரகிருதி என்கிறோம். புருஷனும் பிரகிருதியும், யார் புருஷனோ அவரே பிரகிருதி. ஆனந்தமயன், ஆனந்த மயீ.
யாருக்கு ஆணைப்பற்றிய உணர்வு இருக்கிறதோ, அவனுக்குப்பெண்ணைப் பற்றிய உணர்வும் இருக்கும். தந்தையை அறிபவனுக்குத் தாயைப்பற்றிய அறிவும் இருக்கும். (கேசவர் சிரித்தார்)
இருள் பற்றிய அறிவு உடையவனுக்கு ஒளியைப் பற்றிய அறிவும் இருக்கும். இரவைப் பற்றிய அறிவு உடையவனுக்குப் பகலைப் பற்றிய அறிவும் இருக்கிறது. இன்பத்தைப் பற்றிய அறிவு உடையவனுக்குத் துன்பத்தைப் பற்றிய அறிவும் இருக்கிறது. இவை உங்களுக்குப் புரிகிறது அல்லவா?
கேசவர்(சிரித்தபடியே)
ஆம் புரிந்து கொண்டேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அன்னை! எந்த அன்னை? உலகின் அன்னை. யார் உலகைப் படைத்திருக்கிறாளோ, காக்கிறாளோ, தன் குழந்தைகளை எப்போதும் காப்பாற்றுகிறாளோ, அறம் பொருள் இன்பம் வீடு என்று யார் விரும்பினாலும் அதை அவர்களுக்குக் கொடுக்கிறாளோ அந்த அன்னை. உண்மையான குழந்தை தாயைப் பிரிந்திருக்க முடியாது. தாய்க்கு எல்லாம் தெரியும். உண்பது, உறங்குவது , திரிவது இவை தான் குழந்தை செய்பவை. வேறு எதைப் பற்றியும் குழந்தை கவலைப்படுவதில்லை.
கேசவர்-
ஆம், சுவாமி.
பேசிக்கொண்டிருக்கும்போதே குருதேவர் சாதாரண நிலைக்குத் திரும்பி விட்டார். முகத்தில் புன்னகை தவழ கேசவரை நோக்கிப்பேசினார். அந்த அறை நிரம்ப அமர்ந்திருந்த பக்தர்கள் ஆவலோடு பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?போன்ற குசலம் விசாரிப்பு எதுவும் இல்லாதது கண்டு அனைவருமே ஆச்சரியமடைந்தனர். பகவானைப் பற்றிய பேச்சு மட்டுமே நடந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(கேசவரிடம்)
பிரம்ம சமாஜத்தினர் இறைவனது ஐசுவரியங்களை அவ்வளவு வர்ணிப்பது ஏன்? எம்பெருமானே, நீ சந்திரனைப் படைத்திருக்கிறாய், சூரியனைப் படைத்திருக்கிறாய், நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறாய்” என்பன போன்றவற்றை இவ்வளவு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? பெரும்பாலோர் தோட்டத்தைக் கண்டு அதையே புகழ்கிறார்கள். தோட்டத்தின் சொந்தக் காரனைக் காண எத்தனைபேர் ஆசைப் படுகின்றனர். பெரியது தோட்டமா, அதன் சொந்தக் காரனா?
கள் குடித்த பிறகு, கடைசியில் இன்னும் எத்தனை பானை கள் இருக்கிறது என்ற கணக்கெல்லாம் எனக்கு எதற்கு? ஒரு புட்டி கள்ளிலே என் காரியம் முடிந்து விடுகிறதே.
நரேந்திரனைப் பார்க்கும் போது நான் ஒரு முறை கூட, உன் தந்தையின் பெயர் என்ன? அவருக்கு எத்தனை வீடுகள் உள்ளன? என்றெல்லாம் கேட்டதே இல்லை.
விஷயம் என்ன தெரியுமா? மனிதன் தன் பெருமைகளில் இன்பம் காண்கிறான். அவ்வாறே இறைவனும் தன் சொந்த மகிமைகளில் பெருமை கொள்வதாக நினைக்கிறான் அவன். அவரது மகிமைகளைப்போற்றிப் புகழ்ந்தால் அவர் மகிழ்வார் என்பது அவனது எண்ணம். ஒரு சமயம் சம்பு என்னிடம், சுவாமி, என் சொத்துக்களையெல்லாம் பகவானின் தாமரைத் திருவடிகளில் அளித்து விட்டு இறந்து போவதற்கான நிலை வருவதற்கு ஆசீர்வதியுங்கள்” என்று சொன்னார். அதற்கு நான் அவரிடம், இவையெல்லாம் உங்களுக்குத் தானே செல்வம். ஆண்டவனுக்கு நீங்கள் எதைக் கொடுக்க முடியும். அவருக்கு இவையெல்லாம் வெறும் கல்லும் மண்ணுமே” என்றேன்.
விஷ்ணு கோயில் நகைகள் எல்லாம் களவு போன போது மதுர்பாபுவும் நானும் சுவாமி விக்கிரகத்தைப் பார்க்கச்சென்றோம். அப்போது மதுர் பாபு, பகவானே! வெட்கக்கேடு! உமது மதிப்பு இவ்வளவு தானா? உம் மீதிருந்த நகைகளைத் திருடியிருக்கிறான். உம்மால் எதுவும் செய்ய முடியவில்லை” என்றார். உடனே நான் மதுர்பாபு விடம். இது என்ன பேச்சு? நீங்கள் எதை நகையென்று பிரமாதப்படுத்துகிறீர்களோ, அதுவெல்லாம் பகவானைப்பொறுத்தவரையில் வெறும் மண்ணாங்கட்டிகளே. சாட்சாத் மகா லட்சுமியே யாருடைய பக்தினியாக இருக்கிறாளோ, அவர் உங்கள் அற்பப் பணம் களவு போய் விட்டதற்காக கவலையில் ஆழ்ந்திருப்பாரா என்ன? இப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்றேன்.
இறைவன் என்ன. செல்வத்திற்குக் கட்டுப்பட்டவரா? அவர் பக்திக்குக் கட்டுப்பட்டவர். அவர்விரும்புவது என்ன? பணம் அல்ல. அவர் விரும்புவதெல்லாம். பாவனை, அன்பு, பிரேமை, பக்தி, விவேகம் வைராக்கியம் என்பவை தான்.
ஒவ் வொருவரும் தங்கள் மனநிலைக்கு ஏற்பவே இறைவனை நினைக்கிறார்கள். தமோ குணபக்தனை எடுத்துக்கொள்வோம்- தேவியும் ஆட்டிறைச்சி உண்கிறாள் என்று நினைக்கிறான்அவன். ஆதலால் ஆட்டைப் பலியிடுகிறான். ரஜோ குண பக்தன் பல்வேறு வகையான சோறும் கறிகளும் சமைத்து நிவேதிக்கிறான். சத்வ குண பக்தனின் பூஜையில் ஆடம்பரம் இருக்காது. அவனது பூஜையைப் பற்றிபிறர் அறிந்து கொள்ளவே முடியாது. பூ கிடைக்காவிட்டால் வில்வ இலைகளையும் கங்கை நீரையும் அர்ப்பித்து பூஜையை முடிப்பான். நைவேத்திய மெல்லாம் வெல்லம் கலந்த சிறிது அவல் அல்லது சிறிது கற்கண்டு- இதிலேயே அடங்கிவிடும். ஏதோ சில வேளைகளில் கொஞ்சம் பாயசம் செய்து படைப்பான்.
மூன்று குணங்களையும் கடந்த பக்தர்களும் உள்ளனர். அவர்கள் குழந்தை இயல்பு கொண்டவர்கள். தெய்வ நாமத்தை ஜெபிப்பது தான் அவர்கள் செய்யும் பூஜை. தெய்வ நாமம் புனித மானது.
( புன்சிரிப்போடு கேசவரிடம்) உங்களுக்கு உடல் நலம் சரியில்லை. அதற்கொரு காரணம் உண்டு. பல்வேறு பாவனைகள் உங்கள் உடலில் புகுந்து சென்றுள்ளன. அதனால் நோய் வந்துள்ளது. பரவச நிலை வரும் பொழுது நாம் ஒன்றும் அறிவதில்லை. பல நாட்களுக்குப் பிறகு அது உடல் நலத்தைப் பாதிக்கிறது. பெரிய நீராவிக் கப்பல்கள் கங்கையைக் கடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவை போகும் போது அதன் விளைவு ஒன்றும் தெரிவதில்லை.ஆனால் சிறிது நேரம் கழித்த பிறகோ, அம்மம்மா! அலைகள் பளார் பளார் என்று கரைகளில் மோதுகின்றன! என்ன அமளி துமளி! சில வேளைகளில் கரையின் ஒரு பகுதி இடிந்து கூட போகலாம்.
ஒரு குடிசையில் யானை புகுமானால் குடிசையை முற்றிலுமாக ஓர் உலுக்கு உலுக்கி, கீழே தள்ளி விடுகிறது. பரவச நிலை என்னும் யானை உடம்பாகிய குடிசையில் புகுந்து, அதை உலுக்குகிறது.
என்ன நடக்கிறது தெரியுமா? வீடு தீப்பிடித்தால் முதலில் உள்ளேயிருக்கும் சில பொருட்கள் எரிகின்றன. பிறகு ஒரே கூச்சலும் குழப்பமும். அது போல் ஞான த்தீயும் முதலில் காமம், குரோதம், முதலிய எதிரிகளை அழிக்கிறது. பின்பு நான்- உணர்வை அழிக்கிறது! பிறகு உடம்பில் ஆரம்பிக்கிறது ஒரு பெரிய அமளி!
எல்லாம் முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நோயில் இம்மியளவு மீதி உள்ளவரை இறைவன் உங்களை விட மாட்டார். ஆஸ்பத்திரியில் பெயரைப் பதிவு செய்து விட்டால், பிறகு வெளியே வர முடியாது. நோய் முற்றிலுமாக, குணமாகாமல் உங்களை டாக்டர் வெளியே விட மாட்டார். நீங்கள் ஏன் உங்கள் பெயரைப் பதிவு செய்தீர்கள்?( எல்லோரும் சிரித்தனர்)
குருதேவர் மருத்துவமனையை உதாரணமாகக் கூறியதைக்கேட்டு கேசவர் திரும்பத் திரும்பச் சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பல முறை முயன்று பார்த்தும் முடியாமல், விட்டு விட்டு சிரித்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் மீண்டும் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(கேசவரிடம்)-
இப்படிப்பட்ட பரவச நிலைகளையும் வேறு எங்கும் கண்டதில்லை. இப்படிப்பட்ட நோயையும் வேறெங்கும் பார்த்த தில்லை என்பான் ஹிருதயன். அப்போது நான்தீராத வயிற்றுப்போக்கு நோயால் அவதிப்பட்டேன். வெளிக்கு போய்க் கொண்டேயிருப்பேன். லட்சக்கணக்கான எலும்புகள் தலையைக் கடிப்பது போன்ற வேதனை. இருந்தாலமு் இரவும் பகலும் நடந்து கொண்டே இருந்தது. ராம் வைத்தியர் என்னைப் பார்க்க வந்தார். நானோ ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். இதென்ன பைத்தியக் காரத்தனம்!உடம்பில் இரண்டு எலும்புகளே எஞ்சியுள்ளன. இதில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்” என்றார் அவர். எல்லாம் இறைவனின் விருப்பம்.
பனித்துளிகள் படுவதற்காகத் தோட்டக்காரன் ரோஜாச்செடியின் அடிப்பகுதியின் மண்ணை நீக்கி வேர் வெளியில் தெரியும் படி வைக்கிறான். பனி படுவதால் ரோஜா நன்றாக வளர்கிறது.அதனால் தான் நீங்களும் வேர்வரை அசைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.(கேசவரும் குருதேவரும் சிரித்தனர்) . குணமடைந்த பிறகு பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் நோயுற்றால் என் மனம் துடிக்கிறது. முன்பு நீங்கள் நோயுற்ற போது பின்னிரவில் நான் எழுந்து அமர்ந்து அழுதேன். அம்மா! கேசவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் பிறகு நான் யாருடன் பேசுவேன்? என்று தேவியிடம் முறையிட்டேன். பிறகுநான் கல்கத்தாவிற்கு வந்தபோது சித்தேஸ்வரி தேவிக்கு இளநீரும் சர்க்கரையும் காணிக்கையாகச் செலுத்தினேன். நீங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று தேவியிடம் நேர்ந்திருந்தேன்.
ஸ்ரீராமகிருஷ்ணருக்குக் கேசவர் மீதிருந்த ஆழ்ந்த அன்பையும் அவர் கொண்ட கவலையையும் பற்றி பக்தர்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆனால் இந்த முறை நான் அவ்வளவு கவலைப்பட வில்லை. உண்மையைச் சொல்லட்டுமா? இரண்டு மூன்று நாட்கள் சிறிது கவலைப்
பட்டேன்.
கேசவர் உள்ளே வந்த அதே கிழக்குக் கதவின் அருகே அவரது தாய் வந்து நின்றார். அங்கே நின்ற உமா நாத் குருதேவரிடம் உரத்த குரலில், சுவாமி, இங்கு அன்னையார் தங்களை வணங்குகிறார்” என்று கூறினார்.
குருதேவர் சிரித்தார். உமாநாத் மீண்டும், கேசவரின் நோய் தீருமாறு அவரை ஆசீர்வதிக்கும் படி அன்னையார் தங்களை வேண்டிக் கொள்கிறார்” என்று சொன்னார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(கேசவரின் தாயைப் பார்த்து)-
எல்லா வரங்களையும் அருள்பவளும் ஆனந்த வடிவினளும் ஆகிய தேவியிடம் பிரார்த்தனை செய்யுங்கள். துன்பங்களை அவள் போக்கியருள்வாள்.
(கேவரிடம்) வீட்டினுள்ளேயே நீண்ட நேரம் அடைந்து கிடக்காதீர்கள். பெண்டு பிள்ளைகளின் நடுவில் அதிகமாக இருந்தால் மேலும் கீழே தான் அமிழ்ந்து போக நேரும். பகவானைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டால் முன்னைவிட நலம் மிகும்.
கம்பீரமான குரலில் இவ்வளவும் கூறிவிட்டு, ஒரு குழந்தையைப்போல் சிரிக்கத் தொடங்கினார் குருதேவர். பிறகு கேசவரைப் பார்த்து, எங்கே உங்கள் கையைக் காட்டுங்கள் பார்க்கிறேன்” என்றார். சிறுவர்களைப்போல் கையைத் தூக்கி எடை பார்த்தார். பின்னர், உங்கள் கை லேசாகத் தான் இருக்கிறது. கபடர்களின் கை கனமாக இருக்கும்” என்றார். (எல்லோரும் சிரித்தனர்)
உமாநாத் கதவருகிலிருந்து மீண்டும் குருதேவரிடம், கேசவரை ஆசீர்வதிக்குமாறு அன்னையார் தங்களை வேண்டுகிறார்” என்று தெரிவித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(கம்பீரமாக)-
என்னால் என்ன செய்ய முடியும்? ஆண்டவன் தான் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார். சுதந்திரமாக உன்னுடைய தூய பணியைச்செய்கின்றாள். அதனை மனிதன் அறியாமல் ஆற்றிய தன் செயல் என்கிறான்.
கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார். இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தைப் பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது” என்று சொல்லிக்கொள்ளும்போது அவர் சிரிக்கிறார். இந்தப் பிரபஞ்சமே என்னுடையது. அதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே! என்று நினைத்துச் சிரிக்கிறார்.
கடவுள் மற்றும் ஒரு முறை சிரிக்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது. தாய் அழுது கொண்டிருக்கிறாள், வைத்தியர் அவளிடம், அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்தி விடுகிறேன்” என்று சொல்கிறார்.அப்போதும் கடவுள் சிரித்துக் கொள்கிறார். குழந்தை இறக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால் யாராலும் அதைக் காக்க முடியாது என்பது வைத்தியருக்குத் தெரியவில்லை.(எல்லோரும் மௌனமாக இருந்தனர்)
அந்த வேளையில் கேசவருக்கு இருமல் வந்தது. நீண்ட நேரம் கட்டுப்படவில்லை. அவரது இருமல் சத்தத்தைக்கேட்டு, அவரது வேதனையில் அனைவரும் வருந்தினர். வெகுநேரம் கழிந்து, மிகவும் முயற்சி செய்த பிறகுஒரு சிறிது அடங்கியது. அவரால் மேலும் அங்கிருப்பதற்கு முடியவில்லை. குருதேவர் முன்பு தரையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். அவர் பிறகு, முன்பு போல் மிகவும் சிரமப்பட்டு சுவரைப் பிடித்துக் கொண்டே தம் அறைக்குச் சென்றார்.
குருதேவருக்குச் சிற்றுண்டி அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். கேசவரின் மூத்த மகன் அவரது அருகில் வந்து அமர்ந்தான். அமிர்தன் அந்தப் பையனை குருதேவருக்கு அறிமுகப் படுத்தி, இவன்தான் கேசவரின் மூத்த மகன். நீங்கள் இவனை ஆசீர்வதித்து அருளுங்கள். ஓ! இதென்ன! இவன் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று வேண்டிக்கொண்டார். அதற்கு அவர், என்னால் ஆசீர்வதிக்க இயலாதே! என்று சொல்லி விட்டு, இனிய புன்சிரிப்போடு கேசவருடைய மகனது உடலைத் தம் கையினால் மென்மையாகத் தடவிக் கொடுத்தார்.
அமிர்தர்-( புன் சிரிப்போடு)
சரி, அப்படியானால் உடம்பைத் தடவிக் கொடுங்கள். (எல்லோரும் சிரித்தனர்)
அமிர்தர் முதலிய பிரம்ம சமாஜ அன்பர்களிடம் குருதேவர் கேசவரைப்பபற்றி பேசினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நோய் குணமாகட்டும் என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. அந்த சக்தியை நான் ஒரு போதும் தேவியிடம் கேட்டதில்லை. அம்மா, எனக்கு சுத்த பக்தியைக்கொடு” என்று மட்டுமே நான் அவளிடம் பிரார்த்திக்கிறேன்.
கேசவர் என்ன சாதாரண மனிதரா? செல்வந்தர்களும் அவரை மதிக்கின்றனர், சாதுக்களும் மதிக்கின்றனர். நான் ஒரு முறை தயானந்தரைச் சந்தித்தேன். அப்போது அவர் ஒரு தோட்ட வீட்டில் தங்கியிருந்தார். கேசவர் கேசவர் என்று கேசவர் வருவதை எதிர்பார்த்து அவர் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார். கேசவர் அன்று அங்கு செல்வதாக இருந்தது என்று நினைக்கிறேன்.
தயானந்தர் வங்காள மொழியை கௌராண்ட மொழி என்பார். கேசவருக்கு வேள்விகளிலோ தேவர்களிலோ நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது. அதனால் தான் தயானந்தர், இவ்வளவு பொருட்களையும் படைத்த ஒரு வரால் தேவர்களைப் படைக்க முடியாதா என்ன? என்று சொன்னார்.
குருதேவர் கேசவரைப் புகழ்ந்து அவரது சீடர்களிடம் தொடர்ந்து கூறினார்-
கேசவரிடம் குறுகிய மனப்பான்மை இல்லை. அவர் பலரிடம், உங்களுக்கு ஏதாவது சந்துகங்கள் இருக்குமானால் அங்கே (ஸ்ரீராமகிருஷ்ணரிடம்) சென்று தீர்த்துக் கொள்ளுங்கள்” என்பார். என்னுடைய மனநிலையும் அப்படித்தான். கேசவரின் குண நலன்கள் கோடி கோடியாகப் பெருகட்டும். மதிப்பையும் மரியாதையையும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? என்கிறேன் நான். கேசவர் ஒரு சிறந்த மனிதர். செல்வந்தர், சாதுக்கள் என்று அனைவரும் அவரை மதிக்கிறார்கள்.
சிற்றுண்டி அருந்திய பிறகு குருதேவர் புறப்படத் தயாரானார்.பிரம்ம சமாஜ பக்தர்கள் வண்டி வரை வந்து வழியனுப்ப இருந்தனர்.
படிகள் வழியாகக் கீழிறங்கி வரும் பொழுது கீழ்ப் பகுதியில் விளக்கில்லாமல் இருந்ததை குருதேவர் கவனித்தார். உடனே அமிர்தர் முதலான பக்தர்களிடம், இந்த இடங்களிலெல்லாம் நல்ல வெளிச்சம் இருக்கும் படி விளக்கு வைக்க வேண்டும். விளக்கு இல்லாத வீட்டில் வறுமை வளரும். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
பிறகு ஓரிரு பக்தர்களுடன் தட்சிணேசுவரம் நோக்கிப் புறப்பட்டார். வழியில் மாதாகஷா தெருவில் வசித்த ஜெயகோபால் சேனின் வீட்டிற்குச் சென்றார். அப்போது மணிசுமார் ஏழு இருக்கும். சில பக்தர்களுமாக அந்த வீட்டை அடைந்தார் குருதேவர்.
குருதேவரைப் பற்றி பக்தர்கள் எவ்வாறெல்லாம் நினைக்கிறார்கள்?
குருதேவர் இரவு பகலாக ஹரி பிரேமையில் மூழ்கியிருக்கிறார். திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆயினும் மற்றவர்களைப் போல் மனைவியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தவில்லை. மனைவியிடம் பக்தி காட்டுகிறார். மனைவியைப் பூஜிக்கிறார். அவருடன் இறைவனைப் பற்றி மட்டுமே பேசுகிறார். இறைவனைப் பற்றியே பாடுகிறார். அவரையே வழிபடுகிறார். தியானம் செய்கிறார். கபடமான எந்தத் தொடர்பும் இல்லை. இறைவன் மட்டுமே உண்மை, மற்ற எதுவும் உண்மையல்ல என்பதை அவர் காண்கிறார். பணம், உலோகப் பொருட்கள், பாத்திரங்கள் இவற்றை அவரால் தொட முடியவில்லை. பெண்களைத்தொட முடிவதில்லை. தொட்டால் முள் தைப்பது போல் தொட்ட இடம் விண் விண்ணென்று வலிக்கிறது. பணம், பொன் இவற்றைக்கையில் எடுத்தால் கை கோணிக் கொள்கிறது. மூச்சு நின்று விடுகிறது. கடைசியில் அந்தப் பொருளை எறிந்தால் தான் பழைய படி மூச்சு விட முடிகிறது.
பக்தர்கள் இன்னும் என்னென்னவோ நினைத்தனர்-
இல்லறத்தைத் துறக்க வேண்டுமா? கற்பதானாலும் கேட்ப தானாலும் பயன் என்ன? திருமணம் செய்து கொள்ளாவிட்டால் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமே! தாய் தந்தையரைத் துறக்க வேண்டுமோ? நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்” எனக்கு க் குழந்தைகள் இருக்கின்றன. நான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். என் கதி என்னவாகும்? இரவும் பகலும் ஹரி பிரேமையில் மூழ்கிக் கிடக்கவே நானும் விரும்புகிறேன். குருதேவரைப் பார்க்கும் போது, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்” என்று தோன்றுகிறது. அவர் இரவு பகலாக இடைவிடாமல், எண்ணெய் ஒழுகுவது போல், இறைவனையே சிந்தனை செய்கிறார். நானோ இரவு பகலாக உலகியல் சிந்தனைகளில் மூழ்கிக் கிடக்கிறேன். கரு மேகங்கள் மூடிக் கிடக்கின்ற ஆகாயத்தில், ஏதோ மூலையில் சிறிய ஒரு வெளிச்சம். இவருடைய தரிசனம் மட்டுமே. இப்போது வாழ்க்கைப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது?
இவர் தாமே வாழ்ந்து காட்டுகிறார். அப்படியிருந்தும் சந்தேகமா? மணல் அணை உடைந்தது, மனத்தில் ஆசை தீர்ந்தது” என்பார்கள்.
மணல் அணை என்ன உண்மையா? ஆசை வெள்ளம் வந்தால் அது தாங்குமா? கங்கையில் நீரேற்றம்வரும் போது யார் அதை த் தடுக்க முடியும்? எந்தப் பிரேமை உதித்ததால் சைதன்யர் கோவணம் பூண்டு துறவியானாரோ, எந்தப் பிரேம பக்தியினால் ஏசு நாதர் ஒரே சிந்தனையோடு காட்டில் தங்கினாரோ, பிரேமை நிறைந்த பரம பிதாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே உயிரை விட்டாரோ, எந்தப் பிரேமையினால் புத்தர் அரசபோகத்தைத் துறந்து வைராக்கியம் பெற்றாரோ, அந்தப் பிரேமையின் ஒரு துளி உதயமானாலும் இந்த நிலையற்ற உலக வாழ்க்கை எங்கோ போய் விடுமே!
போகட்டும் , பல வீனர்கள், பிரேமை உதிக்கப்பெறாத வர்கள், இல்லற வாழ்க்கையில் இருப்பவர்கள், கால்கள் மாயையின் விலங்குகளால் பூட்டப் பட்டிருப்பவர்கள்- இவர்களுக்கு என்னவழி? பிரேமையே உருவான இந்தப் பரமஹம்சர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இவ்வாறு பக்தர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
குருதேவர் ஜெயகோபாலின் வீட்டு விருந்தினர் அறையில் பக்தர்களுடன் அமர்ந்திருந்தார். எதிரில் ஜெயகோபாலும் அவரது உறவினர்களும் , அண்டை வீட்டாரும் நெருக்கமாக வந்து அமர்ந்தனர். அண்டை வீட்டார் ஒருவர் குருதேவருடன் பேசுவதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தார். அவர் பேச்சை ஆரம்பித்தார். ஜெயகோபாரின் அண்ணனான வைகுண்டரும் அங்கே இருந்தார்.
வைகுண்டர்-
சுவாமி, நாங்கள் இல்லறத்தில் உழல்பவர்கள். எங்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கடவுளை அறிய வேண்டும். ஒரு கையை அவருடைய தாமரைத் திருவடிகளில் வையுங்கள். மற்றொரு கையால் கடமைகளைச்செய்யுங்கள்.
வைகுண்டர்-
சுவாமி! உலலக வாழ்க்கை பொய்யானதா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனை அறியாததுவரை பொய்யானது தான். இதில் மனிதன் அவரை மறந்து, எனது எனது” என்று அடித்துக் கொள்கிறான். மாயையில் அகப்பட்டு, காமினீ- காஞ்சனத்தின் பிடியில் சிக்குண்டு மேலும் மூழ்குகிறான். தப்பிக்க வழி இருந்தாலும் அவனால் தப்பிக்க முடியதில்லை. மாயை காரணமாக அந்த அளவிற்கு அவன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறான். ஒரு பாட்டு இருக்கிறது.
வாழ்க்கை நிலையில்லாதது என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். இந்த வீட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன். எத்தனையோ பேர் வந்தார்கள்.போயும் விட்டார்கள். எத்தனையோ பேர் பிறந்தார்கள், இறந்தார்கள்! வாழ்க்கை என்பது இதோ இருக்கிறது. இல்லாமல் போய் விட்டது. யாரை ” என்னுடையவர், என்னுடையவர்” என்று கருதுகிறீர்களோ, கண்களை மூடி விட்டால் அப்புறம் அவர் இல்லை. யாரும் இல்லை. இருந்தாலும் பேரனை விட்டுக் காசிக்குப்போக முடியவில்லை! என் ஹாருவை யார் கவனிப்பார்கள் என்பது தான் கவலை.
வெளியே செல்ல வழி இருக்கிறது என்றாலும் வலையில் அகப்பட்ட மீன் தப்ப முயலுவதில்லை. தான் கட்டிய கூட்டில் தானே வந்து சாகிறது பட்டுப் பூச்சி. இவ்வாறு உலகம் பொய்யானது, நிலையற்றது.
அண்டை வீட்டார்-
சுவாமி, ஒரு கையால் கடவுளையும் மற்றொரு கையால் வாழ்க்கையையும் ஏன் பற்றிக் கொள்ள வேண்டும்? வாழ்க்கை நிலையற்றது என்றால் ஒரு கையால் கூட ஏன் அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கடவுளை அறிந்த பிறகு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டால் அது நிலையற்றதாகாது.
காளியன்னை திருப் பெயரால் கனவேலி அமைத்திடுவாய், நாளும் உன்றன் வாழ்க்கை வயல் நல்ல பலன் நல்கிடவே” இறைவனைச் சரணடை, எல்லாம் பெறுவாய், நீள் கூந்தல் அலைபாயும் நிமலையாம் காளியின் நாம மாம் வேலி பக்கம் வன் காலன் அனுகானே! உறுதியான வேலி, இறைவனை அடைந்து விட்டால், பிறகு வாழ்க்கை சாரமற்றது என்ற உணர்வு தோன்றாது. இறைவனை அறிந்து கொண்டவன், அந்த இறைவனே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருப்பதைக் காண்கிறான். குழந்தைக்கு உணவு ஊட்டும்போது பால கோபாலனுக்கு ஊட்டுவதாக நினையுங்கள். தாய் தந்தையரை இறைவியாகவும் இறைவனாகவும் காணுங்கள்.சேவை செய்யுங்கள், கடவுளை அறிந்தபிறகு குடும்பம் நடத்துபவன் சாதாரணமாக மனைவியுடன் உடல் தொடர்பு வைப்பதில்லை. இருவருமே பக்தர்கள். இறைவனைப் பற்றியே பேசுவார்கள். இறைவனைப் பற்றிய பேச்சிலேயே அவர்களின் காலம் கழியும். அவர்கள் பக்தர்களுக்கு ச்சேவை செய்வார்கள். எல்லா உயிர்களிலும் உறைகின்ற இறைவனுக்கு அவர்கள் இருவரும் சேவை செய்வார்கள்.
அண்டை வீட்டார்-
சுவாமி, இப்படிப்பட்ட கணவன்- மனைவியைக் காண முடியாதே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இருக்கிறார்கள். ஆனால் மிகக் குறைவு. உலகியல் மனிதர்களால் இவர்களை அறிந்து கொள்ள முடியாது. இவ்வாறு இருக்க வேண்டு மென்றால் இருவரும் நல்லொழுக்கம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இருவருமே இறையானந்தத்தை அனுபவித்திருந்தால் தான் இப்படி வாழ முடியும். கடவுளின் தனிப்பட்ட அருளும் வேண்டும். இல்லாவிட்டால் எப்போதும் மனவேற்றுமை இருக்கும். சில சமயம் இருவரும் பிரியவும் நேரலாம். மனப்பொருத்தம் இல்லாவிட்டால் வாழ்க்கையே நரகமாகி விடும். மனைவி இரவு பகலாக, ”என் தந்தை என்னை இங்கு ஏன் தான் மணம் செய்து கொடுத்தாரோ? சாப்பாட்டிற்கும் வழியில்லை. குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்க முடியவில்லை. நல்ல துணி கிடையாது. குழந்தைகளுக்குத் துணி மணியில்லை. ஒரு நகை நட்டு இல்லை. நீங்கள் என்ன சுகத்தைத்தான் எனக்கு தந்து விட்டீர்கள்? கண்களை மூடிக்கொண்டு ஈசுவரா, ஈசுவரா என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தகையபைத்தியக் காரத் தனத்தையெல்லாம் விடுங்கள்” என்று புலம்புவாள்.
ஒரு பக்தர்-
ஆம் சுவாமி, இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன. ஒருவேளை, பிள்ளைகள் சொன்ன பேச்சைக்கேட்காமல் இருப்பார்கள். இன்னும் எத்தனையோ துன்பங்கள், அப்படியானால் வழி தான் என்ன சுவாமி?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இல்லறத்தில் இருந்து கொண்டு சாதனை செய்வது மிகவும் கடினம். பல தடங்கல்கள் உள்ளன. நோய், துன்பம், வறுமை, மனையியுடன் மனஸ்தாபம், அடங்காத, மூர்க்கத்தனமான, பிடிவாதம் மிக்க பிள்ளைகள், இதையெல்லாம் நான் உங்களுக்குச்சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் வழி இருக்கிறது. அவ்வப்போது தனிமையில் போய் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவரை அடைவதற்கு முயல வேண்டும்.
அண்டை வீட்டான்-
வீட்டை விட்டு வெளியேற வேண்டுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஒரேயடியாக வேண்டாம். வாய்ப்பு கிடைக்கும்போது தனிமையில் சென்று ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கு. அப்போது குடும்பத்துடன் எந்தவிதத்தொடர்பும் வேண்டாம். உலகியல் மக்களுடன் உலகியல் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது. தனிமையில் இரு அல்லது சாது சங்கத்தில் இரு.
அண்டை வீட்டான்-
சாதுவை எப்படி அறிந்து கொள்வது?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
யாருடைய உள்ளம், உயிர் , ஆன்மா எல்லாம் இறைவனிடமே சரணடைந்திருக்கின்றனவோ அவன் தான் சாது. யார் காமினீ- காஞ்சனத்தை விட்டிருக்கிறானோ அவன் தான் சாது. ஒரு சாது பெண்களைச் சிற்றின்ப நோக்குடன் பார்ப்பதில்லை. எப்போதும் அவர்களை விட்டு விலகியே இருக்கிறான். அவர்களின் அருகில் செல்ல நேர்ந்தால் அவர்களைத் தாயாகப் பார்க்கிறான். வழி படுகிறான். சாது எப்போதும் இறை சிந்தனையில் ஈடுபடுகிறான். இறைவனைப் பற்றிய பேச்சைத்தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பதை உணர்ந்து அவர்களுக்குச்சேவை செய்கிறான். அனேகமாக இவையே சாது வின் அடையாளங்கள்.
அண்டை வீட்டான்- எப்போதும் தனிமையில் வாழ வேண்டுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஃபுட்பாத் தில் நிற்கின்ற மரங்களைப் பார்த்திருக்கிறாய்? அவை சிறு செடிகளாக இருக்கும் வரை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆடு மாடுகள் மேய்ந்து விடும். அடிமரம் தடிப்பாக வளர்ந்த பிறகு வேலியின் அவசியம் இல்லை. அப்போது யானையைக் கட்டி வைத்தாலும் மரத்திற்கு ஆபத்தில்லை.(மனத்தை) அடிமரமாக்கிக்ககொள்ள முடிந்தால் பிறகு என்ன கவலை? முதலில் விவேகத்தைப்பெற பாடுபடு. எண்ணெய் பூசிக்கொண்டு பலாப் பழத்தை அறு. கையில் பிசின் ஒட்டாது.
அண்டை வீட்டான்-
விவேகம் என்றால் என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனே ஸத், மற்ற எல்லாம் அஸத்- இத்தகைய ஆராய்ச்சி. ஸத் என்றால் நிலையானது.அஸத் என்றால் நிலையற்றது. விவேகம் வரப் பெற்றவனுக்கு இறைவனே உண்மை. மற்ற எதுவும் உண்மையில்லை என்பது தெரியும். விவேகம் உதித்தால் இறைவனை அறிய விருப்பம் உண்டாகிறது. உண்மையற்றதை விரும்பினால், அதாவது உடலின்பம், புகழ், பணம் இவற்றையெல்லாம் விரும்பினால் உண்மைப் பொருளான இறைவனை அறிய மனம் விரும்பாது. உண்மை- உண்மையற்றது பற்றிய ஆராய்ச்சி செய்யத் தொடங்கினால் இறைவனைத்தேட விருப்பம் உண்டாகும்.
மனம் அகமுகமாகும் போது விவேகம் உதிக்கிறது. விவேகம் வந்தால் உண்மை மலரும் அப்போது காளி என்னும் கற்பக மரத்தின் கீழ் உலவ மனத்தில் விருப்பம் ஏற்படும். அந்த மரத்தின் கீழ் சென்றால், அதாவது கடவுளின் அருகில் சென்றால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பழங்களைச் சுலபமாகப்பெறுவாய். அவை சிரமின்றி கிடைக்கும். சுலபமாக க் கிடைக்கும். தேவியை அடைந்து விட்டால், யாராவது விரும்பினால், சாதாரணமாக மனிதன் நாடுகின்ற அறம், பொருள், இன்பம்- இவை கூட கிடைக்கும்.
அண்டை வீட்டார்-
அப்படியானால் வாழ்க்கையை மாயை என்று ஏன் கூற வேண்டும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனை அடையாதது வரை, இது அல்ல. இது அல்ல. என்று தியாகம் செய்ய வேண்டும். அவரை அடைந்தவர்கள் அவரே எல்லாமாகவும் இருப்பதை அறிகின்றனர். இறைவன், மாயை, உயிர்கள், உலகம் எல்லாம் ஒன்றே என்ற உணர்வ அப்போது ஏற்படுகிறது. உயிர்கள் உலகம் என்று எல்லாமே அவர் தான். விலவப் பழத்தை ஓடு, சதை, விதை என்று பிரிக்கிறோம். வில்வப் பழத்தின் எடை எவ்வளவு என்று ஒருவர் கேட்டால் ஓடு, விதை இவற்றை எறிந்து விட்டு சதையை மட்டும் எடை போடுவாயா? மாட்டாய். எடை வேண்டுமானால் ஓடு, விதை எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் விலவப் பழத்தின் எடை இவ்வளவு என்று சொல்ல முடியும். ஓடு தான் உலகம், விதை தான் உயிரினங்கள் போன்றவை.
ஆராய்ச்சியின்போது உயிர்களையும் உலகையும் ஆன்மா அல்லாதது, உண்மையற்றது என்று கூறினோம். சதை தான் சாரம், ஓடும் விதையும் சாரமற்றது என்ற உணர்வு அப்போது ஏற்படுகிறது. உயிர்கள் உலகம் என்று எல்லாமே அவர் தான். விலவப் பழத்தை ஒடு, சதை, விதை என்று பிரிக்கிறோம். வில்வப் பழத்தின் எடை எவ்வளவு என்று ஒருவர் கேட்டால் ஓடு, விதை, இவற்றை எறிந்துவிட்டு சதையை மட்டும் எடை போடுவாயா? மாட்டாய். எடை வேண்டுமானால் ஓடு, விதை எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் விலவப் பழத்தின் எடை இவ்வளவு என்று சொல்ல முடியும்.ஓடு தான் உலகம். விதை தான் உயிரினங்கள் போன்றவை. ஆராய்ச்சியின் போது உயிர்களையும் உலகையும் ஆன்மா அல்லதது, உண்மையற்றது என்று கூறினோம்.வதை தான் சாரம். ஓடும் விதையும் சாரமற்றது என்ற உணர்வு அப்போது ஏற்படுகிறது.ஆனால் ஆராய்ச்சி முடிந்து விட்டால் எல்லாம் சேர்ந்து ஒன்று என்பது தெரிகிறது. எந்தப் பொருளிலிருந்து சதை உண்டாயிற்றோ அதிலிருந்தே ஓடும் விதைகளும் உண்டாகி இருக்கின்றன என்ற உணர்வு ஏற்படுகிறது. விலவப் பழத்தை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து விடுகேிறோம். அனுலோமம் விலோமம்.
மோரைச் சேர்ந்தது வெண்ணெய். வெண்ணெயைச்சேர்ந்தது மோர். மோர் உண்டென்றால் வெண்ணெயும் உண்டு. வெண்ணெய் உண்டென்றால் மோரும் உண்டு. ஆன்மா இருக்குமானால் ஆன்மா அல்லாததும் இருக்கும்.
நித்தியம் யாருடையதோ அவருடையதே லீலையும். லீலை யாருடையதோ அவருடையதே நித்தியமும். இறைவன் என்று அறியப் படுபவரே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருக்கிறார். இறைவனை அறிந்தவன் அவரே எல்லாமாகிஇருப்பதை, தந்தை, தாய், குழந்தை, அண்டை வீட்டார், உயிரினங்கள், நல்லது- கெட்டது, சுத்தம்- அசுத்தம் என்று எல்லாமாகவும் ஆகியிருப்பதைக் காண்கிறான்.
அண்டை வீட்டார்-
அப்படியானால் பாவ புண்ணியம் என்பது இல்லையா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இருக்கிறது, அதே வேளையில் இல்லை. இறைவன் நம்மில் நான்- உணர்வை வைத்திருந்தால் வேற்றுமை உணர்வையும் வைக்கிறார். பாவ புண்ணிய உணர்வையும் வைக்கிறார். ஏதோ ஓரிருவரிடம் நான்- உணர்வை அடியோடு துடைத்து விடுகிறார். இவர்கள் பாவ புண்ணியம், நல்லது கெட்டது இவற்றைக் கடந்து செல்கின்றனர்.இறைக்காட்சி கிடைக்காதவரை வேற்றுமை உணர்வு- நல்லது –கெட்டது என்ற உணர்வு இவை இருந்தே தீரும்.பாவமும் புண்ணியமும் எனக்குச் சமமே. இறைவன் எவ்வாறு செய்விக்கிறாரோ அப்படியே செய்கிறேன்” என்று நீ வாயினால் சொல்லலாம்.ஆனால் இவையெல்லாம் வெற்றுப்பேச்சு என்பது உள்ளுக்குள் உனக்கு நன்றாகவே தெரியும். கெட்டது செய்தால் மனம் படபடவென்று அடித்துக்கொள்கிறதே. இறைக் காட்சிக்குப் பிறகும், இறைவன் விரும்பினால், ”நான் சேவகன்” என்ற உணர்வை( பக்தனிடம்) வைக்கிறார். அந்த நிலையில் பக்தன், ”நான் சேவகன்” நீ எஜமான்” என்கிறான். இத்தகைய பக்தனுக்கு இறைவனைப் பற்றிய பேச்சு, இறைப் பணிகள் எல்லாம் இன்பம் தருகின்றன. இறைநாட்டம் இல்லாதவர்களை அவன் விரும்ப மாட்டான். இறைநோக்கம் இல்லாத செயல்களை விரும்ப மாட்டான். இத்தகையபக்தர்களிடம் இறைவன் வேற்றுமை உணர்வை வைத்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.
அண்டை வீட்டார்-
சுவாமி, இறைவனை அறிந்து வாழ்க்கையை நடத்து என்கிறீர்கள். அவரை அறிய முடியுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
புலன் களின் மூலமோ, இந்த மனத்தின் மூலமாகவோ அறிய முடியாது. எந்த மனத்தில் உலகியல் நாட்டம் இல்லையோ அந்தத் தூயமனத்தினால் அவரை அறிய முடியும்.
அண்டை வீட்டார்-
இறைவனை யார் அறிய முடியும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவரைச் சரியாக யார் தான் அறிய முடியும்,! நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அறிந்தால் போதும். ஒரு கிணறு தண்ணீர் எனக்கு எதற்கு? ஒரு குடம் தண்ணீர் இருந்தாலே போதும்.
சர்க்கரைக் குன்றின் அருகே ஓர் எறும்பு சென்றது. அத்தனை சர்க்கரையாலும் அதற்கு என்ன பயன்? இரண்டொரு துணுக்குகள் கிடைத்தாலே அதற்குப் போதும்போதும் என்றாகி விடும்.
அண்டை வீட்டார்-
எங்கள் ஜுரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் எப்படி ப்போதும்? இறைவனை முற்ற முழுக்க அறிந்துவிட வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உண்மை தான். ஆனால் ஜுரத்திற்கு மருந்து இருக்கிறதே!
அண்டை வீட்டார்-
என்ன மருந்து சுவாமி!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சாதுசங்கம், இறைவனது திரு நாமத்தையும் அவரது புகழையும் பாடுவது, இடை விடாமல் பிரார்த்திப்பது, அம்மா, எனக்கு ஞானம் வேண்டாம். இதோ உனது ஞானம். எடுத்துக்கொள். இதோ உனது அஞ்ஞானம். எடுத்துக்கொள். எனக்கு உன் பாத கமலங்களில் தூய பக்தியை மட்டுமே கொடு. எனக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று நான் தேவியிடம் சொல்கிறேன்.
நோய்க்கு த் தகுந்த மருந்து வேண்டும். கீதையில் பகவான், அர்ஜுனா, நீ என்னையே சரணடை. உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்” என்கிறார். இறைவனிடம் சரணடை. அவர் நல்ல புத்தியைத் தருவார். உனது எல்லா சுமைகளையும் ஏற்றுக் கொள்வார். அப்போது எல்லாவிட நோய்களும் உன்னை விட்டு ஓடி விடும்.
இந்த மனத்தால் அவரை அறிய முடியுமா? ஒரு படி பாத்திரத்தில் நாலுபடி பால் கொள்ளுமா? அவரே புரிய வைக்கா விட்டால் புரிந்து கொள்ள முடியுமா?ஆகவே தான் அவரைச் சரணடை என்று சொல்கிறேன். அவரது திருவுளம் எதுவோ அதை அவர் செய்யட்டும். அவர் தன் விருப்பப் படியே செய்பவர். மனிதனுக்கு என்ன சக்தி இருக்கிறது!
........................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-47
........................
தட்சிணேசுவரத்தில் பக்தர்களுடன் -2
..........................................
ஞாயிறு, டிசம்பர் 9, 1883.
.................................................
பிற்பகல் சுமார் ஒன்று அல்லது இரண்டு மணி இருக்கும். குருதேவர் தமது அறையில் கட்டிலில் அமர்ந்து பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதர், மனமோகன்,டன்டனைச்சேர்ந்த சிவசந்திரன், ராக்கால், ம-, ஹரீஷ் என்று பலர் அங்கே இருந்தனர். ஹாஸ்ரா அப்போது அங்கே தங்கியிருந்தார்.
ஸ்ரீசைதன்யரின் நிலைகளை குருதேவர் விவரித்துக்கொண்டிருந்தார்.
சைதன்யருக்கு மூன்று நிலைகள் இருந்தன.
1- புறவுணர்வு நிலை-
இந்த நிலையில் அவரது மனம் தூலத்திலும் சூட்சுமத்திலும் இருந்தது.
2- பாதி புறவுணர்வு நிலை-
இந்த நிலையில் அவரது மனம் காரண சரீரத்திலும் காரண ஆனந்தத்திலும் புகுந்திருந்தது.
3- அக வுணர்வு நிலை-
இந்த நிலையில் அவரது மனம் மகா காரணத்தில் லயித்து நின்றது.
ஸ்ரீ சைதன்யரின் இந்த மூன்று நிலைகளும் வேதாந்தம். குறிப்பிடும் பஞ்ச கோசங்களைக் கடந்தது. மனம் மகா காரணத்தில் லயிக்கும்போது ஒருவர் சமாதி நிலையில் ஆழ்கிறார். இதுவே நிர்விகல்ப சமாதி அல்லது ஜட சமாதி என்று சொல்லப் படுகிறது.’
புறவுணர்வு நிலையில் சைதன்யர் நாம சங்கீர்த்தனம் செய்வார். பாதி புறவுணர்வு நிலையில் பக்தர்களுடன் ஆடுவார். அகவுணர்வு நிலையில் சமாதியில் மூழ்கி யிருப்பார்.
ம-(தமக்குள்)-
குருதேவர் தமது மன நிலைகளையே இப்படி கோடி காட்டுகிறாரா? சைதன்ய தேவரும் இத்தகைய நிலைகளைப் பெற்றிருந்தாரா!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஸ்ரீசைதன்யர் பக்தியின் அவதாரம். மக்களுக்கு பக்தியைப்போதிப்பதற்காக வந்தவர் அவர். இறைவனிடம் பக்தி வருமானால் எல்லாமே ஆகிவிட்டது. ஹடயோகத்தின் அவசியம் சிறிதும் இல்லை.
ஒரு பக்தர்-
சுவாமி, ஹடயோகம் என்பது என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஹடயோகத்தில், மனத்தை மிக அதிகமாக உடலில் வைக்க வேண்டியிருக்கிறது. வித்தைக்காரன் ஒருவன் வித்தை காட்டிக் கொண்டிருந்தபோது அவனுடைய நாக்கு அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. அவ்வளவு தான், அவனது உடல் அசைவற்று நின்றுவிட்டது. அவன் இறந்து போனான் என்று மக்கள் அவனைப் புதைத்து விட்டனர். பல ஆண்டுகளாக அவன் மண்ணில் புதைந்து கிடந்தான். நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த மண் எப்படியோ நீங்கியபோது அவனுக்கு த் திடீரென்று உணர்வு திரும்பியது. உடனே அவன், மாயம் பார்! மந்திரம் பார்! குழப்பமெல்லாம் வருகுது பார்! பார்! என்று கத்த ஆரம்பித்தான். (எல்லோரும் சிரித்தனர்) இறையெல்லாம் பிராணனின் செயல்கள். வேதாந்திகள் ஹடயோகத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ராஜ யோகம் என்ற ஒன்று உண்டு. ராஜயோகத்தில் மனத்தின் மூலம் யோகம் சித்திக்கிறது. பக்தியின் மூலமும் ஆராய்ச்சியின் மூலமும் யோகம் ஏற்படுகிறது. இந்தயோகமே சிறந்தது. ஹடயோகம் நல்லதல்ல. கலியுகத்தில் பிராணன் உணவைச் சார்ந்திருக்கிறது.
குருதேவர் சவுக்குத்தோப்பிற்குச் சென்றுவிட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு முகம் கழுவிக்கொண்டு அறைக்குத் திரும்பி வரும் வழியில் நகபத்தை அடுத்துள்ள பாதையில் சற்று நின்று கவனித்தார். நகபத்தின் வராந்தாவில் வேலியின் ஒரு பக்கத்தில் ம- ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் கண்டார். அவர் இறைவனை தியானிக்கிறாரா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஓ! நீ இங்கே இருக்கிறாய்? உனக்கு விரைவிலேயே( ஆன்மீக வழிப்பு) உண்டாகும். நீ சிறிது முயன்றாலே யாரோ ஒருவர் வந்து, இப்படி இப்படிச் செய்” என்று உதவுவார்.
ம-
திருக்கிட்டு குருதேவரை நிமிர்ந்து பார்த்தார். அப்படியே அமர்ந்திருந்தார். எழவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உனக்கான காலம் கூடிவிட்டது. தகுந்த நேரம் வராத வரையில் தாய்ப்பறவை முட்டையின் மேலோட்டை உடைக்காது.ஏற்கனவே நான் என்ன சொல்லியிருந்தேனோ அதுவே உன் பாதை.
இவ்விதம் கூறிவிட்டு குருதேவர் மீண்டும் ம-வுக்கு அவரது ”பாதை” எது என்பதை எடுத்துச் சொன்னார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
எல்லோருமே கடுமையாகத் தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் நான் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. மண் கட்டியைத் தலையணையாகக்கொண்டு தரையில் வீழ்ந்து கிடப்பேன். எப்படியோ நாட்கள் கழிந்தன. அம்மா! அம்மா! என்று மட்டும் அழைத்துக் கொண்டிருந்தேன்” அழுதேன்.
கடந்த சுமார் இரண்டு வருடங்களாக ம- குருதேவரிடம் வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் ஆங்கிலம் படித்தவர். சில வேளைகளில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை இங்க்லீஷ் மேன் என்று அழைப்பார். ம- கல்லூரியில் படித்தவர். அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது.
கேசவ சந்திர சேன் மற்றும் பல அறிஞர்களின் சொற் பொழிவுகளைக்கேட்பதிலும் மேலை த்தத்துவம், மேலை விஞ்ஞானம் முதலியவற்றைப் படிப்பதிலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வர ஆரம்பித்ததிலிருந்து ஐரோப்பிய அறிஞர்களின் நூல்களும், ஆங்கிலம் மற்றும் பிற மொழிச்சொற்பொழிவுகளும் உள்ளீடற்றவையாக அவருக்குத் தோன்றியது. இப்பொழுது இரவு பகலாகக் குருதேவரைத் தரிசிப்பதிலும், அவரது அமுத மொழிகளைக்கேட்பதிலும் விருப்பம் கொண்டிருந்தார்.
சாதனை செய்தால் நிச்சயம் இறைவனைக் காண முடியும்” என்றும் மானிட வாழ்க்கையின் லட்சியம் இறைவனைக் காண்பதே” என்று கூறுகிறார் குருதேவர். இப்போதெல்லாம் ம- குருதேவரின் இந்த உபதேசத்தையே எப்பொழுதும் சிந்திக்கிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்(ம-விடம்)
நீ சிறிது முன்றாலே யாராவது ஒருவர் வந்து, இப்படி இப்படிச் செய்” என்று உனக்கு உதவுவார். நீ ஏகாதசி நாட்களில் விரதம் இரு. நீங்கள் எனக்கு உரியவர்கள். சொந்தக் காரர்கள். இல்லாவிட்டால் இங்கே ஏன் இவ்வளவு வர வேண்டும்?
ஒரு சமயம் நான் நாம சங்கீரத்தனம் கேட்டுக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீகிருஷ்ணரின் தோழர்களில் ராக்காலும் ஒருவனாக இருந்ததைக் கண்டேன். நரேந்திரன் மிக உயர்ந்த தளத்தைச்சேர்ந்தவன். ஹீரானந்தனும் அப்படித்தான். எத்ததையதொரு குழந்தையின் இயல்பில் இருக்கிறான் அவன். அவனது இயல்பு தான் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அவனைப் பார்க்க விரும்புகிறேன்.
ஒரு சமயம் சைதன்யரைத் தமது சீடர்களுடன் கண்டேன் பரவச நிலையில் அல்ல- இந்தக் கண்களாலேயே கண்டேன். முன்பெல்லாம் இந்தக் கண்களாலேயே எல்லா காட்சிகளையும் காணக் கூடிய நிலை இருந்தது- ஆனால் இப்போதோ பரவச நிலையில் மட்டுமே காண்கிறேன். சைதன்யரையும் அவரது சீடர்களையும் இந்தக் கண்களாலேயே தான் கண்டேன். அவர்களுள் உன்னையும் பலராமையும் கண்டது போல் தோன்றுகிறது.
சிலரைப் பார்க்கும்போது மட்டும் நான் திடீரென்று குதித்தெழுந்து நிற்கிறேன். ஏன் தெரியுமா? நீண்ட காலத்திற்குப் பிறகு சொந்தக் காரன் ஒருவனைப் பார்க்கும்போது இப்படித்தான் ஏற்படுகிறது.
நான் அழுது கொண்டே தேவியிடம், அம்மா, பக்தர்களைக் காண்பதற்காக என் உயிர் துடிக்கிறது. அவர்களை விரைவில் இங்கு அழைத்து வா! என்று சொல்வேன். நான் என்னென்ன நினைத்தேனோ அவை அப்படியே நடந்தேறின.
ஜபதியானம் செய்வதற்காகப் பஞ்சவடியில் ஒரு துளசித்தோட்டம் அமைத்தேன். சுற்றி மூங்கில் வேலைி போடவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். பிறகு பார்த்தால் கங்கையின் நீரேற்றத்தில் ஒரு கட்டு மூங்கிலும் கயிறுகளும் வந்து சரியாகப் பஞ்சவடிக்கு எதிரே ஒதுங்கி யிருந்தன. கோயிலில் சுமைதூக்கி ஒருவன் இருந்தான்- அவன் துள்ளிக் குதித்தபடியே வந்து என்னிடம் விவரம் தெரிவித்தான்.
எனக்கு அந்தநிலை வந்த பிறகு என்னால் பூஜை முதலிய வற்றைச் செய்ய முடியாமல் போயிற்று. அப்போது நான் தேவியிடம், அம்மா என்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்னை நானே கவனித்துக் கொள்வதற்கான சக்தி என்னிடம் இல்லையே! உன் பேச்சைக்கேட்க விரும்புகிறேன்- பக்தர்களுக்கு உணவளிக்க விரும்புகிறேன்- என் முன்னால் யாராவது எதிர்பட்டால் அவருக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன். அம்மா , இதெல்லாம் எப்படி நடக்கும்! ஒரு பெரிய மனிதரை எனக்குத் தா” என்று கேட்டேன். அதனால் அல்லவா மதுர் பாபு இவ்வளவு சேவை செய்தார்!
மேலும் அம்பிகையிடம், அம்மா! எனக்கு இனி குழந்தை பிறக்காது.ஆனால் சுத்த பக்தனான ஒருபையன் என்னுடன் எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தகைய பையனை நீ எனக்கு த் தந்தருள்” என்று கேட்டேன். அதனால் தான் ராக்கால் வந்தான். யாரெல்லாம் எனக்குச் சொந்தமானவர்களோ அவர்களுள் சிலர் என்னில் ஓர் அம்சம், சிலர் ஒரு கலை.
மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணர் ம-வுடன் பஞ்சவடியை நோக்கிச்சென்றார். வேறு யாரும் அவர்களுடன் இல்லை. மலர்ந்த முகத்துடன் பல்வேறு விஷயங்களைக்கூறிக் கொண்டே வந்தார் அவர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)
இதோ பார். காளி கோயிலிலிருந்து பஞ்சவடி வரை வியாபித்திருந்த ஓர் அற்புத உருவத்தை ஒரு நாள் நான் கண்டேன். இதை நீ நம்புகிறாயா.?
–
ம-
வியப்பின் காரணமாகப்பேச்சற்று மௌனமாக இருந்தார். பஞ்சவடி மரங்களிலிருந்து சில இலைகளைப் பறித்து தமது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதோ ஒடிந்து போயிருக்கிறதே ஒரு கிளை. அதனடியில்தான் அமர்ந்திருப்பேன்.
ம-
நான் அதிலிருந்து ஒரு பச்சைக்கொம்பை ஒடித்து வீட்டில் வைத்திருக்கிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(புன்சிரிப்புடன்)
எதற்கு?
ம-
அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு, இந்த இடம் ஒரு மகா தீர்த்தத் தலமாக ஆகும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(புன்சிரிப்புடன்)-
எந்த மாதிரியான தீர்த்தத் தலம்? பானி ஹாட்டி போலவா?
பானி ஹாட்டியில் ராகவ பண்டிதர் ஒவ்வோர் ஆண்டும் விழா நடத்துவார். குருதேவர் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவைக் காணச் சென்று கொண்டிருந்தார். அங்கே சங்கீர்த்தனம் நடைபெறும்.அப்போது குருதேவர் பிரேமமானந்தம் பெருக ஆடுவார். அது, பக்தர்களின் அழைப்பைக்கேட்டு, அமைதியாக இருக்க முடியாமல் ஸ்ரீசைதன்யரே வந்து சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டு, தமது பிரேம வடிவைக் காட்டுவது போல் இருக்கும்.
மாலை வேளையாகியது. குருதேவர் தமது அறையில் சிறிய கட்டிலில் அமர்ந்து தேவியை தியானித்துக் கொண்டிருந்தார். மெல்ல மெல்ல கோயில்களும் ஆரதி ஆரம்ப மாயிற்று. சங்கு முழங்கியது. ஆலய மணி அடித்தது.
ம- அன்றிரவு அங்கே தங்குவதாக இருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவர் ம- விடம் பக்த மாலாவைப் படித்துக் காட்டும் படி கூறினார். ம- படிக்க ஆரம்பித்தார்.
ஜெயமல் என்ற மன்னன் ஸ்ரீகிருஷ்ணரிடம் இதயபூர்வமான பக்தி கொண்டிருந்தான். அவரை சியாமள சுந்தரர் என்ற பெயரில் வழிபட்டு வந்தான். கிருஷ்ண பூஜைக்குரிய எல்லா நியம நிஷ்டைகளையும் விதிமுறை தவறாமல் சிரத்தையோடு கடைப்பிடித்து வந்தான். தனது இஷ்டதெய்வத்திடம் ஆழ்ந்த பற்றுக்கொண்ட அவன் மற்ற தேவதேவியரைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை. தினமும் பத்து மணி வரை பூஜையிலேயே கழிப்பான். இதனை அவன் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைவிடாமல் செய்து வந்தான். ராஜ்யமே அழிந்தாலும் சரி, செல்வம் முழுவதும் கரைந்து போனாலும் சரி, இடியே ளைவிழுந்தாலும் சரி, பூஜை வேயில் அவன் வேறு எதையும் செய்ய மாட்டான்.
இந்த ரகசியத்தை அறிந்தான் பக்கத்து நாட்டு மன்னன். எனவேகாலை நேரத்தில் ஜெயமல்லின் ராஜ்யத்தின் மீது படையெடுத்தான். ஜெயமல்லின் கட்டளையில்லாததால் அவனது வீரர்களால் போரில் ஈடுபட முடியவில்லை. அவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்லப் பகைவர்கள் அகழிவரை வந்து விட்டனர். ஆனால் ஜெயமல்லின் மனம் அதில் சிறிதும் போகவில்லை.
ஜெயமல்லின் தாய் பயந்து போய் பரிதாபமாகத்தேம்பித்தேம்பி அழுது கொண்டே அவனிடம் சென்று, எல்லாம் அழிந்தது, எல்லாம் தொலைந்தது. நீ இன்னும் இப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாயே! என்று அரற்றினாள்.
அதற்கு ஜெயமல் அமைதியாக அவளிடம், அம்மா, நீ ஏன் கவலைப்படுகிறாய்? எனக்கு இந்த ராஜயத்தைத் தந்தவரே அதைத் திரும்ப எடுத்துக்கொண்டு விட நிச்சயித்திருந்தால், நான் என்ன செய்ய முடியும்? அது போலவே, அவர் என்னைக் காப்பாற்ற நினைத்தால் யாராலும் அதை என்னிடமிருந்து பறிக்கவும் முடியாது. என் முயற்சியால் என்ன நடந்து விடும்? என்று கூறி விட்டான்.
அந்த வேளையில் சியாமள சுந்தரரே ஜெயமல்லின் குதிரை மீதேறி போருக்குச்சென்றார். தன்னந்தனியாகவே அவர் பகைவரை எதிர்த்து, எதிரியின் படையை அழித்தார். பிறகு கோயிலுக்குப் பக்கத்தில் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு மறைந்து விட்டார்.
ஜெயமல் பூஜையை முடித்து விட்டு வெளியில் வந்த போது, கோயிலுக்கு அருகில் தன் குதிரை கட்டப்பட்டிருந்ததையும், அது வேரவை சொட்டச்சொட்ட நிற்பதையும் கண்டான். என் குதிரை மீது சவாரி செய்தது யார்? கோயிலுக்கு அருகில் அதைக் கொண்டு வந்து நிறுத்தியது யார்? என்று காவலாளிகளை அதட்டிக்கேட்டான். காவல் வீரர்களோ தங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று ஒரே குரலில் கூறினார்கள்.
குழப்பத்துடன், மன்னன் தனது படையுடன் போர்க்களத்திற்குச் சென்றான். அங்கே பகைவரின் படை வீரர்கள் அகைவரும் பிணமாகக் கிடந்தனர். பகை அரசன் மட்டுமே உயிர் தப்பியிருந்தான். நடந்தது என்னவென்று எதுவும்புரியாமல் விழித்தபடி நின்றிருந்த ஜெயமல்லின் அருகில் வந்தான். அவன் ஜெயமல்லை வணங்கி , தயவு செய்து நான் சிலவற்றை உங்களுக்குத்தெரிவிக்க அனுமதியுங்கள். உலகையே வெல்லக்கூடிய பராக்கிரமசாலியான படைவீரர் உங்களிடம் இருக்கிறார். நான் எப்படி போரிடுவேன்? உங்கள் செல்வமோ ராஜ்யமோ எனக்கு வேண்டாம். உங்கள் நண்பனான அந்த நீல வண்ணப் படை வீரனைப் பற்றி மட்டும் நீங்கள் எனக்குச் சொன்னால் போதும், என் ராஜ்யத்தையும் சந்தோஷமாக உங்களுக்கே தந்து விடுகிறேன். என் கண்கள் அந்த வீரரின் மீது பட்டத தான் தாமதம். அவர் என் உள்ளத்தையும் உயிரையும் ஒரேயடியாகக் கவர்ந்து விட்டார்” என்று கூறினான்.
சியாமள சுந்தரர்தான் போர்களம் சென்றவர் என்பதை ஜெயமல் ஒரு நொடியில் புரிந்து கொண்டான். படையெடுத்து வந்த மன்னனுக்கும் அந்த உண்மை விளங்கியது. அவன் ஜெயமல்லை வணங்கி , அவன் மூலமாக கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரமானான்.
ம- படித்து முடிந்ததும் குருதேவர் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இதில் எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? கிருஷ்ணரே குதிரையில் சென்று பகைவர்களைக் கொன்றார்என்பதை நீ நம்புகிறாயா?
ம-
பக்தன் ஏக்கத்துடன் பகவானை அழைத்தான் என்பதை நம்புகிறேன். ஆனால் அவர் குதிரை மீதேறி வந்ததை அனைவரும் பார்த்தார்கள் என்பதை யெல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரால் குதிரை மீதேறி அங்கு வர முடியும், ஆனால் அங்கிருந்தவர்கள் உண்மையாகவே அவரைக் கண்டார்களோ என்னவோ?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(புன்சிரிப்புடன்)
இந்த நூலின் பக்தர்களைப் பற்றி பல கதைகள் இருக்கின்றன.அனால் ஒரு தலைப் பட்சமாக இருக்கின்றன. இந்த நூல், தனது கருத்திலிருந்து வேறுபடுபவர்களையெல்லாம் பழிக்கிறது.
மறுநாள் காலை. தோட்டத்தில் குருதேவரும் ம-வும் நின்ற வாறே பேசிக் கொண்டிருந்தனர்.
ம-
அப்படியானால் நான் இங்கேவந்து தங்குகிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சரி, நீங்களெல்லாம் இப்படி இங்கு வருகிறீர்களே. இதன் பொருள் என்ன? பொதுவாக சாதுவைப் பார்க்க மக்கள் ஒரு தடவை போவார்கள். நீங்களெல்லாம் இப்படி அடிக்கடி வருகிறீர்களே! இதன்பொருள் என்ன?
ம-
பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார். குருதேவரே பதில் அளித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)
அந்தரங்க பக்தர்களுள்ஒருவனாக இல்லாவிட்டால் இப்படி வருவாயா என்ன?அந்தரங்கமானவன் என்றால் சொந்த உறவினன், தந்தை மகன், சகோதரன், சகோதரி போல் எனக்குச் சொந்தமானவன். நான் எல்லாவற்றையும் சொல்வதில்லை. எல்லாவற்றையும் சொல்லி விட்டால் நீங்கள் எல்லாம் மீண்டும் வருவீர்களா என்ன?
சுகதேவர் பிரம்ம ஞானம் பெறுவதற்காக ஜனகரிடம் சென்றார். ஜனகர், முதலில் தடசியையை எனக்குத் தந்து விடு” என்று கூறினார். அதற்கு சுகதேவர், உபதேசம் பெறுவதற்கு முன்னால் எப்படி தட்சியை கொடுப்பது, ? என்று கேட்டார். ஜனகர் சிரித்துக் கொண்டே, உனக்கு பிரம்ம ஞானம் ஏற்பட்ட பிறகு குரு- விஷ்ய உணர்வு உன்னிடம் எஞ்சியிருக்குமா என்ன? ஆகவே தான் நீ முதலில் தட்சியை தர வேண்டும் என்றேன்! என்று கூறினார்.
வளர் பிறைக்காலம். நிலவு உதித்து விட்டது. ம- காளி கோயில் தோட்டப் பாதையில் உலவிக் கொண்டிருந்தார். பாதையின் ஒரு பக்கத்தில் குருதேவரின் அறை, நகபத், மகிழ மரங்கள், பஞ்சவடி, மறுபக்கத்தில் நிலவொளியில் பிரகாசித்த படி பிரவாகமாகச்சென்று கொண்டிருந்தாள் புனித கங்கை.
ம- தமக்குத்தாமே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
உண்மையிலேயே இறைவனைக் காண முடியுமா? ஸ்ரீராமகிருஷ்ணரோ, முடியும் என்று கூறுகிறார். நீ சிறிது முயன்றாலே அதாவது சிறிது சாதனை செய்தாலே, யாரோ ஒருவர் வந்து, இப்படி இப்படிச் செய்” என்று உதவுவார்” என்கிறார் அவர். நானோ திருமணமானவன், குழந்தைகள் வேறு இருக்கின்றன. என்னாலும் பகவானை அடைய முடியுமா?
அவரது சிந்தனை தொடர்ந்தது-
நிச்சயம் அடைய முடியும். அப்படி இல்லாவிட்டால் குருதேவர் சொல்வாரா? கடவுளின் அருள் இருக்குமானால் ஏன் முடியாது?
இதோ என் முன்னால் இந்த உலகம் இருக்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரம், உயிர்கள், இருபத்து நான்கு தத்துவங்கள் இவையெல்லாம் எப்படி உண்டாயின? இவற்றைப் படைத்தது யார்? நான் யார்? எனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? இதையெல்லாம் அறிந்து கொள்ளாவிட்டால் வாழ்க்கை வீணே.
ஸ்ரீராமகிருஷ்ணர் மனிதருள் சிறந்தவர். இப்படிப்பட்ட ஒரு மகா புருஷரை என் வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்ததில்லை. இவர் நிச்சயமாக அந்த பகவானைத் தரிசித்திருக்கிறார். இல்லா விட்டால் அம்மா அம்மா என்று இரவும் பகலும் யாருடன் பேசுகிறார்? அவளிடம் இந்த அளவிற்கு அன்பு தான் எப்படி ஏற்பட முடியும்? அவள் மீது கொண்ட நேசத்தால் புறவுணர்வையே இழந்து விடுகிறார். சமாதியில் மூழ்குகிறார். அசைவற்ற ஜடம் போல் இருக்கிறார். சிலவேளைகளில் பிரேமைப் பித்தின் காரணமாகச் சிரிக்கிறார். அழுகிறார். ஆடுகிறார், பாடுகிறார்.
........................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-48
........................
வெள்ளி, டிசம்பர் 14, 1883
.............................
பௌர்ணமி. காலை சுமார் ஒன்பது மணி. குருதேவர் தமது அறைக்கு அருகிலுள்ள தென் கிழக்கு வராந்தாவில் நின்று கொண்டிருந்தார். அருகில் ராம்லால் நின்று கொண்டிருந்தார். குருதேவரின் இரு பக்கத்திலும் ராக்காலும் லாட்டுவும் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த ம- தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார்.
குருதேவர் அவரிடம், வந்து விட்டாயா! இன்று நல்ல நாள்” என்று கூறினார்.
ம- குருதேவருடன் சில நாட்கள் தங்கி, சாதனை செய்ய எண்ணியிருந்தார்.குருதேவர் அவரிடம், நீ தினமும் இங்குள்ள விருந்தினர் விடுதியில் சாப்பிடுவது சரியாக இருக்காது. இந்த விடுதி துறவிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் ஏற்படுத்தப் பட்டது. எனவே உனக்குச் சமைப்பதற்காக சமையற்காரன் ஒருவனை அழைத்துவா” என்று கூறியிருந்தார். அவ்வாறே ம- ஒருவரை அழைத்து வந்திருந்தார். அவர் சமைக்க வேண்டிய இடம் காட்டப் பட்டது. ம- பால் அருந்துவார், எனவே பால்காரனிடம் சொல்லி பாலுக்கு ஏற்பாடு செய்யுமாறு குருதேவர் ராம்லாலிடம் தெரிவித்தார்.
ராம்லால் அத்யாத்ம ராமாயணம் படிக்க ஆரம்பித்தார். குருதேவரும் ம-வும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பிறகு ஸ்ரீராமபிரான் சீதையைத் திருமணம் செய்துகொண்டு அயோத்திக்குச்சென்று கொண்டிருந்தார். அவர் சிவதனுசை முறித்து விட்டார் என்பதைக்கேள்விப்பட்டு, பரசு ராமர் வழியில் அவரை எதிர்த்தார். தசரதர் பயந்து விட்டார். பரசு ராமர் ஒரு வில்லை ராம பிரானிடம் கொடுத்து அதில் நாணேற்றும்படி சவால் விட்டார்.
இதையெல்லாம் கண்டு தசரதர் பயத்தால் நடுங்கினார். ஸ்ரீராமபிரானோ புன் முறுவலுடன் அந்த வில்லை தமது இடது கையால் எடுத்து சுலபமாக நாணேற்றினார். பிறகு அதில் அம்பை த் தொடுத்து நாணை இழுத்து, இந்த அம்புக்கு இலக்கு எங்கே? சொல்லுங்கள்” என்று பரசுராமரிடம் கேட்டார். பரசுராமரின் கர்வம் தூள் தூளாகியது. அவர் ஸ்ரீராமபிரானை சாட்சாத் பரப்பிரம்மமாகத் துதிக்க த் தொடங்கினார்.
பரசுராமரின் துதியைக்கேட்டவாறே ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலையில் ஆழ்ந்தார். இடையிடையே ராம் ராம் என்று ராமநாமத்தை மெல்லிய குரலில் இனிமையாகக் கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ராம்லாலிடம்)-
இப்போது குகனைப் பற்றி கொஞ்சம் படி,கேட்கலாம்.
தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரான குகன் ஸ்ரீராமபிரானின் நெருங்கிய நண்பன், தசரத மன்னனின் வாக்கை க் காப்பாற்றுவதற்காக ராமன் சீதையோடும் லட்சுமணனோடும் காடு சென்றபோது வழியில் குகனைச் சந்தித்தார். அவர்கள் கங்கையைக் கடப்பதற்கு குகன் படகைச் செலுத்தி உதவி செய்தார். ஸ்ரீராமபிரான் குகனை மார்போடு அணைத்துக் கொண்டார். குகன் ஸ்ரீராமசந்திர மூர்த்தியிடம் முற்றிலுமாக தன்னை ஆத்ம சமர்ப்பணம் செய்து கொண்டார். மரவுரி தரித்தும், கனி, கிழங்கு, மூலிகை வகைகள் உணவாக கொண்டும் பதினான்கு வருட காலம் தாம் காட்டில் வாழப்போவதாக ஸ்ரீராமபிரான் குகனிடம் தெரிவித்தார். அயோத்திக்குத் திரும்பும் வழியில் அவனை மீண்டும் சந்திப்பதாகவும் வாக்குக்கொடுத்தார். உடனே தாமும் கனி, கிழங்கை மட்டுமே உண்டும், மரவுரி தரித்தும் அவரது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் குகன்.
பதினான்கு ஆண்டுகள் முடிந்த பின்னரும் ஸ்ரீராமன் திரும்பி வராததைக் கண்ட குகன் தீ மூட்டினார். அதில் குதிக்க இருந்த சமயத்தில் ஸ்ரீராம தூதராக ஆஞ்சநேயர் அங்கே வந்து சேர்ந்தார். சிறிது நேரத்திற்குள்ளாகவே ஸ்ரீராமபிரானும் சீதா பிராட்டியும் புஷ்பக விமானத்தில் வந்து சேர்ந்தனர். அவர்களைக் கண்டதும் குகன்எல்லையற்ற பேரானந்தத்தில் திளைத்தார்.
பகலுணவிற்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் சிறிது ஓய்வு கொண்டார்.ம- அருகில் அமர்ந்திருந்தார். அப்போது டாக்டர் சியாமும் வேறு சிலரும் வந்தனர். குருதேவர் எழுந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்றென்றைக்குமே செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதில்லை. பிஞ்சு தோன்றிய வுடன் பூ தானாக உதிர்ந்து விடுவது போல் இறையனுபூதி கிடைத்தபிறகு செயல்கள் விலகி விடுகின்றன.
இறையனுபூதி பெற்றவனிடம் சந்தியாவந்தனம் முதலான கிரியைகள் இருப்பதில்லை. சந்தியாவந்தனம் காயத்ரியில் ஒடுங்குகிறது. அப்போது காயத்ரி ஜபம் செய்தாலே போதும். காயத்ரி ஓங்காரத்தில் ஒடுங்குகிறது. அந்த நிலையில் காயத்ரி மந்திரத்தைக் கூட ஜபிக்க வேண்டியதில்லை, வெறுமனே ஓம் மட்டும் ஜபித்தாலே போதும்.
சந்தியாவந்தனம் முதலானவற்றை எவ்வளவு காலம் செய்ய வேண்டும்? ஹரி நாமத்தையோ ராம நாமத்தையோ உச்சரிக்கும் போது மயிர்க் கூச்செறிதல், கண்ணீர் மல்குதல் போன்றவை நிகழும் வரை தான். பணம் காசு கிடைப்பதற்காக வும் வழக்கில் ஜெயிப்பதற்காகவும் பூஜை முதலியன செய்கிறார்கள். அது நல்லதல்ல.
ஒரு பக்தர்-
பணத்திற்காக எல்லோருமே முயற்சி செய்கிறார்களே! கேசவசந்திர சேன் கூட தமது மகளை ஓர் இளவரசனுக்குத்தானே திருமணம் செய்து கொடுத்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கேசவரின் விஷயம் வேறு. உண்மை யான பக்தி தானாக எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்தாலும் அவனுக்குத் தேவையானவற்றை இறைவனே செய்து வைக்கிறார். உண்மையிலேயே மன்னனின் மகனானால், கேட்காமலேயே அவனுக்கு எல்லாம் கிடைக்கும். கஷ்டப்பட்டு, பிறருக்கு அடிமைப்பட்டு, பணம் சம்பாதிக்கின்ற வக்கீல்- கிக்கீல்களின் விஷயத்தை நான் இங்கே சொல்லவில்லை. உண்மையிலேயே மன்னனின் மகனைப் பற்றித்தான் பேசுகிறேன். எந்த ஆசையும் இல்லாதவனுக்குப் பணமும் வேண்டாம். பணம் தானாக அவனிடம் வந்து சேர்கிறது. பகவத் கீதையில் அத்தகைய பக்தனை யத்ருச்சாலாப என்று சொல்லப் பட்டிருக்கிறது.
எந்த ஆசையும் இல்லாத உண்மையான பிராணன் தாழ்ந்த ஜாதியினர் வீட்டிலிருந்தும் உணவுப்பொருட்களை ஏற்றுக் கொள்வான்.கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைபவன் அவன். அவன் எதையும் விரும்புவதில்லை.அவனுக்குத்தேவையானது தானாகவே கிடைக்கிறது.
ஒரு பக்தர்-
சுவாமி, உலகில் எப்படி வாழ வேண்டும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சேற்று மீன்போல் வாழ்ந்து வா. குடும்பத்திலிருந்து விலகி அவ்வப்போது தனிமையில் சென்று தெய்வ தியானத்தில் ஈடுபடவேண்டும். அப்போது பக்தி உண்டாகும். அதன் பிறகு பற்றின்றி வாழ முடியும். சேற்றுமின் இருக்கிறது, அது சேற்றில் தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனாலும் அதன் உடலில் சேறு ஒட்டுவதில்லை. அது போலவே அவனும் பற்றற்றவனாக இல்லறத்தில் வாழ்வான்.
ம- எல்லாவற்றையும் கவனமாகக்கேட்டு கொண்டிருப்பதை குருதேவர் கவனித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ம-வைப் பார்த்து)
தீவிர வைராக்கியம் ஏற்பட்டால் தான் இறைவனைப் பெற முடியும்.
தீவிர வைராக்கியம் வந்தவனுக்கு வாழ்க்கை காட்டுத் தீயாகத்தோன்றுகிறது. எல்லாம் பற்றியெரிவது போன்ற உணர்வு! மனைவி மக்களெல்லாம் பாழுங்கிணறாகத் தென் படுகிறார்கள். உண்டையிலேயே அத்தகைய வைராக்கியம் வந்தவன்வீட்டை விட்டுப்போய் விடுகிறான். பற்றின்றி வாழ்வது என்பதெல்லாம் அவனுக்குப்போதாது.
காமினீ- காஞ்சனமே மாயை, மாயையைப் புரிந்து கொண்டால் அது வெட்கப் பட்டு ஓடி விடும். ஒருவன் புலித்தோலைப்போர்த்திக்கொண்டு பயமுறுத்தவந்தான்.ஆனால் மற்றவனோ, டேய்! நீ யார் என்று எனக்குத் தெரியும். நீ நம்முடைய ஹரிதானே? என்று கேட்டான். அவ்வளவு தான் புலிவேஷக்காரன் சிரித்துக் கொண்டே வேறு ஒருவனைப் பயமுறுத்துவதற்காகச்சென்றான்.
பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவங்கள். அந்த ஆதிபராசக்தியே பெண்களாக விளங்கிக் கொண்டிருக்கிறாள். பெண் வடிவம் தாங்கியிருக்கிறாள். ஓ ராமா! ஆண்கள் எல்லாம் நீ. பெண்கள் எல்லாம் சீதை! நீ இந்திரன், சீதை இந்திராணி, நீ சிவபெருமான், சீதை பார்வதி தேவி, நீ ஆண், சீதை பெண். எங்கெல்லாம் ஆண்மை உள்ளதோ அங்கெல்லாம் நீ விளங்குகிறாய். எங்கெல்லாம் பெண்மை உள்ளதோ அங்கெல்லாம் சீதை விளங்குகிறாள். இதற்கு மேலும் என்ன சொல்ல! என்று நாரதர் போன்றோர் ஸ்ரீராமனைத் துதித்ததாக அத்யாத்ம ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
(பக்தர்களிடம்) விரும்புவதால் மட்டுமே துறந்து விட முடியாது. முன்வினைப்பயன், சம்ஸ்காரம், போன்றவையும் இருக்கின்றன. ஒரு மன்னனிடம் யோகிஒருவர்,”நீ என்னுடன் தங்கி பகவானை தியானம் செய்வதில் ஈடுபடு” என்று கூறினார். அதற்கு அந்த மன்னன், சுவாமி அது முடியும் என்று தோன்றவில்லை.என்னால் உங்களோடு வாழ முடியும். ஆனால் எனக்கு இன்னும் இன்ப நாட்டம் இருக்கிறது. நான் இந்தக் காட்டில் வாழ ஆரம்பித்தால் இந்த இடத்திலும் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தி விடுவேன். எனக்கு இன்னும் போகத்தில் ஆசை உள்ளது” என்று கூறினான்.
நடவர் பாஞ்சா சிறுவனாக இருந்தபோது இங்குள்ள தோட்டத்தில் தான் பசுக்களை மேய்த்து வந்தான். அவனுக்கு இன்ப நாட்டம் தீவிரமாக இருந்தது. ஆதலால் ஆமணக்கு எண்ணெய்ச் செக்கு ஒன்று வைத்தான். இப்போது ஏராளம் பணமும் சேர்த்து விட்டான். ஆலம்பஜாரில் அவனுடைய எண்ணெய் வியாபாரம் மிக நன்றாக நடந்து வருகிறது.
ஒரு சம்பிரதாயத்தில் பெண்களுடன் சாதனை செய்யும் வழக்கம் இருக்கிறது. கர்த்தாபஜா சம்பிரதாயப் பெண்கள் இருந்த இடத்திற்கு என்னை ஒரு சமயம் அழைத்துச் சென்றார்கள். எல்லோரும் என் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். நான் அவர்களை அம்மா அம்மா என்று அழைத்ததும் அவர்கள் தங்களுக்குள், ” இவர் பிரவர்த்தகர்” இன்னும் வழி தெரியவில்லை” என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் கருத்துப் படி கற்றுக் குட்டியாக இருப்பவன் பிரவர்த்தகன். அடுத்து சாதகன், அடுத்து சித்தரில் சித்தன்.
வைஷ்ணவ சரணரின் அருகில் சென்று ஒரு பெண் அமர்ந்தாள். அதைப் பற்றி கேட்டபோது அவர், அவள் தன்னைச் சிறுமியாகக் கருதியவள்” என்றார்.
மனைவி—பாவனையைக் கைக்கொள்பவள் விரைவில் வீழ்ச்சி அடைகிறாள். தாய்- பாவனை தூய பாவனை.
காசாரிபாடாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் எழுந்தனர். ”நாங்கள் போய் வருகிறோம். காளி தேவியையும் மற்ற தெய்வங்களையும் தரிசித்து விட்டுச் செல்கிறோம்” என்று கூறி குருதேவருடன்விடைபெற்றுச் சென்றனர்.
பஞ்சவடியிலும் காளி கோயிலைச்சேர்ந்த மற்றும் சில இடங்களிலும் ம- தனிமையில் உலவிக்கொண்டிருந்தார். சிறிது சாதனை செய்தாலே கடவுளைக் காண முடியும்” என்று குருதேவர் கூறியிருந்தார். அதைப் பற்றி தான் சிந்திக்கிறாரா? தீவிர வைராக்கியம் பற்றிய விஷயமும் உள்ளது. மாயையைப் புரிந்து கொண்டால் அது தானாகவே ஓடி விடுமா?
பிற்பகல் மூன்றரை மணி இருக்கும். ம- குருதேவரின் அறைக்கு மீண்டும் வந்தார். ப்ரௌட்டன் பள்ளியிலிருந்து ஓர் ஆசிரியர் சில மாணவர்களை அழைத்துக்கொண்டு குருதேவரை தரிசிக்க வந்தார். அவர்களுடன் குருதேவர் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே அந்த ஆசிரியர் கேள்வி கேட்டார். உருவ வழிபாடு பற்றி பேச்சு நடந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்- (ஆசிரியரிடம்)-
சிலையைவழிபடுவதில் என்ன தவறு? எங்கே அஸ்தி( இருப்பது), பாதி,( பிரகாசிப்பது) ப்ரியம்(ஆனந்தமளிப்பது) இருக்கிறதோ அங்கே இறைவனின் வெளிப்பாடு இருப்பதாக வேதாந்தம் கூறுகிறது. எனவே இறைவனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
இன்னும் பாருங்கள், சிறுமியர் எவ்வளவு காலம் பொம்மை விளையாட்டு விளையாடுவார்கள்? திருமணமாகாத வரை தானே! திருமணமாகி விட்டால் பொம்மை களையெல்லாம் பெட்டியில் போட்டு மூடி வைத்து விடுகிறார்கள். அது போல் இறையனுபூதி கிடைத்து விட்டால் பிறகு உருவ வழிபாட்டிற்கு என்ன தேவை!
(ம-வைப் பார்த்து) அனுராகம் வந்து விட்டால் இறையனுபூதி கிடைக்கிறது. தீவிர மன ஏக்கம் வேண்டும் தீவிர மனஏக்கம் உண்டாகுமானால் மனம் முழுவதும் கடவுளை நாடிச்செல்கிறது.
ஒருவனுக்கு மகள் ஒருத்தி இருந்தாள். மிகச்சிறு வயதிலேயே அவள் விதவையாகி விட்டாள். கணவனின் முகத்தைக் கூட அவள் பார்த்ததில்லை. மற்ற பெண்களின் கணவன் வருவதையெல்லாம் அவள் காண்பாள். ஒரு நாள் அவள் தன் தந்தையிடம், அப்பா, என் கணவர் எங்கே? என்று கேட்டாள். அதற்கு அவளது தந்தை, அம்மா, கோவிந்தன் தான் உன் கணவன். நீ அவனை கூவியழைத்தால் அவன் உன்னிடம் வருவான்” என்று பதிலளித்தார். இதைக்கேட்டதும் அந்தச் சிறுமி ஓர் அறைக்குள் சென்று கதவை மூடித் தாழிட்டுக்கொண்டு, ஏ கோவிந்தா! என்னிடம் வா. உன்னை எனக்குக் காட்டு, நீ ஏன் வராமல் இருக்கிறாய்? என்று கதறி அழுது புலம்பினாள். அந்தச் சிறுமியின் ஏக்கத்திற்கு பகவானால்செவி சாய்க்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்குக் காட்சி தந்து அருள் புரிந்தார்.
குழந்தையைப்போல் நம்பிக்கை வேண்டும். தாயைக் காண்பதற்காக அது எவ்வளவு ஏங்கித் தவிக்கிறது. அத்தகைய ஏக்கம் வேண்டும். அந்த ஏக்கம் வந்து விட்டால் அருணோதயம் ஆகி விட்டது. விரைவில் சூரியன் உதித்து விடுவான். இந்த ஏக்கத்தைத் தொடர்ந்து இறைக் காட்சி கிடைக்கிறது.
ஜடிலன் என்ற சிறுவனின் கதை உள்ளது. அவன் பள்ளி செல்பவன், சிறிது தூரம் காட்டு வழியாக ப்போக வேண்டும். அவனுக்குப் பயமாக இருந்தது. அவன் தன் பயத்தைப் பற்றி தாயிடம் சொன்னான். அதற்கு அவள், நீ ஏன் பயப்படுகிறாய்? கண்ணனை அழைத்துக்கொள்” என்று கூறினாள். அதற்கு அந்தச் சிறுவன், அம்மா, அந்தக் கண்ணன்யார்? என்று கேட்டான். அவன் உன் அண்ணன்” என்று பதில் சொன்னாள் தாய்.
மறுநாள் ஜடிலனுக்குக் காட்டு வழியில் பயம் வந்ததும், ஓ அண்ணா, கண்ணா” என்று கூப்பிட்டான். ஆனால் யாரும் வரவில்லை. அவ்வளவு தான் உரத்த குரலில் கதறியழத் தொடங்கினான். அண்ணா கண்ணா நீ எங்கே இருக்கிறாய்? இங்கே வா, எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று அழைத்தான். அதற்குப் பிறகும் கண்ணனால் வராமல் இருக்க முடியவில்லை. இதோ நான் இங்கே தான் இருக்கிறேன்” நீ ஏன் பயப்படுகிறாய்? என்று கூறி, அவனுடன் சென்று பள்ளி செல்லும் வழியில் விட்டான். பிறகு ஜடிலனிடம், தம்பி, பயப்படாதே. நீ கூப்பிடும் போது நான் வருவேன்” என்று சொல்லிச்சென்றான். இது தான் குழந்தையின் நம்பிக்கை!இது தான் மன ஏக்கம்.
ஒரு பிராமணன் வீட்டில் பூஜை செய்து வந்தான். ஒரு நாள் அவன் ஏதோ காரியமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. எனவே தன் இளைய மகனிடம், இன்று நீ நைவேத்தியம் வை, பகவானுக்கு உணவு கொடு” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
சிறுவனும் நைவேத்தியம் படைத்தான். ஆனால் சுவாமி இருந்த இடத்தைவிட்டு அசையவும் இல்லை, வாய் திறந்து அவனோடு பேசவுமில்லை. உணவை உண்ணவும் இல்லை. சுவாமி தமது பீடத்திலிருந்து எழந்து வந்து சாப்பிடுவார் என்று நினைத்து சிறுவன் அங்கேயே உட்கார்ந்து நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தான். நேரம் தான் ஆயிற்றே தவிர, சுவாமி என்னவோ தமது பீடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை.
அவர் நிச்சயமாக வந்து ஆசனத்தில் அமர்ந்து உண்பார் உன்ற அசைக்க முடியாத நம்பிக்கை அந்தச் சிறுவனுக்கு இருந்தது. ஆகவே அவன், சுவாமி, வந்து சாப்பிடுங்கள்” நேரம் அதிகமாகி விட்டது. இனிமேலும் என்னால் காத்துக்கொண்டிருக்க முடியாது” என்று திரும்பத் திரும்பக் கூறினான்.
ஆனால் சுவாமியோ எதுவும் பேசவில்லை. சிறுவன் அழ ஆரம்பித்தான். பகவானே, உனக்கு அமுது படைக்கும் படி அப்பா சொல்லி விட்டுப் போயிருக்கிறார். நீ ஏன் வராமல் இருக்கிறாய்? ஏன் என்னிடம் சாப்பிட மாட்டேன் என்கிறாய்? என்று கண்ணீருடன் முறையிட்டான். இவ்வாறு அவன் ஏக்கத்துடன் அழுதவுடன் சுவாமி வந்து விட்டார். மலர்ந்த முகத்துடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அவர் உண்ட பிறகு சிறுவன் வெளியே வந்தான். உடனே வீட்டார், அப்பா, நைவேத்தியம் ஆகி விட்டதா? பிரசாதத்தை எடுத்து வா” என்று கூறினர். சிறுவனோ , நைவேத்தியம் ஆகி விட்டது. பகவான் எல்லாவற்றையும் சாப்பிட்டுப்போய் விட்டார்” என்று சொன்னான். அது எப்படியப்பா? என்று வீட்டினர் அவனைக்கேட்டனர். சிறுவனோ கள்ளங்கபடம் இல்லாமல், ஏன், பகவான் தான் சாப்பிட்டார்” என்று சொன்னான். பூஜையறைக்குள் சென்று பார்த்த அனைவரும் திகைத்து விட்டகர்.
சந்தியா வேளைக்கு இன்னும் நேரம் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் நகபத்தில் தென் பக்கத்தில் நின்று ம-வுடன் பேசிக்கொண்டிருந்தார். எதிரில் புனித கங்கை, குளிர்காலமாதலால் குருதேவர் ஒரு கம்பளிச் சால்வையைப் போர்த்திக் கொண்டிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நீ என்ன பஞ்சவடியில் இருக்கும் குடிசையிலா படுக்கப் போகிறாய்?
ம- நகபத்தின் மாடி அறையைத் தர மாட்டார்களா?
கோயில் அதிகாரியிடம் ம-வைப்பற்றி தெரிவித்து அவர் தங்குவதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்ய எண்ணினார்
குருதேவர்.
அந்த அறை ம-விற்கு ப் பிடித்த இடமாகும். அவர் கவியுள்ளம் படைத்தவர். அந்த அறையிலிருந்து நிர்மல கங்கை, நீல ஆகாயம், நிலவொளி. மலர் மரங்கள், அனைத்தையும் ஒருசேரக் காண முடியும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன் தர மாட்டார்கள்! ஆனால் பஞ்சவடி குடிசையில் எவ்வளவோ ஹரிநாம ஜபமும் தியானமும் நடைபெற்றிருக்கின்றன. அதனால் தான் அந்த இடத்தை உனக்குக் கூறினேன்.
குருதேவரின் அறையில் சாம்பிராணிப் புகை போடப்பட்டது. சிறிய கட்டிலில் அமர்ந்து அவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். ராக்கால், லாட்டு, ராம்லால் ஆகியோரும் ம-வும் வந்து தரையில் அமர்ந்தனர்.
குருதேவர் ம- விடம் ”விஷயம் இது தான்- இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும்- அவரை நேசிக்க வேண்டும்” என்று கூறினார்.
பிறகு லாம்லாலிடம் பாடுமாறு கூறினார்.
முதலில் ஸ்ரீசைதன்யரின் துறவு பற்றிய பாடலைப் பாடினார்.
நகபத்தில் மாடி அறையில் ம- தனிமையில் அமர்ந்திருந்தார். இரவு நெடுநேரம் ஆகிவிட்டது. அன்று பௌர்ணமி. ஆகாயம், கங்கை, காளி கோயில், கோயில் கோபுரம், தோட்டப் பாதை, பஞ்சவடி எல்லாமே பால் நிலவின் வெண்ணொளி வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தது. அந்தத் தனிமையில் ம- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை தியானித்துக் கொண்டிருந்தார்.
நான்கு புறமும் ஒரே அமைதி. இரவு பதினொரு மணிக்கு கங்கையில் நீரேற்றம் தொடங்கியது. தண்ணீர் எதிரே பாய்ந்து செல்லும் சத்தம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது. பௌர்ணமி இரவு. நான்கு புறமும் அடர்ந்திருந்த மரங்களின் ஊடே நிலவொளி பாய்ந்து பூமியில் திட்டுத் திட்டாகப் பதிந்திருந்தது. ம- பஞ்சவடியை நோக்கிச்சென்றார். அந்த அமைதியான சூழ்நிலையில் பஞ்சவடியின் மரக் கூட்டங்களிலிருந்து, அண்ணா கண்ணா, நீ எங்கே இருக்கிறாய்? என்று யாரோ கூவி அழுவது போன்ற ஒரு சோகக் குரல் ம-வின் காதுகளில் வந்து வீழ்ந்தது.
ம- மேலும் சற்று தூரம் சென்றார். அங்கே பஞ்சவடியின் நடுவே குருதேவரின் பக்தர் ஒருவர் தன்னந்தனியாக அமர்ந்து கொண்டு, ”அண்ணா கண்ணா, எங்கே இருக்கிறாய்? என்று அழுது பிரார்த்தித்துக்கொண்டிருந்தார். ம- அந்தக் காட்சியை அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றார்.
விடியற்காலை சுமார் மூன்று மணி இருக்கும். ம- எழுந்து பஞ்சவடியை நோக்கிச்சென்றார். குருதேவர் பஞ்சவடியைப் பற்றி கூறியிருந்தார். நகபத்தின் மாடியறை அவ்வளவு சிறந்ததாக இப்போதும- விற்குத் தோன்றவில்லை. பஞ்சவடி குடிசையிலேயே இனி தங்குவது என்று தீர்மானித்துக் கொண்டார்.
........................
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-49
........................
சனிக் கிழமை, டிசம்பர் 15, 1883
.........................
காலை சுமார் எட்டு மணி, தட்சிணேசுவர கோயிலில் குருதேவரின் அறை. குருதேவர் தரையில் அமர்ந்திருந்தார். பக்த மாலா என்ற நூலிலிருந்து பிரகலாத சரித்திரத்தைப்படித்து கொண்டிருந்தார் ராம்லால்.
குருதேவர் கேட்டுக் கொண்டிருந்தார். குருதேவரின் திருவடி நிழலில் சில நாட்களாக வசித்து வருகின்ற ம-வும் குருதேவரின் அருகில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அறையில் ராக்கால், லாட்டு, ஹரீஷ், முதலியோரும் இருந்தனர். வேறு சிலர் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தனர். ஹாஸ்ரா வராந்தாவில் உட்கார்ந்திருந்தார்.
குருதேவர் பிரகலாதனின் கதையைக்கேட்டவாறு பரவச நிலையை அடைந்தார்.
இரணிய கசிபு மடிந்தான். நரசிம்மத்தின் பயங்கரமான உருவத்தையும் சிம்ம கர்ஜயையையும் கண்ட பிரம்மா முதலான தேவர்கள் நடுங்கினர். உலகம் எல்லாம் பிரளயத்தில் மூழ்கி விடப் போகிறதோ என்று பயந்து அவர்கள் பிரகலாதனை நரசிம்ம மூர்த்தியின் அருகில் அனுப்பினார்கள். பிரகலாதன் சென்று திருமாலைத் துதித்துப் பாடலானான்.குழந்தை உள்ளத்தின் அன்பு தோய்ந்த பாடலைக்கேட்டு பக்தசத்சலனான பகவான் அவனை அன்புடன் தம் நாக்கால் நக்கினார்.
இந்தப் பகுதியைக்கேட்டதும் குருதேவர் பரவச நிலையில் ஆ! ஆ! பக்தர்களிடம் என்ன அன்பு! என்ன அன்பு! என்று கூறிக்கொண்டே பரவச நிலையில் ஆழ்ந்தார். எந்த அசைவும் இல்லை. கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தது. பரவச நிலை கலைந்ததும் சிறிய கட்டிலில் அமர்ந்தார். ம- கீழே குருதேவரின் பாதங்களுக்கு அருகே உட்கார்ந்தார். குருதேவர் ம-வுடன் பேசத் தொடங்கினார். இறை நெறியில் செல்பவர்கள் பெண்களுடன் தொடர்பு கொள்வதைக் கடிந்து தமது கோபத்தையும் வெறுப்பையும் காட்டினார் குருதேவர்.
ஸ்ரீராமகிருஷணர்-
(ம-விடம்)
வெட்கமாக இல்லை? குழந்தைகள் பிறந்துவிட்டன. இன்னும் மனைவியுடன் தொடர்பா? மிருகத்தனமான இந்த வாழ்க்கையில் உனக்கு இன்னும் வெறுப்பு த்தோன்றவில்லையா? நரம்பு, ரத்தம், மலம், மூத்திலம் இவற்றில் உனக்கு இன்னும் வெறுப்பு வரவில்லையா? இறைவனது பாதத் தாமரைகளைச் சிந்திப்பவனுக்குப் பேரழகியும் சுடுகாட்டுச் சாம்பலாகவே தோன்றுவாள். எந்த உடல் நிலையற்றதோ, எதற்குள் கிருமிகள், குடல், ரத்தம்,சதை, எலும்பு போன்ற ஆனந்தப்பொருட்கள் உள்ளதாகவே அந்த உடலிலா ஆனந்தம் காண்கிறாய்? வெட்கக்கேடு!
ம-
தலைகுனிந்து மௌனமாக இருந்தார். குருதேவர் தொடர்ந்தார்.
இறைவனின் அன்பில் ஒரு துளியையாவது பெறுகின்ற ஒருவனுக்குக் காமினீ-காஞ்சனம் மிகவும் துச்சமாகத்தோன்றுகிறது. கற்கண்டு பானகம் கிடைத்தால் வெல்லப் பானகம் அற்பமானதாக ஆகி விடுகிறது. மன ஏக்கத்துடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால், அவருடைய பெயரையும் இயல்பையும் எப்போதும் பாடினால் படிப்படியாக அவரிடம் அன்பு உண்டாகும்.
இவ்வாறு கூறிய குருதேவர் பிரேமப்பித்து பிடித்தவராக அறையில் சுற்றிச்சுற்றி ஆடியபடியே பாடத் தொடங்கினார்.
பத்துமணி ஆகியது, ராம்லால் கோயிலில் தேவியின் நித்திய பூஜையைச் செய்து முடித்தார். குருதேவர் காளி தேவியை தரிசிக்கக்கோயிலுக்குப் புறப்பட்டார். ம-உடன் சென்றார். கோயிலுள் சென்ற குருதேவர் காளி தேவியின் முன்பு அமர்ந்தார். அவளது பாத மலர்களில் இரண்டொரு பூக்களைச் சமர்ப்பித்தார். பிறகு தமது தலையின்மேல் ஒரு பூவை வைத்துக்கொண்டு தியானம்செய்யத் தொடங்கினார். பிறகு தேவியின் மீது துதிப்பாடலொன்று பாடினார்.
காளிகோயிலிலிருந்து திரும்பி வந்து தமது அறையை அடுத்த தென் கிழக்கு வராந்தாவில் உட்கார்ந்தார் குருதேவர். பத்து மணி இருக்கும். இன்னமும் தேவ தேவியருக்கு நிவேதனம் ஆகவில்லை.ஆரதியும் நடைபெறவில்லை. காளிதேவிக்கும் ராதாகாந்தருக்கும் நிவேதனம் ஆனதும் பிரசாத வெண்ணெய், பழம், முதலியவற்றில் சிறிது உண்டார் குருதேவர். ராக்கால் முதலிய பக்தர்களுக்கும் சிறிது கிடைத்தது.
ராக்கால் குருதேவரின் அருகில் உட்கார்ந்து லார்ட் எர்ஸ்கின் பற்றி ஸ்மைல்ஸ் எழுதிய சுய உதவி என்ற நூலைப் படித்து கொண்டிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ம-விடம்)
அதில் என்ன சொல்லி இருக்கிறது?
ம-
மேலை நாட்டினன் ஒருவன் பலன் கருதாமல் செயல் புரிந்து பற்றி. அதாவது நிஷ்காம கர்மம்பற்றி சொல்லப் பட்டுள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அப்படியானால் நல்லது தான்! ஆனால் முழுமையான ஞானம் பெற்றவர்களின் அடையாளம் என்ன தெரியுமா? அவர்கள் ஒரு புத்தகத்தையும் உடன் வைத்துக்கொள்ள மாட்டார்கள். சுகதேவர் இப்படிப் பட்டவர். அவருக்கு எல்லாம் மனப்பாடம், நூலில் அதாவது சாஸ்திரத்தில் சர்க்கரையும் மணலும் கலந்து கிடக்கிறது. சாது, சர்க்கரையை மட்டும் எடுத்துக் கொண்டு மணலை விட்டு விடுகிறான். அதாவது சாரத்தைமட்டும் எடுத்துக் கொள்கிறான்.
சுகதேவர் போன்றோரைக் குறிப்பிட்டு குருதேவர் தமது நிலையை கோடிகாட்டுகிறாரா?
வைஷ்ணவ சரண் என்ற பாடகர். வந்து சில பாடல்களைப் பாடினார்.
சிறிதுநேரத்திற்குப் பிறகு ராம்லால் குருதேவருக்காக ஒரு தட்டில் பிரசாதம் கொண்டு வந்தார்.உணவிற்குப் பிறகு குருதேவர் சிறி து ஓய்வெடுத்தார்.
ம-
இரவில் நகபத்தில் தூங்கினார். அன்னை ஸ்ரீசாரதாதேவி குருதேவருக்குச்சேவை செய்வதற்காக வரும்போது இந்த நகபத்தில் தான் தங்குவார். அவர் இப்போது சில மாதங்களாகக் காமார் புகூரில் உள்ளார்.
...........................
ஞாயிறு, டிசம்பர் 16, 1883
.................................................
காலை சுமார் பத்து மணி. குருதேவர் தட்சிணேசுவரத்தில் தமது அறையின் மேற்குப் புறமுள்ள அரைவட்ட வராந்தாவில் ம-வுடன் அமர்ந்திருந்தார். எதிரில் கங்கை தெற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். அருகில் உள்ள அரளி, மல்லிகை, ரோஜா, செண்பகம் முதலிய பூச்செடிகள் பூத்துக் குலுங்கின.
குருதேவர் ம- வைப்பார்த்தபடியே பாடத் தொடங்கினார்.
கூண்டில் பறவையாக நான் ஏன் ஆக வேண்டும்? சீச்சீ!
இவ்வாறு கூறிக் கொண்டே குருதேவர் பரவச நிலையை அடைந்தார். உடல் ,மனம் எல்லாமே அசைவற்று விட்டன. கண்களில் கண்ணீர், சிறிது நேரம் கழிந்ததும், அம்மா, என்னைச் சீதைபோல் ஆக்கிவிடு. அவள் எல்லாவற்றையும் அடியோடு மறந்தாள். உடம்பு, யோனி, கை, கால், மார்பு என்று எல்லாமே உணர்விழந்தன. அவளிடம் எஞ்சியது ” எங்கே ராமன்? என்ற ஒரே சிந்தனை மட்டுமே என்றார்.
எத்தகைய மன ஏக்கம் இருந்தால் இறையனுபூதி கிடைக்கும் என்பதை ம- விற்குக் காட்டத்தான் குருதேவருக்குச் சீதையின் நினைப்பு உதித்ததோ? ராமர் மயமாகவே வாழ்ந்தவள் சீதை. அவரை நினைத்து நினைத்து பித்துப் பிடித்தவள் அவள். மிகவும் பிரியமான உடலைக் கூட மறந்தாள் அவள்!
நான்கு மணி ஆகியது. குருதேவர் பக்தர்களுடன் அறையில் உட்கார்ந்திருந்தார். பிராண கிருஷ்ணரின் உறவினரான முகர்ஜி என்பவர் ஒரு பிராமண பண்டிதருடன் வந்து சேர்ந்தார்.ம-, ராக்கால், லாட்டு, ஹரீஷ், யோகின் முதலிய பக்தர்களும் அங்கு இருந்தனர்.
யோகின் தட்சிணேசுவரத்தைச்சேர்ந்த ஸாவர்ண சௌதுரியின் மகன். திருமணம் ஆகாதவர். சில நாட்களாக தினமும் மாலையில் குருதேவரைப் பார்க்க வந்து கொண்டிருந்தார். இரவில் வீடு திரும்பி விடுவார்.
முகர்ஜி-( குருதேவரை வணங்கி)-
உங்களைத் தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவன் எல்லோருள்ளும் இருக்கிறார். எல்லோருள்ளும் அதே பொன் தான். சில இடங்களில் ஒளி அதிகம். உலகியல் மனிதர்களிடம் அதிக மண்ணினால் மூடப்பட்டிக்கிறது.
முகர்ஜி-( சிரித்தபடியே)
சுவாமி, இந்த உலகம் மறு உலகம் இவற்றின் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சாதனை வேளைகளில், இது அல்ல, இது அல்ல, என்று துறக்க வேண்டும். இறைவனை அடைந்த பிறகுஅவரே எல்லாமாக ஆகி யுள்ளார் என்பது தெரியவரும்.
ராமருக்கு வைராக்கியம் வந்தது. தசரதர் மிகவும் மனம் வருந்தி வசிஷ்டரைச் சரணடைந்தார். ராமர் இல்லற த்தைத் துறக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு வசிஷ்டரை வேண்டினார்.
வசிஷ்டர் ராமரிடம்சென்றார். அங்கே ராமர் கவலையுடன் அமர்ந்திருந்தார். அவருள் தீவிர வைராக்கியம் கனன்று கொண்டிருந்தது. வசிஷ்டர் கூறினார், ராமா, எதற்காக நீ உலகத்தைத் துறக்க வேண்டும்? உலகம் என்ன இறைவனிடமிருந்து தனியானதா? என்னுடன் ஆராய்ச்சி செய், பார்க்கலாம், உலகம் அந்தப் பரப்பிரம்மத்திடமிருந்தே தோன்றியிருப்பதை அறிந்து ராமர் மௌனமாக இருந்தார்.
எதிலிருந்துமோர் உண்டானதோ அதிலிருந்தே வெண்ணெயும் உண்டாகியிருக்கிறது. எனவே மோரைச்சேர்ந்தது தான் வெண்ணெய், வெண்ணையைச்சேர்ந்தது மோர். சிரமப்பட்டு வெண்ணெய் எடுத்த பிறகு, வெண்ணெய் இருந்தால் மோரும் இருக்கும் என்பதை நீ அறிவாய். எங்கே வெண்ணெய் இருக்கிறதோ அங்கே மோர். இறைவன் இருக்கிறார் என்ற உணர்வு இருந்தாலே உயிர்கள், உலகம் இருபத்திநான்கு தத்துவங்கள் முதலியனவும் உள்ளன.
பிரம்மம் எது என்று சாயால் சொல்ல முடியாது. எல்லா பொருட்களும் எச்சிலாகி விட்டன.( அதாவது வாயினால் சொல்லப் பட்டு விட்டன)
ஆனால் பிரம்மம் என்ன என்பதை மட்டும் யாராலும் கூற முடியவில்லை. ஆகவே எச்சிலாக வில்லை. இதனை நான் வித்யா சாகருக்குக் கூறினேன். அதைக்கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
உலகியல் சிறிதளவு இருந்தாலும் பிரம்ம ஞானம் கிடைக்காது என்பதை குருதேவர் குறிப்பிடுகிறாரா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-( மீண்டும் முகர்ஜியைப் பார்த்து)
உங்களிடம் செல்வம்இருக்கிறது. அந்தஸ்து இருக்கிறது. இருந்தும் இறைவனிடம் பக்தி செலுத்து கிறீர்கள். இது மிகவும் நல்லது. யோகத்திலிருந்து வழுவியவர்களே பணக்காரர். வீட்டில் பக்தர்களாகப் பிறக்கின்றனர் என்று கீதையில் கூறப்பட்டிருக்கிறது.
முகர்ஜி-(சிரித்தவாறே நண்பர்களிடம்)
ஸுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ பிஜாயதே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவன் விரும்பினால் ஞானியைக் கூட இல்லறத்தில் ஈடுபடச்செய்யலாம். அவருடைய விருப்பத்தால் தான் உயிர்கள், உலகம் எல்லாமே உண்டாகி யிருக்கின்றன. அவர் விரும்பியதைச் செய்பவர்.
முகர்ஜி-(சிரித்தவாறே)
இறைவனுக்கும் விருப்பமா? அவருக்கும் தேவை இருக்கிறதா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தவாறே)
அதில் என்ன தவறு!தண்ணீர் அசையாமல் இருந்தாலம் தண்ணீர் தான். அலைகளாக இருந்தாலும் தண்ணீர் தான். சுற்றி வட்டமாகப் படுத்திருந்தாலும் பாம்பு தான். வளைந்து வளைந்து சென்றாலும் பாம்பு தான். பெரிய மனிதன் சும்மா இருக்கும்போது ம்வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும் ஒரே மனிதன் தான்.
உயிரினங்கள், உலகம், இவற்றை விட்டு விட்டு (இறைவனை) எவ்வாறு எடைபொட முடியும்? அது உண்மையிலேயே (இறைவனை) மதிப்பிடுவது ஆகாது. ஓடு, விதை, இவைகளை விட்டு விட்டு வில்வப் பழத்தை எடை போட்டால் முழுப் பழத்தின் எடை கிடைக்குமா?
பிரம்மம் பற்றற்றது. காற்றில் நல்ல வாசனை, கெட்ட வாசனை இரண்டும் உள்ளது. ஆனால் காற்றில் இவை ஒட்டாது. பிரம்மமும் சக்தியும் பிரிக்க முடியாதவை. அந்த ஆத்யா சக்தியிலிருந்தே உயிரினங்களும் உலகமும் தோன்றியுள்ளன.
முகர்ஜி-
யோக நிலையிலிருந்து ஏன் வழுவுகின்றனர்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
காமினீ- காஞ்சனம் தான் மாயை. மனத்திலிருந்து இந்த இரண்டும் அகன்றால் யோகம் உண்டாகும்.ஆன்மா அதாவது பரமாத்மா காந்தக் கல், ஜீவாத்மா ஊசி, இறைவனாகிய காந்தம்( மனிதனாகிய ஊசியை) இழுத்துக் கொண்டால் யோகம் ஏற்படுகிறது. ஆனால் ஊசியில் மண் படிந்திருந்தால் காந்தக் கல் அதை இழுக்காது. மண்ணைக் கழுவிக் களைந்தால் இழுக்கும். காமினீ- காஞ்சனமாகிய மண்ணைக் கழுவிக் களைய வேண்டும்.
முகர்ஜி-
எப்படிக் கழுவுவது?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனுக்காக மன ஏக்கத்துடன் அழுங்கள். அந்தக் கண்ணீர்( ஊசியில் படிந்திருக்கின்ற) மண்ணில் வீழ்ந்தால் மண் கரைந்து ஓடும். நன்றாகத் தூய்மை அடைந்ததும் ஊசியைக் காந்தக் கல் இழுத்துக் கொள்ளும் அப்போது யோகம் கைகூடும்.
முகர்ஜி-
ஆகா! என்ன அற்புதமான பேச்சு!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனுக்காக அழுதால் அவருடைய காட்சி கிடைக்கும். சமாதி உண்டாகும். யோகத்தில் நிறைவு பெற்றால் சமாதி நிலை. அழுதால் கும்பகம் தானாகவே ஏற்படுகிறது. அதன் பிறகு சமாதி.
மற்றொரு வழி இருக்கிறது. தியானம். சஹஸ்ராரத்தில் சிவபெருமான் சிறப்பாக வெளிப்பட்டு உறைகிறார். அவரை தியானிக்க வேண்டும். உடல் ஒரு கிண்ணம்.மனமும் புத்தியும் அதிலுள்ள தண்ணீர். இந்தத் தண்ணீரில் சச்சிதானந்த சூரியனின் உருவம் விழுகிறது. இந்தப் பிரதிபிம்ப சூரியனை தியானம் செய்து செய்து, இறையருளால் உண்மையான சூரியனின் தரிசனம் கிடைக்கிறது.
இல்லத்தாருக்கு எப்போதும் சாது சங்கம் அவசியம். எல்லோருக்கும் இது அவசியம். துறவிகளுக்கும் அவசியம்.ஆனால் இல்லறத்தாருக்கு நிச்சயமாக வேண்டுமு். காமினீ- காஞ்சனத்தின் நடுவில் எப்போதும் வாழ வேண்டியிருப்பதால் அவர்களுக்கு நோய் முற்றியுள்ளது.
முகர்ஜி-ஆம், சுவாமி நோய் முற்றித்தான் விட்டது
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனிடம் வக்காலத்து கொடுத்து விடுங்கள்.(பொறுப்பை ஒப்படைத்தல்)
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். பூனைக்குட்டியைப்போல் மன ஏக்கத்துடன் இறைவனை அழையுங்கள். தாய்ப்பூனை தன்னை எங்கே வைக்கும்என்று குட்டிக்குத் தெரியாது. சில சமயம் படுக்கையில் வைக்கும். சிலசமயம் சமையலறையில் கொண்டு போய் வைக்கும்.
முகர்ஜி-
கீதை முதலிய சாஸ்திரங்களைப் படிப்பது நல்லதா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வெறுமனே படிப்பதாலும் கேட்பதாலும் என்ன நடந்துவிடும்? சிலர் பாலைப் பற்றிகேட்டிருக்கிறார்கள். சிலர் பார்த்திருக்கிறார்கள். சிலர் அதைப் பருகியிருக்கிறார்கள். இறைவனைக் காண முடியும். அவருடன் பேசவும் முடியும்.
முதலில் பிரவர்த்தகன் , அவன்( சாஸ்திரங்களை) படிப்பான். கேட்பான், அடுத்தது சாதகன், அவன் இறைவனை அழைக்கிறான். தியானிக்கிறான். சிந்திக்கிறான். இறைவனுடைய திருநாமத்தையும் குண மகிமைகளையும் பாடுகிறான். அடுத்தது சித்தன். இவன் இறைவனை உணர்வில் உணர்கிறான். அவரது காட்சியைப் பெறுகிறான். அதற்கும் அடுத்தது சித்தரில் சித்தன். சைதன்ய தேவருடையது போன்ற நிலை- சில சமயம் வாத்சல்ய பாவனையில், சில சமயம் மதுர பாவனையில்.
தேவர்களுக்கும் கிடைக்காத இந்த அமுத மொழிகைளை ம-, ராக்கால், யோகின், லாட்டு முதலியோர் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். முகர்ஜியும் அவருடைய நண்பரும் வணங்கி விடை பெற்றனர். குருதேவரும் மரியாதைக்காக எழுந்து நின்றார்.
முகர்ஜி-
(சிரித்தபடியே)
நீங்கள் எழுந்து நிற்பதா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தபடி)
எழுந்தாலும் இருந்தாலும் என்ன தவறு? தண்ணீர் அசையாமல் இருந்தாலும் தண்ணீர், அசைந்து தளும்பினாலும் தண்ணீர் தான். கடுங்காற்றில் பட்ட எச்சில் இலை, காற்று எங்கே அடித்துச் செல்லுமோ அங்கெல்லாம் செல்லும். நான் எந்திரம், இறைவன் அதை ஊட்டுபவர்.
முகர்ஜியும் நண்பரும் சென்றுவிட்டனர்.
எல்லாம் கனவு போன்றது என்கிறது வேதாந்தம் . அப்படியானால் உயிரினங்கள், உலகம், நான் எல்லாமே பொய்யா என்று சிரித்தார் ம-,
ம-
ஏதோ அற்ப சொற்பம் வேதாந்தம் படித்திருந்தார். வேதாந்தத்தின் தெளிவற்ற எதிரொலியான ஜெர்மானிய தத்துவ அறிஞர்களான கான்ட், ஹெகல் முதலியோரின் தத்துவங்களையும் ஏதோ சிறிது படித்திருந்தார். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் சாதாரண பண்டிதர்களைப்போல் ஆராய்ச்சி செய்யவில்லை. தேவியே அவருக்கு எல்லா தத்துவ சாஸ்திரங்களையும் உள்ளது உள்ளபடி காட்டியருளினாள். ம- இதையெல்லாம் நினைத்துப் பார்த்தார்.
சிறிது நேரம் கழிந்து குருதேவர் அரைவட்ட தாழ்வாரத்தில் ம-வுடன் பேசிக் கொண்டிருந்தார். எதிரில் கங்கை கலகலத்வனியுடன் தெற்கு முகமாக ஓடிக் கொண்டிருந்தாள். குளிர் காலம். மாலைப் பொழுது. சூரியன் இன்னமும் மறைய வில்லை. தென்மேற்கு மூலையில் ஒளி வீசிக் கொண்டிருந்தான்.
யாருடைய வாழ்வு வேதமயமானதோ, யாருடைய திருவாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் வேதாந்த வாக்குகளோ, யாருடைய திருவாயின் மூலம் ஸ்ரீபகவானே பேசுகிறாரோ, யாருடைய அமுத மொழிகள் வேதம், வேதாந்தம், பாகவதம், முதலியவையாக உருப்பெறுமோ அந்தக் கருணைக் கடலான மனிதர் குரு வடிவில் பேசி க் கொண்டிருந்தார்.
ம-
சுவாமி! உலகம் பொய்யா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன் பொய்? ஆராய்ச்சிவாதிகளின் கருத்து அது. முதலில், இது அல்ல, இது அல்ல என்று ஆராய்ச்சி செய்யும் போது இறைவன் உயிரினங்கள் அல்ல. உலகம் அல்ல. இருபத்து நான்கு தத்துவங்களும் அல்ல என்று தெரிகிறது. இறையெல்லாம் கனவு போன்றது என்று தோன்றுகிறது. பிறகு அனுலோம விலோமம். அப்போது இறைவனே உயிரினங்களாகவும் உலகமாகவும் ஆகியுள்ளார் என்ற உணர்வு தோன்றுகிறது.
படிக்கட்டின் வழியாக மாடியை அடைந்தாய். மாடி பற்றிய எண்ணம் இருக்கும் வரை படிக்கட்டின் எண்ணமும் இருக்கிறது. உயர்ந்தது பற்றிய எண்ணம் உள்ளது வரை தாழ்ந்தது பற்றிய எண்ணமும் இருக்கவேசெய்யும். மாடியில் சென்ற பிறகு செங்கல், சுண்ணாம்பு, மணல் முதலிய எந்தப் பொருட்களால் மாடி கட்டப் பட்டுள்ளதோ. அதே பொருட்களால் தான் படிக்கட்டுகளும் கட்டப் பட்டுள்ளது என்பதை அறிவாய்.
விலவப் பழத்தின் உதாரணத்தை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
அசைவும் அசைவின்மையும் ஒரே பொருளின் தன்மைகளேயாகும்.
நான்- உணர்வு அவ்வளவு எளிதில் போவதில்லை. நான்- உணர்வு இருக்கும் வரை உயிரினங்கள், உலகம் என்ற உணர்வும் இருக்கவே செய்யும். இறைக் காட்சிக்குப் பிறகு, அவரே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருப்பதைக் காண முடியும். வெறும் ஆராய்ச்சியினால் இதை அறிய முடியாது.
சிவபெருமானுக்கு இரண்டு நிலைகள் உண்டு. சமாதியில் இருக்கும்போது, அதாவது மகாயோக நிலையில் இருக்கும்போது ஆத்மாராமனாக இருப்பார். அந்த நிலையிலிருந்து இறங்கி வரும்போது, சிறிது நான்- உணர்வு இருக்கும் போது ராம், ராம் என்று கூறி நடனமாடுவார்.
சிவபெருமானுடைய நிலையை விளக்குவதன் மூலம் தமது நிலையையே விளக்குகிறாரா குருதேவர்?
மாலைவேளை ஆகியது. குருதேவர் தேவியின் திரு நாமத்தை உச்சரித்தபடி அவளுடைய சிந்தனையில் மூழ்கியிருந்தார். பக்தர்களும் தனித்தனியாக அவரவர் முறைப்படி தியானம் முதலான சாதனைகளில் ஈடுபட்டனர். காளி, ராதா காந்தர், சிவபெருமான் கோயில்களில் மாலை தீபராதனை தொடங்கியது.
தேய்பிறை இரண்டாம் நாள். மாலை மறைந்து சிறிது நேரத்திற்குப் பிறகு நிலவு தோன்றியது. கோயில் கோபுரங்கள், சுற்றிலுமுள்ள மரங்கள், செடி கொடிகள், கோயிலின் கிழக்கே ஓடிய கங்கைமீதெல்லாம் நிலவொளி பரந்து அங்கு ஓர் அற்புத அழகு விரிந்தது. அந்த வேளையில் குருதேவர் தமது அறையில் அமர்ந்திருந்தார். ம- தரையில் இருந்தார். மாலையில் வேதாந்தம் பற்றி ம- ஆரம்பித்த பேச்சு தொடர்ந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)
உலகம் ஏன் பொய் ஆக வேண்டமு்? அதெல்லாம் ஆராய்ச்சி செய்பவர்களின் பேச்சு. இறைக்காட்சி பெற்றுவிட்டால் அவரே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியுள்ளது புரியும். தாமே எல்லாமாக ஆகியிருப்பதை என் அன்னை ஆதிபராசக்தி எனக்குக் காளி கோயிலில் காட்டி அருளினாள். எல்லாமே உணர்வு மயம் என்பதைக் காட்டியருளினாள். பீடம் உணர்வு மயம்! பூஜா பாத்திரங்கள் உணர்வுமயம்! கதவு உணர்வு மயம்! சலவைக்கல் உணர்வு மயம்! இப்படி எல்லாமே உணர்வுமயம்! அறையினுள் பார்த்தேன்! எல்லாம் ரசத்தில், சச்சிதானந்த ரசத்தில் மூழ்கியிருப்பது போல் தோன்றியது. காளி கோயிலின் அருகில் ஒரு துஷ்டனைக் கண்டேன். அவனுள்ளும் தேவியின் சக்தி சுடர்விடுவதைக் கண்டேன்.
அதனால் தானே தேவிக்குப் படைக்க வேண்டிய பூரியை பூனைக்குக்கொடுத்தேன்! தேவியே பூனைவரை எல்லாமாக ஆகியிருப்பதை அப்போது கண்டேன். நைவேத்திய பூரியை பட்டாசாரியார் பூனைக்குக்கொடுக்கிறார். என்று குற்றம்சாட்டி கோயில் அதிகாரி மதுர்பாபுவிற்குக் கடிதம் எழுதிவிட்டார். மதுர்பாபு என் நிலையைப் புரிந்து கொண்டவர். ஆகவே, அவர் விருப்பம் போல் செய்யட்டும். நீ அவரிடம் ஒன்றும் சொல்லாதே” என்று பதில் எழுதினார்.
இறைவனை அடைந்தால் இவையெல்லாம் ஈ அதாவது இறைவனேஉயிர்கள், உலகம், இருபத்து நான்கு தத்துவங்கள் என்று எல்லாமாக ஆகியிருப்பதைக் காணலாம்.
ஆனால் நான்- உணர்வை இறைவன் அடியோடு நீக்கி விட்டால் என்ன நிகழ்கிறது என்பதை வாயால் சொல்ல முடியாது. அப்போது நீ நல்லவளா நான் நல்லவனா என்பது உனக்குத் தெரியும்” என்கிறார் ராம்பிரசாதர். சில வேளைகளில் அந்த நிலையும் எனக்கு ஏற்படுகிறது.
ஆராய்ச்சி வேளையில் நாம் ஒருவிதமாகக் காண்கிறோம். இறைவன் காட்டியருளும் போது வேறு விதமாகத் தெரிகிறது.
.....
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-பாகம்-50
........................
திங்கள், டிசம்பர் 17, 1883
.......................
தட்சிணேசுவரக் காளிகோயில் . காலை எட்டு மணி. குருதேவர் தமது அறையில் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். ராக்கால், லாட்டு, முதலிய பக்தர்கள் அரகே அமர்ந்திருந்தனர். ம- தரையில் உட்கார்ந்திருந்தார். டாக்டர்- மது வந்திருந்தார்.
வயது முதிர்ந்தவரான அவர் வேடிக்கையாகப்பேசக்கூடியவர். அவரும் கட்டிலில் குருதேவருக்கு அருகில் உட்கார்ந்திருந்தார். குருதேவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் பொதுவாக அவரே சிகிச்சை அளிப்பார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்
விஷயம் இது தான். சச்சிதானந்தத்திடம் பிரேமை கொள்ள வேண்டும். எத்தகைய பிரேமை?இறைவனை எப்படி நேசிக்க வேண்டும்? ராமரை அறிய விரும்பினால் சீதையைப்போல் ஆக வேண்டும். பகவானை அறிய வேண்டுமானால் பகவதியைப்போல் ஆக வேண்டும். சிவனை அடைவதற்காக பார்வதி எவ்வளவு தீவிரமான தவம் செய்ய வேண்டியிருந்தது! அதைப்போல் தவம் செய்ய வேண்டும். புருஷனை அறிய வேண்டுமானால் பிரகிருதியின் நிலையை அடைய வேண்டும். அதாவது சக்ய பாவனை, தாஸ்ய பாவனை, மாத்ரு பாவனை, என்று ஏதாவது ஒன்றைக் கைக்கொள்ள வேண்டும்” என்பார் கௌரி பண்டிதர்.
நான் சீதையை தரிசித்தேன். அவளுடைய மனம் முழுவதும், ராமரிடமே லயித்திருந்தது. அங்கங்கள், கைகால், ஆடை, ஆபரணம் எதிலுமே அவளுடைய மனம் செல்ல வில்லை. அவளது உயிரே ராமமயமாக ஆகிவிட்டது போல் இருந்தது. ராமர் இல்லாவிட்டால் , ராமரை அடையாவிட்டால் உயிர் நிலைக்காது போல் தோன்றியது.
ம- ஆம் சுவாமி, பைத்தியம் போன்றநிலை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பைத்தியம் பிடித்தவள்! அது தான் இறைவனை அடையவேண்டு மானால் பைத்தியம் ஆக வேண்டும்.
மனம் காமினீ- காஞ்சனத்தில் இருக்குமானால் அது நடக்காது. பெண்ணின்பம்- அதில் என்ன சுகம் இருக்கிறது!இறைக் காட்சி கிடைத்தால் பெண்ணின்பத்தை விட கோடி மடங்கு ஆனந்தம் கிடைக்கிறது. மகா பாவனை ஏற்படும் போது, மயிர்கால் உட்பட உடலில் உள்ள ஒவ்வொரு துவாரமும் மகாயோனி ஆகிவிடுகிறது. ஒவ்வொரு துவாரத்திலும் ஆன்மாவுடனான கூடலின்பம் உணரப் படுகிறது” என்று கௌரி பண்டிதர் கூறுவார்.
மன ஏக்கத்துடன் இறைவனை அழைக்க வேண்டும். என்ன செய்தால் அவரை அடையலாம்என்பதை குருவிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். குரு முழுமையான ஞானியாக இருந்தால் தான் வழி காட்ட முடியும்.
முழு ஞானம் ஏற்பட்டால் வாசனை அழிகிறது. அவன் ஐந்து வயதுக் குழந்தையைப்போல் ஆகி விடுகிறான். தத்தாத்ரேயர், ஜடபரதர் போன்ற முனிவர்கள் குழந்தை இயல்பு உடையவர்களாக இருந்தார்கள்.
ம-
ஆம், சுவாமி, உலகம் இவர்களை அறிந்துள்ளது. இவர்களைப்போல் எவ்வளவோ முனிவர்கள் இருந்திருக்கலாம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், ஞானிகளிடம் எல்லா வாசனைகளும் மறைந்து விடுகின்றன. ஏதாவது தங்கியிருந்தாலும் அது எந்தவித க் கெடுதலையும் செய்யாது. பரிசமணியால் தொடப்பட்ட இரும்புவாள் பொன்வாளாகி விடுகிறது. அதன் பிறகு அதனால் இரும்புவாள் போல் வெட்ட முடியாது. அதே போல் ஞானியின் ஆசை கோபம் எல்லாம் வெறும் நிழல் மட்டுமே, பெயரளவிற்கு மட்டுமே. அவற்றால் எந்த த் தீங்கும் உண்டாகாது.
ம- ஆம் சுவாமி. தாங்கள் கூறுவது போல் ஞானி மூன்றுகுணங்களையும் கடந்தவன். அவன் சத்வம், ரஜஸ், தமஸ், என்று எந்தக் குணங்களின் வசமும் இல்லை. மூன்று குணங்களும் மூன்று திருடர்கள்.
ஸ்ரீராமகிருஷணர்-
ஆம், இதனை மனத்தில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
ம-
பூரண ஞானிகள் உலகில் மூன்று நான்கு பேருக்கு மேல் இல்லை. என்று தான் நினைக்கிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன்? மேற்கிந்திய மடங்களில் ஏகப்பட்ட சாதுக்களையும் சன்னியாசிகளையும் பார்க்க முடிகிறதே!
ம-
ஆம், அவர்களைப்போன்ற சன்னியாசிகளாக இருக்க என்னாலும் முடியும்.
ம- இவ்வாறு கூறியதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை அப்படியே சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்.
பிறகு அவரிடம், என்ன. எல்லாவற்றையும் துறந்தா? என்று கேட்டார்.
ம-
மாயை விலகாவிட்டால் என்ன சாதிக்க முடியும்? மாயையை வெல்லாமல் வெறும் சன்னியாசியாகி என்ன பயன்?
இருவரும் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தனர்.
ம- சுவாமி, மூன்று குணங்களையும் கடந்த பக்தியின் இயல்பு என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அந்த பக்தி உண்டானால் அவன் எல்லாம் உணர்வு மயமாகக் காண்கிறான். கிருஷ்ணர் உணர்வு மயம். அவருடைய இருப்பிடம் உணர்வுமயம். பக்தனும் உணர்வுமயம், எல்லாம் உணர்வுபயம். இப்படிப்பட்ட பக்தி ஏதோ சிலருக்குத் தான் உண்டாகும்.
டாக்டர் மது( சிரித்தபடி)-
திரிகுணா தீத பக்தி- அதாவது பக்தன் எந்த குணத்தின் வசத்திலும் இல்லை!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தவாறே)-
ஆம்!ஐந்த வயதுக் குழந்தை எந்த குணத்தின் வசத்திலும் இல்லை அல்லவா, அது போல்.
பகலுணவு முடிந்ததும் குருதேவர் சிறிது நேரம் ஓய் வெடுத்தார். மணி மல்லிக் வந்து குருதேவரை வணங்கிவிட்டு தரையில் உட்கார்ந்தார். ம-வும் தரையில் அமர்ந்திருந்தார். குருதேவர் படுத்திருந்தவாறே மணி மல்லிக்குடன் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தார்.
மணி மல்லிக்- நீங்கள் கேசவரைப் பார்க்க போயிருந்தீர்களாமே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், அவர் இப்போது எப்படி இருக்கிறார்?
மணிமல்லிக்-
எந்த முன்னேற்றமும் இல்லை!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவரிடம் ரஜோ குணம் நிறைந்திருந்ததைக் கண்டேன். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு தான் அவரைப் பார்க்க முடிந்தது.
குருதேவர் எழுந்து உட்கார்ந்து பக்தர்களிடம் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ம-விடம்)
நன் ராம் ராம் என்று ஜபித்து பைத்தியமகவே ஆகியிருந்தேன். ஒரு சன்னியாசி தந்த ராம்லால் விக்கிரகமுமாகத் திரிவேன்.அதனைக் குளிப்பாட்டுவேன், உணவு ஊட்டுவேன், தூங்கச்செய்வேன். எங்கெல்லாம் போவேனோ அங்கெல்லாம் அதையும் உடன் எடுத்துக் கெண்டு செல்வேன். ராம்லாலா , ரம்லாலா என்று பைத்தியமாகவே ஆகி விட்டிருந்தேன்.
.........................................
அமுதமொழிகள் புத்தகம் முதற் பகுதி முற்றும்
.........................................
Copyright © 2020 hindumatham.in - All Rights Reserved.
swami vidyananda-Guruji