Join WhatsApp Group 9789 374 109

Hindumatham.in

Hindumatham.inHindumatham.inHindumatham.in
  • Home
  • About Us
  • Sri Ramakrishna
  • vivekananda
  • Hindumatham
  • RK2
  • RK3
  • TITLES
  • More
    • Home
    • About Us
    • Sri Ramakrishna
    • vivekananda
    • Hindumatham
    • RK2
    • RK3
    • TITLES

Hindumatham.in

Hindumatham.inHindumatham.inHindumatham.in
  • Home
  • About Us
  • Sri Ramakrishna
  • vivekananda
  • Hindumatham
  • RK2
  • RK3
  • TITLES

Site Content

சிகாகோ சொற்பொழிவுகள்

  

1. வரவேற்புக்கு மறுமொழி – செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்

இறுதியிலே கடலில் சென்று

சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்

பின்பற்றும் தன்மை யாலே

துங்கமிகு நெறி பலவாய் நேராயும்

வளைவாயும் தோன்றி னாலும்

அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை

அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.’

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.


  

2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? – செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், ‘நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

‘நீ எங்கிருந்து வருகிறாய்?’

‘கடலிலிருந்து’

‘கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?’ என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

‘நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?’ என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, ‘உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?’ என்று கேட்டது.

‘சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?’

‘நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!’ என்று கத்தியது கிணற்றுத் தவளை.
காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.




  

3. இந்து மதம் – செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.
யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.
தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: ‘பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.’ இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.
இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, ‘நான், நான், நான்’ என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? ‘இல்லை’ என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.
அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?
ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?
வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன – ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.
பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.
இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: ‘நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!’
தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.
சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?
இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: ‘எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.’ உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. ‘எனக்குத் தெரியாது’ என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.
ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?
இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ‘நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா’ என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: ‘ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.’
‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.
இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். ‘அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது’ என்றுகூறுகின்றன.
அவனது இயல்புதான் என்ன? அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். ‘அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்!’- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது? அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.
மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் – இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. ‘எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்’ என்கிறது ஒரு பிரர்த்தனை.
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், ‘அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?’ என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், ‘தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது’ என்றார்.
ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, ‘நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்’ என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.
இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். ‘காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்’.
நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.
எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.
ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.
அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.
தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் – இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. ‘ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்’. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், ‘நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?’ என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், ‘உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?’ என்றுகேட்டார், ‘இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்’ என்று பதிலளித்தார் பாதிரி. ‘அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்’ என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து!
பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, ‘பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். ‘எங்கும் நிறைந்தது’ என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? ‘எங்கும் நிறைந்தவர்’ என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.
எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.
அவன் எங்குமே நின்று விடக்கூடாது. ‘புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை’. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : ‘அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.’
இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். ‘குழந்தை, மனிதனின் தந்தை.’ குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.
சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.
ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், ‘முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி’ என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். ‘நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்’ என்கிறார் வியாசர்.

இன்னொன்று: ‘அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?’ பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.
இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.


  

4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று – செப்டம்பர் 20, 1893

நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.
இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.


  

5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு – செப்டம்பர் 26, 1893

நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.
ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.
ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.

இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.
மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.
எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் தேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், ‘நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.
தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.
தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.
அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், ‘பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை’ என்று கூறுகிறார்.
புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!


  

6. நிறைவு நாள் உரை – செப்டம்பர் 27, 1893

சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
இந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.
சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா! உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!
விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.
இந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், ‘உதவி செய், சண்டை போடாதே’, ‘ஒன்றுபடுத்து, அழிக்காதே’, ‘சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்றுஅவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


Site Content

Additional Information

  

குணத்தின் மீது செயலின் விளைவு!

செய்தல் என்று பொருள்படுவதான க்ரு என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து தோன்றியது கர்மம் என்ற சொல். எல்லா செயல்களுமே கர்மம்தான். செயல்களின் விளைவுகளையும் இந்தச் சொல் குறிக்கும். தத்துவம் சம்பந்தமாக வரும்போது இந்தச் சொல் சிலவேளைகளில் நமது முன்வினைகளின் விளைவுகளையும் குறிக்கும் ஆனால் கர்மயோகத்தில், கர்மம் என்ற சொல்லை செயல் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
 

மனித சமுதாயத்தின் குறிக்கோள் அறிவு. கீழை நாட்டுத் தத்துவம் நம் முன் வைத்துள்ள ஒரே லட்சியமும் இதுவே. மனிதனின் லட்சியம் இன்பம் அல்ல. அறிவே. இன்பமும் யோகமும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும். இந்த இன்பத்தை லட்சியமாக எண்ணுவது தவறு. தான் அடைய வேண்டிய லட்சியம் இன்பமே என்று மனிதன் முட்டாள்தனமாக நினைப்பதுதான் இன்று உலகில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம். ஆனால் அவன் சென்று கொண்டிருப்பது இன்பத்தை நாடி அல்ல, அறிவைத் தேடியே, இன்பமும் அதுபோல் துன்பமும் பெரிய ஆசிரியர்கள், நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் அவன் படிப்பினை பெறுகிறான். இவையெல்லாம் காலப்போக்கில் அவனுக்குத் தெரியவருகிறது. இன்பமும் துன்பமும் மனித மனத்தைக் கடந்து செல்லும்போது, அவை மனத்தின்மீது பல்வேறு அனுபவங்களைப் பதித்துச் செல்கின்றன. இந்த மொத்தப் பதிவுகளின் விளைவே குணம் என்று அழைக்கப்படுகிறது.
 

எந்தவொரு மனிதனின் குணத்தை எடுத்துக் கொண்டாலும் உண்மையில் அது அவனது மனப்போக்குகள் அனைத்தின் மொத்தம், மனப்பாங்கின் திரட்சியே தவிர வேறல்ல. எனவே குணத்தை உருவாக்குவதில் துன்பமும் இன்பமும் சரிசமமான பங்கு வகிக்கின்றன. குணத்தைச் செப்பனிடுவதிலும் நன்மை, தீமை இரண்டிற்கும் சம இடம் உண்டு. சிலவேளைகளில் இன்பத்தைவிடத் துன்பமே சிறந்த ஆசிரியராக அமைகிறது. உலகம் தந்துள்ள உயர்ந்த மனிதர்களின் வாழ்வை ஆராய்ந்தோமானால், பெரும்பாலோரது வாழ்க்கையில் இன்பங்களைவிடத் துன்பங்களே, செல்வத்தைவிட வறுமையே அவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளன; புகழ்மொழிகளைவிட ஏமாற்றங்களே அடிகளே அவர்களது அக ஆற்றல்களை வெளியே கொண்டு வந்துள்ளன என்று நான் துணிந்து கூறுவேன்.
 

இந்த அறிவு என்பது மனிதனிடம் இயல்பாக இருக்கின்ற ஒன்று. எந்த அறிவும் மனிதனுக்கு வெளியேயிருந்து வருவதில்லை. அவை உள்ளேயே இருக்கின்றன. ஒரு மனிதன் அறிகிறான் என்பதைச் சரியான மன இயல் மொழியில் கண்டுபிடிக்கிறான். அல்லது திரையை விலக்குகிறான் எனறே சொல்ல வேண்டும். அதுபோலவே ஒரு மனிதன் கற்கிறான் என்பது உண்மையில் அவன் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகிய தன் சொந்த ஆன்மாவை மூடியிருக்கும் திரையை விலக்கிக் கண்டுபிடிப்பதையே குறிக்கும். நியூட்டன் புவியீர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகிறோம். அது ஒரு மூலையில் உட்கார்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டா இருந்தது? அது அவரது மனத்தில் இருந்தது; தருணம் வந்தது அவர் கண்டுபிடித்தார். 

இதுவரை உலகம் பெற்றுள்ள எல்லா அறிவும் மனத்திலிருந்து வந்ததேயாகும். பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்கள் சொந்த மனத்திற்குள்ளேயே இருக்கிறது. புறவுலகம், நீங்கள் உங்கள் மனத்தை ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு தூண்டுகோல், ஒரு வாய்ப்பு மட்டுமே, ஆனால் நீங்கள் ஆராயப்போகின்ற பொருளும் உங்கள்மனம்தான். 

மரத்திலிருந்து ஆப்பிள் விழ்ந்தது நியூட்டனும் ஒரு தூண்டுதலாக அமைந்தது. அவர் அதன்மூலம் தன் மனத்தை ஆராய்ந்தார். ஏற்கனவே தன் மனத்திலிருந்த சிந்தனைத் தொடர்களை எல்லாம் முறைப்படுத்தித் திருத்தி அமைத்தபோது அவற்றுக்கு இடையே ஒரு புதிய தொடர்பைக் கண்டுபிடித்தார். அதை நாம் புவியீர்ப்பு விதி என்று கூறுகிறோம். இந்த விதி ஆப்பிளிலோ பூமியின் மையத்திலோ இருக்கவில்லை.
 

லவுகீக அறிவோ, ஆன்மீக அறிவோ எல்லாமே மனத்தில்தான் இருக்கிறது. பலரிடம் இவை கண்டுபிடிக்காமல் மூடப்பட்டிருக்கிறது. மூடியிருக்கின்ற திரைகள் மெல்லமெல்ல நீக்கப்படும்போது நாம் கற்கிறோம் என்று சொல்கிறோம். நாம் பெறுகின்ற அறிவின் அளவு இந்தத் திரையை விலக்குகின்ற அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்தத் திரை யாரிடமிருந்து தூக்கப்பட்டிருக்கிறதோ, அவன் அதிகம் தெரிந்தவன். யாரிடம் இந்தத் திரை கனமாக இருக்கிறதோ, அவன் அறிவிலி, திரை முழுவதுமாக நீங்கப்பெற்றவன் எல்லாம் தெரிந்தவன் ஆகிறான். 

எல்லாம் அறிந்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். இனி வரும் யுகங்களில் லட்சக்கணக்கில் அவர்கள் தோன்றுவார்கள்
 

சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்புபோல் மனத்தில் அறிவு இருக்கிறது. புறத்தூண்டுதல்தான் அதை வெளியே கொண்டு வருகின்ற உராய்வு.

நம்மையே நாம் அமைதியாக ஆராய்ந்து பார்த்தோமானால் நமது கண்ணீர்கள், நமது புன்முறுவல்கள், நமது மகிழ்ச்சிகள், நமது கவலைகள், நமது அழுகைகள், நமது சிரிப்புகள், நமது சாபங்கள் நமது வாழ்த்துக்கள், நமது பாராட்டுக்கள், நமது ஏச்சுக்கள் என்று நமது எல்லா உணர்ச்சிகளும் செயல்களும் வெளியிலிருந்து தரப்பட்ட பல்வேறு தாக்குதல்களின் மூலம் நமக்குள்ளிருந்தே வெளியே கொண்டு வரப்பட்டன என்பதை அறியலாம்.

இந்தத் தாக்குதல்களை மொத்தமாக கர்மம் அல்லது செயல் என்று கூறுகிறோம். தூலநிலையாகட்டும், மனத்தளவில் ஆகட்டும், மனத்திற்குக் கொடுக்கின்ற அடிகள் ஒவ்வொன்றும், அங்கே ஏற்கனவே மறைந்திருக்கின்ற அதன் சொந்த ஆற்றலையும் அறிவையும் வெளிப்படுத்துகிறது. அதாவது அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த ஒவ்வோர் அடியும் கர்மமே. இங்கு கர்மம் மிகப்பரந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
 

இவ்வாறு நாம் எல்லோரும் எப்போதும் கர்மம் செய்துகொண்டிருக்கிறோம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இது கர்மம், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுவும் கர்மம். நாம் மூச்சு விடுகிறோம். அதுவும் கர்மம், நாம் நடக்கிறோம். அதுவும் கர்மம். உடலின் மூலமாகவும் மனத்தின் மூலமாகவும் நாம் செய்கின்ற எல்லாம் கர்மமே. அவை ஒவ்வொன்றும் நம் மீது ஒரு பதிவை விட்டுச் செல்கின்றன.
 

சிறிய செயல்கள் பலவற்றின் ஒட்டு மொத்தம்போல் தோன்றுகின்ற சில குறிப்பிட்ட செயல்கள் உள்ளன. கடற்கரையில் நிற்பதாக வைத்துக்கொள்வோம். கடல் அலைகள் கரையில் மோதிச் சிதறுகின்றன. அதன் ஓசை தான் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. ஆனால் அந்த ஒரு பேரலை கோடிக்கணக்கான சின்னஞ்சிறு அலைகள் சேர்ந்து உருவானதே தவிர வேறல்ல. இது நமக்குத் தெரயும். இந்தச் சின்னஞ்சிறிய அலைகள் ஒவ்வொன்றும் ஓசை எழுப்புகின்றன. ஆனால் அவற்றை நாம் கேட்பதில்லை. அந்தச் சிற்றொலிகள் ஒன்றுசேர்ந்து ஒரு பேரொலியாக உருவெடுக்கும்போதுதான் நாம் அதைக் கேட்கிறோம். அதுபோல், இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் செயலே. சிலவகையான செயல்களை நாம் உணர்கிறோம். அவை நமக்குத் தெளிவாகப் புரிகின்றன. அதேவேளையில் அவை பல சிறிய செயல்களின் ஒட்டுமொத்தமே
 

நீங்கள் ஒருவரது உண்மையான குணத்தை அறிய விரும்பினால், அவரது மகத்தான் காரியங்களைப் பார்த்து முடிவுக்கு வராதீர்கள். முட்டாள்கூட எப்போதாவது சிலநேரங்களில் மகத்தான் மனிதனாக முடியும். ஒருவன் மிகமிகச் சாதாரணச் செயல்களைச் செய்யும்போது கவனியுங்கள். அவையே அவனது உண்மையான குணத்தைத் தெரிவிப்பவை. 

சில குறிப்பிட்ட நேரங்கள் மிகச் சாதாரண மனிதர்களைக்கூட ஒருவகையான மகத்தான நிலைக்கு உயர்த்திவிடும். 

எந்தச் சூழ்நிலையிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
 

குணத்தை உருவாக்குவதில் செயலின் பங்கு முக்கியமானதாகும். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் தன்னை நோக்கிக் கவர்ந்திழுத்து, தன்னுள்ளே அவற்றை ஒருங்கிணைத்து, மாபெரும் சக்தியாக வெளியே அனுப்புகின்ற ஒரு மையம்போல் இருக்கிறான் மனிதன். அந்த மையம்தான் உண்மை மனிதன். எல்லாம் வல்லவன்,. எல்லாம் அறிந்தவன். பிரபஞ்சம் முழுவதையும் அவன் தன்னை நோக்கிக் கவர்ந்திழுக்கிறான். நன்மை தீமை இன்பம் துன்பம் எல்லாமே அவனை நோக்கி ஓடி வருகின்றன. அவனைச் சுற்றிச் சுழல்கின்றன. குணம் என்று அழைக்கப்படுகின்ற, தன் தனிப்போக்கை அவன் இவற்றிலிருந்து உருவாக்கிப் பேராறுபோல் வெளியில் பரவவிடுகிறான். தன்னிடம் எதையும் இழுத்துக் கொள்வதற்கான ஆற்றல் இருப்பதுபோலவே அதனை வெளியில் விடும் ஆற்றலும் அவனிடம் இருக்கிறது.
 

உலகில் நாம் காண்கின்ற எல்லா செயல்களும் சமுதாயத்தின் எல்லா இயக்கங்களும், நம்மைச் சுற்றி நடக்கும் வேலைகள் அத்தனையும் வெறும் எண்ணங்களின் வெளித்தோற்றமே. மனித கயேச்சையின் வெளிப்பாடுகளே. எந்திரங்கள், கருவிகள், நகரங்கள், கப்பல்கள், போக்கப்பல்கள் இவையெல்லாமே மனிதனது சுயேச்சையின் வெளிப்பாடுகளே, இந்தச் சுயேச்சை குணத்தால் அமைகிறது. குணமோ செயல்களால் உருவாக்கப்படுகிறது. செயல் எத்தகையதோ அத்தகையதே சுயேச்சையின் வெளிப்பாடும் .

உலகம் இதுவரை தோற்றுவித்துள்ள உறுதிவாய்ந்த சுயேச்சை கொண்டவர்கள் எல்லோரும் மாபெரும் செயல்வீரர்களாகவே இருந்திருக்கிறார்கள். காலங்காலமாகத் தொடர்ந்து செய்துவந்த செயல்களின்மூலம் பெற்ற ஆற்றல் வாய்ந்த தங்கள் சுயேச்சையால் உலகையே மாற்றியமைக்க வல்ல மாபெரும் மனிதர்களாக இருந்தார்கள் அவர்கள்.
 

புத்தருக்கும் ஏசுவிற்கும் இருந்தது போன்ற மாபெரும் சுயேச்சை ஒரே பிறவியில் கிடைத்து விடுவதில்லை. இவர்களின் தந்தையர் யார் என்பது நமக்குத் தெரியும். இந்தத் தந்தையர் மனித குலத்தின் நன்மைக்காக ஒரு வார்த்தையாவது பேசினார்களா என்பது சந்தேகமே! ஜோசப்பைப் போன்று லட்சக்கணக்கான தச்சர்கள் வந்துபோய் விட்டனர்; லட்சக்கணக்கானோர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புத்தரின் தந்தையைப் போன்ற எண்ணற்ற சிற்றரசர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றனர். பரம்பரையின் காரணமாக குணம் அமையும் என்றால், ஒருவேளை தன் சொந்த ஏவலர்கூட அடிபணியாத இந்தச் சிற்றரசரால் இன்று உலகில் பாதிக்கு மேற்பட்டவர்களால் கடவுளாக வழிபடப்படுகின்ற ஒரு மகனை எப்படி உருவாக்க முடிந்தது? இன்று லட்சக்கணக்கான மக்களால் வணங்கப்படுகின்ற ஏசுவுக்கும் சாதாரண தச்சரான அவரது தந்தை ஜோசப்பிற்கும் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை எப்படி விளக்குவீர்கள்? பரம்பரைக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு இவற்றை யெல்லாம் விளக்க முடியாது.
 

புத்தரும் ஏசுவும் இந்த உலகின்மீது பரப்பிய மாபெரும் சுயேச்சை எங்கிருந்து வந்தது? இத்தகைய மொத்த ஆற்றல் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? இந்த ஆற்றல் காலம்காலமாக அங்குதான் இருந்திருக்க வேண்டும். அது சிறுகச்சிறுக வளர்ந்து பிரம்மாண்டமான ஆற்றலாகி, ஒரு புத்தராக, ஓர் ஏசுவாக சமுதாயத்தின்மீது பாய்கிறது. இன்றும் பாய்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாமே கர்மத்தால், செயலால்தான் நிச்சயிக்கப்படுகின்றன.
 

உழைக்காமல் யாரும் எதுவும் பெற முடியாது. இது மாறாத நியதி. அப்படியில்லை என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால் காலப்போக்கில் இதைப் புரிந்து கொள்கிறோம். பணக்காரன் ஆவதற்காக ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடலாம். ஆயிரக் கணக்கானோரை ஏமாற்றலாம். ஆனால் கடைசியில், பணக்காரன் ஆவதற்கான தகுதி எனக்கு இல்லை என்பதை அவன் காண்கிறான். வாழ்க்கையே அவனுக்குத் துன்பமாகவும் தொந்தரவாகவும் போய்விடுகிறது. இன்பத்திற்காக நாம் பொருட்களைச் சேர்த்துக் கொண்டே போகலாம். ஆனாலும் நாமே உழைத்துச் சம்பாதித்தவை மட்டுமே உண்மையில் நமக்குச் சொந்தமானவை. ஒரு முட்டாள், உலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் வாங்கித் தனது நூல்நிலையத்தில் அடுக்கி வைக்கலாம். ஆனால் அவற்றுள் அவனது தகுதிக்கு ஏற்றவைகளை மட்டுமே அவனால் படிக்க முடியும். இந்தத் தகுதியைச் செயல்தான் உருவாக்குகிறது.
 

நமது தகுதி என்ன, நம்மால் எதை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை நமது செயல்தான் நிர்ணயிக்கிறது. நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மைச் செய்துகொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது. இப்போதைய நமது நிலைக்கு முன்வினைப் பயன்களே காரணம் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது இப்போதைய நமது செயல்களுக்கு ஏற்பவே அமையும் என்பதும் உறுதி. எனவே செயல்புரிவது எப்படி என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதால் என்ன பயன்? ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு வழியில் வேலைகள் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்! என்று கேட்கலாம் ஆனால் ஆற்றல்களை வீணடிப்பது என்று ஒன்று இருக்கிறது. சாதுரியமாகவும் ஒரு விஞ்ஞானம் போல் நுணுக்கமாகவும் செயல்புரிவதே கர்மயோகம் என்று பகவத்கீதை கூறுகிறது. எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்வதன்மூலம் ஒருவன் பெரிய பலன்களை அடைவான்.
 

அனைத்து செயல்களும் நம் மனத்துள் ஏற்கனவே இருக்கின்ற ஆற்றலை வெளியே கொண்டு வருவதற்கான, ஆன்மாவை விழிப்புணர்த்துவதற்கான முயற்சிகள் மட்டுமே என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஆற்றல் மனிதனுள் இருக்கிறது. அதுபோலவே அறிவும் அவனுள்ளேயே இருக்கிறது. அவற்றை வெளியே கொண்டு வருவதற்காக, இந்த மாமனிதர்களை விழிப்புணர்த்துவதற்காகத் தரப்படும் அடி போன்றதே பல்வேறு செயல்கள். பல்வேறான பலன்களைக் கருதி மக்கள் செயல் புரிகிறார்கள். பலன் கருதாமல் செய்யப்படுகின்ற செயல்களே இல்லை. சிலர் புகழை விரும்புகிறார்கள். அவர்கள் புகழிற்காக வேலை செய்கிறார்கள். சிலர் பணத்தை விரும்புகிறார்கள். அவர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். சிலருக்கு அதிகாரம் வேண்டும், அவர்கள் அதற்காக வேலை செய்கிறார்கள். வேறு சிலர் சொர்க்கத்தை விரும்புகிறார்கள். இறந்தபின் அல்லாமல் சீனாவில் யாரும் எந்தப் பட்டமும் பெறமுடியாது.
 

எப்படிப் பார்த்தாலும் நாம் செய்வதைவிட அது நல்லது தான். அங்கே ஒருவர் மிக நல்ல காரியம் ஏதாவது செய்தால் இறந்துபோன அவரது தந்தைக்கோ பாட்டனாருக்கோ ஒரு கவுரவப் பட்டம் வழங்குவார்கள். பலர் அதற்காகப் பாடுபடுவார்கள். முஸ்லீம் மதத்தின் ஒரு பிரிவினர். தாங்கள் இறந்த பிறகு தங்கள் சமாதி பெரிய மண்டபமாகக் கட்டப்பட வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடுவார்கள். குழந்தை பிறந்த உடனே அதற்கான சமாதியைக் கட்டிவிடுகின்ற ஒரு பிரிவினரைக்கூட எனக்குத் தெரியும். அவர்களைப்

பொறுத்தவரை ஒரு மனிதன் செய்ய வேண்டிய மிகப் பெரிய செயல் சமாதி கட்டுவதுதான். 

சமாதி எவ்வளவுக்கு எவ்வளவு பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த மனிதன் சிறந்தவனாகக் கருதப்படுவான். மற்றும் சிலர் பிராயச்சித்தமாகச் செயல்புரிகிறார்கள்; எல்லாவிதமான பாவங்களையும் செய்வது, பிறகு ஒரு கோயிலைக் கட்டுவது அல்லது புரோகிதர்களுக்கு லஞ்சம் கொடுத்து சொர்க்கத்திற்குப் போவதற்கான பயணச்சீட்டை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டியது. இப்படிச் செய்துவிட்டால் தங்கள் பாவங்கள் நீங்கிவிடும் தன்டனையே இல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பது இவர்களின் எண்ணம். இவ்வாறு பல்வேறு நோக்கங்களுக்காகச் செயல்புரிகிறார்கள்.
 

செயலுக்காகச் செயல்புரிய வேண்டும் உலகிற்கு உண்மையாகவே வளமை சேர்க்கின்ற சிலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் செயலுக்காகவே செயல் புரிகிறார்கள். பெயர், புகழ், ஏன் சொர்க்கத்தைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. நம்முயற்சி என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
 

மற்றும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் இன்னும் உயர்ந்த லட்சியங்களைக் கைக்கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்கிறார்கள். மனித சமுதாயத்திற்கு உதவுகிறார்கள். ஏனெனில் இவர்கள் நன்மை செய்வதிலும் அன்பு காட்டுவதிலும் நம்பிக்கை கொண்டவர்கள், பொதுவாக, பெயர்புகழுக்காகச் செய்யப்படும் செயல்கள் உடனடியாகப் பலனளிப்பதில்லை. அந்தப் பெயரும் புகழும் பெரும்பாலும் நாம் வாழ்க்கையையே கடந்து விட்ட, நமது வயது முதிர்ந்த காலத்தில்தான் வருகிறது.
 

சுயநல நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவன் வேலை செய்தால் அவனுக்குக் கிடைக்கும் பலன் எதுவுமே இல்லையா? இருக்கிறது! 

உண்மையில் மிகவுயர்ந்த பலனை அடைபவன் அவன்தான். சுயநலமின்றி வேலைசெய்வதுதான் மிகுந்த பலனைத் தருவது, ஆனால் அவ்வாறு 

வேலை செய்வதற்கான பொறுமை மக்களிடம் இல்லை. பலன் கருதாமல் செயல்புரிவது உடல்நலத்திற்கும் மிகுந்த நன்மை செய்கிறது. அன்பு, உண்மை, சுயநலமின்மை இவையெல்லாம் ஒழுக்கம் பற்றிய வெறும் பேச்சுக்கள் அல்ல, அவை நம்மிடம் மிக உன்னதமான லட்சியத்தை உருவாக்குகின்றன. ஏனெனில் அவற்றிலிருந்துதான் அளவற்ற ஆற்றல் வெளிப்படுகிறது. எவ்வித சுயநல ஆசையுமின்றி, எதிர்காலத்தைப் பற்றியோ சொர்க்கத்தையோ தண்டனையையோ அல்லது அத்தகைய வேறு எதையுமோ நினைக்காமல் ஐந்து நாட்களோ அல்லது ஐந்து நிமிடங்களோ ஒருவரால் வேலை செய்ய முடியுமானால், தர்மத்தில் நிலைத்த ஒருவராக, ஆகக்கூடிய சக்தி அவரிடம் இருக்கிறது. என்பது பொருள். 

இப்படிச் செய்வது கடினம்தான் என்றாலும் நன்மையைக் கொண்டுவரும் என்பதும் நம் உள்மன்திற்குத் தெரிந்தே இருக்கிறது. ஆற்றலின் வெளிப்பாடுகள் அனைத்திலும் இதுவே மிகப் பெரிய ஆற்றலாகும். இந்தத் தீவிர சுயக்கட்டுப்பாடு, புறமுகமாகச் செய்யப்படுகின்ற எந்த வேலையையும்விட அதிகமான ஆற்றல் வெளிப்பாடாகும்.
 

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டி மலை ஒன்றிலிருந்து கட்டுப்பாடற்று கீழே பாய்ந்து வரலாம், அல்லது பாய்ந்து செல்லும் அந்தக் குதிரைகளை வண்டிக்காரன் கட்டுப்படுத்தலாம், இந்த இரண்டில் எதில் மிகப் பெரிய ஆற்றல் வெளிப்படும்? குதிரைகளைத் தன் போக்கில் ஓட விடுவதிலா, அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதிலா? பீரங்கியிலிருந்து புறப்படுகின்ற ஒரு குண்டு வான்வழியாகப் பாய்ந்து தொலைதூரம் சென்று கீழே விழுகிறது. மாறொன்று அருகிலுள்ள சுவரின்மீது மோதுகிறது. அப்படித் தடுக்கப்படும்போது பயங்கரமான வெப்பத்தைக் கக்குகிறது. சுயநல நோக்கத்துடன் வெளியே செல்கின்ற ஆற்றல்கள் யாவும் சிதறி வீணாகின்றன. அந்த ஆற்றல உங்களிடம் திரும்பி வருவதற்கான வழியில்லை. ஆனால் அவற்றின் ஆற்றல் கட்டுப்படுத்தப்படுமானால். அது ஆற்றல் வளர வழிவகுக்கும். இந்தச் சுயக் கட்டுப்பாடு மகத்தான சுயேச்சையை உருவாக்குவதற்கு ஏதுவாகும். ஏசுவையும் புத்தரையும் உருவாக்குகின்ற குணநலனைத் தரும்
 

முட்டாள்கள் இந்த ரகசியத்தை அறிவதில்லை. ஆனால் மனிதகுலத்தை ஆள மட்டும் அவர்கள் விரும்புகிறார்கள். வேலைகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பானேயானால் முட்டாள்கூட உலகம் முழுவதையும் ஒருநாள் ஆளலாம். ஆள வேண்டும். என்னும் முட்டாள்தனமான எண்ணத்தை விட்டுவிட்டுச் சில ஆண்டுகள் காத்திருக்கட்டும். அந்த எண்ணம் அவனிடமிருந்து முற்றிலுமாக விலகி விடுமானால், அவன் ஒரு மகத்தான ஆற்றலாக மாறிவிடுவான். சில மிருகங்களால் சில அடி தூரத்திற்கு அப்பால் எதையும் பார்க்க முடியாது. அதுபோல் நம்மில் பெரும்பானோருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடிவதில்லை. ஒரு சிறிய வட்டம், அதுவே நமது உலகம். அதைக் கடந்து பார்க்கின்ற பொறுமை நமக்கு இல்லாமல் ஒழுக்கமற்றவர்களாகவும் தீயவர்களாகவும் மாறிவிடுகிறோம். இதுதான் நமது பலவீனம்! வலிமையற்ற நிலை!
 

மிகமிகச் சாதாரண வேலையைக்கூடஇழிவாகக் கருதக் கூடாது. உயர்ந்த எதுவும் தெரியாதவன் சுயநலத்திற்காக வேலை செய்யட்டும், பெயர்புகழிற்காகச் செயல் புரியட்டும். ஆனால் ஒவ்வொருவரும், மேலான இன்னும் மேலான லட்சியங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை அடையவும் எப்போதும் முயற்சி செய்ய வேணடும். செயல்புரிய மட்டுமே நமக்கு உரிமைஉண்டு அதன் பலன்களில் அல்ல. 

பலன்களை அவற்றின் போக்கில் விட்டுவிடுங்கள். விளைவுகளைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவனுக்கு நீங்கள் உதவ விரும்பினால், அவன் உங்களிடம் எப்படி நடந்துகொள்வான் என்பதைப் பற்றியெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் மகத்தான ஒரு செயலை அல்லது நல்ல ஒரு செயலைச் செய்ய விரும்பினால் அதன் பலன் என்னவாக இருக்கும் என்பதை எண்ணி உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்
 

செயல்புரிதல் என்ற இந்த லட்சியத்தில் கடினமான கேள்வி ஒன்று எழுகிறது. இடைவிடாது செயல்புரிதல் முக்கியம். நாம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், வேலை செய்யாமல் ஒரு நிமிடம்கூட நம்மால் உயிர் வாழ முடியாது. அப்படியானால் ஓய்வு என்பது எங்கே?

வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு புறம் வேலை, நாம் இதில் சிக்கி வேகவேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றோம். மற்றொரு புறம் அமைதியான, அனைத்திலிருந்தும் விடுபட்ட துறவு, சுற்றியுள்ள எல்லாமே அமைதி மயம். ஓசைகள் என்று எதுவுமே இல்லையென்று சொல்லிவிடலாம். 

தன் விலங்குகள், மலர்கள் மலைகள் இவற்றோடு இயற்கை மட்டுமே உள்ளது. ஆனால் இந்த இரண்டு காட்சிகளுமே முழுமை பெற்றவை அல்ல. 

ஏகாந்தத்தில் பழக்கப்பட்ட ஒருவனை அலைச்சல் மயமான உலக வாழ்க்கையில் கொண்டு வந்தால் அப்படியே நசுங்கிப் போவான். கடலின் அடி ஆழங்களில் வாழும் மீன், மேற்பரப்பிற்குக் கொண்டுவரப் பட்டால், நீரின் அழுத்தத்தால் இதுவரை ஒன்றாக இருந்த அதன் உடல் உறுப்புகள், இப்பொழுது அந்த நீரின் அழுத்தம் இல்லாத காரணத்தால் சிதறுண்டு போகும். அதுபோல் அலைச்சலும் ஆரவாரமுமான வாழ்க்கைக்குப் பழகிவிட்ட ஒருவன் அமைதியான இடத்தில் நிம்மதியாக வாழ முடியுமா? அவன் மிகுந்த வேதனைக்குள்ளாகிறான். ஒருவேளை அவனது மனநிலைகூடப் பாதிக்கப்படலாம்.
 

ஆனால் ஆழ்ந்த அமைதியிலும் ஏகாந்தத்திலும் இடையீடற்ற செயல்களைக் காண்பவனும், இடையீடற்ற செயல்களிடையே பாலைவனத்தின் அமைதியையும் ஏகாந்தத்தையும் காண்பவனுமான ஒருவனே லட்சிய மனிதன். அவன் சுயக்கட்டுப்பாட்டின் ரகசியத்தைக் கற்று விட்டான். பெருநகரின் ஆரவாரமும் நடமாட்டமும் மிக்க தெருவின் வழியே பேய்க்கொண்டிருந்தாலும், எந்த ஓசையும் உட்புகாத, ஒரு குகைக்குள் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற பேரமைதியில் அவனது மனம் ஆழ்ந்திருக்கும். அதன் ஊடே அவன் இடையீடற்ற செயலிலும் ஈடுபட்டிருப்பான். இதுதான் கர்மயோக லட்சியம். இதனை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்றால் கர்மத்தின் ரகசியத்தை உண்மையில் அறிந்துவிட்டீர்கள்.
 

ஆனால் நாம் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். நம்மிடம் வருகின்ற வேலைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, நாள்தோறும் படிப்படியாக நம்மை மேன்மேலும் சுயநலமற்றவர்களாக மாற்றிக்கொண்டே வர வேண்டும். வேலை செய்ய வேண்டும், கூடவே, எந்த நோக்கம் நம்மை அந்த வேலையில் ஈடுபடத் தூண்டுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். விதிவிலக்கின்றி நமது நோக்கங்கள் சுயநலம் நிறைந்ததாகவே இருப்பதை நாம் ஆரம்ப வருடங்களில் காண்போம். விடாப்பிடியான முயற்சியால் இந்தச் சுயநலம் சிறிதுசிறிதாக மறையும். இறுதியில் ஒருநாள் சுயநலம் சிறிதும் இல்லாமல் செயல்புரிகின்ற மன நிலையைப் பெற்றுவிடுவோம். வாழ்க்கைப் பாதைகளில் போராடியவாறே சென்று கொண்டிருக்கின்ற நாம் முழுக்கமுழுக்கச் சுயநலம் இல்லாதவர்களாகின்ற வேளை என்றாவது ஒருநாள் வரவே செய்யும் என்று நாம் அனைவரும் நம்புவோம். அதை நாம் அடைகின்ற அந்தக் கணமே நமது ஆற்றல்கள் எல்லாம் ஒருமுகப்படும், நமக்கே உரிய அறிவும் வெளிப்படும்.


  

கடமை என்பது என்ன?

கர்மயோகத்தைப்பற்றி ஆராயும்போது கடமை என்றால் என்ன என்பதுபற்றி அறிய வேண்டியது அவசியமாகும். நான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் அது என் கடமை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், அப்போது அதை என்னால் செய்ய முடியும்.

கடமை என்ற கருத்து பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உள்ளது. தன் நூலாகிய குரானில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதுதான் என் கடமை என்று முகமதியன் கூறுகிறான். 

வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் தன் கடமை என்று சொல்கிறான் இந்து. கிறிஸ்தவனோ பைபிளில் கூறப்பட்டது தான் தன் கடமை என்கிறான், எனவே பல்வேறு வாழ்க்கை நிலைகளுக்கும், பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்ப கடமை என்ற கருத்தும் பல்வேறு விதமாக மாறுபடுவதை நாம் காண்கிறோம். 

உலகம் தழுவியதான் சில நுண் கருத்துக்களை விளக்குகின்ற மற்ற சொற்களைப் போலவே கடமை என்னும் சொல்லின் பொருளையும் முழுமையாக விளக்க முடியாது. அதன் செயல்பாட்டு முறைகளையும் விளைவுகளையும் வைத்து ஓரளவுக்கு அதைப் புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான்.
 

சில குறிப்பிட்ட காரியங்கள் நம் முன் நிகழும்போது, இயல்பாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஒரு குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளும் உள்ளுந்தல் நம்மிடம் தோன்றுகிறது. இத்தகைய உள்ளுந்தல் எழுந்ததும் மனம் அந்தச் சூழ்நிலையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறது. அந்தச் சூழ்நிலையில் இன்ன வகையில் நடந்துகொள்வது நல்லது என்று சிலவேளைகளில் நினைக்கிறது. வேறு சிலவேளைகளிலோ, அதே சூழ்நிலையில் அப்படி நடப்பது தவறு என்று நினைக்கிறது. 

எல்லா இடங்களிலும் கடமையைப் பற்றிய பொதுவான கருத்து என்னவென்றால் நல்லவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். என்பதே.
 

ஒரு செயலைக் கடமையாக்குவது எது? ஒரு கிறிஸ்தவன் தனக்கு முன் சிறிது மாட்டிறைச்சியைக் காண்கிறான்; ஒன்று அவன் அதைச் சாப்பிட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இன்னொருவனுக்குக் கொடுத்து, அவன் உயிரைக் காக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை என்றால் கடமையிலிருந்து தான் தவறியாதகவே கட்டாயமாக அவன் எண்ணுவான். ஆனால் ஓர் இந்து அதைச் சாப்பிடத் துணிந்தாலோ அவனும் தன் கடமையிலிருந்து வழுவிவிட்டதாகவே நினைப்பான். பயிற்சியும் படிப்பும் ஓர் இந்துவை அப்படி நினைக்கச் செய்கின்றன. 

கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் தக் எனப்படும் பயங்கரமான ஒரு கொள்ளைக் கூட்டத்தினர் இருந்தனர். யாரை வேண்டுமானாலும் கொல்வதும், அவர்களுடைய பொருட்களைக் கொள்கையடிப்பதும் தங்கள் கடமை என்று அவர்கள் எண்ணினர். எவ்வளவு அதிகம் பேரைக் கொல்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்களைச் சிறந்தவர்களாகக் கருதினார்கள். சாதாரணமாக ஒருவன் தெருவில் சென்று மற்றொருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டால், தான் தவறு செய்துவிட்டதற்காக அவன் வருந்த வேண்டும், அது தான் சரி, அதே மனிதன் போர்வீரனாகப் படையில் சேர்ந்து ஒருவனை அல்ல, இருபது பேரைக் கொன்றாலும் தன் கடமையைச் சிறப்பாகச் செய்ததாகவே நிச்சயமாக மகிழ்வான். எனவே செயலைக் கொண்டு கடமை வரையறுக்கப் படுவதில்லை.
 

அதனால் கடமை என்பதற்குப் புறச்சார்பான விளக்கம் தருவது என்பது இயலாத ஒன்று. ஆனால் அகச்சார்பான விளக்கம் இருக்கிறது. எந்தச் செயல் நம்மைக் கடவுளை நோக்கிச் செலுத்துகின்றதோ அது நற்செயல், நமது கடமை. எது நம்மைக் கீழ் நிலைக்கு இழுத்துச் செல்கிறதோ அது தீயது. நமது கடமை அல்ல. அகச்சார்பான இந்தக் கோணத்தில் நாம் பார்த்தால் சில செயல்களில் நம்மை உயர்த்தவும் உன்னதமாக்குவதற்குமான போக்கு இருப்பதையும், மற்றும் சிலவற்றில் நம்மைச் சீரழித்து தீயவர்கள் ஆக்குகின்ற போக்கு இப்பதையும் காணலாம். பல்வேறு நிலைகளிலும் சூழ்நிலைகளிலும் செயல்படுபவர்களான மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் இன்ன செயல் இன்ன போக்குக் கொண்டதாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஒருபோதும் வரையறுக்க முடியாது. ஆனால் எல்லா காலங்களிலும் எல்லா நெறியினருக்கும் எல்லா நாட்டினருக்குமான கடமையென்று மனிதகுலம் முழுவதுமே ஒருமனதாக ஏற்றுக்கொண்ட கருத்து ஒன்று உள்ளது ஒரு சம்ஸ்கிருத சுலோகம். அதை இப்படிச் சுருக்கமாகக் கூறுகிறது. 

எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது. எந்த உயிருக்கும் துன்பம் தராமல் இருப்பது புண்ணியம் எதையும் துன்புறுத்துவதுபாவம்.
 

பிறப்பையும் வாழ்க்கை நிலையையும் அடிப்படையாகக் கொண்ட கடமைகளைப்பற்றி பகவத்கீதை பல இடங்களில் கூறுகிறது. பிறப்பும் வாழ்க்கையும் மற்றும் சமுதாயத்தில் ஒருவன் பெறுகின்ற இடமுமே அவனது வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் மீது அவன் கொள்கின்ற மனநிலையையும் தார்மீக நிலையையும் பெருமளவிற்கு நிர்ணயிக்கின்றன. எனவே நாம் எந்தச் சமூகத்தில் பிறந்துள்ளோமோ, அந்தச் சமுதாயத்தின் லட்சியங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப நம்மை உயர்த்தவும் உன்னதப்படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை ஆகிறது.
 

ஆனால் லட்சியங்களும் பழக்க வழக்கங்களும் எல்லா சமூகங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே போல் இருப்பதில்லை என்பதை நாம் கட்டாயம் நினைவில்கொள்ள வேண்டும். இதனை அறியாதது தான் நாடுகளுக்கு இடையேயுள்ள வெறுப்புணர்ச்சிக்கு முக்கியக் காரணம். தன் நாட்டின் நடைமுறையை ஒட்டிதான் என்ன செய்தாலும் அவையே செய்த்தக்கவற்றுள் சிறந்தவை. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் தீயவர்கள் என்று அமெரிக்கன் கருதுகிறான். இந்துவோ தன் பழக்க வழக்கங்கள் மட்டுமே சரியானவை, உலகத்திலேயே உயர்ந்தவை. அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொடியவர்கள் என்று நினைக்கிறான். இது நாம் எல்லோருமே செய்யக்கூடிய சர்வ சாதாரணமான தவறு. இது தீங்கு விளைவிப்பது. உலகத்தில் தரும சிந்தனைக் குறைவிற்கு அரைவாசி இதுதான் காரணம்.
 

நான் இந்த நாட்டிற்கு வந்து சிகாகோ பொருட்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒருவன் என் தலைப்பாகையைப் பிடித்து இழுத்தான். நான் திரும்பிப் பார்த்தேன். அவன் நன்றாக உடை உடுத்தி, நல்ல மனிதன் போலவே இருந்தான். அவனிடம் பேசத் தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கண்டபோது அவன் குறுகிப் போனான் .மற்றொருமுறை அதே பொருட்காட்சிச் சாலையில் வேறொருவன் என்னைப் பிடித்துத் தள்ளினான். ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று நான் கேட்டேன். நான் கேட்டவுடனே அவனும் வெட்கிப்போய் சற்று தடுமாற்றத்துடன், ஏன் நீ இப்படி விசித்தரமாக உடை உடுத்தி இருக்கிறாய்? என்று மன்னிப்புக் கேட்கும் தொனியில் கேட்டான். இவர்களின் கனிவெல்லாம் சொந்த மொழி, சொந்த உடை என்ற எல்லைக்குள் நின்றுவிடுகின்றன. வல்லரசுகள் சாதாரண நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இத்தகைய எண்ணமே முக்கியக் காரணம். இந்த எண்ணம் அவர்களிடம் மனிதாபிமானத்தையே வற்றச் செய்துவிடுகிறது. தன்னைப்போல் நான் ஏன் உடை உடுத்தவில்லை என்று கேட்டுவிட்டு, என் உடை காரணமாக என்னைக் கேவலப்படுத்த முயன்றானே ஒருவன் அவன் ஒரு நல்ல மனிதனாக, நல்ல தந்தையாக, நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால் மாறுபட்ட உடையில் ஒருவனைக் கண்டதும் அவனது இயல்பிலுள்ள கனிவு மறைந்து விடுகிறது.
 

புதியவர்கள் எல்லா நாடுகளிலுமே ஏமாற்றப்படுகின்றனர். ஏனென்றால் அங்கே தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்படித்தான் அவர்கள் தாங்கள் கண்ட நாடுகளைப் பற்றியெல்லாம் தவறான கருத்துக்களைத் தங்கள் நாட்டிற்கு எடுத்து செல்கிறார்கள், மாலுமிகளும் படைவீரர்களும் வியாபாரிகளும் தங்கள் நாடுகளில் கனவில்கூட நடந்துகொள்ள முடியாத அசாதாரணமான விதங்களில் எல்லாம் வெளிநாடுகளில் நடந்து கொள்கிறார்கள். அதனால்தான் சீனர்கள், ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் அன்னியப் பேய்கள் என்று கூறுகிறார்கள் போலும். ஆனால் அவர்களே மேலை நாடுகளின் இந்த நல்ல, கனிவுமிக்க பக்கத்தைக் கண்டிருந்தால் இத்தகைய முடிவிற்கு வந்திருக்க மாட்டார்கள்.

 இதனை நாம் முக்கியமாக நினைவில்கொள்ள வேண்டும், மற்றவர்களின் கடமைகளை எப்போதும் அவர்களின் கண்கொண்டே பார்க்க வேண்டும். பிறருடைய பழக்கவழக்கங்களை ஒருபோதும் நமது சொந்த அளவுகோலால் மதிப்பிடக் கூடாது. நான் உலகின் அளவுகோலாக இருக்க முடியாது. நான்தான் உலகை அனுசரித்துப் போக வேண்டும் தவிர, உலகம் என்னை அனுசரித்துப் போகாது. இவ்வாறு சுற்றுச் சூழ்நிலை நமது கடமைகளின் இயல்பை மாற்றுவதைக் காண்கிறோம், எனவே, ஒவ்வொரு குறிப்பிட்ட வேளையில் நமக்கென்று அமைந்த கடமைகளை அந்தந்த வேளைகளில் செய்வதே இந்த உலகில் நாம் செய்யத் தக்கவற்றுள் மிகச் சிறந்தது. பிறவியால் நமக்கு அமைந்த கடமையைச் செய்வோம். அதை முடித்தபின் நமது வாழ்வு மற்றும் சமுதாயத்தில் நமது நிலைகளின் காரணமாக நமக்கு ஏற்படுகின்ற கடமைகளைச் செய்வோம்.
 

மனித இயல்பில் பெரிய அபாயம் ஒன்று உள்ளது. அவன் ஒருபோதும் சுய ஆராய்ச்சி செய்வது கிடையாது. சிம்மாசனத்தில் அமர்ந்து ஆளத் தகுந்த அரசனாகவே அவன் தன்னைக் கருதிக் கொள்கிறான். அத்தகையவனாகவே அவன் இருந்தாலும், தனது நிலைக்கு உரிய கடமைகளை முதலில் செய்து முடித்துக் காட்டவேண்டும். மேலான கடமைகள் அதன்பிறகு அவனுக்கு வந்து சேரும். உலகில் நாம் நேர்மையாக வேலை செய்யத் தொடங்கினாலே போதும், இயற்கை நமக்குத் தேவைப்படுகின்ற அடிஉதைகளைக் கொடுத்து நமது நிலை எதுவென்பதை நாம் அறியுமாறு செய்துவிடும். தனக்குத் தகுதியில்லாத ஓர் இடத்தில் யாரும் நெடுங்காலம் சுகமாக இருக்க முடியாது. இயற்கையின் இத்தகைய வேலைமுறைக்கு எதிராக முணுமுணுப்பதில் பயனில்லை. 

எனவே கீழான வேலையைச் செய்பவன் தாழ்ந்தவனில்லை. கடமைகளை வைத்து யாரையும் எடைபோடக் கூடாது. அவன் அவற்றை எந்த விதத்தில், எத்தகைய உணர்வுடன் செய்கிறான் என்பதைக் கொண்டே எல்லோரையும் மதிப்பிட வேண்டும்.
 

கடமைப்பற்றிய இந்தக் கருத்துக்கூட மாறுவதையும், எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாபோது தான் மகத்தான செல்களைச் செய்ய முடியும் என்பதையும் போகப் போகக் காணலாம் .

ஆனால் கடமையுணர்வுடன் செயல்புரிவதன் மூலவே எந்தக் கடமையுணர்வும் இன்றிச் செயல்புரிகின்ற நிலை உண்டாகும். இந்த நிலையில் செயல் என்பது வழிபாடாக இல்லை. அதைவிட மேம்பட்டதாகிவிடும். அப்போது தான் செயலுக்காகச் செயல்புரிய முடியும்.
 

நன்னெறி என்பதற்காக நாம் செய்தாலும் அன்புணர்வால் செய்தாலும், கடமை என்பதன் அடிப்படைத் தத்துவமும் மற்ற எல்லா யோகங்களைப் போன்றதே. நம்மில் ஜீவபாவனையைக் குறைத்து அதன்மூலம் உண்மையான மேலான ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்வதே, வாழ்க்கையின் கீழ்நிலைகளில் மனிதனின் ஆற்றல் விரயமாவதைத் தடுத்து, அதன் மூலம் ஆன்மா தன்னைத் தானே உயர்நிலைகளில் வெளிப்படச் செய்வதே அதன் நோக்கம். தொடர்ந்து கீழான ஆசைகளை மறுப்பதாலேயே இதனை நாம் சாதிக்க முடியும். கடமைக்கு இது மிகவும் தேவையாகும். அறிந்தோ அறியாமலோ சமுதாய அமைப்புக்கள் எல்லாமே இவ்வாறு செயல். அனுபவம் என்ற இரண்டின் வழியாகவும் விரிவடைந்து வந்ததே. சுயநலத்தைக் குறைப்பதன் மூலம் மனிதனின் உண்மை இயல்பு எல்லையற்று விரிவதற்கு நாம் வழிவகுக்கிறோம்.
 

கடமை அவ்வளவு இனிமையான ஒன்றல்ல; அன்பு என்னும் எண்ணெய் இடாமல் அதன் சக்கரங்கள் எளிதாகச் சுழலாது, மாறாக தொடர்ந்து உராய்ந்த வண்ணமே இருக்கும். அன்பு இல்லாவிடில் பெற்றோர் குழந்தைகளுக்கும், குழந்தைகள் பெற்றோருக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் தங்கள் கடமையை எவ்வாறு செய்ய இயலும்? நமது வாழ்வில் தினமும் சிறுசிறு பூசல்களாகிய உராய்வுகளைச் சந்திக்க வில்லையா? அன்பின் வழியாக மட்டுமே கடமை இனிமையானதாக இருக்க முடியும், இனி, சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்க முடியும். 

புலன்களுக்கும் மனித வாழ்வில் தினமும் சந்தித்தே தீர வேண்டியதான கோபங்களுக்கும் பொறாமைக்களுக்கும் இன்னும் எத்தனையோ அற்பத்தனங்களுக்கும் அடிமையாவதுதான் சுதந்திரமா?

நாம் வாழ்வில் சந்திக்கின்ற இத்தகைய சிறு நெருடல்களுக்கு நடுவில் பொறுமையுடன் அவற்றைச் சகித்துக் கொள்வதே சுதந்திரத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடாக இருக்க முடியும். எரிச்சல் மற்றும் பொறாமைக்கு எளிதில் வசப்படுகின்ற இயல்புடையவர்களாகிய பெண்கள் எளிதில் கணவனைக் குறைகூறி விடுகிறார்கள். அதுதான் தங்கள் சுதந்திரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தாங்கள் அடிமைகளாக இருப்பதையே அதன்மூலம் நிரூபிப்பதை அவர்கள் அறியவில்லை. மனைவியிடம் குற்றம் காண்கின்ற கணவர்களின் விஷயமும் இதுதான்.
 

கற்பு என்பதே ஆண், பெண் இருபாலாரிடமும் இருக்க வேண்டிய முதல் நன்னெறியாகும். ஒரு மனிதன் எவ்வளவுதான் வழிதவறியவனாக இருந்தாலும் மென்மையும் அன்பும் நிறைந்த கற்புமிக்க மனைவியால் திருந்தாத மனிதன் அபூர்வமே. உலகம் அந்த அளவிற்கு இன்னும் கெட்டுவிடவில்லை. மிருகத்தனமான கணவர்களைப் பற்றியும் ஆண்களின் ஒழுக்கமின்மையைப் பற்றியும் உலகமெங்கும் நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் ஆண்களுக்குச் சம அளவில் கொடுமையும் ஒழுக்கமின்மையும் நிறைந்த பெண்கள் இல்லையா? எல்லா பெண்களும், அவர்கள் எப்போதும் நிலைநாட்ட விரும்புவதுபோல், நல்லவர்களாகவும் தூயவர்களாகவும் இருப்பார்களேயானால், இந்த உலகத்தில் ஒழுக்கம் கெட்ட ஆண் ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தூய்மையாலும் கற்பாலும் வெற்றிகொள்ள முடியாத எந்த மிருகத்தனம் உள்ளது? கணவனைத் தவிர பிற ஆடவர்கள் எல்லோரையும் தன் குழந்தையாகக் கருதி, அவர்களுடன் தாயின் நிலையிலேயே பழகுகின்ற நற்பண்புமிக்க, கற்பு நிறைந்த ஒரு பெண்ணின் முன்னால் வருகின்ற எந்த மனிதனும் அவன் எவ்வளவுதான் கொடியவனாக இருந்தாலும் புனிதத்தின் சூழலை உணராமல் இருக்க முடியாது. அந்தப் பெண்ணின் தூய்மையின் ஆற்றல் அவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்! அதுபோலவே ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ நினைக்க வேண்டும், மதபோதகனாக விரும்புகின்ற ஒவ்வொருவரும் பெண்களைத் தாயாகக் கருதி, அவர்களிடம் அந்த நிலையிலேயே பழக வேண்டும்.
 

உலகில் தாயின் இடம் மிகவும் உயர்ந்தது. அந்த ஓர் இடத்தில்தான் மிகவுயர்ந்த சுயலமின்மையைக் கற்கவும் செயல்முறைப்படுத்தவும் முடியும். தாயன்பை விட மேலான அன்பு ஒன்று இருக்க முடியுமானால் அது இறையன்பு மட்டுமே. மற்ற எல்லாமே தாழ்ந்தவைதான். முதலில் பிள்ளைகளைப்பற்றி நினைப்பதும் அதன்பிறகே தன்னைப்பற்றி நினைப்பதும் ஒரு தாயின் கடமையாகிறது. அப்படியில்லாமல் எந்தப் பெற்றோராவது தங்களையே முதலில் நினைப்பார்களானால் அந்தப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அமைகின்ற உறவு பறவைகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் இடையிலுள்ள, அதாவது சிறகு முளைத்ததும் பெற்றோரை மறந்து விடுகின்ற உறவாகவே அமையும். 

பெண்களையெல்லாம் இறைவனுடைய தாய்மையின் பிரதிநிதிகளாக நினைக்கும் ஆண்மகன் உண்மையில் பேறு பெற்றவன். ஆண்களையெல்லாம் இறைவனின் தந்தைக் குணத்தின் பிரதிநிதிகளாகக் காணும் பெண் உண்மையில் பேறுபெற்றவள், பெற்றோர்களை பூமியில் தெய்வ வடிவங்களாகக் காணும் பிள்ளைகள் பேறு பெற்றவர்கள்.
 

நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன்மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர்நிலையை அடைந்து விடலாம்.
 

ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி முதலியவற்றில் நெடுங்காலம் ஈடுபட்டிருந்தார். பல ஆண்டுகளின் கடினமான தவம் மற்றும் பயிற்சிகளுக்குப் பிறகு, ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரதுதலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே உயர்ந்த மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். உடனே ஆத்திரத்துடன், என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள் என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார். யோகி அல்லவா! அவரது தலையிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளைச் சாம்பலாக்கிவிட்டது. அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு தலைகால் புரியாத மகிழ்ச்சி கொண்டார்.
 

சிறிநேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி வழக்கம்போல், உணவிற்காக அருகிலுள்ள ஊருக்குச் சென்றார். இங்கு ஒரு வீட்டில் முன் நின்று, அம்மா, பிச்சை இடுங்கள் என்று கேட்டார் மகனே கொஞ்சம் இரு என்று வீட்டிற்குள்ளிருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி பேதைப் பெண்ணே என்னைக் காக்க வைப்பதற்கு உனக்கு என்ன தைரியம்! என் சக்தியை நீ அறியவில்லை என்று நினைத்தார் இப்படி அவர் நினைத்ததுமே 

உள்ளிருந்து மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல என்று குரல் வந்தது, துறவி திகைத்துவிட்டார் எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவளது கால்களில் வீழ்ந்து தாயே நீங்கள் எப்படி அறிந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அவள் மகனே எனக்கு உன்னைப்போல் யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோயுற்றிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டியதாயிற்று. கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனப்பூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன். இப்போது திருமணம் முடிந்துவிட்டது. எனவே கணவருக்கு என் கடமையைச் செய்து வருகிறேன். நான் செய்யும் யோகம் எல்லாம் இதுதான். என் கடமைகளைச் செய்துவந்ததாலே என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. காட்டில் நடந்ததையும் தெரிந்து கொண்டேன். இதற்கு மேலும் உயர்ந்த ஏதாவதை அறிந்துகொள்ள விரும்பினால் இன்ன நகரத்திலுள்ள சந்தைக்குச் செல். அங்கே ஒரு வியாதனை நீ சந்திப்பாய் அவன் பயனுள்ள பலவற்றை உனக்குப் போதிப்பான் என்றாள்.
 

முதலில் அந்தத் துறவி நகரத்தில் ஒரு வியாதனிடம் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்றும் விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். சந்தையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான வியாதன் ஒருவன் பெரிய கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே விலைபேசுவதும் விற்பதுமாக இருந்தான். கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறேன். இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே என்று அதிர்ந்தார் துறவி. இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது அமர்ந்திருங்கள் என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தார் துறவி.
 

நெடுநேரம் கழிந்தது. வேலை முடிந்தது. வியாதன் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு துறவியிடம் வந்து வாருங்கள் வீட்டிற்குப் போகலாம் என்றான் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்காக இருக்கை ஒன்றை அளித்து இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான்.பிறகு துறவியிடம் வந்து ஐயா, என்னிடம் வந்துள்ளீர்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்கு ஒரு பெரிய விளக்கமே தந்தான். அந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் உள்ளது. வேதாந்தத்தின் மிகவுயர்ந்த தத்துவ விளக்கங்களுள் ஒன்று இந்த கீதை. வியாதன் தன் விளக்கத்தை முடித்தபோது துறவி திகைத்து விட்டார் பின்னர் வியாதனைப் பார்த்து. நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? உங்கள் ஞானத்திற்கு இந்தத் தொழில் இழிந்ததும் கேவலமானதும் ஆயிற்றே என்று கேட்டார். இதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி மகனே கடமைகளுள் எதுவும் இழிந்ததோ கேவலமானதோ இல்லை. என்னுடைய பிறப்பு கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. என்னுடைய இளம் வயதில் பரம்பரைத் தொழிலாக இதனை நான் கற்றுக் கொண்டேன். எனக்குப் பற்றேதும் இல்லை. ஓர் இல்லறத்தானாக என் கடமைகளைச் செய்ய முயற்சிக்கிறேன். என் பெற்றோரை மகிழ்விப்பதற்கான சேவைகள் அனைத்தையும் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது. நான் துறவியாகவில்லை. வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என்னிடம் நீங்கள் பார்ப்பவை கேட்டவை எல்லாம், எனது நிலைக்கு உரிய கடமைகளைப் பற்றின்றிச் செய்ததால் கிடைத்ததாகும் என்றான்.
 

இந்தியாவில் ஒரு மகான் இருக்கிறார். அவர் மிகப் பெரிய யோகி. கண்ட மகான்களுள் விந்தையானவர் விசித்திரமானவர். அவர் யாருக்கும் எதுவும் உபதேசிப்பதில்லை. அவரிடம் எதைக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். குருநிலையை வகிப்பது தன் தகுதிக்கு மீறிய விஷயம் என்று அவர் எண்ணினார். அவரால் அது முடியாது. ஆனால் ஒரு கேள்வி கேட்டபின் சில நாட்கள் காத்திருந்தால், நாம் அவரோடு சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது நமது கேள்வி பற்றிய விஷயத்தை அவரே எழுப்பி, ஆச்சரியப்படத் தக்க வகையில் அதற்கான விளக்கம் தருவார். அவர் ஒரு முறை கர்மத்தின் ரகசியத்தை என்னிடம் இவ்வாறு கூறினார். முடிவையும் வழியையும் ஒன்றாக்கு நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். அந்த வேலையை ஒரு வழிபாடாக, மிகவுயர்ந்த வழிபாடாக, அந்த நேரத்திற்கு உங்கள் வாழ்க்கை முழுவதையும் அதில் செலுத்திச் செய்யுங்கள். மேற்சொன்ன கதையில் வந்த பெண்ணும் வியாதனும் ஆர்வத்துடனும் இதயபூர்வமாகவும் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். அதன் பலனாக அவர்கள் ஞானம் பெற்றார்கள். வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள கடமைகளைச் செய்தாலும் பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும் என்பதையே இது காட்டுகிறது.
 

பலன் கருதி வேலை செய்பவன்தான் தனக்கென்று வாய்த்த கடமையைப்பற்றிக் குறைப்பட்டுக் கொள்வான். ஆனால் பலனில் பற்றில்லாதவர்களுக்கு எல்லா வேலைகளுமே ஒரேபோல் நல்லவைதாம். சுயநலத்தையும் புலனின்ப நாட்டத்தையும் அழித்து ஆன்ம சுதந்திரம் பெறுவதற்குத் தகுந்த கருவிகள்தாம்.
 

நாம் எல்லோருமே நம்மைப்பற்றி மிகப் பெரிதாக எண்ணிக் கொள்கிறோம். நமது விருப்பத்தைவிட, தகுதிக்கு ஏற்பவே நமக்குக் கடமைகள் வந்து சேர்கின்றன. போட்டி பொறாமையை எழுப்புகிறது. இரக்கத்தை அழித்து விடுகிறது. முணுமுணுப்பவர்களுக்கு எல்லா கடமைகளுக்குத் திருப்தி தராது. அவர்களின் வாழ்க்கையே தோல்விதான். நமக்கென வாய்க்கின்ற கடமைகளை எப்போதும் தாயாரான முழுமனத்துடன் செய்து கொண்டே போவோம். அப்போது நிச்சயம் ஒளியைக் காண்போம்.




Site Content

Additional Information

  

நாம் உதவி செய்வது நமக்கே உலகிற்கு அல்ல

-

கடமைகளைச் சரிவரச் செய்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைக் காண்பதற்கு முன், கர்மம் என்பதற்கு இந்தியாவில் வழங்கப்படும் மற்றொரு கருத்தையும் சுருக்கமாக நான் உங்கள்முன் வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு மதத்திலும் தத்துவம், புராணம், சடங்கு என்று மூன்று பகுதிகள் உள்ளன. எந்த மதத்திற்கும் தத்துவமே சாரமாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத்தை ஏறக்குறைய கற்பனைப் பாத்திரங்களான மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது புராணம், சடங்கு என்பது தத்துவக் கருத்துக்களுக்கு, எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது, உண்மையில் தத்துவத்தின் உருத்தோற்றமே சடங்கு.

இந்தச் சடங்குதான் கர்மம். இவை ஒவ்வொரு மதத்திற்கும் இன்றியமையாதவை. ஏனென்றால் ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறாமல் நுட்பமான ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாது. எதையும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பது சுலபம். ஆனால் நடைமுறை அனுபவத்திலோ நுட்பமான கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதுதான் உண்மை. எனவே சின்னங்கள் சிறந்த உதவியாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் எதையும் தெளிவுப்படுத்துகின்ற முறையை நாம் ஒதுக்கிவிட முடியாது. மிகப் பழங்காலத்திலிருந்தே எல்லாவித மதங்களும் சின்னங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

ஒருவகையில் சின்னங்களில் மூலம்தான் நாம் சிந்திக்கவே முடியும். சொற்கள் என்பவை சிந்தனையில் சின்னங்ளே தவிர வேறல்ல. இன்னொரு வகையில், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு சின்னமாக நாம் கொள்ளலாம். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு சின்னம். இதன் பின்னாலுள்ள சாரம் இறைவன். இத்தகைய சின்னங்களின் உருவாக்கம் மனிதனின் வெறும் கண்டுபிடிப்பல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றாக அமர்ந்து தங்கள் மனத்துள் சிந்தித்து வெளிக்கொண்டு வந்தவையல்ல இவை. மதச் சின்னங்கள் இயல்பாகத் தோன்றி வளர்ந்தவை. இல்லையென்றால் ஏறக்குறைய எல்லோரின் மனத்திலும், குறிப்பிட்ட கருத்துக்கள் குறிப்பிட்ட சின்னங்களோடு மட்டுமே தொடர்புடையவையாக எப்படி இருக்கும்? சில சின்னங்கள் உலகம் முழுவதிலுமே வழக்கத்தில் இருக்கின்றன.

கிறிஸ்தவ மதத்துடனான தொடர்பிற்குப் பின்னர் தான் சிலுவை ஒரு சின்னமாக முதலில் கொள்ளப் பட்டது என்று உங்களுள் பலரும் நினைக்காமல். ஆனால் உண்மையில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னால் மோசஸ் தோன்றுவதற்கு முன்னால், வேதங்களும் தோன்றவதற்கு முன்னால் வரலாற்றுக் குறிப்புகள் தொடங்குவதற்கு முன்னால் சிலுவைச் சின்னம் இருந்தது. அஸ்டெக் மற்றும் பினீசியர்களிடையே இந்தச் சின்னத்தை நாம் காணமுடியும். ஒவ்வோர் இனத்தினரும் சிலுவைச் சின்னம் வைத்திருந்ததாகவே தோன்றுகிறது. சிலுவையில் அறையப்பட்ட ரட்சகர்,. அதாவது, சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதர், இந்தச் சின்னமும் எல்லா நாடுகளிலும் அறியப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இதுபோலவே வட்டம் உலகம் முழுவதிலுமே ஒரு மகத்தான சின்னமாக இருந்து வருகிறது. எல்லாவற்றையும்விட உலகம் முழுவதும் அறியப்பட்ட மற்றொரு சின்னம் ஸ்வஸ்திகம். பவுத்தர்களே இதை உலகம் முழுவதும் தங்களுடன் கொண்டு சென்று பரப்பினார்கள் என்று கருத்து ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் புத்த மதத்திற்கு முன்பே பல நாடுகளில் இதனைப் பயன்படுத்தியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. பழங்கால பாபிலோனிலும் எகிப்திலும் இந்தச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தச் சின்னங்கள் மனிதனின் கற்பனையில் ஒரு குறிப்பிட்ட நிச்சயமாக ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தச் சின்னங்களுக்கும் மனித மனத்திற்கும் ஏதோ இயல்பான தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

மொழிகூட மனிதனின் கற்பனையில் ஒரு குறிப்பிட்ட முறையில் தோன்றியதல்ல. சில வார்த்தைகள் மூலம் சில எண்ணங்களை உணர்த்த வேண்டும் என்று சிலர் கலந்து தீர்மானித்ததன் விளைவாகவும் தோன்றியதல்ல. எந்த எண்ணமும் அது குறிக்கின்ற சொல் இல்லாமலோ, எந்தச் சொல்லும் அது உணர்த்துகின்ற எண்ணம் இல்லாமலோ இருந்ததில்லை. எண்ணமும் சொல்லும் இயல்பாகவே பிரிக்க முடியாதவை, கருத்துக்களைக் குறிக்கின்றவை ஒலிச் சின்னங்களாகவோ நிறச் சின்னங்களாகவோ இருக்கலாம். செவிடனும் ஊமையும் ஒலிச் சின்னங்களைத் தவிர மற்றொன்றின் மூலமே சிந்தித்தாக வேண்டும்.

மனத்தில் எழும் ஒவ்வோர் எண்ணத்திற்கும் அதற்கேயான ஓர் உருவம் உண்டு. இது சம்ஸ்கிருதத் தத்துவங்களில் நாம-ரூபம் அதாவது பெயர் உருவம் என்று கூறப்படுகிறது. கற்பனையால் ஒரு மொழியை உண்டாக்க முடியாது. அதுபோலவே சின்னங்களின் முறையையும் உருவாக்க முடியாது. உலக மதங்களில் சடங்கிற்காக அமைந்த சின்னங்கள் அனைத்திலும் மனித சமுதாயத்தின் சிந்தனை வெளிப்பாட்டை நாம் காண்கிறோம். சடங்குகள், கோயில்கள் மற்றும் அதுபோன்ற சம்பிரதாயங்கள் எதுவும் தேவயில்லை என்று சொல்லிவிடுவது எளிது. இன்றைய சிறுபிள்ளை கூட இதைச் சொல்கிறது. ஆனால் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்கள் மற்றவர்களிலிருந்து பல வகையிலும் வேறுபட்டிருப்பதை எல்லோரும் எளிதாக அறிந்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில்கள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் போன்ற தூல வடிவங்களுடன் அந்தக் குறிப்பிட்ட மதத்தினர் தொடர்பு கொள்ளும்போது, அவை எதைக் குறிந்து நிற்கின்றனவோ அந்தக் கருத்துக்களை, எண்ணங்களை அவர்களின் மனத்தில் கொண்டுவருகின்ற தன்மை படைத்தவையாக இருக்கின்றன. எனவே சடங்குகளையும் சின்னங்களையும் தவிர்ப்பது அறிவுடைமை ஆகாது. அவற்றைத் தெரிந்து கொள்வதும் பின்பற்றுவதும் இயல்பாகவே கர்மயோகத்தின் ஒரு பகுதியாகிறது.

இந்தச் செயல்விஞ்ஞானத்தின் அதாவது இடையோகத்தின் அம்சங்கள் இன்னும் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, எண்ணத்திற்கும் வாக்கிற்கும் இடையிலுள்ள தொடர்பையும், வாக்கின் சக்தியால் நாம் சாதிக்கக்கூடியது என்ன என்பதையும் அறிந்து கொள்வதாகும். வாக்கின் சக்தியை ஒவ்வொரு மதமும் அங்கீகரித்துள்ளது. சில மதங்கள் படைப்பே வாக்கிலிருந்துதான் தோன்றியதாகக் கூறுமளவிற்கு அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. இறைவனுடைய சிந்தனையின் புற அம்சம்தான் வாக்கு. படைப்பிற்குமுன் கடவுள் சிந்தித்தார். சங்கல்பித்தார். எனவே படைப்பு வாக்கிலிருந்து தோன்றியது.

மன அழுத்தமும் பரபரப்பும் நிறைந்த இன்றைய நமது உலகாயத வாழ்வால் நமது நரம்புகள் மென்மையை உணரும் தன்மையை இழந்து கடினமாகிவிட்டது. வயதானவர்களாக ஆகுந்தோறும், உலகால் பந்தாடப்படுந்தோறும் கடினமானர்களாகி விடுகிறோம். அதன் காரணமாக நம்மைச்சுற்றி தெள்ளத் தெளிவாக, நிரந்தரமாக நடைபெறுபவற்றைக் கவனிக்காமல் போகின்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம். எனினும் சிலவேளைகளில் மனிதத்துவம் தன் இயல்பை நிலைநாட்டுகிறது. அப்போது இந்த அன்றாட நிகழ்ச்சிகளுள் சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் வியந்து நிற்கவும் செய்கிறோம். இவ்வாறு வியந்து நிற்பதுதான் ஆன்மீக ஒளி பெறுவதற்கான முதற்படியாகும்.

வாக்கின் தத்துவரீதியான, மத சம்பந்தமான உயர்ந்த மதிப்பைத் தவிர ஒலிச் சின்னங்கள் மனித வாழ்க்கை நாடகத்தில் முக்கிய இடம் வகிப்பதை நாம் காணலாம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களை நான் தொடவில்லை. நான் பேசுவதால் காற்றில் ஏற்படுகின்ற அதிர்வுகள் உங்கள் காதுகளில் நுழைந்து, நரம்புகளைத் தொட்டு உங்கள் மனத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உங்களால் இதைத் தடுக்க முடியாது. இதைவிட வியப்பிற்குரியது என்ன இருக்க முடியும்? ஒருவன் மற்றவனை முட்டாள் என்று அழைக்கிறான். விளைவு? இவன் எழுந்து முஷ்டியை மடக்கிக்கொண்டு, அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிடுங்கள். வாக்கின் சக்தியைப் பாருங்கள்! ஒருத்தி துனபத்தால் அழுது கொண்டிருக்கிறாள். இன்னொருத்தி அங்கு வருகிறாள். அவளிடம் மென்மையான சில வார்த்தைகள் பேசுகிறாள். உடனே இவளது வளைந்திருந்த உடம்பு நிமிர்ந்து நேராகிறது. முகத்தில் புன்னகை அரும்ப ஆரம்பிக்கிறது. வாக்கின் ஆற்றலை எண்ணிப் பாருங்கள்! உயர்ந்த தத்துவங்களிலும் அதுபோலவே அன்றாட வாழ்விலும் அவை ஒரு மாபெரும் சக்தியாக விளங்குகின்றன. நாம் சிந்தித்துப் பார்க்காமல், ஆராய்ந்து பார்க்காமல் இரவும் பகலும் இந்த ஆற்றலைக் கையாண்டு கொண்டிருக்கிறோம். இந்தச் சக்தியின் இயல்பைத் தெரிந்துகொள்வதும், அதைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும்கூட கர்மயோகத்தின் ஒரு பகுதியாகும்.

மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதன் பொருள், பிறருக்கு நாம் உதவ வேண்டும், உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே. நாம் எதற்காக உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகத்திற்கு உதவுவதற்காக, ஆனால் உண்மையில் நமக்கே உதவுவதற்காக, நாம் எப்போதும் உலகத்திற்கு உதவ முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அது ஒன்றே நமது மிகவுயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும். நாம் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால், உலகிற்கு நம் உதவி சிறிதுகூடத் தேவையில்லை என்பதைக் காணலாம். நீங்களோ நானோ வந்து உதவி செய்வோம் என்பதற்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை அழகிய இந்த உலகம் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் பிறருக்கு உதவி செய்வதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் இது தருகிறது. என்று ஒரு சொற்பொழிவில் படித்தேன். கேட்கும்போது உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகத்திற்கு நம் உதவி தேவைப்படுகிறது என்று சொல்வது தெய்வ நிந்தனை ஆகாதா? உலகில் துயரம் மிகுந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. நாம் சென்று பிறருக்கு உதவி செய்வதே செய்யத் தக்கவற்றுள் சிறந்தது. எனினும் பிறருக்கு உதவுவது என்பது நமக்கே நாம் உதவிக்கொள்வதுதான் என்பதை இறுதியில் உணர்ந்து கொள்வோம்.

நான் சிறுவனாக இருந்தபோது வெள்ளை எலிகளை வளர்த்து வந்தேன். அவற்றை ஒரு சிறிய கூண்டில் வைத்திருந்தேன். அந்தக் கூண்டினுள் ஒரே அச்சில் சுழல்கின்ற சிறுசிறு சக்கரங்கள் இருந்தன. எலிகள் அந்தச் சக்கரங்களைக் கடப்பதற்காக அதில் ஏறினால் உடனே அவை சுழலத் தொடங்கும். இதனால், எலிகள் நின்ற இடத்திலேயே நிற்குமே தவிர, அவை முன்னால் செல்ல முடியாது. உலகமும் நாம் அதற்கு உதவுவதும் இதே கதைதான். உலகிற்கு உதவுவதால் கிடைக்கின்ற ஒரே உதவி, நாம் பெறுகின்ற நன்னெறிப் பயிற்சிதான்.

இந்த உலகம் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறான். பார்வையற்றவன் உலகத்தைப்பற்றிச் சிந்திப்பானானல், அது மென்மை அல்லது கடினமானதாகவோ குளிர்ச்சி அல்லது சூடானதாகவோ இருக்கும். நாமும் மகிழ்ச்சி அல்லது வேதனையின் சேர்க்கை மட்டுமே. இதை நாம் நம் வாழ்வில் நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறோம். பொதுவாக இளைஞர்கள் இன்பநோக்குடனும் முதியவர்கள் துன்பநோக்குடனும் உள்ளனர். இளைஞர்களுக்கு, வாழ்க்கை முன்னால் உள்ளது. வயதானவர்களோ தங்கள் காலம் கடந்து விட்டதென்று குறைபட்டுக் கொள்கிறார்கள். நிறைவேற்ற முடியாத நூற்றுக்கணக்கான ஆசைகள் அவர்களது மனத்தில் முட்டி மோதுகின்றன. ஆனால் இருசாராரும் முட்டாள்களே. மனத்தின் எத்தகைய நிலையோடு வாழ்க்கையைப் பார்க்கிறோமோ, அதற்கு ஏற்ப அது நல்லதாகவோ கெட்டதாகவோ தோன்றுகிறது. தன்னளவில் அது நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை. நெருப்பு தன்னளவில் நல்லதோ தீயதோ இல்லை. அது நமக்கு இதமான வெகுவெதுப்பு தரும்போது, ஆ எவ்வளவு அருமையான நெருப்பு! என்கிறோம்; விரலைச் சுட்டுவிட்டால் அதையே குறை கூறுகிறோம். எனினும் நெருப்பு தன்னளவில் நல்லதோ கெட்டதோ இல்லை. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ற உணர்ச்சியை அது நம்முள் எழுப்புகிறது. உலகமும் அவ்வாறே. அது பூரணமானது. பூரணமானது என்றால், தன் குறிக்கோளைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் கொண்டது என்பதே. நாம் இல்லையென்றாலும் அது அழகாக இயங்கிக் கொண்டு தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். அதற்கு உதவி செய்ய வேண்டுமே என்று நினைத்து, நாம் நம் தலையைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டியதில்லை.

என்றாலும் நாம் நல்லதையே செய்ய வேண்டும். பிறருக்கு உதவுவது என்பது ஒரு பேறு என்ற எண்ணம் நமக்கு எப்போதும் இருக்குமானால், நன்மை செய்வதற்கான ஆசை மிகவும் ஆற்றல் வாய்ந்த தூண்டுசக்தியாகி விடும். ஐந்து காசுகளைக் கையில் எடுத்துக்கொண்டு, உயரமான மேடையில் நின்று கொண்டு, பிச்சைக்காரா இதோ என்று கூறாதீர்கள். அவன் இருந்ததால்தானே அவனுக்கு தானம் செய்து அதன்மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந்தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவனல்ல, கொடுப்பவனே பேறுபெற்றவன். உங்கள் தானத்திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறைநிலையும் அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள். எல்லா நற்செயல்களுமே நம்மைத் தூய்மையை நோக்கி, நிறைநிலையை நோக்கியே இட்டுச் செல்கின்றன.

மிஞ்சிப்போனால் அப்படி என்ன பெரிதாகச் சாதித்துவிட முடியும்? ஒரு மருத்துவமனையைக் கட்டுவீர்கள், சாலைகள் போடுவீர்கள், அற நிலையங்களை ஏற்படுத்துவீர்கள், அவ்வளவுதானே! ஒரு பெரிய அறக்கட்டளையை ஏற்படுத்தி இரண்டு மூன்று லட்ச ரூபாய் சேர்க்கலாம்; முதல் லட்சத்தில் மருத்துவமனை கட்டலாம், இரண்டாவது லட்சத்தைக் குடி, விருந்து என்று கேளிக்கைகளில் செலவிடலாம். மூன்றாவது லட்சத்தில் பாதியை இதை நடத்துபவர்கள் திருடிக்கொண்டு போகும்படியும் செய்வீர்கள்! இவற்றால் ஆவதென்ன? இப்படி நீங்கள் கட்டுகின்ற கட்டிடங்களைப் புயல் ஒன்று ஐந்து நிமிடத்தில் தரைமட்டமாக்கிவிடும். அதற்குப் பிறகு என்ன செய்வது? குமுறி எழுகின்ற ஓர் எரிமலை, நாம் அமைத்த எல்லா சாலைகளையும் மருத்துவமனைகளையும் நகரங்களையும் கட்டிடங்களையும் அடித்துச் சென்றுவிடும். எனவே உலகிற்கு நன்மை செய்வது என்றெல்லாம் முட்டாள்தனமாகப் பேசுவதை விட்டுவிடுவோம். உங்களுடையவோ என்னுடையவோ உதவிக்காக அது காத்துக்கொண்டிருக்கவில்லை. என்றாலும் நாம் வேலை செய்ய வேண்டும். எப்போதும் நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அது நமக்கு ஓர் ஆசீர்வாதம். நாம் நிறைநிலை அடைய இது ஒன்றே வழி.

நாம் இதுவரை உதவி செய்துள்ள எந்தப் பிச்சைக்காரனும் நம்மிடம் ஒரு சல்லிக்காசுக்கும் கடமைப்பட்டவனல்ல. எல்லா வழிகளிலும் நாம்தான் அவனிடம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஏனெனில் நமது தான சிந்தையைத் தன்மீது செயல்படுத்த அவன் நம்மை அனுமதித்திருக்கிறான். நாம் உலகத்திற்கு நன்மை செய்துவிட்டோம். அல்லது செய்ய முடியும் அல்லது இன்னாருக்கெல்லாம் நாம் உதவி செய்வோம் என்றெல்லாம் நினைப்பது முற்றிலும் தவறு. அது முட்டாள் தனமான எண்ணம். முட்டாள்தனமான எண்ணங்கள் துன்பத்தைத்தான் கொண்டுவரும். நாம் யாரோ ஒருவருக்கும் உதவி செய்ததாக எண்ணி, அவன் நமக்கு நன்றிபாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவன் அப்படிச் செய்யாவிட்டால் நமது மனம் வேதனைப்படுகிறது. நாம் செய்பவற்றிற்கு ஏன் பிரதிபலனை எதிர்பாக்க வேண்டும் நீ உதவி செய்தவனிடம் நன்றி கொள். அவனைக் கடவுளாக எண்ணிக் கொள். சகோதரர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவனை வழிபட அனுமதிக்கப்பட்டது ஒரு பெரும்பேறு அல்லவா? நாம் உண்மையிலேயே பற்றற்றவர்களாக இருப்போமானால், இந்த வீண் எதிர்பார்ப்புக்களில் இருந்து வருகின்ற வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வோம். எப்போதும் உற்சாகத்துடன் நற்செயல்களைச் செய்தபடி இருப்போம். பற்றற்றுச் செய்யும் செயலினால் ஒருபோதும் துன்பமோ துயரமோ வருவதில்லை. இந்த உலகம் சுகதுக்கங்களின் சேர்க்கையாக என்றென்றும் இவ்வாறே போய்க் கொண்டிருக்கும்.

ஓர் ஏழை இருந்தான். அவனுக்குப் பண ஆசை வந்தது. எப்படியாவது ஒரு பூதத்தை வசமாக்கி விட்டால் பணத்தையும் தான் விரும்பும் எதையும் கொண்டுவருமாறு செய்யலாம் என்று அவன் கேள்விப்பட்டான், எனவே பூதத்தை வசமாக்கத் துடித்தான். பூதத்தைப் பிடித்துத் தருபவரைத் தேடி அலையலானான். கடைசியாக, சக்தி வாய்ந்த முனிவர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்து அவரது உதவியை நாடினான். பூதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார் அந்த முனிவர் அதற்கு அவன், முனிவரே எனக்காக வேலை செய்வதற்குத்தான் பூதம் வேண்டும். தயவுசெய்து அதைப் பிடிப்பது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று மிகவும் வேண்டினான். அதற்கு அந்த முனிவர், வீணாகக் குழம்பாமல் வீட்டிற்குப் போ என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

ஆனால் மறுநாள் அவன் மீண்டும் அந்த முனிவரிடம் சென்று எனக்கு ஒரு பூதத்தைக் கொடுங்கள்! எனக்குக் கண்டிப்பாகப் பூதம் வேண்டும் என்று கேட்டபடியே இருந்தான். வெறுப்புற்ற முனிவர் இதோ இந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள். இதனை நீ சொன்னால் பூதம் வரும். நீ சொல்லும் வேலைகளையெல்லாம் அது செய்யும். ஆனால் ஒரு விஷயத்தில் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூதங்கள் பயங்கரமானவை. அதற்கு நீ எப்போதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தவறினாயோ அது உன் உயிரை வாங்கிவிடும் என்றார். அது ஒன்றும் சிரமம் அல்ல, அதன் ஆயுட்காலம் முழுவதும் வேலை கொடுக்க என்னால் முடியும் என்று கூறிப் புறப்பட்டான் அவன்.

அங்கிருந்து நேராக ஒரு காட்டிற்குச் சென்ற அவன் அங்கு அமர்ந்து, முனிவர் கொடுத்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்க ஆரம்பித்தான். நெடுநேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய பூதம் அவன் முன் தோன்றி, நான் ஒரு பூதம். உன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டுள்ளேன் ஆனால் நீ எப்போதும் எனக்கு வேலை தந்துகொண்டே இருக்க வேண்டும். அதில் தவறினால் அடுத்த கணமே உன்னைக் கொன்றுவிடுவேன் என்று கூறியது. உடனே அந்த மனிதன், எனக்கு ஓர் அரண்மனை கட்டு என்றான். தயார் அரண்மனை கட்டியாகிவிட்டது என்றது பூதம். பணம் கொண்டு வா என்றான். இதோ நீ விரும்பிய பணம் என்று பணத்தைக் கொடுத்தது பூதம். இந்தக் காட்டை அழித்து, இங்கே ஒரு நகரத்தை உருவாக்கு என்றான். அடுத்த கணமே தயார் என்றது பூதம். காடு அழிந்து நகரம் உருவாகியது. இனி என்ன? என்று கேட்டது பூதம். இனிமேல் இந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லையே, எதைக் கொடுத்தாலும் ஒரு கணத்தில் செய்துவிடுகிறதே என்று எண்ணிய அவனைப் பயம் பிடித்துக் கொண்டது. அதற்குள் அந்தப் பூதம், வேலை கொடுக்கிறாயா? இல்லை உண்னை விழுங்கட்டுமா? என்று உறுமியது. அந்த அப்பாவியால் அதற்கு எந்த வேலையும் கொடுக்க முடியவில்லை. அஞ்சி நடுங்கிய அவன் ஒரே ஓட்டமாக முனிவரிடம் ஓடினான்.

முனிவரிடம் சென்று, சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினான். நடந்தது என்ன என்று அவர் கேட்டதும், அந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லை. நான் எதைச் சொன்னாலும் அது கண நேரத்தில் முடிந்துவிடுகிறது. வேலை கொடுக்காவிட்டால் என்னையே தின்றுவிடப் போவதாக இப்போது பயமுறுத்துகிறது என்று பதிலளித்தான். அதற்குள் பூதம் அங்கேயே வந்து உன்னைத் தின்னப் போகிறேன் என்று கூச்சல் போட்டவாறே அவனைப் பிடிக்க எத்தனித்தது. அந்த மனிதன் நடுநடுங்கி, தன்னைக் காப்பாற்றுமாறு முனிவரிடம் கெஞ்சினான். முனிவர் அவனிடம், பயப்படாதே. நீ தப்ப நாள் ஒரு வழி கூறுகிறேன். சுருண்ட வாலுடன் அதோ ஒரு நாய் நிற்கிறதே, பார்த்தாயா? வாளை உருவி அதன் வாலை வெட்டு, அதை அந்தப் பூதத்திடம் கொடுத்து நேராக்கும்படிச் சொல் என்றார். அவனும் அவ்வாறே வெட்டி பூதத்திடம் கொடுத்து, இதை நேராக்கு என்றான். பூதம் சுருண்ட நாய்வாலைக் கையில் பிடித்துக்கொண்டு, நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் நிமிர்த்தியது. ஆனால் விட்ட மறுகணமே அந்த வால் சுருண்டுகொண்டது. மறுபடியும் சிரமப்பட்டு நிமிர்த்தியது. விட்டதும் உடனே சுருண்டுகொண்டது. மறுபடியும் மிகுந்த சிரமத்துடன் நிதானமாக நிமிர்த்தியது. விட்டால் பழைய கதைதான். இப்படியே நாட்கணக்கில் முயன்ற பூதம் இறுதியில் களைத்துவிட்டது. அதன்பிறகு அது அந்த மனிதனைப் பார்த்து என் வாழ்நாளில் இப்படி ஒரு சங்கடத்தில் மாட்டியதில்லை. முதிர்ந்த திறமை வாய்ந்த ஒரு பூதம் நான். இதுவரை நான் இப்படி ஒரு துன்பத்திற்கு ஆளாகியதில்லை. நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். நீ என்னை விட்டு விடு. நான் உனக்குக் கொடுத்த அனைத்தையும் அதற்குப் பதிலாக வைத்துக் கொள். நான் உனக்குத் துன்பமும் தர மாட்டேன் என்றது. அந்த மனிதன் மகிழ்ச்சியோடு பூதத்தின் உடன்பாட்டை ஏற்றுக் கொண்டான்.

இந்த உலகமும் நாயின் சுருண்ட வால்போல்தான் இருக்கிறது. அதை நிமிர்த்துவதற்காக மனிதர்கள் காலம்காலமாக முயன்று வருகிறார்கள், ஆனால் விட்டவுடனே அது சுரண்டுகொள்கிறது. சுருண்டுகொள்ளாமல் வேறென்ன செய்யும்? பற்றில்லாமல் செயல்புரிவது எப்படி என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதன் கொள்கைவெறியன் ஆக மாட்டான். இந்த உலகம் நாயின் சுருண்டவால்போன்றது. அது ஒருபோதும் நேராகாது என்று தெரிந்துகொண்டால், நாம் கொள்கைவெறியர்களாக மாற மாட்டோம். கொள்கைவெறி மட்டும் இல்லாதிருந்தால் உலகம் இப்போது இருப்பøதிதவிட எவ்வளவோ மேன்மை யுற்றிருக்கும். கொள்கைவெறி மனித இனத்தை முன்னேற்றும் என்று எண்ணுவது தவறு. உண்மையில் இந்தக் கொள்கைவெறி மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் தூண்டி, ஒருவரோடு ஒருவர் சண்டையிடச் செய்து, இரக்கமில்லாதவர்களாக மாற்றி, அவர்களை அவர்கள் இருந்த நிலையிலிருந்து தாழ்த்தவே செய்யும்.

நாம் என்ன செய்கிறோமோ, நம்மிடம் எது இருக்கிறதோ அதுதான் உலகிலேயே சிறந்தது. நாம் செய்யாதது, நம்மிடம் இல்லாதது, அது மதிப்பே இல்லாதது. இதுதான் நமது எண்ணம். எனவே உங்களிடம் கொள்கைவெறி தலைதூக்கும் போதெல்லாம் சுருண்ட நாய்வாலை நிமிர்த்தும் இந்த உதாரணத்தை எப்போதும் நினைவுகூருங்கள். உலகத்தை நினைத்து, இரவெல்லாம் தூக்கம் கெட்டு நீங்கள் அவதிப்படத் தேவையில்லை. நீங்கள் இல்லாமலே அது இயங்கிக் கொண்டுதானிருக்கும்.

கொள்கைவெறியைத் தவிர்த்தால் மட்டுமே உங்களால் திறமையுடன் செயல்பட முடியும். சமமான மனமும் அமைதியும் ஆராய்ந்து தெளியும் குணமும் குளிர்ந்த சிந்தனையும் மிகுந்த கருணையும் அன்பும் உடையவன்

தான் உலகிற்கு நன்மை செய்கிறான். அதன் மூலம் தனக்கும் நல்லது செய்து கொள்கிறான். கொள்கை வெறி பிடித்தவன் முட்டாள். அவனிடம் இரக்கம் இல்லை. அவனால் உலகத்தையும் செம்மைப்படுத்த முடியாது. தானும் தூய்மையோ நிறைநிலையோ அடைய முடியாது.

இன்றைய சொற்பொழிவின் முக்கியக் கருத்துக்களை இப்போது நினைவுகூர்வோம். முதல் கருத்து; நாம் எல்லோரும்தான் உலகிற்குக் கடன்பட்டிருக்கிறோமே தவிர, உலகம் எந்த வகையிலும் நமக்குக் கடன் பட்டிருக்கவில்லை. உலகத்திற்கு நாம் ஏதாவது நன்மை செய்யமுடிந்தால் அது பெரும்பேறு. உலகிற்கு உதவி செய்வதன்மூலம் உண்மையில் நமக்கு நாமே உதவி செய்துகொள்கிறோம்.

இரண்டாவது கருத்து; இந்த உலகில் கடவுள் ஒருவர் இருக்கிறார். இந்த உலகம் தட்டுத் தடுமாறிக்கொண்டு, உங்களிடமோ என்னிடமோ உதவி தேடி நிற்கிறது என்பது உண்மையல்ல. கடவுள் எப்போதும் இருக்கிறார். அவர் மரணமற்றவர். எந்த நேரமும் செயல் புரிபவர். விழித்துக் கொண்டிருப்பவர். அண்ட சராசரங்கள் அனைத்தும் உறங்கும்போதும் அவர் உறங்குவதில்லை. அவர் இடைவிடாமல் செயல்புரிந்துகொண்டே இருக்கிறார். உலகில் உண்டாகின்ற எல்லா மாற்றங்களும் எல்லா வெளிப்பாடுகளும் அவருடையதே.

மூன்றாவதாக, நாம் யாரையும் வெறுக்கக் கூடாது. இந்த உலகம் நன்மை மற்றும் தீமை இவைகளின் கலப்பாகவே தொடர்ந்து இருக்கும். பலவீனர்களிடம் இரக்கம் கொள்வதும், தவறு செய்பவர்களிடம் கூட அன்பு செலுத்துவதும் நமது கடமை. இந்த உலகம் ஒரு பரந்த நன்னெறிக் கூடம் மேலும்மேலும் ஆன்மீக வலிமை பெறுவதற்காக அதில் நாம் அனைவரும் பயிற்சி செய்ய வேண்டும்.

நான்காவதாக, எந்த வகையான கொள்கை வெறியர்களாகவும் நாம் இருக்கக் கூடாது. ஏனெனில் கொள்கைவெறக என்பது அன்பிற்கு முற்றிலும் எதிரானது கொள்கைவெறியர்கள். நாங்கள் பாவிகளை வெறுப்பதில்லை. பாவங்களையே வெறுக்கிறோம் என்று தேனொழுக வாய்ஜம்பம் அடிப்பதை நாம் கேட்கிறோம். ஆனால் பாவிகளையும் பாவங்களையும் உண்மையிலேயே பிரித்து வேறுபடுத்திக் காண்கின்ற ஒரு மனிதன் இருப்பானானால் அவனது முகத்தைக் காண உலகத்தின் எந்த மூலைக்கும் நான் போகத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பேசுவது எளிது. நம்மால் ஒரு பொருளையும் அதன் குணத்தையும் தனித்தனியாகப் பிரித்துக் காண முடியுமானால், நிறைமனிதர்களாகி விடுவோம். ஆனால் அது எளிதான காரியமல்ல.

மேலும், நாம் எந்த அளவிற்கு அமைதியானவர்களோ, நமது நரம்புகள் எந்த அளவிற்குப் பதற்றமின்றி இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நாம் அதிகமாக அன்பு செலுத்துவோம். நமது வேலையும் சிறந்ததாக இருக்கும்.


  

கர்மயோகத்தின் லட்சியம்

வெவ்வேறு பாதைகள்மூலம் நாம் ஒரே குறிக்கோளை அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான கருத்தாகும். இந்தப் பாதைகளை நான் பொதுவாக கர்மம், பக்தி, யோகம், ஞானம் என்று நான்காகப் பிரித்திருக்கிறேன். ஆனால் இந்தப் பிரிவுகள் துல்லியமாகக் கோடிட்டுப் பிரிக்கப்படாதவை. ஒவ்வொன்றும் முற்றிலும் தனியானவை அல்ல, ஒன்றோடொன்று கலந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கலப்பில் எந்த அடையாளம் முக்கியமாகத் தென்படுகிறதோ, அதை வைத்து அந்தப் பிரிவை அழைக்கிறோம். கர்மத்தைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதவர்கள். பக்தியுடன் வழிபடுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாதவர்கள், வெறும் ஞானத்தைத் தவிர வேறெதுவும் அற்றவர்கள் என்று தனித்தனியாக யாரையும் நீங்கள் காண முடியாது. எத்தகைய மனப்போக்கு, எந்த அடையாளம் ஒருவரிடம் சிறந்து விளங்குகிறதோ, அதற்கு ஏற்ப இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன. கடைசியில் இந்த நான்கு பாதைகளும் சேர்ந்து ஒன்றாகிவிடுவதை நாம் கண்டோம். எல்லா மதங்களும், எல்லா செயல்முறைகளும், எல்லா வழிபாட்டு முறைகளும் ஒரே குறக்கோளை நோக்கியே நம்மை அழைத்துச் செல்கின்றன.

அந்த லட்சியம் எது என்பதைக் காட்ட நான் முயன்றுள்ளேன். நான் புரிந்துகொண்டாடி, அந்த லட்சியம் முக்திதான். சுதந்திரம்தான் நம்மைச் சுற்றி நாம் காண்கின்ற ஒவ்வொன்றும், அணுவிலிருந்து மனிதர் வரையில், உயிரற்ற ஜடப் பொருளணுவிலிருந்து உலகின் மிகச் சிறிந்த உணர்வுப் பொருளான மானிட ஆன்மாவரையில் எல்லாமே சுதந்திரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் பிரபஞ்சம் முழுவதுமே சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தின் விளைவுதான். 

எந்தக் கூட்டுப்பொருளை எடுத்துக்கொண்டாலும் அதன் ஒவ்வொரு அணுவும் தன் சொந்த வழியில் செல்லவே,பிற அணுக்களிலிருந்து பறந்து விலகவே முயல்கின்றன. அவை அவ்வாறு விலகிச் செல்லாமல் மற்ற அணுக்கள் அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. 

பூமி சூரியனிலிருந்து பறந்தோட முயல்கிறது. சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்லத் துடிக்கிறது. ஒவ்வொரு பொருளும் எல்லையற்று அகன்று வியாபிக்கின்ற தன்மை உடையதாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்தின் அடிப்படையும் சுந்திரத்திற்கான ஒரு போராட்டமே.

இந்த இயல்பின் உந்துவேகத்தால்தான் மகான் பிரார்த்திக்கிறார். திருடன் கொள்ளையடிக்கிறான். செயலின் பாதை சரியான திசையில் இல்லை என்றால், அதை நாம் தீமை என்கிறோம். இதே உந்துவேகம் சரியான உயர்ந்த வழியில் வெளிப்படுமானால் அதை நன்மை என்று கூறுகிறோம். ஆனால் இரண்டிலும் உந்துவேகம் ஒன்றுதான். சுதந்திரத்திற்கான போராட்டம்தான். 

தான் கட்டுண்ட நிலையில் இருப்பதை அறிந்து மகான் வேதனை கொள்கிறார். அதிலிருந்து விடுபட விரும்புகிறார். அதற்காக இறைவனை வணங்குகிறார். குறிப்பிட்ட சில பொருட்கள் தன்னிடம் இல்லையென்பதால் வேதனை கொள்கிறான் திருடன். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்து, அதிலிருந்து விடுபட விரும்புகிறான், அதனால் திருடுகிறான். எனவே உணர்வுள்ளதாகட்டும். உணர்வற்றதாகட்டும் இயற்கை அனைத்திற்கும் ஒரே லட்சியம் சுதந்திரம் தான். அறிந்தோ அறியாமலோ ஒவ்வொன்றும் அந்தச் சுதந்திரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு மகான் தேடுகின்ற சுதந்திரம், திருடன் தேடுகின்ற சுதந்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மகான் நாடுகின்ற சுதந்திரம் அவரை எல்லையற்ற இன்பத்திற்கு விவரிக்க முடியாத ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்கிறது. திருடன் நேசிக்கின்ற ஒன்றோ அவனது ஆன்மாவை மேலும் மேலும் பல்வேறு சங்கிலிகளால் கட்டிக் சிறையிடுகிறது.

சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தின் வெளிப்பாட்டை ஒவ்வொரு மதத்திலும் காண முடியும். எல்லா நன்னெறிகளுக்கும் சுயநலமின்மைக்கும், அதாவது சிறிய உடம்பே தாங்கள் என்று மனிதர்கள் எண்ணுவதிலிருந்து விடுபடுவதற்கும் அதுதான் அடிப்படையாக உள்ளது. நல்லது செய்கிறான் என்றால் பிறருக்கு உதவுகிறான் என்றால் நான் எனது என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவனால் அடங்கிக் கிடக்க முடியவில்லை என்பதே பொருள். இந்தச் சுயநலத்தை எவ்வளவு விடலாம் என்பதற்கான எல்லைகள் எதுவும் இல்லை. முழுமையான சுயநலமின்மையே லட்சியம் என்றுதான் மிகச் சிறந்த நன்னெறிக் கோட்பாடுகள் எல்லாமே போதிக்கின்றன. இந்த முழுமையான சுயநலமின்மையை ஒருவன் அடைந்தால் அவன் என்ன ஆவான்? அவன் அதன்பிறகு ஒரு சிறியவனாக, திரு. இன்னார் ஆக இருக்க மாட்டான்; எல்லையற்ற விரிவைப் பெற்று விடுவான். முன்பு அவனுக்கிருந்த சிறியதான தனி மனிதத்துவம் என்றென்றைக்குமாக அவனிடமிருந்து போய்விடும். அவன் எல்லையற்றவனாகி விடுவான்.

இந்த எல்லையற்ற விரிவுதான் எல்லா மதங்களுடையவும் ஒழுக்கங்களுடையவும் தத்துவங்களுடையவும் போதனையின் லட்சியமாகும். மனிதனைச் சிறிய உடம்பிற்குள் மட்டுமே காண்பவர்கள் இந்தக் கருத்தைத் தத்துவரீதியாக விளக்குவதைக் கேட்டாலே அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் நன்னெறிபற்றி உபதேசிக்கும்போது அவர்களும் இதே கருத்தைத்தான் சொல்கிறார்கள், அவர்களும், மனிதனின் சுயநலமின்மைக்கு ஓர் எல்லையை ஏற்படுத்துவதில்லை. மனிதனை இந்தச் சிறிய உடம்பிற்குள் மட்டுமே காண்பவர்களுள் ஒருவன் தங்கள் பாதைமூலம் முழுமையான சுயநலமின்மையை அடைந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அவனை வேறு பாதைகள்மூலம் அதேநிலையை அடைந்தவர்களிடமிருந்து எப்படி வேறுபடுத்திக் காண்பது? அவன் இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றாகிவிட்டான். அப்படி ஆவதுதான் எல்லோருடைய குறிக்கோளாகும். ஆனால் இந்த அப்பாற்விக்குத் தன் ஆராய்ச்சியறிவை அதன் சரியான முடிவுவரை தொடர்ந்து செல்வதற்கான தைரியமில்லை. இதுதான் வேற்றுமை.

தன்னலமற்ற செயலின்மூலம் மனித வாழ்வின் லட்சியமான அந்தச் சுதந்திரத்தை அடைவதுதான் கர்ம யோகம். தன்னலச் செயல் ஒவ்வொன்றும் நாம் லட்சியத்தை அடைவதிலிருந்து நம்மை விலக்குகிறது. சுயநலமற்ற செயல் ஒவ்வொன்றும் நம்மை அந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. அதனால்தான் ஒழுக்கம் என்பதற்குக் கொடுக்க முடிந்த ஒரே விளக்கம் இதுதான். சுயநலமாக உள்ளது தீயொழுக்கம், சுயநலமின்மையாக உள்ளது நல்லொழுக்கம்.

ஆனால் விளக்கங்களுக்கு வரும்போது விஷயம் அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை. உதாரணமாக, நான் முன்பே, சொல்லியதுபோல் சூழ்நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரே செயல் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சுயநலமற்றதாக இருக்கும், மற்றொரு சூழ்நிலையில் சுயநலமுடையதாகி விடும். எனவே நாம் ஒரு பொதுக்கருத்தை மட்டுமே கூற முடியும். விளக்கங்களைப் பொறுத்தவரையில் அந்தச் செயல் நிகழும் காலம், இடம், சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்வதற்கு விட்டுவிட வேண்டும். ஒரு நாட்டில் ஒருவிதமான நடத்தை நன்னெறியாகக் கருதப்படும். மற்றொரு நாட்டில் அதே நடத்தை தீயொழுக்கமாகக் கொள்ளப்படும் ஏனென்றால் சூழ்நிலை வேறுபடுகிறது.

இயற்கை முழுவதன் லட்சியமும் சுதந்திரம்தான் முழுமையான சுயநலமின்மையின் மூலம் மட்டுமே சுதந்திர நிலையை அடைய முடியும். சுயநலமற்ற ஒவ்வோர் எண்ணமும் வாக்கும் செயலும் மனிதனை லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. எனவே அவை நன்னெறி என்று அழைக்கப்படுகின்றன. இந்த விளக்கம் ஒவ்வொரு மதத்திற்கும் நீதிநெறிக் கோட்பாட்டிற்கும் பொருந்துவதை நீங்கள் காணலாம்.

சில பிரிவுகளில் நீதிநெறி என்பது பரம்பொருளிடமிருந்து, கடவுளிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவன் ஏன் இதைச் செய்ய வேண்டும், ஏன் அதைச் செய்யக்கூடாது? என்று கேட்டால், அது இறைவனின் ஆணை என்று பதிலளிக்கிறார்கள். எதிலிருந்து வந்ததாக இருந்தாலும், அவர்களின் நீதிநெறிக் கோட்பாட்டிற்கும், சிறிய நான் என்ற உங்கள் தனித்துவத்தை எண்ணாதீர்கள். அதனை விட்டுவிடுங்கள். என்பதுதான் மையக்கருத்தாக இருக்கிறது. இத்தகைய உன்னதமான நீதிநெறிக் கருத்து இருந்தாலும் தங்கள் தனித்துவத்தை விட வேண்டும் என்று நினைக்கும்போது சிலர் அஞ்சி நடுங்குகிறார்கள். முழுக்க முழுக்கச் சுயநலமற்ற, தனக்கென்று எதையும் நினைக்காத, தனக்கென்று எதையும் செய்யாத, தனக்கென்று எதையும் பேசாத ஒருவனைப்பற்றி எண்ணிப் பார்த்து, அவனது நான் எங்கே இருக்கிறது என்று சொல்லும்படி, இந்தச் சிறிய நான் என்பதைப் பற்றிக்கொண்டிருக்கும்

ஒருவனிடம் கூறுங்கள். சுயநலம் அழிந்தவனின் தனித்துவம் எங்கே இருக்கிறது என்று அவன் சொல்லட்டும். தனக்கென்று நினைத்தும், செயல்பட்டும், பேசியும் இருக்கும்வரைதான் ஒருவனுக்கு நான் என்ற எண்ணம் இருக்கும். பிறரை அண்டசராசரங்களை எல்லாவற்றையும் மட்டுமே உணரும்போது அவனது நான் அது எங்கே இருக்கிறது? அது ஒரேயடியாக மறைந்துவிட்டது.

எனவே கர்மயேகம் என்பது, சுயநலமின்மை மற்றும் நற்செயல்களைச் செய்வதன் மூலம் சுதந்திரம் பெற வைக்கின்ற ஒரு நீதிநெறிக் கோட்பாடாகும். ஒரு நெறியாகும். கர்மயோகி எந்தவிதமான கோட்பாட்டையும் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அவனுக்குக் கடவுளிடம்கூட நம்பிக்கை வேண்டும் என்பதில்லை. ஆன்மா எது என்பதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சுயநலமின்மையை உணர வேண்டும் என்ற சிறப்பான சொந்த லட்சியம் அவனுக்கு உள்ளது. அதை அவன் தன் சொந்த வழியில் நிறைவேற்றிக் கொள்ளவும் வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் இந்த உண்மை அவன் முன் பிரகாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் ஞானி தன் அறிவின் மூலமாகவும் அக விழிப்புணர்வின் மூலமாகவும், பக்தன் தன் அன்பின் மூலமாகவும் தீர்வு காண்கின்ற அதே பிரச்சினையை ஒரு கர்மயோகி எந்தவிதமான கொள்கை மற்றும் கோட்பாட்டின் துணையின்றி, வெறும் செயலின்மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டியவனாக இருக்கிறான்.

இப்போது அடுத்த கேள்வி வருகிறது. செயல் என்பது என்ன? உலகத்திற்கு நன்மை செய்வது என்பது என்ன? நம்மால் உலகிற்கு நன்மை செய்ய முடியுமா? சரியாகச் சொல்வதானால் உலகிற்கு உதவி செய்ய முடியாது; சாதாரண நிலையிலிருந்து சொல்வதானால் உதவி செய்ய முடியும். நிரந்தரமான நன்மையை நாம் உலகிற்குச் செய்ய முடியாது. அப்படிச் செய்ய முடியுமானால் உலகம் இப்போதுள்ள நிலையில் இருந்திருக்காது. நாம் ஒரு மனிதனின் பசியை ஐந்து நிமிடங்களுக்குத் தீர்த்து வைக்கலாம், ஆனால் அவனுக்கு மறுபடியும் பசி எடுக்கவே செய்யும். ஒருவனுக்கு நாம் எவ்வளவு இன்பங்களை அள்ளி வழங்கினாலும், அவையெல்லாம் கண நேரத்திற்கே நிலைக்கும். திரும்பத்திரும்ப வருகின்ற இந்த சுகதுக்கம் எனப்படுகின்ற காய்ச்சலை நிரந்தரமாகக் குணப்படுத்த யாராலும் முடியாது. அழியாத இன்பம் என்ற ஏதாவது ஒன்றை உலகத்திற்குக் கொடுக்க முடியுமா? கடலில் ஏதாவது ஓரிடத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தாமல் அலைகள் எழ முடியாது. மனிதனின் தேவைகளையும் ஆசைகளையும் கருத்திற்கொண்டு பார்த்தால், இந்த உலகத்தில் இருக்கின்ற நிலை பொருட்களில் ஒட்டுமொத்தம் எப்போதும் ஒரே அளவில்தான் இருக்கிறது. அதைக் குறைக்கவோ கூட்டவோ முடியாது. இன்று நான் அறிந்துள்ள மனித இனத்தின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதே துன்பங்களையும் இன்பங்களையும், இதே சுகங்களையும் துக்கங்களையும் இதே உயர்வு தாழ்வுகளையும் எப்போதும் நாம் காணவில்லையா? அன்றும் இன்றும் சிலர் பணக்காரர்களாகவும் சிலர் ஏழைகளாகவும், சிலர் உயர்ந்தவர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும் சிலர் நோயாளிகளாகவும்தானே இருக்கிறார்கள்! இந்த வேற்றுமைகள் பழங்காலத்தில் எகிப்தியரிடமும் கிரேக்கர்களிடமும் ரோமானியரிடமும் இருந்தது போலவே இன்று அமெரிக்கரிடம் உள்ளன. வரலாற்றைப் பொறுத்தவரையில் இவை என்றும் ஒரேபோல்தான் இருக்கின்றன.

சுகதுக்கங்களின் இந்த நீக்க முடியாத வேற்றுமைகளின் கூடவே அவற்றை நீக்குவதற்கான போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் காண்கிறோம். பிறரது வாழ்க்கைப் பாதையைச் சமன்படுத்திச் சீராக்குவதற்காகக் கடினமாகப் பாடுபடுகின்ற ஆயிரமாயிரம் ஆண்களையும் பெண்களையும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தந்துள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள்? பந்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அடித்து விளையாட மட்டுமே நம்மால் முடியும். உடம்பு நிலையில் வேதனைகளை விலக்கினால் அது மனத்தின் நிலையில் செல்கிறது. தாந்தே காட்டும் நரகத்தைப் போலுள்ளது இது. அங்கே கருமிகளுக்கு தங்கக்கட்டி ஒன்றைக் கொடுக்கிறார்கள், அவர்கள் அதை உருட்டிஉருட்டி ஒரு மலையுச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் சிறிதுதூரம் மேலே கொண்டு சென்றதும் அது உருண்டு கீழே வந்துவிடும். பொற்காலம் பற்றிய நமது பேச்சுக்கள் எல்லாம் சிறுவர் கதைபோல் கேட்க மிகவும் சுவையாக உள்ளன; அதற்குமேல் அவற்றிற்கு மதிப்பில்லை. பொற்காலம் பற்றிக் கனவுகாணும் எல்லா நாடுகளுமே, அந்தக் காலம் வரும்போது அதன் மேன்மையான அம்சம் எல்லாம் பிறரைவிடத் தங்களுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் பொற்காலத்தைப் பற்றிய அதிஅற்புதமான சுயநலமற்ற கருத்தாம்!

நம்மால் இந்த உலகத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது, அதுபோலவே வேதனையையும் அதிகப்படுத்த முடியாது. இந்த உலகத்தில் காணப்படுகின்ற இன்ப துன்பங்களின் மொத்த அளவு எப்போதும் ஒருபோலவே இருக்கும், நாம் செய்வதெல்லாம் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும், அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் அதைத் தள்ளுவதுதான், ஆனால் அது எப்போதும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அப்படி இருப்பது அதன் இயல்பு. ஏற்றமும் இறக்கமும், எழுச்சியும் வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு. அப்படியில்லை என்று கருதுவது சாவே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது. சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது. ஏனெனில் வாழ்வு என்றால் அதில் சாவு என்பதும் அடங்கியே உள்ளது. அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.

விளக்கு எரியும்போது அழிந்துகொண்டே இருக்கிறது, அதுதான் அதனுடைய வாழ்க்கை. நீங்கள் வாழ்வை விரும்பினால், அதற்காக ஒவ்வொரு கணமும் செத்துக் கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு தோற்றங்களே வாழ்வும் சாவும். ஒரே அலையின் வீழ்ச்சியும் எழுச்சியுமே அவை; இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையாகின்றன ஒருவன் வீழ்கின்ற பக்கத்தைப் பார்த்துவிட்டு துன்பநோக்கு உடையவனாகிவிடுகிறான் மற்றொருவன் எழுகின்ற பக்கத்தைப் பார்த்துவிட்டு இன்பநோக்கு உடையவனாகிறான். சிறுவன் பள்ளி செல்கிறான். தாயும் தந்தையும் அவனுக்கு வேண்டியதையெல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள். அவனுக்கு எல்லாமே ஆனந்தமயமாக இருக்கின்றன. அவனுடைய தேவைகளும் சொற்பமே. அவன் எல்லாவற்றையும் இன்பமயமாகக் காண்கிறான். வயதானவனோ பல்வேறான தன் அனுபவங்களின் காரணமாக பரபரப்பின்றி இருக்கிறான். அவனது உற்சாகம் பெருமளவு தணிந்துவிடுகிறது. அதுபோலவே, நாற்புறமும் அழிவின் சின்னங்களே காணப்படுகின்ற பழைய நாடுகள், புதிய நாடுகளைவிட உணர்ச்சி குன்றிக் காணப்படுவது இயல்பு தான். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுக்கு நாடு, ஆயிரம் ஆண்டுக்குக் காடு என்ற ஒரு பழமொழி உள்ளது. இவ்வாறு நாடு காடாவதும் காடு நாடாவதும் எங்குமே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பார்க்கின்ற பக்கத்தைப் பொறுத்து மக்களை இன்ப அல்லது துன்பநோக்குக் கொண்டவர்களாக ஆக்கத்தான் செய்கிறது.

அடுத்து, நாம் எடுத்துக்கொள்வது சமத்துவக் கருத்து. இந்தப் பொற்காலக் கருத்துக்கள் மனிதர்களை வேலையில் ஈடுபடுத்துவதற்குச் சிறந்த தூண்டுசக்திகளாக விளங்கி வருகின்றன. கடவுள் இந்த உலகை ஆள்வதற்கு வரப் போகிறார், அதன்பின் எந்தவித வேற்றுமைகளும் இருக்காது என்று இந்தக் கருத்தைப் பல மதங்களும் தங்கள் ஓர் அம்சமாகப் பிரச்சாரம் செய்கின்றன. இந்தக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்பவர்கள் வெறும் கொள்கைவெறியர்கள். ஆனால் மனிதர்களுள் மிக நேர்மையானவர்களும் இந்த வெறியர்கள்தாம். இந்தக் கொள்கைவெறியின் வெறும் கவர்ச்சியின் அடிப்படையில்தான் கிறிஸ்தவ மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தக் கவர்ச்சிதான் கிரேக்க மற்றும் ரோமானிய அடிமைகளை அந்த மதத்தின்பால் ஈர்த்தது, பொற்காலத்தை உருவாக்கப்போகின்ற இந்த மதத்தின் கீழ் இனிமேல் அடிமைத்தனமே இருக்காது, உண்பதற்கும் உடுப்பதற்கும் அளவில்லாமல் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் கிறிஸ்தவ மதத்தில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்தார்கள். இந்தக் கருத்தை முதலில் பிரச்சாரம் செய்தவர்கள் கொள்கைவெறி பிடித்த அறிவிலிகள் என்பதில் சந்தேகமே இல்லை; ஆனால் அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள்.

நவீன காலத்தில், இந்தப் பொற்கால லட்சியம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உருவில் எல்லாம் வருகிறது. இதுவும் கொள்கைவெறிதான். உண்மையான சமத்துவம் என்பது இந்த உலகத்தில் எந்தக் காலத்திலும் இல்லாததும், ஒருபோதும் இருக்க முடியாததும் ஆகும். இங்கே நாம் எல்லோரும் எப்படிச் சமமாக இருக்க முடியும்? இருக்க முடியாத இந்தச் சமத்துவத்தின் பொருள் அழிவு என்பதே, இந்த உலகத்தை இப்போதைய நிலையில் வைத்திருப்பது எது? சமநிலையிலிருந்து வழுவியதுதான் பிரபஞ்ச சிருஷ்டிக்கு முந்தைய பிரளய நிலையில் முழுமையான சமநிலை இருந்தது, அதன்பிறகு இந்தப் பிரபஞ்சத்திற்கு உருவம் கொடுத்த ஆற்றல்கள் எவ்வாறு தோன்றின? போராட்டத்தால் போட்டியால், சண்டையால்தான்.ஜடப் பொருளின் அணுக்களைச் சமநிலையில் வைத்தால், படைப்புச் செயல் ஏதாவது நடைபெறுமா? முடியாது என்று விஞ்ஞானம் கூறுவது நமக்குத் தெரியும். தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துங்கள், தண்ணீரின் ஒவ்வொரு துளியும் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதியவாறு மீண்டும் பழைய அமைதியான நிலைக்குத் திரும்ப முயல்வதைக் காணலாம் இதுபோலவே நாம் பிரபஞ்சம் என்று அழைக்கின்ற இந்த எல்லாமே அதிலுள்ள பொருட்கள் எல்லாமே முழுமையான சமநிலையைத் திரும்ப அடைவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. அதை அடைந்து விட்டால் மறுபடியும் ஒரு சலனம் எழுகிறது. உடனே ஜடப்பொருள் அணுக்கள் சேர்கின்றன. படைப்புச் செயல் நடைபெறுகிறது. சமநிலையின்மைதான் படைப்பின் உண்மையான அடிப்படை, அதேவேளையில், சமநிலையைக் குலைக்கின்ற சக்திகள் படைப்பிற்கு எவ்வளவு முக்கியமோ, சமநிலையை அடையப் போராடுகின்ற சக்திகளும் அதே அளவு முக்கியமானதாகும்.

முழுமையான சமத்துவம், அதாவது எல்லா நிலைகளிலும் போராடிக் கொண்டிருக்கின்ற எல்லா சக்திகளும் முழுமையான சமநிலை அடைவது என்பது இந்த உலகில் ஒருபோதும் ஏற்பட முடியாததாகும். அத்தகைய நிலையை அடையும்முன்னரே இந்த உலகம் எந்த உயிரும் வாழத் தகுதியற்ற இடமாகிவிடும்; யாருமே இங்கு இருக்க மாட்டார்கள். எனவே இந்தப் பொற்காலம், முழுமையான சமத்துவம் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்கள் என்பது மட்டுமல்ல. அவற்றை நடைமுறையில் கொண்டு வர முயற்சிசெய்தோமானால்.நிச்சயமாக இந்த உலகின் அழிவுநாளுக்கே அது நம்மை அழைத்துச் செல்லும்.

மனிதர்களுக்கிடையே வேறுபாடுகளை உண்டாக்குவது எது? பெருமளவிற்கு அறிவுத்திறம்தான். நாம் எல்லோரும் ஒரே அறிவுத் திறத்துடன் பிறந்திருக்கிறோம் என்று பைத்தியக்காரனைத் தவிர வேறு யாரும் இன்று சொல்ல மாட்டார்கள். வேறுபட்ட ஆற்றல்களுடன்தான் நாம் இந்த உலகிற்கு வருகிறோம். சிலர் மாமனிதர்களாகவும் சிலர் சாதாரண மனிதர்களாகவும்தான் பிறக்கிறோம். பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்ட இந்த நிலையிலிருந்து விடுபட வழியே இல்லை.

செவ்வந்தியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில்தான் உங்கள் முன்னோர்கள் இங்கு வந்தார்கள். இந்த நாட்டில்தான் அவர்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள்! எல்லோருமே சமம் என்றால், ஏன் அந்தச் செவ்வந்தியர்கள் இங்கே எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை? நகரங்களை உண்டாக்கவில்லை? உங்கள் முன்னோர் வேறுபட்ட அறிவுத்திறத்துடனும் பூர்வ சம்ஸ்காரங்களுடனும் இங்கே வந்தார்கள். அவை செயல்பட்டு இவ்வாறெல்லாம் வெளிப்பட்டது. முழுக்கமுழுக்க வேற்றுமையே இல்லாத நிலை என்பது மரணமே. எதுவரை இந்த உலகம் இருக்குமோ, அதுவரையில் இந்த வேற்றுமைகளும் இருக்கும்; இருந்தேயாக வேண்டும். படைப்பின் ஒரு கல்பம். ஒரு சுழற்சி முடியும்போது மட்டுமே முழுமையான சமத்துவம் நிலவுகின்ற பொற்காலம் வரமுடியும் . அதற்கு முன்னால் சமத்துவம் என்பது இருக்க முடியாது என்றாலும் அந்தப் பொற்காலத்தை அடைவதற்கான ஆர்வம் ஒரு மகத்தான தூண்டுசக்தியாகச் செயல்படுகிறது. படைப்பு நடப்பதற்குச் சமமின்மை தேவையாவதுபோல், அதைச் சமப்படுத்துவதற்கான முயற்சியும் அவசியம். முக்திபெற்று இறைவனிடம் திரும்பச் செல்வதற்கான போராட்டம் இல்லையென்றால் படைப்பும் உண்டாகாது. இந்த இரண்டு சக்திகளுக்கு இடையே உள்ள வேற்றுமைதான், மனிதர்கள் செயல்படுவதற்கான நோக்கங்களின் இயல்பைத் தீர்மானிக்கிறது. செயல்புரிவதற்கான இந்த நோக்கங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுள் சில பந்தத்திற்கு இட்டுச் செல்வனவாகவும் மற்றுள்ளவை முக்திக்கு அழைத்துச் செல்வனவாகவும் உள்ளன.

சக்கரத்திற்குள் சக்கரங்களாக உள்ள இந்த உலகம் ஒரு பயங்கர எந்திரம். நாம் அதில் கையை வைத்து மாட்டிக் கொண்டோமானால் நம் கதை முடிந்தது. குறிப்பிட்டதொரு கடமையைச் செய்து முடித்ததும், ஓய்வாக இருக்கலாம் என்றுதான் நாம் ஒவ்வொரு வரும் நினைக்கிறோம். ஆனால் அந்தக் கடமையில் ஒரு பகுதியைச் செய்து முடிக்கும் முன்பே மற்றொரு கடமை தயாராகக் காத்திருக்கிறது. உலகமாகிய இந்த மகத்தான சிக்கலான எந்திரத்தால் நாம் அனைவரும் இழுத்துச் செல்லப்படுகிறோம். இதிலிருந்து மீள இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று, அந்த எந்திரத்தைப் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அதனை அதன் போக்கில் போகவிட்டு விலகி நிற்பது, அதாவது ஆசைகளை விடுவது, சொல்வதற்கு இது மிகவும் எளிது, ஆனால் செயலுக்கு வரும்போது பெரும்பாலும் முடியவே முடியாதது. கோடியில் ஒருவரால்கூட இது முடியுமா என்பது சந்தேகமே, மற்ற வழி சம்சாரத்தில்மூழ்கி, செயலின் ரகசியத்தை அறிந்து கொள்வது. இதுதான் கர்மயோகத்தின் வழி. உலக எந்திரத்தின் சக்கரங்களிலிருந்து விலகி ஓடாதீர்கள்! அதனுள்ளேயே நின்று செயலின் ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்! உள்ளிருந்தபடியே சரியான முறையில் வேலை செய்தால் வெளியேறவும் முடியும். வெளியேறுவதற்கான வழியும் இந்த எந்திரத்தின் வழியாகத்தான் உள்ளது.

செயல் என்றால் என்ன என்பதைக் கண்டோம். இயற்கையின் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியே செயல். அது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கும். இறைவனை நம்புபவர்கள் இதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நமது உதவியை எதிர்பார்க்கும் அளவிற்கு அவர் திறமையற்றவர் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நடந்து கொண்டிருந்தாலும், நமது லட்சியம் சுதந்திரம், நமது லட்சியம் சுயநலமின்மை, கர்மயோகத்தின்படி, செயல் புரிவதன் மூலமாக அந்த லட்சியத்தை அடைய வேண்டும். இந்த உலகை முற்றிலும் இன்பமயமாக்குவது போன்ற கருத்துக்கள் எல்லாம் கொள்கைவெறியர்களுக்கான தூண்டுசக்திகள் என்ற அளவில் நல்லவையாக இருக்கலாம். ஆனால் கொள்கைவெறி நன்மையைப்போல் தீமையையும் கொண்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கான நமது இயல்பான ஆர்வத்தைத் தவிர, செயல்புரிவதற்கு வேறு தூண்டு சக்தி எதற்கு என்று கேட்கிறான் கர்மயோகி. சாதாரண லட்சியங்களைக் கடந்தவர்களாக இருங்கள். செயல் புரியவே உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதன் பலன்களைப் பெறுவதற்கு உரிமை இல்லை. இதைப் புரிந்துகொள்வதற்கும் செயல்முறைப் படுத்துவதற்குமான பயிற்சி பெற மனிதனால் முடியும் என்று கர்மயோகி கூறுகிறான். நன்மை செய்வது என்பது ஒருவனில் ஒரு பகுதியாகிவிட்டால் அவன் வெளியிலிருந்து எந்தத் தூண்டுசக்தியையும் தேட மாட்டான். நாம் நன்மை செய்வோம். ஏனென்றால் நன்மை செய்வது நல்லது. சொர்த்திற்குப் போவதற்காக நற்செயல் புரிந்தாலும் அதுவும் அவனைப் பந்தப்படுத்திக் கீழே வீழ்த்திவிடுகிறது என்கிறான் கர்மயோகி. எந்தச் செயலானாலும், அதில் சிறிதேனும் சுயநலம் கலந்திருக்குமானால் அது நமக்குச் சுதந்திரத்தைத் தருவதற்குப் பதிலாக நமது கால்களில் மற்றொரு சங்கிலியைக் கட்டிப் பிணைக்கிறது.

எனவே கர்ம பலன்களை எல்லாம் விட்டுவிடுங்கள். அதில் பற்றுக் கொள்ளாதீர்கள் இது ஒன்றே வழி, நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் இந்த உலகம் நாமல்ல, நாமும் இந்த உலகமல்ல, உண்மையில் நாம் உடம்பு அல்ல, உண்மையில் நாம் வேலை செய்வதே இல்லை, நிரந்தரமான ஓய்விலும் அமைதியிலும் திளைத்திருக்கின்ற ஆன்மாவே நாம். நாம் ஏன் நம்மை எதனோடும் பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்? நாம் சிறிதும் பற்றில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் நல்லது. ஆனால் அதைச் சாதிப்பது எப்படி? சுயநல நோக்கம் சிறிதும் இல்லாமல் செய்யப்படுகின்ற ஒவ்வொரு நல்ல காரியமும் புதிய சங்கிலியைப் பிணைப்பதற்குப் பதிலாக ஏற்கனவே நம்மைப் பிணைத்திருக்கின்ற ஒவ்வொரு சங்கிலிகளையும் உடைக்கிறது. எந்தவொரு பிரதிபலனையும் கருதாமல் நாம் இந்த உலகத்தினுள் அனுப்புகின்ற ஒவ்வொரு நல்ல சிந்தனையும் அங்கே சேமித்து வைக்கப்பட்டு, நம்மைக் கட்டியிருக்கும் ஒவ்வொரு சங்கிலியை உடைத்து, நம்மை மேன்மேலும் தூயவர்களாக்கி, இறுதியில் மனிதருள் புனிதர்களாக ஆக்குகிறது. இவையெல்லாம் பித்துக்குளித்தனமாக, ஏதோ தத்துவமயமாக, நடைமுறைக்குச் சாத்தியமாகாத, கொள்கையளவில் மட்டுமே இருக்கக் கூடியவையாகத் தோன்றலாம். பகவத்கீதையின் இந்தக் கருத்திற்கு எதிரான பல வாதங்களையும் நான் படித்திருக்கிறேன். பலன் கருதாமல் பணி செய்ய முடியாது என்றே பலரும் சொல்கிறார்கள். கொள்கைவெறியால் தூண்டப்பட்டு செயல்படுவதைத் தவிர, பலன் கருதாப் பணி என்ற ஒன்றை அவர்கள் கண்டதே இல்லை. அதனால்தான் இப்படிச் சொல்கிறார்கள்.

கர்மயோகத்தை உண்மையிலேயே தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடித்த ஒரு மனிதரைப்பற்றி மட்டும் கூறி இதனை நிறைவு செய்கிறேன். அவர் புத்தர். கர்மயோகத்தை முழுமையாக நடைமுறையில் கொண்டு வந்த யாராவது இருப்பார்களானால் அது அவர் மட்டுமே. அவரைத் தவிர உலகின் அனைத்து மகான்களையும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவினர் தாங்கள் இறைவனின் அவதாரங்கள் என்றும் மற்றொரு பிரிவினர் தங்களை செயல்படுவதற்கான தூண்டுசக்தியை வெளியிலிருந்தே பெற்றார்கள். வெளியிலிருந்து பிரதிபலனையும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடவுளைப் பற்றிய பல்வேறான உங்கள் கொள்கையைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஆன்மாவைப் பற்றிய நுட்பமான கோட்பாடுகளையெல்லாம் விவாதித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? நன்மை செய், நல்லவனாக இரு! அது உனக்குச் சுதந்திரத்தைத் தரும். சத்தியம் என்பது எதுவாக இருந்தாலும் அந்த சத்தியத்திடம் உன்னை அழைத்துச் செல்லும் என்று கூறிய ஒரே மகான் புத்தர்தான்.

முற்றிலும் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் புத்தர். அவரைவிட அதிகமாகச் செயல்புரிந்தவர்தான் யார்? எல்லோரையும்விட இவ்வளவு உயரத்தில் திளைத்த ஒருவரை உலக வரலாற்றில் எனக்குக் காட்டுங்கள். இத்தகைய ஆழ்ந்த தத்துவ ஞானமும் இவ்வளவு பரந்த இதயமும் கொண்ட ஒரே ஒருவரை மட்டுமே மனிதகுலம் இதுவரை தோற்றுவித்துள்ளது. இந்த மகத்தான தத்துவ ஞானி மிகவுயர்ந்த தத்துவத்தை உபதேசித்தார். அதேவேளையில் மிகச் சாதாரணமான விலங்குகளிடமும் ஆழ்ந்த இரக்கம் உடையவராக இருந்தார். அவர் தனக்காக எந்தத் தனி உரிமையையும் கோரவில்லை. அவர்தான் முழுக்க முழுக்க எந்தவிதமான தூண்டுதல்களும் இல்லாமல் செயல்பட்ட லட்சியக் கர்மயோகி. இதுவரை பிறந்தவர்களுள் மாமனிதர் என்று அவரை மனித வரலாறு காட்டுகிறது. ஒப்புவமை இல்லாத அளவிற்குக் கனிவும் அறிவும் அவரிடம் சங்கமித்திருந்தது. இத்தகைய சங்கமத்தை இதுவரை பூமி கண்டதில்லை. இதுவரை வெளிப்பட்டவற்றுள் மகோன்னதமான ஆன்ம சக்தியின் நிலைக்களன் அவர். உலகம் முதன்முதலாகக் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அவர். சாஸ்திரங்கள் கூறுகின்றன என்பதற்காக ஒன்றை நம்பாதீர்கள். உங்கள் தேசிய பாரம்பரியம் என்பதற்காக நம்பாதீர்கள்! சிறு வயதிலிருந்தே உங்களுக்கு உபதேசிக்கப்பட்டது என்பதற்காக நம்பாதீர்கள்! உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள்! பகுத்து உணர்ந்துகொண்ட பிறகு, அது எல்லோருக்கும் நன்மை தரும் என்று கண்டால் அதனை நம்புங்கள். வாழ்வில் அதைச் செயல்படுத்துங்கள். மற்றவர்களும் அதைப் பின்பற்ற உதவுங்கள் என்று முதன் முதலாகத் துணிவுடன் முழங்கியவர் அவர்.

பணமோ, புகழோ வேறு எந்தப் பிரதிபலனையுமோ எதிர்பார்க்காமல் யார் வேலை செய்கிறார்களோ, அவர்களே சிறப்பாக வேலை செய்ய முடியும். அப்படிச் செயல்புரிய முடியும்போது அவன் புத்தராகி விடுகிறான். உலகத்தையே மாற்றிவிடக்கூடிய அளவு வேலை செய்வதற்கான ஆற்றல் அவனிடமிருந்து பொங்கி எழுகிறது. கர்மயோகத்தின் மிகவுயர்ந்த லட்சியத்தின் பிரதிநிதியாக அவன் விளங்குகிறான்.




Site Content

Additional Information

  

அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!

பிரகிருதி அல்லது இயற்கை மூன்று சக்திகளால் ஆக்கப்பட்டிருப்பதாக சாங்கியத் தத்துவம் கூறுகிறது. இவை சம்ஸ்கிருதத்தில் சத்வம், ரஜஸ், தமஸ் என்று அழைக்கப்படுகின்றன. தூல உலகில் இவை முறையே சமநிலை, செயல்நிலை, மந்தநிலை என்ற நிலைகளில் வெளிப்படுவதாக நாம் கொள்ளலாம். இருள் அல்லது செயலற்றிருப்பது தமஸின் அடையாளம். ஈர்ப்பு மற்றும் விலக்கு சக்திகளாக வெளிப்பட்டுச் செயல்புரிவது ரஜஸ். இந்த இரண்டின் சமநிலையே சத்வம்.
 

ஒவ்வொரு மனிதனிடமும் இந்த மூன்று சக்திகளும் உள்ளன. சிலவேளைகளில் தமஸ் தலைதூக்கி நிற்கும் அப்போது நாம் சோம்பேறிகளாக இருப்போம், நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஏதோ சில கருத்துக்களைப் பிடித்துக் கொண்டோ, வெறும் சோம்பேறித்தனம் காரணமாகவோ கட்டுண்டிருப்போம். மற்ற நேரங்களில் செயல்நிலை ஓங்குகிறது, சிலவேளைகளில் இரண்டையும் சமன்படுத்துகின்ற அமைதி நிலவுகிறது. வெவ்வேறு மனிதர்களில் பொதுவாக இந்த மூன்று சக்திகளுள் ஏதாவது ஒன்று மேலிட்டு நிற்கும். ஒருவன் செயலற்று, மந்தமாக சோம்பேறியாக இருக்கிறான். இன்னொருவனிடம் செயல், ஆற்றல், சக்தி வெளிப்பாடு இவை மிகுந்திருக்கிறது. இன்னும் சிலரோ செயல், செயலின்மை என்ற இரண்டுமே சமன்படுவதால் விளைகின்ற இனிமையும் அமைதியும் மென்மையும் நிறைந்தவர்களாகக் காணப்படுவார்கள். மிருகங்கள், மரங்கள், மனிதர்கள் என்று படைப்பு முழுவதிலுமே இந்த வெவ்வேறு சக்திகளின் அதிகமான அல்லது குறைந்த வெளிப்பாட்டை நாம் காணலாம். கர்மயோகத்தில் இந்த மூன்று குணங்களையும் சிறப்பாக விளக்க வேண்டியுள்ளது. அவை என்ன. அவற்றை எப்படி உபயோகிப்பது என்பதைக் கற்பித்து, நாம் இன்னும் சிறப்பாகச் செயல்புரிவதற்குக் கர்மயோகம் உதவுகிறது.
 

மனித சமுதாயம் என்பது பல படிகளுடன் கூடிய ஓர் அமைப்பாக உள்ளது. நன்னெறியைப்பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். கடமை என்றால் என்ன என்பதும் நாம் அறிந்ததே. அதேவேளையில் நன்னெறி என்பதன் பொருள் நாட்டிற்குநாடு பெரிதும் மாறுபட்டிருப்பதையும் நாம் காண்கிறோம். ஒரு நாட்டில் நன்னெறியாகப் போற்றப்படுவது இன்னொரு நாட்டில் மிகவும் இழிந்த செயலாகத் தூற்றப்படுகிறது. உதாரணமாக, சில நாடுகளில் சகோதரர்களின் பிள்ளைகள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்கள். மற்றொரு நாட்டிலோ இது முற்றிலும் முறைகேடாகக் கருதப்படுகிறது. சில நாடுகளில் சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளலாம். இன்னொரு நாட்டில் இது தவறென்று கருதப்படும். ஒரு நாட்டில் மக்கள் ஒருமுறைதான் திருமணம் செய்து கொள்ளலாம். இன்னொரு நாட்டில் பலமுறை திருமணம் கூறப்படுபவை அனைத்திலுமே அளவுகோல் பெரிதும் தழுவியதான அளவுகோல் ஒன்று இருந்தேயாக வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம்.
 

கடமையின் விஷயமும் இதுதான். அது பற்றிய கருத்தும் நாட்டிற்கு நாடு வெகுவாக வேறுபடுகிறது. ஒரு நாட்டில் ஒருவன் சில காரியங்களைச் செய்ய விலையென்றால் கடமை தவறியவனாகக் குறைகூறப் படுவான். அதே செயல்களை அவன் வேறொரு நாட்டில் செய்தாலோ அவன் தவறாக நடந்து கொண்டதாகக் குறைகூறப்படுகிறான். எனினும் கடமை பற்றிய உலகம் தழுவிய ஏதாவது கருத்து இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இதுபோலவே சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சிலவற்றைத் தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள். அதே நேரத்தில் மற்றொரு பிரிவினர் அது முழுக்கமுழுக்கத் தவறு என்று கருதுகிறார்கள்.
அத்தகைய செயல்களைச் செய்ய நேருமானால் துடித்துவிடுகிறார்கள்.
 

இரு வழிகள். நமக்குத் தென்படுகின்றன ஒன்று அறிவிலிகளின் வழி. உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. மற்றவை அனைத்தும் தவறு என்று அது கூறுகிறது. மற்றொன்று சான்றோரின் வழி; நமது மன அமைப்பிற்கும் நான் வாழ்கின்ற நிலைக்கும் ஏற்ப கடமையும் ஒழுக்கமும் மாறலாம் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கடமை என்பதிலும் ஒழுக்கம் என்பதிலும் படிகள் இருக்கின்றன. வாழ்க்கையின் ஒரு நிலையில், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கடமையாக இருப்பது மற்றொன்றில் அவ்வாறு இருக்காது. இருக்கவும் முடியாது என்பதுதான்.
 

இதற்கு ஓர் உதாரணம் கூறுவோம். எல்லா ஆச்சாரியர்களுமே தீமையை எதிர்க்காதீர்கள். அஹிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று உபதேசித்து இருக்கிறார்கள் இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகிவிடும். அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் வாழ்க்கையையும் பறித்துக்கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அஹிம்சை சமுதாயத்தில் ஒரெயொரு நாள் கடைப்பிடிக்கப் பட்டாலும்கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும். ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள் என்ற அந்த உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிகவுயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது என்றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும். அது மட்டுமல்ல, தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்தவண்ணமே இருக்கும். அது அவர்களைப் பலவீனப்படுத்துகிறது. உண்டாக்கும் தீமையைவிட அதிகத் தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கி விட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதற்கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான் ஏனெனில் நாம் முன்னேற வேண்டும் பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒருபோதும் நம்பிக்கை வைக்க முடியாது.
 

எனவே நமக்கு எஞ்சியுள்ள வழி, இந்த ஒழுக்கம், கடமை பற்றிய கருத்துக்கள் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்பதை ஏற்றுக் கொள்வதுதான். தீமையை எதிர்ப்பது என்பது எல்லா வேளைகளிலும தவறாகிவிட முடியாது, அது தன்னளவில் தவறானதல்ல. அது மட்டுமல்ல, சில சூழ்நிலைகளில் தீமையை எதிர்க்க வேண்டியது ஒருவனது கடமையாகவும் அமையக்கூடும். பகவத்கீதையைப் படிக்கும்போது, மேலைநாட்டினராகிய உங்களுள் பலருக்கு அதன் இரண்டாம் அத்தியாயம் திகைப்பை அளிக்கலாம். எதிரணியில் நண்பர்களையும் உறவினர்களையும் காண்கின்ற அர்ஜுனன் போரிட மறுக்கிறான், எதிர்க்க மறுத்துவிடுகிறான். அஹிம்சையே அன்பின் மிகவுயர்ந்த லட்சியம் என்று அதற்கு அவன் காரணம் காட்டுகிறான். அவனை ஸ்ரீகிருஷ்ணர் கபடதாரி என்றும் கோழை என்றும் அழைக்கிறார். எந்த விஷயத்திலும் இரண்டு கோடிகளும், அதாவது இரண்டு எல்லைகளும் ஒன்றுபோலவே தோன்றும் என்பது நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய பாடமாகும். இருக்கின்ற எல்லையும் இல்லாத எல்லையும் எப்போதும் ஒன்றுபோலவே உள்ளது. அதிர்வுகள் மிகக் குறைவாக இருந்தாலும் நம்மால் ஒளியைக் காண முடியாது. மிக விரைவாக, அதிகமாக இருந்தாலும் நம்மால் அதைக் காண முடியாது. அதுபோல்தான் ஒலியும் மிகமித் தாழ்வான சுவரத்தில் இருந்தால் நம்மால் ஒலியைக் கேட்க முடியாது, மிக அதிகமாக இருந்தாலும் கேட்க முடியாது.
 

எதிர்ப்பதற்கும் எதிர்க்காத்திருப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசமும் இதுபோன்றதே, ஒருவன் தனது பலவீனத்தால், சோம்பலால் இயலாமையால் எதிர்க்காது இருக்கிறான்; எதிர்க்கக் கூடாது என்பதற்காக அல்ல. இன்னொருவன், தான் நினைத்தால் யாரும் தடுக்க முடியாத அளவிற்குத் தன்னால் எதிர்க்க முடியும் என்பது தெரிந்தவன். இருந்தாலும் அவன் பகைவர்களை அடிக்கவில்லை; மாறாக, வாழ்த்துகிறான். பலவீனம் காரணமாக எதிர்க்காமல் இருந்தவன் பாவம் செய்தவனாகிறான். அதனால் அஹிம்சை அல்லது எதிர்க்காமலிருத்தலின் விளைவாக வருகின்ற எந்தப் பலனையும் அவன் அடைய முடியாது. மற்றவனின் விஷயத்திலோ அவன் எதிர்த்திருப்பானானால் அவனும் பாவம் செய்தவனாகிறான். புத்தர் தமது சிம்மாசனத்தைத் துறந்தார். தமது பதவியைத் துறந்தார். அது உண்மையான துறவு! ஆனால் துறப்பதற்கு எதுவும் இல்லாத பிச்சைக்காரன் ஒருவனிடம் துறவு என்ற பேச்சே எழ முடியாது.
 

அஹிம்சை, லட்சியம் அன்பு முதலியவற்றைப் பற்றிப் பேசும்போது உண்மையில் நாம் எதைக் குறிப்பிடுகிறோம். என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எதிர்ப்பதற்கான வலிமை நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை மதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆற்றல் இருந்தும் அதைப் பயன்படுத்தவதில்லை என்ற உறுதியுடன் எதிர்க்காதிருந்தோமானால் அது மகத்தான அன்பின் விளைவாக எழுந்த செயல். நம்மால் எதிர்க்கவே முடியாத நிலையில் இருந்து கொண்டு, மேலான அன்பின் காரணமாகத்தான் அப்படி எதிர்க்காமல் இருக்கிறோம் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றி கொள்வது அஹிம்சைக்கு முற்றிலும் எதிரான ஒன்று. தனக்கு எதிராகப் பெரிய படையைப் பார்த்த அர்ஜுனன் கோழையாகிவிட்டான். அந்த அன்பு காரணமாக நாட்டிற்கும் அரசனுக்கும் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறந்தான். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ணர் அவனைக் கபடன் என்று கூறினார் நீ புத்திசாலி போல் பேசுகிறாய். உன் நடத்தையோ உன் கோழைத்தனத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. எனவே எழுந்து நில். போரிடு.
 

இதுதான் கர்மயோகத்தின் மையக்கருத்து, அஹிம்சையே மிகவுயர்ந்த லட்சியம். அதேவேளையில் அப்படி எதிர்க்காதிருத்தல் என்பது நடைமுறை வாழ்வில் மாபெரும் சக்தியின் வெளிப்பாடு. அது மட்டுமல்ல, தீமையை எதிர்ப்பது என்பது அஹிம்சை என்னும் ஒரு மாபெரும் சக்தி வெளிப்பாட்டை அடைவதற்கான பாதையில் ஒரு படி என்ற உண்மையை அறிபவனே கர்மயோகி இந்த உயர்ந்த லட்சியத்தை அடையும் வரையில் தீமையை எதிர்ப்பதே ஒருவனின் கடமை. அவன் செயலில் ஈடுபடட்டும், அவன் போராடட்டும், முடிந்த அளவு ஆற்றலுடன் எதிர்க்கட்டடும். அப்போது மட்டுமே, எதிர்க்கின்ற ஆற்றலைப் பெற்ற பிறகு மட்டுமே அஹிம்சை ஒரு நற்பண்பாக அமைய முடியும்.
 

நான் ஒருமுறை என் நாட்டில் ஒருவனைச் சந்தித்தேன். அவனை ஏற்கனவே எனக்குத் தெரியும். அவன் ஒரு முட்டாள். மந்தபுத்திக் காரனும்கூட, அவனுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவனிடம் கிடையாது. ஒரு மிருகம்போல் வாழ்ந்து வந்தான். அவன் என்னிடம் வந்து கடவுளை அறிவது எப்படி? முக்தி பெறுவது எப்படி? என்று கேட்டான். நான் அவனிடம் உனக்குப் பொய் சொல்லித் தெரியுமா? என்று கேட்டேன், தெரியாது என்றான் அவன். உடனே நான் அப்படியானால் அதைத் தெரிந்து கொள், ஒரு மிருகம்போல் கட்டைபோல் இருப்பதைவிடப் பொய் சொல்வது எவ்வளவோ சிறந்தது. உறைந்து போனதுபோல் இருக்கிறாய். நீ எல்லா செயல்களுக்கும் அப்பாற்பட்ட அமைதியான சமநிலையை நீ இதுவரை அடையவில்லை. ஒரு கெட்டதைக்கூடச் செய்ய முடியாத அளவிற்கு நீ மந்தபுத்தி உடையவனாக இருக்கிறாய்! என்றேன். அவனுடையது சற்று அதிகபடியான உதாரணம். கேலியாகத்தான் நான் அவனிடம் இதைச் சொன்னேன். நான் சொன்னதன் பொருள் என்னவென்றால் செயல்நிலையைக் கடந்து பூரண அமைதியை அடைய வேண்டுமானால் ஒருவன் ஆர்வத்துடன் செயலில் ஈடுபட வேண்டும்.
 

செயலற்றிருப்பதை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். செயல்திறன் என்றாலே எதிர்த்தல் என்பது தான் எப்போதும் பொருள். மனம் மற்றும் உடல் சம்பந்தமான எல்லா தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எதிர்ப்பதில் வெற்றி பெற்ற பின்னரே அமைதி வரும். யாரையும் வெறுக்காதே, தீமையை எதிர்க்காதே என்றெல்லாம் சொல்வது மிகவும் எளிது ஆனால் பொதுவாக அதைப் பின்பற்றினால் எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. சமுதாயத்தின் கண்கள் நம்மீது இருக்கும்போது நாம் பெரிய அஹிம்சாவாதி போல் நடிக்கலாம். ஆனால் அந்த நேரம் முழுவதும் நமது இதயம் அரித்துக் கொண்டிருக்கும். அஹிம்சையின் விளைவாக வருகின்ற அமைதியை ஒருசிறிதுகூட நாம் அனுபவிக்கவில்லை. இதைவிட எதிர்ப்பது நல்லதென நமக்குத் தோன்றுகிறது. நீ பணம் சேர்க்க ஆசைப்படுகிறாய். அதேவேளையில் பணத்தைக் குறிக்கோளாக உடையவனை உலகம் முழுவதும் கொடியவன் என்று நினைக்கிறது என்பதை அறிந்தால் பணத்தைச் சேர்ப்பதற்கான போராட்டத்திலும் மனமோ பணம் பணம் என்றே இரவும் பகலும் அலைந்து கொண்டிருக்கும். அது கபடத்தனம்! இதனால் எந்தப் பலனும் இல்லை. உலகத்தில் குதித்துப் போராடு, படவேண்டிய வேதனைகளையெல்லாம் படு! இன்பங்களையெல்லாம் அனுபவி! அதன் பிறகே துறவு வரும், அதன்பிறகே அமைதி வரும். எனவே பதவி, ஆசை, அதுஇது என்று எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்! அவை எல்லாம் மிகமிகச் சாதாரணமானவை என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் அதன்பின்னர் வரும். இப்படி இந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளாதவரையில் செயல்புரியும் நிலையைக் கடக்காதவரையில் அமைதி நிலையை, சாந்த நிலையை, சரணாகதிநிலையை அடைய முடியாது.
 

அமைதி, துறவு போன்ற கருத்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உபதேசிக்கப்பட்டு வந்துள்ளன. குழந்தைப் பருவத்திலிருந்தே எல்லோரும் அதைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த நிலையை அடைந்துள்ளவர்கள் மிகச் சிலரே நான் உலகில் நிலையை அடைந்துள்ளவர்கள் மிகச் சிலரே, நான் உலகில் பாதிக்குமேல் பயணம் செய்திருக்கிறேன். இத்தகைய அமைதியையும் எதிர்க்காத நிலையையும் அடைந்துள்ள இருபது பேரையாவது பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
 

ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய சொந்த லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதை அடையப் பாடுபட வேண்டும். அடைய முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத, பிறருடைய லட்சியங்களை எடுத்துக் கொள்வதைவிட இது முன்னேற்றத்திற்கு நிச்சயமான வழியாகும். உதாரணமாக , ஒரு குழந்தையிடம் இருபது மைல் நடந்து போகச் சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஒன்று, அந்தக் குழந்தை பிணமாகும். ஏதோ ஆயிரத்தில் ஒன்று தவழ்ந்து, ஊர்ந்து, களைத்துப்போய், அரைப் பிணமாகச் சென்று சேரும். உலகத்தில் பொதுவாக நாம் செய்ய முயல்வதும் இது போன்றதுதான்.
 

எந்தச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலுள்ள ஆண் பெண் அனைவரும் ஒரேபோன்ற மனமும், திறமையும், செயல்புரியும் ஆற்றலும் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள் அவர்களுக்கு வெவ்வேறு லட்சியங்கள் வேண்டும். எந்த லட்சியத்தையும் கேலி செய்ய நமக்கு உரிமை கிடையாது. தன் லட்சியத்தை அடைய ஒவ்வொருவரும் இயன்றவரையில் முயல வேண்டும். உனது அளவுகோலால் என்னை முடிவு செய்வதும், என் அளவுகோலால் உன்னைப் பற்றித் தீர்மானிப்பதும் சரியானதல்ல. சவுக்கு மரத்தை ஆப்பிள் மரத்தின் தகுதியை வைத்து மதிப்பிடக் கூடாது. அதுபோலவே ஆப்பிள் மரத்தையும் சவுக்கு மரத்தின் தகுதியை வைத்து மதிப்பிடக் கூடாது. ஆப்பிள் மரத்தை மதிப்பிட வேண்டுமானால் ஆப்பிள் மரத்திற்குள்ள தகுதியை வைத்தும் சவுக்கு மரத்தை அதன் தகுதியின் பேரிலும்தான் மதிப்பிட வேண்டும்.
 

வேறுபாடுகளுக்கிடையே ஒருமை என்பதுதான் படைப்பின் திட்டம். மனிதர்களுக்கிடையே எவ்வளவு தான் வேறபாடுகள் இருந்தாலும், அனைவருக்கும் பின்னால் ஒருமை உள்ளது. பலதரப்பட்ட மனிதர்களும் பல்வேறு இனங்களும் படைப்பில் இயல்பாக அமைகின்ற வேறுபாடுகளே, எனவே எல்லோரையும் ஒரே அளவுகோலால் அளக்கவோ எல்லோருக்கும் ஒரே லட்சியத்தை வைக்கவோ கூடாது. அப்படிச் செய்வது இயல்பிற்கு மாறுபட்ட வாழ்க்கைப் போராட்டத்தை உருவாக்குவதாகும். அதன்விளைவாக மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்குகிறான்,. அறநெறியிலும் நற்செயல் புரிவதிலிருந்தும் தடுக்கப்படுகிறான். ஒவ்வொருவரும் உன்னதமான தங்கள் சொந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டத்தில் அவர்களை ஊக்கப்படுத்துவதும், அதேவேளையில் முடிந்தவரையில் அந்த லட்சியம் சத்தியத்தை ஒட்டியிருக்கும்படி அமைத்துத் தருவதுமே நமது கடமை. மிகப்பழங்காலத்திலிருந்தே இந்த உண்மையை இந்து மத நீதிநெறிக் கோட்பாடு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துமத சாஸ்திரங்களும் நீதிநூல்களும் இல்லறத்தார் துறவியர், பிரம்மசாரிகர் என்று வெவ்வேறு நிலையில் இருப்பவர்களுக்கு வெவ்வேறு நியதிகளைக் கூறுகின்றன.
 

மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான கடமைகளைத் தவிர ஒவ்வொரு மனிதனுக்கும் சில தனிக் கடமைகளும் இருப்பதாக இந்துமத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்து, தன் வாழ்க்கையை ஒரு மாணவனாகத் தொடங்குகிறான், பின்னர் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தானாகிறான். வயதான காலத்தில் குடும்பக் கடமைகளிலிருந்து விடுபடுகிறான். இறுதியில் குடும்ப வாழ்வைத் துறந்து துறவியாகிறான். வாழ்வின் இந்த ஒவ்வொரு நிலைக்கும் தனிக்கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
 

இந்த வாழ்க்கை நிலைகள் எதுவும் தன்னளவில் உயர்ந்தவையும் அல்ல, தாழ்ந்தவையும் அல்ல. திருமணம் செய்து கொண்டவனின் வாழ்க்கை. திருமணம் செய்துகொள்ளாமல் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரம்மச்சாரியின் வாழ்வைப்போல் மிகச் சிறந்தது தான். தெருவில் செல்லும் தோட்டியம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற அரசனைப் போன்றே உயர்ந்தவனும் உன்னதமானவனும்தான் சிம்மாசனத்திலிருந்து மன்னனை அகற்றி, தோட்டியின் வேலையைச் செய்யச் சொல்லிப் பாருங்கள். அதுபோலவே தோட்டியைச் சிம்மாசனத்தில் அமர்த்தி ஆளச் சொல்லுங்கள். எனவே சம்சார வாழ்வில் இருப்பனைவிட அதைத் துறந்து வாழ்பவன் உயர்ந்தவன் என்று கூறுவது முட்டாள்தனம். வாழ்க்கையில் இருந்துகொண்டே இறைவனை வழிபடுவது, உலகத்தைத் துறந்து, அதன் துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழ்கின்ற சுலபமான வாழ்க்கையைவிட மிகவும் கடினமானது.
 

வாழ்க்கையின் நான்கு நிலைகள், பிற்காலத்தில் இல்லறத்தான், துறவி என்று இரண்டாகக் குறைக்கப்பட்டன. இல்லறத்தான் திருமணம் செய்து கொள்கிறான். நாட்டின் குடிமகனாக இருந்தபடியே கடமைகளைச் செய்கிறான். துறவி தன் ஆற்றல் முழுவதையும் பிரச்சாரம் வழிபாடு என்று மத வாழ்க்கையில் செலவிடுகிறான். இதனைப்பற்றிக் கூறுகின்ற மஹா நிர்வாண தந்திரம் என்ற நூலிலிருந்து நான் சில பகுதிகளை இப்போது படிக்கிறேன். குடும்பத்தில் வாழ்ந்துகொண்டு எல்லா கடமைகளையும் சிறப்பாகச் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
 

இல்லறத்தான் இறைபக்தி கொண்டவனாக இருக்க வேண்டும் இறை ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும். அதேவேளையில் அவன் இடையீடின்றிச் செயல்புரிய வேண்டும். செயல்கள் அனைத்தின் பலனையும் அவன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
 

வேலை செய்துவிட்டு, அதன் பலனைப் பொருட்படுத்தாதிருப்பது; ஒருவனுக்கு உதவி செய்தபின் அவன் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணாமல் இருப்பது; ஒரு வேலையைச் செய்துவிட்டு அதனால் பெயரோ புகழோ வருமா, எதுவுமே கிடைக்காமல் போகுமா என்பதுபற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இருப்பது இவை மிகவும் கடினமான காரியங்கள், உலகமே புகழும் என்றால், வடிகட்டின கோழைகூட வீரனாக மாறிவிடுவான். சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமானால், அது தன் மீது புகழ்க் கொடியை ஏற்றுகிறது என்றால் கடைந்தெடுத்த முட்டாள்கூட வீரதீரச் செயல்களைச் செய்துவிடுவான். ஆனால் பிறர் ஆமோதிப்பதை எதிர்ப்பார்க்காமல் தொடர்ந்து நன்மை செய்வது என்பது தான் உண்மையிலேயே ஒருவன் செய்ய முடிந்த தியாகங்களுள் தலைசிறந்தது.
 

இல்லறத்தானின் முதற்கடமை வாழ்க்கைக்கான பொருள் ஈட்டுவது ஆனால் பொய் சொல்லியோ ஏமாற்றியோ கொள்ளையடித்தோ அவன் அதைச் செய்யாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும் தன் வாழ்க்கை இறைவனுக்கும், ஏழை எளியவர்களுக்கும் சேவை செய்வதற்காக அமைந்துள்ளது என்பதை அவன் மறக்கக் கூடாது
 

தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள் என்பதை உணர்ந்து இல்லறத்தார் எப்போதும் எல்லா வழிகளிலும் அவர்களை மகிழ்ச்சியுறச்ö செய்ய வேண்டும். தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால் இறைவனும் மகிழ்ச்சி அடைகிறார். பெற்றோரிடம் கடின வார்த்தைகள் பேசாத பிள்ளை உண்மையிலேயே சிறந்தவன்
 

பெற்றோரின் முன்னர் ஒருவன் கேலியோ கிண்டலோ செய்யக் கூடாது. படபடப்பாக நடந்து கொள்ளக் கூடாது. கோபத்தையோ ஆத்திரத்தையோ காட்டக் கூடாது. தாய் தந்தையரின் முன் பணிந்து வணங்க வேண்டும். அவர்களின் முன்னால் எழுந்து நிற்க வேண்டும். அவர்கள் கூறும்வரை உட்காரக் கூடாது.
 

தாய், தந்தை, குழந்தைகள், மனைவி மற்றும் ஏழைகளுக்கு உணவும் உடையும் வழங்காமல் இல்லறத்தான் தான் மட்டும் ஏற்றுக் கொள்வானானால் அவன் பாவம் செய்தவனாவான். இந்த உடல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் தாயும் தந்தையும் அவர்களுக்கு நன்மை செய்வதற்காக ஓராயிரம் துன்பங்களையும் ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்
 

இதுபோலவே ஒருவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன.
 

மனைவியைத் திட்டக் கூடாது. அவளைத் தன் தாயைப் போன்றே போற்றிக் காக்க வேண்டும். கடுமையான துன்பங்களிலும் பிரச்சினைகளிலும்கூட அவன் மனைவியிடம் கோபம் காட்டக் கூடாது.
 

மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஒருவன் நினைப்பானேயானால், மனத்தாலேனும் அவளைத் தீண்டுவானேயானால், அவன் இருள் சூழ்ந்த கொடிய நரகத்தை அடைவான்.
 

பெண்களுக்கு முன்னால் ஒருவன் முறையற்ற பேச்சுகளைப் பேசக் கூடாது தன்னைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடாது. நான் இதைச் செய்தேன்,. அதைச் செய்தேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது
 

இல்லறத்தான் தன் மனைவியைப் பணம் ஆடைகள், அன்பு நம்பிக்கை இனிய மொழிகள் இவற்றால் எப்போதும் மகிழ்விக்க வேண்டும். அவளைத் தொந்தரவு செய்கின்ற எதையும் செய்யக் கூடாது. கற்பு நிறைந்த மனைவியின் அன்பைப் பெறுவதில் வெற்றி பெற்றவன் தன் கடமையில் வெற்றி பெற்றுவிட்டான், அவனுக்கு எல்லாவித நற்குணங்களும் வந்து சேர்கின்றன.
 

கீழ்க்கண்டவை ஒருவன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும்
 

நான்காவது வயதுவரை ஒருவன் தன் மகனை அன்போடு போற்றி வளர்க்க வேண்டும். இருபது வயதில் அவனை எங்காவது ஒரு வேலையில் அமர்த்த வேண்டும். அதன்பிறகு அவனைத் தனக்குச் சமமாகவும் அன்போடும் நடத்த வேண்டும். மகளையும் இதுபோலவே அன்போடு வளர்க்க வேண்டும். மிகுந்த கவனத்துடன் அவளைக் கல்வி கற்கச் செய்ய வேண்டும். அவளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அவளுக்கு நகைகளும் சொத்துக்களும் தர வேண்டும்
 

பிறகு சகோதர சகோதரிகளே, அவர்கள் ஏழையாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைகள், பிற உறவினர், நண்பர், வேலைக்காரர் என்று இவர்களிடமும் அவனுக்குக் கடமைகள் உள்ளன. அதன்பிறகு அவன் வாழும் கிராமத்தில் உள்ள மக்கள் ஏழைகள் மற்றும் அவனிடம் உதவிக்கென்று வருபவர்கள் இவர்களுக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. வசதி இருந்தும் ஒருவன் உறவினருக்கும் ஏழைகளுக்கும் ஒன்றும் கொடுக்காமல் போனால், அவன் மனிதன் அல்ல, மிருகம் என்றே கொள்ள வேண்டும்
 

உணவு, உடை உடம்பைப் பராமரிப்பது முடியை அலங்கரிப்பது இவற்றில் அளவுக்கு அதிகமான பற்றைத் தவிர்க்க வேண்டும் இல்லறத்தான் இதயத்தில் தூயவனாகவும் உடம்பைச் சுத்தமாக வைத்திருப்பவனாகவும் சுறுசுறுப்பு நிறைந்தவனாகவும், செயல்புரிய எந்த நேரத்திலும் தயாரானவனாகவும் இருக்க வேண்டும்.
 

இல்லறத்தான் பகைவர்களுக்கு அச்சம் தருபவனாக இருக்க வேண்டும்.
 

அவர்களை எதிர்க்க வேண்டும். அது இல்லறத்தானின் கடமை, ஒரு மூலையில் அமர்ந்து மூக்கைச் சிந்தியபடி அஹிம்சை என்று முட்டாள்தனமாகப் பேசிக் காட்டவில்லையென்றால், அவன் கடமை தவறியவனாகிறான். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அவன் ஆட்டுக்குட்டிபோல் அடங்கி நடக்க வேண்டும்.
 

இல்லறத்தான் தீயவர்களுக்கு மரியாதை தரக்கூடாது. அது அவனது கடமை
 

ஏனென்றால் தீயவர்களுக்கு மரியாதை செய்தால்
 

அதுபோலவே போற்றுதலுக்கு உரியவர்களையும் நல்லவர்களையும் மதிக்காதிருப்பதும் பெரிய குற்றமாகும்.
 

நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவன் அவசரப் படக் கூடாது. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக முறைதவறி எல்லா இடங்கிலும் செல்லக் கூடாது நண்பராக்கிக் கொள்ள விரும்புபவர்களின் செயல்களையும், அவர்கள் பிறருடன் பழகும் விதத்தையும் கவனிக்க வேண்டும். அதை ஆராய வேண்டும் அதன் பிறகே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.
 

மூன்று விஷயங்களை அவன் பேசக் கூடாது. தன் புகழைப் பொது இடத்தில் பேசக் கூடாது. தன் பெயரையோ திறமையையோ தானே பரப்பக் கூடாது. செல்வத்தைப் பற்றியோ, தன்னிடம் தனிமையில் பிறர் சொன்னதையோ சொல்லக்கூடாது
 

தான் ஏழை என்றோ பணக்காரன் என்றோ எதுவும் அவன் பேசுவது நல்லதல்ல. அவன் தன் செல்வத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயங்களைத் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும். இது உலக வழக்கு மட்டுமல்ல. அவனது கடமையும் ஆகும். இவற்றையெல்லாம் அவன் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் நன்னெறியில் செல்லாதவன் என்று கருதப்பட வேண்டும்.
 

இல்லறத்தான் சமுதாயம் முழுவதன் ஆதாரமாகவும் தாங்கும் தூணாகவும் இருக்கிறான்,. சமுதாயத்தில் முக்கியமாகச் சம்பாதிப்பவன் அவனே. ஏழைகள், பலவீனர்கள், குழந்தைகள், வேலை செய்யாத பெண்கள் ஆகிய எல்லோருமே அவனைச் சார்ந்தே வாழ்கிறார்கள். எனவே அவன் செய்தேயாக வேண்டிய கடமைகள் உள்ளன. இந்தக் கடமைகள் அவற்றைத் திறம்படச் செய்கின்ற வலிமையை அவனுக்குத் தருபவையாக அமைய வேண்டும். தனது லட்சியத்திற்குப் பொருந்தாத, கீழான செயல்களைச் செய்கிறோம் என்ற உணர்வை அவனுக்குத் தருபவையாக அவை அமையக் கூடாது.
 

பலவீனம் காரணமாக அவன் எதையாவது செய்து விட்டாலோ, ஏதேனும் குற்றம் செய்துவிட்டாளோ அதை எல்லோரிடமும் சொல்லக் கூடாது. அவன் ஈடுபட்டிருக்கின்ற ஒரு முயற்சி தோல்வியையே தழுவும் என்று கண்டால் அதையும் பிறரிடம் அவன் சொல்லக் கூடாது. இப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது தேவையில்லாதது மட்டுமல்ல. அது அவனது உறதியைப் பாதித்து, அவனது சொந்தக் கடமைகளையும் ஆற்ற முடியாமல் செய்துவிடும். அதேவேளையில் இவற்றை அடைய அவன் கடினமாகப் பாடுபட வேண்டும் முதலில் அறிவு இரண்டாவது செல்வம்
 

இது அவனது கடமை. கடமையைச் செய்யாதவன் மனிதனே அல்ல. செல்வம் சேர்ப்பதற்காகப் பாடுபட்டு உழைக்காத இல்லறத்தான் நன்னெறியைப் பின்பற்றாதவன். அவன் உத்வேகம் இல்லாதவனாகவும் சோம்பல் வாழ்க்கையில் திருப்தி அடைபவனாகவும் இருப்பவன். நன்னெறியில் செல்லாதவன், ஏனென்றால் அவனை நம்பி நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். அவன் செல்வந்தன் ஆனால் நூற்றுக்கணக்கானோர் உதவி பெறுவார்கள்.
 

செல்வம் சேர்க்க வேண்டும் என்ற துடிப்போடு ஒரு நூறு பேராவது இந்த நகரத்தில் இல்லையென்றால், அவர்கள் பணம் சேர்க்கவில்லையென்றால், இந்த நாகரீகமும், இந்த அன்ன சத்திரங்களும் மாளிகைகளும் இங்கே இருந்திருக்குமா? எனவே பணம் சேர்ப்பது தவறல்ல. ஏனென்றால் அந்த பணம் பகிர்ந்தளிக்கவே பயன்படுகிறது. வாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் மையமாக இல்லறத்தான் இருக்கிறான். எனவே நல்வழியில் செல்வம் சேர்ப்பதும் செலவிடுவதும் அவனுக்கு ஒரு வழிபாடாகிறது. நல்ல காரியங்களுக்காக நல்ல வழிகளில் பணம் சம்பாதிப்பதற்காக உழைக்கின்ற இல்லறத்தான் செய்வதும், குகைகயில் அமர்ந்து முக்திக்காகப் பிரார்த்தனை செய்கின்ற தபஸ்விகள் செய்வதும் விஷயத்தில் ஒன்றதான். இறைவனிடமும் அவனது படைப்பின் மீதும் உண்டாகின்ற, பக்தியால் உந்தப்பட்ட ஒரே நற்பண்பின் இரண்டு பக்கங்களான சரணாகதி தியாகம் என்பவற்றையே நாம் காண்கிறோம்.
 

நற்பெயர் பெற அவன் எல்லா வழிகளிலும் பாடுபட வேண்டும். சூதாடுவதையும் தீயோர் சேர்க்கையையும் விட வேண்டும். பொய் பேசக் கூடாது பிறருடைய துன்பத்திற்கு எந்த விதத்திலும் காரணமாகக் கூடாது. பல நேரங்களில் மனிதர்கள் தங்களால் இயலாத ஒன்றில் ஈடுபட்டு விடுகிறார்கள். எனவே அதைச் செய்து முடிப்பதற்காக மற்றவர்களை ஏமாற்ற நேர்கிறது. அத்துடன் எல்லா விஷயங்களிலும் காலத்திவ் பங்கைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் தோல்வியாக இருந்தது மற்றொரு வேளையில் பெரிய வெற்றியாக மாறிவிடக்கூடும்.
 

இல்லறத்தான் உண்மையிலேயே பேச வேண்டும் அதையும் மென்மையாகவும், பிறர் விரும்புகின்ற வகையிலும், அவர்களுக்கு நன்மை செய்கின்ற விதத்திலும் பேச வேண்டும். பிறருடைய விஷயங்களைப் பற்றி அவன் பேசக் கூடாது. குளங்கள் வெட்டுதல், சாலைஓரங்களில் மரங்கள் நடுதல், மக்களுக்கும் விலங்குகளுக்கும் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்யும் இல்லறத்தான், பரம யோகிகள் செல்லும் குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்கிறான். இல்லறத்தார்களின் இந்தக் கடமைகள் கர்ம யோகக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகும், அந்த நூலின் பிற்பகுதியில், சொந்த நாட்டிற்காகவோ, மதத்திற்காகவோ, போரிட்டு மரணம் அடைபவன் தியானத்தின் மூலம் ஒரு யோகி செல்கின்ற அதே இடத்திற்குச் செல்கிறான்.
 

(8.67) என்று கூறப்பட்டுள்ளது. ஒருவனுக்குக் கடமையாக அமைவது மற்றொருவனுக்கு அவ்வாறே அமைய வேண்டும் என்பதில்லை என்பது இதன் மூலம் காட்டப்படுகிறது. அதே வேளையில் ஒரு கடமை மனிதனைத் தாழ்ச் செய்கிறது என்றோ மற்றொன்று உயர்வைத் தரும் என்றோ அந்த நூல் கூறவில்லை. ஒவ்வொரு கடமைக்கும் தனக்கென்று ஓர் இடம் உள்ளது. எந்தச் சூழ்நிலையில் நாம் வைக்கப்பட்டிருக்கிறோமோ, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்துள்ள கடமைகளை நாம் செய்ய வேண்டும்.
 

இவற்றிலிருந்து ஒரு கருத்து தெளிவாகிறது அது எல்லா பலவீனங்களையும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதாகும் எங்களுடைய தத்துவம் மதம் செயல் என்று எல்லாவற்றின் உபதேசங்களிலும் நான் விரும்புகின்ற ஒரு சிறந்த கருத்து இது . நீங்கள் வேதங்களைப் படித்தீர்களானால் பயமில்மை என்னும் வார்த்தை திரும்பத்திரும்பக் கூறப்படுவதைக் காணலாம் எதற்கும் பயப்படாதீர்கள் பயம் பலவீனத்தின் அடையாளம் உலகத்தின் கேலியையோ அவமதிப்பையோ பொருட்படுத்தாமல் ஒருவன் தன் கடமைகளைச் செய்து கொண்டே போக வேண்டும்.
 

இறைவனை வழிபடுவதற்காக உலகத்தைத் துறந்து செல்கின்ற ஒருவன் உலகத்தில் வாழ்ந்து உலகின் நன்மைக்காகச் செயல் புரிந்துகொண்டிருப்போர் எல்லாம் இறைவனை வழிபடாதவர்கள் என்று நினைக்கக் கூடாது. அதுபோலவே குடும்பத்தில் மனைவி மக்களோடு வாழும் இல்லறத்தான் உலகைத் துறந்து வாழும் துறவியரைப் பயனற்ற நாடோடிகள் என்று கருதக்கூடாது. அவரவர் இடத்தில் ஒவ்வொருவரும் பெரியவரே இந்தக் கருத்தை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.
 

ஓர் அரசன் தன் நாட்டிற்கு வரும் துறவிகளை எல்லாம் உயர்ந்தவன் யார்? உலகைத் துறந்து துறவியானவனா? உலகில் வாழ்ந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானா? என்று கேட்பது வழக்கம் அறிவாளிகள் பலர் அந்தச் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வந்தார்கள் சிலர் துறவிகளே சிறந்தவர்கள் என்றனர். அரசன் அவர்களின் கூற்றை நிரூபிக்கச் சொன்னான் அவர்களால் முடியாமல் போகவே அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடுமாறு கட்டளையிட்டான் வேறு சிலர் வந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானே சிறந்தவன் என்று கூறினர். அதையும் அரசன் நிரூபிக்கச் சொன்னான் அவர்கள் நிரூபிக்காதபோது அவர்களையும் இல்லறத்தார்களாக வாழும்படிக் கட்டளையிட்டான்.
 

கடைசியாக ஒருநாள் இளம்துறவி ஒருவர் அரசனிடம் வந்தார். அவரிடமும் அரசன் தன் கேள்வியைக் கேட்டான் அதற்கு அந்தத் துறவி மன்னா அவரவர் நிலையில் இருக்கும்போது இருசாராரும் சம அளவில் உயர்ந்தவர்களே என்றார் அரசன் அதை நிரூபியுங்கள் என்றான் அதற்கு அந்த இளம் துறவி நான் அதைநிரூபிக்கிறேன் ஆனால் நீங்கள் என்னுடன் வந்துநான் வாழ்வதுபோல் சில நாட்கள் வாழ வேண்டும் அப்போது நான் கூறியதை நிரூபிக்க வசதியாக இரு க்கும் என்றார் அரசன் அதனை ஏற்றுக்கொண்டு துறவியுடன் புறப்பட்டான் இருவரும் அந்த நாட்டைக் கடந்து மேலும் பலநாடுகளைக் கடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள் அப்போது அந்த நாட்டின் தலைநகரில் ஒரு பெரிய விழா நடந்து கொண்டிருந்தது எங்கு பார்த்தாலும் வாத்திய இசையும் பாட்டும் ஆரவாரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. தண்டோரா போடுபவனின் குரலும் இடையில் கேட்டது மக்கள் கண்ணைப் பறிக்கும் ஆடைகளோடு கூடியிருந்தனர். அவர்கள் முன்னால் அவன் உரத்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தான் அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மன்னனும் துறவியும் அங்கே சென்றனர் அந்த நாட்டு மன்னனின் மகளுடைய சுயம்வரம் நடைபெறப் போகிறது என்பதையே அவன் அங்கே அறிவித்துக் கொண்டிருந்தான்.
 

சுயம்வரத்தில் அரசகுமாரிகள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவில் பண்டைய வழக்கமாக இருந்தது. தனக்குக் கணவனாக வரப்போகின்றவன் இப்படியிருக்க வேண்டும் என்று ஒவ்வோர் அரச குமாரியும் சில எண்ணங்களைக் கொண்டிருந்தாள் சிலருக்கு ஈடற்ற அழகன் வேண்டும் சிலருக்கு அறிவில் சிறந்தவன் வேண்டும் சிலருக்குப் பெரிய செல்வந்தன் வேண்டும் அண்டை அயல்நாடுகளின் ராஜகுமாரர்கள் எல்லாம் நன்றாக அலங்கரித்துக் கொண்டு சுயம்வரத்திற்கு வருவார்கள் சிலவேளைகளில் அவர்கள் தங்களுடன் ஓர் அறிவிப்பாளனையும் அழைத்து வருவார்கள் அவன் அந்த ராஜகுமாரனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அந்த இளவரசி அவனை மணந்து கொண்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதை அறிவிப்பான் ராஜகுமாரி அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் அமர்ந்தபடி ஒவ்வொரு ராஜகுமாரனிடமும் வந்து அவனைப் பற்றி விவரங்களை எல்லாம் கேட்பாள் திருப்தி அடையாவிட்டால் முன்னே செல்லுங்கள் என்று பல்லக்கு சுமப்பவர்களிடம் கூறுவாள் நிராகரிக்கப்பட்ட ராஜகுமாரர்களைப் பின்னர் பார்ப்பதே இல்லை தனக்குப் பிடித்தவனைக் கண்டுகொண்டால் உடனே அவன் கழுத்தில் ஒரு மலர் மாலையை அணிவிப்பாள் அவன் அவளை மணப்பான்.
 

நமது துறவியும் மன்னனும் சென்ற அந்த நாட்டின் இளவரசிக்கும் இந்தச் சுயம்வர விழாதான் நடந்து கொண்டிருந்தது. அவள் உலகிலேயே பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள் அவளை மணந்து கொள்பவன் அவளுடைய தந்தைக்குப் பிறகு அந்த நாட்டின் அரசன் ஆவான் அவள் பேரழகன் ஒருவனை மணக்க விரும்பினாள் இதற்கு முன்பும் எத்தனையோ சுயம்வரங்கள் நடந்தன அவளுக்கு யாரையும் பிடிக்க வில்லை அவளால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை இந்தச் சுயம்வரம் முன் நடந்த எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததாக இருந்தது. முன்பைவிட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர் ராஜகுமாரி பல்லக்கில் அமர்ந்து ஒவ்வொருவராகப் பார்த்தாள் ஆனால் எல்லோரையுமே ஒதுக்கிவிட்டாள் இந்த முறையும் சுயம்வரம் தோல்வி தானோ என்று எல்லோரும் கவலைப்பட்டனர்.
 

அப்போது அந்த மண்டபத்திற்குள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும் அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது சூரியனே வானத்தை விட்டுப் பூமியில் வந்ததுபோல் இருந்தது. அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று அவர் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கே வந்த இளவரசி அவரது அழகில் தன்னைப் பறிகொடுத்து கையிலிருந்த மாலையை அவர் கழுத்தில் சூட்டினாள் இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துளவி அதிர்ச்சியுற்றவராக என்ன முட்டாள்தனம் இது ? நான் ஒரு துறவி எனக்னென்ன திருமணம் என்று கூறிமாலையைக் கழற்றிக் கீழே எறிந்தார். இதைக் கண்ட அந்த நாட்டு அரசர் இந்தத் துறவி ஏழையாக இருப்பதால் இளவரசியை மணந்துகொள்ள பயப்படுகிறான் என்று நினைத்து என் மகளை மணந்து கொண்டதும் இந்த நாட்டில் பாதி உனக்குச் சொந்தமாகும் நான் இறந்த பிறகு முழு நாடும் உனக்கே என்று கூறி அந்த மாலையை எடுத்து மறுபடியும் அந்தத் துறவியின் கழுத்தில் போட்டான் துறவியோ மீண்டும் மாலையைக் கழற்றிக் கீழே வீசியெறிந்து மடத்தனம் திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சட்டென்று அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினார் இதற்குள் இளவரசி அந்தத் துறவியிடம் அளவற்ற காதல் கொண்டுவிட்டாள் ஒன்று நான் அவரை மணந்து கொள்ள வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று கூறியபடியே அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக அவர் பின்னாலேயே சென்றாள்.
 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் துறவி தான் அழைத்து வந்த அரசனைப் பார்த்து மன்னா! நாம் அந்த இருவரையும் தொடர்ந்து செல்வோம் என்று கூறினார். பின்னர் இருவரும் இளவரசி தங்களைப் பார்த்து விடாதபடி அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.
 

இளவரசியை மணக்க மறுத்த இளந்துறவி நகரத்தை விட்டுப் பல மைல் தொலைவு நடந்துபோய் விட்டார். ஒரு காட்டின் அருகே வந்ததும் அதற்குள் நுழைந்தார் தொடர்ந்து வந்த இளவரசியும் காட்டிற்குள் நுழைந்தாள். நமது துறவியும் அரசனும் பின்தொடர்ந்தனர். அந்த இளந்துறவிக்குக் காடும் குறுகிய பாதைகளும் அத்துபடியாக இருந்தது சட்டென்று அவற்றுள் ஏதோ ஒருவழியில் நுழைந்து மறைந்துவிட்டார் இளவரசியால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை காடு முழுவதும் அலைந்து திரிந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் வெளியேறவும் வழியறியாமல் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள் அப்போது நமது துறவியும் அரசனும் அவளிடம் சென்று அழாதே நீ வெளியே செல்ல நாங்கள் வழி காட்டுகிறோம் இப்போது மிகவும் இருட்டிவிட்டதால் வழி காண்பது சிரமம் இதோ பெரிய மரம் ஒன்று உள்ளது இதனடியில் இன்றிரவு தங்கலாம் காலையில் உனக்கு வழி காட்டுகிறோம் என்றனர்.
 

அந்த மரத்தில் ஒரு குருவியும் அதன் மனைவியும் மூன்று குஞ்சுகளும் ஒரு கூட்டில் வாழ்ந்து வந்தன அந்தச் சின்னஞ்சிறு குருவி மரத்திற்குக் கீழே வந்து தங்கியுள்ள மூவரையும் பார்த்துத் தன் மனைவியிடம் என் அன்பே இப்போது என்ன செய்வது நம்வீட்டில் சில விருந்தினர் வந்துள்ளனர் இது குளிர்காலம் வேறு நெருப்புக்கூட இல்லையே என்று கவலையுடன் கூறியது பின்னர் எங்கோ பறந்து சென்று எரிந்து கொண்டிருக்கும் ஒரு சுள்ளியைக் கொண்டுவந்து அந்த மூன்று பேருக்கும் முன்னால் போட்டது அவர்கள் மேலும் சில சுள்ளிகளைச் சேர்த்துத் தீயை வளர்த்துக் குளிர்காய்ந்தார்கள்.
 

அப்போது குருவிக்கு மனநிறைவு ஏற்பட வில்லை மீண்டும் அது தன் மனைவியைப் பார்த்து அன்பே இப்போது என்ன செய்வது? அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியவில்லையே நாமோ இல்லறத்தினர் வீடு தேடி வருபவர்களின் பசியைத் தீர்ப்பது நமது கடமை அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்தாக வேண்டும் என் உடம்பை அவர்களுக்கு உணவாகத் தருகிறேன் என்று கூறியபடி அவர்கள் வளர்த்திருந்த நெருப்பில் பாய்ந்து மாண்டது மரத்தடியிலிருந்த மூவரும் அந்த குருவி நெருப்பில் வீழ்வதைப் பார்ததார்கள் தடுக்கவும் முயன்றார்கள் ஆனால் குருவி மிக வேகமாக நெருப்பில் வீழந்துவிட்டது.
 

அந்தக் குருவியின் மனைவி தன் கணவனின் செயலைப் பார்த்தது. பின்னர் இங்கோ மூன்று பேர் இருக்கிறார்கள் ஒரு சிறிய பறவையின் உடல் எப்படி அவர்களது பசியைத் தீர்க்கும் அது போதாது என் கணவரின் முயற்சி வீணாகாமல் காப்பது மனைவியான என் கடமை அவர்களுக்கு என் உடலும் கிடைக்கட்டும் என்று கூறித் தானும் தீயில் வீழ்ந்தது.
 

நடந்தவை அனைத்தையும் மூன்று குஞ்சுகளும் கண்டன . தங்கள் விருந்தினர்களுக்குப் போதுமான உணவு இல்லாததைக் கண்ட அவை நம் பெற்றோர் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள் அப்படியும் உணவு போதவில்லை பெற்றோரின் பணியைத் தொடர்வது நம் கடமை நமது உடலும் போகட்டும் என்று பேசிபடியே மூன்றும் அந்த நெருப்பிற்குள் வேகமாக வீழந்து இறந்தன.
 

நடந்ததைக் கண்டு திகைத்த அந்த மூவருக்கும் அந்தக் குருவிகளின் உடலைத் தீண்டவும் மனம் வரவில்லை உணவு எதுவும் இன்றியே அவர்கள் இரவைக் கழித்தனர். பொழுது விடிந்ததும் துறவியும் அரசனும் இளவரசி வெளியேற வழிகாட்டினர் அவள் தன் தந்தையிடம் திரும்பினாள்.
 

பின்னர் நமது துறவி அரசனிடம் மன்னா தான் இருக்கும் இடத்தில் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்கள் என்பதைக் கண்டு கொண்டாய் அல்லவா? நீ இல்லறத் தானாக வாழ விரும்பினால் இந்தப் பறவைகளைப் போல் எந்த வினாடியும் பிறருக்காக உன்னைத் தியானம் செய்வதற்குத் தயாராக வாழ வேண்டும் உலகைத் துறந்து வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளந்துறவியைப்போல் இரு இல்லறத்தானாக விரும்பினால் உன் வாழ்வை மற்றவர்களின் நன்மைக்காக ஒரு பலியாக அர்ப்பித்து விடு துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தால் அழகையோ பணத்தையோ பதவியையோ ஏறெடுத்தும் பார்க்காதே அவரவர் நிலையில்அவரவர் பெரியவரே ஆனால் ஒருவரின் கடமை மற்றவரின் கடமை ஆகாது என்றார்.




Site Content

Additional Information

  

செயல்புரிவதன் ரகசியம்

-

பிறருடைய பௌதீகத் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உதவுவது உண்மையிலேயே பெரிய விஷயம் தான் ஆனால் அந்தத் தேவை எவ்வளவு பெரியது அந்த உதவி எவ்வளவு காலம் நீடித்து நிற்கும் என்பதைப் பொறுத்தே அந்த உதவியின் சிறப்பு அமைகிறது .ஒருவனது தேவைகளை ஒரு மணி நேரத்திற்குப் பூர்த்தி செய்வது அவனுக்கு ஓர் உதவிதான் ஒரு வருடத்திற்குப் பூர்த்தி செய்தோமானால் அது அதைவிடப் பெரிய உதவி அவனது தேவைகளை என்றென்றைக்குமாக நாம் பூர்த்தி செய்ய முடியுமானால் அதுவே அவனுக்குச் செய்யக்கூடிய மகத்தான உதவி.

ஆன்மீக ஞானம் ஒன்றினாலேயே நமது துன்பங்களை என்றென்றைக்குமாக ஒழிக்க முடியும். மற்ற எல்லா அறிவும் நமது தேவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே நீக்கும். தேவைகளை எழுப்பு கின்ற மூலக்காரணத்தை ஆன்ம ஞானத்தால் மட்டும் முற்றிலுமாக வேரறுக்க முடியும். எனவே ஒருவனுக்கு அளிக்க முடிந்த உதவிகள் அனைத்திலும் ஆன்மீக உதவியை தலைசிறந்தது. ஆன்மீக ஞானத்தைத் தருபவனே மனித குலத்திற்கு மிகச் சிறந்த நன்மை செய்பவன். அவ்வாறு மனிதனுக்கு ஆன்மீக உதவி செய்துள்ளவர்களையே மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர்களாக எந்தக் காலத்திலும் நாம் காண்கிறோம். ஏனெனில் வாழ்வின் நமது செயல்பாடுகள் அனைத்திற்கும் உண்மையான அடிப்படை ஆன்மீகமே. ஆன்மீக வலிமையும் ஆன்ம நிறைவும் உடைய ஒருவன் அவன் விரும்புவானானால் எல்லா துறைகளிலும் பேராற்றல் பெற்றவனாக விளங்க முடியும். ஆன்மீக வலிமை இல்லாமல் ஒருவனால் தன் பௌதீகத் தேவைகளைக் கூடச் சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

ஆன்மீக உதவிக்கு அடுத்து வருவது அறிவு வளர்ச்சிக்கான உதவி. உணவு மற்றும் உடைகள் அளிப்பதைவிட வித்யா தானம் அல்லது அறிவு தானம் எவ்வளவோ மேலானது. ஒருவனது உயிரைக் காப்பதை விட அது சிறந்தது. ஏனென்றால் மனிதனின் உண்மையான உயிர்நாடி உண்மையான வாழக்கை அறிவில் மட்டுமே அமைந்துள்ளது. அறியாமை என்பது மரணம். அறிவுதான் வாழ்வு. அறியாமையிலும் துன்பத்திலும் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை பயனற்றது.

அடுத்து இயல்பாக வருவது ஒருவனது உடல் சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் உதவி .

எனவே பிறருக்கு உதவி செய்வதைப்பற்றி நினைக்கும் போது பௌதீகத் தேவைகளைத் தீர்க்கும் உதவிகள் மட்டுமே நாம் அளிக்க முடிந்தது என்று தவறாக எண்ணி விடக் கூடாது. பௌதீகத் தேவைகளைத் தீர்க்கும் உதவி உதவிகளில் எல்லாம் கடைசியானது மட்டுமல்ல சிறியதும் ஆகும் .அது ஒருவனுடைய தேவையை நிரந்தரமாகத் தீர்ப்பதில்லை பசியால் நான் படும் துன்பம் சாப்பிட்டால் தீர்ந்துவிடும் ஆனால் பசி மீண்டும் வருகிறது. இனிமேல் தேவைகள் எதுவும் இல்லை என்ற அளவிற்கு நான் திருப்தியுறும்போதுதான் என் துன்பம் தீர முடியும் .அப்போது பசி என்னை வாட்ட முடியாது. எந்தக் கவலையும் துயரமும் என்னைப் பாதிக்க முடியாது. எனவே ஆன்ம சக்தியை அளிக்கவல்ல உதவியே முதன்மையானது. அறிவை அளிப்பது அடுத்தது. உடலுதவி கடைசியானது. பௌதீகத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதால் உலகத்தின் துன்பங்களை எல்லாம் தீர்த்து விட முடியாது .மனிதனின் இயல்பு மாறும் வரையில் இந்த பௌதீகத் தேவைகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். துன்பங்களும் அவனை வருத்திக்கொண்டுதான் இருக்கும் .எத்தனை பௌதீக உதவிகளாலும் அதனை முழுவதுமாகத் தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு மனிதர்களைத் தூயவர்கள் ஆக்குவதுதான்.

நாம் காணும் எல்லா தீமைகளுக்கும் எல்லா துன்பங்களுக்கும் மூல காரணம் அறியாமையே .மனிதன் ஒளி பெறட்டும் தூயவனாகட்டும் ஆன்மீக வலிமை பெறட்டும் கல்வி பெறட்டும் அதன்பிறகு மட்டுமே உலகின் துன்பங்கள் தீரும் அதற்கு முன்பு அல்ல. நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டையும் தர்மசாலையாக மாற்றலாம் நாடு முழுவதையும் ஆஸ்பத்திரிகளால் நிரப்பலாம் ஆனால் மனிதனின் குணம் மாறும் வரையில் அவனுடைய துன்பம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இடையீடின்றி நாம் செயல்புரிய வேண்டும் என்று பகவத்கீதை மீண்டும்மீண்டும் கூறுவதை நாம் படிக்கிறோம். இயல்பாகவே எல்லா செயல்களும் நன்மை தீமைகளின் கலவையாகவே உள்ளன. யாருக்கோ எங்கோ சிறிதாவது நன்மை தராத ஒரு செயலை நாம் செய்ய முடியாது. அதுபோலவே எங்காவது யாருக்காவது சிறிது துன்பம் தராத செயலையும் செய்ய முடியாது. எல்லா செயல்களும் நன்மை தீமைகளின் கலவையாகவே இருக்கும் என்றாலும் இடைவிடாமல் செயல் புரியவே நாம் கட்டளையிடப் பட்டிருக்கிறோம். நன்மை தீமை இரண்டும் அவற்றிற்குரிய பலன்களைக் கொடுக்கின்றன அவற்றிற்குரிய கர்மத்தை உண்டாக்குகின்றன. நற்செயல் நம்முள் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது தீய செயல் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் நல்லவை கெட்டவை இரண்டுமே ஆன்மாவைப் பந்தத்தில் பிணைக்கின்றன. செயல்கள் இவ்வாறு நம்மைப் பந்தத்தில் பிணைக்காதிருக்க கீதை வழி காட்டுகிறது. நாம் செய்கின்ற செயலில் பற்றுக் கொள்ளாதிருந்தால் அது ஆன்மாவைப் பிணைக்காது.

பற்றற்றுச் செயல்புரிவது என்றால் என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்ள முயல்வோம். இடைவிடாது செயல்புரிய வேண்டும் ஆனால் அதில் பற்று வைக்க கூடாது என்பது கீதையின் மையக் கருத்து .இதைப் புரிந்துகொள்ள சம்ஸ்காரம் என்பது பற்றி நமக்குச் சிறிது தெரிய வேண்டும். சம்ஸ்காரம் என்பதை ஓரளவிற்கு இயல்பான மனப்பாங்கு என்று மொழிபெயர்க்கலாம் .மனத்தை ஒரு குளத்திற்கு ஒப்பிடலாம் அதில் எழுகின்ற அலை மற்றும் சிற்றலை ஒவ்வொன்றும் அடங்கும்போது முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை மீண்டும் அந்த அலை திரும்பி வருவதற்கான அறிகுறியோடு கூடிய அடையாளத்தை விட்டுச் செல்கிறது .இவ்வாறு அலை மீண்டும் எழுவதற்கான சாத்தியக்கூறுடன் கூடிய அடையாளமே சம்ஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம் உடம்பின் ஒவ்வோர் அசைவும் நாம் எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் சித்தத்தில் ஒரு பதிவை விட்டுச் செல்கிறது இந்தப் பதிவுகள் மேற்பரப்பில் தென்படாதிருக்கலாம் ஆனாலும் ஆழ்மனத்தில் நாம் அறியாமலே செயல்புரியும் அளவு வலிமை படைத்தவை .

ஒவ்வொரு கணமும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை மனத்திலுள்ள இந்தப் பதிவுகளின் மொத்தமே உருவாக்குகிறது. இப்போது இந்தக் கணத்தில் நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னுடைய கடந்தகால சம்ஸ்காரங்களுடைய மொத்தத்தின் விளைவாகும். இதுதான் உண்மையில் குணம் என்று அழைக்கப்படுகிறது ஒரு மனிதனுடைய குணத்தை இந்த சம்ஸ்காரங்களின் மொத்தமே நிர்ணயிக்கிறது. நல்ல சம்ஸ்காரங்கள் மேலோங்கியிருந்தால் குணம் நல்லதாக அமைகிறது. தீயவை மேலோங்கியிருந்தால் குணம் தீயதாக அமைகிறது. ஒரு மனிதன் தொடர்ந்து தீய வார்த்தைகளைக் கேட்டு தீய எண்ணங்களையே எண்ணி தீய செயல்களையே செய்து கொண்டிருந்தால் அவனது மனம் தீய சம்ஸ்காரங்களால் நிறைகிறது அவை அவனது சிந்தனையையும் செயலையும் அவன் அறியாமலே ஆட்டிப்படைக்கின்றன.

உண்மையில் இந்தத் தீய சம்ஸ்காரங்கள் தொடர்ந்து செயல்பட்ட வண்ணமே இருக்கின்றன. அவற்றின் விளைவு தீமையாகத்தான் இருக்கும் அதன் காரணத்தால் அந்த மனிதன் தீயவனாக இருக்கிறான் அவனால் இதைத் தவிர்க்க முடியாது. இந்தச் சம்ஸ்காரங்கள் மொத்தமும் தீய செயல்களைச் செய்வதற்கான ஆற்றல் மிக்க தொரு தூண்டுசக்தியை அவனுள் உருவாக்கும் தன் சம்ஸ்காரங்களின் கையில் மனிதன் எந்திரம் போலாகி விடுகிறான் அவை அவனைத் தீமை செய்யும்படிக் கட்டாயப்படுத்துகின்றன.

அதுபோலவே ஒருவன் நல்ல நினைவுகளையே நினைத்து நற்செயல்களையே செய்தால் சம்ஸ்காரங்களின் மொத்தமும் நல்லதாக இருக்கும் .இவை அவனது நினைப்பும் முயற்சியும் இல்லாமலேயே அவனை நற்செயல்களில் தூண்டுகின்றன. நல்லது செய்வதிலிருந்து தடுக்க முடியாத மனப்பாங்கு உண்டாகும் அளவிற்கு ஒருவன் மிக அதிகமாக நல்லவற்றைச் செய்வானானால் மிக அதிகமாக நல்லவற்றையே நினைப்பானானால் தன்னையும் மீறி அவன் தீமை செய்ய முயன்றாலும் அவனது மனப்பாங்குகளின் மொத்தமும் சேர்ந்து அவனைத் தீமை செய்ய விடாமல் தடுத்துவிடும். அப்போதுதான்அவன் முழுக்க முழுக்க நல்ல மனப்பாங்குகளின் ஆதிக்கத்தில் இருக்கிறான் .அந்த நிலையில் ஒரு மனிதனின் நற்பண்பு நிலைபெற்றுவிட்டது என்று கூறலாம்.

ஆமை தலையையும் கால்களையும் தன் ஓட்டிற்குள் இழுத்துக்கொண்டால் நீங்கள் அதைக் கண்டதுண்டமாக வெட்டிக் சிதைத்தாலும் அது வெளியே வராது .அதுபோல் தன் சங்கல்பங்களையும் புலன்களையும் கட்டுப்படுத்திய மனிதனின் இயல்பு மாறாமல் நிலை பெற்றுவிடும் அவன் அக ஆற்றல்களைத் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கிறான். அவனது சங்கல்பமின்றி அவற்றை வெளிப்படுத்த எதனாலும் முடியாது. நல்ல எண்ணங்களைத் தொடர்ந்து நினைப்பதால் மனத்தின் மேற்பரப்பில் நல்ல சம்ஸ்காரங்களே சஞ்சரிக்கின்றன. அதனால் நல்லது செய்வதற்கான மனப்பாங்கு வலிமை பெறுகிறது. அதன் விளைவாக நாம் புலன்களைக் கட்டுப்படுத்தலாம் என்று உணர்கிறோம் இவ்வாறுதான் குணம் நிலைபெற முடியும். அதன்பிறகு மட்டுமே ஒருவன் உண்மையை அடைகிறான் அத்தகையவன் என்றென்றைக்கும் பத்திரமாக இருப்பான் அவனால் எந்தத் தீமையும் செய்ய முடியாது நீங்கள் அவனை எந்தச் சூழ்நிலையில் வைத்தாலும் அவனுக்கு அபாயம் இல்லை.

இப்படி நல்ல மனப்பாங்கினைப் பெற்றிருப்பதைவிட உயர்ந்த நிலை ஒன்று உள்ளது. அது முக்தியில் நாட்டம். எல்லா யோகங்களின் லட்சியமும் ஆன்ம சுதந்திரமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லா யோகங்களும் வேறுபாடின்றி இந்த லட்சியத்திற்கு நன்மை அழைத்துச் செல்கின்றன. 

இங்கே ஒரு பிரச்சினை எழுகிறது முக்தி என்றால் முழு சுதந்திரம் தீமைத் தளையிலிருந்தும் அதுபோலவே நன்மைத் தளையிலிருந்தும் சுதந்திரம் பெறுவது . இரும்புச் சங்கிலியைப் போலவே தங்கச்சங்கிலியும் தளைதான். என் கையில் முள் ஒன்று குத்தியிருக்கிறது அதை எடுப்பதற்கு இன்னொரு முள்ளையே பயன்படுத்துகிறேன் எடுத்து முடிந்ததும் இரண்டையுமே எறிந்துவிடுகிறேன். இரண்டாவது முள்ளை நான் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை ஏனெனில் இரண்டும் முட்களே. அது போலவே தீய இயல்புகள் நல்ல இயல்புகளால் சமன் படுத்தப்பட வேண்டம் நல்ல சம்ஸ்காரங்களின் புதிய அலைகளைப் பாய்ச்சி தீய சம்ஸகாரங்களை ஏறக்குறைய அவை மறைகின்ற வரையில் ஒடுங்குகின்ற வரையில் மனத்தின் ஒரு மூலையில் கட்டுப்படுத்தப்படும் வரையில் நீக்க வேண்டும் அதற்குப் பிறகு நல்ல இயல்புகளையும் வெற்றி கொள்ள வேண்டும். இவ்வாறு பற்று பற்றின்மை ஆகிறது. செயல்புரி ஆனால் எந்தச் செயலோ எண்ணமோ மனத்தில் ஆழ்ந்த பதிவை உண்டாக்காமல் பார்த்துக்கொள். அலைகள் வந்து போகட்டும் உடம்பிலிருந்தும் மூளையிலிருந்தும் பெரிய பெரிய செயல்கள் புறப்படட்டும் ஆனால் அவை மனத்தில் ஆழ்ந்த பதிவு எதையும் உண்டாக்க அனுமதிக்காதீர்கள்.

இதைச் செய்வது எப்படி ? நாம் பற்றுக்கொள்கின்ற எந்தச் செயலின் பதிவும் நிலைத்து விடுவதைக் காண்கிறோம். ஒரு நாளில் நான் நூறு பேரைச் சந்தித்திருக்கலாம். நான் நேசிக்கின்ற ஒருவரையும் அவர்களுள் சந்திக்கிறேன் இரவு நான் படுக்கைக்குச் செல்லும்போது பகலில் பார்த்த முகங்களையெல்லாம் நினைவிற்குக் கொண்டு வர முயல்கிறேன் . அப்போது அந்த ஒரே முகம் ஒரு வேளை நான் ஒரு நிமிடம் மட்டும் பார்த்திருந்தாலும் நான் நேசிக்கின்ற அந்த முகம் மட்டுமே என் மனக்கண் முன் வருகிறது மற்ற எல்லா முகங்களும் மறைந்து விடுகின்றன. இதன் காரணம் என்ன? அந்தக் குறிப்பிட்ட நபரிடம் நான் கொண்டுள்ள பற்றுதான் மற்ற முகங்களைவிட அந்த முகத்தின் ஆழ்ந்த பதிவை என் மனத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. உடலியலின்படி எல்லா முகங்கள் ஏற்படுத்திய பதிவுகளும் ஒரே போன்றவைதாம் நான் பார்த்த எல்லா முகங்களின் உருவங்களும் என் விழித்திரையில் ஒரேபோல் தான் விழுந்தது, மூளையும் ஒரேபோல் தான் அவற்றைக் கிரகித்தது. ஆனால் மனத்தில் ஏற்பட்ட விளைவு ஒன்றுபோலில்லை நான் பார்த்தவற்றுள் பெரும்பாலானவை ஒருவேளை முற்றிலும் புதிய முகங்களாக இருக்கலாம். அவர்களைப்பற்றி இதற்கு முன் நான் நினைத்துக்கூட இருக்க மாட்டேன் ஆனால் நான் ஒரு கணம் மட்டுமே பார்க்க முடிந்த அந்த ஒரு முகத்திற்கு மட்டும் அதனுடன் தொடர்புடைய சமப் பதிவுகள் என்னுள்ளே இருந்தன. ஒரு வேளை அந்த முகத்தைப் பல ஆண்டுகளாகவே நான் என் மனத்தில் பார்த்து வந்திருக்கலாம். அவரைப் பற்றிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் எனக்குத்தெரிந்திருக்கலாம் இப்போது நான் கண்ட ஒருகணத் தோற்றம் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த அவரைப் பற்றிய ஆயிரமாயிரம் நினைவுகளை எழுப்பிவிட்டன மற்ற முகங்களைவிட அவரது முகம் தொடர்பான இந்த சம்ஸ்காரம் ஒருவேளை நூற்றுக்கணக்கான முறை உண்டாகியிருப்பதால் மனத்தில் ஆழ்ந்த விளைவை ஏற்படுத்திவிட்டது.

எனவே பற்றற்றிரு.செயல்கள் நடைபெறட்டும். மூளை மையங்கள் செயல்படட்டும். இடைவிடாமல் செயலில் ஈடுபடு. ஆனால் ஓர் அலை கூட மனத்தை வெல்ல அனுமதிக்காதே. அன்னியன் போல், ஒரு யாத்திரீகன் போல் இந்த உலகத்தில் வேலை செய். இடைவிடாமல் வேலை செய். ஆனால் உன்னைப் பந்தப் படுத்திக் கொள்ளாதே. பந்தம் என்பது பயங்கரமானது. இந்த உலகம் நமது நிலையான இருப்பிடம் அல்ல. நாம் கடந்து செல்கின்ற பல தளங்களுள் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். இயற்கை அனைத்தும் ஆன்மாவிற்கே தவிர, ஆன்மா இயற்கைக்காக அல்ல என்னும் மகத்தான சாங்கியக் கூற்றை நினைவில்கொள். இயற்கை இருப்பதன் ஒரே காரணம் ஆன்மா பண்படுவது மட்டுமே. இயற்கையின் இருப்பிற்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. ஆன்மா ஞானம் பெற வேண்டும், அதன் மூலமாக முக்தி பெற வேண்டும். அதற்காகவே இயற்கை இருக்கிறது. இது எப்போதும் நம் நினைவில் இருக்குமானால் நாம் நம்மை இயற்கையுடன் பிணைத்துக் கொள்ள மாட்டோம். இந்த உலகம் நாம் படிப்பதற்கான புத்தகம். வேண்டிய ஞானத்தை நாம் பெற்றுக்கொண்ட பிறகு, அந்தப் புத்தகத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை அறிந்துகொள்வோம்.

எப்படியோ, இந்த உலகம் தான் நாம் என்றே நாம் எண்ணுகிறோம். உலகிற்காகத்தான் ஆன்மா, உடலுக்காகத்தான் உயிர் என்று எண்ணத் தலைப்படுகிறோம். பொதுவாகச் சொல்வார்களே அது போல் மனிதன் உண்பதற்காகவே வாழ்கிறான், வாழ்வதற்காக உண்பதில்லை என்றே நாம் நினைக்கிறோம். இந்தத் தவறையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் உலகத்தையே நாம் என்று கருதி, அதில் பற்றுக் கொள்கிறோம். இந்தப் பற்று மனத்தில் ஆழ்ந்த பதிவை உண்டாக்குகிறது. இது நம்மைக் கட்டுப்படுத்தி சுதந்திரமாகச் செயல் புரிய விடாமல் அடிமைகள் போல் வேலை செய்ய வைக்கிறது.

ஓர் எஜமானனைப்போல் வேலை செய்ய வேண்டும். அடிமையைப் போல் அல்ல என்பதே இந்த உபதேசத்தின் சுருக்கம்.இடைவிடாமல் வேலை செய். ஆனால் அடிமையைப்போல் வேலை செய்யாதே. மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை நீ பார்த்த தில்லையா? முற்றிலும் ஓய்ந்திருக்க யாராலும் முடிவதில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் அடிமைகளைப்போல் வேலை செய்கிறார்கள். பலன் துன்பம்தான். இவையெல்லாம் சுயநலம் சார்ந்த வேலை. சுதந்திரத்தின் மூலமாகச் செயல்புரி, அன்பின் வழியாக வேலை செய்!

அன்பு என்னும் வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். சுதந்திரம் இல்லாதவரையில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது. நீங்கள் ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, சங்கிலியில் கட்டி, உங்களுக்காக வேலை செய்யச் சொல்லுங்கள்; அவன் மாடுபோல் வேலை செய்வான் . ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. நாமும் உலகப் பொருட்களுக்காக அடிமைபோல் வேலை செய்தோமானால் நம்மிடம் அன்பு இருக்க முடியாது; நாம் செய்யும் வேலையும் உண்மையான வேலையாகாது. 

உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் செய்யப் படுகின்ற வேலைகளும் சரி, நமக்காகவே செய்யப்படுகின்ற வேலையும் சரி, இது உண்மையே. சுயநலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை. 

இதோ ஒரு சோதனை: அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும் . அமைதியையும் ஆசிகளையும் விளைவாகக் கொண்டு வராத அன்புச் செயல்கள் எதுவுமே இல்லை. உண்மை இருப்பு, உண்மை அறிவு, உண்மை அன்பு மூன்றும் ஒன்றோடு ஒன்று நிரந்தரமாக இணைந்தவை. இந்த மூன்றும் ஒன்றிலேயே உள்ளன. இதில் எங்கே ஒன்று உள்ளதோ அங்கு மற்றவை இருந்தே தீரும். இவை இரண்டற்ற ஒன்றேயான ஸத்சித் ஆனந்தப் பொருளின் மூன்று நிலைகள். அந்த ஒரு பொருளே நடைமுறை நிலைக்கு வரும்போது, இருப்பு அல்லது ஸத் என்பதை நாம் உலகமாகக் காண்கிறோம். அறிவு அல்லது சித் உலகப் பொருட்களைப் பற்றிய அறிவாக மாறுகிறது; ஆனந்தம் மனித இதயம் அறிந்த உண்மையன்பு அணைத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. எனவே உண்மையன்பு என்பது காட்டுபவரிடமோ காட்டப்படுபவரிடமே வேதனையை உண்டாக்கும் வண்ணம் ஒரு போதும் செயல்படாது.

ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவள் முழுக்கமுழுக்கத் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டுமென்று அவன் நினைக்கிறான் அவளுடைய நடத்தை ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் கண்காணிக்கிறான். அவள் அவனது அருகிலேயே அமர வேண்டும், அவனது அருகிலேயே நிற்க வேண்டும், உண்பதும் போவதும் வருவதும் எல்லாமே அவனுடைய கட்டளைப்படியே நடக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவளது அடிமையாகி விட்ட அவன், அவளும் தன் அடிமையாக வேண்டும்.என்ற ஆசைப்படுகிறான். இது அன்பு அல்ல. இது அடிமைகளின் பக்குவப்படாத ஒருவிதப் பற்று; அன்பு போல் தன்னைக் காட்டிக் கொள்கிறது, அவ்வளவுதான். 

இது அன்பு அல்ல, ஏனெனில் இது துன்பத்தைத் தருகிறது. இவன் விரும்பியதை அந்தப் பெண் செய்யாவிட்டால் அது இவனை வேதனைக்கு உள்ளாக்குகிறது. அன்பிற்கு ஒருபோதும் வேதனை தரும் எதிர்விளைவு இருக்காது. அன்பு ஆனந்தத்தை மட்டுமே எதிர்விளைவாகத் தருகிறது. ஆனந்தத்தைத் தராத அன்பு அன்பல்ல. அது வேறு ஏதோ வொன்றைத் தவறாக அன்பென்று நினைப்பதாகும். வேதனை, பொறாமை சுயநல உணர்ச்சிகள் எவையும் எதிர்விளைவாக உண்டாகாவண்ணம் உங்கள் கணவன், மனைவி, மக்கள், உலகம் பிரபஞ்சம் அனைத்தையும் நேசிப்பதில் நீங்கள் வெற்றி பெற்றீர்களானால் பற்றின்றி இருக்கத் தகுந்த நிலையில் இருக்கிறீர்கள்.

அர்ஜுனா என்னைப் பார் நான் செயல்புரிவதை ஒரு கணம் நிறுத்தினாலும் இந்தப் பிரபஞ்சம் அழிந்து போகும். செயல்புரிந்து நான் அடைவதற்கு எதுவும் இல்லை. நானே இறைவன். பின் நான் ஏன் வேலை செய்யவேண்டும் ? ஏனெனில் நான் உலகை நேசிக்கிறேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இறைவன் பற்றின்றி இருக்கிறார். ஏனென்றால் அவர் அன்பு செய்கிறார். உண்மையன்பு நம்மைப் பற்றற்றவர்கள் ஆக்குகிறது. எங்கெல்லாம் பற்று இருக்கிறதோ, உலகப் பொருட்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதோ, அங்கே இருப்பதெல்லாம் வெறும் ஜடப் பொருளணுக்களின் இரண்டு தொகுதிகளுக்கிடையே உள்ள பௌதீகக் கவர்ச்சியே அது; இரண்டு உடம்புகளை நெருக்கமாக, மிக நெருக்கமாக எப்போதும் ஈர்த்துக் கொண்டிருக்கின்ற ஏதோ ஒன்று அது. போதிய அளவு அந்த இரண்டு உடம்புகளும் நெருங்க முடியாவிட்டால் வேதனை விளைகிறது. உண்மையன்பு ஒரு போதும் பௌதீகக் கவர்ச்சியைச் சார்ந்திருப்பதில்லை. அத்தகைய அன்பு கொண்டவர்கள் ஆயிரம் மைல்கள் இடைவெளியில் இருக்கலாம். ஆனால் அவர்களது அன்பு ஒருபோலவே இருக்கும் அது அழிவதில்லை, எந்த வேதனையான எதிர்விளைவையும் உண்டாக்குவதில்லை.

இத்தகைய பற்றின்மை ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு அடையக்கூடிய ஒன்று. இந்த நிலையை அடையும் போது அன்பின் லட்சியத்தை அடைந்து விடுகிறோம்;சுதந்திரர்களாகி விடுகிறோம்; இயற்கையின் கட்டுக்கள் நம்மிடமிருந்து விலகிவிடுகின்றன. உலகம் உண்மையாக எப்படி இருக்கிறதோ அப்படியே நாம் காண்போம். அதன் பின் இயற்கை நம்மை எந்தச் சங்கிலியாலும் கட்டுவதில்லை. நாம் முழுக்க முழுக்கச் சுதந்திரர்களாகி விடுவோம்; செயல்களின் பலன்களைப் பொருட்படுத்த மாட்டோம். அந்தப் பலன்கள் என்ன என்பதைப்பற்றி யாருக்குக் கவலை!

நீ உன் குழந்தைகளுக்குத் தருபவற்றிற்கு எதையாவது திருப்பிக் கேட்பாயா? உன் குழந்தைகளுக்காக உழைப்பது உனது கடமை, அதோடு விஷயம் முடிந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, நகருக்கோ, நாட்டிற்கோ நீங்கள் எதையாவது செய்யும்போதும் இதே மனநிலையைக் கைக்கொள்ளுங்கள்; அதாவது எதையும் பிரதியாக எதிர்பார்க்காமல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்வதுபோலவே செய்யுங்கள். பிரதி பலனைப்பற்றி எந்த எண்ணமும் இல்லாமல், செய்கின்ற அனைத்தையும் உலக வேள்வியில் ஓர் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கின்ற நிலையில் உங்களால் எப்போதும் இருக்க முடியுமானால், நீங்கள் செய்கின்ற வேலை உங்களைப் பற்றுக்கொள்ளச் செய்யாது. பிரதியாக எதையாவது எதர்பார்க்கும்போதுதான் பற்றுவருகிறது. அடிமைகளைப்போல் வேலை செய்தால் சுயநலமும் பற்றுமே உண்டாகிறது. மனத்தின் எஜமானர்களாகச் செயல்புரிந்தாலோ பற்றின்மையால் வரும் ஆனந்தம் விளைகிறது.

நியாயம் நீதி என்றெல்லாம் அடிக்கடிப்பேசுகிறோம். ஆனால் உலகிலோ நியாயம் நீதியெல்லாம் வெறும் சிறுபிள்ளைப் பேச்சாகவே உள்ளது. மனிதனின் நடத்தையை வழிநடத்துகின்ற இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒன்று, அதிகாரம் மற்றொன்று, கருணை. அதிகாரம் செலுத்துவது என்பது உண்மையில் சுயநலத்தின் செயல்பாடுதான். உலகில் உள்ள ஆண் பெண் அனைவருமே தங்கள் அதிகாரத்தையும் சலுகையையும் பயன்படுத்தி முடிந்த அளவு லாபம் தேடவே முயல்கின்றனர். கருணை என்பதே சொர்க்கம்தான். நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றால் நாம் கருணை நிறைந்தவர்கள் ஆக வேண்டும். நீதியும் உரிமையும் கூட கருணையையே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களுக்குப் பலனை எதிர்பார்ப்பது நமது ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கிறது; அது மட்டுமல்ல இறுதியில் அது துன்பத்தையே கொண்டு வருகிறது.

கருணை, சுயநலம் கலவாத தானம் போன்ற லட்சியங்களை வாழ்வில் செயல்முறைப்படுத்த மற்றொரு வழி உள்ளது. நாம் சகுணக் கடவுளை நம்புவர்களாக இருந்தால் செயலை வழிபாடாகச் செய்வதே அந்த வழி. இங்கே நாம் செய்கின்ற செயல்களின் பலன் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து விடுகிறோம். இதன் மூலம் நாம் அவரை வழிபடுகிறோம். எனவே நாம் செய்வதற்குப் பிரதியாக மக்களிடமிருந்தோ உலகிடமிருந்தோ எதையும் எதிர்பார்க்க நமக்கு உரிமையில்லாமல் போகிறது. இறைவன் இடையீடின்றிச் செயல்புரிந்தும் பற்று என்பது அவரிடம் ஒருபோதும் இல்லை. தாமரை இலையைத் தண்ணீர் நனைக்க முடியாது. அதுபோலவே சுயநலம் அற்றவனை அவனிடம் பலன்களில் நாட்டத்தை ஏற்படுத்தி, அவனைப் பிணைக்க கர்மத்தால் முடியாது சுயநலமும் பற்றும் இல்லாதவன் நெருக்கம் மிக்கதும் பாவமே உருவானதுமான ஒரு நகரத்தின் நடுவே வாழ்ந்தாலும் பாவம் அவனை நெருங்காது.

முழுமையான தன்னல மறுப்பைக் கீழ்வரும் கதை விவரிக்கிறது; குருசேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. எல்லோரும் அந்த யாகததின் சிறப்பையும்பெருமையையும் கண்டு வியந்து அத்தகைய ஒரு யாகத்தை இதுவரை உலகம் கண்டதில்லை என்று பாராட்டினர். யாகம் நிறைவுற்ற பின்னர் அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பில் ஒரு பகுதி பொன்னாகவும் மற்றப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருந்தது உள்ளே நுழைந்த அது யாக மண்டபத்தில் விழுந்து புரண்டது. பின்னர் எல்லோரையும் பார்த்து, நீங்கள்எல்லோரும் பொய்யர்கள் இது யாகமே அல்ல என்று கூறியது கேட்டவர்கள் திகைத்தார்கள் என்ன இது யாகம் அல்ல என்றா சொல்கிறாய் எவ்வளவு பொன்னும் பொருளும் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா? எல்லோருக்கும் செல்வந்தர்களாகி மகிழ்ச்சியில் திளைக்கின்றனரே இதுவரை மனிதன் செய்தவற்றுள் மிக அற்புதமான யாகம் இது என்றனர்.

அதற்குக் கீரிப்பிள்ளை கூறியது: முன்பொரு முனை சிறிய கிராமம் ஒன்றில் பிராமணர் ஒருவர் தன்மனைவி மகன் மற்றும் மருமகளோடு வாழ்ந்து வந்தார். அவர்கள் மிகவும் ஏழைகள். பிறருக்குப் படிப்பும் சாஸ்திரமும் சொல்லித் தந்து அதனால் கிடைக்கும் மிகக் குறைந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை அந்த நாட்டில் மூன்று வருடங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. முன்பு எப்போதையும் விட அந்தப் பிராமணக் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியது. பல நாட்கள் பட்டினியில் கழிந்தன அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் காலையில் அந்தப் பிராமணருக்கு பார்லி மாவு கிடைத்தது. அதைப் பக்குவம் செய்து பங்கிட்டு நால்வரும் உண்ணத்தொடங்கினார். அந்த வேளையில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது பிராமணர் கதவைத் திறந்தார் எதிரே விருந்தினர் ஒருவர்நின்று கொண்டிருந்தார்.

இந்தியாவில் விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்கு உரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும். எனவே அந்த ஏழைப் பிராமணர் விருந்தாளியை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் தன் பங்கு உணவை அந்த விருந்தாளிக்குக் கொடுத்துச் சாப்பிடும்படி உபசரித்தார். வந்தவரோ கணநேரத்தில் மாவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, ஐயோ நீங்கள் என்னைக் கொல்கிறீர்களே! பத்து நாட்களாக நான் பட்டினிகிடக்கிறேன் . இந்தச் சொற்ப உணவு என் பசியைத் தூண்டி அல்லவா விட்டுவிட்டது என்று கதறினார். உடனே அந்தப் பிராமணரின் மனைவி கணவரிடம் என் பங்கை அவருக்குக் கொடுங்கள் என்று கூறினாள். பிராமணரோ வேண்டாம் என்றார். அதற்கு அவள் வந்திருப்பவர் ஏழை வீட்டிற்கு வந்த விருந்தினரின் பசியைப் போக்கி உபசரிப்பது இல்லறத்தார்களாகிய நமது கடமை அவருக்குத் தர உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது என்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டியது மனைவியாகிய என் கடமை என்று கூறித் தன் பங்கை அந்த விருந்தாளிக்கு கொடுத்தாள். விருநாளியின் பசி தீரவில்லை அவர் துடித்தார். இதைப் பார்த்த அந்தப் பிராமணரின் மகன் தந்தையின் பாரத்தைச் சுமப்பதில் உதவ வேண்டியது மகனின் கடமை இதோ என் பங்கு என்று தனது பங்கை அந்த விருந்தாளியிடம் கொடுத்தான். அப்படியும் விருந்தாளியின் பசி அடங்க வில்லை. அவர் மிகுந்த வேதனைப்பட்டார் இதைக் கண்ட அந்த மகனுடைய மனைவி தன் பங்கையும் கொடுத்தாள். அதை உண்டபின் அவரது பசி தீர்ந்தது அவர்களை வாழ்த்தி விடைபெற்றார். அந்த விருந்தாளி ஆனால் வீட்டிலுள்ள நால்வரும் பசியின் கொடுமையால் அன்றிரவே இறந்து போனார்கள்,

அந்த மாவில் கொஞ்சம் அங்கே தரையில் சிந்தியிருந்தது. நான் அந்த மாவின் மீது புரண்டபோது என் பாதி உடம்பு பொன்னாகியது. அதை நீங்கள் இதோ பார்க்கிறீர்கள். அது போன்ற யாகம் எங்காவது நடைபெறுகிறதா என்று அன்றிலிருந்து நான் உலகம் முழுவதும் தேடுகிறேன். ஆனால் எங்கேயும் காண முடியவில்லை. என் மீதி உடல் பொன்னாகவும் இல்லை அதனால் தான் இது யாகமே இல்லை என்கிறேன்.

தானம் பற்றிய இந்தக் கருத்து இப்போது இந்தியாவிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது. மாமனிதர்கள் குறைந்து வருகிறார்கள். நான் முதன் முதலில் ஆங்கிலம் கற்றுக் கொண்டபோது கடமையுணர்வு கொண்ட ஒரு சிறுவனைப் பற்றிய ஆங்கிலக் கதையொன்றைப் படித்தேன் . தான் வேலை செய்து பெற்றுவந்த கூலியில் சிறு தொகையைத் தன் தாய்க்குக் கொடுத்தான் அவன். இதைப் புகழ்ந்து நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அது என்ன பிரமாதமோ! இந்துச் சிறுவன் ஒருவனுக்கு இந்தக் கதையின் நீதி புரியவே புரியாது. தனக்காகவே ஒவ்வொருவனும் என்ற மேலை நாட்டுக் கருத்தை அறிந்த பின்னரே இப்போது அந்தக் கதை எனக்குப் புரிகிறது. சிலரோ அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு தாய் தந்தை மனைவி மக்களைக்கூடத் தவிக்கும் படி விட்டுவிடுகிறார்கள். இல்லறத்தானின் லட்சியம் ஒரு போதும் ஓரிடத்திலும் இதுவாக இருக்கக் கூடாது.

இப்போது கர்மயோகம் என்பது எது என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். சாகின்ற நிலையிலும் கூட கேள்வி எதுவும் கேட்காமல் ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். கோடி முறை நீங்கள் ஏமாற்றப் பட்டாலும் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள், ஏழைகளுக்குச் செய்யும் உதவிபற்றிப் பெருமையடித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றி பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். மாறாக நீங்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். ஒரு லட்சிய இல்லறத் தானாக இருப்பது ஒரு லட்சியத் துறவியாக இருப்பதை விடக் கடினம் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். உண்மையான கர்மயோகம் உண்மை யான துறவு வாழ்வைவிடக் கடினமான தில்லை என்றாலும், நிச்சயமாக, துறவு வாழ்விற்கு ஈடான கடுமை நிறைந்ததே.




Site Content

Additional Information

  

பற்றின்மையே பூரணமான தன்னல மறுப்பு!

நம்மிடமிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மிடமே எதிர்ச்செயலாகத் திரும்பி வருவது போல் நம் செயல்கள் பிறரிடமும் பிறரது செயல்கள் நம் மிடமும் செயல்படுகின்றன. தீங்கு செய்கின்ற ஒருவன் மேலும் மேலும் தீயவனாகிறான். அவனே நல்லது செய்யத் தொடங்கும் போது மேலும் மேலும் வலிமை யடைந்து எப்போதுமே நல்லதைச் செய்யக் கற்றுக் கொள்கிறான். இந்த உண்மையை நீங்கள் கவனித்திருப்பீர்கள் ஒரு செயல் ஏற்படுத்தும் தாக்கத்தின் இத்தகைய தீவிரத்தை நமது செயல்கள் பரஸ்பரம் ஒவ்வொருவர் மீதும் விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் உண்டாக்குகின்றன என்ற உண்மையின் மூலம் அல்லாமல், வேறு எதன் மூலமாகவும் விளக்க முடியாது.
 

பௌதீக விஞ்ஞானத்திலிருந்து இதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நான் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வு நிலையில் இருக்கிறது. இந்த அதிர்வு நிலையில் இருக்கின்ற மற்றெல்லா மனங்களும் என் மனத்தால் பாதிக்கப்படலாம். ஓர் அறையில் பல்வேறு இசைக்கருவிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவை அனைத்தின் தந்திக்கம்பிகளும் ஒரேமாதிரி சுருதி சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கருவியின் தந்தியை மீட்டினால் மற்ற கருவிகளும் அதே சுவரத்தைத் தரும் விதத்தில் அதிரத் தொடங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதுபோலவே ஒரு குறிப்பிட்ட அதிர்வுநிலையிலுள்ள எல்லா மனங்களும் அதே நிலையிலுள்ள எண்ணத்தால் சம அளவில் பாதிக்கப்படுகின்றன. ஆனால் தூரம் மற்றும் பல காரணங்களைப் பொறுத்து இந்தப் பாதிப்பின் தாக்கம் மனத்திற்கு மனம் மாறுபடவே செய்கிறது. என்றாலும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையிலேயே அந்த மனம் எப்போதும் இருக்கிறது. உதாரணமாக நான் ஒரு தீமை செய்கிறேன். அப்போது என் மனம் குறிப்பிட்ட அதிர்வு நிலையில் இருக்கிறது அப்போது பிரபஞ்சத்தில் அதே அதிர்வு நிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அந்த அதிர்வால் பாதிக்கப்படலாம். அதுபோலவே நான் நல்ல காரியம் செய்யும்போது, என் மனம் வேறோர் அதிர்வு நிலையில் இருக்கும்; அப்போது அதே அதிர்வு நிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அதனால் பாதிக்கப்படலாம் இப்படி ஒரு மனத்தின் மீது மற்றொரு மனத்திற்குள்ள ஆற்றல் ஓரளவிற்கு அந்த அதிர்வு கூடியும் குறைந்தும் இருப்பதற்கு ஏற்பவே இருக்கும்.
 

இந்த உதாரணத்தைத் தொடர்வோம். ஒளியின் அலைகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையுமுன் லட்சோபலட்சம் ஆண்டுகள் பயணம் செய்யலாம். அதுபோலவே எண்ண அலைகளும் தங்களுக்கு ஏற்றவிதத்தில் அதிர்கின்ற ஒரு பொருளைச் சென்றடைய நூற்றுக் கணக்கான ஆண்டுகள் பயணம் செய்ய நேரலாம் எனவே இந்த வானவெளி அத்தகைய நல்ல மற்றும் தீய அலைகளால் நிரம்பி இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஒவ்வொரு மூளையிலிருந்தும் வெளிக் கிளம்பும் ஒவ்வோர் எண்ணமும் அதை ஏற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான பொருளை அடையும்வரையில் அதிர்ந்து கொண்டேயிருக்கின்றன என்று சொல்லலாம்.
 

அவற்றை ஏற்றுக் கொள்வதற்குத் தகுதியாக இருக்கம் மனம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறது. ஒருவன் தீய செயல்களைச் செய்யும்போது அவன் தன் மனத்தை ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வருகிறான். அப்போது அதே அதிர்வுநிலையில் வானவெளியில் மிதந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற எண்ண அலைகள் எல்லாம் அவனது மனத்தில் நுழையமுயல்கின்றன. இதனால் தான் பொதுவாக தீமை செய்பவன் மேலும் மேலும்தீமை செய்துகொண்டே இருக்கிறான். அவனது செயல் தீவிரமாகிறது நன்மை செய்பவனின் விஷயமும் இதுதான் அவன் வானவெளியில் உள்ள நல்ல அலைகளுக்காகத் தன்னைத் திறந்து வைக்கிறான் அவனது நற்செயல்களும் உறுதி பெறுகின்றன.
 

எனவே நாம் தீமை செய்யும்போது இரண்டு வகையான அபாயங்களை விளைவிக்கிறோம் முதலில் நம்மைச் சுற்றியுள்ள தீய ஆதிக்கங்கள் நம்மீது செயல்பட நாமே இடம் கொடுக்கிறோம். இரண்டாவதாக மற்றவர்களைப் பாதிக்கின்ற அது ஒருவேளை நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகாக இருக்கலாம். தீமையைச் செய்யும் போது நாம் நம்முடன் சேர்த்துப் பிறரையும் துன்புறுத்துகிறோம் மனிதனிலுள்ள மற்ற எல்லா சக்திகளையும் போலவே நன்மை தீமை ஆகிய சக்திகளும் புறத்திலிருந்தே வலிமையைப் பெறுகின்றன.
 கர்மயோகத்தின் படி ஒருமுறை செய்த செயல் பலனை அளிக்கும் வரையில் அதை அழிக்க முடியாது அது பலனளிப்பதை உலகத்தில் உள்ள எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது. நான் ஒரு தீமை செய்தால் அதற்காக நான் துன்பப்பட்டேயாக வேண்டும். அதைத் தடுக்கவோ அழிக்கவோ இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஆற்றலாலும் முடியாது. அதுபோலவே நான் ஒரு நல்ல செயல் செய்தால் அது நற்பலன்களைத் தருவதைத் தடுக்கின்ற ஆற்றலும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை காரணம் காரீயத்தைக் கொண்டு வந்தே தீரும் எதுவும் அதை அழிக்கவோ தடுக்கவோ முடியாது.
 

கர்மயோகத்தைப் பற்றிய நுணுக்கமானதும் ஆழமானதுமான முடிவு ஒன்று இப்போது வருகிறது. நல்லதும் தீயதும்
ஆகிய நமது இரண்டு செயல்களும் பரஸ்பரம் பின்னிப் பிணைந்துள்ளன. இது முற்றிலும் நல்ல செயல் இது முற்றிலும் தீய செயல் என்று நாம் வரையறுக்க முடியாது. ஒரே நேரத்தில் நல்ல மற்றும் தீய விளைவுகளைத் தராத எந்தச் செயலுமே கிடையாது. இந்த உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் நான் நல்லது செய்வதாக உங்களுள் சிலர் நினைக்கலாம். அதே வேளையில் வான்வெளியில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளை நான் சாகடித்துக் கொண்டிருக்கலாம் இவ்வாறு ஏதோ சிலவற்றிற்குத் தீமையும் செய்து கொண்டிருக்கிறேன் நமக்கு மிக அருகிலுள்ளவர்களுக்கு நமக்கு வேண்டியவர்களுக்கு நன்மை பயக்கும் போது அதை நற்செயல் என்கிறோம். உதாரணமாக நான் பேசிக் கொண்டிருப்பதை நல்லது என்று நீங்கள் கூறலாம், ஆனால் நுண்ணுயிரிகள் அவ்வாறு நினைக்காது. நுண்ணுயிரிகளை நீங்கள் பார்க்கவில்லை; ஆனால் உங்களை நீங்கள் பார்க்கிறீர்கள். என் பேச்சு உங்களைப் பாதிப்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது அது அந்த நுண்ணுயிரிகளை எப்படிப் பாதிக்கிறது என்பது அவ்வளவு தெளிவாகத் தெரிய வில்லை. எனவே நமது தீய செயல்களை ஆராய்ந்தால் அவற்றால் எங்காவது ஓரிடத்தில் நன்மை விளைந்திருப்பதைக் காணலாம் யார் நல்ல செயலிலும் தீய அம்சம் உண்டென்றும் தீய செயலிலும் நல்ல அம்சம் உண்டென்றும் காண்கிறானோ அவனை செயலின் ரகசியத்தை அறிந்தவன்.
 

இதிலிருந்து தெரிவது என்ன? தூய்மை என்றால் அஹிம்சை என்றும், தூய்மையற்றது என்றால் ஹிம்சை என்றும் பொருள் கொள்வதானால், நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த அர்த்தத்தில் முழுக்கமுழுக்கத் தூய்மையானதோ ஆன ஒரு செயல் இருக்க முடியாது என்பதுதான். நாம் பிறரைத் துன்புறுத்தாமல் மூச்சுவிடவோ உயிர் வாழவோ முடியாது. நாம் உண்ணும் ஒவ்வொரு பிடி உணவும் மற்றொன்றின் வாயிலிருந்து பறித்தெடுக்கப்பட்டதே நமது வாழ்வே மற்ற உயிர்களின் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளியபடிதான் சென்று கொண்டிருக்கிறது. அது மனிதனாக இருக்கலாம் விலங்காக இருக்கலாம் அல்லது நுண்ணுயிரிகளாக இருக்கலாம். ஏதாவது ஒன்றை நாம் ஒதுக்கித் தள்ளியேயாக காலம் வரை ஓயாமல் செயல்கள் புரியலாம். ஆனால் சிக்கலான இந்தப் பொறியிலிருந்து தப்பிக்க வழி எதுவுமே இல்லை நீங்கள் மேலும் மேலும் செயல் புரிந்துகொண்டே போகலாம் ஆனால் அதன் பலன்களிலுள்ள நன்மை மற்றும் தீமையின் தவிர்க்க முடியாத இந்தச் சேர்க்கைக்கு ஒரு முடிவே இருக்காது.
 

இரண்டாவதாக நாம் ஆலோசிக்க வேண்டியது செயலின் குறிக்கோள் என்ன என்பதே. உலகம் நிறைநிலையை அடைகின்ற காலம் ஒன்று வரும். அப்போது நோயோ மரணமோ,துன்பமோ தீமையோ இருக்காது என்று ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பாலான மக்கள் நம்புவதைக் காண்கிறோம். எண்ணம் நல்லதுதான் பாமர மக்களுக்கு உத்வேகத்தைத் தரவும் அவர்களை உயர்த்தவும் ஒரு மிகச் சிறந்த தூண்டுசக்தி இது ஆனால் நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் இது நடக்க முடியாத ஒன்று என்பது பிரத்தியட்சமாகத் தெரியும். நன்மையும் தீமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்க அது எப்படி நடக்க முடியும் தீமை இல்லாத நன்மை எப்படி இருக்க முடியும் நிறைநிலை என்பதற்கு என்ன பொருள்? நிறைவாழ்வு என்பது முன்னுக்குப் பின் முரணான ஒன்று வாழ்வு என்பதே நமக்கும் வெளியே இருக்கின்ற அனைத்திற்கும் தொடர்ந்து நடக்கின்ற போராட்டம்தான். உண்மையில் ஒவ்வொரு கணமும் நாம் புற இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் தோற்றால் நமது வாழ்க்கை முடிந்தாக வேண்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் வாழ்க்கை என்பது உணவிற்காகவும் காற்றிற்காகவும் தொடர்ந்த போராட்டமாக உள்ளது. உணவோ காற்றோ கிடைக்காவிட்டால் நாம் இறந்து போகிறோம். வாழ்க்கை என்பது தடையற்றுப் பாய்கின்ற நீரோட்டமல்ல பலவற்றுடைய சங்கமத்தின் விளைவு அது உள்ளே உள்ள ஏதோ ஒன்றிற்கும் புறவுலகிற்கும் நிகழ்கின்ற இந்தச் சிக்கலான போராட்டத்தைத் தான் நாம் வாழ்க்கை என்று அழைக்கிறோம். எனவே இந்தப் போராட்டம் ஓயும்போது வாழ்க்கையும் முடிந்து விடுகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவு. இந்தப் போராட்டத்தின் முடிவே லட்சிய இன்பம் என்பதன் பொருள். போராட்டம் முடிவடைந்தால் வாழ்க்கையும் முடிகிறது. ஏனென்றால் வாழ்க்கை முடிவடைந்தால் மட்டுமே இந்தப் போராட்டம் முடிவடையும்.
 

உலகிற்கு உதவுவதன் மூலம் நமக்கேதான் நாம் உதவி செய்துகொள்கிறோம் என்பதை முன்பே கண்டோம். பிறருக்காகச் செய்யப்படும் வேலையின் முக்கிய விளைவு நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் பிறருக்கு நன்மை செய்வதற்காகச் செய்கின்ற இடைவிடாத முயற்சியின் மூலம் நாம் நம்மையே மறக்க முயல்கிறோம். நம்மை மறப்பது என்பது வாழ்வில் நாம் கற்றாக வேண்டிய மிகப் பெரிய பாடமாகும். சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். ஆனால் பலகாலப் போராட்டத்திற்குப் பிறகு தன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. தன்னைத் தவிர வேறு யாராலும் தனக்குச் சுகம் தர முடியாது என்பதை அறிந்து கொள்கிறான்.
 

அறச் செயல்கள் ஒவ்வொன்றும் கருணை நிறைந்த எண்ணம் ஒவ்வொன்றும் உதவியாகச் செய்யப் படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணும் நமது அகந்தையை அழித்து நம்மை மிகத் தாழ்ந்தவர்களாகவும் மிகமிகச் சாதாரணமானவர்களாகவும் நினைக்கும் படிச் செய் கின்றன எனவே இவையனைத்தும் நல்லவையே ஞானம் பக்தி கர்மம் முதலிய எல்லாமே ஓரிடத்தில் சங்கமிக்கின்றன. என்றென்றைக்கும் முழுமையாகத் தன்னை மறுப்பதே மிகவுயர்ந்த லட்சியம் அங்கே நான் இல்லை எல்லாம் நீயே மனிதன் அறிந்தாலும் அறியாவிட்டாலும் கர்மயோகம் அவனை அந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
 

நிர்க்குணக் கடவுள்கருத்தைக் கேட்டாலே மதப் பிரச்சாரகன் நடுங்கலாம் அவன் சகுணக் கடவுள் கருத்தை வற்புறுத்துவான் அதன் மூலம் தனது சொந்த இயல்பையும் தனித்துவத்தையும் நிலை நிறுத்த விரும்புகிறான் அவன் இந்த இரு வார்த்தைகளுக்கும் அவன் என்ன பொருள் கொள்கிறானோ அது வேறு விஷயம் ஆனால் அவனுடைய நீதிநெறிக் கருத்துக்கள் உண்மை யிலேயே நல்லதாக இருக்குமானால் அது மிகவுயர்ந்த தன்னல மறுப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் இருக்க முடியாது தன்னல மறுப்பே எல்லா ஒழுக்கத் திற்கும் அடிப்படை மனிதர்கள் மிருகங்கள் தேவர்கள் என்று யாரை எடுத்துக்கொண்டாலும் சரி எல்லோருடைய நீதிநெறி அமைப்புக்களுக்கும் ஒரே அடிப்படைக் கருத்து ஒரே அடிப்படைக் கோட்பாடு தன்னல மறுப்பே.
 

இந்த உலகத்தில் பலவகையான மனிதர்களை நாம் காணலாம் முதலில் தெய்வ மனிதர்கள் இவர்களின் தன்னல மறுப்பு பரிபூரணமானது தங்கள் உயிரைக் கொடுத்தும் பிறருக்கு நன்மைகளை மட்டுமே செய்பவர்கள் இவர்கள். இவர்களே மனிதர்களுள் உயர்ந்தவர்கள். இத்தகையோர் ஒரு நாட்டில் நூறுபேர் இருந்தாலும் போதும் அந்த நாடு எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் மிகச் சொற்பமாகவே உள்ளார்கள் அடுத்து தங்களுக்குத் துன்பம் நேராதவரையில் பிறருக்கு நன்மை செய்கின்ற நல்லோர் உள்ளனர் மூன்றாவது ஒரு வகையினர் உள்ளனர் அவர்கள் தங்களுக்கு நன்மை செய்து கொள்டவார்கள் பிறருக்குத் தீங்கு செய்வார்கள் இவர்களை அடுத்து பெயரிட்டு அழைக்கத் தகாத நான்காவது வகையான மனிதர்கள் இருப்பதாக சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவர் கூறுகிறார் இவர்கள் தீமை செய்ய வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காகப் பிறருக்குத் தீங்கிழைப் பார்கள் வாழ்க்கையின் ஒரு முனையில் நன்மைக்காகவே நன்மை செய்கின்ற மிக மேலான நல்லோர் இருப்பது போல் மறுமுனையில் தீமைக்காக மட்டுமே தீமை செய்வோர் உள்ளனர் தீமை செய்வதால் இவர்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை ஆனாலும் தீமை செய்வது இவர்களின் இயல்பு.
 

சம்ஸ்கிருதத்தில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று பிரவிருத்தி அதாவது நோக்கிச் செல்லுதல்; மற்றொன்று நிவிருத்தி அதாவது விலகிச் செல்லுதல். பிரவிருத்தியையே சம்சாரம் என்றும், நான் எனது என்றும் கூறுகிறோம் சொத்து, பணம், அதிகாரம், பேர் புகழ் இவற்றால் அந்த நான் என்னும் எண்ணத்தை எப்போதும் அதிகரிக்கச் செய்வதும், பற்றிப்பிடித்துக் கொள்கின்ற இயல்புடையதுமான எல்லா செயல்களும் இந்தப் பிரவிருத்தி என்ற சொல்லில் அடங்கியுள்ளன. எல்லாவற்றையும் நான் என்ற மையத்திற்கு இழுத்துச் சேர்ப்பது அதன் இயல்பு. மனிதனின் இயல்பான தன்மையான இதுவே பிரவிருத்தி. எல்லா இடங்களிலிருந்தும் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டுவந்து ஒரு மையத்தைச் சுற்றி மனிதனின் சொந்த இனிமையான நான் உணர்வைச் சுற்றி குவித்து வைப்பது பிரவிருத்தி இந்த இயல்பு மறையத் தொடங்கும்போது, நிவிருத்தி தொடங்கும்போது, விலகிச் செல்லுதல் தொடங்கும் போது தான் ஒழுக்கமும் மதமும் ஆரம்பிக்கின்றன. பிரவிருத்தி, நிவிருத்தி இரண்டுமே செயல் சம்பந்தப் பட்டவை. முன்னது தீய செயல், பின்னது நற்செயல் இந்த நிவிருத்தியே ஒழுக்கம் மதம் எல்லாவற்றின் அடிப்படை ஆதாரம். நிவிருத்தியின் நிறைவே முழுத்தன்னல மறுப்பு உடல் உயிர் அனைத்தையும் பிறருக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் நிலை இந்த நிலையை அடைந்துவிட்டால் ஒருவன் கர்மயோகத் தின் நிறைநிலையை அடைந்துவிட்டான் இது நற்செயல்களின் விளைவாகக் கிடைக்கின்ற மிக உயர்ந்த பலனாகும்.
 

ஒருவன் எந்தத் தத்துவங்களையும் படிக்காதவனாக இருந்தாலும், எந்தக் கடவுளிடமும் முன்போ இப்போதோ நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், வாழ்நாளில் ஒரு முறைகூடப் பிரார்த்தனை செய்யாதவனாக இருந்தாலும் வெறும் நற்செயல்களின் ஆற்றல் அவனை மற்றவர்களுக்காகத் தன் உயிரையும் மற்ற அனைத்தையும் தியாகம் செய்யும் நிலைக்குக் கொண்டு வந்து விடுமானால், அவன் ஒரு பக்தன் பிரார்த்தனை மூலமாகவும் தத்துவஞானி தன் ஞானத்தின் மூலமாகவும் அடைகின்ற அதே இடத்திற்குச் சென்று சேர்வான். தத்துவஞானி, கர்மயோகி, பக்தன் அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து சேர்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது, அந்த இடம் தன்னல மறுப்பு மக்கள் பின்பற்றும் தத்துவங்களும் மதமும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும் பிறருக்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருப்பவனின் முன் மனிதகுலம் முழுவதுமே மரியாதையோடும் பக்தி யோடும் நிற்கும்.
 

இங்கு மதம், இனம், கோட்பாடு பற்றிய கேள்வியே எழுவதில்லை. அத்தகைய பரிபூரண ஆத்மதியாகபூர்வமான செயல்களைக் காணும்போது, மதக் கருத்துக்களை எதிர்ப்பவர்கள் கூட அவற்றைப் போற்றியே தீர வேண்டும் என்று உணர்கிறார்கள். அவற்றைப் போற்றியே தீர வேண்டும் என்று உணர்கிறார்கள். புத்தர் கடவுளைப் போதிக்க வில்லை ஏன் ஆத்ம தியாகத்தை தவிர எதையும் போதிக்கவில்லை. ஆனால் எட்வின் ஆர்னால்ட் எழுதிய ஆசிய ஜோதியைப் படிக்கின்றவன் மதவெறி பிடித்த கிறிஸ்தவனாக இருந்தால்கூடபயபக்தியோடு அவரைப் பணிவதை நீங்கள் பார்த்தது இல்லையா?
 

மதவெறியன் அறியாத ஒன்று என்னவென்றால், தனது லட்சியம் எதுவோ அதுவே தன்னிலிருந்து வேறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்களுடையதும் என்பது தான் பக்தன் எப்போதும் தன்மனத்தில் இறைநினைவை வைத்துக் கொண்டிருப்பதன் மூலமும் எப்போதும் நல்லவைகளால் குழப்பட்டிருப்பதன் மூலமும் இறுதியாக அதே நிலைக்கு வருகிறான் உன் திருவுளம் நிறைவேறட்டும் என்று கூறுகிறான். தனக்கென்று அவன் எதையும் வைத்துக் கொள்வதில்லை. இது தன்னல மறுப்பு. தத்துவஞானி ஞானத்தின் மூலம், தான் என்று தோன்றுவது ஒரு மாயை என்பதைக் கண்டு அதை எளிதில் விட்டுவிடுகிறான். இதுவும் தன்னல மறுப்பே. எனவே கர்மம் பக்தி ஞானம் எல்லாம் இங்கே சந்திக்கின்றன. கடவுள் என்பது உலகம் அல்ல என்று பண்டைய ஆச்சாரியர்கள் போதித்ததன் பொருள் இதுதான் உலகம் என்ற ஒன்று இருக்கிறது, கடவுள் என்னும் ஒருவர் இருக்கிறார். இந்த வேறுபாடு முற்றிலும் உண்மையானது உலகம் என்று அவர்கள் குறிப்பிடுவது சுயநலத்தையே சுயநலமின்மையே கடவுள் ஒருவன் பொன் மாளிகையில் சிங்காசனத்தில் அமர்பவனாக வாழ்ந்தும் சுயநலம் சிறிதும் அற்றவனாக இருக்கலாம்; அவன் கடவுளில் வாழ்கிறான். மற்றொருவன் கந்தையணிந்து குடசையில் வாழலாம், தனக்கென்று உலகில் எதுவுமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் சுயநலமுள்ளவனாக இருந்தால் அவன் தான் இந்த உலகத்தோடு மிக அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கிறான்.
 

நமது முக்கியக் கருத்துக்களுள் ஒன்றிற்கு இப்போது மீண்டும் வருவோம். தீமை கலவாத நன்மையும் நன்மை கலவாத தீமையும் நம்மால் செய்ய முடியாது என்று கூறினோம். இதை அறிந்து கொண்டு நாம் எப்படிச் செயல்புரிய முடியும்? எனவே சில பிரிவுகள், திகைக்க வைக்கின்ற வகையில் சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்குச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு முட்டாள் தனமான வழியை கூறுகின்றன . ஏனென்றால் அவன் வாழ்ந்தால் பரிதாபத்திற்குரிய சிறு மிருகங்களையும் செடிகொடிகளையும் கொல்ல வேண்டிருக்கிறது; ஒன்றில்லாவிட்டாலும் ஒன்றுக்குத் துன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இவர்களைப் பொறுத்தவரை சம்சாரத்திலிருந்து வெளியேர ஒரே வழி இறந்து போவதுதான். இந்தக் கொள்கையைச் சமணர்கள் தங்கள் மிகவுயர்ந்த லட்சியமாகப் பிரச்சாரம் செய்தார்கள். இது தர்க்க பூர்வமானதாகத்தான் தோன்றுகிறது.
 

ஆனால் உண்மையான வழியை கீதைதான் கூறுகிறது. அதுதான் பற்றின்மைக் கொள்கை ; வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது எதிலும் பற்று வைக்காதிருப்பது.நீ உலகத்திற்குள் இருந்தாலும், அதிலிருந்து நீ முற்றிலும் வேறானவன் என்பதை நினைவில் கொள். நீ எதைச் செய்தாலும் உனக்காகச் செய்யாதே அப்படி உனக்காகச் செய்யும் செயல் நீ சுமப்பதற்கான விளைவுகளைக் கொண்டு வந்தே தீரும். நீ செய்வது நற்செயலாக இருந்தால் நல்ல விளைவுகளையும் தீய செயலாக இருந்தால் தீய விளைவுகளையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். ஆனால் நல்லதோ கெட்டதோ எந்தச் செயலையும் உனக்காகச் செய்யவில்லை என்றால், அது உன்மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது. இந்தக் கருத்தைத் தெளிவாக உள்ளடக்கிய வாக்கியம் ஒன்று நம் சாஸ்திரத்தில் இருக்கிறது: தனக்காகச் செய்யவில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தவன் பிரபஞ்சம் முழுவதையும் கொன்றாலும் (தான் கொல்லப் பட்டாலும்) அவன் கொன்றவனோ கொல்லப் பட்டவனோ ஆகான்.
 அதனால் தான் கர்மயோகம் உலகத்தைத் துறக்காதே உலகத்திலேயே வாழ்; அது தரும் அனுபவங்களை உன்னால் முடிந்த அளவு ஏற்றுக் கொள்; ஆனால் அது உனது இன்பத்திற்காக என்றால் அவற்றை ஒரு போதும் செய்யாதே என்று கற்பிக்கிறது அனுபவிப்பது லட்சியமாக இருக்கக் கூடாது முதலில் சிறிய நான் என்பதைக் கொன்றுவிடு. பின்னர் உலகம் முழுவதையும் நீயாக ஏற்றுக்கொள் முற்காலக் கிறிஸ்தவர்கள் சொல்வது போல் பழைய மனிதன் சாக வேண்டும் பழைய மனிதன் என்று அவர்கள் குறிப்பிடுவது இந்த உலகம் நமது சுகத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது என்னும் சுயநலக் கருத்தையே முட்டாள் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஓ தேவனே! சூரியனை எனக்காகப் படைத்தாய் சந்திரனையும் எனக்காகத்தான் படைத்தாய் என்று கூறிப் பிரார்த்திக்கக் கற்றுத் தருகிறார்கள் குழந்தைகளுக்கு இவற்றை எல்லாம் படைத்துத் தருவதைத் தவிர கடவுளுக்கு வேறு எந்த வேலையும் இல்லாதது போல் இருக்கிறது. இவர்களின் கூற்று குழந்தைகளுக்கு இத்தகைய முட்டாள்தனங்களைச் சொல்லித் தராதீர்கள்.
 

இன்னொரு விதமான முட்டாள்கள் சிலர் உள்ளனர். நாம் கொன்று தின்பதற்காகவே விலங்குகள் எல்லாம் படைக்கப்பட்டதாகவும், அனுபவிப்பதற்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்கள் போதிக்கிறார்கள் இவையெல்லாமே முட்டாள்தனம் தான். மனிதன் எனக்காகவே படைக்கப் பட்டுள்ளான் என்று ஒரு புலி நினைக்கலாம்; ஓ பகவானே! இந்த மனிதர்கள்தான் எவ்வளவு கொடியவர்கள் தானாக வந்து எனக்கு இரையாகாமல் உன் சட்டத்தை மீறிக் கொண்டிருக்கிறார்களே என்று பகவானிடம் பிரார்த்தனைகூடச் செய்யலாம் உலகம் நமக்காகப் படைக்கப்பட்டிருக்குமானால் நாமும், உலகத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம் நமது சுகத்திற்காகவே உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. என்று கருதுவது நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்ற கொடிய எண்ணமாகும் இந்த உலகம் நமக்காக இல்லை லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்த உலகத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை ,லட்சக்கணக்கானோர் அந்த இடத்தில் நிரப்பப்பட்டு விடுகிறார்கள் இந்த உலகம் நமக்காக எவ்வளவு அமைந்திருக்கிறதோ நாமும் உலகிற்காக அவ்வளவு அமைந்திருக்கிறோம்.
 

எனவே நாம் உரிய முறையில் செயல்புரிய வேண்டுமென்றால், பற்று வைப்பதை முதலில் விட வேண்டும் இரண்டாவது இந்த உலகின் குழப்பத்தில் கலந்துகொள்ளாமல் சாட்சியாக இருந்து வேலை செய்துகொண்டே போக வேண்டும். உங்கள் குழந்தைகளை ஒரு தாதியின் மனப்பான்மையோடு பாருங்கள் என்பார் என் குருதேவர். அவள் உங்கள் குழந்தையைத் தன் குழந்தை போலவே கைகளில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள். பற்றாக இருந்த அனைத்தும் அவளுக்கு மறந்து போய்விடும் உங்கள் குழந்தையை விட்டுவிட்டு இன்னொரு குழந்தையைச் சீராட்டுவதில் அவளுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்படுவ தில்லை இத்தகைய மனப்பான்மைதான் உங்களுடையது என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்திடமும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
 

உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருக்குமானால் இந்த உலகத்தில் உங்களுடையது என்று கருதுகின்ற எல்லாமே உண்மையில் அவருடையது என்று நம்புங்கள். மிகப் பெரிய பலவீனங்கள், சில வேளைகளில் மிகப் பெரிய நன்மையாகவும் சில வேளைகளில் மிகப் பெரிய வலிமையாகவும் வேடம்தரித்து வருகின்றன. நம்மை எதிர்பார்த்துச் சிலர் வாழ்கிறார்கள். நாம் ஒருவருக்கு நன்மை செய்ய முடியும் என்று எண்ணுவது பலவீனம் இதுவே நம்முடைய பற்றுக்கள் அனைத்திற்கும் பிறப்பிடம். இந்தப் பற்றின் மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட நம்மை எதிர்பார்த்து வாழவில்லை என்பதை நாம் நம் மனத்திற்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு பிச்சைக்காரன் கூட நம் தானத்தை எதிர் பார்த்து வாழவில்லை . ஒரு ஜீவன் கூட நம் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை நம் உதவியை எதிர்பார்த்து ஓர் உயிர்கூட வாழவில்லை. அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மைப் போல் லட்சக்கணக்கான மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை உதவிக் கொண்டுதான் இருக்கும் உங்களுக்காகவும் எனக்காகவும் இயற்கையின் போக்கு நிற்காது. பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகின்ற மிகப் பெரும் பேறு என்பதை முன்பே கூறினேன். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம் இது இதை முழுமையாக அறிந்து கொண்டால் நாம் துயருறவே மாட்டோம்; சமுதாயத்தில் எங்கும் எவரோடும் சேர்ந்து வாழலாம். அதனால் தீங்கு நேராது. மனைவி, கணவன், வேலைக்காரர் பட்டாளம், அரசாள நாடுகள் என்று நீ பெற்றிருக்கலாம் ஆனால் இந்த உலகம் உனக்காக அல்ல, நீ இருந்தே தான் ஆகவேண்டும் என்ற தேவையும் உலகிற்கு இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் நீ செயல் படுவாயானால் இவற்றால் உனக்கு எந்தத் துன்பமும் வராது.
 

இந்த ஆண்டில் உங்கள் நண்பர்கள் சிலர் இறந்திருக்கலாம். அவர்கள் திரும்பி வருவதற்காக உலகம் சுற்றாமல் அப்படியே நின்று காத்துக்கொண்டா இருக்கிறது ? அதன் செயல்பாட்டுப் பிரவாகம் தான் நின்றுவிட்டதா? இல்லையே! அது போய்க்கெண்டுதான் இருக்கிறது. எனவே நீங்கள் இந்த உலகத்திற்குச் செய்ய வேண்டிய ஏதோ உள்ளது என்ற எண்ணத்தை உங்கள் மனத்திலிருந்து உடனே விலக்கிவிடுங்கள். உலகிற்கு உங்கள் எந்த உதவியும் தேவையில்லை. இந்த உலகத்திற்கு உதவுவதற்காகத்தான் தான் பிறந்திருப்பதாக எந்த மனிதனாவது நினைத்தால் அது வெறும் முட்டாள்தனம் அது கர்வம் நற்குணம் என்ற போர்வையில் தோன்றும் சுயநலம்.
 

உலகம் உங்களையோ வேறு யாரையுமோ சார்ந்திருக்கவில்லை என்னும் இந்தக் கருத்தை ஏற்றுச் செயல்படும்படி உங்கள் மனத்தையும் நரம்புகளையும் பயிற்றுவித்து விட்டீர்களானால், எந்தச் செயலில் இருந்தும் வேதனை வடிவில் வருகின்ற எதிர்விளைவு உண்டாகாது நீங்கள் ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து அதற்குப் பிரதியாக எதையுமே நன்றியைக்கூட எதிர்பார்க்காமல் இருந்தீர்களானால் அவன் நன்றி மறந்தாலும் உங்களுக்குத் துன்பம் வராது. ஏனெனில் நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை பிரதிபலனாக எதையும் பெறும் உரிமை உங்களுக்கு உண்டென்று ஒரு போதும் நீங்கள் எண்ணவில்லை. அவன் எதைப் பெறுவதற்குத் தகுதி இருந்ததோ அதையே கொடுத்தீர்கள். அவனது வினைப்பயன் அதை அவனுக்குப் பெற்றுத் தந்தது, உங்கள் வினைப்பயன் உங்களை அவனிடம் அதைச் சேர்ப்பவர்கள் ஆக்கியது. அப்படி யிருக்க எதையோ கொடுத்துவிட்டதாக நீங்கள் ஏன் பெருமை கொள்ள வேண்டும். பணம் மற்ற பொட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் சுமை தூக்கி மட்டுமே நீங்கள் உலகம் தன் வினைப்பயன் மூலமே அவற்றைப் பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கிறது இதில் நீங்கள் எப்படிப் பெருமை கொள்ள முடியும்? நீங்கள் உலகிற்குக் கொடுப்பதில் பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.
 

பற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களுக்கு நன்மையோ தீமையோ எதுவும் இல்லை.நன்மை தீமை என்ற வேறுபாட்டை உருவாக்குவதே சுயநலம்தான். இது புரிந்துகொள்ளச் சற்றுக் கடினமானது. ஆனால் நீங்களே அனுமதிக்காமல் பிரபஞ்சத்திலுள்ள எதற்கும் உங்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆற்றல் இல்லை என்பதைக் காலப்போக்கில் நீங்கள் புரிந்துகொள்ளவே போகிறீர்கள் ஆன்மா ஒரு முட்டாளாகி தன் சுதந்திரத்தை இழக்காதவரை எந்த ஆற்றலும் மனித ஆன்மாவை எதுவும் செய்ய முடியாது. பற்றின்மை என்பதன்மூலம் உலகின் மற்ற எதுவும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கவும், தவிர்க்கவும் செய்கிறீர்கள். நீங்கள் அனுமதிக்காதவரையில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் உரிமை எதற்குமே கிடையாது என்று சொல்லிக் கொண்டிருப்பது எளிது. ஆனால் தன்மீது எதையும் ஆதிக்கம் செலுத்தவிடாத மனிதனின் உண்மை அடையாளம் என்ன ? புறவுலகம் அவன் மீது செயல்படுவதன் காரணமாக சுகமோ துக்கமோ அடையாத அவனது அடையாளம் என்ன? நல்லதோ, கெட்டதோ அவன் மனத்தில் எந்த மாறுபாட்டையும் ஏற்படுத்தாது; எந்தச் சூழ்நிலையிலும் அவன் சமமாக இருப்பான் இதுதான் அடையாளம்.
 

இந்தியாவில் வியாசர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். இவரே வேதாந்த சூத்திரங்களை இயற்றியவராகக் கருதப்படுகிறார். சிறந்த மகான் அவர். அவரது தந்தை நிறைநிலையை அடைய முயன்றார் முடியவில்லை, அதுபோலவே அவரது பாட்டனும் முப்பாட்டனும் கூட முயன்று தோற்றுப் போனார்கள் வியாசரால் கூட முற்றிலுமாக அந்த நிலையை அடைய முடியவில்லை. ஆனால் அவரது மகன் சுகர் நிறைநிலை எய்தியவராகப் பிறந்தார். வியாசர் தன் மகனுக்கு ஞானத்தைப் போதித்தார் தாமே தத்துவ உபதேசம் செய்த பிறகு சுகரை ஜனகரின் அரசவைக்கு அனுப்பினார் ஜனகர் ஒரு மாமன்னர் ஜனக விதேகர் என்று அழைக்கப்பட்டவர். விதேகர் என்றால் உடம்பில்லாதவர் என்று பொருள் மன்னராக இருந்தாலும் தாம் உடம்பு என்பதை முற்றிலும் மறந்து விட்டிருந்தார் அவர் தாம் ஓர் ஆன்மா என்ற உணர்வுதான் அவரிடம் எப்போதும் இருந்தது அவரிடம் கற்றுக் கொள்வதற்காகவே சுகர் அனுப்பப்பட்டிருந்தார்.
 

பிரம்மஞானத்தைக் கற்பதற்காக சுகர் தம்மிடம் வரப்போவதை ஜனகர் அறிந்தார். எனவே முன்னேற்பாடாக அவர் சில காரியங்களைச் செய்தார். சுகர் அரண்மனை வாசலுக்கு வந்தபோது காவலர்கள் அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிறகு ஓர் ஆசனம் மட்டும் அளித்தனர் மூன்று பகலும் இரவும் அவர் அப்படியே அமர்ந்திருந்தார் ஒருவரும் அவருடன் பேசவில்லை நீ யார் ? எதற்காக வந்தாய்? என்று கூட ஒருவரும் கேட்கவில்லை சுகரோ மகரிஷியான வியாசரின் மகன் வியாசரோ நாடு முழுவதாலும் போற்றிப் பாராட்டபடுபவர் சுகரும் மிகுந்த மரியாதைக்குரிய ஒருவர் ஆனால் மிகச் சாதாரணமான கீழ்நிலைக் காவலர்கூட அங்கே அவரைப் பொருட் படுத்தவில்லை,
 

பின்னர் ஒரு நாள் மந்திரிகளும் உயர்பதவியில் உள்ள அனைவரும் திடீரென்று சுகரிடம் வந்து அவரைச் சிறப்பாக வரவேற்று மிகுந்த மரியாதையுடன் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். அழகிய அறைகளைக் காட்டினர் வாசனைத் திரவியங்கள் கலந்த நீரில் குளிப்பாட்டினர். அற்புதமான ஆடைகளை அணிவித்தனர். எட்டு நாட்கள் இப்படி மிகச் சிறந்த ஆடம்பரத்தில் அவரை வைத்தனர் ஆனால் தமக்களிக்கப்பட்ட இத்தகைய மாறுபட்ட உபசரிப்புகளினால் சுகரின் ஆழ்ந்த கம்பீரம் கலந்த அமைதி தவழும் முகத்தில் ஒரு சிறு மாற்றம்கூடத் தென்படவில்லை வாசலில் காத்திருந்த போதும் இப்போது இந்த ஆடம்பரத்திலும் அவர் ஒரு போலவே இருந்தார்.
 

பிறகு அவர் மன்னரின் முன்னிலையில் அழைத்து வரப்பட்டார். அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திறுந்தார் அங்கே இசையும் நடனமும் வேறு பல கேளிக்கைகளும் நடந்து கொண்டிருந்தன மன்னர் சுகரிடம் ஒரு கிண்ணத்தில் விளிம்பைத் தொடும் அளவு பாலை ஊற்றிக் கொடுத்து அதில் ஒரு துளிகூடச் சிந்தாமல் அந்தச் சபையை ஏழுமுறை சுற்றி வருமாறு கூறினார். பாலனாகிய சுகர் அந்தக் கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இசையும் இனிய முகங்களும் அலைமோதும் அந்தச் சபையை வலம்வரத் தொடங்கினார் மன்னர் விரும்பியது போலவே ஏழுமுறை சுற்றி வந்தார் ஒரு துளி பால்கூடச் சிந்தவில்லை அவரே அனுமதிக்காமல் உலகின் எதுவும் அவரது மனத்தைப் பாதிக்க முடியாது கிண்ணத்தை அவர் ஜனகரிடம் கொடுத்தார். அப்போது ஜனகர் அவரிடம் உன் தந்தை உனக்கு என்ன கற்றுக் கொடுத்தாரோ நீயாக எவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறாயோ அவற்றை மீண்டும் சொல்லிக் கொடுக்கத்தான் என்னால் முடியும் நீ உண்மையை அறிந்துவிட்டாய வீடு செல் என்றார்.
 

இவ்வாறு தனக்குத்தானே கட்டுப்பாடு உள்ளவன் மீது வெளியிலுள்ள எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது. அவனிடமிருந்து அடிமைத்தனம் விடைபெற்று விடுகிறது அவனது மனம் சுதந்திரமாகிவிட்டது அத்தகையவன் மட்டுமே இந்த உலகில் நன்றாக வாழ்வதற்குத் தகுதி உடையவன்.
 

மனிதர்கள் பொதுவாக உலகத்தைப்பற்றி இரண்டு கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். சிலர் துன்பநோக்குக் கொண்டவர்கள் இந்த உலகம் எவ்வளவு கொடூரமானது எத்தனை கொடியது என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்றும் சிலர் இன்ப நோக்குக் கொண்டவர்கள் அவர்கள் உலகம் தான் எவ்வளவு அழகானது எத்தனை அற்புதமானது என்கிறார்கள். மனத்தைக் கட்டுப்படுத்தாதவர்களுக்கு இந்த உலகம் முழுக்கமுழுக்கத் தீமை நிறைந்ததாக அல்லது நன்மை தீமை இரண்டும் சேர்ந்ததாகவாவது தான் காட்சியளிக்கும் நாம் நம் மனத்திற்கு எஜமானர் ஆகும்போது இதே உலகம் இன்பமயமாகிவிடுகிறது. அதன் பின் நன்மை தீமை என்ற நிலையில் எதுவும் நம்மைப் பாதிக்காது எல்லாமே அவற்றிற்குரிய சரியான இடத்தில் எப்போதுமே இயைபாக இருப்பதை நாம் உணர்வோம். உலகம் ஒரு நரகம் என்று தொடங்குபவர்களும் சுயக் கட்டுப்பாட்டுப் பயிற்சியில் வெற்றி பெற்றுவிடுவார்களானால் உலகமே சொர்க்கம் என்றே முடிப்பதைக் காணலாம். நாம் உண்மையான கர்மயோகிகளாக இருந்து அத்தகைய நிலையை அடைவதற்காக நம்மைப்பயிற்றுவித்துக் கொள்ள விரும்பினால் நாம் எங்கே தொடங்கினாலும் பூரணமான தன்னல மறுப்பில்தான் சென்று சேர்வோம். ஆன்மாபோல் தோன்றுகின்ற சிறிய நான் என்பது அழிந்ததுமே முன்பு தீமை நிறைந்ததாகக் காட்சியளித்த உலகம் சொர்க்கமாகத் தெரியும் சீரும் சிறப்பும் நிறைந்ததாகத் தெரியும் உலகின் சூழலே ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும் அப்போது உலகில் உள்ள ஒவ்வொரு மனித முகமும் நல்லதாகவே தெரியும் இது தான் கர்மயோகத்தின் லட்சியமும் நிறைவும் ஆகும் அன்றாட வாழ்வில் அதன் பெருமையும் இதுதான்.
 

நமது பல்வேறு யோகங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கியே நம்மை அழைத்துச் சென்று நிறைநிலை எய்த வைக்கின்றன. எந்த யோகத்தை எடுத்துக் கொண்டாலும் சரி தீவிரமாகப் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்வதில்தான் ரகசியமே இருக்கிறது, முதலில் கேட்க வேண்டும் பிறகு சிந்திக்க வேண்டும், அதன் பிறகு பயிற்சி செய்ய வேண்டும். எல்லா யோகங்களுக்கும் இதுதான் வழி. முதலில் அவற்றைக் கேட்டு அது என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் தொடர்ந்து கேட்கும் போதும் சிந்திக்கும்போதும் புரியாத பல விஷயங்கள் புரியும்.
 

எடுத்தஎடுப்பிலேயே எல்லாவற்றையும் புரிந்து கொள்வது கடினம். சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் விளக்கம் உங்களிடமே உள்ளது. உண்மையில் இதுவரை யாரும் யாராலும் கற்பிக்கப்பட்டதில்லை. ஒவ்வொருவரும் தன்னைத்தானே கற்பித்துக் கொள்ள வேண்டும். அக ஆசிரியர் விழிப்புற்றுச் செயல்படவும் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்குமான ஒரு தூண்டுதலை மட்டுமே புற ஆசிரியர் செய்கிறார். அதன் பின்னர் விஷயங்களை உணர்ந்து கொள்ளும் நமது சொந்த ஆற்றாலாலும் சிந்திக்கும் திறனாலும் எல்லாம் மேலும் மேலும் தெளிவாகிறது அவற்றை நாம் நம்முள்ளேயே உணரவும் செய்கிறோம் இந்த உணர்வு திடமான சுயேச்சையாற்றலாக வளரவும் செய்கிறது முதலில் உணர வேண்டும் அந்த உணர்ச்சியே சுயேச்சையின் சங்கல்பமாகிறது அந்தச் சங்கல்பத்திலிருந்து செயல் புரிவதற்கான மாபெரும் ஆற்றல் பிறக்கிறது அது உங்கள் நாடி நரம்புகளிலும் தசைகளிலும் பாய்ந்து பரவுகிறது. உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவும் சுயநலம் கலவா கர்மயோகம் செய்வதற்குரிய ஒருகருவியாக மாறும் வரை நீங்கள் விரும்பிய பூரணமான தன்னல மறுப்பும் முழுமையான சுயநலமின்மையும் அடையப்படும்வரை அந்த ஆற்றல் பாய்ந்து கொண்டிருக்கிறது.

  இந்த நிலை எந்தக் கொள்கையையோ கோட்பாட்டையோ நம்பிக்கையையோ சார்ந்திருப்பதல்ல நீங்கள் கிறிஸ்தவரோ யூதரோ யூதர்கள் அல்லாத இனத்தைச் சேர்ந்தவரோ அது பெரிய விஷயமல்ல நீங்கள் சுயநலமற்றவர்களா அதுதான் கேள்வி நீங்கள் சுயநலமில்லாதவர் என்றால் ஒரு மத நூலைக்கூடப் படிக்காமலே ஒரு சர்ச்சுக்குள்ளோ கோயிலுக்குள்ளோ கூட நுழையாமலே நிறைநிலை அடைய முடியும் நமது யோகங்கள் ஒவ்வொன்றும் மற்ற யோகங்களின் உதவியில்லாமலே ஒருவனை நிறைநிலைக்குக் கொண்டுசெல்லும் ஆற்றல் பெற்றவை ஏனெனில் எல்லாயோகங்களுமே ஒரே லட்சியத்தைக் கொண்டவை கர்மயோகம் ஞானயோகம் பக்தி யோகம் ஆகிய ஒவ்வொரு யோகமும் பிற யோகங்களைச் சாராமல் நேரடியாக மோட்சத்திற்கு இட்டுச் செல்கின்ற வழிகள் ஆகும் கர்மமும் ஞானமும் வேறானவை என்று முட்டாள்கள் மட்டுமே கூறுவார்கள் அறிவாளிகள் அப்படிச் சொல்லமாட்டார்கள் அவை வேறானவை போல் தோன்றினாலும் இறுதியில் நிறைநிலை என்னும் ஒரே குறிக்கோளுக்குத்தான் இட்டுச் செல்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும்.
 

கர்மம் என்னும் சொல் செயல் என்ற பொருளைத் தருவதோடு மன இயலின்படி காரணகாரியத் தொடர்பு என்னும்
பொருளையும் குறிக்கும் என்பதை முன்பே கண்டோம். ஒரு விளைவை ஏற்படுத்துகின்ற எந்தச் செயலும் எந்த வேலையும் எந்த எண்ணமும் கர்மம்தான். எனவே கர்ம நியதி என்பது காரணகாரிய நியதி என்று பொருள்படுகிறது அதாவது காரணத்தைத் தொடர்ந்து காரியம் வந்தே தீரும் என்றாகிறது எங்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு விளைவு உண்டாகியே தீரும். இதைக் தடுக்க முடியாது நம் தத்துவத்தின் படி இந்தக் கர்ம நியதி பிரபஞ்சம் முழுவதற்குமே பொருந்துவதாகும் நாம் பார்க்கின்ற உணர்கின்ற செய்கின்ற அனைத்தும் பிரபஞ்சத்தில் எங்கு நடக்கும் எந்தச் செயலாயினும் அவை ஒருவகையில் கடந்தகாலச் செயல்களின் விளைவுகளாகவும் வேறுவகையில் எதிர்காலத்தில் விளைவை உண்டாக்குவதற்கான காரணங்களாகவும் அமைகின்றன.
 

இப்போது நியதி என்னும் சொல்லின் பொருளையும் இதனுடன் அறிவது அவசியமாகிறது திரும்பத் திரும்ப நடைபெறுவதற்கான ஒரு நிகழ்ச்சித் தொடரின் இயல்பே நியதி. ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்ச்சி நடப்பதையோ ஒரு நிகழ்ச்சி மற்றொரு நிகழ்ச்சியுடன்ஒரே நேரத்தில் நடப்பதையோ காணும் போது இவ்வாறு ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று நடப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்பவையும் அவ்வாறே மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம் நமது பண்டைய தர்க்க ஆசிரியர்களும் நியாயத் தத்துவ அறிஞர்களும் இந்த நியதியை வியாப்தி என்று அழைத்தனர். நியதி பற்றிய நமது கருத்துக்கள் எல்லாம் தொடர்பிலேயே நிலைபெற்றுள்ளது சில நிகழ்ச்சித் தொடர்கள் நம் மனத்திலுள்ள சில விஷயங்களுடன் பிரிக்க முடியாத ஒரு வகையில் தொடர்பு கொண்டுவிடுகின்றன. அதனால் நாம் எப்போது எந்த ஒன்றை அனுபவித்தாலும் உடனடியாக அவையெல்லாம் ஏற்கனவே நமது மனத்திலுள்ள கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன மன இயலின் படி சித்தத்தில் எழும் எந்த எண்ணமும் எந்த அலையும் அதுபோன்ற பல அலைகளை ஏற்படுத்தவே செய்யும். தொடர்பு என்பதன் மனஇயல் கருத்து இதுதான் இந்த மகத்தான எங்கும் நிறைந்த தொடர்புக் கொள்கையின் ஒரு பகுதியே இந்தக் காரணகாரிய நியதி தொடர்பின் இந்த எங்கும் நிறைந்த தன்மைதான் வியாப்தி என்று சம்ஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.
 

நியதிக் கருத்து அக உலகிற்கு எவ்வாறு அமைந்துள்ளதோ அதுபோல்தான் புறவுலகிற்கும் அமைகிறது அதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்னொரு குறிப்பிட்ட நிகழ்ச்சி வரும். இது தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் நடைபெறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் உண்மையில் சொல்லப்போனால் நியதி என்பது இயற்கையில் இல்லை நடைமுறையில் புவிஈர்ப்பு நியதி பூமியில் இருக்கிறது என்றோ எந்த பியதியாவது இயற்கையில் எங்காவது புறப்பொருளில் இருக்கிறது என்றோ கூறுவது தவறு.
 

நிகழ்ச்சித் தொடர்களை மனம் புரிந்துகொள்கின்ற ஒரு வழியே ஒரு முறையே நியதி நியதி என்ற கருத்து மனத்தில்தான் உள்ளது சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகவோ அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்தோ நடப்பதையும் அவை அவ்வாறே திரும்பத்திரும்ப நடைபெறும் என்ற உறுதியை நம்மிடம் உண்டாக்குவதையும் அந்த நிகழ்ச்சித் தொடர்கள் நடைபெறுகிற விதத்தை நமது மனம் முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்வதையும் தான் நாம் நியதி என்கிறோம்.
 

நியதி என்றால் அது உலகம் தழுவியது என்று நாம் கூறியதன் பொருள் என்ன என்பதே அடுத்ததாக ஆராய வேண்டியது சம்ஸ்கிருத மனஇயல் வல்லுனர்கள் தேச கால நிமித்தம் என்றும் ஐரோப்பிய மன இயல் வல்லுனர்கள் இடம் காலம் காரணகாரியம் என்றும் கூறுபவற்றால் எல்லைப்படுத்தப் பட்ட இருப்பின் அந்தப் பகுதியே நமது பிரபஞ்சம் எல்லையற்ற இருப்பில் தேச கால நிமித்தம் சேர்ந்த ஓர் அச்சில் வார்க்கப்பட்ட ஒரு பகுதி மட்டுமே இந்தப் பிரபஞ்சம் எனவே நியதி என்பது எல்லைப்படுத்தப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தில் மட்டுமே செல்லுபடியாகும் என்பது சொல்லாமலே விளங்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் நியதி என்ற ஒன்று இருக்க முடியாது. நாம் பிரபஞ்சம் என்று சொல்லும் போது இருப்பில் நமது மனத்தால் எல்லைப்படுத்தப் பட்ட பகுதியை மட்டுமே குறிப்பிடுகிறோம் நம்மால் பார்க்கவும் கேட்கவும் உணரவும் தொடவும் நினைக்கவும் கற்பனை செய்யவும் முடிந்த புலன்களால் உணரக் கூடிய பிரபஞ்சத்தை மட்டுமே குறிப்பிடுகிறோம் இது மட்டுமே நியதிக்குள் அடங்க முடியும் இதற்கு அப்பாலுள்ள இருப்பை நியதியால் கட்டுப்படுத்த முடியாது ஏனெனில் காரணகாரிய நியதி நமது மனத்திற்கு அப்பால் செல்ல முடியாது புலன்களுக்கு அப்பாலுள்ள பகுதியில் பொருட்கள் மனத்துடன் தொடர்பு கொள்வது என்பது இருக்க முடியாது எண்ணங்களின் தொடர்பின்றி காரணகாரியம் இருக்க முடியாது. எனவே நமது மனத்திற்கும் நமது புலன்களுக்கும் அப்பாற்பட்ட எதுவும் காரணகாரிய நியதியால் கட்டுப்படாது ஸத் அல்லது இருப்பு என்பது பெயர் மற்றும் வடிவம் என்ற அச்சில் வார்க்கப்பட்டால் மட்டுமே அதுகாரணகாரிய நியதிக்கு உட்படுகிறது நியதியின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது ஏனென்றால் நியதிகள் அனைத்தின் சாரமும் காரண காரியத்திலேயே உள்ளது எனவே சுதந்திர சுயேச்சை என்ற ஒன்று இருக்கவே முடியாது என்பது எடுத்த எடுப்பிலேயே புரிகிறது சுதந்திர சுயேச்சை என்ற சொற்களே முன்னுக்குப்பின் முரணானவை ஏனெனில் சுயேச்சை என்பது நமது அறிவிற்கு உட்பட்டது நாம் அறிகின்ற எல்லாமே நமது அறிவிற்கு உட்பட்டது நாம் அறிகின்ற எல்லாமே நமது பிரபஞ்சத்திற்குள் இருப்பவை பிரபஞ்சத்தினுள் உள்ள அனைத்தும் தேச கால நிமித்த நியதிகளால் உருவாக்கப்பட்டவை நாம் அறிந்த எல்லாமே நம்மால் அறியக்கூடிய எல்லாமே காரண காரியத்திற்கு உட்பட்டது சுதந்திரமாக இருக்க முடியாது அதன்மீது மற்ற காரணங்கள் செயல்படுகின்றன அதுவே பின்னர் பிற காரியங்களுக்குக் காரணமாக அமையவும் செய்கிறது ஆனால் சுயேச்சையாக மாறியிருப்பது எதுவோ முன்பு சுயேச்சையாக இல்லாமல் பின்னால் தேச கால நிமித்த எல்லைகளால் வார்க்கப்பட்டு மனிதனின் சுயேச்சையாக மாறியது எதுவோ அது சுதந்திர மானது இந்தச் சுயேச்சை தேச கால நிமித்த எல்லைகளுக்கு வெளியே போகும் போது அது மீண்டும் சுதந்திரம் பெறவும் செய்கிறது அது சுதந்திரத்திலிருந்து வருகிறது இந்தத் தளைகளுக்குள் கட்டுப்படுகிறது பிறகு இவற்றிலிருந்து விடுபட்டு மறுபடியும் சுதந்திரமாகிறது.
 

இந்தச் பிரபஞ்சம் யாரிலிருந்து வந்தது யாரில் நிலைபெறுகிறது யாரிடம் செல்கிறது என்னும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அது சுதந்திரத்திலிருந்து வருகிறது தளையில் நிலைபெறுகிறது மறு படியும் சுதந்திரத்திற்குள் செல்கிறது என்று பதில் கூறப்படுகிறது. எனவே மனிதன் என்பவன் எல்லையற்ற பரம்பொருளின் சுய வெளிப்பாடே தவிர வேறல்ல என்று சொல்லும்போது அந்த எல்லையற்ற பொருளின் மிகச் சிறிய அம்சம் மட்டுமே மனிதன் என்பதையே நாம் குறிப்பிடுகிறோம். நாம் காண்கின்ற நமது இந்த உடலும் மனமும் அந்த முழுமையின் ஓர் அம்சம் மட்டுமே அந்த எல்லையற்ற பொருளின் ஒரே ஒரு துகள் மட்டுமே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சேர்ந்தால் கூட அந்த எல்லையற்ற பொருளின் ஒரு சிறு அணுவளவு மட்டுமே ஆகிறது நமது நியதிகளும் கட்டுப்பாடுகளும் நமது இன்பங்களும் துன்பங்களும் நமது மகிழ்ச்சியும் எதிர்பார்ப்புகளும் எல்லாமே இந்தச் சிறிய பிரபஞ்சத்திற்கு உள்ளேதான் நமது முன்னேற்றமும் பின் வாங்கலும் எல்லாமே அதன் சிறிய எல்லைக்குள் மட்டுமே.
 

நமது மனத்தின் படைப்பான இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று எதிர்பார்ப்பதும் சொர்க்கத்திற்குப் போக விரும்புவதும் எல்லாம் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானவை பாருங்கள் இவ்வளவிற்கும் அந்தச் சொர்க்கம் என்பது நாம் அறிந்த இந்த உலகத்தின் ஒரு நகலாக மட்டுமே இருக்க முடியும் எல்லையற்ற இருப்பு முழுவதையும் எல்லைக்கு உட்பட்ட கட்டுப்பட்ட நாம் அறிந்த இருப்புடன் ஒத்துப் போகச் செய்ய முயல்வது நடக்க முடியாததும் சிறுபிள்ளைத்தனமானதுமான ஆசை என்பது புரிகிறது அல்லவா! ஒருவன் இப்போது தான் அனுபவிக்கின்ற அதே பொருட்களே மீண்டும் மீண்டும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று கூறும்போது அல்லது நான் சிலவேளைகளில் சொல்வதுபோல், சொகுசான மதம் வேண்டும் என்று கேட்கும்போது தான் இப்போது இருக்கின்ற நிலையைவிட உயர்ந்த எதையும் சிந்திக்க முடியாத அளவுக்கு அவன் தாழ்ந்துவிட்டான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தான் இப்போது இருக்கின்ற சின்னஞ்சிறு சூழ்நிலையுடன் அவன் தன்னை ஒன்றுபடுத்திவிட்டான்.அவன் வேறு எதுவும் அல்ல தனது எல்லையற்ற இயல்பை அவன் மறந்துவிட்டான் அவனுடைய நினைப்பெல்லாம் அந்த நேரத்திற்கு அவனிடம் இருக்கின்ற இன்ப துன்பங்களிலும் பொறாமை அவனிடம் இருக்கின்ற இன்ப துன்பங்களிலும் பொறாமைகளிலும் கட்டுண்டுவிட்டன. எல்லைக்கு உட்பட்ட இதையே எல்லையற்ற தென்று அவன் நினைக்கிறான் நினைப்பது மட்டும் அல்ல இந்த முட்டாள் தனத்தைத் தன்னிடமிருந்து விலகவும் விடமாட்டான் பௌத்தர்கள் தன்ஹா என்றும் திஸ்ஸா என்றும் கூறுகின்ற திருஷ்ணையை வாழ்வின் மீதுள்ள மோகத்தை அவன் நிர்க்கதியான நிலையில் பற்றிப்பிடித்துக் கொண்டிருகிறான் நாம் அறிந்துள்ள இந்தச் சிறிய பிரபஞ்சத்திற்கு அப்பால் லட்சோபலட்சம் ஜீவிகளும் மகிழ்ச்சிகளும் நியதிகளும் வளர்ச்சிகளும் காரணகாரியங்களும் இருக்கலாம். இவ்வளவானாலும் அவையெல்லாம் சேர்ந்தாலும் அது நமது எல்லையற்ற இருப்பின் ஓர் அம்சம் மட்டுமே பூரண சமநிலையை அதாவது கிறிஸ்தவர்கள் கூறுகின்ற அறிவுநிலை அனைத்தையும் கடந்த அமைதி நிலையை இந்தப் பிரபஞ்சத்தினுள் பெற முடியாது. இங்கு மட்டுமல்ல சொர்க்கத்தில் நம் மனமும் எண்ணங்களும் செல்லக்கூடிய புலன்கள் உணரக்கூடிய கற்பனை செய்து பார்க்கக்கூடிய எந்த இடத்திலும் பெற முடியாது இத்தகைய எந்த இடமும் நமக்கு அந்த எல்லா இடங்களுமே நமது தேச கால நிமித்தங்களால் எல்லைப்படுத்தப் பட்ட பிரபஞ்சத்திற்குள்ளேயே உள்ளன.
 

நமது பூமியை விட மிகவும் சூட்சுமமான உலகங்கள் இருக்கலாம். அங்கே இன்ப அனுபவங்கள் இன்னும் நுட்பமாக இருக்கலாம். ஆனால் அந்த உலகங்களும் பிரபஞ்சத்திற்குள் தான் இருக்க வேண்டும் எனவே அவையும் நியதிக்குள் கட்டுப்பட்டவையே நாம் இவைகளுக்கு அப்பால் போக வேண்டும். இந்தச் சிறிய பிரபஞ்சம் முடிகின்ற இடத்தில் தான் உண்மையான மதவுணர்வு தொடங்குகிறது. இந்தச் சிறுசிறு இன்பங்களும் துன்பங்களும் பொருட்களைப் பற்றிய அறிவும் அங்கே துன்பங்களும் பொருட்களைப் பற்றிய அறிவம் அங்கே முற்றுப் பெறுகிறது உண்மை தொடங்குகிறது வாழ்வின் மீதுள்ள மோகத்தை விடும்வரை கட்டுப்பட்ட இந்த நிலை யற்ற நிலைமையின்மீது வைத்துள்ள தீவிரமான முக்தி நிலையின் ஒரு கணக் காட்சியைக் கூடப்பெறுவோம் என்ற நம்பிக்கை கிடையாது மனித சமுதாயத்தின் மகோன்னதமான எல்லா முயற்சிகளுடையவும் லட்சியமான அந்த முக்திநிலையைப் பெறுவதற்கு ஒரே வழிதான் உள்ளது இந்தச் சிறிய வாழ்வை விட வேண்டும் உடம்பை விட வேண்டும் மனத்தை விடவேண்டும் எல்லைக்கு உட்பட்ட கட்டுப்பட்ட அனைத்தையும் விடவேண்டும். இதுதான் வழி இது அறிவுபூர்வமானதுதான் புலன்களாலும் மனத்தாலும் உணரப்படுகின்ற. இந்தச் சிறிய பிரபஞ்சத்தின் மீது நமக்குள்ள பற்றை விட்டோமானால் அந்தக் கணமே நாம் முக்தி பெறுவோம் தளையிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி நியதியின் எல்லைகளுக்கு அப்பால் போவது தான் காரண காரியங்களுக்கு அப்பால் போவதுதான்.
 

ஆனால் உலகின் மீதுள்ள மோகத்தை விடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல ஏதோ மிகச் சிலரே அந்த நிலையை அடைந்திருக்கின்றனர் அதற்கு இரண்டு வழிகளை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன ஒன்று நேதி நேதி ( இதுவல்ல இதுவல்ல), மற்றொன்று இதி இது முன்னையது எதர்மறை வழி பிள்ளையது உடன்பாட்டு வழி.
 

மிகவும் கடினமானது எதிர்மறை வழி மிகவுயர்ந்த அசாதாரணமான மனமும் மாபெரும் சுயேச்சையும் கொண்ட வெகுசிலருக்கே இது சாத்தியமாகும். அவர்கள் எழுந்துநின்று, எனக்கு இது தேவையில்லை என்று சொன்னால் போதும் மனமும் உடம்பும் அவர்களின் சுயேச்சைக்குப் பணிந்து நடக்கும். அவர்கள் வெற்றியுடன் வெளிவருவார்கள் ஆனால் அத்தகையோர் அபூர்வமே.
 

உலகில் பெரும்பாலான மக்கள் உடன்பாட்டு வழியையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த வழி லௌகீக வாழ்வை ஏற்றுக்கொள்கிறது. இதில் தளைகளை உடைப்பதற்கு அந்தத் தளைகளே பயன்படுத்தப் படுகின்றன இதுவும் ஒருவகையான விட்டுவிடுதல் தான் ஆனால் அது நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யப்படுகிறது பொருட்களை அறிந்து அவற்றை அனுபவித்து அதன் மூலம் அனுபவங்களைப் பெறும் போது பொருட்களின் இயல்பு தெரிய வருகிறது இறுதியில் மனம் அவற்றை விட்டுவிட்டு பற்றற்ற நிலையை அடைகிறது.

 
 


Site Content

Additional Information

 முதல் வழியில் ஆராய்ச்சியின் மூலம் பற்றற்ற நிலை அடையப்படுகிறது. இரண்டாவது வழியில் செயல் புரிவதன் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் அடையப்படுகிறது. முதல் வழி, ஞானயோகம்; இங்கு எல்லா செயல்களும் மறுக்கப்படுகின்றன. இரண்டாவது வழி கர்மயோகம் செயல்புரிவதிலிருந்து ஓர் ஓய்வே இதில் இல்லை பிரபஞ்சத்தில் உள்ள அனைவருமே செயல் புரிந்தாக வேண்டும். யார் ஆன்மாவிலேயே முழுத்திருப்தி காண்கிறார்களோ யாருடைய ஆசைகள் ஆன்மாவைத் தவிர வேறெதையும் நாடாதோ யாருடைய மனம் ஆன்மாவைத் தவிர வேறு எங்கும் செல்வதில்லையோ யாருக்கு ஆன்மாவே எல்லாமாக இருக்கிறதோ அவர்கள் செயல்புரிய வேண்டியதில்லை மற்ற எல்லோரும் வேலை செய்தேயாக வேண்டும்.
 

தானாகப் பாய்ந்து செல்லும் நீரோட்டம் ஓரிடத்தில் சுழலை உண்டாக்குகிறது. சிறிதுநேரம் அந்தச் சுழலில் இருந்துவிட்டு, அதிலிருந்து வெளிப்பட்டு மீண்டும் சுதந்திரமாக தடையின்றித் தன்போக்கில் செல்கிறது. ஒவ்வொரு மனித வாழ்வும் அந்த நீரோட்டம் போன்றது தான்; தேச கால நிமித்தமாகிய சுழலில் சிக்கி என் தந்தை என் சகோதரன் என் பெயர் என் புகழ் என்றெல்லாம் கதறியவாறே அதில் சிறிதுநேரம் சுழல்கிறது இறுதியில் அதைவிட்டு வெளியே வந்து தனது பழைய சுதந்திர நிலையைப் பெறுகிறது உலகம்முழுவதும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது நாம் இதை அறிகிறோமோ இல்லையோ உணர்கிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் இந்த உலகமாகிய கனவிலிருந்து விடுபடவே வேலை செய்து கொண்டிருக்கிறோம் உலகில் மனிதன் பெறுகின்ற அனுபவமெல்லாம் அவனை இந்தச் சுழலிலிருந்து விடுபட வல்லவன் ஆக்குவதற்கே.
 

கர்மயோகம் என்பது என்ன செயல்புரிவது எப்படி என்னும் ரகசியம் பற்றிய அறிவே கர்மயோகம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் செயல் புரிந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். எதற்காக? முக்தி பெறுவதற்காக சுதந்திரம் பெறுவதற்காக அணுவிலிருந்து மிகவுயர்ந்த ஜீவிவரை எல்லாமே அந்த ஒரே லட்சியத்திற்காக மன சுதந்திரத்திற்காக உடல் சுதந்திரத்திற்காக ஆன்ம சுதந்திரத்திற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்தும் சுதந்திரத்திற்காகவே தளை யிலிருந்து விடுபட்டுப் போகவே எப்போதும் முயற்சி செய்கின்றன. சூரியன், சந்திரன் பூமி, கிரகங்கள் என்று எல்லாமே கட்டிலிருந்து விடுபட்டுப் பறந்து போகவே முயன்று கொண்டிருக்கின்றன. மையத்தை நோக்கியும் மையத்திலிருந்து விலகியும் செயல்படுகின்ற இரண்டு இயற்கைச் சக்திகளும் பிரபஞ்சத்தின் அடையாளங்களாக உள்ளன. உலகில் அடியும் உதையும் ஏற்று துன்பங்களைச் சகித்து நெடுங்காலம் கழிந்த பின்னர் பொருட்களின் உண்மையை அறிவதற்குப் பதிலாக கர்மயோகத்திலிருந்து செயலின் ரகசியத்தையும் செயல் புரிய வேண்டிய முறையையும் செயலின் ஒருங்கிணைக்கும் ஆற்றலையும் தெரிந்து கொள்கிறோம்.
 

எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாவிட்டால் மிகப் பெரிய சக்தி வீணாக நேரலாம் கர்ம யோகம் செயலை ஒரு விஞ்ஞானமாக மாற்றுகிறது. அதன் மூலம் இந்த உலகின் செயல்பாடுகள் அனைத்தையும் எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம் வேலை என்பது தவிர்க்க முடியாதது அப்படித்தான் இருக்கவும் செய்யும் ஆனால் மிக உயர்ந்த நோக்கத்திற்காக நாம் வேலை செய்வோம். இந்த உலகம் நமக்கு ஓர் ஐந்து நிமிடங்காலத் தங்குமிடம் மட்டுமே நாம் கடந்து போக வேண்டிய பாதை மட்டுமே; சுதந்திரம் என்பது இதற்குள் இல்லை, இதைக் கடந்தால் தான் கிடைக்கும் என்பதையெல்லாம் கர்ம யோகம் நமக்கு உணர்த்துகிறது உலகத்தின் தளைகளிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்காக நாம் நிதானமாகவும் உறுதியாகவும் செல்ல வேண்டும் நான் முன்பு சொல்லியதுபோல் சராசரிக்கும் மேற்பட்ட சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்த உடனே பாம்பு தன் தோலை உரித்துவிடுவது போல் தங்களிடமிருந்து உலகத்தைப் பிரித்து அதை விட்டு விட்டு அப்பால் நின்றுகொண்டு உலகத்தைப் பார்க்கிறார்கள். அத்தகைய அசாதாரண மனிதர்கள் இருக்கிறார்கள் அதில் சந்தேகம் இல்லை ஆனால் மற்றவர்கள் செயல் வழியாக நிதானமாகத்தான் செல்ல வேண்டும் செயல்புரிகின்ற முறையையும் அதன் ரகசியத்தையும் மிகுந்த பலன் கிடைக்கும் வகையில் அதைச் செய்யும் முறையையும் காட்டுகிறது கர்மயோகம்.
 

கர்மயோகம் என்ன சொல்கிறது? இடையீடின்றி வேலை செய் ஆனால் அதில் எந்தப் பற்றும் வைக்காதே உங்களை எதனோடும் இணைத்துக் கொள்ளாதீர்கள் மனத்தைச் சுதந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் காண்கின்ற துன்பங்கள் துயரங்கள் எல்லாமே இந்த உலகம் இயங்குவதற்குத் தேவையான சூழ்நிலைகளே வறுமையும் சரி வளரும் மகிழ்ச்சியும் சரி கண நேரத்திற்கே அவை நமது உண்மை இயல்பைச் சேர்ந்தவை அல்ல இன்பதுன்பங்களையும் புலனுகர்ச்சிப் பொருட்கள் அனைத்தையும் கற்பனைகளையும் கடந்ததே நமது இயல்பு என்றாலும் நாம் எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
 

பற்றினால் தான் துன்பம் வருகிறதே தவிர செயலால் அல்ல நாம் செய்கின்ற செயலோடு நம்மைப் பிணைத்துக் கொண்ட அந்தக் கணமே துன்பத்தை உணரத் தொடங்குகிறோம். இணைத்துக் கொள்ளாமல் வேலை செய்வோமானால் துன்பத்தை உணர மாட்டோம். இன்னொருவனுக்குச் சொந்தமான அழகிய ஓவியம் ஒன்று எரிந்துபோனால் அதற்காக ஒருவன் வருத்தப்பட மாட்டான் ஆனால் அவனுடைய ஓவியம் எரிந்து போனால் அவன் எவ்வளவு வேதனைப்படுகிறான் ஏன் இரண்டுமேஅழகிய ஓவியங்கள் ஒரே ஓவியத்தின் பிரதிகளாகக்கூட அவை இருக்கலாம். ஆனால் அவற்றுள் ஒன்று எரியும் போது மட்டும் அவன் மிகவும் துன்பப்பட்டான் காரணம் ஓர் ஓவியத்தோடு அவன் தன்னை இணைத்துக் கொண்டான் மற்றொன்றோடு இணைத்துக் கொள்ளவில்லை.
 

இந்த நான் எனது என்பவைதாம் எல்லா துன்பங்களுக்கும் காரணம். எனது என்ற எண்ணம் வந்தவுடனே சுயநலமும் வருகிறது. சுயநலம் துன்பத்தைக் கொண்டு வருகிறது. சுயநலத்துடன் செய்யும் ஒவ்வொரு செயலும் சுயநலத்துடன் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பும், நம்மை ஏதாவது ஒன்றுடன் பற்றுக்கொள்ளச் செய்கிறது. உடனே நாம் அடிமையாக்கப்படுகிறோம். சித்தத்தில் ஏழுகின்ற நான் எனது என்னும் ஒவ்வோர் அலையும் நம்மைச் சுற்றி உடனடியாகச் சங்கிலியைப் பிணைக்கிறது; நம்மை அடிமைகளாக்கிவிடுகிறது. நான் எனது என்று அதிகமாகச் சொல்லும் அளவு அடிமைத்தளை பலமாகிறது; துன்பங்களும் அதிகரிக்கின்றன. எனவே உலகத்தில் உள்ள எல்லா ஓவியங்களின் அழகையும் அனுபவியுங்கள். ஆனால் எந்த ஓவியத்தோடும் உங்களை இணைத்துக்கெள்ளாதீர்கள் என்று கர்மயோகம் சொல்கிறது. எனது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள் ஒரு பொருளை எனது என்று சொல்லி விட்டால் உடனடியாகத் துன்பம் வந்து சேர்ந்துவிடும். மனத்தில்கூட என் குழந்தை என்று சொல்லாதீர்கள் குழந்தையை வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் எனது என்று மட்டும் சொல்லாதீர்கள் சொன்னால் துன்பம் தான் என் வீடு என்று கூறாதீர்கள் எனது உடம்பு என்று சொல்லாதீர்கள் பிரச்சினையே அதில்தான் இந்த உடம்பு உங்களுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல வேறு யாருடையதும் அல்ல அவை இயற்கையின் நியதிப்படி வந்துபோகின்றன ஆனால் நாமோ சுதந்திரர்கள் சாட்சியாக நிற்பவர்கள் இந்த உடம்பு ஒரு படத்தைவிட ஒரு சுவரைவிட அதிக சுதந்திரம் உள்ளது அல்ல அப்படி இருக்கும் போது அதனோடு நாம் ஏன் நம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டும் ஒருவன் ஓவியம் வரைந்தால் அவன் வரைந்துவிட்டுப் போகிறான் அது எனக்கு வேண்டம் என்னும் சுயநலக்கைகளை நீட்டாதீர்கள் சுயநலம் தலைதூக்கினால் துன்பமும் தொடங்கிவிடும்.
 

எனவே கர்மயோகம் சுயநலம் தலைதூக்குகின்ற போக்கையே முதலில் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதைத் தடுப்பற்கான ஆற்றல் உங்களிடம் இருக்குமானால் அதை உடனே தடுத்துவிடுங்கள். சுயநலப் பாதைகளில் மனம் செல்ல அதற்கு மேலும் அனுமதிக்காதீர்கள். அதன்பிறகு உலகத்தில் சென்று முடிந்த அளவு வேலை செய்யலாம், எல்லோருடனும் பழகலாம், விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம். உங்களை எந்தத் தீமையும் அணுகாது. தாமரை இலை தண்ணீரில் இருக்கிறது ஆனால் தண்ணீரால் அதை நனைக்கவோ அதன்மீது ஒட்டிக் கொள்ளவோ முடியாது. அதுபோலவே உலகில் நீங்களும் இருப்பீர்கள். இது தான் வைராக்கியம், ஆசையின்மை, பற்றின்மை என்று அழைக்கப்படுகிறது.

   

பற்றின்மை இன்றி எந்தவிதமான யோகமும் கிடையாது என்று முன்பே கூறினேன் என்று நினைக்கிறேன். எல்லா யோகங்களுக்கும் பற்றின்மையே அடிப்படை. இல்லறத்தையும், அழகிய ஆடை அணிகளையும் நல்ல உணவு உண்பதையும் விட்டு விட்டு பாலைவனத்தில் வாழும் ஒருவன் தீவிரப் பற்று உடையவனாக இருக்கலாம். அவனது ஒரே உடைமையான உடம்பே அவனுக்கு இப்போது எல்லாமாக ஆகிவிட்டிருக்கலாம். அவனுக்கு வாழ்க்கை என்பது இப்போது அந்த உடம்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாகவே இருக்கும். பற்றின்மை என்றால் உடம்பிற்காக நாம் எதுவும் செய்யக் கூடாது என்பதல்ல பொருள். அது மனத்தைப் பொறுத்து பிணைக்கின்ற சங்கிலியாகிய நான் எனது என்பவை மனத்திலேயே உள்ளது. நாம் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் நமது உடம்பின் மீதோ புலன்களின் மீதோ இந்தச் சங்கிலியால் நம்மைப் பிணைத்துக் கொள்ளாவிட்டால் நாம் பற்றற்றவர்கள். ஒருவன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கலாம் ஆனால் சிறிது கூடப் பற்றில்லாதவனாக இருக்கலாம் மற்றொருவன் கந்தை உடுத்திருக்கலாம், ஆனால் தீவிரப் பற்றுடையவனாக இருக்கலாம். முதலில் இந்தப் பற்றற்ற நிலையை அடைய வேண்டும் பின்னர் இடையீடின்றிச் செயல் புரிய வேண்டும் பற்றுகளை விடுவது மிகவும் கடினம்தான் என்றாலும் நாம் அவற்றை நீக்குவதில் உதவுகின்ற வழியைக் கர்மயோகம் கூறுகிறது.
 

எல்லா விதமான பற்றுகளையும் நீக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன ஒரு வழி இறை நம்பிக்கை இல்லாத புறத்திலிருந்து வரும் எந்த உதவியையும் நம்பாதவர்களுக்கு உரியது தங்களுக்குரிய வழி முறைகளைத் தேடிக்கொள்ளும்பொறுப்பு அவர்களுடையதே தங்கள் சொந்த சுயேச்சைகள் மன ஆற்றல்கள் விவேகம் இவற்றை த் துணையாகக் கொண்டு நான் பற்றில்லாமல் இருப்பேன் என்னும் உறுதியுடன் இவர்கள் செயலில் ஈடுபட வேண்டும்.
 

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மற்றொரு வழி இருக்கிறது. இது முன்னதைவிடக் கொஞ்சம் எளிய வழி இவர்கள் தங்கள் செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறார்கள். இவர்கள் செயல் புரிகிறார்கள் ஆனால் பலனில் பற்று வைக்க மாட்டார்கள் இவர்கள் காண்பதும் கேட்பதும் உண்பதும் எல்லாம் இறைவனுக்காகவே நாம் எத்தகைய நற்செயல்களைச் செய்தாலும் புகழுக்கோ பலனுக்கோ உரிமை கொண்டாடாமல் இருப்போம். அவை இறைவனுடையவை பலன்களை அவரிடமே அர்ப்பித்துவிடுவோம் எஜமானனான இறைவனின் ஏவலர் மட்டுமே நாம் என்றும் செயல்புரிவதற்கான ஒவ்வொரு தூண்டுதலும் ஒவ்வொரு கணமும் அவரிடமிருந்தே வருகிறது என்றும் எண்ணி ஒதுங்கி நிற்போம் நீங்கள் வழிபடுகின்ற எல்லாவற்றையும் உணர்கின்ற அனைத்தையும் செய்கின்ற அனைத்தையும் அவரிடமே அர்ப்பித்துவிட்டு ஓய்வெடுங்கள் நாம் அமைதியில் நிலைத்திருப்போம் நமக்குள் பூரண அமைதி நிலவட்டும் பின்னர் நமது உடம்பு மனம் மற்றும் அனைத்தையும் அவரிடமே அர்ப்பித்துவிட்டு ஓய்வெடுங்கள் நாம் அமைதியில் நிலைத்திருப்போம் நமக்குள் பூரண அமைதி நிலவட்டும். பின்னர் நமது உடம்பு, மனம் மற்றும் அனைத்தையும் இறைவன் என்னும் வேள்வித் தீயில் ஆஹுதியாக சமர்ப்பிப்போம். வேள்வியில் நெய்யைச் சொரிவதற்குப் பதிலாக, உங்கள் சிறிய நாவ் என்பதைச் சொரிந்து பதிலாக உங்கள் சிறிய நான் என்பதைச் சொரிந்து இரவும்பகலும் இந்த மாபெரும் வேள்வியைச் செய்யுங்கள் இறைவா இந்த உலகத்தில் செல்வத்தைத் தேடியதில் நான் கண்ட ஒரே செ,ஞூவம் நீயே நான் என்னை உன்னிடம் ஆஹுதியாக அளிக்கிறேன் அன்பு நீயே நான் என்னை எதுவும் வேண்டாம் அது நல்லதோ கெட்டதோ இரண்டும் இல்லாததோ எப்படியும் இருக்கட்டும் எனக்குக் கவலை இல்லை எல்லாவற்றையும் உன்னிடமே அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லுங்கள்.
 

ஆன்மாபோல் தோன்றுகின்ற நமது சிறிய நான் என்பதை இரவும் பகலும் துறப்போம். அப்படித் துறப்பது நமது இயல்பாக மாறும்வரையில் அது நமது ரத்தத்தில் நரம்புகளில் மூளையில் கலந்து நமது உடம்பு முழுவதும் அந்த லட்சியத்தை ஒவ்வொரு கணமும் ஏற்றுக்கொள்ளும்வரையில் முயன்று கொண்டே இருப்போம். அதன் பிறகு போர்க்களத்தில் புகுந்து பீரங்கிகளின் முழுக்கத்திறக்கு நடுவில் பேரின் அமளி துமளியின் இடையில் சென்றாலும் நீங்கள் சுதந்திரமாக அமைதிமயமாக இருக்க முடியும்,
 

கடமை என்ற கருத்து சற்று தாழ்ந்த படியிலுள்ளது என்று கர்மயோகம் கூறுகிறது. ஆனாலும் நாம் நமது கடமையைச் செய்துதான் ஆக வேண்டும். விசித்திரமான இந்தக் கடமை உணர்வு சில வேளைகளில் பெரிய துயரங்களுக்கெல்லாம் காரணமாக அமைந்துவிடுகிறது கடமை என்பது நமக்கு நோயாகி விடுகிறது நம்மை இழுத்துக் கொண்டே போகிறது நம்மைப் பிடித்துக் கொண்டு நம் வாழ்க்கை முழுவதையும் துயரமாக மாற்றுகிறது. அது மனித வாழ்வில் ஒரு சாபக்கேடு கடமையும் கடமையுணர்வும் கோடைகாலத்தின் நண்பகல் சூரியன் போல் மனித சமுதாயத்தின் அந்தராத்மாவையே தகிக்கிறது கடமைகளுக்கு அடிமையாகிவிட்ட பரிதாபத் திற்குரிய அடிமைகளைப் பாருங்கள் கடமை அவர்களைப் பிரார்த்தனை செய்யவோ குளிக்கவோ கூட விடுவதில்லை. அவர்களின் மீது எப்போதும் அது அமர்ந்திருக்கிறது வெளியில் சென்று வேலை செய்கிறார்கள். அங்கும் அவர்கள்மீது கடமைதான் வீட்டிற்கு வருகிறார்கள் வீட்டிலும் மறுநாள் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றிய எண்ணத்தில் மூழ்குகிறார்கள் கடமை அவர்களின் மீது உள்ளது இது அடிமை வாழ்க்கை ஒரு குதிரை ஓடி ஓடிக் களைத்து நடுவீதியில் வீழ்ந்து சாவதுபோல் இறுதியில் சாகிறார்கள் கடமையைப்பற்றி மக்கள் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
 

உண்மையான ஒரே கடமை பற்றற்றிருப்பதும் சுதந்திரமாகச் செயல் புரிவதும் செயல்கள் அனைத்தையும் கடவுளிடம் அர்ப்பணித்து விடுவதும்தான் நமது கடமைகள் எல்லாமே அவருடையது. இங்கு வேலை செய்யக் கட்டளையிடப்பட்டிருக்கின்ற நாம் பேறு பெற்றவர்கள். நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள காலம்வரை வேலை செய்கிறோம்.அதை நாம் நன்றாகச் செய்கிறோமோ மோசமாகச் செய்கிறோமோ யாருக்குத் தெரியும்? நன்றாகவே செய்தாலும் அதன் பலன் நமக்கு வேண்டாம் மோசமாகச் செய்தாலும் அதன் பலனைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் அமைதியாக இருங்கள் சுதந்திரமாக இருங்கள் வேலைகளைச் செய்யுங்கள் இத்தகைய சுதந்திரத்தை அடைவது மிகவும் கடினமானதுதான் .
 

அடிமைத்தனத்தைக் கடமையென்று சொல்வதும் மாமிசப் பிண்டத்திற்கு மாமிசப் பிண்டத்தின் மீது இருக்கும் திவீரப் பற்றிற்குக் கடமையென்று விளக்கம் தருவதும் எவ்வளவு எளிதானவை பணம் முதலான பொருட்களிடம் பற்றுக்கொண்டு அவற்றை அடைவதற்காக உலகத் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள் இதை ஏன் செய்கிறீர்கள் என்று கடமை என்பார்கள் பணத்தின் மீதுளம் லாபத்தின் மீதும் இருக்கின்ற முட்டாள் தனமான பேராசையைச் சில பூக்களால் மறைக்க முயற்சிக்கிறார்கள்.
 

கடைசியில் கடமை என்பது என்ன ? அது உண்மையில் நமது உடலின் நமது பற்றின் தூண்டுதல் மட்டுமே ஒரு பற்று நிலைத்துவிட்டால் அதைக் கடமை என்கிறோம். உதாரணமாக திருமணம் என்பது இல்லாத நாடுகளில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான கடமைகள் எதுவும் இல்லை. திருமணம் என்று வந்தவுடனே பற்றின் காரணமாக இருவரும் சேர்ந்து வசித்தார்கள் இப்படிச் சேர்ந்து வசிப்பது என்பது பல தலைமுறைகளுக்குப் பிறகு ஒரு நிலையான வழக்க மாகியது. அப்படி நிலைபெற்றுதும் அது ஒரு கடமையாக மாறிவிட்டது அதை நாள்பட்டுபோன தீராத ஒரு வகை வியாதி என்று சொல்லலாம். அது கடுமையாகும் போது வியாதி என்கிறோம் தீர்க்க முடியாத அளவு தீவிரமாகும்போது நாம் அதனைச் சற்று அந்தஸ்துடைய கடமை என்ற பெயரை கொண்டு அபிஷேகம் செய்கிறோம். அதன்மீது மலர் தூதுகிறோம். அதற்காகப் பேரிக்கைகளை முழுக்குகிறோம் மந்திரங்களை உச்சரிக்கிறோம் அதன் பிறகோ கடமை என்ற அந்தப் பெயரால் உலகம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொள்ளையடிக்கிறான், மிருகத்தனத்தைக் கட்டுப்படுத்தும் அளவிற்குக் கடமை நல்லது தான். வேறு எந்த லட்சியமும் இல்லாத மிகத் தாழ்ந்த மனிதர்களுக்குக் கடமை என்பது கொஞ்சம் நன்மையளிப்பதாக இருக்கும்.
 

ஆனால் கர்மயோகிகள் ஆக விரும்புபவர்கள் கடமை என்னும் நினைப்பையே தூக்கி எறிந்துவிட வேண்டும். உங்களுக்கும் எனக்கும் எந்தக் கடமையும் இல்லை உலகிற்குக் கொடுப்பதற்காக உங்களிடம் உள்ளவற்றை எல்லாம் தாராளமாகக் கொடுங்கள், ஆனால் கடமை என்பதற்காகக் கொடுக்காதீர்கள். அத்தகைய நினைப்பையே மனத்தில் கொள்ளாதீர்கள் கட்டாயத்திற்கு ஆளாகாதீர்கள். கட்டாயத்திற்கு ஏன் ஆளாகவேண்டும்? கட்டாயத்தின் பேரில் நீங்கள் செய்கின்ற அனைத்தும் பற்றையே வளர்க்கும்.
 

கடமை என்ற ஒன்றே உங்களுக்கு எதற்கு அனைத்தையும் ஆண்டவனிடம் அர்ப்பணித்து விடுங்கள் கடமை என்னும் நெருப்பு தகிக்கின்ற அனல் கக்கும் எரிஉலையில் உள்ள நீங்கள் இந்த அமுதைக் குவளைகளில் ஏந்திக் குடியுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் நாம் அனைவருமே அவரது திருவுளக் கருத்தை நிறைவேற்றுகிறோம் அவ்வளவுதான் அதில் வரும் பரிசிலோ தண்டனையிலோ நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை பரிசைப் பெற விரும்பினால் தண்டனையும் பெற்றேயாக வேண்டும் தண்டனை வேண்டாமென்றால் அதற்கு ஒரே வழி பரிசையும் உதறிவிடுவதுதான் துயரத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மகிழ்ச்சி துயரத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரேவழி மகிழ்ச்சி பற்றிய நினைப்பையும் விட்டுவிடுவதுதான் ஏனென்றால் இந்த இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் துன்பம் ஒரு பக்கம் வாழ்க்கை இருக்கிறது மறுபக்கம் மரணம் உள்ளது மரணத்திற்கு அப்பால் செல்வதற்கு ஒரே ஒரு வழி வாழ்க்கை மீதுள்ள மோகத்தை விட்டுவிடுவதுதான் வாழ்வும் சாவும் ஒரே விஷயம் தான் ஆனால் இரண்டு கோணங்களிலிருந்து பார்க்கப்படுகின்றன, அவ்வளவு தான் எனவே துன்பமற்ற இன்பம் மரணமற்ற வாழ்க்கை போன்ற கருத்துக்கள் எல்லாம் பள்ளிச் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது ஆனால் அறிவுஜீவியோ இவை முன்னுக்குப்பின் முரணானவை என்றே காண்கிறான் கண்டு இரண்டையும் விட்டு விடுகிறான்.
 

நீங்கள் செய்யும் எதற்கும் பாராட்டுகளையோ பரிசுகளையோ எதிர்பார்க்காதீர்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் உடனே அதற்கான வெகுமதியை எதிர்பார்க்கத் தொடங்கி விடுகிறோம். ஏதாவது ஒரு தர்ம காரியத்திற்காகப் பணம் கொடுத்த உடனே நம்முடைய பெயர் பத்திரிக்கையில் பளிச்சிட வேண்டும் என்று விரும்புகிறோம். இத்தகைய ஆசைகளின் விளைவாகத் துன்பங்கள் வந்தே தீரும்.. உலகின் மாமனிதர்கள் யாருக்கும் தெரியாமலே வாழ்ந்து மறைந்து விட்டார்கள் உலகம் சிறிதும் அறியாத இந்த மாமனிதர்களுடன் ஒப்பிடும்போது நாம் அறிந்த புத்தர்களும் ஏசுநாதர்களும் இரண்டாவது படியிலேயே நிற்கிறார்கள் உலகம் அறியாத இத்தகைய மாமனிதர்கள் ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கணக்கில் வாழ்ந்து ஆரவாரமின்றிச் செயல் புரிந்திருக்கிறார்கள் யாரும் அறியாமலே அவர்கள் வாழ்கிறார்கள் யாரும் அறியாமலே மறையவும் செய்கிறார்கள். உரிய காலத்தில் அவர்களுடைய சிந்தனைகள் புத்தர்களின் மூலமும் ஏசுநாதர்களின் வாயிலாகவும் வெளிப்படுகின்றன. இந்த புத்தர்களையும் ஏசுநாதர்களையுமே நாம் அறிகிறோம் தங்கள் ஞானத்திற்காக எந்த விதமான பெயரையும் புகழையும் மாமனிதர்கள் நாடுவதில்லை தங்கள் சிந்தனைகளை மட்டும் உலகத்திற்காக அவர்கள் விட்டுச் செல்கிறார்கள். அவைகளைத் தங்களுடையது என்று உரிமை பாராட்டுவதோ அல்லது தங்கள் பெயரில் அவைகளை ஒரு தத்துவமாக ஒரு நெறியாக நிலைநிறுத்துவதோ இல்லை. அத்தகைய விஷயங்களிலிருந்து அவர்களுடைய இயல்பே பின்வாங்கிவிடுகிறது அவர்கள் தூய சாத்வீகர்கள் அவர்களிடம் ஆரவாரத்திற்கு இடமில்லை. அவர்கள் அன்பில் உருகிப் போகிறார்கள் இந்தியாவின் குகை யொன்றில் அத்தகைய யோகி ஒருவரை நான் பார்த்தேன் நான் கண்ட மிகவும் ஆச்சரியப்படத் தக்கவர்களுள் அவர் ஒருவர் அவரிடமுள்ள மனிதன் முற்றிலுமாக மறைந்து விட்டானோ என்று சொல்லும் அளவிற்க அவர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டவர் அவரிடம் எஞ்சியிருந்ததெல்லாம் எல்லாம் அறிகின்ற தெய்வீக உணர்வு மட்டுமே ஒரு மிருகம் அவரது ஒரு கையைக் கடித்தால் அது தெய்வ சங்கல்பம் எனக் கூறி மற்ற கையையும் நீட்டத் தயாராக இருப்பவர் அவர். அவரிடம் வருகின்ற எல்லாமே அவரைப் பொறுத்தவரை கடவுளிடமிருந்து வருபவையே அவரைப் பொறுத்தவரை கடவுளிடமிருந்து வருபவையே அவர் மனிதர்கள் முன் தம்மைக் காட்டிக் கொள்வதில்லை என்றாலும் அன்பு மற்றும் உண்மையான இனிமையான கருத்துக்களுடைய இருப்பிடம் அவர்
 

அடுத்து வருபவர்கள் ரஜஸ் அதிகமாக உள்ளவர்கள் செயல்திறனும் எதற்கும் முன்நிற்கின்ற இயல்பும் படைத்தவர்கள் இவர்கள் நிறைமனிதர்களின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு, அவற்றை உலகத்தில் பரப்புபவர்கள். மிகவும் உயர்நிலை மனிதர்கள் உண்மையான உன்னதமான சிந்தனைகளை அமைதியாகச் சேர்த்து வைக்கிறார்கள் மற்றவர்கள் அதாவது புத்தர்களும் ஏசுநாதர்களும் ஒவ்வோர் இடமாகச் சென்று அவற்றைப் பரப்பவும் அதற்காகப் பாடுபடவும் செய்கிறார்கள். கொளதம் புத்தர் அடிக்கடி தாம் இருபத்தைந்தாவது புத்தர் என்று கூறிக்கொள்வதை அவரது வரலாற்றில் பார்க்கிறோம். இன்று வரலாற்றிற்குத் தெரிந்த புத்தர் தமக்கு முன்பு வாழ்ந்த அந்த இருபத்து நான்கு பேர் அமைத்த சிந்தனை அடிப்படைகளின் மீதுதான் தமது கட்டிடத்தை எழுப்பியிருக்க வேண்டும் எனினும் அவர்களைப்பற்றி வரலாறு எதுவுமே அறியவில்லை மாமனிதர்கள் ஆரவாரமின்றி அமைதியாக பிறர் அரியாதவர்களாக வாழ்கிறார்கள் அவர்கள் தாம் உண்மையிலேயே சிந்தனையின் ஆற்றலை அறிந்தவர்கள் தாங்கள் ஒரு குகைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு ஐந்தே ஐந்து கருத்துக்களைச் சிந்தித்துவிட்டு அங்கேயே இறந்துவிட்டாலும் கூட தங்களுடைய அந்த ஐந்து சிந்தனைகளும் காலம்காலமாக வாழும் என்பது அவர்களுக்கு சர்வநிச்சயமாக இருந்தது உண்மைதான் அத்தகைய சிந்தனைகள் மலைகளை ஊடுருவி,கடல்களைக் கடந்து உலகில் நுழைந்து பரவும் வல்லமை பெற்றவை அவை மனித இதயங்களில் மூளைகளில் ஆழமாகப் புகுந்து அன்றாட வாழ்க்கையில் அவற்றிற்குக் செயல் முறை விளக்கம் தரவல்ல ஆண்களையும் பெண்களையும் கிளர்ந்தெழச் செய்யும்.
 

இத்தகைய சாத்வீக மனிதர்கள் செயல்களில் ஈடுபடவோ போரிடவோ பிரச்சாரம் செய்யவோ சாதாரணமாகச் சொல்லப்படுகிறதே அதுபோல் உலகிற்கு நன்மை செய்யவோ முடியாத அளவிற்கு இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கிறார்கள் எவ்வளவுதான் சிறந்தவர்களாக இருந்தாலும் செயல்வீரர்களிடம் சிறிது அறியாமை இருக்கவே செய்கிறது. நமது இயல்பில் ஒரு சிறிதேனும் மலினம் இருந்தால் மட்டுமே நம்மால் செயல்புரிய முடியும் அது செயலின் இயல்பு ஒரு சின்னஞ்சிறு குருவி கீழே விழுவதைக்கூடக் கவனிப்பவரான இடையீடின்றிச் செயல்புரிபவரான பகவானின் முன்னிலையில் மனிதன் தனது வேலைக்கு ஏதாவது முக்கியத்துவம் கொடுக்க எப்படி இயலும் மிகச் சிறு உயிர்களைக் கூட அவர் காப்பாற்றுவதை அறிகின்ற நாம் அப்படி முக்கியத்துவம் கொடுப்பது தெய்வநிந்தனை ஆகாதா நாம் செய்ய வேண்டிய தெல்லாம் அவரது திருமுன்னர் பயபக்தியோடு நின்று உமது திருவுளம் போல் நடக்கட்டும் என்று கூறுவது தான்.
 

மிக உயர்ந்தவர்களால் செயல்புரிய முடிவதில்லை ஏனென்றால் அவர்களிடம் பற்று என்பது இல்லை யாருடைய ஆன்மா பரமாத்மாவில் நிலைத்து விட்டதோ யாருடைய ஆசைகள் ஆன்மாவில் ஒடுங்கி நிற்கிறதோ யார் எப்போதும் ஆன்மாவில் மூழ்கியிருக்கிறார்களோ அவர்களுக்குச் செயல் என்பதே இல்லை அத்தகையோர் உண்மையிலேயே மனித குலத்தின் மகோன்னதமான மனிதர்கள் அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் வேலை செய்தேயாக வேண்டும் அப்படி வேலை செய்யும் போது, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு பொருளுக்குக் கூட நம்மால் உதவி செய்யமுடியும். என்று நினைக்கக் கூடாது நம்மால் உதவவும் முடியாது. உலகமாகிய இந்த விளையாட்டரங்கில் நாம் நமக்கே உதவி செய்துகொள்கிறோம். செயல் புரிவதற்குரிய சரியான மனநிலை இதுவே இவ்வாறு நாம் வேலை செய்தால் வேலை செய்வதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பு நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரும்பேறு என்பதை எப்போதும் நினைவு கொள்வோமானால் நாம் எதிலும் பற்றுக் கொள்ள மாட்டோம்.
 

உலகியல் நாமே பெரிய மனிதர்கள் என்று நீங்களும் நானும் இன்னும் நம்மைப் போன்ற லட்சக்கணக்கானோரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் அத்தனைபேரும் சாகப் போகிறோம்; ஐந்து நிமிடத்தில் உலகம் நம்மை மறந்து விடப் போகிறது. ஆனால் இறைவனோ என்றென்றும் இருப்பவர் எல்லாம் வல்ல அந்த இறைவன் திருவுளம் கொள்ளவில்லை என்றால் ஒரே ஒரு கணம் கூடயாரால் வாழ முடியும்? யாரால் சுவாசிக்க முடியும் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர் அவர் எல்லா ஆற்றலும் அவருடையது, எல்லாம் அவரது அதிகாரத்தின் கீழ் உள்ளது. அவரது கட்டளையால்தான் காற்று வீசுகிறது. சூரியன் ஒளிர்கிறது. உயிர்கள் வாழ்கின்றன மரணம் பூமியின் மீது நடைபோடுகிறது. எல்லாவற்றிலுமுள்ள எல்லாமும் அவரே. அவரே எல்லாம் எல்லாவற்றிலும் அவரே. நம்மால் அவரை வழிபடத்தான் முடியும் செயல்களின் பலனையெல்லாம் விட்டுவிடுங்கள் நன்மைக்காகவே நன்மை செய்யுங்கள் அப்போதுதான் முழுமையான பற்றின்மை வரும் இதயத்தின் தளைகள் அப்போது தான் உடையும் பூரண சுதந்திரத்தை அப்போதுதான் நாம் அனுபவிப்போம் இந்தச் சுதந்திரம் தான் கர்மயோகத்தின் லட்சியம்!


  

நாம் உதவி செய்வது நமக்கே உலகிற்கு அல்ல!

கடமைகளைச் சரிவரச் செய்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு எப்படி உதவுகிறது என்பதைக் காண்பதற்கு முன், கர்மம் என்பதற்கு இந்தியாவில் வழங்கப்படும் மற்றொரு கருத்தையும் சுருக்கமாக நான் உங்கள்முன் வைக்க விரும்புகிறேன். 

ஒவ்வொரு மதத்திலும் தத்துவம், புராணம், சடங்கு என்று மூன்று பகுதிகள் உள்ளன. எந்த மதத்திற்கும் தத்துவமே சாரமாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத்தை ஏறக்குறைய கற்பனைப் பாத்திரங்களான மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது புராணம், சடங்கு என்பது தத்துவக் கருத்துக்களுக்கு, எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது, உண்மையில் தத்துவத்தின் உருத்தோற்றமே சடங்கு.
 

இந்தச் சடங்குதான் கர்மம். இவை ஒவ்வொரு மதத்திற்கும் இன்றியமையாதவை. ஏனென்றால் ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறாமல் நுட்பமான ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாது. எதையும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பது சுலபம். ஆனால் நடைமுறை அனுபவத்திலோ நுட்பமான கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதுதான் உண்மை. எனவே சின்னங்கள் சிறந்த உதவியாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் எதையும் தெளிவுப்படுத்துகின்ற முறையை நாம் ஒதுக்கிவிட முடியாது. மிகப் பழங்காலத்திலிருந்தே எல்லாவித மதங்களும் சின்னங்களைப் பயன்படுத்தி வருகின்றன.
 

ஒருவகையில் சின்னங்களில் மூலம்தான் நாம் சிந்திக்கவே முடியும். சொற்கள் என்பவை சிந்தனையில் சின்னங்ளே தவிர வேறல்ல. இன்னொரு வகையில், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு சின்னமாக நாம் கொள்ளலாம். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு சின்னம். இதன் பின்னாலுள்ள சாரம் இறைவன். இத்தகைய சின்னங்களின் உருவாக்கம் மனிதனின் வெறும் கண்டுபிடிப்பல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றாக அமர்ந்து தங்கள் மனத்துள் சிந்தித்து வெளிக்கொண்டு வந்தவையல்ல இவை. மதச் சின்னங்கள் இயல்பாகத் தோன்றி வளர்ந்தவை. இல்லையென்றால் ஏறக்குறைய எல்லோரின் மனத்திலும், குறிப்பிட்ட கருத்துக்கள் குறிப்பிட்ட சின்னங்களோடு மட்டுமே தொடர்புடையவையாக எப்படி இருக்கும்? சில சின்னங்கள் உலகம் முழுவதிலுமே வழக்கத்தில் இருக்கின்றன.
 

கிறிஸ்தவ மதத்துடனான தொடர்பிற்குப் பின்னர் தான் சிலுவை ஒரு சின்னமாக முதலில் கொள்ளப் பட்டது என்று உங்களுள் பலரும் நினைக்காமல். ஆனால் உண்மையில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னால் மோசஸ் தோன்றுவதற்கு முன்னால், வேதங்களும் தோன்றவதற்கு முன்னால் வரலாற்றுக் குறிப்புகள் தொடங்குவதற்கு முன்னால் சிலுவைச் சின்னம் இருந்தது. அஸ்டெக் மற்றும் பினீசியர்களிடையே இந்தச் சின்னத்தை நாம் காணமுடியும். ஒவ்வோர் இனத்தினரும் சிலுவைச் சின்னம் வைத்திருந்ததாகவே தோன்றுகிறது. சிலுவையில் அறையப்பட்ட ரட்சகர்,. அதாவது, சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதர், இந்தச் சின்னமும் எல்லா நாடுகளிலும் அறியப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.
 

இதுபோலவே வட்டம் உலகம் முழுவதிலுமே ஒரு மகத்தான சின்னமாக இருந்து வருகிறது. எல்லாவற்றையும்விட உலகம் முழுவதும் அறியப்பட்ட மற்றொரு சின்னம் ஸ்வஸ்திகம். பவுத்தர்களே இதை உலகம் முழுவதும் தங்களுடன் கொண்டு சென்று பரப்பினார்கள் என்று கருத்து ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் புத்த மதத்திற்கு முன்பே பல நாடுகளில் இதனைப் பயன்படுத்தியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. பழங்கால பாபிலோனிலும் எகிப்திலும் இந்தச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தச் சின்னங்கள் மனிதனின் கற்பனையில் ஒரு குறிப்பிட்ட நிச்சயமாக ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தச் சின்னங்களுக்கும் மனித மனத்திற்கும் ஏதோ இயல்பான தொடர்பு இருந்திருக்க வேண்டும்.
 

மொழிகூட மனிதனின் கற்பனையில் ஒரு குறிப்பிட்ட முறையில் தோன்றியதல்ல. சில வார்த்தைகள் மூலம் சில எண்ணங்களை உணர்த்த வேண்டும் என்று சிலர் கலந்து தீர்மானித்ததன் விளைவாகவும் தோன்றியதல்ல. 

எந்த எண்ணமும் அது குறிக்கின்ற சொல் இல்லாமலோ, எந்தச் சொல்லும் அது உணர்த்துகின்ற எண்ணம் இல்லாமலோ இருந்ததில்லை. எண்ணமும் சொல்லும் இயல்பாகவே பிரிக்க முடியாதவை, கருத்துக்களைக் குறிக்கின்றவை ஒலிச் சின்னங்களாகவோ நிறச் சின்னங்களாகவோ இருக்கலாம். செவிடனும் ஊமையும் ஒலிச் சின்னங்களைத் தவிர மற்றொன்றின் மூலமே சிந்தித்தாக வேண்டும்.
 

மனத்தில் எழும் ஒவ்வோர் எண்ணத்திற்கும் அதற்கேயான ஓர் உருவம் உண்டு. இது சம்ஸ்கிருதத் தத்துவங்களில் நாம-ரூபம் அதாவது பெயர் உருவம் என்று கூறப்படுகிறது. 

கற்பனையால் ஒரு மொழியை உண்டாக்க முடியாது. அதுபோலவே சின்னங்களின் முறையையும் உருவாக்க முடியாது. உலக மதங்களில் சடங்கிற்காக அமைந்த சின்னங்கள் அனைத்திலும் மனித சமுதாயத்தின் சிந்தனை வெளிப்பாட்டை நாம் காண்கிறோம். சடங்குகள், கோயில்கள் மற்றும் அதுபோன்ற சம்பிரதாயங்கள் எதுவும் தேவயில்லை என்று சொல்லிவிடுவது எளிது. இன்றைய சிறுபிள்ளை கூட இதைச் சொல்கிறது. ஆனால் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்கள் மற்றவர்களிலிருந்து பல வகையிலும் வேறுபட்டிருப்பதை எல்லோரும் எளிதாக அறிந்துகொள்ளலாம். 

ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில்கள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் போன்ற தூல வடிவங்களுடன் அந்தக் குறிப்பிட்ட மதத்தினர் தொடர்பு கொள்ளும்போது, அவை எதைக் குறிந்து நிற்கின்றனவோ அந்தக் கருத்துக்களை, எண்ணங்களை அவர்களின் மனத்தில் கொண்டுவருகின்ற தன்மை படைத்தவையாக இருக்கின்றன. எனவே சடங்குகளையும் சின்னங்களையும் தவிர்ப்பது அறிவுடைமை ஆகாது. அவற்றைத் தெரிந்து கொள்வதும் பின்பற்றுவதும் இயல்பாகவே கர்மயோகத்தின் ஒரு பகுதியாகிறது.
 

இந்தச் செயல்விஞ்ஞானத்தின் அதாவது கர்மயோகத்தின் அம்சங்கள் இன்னும் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, எண்ணத்திற்கும் வாக்கிற்கும் இடையிலுள்ள தொடர்பையும், வாக்கின் சக்தியால் நாம் சாதிக்கக்கூடியது என்ன என்பதையும் அறிந்து கொள்வதாகும். 

வாக்கின் சக்தியை ஒவ்வொரு மதமும் அங்கீகரித்துள்ளது. சில மதங்கள் படைப்பே வாக்கிலிருந்துதான் தோன்றியதாகக் கூறுமளவிற்கு அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. இறைவனுடைய சிந்தனையின் புற அம்சம்தான் வாக்கு. படைப்பிற்குமுன் கடவுள் சிந்தித்தார். சங்கல்பித்தார். எனவே படைப்பு வாக்கிலிருந்து தோன்றியது.
 

மன அழுத்தமும் பரபரப்பும் நிறைந்த இன்றைய நமது உலகாயத வாழ்வால் நமது நரம்புகள் மென்மையை உணரும் தன்மையை இழந்து கடினமாகிவிட்டது. வயதானவர்களாக ஆகுந்தோறும், உலகால் பந்தாடப்படுந்தோறும் கடினமானர்களாகி விடுகிறோம். அதன் காரணமாக நம்மைச்சுற்றி தெள்ளத் தெளிவாக, நிரந்தரமாக நடைபெறுபவற்றைக் கவனிக்காமல் போகின்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம். எனினும் சிலவேளைகளில் மனிதத்துவம் தன் இயல்பை நிலைநாட்டுகிறது. அப்போது இந்த அன்றாட நிகழ்ச்சிகளுள் சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் வியந்து நிற்கவும் செய்கிறோம். இவ்வாறு வியந்து நிற்பதுதான் ஆன்மீக ஒளி பெறுவதற்கான முதற்படியாகும்.
 

வாக்கின் தத்துவரீதியான, மத சம்பந்தமான உயர்ந்த மதிப்பைத் தவிர ஒலிச் சின்னங்கள் மனித வாழ்க்கை நாடகத்தில் முக்கிய இடம் வகிப்பதை நாம் காணலாம். நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களை நான் தொடவில்லை. நான் பேசுவதால் காற்றில் ஏற்படுகின்ற அதிர்வுகள் உங்கள் காதுகளில் நுழைந்து, நரம்புகளைத் தொட்டு உங்கள் மனத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உங்களால் இதைத் தடுக்க முடியாது. இதைவிட வியப்பிற்குரியது என்ன இருக்க முடியும்? ஒருவன் மற்றவனை முட்டாள் என்று அழைக்கிறான். விளைவு? இவன் எழுந்து முஷ்டியை மடக்கிக்கொண்டு, அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிடுங்கள். வாக்கின் சக்தியைப் பாருங்கள்! ஒருத்தி துனபத்தால் அழுது கொண்டிருக்கிறாள். இன்னொருத்தி அங்கு வருகிறாள். அவளிடம் மென்மையான சில வார்த்தைகள் பேசுகிறாள். உடனே இவளது வளைந்திருந்த உடம்பு நிமிர்ந்து நேராகிறது. முகத்தில் புன்னகை அரும்ப ஆரம்பிக்கிறது. வாக்கின் ஆற்றலை எண்ணிப் பாருங்கள்! உயர்ந்த தத்துவங்களிலும் அதுபோலவே அன்றாட வாழ்விலும் அவை ஒரு மாபெரும் சக்தியாக விளங்குகின்றன. நாம் சிந்தித்துப் பார்க்காமல், ஆராய்ந்து பார்க்காமல் இரவும் பகலும் இந்த ஆற்றலைக் கையாண்டு கொண்டிருக்கிறோம். இந்தச் சக்தியின் இயல்பைத் தெரிந்துகொள்வதும், அதைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும்கூட கர்மயோகத்தின் ஒரு பகுதியாகும்.
  

மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதன் பொருள், பிறருக்கு நாம் உதவ வேண்டும், உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே. நாம் எதற்காக உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகத்திற்கு உதவுவதற்காக, ஆனால் உண்மையில் நமக்கே உதவுவதற்காக, நாம் எப்போதும் உலகத்திற்கு உதவ முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அது ஒன்றே நமது மிகவுயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும். நாம் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால், உலகிற்கு நம் உதவி சிறிதுகூடத் தேவையில்லை என்பதைக் காணலாம். நீங்களோ நானோ வந்து உதவி செய்வோம் என்பதற்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை .அழகிய இந்த உலகம் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் பிறருக்கு உதவி செய்வதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் இது தருகிறது. என்று ஒரு சொற்பொழிவில் படித்தேன். கேட்கும்போது உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகத்திற்கு நம் உதவி தேவைப்படுகிறது என்று சொல்வது தெய்வ நிந்தனை ஆகாதா? உலகில் துயரம் மிகுந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. நாம் சென்று பிறருக்கு உதவி செய்வதே செய்யத் தக்கவற்றுள் சிறந்தது. எனினும் பிறருக்கு உதவுவது என்பது நமக்கே நாம் உதவிக்கொள்வதுதான் என்பதை இறுதியில் உணர்ந்து கொள்வோம்.
 

நான் சிறுவனாக இருந்தபோது வெள்ளை எலிகளை வளர்த்து வந்தேன். அவற்றை ஒரு சிறிய கூண்டில் வைத்திருந்தேன். அந்தக் கூண்டினுள் ஒரே அச்சில் சுழல்கின்ற சிறுசிறு சக்கரங்கள் இருந்தன. எலிகள் அந்தச் சக்கரங்களைக் கடப்பதற்காக அதில் ஏறினால் உடனே அவை சுழலத் தொடங்கும். இதனால், எலிகள் நின்ற இடத்திலேயே நிற்குமே தவிர, அவை முன்னால் செல்ல முடியாது. உலகமும் நாம் அதற்கு உதவுவதும் இதே கதைதான். உலகிற்கு உதவுவதால் கிடைக்கின்ற ஒரே உதவி, நாம் பெறுகின்ற நன்னெறிப் பயிற்சிதான்.
 

இந்த உலகம் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. 

ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறான். பார்வையற்றவன் உலகத்தைப்பற்றிச் சிந்திப்பானானல், அது மென்மை அல்லது கடினமானதாகவோ குளிர்ச்சி அல்லது சூடானதாகவோ இருக்கும். நாமும் மகிழ்ச்சி அல்லது வேதனையின் சேர்க்கை மட்டுமே. இதை நாம் நம் வாழ்வில் நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறோம். பொதுவாக இளைஞர்கள் இன்பநோக்குடனும் முதியவர்கள் துன்பநோக்குடனும் உள்ளனர். இளைஞர்களுக்கு, வாழ்க்கை முன்னால் உள்ளது. வயதானவர்களோ தங்கள் காலம் கடந்து விட்டதென்று குறைபட்டுக் கொள்கிறார்கள். நிறைவேற்ற முடியாத நூற்றுக்கணக்கான ஆசைகள் அவர்களது மனத்தில் முட்டி மோதுகின்றன. ஆனால் இருசாராரும் முட்டாள்களே. மனத்தின் எத்தகைய நிலையோடு வாழ்க்கையைப் பார்க்கிறோமோ, அதற்கு ஏற்ப அது நல்லதாகவோ கெட்டதாகவோ தோன்றுகிறது. தன்னளவில் அது நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை. நெருப்பு தன்னளவில் நல்லதோ தீயதோ இல்லை. அது நமக்கு இதமான வெகுவெதுப்பு தரும்போது, ஆ எவ்வளவு அருமையான நெருப்பு! என்கிறோம்; விரலைச் சுட்டுவிட்டால் அதையே குறை கூறுகிறோம். எனினும் நெருப்பு தன்னளவில் நல்லதோ கெட்டதோ இல்லை. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ற உணர்ச்சியை அது நம்முள் எழுப்புகிறது. உலகமும் அவ்வாறே. அது பூரணமானது. பூரணமானது என்றால், தன் குறிக்கோளைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் கொண்டது என்பதே. நாம் இல்லையென்றாலும் அது அழகாக இயங்கிக் கொண்டு தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். அதற்கு உதவி செய்ய வேண்டுமே என்று நினைத்து, நாம் நம் தலையைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டியதில்லை.
 

என்றாலும் நாம் நல்லதையே செய்ய வேண்டும். பிறருக்கு உதவுவது என்பது ஒரு பேறு என்ற எண்ணம் நமக்கு எப்போதும் இருக்குமானால், நன்மை செய்வதற்கான ஆசை மிகவும் ஆற்றல் வாய்ந்த தூண்டுசக்தியாகி விடும். ஐந்து காசுகளைக் கையில் எடுத்துக்கொண்டு, உயரமான மேடையில் நின்று கொண்டு, பிச்சைக்காரா இதோ என்று கூறாதீர்கள். அவன் இருந்ததால்தானே அவனுக்கு தானம் செய்து அதன்மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந்தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவனல்ல, கொடுப்பவனே பேறுபெற்றவன். உங்கள் தானத்திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறைநிலையும் அடைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள். எல்லா நற்செயல்களுமே நம்மைத் தூய்மையை நோக்கி, நிறைநிலையை நோக்கியே இட்டுச் செல்கின்றன.
 

மிஞ்சிப்போனால் அப்படி என்ன பெரிதாகச் சாதித்துவிட முடியும்? ஒரு மருத்துவமனையைக் கட்டுவீர்கள், சாலைகள் போடுவீர்கள், அற நிலையங்களை ஏற்படுத்துவீர்கள், அவ்வளவுதானே! ஒரு பெரிய அறக்கட்டளையை ஏற்படுத்தி இரண்டு மூன்று லட்ச ரூபாய் சேர்க்கலாம்; முதல் லட்சத்தில் மருத்துவமனை கட்டலாம், இரண்டாவது லட்சத்தைக் குடி, விருந்து என்று கேளிக்கைகளில் செலவிடலாம். மூன்றாவது லட்சத்தில் பாதியை இதை நடத்துபவர்கள் திருடிக்கொண்டு போகும்படியும் செய்வீர்கள்! இவற்றால் ஆவதென்ன? இப்படி நீங்கள் கட்டுகின்ற கட்டிடங்களைப் புயல் ஒன்று ஐந்து நிமிடத்தில் தரைமட்டமாக்கிவிடும். அதற்குப் பிறகு என்ன செய்வது? குமுறி எழுகின்ற ஓர் எரிமலை, நாம் அமைத்த எல்லா சாலைகளையும் மருத்துவமனைகளையும் நகரங்களையும் கட்டிடங்களையும் அடித்துச் சென்றுவிடும். எனவே உலகிற்கு நன்மை செய்வது என்றெல்லாம் முட்டாள்தனமாகப் பேசுவதை விட்டுவிடுவோம். உங்களுடையவோ என்னுடையவோ உதவிக்காக அது காத்துக்கொண்டிருக்கவில்லை. என்றாலும் நாம் வேலை செய்ய வேண்டும். எப்போதும் நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அது நமக்கு ஓர் ஆசீர்வாதம். நாம் நிறைநிலை அடைய இது ஒன்றே வழி.
 

நாம் இதுவரை உதவி செய்துள்ள எந்தப் பிச்சைக்காரனும் நம்மிடம் ஒரு சல்லிக்காசுக்கும் கடமைப்பட்டவனல்ல. எல்லா வழிகளிலும் நாம்தான் அவனிடம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஏனெனில் நமது தான சிந்தையைத் தன்மீது செயல்படுத்த அவன் நம்மை அனுமதித்திருக்கிறான். நாம் உலகத்திற்கு நன்மை செய்துவிட்டோம். அல்லது செய்ய முடியும் அல்லது இன்னாருக்கெல்லாம் நாம் உதவி செய்வோம் என்றெல்லாம் நினைப்பது முற்றிலும் தவறு. அது முட்டாள் தனமான எண்ணம். முட்டாள்தனமான எண்ணங்கள் துன்பத்தைத்தான் கொண்டுவரும். நாம் யாரோ ஒருவருக்கும் உதவி செய்ததாக எண்ணி, அவன் நமக்கு நன்றிபாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவன் அப்படிச் செய்யாவிட்டால் நமது மனம் வேதனைப்படுகிறது. நாம் செய்பவற்றிற்கு ஏன் பிரதிபலனை எதிர்பாக்க வேண்டும் நீ உதவி செய்தவனிடம் நன்றி கொள். அவனைக் கடவுளாக எண்ணிக் கொள். சகோதரர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவனை வழிபட அனுமதிக்கப்பட்டது ஒரு பெரும்பேறு அல்லவா? 

நாம் உண்மையிலேயே பற்றற்றவர்களாக இருப்போமானால், இந்த வீண் எதிர்பார்ப்புக்களில் இருந்து வருகின்ற வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வோம். எப்போதும் உற்சாகத்துடன் நற்செயல்களைச் செய்தபடி இருப்போம். பற்றற்றுச் செய்யும் செயலினால் ஒருபோதும் துன்பமோ துயரமோ வருவதில்லை. இந்த உலகம் சுகதுக்கங்களின் சேர்க்கையாக என்றென்றும் இவ்வாறே போய்க் கொண்டிருக்கும்.
 

ஓர் ஏழை இருந்தான். அவனுக்குப் பண ஆசை வந்தது. எப்படியாவது ஒரு பூதத்தை வசமாக்கி விட்டால் பணத்தையும் தான் விரும்பும் எதையும் கொண்டுவருமாறு செய்யலாம் என்று அவன் கேள்விப்பட்டான், எனவே பூதத்தை வசமாக்கத் துடித்தான். பூதத்தைப் பிடித்துத் தருபவரைத் தேடி அலையலானான். கடைசியாக, சக்தி வாய்ந்த முனிவர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்து அவரது உதவியை நாடினான். பூதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார் அந்த முனிவர் அதற்கு அவன், முனிவரே எனக்காக வேலை செய்வதற்குத்தான் பூதம் வேண்டும். தயவுசெய்து அதைப் பிடிப்பது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று மிகவும் வேண்டினான். அதற்கு அந்த முனிவர், வீணாகக் குழம்பாமல் வீட்டிற்குப் போ என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
 

ஆனால் மறுநாள் அவன் மீண்டும் அந்த முனிவரிடம் சென்று எனக்கு ஒரு பூதத்தைக் கொடுங்கள்! எனக்குக் கண்டிப்பாகப் பூதம் வேண்டும் என்று கேட்டபடியே இருந்தான். வெறுப்புற்ற முனிவர் இதோ இந்த மந்திரத்தைப் பெற்றுக்கொள். இதனை நீ சொன்னால் பூதம் வரும். நீ சொல்லும் வேலைகளையெல்லாம் அது செய்யும். ஆனால் ஒரு விஷயத்தில் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூதங்கள் பயங்கரமானவை. அதற்கு நீ எப்போதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தவறினாயோ அது உன் உயிரை வாங்கிவிடும் என்றார். அது ஒன்றும் சிரமம் அல்ல, அதன் ஆயுட்காலம் முழுவதும் வேலை கொடுக்க என்னால் முடியும் என்று கூறிப் புறப்பட்டான் அவன்.
 அங்கிருந்து நேராக ஒரு காட்டிற்குச் சென்ற அவன் அங்கு அமர்ந்து, முனிவர் கொடுத்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்க ஆரம்பித்தான். நெடுநேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய பூதம் அவன் முன் தோன்றி, நான் ஒரு பூதம். உன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டுள்ளேன் ஆனால் நீ எப்போதும் எனக்கு வேலை தந்துகொண்டே இருக்க வேண்டும். அதில் தவறினால் அடுத்த கணமே உன்னைக் கொன்றுவிடுவேன் என்று கூறியது. உடனே அந்த மனிதன், எனக்கு ஓர் அரண்மனை கட்டு என்றான். தயார் அரண்மனை கட்டியாகிவிட்டது என்றது பூதம். பணம் கொண்டு வா என்றான். இதோ நீ விரும்பிய பணம் என்று பணத்தைக் கொடுத்தது பூதம். இந்தக் காட்டை அழித்து, இங்கே ஒரு நகரத்தை உருவாக்கு என்றான். அடுத்த கணமே தயார் என்றது பூதம். காடு அழிந்து நகரம் உருவாகியது. இனி என்ன? என்று கேட்டது பூதம். இனிமேல் இந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லையே, எதைக் கொடுத்தாலும் ஒரு கணத்தில் செய்துவிடுகிறதே என்று எண்ணிய அவனைப் பயம் பிடித்துக் கொண்டது. அதற்குள் அந்தப் பூதம், வேலை கொடுக்கிறாயா? இல்லை உண்னை விழுங்கட்டுமா? என்று உறுமியது. அந்த அப்பாவியால் அதற்கு எந்த வேலையும் கொடுக்க முடியவில்லை. அஞ்சி நடுங்கிய அவன் ஒரே ஓட்டமாக முனிவரிடம் ஓடினான்.
 

முனிவரிடம் சென்று, சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினான். நடந்தது என்ன என்று அவர் கேட்டதும், அந்தப் பூதத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லை. நான் எதைச் சொன்னாலும் அது கண நேரத்தில் முடிந்துவிடுகிறது. வேலை கொடுக்காவிட்டால் என்னையே தின்றுவிடப் போவதாக இப்போது பயமுறுத்துகிறது என்று பதிலளித்தான். அதற்குள் பூதம் அங்கேயே வந்து உன்னைத் தின்னப் போகிறேன் என்று கூச்சல் போட்டவாறே அவனைப் பிடிக்க எத்தனித்தது. அந்த மனிதன் நடுநடுங்கி, தன்னைக் காப்பாற்றுமாறு முனிவரிடம் கெஞ்சினான். முனிவர் அவனிடம், பயப்படாதே. நீ தப்ப நாள் ஒரு வழி கூறுகிறேன். சுருண்ட வாலுடன் அதோ ஒரு நாய் நிற்கிறதே, பார்த்தாயா? வாளை உருவி அதன் வாலை வெட்டு, அதை அந்தப் பூதத்திடம் கொடுத்து நேராக்கும்படிச் சொல் என்றார். அவனும் அவ்வாறே வெட்டி பூதத்திடம் கொடுத்து, இதை நேராக்கு என்றான். பூதம் சுருண்ட நாய்வாலைக் கையில் பிடித்துக்கொண்டு, நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் நிமிர்த்தியது. ஆனால் விட்ட மறுகணமே அந்த வால் சுருண்டுகொண்டது. மறுபடியும் சிரமப்பட்டு நிமிர்த்தியது. விட்டதும் உடனே சுருண்டுகொண்டது. மறுபடியும் மிகுந்த சிரமத்துடன் நிதானமாக நிமிர்த்தியது. விட்டால் பழைய கதைதான். இப்படியே நாட்கணக்கில் முயன்ற பூதம் இறுதியில் களைத்துவிட்டது. அதன்பிறகு அது அந்த மனிதனைப் பார்த்து என் வாழ்நாளில் இப்படி ஒரு சங்கடத்தில் மாட்டியதில்லை. முதிர்ந்த திறமை வாய்ந்த ஒரு பூதம் நான். இதுவரை நான் இப்படி ஒரு துன்பத்திற்கு ஆளாகியதில்லை. நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். நீ என்னை விட்டு விடு. நான் உனக்குக் கொடுத்த அனைத்தையும் அதற்குப் பதிலாக வைத்துக் கொள். நான் உனக்குத் துன்பமும் தர மாட்டேன் என்றது. அந்த மனிதன் மகிழ்ச்சியோடு பூதத்தின் உடன்பாட்டை ஏற்றுக் கொண்டான்.
 

இந்த உலகமும் நாயின் சுருண்ட வால்போல்தான் இருக்கிறது. அதை நிமிர்த்துவதற்காக மனிதர்கள் காலம்காலமாக முயன்று வருகிறார்கள், ஆனால் விட்டவுடனே அது சுரண்டுகொள்கிறது. சுருண்டுகொள்ளாமல் வேறென்ன செய்யும்? பற்றில்லாமல் செயல்புரிவது எப்படி என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதன் கொள்கைவெறியன் ஆக மாட்டான். இந்த உலகம் நாயின் சுருண்டவால்போன்றது. அது ஒருபோதும் நேராகாது என்று தெரிந்துகொண்டால், நாம் கொள்கைவெறியர்களாக மாற மாட்டோம். கொள்கைவெறி மட்டும் இல்லாதிருந்தால் உலகம் இப்போது இருப்பதைவிட எவ்வளவோ மேன்மை யுற்றிருக்கும். கொள்கைவெறி மனித இனத்தை முன்னேற்றும் என்று எண்ணுவது தவறு. உண்மையில் இந்தக் கொள்கைவெறி மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் தூண்டி, ஒருவரோடு ஒருவர் சண்டையிடச் செய்து, இரக்கமில்லாதவர்களாக மாற்றி, அவர்களை அவர்கள் இருந்த நிலையிலிருந்து தாழ்த்தவே செய்யும்.
  

நாம் என்ன செய்கிறோமோ, நம்மிடம் எது இருக்கிறதோ அதுதான் உலகிலேயே சிறந்தது. நாம் செய்யாதது, நம்மிடம் இல்லாதது, அது மதிப்பே இல்லாதது. இதுதான் நமது எண்ணம். எனவே உங்களிடம் கொள்கைவெறி தலைதூக்கும் போதெல்லாம் சுருண்ட நாய்வாலை நிமிர்த்தும் இந்த உதாரணத்தை எப்போதும் நினைவுகூருங்கள். உலகத்தை நினைத்து, இரவெல்லாம் தூக்கம் கெட்டு நீங்கள் அவதிப்படத் தேவையில்லை. நீங்கள் இல்லாமலே அது இயங்கிக் கொண்டுதானிருக்கும்.
 

கொள்கைவெறியைத் தவிர்த்தால் மட்டுமே உங்களால் திறமையுடன் செயல்பட முடியும். சமமான மனமும் அமைதியும் ஆராய்ந்து தெளியும் குணமும் குளிர்ந்த சிந்தனையும் மிகுந்த கருணையும் அன்பும் உடையவன்தான்  உலகிற்கு நன்மை செய்கிறான். அதன் மூலம் தனக்கும் நல்லது செய்து கொள்கிறான். கொள்கை வெறி பிடித்தவன் முட்டாள். அவனிடம் இரக்கம் இல்லை. அவனால் உலகத்தையும் செம்மைப்படுத்த முடியாது. தானும் தூய்மையோ நிறைநிலையோ அடைய முடியாது.
 

இன்றைய சொற்பொழிவின் முக்கியக் கருத்துக்களை இப்போது நினைவுகூர்வோம். முதல் கருத்து; நாம் எல்லோரும்தான் உலகிற்குக் கடன்பட்டிருக்கிறோமே தவிர, உலகம் எந்த வகையிலும் நமக்குக் கடன் பட்டிருக்கவில்லை. உலகத்திற்கு நாம் ஏதாவது நன்மை செய்யமுடிந்தால் அது பெரும்பேறு. உலகிற்கு உதவி செய்வதன்மூலம் உண்மையில் நமக்கு நாமே உதவி செய்துகொள்கிறோம்.
 

இரண்டாவது கருத்து; இந்த உலகில் கடவுள் ஒருவர் இருக்கிறார். இந்த உலகம் தட்டுத் தடுமாறிக்கொண்டு, உங்களிடமோ என்னிடமோ உதவி தேடி நிற்கிறது என்பது உண்மையல்ல. கடவுள் எப்போதும் இருக்கிறார். அவர் மரணமற்றவர். எந்த நேரமும் செயல் புரிபவர். விழித்துக் கொண்டிருப்பவர். அண்ட சராசரங்கள் அனைத்தும் உறங்கும்போதும் அவர் உறங்குவதில்லை. அவர் இடைவிடாமல் செயல்புரிந்துகொண்டே இருக்கிறார். உலகில் உண்டாகின்ற எல்லா மாற்றங்களும் எல்லா வெளிப்பாடுகளும் அவருடையதே.
 

மூன்றாவதாக, நாம் யாரையும் வெறுக்கக் கூடாது. இந்த உலகம் நன்மை மற்றும் தீமை இவைகளின் கலப்பாகவே தொடர்ந்து இருக்கும். பலவீனர்களிடம் இரக்கம் கொள்வதும், தவறு செய்பவர்களிடம் கூட அன்பு செலுத்துவதும் நமது கடமை. இந்த உலகம் ஒரு பரந்த நன்னெறிக் கூடம் மேலும்மேலும் ஆன்மீக வலிமை பெறுவதற்காக அதில் நாம் அனைவரும் பயிற்சி செய்ய வேண்டும்.
 

நான்காவதாக, எந்த வகையான கொள்கை வெறியர்களாகவும் நாம் இருக்கக் கூடாது. ஏனெனில் கொள்கைவெறக என்பது அன்பிற்கு முற்றிலும் எதிரானது கொள்கைவெறியர்கள். நாங்கள் பாவிகளை வெறுப்பதில்லை. பாவங்களையே வெறுக்கிறோம் என்று தேனொழுக வாய்ஜம்பம் அடிப்பதை நாம் கேட்கிறோம். ஆனால் பாவிகளையும் பாவங்களையும் உண்மையிலேயே பிரித்து வேறுபடுத்திக் காண்கின்ற ஒரு மனிதன் இருப்பானானால் அவனது முகத்தைக் காண உலகத்தின் எந்த மூலைக்கும் நான் போகத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பேசுவது எளிது. நம்மால் ஒரு பொருளையும் அதன் குணத்தையும் தனித்தனியாகப் பிரித்துக் காண முடியுமானால், நிறைமனிதர்களாகி விடுவோம். ஆனால் அது எளிதான காரியமல்ல.
 

மேலும், நாம் எந்த அளவிற்கு அமைதியானவர்களோ, நமது நரம்புகள் எந்த அளவிற்குப் பதற்றமின்றி இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நாம் அதிகமாக அன்பு செலுத்துவோம். நமது வேலையும் சிறந்ததாக இருக்கும்.

-
 
 
 


Site Content

Additional Information

  

பக்தியின் இலக்கணம்!

பிரார்த்தனை:
 

ஸ தன்மயோ ஹ்யம்ருத ஈசஸம்ஸ்தோ
ஜ்ஞ ஸர்வகோ புவனஸ்யாஸ்ய கோப்தா
ய ஈசோஸ்ய ஜகதோ நித்யமேவ
நான்யோ ஹேதுர்வித்யத ஈசனாய
 

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாசம்
முமுக்ஷúர்வை சரணமஹம் ப்ரபத்யே
 

அவர் பிரப்ஞசத்தின் ஆன்மா . அவர் அழிவற்றவர் அவரே ஆள்பவர், ஆட்சி அவர் எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர், பிரபஞ்சத்தைக் காப்பவர், என்றென்றும் ஆள்பவர், அதனை ஆள்வதற்கு அவரைவிடத் திறமை வாய்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை.
 

படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மாவைத் (அதாவது பிரபஞ்ச உணர்வை) தோற்றுவித்து, வேதங்களை அவருக்கு அளித்தவர் அவர். முக்தி பெறுவதற்காக அந்த ஒளி வடிவினரை நான் அடைக்கலாம் புகுகிறேன். அவரது ஒளியே புத்தியை ஆன்மாவை நோக்கித் திரும்புகிறது.
 

1. பக்தியின் இலக்கணம்
 

உண்மையாக, இயல்பாக இறைவனைத் தேடுவதே பக்தி யோகம். இந்தத் தேடல் அன்பில் தொடங்கி, அன்பில் தொடர்ந்து, அன்பிலேயே நிறைவுறுகிறது. இறைவனிடம் தீவிர அன்புவெறி நம்மிடம் கணப்பொழுது தோன்றினால் போதும், அது அழிவற்ற முக்தியைத் தந்துவிடும். நாரதர் தமது பக்தி சூத்திரங்களில் இறைவனிடம் நாம் பூணும் ஆழ்ந்த அன்பே பக்தி என்கிறார் அதைப் பெறுகின்ற ஒருவன் அனைவரையும் நேசிக்கிறான். யாரையும் வெறுப்பதில்லை என்றென்றைக்குமாகத் திருப்தியுற்று விடுகிறான். உலகப் பொருட்களை அடைவதற்குரிய ஒரு சாதனமாக இந்த அன்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் ஆசைகள் இருக்கும்வரை இத்தகைய அன்பு வராது. பக்தி கர்மத்தைவிடச் சிறந்தது. யோகத்தைவிட மேலானது. ஏனெனில் இந்த இரு நெறிகளும் ஒரு பயனை முன்வைத்தே கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் பக்தியின் பயன் பக்தியே. வழியாகவும் முடிவாகவும் பக்தியே விளங்குகிறது.
 

பக்தி நமது ரிஷகளின் முக்கியக் கருத்தாக இருந்து வந்துள்ளது. பக்தி ஆச்சாரியர்களான சாண்டில்யர் நாரதர் போன்றோர் மட்டுமன்றி, ஞானத்தையே சிறப்பித்துப் பேசுபவர்களும், வியாச சூத்திரங்களின் உரைபித்துப் பேசுபவர்களும், வியாச சூத்திரங்களின் உரையாசிரியர்களுமான ஆச்சாரியர்களும் பக்தியைச் சுட்டிக் காட்டியுள்ளனர். எல்லா வியாச சூத்திரங்களுக்கும் இல்லாவிடினும். பெரும்பாலான சூத்திரங்களுக்கான விளக்கவுரை எழுதும்போது, அவை ஒருவித வறண்ட் ஞானத்தைக் கூறுகின்றன என்பதை நிலைநாட்டுவதில் தான் உரையாசிரியர்கள் ஆர்வம் காட்டினர். என்றாலும் சில சூத்திரங்கள், குறிப்பாக உபாசனை காண்டத்திலுள்ள சில சூத்திரங்களும் எளிதில் திரித்துப் பொருள் கூற அவர்களால் இயலவில்லை.
 

மக்கள் பொதுவாக எண்ணுவதுபோல், ஞானத்திற்கும் பக்திக்கும் இடையே உண்மையில் அவ்வளவு வேறுபாடு இல்லை இறுதியில் அவை இணைந்து ஒரு மையத்தில் சந்திப்பதை இந்த நூலின் உள்ளே போகப் போக நாம் காணலாம். ராஜயோகத்தைப் பற்றிய உண்மையும் இதுதான் (துரதிர்ஷ்டவசமாக இன்று அது மந்திரவாதிகளிடமும் ரகசிய வித்தைக்காரர்களிடமும் ஏறத்தாழ சிக்கிக் கிடக்கிறது) பாமர மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கருவியாக அதைப் பயன்படுத்தாமல், முக்தியை அடைவதற்குரிய சாதனமாகப் பின்பற்றுவோமானால் அதே லட்சியத்திற்கு அது நம்மை இட்டுச் செல்லும்.
 

இறைவனை அடைவதற்குரிய நெறிகளில் பக்தி எளிமையானதும் மனித இயல்புக்கு ஏற்றதுமான நெறியாகும். இது பக்தி நெறியினால் வருகின்ற பெரியதொரு நன்மை. ஆனால் பக்தியின் ஆரம்ப காலங்களில், அதாவது கீழ்நிலைகளில், அது அருவருக்கத்தக்க கொள்கை வெறியாக மாறித் தாழ்ந்து போகிற ஆபத்தும் பலவேளைகளில் ஏற்பட்டுவிடுகிறது. இந்து மதத்திலுள் சரி, முகமதிய, கிறிஸ்தவ மதங்களிலும் சரி, அதில் காணப்படும் மத வெறியர்களின் கூட்டம், பக்தியின் கீழ்மட்ட நிலைகளில் இருப்பவர்களிலிருந்தே உருவாகியிருப்பதைக் காணலாம். தான் அன்பு செய்கின்ற ஒருவரிடம் ஒருமித்த பற்று (நிஷ்டை) இல்லாமல் தூய அன்பு வளர முடியாது. ஆனால் பல நேரங்களில் இந்தப் பற்றே மற்ற எல்லாவற்றையும் வெறுத் ஒதுக்குவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, எந்த நாட்டிலும் சரி, பலவீனமான, வளர்ச்சியுறாத மனிதர்களைப் பொறுத்தவரை, தங்கள் சொந்த லட்சியத்தை நேசிப்பதற்கான ஒரே வழி பிற லட்சியங்கள் அனைத்தையும் வெறுப்பதே. அதனால் தான், தான் வழிபடுகின்ற தெய்வத்திடம் பேரன்பும் பற்றும் கொண்டவன், தனது மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன், பிற மதத்தினரைக் கண்டாலோ கேட்டாலோ எதிர்க்கிறான். எஜமானனுடைய சொத்தைப் பிறர் கவர்ந்து விடாமல் காத்து நிற்கின்ற நாயின் பிறடிக் குணத்தைப் போன்றதே இத்தகைய வெறி, சொல்லப் போனால் நாயின் குணம் மனிதனின் பகுத்தறிவை விட மேலானது. ஏனெனில் எஜமான் எந்த வேடத்தில் வந்து நின்றாலும் நாய் அவனை அறிந்துகொள்ளும் அவனை அது பகைவன் என்று நினைப்பதில்லை. கொள்கை வெறியனோ எல்லா பகுத்தறிவையும் இழந்து விடுகிறான். தன் சொந்த எண்ணங்களிலேயே ஊறிப்போய் கண்மூடிக் கிடக்கும் இந்த வெறியன், ஒருவன் என்ன சொல்கிறான், அவன் சொல்வது நல்லதா கெட்டதா என்பது பற்றியே கவலைப்படுவதில்லை. சொல்பவன் யார் என்பதுதான் அவனது கவலையெல்லாம். தன் மதத்தினரிடம் இரக்கமுடையவனாக, நல்லவனாக, நேர்மையாளனாக அன்புடையவனாக இருக்கின்ற இவனே தனது மதக் கோட்பாடுகளுக்குப் புறம்பாக உள்ளவர்களிடம் கொடிய ஈனச் செயல்களைச் செய்வதற்கும் தயங்குவதில்லை.
 

இந்த அபாயம் ஆரம்ப நிலையில் உள்ள பக்தியில் தான் (கௌணீ பக்தி) உள்ளது. பக்தி கனிந்து உயரிய (பரா) பக்தியாக உருவெடுக்கும்போது மதவெறியால் ஏற்படும் பயங்கரச் செயல்கள்பற்றி பயம் கொள்ள வேண்டியதில்லை . பராபக்திக்கு வசப்பட்டிருக்கும் பக்தன் அன்பே வடிவமான இறைவனுக்கு மிகமிக அருகில் சென்று விடுவதால் வெறுப்பைப் பரப்புகின்ற ஒரு கருவியாக இருப்பதில்லை.
 

நல்ல பண்புகளை இயைபுடன் வளர்த்துக்கொள்ள நம் அனைவராலும் முடிவதில்லை. ஆனால் ஞானம், பக்தி, யோகம் என்ற மூன்றும் இயைபுடன் இணைவதே மிக உன்னதமான பண்பாடு என்பதும் நமக்குத் தெரியும் ஒரு பறவை பறப்பதற்கு மூன்று விஷயங்கள் தேவை: இரண்டு இறக்கைகள் மற்றும் வழி காட்டுகின்ற சுக்கான் போல் ஒரு வால், ஞானம் ஓர் இறக்கை, பக்தி மற்றோர் இறக்கை, சமநிலையைக் காக்கின்ற வால் யோகம், இந்த மூன்று வழிபாட்டு முறைகளை இயைபுடன் பின்பற்றிற இயலாமல் அதன் காரணமாக பக்தி ஒன்றையே தங்கள் நெறியாக மேற்கொள்பவர்கள் ஒன்றை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்; முன்னேறிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு உருவங்களும் சடங்குகளும் மிகவும் இன்றியமையாதவைதான் ஆனால் ஆழ்ந்த பக்தியை நாம் உணர்கின்ற நிலைக்கு அவை நம்மை இட்டுச் செல்லுமே தவிர, அதற்குமேல் அவற்றால் எந்தப் பயனும் இல்லை.
 

ஞான ஆச்சாரியர்களும், பக்தி ஆச்சாரியர்களும் பக்தியின் வலிமையை ஒப்புக்கொண்டாலும் அவர்களிடையே சிறிதளவு கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. முக்திக்கு பக்தி ஒரு கருவி மட்டுமே என்று ஞானிகள் நினைக்கிறார்கள். பக்தர்களோ, அதைக் கருவியாகவும் அதேவேளையில் முடிவிடமாகவும் கருதுகின்றனர். இந்த வேறுபாடு ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. உண்மை என்னவென்றால் பக்தி ஒரு கருவியாகப் பயன்படும்போது அது ஒரு கீழ்நிலை வழிபாடு. சற்று உயர்ந்த நிலையில் இதுவே உயர்நிலை வழிபாட்டிலிருந்து பிரித்தறிய முடியாத ஒன்றாகி விடுகிறது. பக்தி முதிரும்போது, பக்தன் தேடாவிட்டாலும் உண்மைஞானம் தானாகவே அவனிடம் வந்து சேர்கிறது. அதுபோல் நிறைஞானத்திலிருந்து உண்மை பக்தியையும் பிரிக்க முடியாது. இதனை மறந்துவிட்டு ஒவ்வொரு வரும் தத்தம் வழிபாட்டு முறையே சிறந்தது என்று வலியுறுத்துவதுபோல் தோன்றுகிறது.
 

இதை மனத்திற்கொண்டு வேதாந்த உரையாசிரியர்கள் இதுபற்றி என்ன சொல்கின்றனர் என்பதைக் காண்போம். ஆவ்ருத்திரஸக்ருத் உபதேசாத் என்ற பிரம்மசூத்திரத்தை விளக்குகையில் பகவான் சங்கரர் கூறுகிறார். இவன் அரசனிடம் பக்தி கொண்டுள்ளான், இவன் குருவிடம் பக்தி கொண்டுள்ளான் என்று மக்கள் கூறுகின்றனர். குருவையே புகலிடமாகக் கொண்டு அவரையே வழிபட்டு வருபவனைப்பற்றி இவ்விதம் கூறுகின்றனர். இங்கும் ஒருவிதமான ஆர்வத்தோடு கூடிய தொடர்ச்சியான நினைப்புத்தான் குறிக்கப்படுகிறது. சங்கரரின் கருத்துப்படி இதுவே பக்தி.
 

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா என்ற சூத்திரத்தின் உரையில் பகவான் ராமானுஜர் கூறுகிறார். ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படும் இடையீடற்ற எண்ணெய் ஒழுக்கைப் போன்று இடையீடின்றிச் (தியானிக்கப்படும் பொருளை)சிந்திப்பதே தியானம். இப்படி இடையீடின்றித் தொடர்ச்சியாக (இறைவனை) நினைக்க இயலும்போது தளைகள் எல்லாம் அறுபடுகின்றன. எனவேதான் இடையீடற்ற சிந்தனை, முக்திக்கு வழி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் இவ்வாறு இடையறாது நினைப்பது காண்பதற்கு நிகரானது. ஏனெனில் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான், இதைப் பின்வரும் பகுதியினால் அறியலாம்.
 

தூரத்திலும் அருகிலும் இருப்பவர் யாரோ அவரைக் கண்டுவிட்டால் இதயத்தளைகள் அறுபடுகின்றன, ஐயங்கள் அழிகின்றன, வினைப்பயன்கள் அடியோடு மறைகின்றன. அருகில் இருப்பவனைக் காணலாம். தொலைதூரத்தில் இருப்பவனை நினைக்கத்தான் முடியும். ஆனால் அருகிலும் தொலைவிலுமாக இருப்பவனைக் காண வேண்டும் என்றே கூறுகிறது சாஸ்திரம். எனவே மேற்கூறியதுபோல் நினைப்பது பார்ப்பதற்குச் சமமானது என்பதுதான் சாஸ்திரத்தின் முடிவு என்பது தெளிவு. நினைப்பது தீவிரமாகும்போது அது காண்பதாகவே ஆகிவிடுகிறது. இடையீடற்ற நினைப்புதான் வழிபாடு என்று சாஸ்திரங்களின் முக்கியப் பகுதிகளும் கூறுகின்றன. தொடர்ந்த வழிபாடே ஞானம். இந்த ஞானம் என்பது இடையீடற்ற நினைப்பு என்று விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நினைவு என்பது பிரத்தியட்சமாக ஒன்றைக் காண்பது என்ற நிலைக்கு உயர்ந்து விடுமானால், அது முக்திக்கு வழியாகிறது என்றும் சுருதிகள் முழங்குகின்றன. இந்த ஆன்மா பல்வேறு விஞ்ஞானங்களாலோ, கூர்த்த அறிவாலோ, வேதங்களைக் கரைத்துக் குடிப்பதாலோ அடையப்படுவது அல்ல. ஆன்மா யாரை விரும்புகிறதோ அவனாலேயே அது அடையப்படுகிறது. அவனுக்குத்தான் ஆன்மா தன்னை வெளிப்படுத்துகிறது வெறுமனே கேட்பதோ, சிந்திப்பதோ, தியானிப்பதோ ஆன்மாவை அடையும் வழிகள் அல்ல என்று கூறிய சுருதி மேலும் இந்த ஆன்மா யாதர விரும்புகிறதோ அவனாலேயே அடையப்படுகிறது. என்று கூறுகிறது. ஆழ்ந்த அன்பிற்குரிய பொருளே விரும்பப்படுகிறது. யார் இந்த ஆன்மாவை ஆழ்ந்து நேசிக்கிறானோ அவன் ஆன்மாவின் ஆழ்ந்த அன்பிற்கு உரியவன் ஆகிறான். தன் அன்பிற்குரிய அவன் ஆன்மாவை அடைய ஆண்டவனே அவனுக்கு உதவுகிறான். ஏனெனில் கீதையில் அவரே என்னிடம் நீங்காத பற்றுக் கொண்டவர்கள் என்னையே வந்தடையுமாறு அவர்களது புத்தியை நான் தூண்டுகிறேன் என்றல்லவா கூறுகிறார். நேரில் காண்பதற்கு ஒப்பான இந்த நினைப்பு அந்த நினைப்பின் பொருளுடைய ஆன்மாவின் நேசத்திற்கு உரியதாகையால் அதிக நேசத்திற்கு உரியதாக யாரிடம் இருக்கிறதோ, அவனையே பரமாத்மாவாகிய இறைவன் விரும்புகிறார். அவனாலேயே ஆன்மாவும் அடையப்படுகிறான் என்று அதனால்தான் கூறப்படுகிறது. இந்த இடையீடற்ற நினைப்பே பக்தி என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.
 

பதஞ்சலி முனிவருடைய ஈச்வர ப்ரணிதானாத்வா இறைவனை வழிபடுவதால் என்னும் யோக சூத்திர உரையில் போஜர் புலனின்பங்கள் முதலான எந்தப் பலன்களையும் நாடாமல் செய்யும் செயல்களை எல்லாம் குருவுக்கெல்லாம் குருவாக விளங்கும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்ற பக்தியே ப்ரணிதானம் என்று கூறுகிறார் பகவான் வியாசரும் இந்தச் சூத்திரத்தின் விளக்கத்தில் எந்த வகை பக்தியின் விளைவாக இறைவனின் கருணை யோகியின்மீது பொழிந்து அவன் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதுடன் ஆசியுள் வழங்குகிறதோ அதுவே ப்ரணிதானம் என்று கூறுகிறார். சாண்டியல்யர் ஆழ்ந்த இறையன்பே பக்தி என்கிறார்
 

ஆனால் பக்திக்கு மிகச் சிறந்த விளக்கம் பக்த சிகாமணியாகிய பிரகலாதனால் கூறப்பட்டுள்ளது
 

யா ப்ரீதிரவிவேகானாம் விஷயேஷ்வனபாயினீ
த்வாமனுஸ்மரத ஸாமே ஹ்ருதயான் மாபஸர்ப்பது
 

நிலையற்ற புலனின்பப் பொருட்கள்மீது பாமரர்கள் வைக்கின்ற அழிவில்லாத அதே அன்பு, உன்னைத் தியானம் செய்யும்போது என் மனத்தில் சிறிதும் வழுவாதிருக்குமாக!
 

அன்பு! யாருக்காக? மாபெரும் தலைவனாகிய இறைவனுக்காக, இறைவனைத் தவிர்த்துப் பிற பொருட்களின்மீது அவை எவ்வளவுதான் உயர்ந்தவையாக இருந்தாலும் நாம் வைக்கும் அன்பு பக்தியாக முடியாது. காரணம் ஒரு புராதன ஆச்சாரியாரின் கூற்றை மேற்கோள் காட்டி ராமானுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கூறுவது போல்
 

ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர்வ்யவஸ்திதா
ப்ராணின கர்மஜனித ஸம்ஸாரவர்த்தின யதஸ்ததோ
தே த்யானே த்யானினாமுபகாரகா அவித்யாந்தர்கதா
ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா
 

பிரம்மா முதல் புல் வரையில் உலகில் வாழும் எல்லாஙம வினைப்பயனால் வரும் பிறப்பு மற்றும் இறப்பின் அடிமைகளாக உள்ளன. அவை எல்லாமே அறியாமையில் அழல்பவை. மாறும் இயல்புடையவை. எனவே தியானிக்கப்படும் பொருட்களாக அவை நமக்குத் தியானத்தில் உதவு முடியாது.
 

சாண்டில்யர் பயன்படுத்திய அனுரக்தி என்ற சொல்லை விளக்கும்போது சுவப்னேசுவரர் தமது உரையில் கூறுகிறார் அனு என்றால் பின்னர் ரக்தி என்றால் பற்று. அதாவது இறைவனின் இயல்பையும் பெருமைகளையும் அறிந்த பிறகு அவரிடம் ஏற்படும் பற்று. இல்லாவிடில் மனைவிமக்களிடம் ஏற்படுகின்ற குருட்டுத்தனமான பற்று பக்தி என்றாகிவிடும். எனவே சாதாரண வழிபாட்டில் ஆரம்பித்து, ஆழ்ந்த உயரிய இறையன்பில் முடிவடைவதான இறையனுபூதிக்காக தொடர்ந்து மனத்தால் செய்யப்படும் இடைவிடாத முயற்சியே பக்தி என்பது தெளிவாகத் தெரிகிறது.


  

கடவுள் தத்துவம்

கடவுள் என்பவர் யார்? ஜன்மாத்யஸ்ய யத யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள், அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக ! ஈச்வர அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்
 

இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை. அப்படியானால் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்களா? தத்துவ ஞானியின் இதுவல்ல, இது வல்ல என்ற சச்சிதானந்தக் கடவுள் பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா? இல்லை சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்பு மூர்த்தியும், நிர்க்குணமும் சகுணமும் ஒருவரே, பக்தன் வழிபடும் சகுணக் கடவுள், பிரம்மத்திலிருந்து வேறானவரோ,. வேறுபாடு உள்ளவரோ அல்ல என்பதை நாம் உணர வேண்டும். எல்லாமே இரண்டற்ற ஒன்றேயான பிரம்மம்தான், ஒருமையாகவும் தனிமையாகவும் உள்ள பிரம்மம், மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரம்மத்தை குணங்களோடு கூடிய நிலையில் அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய இறைவனாகக் கொள்கிறான்.
 

இதை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம். களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு மூலப்பொளிலிருந்தோ எண்ணிலடங்காத விதவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன. களிமண்ணாகப் பார்க்கும்போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத்தோற்றத்தில் அவை பலவேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றாநிலையில் மண்ணில் இருக்கவே செய்தன. மூலப் பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரே தன்மை உடையவை. ஆனால் வடிவம் பெற்ற பின்னர், அந்த வடிவம் நிலைத்து வெவ்வேறானவை. களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது. காரணம், களிமண்ணோடு களிமண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றதான். அதுபோன்றே, அறுதி உண்மையான பிரம்மத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடு இறைவன், இன்னும் தெளிவாகச் சொல்வதானால், பிரம்மத்தைப்பற்றி மனித மனத்தினால் உணரமுடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன். படைப்பு அனாதி காலந்தொட்டு என்றும் இருந்து வருவது, இறைவனும் அப்படியே
 

மோட்சத்தை அடைந்த பிறகு, முக்த ஆன்மா பெறுகின்ற ஏறக்குறைய எல்லையற்ற ஆற்றலையும் அறிவையும் பிரம்ம சூத்திரம் நான்காம் அத்தியாயத்தில், நான்காம் பாதத்தில் வியாச பகவான் குறிப்பிடுகிறார். ஆனால் பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கான ஆற்றலை வேறு யாரும் பெற முடியாது. அது இறைவனுக்கே உரியது என்று தொடர்கின்ற மற்றொரு சூத்திரத்தில் கூறுகிறார். துவைத உரையாசிரியர்கள். சார்ந்தே விளங்கும் இயல்புடைய ஜீவன், தனித்தலைமையுடைய இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும், முழுச் சுதந்திரத்தையும் ஒருபோதும் பெற இயலாது. என்று பொருள் கூறி இந்தச் சூத்திரத்தை வெகு எளிதாக விளக்கி விடுகிறார்கள். தீவிர துவைத உரையாசிரியரான மத்வாச்சாரியர். தமக்கே உரிய தொகுத்துக்கூறும் பாணியில் வராஹ புராணத்தில் வரும் ஒரு பாடலை மேற்கோள் காட்டி இந்தச் சூத்திரத்தை விளக்கிச் சொல்கிறார்.
 

இந்தச் சூத்திரத்தின் உரையில் ராமானுஜர் எழுதுகிறார். இங்கு ஓர் ஐயம் எழுப்பப்படுகிறது. முக்தி நெற்ற ஜீவன்கள் பல்வேறு ஆற்றல்களைப் பெறுகின்றன. இறைவனுக்கே உரிய பிரபஞ்சப் படைப்பு முதலான சிறப்புச் சக்தியும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே அதிபதியாக இருப்பதும் இவற்றுள் அடங்குமா? அல்லது அவை எதுவுமின்றி, முக்தி பெற்றவர்களின் பெருமையெல்லாம் அந்தப் பரம்பொருளை நேராகக் காண்பதுடன் நின்றுவிடுமா?
 

இங்கு ஓர் ஐயம் எழுப்பப்படுகிறது: முக்தி பெற்ற ஜீவன்கள் பல்வேறு ஆற்றல்களைப் பெறுகின்றன. இறைவனுக்கே உரிய பிரபஞ்சப் படைப்பு முதலான சிறப்புச் சக்தியும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே அதிபதியாக இருப்பதும் இவற்றுள் அடங்குமா? அல்லது அவை எதுவுமின்றி, முக்தி பெற்றவர்களின் பெருமையெல்லாம் அந்தப் பரம்பொருளை நேராகக் காண்பதுடன் நின்றுவிடுமா?
 

இதைத் தொடர்ந்து பின்வரும் வாதத்தை நாம் காண்கிறோம். முக்தி பெற்றவன் அனைத்து உலகங்களையும் இயக்கியாளும் தலைமையை எய்துகிறான் என்பது அறிவுபூர்வமானதே. ஏனெனில் சாஸ்திரங்களும், பரம்பொருளின் மேலான அதே நிலையை அவனும் அடைகிறான். அவனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. இனி, மேலான அதே நிலையை அடைவதும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவதும் பரம்பொருளின் தனிப் பேராற்றல் அதாவது பிரபஞ்சத்தை ஆளும் ஆற்றல் இன்றி நடைபெற முடியாது. எனவே முக்தி பெற்றவனின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. அவன் மேலான நிலையில் இறைவனோடு ஒன்றியிருக்கிறான் என்னும்போது, உலகங்களை இயக்கியாளும் ஆற்றலையும் பெறுகிறான் என்பதை ஏற்றுக்கொண்டுதானே தீர வேண்டும்!
 

இதற்கு நாம் தரும் பதில் இதுதான் முக்தி பெற்றவன் பிரபஞ்சத்தை ஆளும் தனித்தலைமை தவிர பிற எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். உலகை ஆள்வது என்பது உயிருள்ளவை, உயிரற்றவை ஆகியவற்றின் உடல், வாழ்க்கை, விருப்பங்கள் அனைத்தையும் வழிநடத்துவதைக் குறிப்பதாகும். முக்தி பெற்றவர்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவர்களின் ஆன்ம சொரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகள் அகன்றுவிடுவதால், பிரம்மத்தின் தடையற்ற காட்சியில் எப்போதும் ஆழ்ந்து மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். பின்வரும் சாஸ்திர மேற்கோளால் இது நிரூபிக்கப்படுகிறது யாரிடமிருந்து இந்த அனைத்துப் பொருட்களும் தோன்றியுள்ளனவோ, பிறந்தவை அனைத்தும் யாரால் வாழ்கின்றனவோ, இறந்தபின் அனைத்தும் யாரிடம் ஒடுங்குகின்றனவோ அவரே பிரம்மம்
 

உலகை ஆளும் ஆற்றல் முக்தி அடைந்தவர்களுக்கும் பொதுவானது என்றால், மேலே குறிப்பிட்ட மேற்கோள் பிரம்மத்திற்கான விளக்கம் என்பது இங்கு பொருந்தாமல் போகிறது. ஏனெனில் இந்த விளக்கம், அவர்மூலமாக மட்டுமே இந்தப் பிரபஞ்சம் நடைபெறுகிறது என்று கூறுகிறது. பிற எதற்கும் இல்லாத சிறப்புப் பண்புகளைக் கொண்டுதான் ஒரு பொருளைச் சரியாக விவரிக்க முடியும். பின்வரும் சாஸ்திரப் பகுதிகளில் பிரம்மத்தைப் பற்றிய பகுதியையும் பார்ப்போம்.
 

என் அருமை மாணவனே! ஆரம்பத்தில் இரண்டற்ற ஒரே பொருள்தான் தன்னந்தனியாக இருந்தது. அது சிந்தித்தது. பின்னர் பலவற்றைத் தோற்றுவிப்பேன். என்றது அதிலிருந்து சூடு உண்டாயிற்று.
 

உண்மையில் பிரம்மம் ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. அது பரிணமித்தது. அது க்ஷத்திரம் என்ற புண்ணிய வடிவினைத் தோற்றுவித்தது. வருணன், சோமன், ருத்திரன், பர்ஜன்யன், எமன், மிருத்யு, ஈசானன் முதலான தேவர்கள் க்ஷத்திரங்களே.
 

உண்மையில் ஆன்மா ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. வேறு எதுவும் இயங்கவில்லை. ஆன்மா உலகைப் படைக்க எண்ணம் கொண்டது, பிறகு உலகைத் தோற்றுவித்தது.
 

நாராயணன் மட்டுமே இருந்தார். பிரம்மனோ, ஈசானனோ, தியாவா, பிருதிவியோ, நட்சத்திரங்களோ, நீரோ, நெருப்போ, சந்திரனோ, சூரியனோ யாருமே அப்போது இல்லை. தன்னந் தனியாக இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. எனவே தியானத்தில் ஆழ்ந்தார். அதற்குப் பிறகு ஒரு மகளையும் பத்து அங்கங்களையும் இன்னும் பலவற்றையும் உருவாக்கியனார்.
 

இன்னும் வேறு நூல்களில் பரம்பொருளைப் பற்றிப் பேசும்போது, பூமியில் வாழ்ந்து வந்தாலும் அது பூமியிலிருந்து வேறுபட்டது. அது ஆன்மாவில் வாழ்ந்து என்றெல்லாம் உலகை ஆளும் அதன் செயலைக் கூறுகின்றன. இந்த விளக்கங்களில் எல்லாம் பிரபஞ்சத்தின்மீது இறைவனின் தனித்தன்மை பேசப் படுகிறதே தவிர, முக்தி பெற்ற ஆன்மாவைப் பற்றிய குறிப்போ அல்லது உலகத் தலைமை அதற்குக் கொடுக்கப்பட்டதாகவோ எந்தச் செய்தியும் இல்லை.
 

அடுத்த சூத்திரத்தை விளக்கும்போது ராமானுஜர் கூறுகிறார். அப்படியல்ல இந்தக் கருத்தை நேரடியாக மறுக்கும் பல பகுதிகள் வேதங்களில் கணாப்படுகின்றனவே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்தப் பகுதிகள் தேவர்களின் உலகில் வாழ்பவர்களான முக்த புருஷர்களின் மகிமையைத்தான் சுட்டிக்காட்டுகின்றன இதுவும் பிரச்சினைக்கு எளிதான் தீர்வாகத்தான் உள்ளது.
 

ராமானுஜரின் கோட்பாடு, முழுமையின் ஒருமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த முழுமைக்குள் நிலையான வேறுபாடுகள் உள்ளன என்பது அவரது கருத்து. ஆகவே இந்த வேதாந்தம் நடைமுறையில் துவைதமாகவே இருப்பதால் முக்தியடைந்த ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ராமானுஜர் மிகத் தெளிவாக, எளிதாக விளக்கி விடுகிறார்.
 

இனி, அத்வைத நெறியின் மாபெரும் பிரதிநிதி இதுபற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். துவைதிகளின் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் அத்வைதம் அப்படியே முழுமையாக ஏற்கிறது. அதே வேளையில் மனித இனத்தின் மிகவுயர்ந்த தெய்வீக லட்சியத்தைக் கருத்திற்கொண்டு இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் தருகிறது.
 

முக்தி பெற்ற பிறகும் தங்கள் ஜீவாத்ம உணர்வை இழந்து விடாமல் தனித்து வேறாக இருக்க விரும்புபவர்கள், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள எல்லா வாய்ப்புகளையும் பெறுவதோடு, குணங்களோடு கூடிய பிரம்மத்தின் பேரருளையும், பேரானந்தத்தையும் அனுபவிக்கின்றனர். இத்தகையோரைப் பற்றித்தான் பாகவத புராணம் பேசுகிறது. மன்னா! தங்கள் பிணைப்புக்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, ஆத்மானந்தத்தில் மூழ்கியிருக்கின்ற ரிஷிகள்கூட எங்கும் நிறைந்திருக்கும் இறைவனிடம் அன்புக்காகவே அன்பு செலுத்துகிறார்கள். இறைவனின் பெருமை அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது.
 

சாங்கியர்கள் இத்தகையோரை இன்னொரு விதமாகப் போற்றுகிறார்கள். இவர்கள் ஒரு கல்பத்தில் பிரகிருதியோடு ஒன்றாகியிருக்கின்றனர். அடுத்த கல்பத்தில் இவர்கள் உலகத்தை ஆள்பவர்களாக வரக்கூடும். ஆயினும் இவர்கள் யாரும் இறைவனுக்கு நிகராக மாட்டார்கள்.
 

அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு பெருநிலையை அத்வைதம் கூறுகிறது. அந்த நிலையில் படைப்பு, படைக்கப்படும் பொருள், படைப்பவர் என்று எதுவும் இல்லை. காண்பவன், காணப்படும் பொருள், காட்சி என்றில்லை. நான், நீ, அவன் என்பவை இல்லை. செய்பவன், செய்யப்படும் பொருள் , தொடர்பு எதுவும் இல்லை. அங்கே யார் யாரைக் காண்பது? இத்தகைய பெருநிலையை அடைந்தவர்கள் எல்லாவற்றையும் கடந்துவிடுகின்றனர். வாக்கும் மனமும் போக முடியாத நிலையை அடைகின்றனர். இதுவல்ல, இதுவல்ல என்று வேதங்கள் கூறுகின்ற இடத்தை எட்டிவிடுகின்றனர். இந்தப் பெருநிலையை அடையாதவர்களுக்கும், அடைய இயலாதவர்களுக்கும், பிரகிருதி, ஆன்மா, இந்த இரண்டையும் காப்பவனும் அவையிரண்டினுள் ஊடுருவியிருப்பவனும் ஆகிய இறைவன் இந்த மூன்றின் பிரிக்கவொண்ணா பிணைப்பாகிய பிரம்மத்தின் காட்சி கட்டாயமாகக் கிடைக்கிறது.
 

எனவேதான் பிரகலாதன் தன்னை மறந்தபோது உலகையோ, அதன் மூலகாரணத்தையோ காணவில்லை. அவன் கண்டதெல்லாம் பெயரும் உருவமுமற்ற, பிரிக்க முடியாத, எல்லையற்றதான ஒன்றைத்தான், ஆனால், தான் பிரகலாதன் என்ற நினைவு எழுந்தபோது அவன் கண்முன் உலகம் விரிந்து, கூடவே உலகின் தலைவனான அனந்த கல்யாண குணங்களின் இருப்பிடமான இறைவனும் தோன்றினார்.
 

பேறு பெற்றவர்களான கோபியரின் நிலையும் இதுவே. தாங்கள் இன்னார் என்பதையும், தங்கள் தனித்தன்மையையும் இழந்த நிலையில் அவர்கள் அனைவரும் கிருஷ்ணர்களாகவே மாறிவிட்டார்கள். கிருஷ்ணன் தங்கள் வழிபடுதெய்வம் என்ற எண்ணம் எழுந்தவுடன் மீண்டும் கோபியர்களானார்கள். உடனே அவர்கள் முன்
 தாஸாமாவிரபூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ
பீதாம்பரதர ஸ்ரக்வீ ஸாக்ஷõன் மன்மத மன்மத
 

தாமரை போன்ற முகத்தில் புன்னகை அரும்ப, பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மலர் மாலைகள் சூடி, அழகில் காதற் கடவுளான மன்மதனுக்கும் ஒரு மன்மதனாக ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார். இப்போது நாம் ஆசாரிய சங்கரரிடம் திரும்புவோம் அவர் கூறுகிறார்- சகுண பிரம்மத்தை வழிபடுவதன் மூலம் தனிமுதல் தலைவனாகிய இறைவனுடன் இணைகின்றனர். அதேவேளையில் தங்கள் சொந்த மனத்தையும் தக்க வைத்துக் கொள்கின்றனர்,. இவர்களின் பெருமை எல்லைக்கு உட்பட்டதா, எல்லையற்றதா? இந்தச் சந்தேகத்திற்கு விடையாக ஒரு வாதம் வருகிறது. அவர்களுடைய பெருமை எல்லையற்றதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் சாஸ்திரங்கள் தங்களுக்குரிய அரசை அவர்கள் பெறுகிறார்கள். எல்லா தேவதைகளும் அவர்களை வழிபடுகின்றனர். எல்லா உலகங்களிலும் அவர்களின் ஆசைகள் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. இதற்கு, விடைபோல் வியாசர் உலகை ஆளும் ஆற்றலைத் தவிர என்று எழுதுகிறார்.
 

படைத்தல் முதலிய சக்திகளைத் தவிர பிற அணிமா முதலிய எல்லா ஆற்றல்களையும் முக்தர்கள் பெறுகிறார்கள். உலகை இயக்கியாளும் தனித்தலைமை, என்றும் பரிபூரணனான இறைவனுக்கே எப்போதும் உரியது ஏன்? ஏனெனில் படைப்பைப் பற்றி விளக்கும் இடங்களில் எல்லா சாஸ்திரங்களும் இறைவனையே பொருளாகக் கொண்டு பேசுகின்றன. முக்த புருஷர்களைப் பற்றிய பேச்சே இல்லை. உலகை ஆளும் தனித்தலைமை பரம்பொருள் ஒருவருக்கே உரியது. படைப்பைப்பற்றிக் கூறும் நூல்களும் பரம்பொருளையே சுட்டுகின்றன. என்றும் பரிபூரணன் என்னும் அடைமொழியும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறைவனை வழிபட்டதன் விளைவாகவே, பரம்பொருளைத் தேடியதவ் பலனாகவே அணிமா முதலான சக்திகள் முக்தர்களுக்குக் கிடைத்துள்ளன என்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே முக்த ஜீவர்களுக்கு உலகை ஆளும் தனித் தலைமையில் இடமில்லை என்பது தெளிவாகிறது.
 

அதுமட்டுமின்றி, முக்த ஜீவர்கள் மனத்தைத் தங்களிடமே நிறுத்திக் கொள்வதால் அவர்களது எண்ணங்கள் மாற வாய்ப்பு உள்ளது. ஒருவர் படைக்க விரும்பினால் இன்னொருவர் அழிவை விரும்பக்கூடும். ஆகவே இத்தகைய விபரீதங்கள் நிகழாமலிருக்க, எல்லா எண்ணங்களும் ஒரு மகா எண்ணத்திற்கு அடக்கம் என்று கொள்வதே பொருத்தமானது. எனவே முக்த ஜீவர்கள் பரம்பொருளுக்கு அடங்கியவர்களே என்பதை நாம் முடிந்த முடிவாகக் கொள்ளலாம்.
  

அதனால் பிரம்மத்தின் சகுண வடிவத்திடமே நாம் பக்திகொள்ள முடியும் க்லேசோ அதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம் நிர்க்குண பிரம்மத்திடம் மனத்தைப் பதிய வைக்கும் பாதையில் செல்வது மிகக் கடினமானது. ஆகையால் பக்தி நமது இயல்பிற்கு ஏற்ப இயைந்து இதமாகச் செல்ல வேண்டும். மனிதவுணர்வு கலவாத பிரம்மத்தைப் பற்றிய கருத்தை நாம் கொள்வது சாத்தியமில்லை என்பது உண்மைதான். சிந்தித்தப் பார்த்தால் நாம் அறிகின்ற அனைத்தைப் பொறுத்த வரையிலும்கூட இது உண்மையே அல்லவா! அகத்திலும் புறத்திலும் நாம் பெறுகின்ற அனுபவங்கள் மற்றும் நமது கருத்துக்கள் இவற்றை நமக்குத் தருகின்ற பொருட்கள் எல்லாம் மனிதவுணர்வு கலந்ததாகவே இருக்கும், என்ற கருத்தை, உலகம் இதுவரை கண்டவர்களுள் மகத்தான மனஇயல் ஞானியான கபிலர் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுவியிருக்கிறார். மனித உடல் முதல் இறைவன் வரையிலும் நாம் அனுபவிக்கின்ற ஒவ்வொரு பொருளும் மனிதவுணர்வும் இன்னொன்றும் சேர்ந்ததே அந்த இன்னொன்று எதுவாக இருந்தாலும் சரி, இந்தத் தவிர்க்க முடியாத கலவையைத்தான் நாம் உண்மைப் பொருள் என்று பொதுவாகக் கூறுகிறோம். அது உண்மைதான். மனிதன் தன் மணத்தினால் அறியக் கூடிய பொருட்களின் உண்மை என்பது இப்படித்தான் என்றென்றும் இருக்கவும் செய்யும். எனவே இறைவன் மனிதவுணர்வு கலந்தவன் என்பதால் அவன் இல்லை என்பது வடிகட்டின முட்டாள்தனம்.
 

உண்மை என்ற சொல்லிற்குப் பொருள் காண்பதில் எழுந்த கருத்து வேறுபாட்டினால், மேலை நாட்டில் லட்சியவாதிகளும் பிரத்தியட்ச வாதிகளும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்,. முட்டாள் தனமான இந்தக் கருத்தும் வாய்ச்சொல் வீரம் போன்றதே. உண்மை என்னும் சொல் இதுவரை எதையெல்லாம் குறிப்பிட்டு வந்துள்ளதோ, எதையெல்லாம் பொருளாகக் கொண்டதோ அவை அத்தனையையும் தழுவி நிற்பது இறைவன் பற்றிய கருத்தாகும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு இறைவனும் உண்மை. பார்க்கப் போனால் உண்மை என்ற சொல் இப்பொழுது கூறப்பட்ட கருத்தைத் தவிர அதிகமாக வேறு எதையும் குறிக்கவில்லை. இறைவன் என்பதற்கு நமது தத்துவ விளக்கம் இதுவே.
   

ஆன்மீக அனுபூதியே பக்தியோகத்தின் குறிக்கோள்

இந்த வறட்டு விளக்கங்கள் எல்லாம் ஒரு பக்தனுக்கு மனத் திடத்தை உறுதிப்படுத்தத் தேவைப்படுகின்றனவே. தவிர அதற்கு மேல் அவற்றால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் அவன் செல்கின்ற பாதை அவனை தெளிவற்றதும் கொந்தளிப்பு மிக்கதுமான ஆராய்ச்சிடீ நிலைகளைக் கடக்கச் செய்து, வெகுவிரைவில் ஆன்மீக அனுபூதி பெறும் நிலைக்கு உயர்த்தத் தகுதி வாய்ந்ததாக உள்ளது. இறைவனின் திருவருளால் அவன் அந்த உன்னத நிலையை விரைவில் அடைகிறான். அங்கே செருக்குமிக்க, வலுவிழந்த ஆராய்ச்சிக்கு இடமில்லை. வெற்று அறிவின் துணையுடன் இருளில் உழன்று கொண்டிருக்கும் அலைச்சல்கள் இல்லை. அங்கே நேரடி அனுபூதியாகிய ஒளியை அவன் தரிசிக்கிறான். அதற்குப் பிறகு, அவன் ஆராய்வதும் நம்புவதும் நின்றுவிடுகிறது. அவன் ஏறக்குறைய அனுபவிக்கவே செய்கிறான். அவன் விவாதிப்பதில்லை. உணர்கிறான். இறைவனைக் காண்பதும், உணர்வதும், இறையின்பத்தை அனுபவிப்பதும் மற்ற அனைத்தையும்விட உயர்ந்தது அல்லவா! ஏன் இது முக்தியைவிட உயர்ந்தது என்று கொள்ளும் பக்தர்கள்கூட உள்ளனர். நாம் அடையக்கூடிய மிகப் பெரும் பயன் இதைவிட வேறு ஏதாவது இருக்க முடியுமா?
 

இதற்கு மாறாக, உலகில் சிலர் இருக்கிறார்கள் ஏன், நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குச் சுகபோகங்களைத் தருபவையே பயனுடையவை என்று உறுதியாக நம்புகிறார்கள். மதமோ, கடவுளோ, நிலைத்த தன்மையோ, ஆன்மாவோ, எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் அவை அவனுக்கப் பணமோ, வாழ்க்கை வசதிகளோ தரவில்லை அல்லவா? புலன்களுக்கு இன்பம் தராத, ஆசைகளைப் பூர்த்தி செய்யாத எதுவும் அவர்களைப் பொறுத்தவரை பயனற்றவை. வாழ்க்கைக்குப் பயன்படுவது எதுவென்பதை ஒவ்வொருவரும் தங்கள் சுய தேவையை வைத்தே அளவிடுகிறார்கள். வயிறு புடைக்கத் தின்பது, குடிப்பது, இனப்பெருக்கம் செய்வது, பிறகு செத்து மடிவது-இவற்றிற்கு மேல் உயர முடியாதவர்களுக்கு, பயன் என்பதே புலனின்பங்களில் மட்டும்தான். அதைவிட உயர்ந்த ஏதேனும் ஒன்றின் தேவையைக் கடுகளவாவது இவர்கள் உணர வேண்டுமானால் கூட காலங்காலமாகக் காத்திருக்க வேண்டும். எத்தனையோ பிறவிகள். எத்தனையோ மறுபிறவிகள் இவர்களுக்குத் தேவைப்படும்.
 

இதற்கு மாறாக, கணப்பொழுதில் மறைந்தொழியும் இந்த உலக வாழ்கையைவிட, அழிவற்ற ஆன்மாவில் நாட்டம் கொள்வது எவ்வளவோ உயர்ந்தது என்பதை அறிந்தவர்களுக்கு, புலனின்பங்கள் அர்த்தமற்றவையாக, சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளாகத் தெரிபவர்களக்கு கடவுளும் அவரிடம் பக்தி செய்வதும்தான் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த பயனாக, ஒரே பயனாக உள்ளது. நல்ல வேளையாக இத்தகைய ஒருசிலர், உலகியல் தாண்டவமாடுகின்ற இந்த உலகில் இன்னும் இருக்கத் தான் செய்கின்றனர்.
 

பக்தியோகம், நாம் ஏற்கனவே கூறியதுபோல், தொடக்க நிலையான கவுணி பக்தி என்றும், உயர்ந்த நிலையான பராபக்தி என்றும் இருவகைப்படும். நாம்முன்னேறிச் செல்ல, பக்தியின் ஆரம்ப காலங்களில் நமக்குப் புற உதவிகள் மிகவும் இன்றியமையாதவை இது ஏன் என்பதைப் போகப்போக நாம் பார்க்கலாம். எல்லா மதங்களிலும் காணப்படுகின்ற புராணக் கதைகளும், சின்னங்களைப் பயன்படுத்துவதும் இயல்பான வளர்ச்சியே ஆகும். இவை ஆன்ம தாகம் கொண்டவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு பாதுகாப்பாக அமைந்து அவர்களை இறைநெறியில் செலுத்துகின்றன. பேரளவிற்குப் புராணக் கதைகளும் சடங்குகளும் செழித்து வளர்ந்துள்ள மதங்களில்தான் ஆன்மீகச் செம்மல்கள் தோன்றியுள்ளனர் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

  கொள்கைவெறி பிடித்த வறண்ட மதங்கள், எதுவெல்லாம் இன்ப ஊற்றாகத் திகழும் கவிதைச் சிறப்புடையதோ, கவின் மிக்கதோ நுண்மை வாய்ந்ததோ அதையெல்லாம் அடியோடு துடைத்து விடுகின்றன. இறைநெறியில் தளர்நடையிட்டுச் செல்லும் குழந்தை மனத்திற்கு உறுதிமிக்கப் பிடிப்பாக, ஊன்றுகோலாக இருக்கின்ற அனைத்தையும் இந்த மதங்கள் அழித்துவிடுகின்றன. ஆன்மீக மாளிகையின் கூரையைத் தாங்கி நிற்கும் தூண்களையே உடைத்தெறிய முயல்கின்றன. அறியாமை மிக்கதும் மூட நம்பிக்கைகளைக் கொண்டதுமான இந்த நெறிகள், ஆன்மீகம் எனப்படும் செடிக்கு உயிரூட்டுவது எதுவோ, வளர்வதற்குத் தேவைப்படும் உரங்களாக இருப்பவை எவையோ அவற்றையெல்லாம் அடியோடு எறிந்துவிடுகின்றன. இந்த மதங்களில் கடைசியாக மிஞ்சுவதெல்லாம் வெற்றுச் சொல்ஜாலங்களாலும் ஆரவாரத்தாலும் கட்டப்பட்ட வெறும் கூடு மட்டுமே. சமுதாயக் குப்பைகளை அகற்றுதல் என்ற சிறு மணமோ, சீர்திருத்தம் என்று கூறுகிறார்களே, அதன் வேகம் சிறிதோ ஒருவேளை அதில் இருக்கலாம், அவ்வளவுதான்.
 

இப்படிப்பட்ட மதத்தைப் பின்பற்றுவோர் அறிந்தோ அறியாமலோ உலகியல் மூழ்கியவர்களாகவே உள்ளனர். இம்மையிலும் மறுமையிலும் இவர்களின் நோக்கம், எண்ணம் எல்லாம் வெறும் இன்ப நுகர்ச்சியே. இதுவே அவர்களின் வாழ்க்கையாக, வாழ்க்கையின் முதலும் முடிவுமாக இருக்கிறது. இதுவே இவர்களுக்கு இஷ்டா பூர்த்தம் இவர்கள் கருத்துப்படி தெருவைப் பெருக்குவது, தோட்டிவேலை செய்வது என்று மனிதனின் சொந்த சுகத்திற்காக வேலை செய்வதே வாழ்க்கையின் எல்லாம் என்றாகிறது. அறியாமையும் வெறித்தனமும் இணைந்த இந்த வினோதக் கலவையைப் பின்பற்றுபவர்கள் தங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்திக் கொண்டு இதுவே இவர்களுக்கு ஏற்றதும்கூட நாத்திகர்களுடனும் விஷயப்பற்று மிக்கவர்களுடனும் எவ்வளவு விரைவில் சேர்ந்து கொள்வார்களோ, அவ்வளவிற்கு உலகத்திற்கு நன்மை உண்டாகும்.
 

வண்டிவண்டியாக வீண்பேச்சுக்களைப் பேசுவதை விட, முறையற்ற பாவனைகளை வளர்த்துக் கொள்வதை விட எள்ளளவு அறநெறியையும் ஆன்மீக சாதனையையும் மேற்கொள்வது எவ்வளவோ மேலானது. அறியாமை, கொள்கைவெறி என்னும் குப்பையிலிருந்து ஆன்மீக மேதை ஒருவராவது, ஒரே ஒருவராவது தோன்றியிருக்கிறாரா? காட்டுங்கள் பார்க்கலாம்! காட்ட முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் இதயக் கதவுகளை நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். உண்மையின் ஒளிக் கிரணங்கள் உள்ளே நுழையட்டும். தாங்கள் அனுபவித்த மாமேதைகளான ரிஷிகளின் காலடிகளில் குழந்தைகள்போல் அமர்வோம். அவர்கள் கூறுவதைக் கருத்துடன் கேட்போம்!

 
 


Site Content

Additional Information

  

ராஜ யோகம் சொற்பொழிவுகள்

…

முன்னுரை

…

நமது அறிவு எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனுமான அறிவிற்கும் அனுபவமே அடிப்படை. அனுமான அறிவில், நாம் சாதாரண அறிவிலிருந்து பொது அறிவிற்கோ பொது அறிவிலிருந்து விசேஷ அறிவிற்கோ செல்கிறோம். நிச்சய விஞ்ஞானம் என்று அழைக்கப்படுபவற்றுள் உள்ள உண்மையை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். ஏனெனில் அது ஒவ்வொருவருடைய தனி அனுபங்களை ஒத்திருக்கிறது. தான் கூறும் எதையும் நம்புமாறு விஞ்ஞானி சொல்வதில்லை. அவன் தனது சொந்த அனுபவங்களிலிருந்து சில முடிவுகளைக் கண்டறிந்துள்ளான். ஆராய்ந்த பின்னரே அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு அவன் கூறுகிறான். அவனது முடிவுகள் உலகம் முழுவதிலுள்ள மனித அனுபவங்களுடன் ஒத்திருக்கின்றன. நிச்சய விஞ்ஞானம் ஒவ்வொன்றிலும் மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான அடிப்படை ஒன்ற உள்ளது. எனவே அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் சரியா தவறா என்பதை நாம் உடனடியாகக் காண முடியும். மதத்திற்கு இத்தகைய ஓர் அடிப்படை உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி. அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் நான் விடை தர வேண்டியுள்ளது.
 

உலகம் முழுவதும் பொதுவாக உபதேசிக்கப்பட்டு வருவதான் மதம் என்பதன் அடிப்படை நம்பிக்கை, முழு நம்பிக்கை என்று கூறப்படுகிறது. பல மதங்கள் வெறும் பல்வேறு கொள்கைளை மட்டுமே கொண்டவையாக உள்ளன. அதனால்தான் மதங்களுக்கிடையே பூசலை நாம் காண்கிறோம். இந்தக் கொள்கைகளும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையே. மேகங்களுக்கு மேலே அமர்ந்து பிரபஞ்சம் முழுவதையும் ஆள்கின்ற ஒரு மாபெரும் தெய்வம் இருப்பதாக ஒருவர் கூறுகிறார். தாம் கூறுவதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, நானும் அதை நம்ப வேண்டும் என்று என்னிடம் சொல்கிறார். எனக்கும் அதுபோலவே சொந்தக் கருத்துக்கள் இருக்கலாம். அவற்றை நம்புமாறு மற்றவர்களைக் நானும் கூறலாம். அதற்கு யாராவது காரணம் கேட்டால் எந்தக் காரணத்தையும் என்னால் கொடுக்க முடியாது. இதனால்தான் தற்காலத்தில் மதமும் தத்துவ ஞானமும் கெட்ட பெயரைச் சம்பாதித்து வருகின்றன. ஓ இந்த மதங்களில் வெறும் கொள்கைகள் மட்டுமே மூட்டைமூட்டையாக உள்ளன இவற்றை நிர்ணயிக்க ஓர் அளவுகோலும் இல்லை. ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த கருத்துக்களைப் பரப்புகிறார்கள். என்றே பிடித்தவர்கள் கூறுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் மதத்திலுள்ள உலகம்தழுவிய நம்பிக்கைக்கு ஓர் அடிப்படை உள்ளது. அந்த அடிப்படையே, வெவ்வேறு கொள்கைகளையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் வேறுபட்ட கருத்துக்களையும் கட்டுப்படுத்துகிறது. அவற்றை அலசிப் பார்த்தால், அவை உலகம்தழுவிய அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதாக் காணலாம்.
 

உலகிலுள்ள பல்வேறு மதங்களை ஆராய்ந்தால் அவை சாஸ்திரங்கள் உடையவை. சாஸ்திரங்கள் இல்லாதவை என்று இருவகைப்படும். சாஸ்திரங்கள் உடையவை வலிமை மிக்கவை. அவற்றைப் பலர் பின்பற்றவும் செய்கின்றனர். சாஸ்திரங்கள் இல்லாதவை அனேகமாக மறைந்துவிட்டன. புதிதாகத் தோன்றிய ஏதோ சில மதங்களைச் சிலர்தான் பின்பற்றுகின்றனர். ஆனாலும் அவை அனைத்திலும் ஒரு விஷயத்தில் கருத்து ஒற்றுமையைக் காணலாம்; தாங்கள் போதிக்கும் உண்மைகள், குறிப்பிட்ட மனிதர்களின் அனுபவங்களின் விளைவுகள் என்று அவை எல்லாமே கூறுகின்றன. கிறிஸ்தவ மதத்தை எடுத்துக்கொண்டால், கிறிஸ்துவிடமும், கிறிஸ்து கடவுளின் அவதாரம் என்பதிலும், கடவுளிடமும், ஆன்மாவிலும் ஆன்மாவிற்கு இதைவிடச் சிறந்த நிலை உண்டு என்பதிலும் நம்பிக்கை கொள்ளுமாறு கிறிஸ்தவர்கள் உங்களிடம் கூறுகின்றனர். அதற்கான காரணம் கூறுமாறு அவரிடம் கேட்டால், தாங்கள் அவற்றை நம்புவதாகச் சொல்கின்றனர். ஆனால் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை அமைப்பை ஆராய்ந்தால், அது அனுபவத்தின்மீதே அமைந்துள்ளதைக் காண்போம். தாம் கடவுளைக் கண்டதாக ஏசு கூறினார். அவரது சீடர்களோ தாங்கள் கடவுளை உணர்ந்ததாகக் கூறினர். இவ்வாறே ஒவ்வொருவரின் அனுபவங்களும் உள்ளன. இதுபோல் பவுத்த மதத்தில் புத்தரின் அனுபவம் ஆதாரமாக உள்ளது. புத்தர் சில உண்மைகளை அனுபவித்தார். அவற்றைக் கண்டார். அவற்றுடன் தொடர்புகொண்டார். அவற்றை உலகிற்குப் போதித்தார். இந்துக்களும் இவ்வாறே கூறுகின்றனர். இந்துக்களின் சாஸ்திரங்களை எழுதியவர்கள் ரிஷிகள். இவர்களும் தாங்கள் சில உண்மைகளை அனுபவித்ததாகவும் அவற்றையே உபதேசிப்பதாகவும் கூறினார்கள். ஆகவே உலகிலுள்ள மதங்கள் எல்லாமே, நம் அறிவு அனைத்திற்கும் அடிப்படையானதும் உலகம் தழுவிய தும் உறுதிமிக்கதுமான அனுபூதி அல்லது நேரடி அனுபவத்தின்மீதே அமைக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.

மனத்தின் ஆற்றல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தியதால்தானே உலகிலுள்ள அறிவை மனிதன் பெற்றான், எவ்வாறு தட்ட வேண்டும், தேவையான உந்துதலை எப்படி அளிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால் உலகம் தனது ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின் மூலமே கிடைக்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். இதுதான் ரகசியம்.
 

மனத்தைப் புறப்பொருட்களின்மீது குவிப்பது எளிது. இயல்பாகவே மனம் வெளிநோக்கு கொண்டது. ஆனால் மத ஆராய்ச்சி, மனஇயல், தத்துவம் இவற்றில் அவ்வாறு இல்லை. ஏனெனில் இங்கே அறிபவனும் அறியப்படும் பொருளும் ஒன்றே. அறியப்படும் பொருளான மனம் உள்ளே இருக்கிறது. இந்த மனத்தை ஆராயவும் மனம்தான் வேண்டும். மனமே மனத்தை ஆராய்கிறது. மனத்திற்குத் தன்மையே நோக்கும் தன்மை உண்டு என்பது நமக்குத் தெரியும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில் ஏதோ ஓர் இரண்டாம் மனிதனைப்போல் தனியாக நின்று, நான் பேசுவதை அறியவும் கேட்கவும் செய்கிறேன். ஒரே நேரத்தில் நீங்கள் வேலை செய்யவும் சிந்திக்கவும் செய்கிறீர்கள். அப்போது மனத்தின் ஒரு பகுதி விலகி நின்று நீங்கள் சிந்திப்பதை நோக்குகிறது. மனத்தின் ஆற்றல்களைக் குவித்து அதன் மீதே திருப்ப வேண்டும். அப்போது எவ்வாறு கதிரவனின் கதிர்களின் முன்னால் காரிருள் தன் ரகசியங்களை வெளிப்படுத்துகிறதோ, அவ்வாறு இந்த ஒருமுகப்பட்ட மனமும் தன் ஆழங்களிலுள்ள ரகசியங்களில் ஊடுருவிச் செல்கிறது. இவ்வாறு நாம் நம்பிக்கையின் அஸ்திரவாரத்திற்கு, உண்மையான, சரியான மதவுணர்விற்கு வருகிறோம். நமக்கு ஆன்மா உண்டா, இல்லையா? வாழ்வு என்பது ஐந்து நிமிடத்திற்கா அல்லது என்றென்றைக்குமா? பிரபஞ்சத்தில் ஒரு கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பவற்றையெல்லாம் நமக்கு நாமே உணர்ந்துகொள்வோம். அவையெல்லாம் நமக்கு வெளிப்படுத்தப்படும். இதைக் கற்பிக்கிறது ராஜயோகம். எப்படி மனத்தை ஒருமைப்படுத்துவது, நமது சொந்த மனங்களின் அடியாழத்திலுள்ள அறைகளை எப்படிக் கண்டுபிடிப்பது, பிறகு அங்குள்ள எண்ணத் திரள்களைப் பொதுமைப்படுத்தி அவற்றிலிருந்து எப்படி நமக்கென்று முடிவுகளைக் காண்பது என்பவற்றைக் கற்பிப்பதே ராஜயோகத்தின் நோக்கம். ஆதலால் அது நமது மதத்தைப் பற்றியோ, நாம் ஆத்திகர்களா, நாத்திகர்களா, கிறிஸ்தவர்களா, யூதர்களா, பவுத்தர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. நாம் மானிடர், அது போதும் , மதத்தைத் தேடும் உரிமையும் ஆற்றலும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. காரணம் என்ன என்று கேட்கும் உரிமையும், விடையைத் தானே காணும் <உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் அதற்காக அவன் சிறிது பாடுபட வேண்டும்.
 

இதுவரை நாம் பார்த்ததிலிருந்து ராஜயோகப் பயிற்சிக்கு எந்தவிதமான நம்பிக்கையும் தேவையில்லை என்பது தெளிவாகிறது. நீங்களே கண்டறியாததுவரை எதையும் நம்பாதீர்கள். இதுதான் ராஜயோகம் போதிப்பது. உண்மை நிலைநிற்க எந்த ஊன்றுகோலும் தேவையில்லை. நமது விழிப்புநிலை உண்மைகளை நிரூபிக்கக் கனவுகளோ கற்பனைகளோ தேவையா என்ன? நிச்சயமாக இல்லை! ராஜயோகத்தைப் பயில நீண்ட காலமும் நீடித்த பயிற்சியும் சார்ந்தது. ஆனால் பெரும்பகுதி மனத்தைச் சார்ந்தது. மனம் எந்த அளவிற்கு நெருக்கமாக உடலுடன் தொடர்புள்ளது என்பதைப் பின்னர் காண்போம்.
 

மனம் என்பது உடலின் ஒரு நுண்பகுதி மட்டுமே என்பதையும் மனம் உடலின்மீது செயல்படுகிறது என்பதையும் நாம் நம்புவதானால் உடலும் மனத்தின்மீது செயல்படுகிறது என்று கொள்வது நியாயமானது. உடல் நோயுற்றால் மனமும் சஞ்சலமடைகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் நலமாக வலிமையாக இருக்கிறது. கோபம் வரும்போது மனம் சஞ்சலமடைகிறது. அது போலவே மனம் கலங்கினால், உடல்நலமும் கெடுகிறது. மக்களுள் பெரும்பாலோரைப் பொறுத்தவரை மனம் ஏறக்குறைய உடலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவர்களின் மனம் மிகக்குறைவாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவர்கள் விலங்குகளிலிருந்து மிகச் சிறிது மட்டுமே வேறுபட்டுள்ளனர். அது மட்டுமல்ல. அவர்களுள் பலருக்கும் கட்டுப்பாட்டு ஆற்றல், தாழ்ந்த விலங்குகளைவிடச் சிறிதளவே அதிகமாக உள்ளது. நமக்கு நம் மனத்தின்மீது மிகச் சிறிதளவே கட்டுப்பாடு உள்ளது. அந்தக் கட்டுபாட்டைக் கொண்டுவருவதற்கு, உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவதற்கு உடலைச் சார்ந்த சில உதவிகள் வேண்டும். போதிய அளவிற்கு உடம்பை அடக்கியபின், மனத்தை வசப்படுத்த முயலலாம். மனத்தை வசப்படுத்தினால் அது நமது கட்டுப்பாட்டிற்குள் வரும். அதன்பின்னர் நாம் விரும்புவதுபோல் அதனை வேலை செய்ய வைக்கலாம். அதைக் கட்டாயப்படுத்தி, நாம் விரும்புவதுபோல் அதன் ஆற்றல்களை ஒருமைப்படுத்தலாம்.
 

அகவுலகம் அல்லது நுண்ணுலகின் தூல வடிவமே புறவுலகம் என்கிறான் ராஜயோகி. சூட்சுமமாக இருப்பது தான் எப்போதும் காரணமாகவும்
தூலம் எப்போதும் காரியமாகவும் இருக்கும். எனவே புறவுலகம் காரியம்; அகவுலகம் காரணம். அதுபோலவே அகத்தில் உள்ள நுண்ணிய சக்திகளின் தூலப் பகுதிகளே புறசக்திகள், இந்த அகசக்திகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கையாள்வது எப்படி என்று அறிந்துகொண்டவனுக்கு இயற்கை முழுவதுமே வசமாகும். பிரபஞ்சம் முழுவதையும் கட்டுப்படுத்த முனைகிறான் யோகி. அதற்குக் குறைந்த எதையும் அவன் நாடுவதில்லை. இயற்கைநியதிகள் என்று நாம் அழைக்கிறோமே, அவை தன் மீது எந்த ஆதிக்கமும் செலுத்தாத, அவை அனைத்தையும் கடந்த ஒரு நிலையை அடைய அவன் விரும்புகிறான். அக மற்றும் புற இயற்கை அனைத்திற்கும் அதிபதியாக விழைகிறான். மனித இனத்தின் முன்னேற்றம். நாகரீகம் என்பதெல்லாம் இயற்கையை அடக்கி ஆள்வதைத்தான் குறிக்கும்.
 

இயற்கையை ஆள வெவ்வேறு இனத்தினர் வெவ்வேறு வழிகளில் முயன்றனர். ஒரு சமுகத்தில் சிலர் புற இயற்கையையும், வேறு சிலர் அக இயற்கையையும் அடக்கியாள முயல்வதுபோல் இனங்களுள்ளும் சிலர் புற இயற்கையையும் சில அக இயற்கையையும் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். அக இயற்கையையும் கட்டுப்படுத்தவதால் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களோ புற இயற்கையைக் கட்டுப்படுத்துவதால் நாம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இரண்டு கூற்றுகளின் எல்லைவரை சென்றோமானால் இரு சாரார் கூறுவதும் சரியே, ஏனெனில் இயற்கையில் அகம், புறம் என்ற பாகுபாடு இல்லை. இவை கற்பனையில் மட்டுமே காணப்படுகின்ற பொய்யான வரம்புகள். தத்தம் ஞானத்தின் எல்லையை அடையும் போது இரு சாராரும் ஒரு மையத்தில் சந்தித்தே தீர வேண்டும். ஒரு பவுதீக விஞ்ஞானி வெளியுலக விஞ்ஞான அறிவை அதன் கடைசி எல்லைக்குக் கொண்டு போகும்போது அது தத்துவத்தில் கரைவதைக் காண்கிறான். அதேபோல், உள்ளது ஒன்றே, மனம் என்றும் ஜடப்பொருள் என்றும் அவன் கருதுகின்ற வேறுபாடு உண்மையில் இல்லாதது என்பதையும் காண்கிறேன்.
 

எந்த ஒன்றிலிருந்து பல தோன்றினவோ, எந்த ஒன்று பலவாக இருக்கின்றதோ, அந்த ஒன்றை அந்த ஒருமையைக் காண்பதே எல்லா சாஸ்திரங்களின் முடிவான நோக்கம், ராஜயோகம் அகவுலகில் ஆரம்பிக்கிறது. அக இயற்கையை ஆராய்கிறது. அதன் மூலம் அகம், புறம் இரண்டையும் கட்டுப்படுத்த முயல்கிறது. இந்த முயற்சி மிகவும் தொன்மையானது. இந்தியா அதன் சிறப்பிடமாக இருந்து வருகிறது. மற்ற நாட்டினரும் இந்த முயற்சியில் ஈடுபடவே செய்தனர். மேலை நாடுகளில் இது ஒரு ரகசிய முறையென கருதப்பட்டது. இதனைப் பயின்றவர்கள் சூனியக்காரிகள், மந்திரவாதிகள் என்று கருதப்பட்டு எரிக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர் இந்தியாவிலோ பல காரணங்களால் இது யாருடைய கைகளில் அகப்பட்டதோ அவர்கள் அதில் தொண்ணூறு சதவீதத்தை அழித்தனர். எஞ்சியதைப் பரம ரகசியம் என்று மறைத்து விட்டனர்.
 

இந்தக் காலத்தில் மேலைநாட்டில் பலர் யோக ஆசிரியர்களாகப் புறப்பட்டுள்ளனர். இவர்களுடைய கதை இந்தியாவில் உள்ளவர்களைவிட மோசம். இந்தியர்களுக்காவது ஏதோ கொஞ்சம் தெரியும். இந்த நவீன ஆசிரியர்களுக்கோ ஒன்றும் தெரியாது.
 

ரகசியம் என்றோ அற்புதம் என்றோ யோக நெறியில் ஏதாவது சொல்லப்படுமானால் அதை உடனே நீக்கி விட வேண்டும். வலிமையே வாழ்வில் சிறந்த வழிகாட்டி. மற்ற விஷயங்களில் போலவே மதத்திலும் உங்களைப் பலவீனப்படுத்துகின்ற அனைத்தையும் விலக்கிவிடுங்கள். அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ரகசியங்களை நாடுவது மூளையைப் பலவீனப்படுத்துகிறது. சாஸ்திரங்களுள் மிகச் சிறந்த ஒரு விஞ்ஞானமான யோகத்தை அது ஏறக்குறைய அழித்தே விட்டது. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே நன்றாக விவரிக்கப்பட்டு, அமைக்கப்பட்டு, போதிக்கப்பட்டு வருகிறது. இதில் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை என்னவென்றால் உரையாசிரியர் எந்த அளவிற்கு நவீன காலத்தைச் சேர்ந்த வராக இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அதிகம் தவறுகள் செய்கிறார். எந்த அளவிற்கு காலத்தால் முந்தியவரோ அந்த அளவிற்கு அவர் அறிவுபூர்வமானவராக இருக்கிறார். நவீன உரையாசிரியர்களுள் பலர் பலவகைப்பட்ட ரகசிய முறைகளைப்பற்றிப் பேசுகின்றனர். இவ்வாறு ஒரு சிலரின் கையில் யோக சாஸ்திரம் அகப்பட்டுக்கொண்டது. அவர்கள் அதன்மீது பகல் வெளிச்சமும் அறிவாராய்ச்சியின் முழுஒளியும் படாமல் செய்து அதனை ரகசிய வித்தையாக்கி விட்டனர். தங்களுக்கே ஆற்றல்கள் எல்லாம் சொந்தமாக வேண்டும் என்பதே அவர்கள் அவ்வாறு மறைத்ததன் நோக்கம் ஆகும்.
 

இங்கு நான் முதலில் சொல்ல வேண்டுவது நான் கற்பிப்பதில் ரகசியம் எதுவும் இல்லை என்பதுதான். எனக்குத் தெரிந்த ஏதோ சிறிதை உங்களுக்குச் சொல்கிறேன். எனது அறிவால் ஆராய்ந்து தெளிவுபடுத்த முடிந்த அளவு அதைச் செய்வேன். எனக்குத் தெரியாதது என்று வரும்போது சாஸ்திரங்கள் சொல்வதை அப்படியே சொல்வேன். குருட்டுத்தனமாக நம்புவது தவறு. உங்கள் அறிவையும் உங்கள் ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்த வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் இவையெல்லாம் நிகழ்கின்றனவா இல்லையா என்று பார்க்க வேண்டும், வேறு எந்த விஞ்ஞானத்தையும் கற்பது போலவே இந்த விஞ்ஞானத்தையும் நீங்கள் பயில வேண்டும். இதில் ரகசியமோ அபாயமோ எதுவும் இல்லை. இதில் உண்மை என்று இருப்பதைப் பொதுத் தெருவில் பட்டப்பகல் வெளிச்சத்தில் போதிக்கலாம். இதில் எதையாவது ரகசிய விந்தையாக்க முயன்றால் அது ஆபத்திலேயே முடியும்.
 

தொடர்ந்து போகுமுன் ராஜயோகத்திற்கு அடிப்படையாகிய சாங்கியத் தத்துவத்தின்படி ஒரு காட்சி அல்லது பிரத்தியட்ச ஞானம் உண்டாகும் முறை இதுவே. புறப் பொருட்களின் தூண்டுதல்கள் புறப்பொறிகள் வாயிலாக மூளையில் அவற்றிற்கு உரிய மையங்களுக்கு அல்லது புலன்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. புலன்கள் இந்தத் தூண்டுதல்கள் மனத்திற்குக் கொண்டு செல்கின்றன. மனம் புத்தியிடம் சேர்க்கிறது. புத்தியிலிருந்து புருஷன்(அல்லது ஆன்மா) அதை ஏற்றுக் கொள்கிறான். அப்போது காட்சி உண்டாகிறது. பின்னர் புருஷன் ஆணையிடுவதுபோல் கட்டளைகள் பிறப்பிக்கிறான். அவற்றிற்கேற்ப கர்மேந்திரியங்கள் செயல்புரிகின்றன. புருஷனைத் தவிர மற்றவை அனைத்தும் ஜடப் பொருட்கள். ஆனால் மனம் புறப்பொருட்களைவிட மிக நுண்ணிய ஜடப்பொருள் ஆகும், மனம் எந்த மூலப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே பொருளால் தான் நுண்ஜடப் பொருளான தன்மாத்திரைகளும் ஆக்கப்பட்டுள்ளன. இவையே தூலமாகி புறப்பொருட்கள் ஆகின்றன. இதுவே சாங்கியம் கூறும் மன இயல் ஆகும்.
 புறத்தேயுள்ள தூலப்பொருளுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடு என்பது தூலம் அல்லது சூட்சுமம் என்ற அளவில் மட்டுமே. ஜடப்பொருள் அல்லாதவன் புருஷன் மட்டுமே. மனம் ஆன்மாவின் கைகளில் ஒரு கருவிபோல் செயல்படுகிறது. இந்தக் கருவியின் மூலம் ஆன்மா புறப்பொருட்களுடன் தொடர்பு கொள்கிறது. மனம் தொடர்ந்து மறுபடியும் ஊசலாடியபடியும் உள்ளது. அதைப் பக்குவப் படுத்தினால், ஒரு புலனுடனோ, பல இந்திரியங்களுடனோ அது தன்னை இணைத்துக்கொள்ள இயலும். எதையும் பற்றாமல் இருக்கவும் அதனால் முடியும். உதாரணமாக ஒரு கடிகாரத்தில் மணியடிப்பதை நான் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது என் கண்கள் திறந்திருந்தாலும் ஒருவேளை நான் எதையுமே பார்க்கமாட்டேன். கேட்கும் புலனை மனம் பற்றியிருப்பதால், காணும் புலனை அது பற்றவில்லை என்பதை அது காட்டுகிறது. ஆனால் எல்லா புலன்களையும் ஒருங்கே பற்றியிருக்கின்ற தன்மை பக்குவப்பட்ட மனத்திற்கு உண்டு அது தன் ஆழங்களைத் தானே உள்நோக்கிக் காணும் சக்தியை உடையது. இத்தகைய அகநோக்கை அடையவே யோகி முயல்கிறான். மனத்தின் ஆற்றல்களைக் குவித்து, அதனை உள்ளே திருப்பி, உள்ளே என்ன நிகழ்கிறதென்று அறிய அவன் விரும்புகிறான். இதில் வெறும் நம்பிக்கை என்ற பேச்சே இல்லை. தத்துவ ஞானிகளுள் சிலர் கண்டறிந்த முடிவு இது.
 

கண்கள் காட்சிப் புலன் அல்ல என்றும் மூளையில் உள்ள நரம்பு மையங்களுள் ஒன்றே அந்தப் புலன் என்றும் நவீன உடலியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மற்றப் புலன்களும் இவ்வாறே, மூளை எந்தப் பொருளினால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே பொருளினால் தான் இந்த மையங்களும் ஆக்கப்பட்டுள்ளன. என்பது அவர்களின் கருத்து, சாங்கியர்களும் இதையே கூறுகின்றனர். முந்தியது பவுதீகப் பொருள் தொடர்பான முடிவு, பிந்தியது மன இயல் தொடர்பான முடிவு. ஆனால் இரண்டும் ஒன்றே. நமது ஆராய்ச்சிக்களமோ இதற்கு அப்பால் உள்ளது.
அந்த முறையைப் பின்பற்றியே அந்த விஞ்ஞானத்தை நாம் அறிய முடியும். ராஜயோகத்திற்கும் அவ்வாறே.
  

உணவு பற்றிய சில கட்டுப்பாடுகள் உள்ளன. மனத்தை மிகவும் தூய்மையாக்கும் உணவையே நாம் உட்கொள்ள வேண்டும். மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றால் இதன் உண்மையை நீங்கள் உடனடியாக அறியலாம். யானை பெரிய மிருகமாக இருந்தும், அமைதியாக சாதுவாக இருக்கிறது. சிங்கம், புலி இருக்கும் கூண்டுகளின் அருகில் சென்றாலோ அவை சஞ்சலத்துடன் அலைந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உணவு எத்தகைய வேறுபாட்டை உண்டாக்கியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. உடலில் செயல்படும் சக்திகள் எல்லாம் உணவிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் ஒவ்வொரு நாளும் அதை அனுபவிக்கிறோம். பட்டினியாக இருந்தால் முதலில் உடல் பலவீனம் அடையும். பின்னர் பவுதீக சக்திகள் பாதிக்கப்படும், சில நாட்களுக்குப் பின் மன ஆற்றல்கள் தளரத் தொடங்கும். முதலில் ஞாபக சக்தி குறையும். பிறகு எதையும் சிந்திக்க முடியாத நிலை வரும், எதையாவது ஆராய்வது என்ற பேச்சே இல்லை. எனவே ஆரம்பத்தில் நாம் என்ன உண்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். போதிய வலிமை பெற்றபின், நமது முயற்சி நன்றாக முன்னேறிய பின் இந்த விஷயத்தில் அவ்வளவு எச்சரிக்கை வேண்டியதில்லை. இளம் பயிராக இருக்கும்போது தீங்கு ஏற்படாதபடி வேலியிடுவது அவசியம். அது வளர்ந்து மரமானபின் வேலி தேவையில்லை. தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான ஆற்றலை அது பெற்றுவிடும்.
 

அதிக சுகபோகம், கடின தவம் ஆகிய இரண்டு எல்லைகளையும் யோகி விலக்க வேண்டும். அவன் பட்டினி கிடக்கக் கூடாது. உடலையும் துன்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்பவன் யோகியாக இருக்க முடியாது என்கிறது கீதை: பட்டினி கிடப்பவன், விழித்தே இருப்பவன், அதிகம் தூங்குபவன், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவன்-இவர்களுள் யாருமே யோகியாக முடியாது.
 
   

பிராணன்: 

…

பலர் நினைப்பதுபோல், பிராணாயாமம் என்பது சுவாசத்தைப் பற்றியது அல்ல. சுவாசத்திற்கும் பிராணாயாமத்திற்கும் தொடர்பு இருந்தாலும் அது மிகக் குறைவே. உண்மையான பிராணாயாமத்தை நாம் சென்றடைவதற்கான பல பயிற்சிகளுள் சுவாசமும் ஒன்று, அவ்வளவுதான். பிராணாயாமம் என்றால் பிராணனைக் கட்டுப்படுத்துதல். இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி, பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருளாகவும், திடப் பொருளாகவும், ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே. அதை உணர முடியாது. சாதாரணமாக எந்த விதத்திலும் நாம் உணர முடியாத அளவிற்கு அது நுண்ணியதாக உள்ளது. அது தூலமாகிய உருவம் பெறும்போதுதான் அதை நாம் காண முடியும். படைப்பின் துவக்கத்தில் இந்த ஆகாசம் மட்டுமே இருந்தது. ஒரு கல்பம் முடியும் போது திடப்பொருட்கள், திரவங்கள், வாயுக்கள் எல்லாமே கரைந்து மீண்டும் ஆகாசமாகிவிடுகின்றன. மறுபடியும் ஆகாசத்திலிருந்து அடுத்த படைப்பு தோன்றுகிறது.
 

எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியினால்தான். பிரபஞ்சத்திற்கு எல்லையற்ற எங்கும் நிறைந்த மூலப்பொருளாக ஆகாசம் இருப்பது போல், பிராண சக்தி, எல்லையற்ற எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக உள்ளது. கல்பத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் எல்லா பொருட்களும் ஆகாசமாகின்றன; பிரபஞ்சத்திலுள்ள எல்லா சக்திகளும் பிராணனில் மீண்டும் ஒடுங்குகின்றன. அடுத்த கல்பத்தில் அந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவீயிர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஒட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் வெளிப்பாடுகளே. பிரபஞ்சத்திலுள்ள மன சக்திகள், பௌதீக சக்திகள், அனைத்தின் ஒட்டுமொத்தமும் அதன் மூலநிலைக்கு மீண்டும் செல்லும்போது பிராணன் என்று அழைக்கப்படுகிறது. இருப்பு, இல்லாமை, இரண்டுமற்று இருளை இருள் மூடியிருந்தபோது என்ன இருந்தது? அந்த ஆகாசம் அசைவின்றி இருந்தது. அப்பொழுது பிராணனின் பௌதீக இயக்கம் நின்றிருந்தது; ஆனால் பிராணன் இருக்கவே செய்தது. பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திகள் எல்லாம் கல்பத்தின் இறுதியில் அமைதியடைந்து ஒடுங்கிவிடும். அடுத்த கல்பம் தொடங்கும்போது அவை எழுந்து ஆகாசத்தில் மோதுகின்றன; ஆகாசம் இந்தப் பல்வேறு வடிவங்களாகப் பரிணமிக்கிறது. ஆகாசம் மாறும்போது பிராணனும் பல்வேறு சக்திகளாக வெளிப்படுகிறது. இந்தப் பிராணனை அறிவதும் அதைக் கட்டுப்படுத்துவதும்தான் பிராணாயாமம் என்பதன் உண்மையான பொருளாகும்.
 

எல்லையற்ற ஆற்றலின் கதவை இது நமக்குத் திறந்துவிடுகிறது. உதாரணமாக ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்திவிட்டால் உலகில் எந்தச் சக்திதான் அவனுடையது ஆகாது? அவன் சூரியனையும் நட்சத்திரக் கூட்டங்களையும் அவர்களின் இடத்திலிருந்து பெயர்த்துவிட முடியும். அணுவிலிருந்து மிகப் பெரிய சூரியர்கள் வரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் அவனால் அடக்கியாள முடியும். ஏனெனில் அவன் பிராணனைக் கட்டுப்படுத்துகிறான். இதுவே பிராணாயாமத்தின் முடிவும் குறிக்கோளும் ஆகும். யோகி நிறைநிலை எய்தும்போது அவனது ஆணைக்கு உட்படாத எதுவும் இயற்கையில் இருக்காது. தேவர்களாகட்டும், ஆவிகள் ஆகட்டும், அவன் அழைத்தால் வந்துவிடுவர். இயற்கையின் சக்திகள் அனைத்தும் அடிமைகள் போல் அவன் ஆணைக்குக் கீழ்ப்படியும். இத்தகைய ஆற்றல்களை யோகியிடம் காண்கின்ற சாதாரண மனிதன் அவற்றை அற்புதங்கள் என்பான்.
 

இந்து மனத்திற்கு விசேஷப் பண்பு ஒன்று உள்ளது முடிந்த அளவு கடைசிப் பொதுமையை முதலில் காண்பது, விளக்கங்களைப் பின்னால் விவரிப்பது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ, அது என்ன? என்ற கேள்வி வேதங்களில் எழுப்பப்படுகிறது. எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ அதை நிர்ணயிப்பதற்காக மட்டுமே எல்லா நூல்களும் எல்லா தத்துவங்களும் ஏற்பட்டன. இந்தப் பிரபஞ்சத்தைச் சிறிது சிறிதாக ஒருவன் அறிய விரும்பினால், அவன் ஒவ்வொரு மணல் துகள்களையும் அறிய வேண்டும். எல்லையற்ற காலம் கிடைத்தாலும் அவனால் எல்லாவற்றையும் அறிய இயலாது. அப்படியானால் அறிவு எவ்வாறு உண்டாகும்? விசேஷ அறிவின் மூலம் எப்படிஎல்லா அறிவையும் பெறமுடியும்? இதற்கு யோகி, ஒவ்வொரு விசேஷப் பண்பின் பின்னாலும் ஒரு பொதுமை உள்ளது என்கிறான். எல்லா விசேஷக் கருத்துக்களின் பின்னாலும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. அதைப் பற்றிக்கொள்ளுங்கள், அனைத்தையும் கிரகித்தவர் ஆவீர்கள். வேதங்களில் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றேயான, தனியான இருப்பு என்று பொதுமைப்பட்டுள்ளது. அந்த இருப்பை அறிந்தவன் பிரபஞ்சம் முழுவதையும் அறிந்தவன் ஆவான். அதுபோல் பிரபஞ்சத்திலுள்ள ஆற்றல்கள் யாவும் பிராணன் என்று பொதுமைப்பட்டுள்ளது. பிராணனைஅறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள மனம் மற்றும் பௌதீக சக்திகள் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். பிராணனை வசப்படுத்துபவன் தனது மனத்தையும் மற்ற மனங்களையும் அடக்கி ஆளும் திறன் பெறுகிறான். அதேபோன்று பிராணனை வசப்படுத்துபவன் தனது உடலையும் வேறு எல்லா உடல்களையும் அடக்கி ஆள்கிறான். ஏனெனில் பிராணன் என்பது சக்திகள் அனைத்தின் அனைத்தின் பொது வெளிப்பாடாகும்.
 

பிராணனை எப்படி வசப்படுத்துவது என்பதே பிராணாயாமத்தின் ஒரே நோக்கம். எல்லா பயிற்சிகளும் சாதனைளும் அதற்காகவே. ஒவ்வொருவனும் தான் இருக்கும் இடத்திலிருந்தே தொடங்க வேண்டும்; தனக்கு மிக அருகில் உள்ளவற்றை வசப்படுத்துவது எப்படி என்பதை அறிய வேண்டும். புறவுலகில் உள்ளவற்றுள் எதை விடவும் நமக்கு மிக அருகில் உள்ளது நமது உடல். மனமும் பிற அனைத்தையும்விட வெகு அருகில் உள்ளது. இந்த மனத்தையும் உடலையும் செயல்படுத்தும் பிராணன், உலகில் உள்ள எல்லா பிராணன்களையும்விட நமக்கு மிக அருகில் உள்ளது. பிராணனாகிய எல்லையற்ற கடலின் அலைகளில் மிக அருகில் இருப்பது நமது மனம் மற்றும் பௌதீக சக்தி வடிவிலுள்ள சிறு அலையே. இந்தச் சிறிய அலையை அடக்கி ஆள்வதில் வெற்றி பெற்றால்தான், பிராணன் முழுவதையும் அடக்கி ஆள முயலலாம். இதனைச் செய்து முடித்த யோகி நிறைநிலையை அடைகிறான்; இதன்பின் அவன் வேறு எந்தச் சக்தியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அவன் ஏறக்குறைய எல்லாம் வல்லவனாகவும் ஏறக்குறைய எல்லாம் அறிந்தவனாகவும் ஆகிறான்.
 பிராணனன வசப்படுத்த முயன்ற மதப் பிரிவினரை நாம் எல்லா நாடுகளிலும் காணலாம். இந்த நாட்டிலும் கூட மன வைத்தியர்கள், நம்பிக்கை வைத்தியர்கள், ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள், கிருஸ்தவ விஞ்ஞானிகள், மனவசியக்காரர்கள் முதலியவர்கள் உள்ளனர். இந்தப் பிரிவுகளை ஆராய்ந்து பார்த்தால், தெரிந்தோ தெரியாலோ இந்தப் பிராணனை வசப்படுத்துவதுதான் அவர்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பதைக் காணலாம். அவர்களுடைய கொள்கைகளின் சாரம் அதுவே. அந்த ஒரே சக்தியையே அவர்களும் கையாள்கின்றனர்.அதை அறியாமல் அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். எதேச்சையாக அவர்களிடம் ஒருசக்தி கிடைத்தது, அதன் இயல்பை அறியாமலே, அது என்னவென்று தெரியாமலே பயன்படுத்தவும் செய்கிறார்கள். பிராணனிலிருந்து இதே சக்தியைத் தான் யோகியும் பயன்படுத்துகிறான். பிராணனின் மிக நுண்ணிய, மிகவுயர்ந்த செயல்பாடு எண்ணம். ஆனால் எண்ணமே எல்லாம் ஆகிவிடாது. செயல்பாடுகளில் மிகவும் கீழ்த் தளத்திலுள்ளதும் உணர்வுமனத்தை எட்டாததுமான எண்ணம் உள்ளது. இது இயல்புணர்ச்சி என்று அழைக்கப்படுக்கிறது. ஒரு கொசு கடித்தால் நம்மை அறியாமலே கை தானாகவே சென்று அதை அடிக்கிறது. இது எண்ணத்தின் ஒருவகையான வெளிப்பாடு. எதிர்ச்செயல்களாக உடலில் நிகழ்பவை எல்லாமே எண்ணத்தின் இந்தத் தளத்தால் சேர்ந்தவைதாம். இனி, உணர்வுத் தளத்தைச் சேர்ந்த எண்ணங்கள் உண்டு, நான் ஆராய்கிறேன் நான் தீர்மானிக்கிறேன், நான் நினைக்கிறேன், சில விஷயங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறேன்; ஆனால் அதுவே எல்லாம் அல்ல. சிந்தனை சக்தி எல்லைக்கு உட்பட்டது. ஒரு குறிப்பிட்ட தூரம்வரை மட்டுமே அது செல்ல முடியும். அதற்குமேல் போக முடிவதில்லை. அது இயங்க முடிந்த வட்டம் மிகமிகச் சிறியதுதான். இருந்தாலும் அதனுள் எத்தனையோ எண்ணங்கள் முட்டி மோதுகின்றன. ஆனால் சிலவேளைகளில் வால் நட்சத்திரங்கள் வருவது போன்று சில விஷயங்கள் இந்த வட்டத்திற்குள் வருகின்றன. அவை அந்த வட்டத்தின் எல்லைக்கு வெளியிலிருந்தே வருகின்றன என்பது நிச்சயம். நமது பகுத்தறிவுக்கோ அந்த எல்லையைக் கடந்து அப்பால் போகவும் முடியாது. இவ்வாறு வந்து நுழைகின்ற விஷயங்களுக்கான காரணங்கள் அந்த எல்லைக்கு வெளியிலேயே உள்ளன.
 

உணர்வு நிலைக்கு மேலான நிலைக்குச் செல்லவும் மனத்தால் முடியும், அது சமாதி நிலை முழு ஒருமைப்பாடாகிய, உணர்வு கடந்த இந்தச் சமாதி நிலையை மனம் அடையும்போது, அது பகுத்தறிவு எல்லையைத் தாண்டிச் செல்கிறது; இயல்புணர்ச்சியாலோ பகுத்தறிவாலோ அறிய முடியாத பல விஷயங்களை அது நேருக்குநேராக அறிகிறது. உடலிலுள்ள பல நுண்ணிய, சக்திகளின் செயல்பாடுகளையும் அதாவது பிராணனின் பல்வேறு வெளிப்பாடுகளையும் பயிற்சியின் மூலம் பண்படுத்தினால், அது மனத்தை உந்தி, மனம் உயர்நிலைகளுக்குச் செல்லவும், உணர்வு கடந்த நிலையை அடையவும் உதவி செய்யவும். அங்கிருந்துகொண்டு மனம் செயல்படும்.
 

இந்தப் பிரபஞ்சத்தில் ஸத் அல்லது இருப்பின் ஒவ்வொரு தளத்திலும் இடையீடின்றித் தொடர்ச்சியான ஒரு பொருள் இருக்கிறது. பௌதீக நிலையில் இந்தப் பிரபஞ்சம் ஒன்றுதான்; உங்களுக்கும் சூரியனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வேறுபாடு காண்பது வெறும் பிரமை, மயக்கம் என்பான் விஞ்ஞானி, இந்த மேஜைக்கும் எனக்கும் உண்மையில் எந்த வேறு பாடும் இல்லை. ஜடப் பொருள் தொகுதியில் ஒரு புள்ளிமேஜை , மற்றொரு புள்ளி நான். எல்லையற்ற ஜடப்பொருள் கடலில் ஒவ்வோர் உருவமும் ஒவ்வொரு சுழி போல் உள்ளன. இனி, இவற்றில் எந்தச் சுழியும் நிலையானது இல்லை. ஓடி வருகின்ற ஆற்றில் பல்லாயிரக்கணக்கான சுழிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உள்ள நீர் ஒவ்வொரு கணமும் வேறாக உள்ளது. சுழியில் கணநேரம் நீர் சுழன்றுவிட்டு வெளியே செல்கிறது. உடனே புதிய நீர் அங்கு வருகிறது. அதுபோல் பிரபஞ்சம் முழுவதுமே இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் ஒரே ஜடப்பொருள் தொகுதிதான்; இருக்கின்ற எல்லா உருவங்களும் அதில் நீர்ச்சுழிகள் போன்றவை. மனித உடம்பு என்ற ஒருசுழியை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜடப்பொருள் தொகுதி இதில் சிறிதுகாலம் இருக்கிறது. பின்னர் மாறுதல் அடைந்து வெளியே சென்று, மற்றொரு சழியில் புகுகிறது; அத பிராணி உடலாக இருக்கலாம்.
 

சில வருடங்களுக்குப் பின் அது உலோகக் கட்டியான சுழிக்குள் புகக்கூடும். மாறுதல் தொடர்ந்து நடக்கிறது. ஓர் உடல்கூட மாறுதலற்று அப்படியே இருப்பதில்லை. எனது உடல், உனது உடல் என்ற வேறுபாடெல்லாம் பேச்சளவில் தானே தவிர உண்மையில் இல்லை. ஒரு பெரிய ஜடப்பொருள் தொகுதியில் ஒரு புள்ளி சூரியன், மற்றொன்று சந்திரன், ஒரு புள்ளி பூமி, மற்றொன்று மனிதன், ஒன்று தாவரம், மற்றொன்று உலோகம். ஒன்றுகூட அப்படியே இருப்பதில்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. ஜடப் பொருள் சேர்வதும் பிரிவதும் இடையீடின்றி நடந்து கொண்டிருக்கிறது. மனமும் அப்படித்தான். ஜடப்பொருளாக வெளிப்பட்டிருப்பது ஆகாசமே. பிராணனின் செயல்பாடு மிகமிக நுண்ணியதாக நுண் அதிர்வு நிலையில் இருக்கும். போது, இந்த ஆகாசமே மணமாகிறது. அங்கேயும் அது, பிரிக்க முடியாத ஒரு தொகுதியாகவே இருக்கும். அந்த நுண் அதிர்வுகளினால் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு உணர முடியும். நாம் புலனுலக நிலையில் இருக்கும்போதே சிலவேளைகளில் சில மருந்துகள் நம்மை அந்த நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தியுடையவை. ஸர் ஹம்பரி டேவியின் பரிசோதனை உங்களுக்கு நினைவிருக்கலாம். சொற்பொழிவின்போது அவர் சிரிப்பு வாயுவினால் தாக்குண்டு அசைவற்று உறைந்தவர் போலாகிவிட்டார். அதிலிருந்து விழித்தபோது, பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்களால் ஆனவை என்றார். குறிப்பிட்ட அந்த நேரத்தில் தூல அதிர்வுகள் அடங்கி, அவர் எண்ணங்கள் என்று குறிப்பிட்ட நுண் அதிர்வுகள் மட்டுமே அவரது அனுபவத்திற்கு எட்டியதுபோல் ஆகிவிட்டது.
  

அவர் தம்மைச் சுற்றி நுண் அதிர்வுகளை மட்டுமே கண்டார். எல்லாமே எண்ணங்களாகி விட்டன. பிரபஞ்சமே எண்ணக் கடலாகக் காட்சி தந்தது. அவரும் மற்றவர்களும் எல்லாருமே சிறுசிறு எண்ணச் சுழிகளாக அவருக்குத் தெரிந்தன. இவ்வாறு எண்ணப் பிரபஞ்சத்தில்கூட நாம் ஒருமையைக் காண்கிறோம். இதையும் கடந்தால் ஆன்மாவை அடைகிறோம். அந்த ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். தூல மற்றும் சூட்சும நிலையிலுள்ள ஜடப்பொருளின் அதிர்வுகளுக்கு அப்பால், இயக்கங்களுக்கு அப்பால் இருப்பது ஒன்றே. இயக்கத்தின் வெளிப்பட்ட நிலையிலும் ஒருமையே உள்ளது. இந்த உண்மைகளை இனிமேலும் நாம் மறுக்க முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளின் கூட்டுத் தொகை எப்போதும் ஒரே அளவில்தான் இருக்கிறதென்று தற்கால இயற்பியலும் நிரூபித்துள்ளது. இந்த மொத்த சக்தியும் இரண்டு நிலைகளில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அமைதியான, செயல்படாத ஒடுக்க நிலையில் இருந்து, பின்னர், பலவித சக்திகளாக வெளிப்படுகிறது. மறுபடியும் செயலற்ற நிலைக்குச் செல்கிறது. மீண்டும் வெளிப்படுகிறது. இப்படி வெளிப்படுவதும் ஒடுங்குவதும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கிறது. முன்பு கூறியதுபோல், இந்தப் பிராணனை அடக்கியாள்வதே பிராணாயாமம். 

மனித உடலில் இந்தப் பிராணனின் நன்கு புலனாகும். வெளிப்பாடு நுரையீரல்களின் இயக்கமாகும். அது நின்று விட்டால் உடலில் உள்ள மற்ற சக்தி வெளிப்பாடுகள் எல்லாம் உடனே நின்றுவிடுகின்றன. இந்த இயக்கம் நின்றாலும் உயிர் வாழ்வதற்கான பயிற்சி பெற்ற சிலர் இருக்கின்றனர். பூமியில் தங்களைப் புதைத்துக் கொண்டு, சுவாசிக்காமலே பல நாட்கள் வாழ்பவர்கள் உள்ளனர். சுட்சுமத்தை அடைய தூலத்தின் உதவி வேண்டும். இவ்வாறு மெள்ளமெள்ளச் சென்று மிக நுண்ணியதை அடைய வேண்டும். உண்மையில் நுரையிரல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் பிராணாயாமம். இந்த இயக்கம் சுவாசத்துடன் சம்பந்தப்பட்டது. மூச்சு, இயக்கத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, அந்த இயக்கமே மூச்சை உண்டாக்குகிறது. இந்த இயக்கம் ஓர் உறிஞ்சு குழாய் போல் செயல்பட்டு காற்றை உள்ளே இழுக்கிறது. பிராணன் நுரையிரல்களைச் செயல்படுத்துகிறது, நுரையிரல்களின் இயக்கம் காற்றை உள்ளிழுக்கிறது. எனவே பிராணாயாமம் என்பது மூச்சு விடுவதல்ல; நுரையிரல்களை இயக்கும் தசைகளை அடக்கி ஆள்வதாகும். நரம்புகள் வழியாக தசைகளுக்கும், அங்கிருந்து நுரையீரல்களுக்கும் சென்று அவற்றை ஒரு குறிப்பிட்ட வகையில் இயங்கச் செய்யும் தசை சக்தியே பிராணன். இந்தப் பிராணனையே நாம் பிராணாயாமப் பயிற்சியால் கட்டுப்படுத்த வேண்டும் பிராணன் கட்டுப்படுத்தப்பட்டதும் உடனடியாக உடலில் உள்ள பிராணனின் மற்றச் செயல்களும் மெல்லமெல்லக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதைக் காணலாம். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா தசைகளையும் அடக்கி ஆள்பவர்களை நானே கண்டிருக்கிறேன். அது ஏன்தான் முடியாது? சில தசைகளைக் கட்டுப்படுத்த முடியுமானால் மற்ற தசைகளையும் நரம்புகளையும் ஏன் கட்டுப்படுத்த முடியாது? அதில் முடியாதது என்று என்ன இருக்கிறது? இப்பொழுது அந்தக் கட்டுப்பாட்டை நாம் இழந்திருக்கிறோம், அதனால் அந்த இயக்கம் தானாக நடைபெறுகிறது. விருப்பம்போல் காதுமடலை நாம் அசைக்க முடியாது, விலங்குகளால் முடியும் என்பது நமக்குத் தெரியும். நாம் அந்த ஆற்றலைப் பயன்படுத்தவில்லை, ஆதலால் இழந்துவிட்டோம். இதுவே குணங்கள் மீண்டுவரல் என்று சொல்லப்படுகிறது.
 

ஒய்ந்திருக்கும் சில இயக்கங்களைப் புதுப்பிக்கலாம். என்பது நமக்குத் தெரியும். உடலில் முற்றிலுமாக இயங்காமல் நிற்கின்ற சில இயக்கங்களைக் கடின உழைப்பாலும் பயிற்சியாலும் மீண்டும் இயங்கச் செய்து கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு நாம் ஆராய்ந்து பார்த்தால் உடலில் கட்டுப்படுத்த முடியாத ஒரு பாகமே இருக்க முடியாது; எல்லாவற்றையும் கண்டிப்பாகப் கட்டுப்படுத்த முடியும். யோகி இதைப் பிராணாயாமத்தின் மூலம் செய்கிறான். பிராணாயாமத்தில் மூச்சை உள்ளே இழுக்கும்போது உடலின் ஒவ்வொரு பகுதியையும் பிராணனால் நிரப்ப வேண்டும். என்று உங்களுள் சிலர் படித்திருக்கலாம். ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பிராணனை மூச்சு என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே மூச்சுக்காற்றால் உடலை நிரப்புவது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்புதான் இது மொழிபெயர்ப்பாளரின் தவறு. உடல் முழுவதையும் நாம் பிராணனால், இந்த ஆதார சக்தியால் நிரப்ப முடியும். அதைச் செய்தால் உடம்பு முழுவதையுமே நாம் அடக்கியாள முடியும். உடலில் ஏற்படும் வியாதியையும் துன்பத்தையும் நாம் அப்போது கட்டுப்படுத்தலாம். அது மட்டுமல்ல, மற்றவர்களின் உடலையும் கட்டுப்படுத்தலாம்.
 நல்லதோ கெட்டதோ இவ்வுலகில் எல்லாமே தொற்றும் தன்மையேப் பெற்றிருக்கிறது. உங்கள் உடல் ஒருவித அழுத்தநிலையில் இருக்குமானல் அது மற்றவர்களிடமும் அதே நிலையை உண்டாக்கும் போக்கு உடையதாக இருக்கும். நீங்கள் நலமாகவும் பலமாகவும் இருந்தால் .உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் அவ்வாறே நலமாகவும் பலமாகவும் இருப்பதற்கான ஓர் இயல்பு ஏற்படுகிறது. நீங்கள் நோயுற்று துன்புற்று இருந்தால் சூழ இருப்பவர்களிடமும் அதே துன்பம் வருவதற்கான தன்மை ஏற்படுகிறது.மற்றவனைக் குணப்படுத்த முயல்கின்ற ஒருவன் தன் சொந்த ஆரோக்கியத்தை மற்றவனிடம் மாற்றுவதுதான் முதற்கருத்தாக உள்ளது. இது குணப்படுத்தலைக் குறித்த பண்டைய கொள்கை. தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் உடல்நலத்தை மற்றவருக்கு அளிக்க முடியும். மிகவும் வலிமையான ஒருவன் தன்னோடு இருக்கும் வலிமையற்றவனைச் சிறிது வலிமையுள்ளவனாகச் செய்யலாம். வலிமையற்றவனுக்கு இது தெரியலாம், தெரியாமலும் இருக்கலாம். இதை உணர்வு பூர்வமாகச் செய்தால் பலன் விரைவாகவும் சிறப்பாகவும் இருக்கும். அடுத்தபடியாக, அதிக அரோக்கியம் இல்லாத ஒருவன்கூட மற்றவனிடம் உடல்நலத்தை உண்டாக்க முடியும். இவன் சற்று அதிகமாகப் பிராணனைக் கட்டுப்படுத்தியவன்; அந்த நேரத்திற்குத் தன் பிராணனை எழுப்பி மற்றவனுக்கு அதனை அளிக்கிறான் என்று சொல்லலாம்.
 

தூரத்தில் உள்ளவர்களை இவ்வாறு குணப்படுத்திய நிகழ்ச்சிகள் உண்டு. இடைவெளி என்ற பொருளில் தூரம் என்ற ஒன்று உண்மையில் இல்லை. முற்றிலும் தொடர்பில்லாத தூரம் என்ற ஒன்று எங்கே இருக்கிறது? சூரியனுக்கும் உங்களுக்கும் இடைவெளி இருக்கிறதா என்ன? எல்லாம் ஜடப்பொருள் தொகுதியின் ஒரே தொடர்ச்சியே. அதில் சூரியன் ஒரு பகுதி, நீங்கள் மற்றொரு பகுதி. ஆற்றின் ஒரு பகுதிக்கும் மற்றொருக்கும் இடைவெளி என்ற ஒன்று உள்ளதா? அதேபோல் சக்தியும் ஏன் எங்கும் சஞ்சரிக்கக் கூடாது? கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. தூரத்திலிருந்து கொணடு குணப்படுத்துமும் முற்றிலும் உண்மையே. குணப்படுத்தும் முறை நாம் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதானதல்ல. பிராணனை நீண்ட தூரத்திற்குச் செலுத்த முடியும். ஆனால் இதைச் செய்வதில் நேர்மையானவர் ஒருவர் இருந்தால் ஏமாற்றுப் பேர்வழிகள் நூறு பேர் இருப்பார்கள். சாதாரணமாக அவர்கள் மனித உடலின் இயற்கையான ஆரோக்கியமான நிலையை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். காலரா கண்டவனுக்கு ஆங்கில டாக்டரும் மருந்து கொடுத்து குணப்படுத்துகிறார். ஹோமியோபதி டாக்டரும் தனது மருந்துகளைக் கொடுக்கிறார்; ஆனால் இவர் முன்னையதைவிட ஒருவேளை விரைவாகக் குணப்படுத்திவிடுகிறார். ஏனெனில் அவர் தன் மன சக்தியைப் பயன்படுத்தி நோயாளியிடம் நம்பிக்கையை ஊட்டி, அவனிடம் தூங்கிக்கிடக்கின்ற பிராணனை எழுப்புகிறார்.
 

நம்பிக்கை நேரடியாக ஒரு மனிதனை குணமடையச் செய்கிறது என்று நம்பிக்கை வைத்தியர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. நம்பிக்கையால் மட்டுமே எல்லாம் நடந்து விட முடியாது. சில வியாதிகள் உள்ளன. அவற்றின் மிக மோசமான அறிகுறி என்னவென்றால் நோயாளி தனக்கு நோய் இருப்பதாக நினைப்பதே இல்லை. அசைக்க முடியாத அவனது நினைப்பே, நம்பிக்கையே வியாதியின் ஓர் அறிகுறி. பொதுவாக, இவ விரைவில் அவன் இறந்து விடுவான் என்பதையே காட்டுகின்ற ஒன்று. நம்பிக்கை அவனைக் குணப்படுத்தும் என்றால், இவன் குணமடைந்திருக்க வேண்டும். உண்மையில் பிராணனே அவர்களைக் குணப்படுத்துகிறது. பிராணனைக் கட்டுப்படுத்திய தூய மனிதன், அதைக் குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வந்து, அதைப் பிறரிடம் செலுத்தி அவர்களிடம் அதுபோன்ற அதிர்வுகளை எழுப்புகிறான். இதை நாம் அன்றாடச் செயல்களிலும் காண்கிறோம். நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

  உண்மையில் நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன்? என் மனத்தை ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் எவ்வளவு வெற்றிகரமாக அந்த நிலைக்கு மனத்தைக் கொண்டு வருகிறேன். என்று தான் சொல்ல வேண்டும். நான் எவ்வளவு வெற்றிகரமாக அந்த நிலைக்கு மனத்தைக் கொண்டு வருகிறேனோ, அவ்வளவு தூரம் என் பேச்சின் தாக்கம் உங்களிடம் மிகும். நான் ஊக்கத்துடன் பேசும்போது நீங்களும் என் பேச்சை மகிழ்ந்து அனுபவிப்பீர்கள். நான் சற்று ஊக்கம் குன்றிப் பேசினால் உங்களுக்கும் கேட்பதில் விருப்பம் இருப்பதில்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே.
 

உலøயே அசைக்கின்ற மாபெரும் சங்கல்ப வலிமை பெற்ற தீரர்கள் உலகில் தோன்றுகின்றனர். அவர்கள் தங்கள் பிராணனை மிகவுயர்ந்த அதிர்வு நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது கணத்தில் மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்ற அளவிற்கு ஆற்றலும் வேகமும் உடையதாக இருக்கிறது, ஆயிரக்கணக்கானோர் அவர்பால் ஈர்க்கப்படுகின்றனர், உலகில் பாதிப்பேர் அவர்கள் நினைப்பதுபோலவே நினைக்கின்றனர். உலகின் மாபெரும் தீர்க்க தரிசிகள் பிராணனை அற்புதமாக வசப்படுத்தியிருந்தனர். இது அவர்களுக்கு மிகுந்த சங்கல்பத்தை அளித்தது. அவர்கள் தங்கள் பிராணனை இயக்கத்தின் மிகவுயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்ததால் உலகையே அசைக்கவல்ல ஆற்றல் பெற்றனர். பிராணனை வசப்படுத்துவதால் எல்லா ஆற்றல்களும் கிடைக்கின்றன. இந்த ரகசியத்தை மனிதன் அறியாதிருக்கலாம். ஆனால் இதுதான் விளக்கம்.
 

சிலவேளைகளில் உங்கள் உடலில் பிராணன் ஒரு பகுதியில் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது சமநிலை குலைகிறது. சமநிலை குலையும்போது, நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. பிராணன் அதிகமான இடத்திலிருந்து அதை எடுக்கவோ, குறைந்த இடத்தில் நிரப்பவோ செய்யும்போது நோய் குணமாகிறது. உடலின் எந்தப் பகுதியிலாவது தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பிராணன் உள்ளதா என்பதை அறிவதும் பிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது கை விரலிலோ உடலின் எந்தப் பகுதியில் பிராணன் குறைந்துள்ளது என்பதை அறிவதற்கும் அங்கு அதைச் செலுத்துவதற்கான ஆற்றலை மனம் பெற்றிருக்கும். பிராணாயாமத்தின் பல்வேறு செயல்பாடுகளுள் இதுவும் ஒன்று. இவற்றை மெதுவாக, படிப்படியாகப் பயில வேண்டும். பிராணனைப் பல தளங்களில் கட்டுப்படுத்துவதும் கையாள்வதும் எப்படி என்பதைக் கற்பிப்பது ராஜயோகத்தின் முழு நோக்கம். ஒரு மனிதன் தன் ஆற்றல்களை ஒருமுகப்படுத்தும்போது, தன் உடலிலுள்ள செய்யும்போது அவனும் பிராணனையே ஒருமுகப்படுத்துகிறான்.
 

கடலில் மலையளவு பெரிய அலைகளும், சிறிய அலைகளும், இன்னும் சிறியனவும், சிறுசிறு குமிழிகளும் உள்ளன. ஆனால் இவையனைத்திற்கும் ஆதாரமாக எல்லையற்ற கடல் உள்ளது. ஒரு முனையில் சிறு குமிழி மற்றொரு முனையில் பெரிய அலை என்று அவை கடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒருவன் மிகப் பெரியவனாக இருக்கலாம், மற்றொருவன் சிறு குமிழியாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும், வாழும் உயிர்கள் ஒவ்வொன்றின் பொதுப் பிறப்புரிமையாகிய அந்த எல்லையற்ற ஆற்றல்கடலுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். எங்கெங்கு உயர் உள்ளதோ, அங்கு அவற்றின் பின்னால் அளப்பரிய சக்திக் களஞ்சியம் உள்ளது. ஊனக்கண்ணிற்குத் தெரியாத மிகமிக நுண்ணிய அமீபாவாக தனது பயணத்தைத் தொடங்குகின்ற உயிர், அந்த எல்லையற்ற ஆற்றல் களஞ்சியத்திலிருந்து தொடர்ந்து சக்தியை எடுத்தவாறு, தாவரமாக, விலங்காக, மனிதனாக மெதுவாக, படிப்படியாக உருமாறி இறுதியில் கடவுளாகவும் ஆகிறது. இந்தப் பரிணாமத்திற்குப் பல கோடியுகங்களாகலாம். ஆனால் காலம் என்பதுதான் என்ன? வேகத்தை அதிகரியுங்கள், முயற்சியைக் கூட்டுங்கள், கால இடைவெளியைக் கடந்துவிடலாம். இயல்பாக நீண்ட காலத்தில்தான் நிறைவேற்ற முடிந்த ஒரு செயலை அதன் தீவிரத்தை அதிகரிப்பதன் மூலம் விரைவில் முடித்து விடலாம் என்கிறான் யோகி. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திக் களஞ்சியத்திலிருந்து ஒருவன் சிறிது சிறிதாக சக்தியைக் கிரகிப்பதாக வைத்துக் கொள்வோம். அவன் ஒரு தேவனாக மாற ஒரு லட்சம் ஆண்டுகள் தேவைப்படலாம். இன்னும் சற்று உயர்ந்த நிறைநிலையை அடைய ஐந்து லட்சம் ஆண்டுகள் ஆகலாம். நிறைநிலையை அடைய ஒரு வேளை ஐம்பது லட்சம் ஆண்டுகள் பிடிக்கலாம். வளர்ச்சி விரைவாக இருந்தால் காலத்தைக் குறைக்கலாம். போதிய முயற்சியினால் இதே நிறைநிலையை ஆறு மாதங்களிலோ ஆறு வருடங்களிலோ ஏன் அடைய முடியாது? இவ்வளவு காலம் என்று அதற்கு ஓர் எந்திரம் குறிப்பிட்ட அளவு நிலக்கரியை உபயோகித்து மணிக்கு இரண்டுமைல் ஒடுவதாக வைத்துக் கொள்வோம். அதிகக் கரியைப் பயன்படுத்தினால் அதே தூரத்தைக் குறைந்த நேரத்தில் அந்த எந்திரம் கடக்கும். அதேபோல், ஆன்மா தனது செயலைத் துரிதப்படுத்தி, இந்தப் பிறவியிலேயே ஏன் நிறைநிலையை அடையக் கூடாது? எல்லா உயிரினங்களும் இறுதியில் அந்த நிலையை அடையும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் கோடிக்கணக்கான யுகங்களாக யார் காத்திருப்பது? இதே உடலில், இந்த மானிட உருவிலேயே, எல்லையற்ற ஞானமும் எல்லையற்ற வலிமையும் இப்பொழுதே ஏன் நான் பெறக் கூடாது?
 அடிமேல் அடி வைத்து மெதுவாக முன்னேறி மனித இனம் முழுவதும் நிறைநிலையை அடையும் வரை காத்திராமல் அதிக சக்தியை ஏற்றுக் கொள்வதற்கான ஆற்றலை வளர்த்து, நிரைநிலையை அடைவதற்குரிய காலத்தைச் சுருக்குவது எப்படி என்பதைப் போதிப்பதே யோகியின் லட்சியம், யோகத்தின் நோக்கம். உலகில் பிறந்த பெரிய தீர்க்கதரிசிகளும் மகான்களும் ரிஷிகளும் என்ன செய்தனர்? தங்கள் வாழ்க்கைக் காலத்திலேயே, மனித குலம் முழுமையின் வாழ்வையும் வாழ்ந்து விட்டனர். சாதாரண மனிதன் நிறைநிலையை அடைவதற்கு ஆகின்ற காலம் முழுவதையும் அவர்கள் ஒரு பிறவிலேயே கடந்து விட்டனர்; ஒரு பிறவிலேயே தங்களைப் பூரணமாக்கிக் கொண்டுவிடுகின்றன. அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் எண்ணமில்லை. ஒருகணம்கூட அவர்கள் வேறு எந்த லட்சியத்திற்காகவும் வாழ்வதில்லை. இவ்வாறு அவர்களது பாதையின் தூரம் குறுகிவிடுகிறது. சக்தியை ஏற்றுக்கொள்ளும் திறனை அதிகரித்து, அதன்மூலம் காலத்தைச் சுருக்குவதே ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டு ஆற்றலைப் பெறுவது எப்படி என்பதைக் கற்பிக்கின்ற விஞ்ஞானமே ராஜயோகம்.
 

பிராணாயாமத்திற்கும் ஆவி நெறிக்கும் தொடர்பு என்ன? ஆவி நெறியும் பிராணாயாமத்தின் ஒரு வெளிப்பாடே. இரண்டிற்கும் தொடர்பு உண்டு. ஆவிகள் இருக்கின்றன. நம்மால் காணத்தான் முடியவில்லை என்பது உண்மையானால் அவை நூற்றுக்கணக்கில் லட்சக்கணக்கில் நம்மைச் சூழ்ந்தும் இருக்கலாம் என்று ஊகிப்பதில் தவறில்லை. அவற்றை நம்மால் காணவோ உணரவோ தொடவோ முடியவில்லை, அவ்வளவுதான். நாம் தொடர்ந்து அவற்றின் உடல்கள் வழியாகப் புகுவதும் வெளிவருவதுமாக இருக்கிறோம் என்பது உண்மையாக இருக்கலாம். அவை நம்மைக் காண்பதோ உணர்வதே இல்லை. இது ஒரு வட்டத்திற்குள் வட்டம்; பிரபஞ்சத்தினுள் பிரபஞ்சம். நமக்கு ஐந்து புலன்கள் உள்ளன, நாம் பிராணனின் ஒருவித அதிர்வு நிலையில் வாழ்கிறோம். அதே அதிர்வு நிலையில் இருக்கின்ற பிராணிகள் ஒன்றை ஒன்று காண முடியும். ஆனால் அதைவிட உயர்ந்த அதிர்வு நிலையில் பிராணிகள் இருக்குமானால் அவற்றைக் காண முடியாது. ஒளியின் ஆற்றலை அதிகரித்து அதிகரித்து அதை நாம் காண முடியாத நிலைக்குக் கொண்டு போக முடியும். ஆனால் அத்தகைய ஒளியையும் காணத்தக்க ஆற்றல் படைத்த கண்கள் கொண்ட பிராணிகள் இருக்கலாம். அதுபோலவே ஒளியின் அதிர்வு மிகக் குறைவாக இருந்தாலும் அதை நாம் காண முடியாது. ஆனால் பூனை, ஆந்தை போன்ற சில பிராணிகள் அதனைக் காண முடியும். பிராணனின் அதிர்வுகளுடைய ஒரு தளத்தை மட்டுமே நாம் காண இயலும். வாயுமண்டலத்தை ஆராய்வோம். அது அடுக்கடுக்காக உள்ளது. பூமிக்கு அருகே உள்ள அடுக்குகள் மேலே உள்ளவற்றைவிட அடர்த்தியாக உள்ளன. மேலே செல்லச் செல்ல வாயுமண்டலத்தின் அடர்த்தி குறைந்துகொண்டே போகிறது. கடலை எடுத்துக் கொள்வோம். ஆழத்தில் போகப்போக, நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது. கடலின் அடிமட்டத்தில் வசிக்கும் பிராணிகள் மேலே வரவே முடியாது,மேலே வந்தால் அவை தூளாகிவிடும்.

  பிரபஞ்சத்தை ஓர் ஆகாசக் கடலாகக் கொள்வோம். பிராணனின் செயல்பாட்டினால் வேறுபட்ட அதிர்வுகள் உள்ள பல அடுக்குகள் அதில் இருப்பதாகக் கொள்வோம். மையத்திலிருந்து விலகியுள்ள அடுக்கில் அதிர்வு குறைவாக இருக்கும். மையத்தின் அருகில் வரவர அதன் அதிர்வு விரைவாக இருக்கும். ஒரேவிதமான அதிர்வு உள்ள பகுதி ஒரு தளம் ஆகிறது. இந்த அதிர்வு அடுக்குகள் ஒவ்வொன்றும் லட்சம் மைல் பரப்புடையனவாக ஒன்றின் மீது ஒன்றாக இருப்பதாகக் கொள்வோம். ஒரேவித அதிர்வு நிலை பெற்ற அடுக்கில் வசிப்பவர்கள் ஒருவரை ஒருவர் காண முடியும். ஆனால் அதற்கு அடுத்து உள்ள அடுக்கில் உள்ளவர்களைக் காண முடியாது. ஆனால் தொலை நோக்கியாலும் உருப் பெருக்கியாலும் நமது பார்வையின் எல்லைகளை விவரிக்க முடிவதுபோல், யோக சக்தியால் மற்றோர் அடுக்கின் அதிர்வு நிலையைப் பெறவும் அங்கு நிகழ்வதைக் காணவும் முடியும். இந்த அறை முழுவதும் நம்மால் காண முடியாத உயிரினங்கள் இருப்பதாகக் கொள்வோம். அவர்கள் ஒரு வகை அதிர்வு நிலையுடன் கூடிய பிராணனைப் பெற்றிருப்பார்கள்; நாம் வேறு அதிர்வு நிலையைப் பெற்றிருப்போம். அவர்கள் விரைவான அதிர்வுநிலையில் இருக்கலாம். நாம் அதற்கு எதிர் நிலையில் இருக்கலாம். ஆனால் அவர்களும் சரி, நாமும் சரி ஆக்கப்பட்டிருப்பது பிராணன் என்னும் ஒரு பொருளினால்தான். எல்லோரும் பிராணன் என்னும் ஒரே கடலின் பகுதிகளே, வேறுபடுவது அதிர்வின் விகிதத்தில் மட்டுமே. நான் என்னை விரைவான அதிர்வு நிலையில் கொண்டுபோனால், மறுகணமே இந்த உலகம் எனக்கு மாறி விடும்: உங்களை நான் காண மாட்டேன், நீங்கள் மறைந்து விடுவீர்கள். அவர்கள் தோன்றுவார்கள். இதன் உண்மையை உங்களுள் சிலர் ஒருவேளை அறிந்திருக்கலாம். இவ்வாறு மனத்தை உயர்ந்த அதிர்வு நிலைகளுக்குக் கொண்டு வருவதெல்லாம் யோக சாஸ்திரத்தில் சமாதி என்ற சொல்லில் அடங்கிவிடுகிறது. இந்த உயர் அதிர்வு நிலைகள், மனத்தின் உயர் உணர்வு அதிர்வுகள் எல்லாமே இந்த சமாதி என்ற சொல்லில் அடங்கியுள்ளது. கீழ்நிலைச் சமாதிகளில் இத்தகைய உயிர்களின் காட்சி கிடைக்கிறது. மிகவுயர்ந்த சமாதியில் நாம் உண்மைப் பொருளைக் காண்கிறோம்; பல்வேறு உயிர் வகைகள் எல்லாம் எந்த மூலப் பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அந்தப் பொருளைக் காண்கிறோம். அந்த ஒருபிடி களிமண்ணை அறிந்தால், உலகில் உள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவர் ஆகிறோம்.
 

இவ்வாறு பிராணாயாமத்தில் ஆவி பற்றிய உண்மைகள் கூட அடங்கியுள்ளது அதுபோலவே சித்திகளைப் பெற முயல்பவர்களும் சரி, ரகசியத்தையோ மறைபொருட்களையோ தேட முயல்பவர்களும் சரி, பிராணனை அடக்க முயற்சிப்பதையே அதாவது இந்த யோகத்தையே செய்கின்றனர். எங்காவது அசாதாரணமான ஆற்றல் காணப்பட்டால் அது பிராணனின் வெளிப்பாடுதான் என்பதைக் காணலாம். பௌதீக விஞ்ஞானங்களைக்கூட பிராணாயாமத்தில் அடக்கிவிடலாம். நீராவி எந்திரத்தை இயக்குவது எது? நீராவி மூலம் செயல்புரியும் பிராணனே. மின்சக்தி முதலிய எல்லாமே பிராணன் அன்றி வேறென்ன? பௌதீக விஞ்ஞானம் என்பது என்ன? புறக்கருவிகள் மூலம் செய்யப்படுகின்ற பிராணாயாமமே. மனச்சக்தியாக வெளிப்படும் பிராணனை மனத்தின் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும். பிராணனின் பௌதீகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும். பிராணனின் பௌதீகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பிராணøõயாமம், பௌதீக விஞ்ஞானம். பிராணனின் மன ஆற்றல்களை, மனத்தைக் கொண்டு அடக்கி ஆளும் நெறியே ராஜயோகம்.

 
 


Site Content

Additional Information

 சித்துப் பிராணன்
 

யோகிகளின் கருத்துப்படி முதுகுத்தண்டில் பிங்கலை, இடை என்ற இரண்டு நாடிகள் இயங்குகின்றன. முதுகுத் தண்டின் வழியாக உள்ளே கழுமுனை என்ற ஒரு நாளம் செல்கிறது. சுழுமுனையில் கீழ் நுனியில் யோகிகள் கூறுகின்ற குண்டலினிக் கமலம் உள்ளது. அது முக்கோண வடிவமாக இருப்பதாகவும், அதில் குண்டலினி சக்தி சுருண்டு இருப்பதாகவும் யோகிகள் உருவகமாகக் கூறுவார்கள். குண்டலினி விழித்து எழும் போது, அது கழுமுனை வழியாக ஒரு பாதையை உருவாக்கி மேலே செல்ல முயல்கிறது. அது படிப்படியாக மேலெழும்போது மனத்தின் திரைகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகுவது போலாகின்றன. பல்வேறு காட்சிகளும் அற்புதமான ஆற்றல்களும் யோகிக்குக் கைகூடுகின்றன குண்டலினி சக்தி மூளையை அடையும் போது யோகி, உடல் மற்றும் மனத்திலிருந்து முற்றிலுமாகப் பிரிந்தவனாகிறான்; ஆன்மா, சுதந்திரமாக இருப்பதை உணர்கிறது.
 

முதுகுத்தண்டு ஓர் அதிசயமான வகையில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். எட்டு என்ற எண்ணை சமதள நிலையில் எழுதினால் (8) அதில் இரண்டு பகுதிகள் உள்ளன, அவை நடுவில் இணைந்துள்ளன, இத்தகைய எட்டுகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்கொண்டே போனால், அதன் சேர்க்கை முதுகுத்தண்டு போல் தோன்றும். இடது பக்கம்இடை, வலதுபக்கம் பிங்கலை. முதுகுத்தண்டின் ஊடே செல்லும் நாளம் சுழுமுனை. முதுகுத்தண்டின் கீழ்ப் பாகம் முடிகின்ற இடத்தில் எலும்பில் ஒரு மிக நுண்ணிய நரம்பின் வழியாகவும் சுழுமுனை நாடி செல்கிறது; அது மிகமிக நுட்பமானது. சுழுமுனையின் கீழ்நுனியின் துளை மூடியிருக்கும். அது மூலக்கிரந்தி என்ற நரம்பு மண்டலத்திற்கு அருகில் உள்ளது. தற்கால உடலியல் வல்லுனர்கள் அது முக்கோண வடிவத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். முதுகுத் தண்டில் உள்ள வெவ்வேறு நரம்பு மண்டல மையங்களை, யோகி கூறும் வெவ்வேறு தாமரை களோடு ஒப்பிடலாம்.
 

அடியிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி மேலே மூளையிலுள்ள ஆயிரம் இதழ்த் தாமரையாகிய சகஸ்ரா ரத்தில் முடிவு பெறும் முதுகுத்தணடில் பல சக்கரங்களாகிய மையங்களை யோகி உணர்கிறான். இந்த நரம்பு மண்டல மையங்கள் தாமரைகளைக் குறிக்கின்றன என்று கொண்டால், யோகியின் கருத்தை நவீன உடலியல் வல்லுனர்களின் மொழியில் எளிதில் புரிந்துகொள்ளலாம். இந்த நரம்புகளில் இருவகைச் செயல்கள் நடைபெறுவது நமக்குத் தெரியும். ஒன்று உள்முகமாகச் செல்வது, மற்றொன்று வெளிமுகமாகச் செல்வது; ஒன்று ஞானேந்திரியத்தின் வழிப்பட்டது; மற்றது கர்மேந்திரியத்தின் வழிப்பட்டது; ஒன்று மையத்தை நோக்கிச் செல்வது, மற்றது மையத்திலிருந்து விலகிச் செல்வது; ஒன்று உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச் செல்வது. மற்றது மூளையிலிருந்து வெளி உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வது. இறுதியில் இந்த அதிர்வுகளெல்லாம் மூளையோடு இணைக்கப்பட்டுள்ளன.
 

இனி வரும் விளக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு முன் பல உண்மைகளை நினைவுகூர வேண்டியுள்ளது. முதுகுத்தண்டு, மூளையிலல் ஒருவகைக் குமிழ் வடிவம் கொண்ட முகுளம் என்ற பகுதியில் முடிவடைகிறது. முகுளம் மூளையோடு ஒட்டிக்கொண்டு இல்லை, மூளையிலுள்ள ஒரு திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தலையில் ஏதாவது அடிபட்டால், அந்த வேகம் திரவத்தால் சமன் செய்யப்பட்டுவிடும்; முகுளத்தைத் தாக்காது. இது நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை.
 

அடுத்ததாக எல்லா மையங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மூன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவை மூலாதாரம் (அடியிலிருப்பது), சகஸ்ராரம் (மூளையிலுள்ள ஆயிரம் இதழ்த் தாமரை), மணிபூரகம் (தொப்புளிலுள்ள தாமரை).
 

அடுத்து இயற்பியலிலிருந்து ஓர் உண்மையை எடுத்துக் கொள்வோம். மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சக்திகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் மின்சாரம் என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்ததெல்லாம் அது ஒரு வகையான இயக்கம் என்பது மட்டுமே. பிரபஞ்சத்தில் வேறு பலவித இயக்கங்களும் உள்ளன. அவற்றிற்கும் மின்சாரத்திற்கும் என்ன வேறுபாடு? இந்த மேஜை எதனால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த மூலக்கூறுகள் எல்லாம் வெவ்வேறு திசைகளில் இயங்குகின்றன. அவற்றை ஒரே திசையில் இயங்கச் செய்ய வேண்டுமானால் அது மின்சாரத்தின் வழியாகத்தான் முடியும். மின்னியக்கம் ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளை ஒரே திசையில் இயங்கச் செய்கிறது. ஓர் அறையிலுள்ள எல்லாக் காற்று மூலக்கூறுகளையும் ஒரே திசையில் இயங்கச் செய்தால், அந்த அறை ஒரு பெரிய மின்சாரக் கொள்கலனாகிவிடும். அடுத்து, உடலியலிலிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொள்வோம். சுவாச உறுப்புக்களை ஒழுங்குப்படுத்தும் மையம், நரம்பு மண்டலம் முழுவதையுமே ஒருவிதமாக அடக்கியாளும் ஆற்றல் பெற்றுள்ளது.

  சுவாசப் பயிற்சி ஏன் அவசியம் என்பதை இப்போது பார்ப்போம். முதலாவதாக, லயத்துடன் கூடிய சுவாசத்தினால் உடலிலுள்ள மூலக்கூறுகள் எல்லாம் ஒரே திசையில் இயங்கத் தலைப்படுகின்றன. மனம் சுயேச்சையாக மாறும்போது நாடி இயக்கங்கள் மின்சக்தியைப் போன்றதோர் இயக்கமாக மாறுகின்றன. மின்னோட்டத்தின் கீழ், நரம்புகளின் இருமுனைப் பகுதிகளிலும் எதிர் சக்திகள் உருவாகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்கல்பம், நரம்பு இயக்கமாக மாறும்போது அது மின்சக்தி போன்ற ஒன்றாக மாறுகிறது என்பதையே இது காட்டுகிறது. உடலின் இயக்கங்கள் எல்லாமே பரிபூரண லயத்துடன் செயல்படும்போது உடலே சங்கல்பத்தின் ஒரு மாபெரும் கொள்கலன்போல் ஆகிவிடுகிறது. அபரிமிதமான இந்தச் சங்கல்பமே யோகி வேண்டுவது. இது சுவாசப் பயிற்சியின் ஓர் உடலியல் விளக்கம். உடலில் ஒரு லயத்துடன் கூடிய செயல்பாட்டை உருவாக்க இது தலைப்படுகிறது; சுவாச மையம் வழியாக, உடலின் வேறு மையங்களைக் கட்டுப்படுத்த நமக்கு உதவுகிறது. சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வதே.
 

காண்பது கற்பனை செய்வது, கனவு காண்பது எல்லாவற்றையுமே ஆகாசத்தில் தான் செய்ய வேண்டும். சாதாரண வெளியாகிய இது மஹாகாசம் அல்லது பூதாகாசம். ஒரு யோகி மற்றவர்களின் எண்ணங்களை அறியும்போது, புலன் கடந்தவற்றை உணரும்போது அவற்றை மற்றொருவிதமான வெளியில் அதாவது சித்தாகாசத்தில், மனவெளியில் அதாவது சித்தாகசத்தில், மனவெளியில் காண்கிறேன். காட்சியானது தனக்கு விஷயமாகிய பொருளற்றிருக்கும் போது, ஆன்மா தனது சொந்த இயல்பில் பிரகாசிக்கும் போது அது சிதாகாசம் அல்லது அறிவுவெளி என்று அழைக்கப்படுகிறது. குண்டலினி விழித்தெழுந்து சுழுமுனை நாடியில் நுழையும்போது காட்சிகள்