இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

சீடர்களுக்கு தீட்சை வழங்குதல்

சீடர்களுக்கு தீட்சை வழங்குதல்

மற்றொரு நிகழ்ச்சி,ரசிக்லால் ராய் என்பவருக்கு அன்னை தீட்சை தந்தார். அவருடைய குல தெய்வம் என்னவென்பதை அறிந்து கொள்ள அன்னை விரும்பினார். ஆனால் ரசிக்லாலுக்கு அது தெரியவில்லை. உடனே தியானத்தில் ஆழ்ந்தார் அன்னை. சிறிது நேரத்திற்குப்பிறகு இது தான் உன் குல தெய்வம் என்று தெய்வத்தைக்கூறி உரிய மந்திரத்தை அளித்து தீட்சையும் தந்தார். வீடு சென்ற ரசிக்லால் தன் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் விசாரித்தபோது அன்னை கூறியது முற்றிலும் சரியாக இருப்பதைக் கண்டார். இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனையோ பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளன.

ஏற்கனவே வேறொரு குருவிடம் தீட்சை பெற்றவர்கள் மறுபடியும் தீட்சை பெறுவதற்காகச் சில வேளைகளில் அன்னையிடம் வருவார்கள். பொதுவாக அன்னை இப்படிப்பட்டவர்களுக்கு தீட்சை தருவதில்லை என்றாலும் சிலர் மிகுந்த ஆர்வத்தோடு வேண்டிக்கண்ணீர் வடிப்பார்கள். அவர்களுக்கு மட்டும் தீட்சை தருவார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப்பற்றி அன்னை சொல்லும் போது என்னால் யாருடைய கண்ணீரையும் பார்க்க முடிவதில்லை.ஆதனால் அத்தகையவர்களுக்கு தீட்சை தருமுன்,அவர்களுக்கு நான் தரப்போகும் மந்திரத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்துமாறு குருதேவரை வேண்டிக் கொள்வேன்.பிறகு அவரது கட்டளைப்படி ஏற்கனவே அவர்கள் பெற்றிருக்கும் மந்திரத்துடன் மற்றொரு மந்திரத்தையும் சேர்த்து தீட்சை அளிப்பேன். இப்படி நான் கூடுதலாகத் தருகின்ற மந்திரம் அவர்களுக்கு இறைவனிடமும் அவரது திருநாமத்திலும் புதிய நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

இப்படி ஏற்கனவே குல குருவிடம் தீட்சை வாங்கிய ஒருவர் அன்னையிடம் மறுபடியும் தீட்சை பெற்றார். இதையறிந்த அந்த குரு கோபம் கொண்டு,சீடரைச் சபித்து அழித்துவிடப் போவதாகக் கூறினார். சீடர் மிகுந்த கலவரத்தோடு அன்னையிடம் வந்தார். அதற்கு அன்னை யாருடைய சாபமும் உன்னை ஒன்றும் செய்யாது என்று அவரைத் தேற்றினார். அந்த குரு கூறியது போல் எதுவும் நடக்கவும் இல்லை. ஆனால் தம்மிடம் இவ்வாறு தீட்சை பெறுபவர்கள் தங்கள்  குலகுருவிற்கு ஆண்டு தோறும் தர வேண்டிய காணிக்கையை நிறுத்தாமல்  கொடுக்குமாறு பார்த்துக் கொள்வார். அன்னை.

அன்னை வங்கமொழி மட்டுமே தெரியும். அவர் தென்னிந்தியாவில்  பயணம்  செய்த போது பக்தர்களோடு பேசமுடியவில்லை. அவரிடம் வந்தவர்கள் அம்மா மந்திரம் , அம்மா தீட்சை என்ற வார்த்தைகளை மட்டுமே கூறினார்கள். அவர்களோடு எந்த வித பேச்சும் இல்லாமலே அவர்களுக்கு ஏற்ற,அதே வேளையில் அவர்கள் பின்பற்றி வந்த சம்பிரதாயத்திற்கும் உகந்த இஷ்டதெய்வத்தையும் மந்திரத்தையும் மிகப்பொருத்தமாக அன்னை அவர்களுக்குத்தந்தார். இது அவரால் எப்படி முடிந்தது என்பதைக்கேட்டபோது அன்னை சிலருக்கு நான் தீட்சையளிக்க ஆரம்பித்தவுடனே என் மனத்தில் இதைச் சொல்” அதைச் சொல் என்று தோன்றும்.சிலருக்கு உபதேசம் செய்யும் போதோ எனக்கு எதுவுமே தெரியாதது போலிருக்கும்.மனத்திலும் எந்த நினைவும் தோன்றாது. பேசாமல் அப்படியே உட்கார்ந்திருப்பேன்.நெடுநேரம் ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு அவர்களுடைய மந்திரம் என் மனக்கண் முன் தோன்றும்,நல்ல சாதகர்களுக்கு தீட்சை தரும்போது ,உடனடியாகவும் தானாகவும்அவர்களுக்குரிய மந்திரம் என் மனத்தில் தோன்றிவிடும் என்று கூறியுள்ளார்.

 அன்னைக்கு மந்திரங்களில் எவ்வளவு ஆழ்ந்த ஞானம் இருந்தது என்பதைக் கீழ் வரும் நிகழ்ச்சி விளக்குகிறது. ஒரு முறை உத்போதனில் அன்னை ஒருவருக்கு சக்தி மந்திர தீட்சை அளித்தார். பின்னர் கிழே சுவாமி சாரதானந்தரிடம் சென்று ஜபம் செய்யும் முறையைத் தெரிந்து கொள்ளுமாறு அவரிடம் கூறினார். பக்தர் சென்று கேட்டபோது சுவாமிகளும் அவற்றைத் தெளிவாக விளக்கினார். பேச்சுவாக்கில் அந்த பக்தர் தம்மையறியாமல் மந்திரத்தை உச்சரித்து விட்டார். சவாமிகள் மந்திர சாஸ்திரங்களைப்பற்றி நன்றாக அறிந்தவர்.  இந்த மந்திரத்தைக்கேட்டபோது அதில் ஏதோ தவறு இருப்பது போல் அவருக்கு ப் பட்டது. எனவே அன்னையிடம்  சென்று அதனைத் தெளிவுபடுத்தி வருமாறு அனுப்பினார். அன்னை மந்திரத்தைக்கேட்ட பிறகு,அது சரி தான் என்று கூறி அனுப்பினார்.சுவாமிகளுக்கு சந்தேகம் தீரவில்லை எனவே பக்தரை மீண்டும் மேலே அனுப்பினார். இந்த முறையும் முன்பு தெரிவித்ததையே அன்னை கூறினார். ஆனாலும் சுவாமிகளுக்கு  அந்த மந்திரத்தில் ஏதோ தவறு இருப்பதாக தோன்றியது. எனவே அந்த பக்தரிடம் மீண்டும் மேலே சென்று அன்னையிடம் நன்றாக உச்சரித்துக்காட்டி உறுதி பெறுமாறு கூறி,அனுப்பினார். இந்த முறை அன்னை மந்திரத்தைக் கேட்டுவிட்டு சற்று உறுதியான குரலில், இது சரியான மந்திரம் தான் .ஜபம் செய்கின்ற முறையை மட்டும் உனக்குக் கற்றுத்தருமாறு சரத்திடம் சொல் என்று கூறினார். சுவாமிகளும் மௌனமானார். காலம் கடந்தது . அன்னையின் மகா சமாதிக்குப்பிறகு ஒரு நாள் சுவாமிகள்  சக்தி வழிபாடு பற்றிய ஓர் அரிய நூலைப்படிக்க  நேர்ந்தது. அதில் அன்னை அந்த பக்தருக்கு அளித்த மந்திரம் அப்படியே இருந்தது. திகைத்துவிட்டார் சவாமிகள். தாம் எவ்வளவோ கற்றிருந்தும் அன்னையின்  ஆழ்ந்த ஞானத்திற்கு முன் தமது அறிவு எதுவுமே இல்லை என்பதைக் கண்டார் அவர்.


தடைகள் இல்லாத ஒரு வாழ்வு கிடையாது.ஆன்மீக வாழ்வில் அவை எண்ணற்றவை. உண்மை குரு ஒருவரால் மட்டுமே சீடனுக்கு ஏற்பட்டுள்ள தடையின் உண்மைப் பரிமாணத்தை உணர்ந்து அவனுக்கு உதவ முடியும். தீட்சையளிப்பதும் சீடர்களின் சாதனை முறைகளில் எழும் வடைகளை விலக்கி அவர்களுக்கு வழிகாட்டுவதும் அன்னையின் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள். ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே காண்போம்.

தீட்சை பெற்ற பின் முறையான பயிற்சியின்மையாலும் வேறு பல காரணங்களாலும் பலர் மந்திரத்தை மறந்துவிடுவர். இன்னும் சிலருக்கு மந்திரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டோமா இல்லையா என்ற சந்தேகம் அடிக்கடி வந்துவிடும். அதைத் தெளிவு படுத்திக்கொள்ள அன்னையிடம் வருவார்கள். ஒரு பெண், தான் தீட்சை பெற்ற மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இத்தகைய சந்தேகத்தோடு அன்னையிடம் வந்தாள். அவளது சந்தேகத்தைக் கேட்டதும் அன்னை,அப்படியா! எனக்கு நான் தீட்சை தந்து வெகுநாளாகிறதே.இன்னும் அந்த மந்திரம் எப்படி என் நினைவில் இருக்கும்? சரி கொஞ்சம் இரு வருகிறேன் என்று கூறி விட்டு பூஜையறைக்குள் சென்றார்.சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்ததும், மகளே! இந்த மந்திரத்தைத் தானே உனக்குத் தந்தேன் என்று ஒரு மந்திரத்தைக்கூறினார். அந்த சிஷ்யையும் அதே மந்திரம் தான் என்று கூறி,தானும் அதையே ஜபித்து வருவதாகச் சொன்னாள்.

அடுத்து நாம் காணப்போகின்ற நிகழ்ச்சி பொதுவாக இன்றும் நாம் பரவலாகக் காண்கின்ற குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டது.ராஜயோகம் போன்ற நூல்களைப் படித்ததும் அதில் காணப்படுகின்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் இயல்பாக எழுவது தான் . ஏனெனில் அது கூறுகின்ற ஒளிக் காட்சிகளும் ஒலி அனுபவங்களும் எந்த மனத்தையும் கவர்ந்திழுக்க கூடியவை.ஆனால் பயிற்சி செய்பவருக்குரிய தகுதிகளாக அந்த நூல்கள் கூறுபவற்றை மட்டும் நாம் விட்டுவிடுகிறோம்.  அந்தத் தகுதிகளை அடைந்த பின் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது நம் மனத்தில் உறைப்பதில்லை. எடுத்ததும் பயிற்சிதான்! விளைவு? தீராத நோய்கள்,மூளைக்கோளாறு இவையே.ரங்கூனில் வாழ்ந்த சியாமா சரண் என்பவரும் சுவாமிவிவேகானந்தரின் ராஜயோகம் என்னும் நூலைப்படித்தார். பின்னர் ஒரு நாளைக்கு சுமார் மூன்று மணிநேரம் பிராணாயாமம் பழகத் தொடங்கினார்.அதன் காரணமாக,அவர் காதுகளில் ”உஸ்” என்னும் பெரும் ஓசை எப்போதும் கேட்கத் துவங்கியது. இந்தச் சத்தம் அவருக்குப் பெரும் இடையூறாக இருந்தது. அலுவலக வேலைகளில் மனம் ஒன்றி அவரால் வேலை செய்ய முடியவில்லை. பல மருத்துவர்களிடம் சிகிச்சை செய்து பார்த்தார். பலனேதும் ஏற்படவில்லை.இறுதியில் விடுப்பு எடுத்துக்கொண்டு கல்கத்தா வந்தார். பேலூர் மடத்திற்குச் சென்றபோது அன்னையைப்பற்றிக்கேள்விப்பட்டார். உடனே ஜெயராம்பாடி சென்றார்.

ஜெயராம்பாடியின் புனிதமான சூழ்நிலையே அவருக்கு அமைதியைத் தந்தது.இவ்வளவு காலம் பல்வேறு வழிகளில் துன்புறுத்தி அவரை அலைகழித்து வந்த அந்த ஓசையும் நின்று விட்டது. பிறகு அன்னையைச் சந்தித்த அவர்.தனக்கு பிராணாயாமத்திலும் மற்ற யோகப் பயிற்சிகளிலும் உள்ள ஆர்வத்தைத் தெரிவித்தார். இதைக்கேட்ட அன்னை,அத்தகைய கடுமையான பயிற்சிகளைச் செய்யும் அளவிற்கு உன் உடம்பிலும் மனத்திலும் சக்தியைச்சேமித்து வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கு சியாமா சரண்.அப்படியானால் வேறு என்னதான் வழி? என்று கேட்டார். அப்போது அன்னை நீ செய்ய வேண்டியவற்றை நான் சொல்கிறேன் என்று  கூறி அவருக்கு தீட்சை தந்து,ஒரு நாளைக்கு இரண்டு முறை ஜபம் மட்டும் செய்யும்படி கூறினார். ஆனால் கடுமையான பயிற்சிகளில் நாட்டம் கொண்ட சியாமா சரணுக்கு அன்னை கூறிய எளிய வழி திருப்தி அளிக்கவில்லை.ஒரு நாளைக்கு மூன்றுமுறை ஜபம் செய்ய விரும்புவதாகக்கூறி வேறு ஏதாவது பயிற்சிகளைச் சொல்லித் தரும்படியும் வேண்டினார். அன்னையோ ஒரு நாளைக்கு இரண்டுமுறை மட்டுமே ஜபம் செய்ய வேண்டும் என்று மறுபடியும் கூறி.உன் உடம்பும் மனமும் தாங்கக் கூடியது இவ்வளவு தான் என்றார். எப்படி அன்னையால் சீடர்களின் மனத்தையும் அதன் தகுதியையும் புரிந்து செயல்பட முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது அல்லவா!இனி நாம் காணப்போகின்ற நிகழ்ச்சிதான்  அன்னையின் தடை நீக்கும் ஆற்றலுக்கு ஈடிணையற்ற எடுத்துக்காட்டாகும். இதுவும் காளிகிருஷ்ணரின் வாழ்வில் நடைபெற்றது தான். இவர் பின்னாளில் சுவாமி விரஜானந்தர்  என்ற பெயரில் துறவியாகி ,சுவாமிஜியின் அருளாணைப்படி பணிகளில் ஈடுபட்டுவந்தார். சுவாமிஜி 1902-ஆம் ஆண்டு மறைந்தார்.இந்தப்பிரிவை விரஜானந்தரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே சுமார் ஒன்றரையாண்டு காலம் மாயாவதியின் அருகில் ஏகாந்தமாக குடில் ஒன்றில் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார். முழுமையான மௌன விரதம் அனுசரித்து ஒரு நாளில் பதினைந்து மணிநேரம் ஜபத்திலும் தியானத்திலும் கழித்தார்.

இந்தக் கடுமையான தவம் அவரது நரம்புமண்டலத்தைப்பாதித்தது.உடம்பெல்லாம் மோசமாகத் தாக்கியது.நாளாக நாளாக தன் மனம் எந்த வேலைகளிலும் ஈடுபடவிரும்பாதது போல் அவருக்குத் தோன்றியது. மனம் அப்படியே வெறுமை   யாகி விட்டதாக அவர் உணர்ந்தார். உடனே தீவிரசாதனைகளை விட்டுவிட்டு சாஸ்திரங்களைப் படிக்கத் துவங்கினார். அப்போதும் அவரது நிலையில் மாறுதல் ஏற்படவில்லை. அது மட்டுமின்றி உடல்நிலையும் கவலைக்கிடமாகியது. எனவே பேலூர் மடத்திற்குத் திரும்பினார். அவரது நிலைமையைக் கண்டு அதிர்ச்சியுற்ற மூத்த துறவியர் அவரைப் பிரபல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பயனேதும் ஏற்படவில்லை.

இப்படி சுமார் ஆறு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் அவருக்கு அன்னையிடம் செல்ல வேண்டுமென்று தோன்றியது.உடனே ஜெயராம்பாடிக்குப் புறப்பட்டுச் சென்றார்.ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் அன்னையைச் சந்திக்கிறார். எலும்பும் தோலுமாக வந்த அவரைக் கண்டதும் அன்னை திடுக்கிட்டு விட்டார். என்ன கோலமாக இருக்கிறான், என்று அவரது தாயுள்ளம் பதறியது.விரஜானந்தரின் நிலைமைக்குக் காரணம் உடல் நோய் அல்ல என்பது அவரைப் பார்த்ததுமே அன்னைக்குத் தெரிந்தது. உடனே அவரிடம் மகனே! நீ உன் மனத்தை எங்கே ஒருமைப்படுத்துகிறாய்? தலையிலா,இதயத்திலா? என்று கேட்டார். அதற்கு விரஜானந்தர்,தலையில் தான் அம்மா,ஏனெனில் அங்கு மனத்தை ஒருமைப்படுத்தி  தியானிப்பது இதமாக இருக்கிறது. மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது, என்றார். பதறிவிட்டார் அன்னை.மகனே நீ என்ன செய்து விட்டாய்! அது இறுதிநிலையில் செய்ய வேண்டியதாயிற்றே! திடீரென்று மனத்தை அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு போக முடியுமா? முதலில் தலையில் மனத்தை ஒருமைப்படுத்திவிட்டு பின்னர் இதயத்திற்குக் கொண்டுவர வேண்டும். அங்கு தான் இஷ்டதெய்வத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார்.

என்ன ஆச்சரியம்! எவ்வளவோ சிகிச்சைகளும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடுகளும் சாதிக்க முடியாததை அன்னையின் அறிவுரை சாதித்தது. அன்னை கூறியது போல் தியான முறையை மாற்றியதும் விரஜானந்தரின் உடல்  மற்றும் மனநிலைகளில் பிரமிக்கத்தக்க மாறுதல் உண்டாகியது. மிகக்குறுகிய காலத்தில் அவரது பழைய நிலைமைதிரும்பியது. இதற்காகத் தான் பூரண குரு ஒருவர் வேண்டும்.அன்னை மட்டும் எனக்கு வழிகாட்டியிராவிட்டால்  என் வாழ்வே நாசமாகியிருக்கும்  என்று விரஜானந்தர் பின்னாளில் நினைவு கூர்ந்தார். உடம்பைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருக்கின்ற கைதேர்ந்த மருத்துவரால் மட்டுமே வியாதி எதுவானாலும் அதற்குச் சிகிச்சை அளிக்க முடியும், அது போல் மனித மனத்தின் செயல்பாடுகள் அமைப்பு அனைத்தும் அறிந்த ஒரு குருவால் மட்டுமே சீடனின் வாழ்வில் வருகின்ற இது போன்ற தடைகளை நொடியில் விலக்க முடியும்


கொடுக்கல் வாங்கல் என்பது இயற்கையெங்கும் காணப்படும் நியதி.சீடனின் ஆன்மீக வாழ்வைவளப்படுத்துவதற்காக குரு தனது ஆற்றலை அளிக்கிறார். அதே வேளையில் அவனது பாவங்களை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு உண்மையிலேயே நன்மை செய்யும்போது குருவின் ஆற்றல் குறைவதுடன் அவர்  அவனது பாவங்களின் பலனையும் அனுபவிக்க நேர்கிறது. தவ ஆற்றல்  மிக்க குருவினால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். இதன் காரணமாகத்தான் சாதாரண குருவினால் மிகச் சிலருக்கே உண்மையாக நன்மை செய்ய இயலும் .அன்னை நூற்றுக்கணக்கானோருக்கு அருள் புரிந்தார். அது எவ்வளவு கடினமானது என்பதை உணர்வதற்கு அன்னை ஒருவருக்கு தீட்சை தந்த போது கூறியவற்றை நினைவிற்குக் கொண்டுவருவது போதுமானது, குருவின் ஆற்றல் அவர் அளிக்கின்ற மந்திரத்தின்  மூலம் சீடனுள் பாய்கிறது. அதே வேளையில் சீடனின் பாவங்களை குரு தன்னிடம் ஏற்றுக்கொள்கிறார். அதன் பலனாக அவர் நோய்களால் பாதிக்கப்படுகிறார். குருவாக இருப்பது மிகமிகக் கடினம்.பாவங்களுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது பொல் நல்ல சீடனால் அவர் இதம் பெறவும் செய்கிறார். சிலர் வேகமாக முன்னேறுகிறார்கள். சிலரது வளர்ச்சி மெதுவாக உள்ளது. அது அவரவர் முன்வினைப்பயன்களால் அடைந்துள்ள மனப்பக்குவத்தைப் பொறுத்தது. அதனால் தான்  ராக்கால் தீட்சையளிக்க த் தயங்குகிறான். அவன் என்னிடம் அம்மா! தீட்சையளித்த மறுகணமே  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. மந்திர தீட்சை என்றாலே என் உடல் தகிக்கத்துவங்கி விடுகிறது என்று கூறினான்.

பெரும்பாலும் மேற்கூறிய காரணத்துக்காக சுவாமி பிரம்மானந்தர் அவ்வளவு எளிதாக யாருக்கும் தீட்சை கொடுக்க மாட்டார். மிகப்பலரை அன்னையிடம் அனுப்பி விடுவார். ஆனால் அன்னையைப் பொறுத்த வரையில் அவரது எல்லையற்ற தாய்பாசமும் கருணையும்,தீட்சை தருவதால் உடலுக்கு ஏற்படும் துன்பங்களை மறக்கச் செய்தன. எல்லோருக்கும் அவர் தீட்சை தந்தார். அன்னையின் இந்த மகோன்னதமான குணத்தைக் கண்ட சுவாமி பிரேமானந்தர்,எங்களால் விழுங்க முடியாத விஷங்களை  எல்லாம் தாங்கள் அன்னையிடம் அனுப்பிக்கொண்டிருக்கிறோம். அவரோ எல்லோருக்கும் அடைக்கலம் தந்து, அனைவருடைய பாவங்களையும்  ஏற்று அவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அன்னையைப் புனிதத்தின் திரண்ட வடிவம் என்று வர்ணிக்கிறார் சுவாமி அபேதானந்தர்.அவரது எண்ணம் சொல்,செயல் அனைத்திலும் புனிதத்தின் பேரமைதி ஒன்றே தவழ்ந்தது.எனவே புனிதமற்ற பாவமிக்க ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொள்ள நேரும் போது அவரது உடல் வேதனையால்  துடித்தது. தூய்மையற்ற மனமும் பாவச் சிந்தனைகளும்  உடைய சிலர் அவரது பாதங்களைத் தொடும் போது இதை நேரிடையாகவே காண முடிந்தது. அத்தகையோர் அன்னையின் பாதத்தைத் தொட்டால் அவரது பாதங்கள் தானாகப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளும். தூய்மையில்லாத மனிதர்கள் இப்படி அவரது திருவடிகளைத் தொட்ட போது அன்னை எவ்வளவு வேதனையை அனுபவித்தார் என்பதை அவரது சீடர்கள் நேராகவே கண்டிருக்கிறார்கள்.

1916-ஆம் ஆண்டு பேலூர் மடத்தில் கொண்டாடப்பட்ட  துர்க்கா பூஜையில் அன்னை கலந்து கொண்டார். அப்போது கணக்கற்றோர் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினர். சிறிது நேரம் சென்ற பின் அன்னை தம் இரண்டு பாதங்களையும் கங்கை நீரால் நெடுநேரம் கழுவினார். இதைக்கண்ட யோகின்மா,அம்மா என்ன காரியம் செய்கிறீர்கள்?இப்படி கழுவிக்கொண்டே இருந்தால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளப்போகிறது என்றார். அதற்கு அன்னை நீ சொல்வது சரிதான் யோகின்.ஆனால் நான் ஏன் இப்படிச் செய்கிறேன் என்பதை உனக்கு எவ்வாறு விளக்குவேன்.சிலர் என் கால்களைத் தொட்டு வணங்கும்போது எனக்கு இதமாக இருக்கிறது. ஆனால் வேறு சிலர் தொடும் போதோ நெருப்பைக் கொட்டினாற்போன்ற எரிச்சல் உண்டாகிறது. குளவி கொட்டியது போல் வலிக்கிறது. கங்கை நீரால் கழுவும் போது தான் சிறிதாவது நிவாரணம் கிடைக்கிறது என்றார்.

ஜெயராம்பாடியில் இத்தகைய ஒரு சம்பவம் நடந்தது. வழக்கமாக அன்னைக்குத் தொண்டு செய்கின்ற சீடர் ஒரு நாள் வெளியே போயிருந்தார். அவர் திரும்பி வந்த போது வராந்தாவில் ஒரு பாயில் அன்னை படுத்திருந்தார். சீடர் வந்ததும் அன்னை அவரிடம் வயதான மனிதர்  ஒருவர் வந்தார்.அவர் தொலைவில் வருவதைப் பார்த்துவுடனே நான் என் அறைக்குள் சென்று படுக்கையில் உடகார்ந்து கொண்டேன். அவர் என் பாதங்களைத் தொட்டு வணங்குவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். நான் எவ்வளவோ தடுத்துப் பின்வாங்கியும், பிடிவாதமாக அவர் என் பாதங்களைத் தொட்டு வணங்கினார். அந்த நேரத்திலிருந்து கால்களிலும் வயிற்றிலும் பொறுக்க முடியாத வலியால் நான் துடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று நான்கு முறை பாதங்களை கழுவி விட்டேன்.அப்படியும் எரிச்சல் நிற்கவில்லை. நீ மட்டும் இங்கே இருந்திருந்தால் என் சைகை மூலம் அந்த மனிதரைப்பற்றித் தெரிந்து கொண்டு,அவர் என் கால்களைத் தொடாதபடி செய்திருப்பாய் என்றார்.

கல்கத்தாவில் இவ்வாறு பலமுறை நிகழ்வதுண்டு.குறிப்பாகத் திருவிழா நாட்களில் எல்லோரும் வந்து அன்னையின் திருவடிகளைத் தொட்டு வணங்கும்போது இது ஓர அன்றாட நிகழ்ச்சியாகவே இருக்கும். சில வேளைகளில் தமக்கு ஏற்படும்  தமக்கு ஏற்படும் வேதனையை மற்றவர்களிடம் சொல்ல நேர்ந்தால் உடனே உடனே அன்னை, இவற்றையெல்லாம்  சரத்திடம் சொல்லிவிடாதே.அதன் பிறகு மக்கள் இங்கு வருவதையே  அவன் நிறுத்தி விடுவான்  என்பதையும் கூறுவார். அன்னையின் கருணை அத்தகையதாக இருந்தது. தாம் துன்பப்பட்டாலும் தம்மை வணங்குவதால் மக்கள் பெறும் ஆறுதலைத் தடுக்க அவர் விரும்பவில்லை.


ஒரு முறை கோயால்பாரா ஆசிரமத்தில் அவர் இருந்த போது சீடர் ஒருவர், தாம் அன்னையின் பாதங்களைத் தொட்டால் தன்னுடைய பாவத்தின் காரணமாக அவருக்கு வேதனை தோன்றுமோ என்று தயங்கி நின்றார். அப்போது அன்னை மகனே அதைப்பற்றி எல்லாம் நி கவலைப்படாதே.நாங்கள் இதற்காகத்தான் பிறந்திருக்கிறோம்.மற்றவர்களுடைய பாவங்களையும் துன்பங்களையும் நாங்கள்“ ஏற்று அனுபவிக்கவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்? அவர்களின் பொறுப்புகளை எல்லாம் யார் தாம் ஏற்றுக் கொள்வார்கள்?என்றார்.

இறுதி நாட்களில் அன்னையின் உடல் மிகவும் பலவீனமாகி,பிறருடைய உதவியின்றி எழவோ அமரவோ முடியாத நிலையில் இருந்தார். அப்போது சீடர்கள் அன்னையின் வேதனையைப்பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களள் ஒருவர் அன்னை உடல் நலமடைந்த பின்னர் தீட்சைக்கென்று யாரையும் அவரிடம் அனுமதிக்கக்கூடாது.எண்ணற்றோரின் பாவங்களை ஏற்றுக் கொண்டதால் தானே அவர் இப்படித் துன்புற நேர்கிறது! என்று கூறினார். இதைக்கேளிவியுற்ற அன்னை மெல்ல ச் சிரித்தபடி நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? வெறும் ரசகுல்லா சாப்பிடுவதற்காகத் தான் குருதேவர் இந்த உலகத்திற்கு வந்ததாக நினைத்து கொண்டிருக்கிறாயா? என்றார்.

தீட்சை தந்தால் அன்னை மிகவும் துன்புறுகிறார்  என்பதை அறிந்து வேதனையுற்ற ஒரு பக்தர் ஒரு முறை அன்னையிடம் அம்மா பக்தர்களின் பாவங்களை ஏற்று கொண்டதால் உங்களுக்கு வாதநோய் வந்து நீங்கள் துன்பப்படுவதைக் கண்டு மிகுந்த வேதனையாக இருக்கிறது. நான் தங்களிடம் உள்ளமுருகி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். என் காரணமாக நீங்கள் துன்பப்படக்கூடாது என் வினைப்பயன்களுக்கான  துன்பம் முழுவதையும் நானே அனுபவிக்கும்படி எனக்கு அருள் செய்ய வேண்டும் என்றார். இதைக்கேட்ட  அன்னை அமைதியாக, அதுஎப்படி முடியும் மகனே!அதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும்?நீ சுகமாக இரு! உனக்காக என்னைத்துயரப்படவிடு என்றார்.

இது வரை நாம் கண்ட மூன்று பண்புகளும் ஓர் உண்மை குருவிடம் காணப்படக் கூடியவைதாம்.சாதாரண குரு மிகச்சிலருக்கு நாம் மேற்கண்டது போல் உண்மை வழிகாட்ட முடியும். ஆனால் அன்னை ஆன்மீக ஆற்றலின் சுரங்கமாக இருந்ததால் அவரால் எண்ணற்றோருக்கு வழிகாட்ட முடிந்தது. ஆனால் அன்னையின் தனித்தன்மை இதில் இல்லை.ஒரு சாதாரணகுருவிலிருந்து அன்னை இரண்டு விஷயங்களில் வேறுபட்டு நிற்கிறார்.

அவை-அன்பு,2)அபயம்,. அன்னையிடம் சென்ற ஒவ்வொருவருமே இதனை உணர்ந்தனர். பிரபஞ்சம் தழுவிய தாய்மையையும் தாம் குருதேவரின் அருள் சக்தி என்ற உணர்வையும் அடிப்படையாகக் கொண்டிருந்தால் தான் உலகம் இதுவரை கண்டிராத இத்தகைய அன்பை அவரால் அனைவரிடமும் செலுத்த முடிந்தது. சென்றோர் அனைவருக்கும் அவரால் அபயம் அளிக்க முடிந்தது.

அன்னையின் அருகில் சென்ற அனைவருமே அவரது புனித அன்பு தங்களைத்தழுவி பேரமைதியை அளிப்பதை உணர்ந்தனர். அன்னை ஒவ்வொருவரிடமும் அன்பு செலுத்தினார் என்பதில்லை.அவர் அன்பின் ஒரு திரண்ட வடிவாக இருந்தார். அவரிடம் சென்ற அனைவரும் அதன் இனிமையையும் இதத்தையும் உணர்ந்தனர். அன்பு என்பது ஓர் ஒருமை சக்தி.அது ஒன்றாக இருக்கும் போது மட்டுமே உண்மை நிலையில் இருக்கிறது. இவரிடம் அவரிடம் என்று அதனைப்பிரித்துச் செலுத்தும் போது அது தன் புனிதத்தை இழந்து விடுகிறது. பிரிவுபட்ட அந்த அன்பு துன்பத்தையே தரும். இதைத்தான் அன்னை, மனிதர்களிடம் அன்பு செலுத்தினால்  அதனால் துன்பம் வரத்தான் செய்யும். இறைவனிடம் அன்பு செலுத்த முடிந்தால் அது பெரிய விஷயம். அதனால் துன்பமோ துயரமோ எதுவும் வராது, என்று குறிப்பிட்டார். இதனால் தான் அவர் தனித்தனியாக யாரிடமும் அன்பு செலுத்தவில்லை என்று கூறினோம்.ஆனால் அவரது அருகில் சென்ற ஒவ்வொருவரும் அன்னை தனினிடம் விசேஷ அன்பு செலுத்துவதாக உணர்ந்தனர்.

இத்தகைய அன்பு பெருக்கின் காரணமாகத்தான் எந்த பாரபட்சமும் காட்டாமல் தம்மை நாடி வந்த அனைவருக்கும் தீட்சை அளித்தார் அன்னை. -


MAIN PAGE

image86

அன்னையின் அன்பு

அன்னையின் அன்பு

அன்னையின் இந்தப்போக்கைப் பற்றி அவரது சீடர் ஒருவர், அம்மா! நீங்கள் கணக்கற்ற வகையில் ஏராளமானோருக்கு தீட்சை தருகிறீர்கள், அவர்கள் அத்தனை பேரையும் உங்களால் நினைவு கூட வைத்துக்கொள்ள மடியாது.அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார் கள் என்றும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதில்லை ஆனால் ஒரு குரு தன் சீடனின் ஆன்மீக வளர்ச்சியில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனவே எவ்வளவு பேரை நீங்கள் நினைவில் வைத்து கொள்ள முடியுமோ? அவ்வளவு பேருக்கு மட்டும் தீட்சை கொடுங்கள் என்றார். அதற்கு அன்னைமகனே நான் தீட்சை தருவதை குருதேவர் ஒருபோதும் தடுப்பதில்லை.அவர் எனக்குப் பல விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிறார். தேவையானால் இது பற்றியும் சொல்லியிருப்பார் அல்லவா! நான் என் சீடர்களின் பொறுப்பை குருதேவரிடம் கொடுத்து விடுகிறேன்.தினமும் நான் அவரிடம் பகவானே! இந்தச் சிடர்கள் எங்கிருந்தாலும் அருள் கூர்ந்து அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று பிராத்திக்கிறேன். இதற்கு மேலாக அவர்களுக்குத் தரும் மந்திரத்தை நான் குருதேவரிடமிருந்தே பெறுகிறேன். அதன் மூலம் அவர்கள் பூரண நிலையை அடைவது நிச்சயம் என்றார்.

இனி பிராத்தனையுடன் மட்டும் அன்னை நின்று விடுவதில்லை,நாள்தோறும் ஜபம் செய்வார். அந்த ஜபம் எல்லாம் தமது சீடர்களின் நலனுக்காக என்பதை அவரே கூறியுள்ளார். இறுதி நாட்களில் தியானம் செய்வதற்காகக்கூட அவரால் எழுந்து உட்கார முடியாத நிலைமை உண்டாயிற்று.அப்போதும் அவர் விடியற்காலை இரண்டு மணிக்கு எழுந்து நெடுநேரம் ஜபம் செய்வார். இதைக் கவனித்த சீடர் ஒருவர் அன்னையிடம் , இரவில் ஏன் நன்றாக த் தூங்க முடியவில்லையா? என்று கேட்டார். அதற்கு அன்னை என்னால் எப்படித் தூங்க முடியும் மகனே? என் பிள்ளைகள் ஆர்வத்தோடு தீட்சை பெற  வருகிறார்கள். ஆனாதல் பெரும் பாலானவர்கள் தொடர்ந்து முறையாக ஜபம் செய்வதில்லை.ஆனால் அவர்களுடைய நன்மைக்குப் பொறுப்பேற்றுக்  கொண்ட நான் சும்மா இருக்க முடியுமா? எனவே அவர்களுக்காக குருதேவரிடம் ஓ! பகவானே! இந்த உலகில் எங்கு பார்த்தாலும் சொல்ல முடியாத வேதனை நிறைந்திருக்கிறது.அவர்கள் மீண்டும் இந்த உலகில் பிறக்க வேண்டாம்.அவர்களின் ஆன்மீக உணர்வை எழுப்புங்கள்.அவர்களுக்கு முக்தி அளியுங்கள் என்று பிராத்தனை செய்கிறேன் என்றார்.

ஒரு முறை பக்தர் ஒருவர் ஒழுங்காகச் சாதனைகளைச் செய்ய முடியாமல் தடுமாறினார். இதை அவர் அன்னையிடம் கூறியதும் அன்னை தாம் அவருக்கு நிலையான துணையாக எப்போதும்  இருப்பதாக ஆறுதல் கூறினார். இதைக்கேட்ட பக்தர் அன்னையிடம் அம்மா உங்கள் பிள்ளைகள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவருக்காகவும் நீங்கள் சாதனைகள் செய்வீர்களா? என்று கேட்டார். அதற்கு அன்னை ஆம், எல்லோருக்காகவும் நான் ஜபம் தியானம் செய்தாக வேண்டும் என்றார். அந்த பக்தர் மேலும் உங்களுக்கோ நிறைய சீடர்கள். அவ்வளவு பேரையும் உங்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டார். அதற்கு அன்னை எவ்வளவு பேரை என்னால் நினைவு படுத்த முடியுமோ,அவர்களை நினைவுபடுத்தி,அவர்களுக்காக ஜபம் செய்கிறேன்.நினைவுக்கு கொண்டுவர முடியாதவர்களுக்காக குருதேவரிடம் பகவானே! எனக்கு எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பிள்ளைகள் இருக்கிறார்கள், பலருடைய பெயர் கூட என் நினைவில் இல்லை. என் நினைவுக்கு வராத அவர்களையெல்லாம் நீங்கள் தாம் பாதுகாக்க வேண்டும்.அவர்களுக்குக் கருணை காட்டி வாழ்க்கையில் முன்னேறச் செய்ய வேண்டும்.என்று பிராத்திப்பேன் என்று கூறினார். சீடர்கள் குருவுக்குச் செய்வதற்கு மாறாக சீடர்களுக்காக சாதனைகள் செய்த அன்பின் திருவுருவான குருவை வேறெங்கு நாம் காண முடியும்.

 சாதாரண குருக்கள் மற்றும் சாதுக்களைப் பொறுத்த வரை மந்திரம்,தந்திரம், கிரியை என்று எந்த வழியைப் பின்பற்றி தாங்கள் அனுபூதி பெற்றார்களோ, அந்த வழியைப் பிறருக்கு உபதேசிக்க முடியும். அவ்வளவு தான். அவர்கள் தங்கள் புனித வாழ்க்கையின் மூலம் ஒருவனை நல்வழிக்கு ஈர்க்க முடியும். உலகத் தளைகளில் சிக்குண்டு உழல்கின்ற அவனிடம், இவ்வாறு செய், அவ்வாறு செய், என்று உபதேசிக்கவும் முடியும்.ஆனால் பாவம் ,அவன் நிர்கதியான நிலையில் ,நீங்கள் சொல்வது சரி நீங்கள்  சொல்வதை நான் எப்படிச் செய்து முடிப்பது?அதற்குரிய ஆற்றலையும் அளித்தால் செய்கிறேன் என்று இவர்களையே திரும்பிப்பார்க்கிறான். அத்தகையோருக்கு உதவ சாதாரணகுருவால் முடியாது. ஆம், உனது தீய செயல்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உன் செயல்கள் அனைத்தின் பலனையும் ஏற்கிறேன் என்று தைரியமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கூறவோ, அவ்வாறு செய்யவோ முடியாது. ஆன்மீக உயர்வு குறையும்போது கருணைக்கடலான இறைவன் அவதரிக்கிறார். மனிதனின் தீய செயல்களின் பலனை அவனுக்காக அனுபவிக்கிறார். தளைகளிலிருந்து அவனை விடுவிக்கிறார். அவர் மட்டுமே இதனைக்கூற முடியும்.அவர் கூறும் போது மட்டுமே மனிதன் அதனை  நம்புகிறான். அன்னையிடம் சென்ற  ஒவ்வொருவரும் இத்தகைய அபாய நிலையை உணர்ந்தனர். 


தங்களின் இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமல்ல, மறவுலக  வாழ்க்கையிலும் தன்னைக் காக்க வல்லவர் அன்னை என்ற உணர்வு அன்னையின் சீடர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது. அன்னை உன்னை ஆசீர்வதித்தால் அந்தக் கணமே உன் தலைவிதி மாற்றி எழுதப்பட்டுவிட்டது என்று பக்தர் ஒருவருக்கு எழுதுகிறார் சுவாமி சுபோதானந்தர்.

தீட்சை பெற்றுக் கொண்டோருள் பலரும் தங்களால்  முறையாக ஜபம் செய்ய முடியவில்லை என்று அன்னையிடம் வந்து முறையிடுவர். அப்போதெல்லாம் அவர்களிடம் அன்னை, பயப்படாதே உன்னால் முடிந்த அளவுஜபம் செய்.குருதேவரைச் சரணைந்துவிடு. உனக்கொரு அம்மா இருக்கிறாள் என்பதை மறவாதே,என்று கூறுவார். அவர்களால் பெரிதாக சாதனை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதற்காக அவர்களுக்கு அபயம் அளித்து, அவர்களுக்காக ஜபதியானங்கள் செய்வார்.அன்னையின் சீடர் ஒருவர் எழுதிய நினைவுக் குறிப்பிலுள்ள உரையாடல் பகுதி இதனைத் தெளிவாக விளக்குகிறது .அதனை இங்கே காண்போம்.


அந்தச்சீடர் குடும்பப் பிரச்சனைகள் மன உளைச்சல் போன்றவற்றின் காரணமாக வேதனையின் விளிம்பிற்கே சென்று விட்டிருந்தார்.ஒரு நாள் அன்னையிடம் சென்றுதன் மனத்துயரை எல்லாம் கண்ணீருடன் கூறினார். அதனைக் கேட்ட அன்னையின் கண்களும் குளமாயின. அனைத்தையும் கூறிய பின்னர் அந்த பக்தர் அம்மா அழிந்து போவது தான் என் விதியா? என்று வேதனை வெடிக்கக் கேட்டார்.

அன்னை-என்ன சொல்கிறாய் மகனே நீ! என் பிள்ளையான நீ அழியமுடியுமா? இங்கு வருகின்ற அனைவருக்கும் என்  பிள்ளைகள் அனைவருக்கும் முக்தி உரியதாகி விட்டது. கடவுள் கூட என் பிள்ளைகளை எதுவும் செய்ய முடியாது.

சீடர்- அம்மா, இப்போது நான் என்ன செய்யட்டும்?

அன்னை- என் மீது பாரத்தை வைத்துவிட்டுஅமைதியாக இரு.உரிய காலத்தில் உங்கள் அனைவரையும்  முக்திப் பேரானந்தத்திற்கு அழைத்துச் செல்ல க்கூடிய ஒருவர் உன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதை நினைவுகொள்.

சீடர்- இங்கே இருக்கும்வரை ஆனந்தமாக இருக்கிறது.வீடு சென்றால் மறுபடியும் குழப்பமும் கெட்ட எண்ணங்களும் தான்.

அன்னை- இது முன்வினைப் பயன்களால் ஏற்படுவது.பலவந்தமாக அவற்றை விரட்ட முடியுமா? சத்சங்கத்தை நாடு. தூய்மையாக வாழ முயற்சி செய். படிப்படியாக எல்லாம் சரியாகும். குருதேவரிடம் பிராத்தனை செய். நான் உன்னுடன் இருக்கிறேன். இந்தப் பிறவியிலேயே நீ முக்தி பெற்று விட்டாய். ஏன் பயப்படுகிறாய்? உரிய காலத்தில் அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.

இத்தகைய அபய வாக்கினைச் சாதாரண மனிதர் இன்னொருவரிடம் கூற முடியுமா? அப்படியே கூறினாலும்  அதை அவர் தான் நம்பி விடுவாரா?

இந்த அத்தியாயத்தில் அன்னையின் குருநிலை என்ற பரிமாணத்தில்  அவர் ஒரு தனிமனிதனுக்கு எவ்வாறு குருவாக இருந்தார் எனபதை மட்டுமே இங்கு கண்டோம்.அவர் துறவியருக்கு எப்படி வழிகாட்டினார். ராமகிருஷ்ண மிஷனை எவ்வாறு வழிநடத்தினார் என்பவற்றை இனி காண்போம்.

23-சங்க குரு

சமுதாயக் கடமைகளை வலியுறுத்தி இந்திய வரலாற்றில் எழுந்த முதல் துறவியர் சங்கம். என்று ராமகிருஷ்ண துறவியர் சங்கத்தைப்பற்றி பின்னாளில் நிவேதிதை எழுதினாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய  ஓர் இயக்கத்தை வழிநடத்தியவராக ஒரு பெண் போற்றப்படுவது பெண்குலத்திற்கு ப் பெருமை தருகின்ற செய்தி அல்லவா! அன்னையை சங்க ஜனனியாக ஏற்கனவே பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அவர் எவ்வாறு ராமகிருஷ்ண துறவியர் சங்கத்தை வழிநடத்தினார் என்பதைப்பார்ப்போம். தனிமனித வளர்ச்சியிலும் சரி, சமுதாய வளர்ச்சியிலும் சரி, இந்தச்சங்கத்தின் பங்கு மகத்தானதாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்திருந்த அன்னை அதன் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தினார். வரலாற்றில் அது எவ்வளவு முக்கியமான இடத்தை வகிக்கப் போகிறது என்று அன்னை கருதியிருந்தார் என்பதைக் கீழ் வரும் நிகழ்ச்சியால் அறியலாம்.

கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதையின் தலைமையில் நிவாரணப்பணியை ஆரம்பித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்தப்பணிக்கான நிதி வந்து சேரவில்லை. எனவே தேவைப்பட்டால் பேலூர் மடத்தையே விற்று நிவாரணப்பணிக்குப்  பயன்படுத்த வேண்டியது தான், என்று தமது சகோதரத்துறவியரிடம் தெரிவித்தார் அவர். இது அன்னையின் காதுகளை எட்டியது. சுவாமிஜி இந்தக்கருத்தைச் சற்று உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில் கூறியிருந்தார். ஒருவேளை அவருக்கு அந்த நோக்கம் உண்மையிலேயே இருந்திருக்காது.ஆனாலும் அத்தகைய எண்ணத்தையே அன்னை வரவேற்கவில்லை. இது என்ன பேச்சு! பேலூர் மடத்தை விற்கப் போகிறானா! அந்த மடம் என் பெயரில் சங்கல்பம் செய்யப்பட்டுள்ளது. குருதேவரின் பெயரில் நிறுவப்பட்டுள்ளது. இதில் விற்பனை செய்யும் உரிமை அவனுக்கு எங்கிருந்து வந்தது! ஒரு நிவாரணப்பணியிலேயே பேலூர் மடத்தின்  லட்சியங்கள் முடிந்து போக வேண்டியதுதானா? என்னென்ன லட்சியங்களுக்காக அது நிறுவப்பட்டுள்ளது தெரியுமா? குருதேவர் எண்ணற்ற கருத்துகளின் இருப்பிடமாக இருந்தார். அவை இந்த மடத்தின் மூலமே உலகெங்கும் பரவப்போகிறது.யுகயுகமாக இவ்வாறே இது நடைபெறப்போகிறது என்றாராம் அவர். ராமகிருஷ்ண சங்கத்தின் இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தால் அதன் வளர்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டினார் அன்னை. தகுதி உடைய இளைஞர்களுக்கு எந்த எதிர்ப்பையும் பற்றிக் கவலைப்படாமல் சன்னியாச தீட்சை அளித்து, அவர்களை ராமகிருஷ்ண துறவியர் பரம்பரையில் சேர்த்தார்.


மடத்தில் இளைஞர்கள் சேர்வதற்கு பெற்றோரின் எதிர்ப்பும் ஒரு பக்கம் இருக்கவே செய்தது. ஆனால் அரசாங்கமும் சமுதாயமும் தந்த எதிர்ப்பு கவலையுறத்தக்கதாக இருந்தது. அந்த நாட்களில் நாடெங்கிலும் தேசிய விடுதலை இயக்கங்கள் எழுந்து இளைஞர்கள் அவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் சிலர் விவேகானந்தரின் வீர முழக்கத்தால் கவரப்பட்டு ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார்கள். ஆன்மீக லட்சியத்தை ஏற்றுக்கொண்டு மடத்தில் சேர்ந்த பின்னர் அவர்கள் தங்கள் பழைய தொடர்புகளை விலக்கிவிட்டனர். ஆனாலும் ஆங்கிலேய அரசாங்கம் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன்  பார்த்தது.இதனால் பேலூர் மடம், கோயால்பாரா ஆசிரமம், ஜெயராம் பாடியில் அன்னையின் வீடு எல்லாம் தீவிரமான போலீஸ் கண்காணிப்புக்கு உள்ளாயின.அங்கு வருவோர் போவோரின்  பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அன்னை எதையும் பொருட்படுத்தவில்லை, தம்மை நாடிவந்த அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்தார். தீட்சை அளித்தார். சில வேளை  களில்  மிகுந்த சிரமத்தின் பேரில்  அவர்களை ஓர் இரவு மட்டும் ஜெயராம்பாடியில் தங்க வைத்து,மறுநாள் தீட்சை அளித்து யாருக்கும் தெரியாமல் பிற இடங்களுக்கு அனுப்பி வைப்பார். ஒரு முறை போலீஸ் தீவிரமாகத் தேடிய ஒருவர் அன்னையைத் தஞ்சமடைந்தார். அவரை அங்கேதங்க வைக்க யாருக்கும் சம்மதம் இல்லை. அன்னையோ மிகவும் பிடிவாதமாக நடக்க வேண்டியது குருதேவரின் திருவுளம் போல் நடக்கத்தான் செய்யும்.என் மகன் என்னோடு தங்குவான் என்று கூறிவிட்டார்.மற்றவர்கள் உண்மையை விளக்கி, போலீஸினால் வரக்கூடிய சிரமங்களை எடுத்துக்கூறி அவரை அங்கே தங்க வைக்க வேண்டாம், என்று தடுத்த போது அவர் மீது கொண்ட கருணையின் காரணமாக அன்னையின் கண்களில் நீர் பெருகி விட்டது. எனவே அதன் பின் யாரும் எதுவும் சொல்லவில்லை.பின்னர் அந்த பக்தர் வந்து,தானும் தன் நண்பரும் போலீசால் பட்ட கஷ்டங்களைக்கூறிய போது அன்னை தேம்பி  த்தேம்பி அழவே தொடங்கிவிட்டார்.ராமகிருஷ்ணசங்கத்தின் ஆரம்பக்கால துறவியருள் பலர் அன்னையின் இத்தகைய  கருணைப் பெருக்கினால் மட்டுமே மடத்தில் சேர முடிந்தது.

இளைஞர்களை இவ்வாறு துறவிகளாக்குவதை அன்னையின் வீட்டினரும் விரும்பவில்லை. தம்பியர்,தம்பி,மனைவியர், மருமகள்கள் என்று எல்லோருமே அன்னையை எதிர்த்தனர். இந்த விஷயத்தில் அன்னை அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தமக்கே உரிய உறுதியுடன் இருந்தார். ஒரு முறை இளைஞர் ஒருவரின் துறவு நாட்டத்தைக் கண்ட அன்னை அவரை ஊக்குவித்தார். அதைக் கண்ட நளினி,அத்தையின் போக்கை ப் பார்.அவனோ பி.ஏ படித்துக் கொண்டிருக்கின்ற இளைஞன். எவ்வளவு செலவு செய்து பெற்றோர்கள் அவனைப் படிக்க வைத்திருப்பார்கள். அவன் பணம் சம்பாதித்து வயதான பெற்றோர்களைப் பாதுகாக்காமல்  மடத்தில் சேரப்போகிறானாம்,அத்தையும் அதை ஆமோதிக்கிறாராம் என்றாள். அன்னைக்கு நளினியின் பேச்சு பிடிக்க வில்லை,இதோ பார் உனக்கு அவனைப்பற்றி என்ன தெரியும்? அவன் காகம் அல்ல, குயில்குஞ்சு வளர்ந்ததும் தன் உண்மைத் தாயை உணர்ந்து கொள்கிறது. உடனே வளர்ப்புத் தாயாகிய காகத்தை விட்டுப்பறந்து தாய்க்குயிலுடன் இணைந்து விடுகிறது என்றார். அந்த இளைஞர் பின்னர் துறவியானார்.

திருமணமான இளைஞர் ஒருவருக்கு அன்னை சன்னியாச தீட்சை கொடுத்தார்.இதையறிந்த அந்த இளைஞரின் தாய் மிகுந்த கோபத்துடன் வந்து அன்னையின் செயலை கண்டித்துக்கூறினார். அன்னை அந்தத் தாயின் புகார்கள் அனைத்தையும் அமைதியாக க் கேட்டுவிட்டு,அவன் செய்ததில் எந்தத் தவறுமில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவன் சரியான பாதையையே தேர்ந்தெடுத்திருக்கிறான். மேலும் குடும்பத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தானே துறவியாகியுள்ளான்! என்று கூறிவிட்டார்.

மற்றோர் இளைஞனுக்கு அன்னை காவியுடை அளித்த போது அன்னையின் நாத்தனார் ஒருத்தி மீண்டும் அதே கதை இதோ இன்னொருவரையும் சன்னியாசியாக்கி விட்டார். என்றார். அன்னையின் மருமகள்களுள் ஒருத்தி அதைத் தொடர்ந்து அந்த இளைஞனின் பெற்றோர்கள் எவ்வளவு நம்பிக்கைகளுடன் அவனை வளர்த்திருப்பார்கள்! இப்போது எல்லாம் தகர்ந்து விட்டது.திருமணமும் ஒரு கடமையே அல்லவா! அத்தை இப்படி சன்னியாசிகளை உருவாக்கிக் கொண்டிருப்பாரானால் மகாமாயை கட்டாயமாகக் கோபம் தான் கொள்வாள். என்றாள்.இதைக்கேட்ட அன்னை மகளே,இதோ பார்,உலக இன்பங்களில் தீவிர நாட்டமுடைய ஒருவன் நான் சொல்வதால் மட்டும் உலகைத்துறந்து விடுவானா என்ன!ஆனால் யாராவது புண்ணியசாலி,இறைவனே உண்மை. உலகம் மாயையின் விளையாட்டு என்பதை உணர்ந்து கொண்டானானால் அவனுக்கு நான் சிறிது உதவ வேண்டாமா? இவர்கள் எல்லாம் என் தெய்வீக ப் பிள்ளைகள்.மலரைப்போன்ற புனிதத்துடன் உலகில் வாழ்வார்கள்.இதை விடப்பேறு ஒன்றிருக்க முடியுமா? இல்லறத்தார் படும் வேதனைகளைக்காணும் போது என் நாடிநரம்புகள் எல்லாம் தகிக்கின்றன என்றார்.

துறவறம் என்பதை அன்னை இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தார். அன்னை அளிக்கின்ற பிரம்மசரிய மற்றும் சன்னியாச தீட்சையும் இத்தகைய தாய்-சேய் உறவின் அடிப்படையிலேயே இருந்தது. மந்திர தீட்சையைப்போல் இங்கும் சடங்குகளோ சம்பிரதாயங்களோ முக்கிய இடம் பெறவில்லை. துறவின் லட்சியம்,ராமகிருஷ்ண சங்கத்தின் அடிப்படை அதன் நோக்கம், செயல்படுமுறை,துறவியரின் வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்கி அந்தந்த தீட்சைகளுக்குரிய வெள்ளைஆடை அல்லது காவியுடை அளிப்பார் அன்னை. பின்னர் எம்பெருமானே,இவர்கள் துறவு நெறியைச் சரிவரக் கடைபிடிக்குமாறு காப்பாற்றவேண்டும். மலை,காடு, என்று இவர்கள் எங்கிருந்தாலும்  ஒரு பிடி உணவு கிடைக்குமாறு அருளவேண்டும் என்று குருதேவரைப் பிராத்திப்பார். ஹோமம் முதலான சடங்குகளை பேலூர் மடத்தில் சென்று செய்து கொள்ளும்படிக்கூறுவார்--


இல்லறத்தாருக்குச் சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொள்ள பலருண்டு. உலகைத்துறந்து குருதேவரை மட்டுமே கதியாக க்கொண்டு மடத்தில் சேர்ந்திருக்கின்ற துறவிப்பிள்ளைகளுக்குத் தாமே அன்னை,தந்தை, குரு எல்லாம் எனபதை உணர்ந்திருந்தார். அன்னை. அது மட்டுமல்ல,குருதேவரின் அவதாரப்பணியில்இந்தத்துறவிப் பிள்ளைகளின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களுடன் ஒரு விசேஷப்பிணைப்பை அன்னை கொண்டிருந்தார்.ஆ! இறைவனுக்காக உலகைத்துறந்த இவர்களுடன் அல்லாமல் வேறு யாருடன் நான் வாழ்வேன்! என்று அடிக்கடி அவர் கூறுவதுண்டு. ஒரு நாள் தம்  உறவினர்களைக்குறிப்பிட்டு சுவாமி அரூபானந்தரிடம் , அவர்களை நான் விசேஷமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.இல்லாவிடில் நான்  அவர்களுக்கு ஏதோ அநீதி இழைத்துவிட்டதாக எண்ணிக்கொள்கிறார்கள். இருப்பதில் மிக நல்லவற்றை அவர்களுக்குக்கொடுக்க வேண்டும், எப்போதும் அவர்களைக் கவனிக்க வேண்டும். இல்லாவிடில் பிணங்கிக் கொள்வார்கள்.ஆனால் நீங்கள் என் பிள்ளைகள்.நான் எது செய்தாலும் உங்களுக்குத் திருப்திதான். உங்களை நான் சதா கவனிக்காவிட்டாலும் நீங்கள்  அதைப்பெரிதாக  எடுத்துக்கொள்வதில்லை.உண்மையில் நீங்கள் எல்லோரும் தான் என்னைச்சேர்ந்தவர்கள்,ராதுவும் பிறரும் அல்ல, உங்களிடம் நான் மிகவும் கவரப்பட்டாலும் அதில் மாயை இல்லை. இந்தக்கவர்ச்சி தான் என்னை மீண்டும் மீண்டும் பூமிக்கு இழுத்து வருகிறது என்றார்.

அன்னை வீட்டின் தலைவி. பிரம்மசாரிகளும் துறவியரும் பெண்களும் அவருடன் வாழ்ந்தனர். ஆனால் துறவியரின் வாழ்வில் பெண்களோ இல்லறத்தாரோ குறுக்கிடாமல் இருப்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். ஒரு நாள் உத்போதனில் ராது கொலுசை அணிந்துகொண்டு வேகமாக ஓடினாள். அதைக்கண்ட அன்னை,ஏ ராது, உனக்கு நாணம் என்பதே இல்லாமல் போய்விட்டதா? கீழே என் துறவிப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.அவர்கள் வெறும் விளையாட்டுக்காக இங்கே வந்து வாழவில்லை.ஆன்மீக சாதனைகள் செய்வதற்காக வீடுவாசலைத்துறந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் விரதம் குலைந்தால் அதன் விளைவு என்னவாகும் தெரியுமா? நீ என்னடாவென்றால் சலங்கைகட்டிக்கொண்டு ஓடியாடுகிறாய்.அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவற்றை உடனே கழற்று, என்று கண்டிப்பாகக் கூறினார். ராது வேறு வழியின்றி கொலுசைக் கழற்றி வீசி எறிந்தாள்.

ஒரு முறை பக்தை ஒருத்தி நடந்து செல்லும் போது அவளது சேலைத்தலைப்பு பிரம்மசாரி வரதரின் மீது பட்டது. அதைக்கண்ட அன்னை அந்தப்பெண்ணிடம் என்னம்மா இது! இவ்வளவு கவனக்குறைவாக நடக்கிறாய்? அவர்கள் பிரம்மசாரிகள் ,வணங்கப்பட வேண்டியவர்கள். அவனை வணங்கு,என்று கூறி அவள் அவரை வணங்குமாறு செய்தார்.

அது மட்டுமல்ல பெண்கள் அடிக்கடி துறவியர் வசிக்கின்ற மடத்திற்குச் செல்வதையும் அன்னை விரும்பவில்லை.மகளே உன் மனத்தில் தீய எண்ணம் எதுவும் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர்கள் மனத்தில் உன் காரணமாக ஏதாவது சஞ்சலம் எழுமானால் அதற்கு நீயும் பொறுப்பு என்பதை மறவாதே!என்று கூறுவார்.

இவற்றில் எல்லாம் துறவின் பெருமையை அன்னை எப்படி கட்டி காத்தார் என்பதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. கோலாப்மா அன்னையுடன்வாழ்ந்து அவருடைய சேவையில் ஈடுபட்டிருப்பவர் என்பதைக் கண்டோம். அவர் ஒரு முறை பிரம்மசாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகக்கோபம் கொண்டு அவன் இங்கே இருந்தால் நான் இருக்கப்போவதில்லை.நான் போகிறேன் என்று கூறி விட்டு,செல்வதற்கான ஆயுத்தங்களில் ஈடுபட்டார்.இந்த விஷயம் அன்னைக்குத் தெரிவிக்கப்பட்டது.உடனே அன்னை சற்று உரத்த குரலில், அவள் யார்? வெறும் குடும்பப்பெண்.வேண்டுமானால் அவள் போகட்டும். அந்த பிரம்மசாரி எனக்காக அனைத்தையும் துறந்து விட்டல்லவா என்னுடன் வாழ்கிறான் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

அதனால் துறவியர் என்ன செய்தாலும் அன்னை ஏற்றுக்கொண்டார் என்பது இதன்  பொருளல்ல. துறவியருக்கும் அவர் முதலில் அன்னை, பிறகே குரு என்பது உண்மை. ஆனால் தாயின் பரிவுடன் தந்தையின் கண்டிப்பும் சேர்த்தே அவர்களை  வழிநடத்தினார். சாதனை விஷயத்தில் பொதுவாக சாதாரண பக்தர்களிடம்  காட்டுகின்ற சலுகைகளை அவர்  துறவிகளிடம் அரிதாகவே காட்டினார். சாதாரண பக்தர்களிடம் சொல்வதுபோல், உன்னால் முடிந்த அளவு சாதனைகள் செய், என்றெல்லாம் பொதுவாக அவர் துறவிப்பிள்ளைகளிடம் கூறுவதில்லை. துறவிகளும் அவரது அன்புப் பெருக்கில் நனைவர், அவர்களுக்கும் அபயம் அளிப்பார்.ஆனால் அவர்கள் சிறிதளவாவது எப்போதும் முயற்சியில் ஈடுபடுமாறு பார்த்துக்கொள்வார்.ஒரு முறை அன்னையின் துறவிச்சீடர் ஒருவர் ரிஷிகேசம் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டார். அங்கிருந்து அவர் அன்னைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அம்மா, நான் குருதேவரின் காட்சியை உரிய காலத்தில் பெறுவேன் என்று கூறியிருந்தீர்களே, ஆனால் எனக்கு இன்னும் அந்தப்பேறு கிடைக்கவில்லையே, என்று ஆதங்கப்பட்டிருந்தார். அதற்கு அன்னை தம் சீடர் ஒருவரிடம் கூறினார். அவனுக்கு உனக்காகவோ இல்லை, நீ அங்கே  போயிருக்கிறாய் என்பதற்காகவோ,குருதேவர் ரிஷிகேசத்திற்குப் போக முடியாது? என்று எழுது. அவன் ஒரு துறவி கடவுளைத்தேடி சாதனைகளில் ஈடுபடுவதைத் தவிர அவனுக்கு வேறென்ன வேலை? கடவுள் விரும்பும்போது பக்தனுக்குத்தம்மை அறிவித்து அருள்வார்.


துறவிச்சீடர்களிடம் தாய்-சேய் உறவிலும் ஓர் எல்லையை வைத்திருந்தார் அன்னை. அவர்கள் தம்மிடம் பற்று வைப்பதை அன்னை வரவேற்கவில்லை. ஒரு துறவிச்சீடர் தாம் சில மாதங்கள் அன்னையைக் காண முடியாததால் மிகவும் வேதனைப் படுவதாக எழுதியிருந்தார். அது அன்னைக்குப்பிடிக்கவில்லை. அவன் ஏன் அப்படி வேதனையுற வேண்டும்? மாயையின் அனைத்து சங்கிலிகளையும் ஒரு துறவி உடைத்திருக்க வேண்டும். தங்கச்சங்கிலியாக இருக்கலாம் ஆனால் அதுவும் சங்கிலிதான் . துறவிக்குப் பற்றே கூடாது. அன்னையின் அன்பு என்ற எண்ணம் தனக்கு அது கிடைக்கவில்லையே என்ற புலம்பல்- இவையெல்லாம் சுத்த முட்டாள் தனம். ஆண்  சீடர்கள் என்னைச்சுற்றிச்சுற்றி வருவதை நான் விரும்பவில்லை. என்னதான் இருந்தாலும் எனக்கு இருப்பது மனிதவுருவம் அதனை தெய்வமாக உணர்வது அத்தனை எளிதல்ல என்றார் அவர். துறவியர் இல்லறத்தாருடன் அதிகமாகத் தொடர்புகள் வைப்பதையும் அன்னை அனுமதிக்கவில்லை. ஒரு முறை அன்னையின் துறவிச்சீடர் ஒருவர் கிரீஷீடன் காசி செல்ல எண்ணியிருந்தார். கிரீஷ் அவருடைய பயணச் செலவை  ஏற்றுக்கொள்வதாக ஏற்பாடு. அதைக்கேட்ட அன்னை கூறினார்,நீ ஒரு துறவி.உனது பயணச்செலவை வேறுவிதமாகப் பெற்றுக்கொள்ள முடியாதா? கிரீஷ் குடும்பத்தில் வாழ்பவர்.நீஏன் அவருடன் பயணம் செய்ய வேண்டும்.ஃ நீங்கள் ஒரே பெட்டியில் இருப்பீர்கள். அவர் தனக்காக ஏதாவது செய்யும் படி உன்னிடம் கூற நேரும்.துறவியான நீ அவர் கட்டளைப்படி நடக்க வேண்டுமா?

அன்னையின் துறவிச் சீடர்களுள் ஒருவர், துறவின் நியதிகளைப் பின்பற்ற இயலாமல் மீண்டும் பழைய வாழ்க்கையை நாடினார். அப்போது அன்னை கூறினார்.மண்பாண்டத்தில் சிங்கத்தின் பாலை வைக்க முடியுமா? உலகியல் மக்களின் வீடுகளில் தொடர்ந்து சாப்பிட்டதால் அவனது மனம் வழிதவறி விட்டது.

இவ்வாறு அன்னை அவ்வப்போது தமது துறவிப்பிள்ளைகளை வழிநடத்தியதிலிருந்து அவர் ராமகிருஷ்ண சங்கத்தின் கோட்பாடுகளாக எவற்றைக் கருதினார் எனபதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

குருதேவர் எல்லா தெய்வங்களும் திரண்ட வடிவினர்.அனைத்து மந்திர வடிவினர். உண்மையாக சத்தியமாக அவர் மூலம் எல்லா தெய்வங்களையும் வழிபடமுடியும். உலகின் துயரங்களையும் வேதனைகளையும் துடைக்கவே அவர் அவதரித்தார் என்பது அன்யைின் முடிவான கருத்தாக இருந்தது. எனவே அவரைப்பற்றிப் பிடித்துக் கொள்வதும் அவரிடம் பிராத்தனை செய்வதும் ஆன்மீக வாழ்க்கைக்கான அனைத்தையும் தரும் என்பதை உறுதிபடக் கூறுவார். குருதேவரிடம் ஒரு முறையேனும் பிராத்தனை செய்தவர்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை.ஆன்மீக வாழ்வின் சாரம் பிரேம பக்தி. குருதேவரிடம் தொடர்ந்து பிராத்தனை செய்வதன்  மூலமே அந்த பக்தியை அடைய முடியும், குருதேவரையே அன்னை ராமகிருஷ்ண துறவியரின் லட்சியமாக வைத்தார். நமது லட்சியம் குருதேவரே,குருதேவர் மட்டுமே நீ என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் குருதேவரைப்பற்றிப் பிடித்திருந்தாயானால் வழி தவற மாட்டாய் என்பார் அவர்.

லட்சியம் என்னும் வார்த்தை இருபொருளில் பயன் படுத்தப்படுகிறது.1) சென்று சேர வேண்டிய இடம்.2) அந்த இடத்தைச் சென்றடைவதற்குப் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை. துறவியரின்  லட்சியம் குருதேவர் என்னும் போது அன்னை இந்த இரண்டையுமே குறிப்பிட்டார். குருதேவரிடம் பிராத்தனை செய்ய வேண்டும், அவரையே சார்ந்து வாழ வேண்டும்.அதே வேளையில் குருதேவர்,நான் அச்சை வார்த்து விட்டேன். நீங்கள் உங்கள் வாழ்வை அதில் வார்த்துக்கொள்ளுங்கள், என்பாரே,அப்படி  வார்த்துக் கொள்வதிலும்  துறவியரைத்தூண்டுவார். குருதேவரின் இந்த உபதேசம் பல பரிமாணங்களை உடையது. துறவியரைப் பொறுத்தவரை இந்த உபதேசத்தின் பொருளைச்சுருக்கமாகக் கூறுவதானால் காமினி-காஞ்சன தியாகம், அதாவது காமம், பணத்தில் பற்று இரண்டையும் விடுவது. துறவின் இலக்கணத்தைக் காலத்திற்கு ஏற்ப வடிவமைத்தவர் குருதேவர். அனைத்து ஆசைகளுக்கும் ஆணிவேராக இருப்பவை.இந்த இரண்டும் எனபதைச்சுட்டிக்காட்டி அவற்றை விலக்குமாறு கூறினார். அவர் அவரது அருள் சக்தியாகிய அன்னையும் இந்த இரண்டைப்பொறுத்த வரையில் துறவிப் பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பாக இருப்பார். 

அன்னை தமது எளிய  மொழியில் இதனை விளக்குவார்-பணம் இருக்கிறதே, அதனுடன் நீ அதிகமாகப் புழங்கினால் அதன் கவர்ச்சிக்கு அடிமைப்பட்டு விடுவாய்.பணமா,எந்தக்கணம் வேண்டுமானாலும் அதனை விட்டுவிட என்னால் முடியும். என்று நீ நினைக்கலாம். முடியாது மகனே,அத்தனை முட்டாள் தனமான எண்ணங்களுக்கு ஒரு போதும் இடம் கொடுக்காதே. என் மனத்தில் எங்கோ மூலையில் ஓர் ஓட்டை இருக்கும்.அதன் வழியாக நீ அறியாமலே அது மெதுவாக உள்ளே புகுந்து உன்னைப் படுகுழியில் ஆழ்த்திவிடும்.பணத்தின் மீதுள்ள உன்னைப்படுகுழியில் ஆழ்த்திவிடும். பணத்தின் மீதுள்ள பற்று மெள்ள மெள்ள உன்னை வேறு பலவற்றின் மீதும் ஆசை கொள்ளச் செய்து விடும்.


 MAIN PAGE 

image87

சீடர்களுக்கு அறிவுரை

சீடர்களுக்கு அறிவுரை

காமம் என்பதைப்பற்றிச் சொல்லும் போது, ஒரு துறவி துறவின் லட்சியத்தை ஒரு போதும் தாழ்த்தக்கூடாது. அவன் செல்லும் வழியில் ஒரு பெண் வடிவ பொம்மை கிடப்பதாக வைத்துக்கொள்வோம்,.அதன் முகத்தைப் பார்க்க வேண்டும். என்று அவன் தன் காலால் கூட அந்தப்பொம்மையைத் திருப்பக்கூடாது என்பார்.

காமம்,பணத்தாசை என்ற இரண்டுடன் அன்னை வலியுறுத்திச் சொல்கின்ற மற்றொன்று ஆணவம். காவி உடுப்பது பல நேரங்களில் அகங்காரத்திற்கு வழிவகுத்து விடுகிறது. இவன் என்னை வணங்கவில்லை அவன் என்னை மதிக்கவில்லை, எனக்குரிய மரியாதை தரப்படவில்லை என்றெல்லாம் துறவியரின் ஆணவம் வளர்ந்து விடுகிறது. அவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும் போது என்னைப்போல் வெள்ளை ஆடையில் இருப்பது எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது  எனபார் அன்னை.

இறையனுபூதி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு குருதேவரிடம்  தஞ்சம் அடைந்துள்ள துறவியர் ஒருபோதும் தங்கள் குறிக்கோளை மறக்க க் கூடாது. என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார் அன்னை. அப்படி மறக்காமல் இருக்க வேண்டுமானால் இடையீடற்ற சாதனைகள் அவசியம். அவர்கள் ஒரு கணமும் சாதனை வாழ்விலிருந்து தவறிவிடக்கூடாது. துறவி என்பவன் வெள்ளைத்துணி போல, இல்லறத்தார் கறுப்புத்துணி போல.கறுப்புத்துணியில் கறை படிந்தால்  அது யார் கண்ணுக்கும் எளிதாகப்படுவதில்லை. ஆனால் வெள்ளைத்துணியில் ஒரு துளி மை விழுந்தால் போதும்,பளிச்சென்று எல்லோருக்கும் தெரிந்து விடும். துறவியின் வாழ்க்கை அபாயங்கள் நிறைந்தது. காமமும் பணத்தாசையும் நிறைந்தது இந்த உலகம்.  எனவே துறவி இடையீடின்றி விவேக வைராக்கியங்களைப் பழக வேண்டும்  என்பார்.

துறவியர் என்போர் சமுதாயத்தின் ஒட்டுண்ணி கள் என்ற கருத்து நீங்கி, அவர்களுக்கும் ஓர் அந்தஸ்து கிடைப்பதைச் சமய வரலாற்றில் முதன்முதலில் ராமகிருஷ்ண சங்கத்தின் தோற்றத்திற்குப் பின்னர் தான் நாம் காண்கிறோம்.அதன் முக்கியக்காரணம் சுவாமிஜி அறிமுகப்படுத்திய கர்மயோகம்.இதன் மூலம் துறவி தன் வாழ்க்கைக்கான இன்றியமையாத தேவைகளைத்தானே உழைத்துப் பெறுவதடன் மனித குலத்திற்கும் உதவியாக அமைகிறான். செய்யும் வேலையை இறைவனுக்கு அர்ப்பணித்து இறைவனுக்காகவே அதனைச்செய்யும் போது அது ஓர் ஆன்மீக சாதனையாகிறது.ஜபதப சாதனைகளில் முழுமையாக ஈடுபடமுடியாத துறவியருக்கும் வாழ்க்கை முறையாகக் கர்மயோகம் அமைகிறது. ஆனால் துறவி என்றால்  சமுதாயத்திலிருந்து விலகியே வாழ வேண்டும் என்ற நெடுங்காலக் கருத்தை,மடத்தில் சேர்ந்த பிறகும் பலரால் விட முடியவில்லை. அம்மா, நிவாரணப்பணிகள் போன்ற வேலைகள் எல்லாம் உண்மையிலேயே குருதேவரின் பணிகள் தாமா? என்று துறவிச் சீடர் ஒருவர் ஒரு முறை தமது ஐயத்தை அன்னையிடம் வெளியிட்டார். ஆம், மகனே,இவையெல்லாம்  குருதேவரின் பணிகள் தாம். இந்த வேலைகளின் மூலம் உன் உணவை நீயே உழைத்துத்தேடிக் கொள்கிறாய். வேலை செய்யாவிடில் யார் உனக்கு உணவு தருவார்கள்? வீட்டுக்கு வீடு சென்று பிச்சையேற்பது மன உளைச்சலுக்கே வழி வகுக்கும்.நல்ல உணவு இல்லையென்றால் உடல் நோயுறும்.யார் சொல்வதையும் பொருட்படுத்தாதே. நன்றாக வேலை செய், நன்றாக சாப்பிடு,நன்றாகச் சாதனைகள் செய், என்று அதற்குப் பதிலளித்தார் அன்னை.

 இத்தகைய நிவாரணப் பணிகளை முடித்து விட்டு வருபவர்களிடம் மக்களின் துயர் பற்றியும் துறவியர் செய்யும் பணிகள் பற்றியும் விளக்கமாக க்கேட்பார். கேட்பதும் சொல்வதும் மட்டுமல்ல,தாமும் ஒரு முன்னுதாரணமாக விளங்கினார். பின்னாளில் அன்னையைக் காண  ஜெயராம்பாடி செல்பவர்களுள் டாக்டர்களும் இருந்தனர். அவர்களிடம் கிராம மக்களுக்கு இலவச சிகிச்சை செய்யும் படி கூறுவார். அன்னையின் தூண்டுதலால் பலமுறை மருத்துவ முகாம்கள் நடந்ததும் உண்டு.

 இவ்வாறு மெள்ள மெள்ள கோயால்பாராவில் ஓர் இலவச மருத்துவமனை உருவாகியது. அங்கே ஒரு பிரச்சனையை அந்தத்துறவியர் எதிர்கொள்ள நேர்ந்தது. பணம் கொடுத்து மருந்து வாங்க முடிந்தவர்களும் இந்த இலவச  மருந்து வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் பல ஏழைகள் மருந்து பெற முடியவில்லை. எனவே அந்தத் துறவியர் அன்னையிடம் சென்று,பண வசதி உள்ளவர்களுக்கு இலவச மருந்து கொடுக்கலாமா?கூடாதா? என்று கேட்டனர். நறுக்குத் தெறித்தாற்போல் வந்தது.அன்னையின்  பதில், மகனே.கையை நீட்டுபவன் யாராக இருந்தாலும் அவன் ஏழை தான். இலவச மருந்து வேண்டும். என்று யார் கேட்டாலும் அவரை ஏழையாகக் கருதி மருந்து கொடுத்து விடு.நமது மருத்துவ மனை  எல்லோருக்கும் திறந்தே இருக்க வேண்டும். இவ்வாறு பணிகளின் போது எதிர் கொள்ள நேர்கின்ற பிரச்சனைகளையும் தீர்த்துத் துறவியரை வழிநடத்தினார் அன்னை..


நாள் முழுவதும் ஜபம் தியானம் என்று ஆன்மீக சாதனைகளில் ஈடுபட நல்ல மனப்பக்குவம் வாய்க்கப் பெற்ற ஏதோ ஓரிருவரால் முடியும்.சோம்பியிருக்கின்ற மனம் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் தான் உருவாக்கும்.சாதாரணமானவர்களுக்கு இத்தகைய பணிகள் மிகவும் தேவை என்பதை அன்னை மிகத்தெளிவாக உணர்ந்திருந்தார். அதற்காகத் தான் என் நரேன் இத்தகைய  பணிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறான். நமது சங்கம் இந்தப் பாதையில் தான் போகும். இதனை அனுசரித்துப் போக முடியாதவர்கள் போய்விடுவார்கள்.நரேன் குருதேவரின் ஒரு கருவி. உலக நன்மைக்காகத் தம் பிள்ளைகள் மற்றும் பக்தர்களின் எதிர்காலக் கடமைகளை அவரே நரேன் மூலமாகச் செய்கிறார். அவன் கூறுபவை அனைத்தும் சரியே. காலப்போக்கில் அதன் அற்புத விளைவுகளை நீங்கள் காண்பீர்கள்? என்பார் அவர்.

அதே வேளையில் பணிகள் என்ற பெயரில் ஆன்மீக சாதனைகளை ஒரேயடியாக விட்டுவிடுவதை அன்னை ஏற்றுக்கொள்ளவில்லைஇந்த விஷயத்தில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அப்படி ஈடுபட்ட ஒரு துறவியிடம் அன்னை பேசியதும் அவரை வழிநடத்திய விதமும் துறவியர் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையக்கூடியது. அந்த துறவியிடம் அன்னை புளிப்புப் பொருட்களிலிருந்து விடுபட நினைத்தவன் புளிய மரத்தடியில் வீடுகட்டிக்கொண்ட கதையாக இருக்கிறது என் நடத்தை.இறைவனின் திருநாமத்தில் ஈடுபடுவதற்காக நீ உலகைத்துறந்தாய்.ஆனால் இங்கோ பணிகள் என்ற பெயரில் இன்னோர் உலகை உருவாக்கி அதில் மூழ்கிக் கிடக்கிறாய். குடும்பத்தையும் சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு மடத்தில் சேர்கிறார்கள்.ஆனால் மடத்தைப்பற்றிப்பிடித்துக்கொண்டு அதை விட்டு விலக மறுக்கிறார்கள். என்ன மாயை! நீ தகர்குண்டிக்குப்போ. அங்கே மாணவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடு.முடிந்த அளவு ஜப தியானங்கள் செய் என்றார்.

தன் தவறை உணர்ந்த துறவி உடனே முற்றிலுமாக சாதனை வாழ்வில் ஈடுபட விரும்பினார்.

சீடர்- அம்மா,ஏதாவது ஏகாந்தமான இடத்திற்குச் சென்று முற்றிலுமாகத் தவ வாழ்வில் ஈடுபட விரும்புகிறேன்.ஆனால் என் உடல்நிலையும் சரியில்லை.

அன்னை-இப்போதைக்குச் சிறுசிறு பணிகளிலும் ஈடுபட்டிரு.தீவிர வேகம் தோன்றும் போது அத்தகைய வாழ்வில் ஈடுபடலாம். 

சீடர்-நான் ஜபம் செய்கிறேன்.ஆனால் மனம் ஒருமைப்படாமல் அலைகிறது.

அன்னை- மனம்  ஒருமைப்பட்டாலும் சரி,படாவிட்டாலும் சரி,ஜபம் செய்வதை விடவே கூடாது. தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு ஜபம் செய்தே தீர வேண்டும்.

ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்களுள்  கூட மனக்கசப்புகளும் பூசல்களும்  சகஜம். வேறுபட்ட இனம்,மொழி, மற்றும் பழக்கவழக்கங்களைச் சார்ந்த பலர்  சேர்ந்து வாழும் போது கருத்து வேற்றுமைகள் எழுவதில் வியப்பில்லை தான். ஆனால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகவில்லை என்றால் சங்கத்தின் ஒற்றுமை குலையும், வளர்ச்சி தடைப்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத்தேவை அன்பு. அன்னை இதை மிகவும் வலியுறுத்தினார். ஒரு முறை கோயால்பாரா ஆசிரமத்தின் தலைவரான சுவாமி அன்னையிடம் வந்து, அம்மா ஆசிரமத்துறவியர் முன்பெல்லாம் நான் சொன்னபடி கேட்டு நடந்தார்கள். இப்போது அப்படியில்லை.நான் ஏதாவது சொன்னால் உடனே உங்களிடமோ சாரதானந்தஜி மகராஜிடமோ அடைக்கலம் புகுந்து விடுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு நல்ல சாப்பாடும் போடுகிறீர்கள். நீங்கள் இருவரும்  அவர்களை வைத்துக்கொள்ளாமல் நல்ல புத்திமதி கூறி என்னிடமே திருப்பி அனுப்பினால் தான் நான் அவர்களை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.என்றார். இதைக்கேட்ட அன்னை அதிர்ந்து போய், உனக்கு என்ன ஆகிவிட்டது?என்ன பேசுகிறாய் என்பதை யோசித்துத்தான் பேசுகிறாயா? அன்பே சாரமானது.நமது சங்கம் அன்பு ஒன்றினால் மட்டுமே வளர்ந்து வருகிறது.நான் அவர்களின் தாய். அவர்களுக்கு நான் சாப்பாடு போடுகிறேன் என்று என்னிடமே வந்து சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை? கண்டிப்பிலும் கட்டுப்பாட்டிலும் ஆசிரமத்தை எப்படி வளர்க்க முடியும்? இப்படித்திட்டினால் உன் சொந்தப்பிள்ளையாக இருந்தாலும் கூட ஓடி விடுவார்களே! என்று கண்டித்து அறிவுரை கூறினார்.

மற்றொரு முறை அந்த சுவாமி அதே போன்ற புகாருடன் வந்தார். அவர் சொல்வதைக் கேட்காமல் வருபவர்களுக்கு அன்னை தம்மிடம் மட்டுமல்ல வேறெந்த ஆசிரமங்களிலும்  இடம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அன்னையால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆத்திரத்துடன் அவரிடம், என்னிடமே என் பிள்ளைகளைப்பற்றி இப்படிப்பேச உனக்கு என்ன தைரியம்? அவர்களுக்கு எங்கும் புகலிடம் கிடைக்காது என்று நான்  சொல்லவேண்டும்- இது தானே நீ வேண்டுவது? அப்படி ஒரு போதும் என் வாயிலிருந்து வராது. ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள். அவர்கள் என் பிள்ளைகள். குருதேவரிடம் தஞ்சம் புகுந் திருப்பவர்கள். அவர்கள் எங்கு போனாலும் அவர் அவர்களைப் பாதுகாப்பார். என்று கூறினார். அன்னை இதைக்கூறும்போது அவரது முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்ததாம். அவ்வளவு கோபமாக இருந்தார் அவர். தன் தவறை உணர்ந்த சுவாமி அன்னையின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு வேண்டினார். மடத்தின் தலைவரும் சரி, பிறரும் சரி, ஒருவரையொருவர் அனுசரித்துப்போக வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.  அதுவே பெரிய தவம் என்பதை மிகவும் வலியுறுத்துவார் அன்னை.

--

மடத்தில் சேர்ந்த இளைஞர்கள் பலர் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சுவாமிஜியை மேலோட்டமாகப் படிக்கின்ற பலருக்கும் எழுகின்ற குழப்பம் தான் அது. சுவாமிஜி தனி மனிதனுக்கு ஒரு நாட்டிற்கு என்றில்லாமல் மனித குலத்திற்கே ஒரு செய்தியுடன் வந்தவர். எனவே அவரது உபதேசங்கள் மனிதனுக்கு மனிதன், நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடும்.இந்த இளைஞர்களும் அவரது தேசபக்திமிக்க,எழுச்சியூட்டக்கூடிய சொற்பொழிவுகளைப் படித்துவிட்டு மடத்திற்கு வந்தனர். ஆனால் மடத்தில் சேர்பவர்களுக்கோ சுவாமிஜி ஆன்மஅனுபூதி என்பதை லட்சியமாக வைத்திருந்தார். இது பலரிடம் ஏன், குருதேவரின் பிற சீடர்களுக்கிடையில் கூட குழப்பத்தை விளைவித்திருந்தது.சுவாமி சாரதானந்தரே ஒரு முறை யோகானந்தரிடம் யோகின்,நரேனை  அவ்வப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பல விஷயங்களை அவன் சொல்கிறான். ஒன்றைச் சொல்லும் போது அது மட்டுமே உண்மை என்பது போல் அவ்வளவு அழுத்தமாகக் கூறுகிறான். அந்த நேரத்திற்கு அவன் கூறிய மற்ற விஷயங்கள் பொருளற்றவை போல் தொனிக்கின்றன என்று தமது மனப்போராட்டத்தைத் தெரிவித்தார். அதற்கு யோகானந்தர் சரத் உனக்கு ஒன்று சொல்கிறேன்.நீ அன்னையைப் பின்பற்று .அவர் சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும் என்றார்.

சுவாமிஜி மேலை நாடுகளிலிருந்து திரும்பி வந்து தமது எண்ணங்களுக்கு ஓர் உறுதியான வடிவம் கொடுப்பதுவரை தத்தளிக்கின்ற கப்பலுக்கு ஒரு கைதேர்ந்த மாலுமிபோல் செயல்பட்டார் அன்னை. இத்தகைய போராட்டத்துடன்  செல்கின்ற துறவியரிடம் மகனே! வெறும் தேசப்பற்று என்ன சாதித்துவிட முடியும்? நமது லட்சியம் குருதேவரே, குருதேவர் மட்டுமே. நீ என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் குருதேவரைப் பற்றிப் பிடித்திருந்தாயானால் வழிதவற மாட்டாய். என்று அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார். அவரது ஆன்மீக ஆற்றல் அந்தத் துறவியின் வாழ்க்கைப் போக்கை மாற்றியமைத்து விடும்.

அத்வைத அனுபூதி அதாவது இரண்டற்ற பரம்பொருளுடன் ஒன்று கலந்திருக்கின்ற அனுபவத்தையே மிகவுயர்ந்த ஆன்மீக அனுபவமாக நமது உபநிடதங்கள் கூறுகின்றன. அந்த உயர் லட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு.உருவ வழிபாடு போன்ற சாதனைகள்இன்றி ஞான நெறி சாதனைகளை மட்டுமே பின்பற்றுகின்ற வகையில் ராமகிருஷ்ண மடங்களுள் ஒன்று அமைய வேண்டும்.என்பது சுவாமிஜி விரும்பினார். அதற்காக இமய மலையில் மாயாவதி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே அத்வைத ஆசிரமம் ஒன்றை நிறுவினார். அங்கே உருவ வழிபாடு போன்ற எந்தக் கோட்பாடும் இடம்பெறக் கூடாது என்பதைக் கண்டிப்பாக க்கூறியிருந்தார்.ஆனால் அதையும் மீறி அங்கிருந்த துறவியர் குருதேவரிடம் படத்தை வைத்து வழிபாடு செய்தனர். சுவாமிஜியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனடியாக அங்கே பூஜையை நிறுத்தும்படி கூறிவிட்டார். அங்கிருந்த துறவியர் அப்படியே செய்தாலும் ஓரிருவருக்கு அது என்னவோ சரியாகப் படவில்லை. சுவாமிஜியின் மறைவிற்குப்பின்னர் அன்னையிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது. நாள்தோறும் குருதேவரின்  பூஜை புனஸ்காரம் என்று வாழ்பவர் அன்னை. எனவே அவர் தங்களுக்குச் சாதகமாக இருப்பார் என்று எண்ணினார். ஆனால் அன்னையோ குருதேவர் ஓர் அத்வைதி,அவர் அத்வைதத்தையே போதித்தார். அவரைப்பின்பற்றுபவர்கள் அனைவரும அத்வைதிகளே என்று பதில் எழுதினார். அதன் பின் எவ்வித மறுப்பும் இன்றி இன்றும் அந்த ஆசிரமம் அத்வைத ஆசிரமமாகவே செயல்பட்டு வருகிறது.

லட்சியப் பிரச்சனைகளில் மட்டுமல்ல.விவேகானந்தர் முதலான குருதேவரின் சீடர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்னை வகித்த இடம் மிகவுயர்ந்தது. மேலை நாடுகளைத் தமது ஆன்மீகப்பேராற்றலால் வெற்றிகொண்ட சுவாமிஜி அன்னையின் திருமுன்னர் ஒரு குழந்தையாக மாறிவிடுவதைக் காணும் போது நமது விழிகள் வியப்பால் விரிகின்றன. சுவாமிஜி போன்ற மகான்கள் அன்னையை எப்படிப் போற்றினார்கள் என்பதைக் காணும் போது தான் அன்னையின் உன்னதத்தை நாம் அறிய முடிகிறது. 

மேலை நாட்டிலிருந்து திரும்பி வந்த சுவாமிஜி அக்டோபர் 1898-.இல் அன்னையை தரிசிக்கச் சென்றார். அப்போது தான் அவர் காஷ்மீர் சென்று வந்திருந்தார். காஷ்மீரில் நடந்த  ஒரு நிகழ்ச்சி அவரைச்சற்று கலங்கச் செய்திருந்தது. அன்னையைக் கண்டதும் அவர் புகார் கூறும் தொனியில் அம்மா உங்கள் குருதேவரின் ஆற்றல் பிரமாதம் தான்! காஷ்மீரில் ஒரு சாது இருந்தார். அவரது சீடன் என்னிடம் வரத் தொடங்கினான். அதனால் கோபமுற்ற அவர் எனக்கு வயிற்று நோய் கண்டு மூன்றே நாளில்  அங்கிருந்து புறப்பட்டு விடுவேன் என்று சபித்துவிட்டார். அப்படியே நடக்கவும் செய்தது. உங்கள் குருதேவரால் என்னைக் காக்க முடியவில்லை என்று கூறினார். அதற்கு அன்னை மகனே,அந்த சாது  பெற்றுள்ள சித்திகளின் விளைவு அது. அவற்றின் ஆற்றலை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். குருதேவர் அவற்றை நம்பினார். அவர் எதையும் அழிக்க வரவில்லை. எல்லா நெறிகளையும்  அவர் ஏற்றுக்கொண்டார் என்றார். சுவாமிஜி விடாமல் இனி தாம் குருதேவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றார். அதற்கு அன்னை  சற்று கேலி கலந்த குரலில்,” என் மகனே,அது உன்னால் முடியக்கூடிய காரியமா? என் குடுமி அவர் கையில் அல்லவா உள்ளது என்றார்.


மற்றொரு முறை நடைபெற்ற நிகழ்ச்சியைப்பற்றி அன்னையே கூறினார். ஒரு முறை சுவாமிஜி அன்னையிடம் சென்று,அம்மா என்னிடமிருந்து அனைத்தும் பறந்து கொண்டிருக்கின்றன.எல்லாமே என்னை விட்டுப் பறப்பதை நான் காண்கிறேன், என்றார். அதற்கு அன்னை சிரித்தவாறே,நரேன் கவனமாக இரு. நானும் பறந்து விடாமல் பார்த்துக்கொள் என்றார். உடனே சுவாமிஜி நீங்கள் என்னிடமிருந்து பறந்துவிட்டால் என் கதி என்னவாகும்! குருவின் பாதகமலங்களின் மகிமையை உணர்த்தாத ஞானம் ஒரு ஞானமா? அது அஞ்ஞானமே . குருவின் திருப்பாதங்களைத் தவிர வேறெங்கிருந்து ஞானம் உதிக்க முடியும்? என்று அதற்கு பதில் கூறினார்.

அன்னை சொல்வதை மறு பேச்சின்றி ஏற்றுக்கொள்வார் சுவாமிஜி. பேலூர் மடத்தில் வேலை செய்து வந்த ஒருவரைத் திருட்டுக் குற்றத்திற்காக சுவாமிஜி வெளியேற்றினார். தன் தவறை உணர்ந்த அவன்  மன்னிப்பு வேண்டி நேராக உத்போதனுக்கு ஓடி அன்னையின் பாதங்களில் வீழ்ந்தான். அன்னையால் அவனை மன்னிக்காமல் இருக்க முடியவில்லை. அன்று பிற்பகல் பிரேமானந்தர்  எதேச்சையாக அன்னையிடம் சென்றிருந்தார். அன்னை அவரை அழைத்து இதோ பார் பாபுராம், இவன் மிகவும் ஏழை.வறுமை தான் அவனைத் திருடத் தூண்டியிருக்கிறது. அதற்காக நரேன் அவனைத் திட்டி வெளியேற்றிவிட வேண்டுமா என்ன? இந்த உலகம் இருக்கிறதே, அது துன்பங்களும் வேதனைகளும் நிறைந்ததப்பா!நீங்கள் துறவிகள் .உங்களுக்கு அதெல்லாம் எங்கே புரியும்! அது போகட்டும். இவனைக் கூட்டிச் செல் என்றார். அவனைக் கூட்டிச் சென்றால் சுவாமிஜி போபித்துக் கொள்வார் என்று அன்னைக்கு விளக்க முற்பட்டார் பிரேமானந்தர். ஆனால் அவரை ப் பேச விடாமல் இடைமறித்த அன்னை சற்று கண்டிப்பான குரலில்,நான் சொல்கிறேன்,கூட்டிச் செல் என்றார். வேறு வழியின்றி அவனை பேலூர் மடத்திற்கு அழைத்துச் சென்றார் பிரேமானந்தர். அவனைக்கண்டதும் சுவாமிஜி,பாபுராமின் புத்தியைப்பார்.அந்தத் திருடனை மீண்டும் கூட்டி வந்திருக்கிறான் என்று கோபத்தடன் கூறினார். ஆனால் உத்போதனில் நடைபெற்றதை பிரேமானந்தர் கூறியதும் மறு பேச்சின்றி மௌனமானார். 

 சுவாமிஜி மட்டுமல்ல,குருதேவரின் சீடர்கள் ஒவ்வொருவரும் அன்னையைத் தங்கள் தாயாகவும்  குருவாகவும்  தேவியாகவுமே கண்டனர். அவர்களுக்குப் பின் மடத்தில் சேர்ந்த அடுத்த தலைமுறையினருக்கு குருதேவரை நேரில் காணும் வாய்ப்பில்லை. எனவே அவர்கள் அன்னையையே தங்கள் புகலிடமாகக் கொண்டனர். துறவு வாழ்க்கையில் போதனைகளாலும் பயிற்சிகளாலும் மட்டும் வெற்றி பெறுவது கடினம். துறவி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு ஓர் லட்சிய-வாழ்க்கை வேண்டும். அவன் தளர்வுறும் நேரங்களில் அவனுக்குப் புத்துணர்வை அளிப்பதற்கு ஆற்றல் மிக்க ஒரு குரு வேண்டும். குருதேவர் மறைந்துவிட்ட இந்த வேளையில் அந்த இடத்தைப் பூர்த்தி செய்தார் அன்னை.உபதேசங்களையும் வழிகாட்டுதலையும் விட இது மிக முக்கியமானது. தளர்வுற்ற நேரங்களில் எல்லாம் அவர்கள் அன்னையை நோக்கினர்.அவரது புனித வாழ்வு அவர்களிடம் ஆற்றலை  நிரப்பியது. எனவே புத்துணர்வுடன் தீவிரமான சாதனை வாழ்வில் ஈடுபட்டனர். கல்கத்தா செல்லும்போது முடிந்த நேரங்களில் எல்லாம் பேலூர் மடத்திற்குச் செல்வார் அன்னை. குறிப்பாக துர்க்கா பூஜை போன்ற விசேஷ நாட்களில் பல முறை சென்றுள்ளார். அன்னையின் வருகை துறவியருக்கு சாதனை வாழ்வில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பண்மடங்காக்கியது.

ஆனால் துறவியரிடம் துறவுணர்வைக் கொழுந்து விட்டெரியச் செய்த அன்னை, குடும்பத்தில் தான் வாழ்ந்தார்.  குடும்பத்தில் வாழ்ந்து கொண்டே இல்லறத்தாருக்கும் துறவியருக்கும் ஆன்மீகப் பாதையைத் திறந்து வைத்தார். ஆன்மீக அனுபவங்களை அள்ளி வழங்கினார். இது வரலாறு காணாத அதிசயம்.

குருதேவி என்ற நிலையில் அன்னை சில  தீர்த்த தலங்களுக்குச் சென்றதை ஏற்கனவே கண்டோம். இப்போது அவர் தென்னகத்திற்கு வந்தது பற்றிப் பார்ப்போம்.


தென்னாட்டில்


அன்னை 1886-ஆம் ஆண்டு பிருந்தாவனத்திற்குச் சென்றதையும் 1888-இல் கயை புத்தகயை முதலான இடங்களை தரிசித்ததையும் ஏற்கனவே கண்டோம். 1893-டிசம்பரில் பலராம் போஸின் மகள் இறந்தாள். அதனை  அவரது மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனமாற்றத்திற்காக அவளை பீகாரிலுள்ள கைல்வாருக்கு அனுப்ப எண்ணினார் அவர். அவளோ அன்னை உடன் செல்வதானால் மட்டுமே போக ஒப்புக் கொண்டாள்.எனவே அன்னையும் உடன் சென்றார். அவருடன் கோலாப்மா,சரத், யோகின்,சாரதா பிரசன்னர் மற்றும் பலரும் சென்றனர். கைல்வாரில் அன்னை இயற்கையழகில் ஆழ்ந்து ஈடுபட்டார். மான்கள் நிறைந்த காட்டுப்பகுதி அது. சிறிய சத்தம் கேட்டால் கூட அம்புபோல் பாய்ந்தோடும் மான்களின் கூட்டம் அவருக்கு அலாதியான இன்பத்தைக் கொடுத்தது.  பேரீச்சை மரங்களின் ரசம் வடிக்கப் பானைகள் கட்டியிருப்பார்கள். நரிகள் வந்து ரசத்தைக்குடித்துச் சென்றுவிடும். அவற்றை விரட்ட அந்தப்பகுதி மக்கள் வினோதமான யுக்தியைக் கையாண்டனர். பானை முதலான மண்பாண்டங்களைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு அருகிலுள்ள குழிகளில் மறைந்து கொள்வார்கள். நரிகள் வந்ததும் ஒரு விதமான ஒலியெழுப்பிக் கொண்டு அவற்றை விரட்டுவர். இதனைக் கண்டு சிறுமி போல் களித்தார் அன்னை. ஓரிரு மாதங்கள் அங்கே தங்கி விட்டு அனைவரும் 1894 ஆரம்பத்தில் திரும்பினர். 

1894- இல் காசிக்கும் பிருந்தாவனத்திற்கும்  இரண்டாம் முறையாகப் பயணம் செய்தார் அன்னை. இந்த முறை அவருடன் சியாமாசுந்தரி தேவி, அன்னையின் சகோதரர்கள், சுவாமி யோகானந்தர், யோகின்மா,கோலாப்மா ஆகியோர் சென்றனர்.அன்னை பிருந்தாவனத்திலிருந்து திரும்பிய போது பாலகோபாலனின்  சிறு விக்கிரகம் ஒன்றை வாங்கி வந்தார். பூஜை எதுவுமின்றி அதை ஜெயராம்பாடி வீட்டில் ஓர் அலமாரியில் வைத்திருந்தார். ஒரு நாள் அன்னை கட்டிலில் படுத்திருந்தபோது சின்னக் கண்ணன் அங்கே தவழ்ந்து வந்தான். அன்னையின் அருகில் அமர்ந்து கொண்டு,ஆமாம் நீ என்னை இங்கே கொண்டு வந்தாய்.ஆனால் உணவோ பூஜையோ எதுவுமின்றி வைத்துவிட்டாய். நீயே என்னைக் கவனிக்காவிட்டால் வேறு யார் கவனிப்பார்கள்? என்று கேட்டு மறைந்தான். அன்னை உடனே எழுந்து,  அலமாரியில் வைத்திருந்த அந்த பாலகோபாலனை எடுத்து, அன்புடன் அவனது முகவாயைத் தடவி, குருதேவரின் படத்திற்கு அருகில் வைத்து சில மலர்களை அர்ப்பித்தார். அதன் பிறகு குருதேவருடன் கண்ணனுக்கு தினசரி வழிபாடு நடைபெறலாயிற்று.

பின்னர் 1904 நவம்பரில் மீண்டும் அன்னை புரி சென்றார். சியாமா சுந்தரி,சுரபாலா,ராது, அன்னையின் சகோதரரான காளி, அவரது குடும்பத்தினர், பிரேமானந்தர்,மற்றும குருதேவரின்சீடர்கள்  பலரும் உடன் சென்றனர். புரியில் அனைவரும் சில நாட்கள் தங்கினர். அப்போது அன்னைக்குக் காலில் கட்டி ஒன்று தோன்றியது. அது அவருக்கு மிகுந்த வேதனை தந்தது. வலியின் காரணமாக அவர் அதைத் தொடுவதற்குக்கூட யாரையும் அனுமதிக்க வில்லை. இதைக்கண்ட பிரேமானந்தர் அன்னையின் சீடரான ஒரு மருத்துவருடன்  ஆலோசித்தார். அதன் படி யாருக்கும், அன்னைக்குக் கூட,சொல்லாமல் காலில் உள்ள கட்டியை அறுத்துவிடுவது என்று முடிவு செய்தனர். மறுநாள் வழக்கம் போல் மருத்துவரான அந்தச் சீடர் வந்தார். வணங்குவதற்காக அன்னையின் திருவடிகளை நோக்கிக் குனிந்த அவர்,மறைவாகத் தன் கையில்  கொண்டு வந்திருந்த கத்தியால், மிகுந்த கவனத்தோடு கட்டியைக் கீறி விட்டார். அவ்வளவு தான்.அன்னை வலியால் ஓவென்று அலறிவிட்டார். அருகிலிருந்தவர்கள்  அதிர்ந்து சிலையாக நின்றனர். அந்தக் காரியத்தைச் செய்த மருத்துவர்  மீதும், அதற்கு உடந்தையாக இருந்த பிரேமானந்தர் மீதும் அன்னைக்குக் கோபமோ கோபம். ஆனால் கட்டி அறுக்கப்பட்டுச் சீழ் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின் வலி பெரிதும் குறைந்து விட்டது. அன்னையும் மகிழ்ச்சியுடன் இருவருக்கும் நன்றி செலுத்தினார். வலி குறைந்து விட்டதால் ஜகன்னாதர் கோயிலையும்,மற்ற கோயில்களையும் நன்றாக தரிசித்தார். ஆலயத்தை அடுத்திருந்த கடலில் இரண்டு முறை நீராடவும் செய்தார். நல்ல சீதோஷ்ணத்திற்குப் பெயர் பெற்ற அந்தத் தலத்தில் இரண்டு மாதங்கள் தங்கியபின் திரும்பினார்.

காமார்புகூரிலிருந்து இருபத்தெட்டு மைலில் உள்ள விஷ்ணுபூருக்கும் ஒரு முறை அன்னை பயணம் செய்தார் விஷ்ணுபூர் ஒரு காலத்தில் வளத்தோடு கூடிய தலைநகராக இருந்தது. அதனை ஆண்ட பக்தி மிக்க வைணவ மன்னர்கள் அந்த ஊரில் அழகிய கோயில்களைக் கட்டினார். அவற்றுள் பலவும் கவனிப்பாரற்றுச் சிதைந்து கிடந்தன. குருதேவர் இந்த கோயில்களையும் ஊரையும் மிகவும் புனிதமாகப்போற்றினார். விஷ்ணுபூர் மறைந்திருக்கின்ற மற்றொரு பிருந்தாவனம். நீ ஒரு முறை அந்தத் தலத்திற்குச் சென்று வா, என்று அன்னையிடம் கூறியும் இருந்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக அன்னை விஷ்ணுபூர் சென்றார்.

அன்னையின் புனிதத் திருப்பாதங்கள் படுவதற்கு தென்னகம், குறிப்பாக தமிழ்நாடு கொடுத்து வைத்திருந்தது. தமிழகத்தின் முக்கிய சிவத்தலமான ராமேசுவரத்தை தரிசிக்கும் ஆவல் அன்னைக்கு இருந்தது. குருதேவரின் சீடரும், சென்னை ஸ்ரீராகிருஷ்ண மடத்தின் முதல் தலைவருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் அன்னையைப் பலமுறை அழைத்திருந்தனர். ஆனால் என்னவோ  யாத்திரை தள்ளிப்போய்க் கொண்டேயிருந்தது. --


 MAIN PAGE 

image88

தென்னாட்டில்

தென்னாட்டில்

கடைசியாக,1910-ஆம் ஆண்டு இறுதியில் அன்னை புறப்பட்டார். வழக்கம் போல் சுரபாலா,ராது மற்றும் கோலாப்மா,பிரம்மசாரிகள் சுகுல் மற்றும் கிருஷ்ணலால், இவர்களுடன் இன்னும் பல பக்தர்கள்  என்று அன்னையின் பரிவாரமும் உடன் புறப்பட்டது. ஒரிசாவில் கோட்டார் என்னும் ஊரில் பலராம் போஸின் வீடும் பண்ணை நிலமும் இருந்தது. அங்கே அன்னை இரு மாதங்கள் தங்கினார். பல பக்தர்களுக்கு தீட்சையும் அளித்தார்.

அங்கிருந்து சென்னைக்குப் பயணமானார். இந்தத் தென்னிந்திய யாத்திரை அன்னைக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சில்கா ஏரியின் கரை வழியாக ரயில் சென்ற போது அதிகாலை வேளையாக இருந்தது. இதமான குளிருடன் வீசிய பனிக்காற்றும்,காற்றின் சுருதிக்குத் தாளமிட்டபடியே தவழ்ந்த அந்த நீல நிற ஏரியின் சிற்றலைகளும், அலைகளுடன் களித்து நீந்திய மீன்களும், மீன்களைப் பிடிக்க தங்கள் கூரிய அலகை நுழைத்தவாறே நடந்த நாரைகளும், எப்போதாவது மேற்பரப்புக்கு வருகின்ற மீன்களைக் கொத்திச் செல்வதற்காகப் பறந்த நீலக்குருவிகளும் அன்னையின் மனத்தை வெகுவாக ஆக்கிரமித்தது. மெள்ள,மெள்ள சூரியன் உதித்ததும் காட்சி மாறியது. நீர்ப்பரப்பிலிருந்து மேலே கிளம்பிய பனி மண்டலப்புகை, அனைத்தையும் சூழ்ந்து அந்தக்காட்சியை ஒரு கனவுலகக்காட்சி போல் மாற்றியது. இப்படி மாறுகின்ற காட்சிகளை அளித்தவாறே விரைந்து கொண்டிருந்தது ரயில். அன்னைக்கு மனநிலை விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒரு கணம் இயற்கையின் இந்த எழிலைக் கண்டு ஒரு சிறுமி போல் கைகொட்டிக் களிப்பார். மறுகணம்,இயற்கையின் மகிமை இறைவனின் மாட்சிமையை நினைவூட்டும்போது கைகூப்பி வணங்குவார்.

ரயில் பெர்ஹாம்பூரை அடைந்தது. ராமகிருஷ்ணானந்தரின் ஏற்பாட்டின்படி அங்கே பக்தர் ஒருவர் அன்னையைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பக்தர்கள் பலர் வந்து அன்னையை வணங்கினர். மறுநாள் அங்கிருந்து புறப்பட்டனர். ரயில் விசாகப்பட்டினத்தைக் கடந்த போது இருபுறமும் நீண்டு கிடந்த குன்றுகளைக் கண்ட அன்னை,பார் பார் அற்புதச் சித்திரம் போல் எத்தனை அழகாக உள்ளது என்று வியந்து கூறினார்.

 சென்னை ரயில் நிலையத்தில் ராமகிருஷ்ணானந்தர் பக்தர்களுடன் காத்திருந்தார். ஜெய கோஷத்துடன் அன்னை வரவேற்கப்பட்டார். கார் ஒன்றில் அன்னையை ஸ்டேஷனிலிருந்து மடத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்திருந்தார்சுவாமிகள். அப்பொழுது கோடைக்காலம் . ரயில் வரும்வரை கார் வெயிலில் நின்றதால் இருக்கை சூடாகி விட்டிருந்தது. எனவே அன்னை வந்து அமருமுன் சுவாமிகள் தமது அங்கவஸ்திரத்தை எடுத்து,அருகிலிருந்த குழாய் நீரில் நனைத்துப் பிழிந்து,இருக்கையைத்துடைத்துக் குளிரச் செய்தார். அன்னை தங்குவதற்கான வசதிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்தார்.

மயிலாப்பூர் மடத்திற்கு எதிரில் அமைந்திருந்த சுந்தர் நிவாஸ்” என்ற ஒரு வீட்டில் அன்னை தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாத காலம் அன்னை சென்னையில் தங்கினார். மடத்தின் அருகிலுள்ள கபாலீசுவரர் கோயிலிலும்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும்,தரிசனம் செய்தார். மாலை வேளைகளில் கடற்கரை,கோட்டை,அப்போது முற்றுப் பெறாத நிலையிலிருந்த மீன் காட்சியகம் போன்ற இடங்களைப் பார்த்தார். சென்னையில் தான் அன்னை முதன்முதலில் ரிக்ஷாவிலும் பயணம் செய்தார்.

இங்கேயும் கணக்கற்ற பக்தர்கள் அன்னையை தரிசிக்க வந்தனர். பலருக்கு தீட்சை அளித்தார். மொழியின் துணையின்றியே அன்னை பக்தர்களுக்கு தீட்சையளித்தது ஓர் அற்புத நிகழ்ச்சி. பக்தர்களுடன் சாதாரணமாகப் பேசும் போது ஒரு மொழிப்பெயர்பாளரின்  துணையை நாடிய அன்னை,தீட்சை வேளையில் யாரையும் சாராமல் தாமே அவர்களுடன் பேசினார். இது பற்றி ஏற்கனவே கண்டோம். ஒரு நாள் பள்ளி மாணவிகள் வந்து அன்னையைின் திருமுன்னர் தமிழ்ப்பாடல்களைப் பாடி.வயலின் இசைத்தனர். அன்னை மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தைகளை ஆசீர்வதித்தார்.

ராமேசுவர யாத்திரையில் ராமகிருஷ்ணானந்தரும்  ராம்லாலும்  சேர்ந்து கொண்டனர். சென்னையிலிருந்து அனைவரும் ரயில் மூலம் மதுரை சென்றனர். அங்கே மீனாட்சி அம்மன் கோயிலை தரிசித்ததுடன் திருமலை நாயக்கர் மஹால் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் முதலான இடங்களைச் சென்று பார்த்தார்.

மதுரையில் ஒரு நாள் தங்கிவிட்டு, மறுநாள் ராமேசுவரத்தை அடைந்தனர். அங்கே அன்னை மூன்று நாட்கள் தங்கினார். ராமநாதபுரம் அரசர் சுவாமி விவேகானந்தரின் சீடரும் ராமேசுவரக்கோயிலின் அறங்காவலரும் ஆவார். தனது குருநாதருடைய குருவான அன்னை வருவதை அறிந்த அவர் அன்னையை வரவேற்கவும் ஆலய தரிசனத்திற்கும் கோயிலில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார். 


மன்னரது கட்டளையின் பேரில் அன்னையும் அவருடன் சென்றவர்களும் கோயிலின் கருவறைக்குள் சென்று வழிபட முடிந்தது. அன்னை அங்குள்ள சிவலிங்கத்திற்குத் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபட்டார்.ராமகிருஷ்ணானந்தர் ஏற்பாடு செய்து அளித்திருந்த நூற்றெட்டு பொன் வில்வ இலைகளால் அர்ச்சனையும் செய்தார்.

பொதுவாக லிங்கத்தின் மீதுள்ள தங்கக் கவசம் அகற்றப்படுவதில்லை. அன்னை கங்கை நீரால் அபிஷேகம் செய்ய விரும்பிய போது, அந்தக் கவசம்  கழற்றப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் அன்னை தம்மை மறந்த படி,நான் வைத்தது போலவே உள்ளார், என்று கூறினார். உடனே துணுக்குற்றவராய் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு பொருளற்ற வார்த்தைகள் எல்லாம் இப்போது என் வாயிலிருந்து வெளிவருகின்றன. என்றார். ஆனால் அவர் கூறியது அருகில் நின்ற பிரம்மசாரி கிருஷ்ணலாலின் காதுகளில் விழுந்து விட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சில மாதங்கள் கழித்து கோயால்பாராவைச் சேர்ந்த அன்னையின் சீடரான கேதார்பாபு கல்கத்தாவிற்கு வந்து அன்னையை தரிசித்து பேசிக் கொண்டிருந்தார். அவர் அன்னையின் ராமேசுவரதரிசனத்தைப் பற்றிக் கேட்டார். அப்போதும் அன்னை மகனே, எம்பெருமான் நான் அன்று வைத்துச் சென்றது போலவே இப்போதும் உள்ளார், என்று கூறினார். அப்போது அந்தப் பக்கமாக ச் சென்று கொண்டிருந்த கோலாப்மாவின்  காதுகளில் இந்தச் சொற்கள் விழுந்தன.அவருக்கு அன்னை கூறியதன் பொருள் புரிந்துவிட்டது. உடனே அவர் அன்னை தம்மையும் மீறிய நிலையில் கூறிய இந்த வார்த்தைகளால் தாம் யார் என்பதைத்தாமே வெளிப்படுத்தி விட்டார்.என்று கூறி விட்டு,அன்று நான் விட்டுச் சென்றது போலவே உள்ளது என்று அன்னை கூறியதன் உட்பொருளையும் கூறத்துவங்கினார்.ராமாவதாரத்தில் அன்னை சீதையாக அவதரித்தார். இலங்கைப்போர் முடிந்து ராமரும் சீதையும் அயோத்தி திரும்பிய போது கடற்கரை மணலால் லிங்கம் செய்து ராமபிரான் சிவபெருமானை வழிபட்டார். அப்போது அன்னையாகிய சீதையும் அருகில்  இருந்தார். இப்போது கவசம் கழற்றப்பட்ட நிலையில் அதைக் கண்டதும் தமது முந்தைய அவதார நினைவுகள்  மனத்தில்பளிச்சிட நான் விட்டுச் சென்றது போலவே உள்ளது.என்று கூறினார்அன்னை. இப்படியெல்லாம் கோலாப்மா விளக்கம் கூறுவதைக்கேட்ட அன்னை, என்ன இது! லிங்கத்தைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தைத்தான்  சொன்னேன். அதற்குப்போய் இப்படியெல்லாம் கதைகட்டிக் கொண்டிருக்கிறாயே! என்று தாம் பேசிய சொற்களின் பொருளை மறைக்க முற்பட்டார். தமது ராமேசுவர அனுபவங்களைப் பிற்காலத்தில் அன்னை சீடர்களிடம் கூறியுள்ளார். ராமேசுவரத்தில் நான் ராமலிங்கரை வழிபடுவதற்காக,தங்கத்தால் நூற்றெட்டு வில்வ இலைகளை சசி தயார் செய்து வைத்திருந்தான். நான் கோயிலுக்கு வந்ததை அறிந்த ராமநாதபுர மன்னர் கோயிலையும் சுவாமிக்கு அணிவிக்கும் நகைகளையும் கஜானாவையும் காட்டும்படி ஆணையிட்டிருந்தார். அதோடு அந்த ஆபரணங்களில்  நான்  எதையாவது விரும்பினால் அதை எனக்குக் கொடுக்கும் படியும் உத்தரவிட்டிருந்தார். எனக்கு அவை எதற்கு? எனவே, என் தேவைகளை எல்லாம் சசி கவனித்துக் கொள்கிறான் என்று கூறினேன். அவர்களின் மனம் வருந்துமே என்பதற்காக அருகிலிருந்த ராதுவைக் காட்டி இவளுக்கு ஏதாவது வேண்டுமானால் கொடுங்கள், என்றேன். உடனே கோயில் அதிகாரிகள் வைரம், மாணிக்கம், இவைகளால் ஆன நகைகளை அவளிடம் காண்பித்து அவளுக்குப் பிடித்ததை எடுத்துக்கொள்ளும்படி கூறினர். நகைகளைப் பார்த்த பின்னர்  என் இதயம் வேகமாக அடித்துக்கொள்ளத் துவங்கியது.ஐயோ! இவள் எதையும் எடுக்கக்கூடாதே என்று எண்ணியவாறே பரபரப்போடு குருதேவரிடம் பகவானே,ராதுவிற்கு இந்த நகைகள் மீது ஆசை ஏற்பட்டுவிடக்கூடாது. என்று பிராத்தனை செய்தேன். நெடுநேரம் ஒவ்வொரு நகையாகப் பார்த்து வந்த ராது கடைசியில்,தனக்கு அவை எதுவும் வேண்டாம் என்றும். தொலைந்து போன பென்சிலுக்குப் பதிலாகப் புதிய பென்சில் ஒன்று வாங்கித் தருமாறு கூறினாள். நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். கோயிலை விட்டு வெளியே வந்ததும் ஒரு கடையில் அரைஅணாவுக்கு அவளுக்கு ஒரு பென்சில் வாங்கிக் கொடுத்தேன்.

ராமேசுவரத்திற்கு அருகிலுள்ள புண்ணியத் தலம் தனுஷ்கோடி, அங்கே அன்னை செல்ல முடியவில்லை. எனினும் அங்குள்ள வழக்கப்படி வெள்ளியில் அம்பும் வில்லும் செய்வித்து ஒருவர் மூலம் காணிக்கை செலுத்தினார்.

 ராமேசுவரத்திலிருந்து நேராக சென்னை வந்து குருதேவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். 1911 மார்ச் மாத இறுதியில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர்  உடன் வர பெங்களூர் சென்றார். அங்கு ஏற்கனவே ராமகிருஷ்ணமடம் ஒன்று செயல்பட்டுக்  கொண்டிருந்தது. அப்போது அதன் தலைவராக இருந்த சுவாமி நிர்மலானந்தர்  அன்னையை வரவேற்றார்.அன்னை மடத்திலேயே தங்கினார். அவருடன் வந்தவர்கள்  ஆசிரமத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில்  தங்கினர். பொது மக்களுக்கு முன் கூட்டித் தெரிவிக்கப்படாமல் இருந்தும்,  அன்னையை தரிசிக்க  ஏராளமானோர் மடத்திற்கு வந்தனர். பிற்காலத்தில்  ஆ! பெங்களூரில் தான் என்ன கூட்டம்! நான் ரயிலில் இருந்து இறங்கிய உடனே என் மீது பூக்களை மழையாகப் பொழிந்தார்கள். நான் நடந்து சென்ற பாதை முழுவதும் பூக்கள்.குருதேவரின் உபதேசங்கள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. அதனால் தான் அங்கே அவ்வளவு கூட்டம் வந்ததுஎன்று நினைவு கூர்ந்தார் அன்னை. அங்கே அவர் ஒரு வாரம் தங்கினார்.


ஒரு நாள் பிற்பகலில் அன்னை ஆசிரமத்திற்கு அருகில்  காவிபுரத்தில்  இருந்த குகைக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினார். அப்போது ஆசிரம வாசல் முழுவதும் மக்கள் திரண்டிருந்தனர். அவர் வண்டியை விட்டு இறங்கியதும்,அத்தனைபேரும் தங்களை மறந்து நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் வீழ்ந்து அவரை வணங்கினர். அன்னையின் மனம் உருகியது. கண்களில்  நீர் அரும்பியது. தம்மை மறந்தவராக நெடுநேரம் அங்கேயே நின்று கைகளை உயர்த்தி, உள்ளம் நெகிழ அவர்களை ஆசீர்வதித்தார்.பக்தர்களின் உள்ளம் பேரானந்தத்தில் மூழ்கியது.

அன்னையை தரிசிக்க காலையும், மாலையும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அன்னையின் முன் அமைதி யோடும் ஆனந்தத்தோடும்  அமர்ந்திருந்தனர். மொழி தெரியாத காரணத்தால் அவர்களுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் பேசவும் தம்மால் முடியாததற்கு அன்னை மிகவும் வருந்தினார். இதைக்கண்ட பக்தர்கள்,அம்மா நீங்கள் பேசவே வேண்டாம்,பேச்சு எதற்கு தாயே? உங்களைப் பார்த்துக்  கொண்டிருப்பதிலேயே எங்கள் இதயங்களில் அளவில்லாத ஆனந்தம் பொங்கிப் பெருகுகிறது என்று கூறினர்.

ஒரு நாள்  மாலை வேளை மடத்தின் பின்புறத்தில்  இருக்கும் ஒரு சிறு பாறையின் மீது அன்னை அமர்ந்து கதிரவன் மறையும் அழகை அனுபவித்துக்கொண்டிருந்தார். சில துறவிச் சீடர்களும் அங்கிருந்தனர். அன்று இயற்கையின் எழில் விவரிக்கவொண்ணா மாட்சியுடன் மிளிர்ந்தது. நீல வானத்தில் வெண்மேகங்கள்  மிதந்து சென்றன. அவற்றின் மீது மாலைச் சூரியன் தன் வர்ண ஜாலங்களை வீசி ஆகாயத்தை ஒப்பில்லா அழகுக் களஞ்சியமாக ஆக்கியிருந்தான். பிரகிருதியின் இந்த அழகைப் பார்த்ததும்,பிரகிருதியின் மூலப்பொருளான பரமாத்மாவின் சொல்லொணா அழகும் பெருமையும்  நினைவுக்கு வந்ததோ என்னவோ, அன்னை ஆழ்ந்த தியானத்தில் முழ்கிவிட்டார். இதனைக் கேள்வியுற்றராமகிருஷ்ணானந்தர்,அன்னை மலைமகள் ஆகிவிட்டார் என்று கூறி விட்டு அன்னை இருந்த பாறையின்  உச்சிக்கு விரைந்து ஏறினார். பருத்த தேகம்  உடையவராதலால் அந்தச் சிறு பாறையில் கூட சிரமத்தின் பேரிலேயே ஏறிச் செல்ல முடிந்தது. ஏறியவர் நேராக அன்னையின் திருமுன்னர் சென்று நமஸ்காரம் செய்து, அவரது திருப்பாதங்களில் தலைவைத்து,தேவீ மாகாத்மியத்திலுள்ள சுலோகங்களைச் சொல்லி,கருணை புரி தாயே! கருணை புரி அம்மா! என்று பிராத்தித்தார். கெஞ்சிக் கேட்கும் மகனைச் சாந்தப்படுத்தும் தாய் போன்று அன்னை அவரது தலையை அன்பாக த் தடவிக் கொடுத்தார். அன்னையின் பூரண ஆசி பெற்றுப் பூரித்தார் சுவாமிகள்.

பெங்களூரிலிருந்து சென்னை வந்து ஓரிரு நாட்கள் தங்கியபின்  கல்கத்தா புறப்பட்டார் அன்னை. வழியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமந்திரியில் தங்கி, கோதாவரியில் புண்ணிய நீராடி,பின்னர் புரி சென்று இரண்டு நாட்கள் அங்கே தங்கி ஜகன்னாதரை தரிசித்துவிட்டு ,1911 ஏப்ரல் 11-ஆம் நாள் கல்கத்தாவை அடைந்தார்.அங்கிருந்து பேலூர் மடத்திற்குச் சென்றார்.

இந்தியாவின் தென்கோடியான ராமேசுவரம் சென்று திரும்பும் தங்கள்  அன்னைக்கு பேலூர் மடத்தில் துறவிகளும் பிரம்மசாரிகளும் பக்தர்களும் காண்பவர் மனமெல்லாம் சிலிர்க்கும் படியான வரவேற்பை அளித்தனர். அன்னை வெள்ளை வெளேரென்ற ஆடையால் உடம்பு முழுவதையும்  போர்த்தியபடி நிதானமாக அடிமேல் அடி வைத்து உயிர் பெற்ற தெய்வத்திருவுரு போல் மடத்தின் வாசலிலிருந்து குருதேவரின் கோயிலுக்கு நடந்து வந்தார். சிஷ்யைகளும் பக்தைகளும் அவரைச் சூழ்ந்து வந்தனர். இரண்டு புறத்திலும் நீண்டபாதையில் பக்தர்கள்  வழி நெடுகிலும் நின்றபடி இனிமையான குரலில் தேவீ மாகாத்மியத்தைப் பாராயணம்  செய்தபடி வந்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இனிமையான பாடல்களைப் பாடியவாறே சிலர் அன்னையைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்

கோயிலின் அருகே அன்னை வந்ததும் அன்னையைக்கண்ட அளவற்ற ஆனந்தத்தால் சுவாமி பிரம்மானந்தர் புறவுலக நினைவை இழந்து சமாதியில் மூழ்கினார். நெடுநேரம் கழிந்த பிறகு அன்னை கூறிய சில மந்திரங்கள் அவர் காதில் ஓதப்பட்ட பின்பே அவருக்கு உலக நினைவு திரும்பியது.


இதற்குப்பிறகு அன்னை ஒரே ஒரு பயணம் தான் மேற்கொண்டார்,அது 1912-ஆம் ஆண்டு அவர் காசிக்குச் சென்றது. அவருடன் சுவாமி பிரம்மானந்தர் முதலிய சில துறவிகளும்,அன்னையின் உறவினர்களும் பக்தர்களுமாகப் பெரிய கூட்டமே சென்றது. காசியில் ஸ்ரீராமகிருஷ்ண அத்வைத ஆசிரமத்திற்கு அருகில் அப்போது தான் கட்டப்பட்ட ”லட்சுமி நிவாஸ்” என்னும் வீட்டில் அன்னை தங்கினார். இந்த முறை காசியில் அன்னை இரண்டரை மாதங்கள் தங்கினார். எனவே நிதானமாக காசியில் இருந்த  முக்கியமான இடங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று வந்தார். காசிக்கு வந்த மூன்றாம் நாள் விசுவநாதரையும் அன்னபூரணி தேவியையும் தரிசித்தார்.

பின்னர் ராமகிருஷ்ண சங்கத்தின் ஆரம்பகால அமைப்பும், சிறந்த மருத்துவ சேவை செய்து வருவதுமான ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமத்திற்குச் சென்றார். அந்த ஆசிரமத்தில் அமைந்திருந்த பல்வேறு மருத்துவப் பகுதிகளையும்,ஆசிரமம் சிறந்த முறையில் ஏழைகளுக்கு நோய் தீர்க்கும் காட்சியையும் நேரில் கண்டு மகிழ்ந்தார். ஆசிரமச் செலவுகளுக்குப் பணம் எப்படிக் கிடைக்கிறது,யார் அதைத் தொடங்கினார்கள் என்பதையெல்லாம் ஆவலோடு கேட்டறிந்தார். புறப்படும் போது,அதை நடத்தும் தம் துறவிப்பிள்ளைகளிடம் இந்த இடத்தில்  குருதேவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரோடு செல்வத்தின் அதிபதியாகிய லட்சுமியும் எல்லா பெருமையோடும் வாழ்கிறாள். இந்த இடம் மிக அருமையாக இருக்கிறது. இங்கேயே தங்கிவிட வேண்டும் போல் தோன்றுகிறது என்று கூறினார். தாம் இருக்கும் வீட்டிற்கு ச்சென்றதும், பத்துரூபாய்  நோட்டு ஒன்றைத் தம்முடைய அன்பளிப்பாக ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார். காசியில் இருந்த சிறந்த கோயில்கள் பலவற்றிற்கும் சென்று அன்னை தரிசித்தார்.அங்குள்ள வைத்தியநாதேசுவரர், தில பாண்டேசுவரர் போன்ற மூர்த்திகள் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தாமே தோன்றி வந்தவை என்று கூறினார். கேதார நாதர் கோயிலுக்குச் சென்ற போது,இமய மலையில் உள்ள கேதார நாதர் ஆலயமும் காசியில் இருக்கின்ற இந்தக் கேதார நாதர் ஆலயமும் ஒன்றுக்கொன்று உறவானது. இங்குள்ளவரை தரிசிப்பவர்கள் இமயத்தில் உள்ளவரை தரிசித்தவர்கள் ஆவார்கள். இங்கே சிவபெருமான் உயிருணர்வுடன் பொலிகிறார் என்று கூறினார்.

காசிக்கு அருகில் உள்ள சாரநாத்திற்கும் அன்னை சென்றார். முற்காலத்தில் இது புத்த சமயத்தின் மையத்தலமாக விளங்கியது. அன்னை சென்றிருந்த போது மேலை நாட்டினர் சிலர் அங்கே இருந்த புத்தரின் நினைவுச் சின்னங்களையும் சிலையையும் பார்த்து,அதன் அழகிலும் கம்பீரத்திலும் தங்களை மறந்து நின்றிருந்தனர். அவர்களைக் கண்ட அன்னை, இதோ இந்த மனிதர்கள் தாம் முற்பிறவியில் இந்த புத்த விகாரங்களையெல்லாம் கட்டினார்கள். தாங்கள்  கட்டியவற்றையே பார்த்து இப்போது ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள் என்றார்.

 சாரநாத்திலிருந்து காசி திரும்பும் வழியில் ஒரு பெரிய விபத்திலிருந்து அன்னை தப்பினார். அன்னையுடன் சென்றிருந்த  பிரம்மானந்தர் அங்கிருந்து திரும்பும் போது அன்னை ஏறி வந்த வண்டியில் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. சிறிது நேரத்திற்குள் பிரம்மானந்தர் அமர்ந்திருந்த வண்டிகள் கட்டப்பட்டிருந்த குதிரை வெறிபிடித்தாற்போல் ஓடி,ஓர் இடத்தில் மோதியது. வண்டி உடைந்து சுவாமி பரம்மானந்தருக்கும், சிறிது காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி அன்னை கூறிய போது நான் விபத்தில் சிக்கியிருக்க வேண்டும். இதை ராக்கால் முன்னதாகவே உணர்ந்து அதனைத் தானே ஏற்றுக்கொண்டான் என்று கூறினார்.

காசியில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு மகான்களை அன்னை தரிசித்தார். அவர்களுள் ஒருவர் கங்கைக்கரையில் வாழ்ந்துவந்த நானக் துறவி. மற்றொருவர் சமேலி புரி.இரண்டாமவர் குருதேவரின் அத்வைத குருவான தோதாபுரியின் சம்பிரதாயத்தையும் மடத்தையும் சேர்ந்தவர். அவரிடம் கோலாப்மா, உங்களுக்கு யார் உணவு தருகிறார்கள்,  என்று கேட்டார்.அதற்கு அந்த சாது,யார் தருகிறார்கள்? என் தாயான அன்னபூரணி தான் தருகிறாள்! வேறு யார் எனக்குச் சோறு போடுவார்கள்? என்றார். இந்தப் பதிலை க்கேட்ட அன்னை அளவற்ற ஆனந்தம் அடைந்தார். வீடு திரும்பியதும் தம், சீடர்களிடம்,முதியவரான  அந்தத் துறவியின் முகம் என் கண்களில் அப்படியே நிற்கிறது. கள்ளங்கபடமற்ற சின்னஞ்சிறு குழந்தைபோல் என்ன அற்புதமான முகம்! என்றார். மறுநாள் சமேலி புரிக்கு இனிப்பும் ஆரஞ்சுப் பழங்களும் ஒரு போர்வையும்  அனுப்பிவைத்தார். காசியில் உள்ள மற்ற மகான்களையும் தரிசிக்கும் படி அன்னையின் சீடர்கள் கூறினார்கள். அதற்கு அன்னை, நான் சமேலி புரியை தரிசித்துவிட்டேன். மற்றவர்களை தரிசிக்க வேண்டிய அவசியம், என்ன இருக்கிறது? வேறு எந்த மகான் தான் இங்கு உள்ளார்? என்றார்.


1913 ஜனவரி 16-ஆம் நாள் காசியிலிருந்து கல்கத்தா திரும்பினார்.

25-பிற்கால வாழ்க்கை

அன்னையின் கிராம வாழ்க்கை உழைப்பு மிகுந்ததாகும். வீட்டு வேலைகளை அவரே செய்ய வேண்டியிருந்தது. உறவினர்களும் பக்தர்களுமாக ப் பலர் அவருடன்  தங்கியிருந்ததால் வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. கல்கத்தாவில் வாழும் போது இவ்வளவு வேலைச் சுமை இல்லை. அது மட்டுமின்றி அங்கு குறிப்பிட்ட நேரத்தில் அல்லாமல் ஆண்பக்தர்கள் யாரும் அவரைக்காண அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் அங்கே அன்னைக்குச் சற்று ஓய்வு கிடைத்தது. கிராமத்திலோ அவர் சுதந்திரமாக நடமாடுவார். எந்த நேரத்திலும் பக்தர்கள் அவரைக்காண முடியும்.இதனால் அன்னையை நெருக்கமாகக் காண  விரும்பிய பக்தர்கள் வழி எவ்வளவு கடினமாக இருந்தாலும் வசதி இல்லாத கிராமமான ஜெயராம்பாடிக்கே செல்வார்கள். கல்கத்தாவில் இந்த பக்தர்கள் வாழும் வசதியான வாழ்க்கையைக் கண்டிருந்த அன்னை,கிராமத்திலும் அந்த அளவிற்கு வசதிசெய்து கொடுப்பதற்காகக் கடினமாக உழைப்பார். ஜெயராம்பாடியில் பால் அதிகமாகக் கிடைக்காது.எனவே  அன்னை நாள்தோறும் தாமே பல வீடுகளுக்குச் சென்று பாலும் காய்கறிகளும் வாங்கி வருவார். உணவைத்தாமே சமைப்பார். பரிமாறவும் செய்வார். உடல்நிலை சரியில்லாதவர்களின் அருகே இருந்து சேவை செய்வார்.  தாங்கள் வருவதால் அன்னை படும் சிரமங்களைக் கண்டு பக்தர்கள் வருந்தும்  போது,அவரோ அத்தகைய சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததாகக் கூறி மகிழ்ச்சி அடைவார். ஜெயராம் பாடியில் அமைதியும், சுதந்திரமும் கிராம வாழ்க்கைக்கே உரியதான சில பழக்கவழக்கங்களும் அன்னைக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் சில வேளை ஓராண்டிற்கும் மேலாகவும் கூட அவர் கிராமத்திலேயே தங்கினார். ஆனால் கிராமத்து வீட்டில் இருந்த கடினமான வேலைகளும்,வங்காள கிராமங்களில் அந்தக்காலத்தில்  பரவியிருந்த மலேரியாவும் ,மருத்துவ வசதி இல்லாத நிலையும்  அவரை உத்போதனில் வசிக்கும்படிச் செய்தன. அங்கே அவரது சுதந்திர வாழ்வு சற்று பாதிக்கப்பட்டாலும் பணப்பொறுப்போ வேலைப்பளுவோ  இல்லை.

கல்கத்தாவில் சுவாமி சாரதானந்தர் உத்போதன் வீட்டைக்கட்டியது பற்றியும் அதில் அன்னை 1909 மே-23 ஆம் நாள் முதன்முதலாகக் குடியேறியது பற்றியும் ஏற்கனவே கண்டோம்.1909 டிசம்பரில்இந்த வீட்டோடு சேர்ந்த  நூறு அடி மனையை வாங்கி ,அதனை மேலும் விரிவு படுத்தினார் சவாமிகள். 1915-இல் மேலும் ஓரிரு அறைகள் கட்டப்பட்டன. மாடியில் வடக்குப்பக்கத்தில் இருந்த கூடம் அன்னையின் அறையாகவும் பூஜையறையாகவும்  அமைக்கப்பட்டது. இந்த வீட்டில் அன்னை தமது உறவினர்,துறவிச் சீடர்கள் மற்றும் குருதேவரின் சிஷ்யைகளும் தமது துணைவிகளுமான பக்தைகளுடன் வாழ்ந்தார்.

 அன்னை உத்போதன் வீட்டில் வாழ்ந்த போதெல்லாம் சுவாமி சாரதானந்தர் அவரது செலவுகளை ஏற்றுக்கொண்டார். ஜெயராம்பாடியில் வாழும் போது அவ்வப்போது அவர் கொஞ்சம் பணம் அனுப்பினாலும் தம் குடும்பத்திற்கான செலவை அன்னையே சமாளித்துக் கொள்வார். தீட்சை தரும் போது சீடர்கள்  கொடுக்கும் காணிக்கையும் நெருங்கிய பக்தர்கள் தரும் அன்பளிப்பும் தான் அன்னையின் குடும்பத்திற்கான  வருமானமாக இருந்தது. அன்னையின் சீடர்கள் பெரும்பாலும் மாணவர்களாகவும் நடுத்தர வகுப்பினராகவும் இருந்ததால் ,அவர்கள் தரும் காணிக்கை அதிகமாகவோ தொடர்ந்தோ இருக்காது. சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை யான மிசஸ் ஓலிபுல் மதந்தோறும் அமெரிக்காவிலிருந்து இருபத்தைந்து ரூபாய் அனுப்பி வந்தார். பிற்காலத்தில் அன்னைக்கு மாதம் நூறு ரூபாய்க் குறையாமல் செலவழிந்தது. அன்னையின் தேவை மிகக் குறைவு தான். ஆனால் குறைந்தது பத்து பதினைந்து பக்தர்களாவது எப்போதும் அவருடன் தங்கியிருப்பார்கள். அதோடு அன்னையை எதிர்பார்த்து வாழ்ந்த ராது,அவளுடைய தாய், ஆதரவில்லாத வேறு பல உறவினர்கள் மற்றும் ஊராருக்காகவும் தான் அதிக பணம் தேவைப்பட்டது. அன்னையின் கடைசிக் காலத்தில் ராதுவின் தீராத நோயின் காரணமாகவும் அன்னையின்  செலவு அதிகரித்தது.

கோயால்பாரா ஆசிரமத்தைப்பற்றி அங்கங்கே குறிப்பிட்டோம். ஜெயராம்பாடியிலிருந்து விஷ்ணுபூர் செல்லும் போது அன்னை இந்தக் கிராமத்தில் தங்கி இளைப்பாறிச் செல்வார். எனது வரவேற்பைறை என்று அதனைக்கூறுவார். நாளடைவில் அது ராமகிருஷ்ணமடத்தின் ஒரு கிளையாக உருவெடுத்தது.1911-ஆம் ஆண்டில் அங்கு அன்னையே குருதேவரின் படத்தையும் தமது படத்தையும் பிரதிஷ்டை செய்தார். அன்னை தங்குவதற்கென்று அந்த ஆசிரமத்தின் ஒரு பகுதியில் குடிசை ஒன்று கட்டப்பட்டது. ராதுவின் உடல்நலத்திற்காக ஓய்வு தேவைப்படும் போது, அன்னை அந்தக் குடிசையில் தான் தங்குவார்.

வீடு திரும்பியதும் தம், சீடர்களிடம்,முதியவரான  அந்தத் துறவியின் முகம் என் கண்களில் அப்படியே நிற்கிறது. கள்ளங்கபடமற்ற சின்னஞ்சிறு குழந்தைபோல் என்ன அற்புதமான முகம்! என்றார். மறுநாள் சமேலி புரிக்கு இனிப்பும் ஆரஞ்சுப் பழங்களும் ஒரு போர்வையும்  அனுப்பிவைத்தார். காசியில் உள்ள மற்ற மகான்களையும் தரிசிக்கும் படி அன்னையின் சீடர்கள் கூறினார்கள். அதற்கு அன்னை, நான் சமேலி புரியை தரிசித்துவிட்டேன். மற்றவர்களை தரிசிக்க வேண்டிய அவசியம், என்ன இருக்கிறது? வேறு எந்த மகான் தான் இங்கு உள்ளார்? என்றார்.


 MAIN PAGE 

image89

நோயால் அவதி

நோயால் அவதி

இந்த ஆசிரமத்தில் வாழ்ந்தவர்கள், கிராமத்தில் அன்னை வாழும்போது அவரைப் பாதுகாக்கவும்,அவருக்குச் சேவை செய்வதற்குமான சேவகர்களாகவே தங்களைக் கருதினர். அன்னையின் வீட்டில்  விழாக்களோ, வீட்டைப்பழுதுபார்ப்பது போன்ற வேலைகளோ இருந்தால் இந்த ஆசிரமத்தின் பிரம்மசாரிகளே அவற்றை எல்லாம் செய்தனர். அன்னையின் வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வரவும்,அன்னை கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரவும் அவர்கள் தயாராகக் காத்திருந்தனர். அன்னைக்கு இந்தச் சீடர்களிடம், மற்றயாரிடமும் இல்லாத பரிவும் பாசமும் இருந்தது.

1911 ஜீன் 10-ஆம் நாள் ராதுவிற்கு த் திருமணம் நடைபெற்றது. பன்னிரண்டு வயதான அவள் பதினைந்து வயதான மன்மத சட்டர்ஜியை மணந்தாள். சுவாமி சாரதானந்தர் திருமணத்திற்காக, ஏராளமான பணம் செலவழித்தார். மன்மதன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் பெரிதாக எவ்வித த்திறமையும்  இல்லாதவன். எனவே திருமணம் முடிந்த பிறகும் ராது கணவன் வீட்டிற்கு ப் போகவில்லை. அவளும்  அவள் கணவனும் பெரும்பாலும் அன்னையுடனே தங்கியிருந்தார்கள். காலம் கடந்ததே தவிர ராதுவின் நடவடிக்கைகள்  எந்த விதத்திலும் திருந்தவில்லை. அன்னை ஒரு முறை தம் சீடரிடம்,”சிறு வயதில் அவள் எவ்வளவோ பரவாயில்லை.இப்போது திருமணம் முடிந்து விட்டது .ஆனால் அவளது குணம் சிறிதும் மாறவில்லை. அதனுடன் விதவிதமான நோய்கள் வேறு. பைத்தியத்தின் மகளாகிய இவளும் எங்கே பைத்தியமாகி விடுவாளோ, என்று பயமாக இருக்கிறது. அந்தோ, நான்  ஒரு பைத்தியக்காரியையா வளர்த்து வருகிறேன் என்று வருத்தத்துடன் கூறினார்.

 புகுந்த வீட்டிற்குப் போகவில்லையே தவிர, ராது கணவனிடம் மிகுந்த  பற்றுக் கொண்டிருந்தாள். மனமதன் வெளியில் சென்றால் நிலைகொள்ளாமல் தவிப்பாள். ஒரு நாள் அவள்  இவ்வாறு பரபரப்படைவதைக் கண்ட அன்னை, குருதேவரின் திருவிளையாடலைப்பார் .என் தாயின் குடும்பம் எத்தனை உன்னதமானதாக இருந்தது. இப்போது என்னுடன் இருப்பவர்களை என்னவென்று சொல்வது? ராதுவைப் பற்றியோ சொல்ல எதுவும் இல்லை. வாசல் நூணைப்பிடித்துக்கொண்டு கணவனின் வரவுக்காகக் காத்திருக்கிறாள். அதோ,அந்த வீட்டில் பாட்டு கேட்கிறதே, அங்கே அவன் நுழைந்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு.! எனவே இரவும் பகலும் அவனைக் கண்காணிக்கிறாள். என்ன ஒருபற்றுதல் ! இவள் இப்படி ஆவாள் என்று நான் கனவிலும் கருதவில்லை என்றார்.

நோய்கள், பைத்தியக்காரத் தனம்,பிடிவாதம் இவற்றுடன்  எப்படியோ அபின் பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டிருந்தாள் ராது. அதனை மாற்ற அன்னை எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாயின. ஆனால் அன்னை வேண்டுமென்றே அவளுக்கு அபின் கொடுத்து அவளைத் தம் கட்டுக்குள் வைத்திருப்பதாகப் புலம்பினாள் சுரபாலா.அன்னை அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.ஒரு நாள் வழக்கம்போல் சுரபாலா அன்னையை ஏசிக்கொண்டிருந்தாள். வெகு நேரமாகியும்  அவள் நிறுத்தாததைக் கண்ட அன்னை,இதோ பார், நான் உன் மகளை மறைத்தா வைத்திருக்கிறேன்? இதோ கிடக்கிறாள் அவள், கூட்டிச் செல் என்று கூறினாள். இதைக் கேட்டது தான் தாமதம், சுரபாலாவிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ! ஏதேதோ! திட்டியவாறே அடுப்பாங்கரைக்கு ஓடினாள். எரிந்து கொண்டிருந்த விறகுக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு அன்னையை அடிக்கவந்தாள். இதனைச்சற்றும் எதிர்பார்க்காத அன்னை, ஆ! இந்தப்பைத்தியம் என்னைக் கொல்லப் போகிறதே! என்று அலறினார். அன்னையின் குரல் கேட்டு விரைந்தார் பிரம்மசாரி வரதர்.அவர் ஒரு கணம் தாமதித்திருந்தால்  கூட நிலைமைவிபரீதமாகியிருக்கும். அன்னையின் மீது அடி விழுவதற்குள் அவர் ஓடிச் சென்று,சுரபாலாவின் கையிலிருந்து விறகுக் கட்டையைப் பிடுங்கியெறிந்தார். அவளையும் வாசலுக்கு வெளியே விரட்டிவிட்டு அன்னையிடம் வந்தார். அன்னை அப்போதும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை. அந்த நிலையிலேயே,அடி பைத்தியக்காரி,என்ன செய்யத் துணிந்தாய் நீ? உன் கைகள்  உடம்பில் தங்குமா? என்ற வார்த்தைகள் அவரையும் மீறி அவரது உதடுகளிலிருந்து வெளிவந்தன. ஆனால் மறுகணமே தம் வாயிலிருந்த இத்தகைய சாபம் வெளிவந்ததை உணர்ந்த அவர் துவண்டு விட்டார். ஆ! எம்பெருமானே என்ன செய்து விட்டேன். இனி என்ன தான் செய்வேன்! இது வரை  யாரையும் புண்படுத்தாத  என் நாக்கு இன்று ஒரு சாபத்தையே கொடுத்து விட்டதே! இனியும் நான் வாழத்தான்  வேண்டுமா? என்று இதயமே வெடிப்பது போல் அழுது அரற்றினார்.

இது நாள் வரை அன்னை பொதுவாக பிரசன்னரின் வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். அன்னையை நாடி வருகின்ற பக்தர்களின்  எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் மிகவும் அதிகரித்தது. எனவே அன்னைக்காக ஒரு வீடு கட்ட பக்தர்கள் முடிவு செய்தனர். அன்னையின் குடும்ப வீட்டிற்கு அருகிலேயே ஒரு நிலமும் அதைச் சேர்ந்த ஓரிரு வயல்களும் ஒரு குளமும் வாங்கப்பட்டன. நாலைந்து அறைகள் கொண்ட சிறிய வீடு ஒன்று கட்டப்பட்டது. 1916,மே 15-ஆம் நாள் அன்னை அதில்  குடிபுகுந்தார். எஞ்சிய தமது வாழ்நாளில் ஜெயராம்பாடியில் இருந்தபோது அன்னை இந்த வீட்டிலேயே தங்கினார்.அன்னை புதிய வீட்டில் குடியேறிய போது சுவாமி சாரதானந்தர் கல்கத்தாவில் இல்லை.பிருந்தாவனத்திற்குப் போயிருந்தார். அங்கிருந்து திரும்பிவந்ததும் ஜெயராம்பாடி சென்றார்.அப்போது வீட்டையும் நிலம்மற்றும் வயல்களையும் பேலூர்  மடத்தின் பெயருக்கு எழுத வைத்தார் அன்னை.


1919-இல் ராது கருவுற்றாள். அந்த நாட்களில் அவளது கர்வமும் பிடிவாதமும் எல்லை கடந்தன. உடல்நலமும் ஆபத்தான நிலையை அடைந்தது. இந்தக்காலம்  அன்னையின் வாழ்வில் கவலையும் பரபரப்பும் நிறைந்த காலமாகும். முன்பைவிட ராது உடல்நிலையிலும் மனப்போக்கிலும் மோசமாகி விட்டாள். அவளுடைய தீராத நோய்களுக்கான மருத்துவத்திற்கும் செலவுகளுக்கான பணத்திற்கும் அன்னை எல்லை மீறி அலைந்தார். இதனால் அன்னையின் உடல்நலனும் கெட்டது.

கல்கத்தாவின் பரபரப்பிலிருந்து விலகியிருந்தால் ராதுவின் நிலையில் மாறுதல் ஏற்படலாம் என்று கருதிய அன்னை 1919 ஜனவரியில் ஜெயராம்பாடி புறப்பட்டார். அப்போது சீடர் ஒருவரிடம் மகனே, கொந்தளிக்கின்ற சமுத்திரம் ஒன்றையே என்னுடன் கட்டியிழுத்துக்கொண்டு செல்கிறேன். உதவிக்கு என் பிள்ளைகளாகிய உங்களைத்தான் நம்பியிருக்கிறேன் என்றார்.விஷ்ணுபூர்வரை எல்லோரும் ரயிலில் சென்றனர். அங்கே கைரேகை நிபுணன் ஒருவன்  ராதுவின் கைகளைப் பார்த்துவிட்டு அவளது பிரசவம் சுலபமானதாக இருக்காது என்று கூறிவிட்டான். அன்னையின் கவலை வளர்ந்தது. அங்கிருந்து அனைவரும் ஆறு வண்டிகளில் ஜெயராம்பாடி புறப்பட்டனர். வழியில் ஓய்வெடுப்பதற்காக கோயால்பாரபவில் சில நாட்கள்தங்கினர். ஆசிரமத்தைச்சுற்றிலும் இருந்த அடர்ந்த வனமும் அங்கு நிலவிய அமைதியும் ராதுவை வெகுவாகக் கவர்ந்தன. எனவே மேலும் சில நாட்கள் அங்கே தங்க விரும்பினாள் அவள். அன்னையின் தம்பி காளி உட்பட பலரும் ராது அங்கிருப்பதையே நல்லதென்று கூறினர். எனவே  அன்னை கோயால்பாராவில்  ஜீலை மாதக் கடைசி விரை தங்கியிருந்தார். 

இந்த நாட்களில் ராதுவின் நிலைமை அன்னையை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது.ஏற்கனவே அவள் உடல்நிலை பலவீனமானது.பிள்ளைப்பேற்றின் கடுமை அவள் உடல் நிலையை மேலும் மோசமாக்கியது. கடுமையான நரம்புத்தளர்ச்சியால் அவள் தாக்கப்பட்டாள். உடம்பு இளைத்து துரும்பாகியது. உடலை போலவே மனமும் பலவீனம்  அடைந்தது. எதற்கும் எரிச்சல் அடைபவளாகவும்,எதைச் சொன்னாலும் கேட்காத அலட்சியம் நிறைந்தவளாகவும் மாறினாள். எந்த ஒரு சிறு சத்தத்தையும்,ஏன் யாராவது உரக்கப் பேசுவதைக்கூட அவளால் தாங்க முடியவில்லை. காக்கை கத்தினாலோ, யாராவது பாத்திரத்தைக் கீழே வைக்கும் போது ஓசை எழுப்பினாலோ அலறத் துவங்கினாள். சிலநேரங்களில் அவளுடைய இந்த அலறல் அதிகமாகி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அதனுடன் உடம்பு முழுவதிலும்  எப்போதுமே தாங்க முடியாத எரிச்சலாலும் வேதனைப்பட்டாள். இவற்றுடன் ஆசிரமத்தின் பக்கத்தில் கரடி ஒன்று இரவில் அலைவதாகவும், கிராமத்திற்குள் புகுந்து கிராமக் காவல்காரனைக் கடித்துக் குதறிவிட்டது என்றும் ஒரு செய்திஅங்கே பரவியது. ஆசிரமத்தை ஒட்டி அடர்ந்த தோப்பு இருந்ததால், கரடி எந்த நேரத்திலும் ஆசிரமத்தில் புகுந்து விடலாம் என்ற பயம்  வேறு. இவற்றால் எல்லாம் ராதுவின் நிலைமை மேலும் மோசமாகியது. இது போதாதென்று பைத்தியக்காரன் ஒருவன் திடீரென்று இரவு நேரங்களில் ஆசிரமத்திற்குள் புகுந்து ஆஊ என்று கத்தி அமர்களம் செய்தான். இதுவும் பெண்களைப் பெரும் அச்சத்தைிற்கு உள்ளாக்கியது. அன்னை ஒரு நாள் அந்தப் பைத்தியத்தை அருகில் அழைத்து, அன்பான வார்த்தைகள் பேசி, உணவும் தின்பண்டமும் தந்து ஆசிரமத்திற்குள் நுழைந்து அமர்களம் செய்யாமல் இருக்குமாறு கூறி அமைதிப்படுத்தினார்.

இந்த நிலைமையைில் ராதுவின் உடல்நலத்திற்காகப் பல்வேறு சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன. எந்த மருந்தும் அவளது உடல்நிலையைச் சீராக்கவில்லை. மாறாக நாளுக்கு நாள் நோய் முற்றிக் கொண்டே வந்தது. பல்வேறு மருந்துகளையும் பார்த்த பிறகு, உடனிருந்தவர்கள், கூறியதன் பேரில் மந்திரவாதம் போன்றவையும் கையாளப்பட்டன.

கோயால்பாராவிலிருந்து பதினேழு மைல் தொலைவில் டிரோல் என்னும் ஊர் இருந்தது. அந்த ஊர் தெய்வமான பைத்தியக்காளி” மிகவும் ஆற்றல் பெற்றவள் என்றும் அவளுக்கு அணிவித்த வளையல்ளைக் கொண்டுவந்து ராதுவின் கைகளில் போட்டால்  அவள் உடல்நலம் சரியாகிவிடும் என்றும் நளினி ஆலோசனை தெரிவித்தாள். முன்பு சுரபாலாவிற்கு பைத்தியம் முற்றியபோது அந்த  வளையலை த்தான்  போட்டனர். அதனால் ச் சிறிது பலனும் இருந்தது. இப்போது ராதுவும்  ஏறக்குறைய பைத்திய நிலை யில் இருப்பதால் ,அந்த வளையல்-வைத்தியத்தை நினைவுபடுத்தினாள் நளினி. அன்னையும் உடனே டிரோலுக்கு ஆளனுப்பி,காளி தேவிக்கு முறைப்படி பூஜை நடத்தி, அதில் படைக்கப்பட்ட வளையல் ஒன்றை வாங்கி வருமாறு கூறினார். வளையல் வாங்கச் சென்றவன் இரவில் வீடு திரும்பினான். அவன் இரவில் வந்து சேர்ந்தது ஒரு பிரச்சனையை உருவாக்கியது. ஏனெனில்  அந்த வளையலை இரவில் அணிவிக்கக் கூடாது. அதற்காகத் தரையில் வைத்துவிடவும் கூடாது. எனவே இரவு முழுவதும் அதை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டனர். மறுநாள் எடுத்து ராதுவின் கையில் அணிவித்தனர். ஆனால் பலன் எதுவும் இல்லை. சுரபாலாவுக்கு வந்ததே கோபம். நளினியைத் திட்டித் தீர்த்தாள். இருவருக்கும் நடந்த ஓயாத சண்டை தான் சிகிச்சைக்குக் கிடைத்த பலன்.

சில நாட்கள் கழிந்தன. ராதுவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. வசதியான  கல்கத்தாவிலிருந்து பிள்ளைப்பேறு வேளையில் ராதுவை அந்தக் குக்கிராமத்திற்கு அழைத்து வந்ததற்காக அன்னையைத் திட்டினாள் சுரபாலா. அங்கே இருந்திருந்தால் என் மகள் நன்றாக இருந்திருப்பாள், இங்கே பார், எவ்வளவு பயங்கரமான வெயில், அதனால் இப்படி இருக்கிறாள். எங்கிருந்தாவது ஐஸ்கட்டி கொண்டுவந்து அவள் தலையில் கட்டு, அப்போது தான் அவள் உடம்பு சரியாகும் என்று கத்தினாள். அன்னையும் நெடுந்தொலைவிற்கு ஆளனுப்பி ஐஸ் கொண்டு வரச்சொல்லி ராதுவின் தலையில்  கட்டினார். அதைக் கண்ட காளி பைத்திக்காரியின் பேச்சைக்கேட்டு பிள்ளைத்தாய்ச்சியின் தலையில் ஐஸ்கட்டியைக் கட்டுவதற்காக அன்னையைக் கடிந்து கொண்டார். இதனால் ராதுவிற்கு ஜன்னி கூட வரக்கூடும் என்று கூறி அந்த வைத்தியத்தைக் கைவிடச் செய்தார். பிறகுஅவர் அன்னையிடம் அக்கா, இது நோயே அல்ல,ஏதோ ஆவியோ பூதமோ அவளைப்பிடித்திருக்கிறது. அதன் வேலைதான் இது. எனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதி இருக்கிறான். அவனை அழைத்து வரலாம், என்று கூறினார். காளியும் பிரம்மசாரி வரதரும் சென்று அந்த மந்திரவாதியை அழைத்து வந்தனர். அன்னை அவனை வரவேற்று,ராதுவின் உடல் நிலையைப்பற்றிக் கூறி அவளைக் காப்பாற்றும்படி வேண்டினார். மந்திரவாதியும் எல்லாம் புரிந்து கொண்டவன் போல் உடனடியாக அதற்கு மருந்து சொன்னான்.மருந்தைக் கேட்டதும் அன்னைக்கு நடுக்கமே  ஏற்பட்டுவிட்டது. பிறருக்கோ மூச்சு நின்றுவிடும் போலிருந்தது அவன் கூறியதைக்கேட்டு ஒன்றும் ஆகாமல் இருந்த ஒரே ஆள் காளி தான்.அந்த மந்திரவாதி சொன்ன வைத்தியம் இது தான். ரோஹித மீனின் ஈரலை வாட்டி சுமார் இருபது கிலோ எண்ணெய் எடுக்க வேண்டும். மரச்செக்கில் ஆட்டிய நல்லெண்ணையோடு அதைச் சேர்க்க வேண்டும். இதோடு பல்வேறு வாசனைப் பொருட்களையும் காட்டில், மனிதர்களின் காலடி படாத இடத்திற்குச் சென்று அங்கேயிருந்து பல்வேறு மிருகங்களின் சாணத்தையும் வேறு சில பொருட்களையும் இட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் களிம்பை ராதுவின் உடம்பில் தடவ வேண்டும். அதோடு அவன் மந்திரித்துக்கொடுக்கும் தாயத்தையும் அவள் கட்டிக் கொள்ள வேண்டும். காட்டிற்குப்போய்ச் சேகரித்து வர வேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியலைக்கேட்டவர்கள் யாருக்கும்  இந்த  மருந்தைத் தயார் செய்யலாம் என்று சொல்வதற்கான தைரியமே வரவில்லை. ஓர் ஆவியை வரவழைத்து மருந்து கேட்டனர். அது கூறிய மருந்திலும் பயனில்லை.

 தெய்வாதீனமாக அன்னையின் கூட்டத்தில் கொஞ்சம் தெளிந்த புத்தியோடு ஒருவர் இருந்தார். அவர் அன்னையிடம் அம்மா, இது மாதிரி வைத்தியமெல்லாம் வேண்டாம். நல்ல டாக்டரை் ஒருவரை வரவழையுங்கள் என்று கூறினார். இது வரை எல்லா வினோதங்களையும் கேட்டுவிட்ட அன்னை மிகுந்த சலிப்போடு, ஒரு சாதாரண பிள்ளைப்பேற்றுக்கு  என்ன அமர்களம்.காட்டில் யாருமே இல்லாத இடத்தில் நாய் நரிகள் குட்டி போடுவதில்லையா? என்று கூறி டாக்டரை வரவழைக்க மறுத்துவிட்டார். அதற்குள் சவாமி சாரதானந்தர் அனுப்பிய டாக்டர் ஒருவரும் ஒரு தாதியும் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். மே மாதம் 9-ஆம் நாள் எந்த விதத் துன்பமும் இல்லாமல் ராது நல்லபடியாக  ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். ராதுவின் சுகமான குழந்தை ப் பேற்றால் அன்னையும் பிறரும் நிம்மதி அடைந்தனர். அந்தக் குழந்தைக்கு வனவிஹாரி என்று பெயரிடப்பட்டது. அந்தக் குழந்தையையும் அன்னையே பராமரிக்க நேர்ந்தது. உலகிலிருந்து மறைய இரண்டு ஆண்டுகளே எஞ்சிய இந்த அறுபத்தைந்து வயதில் கூட அலைச்சலும் பரபரப்பும் மிக்க நாட்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அன்னையின் சீடர் ஒருவரது நாட்குறிப்பு அந்த நாட்களைப்பற்றி நமக்குத் தெரிவிக்கின்றன.

ராதுவின் குழந்தைக்கு அப்போது ஆறுமாதம்.பலவீனத்தின் காரணமாக ராதுவால் எழுந்து நிற்கவே முடியவில்லை. எங்குச் சென்றாலும் தரையில் தவழ்ந்தபடியே சென்றாள். அன்னைக்கு அப்போது உடல் நிலை சரியில்லை. அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் காலையில் அன்னை காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். ராது  அன்னையிடம் அபினுக்கு வந்தாள். அவள் வந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட அன்னை அவளைப்பார்த்து ராதி, அதெல்லம் வேண்டிய அளவிற்கு நீ சாப்பிட்டாகிவிட்டது. நீ ஏன் எழுந்து நடக்கக் கூடாது?இனியும் உன்னைக்கவனித்துக் கொள்வது என்னால் முடியாத காரியம். உன்னைப் பார்த்துக் கொள்வதில் என் பக்தி மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். உனக்காக எவ்வளவு செலவாகிறது? இதற்கெல்லாம் நான் எங்கே போவேன்? என்றார். அன்னை இவ்வாறு சொன்னது தான் தாமதம் ராது ஆத்திரத்துடன் அங்கிருந்த கத்திரிக்காயை எடுத்து அன்னையின் மீது வீசி எறிந்தாள். அது வேகத்துடன் சென்று அன்னையின் முதுகைத்தாக்கியது. வலி தாங்க மடியாமல் அன்னை ஓவென்று அலறியவாறே முன்னால் சாய்ந்தார் அடிப்பட்ட இடம் வீங்கிவிட்டது.

வலியால் துடித்த அன்னை நிமிர்ந்தார். பரபரப்புடன் குருதேவரின்  படத்தை நோக்கி இரண்டு கைகளையும் கூப்பியவராய் பகவானே!அவளுடைய குற்றத்தை மன்னித்து விடுங்கள். அவள் சுய புத்தி இல்லாதவள். அவளை மன்னித்து விடுங்கள். என்று வேண்டியபடியே மிகுந்த வேதனையோடு தம் பாத தூசியை எடுத்து ராதுவின் தலையில் தேய்த்து ராதி  குருதேவர் இந்த உடம்பைப் பார்த்துக் கடுமையாக ஒரு வாத்தைக்கூட பேசியது இல்லை.


எங்கும் நிறைந்தார்


இந்த உலகில் சர்வ நிச்சயமாக ஒன்று உண்டென்றால் அது மரணம் .பிறப்பு. அது நம்மைக்கடந்து சென்று விட்டது. இனி அது விஷயமாக நாம் செய்வதற்கு எதுவும் இல்லை. மரணம், அது நம் முன் நிற்கிறது.பிறந்த ஒவ்வொருவரும் அதனை எதிர்கொண்டே தீர வேண்டும். பிறந்த ஒவ்வொருவரையும் மரணத்தை நோக்கி உந்தித் தள்ளிக்கொண்டே விரைகிறது. காலம் என்னும் மாபெரும் எந்திரம்.அதன் ஆற்றல் தான் எத்தனை! தன் சழற்சியில் தான் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.ஏதோ சாதாரணமான, எந்த சக்தியும் இல்லாத ஒன்று போல் காலம் தன்னைச்காட்டிக்கொள்கிறது. ஆனால் உண்மையில் அது தான் மனித வாழ்வை ஒரு வாள்போல், ஒரு கணம் கூட இடையீடின்றி அறுத்துக்கொண்டிருக்கிறது என்று வியந்து நிற்கிறார். தெய்வப்புலவர் காலம் என்ற இந்த வல்லமை மிக்கக் கருவியை இயற்கை அனைவரிடமும் சமமாகக் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வேறு எல்லாம் –அது சூழ்நிலையாகட்டும், உணவு, உடை உறையுள் என்று எதுவும் ஆகட்டும்- மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. காலம் மட்டும் அனைவருக்கும் ஒன்றே. இந்தக்காலம் என்னும் மாயக் கருவியைக் கையாளத் தெரிந்தவனை மரணம் அணுகுவதில்லை. அவனை மரணத்தை நோக்கி உந்தித் தள்ளுவதற்கானஆற்றலைக் காலம் இழந்து விடுகிறது. அவனுக்குக் காலம் அடிபணிகிறது.அவன் காலத்தை வெல்கிறான்.

நீர் குமிழிகள் போல் கோடானுகோடி பேர் தோன்றி மறைந்து விட்ட இந்த மனித வரலாற்றில், இவ்வாறு காலத்தை வென்று நிற்கின்ற சிலரை நாம் காண்கிறோம். இதுவரை நாம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற வரலாறு அத்தகைய ஒன்று. ஆம், அன்னை காலத்தை வென்றவர். மரணத்தை வென்றவர். அவர் காசியில் இருந்தபோது ஒரு நாள் சுரபாலா வழக்கம் போல் அன்னையைத் திட்டியபடியே, நீ செத்து தொலை, எப்போது தான் செத்துத் தொலைவாயோ? என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். இதைக்கேட்ட அனனை அமைதியாகச் சிரித்தார். பின்னர் பாவம் இவள் எனக்கு மரணமே கிடையாது என்பது இவளுக்குத் தெரியவி்ல்லை என்றார். அவர் பூமியிலிருந்து மறைந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆனால்  இன்றும் நாம் அவரது நினைவுகளைப் புனிதமாகப்போற்றுகிறோம் என்றால் அவர் நம்முடன் வாழ்ந்து   வருகிறார் என்று தானே பொருள்! இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பாங்குரா மாவட்டத்தின் வரைபடத்தில் கூடஇடம் பெற முடியாத ஒரு குக்கிராமமான ஜெயராம்பாடி, இன்று உலகெங்கிலுமிருந்து மக்கள் நாடி வருகின்ற ஒரு புனிதத் தலமாக உள்ளது என்றால் அன்னை இன்றும் வாழ்ந்து வருவதால் அல்லவா!

ஆனால் உடல் அழிவது இயற்கை. பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய உடல் மீண்டும் அவற்றுடன் கலந்தே தீர வேண்டும். இது இயற்கை. பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய உடல் மீண்டும் அவற்றுடன் கலந்தே தீர வேண்டும். இது இயற்கை நியதி. அன்னையின் திருவுடலும் அந்த நியதிக்கு எற்ப அதன் அழிவை நோக்கிச் செல்லவே செய்தது. அன்னை 1919 ஜீலை இறுதியில் கோயால்பாராவிலிருந்து ஜெயராம்பாடி சென்றதுவரை, அதாவது அறுபத்தைந்தாம் வயது வரை அவரது வாழ்வைத் தொடர்ந்து வந்து விட்டோம். எத்தனைதவம்! என்ன உழைப்பு! என்ன அலைச்சல்! நோயற்ற உடல் கூட நலிந்து விடும். சதாகாலமும் பல்வேறு நோய்களுடன் போராடியவாறே வாழ்ந்த அன்னையின் திருவுடலைப்பற்றி சொல்லவும் வேண்டுமா? ஜெயராம்பாடி மலேரியாவுக்குப் பெயர் போன இடம். சிகிச்சைக்கும் பெரிய வசதிகள்  அங்கு இல்லை. எனவே இளமையிலிருந்தே அடிக்கடி மலேரியாவின் தாக்குதலுக்கு ஆளானார் அன்னை. அத்துடன் வயிற்றுக்கடுப்பு, சீதபேதி போன்ற நோய்களும் அவ்வப்போது அவரை வாட்டியது.தட்சிணேசுவர நாட்களில் கீல்வாதமும் நேர்ந்து கொண்டது. இதன் காரணமாக அன்னை வாழ்நாள் முழுவதும் விந்திவிந்தியே நடக்க வேண்டியிருந்தது. இதனை அன்னை ஒரு முறை வேடிக்கையாகக் குறிப்பிட்ட துண்டு. பக்தர் ஒருவர் அன்னையைப்புகழ்ந்து, அம்மா, வருங்காலத்தில் உங்களை எண்ணற்றோர் நினைவு கூர்வார்கள் என்றார் .அதற்கு அன்னை சிரித்தவாறே, ஆமாம், குள்ளமாக ஒருத்தி இருந்தாள், விந்தி விந்தி நடப்பாள் என்று நினைவு கூர்வார்கள் என்றார். குருதெவரின் மறைவுக்குப்பிறகு அன்னையின் கடுமையான தவ வாழ்வைக்கண்டோம். ராது அன்னையின் வாழ்வில் வந்த பிறகோ சொல்லவே வேண்டாம். அவளைப் பராமரிப்பதற்காக அன்னை        பட்டபாடு அவரது உடல்நலத்தை மேலும் சீர்குலைத்தது.

இவையனைத்திற்கும் மேலாக அன்னையே அடிக்கடி குறிப்பிடுவதான, பிறர் பாவங்களை ஏற்றுக்கொள்ளல், இதன் காரணமாக அன்னை அனுபவித்த உடல் நோய்கள் ஏராளம். ஆனால் இவற்றை அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதே இல்லை. மாறாக ராதுவின் சிகிச்சைகளுக்காகவே அவர் பெரிதும் கவலைப்பட்டார். அது மட்டுமின்றி சீடர்களிடம் என் உடல்நிலைப்பற்றி சரத்திற்கு எழுதி விடாதீர்கள். தீட்சைக்கு வருபவர்களை அவன் தடுத்துவிடுவான் என்பார். அத்தகைய கருணைக் கடலாக இருந்தார் அவர்.


பின்னாளில் காய்ச்சல் தொடர்ந்து அன்னையை வாட்டத் தொடங்கியது.1917-இல் ஒரு முறை அவர் கோயால்பாராவில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் அங்கே ஆலங்கட்டி மழை பெய்தது. அதைப் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்து கொண்டு, பனிக்கட்டிகளைப்பொறுக்கிச் சேர்ப்பதும், உருவங்களைச் செய்வதுமாகச் சிறுமிகளோடு சிறுமியாக விளையாடிக் களித்தார். விளைவு? ஜீரம் மிகவும் அதிகமாகி விட்டது. எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. சுவாமி சாரதானந்தர்  டாக்டர்களுடன் விரைந்தார். தெய்வாதீனமாக அன்னை அப்போது பிழைத்தார்.

இப்போது கோயால்பாராவிலிருந்து வந்த பிறகு அன்னையின் உடல்நிலை கவலைக்கிடமாகியது. காய்ச்சல் அடிக்கடி வர ஆரம்பித்தது. அங்குள்ள டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே அன்னையை உத்போதன் வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தார் சாரதானந்தர். பிப்ரவரி 24-ஆம் நாள் செவ்வாயன்று அன்னை புறப்படுவதாக ஏற்பாடாயிற்று. விடைபெறும் நோக்கத்துடனோ என்னவோ புறப்படுவதற்கு இரண்டுநாள் முன்பு அன்னை சிம்மவாஹினி கோயிலுக்குச் சென்றார். போய் வருவதற்குள் மிகவும் சிரமப்பட்டார். புறப்படுகின்ற அன்று காலையில் புண்யபூகூர் படிக்கட்டில் கால்தவறி விழுந்து விட்டார். இவ்வாறு ஆறு மாதங்கள் தளர்ந்த நிலையில் ஜெயராம்பாடியில் தங்கிவிட்டு அன்னை கல்கத்தா புறப்பட்டார். அவருடன் வழக்கம்போல் ராது, சுரபாலா, மாக்கு, நளினி மற்றும் பிரம்மசாரி வரதர் ஆகியோரும் வேறு ஓரிரு பக்தைகளும் சென்றனர்.

அன்னை புறப்பட்ட காட்சி காண்பவர் நெஞ்சங்களை எல்லாம் துயரில் ஆழ்த்துவதாக இருந்தது. இது பிறந்தகத்திற்குப் பிரியாவிடை என்பதை அன்னையும் அறிந்திருக்க வேண்டும். அன்னை புறப்பட துவங்கியதும் அந்தச் சின்னஞ்சிறு கிராம மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இவ்வளவு நாட்கள் நிழல் தந்து, பெற்ற தாயினும் பெருந்தாயாக  இருந்த அன்னை, இப்போது நடக்கவும் முடியாதவராய்த் தளர்ந்து போய் ஊரை விட்டுச் செல்கிறார். இந்தக் காட்சியைக் கள்ளங்கபடமற்ற அந்த கிராம மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களின் கண்கள் அருவிகளாயின. அம்மா! எங்களை  மறந்து விடாதீர்கள்! நோய் குணமாகி சீக்கிரமாக வந்து விடுங்கள்! என்று தழுதழுத்தக் குரலில் வேண்டிக்கொண்டனர். அன்னை தாம் வழிபட்டுவந்த குருதேவரின் படத்தைத் துணியில் சுற்றி பெட்டி ஒன்றில் வைத்துவிட்டு, எல்லாம் குருதேவரின் திருவுளம் போல் நடக்கும். நான் உங்களையெல்லாம் மறக்க முடியுமா? என்றார். பின்னர் எழுந்து வாசலைக் கடந்து வெளியே வந்தார்.

அதன் பின் கிராம தெய்வங்களான சிம்மவாஹினியையும் மற்ற தெய்வங்களையும் பெயர் சொல்லி அழைத்து வணங்கினார். பின்னர்  மெள்ளமெள்ள நடக்கத் தொடங்கினார். பரசன்னரின் மனைவி வழியில் தன் வீட்டிற்கு முன்னால் அன்னையின் திருப்பாதங்களைக் கழுவி வழிபடத் தயாராக நின்றார். அது நிறைவுற்றதும் சிறிது இனிப்பும் தண்ணீரும் உட்கொண்டார். சிம்மவாஹினி முதலான தெய்வங்கள் உறைவதால் ஊர் எல்லை வரை பல்லக்கை மறுத்துவிட்டு நடந்தே சென்றார். வழியில்யாத்ரா  சித்திராயனையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டார். கையெடுத்துக் கும்பிட்டபடியே நெடுநேரம் நின்றார். பின்னர் பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அன்னை அமர்ந்ததும் பல்லக்கு புறப்பட்டது. கிராம மக்கள் அதுவரை வந்து கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

ஜெயராம்பாடியை அன்னை மிகவும் நேசித்தார். தமது காலத்திற்குப் பிறகு எண்ணற்ற தம் பிள்ளைகள் அங்கு வரப்போவதும் அவருக்குத்தெரியும். எனவே தான் ஒரு நாள் சுவாமி சாரதானந்தரிடம், மகனே, நான் மறைந்த பிறகு என்னைத்தேடி என் பிள்ளைகள் எத்தனையோ பேர் இங்கு வருவார்கள்.  வருகின்ற அவர்களுக்குச் சிறிது உணவும் ஓய்வெடுத்துக்கொள்ள இடமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள், என்று கூறவும் செய்திருந்தார். 

இரவு நெடுநேரம் கழித்து அன்னையும் பிறரும் கோயால் பாரா  சேர்ந்தனர். அன்று இரவு அங்கேயே தங்கினர். மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது வணங்கிய அனைவரையும் மனதார ஆசீர்வதித்தார் அனனை. தாம் வைத்திருந்த கைத்தடியையும் கொசுவலையையும் பிரம்மசாரி ககனிடம் கொடுத்து, இவை பிரசன்னனுடையது, அவனிடமே கொடுத்துவிடு” என்று கூறினார். பிறந்த கத்தைச் சேர்ந்த அவை தம்மிடம் தங்கிவிடக்கூடாது என்று எண்ணினாரோ என்னவோ! அன்னையின் உணர்வைப்புரிந்து கொண்டதாலோ, அவரது அன்பில் கரைந்ததாலோ ககனின் கண்களில் நீர் மல்கியது. அதைக் கண்ட அன்னை வருந்தாதே, சரத் இருக்கிறான் .உங்களைக் கவனித்துக்கொள்வான் என்றார்.

கோதுல்பூர் வழியாக அன்று பகல் இரண்டு மணிக்கு அனைவரும் விஷ்ணுபூரை அடைந்தனர். அங்கே சுரேஸ்வர்சேன் என்ற பக்தரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள் அங்கிருந்து ரயில் மூலம் கல்கத்தா புறப்பட்டனர். பிப்ரவரி 27, வெள்ளி இரவு 9 மணிக்கு வண்டி கல்கத்தாவை அடைந்தது.

கல்கத்தா ரயில் நிலையத்தில் அன்னையை வரவேற்க யோகின்மாவும் கோலாப்மாவும் வேறு பல பக்தர்களும் வந்திருந்தனர். இளைத்துக் கறுத்து வண்டியிலிருந்து இறங்கிய அன்னையைக் கண்டதும் அவர்கள் பெரும் அதிர்ச்சியும் சொல்ல முடியாத வேதனையும் அடைந்து, இது என்ன கோலம், அன்னையையா கூட்டி வந்திருக்கிறீர்கள்? எலும்பும் தோலுமாக அவர் ஒரு கரிக்கட்டையைப்போல் அல்லவா உள்ளார்? என்று தங்களை மறந்து கூவிவிட்டனர். பின்னர் எல்லோருமாக உத்போதன் வந்து சேர்ந்தனர்.


 MAIN PAGE 

image90

கடைசி நாட்கள்

கடைசி நாட்கள்

தொடர்ந்த மாதங்களில் பயங்கரக் காய்ச்சலால் அன்னை மிகுந்த வேதனைப்பட்டார். அவர் கல்கத்தா வந்த அன்றே அன்னையின் வைத்தியத்திற்குச் சிறப்பான ஏற்பாடுகளைத் துவக்கினார் சாரதானந்தர். முதலில் ஹோமியோபதி சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் கஞ்சிலால்  என்பவர் வந்து சிகிச்சை செய்தார்.இரு வாரங்கள் கழிந்தும் எந்தப் பயனும் இல்லை. அதன் பின்னர் பிரபல ஆயுர்வேத மருத்துவரான சியாமாதாஸ் அழைக்கப்பட்டார். அவரது சிகிச்சை அன்னையின் காய்ச்சலைக் கொஞ்சம் தணித்தது. ஆனால் அவர் கொடுத்த மருந்து மிகவும் கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பின் காரணமாக நாள் முழுவதும் அன்னையால் வேறு எதையும் சாப்பிட முடியவில்லை. ஆனால் அன்னையின் நோய்க்கு அந்த மருந்தைத் தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. இதனால் ஆங்கில மருத்துவத்தை நாடினர். பிரபல டாக்டர் பிபின் பிஹாரி கோஷ் வரவழைக்கப்பட்டார். அவர் ஒரு மாதம் சிகிச்சை செய்தார். பின்னர் அவரது ஆலோசனைப்படி, மற்றொரு சிறந்த டாக்டரான பிரதான்போஸ் மற்றும் ஓரிரு டாக்டர்களையும் அழைத்துச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அன்னையின் ஜீரம் தங்கள் சிகிச்சையின் எல்லையைத் தாண்டுவதைக் கண்ட அவர்கள் ஆராய்ந்து அது வெயில் மிகுந்த இடங்களில் வருகின்ற  மலேரியா போன்ற ஒரு கொடிய காய்ச்சல் என்பதைக் கண்டறிந்தனர். அந்த நாட்களில் இந்த நோய்க்குச் சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆங்கில மருத்துவர்கள் கையை விரித்துவிட்டனர். எனவே  பழைய ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் தொடரப்பட்டன. இந்த மூவகை சிகிச்சைகளுடன் சாந்தி, ஸ்வஸ்த்யயனம் போன்ற சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்தார் சாரதானந்தர்.ஆனால் அன்னையின் ஜீரம் அனைத்திற்கும் போக்குக் காட்டுவதாக இருந்தது.

நோயின் ஆரம்பக் காலத்தில் மாலைநேரத்தில் மட்டுமே காய்ச்சல் வரும். இரவில் குறைந்து விடும். அதன் பிறகு காய்ச்சல் காலையிலும் மாலையிலும் வரலாயிற்று. சிலவேளைகளில் 103 டிகிரியையும் எட்டியது. இதையும் தாண்டும் போது அன்னை நினைவிழந்து விடுவார். இதோடு  உடம்பு முழுவதும் பொறுக்க முடியாத எரிச்சல்வேறு, இந்த எரிச்சல் அளவு கடந்து போகும் போது, ஏதாவது குளத்தில் சென்று மூழ்கிக் கிடக்க வேண்டும்போல் தோன்றுகிறது என்பார் அன்னை. அவரது இந்த எரிச்சல் தணிவதற்காக எப்போதும் ஒருவர் பக்கத்தில் நின்றபடியே விசிறிக்கொண்டோ அல்லது ஐஸைத் தங்கள் கைகளில் தேய்த்துக்கொண்டு பின்னர் அன்னையின் திருவுடல் மீது தடவியவாறோ இருப்பார்கள். ஐஸ் இல்லாமல் போனால் சூடு குறைவான தேகம் கொண்டவர்களின்  வெற்றுடம்பில் தமது கையை வைத்துக்கொள்வார் அன்னை!

அன்னைக்கு இரு பிரிவினர் சேவை செய்தனர்.  துறவியரும் பிரம்மசாரியரும் டாக்டர்களை அழைத்துவரல் உணவு மற்றும் மருந்து முதலியவை வாங்குதல், சில திரவ உணவுகளைத் தயாரித்தல், விசிறுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். உணவு சமைத்தல், துணி துவைத்தல்,படுக்கையைச் சுத்தம் செய்தல், உணவளித்தல் போன்றவற்றை பக்தைகள் செய்தனர். படுத்த படுக்கையாய்க் கிடந்தும் இத்தனை வேதனைகளுக்கிடையிலும் அனைவரையும் அன்பாகப் பேணினார் அன்னை. அதோடு தம்மைக் காண வருகின்ற பக்தர்கள் மற்றும் சீடர்களின் நலனைப்பற்றி அன்போடு விசாரிக்கவும், அவர்களுக்கு உணவு தரவும் அவர் தவறவே இல்லை. தம்மைக் கவனிப்பதற்காக வருகின்ற டாக்டர்களுக்கும் குருதேவரின் பிரசாதமான பழமும் இனிப்புகளும் தருவதிலும் மிகுந்த கவனமாக இருப்பார். உடல் எரிச்சலின் காரணமாக அன்னை வேதனைப்பட்டதால், பக்தர்கள் அருகிலிருந்து விசிறுவார்கள். எரிச்சலுக்கு அது கொஞ்சம் இதமாக இருக்கும். ஆனால் யாரையும் நீண்ட நேரம் விசிற அனுமதிக்கமாட்டார். தமது நோயையும் பொறுத்துக்கொண்டு குழந்தாய், உன் கை வலிக்கும், விசிறியது போதும், என்பார். தொடர்ந்து விசிறினால் மகனே, உன் கை வலிக்கும் என்ற எண்ணத்தால் என்னால் தூங்க முடியவில்லை. நிறுத்தி விடு” என்பார். வேறு வழியின்றி விசிறுவதை நிறுத்த வேண்டியிருக்கும்.

ஒரு நாள் சீடர் ஒருவர் ரமணி என்னும் பெண்மூலம்  அன்னைக்குப் பனம்பழம் கொடுத்தனுப்பினர். அவள் உத்போதன் வந்தபோது அன்னை காய்ச்சலால் நினைவிழந்த நிலையில் படுத்திருந்தார். நினைவு வந்ததும் அவள் வந்து போனதை அறிந்த அன்னை மிகவும் வேதனைப்பட்டு, ஆ! எவ்வளவு தூரம் கடந்து ஜெயராம்பாடியிலிருந்து அவள் கல்கத்தாவிற்கு வந்தாள்! அவளைப்பார்த்து ஒரு வார்த்தை பேச முடியாமல் போய்விட்டதே, நான் மிகவும் வருத்தப்பட்டதாக அவளிடம் சொல்லுங்கள் என்று கூறினார். 

ஒரு நாள் ராம்லாலும் லட்சுமிதேவியும் அன்னையைக்காண வந்தனர். அவர்கள் திரும்பிப் போகும் போது எதுவும் கொடுக்க மறந்துவிட்டார் அன்னை.பின்னர் அதற்காக மிகவும் வருந்தினார். ஒருவர் மூலம் துணியும் ரூபாயும் அவர்களுக்குக்  கொடுத்தனுப்பிய பிறகு தான் அவரால் நிம்மதியாக  இருக்க முடிந்தது.


இந்தக்கடுமையான காய்ச்சலின் போது கஞ்சியும் பாலும் பத்திய உணவும் சில வகைப் பழங்களும் அன்னைக்குத் தரப்பட்டன. பொதுவாக அப்போது அவரது உடலில் சோகை படியத் துவங்கியிருந்தது. எனவே ரத்தம் அதிகரிப்பதற்காக, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை நிறையத்தரும்படி ஆயுர்வேத மருத்துவர் கூறினார். அன்னைக்கு உணவளித்து வந்தது சரளா என்ற சிஷ்யை. ஒர நாள் அன்னைக்கு உணவு கொண்டு சென்றபோது  ஹோமியோபதி மருத்துவரான கஞ்சிலால் வந்தார். உணவின் அளவைப்பார்த்ததும் அவரது முகம் கடுமையாக மாறியது. அன்னை அதிக உணவு சாப்பிடுவது நல்லதல்ல என்று அவர் நினைத்தார். எனவே அளவுக்கு  அதிகமாக உணவு தருவதற்காக சரளாவைக் கடுமையாகத் திட்டினார். இனிமேல் அவள் அன்னையைக் கவனிக்க வேண்டாமென்றும், இர நர்சுகளை அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அறையை விட்டு டாக்டர் வெளியே சென்றதும், அன்னை ஆறுதலான குரலில் சரளாவிடம், கஞ்சிலால் அர்த்தமில்லாமல் கோபித்துக்கொள்கிறார். நான் சாப்பிடுவதால் தானே நீ கொண்டு வருகிறாய்? அவர் நர்சுகளை அனுப்புவதாகச் சொல்லியதைப்பற்றிக் கவலைப்படாதே.அந்த ”பூட்ஸ்” போட்ட பெண்களை நான் அருகிலேயே சேர்க்கப்போவதில்லை என்று கூறிச் சமாதானப்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சாப்பிட வேண்டும் என்று இருந்த சிறு ஆசையும் அன்னையிடமிருந்து போய் விட்டது.

நீண்ட கால நோயின் காரணத்தால் அன்னையின் இயல்பு ஒரு சிறிய பெண்ணின் இயல்புபோல் மாறிவிட்டது. கங்கைக்குப்போக வேண்டும் என்று அவ்வப்போது கூறுவார். அழைத்துக்கொண்டு போவதாக யாராவது சொல்லும் வரை சாப்பிட மாட்டார். அது மட்டுமின்றி அவரைச் சாப்பிட வைப்பதும் பெரும் பாடாகியது. அவர் சாப்பிடாமல் பிடிவாதம் செய்யும் போது, சாரதானந்தரை அழைக்கப்போவதாக சொன்னால் மட்டும், என் மகனை ஏன் தொந்தரவு செய்கிறாய்? என்று கூறிச் சாப்பிட்டுவிடுவார்.

ஒரு நாள் இரவு நெடுநேரம் கடந்து விட்டது. சரளா எவ்வளவோ முயன்றும் அன்னை சிறு குழந்தையைப்போல் சாப்பிட மறுத்துக்கொண்டிருந்தார். எப்பொழுது பார்த்தாலும்  சாப்பிடு, சாப்பிடு என்று சொல்வது அது முடிந்ததும் அந்தக்குச்சியை அக்குளில் வைப்பதும் இது தான் உன்வேலை.இதைத்தவிர உனக்கு வேறு எதுவும் தெரியாது. என்று கூறி எவ்வளவு சொல்லியும் சாப்பிட மறுத்துவிட்டார். சரளா வேறு வழியின்றி சாரதானந்தரை அழைப்பதாகக் கூறினாள். ஆனால் இம்முறை அந்த அஸ்திரம் பலனளிக்கவில்லை. கூப்பிடு! உன் கையால் நான் சாப்பிட மாட்டேன், சாப்பிடவே மாட்டேன் என்று  உறுதியாக கூறிவிட்டார் அன்னை. கடைசியில் கீழ்த்தளத்தில் இருந்த சாரதானந்தரை அழைத்தாள் சரளா. சுவாமிகள் மாடிக்கு வந்தார். அவர் வந்ததும் அன்னை நடந்து கொண்ட முறை வியப்பை அளிப்பதாக இருந்தது.

இது நாள் வரை அன்னை முகத்தைத் திரையிட்டுக்கொள்ளாமல் சாரதானந்தர் முன் இருந்ததில்லை. அவரோடு நேருக்குநேர் பேசவும் மாட்டார். யாராவது ஒருவர் மூலமே பேசுவார். ஆனால் இப்போது அவரை அருகில் வரும்படி அழைத்துத் தம் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.அவருடைய முகவாயை மிகுந்த பாசத்தோடு தொட்டுமுத்தமிட்டு அவருடைய இரண்டு கைகளையும் தமது கைகளில் வைத்துக்கொண்டு சிறு குழந்தையைப்போல் சரளாவைக் காட்டி, மகனே இவள் என்னை எப்படியெல்லாம் தொந்தரவு செய்கிறாள் தெரியுமா? எப்போது பார்த்தாலும் சாப்பிடு, சாப்பிடு என்று உயிரை வாங்குகிறாள். அதைவிட்டால் அந்தக் குச்சியை அக்களில் வைத்துக்கொண்டு எடுக்கிறாள். என்னை இப்படி இம்சிக்கவேண்டாம் என்று அவளுக்குச் சொல் என்றார். சுவாமிகள் உடனே அம்மா இனிமேல் அவள் அப்படிச்செய்ய மாட்டாள் என்று ஆறுதல் கூறினார். சிறிதுநேரம் கழிந்ததும் அம்மா இரவு இவ்வளவு நேரமாகிவிட்டதே , ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்” என்று மிகுந்த அன்புடன் கேட்டார். அன்னையும் சரி என்று தலையாட்டினார். உடனே சுவாமிகள் சரளாவிடம் உணவை ஊட்டுமாறு கூறினார். அன்னை அதைத் தடுத்து வேண்டாம், வேண்டாம். அவள் கொடுக்கவேண்டாம். நீயே என் கையால் கொடு” என்றார் . சுவாமிகளும் அன்னையின் வாயில் சிறிதுசிறிதாகப் பாலைப் புகட்டினார். பிறகு பால் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு அம்மா” இப்போது இது போதும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள், அப்புறம் சாப்பிடலாம் என்று பரிவுடன் கூறினார். இந்த வார்த்தைகளைக்கேட்டதும் அன்னை மிகுந்த மகிழ்ச்சியுடன் சரளாவையும் மற்றவர்களையும் பார்த்து, என் மகன் எவ்வளவு கனிவோடு பேசுகிறான். அம்மா,   கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.பிறகு சாப்பிடலாம், உங்களுக்கு ஏன் இப்படிப்பேசத் தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்-இதையேபேசுகிறீர்களே!என்றார். பிறகு சுவாமிகளைப்பார்த்து மிகுந்த அன்போடு மகனே, நீ நாளெல்லாம் உழைப்பவன், இந்த நள்ளிரவில் உன்னை இங்கே அழைத்துத் தொந்தரவு கொடுத்து விட்டார்கள்,! போய் ஒய்வெடுத்துக்கொள்! எனக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாய்” என்றார்.


கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக அன்னையின் பொறுப்புகளை வகித்து, அவரது பேரன்பிற்குப் பாத்திரமாகி யிருந்த சுவாமி சாரதானந்தரின் மனத்தில் குறை ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது. அன்னைக்கு நேரடிப் பணிவிடைகள் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் அது. இயல்பான கூச்ச சுபாவம் காரணமாக அவராக அதைச் செய்யவில்லை.எல்லோர் உள்ளங்களின் ஆசைகளையும் அறிந்து நிறைவேற்றுகின்ற கருணைக் கடலான அன்னை சுவாமிகளின் அந்த ஆசையை இப்படி நிறைவேற்றினார். என் மனத்துயரை விலக்கவே அன்னை என் சேவையை ஏற்றுக்கொண்டார். என்று பின்னர் சுவாமிகள் கூறினார்.

அது சரி, சரளா? அன்னை இப்படித் தம்மை விலக்கியதை  அவளால் எப்படி பொறுக்க முடியும்? அன்னைக்குத் தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று எண்ணிய அவள் சாரதானந்தரிடம் சென்று நிலைமையைக் கூறி தனது பணியை மாற்றிக்கொண்டாள். சாதம் கொடுப்பது போன்ற பிற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் பால் கொடுப்பதையும் ஜீரத்தை அளவிடுவதையும் வேறு யாராவது செய்யட்டும். என்று கூறினாள். சுவாமிகளும் அதனை ஏற்றுக்கொண்டார். அன்னை மறுநாளே இதைப்புரிந்து கொண்டார். சரளா வெளியே  சென்றிருந்தபோது சிஷ்யை ஒருத்தியிடம் என்ன, சரளா என்னிடம் கோபித்துக் கொண்டு போய் விட்டாளா? என்று கேட்டார். அதற்கு அந்த சிஷ்யை ஏன் அம்மா! அவள் ஏன் உங்களிடம் கோபம் கொள்ளவேண்டும் என்று கூறினாள். அதற்கு அன்னை இல்லையில்லை.அவளுக்கு என் மீது கோபம் தான் என்றார்.சிறிது நேரம் கழித்து சரளாவந்தாள். கண்டதுமே அன்னை அவளை அன்புடன் அழைத்து பாசத்தையெல்லாம் அள்ளிக்கொட்டுகின்ற குரலில் மகளே! என் மீது கோபமா? என்று கேட்டார். நான் ஏன் உங்கள் மீது கோபம் கொள்ள வேண்டும் அம்மா? என்று பதிலளித்தாள் சரளா.அதற்கு அன்னை கோபம் இல்லை என்றால் நீ ஏன் எனக்க பால் தருவதில்லை? அந்தக் குச்சியை ஏன் என் அக்குளில் செருகுவதில்லை? மகளே, தொடர்ந்த நோய் எரிச்சலை உண்டாக்குகிறது. சில வேளைகளில் எதையோ நினைத்து எதையோ பேசி விடுகிறேன். என் வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்றார். இவ்வாறு கூறிவிட்டு அவளது தலையை அப்படியே இழுத்துத் தம் மார்போடு அணைத்துக்கொண்டு அன்பொழுகத் தடவிக்கொடுத்தார். அன்னையின் அப்பழுக்கற்ற அன்பில் நனைந்த சரளா கேவிக்கேவி அழுதாள்.

அன்னைக்கு சரளாவிடம் ஒரு தனி இருந்தது. குறிப்பாக அவளது ஆன்மீக வாழ்வில் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். ஏனெனில் இந்த சரளா பின்னாளில் ராமகிருஷ்ண இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகிக்கப்போவதை அன்னை அறிந்திருந்தார். எனவே அதற்கேற்ப அவளை வழிநடத்தினார். ஒரு நாள் அது பற்றி அவளிடமே கூறவும் செய்தார். அன்னை இனிமேல் அதிக நாட்கள் வாழமாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட சரளா ஒரு நாள் அழுதவாறே அன்னையிடம் சென்று அம்மா நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என்று கூறினாள்.அதற்கு அன்னை ஆழ்ந்த அமைதியுடன், மகளே இறுதியில் என்னிடம் நீ வருவாய், என்னிடம் தான் வந்து சேர்வாய்.ஆனால் உன் மூலம் நான் செய்ய வேண்டிய வேலை சிறிது பாக்கியிருக்கிறது.அதை நிறைவேற்றிய பின் நீ என்னிடம் வரலாம், என்று கூறினார். அன்னையின் இந்த வார்த்தைகள் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணிக்கான விதையாகும். ராமகிருஷ்ண மடத்தைப்போல பெண்களுக்குரிய அமைப்பான சாரதா மடத்தின் தோற்றத்தையே அன்னை அவ்வாறு குறிப்பிட்டார். சாரதா மடம் பின்னாளில் உருவாகியபோது இந்த சரளாவே ப்ரவ்ராஜிகா பாரதீப்ராணா என்ற பெயரில் அதன் முதல் தலைவி ஆனார். ராமகிருஷ்ணதுறவியர் சங்கத்தின் ஜனனியாகவும் குருதேவியாகவும் விளங்கிய அன்னை, அதில் பெண்களுக்கும் உரிய இடத்தை இவ்வாறு அளித்தார்.

இனி? இனி என்ன, வந்த வேலை முடிந்தால் போக வேண்டியது தான், எங்கோ உயரத்தில் உலவுகின்ற நிலவின் பிம்பம் குளத்து நீரில் பிரதிபலிக்கிறது. மீன்கள் அந்தப் பிம்பத்தைத் தங்களுள் ஒன்றாகக் கருதி அதனுடன் விளையாடிக்களிக்கின்றன. ஆனால் அதன் உண்மையான இருப்பிடம் எது என்பதைப் பாவம் அந்த மீன்கள் அறிந்திருக்கவில்லை. விடியும் போது அந்தப் பிம்பம் காணாமல் போய்விடுகிறது. தமது தெய்வீகத்தைக் கோடி காட்டுவது போல் சிலவேளைகளில் அன்னை இவ்வாறு கூறுவார். இப்போது இந்த பிம்பமும் மறைய வேண்டியது தான். அப்படியானால் விடிய வேண்டும். விடிவது என்றால் இருள் விலக வேண்டும். உலகில் தமது பணிகளுக்கான இருளாகிய மாயையுடன் அன்னை தம்மைப் பிணைத்துக்கொண்டிருந்தார். இப்போது பணிகள் நிறைவுற்றுவிட்ட நிலையில் மாயையை விலக்க வேண்டியது தான். காசியில் ஒரு முறை அன்னையை ராது மற்றும் குடும்பத்தினருடன் கண்ட ஒரு பெண், அம்மா, இது என்ன? நீங்கள் இப்படி மாயையில் உழல்கிறீர்களே? என்று கேட்டாள் . அதற்கு அன்னை என்ன செய்வது மகளே! மகாமாயையும் நானே அல்லவா? என்று மெல்லிய குரலில் கூறினார். மகாமாயையான அவரிடம் மாயை இருக்கத்தானே செய்யும்! ஆனால் நாம் முன்பு கண்டது போல் அது அவரது கைக்கருவி, வேண்டிய நேரத்தில் உபயோகிப்பார். வேண்டாத நேரத்தில் விலக்கி வைத்துவிடுவார். இப்போது விலக்கத் திருவுளம் கொண்டு விட்டார். அதற்கான அறிகுறிகள் மே மாத இறுதியில் தெரிய ஆரம்பித்தன.


தட்சிணேசுவர நாட்களிலேயே அன்னைக்குச் சேவகராக விளங்கியவர் லாட்டு. குருதேவரின் மறைவுக்குப்பின்னர்    சுவாமி அத்புதானந்தர் என்ற பெயருடன் வராக நகர மடத்தில் மற்ற துறவியருடன் வாழ்ந்து சாதனை  கள் பழகிவந்தார். ஒரு முறை அவர் பலராம்போஸின் வீட்டில் தங்கியிருந்தபோது அன்னையும் அங்கிருந்தார். ஒரு நாள் அன்னைப்புறப்படத் தயாரானார். அப்போது ஒருவர்     அத்புதானந்தரிடம் அன்னை புறப்படும் விஷயத்தைத் கூறினார். அதற்கு அவர் போகட்டும், நான் துறவி. எனக்கு அன்னையும் கிடையாது.அப்பனும் கிடையாது என்று கூறிவிட்டார். புறப்படும் போது அவரைக் காணாததால் அன்னை அவரைப்பற்றி விசாரித்தார். அவர் சொன்னதை அப்போது அன்னையிடம் தெரிவித்தனர். உடனே அன்னை, அவனுக்கு அன்னை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் எனக்குப் பிள்ளை உண்டே! என்று கூறியபடி தாமே நேரில் சென்று அவரைப்பார்த்தார். இதனைச்சிறிதும் எதிர்பார்க்காத  சுவாமிகள் வெலவெலத்துப்போய் அன்னையின் திருப்பாதங்களில் வீழ்ந்து பணிந்தார். அன்னையின் இத்தகைய புத்திரவாஞ்சைக்குப் பாத்திரமானவர் லாட்டு. அவர் அன்னையின் இந்த இறுதி நாட்களில் ஏப்ரல் 24-ஆம்நாள் மகா சமாதி அடைந்தார். அவரைத்தொடர்ந்து மே 14-ஆம் நாள்  பலராம்போஸின் மகனான ராமகிருஷ்ணபோஸ்  காலமானார். அன்னையின் சிர்குலைந்த உடல்நிலையைக்கருதி இவற்றை அன்னையிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் கோலாப்மா தமக்கே உரிய பாணியில் ஒரு நாள் எல்லாவற்றையும் பட்டென்று கூறிவிட்டார். விளைவு? அன்று முழுவதும் அன்னை ஏங்கிஏங்கி அழுதார். இரவிலும் தூங்கவில்லை. இதனால் ஜீரம் அதிகரித்து, அன்னை நினைவிழக்கும் நிலைக்குப்போய் விட்டது.

இது வியப்புக்குரியதல்ல. யாராவது இறந்துவிட்டால் அன்னை பிழியப்பிழிய அழுவது ஒன்றும் புதியவிஷயம் அல்லவே!அனைவரையும்ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அன்னை தமது தம்பியான வரத பிரசாதரின் மரணச்செய்தியை ஏற்றுக்கொண்ட விதம் தான். அவர் நிமோனியாவின் காரணமாக ஜெயராம்பாடியில் படுத்தபடுக்கையாக இருந்தார். இது அன்னைக்குத்தெரியும்.அவ்வப்போது, வரதன் எப்படி இருக்கிறான்? என்று விசாரித்தும் வந்தார்.ராமகிருஷ்ணபோஸ் மறைந்த ஒரு வாரத்திற்குப் பின் வரதர் காலமானார். இந்த விவரமும் அன்னைக்குத் தெரிவிக்கப்படவில்லை.ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக வரதர் இறந்த மறுநாள் அன்னையின் கேள்வியே வேறுவிதமாக இருந்தது. என்ன, வரதன் போய்விட்டான் போலிருக்கிறதே! அந்த வராந்தாவில் நின்று என்னை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக கண்டேன்” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார். அதன் பின்னரும் உண்மையை மறைக்க முடியவில்லை. விவரத்தைக்கூறினார். அன்னை சிறிதுநேரம் அழுதார். அவ்வளவு தான். அதன் பின் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஓரிருநாட்களுக்குப் பின் பிரம்மசாரி கோபேஷிடம் ஓ கோபேஷ், சேதி தெரியுமா? வரதன் போய்விட்டான் என்று யாரோ மூன்றாம் மனிதனைப் பற்றிய விஷயம் போல் கூறினார். கோபேஷ் குழம்பிப்போய் நின்றார். தம் அன்பிற்குரிய தம்பியின் மரணச்செய்தியை இவ்வாறு எந்தப் பற்றுமின்றி அன்னையால் சொல்ல முடியும் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனவே கேள்விக்குறியுடன் அன்னையின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். உடனே அன்னை இன்னும் சற்று அழுத்தமாக புரியவில்லையா? அவன் தான், ஷேதியின் தகப்பன் தான். இறந்து விட்டான். என்று சொன்னார். மரணச்செய்தி அளித்த கவலையைவிட என்னைப் பெருங்கவலையில் ஆழ்த்தியது அன்னையின் குரலில் சோகமோ வருத்தமோ காணப்படாததுதான் என்று எழுதுகிறார் கோபேஷ்.அன்னை தம் மனத்தை உலகிலிருந்து பிரிக்கத்தொடங்கி விட்டார். என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் ஆரம்பமாக அமைந்தது. இதன் பிறகு அவரது சொல்லும் செயலும் இந்த மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

கௌரிமா கங்கையில் குளித்துவிட்டுச் செல்லும் வழியில் தினமும் வந்து அன்னையைக்காண்பது வழக்கம். அவரது அருகில் சிறிதுநேரம் அமர்ந்து நலம் விசாரித்து விட்டுச் செல்வார். அது போல இப்போதும் வந்தார். ஆனால் அன்று அவர் நுழைந்ததம் அன்னை தினமும் இங்கு வந்து ஏன் தொந்தரவு கொடுக்கிறாய்? எதற்கு வருகிறாய்? எதைப்பார்க்க வருகிறாய்? என்று நறுக்கென்று கேட்டார். அன்னையின் இந்த க்கேள்விகளால் அதிர்ந்து போன கௌரிமா, அம்மா, நீங்கள்படுத்தபடுக்கையாக இருக்கிறீர்கள் எங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா? எப்போதும் உங்கள் அருகிலேயே  இருக்க மனம் விழைகிறது. ஆனால் நேரம் கிடைப்பதில்லை..அதனால்  தினமும் ஒரு தடவையாவது வந்து போகிறோம் என்று தாழ்ந்த குரலில் கூறினார். ஆனால் அன்னை அதே தொனியிலேயே என்னிடம் வருவதால் என்ன லாபம்? யாருடைய பிரச்சனைகளையும் இனி என்னால் கேட்க முடியாது? என்று விறைப்பாக கூறினார். பின்னர் சிறிது அமைதியாகி, அப்படியே வந்தாலும் என் அறையினுள் வராதே. வாசலிலிருந்தே பார்த்துவிட்டுப்போய்விடு. என்னைப்பேச வைக்காதே” என்றார். கௌரிமா என்ன சொல்வார்! கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடியே கனத்த மனத்துடன் சென்றார். அதன் பிறகும் அவர் தினமும் வந்தார். அன்னை கூறியது போலவே வாசலுக்கு வெளியில் அமர்ந்து கொள்வார். மனத்துயரைக் கண்ணீர் மொழியில் தெரிவித்தவாறு ஒரு மணி நேரம் வரை இருந்துவிட்டு எழுந்து செல்வார். அன்னை தினமும் இதைக் கண்டார். ஆனால் ஒரு வார்த்தைகூட பேசவும் இல்லை. அவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.   


இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாகச் சம்பவங்கள் தொடர்ந்தன.ஆனால் ராதுவையும் விலக்கிவிடுவார் என்பதை யார்தாம் நினைத்திருக்க முடியும்? அதுவும் நடக்கவே செய்தது. ஒரு நாள் பக்தர் ஒருவர் அன்னையிடம் அம்மா உங்கள் உடல்நிலை இப்படியாகிவிட்டதே, இவ்வளவு பலவீனமாக   நான் உங்களைக் கண்டதே இல்லை, அதற்கு அன்னை ஆம், மகனே, உடம்பு மிகவும் பலவீனமாகி விட்டது. இந்த உடம்பின் மூலம் குருதேவரின் பணிகள் என்னென்ன நடைபெற வேண்டுமோ அவை முடிந்து விட்டதென்று தோன்றுகிறது. இப்போது என் மனம் அவரையே நாடுகிறது. வேறெதையும் விரும்பவில்லை. பாரேன் ராதுவை எவ்வளவு நேசித்தேன், அவளது மகிழ்ச்சிக்காகவும் வசதிக்காகவும் எவ்வளவு பாடுபட்டிருப்பேன், ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. அவள் என் அருகில் வந்தால் என்னவோ போலிருக்கிறது., இவள் ஏன் இங்கு வரவேண்டும்? என் மனத்தைக் கீழே இழுக்க ஏன் முயலவேண்டும். என்ற எண்ணம் தோன்றுகிறது. தமது பணிகளுக்காக குருதேவர் என் மனத்தை இவற்றால்  எல்லாம் கட்டி வைத்திருந்தார். இல்லாவிடில் அவர்போனபிறகு என்னால் வாழ முடிந்திருக்குமா என்ன! என்றார். சொன்னது மட்டும் அல்ல, அப்படியே செய்தும் விட்டார். ஒரு நாள் ராதுவை அழைத்து, நீ இனிமேல் இங்கேயிருக்கவேண்டாம், ஜெயராம்பாடிக்குப்போய் விடு என்றார். அருகிலிருந்த சரளா, அம்மா என்ன சொல்கிறீர்கள்? ராது இல்லாமல் உங்களால் இருக்க முடியாதே, என்றாள். அதற்கு அன்னை உறுதியான குரலில், நிச்சயமாக முடியும், என் மனத்தை அவளிடமிருந்து விலக்கிக்கொண்டு விட்டேன் என்றார். 

அன்னை கூறியதை யோகின்மாவிடமும் சாரதானந்தரிடமும் தெரிவித்தாள்சரளா. யோகின்மா அன்னையிடம் விரைந்து சென்று அம்மா ராதுவை ஏன் போகச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அன்னை யோகின் இனிமேல் அவள் ஜெயராம்பாடியில் தான் வாழ்ந்தாக வேண்டும். அவளை அங்கே அனுப்பிவிடு. அவளிடமிருந்து என் மனத்தைத் திருப்பி விட்டேன். இனி அவர்கள் தேவையில்லை, என்றார். இதைக்கேட்ட யோகின்மா அம்மா அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்? ராதுவிடமிருந்து உங்கள் மனத்தைப் பிரித்து விட்டீர்களானால் எங்களுக்கெல்லாம், யார் கதி? என்று கலக்கத்துடன் கூறினார். ஆனால் அன்னையோ உறுதியான குரலில், யோகின் என் பற்றினை எல்லாம் வெட்டிக்கொண்டு விட்டேன். இனி இந்தப்பேச்சே வேண்டாம் என்று கூறிவிட்டார்.யோகின்மா அனைத்தையும் சாரதானந்தரிடம் கூறினார். அவர் சொல்வதை அமைதியாக கேட்ட சுவாமிகள் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார். பின்னர் வேதனையுடன், அப்படியானால் அன்னையை இனி அதிக  நாட்கள் உயிரோடு பார்க்க முடியாது. ராதுவிடமிருந்து அவர் தம்மைப் பிரித்துவிட்டாரானால் வேறு எந்த வழியும் இல்லை.என்றார்.

பின்னர் அருகில் நின்ற சரளாவைப்பார்த்து நீ அதிகமான நேரம் அன்னையின் அருகில் இருக்கிறாய், அன்னையின் மகத்தை ராதுவிடம் திருப்ப முயற்சி செய், என்றார். சரளாவும் பல வழிகளில் முயன்றாள். ஆனால் அவளுடைய முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.மாறாக அன்னை ஒரு நாள் அவளிடம் நீ என்னதான் முயன்றாலும் திரும்பிய மனம் மீண்டும் கீழே வராது. இதைப் புரிந்துக்கொள் என்றார்.சரளாவும் தன் முயற்சிகளைக் கைவிட்டாள்.

ராதுவிடமிருந்து மட்டுமல்லாமல் நளினி, மாக்கு அவர்களுடைய பிள்ளைகள் என்று எல்லோரிடமிருந்தும் அன்னை தன் மனத்தைப் பிரித்துக்கொண்டார். எல்லோரையுமே ஜெயராம்பாடிக்கு அனுப்பிவிடச் சொன்னார். அவர்கள் பார்வையில் பட்டாலே எரிச்சல் அடைந்தார். இதனால் நளினி அன்னையின் பார்வையில் படுவதற்கே பயந்தாள். ஒரு நாள் அவள் தனிமையில் தேம்பித்தேம்பி அழுதவாறே நாங்கள்  இங்கே இருப்பதில் அன்னை இவ்வளவு வேதனை அடைகிறார் என்றால் போய்விடுகிறோம். ஆனால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? அன்னை நோயுற்றுக் கிடக்கின்ற இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இல்லாமல், இங்கு வந்துவிட்டார்கள் என்றல்லவா பேசுவார்கள்? என்றாள். சுவாமி சாரதானந்தரும் அன்னையிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார். அம்மா, நீங்கள் இப்படி நோயுற்றிருக்கையில் உங்களைவிட்டுச்செல்ல அவர்களுக்கு மனவருத்தம் இருக்காதா? உங்கள் உடல்நிலை சற்று த்தேறியதும் அவர்கள் சென்று விடுவார்கள்.அப்போது அன்னை உறுதியுடன் இப்போதே அவர்களை அனுப்பிவிடுவது நல்லது, இல்லையென்றால் அவர்கள்  என் அருகில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களின் நிழல்கூட என் மீது படுவதை நான் விரும்பவில்லை என்றார். 

அந்த உறுதியை வெளிப்படுத்துவது போல் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் அன்னை தரையில் படுக்கையை விரித்துப் படுத்திருந்தார். ராதுவின் கைக்குழந்தையான வன விஹாரி தவழ்ந்தபடியே சென்று அன்னையை நெருங்கினான். அப்போது அன்னை அந்தக் குழந்தையிடம் உன்னிடமிருந்த பற்றை விலக்கிவிட்டேன், போய்விடு.இனியும் என்னை உன்னால் பந்தப்படுத்த முடியாது” என்று கூறிவிட்டு அருகிலிருந்த சீடரிடம் இந்தக்குழந்தையை எடுத்துச்செல் அதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையும் இல்லை என்றார்.

இவையெல்லாம் நடந்தபோது ராதுவுக்கு எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு காலம் பாசத்தைப்பொழிந்த அன்னை இப்போது இப்படிச் செய்வதை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.? எனவே ஓருநாள் தயங்கியபடியே அன்னையின் அருகில் சென்றாள், மாறாத உறுதியுடன் அவளிடம், அன்னை இதோ பார் (என் மனத்தைத்) தறியிலிருந்து அவிழ்த்துவிட்டுவிட்டேன்.இனி நீ என்னை என்ன செய்ய முடியும்? நான் வெறும் மனித ஜீவனா என்ன? என்று கூறினார். ராதுவுக்கு எதுவும் பெரிதாகப்புரியவில்லை. என்றாலும் தாம் அருகில் செல்வதை அன்னை விரும்பவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. எனவே கலங்கிய மனத்துடன் விலகினாள்.இதுவே அன்னை ராதுவுடன் கடைசியாகப்பேசியது.


நாட்கள் மிகுந்த வேதனையுடன் நகர்ந்து கொண்டிருந்தது. ஜீன் மாதத்தில் ஒர நாள் அன்னை சீடர் ஒருவரை அழைத்து அறையிலிருந்த குருதேவரின் படத்தை வேறு அறைக்கு மாற்றி விடும்படிக்கூறினார். காரணம் கேட்ட போது அவர்களிடம், இனி என்னால் எழுந்து நடமாட முடியாது.சுத்தமில்லாத இந்த நிலையில் உன் அறை பூஜையறையாகவும் இருப்பது சரியல்ல என்றார். அதோடு இவ்வளவு நாட்கள் கட்டில்மீது இருந்த தமது படுக்கையையும் தரையில் போடச்செய்தார். தரை மீது படுத்தபடி தான் உயிர் பிரிய வேண்டும் என்ற சாஸ்திர நியதியை நினைத்துக்கொண்டாரோ என்னவோ!

இந்தக் கடுமையான நோயிலும் அன்னை எந்தப்பொருளையும் குருதேவருக்குப் படைத்தபிறகே உட்கொண்டார். முடியாத வேளைகளில் மனத்தாலேனும் நிவேதித்த பின்னர் உண்டார். ஒவ்வொரு வினாடியும் தம்மை குருதேவரிடம் அர்ப்பணித்தார். எல்லாம்  அவர் விருப்பம். எல்லாம் அவர் செயல். அவரது விருப்பம் மட்டுமே நிறைவேறும் என்று கூறியபடியே இருந்தார். யாராவது அம்மா தங்கள் நோய் எப்போது குணமாகும்? என்று கேட்டால், குருதேவர் எப்போது நினைக்கிறாரோ அப்போது குணமாகும். ஆனால் குருதேவரின் திருவுள்ளம் வேறு என்று தோன்றுகிறது. உங்கள் நன்மைக்காக இந்த உடல் குணமடைய வேண்டும் என்று நான் அவரிடம் பிராத்தனை செய்யவில்லை என்றா நினைக்கிறீர்கள்? முன்பெல்லாம்  என் உடல்நலத்திற்காக வேண்டினால் உடனே அவர் என் என்முன் தோன்றுவார். ஆனால் இப்போது அவர் வருவதில்லை. இந்தவுடல் இன்னும் நிலைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் அல்ல, என்றே தோன்றுகிறது.  அதனால் என்ன? சரத்தை நான் விட்டுச் செல்கிறேன் என்றார்.

ஜீலை மாதம் தொடங்கியபோது அன்னையின் உடல்நிலை வேகமாகச் சீர்குலையலாயிற்று. ரத்தக்குறைவின் காரணமாக கால்கள் பெரிதாக வீங்கின. எழுந்து உட்காரவும் அவரால் முடியவில்லை.நிவேதிதை பள்ளியின் மாணவியர் அன்னைக்கு விசிறுவது போன்ற பணிகளை ஒருவர்பின் ஒருவராக செய்து வந்தனர். ஜீலை பத்தாம் தேதி வாக்கில் ஒருநாள் அன்னை திடீரென சாரதானந்தரை அழைத்தார். அவர் வந்து அன்னைக்கு அருகே முழங்காலிட்டு அமர்ந்தார். அன்னை தமது இடது கையால் அவரது வலது கையைப் பற்றிக்கொண்டு மகனே, கோலாப், யோகின் எல்லோரும் உள்ளனர். அனைவரையும் கவனித்துக்கொள் என்றார். பின்னர் தமது கையை விலக்கிக்கொண்டு விட்டார். சுவாமிகள் கனத்த இதயத்துடன் அன்னையைப் பார்த்தவாறே பின்புறமாக நடந்து அறையை விட்டு வெளியேறினார்.

சுவாமி ஹரிபிரேமானந்தர் ஜெயராம்பாடியிலிருந்து வந்திருந்தார். புதிதாக வெட்டப்பட்ட கிணற்றிலிருந்து கொண்டு வந்த நீரில் ஓரிரு துளிகளை அன்னை பருகுமாறு செய்தார். பின்னர் அன்னையிடம் அம்மா, கிசோரி மஹராஜ் உங்கள் அறைக்கு சிமெண்ட் போட்டிருக்கிறார். இனி அங்கே வரும்போது உங்களுக்குச் சிரமமே இருக்காது என்றார். அதற்கு அன்னை ஏன் சிமென்ட் போட வேண்டும்? மண்தரை தான் நல்லது ஆனால் இவற்றால் என்ன பயன்? நான் மீண்டும் அங்கே போவேன் என்றா கிசோரி நினைக்கிறான்? நான் இனி அங்கே போகப்போவதில்லை? என்றார்.

 தம் மனத்தை உலகிலிருந்து பிரித்து, உற்றார் உறவினரிலிருந்து பிரித்து , ராதுவிடமிருந்தும் பிரித்துவிட்ட அன்னை இப்போது உடம்பிலிருந்தும் பிரித்து விடுவதற்கான வேளை நெருங்கியது. பெரிய மகான்களின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும். இறைவனின் ஆணையினாலோ கருணைவசப்பட்டோ அவர்கள் மனித குலத்தின் நன்மைக்கான பணிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக ஆன்ம சுதந்திரத்தைத் தற்காலிகமாக  அவர்கள் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. தங்கள் பணி நிறைவுற்றதும் உடம்பை உதறிவிட்டு, எல்லையற்ற ஆனந்த வெளியில் பறந்து, மரணமிலாப் பெருநிலையில் ஆன்ம சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். அன்னையும் அதற்கான உறுதிபூண்டு விட்டார்.

ஜீலை 15-ஆம் தேதி வாக்கில் ஒருநாள்  பக்தையான அன்னபூர்ணாவின் தாய் வந்திருந்தார். யாரும் அப்போது அன்னையின் அறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.ஆதலால் அவர் கதவருகில் உட்கார்ந்து கண்களில் நீர் வழிய அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்னையின் பார்வை அன்னபூர்ணாவின் தாய் மீது விழுந்தது. அவரை அருகே வரும்படி தலையசைத்தார். உள்ளே வந்த அன்னபூர்ணாவின் தாய், அன்னையின் காலடியில் வீழ்ந்து, அம்மா எங்கள் கதி என்ன? என்று கூறித் தேம்பித்தேம்பி அழுதார். அன்னை மெல்லிய குரலில் ”குருதேவரை நீ பார்த்திருக்கிறாய் பிறகு ஏன் பயப்படுகிறாய் என்றார். சிறிது நேரம் கழிந்தது.

மீண்டும் அவளிடம் ”ஒன்று சொல்கிறேன் மகளே, உனக்கு அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைப் பார்க்காதே.அதற்குப் பதிலாக உன் குறைகளைப்பார்! உலகம் முழுவதையுமே உனது சொந்தமாக்கக் கற்றுக்கொள்! யாரும் அன்னியர் அல்ல மகளே! உலகம் முழுவதுமே உன் சொந்தம் தான்! என்றார். அன்னைக்கு மூச்சு வாங்கியது. இன்னும் சிறிது நேரம் கழிந்தது.மெல்லிய குரலில் மீண்டும் கூறினார், மகளே யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வர வில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பைத்தெரிவித்துவிடு.என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று கூறினார். கருணைக்கடலான அன்னையின் திருவாயிலிருந்து வந்த கடைசி அன்பு மொழிகள் இவை. செய்திக்குச்செய்தி! அன்புக்கு அன்பு!ஆசிக்கு ஆசி! அனைத்திலும் அன்னை அன்னைதான். இறுதியிலும்  இத்தகையதோர் அற்புத உபதேசத்தையும் ஆசியையும் செய்தியையும் நல்கிவிட்டார்.

-

கடைசி மூன்று நாட்களில் நடைமுறையில் பேச்சு என்று எதுவுமே இல்லை.அளவற்ற உடல் தளர்ச்சியாலும், மனம் எப்போதும்   இடையீடு இல்லாமல் மிக உயர்ந்தபிரம்ம நிலையில் மூழ்கியிருந்ததாலும் பேசுவது என்பது அன்னையால் முடியக்கூடிய காரியமாக இல்லை. கண்களை  மூடியவாறே படுத்திருந்தார். யாராவது அவரிடம் பேச விரும்பினாலும் அன்னை அதனை வரவேற்கவில்லை. ஒரு முறை சுவாமி சாரதானந்தரை அழைத்து ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியவில்லை.

ஜீலை 19-ஆம் நாள் அன்னைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. மிகுந்த சிரமத்தின்  பேரிலேயே மூச்சுவிட முடிந்தது. முதல் மாடியில் தங்கியிருந்தார் அன்னை. இழுத்து அவர் விட்ட மூச்சு மொட்டைமாடி கீழ்ப்பகுதி என்று கட்டிடம் முழுவதுமே கேட்டது. அவரது கண்கள் பிதுங்கி வெளியே வந்து விடுவது போல் தோன்றின. பக்தர்கள் சீடர்கள் என்று அனைவரின் நெஞ்சங்களையும் பிழிந்த காட்சி அது. சுதீராவும் சரளாவும் அருகிலேயே இருந்தனர். ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் சரளா கங்கைநீரைத் துளித்துளியாக அன்னையின் திருவாயில் விட்டுக்கொண்டிருந்தாள்.இவ்வாறு ஒரு நாள் கழிந்தது.

ஜீலை 20 மாலை வேளையாகிய போது மூச்சு மென்மையாகத் தொடங்கியது.மென்மை மேலும் மென்மையாகி இன்னும் மெலிதாகி இரவு 1.30 மணிக்கு எல்லாம் அடங்கியது. அன்னையின் உயிர் பிரிந்தபின் அவரது திருவுடலில் ஆச்சரியப்படத்தக்க சில மாறுதல்கள் ஏற்பட்டன. அவரது உடலின் சுருக்கங்கள் நீங்கி புதுப்பொலிவு வந்தது. கண்கள் சாந்தமாகி ஒரு தெய்வீக ஒளியும் அதிலிருந்து வீசலாயிற்று.

மறுநாள் காலையில் அவரது திருவுடல் நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள பேலூர் மடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. கங்கையில் நீராட்டப்பட்டு மலரும் சந்தனமும் புத்தாடைகளும் அணிவிக்கப்பட்டன.சீடர்களின் தோள்கள், நீராட்டி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பொன்னுடலைச்சுமந்து சென்றன. சுவாமி சிவானந்தரும் சுவாமி சாரதானந்தரும் மற்றும் எண்ணற்ற பக்தர்களும் சீடர்களும் ராமநாம சங்கீர்த்தனம் பாடியவாறே உடன் நடந்து சென்றனர். இவர்களுடன் கல்கத்தா நகரப் பிரமுகர்களும் சாதாரணபொதுமக்களும் பெரும் கூட்டமாக உடன்  நடந்தனர். ஆரம்பத்தில் சில நூறாக இருந்த கூட்டம் வரவர ஆயிரம் ஆயிரமாகப்பெருகியது. பேலூர் மடத்தில் கங்கைக் கரையில் சந்தனக்கட்டைகளால் ஆகிய சிதைமீது அன்னையின் திருவுடல் வைக்கப்பட்டு தீமூட்டப்பட்டது.அப்போது பிற்பகல் மணி இரண்டிற்கு மேல் இருக்கும்.

இதற்குள் வானம், இருண்டு கங்கையாற்றின் மறுகரையில் மேகங்கள் திரண்டு கறுத்தது. தூறலும் போட ஆரம்பித்தது. மழையால் இடையூறு நேருமோ என்று பக்தர்கள் அஞ்சினர். ஆனால் அன்னையின் திருவுடல் எரிந்து கொண்டிருந்தது வரை மழை தொலைவிலேயே பெய்து கொண்டிருந்தது. அந்தப்பகுதிக்கு வரவே இல்லை. இருள் கவியத் துவங்கியது. சந்தனக் கட்டைகள் எரிந்து அடங்கின. சாரதானந்தர் கமண்டலம் நிறைய நீரை எடுத்து வந்து சாம்பல் மீது முதன்முதலில் தெளித்தார். பின்னர் அங்கேயும் மழை பெய்ய, மனித முயற்சி இன்றியே அன்னையின் சிதைக்கு நீர் வார்க்கப்பட்டது. ஆம், பக்தர்களும் சீடர்களும் மட்டுமல்ல, இயற்கையும் தன் தலைவிக்கு அஞ்சலி செய்வது போல் மேகம் பொழிந்த நீராலே நெருப்பு அணைந்தது.

அன்னையின் பூவுடல் மறைந்துவிட்டது. அன்னை? அவர் எப்படி மறைய முடியும்? மகனே, ஓய்வு என்பதே கிடையாது. என் பிள்ளைகள் அனைவருக்காகவும் நான் உழைத்துக்கொண்டே இருப்பேன். என் உடல் மறைந்த பின்னும் அவர்களின் நலனை நான் கவனித்தேயாக வேண்டும். என்ற அன்பு மொழிகளை உதிர்த்தவர் அல்லவா அவர், அவர் எங்கு போக முடியும்? ஆனால் பக்தர்கள்? இந்த வரலாற்றைத் தொடர்ந்து வருகின்ற நம் இதயமே கனக்கிறது என்றால் அன்பு, அன்பு, அன்பு என்று அல்லும் பகலும் அனவரதமும் அன்பு மழை பொழிந்த அவரது பாச மழையில் நனைந்திருந்த அவர்களால் அவர் பிரிவை எப்படித்தாங்க முடியும்? அவ்வாறு கலங்கி நின்ற ஒருவரிடம் சுபோதானந்தர் கூறினார். மகனே, ஏன் கலங்குகிறாய்,? அன்னை இதுவரை ஓர் உடம்பில் மட்டுமே வாழ்ந்தார். இப்போது எங்கும் நிறைந்து விட்டார். ஏன் உங்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் நிறைந்துள்ளார். இனி நீங்கள் அன்னையைக்காண எங்கும் போகவேண்டாம். இருந்த இடத்தில் இருந்தபடியே உள்ளம் உருகி அழைத்தால் அவர் உங்கள் முன்வருவார், எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! எத்தனையோ அன்பர்களின் வாழ்வில் இந்த வார்த்தைகளை நிரூபித்தவாறு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே அன்னை!

-

END


 MAIN PAGE        HOME PAGE

image91