46
..
குருதேவருடன் பாபுராம், ம-, முகர்ஜி, சகோதரர்களில் ஹரி என்று பல பக்தர்கள் அறையிலும் வராந்தாவிலும் நடந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீராகிருஷ்ணர்-
(ம-விடம்)
நவீன் சேனின் வீட்டிற்குப் போனாயா?
ம-
ஆம் சுவாமி போயிருந்தேன். கீழ்ப் பகுதியில் அமர்ந்து பாட்டைக்கேட்டேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அப்படியா! நல்லது செய்தாய். உன் மனைவி வந்திருந்தாளா? கேசவர் அவளது ” சித்தப் பாவின் மகன் அல்லவா?
ம-
இன்னும் சற்று தூரத்து உறவு.
நவீன் சேன் ஒரு பக்தனின் சம்பந்தி வீட்டுடன் உறவு உடையவர்.
குருதேவர் ம-வுடன் தனிமையில் நடந்தவாறு பேசிக் கொண்டிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மாமனார் வீட்டிற்குப் போகின்றனர். நானும் திருமணம் செய்து கொள்வேன். மாமனார் வீட்டிற்குப் போவேன். உல்லாசமாக இருப்பேன் என்றெல்லாம் நிறைய நினைத்திருந்துன். ஆனால் நடந்தது என்ன பார்த்தாயா?
ம-
ஆம் சுவாமி, குழந்தை தந்தையின் கையைப் பிடித்திருந்தால் கீழே விழுந்து விடக் கூடும். ஆனால் தந்தை குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டால் விழுவதற்கு இடமில்லை என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். உங்கள் நிலைமை இப்படித் தான் இருக்கிறது. தேவி உங்கள் கையைப் பிடித்திருக்கிறாள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உலோரைச் சேர்ந்த வாமன் தாஸை விஸ்வாஸின் வீட்டில் சந்தித்தேன். நான் உங்களைப் பார்க்கத் தான்வந்தேன்” என்று அவரிடம் சொன்னேன். அங்கிருந்து திரும்பும் போது அவர்கள் பேசியதைக்கேட்க நேர்ந்தது. ” அப்பா! புலி மனிதனைப் பிடிப்பது போல் தேவி இவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்” என்று அவர் கூறினார். அப்பொழுது எனக்கு வயது குறைவு, நல்ல குண்டாகவும் இருந்தேன். எப்போதும் பரவச நிலையில் தான் இருப்பேன்.
பெண்களிடம் எனக்கு மிகுந்த பயம். பெண் புலி தின்ன வருவது போல் தோன்றும். அவர்களின் உடல், அங்கங்கள், துவாரங்கள் எல்லாம் பெரிது பெரிதாக த்தோன்றும். அரக்கிகளைப்போல் அவர்கள் தென் பட்டனர்.
முன்பெல்லாம் மிகுந்த பயம் இருந்தது. யாரையும் அருகில் வர விட மாட்டேன். இப்போது பலவாறாக மனத் திற்கு எடுத்துக் கூறி, அவர்களை தேவி ஆனந்த மயியின் பல்வேறு வடிவங்களாகக் காண்கிறேன். அன்னை பகவதியின் அம்சம் அவர்கள். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, சாதுக்களைப் பொறுத்தவரை , பக்தர்களைப் பொறுத்தவரை பெண்கள் துறக்கப் பட வேண்டியவர்கள்.
எவ்வளவு தான் பக்தி நிறைந்தவளாக இருந்தாலும் பெண் களை அதிக நேரம் அருகில் உட்கர விட மாட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்களிடம் கோயிலுக்குப்போகும் படி கூறுவேன். அப்படியும் அவர்கள் எழாவிட்டால் ஹுக்கா பிடிக்கப்போகின்ற சாக்கில் நான் வெளியே சென்று விடுவேன்.
சிலருக்குப் பெண்களிடம் சிறிதும் நாட்டமில்லை என்பதைக் காண்கிறேன். என் மனம் ஒரு போதும் பெண்கள் பக்கம் போனதே இல்லை” என்று நிரஞ்ஜன் கூறுவான். ஹரியிடம்( டாக்டர் உபேனின் சகோதரன்) கேட்டபோது தன் மனம் பெண்களை நினைப்பதில்லை என்றே அவனும் சொன்னான்.
எந்த மனத்தை இறைவனிடம் கொடுக்க வேண்டுமோ, அதில் முக்கால் பாகத்தை பெண்கள் அபகரித்து விடுகின்றனர். குழந்தை பிறந்து விட்டாலோ, ஏறக்குறைய முழு மனமும் போய் விடுகிறது. இதில் இறைவனிடம் எதைக் கொடுப்பாய்?
இன்னும் சிலருக்கு மனைவியின் தான் தோன்றித் தனங்களைத் தடுத்துத் தடுத்தே உயிர் போகின்றது. அந்த வாசற் காவலன் ஒரு தொண்டு கிழவன், அவனுக்கு பதினான்கு வயது மனைவி! அவள் இந்தக் கிழவனுடன் வாழ வேண்டும். ஓலை வீடு. ஓலையை ஒதுக்கிக் கொண்டு மக்கள் எட்டிப் பார்ப்பார்கள். இப்போது அந்தப் பெண் ஓடி விட்டாள்.
இன்னொருவன் இருக்கிறான். அவனுக்கு மனைவியை எங்கு வைப்பது என்று தெரியவில்லை. வீட்டில் ஒரே சண்டை சச்சரவு. இப்போது அவனுக்கு ஒரே கவலை . ஓ, போதும் இது போன்ற பேச்சுக்கள்.
இனி, பெண்களோடு தங்கினாலே அவர்களுக்கு அடங்கியவனாக இருக்க வேண்டியுள்ளது. பெண்கள் எழு என்றால் எழுகிறார்கள். உட்கார் என்றால் உட்கார்கிறார்கள் இல்லறத்தார்கள். அனேகமாக எல்லோரும் தங்கள் மனைவி யின் புகழ் பாடவே செய்கிறார்கள்.
நான் ஓர் இடத்திற்குப் போ க ஆசைப்பட்டேன். போக லாமா என்று ராம்லாலிடம் சித்தியைக்( அன்னை ஸ்ரீசாரதாதேவி) கேட்டேன். அவள் வேண்டாம் என்றாள். என்னால் போக முடியவில்லை.ஆகா! நான் இல்லறத்தான் அல்ல. நான் காமினீ- காஞ்சன த் தியாகி. எனக்கே இத்தகைய நிலை என்றால் இல்லறத்தான் எந்த அளவுக்கு மனைவிக்குக் கட்டுப் பட்டவனாக இருப்பான்! என்று பிறகு எண்ணிக் கொண்டேன்.
ம-
காமினீ- காஞ்சனத்துடன் வாழ்ந்தால் உடலில் சிறிதாவது கறை படியத் தான் செய்யும். நீங்கள் ஜெய நாராயணரைப் பற்றி சொன்னீர்கள்- எவ்வளவு பெரிய பண்டிதர், வயது முதிர்ந்தவர், நீங்கள் சென்ற போது பாய் தலையணைகளை வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆனால் பண்டிதர் என்ற அகங்காரம் அவரிடம் இல்லை. அது மட்டுமல்ல, அவர் கூறியது போலவே காசியில் இறுதி நாட்களைக் கழிக்கவும் அவரால் முடிந்தது. அவருடைய பிள்ளைகளைப் பார்த்தேன்- கால்களில் பூட்ஸ், ஆங்கிலப் படிப்பு!
கேள்விகள் மூலம் குருதேவர் ம-வுக்கு த் தமது நிலையை விளக்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
முன்பெல்லாம் மிகவும் பைத்தியம் பிடித்தவன்போல் இருந்தேன். இப்போது குறைந்து விட்டது. அது ஏன்? ஆனால் இப்போதும் சில வேளைகளில் அந்த நிலை வந்து விடுகிறது.
ம-
நீங்களே கூறியது போல் சில வேளைகளில் குழந்தைபோல், சில வேளைகளில் பித்தனைப்போல், சில வேளைகளில் ஜடம் போல், சில வேளைகளில் பிசாசைப் போல் என்று பல நிலைகள் உங்களுக்கு ஏற்படுகின்றன. அவ்வப்போது சாதாரண நிலையிலும் இருக்கிறீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம். குழந்தை போல் தான் . அத்துடன் சிறு குழந்தை, சிறுவன், இளைஞன் என்ற நிலைகளும் ஏற்படுகின்றன. ஞான உபதேசம் தரும் போது இளைஞனைப் போன்ற நிலை. இனி, சிறுவனைப் போன்ற நிலை. அப்போது பன்னிரண்டு பதின் மூன்று வயதுச் சிறுவனைப்போல் விஷமம் செய்யத்தோன்றுகிறது. ஆகவே சிறுவர்களோடு வேடிக்கை வினோதங்களில் ஈடுபடுகிறேன். அது சரி, நாராயணன் எப்படி?
ம-
சுவாமி, அடையாளங்கள் எல்லாம் நன்றாகவே உள்ளன.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சுரைக் காயின் ஓடு நன்றாக இருக்கிறது. அதில் செய்யப் படுகின்ற தம்புரா நல்ல நாதம் தரும். அவன் என்னிடம், ” நீங்களே எல்லாம்.( அதாவது அவதாரம்)” என்று கூறுகிறான். யார் எப்படி புரிந்து கொண்டார்களோ அதற்கேற்றபடி பேசுகிறார்கள். ஒரு சிலர் நான் வெறும் சாதாரண சாது தான், சாதாரண பக்தன் தான் என்று கூறுகின்றனர்.
இது கூடாது என்று நான் எதையாவது தடுத்தால் மனத்தில் அதை நன்றாகப் பதித்துக் கொள்கிறான். திரையை விலக்கச் சொன்னேன். ஆனால் விலக்க வில்லை. முடி போடுவது, தைப்பது, திரையை விலக்குவது, பெட்டி கதவு இவற்றை ப் பூட்டுப்போட்டு பூட்டுவது, போன்றவற்றைச் செய்யக் கூடாது என்று கூறியிருந்தேன். அதை நன்றாக மனத்தில் வைத்துள்ளான். துறவை மேற் கொள்பவன் இத்தகைய சாதனைகளையெல்லாம் செய்ய வேண்டும். துறவிகளின் விஷயத்தில் இவை சாதனைகள்.
சாதனைக் காலத்தில் பெண்ணை காட்டுத் தீயாக கருநாகமாகக் கருத வேண்டும். ஆனால் சித்தனாகிய பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அதே பெண் அன்னை ஆனந்தமயியாகத் தோன்றுவாள். அன்னையின் ஓர் உருவ மாக அவளை நீ காண்பாய்.
நில நாட்களாக குருதேவர் பெண்கள் விஷயத்தில் நாராயணனை எச்சரித்து வந்தார். பெண்ணின் காற்று கூட உன் உடல் மீது படாமல் பார்த்துக் கொள். அப்படிப் படாதிருக்க கனமான போர்வையைால் உன் உடம்பை மூடிக் கொள். தாயைத் தவிர மற்ற பெண்களிடமிருந்து குறைந்தது இரண்டடியாவது, குறைந்தது எட்டடியாவது விலகி யிரு. முடியாவிட்டால் ஓரடித் தூரமாவது எப்போதும் விலகியிரு” என்று அவனிடம் கூறியிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( ம-விடம்)
நாராயணனின் தாய் என்னைப் பற்றி அவனிடம், அவரைக் கண்டு நாங்களே இழுக்கப் பட்டு விடுகிறோம். நீயோ பச்சைக் குழந்தை” என்று கூறினாள்.
எளிய சுபாவம் இல்லாவிட்டால் இறைவனைப் பெற முடியாது. நிரஞ்ஜன் எவ்வளவு எளிமையாக உள்ளான்!
ம-
ஆம், சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அன்று கல்கத்தா செல்லும் போது வண்டியில் அவனை நீ கவனிக்கவில்லயா? எப்பொழுதும் ஒரே மாதிரியான நிலை-
கள்ளங்கபடமற்ற எளிய மனம். ஒரே மாதிரியான நிலை, கள்ளங்கபடமற்ற எளிய மனம், மனிதர்கள் வீட்டில் ஒரு விதமாக இருப்பார்கள். வெளியே வந்து விட்டால் இன்னொரு விதமாக நடந்து கொள்வார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு நரேந்திரன் வீட்டுப் பொறுப்பைப் பற்றி கவலைப் படுகிறான். கணக்குப் பார்க்கும் பொறுப்பைப் பற்றி கவலைப் படுகிறான். கணக்குப் பார்க்கும் புத்தியும் சற்று வந்துள்ளது. எல்லா இளைஞர்களும் இவர்களைப்போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நீல கண்டரின் யாத்ரா காணப் போயிருந்தேன். தட்சிணேசுவரத்தில் நவீன் நியோகியின் வீட்டில் நடைபெற்றது. அங்கேயுள்ள இளைஞர்கள் மகா மட்டம். இவனையோ, அவனையோ குறை கூறிக் கொண்டிருந்தனர். இப்படிப் பட்ட இடங்களில் தெய்வீக சிந்தனைகள் தடை பட்டு விடுகின்றன.
47
..
நீல கண்டரின் யாத்ரா காணப் போயிருந்தேன். தட்சிணேசுவரத்தில் நவீன் நியோகியின் வீட்டில் நடைபெற்றது. அங்கேயுள்ள இளைஞர்கள் மகா மட்டம். இவனையோ, அவனையோ குறை கூறிக் கொண்டிருந்தனர். இப்படிப் பட்ட இடங்களில் தெய்வீக சிந்தனைகள் தடை பட்டு விடுகின்றன.
மற்றொரு யாத்ராவைக் கண்டு டாக்டர் மதுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற யாரையும் பார்க்க என்னால் முடியவில்லை.
நல்லது, இவ்வளவு பேர் இங்கு கவரப் பட்டு வருகிறார்களே, இதன் பொருள் என்ன?
ம-
எனக்கு பிருந்தாவன லீலை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு முறை கிருஷ்ணரே இடைச் சிறுவர்களாகவும் , கன்றுகளாகவும் மாறினார். அப்போது அந்த இடைச் சிறுவர்கள் மீது கோபியருக்கும், அந்தக் கன்றுகளின் மீது தாய்ப் பசுவிற்கும் அதிக வசீகரம் ஏற்பட்டது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது இறைவனின் வசீகரம். உண்மை என்ன தெரியுமா? அன்னை பராசக்தி இப்படி ஒரு ஜால வித்தையைத்தோற்றுவித்து விடுகிறாள். அதனால் தான் இந்த வசீகரம்!
அது சரி, கேசவரிடம் போகின்ற அளவுக்கு இங்கு ஆட்கள் வருவதில்லையே? அவரை எவ்வளவு பேர் மதிக்கின்றனர். போற்றிப் புகழ்கின்றனர்! மேலை நாட்டிலும் கூட அவரை அறிந்துள்ளனர். குயீன் விக்டோரியாவே அவருடன் பேசியிருக்கிறார்! யாரைப் பலர் போற்றிப் புகழ்கிறார்களோ, அவரிடம் இறைவனின் சக்தி உள்ளது என்று கீதையே சொல்கிறதே! இங்கே அது போல் அவ்வளவு பேர் வருவதாகத்தோன்றவில்லையே!
ம-
இல்லறத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான் கேசவரிடம் போகின்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், அ து உண்மை தான்-வெறும் உலகியல் மக்கள்.
ம-
கேசவர் செய்துவிட்டுச் சென்றுள்ளது நிலைக்குமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன்? ஒரு சம்ஹிதை எழுதியிருக்கிறாரே! அதில் தான் எவ்வளவு விதிகள்!
ம-
அவதார புருஷர், தானே செய்யும் பணியின் விஷயமே வேறு. உதாரணத்திற்கு சைதன்ய தேவரின் பணி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம்! ஆம்! சரியாகச் சொன்னாய்.
ம-
நான் விதைத்துள்ள விதை ஒரு சமயம் இல்லா விட்டால் மற்றொரு சமயம் முளைக்கும் என்று சைதன்ய தேவர் கூறியதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
வீட்டு உத்தரத்தில் விதை வைக்கப் பட்டிருந்தது. வீடு இடிந்து வீழ்ந்தது. அந்த விதை முளைத்து மரமாகியது என்றும் நீங்கள் சொல்லியதுண்டு.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது சரி, சிவநாத் தொடங்கியுள்ள சமாஜத்திற்கும் அதிகம் பேர் போகிறார்கள்.
ம-
ஆம், ஏதோ அத்தகையோர் போகிறார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( சிரித்தவாறே)- ஆமாம், ஆமாம்! உலகியல் மனிதர்கள் போகிறார்கள். இறைவனுக்காக மன ஏக்கம் கொள்பவர்கள், காமினீ- காஞ்சனத்தை விட முயல்பவர்கள். அதிகம் போவதில்லை.
ம-
இங்கிருந்து ஓர் அலை எழுந்து பாயுமானால் நன்றாக இருக்கும். அதன் வேகம் எல்லாவற்றையும் இழுத்துச் சென்றுவிடும். இங்கிருந்து செல்வது எதுவும் ஒரு பக்கச் சார்புடையதாக இருக்காதே!
ஸ்ரீராமகிருஷ்ணர்( சிரித்தவாறே)-
யாருக்கு எந்த பாவனையோ அதை நான் பாதுகாக்கிறேன். வைணவனை வைணவ பாவனையையே கடைப்பிடிக்குமாறு சொல்கிறேன். சாக்தனை சாக்த பாவனையிலேயே இருக்கச் சொல்கிறேன். ஆனால் ஒன்று, எனது பாதை தான் உண்மை. மற்றவை எல்லாம் தவறு. பொய் என்று மட்டும் சொல்லாதே” என்பதையும் கூறிவிடுகிறேன். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவன், எல்லோரும் வெவ்வேறு பாதை வழியாக, ஒரே இடத்தைத் தான் அடைகிறார்கள். தத்தம் பாவனையைப் பற்றிக் கொண்டு, ஆத்மார்த்தமாக இறைவனை அழைத்தால் இறையனுபூதி கிடைக்கும்.
விஜயரின் மாமியார் என்னிடம் ஒரு முறை, உருவக் கடவுளை வழிபடுவதன் அவசியமென்ன? உருவமற்ற சச்சிதானந்தத்தை அழைத்தாலே போதும்” என்று பலராமின் வீட்டாரிடம் சொல்லுமாறு கூறினாள்” நான் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவர்களும் ஏன் அதை க்கேட்க வேண்டும்? என்று நான் கூறி விட்டேன்.
தாய் மீன் சமைக்கிறாள். ஒரு குழந்தைக்கு மீன் புலவு கொடுக்கிறாள். வயிறு சரியில்லாத குழந்தைக்கு மீன் சூப் செய்து கொடுக்கிறாள். ருசி வேறுபாடு, தகுதி வேறுபாடு இவற்றைக் கருத்தில் கொண்டு ஒரே பொருளைப் பலவகை யாகக் கொடுக்க வேண்டும்.
ம-
ஆம் சுவாமி, இடம், காலம், தகுதி வேறுபாடு களுக்கு ஏற்ப பாதைகள் வேறுபடுகின்றன. ஆனால் எந்தப் பாதை வழியாக போனாலும் தூய மனத்துடன் ஆத்மார்த்தமாக அழைத்தால் இறைவனைப் பெறலாம் என்று நீங்கள் சொல்வதுண்டு.
குருதேவர் அறையில் தமது இருக்கையில் அமர்ந்திருந்தார். முகர்ஜி சகோதரர்களில் ஒருவரான ஹரி, ம-, முதலியோர் தரையில் இருந்தனர். இது வரை அறிமுக மில்லாத ஒருவர் வந்து குருதேவரை வணங்கி அங்கே உட்கார்ந்தார். பின்னர் குருதேவர், அவனது கண்கள் சரியாக இல்லை. பூனைக் கண்கள்” என்றார்.
ஹரி குருதேவருக்காக ஹுக்கா தயார் செய்து கொண்டு வந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( ஹுக்காவைக் கையில் வைத்துக் கொண்டு ஹரியிடம்)
எங்கே உன் கைகளைக் காட்டு, பார்க்கலாம். இந்த அடையாளங்கள் மிக நல்ல அறிகுறி. கையைச் சற்று தளர்த்து.( தமது கையினால் ஹரியின் கையை எடுத்து எடையிடுவது போல் பார்த்தார்) குழந்தை மன மாக இருக்கிறது. இன்னும் எந்தக் களங்கமும் ஏற்பட வில்லை.
( பக்தர்களிடம்)
நான் கையைப் பார்த்தே ஆள் கபடனா, எளிமையானவனா என்று சொல்லி விடுவேன்.
( ஹரியிடம்)-
மாமனார் வீட்டிற்குப்போ, மனைவி யோடு சற்றுப்பேசு. வேண்டுமானால் சற்று வேடிக்கை வினோதம் கூட செய்யலாம். ( ம-விடம்) என்னப்பா எப்படி? (ம- முதலியோர் சிரித்தனர்)
ம- சுவாமி, புதிய சட்டி கெட்டு விட்டால் அதில் பால் வைக்க முடியாது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( சிரித்தவாறே)
இன்னும் கெட வில்லை என்று எப்படி அறிவாய்?
முகர்ஜி சகோதரர்களாகிய மகேந்திரரும் , பிரியநாத்தும் யார் கீழேயும் வேலை செய்யவில்லை. அவர்களுக்குச் சொந்தமாக மைதா மில் இருக்கிறது. பிரியநாத் முன்பு எஞ்ஜினியராக வேலை பார்த்து வந்தார். குருதேவர் ஹரியிடம் முகர்ஜி சகோதர்ரகளைப் பற்றி கூறினார்.
மூத்த சகோதரன் நல்லவன், அப்படித்தானே! மிகவும் எளியவன்.
ஹரி, -
ஆம் சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( பக்தர்களிடம்)
சிறியவன் மிகவும் கஞ்சனாமே! இங்கு வந்த பிறகு எவ்வளவோ நல்லவனாகிவிட்டானாம்.” முன்பெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது.” என்று என்னிடம் சொன்னான் அவன்( ஹரியிடம்) அவர்கள் தானம். கீனம் ஏதாவது செய்கிறார்களா?
ஹரி-
அப்படி எதுவும் தெரியவில்லை. இவர்களுக்கு மூத்தவர் ஒருவர் இருந்தார். அவர் இப்போது இல்லை. அவர் மிகவும் நல்லவராக இருந்தார், தானதருமங்களும் ஏராளம், செய்தார்
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம- முதலியோரிடம்)
தேக லட்சணங்களைப் பார்த்தே( ஆன்மீக முன்னேற்றம்) உண்டா இல்லையாஎன்பதையெல்லாம் அறிந்து கொள்ளலாம். கபடனின் கை கனமாக இருக்கும். சப்பை மூக்கு நல்ல அடையாளம் அல்ல. சம்புவின் மூக்கு அப்படித்தான் இருந்தது. எவ்வளவோ அறிவு இருந்தாலும், அவர் அவ்வளவு கபடம் அற்றவராக இல்லை. கூம்பிய மார்பும் நல்ல அறிகுறி அல்ல.
தடித்த எலும்பு, கனமான முழங்கை, சூம்பிய கை, பூனைக் கண்கள், பூனையின் கண்களைப் போல் மஞ்சள் நிறக் கண்கள் இவை எல்லாம் நல்ல அறிகுறிகள் அல்ல.
டோம்களைப்போல்( தடித்த) உதடுகளை உடையவன் அற்பனாக இருப்பான். சில மாதங்களாக விஷ்ணு கோயிலில் ஆக்டிங் பூஜாரியாக இருந்தான் ஒருவன். அவன் தொட்டதை என்னால் சாப்பிட இயலவில்லை. ஒரு நாள், ” திடீரென்று அவள் ஒரு டோம்” என்று சொல்லி விட்டேன். அவன் பிறகு ஒரு நாள் என்னிடம் வந்து, ஆம், எங்கள் வீடு டோம்கள் வசிக்கும் பகுதியில் தான் இருக்கிறது. எனக்கு டோம்களைப்போல் கூடை பின்னத் தெரியும்” என்றான்.
இன்னும் மோசமான அடையாளங்கள் உள்ளன- ஒற்றைக் கண், மாறு கண், ஒற்றைக் கண் பரவாயில்லை. மாறு கண் நல்லதல்ல. இவர்கள் தீயவர்களாக, கபடர்களாக இருப்பார்கள்.
மஹேஷ் நியாய நத்னரின் மாணவன் ஒருவன் இங்கு வந்திருந்தான். தன்னை ஒரு நாத்திகன் என்று கூறிக் கொண்டான். அவன் ஹிருதயனிடம், ” நான் நாத்திகன், நீ ஆத்திகன், என்னுடன் தர்க்கம் செய்” என்றான். அப்போது அவனை நான் கவனமாகப் பார்த்தேன். அவனுக்கு பூனைக் கண்கள்.
ஒருவர் நடப்பதை வைத்தும் அவன் நல்லவனா கெட்டவனா என்பதை ஊகிக்கலாம்.
முஸ்லீம்களைப்போல் ஆணுறுப்பின் முன்தோலை வெட்டியிருப்பது, அது ஒரு மோசமான அடையாளம். (எல்லோரும் சிரித்தனர்) ( ம-விடம் சிரித்தபடியே) நீ அதைப் பார் , அது மோசமான அடையாளம்.( எல்லோரும் சிரித்தனர்)
குருதேவர் அறையிலிருந்து வந்து வராந்தாவில் உலவினர். அவருடன் ம-வும் பாபுராமும் இருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ஹாஸ்ராவிடம்)-
ஒருவன் வந்திருந்தான். அவனுக்குப் பூனைக் கண்கள். அவன் என்னிடம்” உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா? நான் கஷ்டத்தில் உள்ளேன்” என்றான். அதற்கு நான், ” தெரியாது” . வராக நகரத்திற்குப் போ. அங்கே ஜோதிடப் பண்டிதர்கள் இருக்கிறார்கள் என்றேன்.
பாபுராமும் ம-வும் நீலகண்டரின் யாத்ரா பற்றி பேசிக் கொண்டிருந்தனர். நவீன் சேனின் வீட்டிலிருந்து திரும்பி வந்து நேற்றிரவு தட்சிணேசுவரக்கோயிலில் தங்கியிருந்தார் பாபுராம். இன்று காலை தட்சிணேசுவரத்திலுள்ள நவீன் நியோகியின் வீட்டில் நீல கண்டரின் யாத்ராவைப் பார்க்க குருதேவருடன் சென்றிருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்(ம- மற்றும் பாபுராமிடம்)-
என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
ம-வும் பாபுராமும் –
நீலகண்டரின் யாத்ரா பற்றியும் ” தேவி பாதங்களில் நம்பிக்கை, நதி தீரத்தில் வாழ்க்கை” என்ற பாட்டு பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
வராந்தாவில் நடந்து கொண்டிருந்த குருதுவர் திடீரென்று ம-வைத் தனியாக அழைத்துச் சென்று, ” சாதனைகளை எவ்வளவு தூரம் பிறர் அறியாமல் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நல்லது” என்று கூறினார். இப்படிக் கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து போய்விட்டார்.
48
..
குருதேவர் ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஹாஸ்ரா-
நீல கண்டர் இங்கு வருவதாக உங்களிடமே சொன்னாரே! அவரைக் கூப்பிட்டு அனுப்பினால் நல்லது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வேண்டாம், இரவெல்லாம் கண் விழித்திருக்கிறார். இறைவன் திருவுளத்தால் அவரே வந்தால் அது வேறு விஷயம்.
குருதேவர் பாபுராமை நாராயணனின் வீட்டிற்குச் சென்று பார்த்து வருமாறு கூறினார். நாராயணனை சாட்சாத் நாராயணனாகவே கண்டார் அவர். ஆகையால் தான் அவனைக் காண ஏங்கினார். நீ ஓர் ஆங்கிலப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு அவனிடம் போ” என்று பாபுராமிடம் கூறினார் குருதேவர்.
குருதேவர் அறையில் உட்கார்ந்திருந்தார். மாலை சுமார் மூன்று மணி. நீல கண்டர் தமது குழுவிலுள்ள ஐந்தாறு பேருடன் குருதேவரின் அறைக்கு வந்தார். குருதேவர் கிழக்கு முகமாக அமர்ந்திருந்தது, ஏதோ அவரை எதிர் கொண்டழைப்பது போல் இருந்தது. நீல கண்டர் கிழக்கு வாசல் வழியாக உள்ளே வந்து, தரையில் வீழ்ந்து குருதேவரை வணங்கினார்.
குருதேவர் சமாதி நிலையில் ஆழ்ந்தார். அவருக்குப் பின்னர் பாபுராம், முன்னால் ம-, நீல கண்டர் மற்றும் அவரது குழுவினர் அனைவரும் அவரை வியப்புடன் பார்த்து க் கொண்டிருந்தனர். கட்டிலின் வடக்குப் பக்கம் கோயிலின் பொருளாளரான தீன நாத் நின்று குருதேவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் கோயில் வேலை யாட்களால் அறை நிரம்பியது.
குருதேவரின் பரவச நிலை சிறிது கலைந்தது. அவர் வந்து தரையில் பாயில் அமர்ந்து கொண்டார். அவருக்கு எதிரே நீல கண்டர், சுற்றிலும் பக்தர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( பரவச நிலையில்)
நான் நன்றாகத் தான் இருக்கிறேன்.
நீலகண்டர்( கூப்பிய கைகளுடன்)-
என்னையும் நன்றாக இருக்கும் படி செய்யுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( சிரித்தவாறு)-
நீங்கள் நன்றாகத் தானே இருக்கிறீர்கள். ” க” வுடன் ” அ” சேர்த்தால், ” கா”. மறுபடியும் ” அ” சேர்ப்பதால் என்ன பயன்? ” கா” வுடன் மீண்டும் ” அ” சேர்த்தாலும் அது ” கா” வாகத் தான் இருக்கும்.( எல்லோரும் சிரித்தனர்)
நீலகண்டர்-
சுவாமி, இல்லறத்தில் மூழ்கிக் கிடக்கிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)
பலரது நன்மைக்காக இறைவன் உங்களைக் குடும்பத்தில் வைத்துள்ளார். எட்டு பாசங்கள் உள்ளன. எல்லாம் மறைவதில்லை. மக்களுக்கு வழி காட்டுவதற்காக அவர் ஓரிரண்டை வைக்கிறார். நீங்கள் யாத்ரா நடத்து கிறீர்கள். உங்கள் பக்தியைப் பார்த்து எவ்வளவு பேர் பயனடைகின்றனர். மேலும், நீங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டால் இவர்கள் எங்கே போவார்கள்?
இறைவன் உங்கள் மூலம் இவற்றையெல்லாம் செய்கிறார். அது முடிந்து விட்டால் உங்களுக்கு வேலை இருக்காது. வீட்டுக்காரி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, எல்லோருக்கும் உணவளித்து விட்டு, வேலைக் காரர்களுக்கும் உணவு கொடுத்த பிறகு குளிக்கப் போகிறாள். அப்போது எவ்வளவு கூப்பிட்டாலும் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.
நீல கண்டன்-
என்னை ஆசீர்வதியுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கிருஷ்ணனைப் பிரிந்த யசோதை பைத்தியம் போல் ராதையிடம் சென்றாள். ராதை அப்போது தியானத்தில் இருந்தாள். அவள் பரவச நிலையில் யசோதையிடம், ” மூலப் பிரகிருதியான ஆத்யா சக்தியே நான். நீ என்னிடம் ஏதேனும் வரம் கேள்” என்றாள். அதற்கு யசோதை, ” என்ன வரம் தரப் போகிறாய்? மனம், வாக்கு, உடம்பு இவற்றால் அவனையே சிந்தித்து அவனுக்கே சேவைசெய்ய வேண்டும். காதுகளால் அவனது பெயரையும் குணங்களையும் கேட்க வேண்டும். கைகளால் அவனுக்கும் அவனது பக்தர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். கண்களால் அவனது உருவத்தையும் அவனுடைய பக்தர்களையும் தரிசனம் செய்ய வேண்டும்” என்று பதிலளித்தாள்.
தெய்வ திருநாமத்தைச் சொல்லும் போது உங்கள் கண்கள் கண்ணீரால் நிறையுமானால் அதன் பிறகு கவலை எதற்கு? அவரிடம் உங்களுக்கு அன்பு வந்து விட்டது.
பன்மை அறிவு அஞ்ஞானம். ஒருமை அறிவு, அதாவது இறைவன் ஒருவரே உண்மை, அவரே எல்லா உயிர்களிலும் உள்ளார் என்ற அறிவு ஞானம். அவருடன் பேசிப் பழகுவது விஞ்ஞானம். அதாவது இறைவனைத் தரிசித்த பிறகு அவருடன் பல விதங்களில் அன்பு கொள்வது விஞ்ஞானம்.
இறைவன் ஒன்று இரண்டு இவற்றைக் கடந்தவர். மன வாக்குகளுக்கு எட்டாதவர் போன்ற கருத்துக்களும் உள்ளன. லீலையிலிருந்து நித்தியத்திற்கு மீண்டும் நித்தியத்திலிருந்து லீலைக்கு வருவது இதன் பெயர் தான் பழுத்த பக்தி.
தேவி பாதங்களில் நம்பிக்கை. நதிதீரத்தில் வாழ்க்கை.” என்ற அந்த உங்கள் பாட்டு நன்றாக இருந்தது.
எல்லாம் இறைவனின் அருளைப் பொறுத்து என்ற நம்பிக்கை இருந்தால், அது போகும். ஆனால் அருள் என்று கூறிக் கொண்டு சும்மா இருக்காமல் அவரை நாட வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதில் பயனில்லை. வக்கீல், நீதிபதியிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு கடைசியாக, ” நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டேன். இனி எல்லாம் நீதிபதியின் கையில்” என்பார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவர் நீலகண்டரிடம் ” காலையில் நீங்கள் அவ்வளவு பாடி இருக்கிறீர்கள். அதன் பிறகு சிரமத்தைப் பாராமல் இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் இங்கு எல்லாம் ஆனரரி என்றார்.
நீலகண்டர்-
ஏன்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( சிரித்தவாறு)-
நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
நீலகண்டர்-
விலையுயர்ந்த ரத்தினத்தை ப் பெற்றுப் போவேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அந்த விலையுயர்ந்த ரத்தினம் உங்களிடமே இருக்கிறது. ”கா” வோடு ”அ” சேர்ப்பதால் என்னவாகும்? இல்லாவிட்டால் உங்கள் பாட்டு எனக்கு இவ்வளவு பிடித்துப்போகக் காரணமென்ன? ராம் பிரசாதர் மகான், ஆகையால் அவரது பாட்டு பிடித்திருக்கிறது.
சாதாரண ஜீவனை மானுஷ் என்கின்றனர். யாருக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டதோ, அவன் மான்ஹுஷ். நீங்கள் மான்ஹுஷ்.
உங்கள் பாட்டு இருக்கும் என்று கேட்டு, அங்கு வர வேண்டும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். அப்போது தான் நியோகியும் கூப்பிட வந்தார். குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்திருந்தார். நீலகண்டரிடம், அன்னையின் புகழைச் சிறிது பாடுங்கள்” என்றார்.
நீலகண்டர் பக்க வாத்தியங்களுடன் பாட ஆரம்பித்தார்.
1-
தேவி பாதங்களில் நம்பிக்கை, நதிதீரத்தில் வாழ்க்கை.
2 மஹிஷி மர்த்தினி.............
இந்தப் பாட்டைக்கேட்டுக் கொண்டே குருதேவர் எழுந்து நின்று சமாதியில் ஆழ்ந்தார். நீலகண்டர் பாடினார்.
கங்கையைச் சடையில் தரித்த சிவனும்.........
ராஜ ராஜேசுவரியை அல்லவா!
குருதேவர் பிரேமைப் பித்துப் பிடித்தவராய் ஆடினார். நீலகண்டரும் பக்தர்களும் அவரைச் சுற்றி வந்து பாடிய படியே ஆடினர். ” சிவ சிவ” என்ற பாடலுக்கும் குருதேவர் பக்தர்களோடு ஆடினார்.
பாட்டு நிறைவுற்றது. அப்போது குருதேவர் நீலகண்ட ரிடம், நீங்கள் கல்கத்தாவில் பாடி பாட்டைக்கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
ம-
பொன்னொளி திகழும் புதியவர் சைதன்யர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், ஆம்.
நீல கண்டர் அந்தப பாட்டைப் பாடினார். ” பிரேமைப் பெருமழை தனையே பெய்தார் இந்த புவனம் தனிலே” என்றவரி வந்ததும குருதேவரும் உடன் பாடிக் கொண்டு நீல கண்டர் முதலிய பக்தர்களுடன் ஆடினார். அந்த அற்புத நடனத்தைக் கண்டவர்களால் ஒரு போதும் அதை மறக்க இயலாது. அறை முழுவதும் பக்தர்கள். எல்லோரும் அனேக மாக பித்தர்களைப்போல் ஆகி விட்டிருந்தனர். அந்த அறை ஸ்ரீவாசரின் வீடு போல் காட்சியளித்தது.
மனமோகன் பரவச நிலையில் ஆழ்ந்தார். அவரது வீட்டுப் பெண்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் வடக்கு வராந்தாவிலிருந்த படி இந்தப் பாட்டு, அற்புத நடனம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுள்ளும் ஒருவருக்குப் பரவச நிலை உண்டாயிற்று. மனமோகன் குருதேவரின் பக்தர், ராக்காலின் சம்பந்தி.
குருதேவர் மீண்டும் பாடினார்-
ஹரியின் பெயரை உச்சரித்தாலே கண்களில்...................
வந்துள்ளனர்.
படிய படியே நீல கண்டர் முதலிய பக்தர்களுடன் ஆடத் தொடங்கினார். இடையிடையே சில வரிகளைச் சேர்த்தார்.
ராதை பிரேமையில்..................
........... வந்துள்ளனரே!
உரத்த இந்த இசையைக்கேட்டு நான்கு பக்கங்களிலும் மக்கள் கூடினர். தெற்கு, வடக்கு, மேற்கு வட்ட வராந்தாவில் எல்லாம் மக்கள் நெருக்கம். கங்கையில் படகில் சென்று கொண்டிருந்தவர்களும் தங்கள் காதில் விழுந்த இந்த இனிய சங்கீர்த்தனத்தால் கவரப் பட்டனர்.
பாட்டு நிறைவுற்றது. குருதேவர் தேவியை சமஸ்கரித்து, பாகவத- பக்த- பகவான். ஞானிகளுக்கு நமஸ்காரம், யோகிகளுக்கு நமஸ்காரம், பக்தர்களுக்கு நமஸ்காரம்” என்றார்.
குருதேவர் நீலகண்டர் முதலிய பக்தர்களுடன் மேற்கு வட்ட வராந்தாவில் சென்று அமர்ந்தார். மாலை மறைந்தது. பௌர்ணமிக்கு அடுத்து நாள். எங்கும் நில வொளி வெள்ளமெனப் பரவியிருந்தது. குருதேவர் நீலகண்டருடன் ஆனந்தமாகப் பேசத் தொடங்கினார்.
நீலகண்டர்-
நீங்கள் தான் சாட்சாத் சைதன்யர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இதென்ன பேச்சு! நான் எல்லோருடைய சேவகனுக்குச்சேவகன். கங்கையைச்சேர்ந்தது அலை, ஒரு போதும் அலை கங்கையைச்சேர்ந்தது ஆகாது.
நீலகண்டர்-
நீங்கள் என்ன சொன்னாலும் சரி, உங்களை நாங்கள் அப்படித் தான் காண்கிறோம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிறித பரவச நிலையில் ஆழ்ந்து, அன்பு ததும்ப)-
அப்பா, என்னுடைய ” நான்” என்பதைத்தேடித்தேடி பார்த்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. ராமா, சில வேளைகளில் நீ முழுமை, நான் அம்சம் என்றும், நீ எஜமான் நான் சேவகன் என்றும் கருதுகிறேன்.ஆனால் தத்துவ ஞானம் ஏற்படும் போது ” நீயே நான், நானே நீ” என்று காண்கிறேன்! என்றார் அனுமன்.
நீல கண்டர்-
நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? எங்களுக்கு அருள் புரியுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( சிரித்தவாறு)-
நீங்கள் எவ்வளவோ பேரைக் கரையேற்றுகிறீர்கள். உங்கள் பாட்டைக்கேட்டு எத்தனையோ பேர் விழிப்படைந்துள்ளனர்.
நீலகண்டர்-
கரையேற்றுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் நானே மூழ்கி விடாமல் இருக்க ஆசீர்வதியுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( சிரித்துக் கொண்டு)-
மூழ்க வேண்டுமானால் அமுதக் கடலில் மூழ்குங்கள்!
நீல கண்டர் வந்ததில் குருதேவருக்கு மிக்க மகிழ்ச்சி! அவரிடம் கூறினார், பல சாதனைகள் செய்து அடையத் தக்கவரான நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். ஒரு பாட்டைக்கேளுங்கள்-
மங்களம் எனக்கு..............
.......... தன்னை மகிழ்வுடன் பெற்றேன்.
எத்தனை யோகியர், எத்தனை துறவியர்................
.................... இறைவன் திருப் பெயர் எண்ணி இருப்பர்!
சண்டி தேவி வீட்டிற்கு வந்தால் எவ்வளவு யோகிகளும் ஜடாதாரிகளும் வருவார்கள்!
குருதேவர் சிரித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ம- பாபுராம் முதலிய பக்தர்களைப் பார்த்துக் கூறினார். இவர் களே பாடகர்கள், இவர்களுக்குப்போய் நான் பாட்டுப் பாடிக் காட்டுகிறேனே! எனக்கு ஒரே சிரிப்பாக வருகிறது.
நீலகண்டர்-
நாங்கள் எந்தப் பாடல்களைப் பாடித் திரிகிறோமோ, அவைகளுக்கு இன்று தக்க பரிசு கிடைத்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்துக் கொண்டு)
சில பொருட்களை வாங்கும் போது கொசுறு கொடுப்பார்கள். நீங்கள் நவீன் வீட்டில் பாடினீர்கள். இங்கே கொசுறு கொடுத்தீர்கள்,( எல்லோரும் சிரித்தனர்)
49
..
சனிக் கிழமை, அக்டோபர் 11, 1884
..................
ஸ்ரீராமகிருஷ்ணர் தட்சிணேசுவரக் காளி கோயிலில் தமது அறையில் சிறியகட்டிலில் படுத்திருந்தார். மணி சுமார் இரண்டு. ம-வும் பிரிய முகர்ஜியும் தரையில் உட்கார்ந்திருந்தனர். பள்ளியிலிருந்து ஒரு மணிக்குப் புறப்பட்ட ம- ஏறக்குறைய இரண்டு மணிக்கு தட்சிணேசுவரம் வந்து சேர்ந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஒரு முறை யது மல்லிக்கின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சென்ற உடனேயே, ” வண்டி வாடகை எவ்வளவு” என்று கேட்டார். இவர்கள் ” மூன்று ரூபாய் இரண்டணா” என்றனர். பிறகு வண்டிக் காரனிடம் சென்று ரகசியமாக, வாடகை எவ்வளவு” ? என்று கேட்டார். அவன்” மூன்று ரூபாய் நாலணா” என்றான். ( எல்லோரும் சிரித்தனர்) இதைக்கேட்டதும் மீண்டும் என்னிடம் ஓடி வந்து, ஆமாம், வண்டி வாடகை எவ்வளவு என்று சொன்னீர்கள்? என்று கேட்டார்.
அங்கே ஒரு தரகன் இருந்தான். அவன் யது மல்லிக்கிடம், படாபஜார் என்ற இடத்தில் நாலு ஏக்கர் நிலம் விற்பனைக்கு, வந்துள்ளது. வாங்குகிறீர்களா? என்று கேட்டான்.”விலை எவ்வளவு? என்று யது கேட்டார். விலையைக் கூறியதும், என்ன சிறிது குறைக்கக் கூடாதா? என்றார். ” இதோ பாருங்கள்” நீங்களோ வாங்கப் போவதில்லை” வீணாக ஏன் பேரம் பேசுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். இதைக் கேட்டதும் யது என் பக்கம் திரும்பி சிரித்தார். நாலு பேர் வந்து போக வேண்டும். பெயர் பரவ வேண்டும்- இது தான் உலகியல் மனிதர்களின் இயல்பு.
அதரின் வீட்டிற்கு யது மல்லிக் சென்றிருந்தார். நான் அவரிடம், ” நீங்கள் தன் வீட்டிற்குச் சென்றதில் அதருக்கு மிக்க மகிழ்ச்சி! என்றேன். அதைக் கேட்டதும் அவர், என்ன சொன்னீர்கள். என்ன சொன்னீர்கள். உண்மையாகவே மகிழ்ச்சியடைந்தாரா? என்றார்.
யதுவின் வீட்டிற்கு ஒரு மல்லிக் வந்திருந்தான். அவன் நல்ல தந்திரசாலி. வஞ்சகன். அவனுடைய கண்களைப் பார்த்தே புரிந்து கொண்டேன். அவனது கண்களைப் பார்த்த படியே, ” தந்திரத்தனம் அவ்வளவு நல்லதல்ல. காகம் மிகவும் தந்திரமானது. சாமர்த்தியம் மிக்கது. அது மற்றவர் களுடைய மலத்தை உண்டு திரிகிறது” என்றேன். தரித்திரம் பிடித்தவன் அவன் என்பதையும் கண்டேன். இதைக் கண்ட யதுவின் தாயார் வியப்புடன் ” அவன் தரித்திரன் என்பதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான். முகத்தைப் பார்த்து அறிந்து கொண்டேன்” என்று சொன்னேன்.
நாராயணன் வந்தான். அவனும் தரையில் உட்கார்ந்தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( பிரியநாத்திடம்)
உங்கள் ஹரி நல்ல பையன்.
பிரியநாத்-
சுவாமி, அப்படி என்ன நல்ல பையன்! சிறு பிள்ளைத்தனம்!
நாராயணன்-
மனைவியை அம்மா என்று அழைக்கிறான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்ன! என்னாலேயே அப்படி அழைக்க முடியவில்லை. ஆனால் இவன் அம்மா என்கிறானே! ( பிரியநாத்திடம்) விஷயம் என்ன தெரியுமா? பையன் மிகவும் சாந்தமானவன். மனம் இறைவனை நாடியிருக்கிறது.
குருதேவர் வேறு விஷயங்களைப் பற்றி பேசலானார்-
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஹேம் என்ன சொன்னான் தெரியுமா? இறைவன் ஒருவரே உண்மை. மற்றவை எல்லாம் பொய்” என்று பாபுராமிடம் சொன்னான். ( எல்லோரும் சிரித்தனர்) ஆமாமப்பா, ஆத்மார்த்தமாகச் சொன்னான், அதோடு என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கீர்த்தனை பாடிக் காட்டுவதாகவும் கூறினான். ஆனால் அது நடக்கவில்லை. ” நான் ஜால்ராவையும் மிருதங்கத்தையும் கையில் எடுத்துக் கொண்டால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? என்று பின்னர் ஏதோ சொன்னானாம். மக்கள் தன்னைப் பைத்தியம் என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு.
ஹரிபதன் ஒரு கோஷ்பாரா பெண்ணின் வலையில் சிக்கி யிருந்தான். அவள் இவனை லேசில் விடவில்லை. இவனை மடியில் வைத்து உணவு ஊட்டுவாளாம். கோபால பாவனையோ ஏதோ ஒன்றாம்! நான் அவனைப் பல முறை எச்சரித்துவிட்டேன்! அது வாத்சல்ய பாவனை என்கிறாள் அவள். இத்தகைய வாத்சல்யத்திலிருந்து பிறகு முறைகேடுகள் தோன்றும்.
விஷயம் என்ன தெரியுமா? பெண்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். அப்போது தான் இறையனுபூதிக்கான வாய்ப்பு உண்டு. கெட்ட பெண்களுடன் பழகுவதும் அவர்கள் கையால் சாப்பிடுவதும் குற்றம். இவர்கள்ஆளுமையை அழித்து விடுகிறார்கள்.
மிகவும் விழிப்புடன் இருந்தால் தான் பக்தியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஒரு நாள் பவநாத், ராக்கால், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து உணவு சமைத்தனர். சாப்பிட அவர்கள் உட்கார்ந்த போது ஒரு பௌல் வந்து உட்கார்ந்து கொண்டு, ” எனக்கும் உணவு வேண்டும்” என்றாள். சோறு போதாது. மீதி இருந்தால் உனக்குக் கொடுப்பார்கள்” என்று சொன்னேன். அவ்வளவு தான் கோபத்துடன் அவன் எழுந்து சென்று விட்டான். விஜயதசமி நாட்களில் யாரும் யாருக்கும் உணவு ஊட்டலாம். ஆனால் அது நல்லதல்ல. சுத்த சத்வ பக்தர்களிடமிருந்து உண்ணலாம்.
பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபால பாவனையாம்! அதையெல்லாம் நம்பாதே! ” பெண் மூவுலகையும் விழுங்கி விடுவாள்” என்பது பழமொழி. ஒருவன் இளைஞனாக, பார்ப்பதற்கு அழகானவனாக இருந்தால் பல பெண்கள் அவன் மீது ஒரு புதிய மாயவலையை வீசுகின்றனர். இதை கோபால பாவனை என்று வேறு சொல்கின்றனர்!
சிறு வயதிலிருந்தே வைராக்கியம் இருப்பவர்கள் இளமையிலேயே இறைவனுக்காக மன ஏக்கம் கொள்கிறார்கள். அவர்கள் தனி வகுப்பைச்சேர்ந்தவர்கள், கலப்படமற்ற தூயவர்கள்! எங்கே தங்கள் முன்னேற்றத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்று இவர்கள் பெண்களிடமிருந்து ஐம்பதடி அகன்றே இருப்பார்கள். இவர்களும் பெண்களின் வலையில் சிக்கி விட்டால் கலப்படமற்ற தூய நிலையிலிருந்து நழுவி விடுகிறார்கள். அவர்களின் பாவனை கெட்டு விடுகிறது.கீழ் நிலைக்கு ப் போய் விடுகிறார்கள். யாரிடம் சிறு வயதிலிருந்தே சரியான வைராக்கியம் உள்ளதோ அவர்கள் உயர்தளத்தைச்சேர்ந்தவர்கள். மிகவும் தூயவர்கள். உடலளவில் கூட களங்கம் இல்லாதவர்கள்.
புலன்களை வென்றவனாக இருப்பது எப்படிஃ அவன் தன்னைப் பெண்ணாகக் கருத வேண்டும். நான் பல நாட்கள் தேவியின் தோழி பாவனையில் இருந்தேன். பெண்களைப் போல் புடவை உடுத்தினேன். நகைகள் அணிந்து கொண்டேன். மார்புச் கச்சை அணிந்தேன். மார்புக் கச்சையுடன் தான் ஆரதி செய்தேன். இல்லாவிட்டால் மனைவியை என்னுடன் எட்டு மாதங்கள் எவ்வாறு வைத்திருக்க முடியும்? இருவரும் தேவியின் தோழிகளாக இருந்தோம். நான் ஆண் என்று என்னால் சொல்ல முடியாது. ஒரு நாள் நான் பரவச நிலையில் இருந்த போது என் மனைவி என்னைப் பார்த்து, ” நான் உங்களுக்கு யார்? என்று கேட்டாள். அதற்கு, ஆனந்தமயி அன்னை! என்று பதிலளித்தேன்.
முலைக் காம்பு உள்ளவர்கள் எல்லாம் பெண்கள் என்று ஒரு கருத்து உள்ளது. அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் மார்பில் காம்பு இல்லையாம்! சிவ பூஜையின் கருத்து என்ன தெரியுமா? சிவலிங்க பூஜை- அதாவது லிங்கத்தையும் யோனியையும் பூஜை செய்வது. அதைப் பூஜிக்கின்ற பக்தன், இறைவா! இனிமேல் எனக்குப் பிறவி ஏற்படாமல் பார்த்துக் கொள். கரு மற்றும் விந்துவின் சேர்க்கையால் யோனி வழியாக இனி எனக்கு ப் பிறகு ஏற்படாமல் இருக்கட்டும்” என்று வேண்டுகிறான்.
50
..
ஸ்ரீராமகிருஷ்ணர் பெண்மை பற்றி பேசிக் கொண்டிருந்தார். பிரிய முகர்ஜியும் ம-வும் இன்னும் சில பக்தர்களும் அருகில் இருந்தனர். அப்போது தாகூர் குடும்பத்தைச்சேர்ந்த சிறுவர்களுடன் ஆசிரியர் ஒருவர் வந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( பக்தர்களிடம்)-
கண்ணனுடைய கொண்டையில் மயில் பீலி உள்ளது. மயில் பீலியில் யோனிக் குறி உள்ளது. அதன் கருத்து, கண்ணன் பெண் தத்துவத்தைத் தலையில் தாங்கியிருக்கிறார் என்பதாகும்.
ராசலீலை நடைபெறும் இடத்திற்குக் கண்ணன் சென்றார். அங்கு சென்ற உடனே பெண்ணாக மாறி விட்டார். ஆகவே தான் ராச மண்டபத்தில் அவரைப் பெண் வேடத்தில் காண்கிறோம். அவர் பெண்ணாக மாறாமல் பெண்களுடன் தங்கும் அதிகாரம் இல்லை. பெண்மை நிலை ஏற்பட்டால் தான் ராசலீலை நடைபெறும். அப்போது தான் சேர்க்கை.
ஆனால் சாதக நிலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! அப்போது பெண்களிடமிருந்து மிகவும் அகன்றிருக்க வேண்டும். பக்தையாக இருந்தாலும் அவளுக்கு வெகு அருகில் போகக் கூடாது. படிக்கட்டு வழியாக ஏறும் போது வளையவும் நெளியவும் கூடாது. அப்படி ஏறினால் விழுந்து விடக் கூடும். வலிமையற்றவர்கள் கைப் பிடியைப் பிடித்தபடி மெதுவாக மேலே ஏற வேண்டும்.
சித்த நிலையில் விஷயமே வேறு. இறைக் காட்சிக்குப் பிறகு அவ்வளவு பயமில்லை. பயமே இல்லை என்றே சொல்லி விடலாம். எப்படியாவது மாடியை அடைந்தால் போதும், அதன் பிறகு அங்கே நீ நாட்டியம் கூட ஆடலாம். ஆனால் படிக்கட்டில் ஆட முடியாது. இன்னும் ஒரு விஷயம். முதலில் விட்டவற்றையெல்லாம் மாடியை அடைந்த பிறகு விடத்தேவையில்லை. செங்கல், சுண்ணாம்பு, காரை முதலியவற்றால் கட்டப் பட்டுள்ளது மாடி. படிக்கட்டும் அதே பொருட்களால் தான் கட்டப் பட்டுள்ளது. எந்தப் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்ததோ, இறைக் காட்சிக்குப் பிறகு, அதே பெண்கள் அன்னை ஆதி பராசக்தியாகத் தோன்றுகிறார்கள். அப்போது அவளை அன்னையாக வழி பட வேண்டும். அங்கே அவ்வளவு பயமில்லை. விஷயம் இது தான். தாய்ச்சியைத் தொட்ட பின் என்ன வேண்டுமானாலும் செய்.
புற முக நிலையில் தூலப் பொருட்களையே காண்கிறோம். அந்த நிலையில் மனம் அன்னமய கோசத்தில் நிலை பெறுகிறது. அடுத்தது சூட்சும சரீரம், லிங்க சரீரம் . அப்போது மனம் மனோமய, விஞ்ஞானமய கோசத்தில் நிலை பெறுகிறது. அடுத்தது காரண சரீரம். மனம் காரண சரீரத்தை அடையும் போது எல்லாம் ஆனந்தம். அப்போது மனம் ஆனந்தமய கோசத்தில் நிலை பெறுகிறது. இந்த நிலையே சைதன்ய தேவரிடம் காணப்பட்ட பாதி புறவுணர்வு நிலை.
இதன் பிறகு மனம் ஒடுங்கி விடுகிறது. மனம் அழிந்து விடுகிறது. மகா காரணத்தில் அழிந்து விடுகிறது. மனம் அழிந்த பிறகு எந்த விவரமும் இல்லை. இது தான் சைதன்ய தேவரிடம் காணப் பட்ட அகமுக நிலை. அக முக நிலை எப்படிப் பட்டது தெரியுமா? தயானந்தர் இதை விளக்கினார். ” உள்ளேவா, கதவைத் தாழிடு” கண்டவர்கள் எல்லாம் வீட்டின் அந்தப் புரத்திற்குப் போக முடியாது.
நான் தீச்சுடரை தியானிப்பதுண்டு. அதன் சிவப்பு நிறத்தைத் தூலம் என்றும், அதனுள் இருக்கின்ற வெண்ணிறத்தை சூட்சுமம் என்றும் எல்லாவற்றிற்கும் உள்ளே இருக்கின்ற கருநிறத்திரி போன்ற பகுதியைக் காரண சரீரம் என்றும் நினைத்துக் கொள்வேன்.
தியானம் சரியாக அமைவதற்குச் சில அடையாளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, தியானம் செய்பவனை ஏதோ ஜடப் பொருள் என்று கருதி பறவைகள் அவன் தலை மீது உட்காரும்.
கேசவரை முதன் முதலாக நான் ஆதி பிரம்ம சமாஜத்தில் பார்த்தேன். மேடையில் சிலர் இருந்தனர். நடுவில் கேசவர், ஒரு மரக் கட்டை போல் அமர்ந்திருந்தார் அவர். மதுர் பாபுவிடம், ” இதோ பாருங்கள்” இவரது தூண்டில் இரையை மீன் விழுங்கியுள்ளது” என்றேன் நான். அப்படிப் பட்ட தியான நிலை ஏதோ அவருக்கு இருந்ததால் தான், அவர் விரும்பியதையெல்லாம் ( பெயர், புகழ்) இறைவனின் திருவுளப் படி அடையப் பெற்றார்.
கண்களை த் திறந்து வைத்துக் கொண்டும் தியானிக்கலாம். பேசிக் கொண்டிருக்கும் போதும் தியானம் நிகழலாம்.ஒருவனுக்கு விண்விண் என்று பல்வலித்தால் எப்படியோ அப்படி.
தாகூர் வீட்டு ஆசிரியர்-
ஆம் சுவாமி, அது நன்றாகத் தெரிந்த விஷயம்( சிரிப்பு)
ஸ்ரீராமகிருஷ்ணர்-( சிரித்தவாறே)
அப்படித்தான் பல்வலி உள்ளவன் எல்லா வேலைகளையும் செய்கிறான். ஆனால் மனம் மட்டும் பல்வலியையே நினைத்துக் கொண்டிருக்கும். அது நடக்குமானால் கண்கள் திறந்த நிலையிலும் தியானம் நிகழலாம். பேசிக் கொண்டிருக்கும் போதும் தியானம் நிகழலாம்.
ஆசிரியர்-
இறைவனுக்கு ” பதித பாவனர்” என்ற பெயருண்டு. இது நமக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. அவர் கருணை நிறைந்தவராயிற்றே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சீக்கியர்களும் இறைவனைக் கருணை நிறைந்தவர் என்று தான் கூறினார்கள். அவர்களிடம் நான், ” அவர் ஏன் கருணை நிறைந்தவர்? என்று கேட்டேன். அதற்கு அவர் கள், ” சுவாமி, அவர் நம்மைப் படைத்திருக்கிறார் , நமக்காக இவ்வளவு பொருட்களைத் தோற்றுவித்திருக்கிறார். நம்மை மனிதர்களாக ஆக்கியுள்ளார். அடிகள் தோறும் நம்மை ஆபத்துக்களிலிருந்து காக்கிறார்” என்றார்கள். உடனே நான், ஆமாம், நம்மைப் படைத்தவர் அவர். அவர் காக்கிறார். உணவு ஊட்டுகிறார். இது என்ன அவ்வளவு பெரியவிஷயம்! உனக்குக் குழந்தை பிறந்தால் அவற்றை அடுத்த வீட்டுக்காரனா வந்து காப்பாற்றுவான்? என்று கேட்டேன்.
ஆசிரியர்-
சுவாமி, சிலருக்கு எளிதில் கிடைத்து விடுகிறது. சிலருக்கோ கிடைப்பதில்லை . இதன் பொருள் என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
விஷயம் என்ன தெரியுமா?முற்பிறவி சம்ஸ்காரங்களுக்கு ஏற்பவே பெரும்பாலும் எல்லாம் நடக்கிறது. ஏதோ திடீரென்று ஏற்படுவதாக மக்கள் நினைக்கின்றனர்.
ஒருவன் காலையில் ஒரு புட்டி கள் குடித்தான். அதிலேயே போதை தலைக்கேறி தள்ளாடத் தொடங்கினான். ” ஒரே ஒரு புட்டியிலே இவ்வளவு போதையா? என்று மக்கள் வியந்தார்கள். அப்பனே, அவன் இரவு முழுவதும் குடித்தான்” என்று விளக்கினான் மற்றொருவன்.
அனுமன் பொன்னிலங்கையை எரித்தான். ” என்ன! ஒரு சிறு குரங்கு வந்தா எல்லாவற்றையும் எரிந்து விட்டது” என்று மக்கள் வியந்தார்கள். உண்மையில் சீதையின் துயரப் பெரு மூச்சும் ராமனின் சீற்றமுமே இலங்கையை எரித்தன என்பதை அவர்கள் பிறகு கூறினர்.
லாலா பாபுவைப் பார். அவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தது. முற்பிறவி சம்ஸ்காரம் இல்லாமல் திடீரென்று இத்தகைய வைராக்கியம் வந்து விடுமா? இனி, ராணி பவானி! ஒரு பெண்ணாக இருந்தும் என்ன ஞானம், என்ன பக்தி!
கடைசிப் பிறவியில் ஒருவனுக்கு சத்வ குணம் வாய்க்கிறது. மனம் இறைவனை நாடுகிறது. இறைவனுக்காக மனம் ஏக்கம் கொள்கிறது. பல்வேறு உலகக் கடமைகளிலிருந்து மனம் விலகி நிற்கிறது.
கிருஷ்ணதாஸ் பால் வந்திருந்தார். அவரிடம் ரஜோ குணம் இருந்ததைக் கண்டேன்! அவர் இந்து, செருப்பை வெளியே விட்டு விட்டு வந்தார். சிறிது நேரம் பேசியதிலேயே அவரிடம் உள்ளே எந்தச் சாரமும் இல்லை என்பதைக் கண்டு கொண்டேன். மனிதனின் கடமை என்ன என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ” உலகிற்கு உதவி செய்வது” என்றார். உடனே நான், ” அதற்கு நீங்கள் யார்? என்று உதவி தான் செய்ய முடியும்? நீங்கள் உதவுகின்ற அளவுக்கு உலகம் என்ன அவ்வளவு சிறியதா” என்று கேட்டேன்.
51
..
நாராயணன் வந்தான். அவனைக் கண்டதும் குருதேவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நாராயணனைத் தன்னருகில் சிறிய கட்டிலின் மீது உட்கார வைத்துக் கொண்டு அன்புடன் அவனைத் தடவிக் கொடுத்தார். இனிப்புகள் கொடுத்து உண்ணச் செய்தார். தண்ணர் குடிக்கிறாயா? என்று அன்புடன் கேட்டார். நாராயணன் ம- வின் பள்ளி மாணவன். குருதேவரை க் காண வருவதற்காக வீட்டில் அடி வாங்குவான். குருதேவர் சிரித்துக் கொண்டே அன்புடன். நீ ஒரு தோல் சட்டை தைத்து போட்டுக் கொள். அப்பொழுது, அடித்தாலும் வலிக்காது” என்றார். பிறகு ” ஹுக்கா பிடிக்க வேண்டுமே! என்று ஹரிஷிடம் கூறினார்.
நாராயணனைப் பார்த்துக் கூறினார்-
ஹரிபதனைப் பிள்ளையாகப் பார்க்கின்ற அந்தப் பெண் வந்திருந்தாள். நான் ஹரிபதனை நன்றாக எச்சரித்து அனுப்பி னேன். அவர்கள் கோஷ்பாரா நெறியினர்.” உனக்கு ஆதரவாக யாராவது உண்டா? என்று அவளைக்கேட்டேன். அதற்கு அவள், ஆமாம், ஒருவர் இருக்கிறார். அவர்- சக்கரவர்த்தி ” என்றாள்.
( ம-விடம்) –
ஆகா, அன்று நீலகண்டர் வந்திருந்தார். அடடா, என்ன ஒரு பரவசம், இன்னொரு நாள் வந்து பாடுவதாகக் கூறிச் சென்றார். இன்று அங்குஆடல் நடைபெறுகிறது, போய்ப் பாரேன்,( ராம்லாலிடம் ஒரு புட்டியைக் காட்டி) எண்ணெய் இல்லையே, எண்ணெய் நிறைக்கவில்லையா?
குருதேவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். சில சமயம் அறையின் உள்ளேயும் சில சமயம் தெற்கு வராந்தாவிலுமாக நடந்தார். சில சமயம் மேற்கிலுள்ள வட்ட வராந்தாவில் நின்று கொண்டு கங்கையைத் தரிசித்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கட்டிலில் உட்கார்ந்தார். மணி மூன்றாகியது. பக்தர்கள் மறுபடியும் வந்து தரையில் உட்கார்ந்தனர். குருதேவர் சிறிய கட்டிலின் மீது மௌனமாக உட்கார்ந்திருந்தார். அவ்வப்போது அறைச் சுவரைப் பார்த்தார். சுவரில் பல படங்கள் மாட்டப் பட்டிருந்தன. குருதேவருக்கு இடது புறம் கலை மகளின் படம். சிறிது தள்ளி சைதன்யரும் நித்யானந்தரும் பக்தர்களுடன் நாம சங்கர்த்தனம் செய்யும் படம். எதிர்ப் பக்கம் துருவன், பிரகலாதன் மற்றும் அன்னை காளியின் படங்கள். வலது பக்கம் ராஜராஜேசுவரி . பின் பக்கம் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த பீட்டரை ஏசுநாதர் தூக்கி விடும் காட்சி. குருதேவர் திடீரென்று ம-விடம், ” இதோ பார். சாது சன்னியாசிகளின் படங்களை வீட்டில் வைப்பது நல்லது. காலையில் எழுந்ததும் மற்றவர்களின் முகத்தில் விழிக்காமல் சாது சன்னியாசிகளின் முகத்தில் விழிப்பது நல்லது. ஆங்கிலேயரது படங்களைச் சுவரில் மாட்டுவது- பணக்காரன், அரசன், குயீன்அவரது மகன், ஆங்கிலேயனும் பெண்ணும் நடப்பது போன்ற படங்கள் எல்லாம் ரஜோ குணத்தின் அறிகுறிகள்.
எத்தகையோருடன் நீ தங்கியிருக்கிறாயோ அவர்களின் இயல்பு எல்லாமே உனக்கும் வந்து விடுகிறது. அதனால் படங்களாலும் கெடுதல் உண்டாகலாம், ஒவ்வொருவரும் தன் இயல்புக்கேற்ற கூட்டாளியைத்தேடுகிறான். பரமஹம்சர்கள் சிறு குழந்தைகளைத் தங்களருகில் வைத்துக் கொள்கின்றனர். ஐந்தோ ஆறு வயதுக் குழந்தைகளை மட்டுமே அருகில் வர அனுமதிக்கின்றனர். அந்த நிலையில்,, அவர்களுடன் பழகுவது மட்டுமே அவர்களுக்குப் பிடிக்கிறது. சத்வம், ராஜசம், தாமசம், என்று எந்த குணத்தின் பிடியிலும் குழந்தைகள் இல்லை.
மரங்களைப் பார்த்தால் தபோவனமும், முனிவர்கள் தவம் செய்வதும் நினைவுக்கு வரும்.
சிந்தியைச்சேர்ந்த பிராமணர் ஒருவர் வந்து குருதேவரை வணங்கினர். அவர் காசியில் வேதாந்தம் படித்தவர். பருத்த உடல், சிரித்த முகம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்ன, எப்படி இருக்கிறீர்கள்? வந்து பல நாட்கள் ஆயிற்று போலிருக்கிறதே?
பண்டிதர்( சிரித்தவாறே)-
என்ன, எப்படி இருக்கிறீர்கள்? வந்து பல நாட்கள் ஆயிற்று போலிருக்கிறதே?
பண்டிதர்( சிரித்தவாறே)-
ஆம், சுவாமி! குடும்பக் கடமைகள், வர நேரம் கிடைக்கவில்லை. இது நீங்கள் அறிந்தது தானே!
பண்டிதர் கீழே உட்கார்ந்தார். குருதேவர் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
காசியில் பல நாட்கள் தங்கியிருந்தீர்களே, என்னவெல்லாம் பார்த்தீர்கள்? சொல்லுங்களேன். தயானந்தரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.
பண்டிதர்-
தயானந்தரைப் பார்த்தேன். நீங்களும் அவரைப் பார்த்தீர்களல்லவா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், பார்க்கப்போயிருந்தேன். அவர் கங்கையின் அக்கரையில் ஒரு தோட்ட வீட்டில் தங்கி இருந்தார். அன்று கேசவர் அங்கு வருவதாக இருந்தது.கேசவரின் வருகைக்காக அவர் சாதகப் பறவையைப்போல் ஏங்கிக் கொண்டிருந்தார். பெரிய பண்டிதர்! வங்க மொழியைக் கவுராண்ட மொழி என்று கேலி செய்தார். தேவதைகளை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் கேசவர் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை.” இவ்வளவு பொருட்களை இறைவன் படைத்திருக்கிறார். தேவதைகளைப் படைக்க முடியாதா என்ன? என்று கூறுவார் தயானந்தர். அவர் அருவவாதி. காப்டன், ” ராம், ராம்” என்று கூறிக் கொண்டிருந்ததைக் கண்டு, அதை விட சந்தோஷ், சந்தோஷ் என்று சொல்” என்று கூறினார்.
பண்டிதர்-
காசியில் பல பண்டிதர்கள் தயானந்தருடன் கடுமையாக வாதம் செய்தனர். கடைசியில் எல்லா பண்டிதர் களும் ஒரு பக்கம். இவர் மட்டும் இன்னொரு பக்கம் என்றாகி விட்டது. எப்படியாவது தப்பிப் பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார் இவர். எல்லோரும் ஒரே குரலில் ” யதுக்தம் தயானந்தேன தத் ஹேயம்” என்று கூச்சலிட்டனர்.
கர்னல் ஆல்காட்டையும் பார்த்தேன். மகாத்மாக்கள் உள்ளனர். சந்திரலோகம், சூரிய லோகம், நட்சத்திர லோகம், எல்லாம் இருக்கின்றன. துண்ணுடல் அந்த உலகங்களுக்குச் செல்லும் என்றெல்லாம் சொல்கிறார்கள். நல்லது . சுவாமி, தியாஸபியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பக்தி- இறைவனிடம் பக்தி மட்டும் தான் சாரம். அவர்கள் பக்தியைத்தேடுகிறார்களா? அப்படி யானால் நல்லது. சந்திர லோகம், சூரிய லோகம், நட்சத்திர லோகம், மகாத்மா என்று இவற்றில் மட்டுமே ஈடுபடுவார்களானால் இறைவனைத்தேட முடியாது. அவருடைய பாத கமலங்களில் பக்தி உண்டாக சாதனை செய்ய வேண்டும். மன ஏக்கத்துடன் அழைக்க வேண்டும். மனத்தைப் பல பொருட்களிலிருந்து திரட்டி இறைவனிடம், செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறிவிட்டு குருதேவர் ராம் பிரசாதரின் பாடல் ஒன்றைப் பாடினார்.
இறையியல்பை அறிவதற்கா என் நெஞ்சே.......................
சாஸ்திரமானாலும்சரி, தரிசனமானாலும் வேதாந்த மானாலும் சரி,- எதிலும் இறைவன் இல்லை. அவருக்காக மனம் ஏங்காமல் எதுவும் நடக்காது.
தத்துவ தரிசனம் ஆறும்....................
............................. அன்பில் திளைத்துக் களிப்பான்!
ஆழ்ந்த மன ஏக்கம் தேவை- ஒரு பாட்டை கேளுங்கள்-
இராதை கண்ட...........
............................ மிகவும் மயங்கி நிற்பாரோ?
சாதனைகள் மிகவும் தேவை. இறைக்காட்சி சட்டென்று கிடைத்து விடுமா? இறைவனைப் பார்க்க முடியவில்லையே ஏன்? என்று ஒருவன் என்னைக் கேட்டான். அப்போது என் மனதில் தோன்றியதை நான் அவனுக்குக் கூறினேன். ” ஒரு பெரிய மீனைப் பிடிக்க ஆசைப் படுகிறாய். அதற்கு, வேண்டிய ஏற்பாடுகளைச் செய். மீன் பிடிக்கும் கழி, தூண்டில், இரை எல்லாம் எடுத்துக் கொள். வாசனை கேட்டு நீரின் ஆழத்திலிருந்து பெரிய மீன் வருகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
வெண்ணெய் சாப்பிட விரும்புகிறாய்! பாலில் வெண்ணெய் இருக்கிறது. பாலில் வெண்ணெய் இருக்கிறது” என்று திரும்பத் திரும்பக் கூறுவதால் என்ன பயன்? பாடுபட்டால் தானே வெண்ணெய் கிடைக்கும்? ” இறைவன் இருக்கிறார், இறைவன் இருக்கிறார்” என்று சொல்வதால் இறைவனைப் பார்த்து விட முடியுமா? சாதனை தேவை.
உலகின் படிப்பினைக்காக அன்னை பகவதியே பஞ்சமுண்டி ஆசனத்தில் அமர்ந்து கடினமான தவம் செய்தாள். ஸ்ரீகிருஷ்ணர் பூரணப் பிரம்மம். அவர் கூட உலகிற்கு வழி காட்டுவதற்காக ராதா யந்திரத்தை வைத்து தவம் செய்தார்.
ஸ்ரீகிருஷ்ணர் புருஷன். ராதை பிரகிருதி, சித்சக்தி , ஆத்யா சக்தி. ராதை முக்குணமயமான பிரகிருதி. சத்வம், ரஜஸ், தமஸ், என்ற மூன்று குணங்களும் அவளில் உள்ளன. வெங்காயத்தை உரித்தால் முதலில் கறுப்பும் சிவப்பும் கலந்த தோல் வரும். அதை அடுத்து சிவப்புத்தோல் . அதன்பிறகு வெள்ளைநிறத்தோல் வரும். வைணவ சாஸ்திரங்களில் காம ராதை, பிரேம ராதை, நித்ய ராதை பற்றி கூறப் பட்டுள்ளது. சந்திராவளியே காம ராதை, ஸ்ரீமதி தான் பிரேம ராதை. கோபாலனை மடியில் வைத்துள்ள நித்ய ராதையை நந்த கோபன் கண்டான்.
இந்த சித்சக்தியும் வேதாந்தம் கூறுகின்ற பிரம்மமும் வேறல்ல- தண்ணீரும் அதன் குளிரச் செய்கின்ற சக்தியும்போல், தண்ணீரின் குளிரச் செய்யும் சக்தியை நினைத்தால் தண்ணீரை நினைக்காமலிருக்க முடியாது. அது போல், தண்ணீரை நினைத்தாலே குளிரச் செய்யும் சக்தி நினைவில் வருகிறது. பாம்பும் அது வளைந்து செல்வதும். வளைந்து செல்வதை நினைத்தால் பாம்பும் நினைவுக்கு வரவே செய்கிறது. பிரம்மம் என்று எப்போது கூறுகிறோம்? செயலற்ற நிலையில் அல்லது செயலில் பற்றற்ற நிலையில் அது இருக்கும் போது, ஆடை அணிந்திருந்தாலும் அதே மனிதன் தான். நிர்வாணமாய் இருந்தான். இப்போது உடை உடுத்தியுள்ளான், மீண்டும் நிர்வாணமாவான். பாம்பிடம் விஷம் இருக்கிறது. ஆனாலும் அது பாம்பைப் பாதிப்பதில்லை. யாரைக் கடிக்கிறதோ அவன் உடம்பில் தான் விஷம் ஏறும். பிரம்மம் தன்னளவில் பற்றற்றது.
நாம ரூபம் எங்கோ அங்கே தான் பிரகிருதியின் ஐசுவரியமும். சீதை அனுமனிடம், மகனே, நானே ஓர் உருவத்தில் ராமன், மற்றோர் உருவத்தில் சீதை. ஒரு வடிவத்தில் இந்திரன். இன்னொரு வடிவில் இந்திராணி. ஓர் உருவில் பிரம்மா, இன்னோர் உருவில் சரஸ்வதி. ஒரு வடிவில் ருத்திரன். இன்னொன்றில் பார்வதி- இப்படியாக நானே இருக்கிறேன்” என்று கூறினாள். தியானம், தியானிப்பவன் உட்பட நாம ரூபங்கள் எல்லாம் சித்சக்தியின் ஐசுவரியம். நான் தியானம் செய்கிறேன் என்ற உணர்வு இருக்கும் வரை நான் சக்தியின் இலாக்காவில் தான் இருக்கிறேன்(ம-விடம்) இவைகளையெல்லாம் மனத்தில் பதித்துக் கொள். வேத புராணங்களைக்கேட்க வேண்டும். அவை கூறுவது போல் நடக்க வேண்டும்.
( பண்டிதரிடம்) இடையிடையே சாது சங்கம் நல்லது.( உலகியல் என்னும்) தீராத நோய் மனிதனைப்பற்றியுள்ளது. சாதுசங்கம் இதைப் பெருமளவுக்கு த் தணிக்கிறது.
நான் , எனது ” இறைவா! நீயே எல்லாம் செய்கிறாய். நீயே எனக்கு மிகவும் வேண்டியவன். இந்த வீடு, வாசல், உற்றார், உறவினர், நண்பர்கள், இந்த உலகம் எல்லாம் உனதே. இவை யனைத்தும் உனதே- இது தான் சரியான ஞானம். ” எல்லாம் நான் செய்கிறேன்”. நான் கர்த்தா. என் வீடு வாசல், என் சுற்றம், என் மனைவி மக்கள் , என் நண்பன்-இது அறியாமை.
குரு ஒருவர் தனது சீடனுக்கு இந்தக் கருத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இறைவனே உனக்கு மிகவும் நெருங்கியவர். மற்ற யாரும் நெருங்கியவர் அல்ல” என்றார் குரு.
உடனே சீடன், ” நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என் தாயும், மனைவியும், என்னை மிகவும் கவனித்துக் கொள்கின்றனர். கணப் பொழுது என்னைக் காணாவிட்டால் அவர்களுக்கு உலகமே இருண்டு விடுகிறது. அவர்கள் என்னை எவ்வளவோ நேசிக்கிறார்கள் என்று கூறினான். அதற்கு குரு,” இவையெல்லாம் உன் தவறான அபிப்பிராயம். இவர்களில் யாரும் உனக்கு நெருங்கியவர் அல்ல என்பதை உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். இதோ, இந்த மாத்திரைகள் சிலவற்றை வைத்துக் கொள். வீட்டிற்குப் போய் இவற்றைச் சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொள். நீ இறந்தவன் போல் ஆகிவிடுவாய். எல்லோரும் அப்படியே நினைப்பார்கள். ஆனால் உனக்கு நல்ல உணவு இருக்கும், கேட்க பார்க்க எல்லாம் முடியும். அப்போது நான் வந்து சேர்வேன்” என்றார்.
சீடனும் வீட்டிற்குச் சென்றான். மாத்திரைகளைச் சாப்பிட்டான். பிறகு உணர்வற்றுப் படுத்து விட்டான். தாய், மனைவி, உறவினர், எல்லாம் அழத் தொடங்கினர், அப்போது குரு ஒரு வைத்தியர் வேடத்தில் அங்கே வந்தார். எல்லா வற்றையும் விவரமாகக்கேட்ட பிறகு, ” நல்லது” இதற்கு மருந்து இருக்கிறது. இவனை உயிர் பிழைக்க ச் செய்ய முடியும். ஆனால் ஒன்று! இந்த மருந்தை முதலில் உங்களில் ஒருவர் சாப்பிட வேண்டும். அதன் பிறகே அவனுக்குத் தர முடியும்.ஆனால் முதலில் சாப்பிடுபவர் இறந்து விடுவார். இங்கே இவனது தாய், மனைவி என்று எல்லோரும் இருக்கிறீர்கள். ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் கட்டாயமாக இந்த மாத்திரையைச் சாப்பிடவே செய்வீர்கள். அதில் சந்தேகமில்லை. நீங்கள் சாப்பிட்டதும் இவன் உயிர் பெற்றுவிடுவான்” என்றார்.
சீடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். வைத்தியர் முதலில் தாயை அழைத்தார். அழுது புரண்டு கொண்டிருந்த தாயைப் பார்த்து வைத்தியர், ” தாயே, இனியும் நீ அழ வேண்டாம். இந்த மருந்தைச் சாப்பிடு. உன் மகன் பிழைத்து விடுவான். ஆனால் நீ உயிரிழக்க நேரிடும்” என்றார். கையில் மருந்தை வாங்கி வைத்துக் கொண்டு தாய் சிந்திக்க லானாள். பிறகு அழுது கொண்டே, ” ஐயா, எனக்கு இன்னும் சில பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் இறந்து விட்டால் அவர்களின் கதி என்னவாகும் என்று தான் யோசிக்கிறேன். அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? யார் உணவளிப்பார்கள்? அவர்களைக் குறித்துத் தான் கவலைப் படுகிறேன்”என்றாள். வைத்தியர் சீடனின் மனைவியை அழைத்து மாத்திரையை அவளது கையில் கொடுத்தார். அவளும் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் . கையில் மாத்திரையை வாங்கி வைத்துக் கொண்டு அவளும் ஆழ்ந்து சிந்திக்கலானாள். அதைச் சாப்பிட்டால் தனக்கு மரணம் என்பதை அவளும் கேட்டிருந்தாள். சிந்தித்து அவள் அழுது கொண்டே, “ இதோ பாருங்கள் வைத்தியரே” அவருக்கு நடக்க வேண்டியது நடந்து விட்டது. நான் போய்விட்டால் இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் கதி என்ன ஆவது? இவர்களை யார் காப்பாற்றுவார்கள்? நான் எப்படி இந்த மருந்தை ச் சாப்பிடுவேன்? என்றாள்.
இதற்குள் சீடனுக்கு மருந்தின் வேகம் போய்விட்டது. யாரும் யாருக்கும் சொந்தம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டான். சடாரென எழுந்து குருவுடன் சென்றுவிட்டான். உண்மையில் உனக்குச் சொந்தமானவர் ஒரே ஒருவர், அவர் இறைவன்” என்று குரு அவனிடம் கூறினார்.
ஆகவே இறைவனின் பாத கமலங்களில் எதனால் பக்தி ஏற்படுமோ, எதன் மூலம் அவர் மட்டுமே எனது சொந்தம் என்று அவரை நேசிக்க முடியுமோ அதைச் செய்வது தான் நல்லது. உலக வாழ்க்கையைத் தான் பார்க்கிறீர்களே. அது இரண்டு நாட்களுக்கு மட்டுமே. அதில் எதுவும் இல்லை.
52
..
பண்டிதர்( சிரித்தவாறே)-
சுவாமி, இங்கு வருகின்ற நாளில் பூரண வைராக்கியம் வருகிறது. வாழ்க்கையைத் துறந்து சென்றுவிட வேண்டும் என்று தோன்றுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வேண்டாம், ஏன் துறக்க வேண்டும்? நீங்கள் மனத்தளவில் துறந்து வாழுங்கள். பற்றற்று வாழுங்கள்.
இடையிடையே இங்கே வந்து தங்க வேண்டாம் என்று சுரேந்திரன் ஒரு படுக்கையை இங்கே வைத்திருந்தான். ஓரிரு நாட்கள் தங்கவும் செய்தான். அதன் பிறகு அவனது வீட்டுக் காரி, ” பகலில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் இரவில் வெளியே போகக் கூடாது” என்று கூறி விட்டாள். சுரேந்திரன் என்ன செய்வான்! இப்போது இரவில் இங்கே தங்க வழியில்லாமல் போயிற்று.
பாருங்கள், வறட்டு ஆராய்ச்சியினால் என்ன பயன்? இறைவனுக்காக மன ஏக்கம் கொள்ள வேண்டும். அவரை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஞானம் , ஆராய்ச்சி, எல்லாம் ஆண் மகன் போல், வீட்டின் வரவேற்பறைவரை தான் போக முடியும். ஆனால் பக்தி, பெண்ணைப்போல் அந்தப் புரம் வரை போக வேண்டும்.
ஏதாவது ஒரு பாவனையைக் கைக் கொள்ள வேண்டும். அப்போது தான் இறையனுபூதி கிடைக்கும். சனகர் முதலிய முனிவர்கள் சாந்த பாவனையில் இருந்தார்கள். அனுமார் சேவக பாவனையைக் கொண்டிருந்தார். ஸ்ரீதாமர், சுதாமர் மற்றும் கோகுலத்து இடையர்கள் எல்லாம் தோழமை பாவனையில் இருந்தனர். யசோதையிடம் வாத்சல்ய பாவனை அதாவது இறைவனைக் குழந்தையாகக் கருதுவது. ராதை யிடம் மதுர பாவனை.
எம்பெருமானே, நீ எஜமான் நான் சேவகன்- இது தான் சேவக பாவனை. சாதகர்களுக்கு இது மிகவும் நல்லது.
பண்டிதர்-
ஆம் சுவாமி!
சிந்தியைச்சேர்ந்த பண்டிதர் விடை பெற்றுச் சென்றார். மாலை மெதுவாக வந்து கொண்டிருந்தது. காளி கோயிலில் மாலை ஆரதிக்கான வாத்திய நாதங்கள் எழலாயின. குருதேவர் தெய்வங்களை வழி பட்டார். கட்டிலில் அமர்ந்து அகமுக மானார். சில பக்தர்கள் வந்து தரையில் அமர்ந்தனர். அறையில் ஆழ்ந்த அமைதி நிலவியது.
ஒரு மணி நேரம் கழிந்தது. ஈசான் முகோபாத்தியாயரும் கிசேரியும் வந்து குருதேவரை வணங்கிவிட்டுத் தரையில் உட் கார்ந்தனர். ஈசானுக்குப் புரச்சரணம் முதலிய வைதீகக் கருமங்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் ஒரு கர்மயோகி.
குருதேவர் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஞானம் ஞானம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஞானம் வந்து விடுமா? ஞானம் உதிப்பதற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன. முதலில் அனுராகம்,அதாவது இறைவனை நேசிப்பது , நாம் வறட்டு ஆராய்ச்சி செய்கிறோம். இறைவனிடம் நமக்கு அனுராகம் இல்லை, அன்பு இல்லை. என்றால் அது பயனற்றது. மற்றோர் அடையாளம் குண்டலினி சக்தியின் விழிப்பு. குண்டலினி சக்தி தூங்கும் வரை ஞானம் வருவதில்லை. வசதியாக அமர்ந்து கொண்டு சாஸ்திரங்களைப் படிக்கிறோம். ஆராய்ச்சி செய்கிறோம், ஆனால் உள்ளே மன ஏக்கம் இல்லை- இது ஞானத்தின் அடையாளம் அல்ல. குண்டலினி சக்தி வழித்தெழுந்தால் பரவசம், பக்தி, பிரேமை, எல்லாம் ஏற்படுகின்றன. இதற்குப் பெயர் தான் பக்தியோகம்.
கர்மயோகம் மிகவும் கடினமானது. கர்மயோகத்தினால் ஏதோ சக்தி கிடைக்கிறது. சித்திகள்கிடைக்கின்றன.
ஈசான்-
நான் ஹாஸ்ராவிடம் போகிறேன்.
குருதேவர் மௌனமாக இருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு ஈசான் மறுபடியும் வந்தார். கூடவே ஹாஸ்ராவும் வந்தார். குருதேவரின் மௌனம் கலையவில்லை. அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தார். சிறிது நேரம் பார்த்து விட்டு ஹாஸ்ரா ஈசானிடம், வாருங்கள் போகலாம், இவர் தியானம் செய்கிறார்” என்றார். உடனே இருவரும் அங்கிருந்து அகன்றனர்.
குருதேவர் மௌனமாகவே அமர்ந்திருந்தார். மெள்ள மெள்ள உண்மையாகவே தியானத்தில் ஈடுபட்டார். கையால் எண்ணிய படி ஜபம் செய்தார். அந்தக் கையைத் தலையிலும், நெற்றியிலும் , கழுத்திலும், மார்பிலும் பிறகு தொப்புளிலும் வைத்தார். ஆறு சக்கரங்களில் ஆத்யா சக்தியைத் தியானிக்கிறாரா? சிவ சம்ஹிதை முதலிய சாஸ்திரங்களில் யோகம் பற்றி கூறப் பட்டுள்ளது இது தானா?
ஈசான் ஹாஸ்ராவுடன் காளி கோயிலுக்குச் சென்றார். குருதேவரின் தியானநிலை நீடித்தது. இரவு சுமார் ஏழரை மணி. இதற்கிடையில் அதர் அங்கு வந்து சேர்ந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவர் காளி கோயிலுக்குப் புறப்பட்டார். தேவியை வணங்கிய பிறகு அவளது திருப்பாதத்திலிருந்து மலர் ஒன்றை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார். அவளை வணங்கினார். வலம் வந்தார், சாமரம் வீசினார், பரவசத்தில் ஆழ்ந்தார்! வெளியே வந்த போது ஈசான் தண்ணீர்ப் பாத்திரத்துடன் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருபு்பதைக் கண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்(ஈசானிடம்)-
என்ன, இன்னும் இங்கா இருக்கிறீர்கள்? இப்போதும் சந்தியாவந்தனம் செய்து வருகிறீர்களா? ஒரு பாட்டைக்கேளுங்கள்.
குருதேவர் பரவசத்தில் ஆழை்ந்தவராய் ஈசானின் அருகில் அமர்ந்து இனிய குரலில் பாடத் தொடங்கினார்.
அன்னை பெயர் நாவோத அந்திமத்தில் ..................................
சந்தியா முதலியவை எவ்வளவு நாட்களுக்கு? இறைவனின் பாத கமலங்களில் பக்தி ஏற்படாதவரை, அவரதுதிருநாமத்தைச் சொல்லும் போது கண்ணீர் கசியாதவரை மயிர்க் கூச்செறிதல் ஏற்படாதவரை தான்.
காளியும்..................
....................................... பேசி நிற்கிறார்.
என்கிறா் ராம் பிரசாதர்.
காய் உண்டானதும் பூ உதிர்ந்து விடுகிறது. பக்தி வந்ததும் இறையனுபூதி வந்ததும் சந்தியா முதலிய கருமங்கள் அகன்று விடுகின்றன. மருமகள் கருவுற்றிருக்கும் போது மாமியார் அவளுடைய வேலைகளைக் குறைக்கிறாள். பத்து மாதம் ஆகும்போது எந்த வேலையும் செய்ய விடுவதில்லை. குழந்தை பிறந்த பிறகு குழந்தையை மடியில் வைத்துக் கொள்வதும் அதைக் கவனித்துக் கொள்வதும் தான் அவளதுவேலை, வேறெந்த வேலையும் இல்லை. இறையனுபூதி கிடைத்த பிறகு சந்தியா முதலிய கருமங்கள் விலகி விடுகின்றன.
நீங்கள் இப்படி ஆமை வேகத்தில் போனால் ஒன்றும் நடக்காது. தீவிர வைராக்கியம் தேவை.ஓராண்டிற்குப் பதினைந்து மாதங்கள் என்று கணக்கிடுவதில் என்ன பயன்? உங்களிடம் வேகம் இல்லை. சக்தி இல்லை. நனைந்த அவல் போல் இருக்கிறீர்கள். எழுந்து செயல் படுங்கள், கச்சைகட்டிக் கொள்ளுங்கள். இந்தப் பாட்டு எனக்குப் பிடிப்பதில்லை-
திருமால்....................
........................ அடைந்து விடலாம்.
இன்றோ நாளையோ அடைந்து விடலாமாம்- இது எனக்குப் பிடிக்கவில்லை. தீவிர வைராக்கியம் வேண்டும். இதைத் தான் நான் ஹாஸ்ராவிற்கும் சொல்கிறேன்.
தீவிர வைராக்கியம் ஏன் ஏற்படுவதில்லை என்று கேட்கிறீர்களா? அதற்குக் காரணம் இருக்கிறது. மனத்தில் சம்ஸ்காரங்கள் , ஆசைகள் எல்லாம் உள்ளன. ஹாஸ்ராவிடம் இதையே சொன்னேன். கிராமங்களில் வயலுக்கு நீர் பாய்ச்சுவார்கள். தண்ணீர் வீணே வெளியில் போவதைத் தடுப்பதற்காக வயலைச் சுற்றி நாலு பக்கமும் வரப்பு கட்டியிருப்பார்கள். வரப்பு மண்ணால் ஆனது. அதில் இடையிடையே, மடைகளும் வளைகளும் இருக்கும். உயிரைக் கொடுத்து தண்ணீர் கொண்டு வருகிறான். ஆனால் அது வளைகள் வழியாக வெளியே போய் விடுகிறது. ஆசைகள் தான் வளைகள், ஜபம், தவம் எல்லாம் செய்கிறாய், உண்மை தான் , ஆனால் ஆசைகளாகிய வளைகள் வழியாக எல்லாம் விரயமாகி விடுகிறது.
மூங்கிலை வளைத்து வில போலாக்கி மீன் பிடிப்பார்கள். மூங்கில் நேராகத் தான் இருக்கும், ஆனால் இங்கே வளைந்துள்ளது,ஏன்? மீனைப் பிடிப்பதற்காக.
ஆசை தான் மீன், ஆகவே மனம் உலக வாழ்க்கையை நோக்கி வளைந்திருக்கிறது. ஆசைகள் இல்லாவிட்டால் இயற்கையாக அது மேல்நோக்கிய பார்வை கொண்டிருக்கும். அதாவது இறைவனை நாடி நிற்கும்.
எப்படி தெரியுமா? தராசின் முட்கள்போல், காமினீ- காஞ்சனத்தின் பாரம் காரணமாக மேல் முள்ளும் கீழ் முள்ளும் நேர்க்கோட்டில் வருவதில்லை. இவைதான் யோக நெறியிலிருந்து வழுவச் செய்கின்றன. விளக்குச் சுடரைப் பார்த்த தில்லையா? சிறிது காற்று வீசினாலே படபடக்கிறது. யோகநிலை என்பது காற்று வீசாத இடத்தில்எரியும் சுடரைப்போன்றது.
மனம் சிதறிக் கிடக்கிறது- ஒரு பகுதி டாக்காவிற்குப் போயிருக்கிறது. ஒரு பகுதி டில்லிக்கு, மற்றொரு பகுதி கூச்பிகாருக்கு.. இந்த மனத்தைத் திரட்ட வேண்டும். திரட்டி ஓரிடத்தில் குவிக்க வேண்டும். பதினாறு அணா விலையுள்ள துணி வேண்டுமென்றால், துணிக் காரனுக்குப் பதினாறு அணாவையும் கொடுக்க வேண்டுமல்லவா? சிறிது தடையிருந்தாலும் யோகம் வாய்க்க வழியில்லை. டெலிகிராஃப் கம்பியில் சிறிது பிளவு இருந்தாலும் செய்தி போகாது.
இல்லறத்தில் இருக்கிறாய். அதனால் என்ன? செயலின் பலன் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். தனக் கென்று எந்தப் பயனையும் விரும்பக் கூடாது.
ஆனால் ஒரு விஷயம், பக்தியை விரும்புவதை ஆசைஎன்று சொல்லமுடியாது. பக்தியை விரும்பலாம். பக்திக்காகப் பிரார்த்திக்கலாம்.
தமோ பக்தியைக் கைக்கொள். அன்னையை வற் புறுத்து, ராம் பிரசாதரின் ஒரு பாட்டு உண்டு-
அன்னை மகன் நம் இருவருக்கிடையே.................
.............................. இந்த ப் பிரச்சனை இனிதாய்த் தீரும்.
நான் அந்தக் குடும்பத்தில் எப்போது பிறந்தேனோ அப்போதே எனக்கு அந்தச் சொத்தில் பங்கு உண்டு என்றாகி விட்டது” என்று திரைலோக்கியர் கூறுவார்.
இவள் உன் சொந்தத் தாய் ஆயிற்றே. இவள் என்ன மாற்றாந்தாயா?வெறும் பெயரளவிற்கா இவள் அன்னை? இவளிடம் உரிமையை வற்புறுத்தாமல் வேறு யாரிடம் வற்புறுத்துவது?
அன்னையே நானென்ன...................
........ சிறு குழந்தையா.....
அவள் சொந்தத் தாய்! அவளை வற்புறுத்து! ஒருவனிடம் என்ன அம்சம் இருக்குமோ, அவனுக்கு அதில் வசீகரம் இருக்கும். தேவியின் அம்சம் என்னிடம் இருப்பதால் தானே எனக்கு அவளிடம் அவ்வளவு வசீகரம் ஏற்படுகிறது. ஒரு சரியான சைவனில் சிவனின் அம்சம் காணப் படும், ஏதோ சிறு துளியாவது அந்த அம்சம் அவனிடம் வந்து சேர்கிறது. சரியான வைணவன் நாராயணனின் அம்சத்தைத் தன்னில் பெறுகிறான். இனிமேல் நீங்கள் உலக கடமைகளில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை. இனி, சில நாட்கள் தெய்வ சிந்தனையில் மனத்தைச் செலுத்துங்கள். இந்த வாழ்க்கையில் எதுவும் இல்லை என்பதைத் தான் பார்த்து விட்டீர்களே!
குருதேவர் தமது இனிமையான குரலில் மீண்டும் பாடினார்-
நினைவில்............
புவியில் எவருமில்லை.
வழக்காடுவதும் தலைமை தாங்குவதுஎன்றெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் சண்டைசச்சரவுகளைத் தீர்த்து வைப்பதாகவும், மக்கள் உங்களை வழக்கு வாதங்களுக்கு அழைப்பதாகவும் கேள்விப் பட்டேன். இவற்றை நீண்ட காலமாகச் செய்து வருகிறீர்களே! இனி மேலாவது, வேண்டியவர்கள் அதையெல்லாம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுங்களேன். இப்போது இறைவனது திருப்பாத கமலங்களில் மனத்தை ஆழ்ந்து ஈடுபடுத்துங்கள். ஒரு பழமொழி உண்டு. இலங்கையில் ராவணன் மாண்டான், அதற்கு பேகுலா கதறி அழுதாளாம்.
சம்புவும் இப்படித் தான் ஆஸ்பத்திரி கட்டுவேன், டிஸ்பென்சரி கட்டுவேன், என்றெல்லாம் கூறுகிறார்.ஆள் ஒரு பக்தர். அதனால் தான் நான் அவரிடம், இறைவன் உங்கள் முன் வந்தால்ஆஸ்பத்திரியும் டிஸ்பென்சரியுமா கேட்பீர்கள்? என்று கேட்டேன்.
53
..
இறைக் காட்சி ஏன் கிடைக்கவில்லை என்று கேசவர் கேட்டார். பெயர், புகழ், படிப்பு, புலமை இவற்றை எல்லாம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அதனால் தான் கிடைக்கவில்லை” என்று சொன்னேன். குழந்தை நிப்பிளை- சிவப்பு நிப்பிளைச் சப்பிக் கொண்டிருக்கும் வரை தாய் வருவதில்லை- சிறிது நேரம் கழிந்து, நிப்பிளை எறிந்து விட்டு குழந்தை கதறினால் அவள் சோற்றுப் பானையை இறக்கி வைத்து விட்டு ஓடோடி வருகிறாள்.
நீங்கள் வழக்குகளைத் தீர்த்துக் கொண்டு திரிகிறீர்கள். தேவியும், போகட்டும்” என் மகன் வழக்குகளைத் தீர்த்து வைக்கிறான், மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறான். அப்படியே இருக்கட்டும், என்று நினைக்கிறாள்.
ஈசான் அப்போது குருதேவரின் பாதங்களைப் பிடித்த படிஉட் கார்ந்திருந்தார். பணிவுடன், நானாக விரும்பி இவைகளில் எல்லாம் ஈடுபடவில்லையே! என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது தெரியும், அது அன்னையின் விளையாட்டு! அவளுடைய லீலை. வாழ்க்கையில் கட்டி வைப்பது மகா மாயையின் திருவுளம். எப்படி தெரியுமா? பிறவிக் கடலில் படகுகள் எத்தனையோ மிதக்கின்றன. எத்தனையோ மூழ்குகின்றன, மேலும்.
விண்ணில் மிதக்கும்................
............... நீயும் சிரிக்கிறாய்.
லட்சத்தில் ஓரிருவர் முக்தர்கள் ஆகின்றனர். மற்ற எல்லோரும் அவளது திருவுளத்தின் படி கட்டுண்டு கிடக்கின்றனர்.
கண்ணா மூச்சி விளையாட்டைப் பார்த்ததில்லையா? ஆட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். என்பது தாய்ச்சியின் விருப்பம். எல்லோரும் அவளைத் தொட்டு விட்டால் ஆட்டம் தொடர்ந்து நடக்காது . அதனால் எல்லோரும் தன்னைத் தொட அவள் விடுவதில்லை.
இன்னும் ஒன்று. பெரிய கடைகளில் அரிசியைப் பெரிய குவியலாகக் கூட்டி வைத்திருப்பார்கள்- கூரையைத் தொடுமளவுக்கு உயரமாக இருக்கும். அரிசி இருக்கும், பருப்பும் இருக்கும். அவற்றை எலி தின்னாமலிருப்பதற்காக கடைக்காரன் ஒரு தட்டில் சர்க்கரை சேர்த்த கொஞ்சம் பொரியை வைத்து விடுகிறான். அதன் வாசனையும் இனிப்பும் எலிக்கு மிகவும் பிடித்தவை. ஆகவே உள்ள எலிகள் எல்லாம் தட்டில் சென்று சாடுமே தவிர பெரிய குவியல்களைப் பற்றி அவை அறிவதே இல்லை. உயிரினங்கள் காமினீ- காஞ்சனத்திலேயே மயங்கி விடுகின்றன. இறைவன் என்ற ஒருவரைப் பற்றி அறிவதே இல்லை.
ராமர் நாரதரிடம்,” என்னிடம் ஏதாவது வரம் கேளும்” என்றார். அதற்கு நாரதர், “ருாமா , இனி என்ன பாக்கி இருக்கிறது? என்ன என்று நான் கேட்பேன்?வரம் தந் தே ஆக வேண்டும் என்றால், உன் பாத கமலங்களில் தூய பக்தி உண்டாகுமாறும், உலகத்தை மயக்கும் உன் மாயையில் நான் மயங்காமல் இருக்குமாறும் செய்தருள்” என்று வேண்டினார். உடனே, ராமர், ” நாரதரே வேறு ஏதாவது கேளும்” என்றார். அதற்கு நாரதர், ” ராமா வேறு எதுவும் எனக்கு வேண்டாம். உனது பாத கமலங்களில் தூய பக்தி ஏற்பட வேண்டும். இதை அருளினால் போதும்” என்றார்.
நான் அன்னையிடம், அம்மா! எனக்கு பெயர், புகழ் வேண்டாம். தாயே! எட்டு சித்தியும் நூறு சித்தியும் எதுவும் வேண்டாம், உடல் சுகம் வேண்டாம். எனக்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான்- அது உனது பாதத் தாமரைகளில் சுத்த பக்தி. அதை அருள்வாய்.” என்று வேண்டினேன்.
அத்யாத்ம ராமாயணத்தல் லட்சுமணன் ராமரிடம், ராமா! நீ என்னென்ன நிலைகளில் என்னென்ன வடிவங்களில் இருக்கிறாய்? உன்னை எப்படி அறிவது? என்று கேட்கிறான். அதற்கு ராமர், தம்பி! ஒன்றை அறிந்து கொள். எங்கே ஊர்ஜிதா பக்தி உள்ளதோ, அங்கு நான் நிச்சயம் இருப்பேன்” என்றார். ஊர்ஜிதா பக்தன் சிரிக்கிறான். அழுகிறான், ஆடுகிறாள், பாடுகிறான்! யாருக்காவது இப்படிப்பட்ட பக்தி தோன்றுமானால் அங்கே இறைவன் எழுந்தருளியிருப்பதை உறுதியாக அறிந்து கொள். சைதன்ய தேவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தது.
பக்தர்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். தெய்வ வாக்குக்கேட்பது போல் அதில் ஆழ்ந்து போயிருந்தனர். சிலர் தங்களுக்குள், பிரேமையில் சிரிக்கிறான், அழுகிறான், ஆடுகிறான், பாடுகிறான் என்கிறார் குருதுவர். இது சைதன்ய தேவரின் நிலை மட்டும் அல்லவே, குரு தேவரின் நிலையும் இதுவே அல்லவா? அப்படியானால் இங்கு இறைவன் எழுந்தருளி இருக்கிறார் அல்லவா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தனர்.
நிவிருத்தி மார்க்கம் பற்றிய குருதேவரின் தேனொழுகும் இனிய பேச்சு தொடர்ந்தது. மேகம் முழங்குவது போல், ஈசானுக்கு உபதேச மொழிகள் கம்பீரமாகத் தொடர்ந்தன.
ஸ்ரீராமகிருஷ்ணர்( ஈசானிடம்)
முகஸ்முதிக் காரர்களின் பேச்சில் மயங்கி விடாதீர்கள். மாடு செத்துக் கிடந்தால் கழுகுகள் சூழ்ந்து கொள்வது போல் அவர்கள் உலகியல் மக்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். உலகியல் மக்களிடம் சாரம் இல்லை, அவர்கள் வெறும் சாணக் குவியல் போன்றவர்கள்! முகஸ்முதிக் காரர்கள். அவர்களிடம் வந்து, நீங்கள் கொடையாளி, அறிவாளி, தியானசீலர்” என்றெல்லாம் அளப் பார்கள். அவை வெறும் வார்த்தைகள் அல்ல, அம்புகள்! உலகியல் நிறைந்த பிராமணப் பண்டிதர்களின் நடுவில் இரவு பகலாக இருப்பதும் அவர்களுடைய புகழ்மொழிகளைக் கேட்பதும்- என்ன தலையெழுத்து!
உலகியல் மக்கள் மூன்று பேருக்கு அடிமைகள், அவர்களிடம் என்ன சாரம் இருக்க முடியும்? அவர்கள் மனைவிக்கு அடிமை, பணத்திற்கு அடிமை, மேலதிகாரிக்கு அடிமை! ஒருவன் இருக்கிறான்- பெயரைச் சொல்ல மாட்டேன்” எண்ணூறு ரூபாய் சம்பளம், ஆனால் மனைவியின் அடிமை, அவள் எழுந்திரு என்றால் எழுந்திருப்பான், உட்கார் என்றால் உட்காருவான்!
வழக்கு தீர்ப்பது , தலைமை தாங்குவது இதெல்லாம் என்ன வேலை? தயை, பரோபகாரம் எல்லாம் வேண்டிய அளவு செய்தாயிற்று?இதெல்லாம் செய்பவர்கள் வேறு வகுப்பைச்சேர்ந்தவர்கள். இறைவனின் திருவடித் தாமரைகளில் மனத்தை ச் செலுத்துவதற்கான நேரம் உங்களுக்கு வந்து விட்டது. அவரைப் பெற்றால் எல்லாம் பெறலாம். முதலில் இறைவன், அதன் பிறகு தயை, பரோபகாரம், உலக நன்மை, உயிர்களைக் கடைத்தேற்றுவது எல்லாம், அவற்றைப் பற்றி நீங்கள் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்? இலங்கையில் ராவணன் மாண்டான், அதற்கு பேகுலா கதறி அழுதாளாம்! உங்கள் விஷயமும் இது போல் தான் இருக்கிறது. எல்லாம் துறந்த துறவி ஒருவர் உங்களுக்கு, ” இன்னின்ன செய்” என்று சொல்லித் தந்தால் நல்லது. உலகியல் மக்கள் கூறுவது- அவர்கள் பிராமணப் பண்டிதர்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி- அது சரியாகாது.
பித்தனாகுங்கள். தெய்வப் பிரேமையில் பித்தனாகுங்கள்.” ஈசான் பைத்தியமாகி விட்டார். இந்த விஷயங்களெல்லாம் இனி அவரால் முடியாது” என்று மக்கள் அறியட்டும். வழக்குகளை தீர்த்து வைப்பது, தலைமை தாங்குவது என்றெல்லாம் அதன் பிறகு அவர்கள் உங்களிடம் வர மாட்டார்கள். நீர்ப் பாத்திரம் , உத்தரணி எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்” ஈசான், என்ற பெயருக்கு ஏற்றபடி வாழுங்கள்.
ஈசான்-
அம்மா, என்னைப் பித்தனாக்கு. ஞான ஆராய்ச்சியில் இனி பயனில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பித்தன். ஆம் அது தான் சரி, அதிக மாக தெய்வ சிந்தனை செய்தால் மூளை கலங்கி விடும்” என்று சிவநாத் கூறினார். அதற்கு நான், என்ன! உணர்வுப் பொருளை ச் சிந்திப்பதால் யாராவது உணர்வை இழப்பானா? என்றென்றும் சுத்த உணர்வு வடிவினர் இறைவன். அவருடைய உணர்வால் தான் எல்லாவற்றையும் உணர்கிறோம். அவருடைய உணர்வாலேயே எல்லாம் உணர்வுமயமாக விளங்குகிறது. யாரோ வெள்ளைக் காரனுக்கு மூளை குழம்பி விட்டதாம். அதற்குக் காரணம் அவன் அதிகமாக தெய்வ சிந்தனையில் ஈடுபட்டிருந்தது தானாம்- சொல்கிறார் இவர். ஒருவேளை இப்படியும் நடந்திருக்கலாம்- அவர்கள் அதிக மாக உலகப் பொருட்களைச் சிந்திக்கின்றனர். பாவனையில் நிறைந்தது உடல், அதனால் அறிவு அழிந்தது” என்று ஒரு பாட்டு உண்டு. ஆனால் இங்கு கூறப் படுகின்ற அறிவு புற உலகைப் பற்றிய அறிவு.
54
..
குருதேவரின் திருப் பாதங்களைப் பிடித்த படியே ஈசான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது கோயிலில் எழுந்தருளியுள்ள காளிதேவியின் திருவுருவைப் பார்க்கவும் செய்தார். தீப ஒளியில் அவளது திருமுகம் மென் முறுவலுடன் திகழ்ந்தது. குருதேவரின் திருவாயிலிருந்து வெளி வருகின்ற, வேத மந்திரங்களுக்கு ஒப்பான மொழிகளைக்கேட்டு பூரிப் படைவது போல் அவள் தோன்றினாள்.
ஈசான்( ஸ்ரீராமகிருஷ்ணர்)
உங்கள் திருவாயிலிருந்து வெளிவருகின்ற வார்த்தைகள் எல்லாம் அன்னை யிடமிருந்து வருகின்றன.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நான் எந்திரம், அவள் ஓட்டுபவள், நான் வீடு, அவள் அதில் வசிப்பவள். நான்தேர், அவள் செலுத்துபவள். அவள் என்னை எப்படி இயக்குகிறாளோ, அப்படி நான் இயங்குகிறேன், எப்படி சொல்கிறாளோ, அப்படி சொல்கிறேன். கலியுகத்தில் தெய்வத்தின் குரல் சாதாரணமாகக் கேட்பதில்லை. ஆனால் குழந்தை, பித்தன் என்று இப்படிப் பட்டவர்கள் மூலமாக அவள் பேசவே செய்கிறாள்!
மனிதன் குருவாக முடியாது. இறைவனின் திருவுளத்தாலேயே எல்லாம் நடை பெறுகிறது. மகா பாதகங்கள் பல பிறவிகளில் செய்த பாவங்கள், நீண்ட நாளைய அறியாமை எல்லாம் அவளது அருள் பிறந்தால் ஒரு கணத்தில் பறந்தோடி விடும்.
ஆயிரம் ஆண்டுகளாக இருண்டு கிடந்த அறைக்குள் திடீரென்று வெளிச்சம் வந்தால் அந்த இருள் சிறிது சிறிதாக மறையுமா அல்லது ஒரு கணத்தில் விலகுமா? வெளிச்சம் வந்ததும் எல்லா இருளும் ஒரேயடியாக விலகிவிடும்.
மனிதனால் என்ன செய்ய முடியும்? பல விஷயங்களை அவனால் பேச முடியும். ஆனால் கடைசியில் எல்லாம் இறைவனின் கையில்,” நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விட்டேன். இனிமேல் எல்லாம் நீதிபதியின் கையில்” என்பார் வக்கீல்.
பிரம்மம் செயலற்றது. அது படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் போது அதை ஆத்யா சக்தி என்கிறோம். அந்த ஆத்யா சக்தியை மகிழ்விக்க வேண்டும்.தேவீ மாகாத்மியத்தில் நீங்கள் படித்ததில்லையா? தேவர்கள் முதலில் ஆத்யா சக்தியைத் துதித்துப்போற்றினர். அவள் மகிழ்ந்தால் தான் ஹரியின் யோக நித்திரை கலையும்.
ஈசான்-
ஆம் சுவாமி, மது- கைடபர்களின் வதத்தின் போது பிரம்மா முதலிய தேவர்கள் துதித்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
காளி கோயிலுக்கு முன்னால் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சுற்றி பக்தர்கள் உட்கார்ந்திருந்தனர். அவரது திரு வாயிலிருந்து வந்த அமுத மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
குருதேவர் எழுந்தார். அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து தரையில் வீழ்ந்து அவளை வணங்கினார். பக்தர்கள் எல்லோரும் உடனே வந்து அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். எல்லோருக்கும் அவரது திருப் பாத துளியை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம்! அனைவரும் வணங்கிய பிறகு குருவேர் படிக்கட்டு வழியாக இறங்கி ம-வுடன் பேசிக் கொண்டே தமது அறையை நோக்கிச் சென்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( பாடியபடியே, மவிடம்)
காளியும் பிரம்மமும்...........
............................... பிரசாதரும் பேசி நிற்கிறார்.
தர்மம் அதர்மம் என்றால் என்ன தெரியுமா? இங்கே தர்மம் என்றால் வைதீக தர்மம். அதாவது தானம் செய்வது, சிராத்தச் சடங்குகள், ஏழைகளுக்கு உணவளிப்பது போன்றவை. இத்தகைய கருமங்களைத் தான் கர்ம காண்டம்என்கின்றனர். இதுமிகவும் கடினமான வழி. பற்றற்று பணி செய்வது மிகக் கடினம். ஆகையால் தான் பக்தி நெறியைக் கடைப் பிடிக்குமாறு கூறப் பட்டுள்ளது.
ஒரு வீட்டில் சிராத்தச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கசாப்புக் கடைக்காரன், ஒருவன் வெட்டுவதற்காக மாடு ஒன்றை ஓட்டிக் கொண்டு போனான். மாடு முரண்டு பிடித்தது. அதை அடக்குவதில் அவன் களைத்து விட்டான். எனவே அந்த சிராத்த வீட்டில் சென்று சாப்பிடலாம், சாப்பிட்டு தெம்பு வந்ததும் மாட்டை ஓட்டிக் கொண்டு போகலாம் என்று நினைத்தான். அப்படியே செய்யவும் செய்தான். பிறகு மாட்டைக் கொன்ற போது பசு வதையின் பாவம், சிராத்தச் சடங்கு செய்தவனையும் பற்றிக் கொண்டது. அதனால் தான் கர்ம காண்டத்தைவிட பக்தி நெறி சிறந்தது என்கிறேன்.
குருதேவர் ம-வுடன் அறையை அடைந்தார். மெல்லிய குரலில் பாடினார். நிவிருத்தி மார்க்கம் பற்றி அவர் கூறியதே பாடலிலும் எதிரொலித்தது. மெல்லிய குரலில் பாடினார் அவர்-
எல்லாம் நீயே எடுத்துக் கொள்..............
...................... மட்டும் விட்டுவிடு.
குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்தார். அதர், கிசோரி, இன்னும் மற்ற பக்தர்கள் வந்து தரையில் அமர்ந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( பக்தர்களிடம்)-
ஈசானைப் பார்த்தேன். என்னவோ, ஒன்றும் நடக்கவில்லை! ஐந்து மாதம் புரச்சரணம் செய்திருக்கிறார்! வேறு யாராவது இதைச் செய்திருந்தால் எவ்வளவோ நடந்திருக்கும்.
அதர்-
எங்கள் முன்னிலையில் நீங்கள் அவரிடம் அவ்வளவெல்லாம் சொன்னது நல்லதல்ல.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதென்ன அப்படிச் சொல்கிறாய்? அவர் அதிக ஜபம் செய்பவர். அவரை இந்தப் பேச்சுக்கள் ஒன்றும் செய்யாது.
சிறிது பேச்சு வார்த்தைக்குப் பிறகு குருதேவர் அதரிடம், ஈசான் பெரிய கொடையாளி. எவ்வளவோ ஜபதவமும் செய்கிறார்” என்று சொன்னார்.
பின்னர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பக்தர்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று குருதேவர் அதரை மனத்தில் கொண்டு , ” உங்களிடம் யோகம் போகம் இரண்டும் இருக்கின்றன” என்றார்.
55
..
சனிக் கிழமை, அக்டோபர் 18, 1884
....................................................
அமாவாசை, காளி பூஜை நாள். இரவு பத்து பதினொரு மணி அளவில் காளி பூஜை தொடங்கவிருந்தது. இந்த அமாவாசை காரிருள் வேளையில் குருதேவரைத் தரிசிப்பதற்காக சில பக்தர்கள் பகலிலேயே வந்து விட்டனர்.
இரவு சுமார் எட்டு மணிக்கும- தனியாக வந்து சேர்ந்தார்.
காளி கோயிலில் விழா ஏற்பாடுகள் தொடங்கிவிட்டிருந்தன.தோட்டத்தில் அங்கங்கே விளக்குகள் பிரகாசித்தன. கோயிலும் விளக்குகளின் ஒளியால் அழகுடன் திகழ்ந்தது. இசை வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. வேலை யாட்கள் பரபரப்புடன் இங்குமங்குமாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். அன்று ராணி ராசமணி கட்டிய காளி கோளிலில் பூஜை நிகழும், பின்னிரவில் யாத்ரா நடைபெறும் என்பது தட்சிணேசுவர மக்களுக்குத் தெரிந்திருந்தது. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை கிராமவாசிகள் அன்னையை வணங்கி வழிபட திரள் திரளாக வந்தபடி இருந்தனர்.
பிற்பகலில் ராஜ் நாராயணரின் தேவீ மாகாத்மியப் பாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. பக்தர்கள் சூழ குருதேவர் பிரேமானந்தத்துடன் பாடல்களைக்கேட்டார். இரவில் காளி பூஜை நடக்கவிருந்தது. குருதேவர் ஆனந்தத்தில் மூழ்கியவராக இருந்தார்.
இரவு எட்டு மணிக்கு அங்கு வந்து சேர்ந்த ம- குருதேவர் சிறிய கட்டிலில் அமர்ந்திருப்பதையும், அவருக்கு அருகே, தரையில் பாபுராம், சிறிய கோபால், ஹரிபதன், கிசோரி, நிரஞ்ஜனின் உறவுக் காரப் பையன், ஏடேதாவைச்சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆகியோர் உட்கார்ந்திருப்பதையும் கண்டார். ராம்லாலும் ஹாஸ்ராவும் இடையிடையே வந்து போய்க் கொண்டிருந்தனர். குருதேவருக்கு எதிரில் நிரஞ்ஜனின் உறவுப் பையன் தியானத்தில் ஈடுபட்டிருந்தான். அவனைத் தியானம் செய்யும் படி குருதேவர் கூறியிருந்தார்.
ம- குருதேவரை வணங்கி அமர்ந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு நிரஞ்ஜனின் உறவுப் பையன் குருதேவரை வணங்கி விடை பெற்றான்.ஏடேதாவைச்சேர்ந்த பையனும் அவனுடன் செல்வதாக குருதேவரை வணங்கிவிட்டு நின்று கொண்டிருந்தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(நிரஞ்ஜனின் உறவுப் பையனிடம்)
இனி என்று வருவாய்?
பக்தன்-
சுவாமி, ஒருவேளை திங்கட்கிழமை.
-ஸ்ரீராமகிருஷ்ணர்-
(பரிவுடன்)
விளக்கு வேண்டுமா? எடுத்துக் கொண்டு போகிறாயா?
பக்தன்-
வேண்டாம் சுவாமி! இந்தத்தோட்டத்திற்கு அருகில் தான் என் வீடு. விளக்கு தேவையில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( ஏடேதா சிறுவனிடம்)
நீயும் கிளம்பி விட்டாயா?
சிறுவன்-
ஆம் சுவாமி! ஜலதோஷம் பிடித்திருக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அப்படியா! தலையை மூடிக் கொண்டு போ.
சிறுவர்கள் இருவரும் மறுபடியும் குருதேவரை வணங்கி விடை பெற்றனர்.
அமாவாசை காரிருள், அதனுடன் தேவியின் பூஜை. குருதேவர் சிறிய கட்டிலில் ஒரு தலையணையில் சாய்ந்த வாறு அமர்ந்திருந்தார். அகமுக நிலை! இடையிடையே பக்தர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.
திடீரென்று ம-வையும் மற்ற பக்தர்களையும் பார்த்தவாறு கூறினார். ஆகா! அந்தப் பையனின் தியானம்! (ஹரிபதனிடம்) என்ன தியானம் அல்லவா!
ஹரிபதன்-
ஆம் சுவாமி, கட்டை போல் இருந்தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(கிசோரியிடம்)-
அந்தப் பையனைத் தெரியுமா? நிரஞ்ஜனுக்கு ஒரு வகையில் சகோதரன் உறவு.
மறுபடியும் எல்லோரும் மௌனமாக இருந்தனர். ஹரிபதன் குருதேவருக்குப் பாத சேவை செய்து கொண்டிருந்தான். மாலையில் தேவீ மாகாத்மியப் பாடல்களைக்கேட்டிருந்தார் குருதேவர். அவற்றை மெல்லப் பாடினார். பிறகு பாடினார்-
அன்பே உருவாம் காளியை
அறிந்தவர் யாரோ உலகம் தனிலே!
குருதேவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். காளி பூஜை நாள், ஆதலால் அவளைப் பற்றிப் பாடினார்.
படைப்பு முழுவதும்...............
........................... நியும் மிதக்க முயன்றிடுவாய்!
குருதேவர் பாடிக் கொண்டே ஆனந்த போதையில் ஆழ்ந்தார். இவை எல்லாம் ஆனந்த போதையை ஊட்டுகின்ற பாடல்கள்என்று கூறிவிட்டு மறுபடியும் பாடலானார்-
அன்னை காளியே.............
......................... திகழ்வுறக் கிடக்கின்றானே!
பாடல் நிறைவு பெற்றது. ராஜ்நாராயணரின் இரண்டு பிள்ளைகள் குருதேவரை வந்து வணங்கினர். நேற்று மாலை கோயில் மண்டபத்தில் ராஜ் நாராயணன் தேவீ மாகாத்மியம் பாடிய போது அந்தச் சிறுவர்களும் அவருடன் பாடினர். படைப்பு முழுவதும் இவ்வுலகில்” என்ற பாடலை குருதேவர் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பாடினார்.
அந்தச் சிறுவர்களுள் இளையவன் குருதேவரிடம், திருவருட் பேறு பெற்ற” என்ற பாட்டை ஒரு முறை நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும் என்றான். குருதேவர், அருமைச் சகோதரர் கௌர் நிதாய்” என்ற பாட்டா? என்று கேட்டுக் கொண்டே அதனைப் பாடினார்.
பாட்டு முடிந்தது. ராம்லால் வந்தார். குருதேவர் அவரைப் பார்த்து, இன்று காளி பூஜை நாள். சிறிது பாடேன்” என்றார். ராம் லால் பாடினார்.
யுத்த க் களத்தில்..........................
................. இவள் யாரோ?
குருதேவர் தெய்வீகப் பேரானந்தத்தில் ஆடினார்.ஆடிய படியே பாடினார்-
அன்னை............
................ மனவண்டு!
பாடலும் ஆடலும் முடிந்தன. பக்தர்கள் மறுபடியும் தரையில் உட்கார்ந்தனர். குருதேவரும் சிறிய கட்டிலில் அமர்ந்தார். ம-விடம், நீ வரவில்லை, தேவீ மாகாத்மியப் பாடல்களை எவ்வளவு அழகாகப் பாடினார்கள் தெரியுமா? என்றார்.
56
..
சிந்தி பிரம்ம சமாஜத்தில்
...........................................
ஞாயிறு, அக்டோபர் 19, 1884
..........................................
பிரம்ம சமாஜ பக்தர்கள் சிந்தி பிரம்ம சமாஜத்தில் கூடினர்.வேயி மாதவ பாலின் அழகிய தோட்ட வீட்டில் சரத் கால பிரம்ம சமாஜ விழா கொண்டாடப் படுகிறது. காலை பிரார்த்தனை முதலியவை நிறைவுற்றன.
குருதேவர் நாலரை மணியளவில் அங்கு வந்தார். அவருடைய வண்டி தோட்டத்தின் நடுப் பகுதிக்கு வந்து நின்றது. பக்தர்கள் கூட்டமாக அவரைச் சுழ்ந்தனர். முற்றத்தில் வழி பாட்டு மேடை அமைத்திருந்தனர். எதிரில் வராந்தா. அங்கே குருதேவர் உட்கார்ந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்தனர். விஜயர், திரைலோக்கியர் முதலான பிரம்ம சமாஜ பக்தர்களும் அங்கு இருந்தனர். சமாஜத்தைச்சேர்ந்த உதவி நீதிபதி ஒருவரும் இருந்தார்.
விழாவின் காரணமாக சமாஜ அறை மிகுந்த பொலிவுடன் திகழ்ந்தது. அங்கங்கே பல வண்ணக் கொடிகள் கட்டப் பட்டிருந்தன. வீட்டு மாடியிலும் ஜன்னல்களிலும் கட்டப் பட்டிருந்த இலைத்தோரணங்கள் அங்கே உண்மையிலேயே மரங்கள் நிற்பது போன்ற பிரமையை ஏற்படுத்தின. எதிரே காணப் பட்ட குளத்தின் தெளிந்த நீரில் மாசுமறுவற்ற சரத்கால நீல வானம் பிரதிபலித்தது. தோட்டத்தில் உள்ள பல வண்ணப் பாதைகளின் இரு புறங்களிலும் வரிசையாக நின்ற மரங்களில் மலர்களும் கனிகளும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அன்று பக்தர்களுக்கு குருதேவரின் திருவாயிலிருந்து வருகின்ற வேத த்வனியைக்கேட்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. எந்த த்வனி பண்டைய காலத்தில் இந்திய ரிஷிகளின் திருவாயிலிருந்து வேதவடியில் வெளிவந்ததோ, எந்த த்வனி மீண்டும் ஒரு முறை மனி த உருவில் வந்த முற்றும் துறந்த முனி புங்கவரும், பிரம்மத்தில் ஒன்றிய உயிரைக் கொண்டவரும், உலக உயிர்களின் துன்பங்களைக் கண்டு உள்ளம் கசிந்துருகியவரும், பக்த வாத்சலரும், பக்தியே அவதரித்து வந்தது போன்றவரும், இறையன்பில் திளைத்த வருமான ஏசுநாதரின் திரு மொழிகளாக அவரது படிப்பு வாசனையற்ற பன்னிரண்டுசெம்படவச் சீடர்களுக்காக க் கூறப் பட்டதோ, எந்த த்வனி புண்ணியத் தலமாகிய குருஷேத்திரத்தில் பூரணப் பிரம்மமாகிய ஸ்ரீகிருஷ்ணரின் அமர வாக்குகளாக பகவத்கீதை என்ற வடிவில் வெளிப் பட்டதோ, எந்த த்வனி அர்ஜுனனுக்குத்தேரோட்டியாக மனித உருவில் வந்திருந்த சச்சிதானந்த குருவின் இடிபோன்ற கம்பீரமான குரலிலிருந்து பெருக் கெடுத்ததோ, பணிவோடும் ஏக்கத்தோடும் வணங்கி நின்ற அர்ஜுனனால் கேட்கப் பட்டதோ அதே தேவ த்வனியைக்கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு அன்று கிடைத்தது.
குருதேவர் ஆசனத்தில் அமர்ந்தார். நன்றாக அலங்கரிக்கப் பட்ட வழிபாட்டு மேடையைத் தலை குனிந்து வணங்கினார். அங்கே ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற இருந்ததால் அந்த மேடையை ஒரு புண்ணியத் தலமாகக் கண்டார் போலும்! அங்கே இறைவனைப் பற்றிய பேச்சு நிகழ இருந்ததால் எல்லா புண்ணியத்தலங்களும் அங்கே சங்கமமாகியிருந்ததை அவர் கண்டிருக்க வேண்டும். நீதி மன்றத்தை க் கண்டதும் வழைக்கும் நீதிபதியும் நினைவிற்கு வருவது போல், ஹரி கதை நடக்க விருந்த இடத்தைக் கண்டதும் அவருக்கு இறைவனைப் பற்றிய உணர்வு மேலிட்டது.
திரைலோக்கியர் பாடத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( திரைலோக்கியரிடம்)
அப்பனே! உனது அந்த அற்புதப் பாட்டு- ” பித்தனாய் ஆக்கி ட வேண்டும்” என்ற அந்தப் பாட்டைப் பாடேன்.
திரைலோக்கியர் பாடினார்.
பித்தனாய் ஆக்கிட வேண்டும் அம்மா இந்தப்
பேதையை பிரம்ம மயப் பொருளே!..........
பாடலைக்கேட்ட படியே குருதேவர் பரவசத்தில் ஆழ்ந்தார். அப்படியேசமாதியில் மூழ்கினார். மஹத் தத்துவத்தைக் கடந்து, இருபத்து நான்கு தத்துவங்களையும் கடந்து, எல்லா தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டதாக விளங்கும் தத்துவத்தைத் தன்னுள் தாம் காண்பது என்ற நிலையில் திளைத்திருந்தார். கர்மேந்திரம், ஞானேந்திரியம், மனம், புத்தி அகங்காரம், எல்லாம் ஒடுங்கி விட்டன. உடல் மட்டும் தீட்டப் பட்ட சித்திரப் பாவயைப்போல் அசைவின்றி இருந்தது.முன்பொரு சமயம் பாண்டவர் நாதனான ஸ்ரீகிருஷ்ணரின் இது போன்றநிலையைக் கண்ட பாண்டவ சகோதரர்கள் அவரிடம் ஒன்றிப்போனவர்களாய் அழுதனர். அப்போது, மனித குலத்திற்கே பெருமை தேடித் தந்த பீஷ்ம பிதாமகர் தமது இறுதிக் காலத்தில் அம்புப் படுக்கை யில் படுத்து தெய்வ தியானத்தில் மூழ்கி இருந்தார். குருஷேத்திர யுத்தம் முடிந்து விட்டிருந்தது.அந்த நாட்கள் உண்மையில் அழ வேண்டிய நாட்களாகத் தான் இருந்தன. ஸ்ரீகிருஷ்ணரின் இந்த சமாதி நிலையைப் புரிந்து கொள்ள இயலாத பாண்டவர்கள் அழுதனர். அவர் உடலை உகுத்து விட்டார் என்றே எண்ணிக் கலங்கினர்.
இந்த தெய்வ ப்பேருணர்வு நிலை மிக ஆழமானது. இந்த நிலையில் இருப்பவர்கள் குடிகாரனைப்போல் என்னென்னவோ பேசுவார்கள்.
சிறிது நேரம் சென்றதும் குருதேவருக்குச் சிறிது புற வுணர்வு வந்தது. பரவச நிலையிலேயே பிரம்ம சமாஜ அன்பர்களிடம் அவர் பேசினார். பிறகு பரவச நிலையிலிருந்து சிறிது சிறிதாக இறங்கி வந்து கடைசியில் முன் பிருந்த சாதாரண நிலையை அடைந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( பரவச நிலையில்)
அம்மா, எனக்கு மதுவின் ஆனந்தம் வேண்டாம். நான் அதை விரும்பவில்லை. ஸித்தியைச் சாப்பிடுவேன். ஸித்தி என்பது இறையனுபூதிதான், அஷ்ட சித்திகள் எல்லாம் சித்திகள் அ ல்ல,(அணிமா, மகிமா, முதலிய) சித்திகைளைப் பற்றி கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ” தம்பி, அஷ்ட சித்திகளில் ஒன்றாவது இருப்பவன் என்னை அடைய மாட்டான் என்பதை அறிந்து கொள்” என்றார். ஏனெனில் சித்திகள்இருந்தால் ஆணவம் இருக்கும்” ஆணவம் துளியளவு இருந்தாலும் இறைவனைப் பெற முடியாது.
சிலரது கருத்துப் படி பிரவர்த்தகன், சாதகன், சித்தன், சித்தரில் சித்தன் என்று நான்கு வகை பக்தர்கள் உள்ளனர்.
இப்போது தான் இறை வழிபாட்டில் ஈடுபட ஆரம்பித்திருப்பவன் பிரவர்த்தகன். அவன் நெற்றியில் சின்னங்களை அணிவான். திலகம், மாலை போன்றவை அணிந்து கொள்வான்.
பல புற ஆசாரங்களைக் கடைப் பிடிப்பான். சாதகன் இன்னும் சற்று முன்னேறியவன். இவனிடம் புற ஆடம்பரம் குறைந்திருக்கும். இறைவனைப் பெறுவதற்காக மன ஏக்கம் கொள்வான். இதய பூர்வமாக அவரை அழைப்பான், நாமஜபம் செய்வான், எளிய உள்ளத்துடன் பிரார்த்திப்பான், சித்தன் யார்? இறைவன் இருக்கிறார், அவரே அனைத்தையும் செய்கிறார் என்ற திடமான அறிவு உடையவன், இறைவனைத் தரிசித்தவன். சித்தரில் சித்தன் யார்? இறைக்காட்சி பெற்றவன் மட்டும் அல்ல, இறைவனுடன் உரையாடி மகிழ்பவன், அவர்களுள் சிலர் தந்தை பாவனையிலும், சிலர் தாய் பாவனையிலும் சிலர் தோழமை பாவனையிலும், வேறு சிலர் தலைவன்- தலைவி பாவனையிலும் அவருடன் உரையாடு கின்றனர்.
விறகில் நிச்சயமாக நெருப்பு இருக்கிறது என்று நம்புவது, விறகிலிருந்து நெருப்பு வெளிப் படுத்தி, சோறு சமைத்துச் சாப்பிட்டு அமைதியும் நிறைவும் அடைவது- இரண்டும் வேறானவை.
இறைவனுடைய நிலை இது தான் என்று வரையறுத்துக் கூற முடியாது.ஒரு நிலை பெரியதென்றால் அதைவிடப் பெரியதும், அதைவிட மிகப் பெரியதுமான எவ்வளவோ நிலைகள் அவருக்கு உள்ளன.
இவர்கள் பிரம்ம ஞானிகள், அருவவாதிகள் . அது நல்லது. ( பிரம்ம பக்தர்களிடம்) உருவத்திலோ அருவத்திலோ ஏதாவது ஒன்றில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் இறையனுபூதி கிடைக்கும். இல்லை யென்றால் இல்லை. உறுதியாக இருந்தால் உருவவாதியும் இறைக் காட்சி பெறுவான்., அருவவாதியும் பெறுவான். இனிப்பு அப்பத்தை நேராகப் பிடித்துத் தின்றாலும் சரி, கோணலாகப் பிடித்துத் தின்றாலும் சரி, அது இனிப்பாகவே இருக்கும்( எல்லோரும் சிரித்தனர்) ஆனால் உறுதி வேண்டும். மன ஏக்கத்துடன் அவரை அழைக்க வேண்டும்.
உலகியல் மனிதனின் கடவுள் எப்படி இருப்பார் தெரியுமா? சித்தியும் பெரியம்மாவும் சண்டை போடுவைதைக்கேட்டு விட்டு, குழந்தைகள் விளையாடும் போது,” கடவுள் ஆணையாக” என்று சொல்வதுபோல், அல்லது வெற்றிலையை வாயில் அடக்கிக் கொண்டு, கையில் ஸ்டிக்கையும் சுழற்றியபடி தோட்டத்தைச் சுற்றி உலவிவருகின்ற பணக்காரன் வழியில் ஒரு மலரைப் பறித்து நண்பனிடம் காட்டி,ஆகா, இறைவன் எவ்வளவு ப்யூட்டிஃபுல் மலரைப் படைத்திருக்கிறான்” என்று சொல்வது போல் இப்படிப்பட்ட மன நிலை கணநேரத்திற்கு மட்டுமே, பழுக்க க் காய்ந்த இருப்பில் நீர்த்துளி போன்றது அது.
57
..
ஏதாவது ஒன்றில் உறுதியாக இருக்க வேண்டும். மூழ்கு! இல்லாமல் கடலின் அடி மட்டத்தில் இருக்கும். ரத்தினங்களைப் பெற முடியாது. மேல் மட்டத்தில் மிதந்தால் ரத்தினம் கிடைக்காது.
இப்படிக் கூறிவிட்டு, எந்தப் பாட்டினால் கேசவர் முதலிய பக்தர்களின் மனத்தைப் பரவசப் படுக்கினாரோ, அந்தப் பாட்டைத் தம் இனிய குரலில் பாடினார் குருதேவர். பக்தர்களுக்குத் தாங்கள்
சொர்க்கத்திலோ வைகுண்டத்திலோ இருப்பதாகத்தோன்றியது.
ஆழ்ந்து மூழ்குக...........
.................அழகெனும் கடலிடை...
மூழ்கு! இறைவனை நேசிக்கக் கற்றுக் கொள். அவரது அன்பில் ஆழ்ந்து மூழ்கு. உங்களுடைய பிரார்த்தனைகளைக்கேட்டுருக்கிறேன்! நீங்கள் ஏன் உங்கள் சமாஜத்தில் இறைவனுடைய ஐசுவரியத்தை அவ்வளவு அதிகமாக வருணிக்கிறீர்கள்? இறைவா, நீ ஆகாயத்தைப் படைத்திருக்கிறாய், பெரிய பெரிய கடல்களை உண்டாக்கியிருக்கிறாய், சந்திர லோகம், சூரிய லோகம், நட்சத்திரலோகம் என்றெல்லாம் படைத்திருக்கிறாய்- இப்படியெல்லாம் சொல்வதில் நமக்கு என்ன பயன்? எல்லோரும் பணக்காரனின் தோட்டத்தைப்பார்த்து வியப்பு அடைகின்றனர்- ஆகா, எப்படிப்பட்ட செடிகள்! எப்பேர்ப்பட்ட பூக்கள்! குளங்கள்! விருந்தினர் அறைகள்! சுவரில் என்ன அழகான படங்கள்! என்று வியந்து நிற்கின்றனர்.தோட்டத்தின் சொந்தக் காரராகிய பணக்காரனை எத்தனைபேர் தேடுகின்றனர்? யாரோ ஓரிருவர் தான். மன ஏக்கத்துடன் இறைவனைத்தேடினால் அவரது காட்சி கிடைக்கிறது, நான் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் போல் அவரிடம் பேசலாம், அளவளாவலாம். சத்தியமாகச் சொல் கிறேன், அவரைக் காணலாம்! இதையெல்லாம் யாரிடம் சொல்வேன்? யார் தான் நம்புவார்கள்?
சாஸ்திரங்களில் இறைவனைக் காணமுடியுமா? மிஞ்சிப்போனால், அவற்றைப் படிப்பதன் மூலம், இறைவன் இருக்கிறார் என்ற அறிவு வரலாம். அவ்வளவு தான், ஆனால் மூழ்காவிட்டால் அவர் காட்சி தர மாட்டார். மூழ்கிய பிறகு அவரே அறிவைத் தந்தால் தான் சந்தேகங்கள் விலகும். ஆயிரம் நூல்களைப் படிக்கலாம். ஆயிரக்கணக்கான சுலோகங்களைச் சொல்லலாம். மன ஏக்கத்துடன் அவருள் மூழ்காவிட்டால் அவரைப் பற்றிப் பிடிக்க முடியாது. வெறும் புலமையினால் மனிதர்களை மயக்கலாமே தவிர, இறைவனை மயக்க முடியாது.
சாஸ்திரங்கள் நூல்கள் இவற்றால் என்ன செய்ய முடியும்? அவரது அருள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. எதனால் அவரது அருள் கிடைக்குமோ, அதற்காக பாடுபடுங்கள். அருள் உண்டானால் அவரது காட்சி கிடைக்கும். அவர் உங்களுடன் பேசுவார்.
உதவி நீதிபதி-
சுவாமி! அவரது அருள் ஒருவனுக்கு அதிகமாகவும், ஒருவனுக்குக் குறைவாகவும் கிடைக்கிறதா? அப்படியானால் அவர் பாரபட்சமானவர் என்ற குற்றம் ஏற்படாதா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது எப்படி? குதிரையும் லகானும் ஒன்றாகி விடுமா? நீங்கள் கேட்ட கேள்வியைத் தான் வித்யா சாகரும் ஒருமுறை என்னைக்கேட்டார்.- ” சுவாமி, கடவுள் சிலருக்கு அதிக சக்தியும் சிலருக்குக் குறைந்த சக்தியும் கொடுத்திருக்கிறாரா? என்று கேட்டார் அவர். அதற்கு நான், ” கடவுள் எங்கும் நிறைந்தவராக எல்லோருள்ளும் இருக்கிறார். எப்படி என்னுள் இருக்கிறாரோ அப்படியே எறும்பிலும் இருக்கிறார் . ஆனாலும் சக்தி வெளிப் பாட்டில் வேறுபாடு உள்ளது. எல்லோரும் சரிசமம் என்றால் வித்யா சாகர் என்ற பெயரைக்கேட்டு நாங்கள் ஏன் உங்களைப் பார்க்க வர வேண்டும்? உங்களுக்கு என்ன இரண்டு கொம்புகளா முளைத்திருக்கின்றன? இல்லையே, நீங்கள் இரக்க குணம் படைத்தவர், படித்தவர் . இப்படிப்பட்ட குணங்கள் பிறரை விட உங்களிடம் அதிகமாக உள்ளன.ஆகவே தான் உங்களுக்கு இவ்வளவு புகழ். தனியாக நின்று நூறு பேரைத்தோற்கடிப்பவனும் இருக்கிறான். ஒருவனைக் கண்டு பயந்து ஓடுபவனும் இருக்கிறான், பார்த்த தில்லையா? என்று கேட்டேன்.
சக்தி வேறுபாடு இல்லாவிட்டால் மக்கள் கேசவரை ஏன் இந்த அளவுக்கு மதிக்க வேண்டும்?
படிப்பிற்காக ஆகட்டும், பாட்டிற்காக வாத்தியங்களுக்காக லெக்சருக்காக ஆகட்டும், அல்லது வேறு எதற்காகவும் ஆகட்டும், யாரையாவது பலரும் மதித்தால் அவரிடம் இறைவனின் விசேஷ சக்தி உள்ளது என்பதை நிச்சயமாக அறிந்து கொள் என்று கீதை கூறுகிறது.
பிரம்மசமாஜ பக்தர்( உதவி நீதிபதியிடம்)-
அவர் சொல்வதை ஒப்புக் கொண்டு விடுங்களேன்!
ஸ்ரீராமகிருஷ்ணர்( பக்தரைப் பார்த்து)-
நீ என்ன மனிதனப்பா! சொல்வதில் நம்பிக்கை ஏற்படாமல் அதை அப்படியே ஒப்புக் கொள்வதா? அது கபடத்தனம்! நீ ஒரு கள்ள நாணயம் என்பது தெரிகிறது.
பிரம்ம சமாஜ பக்தர் வெட்கினார்.
உதவி நீதிபதி-
சுவாமி! குடும்ப வாழ்க்கையை விட வேண்டுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வேண்டாம், ஏன் விட வேண்டும்? குடும்பத்தில் இருந்து கொண்டே சாதிக்க முடியும். ஆனால் முதலில் சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.தனிமையில் தங்கி, இறைவனைக் குறித்துச் சாதனைகள் செய்ய வேண்டும். வீட்டுக்கு அருகில் ஓர் அறை தயார்ப் படுத்த வேண்டும். சாப்பிட மட்டும் வீட்டிற்கு ஒரு முறை போய் வருவதென்று வைத்துக் கொள்ள வேண்டும். கேசவர், பிரதாப் முதலியோர், சுவாமி, நாங்கள் ஜனகரைப்போன்றவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், வாயினால் ஜனக ராஜா என்று சொல்லி விட்டால், ஜனகராகி விட முடியாது.ஜனகர், தலை கீழாக நின்று தனிமையில் எவ்வளவோ தவம் செய்திருக்கிறார்! நீங்கள் சிறிதாவது செய்யுங்கள். அப்போது ஜனக ராஜா ஆகலாம். ஒருவனுக்கு மள மளவென்றுஆங்கிலம் எழுத முடிகிறது. அதை அவன் என்ன ஒரே நாளிலா கற்றுக் கொண்டான்? அவன் ஏழை, ஒருவர்வீட்டிலேயே தங்கி சமையல் வேலை செய்தான், இரண்டொரு கவளம் சாப்பிட்டு விட்டு, பல சிரமங்களுக்கிடையில் எழுதப் படிக்க கற்றுக் கொண்டிருக்கலாம். அதனால் தான் இப்பொழுது மளமளவென்று எழுதுகிறான்” என்றேன்.
கேசவரிடம், மேலும் கூறினேன். தனிமையில் சென்று தங்காவிட்டால் நீண்ட நாளைய நோய் எவ்வாறு குணமடையும்?நோயோ கடும் காய்ச்சல்! அந்த நோயாளி இருக்கும் அறையிலேயே ஊறுகாயும் புளியும் தண்ணீர்ஜாடியும் வைத்தால் நோய் எப்படிக் குணமாகும்? ஊறுகாய், புளி என்று சொல்லும் போதே, என் நாக்கில் நீர் ஊறுவதைப் பார்( எல்லோரும் சிரித்தனர்) எதிரிலேயே இருந்தால் என்ன நடக்கும்! அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆண்களுக்குப் பெண் தான் இந்த ஊறுகாயும் புளியும். இன்ப நுகர்ச்சி நாட்டம் தான் தண்ணீர் ஜாடி. இன்ப தாகத்திற்கு முடிவே இல்லை. இதில், இந்தப் பொருட்கள் நோயாளியின் அறையிலேயே! கடும் காய்ச்சல் குணமாகுமா? சில நாட்களுக்கு ஊறுகாயோ புளியோ தண்ணீர் ஜாடியோ இல்லாத வேறு அறையில் தங்க வேண்டும். பிறகு காய்ச்சல் குணமான பிறகு மறுபடியும் பழைய அறைக்கு வந்தாலும் பயமில்லை. இறையனுபூதி பெற்ற பிறகு குடும்ப வாழ்க்கை யில் ஈடுபட்டாலும் காமினீ- காஞ்சனம் எதுவும் செய்ய முடியாது. அப்போது ஜனகரைப்போல் பற்றற்று இருக்க முடியும்.
58
..
குருதேவர் தொடர்ந்து பேசினார்…. ஆரம்பத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிமையில் இருந்து அதிக சாதனை செய்ய வேண்டும். அரச மரம் கன்றாக இருக்கும் போது அதைச் சுற்றி வேலி அமைக்கிறோம். இல்லாவிட்டால் ஆடு மாடுகளால் கேடு நேரும் ஆனால் அதன் தடி பருத்து விட்டால் வேலி தேவை இல்லை.யானையைக் கட்டி வைத்தாலும் மரத்துக்கு எந்தக் கேடும் இல்லை. தனிமையில் சாதனை செய்து இறைவனின் தாமரைப் பாதங்களில் பக்தியை ப் பெற்று, ஆற்றலை அதிகரித்துக் கொண்டு வீடு திரும்பு, குடும்பம் நடத்து. அப்போது காமினீ- காஞ்சனம் உன்னை ஒன்றும் செய்யாது.
பாலை உறை குத்தி தனியிடத்தில் வைத்து ணெ்ணெய் எடுக்க வேண்டும். ஞானம், பக்தி என்ற வெண்ணெயை மனம் என்ற பாலிலிருந்து ஒரு முறை எடுத்து விட்டால், பிறகு குடும்பம் என்ற தண்ணீரில் அதைப் போட்டாலும், அது ஒட்டாமல் மிதக்கும். ஆனால் அதே மனத்தைப் பக்குவப் படாத நிலையில், அதாவது பாலாக இருக்கும் நிலையில் குடும்பமாகிய, தண்ணீரில் வைத்தால் பால் தண்ணீருடன் கலந்து விடும். அந்த நிலையில் மனம் பற்றற்று மிதக்க முடியாது.
குடும்பத்தில் இருந்து கொண்டே இறையனுபூதி பெற வேண்டுமானால், ஒரு கையினால் இறைவனின் திருவடித் தாமரைகளைப் பிடித்துக் கொள், மற்றொரு கையினால் கடமைகளைச் செய். கடமைகளிலிருந்து ஓய்வு கிடைக்கும்போது இரு கைகளாலும் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளலாம். அப்போது தனிமையில் வாழ்ந்து, முற்றிலும் இறைவனைப் பற்றிய சிந்தனையிலும் சேவை யிலும் ஈடுபட முடியும்.
உதவி நீதிபதி-( மகிழ்ச்சியுடன்)
சுவாமி! இது மிகவும் அற்புதமான பேச்சு. தனிமையில் சாதனைகள் செய்யவேண்டும். சந்துதேகமில்லை!ஆனால் இதைத் தான் நாங்கள் மறந்து விடுகிறோம். ஒரேயடியாக ஜனகராக ஆகி விட்டதாக நினைக்கிறோம்.( குருதேவரும் மற்றவர்களும் சிரிக்கின்றனர்) குடும்பத்தைத் துறக்க வேண்டிய தேவையில்லை. வீட்டில் இருந்து கொண்டும் இறைவனைப் பெறலாம். இதைக்கேட்கும் போதே எங்களுக்கு அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகின்றன.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நீங்கள் ஏன் துறக்க வேண்டும்? போர் செய்தே தீர வேண்டும் என்னும் போது கோட்டைக்குள் இருந்து கொண்டே போரிடுவது நல்லது. புலன்களுடன் போரிட வேண்டும். பசி, தாகம் இவற்றுடன் போரிட வேண்டும். இந்தப் போர்களைக் குடும்பத்திற்குள் இருந்து கொண்டு செய்வது நல்லது. கலியுகத்தில் வாழ்க்கை உணவையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. உணவுக்கு வழியில்லாமல் போனால் கடவுள்- கிடவுள் எல்லாம் பந்து விடும்.” ஒருவன் தன் மனைவியிடம் ,” நான் குடும்பத்தைத் துறந்து போகப் போகிறேன்” என்றான். அவனது மனைவி சிறிது ஞான முடையவள். அவள் அவனிடம், நீங்கள் ஏன் சுற்றியலைய வேண்டும்? வயிற்றுப் பாட்டிற்காகப் பத்து வீடு ஏறி இறங்க வேண்டியதில்லை என்றால் போங்கள். அப்படிச் சுற்ற நேருமானால், அதைவிட இங்கே ஒரே வீட்டில் இருப்பது நல்லது” என்றாள்.
நீங்கள் ஏன் குடும்ப வாழ்வை விட வேண்டும்? வீட்டில் இருப்பது அதிக சௌகரியமானதும் கூட. சாப்பாட்டிற்காகக் கவலைப் பட வேண்டியதில்லை. மனைவியுடன் வசிக்கலாம், அதில் குற்றமில்லை. உடம்பைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வேண்டியது அருகிலேயே கிடைக்கும். நோய் வந்தால் சேவை செய்ய அருகிலேயே ஆட்கள் இருப்பார்கள்.
ஜனகர், வியாசர், வசிஷ்டர் எல்லாம் ஞானம் பெற்ற பிறகு குடும்பத்தில் வாழ்ந்தார்கள்.. இவர்கள் இரண்டு வாட்களைச் சுழற்றினார்கள்.ஒரு வாள் ஞானம், மற்றொன்று கர்மம்.
உதவி நீதிபதி-
சுவாமி, ஞானம் கிடைத்து விட்டதை எப்படி அறிந்து கொள்வது?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஞானம் கிடைத்தால் இறைவனைத் தொலைவில் காண மாட்டீர்கள். அதன் பிறகு அவர் ” அவர் அல்ல. ” இவர்” ஆகிவிடுவார். இதய நடுவில் அவரைக் காண முடியும். அவர் எல்லோருள்ளும் இருக்கிறார். தேடுபவன் அடைகிறான்.
உதவி நீதிபதி-
சுவாமி, நான் பாவி, அவர் என்னுள் இருக்கிறாரென்று எப்படிச் சொல்வேன்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பாவம், பாவம் என்று புலம்புவதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது. இது தான் கிறிஸ்தவ மதமா! ஒருவன் எனக்கு ஒரு புத்தகம் ( பைபிள்) தந்தான். அதைப் படிக்கச் சொல்லி, சிறிது கேட்டேன். இதே கதை தான்- பாவம், பாவம், பாவம் ” நான் இறைவனின் திரு நாமத்தைச் சொல்கிறேன். எம்பெருமானே, ராம், ஹரி என்று சொல்கிறேன். என்னிடமாவது பாவமாவது! இப்படிப் பட்ட நம்பிக்கை வேண்டும். நாமத்தின் சக்தியில் நம்பிக்கை வேண்டும்.
உதவி நீதிபதி-
சுவாமி , இந்த நம்பிக்கை எப்படி ஏற்படும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனிடம் அனுராகம் கொள்ளுங்கள்.” பிரபோ, அனுராகம் இல்லாமல் யாக யஜ்ஞம் செய்து உன்னை அறிய முடியுமா? என்று உங்கள் (பிரம்ம சமாஜப்) பாட்டிலேயே இருக்கிறதே! இந்த அனுராகம், இறைவனிடம் அன்பு எதனால் உண்டாகுமோ அதை அடைவதற்காக தனிமையில் மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள். அழுங்கள், மனைவிக்கு நோய் வந்து விட்டாலோ, பண நஷ்டம் ஏற்பட்டாலோ, வேலை கிடைப்பதற்காகவோ மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் வடிக்கின்றனர். இறைவனுக்காக யார் அழுகிறார்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
திரைலோக்கியர்-
சுவாமி! இதெற்கெல்லாம் நேரம் எங்கே? வெள்ளைக் காரர்களுக்கு வேலை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( உதவி நீதிபதியிடம்)-
அப்படியானால் இறைவனிடம் வக்காலத்து கொடுத்து விடு. நல்லவன் ஒருவனிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அந்த நல்லவன் தீங்கு செய்வானா? இறைவனிடம் இதய பூர்வமாக எல்லா பாரத்தையும் ஒப்படைத்துவிட்டு நீ கவலையில் லாமல் இரு. இறைவன் எந்த வேலையை உனக்குக் கொடுத்திருக்கிறானோ அதை மட்டும் செய்.
பூனைக் குட்டியிடம் கணக்குப் போடும் புத்தி இல்லை. அது மியாவ், மியாவ் என்று மட்டுமே கத்துகிறது. தாய்ப்பூனை அதை அடுக்களையில் கொண்டு வைத்தால் அங்கே கிடக்கிறது. மியாவ், மியாவ் என்றும் கூப்பிட மட்டும் செய்கிறது. தாய்ப் பூனை எஜமானின் மெத்தை மீது வைத்தாலும் அதே கதைதான், மியாவ், மியாவ் தான்.
உதவி நீதிபதி-
நாங்கள் இல்லறத்தார், இந்தக் கடமைகளையெல்லாம் எவ்வளவு காலம் செய்யவேண்டும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கட்டாயமாக உங்களுக்குக் கடமைகள் உள்ளன. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். மனைவிக்கு உணவு , உடை தந்து காப்பாற்றவேண்டும். உங்கள் காலத்திற்குப் பிறகும் அவள் வாழ்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீங்கள் இரக்கமற்றவர். சுகதேவர் முதலானவர்களிடம் இரக்கம் இருந்தது. இரக்கம் இல்லாதவன் மனிதனே அல்ல!
உதவி நீதிபதி-
குழந்தைகளை எது வரை பராமரிக்க வேண்டும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
தக்க வயது வரும் வரை, கோழிக் குஞ்சு பெரிதாகி விட்டால், தானே இரை தேடிக் கொள்ள வல்லதாகி விட்டால், தாய்க்கோழி அதைக் கொத்தி விரட்டும். அருகில் வர விடாது.( எல்லோரும் சிரித்தனர்)
59
..
உதவி நீதிபதி-
மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நீ உயிருடன் இருக்கும் வரை அவளுக்கு நல்ல விஷயங்களைச் சொல். செலவிற்குக் கொடு. அவள் கற்புடையவளாக இருந்தால் உன் காலத்திற்குப் பிறகும் அவளுக்குத்தேவையான ஏற்பாடுகளைச் செய்.
ஞானப் பித்து பிடித்துவிட்டால், அதன் பிறகு எதுவும் இல்லை. நாளைக்கு வேண்டி நீ நினைக்கா விட்டாலும் இறைவன் நினைப்பார். ஞானப் பித்து க் கொண்ட வனின் மனைவி மக்களைப் பற்றி இறைவன் நினைப்பார். சிறு குழந்தையை விட்டு விட்டு ஜமீன்தார் இறந்து போனால், நீதிமன்றம் நியமிக்கின்ற பொறுப்பாளர் அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். சட்டத்தைப் பற்றிய இந்த விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தானே?
உதவி நீதிபதி- ஆம் சுவாமி.
விஜயர்-
ஆகா! ஆகா! என்ன அற்புதமான பேச்சு! மனத்தை வேறெங்கும் அலையவிடாமல் இறைவனையே சிந்திப்பவன், பிரேமைப்பித்துக் கொண்டவன்- அவனது பொறுப்பை இறைவனே ஏற்கிறான்! பெற்றோரை இழந்த சின்னஞ்சிறு குழந்தையின் பொறுப்பை ஏற்க நீதி மன்றத்தின் ஆள் வந்து சேருகிறானே, அதைப்போல் . ஆகா! எனக்கு இந்த நிலை எப்போது ஏற்படும்? யாருக்கு ஏற்படுகிறதோ அவர்கள் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள்!
திரைலோக்கியர்-
சுவாமி, இல்லறத்தாருக்கு உண்மையிலேயே ஞானம் ஏற்படுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( சிரித்தபடியே)-
ஏனப்பா அப்படி கேட்கிறாய்? நீ தான் வெல்லத்திலும் பாகிலுமாக இருக்கிறாயே( எல்லோரும் சிரித்தனர்), இறைவனிடம் மனத்தை வைத்த படி குடும்பத்தில் தானே வாழ்ந்து வருகிறாய்? இல்லற வாழ்வில் ஏன் கிடைக்காது? நிச்சயமாகக் கிடைக்கும்.
திரைலோக்கியர்-
குடும்ப வாழ்வில் இருக்கும் ஒருவன் ஞானம் பெற்றிருப்பதை எப்படி அறிவது?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனின் திருநாமத்தைக் கூறினாலே கண்ணீரும், மயிர்க் கூச்செறிதலும் அவனுக்கு உண்டாகும். இறைவனின் மதுர நாமத்தைக்கேட்டாலே உடலில் மயிர் குத்திட்டு நிற்கும், கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியும்.
உலகியலில் இருக்கும் வரை, காமினீ- காஞ்சன நாட்டம் இருக்கும் வரை உடற்பற்று அழிவதில்லை. உலகியல் குறைகின்ற அளவுக்கு ஆன்ம ஞானத்தை நோக்கி முன்னேற முடியும். உடற்பற்றும் குறையும். உலகியல் அடியோடு அழிந்தால் தான் ஆன்ம ஞானம் ஏற்படும்.
ஆன்மா வேறு, உடல் வேறு என்ற உணர்வு அப்போது ஏற்படுகிறது.தேங்காயில் நீர் வற்றாதவரை அதனுடைய பருப்பையும் கொட்டாங்குச்சியையும் கத்தியால் கூட தனியாகப் பிரிப்பது கடினம். நீர் வற்றி விட்டால் உள்ளே கொப்பரை குடு குடு என்று ஆடும். கொட்டாங்குச்சியிலிருந்து கொப்பரை தனியாகி விடும். இதைத் தான் கொப்பரைத்தேங்காய் என்கிறோம்.
இறையனுபூதி பெற்றவனின் அடையாளம் இது தான்-
அவன் கொப்பரைத்தேங்காய் போல் ஆகி விடுகிறான்.
உடலே ஆன்மா என்ற அறிவு போய் விடுகிறது. உடம்பின் சுக துக்கங்கள் தனது சுக துக்கங்களாக அவனுக்குத்தோன்றாது. அவன் உடலின்பத்தை விரும்ப மாட்டான். ஜீவன் முக்தனாகத் திரிந்து கொண்டிருப்பான்.
காளியின் பக்தன் ஜீவன் முக்தன், எப்போதும் ஆனந்தத்தில் திளைத்திருப்பவன்.
இறைவனின் திரு நாமத்தைச் சொல்லும் போதே கண்ணீரும் மயிர்க் கூச்செறிதலும் உண்டாகுமானால், அவனிடம் காமினீ- காஞ்சனப் பற்று போய்விட்டது. அவனுக்கு இறையனுபூதி கிடைத்து விட்டது என்று அறிந்து கொள். தீக்குச்சி உலர்ந்திருந்தால் ஒரு முறை கிழிந்த உடனேயே குப்பென்று பற்றிக் கொள்கிறது. ஆனால் குச்சி ஈரமாக இருந்தால் ஐம்பது முறை கிழிந்தால் கூட ஒன்றும் நடக்காது. குச்சிகள் தான் வீணாகும். உலகியலில் ஊறிக் கிடந்தால், காமினீ- காஞ்சனமாகிய பானத்தில் மனம் நனைந்து கிடந்தால் இறைவனைப் பற்றிய விழிப்பு ஏற்படாது.ஆயிரம் தடவை முயற்சி செய். எல்லாம் வீண் முயற்சி தான். பொருளாசையாகிய சாறு வற்றினால் அந்தக் கணமே விழிப்புணர்வு ஏற்படுகிறது.
திரைலோக்கியர்-
பொருளாசையாகிய சாறு வற்றிப் போவதற்கு இப்பொழுது என்ன வழி?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மன ஏக்கத்துடன் தேவியைக் கூப்பிடு. அவளுடைய காட்சி கிடைத்தால் பொருளாசை சாறு தானாக வற்றி விடுகிறது. காமினீ- காஞ்சனத்தில் உள்ள பற்றெல்லாம் நீங்கி விடுகிறது. அவள்” என் சொந்தத் தாய்” என்ற உணர்வு இருந்தால் இந்தக் கணமே சாத்தியமாகும். அவள் வளர்ப்புத் தாய் அல்லவே! சொந்தத் தாய் அவள். மன ஏக்கத்துடன் அவளிடம் பிடிவாதம் கொள். குழந்தை தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு காற்றாடி வாங்குவதற்காக க் காசு கேட்கிறது. அவள் ஒரு வேளை மற்ற பெண்களுடன் பேசிக் கொண்டிருப்பாள். எனவே முதலில் காசு தர மாட்டாள். இல்லை, கொடுக்க வேண்டாம் என்று உன் அப்பா சொல்லி இருக்கிறார். அவர் வரும் போது சொல்கிறேன், இப்போது காற்றாடி விடப் போனால் குழப்பத்தைத் தான் உண்டாக்குவாய்” என்பாள். குழந்தை அழ ஆரம்பிக்கிறது. பிடிவாதம் பிடிக்கிறது. உடனே அவள் மற்ற பெண்களிடம், ” கொஞ்சம் இருங்கள்.இவனைச் சற்று சமாதானப் படுத்தி விட்டு இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு , சாவியை எடுத்து கடக் கென்று பாக்ஸைத் திறந்து காசை எடுத்து குழந்தையிடம் தருவாள். நீங்களும் அன்னையிடம் பிடிவாதம் பிடியுங்கள், அவள் கட்டாயமாகக் காட்சி தருவாள்.
நான் சீக்கியர்களிடம் இதைத் தான் சொன்னேன். அவர்கள் தட்சிணேசுவரக் காளி கோயிலுக்கு வந்திருந்தார்கள். காளி கோயிலின் எதிரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இறைவன் கருணை வடிவானவர்,” என்றார்கள்.” அது எப்படி? என்று கேட்டேன் நான். ஏன் சுவாமி, அவர் எப்போதும் நம்மைக் காப்பாற்றுகிறார். நமக்கு நல்லவழி காட்டுகிறார், பணம் எல்லாம் தருகிறார். உணவு ஏற்பாடு செய்கிறார்” என்றார்கள் அதற்கு நான், ” யாருக்காவது பிள்ளைகுட்டிகள் இருந்தால் அவற்றின் பொறுப்பு, உணவு எல்லாம் தந்தை ஏற்றுக் கொள்வாரா, அல்லது ஊரார் வந்து டிசய்வார்களா? என்று கேட்டேன்.
60
..
உதவி நீதிபதி-
சுவாமி, அப்படியானால் அவர் கருணை மயமானவர் இல்லையா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள், நான் சொன்னது, இறைவன் நமக்கு மிகவும் வேண்டியவர்,அவரை வற்புறுத்தும் உரிமை நமக்கு உண்டு என்று தான். நமக்கு வேண்டிய ஒருவனிடம், ஏண்டா டேய், கொடுக்க மாட்டாயா? என்று கூட கேட்கலாம். அது சரி, ஆணவமும் அகங்காரமும் ஞானத்தால் ஏற்படுகின்றனவா, அஞ்ஞானத்தினால் ஏற்படுகின்றனவா? அகங்காரம் தமோ குணம், அது அஞ்ஞானத்திலிருந்து பிறக்கிறது. அகங்காரம் என்ற இந்தத் திரை இருப்பதால் தான் இறைவனைக் காண முடியவில்லை. நான் இறந்தால் எல்லா தொல்லையும் ஒழியும், அகங்காரம் கொள்வது வீண். இந்த உடல், இந்தச் செல்வம் எதுவுமே நிலைத்து நிற்காது. ஒரு குடிகாரன் துர்க்கை சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிலைக்குச் செய்ய ப் பட்டிருந்த அலங்காரங்களைப் பார்த்து அவன், ” அம்மா எவ்வளவு தான் நீ அலங்காரம் செய்து கொண்டாலும், இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உன்னை இழுத்து கங்கையில் எறிந்து விடுவார்கள்” என்றான்.( எல்லோரும் சிரித்தனர்)ஆகவே எல்லோருக்கும் சொல்கிறேன். ஜட்ஜாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தான். அதனால் ஆணவம், அகங்காரம் எல்லா வற்றையும் விட்டு விட வேண்டும்.
சத்வ, ரஜஸ், மற்றும் தமோ குணங்கள் வெவ்வேறு இயல்பு கொண்டவை. அகங்காரம், தூக்கம், அளவுக்கு மீறிச் சாப்பிடுவது, காமம், கோபம் போன்றவை தமோ குணத்தினரின் அடையாளங்கள். ரஜோ குணத்தினர் பல்வேறு காரியங்களில் சென்று ஈடுபடுவார்கள். அவர்களின் துணி மணிகள் பளபளப்பாக ஆடம்பரமாக இருக்கும். வீடு துய்மையாக , படாடோபமாக இருக்கும். வரவேற்பறையல் குயீனின் படம் இருக்கும்.பூஜை வேளையில் பட்டு உடுத்திக் கொள்வார்கள். கழுத்தில் ருத்திராட்ச மாலை இருக்கும். அந்த மாலையின் இடையிடையே பொன் ருத்திராட்ச மணிகளும் கோர்க்கப் பட்டு இருக்கும். யாராவது பூஜையறையைப் பார்க்க வந்தால், தாங்களே அழைத்துப்போய் எல்லாவற்றையும் காட்டுவார்கள். இதோ, இந்தப் பக்கம் வாருங்கள், இன்னும் இருக்கிறது. வெள்ளைச் சலவைக் கல்லினால் ஆன, மார்பிள் கல்லினால் ஆன தரை இருக்கிறது. சிற்ப வேலைப் பாடுகளுடன் அமைந்த மண்டபம் இருக்கிறது” என்றெல்லாம் விளக்கம் தருவார்கள். பலரும் அறியும் படி தான தருமங்களைச் செய்வார்கள்.
சத்வ குணத்தினர் மென்மையாக, அமைதியாக இருப்பார்கள். கிடைத்த துணியை உடுத்திக் கொள்வார்கள். வயிற்றுப்பாட்டுக்கு வேண்டிய அளவுக்கே சம்பாதிப்பார்கள். பிறரை முகஸ்துதி செய்து பணம் பெறுவதில்லை. வீட்டைப் பழுது பார்ப்பதில்லை. வீடு பராமரிக்கப் படாமல் இருக்கும். குழந்தைகளின் துணி மணிகளைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள். பெயர் புகழுக்காக அலைய மாட்டார்கள். தெய்வ சிந்தனை, தானம், தியானம் எல்லாம் பிறர் அறியாமல் தான் நடைபெறும். யாருக்கும் எதுவும் தெரிய வராது. கொசு வலைக்குள் தியானம் செய்வார்கள். இரவில் இவர் தூங்க வில்லை போலும்! ஆகவே தான் காலையில் இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று மற்றவர்கள் நினைப் பார்கள். சத்வ குணம் படிக்கட்டில் கடைசிப் படி. அடுத்தது மாடி தான். சத்வ குணம் வந்து விட்டால் இறைக் காட்சிக்கு இனி தாமதம் இல்லை. இன்னும் கொஞ்சம் முன்னேறினால் அவரைப் பெற்றுவிடலாம்.எல்லோரும் சமம் என்று சொன்னீர்களே! பாருங்கள், எத்தனை விதமான மக்கள் இருக்கிறார்கள்!
இன்னும் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. நித்திய ஜீவர்கள், முக்த ஜீவர்கள், முமுக்ஷு ஜீவர்கள், பக்த ஜீவர்கள்,- இப்படி பலவகை மனிதர்கள் உண்டு. நாரதர், சுகதேவர் முதலியவர்கள் நித்திய ஜீவர்கள். இவர்கள் ஸடீம் போட் போன்றவர்கள். தாங்கள் கரையை அடைவது மட்டுமல்லாமல், யானை போன்ற பெரிய மிருகங்களையும் ஏற்றிச் செல்ல அவர்களால் முடியும். நித்திய ஜீவர்கள் ஓர் அதிகாரி போன்றவர்கள். ஒரு தாலுக்காவில் சண்டை சச்சரவைச் சீர்ப்படுத்தி விட்டு, மற்றொரு தாலுக்காவிற்குப் போவார்கள், அவர்களை அடுத்து முமுக்ஷு ஜவர்கள். இவர்கள் உலகப் பற்று என்ற வலையிலிருந்து விடுபட உயிரைக் கொடுத்துப் பாடுபடுவார்கள். இவர்களுள் ஓரிருவர் இத்தகைய வலையிலிருந்து தப்பக் கூடும். அவர்கள் முக்த ஜீவர்கள், நித்திய ஜீவர்கள் சாமர்த்தியமுள்ள மீன்களைப் போன்றவர்கள். இவர்கள் வலையில் படவே மாட்டார்கள்.
பக்த ஜீவர்கள் உலகப் பற்றில் சிக்குண்டவர்கள், சொரணை இல்லாதவர்கள். இவர்கள் வலையில் சிக்கிக் கிடக்கிறார்கள். ஆனால் வலையில் அகப் பட்டுள்ளோம் என்ற எண்ணமே இல்லை. அருகே ஆன்மீகப் பேச்சு நடந்தால் அங்கிருந்து போய் விடுவார்கள். கடைசிக் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம். தெய்வ நாமம் எல்லாம் இப்போது எதற்கு? என்பார்கள். சாகக் கிடக்கின்ற போதும் மனைவி மக்களைப் பார்த்து, ” விளக்கில் எதற்காக இத்தனை திரிகள்! ஒரு திரி போதும், இல்லாவிட்டால் எண்ணெய் தீர்ந்து விடும்! என்பார்கள். மனைவி மக்களை நினைத்து, ” ஐயோ , நான் இறந்து போனால் இவர்களின் கதி என்ன? என்று அழுது புலம்புவார்கள். இவர்கள் எதன் காரணமாக இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறார்களோ, அதை மீண்டும் மீண்டும் செய்வார்கள். ஒட்டகம் முட் செடியைத் தின்னும் போது வாயிலிருந்து ரத்தம் பீறிடும், ஆனாலும் விடாது. குழந்தை இறந்து விட்டது என்று துக்கத்தால் துடிப்பார்கள். ஆனாலும் ஆண்டு தோறும் குழந்தையைப் பெற்றுக் கொள்வார்கள். பெண்ணின் கல்யாணத்தில் எல்லாம் தீர்ந்திருக்கும், ஆனாலும் வருடம் தவறாமல் பெண் குழந்தை பெற்றுக் கொள்வார்கள். என்ன செய்வது, என் தலை யெழுத்து அப்படி” என்பார்கள். தீர்த்த யாத்திரை சென்றால் இறைவனைப் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரம் கிடைக்காது. மனைவி மக்களின் மூட்டை முடிச்சுகளைச் சுமப்பதிலேயே அவர்களின் பிராணன் போகும். இனி, கோயிலுக்குப்போனால் குழந்தைகளுக்குத் தீர்த்தப் பிரசாதம் கொடுப்பது, அதை அங்கப் கோயிலுக்குப் போனால் குழந்தைக்குத் தீர்த்தப் பிரசாதம் கொடுப்பது, அதை அங்கப் பிரதட்சிணம் செய்விப்பது என்றே பரபரப்பாக இருப்பார்கள். தன் வயிற்றையும் மனைவி மக்களின் வயிற்றையும் நிரப்புவதற்காக கைகட்டிச்சேவகம் செய்வார்கள். பொய், வஞ்சனை, முகஸ்துதி என்று எல்லா வழிகளிலும் பணம் சம்பாதிப்பார்கள். தெய்வ சிந்தனை செய்பவர்களை, தெய்வ தியானம் செய்பவர்களைப் பைத்தியம் என்று கேலி செய்வார்கள்( உதவி நீதிபடியிடம்) மனிதர்களில் எத்தனை விதம், பார்த்தீர்களா? எல்லோரும் சமம் என்கிறீர்கள். எத்தனை விதமான இயல்புகள்! சிலரிடம் அதிகமான சக்தி, சிலரிடம் குறைவான சக்தி.
பக்த ஜீவன், இறக்கும் தறுவாயிலும் குடும்பத்தைப் பற்றியே பேசுவான், புறத்தளவில் ஜபமாலையை உருட்டுவதாலும், கங்கையில் மூழ்குவதாலும் , தீர்த்த யாத்திரை போவதாலும் என்ன பலன்? உள்ளே பற்று இருக்குமானால், மரண வேளையில் அது தான் முன் வந்து நிற்கும். ஏதேதோ உளறுவான் அவன்! ஜன்னி கண்டிருப்பவன்” மஞ்சள், கடுகு லவங்கம் ” என்றெல்லாம் பிதற்றுகிறான். கிளி சாதாரணமாக ராதா கிருஷ்ணா என்று சொல்லும். ஆனால் பூனை பிடிக்க வரும் போது அதன் உண்மையான கீச் கீச் குரல் தான் வெளி வரும். இறக்கும் போது எதை நினைக்கிறாயோ, அதையே மறுபிறவியிலும் அடைவாய் என்று கீதையில் உள்ளது. பரத மன்னன் மான் மான் என்று உயிரை விட்டான். அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தான். தெய்வ சிந்தனையுடன் உடலை விட்டால் இறையனுபூதி கிடைக்கும். பிறகு இந்த உலகத்திற்குத் திரும்ப வேண்டியதில்லை.
பிரம்ம சமாஜ பக்தர்-
சுவாமி! ஒருவன் மற்ற நேரங்களில் இறைவனை நினைக்கிறான். மரண வேளையில் நினைக்கவில்லை. அவன், இன்ப துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் மீண்டும் திரும்ப நேருமா? அவன் தான“ முன்பு இறைவனை நினைத்திருக்கிறானே?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மனிதன் இறைவனை நினைக்கிறான், ஆனால் அவரிடம் நம்பிக்கை வைப்பதில்லை. அதனால் மீண்டும் மறக்கிறான். இப்போது யானையை க் குளிப் பாட்டுகிறோம், மறுகணமே அது மண்ணையும் சேற்றையும் பூசிக் கொள்கிறது.மனம் ஒரு மத யானை! ஆனால் யானையைக் குளிப் பாட்டியதும் நேரே கொட்டிலில் கொண்டு போய்க் கட்டி விட்டால் அது மண்ணையோ சேற்றையோ பூசிக் கொள்ள முடியாது. மனிதன் இறக்கும் போது கடவுளை நினைத்தால் சுத்த மனம் கிடைக்கிறது. மீண்டும் காமினீ- காஞ்சனத்தில் பற்று வைக்க அந்த மனத்திற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
இறைவனிடம் நம்பிக்கை வைக்கவில்லை, அதனால் தான் இத்தனை கர்ம அனுபவங்கள்! கங்கையில் குளிக்கும் போது பாவங்கள் உன்னை விட்டு விட்டு கங்கைக் கரையில் உள்ள மத்தில் உட்கார்கின்றன. நீ கரையேறியதும் மறுபடியும் உன் தோளில் ஏறிக் கொள்கின்றன” என்று சொல்வார்கள்.( எல்லோரும் சிரித்தனர்) உயிர் உடலை விட்டுப் பிரியும் போது கடவுள் நினைவு இருக்க வேண்டுமானால் அதற்கு வேண்டிய வழியை முன் கூட்டியே செய்து கொள்ள வேண்டும். அந்த வழிதான் பயிற்சி யோகம். இறைவனை இடைவிடாது நினைப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டால் கடைசி நேரத்திலும் அவரைநினைக்க முடியும்.
பிரம்ம சமாஜ பக்தர்-
அற்புதப்பேச்சு, அருமையான வார்த்தைகள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏதோ வளவள என்று உளறினேன். எனது நிலை என்ன தெரியுமா? நான் எந்திரம், அவள் இயக்குபவள், நான் வீடு, அவள் வீட்டுத் தலைவி. நான் வண்டி. அவள் எஞ்ஜினியர். நான் தேர், அவள் தேரோட்டி, அவள் எப்படி நடத்துவாளோ அப்படி நடக்கிறேன். அவள் எப்படி செய்விக்கிறாளோ அப்படி செய்கிறேன்.
திரைலோக்கியர் மீண்டும் பாடினார். மிருதங்கமும் தாளமும் உடன் வாசிக்கப் பட்டன. குருதேவர் பிரேமைப் பித்தில் ஆடினார். ஆடியபடி பல முறை சமாதி நிலை யில் மூழ்கினார். சமாதியில் மூழ்கியபடி நின்று கொண்டிருந்தார். அசைவற்ற உடல்! குத்திட்டு நின்ற கண்கள்! சிரித்த முகம்! அன்பிற்குரிய பக்தர் ஒருவரின் தோளில் கையை வைத்துக் கொண்டு நின்றார். மறுபடியும் பரவச நிலை! அது சிறிது கலையும் போது மதம் பிடித்த யானைபோல் ஆடினார். புறவுணர்வு வந்ததும் பாடலுடன் சில வரிகளைச்சேர்த்தார்.
பக்தர் கூட்டத்தை............
...................அந்த அற்புத உருவில்
ஆடுவாய்.
காண்பதற்கரிய எத்தகைய காட்சி! அன்னையில் பிராணன் ஒன்றிய , பிரேமைப்போதையில் ஆழ்ந்த அந்த தெய்வ பாலகரின் திருநடனம்! இரும்பைக் காந்தம் கவர்ந்ததைப்போல் பிரம்ம சமாஜ பக்தர்கள் அவரைச் சுற்றி வந்து ஆடினார்கள். எல்லோரும் பித்துப் பிடித்தவர்களாக பிரம்ம நாமத்தை ஓதினர். மீண்டும் பிரம்மத்தின் அதே இனிய நாமத்தை, தேவியின் நாமத்தை ஓதினர். பலர் பாலகர்களைப்போல், அம்மா, அம்மா” என்று கூவி அழுதனர்.
பாட்டு முடிந்ததும் அனைவரும் உட்கார்ந்தனர். சமாஜத்தின் மாலைப் பிரார்த்தனைஇன்னும் நிகழவில்லை. திடீரென்று எழுந்த இந்தக் கீர்த்தனானந்தத்தில் விதி முறைகள் எல்லாம் எங்கோ பறந்து விட்டன. இரவில் விஜய கிருஷ்ண கோசுவாமி மேடையில் அமர்ந்து பிரார்த்தனையை நடத்துவதாக ஏற்பாடு. இரவு மணி சுமார் எட்டு.
61
..
எல்லோரும் உட்கார்ந்தனர். குருதேவரும் அமர்ந்தார். எதிரில் விஜயர் இருந்தார். விஜயரின் மாமியாரும் மற்ற பக்தைகளும் குருதேவரைக் காணவும் அவருடன் பேசவும் விரும்புகிறார்கள் என்ற செய்தி வந்தது. குருதேவர் ஓர் அறையில் சென்று அவர்களைச் சந்தித்தார்.
சிறிது நேரம் சென்றதும் திரும்பி வந்த குருதேவர் விஜய ரிடம் கூறினார், உங்கள் மாமியாருக்குத் தான் என்ன பக்தி! அவர் என்னிடம், ” குடும்ப காரியங்களைப் பற்றி சொல்லாதீர்கள்.ஓர் அலை ஓய்ந்ததும், இன்னோர் அலை வருகிறது” என்கிறார். அதற்கு நான், அதனால் உங்களுக்கு என்ன? உங்களுக்குத் தான் ஞானம் வந்து விட்டேதே” என்றேன். அதற்கு அவர், ” எனக்காவது ஞானம் வந்திருப்பதாவது! இதுவரை வித்யா மாயையையும் அவித்யா மாயையையும் தாண்டிச் சென்ற பாடில்லை. அவித்யா மாயையை மட்டும் தாண்டினால் போதாதே, வித்யா மாயையையும் தாண்ட வேண்டுமே? அப்போது தானே, ஞானம் ஏற்படும்?நீங்கள் தானே இப்படி சொல்கிறீர்கள்? என்கிறார்.
குருதேவர் பேசிக் கொண்டிருந்த போது வேணிபால் வந்தார்.
வேணிபால்( விஜயரிடம்)-
ஐயா, வாருங்கள், நீண்ட நேரம் ஆகி விட்டது. பிரார்த்தனையை ஆரம்பியுங்கள்.
விஜயர்-
ஐயா, இனியும் பிரார்த்தனைக்கு என்ன அவசியம்! இங்கே முதலில் பாயசத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். பிறகு சாம்பார், ரசம் எல்லாம்( எல்லோரும் சிரித்தனர்)
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)-
பக்தர்கள் தங்கள் போக்கிற்கு ஏற்ப ஏற்பாடு செய்கிறார்கள். சத்வ குண பக்தன் பாயசம் தருகிறான். ராஜோ குண பக்தன் ஐம்பது விதமான கறிகளோடு உணவு படைக்கிறான். தமோ குண பக்தன் ஆடு போன்ற வற்றைப் பலியிடுகிறான்.
பிரார்த்தனை மேடையில் அமர்வதா வேண்டாமா என்று விஜயர் தயங்கி நின்றார்.
விஜயர்( குருதேவரிடம்)-
நீங்கள் ஆசீர்வதியுங்கள், அப்போது தான் மேடையில் அமர்ந்து பேசுவேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆணவம் அகன்றாலே போதும். ” நான் லெக்சர் செய்கிறேன். நீங்கள் கேளுங்கள்” என்ற ஆணவம் இல்லாவிட்டால் போதும். அகங்காரம் ஞானத்தினால் வருகிறதா, அஞ்ஞானத்தினால் வருகிறதா? அகங்காரம் இல்லாதவனிடம் தான் ஞானம் இருக்கும். பள்ளமான இடத்தில் மழை நீர் தேங்கும். மேடான இடத்திலிருந்து வழிந்து ஓடி விடும்.
அகங்காரம் உள்ளது வரை ஞானம் வருவதில்லை. முக்தியும் கிடைப்பதில்லை. மீண்டும் மீண்டும் இந்த உலகிற்கு வந்தாக வேண்டும். கன்றுக் குட்டி, ஹம்பா ஹம்பா ( நான், நான்) என்று கத்துகிறது. அதனால் அதற்கு எவ்வளவு வேதனை! கசாப்பு கடைக்காரன் வெட்டுகிறான். தோலைச் செருப்பாகத் தைக்கிறார்கள். தப்பட்டை செய்கிறார்கள். அந்தத் தப்பட்டையை எவ்வளவு அடிக்கிறார்கள்! அதன் வேதனைகளுக்கு முடிவே இல்லை! கடைசியாக அதன் நரம்புகளைப் பயன் படுத்தி நாண் செய்கின்றனர். அதிலிருந்து பஞ்சடிக்கும் கருவி செய்கிறார்கள். இப்போது அது துஹு துஹு( நீ, நீ) என்கிறது. அப்போது தான் அதற்கு அமைதி கிடைக்கிறது. இதன் பிறகு அது ஹம்பா , ஹம்பா என்று கத்துவதில்லை. துஹு துஹு என்றே சொல்கிறது. அதாவது, எம்பெருமானே . நீயே கர்த்தா, நான் கர்த்தா அல்ல, நீ எந்திரத்தை ஓட்டுபவர், நான் எந்திரம், நீ தான் எல்லாம்.
குரு, பாபா, கர்த்தா- இந்த மூன்று சொற்களைக்கேட்கும் போது, என் உடம்பில் முள் தைப்பது போல் இருக்கும். நான் அவரது குழந்தை. என்றுமே அவளது குழந்தை தான். இதில் நானாவது பாபாவாவது! இறைவனே கர்த்தா, நான் அல்ல, அவர் ஓட்டுபவர், நான் எந்திரம்.
யாராவது என்னை குரு என்று சொன்னால், சீ,முட்டாளே , யார் குரு? என்பேன். சச்சிதானந்தத்தைத் தவிர வேறு குரு இல்லை. அவரைத் தவிர வேறு வழியும் இல்லைஃ அவர் ஒருவர் தான் பிறவிக் கடலில் நமது படகோட்டி.
( விஜயரிடம்) ஆச்சாரியராக இருப்பது மிகவும் கடினம். இதனால் தனக்கே தான் கேடு விளையும். பத்துப்பேர் மதிப்பதைக் கண்டதும் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, ” நான் சொல்கிறேன்” நீங்கள் கேளுங்கள்” என்று சொல்கிறான். இது மிகவும் மோசம். அதன் லாபம் ஏதோ சிறிது புகழ்! அவ்வளவு தான். சிலர், ஆகா! விஜயர் நன்றாகப்பேசி னார். அவர் பெரிய ஞானி” என்று ஒரு வேளை சொல்லலாம்.
” நான் சொல்கிறேன்” என்று நினைக்காதீர்கள். நான் அன்னையிடம், அம்மா, நீ ஓட்டுபவன், நான் எந்திரம். எப்படி செய்விக்கிறாயோ அப்படிச் செய்கிறேன். எப்படிச் சொல்லச் செய்கிறாயோ அப்படிச் சொல்கிறேன்! என்று கூறுகிறேன்.
விஜயர்( பணிவுடன்)
நீங்கள் சொன்னால் நான் மேடையில் உட்கார்கிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( சிரித்தபடி)-
நான் என்ன சொல்வது? அம்புலி மாமா எல்லோருக்கும் மாமா. நீங்களே இறைவனிடம் சொல்லுங்கள். இதய பூர்வமாக இருந்தால் எந்த பயமும் இல்லை.
விஜயர் மறுபடியும் பணிவுடன் கேட்டதும் குருதேவர், நல்லது , முறைப்படி என்னசெய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். இறைவனிடம் இதய பூர்வமான பக்தி இருந்தாலே போதும்” என்றார். விஜயர்மேடையில் அமர்ந்து பிரம்ம சமாஜ முறைப்படி பிரார்த்தனையை நடத்தினார். பிரார்த்தனை வேளையில் அவர் அம்மா அம்மா என்று அழைத்தது கேட்டு அனைவரது மனமும் உருகியது.
பிரார்த்தனை முடிந்ததும் பக்தர்களின் சாப்பாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஜமுக்காளம், விரிப்பு முதலியவற்றை எடுத்து விட்டு இலை போடப் பட்டது. பக்தர்கள் உட்கார்ந்தனர். குருதேவருக்கு மனை போடப் பட்டது. வேணிபால் கொடுத்த லூச்சி, பப்படம், பல வகை இனிப்புகள், தயிர், திரட்டுப் பால் முதலியவற்றை இறைவனுக்கு நிவேதனம் செய்த பின் குருதேவர் ஆனந்தமாக உண்டார்.
சாப்பாட்டிற்குப் பிறகு எல்லோரும் வெற்றிலைப்போட்டுக் கொண்டு வீடு திரும்பத் தயாராயினர். புறப் படுமுன் குருதேவர் விஜயருடன் தனியாக பேசிக் கொண்டிருந்தார். அருகே ம-வும் இருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நீங்கள் இறைவனை அம்மா அம்மா என்று அழைத்துப் பிரர்த்தித்தது மிகவும் நல்லது. அப்பாவை விட அம்மாவின் ஈர்ப்பு அதிகம் என்று சொல்வார்கள். அம்மாவிடம் பிடிவாதம் பிடிக்கலாம். அப்பாவிடம் அது செல்லாது. திரைலோக்கியருடைய தாயின் ஜமீனிலிருந்து வண்டி வண்டியாகப் பணம் வந்தது. அதற்குக் காவலாகக் கையில் தடியும் சிவப்புத் தொப்பியுமாக காவலாளிகள் சிலர் வந்தார்கள். திரைலோக்கியர் வழியில் பல ஆட்களோடு காத்திருந்து பல வந்தமாக எல்லா பணத்தையும் பிடுங்கிக் கொண்டார். தாயின் சொத்துக்காக பிடிவாதம் பிடிக்கலாம். மகன் மீது தாய் வழக்குத் தொடர மாட்டாள் என்று சொல்வார்கள் அல்லவா!
விஜயர்-
பிரம்மமே அன்னை என்றால் அது உருவமா? அருவமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
யார் பிரம்மமோ அவரே காளி( ஆத்யா சக்தி அன்னை) செயலற்றிருக்கும் போது பிரம்மம் என்று சொல்கிறோம். படைத்தல் , காத்தல், அழித்தல், போன்ற செயல்களில் ஈடுபடும்போது சக்தி என்கிறோம். அசைவற்ற தண்ணீர் பிரம்மத்திற்கு உவமை. ஆடி அசையும் தண்ணீர் சக்தி அல்லது காளிக்கு உவமை. காளி! அவள் மகா காலனுடன் ( பிரம்மத்துடன்) கூடி மகிழ்பவள். காளி உருவம் உள்ளவள், உருவம் அற்றவளும் கூட.
அவள் உருவம் அற்றவள் என்று நீங்கள் நம்பினால் காளியை அந்த முறையிலேயே சிந்தியுங்கள். ஒன்றைத் திடமாக்கிக் கொண்டு அதன் படி அவளைச் சிந்தித்தால் , தான் யார் என்பதை அவளே காட்டுவாள். சியாம் புகூரை அடைந்தால் தேலி பாடாவையும் தெரிந்து கொள்வீர்கள். அவள் இருக்கிறாள் என்பது மட்டும் அல்ல, நான் உங்களுடன் பேசுவது போல் அவள் உங்களிடம் வந்து பேசவும் செய்வாள், என்பதைத் தெரிந்து கொள்வீர்கள், நம்பிக்கை வையுங்கள், எல்லாம் கிடைக்கும்.
இன்னொரு விஷயம் , ஒரு வேளை உங்களுக்கு அருவத்தில் நம்பிக்கை என்றால் திடமாகஅதையே நம்புங்கள். ஆனால், ” நான் பிடித்ததே சரி” என்ற வெறித்தனம் கொள்ளாதீர்கள். இறைவன் இப்படித்தான், அப்படி இருக்க முடியாது என்று அவரைப் பற்றி திட்ட வட்டமாகச் சொல்ல முடியாது. ” அவர் உருவமற்றவர் என்று நான் நம்புகிறேன். தான் எப்படி யெல்லாம் இருக்க முடியும் என்பதை அவரே அறிவார், எனக்குத் தெரியாது. என்னால் அறிந்து கொள்ளவும் முடிய வில்லை” என்று சொல்லுங்கள். மனிதன் தன் ஓர் ஆழாக்கு புத்தியால் இறைவனின் இயல்பை அறிந்து கொள்ள முடியுமா?
ஒரு படிப் பாத்திரத்தில் நான்கு படி பால் கொள்ளுமா? அவரே அருள் கூர்ந்து எப்போதாவது நமக்குக் காட்சி தந்தால், தன்னை அறியுமாறு செய்தால், அப்போது தான் அறிந்து கொள்ள முடியும். இல்லாவிட்டால் முடியாது.
யார் பிரம்மமோ அவரே சக்தி, அவரே அன்னை.
நான் யாரை அன்னை என்கிறேனோ
அதைச் சந்தையில் வந்து சொல்ல வேண்டுமா?
மனமே இதை சூசகமாகப் புரிந்து கொள்.
என்று ராம் பிரசாதர் கூறுகிறார். ” நான் யாரை அன்னை என்கிறேனோ, அதாவது அநத பிரம்மத்தைத் தான் அன்னை என்கிறேன்” இதையே ராம் பிரசாதர்,
காளியும் பிரம்மமும்ஒன்றென அறிந்து
தர்மம் அதர்மம் இரண்டையும் துறந்து
ஆசை, முக்தி அவைகளின் முன்னே
சிரமது தாழ்த்தி வணக்கம் செய்வதாய்
பிரசாதருமே பேசி நிற்கிறார்.
- என்றார்.
- அதர்மம் என்பது முறையற்ற செயல்கள், தர்மம் என்பது வைதீக கர்மம்—இவ்வளவு தானம் செய்ய வேண்டும், இத்தனை பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும் – இவை யெல்லாம் தர்மம்.
62
..
விஜயர்-
தர்மம், அதர்மம் இரண்டையும் விட்டு விட்டால் எஞ்சி இருப்பது என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சுத்த பக்தி. நான் அன்னையிடம் அம்மா! இதோ , உனது தர்மத்தை எடுத்துக் கொள். இதோ உனது அதர்மத்தை எடுத்துக் கொள். எனக்குச் சுத்த பக்தியை க் கொடு. இதோ உனது புண்ணியத்தை எடுத்துக் கொள். இதோ உனது பாவத்தை எடுத்துக் கொள். எனக்குச் சுத்த பக்தியைக் கொடு. இதோ உனது ஞானத்தை எடுத்துக் கொள். இதோ உனது அஞ்ஞானத்தை எடுத்துக் கொள். எனக்குசு் சுத்த பக்தியைக் கொடு” என்று வேண்டினேன். பார்த்தாயா, ஞானத்தைக் கூட நான் விரும்பவில்லை. நான் புகழையும் விரும்பவில்லை. தர்ம அதர்மங்களை விட்டு விட்டால் சுத்த பக்தி- மாசு மறுவற்ற, பற்றற்ற, காரணமற்ற பக்தி- மட்டுமே எஞ்சுகிறது.
பிரம்ம சமாஜ பக்தர்-
இறைவனும் அவரது சக்தியும் வெவ்வேறா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
முழுமையான ஞானம் ஏற்பட்ட பிறகு வேற்றுமை இல்லை. ரத்தினத்தின் ஒளியும் ரத்தினமும் – அவற்றிற்கிடையே வேறுபாடு இல்லை. ரத்தினத்தின் ஒளியை நினைத்தால் ரத்தினத்தையும் நினைக்கிறோம். பாலும் அதன் வெண்மையும் வெவ்வேறல்ல. அது போல் ஒன்றை நினைத்தால் மற்றொன்றையும் நினைக்க வேண்டியுள்ளது. ஆனால் முழுமையான ஞானம் ஏற்படாமல் இந்த வேற்றுமை அற்றதாகிய ஞானம் வருவதில்லை. முழுமையான ஞானம் கிடைக்கும் போது சமாதி நிலை வாய்க்கிறது. இருபத்து நான்கு தத்துவங்களையும் கடந்து செல்ல முடிகிறது. ஆகவே தான் அந்த நிலையில் நான் என்னும் உணர்வு இருப்பதில்லை. சமாதியில் எத்தகைய அனுபவம் ஏற்படுகிறது என்பதை வாயினால் கூற இயலாது. சிறிது இறங்கி வந்து, குறிப்பாக மட்டும் தான் ஏதோ சொல்ல முடிகிறது. சமாதி நிலை கலைந்து ஓம் ஓம் என்று நான் சொல்லும் போது நூறு அடி கீழே இறங்கி வந்து விடுகினே். வேத விதிகளுக்கு அப்பாற்பட்டது பிரம்மம். அதைப் பற்றி வாயினால் சொல்ல முடியாது. அங்கே நான் நீ என்பவை இல்லை.
நான், நீ என்பவை இருக்கும் வரை, ” நான் வழி படுகிறேன், தியானம் செய்கிறேன்” என்ற எண்ணம் இருக்கும் வரை, இறைவன் நம் பிரார்த்தனையைக்கேட்கிறார் என்ற அறிவும் இருக்கும். இறைவன் ஒரு சபர் என்ற உணர்வும் இருக்கும். நீ எஜமான், நான் சேவகன், நீ முழுமை, நான் அம்சம், நீ தாய், நான் குழந்தை என்ற எண்ணம் இருக்கும். ” நான் வேறு, நீ வேறு” என்ற வேற்றுமை உணர்வும் இருக்கும். இந்த வேற்றுமை உணர்வையும் அவரே உருவாக்கியிருக்கிறார்.ஆகவே தான் ஆண்- பெண், ஒளி- இருள் என்றெல்லாம் உணர்கிறோம். இந்த வேற்றுமை உணர்வு இருக்கும் வரை சக்தியை ( சகுணக் கடவுள்) ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். இறைவனே நம்முள், நான் என்ற உணர்வை வைத்திருக்கிறார். ஆயிரம் ஆராய்ச்சிகள் செய்தாலும், ” நான்” மறைவதில்லை. அது இருக்கும் வரை இறைவனும் ஒரு நபராகக் காட்சி தருகிறார்.
எதுவரை,” நான்” இருக்கிறதோ, வேற்றுமை உணர்வு இருக்கிறதோ, அதுவரை பிரம்மம் நீர்க்குணமானது என்று சொல்வதற்குரிய தகுதி நமக்கு இல்லை. அதுவரை சகுணப் பிரம்மத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்தச் சகுணப் பிரம்மத்தை வேதம், புராணம், தந்திரம் எல்லாம் காளி என்றும் ஆத்யா சக்தி என்றும் கூறுகின்றன.
விஜயர்-
இந்த ஆத்யா சக்தியின் காட்சியும் பிரம்ம ஞானமும் எவ்வாறு கிடைக்கும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இதய ஏக்கத்துடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் இதன் மூலம் மனம் தூய்மை பெறுகிறது.தூய்மையான தண்ணீரில் சூரியனின் பிரதி பிம்பத்தைக் காண முடியும். அது போல் பக்தனின் நான் என்ற கண்ணாடியில் சகுணப் பிரம்மமான ஆத்யா சக்தியின் காட்சியைப் பெறுவீர்கள். முதலில் கண்ணாடியை நன்றாகத் துடைக்க வேண்டும். அழுக்குப் படிந்திருந்தால் பிம்பம் தெளிவாகத் தெரியாது.
எதுவரையில்” நான்” என்ற தண்ணீரில் உள்ளசூரியனையே பார்க்க வேண்டியுள்ளதோ, சூரியனைப் பார்ப்பதற்கு வேறு வழி இல்லையோ, பிரதி பிம்பச் சூரியனையன்றி உண்மையான சூரியனைப் பார்க்க வழியில்லையோ, அது வரையில் பிரதிபிம்ப ச் சூரியனே நூற்றுக்கு நூறு உண்மை. எதுவரை ” நான்” உண்மையோ, அதுவரை பிரதி பிம்ப சூரியனும் உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை. இந்தப் பிரதிபிம்பச் சூரியன் தான் ஆத்யா சக்தி.
பிரம்ம ஞானம் வேண்டுமானால், அந்த பிரதி பிம்பத்தையே பிடித்துக் கொண்டு உண்மையான சூரியனை நோக்கிப்போ. அந்த சகுணப் பிரம்மத்திடம், அதாவது யார் நம் பிரார்த்தனைகளைக் கேட்கிறாரோ அவரிடம் கேட்டால் அவரே பிரம்ம ஞானத்தைக் கொடுப்பார். ஏனென்றால் யார் சகுணப் பிரம்மமோ அவரே நிர்க்குணப் பிரம்மமும் கூட. யார் சக்தியோ அவரே பிரம்மம். முழுமையான ஞானத்துக்குப் பிறகு வேற்றுமை இல்லை.
அன்னை பிரம்ம ஞானத்தையும் கொடுப்பாள். ஆனால் சுத்த பக்தன் பிரம்ம ஞானத்தை விரும்புவதில்லை.
மற்றொரு பாதை ஞான யோகம். இது மிகவும் கடினமான பாதை. பிரம்ம சமாஜத்தைச்சேர்ந்த நீங்கள் ஞானிகள் அல்ல, பக்தர்கள். ப்ரஹ்ம ஸத்யம் ஜகத்மித்யா, உலகம் கனவு போன்றது. நான் நீ எல்லாம் கனவே என்பது ஞானிகளின் நம்பிக்கை.
இறைவன் நம்முள் இருப்பவர்! எளிய மனத்துடன் அவரிடம் பிரார்த்தனை செய். அவர் எல்லாவற்றையும் தெரிவிப்பார். அகங்காரத்தை விட்டு அவரைச் சரணடை. எல்லாம் பெறுவாய்.
புற உலகில் பிறருடன் பழகும் போது எல்லோரையும் நேசி. ஒன்றாகக் கலந்து விடுகின்ற அளவுக்கு அவர்களுடன் நன்றாகப் பழகு.வெறுப்பு மனப் பான்மை கொள்ளாதே. அவன் உருவவாதி” அருவத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவன் அருவவாதி, உருவத்தை ஏற்றுக் கொள்வதில்லை! அவன் இந்து, இவன் முஸ்லீம். அவன் கிறிஸ்தவன், என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு யாரையும் வெறுக்காதே. இறைவன் யாருக்கு எப்படி கற்பிக்கிறானோ, அதற்கேற்ப மனிதர்கள் வெவ்வேறு இயல்பு உடையவர்கள் என்பதை அறிந்து கொள். அறிந்து கொண்டு முடிந்தவரை அவர்களுடன் கலந்து பழகு. அவர்களை நேசி. அதன் பிறகு உனது அக வீட்டில் புகுந்து அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவி. அறையில் ஞான விளக்கேற்றி பிரம்ம மயியின் முகத்தைப் பார்” அக வீட்டில் உன் உண்மை வடிவைக் காண்பாய்.
இடைச்சிறுவன் மாடு மேய்க்கப் போகிறான். மாடுகள் மைதானத்தை அடைந்ததும் ஒன்றாகக் கலக்கின்றன. ஒரே கூட்டத்தை ச்சேர்ந்தவை அவை. மாலையில் வீட்டுக்குத் திரும்பும் போது மீண்டும் பிரிகின்றன. உன்றன் மனையிலே வாழ்வாய்”
தட்சிணேசுவரக் காளி கோயிலுக்குத் திரும்புவதற்காக இரவு பத்து மணிக்குப் பிறகு குருதேவர் வண்டியில் ஏறிக் கொண்டார். அவருடன் இரண்டொரு சேவக பக்தர்கள் இருந்தனர்.அடர்ந்த இருளில் ஒரு மரத்தடியில் வண்டி நின்றது. வேணிபால், ராம்லாலுக்காக பிரசாத பூரி, இனிப்பு எல்லாம் வண்டியில் அனுப்புவதாக இருந்தார்.
வேணிபால்-
சுவாமி, ராம்லால் வர முடியவில்லை. இவர்களிடம் அவருக்குச் சிறிது பிரசாதம் கொடுத்தனுப்ப விரும்புகிறேன், நீங்கள் அனுமதி கொடுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( கலக்கத்துடன்)-
ஓ, வேணிபால் பாபு, அவற்றை எல்லாம் என்னுடன் அனுப்பாதீர்கள், எனக்குக் கஷ்டம் வரும். என்னால் எதையும் சேகரித்து எடுத்துக் கொண்டுபோக முடிவதில்லை. மனத்தில் ஒன்றும் வைத்துக் கொள்ளாதீர்கள்.
வேணிபால்-
அப்படியே ஆகட்டும் சுவாமி. என்னை ஆசீர்வதியுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இன்று அதிக ஆனந்தம்ஏற்பட்டது. இதோ பார், யார் பணத்தை அடிமையாக வைத்திருக்கிறானோ அவன் தான் மனிதன். பணத்தைக் கையாளத் தெரியாதவர்கள் மனிதர்களாக இருந்தும் மனிதர்கள் அல்ல. உருவம் தான் மனிதன். ஆனால் மிருகங்களின் செயல் பாடுகள். நீங்கள் புண்ணியவான். எவ்வளவோ பக்தர்களுக்கு இன்று ஆனந்தம் அளித்தீர்கள்!
63
..
...................................
திங்கட்கிழமை
, அக்டோபர் 20, 1884
......................................
கல்கத்தாவிலுள்ள படாபஜார் என்னும் பகுதியில் மல்லிக் தெருவில் 12-ஆம் எண்வீட்டில் மார்வாரி பக்தர்கள் அன்ன கூட விழா கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு குருதேவரை அழைத்திருந்தனர். காளி பூஜை முடிந்து இரண்டு நாட்களாகியிருந்தன. அன்று குருதேவர் பக்தர்களுடன் தட்சிணேசுவரத்தில் இன்பமாகக் கழித்தார். மறுநாள் சிந்தி பிரம்ம சமாஜ விழாவில் கலந்து கொண்டார். இன்று படா பஜார்ப்பகுதி மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினர்.
பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு ம, சிறிய கோபாலுடன், படாபஜாருக்கு வந்தார். குருதேவர் இரண்டு டவல் களை வாங்கி வரச் சொல்லியிருந்தார், அவற்றைக் கொண்டு வந்திருந்தார் ம-, அவற்றைத் தாளில் சுற்றி ஒரு கையில் வைத்திருந்தார். இருவரும் மல்லிக் தெருவை அடைந்த போது அங்கே ஒரே மக்கள் வெள்ளம்- மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்லாமாக நெரிசலாக இருந்தது. 12- ஆம் எண் வீட்டருகே சென்ற போது, அங்கே குருதேவர் ஒரு வண்டியில் உட்கார்ந்திருப்பதை வண்டி முன்னால் போக முடியாமல் நின்று கொண்டிருப்பதையும் கண்டார்கள். வண்டியில் பாபு ராமும் ராம் சட்டர்ஜியும் இருந்தனர். கோபாலையும் ம- வையும் பார்த்ததும் குருதுவர் சிரித்தார்.
குருதேவர் வண்டியிலிருந்து இறங்கினார். அவருடன் பாபுராமும் இறங்கினார். ம- வழி காட்டியபடி முன்னால் சென்றார்.மார் வாரிகளின் வீட்டை அடைந்தனர். வீட்டு வராந்தாவில் துணி மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். குருதேவர் பக்தர்களுடன் மாடிக்கு ச் சென்றார்.
மார்வாரி பக்தர்கள் குருதேவரை வரவேற்று மூன்றாம் மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறைச் சுவரில் அன்னை காளியின் படம் மாட்டப் பட்டிருந்தது. குருதேவர் அதை வணங்கினார். பிறகு சிரித்தபடி உட்கார்ந்து பக்தர்களுடன் பேசத் தொடங்கினார்.
மார்வாரி பக்தர் ஒருவர் அங்கு வந்து குருதேவருக்குப் பாத சேவை செய்யத் தொடங்கியபோது முதலில் குருதேவர் வேண்டாம், வேண்டாம், என்று மறுத்தார். பிறகு ஒரு கணம் சிந்தித்து விட்டு, நல்லது, சிறிது செய்” என்றார் அவரது ஒவ்வொரு வார்த்தையும் கருணை பொதிந்ததாக இருந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்( ம-விடம்)
பள்ளி க் கூட சமாச்சாரம் என்ன?
ம-
இன்று விடுமுறை, சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(சிரித்தவாறே)-
நாளை மீண்டும் அதரின் வீட்டில் தேவீ மாகாத்மிய பஜனை உள்ளது.
வீட்டுத் தலைவரான மார்வாரி பக்தர் ஒரு பண்டிதரை குருதேவரிடம் அழைத்து வந்தார். பண்டிதர் குருதேவரை வணங்கி விட்டு அவரது அருகில் உட்கார்ந்தார். அவதாரம் பற்றி பேச்சு நிகழ்ந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவதாரம் பக்தனுக்காக, ஞானிக்காக அல்ல.
பண்டிதர்-
பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்- அவதாரத்தின் முக்கிய நோக்கிய பக்தனை மகிழ்விப்பது, அடுத்த படி தீயவர்களை அழிப்பது. ஞான ஆசைகள் இல்லாதவன்.
ஸ்ரீகிருஷ்ணர்( சிரித்தவாறு)
ஆனால் என்னால் எல்லா ஆசைகளையும் விட முடியவில்லை.என்னிடம் பக்தி ஆசை உள்ளது.
அப்போது பண்டிதரின் மகன் வந்து குருதேவரை வணங்கி அருகில் அமர்ந்தான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பண்டிதரே எதை பாவனை என்கின்றனர்? எதை பக்தி என்கின்றனர்?
பண்டிதர்-
இறைவனைச் சிந்திப்பதன் மூலம் நமது எண்ணங்கள் மென்மையாகின்றன. இது தான் பாவனை சூரியன் உதித்தவுடன் பனி உருகி விடுவதைப் போல்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சரி, எதைப் பிரேமை என்கின்றனர்?
பண்டிதர் நல்ல இந்தியில் பேசினார். குருதேவரும் இந்தியில் இனிமையாகப்பேசினார். குருதேவர் பிரேமை பற்றி கேட்டதற்கு பண்டிதர் ஏதோ ஒருவிதமாக விளக்கம். கூறினர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்- (பண்டிதரிடம்)
இல்லை, பிரேமை என்பது அதுவல்ல. உலகத்தை மட்டுமல்ல, நம் விருப்பத்திற்குரிய உடலைக் கூட மறந்து விடுகின்ற அளவுக்கு இறைவனிடம் கொள்கின்ற அன்பே பிரேமை. சைதன்ய தேவருக்கு இது ஏற்பட்டிருந்தது.
பண்டிதர்-
ஆம் சுவாமி,
குடிபோதையைப்போன்ற நிலை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நல்லது, சிலருக்கு பக்தி உண்டாகிறது. சிலருக்கு உண்டாவதில்லை. இதன் பொருள் என்ன?
பண்டிதர்-
இறைவனிடம் ஓர வஞ்சனை கிடையாது. அவர் கல்பதரு. யார் எதை விரும்புகிறானோ அவன் அதைப் பெறுகிறான்.ஆனால் கல்ப தருவின் அருகில் சென்று கேட்க வேண்டும்.
பண்டிதர் இவை அனைத்தையும் இந்தியில் பேசினார்.
குருதேவர் ம-வின் பக்கம் திரும்பி அவற்றை அவருக்கு வங்காள மொழியில் விளக்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நல்லது, சமாதிபற்றி சிறிது விளக்கமாக கூறுங்கள்.
பண்டிதர்-
சமாதி இரண்டுவகை-
சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி. நிர்விகல்ப சமாதியில் மனத்தின் செயல் பாடு முற்றிலும் ஒடுங்கி விடுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், தியானிக்கப் படும் பொருள் மயமாகி விடுகிறது. தியானிப்பவன், தியானிக்கப் படும் பொருள் என்ற வேற்றுமை அங்கே இல்லை.மேலும் சேதன சமாதி, ஜட சமாதி, நாரதர் மற்றும் சுகதேவருக்கு சேதன சமாதி வாய்த்திருந்தது. அல்லவா?
பண்டிதர்-
ஆம் சுவாமி!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மேலும் உள் மனா சமாதி, ஸ்தித சமாதி என்றும் உள்ளன இல்லையா?
பண்டிதர் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஜப தவம் செய்வதால் கங்கையின் மேல் நடப்பது போன்ற சித்திகள் கிடைக்கின்றன அல்லவா?
பண்டிதர்-
ஆமாம், ஆனால் பக்தன் அவற்றை விரும்புவதில்லை.
சிறிது நேரம் பேசிய பிறகு பண்டிதர் குருதேவரிடம் தாம் ஏகாதசியன்று தட்சிணேசுவரத்திற்கு அவரைக் காண வருவதாகக் கூறினர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஓ வரலாமே! உங்கள் மகன் கெட்டிக் காரன்.
பண்டிதர்-
சுவாமி, என்ன சொல்வேன்? ஆற்றில் ஓர் அலை போகிறது. மற்றொன்று எழுகிறது. எல்லாம் நிலையற்றவை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உண்மை தான். உங்களிடம் சாரம் உள்ளது.
சிறிது நேரத்திற்குப் பண்டிதர் குருதேவரை வணங்கி, பூஜை செய்யும் வேளையாகி விட்டதாகக் கூறி, விடை பெய எழுந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
பண்டிதரே உட்காருங்கள். உட்காருங்கள்.
பண்டிதர் மீண்டும் உட்கார்ந்தார். குருதுவர் ஹட யோகத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். பண்டிதர் இந்தியில் பேசினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், அதுவும் ஒருவகை தவம் தான். ஹடயோகி உடலை மிகவும் பேணுகிறான். அவனது மனம் உடலை நாடி நிற்கிறது.
பண்டிதர் குருதேவரிடம் விடைபெற்று, பூஜை செய்யச் சென்றார். குருதேவர் பண்டிதரின் மகனுடன் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கொஞ்சம் நியாயம், வேதாந்தம், தரிசனம் எல்லாம் படித்தால் பாகவதத்தைச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். இல்லையா?
மகன்-
ஆம் சுவாமி, சாங்கியத் தத்துவம் படிப்பது மிகவும் அவசியம்.
இவ்வாறு அவ்வப்போது பேச்சு நடைபெற்றது. குருதேவர் திண்டின் மீது சாய்ந்து அமர்ந்தார். பண்டிதரின் மகனும் மற்றும் சில பக்தர்களும் தரையில் அமர்ந்திருந்தனர். குருதேவர் படுத்தவாறே பாடினார்.
திருமால் திருவடி..........
............................. கைவிடு வானா?
வீட்டுத் தலைவர் வந்து குருதேவரை வணங்கினார். அவர் ஒரு மார்வாரி. குருதேவரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். பண்டிதரின் மகனும் இருந்தான்.
இங்கெல்லாம் பள்ளிகளில் பாணினி இலக்கணம் சொல்லிக் கொடுக்கிறார்களா? என்று கேட்டார் குருதேவர்.
ம-
என்ன, பாணினி இலக்கணமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், சியாயம், வேதாந்தம் முதலியவையும் கற்றுத் தருகிறார்களா?
மார்வாரி பக்தர் அந்தப் பேச்சில் ஆர்வம் காட்டாமல் குருதேவரிடம் சுவாமி, வழி என்ன? என்று கேட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இறைவனின் திரு நாமத்தையும் மகிமைகளையும் பாடுவது , சாது சங்கம், மன ஏக்கத்துடன் இறைவனிடம் பிரார்த்தனை.
பக்தர்-
சுவாமி, குடும்ப விவகாரங்களில் என் மனம் ஈடுபடுவது குறைய வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள்.
-ஸ்ரீராமகிருஷ்ணர்-
( சிரித்தவாறே).
ஈடுபாடு எவ்வளவு இருக்கிறது? எட்டணா அளவுக்கா? ( சிரிப்பு)
பக்தர்-
சுவாமி, அது உங்களுக்குத் தான் தெரியும். மகான்களின் அருள் இல்லாமல் ஒன்றும் நடக்காது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
கடவுளை மகிழ்வித்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகிறது. மகான்களின் இதயத்தில் கடவுளே அல்லவா உள்ளார்!
பக்தர்-
அவரைப் பெற்று விட்டால் பிரச்சினையே இல்லையே! ஆண்டவனைப் பெற்றவன் மற்றவற்றை விட்டு விடுகிறான். ரூபாய் கிடைத்தால் பைசாவில் ஆனந்தம் போய் விடுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சிறிது சாதனைகள் செய்வது அவசியம். சாதனைகள் செய்யச் செய்ய படிப்படியாக ஆனந்தம் ஏற்படுகிறது.
ஆழத்தில் குடம் நிறையப் புதையல் உள்ளது. அதை விரும்புபவன்பாடுபட்டு பூமியைத்தோண்ட வேண்டும். தலையெல்லாம் வியர்த்துக் கொட்டும், இருந்தாலும் விடாமல் நீண்ட நேரம் தோண்டினால், மண்வெட்டி குடத்தில் பட்டு டங் என்ற சத்தம் வருகிறது. அப்போது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. டங்டங் என்று அதிகமாகச் சத்தம் கேட்கின்ற அளவுக்கு அதிகமான ஆனந்தம்! ராமரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவரைச் சிந்தனை செய்யுங்கள். உங்களுக்காக அவரே எல்லாம் செய்து தருவார்.
பக்தர்-
சுவாமி, நீங்கள் தான் ராமர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்? அலைகள் ஆற்றனுடையவை, ஆறு அலைகளுக்கு உரியது ஆகுமா?
64
..
பக்தர்-
மகான்களுள் தான் ராமர் இருக்கிறார். ராமரை நாம் பார்க்க முடியாதே! இப்போது அவதாரமும் இல்லையே?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)
அவதாரம் இல்லையென்று எப்படி அறிந்து கொண்டீர்கள்?
மார்வாரி பக்தர் மௌனமாக இருந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவதார புருஷரை எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. நாரதர் ராமரைக் காணச் சென்ற போது ராமர் எழுந்து நாரதரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி,” நாங்கள் இல்லறத்தார்,உங்களைப்போன்ற சாதுக்கள் இங்கு வராமற் போனால் நாங்கள் தூய்மை பெறுவது எப்படி? என்று கூறினார். தந்தை சொல்லைக் காப்பதற்காக ராமர் காட்டிற்குச் சென்றார். தாம் காட்டிற்கு வருவதைக்கேட்டதிலிருந்து முனிவர்கள் உணவைத்துறந்து , விரதம் இருப்பதை அங்கே அவர் கண்டார். ராமர் பரப்பிரம்மமே என்பதை அவர்களிலும் பலர் அறியவில்லை.
பக்தர்-
நீங்களும் அந்த ராமர் தான்!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ராம், ராம் ! அப்படி ஒரு போதும் சொல்லாதீர்கள்!
இவ்வாறு கூறிய குருதேவர் மார்வாரி பக்தரைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி கூறினார்-
அந்த ராமர் எல்லா உயிர்களிலும் வாழ்கிறார், அண்ட சராசரங்கள் அனைத்திலும் பரவி நிற்கிறார். ஒவ்வொருவர் நெஞ்சிலும் வீற்றிருக்கிறார். நானோ உங்கள் சேவகன். அந்த ராமரே இந்த எல்லா மனிதர்களாகவும் உயிரினங்களாகவும் ஆகியிருக்கிறார்.
பக்தர்-
சுவாமி, எங்களுக்கு அது ஒன்றும் தெரியாது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
தெரிந்தாலும் சரி, தெரியா விட்டாலும் சரி, நீங்கள் ராமன் தான்.
பக்தர்-
உங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஏன்,? என்னைக் கல்கத்தாவிற்கு அழைத்து வர ஒரு வண்டிக் காரன் ஒப்புக் கொண்டான். மூன்று அணாவும் வாங்கிக் கொண்டான். கடைசியில் வரவில்லை.அப்போது எனக்கு மிகவும் கோபம் வந்ததே! அவன் மோசக் காரன். எனக்கு எவ்வளவு துன்பம் கொடுத்து விட்டான் பாருங்கள்!
குருதேவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மார்வாரி பக்தர்கள் மாடியில் வெளியில் பஜனை தொடங்கினர்.மயூரமுகுடனுக்கு அன்று திருவிழா. நைவேத்தியற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டு விட்டன. சுவாமி தரிசனத்திற்காக குருதேவரை அழைத்துச் சென்றனர். கண்ணனை வணங்கி, அர்ப்பித்த சில மலர்களையும் எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார் குருதேவர்.
சுவாமி தரிசனம் நிறைவுற்றதும் குருதேவர் பரவச நிலையில் ஆழ்ந்தார். கைகளைக் கூப்பி, என் பிராணனே கோவிந்தா, நீயே என் உயிர்! ஜெய் கோவிந்தா, கோவிந்தா, வாசுதேவர்! சச்சிதானந்தப் பொருளே, ஆ கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணனே ஞானம்! மனம் கிருஷ்ணன்! பிராணன் கிருஷ்ணன்!ஆன்மா கிருஷ்ணன்! உடல் கிருஷ்ணன்! ஜாதி கிருஷ்ணன்! குலம் கிருஷ்ணன்! என் பிராணனே, ஹே கோவிந்தா, நீயே என் உயிர்! என்று கூறிய வண்ணம் நின்ற நிலையிலேயே சமாதியில் ஆழ்ந்தார். ராம் சட்டர்ஜி குருதேவரை பிடித்தபடி நின்றார். நீண்ட நேரத்திற்குப் பிறகு சமாதி நிலை கலைந்தது.
மார்வாரி பக்தர்கள் அரியணையில் வீற்றிருக்கும் கண்ணனின் திருவுருவை வெளியே கொண்டு வர இருந்தனர். நைவேத்தியத்திற்கான ஏற்பாடுகள் வெளியில் செய்யப் பட்டிருந்தது.
குருதேவரின் சமாதி நிலை கலைந்தது. மார்வாரி பக்தர்கள் அரியணையிலிருந்த திருவுருவைப்பேரானந்தத்துடன் தாங்கியபடி வீட்டிற்குவெளியே எடுத்து வந்தனர். குருதேவரும் உடன் சென்றார்.
நைவேத்தியம் படைக்கப் பட்டது. நைவேத்தியத்தின் போது மார்வாரி பக்தர்கள் துணியாலான திரையை மறைப்பாகத் தொங்கவிட்டனர். நைவேத்தியம் முடிந்ததும் ஆரதியும் பஜனையும் நடந்தது. குருதேவர் அந்தத் திருவுருவத்திற்கு சாமரம் வீசினார்.
பிராமணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. குருதேவரின் அருகில் மாடியிலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. மார்வாரி பக்தர்கள் குருதேவரை உணவு ஏற்குமாறு வேண்டினர். குருதேவரும் பக்தர் களுடன் சாப்பிட்டார்.
பின்னர் குருதேவர் விடை பெற்றுக் கொண்டார். மாலை நேரம். தெருவில் மக்கள் கூட்டம். அதைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர், ” நாம் வண்டியிலிருந்து இறங்கலாம். அது பின் புறமாக சுற்றிக் கொண்டு வரட்டும்” என்று கூறிவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தார். சிறிது தூரம் நடந்து சென்ற போது வழியில் பொந்து போன்ற அறை ஒன்றின் முன்னால் ஒருவன் வெற்றிலைப் பாக்குக்கடை வைத்திருந்தான். கடைக்குள் நுழையவேண்டுமானால் கூட தலையைக் குனிந்து கொண்டு தான் செல்ல வேண்டும். அதைக் கண்ட குருதேவர், என்ன கஷ்டம்! இவ்வளவு சிறிய இடத்திற்குள் அடைப் பட்டிருக்கிறானே, இல்லறத்தானின் இயல்பு அது! இதிலும் இவர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்! என்றார்.
வண்டி சுற்று வழி வழியாக வந்து சேர்ந்தது. குருதேவர் வண்டியில் ஏறிக் கொண்டார். வண்டிக்குள் குருதேவருடன் பாபுராம்,ம-, ராம சட்டர்ஜி ஆகியோர் இருந்தனர். சிறிய கோபால் வெளியில் அமர்ந்து கொண்டார். அப்போது ஒரு பிச்சைக் காரி கையில் குழந்தையுடன் வண்டியின் அருகில் வந்து பிச்சை கேட்டாள். குருதேவர் ம-விடம், ” என்னப்பா, சில்லறை இருக்கிறதா? என்று கேட்டார். கோபால் காசு கொடுத்தார்.
படா பஜார் வழியாக வண்டி சென்றது. எங்கும் தீபாவளியின் கோலாகலம். இருள் செறிந்த இரவு என்றாலும் எங்கும் விளக்குகளால் ஒளிமயமாக இருந்தது. படாபஜார் தெருவிலிருந்து வண்டி சித்பூர் சாலையை அடைந்தது. அங்கும் ஒரே வெள்ளம்! அலங்கரிக்கப் பட்ட கடை வரிசைகளை இரு பக்கங்களிலும் வியப்புடன் வேடிக்கை பார்த்தவாறே மக்கள் எறும்புகளைப்போல் சாரை சாரையாய்ச் சென்றனர். மிட்டாய்க் கடைகளில் விதவிதமான பாத்திரங்களில் இனிப்புகள் இருந்தன. சில கடைகளில் ரோஜா முதலான நறுமண மலர்கள் அழகாகக் காட்சியளித்தன. அத்தர் கடைக்காரர்கள் அழகாக ஆடைஅணிந்து கொண்டு கடைக்கு வருபவர்கள் மீது பன்னீரைத் தெளித்துக் கொண்டிருந்தனர். குருதேவரின் வண்டி ஓர் அத்தர் கடையின் முன் நின்றது. குருதேவர் ஐந்து வயது பையனைப்போல் ஓவியங்களையும் விளக்குகளையும் கண்டு ஆனந்தம் கொண்டார். நாலா புறமும் ஒரே கோலாகலம்! குருதேவர் உரத்த குரலில், முன்னால் போ! இன்னும் முன்னால் போ! என்று கூறி விட்டுச் சிரித்தார். உரத்த குரலில் சிரித்தபடியே பாபுராமிடம் , டேய், முன்னால் போயேன், என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். பக்தர்கள் சிரித்தார்கள்.
கடவுளை நோக்கி முன்னேறு, தற்போது இருக்கும் நிலையில் திருப்தி பெற்று விட வேண்டாம். என்று குருதேவர் கூறுவதாக பக்தர்கள் உணர்ந்தனர். விறகு வெட்டி ஒருவனிடம் முன்னால் போகுமாறு ஒரு பிரம்மச்சாரி கூறினார். விறகு வெட்டியும் முன்னேறிச் சென்று சந்தன மரக் காட்டைக் கண்டான். சில நாட்களுக்குப் பிறகுமேலும் முன்னால் சென்று வெள்ளிச் சுரங்கத்தைக் கண்டான். இன்னும் முன்னேறிச் சென்ற போது தங்கச் சுரங்கத்தைக் கண்டான். கடைசியாக வைரம், மாணிக்கம் முதலியவற்றையும் கண்டான். அதனால் தான் குருதேவர், முன்னேறு, முன்னேறு என்று திரும்பத்திரும்பக் கூறுகிறார்.
வண்டி நகரத் தொடங்கியது- ம- துணி கொண்டு வந்திருப்பதை குருதேவர் கண்டார். அவற்றுள் இரண்டு சாதாரண டவல்கள் , இரண்டு துவைத்த டவல்கள். குருதேவர் ம-விடம் சாதாரண டவல்களை மட்டுமே வாங்கி வருமாறு கூறியிருந்தார். எனவே அவர் ம-விடம். சாதாரண டவல்கள் இரண்டை மட்டும் என்னிடம் கொடு. மற்றவற்றை இப்போதைக்கு நீ எடுத்துச் சென்று நீ வைத்துக் கொள். இல்லா விட்டால் ஒன்றை மட்டும் கொடு” என்றார்.
ம- சுவாமி, ஒன்றை நான் திரும்பக் கொண்டு போகவா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ம்.... இல்லாவிட்டால் இரண்டை யுமே கொண்டு போ.
ம- உங்கள் விருப்பம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
மறுபடியும் தேவை ஏற்படும் போது கொண்டு வந்து கொடு. நேற்று ராம் லாலுக்காகச் சிறிது உணவை வேணிபால் வண்டியில் வைக்க வந்தான். என்னிடம் எதையும் அனுப்பாதே என்று அவனிடம் நான் சொன்னேன். எதையும் சேர்த்து வைத்துக் கொள்ள இயலுவதில்லை.
ம- நல்லது சுவாமி, அதனால் தான் இந்த இரண்டு டவல்களை எடுத்துச் செல்கிறேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( அன்புடன்)
என் மனத்தில் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் அது உங்களுக்கு நல்லதல்ல. நீங்கள் எல்லாம் எனக்கு வேண்டியவர்கள். தேவைப் படும் போது வாங்கிக் கொள்கிறேன்.
ம-( பணிவுடன்)-
நல்லது சுவாமி.
வண்டி சிறிது முன்னேறி ஹுக்காக் குழாய் விற்கும் கடையருகே சென்று கொண்டிருந்தது. குருதேவர் ராம் சட்டர்ஜியிடம், ராம், ஒரு பைசா குழாய் ஒன்று வாங்கேன் என்றார்.
குருதேவர் ஒரு பக்தனைப் பற்றி கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நாளை படாபஜாருக்கு ப்போகிறேன். நீயும் வா என்று அவனிடம் சொன்னேன். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? டிராம் வாடகை ஓர் அணா ஆகும். யார் போவார்கள்?நேற்றுவேணி பாலின் தோட்ட வீட்டிற்குப்போனான். அங்கே ஆச்சாரியராகி விட்டான். அவனிடம் யாரும் சொல்லவே இல்லை. அவனாகவே உபதேசம் செய்தான். தான் பிரம்ம சமாஜ பக்தர்களில் ஒருவன் என்று மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக அப்படி ச் செய்தான் போலிருக்கிறது.(ம-விடம்) பார்த்தாயா? டிராமிற்கு ஓர் அணாசெலவாகும் என்று சொன்னானே, அவனை என்ன வென்று சொல்வது!
மார்வாரி பக்தர்களின் அன்ன கூட விழாபற்றி பேச்சு எழுந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( பக்தர்களிடம்)
இங்கு காண்கிறீர்களே அதையே பிருந்தாவனத்திலும் காண்பீர்கள். ராக்கால் முதலியோர் இப்போது பிருந்தாவனத்தில் இதையெல்லாம் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கே அன்ன கூடம் இன்னும் உயரமாக இருக்கும், கூட்டமும் அதிகம். அத்துடன் கோவர்த்தன கிரியையும் அங்கே பார்க்கலாம். இவை தான் வேறுபாடு.
மார்வாரி பக்தர்களிடம் எவ்வளவு பாதி பார்த்தாயா! இது தான் உண்மையான இந்து லட்சியம். இது தான் சனாதன தர்மம். தெய்வ விக்கிரகத்தை எடுத்துச் செல்லும் போது என்ன ஆனந்தம் பார்த்தாயல்லவா! இறைவனுடைய சிம்மா சனத்தை நாம் தாங்கிச் செல்கிறோம் என்பதனால் ஏற்பட்ட ஆனந்தம் அது.
இந்து மதம் தான் சனாதன தர்மம். இப்போது எந்த மதங்களையெல்லாம் பார்க்கிறாயோ அவை இறைவனுடைய விருப்பத்தினால் தோன்றும், மறையும். ஆனால் நிலைத்து நிற்காது. அதனால் தான் தற்கால பக்தர்களின் பாதங்களுக்கும் வணக்கம் என்று கூறுகிறேன். இந்து மதம் என்றென்றும் இருந்தது, இனியும் நிலைத்திருக்கப்போவது.
ம- தனது வீட்டிற்குச் செல்வதாக வழியில் சோபா பஜார் என்ற இடத்தில் குருதேவரின் பாதங்களை வணங்கி விட்டு இறங்கிக் கொண்டார். குருதேவர் ஆனந்தமாக வண்டியில் சென்று கொண்டிருந்தார்.
65
..
பல பக்தர்களுடன்
..............................................
ஞாயிறு, அக்டோபர் 26, 1884
..........................................
சகோதரா வா, போகலாம். மீண்டும் அந்த மகா புருஷரைக் கண்டு வணங்குவோம். குழந்தை இயல்புடைய அவரை மீண்டும் தரிசிப்போம். அன்னை காளியைத் தவிர வேறு எதுவும் தெரியாதவர் அவர். அவர் நமக்காகவே உடல் தாங்கி வந்திருக்கிறார். சிரமமான இந்த வாழ்க்கைப் புதிரை எப்படி அவிழ்ப்பது என்பதை நமக்குச் சொல்லித் தருவார். துறவிகளுக்கு வழி சொல்வார். இல்லறத்தாருக்கும் வழி சொல்வார். அவருடைய கதவு அனைவருக்கும் திறந்தே இருக்கும். தட்சிணேசுவரக் காளி கோயிலில் அவர் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். வா! விரைந்து வா! அவரைக் காண்போம். எல்லையற்ற குணங்களுக்கு அவர் இருப்பிடம். மலர்ந்த முகத்தைக் கொண்ட அவரது அமுத மொழிகள் நம் கண்களில் நீரைப் பெருக்கும்.
வா சகோதரா, அவர் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத அருட்கடல், காண்பற்கு இனியவர். இரவு பகலாக இறைநினைவாகிய போதையில் ஆழ்ந்திருப்பவர். சிரித்த முகம் கொண்டவர். அவரைக் கண்ணாரக் கண்டு நம் மானிடப் பிறவியைப் பயணுடையதாக்கிக் கொள்வோம்.
பிற்பகல் வேளை, குருதேவரின் அறையில் பக்தர்கள் கூடியிருந்தனர். பலர் வந்திருந்தனர். அன்று ஆனந்தச் சந்தைதான். ஆனந்த மயமான குருதேவரின் இறையன்பு பக்தர்களின் முகமாகிய கண்ணாடிகளில் பிரதிபலித்தது. என்ன வியப்பு! ஆனந்தம் பக்தர்களின் முகக் கண்ணாடிகளில் மட்டும் தானா? இல்லையில்லை, வெளியே பூந்தோட்டத்தில்! மரத்தின் இலைகளில்! மலர்ந்து நின்ற பல வண்ண மலர்களில்! பரந்து ஓடும் கங்கையில் நீர்ப் பரப்பில்! சூரியன் ஒளி வீசும் நீல வான வெளியில்! திருமாலின் திருப் பாதத்தைத் தொட்டு ஓடும் கங்கையின் நீர்த்துளிகளைத் தாங்கி வந்த குளிர்ந்த காற்றில்! இவற்றில் எல்லாம் அந்த ஆனந்தம் பிரதி பலித்துக் கொண்டிருந்தது. என்ன வியப்பு! மணற்பொடிகளும் இனிமை ததும்பும்( மதுமத் பார்த்திவம் ரஜ) என்பது உண்மைதானா! அந்தப் பூந்தோட்டத்து மண்ணில் கூட இனிமை தவழ்ந்தது!
தனித்தோ பக்தர்களுடனோ அந்தப் புழுதியிலே புரள வேண்டும் என்று ஆசை எழுகிறது. தோட்டத்தின் ஒரு பக்கத்தில் நின்றவாறு, மனத்தைக் கவரும் இந்த கங்கையை நாள் முழுவதும் தரிசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செடி கொடிகள் , மலர்கள் இவைகளுடன் தண்ணிழல் பரப்பிய அந்தப் பூந்தோட்ட மரங்களை உறவினர்களாகக் கருதி, அவற்றுடன் அன்போடு பேச வேண்டும். அன்புடன் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை எழுகிறது. அந்தப் புழுதியின் மீதல்லவா ஸ்ரீகுருதேவர் நடந்தார்! மரம், செடி கொடிகள் இவைகளின் நடுவில் தானே அவர் தினந்தோறும் நடந்தார்! ஒளிமயமான வானத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து க் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது! ஏனெனில் பூலோகம் , தேவலோகம் எல்லாம் பிரேமானந்தத்தில் அல்லவா மிதந்து கொண்டிருந்தது!
கோயிலைச்சேர்ந்த பூஜாரி, சமையற்காரன், வேலைக் காரன் எல்லோருமே ஏன் சொந்த மனிதர்களைப்போல் தோன்றுகின்றனர்? பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் பார்க்கின்ற பிறந்த இடம் போல் அந்த இடம் ஏன் மனத்திற்கு இனிமையாக உள்ளது? வானம், கங்கை, கோயில், தோட்டப் பாதைகள், மரம், செடி கொடிகள், வேலையாட்கள், தரையில் அமர்ந்திருந்த பக்தர்கள் எல்லாமே ஒரே பொருளால் ஆனவர்கள்போல் தோன்றுகிறது. ஸ்ரீகுருதேவர் எந்தப் பொருளால் ஆக்கப் பட்டிருக்கிறாரோ அதே பொருளால் தான் இவர்களும் ஆக்கப் பட்டவர்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது. தோட்டம், செடி, கொடி, பூ, இலை தோட்டப் பாதை, தோட்டக் காரன், தோட்டத்தின் நடுவில் உள்ள வீடு எல்லாமே மெழுகால் செய்யப் பட்டது போல் ஓர் உணர்வு ! அங்கிருந்த எல்லாமே ஆனந்தத்தில் வார்க்கப் பட்டவை போல் தோன்றுகின்றன.
மனமோகன், மகிமா சரண்,ம- ஆகியோர் அங்கிருந்தனர். மெள்ள மெள்ள ஈசான், ஹாஸ்ரா, எல்லாம் வந்தனர். இவர்களைத் தவிர வேறு சில பக்தர்களும் இருந்தனர், பலராமும்,ராக்காலும் அப்போது பிருந்தானவனத்தில் இருந்தனர். இந்தக் காலத்தில் நாராயணன், பல்டு, சிறிய நரேன்,தேஜ்சந்திரன், வினோத், ஹரிபதன், முதலிய புதிய பக்தர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். பாபுராம் அவ்வப்போது வந்து தங்குவார். ராம், சுரேஷ், கேதார், தேவேந்திரன் முதலிய பக்தர்களும் சிலர் வாரத்திற்கு ஒரு முறை சிலர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று வந்தபடி இருந்தனர். லாட்டு அங்கேயே தங்கியிருந்தார். யோகினின் வீடு அருகில் இருந்தது. அவர் பொதுவாக தினமும் வருவார். நரேந்திரர் நடுநடுவே வருவார். அவர் வந்தால் போதும், ஒரே ஆனந்தச் சந்தைதான்.தேவர்களுக்கும் அரிதான இனிய குரலில் அவர் பாடினாலே குருதேவருக்கு பலவித பரவச நிலைகளும் சமாதியும் ஏற்படும். எல்லாம் சேர்ந்து ஒரு திருவிழாபோல் காட்சி அளிக்கும். இளைஞர்களுள் ஒரு சிலராவது தம்முடன் இரவு பகலாகத் தங்கியிருக்க வேண்டும் என்று குருதேவர் மிகவும் விரும்பினார். அவர்கள் தூயவர்கள், திருமணத்தின் மூலமாகவோ வேறு உலகியல் காரியங்கள் மூலமாகவோ குடும்ப வாழ்வில் சிக்காத வர்கள். குருதேவர் பாபுராமைத் தங்கச் சொல்வார். அவரும் அவ்வப்போது தங்கினார். அதர்சேன் அடிக்கடி வருவார்.
அறையில் பக்தர்கள் உட்கார்ந்திருந்தனர். குருதேவர் ஒரு சிறுவனைப்போல் நின்று கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( மனமோகனிடம்)
எல்லாம் ராமனாகக் காண்கிறேன்! நீங்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறீர்கள். ராமரே நீங்கள் ஒவ்வொருவருமாக ஆகி இருப்பதைக் காண்கிறேன்.
மனமோகன்-
ராமரே எல்லாமாக ஆகியிருக்கிறார்! நீங்கள் சொல்வது போல் ஆபோ நாராயண- தண்ணீர் நாராயணன் தான். இருந்தாலும் சில தண்ணீரைக் குடிக்க முடியும், சில தண்ணீரால் முகம் கழுவலாம். இன்னொன்றால் பாத்திரம் அலம்பலாம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், ஆனால் அவரே எல்லாமாக இருப்பதைக் காண்கிறேன். அவரே உயிர்களாகவும் உலக மாகவும் ஆகியிருக்கிறார்.
இவ்வாறு சொல்லிக் கொண்டே குருதேவர் சிறிய கட்டிலில் உட்கார்ந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( மகிமா சரணிடம்)
என்னப்பா, சத்தியத்தைப்பேச வேண்டும். உண்மை தான், அதற்காக எனக்கு அதில் வெற்றிதோன்றி விட்டதா என்ன? சாப்பிட மாட்டேன் என்று திடீரென்று சொல்லி விட்டால் பசி எடுத்தாலும் என்னால் சாப்பிட முடியவில்லை. சவுக்குத்தோப்பிற்கு என்னுடன் இன்னவன் செம்பை எடுத்துவர வேண்டும் என்று சொல்லி விட்டேனானால் , பிறகு வேறு யாராவது கொண்டு வந்தால் அவனைத் திரும்பிப்போகுமாறு சொல்ல வேண்டியிருக்கிறது. இது என்னப்பா தர்ம சங்கடம்! இதற்கு வேறு வழியே இல்லையா?
எதையும் என்னுடன் கொண்டு வர முடிவதில்லை. வெற்றிலை, சாப்பாடு எதையுமே என்னோடு எடுத்து வர இயலுவதில்லை. எடுத்து வந்தால் அது சேர்த்து வைப்பதாகி விடுகிறதல்லவா! கையில் மண்ணைக் கூட எடுத்து வர முடிவதில்லை.
அப்போது ஒருவர் வந்து, சுவாமி, யது மல்லிக்கின் தோட்டத்தில் ஹிருதயர் வந்திருக்கிறார். இப்போது வாசலின் அருகில் நிற்கிறார். உங்களைக் காண விரும்புகிறார்” என்று கூறினார்.உடனே குருதேவர் பக்தர்களிடம், ” ஹிருதயனைச் சற்று பார்த்து விட்டு வருகிறேன். நீங்கள் உட்கார்ந்திருங்கள்” என்று சொல்லி விட்டு, கறுப்பு நிறச் செருப்பை அணிந்து, கிழக்கு வாசல் நோக்கிச் சென்றார். ம- மட்டும் உடன் சென்றார்.சிவப்பு ஜல்லி பரப்பப் பட்ட தோட்ட ப் பாதை வழியாக அவர் கிழக்கு நோக்கிச் சென்றார். வழியில் நின்று கொண்டிருந்த பொருளாளர் குருதேவரை வணங்கினார். தென்பக்கம் முற்றத்திற்கான கதவு இருந்தது. முறுக்கிய மீசையுடன் கூடிய காவலர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். இடது பக்கம் விருந்தினர் மாளிகை.அதையடுத்து பாதையின் இரண்டு பக்கங்களிலும் மலர் மரங்களும், சிறிது தூரத்தில் பாதையின் தென் புறத்தில் காஜிதலாவும், காளி கோயிலைச்சேர்ந்த குளத்தின் படித்துறையும் இருந்தன. அடுத்து கிழக்கு வாசல். அதன் இடது புறம் காவலாளிகளின் அறையும் வலது புறம் துளசி மாடமும் இருந்தன.
தோட்டத்தை விட்டு வெளியே வந்து பார்த்தபோது பக்கத்தில் உள்ள யதுமல்லிக்கின் தோட்ட வாசலின் அருகில் ஹிருதயர் கூப்பிய கைகளுடன் நின்று கொண்டிருந்தார். குரு தேவரைக் கண்டதும் பாதையிலேயே மரம்போல் அவரது காலில் வீழ்ந்தார். குருதேவர் அவரை எழுந்திருக்கச் சொன்னார்.ஹிருதயர் மறுபடியும் கைகளைக் கூப்பிக் கொண்டு குழந்தையைப்போல் அழ ஆரம்பித்தார்.
என்ன வியப்பு! குருதேவரும் அழுதார்! கண்ணின் ஓரத்தில் சில கண்ணீர்த் துளிகள் காணப் பட்டன. அது தெரியாமலிருக்குமாறு அவர் உடனே கண்களைத் துடைத்துக் கொண்டார். எந்த ஹிருதயர் அவருக்குத் தாங்காத தொல்லை கொடுத்தாரோ அவரைப் பார்க்க ஓடி வருகிறார்! அழவும் செய்கிறார்!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இப்போது ஏன் வந்தாய்?
ஹிருதயர்-
( அழுது கொண்டே)-
உங்களைப் பார்க்க வந்தேன். என் துக்கத்தை வேறு யாரிடம் சொல்வேன்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-( ஆறுதல் தரும் புன்னகையுடன்)-
குடும்பத்தில் இப்படிப்பட்ட துக்கங்கள் இருக்கவே செய்கின்றன. குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலே சுகமும் துக்கமும் தான்.(ம- வைச் சுட்டிக் காட்டி) அதனால் தான் இவர்கள் எல்லாம் அவ்வப்போது இங்கே வருகிறார்கள். வந்து இறைவனைப் பற்றிய பேச்சைக் கொஞ்சம் கேட்டால் மனம் அமைதி பெறுகிறது. உனக்கு என்ன துக்கம் இப்போது?
ஹிருதயர்-
( அழுது கொண்டே)-
உங்களை விட்டுப் பிரிந்தேனே அது தான் துக்கம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உங்கள் வழி உங்களுக்கு, என் பாடு எனக்கு என்று நீ தானேசொன்னாய்!
ஹிருதயர்-
ஆம், சொன்னேன். எனக்கு என்ன தெரியும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
போகட்டும், இன்று போய்வா. இன்னொரு நாள் உட்கார்ந்து பேசலாம். இன்று ஞாயிற்றுக் கிழமை. பலர் வந்திருக்கிறார்கள். காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம், இந்தத் தடவை கிராமத்தில் விளைச்சல் எப்படி?
ஹிருதயர்-
ஏதோ, பரவாயில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சரி, நான் கிளம்புகிறேன். நீ இன்னொரு நாள் வா.
ஹிருதயர் தரையில் வீழ்ந்து வணங்கினார். வந்த வழியே குருதேவர் திரும்பினார். அவருடன் ம-வும் சென்றார்.
66
..
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( ம-விடம்)
இவன் எனக்கு எவ்வளவு சேவை செய்தானோ அவ்வளவு வேதனையையும் கொடுத்தான். நான் வயிற்றுக் கோளாறினால் எலும்பும் தோலுமாக ஆகி, ஒன்றுமே சாப்பிட முடியாமல் இருந்த போது, இதோ நான் எப்படி சாப்பிடுகிறேன் பாருங்கள். ஒன்றும் சாப்பிட முடியவில்லை என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே நினைத்துக் கொள்கிறீர்கள்” என்றான் அவன். மற்றொரு முறை, ” முட்டாளே, நான் இல்லாவிட்டால் உங்கள் சாது வாழ்க்கை எல்லாம் காணாமல் போயிருக்கும்” என்றான். ஒரு நாள் இவனுடைய கொடுமை தாங்காமல், கங்கையில் நீரேற்றம் வந்த போது குதித்து உயிரை விடவே போய் விட்டேன்.
இதைக்கேட்டு ம- திகைத்து நின்றுவிட்டார். இத்தகைய வனுக்கா மனம் கசிந்து கண்ணீர் சிந்தினார்! என்று நினைத்தார் அவர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-(ம-விடம்)
அதுசரி! அவ்வளவு சேவை செய்தும் அவனுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை வந்துள்ளது? குழந்தையை வளர்ப்பது போல் என்னைக் கவனித்துக் கொண்டான். நானோ இரவு பகலாக புறவுணர்வு இல்லாமல் கிடப்பேன், அதோடு நெடுநாட்கள் நோய் வேறு!அவன் என்னை எப்படி வைப்பானோ அப்படியே நான் இருப்பேன்.
ம- என்ன சொல்வார்? மௌனமாக இருந்தார். ஒரு வேளை ஹிருதயர் பயன் கருதாமல் குருதேவருக்குச்சேவை செய்யவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டார்.
பேசியபடியே குருதேவர் அறையை அடைந்தார். பக்தர்கள் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். குருதேவர் சிறிய கட்டிலில் உட்கார்ந்தார்.
பேசியபடியே குருதேவர் அறையை அடைந்தார். பக்தர்கள் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். குருதேவர் சிறிய கட்டிலில் உட்கார்ந்தார்.
மகிமாசரண் முதலியவர்களைத் தவிர கொன்னகரைச்சேர்ந்த சில பக்தர்களும் வந்திருந்தனர். அவர்களுள் ஒருர் குருதேவரிடம் சில கேள்விகள் கேட்டார்.
கொன்னகர் பக்தர்கள்-
.................................................
சுவாமி, உங்களுக்கு பாவனை ஏற்படுகிறது. சமாதி நிலை ஏற்படுகிறது என்று கேள்விப் பட்டேன். ஏன் ஏற்படுகிறது? எவ்வாறு ஏற்படுகிறது? அதைச் சிறிது விளக்குங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ராதைக்கு மகாபாவனை ஏற்படுவது உண்டு. அப்போது தோழிகள் யாராவது அவளைத் தொடப்போனால் மற்றொருத்தி, அவள் உடம்பில் இப்போது கிருஷ்ணன் ஆடல் புரிகிறான். அவளைத்தொடாதே” என்பாள். இறையனுபவம் கிடைக்காவிட்டால் பாவனையோ மகாபாவனையோ ஏற்படாது. மீன் அதிக ஆழத்திலிருந்து மேலே வந்தால் தண்ணீர் அசைகிறது. பெரிய மீனாக இருந்தால் தண்ணீர் வேகமாக மேலும் கீழும் எழும்பும். அதனால் தான், ” பாவனையில் சிரிக்கிறான். அழுகிறான். ஆடுகிறான், பாடுகிறான். நீண்ட நேரம் பாவனை- நிலையில் இருக்க முடிவதில்லை. கண்ணாடியின் முன்னால் உட்கார்ந்து நீண்ட நேரம் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் பைத்தியம் என்று தான் நினைப்பார்கள்.
கொன்னகர் பக்தர்-
நீங்கள் கடவுளைக் கண்டிருப்பதாக கேள்விப் பட்டோம். எங்களுக்கும் காட்டியருளுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
எல்லாம் அவரது கையில். மனிதன் என்ன செய்ய முடியும்? இறைவனின் திரு நாமத்தைச் சொல்லச் சொல்ல சில வேளைகளில் தாரை தாரையாக கண்ணீர் வழிகிறது.சில வேளைகளில் வழிவதில்லை. அவரை தியானிக்கும் போது சில நாட்களில் அதிக விழிப்பு ஏற்படுகிறது. சில நாட்களில் ஒன்றும் ஏற்படுவதில்லை.
சாதனைகள் செய்ய வேண்டும், அப்போது தான் காட்சி கிடைக்கும். பரவச நிலையில் ஒரு நாள் ஹல்தார் புகூர் குளத்தைக் கண்டேன். கீழ் ஜாதிக்காரன் ஒருவன் பாசியை ஒதுக்கி விட்டுத் தண்ணீரை அள்ளிக் கொண்டிருந்தான். சிலவேளைகளில் கையில் நீரை எடுத்துப் பார்த்தான். பாசியை ஒதுக்காவிட்டால் தண்ணீரைப் பார்க்க முடியாது. சாதனை செய்யாவிட்டால் பக்தி வராது. இறைக் காட்சி கிடைக்காது என்பது அதன் மூலம் எனக்குக் காட்டப் பட்டது. தியானம், ஜபம் இவையெல்லாம் சாதனை. இறைவனது மகிமையையும் திரு நாமத்தையும் பாடுவதும் சாதனை. தானம், யஜ்ஞம், எல்லாமே சாதனைதான்.
வெண்ணெய் வேண்டுமானால் பாலில் உறையிட வேண்டும். பிறகு தனியிடத்தில் வைக்க வேண்டும். தயிராக த்தோய்ந்த பிறகு பாடுபட்டு கடைய வேண்டும். அப்போது தான் வெண்ணெய் எடுக்க முடியும்.
மகிமா சரண்-
ஆமாம், சாதனை செய்ய வேண்டும். சந்தேகமில்லை. மிகவும் பாடுபடவேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும். படிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன, கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன.
ஸ்ரீராமகிருஷ்ணர்( மகிமரிடம்)
எவ்வளவு தான் சாஸ்திரங்களைப் படிக்க முடியும்? வெறும் ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன்? முதலில் அவரை அடையப் பாடுபடு. குரு வார்த்தையில் நம்பிக்கை வைத்துச் சிறிது சாதனைகள் செய். குரு கிடைக்கா விட்டால் கடவுளிடம் மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய். தான் எத்தகையவர் என்பதை அவரே தெரிவிப்பார்.
நூல்களைப் படித்து என்ன தெரிந்து கொள்வாய்? சந்தைக்குள் போகாமல் தொலைவில் இருக்கும் வரை ஹோஹோ என்ற இரைச்சல் தான்கேட்கும். சந்தையை அடையும் போதோ நிலைமை வேறாகி விடுகிறது. அப்போது எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியும். கேட்கமுடியும். உருளைக்கிழங்கை எடு, பைசா கொடு” என்றெல்லாம் தெளிவாகக்கேட்கிறது.
கடல், தூரத்தில் இருக்கும் போது ஹோ ஹோ என்று ஓசை கேட்கிறது. அருகில் சென்றால் அதன்மேல் பல கப்பல்கள் போவதையும், பறவைகள் பறப்பதையும் அலைகள் எழுவதையும் காணலாம்.
புத்தகம் படிப்பதால் சரியான அனுபவம் கிடைப்பதில்லை. (புத்தக அறிவுக்கும் அனுபவத்திற்கும்) எவ்வளவோ வேறுபாடு. இறைக் காட்சிக்குப் பிறகு புத்தகம், சாஸ்திரம், சயன்ஸ், எல்லாம் வெறும் குப்பைகூளமாகத்தோன்றும்.
எஜமானைச் சந்திப்பது தான் அவசியம். அவருக்கு எத்தனை வீடுகள், எத்தனை தோட்டங்கள், அவரிடம் எவ்வளவு ரெசாங்கப் பத்திரங்கள் என்பதை யெல்லாம் முதலில் அறிந்து கொள்வதில் ஏன் அவ்வளவு பரபரப்பு? வேலைக் காரர்களின் அருகில் சென்றால் உன்னை அங்கே நிற்கக் கூட அனுமதிக்க மாட்டார்கள். இதில் பத்திரமும் பணமும் பற்றி ஏதாவது சொல்வார்களா என்ன? ஆனால் முண்டியடித்துக் கொண்டோ வேலியைத் தாண்டியோ எப்படியாவது எஜமானை ஒரு முறை சந்தித்து விடு. தனக்கு எத்தனை வீடுகள், எத்தனை தோட்டங்கள், எத்தனை பத்திரங்கள் என்ற விவரத்தை அவரே சொல்லி விடுவார். எஜமானைத் தெரிந்து வைத்துக் கொண்டால் வேலைக் காரர்கள், காவலாளிகள் எல்லோரும் கூட சலாம் போடுவார்கள்( எல்லோரும் சிரித்தனர்)
பக்தர்-
இப்போது எஜமானைச் சந்திப்பது எப்படி? ( எல்லோரும் சிரித்தனர்)
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதற்காக தான் சாதனை செய்ய வேண்டும். இறைவன் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு உட் கார்ந்திருந்தால் போதாது. எப்படியாவது அவரிடம் போக வேண்டும். தனிமையில் அவரை அழை, பிரார்த்தனை செய், ” எனக்குக் காட்சி கொடு” என்று முறையிட்டு மன ஏக்கத்துடன் அழு. காமினீ- காஞ்சனத்திற்காக பைத்தியம் பிடித்து அலைய உன்னால் முடிகிறது. இறைவனுக்காகச் சிறிது பைத்தியம் பிடிக்கட்டுமே! இறைவனுக்காக இவன் பைத்தியமாகி விட்டான்! என்று மக்கள் சொல்லட்டும்.சில நாட்களுக்கு அனைத்தையும் துறந்து தனிமையில் இறைவனைக் கூப்பிடு.
கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் என்ன கிடைக்கும்? ஹல்தார் புகூர் குளத்தில் பெரிய மீன் உண்டு. குளக் கரையில் உட் கார்ந்திருந்தால் மீன் கிடைக்குமா? தூண்டிலைத் தயார் செய், தண்ணீரில்போடு, மெள்ள மெள்ள அடியாழத்திலிருந்து மீன்மேலே வரும், தண்ணீரில் அசைவு உண்டாகும். அப்போது மனம் மகிழும். ஒ ருவேளை மீனைச் சற்று காணவும் முடியும். பிறகு தபாங் என்று அது தண்ணீரிலிருந்து வெளி வரும். மீனைக் கண்டதும் அதிக ஆனந்தம் ஏற்படும்.
பாலைத் தயிராக்கிக் கடைந்தால் தானே வெண்ணெய் கிடைக்கும். ( மகிமரிடம்) என்ன தொந்தரவு இது? கடவுளைக் காட்டிக் கொடுக்க வேண்டுமாம், இவர் சும்மா உட்கார்ந்திருப்பாராம்! வெண்ணெயை எடுத்து வாயின் அருகில் கொடுக்க வேண்டுமாம்!( எல்லோரும் சிரித்தனர்) என்ன தொல்லை!மீனைப் பிடித்துக் கையில் கொடுக்க வேண்டுமாம்!
ஒருவர் அரசனைக் காண விரும்பினால் , அரசன் இருப்பதோ ஏழு வாசல்களுக்கு அப்பால், முதல் வாசலைக் கடந்த உடனேயே, அரசன் எங்கே? என்று கேட்கிறான். ஆனால் எல்லா வாசல்களையும் கடக்க வேண்டும் அல்லவா?
மகிமாசரண்-
எந்த சாதனையின் மூலம் இறைவனைப் பெற முடியும்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இந்தச் சாதனையால் முடியும். அந்தச் சாதனையால் முடியாது என்று எதுவும் இல்லை. எல்லாம் அவரது அருளைப் பொறுத்தது. ஆனால் மன ஏக்கத்துடன் சிறிது சாதனைகளில் ஈடுபட வேண்டும். மன ஏக்கம் இருந்தால் இறைவனின் அருள் கிடைக்கும்.
நல்ல சூழ்நிலை அமைய வேண்டும். சாது சங்கம், விவேகம், மற்றும் சத்குரு வேண்டும். ஒரு வேளை ஒரு மூத்த சகோதரன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன் வரலாம், ஒரு வேளை மனைவி வித்யா சக்தியாக , தர்ம சிந்தை உள்ளவனாக இருக்கலாம். அவன் திருமணமே செய்து கொள்ளாதவனாக இருக்கலாம். குடும்ப வாழ்வில் சிக்கா மலே இருக்கலாம், இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும்.
ஒரு வீட்டில் ஒருவனுக்குத் தீராத வியாதி , இப்போதோ அப்போதோ என்று கிடக்கிறான். அப்போது ஒருவன் வந்து, ” சுவாதி நட்சத்திரத்தில் மழை பெய்ய வேண்டும். அந்த மழை நீர் ஒரு மண்டை ஓட்டில் விழ வேண்டும். அருகில் ஒரு தவளை வரவேண்டும். அதைப் பாம்பு ஒன்று துரத்தவேண்டும். பாம்பு பிடிக்கும் தறுவாயில் அது தப்பி மண்டையோட்டைத் தாண்டிக் குதிக்க வேண்டும். அப்போது பாம்பின் விஷம் மண்டை யோட்டில் விழ வேண்டும். அந்தவிஷத்தைக் கொண்டு மருந்து தயாரித்து நோயாளிக்குக் கொடுத்தால் அவன் பிழைத்து விடுவான்” என்று கூறினான்.
வீட்டுக் காரனும் நாள் நேரம் நட்சத்திரம் எல்லாம் பார்த்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினான். குறிப்பிட்டஎல்லா பொருட்களையும் மன ஏக்கத்துடன் தேட ஆரம்பித்தான். எம் பெருமானே, நீ சேர்த்து வைத்தால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்” என்று கடவுளிடம் பிரார்த்தனையும் செய்து கொண்டான். இப்படி சிந்தித்தபடி போய்க் கொண்டிருக்கும் போது உண்மையாகவே அங்கு ஒரு மண்டை ஓடு கிடந்தது. சிறிது நேரத்தில் சிறிது மழையும் பெய்தது. அப்போது அவன், ” பிரபோ, மண்டையோடு கிடைத்து விட்டது. சுவாதி நட்சத்திரத்தில் மழையும் பெய்திருக்கிறது. மழைத்துளி இந்த மண்டை ஓட்டில் விழுந்திருக்கிறது. இப்போது கருணை கூர்ந்து மற்றவைகளையும் சேகரித்துக் கொடு ” என்று வேண்டினான். அவன் இவ்வாறு மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்த போது விஷப் பாம்பு ஒன்று அங்கே வந்து கொண்டிருந்தது. அவன் அடைந்த மகிழ்ச்சியிலும் பரபரப்பிலும் அவனது நெஞ்சு டப்டப் என்று அடித்துக் கொண்டது.” தெய்வமே பாம்பும் வந்து விட்டது. பல பொருட்கள் ஒன்று கூடி விட்டன. எஞ்சியவற்றையும் கருணை கூர்ந்து சேர்த்துத் தருவுாய்” என்று பிரார்த்திக்கத் தொடங்கினான். பிரார்த்தித்துக் கொண்டிருந்த போதே தவளை வந்தது. வந்த தவளையைப் பாம்பு துரத்த, மண்டை யோட்டின் அருகே வந்த பாம்பு தவளையைப் பிடிக்கும் தறுவாயில் தவளை ஒரு குதிகுதித்து ஓட்டைத் தாண்டியது. பாம்பின் விஷம் மண்டை யோட்டில் விழுந்தது. அவ்வளவு தான், அவன் ஆனந்தத்தினால் கைகொட்டி ஆடிப் பாடி குதிக்க ஆரம்பித்தான்.
அதனால் தான் சொல்கிறேன், மன ஏகு்கம் இருக்குமானால் எல்லாம் நடக்கும்.
மனத்திலிருந்து எல்லாம் அகலாவிட்டால் இறையனுபூதி கிடைக்காது. சாதுவால் சேர்த்து வைக்க முடியாது. பறவையும் பக்கீரும் சேர்த்து வைப்பதில்லை. பறவையும் துறவியும் சேமிப்பதில்லை. ( தம்மைச் சுட்டிக் காட்டி) இந்த இடத்தின் நிலை என்ன தெரியுமா? கையைச் சுத்தம் செய்வதற்கான மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடிவதில்லை. வெற்றிலை போடுவதற்கானவற்றைக் கூட பொதிந்து கொண்டு வர முடிவதில்லை. ஹிருதயன் எனக்குத் துன்பம் கொடுத்த போது காசிக்குப்போய்விடலாம் என்று நினைத்தேன், துணி மணிகளை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் பணத்தை எப்படி எடுத்துச் செல்வது? கடைசியில் காசிக்குப் போகவில்லை. ( எல்லோரும் சிரித்தனர்)
67
..
மகிமரிடம் குருதேவர் கூறினார்-
நீங்கள் இல்லறத்தார்கள். இதையும் வைத்துக் கொள்ளுங்கள் , அதையும் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தையும் நடத்துங்கள், ஆன்மீகத்தையும் கைக் கொள்ளுங்கள்.
மகிமர்-
இது , அது இரண்டும் இருக்க முடியுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நான் பஞ்சவடிக்கு கங்கை கரையில்,, பணம்- மண், பணமே- மண், மண்ணே- பணம்” என்று ஆராய்ச்சி செய்து, பணத்தை கங்கையில் எறிந்த போது சிறிது பயம் ஏற்பட்டது. நான் மகா லட்சுமியை விட்டு விட்டேனோ? அவள் என் சாப்பாட்டை முடக்கி விட்டால் என்ன செய்வது? உடனே ஹாஸ்ராவைப்போல் நானும் ஒருதந்திரம் கண்டு பிடித்தேன்.” அம்மா நீ என் இதயத்தில் தங்கு! என்று கூறிவிட்டேன். ஒருவனுடைய தவத்தில் மகிழ்ந்த தேவி, அவன் முன்தோன்றி, ” உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்” என்றாள். அதற்கு அவன் , ” தாயே! நீ வரம் கொடுப்பதானால் நான் என்பேரனுடன் தங்கத் தட்டில் சாதம் சாப்பிடும் படிச்செய்” என்றான். ஒரே வரத்தில் பேரன், செல்வம், பொன் தட்டு எல்லாம் ஆகிவிட்டது( எல்லோரும் சிரித்தனர்)
மனத்திலிருந்து காமினீ- காஞ்சனம் அகலுமானால் மனம் இறைவனை நாடும். அவரிடம் சென்று ஒட்டிக் கொள்ளும். கட்டுண்டவனே முக்தனாக முடியும். இறைவனிலிருந்து விலகுபவன் கட்டுண்டவன் ஆகிறான். தராசின் கீழ் முள்,மேல் முள்ளிலிருந்து எப்போது விலகும்? காமினீ- காஞ்சனம் என்ற பளு தராசுத் தட்டை அழுத்தும்போது.!
குழந்தை பிறந்ததும் ஏன் அழுகிறது? கர்ப்பத்தில் இருக்கும் போது யோகத்தில் இருந்தேன்” ” பூமியில் விழுந்ததும் ” எங்கே , எங்கே, எங்கே வந்துள்ளேன், இறைவனின் பாதகமலங்களை நினைத்துக் கொண்டிருந்தேனே! இப்போது எங்கே வந்து சேர்ந்துள்ளேன்! என்று அழுகிறது.
நீங்கள் மனத்தளவில் துறக்க வேண்டும். பற்றற்று இல்லறம் நடத்துங்கள்.
மகிமர்-
இறைவனிடம் மனம் சென்றால் பிறகு குடும்ப வாழ்வு நிலைக்குமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதென்ன பேச்சு? குடும்பத்தை விட்டு விட்டு எங்கே போவாய்? நான் எங்கு இருந்தாலும் ராமரின் அயோத்தியிலேயே இருப்பதைக் காண்கிறேன். இந்த உலகமாகிய குடும்பம் தான் ராமரின் அயோத்தியிலேயே இருப்பதைக் காண்கிறேன். இந்த உலகமாகிய குடும்பம் தான் அயோத்தி. குருவிடமிருந்து ஞானம் பெற்ற பிறகு ராமபிரான், ” நான் குடும்ப வாழ்க்கையைத் துறந்து விடப்போகிறேன்.” என்றார். அவருக்கு விஷயத்தைப் புரிய வைப்பதற்காக தசதரர் வசிஷ்டரை ராமரிடம் அனுப்பினார். ராமரின் தீவிர வைராக்கியத்தைக் கண்ட வசிஷ்டர் அவரிடம், ராமா! முதலில் என்னுடன் வாதம் செய், பிறகு குடும்ப வாழ்வைத் துறக்கலாம். நான் ஒன்று கேட்கிறேன், ஆமாம், குடும்ப வாழ்க்கை என்பது இறைவனிலிருந்து வேறுபட்டதா, வேறுபட்டதானால் நீ துறந்து செல்லலாம்” என்றார். ஆனால் இறைவனே உயிர் உலகம் எல்லாமாக ஆகியிருப்பதை ராமர் கண்டார். இறைவன் இருப்பதால் தான் மற்ற எல்லாம் இருப்பதாக உணர்கிறோம் என்பது அவருக்குத் தெரிந்தது. அப்படியே மௌனமாகி விட்டார்.
குடும்ப வாழ்க்கையில் காமக் குரோதங்களுடன் போராட வேண்டியுள்ளது, பல்வேறு சம்ஸ்காரங்களுடன் போரிட வேண்டியுள்ளது. பற்றுக்களுடன் மோத வேண்டியுள்ளது. போரைக்கோட்டைக்கு உள்ளிருந்து நடத்துவதே சௌகரியமானது. குடும்பத்தில் இருந்து கொண்டே போர் செய்வது நல்லது- சாப்பாடு கிடைக்கிறது, மனைவி பலவித உதவிகளைச் செய்வாள். கலியுகத்தில் உயிர் உணவைச் சார்ந்துள்ளது. உணவிற்காக ஏழு இடங்களில் அலைவதை விட ஒரு வீட்டில் கிடைப்பது நல்லது, வீட்டில் இருப்பது, கோட்டைக்குள் இருந்து போர் செய்வது போன்றது.
காற்றில் பட்ட எச்சில் இலை போல் குடும்பத்தில் இரு. அந்த இலையைக் காற்று சில வேளைகளில் வீட்டின் உள்ளே அடித்துச் செல்லும், காற்று எந்தப் பக்கம் வீசுமோ, இலை அந்தப் பக்கம் செல்லும். சில சமயம் நல்ல இடத்தில் விழும், சில சமயம் மோசமான இடத்தில் விழும். இப்போது இறைவன் உன்னைக் குடும்பத்தில் வைத்திருக்கிறான். நல்லது, இப்போது அங்கேயே இரு. மீண்டும் இங்கிருந்து எடுத்து இதைவிட நல்ல இடத்தில் வைக்கிறானோ, அப்போது நடப்பது நடக்கட்டும்.
குடும்ப வாழ்வில் வைத்திருக்கிறார், அதற்கு என்ன செய்வது? எல்லாவற்றையும் அவரிடம் சமர்ப்பித்து விடு, அவரிடம் உன்னையே சமர்ப்பணம் செய். அப்படி செய்தால் எந்தக் குழப்பமும் இல்லை. அவரே எல்லாம் செய்கிறார் என்பதை அப்போது காண்பாய். எல்லாம் ராமரின் திருவுளம்.
ஒரு பக்தர்-
அது என்ன ராமரின் திருவுளம் கதை?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஒரு கிராமத்தில் நெசவாளி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் தர்ம சிந்தனை உள்ளவன். அவனை அனைவரும் நம்பினர். அவன் சந்தைக்குப்போய் துணி விற்பான். வாங்குபவர் விலை கேட்டால், ” ராமரின் திருவுளப் படி நூலின் விலை ஒரு ரூபாய், ராமரின் திருவுளப் படி வேலைக் கூலி நாலணா, ராமரின் திருவுளப் படி லாபம் இரண்டணா, துணியின் விலை ராமரின் திருவுளப் படி ஒரு ரூபாய் ஆறணா, என்று பதில் சொல்வான். மக்கள் அவனை மிகவும் நம்பினர். எனவே அவன் சொன்ன விலையைக் கொடுத்துத் துணியை வாங்கி விடுவார்கள்.
அவன் நல்ல பக்தன. இரவு சாப்பாட்டுக்குப் பிறகு நீண்ட நேரம் சண்டி மண்டபத்தில் உட்கார்ந்து இறைவனைச் சிந்திப்பான். அவரது திருநாமத்தையும் மகிமைகளையும் பாடுவான். ஒரு நாள் இரவு நீண்ட நேரம் ஆகியும்தூக்கம் வராததால், அவன் சண்டி மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் புகை பிடித்தான். அப்போது சில கொள்ளைக் காரர்கள் கொள்ளையடிப்பதற்காக அந்தவழியாகச் சென்றனர். சுமை தூக்க அவர்களுக்கு ஓர் ஆள் தேவையாக இருந்தது. உடனே அந்த நெசவாளியிடம், வந்து ” எங்களுடன் வா” என்று கூறி அவனது கைளைப் பிடித்து இழுத்துச் சென்றனர். பிறகு ஒரு வீட்டில் கொள்ளை யடித்தனர். சில பொருட்களை நெசவாளியின் தலையில் வைத்தனர். இந்த வேளையில் அங்கே போலீசார் வரவே கொள்ளைக் காரர்கள் ஓடி விட்டனர். நெசவாளி மட்டும் தலையில் சுமையுடன் அகப் பட்டுக் கொண்டாள்.
போலீசார் அவனை அன்று இரவு முழுவதும் காவலில் வைத்தனர். மறுநாள் மாஜிஸ்டரின் முன்பு விசாரணை நடந்தது. செய்தி தெரிந்ததும் கிராமவாசிகள் அனைவரும் அங்கே வந்தனர். அவர்கள் எல்லோரும் நீதிபதியிடம் , ”ஐயா இவன் ஒரு போதும் கொள்ளை அடித்திருக்க மாட்டான்” என்றனர். உடனே நீதிபதி நெசவாளியிடம், ” என்னப்பா என்ன நடந்தது சொல்” என்று கேட்டார்.
நெசவாளி பின் வருமாறு கூறினான், ஐயா , ராமரின் திருவுளப் படி இரவு சோறு சாப்பிட்டேன், பிறகு ராமரின் திருவுளப் படி சண்டி மண்டபத்தில் உட்கார்ந்திருந்தேன். ராமரின் திருவுளப் படி இரவு வெகு நேரம் ஆகியது. ராமரின் திருவுளப் படி அவரைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவரது திரு நாமத்தையும் மகிமைகளையும் பாடிக் கொண்டிருந்தேன். அந்தவேளையில் ராமரின் திருவுளப் படி கொள்ளைக் கூட்டத்தார் அந்த வழியே சென்றார்கள். ராமரின் திருவுளப் படி என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். ராமரின் திருவுளப் படி அவர்கள் ஒரு வீட்டில் கொள்ளை யடித்தார்கள். ராமரின் திருவுளப் படி என்னுடைய தலையில் சுமையை ஏற்றினார்கள். அந்த நேரத்தில் ராமரின் திருவுளப் படி போலீசார் வந்தனர். ராமரின் திருவுளப் படி நான் பிடிபட்டேன். ராமரின் திருவுளப் படி போலீசார் என்னைக் காவலில் வைத்தனர். இன்று காலை ராமரின் திருவுளப் படி என்னை உங்கள் முன்னால் கொண்டு வந்துள்ளனர்.
ஆள் இவ்வளவு நல்லவனாக இருப்பதைக் கண்ட நீதிபதி அவனை விடுதலை செய்யும் படி உத்தரவிட்டார். நெசவாளி வழியில் தனது நண்பர்களிடம், ” ராமரின் திருவுளப் படி என்னை விடுதலை செய்தனர்” என்று சொன்னான்.
குடும்பத்தில் வாழ்வது, சன்னியாசி ஆவது எல்லாமே ராமரின் திருவுளம். ஆகவே அவர்மேல் பாரத்தைப்போட்டு குடும்பக் கடமைகளைச் செய். உன்னால் வேறு என்ன தான் செய்ய இயலும்.
ஒரு குமாஸ்தா ஜெயிலுக்குப்போக நேர்ந்தது. தண்டனைக் காலம் முடிந்ததும் வெளியே வந்தான். வெளியே வந்த அவன் தைதை என்று குதித்துக் கொண்டிருப்பானா? அல்லது குமாஸ்தா வேலை பார்ப்பானா?
இல்லறத்தான் ஜீவன் முக்தனானால் , அவன் விரும்பினால் சுலபமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியும், ஞானம் பெற்றவனுக்கு , இங்கே அங்கே என்பதெல்லாம் இல்லை. அவனுக்கு எல்லாம் சமம். யாருக்கு அங்கே இருக்கிறதோ, அவனுக்கு இங்கேயும் இருக்கிறது.
கேசவரை நான் முதன் முதலில் தோட்டத்தில் பார்த்த போது, இவருடைய வால் விழுந்து விட்டது” என்று சொன்னேன். எல்லோரும் சிரித்து விட்டனர். உடனே கேசவர் ” சிரிக்காதீர்கள்” இவர் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. இவரையே கேட்போம்” என்றார். நான் சொன்னேன், தவளையின் வால் விழாதவரையில் அது தண்ணீரில் மட்டும் தான் வாழ வேண்டும். கரைக்கு வந்து தத்திக் குதிக்க முடியாது.ஆனால் வால் விழுந்ததும், அது கரைக்குத் தாவிக் குதிக்கிறது. அதன் பிறகு அது நீரிலும் வாழும், நிலத்திலும் வாழும். அதுபோல் அஞ்ஞான வால் விழாதவரை மனிதன் குடும்ப வாழ்வில் மூழ்கிக் கிடக்கிறான். அஞ்ஞான வால் விழுந்ததும், ஞானம் ஏற்பட்டதும், முக்தனாகி வாழ முடிகிறது. விரும்பி னால் குடும்ப வாழ்விலும் ஈடுபட முடியும்.
68
..
மகிமா சரண் முதலிய பக்தர்கள் தரையில் அமர்ந்தவாறு குருதேவரின் மொழிய முகத்தைப் பருகிக் கொண்டிருந்தனர். அவரது பேச்சு பல்வேறு நிறங்களைக் கொண்ட ரத்தினக் கற்கள்போல். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அவற்றைத் திரட்டிக் கொண்டனர். திரட்டிய மணிகளால் மடி நிறைந்து கனத்தது, எழுந்து நிற்கக் கூட முடியாது என்ற அளவிற்கு கனமாக இருந்தது- சின்னஞ்சிறு பாத்திரங்கள், ஆகவே வைத்துக் கொள்ள இயலவில்லை. படைப்பு தொடங்கியது முதல் இன்றுவரை பல்வேறு விஷயங்கள் பற்றி மனித உள்ளத்தில் எழுந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் இப்போது தீர்வு காணப் பட்டது. சாஸ்திரம் கற்ற பண்டிதர்களான பத்மலோசனர், நாராயண சாஸ்திரி, கௌரி பண்டிதர், தயானந்த சரஸ்வதி முதலியவர்களும் வியப்புக் கொண்டனர்.
தயானந்த சரஸ்வதி குருதேவரைத் தரிசித்து, அவரது சமாதி நிலைகளைக் கண்டபோது, ” நாங்கள் வேத வேதாந்தங்களை எவ்வளவோ வெறுமனே படித்திருக்கிறோம், ஆனால் இந்த மகானிடம் அவற்றின் விளைவைக் காண்கிறோம். பண்டிதர்கள் சாஸ்திரங்களைக் கடைந்து மோரை மட்டும் குடிக்கின்றனர். இவரைப்போன்ற மகான்கள் அதன் வெண்ணெயை உண்கின்றனர் என்பது இவரைக் கண்டதன் மூலம் தெளிவாகிறது” என்று திகைப்புடன் கூறினார்.
ஆங்கிலம் கற்ற கேசவசந்திர சேன் முதலிய அறிஞர்களும் குருதேவரைப் பார்த்து வியந்து நின்றனர். என்ன ஆச்சரியம்? படிப்பு வாசனையற்ற இவரால் எப்படி இந்த விஷயங்களையெல்லாம் பேச முடிகிறது. ஏசுநாதரைப்போன்ற பேச்சு! எளிமையான மொழி! ஆண், பெண் குழந்தை என்று அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில்
ஏசுநாதரைப்போல் கதைகள் மூலம் விளக்குகிறார். ஏசுநாதர் ” பிதாவே, பிதாவே ” என்று பைத்தியம் ஆனார். இவர் ” அம்மா, அம்மா” என்று பைத்தியமாக உள்ளார். ஞானத்தின் வற்றாத செல்வம் மட்டுமல்ல, இறைப் பிரேமையும் குடம் குடமாக அள்ளிக் கொடுக்கிறார். ஆயினும் அது குறையவே இல்லை.ஏசுவைப்போல் இவரும் ஒரு தியாகி. அவரைப்போல் தீவிர நம்பிக்கை இவரிடமும் இருக்கிறது. ஆகவே தான் இவரது பேச்சு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது. உலகியல் மனிதர்களின் பேச்சில் இந்த அளவு சக்தி இருப்பதில்லை. அவர்கள் தியாகிகள் அல்ல, கொழுந்து விட்டெரியும் நம்பிக்கை அவர்களிடம் கிடையாது. படிப்பற்ற இந்த மனிதருனக்கு இவ்வளவு பரந்த மனம் எங்கிருந்து வந்தது? என்ன விந்தை! இவரிடம் எந்தவித வெப றுப்பு மனப்பான்மை யும் இல்லை! எல்லா மதத்தினரையும் இவர் நேசிக்கிறார். யாருடனும் இவருக்குக் கருத்து வேறுபாடு இல்லை.
கேசவர் முதலான அறிஞர்கள் இவ்வாறெல்லாம் நினைத்துக் கொண்டனர்.
மகிமா சரணுடன் குருதேவர் பேசியதைக்கேட்ட ஒரு பக்தர் நினைத்தார்-
குருதேவர் குடும்பத்தைத் துறக்கும் படி சொல்ல வில்லையே! மாறாக , குடும்ப வாழ்க்கை ஒரு கோட்டையைப் போன்றது. கோட்டையில் இருந்து கொண்டு காமம், கோபம், போன்றவற்றுடன் போர் செய் என்று தான் கூறுகிறார்.
குடும்பத்தில் இல்லாமல் போனால் வேறு எங்கு போவாய்? குமாஸ்தா ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்தால் மறுபடியும் குமாஸ்தா வேலையைத் தானே செய்கிறான்? எனவே ஜீவன் முக்தன் குடும்பத்திலும் வாழ முடியும் என்றும், ஒரு விதமாகப் பார்த்தால் அவர் சொல்லத் தான் செய்கிறார். இந்த நோக்கில் கேசவர் லட்சியமாக ஆக முடியுமா? அவரிடம் குருதேவர், உங்கள் வால் விழுந்து விட்டது வேறு யாருக்கும் விழவில்லை” என்று சொன்னாரே! ஆனால் அவ்வப்போது தனிமையில் வாழ வேண்டும் என்றும் கூறுகிறார். சிறிய செடிக்கு வேலி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆடு மாடுகள் தின்று விடும். செடி வளர்ந்து அடிமரம் பருத்து விட்டால், வேலியை வைத்திருக்கலாம், அல்லது எடுத்து விடலாம். தேவையானால் ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கலாம். தனிமையில் வாழ்ந்து ஞானத்தைப் பெற வேண்டும், பக்தி பெற வேண்டும், அதன் பிறகு வந்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டால் எதற்கும் பயமில்லை.
பக்தர்கள் இவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தனர். குருதேவர் கேசவரைப் பற்றி பேசிய பின் இரண்டொரு இல்லற பக்தர்களைப் பற்றி கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( மகிமா சரண் முதலியோரிடம்)-
மதுர் பாபுவுடன் தேவேந்திர நாத் தாகூரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மதுர் பாபுவிடம், தேவேந்திரர் தெய்வ சிந்தனையில் ஈடுபடுபவர் என்று கேள்விப் பட்டேன். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டாகிறது” என்றேன். அதற்கு மதுர் பாபு, ” நல்லது, நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். நானும் தேவேந்திர நாத்தும் இந்துக் கல்லூரியல் ஒரே வகுப்பில் படித்தோம். நாங்கள் நல்ல நண்பர்கள்” என்றார். பல நாட்களுக்குப் பிறகு மதுர் பாபுவுடன் தேவேந்திரரைச் சந்தித்தேன். மதுர் பாபுவைக் கண்டதும் அவர் மதுர் பாபுவிடம், ” சற்று மாறி விட்டாய்,உனக்குத் தொந்தி விழுந்திருக்கிறது” என்றார் . மதுர் பாபு என்னைக் காட்டி, இவர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார், கடவுள் கடவுள் என்று பைத்தியமாக உள்ளார்” என்று கூறினார். நான் தேவேந்திரரின் அங்க அடையாளங்களைப் பார்ப்பதற்காக, ” உங்கள் உடம்பைக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்றேன். தேவேந்திரர் சட்டையைக் கழற்றினார். நல்ல பொன்னிறம் அதில் குங்குமம் கலந்தது போன்றிருந்தது. அவருக்கு முடி நரைக்க வில்லை.
அவரிடம் சிறிது ஆணவம், இருந்ததைக் கண்டேன். ஏன் இருக்காதப்பா! அவ்வளவு செல்வம், படிப்பு, பெயர் , புகழ்! நான் மதுர் பாபுவிடம், ” ஆமாம், ஆணவம் ஞானத்தால் ஏற்படுகிறதா, அஞ்ஞானத்தால் ஏற்படுகிறதா? பிரம்ம ஞானம் பெற்றவரிடம், ” நான் பண்டிதன்” ” நான் ஞானி” ” நான் பணக்காரன்” என்றெல்லாம் ஆணவம் இருக்க முடியுமா? என்று கேட்டேன்.
தேவேந்திரரிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று எனக்கு அந்த நிலை ஏற்பட்டது. அந்தநிலை வந்தால் யார் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள முடியும். என்னுள்ளிருந்து ஹிஹி என்று ஒரு சிரிப்பு வெளி வந்தது. அந்த நிலை ஏற்படும் புாது பண்டிதர்- டண்டிதர் எல்லாம் எனக்கு ஒரு புல்லாகத் தான் தோன்றுவார்கள். விவேக வைராக்கியம் இல்லாத பண்டிதன் ஒரு துரும்பாகவே தோன்றுவான். கழுகு மிக உயரத்தில் பறந்தாலும் அதன் பார்வை பிணக் குழி மீதே இருக்கும்.
தேவேந்திரரிடம் யோகம்,போகம் இரண்டும் இருந்ததைக் கண்டேன். சிறு சிறு பிள்ளைக் குட்டிகள் நிறைய இருந்தனர். டாக்டர் வந்திருந்தார். அவ்வளவு பெரிய ஞானியாக இருந்தும் எப்போதும் குடும்பத்திலேயே உழன்று கொண்டிருந்தார்.” நீங்கள் கலியுகத்தின் ஜனகர்”என்று அவரிடம் சொன்னேன். ” ஜனகர் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் இரண்டையும் பிடித்துக் கொண்டே, ததும்பும் கிண்ணத்தில் பால் குடித்தார். ” நீங்கள் குடும்பத்தில் இருந்து கொண்டே இறைவனிடம் மனத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப் பட்டு உங்களைப் பார்க்க வந்தேன். கடவுளைப் பற்றி எனக்கு ஏதாவது சொல்லுங்கள்” என்று தேவேந்திரரைக்கேட்டேன்.
அவர் வேதத்திலிருந்து சில வற்றைச் சொன்னார். இந்த உலகம் ஒரு சரவிளக்குப்போன்றது. ஒவ்வோர் உயிரும் ஒவ்வொரு விளக்கு” என்றார். நான் பஞ்சவடியில் தியானம் செய்த போது அப்படியே கண்டிருந்தேன். தேவேந்திரரின் வார்த்தைகளுடன் அது ஒத்திருப்பதைக் கண்டதும், இவர் பெரிய மனிதர் தான் என்று எண்ணினேன். சிறிது விளக்கிச் சொல்லும் படி கேட்டேன். அதற்கு அவர், ” இந்த உலகத்தை யார் அறிவார்? இறைவன் தன் மகிமையை வெளிப்படுத்தவே மனிதனைப் படைத்திருக்கிறார். விளக்கு இல்லாவிட்டால் எங்கும் இருள் தான். இருளில் விளக்கையே கூட பார்க்க முடியாது” என்றார்.
பல்வேறு பேச்சுகளுக்குப் பிறகு தேவேந்திரர் மகிழ்ச்சியாக , ” நீங்கள் பிரம்ம சமாஜ விழாவிற்கு வர வேண்டும்” என்று கூறினார். அது இறைவன் திருவுளம். என் நிலையைத் தான் பார்க்கிறீர்களே! எப்பொழுது எந்த நிலையில் என்னைஅவர் வைப்பார் என்பது தெரியாது” என்றேன் நான். அதற்கு தேவேந்திரர், இல்லை, நீங்கள் வரத்தான் வேண்டும்.ஆனால் வரும்போது வேட்டியும் மேல் துண்டும் அணிந்து வாருங்கள். நீங்கள் ஏனோ தானோ என்றிருப்பதைக் கண்டு யாராவது ஏதாவது சொன்னால் என் மனம்கஷ்டப் படும்” என்றார்.” அது என்னால் முடியாது” நான் கனவான் ஆக முடியாது” என்றேன். தேவேந்திரரும் மதுர் பாபுவும் சிரித்தனர்.
அடுத்த நாளே தேவேந்தரரிடமிருந்து மதுர் பாபுவுக்குக் கடிதம் வந்தது. நான் விழாவிற்குப் போக வேண்டாம் என்று அவர் எழுதி இருந்தார். உடலில் மேல் துண்டின்றி இருப்பது அநாகரீகம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.( எல்லோரும் சிரித்தனர்)
(மகிமரிடம்) இன்னொருவர் இருக்கிறார்- கேப்டன், அவர் இல்லறத்தார், ஆனால் பெரிய பக்தர். நீ அவருடன் பேசு. வேதம், வேதாந்தம், ஸ்ரீமத் பாகவதம் , கீதை, அத்யாத்ம ராமாயணம் எல்லாம் அவருக்கு மனப் பாடம். நீபேசிப் பார்.
அவருக்கு ஆழ்ந்த பக்தி! நான் வராக நகர் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது அவர் எனக்கு க் குடை பிடித்தார். வீட்டுக்கு அழைத்துச் சென்று எவ்வளவோ உபசாரங்கள் செய்வார்- வீசுவார். கால் பிடித்து விடுவார். பல விதமான காய்கறிகளுடன் சாப்பாடு போடுவார். ஒருநாள் அவரது வீட்டுக் கழிவறையில் நான் புறவுணர்வை இழந்து விட்டேன்.அவரோ ஆசாரம் மிக்கவர். இருந்தும் உள்ளே வந்து என்னைச் சரியாக உட்கார வைத்தார். அவ்வளவு ஆசாரம் உள்ளவராக இருந்தும் வெறுப்புக் காட்ட வில்லை.
கேப்டனுக்குச் செலவு அதிகம். காசியில் அவருடைய சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும். அவருடைய மனைவி முன்பெல்லாம் பெரிய கருமியாக இருந்தாள். இப்போது செலவு பெருகிப் பெருகி, வேண்டிய அளவு செலவு செய்ய அவளால் முடியவில்லை.
கேப்டனின் மனைவி என்னிடம் ஒரு சமயம் குடும்ப வாழ்க்கை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், குடும்ப வாழ்க்கையை விட்டு விடப்போவதாகவும் கூறினாள். விட்டுவிடப்போகிறேன், விட்டு விடப்போகிறேன்” என்று அவ்வப்போது புலம்புவாள்.
அவர்களின் வம்சமே பக்த வம்சம்.கேப்டனின் தந்தை போர் வீரர். போர் செய்யும்போது, ஒரு கையால் சிவ பூஜை செய்த படியே மற்றொரு கையால் வாளைச் சுழற்றுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
69
..
கேப்டன் ஆசார அனுஷ்டானங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். நான் கேசவரிடம் போகிறேன் என்பதற்காக அவர் ஒரு மாதம் இங்கேவரவில்லை. கேசவர் ஆசாரம் இல்லாதவர். ஆங்கிலேயருடன் சாப்பிடுகிறார்” வேறு ஜாதியில் மகளைத் திருமணம் செய்து கொடுத்தவர். எனவே ஜாதியை இழந்தவர்” என்று அவர் கூறுவார். அதற்கு நான், அதையெல்லாம் பற்றி நான் ஏன் கவலைப் படவேண்டும்? அவர் ஹரி நாமத்தைச் சொல்கிறார். நான் பார்க்கப்போகிறேன். இறைவனைப் பற்றிய பேச்சைக் கேட்கப்போகிறேன். அவ்வளவு தான். நான் இலந்தைப் பழத்தைச் சாப்பிடுகிறேன், முட்களைப்பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்?” என்று கூறினேன். ஆனாலும் அவர் என்னை விடவில்லை. ” நீங்கள் ஏன் கேசவரின் வீட்டுக்குப் போக வேண்டும்” ? என்று கேட்டார். எனக்கு வெறுப்பாகி விட்டது. ” நான் பணத்திற்காக அங்கு போகவில்லையே? ஹரி நாமத்தைக்கேட்கத் தானே அங்கு போகிறேன்! நீங்கள் ஏன் வைஸ்ராயின் மாளிகைக்குப்போகிறீர்கள்! அவர்கள் மிலேச்சர்கள், அவர்களுடன் எப்படி இருக்கலாம்? என்று கேட்டேன். இவ்வளவு நடந்த பிறகு தான் அவர் மௌனமானார்.
எது எப்படியிருந்தாலும் கேப்டன் பரம பக்தர். பூஜை வேளையில் கற்பூர ஆரதி காட்டுவார். பூஜை செய்து செய்து ஸ்தோத்திரங்களைச் சொல்வார். அப்போது ஒரு பது மனிதராக மாறிவிடுவார், தன்னுள் ஆழ்ந்து விடுவார்.
வேதாந்த ஆராய்ச்சியில், உலகம் மாயைமயமானது , கனவைப்போன்றது, எதுவும் உண்மையல்ல, யார் பரமாத்மாவோ அவர் சாட்சி நிலையில் இருக்கிறார்-
விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக இருக்கிறார். இவையெல்லாம் உன் மனப்போக்குக்கு ஒத்த கருத்துக்கள். கனவு எவ்வளவுஉண்மையோ, விழிப்பு நிலையும் அவ்வளவே உண்மை. உன்னுடைய போக்குக்கு ஏற்ற ஒரு கதை சொல்கிறேன் கேள்.
ஓர் ஊரில் குடியானவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய ஞானி. விவசாயம் செய்து வந்தான். அவனுக்கு மனைவி இருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் ஹாரு. பெற்றோர் குழந்தையை மிகவும் நேசித்தனர். வீட்டில் ஒரே செல்வம் அல்லவா! குடியானவன் நல்லவன். கிராம மக்களும் அவனை நேசித்தனர். ஒரு நாள் அவன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது ஒருவன் அவனிடம் வந்து, ஹாருவிற்குக் காலரா கண்டிருப்பதாகச் சொன்னான். குடியானவன் வீட்டுக்குச் சென்றான். எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தான். ஆனாலும் குழந்தை இறந்து விட்டது. வீட்டினர் அனைவரும் துயரத்தில் மூழ்கினர். ஆனால் குடியானவன் எதுவும் நிகழாதது போல் இருந்தான். கவலைப் பட்டு என்ன பயன் என்று எல்லோருக்கும் ஆறுதல் வேறு சொன்னான். பிறகு மீண்டும் வயலுக்குச் சென்று வேலை செய்யத் தொடங்கினான். வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றபோது மனைவி இன்னும் அழுது கொண்டேயிருந்தாள். அவன் அவனிடம், ” நீ கல் நெஞ்சுக் காரன் குழந்தைக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லையே? என்றாள். குடியானவன் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டான். ” ஏன் அழவில்லை என்று சொல்லவா? கேள்.நேற்று நான் ஒரு கனவு கண்டேன். நான் அரசனாக இருந்தேன். எட்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தேன். எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்! பிறகு தூக்கம் கலைந்து விட்டது. இப்போது ஒரு பெரிய பிரச்சனை யில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்- அந்த எட்டு குழந்தைகளுக்காக அழுவதா? இல்லை, இந்தக் குழந்தை ஹாருவிற்காக அழுவதா? என்றான்.
குடியானவன் ஒரு ஞானி, ஆகவே தான் கனவு எப்படி உண்மையில்லையோ, அதே போல் நனவு நிலையும் உண்மையற்றது, அந்த ஆன்மா ஒன்று தான் நிலையான பொருள் என்பதைக் கண்டான்.
நான் எல்லா நிலைகளையும் அதாவது துரீயம் மற்றும் விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற மூன்று நிலைகள் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்கிறேன். பிரம்மம், மாயை, உயிர், உலகம், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளா விட்டால் எடை குறைந்து விடுமே!
ஒரு பக்தன்-
எடை ஏன் குறைய வேண்டும்? ( எல்லோரும் சிரித்தனர்)
ஸ்ரீராமகிருஷ்ணர்-
உயிர், உலகம் அனைத்தையும் உள்ளடக்கியது பிரம்மம். முதலில் இது அல்ல, இது அல்ல என்று ஆராயும் போது உயிர்களையும் உலகத்தையும் விட வேண்டியிருக்கிறது. நான் என்ற புத்தி இருக்கும் வரை இறைவனே எல்லாமாகியிருக்கிறார். அவரே இருபத்து நான்கு தத்துவங்களாகவும் ஆகியிருக்கிறார். வில்வப் பழத்தின் சாரம் என்று சொல்லும் போது அதன் சதையைத் தான் குறிக்கிறோம். விதையையும் ஓட்டையும் எறிந்து விடுகிறோம். ஆனால் வில்வப் பழத்தின் எடை எவ்வளவு என்று சொல்ல வேண்டுமானால் வெறும் சதையை மட்டும் எடை போட்டால் போதாது. எடை போடும் போது சதை, விதை, ஓடு எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். சதை எதனுடையதோ, அதனுடையது தான் விதை, அதனுடையது தான் ஓடு!
நித்தியம் யாருடையதோ அவருடையது தான் லீலையும். ஆகவே தான் நித்தியம். லீலை எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். மாயை என்று சொல்லி நான் வாழ்க்கையைத் தட்டிக் கழித்ததில்லை. அப்படியானால் எடை குறையுமே!
மகிமர்-
இது நல்ல சமரசம். நித்தியத்திலிருந்து லீலை, லீலையிலிருந்து நித்தியம்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஞானிகள் எல்லாவற்றையும் கனவு போல் காண்கின்றனர். பக்தர்கள் எல்லா நிலைகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஞானிகள் பால் தருவார்கள்- ஆனால் துளி த் துளியாக ( எல்லோரும் சிரிக்கின்றனர்) சில பசுக்கள் இருக்கின்றன. பார்த்துப் பார்த்து தீனி தின்னும், ஆகவே துளித்துளியாகத் தான் பால் கொடுக்கும். இவ்வாறு பார்த்துப் பார்த்து தின்னாமல், கண்டதையெல்லாம் தின்னக் கூடிய பசு தான் தாரைத் தாரையாக பால் கொடுக்கும். உத்தம பக்தன் நித்தியம். லீலை இரண்டையும் ஏற்றுக் கொள்கிறான். ஆகையால் தான் அவனது மனம் நித்தியத்திலிருந்து கீழே வந்தாலும் இறைவனை அனுபவிக்க முடிகிறது. உத்தம பக்தன் தாரை தாரையாகப் பால் கொடுக்கிறான்.( எல்லோரும் சிரித்தனர்)
மகிமர்-
ஆனால் அந்தப் பாலில் சிறிது நாற்றம் இருக்கும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( சிரித்தபடி)
இருக்கும், உண்மை தான். அதைச் சிறிது சுட வைக்க வேண்டும். நெருப்பின் மீது வைத்துக் காய்ச்ச வேண்டும். ஞான நெருப்பின் மீது அதைச் சிறிது நேரம் வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த நாற்றம் இருக்காது( எல்லோரும் சிரித்தனர்)
( மகிமரிடம்)-
ஓங்காரத்தின் விளக்கம் அகார, உகார , மகாரம் என்று மட்டுமே நீங்கள் சொல்கிறீர்கள்.
மகிமர்-
அகார, உகார, மகாரம் அதாவது படைத்தல், காத்தல், ஒடுக்குதல்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நான் மணியின் டங், என்ற ஓசையை உவமையாகச் சொல்கிறேன். ட- அ-அ-ம்- லீலையிலிருந்து நித்தியத்தில் ஒடுங்குதல், தூலம், சூட்சுமம், காரணம் இவற்றிலிருந்து மகா காரணத்தில் ஒடுங்குதல், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம், இவற்றிலிருந்து துரீயத்தில் ஒடுங்குதல், மணியடிப்பது என்பது மகா சமுத்திரத்தில் ஒரு கனமான பொருள் விடுவது போன்றது. உடனே அலைகள் எழத் தொடங்குகின்றன- நித்தியத்திலிருந்து லீலை ஆரம்பமாகிறது.மகா காரணத்திலிருந்து தூல, சூட்சும, காரண உடல்கள் உருவெடுக்கத் தொடங்குகின்றன. அதே துரீய நிலையிலிருந்து தான் விழிப்புணர்வு, கனவு, ஆழ்ந்த தூக்க நிலைகள்தோன்றுகின்றன.மேலும் மகா சமுத்திரத்தின் அலைகள் மகா சமுத்திரத்திலேயே ஒடுங்குகின்றன. நித்தியத்தைப் பிடித்துக் கொண்டே லீலைக்கு, லீலையைப் பிடித்துக் கொண்டே நித்தியத்திற்கு, அதனால் தான் நான் டங் என்ற ஓசையை உலமையாகச் சொல்கிறேன். இவற்றைஎல்லாம் நான் அப்படி அப்படியே கண்டிருக்கிறேன். எல்லையற்ற உணர்வுப் பெருங்கடல் எனக்குக் காட்டப் பட்டது. அதிலிருந்து தான் இந்த லீலை எழுந்தது. அதிலேயே ஒடுங்கவும் செய்தது. உணர்வுப் பெரு வெளியில் பலகோடி பிரம்மாண்டங்கள் உற்பத்தி ஆகின்றன. அதிலேயே ஒடுங்கவும் செய்தன. உங்கள் சாஸ்திரத்தில் என்ன இருக்கிறதோ எனக்குத் தெரியாது.
மகிமர்-
கண்டவர்கள் சாஸ்திரம் எழுத வில்லையே! அவர்கள் தங்கள் எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தனர். எழுத அவர்களுக்கு நேரம் எங்கே? எழுதுவதானால் சிறிது கணக்குப்போடும் புத்தியும் வேண்டும். அவர்களிடம் கேட்டு மற்றவர்கள் எழுதினார்கள்?
….
70
..
ஸ்ரீராமகிருஷ்ணர்-
காமினீ- காஞ்சனப் பற்று ஏன் போவதில்லை என்று இல்லறத்தார் கேட்கின்றனர். ஒரு முறை பிரம்மானந்தத்தைப் பெற்று விட்டால் புலனின்பங்களை அனுபவிக்கவோ, பணம் பெயர் புகழ் இவற்றை நாடியோ மனம் ஓடாது. வீட்டில் பூச்சி ஒரு முறை வெளிச்சத்தைக் கண்டு விட்டால், பிறகு அது இருளை நாடாது.
ராவணனிடம், ” சீதையை அடைவதற்காக நீ மாயா சக்தியால் பல உருவங்களை எடுக்கிறாய். ஒரு முறை ராமனின் வடிவத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் போயேன்” என்று யோசனை கூறியபோது அவன், துச்சம் ப்ரஹ்ம பதம்” பரவதூஸங்கம் குத? – ராமனை நினைக்கும் போது பிரம்மபதமே துச்சமாகி விடும் பொழுது பிறன் மனைவியை நாடுவது என்பது அற்பமாகி விடும். எனவே ராம வடிவம் தரிப்பதா? என்றான்.
அதற்காகத் தான் சாதனைகள், தவம் எல்லாம். இறைவனைச் சிந்திக்கின்ற அளவிற்கு உலகின் சாதாரண இன்பங்களின் மீதுள்ள பற்று குறைகிறது. அவருடைய பாத கமலங்களில் பக்தி அதிகரிக்கின்ற அளவுக்கு உலகியல் ஆசைகள் குறையும். உடலின்ப நாட்டம் குறையும். பிற பெண்கள் தாய் போல் தோன்றுவர். மனைவி ஆன்மீகப் பாதையில் உதவி செய்யக் கூடிய தோழியாகத்தோன்றுவாள். மிருகத் தன்மை போகும், தெய்வத்தன்மை வரும். குடும்ப வாழ்வில் பற்று ஒரேயடியாக விலகி விடும். அவர்கள் குடும்பத்தில் இருந்தாலும் ஜீவன் முக்தர்களாக இருப்பார்கள். சைதன்ய தேவரின் பக்தர்கள் பற்றற்றவர்களாகக் குடம்ப வாழ்வில் இருந்தனர்.
( மகிமரிடம்)
சரியான பக்தனிடம் போய் ஆயிரம் வேதாந்த ஆராய்ச்சி செய்யுங்கள், எல்லாம் கனவு போன்றது. என்றெல்லாம் சொல்லுங்கள். அவனது பக்தி போகாது. இங்கே அங்கே என்று சுற்றிவிட்டு பக்தியிலேயே நிலைப்பான். உலக்கையின் சிறு துண்டு நாணல் காட்டில் விழுந்தது. அந்த உலக்கைத் துண்டால் குலமே அழிந்தது.
சிவ அம்சங்களோடு பிறந்தால் ஞானியாவான்.ப்ரஹம ஸத்யம், ஜகத் மித்யா என்ற உணர்வை நோக்கியே அவனது மனம் எப்போதும் செல்லும். விஷ்ணு அம்சத்தோடு பிறந்தால் பிரேம பக்தி ஏற்படும். அந்தப் பிரேம பக்தி மறையாது. ஞான ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பிரேம பக்தி ஒரு வேளை குறைந்தாலும் பிறகு ஒரு சமயம் மடமடவென்று வளர்ந்து விடும். உலக்கை யது வம்சத்தை அழித்ததே அது போல்.
குருதேவரின் அறைக்குக் கிழக்கேயுள்ள வராந்தாவில் உட்கார்ந்து ஹாஸ்ரா ஜபம் செய்வார். அவருக்கு நாற்பத்தாறு நாற்பத்தேழு வயது இருக்கும். குருதேவரின் ஊரைச்சேர்ந்தவர். பல நாட்களாக வைராக்கியம் வந்தவராக அங்கும் இங்கும் சுற்றினார். அவ்வப்போது வீட்டில் சென்றும் தங்குவார். சிறிது நில புலன்கள் இருந்தன. அதைக் கொண்டு தான் மனைவி மக்களைப் பராமரித்து வந்தார். ஆயிரம் ரூபாய் வரை கடன் இருந்தது. ஆகவே எப்போதும் கவலையில் இருப்பார். கடனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார். அடிக்கடி கல்கத்தாவுக்கு செல்வார். அங்கே டன்டானியாவில் வசித்து வந்த ஈசான் சந்திர முகோபாத்தியாயர் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருந்தார். ஒரு சாதுவுக்குச் செய்வதைப்போல் அவருக்குச்சேவை செய்வார்.குருதேவரும் ஹாஸ்ராவை அன்புடன் கவனித்துக் கொண்டார். ஆடை கிழிந்திருக்கக் கண்டால் உடனே புதிய ஆடை வாங்கி க் கொடுக்க ஏற்பாடு செய்வார். அவரது நலனை விசாரிப்பார்ஆன்மீக விஷயங்களை அவருடன் பேசுவார். ஹாஸ்ரா பெரிய தர்க்கவாதி. பேசிக் கொண்டிருக்கும்போதே தர்க்க அலைகளில் மிதந்து ஒரு பக்கமாக ப்போய் விடுவார். வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு ஜபமாலையும் கையுமாக எப்போதும் ஜபம் செய்வார்.
ஹாஸ்ராவின் தாய் நோயுற்ற செய்தி வந்திருந்தது. ராம்லால் கிராமத்திலிருந்து வந்தபோது அவள் ராம்லாலின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ” உன் சித்தப்பாவிடம் என் வேண்டுகோளை எடுத்துக் கூறி, எப்படியாவது பிரதாபை( ஹாஸ்ரா) இங்கு அனுப்புமாறு சொல். அவன்ஒரு முறை என்னை வந்து பார்க்கக் கூடாதா? என்று கெஞ்சினாள்.ஆகவே தான் குருதேவர் ஹாஸ்ராவிடம், நீ ஒரு முறை வீட்டுக்குப் போய் உன் தாயைப் பார்த்து விட்டு வா. அவள் ராம்லாலிடம் மன்றாடி சொல்லி அனுப்பியிருக்கிறாள். தாய்க்குக் கஷ்டம் கொடுத்து இறைவனை அழைக்க முடியுமா? ஒரு முறை அவளைப் பார்த்து விட்டு, வேண்டுமானால் உடனே வந்து விடு” என்று கூறியிருந்தார்.
பக்தர்கள் கூட்டம் கலைந்ததும் மகிமர் ஹாஸ்ராவை அழைத்துக் கொண்டு குருதேவரிடம் வந்தார். ம-வும் அங்கு இருந்தார்.
மகிமர்-( குருதேவரைப் பார்த்து சிரித்தவாறு)-
சுவாமி, உங்களிடம் ஒரு புகார் செய்ய வந்துள்ளேன். நீங்கள் ஏன் ஹாஸ்ராவை வீட்டுக்குப் போகும் படி சொல்கிறீர்கள்? வீட்டுக்குப் போக வேண்டும் என்றஆசை அவருக்கு இல்லையே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவனுடைய தாயார் ராம்லாலிடம் தனது கஷ்டத்தையெல்லாம் சொல்லி முறையிட்டிருக்கிறாள்.ஆகவே தான் அவனை இரண்டொரு நாள் போய் தங்கி வருமாறு கூறுகிறேன். தாயாரை ஒரு முறை பார்த்து விட்டு வா என்கிறேன். தாய்க்கு க் கஷ்டம் கொடுத்துக் கொண்டு இறை சாதனை செய்ய முடியுமா என்ன? நான் பிருந்தாவனத்தில் தங்க முடிவு செய்தேன்.அப்போது என் தாயின் நினைவு வந்தது.” அவள் அழுவாளே” என்று நினைத்தேன். உடனே மதுர் பாபுவுடன் இங்கே திரும்பி விட்டேன். மேலும், வீட்டிற்குப் போக ஞானி ஏன் பயப் பட வேண்டும்?
மகிமர்( சிரித்தவாறே)-
சுவாமி, ஞானியாக இருந்தால் தானே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( சிரித்தபடி)-
ஹாஸ்ராவிற்கு எல்லாம் ஏற்பட்டு விட்டது. ஏதோ சிறிது மனம் குடும்பத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது- குழந்தைகள் இருக்கின்றன. சிறிதுகடன் இருக்கிறது. அவ்வளவு தான், மாமியாருக்கு நோய் எல்லாம் குணமாகி விட்டது. வியாதி மட்டுமே சிறிது உள்ளது”( மகிமா சரண் முதலியோர் சிரித்தனர்)
மகிமர்-
எங்கே ஞானம் ஏற்பட்டிருக்கிறது, சுவாமி?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இல்லையப்பா, உனக்குத் தெரியாது! ” ஹாஸ்ரா பெரிய மனிதர், ராசமணியின் கோயிலில் இருக்கிறார்” என்று எல்லோரும் சொல்கின்றனர். எல்லோரும் ஹாஸ்ராவின் பெயரைத் தான் சொல்கிறார்கள். இந்த இடத்தின் பெயரை யாராவது சொல்கிறார்களா?( எல்லோரும் சிரித்தனர்)
ஹாஸ்ரா-
நீங்கள் இணையற்றவர், உங்களுக்கு ஒப்புவமையே கிடையாது. ஆகவே உங்களை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஒப்புவமை இல்லாதவரைக் கொண்டு எந்த வேலையும் நடக்காது. எனவே இந்த இடத்தின் பெயரை யாராவது சொல்வார்களா என்ன?
மகிமர்-
சுவாமி, அவருக்கு என்ன தெரியுமா? நீங்கள் எப்படி சொல்வீர்களோ, அப்படி நடப்பார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அப்படியில்லை, வேண்டுமானால் நீ அவனைக்கேட்டுப் பார். ” உனக்கும் எனக்கும் எந்த விதக் கொடுக்கல் வாங்கல் இல்லை” என்று என்னிடம் சொல்லி யிருக்கிறான்.
மகிமர்-
அதிகமாக தர்க்கம் செய்கிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவ்வப்போது அவன் எனக்கு உபதேசம் செய்வதும் உண்டு. ( எல்லோரும் சிரித்தனர்) அவன் தர்க்கம் செய்யும் போது சில வேளைகளில் நான் அவனைத் திட்டி விடுவேன். பிறகு, கொசுவலையின் உள்ளே படுத்துக் கொண்டிருப்பேன். என்ன வார்த்தை சொல்லி விட்டேன் என்று மனம் வருந்துவேன். உடனே வெளியே வந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வருவேன், அப்போது தான் நிம்மதி ஏற்படும்.
( ஹாஸ்ராவிடம்) சுத்த ஆன்மாவை நீ ஏன் இறைவன் என்கிறாய்? சுத்த ஆன்மா செயலற்றது, மூன்று நிலைகளிலும் சாட்சியாக இருப்பது . படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகியவற்றை நினைக்கும் போது அவரை இறைவன் என்று சொல்கிறோம். சுத்த ஆன்மா எப்படிப் பட்டது தெரியுமா? காந்தம் போல், காந்தக் கல் அதிக தூரத்தில் இருக்கிறது. ஆனால் ஊசி அசைகிறது, காந்தக் கல் அசைவதில்லை. செயலற்ற நிலை.
71
..
மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. குருதேவர் உலவிக் கொண்டிருந்தார்.ம- தனிமையில் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட குருதேவர் திடீரென்று அவரைக் கூப்பிட்டு அன்புடன், எனக்கு இரண்டொரு சட்டைத் தைத்துக் கொடு” நான் எல்லோரிடமிருந்தும் சட்டை வாங்கிக் கொள்வதில்லையே! கேப்டனிடம் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் நீயே கொண்டு வா” என்றார். ம- எழுந்து நின்று, உத்தரவு” என்றார்.
மாலைவேளை குருதேவரின் அறையில் தூபம் போட்டிருந்தனர். அவர் தேவ தேவியரை வணங்கிவிட்டு , பீஜ மந்திரத்தை ஜபித்த வண்ணம் நாம சங்கீர்த்தனம் செய்தார்.
அறைக்கு வெளியே என்றுமில்லாதோர் அழகு விரிந்திருந்தது! ஐப்பசி மாம், வளர்பிறை ஏழாம் நாள், தூய சந்திரக் கிரணங்களினால் கோயில் அழகில் குளித்துக் கொண்டிருந்தது. மற்றொரு புறம், தூங்குகின்ற குழந்தையின் மார்பு போல் கங்கையின் மேற்பரப்பு மெதுவாக விம்மித் தணிந்து கொண்டிருந்தது. நீருற்றம் வடிந்து கொண்டிருந்தது. மாலை ஆரதியின் இசையொலி குளிர்ந்த, பள பளப்பான கங்கைப் பிரவாகத்தில் ஏற்பட்ட கல கல என்ற ஓசையுடன் கலந்து வெகு தூரம் சென்று கடைசியில்ஓய்ந்தது.
காளி, விஷ்ணு, சிவன் கோயில்களில் ஒரே நேரத்தில் ஆரதி நடை பெற்றது. பன்னிரண்டு சிவன் கோளில்களிலும் ஒவ்வொன்றாக சிவ லிங்கங்களுக்கு ஆரதி நடை பெற்றது. பூஜாரி ஒரு கோயிலிலிருந்து மற்றோர் கோயிலுக்குச் சென்று ஆரதி செய்தார். அவரது இடது கையில் மணியும் வலது கையில் பஞ்ச தீபமும் இருந்தன. ஓர் உதவியாளனும் கூடவே சென்றான். அவனது கையில் சேகண்டி இருந்தது.ஆரதி நடை பெற்றபோது கோயிலின் தென்மேற்கு மூலையிலிருந்து ஷெனாயின் இனிய நாதம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்குள்ள நகபத்திலிருந்து மாலை நேர ராகங்கள் இசைக்கப் பட்டன. ஆனந்த மயியின் நித்தியத் திருவிழா நடை பெற்றது. யாரும் ஆனந்த மற்றவர்களாக இருக்காதீர்கள். உலகில் சு துக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அவை இருந்து விட்டுப்போகட்டும். ஜகதம்பா இருக்கிறாள்! நமது தாய் இருக்கிறாள், ஆனந்தமாக இருங்கள்” என்று நினைவூட்டுவது போல் அந்த இசை ஒலிக்கின்றதா?
வேலைக் காரியின் குழந்தைக்கு நல்ல உணவு இல்லை. கட்ட நல்ல துணி இல்லை. வீடு வாசல் எதுவுமில்லை. ஆனாலும் மனத்தில் உறுதி இருக்கிறது. காரணம் தாய் ஒருத்தி இருக்கிறாளே! தாயின் மடியில் கவலையின்றி இருக்கிறது. அவள் வளர்ப்புத் தாய் அல்ல, உண்மையான தாய். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனக்கு என்ன நடக்கும்? நான் எங்கே போவேன்? எல்லாம் அவளுக்குத் தான் தெரியும். அதைப் பற்றி நான் ஏன் கவலைப் படவேண்டும்? என் தாய்க்கே எல்லாம் தெரியும். உடல், மனம், பிராணன், ஆன்மா எல்லாம் தந்து என்னை உருவாக்கிய அந்த என் தாய்க்கே எல்லாம் தெரியும். தெரிந்து கொள்ள நான் விரும்பவும் இல்லை. தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்குமானால் அவளே தெரிவிப்பாள். அதைப் பற்றி ஏன் கவலை! அன்னையின் குழந்தைகளே! எல்லோரும் ஆனந்தமாய் இருங்கள்- இவ்வாறெல்லாம் இந்த மாலைநேர இசை எடுத்துக் கூறுவது போல் இருந்தது.
அறைக்கு வெளியே வான வீதியில் உலா வந்த வெண்ணிலவின் தண்ணொளியில் உலகம் குளித்துக் கொண்டிருந்தது. அறைக்கு உள்ளே குருதேவர் ஹரிப் பிரேமானந்தத்தில் மூழ்கியிருந்தார். மீண்டும் இறைவனைப் பற்றிய பேச்சு எழுந்தது. ஈசானுக்குத் தீவிர நம்பிக்கை இருந்தது. ஒரு முறை துர்க்கையின் நாமத்தைக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப் படுபவனின் கூடவே சூலம் ஏந்திய கையுடன் சிவபெருமானும் செல்வார். விபத்தில் என்ன பயம்? சாட்சாத் சிவ பெருமானே காப்பாற்றுவார்” என்பார் அவர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( ஈசானிடம்)-
உங்களிடம் திட நம்பிக்கை உள்ளது. எங்களிடம் அந்த அளவு இல்லை.( எல்லோரும் சிரித்தனர்) நம்பிக்கையாலேயே அவரைப் பெற முடியும்.
ஈசான்-
ஆம் சுவாமி.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நீங்கள் ஜபம், ஹோமம், உபவாசம், புரச்சரணம் என்றெல்லாம் கருமங்களைச் செய்கிறீர்கள். அது நல்லது. யாருக்கு இறைவனிடம் ஆத்மார்த்தமான ஈர்ப்பு இருக்கிறதோ அவன் மூலமாக அவர் இப்படிப் பட்ட கருமங்களைச் செய்கிறார். பயனை கருதாமல் இந்தக் கருமங்களைச் செய்து வந்தால் கட்டாயமாக அவரது காட்சி பெறலாம்.
பல கருமங்களைச் செய்யுமாறு சாஸ்திரம் சொல்லி யுள்ளது. அதனால் தான் நாம் செய்கிறோம். இத்தகைய பக்தியை வைதீ பக்தி என்கிறோம். மற்றொரு வகையான பக்தி இருக்கிறது. அது ராக பக்தி. அது அனுராகத்திலிருந்து உண்டாவது, இறைவனிடம் கொள்கின்ற அன்பிலிருந்து உண்டாவது. பிரகலாதனிடம் இருந்ததைப்போன்ற பக்தி இது. இந்த பக்தி வந்து விட்டால் வைதீக கருமங்களின்தேவை இல்லை.
மாலை நேரத்திற்கு முன்பு ம- எல்லாம் ராமரின் திருவுளம்” பற்றி சிந்தித்த படி நடந்து கொண்டிருந்தார். இது அருமையான கருத்து! இதன் மூலம் predestination( விதி), Free will( சுதந்திர சுயேச்சை), Liberty( சுதந்திரம்), Necessity( கண்டிப்பு) என்பவை பற்றிய சர்ச்சைகள் தீர்ந்து விடுகின்றன. என்னைத் திருடர்கள் பிடித்துச் சென்றால் ராமரின் திருவுளம். நான் புகை பிடிக்கிறேன். அது ராமரின் திருவுளத்தால், நான் திருடுகிறேன், ராமரின் திருவுளத்தால், என்னைப் போலீஸ் பிடித்தால் ராமரின் திருவுளம். நான் சாது ஆனேன், ராமரின் திருவுளத்தால், எம்பெருமானே, தீய புத்தியைத் தராதே! நான் திருடுமாறு செய்யாதே! என்று பிரார்த்திக்கிறேன்.அதுவும் ராமரின் திருவுளத்தால். நல்ல விருப்பம். தீய விருப்பம் எல்லாவற்றையும் அவரே தருகிறார்.ஆனால் ஒன்று- தீய விருப்பத்தை அவர் ஏன் தருகிறார்? திருடு வதற்கான விருப்பத்தை அவர் ஏன் தர வேண்டும்? அதற்கு குருதேவர் பதில் கூறுகிறார்- மிருகங்களில் புலி, சிங்கம்,பாம்பு போன்றவற்றை அவர் படைத்திருக்கிறார், மரங்களுள் விஷ மரங்களையும் படைத்திருக்கிறார். அது போல் மனிதர்களிலும் திருடன், கொள்ளைக் காரன் என்றும் படைத்திருக்கிறார். ஏன் படைத்தார்? ஏன் படைத்தார் என்பதை யார் சொல்வது? இறைவனை யார் புரிந்து கொள்வார்கள்?
ஆனால் இறைவனே எல்லாவற்றையும் செய்கிறார் என்றால் sense of Responsibility( பொறுப்புணர்ச்சி) போய் விடுமே! ஏன் போக வேண்டும்? இறைவனை அறியா விட்டால், அவரது காட்சி பெறாவிட்டால், ராமரின் திருவுளம்” என்ற உணர்வு முழுமையாக ஏற்படாதே! அவரை அறியாதபோது ம் இந்த உணர்வு அவ்வப்போது ஏற்படுகிறது.ஆனால் பிறகு மறைந்து விடுகிறது! முழு நம்பிக்கை ஏற்படாத வரை பாவ புண்ணிய உணர்வு, responsibility- உணர்வு இருக்கத் தான் செய்யும். ” ராமரின் திருவுளம்” பற்றி குருதேவர் விளக்கினார். ” ராமரின் திருவுளம்” என்று கிளிப்பிள்ளை போல் சொல்வதால் எதுவும் நடக்காது. இறைவனை அறியாதது வரை அவரது திருவுளமும் நமது விருப்பமும் ஒன்றாக ஆகாதது வரை, ” நான் எந்திரம்” என்ற உணர்வு சரியாக ஏற்படாத வரை அவர் நம்மிடம் பாவ- புண்ணிய உணர்வு, சுக- துக்க உணர்வு, சுத்த- அசுத்த உணர்வு, நல்லது- கெட்டது உணர்வு. எல்லாவற்றையும் வைக்கிறார், sense of Responsibility- யையும் வைக்கிறார். இல்லாவிட்டால் அவரது மாயா உலகம் எப்படி நடக்கும்?
குருதேவரின் பக்தி ததும்பும் பேச்சைச் சிந்திக்க சிந்திக்க திகைப்பாக இருக்கிறது. சேசவர் ஹரிநாமம் சொல்கிறார், கடவுளைச் சிந்தனை செய்கிறார்- உடனே அவரைக் காண குருதேவர் ஓடுகிறார். அப்படியே கேசவர் அவருக்கு மிகவும் வேண்டியவர் ஆகி விட்டார்!கேப்டனின் மறுப்பையெல்லாம் அவர் கேட்கவில்லை-கேசவர் வெளி நாட்டுக்குச் சென்று வந்தார், வெள்ளைக் காரர்களுடன் சாப்பிட்டார். பெண்ணை வேறு ஜாதியில் திருமணம் செய்து கொடுத்தார்” என்றெல்லாம் அவரைப் பற்றி குற்றம் சாட்டியது எல்லாம் எங்கோ பறந்து விட்டது. இலந்தைப் பழத்தைச் சாப்பிடுகிறேன். முள்ளைப் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்?
பக்தி என்ற பிணைப்பில் உருவவாதி, அருவவாதி எல்லோரும் ஒன்றாகி விடுகின்றனர். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் எல்லாம் ஒன்றாகி விடுகின்றனர். நான்கு வர்ணத்தினரும் ஒன்றாகி விடுகின்றனர். பக்திக்கே வெற்றி!ஸ்ரீராமகிருஷ்ணரே பேறு பெற்றீர் நீர்! உமக்கே வெற்றி! சனாதன தர்மத்தின் உலகம் தழுவிய இந்தக் கருத்திற்கு நீர் மறுபடியும் உருவம் கொடுத்திருக்கிறீர். அதனால் தான் உம்மிடம் இவ்வளவு வசீகரம் என்றுதோன்றுகிறது. எனக்கு மிகவும் வேண்டியவன்” என்று எல்லா மதத்தினரையும் தடையின்றிநீர் தழுவிக் கொள்கிறீர்! பக்தியே நீர் பரிசோதிக்கும் உரைக்கல். உள்ளே இறைவனிடம் அன்பு, பக்தி இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே நீர் பார்க்கிறீர். இருந்தால் அவன் உடனே உமக்கு மிகவும் வேண்டியவன் ஆகி விடுகிறான். இந்துவிடம் பக்தி இருந்தால் உடனே அவன் உமக்கு வேண்டியவன் ஆகிறான். முஸ்லீம் ருவன் அல்லாவிடம் பக்தி வைத்திருந்தால் அவனும் உமக்கு வேண்டியவன். கிறிஸ்தவன் ஏசுவிடம் பக்தி கொண்டிருந்தால் அவனும் உமக்கு மிகவும் வேண்டியவன் ஆகிவிடுகிறான். நதிகள் எல்லாம் பல திசைகளிலிருந்து வருகின்றன. ஆனால் எல்லாம் ஒரு பெருங்கடலில் வந்து விழுகின்றன! எல்லாவற்றின் நோக்கமும் ஒரே கடலை அடைவது தான்” என்றே நீர் சொல்கிறீர்!
இந்த உலகம் கனவு போன்றது என்று குருதேவர் சொல்வதில்லை, அதனால் எடை குறைந்து விடும்” என்கிறார். அது மாயா வாதம் அல்ல. வசிஷ்டாத்வைத வாதம். ஏனெனில் உயிர்களும் உலகமும் பொய் என்று அவர் சொல்லவில்லை. மனத்தின் பிரமை என்று சொல்லவில்லை. இறைவன் உண்மை, அது போல் மனிதன் உண்மை, உலகம் உண்மை. உயிர்கள் மற்றும் உலகத்துடன் இணைந்தது பிரம்மம்.விதை, ஓடு இவற்றை விட்டு விட்டால் முழு விலவப் பழம் கிடைக்காது.
இந்தப் பிரம்மாண்டமான உலகம் மகா சிதாகாசக்திலிருந்து வெளிப் படுகிறது. மறுபடியும் கால முடிவில் அதிலேயே ஒன்றுகிறது. பெருங்கடலில் அலைகள் எழுகின்றன. மறுபடியும் உரிய காலத்தில் அதில் ஒன்றாகின்றன. ஆனந்தப் பெருங்கடலில் கணக்கற்ற அலைகளின் ஆடல்! இந்தஆடலின் ஆரம்பம் எங்கே? முடிவு எங்கே? அதை வாயினால் சொல்ல முடியாது. மனத்தினால் சிந்திக்க முடியாது. மனிதன் எவ்வளவு சாதாரணமானவன்! அவனது புத்தி தான் எவ்வளவு சாதாரணமானது!
மகான்கள் சமாதி நிலையில் அந்த நிலையான பரம் பொருளைத் தரிசித்தார்கள். என்றென்றும் திருவிளையாடல் புரிகின்ற ஹரியை அனுபூதியில் கண்டார்கள்” என்றெல்லாம் கேள்விப் படுகிறோம். அவர்கள் கட்டாயம் தரிசித்திருக்க வேண்டும். ஏனெனில் குருதேவரே அவ்வாறு கூறியிருக்கிறாரே! ஆனால் அந்தக் காட்சி இந்தக் கண்களால் அல்ல. தெய்வீகக் கண்கள் என்று எதை ச் சொல்கிறார்களோ அந்தக் கண்களால், எந்த தெய்வீகக் கண்களைப் பெற்று அர்ஜுனன் விசுவரூப தரிசனம் பெற்றானோ, எந்தக் கண்களின் வாயிலாக ரிஷிகள் ஆன்ம அனுபூதிபெற்றார்களோ, எந்த தெய்வீகக் கண்களால் ஏசுநாதர் பரம ண்டலத்தில் இருக்கும் பிதாவை நாள்தோறும் கண்டாரோ அந்தக் கண்களை எப்படிப் பெறுவது? மன ஏக்கத்தினால் அந்தக் கண்கள் கிடைக்கும் என்று குருதேவரின் திருவாயிலிருந்து கேட்டிருக்கிறேன். அந்த மனஏக்கம் எப்படி ஏற்படும்? குடும்பத்தைத் துறக்க வேண்டுமா? எப்படி? அதைப் பற்றி இன்று எதுவும் சொல்ல வில்லையே- இவ்வாறு ம-வின் சிந்தனைகள் தொடர்ந்தன.
............................
72
............................
ஞாயிறு, நவம்பர் 9,
1884
....................................................
பிற்பகல் சுமார் இரண்டு மணி இருக்கும். தட்சிணேசுவரக் காளி கோயிலில் குருதேவர் தமது அறையில் சிறிய கட்டிலில் கிழக்கு நோக்கியபடி அமர்ந்திருந்தார். பக்தர்கள் தரையில் இருந்தனர்.ம- அங்கு வந்த போது பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். விஜய கிருஷ்ண கோசுவாமியுடன் சில பிரம்ம சமாஜ பக்தர்கள் வந்தனர். பூஜாரியான ராம் சக்கரவர்த்தியும் அங்கிருந்தார். தொடர்ந்து மகிமா சரணும் நாராயணனும் கிசோரியும் வந்தனர். நேரம் ஆக ஆக மேலும் பல பக்தர்கள் வரலாயினர்.
குளிர் காலம் தொடங்கியிருந்தது. குருதேவருக்கு சட்டை தேவைப் பட்டது. ம-விடம் கொண்டு வருமாறு கூறியிருந்தார். ம- கனரக துணியில்ஒரு சட்டையையும் கனமான துணியாலான மற்றொரு சட்டையையும் வாங்கி வந்திருந்தார். குருதேவர் கனரகச் சட்டையை வாங்கி வருமாறு சொல்ல வில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ம-விடம்)
நீ இந்த ஒன்றைத் திருப்பி எடுத்துக் கொள். அதை நீ போட்டுக் கொள்ளலாம். அதில் தவறு இல்லை. சரி, உன்னை நான் எந்த மாதிரியான சட்டையை வாங்கி வரச் சொன்னேன்?
ம-
சாதாரண சட்டையைத் தான் வாங்கி வரச் சொன்னீர்கள். கனரகச் சட்டை வாங்கிவரச் சொல்ல வில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதனால் அந்தச் சட்டையை திருப்பி எடுத்துக் கொள். ( விஜயர் முதலியவர்களிடம்)” பாருங்கள்” துவாரகா பாபு எனக்கு ஒரு கம்பளிப்போர்வை தந்தார். மார்வாரி பக்தர்களும் ஒன்று கொண்டு வந்தனர். நான் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
குருதேவர் ஏதோ தொடர்ந்து சொல்ல முயன்ற போது விஜயர் குறுக்கிட்டுப்பேசினார்.
விஜயர்-
ஆம், அப்படித்தான். தேவைப் படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். யாராவது ஒருவர் தந்தேயாக வேண்டும். மனிதனைத் தவிர வேறு யார் தருவார்கள்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
தருபவர் இறைவனே! மாமியார் மருமகளிடம், பெண்ணே! ஒவ்வொருவருக்கும் சேவை செய்ய ஒருவர் இருக்கிறார். உனக்குக் கால் பிடித்து விட ஒருவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறினாள்.அதற்கு மருமகள், மாமி! எனக்குக் கால் பிடித்து விட ஹரி இருக்கிறார். வேறு யாரும் எனக்கு த்தேவையில்லை” என்று சொன்னாள். பக்தியின் காரணமாக அவள் அப்படிச் சொன்னாள்.
ஒரு சமயம் பக்கீர் ஒருவர் அக்பரிடம் கொஞ்சம் செல்வம் பெறுவதற்காக போனார். அப்போது அக்பர் நமாஸ் செய்து, அல்லா! எனக்குப் பணம் தாரும், செல்வம் தாரும்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். உடனே அந்த பக்கீர் அங்கிருந்து புறப்பட எத்தனித்தார். அதைக் கண்ட அக்பர் அவரைச் சிறிது நேரம் உட்காரும் படி சைகை காட்டினார்.நமாஸ் முடிந்ததும் பக்கீரிடம் வந்து, ” நீங்கள் ஏன் திரும்பிப்போக நினைத்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்தப் பக்கீர், ” மன்னா, பணம் தாரும், செல்வம் தாரும் என்று நீங்களே கேட்டுக் கொண்டிருந்தீர்கள். எனவே ஏதாவது கேட்க வேண்டுமானால் ஏன் பிச்சைக் காரனிடம் கேட்க வேண்டும். கடவுளிடமே கேட்போம் என்று நினைத்தோம்” என்றார்.
விஜயர்-
கயையில் ஒரு சாதுவைக் கண்டேன். அவர் தனக் கென்று எந்தவித முயற்சியும் மேற் கொள்வதில்லை. பக்தர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவருக்குத் தோன்றியது. எங்கிருந்தோ ஒருவன் மைதா, நெய் முதலியவற்றைத் தலையில் சுமந்து கொண்டு வந்தான். பலவனையான பழங்களும் வந்து சேர்ந்தன.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(விஜயர் முதலியோரிடம்)
சாதுக்கள் மூன்றுவகை- உத்தமம், மத்திமம், அதமம். உத்தம சாதுக்கள் உணவுக்காக முயற்சி செய்வதில்லை. தண்டி-ஃபண்டி சாதுக்கள் மத்திம, அதம வகையினர். மத்திம சாதுக்கள் நமோ நாராயணா என்று கூறிக் கொண்டு( உணவுக்காக வீடு களின் முன்னால்) நிற்பார்கள். அதம சாதுக்களோ உணவு தராவிட்டால் சண்டைக்கே வந்து விடுவார்கள். ( எல்லோரும் சிரித்தனர்)
உத்தம சாதுக்கள் அஜகர விருத்தியைக் கைக் கொள்கின்றனர். இருந்த இடத்திலேயே உணவு பெறுகின்றனர்.மலைப் பாம்பு எங்கும் போவதில்லை. ஒரு சமயம் இளம் துறவி- பால பிரம்மச்சாரி ஒருவர் பிக்ஷக்காகப் போனார். பெண்ணொருத்தி வந்து அவருக்கு பிக்ஷ அளித்தாள். அவளது நெஞ்சில் மார்பகங்கள் இருந்ததைக் கண்ட அவர் அவளுக்கு நெஞ்சில் ஏதோ கொப்புளம் உண்டாகி இருப்பதாக எண்ணி அது பற்றி கேட்டார். வீட்டிலுள்ள முதிய பெண்கள் விளக்கினர். இவளுடைய வயிற்றில் குழந்தை உண்டாகும். அதற்குக் கொடுப்பதற்காக இறைவன் இவளுடைய மார்பில் பால் சுரக்கச் செய்வார். குழந்தைக்காக அவர் முன் கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். இதைக்கேட்ட துறவியின் வியப்பிற்கு எல்லை இல்லை. அப்படி யானால் நான் பிக்ஷ எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்காகவும் உணவு ஏற்கனவே வைக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.
இதைக்கேட்டதும் பக்தர்களில் சிலர், அப்படியானால் நாமும் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை” என்று நினைத்துக் கொண்டார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
முயற்சி அவசியம் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் முயற்சி செய்தேயாக வேண்டும்.
விஜயர்-
பக்தமாலா நூலில் அழகான கதை ஒன்று இருக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அதைச் சொல்லுங்களேன்.
விஜயர்-
நீங்களே சொல்லுங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இல்லை, நீங்களே சொல்லுங்கள். எனக்கு அவ்வளவாக நினைவில்லை. முதலில் பலவற்றைக் கேட்டறிய வேண்டும். அதனால் தான் நானும் ஆரம்பத்தில், இவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இப்போது அந்த நிலை இல்லை, ” நாள்” திதி, நட்சத்திரம் எதுவும் எனக்குத் தெரியாது. ராம சிந்தனை நான் செய்கிறேன்” என்றார் அனுமன்.
சாதகப் பறவைக்கு மழைத் தண்ணீர் மட்டுமே வேண்டும். தாகத்தினால் உயிர் போகிறது” என்றாலும் அது மேலே பார்த்தவாறு மழை நீருக்காகக் காத்திருக்கும். கங்கை, யமுனை, ஏழு கடல்கள் எல்லாவற்றிலும் நீர் நிரம்பி இருந்தாலும் அது பூமியிலுள்ள தண்ணீரை ஒரு போதும் அருந்தாது.
ராமரும் லட்சுமணனும் பம்பாநதிக்கரைக்குச் சென்றனர். நதிக்கரையில் காகம் ஒன்று தண்ணீர் அருந்த ஏக்கத்துடன் செல்வதையும் ஆனால் தண்ணீர் அருந்தாமல் மீண்டும். மீண்டும் திரும்பி வருவதையும் லட்சுமணன் கண்டான். அது பற்றி ராமரைக்கேட்டான். அதற்கு அவர், தம்பி, இந்தக் காகம் ஒரு பரம பக்தன். இரவு பகலாக ராம நாமம் ஜபித்துக் கொண்டிருக்கிறது. தாகத்தினால் தொண்டை வறள்கிறது. ஆனால் தண்ணீர் அருந்த முடியவில்லை. அருந்தும் போது ராமநாம ஜபம் தடைப் பட்டு விடுமோ என்று பயப் படுகிறது” என்றார்.
நான் ஒரு பௌர்ணமி நாளில் ஹலதாரிடம், ” அண்ணா இன்று அமாவாசையா? என்று கேட்டேன்.( எல்லோரும் சிரித்தனர்)
(சிரித்தபடி) ஆமாம்! அமாவாசை, பௌர்ணமி என்ற வேறுபாடெல்லாம் மறையும் போது தான் முழு ஞானம் ஏற்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஹலதாரி இதையெல்லாம் நம்ப மாட்டார். இது என்ன கலிகாலம்! அமாவாசை, பௌர்ணமி தெரியாத இவனைப் போய் மக்கள் கொண்டாடுகிறார்களே? என்றார் அவர்.
குருதேவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது மகிமாசரண் வந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( மரியாதையுடன்)-
வாருங்கள், வாருங்கள், உட்காருங்கள்.( விஜயர் முதலியவர்களிடம்) இந்த நிலையில் இன்ன நாள் என்ற நினைவெல்லாம் இருபு்பதில்லை. அன்று வேணி மாதவ பாலின் தோட்டத்தில் விழா நடைபெற்றது. நாள் எனக்கு மறந்து விட்டது. இன்ன நாள் சங்கராந்தி. நன்றாக ராம பஜனை செய்யவேண்டும்” என்று நினைப்பேன். பிறகு எல்லாம் மறந்துவிடும்.( சிறிது யோசித்து விட்டு) ஆனால் இன்னவர் வருவார் என்றால் அது நினைவில் நிற்கும்.
பதினாறு அணா மனமும் இறைவனிடம் சென்றுவிடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. ஆஞ்சநேயா! நீ சீதையைப் பற்றிய செய்தி கொண்டு வந்திருக்கிறாய். எந்த நிலையில் அவளைக் கண்டாய், சொல்” என்று ராமர் அனுமனைக்கேட்டார். அதற்கு அனுமன், ராமா! சீதையின் உடல் மட்டும் தான் அங்கேகிடக்கிறது. மனமோ உயிரோ அதனுள் இல்லை. மனத்தையும் உயிரையும் அவள் உனது பாத கமலங்களில் சமர்ப்பித்திருக்கிறாள். அதனால் தான் உடம்பு மட்டும் அங்கே கிடக்கிறது. காலனும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனால் என்ன செய்ய முடியும்? வெறும் உடல் தானே அங்கு இருக்கிறது! மனமும் பிராணனும் அதில் இல்லையே” என்று கூறினார்.
எதைப் பற்றி நினைக்கிறாயோ அதன் இயல்பைப் பெறுவாய். இரவு பகலாக இறைவனை நினைத்தால் இறை இயல்பு உண்டாகிறது. உப்பு பொம்மை கடலை அளக்கச் சென்று கடலாகவே ஆகிவிட்டது.
புத்தகம், சாஸ்திரம், இவற்றின் நோக்கம் என்ன? இறையனுபூதி . ஒரு சாதுவின் புத்தகத்தைத் திறந்து பார்த்த போது அதில் ஒவ்வொரு பக்கத்திலும் வெறும் ராம நாமம் மட்டுமே எழுதப் பட்டிருந்தது! வேறு எதுவும் இல்லை.
இறைவனிடம் அன்பு உண்டாகுமானால் , சிறிது முயற்சி செய்தாலே ஆன்மீக விழிப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த நிலையில் ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்தாலே கோடி சந்தியா வந்தனம் செய்த பலன் கிடைக்கும்.
மேகத்தைக் கண்டதும் மயிலிடம் கிளர்ச்சி உண்டாகிறது. மகிழ்ச்சியினால் தோகை விரித்து ஆடுகிறது. ராதைக்கும் இந்த நிலை ஏற்பட்டிருந்தது. மேகத்தைக் கண்டால் அவளுக்கு கிருஷ்ணனின் நினைவு வந்து விடும்.
iசைதன்ய தேவர் மேட்காவ் கிராமம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராமத்தின் மண்ணிலிருந்து தான் கோல் செய்யப் படுகிறது என்று கேள்விப் பட்டார். உடனே பரவசத்தில் புறநினைவு இழந்து விட்டார்- ஹரிநாம பஜனை வேளைகளில் கோல் அடிப் பார்கள் அல்லவா?
யாருக்கு ஆன்மீக விழிப்பு ஏற்படுகிறது? யாரிடமிருந்து உலகியல் மறைந்து விட்டதோ அவருக்கு. யாரிடம் உலகியல் சாறு வற்றி விட்டதோ அவருக்கு சிறு முயற்சியாலேயே விழிப்பு ஏற்பட்டு விடுகிறது. தீக்குச்சி ஈரமாக இருந்தால் ஆயிரம் முறை கிழிந்தாலும் எரியாது. நீர் வற்றி விட்டால் சிறிது உரசினாலே குப் என்று பற்றிக் கொள்ளும்.
உடம்பில் சுக துக்கங்கள் இருக்கவே செய்கின்றன. இறையனுபூதி பெற்றவன் மனம், உயிர், உடல், ஆன்மா எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான். பம்பா நதியில் குளிக்கச் சென்ற போது ராமனும் லட்சுமணனும் கரையில் வில்லை ஊன்றி வைத்தார்கள். குளித்த பிறகு வில்லை எடுத்தான் லட்சுமணன். அதில் ரத்தம் தோய்ந்திருப்பதைக் கண்டான். ராமர் கூறினார்.” தம்பி இங்கே பார்,ஏதோ பிராணி காயப் பட்டிருப்பதைபோல் தோன்றுகிறது”! என்றார். லட்சுமணன் மண்ணைக் கிளறிப் பார்த்தான். அங்கே பெரிய தவளை ஒன்று சாகும் தறுவாயில் இருந்தது. அதைக் கண்ட ராமர் கருணை ததும்பும் குரலில் அதனிடம், நீ ஏன் கத்தவில்லை நாங்கள் உன்னைக் காப்பாற்ற முயன்றிருப்போமே!பாம்பு பிடிக்கும் போது உரக்கக் கத்துகிறாயே?! என்றார். அதற்குத் தவளை, ” ராமா, பாம்பு பிடிக்கும் போது, ராமா காப்பாற்று! ராமா காப்பாற்று” என்று கத்துவேன். ஆனால் இப்பொழுது ராமரே என்னைக் குத்துகிறார் ! அதனால் தான் மௌனமாக இருந்தேன்” என்றது.
73
.......
குருதேவர் சிறிது நேரம் மகிமர் முதலிய பக்தர்களைப் பார்த்த வண்ணம் அமைதியாக இருந்தார். மகிமா சரண் குருவை ஒப்புக் கொள்வதில்லை என்பதை குருதேவர் கேட்டிருந்தார்.
குருதேவர் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
குருவின் சொற்களில் நம்பிக்கை வைப்பது நல்லது. அவரது வாழ்க்கையை ஆராய வேண்டியதில்லை.” என் குரு கள்ளுக் கடைக்குப் போனாலும் அவர் எனக்கு குரு நித்தியானந்தரே! இங்கே ஒருவன் தேவீ மாகாத்மியமும் பாகவதமும் படிப்பான்.” துடைப்பம் தொடத்தகாத ஒன்று, உண்மை தான். ஆனால் அது இடத்தைச் சுத்தம் செய்கிறது” என்று அவன் கூறுவதுண்டு.
மகிமா சரண் வேதாந்த ஆராய்ச்சி செய்பவர். பிரம்ம ஞானம் அவரது நோக்கம். அவர் ஞான நெறியைப் பின் பற்றுபவர். எப்போதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( மகிமரிடம்)
ஞானியின் நோக்கம் தன் உண்மை இயல்பை அறிவது. இதன் பெயர் தான் ஞானம். இதன் பெயர் தான் முக்தி. நமது சொந்த இயல்பு பரப்பிரம்மம், நானும் பரப்பிரம்மமும் ஒன்று. மாயை இதை அறிய விடாமல் தடுக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. தங்கத்தின் மீது சிறிது மண் படிந்திருக்கிறது. அந்த மண்ணை அப்புறப் படுத்தி விடு” என்று நான் ஹரிஷிடம் கூறினேன்.
பக்தர்கள் நான் என்பதை வைத்துக் கொள்கின்றனர். ஞானிகள் வைத்துக் கொள்வதில்லை. சொந்த இயல்பிலேயே நிலைத்திருப்பது எப்படி என்பதை நங்டா எனக்கு உபதேசித்தார்- மனத்தைப் புத்தியில் ஒடுக்கு, புத்தியை ஆன்மாவில் ஒடுக்கு. அப்போது சொந்த இயல்பில் இருக்க முடியும்.
ஆனால் நான் இருக்கத் தான் செய்யும். போகாது. எல்லையற்றுப் பரந்த வெள்ளம்போல்- மேலே, கீழே, முன்னால், பின்னால் இடது பக்கம், வலது பக்கம் எங்கும் தண்ணீர் மயம். அந்தத் தண்ணீர்ப் பரப்பின் நடுவில் நீர் நிரம்பிய குடம் ஒன்று இருக்கிறது. உள்ளும் புறமும் தண்ணீர் இருந்தாலும் குடம் இருக்கவே செய்கிறது. அந்தக் குடம்தான் நான்.
ஞானியின் உடம்பு முன்போலவே தான் இருக்கிறது.ஆனால் ஞான நெருப்பால் காமம் முதலிய பகைகள் எரிக்க ப் பட்டிருக்கும். பல நாட்களுக்கு முன்பு ஒரு முறை புயலும் மழையும் வாரியடித்த போது, காளி கோயிலின் மீது இடி விழுந்து விட்டது. நாங்கள் போய்ப் பார்த்தோம். கதவுகளுக்கு எந்தச்சேதமும் இல்லை, ஆனால் ஸ்க்ரூக்களின் தலை உடைந்திருந்தது. கதவு உடம்பு போல், ஸ்க்ரூக்கள் காமம் முதலிய பற்றுகள்போல்.
ஞானி ஆன்மீகப்பேச்சை மட்டுமே விரும்புகிறான். உலகியல் பேச்சு அவனுக்கு மிகுந்த வேதனை தருகிறது. உலகியல் மக்கள் வேறு ரகத்தினர், அவர்களின் அவித்யைத் தொப்பி விழ வில்லை. அதனால் தான் சுற்றி வளைத்து க் கொண்டு மீண்டும் மீண்டும் உலகியல் பேச்சுக்கே வருகின்றனர்.
வேதத்தில் ஏழு பூமிகளைப் பற்றி சொல்லப் பட்டுள்ளது. ஞானி ஐந்தாவது பூமியைஅடையும் போது, இறைவனைப் பற்றிய பேச்சைத் தவிர வேறு எதையும் அவனால் கேட்கவோ பேசவோ முடிவதில்லை. அந்த நிலையில் அவனது வாயிலிருந்து ஞான உபதேசம் மட்டுமே வெளிப் படுகிறது.
இவ்வாறெல்லாம் பேசுவதன் மூலம் ஸ்ரீகுருதேவர் தமது நிலையையே குறிப்பிடுகிறாரா?
குருதேவர் தொடர்ந்தார்.
வேதத்தில் சச்சிதானந்த பிரம்மம் பற்றி உள்ளது. பிரம்மம் ஒன்றும்அல்ல. இரண்டும் அல்ல, ஒன்று- இரண்டு இவற்றின் இடையே உள்ளது. அதை இருக்கிறது என்று சொல்ல முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது. இருக்கிறது- இல்லை என்ற இரண்டிற்கும் இடையில் அது உள்ளது.
ராக பக்தி ஏற்பட்டால், அதாவது இறைவனிடம் அன்பு உண்டானால் அவரைப் பெற முடியும். வைதீ பக்தி, வருவது போல் அதே வேகத்தில் போய்விடும். இவ்வளவு ஜபம், இவ்வளவு தியானம் செய்ய வேண்டும். இவ்வளவு யாகம், யஜ்ஞம், ஹோமம் செய்ய வேண்டும். இன்னின்ன உப சாரங்களுடன் பூஜை செய்ய வேண்டும். பூஜை வேளையில் இன்னின்ன மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.- இப்படி விதிமுறைப்படி செய்வது வைதீ பக்தி. இது, வருகின்ற வேகத்தில் போயும் விடும்! ” தம்பி எவ்வளவு ஹவிஸ் சாப்பிட்டேன்? வீட்டில் எத்தனை முறை பூஜை செய்தேன்? ஆனால் ஒன்றும் நடக்கவில்லை” என்று பலர் சொல்வதைக்கேட்டதில்லையா?
ராம பக்தியில் வீழ்ச்சி கிடையாது. யாருகு்கு ராக பக்தி தோன்றும்? முற்பிறவியில் யார் பாடுபட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு, அல்லது நித்திய சித்தர்களுக்கு. பாழடைந்த வீட்டில் குப்பை கூளங்களையும் செடி கொடிகளையும் அகற்றிக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக நீரூற்று ஒன்றைக் கண்டுபிடிப்பது போன்றது அது. நீரூற்று மண் மற்றும் காரையால் மூடப் பட்டிருந்தது. அதை அகற்றினால் தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது.
யாரிடம் ராம பக்தி உள்ளதோ அவர்கள் ஒரு போதும், ” தம்பி எவ்வளவு ஹவிஸ் சாப்பிட்டேன்! எந்தப் பயனும் ஏற்படவில்லையே” என்று சொல்ல மாட்டார்கள். புதிதாக விவசாயம் செய்பவர்கள் விளைச்சல் இல்லாவிட்டால் விவசாயத்தை விட்டு விடுவார்கள். ஆனால் பரம்பரை விவசாயி விளைச்சல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி விவசாயத்தைத் தொடரவே செய்வான். அவனுடைய தந்தை, பாட்டன் எல்லோரும் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்தவர்கள், விவசாயம் செய்தே வாழ வேண்டும் என்று உணர்ந்தவர்கள்.
யாரிடம் ராக பக்தி இருக்கிறதோ அவர்கள் தான் ஆத்மார்த்தமாக இருக்க முடியும். இறைவன் அவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். ஆஸ்பத்திரியில் உன் பெயரைப் பதிவு செய்து விட்டால், நோய் குணமாகாமல் டாக்டர் உன்னை விடமாட்டார்.
இறைவன் யாரைப் பிடித்திருக்கிறாரோ அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வயல் வரப்பின் மீது நடக்கின்ற பையன் வேறேதோ ஞாபகத்தில் பிடியை விட்டால் விழுந்து விடக் கூடும். ஆனால் தந்தை பையனின் கைளைப் பிடித்துக் கொண்டிருந்தால் பையன் விழ மாட்டான்.
நம்பிக்கையால் எது தான் நடக்காது? உண்மையான பக்தன் உருவக் கடவுள். அருவக் கடவுள், ராமர் கிருஷ்ணர், தேவி என்று எல்லாவற்றையும் நம்புகிறான்.
ஒரு முறை காமார் புகூருக்குப் போகும் வழியில் புயலும் மழையும் வந்து விட்டது. திறந்த மைதானம்அது.அங்கே கொள்ளையர் பயம்வேறு. அப்போது நான் ராமர்,கிருஷ்ணர், தேவி எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன். அத்துடன் ஆஞ்சநேயரையும் பிரார்த்தித்தேன். ஆமாம், இப்படி எல்லோரையும் வேண்டினேனே இதன் பொருள் என்ன?
விஷயம் என்ன தெரியுமா? ஒரு வேலைக் காரனோ, வேலைக் காரியோ கடைக்குப் பணம் எடுத்துச் செல்லும் போது, ” இது உருளைக் கிழங்கிற்கான பணம்” இது கத்தரிக்காய்க்கான பணம் , இது மீனுக்கான பணம்” என்று தனித்தனியாக வைத்துக் கொள்வார்கள். எல்லாம் தனித்தனி. ஆனால் மொத்தமாக கணக்கு போட்ட பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து விடுவார்கள்.
இறைவன் மீது அன்பு ஏற்படும் போது அவரைப் பற்றிமட்டுமே பேச விருப்பம் ஏற்படுகிறது. ஒருவனுக்கு தான் விரும்புபவனுடைய பேச்சைக் கேட்பதும் அவனுடன் பேசுவதும் நன்றாக இருக்கிறது.
உலகியல் மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி பேசும் போது அப்படியே கடைவாயில் எச்சில் ஒழுகும். யாராவது தங்கள் பிள்ளைகளைப் புகழ்ந்து பேசினால் உடனே, ” போ மாமாவிற்குக் கைகால் அலம்ப தண்ணீர் கொண்டு வா” என்பார்கள். புறாக்களை விரும்புபவர்களிடம் புறாக்களைப் புகழ்ந்து பேசினால் மிகவும் மகிழ்வார்கள். யாராவது புறாக்களை இகழ்ந்தால் உடனே, ” உன் அப்பனோ , பதினான்கு தலை முறையினரோ புறா வளர்த்திருப்பார்களா? என்று பொரிந்து தள்ளி விடுவார்கள்.
குருதேவர் மகிமா சரணுக்காக சிலவற்றைக் கூறினார். ஏனெனில் அவர் இல்லறவாசி.
ஸ்ரீராமகிருஷ்ணர்( மகிமரிடம்)-
குடும்பத்தை அடியோடு ஏன் விட வேண்டும்? பற்று நீங்கினால் போதும். ஆனால் சாதனை செய்ய வேண்டும். புலன்களுடன் போராட வேண்டும்.
கோட்டையின் உள்ளே இருந்து போர் செய்வது மிகவும் சௌகரியமானது. கோட்டையின் உள்ளிருந்து பல உதவிகள் கிடைக்கும். குடும்பம் போகத்திற்கான இடம், ஒவ்வொன்றையும் அனுபவித்து, உடனே அதைவிட வேண்டும். பொன் அரை ஞாண் அணிய வேண்டும். என்று ஒரு முறை எனக்கு ஆசை வந்தது. கடைசியில் அது கிடைத்தது.அணியவும் செய்தேன்,ஆனால் அடுத்த வினாடியே அதைக் கழற்ற வேண்டியதாயிற்று.
ஒரு முறை வெங்காயம் தின்றேன். தின்றபடியே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். ” மனமே, இது தான் வெங்காயம்! என்று சொன்னேன். அதன் பிறகு அதை வாயில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக மென்றுவிட்டு பிறகு துப்பி விட்டேன்.
அன்று ஒரு பாடகர் தன் குழுவினருடன் வந்து பாடுவதாக ஏற்பாடு. பாடகர் வந்து விட்டாரா என்று குருதேவர் அடிக்கடி பக்தர்களிடம் கேட்டார்.
மகிமர்-
பாட்டு இல்லாமலே நாம் நன்றாகத் தானே இருக்கிறோம்?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இல்லையப்பா, இதை பன்னிரண்டு மாதங்களும் நாம் அனுபவிக்கிறோமே!
அப்போது அறைக்கு வெளியிலிருந்து ஒருவர், பாடகர் வந்து விட்டார்” என்று சொன்னார். குருதேவர் மிகுந்த மகிழ்ச்சியுடன்,” ஆகா, வந்து விட்டாரா? என்றார்.
அறையின் தென் கிழக்கிலுள்ள நீண்ட வராந்தாவில் பாய் விரித்தனர். குருதேவர், ” சிறிது கங்கை நீரைத் தெளி. எத்தனையோ உலகியல் மனிதர்கள் அதில் கால் வைத்திருப்பார்கள்” என்றார்.
பாலியைச்சேர்ந்த பியாரி பாபுவின் மனைவி மக்கள் காளிதேவியை வழிபட கோயிலுக்கு வந்தனர். பாடல் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதைக் கண்ட அவர்களும் கேட்க விரும்பினர். எனவே ஒருவர் குருதேவரிடம் வந்து அறையில் அவர்கள் உட்கார இடம் இருக்கிறதா என்று கேட்டார். பாட்டைக்கேட்டுக் கொண்டிருந்த குருதேவர் ” இல்லை” இங்கே எங்கே இடம் இருக்கிறது? என்று கூறினார்.
நாராயணன் வந்து குருதேவரை வணங்கினான். குருதேவர் அவனிடம், ” நீ ஏன் வந்தாய்” நீ இங்கு வரக் கூடாது என்று உன் வீட்டினர் உன்னை அப்படி அடித்தார்களே! என்று கேட்டார். நாராயணன் குருதேவரின் அறைப் பக்கம் போவதைக்கண்ட குருதேவர் பாபுராமிற்குச் சைகை காட்டி, அவனுக்கு ஏதாவது தின்பதற்குக் கொடுக்குமாறு கூறினார். நாராயணன் அறைக்குள் சென்றான். திடீரென்று குருதேவரே எழுந்து அறைக்குள் சென்றார். தம் கைகளாலேயே நாராயணனுக்கு ஊட்டினார். நாராயணன் சாப்பிட்ட பிறகு மீண்டும் வந்து உட்கார்ந்து பாட்டைக்கேட்கலானார்.
விஜய கிருஷ்ண கோசுவாமி, மகிமர், நாராயணன், அதர் ம-, சிறிய கோபால், முதலிய பல பக்தர்கள் வந்திருந்தனர். ராக்காலும் பலராமும் பிருந்தாவனத்தில் இருந்தனர்.
74
.......
மணி மூன்று அல்லது நான்கு இருக்கும். குருதேவர் வராந்தாவில் உட்கார்ந்து பாட்டைக்கேட்டுக் கொண்டிருந்தார். நாராயணன் வந்து அவரது அருகில் உட்கார்ந்தான். பக்தர்கள் பலர் சுற்றியிருந்தனர். அப்போது அதர் வந்து சேர்ந்தார். அதரைக் கண்டதும் குருதேவர் பரபரப்படைந்தார். அவர் குருதேவரை வணங்கிவிட்டு உட்காரச் சென்ற போது, குருதேவர் சைகை காட்டி இன்னும் அருகில் வந்து உட்காருமாறு கூறினார்.
பாடல் நிறைவுற்றது. கூட்டம் கலைந்தது. பக்தர்கள் தோட்டத்தில் இங்குமங்குமாக உலவிக் கொண்டிருந்தனர். சிலர் அன்னை காளி, ராதாகாந்தர் கோயில்களில் மாலை ஆரதிகாணச் சென்றனர்.
மாலை சாய்ந்தது. குருதேவரின் அறையில் பக்தர்கள் மீண்டும் வந்து கூடினர். அறையிலேயே பாட்டு நிகழ இருந்தது.குருதேவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்.( விளக்கில்) இந்தப் பக்கமும் ஒரு திரி போடு” என்றார். இரண்டு பக்கமும் திரிகள் எரிந்ததும் அறை முழுவதும் நல்ல வெளிச்சம் பரவியது. குருதேவர் விஜயரிடம், நீங்கள் ஏன் அங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? இங்கே வந்து உட்காருங்கள்” என்றார்.
சங்கீர்த்தனத்தின் வேகம் கூடியது. குருதேவர் போதையில் தம்மை மறந்து ஆடினார். பக்தர்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்துஆடினார்கள். விஜயர் ஆடியதில் ஆடை கூட அவிழ்ந்து விட்டது. அவருக்கு அது பற்றிய உணர்வே இல்லை.
கீர்த்தனம் நிறைவுற்ற போது விஜயர் சாவியைத்தேடினார். அது எங்கேயோ விழுந்து விட்டது. இதற்கும் ஒரு முறை ஹரிநாமம் சொல்லுங்கள்” என்று கூறியபடியே சிரித்தார் குருதேவர். பிறகு விஜயரிடம் ” சாவி எல்லாம் இன்னும் எதற்கு?( அதாவது சாவி அது இது இன்னும் பந்தங்கள் எதற்கு? என்று கேட்டார்.
கிசோரி குருதேவரை வணங்கி விடை பெற்றார். குருதேவர் அன்பு கனிந்தவராய் அவரது மார்பில் கையை வைத்து ” போய் வா” என்றார். அவரது பேச்சு கருணை சொட்டுவதாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு ம-வும் கோபாலும் அருகில் வந்து வணங்கி விடைபெற்றனர். அவர்களிடம் அன்புடன், ” காலையில் போகலாமே” இரவில் போனால் ஜலதோஷம் பிடிக்குமே! என்றார் குருதேவர். அந்த வார்த்தைகள் தேனில் குழைத்தெடுத்தது போல் இருந்தது.
அதன் பிறகு ம-வும் கோபாலும் போக விரும்பவில்லை. இரவை அங்கேயே கழித்தனர். அவர்களைத் தவிர இன்னும் ஓரிரு பக்தர்களும் இருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு குருதேவர் ராம் சக்கரவர்த்தியிடம், ராம்! இங்கு இன்னும் ஒரு கால்மிதி கிடந்ததே, அது எங்கே என்று கேட்டார்.
அன்று முழுவதும் குருதேவருக்கு ஓய்வு கொள்ள சிறிது நேரம் கூட கிடைக்கவில்லை. பக்தர்களை விட்டு விட்டு எங்கே போவார்? இப்போது சற்று வெளியே சென்றார் அவர். திரும்பி வந்து பார்த்த போது ம- ராம்லாலிடமிருந்து ஒரு பாட்டை எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே ம-விடம், என்ன எழுதுகிறாய்? என்று கேட்டார். ம- அந்தப் பாட்டின் முதல் அடியைச் சொன்னார்.
ஆழத்துயரக் கடலில் நான் அமிழ்ந்து மடிந்து போகாமல்...................
அது பெரிய பாட்டு ஆயிற்றே! என்றார் குருதேவர்.
இரவில் குருதேவர் ஒன்றோ இரண்டோ பூரியும் சிறிது ரவைப் பாயசமும் சாப்பிடுவது வழக்கம். குருதேவர் ராம் லாலிடம், என்ன, ரவை ப் பாயசம் இருக்கிறதா? என்று கேட்டார்.
பாட்டின் ஓரிரு வரிகளை எழுதிவிட்டு ம- நிறுத்தி விட்டார்.
கட்டிலின் அருகில் தரையில் இடப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து குருதேவர் சிறிது ரவைப் பாயசம் சாப்பிட்டார்.
குருதேவர் சிறிய கட்டிலில் உட்கார்ந்தார். ம- கட்டிலின் அருகில் உள்ள கால்மிதியின் மீது உட்கார்ந்து குருதேவருடன் பேசிக் கொண்டிருந்தார். குருதேவர் நாராயணனைப் பற்றி பேசிய படியே பரவச நிலையை அடைந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இன்று நாராயணனை ப் பார்த்தேன்.
ம- ஆம் சுவாமி, அவனது கண்கள் கலங்கி இருந்தன. அவனைப் பார்த்ததும் எனக்கே அழுகை வரும் போல் இருந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவனைக் கண்டால் வாத்சல்யம் எழுகிறது. அவன் இங்கு வருகிறான் என்பதற்காக வீட்டில் அவனை அடிக்கிறார்கள். அவனுக்காகப்பேச யாரும் இல்லை. கூனி உன்னிடம் தவறாகச் சொல்கிறாள். ராதைக்காகப்பேசுவார் யாருமில்லை.
ம(சிரித்தபடி)-
ஒரு நாள் அவன் ஹரி பதனின் வீட்டில் புத்தகங்களை வைத்து விட்டு இங்கே ஓடி வந்து விட்டான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அப்படிச் செய்வது நல்லதல்ல.
குருதேவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு பேசத் தொடங்கினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இதோ பார், அவனிடம் அதிக சாரம் உள்ளது. இல்லாவிட்டால் , பாட்டுக்கேட்பதை விட்டு விட்டு வருமளவிற்கு ஈர்ப்பு இருக்க முடியுமா? அறைக்கு நான் வர வேண்டியதாயிற்றே! பாட்டை விட்டு விட்டு வருவதாவது! இது போல் ஒரு போதும் நடந்ததில்லை.
குருதேவர் மௌனமாக இருந்தார். சில வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் பேசினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
நான் பரவச நிலையில் அவனிடம், எப்படி இருக்கிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவன், ஆனந்தமாக இருக்கிறேன்” என்றான்.(ம-விடம்) நீ அவ்வப்போது ஏதாவது தின் பண்டம் வாங்கி அவனுக்கு வாத்சல்ய துடன் கொடு.
குருதேவர் தேஜ்சந்திரனைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ம-விடம்)
ஒரு முறை நீ அவனிடம் என்னைப் பற்றி அவன் என்ன நினைக்கிறான் என்று கேள்- ஞானியாகவா வேறு ஏதாவதாகவா?அவன் அதிகம் பேசுவதில்லையாமே!( கோபாலிடம்) இதோ பார், நீ தேஜ் சந்திரனை சனிக்கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் வரச்சொல்.
தரையில் ஆசனத்தில் அமர்ந்து குருதேவர் ரவைப் பாயசம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் விளக்குத் தண்டின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குருதேவரின் அருகில் ம- அமர்ந்திருந்தார். இனிப்பு ஏதாவது இருக்கிறதா, பார்” என்றார் குருதேவர், ம- புதிய வெல்லத்தினாலான இனிப்பு கொண்டு வந்திருந்தார். அது அலமாரியில் இருக்கிறது என்று ராம்லாலிடம் கூறினார். உடனே குருதேவர் எங்கே, எடுத்து வா” என்றார்.
ம- பரபரப்புடன் இனிப்பைத்தேடினார். அங்கே அது இல்லை. பக்தர்களுக்குக் கொடுத்து விட்டிருக்க வேண்டும். ம- இதை எதிர்பார்க்கவில்லை. சற்று வருத்தத்துடன் குருதேவரிடம் வந்து அமர்ந்தார். குருதேவர் பேசினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
போகட்டும், ஒரு முறை நான் உன் பள்ளிக் கூடத்திற்கு வந்து பார்த்தால்.........................
குருதேவர் நாராயணனைக் காண்பதற்காகத் தான் பள்ளிக்கு வர விரும்புகிறார் என்று எண்ணிய ம-, எங்கள் வீட்டுக்கு வந்தாலே போதுமே! என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது இல்லை, அதற்கு வேறொரு நோக்கம் உள்ளது. அது என்ன தெரியுமா? வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.
ம-
கட்டாயமாக நீங்கள் வரலாம். மற்றவர்கள் பார்க்க வருகிறார்கள், அது போல் நீங்களும் வரலாம்.
75
.......
சாப்பிட்டு முடிந்ததும் குருதேவர் சிறிய கட்டிலில் சென்று அமர்ந்தார். அவர் புகை பிடிக்க ஒரு பக்தர் ஹுக்கா தயார் செய்து கொடுத்தார். குருதேவர் புகை பிடித்தார். இதற்கிடையில் ம-வும் கோபாலும் வராந்தாவில் உட்கார்ந்து சப்பாத்தியும் பருப்பும் சாப்பிட்டனர். அவர்கள் இருவரும் நகபத்தில் இரவு படுத்துக் கொள்வார்கள்.
உணவுக்குப் பிறகு ம- மறுபடியும் குருதேவரின் கட்டிலுக்கருகில் கால் மிதியின் மீது வந்து உட்கார்ந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(மவிடம்)
நகபத்தில் பானை சட்டியெல்லாம் இருக்கும். இந்த அறையிலேயே படுத்துக் கொள்கிறாயா?
ம- சரி சுவாமி.
இரவு பத்து பதினொரு மணி இருக்கும். குருதேவர் சிறிய கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.ம- தரையில் உட்கார்ந்திருந்தார். குருதேவர் ம-வுடன் பேசினார். சுவருக்கு அருகில் விளக்குத் தண்டின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
குருதேவர் எதையும் எதிர் பார்க்காத ஒரு கருணைக் கடல், ம-வின் சேவைகளை ஏற்றுக் கொண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இதோ பார், என் கால் வலிக்கிறது. கொஞ்சம் தடவிக் கொடு.
ம- சிறிய கட்டிலில் உட்கார்ந்தவாறு குருதேவரின் திருப் பாதங்களைத் தன் மடியில் வைத்துக் கொண்டு மெதுவாக வருடிக் கொடுத்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி) இன்று பேச்செல்லாம் எப்படி இருந்தது?
ம- மிகவும் நன்றாக இருந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)-
அக்பர் பாதுஷாவைப் பற்றிய பேச்சு எப்படி?
ம-
அருமையாக இருந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது என்ன, சொல் பார்க்கலாம்.
ம-
பக்கீர் ஒருவர் அக்பரைக் காணச் சென்றிருந்தார். அக்பர் அப்போது தொழுது கொண்டிருந்தார். பணம், புகழ், எல்லாம் வேண்டி பிரார்த்தித்தார் அவர். இதைக் கண்ட பக்கீர் மெல்ல அங்கிருந்து புறப் படலானார். பிறகு அக்பர் அதற்கான காரணம் கேட்டபோது அவர், பிச்சை எடுக்க வேண்டுமானால் ஏன் பிச்சைக் காரனிடம் எடுக்க வேண்டும்? என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
வேறு என்ன பேச்சு நடந்தது?
ம- சேர்த்து வைப்பதைப் பற்றிய பேச்சும் நன்றாக இருந்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)-
அது பற்றி என்ன சொன்னேன்.?
ம- முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை முயற்சி செய்தேயாக வேண்டும்.சேமிப்பு பற்றி சிந்தியில் அருமையாகச் சொன்னீர்கள்!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்ன சொன்னேன்?
ம-
யார் கடவுளையே முற்றிலும் நம்பி இருக்கிறானோ அவனது பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொள்கிறார்- சிறுவனின் பொறுப்பைப் பாதுகாவலர் ஏற்றுக் கொள்வது போல். இன்னொன்றும் சொன்னீர்கள்- விருந்தில் எங்கே உட்கார வேண்டும் என்று குழந்தைக்குத் தெரியாது. யாராவது உட்கார வைக்க வேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இல்லை, அப்படிச் சொல்ல வில்லை.தந் தை பையனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றால் அவன் கீழே விழ மாட்டான் என்று தான் சொன்னேன்.
ம-
மேலும் மூன்று விதமான சாதுக்களைப் பற்றி இன்று சொன்னீர்கள். உத்தம சாது உட்கார்ந்த இடத்திலேயே தனது உணவைப் பெறுகிறான். உத்தம சாது உட்கார்ந்த இடத்திலேயே தனது உணவைப் பெறுகிறான். இளம் துறவியைப் பற்றி சொன்னீர்கள். அவன் பெண்ணின் மார்பகத்தைக் கண்டு நெஞ்சில் கொப்புளம் ஏன் என்று கேட்டான். இன்னும் எவ்வளவோ அரிய விஷயங்களைச் சொன்னீர்கள். எல்லாம் மிக உயர்ந்த கருத்துக்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)
அது என்ன?
ம-
பம்பா நதிக்கரையில் இருந்த காகம்! அது இரவு பகலாக ராம நாமத்தை ஜபித்ததால் தண்ணீரின் அருகில் சென்றும் அதனால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. ஒரு சாதுவின் புத்தகம், அதில் முழுவதும் ஓம் ராம் என்று மட்டும் எழுதப் பட்டிருந்தது. அனுமன் ராமனிடம் கூறியது- இவை பற்றியெல்லாம் சொன்னீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அது என்ன?
ம-
சீதையைக் கண்டு வந்தேன். அவளது உடல் தான் வீழ்ந்து கிடக்கிறது. மனம், உயிர், எல்லாவற்றையும் அவள் உமது பாதத்தில் சமர்ப்பித்திருக்கிறாள். சாதகப் பறவைபற்றி – அது மழை நீரைத் தவிர வேறு எதையும் பருகாது.மேலும் ஞான யோகம், பக்தி யோகம் பற்றியும் சொன்னீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்ன அது?
ம- குடம் பற்றிய அறிவு இருக்கும் வரை, ” நான் குடம்” என்ற அறிவு இருக்கத் தான் செய்யும். ” நான்” என்ற அறிவு இருக்கும் வரை ”நான் பக்தன்” நீ பகவான், என்ற அறிவு இருக்கும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இல்லை, குடம் பற்றிய அறிவு இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். குடம் போகாது. ” நான்” போவதில்லை . ஆயிரம் ஆராய்ச்சி செய்தாலும் போகாது.
ம- சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மறுபடியும் பேசத் தொடங்கினார்.
ம-
நீங்கள் காளி கோயிலில் ஈசானுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். நாங்களும் அதைக் கேட்பதற்கான பெறும் பேறு கிடைத்தது.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடி)-
அப்படியா? என்னென்ன பேசினேன், சொல்.
ம-
கர்ம நெறி முதல் படி என்றீர்கள். சம்பு மல்லிக் கிடம், இறைவன் உங்கள் முன்னால் தோன்றினால் அவரிடம் சில ஆஸ்பத்திரிகளும் டிஸ்பென்சரிகளுமா கேட்பீர்கள்? என்று கூறியது பற்றி சொன்னீர்கள், மேலும் செயலில் பற்றுஇருக்கும் வரை இறைவன் காட்சி தர மாட்டார் என்று சொன்னீர்கள். இதைக் கேசவரிடம் கூறிய தாகவும் சொன்னீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
என்ன சொன்னேன்?
ம-
குழந்தை நிப்பிளை வைத்துக் கொண்டு தன்னை மறந்து விளையாடும் போது தாய் சமையல் வேலைகளைக் கவனிக்கிறாள். நிப்பிளை எறிந்து விட்டு ஓவென்று அழும் போது தாயார் சோற்றுப் பானையை க் கீழே இறக்கி வைத்து விட்டு குழந்தையிடம் வருகிறாள்.
மற்றொன்றும் கூறினீர்கள். கடவுளை எங்கெல்லாம் காணலாம்? என்று லட்சுமணன் கேட்டான். அதற்கு ராமர் பல விஷயங்களைச் சொல்லிய பிறகு, தம்பி! யாரிடம் ஊர்ஜிதா பக்தியை, பைத்தியம் பிடித்திருப்பதை- அதாவது சிரிப்பது, அழுவது, ஆடுவது, பாடுவது என்று பிரேமைப் பித்தைக் காண்பாயோ அங்கே நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள்” என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆகா, ஆகா
குருதேவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
ம-
ஈசானுக்கு நிவிருத்தியைப் பற்றி மட்டும் கூறி னீர்கள். அன்றிலிருந்து எங்களிலும் பலருக்கு புத்தி வந்தது. நாங்களும் கடமைகளைக் குறைத்துக் கொள்ள ஆசைப் படுகிறோம். ராவணன் இலங்கையிலே மாண்டான். பேகுலா ஏங்கி அழுதாள் என்றும் கூறினீர்கள்.
குருதேவர் இதைக்கேட்டு உரக்கச் சிரித்தார்.
ம-( மிகுந்த பணிவுடன்)
சுவாமி, நமது கடமைகள், பொறுப்புகள் எல்லாவற்றையும் குறைத்துக் கொள்வது நல்லதல்லவா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், ஆனால் உன்னிடம் யாராவது வந்து சேர்ந்தால் அது வேறு விஷயம். துறவியோ ஏழையோ உன்னை நாடி வந்தால் அவர்களுக்குச் சேவை செய்வது நல்லது.
ம-
அன்று ஈசானிடம் முகஸ்துதிக் காரர்களைப் பற்றி நன்றாகச் சொன்னீர்கள். பிணத்தைச் சுற்றி கூடுகின்ற பருந்துகள் போன்றவர்கள் அவர்கள் என்றீர்கள். இதைப் பத்ம லோசன பண்டிதருக்கும் கூறியதாகச் சொன்னீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இல்லை! இல்லை! உலோவைச்சேர்ந்த வாமன் தாசிற்கு ச் சொன்னேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ம- சிறிய கட்டிலின் அருகில் கால் மிதியின் அருகில் உட்கார்ந்தார்.
குருதேவருக்கு த் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. அவர் ம-விடம் , நீ படுத்துக் கொள்ளப்பா, கோபால் எங்கே போனான்? கதவை மூடிவிடு” என்றார்.
திங்கள், நவம்பர் 10, 1884
......................................................
மறுநாள் திங்கள் குருதேவர் அதிகாலையிலேயே எழுந்து விட்டார். இறை நாமங்களை ஓதினார். இடையிடையே கங்கை தரிசனம் செய்தார். அன்னை காளி, ராதா காந்தர் கோயில்களில் மங்கல ஆரதி நடந்தது.
ம- குருதேவரின் அறையிலேயே தரையில் படுத்திருந்தார். அவரும் படுக்கையிலிருந்து எழுந்து எல்லாவற்றையும் பார்த்தார். கேட்டார். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குருதேவரின் அறையில் வந்து உட்கார்ந்தார்.
குருதேவர் குளித்தார். பிறகு காளி கோயிலுக்குப் புறப்பட்டார். ம-வும் உடனிருந்தார். அறையைப் பூட்டிக் கொண்டு வருமாறு அவரிடம் கூறினார் குருதேவர்.
காளி கோயிலுக்குச் சென்ற குருதேவர் ஆசனத்தில் உட்கார்ந்து பூக்களை எடுத்து தமது தலையிலும், அன்னையின் திருப் பாதங்களிலுமாக வைத்தார். சாமரம் வீசினார். பிறகு அறைக்குத் திரும்பினார். ம-விடம் அறையின் பூட்டைத் திறக்குமாறு கூறினார். அறைக்குள் சென்று சிறிய கட்டிலின் மீது அமர்ந்தார். பரவச நிலையில் மூழ்கி, தெய்வ நாமங்களை ஓதினார். ம- தனியாக தரையில் உட் கார்ந்திருந்தார்.
குருதேவர் பாட ஆரம்பித்தார். பரவசத்தில் ஆழ்ந்த நிலையில் பாட்டின் வாயிலாக ம-விற்கு போதனை செய்தார்.- காளியே பிரம்மம், காளி குணமற்றவள், குணங்களுடன் கூடியவளும் அவளே. அவள் உருவமற்றவள், எல்லையற்ற உருவங்களை உடையவளும் அவளே.
அன்பே உருவாம்......................
............................ஆழத் துயரக் கடலில்...
இனி நீ...........
என்ற பாடலை குருதேவர் பாட மாட்டாரா என்று ம- எண்ணினார். என்ன ஆச்சரியம் ! உடனே குருதேவர் அந்தப் பாட்டை பாடினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, சரி எனது இப்போதைய நிலையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டார்.
ம- ( சிரித்தபடியே)-
நீங்கள் இயல்பாக எளிமையாக இருக்கிறீர்கள்.
குருதேவர் தமக்குத் தாமே பாடினார்.
எளியவனாக இல்லாவிடில் எளியவனை அறிய முடியாது”
..........................................................
77
.......
சிரிப்பு நின்றதும் பங்கிம் பேசத் தொடங்கினார்.
பங்கிம்-
சுவாமி, நீங்கள் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(சிரித்தபடியே)-
பிரச்சாரமா! அதெல்லாம் அகங்கார விஷயம்! மனிதன் ஓர் அற்ப ஜீவன். சந்திர சூரியர்களைப் படைத்து உலகத்தையே யார் ஒளிமயமாக ச் செய்திருக்கிறாரோ அவரே பிரச்சாரம் செய்வார். பிரச்சாரம் செய்வது என்ன சாதாரணமான விஷயமா? அவர் காட்சி தந்து ஆணையிடாவிட்டால் பிரச்சாரம் சாத்தியம் அல்ல. ஆனால் சாத்தியப் படாதது ஏன்? ஆணை கிடைக்கவில்லை.ஆனாலும் நீங்கள் பிதற்றுகிறீர்கள். மக்கள் அதை இரண்டொரு நாட்கள் கேட்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள், எல்லாம் புஸ்வாணமாகப் போகும். நீ பேசும் வேரை, ஆகா! இவன் என்ன அற்புதமாகப் பேசுகிறான்! என்பார்கள். நீ முடித்த பிறகு எந்த அடையாளமும் இருக்காது. பாலின் கீழே தீ எரிந்து கொண்டிருக்கும் வரை, பால் புஸ் என்று பொங்கி வழியும்,தீயை இழுத்து விடு, பால் பழைய கதையாகி விடும், குறைந்து விடும்.
சாதனைகள் செய்து சொந்த ஆற்றலை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சாரம் சாத்தியமில்லை. ” உனக்கே படுக்க இடம் இல்லை. சங்கரனையும் அழைக்கிறாய். ” உனக்கே படுத்துக் கொள்ள இடமில்லை. இதில், ” சங்கரா வா! என்னுடன் படுத்து க் கொள்! என்று கூவுகிறாய்.(சிரிப்பு)
காமார் புகூரில் ஹல்தார் புகூர் குளக்கரையில் வெளிக்குபபொய் விடுவார்கள். காலையில் வந்து பார்ப்பவர்கள் ஏசுவார்கள்.ஆனால் எந்த ஏச்சிலும் அங்கே வெளிக்குப் போவது நின்ற பாடில்லை. கடைசியில் கிராமவாசிகள் சர்க்காரிடம் ஒரு மனு எழுதிக் கொடுத்தனர். அவர்கள் வந்து, ” இங்கே மல ஜலம் கழிக்கக் கூடாது, மீறினால் தண்டனை கிடைக்கும்” என்று ஒரு நோட்டீசை ஒட்டினார்கள். அவ்வளவு தான், அதன் பிறகு எல்லாம் அடியோடு நின்று விட்டது. பிறகு எந்தப் பிரச்சனையும் இல்லை, அரசாங்க ஆணை அல்லவா? எல்லோரும் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். அது போல் இறைவன் காட்சி தந்து, ஆணை தந்தாரானால் , பிரச்சாரம் சாத்தியம், மக்களுக்குப்போதிக்கலாம். இல்லாவிட்டால் உன்பேச்சை யார் கேட்பார்கள்?
பக்தர்கள் கவனமாக க்கேட்டனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்( பங்கிமிடம்)-
நல்லது, நீங்கள் பெரிய பண்டிதர், பல நூல்களையும் எழுதி இருக்கிறீர்கள். மனிதனின் கடமை என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவனுடன் போவது எது? மறுஉலகம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
பங்கிம்-
மறுஉலகமா! அது என்ன?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆமாம், ஞானம் பெற்ற பிறகு இறந்தால் வேறு உலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மறுபிறப்பு இல்லை. ஆனால் ஞானம் பெறாத வரை, இறையனுபூதி கிடைக்காதவரைஉலகில் மீண்டும் மீண்டும் பிறந்தேயாக வேண்டும். தப்புவதற்கு வழியே கிடையாது. அது வரை உலகமும் இருக்கிறது. ஞானம் பெற்று விட்டால், இறைக் காட்சி பெற்று விட்டால் முக்தி கிடைக்கிறது. பிறகு பிடிக்க வேண்டியதில்லை. வேகவைத்த நெல்லை விதைத்தால் அது முளைத்து செடியாகாது. ஞான நெருப்பில் வெந்தவனைக் கொண்டு படைப்பு விளையாட்டைத்தொடர இயலாது. அவனால் குடும்ப வாழ்வில் ஈடுபட இயலாது. அவனுக்குத் தான் காமினீ- காஞ்சனத்தில் ஈர்ப்பு இல்லையே! வேகவைத்த நெல்லை விதைப்பதால் என்னபயன்?
பங்கிம்-( சிரித்தவாறு)
சுவாமி!களைகளாலும் எந்தப் பயனும் இல்லையே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஞானி, களை அல்லவே! அவன் இறைக் காட்சி பெற்றவன். அவன் அமுதமாகிய பழத்தைப் பெற்றவன். அவன் பெற்றிருப்பது சுரைக்காய், பூசணிக் காய் அல்ல. அவனுக்கு மறுபிறப்பு இல்லை. மண்ணுலகிற்கோ, சூரிய லோகத்திற்கோ, சந்திர லோகத்திற்கோ அல்லது வேறு எந்த உலகிற்கோ அவன் போக வேண்டியதில்லை.
உவமை என்பது ஒரு பக்க சார்புடையது. நீங்கள் ஒரு பண்டிதர். நியாய சாஸ்திரம் படித்ததில்லையா? புலிபோல் பயங்கரமானவன் என்றால் அவனுக்குப் புலியைப்போல்பெரிய வாலும் சட்டி முகமும் இருக்கிறது எ ன்று பொருள் ஆகாது அல்லவா? ( எல்லோரும் சிரித்தனர்)
நான் கேசவரிடம் இதைச் சொன்னேன், ஒரு சமயம் கேசவர், ” சுவாமி, மறு உலகம் உண்டா? என்று என்னைக்கேட்டார். உண்டு என்றோ இல்லை என்றோ நான் சொல்ல வில்லை. உவமை ஒன்றைக் கூறினேன், குயவன் பானைகளைக் காய வைக்கிறான். அவைகளில் சுட்ட பானைகளும் இருக்கும், சுடாத பானைகளும் இருக்கும். ஆடு மாடுகள் அவற்றின் மீது நடந்தால் உடையும். சுட்ட பானை உடைந்தால் குயவன்அவைகளை வீசியெறிந்து விடுகிறான். சுடாத பானைகள் உடைந்தால் அவற்றை மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வருகிறான். கொண்டு வந்து தண்ணீர் விட்டுப் பிசைந்து , மீண்டும் சக்கரத்தில் வைத்து புதுப் பானை செய்கிறான். அந்த மண்ணை விட மாட்டான். சுடாததுவரை குயவன் மண்ணை விட மாட்டான். ஞானம் கிடைக்காதது வரை இறைக்காட்சி கிடைக்காதது வரை குயவன் சக்கரத்தில் சுழற்றுவான், விட மாட்டான். அதாவது திரும்பத் திரும்ப இந்த உலக வாழ்வில் வந்து பிறக்க வேண்டும், தப்ப முடியாது. இறைவனைப் பெற்று விட்டால் முக்தி கிடைக்கும். அப்போது தான் குயவன் விடுவான். ஏனெனில் அவனைக் கொண்டு மாயையின் உலகத்தில் எந்தக் காரியமும் நடக்காது. ஞானி மாயையைக் கடந்தவன், மாயையின் வாழ்வில் அவனுக்கு என்ன வேலை?
ஆனால் மக்களை வழி நடத்துவதற்காக ஒரு சிலரை இறைவன் இந்த மாயையின் உலகில் விட்டு வைக்கிறார். மக்களுக்கு உபதேசிப்பதற்காக வித்யா மாயையைப் பற்றிக் கொள்கிறான் ஞானி. அது, இறைவன் தன் வேலைக்காகத் தானே விட்டு வைப்பது, சுகர், சங்கரர், போன்றோர் அத்தகையவர்கள்.
( பங்கிமிடம்)-
அது சரி, மனிதனின் கடமை என்னஎன்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பங்கிம்( சிரித்தவாறே)-
என்னைக்கேட்டால் சாப்பாடு, தூக்கம், பெண்ணின்பம் இவைதான்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
( வெறுப்புடன்)-
சே! நீ மட்டமானவன். இரவு பகலாக எதைச் செய்து வருகிறாயோ அது தான் வாயில் வருகிறது. எதை உண்கிறானோ அந்த ஏப்பம் தான் வரும். முள்ளங்கி தின்றால் முள்ளங்கி ஏப்பம் வரும் இளநீர் சாப்பிட்டால் இளநீர் ஏப்பம் வரும். இரவு பகலாக காமினீ- காஞ்சனத்தில் உழல்கிறாய். அது தான் அந்த விஷயம் வாயிலிருந்து வருகிறது.
வெறும் உலகியல் விஷயங்களையே சிந்திப்பதால் கணக்குப் பார்க்கும் இயல்பு வருகிறது. மனிதன் கபடனா கிறான். இறைவனைப் பற்றி நினைத்தால் எளிமையான வனாகிறான். இறையனுபூதி பெற்றவனால் ஒரு போதும் இப்படி பேச முடியாது.
தெய்வ சிந்தனை இல்லாத, விவேக வைராக்கியம் இல்லாத வெறும் புலமையினால் என்ன பயன்? மனம் காமினீ- காஞ்சனத்தில் உழலும் போது புலமை என்ன செய்யும்?
கழுகும் பருந்தும் மிக உயரத்தில் பறக்கும். ஆனால் அவற்றின் பார்வையெல்லாம் கீழே பிணக் குழியின் மீது தான் இருக்கும். பண்டிதன் உலகின் நூல்களையெல்லாம் படித்திருப்பான். அவனால் சுலோகங்களை அள்ளிவிட முடியும். நூல்களும் எழுதியிருப்பான். ஆனால் அவன் பெண்ணிடம் பற்றுக் கொள்வானானால் , காசு பணம் புகழ் இவற்றையே வாழ்க்கையின் சாரமாக நினைப்பானானால் அவன் பண்டிதனா? இறைவனில் மனத்தை வைக்காத பண்டிதன் என்ன பண்டிதன்?
பக்தர்களைப் பார்த்து ச் சிலர், இவனென்ன எப்போது பார்த்தாலும் கடவுளே, கடவுளே என்கிறான். மூளை கெட்டு விட்டது! நாம் எவ்வளவு திறமை சாலிகள்! சுகபோகங்களை எப்படி அனுபவிக்கிறோம். ! பணம், புகழ், புலனின்பம் என்று எப்படியெல்லாம் வாழ்கிறோம்! என்று பேசுவார்கள். இப்படித்தான் காகம் தன்னை திறமைசாலி என்று நினைத்துக் கொள்கிறது. ஆனால் அதிகாலையில் எழுந்தவுடன் முதல்வேலையாக பிறரது கழிவைத் தின்கிறது. காகத்தைப் பாரேன், என்ன கர்வம் பிடித்த போக்கு!உண்மையிலேயே திறமை சாலி தான்!( எல்லோரும் பேரமைதியுடன் இருந்தனர்)
ஆனால் யார் தெய்வ சிந்தனை செய்கிறார்களோ, உலகியல் பற்று, காமினீ- காஞ்சன நாட்டம் எல்லாம் விலக வேண்டுமென்று இரவு பகலாக பிரார்த்திக்கிறார்களோ, யாருக்கு உலகியல் சுகங்கள் சகப்பாக இருக்கின்றனவோ, யார் இறைவனின் பாத கமல அமுதத்தைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லையோ அவர்களின் இயல்பு அன்னப் பறவையின் இயல்பு போன்றது. அன்னப் பறவை யின் முன் தண்ணீர் கலந்த பாலை வைத்தால் அது தண்ணீரை நீக்கி விட்டு ப் பாலை மட்டும் பருகுகிறது. அன்னப் பறவையின் நடையைக் கவனித்திருக்கிறாயா? அது ஒரே திசையில் நேராக நடந்து செல்லும். தூய பக்தனும் இறைவனை நோக்கி மட்டுமே போகிறான். அவன்வேறு எதையும் விரும்புவதில்லை. அவனுக்கு வேறு எதுவும் பிடிப்பதில்லை.
78
.......
( பங்கிமிடம் மென்மையாக) தப்பாக நினைக்காதீர்கள்.
பங்கிம்-
சுவாமி, நான் இன்சொற்களைக்கேட்பதற்காக வரவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர்-( பங்கிமைப் பார்த்து)-
காமினீ- காஞ்சனம் தான் இல்லற வாழ்க்கை. அதன் பெயர் தான் மாயை. இறைவனைக் காணவோ, அவரை நினைக்கவோ இந்த மாயை இடம் தருவதில்லை. ஓரிரு குழந்தைகள் பிறந்த பிறகு கணவனும் மனைவியும் சகோதர சகோதரி போல் வாழ வேண்டும். எப்போதும் இறைவனைப் பற்றியே பேச வேண்டும். அப்படிச் செய்தால் இருவருடைய மனமும் இறைவனை நாடிச் செல்லும். மனைவி, கணவனுடைய ஆன்மீக வாழ்விற்குத் துணை செய்பவளாக இருப்பாள். மிருக வுணர்ச்சி மறையா விட்டால் இறையானந்தத்தை அனுபவிக்க முடியாது. இந்த மிருகவுணர்ச்சி மறைய வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். மன ஏக்கத்துடன் பிரார்த்திக்க வேண்டும். அவர் நம்முள் உறைகிறார். அந்தப் பிரார்த்தனை இதய பூர்வமானதாக இருந்தால் கட்டாயம் கேட்பார்.
பணத்தாசை! நான் பஞ்சவடிக்கருகில் கங்கைக்கரையில் உட்கார்ந்து , பணம்-மண், பணம்- மண், மண்ணே பணம், பணமே மண் என்று கூறி இரண்டையும் நீரில் வீசி யெறிந்தேன்.
பங்கிம்-
பணம் மண்ணா? சுவாமி, நாலு பைசா இருந்தால் ஓர் ஏழைக்குத் தரலாமே! பணம் மண் என்றால் தயை, பரோபகாரம் எதுவும் நடக்காதே!
ஸ்ரீராமகிருஷ்ணர்-
தயை, பரோபகாரம்! என்ன பரோபகாரம் செய்து விடுவாய் நீ! மணிதன் இவ்வளவு தம்பட்டம் அடித்துத் திரிகிறான். ஆனால் தூங்கும்போது, ஒருவன் நின்று கொண்டு அவனது வாயில் மூத்திரம் பெய்தால் அவன் அறிவதில்லை. அது வாயிலிருந்து வழிந்தோடும். அப்போது அந்த டம்பம், ஆணவம், ஆர்ப்பாட்டம், எல்லாம் எங்கே போயின?
துறவி காமினீ- காஞ்சனத்தைத் துறக்க வேண்டும். அவற்றை மீண்டும் அவன் ஏற்கக் கூடாது. துப்பிய எச்சிலை மீண்டும் தின்பதில்லை. துறவி யாருக்காவது எதையாவது கொடுத்தால், ” நான் கொடுத்தேன்” என்று எண்ணக் கூடாது. தயை என்பது இறைவனுடையது. மனிதன் என்ன தயை காட்ட முடியும்? தானம்- டானம் எல்லாம் ராமரின் திருவுளம் . உண்மையான துறவி மனத்தளவிலும் துறக்கிறான். புறத்தளவிலும் துறக்கிறான். வெல்லம் தின்னாதவனின் பக்கத்தில் வெல்லம் இருப்பது நல்லதல்ல. பக்கத்தில் வெல்லத்தை வைத்துக் கொண்டு, ” வெல்லம் தின்னாதே” என்று சொன்னால், மக்கள் அதைக்கேட்க மாட்டார்கள்.
இல்லறத்தானுக்குப் பணத்தின் தேவை இருக்கவே செய்கிறது. ஏனெனில் மனைவி மக்கள் இருக்கிறார்களே! அவர்களுக்காகப் பணம் சேமிக்க வேண்டும். அவர்களின் சாப்பாட்டிற்கு வழி செய்ய வேண்டும். பறவை, துறவி இருவரும் தான் சேர்த்து வைப்பதில்லை. பறவையும் குஞ்சு பொரித்து விட்டால் குஞ்சுகளுக்கு அலகில் இரை கொண்டு வருகிறது. அப்போது, பறவையும் சேமிக்க வேண்டியுள்ளது. ஆகவே இல்லறத்தானுக்குப் பணம் அவசியம். அவன் தனது குடும்பத்திற்கு உணவும் உடையும் அளிக்க வேண்டும்.
இல்லறத்தான் தூய பக்தனாக இருந்தால் பற்றற்று வேலை செய்கிறான். லாபம் நஷ்டம், சுகம் துக்கம் என்று அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறான். இரவு பகலாக அவரிடம் பக்தியை வேண்டுகிறான். அவனுக்கு வேறு எதுவும் தேவையில்லை. பற்றற்று வேலை செய்வது- இதன் பெயர் தான் பலன் கருதாப் பணி.எல்லா வேகைளையும் பலன் கருதாமல் செய்ய வேண்டும். ஆனால் துறவி இல்லறத்தானைப்போல்உலகியல் வேலைகள் செய்வதில்லை.
இல்லறத்தான் பலன் கருதாமல் யாருக்காவது தானம் கொடுத்தால் அது அவனுடைய நன்மைக்காகவே தவிர ” பரோபகாரத்திற்காக” அல்ல. எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார். அவருக்கே சேவை செய்ய வேண்டும். இறைவனுக்கு ச்சேவை செய்தால் அது சொந்த நன்மையே தவிர, பரோபகாரம் அல்ல. இப்படி எல்லா உயிர்களிலும் இறைவனுக்குச்சேவை செய்யவேண்டும்.- மனிதர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா உயிரினங்களுக்கும் தெய்வத் தொண்டு செய்யவேண்டும். அதனுடன், பெயருக்கு ஆசைப் படாமல், புகழுக்கு ஆசைப் படாமல், மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தை விரும்பாமல், யாருக்குச்சேவை செய்தோமோ அவர்களிடம் இருந்து பிரதியாக உதவி எதையும் எதிர் பாராமல் யாராவது சேவை செய்தால் அது தான் உண்மையில் பலன் கருதா பணி. பற்றற்ற பணி. இவ்வாறு பலன் கருதா பணி செய்தால் செய்தவனுக்கே நன்மை உண்டாகிறது. இதன் பெயர் தான் கர்மயோகம். இந்தக் கர்ம யோகமும் இறையனுபூதிக்கான ஒரு வழி. ஆனால் இது மிகக் கடினமான வழி. கலியுகத்திற்கு ஏற்றது அல்ல.
ஆகவே தான் யார் பற்றற்று இப்படிவேலை செய்கிறானோ, தயையுடன் தானம் செய்கிறானோ, அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான் என்று சொல்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்வது, நன்மை செய்வது எல்லாம் இறைவன் செய்வார். எந்த இறைவன் மக்களுக்காக சந்திரன், சூரியன், தந்தை, தாய், பழம், பூ , தானியங்கள் எல்லாம் படைத்திருக்கிறாரோ அவர் பார்த்துக் கொள்வார். தந்தையிடம் எந்த அன்பைக் காண்கிறாயோ அது அவரது அன்பு. உயிர்களின் பாது காப்பிற்காகவே அதை அவர் தந்திருக்கிறார். கருணை மனத்தினரிடம் நீங்கள் காண்கின்ற தயையும் அவருடையது தான். கதியற்ற உயிர்களின் பாதுகாப்பிற்காக அவர் அதைத் தந்திருக்கிறார். ஆகவே நீ தயை காட்டினாலும் சரி, காட்டாவிட்டாலும் சரி, இறைவன் ஒரு வழியில் இல்லாவிட்டால் இன்னொரு வழியில் தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார். அவருடைய காரியம் ஒருபோதும் தடை படாது.
எனவே மனிதனின் கடமை என்ன? இறைவனிடம் சரண் புகுவது. எதனால் அவரைப் பெற முடியுமோ, அவரது காட்சியைப் பெற முடியுமோ அதற்காக மன ஏக்கத்துடன் அவரிடம் பிரார்த்திப்பதும் தான், வேறு என்ன!