இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்

பாகம்-1

பாகம்-1

பாகம்-1

image82

  பலவிதமான பூஜை முறைகளை இறைவனே ஏற்படுத்தியிருக்கிறார்.  ஒரு தாய் தன் குழந்தைகளின் ஜீரண சக்திக்கு ஏற்ப உணவு சமைக்கிறாள் அல்லவா! அதுபோல் 

பாகம்-2

பாகம்-1

பாகம்-1

image83

 உலகியல் ஆசையின் சுவடு இருந்தால்கூட பிரம்மஞானம் கிடைக்காது.பார்ப்பது,கேட்பது,சுவைப்பது,தொடுவது போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருந்தால்தான் பிரம்மஞானம் கிடைக்கும் 

பாகம்-3

பாகம்-1

பாகம்-3

image84

 பிள்ளைகள் தங்கள் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளரும் வரை அவர்களின் பாரத்தை நீ சுமக்க வேண்டும். அதன்பிறகு குடும்ப கடமையிலிருந்து விலகிவிடலாம். 

பாகம்-4

பாகம்-4

பாகம்-3

image85

 நான் பாவி, பாவி என்று நினைத்துக்கொண்டிருப்பவன் பாவியாகவே மாறிவிடுகிறான் 

பாகம்-5

பாகம்-4

பாகம்-5

image86

  உலகில் வாழ்வது மிகக் கடினமானது. பல சாதனைகள் செய்து, இறையருள் பெற்ற ஒரு சிலரால்தான் வெற்றிபெற முடிகிறது 

பாகம்-6

பாகம்-4

பாகம்-5

image87

 மனத்தூய்மை உண்டாகாவிட்டால் இறைக்காட்சி கிடைக்கது. காமம்-பணத்தாசையால் மனம் மாசு படிந்துள்ளது 

teachings of sri ramakrishna

பாகம்-7

பாகம்-7

பாகம்-7

image88

 காமம்,உலகியல் பற்று மறைந்த பின்,மனம் தூய்மையான பின் அனைத்தையும் செய்பவன் நான் அல்ல என்ற அனுபவம் உண்டாகிறது 

பாகம்-8

பாகம்-7

பாகம்-7

image89

 சித்தனால் அதாவது இறைக்காட்சி பெற்றவனால் பாவம் செய்ய முடியாது.திறமையான பாடகன் தாளம் தவற மாட்டான். 

பாகம்-9

பாகம்-7

பாகம்-10

image90

பாகம்-10

பாகம்-10

பாகம்-10

image91

பாகம்-11

பாகம்-10

பாகம்-11

image92

பாகம்-12

பாகம்-10

பாகம்-11

image93

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-1

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-1

 ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-1
--------------------
பலவிதமான பூஜை முறைகளை இறைவனே ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உலகம் யாருடையதோ அந்த ஆண்டவனே இவைகளையெல்லாம் மக்களின் தகுதிக்கு ஏற்ப அமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் குழந்தைகளின் ஜீரண சக்திக்கு ஏற்ப உணவு சமைக்கிறாள் அல்லவா! அதுபோல்
---------------------
அவ்வப்போது பக்தர்களையோ சாதுக்களையோ நாடிச் செல்லவேண்டும். குடும் விவகாரங்களிலும் உலகியல் விசயங்களிலும் இரவுபகலாக ஆழ்ந்துகிடந்தால் மனம் இறைவனிடம் செல்லாது.எனவே அவ்வப்போது தனிமையில் சென்று இறைவனை நினைப்பது மிகவும் இன்றியமையாதது. ஆரம்பத்தில் தனிமை வாழ்க்கை பழகாவிட்டால் பிறகு மனத்தை இறைவனிடம் நிறுத்துவது மிகவும் கடினம். இளஞ்செடியாக இருக்கும்போது சுற்றி வேலி போட வேண்டும்.இல்லாவிட்டால் ஆடுமாடுகள் மேய்ந்துவிடும்
----------------------------
பணக்காரவீட்டு வேலைக்காரி அங்கே எல்லா வேலைகளையும் செய்கிறாள்.ஆனால் அவளது மனம் கிராமத்தில் உள்ள தன் வீட்டையே சதா நினைத்துக்கொண்டிருக்கும். பணக்காரவீட்டு குழந்தையை பாசத்தோடு கொஞ்சுவாள்.ஆனாலும் அது தன் குழந்தை இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதேபோல் எல்லா கடமைகளையும் செய். ஆனால் மனத்தை இறைவனிடம் வை. மனைவி,மக்கள்,தாய்,தந்தை எல்லோருடனும் சேர்ந்து வாழ். அவர்களுக்கு சேவை செய். அதேவேளையில் அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் தெரிந்துவைத்துக்கொள்.
------------------
இறைவனிடம் பக்தியை அடையாமல், இல்லறத்தில் ஈடுபட்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வாய். ஆபத்து,துன்பம்,கவலை இவையெல்லாம் வந்து மோதும்போது மனஉறுதியை இழப்பாய். அது மட்டுமல்ல, உலகியல் விஷயங்களில் மனம் செல்கின்ற அளவுக்கு பற்றும் அதிகரிக்கும்
-
தனிமையில் அமர்ந்து,இறைசிந்தனையில் ஈடுபட்டால் மனத்தில் ஞானம்,வைராக்கியம்,பக்தி முதலியவை உண்டாகிறது. ஆனுால் அதே மனத்தை உலகியல் விஷயங்களில் ஈடுபடுத்தினால் அதன் தரம் தாழ்ந்துவிடுகிறது. உலகியல் வாழ்க்கையில் காமம்-பணத்தாசை போன்ற சிந்தனைகளே உள்ளன.
-
இதோ பார் பணத்தில் என்ன இருக்கிறது. அழகிய உடம்பில்தான் என்ன இருக்கிறது. பகுத்தறிந்து பார். வெறும் எலும்பு,சதை,கொழுப்பு,மலம்,மூத்திரம் எல்லாம்தான் இருக்கிறது. இறைவனைவிட்டுவிட்டு மக்கள் இத்தகைய விஷயங்களில் ஏன்தான் மனத்தைப் பறிகொடுக்கிறார்களோ!
-
ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் இறைவனைக்காணமுடியும். மனைவி மக்களுக்காக மக்கள் குடம்குடமாகக் கண்ணீர் வடிக்கிறார்கள். பணத்திற்காக அழுது புரள்கிறார்கள்.ஆனால் கடவுளுக்காக யார் அழுகிறார்கள்?
-
தாய் குழந்தையை நேசிப்பதுபோல், மனைவி கணவனை நேசிப்பதுபோல், உலகியல் மனிதன் இனபத்தை நேசிப்பதுபோல், இந்த மூன்று கவர்ச்சியும் ஒன்று சேர்ந்தால் எவ்வளவாகுமோ அந்த நேசத்தை இறைவனிடம் செலுத்த முடியுமானால் இறைவனைக்காண முடியும்

   

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸

-
கடவுள் எல்லா உயிரிலும் இருக்கிறார்.ஆனால் நல்லவர்களுடன் நெருங்கிப்பழகலாம். கெட்டவர்களைக் கண்டல் தூர விலகி நிற்க வேண்டும். புலியிலும் இறைவன்தான் இருக்கிறார்.அதற்காக யாரும் புலியை கட்டித்தழுவிக்கொள்ள முடியாது


உலகில் வாழ நேரும்போது,தீயவர்களிடமிருந்து நம்மைக்காப்பாற்றிக்கொள்வது அவசியம் தீயவர்கள் நமக்கு தீங்கு செய்யாமல் இருப்பதற்காக அவர்களை பயமுறுத்த வேண்டும். ஆனால் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது.


இறை நம்பிக்கை உள்ளவன் கொடிய பாங்களை செய்திருந்தாலும்,இறைநம்பிக்கை காரணமாக பாவத்திலிருந்து விடுபட முடியும். இனி இத்தகைய கொடிய பாவங்களைச் செய்ய மாட்டேன் என்று அவன் உறுதியாக இறைவனிடம் சொன்னால் போதும். எதற்கும் பயப்பட வேண்டியதில்லை


இந்த உலகம் இறைவனின் மகிமை. ஆனால் மக்கள் மகிமையைக் கண்டு அதில் மயங்கிவிடுகிறார்கள்.காமத்திலும் பணத்தாசையிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். முடிவில் அவர்களுக்கு கிடைப்பது பெரும் துன்பமும்,அமைதியின்மையும்தான்
-
இந்த உலகம் ஒருவிதமான முட்செடி போன்றது. இதில் மாட்டிக்கொள்பவன் ஒரு முள்ளிலிருந்து தன்னை விடுவிப்பான்,அதற்குள் இன்னும் மூன்றில் மாட்டிக்கொள்வான். தடுமாறச்செய்கின்ற குழப்பவழியைப்போன்றது இந்த உலகம். ஒரு முறை இதில் அகப்பட்டுக்கொண்டால் வெளிவருவது மிகக்கடினம். மனிதன் இதில் வறுக்கப்படுகிறான்


சாதுசங்கத்தினால் பயன் உண்டு. உண்மை எது, உண்மையற்றது எது என்ற விவேகம் அதனால் உண்டாகிறது. நிலையான பொருள் அதாவது இறைவன் மட்டுமே உண்மை,மற்ற அனைத்தும் உண்மையற்றவை அதாவது நிலையற்றவை.


அடுத்தவன் வீட்டு வாழை மரத்தை தின்ன யானை துதிக்கையை நீட்டினால் உடனே யானைப்பாகன் அங்குசத்தால் ஒரு போடுபோட்டு அதைத் தடுக்கிறான். அதேபோல உண்மையற்றதான வழியில் மனம் செல்லத்தொடங்கினால் ஆராய்ச்சி செய்து மனத்தை அடக்க வேண்டும்


இறைவனது படைப்பில் எல்லா ரகங்களும் உண்டு. நல்லவர்களையும் அவரே படைத்திருக்கிறார், தீயவர்களையும் அவரே படைத்திருக்கிறார். நல்ல அறிவை அளிப்பவரும் அவரே தீய அறிவை அளிப்பவரும் அவரே.பாவம் செய்தால் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி.


மிளகாயை கடித்தால் காரத்தை அனுபவிக்காமல் இருக்க முடியாது. அதே போல் பாவ செயல்களை செய்தால் அதனால் வரும் துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது.இது இறைவன் வகுத்த நியதி

   

பெரிய விறகு அடுப்பில் உணவு சமைக்கும்போது . ஈரமான விறகு கட்டைகள் முதலில் நன்றாக எரியும். அப்போது அந்த கட்டைகளுக்குள் நீர் இருப்பது நமக்கு தெரியாது.ஆனால் விறகு எரிந்து முடியும் தருவாயில் தண்ணீர் எல்லாம் கட்டையின் மறுபுறத்திற்கு புஸ்புஸ் என்று சத்தத்துடன் வருகிறது.பின்பு அது அடுப்பையே அணைத்துவிடுகிறது.அதேபோல் சிறுவயதில் சிலர் செய்யும் பாவச்செயல்கள் அவர்களை பாதிப்பதில்லை.ஆனால் வயது ஆகஆக அதன் பலன் வெளிப்பட தொடங்கும்.


இருட்டு இருப்பதால் தான் வெளிச்சத்தின் பெருமை விளங்குகிறது. காமம்,கோபம், பேராசை இவைகள் இருப்பதற்கு காரணம். மாமனிதர்களை உருவாக்குவதற்காக. புலன்களை வென்றால் மாமனிதர்கள் ஆகலாம். காமத்தினால்தான் இறைவனின் படைப்பு தொடர்ந்து நடைபெறுகிறது


ஒரு ஊரில் உள்ள அனைவரும் தீயவர்களாக இருந்தார்கள்.அவர்களை அடக்குவதற்காக அவர்களைவிட தீயவன் ஒருவனை அந்த ஊருக்குள் அனுப்பினார்கள்.தீயவர்களும் இருக்க வேண்டியது அவசியம்.எல்லா வகையான மனிதர்களும் வேண்டும். அப்போதுதான் இறைவனின் படைப்பு தொடர்ந்து நடைபெறும்.


இளம் செடியாக இருக்கும்போது வேலியிட்டு பாதுகாக்க வேண்டியது அவசியம்.இல்லாவிட்டால் ஆடுமாடுகள் மேய்ந்து அந்த செடியை அழித்துவிடும். அதேபோல் இறைவனை அடைய வேண்டுமானால் ஆரம்பத்தில் சாதுசங்கம் தேவை.இடையிடையே தனிமையில் வாழ்வது அவசியம்.அப்போது தான் இறைவனிடம் அன்பு ஏற்படும்.
-
மேற்கு இந்தியாவில் பெண்கள் குடத்தை தலையில் சுமந்தபடி வெகுதொலைவு நடந்து செல்வார்கள்.அவர்கள் மனம் முழுவதும் குடத்தின்மீதே இருக்கும். அதேவேளையில் சிரித்துபேசியபடியே நடப்பார்கள். அதேபோல் இல்லறத்தில் வாழ்பவர்கள் இறைவனை தலையில் தாங்கிய வண்ணம் வாழவேண்டும்.மனம்முழுவதும் இறைவனிடம் இருக்கவேண்டும்.இல்லற கடமைகளையும் செய்ய வேண்டும்.


நேரான வழியில் செல்லாமல் சுற்றிவழைத்து செல்லும் வழியில் சென்றால், சென்று நேரவேண்டிய இடத்தை அடைவது காலதாமதமாகலாம். அதேபோல் இறைவனைப் பற்றி குருவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் முக்தி கிடைக்க காலதாமதம் ஆகலாம். பல பிறவிகள்கூட காத்திருக்கவேண்டிவரலாம்

பெரிய மரக்கட்டை தானும் மிதக்கும், அதன்மேல் ஏறிக்கொள்பவர்களையும் தாங்கிக்கொள்ளும் . குரு என்பவர் பெரிய மரக்கட்டை போன்றவர்கள் .உலகை வழிநடத்துவதற்காக ஒவ்வொரு யுகத்திலும் இறைவனே குருவாக அவதரிக்கிறார்..

எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி. இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.

உங்களுக்கு ஒரு மகாமந்திரம் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாவற்றையும் துறந்து கடவுளை நம்பி இருங்கள். அவரே உண்மை,மற்ற அனைத்தும் நிலையற்றவை. அவரை அறியவில்லை என்றால் மற்ற அனைத்தும் இருந்தும் வீண். அவரை அறியாமல் வாழ்வதுவீண். இதுதான் மகாமந்திரம்.

 கழுகுகள் மிக உயரத்தில் பறக்கின்றன. ஆனால் அதன் பார்வை கீழே உள்ள அழுகிய பிணங்களை தேடுவதிலேயே இருக்கும். அதேபோல் மத கருத்துக்களை பேசும் பண்டிதர்கள் பார்வை எல்லாம் காமத்தின்மீதும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.

விளக்கின் வெளிச்சத்தில் ஒருவன் பகவானைபற்றிய புத்தகத்தை படிக்கிறான்.மற்றொருவன் திருட்டுகையெழுத்து போடுகிறான்.சூரியன் நல்லவனுக்கும் ஒளி தருகிறது தீயவர்களுக்கும் ஒளி தருகிறது. அதேபோல் பிரம்மம்(உருவமற்ற இறைவன்) நல்லவர்களிடமும் தீயவர்களிடமும் அனைவரிடமும் உள்ளார்

பாம்பின் வாயில் விசம் இருக்கிறது. பாம்பு ஒருவனைக் கடித்தால் அவன் இறந்துவிடுவான் ஆனால் பாம்பை விசம் பாதிக்காது. அதேபோல் இந்த உலகத்தில் உள்ள துன்பம் பாவம் அமைதியின்மை போன்றவற்றால் பிரம்மம் பாதிக்கப்படுவதில்லை. உயிர்கள்தான் இவற்றால் பாதிக்கப்படுகின்றன.

 MAIN PAGE

image94

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள் -2

part-2

 வேதம், புராணம்,தந்திரம்,ஆறுதரிசனங்கள் இவைகளை பற்றி வாயினால் விவரிக்கலாம்.அதனால் அவைகள் எச்சிலாகிவிட்டன. ஆனால் பிரம்மத்தை வாயினால் விவரிக்க முடியாது. அதனால் அது ஒன்றுமட்டும் எச்சிலாகவில்லை.பிரம்மத்தை நேரில் உணர்ந்தவர்கள் அதை குறித்து வாயால் விவரிக்க முடியவில்லை.உலகியல் ஆசையின் சுவடு இருந்தால்கூட பிரம்மஞானம் கிடைக்காது.பார்ப்பது,கேட்பது,சுவைப்பது,தொடுவது போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருந்தால்தான் பிரம்மஞானம் கிடைக்கும்.ரிஷிகள் தனிமையில் அமர்ந்து நாள் முழுவதும் தியானம்செய்வார்கள்.அதானால் தான் அவர்களால் பிரம்மஞானம் பெற முடிந்தது.கலியுகத்தில் மனிதன் உணவை நம்பி இருக்கிறான். உணவை சார்ந்து இருக்கும்வரை உடல் உணர்வு நீங்காது. உடல் உணர்வு உள்ளவர்கள் நானே பிரம்மம் என்று சொல்வது நல்லதல்ல. உடல் உணர்வு யாருக்கு இல்லையோ அவர்கள் தான் நானே அது என்று சொல்ல தகுதியானவர்கள்.உடல் பிரம்மமல்ல, மனம் பிரம்மமல்ல,இந்த உலகம் பிரம்மல்ல இதுவல்ல,இதுவல்ல என்று ஆராய்ந்து பிரம்மத்தை அறிந்த பின். அந்த பிரம்மமே உடலாகவும்,மனமாகவும்,இந்த உலகமாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்.பிரம்மத்தை அறிந்தவன் ஞானி. அந்த பிரம்மமே அனைத்துமாக ஆகியிருப்பதை காண்பவன் விஞ்ஞானி.
-

கடவுள் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கிறார், எறும்புவரை உள்ள உயிரினங்களில் இருக்கிறார்.ஆனால் சக்தி வெளிப்பாட்டில் வேறுபாடு உள்ளது.யாரை பலர் மதிக்கிறார்களோ போற்றுகிறார்களோ அவர்களிடம் கடவுளின் சக்தி அதிகம் வெளிப்பட்டுள்ளது.புத்தகம் படிப்பது கடவுளை அடைவதற்கான வழியை தெரிந்துகொள்வதற்காகத்தான். வெறுப் படிப்பினால் எந்த பயனும் இல்லை. படித்து முடித்தபிறகு இறைவனை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்அரசமரத்தை வெட்டினால் அது மறுபடியும் தளிர்விடும். அதேபோல் ஞானிகளுக்கு சமாதிநிலையில் நான்-உணர்வு போய்விடுகிறது. சமாதி கலைந்த பிறகு மறுபடியும் வந்துவிடுகிறது.அதனால் தான் விஞ்ஞானி பக்தி நெறியை பின்பற்றி வாழ்கிறான்.மரணத்தைப்பற்றி எப்போதும் சிந்தித்துவர வேண்டும். மரணத்திற்கு பிறகு எதுவும் இருக்காது என்பதை மனத்தில் பதியவைக்க வேண்டும். வேலையின் காரணமாக மக்கள் நகரங்களுக்கு செல்வது போல் நாமும் சில கடமைகளை செய்வதற்காக பிறந்திருக்கிறோம்.
 

பணக்காரனின் ஒரு தோட்டத்தில் வேலைக்காரன் வேலை செய்கிறான். இது யாருடைய தோட்டம் என்று யாராவது கேட்டால். இது எங்களுடைய தோட்டம் என்று சொல்வான். ஆனால் வேலை போய்விட்டால் அங்கிருந்து ஒரு தகரட்டபாவை கூட வெளியே கொண்டு வரமுடியாது. அதேபோல் வாழும்போது சம்பாதித்தவை அனைத்தும் என்னுடையது என்கிறோம்.மரணத்திற்கு பின் எதுவும் எடுத்து செல்ல முடியாது

  நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால் இறைவனைக் காணலாம். அனுமனுக்கு ராமநாமத்தில் நம்பிக்கை இருந்தது . அந்த நம்பிக்கையின் வலிமையினால் அவர் கடலைத்தாண்டினால். ஆனால் ராமனுக்கு பாலம் கட்டித்தான் கடலை கடக்கவேண்டியிருந்தது. நெருப்பும் அதன் சுடும்தன்மையும் சேர்ந்தே இருக்கின்றன.அதேபோல் பிரம்மமும் சக்தியும் பிரிக்க முடியாதவை.செயலற்றவராகத் தோன்றும் போது அவரை பிரம்மம் என்கிறோம். படைத்து,காத்து,அழிக்கும் செயல்களைச் செய்யும் போது அவரை காளி என்கிறோம்.ஆத்யாசக்தி என்கிறோம். ஈஸ்வரன் என்கிறோம்.மனம் இறைவனில் லயித்துவிடவேண்டும்.இறைவனை அதிகம் நினைத்தால் மூளை குழம்பிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள்.அது உண்மையல்ல. ஏனெனில் அவர் ஒரு அமுதக்கடல்.அதில் மூழ்கினால் மரணம் இல்லை.மரணமில்லாப்பெருநிலை கிடைக்கிறது.காற்றில்லாதபோது விசிறிதேவை . தென்றல் வீசத்தொடங்கியதும் விசிறியை வைத்துவிடுகிறோம். அதேபோல் இறைவனிடம் பக்தி ஏற்படும்வரை தான் பூஜை,யாகம்,யக்ஜம் போன்றவை தேவை. பக்தி ஏற்பட்டுவிட்டால் இவைகள் தேவையில்லைமருமகள் கருவுற்றால் மாமியார் அவளை வேலைகள் செய்ய விடுவதில்லை. அதேபோல் ஒருவனுக்கு இறைவனிடம் பக்தி ஏற்பட்டடுவிட்டால் தினசரி கடமைகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.பக்தி ஏற்படும்வரை பற்றின்றி கடமைகளை செய்ய வேண்டும்.


 

 பற்றின்றி பணி செய்தால் மனம் தூய்மைபெறுகிறது, இறைவனிடம் அன்பு பிறக்கிறது..ஆசைகள் இன்றி யார் வேலை செய்கிறார்களோ,அவன் தனக்கே நன்மை செய்கிறான். மனிதர்களால் இறைவனுக்கு நன்மைசெய்ய முடியாது. இறைவனே அனைத்து செயல்களையும் செய்கிறார்.


இறைவனைக்காண முடியும் அவருடன் பேச முடியும். நான் இப்போது உங்களிடம் எப்படி பேசுகிறேனோ அதேபோல் அவருடன் பேச முடியும்.நாம் ஒருவரின் பெயரைச்சொல்லி அழைக்கிறோம். அவரே வந்துவிட்டால் அதன்பின் அழைக்கவேண்டியதில்லை. அதேபோல். சச்சிதானத்தை அடைந்தால்மா சமாதிநிலை வாய்க்கிறது. சமாதிநிலை வாய்க்கும் வரை கடமைகளை செய்ய வேண்டும். அதன்பின் அவைகளை செய்ய முடியாதுதேனீ எதுவரை ரீங்காரம் செய்துகொண்டிருக்கும் பூவில் அமரும்வரை. அதேபோல் இறைவனைக்காணும் வரை சாதகர்கள் பூஜை,தியானம்,ஜபம்,தீர்த்த யாத்திரை போன்றவற்றை விடக்கூடாது. அதன் பின் தேவையில்லை

  உன்னுள் என்ன உள்ளது என்பதை நீ அறியவில்லை. இறைவன் உனக்குள்ளேதான் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தால் எல்லா பணிகளையும் விட்டுவிட்டு, உள்ளம் உருகி அவரை அழைக்க ஆசைப்படுவாய்


மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காமமும்-உலகியல் ஆசையும் தான் யோகத்திற்கு தடை. சிலர் யோகத்திலிருந்து நழுவி, வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். ஒருவேளை இன்ப நுகர்ச்சி நாட்டம் சிறிது இருந்திருக்கலாம். அதை அனுபவித்து முடித்தபிறகு மீண்டும் இறைவனை நாடுவார்கள், மீண்டும் யோக நிலையை அடைவார்கள்.


தராசில் ஒரு தட்டில் எடைகூடினால் கீழ்முள்ளும் மேல் முள்ளும் ஒரே நேர்கோட்டில் நிற்காது. கீழ் முள்தான் மனம், மேல்முள் கடவுள். கீழ்முள் மேல் முள்ளுடன் ஒன்றுபட்டு நிற்பது தான் யோகம்


மனம் அமைதியடையாவிட்டால் யோகம் கைக்கூடாது. யோகத்தை அசையாத சுடருக்கு ஒப்பிடலாம். காற்றின் வேகத்தால் தீபம் அசைகிறது. அதேபோல் உலகியல் ஆசைகளால் மனம் சலனமடைகிறது. மனம் சஞ்சலப்படாமல் அமைதியாக இருந்தால் யோகம் கைக்கூடிவிட்டது என்று பொருள்


ஆணவம் என்னும் குன்றின்மீது மழைநீர் தேங்காது. வழிந்து கீழே வந்துவிடும். யாரிடம் ஆணவம் இல்லையோ அவரிடம் தான் இறைவனின் கருணைமழை பொழியும்.


இறைவன் எல்லா உயிரிலும் இருக்கிறார். இதில் பக்தன் என்று யாரைச் சொல்வது? யாருடைய மனம் எப்போதும் இறைவனில் இருக்கிறதோ அவனே பக்தன்


மாடியை அடைவது தான் முக்கியம். சரியானபடிகள் வழியாக ஏறிவரலாம். மூக்கில் படிகள் வழியாகவும் வரலாம். கயிறு வழியாகவும் ஏறிவரலாம்.மூங்கிலை ஊன்றி தாவியும் வரலாம்.அதே போல் எல்லா நெறிகள் வழியாகவும் இறைவனை அடையலாம்.எல்லா மதங்களும் உண்மை.ஆனால் பாதைகள் வெறுவேறு


பிறமதங்களில் தவறுகளும் மூடநம்பிக்கையும் இருப்பதாக நீங்கள் சொல்லலாம்.இருந்தால் என்ன? இருக்கட்டுமே என்பேன் நான். எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. மன ஏக்கம் இருந்தால்போதும்.இறைவனிடம் அன்பு,ஒரு ஈர்ப்பு இருந்தால் போதும்.நமக்குள் இருந்துகொண்டு நம்மை வழிநடத்துபவர் அவரே அல்லவா.அவருக்கு நமது மன ஏக்கம் புரியாதா?


 MAIN PAGE

image95

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-3

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-3

 முட்டையை அடைகாக்கும் பறவையின் கண்கள் எங்கேயோ பார்த்தபடி இருக்கும்.மனம் முழுக்க முழுக்க முட்டையின் மீது இருக்கும். அதேபோல் யோகியின் கண்களில் ஒரு வறட்டுப்பார்வை இருக்கும்.மனம் எப்போதும் இறைவனிடம் இருக்கும். எப்போதும் ஆன்மாவிலேயே நிலைத்திருக்கும்.

எல்லோரும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறோம். பகவானின் நாமத்தை உச்சரிப்பதும் செயல்தான். தியானிப்பதும் செயல்தான். மூச்சுவிடுவதும் செயல்தான். எனவே செயலை விட்டுவிடுவது சாத்தியமில்லை. வழி என்ன? கடமைகளைச்செய் பலனை இறைவனிடம் அர்ப்பணித்துவிடு.

 குடும்பம் நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவையோ அந்த அளவுக்கு பணம் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் லட்சியமல்ல. பணத்தால் இறைவனுக்கு சேவை நிகழுமானால் அந்த பணத்தில் குற்றமில்லை.

குஞ்சுகள் தாங்களே இரையை கொத்தி தின்னும் நிலைக்கு வளர்ந்துவிட்டபின் தாய்ப்பறவை அவைகளை விரட்டிவிடுகிறது. அதேபோல் பிள்ளைகள் தங்கள் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளரும் வரை அவர்களின் பாரத்தை நீ சுமக்க வேண்டும். அதன்பிறகு அவர்களை அவர்களே கவனித்துக்கொள்வார்கள்.குடும்ப கடமையிலிருந்து விலகிவிடலாம்.

காய் தோன்றிய பின் பூ உதிர்ந்துவிடுகிறது. அதேபோல் இறையனுபூதி கிடைத்தபின் ஒருவன் கடமைகளைச் செய்ய வேண்டியதில்லை. அதற்கான மனமும் இருக்காது.

இந்த ஊனக்கண்களால் இறைவனைக் காண முடியாது. சாதனைகள் செய்துசெய்து ஒரு பிரேமை உடல் உண்டாகிறது. பிரேமைக் கண்கள்,பிரேமை காதுகள், எல்லாம் உண்டாகின்றன. பிரேமை கண்களால் இறைவனைக் காணலாம். பிரேமை காதுகளால் இறைவன் பேசுவதைக் கேட்கலாம்.பிரேமை மயமான ஆண்பெண் உறுப்புகளும் உண்டாகின்றன.இந்த பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது. இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் இது கிடைக்காது. அந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாகக் காணலாம்.

இறைவனின் அருள் இல்லாமல் சந்தேகங்கள் விலகுவதில்லை. ஆன்ம அனுபூதி கிடைத்த பிறகு தான் அனைத்து சந்தேகங்களும் நீங்கும்.

குழந்தை தந்தையின் கையை பிடித்து நடந்தால் ஒருவேளை கீழே விழலாம். ஆனால் தந்தை குழந்தையின் கையை பிடித்திருந்தால் கீழே விழ வாய்ப்பே இல்லை. மன ஏக்கத்துடன் அழுதால் இறைவனே நமது கையை பிடித்து வழிநடத்தி செல்வார்.

குழந்தை தாயைக்காணாமல் கதறிய படி அங்குமிங்கும் ஓடினால், ஒளிந்துகொண்டிருந்த அவள் வெளியே வருகிறாள். குழந்தையின் முன் வந்து நிற்கிறாள். இந்த உலகம் ஒரு விளையாட்டு.பாசக்கயிற்றினால் இறைவன் நம்மை கட்டியிருக்கிறாள். விளையாட்டில் விருப்பம் இல்லாதவர்கள் இறைவனைக்காண இங்குமங்கும் ஓடுகிறார்கள். அப்போது இறைவன் காட்சி தருகிறார்.

  இந்த மகாமாயையே உலகை மயக்கத்தில் ஆழ்த்தி படைத்தல்,காத்தல்,அழித்தல் எல்லாம் செய்துவருகிறாள். அந்த மகாமாயை கதவை திறந்துவிட்டால்தான் நாம் உள்ளே போகமுடியும். வெளியில் விழுந்துகிடந்தால் வெறும் புறவிஷயங்களைத்தான் காணமுடியும்.நித்தியமான அந்த சச்சிதானந்தத்தை(பிரம்மம்) அறிந்துகொள்ள முடியாது.
-
சக்தியே உலகின் ஆதாரம். அந்த ஆத்யாசக்தியிடம் வித்யைமாயை,அவித்யை மாயை இரண்டும் உள்ளன. அவித்யை மோகத்தில் ஆழ்த்துகிறது. பக்தி,தயை,ஞானம்,பிரேமை போன்றவை வித்யைமாயையிடமிருந்து வருகிறது. இது இறைநெறியில் நம்மை அழைத்துச்செல்கிறது
-
உண்மையான பக்தனுக்கு இறைவனைப்பற்றிய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று தோன்றும்.உலகியல் விஷயங்கள் காதில் விழுந்தால் மிகவும் வேதனைப்படுவார்கள்.
-
கடவுளால் இயலாதது எதுவும் இல்லை. அவரது இயல்பை வாக்கினால்யாரும் கூற முடியாது. அவரால் எல்லாம் முடியும்.
-
விவேகம் என்பது என்ன? இருப்பது இறைவன் மட்டுமே.மற்ற அனைத்தும் நிலையற்றவை என்று உணர்வது.
-
முதலில் உன் இதயக்கோவிலில் இறைவனை எழுந்தருழச்செய். பேச்சு.பிரசங்கம் எல்லாம் பிறகு வைத்துக்கொள்ளலாம். விவேகமும், வைராக்கியமும் இல்லாமல் வெறுமனே பிரம்மம் பிரம்மம் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் என்ன பயன்?
-
மக்களுக்கு போதிப்பது கடினம். பகவானது தரிசம் கிடைத்தபிறகு, அவரிடமிருந்து ஆணை பெற்றால், பிறகு மக்களுக்கு போதிக்கலாம்
-
யாருக்கு இறைவனிடம் ஆழ்ந்த பக்தி இருக்குமோ, அவனுக்கு அரசர்,தீயவர்,மனைவி என்று எல்லோரும் அனுமூலமாக அமைந்துவிடுவார்கள். ஒருவனுக்கு மனப்பூர்வமான பக்தி இருக்குமானால் காலப்போக்கில் அவனது மனைவியும் இறைநெறியில் செல்வது சாத்தியமாகிவிடும்.அவன் நல்லவனாக இருந்தால் அவனது மனைவியும் காலப்போக்கில் நல்லவளாக மாறிவிடுவாள்
-
சொந்த தாயை இறைவனின் வடிவமாக நினைத்து தியானிக்கலாம். அவளே குரு. அவளே பிரம்ம ரூபிணி.
-
பல்வேறு இடங்களிலும் சுற்றி மனத்தை ஒருமுகப்படுத்தியவர்கள்,அமைதி கண்டவர்கள் குடீசகர்கள். அவர்கள் எங்கும் அலையாமல் ஓரிடத்தில் நிலையாக தங்கி சாதனைகள் செய்வார்கள். ஒரே இடத்தில் தங்குவதில்தான் அவர்களுக்கு ஆனந்தம்.
-
சாக்தம்,வைணவம்,வேதாந்தம்,போன்ற பல மதங்களுடன் இஸ்லாம்,கிறிஸ்தவம் போன்றவற்றையும் நான் பின்பற்றினேன். எல்லா பாதைகள் வழியாகவும் சென்றேன். எல்லோரும் ஒரே கடவுளை நோக்கியே வருகிறார்கள் என்று அப்போது கண்டேன்.
-
நான் பிருந்தாவனத்தை காணச்சென்றேன். அங்கே தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.அங்கேயே தங்கிவிடலாம் இனி கல்கத்தாவிற்கு போகவேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன்.அப்போது என் தாயின் நினைவு வந்தது. அவள் தனியாக இருப்பாள்(ராமகிருஷ்ணரை பெற்ற தாய் அப்போது கல்கத்தாவில் அவருடன் வசித்து வந்தார்) என்ற எண்ணம் வந்தது. அதன் பிறகு பிருந்தாவனத்தில் இருக்க முடியவில்லை.

  தோட்டி மலக்கூடையை சுமந்து செல்கிறான். பழக்கத்தின் காரணமாக அதன்மீதிருந்து அருவருப்பு மறைந்துவிடுகிறது. அதேபோல் காமத்திலும் உலகியல் ஆசைகளிலும் மூழ்கிக்கிடப்பவன், நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வான்.
-
ஒரு ஜமீன்தார் தனது அரண்மனையில் எல்லா இடங்களுக்கும் போக முடியும். ஆனால் அவரை பார்க்க வேண்டுமானால் வரவேற்பறைக்கு செல்ல வேண்டும். அதேபோல் இறைவன் எல்லா உயிர்களிலும் உறைகிறார். ஆனால் பக்தனின் இதயம் அவரது வரவேற்பறை .பக்தனின் இதயத்தில் இறைவனைக்காணலாம்.
-
நாம ரூபங்கள்(இந்த உலகத்தில் உள்ள உருவங்கள் மற்றும் பெயர்கள்) எல்லாம் கனவு போன்றவை என்ற உறுதியான உணர்வு பிரம்ம ஞானியிடம் இருக்கும். ஆனால் பக்தர்கள் எல்லா நிலைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இந்த நாம ரூபங்கள் அதாவது இந்த உலகம் கனவு போன்றது என்று சொல்வதில்லை.
-
இறைவனே இதயத்தின் உள்ளேயும் இருக்கிறான், வெளியேயும் இருக்கிறார். அவரே பஞ்ச பூதங்களாகவும்,உயிர்களாகவும், உலகமாகவும் ஆகியுள்ளார். பக்தர்கள் பிரம்மமாக விரும்பவில்லை. பிரம்மத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்.
-
யோகி உலகியல் விஷயங்களிலிருந்து மனத்தை விலக்கி பரமாத்மாவில் நிறுத்த முயல்கிறான். ஆரம்ப காலத்தில் தனிமையான இடத்திற்கு சென்று, அசைவில்லாத ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்கிறான். ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது தான் யோகம்.
-
படைத்தல்,காத்தல்,அழித்தல்,உயிர்,உலகம் எல்லாம் சக்தியின் விளையாடல் என்கின்றனர் ஞானிகள். ஆராய்ந்து பார்த்தால் இவையெல்லாம் கனவு போன்றவை. சக்தியும் கனவு போன்றது தான். பிரம்மம் ஒன்றே உள்ளது. மற்றவை எதுவும் இல்லை. ஆனால் ஆயிரம் ஆராய்ச்சி செய்தாலும் சமாதிநிலையை அடையாமல் சக்தியின் எல்லையைவிட்டு வெளியே வரமுடியாது. நான் தியானிக்கிறேன். நான் சிந்திக்கிறேன் என்ற உணர்வும் சக்தியின் எல்லைக்கு உட்பட்டது.
-
பாலும் அதன் வெண்மையும் சேர்ந்தே இருப்பது போல்.இறைவனை விட்டுவிட்டு உலகத்தை மட்டும் தனியாக நினைக்க இயலாது. அதேபோல் உலகத்தை விட்டுவிட்டு இறைவனை நினைக்க முடியாது.
-
எல்லாம் மனத்தைப் பொறுத்தது. ஒரு பக்கம் மனைவி. இனைனொரு பக்கம் மகள். அவன் இருவரிடமும் வெவ்வெறு விதமாக பழகுகிறான். இல்லறத்தில் இருந்தாலும் சரி காட்டில் இருந்தாலும் சரி, எனக்கு என்ன பந்தம் நான் இறைவனின் குழந்தை, என்னை யார் கட்டுப்படுத்த முடியும்? என்று நினைப்பவன் முக்தனாகிறான்.
-
மனைவி மக்களுக்காக குடம் குடமாக கண்ணீர் வடிக்கிறார்கள். இறைவனைக் காண்பதற்காக யார் அழுகிறார்கள். சொல்.

 MAIN PAGE

image96

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-4

PART-4

 இறைநாமத்தை சொல்வதால் மனிதனுடைய மனம், உடல் எல்லாம் பரிசுத்தமடைகின்றன. நான் பாவி, பாவி என்று நினைத்துக்கொண்டிருப்பவன் பாவியாகவே மாறிவிடுகிறான். நான் இறைவனின் திருநாமத்தை சொல்கிறேன். அந்த நாம மகிமையால் என் பாவங்கள் எல்லாம் போய்விட்டன என்று உறுதியாக நினைப்பவன் முக்தனாகிறான்.
-
வெறும் பாவம் நரகம் என்றெல்லாம் ஏன் பேசவேண்டும்? தீயவை செய்துவிட்டேன். இனிமேல் செய்யமாட்டேன் என்று ஒருமுறை சொல். இறை நாமத்தை நம்பு.
-
இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு கடமைகள் உள்ளன.இதற்கிடையில் மனத்தை இறைவனிடம் நிறுத்துவது கடினம்.ஆரம்ப காலத்தில் பல தடைகள் ஏற்படும்.இல்லறத்தில் இருந்தாலும் அவ்வப்போது தனிமையில் வாழவேண்டும். மூன்று நாட்களாவது வீட்டைவிட்டு தனிமையில் சென்று இறைவனை நாடி அழுதால் அது நல்லது. அது முடியாவிட்டால் ஒரு நாளாவது தனிமையில் இருந்து இறைவனை சிந்தித்தால் அதுவும் நல்லது தான்.
-
ஊறு காயை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும். இதில் ஊறுகாயை அருகில் வைத்தால் என்ன செய்வது? ஆண்பெண் உறவு தான் ஊறுகாய். இல்லறத்தில் இருப்பவர்கள் இதிலிருந்து விடுபடுவது கடினம். அதனால் தான் ஆரம்ப காலத்தில் தனிமையில் சென்று இறைவனை குறித்து சிந்திக்க வேண்டும்.
-
முதலைகள் இருக்கும் ஆற்றில் இறங்கினால் அவைகள் பிடித்துவிடும்.ஆனால் உடம்பில் மஞ்சளை பூசிக்கொண்டால் பயப்படதேவையில்லை. காமம்,கோபம் முதலியவை முதலைகள். விவேகம்-வைராக்கியம் தான் மஞ்சள்.முதலில் விவேக வைராக்கியத்தை பெற்றுவிடு.
-
மக்களுக்கு போதிப்பதற்கு இறைவனின் அதிகார முத்திரை வேண்டும். இல்லாவிட்டால் போதனை கேலிக்கூத்தாகிவிடும்.தனக்கே இறைக்காட்சி கிடைக்கவில்லை,இதில் இறைவனைப்பற்றி மற்றவர்களுக்கு எப்படி போதிக்க முடியும்? ஆணை பெறாவிட்டால், நான் உலகிற்கு போதிக்கிறேன் என்ற ஆணவம் வந்துவிடுகிறது. ”நான்” என்ற ஆணவம் அறியாமையிலிருந்து வருகிறது.
-
இறைவனே கர்த்தா.அதாவது செய்பவர்.நான் எதையும் செய்யவில்லை என்ற உணர்வு ஏற்படுமானால் அவன் ஜீவன் முக்தன். நானே செய்கிறேன்,நான் செய்தேன் என்ற நினைப்பிலிருந்துதான் எல்லா துன்பங்களும் அமைதியின்மையும் வருகின்றன.
-
உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.உலகிற்கு உதவ நீங்கள் யார்? இந்த உலகை படைத்தவருக்கு எது செய்ய வேண்டும் என்று தெரியாதா? சாதனைகள் செய்து இறைவனை அறியுங்கள். அவரை பெறுங்கள். அவர் ஆற்றலை தந்தால்,அவர் ஆணையிட்டால் எல்லோருக்கும் உதவி செய்யலாம்.இல்லாவிட்டால் முடியாது.
-
குடும்பத்தை நடத்துவதற்கு எந்த அளவு பணம் தேவையோ அந்த அளவுக்கு,பணம் சம்பாதிக்கலாம்.ஆனால் அவற்றையும் பற்றின்றி செய்வதற்காக தனிமையில் இறைவனுடன் கண்ணீருடன் பிரார்த்திக்க வேண்டும்.”எம்பெருமானே,அதிகமாக செயல்களில் ஈடுபடும்போது உன்னை மறந்துவிடுகிறேன்,எனவே உலகக்கடமைகளை குறைத்துவிடு.பற்றின்றி வேலை செய்வதாகத்தான் நினைக்கிறேன்,ஆனால் பற்று எப்படியோ வந்துவிடுகிறது-இவ்வாறு பிரார்த்தனை செய்
-
அன்னதானம் போன்ற தர்ம காரியங்களை அதிகமாக செய்யச்செய்ய பெயரும் புகழும் பெருமையும் பெறவேண்டும் என்ற ஆசை தோன்றிவிடுகிறது. உங்களிடம் வந்து சேர்பவற்றை,தவிர்க்க முடியாதவற்றை பற்றின்றி செய்ய வேண்டும்.ஆனால் வரிந்துகட்டிக்கொண்டு பல வேலைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. அது கடவுளை மறக்கச்செய்யும்.ஒருவன் காளிகோவிலுக்கு தானம் செய்ய வந்தான்.ஆனால் கடைசி வரை காளியை தரிசிக்க நேரம் கிடைக்கவில்லை.முதலில் காளியை தரிசித்துவிடு.நமது செயல்கள் யாவும் இறைவனை காண்பதற்காகவே இருக்க வேண்டும்.

  உலகியல் மனிதர்களிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு,இறைவனிடம் பக்தி செலுத்துங்கள் என்று சொன்னால் ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கு இறைவனைப்பற்றிய பேச்சு பிடிக்காது.
-
சத்வகுணம் மிக்கவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? அவர்களுடைய வீடு அங்கும் இங்கும் இடிந்து கிடக்கும்.அதை பழுதுபார்க்க மாட்டார்கள்.பூஜையறையில் புறாக்கள் அசுத்தம் செய்யும். முற்றத்தில் பாசி படந்திருக்கும்.மேஜை நாற்காலிகள் பழையவையாக இருக்கும்.உடுத்துவதற்கு ஏதோ ஒரு துணி இருக்கும்.இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்,சாந்தமானவர்கள்,கபடம் இல்லாதவர்கள்,கருணை நிறைந்தவர்கள்,யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள்.இறைவனை நம்பி வாழ்வார்கள்.
-
சத்துவ குண பக்தன் மிகவும் ரகசியமாக தியானம் செய்வான்.பசியை போக்கும் அளவுக்குத்தான் உடல்மீது கவனம் செலுத்துவான்.இவனுக்கு சோறும் கீரையும் கிடைத்தாலே போதும்.சுவையாக சாப்பிடவேண்டும் என்ற எண்ணமே இருக்காது.பிறரை புகழ்ந்துபேசி பணம் சம்பாதிக்க விரும்பமாட்டான்.வீட்டில் உள்ள பொருட்கள் மிகவும் சாதாரணமாகவே இருக்கும்
-
இறைவன் இப்படிப்பட்டவர்தான் என்று சொல்லமுடியாது. அவர் உருவம் இல்லாதவர்,அதேவேளையில் உருவம் உள்ளவரும்கூட.பக்தர்களுக்காக அவர் உருவம் தாங்குகிறார்.யார் ஞானியோ,அதாவது யார் உலகத்தையோ கனவுபோல் காண்கிறானோ,அவர்களுக்கு அவர் உருவம் அற்றவராக உள்ளார்.
-
கங்குகரையற்ற பெருங்கடலில் தண்ணீர்,ஆங்காங்கே உறைந்து பனிக்கட்டிகளாக காட்சி தருகிறது.சூரியன் உதித்ததும் பனிக்கட்டிகள் உருகிவிடும்.அதேபோல் பக்தனின் பக்தி என்ற குளிர்ச்சியால் இறைவன் உருவத்தோடு காட்சி தருகிறார்.ஞானம் என்ற சூரியன் உதித்ததும் உருவம் மறைந்துவிடுகிறது.அப்போது இறைவனை பற்றி வாயால் சொல்ல முடியாது.யார் சொல்வது?யார் சொல்வானோ அவனே இல்லை.அவனது நான்-உணர்வு அழிந்துவிடும்.
-
ஒரு உப்புபொம்மை கடலை அளக்க சென்றது.கடலில் இறங்கியதுமே அதில் கரைந்துவிட்டது.பிறகு செய்தி சொல்வது யார்? அதுபோல் நான் என்ற உப்புபொம்மை சச்சிதானந்தம் என்ற கடலில் இறங்கியதும் அதனுடன் ஒன்றாகிவிடுகிறது.அங்கே வேறுபாட்டு உணர்வே இருக்காது.
-
குளத்திலிருந்து, குடத்தில் தண்ணீர் பிடிக்கும்போது சத்தம் வருகிறது. குளத்து தண்ணீருக்குள் குடம் முழுவதும் மூழ்கிவிட்டால்,சத்தம் வருவதில்லை. அதுபோல் இறைவனைக் காணாதவரை மக்கள் வெற்று வாதங்களில் ஈடுபடுகிறார்கள்.உண்மையை உணர்ந்தவன் மௌனமாகிவிடுகிறான்.
-
பக்தனுக்கு பிடித்தது சகுண பிரம்மம்.அதாவது இறைவன் குணங்களோடு கூடியவர் என்ற கருத்து. அவர் ஒரு மனிதராக உருவம் தாங்கி காட்சி தருகிறார்.பிரார்த்தனைகளை கேட்சிறார்.இந்த பிரபஞ்சத்தைப் படைப்பதும்,காப்பதும்,அழிப்பதும் அவரே.அவர் அளவற்ற ஆற்றல்களைப் பெற்றவர்.

  இறைவனைக் காணலாம்.கட்டாயமாகக்காணலாம். உருவத்துடன் காணலாம்.உருவம் இல்லாமலும் காணலாம்.மன ஏக்கத்துடன் அவரை காணவேண்டும் என்று உன்னால் அழ முடியுமா?மனைவி மக்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்.இறைவனைக் காண யார் அழுகிறார்கள்?
-
குழந்தை ஊதலை ஊதிக்கொண்டு விளையாடும் வரை தாய் தன் வேலைகளை செய்துகொண்டிருப்பாள்.ஊதலில் சலிப்புதட்டி அதை தூர உறிந்துவிட்டு அம்மா என்று உரக்க கத்தி அழும்போது,தாய் வீட்டுவேலைகளை அப்படியே போட்டுவிட்டு ஓடி வருகிறாள்.அதே போல் உலக விவகாங்களில் சலிப்புதட்டி இறைவனைக்காண ஏங்கி அழும்போது அவர் ஓடி வருகிறார்.
-
எந்த பக்தன் எந்த உருவத்தை விரும்புகிறானோ அந்த உருவத்தில் இறைவன் காட்சி தருகிறார். ஒருமுறை எப்படியாவது இறைவனைப்பார்த்துவிடு, பிறகு தன்னைப்பற்றி அவரே அனைத்தையும் உனக்கு எடுத்து சொல்வார்.இறைவனைக்காண ஒரு அடிகூட எடுத்துவைக்கவில்லை. இந்த நிலையில் அவரைப்பற்றி எப்படி அறிந்துகொள்ள முடியும்?
-
யார் எப்போதும் இடைவிடாமல் இறைவனைக்குறித்து நினைத்துக்கொண்டிருக்கிறானோ,அவனுக்குத்தான் இறைவனைப்பற்றி தெரியும் .மற்றவர்கள் இறைவனைப்பற்றி வீணாக வாதம் செய்து சண்டையிட்டு துன்பப்படுகிறார்கள்.
-
வேதாந்த ஆராய்ச்சியில் இறைவனுக்கு உருவம் இல்லை.பிரம்மமே உண்மை. நாம ரூபங்களோடு கூடிய இந்த உலகம் உண்மையற்றது. நான் பக்தன் என்ற உணர்வு இருக்கும்வரை மட்டும்தான் கடவுளை உருவமாக காணமுடியும்.
-
வேதத்தில் ஏழு தளங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. மனம் உலகியலில் உழலும்போது பிறப்புறுப்பு,குதம்,தொப்புள் இவையே அதன் இருப்பிடம்.அப்போது மேல் நோக்கிய பார்வை அவனுக்கு இருப்பதில்லை. காமத்திலும்,பணத்தாசையிலும் சஞ்சரிக்கிறது.
-
மனத்தின் நான்காம் தளம் இதயம்.இங்கே முதன்முதலாக உணர்வின் விழிப்பு ஏற்படுகிறது. நாலாபக்கமும் ஜோதி தரிசனம் கிடைக்கிறது.அதற்கு பிறகு அவனது மனம் உலகியலை நோக்கி திரும்பாது.
-
மனத்தின் ஜந்தாவது தளம் தொண்டை. யாருடைய மனம் தொண்டையை அடைந்துவிட்டதோ, அவனது அவித்தை,அஞ்ஞானம் எல்லாம் நீங்கிவிட்டது. கடவுளைத்தவிர வேறு எதையும் பேசுவதற்கோ கேட்பதற்கோ அவன் விரும்பமாட்டான். அப்படி வேறு யாராவது பேசினால் அந்த இடத்தைவிட்டு எழுந்துபோய்விடுவான்.
-
மனத்தின் ஆறாவது தளம் புருவமத்தி.மனம் அந்த இடத்தை அடையும்போது இரவுபகலாக இறைவனின் உருவக்காட்சி கிடைக்கிறது.அந்த நிலையில் நான் என்பது சிறிது இருக்கிறது.ஈடிணையற்ற அந்த காட்சியில் மனிதன் பித்தனாகிறான்.உருவத்தை தொடவும் அணைத்துக்கொள்ளவும் விரும்புகிறான்.ஆனால் முடிவதில்லை.
-
உச்சந்தலை மனத்தில் ஏழவாது தளம்.மனம் அந்த இடத்தை அடையும்போது பிரம்மதரிசனம் கிடைக்கிறது.எப்போதும் சுயநினைவு அற்ற நிலை.அந்த நிலையில் உடம்பு அதிக நாள் வாழாது.வாயில் பால் ஊற்றினால் வெளியே வழிந்துவிடும்.இது தான் சமாதி நிலை. இந்த நிலையை அடைந்தவன் உடல் இருபத்தொரு நாட்களில் வீழ்ந்துவிடும்.அவதாரபுருஷர்கள் போன்ற ஈஸ்வரகோடிகள் மட்டுமே மீண்டும் சாதாரண நிலைக்கு வரமுடியும்.

 HOME PAGE

image97

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்- 5

Part-5

  

சமாதி நிலையை அடைந்த பிறகு அனேகமாக உடல் நிலைப்பதில்லை. ஏதோ சிலரது விஷயத்தில்,உலகிற்கு போதிப்பதற்காக உடல் நீடிக்கிறது.இத்தகைய மகாபுருஷர்கள் மக்களின் துயரத்தில் துடிக்கிறார்கள்.தாங்கள் ஞானம் பெற்றால் போதும் என்று நினைக்கின்ற சுயநலவாதிகள் அல்ல இவர்கள்.
-
இறைக்காட்சிக்கு பிறகு பக்தனுக்கு அவருடைய திருவிளைடல்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது
-
எல்லோரும் வயிற்றிற்காக ஓடுகிறார்கள். யாரும் கடவுளை நினைக்க விரும்பவில்லை.
-
உலகில் வாழ்வது மிகக் கடினமானது. பல சாதனைகள் செய்து, இறையருள் பெற்ற ஒரு சிலரால்தான் வெற்றிபெற முடிகிறது.பெரும்பாலோரால் முடிவதில்லை. வாழவாழ அதில் மேலும் கட்டுண்டுவிடுகிறார்கள்.மேலும்மேலும் மூழ்குகிறார்கள்.மரண வேதனையை அனுபவிக்கிறார்கள்
-
இல்லறத்தானுக்கு கடமை உள்ளது. கடன் உள்ளது. தேவர்களுக்கும்,முன்னோர்களுக்கும்,ரிஷிகளுக்கும் மட்டுமின்றி குடும்பத்திற்கும் அவன் கடன்பட்டவன்.கற்புடைய மனைவியாக இருந்தால் அவன் அவளை காப்பாற்ற வேண்டும். குழந்தைகள் தக்க வயது வரும்வரை அவர்களை காப்பாற்றியே தீர வேண்டும்.சாதுக்கள் மட்டுமே சேர்த்துவைக்க கூடாது. இல்லறத்தார்கள் சேர்த்து வைக்கலாம்.
-
தீவிர வைராக்கியம் ஒருமுறை ஏற்பட்டு இறையனுபூதி பெற்றுவிட்டால், பிறகு பெண்ணிடம் பற்று ஏற்படுவதில்லை. குடும்பத்தில் தங்கியிருந்தாலும் பெண்ணிடம் மனம் செல்லாது. அவர்களால் எந்த பயமும் இல்லை. ஒரு காந்தம் பெரியது ஒரு காந்தம் சிறியது. எது முதலில் இரும்பைக்கவரும்? பெரியதுதானே. இறைவன் பெரிய காந்தம்.
-
எந்த பார்வையால் பெண்ணை பார்த்தால் பயம் ஏற்படுமோ அந்த பார்வையால் பெண்களை பார்க்கமாட்டான்,இறையனுபூதி பெற்றவன்.பெண்கள் தேவி பராசக்தியின் அம்சம் என்பதை அவன் தெளிவாகக் காண்கிறான்.எனவே எல்லா பெண்களையும் தேவி என்றே அவன் வழிபடுவான்.
-
ஆச்சாரியனுடைய வேலை மிகக்கடினமானது.இறைவனிடமிருந்து நேரடி ஆணை இல்லாமல் மக்களுக்கு போதிக்க முடியாது. இறையாணை பெறாமல் போதிப்பீர்களானால் மக்கள் கேட்க மாட்டார்கள்.முதலில் சாதனைகள் செய்து இறையனுபூதி பெறவேண்டும். அவருடைய ஆணை கிடைத்த பிறகு லெக்சம் செய்யவேண்டும்.
-
இறைவனிடமிருந்து ஆணையைப் பெறுபவன் அவரிடமிருந்து சக்தியையும் பெறுகிறான்.அப்போதுதான் கடினமான இந்த ஆசாரிய வேலையை செய்யமுடியும். மனிதன் சாதாரணமானவன். இறைவனுடைய நேர்முகச் சக்தியைப் பெறாவிட்டால், ஆசாரியனாக இருக்கின்ற கடினமான வேலையை அவனால் ஒருபோதும் செய்ய முடியாது.
-
உலக பந்தத்திலிருந்து ஒரு மனிதனை விடுவிக்க மற்றொரு மனிதனுக்கு என்ன சக்தி இருக்கிறது? உலகை மயக்குவதான இந்த மாயை யாருடையதோ, அவர்தான் இந்த மாயையிலிருந்து விடுவிக்க முடியும். சச்சிதானத்த குருவைத்தவிர வேறு வழியில்லை. யாருக்கு இறையனுபூதி கிடைக்கவில்லையோ அவர்களால் மக்களை எப்படி சம்சாரபந்தத்திலிருந்து விடுவிக்க முடியும்?


  

மனிதனின் அகங்காரம்தான் மாயை. இந்த அகங்காரமே எல்லாவற்றையும் திரையிட்டு மறைத்து வைத்துள்ளது. “நான்” இறந்தால் தொந்தரவு தீர்ந்தது. ”எதையும் செய்பவன் நான் அல்ல” என்ற உணர்வு இறையருளால் வந்துவிடுமானால், அவன் ஜீவன்முக்தனாகிவிடுகிறான். பிறகு அவனுக்கு பயமில்லை
-
மனிதன் சச்சிதானந்த இயல்பினன். ஆனால் மாயை அல்லது அகங்காரத்தால் பல்வேறு தளைகள் ஏற்பட்டுவிட்டன. இதனால் அவன் தன் உண்மை இயல்பை மறந்துவிட்டான்
-
ஞானம் ஏற்பட்டால் அகங்காரம்போகலாம். ஞானம் கிடைத்துவிட்டால் சமாதிநிலை உண்டாகிறது. சமாதிநிலையில் அகங்காரம் அழிகிறது. ஆனால் அத்தகைய ஞானத்தை அடைவது மிகக்கடினம்
-
ஏழாவது தளத்தை மனம் அடைந்தால் சமாதி ஏற்படும் என்று வேதத்தில் உள்ளது. சமாதிநிலை ஏற்பட்டால் நான்-உணர்வு போய்விடும். பொதுவாக மனம் எங்கே இருக்கும்? குதம்,குறி,தொப்புள் இவைகளில் அதாவது காமத்திலும் பணத்தாசையிலும் பற்றுகொண்டிருக்கும்
-
மனம் நான்காவது தளமான இதயத்தில் வரும்போது விழிப்புணர்வு உண்டாகிறது. அங்கே ஜோதி தரிசம் கிடைக்கிறது. ஐந்தாவது தளமான தொண்டையில் மனம் இருக்கும்போது ஒருவனுக்கு இறைவனைப்பற்றி மட்டுமே பேசவும் கேட்கவும் ஆசை எழுகிறது
-
மனம் ஆறாவது தளமான புருவமத்தியை அடையும்போது சச்சிதானந்த தரிசம் கிடைக்கிறது. அந்த உருவத்தை தொடடுவிடவும், கட்டிக்கொள்ளவும் ஆவல் எழுகிறது.ஆனால் முடிவதில்லை. ஏழாவது தளத்தில் மனம் செல்லும்போது ”நான்” இருப்பதில்லை. சமாதி ஏற்படுகிறது
-
ஏழாவது தனத்தை மனம் அடைந்தபிறகு என்ன ஏற்படும் என்பதை வாயினால் சொல்லமுடியாது. உப்புபொம்மை கடலை அளக்க சென்றது.ஆனால் இறங்கிய உடனே அதில் கரைந்துவிட்டது. ஏழாவது தளத்தில் மனம் அழிகிறது.அதனால் அந்த அனுபவத்தை விளக்க முடியாது
-
தண்ணீர்மேல் ஒரு கம்பை இட்டால் தண்ணீர் இரண்டு பிரிவாக இருப்பது போல் தோன்றுகிறது. ”நான்” என்பது கம்பு. இந்த நான் என்பதை எடுத்துவிட்டால் ஒரே தண்ணீர்தான் இருக்கும்.
-
ஞானயோகம் மிகக்கடினமானது. நான் உடம்பு என்னும் உணர்வு மறையாவிட்டால் ஞானம் ஏற்படாது.
-
தென்னை மட்டை உலர்ந்துவிட்டால் மரத்தில் வெறும் சுவடுமட்டுமே காணப்படும். அதுபோல், இறையனுபூதி பெற்றவனிடம் பெயரளவிற்கு மட்டுமே அகங்காரம், காமம்,கோபம் எல்லாம் இருக்கும்.அவனுக்கு குழந்தையின் நிலை ஏற்பட்டுவிடும்.
-
குழந்தை ஒரு பொருளில் ஆசை வைக்க எவ்வளவு நேரம் பிடிக்கிறதோ, அதே அளவு நேரத்தில் அந்த ஆசையை அது விட்டுவிடவும் செய்யும். குழந்தைக்கு எல்லோரும் சமம்.அதேபோல் சமாதிநிலையை அடைந்த பிறகு ஞானிகள் குழந்தைநிலையில் இருப்பார்கள்
-
நான்- சேவகன் நீ எஜமான், நான்-பக்தன் நீ பகவான் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டால் இறையனுபூதி வாய்க்கிறது. இதுதான் பக்தியோகம்
-
இறைவன் உண்மை, உலகம் உண்மையல்ல- இந்த உணர்வு சரியாக ஏற்படும்போது மனம் ஒடுங்குகிறது. சமாதிநிலை வாய்க்கிறது. ஆனால்கலியுகத்தில் மனிதன் உணவை சார்ந்திருக்கிறான், இதில் உலகம் உண்மையில்லை என்ற உணர்வு எப்படிவரும்?


 அரசமரத்தை இப்போது வெட்டினால் நாளை மறுபடியும் துளிர்விட்டிருக்கும். அதேபோல் உடல் உணர்வு அழிவதில்லை. உணடல் உணர்வு அழியாமல் சமாதி கிடைக்காது.
-
நான் சர்க்கரையாக இருக்க(பிரம்மமாக) விரும்புவதில்லை. சர்க்கரையை சுவைக்கவே(பக்தன்-பகவான்) விரும்புகிறேன். ஐந்து மற்றும் ஆறாம் தளங்களுக்கு இடையே படகைப்போல் வந்துபோய் விளையாடுவது நல்லது. ஆறாம் தளத்தை கடந்து ஏழாம் தளத்தில் அதிகநேரம் தங்கியிருப்பதை நான் விரும்புவதில்லை.
-
நானே இறைவன் என்று நினைப்பது நல்லதல்ல. நான் உடல் என்ற எண்ணம் இருக்கும்வரை இப்படி நினைப்பது பெரிய தீமையை தரும். மேல்நோக்கி செல்ல முடியாது படிப்படியாக வீழ்ச்சிதான் நேரும். இவர்கள் பிறரை ஏமாற்றுகிறார்கள். தங்களையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள். தங்கள் நிலையை அவர்களால் அறிய முடிவதில்லை.
-
ஏனோதானோ என்ற பக்தியினால் இறைவனை அடைய முடியாது. பிரேமபக்தி ஏற்படாவிட்டால் இறைவனுபூதி கிடைக்காது. பிரேமபக்திக்கு மற்றொரு பெயர் ராகபக்தி. பிரேமையும் அனுராகமும் உண்டாகாமல் இறையனுபூதி இல்லை. அவரிடம் அன்பு ஏற்படாமல் அவரை அடைய முடியாது
-
இவ்வளவு ஜபம் செய்ய வேண்டும், இவ்வளவு உபவாசம் இருக்க வேண்டும், தீர்த்தயாத்திரை செய்ய வேண்டும், பூஜை செய்ய வேண்டும் இப்படி பல வழிகளில் இறைவனை வழிபடுவது வைதீபக்தி. வைதிபக்தி அதிகமானால் ராகபக்தி உண்டாகிறது
-
ராகபக்தி உண்டாகாமல் இறையனுபூதி கிடைக்காது. அவரை நேசிக்க வேண்டும். இதயம் நூற்றுக்கு நூறு சதவீதம் அவரிடம் பதியவேண்டும். அப்போது அவரை அடையலாம்.
-
சிலருக்கு ராகபக்தி தானாகவே உண்டாகிறது. குழந்தை பருவத்திலிருந்தே உள்ளது. அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே இறைவனுக்காக ஏங்கி அழுவார்கள்.
-
கடவுளிடம் அன்பு ஏற்படுவதற்காக ஜபம்,தபம், உபவாசம் முதலியவை செய்வது வைதீபக்தி. ராகபக்தி ஏற்பட்ட பிறகு ஜபம் முதலிய செயல்கள் தாமாகவே நின்றுவிடுகின்றன.
-
வைதீபக்தி உடையவர்களால் இறைவனைப்பற்றிய உண்மைகளை புரிந்துகொள்ள முடியாது. ராகபக்தி ஏற்பட்டால் புரிந்துகொள்ளலாம். இறைவனிடம் அன்பு ஏற்படாவிட்டால் உபதேசங்களை புரிந்துகொள்ள முடியாது.
-
குழந்தைக்கு தாயிடமும், தாய்க்ககு குழந்தையிடமும், மனைவிக்கு கணவனிடமும் உள்ள அத்தகையை அன்பு வேண்டும். இந்த அன்பு, இந்த ராகபக்தி உண்டாகும்போது மனைவி மக்கள் உற்றார் உறவினர் முதலியவர்களிடம் மாயை காரணமாக எழும் கவர்ச்சி இருக்காது. தயை இருக்கும்.உலகம் அன்னிய இடம் என்று தோன்றும்.
-
வீடு கிராமத்தில் உள்ளது. பட்டணத்தில் வேலை கிடைத்துள்ளது. பட்டணத்தில் தங்குவதற்கு ஒரு தற்காலிக இடம் வேண்டுமல்லவா, அதுபோல் பக்தனுக்கு இந்த உலகம் ஒரு தற்காலிக வீடு.
-
ஈரமான தீக்குச்சிகளை ஆயிரம்முறை கிழித்தாலும் தீ பிடிக்காது. அதேபோல் உலகத்தில் பற்றுகொண்டவர்கள் ஈரதீக்குச்சி போன்றவர்கள். இறைக்காட்சி அவர்களுக்கு கிடைக்காது. உலகியலின் சாயல் ஒருசிறிது இருந்தால்கூட இறைக்காட்சி கிடைக்காது
-
நான் எல்லாவற்றையும் கிருஷ்ணமயமாக காண்கிறேன் என்று ராதை சொன்னாள். அதற்கு தோழிகள் நாங்கள் அவ்வாறு பார்க்கவில்லையே என்று சொன்னார்கள். கண்ணில் அனுராகம்(ராகபக்தி) என்ற மையை பூசிக்கொண்டு பாருங்கள் அப்போது காணலாம் என்று சொன்னாள்

 HOME PAGE

image98

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-6

PART-6

  

மனத்தூய்மை உண்டாகாவிட்டால் இறைக்காட்சி கிடைக்கது. காமம்-பணத்தாசையால் மனம் மாசு படிந்துள்ளது. தூசி படிந்துள்ளத. ஊசியை சேறு மூடியிருக்கும்போது அதை காந்தம் கவராது. சேற்றை கழுவினால் காந்தம் கவரும்.
-
மனத்தின் அழுக்கை கண்ணீரால் கழுவலாம். இறைவா இப்படிப்பட்ட செயலை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று பச்சாதாபத்துடன் முறையிட்டு அழுதால் மனஅழுக்கை துடைத்துவிடலாம். “நான் செய்கிறேன்” என்ற உணர்வு இருந்தால் இறைக்காட்சி கிடைக்காது
-
பண்டக அறைக்கு பொறுப்பாளியாக ஒருவன் இருக்கும்போது, வீட்டுத்தலைவனிடம் ஐயா, நீங்கள் வந்து பொருட்களை எடுத்துத்தாருங்கள் என்று கேட்டால், தலைவன், பண்டக அறையில் ஏற்கனவே ஒருவன் இருக்கிறானே, நான் வந்து என்ன செய்வது? என்பான். நான் கர்த்தா, நான் செய்கிறேன் என்ற உணர்வு உள்ளவனிடம் இறைவன் வரமாட்டார்
-
இரவு பணியில் செல்லும் போலீஸ்காரன் கையில் லாந்தர் விளக்கு உள்ளது. அவரால் மற்றவர்களை பார்க்க முடியும்.அந்த ஒளியால் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் அவரை மற்றவர்கள் பார்க்க முடியாது. அவரை பார்க்க வேண்டுமானால் யாராவது லாந்தர்விளக்கை உங்கள் முகத்தில் காட்டுங்கள் என்று கேட்கவேண்டும். அதேபோல் இறைவனது ஒளியால் ஒருவரை ஒருவர் பார்க்க முடிகிறது. இறைவனை பார்க்க வேண்டுமானால், அவரிடம், இறைவா, உமது ஞானஒளியை உம்மீது ஒருமுறை திருப்பு, நான் உன்னை பார்க்கிறேன் என்று பிரார்த்திக்க வேண்டும்.
-
தேவி உருவமற்றவள் மட்டுமல்ல, உருவமுள்ளவளும்கூட. அவளுடைய உருவத்தை பார்க்க முடியும். பாவனை-பக்தி மூலம் அவளது ஈடிணையற்ற உருவத்தை பார்க்க முடியும். அவள் பல வடிவங்களில் காட்சி அளிக்கிறாள். ஒருநாள் காவிநிறச்சட்டை அணிந்துகொண்டு என்னிடம் வந்தாள்.மற்றொருநாள் ஒரு முஸ்லீம் பெண்ணின் வடிவத்தில் வந்தாள்
-
புயற்காற்றில் பட்ட எச்சில் இலையை காற்று பல இடங்களில் அலைக்கழிக்கிறது. சில நேரம் பறந்து நல்ல இடத்திலும், சில நேரம் சாக்கடையிலும் விழுகிறது.அதேபோல் இறைவன் எப்படி இயக்குகிறாரோ அப்படி இயங்குகிறேன். அவர் எப்படி பேசவைக்கிறாரோ அப்படி பேசுகிறேன்.
-
இறைவன் குழந்தை இயல்பு கொண்டவர். அதனால் இறைவனை நேசிப்பவருக்கும் குழந்தை இயல்பு வருகிறது.இறைவன் சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணத்திலும் இல்லை.
-
நாம் முன்னேறும் அளவுக்கு இறைவனின் மகிமையில் நாட்டம் குறைந்துவிடுகிறது. சாதகன் முதலில் பத்துக் கைகள் உடைய தேவியின் தரிசனம் பெறுகிறான். இந்த வடிவத்தில் மகிமை அதிகமாக தென்படுகிறது. பிறகு இரண்டு கைகள் கொண்ட காட்சி, பிறகு கோபாலனின் காட்சி. இதில் மகிமைக்கான எந்த அடையாளமும் இல்லை. இதற்கு பிறகும் காட்சி உண்டு. அது ஜோதி தரிசனம்.

மலையடிவாரத்தில் நின்று பார்த்தால் வண்டி,குதிரை, மக்கள் எல்லாம் தெரிகிறது. அதன் உச்சியில் நின்று பார்த்தால் எதிலும் மனம் செல்லாது. எல்லாம் எறும்புபோல் மிகசிறிதாக தென்படும். அதேபோல் மக்கள் வீடு,வாசல்,பணம்,புகழ்,இன்பம் இவற்றை சுற்றிமனம் அலையும். பிரம்மஞானம் கிடைத்தபின் எதிலும் ஆர்வம் இருக்காது.
-
விறகு எரியும்போது முதலில் கடமுட சத்தமும் தீப்பொறியும், எல்லாம் வெளிப்படும். எரிந்து முடிந்தபின் சாம்பல்மட்டுமே மிஞ்சும். எந்த சத்தமும் இல்லை. அதேபோல் உலகியல் பற்றுமறைந்தால் வேகம் மறைகிறது. இறுதியில் முடிவற்ற அமைதி
-
இறைவனை நோக்கி நாம் அருகில் செல்கின்ற அளவிற்கு அமைதி, அமைதி, அமைதி, அளவற்ற அமைதி
-
ஒன்றிற்கு பக்கத்தில் பூஜ்யங்கள் போடபோட மதிப்பு அதிகமாகிறது. ஒன்றை எடுத்துவிட்டால், எத்தனை பூஜ்யங்கள் இருந்தாலும் மதிப்பு இல்லை. அதேபோல் இறைவன் இருப்பதால்தான் இந்த பிரபஞ்சம் இருக்கிறது
-
நூலின் நுனியில் ஓர் இழை பிரிந்திருந்தாலும்கூட. அது ஊசியின் காதில் நளையாது. அதேபோல் மனதில் சிறிதளவு பற்று இருந்தாலும் கடவுளைப் பெற முடியாது

 

 எரிந்துபோன கயிறு பார்ப்பதற்கு கயிறுபோல்தான் இருக்கும். ஊதினால் பறந்துவிடும். அதுபோல் இறையனுபூதி பெற்றவனின் காமம்,கோபம் முதலியவை எல்லாம் பார்ப்பதற்கு இருப்பதுபோல் தெரியும்.
-
மனம் பற்றற்ற நிலையை அடைந்தால் இறைவனைக் காணலாம். தூயமனத்தில் எழுவது இறைவனின் குரலே. தூய மனமே தூயபுத்தி, அதுவே தூய ஆன்மா. ஏனெனில் இறைவனைத்தவிர வேறு யாரும் தூயவர் அல்ல
-
கடவுளை அடைந்தால் தர்மம் அதர்மம் இரண்டையும் கடந்துசெல்ல முடியும். பிரம்மஞானத்திற்கு பிறகு சமாதிநிலைக்குப் பிறகு சிலர் அங்கிருந்து கீழே இறங்கி “நான் ஞானி” “நான் பக்தன்” என்ற உணர்வுடன் வாழ்கிறார்கள்
-
இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஆராய்ச்சி வழி இன்னொன்று அனுராகம் . உண்மை-உண்மையற்றது பற்றிய ஆராய்ச்சி. உண்மையானது, நிலையானது இறைவன் மட்டுமே. மற்ற எதுவும் உண்மையில்லை. எல்லாம் அழியக்கூடியது. ஜாலவித்தை காட்டுபவன் உண்மை. ஜாலவித்தை பொய் .இவ்வாறு பாகுபடுத்தி அறிவதுதான் ஆராய்ச்சி
-
விவேகம்,வைராக்கியம். உண்மை-உண்மையற்றது என்ற ஆராய்ச்சிதான் விவேகம். உலகப்பொருட்களிடம் ஏற்படும் வெறுப்புதான் வைராக்கியம். எடுத்த எடுப்பிலேயே இது வந்துவிடுவதில்லை, தினமும் பயிற்சிசெய்ய வேண்டும். காமத்தையும்- பணத்தாசையையும் முதலில் மனத்திலிருந்து அகற்றவேண்டும். பிறகு கடவுளின் அருளால் அவற்றை மனத்தாலும் செயலாலும் துறக்கவேண்டும்
-
தந்தையின் போட்டோ எப்படி தந்தையை நினைவிற்கு கொண்டுவருகிறதோ, அதுபோல் உருவ வழிபாட்டைச் செய்யச்செய்ய உண்மை உருவத்தை உணர்வாய்
-
உருவம் என்றால் என்ன தெரியுமா? நீரின் அடியிலிருந்து எழுகின்ற குமிழிகள் போன்றது அது. எல்லையற்று பரந்ததான உணர்வு வெளியில் பல்வேறு உருவங்கள் உதிக்கின்றன. அவதாரமும் இந்த பல உருவங்களில் ஒன்றாகும்.
-
வெறும் நூலறிவினால் என்ன இருக்கிறது? மன ஏக்கத்துடன் அழைத்தால் அவரை அடைய முடியும். பல விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? யார் ஆச்சாரியரோ, அவர் பல விஷயங்களை அறிய வேண்டும்.
-
நான் என்பதை தேடினால் இறைவனை அடையலாம். நான் என்பது என்ன? மாமிசமா, எலும்பா,ரத்தமா, மஜ்ஜையா, அல்லது மனமா, புத்தியா? இவ்வாறு ஆராய்ந்துகொண்டேபோனால் கடைசியில் நான் என்பது இவை எதுவும் அல்ல என்பதை அறியலாம்.
-
பக்தி நெறியில் இறைவன் உணர்வுமயமானவர்.அவர் குணங்களுடன் கூடியவர். அவரும் உணர்வுமயம், அவரது இருப்பிடமும் உணர்வுமயம்- எல்லாம் உணர்வுமயம்

 

  

எல்லோரும் இல்லறத்தை துறப்பது நல்லதல்ல.சுகபோகங்களை அனுபவித்துத் தீர்க்காதவர்கள் வாழ்க்கையைத் துறக்கக் கூடாது.அவர்கள் பற்றின்னறி கடமைகளைச் செய்ய முயற்சிக்க வேண்டும்

-

பணம்,பொன்,புகழ்,உடல்சுகம் இவற்றை ஒருமுறை அனுபவிக்காவிட்டால்,இந்த சுகபோகங்களை அனுபவித்துத் தீர்க்காவிட்டால் இறைவனுக்காக மன ஏகக்ம் ஏற்படுவதில்லை

-

பணக்கார வீட்டு வேலைக்காரி தன் சொந்த வீட்டையே நினைத்துக்கொண்டிருப்பாள். அதேபோல் இல்லறத்தார்கள்

பற்றின்றி பணி செய்ய வேண்டும்.மனத்தை இறைவனிடம் வைக்க வேண்டும். மனத்தளவில் உலகத்தை துறக்க வேண்டும்.

-

வித்யா சக்தியான பெண்களும் உள்ளனர்.அவித்யா சக்தியான பெண்களும் உள்ளனர்.வித்யா சக்தியான பெண் இறைநெறியில் நம்மை அழைத்துச் செல்கிறாள்.அவித்யா சக்தியான பெண்ணோ நாம் தெய்வத்தை மறக்கும்படி செய்துவிடுகிறாள்.உலகியல் வாழ்க்கையில் நம்மை மூழ்கடிக்கிறாள்

-

அவித்யா மாயை என்பது பஞ்சபூதங்களும்,புலன்களின் சுகபோகங்களுக்கு காரணமான உருவம்,சுவை,மணம்,ஸ்பரிசம்,ஓசை என்பவவும் ஆகும்.புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும் நாம் இறைவனை மறக்கும்படி செய்கின்றன.

-

வித்யா மாயை என்பது சத்சங்கம்,ஞானம்,பக்தி,பிரேமை வைராக்கியம் இவையெல்லாம்.வித்யா மாயையை சரணடைந்தால் இறைவனை அடையலாம்

-

தீமையை இறைவன் ஏன் படைத்திருக்கிறான்?அது அவருடைய விளையாட்டு.இருள் இல்லாவிட்டால் ஒளியின் பெருமையை உணர முடியாது.துன்பம் இல்லாவிட்டால் இன்பத்தை புரிந்துகொள்ள முடியாது.தீமை இருப்பதால்தான் நன்மையை அறிய முடிகிறது

-

தோல் இருப்பதால்தான் மாங்காய் பக்குவம் அடைகிறது.பழம் பழுத்துவிட்டால் தோலை எறிந்துவிடலாம்.மாயையாகிய தோல் இருப்பதால்தான் பிரம்மஞானம் உண்டாகிறது.வித்யாமாயை,அவித்யா மாயை இரண்டும் மாம்பழத்தின் தோலுக்கு சமம்

-

உங்களுக்கு உருவ வழிபாடு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் ராதைக்கு கண்ணனிடம் இருந்த ஈர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.அந்த மனநிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.காளி பக்தர்கள் அம்மா அம்மா என்று எப்படி உள்ளம் உருகி அழைக்கிறார்கள்.அந்த ஏக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

-

சுகபோக நாட்டம் தணியாவிட்டால் வைராக்கியம் தோன்றாது.குழந்தைக்கு மிட்டாயும் பொம்மையும் கொடுத்து தாயை மறக்கும்படி செய்யலாம்.அதன்மீது ஆர்வம் இருக்கும்வரை அந்த குழந்தை தாயை தேடாது.

-

சச்சிதானந்தம்தான் குரு.குரு வடிவில் ஒரு மனிதர் உன் மனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவாரானால்,சச்சிதானந்தமே அந்த வடிவில் வந்திருக்கிறார் என்று அறிந்துகொள்.குரு ஒரு நண்பனைப்போல கையைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.இறைக்காட்சிக்குப் பிறகு குரு-சீடன் உறவு இருக்காது.

-

அருவம்.உருவம் இரண்டும் உண்மை.அருவத்தை மட்டும் ஏற்றுக்கொள்வது எதைப்போன்றது தெரியுமா? ஏழு துளையுள்ள புல்லாங்குழல் இருந்தும் அதைக் கொண்டு ஒரே சுருதியை ஒருவன் வாசிப்பதுபோன்றது.மற்றொருவன் அதில் எத்தனையெத்தனையோ ராகங்களை எழுப்புகிறான்

-

எபப்டியாவது அமுதக்கடலில் விழ வேண்டும்.இறைவனைத் துதித்துப் பாடியோ.அல்லது வேறு ஒருவர் உன்னைப் பிடித்துத் தள்ளுவதாலோ,அல்லது நீயாகவோ விழுவதாலோ எப்படியாவது அந்த அமுதக்கடலில் விழுந்தால் போதும்.மரணமில்லாப்பெருநிலை கிடைத்துவிடும்.


HOME PAGE

image99

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-7

PART-7

  

பிரம்மம் என்பது என்ன என்பதைப் பண்டைய முனிவர்கள் கடுந்தவத்தின் விளைவாக உணர்வில் உணர்ந்தார்கள்.அனுபவத்தில் உணர்ந்தார்கள்.அவர்கள் நாள் முழுவதும் தவம் செய்வார்கள்.சிறிது பழம்,கிழங்கு இவற்றை உண்பார்கள்.உலகப்பற்று ஒரு துளி இருந்தாலும் பலன் கிடைக்காது.தொடு உணர்ச்சி,ஓசை,மணம் இவற்றின் நிழல்கூட மனத்தில் இருக்கக்கூடாது.அப்போது மனம் தூய்மையாகும்.அந்த தூயமனம் எதுவோ அதுவே தூய ஆன்மா

-

காமம்,உலகியல் பற்று மறைந்த பின்,மனம் தூய்மையான பின் அனைத்தையும் செய்பவன் நான் அல்ல என்ற அனுபவம் உண்டாகிறது.இன்பத்திலாகட்டும்,துன்பத்திலாகட்டும் நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்ற எண்ணம் மறைந்துவிடுகிறது.

-

உலகியல் எண்ணங்கள் மனத்தை சமாதிநிலை அடையவிடுவதில்லை.உலகியல் எண்ணங்கள் அடியோடு விலகுமானால் ஸ்தித சமாதி உண்டாகிறது.ஸ்தித சமாதியில் என்னால் உடம்பை விட்டுவிட முடியும்.ஆனால் பக்தியை பற்றிக்கொண்டு பக்தர்களுடன் வாழவேண்டும் என்னும் ஆசை சிறிது இருக்கிறது.அதனால்தான் சிறிதுமனம் உடலின்மீது ஒட்டிக்கொண்டிருக்கிறது

-

சிதறிக்கிடக்கின்ற மனத்தைத் திடீரென்று ஒன்றுபடுத்துவது உன்மனா சமாதி.இந்த நிலை அதிகநேரம் நிலைக்காது.உலகியல் எண்ணங்கள் வந்து கலைத்துவிடுகிறது.யோகிகள் யோகத்திலிருந்து நழுவி விடுகிறார்கள்

-

உலகியல் மனிதர்களுக்குக்கூட எப்போதாவது சமாதிநிலை வாய்க்கலாம்.சூரியன் உதித்ததும் தாமரை மலர்கிறது.மேகம் சூழ்ந்து சூரியனை மறைந்தததும் தாமரை கூம்பிவிடுகிறது.உலகியல்தான் மேகம்.உலகியல் எண்ணங்கள் சூழ்ந்து சமாதிநிலையை அடையவிடுவதில்லை.

-

பிரம்மஞானத்திற்குப் பிறகு உடல் நிலைப்பதில்லை.இருபத்தியொரு நாட்களில் மரணம் உண்டாகிவிடும்.

பிரம்ம ஞானத்திற்குப்பிறகும்.உலக மக்களுக்கு போதிப்பதற்காக அவதாரபுருஷரின் உடல் நிலைத்திருக்கிறது

-

பிரம்மம் உண்மை,உலகம் உண்மையில்லை.எல்லாம் கனவுக்கு ஒப்பானது.இதுதான் ஆராய்ச்சி.இது மிகக் கடினமான வழி.இந்த வழியில் இறைவனது லீலை கனவு போன்றது.உண்மையற்றதாகிவிடுகிறது.நான் என்ற எண்ணம்கூட பறந்துவிடுகிறது.இது கடினமான வழி

-

சில வேளைகளில் கடவுள் காந்தக்கல்லாக இருக்கிறார்.பக்தன் ஊசியாக இருக்கிறான்.வேறு சில வேளைகளில் பக்தன் காந்தக்கல்லாகிறான்,இறைவன் ஊசியாகிவிடுகிறார்.பக்தன் இறைவனை இழுக்கிறான்.இறைவன் பக்தவச்சலர் பக்தர்களுக்கு கட்டுப்பட்டவர்

-

அவதாரபுருஷரை எல்லோராலும் அறிந்துகொள்ள முடியாது. உடல் தரித்தால் நோய்.துக்கம்.பசி,தாகம் எல்லாம் உண்டு.இவற்றை அவதாரபுருஷர்களிடமும் காணும்போது,அவர்களும் நம்மைப்போல்தானே என்று எண்ணத்தோன்றிவிடுகிறது.சீதையைப் பிரிந்த சோகம் தாளாமல் ராமர் அழுதார்.பஞ்பூதங்களாகிய பொறியில் சிக்கி பிரம்மம் அழுதது

-

ஒரு இடத்தில் யாருமே இறைநாமத்தைப் பாடுவதைில்லை என்று என்னிடம் ஒருவன் கூறினான்.இதை அவன் கூறிய அளவிலேயே.இறைவன் ஒருவனே எல்லா உயிர்களாகவும் ஆகியிருப்பதை நான் கண்டேன்.

-

அருவமும் உண்மை.உருவமும் உண்மை.சச்சிதானந்த பிரம்மம் எப்படிப்பட்டது என்று நங்கடா(ஸ்ரீராமகிருஷ்ரின் குரு) உபதேசிப்பார். எல்லையற்ற கடல்போல்-மேல்.கீழ்,இடம்,வலம் என்றில்லாமல் எங்கும் தண்ணீர்மயம்.அனைத்திற்கும் ஆதிகாரணமான தண்ணீர் அது.அங்கே அசைவில்லை.அது செயல்படும்போது தண்ணீர் அலைகளாக எழுகிறது.இந்த செயல்தான் படைத்தல்.காத்தல்.ஒடுக்கல்

-

கற்பூரத்தை கொழுத்தினால் எல்லாம் எரிந்துவிடுகிறது.சாம்பல்கூட எஞ்சுவதில்லை.அதுபோல ஆராய்ச்சி சென்று சேருமிடம்தான் பிரம்மம்.மனம் வாக்கிற்கு எட்டாதது பிரம்மம்.உப்பு பொம்மை கடலை அளக்கச்சென்றது.அங்கேயே கரைந்துவிட்டது.

-

ஒரே சச்சிதானந்தம்.அதன் சக்தி ஒரு கருவி வழியாக, அதாவது மனித உடல் வழியாக வெளிப்படுகிறது.இந்த உடல்தான் அவதாரம்.பன்னிரண்டு முனிவர்கள் மட்டுமே ராமரை அவதாரம் என்று அறிந்துகொண்டார்கள்.மனிதராக வரும்போது அவதாரபுருஷரை அறிந்துகொள்வது கடினம்.

-

இங்கே வருவதற்கு முன்பு நீ யார் என்பதை மறந்திருந்தாய்.இனி உன்னை நீ அறிந்துகொள்ள முடியும். இறைவனே குருவாக வந்து அறியுமாறு செய்வார்

-

சாதுக்களுக்கும் பக்தர்களுக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும். பணம் படைத்தவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்.

-

அகங்காரமும் தளைகளும் மறைந்த பிறகுதான் கடவுளைக்காண முடியும்.நான் அறிவாளி,நான் இன்னாரின் மகன்,நான் பணக்காரன், நான் பிரபலமானவன் இத்தகையை தளைகளை விட்டுவிட்டால்தான் இறைக்காட்சி கிடைக்கும்.

-

கடவுள்தான் உண்மை,மற்ற எல்லாம் நிலையற்றவை,வாழ்க்கை நிலையற்றது.இத்தகைய சிந்தனைதான் விவேகம். விவேகம் இல்லையென்றால் உபதேசங்களை மனத்தில் வாங்கிக்கொள்ள முடியாது

-

இறைவனை தியானிக்க வேண்டுமானால் முதலில் அவரை எந்த வரையறைக்கும் உட்படாதவராக தியானிக்க முயற்சிப்பது நல்லது.அவர் வரையறைகளுக்கு உட்படாதவர்,மனவாக்கிற்கு அப்பாற்பட்டவர்.ஆனால் இந்த வகையான தியானத்தின் மூலம் நிறைநிலையை அடைவது கடினம்.அவதாரபுருஷரை தியானிப்பது எளிது.

-

மனிதர்களின் உள்ளே நாராயணன் உள்ளார்.உடல் ஒரு திரை மட்டுமே-லாந்தர் விளக்கின் உள்ளே விளக்கு எரிவதுபோல் அல்லது கண்ணாடி அலமாரிக்குள் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதுபோல்

-

படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் இரவு பகலாக நடந்துகொண்டே இருக்கிறதே இவையெல்லாம் இறைவனின் சக்தியால் நடைபெறுகின்றன.இதை ஆத்யா சக்தி என்று சொல்கிறார்கள்.இந்த ஆத்யா சக்தியும் பிரம்மமும் பிரிக்க முடியாதவை.பிரம்மம் இன்றி சக்தி இல்லை.இறைவன் இந்த உலகத்தில் நம்மை வைத்திருக்கும்வரை ஆத்யாசக்தியும் உண்மை,பிரம்மமும் உண்மை.

-

இறைவன் உருவம் உள்ளவர்,அதேபோல் உருவமற்றவர்.இன்னும் எத்தனையெத்தனையோ நிலைகள் உடையவர் .நித்தியம் யாருடையதோ அவருடையதே லீலையும். மன வாக்கிற்கு எட்டாத அவரே பல உருவங்களைத் தாங்கிச் செயல்களில் ஈடுபடுகிறார். ஓம் என்பதிலிருந்தே, ஓம் சிவ.ஓம் காளி, ஓம் கிருஷ்ண எல்லாம் தோன்றியுள்ளன.


  

செயல்கள் என்பது எவ்வளவுநாள் வரை? கடவுளை அடையாததுவரை.அப்போது மனிதன் பாவபுண்ணியங்களைக் கடந்து செல்கிறான்.பழம் தோன்றியதும் பூ உதிர்ந்துவிடுகிறது.பழத்திற்காகத்தான் பூ பூக்கிறது.அதேபோல் கடவுளைஅடைவதுதான் செயல்களின் நோக்கம்.

-

இறைவனை எந்த அளவுக்கு நெருக்கிறாயோ அந்த அளவுக்குக் கடமைகளை அவரே குறைத்துவிடுகிறார்.மருமகள் கருவுற்றால் மாமியார் படிப்படியாக வேலைகளை குறைத்துவிடுவாள்.

-

பெண்கள் அவல் குத்துவதை பார்த்திருக்கிறாயா? ஒரு கையில் உலக்கை இருக்கும் இன்னொரு கையால் உரலில் உள்ள நெல்லை விலக்கிவிடுவார்கள்.அதே நேரத்தில் பேசிக்கொண்டும் இருப்பார்கள்.மனம் முழுவதும் உலக்கை கையில் விழுந்துவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும்.இதற்கு நிறைய பயிற்சி தேவை.அதேபோல இல்லறத்தில் இருப்பவர்கள் மனத்தின் ஒரு பகுதியை எப்போதும் இறைவனில் வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் சர்வ நாசம்தான்

-

ஞானம் பெற்றபிறகு இல்லறத்தில் வாழலாம்.ஆனால் முதலில் ஞானம்பெற வேண்டும்.இல்லறமாகிய தண்ணீரில் மனமாகிய பாலை வைத்தால் கலந்துவிடும்.ஆகவே மனமாகிய பாலைத் தயிராக்கி தனிமையில்வைத்து,கடைந்து வெண்ணை எடுத்து,அதை இல்லறமாகிய தண்ணீரில் வைக்க வேண்டும்.அப்போது வெண்ணை தண்ணீரில் கலக்காது

-

ஆரம்பத்தில் சாதனைகள் செய்வது அவசியம்.அரசமரம் சிறு செடியாக இருக்கும்போது அதைச்சுற்றி வேலை அமைக்க வேண்டும்.இல்லவிட்டால் ஆடுமாடுகள் மேய்ந்துவிடும்.அதுவே பெரிதாக வளர்ந்துவிட்டால் ஒரு யானையைக்கூட அதில் கட்டி வைக்கலாம்.முதலில் ஞானம்.அதன்பின் இல்லறம்

-

ஆரம்ப காலத்தில் அவ்வப்போது தனிமையைநாட வேண்டும்.சாதனை தேவை.சோறு சாப்பிடவேண்டுமானால் சும்மா இருந்தால் நடக்குமா?விறகு சேகரிக்க வேண்டும்.தீ மூட்ட வேண்டும்.அரிசியை சமைக்க வேண்டும்.சோறு சாப்பிட அதற்கு முன்பு எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது

-

ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிக்கலாம்.இறைவனிடம் பக்தி ஏற்படாவிட்டால் அவரை அடையவேண்டும் என்ற ஏக்கம் ஏற்படாவிட்டால் எல்லாம் வீண்.சாஸ்திரம் படித்த விவேக வைராக்கியம் இல்லாத பண்டிரின் நோட்டம் எல்லாம் காமத்திலும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.

-

எந்த அறிவைப் பெற்றால் இறைவனை அறிய முடியுமோ,அதுதான் அறிவு.பிற எல்லாம் வீண்.

-

இறைவனைப்பற்றி கேள்விப்படுவது என்பது ஒன்று,அவரைப் பார்ப்பது என்பது மற்றொன்று,அவருடன் பேசுவது என்பது வேறொன்று.பாலைப்பற்றி கேள்விப்பட்டால் போதுமா? அதை பார்த்தால் மகிழ்ச்சி வரும் குடித்தால்தானே வலிமை வரும்.இறைவனது காட்சிபெற்றால் அமைதி கிடைக்கும்.அவருடன் பேசினால் ஆனந்தம் உண்டாகும்.ஆற்றல் அதிகரிக்கும்

-

இறைவனை அடையவதற்கு உரிய வேளை வராமல் எதுவும் நடக்காது. ஒரு குழந்தை தூங்கப்போகும் முன், அம்மா தூங்கும்போது வெளிக்கு வந்தால் எழுப்பிவிடு என்றது.அதற்கு அவள் கவலைப்படாதே அந்த உணர்ச்சியே உன்னை எழுப்பிவிடும் நான் எழுப்பத் தேவையில்லை என்றாள்.

-

யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் அறிந்தே வைத்திருக்கிறார். நீ இறைவனுடைய திருவடிகளில் எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்.அவரிடம் வக்காலத்துகொடு.அவர் எது நல்லது என்று நினைக்கிறாரோ அதை செய்யட்டும்.ஒரு நல்ல மனிதனிடம் பொறுப்பைஒப்படைத்துவிட்டால் அவர் ஒருபோதும் வஞ்சிக்க மாட்டார்.


  

MAIN PAGE

image100

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-8

PART-8

 

இறைவன் செய்விக்கிறார் என்பது உண்மைதான்.அவர்தான் கர்த்தா,மனிதர்கள் கருவி மட்டுமே.அதேவேளையில் கர்மபலன் இருப்பதும் நிச்சயமான உண்மை.மிளகாயைத் தின்றால் வயிறு எரிகிறது.மிளகாய் வயிற்றை எரிக்கும் என்பது இறைவனின் கட்டளை.பாவம் செய்தால் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும்

-

சித்தனால் அதாவது இறைக்காட்சி பெற்றவனால் பாவம் செய்ய முடியாது.திறமையான பாடகன் தாளம் தவற மாட்டான்.பயிற்சிபெற்ற தொண்டையிலிருந்து ச-ரி-க--ம சரியான சுருதியில்தான் வரும்.

-

நானே அவன் என்று சொல்பவனுக்கு இந்த உலகம் கனவைப்போன்றது.அவனுடைய நான்-உணர்வுகூட கனவைப்போன்றதுதான்.மொத்தத்தில் அவனால் அன்றாட கடமைகளைச் செய்ய முடியாது.ஆனவே சேவக பாவனை,தாச பாவனை மிகவும் நல்லது

-

அனுமனிடம் சேவக பாவனை இருந்தது.அவன் ராமரிடம் பிரபோ சில சமயம் நீங்கள் முழுமை நான் உங்கள் அம்சம் என்றும்.சில சமயம் நீங்கள் எஜமான் நான் சேவகன் என்றும் நினைக்கிறேன் .ஆனால் உண்மை ஞானம் ஏற்படும்போது நீங்களே நான்,நானே நீங்கள் என்று காண்கிறேன் என்றார்

-

யார் உருவம் உள்ளவரோ அவரே உருவமற்றவர்.பக்தர்களுக்காக அவர் உருவமுடையவராக காட்சி தருகிறார்.பரந்து விரிந்து கிடக்கின்ற கடல் அதில் தண்ணீர் சில இடங்களில் பனிக்கட்டியாகிறது.பக்தனின் பக்தி என்ற குளிர்ச்சி காரணமாக உருவக்கடவுள் காட்சி கிடைக்கிறது

-

ஞான நெறியில் செல்பவன் உருவக்கடவுளை காண்பதில்லை.ஞானம் என்ற சூரியன் உதித்ததும் பனிக்கட்டிகள் எல்லாம் உருகிவிடுகின்றன.ஆனால் அருவம் யாருடையதோ அவருடையதே உருவமும்

-

இல்லறத்தில் சேற்றுமீனைப்போல வாழ வேண்டும். குளத்தில் சேறு இருக்கிறது,ஆனால் மீனில் உடலில் அது ஒட்டுவதில்லை.இந்த மாயா உலகில் வித்யை அவித்யை இரண்டும் உள்ளது.அவித்தையை விலக்கி வித்யையை பற்றிக்கொள்ள வேண்டும்

-

பரமஹம்சர்கள் என்று யாரை சொல்கிறோம்? பாலும் தண்ணீரும் கலந்து இருந்தாலும் அன்னப்பறவையைப்போல் தண்ணீரை விலக்கிவிட்டு பாலை எடுக்க தெரிந்தவர்களைத்தான். சர்க்கரை மணல் இரண்டும் கலந்திருந்தாலும் எறும்பைப்போல் மணலை நீக்கி சர்க்கரையை எடுக்கத்தெரிந்தவர்களைத்தான்

-

குழந்தை தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வரப்பின்மீது நடந்தால் ஒருவேளை குழியில் விழ நேரலாம்.ஆனால் தந்தை குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டால் அந்தக் குழந்தை ஒருபோதும் விழாது

-

ஒரு பெண் தன் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு பணிவிடை செய்கிறாள். ஆனால் அவள் தன் கணவனுக்கு பணிவிடை செய்வது என்பது வேறு.அதேபோல் அனைத்து தெய்வங்களையும் வணங்கு.ஆனால் இஷ்டதெய்வத்திடம் உன் மனத்தை வை.

-

யாரையும் எந்த மதத்தையும் வெறுக்கக்கூடாது.அருவவாதி,உருவவாதி எல்லோரும் இறைவனை நோக்கியே செல்கிறார்கள்.ஞானி,யோகி,பக்தன் எல்லோரும் தேடுவது இறைவனைத்தான்.ஞான நெறியினர் பிரம்மம் என்கிறார்கள்.யோகிகள் ஆத்மா என்கிறார்கள்.பக்தர்கள் பகவான் என்கிறார்கள்

-

ஏதாவது ஒரு பாதையில் சரியாக போக முடிந்தால் அவரை அடையலாம்.அப்போது எல்லாப் பாதையைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.எப்படியாவது ஒருமுறை மாடியை அடைந்துவிடவேண்டும். பிறகு மரப்படிகள் வழியாகவும் கீழே வரலாம். நல்ல படிக்கட்டின் வழியாகவும் கீழே வரலாம்.கயிற்றை பிடித்துகூட இறங்கிவரலாம்

-

ஒருமுறை எப்படியாவது பணக்காரவீட்டு சொந்தக்காரனை சந்தித்துவிட வேண்டும்.அவனுடன் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது அவனே தன்னைப்பற்றியும் தனது சொத்துக்களைப்பற்றியும் சொல்வான்.அதேபோல இறைவனை அடைந்தால் இந்த உலகத்தைப்பற்றி அவரே அனைத்தையும் சொல்லித்தருவார்

-

இறைவனடைய திருப்பெயரையும் மகிமையையும் எப்போதும் பாடவேண்டும்.முடிந்தவரை உலகியல் சிந்தனைகளை அடியோடி விலக்க வேண்டும். விவசாயத்திற்காக சிரமப்பட்டு தண்ணீரைக்கொண்டு வருகிறாய்.ஆனால் வளைகள் வழியாக அது வெளியே போய்விடுகிறது.வாய்க்கால் வெட்டி என்ன பயன்?உலகியல் சிந்தனைகளை விலக்கினால்தான் இறைவனைக்காண முடியும்

-

மனம் தூய்மையடைந்து,உலகியல் பற்று அகன்றுவிடுமானால் மன ஏக்கம் ஏற்படும்.அப்போது உன் பிரார்த்தனை இறைவனைச் சென்றடையும்.உலகியல் பற்றை முழுமையாக விடமுடிந்தால் யோகம் கைக்கூடும்

-

எந்த விதமான ஆசையும் இருக்க்கூடாது.ஆசையோடு கூடிய பக்தியை ஸகாம பக்தி என்பார்கள்.பயன் கருதாமல் செய்யும் பக்தி அஹேதுகீ பக்தி.இறைவனா நீ என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன்னை நேசிக்கிறேன்-இதுதான் அஹேதுகீ பக்தி

-

மனைவிக்கு கணவனிடம் உள்ள வசீகரம்,தாய்க்கு குழந்தையிடம் உள்ள ஈர்ப்பு.உலகியல் மனிதனுக்கு பொருள்மீது உள்ள பற்று இந்த மூன்றும் ஒன்று சேருமானால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட உணர்வு தோன்றுமானால் இறைக்காட்சி கிடைக்கும்.

-

அதிக ஆராய்ச்சி நல்லதல்ல.முதலில் இறைவன்.பிறகு உலகம். முதலில் இறைவனை அடைந்தால் அவருடைய உலகத்தைப்பற்றியும் அறிந்துகொள் முடியும்.

-

யாரும் அறியாதபடி தனிமையில் மன ஏக்கத்துடன் ஏங்கிஏங்கி அழுது இறைவனை அழைக்க வேண்டும்.முதலில் வேண்டுவது இறைக்காட்சி.அதன்பிறகு சாஸ்திரத்தைப்பற்றியும் உலகத்தைப்பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம்.அதிக ஆராய்ச்சி நல்லதல்ல.

-

அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அதனால் தீங்குதான் நேரும்.பிறகு நீயும் ஹாஸ்ராவைப்போல வறட்டுஞானி ஆகிவிடுவாய்.நான் இரவில் தனிமையில் அழுதுகொண்டே அம்மா ஆராய்சி புத்தியை உன் வஜ்ராயுதத்தால் ஓங்கி அடி என்று வேண்டுவேன்.

-

பக்தியினால் எல்லாம் கிடைக்கும். பிரம்மஞானத்தை விரும்புபவர்களும் பக்தி நெறியைக் கடைபிடித்தால்,அவர்களுக்கு அது கிடைக்கும்.இறைவனுடைய கருணை இருந்தால் ஞானத்திற்கு குறைவு இருக்குமா என்ன? தேவி ஞானத்தை அள்ளிக்கொடுப்பாள்.

-

இறைவனைப் பெற்றுவிட்டால் பண்டிதர்கள் வைக்கோல் துரும்புபோல் தோன்றுவார்கள். பக்தியினால் எல்லாம் கிடைக்கும்.

-

நான் அழதுகொண்டே தேவியிடம்,அம்மா வேத வேதாந்தத்தில் என்ன இருக்கிறதோ அதை எனக்கு தெரிவி.புராண,தந்திரத்தில் என்ன இருக்கிறதோ அதை எனக்கு தெரிவி என்று வேண்டினேன்.அம்பிகை ஒவ்வொன்றாக எனக்கு தெரிவித்தாள்.ஆம்.அவள் எனக்கு எல்லாவற்றையும் அறிவித்தாள்.எவ்வளவோ விஷயங்களை எனக்கு காட்டியருளினாள்

-

தேவி ஒரு நாள் நாலா பக்கமும் சிவனையும் சக்தியையும் காட்டினாள்-சிவசக்தியின் கூடலைக் கண்டேன்.மனிதன், ஜீவராசிகள்,மரம்.செடி.கொடி என்று அனைத்திற்குள்ளும் அதே சிவசக்தி,அதே புருஷ பிரகிருதி.அவர்களின் கூடலை எங்கும் கண்டேன்.

-

இறைவனை நாடும்போது சேவகனாக,பிள்ளையாக ஏதாவது ஒரு பாவனையை கைக்கொள்ள வேண்டும்.அல்லது வீரபாவனையை மேற்கொள்ளலாம்.என்னுடையது குழந்தை பாவனை.இந்த உறவு முறையைக் கண்டால் மாயாதேவி வெட்கத்தினால் விலகி வழிவிட்டு நிற்கிறாள்

-

சித்தனான பிறகு எல்லா பாவனையும் பிடிக்கும்.அந்த நிலையில் காமத்தின் நிழல்கூட இருக்காது.அந்த நிலையில் பெண்மை பாவனை வருகிறது. நான் ஓர் ஆண் என்ற உணர்வு இருக்காது.

-

ரிஷிகள் அருளிய சனாதன தர்மம்தான் நிலைத்து நிற்கும் மற்றவைகள் சிலகாலம் மட்டும் நிற்கும். எல்லாம் இறைவனின் திருவுள்ளப்படி தோன்றுகின்றன,மறைகின்றன

இறைவனே இப்படியெல்லாமாகவும் ஆகியிருக்கிறார் . இதைச்சொல்பலரும் அவரே இப்படி ஒரு கருத்து உள்ளது . மாயை, உயிர்கள் ,உலகம் எல்லாம் இறைவனே. காமினீ-காஞ்சனம்தான் யோகத்திற்கு தடை. -  மனம் துாய்மையானால் யோகநிலை கைகூடுகிறது.மனத்தின் இருப்பிடம் கபாலம். அதாவது புருவமத்தி. ஆனால் நம் மனத்தின் பாா்வை எல்லாம் குறி,குறம்,தொப்புள் இவைகளில் அதாவது காமத்திலும்-பணத்தின்மீதும்தான் உள்ளது . சாதனைகள் செய்தால் அதே மனம் மேல் நோக்கிய பார்வை பெறுகிறது. -  எந்த சாதனைகளைச் செய்தால் மேல் நோக்கு பார்வை மனதிற்கு கிடைக்கும்? எப்போதும் சாதுக்களின் தொடர்பு இருக்குமானால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளலாம். ரிஷிகள் எப்போதும் தனிமையில் வாழ்ந்தனர் அல்லது சாதுக்களுடன் தங்கினர்.  அதனால்தான் அவர்களால் எளிதில் காமத்தையும்-உலகியல் பற்றையும் துறந்து இறைவனிடம் மனத்தை வைக்க முடிந்தது. அவர்களிடம் நிபந்தனையோ அச்சமோ இல்லை. -  துறக்க வேண்டுமானால் மனவலிமை வேண்டும். அந்த வலிமையைத் தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் . எதை உண்மையற்றது என்று உணர்கிறோமோ அதை அந்தக்கணமே துறந்துலிட வேண்டும் . ரிஷிகளிடம் இத்தகைய மனவலிமை இருந்தது . இந்த வலிமையின் காரணமாக அவர்கள் புலன்களை வென்றவர்களாக இருந்தனர் -  ஆமை தன் அவயவங்களை ஓட்டிற்குள் இழுத்துக் கொண்டப்பின் அதைத் துண்டுதுண்டாக வெட்டினாலும் அவற்றை வெளியே நீட்டாது. உலகியல் மனிதன் கபடனாக இருக்கிறான், எளிய மனத்தினனாக இருப்பதில்லை. இறைவனை நேசிப்பதாக வாயால் சொல்வான், ஆனால் உலகப் பொருட்களில் அவன் வைத்திருக்கும் பற்றில் காமத்திலும்,பணத்தையும் நேசிப்பதில் வைக்கும் பற்றில் ஒருசிறு பகுதிகூட இறைவனில் வைக்கமாட்டான் . அவன் இறைவனை நேசிப்பதெல்லாம் வெறும் பேச்சளவில்தான் -  கபடத்தை விட்டுவிடுங்கள். மனிதர்களிடம் கபடம் காட்டக் கூடாது, இறைவனிடமும் கூடாது. மொத்தத்தில் கபடத்தனமே கூடாது. -  மனைவியிடம் நேசம் ஏற்படுவது இயல்புதானே. இதுதான் பராசக்தியின் உலகை மயக்கும் மாயை. “இவளைப்போல் எனக்கு வேண்டியவள் வேறு யாரும் இருக்க முடியாது; வாழ்விலும் சாவிலும், இந்த உலகிலும் மறு உலகிலும் எனக்கு மிகவும் நெருங்கியவள் இவளே என்ற எண்ணம் உண்டாகிறது. 'இந்த மனைவியின் காரணமாக மனிதன் எந்த வேதனையைத்தான் அனுபவிக்கவில்லை ! இருந்தாலும் அவளைப் போல் தனக்குநெருக்கமானவள் வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறான் . என்ன பரிதாபம் !. -  வித்யை வடிவினளான மனைவி உண்மையான வாழ்க்கை துணைவிதான். அவள் கணவன் இறை றியில் முன்னேற மிகுந்த உதவி செய்கிறாள். ஓரிரு குழந்தைகளை பெற்றபின் இருவரும் உடன்பிறப்பைபோல் வாழ்கின்றனர் .  இருவருமே இறைவனின் பக்தர்கள்-சேவகன் ,சேவகி . அவர்களுடைய இல்லறம் வித்யையின் இல்லறம் . -  உலகியல் மனிதர்கள் கடவுளை நேசிப்பது கண நேரத்திற்கு மட்டுமே. பழுக்கக் காய்ச்சிய இரும்புச்சட்டியில் தண்ணீர் துளி விழுந்தால் சொய் என்று பொங்கும் .உடனே மறைந்துவிடும் அதுபோல் உலகியல் மனிதர்களின் மனம் உலக இன்பத்தையே நாடி நிற்கிறது . அதனால்தான் இறைவனிடம் எந்த நேசமும் அந்த மன  ஏக்கமும் உண்டாவதில்லை . -  மனிதர்கள் சாதனைகள் தவம் என்றெல்லாம் செய்கிறார்கள். ஆனால் மனமோ காமத்தையும்,போகத்தையும் நாடுவதால் தான் சாதனைகள் பலன் தருவதில்லை -  ஆரம்பநிலையில் அதிகம் சுற்ற வேண்டியிருக்கிறது.மிகுந்த கஷ்டப்படவேண்டியிருக்கிறது. ராக பக்தி தோன்றி விட்டால் வழி எளிதாகிவிடுகிறது. அறுவடை முடிந்த பிறகு வயலின் குறுக்கே நடந்து எளிதாகக் கடந்து விடுவதைப் போன்றது இது. அறுவடைக்கு முன்போ வரப்பு வழியாக சுற்றிச் செல்ல வெண்டும். -   


 MAIN PAGE

image101