இந்துமதம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்துமதம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்துமதம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்இந்துமதம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்இந்துமதம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

life history of sri ramakrishna in tamil

பிறப்பிடமும் பூர்வீகமும்

image27

அற்புத அனுபவங்கள்

image28

திருஅவதாரம்.

image29

இளமைப்பருவம்

image30

வாலிபத்தின் வாசலில்

image31

கிராமத்துப் பெண்களுடன்

image32

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு தமிழில்

பரவசநிலை அனுபவங்கள்

image33

கல்கத்தா நோக்கி பயணம்

image34

காளி தரிசனம்

image35

சாதனையும் தெய்வப்பித்தும்

image36

முதல் நான்கு ஆண்டு சாதனைகள்

image37

திருமணமும் தட்சிணேசுவரத்திற்குத் திரும்புதலும்

image38

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு

பைரவி பிராம்மணியின் வருகை

image39

ஜடாதாரியும் குருதேவரின் வாத்சல்ய பாவனை சாதனையும்

image40

மதுரபாவனை-ஒரு விளக்கம்

image41

.

மதுர பாவனை சாதனை

image42

குருதேவரின் வேதாந்த சாதனை

image43

இஸ்லாமிய சாதனை

image44

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு

தீர்த்த யாத்திரை

image45

ஷோடசி பூஜை

image46

சாதகநிலை-நிறைவுரை

image47

கேசவருடன் சந்திப்பு

image48

Share the big news

image49

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

image50

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

Site Content

Detail your services

image51

If customers can’t find it, it doesn’t exist. Clearly list and describe the services you offer. Also, be sure to showcase a premium service.

Announce coming events

image52

Having a big sale, on-site celebrity, or other event? Be sure to announce it so everybody knows and gets excited about it.

Display real testimonials

image53

Are your customers raving about you on social media? Share their great stories to help turn potential customers into loyal ones.

Promote current deals

image54

Running a holiday sale or weekly special? Definitely promote it here to get customers excited about getting a sweet deal.

Share the big news

image55

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

image56

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

பிறப்பிடமும் பூர்வீகமும்

வங்காள மாநிலத்தில் ஹீக்ளி மாவட்டத்தில் வடமேற்குப்பகுதியும்,பாங்குரா,மேதினிபூர் மாவட்டங்களும் சந்திக்கின்ற இடத்திற்கு அருகில் முக்கோணமாக மூன்று கிராமங்கள் உள்ளன. உள்ளூர் வாசிகளுக்கு அவை ஸ்ரீபூர்,காமார்புகூர் ,முகுந்தபூர் என்று தனித்தனியாகத் தெரிந்திருந்தாலும்,ஒன்றையொன்று மிகவும் நெருங்கியிருப்பதால் .பயணிகளுக்கு அவை ஒரே கிராமத்தின் மூன்று பகுதிகளாகவே தோன்றும். பொதுவாக மூன்று கிராமங்களும் சேர்ந்த அந்தப்பகுதி காமார்புகூர் என்றே வழங்கப்பட்டு வந்தது.

பிராமணர்,ஷத்திரியர்.நெசவாளர் .இடையர்,கொல்லர்,குயவர், மீனவர்., துப்புரவாளர்,போன்ற பல இனத்தவர் காமார்புகூரில் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் மூன்று நான்கு பெரிய குளங்கள் உள்ளன. அவற்றுள் பெரியது ஹல்தார்புகூர்.

நூறிதழ்த் தாமரைகளும்,வெண்ணிற அல்லி மலர்களும் மலர்ந்து அழகு செய்கின்ற சிறிய குளங்களும் ஏராளமாக உள்ளன. 

செங்கல்லால் கட்டப்பட்ட பல வீடுகளும் சமாதிகளும் இந்த கிராமத்தில் ஏராளமாக இருந்தன.

காமார்புகூருக்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் சாத்பேரே,நாராயண்பூர்.தேரே என்னும் மூன்று கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன.

தேரேயில் உள்ள குளம்,அதற்கு அருகிலுள்ள கோயில் போன்ற பலவற்றிலிருந்து இந்த கிராமங்களின் பண்டைய செழிப்பை அறியலாம். 

நாம் கூறுகின்ற காலத்தில் இந்த மூன்று கிராமங்களும் பல்வேறு ஜமீன்தார்களின் ஆதிக்கத்தில் இருந்தன.

ஜமீன்தாரான ராமானந்த ராய் சாத்பேரே கிராமத்தில் வசித்து வந்தார்.சுமாரான செல்வம் படைத்த இந்த ஜமீன்தார் தனது ஜமீனில் வாழ்ந்தவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார்.யாரிடமாவது அவர் கோபம் கொண்டுவிட்டால் அவரது எல்லா உடமைகளையும் பறித்துக்கொள்ளத் தயங்க மாட்டார். 

தேரே கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சீலமுள்ள பரம்பரையில் தோன்றிய ஓர் அந்தணர் குடும்பம் வசித்து வந்தது.

ஓரளவே வருமானம் உள்ள அவர்கள் நல் ஆசாரங்களைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தனர்.ஸ்ரீராமசந்திர மூர்த்தியை அவர்கள் வழிபட்டு வந்தனர். அங்குள்ள சிவன் கோயிலும் அருகிலுள்ள சட்டுஜ்ஜே குளமும் அவர்களை நினைவூட்டும் வகையில் இன்றும் உள்ளன. 

இந்தக் குடும்பத்தைச்சேர்ந்த மாணிக்ராம் சட்டோபாத்யாருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். அவர்களுள் மூத்தவரான கூதிராம் கி.பி.1775-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப்பின் ராம்சிலா என்னும் மகளும் நிதிராம்,கனைராம் என்னும் மகன்களும் பிறந்தனர்.

தந்தையின் மறைவிற்குப்பிறகு கூதிராம் பரம்பரைச் சொத்தைப்பராமரிக்கலானார்..

தார்மீக வழியிலிருந்து சிறிதும் பிறழாமல் தம்மால் முடிந்தவரை கடமைகளை ஆற்றி வந்தார். அவரது மனைவி இளமையிலேயே இறந்துவிட்டார். எனவே தமது 25-ஆம் வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மணமகளின் பெயர் சந்திரமணி . குடும்பத்தினர் அவளை சந்திரா என அழைத்தனர்.

சுமார் 1791-ஆம் ஆண்டில் பிறந்த சந்திரமணியின் திருமணம் எட்டாம் வயதில் நடைபெற்றது.

கூதிராம் -சந்திரமணி தம்பதியரின் மூத்த புதல்வனான ராம்குமார் 1805-ஆம்ஆண்டு பிறந்ததாகக் கூறுகின்றனர். 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு காத்யாயனி என்ற மகளும் 1826-இல் ராமேசுவரர் என்ற மகனும் பிறந்தனர்.

சத்தியப் பாதையிலிருந்து பிறழாமல் உலகக் கடமைகளைச் செய்வது எவ்வளவு சிரமம் என்பதை அறிய கூதிராமிற்கு வெகுகாலம் ஆகவில்லை. 

காத்யாயனி பிறந்த சில ஆண்டுகளுக்குள் கடுமையான சோதனை ஒன்றை அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. 

அந்த கிராமத்தின் ஜமீன்தாரான ராமானந்த ராய் கிராம மக்களைக் கொடுமைப்படுத்திவந்ததைப்பற்றி முன்னரே கூறியுள்ளோம்.

தேரேபூரைச்சேர்ந்த ஒருவரிடம் கோபம் கொண்டு அவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.அந்த ஜமீன்தார். வழக்கில் வெற்றி பெறுவதற்கு நற்பெயருடைய ஒருவரின் சாட்சி வேண்டியிருந்தது. அதற்காக கூதிராமைத் தமக்குச் சாதகமாக சாட்சி சொல்லும் படி அவர் கூறினார்.நாணயத்திற்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற கூதிராமிற்கு நீதிமன்றம், வழக்கு போன்ற சொற்களே அச்சம் ஊட்டுபவையாக இருந்தன.தன் பக்கம் நியாயம் இருந்தால் கூட யார் மீதும் வழக்குத் தொடர்வதற்காக அவர் நீதிமன்றங்களை நாடியிருக்க மாட்டார். அத்தகையவருக்கு ராமானந்த ராயின் வேண்டுகோள் ஓர் இடிபோல் தலையில் இறங்கியது. ராமானந்த ராயின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அறிந்திருந்தும் கூதிராம் பொய்சாட்சி கூற மறுத்துவிட்டார்.

தவிர்க்க முடியாதது நிகழ்ந்தது. அந்த ஜமீன்தார் கூதிராமின் மீதே பொய்வழக்கு ஒன்று தொடர்ந்து அதில் வென்று கூதிராமின் தந்தைவழிச் சொத்து முழுவதையும் அபகரித்து விட்டார். 

எனவே தேரேபூரில் ஓர் அங்குல நிலம் கூட இல்லாமல் அனைத்தையும் கூதிராம் இழந்தார். கிராம மக்கள் அவரது துன்பத்தை உணர்ந்திருந்தாலும் ஜமீன்தாரிடம் கொண்டுள்ள அச்சத்தால் அவருக்கு எந்த விதத்திலும் உதவ முன்வரவில்லை.

இது நிகழ்ந்த போது கூதிராமிற்குநாற்பது வயதிருக்கும்.பரம்பரைச் சொத்தும் அத்துடன் பல காலம் உழைத்துச் சம்பாதித்த செல்வமும் காற்றில் கலைந்து சென்ற மேகத்தைப்போல் மறைந்து விட்டன. ஆனால் இந்த நிகழ்ச்சி அவரது நேர்மையைச் சிறிதும் பாதிக்கவில்லை. ஸ்ரீரகுவீரரின் திருவடிகளில் சரண்புகுந்தார் அவர் . 

கெட்ட மதியுடைய அந்த ஜமீன்தாரிடமிருந்து தப்பிக்க மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அமைதியாகச் சிந்தித்தார். முடிவில் தன் பரம்பரை இருப்பிடமான அந்த கிராமத்திற்கு நிரந்தரமாக விடைதரத் தீர்மானித்தார்.

காமார்புகூரைச்சேர்ந்த சுக்லால் கோசுவாமியும் கூதிராமும் ஒத்த மனத்தினர்.நெருங்கிய நண்பர்கள். கூதிராமிற்கு நேர்ந்த இழப்பை அறிந்த சுக்லால் மிகவும் மனம் வருந்தினார். தன் வசமிருந்த சில குடிசைகளைக் காலி செய்து அதில் நிரந்தரமாக வாசம் செய்யும் படி அவர் கூதிராமை அழைத்தார். 

இவ்வாறு கூதிராமிற்கு ஒரு தஞ்சம் கிடைத்தது. அந்த அழைப்பைக் கடவுளின் திருவிளையாடலாகக் கருதி கூதிராம் ஏற்றுக்கொண்டார். நன்றியால் நிறைந்த மனத்துடன் காமார்புகூரை அடைந்து அங்கு வாழத் தொடங்கினார். 

அந்த நல்ல நண்பர் தங்க இடம் கொடுத்ததுடன் நின்றுவிடவில்லை. குடும்பப் பராமரிப்புக்காக நெல்விளையும் நிலத்தையும் மனமுவந்து அளித்தார்.


 

கூதிராமும் சந்திராவும் பத்து வயது பாலகன் ராம்குமாருடனும் நான்கு வயதே நிறைந்த காத்யாயனியுடனும் காமார்புகூருக்கு வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட குடிசையில் வாழலாயினர். அவர்களின் உள்ளங்களில் எத்தனையெத்தனை உணர்ச்சிகளும் எண்ணங்களும் அப்போது எழுந்து அலைமோதி மறைந்திருக்கும்! அவற்றின் ஆழத்தையும் பரிமாணத்தையும் யார் தான் அளக்க முடியும்? 

வெறுப்பும் பொறாமையும் நிறைந்த இந்த உலகம் காரிருள் சூழ்ந்ததாக,பிணங்கள் நிறைந்த இடுகாடாக அவர்களுக்குத் தோன்றியது. துடிக்கும் அவர்களின் இதயங்களில் அன்பும் பண்பும் கருணையும் பாசமும் நீதியும் நேர்மையும் ஒளிக்கதிர்களை வீசி அவ்வப்போது மகிழ்ச்சி யூட்டினாலும் கண நேரத்தில் அவை தமது ஒளியை இழந்து அங்கு மீண்டும் துக்கக் காரிருள் சூழ்ந்துவிடும். 

கடந்த கால வாழ்க்கையுடன் நிகழ்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்களின் உள்ளங்களில் இத்தகைய எண்ணங்கள் எழுந்தது இயற்கையே. அல்லலும் ஆபத்தும் அலைக்கழிக்கும் போது தான் மக்கள் உலகின் நிலையாமையையும் பயனற்ற தன்மையையும் உணர்கின்றனர். அத்தகைய ஒரு தருணம் கூதிராமின் வாழ்விலும் இப்போது வந்திருக்கிறது. 

இயல்பாகவே பக்தி நிறைந்த அவர் இந்த வேளையில் உலகிலிருந்து விலகி கடவுளை முற்றிலுமாகச் சார்ந்திருக்கத் தலைப்பட்டதில் வியப்பேதும் இல்லை. அனைத்தையும் இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலை வந்த போது கூட தாம் யாரிடமும் சென்று கேட்காமலேயே தஞ்சம் கிடைத்ததை நினைத்து நினைத்து அவர் உருகினார். ஸ்ரீரகுவீரரின் அருள் வெள்ளத்தில் கரைந்த அவரது உள்ளம் உலகியலிலிருந்து மெள்ளமெள்ள விலகத் தொடங்கியது.ஸ்ரீரகுவீரரிடம் பக்திபூண்டு அவருடைய சேவையில் கூதிராம் மேலும்மேலும் நேரத்தைச் செலவிட்டார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவரது வாழ்க்கை பழங்கால வானபிரஸ்தர்களின் வாழ்க்கையைப்போல அமைந்தது.உலகில் வாழ்ந்தும் அவர் அதில் ஒட்டவில்லை.

உலகியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது துன்பங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. கூதிராம் எல்லா துரதிஷ்டங்களையும் மகிழ்வுடன் தாங்கிக்கொண்டார்.

சாஸ்திர விதிகளைப் பின்பற்றுவதில் கூட அவர் எந்தக்குறையும் வைக்கவில்லை.சில நாட்கள் சாப்பிடுவதற்கு வீட்டில் எதுவும் இருக்காது. சந்திராதேவி கவலையுடன் அதைப்பற்றிக் கூறுவாள். ஆனால் கூதிராம் சிறிதும் மனம் கலங்காமல் ”கவலைப்படாதே”பூஜையின்போது ராமனுக்கு உணவு படைக்க உணவில்லை. ஸ்ரீராமனே பட்டினி கிடக்கும்போது அவருடன் சேர்ந்து நாமும் என் பட்டினி கிடக்கக்கூடாது? என்று கேட்டு அவளைத்தேற்றுவார். எளிய உள்ளம் படைத்த சந்திராதேவியும் அந்தப் பதிலில் திருப்தியடைந்துவிடுவாள். தன் கணவரைப்போலவே ஸ்ரீராமனைச் சரணடைந்து கவலையின்றி வீட்டுவேலைகளில் ஈடுபடுவாள். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தேவையான உணவு எப்படியோ அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

ஆறு வருடங்கள் உருண்டோடின. கூதிராமின் மகன் ராம்குமாருக்குப் பதினாறு வயதும் மகள் காத்யாயனிக்குப் பதினொரு வயதும் ஆயின. ராம்குமார்அடுத்த கிராமத்திலிருந்த சமஸ்கிருத பள்ளியில் வடமொழி இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் ஸ்மிருதிகளைக் கற்கலானார். காத்யாயனி திருமண வயதை எட்டியிருந்தாள். இருவருக்கும் திருமணத்தை நடத்தினார் கூதிராம்.

கூதிராமின் உள்ளத்தில் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆசை இப்போது எழலாயிற்று.அது கி.பி 1824-ஆம் ஆண்டாக இருக்கலாம். 

தாமதமின்றி சேது பந்தன ராமேசுவரத்தை நோக்கிக் கால் நடையாகத் தமது தீர்த்த யாத்திரையைத் தொடங்கினார் அவர். ஓராண்டு காலம் தென்னிந்தியாவில் பல புண்ணியத் தலங்களைத் தரிசித்த பின்னர் காமார்புகூர் திரும்பினார். 

ராமேசுவரத்திலிருந்து பாணலிங்கம் ஒன்றைக்கொண்டு சென்று அதனையும் தமது பூஜையறையில் வைத்து தினசரி வழிபாட்டைில் சேர்த்துக்கொண்டார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திராதேவி இப்போது மீண்டும் கருவுற்று,1826-இல் ஆண்மகவு ஒன்றை ஈன்றெடுத்தார். தமது தீர்த்த யாத்திரையின் நினைவாக கூதிராம் அந்தக்குழந்தைக்கு ராமேசுவரர் என்று பெயரிட்டார்.

அடுத்த எட்டு ஆண்டுகள் காமார்புகூரின் அந்த ஏழைக்குடும்பத்தில் பெரிய நிகழ்ச்சிகள் எதுவுமின்றி சாதாரணமாகக் கழிந்தன.

ராம்குமார் சிறந்த தேவி உபாசகர். தகுந்த ஒருவரிடமிருந்து மந்திர உபதேசம் பெற்றிருந்த அவர் தீவிரமான சாதனைகள் மூலம் தன் இஷ்ட தெய்வமான ஆத்யாசக்தி அன்னையின் காட்சியைப்பெற்றார். ராம்குமாரின் வழிபாட்டில் மகிழ்ந்த அன்னை தன் திருக் கை விரலால் அவரது நாக்கில் ஒரு மந்திரத்தை எழுதினாள்.அதிலிருந்து ராம்குமார் சோதிடக்கலையில் வல்லவரானார். அவர் சொன்னதெல்லாம் பலித்தது. 

நோயாளி ஒருவனைப்பார்த்த மாத்திரத்திலேயே அவன் நலம் பெறுவானா மாட்டானா என்பதை அவரால் கூற முடிந்தது. 

எதிர்காலத்தைக் கணிப்பதில் வல்லவர் என்று அவரது பெயர் அந்தப்பகுதியில் பரவியது.சாதாரண நோயாகட்டும் கொடிய வியாதி ஆகட்டும்.அவரிடம் வந்த யாரும் குணமாகாமல் போனதில்லை. 

நோயாளி வந்ததும் ஸ்வஸ்த்யயனம் என்ற சடங்கைச் செய்வார்.பின்னர் நான் இப்போது பூஜை செய்யும் இடத்தில் விதைக்கின்ற விதைகள் முளைக்க ஆரம்பித்ததும் இவன் குணமடைவான் என்று உறுதியுடன் கூறுவார். 

அவர் கூறுவது சிறிதும் பிசகின்றி உண்மையாகி வந்தது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்ச்சியை சிவராம் கூறினார்.

ஒரு சமயம் வேலை நிமித்தமாக ராம்குமார் கல்கத்தா செல்ல நேர்ந்தது. 

அங்கே ஒரு நாள் காலையில் அவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது செல்வந்தன் ஒருவன் குடும்பத்துடன் அங்கே குளிக்க வந்தான். 

தனது மனைவி பிறர் காணாமல் நீராட வேண்டும் என்பதற்காக அவள் அமர்ந்திருந்த பல்லக்கையே நதியினுள் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்திருந்தான் அவன். 

ராம்குமார் கிராமவாசி. பெண்ணொருத்தி இவ்வளவு தூரம் தன்னை மறைத்துக்கொண்டு குளிப்பதை அவர் கண்டதில்லை. அதை அவர் வியப்புடன் பார்த்தார். அப்போது தற்செயலாக அந்தப்பெண்ணின் முகத்தைக் காண நேர்ந்தது. 

அந்தோ பரிதாபம் என்று தனக்குள் கூறிக்கொண்டார் ராம்குமார்.

ஏனெனில் மறுநாளே அந்தப்பெண் சாகப்போகிறாள் என்பது அவருக்குத் தெரிந்தது.ஐயோ! இன்று இத்தனை ஆடம்பரத்துடன் மறைவாக நீராடும் இந்த உடல் நாளை எல்லார் கண்முன்னாலும் இதே கங்கையில் பிணமாக மூழ்கப்போகிறதேஎன்று முணுமுணுத்தார்.

இதைக்கேட்டு விட்டான் அந்தப்பணக்காரன்.ராம்குமாரின்வார்த்தைகள் அவனுக்கு அதிர்ச்சியை அளித்ததுடன் ஆத்திரத்தையும் மூட்டின. 

அந்தப்பெண் நல்ல உடல் நிலையுடன் இருந்தாள். மறுநாள் இறப்பதற்கான எந்த அறிகுறியும் அவளிடம் காணப்படவில்லை. எனவே ராம்குமார் கூறியதைச்சோதிக்க முடிவு செய்தான் அவன். 

கணிப்பு தவறாகி விட்டால் அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரை வற்புறுத்தித் தன் வீட்டிற்குக்கூட்டிச்சென்றான். ஆனால் ராம்குமாரின் வாக்கு பொய்க்கவில்லை. 

மறுநாளே் அந்தப்பெண் திடீரென இறந்து விட்டாள். வேறு வழியின்றி அவரைப்போக விட்டான் அவன்.

 

ஆவணி மாதத்தில் ஒருநாள் .பூர்சுபோ கிராமத்தில் ஒரு வீட்டில் கோஜாகரி பூஜை செய்வதற்காக ராம்குமார் சென்றிருந்தார். 

நள்ளிரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. சந்திரா வீட்டிற்கு வெளியே வந்து அவர் வருகின்ற திசையைக் கவலையுடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். 

அப்போது பூர்சுபோவிலிருந்து காமார்புகூர் வரும் ஒற்றையடிப் பாதையில் தனியாக யாரோ வருவது தெரிந்தது. 

அது தன் மகன் தான் என்று எண்ணிய சந்திரா ஆவலுடன் சற்று முன்னே சென்றாள். அருகில் சென்றபோது அது ராம்குமார் இல்லையென்பது தெரிந்தது. வந்தது ஓர் அழகிய பெண். பட்டாடையும் பலவித ஆபரணங்களுமாக அவளது பேரெழில் ஈடிணையற்று விளங்கியது. 

மகனுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் மனம் வெதும்பிக் கொண்டிருந்த சந்திராவின் கண்களில் அந்த எழிலோ வடிவோ தென்படவில்லை. நள்ளிரவில் இத்தகைய பேரழகி ஒருத்தி தன்னந்தனியாகச் செல்வதும் புதுமையாகப்படவில்லை. 

அவளது அருகில் சென்றாள் சந்திரா. 

அவளிடம்.. குழந்தாய், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டாள். 

பூர்சுபோவிலிருந்து என்று பதிலளித்தாள் அந்தப்பெண்.

நீ ராம்குமாரைப் பார்த்தாயா? திரும்பி வருகிறானா அவன்? என்று வினவினாள். 

முற்றிலும் பதியவளான இந்தப்பெண்ணுக்கு எப்படி ராம்குமாரைத் தெரிந்திருக்க முடியும் என்ற எண்ணம் சந்திராவின் மனத்தில் சிறிதும் எழவில்லை. 

சந்திராவின் கேள்வியைச் செவியுற்ற அவள் மென்மையாகப் புன்முறுவலித்தவாறே, அம்மா, உங்கள் மகன் பூஜை செய்கின்ற அதே வீட்டிலிருந்து தான் நான் வருகிறேன். கவலைப்படாதீர்கள்,அவன் விரைவில் வந்து விடுவான் என்றுஅன்புடன் கூறினாள். 

சந்திராவின் கலக்கம் நீங்கியது. அப்போது தான் அந்தப் பெண்ணின் எழில் கொஞ்சம் திருவுருவும்,அவள் அணிந்துள்ள ஆபரணங்களும்,அவளது இனிமையான மென்குரலும் சந்திராவின் கவனத்தில் பட்டது. வியப்புடன் அவள் அந்தப் பெண்ணிடம் 

குழந்தாய் வயதில் மிகவும் இளையவளாக இருக்கிறாய் நீ! இந்த நள்ளிரவு வேளையில் இவ்வளவு அழகான ஆடை அணிகலன்களுடன் எங்கு செல்கிறாய்? ஆமாம், நீ காதில் அணிந்துள்ள இந்தப் புதுமையான நகையின் பெயர் என்ன? என்று ஒவ்வொன்றாகக்கேட்கத் தொடங்கினாள். வந்தவளும் புன்னகை மாறாமலேயே இதுவா,இது குண்டலம், என்று கூறிவிட்டு, அம்மா நான் இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டும்.நான் புறப்படுகிறேன் என்று கூறினாள். 

பாவம் இவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்க வேண்டும். அதனால் தான் இந்த இரவில் தனியாகச் செல்கிறாள் என்று எண்ணிய சந்திரா அன்புடன், வா குழந்தாய்! இன்று இரவு எங்கள் வீட்டில் தங்கலாம். நாளை உன் வசதி போலச் செல்லலாம் என்று அவளை அழைத்தாள். அழுத்தமாகச் சிரித்தாள் வந்தவள். இல்லையம்மா நான் இப்பொழுதே போக வேண்டும். இன்னொரு சமயம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியபடியே நடக்கத் தொடங்கினாள். 

ஆனால் போகின்றவள் சரியான பாதையில் செல்லாமல் லாஹா வீட்டு வைக்கோற்போரை நோக்கி ச் செல்வதைக்கண்ட சந்திரா அவள் வழி தவறியிருக்க வேண்டும் என்று எண்ணினாள். அவளுக்கு வழிகாட்டுவதற்காக அவளைப்பின்தொடர்ந்தாள். 

ஆனால் அவள் கண்களிலிருந்து மறைந்துவிட்டாள்,எங்கு தேடியும் காணவில்லை. 

திகைப்புற்ற சந்திரா நிகழ்ந்ததை எல்லாம் முதலிலிருந்தே ஒரு கணம் நினைத்துப்பார்த்தாள். திடீரென ஒரு திரை விலகியதுபோலிருந்தது. அன்று லட்சுமி பூஜை என்பது அவளது கவனத்திற்கு வந்தது. 

இத்தனை நேரம் தன்னிடம் பேசியது திருமகளே என்பதை அறிந்து கொண்டாள். ஆனந்தமும் ஆச்சரியமும் மேலிட தன் கணவனிடம் விரைந்து சென்று எல்லாவற்றையும் விளக்கமாகக்கூறினாள். 

எல்லாவற்றையும் கேட்ட கூதிராம் வந்தது திருமகள் தாம் என்பதை உறுதிப்படுத்தினார். 

ராம்குமார் விரைவில் வீடு திரும்பினார். நடந்தவற்றைக்கேட்டு மகாலட்சுமியின் கருணைப்பெருக்கை எண்ணி ப் புளகாங்கிதம் அடைந்தார்.

நாட்கள் கழிந்தன. அது கி.பி 1835 தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆவல் மீண்டும் ’ கூதிராமிடம் எழுந்தது. இம்முறை கயைக்குச் சென்று முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்ய விரும்பினார் அவர்.

அப்போது அவருக்கு வயது அறுபது. 

மகாவிஷ்ணுவின் திருத்தலத்திற்குச் செல்வதற்கு அவருக்கு வயது ஒரு தடையாக இருக்கவில்லை.இந்தத் தீர்த்த யாத்திரைக்கு கூதிராமின் ஆவல் மட்டுமின்றி வேறொரு காரணமும் இருந்ததாக ஹிருதயராம் கூறினார்.அந்த வியத்தகு நிகழ்ச்சி பின்வருமாறு.

ஒருமுறை தன் மகளான காத்யாயனி உடல்நலம் குன்றியிருப்பதைப் பற்றிக் கேள்வியுற்று அவளைப் பார்ப்பதற்காக ஆனூர் சென்றார் கூதிராம். அப்போது அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும்.அங்கு சென்று பார்த்தபோது காத்யாயனி உடல் நோயால் மட்டும் அவதிப்படவில்லை என்பதை கூதிராம் அறிந்துகொண்டார். அவளது செய்கைகளும் பேச்சு முறைகளும்,ஆவி ஒன்று அவளைப்பிடித்திருப்பதைக் காட்டியது.

உடனே அதனை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். நெஞ்சம் கனிய ஒரு முறை இறைவனைப் பிரார்த்தித்தார். பின்னர் அந்த ஆவியை முன்னிட்டு, தேவதையோ பிசாசோ நீயாராக இருந்தாலும் என் மகளை ஏன் துன்புறுத்துகிறாய்? இக்கணமே அவளை விட்டுவிலகி உன் வழியே செல் என்று கூறினார். 

அதைக் கேட்ட அந்த ஆவி பயந்து காத்யாயனியின் உடலிலிருந்தபடியே நான் போய் விடுகிறேன்.

ஆனால் எனக்காக கயையில் பிண்டதர்ப்பணம் செய்து எனது இந்த சோகமான நிலைக்கு முடிவு கொண்டு வருவதாக வாக்களித்தால் இப்போதே உன் மகளின் உடலை விட்டு விடுகிறேன். நீ கயைக்குப் புறப்படுகின்ற அந்தக் கணமே இவள் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுவாள். இது சத்தியம் என்று கூறியது.

அந்த ஆவியின் துன்பத்தைக்கண்டு மனம் இரங்கிய கூதிராம் என்னால் முடிந்த அளவு விரைவில் கயை சென்று உன் வேண்டுகோளைப் பூர்த்தி செய்கிறேன்.

ஆனால் என் தர்ப்பணத்தால் நீ விடுதலை பெற்றாய் என்பதற்கு அறிகுறியாக எனக்கு ஏதாவது அடையாளம் காட்டினால் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று கூறினார். 

கண்டிப்பாகக் காட்டுகிறேன். எனக்கு இந்த நிலையிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டால் நான்போகும் போது,அதோ அங்கே நிற்கின்ற வேப்பமரத்தின் பெரிய கிளையை முறித்துவிட்டுச் செல்கிறேன் என்று அந்த ஆவி கூறியது.

இந்த நிகழ்ச்சி தான் ’ கூதிராம் கயைக்குப்போகும் படிச் செய்தது என்பது ஹிருதயராமின் கூற்று. 

சில நாட்களுக்குப் பின் அந்த ஆவி கூறிய வேப்ப மரத்தின் கிளை திடீரென ஒடிந்து விழுந்தது. அந்த ஆவிக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று அனைவரும் அறிந்து கொண்டனர்.

காத்யாயனியும் உடல்நலம் பெற்றுவிட்டாள் TOP PAGE


image57

கயையில் அற்புத அனுபவங்கள்

அற்புத அனுபவங்கள்

   

1835-ஆம் ஆண்டின் குளிர்கால நாட்களில் கூதிராம் காசியையும் கயையையும் தரிசனம் செய்தார்.

காசி விசுவநாதரைக் கண்குளிர தரிசித்தப்பிறகு பங்குனி மாதத் தொடக்கத்தில் கயா சென்றடைந்தார். பங்குனி மாதத்தில் அந்தப் புண்ணியத்தலத்தில் நீத்தார் வழிபாடு செய்தால் முன்னோர்களுக்கு மிகுந்த மனநிறைவு உண்டாகும் என்ற காரணத்தினாலும் அவர் கயாவுக்கு அந்த வேளையில் சென்றிருக்கக்கூடும்.

அங்கு ஒரு மாதம் தங்கி சாஸ்திர விதிப்படி எல்லாச்சடங்குகளையும் செய்து, முடிவில் அங்கே கோயில் கொண்டருளும் கதாரப் பெருமானாகிய மகாவிஷ்ணுவின் திருப்பாதங்களில் பிண்டதர்ப்பணம் செய்தார். 

தமது தர்ப்பணத்தால் முன்னேர்கள் கட்டாயம் திருப்தி பெற்றிருப்பார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருக்கு மனஅமைதியையும் மனநிறைவையும் அளித்தது. 

முன்னோர்களுக்குத் தமது கடமைகளை நிறைவேற்றிய அவரது மனம் எல்லாக் கவலையிலிருந்தும் விடுபட்டது. எவ்விதத் தகுதியுமற்ற தன்னைக்கூட இத்தகைய நற்செயலுக்கான ஒரு கருவியாக எம்பெருமான் ஆக்கினாரே என்ற எண்ணம் அவருள் எழுந்தது. இதற்கு முன் அனுபவித்திராத பேரானந்தமும் அன்பும் அமைதியும் அன்று பகல் முழுவதும் ஏன், இரவும் கூட அவரது இதயத்தை மூழ்கடித்த வண்ணமே இருந்தன.

இந்தப்பேரானந்த நினைவுகளுடன் இரவில் துயில் கொண்டார் கூதிராம். 

அப்போது அற்புதமான கனவு ஒன்று தோன்றியது. கனவில் அவர் கயை கோயிலினுள் விஷ்ணுவின் திருப்பாதங்களில் பிண்டதர்ப்பணம் செய்து கொண்டிருந்தார்.அவரது முன்னோர்கள் ஒளிமயமான உடலுடன் தோன்றி கூதிராம் அளித்த பிண்டங்களை மகிழ்ச்சியுடன் ஏற்று அவரை வாழ்த்தினார். 

நீண்ட காலத்திற்குப்பிறகு அவர்களைக் கண்ட கூதிராமின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் நீர் பொங்க, இதயம் அன்பினால் நெகிழ அவர் அவர்களைப்பணிந்து அவர்களது திருவடிகளைத்தொட்டார். 

மறுகணம் காட்சி மாறியது. என்ன ஆச்சரியம்! அந்தக்கோயில் அது வரை அவர் கண்டிராத தெய்வீகப்பேரொளியில் மூழ்கியது! அங்கே அற்புதமான அரியணை ஒன்றில் பேரழகெல்லாம் திரண்டதோர் அற்புத புருஷன் வீற்றிருந்தான். கூதிராமின் முன்னோர்கள் அந்த தெய்வ புருஷனின் இரு பக்கத்திலும் பணபக்தியுடன் கைகள் கூப்பி வணங்கிய வண்ணம் நின்று கொண்டிருந்தனர். 

அந்தப் பரம புருஷனின் திருமேனி புத்தகம் புதிய அறுகம்புல்லை நிகர்த்த பச்சை வண்ணத்தில் விளங்கியது. அன்பும் கருணையும் பொங்கிப் பிரவகிக்கின்ற தமது அருள் விழிப்பார்வையை கூதிராமின் பக்கம் திருப்பினான் அந்தப்பச்சை மாமலை மேனியான். அவரைத் தமதருகில் வரும்படி சைகை செய்தான். கூதிராமின் நிலை வார்த்தைகளில் விளக்க முடியாததாக இருந்தது. என்ன செய்கிறோம் என்ற நினைப்பே இன்றித் தம்மை மறந்த நிலையில் அவர் அந்த மரகத வண்ணனின் அருகில் சென்றார். 

உள்ளம் நிறைந்த பக்தியுடன் அவனது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவனது புகழ் பாடினார். கமலச் செங்கண் கனிய கூதிராமின் வழிபாட்டை நோக்கிக் கொண்டிருந்த அந்த தேவ தேவன் தேனொழுகும் மதுரக்குரலில் கூதிராம் உனது பக்தியால் மகிழ்ந்தேன்.எனக்கு மகனாகப் பிறந்து உன் அன்பான சேவையை ஏற்க விரும்புகிறேன் என்று திருவாய் மலர்ந்து அருளினார். 

இதைக்கேட்ட கூதிராம் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். ஆனால் மறுகணமே அவரது ஆனந்தம் மறைந்தது. 

பரம ஏழையான தாம் எவ்வாறு இத்தகைய தெய்வ புருஷனுக்குச் சிறப்பாக சேவை செய்ய முடியும் என்ற எண்ணம் அவருள் எழுந்து அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது.

இல்லை, இல்லை, பிரபோ, அத்தகைய பேற்றிற்கு அடியேன் தகுதியற்றவன். எனக்குக் காட்சியளித்து என் மகனாகப் பிறக்கப்போகிறேன் என்று நீங்கள் சொன்னதே போதாதா? 

நீங்கள் என் மகனாகப்பிறந்தால் ஏழையான நான் உங்களுக்கு என்ன சேவை செய்ய முடியும்? என்று உணர்ச்சிப் பெருக்கினால் வாய்குழறக் கேட்டார். 

துயரத்தில் தோய்ந்த ’ கூதிராமின் சொற்களைக்கேட்ட அந்த தெய்வ புருஷனின் திருமுகத்தில் முன்னை விடக் கருணையும் கனிவும் பொங்கியது. அன்புக்குரலில் அந்தப்பரம புருஷன் கூதிராமிடம்,அஞ்சாதே ’ கூதிராம் நீ அளிக்கும் எதையும் நான் திருப்தியுடன் ஏற்பேன். என் விருப்பத்தை ப் பூர்த்தி செய் என்று கூறினார். 

இதன் பிறகும் கூதிராமினால் முடியாது என்று சொல்ல இயலவில்லை. மகிழ்ச்சியும்,துயரமும் மாறி,மாறிப் பேரலைகளாகத் தாக்கவே கூதிராம் நினைவிழந்தார்.கனவு கலைந்தது.

விழித்தெழுந்து சிறிது நேரம் வரை தாம் எங்கிருக்கிறோம் என்று ’ கூதிராமினால் உணர முடியவில்லை. கனவின் தெளிவு அவரை இவ்வுலக நினைவிழக்கச் செய்தது! மெல்ல மெல்ல அவரது உலக உணர்வு திரும்பியது.இத்தனை நேரம் கண்டதெல்லாம் கனவு என்பதை அவரால் நம்ப முடியவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து அந்தக்கனவை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்தார்.பல கோணங்களில் அதனை ஆராய்ந்தார். தெய்வீகக் கனவு கட்டாயம் பலிக்கும். அப்படியானால் விரைவில் தன் வீட்டில் பெரிய மகான் ஒருவர் பிறக்கப்போகிறார் என்பது கூதிராமுக்குத் தெரிந்தது. அந்த முதுமைக் காலத்திலும் புதிய குழந்தை ஒன்றின் முகத்தைக் காணும் பேறு பெற்றதை எண்ணி அவர் மகிழ்ந்தார். ஆயினும் கனவு நனவாகும் வரை அதைப் பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று முடிவு செய்தார். சில நாட்களுக்குப் பிறகு கயையிலிருந்து காமார்புகூர் திரும்பினார்.அது நடந்தது 1835, ஏப்ரல் மாதம்.

-

சந்திரா தேவியின் அற்புத அனுபவங்கள்

-

கயையிலிருந்து வீடு திரும்பிய கூதிராம் தமக்கு அங்கு தோன்றிய அற்புதக் கனவைப் பற்றி யாரிடமும் கூறாமல்.மேற்கொண்டு நடக்கப்போவதைக் காணக் காத்திருந்தார் அவர் கண்களில் முதலில் தென்பட்டது. சந்திரா தேவியிடம் தோன்றியிருந்த வியத்தகு மாறுதல்கள். அவரது கண்களுக்கு அவள் சாதாரணப்பெண்ணைப் போலன்றி ஒரு தேவதையைப்போலக் காட்சியளித்தாள். 

எங்கிருந்தோ பிரவகித்த அளவற்ற அன்பு அவள் உள்ளத்தை நிரப்பி உலக ஆசைகளைக் கடந்த உன்னத நிலைக்கு அவளை உயர்த்தியிருந்தது போலத்தோன்றியது. அவள் தன் சொந்த வேலைகளை விட அண்டை அயலாரின் தேவைகளில் அதிக அக்கறை கொண்டவளானாள்.

வீட்டு வேலைகளுக்கு இடையிலும் அவர்களது தேவைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்தாள். வீட்டில் இருப்பவற்றை எல்லாம் வறியவர்களுக்கு வழங்கினாள்.

ஸ்ரீரகுவீரரின் பூஜை முடிந்ததும் கணவருக்கும் குழந்தைகளுக்கும் உணவு படைப்பாள். எந்நேரமாயினும் தான் உணவு முன் அண்டை அயலார் உண்டனரா என்று அறிந்து கொள்வாள். 

உண்ணாத யாரையாவது காண நேர்ந்தால் அவர்களை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து தன் உணவை ப் பகிர்ந்து அளிப்பாள்.ஏதாவது எஞ்சினால் அதை மனநிறைவுடன் உண்டு உள்ளம் மகிழ்வாள்.

பக்கத்து வீட்டுக் குழந்தைகளை தன் குழந்தைகள் போல நேசித்த சந்திரா, இப்போது தேவ தேவியர் மீதும் அதே தாயன்பை பொழிந்தாள். 

குலதெய்வமான ஸ்ரீரகுவீரரையும் சீதளாதேவியையும் ராமேசுவரரையும் தன் குழந்தைகளாகவே எண்ணி அன்பு பாராட்டினாள். முன்பெல்லாம் பூஜை வேளையில் அவளது உள்ளத்தில் பயபக்தி நிரம்பியிருக்கும்.இப்பொழுதோ அன்பின் வேகம் அந்த அச்சத்தையும் தயக்கத்தையும் முழுவதுமாக நீக்கிவிட்டிருந்தது. 

கடவுளிடமிருந்து மறைப்பதற்கோ கேட்பதற்கோ இப்போது அவளிடம் ஒன்றும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக , சொந்தக் குழந்தைகளை விட தேவதேவியர் அவளுக்கு நெருங்கியவர்களாகத் தோன்றினர். 

அவர்களை மகிழ்விப்பதற்காக அனைத்தையும் துறக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை அவளிடம் தோன்றியது. அவர்களிடம் நிரந்தரமானதோர் உறவு கொண்டதன் மட்டற்ற மகிழ்ச்சியும் அவளிடம் மிளிர்ந்தது.

தேவதேவியரிடம் கொண்டிருந்த அச்சமற்ற பக்தி,நெருங்கிய உறவினரால் ஏற்பட்ட ஆனந்தம்,ஆகியவற்றின் காரணமாக,ஏற்கனவே வெள்ளையுள்ளம் கொண்ட சந்திராவின் மனம் மேலும் இளகியதாயிற்று.யாரையும் எதற்கும் அவளால் சந்தேகிக்க முடியவில்லை. யார் கூறுவதையும் உண்மையென்று நம்பினாள். சந்திராவின் இத்தகைய மனப்பான்மை கூதிராமைச் சிந்திக்க வைத்தது. 

இவளது வெகுளித்தனத்தை இந்த சுயநல உலகம் ஒரு போதும் பாராட்டாது.அறிவற்றவள் என்றோ பைத்தியம் என்றோ தூற்றும் என்று நினைத்த அவர் அவளை எச்சரிப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தார்.

அந்த வாய்ப்பும் விரைவில் வந்தது. களங்கமற்ற சந்திராவினால் தனது எண்ணங்கள் எதையும் கணவரிடம் சொல்லாமல் இருக்க முடிவதில்லை.

பழகியவர்களிடமே எதையும் மறைக்க முடிந்ததில்லை. அவ்வாறு இருக்க இவ்வுலகில் அனைவரை விடவும் தனக்கு நெருங்கிய சொந்தமானக் கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் கணவரிடம் எவ்வாறு சொல்லாமல் இருக்க இயலும்? கூதிராம் கயைசென்றிருந்த போது தனக்கு நேர்ந்த , தான் அனுபவித்த அனைத்து அனுபவங்களையும் அவர் திரும்பி வந்ததும்கூறத் துடித்தாள் சந்திரா.தக்க தருணத்தில் ஒரு நாள் கூறினாள்.

இதோ பாருங்கள், நீங்கள் கயைக்குச் சென்றிருந்த காலத்தில் எத்தனையெத்தனை அற்புதக் காட்சிகளை நான் பெற்றேன், தெரியுமா? ஒரு நாள் அற்புதமான கனவு ஒன்று கண்டேன். 

அதில் ஒளி பொருந்திய தேவன் ஒருவன் என் படுக்கையில் படுத்திருந்தான். 

முதலில் அது நீங்களாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த உருவத்தின் உடலிலிருந்து தோன்றியஒளி அவன் மனிதனாக இருக்க முடியாது என்று உணர்த்தியது. இதைப்பற்றி ச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே கனவு கலைந்தது. என்ன ஆச்சரியம்! கனவு கலைந்த பின்னரும் அந்த தேவன் அங்கேயே படுத்திருப்பதாகத்தோன்றியது. அடுத்த கணமே, மனிதர்கள் முன் தேவர்கள் இவ்வாறு தோன்றுவார்களா? என்ற ஐயம் எழுந்தது. வேறு யாரேனும் தீய நோக்கத்துடன் அறைக்குள் நுழைந்திருக்கலாமோ,,ஒரு வேளை அவனது காலடியோசை தான் என் கனவிற்கும் காரணமாக அமைந்ததோ என்று குழம்பினேன். இந்த எண்ணம் தோன்றியதுமே அச்சம் என்னைக் கௌவியது. மேலும் தாமதிக்காமல் எழுந்து விளக்கை ஏற்றினேன். ஆனால் அறைக்குள் யாரும் இல்லை. கதவு கூட உட்புறமாகத் தாளிடப்பட்டிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை. அச்சம் காரணமாக இரவு முழுவதும் உறங்கவே இல்லை. யாராவது தாழ்பாளை நீக்கிவிட்டு அறைக்குள் நுழைந்திருக்கலாம் என்னைக் கண்டதும் கதவை மூடிவிட்டு ஓடிவிட்டானோ? என்றெல்லாம் மனம் குழம்பியது? 

விடிந்தவுடன் தனியையும் பிரசன்னாவையும் அழைத்து அவர்களிடம் எல்லாவற்றையும் கூறி விட்டு, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என் அறைக்குள் யாராவது உண்மையிலேயே நுழைந்திருப்பார்களா? அனால் எனக்கு யாரிடமும் விரோதம் கிடையாதே! அன்றொரு நாள் மதுஜீகியுடன் மட்டும் ஏதோ ஓர் அற்ப விஷயத்திற்காகச் சில வார்த்தைகள் கடுமையாகப்பேச நேர்ந்தது. ஒரு வேளை என் மீது கொண்ட கோபத்தால் அவன் தான் என் அறைக்குள் நுழைந்திருப்பானோ? என்று கேட்டேன். 

இதைக்கேட்ட இருவரும் சிரித்துவிட்டார்கள். பின்னர் என்னைக் கடிந்து கொண்டு, முட்டாள் பெண்ணே! முதுமை உன் மூளையைப் பாதித்து விட்டதா? இது வெறும் கனவு. ஒன்றுமில்லாததை ஏன் பெரிதுபடுத்துகிறாய்? இது வெறும் கனவு தான். நீங்கள் திரும்பியதும் உங்களிடம் மட்டும் சொல்ல வேண்டும்.வேறு யாரிடமும் சொல்லக்கூடாது, என்று நினைத்துக்கொண்டேன்.

இன்னொரு சமயம் ஜீகிகளின் சிவன் கோயிலுக்கு முன்னால் தனியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கண்ணைப் பறிக்கின்ற ஓர் ஒளி வெள்ளம் திடீரென சிவலிங்கத்திலிருந்து தோன்றி கோவில் முழுவதையும் நிறைத்தது. பின்னர் அந்தப் பேரொளி அலைகள் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. அதை தனியிடம் கூற எண்ணி வாய் திறப்பதற்குள் அந்த அலைகள் வேகமாக என்னைச் சூழ்ந்து என்னுள் நிறைந்து விட்டன. 

வியப்பாலும் அச்சத்தாலும் வாயடைத்துப்போன நான் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தேன். தனியின் உபசாரத்தில் கண் விழித்ததும் அவளிடம் எல்லாவற்றையும் கூறினேன். அவளுக்கும் அது திகைப்பைத் தான் கொடுத்தது.

பின்னர் அவள் என்னிடம் சந்திரா, வேறு ஒன்றும் இல்லை.நரம்புக்கோளாறினால் ஏற்பட்ட மயக்கம், அவ்வளவு தான், என்றாள். என்னால் அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியவில்லை. 

அப்பொழுதிலிருந்து அந்த ஒளி என்னைவிட்டு விலகாமல் என் வயிற்றினுள் தங்கிவிட்டது போலவும் நான் கருவுற்றிருப்பதாகவும் உணர்கிறேன். 

இதையும் தனியிடமும் பிரசன்னா விடமும் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை முட்டாள்,பைத்தியம் என்றெல்லாம் ஏசினார்கள். அந்த அனுபவம் அவர்களைப் பொறுத்தவரை நரம்புக்கோளாறு அல்லது மயக்கம், அவ்வளவு தான். இத்தனை நாட்களாக உங்களைத் தவிர வேறு யாரிடமும் இதைக்கூறுவதில்லை. என்று முடிவு செய்திருந்தேன். 

அது சரி, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது இறையருளால் நிகழ்ந்ததா? 

அல்லது அவர்கள் கூறுவது போல் வெறும் நரம்புக்கோளாறு தானா?ஆனால் இப்பொழுது கூட நான் கருவுற்றிருப்பதாக உணர்கிறேன்.

சந்திரா சொன்னவற்றை எல்லாம் கேட்ட ’ கூதிராமிற்கு கயையில் தாம் கண்ட கனவு நினைவிற்கு வந்தது. 

அவளைப் பலவாறாகத் தேற்றி, என்னைத் தவிர வேறுயாரிடமும் இந்தக் காட்சிகள், அனுபவங்கள் பற்றியெல்லாம் பேசாதே! 

எல்லாக் கவலைகளையும் விடு. ஸ்ரீரகுவீரர் தன் கருணையால் காண்பிக்கும் எதுவும் நம் நன்மைக்கே என்று உறுதியாக உணர்ந்து கொள். 

கயையில் நான் தங்கியிருந்த போது நமக்கு ஒரு மகன் பிறக்கப்போகிறான் என்று ஸ்ரீகதாதரர் எனக்குக் கனவில் தெரிவித்தார் என்று கூறினார். 

தெய்வத்தை நிகர்த்த கணவரின் இந்தச் சொற்கள் சந்திராவின் மனத்தை அமைதியுறச் செய்தன. அன்றிலிருந்து சந்திரா ஸ்ரீரகுவீரரை முழுவதுமாகச் சரணடைந்தாள்.


 

மூன்று நான்கு மாதங்கள் கழிந்தன. நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய சந்திராதேவி மீண்டும் கருவுற்றிருப்பது அனைவருக்கும் தெரியவந்தது. 

கருவுற்றிருக்கும் போது பெண்கள் வழக்கத்தை விட அழகாக இருப்பார்கள். இந்தத் தடவை சந்திரா மேலும் அழகாகக் காணப்படுகிறாள் என்று தனியும் பிற பெண்களும் சொன்னார்கள். 

செய்தி பரவியது.சிலர் இந்த வயதில் கருவுற்றும் எத்தனை அழகாகத் திகழ்கிறாள்! பிரசவத்தின் போது ஒருவேளை அவள் இறந்துகூட போகலாம் என்று சந்தேகிக்கவும் செய்தனர்.

நாட்கள் செல்லச்செல்ல கருவுற்ற சந்திராவின் தெய்வீகக் காட்சிகளும் அனுபவங்களும் அதிகரித்தன.  தேவதேவியரின் காட்சிகள் அவளுக்கு அன்றாட நிகழ்ச்சியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த தேவர்களின் உடலிலிருந்து பரவும் நறுமணம் வீடு முழுவதும் நிறையும். அவர்களது இனிமையான குரல்கள் அவளை வியப்பில் ஆழ்த்தும். 

இந்தச் சமயத்தில் தேவதேவியரின் மீது அவளுக்கு ஆழ்ந்த தாயன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தான் பெற்ற காட்சிகளையும் அனுபவங்களையும் கூதிராமிடம் கூறி அவற்றிற்கான காரணத்தைக்கேட்பாள் சந்திரா. கூதிராம் பல விளக்கங்கள் கூறி அவளது ஐயங்களைப்போக்குவார்.

ஒரு முறை சந்திரா கூதிராமிடம் கூறினாள். இதோ பாருங்கள்.! சிவன் கோவிலில் அந்த ஒளியைப் பார்த்த நாளிலிருந்து எண்ணற்ற தேவதேவியர் என் முன் தோன்றுகின்றனர். 

பலரை இதற்கு முன்னால் நான் படத்தில்கூடப் பார்த்தது கிடையாது.இன்று ஒரு தேவன் அன்னப் பறவையின் மீது அமர்ந்து வந்தான்.முதலில் நான் பயந்து விட்டேன். வெயிலின் கடுமையினால் அவனது முகம் சிவந்திருந்தது. என் மனம் இளகி விட்டது. நான் அவனை அழைத்து அன்ன வாகன தேவனே! வெயிலினால் உன் முகம் இப்படி உலர்ந்து விட்டதே! கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது.வா சிறிது உண்டு இளைப்பாறு! என்று கூறினேன். 

அவன் புன்னகை புரிந்தவாறே காற்றில் கரைந்தது போல் மறைந்து விட்டான். அதன் பிறகு அந்த தேவனை நான் காணவில்லை. 

இத்தகைய தேவர்கள் பலரை நான் காண்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தக்காட்சிகள் எல்லாம் வழிபாட்டு வேளை,தியான வேளை என்றில்லாமல் காலை,இரவு எந்த நேரத்திலும் தோன்றுகின்றன. 

சில வேளைகளில் அவர்கள் மனித வடிவில் என் முன் வருகிறார்கள். அருகில் வந்ததும் காற்றில் கரைந்து விடுகிறார்கள். 

நான் ஏன் அவர்களை யெல்லாம் காண்கிறேன்? இது ஏதேனும் நோயாக இருக்குமோ? கோசாயியின் ஆவி(இறந்துபோனவனின் ஆவி) என்னைப் பிடித்திருக்குமோ என்று கூடச் சில வேளைகளில் தோன்றுகிறது.

இதனைக்கேட்ட கூதிராம் கயையில் அவளிடம் கூறினார். அவளுக்கு தெய்வீகக் காட்சிகளை அளிக்கின்ற அந்தப் பரம்பொருளையே வயிற்றில் சுமப்பதற்கு அவள் மாதவம் செய்திருக்க வேண்டும். என்பதைச்சுட்டிக்காட்டினார். 

கணவன் மீதிருந்த முழுநம்பிக்கையின் காரணமாக அவரது சொற்கள் சந்திராவின் இதயத்தை ஆழ்ந்த பக்தியால் நிரம்பின. புதிய வலிமை பெற்ற அவள் கவலைகளிலிருந்து விடுபட்டாள்.

காலம் உருண்டது. 

கூதிராமும் அவரது அன்பு மனைவியும் ஸ்ரீரகுவீரரிடம் முற்றிலுமாகச் சரண் புகுந்தனர். 

எந்தப் பரம்பொருளின் புனிதமான காட்சிகள் இப்பொழுதே அவர்களது வாழ்க்கையை பக்தியால் நிரப்பியுள்ளதோ, அந்தப் பரம்பொருளையே தங்கள் மகனாகப் பார்க்கும் நல்ல நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.


 MAIN PAGE 


image58

தெய்வக் குழந்தையின் திருஅவதாரம்.

திருஅவதாரம்.

காலத்தின் சுழற்சியால் தான் எத்தனை மாறுதல்கள்! இலையுதிர் காலத்தைத் தொடர்ந்து பனிக்காலமும் அதன் பின்னர் குளிர்காலமுமாக பருவங்கள் வந்து போய் கொண்டே இருந்தன. 

பரிவாரங்களைத் தொடர்ந்து அரசன் வருவதைப்போல வசந்த காலம் வந்தது. 

அதிக உஷ்ணமோ கடுமையான குளிரோ இல்லாத மாசி மாதம் அது. தண்மை பொதிந்த மென்மையான காற்று உடலை மட்டுமின்றி மனங்களையும் வருடியபடி வீசிற்று. படைப்பு முழுவதிலும் ஏதோ ஒரு புதிய உயிர்துடிப்பு பரந்து கலந்து நின்றது. 

எங்கும் ஆனந்தம்! அன்பின் அலைகள் எங்கும் சுழன்றடிப்பது போல் இயற்கை புத்துணர்வுடன் பொலிந்தது. 

இயற்கையினுள்ளும் மனித உள்ளங்களிலும் ஆனந்த வடிவாகி நிற்பது இறைவன் தான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே, அந்த ஆனந்தம் முழுவதையும் அப்படியே அள்ளித் தெளித்திட இயற்கையன்னை துடிப்பது போல் தோன்றியது. 

இப்படி வானும் நிலமும் கலந்து குதூகலிப்பதால் தானோ என்னவோ வசந்த காலம் மற்ற பருவங்களை விட தெய்வீகமாகக் கூறப்படுகிறது.

சந்திராதேவி பிரசவிக்கும் நாள் வந்தது. 

அன்று அவளது மனம் கரைகடந்த மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. ஆயினும் உடல் சோர்வு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ஸ்ரீரகுவீரருக்கான நைவேத்திய உணவு தயாரிக்கும் போது அவளது உள்ளத்தில் எந்த நொடியிலும் பிரசவம் நேரலாம்.அப்படி ஏதாவது நிகழ்ந்தால் நைவேத்தியம் தயாரிக்க வீட்டில் யாரும் இல்லையே! என்ற எண்ணம் தோன்றியது. 

கணவரிடமும் அவள் அதனைத் தெரிவித்தாள். அதைக்கேட்ட கூதிராம் அவளிடம் 

அஞ்சாதே! உன் வயிறிறில் இருக்கின்ற அந்த தெய்வ புருஷன்,ஸ்ரீரகுவீரரின் பூஜைக்கும் சேவைக்கும் தடையாக வந்து நிச்சயமாகப் பிறக்க மாட்டான். கவலைப்படாதே உன்னால் இன்று எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். 

நாளை முதல் இவற்றைச் செய்வதற்கு வேறு ஏற்பாடுகள் செய்துவிட்டேன். இன்றிலிருந்து இரவு வேளைகளில் தனி உன்னுடன் இருப்பாள்  என்று கூறிச் சமாதானப்படுத்தினார். 

சந்திராவும் மன நிறைவுடன் கடமைகளில் ஈடுபட்டாள்.

கூதிராம் சொன்னது போலவே நடந்தது. 

ஸ்ரீரகுவீரரின் மதிய, மாலை நைவேத்தியங்களுக்கும் பிற சேவைகளும் எவ்விதத் தடையுமின்றி நிறைவேறின. 

கூதிராமும் ராம்குமாரும் இரவு உணவிற்குப் பின் உறங்கச் சென்றனர். 

தனி வந்து சந்திராவுடன் படுத்துக்கொண்டாள். பூஜையறையைத் தவிர புற்கூரை வேய்ந்த இரு சிறிய அறைகளும் ஒரு சமையல் அறையும் அந்த வீட்டில் இருந்தன. 

மற்றொரு சிறிய அறையில் ஒரு புறம் நெல்குத்தும் எந்திரமும் மறுபுறம் நெல்லை வேகவைக்கும் அடுப்பும் இருந்தன. 

வேறு நல்ல இடம் இல்லாததால் கூரை வேய்ந்த இந்த அறைதான் சந்திராவின் பிரசவத்திற்காகத் தயார் செய்யப்பட்டது.

பிரம்ம முகூர்த்தத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன் பிரசவத்தின் முதல்வலியை சந்திரா உணர்ந்தாள்.

உடனே அவளை மேற்கூறிய அறைக்கு இட்டுச் சென்றாள் தனி. சென்ற சிறிது நேரத்தில் சந்திரா ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். 

தாய்க்குத் தேவையான பணிவிடைகளைச் செய்த பிறகு குழந்தையைப் பார்க்கத் திரும்பினாள் தனி. 

திரும்பியவள் திடுக்கிட்டாள் அவள் கிடத்திய இடத்தில் குழந்தை இல்லை! 

அச்சம் மேலிட விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாகத் தேடினாள். 

என்ன ஆச்சரியம்! அந்த அதிசயக்குழந்தை நழுவி உருண்டு அருகிலிருந்த அடுப்பினுள் கிடந்தது. 

உடலில் ஒட்டிக்கிடந்த ரத்தமும் கோழையும் அடுப்புச் சாம்பலுடன் கலந்து அதன் உடல் முழுவதும் திருநீறு பூசியது போன்ற காட்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

வியப்பினால் விழிகள் விரிய இந்த அபூர்வக் காட்சியைப் பார்த்த தனிக்கு அந்தக்குழந்தை அழாதது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

உடனே கழந்தையைக் கையில் எடுத்து,குளிப்பாட்டி வெளிச்சத்தில் அதனை நன்றாகப் பார்த்தாள். அதன் அழகும் உருவமும் அவளை பிரமிக்கச் செய்தது. 

ஆறு மாதக்குழந்தையைப்போலப்பொலிந்தான் அந்த பாலகன்.! விவரம் அறிந்த பிரசன்னா முதலிய தோழிகள் அங்கு குழுமினர். குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியப் பட்டனர்.

இயற்கை முழுவதும் இனிய அமைதி தவழ்கின்ற அந்த வைகறைப்பொழுதில் கூதிராமின் எளிய குடிசையிலிருந்து எழுந்த சங்கநாதம் தெய்வக் குழந்தையின் திருஅவதாரத்தை உலகிற்குத் தெரிவித்தது. 

சோதிடத்தில் நிபுணரான கூதிராம் அந்த பாலகன் இந்த பூமியில் வந்துதித்த நேரத்தையும் ராசிநிலைகளையும் கொண்டு அவனது ஜாதகத்தைக் கணித்தார். அவன் பிறந்த வேளை மிகவும் சுபவேளையாக இருந்தது.

அது வங்க ஆண்டு 1242, சக ஆண்டு 1757.மாசி ஆறாம் நாள்.

அதாவது கி.பி 1836, பிப்ரவரி 17,புதன் கிழமை சூரியோதத்திற்கு சரியாகப் பன்னிரண்டு நிமிடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

வளர் பிறை இரண்டாம் நாளும் பூரட்டாதி நட்சத்திரமும் இணைந்த அபூர்வ சேர்க்கையின் யோக வேளை அது.

ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் சந்திரனும் ஒன்று கூடியிருந்தன. சுக்கிரனும் செவ்வாயும் சனியும் உச்சநிலையில் இருந்தன. 

இது அந்தக்குழந்தை வாழப்போகும் மகத்தான வாழ்க்கையைக் காட்டியது. 

ராகுவும் கேதுவும் உச்சத்தில் மேன்மை பொருந்திய நிலையில் இருந்தன என்று பராசர முனிவரின் நூலில் படியுள்ள கணக்கீடுகள் காண்பித்தன. 

எல்லாவற்றிற்கும் மேலாக, உச்சத்தை நோக்கி சஞ்சரிக்கத் தொடங்கியிருந்த குருவின் ஆதிக்கம் அந்தக் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப்போவதை உறுதி செய்தது.

ஜாதகத்தைச்சோதித்த பிரபல சோதிடர்களும் அந்தக்குழந்தை பிறந்த ராசி மங்கலகரமானது என்றே கூறினர் .இந்த ராசியில் பிறந்தவர்கள் நற்பண்புகள் மிக்கவராகவும் இருப்பார். எல்லோராலும் வணங்கப்பெறுவார். நற்செயல்களையே செய்வார். பல சீடர்கள் சூழக் கோயில் ஒன்றில் வாழ்வார் தலைமுறை தலைமுறையாகச் சமயத்தைப் பரப்புவதற்கான அமைப்பு ஒன்றை நிறுவுவார். 

இவர் நாராயணனின் அம்சமாகப் பிறந்தவர். உலகம் முழுவதாலும் வணங்கப்பெறுவார். என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். 

கூதிராம் கயையில் தான் கண்ட கனவை ஒரு கணம் எண்ணிக்கொண்டார். 

அந்த தெய்வீகக் கனவு நனவானதை உணர்ந்த அவரது உள்ளம் பேருவகையாலும் நன்றியுணர்வாலும் நிறைந்தது. 

மகப்பேற்றுச் சடங்குகளை முறையாக நிறைவேற்றிய பின்னர் ராசிக்கணக்கின் படி அந்த பாலகனுக்கு சம்பு சந்திரன் என்று பெயரிட்டார் அவர். 

ஆயினும் கயையில் கனவில் தோன்றியருளிய கதாதரப்பெருமானின் நினைவாக கதாதரன் என்னும் பெயரால் அழைக்க முடிவு செய்தார். 

அந்த பாலகனும் பின்னாளில் கதாதரன் என்றே அழைக்கப்பட்டான்.

அழகான அந்தக் குழந்தையின் முகத்தைக் கண்டும் அவனது சிறந்த எதிர்காலத்தை நினைத்துப்பெருமை கொண்டும்.தங்கள் நற்பேற்றினை எண்ணியும் கூதிராமும் சந்திரமணியும் மகிழ்ந்தனர். 

முதல் முறையாக க் குழந்தையை வெளியே கொண்டு செல்லும் சடங்கு நிறைவுற்றது. குழந்தையை மிகவும் கவனத்துடன் வளர்க்க முயன்றனர். அந்தத் தெய்வக்குழந்தையின் தெய்வீகப்பெற்றோர்.

-


மழலைப்பருவமும் தந்தையின் 

மறைவும்,

-

முதன் முதலாக சாதம் ஊட்டும் சடங்காகிய அன்ன பிராசனத்தைத் தமது தகுதிக்கேற்ப எளிய முறையில் நடத்தலாம். என்று தான் நினைத்திருந்தார். கூதிராம்.

நெருங்கிய ஒரிரு உறவினர்களை மட்டும் அழைத்து சாஸ்திரச் சடங்குகளைச் செய்து ஸ்ரீரகுவீரருக்கு அன்னத்தைப்படைத்து பிரசாதத்தைக் குழந்தைக்குக் கொடுத்து நிகழ்ச்சியை முடித்துவிடலாம் என்பது அவரது எண்ணம். நடந்ததோ வேறு. 

அந்த கிராமத்தின் ஜமீன்தாரும் கூதிராமின் நண்பருமான தர்மதாஸ் லாஹாவின் மறைமுகத் தூண்டுதலினால் அந்த கிராமத்தின் வயோதிக அந்தணர்களும் பெரியவர்களும் கூதிதிராமிடம் சென்று அந்த நன்னாளில் தங்களுக்கெல்லாம் விருந்தளிக்க வேண்டும் என்று அவரை அன்புடன் வற்புறுத்தினார். 

கூதிதிராமுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.ஏழையான அவர் கிராமத்தவர் அனைவரையும் அழைத்து விருந்தளிப்பது என்பது இயலாத காரியம். சிலரை அழைத்து பிறரை விடவும் முடியாது. கிராமத்தவர் அனைவருமே அவரிடம் பாசமும் மரியாதையும் மிக்கவர்கள். 

யாரைக் கூப்பிடுவது யாரை விடுவது? குழம்பினார் ’ கூதிதிராம். இறுதியில் ஸ்ரீரகுவீரர் தான் வழிகாட்ட வேண்டும் என்று உறுதிபூண்டு, நண்பரான தர்மதாஸ் லாஹாவின் அறிவுரையை நாடிச்சென்றார். 

அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ’ கூதிதிராம் விஷயத்தைத் தெரிவித்ததும் தர்மதாஸ் எல்லாப் பொறுப்பையும் தாமே எற்றுக் கொள்வதாகக் கூறினார். 

மனச்சுமை இறங்கிய மகிழ்ச்சியில் வீடு திரும்பினார் கூதிதிராம். 

தர்மதாஸ் லாஹாவின் செலவில் கதாதரனின் அன்னபிராசனச் சடங்கு சிறப்பாக நடந்தேறியது.

கிராமத்தைச் சேர்ந்த எல்லா ஜாதியினரும் கூதிராமின் குடிசைக்கு வந்து ஸ்ரீரகுவீரரின் பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தனர். பல ஏழைகளும் பிச்சைக்காரர்களும் வயிறார உண்டு குழந்தையை வாழ்த்திச் சென்றனர்.

கதாதரனுக்கு ஏழு எட்டு மாதம் இருக்கும். 

ஒரு நாள் காலையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிவிட்டான். 

அவனைப் படுக்கையில் கிடத்தி கொசுவலையையும் கட்டி விட்டு சந்திரா வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். சிறிது நேரம் கழித்து ஏதோ வேலையாக அந்த அறைக்குத் திரும்பிவந்தாள். தற்செயலாகப்படுக்கையைப் பார்த்த போது அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. 

ஏனெனில் அங்கே குழந்தைக்குப் பதிலாக நெடிய மனிதர் ஒருவர் படுக்கை முழுவதையும் அடைத்துக்கொண்டு படுத்திருந்தார். 

திகைப்பில் உறைந்துபோன அவள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து கூதிதிராமிடம் விபரத்தைக்கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.இருவருமாக அறைக்குள் சென்று பார்த்தால் உறங்கிக்கொண்டிருக்கும் கதாதரனைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை. 

சந்திராதேவியின் அச்சம் குறையவில்லை. இது ஏதோ பொல்லாத ஆவியின் வேலை தான். குழந்தை படுத்திருந்த இடத்தில் நெடிய ஒருவர் படுத்திருப்பதைக் கண்கூடாகக் கண்டேன். எனக்கு ஏதோ பிரமை என்று எண்ணி விடாதீர்கள். 

உடனடியாக யாராவது மந்திரவாதி ஒருவனை அழையுங்கள். இல்லையெனில் அவனுக்கு ஏதேனும் தீங்கு நேரலாம்” என்று மீண்டும் மீண்டும் கூதிதிராமிடம் கூறினாள். 

அவளைத்தேற்றுவதற்காக கூதிதிராம் ”கதாதரன் பிறப்பதற்கு முன்னரே இது போன்ற எத்தனையோ தெய்வீகக் காட்சிகளை நாம் கண்டதில்லையா? 

ஏன் அத்தகைய ஒன்று இப்போது நேர்ந்தபோது இவ்வளவு பதறுகிறாய்? இது ஆவியின் வேலையுமல்ல, பூதத்தின் வேலையும் அல்ல.வீட்டில் ஸ்ரீரகு வீரர் இருக்கும் போது குழந்தைக்குக்கேடு விளைவிக்க எந்தப் பிசாசு வர முடியும்? அமைதியாக இரு. யாரிடமும் இது பற்றி எதுவும் சொல்லாதே! 

கதாதரனை ஸ்ரீரகுவீரர் எப்போதும் காத்து வருகிறார் என்பதில் உறுதி கொள். என்றெல்லாம் கூறினார். 

கணவனின் சொற்களால் சந்திரா அப்போதைக்கு மன அமைதி பெற்றாலும் குழந்தைக்குக்கேடு நேரலாம் என்ற அச்சம் அவளை நிழல் போலத் தொடர்ந்து மனத்தை உறுத்திக்கொண்டு தான் இருந்தது. அன்று நீண்ட நேரம் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீரகுவீரரிடம் தன் கவலைகளை வெளியிட்டுப் பிராத்தித்தாள் சந்திரா.

இன்பம் துன்பம் , அமைதி-சஞ்சலம் என்று மாறி மாறிப் பாய்கின்ற உணர்ச்சி நீரோட்டங்களின் ஊடே கூதிராம் தம்பதியினரின் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. 

கதாதரனின் மனத்தை மயக்கும் உருவமும் மழலைக்குறும்புகளும் குடும்பத்தினரை மட்டுமின்றி கிராமத்தையும் கவர்ந்தது. 

நான்கைந்து ஆண்டுகள் கழிந்தன.இந்தச் சமயத்தில் தான் கூதிராமின் கடைசிக்குழந்தையாக சர்வமங்களா என்னும் பெண் பிறந்தாள்.

கதாதரன் வளரவளர அவனது அறிவுக்கூர்மையும் நினைவாற்றலும் வளர்ந்தன. அவனது அபார அறிவாற்றல் கூதிராமை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. 

அவர் சில வேளைகளில் கதாதரனை மடிமீதமர்த்திக் கொண்டு,தம் முன்னோர்களின் நீளமான பெயர்ப் பட்டியலைச் சொல்லிக் காட்டுவார்.தேவதேவியர் பற்றிய சின்னஞ்சிறு பாடல்களையும் அவர்களை வழிபடும் முறைகளையும் எளிய முறையில் கூறுவார். 

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து அருமையான கதைகளைச் சொல்வார். கதாதரனுக்கு இவற்றை ஒரு முறை கேட்டால் போதும் எத்தனை நாட்களானாலும் மறக்காது. அது மட்டுமின்றி அவர் கூறிய அனைத்தையும் சிறிதும் தடுமாற்றமின்றி எந்த நேரத்திலும் அவரால் திருப்பிச் சொல்ல முடியும். மகனின் ஆற்றலை எண்ணி யெண்ணி வியந்து உள்ளம் பூரிப்பார் கூதிராம். 

அதே வேளையில் எந்த அளவிற்குச் சிலவற்றில் ஆர்வம் இருந்ததோ அந்த அளவிற்கு அவனுக்குப் பிடிக்காதவற்றில், எவ்வளவு தூண்டினாலும் ஆர்வம் உண்டாகவில்லை. என்பதையும் அறிந்து கொண்டார். 

கணிதத்தில் குறிப்பாகப் பெருக்கல் வாய்ப்பாட்டை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது தான் இதைக் கண்டுபிடித்தார். எனவே அவனை வற்புறுத்திக் கணிதம் கற்கச் செய்யாமல் விட்டுவிட்டார். ஆனால் அவனது குறும்புகளையும் தொல்லைகளையும் சமாளிக்கவாவது அவனைப் பள்ளிக்கு அனுப்புவது அவசியம் என்று நினைத்தார்.ஏடு தொடங்குதல் முதலிய சடங்குகளை நிறைவு செய்து கதாதரனைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தார். அப்போது அவனுக்கு வயது ஐந்து.

தன் வயதொத்த சிறுவர்களைக் கண்டு கதாதரன் மகிழ்ந்தான். அவனது துடுக்குத் தனமும் நல்லியல்புகளும் விரைவிலேயே ஆசிரியர்களையும் அவன் பால் ஈர்த்தது. அனைவரும் அவனை மிகவும் நேசித்தனர்.

ஜமீன்தாரான லாஹாவின் வீட்டிற்கு முன்புறமிருந்த பெரிய மண்டபத்தில் பள்ளி நடைபெற்றது. 

ஜமீன்தாரால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் அவர் வீட்டுக் குழந்தைகளுக்கும் கிராமத்திலுள்ள பிற குழந்தைகளுக்கும் பாடம் கற்பித்தார். எல்லோருக்கும் பயன்படுகின்ற அந்தப் பள்ளியை நிறுவுவதற்கு லாஹாக்களே காரணமாக இருந்தனர். கூதிராமின் வீட்டிற்கு அருகில் அந்தப் பள்ளி இருந்தது. காலை, மாலை இரு வேளைகளிலும் பள்ளி நடைபெற்றது. காலையில் மாணவர்கள் இரண்டு மூன்று மணிநேரம் கல்வி கற்பர். பின்னர் வீடு சென்று குளித்து, சாப்பிட்டு,ஓய்வெடுப்பார்கள்.மீண்டும் பிற்பகல் மூன்று அல்லது நான்கு மணிக்குப் பள்ளி ஆரம்பமாகும். இருட்டும் முன் வீடு திரும்புவார்கள். கதாதரனைப்போன்ற சிறு பிள்ளைகள் அவ்வளவு நேரம் படிக்க வேண்டியதில்லை. ஆனால் பள்ளியில் தான் இருக்க வேண்டும். புதிய மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் பழைய பாடங்களை அவர்கள் அன்றாடம் படிக்கிறார்களா என்று கவனிப்பதிலும் பெரிய மாணவர்கள் உதவினர். 

ஒரே ஆசிரியர் பணியாற்றினாலும் வேலை நன்றாக நடைபெற்று வந்தது. 

கதாதரன் பிறப்பதற்கு முன்னர் தோன்றியிருந்த அதிசயக் கனவுகளும் தெய்வீகக் காட்சிகளும் கூதிராமின் மனத்தில் சில எண்ணங்களை நிரந்தரமாக நிலைபெறச் செய்திருந்தன. 

எனவே எல்லாக்குழந்தைகளையும் போல கதாதரன் குறும்பு செய்யும்போது சிலவேளைகளில் அவரால் அவனிடம் கடுமையாக நடந்து கொள்ள இயலாமல் போய்விடும். மீண்டும் அவ்வாறு செய்யாதிருக்குமாறு மென்மையாகக்கூற மட்டும் செய்வார். அவன் அவ்வப்போது காட்டும் பிடிவாதம் அவரைச் சிந்தனையில் ஆழ்த்தும். 

எல்லோரும் காட்டும் அளவு கடந்த அன்பினால் அவன் இவ்வாறு நடந்து கொள்கிறானா? அல்லது அவனது இயல்பே அது தானா என்பதை அவரால் உறுதி செய்ய முடியவில்லை.

கதாதரன் வளரவளர அவனது குறும்புகளும் கூடவே வளர்ந்தன. 

பள்ளி செல்வதற்குப் பதிலாக அவன் கிராமத்திற்கு வெளியே சென்று விருப்பம் போல் விளையாடுவான்.அருகில் எங்காவது நடைபெறும் யாத்ரா எனப்படும் திறந்தவெளி நாடகத்திற்கு யாருக்கும் தெரியாமல் சென்று விடுவான். பொதுவாக பெற்றோர் செய்வதை ப்போல கூதிராம் இதற்கெல்லாம் அவனைக்கடிந்து கொள்ளவில்லை. தன்னிச்சையாகச் செயல்படுவது அவனை உயர்ந்தவனாக்க உதவும் என்று உறுதியாக நம்பினார். அவர் அவ்வாறு அவர் நம்பியதற்கு கதாதரனின் ஓரிரு அடிப்படை குணங்கள் தாம் காரணமாக இருந்தன.

செய்யத்தொடங்கிய எதையும் செய்து முடிக்கும் வரை அவனால் ஓய்ந்திருக்க முடியாது. 

தவறு செய்தாலும் அவற்றை அவன் பொய் சொல்லி மறைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் அவனிடம் சிறிதும் இல்லை. இத்தகைய 

நற்பண்புகளுடன் கூதிராமைக் கவலையில் ஆழ்த்திய ஒன்றும் அவனிடம் இருந்தது.அது சில விஷயங்களில் அவனது அணுகுமுறை. வற்புறுத்தி அவனை எதற்கும் பணிய வைக்க முடியாது.

. அவன் எதையாவது செய்ய வேண்டுமானாலும் சரி, அவன் செய்கின்ற எதையாவது தடுக்க வேண்டுமானாலும் சரி, அவனது அறிவிற்கும் மனத்திற்கும் புரியும் வகையில் அதனை விளக்க வேண்டும். விளங்கம் வரையில் அதற்கு நேர்மாறாகவே அவன் செய்வான். இதற்கு காரணம் அவனது ஆராய்ச்சி அணுகுமுறை என்பதை கூதிராம் புரிந்து கொண்டார். எந்தப்பெற்றோரும் பிள்ளையின் இத்தகைய நடத்தையைப்பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும்காரண காரியங்களோடு விளக்கி, பிள்ளைகளின் ஆவலை நிறைவு செய்யவும் மாட்டார்கள். மரபு வழி வந்த நல்லொழுக்க வழிகளை விட்டுப் பிள்ளைகள் விலகிச் செல்வதற்கு பொதுவாக இதுவே காரணமாகிறது. என்பதை கூதிராம் உணர்ந்திருந்தார். கதாதரனின் வாழ்வில் இத்தகைய ஒன்று நேர்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதற்காகஈஅவன் கேட்டவற்றை எல்லாம் முடிந்தவரையில் விளக்கினார். இந்தக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவனது மனநிலையை கூதிராமுக்கு நன்றாகப் புரியவைத்தது. அதற்கேற்ப அவரும் கதாதரனுக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கலானார். நிகழ்ச்சி வருமாறு.கூதிராமின் வீட்டிற்கு அருகில் ஹல்தார்புகூர் என்ற பெரிய குளம் ஒன்று இருந்தது. கிராம மக்கள் அதிலுள்ள தெளிந்த நீரைக் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தினார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிப்பதற்குத் தனித்தனியாகப் படித்துறைகள் அதில் இருந்தன. 

கதாதரனைப்போன்ற சிறுவர்கள் பொதுவாக பெண்களுக்கான படித்துறையையே பயன்படுத்தினா். ஒரு நாள் குளிப்பதற்காக நண்பர்களுடன் அங்கு சென்றான் கதாதரன். தண்ணீரில் குதித்தும், நீந்தியும் குளிக்க வந்த பெண்களுக்குப் பெரிய தொல்லையை உண்டாக்கினான். கரையில் பிராத்தனையிலும் சமயச் சடங்குகளிலும் ஈடுபட்டிருந்த வயதான பெண்கள் மீது தண்ணீர் தெறித்துஅவர்களை நனைத்தது. எவ்வளவு தடுத்தும் சிறுவர்களின் ஆர்பாட்டம் ஒயவில்லை. 

அதனால் கோபம் கொண்ட ஒருத்தி,” நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள்? ஆண்கள் படித்துறைக்குப்போக கூடாதா? துணியின்றிப் பெண்கள் இருப்பதைப்பார்க்கக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கூறி அவர்களைத் திட்டினாள்.

உடனே, கதாதரன் அது ஏன்? பார்த்தால் என்ன? என்று அவளிடமே கேட்டான். கதாதரனின் துடுக்கான கேள்வி அவளது கோபத்தைக் கிளறிவிட்டது. பதில் எதுவும் கூறாமல் அதிகமாகத் திட்டத் தொடங்கினாள் அவள். மற்றச் சிறுவர்கள் எல்லோரும் எங்கே இந்தப் பெண்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் செய்து விடுவார்களோ என்று பயந்து அமைதியாகக் கரையேறிச் சென்றுவிட்டனர். 

ஆனால் கதாதரனோ அவளது பேச்சில் ஏதாவது உண்மை இருக்குமானால் அதைக் கண்டறிய விழைந்தான். அதற்காகத் திட்டம் ஒன்று தீட்டினான். 

அதன் படி தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அந்தக்குளத்தின் அருகிலிருந்த மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொண்டு பெண்கள் குளிக்கும்போது பார்த்தான். ஆனால் அந்தப்பெண் அன்று கூறியதன் பொருள் அவனுக்கு விளங்கவில்லை. 

அடுத்த நாள் அந்த வயதான பெண்மணியைச் சந்தித்த கதாதரன் .நீ ஏதேதோ சொன்னாயே, அன்று நான்கு பெண்கள், நேற்று ஆறு பெண்கள், இன்று எட்டுப்பெண்கள் குளிக்கும்போது நான் பார்த்தேன். எனக்கு ஒன்றும்நேரவில்லையே என்று கூறிக் களங்கமின்றிச் சிரித்தான். 

அந்தப் பெண்ணும் கதாதரனின் வெகுளித்தனத்தை ரசித்தவாறே சந்திராவிடம் வந்து நடந்ததைக்கூறி வேண்டிய மட்டும் சிரித்தாள். 

எதையும் அறிவுபூர்வமாக விளக்கிச் சொன்னாலன்றி கதாதரனை வழிக்குக் கொண்டு வர முடியாது என்பதை அறிந்திருந்த சந்திரா, தக்க தருணம் வந்தபோது அவனிடம்,

குழந்தாய், பெண்கள் குளிக்கும் போது பார்த்தால் எனக்கு ஒன்றும் நேராது என்பது உண்மை தான், ஆனால் அவமானம் அந்தப் பெண்களுக்கு அல்லவா! அவர்களோ எனக்குச் சமமானவர்கள் .

நீ அவர்களை அவமானப்படுத்துவது என்னை அவமதிப்பதற்குச் சமம். என்னை அவமதிப்பது உனக்குச் சம்மதமா? 

எனவே இனி ஒரு போதும் அவர்கள் மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டு அவர்களையும் என்னையும் அவமதிக்காதே! என்று அவனது பிஞ்சு மனத்தில் பதியும் படிக் கூறினாள். 

அதன் பின்னர் கதாதரன் ஒரு போதும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

படிப்பில் படு சுட்டியாக இருந்த கதாதரன் மிகக்குறுகிய காலத்தில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டான். கணிதத்தின் மீது மட்டும் ஏகோ அவனது வெறுப்பு தொடர்ந்தது. மற்றவர்களின் செய்கைகளை நடித்துக் காண்பிப்பது அவனுக்குக் கைவந்த கலையாக இருந்தது. புதியனவற்றைக்கற்றுக் கொள்வதிலும் தீவிர ஆர்வம் காட்டினான். 

குயவர்கள் தேவதேவியர்களின் பொம்மைகளைச் செய்வதைக் கண்ட அவன் அதைக் கற்று க் கொள்ள விழைந்தான். அவர்களிடம் அடிக்கடிச் சென்று அதைக்கற்று கொண்டு வீட்டில் பயிற்சி செய்தான். அவனது பொழுதுபோக்குகளில் பொம்மை செய்வதும் ஒன்று. ஓவியர்களிடம் பழகி ஓவியம் தீட்ட ஆரம்பித்தான். புராணச் சொற்பொழிவு, நாடகம்,என்று எதையும் விட்டுவைக்கவில்லை. எங்காயினம் சரி, அவை நடைபெறும் இடத்திற்குச் சென்று அங்கு நடைபெறுவதை அப்படியே மனத்தில் பதித்துக்கொள்வான். பின்னர் அப்படியே நடித்துக்காட்டுவான். ஆண். பெண் அனைவருடைய பாவனைகளையும் அப்படியே அச்சாகத் தனது முகத்தில் காட்டுவான். அவனது அபாரமான நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் இதில் அவனுக்கு மிகவும் துணை நின்றன.

பெற்றோரின் அன்றாட வாழ்க்கை முறை அவனுக்குக் களங்கமற்ற இயல்பையும் பக்தியையும் வளர்க்க உதவியது.இந்த விஷயத்தில் பெற்றோருக்கத் தாம் மிகவும் கடமைப் பட்டிருப்பதாக குருதேவர் பின்னாளில் நினைவு கூர்வதுண்டு. 

தட்சிணேசுவரத்தில் அவருடன் நாங்கள் வாழ்ந்த நாட்களில் அவர் எங்களிடம் கூறியது வாசகர்களுக்கு இதனைத்தெளிவாக விளக்கும். அவர் தமது பெற்றோரைப் பற்றிக் கூறினார்.

எளிமையின் உறைவிடமாக இருந்தாள் என் அன்னை. உலகியல் விவகாரங்கள் எதுவும் அவளுக்குத்தெரியாது. பணத்தை எப்படி எண்ணுவது என்பதைக் கூட அவள் அறிந்திருக்கவில்லை. மனத்தில் தோன்றியதை அப்படியே எல்லோரிடமும் வெளிப்படையாகக் கூறிவிடுவாள். 

அவளது வெகுளித்தனத்தை அனைவரும் அறிந்திருந்தனர். எல்லோருக்கும் உணவளிப்பதில் அவளுக்கு அலாதி இன்பம். 

என் தந்தை நாளின் பெரும்பகுதியை பூஜை,ஜபம், தியானம் இவற்றிலேயே செலவிடுவார். தாழ்ந்த குலத்தினரிடமிருந்து அவர் எந்த அன்பளிப்பையும் ஏற்றுக்கொண்டதில்லை. 

தினமும் சந்தியாவந்தன வேளையில் ”ஆயா ஹி வரதே தேவி” என்ற மந்திரத்தை ஆழ்ந்த அன்புடன் கூறி காயத்ரீ தேவியை தியானிக்கும் போது உணர்ச்சிப்பெருக்கால் அவரது மார்பு சிவந்து காட்சியளிக்கும்.

கண்களில் ஆனந்த க்கண்ணீர் பெருகும். ஆன்மீக சாதனைகளில் ஈடுபடாத வேளைகளில் ஸ்ரீரகுவீரரை அலங்கரிப்பதற்காக நூலில் பூமாலை புனைவார். பொய் சாட்சி சொல்ல மறுத்ததால் பூர்வீக சொத்தையே இழந்தவர் என் தந்தை முனிவர் ஒருவருக்கு அளிக்கத்தக்க நன்மதிப்பையும் பக்தியையும் கிராம மக்கள் அவருக்கு அளித்தனர்.

அச்சம் என்பது சிறுவயதிலிருந்தே கதாதரனிடம் இல்லை. பேய், பிசாசு, என்ற அச்சத்தால் பெரியவர்களும் போகத் தயங்குகின்ற இடங்களுக்கு அவன் சிறிதும் பயமின்றிச் செல்வான். 

அவனது அத்தையான ராம்சிலாவின் மீது சீதளாதேவியின் ஆவேசம் வருவதுண்டு. 

அப்போது அவள் இன்னொருத்தியாகவே மாறி விடுவது போலிருக்கும். 

அந்த வேளையில் அவளது அருகில் செல்லவே பயப்படுவர். ஒரு சமயம் காமார்புகூரில் இருந்தபோது அவளுக்கு ஆவேசம் வந்தது. வீட்டார் அனைவரும் பயபக்தியுடன் சற்று விலகி நின்றனர். 

கதாதரனோ அவளது அருகில் சென்று சிறிதும் அச்சமின்றி அவளை உற்று நோக்கினான். அத்தையிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதலை ஊன்றிக் கவனித்தான். 

பின்னர் அமைதியாக, என் அத்தையைப் பிடித்திருக்கும் தேவதை என்னிடம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறினான்.

காமார் புகூரிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள பூர்சுபோ கிராமத்தின் ஜமீன்தாரான மாணிக்ராஜாவைப்பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். 

அவர் கொடை வள்ளல், சிறந்த பக்தர், கூதிராமின் நல்லியல் பினால் கவரப்பெற்று அவருக்கு நெருங்கியநண்பர் ஆனார்.

ஒரு சமயம் கதாதரனுக்கு ஆறு வயதிருக்கும் போது கூதிராம் அவனை மாணிக்ராஜாவின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். கதாதரன் அந்த வீட்டிலிருந்த அனைவருடனும் ஏற்கனவே அறிமுகமானவன் போல் நெருங்கிப் பழகினான். 

அவனது இனிய இயல்பு மாணிக் ராஜாவின்வீட்டிலுள்ள அனைவரையும் கவர்ந்தது. மாணிக் ராஜாவின் சகோதரரான ராம்ஜய பந்த்யோபாத்யாயர் கூதிராமிடம் 

”நண்பரே, உங்கள் மகன் சாதாரணக் குழந்தையல்ல. அவனிடம் தெய்வீக இயல்புகள் பல உள்ளன. நீங்கள் இந்தப்பக்கம் வரும்போதெல்லாம் அவனையும் அழைத்து வாருங்கள். அவனைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகுகிறது. என்ற கூறினார். 

இதன் பின்னர் பல காரணங்களால் கூதிராமினால் பல நாட்கள் மாணிக்ராஜாவின் வீட்டிற்குச் செல்ல இயலவில்லை. ஆனால் மாணிக்ராஜாவால் கதாதரனைப் பார்க்காமலிருக்க முடியவில்லை. எனவே தன் வீட்டிலிருந்த ஒரு பெண்ணை அனுப்பி கதாதரனை பூர்சுபோவிற்கு அழைத்து வரச் செய்தார்.தந்தையின் விருப்பப்படி குதூகலமாக அந்தப்பெண்ணுடன் பூர்சுபோ சென்றான் கதாதரன் நாள் முழுவதும் அங்கே கழித்துவிட்டு பல்வேறு அன்பளிப்புகளுடனும் இனிப்புகளுடனும் மாலையில் வீடு திரும்பினான். 

இதன் பின்னர் அவன் மாணிக்ராஜா குடும்பத்திற்கு மிகவும் பிரியமானவன் ஆகிவிட்டான். 

தொடர்ந்து சில நாட்கள் கூதிராம் பூர்சுபோவிற்குப்போகவில்லை என்றால் ஜமீன்தார் உடனே ஆள் அனுப்பி கதாதரனை அழைத்துவரச் செய்து விடுவார்.  MAIN PAGE  

image59

இளமைப்பருவம்

இளமைப்பருவம்

   

இவ்வாறு நாட்கள் மாதங்களாகி வருடங்களாகி மறைந்தன. கதாதரனுக்கு வயது ஏழு ஆகியது. 

அவனுடன் அவனது இனிய இயல்புகளும் வளர்ந்தன. 

கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அவனை நேசித்தனர். தங்கள் வீடுகளில் ஏதாவது தின்பண்டம் செய்தால், கதாதரனை எப்போது சாப்பிட அழைப்பது என்பது தான் பெண்களின் முதல் எண்ணமாக இருக்கும். 

நண்பர்களுக்கும் கதாதரனுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் மகிழ்ச்சியே இருக்காது.இவற்றின் காரணம் கதாதரன் அடக்கமான சிறுவன் என்பதல்ல, அவனது குறும்புகளும் சுட்டித் தனமும் அடக்க முடியாதவை.ஆனால் அவனது நற்குணங்களும் நடிப்பாற்றலும் பாடும் திறமையும் அவனது மழலைக்குறும்புகளைப் பெரிதாக எண்ணாதிருக்கும் படிச் செய்துவிட்டன.

இந்தச் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி பெற்றோரையும் நண்பர்களையும் கதாதரனைப்பற்றிய கவலையில் ஆழ்த்தியது. 

இறையருளால் கதாதரன் உறுதியான, நலமான உடலைப் பெற்றிருந்தான். எந்த நோயாலும் அவன் பாதிக்கப்படவில்லை. எனவே வானத்துப் பறவை போல் உல்லாசமாக மகிழ்ச்சியாக இருந்தான். 

உடலுணர்வு இன்மையே உடல் நலத்திற்கு அறிகுறி என்பதுசிறந்த மருத்துவர்களின் கருத்து. பிறந்ததிலிருந்தே இத்தகைய உடல் நலத்தைப் பெற்றிருந்தான் கதாதரன்.

இயற்கையிலேயே மனஒருமை படைத்த அவன் ஏதாவது சிந்தனையில் ஆழ்கின்ற போதெல்லாம் உடலுணர்வு முற்றிலுமாக அவனிடமிருந்து மறைந்துவிடும். இயற்கை அள்ளித் தெளிக்கின்ற இனிய கோலங்கள் அவனை வெகுவாகக் கவரும். சில்லென்ற காற்றில் சிலிர்க்கும் பரந்த வயல்கள், சலனமின்றி ஓடும் சிற்றாறு, பறவைகளின் இன்ப கீதம், நீல வானில் எத்தனை எத்தனையோ

உருவங்களாக மாறிமாறி மிதக்கின்ற மேகக் கூட்டங்களின் மாயாஜாலம்-இவை யாவும் அவனுள் சிந்தனை நதிகளைப்பெருகச் செய்வதுண்டு. 

இயற்கையின் வண்ணக்கோலம் கதாதரனை சொல்லொணா வியப்பில் ஆழ்த்தும். அவன் அதில் மூழ்கி தன்னை முழுவதுமாக இழந்துவிடுவான். 

இவ்வாறு இயற்கையுடன் ஒன்றிக் கலக்கின்ற வேளைகளில் எல்லாம் அவனது மனம் எங்கோ தொலை தூரத்தில் உணர்ச்சிகளின் ஆனந்தப் பிரவாகத்தில் சஞ்சரிக்கும். 

இப்போது நாம் சொல்லப்போகும் நிகழ்ச்சி அத்தகைய ஒன்று.

ஒரு நாள் கதாதரன் வயல்வெளி ஒன்றில் உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அது மழைக்காலம். மழைமேகங்கள் திரண்டு வானம் கறுப்பாகக் காட்சி அளித்தது. அதன் கரிய வண்ணம் கதாதரனை வெகுவாகக் கவர்ந்தது. அவன் அதில் லயித்து நின்ற போது அந்தக் கருமைக் கிழித்து விடுவது போல எங்கிருந்தோ சில வெண்ணிற நாரைகள் சிறகுகளை விரித்துப் பறந்து சென்றன.கரிய வானம், அதில் வெண்ணிற நாரைகளின் ஊர்வலம்-இயற்கையின் இந்த எதிர்வண்ணக்கோலம் கதாதரனைத் தன்வயமிழக்கச் செய்து விட்டது. 

இயற்கையின் இனிய கோலத்தில் அவன் மனம் கரைந்தது. உடல் உணர்விழந்தது. புறவுலக நினைவின்றி அவன் தரையில் சாய்ந்தான். பார்த்தவர்கள் பயந்து விட்டனர். உடனே அவனது பெற்றோருக்குச் சொல்லியனுப்பிவிட்டு அவனை வீட்டிற்குத்தூக்கிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் உணர்வு பெற்றுப் பழைய நிலைக்குத் திரும்பினான் அவன்.

கூதிராமுக்கும் சந்திராதேவிக்கும் இந்த நிகழ்ச்சி மிகுந்த கவலையைக்கொடுத்தது. மீண்டும் இது போல் நிகழாமல் இருக்கப் பல்வேறு வழிகளை அவர்கள் சிந்தித்தனர். இது வலிப்பு நோயின் ஆரம்பமாக இருக்கலாம் என்ன மருத்துவம் செய்வது? சாந்தி.,ஸ்வஸ்த்யயனம் போன்ற சடங்குகளைச் செய்ய வேண்டுமா? என்றெல்லாம் எண்ணிக்குழம்பினர். கதாதரனோ தனக்கு நோய் எதுவம் இல்லை என்றும், தான் இதுவரை அனுபவித்தறியாத புத்துணர்வில் மூழ்கி இருந்ததால் தான் புறவுலக நினைவை இழக்க நேர்ந்ததாகவும் உடல் நினைவிழந்தாலும் உள்ளம் விழிப்புணர்வுடன் புதுமையான மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததாகவும் திரும்பத் திரும்பக்கூறினான். எப்படியானாலும், மீண்டும் இது போல் எதுவும் நேரவில்லை. 

கதாதரனின் உடல் நலமும் நன்றாகவே இருந்தது. எனவே அது வாய்வுக் கோளாறினால் நேர்ந்தது என்றுகூதிராம் முடிவு செய்தார். சந்திராவோ கதாதரன் ஏதோ ஓர் உபதேவதையால் பீடிக்கப்பட்டுள்ளான். என்று நம்பினாள். சில நாட்கள் அவனைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. இது கதாதரனுக்கு இன்னும் வசதியாகப்போய்விட்டது. 

பள்ளிக்குச் செல்லாமல் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று முன்னைவிட அதிகமாக விளையாட்டிலும் வேடிக்கைகளிலும் ஈடுபட்டான்.

கதாதரனுக்கு ஏழரை வயது வங்காளத்தில் சிறந்த விழாவாகிய துர்க்காபூஜை வந்தது. 

கூதிராமின் மருமகனான ராமச்சந்திரனைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். அவனது குடும்பம் செலாம்பூரில் பிறந்த வீட்டில் வசித்து வந்தது. வேலை காரணமாக ராமச்சந்திரன் பெரும்பாலான நாட்களை மேதினிபூரில் கழித்தான்.ஒவ்வோர் ஆண்டும் செலாம்பூரில் துர்க்கா பூஜையை மிகவும் விமரிசையாகக்கொண்டாடுவது வழக்கம்.

பூஜைக்காக ராமச்சந்திரன் ஏராளமாகச் செலவு செய்வான். 

எட்டு நாட்களும் பாட்டும், வாத்தியங்களுமாக வீடே அமர்க்களப்படும் என்று ஹிருதயரிடமிருந்து அறிந்திருக்கிறோம். 

அந்தணர்களுக்கு உணவு, பண்டிதர்களுக்கு வெகுமதி, ஏழைகளுக்கு அன்னதானம் இலவச உடை போன்ற தான தருமங்கள் அப்போது தாராளமாக நடைபெறும். 

அந்த வேளையில் ராமச்சந்திரன் கூதிராமையும் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று அவருடன் அந்த நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பதுண்டு.இந்த ஆண்டும் கூதிராமைக்குடும்பத்துடன் வருமாறு அழைத்திருந்தான்.

கூதிராமிற்கு அறுபத்தெட்டு வயது ஆகி இருந்தது. இப்போது கொஞ்சகாலமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு, அஜீரணம் என்று பல நோய்களால் பாதிக்கப்பட்டு அவர் முந்தைய வலுவை இழந்திருந்தார். 

ஆகையால் விருப்பம் இருந்தும் அருமை மருமகனின் அழைப்பை ஏற்க அவர் தயங்கினார். அது மட்டும் இன்றி, வீட்டையும் குடும்பத்தையும் முக்கியமாக கதாதரனைச் வில நாட்கள் கூடப்பிரிய இந்த முறை ஏனோ அவரது மனம் மறுத்தது. 

அதே வேளையில் ”என் உடலோ வலுவிழந்து வருகிறது. இந்த ஆண்டு போகாவிட்டால் இனி போக முடியுமோ, முடியாதோ, யார் கண்டது? என்ற எண்ணம் அவர் நெஞ்சை நெருடியது. எனவே இந்த முறை எப்படியாவது சென்று விட வேண்டும் என்று எண்ணிய அவர், போகும் போது கதாதரனை உடன் அழைத்துச்செல்ல விரும்பினார். அவனது பிரிவால் சந்திரா வருந்துவாள் என்ற எண்ணம் அவரது முடிவை மாற்றியது. கடைசியில் ராம்குமாருடன் செல்வதென்றும் சில நாட்கள் அங்கிருந்து விட்டுத் திரும்புவது என்றும் முடிவு செய்தார். 

பூஜைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் கூதிராமும் ராம்குமாரும் புறப்பட்டனர். 

அன்று கூதிராம் வழக்கம் போல் ஸ்ரீரகுவீரரை வணங்கினார். கதாதரனை அன்புடன் கொஞ்சினார். பின்னர் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு செலாம்பூர் நோக்கிப்புறப்பட்டார். கூதிராமையும் ராம்குமாரையும் கண்டு ராமச்சந்திரன் பெரிதும் மகிழ்ந்தான்.

செலாம்பூர் அடைந்த பின்னர் கூதிராமை வயிற்றுப்போக்கு மீண்டும் பற்றிக்கொண்டது. 

உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.பூஜையின் ஆறு, எட்டாம் நாட்களில் நிலவிய பரமானந்தச் சூழ்நிலையை அவரது நோய் பாதிக்கவில்லை. ஆனால் ஒன்பதாம் நாளன்று நோய் தீவிரமாகியது. அந்த ஆனந்தச்சூழ்நிலையில் கவலைக்குறிகள் தோன்றின.

ராமச்சந்திரன் திறமைமிக்க மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை செய்தான்.ஹேமாங்கினியும் ராம்குமாரும் கூதிராமின் அருகிலிருந்து தேவையானவற்றைக் கவனித்துக்கொண்டனர். 

ஆனால் கூதிராமின் உடல்நிலை தேறுவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. எப்படியோ அந்த ஒன்பதாம் நாள் பகலும் இரவும் கழிந்தன. இந்துக்களுக்குப்புனிதமான விஜயதசமி நாள் வந்தது. அன்று சிறிதும் பேச இயலாத அளவிற்கு கூதிராமின் நிலை கவலைக்க இடமாகியது. 

துர்க்கையின் திருவுருவை நீரில் மூழ்கவிடுகின்ற விசர்ஜனச் சடங்கு நிறைவுற்றதும் ராமச்சந்திரன் மாமாவின் படுக்கை அருகில் வந்து அமர்ந்தான். அப்போது மாலை வேளையாகி விட்டிருந்தது.நேரம் நகர்ந்தது.

இரவு கவியலாயிற்று. கூதிராமின் இறுதி நேரம்நெருங்கி விட்டதுபோல் தோன்றியது. ராமச்சந்திரன் அங்கிருந்தோரை விசாரித்த போது கூதிராம் நீண்ட நேரமாக எதுவும் பேசாமல் அதே நிலையில் படுத்திருப்பதாகச்சொன்னார்கள். 

அவன் கண்களில் கண்ணீர் மல்க,

தழுதழுத்த குரலில் கூதிராமிடம் மாமா, எப்போதும் ஸ்ரீரகுவீரரின் நாமத்தை ஓதுவீர்களே! இப்போது என் மௌனமாக இருக்கிறீர்கள்? அவரது திருப்பெயரை ஓதுங்கள்? என்று சொன்னான். 

இறைவனைப் பற்றிய பேச்சு கேட்டதும் கூதிராம் கண் திறந்து பார்த்தார். ஏதோ கூற விழைந்தார். ஆனால் உடம்பில் தெம்பில்லை. வலுவையெல்லாம் சேர்த்து குழறுகின்ற குரலில், ராமச்சந்திரனா,வா, விசர்ஜனம் முடிந்து விட்டதா? 

அப்படியானால் என்னைச்சற்று உட்கார வை. குழந்தாய் என்றார். ராமசந்திரனும் ஹேமாங்கினியும் ராம்குமாரும் அவரைப் படுக்கையில் உட்காரவைத்தனர். 

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் கம்பீரமான குரலில் மூன்று முறை ஸ்ரீரகுவீரரின் திருநாமத்தை ஓதினார் கூதிராம். 

திருநாமங்களின் உச்சாரணத்துடன் அந்தப் புண்ணியாத்மாவின் உயிர் பிரிந்தது. 

ஸ்ரீரகுவீரர் தன் அருமை பக்தனைத் தன்னுடன் அணைத்துக்கொண்டார். அப்போது நள்ளிரவு அந்த நடுநிசியில் இறைநாம சங்கீர்த்தனம் அந்த கிராமத்தில் உரத்த குரலில் எழுந்தது. 

கூதிராமின் உடல் நதிக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

அடுத்த நாள் காமார்புகூருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ’ 

கூதிராமின் வீடு துயரத்தில் ஆழ்ந்தது. துக்கநாட்கள் முடிந்ததும் ராம்குமார் எருது ஒன்றை சாஸ்திர விதிப்படி விடுதலை செய்தார். பல அந்தணர்களுக்கு உணவளித்து தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்தார்.இளமைப்பருவம்

-

கூதிராமின் மறைவு அவரது குடும்பத்தை வெகுவாகப் பாதித்தது. நீண்ட நாற்பத்து நான்கு ஆண்டுகள் தனது இன்ப துன்பங்களில் எல்லாம் பங்கெடுத்திருந்த துணைவரின் பிரிவைச் சந்திராவால் தாங்க முடியவில்லை. அவரது நினைவுகள் ஒவ்வொரு கணமும் அவளை வாட்டின. அவர் இல்லாத இந்த உலகம் அவளுக்கு வெறுமையாகக் காட்சியளித்தது. உலகத்தின் மீது அவளுக்கு எந்த வித ஈடுபாடும் இல்லாமல் போயிற்று. 

ஸ்ரீரகுவீரரின் திருவடிகளே சரணமென்று வாழப் பழகியிருந்த அவள் இப்போது தன் முழு மனத்தையும் அவரிடம் செலுத்தினாள். ஆனால் வேளை வரும் வரை அவள் இந்த உலகிலிருந்து விடுபட முடியாது அல்லவா? 

தனது ஏழு வயது மகன் கதாதரன் நான்கு வயது ப் பெண் சர்வமங்களா ஆகியோரின் பிஞ்சு முகங்களின் நினைவு அவளைப் படிப்படியாக அன்றாட வாழ்வின் இன்ப துன்பங்களில் ஈடுபட வைத்தது. 

அவர்கள் இருவரையும் வளர்ப்பதிலும் ஸ்ரீரகுவீரருக்குச் சேவை செய்வதிலும் நாட்களை ஒரு வாறு கழித்தாள் சந்திரா.

இப்போது குடும்பப் பொறுப்பு முழுவதையும் ராம்குமார் ஏற்றுக்கொள்ளும் படி ஆயிற்று. 

அளவிலாதத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தாயையும் குழந்தைகளான தங்கை தம்பியரையும் குறையின்றி வாழச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே தன் துக்கத்தைக்கூடத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டார். 

அவரது பதினெட்டு வயது தம்பி ராமேசுவரர் சோதிடக்கலையிலும் ஸ்மிருதிகளிலும் தேர்ச்சி பெற்றதும் அவரும் அண்ணனுடன் குடும்ப பாரத்தைச் சுமக்கத் தொடங்கினார். 

சந்திரா தேவியால் மேற்கொண்டு வீட்டுவேலைகளைக் கவனிக்க முடியாமல் போனதால் ராம்குமாரின் மனைவி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.குழந்தைபருவத்தில் தாயைப் பறிகொடுத்தல், இளமையில் தந்தையை இழத்தல்,வாலிபத்தில் மனைவியின் மரணம், ஒருவனின் வாழ்க்கையைக் சூன்யமாக அடித்துவிட இவற்றுள் ஒன்று போதும் என்பர் பெரியோர். 

தாயின் அரவணைப்பிலுள்ள ஒரு குழந்தை தந்தை இறந்தாலும் அந்தப்பிரிவை உணர்வதில்லை. குழந்தை வளர்ந்து இளமையை எட்டும் போது தான் தந்தையின் அன்பைப் புரிந்து கொள்கிறது.தனது சில ஆசைகளை நிறைவேற்ற தந்தையைத் தவிர அன்புத் தாயினாலும் முடியாது என்று அறிகிறது. 

அதன் இதயம் தந்தையின் பால் அதிகமாக ஈர்க்கப்படுகிறது.அந்தச் சமயத்தில் தந்தை இறந்ததால் அந்தப்பிரிவு குழந்தையை மிகவும் பாதிக்கிறது. 

கூதிராம் இறந்தபோது கதாதரனின் நிலையும் இது தான். நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் தந்தையை நினைவூட்டி அவனது இதயத்தைப்புண்ணாக்கியது. ஆனால் வயதுக்கு மீறிய மனப்பக்குவம் உடையவனாக இருந்ததால் எந்தவேதனையையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. தான் வருந்தினால் தாயின் கவலை மேலும் அதிகமாகும் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். எனவே வெளிப்பார்வைக்கு எப்போதும் போல் மகிழ்ச்சியாகவும் குறும்புத்தனம் மிக்கவனாகவும் தன்னைக் காட்டிக்கொண்டான். 

ஆனால் அவனது மனத்தை வெறுமையும் தனிமையும் வாட்டி வதைத்தன. 

மனச்சுமை தாங்க முடியாமல் தவிக்க நேரும் போது பூதிர்கால் சுடுகாட்டிலும் மாணிக்ராஜாவின் மாந்தோப்பிலும் மற்ற இடங்களிலும் தனிமையாக உலவுவான்.இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஏனெனில் வீட்டிற்குள் அடங்கிக் கிடக்க எந்தச் சிறுவனும் விரும்புவதில்லை. கதாதரனின் செய்கைக்கு இதைத்தவிர வேறு எந்தக்காரணமும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. 

ஆனால் கதாதரன் சிந்தனையில் ஆழ்பவனாகவும் தனிமையை விரும்புபவனாகவும் மாறிக்கொண்டிருந்தான். 

தன் வாழ்வில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்களைச் சரியாகப்புரிந்து கொள்வதற்காகவோ என்னவோ அவன் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் கூர்ந்து கவனிக்கலானான்.

ஒரே இழப்பினால் பாதிக்கப்பட்ட இருவர் தங்களுக்குள் நெருக்கமாவது இயல்பு. தந்தையின் மரணத்திற்குப்பிறகு கதாதரனும் தாயிடம் ஒட்டிக்கொண்டான். முன்னை விட அதிகமாகத் தற்போது தாயின் அருகில் இருக்கத் தொடங்கினான். 

தான் அருகில் இருந்தால் தாய் தன் வருத்தத்தை மறக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட அவன் வீட்டு வேலைகளிலும் பூஜை வேளைகளிலும் அருகிலிருந்து அவளுக்கு உதவினான். எதன் பொருட்டும் தாயை வற்புறுத்துவதை விட்டுவிட்டான். ஏனெனில் தான் ஏதாவது கேட்டு அதை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டால் அவள் மிகவும் வருந்துவாள் என்பதை நன்றாக உணர்ந்திருந்தாள். சுருங்கக்கூறினால் ஒவ்வொரு வகையிலும் தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதைக்கருத்தில் கொண்டு செயல்பட்டான்.

கதாதரன் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான். இப்போது புராணப்பாடல்கள் மற்றும் யாத்ரா பாடல்களைக் கேட்பதிலும் மண்ணால் தெய்வ உருவங்கள் செய்வதிலும் முன்னிலும் அதிகமாக ஈடுபட்டு மகிழ்ந்தான். 

தந்தையின் பிரிவால் வாடிய அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குஅவை இதமாக இருந்திருக்க வேண்டும்.

இந்த ஈடுபாடுகளுடன் அவனது இயல்புக்கேற்ற மற்றொரு புதிய ஆர்வமும் அவனில் வளரத்தொடங்கியது.

புரி கோவில் திருத்தலத்திற்கான பாதை காமார்புகூர் வழியாகச் சென்றது. 

யாத்திரிகர்களின் வசதிக்காக கிராமத்தின் தென்கிழக்குக்கோடியில் சத்திரம் ஒன்றை லாஹாக்கள் கட்டியிருந்தனர். தீர்த்த யாத்திரை செல்கின்ற சாதுக்களும் பக்தர்களும் அந்தச் சத்திரத்தில் தங்குவது வழக்கம். 

அவர்கள் அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் உணவிற்காக கிராமத்திலுள்ள பல வீடுகளுக்குச் செல்வார்கள். சாதுக்களைக் காணும் போதெல்லாம் கதாதரனின் உள்ளத்தில் ஏதேதோ இனம்புரியாத உணர்ச்சிகள் கிளர்ந்து எழும். உலகவாழ்வு நிலையற்றது என்பதை அறிந்து, அதனை துறந்து , இறைவனைச் சரண்புகுந்து வாழ்பவர்கள் இந்தப்பெருமக்கள் என்கின்ற எண்ணம் அவனது இளமனத்தைச் சிந்தனையுள் ஆழ்த்தும்.

புராணப் பாடல்களிலும் நாடகங்களிலும் உலக வாழ்வின் நிலையாமையைப் பற்றிக்கூறக் கேட்டிருந்தான் அவன். தந்தையின் திடீர் மறைவு அந்த எண்ணத்தை நன்றாக அவனுள் வேர்விடச் செய்திருந்தது.அழியாஆனந்தமும் அமைதியும் பெற சாதுக்களின் தொடர்பு தேவை என்பதை உணர்ந்து இயன்றபோதெல்லாம் அந்த துறவியர் தங்கியிருந்த சத்திரத்திற்குச் சென்றான். அவர்களது வாழ்க்கைமுறை அவனை மிகவும் கவர்ந்தது. 

காலையிலும் மாலையிலும் துனி எனப்படும் புனிதத் தீ வளர்த்து அதனைச்சுற்றி அவர்கள் அமர்ந்து தியானத்தில் மூழ்கியிருப்பதையும், பிச்சையாகக் கிடைத்த எளிய உணவை இஷ்டதெய்வத்திற்குப் படைத்தபின் மனநிறைவுடன் உண்பதையும், கடவுள் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகக்கடும் நோயையும் அமைதியாகத் தாங்கிக் கொள்வதையும், அத்தியாவசியத்தேவைகளுக்காகக் கூடப்பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் வாழ்கின்ற வகையையும் கூர்ந்து கவனிப்பான். அதே வேளையில் அவன் போலித்துறவிகளை உடனே இனம் கண்டு கொள்ளவும் தவறுவதில்லை.துறவு வாழ்க்கையை சுகபோகங்களுக்காகப் பயன்படுத்துகின்ற அவர்களிலிருந்து விலகி, உண்மைத் துறவியருடன் நெருங்கிப் பழகத் தொடங்கினான். 

அவர்களுக்கு நீர் கொண்டு வருவான். சமையலுக்காக சுள்ளிகளைச் சேகரித்து உதவுவான். சிறுசிறு வேலைகளில் அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வான். 

அந்தத் துறவியரும் கதாதரனின் இனிய இயல்பினால் கவரப்பெற்று, எவ்வாறு இறைவனிடம் பிராத்தனை செய்வது எவ்வாறு சாதனைகள் செய்வது என்பதையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்தனர். தாங்கள் பெற்ற உணவை அவனுடன் பகிர்ந்து உண்பதில் அந்த சாதுக்களும் மகிழ்வுற்றனர்.

சிறிது காலம் தொடர்ந்து தங்கிய துறவியருடன் மட்டுமே கதாதரனால் நெருக்கமாகப் பழக முடிந்தது.

ஒரு முறை அந்தச் சத்திரத்தில் வழக்கம்போல் துறவியர் சிலர் தங்கியிருந்தனர். நெடுந்தொலைவு பயணத்தால் மிகவும் களைப்படைந்ததாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தினாலோ அவர்கள் தொடர்ந்து பல நாட்கள் தங்கினர்.

கதாதரனுக்கு அப்போது எட்டு வயது இருக்கும். அவன் அவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப்பெற்றான். கதாதரன் இவ்வாறு துறவியருடன் பழகுவது பற்றி முதலில் யாருக்கும் தெரியாது. அவர்களுடன் நீண்ட நேரம் செலவிடத் தொடங்கிய போது தான் அந்தச் செய்தி பரவியது. 

அவர்களுடன் உண்டுவிட்டால் வீடு திரும்பிய பிறகு பசியே இருக்காது. சந்திராதேவி காரணம் கேட்டால் துறசியருடன் உண்டதை அவளிடம் கூறுவான். ஆரம்பத்தில் சந்திரா இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கதாதரன் துறவியரின் அன்பைப் பெறுவது ஒரு நற்பேறாக, ஆசியாகவே அவளுக்குத்தோன்றியது. துறவிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் மற்றப்பொருட்களையும் கூட அவன் மூலம் அனுப்புவாள் அவள். 

நாட்கள் செல்லச்செல்ல அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தபோது அவள் மனத்தில் அச்சம் தலைதூக்க ஆரம்பித்தது.சில சமயம் அவன் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு, நெற்றியில் திலகத்துடன் வரும்போது அவளது மனம் கலங்கும். 

அப்போது தனக்குத்தானே ஏதாவது சமாதானம் கூறிக்கொள்வாள். ஆனால் தான் அணிந்திருந்த துணியைக்கிழித்து,துறவியரைப் போல கோவணம் கட்டிக்கொண்டு மகன் வந்தால் எந்தத் தாயால் தான் பொறுத்துக் கொள்ள முடியும்? 

கதாதரன் ஒரு நாள் அப்படித்துறவிக்கோலத்தில் வந்த போது பதறிவிட்டாள் சந்திரா.கதாதரனோ. ” பார்த்தாயா” அம்மா! அந்த சாதுக்கள் என்னை எப்படி அலங்கரித்திருக்கிறார்கள்! என்று மகிழ்ச்சி பொங்கக்கூறினான்.

இந்த நிகழ்ச்சி சந்திராவை மிகவும் பாதித்தது. இந்தத்துறவியர் கதாதரனையும் தங்களுடன் அழைத்துச் சென்று விடுவார்களோ என்ற கவலையில் மூழ்கியது அந்த தாயுள்ளம்.ஒரு நாள் பொறுக்க முடியாமல் தன் கவலையை கதாதரனிடம் கூறி அழுதாள் சந்திரா. இதைச்சற்றும் எதிர்பார்க்கவில்லை கதாதரன். அவளது பயத்தைப்போக்க எவ்வளவோ முயன்றான்.சந்திராவின் மனம் எதனாலும் ஆறுதல் பெறவில்லை. தான் துறவிகளிடம் செல்வதால் தான் அன்னை துயருற நேர்ந்தது, இனி அவர்களிடம் செல்வதில்லை என்று முடிவு செய்து சந்திராவிடம் கூறினான். 

சந்திராவின் அச்சமும் கவலையும் நீங்கின. 

கதாதரன் அந்த சாதுக்களிடம் சென்று நடந்தவற்றைக்கூறி இறுதியாக விடைபெற்றான். அவன் கூறியதைக்கேட்ட சாதுக்கள் மிகவும் வருந்தினர். 

அவர்கள் நேராகச் சந்திராவிடம் வந்து. ” அம்மா உங்கள் மகனை எங்களுடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் எங்கள் மனத்தில் தோன்றியதில்லை. பெற்றோர்களின் இசைவின்றி பிள்ளைகளை அழைத்துச் செல்வது திருடுவதற்கு ஒப்பானது அல்லவா? அது துறவியர்க்கு உகந்த செயல் ஆகுமா? எனவே நாங்கள் கதாதரனை அழைத்துச் சென்று விடுவோம் என்ற பயத்தை விட்டுவிடுங்கள்” என்று இதயபூர்வமாகக் கூறினர். 

இதைக்கேட்டபின் சந்திராவின் அச்சம் முழுவதும் நீங்கியது.முன்போலவே கதாதரன் அவர்களிடம் செல்லவும் அவள் மனமுவந்து இசைந்தாள்.

இந்தச் சமயத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சிசந்திராவுக்கு கதாதரனைப்பற்றிய கவலையை வளரச்செய்தது. 


 MAIN PAGE   

image60

வாலிபத்தின் வாசலில்

வாலிபத்தின் வாசலில்

   

காமார்புகூருக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது ஆனூர் என்னும் கிராமம். 

புகழ் பெற்ற விசாலாட்சி திருக்கோயில் ஒன்று அங்கு உள்ளது. ஒரு நாள் அந்தக்கோயிலுக்குப் போகும் வழியில் கதாதரன் திடீதென வெளியுலக உணர்வை இழந்து மயங்கி விழுந்தான். அவனுடன் சென்றவர்களும் தர்மதாஸ் லாஹாவின் தங்கை பிரசன்னமயியும் ஒருத்தி. சிறந்த பக்தையான அவள் ஆன்மீக உணர்வே கதாதரனில் இந்த நிலையை எற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தாள். பிரசன்னமயி கூறியதை சந்திராதேவி நம்பவில்லை. 

வாய்வு கோளாறு அல்லது வேறு ஏதாவது நோயினால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அஞ்சினாள்.

கதாதரனோ தன் மனம் தேவியின் மீது பதிந்து, அவளது திருவடித் தாமரைகளில் ஒன்றியதால் தான் புற உணர்வை இழக்க நேர்ந்தது என்று கூறினான்.

மேலும் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. வாழ்க்கையினூடே மாறிமாறி வந்த சுகதுக்கங்கள் கதாதரன் படிப்படியாகத் தந்தையின் பிரிவுத்துயரை மறக்கும்படிச் செய்தன. 

தர்மதாஸ் லாஹாவின் மகனான கயாவிஷ்ணுவும் கதாதரனும் நெருங்கிய நண்பர்கள். பள்ளியிலும் வெளியிலும் இருவரும் சேர்ந்தே இருந்தனர். ஒருவரையொருவர் அன்புடன், அண்ணா, தம்பி என்றே அழைத்தனர். கிராமப்பெண்கள் விருந்திற்கு அழைக்கும்போதெல்லாம் கதாதரன் கயாவிஷ்ணுவையும் உடன் அழைத்துச் செல்வான். 

சந்திராவின் தோழியான தனி இனிப்புவகைகளையும் மற்ற பண்டங்களையும் கொடுக்கும் போது கயாவிஷ்ணுவுக்குத் தந்த பிறகு தான் கதாதரன் உண்பான். 

தர்மதாஸீம் கதாதரனின் வீட்டினரும் இவர்களின் நட்பைக்கண்டு மகிழ்ந்தனர்.

சந்திராவின் தோழியருள் தனி என்பவளைப்பற்றி ஏற்கனவே அறிந்துள்ளோம். 

தனி கொல்லர் இனத்தைச்சேர்ந்தவள். 

கதாதரன் பிறந்ததிலிருந்து அவனிடம் அதிக வாஞ்சை கொண்டிருந்தாள் அவள். 

ஒரு நாள் அவள் கதாதரனிடம், கதாயீ,உனது உபநயனத்தின் போது என்னிடம் முதல் பிச்சை ஏற்று, என்னை அம்மா என்று அழைப்பாயானால் நான் எத்தனை மகிழ்வேன், தெரியுமா? என்று மிகுந்த அன்புடன் வேண்டினாள். 

தன் மீது அவளுக்கிருந்த உளமார்ந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்த கதாதரன் அவளது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்தான். 

அந்த ஏழைப்பெண்ணும் தன்னால் இயன்ற அளவு பணமும் மற்ற பொருட்களும் சேகரித்து வைத்துக்கொண்டு அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

ஓரிரு ஆண்டுகள் கடந்த பின் அந்த நாளும் வந்தது. கதாதரனுக்கு ஒன்பது வயது நிறைவடைய இருந்த போது உபநயன ஏற்பாடுகளைராம்குமார் செய்தார். தனிக்குத் தான் கொடுத்திருந்த வாக்குறுதியைப் பற்றி தக்கத் தருணத்தில் ராம்குமாரிடம் கூறினான் கதாதரன்.

ஆனால் அவன் எண்ணியது போல விஷயம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

தாழ்ந்த குல மாது ஒருத்தியிடம் இருந்து பிச்சை ஏற்பது வழக்கத்திற்கு மாறானது என்று கூறி,ராம்குமார் கதாதரனின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டார்.

கதாதரனோ தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான். அண்ணா, தனியிடமிருந்து பிச்சை ஏற்கத் தவறினால், நான் சொன்ன சொல் தவறியவன் ஆவேன். சத்தியத்திலிருந்து வழுவிய ஒருவன் பூணூலை அணிந்து கொள்ளவே தகுதியற்றவன் ஆகிவிடுவான்.எனவே நான் எப்படிப்பூணூல் அணிய முடியும்? என்று அவன் வாதம் செய்தான்.

உபநயன நாள் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. எங்கே கதாதரன் தனது பிடிவாதத்தால் எல்லாவற்றையும் தடுத்துவிடுவானோ என்று வீட்டிலுள்ளோர் அஞ்சினர். இந்தச் செய்தி தர்மதாஸ் லாஹாவின் செவிக்கு எட்டியது. அவர் ராம்குமாரை அழைத்து,ராம்குமார் உன் குடும்பத்தில் இது வரை இவ்வாறு நடந்ததில்லை என்பது உண்மை தான்  .ஆனால் எத்தனையோ வேறு பல நல்ல அந்தணர் குடும்பங்களில் பலர் தாழ்ந்த குலத்தினரிடமிருந்து பிச்சை ஏற்றுள்ளனர். இதனை அனுமதிப்பதால் உன்னை எந்தப் பழியும் சேராது. அது மட்டுமின்றி சிறுவனின் மகிழ்ச்சி, மனநிறைவு இவற்றைக்குறித்தும் நீ சற்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று எடுத்துக்கூறினார். 

வயதில் பெரியவரானஅவரது அறிவுரையை ராம்குமாரும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர். கதாதரனின் ஆனந்தம் கரை புரண்டோடியது. உபநயச்சடங்குகள் இனிது நடைபெற்றன. சாஸ்திரங்களுக்கு ஏற்பச் சடங்குகள் செய்து,பூணூல் தரித்து, தனியிடமிருந்து முதற்பிச்சை ஏற்றான் கதாதரன். 

தன் வாழ்வே புனிதம் பெற்றுவிட்டதாக தனி பேரானந்தம் எய்தினாள். உபநயனத்திற்குப் பின்னர் கதாதரன் சந்தியா, பூஜை போன்ற ஆன்மீக சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டான்.

கதாதரனுக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போது அவனது ஒப்பற்ற அறிவுத் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியொன்று நடந்தது. 

அப்போது லாஹாவின் வீட்டில் நடைபெற்ற சிராத்தச் சடங்கை ஒட்டி பண்டிதர்களின் சபை ஒன்று கூடியது. 

அதில் தர்மம் சம்பந்தமான ஒரு வாக்குவாதம் எழுந்தது. பண்டிதர்களால் சரியான எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. அப்போது அங்கிருந்த கதாதரன், அந்தப் பிரச்சனைக்கு மிகவும் சரியான தீர்வு ஒன்றைச் சொன்னான். பண்டிதர்கள் அந்தப் பத்து வயது சிறுவனின் புத்திக் கூர்மையைக் கண்டு மகிழ்ந்தனர். மனம் நிறைந்தது அவனை ஆசீர்வதித்தனர்.

உபநயனத்திற்குப் பின்னர் தெய்வத் திருவுருவங்களைத் தொட்டுப் பூஜை செய்யும் வாய்ப்பு கதாதரனுக்குக் கிட்டியது. 

பூஜை செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த வாய்ப்பினால் அவனது இயல்பான ஆன்மீக உணர்வுகள் விழித்தெழுந்தன. 

ஸ்ரீரகுவீரர் எவ்வாறு தன் தந்தையின் கனவில் காட்சியளித்தார். வீட்டில் முதலில் ஸ்ரீரகுவீரர் எவ்வாறு இடம் பெற்றார், ஸ்ரீரகுவீரர் வந்த நன்னாளிலிருந்து சிறிய நிலம் எவ்வாறு போதிய நெல்லை வழங்கியது. 

சொற்ப வருவாயினால் குடும்பத்தின் எல்லாத் தேவைகளும் எவ்வாறு நிறைவு பெற்றன. அந்தச் சொற்ப வருமானத்திலும் வீட்டிற்கு வந்தோருக்கெல்லாம் உணவளித்து வரவேற்க அன்புள்ளம் கொண்ட சந்திராதேவியால் எவ்வாறு இயன்றது. போன்றவற்றை எல்லாம் முன்னரே அறிந்திருந்தான் கதாதரன்.

ஸ்ரீரகுவீரரின் பேரருளைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பில் ஆழ்வான். இப்போது அந்த ரகுவீரரைத் தொட்டு வழிபடும் பேறு கிடைத்ததும் அவனது மனத்தில் புதியதொரு பக்திவேகம் பிறந்தது. தினமும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளைச் செய்த பின்னர் நீண்ட நேரம் பூஜையிலும் தியானத்திலும் ஈடுபட்டான். 

அருட்காட்சி அளித்தும் அவ்வப்போது அருளாணை தந்தும் தந்தைக்கு ஸ்ரீரகுவீரர் ஆசி வழங்கியது போன்று தனக்கும் ஆசி வழங்கி மகிழ்வு தரவேண்டும் என்பதற்காக ஸ்ரீரகுவீரரை சிரத்தையோடும் பக்தியோடும் பூஜித்தான்.

ஸ்ரீரகுவீரருடன் ராமேசுவரசிவனையும் சீதளாதேவியையும் உள்ளமுருகி வழிபட்டான். அவனது தீவிர பக்தி பலனளிக்க வெகுகாலம் ஆகவில்லை. வெகுவிரைவில் பாவ சமாதி அல்லது சவிகல்ப சமாதி எனப்படும் மிக உயர்ந்த நிலையை அடைந்து விட்டான். அந்த நிலையில் அவனுக்குப் பல தெய்வீகக் காட்சிகள் கிடைத்தன.

அந்த ஆண்டு சிவராத்திரியின் போது கதாதரனுக்கு அத்தகைய காட்சியும் பாவ சமாதியும் ஏற்பட்டது. 

சிவராத்திரியின் போது கதாதரன் உண்ணாநோன்பு இருந்து ஆழ்ந்த பக்தியுடன் முழுமுதற் கடவுளான சிவபெருமானை வழிபட்டான். அவனுடன் கயாவிஷ்ணுவும் வேறு பல சிறுவர்களும் நோன்பிருந்தனர்.சீதாநாத் பைன் என்பவரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிவபெருமானின் திருவிளையாடல் சம்பந்தமான நாடகத்தைப் பார்த்தபடி அன்றிரவு கண்விழிக்க ஊரார் முடிவு செய்திருந்தனர்.கதாதரன் தன் வீட்டிலேயே பூஜை, ஜபம் என்று சாதனைகளில் ஈடுபட்டான். முதல் யாமப்பூஜைக்குப்பிறகு சிவ தியானத்தில் மூழ்கியிருந்த போது அவனது நண்பர்கள் அங்கு வந்து, பைன் வீட்டில் நடக்கவிருந்த நாடகத்தில் வழக்கமாக சிவவேடத்தில் நடிப்பவர் திடீரென நோய்வாய்ப் பட்டுவிட்டதாகவும், கதாதரன் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

தனது பூஜை பாதிக்கப்படும் என்பதால் முதலில் கதாதரன் அதனை மறுத்தான். சிவனாக நடித்தால் சிவனையே நினைக்க வேண்டிவரும்,அந்த நினைவு பூஜைக்கு நிகரானதே,மேலும் அவனது இசைவு பலருக்கு மகிழ்ச்சியூட்டும் என்றெல்லாம் நண்பர்கள் எடுத்துக்கூறினர். அவர்கள் பல முறை வேண்டிக்கொண்ட பின் நடிப்பதற்கு இசைந்தான் கதாதரன்.

ஜடாமுடி, ருத்திராட்ச மாலை, திருநீறு முதலியன தரித்து சிவவேடம் பூண்டான். ஆனால் மேடையில் தோன்றிய போது தன்னை மறந்து சிவபெருமானின் நினைவில் ஆழ்ந்து மூழ்கிப்போனான். 

கொஞ்சம், கொஞ்சமாக அவனது வெளியுணர்வு முற்றிலும் அகன்று விட்டது.நீண்ட நேரம் அவனுக்குச் சுயவுணர்வு வராததால் அன்றிரவு நாடகம் நடைபெறவில்லை.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கதாதரன் அடிக்கடி இத்தகைய பாவ சமாதியில் ஆழ்வது வழக்கமாயிற்று. 

தெய்வீகப் பாடல்களை கேட்கும் போதும் தெய்வங்களை தியானிக்கும் போதும் தன்னையும் சுற்றுப்புறத்தையும் அறவே மறந்தான். 

அந்த நேரத்தில் புறவுலகின் தூண்டுதல் எதுவும் அவனது மனத்தைக் கலைக்க முடிவதில்லை. முற்றிலுமாக மனம் உள்நோக்கிய வண்ணம் இருக்கும். சில வேளைகளில் உடல் மரக்கட்டை போல் உணர்வற்றுக் கிடக்கின்ற அளவிற்கு தியானத்தில் ஆழ்ந்திருப்பான். 

அந்த நிலையிலிருந்து மீண்ட பிறகு அது பற்றி அவனைக்கேட்டால் தியான வேளையில் தோன்றுகிற காட்சிகளாலும் இறைவனின் திருப்புகழைச் செவியுற்று அதில் மூழ்குவதாலும் ஏற்படுகின்ற பேரானந்தத்தில் லயித்துவிடுவதால் தான் இப்படிப்புறவுணர்வை இழக்க நேர்வதாக க்கூறுவான்.

இவையெல்லாம் சந்திராவிற்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தின. ஆனால் இத்தகைய பரசவ நிலையால் கதாதரனின் உடல்நலம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதையும், எல்லாவிதத்திலும் அவன் திறமைசாலியாக இருப்பதையும், எப்போதும் ஆனந்தமாக இருப்பதையும் பார்த்த பிறகு அவர்களின் அச்சம் விலகியது.கதாதரனுக்கு இப்போது அடிக்கடி இத்தகைய பரவச நிலை ஏற்பட்டது. அவனும் படிப்படியாக இதற்குப் பழக்கமாகி விட்டிருந்தான். விரும்பிய போது அதனைக் கட்டுப் படுத்தவும் அவனால் முடிந்தது.

ஆன்மீக உலகின் நுட்பங்கள் பலவற்றை அறியவும் தெய்வங்களைப் பற்றிய உண்மைகள் பலவற்றைத் தெரிந்து கொள்ளவும் இந்த நிலை அவனுக்கு உதவியது. இந்த நிலையை அனுபவிப்பதில் அவனுக்கு அச்சம் ஏற்படவில்லை. மாறாக ஆனந்தமே ஏற்பட்டது. 

பரவச நிலைகளுக்குப்பிறகு அவனது ஆன்மீக உணர்வுகள் மிகவும் வலிமை பெற்றன. 

கிராமத்தில் நடைபெற்ற சிவன், விஷ்ணு, மானசா, தர்மம் முதலிய எந்த தெய்வத்தின் விழாவானாலும் அதில் அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டான். 

இந்த ப் பரந்த மனப்பான்மை பல்வேறு தெய்வங்களின் பக்தர்களிடம் அவன் வெறுப்புணர்வின்றி நட்பு பாராட்டும் படிச் செய்தது. இத்தகைய பண்பை வளர்ப்பதில், அந்த கிராமத்தில் வேரூன்றியிருந்த பரம்பரைப் பண்பாடு கதாதரனுக்கு உதவியது. 

மற்ற கிராமங்களைப் போலன்றி காமார்புகூரில் சிவன், விஷ்ணு, தர்மம் முதலிய தெய்வங்களை வழிபடுபவர்கள் பகையுணர்வு இன்றி நட்பிலும் அமைதியிலும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.

ஆன்மீக வாழ்வில் கதாதரன் உயர்ந்த நிலைகளை எட்டிக் கொண்டிருந்தான். 

ஆனால் ஏட்டுப்படிப்பில் அவன் விருப்பம் காட்டவேயில்லை. பண்டிதர், பட்டாச்சாரியர் என்றெல்லாம் பட்டங்களைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் உலக இன்பத்திலும் பொருட்களிலும் தணியாத வேட்கை கொண்டு திரிவதைக் கண்ட போது அவர்களைப்போன்று வெறும் நூலறிவைப் பெருக்கிக் கொள்வதில் அவனுக்கு வெறுப்பு உண்டாயிற்று. 

அவனது கூரிய அறிவு, எந்தச் செயலானாலும் அதன் உள்நோக்கத்தை முதலில் அறிந்து தன் தந்தையிடமிருந்த பற்றின்மை, பக்தி, நல்லொழுக்கம் போன்ற நற்குணங்களை அடிப்படையாக வைத்து, அதன் பிறகே அவற்றை மதிப்பீடு செய்தது. 

பெருவாரியான மக்களின் குறிக்கோள் தன் தந்தையின் குறிக்கோளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்ததை அந்த ஒப்பீடு காட்டியது. இது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

பொய்த்தோற்றமுள்ள இந்த உலகை நிலையானது என்று கருதி அறியாமையினால் மக்கள் துன்புறுவதைக் கண்டு கதாதரன் மிகவும் வருந்தினான். இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்டதன் பின் அவன் தன் வாழ்க்கையை வேறுவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்என்று எண்ணி அதற்கேற்ப வாழ முயன்றதில் என்ன வியப்பு இருக்கிறது.

பதினொன்று பன்னிரெண்டு வயது பாலகனுக்கு இத்தகைய நுண்ணறிவு இருக்க முடியுமா என்று வாசகர்கள் கேட்கலாம். 

அதற்கு விடை இது தான். கதாதரன் சாதாரணச் சிறுவன் அல்லன். வயதுக்கு மீறிய அறிவுடனும் மன அமைப்புடனும் ஆற்றல்களுடனும் பிறந்தவன் அவன். 

ஆகையால் சிறியவனாக இருந்த போதிலும் இயல்பை மீறிய ஆற்றல் அவனிடம் இருந்ததில் வியப்பொன்றுமில்லை. 

ஏட்டுக்கல்வியின் மீது வெறுப்பு வளர்ந்து வந்தாலும் கதாதரன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தவில்லை. தாய்மொழி நூல்களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் பயிற்சி பெற்றான். ராமாயணம், மகாபாரதம் போன்ற பல நூல்களை ஆழ்ந்த பக்தியுடன் இனிமையாக வாசிப்பான். மக்கள் அவற்றை க் கேட்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். எளிய உள்ளம் படைத்த எழுத்தறிவில்லாத அந்த கிராம மக்கள், கதாதரன் நூல்களை வாசிப்பதைக்கேட்பதிலும் ஆர்வம் காட்டினர். 

கதாதரனும் அவர்களை மகிழ்விப்பதில் இன்பம் கண்டான். சீதாநாத் பைன், மதுஜீகி போன்றவர்கள் அவனைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்து பிரகலாத சரிதம், துருவ சரிதம் மற்றும் ராமாயணம் , மகாபாரதம் போன்ற நூல்களை வாசிக்கக்கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த நூல்களைத் தவிர தேவதேவியரைப் பறறி அந்தப் பகுதியைச்சேர்ந்த கவிஞர்கள் எழுதிய கதைப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. 

பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் தேவதேவியர் தங்கள் உண்மை வடிவத்தைக் காட்டியருளிய அந்தக் கதைகளையும் இறைவனது திருவிளையாடல்களையும் கதாதரன் கேட்டு இன்புற்றான். இதற்குச் சான்றாக தாரேகேசுவரரின் திருஅவதாரம்,யோகாத்யாவைப் பற்றிய காவியம், வனவிஷ்ணுபூதரின் மதன் மோகனைப் பற்றிய கதைகள் முதலியவற்றைக்கூறலாம். 

கதாதரனுக்கு இவற்றை ஒரு முறை கேட்டால், போதும் மனப்பாடமாகி விடும். அவனது அசாதாரண நினைவாற்றல் இதற்குத்துணை செய்தது. சில வேளைகளில் கதைகளின் கையெழுத்துப் பிரதியோ அச்சப்பிரதியோ கிடைத்தால் அவற்றை எழுதி வைத்துக்கொள்வான்.காமார் புகூர் வீட்டில் தேடிய வேளையில் கதாகரனால் இவ்வாறு எழுதப்பட்ட ராமகிருஷ்ணாயனம்,யோகாத்யா,ஸீபாஹீ போன்ற இசைப்பாடல் தொகுப்புகளைக் கண்ட போது இந்த உண்மை தெளிவாயிற்று. 

கிராம மக்கள் விரும்பியபோதெல்லாம் இந்தக் கதைகளை வாசித்தும் பாடிக்காட்டியும் அவர்களை கதாகரன் மகிழ்வித்தான் என்பதில் ஐயமில்லை.

கதாகரனுக்குக் கணிதத்தின் மீதிருந்த ஆர்வமின்மையை முன்னரே கண்டோம்.

சில காலம் பள்ளிக்குச் சென்ற பின் அவன் கணிதத்திலும் சிறிது முன்னேற்றம் காடடினான். கணித வாய்ப்பாடுகள் சிலவற்றை மனப்பாடம் செய்திருந்தான். எளிய கூட்டல், பெருக்கல்.வகுத்தல் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றான். அவனது பரவச நிலை அனுபவங்களுக்குப் பிறகு அவன் விரும்பிய நேரங்களில் பள்ளி செல்லவும், விரும்பிய பாடத்தைப் படிக்கவும் ராம்குமார் அவனை அனுமதித்தார். ஏனெனில் கதாதரனின் பரவச நிலைகளுக்குக் காரணம் வாய்வுக்கோளாறு என்றே ராம்குமார் நம்பினார்.

நோயால் அவதிப்படுகின்ற அவனை மேலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணினார் அவர். ஆசிரியரும் அவனை எதற்காகவும் வற்புறுத்தவில்லை. ஆகையால் பள்ளிப்படிப்பில் கதாதரனின் முன்னேற்றம் சிறிதளவே இருந்தது.

கதாதரனுக்கு வயது பன்னிரண்டு ஆகியது.

ராமேசுவரருக்கு இருபத்திரண்டு வயது. தங்கை சர்வமங்களாவிற்கு வயது ஒன்பது. 

காமார்புகூருக்கு அருகிலுள்ள கௌர்ஹாடியைச்சேர்ந்த ராம்சதய் பந்த்யோபாத்யாயரின் தங்கையை ராமேசுவரருக்குத் திருமணம் செய்து வைத்தார் ராம்குமார். சர்வமங்களாவை ராம்சதய் திருமணம் செய்து கொண்டார். அதனால் வரதட்சணைக் கவலை இல்லாமற் போய் விட்டது.

இப்போது ராம்குமாரின் வீட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது.


  

திருமணமாகி நீண்ட நாளாகியும் கருத்தரிக்காமல் இருந்ததால் ராம்குமாரின் மனைவியை மலடி என்றே எல்லோரும் எண்ணியிருந்தனர். 

ஆனால் அதிசயமாக இப்போது அவள் கருவுற்றாள். அது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருந்தாலும் அவள் கருவுற்றால் இறந்து விடுவாள் என்று ராம்குமார் ஆரூடம் கூறியிருந்தது 

இது தெரிந்திருந்ததால் எல்லோரும் கவலை கொண்டனர். அதற்கேற்றாற் போன்ற பல நிகழ்ச்சிகளும் அந்த வீட்டில் நடைபெற்றன. 

ராம்குமாரின் மனைவி கருவுற்றதன் பின்னர் திடீரென ராம்குமாரின் வருமானம் குறையத் தொடங்கியது. உடல் நலம் வேகமாகக் குன்றத் தொடங்கியது. முன்னைப்போல் சுறுசுறுப்பாக அவரால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. ராம்குமாரின் மனைவியின் நடைமுறைகள் முற்றிலும் விபரீதமாயின. 

கூதிராமின் காலத்திலிருந்தே அந்தக் குடும்பத்தில் நியதி ஒன்று இருந்து வந்தது.

உபநயனம் ஆகாதவர்கள் , நோயாளிகள் ஆகியோரைத் தவிர வேறு யாரும் ஸ்ரீரகுவீரரின் பூஜை முடியும் வரை எதுவும் உண்ணக்கூடாது என்பதே அந்த நியதி. 

ராம்குமாரின் மனைவி இப்போது அந்த நியதியை மீறினாள். இதனால் ஏதாவது தீங்கு நேரலாம் என்று அஞ்சி குடும்பத்தினர் கூறிய மறுப்புகளை அவள் பொருட்படுத்த வில்லை. 

சிறு விஷயங்களுக்கும் வீட்டிலுள்ள அனைவரிடமும் சண்டையிட்டாள். கடும்பத்தில் மனக்கசப்பு வளர்ந்தது. சந்திராவும், ராம்குமாரும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவள் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. 

கருவுற்றப் பெண்ணிடம் இயல்பாகத் தோன்றும் மாறுதல் இது என நினைத்து அவர்களும் அவளை அவள் போக்கில் விட்டு விட்டனர். அந்த தெய்வீகக் குடும்பத்தில் இருந்து வந்த அமைதி நீங்கி ஒற்றுமை குலையலாயிற்று.

ராமேசுவரர் நன்கு படித்திருந்தும் அவரால் அதிகம் சம்பாதிக்க இயலவில்லை.குடும்பத்தில் உள்ளோரின் எண்ணிக்கை கூடியது. ஆனால் வருமானம் குறைந்தது. முன்பிருந்த வசதியான வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ராம்குமார் மிகவும் கவலையுற்றார். எவ்வளவோ முயன்றும் அவரால் இதற்கு ஒரு தீர்வு காண முடியவில்லை. 

ஏதோ ஓர் ஆற்றலால் தடுக்கப்படுவது போன்று அவரால் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போயின.தொடர்ச்சியான கவலைகள் குடும்பத்தை ஒரு சுமையாக்கிவிட்டது. இத்தகைய கவலைகளுடன் நாட்களும் மாதங்களும் நகர்ந்தன. அவரது மனைவியின் மகப்பேறு காலம் நெருங்கியது. அவளது விதியை நினைத்து மனம் நோவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாமல் திகைத்தார் ராம்குமார்.

1849-ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். ஈன்ற மறுகணம் அதன் முகத்தைப் பார்த்தவாறு அந்த அறையிலேயே அவள் தன் உயிரை நீத்தாள். அந்த தெய்வீகக் குடும்பத்தை ஏழ்மையும் துயரமும் சூழ்ந்து கொண்டன.


வாலிபத்தின் வாசலில்


மனைவியின் மறைவிற்கு ப் பிறகும் ராம்குமாரின் துரதிர்ஷ்டம் தொடர்ந்தது. நாளுக்கு நாள் வறுமையும் துயரமும் அவரை வாட்டின.பிற வீடுகளில் அவர் செய்து வந்த பூஜை மற்றும் சடங்குகளுக்கான காணிக்கையும் அன்பளிப்புகளும் படிப்படியாகக்குறைந்தன. 

லட்சுமி ஜாலாவிலுள்ள சிறிய வயலில் போதுமான நெல் விளைந்ததால் உணவுப் பிரச்சனை இல்லை. 

ஆனால் துணி முதலிய அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம் அதிகமாகியது. 

வயோதிகத் தாய்க்கும், தாயை இழந்த குழந்தையான அட்சயனுக்கும் தினமும் பால் தேவைப்பட்டது. பாலுக்கும் பிற தேவைகளுக்குமாவது கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ராம்குமார் கடனில்மூழ்கத் தொடங்கினார் .நிலைமையைச் சீராக்க எவ்வளவு முயன்றும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அப்போது அவரது நண்பர்கள் பலர், கிராமத்தை விட்டு எங்காவது நகரங்களுக்குச் சென்றால் அதிகமாகப் பொருளீட்ட முடியும் என்று ஆலோசனை கூறினர். 

அதன் படி காமார்புகூரிலிருந்து கிளம்ப அவர் முடிவு செய்தார். அவரது இந்த முடிவிற்கு பணப்பிரச்சனைமட்டும் தான் என்று சொல்லி விட முடியாது.

முப்பது ஆண்டுகள் தன் வாழ்க்கையில் துணையாக இருந்த மனைவியின் நினைவுகளிலிருந்து விடுபடவும் அவர் விரும்பினார். அவளது நினைவுகள் நிறைந்திருந்த இந்த வீட்டிலிருந்து நீங்கினால் தனக்கு அமைதி கிட்டும் என்று நம்பினார்.

காமார்புகூரை விட்டுப் புறப்பட முடிவு பின்னர் கல்கத்தா, பர்த்வான்ஆகிய இரு நகரங்களில் எங்கு அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ராம்குமாருக்குத் தெரிந்தவர்களும் சிகோரைச்சேர்ந்தவர்களுமான ராம்தன்கோஷ் மற்றும் பலர் கல்கத்தா சென்று தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்டதாக ராம்குமாரின் நண்பர்கள் கூறினர். 

கல்வி, அறிவுத்திறம்,சீலம் என்று எல்லாவிதத்திலும் ராம்குமார் அவர்களை மிஞ்சியவர். ஆகவே ராம்குமாருக்கு கல்கத்தாவில் நல்லவாய்ப்புகள் அதிகம் என்று அனைவரும் கூறினர். 

அதன் பின் கல்கத்தா செல்ல முடிவு செய்தார் ராம்குமார்.

சில நாட்களுக்குப் பின்னர் குடும்பப்பொறுப்பை ராமேசுவரரிடம் ஒப்படைத்து விட்டுக் கல்கத்தா சென்றார். 

அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத்தொடங்கி சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கலானார்.

ராம்குமாரின் மனைவியின் மறைவுக்குப் பின்னர் குடும்பத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சந்திராவின் வேலைப்பளு அதிகமாகியது. ராம்குமாரின் சிறுகுழந்தை அட்சயனைக் கவனிப்பதிலிருந்து வீட்டின் எல்லா வேலைகளையும் அவளே செய்ய வேண்டியிருந்தது. 

ராமேசுவரரின் மனைவி தன்னால் முடிந்த அளவு உதவ முயன்றாள். அவள் மிகவும் சிறிய வயதினளாக இருந்ததால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. 

ஸ்ரீரகுவீரர் சேவை, அட்சயனைக் கவனித்துக் கொள்ளல் சமையல் வீட்டு வேலைகள் என்று நாள் முழுவதம் சந்திரா உழைத்தாள். ஒரு நிமிட ஓய்வு கூடக் கிடைக்கவில்லை. வயதுவேறு ஐம்பத்தெட்டு ஆகிவிட்டிருந்ததால் அதிகக் களைப்பை உணரலானாள். ஆனாலும் ஸ்ரீரகுவீரரின் திருவுளம் இது தான் என்பதை எண்ணி எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேலைகளைச் செய்துவந்தாள்.

குடும்பத்தின் வரவுசெலவுகளை இப்போது ராமேசுவரர் கவனித்தார். வரவு செலவுகளைச் சீராக்கி, குடும்பத்தை வசதியாக வாழச் செய்வது பற்றி அவர் சிந்தித்தார். 

வசதியான வாழ்க்கை வாழ அவரது படிப்பு உதவவே இல்லை. இத்தனைக்கும் அவர் முன்பை விட அதிகம் சம்பாதித்தார். ஆனால் எதையும் திட்டமிட்டுச் செயவதில்லை. 

சாதுக்களையோ சாதகர்களையோ சந்திக்க நேர்ந்தால் நேரம் போவதே தெரியாமல் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர்களுக்குத்தேவையான பொருட்களைத் தயக்கமின்றிக் கொடுத்து விடுவார். எனவே அவரால் தமது வருமானத்தில் எதையும் சேமிக்கவோ குடும்பக் கடனை அடைக்கவோ முடியவில்லை. 

குடும்பத்தின் இன்றியமையாத தேவைகளைச் சமாளித்து வந்தார். எப்படியும் ஸ்ரீரகுவீரர் குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்று கூறிய படியே வரவுக்கு மேல் செலவு செய்து கொண்டு கவலையற்று வாழ்ந்தார்.

ராமேசுவரர் கதாதரனை மிகவும் நேசித்தார். ஆனால் அவனது படிப்பைப் பற்றி மட்டும் அவர் எந்தக் கவலையும் படவில்லை.

அவருடைய இயல்பே அது தான் .மேலும் பல இடங்களுக்குச் சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டியிருந்ததால் அதற்கான நேரமும் கிடைக்கவில்லை. கதாதரன் தவறான பததையில் செல்லமாட்டான் என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் அந்த இளம் வயதிலேயே கதாதரனிடம் குடிகொண்டிருந்த ஆன்மீகச் சிந்தனைகளும் நன்னெறியும் தான். கிராமத்து ஆண்களும், பெண்களும் தன் தம்பியிடம்முழுநம்பிக்கை வைத்து அவனை நேசித்ததை க் கண்ட போது ராமேசுவரரின் நம்பிக்கை உறுதியாயிற்று. 

உண்மையிலேயே நல்லவனாகவும் ஒழுக்க சீலனாகவும் இருந்தாலன்றி எல்லோருடைய மனங்களிலும் இவ்வளவு தூரம் அவன் இடம் பெற முடியாத என்பதை ராமேசுவரர் உணர்ந்திருந்தார். 

எனவே கதாதரனை அவன் போக்கிலே விட்டுவிட்டு, சிறப்பாக அமையப்போகின்ற அவனது எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருந்தார். அவனைப்பற்றி எவ்வித கவலையும் அவருக்கு இல்லை. ராமேசுவரர் இப்படி இருந்தது கதாதரனுக்கு விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லும் சுதந்திரத்தை அளித்தது.

இப்போது கதாதரனுக்கு வயது பதின்மூன்றாகி விட்டிருந்தது.  


MAIN PAGE (TOP)

image61

கிராமத்துப் பெண்களுடன்

கிராமத்துப் பெண்களுடன்

  

இளம் வயதிலேயே தனது கூரிய அறிவினால் பிறர் செயல்களுக்கான அடிப்படை நோக்கத்தை அவனால் அறிந்து கொள்ள மடிந்ததாகக் கண்டோம். பள்ளியில் படிப்பதும் தேர்ச்சி பெற்று பட்டங்களைப் பெறுவதும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்பதை அவன் கண்டு கொண்டான். உலகியல் இன்பங்களுக்காக இத்தகைய பயிற்சிகளைிலும் முயற்சிகளிலும் தங்கள் சக்தியைச் செலவிடுகின்ற யாரும் தன் தந்தையைப்போல் சக்திவாதியாகவோ ஒழுக்கசீலராகவோ தர்மநிதிஷ்டராகவோ இருக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தான். 

தன்னலம் கண்ணை மறைக்க மண்ணுக்கும் பொன்னுக்கும் அடித்துக்கொண்டு சில குடும்பங்கள் தங்களுக்கள் வீடு, நிலம் முதலியவற்றை அளந்து பிரித்து, இந்தப்பக்கம் என்னுடையது, அந்தப்பக்கம் உன்னுடையது என்றெல்லாம் சண்டையிட்டுப் பகைவர்களாவர். ஒரு வேளை ஓரிருநாட்கள் அவற்றை அனுபவித்து விடுவர். 

ஆனால் அந்தோ! சாவு அவர்களைக் கொண்டு போய்விடும். இவற்றையெல்லாம் கண்முன் கண்டிருக்கிறான் கதாதரன். எல்லா துன்பங்களுக்கம் அடிப்படைக்காரணம் பணமும் புலனின்ப ஆசையுமே என்பது அவனுக்குத் தெள்ளத்தெளிவாகப் புரிந்திருந்தது. 

அத்தகைய பணத்தைச் சம்பாதிப்பதற்கான கல்வியை அவன் வெறுத்து ஒதுக்கியதில் என்ன வியப்பு இருக்கிறது? பக்தியையே வாழ்க்கையின் தலையாய குறிக்கோளாகக் கருதினால் அவன் தந்தையைப்போல் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளான சாதாரண உடை, எளிய உணவு இவற்றில் திருப்தி கண்டான். எனினும் நாள்தோறும் சிறிதுநேரம் பள்ளி சென்று வரத்தவறவில்லை. பிற மாணவர்கள் மீது அவன் வைத்திருந்த அன்பே அதற்குக்காரணம் .

ஸ்ரீரகுவீரரின் பூஜையிலும் வீட்டுவேலைகளில் தன் தாய்க்கு உதவுவதிலும் நீண்ட நேரத்தைக் கழித்தான்.

கதாதரன் இவ்வாறு வெகுநேரத்தை வீட்டில் கழித்ததால் கிராமத்துப் பெண்களுக்கு அடிக்கடி அவனைச் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.

வீட்டுவேலைகள் முடிந்ததும் பெண்கள் வந்து, அவனிடம் பாடவோ பக்தி நூல்களைப் படிக்கவோ சொல்வார்கள். கதாதரனும் தன்னால் முடிந்த அளவு அவர்களின் ஆவலை நிறைவேற்றுவான். தாய்க்கு உதவுவதில் கதாதரன் மும்முரமாக இருந்தால், புராணங்கள் வாசித்துக் காண்பிக்கவோ பாடவோ அவனுக்கு நேரம் கிடைக்கவேண்டும். என்பதற்காக அந்தப்பெண்களே அந்த வேலைகளை எல்லாம் செய்வதும் உண்டு. இது ஓர் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டிருந்தது.

கதாதரனின் பாடல்களையும் வாசிப்பையும் நீண்ட நேரம் கேட்க வேண்டும் என்பதற்காக வீட்டு வேலைகளை வேகவேகமாக முடிப்பார்களாம் கிராமப்பெண்கள்! அந்த அளவுக்கு அவர்களைக் கவர்ந்திருந்தான் கதாதரன்.

காமார்புகூரில் வைணவர்கள் அதிகம். ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் யாராவது ஒருவரின் வீட்டில் பாகவத பாராயணம் ,நாம சங்கீர்த்தனம் போன்ற ஏதாவதொரு நிகழ்ச்சி நடைபெற்ற வண்ணம் இருக்கும். இவற்றையே தொழிலாகக்கொண்ட மூன்று யாத்ரா குழுவினரும் ஒரு பவுல் குழுவும் ஓரிரு கவி குழுவினரும் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் தவறாமல் அங்கு சென்று விடுவான் கதாதரன். அங்கு நிகழ்பவற்றை அப்படியே மனத்தில் பதித்துக்கொள்வான். அவனது அபாரமான நினைவாற்றலைப்பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த நாடகங்களை, பாடல்களை அப்படியே இந்தப்பெண்களிடம் நடித்துக் காட்டுவான். பாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரலை ஏற்றி இறக்கி, பல்வேறு பாத்திரங்களைத் தான் ஒருவனே நடித்து எல்லோரையும் மகிழவைப்பான். எப்போதாவது தாயோ வேறு யாராவதோ கவலையுற்றிருப்பதைக் கண்டால் போதும், உடனே ஒரு நகைச்சுவைப் பாத்திரமாகி விடுவான். ஏதாவதொரு நாடகத்திலுள்ள நகைச்சுவைப் பகுதியை நடித்துக் காண்பிப்பான். அல்லது கிராமத்திலுள்ள யாராவது ஒருவரின் நடை உடை பாவனைகளை அப்படியே நடித்துக்காட்டி அனைவரையும் வயிறு வெடிக்கச் சிரிக்க வைப்பான்.


கதாதரன் கிராமப்பெண்களின் வாழ்வில் நிறைந்திருந்தான். அவனது பிறப்பின் போது கூதிராமுக்கும் சந்திராதேவிக்கும் ஏற்பட்ட அற்புதக்காட்சிகளைப் பற்றியும் கனவுகளைப் பற்றியும் அந்தப் பெண்கள் கேள்விப்பட்டிருந்தனர். பரவச நிலைகளில் திளைக்கும்போது அவனிடம் ஏற்படுகின்ற வியக்கத்தக்க மாறுதல்களை நேரடியாகக் கண்டிருக்கின்றனர்.அவனது ஆழ்ந்த பக்தி, தன்னையே மறந்துஅவன் கதைகள் கூறும் லயம், இனிய குரல், எளிமை போன்ற பண்புகள் அவர்களை அவன் மீது அன்பும் பாசமும்கொள்ளச் செய்தது இயல்பு தான். தர்மதாஸ் ராஹாவின் மகளான பிரசன்னமயியும் பிற முதிய பெண்களும் கதாதரனிடம் பாலகோபாலனையே கண்டதாகவும் அதனால் அவனைத் தங்கள் குழந்தைகளை விட அதிகமாக நேசித்ததாகவும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.

இளைய பெண்கள் அவனை பகவான் ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணரின் அம்சாவதாரமாகக் கருதி தங்கள் ஆத்ம நண்பனாகக் கொண்டாடினர். 

இந்தப்பெண்களுள் பலர் வைணவக் குடும்பத்தினர். நம்பிக்கையே அவர்களது சமயவாழ்க்கையின் அடிப்படை. எனவே உயர்ந்த பல குணங்களையும் தோற்றத்தையும் உடைய கதாதரனைக் கடவுளாக அவர்கள் நம்பியதில் வியப்பில்லை. அந்த நம்பிக்கையின் விளைவாகத் தங்கள் அந்தரங்க எண்ணங்களைக்கூட அவனிடம் எவ்விதத் தயக்கமுமின்றி கூறி அவர்கள் அறிவுரை கேட்பதுண்டு. அதன் படி நடக்கவும் முயற்சி செய்தனர். 

அப்போதெல்லாம் கதாதரனும் அவர்களில் ஒருவனாகவே நடந்து கொள்வான். அந்தப்பெண்களும் அவனை ஒரு பெண்ணாகவே கருதினர்.

சில நேரங்களில் பெண்களைப்போல வே்டணிந்து கொண்டு அவர்களைப்போல் நடித்துக் காட்டுவான் கதாதரன். இவ்வாறு கிராமப்பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ராதை, அவளது தோழி பிருந்தை போன்றோராகத்தோன்றி நடிப்பதுண்டு. அந்தச் சமயத்தில் நடை உடை பாவனைகளில் அப்படியே ஒரு பெண்ணைப்போலத் தோன்றுவான். மிகவும் நெருங்கியவர்கள் கூட அந்த வேளையில் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாது என கிராமப்பெண்கள் கூறினர். 

சில நேரங்களில் பெண்களைப்போல் வேடமிட்டுக்கொண்டு இடுப்பில் ஒரு குடத்துடன் ஹல்தார்புகூரிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காகச் செல்வது போல ஆண்கள் முன்னால் அவன் ஆடி அசைந்து நடந்து செல்லும் போது அவனை யாரும் கதாதரன் என்று கூறவே முடியாது.அப்போது ஒரு பெண்ணாகவே மாறிவிடுவான். பெண்களின் பல்வேறு பாவனைகள் அவன் எந்த அளவிற்கு நுணுக்கமாக கவனித்துள்ளான் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

காமார்புகூரில் வாழ்ந்த சீதாநாத் பைன் என்னும் செல்வந்தரைப்பற்றி முன்பே கூறியுள்ளோம். அவருக்கு ஏழு பிள்ளைகளும் எட்டு பெண்களும் இருந்தனர். திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் சீதாநாத் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். அன்றாட ச் சமையலுக்கு அவர்கள் வீட்டில் பத்து அம்மிகளில் மசாலா அரைப்பார்களாம். 

சீதாநாதரின் தூரத்து உறவினர்கள் பலரும் அவரது வீட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வந்தனர். வணிகர்களாகிய அவர்கள் வாழ்ந்து வந்த அந்தப்பகுதி வணிகர் குடியிருப்பு என்று அழைக்கப்பட்டு வந்தது.

சீதாநாதரின் வீடு கூதிராமின் வீட்டிற்கு அருகில் இருந்ததால் சீதாநாதரின் மனைவியும் புதல்விகளும் அந்தக்குடும்பத்தின் பிற பெண்களும் ஓய்வு நேரங்களில் சந்திராதேவியின் வீட்டிற்கு வந்து கதாதரனின் ஆடல்பாடல்களை ரசிப்பதுண்டு. அவனைத்தங்கள் வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச்சென்று பெண்வேடமிட்டு நடிக்கச்செய்தும் மகிழ்வார்கள்.

சீதாநாதரின் உறவுப்பெண்கள் பலர் பிறந்தகத்தைத்தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே அவர்கள் சந்திரா தேவியின் வீட்டில் அன்றாடம் நிகழ்கின்ற ஆடல் பாடல்களைக்காணவோ கேட்கவோ முடிவதில்லை. ஒரு வேளை அதற்காகத்தான் கதாதரனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் போலும்.சந்திராதேவியின் வீட்டிற்குச் செல்ல இயலாத பலரும் சீதாநாதரின் வீட்டில் வந்து கதாதரனின் நடிப்பையும் புராணங்களை அவன் படிப்பதையும் கண்டு ரசிப்பர். 

சீதாநாத் பைனும் கதாதரனை மிகவும் நேசித்தார். அவர் வீட்டு ஆண்கள் அனைவரும் கதாதரனின் ஒழுக்கத்தை நன்றாக அறிந்திருந்தனர். எனவே தங்கள் வீட்டுப்பெண்கள் அவனுடன் பழகுவதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஒருவருக்கு மட்டும் கதாதரனின் இந்த ஆட்டமும் பாட்டும் அவனைச்சுற்றிப்பெண்கள் கூடுவதும் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் துர்க்காதாஸ் பைன். அவரும் வணிகர் குடியிருப்பைச்சேர்ந்தவர் தாம்.

கதாதரனை அவர் உயர்வாக எண்ணியிருந்தார். அவனை நேசிக்கவும் செய்தார். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் பெண்கள் பர்தா முறையைத் தளர்த்துவதை அவர் சிறிதும் விரும்பவில்லை. 

எனவே தன்வீட்டுப்பெண்கள் இதில் எல்லாம் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கவில்லை. இதை அவர் ஒரு பெருமையாகக் கருதினார்.

தன் வீட்டுப் பெண்களையோ தன் வீட்டின் உட்பகுதியையோ பிறர் கண்டதில்லை என்று சீதாநாதரிடமும் பிறரிடமும் பெருமையாகக் கூறிக்கொள்வார். வீட்டுப்பெண்கள் பர்தா முறையைத் தளர்த்துவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற சீதாநாதரையும் பிறரையும் தாழ்வாகப்பேசுவார்.

ஒரு நாள் துர்க்காதாஸ் இவ்வாறு தன் உறவினர் ஒருவரிடம் கூறிப்பெருமையடித்துக்கொண்டிருந்த போது தற்செயலாக கதாதரன் அங்கு வந்தான். அவர் கூறியது அவனுக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது. 

உடனே அவன்.”ஐயாநீங்கள் என்ன சொல்கிறீர்கள்? பெண்களைப் பர்தா முறையினால் மட்டும் பாதுகாத்துவிட முடியுமா? ஒழுக்கத்தினாலும் பக்தியினாலுமே அவர்கள் தூயவர்களாள வாழ முடியும். அது போகட்டும், நான் விரும்பினால் உங்கள் வீட்டின் உட்பகுதிக்குச் சென்று பெண்களுடன் பழக என்னால் முடியும்” என்று கூறினான்.

துர்க்காதாஸ் மேலும் செருக்குடன் அதையும் தான் பார்ப்போமே” என்றார். கதாதரனும் விடாமல், சரி” பார்த்துவிடலாம்” என்று கூறிவிட்டுச்சென்றான். 

சில நாட்கள் கழிந்தன.ஒரு நாள் மாலை நேரம் யாருக்கும் தெரியாமல் தன்னை ஓர் ஏழை நெசவாளிப்பெண்ணாக வேடமிட்டுக்கொண்டான் கதாதரன். தழையத்தழைய சாதாரணச்சேலை ஒன்றை உடுத்திக்கொண்டான். ஓரிரு சாதாரண ஆபரணங்களையும் கையில் வெள்ளிக்காப்புகளையும் அணிந்து கொண்டான். கையில் ஒரு கூடையையும் எடுத்துக்கொண்டான். முக்காடிட்டிருந்த புடவையை, முகத்தைச்சற்று மறைக்கும்படி இழுத்துவிட்டுக்கொண்டான். சந்தைப் பக்கத்திலிருந்து தயங்கிய நடையுடன் துர்க்காதாஸ் வீட்டிற்கு முன் வந்து சேர்ந்தான். 

அப்போது இருள் கவியத் தொடங்கியிருந்தது. துர்க்காதாஸ் தன் நண்பர்களுடன் வீட்டின் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தார். கதாதரன் அவரிடம் நேராகச் சென்று தன்னை ஒரு நெசவாளிப்பெண் என்று அறிமுகம் செய்து கொண்டான்.

நூல் விற்பதற்காகப் பிற பெண்களுடன் சந்தைக்கு வந்ததாகவும், அவர்கள் தன்னை விட்டுவிட்டுச் சென்று விட்டதாகவும் , அன்றிரவு மட்டும் அவர் வீட்டில் தங்க அனுமதி அளிக்கும் படியும் மிகவும் பணிவுடன் கேட்டான்.

துர்க்கா தாஸ் அவனை நம்பிவிட்டார். இருப்பினும் சொந்த கிராமம் எது என்பவை போன்ற ஓரிரு கேள்விகளைக்கேட்டார். அதற்கெல்லாம் கச்சிதமாகப் பதிலளித்தான் கதாதரன். திருப்தியடைந்த துர்க்காதாஸ், அவனிடம் ,”சரியம்மா கலங்க வேண்டாம், உள்ளே போ, அங்கிருக்கின்ற பெண்கள் உனக்குத் தங்க இடம் தருவார்கள். என்று கூறினார். கதாதரனும் நன்றியுடன் அவரை வணங்கிவிட்டு வீட்டின் உட்புறத்திற்குச் சென்றான்.

துர்க்காதாஸின் வீட்டின் உட்புறத்திற்குச் சென்ற கதாதரன் அந்தப்பெண்கனிடமும் அதே கதையைத் திரும்பக்கூறி அவர்களையும் நம்பச் செய்து விட்டான். அவனது இனிய பேச்சும் இளம் வயதும் அந்தப்பெண்களை மிகவும் கவர்ந்தன. அந்தப்பெண்களும் அவனைத் தங்களுடன் தங்க அனுமதித்தனர். உண்பதற்கு அவலும் இனிப்புப் பொரியும் அளித்தனர். படுப்பதற்கும் ஓரிடத்தைக் காட்டினர். 

கதாதரனும் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கொண்டான். பொரியை சாப்பிட்டவாறே அங்கிருந்த பெண்களையும் அறைகளையும் கூர்ந்து கவனித்தான். அவர்களின் உரையாடல்களைக்கேட்டு அதில் பங்குகொள்ளவும் செய்தான். இவ்வாறு பேச்சும் சிரிப்புமாக இரவுவெகுநேரமாகி விட்டிருந்தது.

 இருட்டி நெடுநேரமாகியும் கதாதரன் வீடு திரும்பாததைக் கண்ட சந்திராதேவி அவனைத்தேடுவதற்காக ராமேசுவரரை அனுப்பினாள். அவன் வழக்கமாக செல்லும் வணிகர் குடியிருப்புக்கு வந்த ராமேசுவரர் முதலில் சீதாநாத் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவன் இல்லையென அறிந்ததும் துர்க்காதாஸ் வீட்டிற்கு அருகில் வந்து, கதாயீ, கதாயீ என்று உரத்த குரலில் அழைத்தார். 

அண்ணனின் குரலைக் கேட்டதும் கதாதரன் வெகுநேரமாகி விட்டதை உணர்ந்தான். வீட்டின் உட்பகுதியிலிருந்த படியே,இதோ வருகிறேன் அண்ணா” என்று கூவிக் கொண்டே வெளியே ஓடினான். முதலில் துர்க்கா தாஸிற்கு எதுவும் புரியவில்லை. 

புரிந்த போது இந்தச் சிறுவன் தன்னையும் தன் குடும்பத்தையும் முட்டாளாக்கி விட்டானே எனற அவமானமும் கோபமும் அவரை ஒரு கணம் ஆட்கொண்டன. 

ஆனால் அடுத்த வினாடியே கதாதரனின் நடிப்புத் திறமையை எண்ணிச் சிரித்து விட்டார். நடந்ததை எல்லாம் மறுநாள் அறிந்த சீதாநாதரும் மற்ற உறவினர்களும் கதாதரன் துர்க்காதாஸின் தற்பெருமைக்கு அடி கொடுத்ததை எண்ணி மகிழ்ந்தனர். 

அன்று முதல் துர்க்காதாஸ் வீட்டுப்பெண்களும் சீதாநாதரின் வீட்டிற்கு கதாதரன் வந்தபோதெல்லாம் அங்குச்சென்று ஆடல் பாடல்களைக் கண்டு மகிழலாயினர்.

சீதாநாதர் வீட்டுப்பெண்களும் மற்ற வணிகர் பெண்களும் கதாதரன் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டிருந்தனர். சில நாட்கள் தொடர்ந்து அவன் வரவில்லை என்றால் உடனே அவனை அழைத்துவர ஆளனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் சீதாநாதரின் வீட்டில் பாடும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ அவன் பரவச நிலையில் மூழ்கி விடுவதுண்டு.இது அந்தப் பெண்களுக்கு கதாதரன் மீது பாசத்துடன் பக்தியையும் வளர்த்தது. இவ்வாறு அவன் பரவச நிலைகளில் ஆழ்ந்திருந்த போது அவனை ஸ்ரீசைதன்யராகவே ஸ்ரீகிருஷ்ணராகவோ எண்ணி பல பெண்கள் வழிபட்டதாகவும் தெரியவருகிறது. 

ஆண், பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் மற்றும் ஒரு தங்க ப் புல்லாங்குழல் இவற்றை எல்லாம் கூட அவனது வேடங்களுக்காக அவர்கள் வாங்கி வைத்திருந்தனர்.

நல்லொழுக்கம் .புனிதம்,அறிவுக்கூர்மை,சமயோசித புத்தி, அன்பு, எளிமை,பணிவு போன்ற நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்த கதாதரன் 

சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் எங்களில் வேறு சிலரும் 1893-ஆம் ஆண்டு காமார்புகூர் சென்றிருந்தோம். அப்போது சீதாநாத் பைனின் மகளான ருக்மிணியைச் சந்திக்க முடிந்தது. அப்போது அவருக்கு அறுபது வயதாகி விட்டிருந்தது. அவர் சொன்னதைக்கேட்டால் அவர்கள் வாழ்வில் கதாதரன் கொண்டிருந்த இடத்தைப்பற்றி வாசகர்கள் உணர முடியும். அவர் கூறினார்.

எங்கள் பழைய வீடுஇதோ வடக்கில் இருக்கிறது. எங்களுள் பலர் இப்போது உயிருடன் இல்லாததால் அந்த வீடு பராமரிக்கப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. எனக்குப் பதினேழு பதினெட்டு வயதிருக்கும்போது அது ஒரு செல்வச்செழிப்புமிக்க மாளிகையாகக் காட்சியளித்தது. என் தந்தை சீதாநாத் பைன், அவரது மூத்த, இளைய சகோதரர்களின் மகள்களையும் சேர்த்து நாங்கள், பதினேழு பதினெட்டு பெண்கள் அந்த வீட்டில் இருந்தோம். சிறுவனாக இருக்கும் போதே கதாதரன் எங்களுடன் விளையாடுவதுண்டு.

நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் வளர்ந்த பிறகும் கதாதரன் எங்கள் விட்டிற்கு வந்து போய் கொண்ருந்தான். அந்தச் சமயத்தில் சிறிது வளர்ந்தவனாக இருந்தும் வீட்டின் உட்பகுதிகளுக்கு வந்து செல்ல அவனுக்கு ச் சுதந்திரம் இருந்தது. 

அப்பா அவனை மிகவும் நேசித்தார்.அது மட்டுமல்ல. அவனை அவர் தன் இஷ்டதெய்வமாகவே கருதி அவன் மீது பக்தியும்,மரியாதையும் செலுத்தினார். யாராவது அவரிடம், இப்போது கதாதரன் சிறுவனல்ல, அவன் வளர்ந்துவிட்டான். 

உங்கள் வீட்டில் வயது வந்த பெண்கள் பலர் உள்ளனர், இன்னும் அவனை ஏன் உள்ளே அனுமதிக்கிறீர்கள்? என்று வினவினால் என் தந்தை, நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்,எனக்கு அவனைப்பற்றி நன்றாகத் தெரியும், என்று சட்டென்று கூறிவிடுவார். அவ்வளவு மதிப்பு அவருக்கு கதாதரனிடம் இருந்தது. அவர்களும் மேலும் எதுவும் சொல்வதற்கு அஞ்சி அகன்று விடுவார்கள்.ஆ! எத்தனை எத்தனை புராணக்கதைகள் அவன் எங்களுக்குக் கூறியிருக்கிறான்,! 

என்னென்ன வேடிக்கைகள் !என்னென்ன வினோதங்கள்! அவன் சொல்கின்ற கதைகளைக்கேட்டுக் கொண்டே நாங்கள் வீட்டு வேலைகளைச் செய்வோம். அவன் எங்களுடன் இருந்தபோது நாங்கள் பெற்ற இன்பத்தை எப்படி வார்த்தைகளால் விளக்க இயலும்? அவன் வரவில்லை என்றால் என்னவோ ஏதோவென்று கவலைப்படுவோம். அவனைப்பற்றிய விவரம், அறிய உள்ளம் துடிக்கும். உடனே எங்களுள் ஒருவர், தண்ணீர் கொண்டு வருவதையோ, வேறு ஏதோ ஒரு வேலையையோ சாக்குப்போக்காக வைத்துக்கொண்டு சந்திரா, வீட்டிற்குச் சென்று விஷயம், அறிந்து வருவோம். 

போனவள் செய்தி கொண்டு வரும்வரை எங்களுக்கு அமைதியே இருக்காது. அவனது ஒவ்வொரு சொல்லும் எங்களுக்கு அமுதமாக இனித்தது. அவன் வராத போதெல்லாம் அவனைப்பற்றி ப் பேசிக்கொண்டே நாள் முழுவதையும் கழிப்போம்,என்றெல்லாம் கூறிப்பரவசப்பட்டார் அந்த முதிய பெண்மணி.

பெண்கள் என்றல்ல. ஆண்கள், குழந்தைகள், என்று கிராமத்திலுள்ள அனைவரையும் கதாதரனின் இனிய இயல்பும் பல்வேறு திறமைகளும் கவர்ந்திருந்தன. 

புராணங்களைப் படிப்பதைக்கேட்டு ரசிப்பதற்காகவோ நாம சங்கீர்த்தனம், கேட்பதற்காகவோ மக்கள் எங்குக் கூடியிருந்தாலும் அங்கெல்லாம் கதாதரன் சென்று விடுவான். அவன் சென்று விட்டால் அந்த இடம் ஆனந்தச் சந்தையாகி விடும். அவன் புராணக்கதைகளைப் படித்துக்காட்டுவது போல் வேறு யாராலும் முடியாது. இறைவனின் பெருமை கூறும் பாடல்களை அவன் பாடத்தொடங்கி விட்டால் பக்திப்பேருணர்வில் அலைகள் பொங்கிப்பொங்கி அனைவரையும் மூழ்கடித்துவிடும். 

பக்தியில் தோய்ந்து குழைகின்ற அந்த இனிய குரல் வேறு யாருக்கும் கிடையாது என்றே கூறலாம். தாள இசைவுடன் வேறு யாரால் இப்படி நடனமாட முடியும்? நாடகம் என்று எடுத்துக்கொண்டால், ஆண், பெண், என்று அந்தப் பாத்திரங்களாகவே மாறி விடுவான். நகைச்சுவையானால் சூழ்ந்திருப்பவர்கள் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாக வேண்டியது தான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்களைப்புனைந்து பாடவோ, கதைகளைச் சொல்லவோ அவனைப்போல வேறு யாராலும் முடியாது. மாலையானதும் இளைஞர், முதியவர் என்ற பாகுபாடின்றி எல்லோரும் அவன் வரவை எதிர்நோக்கினர். கதாதரனும் மக்களைச் சந்திப்பதில் அவர்களை மகிழ்விப்பதிலும் ஆனந்தமடைந்தான்.

கதாதரனின் வேறோர் அபூர்வமான திறமும் மக்களை அவனிடம் ஈர்த்தது. அந்தச் சிறிய வயதிலேயே எந்தச் சிக்கலான வழக்கையும் பிரச்சனையையும் ஆராய்ந்து , தகுந்த நீதி வழங்கும் ஆற்றல் அவனிடம் இருந்தது. 

எனவே உலகியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஊரார் அவனது அறிவுரையை நாடி வருவர். அது போல, அவனது புனித வாழ்வினால் கவரப்பட்டும், கடவுள் புகழைப்பாடும் போது அல்லது இறைநாமத்தைக்கேட்கும் போது அவன் பாவ சமாதியில் ஆழ்வதைக் கண்டும் ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள் அவனை நாடினர். அவனது அறிவுரைகளைப்பின்பற்றி அவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேறினர்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க , கதாதரனை முற்றிலும் தவிர்த்தவர்களும் அந்த கிராமத்தில் இருந்தனர். கபடர்களும், வஞ்சகர்களும் அவனது அருகில் வர அஞ்சினர். 

ஏனெனில் கதாதரனின் கூரிய உட்பார்வை அவர்களது வெளிவேடத்தைக் கிழித்து அவர்களின் மனத்தில் குடிகொண்டிருக்கின்ற தீய வஞ்சக எண்ணங்களைக் கணத்தில் கண்டு விடும்.ஒளிவு மறைவு என்பது சிறிதுமற்ற அவன் இத்தகைய போலி வாழ்வு வாழ்வோரைக்கண்டால் உடனே அவர்களின் துர்நடத்தைகளை அம்பலப்படுத்தி விடுவான். எந்தக்கூட்டமாயினும் அவற்றைக்கூறத் தயங்கமாட்டான். சில வேளைகளில் அவர்களின் போலி நடவடிக்கைகளை பிறர் முன்னால் நகைச்சுவையுடன் நடித்துக்காட்டி அவர்களைத் தலைகுனியச் செய்து விடுவான். அவர்களுக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் அதை கதாதரன் மீது காட்ட முடியாது. ஏனெனில் கிராமமே அவன் பக்கம் அல்லவா இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே வழி அவனிடம் பணிந்து போவது தான். ஏனெனில் பணிவாக இருப்பவர்களிடம் அவன் எப்போதும் அன்பு காட்டி வந்தான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.கதாதரன் தன்னையொத்த சிறுவர்களின் மீதிருந்த அன்பின் காரணமாகத்தான் அன்றாடம் சிறிது நேரம் பள்ளிக்குச் சென்று வந்தான் என்று முன்னரே கூறியிருந்தோம்.வயது பதினான்கு ஆன போது அவனது பகதியும் பரவசநிலைகளும் அதிகரித்தன.

வயிற்றுப் பிழைப்பிற்கான கல்வியால் தனக்கு எந்தவித பயனுமில்லை என்பது அவனது உறுதியான முடிவாயிற்று.தன் வாழ்க்கை வேறு ஏதோ ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக ஏற்பட்டிருக்கிறது என்பதையும் தன் ஆற்றல் முழுவதையும் உண்மையை அடைவதற்காகச் செலுத்த வேண்டும் என்பதையும் இந்த வேளையில் கதாதரன் உணர்ந்தான். 

அந்த மகோன்னதமான லட்சியம் சில வேளைகளில் அவன் மனக்கண்முன் நிழற்சித்திரம் போலத்தோன்றும் 

அவனது மனம் பூரணமாகத் தயாராகாததாலோ என்னவோ , அதைப்புரிந்து கொள்ளவோ அது விரிக்கின்ற பொருளை அறிந்து கொள்ளவோ அவனால் இயலவில்லை. அதற்காக அவன் அதை அப்படியே விட்டுவிடவும் இல்லை.வருகின்ற வாழ்நாட்களை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும். என்ற கேள்வி மனத்தில் எழும்போதெல்லாம், பகவானிடம் பரிபூரண சரணாகதியுடன் காவித்துணி அணிந்து, வேள்வித் தீயின் அருகில் அமர்ந்து சாதனைகள் செய்வதும் பிச்சை எடுப்பதன மூலம் பெறப்பட்ட உணவை உட்கொள்வதுமாக எல்லா பற்றுக்களிலிருந்தும் விடுபட்ட பரிவிராஜக வாழ்க்கை ஒன்றை அவனது விவேக புத்தி சுட்டிக்காட்டும். 

அந்த விவேக புத்தி காட்டும் சித்திரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு மற்றோர் ஓவியம் அவன் மனத்தில் எழும். அது அவனது அன்புள்ளம் தீட்டுகின்ற ஓவியம்.

அந்த ஓவியம் தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தைச் சார்ந்த பிறரின் நிலை ஆகியவற்றை அவனுக்கு நினைவூட்டி நிற்கும். இப்படி விவேக புத்தியும் அன்புள்ளமும் தீட்டிக்காட்டிய சித்திரங்களுள் எப்போதும் அன்புள்ளத்தின் சித்திரமே வென்று அவனுள் நின்றது. 

அது கதாதரனிலிருந்த துறவு எண்ணத்தைக் கைவிடச்செய்தது. அதற்குப் பதிலாக தன் தந்தையைப்போல கடவுளையே நம்பி உலகியலில் ஈடுபட்டு இயன்றவரை தாய்க்கும் குடும்பத்தினருக்கும் உதவுமாறு அவனைத் தூண்டியது. தனது அறிவம் உள்ளமும் இவ்வாறு எதிர் திசைகளில் சென்று கொண்டிருந்ததால் குழம்பிய அவன் முழுப்பொறுப்பையும் ஸ்ரீரகுவீரரிடம் ஒப்படைத்து அவரது அருளாணையை எதிர்நோக்கிக் காத்திருந்தான். ஸ்ரீரகுவீரர் முற்றிலும் தன்னுடையவர் என்று பரிபூரணமாகக் கருதி அவரிடம் இதயம் நிறைந்த பக்தி கொண்டிருந்தான் கதாதரன். உரிய காலத்தில் தனது இந்தப்போராட்டத்திற்கு ஒரு நல்ல முடிவை அவர் தருவார் என்ற முழுநம்பிக்கையுடன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். இவ்வாறு அறிவிற்கும் உள்ளத்திற்கும் இடையில் போராட்டம் நேரும் போதெல்லாம் உள்ளமே வெற்றி கொண்டது. உள்ளத்தின் பாதையில் சென்றே அவன் எல்லாவற்றையும் செய்தான்.

மற்றெல்லா பண்புகளையும் விட கருணை என்னும் மகத்தான குணம் அவனது தூய உள்ளத்தை நிறைந்திருந்தது. கிராம மக்களின் சுகதுக்கங்களை அவன் தனதாகவே கருதினான். 

ஆகையால் உலகைத் துறக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றிய போதெல்லாம் எளிமையும் எல்லையற்ற அன்பும் கொண்ட அந்த கிராமமக்களின் நினைவும் அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவனைத் தடுத்தன. தன் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் அந்த எளிய கிராம மக்கள் தன்னை முன்னோடியாகக் கொண்டு உயர்ந்த குறிக்கோளை அடைவர்.என்பதும் தற்போது தன்னுடன் வைத்திருந்த உறவை எவ்வாறு ஆன்மீகஉறவாக அவர்கள் மாற்றிக்கொள்ள முடியும் என்பதும் கதாதரனுக்குத் தெரிந்தே இருந்தது. அவனது தன்னலமற்ற உள்ளமும், உனது நன்மைக்காக உலகைத் துறப்பதும் தன்னலம்” எதனால் எல்லோருக்கும் நன்மை உண்டாகுமோ அதனைச் செய்” என்றே அவனிடம் கூறியது.

படிப்பைப் பொறுத்த வரையில் வெறும் ஏட்டுப் படிப்பு தேவையில்லை என்றே கதாதரனின் அறிவும் உள்ளமும் ஒருமித்துக்கூறின.இருந்தாலும் தன்னை உயிருக்குயிராக நேசித்த கயா விஷ்ணு போன்ற நண்பர்கள் தன் நட்பை இழந்துவிடுவார்கள் என்பதற்காக அவன் பள்ளியை விட்டு விலகவில்லை. ஆனால் பள்ளியிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு ஒன்று அவனைத்தேடி வந்தது. கதாதரனின் நடிப்புத் திறமையை அறிந்திருந்த நண்பர்கள் அவனிடம் நாடகக்குழு ஒன்றை அமைத்து தங்களுக்குப் பயிற்சி தருமாறு கேட்டுக்கொண்டனர். கதாதரனுக்கும் இது பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டான். 

படிக்காமல் நாடகக்குழு அது.இது என்றெல்லாம் ஆரம்பித்தால் பெற்றோர்கள் அந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்கலாம் என்று கருதிய சிறுவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் நாடகப் பயிற்சிகள் செய்வதற்கு ஓர் இடம் தேடத் தொடங்கினர். 

மாணிக்ராஜாவின் மாந்தோப்பைத் தேர்ந்தெடுத்தான் புத்திசாலியான கதாதரன். பள்ளிக்குச் செல்லாமல் குறித்த நேரத்தில் தினமும் அங்குக் கூட முடிவு செய்தனர். திட்டம் தீட்டிய உடனேயே அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டனர். 

ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகங்கள் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மனப்பாடம் செய்வதற்குரிய பாடல்களையும் வசனங்களையும் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்தான் கதாதரன். 

முக்கியப் பாத்திரங்களில் நடிப்பதுடன் காட்சிகளின் விவரங்களையும் அவனே சிந்தித்து முடிவு செய்தான்.தடங்கல்கள் இன்றித்தங்கள் சிறிய நாடகக்குழு வளர்வது கண்டு சிறுவர்கள் மகிழ்ந்தனர்.மாந்தோப்பில் நடந்த இந்த நாடகங்களின் போதும் கதாதரன் அவ்வப்போது பாவ சமாதியில் ஆழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

நாடகத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டதால் கதாதரனின் ஓவியத் திறமை மேலும் வளர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிடவில்லை.ஒரு நாள் அவன் கௌர்ஹாட்டியில் வசிக்கும் தங்கை சர்வமங்களாவைின் வீட்டிற்குச் சென்றிருந்தான்.அப்போது அவள் மலர்ந்த முகத்துடன் தன் கணவருக்குச்சேவை செய்து கொண்டிருந்தாள். அந்தக்காட்சியை அப்படியே ஓவியமாகத்தீட்டினான். உயிரோவியமாகத் திகழ்ந்த அந்தச் சித்திரத்தைக் கண்டு சர்வமங்களா தம்பதியர் உட்பட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டதாகக்கூறப்படுகிறது.

தெய்வ உருவங்களைச் செய்வதிலும் கதாதரன் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தான். தெய்வீகத்தில் தோய்ந்த அவனது மனநிலை இதற்கு மிகவும் உதவியாக இருந்தது. கதாதரன் செய்த தெய்வ உருவங்களுக்கு சாஸ்திர முறைப்படி அவனும் அவனது நண்பர்களும் வழிபாடு நிகழ்த்துவதும் உண்டு. பள்ளிப்படிப்பை விட்டபின் இத்தகைய வேலைகளில் ஈடுபடுவதும் வீட்டு வேலைகளில் தாய்க்கு உதவுவதுமாகத் தன் நாட்களைச் செலவிட்டான்.

அண்ணன் ராம்குமாரின் தாயற்ற குழந்தையான அட்சயனிடம் கதாதரன் மிகவும் அன்பு கொண்டிருந்தான். வீட்டுவேலைகளைச் செய்யவே சந்திராதேவிக்கு நேரம் சரியாக இருந்ததால் அட்சயனைப்பெரும்பாலும் கதாதரனே கவனித்துக்கொண்டான். குழந்தையை மடியில் அமர்த்தி வேடிக்கை காட்டுவதும் விளையாடுவதும் இப்போது அவனது அன்றாட வேலைகளில் ஒன்றாயிற்று.


 MAIN PAGE (TOP) 

image62

பரவசநிலை அனுபவங்கள்

பரவசநிலை அனுபவங்கள்

  

கதாதரன் சிறுவயதில் பரவசநிலையை அடைந்த ஒரு நிகழ்ச்சி

-

கிராமத்தில்( காமார்புகூரில்) குழந்தைகளுக்குச் சிறு கூடைகளில் பொரி கொடுப்பது வழக்கம். கூடைகள் இல்லாத வீடுகளில், குழந்தைகள் உடுத்தியிருக்கும் துணிகளிலேயே பொரியை முடிந்து கொடுத்து விடுவார்கள். சிறுவர்கள் பொரியைத் தின்றபடியே வயல்வெளிகளில் சுற்றித் திரிவார்கள். எனக்கு ஆறு ஏழு வயதிருக்கும் . 

ஒரு நாள் காலைப்பொழுதில் கூடை ஒன்றில் பொரியை வைத்துத் தின்றவாறே வயல்வரப்பு வழியாக நடந்து கொண்டிருந்தேன். அது வைகாசி அல்லது ஆனி மாதமாக இருக்கலாம். வானத்தின் ஒரு பகுதியிலிருந்து மழைமெகங்கள் திரளத் தொடங்கின. நான் அந்தக் கருமையின் அழகில்ஈடுபடலானேன். சிறிது நேரத்தில் வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்துவிட்டன. அந்தக் கருமைப் பின்னணியில் பால்போன்ற வெண்ணிற நாரைகள் சில அமைதியாகப் பறந்து சென்றன. என்ன அற்புதமான காட்சி அது! அதன் அழகில் என்னையே நான் மறந்து விட்டேன். அப்படியே அதில் லயித்து புறவுலகை நினைவை இழந்து கீழே விழுந்தேன். கையிலிருந்த பொரி வயலில் விழுந்து சிதறியது. எவ்வளவு நேரம் அங்கே கிடந்தேனோ தெரியாது. நான் வீழ்ந்து கிடப்பதைக் கண்டவர்கள் என்னை வீட்டிற்குத் தூக்கிச் சென்றார்கள். புறவுலக நினைவை இழந்து நான் பரவச எய்தியது இது தான் முதல் தடவை.

குருதேவரின் பிறந்த ஊரான காமார்புகூருக்கு வடக்கே ஏறக்குறைய இரண்டு மைல் தொலைவில் ஆனூர் என்ற சிற்றூர் இருக்கிறது. 

அந்தச் சிற்றூரில் கோயில் கொண்டருளும் விசாலாட்சி விழிப்புற்ற தெய்வம். அக்கம்பக்கத்து கிராம மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு விசாலாட்சிக்கு வழிபாடும் காணிக்கைகளும் செலுத்துவதாக வேண்டிக்கொள்வார்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். இந்தக்கோயிலுக்கு ஆண்களை விடப் பெண்களே அதிகமாக வருவது வழக்கம். பலர் நோய்கள் நீங்குவதற்காக வருபவர்களே, தற்போதும் கூட கிராமத்தின் உயர்குடி பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்குச் சென்று தேவி விசாலாட்சி முதன்முதலில் அங்கு எழுந்தருளிய விதம் பற்றியும் அவளது அருள் வெளிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றியும் கதைப்பாடல்களைப் பாடுவதுண்டு. அன்னை அங்கு குடி கொண்டுள்ளதால் அவ்வழியில் மக்கள் அச்சமின்றிச் சென்றனர். தற்போதைய நிலையை விட குருதேவரின் காலத்தில் காமார்புகூர் கிராமம் மக்கள் தொகை மிக்கதாகவும் செல்வ வளம் பெற்றதாகவும் இருந்தது. இன்று நாம் அங்கு காண்கின்ற இடிந்துபோன செங்கற்கட்டிடங்கள் , அவற்றைச் சூழ்ந்து மண்டிக் கிடக்கின்ற புதர்கள், சிதிலமான கோயில்கள் பாழ்பட்ட மண்டபங்கள் எல்லாம் இதற்குச் சான்றாக உள்ளன. 

ஆகவே அந்தக்காலத்தில் ஆனூர் விசாலாட்சி கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டமும் மிகுதியாக இருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளலாம்.

வயல்களின் நடுவில் திறந்த வெளியில் தேவி எழுந்தருளியிருக்கிறாள். அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் தேவியின் மீது மழையோ வெயிலோ படாதிருக்கஆண்டுதோறும் புற்கூரை வேய்வார்கள். அங்கு தற்போது காணப்படுகின்ற இடிபாடுகளைப் பார்க்கின்றபோது ஒரு காலத்தில் அங்கே செங்கற்களால் கட்டப்பட்ட நல்லதொரு கோயில் இருந்திருக்கும் என்பது தெரிகிறது. இதைப்பற்றி ஆனூர் மக்களிடம் நாங்கள் கேட்ட போது, தனக்குக்கோயில் எதுவும் வேண்டாம் என்று தேவியே கோயிலை இடித்து விட்டதாகக் கூறினர். அவர்கள் சொன்னார்கள். 

கிராமத்தின் இடைச்சிறுவர்கள் தேவிக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்கள் காலையில் மாடுகளுடன் வந்து அவற்றை மேயவிட்ட பின்னர் அங்கு அமர்ந்து கதை, பாட்டு, விளையாட்டு என்று நேரத்தைக் கழிப்பார்கள். காட்டு மலர்களைப் பறித்து தேவிக்கு அலங்காரம் செய்து மகிழ்வார்கள். யாத்திரிகர்களும் வழிப்போக்கர்களும் தேவிக்குக் காணிக்கைச் செலுத்துகின்ற பணத்தையும் இனிப்புகளையும் அந்தச் சிறுவர்களே எடுத்துக் கொள்வார்கள். கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுவர்களின் சின்னச்சின்னக் குறும்புகளை தேவி அன்புடன் ஏற்றுக்கொண்டாள். அவற்றை அவள் விரும்பவும் செய்தாள். அப்போது அந்தக் கிராமத்துச் செல்வந்தர் ஒருவர், தம் பிராத்தனை நிறைவேறியதால் ஒரு கோயில் கட்டி அதில் தேவியைப் பிரதிஷ்டை செய்தார். பூஜாரி நாள்தோறும் காலையிலும் மாலையிலும் வந்து பூஜை செய்வார். பூஜை முடிந்ததும் கோயிலை மூடிவிட்டுச் சென்றுவிடுவார். பூஜை நேரங்கனைத் தவிரமற்ற நேரங்களில் வருகின்ற பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை சாளரம் போன்ற கதவுகளின் வழியாக உள்ளே செலுத்திவிட்டுச் சென்று விடுவார்கள். இதனால் சிறுவர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. இனிப்புகள் வாங்கி தேவிக்குப் படைத்து உண்ணவும் மகிழ்ச்சியாக விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. மனம் வருந்திய அவர்கள் தேவியிடம் அம்மா! எங்களுக்குத் தின்பண்டங்கள் இல்லாமல் செய்து விட்டாயே! நீ கொடுக்கும் பணத்தால் நாங்கள் தினமும் இனிப்புகள் வாங்கி உண்டு மகிழ்ந்தோம்.இனி யார் எங்களுக்குத் தின்பண்டங்கள் எல்லாம் கொடுப்பார்கள்? என்றுகண்ணீருடன் கேட்டனர்.

கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுவர்களின் பிராத்தனைக்குச் செவிசாய்த்த தேவி கோயில் சுவரில் அன்றிரவு ஒரு பெரிய விரிசலை உண்டாக்கினாள். அடுத்த நாள் காலையில் இதனைக்கண்ட பூஜாரி கோயில் இடிந்து விடுமே என்று பயந்து தேவியின் திருவுருவத்தை வெளியில் கொண்டு வந்து விட்டார். 

அதற்குப்பின் கோயிலைப் பழுது பார்க்கவும் புதுப்பிக்கவும் பலர் முயன்றனர். ஆனால் தேவி அவர்கள் கனவில் தோன்றியும் வேறு பல வழிகளிலும் அது தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டாள். அதையும் மீறி கோவிலைப் புதுப்பிக்க முயற்சித்த பலரது கனவில் தொன்றி, வயல்களின் நடுவில் திறந்த வெளியில் அந்தச் சிறுவர்களுடன் வாழ்வதைத்தான் நான் விரும்புகிறேன். என்னைக்கோவிலுக்குள் வைத்து சிறைபடுத்த முயன்றால் உன்னை அழித்து, உன் வம்சத்தையும் வேரறுத்து விடுவேன். விட்டுவைக்க மாட்டேன் என்று அச்சுறுத்தியதாகவும் கிராம மக்கள் எங்களிடம் கூறினர்.

கதாதரனுக்கு எட்டுவயதிருக்கும் போது நடந்த நிகழ்ச்சி இது

-

அப்போது ஒரு நாள் அவனது குடும்பத்தைச்சேர்ந்த ஓரிரு பெண்களும் ஜமீன்தாரான தர்மதாஸ் லாஹாவின் விதவைப்பெண் பிரசன்னாவும் மற்றும் பல உயர்குடிப்பெண்களும் விசாலாட்சி கோயிலுக்குச் சென்றனர். பிரசன்னா, தூய்மை, அன்பு, எளிமை, தெய்வபக்தி ஆகிய பண்புகளைப் பெற்று கதாதரனின் மதிப்பிற்குரிய ஒருத்தியாக இருந்தாள்.

பல விஷயங்களிலும் பிரசன்னாவின் அறிவுரையைக்கேட்டு நடக்கும் படி பிற்காலத்தில் அன்னை சாரதாதேவிக்கு குருதேவர் கூறியது உண்டு. பக்தைகளுக்கும் அடிக்கடி அவர் பிரசன்னாவைப் பற்றி கூறுவதுண்டு. 

பிரசன்னாவுக்கு கதாதரனிடம் உள்ளார்ந்த அன்பு இருந்தது. அவள் அவனைக் கடவுளாகவே கருதினாள். 

கள்ளங்கபடமற்ற உள்ளம் கொண்ட அவள் அவனிடமிருந்து கதைகளையும் பக்திப்பாடல்களையும் கேட்டுப் பரவசம் அடைந்தாள். அடிக்கடி அவள் கதாதரா! அடிக்கடி நீ ஏன் எனக்குக் கடவுளாகவே தோன்றுகிறாய்? ஆம் உண்மையிலேயே நான் அவ்வாறு தான் உணர்கிறேன்” என்று சொல்வாள். இதைக்கேட்கும் போது கதாதரன் எதுவும் கூறாமல் புன்னகை செய்வான். அல்லது வேறு விஷயங்களைக்கூறிப் பேச்சைத் திருப்ப முயல்வான். ஆனால் பிரசன்னாவோ நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள், என்னைப்பொறுத்தவரை நீ சாதாரணமானவன் அல்ல என்று சொல்வாள். அவளது பக்தியைப் பற்றியும் குருதேவர் புகழ்ந்துகூறுவார். 

.விசாலாட்சி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பெண்களிடம் கதாதரன் ” நானும் உங்களுடன் வருகிறேன்” என்று சொன்னான். அவன் வெகுதூரம் நடக்க வேண்டியிருக்குமே என்று கவலையுற்ற அந்தப்பெண்கள் அவனைத்தடுத்தனர். கதாதரன் அவர்களின் சொல்லைக் கேளாமல் அவர்களுடன் நடக்கத் தொடங்கினான். அந்தப் பெண்களும் மகிழ்ந்தனர். துருதுருவென்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தையை யார்தான் விரும்ப மாட்டார்கள். அவன் பாடுவதைக் கேட்கவும் அவர்கள் விரும்பினர். அப்படியே அவனுக்கு பசியெடுத்து விட்டால் கூட, கோயிலிலிருந்து திரும்பி வரும் போது பால் முதலிய பிரசாதங்கள் இருக்கவே செய்யும்.ஆகவே கதாதரன் தங்களுடன் வருவதை அவர்கள் ஏன் மறுக்கவேண்டும்? ஏன் கோபப்பட வேண்டும்? இதைப்பற்றியெல்லாம் சற்று யோசித்த பின் அந்தப்பெண்கள் தயக்கமின்றி கதாதரனையும் அழைத்துச் சென்றனர். கதாதரனும் அவர்கள் எதிர்பார்த்தபடியே கதைகள் கூறுவதும் பாடுவதுமாக உற்சாகத்துடன் சென்றான்.

விசாலாட்சியைப் பற்றிய கதாதரனின் பாடல்களைக்கேட்டவாறே எல்லோரும் வயல்வெளியைக் கடந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கதாதரனின் பாடல் திடீரென்று நின்றது. அவன் சிலை போல் நின்றுவிட்டான். அவனது உடல் விறைத்து உணர்ச்சியற்று விட்டது.விழிகளிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அந்தப் பெண்கள் அவனைப் பலமுறை அழைத்துப்பார்த்தனர். அவனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது? ஏன் நேர்ந்தது? எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. 

ஒரு வேளை நீண்ட தூரம் நடந்து பழக்கமில்லாத பிஞ்சுப் பாலகன் வெயிலில் இவ்வளவு தூரம் நடந்ததால் களைத்து மயக்கமடைந்து விட்டானோ என்று அஞ்சிய அவர்கள், குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவன் தலையிலும் முகத்திலும் சிறிது தெளித்துப்பார்த்தனர். ஆனாலும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. 

அந்தப்பெண்களின் கவலை அதிகமாயிற்று. இவன் மூர்ச்சை தெளிவதற்கு என்னவழி? இவனது நினைவு திரும்பாவிட்டால் கோவிலுக்கு சென்று தேவிக்கான நேர்த்திக்கடனைச் செலுத்த முடியாது. அந்தப் பெண்கள் குழம்பினர். இந்த நிலையில் அவனை எவ்வாறு வீட்டுக்குக்கொண்டு போவது? நேர்த்தி கடனையே மறந்து விட்டு எல்லாப் பெண்களும் கதாதரனைச்சுற்றி அமர்ந்து விசிறுவதும் தண்ணீர் தெளிப்பதும் மீண்டும் மீண்டும் அவன் பெயரைச் சொல்லி அழைப்பதுமாக இருந்தனர். இவ்வாறு சிறிது நேரம் சென்றது.

அப்போது பிரசன்னாவின் உள்ளத்தில் கள்ளங்கபடமற்ற தூய உள்ளம் படைத்த ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கு தேவியின் அருளால் பரவச நிலை ஏற்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தூயவனான கதாதரனின் நிலையும் ஏன் அத்தகைய பரவச நிலையாக இருக்கக்கூடாது. என்ற எண்ணம் எழுந்தது. உடனே தன் கருத்தை மற்றப்பெண்களுக்கும் தெரிவித்தாள். பின்னர் எல்லோரிடமும், கதாதரனை அழைப்பதை விட்டுவிட்டு மனஒருமைப்பாட்டுடன் தேவி விசாலாட்சியின் திருநாமத்தை உச்சரிக்கும் படிக் கூறினாள்.

தூய நற்பண்புகள் கொண்ட பிரசன்னாவை அனைவரும் மதித்தனர். ஆகவே அவளது சொற்களில் நம்பிக்கை வைத்து அந்தப்பெண்கள் கதாதரனையே தேவியாக எண்ணி, தாயே! விசாலாட்சி! கருணை காட்டி எங்களைக் கைதூக்கிக் கரை சேர்ப்பாய்! என்று பிரார்த்திக்கத் தொடங்கினர்.

விந்தையிலும் விந்தை! தேவியின் திருப்பெயரை அவர்கள் சில முறை கூறியவுடனேயே கதாதரனின் முகத்தில் புன்னகை அரும்பியது. புறவுலக நினைவு திரும்பத் தொடங்கியது. தேவியின் மீது கொண்ட பக்திப் பரவசத்தினால் தான் கதாதரன் இத்தகைய நிலைக்கு உள்ளானான் என்பது அவர்களுக்கு நிச்சயமாயிற்று.அவர்கள் அவனையே தேவியாக பாவித்து பல முறை வணங்கிப் பிரார்த்தித்தனர்.

கதாதரன் சிறிதுநேரத்தில் இயல்பான நிலையை அடைந்தான். அவனிடம் எந்தவித உடற்சோர்வோ களைப்போ தென்படவில்லை. 

பின்னர் அனைவரும் உற்சாகத்துடன் விசாலாட்சி கோயிலை அடைந்தனர். பூஜையை முடித்துக்கொண்டு வீடுதிரும்பிய பின்னர் நடந்தவற்றை அந்தப்பெண்கள் சந்திராதேவியிடம் கூறினர். செய்தியைக்கேட்ட அவள் மிகவும் அச்சமடைந்தாள். 

கதாதரனின் நலம் வேண்டிஸ்ரீரகுவீரருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்தாள். அன்னை விசாலாட்சிக்கும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்டாள்.


  

அவ்வப்போது கதாதரன் பரவச நிலை அடைந்ததற்கு வேறொரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடலாம்.

காமார்புகூருக்குச் சற்று தென்மேற்கில்பொற்கொல்லர்கள் வசித்து வந்தனர். பைன்கள் எனப்பட்ட இவர்களின் குடும்பம் அந்தக் காலத்தில் மிகவும் செல்வ வளம் கொண்டதாக இருந்தது. செங்கற்களால் அழகுற அவர்கள் கட்டியிருக்கின்ற சிவன் கோவிலே இதற்குச் சான்று.

அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரிருவர் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வீடுகள் இடிந்து சிதிலமாகி விட்டன. அது பெரிய குடும்பம். அவர்கள் சிறந்த விவசாயிகளாகவும் விளங்கினர். ஏராளமான ஆடுமாடுகளும் பரந்த விவசாய நிலமும், விவசாயக்கருவிகளும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன.வியாபாரத்திலிருந்தும் அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. ஆனாலும் கிராம ஜமீன்தார்களைப்போல பைன்கள் அவ்வளவு செல்வந்தர்கள் அல்லர். அவர்கள் நடுத்தரக்குடும்பங்களைச்சேர்ந்தவர்களே.

பைன் குடும்பத்தலைவர் மிகுந்த சமயப்பற்றும் பக்தியும் கொண்டவர். நல்ல நிலையிலிருந்தும் கூட அவர் செங்கல் வீடு கட்டிக்கொள்ள முயற்சி செய்யவில்லை. மண்ணால் கட்டப்பட்ட இரண்டடுக்கு வீட்டிலேயே அவர் வசித்து வந்தார். ஆனால் கோயிலைச் செங்கற்களால் அழகுறக் கட்டியிருந்தார். சீதாநாத் பைன் என்பது அவரது பெயர். அவருக்கு ஏழு பிள்ளைகளும் எட்டு பெண்களும் இருந்தனர். 

திருமணம் நடைபெற்றிருந்தும் எல்லாப் பெண்களும் தந்தையின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். இதற்கான காரணம் தெரியவில்லை. குருதேவருக்குப் பத்து அல்லது பதினொரு வயதான போது சீதாநாத் பைனின் கடைசிப்புதல்வி கன்னிப்பருவம் அடைந்திருந்தாள். புதல்விகள் அனைவரும் அழகாக இருந்ததுடன் கடவுளிடமும் பிராமணர்களிடமும் பக்தி கொண்டிருந்தனர். அனைவரும் கதாதரனை மிகவும் நேசித்தனர். பக்திமிக்க அந்தக் குடும்பத்துடன் கதாதரனும் நீண்ட நேரம் கழித்தான்.

பைன் குடும்பத்துடன் கதாதரன் இருந்தபோது பரவசநிலையில் அவன் புரிந்த தெய்வீகச் செயல்களைப்பற்றி இன்றும் கிராம மக்கள் சொல்கின்றனர். நாம் தற்போது விவரிக்க இருக்கும் நிகழ்ச்சியை குருதேவரே எங்களிடம் கூறினார்.

வைணவர்களும் சைவர்களும் தங்களுக்குள் எந்தவிதமான மனவேறுபாடுமின்றிக் காமார்புகூரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். தற்போதும் ஆண்டுதோறும் எழுபத்திரண்டு மணிநேர விஷ்ணு பஜனை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. காமார்புகூரில் விஷ்ணு கோயில்களை விட சிவன் கோவில்கள் அதிகமாக உள்ளன. பெரும்பாலான பைன்கள் தீவிர வைணவர்களாக இருந்தனர். உத்தாரண் தத்தருக்கு நித்யானந்தர் மந்திரோபதேசம் செய்து அவரை உலகப் பற்றுக்களிலிருந்து விடுவித்த நாளிலிருந்து அவர்கள் வைணவர்களாக இருந்து வந்தனர். 

காமார்புகூரைச் சேர்ந்த பைன் குடும்பத்தினர் அவ்வாறின்றி விஷ்ணுவையும் சிவனையும் ஒருங்கே வழிபட்டு வந்தனர். பைன் குடும்பத்தின் மூத்த தலைவர் நியதிப்படி தினசரி மூன்று முறை ஹரிநாம ஜபம் செய்வார்.

சிவ பிரதிஷ்டை செய்து ஆண்டு தோறும் சிவராத்திரி விரதமும் இருப்பார்.சிவராத்திரியன்று கண்விழிப்போருக்காக அந்த சிவன் கோவிலில் நாடகம் ஏற்பாடு செய்யப்படும்.

ஒரு முறை சிவராத்திரியின் போது இத்தகைய நாடகம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது. 

பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த யாத்ரா குழுவினர் அதனை நடத்துவதாக இருந்தனர். சிவபெருமானின் திருவிளையாடல்களை விவரிக்கின்ற அந்த நாடகம் அந்தி நேரத்திற்கு அரைமணி நேரம் கழித்து ஆரம்பமாக இருந்தது. 

அப்போது அந்த நாடகத்தில் சிவனாக நடிக்க வேண்டிய சிறுவனுக்கு எதிர்பாராத விதமாக கடுமையான நோய் ஏற்பட்டு நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கத் தகுதியான யாரும் கிடைக்கவில்லை. யாத்ரா குழுவின் உரிமையாளருக்கு நாடகத்தை நடத்த முடியும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. 

நாடகத்தை ஒத்திப்போடுவதைத் தவிர வேறு வழியில்லை. என்று பணிவுடன் கூறினார் அவர். என்ன செய்வது, கண்விழிக்கும் பக்தர்கள் வேறு எந்த வழியில்நேரத்தைச் செலவிடுவது? 

அங்குக் கூடியிருந்த பெரியவர்கள் ஆலோசித்தனர். சிவவேடம் பூண்டு நடிக்கத் தகுந்த ஒருவர் கிடைத்தால் நாடகத்தை நடத்த இயலுமா? என்று அந்த நாடக குழுவின் உரிமையாளரை அவர்கள் கேட்டபோது அவர் அதற்கு இசைந்தார். கிராமத்துப்பெரியவர்கள், சிவனாக யாரை நடிக்கச் சொல்வது என்று மீண்டும் சிந்தித்தனர். தகுந்த நபராக அவர்கள் எண்ணியது கதாதரனைத் தான். அவன் சிறுவனாக இருந்தாலும் சிவனைப் பற்றிய பல பாடல்கள் அவனுக்குத் தெரியும்.

சிவவேடம் ஏற்பதற்குரிய தோற்றமும் அவனுக்கு இருந்தது. ஆகவே கதாதரனைக்கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. அவன்பேச வேண்டிய சில வசனங்களை எப்படியோ தான் சமாளித்துக் கொள்வதாக நாடகக்குழுவின் உரிமையாளர் சொன்னார். 

அனைவருடைய ஆர்வத்தையும் கண்ட கதாதரன் சிவனாக நடிக்க ஒப்புக்கொண்டான். குறித்த நேரத்தில் நாடகம் தொடங்கிற்று.

ஜமீன்தாரான தர்மதாஸ் லாஹாவின் மூத்த மகன் கயாவிஷ்ணுவும் கதாதரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததை முன்பே கண்டோம். கதாதரன் சிவனாக நடிக்க இருப்பதை அறிந்த கயாவிஷ்ணுவும் நண்பர்களும் கதாதரனுக்கு ஒப்பனை செய்யத் தொடங்கினர். 

சிவவேடம் தரித்த பின் கதாதரன் ஒப்பனை அறையில் அமர்ந்து சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மேடையில் தோன்ற வேண்டிய நேரம் வந்தது. அவனை மேடைக்கு அழைத்துச் செல்ல நண்பன் ஒருவன் வந்தான். கதாதரன் சிவ நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கியவனாய் வேறு எங்கும் பார்க்காது மெல்ல நடந்து மேடைக்கு வந்தான். வந்தவன் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று விட்டான். சடை முடியும், வெண்ணீறும், தெய்வீக ஒளிவீசும் முகமும், அகமுகப்பட்ட பார்வையும், இதழ்களில் முகிழ்ந்த புன்முறுவலும் கண்டால் சாட்சாத் சிவபெருமானே அங்க வந்து நிற்பது போல இருந்தது. 

தங்களை மறந்த நிலையில் பக்தர்கள் ஹரிஹரி என்று கூவினர். பெண்களுள் சிலர் குரவையிட்டனர். சிலர் சங்குகளை முழங்கத் தொடங்கினர். இவ்வாறு பார்வையாளர்களிடம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த நாடகக்குழுவின் உரிமையாளர், சிவபெருமான் மீது துதிகளைப் பாடத் தொடங்கினர். கூட்டத்தில் பரபரப்பு சற்றுக்குறைந்தது. இருப்பினும் கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்து,ஆகா! கதாதரன் அவ்வளவு அழகாக இருக்கிறான்! சிவபெருமானின் வேடம் இவனுக்கு இவ்வளவு சிறப்பாகப் பொருந்தும் என்று நினைக்கவே இல்லை. எப்படியாவது இவனை வைத்து நாம் யாத்ரா குழுவை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்று பேசிக்கொண்டனர். 

இந்த அமர்க்களம் எதையும் கதாதரன் அறியவில்லை. அவன் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. மேலும் சிறிது நேரம் சென்றது.

கதாதரன் எதுவும் பேசவுமில்லை. அசையவும் இல்லை. அதன் பின் நாடகக்குழுவின் உரிமையாளரும் இன்னும் ஓரிரு பெரியவர்களும் கதாதரனின் அருகில் சென்று பார்த்தனர். அவனது கைகளும் கால்களும் விறைத்துக் கிடந்தன. 

அவன் புறவுலகை நினைவையிழந்து பரவசநிலையில் இருந்தான்.கூட்டத்தில் பரபரப்பும் ஆரவாரமும் மிகுந்தன. தண்ணீர்” முகத்தில் தண்ணீர் தெளியுங்கள். அவனுக்கு விசிறுங்கள். சிவபெருமான் அவன் மீது எழுந்தருளியிருக்கக் கூடும், சிவநாமத்தை ச் சொல்லுங்கள் என்ற கூக்குரல்களும் இந்தப்பையன் நாடகத்தையே கெடுத்துவிட்டான், இனிமேல் எங்கே நாடகம் நடக்கப்போகிறது? என்பது போன்று முணுமுணுப்புகளும் எங்கும் எழுந்தன. என்ன செய்தும் கதாதரன் சுயநினைவு பெறவில்லை. கூட்டம் கலைந்தது.அவனைத்தோள் மீது தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.பல்வேறு முயற்சிகள் செய்தும் அன்று இரவு முழுவதும் அவனுக்குச் சுயநினைவு திரும்பவில்லை. வீட்டில் ஒரே குழப்பமும் துயரமும் நிலவியது. அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு பின் தான் கதாதரனுக்குச் சுய நினைவு திரும்பிற்று.

 


சாதக நிலையின் முதல் வெளிப்பாடு

-

ஒரு முறை நண்பர்களுடன் பூஜை விளையாட்டிற்காக ஒரு தெய்வீகத் திருவுருவத்தை கதாதரன் செய்தான். துணியில் ஓவியமாகவும் வரைந்தான். அவற்றின் அழகைப் பார்த்த மக்கள் அவை கைதேர்ந்த கலைஞர்களின் படைப்புகள் என்றே கருதினர்.

ஒரு சமயம் கிராமத்தில் ராமர் அல்லது கிருஷ்ணரைப் பற்றிய யாத்ரா நடைபெற்றது. கதாதரனும் அதைப் பார்க்கச் சென்றிருந்தான். யாத்ராவைக்கண்டு களித்த அனைவரும் அதில் வரும் பாடல்களையும், வசனங்களையும் உடனேயே மறைத்துவிட்டுத் தங்கள் சொந்த அலுவல்களில் ஈடுபட்டனர்.ஆனால் கதாதரனின் மனத்தில் அவை தோற்றுவித்த ஆன்மீக உணர்ச்சி அலைகளுக்கு எல்லையே இல்லை. அந்தப் பாடல்களையும் காட்சிகளையும் அவன் மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து மகிழ்ந்தான். 

நண்பர்களை அருகிலிருந்த மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று அவர்களின் முன்னிலையில் அந்த யாத்ரா காட்சிகளை நடித்துக் காண்பித்தான். பல்வேறு பாத்திரங்களுக்கான வசனங்களை நண்பர்களுக்குக் கற்று கொடுத்து முக்கிய கதாபாத்திரத்தை த் தான் ஏற்றுக் கொண்டு அந்த யாத்ராவை மீண்டும் அப்படியே நடித்துக்காட்டவும் செய்தான்.

பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த உழவர்கள் வேலை செய்த படியே அந்தச்சிறவர்களின் யாத்ராவைக் கண்டுகளித்தனர். ஒரே ஒரு தடவை கேட்ட வசனங்களையும் பாடல்களையும் அவர்கள் மனப்பாடம் செய்து நடித்த பாங்கினைக் கண்டு அவர்கள் வியந்தனர். கதாதரனின் அற்புதமான நினைவாற்றலுக்கு இது ஓர் உதாரணமாக அமைகிறது.

உபநயனம் நடைபெற்றபோது குடும்ப வழக்கத்தையும் சமூக கட்டுப்பட்டையும் மீறி, தனி என்ற தாழ்ந்த குலப்பெண்ணிடமிருந்து முதல் பிச்சை ஏற்றது கதாதரனின் மனவுறுதியைக் காட்டுகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். அது மட்டுமின்றி அவளது அன்பினாலும் பக்தியினாலும் கவரப்பட்ட கதாதரன் சமூகத்தின் விதிமுறைகளை மீறி, தனி சமைத்த உணவைக்கூட ஏற்று உண்டான். இது தனிக்கு அச்சத்தைக் கொடுத்தது. அவள் எவ்வளவோ தடுத்தும் பயனில்லாமல் போயிற்று.

கிராமத்திலாகட்டும், நகரத்திலாகட்டும் சடைமுடி தரித்து வெண்ணீறு பூசிச் செல்கின்ற சாதுக்கள் என்றாலே சிறுவர்களின் அச்சத்தைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் சிறுவர்களை வசியப்படுத்தி தொலை தூரத்திலுள்ள இடங்களுக்குக் கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயம் வங்காளம் முழுவதும் பரவியிருந்தது. காமார்புகூரின் தென்பகுதியில் புரி செல்லும் சாலையில் இத்தகைய சன்னியாசிகளும், பைராகிகளும் நாள்தோறும் கூட்டம் கூட்டமாகச் செல்வதுண்டு.அவர்கள் காமார்புகூரில் ஓரிருநாட்கள் தங்கி, பிச்சையெடுத்து உண்டு, ஓய்வெடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்வார்கள். 

கதாதரனின் நண்பர்கள் இந்த சாதுக்களைக் கண்டு நடுங்கினர். இதில் விதிவிலக்காக இருந்தது கதாதரன் மட்டுமே.சிறிதும் அச்சமின்றி அவர்களிடம் சென்று பணிவிடைகள் செய்வதும் பேசுவதுமாக நெடுநேரம் தங்கியிருந்து அவர்களின் நடத்தையை யும் பண்புகளையும் அறிந்து கொண்டான். 

சிலவேளைகளில் அவர்கள் தரும் பிரசாதத்தை உண்பான். வீடு திரும்பியதும் நடந்தவற்றை எல்லாம் தாயிடம் சொல்வான். சாதுக்களின் வாழ்க்கையால் கவரப்பட்டு, ஒரு நாள் அவர்களைப்போலத் தன் உடல் முழுவதும் வெண்ணீற்றைப்பூசிக் கொண்டு தாயார் கொடுத்திருந்த புதுத்துணியைக் கிழித்துக் கோவணமாகக் கட்டிக் கொண்டு தாயின் முன்னே சென்று விட்டான். பயம் என்பதுஅவன் அறியாத ஒன்றாக இருந்தது.

கிராமத்திலிருந்த பாமரமக்களுக்குப் பொதுவாக எழுதப்படிக்கத் தெரியாது. ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை அவர்கள் கேட்க விரும்பும்போது ஒரு பிராமணரையோ, படித்த தங்கள் ஜாதியினரையோ உதவிக்காக நாடுவது வழக்கம். அப்படி புண்ணிய நூல்கள் வாசிக்க வருபவரை அந்தப் பாமரமக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்துவார்கள். பாதங்களைக்கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்து புகைப்பதற்கு ஹீக்கா கொடுத்து, அமர்வதற்கு சிறந்த ஆசனமோ புதுப்பாயோ கொடுத்து உபசரிப்பார்கள். படிக்க வருபவர் பாமரமக்களின் பணிவான இந்த உபசாரத்தால், தலைகால் புரியாமல் தத்தளித்து விடுவார்.

கர்வம் பிடிபடாமல் அவர் செய்கின்ற டம்பங்களை எல்லாம் கூர்ந்து கவனிப்பான் கதாதரன். அவர் ஆசனத்தில் எவ்வாறு அமர்கிறார், பாடல்களைப் பாடும்போது என்னென்ன உணர்ச்சிகளைக் காட்டுகிறார், வினோதமானகுரலில் எவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்,ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு தன்னை மிகவும் படித்தவனாக மற்றவர்களை விட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்கிறார் என்பனவற்றை மனத்தில் வாங்கிக்கொள்வான். பின்னர் அவற்றை அப்படியே நடித்துக்காட்டி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்கும் படிச் செய்வான். வேடிக்கை வினோதங்களில் வல்லவன் அவன்.


 MAIN PAGE (TOP) 

image63

கல்கத்தா நோக்கி பயணம்

கல்கத்தா நோக்கி பயணம்

  

கதாதரன் பதினேழு வயது வாலிபனாக வளர்ந்திருந்தான். 

பணம் சம்பாதிப்பதற்காகக் கல்கத்தா சென்றிருந்த ராம்குமாரின் இடைவிடாத முயற்சியின் காரணமாக அவரது பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். எனவே அதிக வருமானம் வரலாயிற்று.

அதிக நாட்களைக் கல்கத்தாவில் கழித்தாலும் ராம்குமார் ஆண்டுகளுக்கு ஒரு முறை காமார்புகூர்சென்று தாய், தம்பியர், மற்றும் குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கி வருவார். இந்த முறை அவ்வாறு அவர் வந்திருந்த போது கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் அவருக்குத் தெரிந்தன. படிப்பில் அவனது கவனக் குறைவையும், நாடகம், பாட்டு என்று அவன் காலம் கழிப்பதையும் கண்டு மிகவும் கவலை கொண்டார். 

தாயுடனும் ராமேசுவரருடனும் இது பற்றிக் கலந்து பேசி கதாதரனைத் தன்னுடன் கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்வதென முடிவு செய்தார். 

அது கதாதரனுக்கு நன்மை பயக்கும் என்பதுடன் தமக்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணினார். இப்போது அவரது பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததால் பாடசாலையைக் கவனிப்பதில் உதவியாக ஒருவர் தேவைப்பட்டது. கதாதரன் அவருடன் கல்கத்தா சென்றால் அவருக்கு உதவியாகவும் இருக்கலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்தார். 

கதாதரனுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அவன் சிறிதும் மறுப்புக் கூறவில்லை. 

தந்தையின் இடத்தில் இருப்பவரும் மரியாதைக்கு உரியவருமான சகோதரருக்கு உதவி செய்வதற்கான இந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சியே அடைந்தான். 

ஒரு நல்ல நாளில் சுபவேளையில் ராம்குமாரும் கதாதரனும் ஸ்ரீரகுவீரரை நமஸ்கரித்து தாயின் பாதங்களையும்வணங்கிக் கல்கத்தாவிற்குப் புறப்பட்டனர். காமார்புகூரின் ஆனந்தச் சந்தை கலைந்தது போல தோன்றிற்று. சந்திராவும் கதாதரனிடம் அன்பு பெண்மணிகளும் அவனது இனிய நினைவுகளிலும் அவனது எதிர்கால வளர்ச்சியைப் பற்றிய சிந்தனைகளிலும் நாட்களை நகர்த்தினர்.

கல்கத்தாவில் ராம்குமாருடன் வாழ்ந்த நாட்களில் தாம்நாம் கதாதரனின் ஒரு சாதகனின் மனநிலை வெளிப்படுவதை முதன்முதலில் காண்கிறோம்.உலகியல் விஷயங்களில் தம்பியின் பிடிப்பற்ற போக்கை க் கண்ட ராம்குமார் ஒரு நாள் அவனிடம் மனத்தை படிப்பில் செலுத்துமாறு கடிந்து கூறினார். அதற்கு கதாதரன் அரிசியும், வாழைக்காயும் மூட்டைக்கட்டுவதற்கான கல்வி எனக்கு வேண்டாம். சரியான அறிவைத் தந்து மனிதனை உயர்ந்த குறிக்கோளுக்கு அழைத்துச் செல்கின்ற கல்வியே எனக்குத்தேவை” என்று திட்டவட்டமாய்ப் பதிலளித்து விட்டார்.அப்போது அவருக்குப் பதினேழு வயதிருக்கும்.

தர்ம நிதிஷ்டரான ராம்குமார் சோதிடக்கலையில் வல்லவர். இந்த சமய சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தவர். ஜாமாபுகூரில் திகம்பர மித்ரர் என்பவரின் விட்டிற்கு அருகில் ஒரு சமஸ்கிருதப் பள்ளியை ஆரம்பித்திருந்தார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீடுகளில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்ததால் நாளொன்றுக்கு இரண்டு தடவை வீடுகளில் சென்று பூஜை செய்வதில் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பள்ளியிலிருந்துகுறைந்த வருவாய் தான் கிடைத்தது. அதுவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. ஆகவே வீடுகளில் பூஜை செய்வதை அவரால் விட முடியவில்லை. அந்த வருவாயை விட்டுவிட்டால் குடும்பத்தை எவ்வாறு நடத்துவது? இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது? இதைப் பற்றியெல்லாம் சிந்தித்த அவர் கதாதரனைக் கல்கத்தாவுக்கு அழைத்து வந்து தம் உதவிக்காக வைத்துக்கொள்வதென முடிவு செய்தார். அவ்வாறே தம்பியைப் பூஜைகள் செய்வதற்காக அமர்த்திவிட்டுத் தாம் ஆசிரியர் பணியில் கவனம் செலுத்தினார்.

 


கல்கத்தாவுக்கு வந்த கதாதரர் தனக்கு அளிக்கப்பட்ட பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். பூஜை அவருக்கு விருப்பமான ஒன்றானதால் மகிழ்ச்சியுடன் அதில் ஈடுபட முடிந்தது. அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார். புன்முறுவல் மாறாத முகம் கொண்ட நற்பண்புகள் மிக்க அந்த இனிய இளைஞர் விரைவில்அனைவரின் அன்பையும் பெற்றார். காமார்புகூர் பெண்களைப்போலவே இங்கும் உயர் குடும்பங்களிலுள்ள பெண்கள் கூட கதாதரரின் சுறுசுறுப்பு, களங்கமற்ற நடத்தை, இனிய சொற்கள், பக்தி ஆகியவற்றால் கவரப்பட்டு எவ்வகைத் தயக்கமும் இன்றி அவரிடம் பழகினர். சிறுசிறு வேலைகளை கதாதரரிடம் கூறிச் செய்வித்த அவர்கள் முக்கியமாக, இனிய குரலில் அவர் பாடுகின்ற பக்திப் பாடல்களைக்கேட்க மிகவும் விரும்பினார். காமார்புகூரில் இருந்தது போலவே கல்கத்தாவிலும் கதாதரரைச் சுற்றி ஆண்களும், பெண்களுமாக ஒரு கூட்டம் தானாகவே அமைந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கதாதரர் அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தார். ஆகவே இங்கு வந்தும் கதாதரருடைய படிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இவை அனைத்தையும் ராம்குமார் கவனித்து வந்தாலும் கதாதரரிடம் எதுவும் சொல்லவில்லை. குடும்பத்தின் கடைசிப் பையனான அவனைத் தாயன்பினின்று பிரித்து, சொந்த வசதிக்காக கல்கத்தாவுக்கு அழைத்து வந்தது ராம்குமாரின் மனத்தில் ஒரு சுமையாக உறுத்திக்கொண்டிருந்தது. இதைவிட முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது. கதாதரரின் நற்பண்புகளால் கவரப்பட்ட மக்கள் அடிக்கடி அவரைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதுண்டு.

அவ்வாறு அவர் செல்வதற்குத் தடைவிதித்து, அந்த மகிழ்ச்சியில் குறுக்கே நிற்க ராம்குமார் விரும்பவில்லை. கட்டுபாடுகள் விதித்தால் தம்பியின் கல்கத்தா வாழ்க்கை ஒரு வனவாசமாகி விடும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. குடும்பத்தில் வாழ்க்கைத்தேவைக்கான வசதிகள் இருந்திருப்பின் தம்பியைக் கல்கத்தாவிற்கு அழைத்து வந்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.காமார்புகூருக்கு அருகிலேயே ஏதாவது கிராமத்திற்கு அவனை அனுப்பி ஒரு பண்டிதரிடம் கல்வி கற்கச் செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அவன் அம்மாவுடன் தங்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்றெல்லாம்எண்ணி மனம் வருந்திய ராம்குமார் சில மாதங்கள் கதாதரரைக் கடிந்து எதுவும் சொல்லவில்லை.ஆயினும் கடமையுணர்வினால் உந்தப்பட்டு அவர் ஒரு நாள் படிப்பில் கவனம் செலுத்துமாறு கதாதரரைச் சிறிது கடிந்து கொண்டார்.ஏனெனில் இன்று கதாதரர் இப்படி இறையுணர்வில் தன்னை மறப்பதும் பாடல்களில் லயிப்பதுமாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் இல்லற வாழ்வில் ஈடுபட்டுத்தானே தீர வேண்டும்! இப்போது உலக விஷயங்களில் ஈடுபட்டுத் தன்னை முன்னேற்றிக் கொள்ளாவிடில் வேறு எப்போது முடியும்? தம்பியின் மேலிருந்த அன்பும் சொந்த வாழ்க்கை அனுபவமும் ராம்குமாரை இவ்வாறெல்லாம் எண்ணவும் நடந்து கொள்ளவும் தூண்டியிருக்க வேண்டும்.

தன்னலம் மிக்க உலகத்தின் கடினமான வழிகளினால் தமக்குத் துன்பங்கள் நேர்ந்து அவற்றால் சிறிது அனுபவம் பெற்றிருந்தாலும் ராம்குமார் தன் தம்பியின் அசாதாரணமான மனநிலையைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.கதாதரர் இந்த இளவயதிலேயே சம்சார சாகரத்தில் உழலும் மனிதர்களின் எல்லா வகையான பயனற்ற முயற்சிகளையும் அவர்கள் வாழ்நாள் முழுவதம் துன்பப்படுவதைன் நோக்கத்தையும் புரிந்து கொண்டுள்ளார். ஓரிரு நாட்களில் மறையக்கூடிய இன்பங்களின் நிலையாமையை அறிந்து கொண்டுள்ளார் என்பதையெல்லாம் ராம்குமார் கனவிலும் கருதவில்லை. பெற்றோர்களின் செல்லக்குழந்தையாக வளர்ந்த அவனைக் கடிந்து கொண்டதற்காகத் தான் தன்மேல் கோபம் கொண்டு இவ்வாறு பேசி விட்டான் என்று ராம்குமார் எண்ணினார். ஆனால் தாம் ஏன் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கான கல்வியைக் கற்க விரும்பவில்லை. என்பதைத் தன்னால் முடிந்தவரை விளக்கிக்கூறினார் கதாதரர். அவரது சொற்களை யார் செவிமடுப்பார்கள்? இளைஞன் , இளைஞன் தானே! தன்னலமற்ற ஒருவன் இருந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்று கருதும் உலகிலன்றோ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ராம்குமார் கதாதரரின் பேச்சைப்புரிந்து கொள்ளவில்லை. நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரைக் கடிந்து கொள்ள நேர்ந்தால் பிறகு நம் செயலை எண்ணி வருந்துகிறோம். பின்னர் நம் மனத்தை அமைதிப்படுத்த அவரிடம் பல மடங்கு அன்பு காட்டுகிறோம். இதைப்போன்று தான் ராம்குமாரும் கதாதரரிடம் நடந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் கதாதரரின் செயல்கள் எல்லாம் தான் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான தருணத்தை எதிர்பார்த்தே அமைந்தன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சகோதரர்கள் இருவர் வாழ்விலும் பல்வேறு நிகழ்ச்சிகள் வேகமாக நிகழ்ந்தன. ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது. பல வழிகளில் முயன்றும் வருவாயை அவரால் அதிகரித்துக் கொள்ள முடியவில்லை.பள்ளியை மூடிவிட்டு வேறு தொழிலில் ஈடுபடலாமா என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார். அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.வேறு ஒரு தொழிலைத்தேடிக் கொள்ளாமல் இப்படியே நாட்களைக் கழித்தால் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாகிவிடும். கடன்பட நேர்ந்தால் வாழ்க்கையே துன்பமாகிவிடும். எனவே வேறு தொழில் தேடிக்கொள்வதே உசிதம்? ஆனால் என்ன தொழிலை மேற்கொள்வது? கற்பிப்பதையும் பூஜை முதலான சடங்குகள் செய்வதையும் தவிர தமக்கு வேறுறொன்றும் தெரியாது. மேலும் ஏறிக் கொண்டே போகின்ற இந்த வயதில் நல்ல வருவாய் தரக்கூடிய வேறு தொழிலை மேற்கொள்ளும் சக்தியும் ஊக்கமும் தம்மிடம் உள்ளதா? அத்தகைய தொழிலை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்து, அதன் மூலம் அதிகம் வருவாய் பெற முயன்றால் நித்திய பூஜை மற்றும் வழிபாடுகளுக்கான நேரம் கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். இவற்றை எல்லாம் எண்ணியெண்ணி கவலையுற்ற ராம்குமார் இறுதியில் ஸ்ரீரகுவீரர் விருப்பப்படி நடக்கட்டும் என்று தன் மனத்தை இத்தகைய எண்ணங்களிலிருந்து விடுவித்துக்கொண்டு தாம் செய்து வந்த பணிகளில் முன்னைப்போலவே ஈடுபட்டார். ராம்குமார் இறைநம்பிக்கை மிக்கவர். உள்ளதைக்கொண்டு திருப்தி அடையும் மனப்பான்மை கொண்டவர். பொருள் ஈட்டி மிகுவும் வசதியான வாழ்க்கை அமைத்துக்கொள்ளவிழையாதவர் என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தூயவரானஅவரைக் கடவுள் எப்படிக் கைவிடுவார்.? அவரது துயரங்கள் தீரும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி அப்போது கடவுளின் அருளால் நடைபெற்றது.காளியின் அர்ச்சகராக


கதாதரனைக் கண்டது முதலே மதுர்பாபு அவரிடம் மிகவும் ஈர்க்கப் பட்டிருந்தார். கனிவான பார்வை, மென்மையான இயல்பு, நற்பண்பு, இளவயது இவையனைத்தும் இணைந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற சில வாரங்களிலேயே மதுர்பாபுவின் இதயத்தில் கதாதரருக்கு ஒரு தனியிடத்தை அளித்திருந்தார். 

நமது வாழ்நாள் முழுவதும் யாருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று இருக்கிறதோ, அவரைக்காணும் முதல் சந்திப்பிலேயே இனம் புரியாத உணர்ச்சி ஒன்று அவருடன் நமக்கு ஒரு பிணைப்பை உண்டாக்கி விடுவதை நாம் அறிவோம். முற்பிறவி தொடர்பை ஒட்டிய எண்ணங்களின் தொடர்ச்சியே இத்தகைய கவர்ச்சிக்குக் காரணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பின்னாளில் குருதெவருக்கும் மதுர்பாபுவுக்கும் இடையே நிலவிய ஆழ்ந்த அன்பின் பிணைப்பை நாம் எண்ணும் போது, அவர்களிடையே ஏற்பட்டதும் இத்தகைய கவர்ச்சி தான் என்பது தெரிகிறது.

கோயில் கும்பாபிஷேகம் நிறைவுற்று ஒரு மாதம் ஆயிற்று. கதாதரரும் தமையனாரின் விருப்பத்திற்கிணங்கி தட்சிணேசுவரத்தில் எவ்வாறோ நாட்களைக் கழித்தார். அவர் பால் ஈர்க்கப்பட்ட மதுர்பாபு அன்னை காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க எண்ணினார். இது விஷயமாக ராம்குமாரிடமும் கலந்து ஆலோசித்தார். இது நடக்கும் என்று ராம்குமாருக்குத்தோன்றவில்லை. தம்பியைப் பற்றித்தான் அவருக்கு நன்றாகத் தெரியுமே! அவன் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறி அவனது மனநிலையை மதுர்பாபுவிடம் விவரமாகக்கூறினார் ராம்குமார். மதுர்பாபு எளிதில் அதனை விட்டுவிடவில்லை. உடனடியாக முடியாமல் போனாலும் அதனை நிறைவேற்றுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

கதாதரரின் எதிர்கால வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளப்போகின்ற வேறொருவர் இந்தச் சமயத்தில் தட்சிணேசுவரத்திற்கு வந்தார். அவர் ஹிருதய ராம் முகோபாத்யாயர்

கதாதரரின் ஒன்று விட்ட சகோதரி ஹேமாங்கினியின் மகனான ஹிருதய ராம் வேலை தேடி பர்த்வானுக்கு வந்தார்.அவருக்கு வயது பதினாறு. கிராமத்திலிருந்து பர்த்வான் நகரில் குடியேறியிருந்த நண்பர் ஒருவர் வீட்டில் சில காலம் தங்கியிருந்து வேலை முயற்சிகளைச் செய்தார். ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை. அந்தவேளையில் தான் தாய் மாமன் இருவர் ராணி ராசமணி கட்டிய கோயிலில் நன்மதிப்புடன் வாழ்ந்து வருவதை அறிந்தார்.அங்கு சென்றால் ஒரு வேளை தாம் வேலை தேடிவந்த நோக்கம் நிறைவேறலாம் என்று எண்ணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். 

கதாதரரும் ஹிருதயரும் சம வயதினர். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். எனவே ஹிருதயர் அங்கே மகிழ்ச்சியாக நாட்களைக் கழித்தார்.

கட்டான உடலும் பார்வைக்கு எடுப்பான தோற்றமும் உடையவர் ஹிருதயர். உடலைப்போலவே உறுதியான மனமும் வாய்ந்த அவர் அச்சமே அறியாதவர். கடின உழைப்பாளி. 

எந்தச் சூழ்நிலையிலும் சிரமமின்றி வாழும் பக்குவம் பெற்றவர். எத்தகைய கஷ்டங்களையும் பாதகமான சூழ்நிலைகளையும் சமாளிக்கக்கூடிய அறிவுக்கூர்மையும் திட மனமும் கொண்டவர். குறிப்பாக கதாதரரிடம் உள்ளார்ந்த அன்பு உடையவர். சின்ன மாமனின் மகிழ்ச்சிக்காக எத்தனை இன்னல்களை வேண்டுமானாலும் ஏற்கத் தயாராக இருப்பவர்.

எப்போதும் துருதுரு என்றிருந்த ஹிருதயரிடம் சிந்திக்கும் திறன் மட்டும் மருந்துக்கும் இல்லை. அதனால் சாதாரண லௌகீக மக்களைப்போல எப்போதும் சுயநல முயற்சியிலேயே ஈடுபட்டிருப்பார். 

அவரது பிற்கால வாழ்வில் நாம் காண்கின்ற ஏதோ சிறிதளவு சுயநலமின்மையும் சிந்திக்கும் திறன் போன்ற நற்பண்புகளும் , குருதேவருடன் அவர் கொண்டிருந்த நீண்ட நாளைய தொடர்பினால் தான் ஏற்பட்டது. 

குருதேவரைப் பின்பற்றி நடப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளும் ஹிருதயருக்குக் கைகொடுத்தன. உணவு, உடை போன்ற தேவைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் தெய்வீக சிந்தனைகளில் மூழ்கியிருந்த குருதேவருக்கும் ஹிருதயரைப்போன்ற ஆழ்ந்த அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒருவரின் உதவி தேவைப்பட்டது.

குருதேவரின் சாதனைக் காலத்தில் ஹிருதயரைப்போன்ற ஒருவரைக்கொணர்ந்து , இருவருக்கும் இடையே பொருள் பொதிந்ததோர் இணக்கத்தை அன்னை காளிஏற்படுத்தி வைத்ததற்கு இது தான் காரணமாக இருக்குமோ? யாருக்குத்தெரியும்? சாதனைக் காலத்தில் ஹிருதயர் மட்டும் அங்கு இல்லையெனில் தம் உடலைக்காப்பாற்ற முடிந்திருக்காதுஎன்று குருதெவர் அடிக்கடி கூறுவார். 

ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயர் உள்ளளவும் ஹிருதயரின் பெயரும் அதனுடன் இதயபூர்வமாக அஞ்சலிகள் என்றென்றும் உரியனவாகுக!

ஹிருதயர் தட்சிணேசுவரத்திற்கு வந்து சேர்ந்த போது கதாதரருக்கு வயது இருபது முடிந்து சில மாதங்கள் சென்றிருந்தன. ஹிருதயர் பல வழிகளில் கதாதரருக்குத் துணையாக இருந்தார். கதாதரரின் வாழ்க்கை இதனால் சற்று எளிதாயிற்று என்பதை நாம் ஊகிக்கலாம். நடப்பது, படுப்பது , இருப்பது போன்ற அன்றாடச் செயல்கள் அனைத்தையும் ஹிருதயரின் உதவியுடனேயே கதாதரர் செய்தார். 

பாலகனைப்போன்ற இயல்புடைய கதாதரரின் செயல்கள் சாதாரண மனிதனின் கண்களுக்குச் சிறுபிள்ளைத்தனமாக, காரணம் அற்றவையாகத்தோன்றின. ஆனால் ஹிருதயரோ இந்தச் செயல்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இதமாக நடந்து கொண்டார். இத ஹிருதயரை குருதேவரின் அன்புக்குரியவர் ஆக்கியது.

ஹிருதயர் கூறினார். இனம் காண முடியாத ஈர்ப்பு ஒன்று அந்த நாட்களில் எனக்கு குருதேவரிடம் இருந்தது. நிழல்போல் எப்போதும் நான் அவருடனே இருப்பேன்.

ஒரு நிமிடநேரம் அவரைப் பிரிந்திருப்பது கூட எனக்கு வேதனை அளிப்பதாக இருந்தது. அவருடனே நடந்தேன். அவருடனே உறங்கினேன். நண்பகல் உணவு வேளையில் மட்டும், அதுவும் மிகச்சிறிது நேரம் மட்டுமே நாங்கள் பிரிந்திருப்போம் .ஏனெனில் குருதேவர் கோயில் பண்டக சாலையிலிருந்து பொருட்களைப் பெற்று அவற்றைத் தம் கையாலேயே சமைத்து, பஞ்சவடியில் அமர்ந்து உண்பார். 

நான் கோயில் பிரசாதம் உண்பேன்.குருதேவரின் சமையலுக்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் செய்த பின்னரே நான் அவரை விட்டுச் செல்வேன். அந்த நாட்களில் உணவு விஷயத்தில் அவரது கட்டுபாடு மிகவும் தீவிரமாக இருந்தது. தாமே சமைத்து உண்டபோது கூட அவருக்குத் திருப்தி இல்லை. மதிய உணவைத்தாமே சமைத்து உண்டாலும் இரவில் எங்களைப்போலவே அன்னை காளிக்குப் படைக்கப்பட்ட பூரி பிரசாதத்தை உட்கொள்வார். 

பல வேளைகளில் அந்தப் பூரி பிரசாதத்தை உட்கொள்வார். பல வேளைகளில் அந்தப் பூரியை உண்ணும் போது அவர் கண்கள் நீரால் நிரம்பும், அம்மா! ஒரு மீனவப்பெண்ணின் உணவை உட்கொள்ளச் செய்து விட்டாயே என்று வேதனையுடன் அன்னையிடம் முறையிடுவார்.

குருதேவரும் இதைப்பற்றிச் சிலவேளைகளில் கூறியுள்ளார். ஒரு மீனவப் பெண்ணிடமிருந்து உணவு கொள்ள வேண்டியிருக்கிறதே என்று மனம் வருந்துவேன்.

ராணி கீழ்ஜாதியைச்சேர்ந்தவர் என்பதால் ஏழைகள் கூட காளி கோயிலுக்கு உணவு கொள்ள வருவதில்லை. அதனால் அன்னைக்கு நிவேதனம் செய்யப்பட்ட உணவில் பெரும்பகுதியை மாடுகளுக்குப்போட்டனர். அதிலும் செலவழியாததை நதியில் எறிந்தனர்.குருதேவர் அதிக நாள் இவ்வாறு தாமே சமைத்து உண்ணவில்லை. இதனை அவரும் கூறினார்.ஹிருதயரும் கூறினார். காளிகோயில் அர்ச்சகர் பொறுப்பை ஏற்கும் வரை மட்டுமே, அதாவது இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே குருதேவர் தாமே சமைத்து உண்டிருக்க வேண்டும். ஏனெனில் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களில் அவர் அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கதாதரர் தன்னை நேசிக்கிறார் என்பது ஹிருதயருக்குத் தெரியும். ஆனால் கதாதரரின் ஒரு செய்கையை மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவெனில் திடீர்திடீரென கதாதரர் எங்கோ மறைந்து விடுவது தான்.பெரிய மாமாவுக்கு உதவச் செல்கின்றபோது. பகலுணவிற்குப்பின் ஓய்வெடுக்கும்போது, மாலை தீபாராதனை காணக்கோயிலுக்குச்செல்லும்போது என்று சிறிது நேரம் ஹிருதயர் எங்காவது சென்றால் , கதாதரர் எங்கோ மறைந்து விடுவார். 

அவர் எங்கு செல்கிறார் என்பது தெரியாது. தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. ஓரிரு மணி நேரத்தில் வந்து விடுவார்.அப்போது அது பற்றிக்கேட்டால் ஏன்? நான் இங்கு பக்கத்தில் தானே இருந்தேன்” என்று ஏதேதோ கூறி மழுப்பி விடுவார். சில வேளைகளில் தேடும்போது பஞ்சவடிப் பகுதியிலிருந்து வந்து கொண்டிருப்பார். ஒரு வேளை இயற்கைக் கடன்களைக் கழிக்கச் சென்றிருப்பார் என்று எண்ணி மேலும் எதுவும் கேட்காமல் இருந்து விடுவார் ஹிருதயர்.

  


ஒரு சமயம் கதாதரர் தாம் வழிபடுவதற்காக சிவ விக்கிரகம் ஒன்றைச் செய்ய எண்ணியதையும் அதன்பின் நிகழ்ந்தவற்றைப் பற்றியும் ஹிருதயர் கூறினார். குழந்தைப்பருவத்தில் காமார்புகூரில் கதாதரர் விக்கிரகங்கள் செய்வதுண்டு. இப்போது அந்த ஆசை எழுந்தவுடனேயே ஆற்றங்கரைக்குச் சென்று மண் எடுத்து காளை வாகனம், சூலம், உடுக்கை ஆகியவற்றுடன் சிவ விக்கிரகம் ஒன்றைச் செய்து வழிபடத் தொடங்கினார். 

கங்கைக் கரையில் உலவிக்கொண்டிருந்த மதுர்பாபு தற்செயலாக அங்கு வர நேர்ந்தது. எந்த தெய்வத்தை இவ்வாறு பக்திப் பரவசமாகப் பூஜை செய்கிறார் என்பதை அறிய விரும்பிய அவர் அருகில் சென்று பார்த்தார். 

அது ஒரு சிவ விக்கிரகமாக இருந்தது. சிறியதாக இருந்தாலும் அது மிகவும் அழகாக இருந்தது. அதைக்கண்ட மதுர்பாபு மிகவும் மகிழ்ந்தார். தெய்வீகப்பொலிவு மிக்க இத்தனை அழகான விக்கிரகம் வாங்கக் கிடைக்காது என்பதை அறிந்திருந்த அவர் ஹிருதயரிடம் ” இந்த விக்கிரகம் எங்கிருந்து கிடைத்தது? இதனைச்செய்தது யார் என்றுக்கேட்டார்? கதாதரரே இந்த விக்கிரகத்தைச்செய்தார், விக்கிரகங்கள் செய்வதுடன் உடைந்த விக்கிரகங்களைத் திறம்படச் செப்பனிடுவதிலும் அவர் வல்லவர் என்பதை மதுர்பாபுவிடம் கூறினார் ஹிருதயர். மதுர்பாபு வியப்பில் ஆழ்ந்தார். பூஜை முடிந்ததும் அந்த விக்கிரகத்தை தமக்குக் கொடுத்துவிடுமாறு ஹிருதயரிடம் கேட்டுக்கொண்டார். அவ்வாறே வழிபாடு முடிந்ததும் கதாதரரின் அனுமதியுடன் அந்த விக்கிரகத்தை மதுர்பாபுவிற்குக்கொடுத்தார் 

ஹிருதயர். அருகில் வைத்து அதனை மிகவும் நுணுக்கமாகப் பார்த்தபோது அதன் அழகால் மிகவும் கவரப்பட்டார் மதுர்.தெய்வீகப்பொலிவுடன் திகழ்ந்த அந்த விக்கிரகத்தை ராணி ராசமணியும் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அனுப்பி வைத்தார். 

ராணியும் அதன் அழகால் மிகவும் கவரப்பட்டார். அதனை குருதேவர் தான் செய்தார் என்பதை அறிந்தபோது அவரது களிப்பு இருமடங்காகியது. 

இந்த நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் முன்பு தான் கதாதரரைக்கோயில் பணியில் நியமிக்கலாம் என்ற எண்ணம் மதுர்பாபுவின் மனத்தில் தோன்றியிருந்தது. இப்போது அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது. மதுர்பாபுவின் இந்த விருப்பத்தைப்பற்றி ராம்குமார் கதாதரரிடம் முன்பே கூறியிருந்தார்.ஆனால் அதில் கதாதரர் சிறிதும்ஈடுபாடு காட்டவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்தே இறைவன் ஒருவனைத் தவிர வேறொருவரின் கீழ் பணி செய்யக்கூடாது என்ற தீர்மானத்தோடு வாழ்ந்த அவரால் எப்படி அதனை ஏற்றுக்கொள்ள முடியும்.

வேலை பார்ப்பது பற்றி குருதேவர் பலமுறை எங்களிடம் கூறியதுண்டு. நிர்ப்பந்தம் ஏற்பட்டாலன்றி ஒருவரின் கீழ் வேலைபார்ப்பதை அவர் உயர்வாகக் கருதியதில்லை. 

ஒரு சமயம் தமது இளம் பக்தர்களுள் ஒருவரான நிரஞ்சன் ஒருவரின் கீழ் வேலை பார்க்கிறார் என்று கேள்வியுற்ற அவர் மிகவும் மனவேதனையுடன் இதைக்கேள்விப்பட்டு என் மனம் படும்பாடு சொல்லி முடியாது. 

அவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்டால் கூட நான் இவ்வளவு வேதனைப் பட்டிருக்க மாட்டேன் என்று சொன்னார்.

பின்னர் ஒரு நாள் குருதேவர் அவனைச் சந்திக்க நேர்ந்தது. தன் வயதான தாயைக் காப்பாற்றவே வேலைக்குச் செல்வதாக அவன் தெரிவித்தான். உடனே அவனை அன்போடு தடவிக்கொடுத்து, வயதான தாயைக் காப்பாற்றுவதற்காக நீ அவ்வாறு செய்ய நேர்ந்தது.அதில் தவறில்லை.

உன் சொந்த சுகங்களுக்காக அவ்வாறு செய்திருந்ததால் நான் உன்னைத் தொடவே முடிந்திருக்காது. என் நிரஞ்ஜனிடம் சிறு துளியும் அஞ்ஜன் இல்லை அவன் எவ்வாறு தவறு செய்ய முடியும்? என்று கூறினார்.

குருதேவர் நிரஞ்ஜனிடம் இவ்வாறு கூறியது புதிதாக வந்தவர்களுக்குத் திகைப்பை அளித்தது. 

அவர்களுள் ஒருவர் தயங்காமல் .”ஐயா நீங்கள் வேலை பார்ப்பதைக் கண்டிக்கிறீர்கள்.வேலை பார்க்காமல் நாங்கள் எவ்வாறு குடும்பங்களைக் காப்பாற்ற முடியும்? என்று கேட்டார்.

அதற்கு குருதேவர் விரும்புபவர்கள் செய்யுங்கள்.நான் தடுக்கவில்லை. நான் சொல்வதெல்லாம் (நிரஞ்ஜனையும் மற்ற இளைஞர்களையும் சுட்டிக்காட்டி) இவர்களுக்கு மட்டுமே. இவர்கள் விஷயமே வேறு என்று பதில் கூறினார். 

அந்த இளைஞர்களின் வாழ்க்கையைத் தனிவிதமாக உருவாக்கி வந்தார் குருதேவர். 

ஒருவரின் கீழ் வேலை பார்ப்பது ஆன்மீக சாதகர்களுக்கு உகந்ததல்ல என்பதே குருதேவர் கூறியதன் கருத்து.

மதுர்பாபுவின் நோக்கத்தைத் தன் சகோதரரிடமிருந்து அறிந்த கதாதரர் மதுர்பாபுவின் கண்களில் படாமல் இருக்க முயன்றார். 

கதாதரரைப் பொறுத்த வரை மனம், வாக்கு, உடல் இம்மூன்றாலும் மதிப்பது உண்மையையும் தர்மத்தையும் தானே தவிர, எந்தத் தனிமனிதரையும் அல்ல. அதற்காக, காரணமின்றி யாரையும் அவமதிப்பதையும் அவர் விரும்பவில்லை. பிறரிடம் நற்குணங்களைக் கண்டால் அவற்றை மனதாரப்புகழவும் , சான்றோரைப் பாராட்டவும் அவர் என்றும் தவறியதில்லை.கோயில் அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது பற்றி அவரே ஒரு முடிவுக்கு வராத நிலையில் , அந்தப்பொறுப்பை ஏற்கும் படி மதுர்பாபு கேட்டுக்கொண்டால் மறுக்கநேரிடும்.அது மதுர்பாபுவின் மனத்தைப் புண்படுத்தும். அத்தகையதொரு சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காகவே கதாதரர் ஒதுங்கி வாழ முயற்சி செய்திருக்க வேண்டும். 

அது மட்டுமின்றி கதாதரர் வயதில் மிகவும் சிறியவர், மிகவும் சாதாரணமானவர். மதுர்பாபுவோ ராணி ராசமணியின் வலது கையாகச் செயல்பட்டு வருபவர். மிகுந்த மதிப்பிற்குரியவர். அவரது வேண்டுகோளை மறுப்பது என்பது சிறுபிள்ளைத் தனமானதாகக் கருதப்படும் என்றும் அவர் எண்ணியிருக்க வேண்டும்.

நாட்கள் செல்லச்செல்ல காளி கோயிலின் மீது கதாதரருக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அங்கு வசிப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது. காமார்புகூருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் கூடக்குறையலாயிற்று. 

பொறுப்புகள் , கடமைகள் எதுவும் கொடுக்கப் படாவிட்டால் தட்சிணேசவரத்தில் தங்குவதில்அவருக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அப்போது நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து இதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்தத் தருணத்தை எண்ணி கதாதரர் கலங்கிக் கொண்டிருந்தாரோ அது வந்து விட்டது. 

ஒரு நாள் மதுர்பாபு ஆலயத்திற்கு வந்தபோது சற்று தொலைவில் கதாதரரும் ஹிருதயரும் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். உடனே கதாதரரை அழைத்து வரும்படி வேலையாளை அனுப்பினார். 

கதாதரர் அங்கிருந்து மெல்ல நழுவ எத்தனித்தார். அதற்குள் வேலையாள் வந்து, பாபு தங்களை அழைக்கிறார் என்று கூறினான். 

கதாதரர் தயங்குவதைக் கண்ட ஹிருதயர் காரணம் கேட்ட போது கதாதரர், நான் இப்போது அங்கு சென்றால் அவர் என்னை இங்கு தங்கும்படி கோயில் பணியை ஏற்கும் படியும் கூறுவார். அதனால் தயங்குகிறேன் என்று சொன்னார். 

ஹிருதயருக்கு அது பெரிய விஷயமாகப் படவில்லை. அவர் கதாதரரிடம் அதில் என்ன கஷ்டம் இருக்கிறது? இத்தகைய ஒரு நல்ல இடத்தில் ஒரு பெரிய மனிதரின் கீழ் பணி செய்வது நல்லது தானே? இதற்குப்போய் தயங்குகிறீர்களே! என்றார். 

அதற்கு கதாதரர் எந்த வேலையிலும் கட்டுண்டு வாழ நான் விரும்பவில்லை. கோயில் பணியை ஏற்றுக்கொண்டால் காளி விக்கிரகத்தின் மீதுள்ள ஆபரணங்களுக்கும் நான் தானே பொறுப்பு. அது என்னால் முடியாது. 

ஆபரணங்களின் பொறுப்பை நீ ஏற்றுக்கொண்டு என்னுடன் இங்கே தங்குவதானால் நான் பூஜைப் பணியை ஏற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்.

ஹிருதயர் தட்சிணேசுவரத்திற்கு வந்ததே ஒரு வேலை தேடித்தான். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல வேலையே தன்னைத்தேடி வருவதைக்கண்ட ஹிருதயர் கதாதரரின் கருத்துக்கு உடனே இசைந்தார். 

அதன் பின்னர் கதாதரர் மதுர்பாபுவிடம் சென்றார். எதிர்பார்த்தபடியே மதுர்பாபு கோயில் பணியை ஏற்கும் படி வேண்டினார். கதாதரரும் முன்பு குறிப்பிட்ட நிபந்தனையுடன் அதனை ஏற்றுக்கொண்டார். 

காளியின் திருவுருவை அலங்கரிக்கின்ற பணியை அன்று முதல் கதாதரருக்கு மதுர்பாபு அளித்தார். கதாதரருக்கும் ராம்குமாருக்கும் உதவுமாறு ஹிருதயரைப் பணித்தார். 

மதுர்பாபுவின் வேண்டுகோளுக்கு கதாதரர் இணங்கியது ராம்குமாரின் கவலையைப் பேரளவிற்கு க் குறைத்தது.

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் யாவும் கோயில் கும்பாபிஷேகம் நிறைவுற்ற மூன்று மாதங்களில் நிகழ்ந்தன. 


 MAIN PAGE (TOP) 

image64

காளி தரிசனம்

காளி தரிசனம்

  

அது 1855-ஆம் ஆண்டு கோகுலாஷ்டமி நாள் வந்தது. கண்ணன் பிறந்த அந்த நன்னாளை கோலாசலமாகக் கொண்டாடுவதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் கோகுலாஷ்டமியன்று அசம்பாவித நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அன்று ராதாகோவிந்தருக்கு உச்சிக்கால பூஜையும் நைவேத்தியமும் நிறைவேறிய பின்னர், அர்ச்சகரான ஷேத்திரநாதர் ராதாராணி விக்கிரகத்தைப் பள்ளியறையில் வைத்துவிட்டு, கோவிந்தரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். வழியில் திடீரென கால் வழுக்கிக் கீழே விழுந்தார். 

கோவிந்த விக்கிரகத்தைின் ஒரு கால் உடைந்து விட்டது. இது விஷயமாகப் பல பண்டிதர்களின் யோசனை கேட்கப்பட்டது. 

கதாதரர் பரவச நிலைகளில் அவ்வப்போது ஆழ்வதையும் இது பொன்ற பிரச்சனைகளுக்கு விடை சொல்வதையும் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த மதுர்பாபு அவரது அறிவுரையைக்கேட்பதில் ஆர்வம் காட்டினார். இது பற்றி ஹிருதயர் கூறியதாவது, உடைந்த விக்கிரகம் பற்றி மதுர்பாபு கேட்டதும் கதாதரர் பரவசநிலையில் ஆழ்ந்தார். பரவசநிலை கலைந்ததும், புதிய விக்கிரகம் தேவையில்லை என்று கூறிவிட்டார். உடைந்த விக்கிரகங்களைச் செப்பனிடுவதில் கதாதரர் கைதேர்ந்தவர் என்பது மதுருக்குத் தெரியும். அவரது வேண்டுகோளின் பேரில் கோவிந்த விக்கிரகத்தை உடைந்த காலை கதாதரரே சரி செய்தார். 

அந்த விக்கிரகமே தொடர்ந்து வழிபடப்பட்டது. இன்றும் அதனை உன்னிப்பாகப் பார்ப்பவர்கள் கூட அது உடைந்து , சீர் செய்யப்பட்டது என்று கூற முடியாது. அவ்வளவு அழகாக அதனைச் சரி செய்துள்ளார் குருதேவர்.

பழுதபட்ட விக்கிரகத்தைப் பூஜிப்பதைப் பற்றிப் பலர் பலவாறாகப்பேசினார். ஆனால் கததரரின் அறிவுரையில் நம்பிக்கை கொண்டிருந்த ராணியும் மதுரும் இத்தகைய பேச்சுகளுக்குச் செவிசாய்க்கவில்லை. கவனமின்மைக்காக ’ ஷேத்திரநாதர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். 

ராதாகோவிந்தரின் பூஜை செய்யும் பொறுப்பு குருதேவருக்குக் கொடுக்கப்பட்டது. 

ராம்குமாருக்கு உதவியாக காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஹிருதயர் ஏற்றார்.

ராதா கோவிந்தர் விக்கிரகம் உடைந்ததைப் பற்றிய இன்னொரு நிகழ்ச்சியை வேறொரு சமயத்தில் ஹிருதயர் எங்களிடம் கூறினார். 

கல்கத்தாவிலிருந்து சில மைல்கள் வடக்கே வராக நகரில் கூடிகாட்படித்துறைக்கு அருகில் நடால் பகுதியைச்சேர்ந்த பிரபல நிலக்கிழாரான ரதன்ராய்க்குச் சொந்தமான ஒரு படித்துறை இருந்தது. அந்தத் துறைக்கு அருகில் தசமகா வித்யை கோவில் ஒன்று உள்ளது. 

ஆரம்ப காலத்தில் அந்தக் கோயிலில் வழிபாட்டிற்கும் நைவேத்தியத்திற்கும் சிறந்த ஏற்பாடுகள் இருந்தன. நாம் குறிப்பிடுகின்ற இந்தக் காலகட்டத்தில் அந்த ஆலயம் அழியும் நிலையில் இருந்தது. 

கதாதரிடம் பக்தியும் மதிப்பும் கொண்டு, அவருடன் மதுர் நெருங்கிப் பழகத் தொடங்கிய நாட்களில் இருவரும் ஒரு நாள் அந்தக்கோயிலுக்குச் சென்றனர். மோசமான நிலையிலிருந்த அந்தக்கோயிலின் அன்றாட வழிபாட்டிற்கு மாதம் இரு மணங்கு அரிசியும் இரண்டு ரூபாயும் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு மதுர்பாபுவைக்கேட்டுக்கொண்டார் கதாதரர். 

மதுர்பாபுவும் உடனடியாக அதற்கு இசைந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குருதேவர் சிலவேளைகளில் அந்தக்கோவிலுக்குச் சென்று வருவதுண்டு. ஒரு முறை கதாதரர் அங்கிருந்து வந்து கொண்டிருந்தபோது பிரபல நிலக்கிழாரான ஜெயநாராயணன் தாம் கட்டிய படித்துறையில் பலருடன் நின்று கொண்டிருந்தார். 

கதாதரருக்கு அவரைத் தெரியும். எனவே அவரைச் சந்திக்கச்சென்றார். கதாதரரை வணங்கி மரியாதையுடன் வரவேற்ற ஜெயநாராயணர் தன் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். 

உரையாடலின் போது கோவிந்த விக்கிரகத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. ஜெயநாராயணர்கதாதரரிடம் கோவிந்தர் உடைந்து விட்டாராமே? என்று கேட்டார். 

கதாதரர் அதற்கு பதிலாக ஆகா! என்ன அறிவுத்திறன்? சிதைக்க முடியாத முழுமையான பரம்பொருள் உடைந்துவிடுமா? என்று கேட்டுவிட்டு தொடர்ந்து வீணான விவாதங்கள் எழுவதைத் தவிர்ப்பதற்காகப் பேச்சின் போக்கை மாற்றினார். 

எதிலும் தேவையற்ற அம்சங்களை விலக்கி. தேவையானவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளும் படி அறிவுரை கூறினார். ஜெயநாராயணரும் கதாதரரின் குறிப்பை உணர்ந்து பயனற்ற கேள்விகள் கேட்பதை நிறுத்திக்கொண்டார்.

ஹிருதயர் கூறினார், குருதேவர் பூஜை செய்வது ஒரு கண்கொள்ளாக்காட்சி. 

பார்ப்பவர்கள் அப்படியே தங்களை மறந்து நின்று விடுவர். அந்த தெய்வீகக் குரல்! இதய ஊற்றிலிருந்து அந்த இன்குரல் பொங்கி வரும் போது தான் எத்தனை உருக்கம்! 

ஒரு முறை கேட்டாலும் போதும் மறக்கவே முடியாது. அவரது பாடல்களில் பெரிய இசை மேதாவித்தனம் எதுவும் இருக்காது. ஆனால் பாடலின் பொருளை அப்படியே தன்னுள் வாங்கி, அந்த உணர்ச்சியைத் தமது தேனொழுகும் தெய்வீகக் குரலில் குழைத்து தாள லய சுத்தமாக அப்படியே இழைய விடுவார். 

உணர்ச்சி அல்லது பாவம் தான் சங்கீதத்தின் உயிர் நாடி, என்பதை அவரது பாடல்களைக் கேட்கின்ற யாரும் உணர்ந்து கொள்ள முடியும். அதே வேளையில் தாளமும் லயமும் கீதத்துடன் இசைந்து வராவிட்டால் இசையின் பாவம் சரியாக வெளிப்பட முடியாது. 

பிறர் பாடுவதையும் குருதேவர் பாடுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெரியும். ராணி ராசமணி தட்சிணேசுவரத்திற்கு வரும்போதெல்லாம் குருதெவரைப் பாடும்படிக் கேட்டுக்கொள்வார்.

கீழ்காணும் பாடலை ராணி மிகவும் விரும்பினார்.

ஓ அன்னையே!

நீசிவனின் மார்பின் மீது

நிற்கும் காரணம் தான் என்ன?

நீ நாக்கினை வெளியே நீட்டிக்கொண்டு 

ஓர் எளிய பெண்ணைப்போல் இருக்கிறாய்.

அதன் காரணம் எனக்குப் புரிகின்றது.

ஓ! உலகைக் காப்பவளே! 

இது உன் பரம்பரை ப் பண்பா?

உன் தாயும் இவ்வாறே உன் தந்தையின் மார்பின் மீது நின்றாளா?

குருதேவரின் பாடல்கள் இனிமையாக இருப்பதற்கு வேறொரு காரணமும் உண்டு. பாடும் போது அவர் தம்மையே மறந்து பாடலின் உணர்ச்சியிலும் அதன் பொருளிலும் பரிபூரணமாக ஒன்றிப் பாடுவார்.

எந்த மனிதரையும் மகிழ்விப்பதற்காக அவர் பாடுவதும் இல்லை. தம்மை மறந்து சுற்றுப்புறத்தையும் மறந்து குருதேவர் பாடுவதைப்போல வேறு யாரும் பாடுவதை நாங்கள் கேட்டதே இல்லை. 

எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாடகர்கள் சிறிது பாராட்டை எதிர்பார்ப்பார்கள்.

குருதேவர் விஷயத்தில் அந்த எதிர் பார்ப்பு கூட இருந்ததில்லை. அவர் பாடுவதை யாராவது புகழ்ந்தால், அந்தப் புகழ்மொழி பாடலில் பொஞ்குகின்ற உணர்ச்சிக்கும் அதன் கருத்துக்கும் தானேயன்றித் தமக்கு அல்ல என்றே எண்ணினார்.

கதாதரர் பாடும்போது அவரது கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வழியும். பூஜை செய்யும் போது பிறர் அருகில் வருவதையோ பேசுவதையோ சிறிதும் அறியாத அளவிற்கு அதில் அப்படியே லயித்து விடுவார். என்று ஹிருதயர் சொல்வதுண்டு. 

குருதேவர் கூறினார் பூஜைவேளையில் அங்க நியாசம், கர நியாசம், போன்ற சடங்குகளைச் செய்யும் போது மந்திரங்களின் எழுத்துகள் பிரகாசமான வண்ணங்களில் என் உடலில் ஒளிர்வதைநான் கண்டேன். 

குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக ஒரு பாம்பைப்போல சஹஸ்ராரத்திற்குச் செல்வதைப் பார்த்தேன். 

அந்த சக்தி கடந்து சென்ற உடலின் பகுதிகள் செயலற்று, உணர்ச்சியிழந்து உயிரற்றவை போலாகிவிட்டன. 

பூஜை வேளையில் ரம் இதி ஜலதாரயா வஹனி ப்ராகாரம் விசிந்த்ய, என்று கூறியபோது அதாவது ரம் என்ற பீஜ மந்திரத்தைக் கூறி நீரைத் தெளித்து பூஜை செய்யும் பகுதியைச் சுற்றி அக்கினிச் சுவர் எழும்பியிருப்பதாகக் கற்பனை செய்தபோது, நூற்றுக் கணக்கான ஜீவாலைகளைக் கொண்ட ஓர் அக்கினிச் சுவர் எழும்பி அவ்விடத்தை எந்த வித ஆபத்தும் நேராவண்ணம் காப்பாற்றுவதைக் கண்கூடாகக் கண்டேன்.

உள்ளம் ஒன்றி கதாதரர் பூஜை செய்யும் போது அவரது உடலில் ஒரு தெய்வீக ஒளி பிரகாசிப்பதைக் கண்ட மற்ற பிராமணர்கள் ஒருவருக்கொருவர்,” இறைவனே மனித உருத்தாங்கி வந்து பூஜை செய்வது போல் அல்லவா உள்ளது? என்று வியப்புடன் பேசிக்கொண்டதாக ஹிருதயர் கூறினார்.

தட்சிணேசுவரத்திற்கு வந்த பின்னர் ராம்குமார் குடும்பச்சுமையைப் பற்றிய கவலையிலிருந்து பேரளவிற்கு விடுபட்டிருந்தார். ஆனால் கதாதரரின் போக்கு மட்டும் உறுத்திக்கொண்டிருந்தது. தம்பியின் தனிமை நாட்டமும், உலகியலில் அக்கறையின்றி விலகி நிற்கும் இயல்பும், எதிலும் விருப்பமின்றி உதாசீனமாக நடந்து கொள்வதும் ராம்குமாரின் மனத்தை வாட்டின. 

காலை, மாலை என்றில்லாமல் கோயிலிலிருந்து தொலைவில் கங்கைக் கரையில் ஆழ்ந்த சிந்தனையுடன் அவர் நடப்பதும், பஞ்சவடியில் ஏதோ நினைவாக அமர்ந்திருப்பதும், பஞ்சவடியைச் சுற்றியிருந்த அடர்ந்த காட்டில் நெடுநேரம் இருந்து விட்டு வருவதும் ராம்குமாருக்குப் பிடிபடாத புதிராக விளங்கின. 

நாட்கள் கடந்தன. ஒரு வேளை பெற்றஅன்னையின் நினைவால் வாடுகிறான் போலும்.ஆனால் காமார்புகூருக்குச் செல்ல வேண்டுமென்று ஒரு போதும் அவன் கூறியதில்லை. நான் கேட்ட போது கூட அந்த விருப்பம் இல்லையென்றே சொன்னான். எனவே காமார்புகூருக்கு அனுப்பத்தேவையில்லை. எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. நாட்கள் செல்லச்செல்ல தளர்ச்சியும் தள்ளாட்டமும் அதிகமாகி விட்டது.இன்றோ நாளையோ வாழ்க்கை என்று முடிவுறும் என்பது யாருக்குத்தெரியும்? 

இனியும் காலத்தை வீணாக்கக்கூடாது. சாகுமுன் தம்பியை எப்படியாவது ஆளாக்கி அவன் சொந்தக்காலில் நின்று சம்பாதித்து சிறப்பாக வாழும்படிச் செய்வது என் கடமை, என்றெல்லாம் ராம்குமாரின் மனத்தில் எண்ணங்கள் எழுந்து அலைமோதின. 

ஆகவே கதாதரருக்குக் கோயில் பொறுப்புகளைக் கொடுப்பதுபற்றி மதுர்பாபு அவரிடம் கலந்து ஆலோசித்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

கதாதரர் முதலில் காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பணியையும், தொடர்ந்து பூஜைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அந்தப் பணியைத் திறம்படச் செய்தபோது அவரது கவலை வெகுவாகக்குறைந்து விட்டது. 

அதன் பின்னர் அவர் கதாதரருக்கு சண்டி, காளி போன்ற பல்வேறு தெய்வங்களின் பூஜை முறைகளில் பயிற்சி அளித்தார். கதாதரரும் அவற்றைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டார். சக்தி மந்திர தீட்சை பெறாமல் தேவிபூஜை செய்வது முறையல்ல என்பதற்காக மந்திரோபதேசம் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

கேனாராம் பட்டாச்சாரியார் என்ற சிறந்த உபாசகர் கல்கத்தாவில் பைடக்கானா தெருப்பகுதியில் வசித்துவந்தார். 

தட்சிணேசுவர ஆலயத்திற்கு அவர் அடிக்கடி வருவார் . மதுர்பாபு மற்றும் ராணியின் குடும்பத்தில் பலரையும் அவருக்குத்தெரியும். அவர் நல்ல சாதகர் என்பதால் எல்லோரும் அவரை மதித்துப்போற்றினர். 

ராம்குமாரையும் கேனாராம் அறிந்திருந்தார். அவரிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்வதென கதாதரர் முடிவுசெய்தார். 

மந்திரோபதேசம் பெற்றவுடனேயே கதாதரர் பரவச நிலை அடைந்து சமாதியில் ஆழ்ந்துவிட்டார்என்று கூறப்படுகிறது. 

இதைக்கண்ட கேனாராம் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். சீடரின் உயர்ந்த பக்தியும் பக்குவமும் அவருக்குச் சொல்லொணா வியப்பை அளித்தது. சீடர் தமது லட்சியத்தில் வெற்றி பெற மனமார வாழ்த்திச்சென்றார்.

இந்த வேளையில் ராம்குமார் ராதாகோவிந்தரின் பூஜைப் பணியைத் தாம் ஏற்றுக்கொண்டுவிட்டு காளியைப்பூஜிக்கும் பணியை கதாதரரிடம் தற்காலிகமாகக் கொடுத்தார். 

அவ்வப்போது ஏற்பட்ட உடல் தளர்ச்சியோ, தம்பியைக் காளிக்கோயில் அர்ச்சனர் பணியில் சிறந்த முறையில் ஈடுபடச்செய்ய வேண்டும் என்ற எண்ணமோ அவரது இந்த முடிவிற்குக் காரணமாக இருக்கலாம். மதுர்பாபுவும் ராம்குமாரை நிரந்தரமாக ராதா கோவிந்தர் பணியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ராம்குமாருக்கு வயதாகிவிட்டதால் உடல் தளர்ந்து விட்டதையும், அவரால் காளிகோயில்பூஜை போன்ற கடுமையான பணியைச் செய்ய இயலாது என்பதையும் மதுர்பாபு உணர்ந்து தான் இருந்தார். 

அதனால் தான் உடனடியாக இந்த மாற்றங்களைக் கொண்டுவந்து விட்டார். 

இப்போது முதல் கதாதரர் காளிகோயில் அர்ச்சகராகப் பணியாற்ற முறையாக நியமிக்கப்பட்டார். 

இந்த மாற்றங்களால் ராம்குமார் மகிழ்ச்சி யுற்றார். அன்னையின் பூஜை பற்றிய விவரங்களை எல்லாம் கதாதரருக்கு விளக்கமாகக் கற்பித்தார். 

காளிகோயில் பூஜை பற்றிய அவரது கவலை தீர்ந்தது.

சில நாட்களுக்குப் பின்னர் ராம்குமார் மதுர்பாபுவிடம் கலந்துபேசி ராதாகோவிந்தர் ஆலய பூஜைப் பணியை ஹிருதயரிடம் ஒப்படைத்துவிட்டார். 

சில நாட்கள் விடுமுறையில் காமார்புகூர் சென்று வர விரும்பினார். அவரது அந்த ஆவல் நிறைவேறவில்லை. 

ஏதோ வேலை நிமித்தமாகக் கல்கத்தாவின் வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற ஊருக்குச் சென்ற அவர் அங்கே திடீரென காலமானார். 

காளிகோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றபின் அங்கு ஓர் ஆண்டு மட்டும் பூஜை செய்தார். என்ற குறிப்பிலிருந்து அவர் 1856-ஆம் ஆண்டு காலமானார் ஆன்ம தாகமும் முதல் தரிசனமும்


கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். 

கதாதரரை விட ராம்குமார் எறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர். 

அவரைத் தந்தைக்குச் சமமாக மதித்து வந்தார் கதாதரர். தந்தை போல் அன்பு காட்டிய சகோதரரின் திடீர் மறைவு அவரை அளவு கடந்த துயரத்தில் ஆழ்த்தியது. 

இந்த மரணம் வாழ்வு நிலையற்றது என்பதை அவரது மனத்தில் பதிய வைத்து, அவரது தூய உள்ளத்தில் எந்த அளவிற்குத் துறவின் கனலைத் தூண்டியிருக்கும் என்று யாரால் கூற இயலும்? 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கதாதரர் அன்னை காளியின் வழிபாட்டில் மிகவும் ஆழ்ந்து ஈடுபடலானார். 

அன்னையைக் காண வேண்டுமென்ற தணியாத தாகம் கொண்டவனுக்கு உண்மையிலேயே அன்னை காட்சி அளிப்பாளா என்ற கேள்வி அப்போதிலிருந்து அவர் மனத்தைக் குடைய ஆரம்பித்தது. 

நாள்தோறும் பூஜை முடிந்தவுடன் அன்னையின் முன் அமர்ந்து சூழ்நிலையை மறந்து அவளது எண்ணத்தில் மூழ்கியிருப்பார். 

ராமபிரசாதர் , கமலாகாந்தர் போன்ற பக்தர்கள் இயற்றிய பாடல்களை தம்மை மறந்து பாடியபடியே அன்புப் பெருக்கில் ஆழ்ந்து விடுவார். 

வீண்பேச்சுக்களில் துளிநேரத்தை வீணாக்குவதையும் அடியோடு வெறுத்தார். இரவில், கோயில் கதவு சாத்திய பிறகு யாரும் அறியாவண்ணம் பஞ்சவடியின் அருகிலிருந்த வனத்திற்குள் சென்று அன்னையை தியானிப்பார்.

கதாதரரின் இத்தகைய வினோதச் செயல்கள் ஹிருதயருக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் என்ன செய்ய முடியும்? சிறு வயதிலிருந்தே கதாதரர் தாம் நினைத்ததைச் செய்து முடிக்கும் இயல்புடையவர் என்பதும் யாரும் அவரைத் தடுக்க முடியாது என்பதும் ஹிருதயருக்குத் தெரியாதவை அல்ல. எனவே கதாதரரைத் தடுக்க அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே வேளையில் கவலையை வெளிப்படுத்தாமல் இருக்கவும் இயலவில்லை. 

இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தார் அவர். கதாதரரின் வினோத ப்போக்கு அதிகரிக்கலாயிற்று. 

இரவில் தூங்காமல், படுக்கையை விட்டெழுந்து எங்கோ சென்று விடுவார். ஹிருதயரின் கவலை அதியமாயிற்று. இரவில் உறங்காவிட்டால் கோயிலில் எப்படி பூஜைப் பணியைச் சரிவரச் செய்ய இயலும். 

கதாதரர் உண்ணும் உணவின் அளவும் குறைந்துவிட்டது. உணவையும் குறைத்து உறக்கத்தையும் தவிர்த்து எத்தனை நாள் உடல் நலத்துடன் ஒருவர் வாழ முடியும்? இனியும் தாமதிப்பதில் பயனில்லை.என்று எண்ணிய ஹிருதயர் கதாதரரிடமே இது பற்றிப்பேச முடிவு செய்தார்.

அந்த நாட்களில் பஞ்சவடிப் பகுதி தற்போது இருப்பதைப்போல் இல்லாமல் அடர்ந்த காடாக இருந்தது. 

பெரிய குழிகளும் நெருக்கமான புதர்களும் மண்டிக் கிடந்தன. அது ஒரு அடர்ந்த காடு என்பதுடன் மயானமாகவும் இருந்ததால் பகலில் கூட மக்கள் அந்த வழியாகச் செல்ல அஞ்சினர். சென்றாலும் தப்பித்தவறிக்கூட யாரும் காட்டிற்குள் நுழைவதில்லை. இரவிலோ, பேய் பிசாசு பயத்தால் யாரும் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை. 

அந்தக் காட்டிற்குள் நெல்லி மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அது சற்று தாழ்வான பகுதியாக இருந்ததால் அந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கின்ற ஒருவரை, உயரமான பகுதியிலிருந்து பார்த்தால் கூடக் கண்டுபிடிக்க முடியாது. இரவு வேளைகளில் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து கதாதரர் தியானத்தில் ஈடுபடுவார்.

கதாதரர் ரகசியமாக எங்கு செல்கிறார் என்பதைக் காண விரும்பிய ஹிருதயர் ஒரு நாள் அவர் புறப்படும்போது அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தார்.

கதாதரர் நேராகக் காட்டிற்குள் சென்றார். அவரைத் தொடர்ந்து சென்றால் ஒரு வேளை கோபம் கொள்வார் என்றெண்ணி ஹிருதயர் அதற்குமேல் செல்லவில்லை. 

கதாதரரை அச்சுறுத்தும் எண்ணத்தோடு அவரைச் சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கற்களை எறிந்து பார்த்தார். கதாதரரோ திரும்பிகூடப் பார்க்காமல் காட்டினுள் சென்று விட்டார். முயற்சி பலிக்காததால் ஹிருதயர் அறைக்குத் திரும்பினார். 

அடுத்த நாள் ஓய்வாக இருக்கும்போது அவர் கதாதரரை அணுகி, ஆமாம் நீங்கள் இரவில் காட்டிற்குள் சென்று என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். 

அங்கு நெல்லி மரம் ஒன்று உள்ளது, அதன் கீழ் அமர்ந்து தியானம் செய்கிறேன். நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்பவர் நினைப்பவை நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என்று பதிலளித்தார் கதாதரர்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கதாதரர் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்யும் போதெல்லாம் கற்கள் வந்து விழுதல் போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்பட்டன. 

எல்லாம் ஹிருதயரின் செயல் என்று தெரிந்திருந்தும் கதாதரர் அவரிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை. எதனாலும் கதாதரரின் செயலைத் தடுக்க முடியாததைக் கண்ட ஹிருதயரின் பொறுமை எல்லை மீறி விட்டது.

எனவே ஒரு நாள் கதாதரர் காட்டிற்குள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஹிருதயரும் அவர் என்னதான் செய்கிறார் என்பதைக் கண்டே தீர வேண்டும் என்ற முடிவுடன் ஓசையின்றி அவரைத் தொடர்ந்து சென்று சற்றுத் தொலைவில் இருந்தபடியே கவனித்தார்.

அங்கு அவர் கண்ட காட்சிஅவரைத் திகைப்படையச் செய்தது. ஏனெனில் நெல்லிமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த கதாதரரின் உடம்பில் உடைகள் எதுவும் இல்லை.பூணூல் கூட இல்லை. 

இது என்ன கோலம்! மாமாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? பைத்தியங்கள் தாம் இப்படியெல்லாம் செய்யும் .தியானம் செய்வதானால் செய்யட்டும். அதற்காக உடுத்தியிருக்கும் துணியை ஏன் களைய வேண்டும்? என்று வியந்தார் ஹிருதயர்.

கதாதரரின் செயல்களைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாத ஹிருதயர் நேராக அவரிடம் சென்று, இதெல்லாம் என்ன? ஏன் இப்படி உடையையும் பூணூலையும் களைந்து விட்டு நிர்வாணமாக அமர்ந்திருக்கிறீர்கள்? என்று கத்தினார்.

தியானத்தில் ஆழ்ந்திருந்த கதாதரர் எதையும் அறியவில்லை.ஒரிரு முறை ஹிருதயர் இவ்வாறு உரக்கக் கத்திய பின்னரே அவருக்குப் புறவுணர்வு வந்தது. 

உனக்கு என்ன தெரியும்? உலகத் தளைகளிலிருந்து விடுபட்டுத்தான் தியானம் செய்ய வேண்டும். 

பிறப்பிலிருந்தே மனிதன் வெறுப்பு, வெட்கம். குலப்பெருமை , நன்னடத்தையால் வரும் கர்வம், அச்சம், மானம், உயர்குடிப்பிறப்பு, அகந்தை ஆகிய எட்டு தளைகளில் சிக்கி உழல்கிறான். 

பூணூல் கூட இவ்வகையான தளைகளில் ஒன்று தான். ஏனெனில் அது, நான் பிராமணன் அனைவரிலும் உயர்ந்தவன் என்ற தற்பெருமையின் சின்னம். 

அன்னையின் அருளை நாடும் ஒருவன் இத்தகைய தளைகளிலிருந்து விடுபட்டு ஒருமித்த மனத்துடன் அவளை அழைக்க வேண்டும். அதனால் தான் நான் இவற்றைக் களைந்து விட்டேன். தியானம் முடித்துத் திரும்பும் பொழுது மறுபடியும் அணிந்து கொள்வேன் என்று அமைதியாகக் கூறினார் கதாதரர். 

இது வரை கேட்டிராத இந்த விஷயங்கள் ஹிருதயருக்கு அதிர்ச்சியைத் தந்தன. மாமாவின் தவறுகளை எடுத்துக்கூறி வற்புறுத்தி அவரை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று நினைத்திருந்தார். அவ்வாறு நடக்காததால் மறுமொழி ஒன்றும் கூறாமல் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தொடர்பாக ஓர் உண்மையை இங்குக்குறிப்பிடுவது நல்லது. 

அது நமக்குத் தெரிந்தால் குருதேவரின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை நாம் நன்றாகப்புரிந்து கொள்ள முடியும். 

மேலே குறிப்பிட்ட எட்டு வகைத் தளைகளை மனத்தால் மட்டும் துறந்தால் போதும், ஒருவர் உண்மையில் அவற்றைத் துறந்தவர் ஆவார் என்ற கருத்தில் குருதேவருக்கு நம்பிக்கையும் திருப்தியும் இல்லை.

மனத்தால் அவற்றைத் துறப்பதோடு முடிந்தவரை உடலாலும் அவற்றைத் துறக்க வேண்டும். என்பதே குருதேவரின் கருத்து. 

தம் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் குருதேவர் இவ்வாறு தான் நடந்து கொண்டார். கீழே கொடுக்கப்பட்ட சில நிகழ்ச்சிகள் இவற்றைத் தெளிவாக்கும்.உயர் குடிப்பிறப்பு என்ற கர்வத்திலிருந்து விடுபடுவதற்காக அசுத்தமான இடங்கள் என்று மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட இடங்களை குருதேவர் தம் கைகளாலேயே சுத்தம் செய்தார்.

மண்ணையும் பொன்னையும் ஒன்றாகக் கருதாவிடில் அதாவது பொன் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கூட மண்ணுக்குச் சமமானவையே என்ற அறிவு தோன்றாவிட்டால் உலகியல் இன்ப நாட்டத்திலிருந்து விடுபடுவது கடினம். யோக சாதனைகளில் வெற்றி பெற முடியாது. 

எனவே குருதேவர் ஒரு கையில் சில நாணயங்களையும், மற்றொரு கையில் மண்ணையும் வைத்துக்கொண்டு ”பணமே மண், மண்ணே பணம்” என்று சொல்லியபடியே அவற்றை கங்கையில் எறிந்தார்.

எல்லா உயிர்களிலும் ஒரே இறைவன் தான் உறைகிறான் என்ற தம் அறிவை உறுதிப்படுத்துவதற்காக காளிகோயிலில் ஏழைகள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் இருந்து உணவை எடுத்துபிரசாதமாக உண்டதுடன், தலையிலும் வைத்துக்கொண்டார். பின்னர் அந்த எச்சில் இலைகளையும் அப்புறப் படுத்தி கங்கைக் கரையில் போட்டுவிட்டு, சாப்பிட்ட இடத்தையும் தம் கைகளாலேயே பெருக்கி சுத்தம் செய்து கழுவிவிட்டார். அழியக்கூடிய தம் உடலால் ஏதோ ஒரு சிறு தெய்வப்பணி செய்ய முடிந்ததே என்றெண்ணி மகிழ்ந்தார்.

இது போன்ற வேறு பல நிகழ்ச்சிகளையும் இங்குக்குறிப்பிடலாம். 

ஆன்மீக வாழ்க்கைக்குத்தடையாக இருக்கும் பொருட்களை மனத்தளவில் துறப்பதுடன் நின்றுவிடாமல் உடலும் புலன்களும் கூட அவற்றிலிருந்து விலகியிருக்கும்படிச் செய்தார் குருதேவர். அவ்வாறு செய்ததன் மூலம் உடலும் புலன்களும் தங்கள் இயல்பான வழிகளில் செல்லாமல் தடுத்தார். 

இதனால் அவரது மனத்தில் ஏற்பட்டிருந்த பழைய சம்ஸ்காரங்கள் முற்றிலுமாக அழிந்து புதிய சம்ஸ்காரங்கள் உண்டாயின. அவற்றிற்கு எதிராக மனம் செயல்பட முடியாத அளவுக்கு அவை உறுதியாக இருந்தன. 

புதிய சம்ஸ்காரங்களை உடலும் புலன்களும் சிறிதளவாவது கடைபிடிக்கும் படிச் செய்யாத வரையில், பழைய சம்ஸ்காரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தார் அவர்.

பழைய நினைவுகளைக் களைய வேண்டும் என்பதையே விரும்பாத நாம், குருதேவரின் இத்தகைய செயல்களுக்கு அவசியம் இல்லையென்று நினைக்கிறோம். இதைப்பற்றிச் சிலர் கீழ்கண்ட வாறு கூறியதுண்டு.

அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்வதும், நாணயங்களையும் மண்ணையும் ஒன்றாகக் கருதி கங்கையில் எறிந்து பணமே மண்ணே பணம் என்று சொல்வதும் போன்ற செயல்கள் தேவையற்றவை. 

அத்தகைய அசாதாரணமான செயல்களால் பெற்ற மனக்கட்டுப்பாட்டை வேறு எளிய வழிகளில் சுலபமாகப் பெற்றிருக்கலாம். இதற்கு எங்கள் பதில், 

இப்படிச் சொல்வது சரியாக இருப்பது போல் தோன்றுகிறது.ஆனால் எத்தனை பேர் இவ்வாறு வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

உலகியல் இன்பங்களை உடலளவில் விலக்காமல் மனத்தளவில் மட்டும் துறந்து விட்டு, நீங்கள் கூறியது போன்ற எளிய வழிகளைப் பின்பற்றி. இதுவரை எத்தனைபேரால் மனத்தைக் கடவுள் பால் செலுத்த முடிந்திருக்கிறது? 

இது முடியாத ஒன்று. 

மனம் ஓர் எண்ணத்தைப் பற்றிக்கொண்டு ஒரு புறம் செல்ல, உடல் அதற்கு மாறாகச் செயல்பட்டு வேறு திசையில் செல்லுமானால் எந்த அரிய காரியத்தைச் சாதிக்க முடியும்? கடவுள் காட்சி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதே. புலனின்பங்களை நுகர வேண்டும் என்று ஏங்கி நிற்கும் மனிதன் இந்தக்கோட்பாட்டின் உண்மையை உணர்வதில்லை. 

உடலாலும் புலன்களாலும் உலகியல் பொருட்களைத்துறப்பது நல்லது என்று அவன் அறிந்தாலும் பழைய சம்ஸ்காரங்களின் பிடியில் சிக்கியிருக்கின்ற அவனால் விட முடிவதில்லை. 

உடல் என்ன செய்தாலும் என் மனம் தூயவற்றைத்தானே நாடுகிறது. என்று எண்ணியபடியே அவன் தன் வழியில் தொடர்ந்து செல்கிறான்.

யோகத்தையும் போகத்தையும் ஒரே சமயத்தில் பெற விரும்பி அவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். இருளும் ஒளியும் போல இவைஇரண்டும் ஒரு போதும் சேர்ந்திருக்க முடியாது. 

கடவுளையும், உலகத்தையும், காசையும் காமத்தையும் ஒரே நேரத்தில் வழிபடக்கூடிய சுலபமான வழியை ஆன்மீக உலகத்தில் இது வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

எவற்றையெல்லாம் துறக்கவேண்டுமோ அவற்றை மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் துறக்க வேண்டும். எவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அவற்றையும் இவ்வாறே மனம் , வாக்கு உடல் ஆகிய மூன்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அப்போது தான் சாதகன் கடவுளை உணர்தற்குரிய தகுதியைப்பெறுகிறான்.

மூத்த சகோதரர் காலமானதற்குப்பின் கதாதரர் அன்னையின் வழிபாட்டில் தீவிரமாக மூழ்கினார் என்று கூறினோம். ஆழ்ந்த நம்பிக்கையுடன்அவர் தமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் ஈடுபட்டு ஆர்வத்துடன் அன்னையின் தரிசனத்திற்காக முயன்றார். 

ராமபிரசாதர் போன்ற சிறந்த பக்தர்களின் பாடல்களை அன்னையின் முன்பாடுவது தமது அன்றாட வழிபாட்டின் ஓர் அங்கமாகத் திகழ்ந்தது என்று பின்னாளில் குருதேவர் கூறினார். 

இதயம் நிறைந்த பக்திப்பெருக்கால் அந்தப் பாடல்களைப் பாடும்போது அவரது உள்ளம் பேரானந்தத்தால் விம்மியது. ராமபிரசாதர் போன்ற பக்தர்கள் அன்னையின் தரிசனம் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அன்னையைக் காணமுடியும் என்பது நிச்சயம். எனக்கு மட்டும் ஏன் அன்னையின் தரிசனம் கிடைக்கவில்லை? என்று தவித்தார். ஏக்கம் நிறைந்த உள்ளத்துடன், அம்மா நீ ராமபிரசாதருக்குக் காட்சி தந்தாய், என்னிடம் மட்டும் ஏன் வரமறுக்கிறாய்?

பணம், உற்றார் உறவினர், சுகபோகங்கள் போன்ற எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு உன் திவ்ய வடிவை மட்டும் காட்டி அருள்வாய் என்று கதறி அழுது பிராத்தனை செய்வார். 

அவரது கண்களிலிருந்து நீர் பெருகி, மார்பில் வழியும் . அழுவதால் இதயச்சுமை சற்று குறையும். 

மீண்டும் நம்பிக்கையால் உந்தப்பட்டு ஒரு குழந்தையைப்போல அன்னையை மகிழ்விப்பதற்காகப் பாடல் களைப் பாடுவார். இவ்வாறு பூஜை தியானம், பாட்டு என்று நாட்களைக் கழித்தார். அன்னையைக் காண வேண்டுமென்ற அவரது ஆவலும் ஏக்கமும் நாளுக்குநாள் வளர்ந்தன.

அற்புத பக்தரான கதாதரரின் பூஜை மற்றும் சேவை நேரங்கள் நாள்தோறும் அதிகரிக்கலாயிற்று. 

மலரைத் தலை மீது வைத்துக்கொண்டு இரண்டு மணிநேரம் அசையாமல் தியானத்தில் அமர்ந்திருப்பார். அன்னைக்கு உணவு படைத்துவிட்டு அன்னை அதனை உட்கொள்வதற்காக நெடுநேரம் காத்திருப்பார். 

தினமும் காலையில் மலர்கொய்து, மாலை தொடுத்து அன்னையை நெடுநேரம் அலங்கரிப்பார். பக்தி பொங்கும் இதயத்துடன் மாலை தீபாதாரனையில் நீண்ட நேரம் செலவிடுவார். சில நாட்களில் பிற்பகல் வேளையில் அன்னையின் முன் அமர்ந்து பாடத் தொடங்குவார்.நேரம் சென்று கொண்டிருக்குமே தவிர பாடல் முடிவடையாது. தம்மை மறந்து நெடுநேரம் பாடிக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் தீபாராதணை மற்றும் பிற சேவைகளை அவருக்கு மற்றவர்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கும். சில காலம் இவ்வாறாகபூஜை நடைபெற்றது.

கதாதரரின் இத்தகைய பக்தி, ஆர்வம், ஆன்மதாகம் எல்லாம் கோயிலில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தன. நியமங்களிலிருந்து மாறுபட்டு தம் விருப்பத்திற்கு ஏற்பப் புதுவழியில் பூஜை செய்கின்ற ஒருவரைப் பிறர் கடுமையாக விமர்சிப்பதும் கேலிசெய்வதும், புதுமையல்ல. நாளுக்கு நாள் அவர் தனது வழியில் தொடர்ந்து உறுதியாக முன்னேறிச் செல்வதைக் காணும் போது அவர்களும் உண்மையை உணர்ந்து மரியாதை அளிப்பார்கள். 

கதாதரரின் விஷயத்தில் இவ்வாறேநடைபெற்றது. 

அவர் மரபை மீறிய பூஜை செய்யத் தொடங்கிய போது பலர் அவரைத் தூற்றினர்.ஆனால் சிறிது நாட்களிலேயே ஓரிருவர் அவரைப்போற்றத் தொடங்கினர்.

கதாதரரின் பூஜை முறை மதுர்பாபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 

அவர் ராணி ராசமணியிடம் . நமக்கு ஒர் அசாதாரணமான பூஜாரி கிடைத்துள்ளார். அன்னை காளி விரைவிலேயே விழிப்புற்று அருளொளி பரப்பத்தொடங்கி விடுவாள். என்று சொன்னார்

மற்றவர்களின் எண்ணத்திற்கேற்ப குருதேவர் தம் வழியை மாற்றிக்கொள்ளவில்லை. 

பொங்கும் கடலை நோக்கிப் பாய்ந்து செல்லும் நதியைப்போல அவரது மனம் அகிலாண்டேசுவரியான அன்னை காளியின் திருவடிகளை நாடி ஆர்வத்துடன் சென்றது. 


 

நாட்கள் செல்லச்செல்ல கதாதரரின் பக்தியும் ஆன்மதாகமும் அதிகரித்துக்கொண்டே சென்றன. லட்சியத்தை நோக்கி மனம் இடைவிடாமல் சென்று கொண்டிருந்ததால் அவரது உடலில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. 

பசி, தூக்கம், ஆகியவை குறைந்தன. மூளை, மார்புப் பகுதிகளில் ரத்தம் வேகமாகச் சென்றதால் அவரது மார்பு எப்போதும் சிவந்து காணப்பட்டது. கண்கண் அடிக்கடி நீரால் நிரம்பி நின்றன. 

அன்னையை நேரில் காணும் ஆவலும், ஏக்கமும் தீவிரமாகி, என்ன செய்யலாம்? என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும்? என்ற எண்ணம் தொடர்ந்து அவர் மனத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டே இருந்தது. அதனால் பூஜை, தியான வேளைகளைத் தவிர மற்ற நேரங்களில் அவரது உடலில் ஒரு பரபரப்பும் அமைதியின்மையும் காணப்பட்டது.

பின்னாளில் குருதேவர் கூறினார், ஒரு நாள் அன்னையின் திருமுன்னர் பாடிக்கெண்டிருந்தேன். அவளது அருட்காட்சிக்காக என்னையும் மீறி அழுதவாறே, அம்மா எவ்வளவு தூரம் அழைக்கிறேன். எதுவும் உன் செவிகளில் விழவில்லையா? ராமபிரசாதருக்குக் காட்சி அளித்தாய். ஏன் என் முன் மட்டும் வராதிருக்கிறாய்? என்று பிராத்தனை செய்தேன்.

அன்னையின் திருக்கோலத்தைக் காண முடியவில்லை.என்ற துயரம் என் இதயத்தை வாட்டியது. ஈரத்துணியை முறுக்கிப்பிழிவது போல என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை நான் அனுபவித்தேன்.

ஒரு வேளை அன்னையின் காட்சி கிடைக்காமலே போய் விடுமோ என்ற தவிப்பு என்னுள் அளவு கடந்த துயரத்தை உண்டாக்கியது. 

இப்படி வாழ்வதால் எவ்வித பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது கோயிலில் இருந்த வாளின் மீது தற்செயலாக என் பார்வை விழுந்தது. 

அந்தக் கணமே வாளால் என் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினேன். பைத்தியக்காரனைப்போல ஓடிச்சென்று அந்த வாளை எடுத்தேன்.

மறுகணமே் அகிலாண்டேசுவரியான அன்னை என்முன் தோன்றினாள். 

நான் நினைவிழந்து கீழே விழுந்தேன். 

வெளி உலகில் என்ன நடந்தது என்பதோ அந்த நாளும் மறுநாளும் எப்படிக்கழிந்தன என்பதோ எனக்குத் தெரியாது.

ஆனால் என் இதயத்தின் ஆழத்தில் இதுவரை அனுபவித்திராத ஓர் எல்லையற்ற ஆனந்தம் பொங்கிப் பெருகுவதை உணர்ந்தேன்.

ஒளி மயமான அன்னையின் தரிசனம் பெற்றேன்.

வேறொரு சமயத்தில் குருதேவர் தமது முதற்காட்சியைப்பற்றி மிகவும் விளக்கமாகக்கூறினார். 

வீடு, கோயில், கதவு அனைத்தும் அடியோடு மறைந்து போனது போலிருந்தது! 

எங்கும் எதுவும் இல்லாதது போல் தோன்றிற்று. நான் கண்டதெல்லாம் கங்குகரையற்ற ஞானப்பேரொளிக் கடல் ஒன்றையே! 

எவ்வளவு தூரம் எந்தத் திசையில் நோக்கினாலும் ஒளிமயமான அலைகள் கொந்தளித்துக் குமுறியபடி முன்னோக்கிப்பெரும் வேகத்துடன் வந்து கொண்டிருந்த அந்தக்கடல் தான் தெரிந்தது. 

அந்த அலைகள் அப்படியே விரைந்து வந்து என்னைக்கௌவிக்கொண்டு ஆழங்காண முடியாத பேரின்ப சாகரத்தில் மூழ்கடித்துவிட்டன. 

நான் போராடினேன். துடித்தேன், வெளியுலக நினைவிழந்து வீழ்ந்தேன்.

தமது முதற்காட்சியின் போது ஞானப்பேரொளி வெள்ளத்தைக் கண்டதாக குருதேவர் கூறியுள்ளார். 

அப்படியானால் வரமும் அபயமும் அளிக்கின்ற திருக்கரங்களைக்கொண்ட சுத்த சைதன்ய மயமான அன்னை? 

குருதேவர் தாம் கண்ட ஒளி வெள்ளத்தில் அன்னையின் அந்த உருவத்தையும் கண்டாரா? அவர் கண்டதாகத் தான்தெரிகிறது.

ஏனெனில் புறவுணர்வை இழந்து கிடந்த அவர் சுய உணர்வு பெற்றபோது அம்மா, அம்மா என்று நாத்தழுதழுக்க உணர்ச்சி பொங்கக் கூறியதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.

இந்த அற்புதத் திருக்காட்சி மறைந்தபோது குருதேவரின் ஏக்கம் முன்பைவிடப் பன்மடங்காகியது.

சைதன்ய மயமான அன்னை எப்போதும் தமக்கு தரிசனம் தர வேண்டும் என்ற தீவிர ஏக்கம் அவரை ஆட்கொண்டது. இடைவிடாது அவளிடம் முறையிட்டு மனத்திற்குள் கதறினார். 

பொதுவாக அந்த ஏக்கம் புறத்தே தெரியவில்லை. எப்போதும் அவர்அழுது கொண்டும் புரண்டு கொண்டும் இருக்கவில்லை.ஆனால் நீறுபூத்த நெருப்பாக அந்த ஏக்கம் அவரது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது. 

சில வேளைகளில் அந்தத்துயரம் அடக்க முடியாதபடி பொங்கிவிடும். அப்போது தரையில் விழுந்து புரள்வார், துடிப்பார், அம்மா! அருள்மழை பொழிவாய்! என் முன் எழுந்தருள்வாய்! என்று வேண்டுவார்.

இப்படிக் கண்ணீர் உகுத்துக் கதறி அழும்போது அவரைச்சுற்றிலும் மக்கள் கூடி விடுவர். தம்மைப்பார்த்துமற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் சிறிது கூட அவரிடம் எழவில்லை. 

பிற்காலத்தில் அவர், அப்போது என்னைச்சுற்றி நின்ற மனிதர்கள் வெறும் நிழல்களாக, சித்திரங்களாக எனக்குத் தோன்றினர்.

என் மனத்தில் எள்ளளவும் வெட்கமோ தயக்கமோ எழவில்லை. இப்படித் தாங்க முடியாத மனவேதனையினால் துடித்து புறவுலக நினைவிழக்கும் போதெல்லாம் ஆனந்தமயமான அன்னை என் முன் தோன்றுவாள். 

அவள் சிரித்தாள், பேசினாள், ஆறுதல் கூறினாள், கணக்கற்ற வழிகளில் எனக்குக் கற்பித்தாள் என்று கூறியுள்ளார்.


 MAIN PAGE (TOP) 


image65

சாதனையும் தெய்வப்பித்தும்

சாதனையும் தெய்வப்பித்தும்

  

சாதனையும் தெய்வப்பித்தும்

--

அன்னையின் திருக்காட்சி தந்த பேரானந்தத்தில் திளைத்திருந்த குருதேவரால் சில நாட்கள் வேறு எந்தப்பணியிலும் ஈடுபட முடியாமல் போயிற்று. 

பூஜை முதலான எந்தக்கடமைகளையும் முறையாக அவரால் செய்ய இயலவில்லை. வேறொருவரின் உதவி யுடன் ஹிருதயரே இவற்றைச் சமாளித்து வந்தார். 

குருதேவரின் இந்த நிலைக்குக் காரணம் மூளைக்கோளாறு என்று கருதிய ஹிருதயர் அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பூகைலாஸ் என்ற செல்வந்தரின் வீட்டு வைத்தியரை ஏற்பாடு செய்தார். 

ஆனால் குணமடைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எனவே காமார்புகூருக்குச் செய்தி அனுப்பி குருதேவரிடம் தாயாருக்கும் சகோதரருக்கும் விவரங்களைத் தெரியப்படுத்தினார்.

கடவுள் காட்சிக்காக ஏங்கி, அதனால் புறவுலக நினைவை இழந்த நாட்களைத் தவிர மற்ற நாட்களில் குருதேவரே பூஜைப் பணிகளைச் செய்ய முயன்றார்.

தமது பூஜை தியான வேளைகளில் அனுபவங்களைப் பற்றி குருதேவர் கூறியதாவது, மண்டபக்கூரையின் சுற்றுச்சுவரிலுள்ள தியான நிலை பைரவரின் திருவுருவத்தைச்சுட்டிக்காட்டி நான் என் மனத்திடம், மனமே நீயும் இந்த பைரவரைப்போல் எவ்விதச் சலனமுமின்றி அன்னையின் திருவடித் தாமரைகளை தியானிக்க வேண்டும் என்று சொல்லிக்கொள்வேன். 

தியானிக்க அமர்ந்த உடனே என் கால்களில் தொடங்கி மேலே உள்ள உடம்பின் மூட்டுகள் அனைத்தையும் யாரோ ஒன்றன்பின் ஒன்றாகச் சாவிபோட்டு பூட்டுவது போலிருக்கும். சாவியைத் திருப்பவது போன்ற கட்கட் ஒலி கூட எனக்குத் தெளிவாகக்கேட்கும். 

அதன் பின்னர் நான் விரும்பினால் கூட உடம்பை அங்கும் இங்கும் அசைக்க முடியாது. 

அமர்ந்திருக்கின்ற நிலையையும் மாற்ற இயலாது. விரும்பிய வேளையில் தியானத்திலிருந்து எழுந்திருக்கவும் முடியாது.மீண்டும் அந்தகட்கட் ஒலியுடன் தலையிலிருந்து கால் வரையுள்ள பூட்டப்பட்ட மூட்டுகள் அனைத்தும் திறக்கும் வரை என்னால் தியானத்திலிருந்து எழ முடியாது.

தியான வேளையில் நான் கண்ட காட்சிகள் தாம் எத்தனை எத்தனை! 

தியானிக்கும்போது ஆயிரமாயிரம் மின்மினிப் பூச்சிகள் சேர்ந்து பறப்பது போன்ற ஒளிக்கூட்டம் என் முன் தோன்றும். 

சில வேளையில் வெண்பனிப் படலம் போன்ற ஒளிவெள்ளம் என்னைச்சுற்றி நாற்புறம் பரந்து படர்ந்திருப்பதைக் காண்பேன். 

வேறு சிலவேளைகளில் அனைத்துப் பொருட்களிலும் வெள்ளியை உருக்கிவிட்டாற்போல் ஒளி பிரகாசிப்பதைப் பார்ப்பேன்.

பொதுவாக இத்தகைய காட்சிகள் நான் கண்களை மூடிக்கொண்டிருந்தபோது மட்டும் தான் தோன்றும். 

சிலவேளைகளில் கண்களைத் திறந்து வைத்திருந்த போதும் நான் கண்டதுண்டு. நான் கண்ட காட்சிகள் என்னவென்றும் எனக்குத் தெரியவில்லை. 

இத்தகைய காட்சிகளைக் காண்பது நன்மையா தீமையா என்பதும் புரியவில்லை. 

குழம்பிய நான் அன்னை காளியிடம், அம்மா எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது. எதுவும் புரியவில்லை. உன்னை அழைப்பதற்கான மந்திரங்களோ தந்திரங்களோ எனக்குத் தெரியாது. அம்மா உன்னை நான் எப்படி வந்தடைவேன் என்பதை எனக்குக் கற்பித்து அருள்வாய். நீ கற்பிக்காவிட்டால் எனக்கு வேறு யார் கற்றுத்தருவார்கள்? அம்மா, உன்னைத் தவிர எனக்கு வேறு யார் அடைக்கலம். என்று மனமுருகிப் பிராத்திப்பேன்.

ஒரு மித்த மனத்துடன் என் இதய வேட்கையைச் சொல்லிப் பரிதாபமாக அழுவேன்.

இந்த நாட்களில் குருதேவரின் பூஜை, தியானம். போன்றவற்றில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. 

குழந்தை தாயிடம் கொண்டிருப்பது போல் அன்னை காளியிடம் அவர் வைத்திருந்த நம்பிக்கை, தன்னை மறந்த நிலை இனிமை இவற்றைப் பிறருக்குப் புரிய வைப்பது கடினம். 

அவரது செயலில் வயதின் முதிர்ச்சியோ,காலம், இடம் ஆகியவற்றைப் பற்றிய உணர்வோ, இதைச்செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்கின்ற விதிமுறைகளோ எதுவும் தென்படவில்லை. 

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் அவரது செயல்கள் அனைத்திலும் இழையோடி நின்ற ஒன்று பரிபூரண சரணாகதி.தமது நான் உணர்வையும் சிறிய ஆசைகளையும் அன்னையின் தெய்வீக மகாசங்கல்பத்தில் ஒன்றுபடுத்திக்கொண்டு தம்மை முற்றிலும் அவளது கருவியாக எண்ணியே அவர் செயல்பட்டார். 

அம்மா, எனக்குப் புகலிடம் நீயே, என்னை ஏற்றுக்கொண்டு வழிநடத்துவாய், தாயே, என்பதே அவரது இதயபூர்வமான பிராத்தனையாக இருந்தது.

குருதேவரின் இத்தகைய வித்தியாசமான போக்கு பலவித வதந்திகளைக் கிளப்பியது. 

உலகியல் மாந்தரின் பார்வையில் அவரது செயல்கள் இயற்கைக்கு முரணாதத் தோன்றின. 

முதலில் மக்கள் தங்களுக்குள் கிசுகிசுக்துக் கொண்டனர். நாட்கள் செல்லச்செல்ல வெளிப்டையாகப்பேசத் தொடங்கினர். 

இவை எதுவும் குருதேவரைப் பாதிக்கவில்லை. உலக அன்னையின் குழந்தையான அவர் அவளது ஆணைப்படியல்லவா ஒவ்வொரு செயலையும் செய்து வந்தார். 

ஊராரின் தூற்றுதல் அவரது செவிகளைச் சிறிதும் எட்டவில்லை. ஏனெனில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தாலும் இந்த உலகைச் சார்ந்தவரைாக இருக்கவில்லை. புறவுலகம் அவருக்கு ஒரு கனவுலகமாக மாறிவிட்டிருந்தது. 

எவ்வளவு முயன்றும் அவரால் அந்தக் கனவுலகை முன்புபொல் நனவுலகமாகப் பார்க்க இயலவில்லை. அவரைப்பொறுத்தவரை உலக அன்னையின் அற்புதப்பேரானந்த வடிவம் ஒன்றே உண்மைப்பொருளாக விளங்கியது.

முன்பெல்லாம் குருதேவர் பூஜை தியானங்கள் செய்கின்ற போது அன்னையின் அழகிய திருக்கரங்கள், தாமரைத் திருப்பாதங்கள், இனியதிலும் இனிய அற்புதப் புன்முறுவல், பொங்கிப் பொலிகின்ற திருமுகம் ஆகியவற்றுள், ஏதேனும் ஒன்றினை மட்டுமே காண்பார். இப்போதோ, பூஜை தியானங்களில் ஈடுபடாத வேளைகளில் கூட அன்னையின் ஒளிமிக்க முழுவடிவையும் கண்டார். அன்பொழுகும் ஆனந்தத்துடன் அவள் சிரித்தாள். இதைச்செய், அதைச்செய்யாதே என்றெல்லாம் கூறி வழிகாட்டியபடி எப்போதும் அவருடன் இருந்தாள்.

முன்பெல்லாம் குருதேவர் அன்னைக்கு நைவேத்தியம் படைக்கின்ற போது அன்னையின் கண்களிலிருந்து ஓர் அபூர்வ ஒளிக்கதிர் கிளம்பி நைவேத்தியப்பொருட்களைத்தொட்டு, அவற்றின் சாரத்தை கிரகித்துக்கொண்டு, மீண்டும் அன்னையின் கண்களுக்குள் சென்று சங்கமிக்கும் இப்போதோ,நைவேத்தியம் படைத்து முடிய வேண்டாம், ஏன், சில வேளைகளில் படைக்குமுன்பே கூட, உலகெல்லாம் ஒளி பரப்பிச்செல்லும் அழகுத் திருமேனியுடன் அன்னை நேரில் வந்து அமர்வதைக்கண்டார் குருதேவர். 

அவளது வருகையால்அந்தத் திருக்கோயில் முழுவதுமே ஒளி வெள்ளத்தில் மூழ்குவது போலிருக்கும்,

ஹிருதயர் கூறினார், ஒரு நாள் குருதேவர் பூஜை செய்து கொண்டிருந்தபோது நான் அங்கே எதேச்சையாகச் செல்ல நேர்ந்தது. அப்போது அவர் தம்மை மறந்த நிலையில், முற்றிலும் அன்னையின் உணர்வில் ஒன்றியவராய் செம்பருத்தி மலரையும், வில்வ இலைகளையும் அன்னையின் திருப்பாதங்களில் அர்ப்பிக்க இருந்தார். ஆனால் அவற்றை அர்ப்பிக்கும் முன் திடீரென, பொறு, பொறு முதலில் மந்திரத்தைச் சொல்கிறேன்.பிறகு உணவை உட்கொள்வாய் தாயே! என்று கூறினார். அதன் பின்னர் பூஜையை முடிக்கும் முன்னரே நைவேத்தியம் செய்தார்.

முன்பெல்லாம் பூஜை தியான வேளைகளில் தமக்கு முன்னால் இருந்த அன்னையின் திருவுருவச் சிலையில் ஓர் உயிருணர்வு ததும்புவதை மட்டுமே கண்டார்.குருதேவர் இப்போதோ கோயிலில் கற்சிலையைக் காண்பதேயில்லை அவர். யாருடைய உணர்வால் இந்த உலகம் முழுமையும் உயிர் பெற்றுச் செயல்படுகிறதோ அந்த அன்னை பேரறிவுப்பெருஞ்சுடராய்,வரமும்

அபயமும் பொலிகின்ற திருக்கரங்களுடன் அங்கே நிற்பதை அவர் கண்டார். பின்னாளில் குருதேவர் கூறினார், நான் என் கையை அன்னையின் மூக்கிற்கு அருகில் வைத்துப்பார்த்தேன். அன்னை உண்மையிலேயே மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். 

ஆனால் ஒன்று அங்கே நின்றிருந்த போதிலும் அவளது நிழல் சுவரில் விழவில்லை. இரவின் விளக்கொளியில் நான் கூர்ந்து கவனித்தேன், ஆனாலும் அவளது நிழலை ஒரு போதும் நான் கண்டதில்லை. 

நான் என் அறையில் அமர்ந்திருப்பேன். கிண்கிணிச் சலங்கைகள் ஜல்ஜல் என்று ஒலிக்க அன்னை கோயில் மீது ஏறிச்செல்கின்ற ஓசை கேட்கும். 

அவசர அவசரமாக வெளியே ஒடி வந்து பார்ப்பேன். உல்லாசமான ஒரு சிறுமியைப்போல உண்மையிலேயே அன்னை நடந்து சென்று கொண்டிருப்பாள். விரித்த கூந்தலுடன் மாடியில் சென்று தூரத்தே காணும் கல்கத்தாவையும் அருகில் பாய்ந்தோடுகின்ற கங்கை நதியையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருப்பாள்.

ஹிருதயர் கூறினார், 

அந்த நாட்களில் காளி கோயிலில் நுழைகின்ற எவரும் ஒருவித அச்சம் கலந்த பேரமைதி நிலவுவதை உணர முடியும். குருதேவர் இல்லாத நேரங்களில் கூடப்பரவி நிற்கின்ற இந்தச் சொல்லொணாத தெய்வீக உணர்வு, அவர் உள்ளே இருக்கும்போது எப்படி இருக்கு மென்று சொல்ல வேண்டியதில்லை. அவர் பூஜை வேளையில் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக நான் அவ்வப்போது கோயிலுக்கு ள்செல்வதுண்டு. அங்கே காண்கின்ற காட்சி என் இதயத்தில் பக்தியையும் வியப்பையும் ஒருங்கே உண்டாக்கிவிடும். ஆனால் வெளியே வந்ததும் ஐயம் எழுந்துவிடும். 

உண்மையிலேயே மாமாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? 

இல்லாவிடில் பூஜை வேளையில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்? என்ற எண்ணம் என்னை அலைக்கழிக்கும். இத்தகைய பூஜையைப் பற்றி ராணியும் மதுர்பாபுவும் அறிந்தால் என்ன நினைப்பார்களோ? என்ற அச்சமும் கூடவே எழும். ஆனால் மாமாவின் மனத்தில் இத்தகைய எண்ணங்கள் ஏற்படாதது மட்டுமல்ல, நான் அவரிடம் இவற்றை எடுத்துச் சொன்னால் கூட அதை அவர் பொருட்படுத்துவதில்லை. இதைப்பற்றி நான் அவரிடம் அதிகம், பேசவும் முயலவில்லை. விவரிக்க முடியாத ஓர் அச்சமும் தயக்கமும் என்னை அவரிடம் பேச முடியாமல் தடுத்தன. இது ஏன் எனக்குத் தெரியவில்லை.

ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கும் எனக்கும் இடையே இனம்புரியாத தோர் இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். 

வேறுவழியின்றி, அவருக்கு என்னால் முடிந்த பணிவிடைகளை அமைதியாகச் செய்து வந்தேன். ஆனால் ஏதோ ஒரு நாள் நிச்சயமாக அவர் ஒரு விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறார் என்ற எண்ணம் மட்டும் என் மனத்திலிருந்து விலகவில்லை.

குருதேவர் பூஜை செய்கின்ற வேளையில் கோயிலுக்குள் சென்று கண்டதையும் மற்ற நிகழ்ச்சிகளையும் கீழ்கண்டவாறு ஹிருதயர் விவரித்தார்.

செம்பருத்திப்பூ,வில்வம் கொண்ட அர்க்கியம் தயாரிப்பார். முதலில் தம் தலை, நெஞ்சு, மற்ற உறுப்புக்களில் ஏன் பாதங்களில் கூடத் தொடுவார்.பின்னர் அன்னையின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பார்.

அவரது கண்களும் மார்பும் குடிகாரனின் கண்களையும் மார்பையும் போன்று எப்போதும் சிவந்தே கிடந்தன.தடுமாறிக்கொண்டே திடீரென இருக்கையைவிட்டு எழுந்து பீடத்தின் மீது எறி அன்னையின் முகத்தை அன்புடன் தொட்டுக்கொஞ்சுவார்,பாடுவார், சிரிப்பார், வேடிக்கை செய்வார் பேசுவார் .சிலவேளைகளில் அன்னையின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடனம்ஆடுவார்.

நைவேத்தியம் படைத்துக்கொண்டிருப்பவர் திடீரென எழுவார். சாதத்தையும் குழம்பையும் பிசைந்து கையில் எடுத்துக்கொண்டு, பீடத்தில் ஏறி அன்னையின் வாய்க்கு அருகில் கொண்டு சென்று, சாப்பிடு! என்று கெஞ்சுவார். 

பின்னர் ஓகோ! என்னைச்சாப்பிடச் சொல்கிறாயா? சரி, சாப்பிடுகிறேன், என்று கூறியபடியே அந்த உணவில் சிறிது உண்டுவிட்டு எஞ்சியதை அன்னையின் வாயில் வைத்து, நான் சாப்பிட்டுவிட்டேன், இப்பொழுது நீ சாப்பிடு என்று சொல்வார்.

ஒரு நாள் அவர் அன்னைக்கு உணவு படைக்கும் போது ஒரு பூனை கத்திக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தது. அன்னைக்குப் படைக்கவிருந்த உணவை அந்தப்பூனைக்கு கொடுத்து சாப்பிடு, அம்மா சாப்பிடு என்று கூறி அந்தப் பூனையைச் சாப்பிடச்செய்தார்.

பலவேளைகளில் இரவில் அன்னையைப் பள்ளியறையில் படுக்க வைத்துவிட்டு என்னையும் அருகில் படுக்க சொல்கிறாயா? அம்மா! நல்லது, இதோ நான் படுத்துக்கொள்கிறேன்” என்று கூறியபடியே அந்த வெள்ளிக் கட்டிலில் தாமும் சிறிது நேரம் படுத்துக்கொண்டிருப்பார்.

பூஜைவேளையில் அவர் தியானம் செய்யும் போது நீண்ட நேரம் புறவுலகை முற்றிலும் மறந்து தம்மில் தாமாகவே லயித்திருப்பார்.

நாள்தோறும் அதிகாலையில்எழுந்து அன்னை காளிக்கு மாலை தொடுப்பதற்காக மலர் கொய்வார். அப்போதும் அவர் யாருடனோ பேசிக் களிப்பார். சிரித்து மகிழ்வார், வேடிக்கை வினோதங்கள் செய்து விளையாடுவார்.

இரவில் தூக்கம் என்பதே அவருக்குச் சிறிதும் இல்லை. நான் கண்விழித்துப் பார்க்கும் போதெல்லாம் அவர் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார். அல்லது பாடிக்கொண்டிருப்பார். அல்லது பஞ்சவடிக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டிருப்பார்.

குருதேவரின் நடத்தையைக்குறித்து தான் அஞ்சினாலும் தன் அச்சத்தை மற்றவர்களிடம் எடுத்துக்கூறி ஆலோசனை பெறத் தன்னால் முடியவில்லை. என்று ஹிருதயர் கூறினார். ஏனெனில் அதைக்கேட்பவர்களுள் யாராவது கோயிலின் உயர் அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் கோயில் உரிமையாளர்களிடம் சொல்லி, குருதேவருக்குப் பாதகமாக ஏதாவது செய்யக்கூடும் என்ற எண்ணமே ஹிருதயரைப் பிறரிடம் கலந்து ஆலோசிக்காமல் இருக்கச்செய்தது. 

ஆனால் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வினோதமான செயல்களை யாரால் மறைத்து வைக்க முடியும்? 

காளிகோயிலில் வழிபட வந்த ஒரு சிலர் வழிபாட்டின்போது அங்கு நிகழ்ந்தவற்றை நேரில் கண்டு கோயில் பொருளாளர் போன்ற அலுவலர்களிடம் புகார் செய்தனர். 

அவர்களும் கோயிலுக்கு வந்து அனைத்தையும் நேரடியாக க் கண்டனர். ஆனால் குருதேவரின் தெய்வீக வடிவையும், தயக்கமற்ற நடத்தையையும், பயமின்மையையும் தம்மையே மறந்த நிலையையும் கண்ட அவர்களால் அவரிடம் எதுவும் கூற முடியவில்லை. அவரது செயல்களையும் அவர் களால் தடுக்க முடியவில்லை. அலுவலகத்திற்குத் திரும்பி வந்த பின் இதைப்பற்றிக் கலந்தாலோசித்து, குருதேவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது அல்லது ஆவிகளின் ஆவேசம் வந்துள்ளது என்று முடிவு செய்தனர். 

பூஜைவேளையில் இவ்வாறு விதிகளுக்கு முரண்பட்டு ஒருவர் நடக்க வேறு என்ன காரணம் இருக்கமுடியும் என்பது அவர்களின் கேள்வி .எப்படியோ பூஜை நைவேத்தியம் போன்ற ஆலயப் பணிகள் சரிவர நடப்பதில்லை. இவர் எல்லாவற்றையும் கெடுத்து விட்டார், இதைப்பற்றி உரிமையாளர்களுக்குத் தெரிவிப்பது தங்கள் கடமை என்று கருதினர் அந்த அலுவலர்கள்.மதுர்பாபுவிற்குச் செய்தி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலனுப்பிய மதுர்பாபு தாமே நேரில் வந்து நிலைமையைச் சோதித்தறிந்த பின் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை அந்த இளம் பூஜாரி வழக்கப்படியே பூஜைப் பணிகளைச் செய்து வரட்டும் என்றும் அதை யாரும் தடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

மதுர்பாபுவின் கடிதம் கிடைத்தபின் அவரது அலுவலர்கள் பூஜாரியின் வேலை நீக்கம் நிச்சயம்,. மதுர்பாபு வந்ததும் இவரை வெளியேற்றிவிடுவார். 

தெய்வக் குற்றம் செய்வதா? தெய்வம் தான் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருக்கும்? என்றெல்லாம் பலவிதமாகப் பேசிக் கொண்டனர்.

ஒரு நாள் யாருக்கும் அறிவிக்காமல் பூஜைவேளையில் திடீரென மதுர்பாபு தட்சிணேசுவரம் வந்தார். 

நேராக காளிகோயிலுக்குச் சென்று குருதேவரின் செய்கைகைளை நீண்ட நேரம் கூர்ந்து கவனித்தார். 

பரவச நிலையிலிருந்த குருதேவர் மதுர் வந்ததை கவனிக்கவில்லை.என்றும் போல அன்றும் அவர் மனம் அன்னை காளியிடம் ஒன்றியிருந்தது. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. 

கோயிலுக்குள் வந்ததும் மதுர்பாபு இதனைப்புரிந்து கொண்டார். 

பின்னர் குருதேவர் அன்னையிடம் ஒரு சிறுபையனைப்போல அடம்பிடித்து எதையோ கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார். இந்தச் செய்கைகள் யாவும் அவர் அன்னையிடம் கொண்ட ஒருமித்த பக்தியாலும் அன்பாலும் விளைந்தவை என்பதை மதுர்பாபுவால் பகுத்துணர முடிந்தது. 

இத்தகைய இதயபூர்வமான பக்தியாலன்றி வேறு எதனால் அன்னையை உணர முடியும்? தாரைதாரையாகக் கண்ணீர் வழிய பூஜை செய்து கொண்டிருந்த அந்த பக்திப்பெருக்கு, களங்கமற்ற அந்த ஆனந்த உல்லாசம் சிலநேரம் ஆடாமல் அசையாமல் ஜடம்போல் தம்மைச்சுற்றியுள்ள பொருட்களையும் உலகையும் முற்றும் மறந்திருந்த தன்மை இவை அனைத்தும்நேரில் கண்ட மதுர்பாபுவின் இதயம் ஒப்பற்றதோர் ஆனந்தத்தால் நிரம்பிற்று. அந்த ஆலயம் உண்மையிலேயே தெய்வீகப்பேருணர்வுடன் பொலிவதை மதுர்பாப உணர்ந்தார்.

குருதேவர் உண்மையிலேயே அன்னையின் பேரருளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார் என்ற உறுதியான எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பியது. இதயம் பக்தியால் விம்மியது.தொலைவில் நின்றபடி அன்னையையும், அன்னையின் அந்த அபூர்வமான அர்ச்சகரையும் திரும்பத்திரும்ப வணங்கினார். 

இத்தனை காலத்திற்கு ப் பிறகு இப்போது தான் அன்னையைப் பிரதிஷ்டை செய்ததன் பலன் கிடைத்திருக்கிறது. உண்மையில் இப்போது தான் அன்னை ஆலயத்தில் எழுந்தருளியுள்ளாள். அன்னைக்கு உண்மையான வழிபாடு இப்போது தான் நடக்கிறது, என்று இதயபூர்வமாக உணர்ந்தார். 

கோயில் அலுவலர்களிடம் எதுவும் கூறாமல் வீடு திரும்பினார். மறுநாள் கோயிலின் தலைமை அலுவலருக்கு மதுரிடமிருந்து உத்தரவு ஒன்று வந்தது.

அதில் அந்த அர்ச்சகர் எப்படி வேண்டுமானாலும் பூஜை செய்யட்டும்.அவரைத் தடுக்க வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது.

மேலே கூறப்பட்ட நிகழ்ச்சிகளைப் படிக்கின்ற சாஸ்திர வல்லுனர்கள் குருதேவரின் நிலையை எளிதில் புரிந்து கொள்வர். 

குருதேவரின் மனம் நியதிகளுக்கு உட்பட்ட சாதாரண பக்தியைக் கடந்து பிரேம பக்தி என்கின்ற மிக உயர்ந்த நிலையை அதிவேகமாக எட்டிக் கொண்டிருந்தது. பிறர் புரிந்து கொள்வது இருக்கட்டும், குருதேவரே தம்மிடம் ஏற்பட்டுள்ள இந்த உயர்ந்த நிலையைப்புரிந்து கொள்ளவில்லை. அவ்வளவு இயல்பாக இந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. 

அன்னையிடம் இருந்த தணியாத பக்தியின் வேகத்தால் தாம் இவ்வாறு நடந்து கொள்ளாமல் இருக்க முடியாது. என்று அவர் உணர்ந்திருந்தார்.அவரை யாரோ இவ்வாறெல்லாம் செய்விப்பது போலிருந்தது. 

சிலவேளைகளில் அவர், எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது? நான் சரியான வழியில் தான் செல்கிறேனா? என்று தமக்குத்தாமே கேட்டுக் கொள்வார். 

அம்மா எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது? எதுவும் புரியவில்லையே! நான் செய்ய வேண்டியதைச் செய்யும் படி என்னை வழிநடத்துவாய், நான் கற்க வேண்டியதை எனக்குக் கற்பித்து அருள்வாய், எப்போதும் என் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்வாய்? என்று மிகுந்த மன ஏக்கத்துடன் அன்னையிடம் பிரார்த்திப்பார். 

உலகியல் ஆசைகளான பணம், உடலின்பம், புகழ், பெருமை அதிகாரம் அனைத்தையும் துறந்து. அன்னையின் அருளை மட்டுமே வேண்டினார். அன்னையும் அவரது மனப்பூர்வமான பிராத்தனைக்குச் செவி சாய்த்து அவரை வழிநடத்தினாள். அவருக்கு வேண்டிய பொருட்களையும் மனிதர்களையும் அவரிடம் கொணர்ந்து, சாதனைகளில் முழு வெற்றி பெறவைத்து வாழ்க்கையின் இறுதிக்குறிக்கோளான தூய ஞானம், தூய பக்தி ஆகியவற்றை அவர் கேட்காமலேயே அருளிச்செய்து அவரை பக்தியின் உச்சியில் மிக எளிதாக அமர்த்தி வைத்தாள். கண்ணனும் கீதையில்,

அனன்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜனா,பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகஷேமம் வஹாம்யஹம்

வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளான உணவு போன்ற பொருட்களைச் சிறிதும் நினைக்காமல் மனம் ஒருமித்து உள்ளம் முழுவதையும் என்னிடம், வைத்து என்னோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பக்தர்களுக்கு, (அவர்கள் கேட்காமலேயே) தேவையான அனைத்தையும் அவர்களின் அருகில் கொண்டு வந்து கொடுக்கிறேன், என்று பக்தர்களுக்கு உறுதியளித்துள்ளார். 

குருதேவரின் இப்போதைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது கீதையின் இந்த அருள்மொழி அவரது வாழ்க்கையில் எவ்வாறு முற்றிலும் பொருந்தியுள்ளது என்பதை அறிந்து பிரமித்து நிற்கிறோம். 

வாழ்க்கையில் பொன்னும் போகமும் பெரிதென எண்ணி அலையும் மனிதர்கள் வாழும் இந்தக் காலத்தில் கீதையில் கூறப்பட்ட வாசகம் உண்மையென நிரூபிக்கப்படவேண்டிய தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது. பல்லாண்டு காலமாக சாதகர்கள், அனைத்தையும் விடு, அனைத்தையும் பெறுவாய், அதாவது இறைவனுக்காக ஒருவர் அனைத்தையும் துறந்தாலும் அவர் எதையும் இழப்பதில்லை என்று சொல்லி வந்தாலும் கூட உலகியல் ஆசைகளில் சிக்கி உழலும் பலவீனமான தற்கால மனிதர்கள் கீதையின் மேற்சொன்ன அருள்மொழி உண்மை என நிரூபிக்கப்பட்டாலன்றி அதை நம்பமாட்டார்கள். 

சாஸ்திரம் கூறுகின்ற அந்த வாசகத்தின் உண்மையை உலகிற்குக் காண்பிக்கவே பிற எல்லாவற்றையும் துறந்து, தன் அருளிலேயே முற்றிலும் ஒன்றிய ஸ்ரீராமகிருஷ்ணர் மூலமாக அன்னை இந்தத் திருவிளையாடல் புரிந்தாள். 

ஓ! மனிதா, இதைத் தூய உள்ளத்துடன் கேட்டு தியாகப் பாதையில் உன்னால் முடிந்த அளவு முன்னேறுவாய்!


  

வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் ஆன்மீகப்பெருவெள்ளம் வேகத்துடன் பாயும்போது, அதை எந்த சக்தியாலும் மறைக்கவோ அடக்கவோ முடியாது.என்று குருதேவர் கூறுவதுண்டு. அது மட்டும்அல்ல, அந்த ஆன்மீக எழுச்சியை சாதாரணமனிதனின் உடலால் தாங்க முடியாது.அவை உடலைச் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்தி விடுகின்றன. பல சாதகர்கள் மரணத்தையே தழுவும்படி ஆகிவிடுகிறது. 

பூரண ஞானம் அல்லது பூரண பக்தியின் வேகத்தைத் தாங்க தகுதியான உடல் வேண்டும். கடவுளின் அவதாரம் என்று கருதப்படும் உயர்ந்த சாதகர்களின் உடல்கள் மட்டுமே இத்தகைய எழுச்சியைத் தாங்கும் ஆற்றல் பெற்றவையாக இருக்கின்றன. அவர்களின் உடலை சுத்த சத்வ உடல் என்று பக்தி நூல்கள் வர்யிக்கின்றன. இத்தகைய உடலுடன் பிறப்பதால் தான் அவர்களால் ஆன்மீகப்பேருணர்வுகளின் முழுவேகத்தையும் தாங்கிக்கொள்ள முடிகிறது.

இருந்தும் சிலவேளைகளில் அவர்கள் கூட உணர்ச்சி வேகங்களால் பாதிக்கப்படுகின்றனர். 

முக்கியமாக பக்தி நெறியில் செல்பவர்களிடம் இது நிகழ்கிறது. பக்திப்பேருணர்ச்சியின் காரணமாக சைதன்யரின் உடல்மூட்டுகள் நெகிழ்ந்து போனதாகவும் உடலில் இருந்து வியர்வையைப்போல் ரத்தத்துளிகள் வெளிவந்தன என்றும் வரலாறுகளிலிருந்து அறிகிறோம். உடலின் இத்தகைய மாற்றங்கள் அவர்களுக்கு மிகுந்தவேதனையைக் கொடத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இருப்பினும் இத்தகைய மாற்றங்களினால் தான் அவர்களின் உடல்கள் அளவுகடந்த ஆன்மீக எழுச்சியினைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. நாட்கள் செல்லச்செல்ல இத்தகைய மாற்றங்கள் அவர்களின் உடலுக்குப் பழக்கமாகிவிடுகின்றன. அவற்றால் அவர்களின் உடல்கள் பாதிக்கப்படுவது குறைந்துவிடுகிறது.

இந்த நாட்களிலிருந்து அளவு கடந்த பக்திப்பெருக்கால் குருதேவரின் உடலில் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்பட்டன. 

சாதனையின் ஆரம்ப நாட்களில் அவரது உடலில் ஏற்பட்ட எரிச்சலைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். பல நேரங்களில் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் வேதனைப் பட்டிருக்கிறார். 

அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். 

சந்தியாவந்தனம், பூஜை போன்றவற்றைச் செய்யும் நேரங்களில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி. என்னுள் இருக்கும் பாவ புருஷன் எரிந்து விட்டதாக நான் நினைப்பதுண்டு. ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பாவ புருஷன் இருக்கிறான், அவனை எரித்து அழிக்க முடியும் என்பதையெல்லாம் யார் அறிந்தார்கள். 

சாதனையின் ஆரம்ப காலத்திலிருந்து உடலில் ஓர் எரிச்சல் இருந்து கொண்டிருந்தது. இது என்ன நோய் என்று நான் குழம்பினேன். எரிச்சல் படிப்படியாக அதிகரித்து தாங்க முடியாததாகிவிட்டது. 

வைத்தியர்கள் கூறிய எத்தனையோ தைலங்களைப் பூசியும் கட்டுப்படவில்லை. ஒரு நாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தேன். அப்போது(தம் உடலைக்காட்டி) இதிலிருந்து சிவந்த கண்களுடன் அச்சமூட்டக்கூடிய விகாரமான தோற்றம் கொண்ட கன்னங்கரேலென்ற மனிதன் ஒருவன் வெளியே , மது அருந்தியவன் போல தள்ளாடித் தள்ளாடி நடக்க ஆரம்பித்தான்.

மறுகணமே (தன் உடலைக் காட்டி) இதிலிருந்துகாவியுடை அணிந்து திரிசூலம் தாங்கிய கம்பீரமான ஒருவர் வெளிவந்தார். இவர் முன்னவனை உக்கிரமாகத் தாக்கிக் கொன்றுவிட்டார். 

அதன் பின் என் உடலில் எரிச்சல் குறைந்துவிட்டது. 

அதற்கு முன் ஆறு மாதங்கள் நான் இந்த எரிச்சலால் அவதிப்பட்டேன்.

பாவ புருஷன் அழிக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பின் தம் உடலில் இத்தகைய எரிச்சல் மீண்டும் தோன்றியதாக குருதேவர் கூறினார். 

அப்போது அவர் விதிமுறைகளுக்கு உட்பட்ட சாதாரண பக்தியான வைதீ பக்தி நிலையைக் கடந்து ராகாத்மிக பக்தியின் மூலம் அன்னைக்கு, நாம் முன்னர் கண்டது போல், பூஜை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.

நாட்கள் செல்லச்செல்ல அவரது உடல் எரிச்சல் அதிகரித்து தலையின் மீது ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு தொடர்ந்து மூன்று நான்கு மணி நேரம் கங்கை நீரினுள் நின்ற போதிலும் எரிச்சல் அடங்கவில்லை. 

கனன்று கொண்டிருக்கும் தணலை மார்பின் மீது வைத்தது போன்ற வேதனையை அவர் அனுபவித்தார். அவரது இந்த வேதனை நீண்ட நாட்கள் தொடர்ந்தது. 

சாதனைகள் நிறைவுற்ற சில ஆண்டுகளுக்குப் பின் அவர் பாராசாத்தைச் சேர்ந்த ராம்கனை கோஷால் என்ற வழக்கறிஞரைச் சந்திக்க நேர்ந்தது. ராம்கனை ஒரு தீவிர சக்தி உபாசகர். குருதேவரின் உடல் எரிச்சலைப் பற்றிக்கேள்விப்பட்ட அவர் இஷ்டதெய்வத்தின் மந்திரம் அடங்கிய ஒரு தாயத்தை அணிந்து கொள்வது பலனளிக்கும் என்று யோசனை கூறினார். அவ்வாறே குருதேவரும் அணிந்து கொண்டு நலம் பெற்றார். 

அதன் பின்னர் இத்தகைய உடல் எரிச்சல் ஏற்படவில்லை.

மதுர்பாபு ஜான்பஜாருக்குத் திரும்பிச் சென்று குருதேவரின் அசாதாரண பூஜை முறையைப் பற்றி ராணியிடம் கூறினார்..

ராணி இதனைக்கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்தார். குருதேவர் பாடும் பாடல்களைக்கேட்டு ஏற்கனவே அவர் மீது அன்பு கொண்டிருந்தார். 

கோவிந்த விக்கிரகம் உடைந்த போது குருதேவர் பரவச நிலையில் கூறிய நுண்ணறிவு மிக்க தீர்வால் ராணிக்கு அவர் மீதுள்ள மதிப்பும் அன்பும் மேலும் வளர்ந்தது. தூய உள்ளம் கொண்ட இத்தகைய அர்ச்சகர் அன்னை காளியின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டார் என்பதை உணர ராணிக்கு வெகுநேரமாக வில்லை. 

ஆனால் ராணி மதுர்பாபு ஆகியோரின் நம்பிக்கையைக்குலைத்து விடுவது போல் ஒரு சம்பவம் சில நாட்களுள் நிகழ்ந்தது. ஒரு நாள் ராணி காளிகோயிலுக்குச் சென்றிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குருதேவர் அன்னை மீது சில பாடல்களை பாடினார். ராணி அங்கேயிருந்த போதும் அவரது மனம் அன்னையிடம்ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வழக்கில் தமக்கு வெற்றி கிட்டுமா? கிட்டாதா? என்ற எண்ணமே அவர் மனத்தில் நிறைந்திருந்தது. ராணியின் மனநிலையைத் தமது தெய்வீக ஆற்றலால் உணர்ந்த குருதேவர், இங்குமா அந்த எண்ணம்? என்று கேட்டபடியே ராணியின் கன்னத்தில் அறைந்து அத்தகைய எண்ணத்தை அகற்றுமாறு பாடம் புகட்டினார். 

அன்னை காளியின் அருள் பெற்றிருந்த ராணியும் தம் தவற்றை உணர்ந்து வருந்தினார். இந்த நிகழ்ச்சியால் ராணிக்கு குருதேவரிடம் இருந்த பக்தி மேலும் அதிகரித்தது..

அன்னை காளியின் மீது பக்தியில் ஆழ்ந்து , மிக உயர்ந்த உணர்வு நிலைகளில் திளைத்து வந்த குருதேவரின் ஆனந்தப் பரவசநிலைகள் அளவு கடந்தாயிற்று. 


 MAIN PAGE (TOP) 

image66

முதல் நான்கு ஆண்டு சாதனைகள்

முதல் நான்கு ஆண்டு சாதனைகள்

  

நாட்கள் செல்லச்செல்ல அவரால் அன்றாட பூஜைப் பணிகளைக்கூட முறையாகச் செய்ய இயலவில்லை.

ஒருவர் ஆன்மீக நிலைகளில் முன்னேற முன்னேற சடங்குகளும், சம்பிரதாயங்களும் தானாகவே அவரை விட்டு விலகிவிடுவதை குருதேவர் ஓர் உதாரணத்தால் விளக்குவதுண்டு.

மருமகள் கருவுறும் வரை , அவள் வேண்டுவதை எல்லாம் உண்ணவும், எல்லா வேலைகளைச் செய்யவும் மாமியார் அனுமதிக்கிறாள். கருவுற்றபின் அவற்றில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். பேறுகாலம் நெருங்கும் போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. கடினமான வேலைகளில் ஈடுபட்டால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படும் என்பதால் எந்த வேலையும் செய்ய அனுமதிப்பதில்லை.குழந்தையை ஈன்றெடுத்து விட்டாலோ, அந்தக் குழந்தையைப் பராமரிப்பதிலேயே அவளுடைய நேரம் முழுவதும் கழிகின்றது? அதுபோல குருதேவரின் பூஜையும்,புறச்சடங்குகளும் இயல்பாகவே குறையத் தொடங்கின. 

குறித்த நேரத்தில் பூஜைப் பணிகளை அவர் செய்வது நின்றுவிட்டால் எப்போதும் ஆனந்தப் பரவசத்தில் மூழ்கித் திளைத்த வண்ணம் தாம் விரும்பும் போது விரும்பும் வகையில் பூஜைப் பணிகளைச் செய்தார். 

அவர் சிலவேளைகளில் பூஜை செய்வதற்கு முன்பே நைவேத்தியம் செய்து விடுவார். தியானத்தில் மூழ்கி தாம் வேறு அன்னை வேறு என்ற நினைப்பையே மறந்து மலர்களாலும் சந்தனத்தாலும் தம்மையே அலங்கரித்துக் கொள்வார். உள்ளும் புறமும் அன்னையின் காட்சியைத் தொடர்ந்து கண்டதே இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்று அவர் எங்களிடம் கூறியதுண்டு. 

அந்தத் தொடர்ந்த காட்சி இடையில் ஒரு கணம் தடைப்பட்டாலே் கூட அவரால் தாங்க முடியாது. விரகதாபம் மேலிட தரையில் விழுந்து புரண்டு, முகத்தை மண்ணில் தேய்த்துக்கொண்டு அலறி அழுது புலம்புவார். 

அவரது அழுகையொலி அந்தப் பகுதி முழுவதையும் நிரப்பும் .மூச்சே நின்றுபொய் உயிருக்காகப் போராடுவார்.கீழே விழுந்து புரள்வதால் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வடிவதைக்கூட அவர் உணர்வதில்லை. விழுந்தது நெருப்பிலா இல்லை, நீரிலா என்பதையும் அறியவில்லை. இந்தப்போராட்டங்கள் எல்லாம் அன்னையின் காட்சி மீண்டும் கிடைத்த உடனேயே மாறிவிடும். அவரது திருமுகம் மீண்டும் அற்புத ஒளியுடன் துலங்கும், ஏதோ முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக அவர் மாறிவிடுவது போலவே இருக்கும்!

இதுவரை எப்படியோ குருதேவர் பூஜையைச் செய்துவர மதுர்பாபு அனுமதித்து வந்தார். 

இனியும் அது நடைமுறையில் இயலாது என்பதை உணர்ந்து மாற்று ஏற்பாடு செய்தார். அதைப்பற்றி ஹிருதயர் கூறினார், மதுர்பாபுவின் இந்த முடிவிற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. 

ஒரு நாள் குருதேவர் பரசவ நிலையில் ஆசனத்திலிருந்து திடீரென்று எழுந்து, கோயிலுள் நின்றிருந்த மதுர்பாபுவையும் என்னையும் பார்த்தார். பின்னர் என்கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று என்னை ஆசனத்தில் அமரச்செய்து மதுர்பாபுவிடம், இன்றிலிருந்து ஹிருதயன் பூஜை செய்வான்.என் பூஜையை ஏற்றுக்கொண்டது போன்றே அவனது பூஜையையும் ஏற்றுக்கொள்வதாக அன்னை கூறுகிறாள். என்றார். 

குருதேவரின் வாக்கை அன்னையின் ஆணையாகவே மதுர்பாபு ஏற்றுக்கொண்டார். ஹிருதயரின் கூற்று எந்த அளவுக்கு உண்மை யானது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் குருதேவர் இருந்த மனநிலையில் அவரால் முறையாகப் பூஜைப் பணிகளைச் செய்ய இயலாது என்பதை மதுர்பாபு நன்றாக அறிந்திருந்தது உண்மை.

குருதேவரை முதன்முதல் கண்டதிலிருந்தே மதுர்பாபுவின் மனம் அவர்பால் ஈர்க்கப்பட்டிருந்தது. அவருக்கு அனைத்து சவதிகளையும் செய்து கொடுத்து தட்சிணேசுவரத்தில் வைத்துக்கொள்ள மதுர்பாபு தீவிரமாக முயன்றார். 

குருதேவரின் அற்புதமான பண்புகளை அறிய அறிய மதுர்பாபுவிற்கு அவரிடம் ஈடுபாடு அதிகரித்தது. குருதேவரின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்தார். அவர் மீது அன்பைப் பொழிந்தார்.காரணமின்றி மற்றவர்கள் கொடுக்கும் தொல்லைகளிலிருந்து அவரைப்பாதுகாத்தார். இதற்கு ஓரிரு நிகழ்ச்சிகளை உதாரணமாகக் கூறலாம். குருதேவருக்கு இருந்த வாய்வுத் தொல்லையை நீக்குவதற்காக நாள்தோறும் கற்கண்டு பானம் கொடுக்க ஏற்பாடு செய்தார். 

குருதேவர் ராகாத்மிக பக்தியின் விளைவால் வழக்கத்திற்கு மாறான முறையில் பூஜை செய்தபோது சிந்தனைத் திறனற்ற மற்றவர்கள் அவரைக்குறைச்சொல்லி அவரது செயல்களில் தலையிட முயன்றனர். அப்போது குருதேவரைப் பாதுகாத்தது மதுர்பாபு தான். 

மேலும் சில நிகழ்ச்சிகளை வேறொரு பகுதியில் கூறியுள்ளோம். ஆனால் புத்தி புகட்டுவதற்காக என்று ராணியை குருதேவர் அடித்த சம்பவத்திற்குப் பிறகு அவரைப்பற்றி மதுர்பாபுவுக்கும் ஐயம் தோன்றியது. 

குருதேவரிடம் ஆன்மீகமும் பைத்தியமும் கலந்துள்ளன என்ற முடிவுக்கு அவர் வந்தார் என்று தோன்றியது.ஆனால் கல்கத்தாவில் புகழ்பெற்ற மருத்துவர் கங்காபிரசாத் சேன் என்பவரின் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

சிகிச்சை ஏற்பாட்டுடன் மதுர்பாபு நின்றுவிடவில்லை. 

மனத்தைக் கட்டுப்படுத்தி சாதனைகளில் ஈடுபடவேண்டும் என்று சொல்லியும், யுக்திபூர்வமான காரணங்களைக் காட்டியும் தான் உண்மை என்று அறிந்ததை குருதேவருக்கு உணர்த்த தன்னாலான முயற்சிகளைச் செய்தார். 

மதுர்பாபுவின் மாற்று ஏற்பாட்டின்படி,குருதேவரின் ஒன்றுவிட்ட சகோதரரான ராம் தாரக் சட்டோபாத்யாயர் அர்ச்சகராக அமர்த்தப்பட்டார். 

வேலை நிமித்தமாக தட்சிணேசுவரக்கோயிலுக்கு வந்த அவர், குருதேவர் குணமடையும் வரை கோயில் பூஜை செய்வதற்காக நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி 1858-ஆம் ஆண்டில் நடந்தது.

ராம்தாரக்கை ஹலதாரி என்று குருதேவர் அழைப்பது வழக்கம். அவரைப்பற்றிய பல விஷயங்களை குருதேவர் எங்களுக்குக் கூறியிருந்தார்.

ஹலதாரி ஒரு நல்ல பண்டிதரும் சாதகரும் ஆவார். பாகவதம், அத்யாத்ம ராமாயணம் போன்ற நூல்களை நாள்தோறும் படிப்பார். அவருக்கு மகாவிஷ்ணுவிடம் அதிக பக்தி இருந்தது. அன்னை பராசக்தியையும் அவர் வெறுக்கவில்லை. எனவே மதுர்பாபுவின் வேண்டுகோளின்படி அன்னைக்குப் பூஜை செய்யும் பணியை ஏற்றுக்கொண்டார்.தானே சமைத்து உண்ண விரும்புவதாகவும் உணவுப்பொருட்களை மட்டும் கொடுத்தால் போதும் என்றும் மதுர்பாபுவிடம் கேட்டார். முதலில் இதனை மறுத்த மதுர்பாபு,ஏன்? உமது சகோதரர் ராமகிருஷ்ணரும் மருமகன் ஹிருதயனும் கோயில் பிரசாதத்தை உண்ண வில்லையா? என்று கேட்டார்.

மதிநுட்பம் வாய்ந்த ஹலதாரி அதற்கு ”என் சகோதரன் மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலையில் இருக்கிறான். அவனுக்கு எந்த விதத்திலும் இது ஊறுவிளைவிக்காது. நான் அந்த நிலையில் இல்லை. நான் உணவு விஷயத்தில் அவனைப்போல் நடந்து கொள்வது குற்றமாகும் என்று சொன்னார்.இதனைக்கேட்டு மதுர்பாபு மிகவும் மகிழ்ச்சியுற்றார். உணவுப்பொருட்களைக்கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். நாள்தோறும் சமையலுக்கு வேண்டிய பொருட்களைப்பெற்று அவற்றை பஞ்சவடியின் கீழ் சமைத்து உண்டார் ஹலதாரி.

அன்னை காளியிடம் ஹலதாரிக்கு எந்த விதமான வெறுப்பும் இல்லையெனினும் மிருகபலி கொடுப்பதை அவர் விரும்பவில்லை. 

விழாக்களின் போது மிருகபலி கொடுப்பது தட்சிணேசுவர ஆலயத்தில் வழக்கமாக இருந்தாலும் அந்த சமயங்களில் உண்மையான ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் ஹலதாரியால் பூஜை செய்ய இயலவில்லை. 

அவர் சுமார் ஒருமாத காலம் பூஜை செய்தார். அதன்பின் ஒரு துயர நிகழ்ச்சி நடைபெற்றதாகக்கூறப்படுகிறது. ஒரு நாள் அவர் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தபோது அன்னை பயங்கர வடிவுடன் ஹலதாரியின் முன்தோன்றி, நீ எனது பூஜையைத் தொடராதே. தொடர்ந்து செய்வாயானால் உரிய முறையில் பூஜை செய்யாத குற்றத்திற்காக உன் மகனை இழக்கநேரிடும் என்று கூறினாள். 

இது ஏதோ பிரமை என்று எண்ணிய ஹலதாரி அன்னையின் வாக்கைப் பொருட்படுத்தவில்லை. 

சில நாட்களில் மகன் இறந்துவிட்ட செய்தி ஹலதாரிக்கு எட்டியது.அப்போது தான் உண்மையை உணர்ந்த ஹலதாரி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் குருதேவரிடம் சொல்லி அன்னைக்குப் பூஜை செய்வதிலிருந்து விலகிக்கெண்டார். அதன்பின் ஹிருதயர் பூஜைப்பணிகளை ஏற்றுக்கொண்டார். ஹலதாரி ராதாகாந்தர் ஆலயத்தில் பூஜை செய்தார்.


  

முதல் நான்கு ஆண்டு சாதனைகளின் நிறைவு


குருதேவரின் சாதனைக் காலத்தைப்பற்றி அறிய அவரே அதனைப்பற்றிக்கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். 

குருதேவரின் சாதனைக்காலம்(தவ வாழ்க்கை) 1856-1867 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தை குருதேவரின் சாதனைக்காலம் என்று நாம் குறிப்பிடுகிறோம். 

இப்படி நாம் வரையறுத்தாலும் இந்தக் காலகட்டத்தின் நிறைவுப் பகுதியில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு அந்த இடங்களிலும், தட்சிணேசுவரத்திற்குத் திரும்பிய பின்னரும் அவர் தமது சாதனைகளைத் தொடர்ந்தார் என்பதையும் நாம் பார்க்கப்போகிறோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டு காலத்தையும் நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக அறிய முற்படுவோம்.

முதல் நான்கு ஆண்டு காலத்தின் 

(1856-1859) முக்கிய நிகழ்ச்சிகளை நாம் முன்னரே பார்த்தோம். 

அடுத்த பகுதி 1860 முதல் 1863 முடிய உள்ளதாகும். 

இப்பகுதியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் கோகுல விரதத்தில் தொடங்கி வங்கநாட்டின் புகழ்மிக்க அறுபத்துநான்கு தந்திரங்கள் கூறுகின்ற சாதனைகளையும் விதிப்படிச் செய்தார் 

குருதேவர். 1864முதல் 1867 முடிய உள்ள மூன்றாவது பகுதியில் கீழ்காணும் சாதனைகளைப்புரிந்தார்.ராமாயத் பிரிவைச்சேர்ந்த ஜடாதாரி என்ற துறவியிடமிருந்து ராம மந்திர தீட்சையும், ராம்லாலா விக்கிரகமும் பெற்றார். பெண்ணுடை தரித்து ஆறு மாதகாலம் வைணவ நூல்கள் கூறுகின்ற மதுர பாவனை சாதனை செய்தார். தோதாபுரியிடமிருந்து துறவறம் ஏற்று நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றார். இறுதியாக கோவிந்தரிடமிருந்து இஸ்லாமிய சமய உபதேசம் பெற்றார். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் தான் வைணவ தந்திரங்கள் கூறுகின்ற சக பாவனை சாதனைகள் புரிந்தார். வைணவத்தின் துணைப் பிரிவுகளான கர்த்தாபஜா, நவரசிக் போன்றவற்றுடனும் இந்தக்காலத்தில் தான் தொடர்பு கொண்டார்.வைணவத்தின் எல்லா பிரிவுகளுடனும் குருதேவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பது, அந்தப் பிரிவுகளைச் சார்ந்த வைஷ்ணவகரண் கோசுவாமி போன்ற சாதகர்கள் தங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அவரை நாடியதிலிருந்து தெரியவருகிறது. 

சாதனைக்காலத்தை இவ்வாறு மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவற்றை ஆராயும் போது ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட தொகுதியாக அமைந்திருப்பதைக் காணலாம்.

குருதேவர் தம் சாதனையின் ஆரம்பகாலத்தில் வெளியிலிருந்து பெற்ற ஒரே உதவி ஸ்ரீகேனாராம் பட்டாச்சாரியரிடம் இருந்து மந்திரோபதேசம் பெற்றதாகும்.

கடவுளைக் காணவேண்டும் என்ற தீவிரமான ஆன்மதாகமே இந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஊன்று கோலாக இருந்தது. 

இந்த தாகம் விரைவில் அதிகமாகிக்கொண்டே போய் அவரது உடலிலும் மனத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இஷ்ட தெய்வத்திடம் எல்லையற்ற அன்பை உண்டாக்கியது. வைதீபக்தியைக் கடந்து ராகாத்மிக பக்திப்பாதையில் முன்னேற வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அன்னையின் ஒப்பற்ற அருட்காட்சியை நல்கி அவரை யோக சக்தி பெற்றவராக்கியது.

அப்படியானால் இனி சாதனைகள் எதற்கு? கடவுள் காட்சியும் யோக சித்தியும் பெற்றுவிட்ட குருதேவருக்கு வேறு சாதனைகள் எதற்கு? என்று ஒரு வேளை வாசகர்கள் கேட்கக் கூடும். 

இது ஒரு விதத்தில் உண்மையே. ஆயினும் மேற்கொண்டு அவருக்கு சாதனைகள் ஏன் தேவைப்பட்டது. என்பதை வாசகர்களுக்குக்கூற விரும்புகிறோம். 

இயற்கையின் நியதிப்படி மரங்களும் செடிகளும் முதலில் பூத்து பின்னர் காய்க்கின்றன. ஆனால் சில தாவரங்கள் முதலில் காய்த்து பின்னர் பூக்கின்றன என்று குருதேவர் சொல்வதுண்டு. சாதனைகளைப்பொறுத்தவரை குருதேவரின் முன்னேற்றம் இரண்டாவதாகக்குறிப்பிட்டதான, முதலில் காய்த்து பின்னர் பூக்கின்ற தாவரங்களைப்போன்றதாகும். 

சாதனையின் ஆரம்பத்தில் குருதேவர் கடவுட்காட்சி போன்ற அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், தாம் கண்டவை உண்மையா, தமது குறிக்கோள் நிறைவேறியதா, என்பதைப் பற்றித் தெளிவான எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சாஸ்திரங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ள மற்ற சாதகர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தெளிவான முடிவுக்கு வர முடியும் என்று அவர் கருதினார்.

தீவிர ஆன்ம தாகம் ஒன்றினால் மட்டுமே எந்த உண்மையைக் கண்டறிந்தாரோ, அதே உண்மையை சாஸ்திரங்கள் காட்டுகின்ற வழிகளைப் பின்பற்றியும் அதாவது சாஸ்திரங்கள் கூறுகின்ற சாதனைகளைச் செய்தும் கண்டறியவேண்டும். இந்தக் காரணத்திற்காகவும் குருதேவருக்கு சாதனைகள் அவசியமாயிற்று, குருவிடமிருந்து கேட்ட அனுபவங்கள் காலம் காலமாக சாஸ்திரங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ள எண்ணற்ற சாதகர்களின் அனுபவங்கள், இவற்றுடன் சொந்த அனுபவங்களையும் தெய்வீகக் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்காதவரை ஒரு சாதகன் தனது அனுபவங்களின் உண்மையை அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

இவ்வாறு ஒப்புநோக்கி, அவை ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன என்று கண்ட மாத்திரத்தில் அவனது ஐயங்கள் யாவும் அகன்று மனம் எல்லையற்ற அமைதியை அடைகிறது.

எடுத்துக்காட்டாக வியாசரின் புதல்வரும் பரமஹம்சர்களுள் மிக உயர்ந்தவருமான சுகதேவரின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றைக்குறிப்பிடலாம். மாயையின் கட்டுக்குள் அகப்படாதவராக இருந்த அவர் பிறப்பிலிருந்தே பல தெய்வீகக் காட்சிகளையும் அனுபவங்களையும் பெற்றார்.பூரண ஞானம் பெற்றதால் தான் தமக்கு இத்தகைய அனுபவங்கள் உண்டாகின்றன என்பது அவருக்குப் புரியவில்லை. அதனால் வேதங்களை நன்கு கற்றுணர்ந்த தம் தந்தை வியாசரின் துணையுடன் வேதங்களையும் பிற சாஸ்திரங்களையும் கற்றார். பின்னர் வியாசரிடம் அப்பா” பிறந்ததிலிருந்தே சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள எல்லா ஆன்மீக நிலைகளையும் அனுபவித்து வருகிறேன். ஆனால் இவைதான் இறுதியான ஆன்மீக உண்மைகளா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இது பற்றித் தாங்கள் அறிந்தவற்றை எனக்குக்கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பேரறிவாளரான வியாசர் தமக்குள், நான் ஆன்மீக வாழ்வின் அனுபவங்களையும்முடிவான உண்மைகளையும் இவனுக்கு நன்றாகக் கற்பித்திருக்கிறேன் . ஆனாலும் இவனது மனத்தில் இன்னமும் ஐயங்கள் நீங்கவில்லை. பூரண ஞானம் கிட்டிவிட்டால் உலகியல் வாழ்வைத் துறந்துவிடுவான் என்ற புத்திரபாசத்தினால் அல்லது வேறு ஏதோ காரணத்தினால் நான் அவனுக்கு முழு உண்மையையும் கற்பிக்கவில்லை என்று என் மகன் நினைக்கிறான். வேறொரு மகானிடமிருந்து இது பற்றி அவன் அறிந்து கொள்வது நல்லது என்று எண்ணினார். எனவே சுகரிடம், என்னால் உனது ஐயங்களைப்போக்க இயலாது. மிதிலை மாமன்னராகிய ஜனகர் சிறந்த ஞானி என்பது உனக்குத் தெரிந்தது தான். அவரிடம் சென்று உன் ஐயங்களைப்போக்கிக்கொள் என்று சொன்னார். சுகதேவரும் தந்தையின் அறிவுரைப்படி உடனே மிதிலைக்குச் சென்று ராஜரிஷியாகிய ஜனகரைச் சந்தித்தார். அவர் சுகருக்கு பிரம்ம ஞானிகளின் அனுபவத்தை எடுத்துக்கூறினார். குருவின் போதனை, சாஸ்திரங்களில்கூறப்பட்டுள்ள கருத்துக்கள், சொந்த அனுபவம் ஆகியவற்றுக்கிடையே முழு ஒருமைப்பாடு இருப்பதை அறிந்து தெளிவும் அமைதியும் பெற்றார் சுகதேவர்.

குருதெவர் மீண்டும் சாதனைகளில் ஈடுபட்டதற்கு முக்கியமான வேறு சில காரணங்களும் உண்டு. 

அவற்றை இங்கு மிகச் சுருக்கமாகக்கூறுவோம். தமது வாழ்வில் அமைதியைப்பெறுவது மட்டும் குருதேவரது சாதனையின்நோக்கம் அன்று. அன்னை பராசக்தி குருதேவரை உலகநன்மைக்காக உடல்தரிசிக்கும் படிச் செய்திருக்கிறாள். அதற்காகத் தான் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு சமயநெறிகளின் சாதனைகளை மேற்கொண்டு அவற்றுள் உண்மை எது, போலி எது என்பதைக் காட்டுவதற்கான பெருமுயற்சி அவரது வாழ்வில் நடைபெற்றது. 

எல்லா சமய நெறிகளையும் அவை கூறும் சாதனை முறைகளையும் அவற்றின் முடிவுகளையும் தாமே கண்டறிந்தால் மட்டும் தான் உலக குருவாகப் பரிணமிக்க முடியும். எனவே பல்வேறு சமய சாதனைகளை மேற்கொள்வது அவருக்கு அவசியமாயிற்று. 

அது மட்டுமன்று களங்கம் சிறிதும் அற்ற, பரந்த மனப்பான்மை உடைய குருதேவரின் சாதனைகள் வாயிலாக சாஸ்திரங்களில் கூறப்பட்ட ஆன்மீக நிலைகளை வெளிக்கொணர்ந்து, இந்த நவீன யுகத்திற்கு வேதங்கள், புராணங்கள், பைபிள், குரான் போன்ற சமய நூல்களில் உள்ள உண்மைகைளை நிரூபித்துக் காட்டினாள். அன்னை! 

ஆன்மீக அனுபூதி பெற்ற பின்னரும் குருதேவர் சாதனைகளைத் தொடர்ந்து செய்ய முயன்றதன் காரணம் இதுதான். 

மேற்சொன்ன நோக்கங்களை நிறைவேற்றவே உரிய காலத்தில் பல்வேறு சமயப் பிரிவுகளைச்சேர்ந்த ஞானிகளையும் பண்டிதர்களையும் கொண்டுவந்து சேர்த்து, அந்தப் பிரிவுகளின் சாதனைகளைப் பற்றிய கருத்துக்களை அவர்களிடமிருந்தே நேரடியாகக்கேட்டு குருதேவரை அறிய வைத்தாள். 

இந்த அற்புதமான வாழ்க்கையைத் தொடர்ந்து படிக்கும்போது இந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்வோம்.


  

தமது சாதனையின் முதல் நான்கு ஆண்டுகளில் இறைவனை உணர்வதற்கு தணியாத ஆன்ம தாகம் ஒன்றையே குருதேவர் துணையாகக் கொண்டிருந்தார் என்று முன்பே கண்டோம். அந்தக் காலகட்டத்தில் சாஸ்திர விதிமுறைகளின்படி அவருக்கு யாரும் சாதனைகளைக் கற்பிக்கவில்லை. 

எல்லா சாதனைகளுக்கும் இன்றியமையாத தான தீவிர ஆன்ம தாகம் ஒன்றுதான் அவருக்குத்துணையாக இருந்தது. 

ஆன்ம தாகத்தால் மட்டுமே அவர் அன்னையின் தரிசனம் பெற்றதிலிருந்து, ஒரு சாதகன் மற்ற எதன் துணையும் இன்றி தீவிர மனஏக்கம் ஒன்றினாலேயே இறைக்காட்சி பெறமுடியும் என்பது உண்மையாயிற்று.

ஆனால் எத்தகைய தீவிரமான மனஏக்கம் இதற்குத்தேவை என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம்.

குருதேவரின் வாழ்க்கையில் இந்தக் காலகட்டத்தை சற்றுக் கவனித்தால் இது நமக்குத் தெளிவாகும்.

தீவிர மனஏக்கத்தின் விளைவால் அவரது உடலும் மனமும் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டதுபோலாகிவிட்டது. 

உணவு, உறக்கம், வெட்கம், பயம் போன்ற நன்கு வேரூன்றிவிட்ட உணர்ச்சிகள் கூட அவரிடமிருந்து மறைந்தது. உயிர்தரிப்பதற்குத்தேவையான முயற்சிகளில் கூட ஈடுபடாத போது, உடல் நலம் பேணுவதைப் பற்றிய பேச்சே இல்லை. இவற்றில் அவர் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.

குருதேவர் கூறினார், உடலைச்சுத்தம் செய்யாததால் தலைமுடியில் தூசிபடிந்து, அது சடையாகி விட்டிருந்தது.

தியானம் செய்ய அமரும் போது மனம் மிகவும் ஆழ்ந்து ஒருமைப்படுவதால் உடல் ஒரு மரக்கட்டையைப்போலச் செயலிழந்து விடும். 

உடலை ஏதோ ஜடம் என்று எண்ணிய பறவைகள் சிறிதும் பயமின்றி என் தலையில் அமர்ந்து, அழுக்கும் தூசியும் மண்டிக்கிடந்த முடியில் ஏதாவது உணவுத்துணுக்குகள் கிடைக்குமா என்று கொத்திக்கிளறும், இறைவனின் திருக்காட்சி கிடைக்காத ஏக்கத்தினால், பொறுமையிழந்து நான் என் முகத்தைத் தரையில் பலமாகத்தேய்த்துக் கொண்டதால் காயங்கள், ஏற்பட்டு ப் பல இடங்களில் ரத்தம் வழியும், நாள் முழுவதும் பிராத்தனை தியானம், பூஜை, சரணாகதி, என்று சாதனைகளிலேயே ஈடுபட்டிருந்ததால் நேரம் எவ்வாறு கழிந்தது என்பதே எனக்கு நினைவில்லை. கோயிலில் சங்கொலியும் மணியோசையும் கேட்கும் போது தான் பகல் கழிந்து விட்டது. என்பது நினைவுக்கு வரும். 

இன்னொரு நாளும் வீணாக முடியப்போகின்றதே, அன்னையின் திருக்காட்சி இன்னும் கிட்டவில்லையே, என்ற எண்ணம் அலைபோல் தொடர்ந்து வரும். இந்த எண்ணத்தின் எழுச்சியால் மனம் பட்டபாட்டைச் சொல்லி முடியாது. ஏதோ உணர்ச்சிப் பிரவாகத்தில் அடித்துச்செல்லப்பட்டது போல் நிலைகுலைந்து அமைதி இழந்து தரையில் விழுந்து புரண்டு, அம்மா இன்னும் உன் தரிசனம் எனக்குக் கிட்டவில்லையே! என்று கதறுவேன்.என்கூக்குரல் நாலாபக்கமும் எதிரொலித்துப் பரவும். என்னைக் கண்டவர்கள், பாவம் தாளாத வயிற்றுவலி போலிருக்கிறது. அதனால் தான் இந்தப் பாடுபடுகிறார் என்று பேசிக்கொள்வார்கள்.

சாதனையின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பலமுறை குருதேவர் எங்களிடம் கூறியிருக்கிறார். ஆன்ம தாகத்தின் தேவையை எங்களுக்கு உணர்த்துவது தான் அவரது நோக்கம். மனைவி, மக்கள், உற்றார், உறவினர், இறந்து விட்டாலோ செல்வத்தை இழந்துவிட்டாலோ மக்கள் குடம்குடமாகக் கண்ணீர் விட்டு அழுவார்கள். இறைவனை அடைய முடியவில்லையே என்று யார் அழுகிறார்கள், சொல் பார்க்கலாம், நாங்களும் இறைவனிடம் எவ்வளவோ பிராத்தனை செய்து விட்டோம். ஆனால் அவன் இன்னமும் காட்சி தரவில்லை. என்று கூறுவதை மட்டும் அவர்கள் விடுவதில்லை. 

ஒரு முறையேனும் மனம் விட்டு ஏங்கி அழட்டும். அவன் எப்படிக்காட்சி தராமல் இருக்கிறான் என்று பார்ப்போம் என்று உணர்ச்சிப்பெருக்குடன் கூறுவார்கள். இதய ஆழத்திலிருந்து வரும் இந்த வார்த்தைகள் எங்களை அப்படியே உறையச் செய்து விடும்! இந்த வார்த்தைகளின் உண்மையை அவர் தம் வாழ்க்கையில் உணர்ந்திருப்பதால் தான் இவ்வளவு ஆணித்தரமாகப்பேச முடிகிறது என்பது எங்களுக்குத் தெளிவாயிற்று.

முதல் நான்கு ஆண்டு சாதனையின் போது கூட அன்னையின் தரிசனத்தால் மட்டும் குருதேவர் திருப்தி அடைந்து நின்றுவிடவில்லை. 

பாவமுகத்தில் இருந்தபோது அன்னையின் தரிசனம் கிடைத்த பின்னர், குலதெய்வமான ஸ்ரீரகுவீரரின் காட்சியைப்பெற விழைந்தது குருதேவரின் மனம். அனுமன் கொண்டது போன்ற வேறெதையும் வேண்டாத பக்தியிருந்தால் மட்டுமே ஸ்ரீராமசந்திரரின் தரிசனம் கிடைக்கும். என்று உணர்ந்த அவர், தாச பக்தியின் மூலம் இறைவனை அடைவதற்காக அனுமனின் அகவுணர்வுகளை மனத்தில் வரவழைத்துக்கொண்டு சில காலம் சாதனையில் ஈடுபட்டார். 

இடைவிடாது அனுமனைச் சிந்தித்ததன் பயனாக, அந்தக் காலகட்டத்தில் தன்னை அனுமனிலிருந்து வேறுபட்ட ஒரு தனிமனிதனாகக் காண அவரால் இயலாது போயிற்று. 

அந்த நாட்களைப் பற்றி குருதேவர் கூறினார், அந்த நாட்களில் நான் அனுமனைப் போலவே நடந்தேன். உண்டேன், மற்ற செயல்களையும் செய்தேன். வேண்டுமென்று அவ்வாறு செய்யவில்லை. தானாகவே அவை நிகழ்ந்தன! இடுப்பை சுற்றி ஒரு துணியைக் கட்டி வால் போல் தொங்கவிட்டுக்கொண்டேன். குதித்துக்குதித்து நடந்தேன். பழங்களையும் கிழங்குகளையும் தவிர வேறெதையும் உண்ணாதிருந்தேன். அவற்றைக்கூட த்தோல் உரித்து உண்ணத்தோன்றவில்லை. நாளின் பெரும்பகுதியை மரக்கிளையிலேயே கழித்தேன். பக்தி மேலீட்டால் எப்போதும், ராமா, ராமா என்று கூவிக்கொண்டிருந்தேன். வானரங்களைப்போலவே என் கண்களும் எப்போதும் ஒரு பரபரப்பான பார்வையைப் பெற்றன. விந்தை என்னவென்றால் என் முதுகுத் தண்டின் கீழ்பகுதி ஓர் அங்குலத்திற்கும்மேலாக அப்போது வளர்ந்திருந்தது. இதைக்கேட்டதும் நாங்கள் குருதேவரிடம் இப்போதும் உங்கள் முதுகுத் தண்டின் கீழ்பகுதி அவ்வாறுதான் இருக்கிறதா? என்று கேட்டோம். அதற்கு அவர் இல்லை, அந்த உணர்வில் நான் முழுமை பெற்று மனம் அதிலிருந்து விடுபட்ட பின்னர் அந்த வளர்ச்சி சிறிதுசிறிதாகக் குறைந்து முன்போலாகி விட்டது என்றார்.....

குருதேவர் தாச பக்தி சாதனை செய்த நாட்களில் ஓர் அசாதாரணமான காட்சி கிடைத்தது. 

முன்னர் கிட்டிய காட்சிகளிலிருந்து அது முற்றிலும் வேறுபட்ட புதுமையான அனுபவம். அது அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்து எப்போதும் நினைவில் நிலைபெற்றிருந்தது. அவர் கூறினார்,ஒரு நாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தேன்.தியானம் எதுவும் செய்யவில்லை வெறுமனே உட்கார்ந்திருந்தேன்.அப்போது ஈடிணையற்ற பிரகாசம் பொருந்திய பெண் என் முன் தோன்றினாள். 

அவளது உடலிலிருந்து தோன்றிய ஒளியால் அந்தப்பகுதி முழுவதுமே ஒளி வெள்ளத்தில் ஆழ்ந்தது. நான் அந்தப் பெண்மணியை மட்டும் தான் கண்டேன் என்பதில்லை, பஞ்சவடியின் மரங்கள், கொடிகள், கங்கை என்று அனைத்தையும் அப்படியே கண்டேன். என் முன்தோன்றிய பெண்ணும் ஒரு மானிடப்பெண்ணாகவே தோன்றினாள். ஏனெனில் அவளுக்கு தேவதேவியரைப்போல் மூன்று கண்கள் இருக்கவில்லை. அனால் பொதுவாக தேவதேவியரின் முகத்தில் கூட காணப்படாத ஓர் அசாதாரணமான அன்பும், கனிந்த கருணையும், அளவற்ற பொறுமையும் ஆழ்ந்த துயரமும் அவளது திருமுகத்தில் பொலிந்தன. 

கருணைத் திருநோக்கால் என்னைப்பார்த்த அவள் வடதிசையிலிருந்து என்னை நோக்கி மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்து வந்தாள். அது யாராக இருக்கும் என்று நான் வியந்து நின்றபோது, எங்கிருந்தோ திடீ ரென்று குரங்கு ஒன்று தோன்றி கீச்கீச்சென்று ஒலி எழுப்பியவாறே அவளது திருவடியில் வீழ்ந்து வணங்கிற்று. என் உள்ளம் ”சீதா, சீதா , துயரமே வடிவான சீதா ஜனகரின் மகள் சீதா, ராமனையே உயிர்மூச்சாகக்கொண்ட சீதா” என்று கூவியது. 

நான் மெய்மறந்து அம்மா அம்மா என்று அழைத்தபடியே அவளது திருவடிகளில் வீழ்ந்து வணங்க முற்பட்டேன். 

அதற்கு அவள் மிக விரைவாக நடந்து வந்து இதனுள் (தம் சரீரத்தைக்காட்டி) புகுந்து விட்டாள்! 

வியப்பாலும் ஆனந்தத்தாலும் நான் சுயவுணர்வை இழந்து சாய்ந்தேன், இதற்கு முன் தியானம், சிந்தனை, எதுவும் செய்யாத நிலையில் இத்தகைய காட்சிகளை நான் கண்டதில்லை.துயரமே வடிவான சீதையை முதன்முதலில் கண்டதாலோ என்னவோ, அவளைப்போன்றே நானும் வாழ்க்கை முழுவதும் துயரங்களில் உழல வேண்டியதாயிற்று.


  

தவம் செய்வதற்கு தகுந்த புனிதமான ஓர் இடம் தேவை. என்று உணர்ந்த குருதேவர் ஐந்து புனித மரங்கள் நடப்பட்ட புதிய பஞ்சவடி ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஹிருதயரிடம் வெளியிட்டார். 

ஹிருதயர் கூறினார், 

பஞ்சவடியின் அருகிலிருந்த சிறிய குளமான ஹம்ச புகூர் தூர்வாரப்பட்டு அந்த மண்ணைப் பழைய பஞ்சவடிக்கு அருகில் இருந்ததாழ்ந்த நிலத்தில் பரப்பி, அந்தப்பகுதி சமநிலமாக்கப்பட்டிருந்தது. எனவே குருதேவர் எந்த நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்வாரோ அந்த மரம் அப்போது இல்லை, அதனால் தற்போது சாதனைக்குடில் அமைந்திருக்கின்ற இடத்திற்கு மேற்கில் குருதேவர் தம் கைகளாலேயே ஓர் அரசமரத்தை நட்டார். ஆல், அசோக, வில்வ, நெல்லி மரங்களை ஹிருதயர் நட்டார். அந்த இடத்தைச்சுற்றி துளசி, அபராஜிதம், இன்னும் பல செடிகொடிகளும் நடப்பட்டன. ஆடு, மாடுகள் அந்த இளஞ்செடிகளை அழித்து விடாதிருக்க கோயில் தோட்டக்காரன் பர்தாபாரியின் உதவியுடன் வேலியும் அமைக்கப்பட்டது. 

குருதேவரின் பராமரிப்பினால் துளசிச் செடியும் அபராஜிதக் கொடியும் வெகுவிரைவில் அடர்த்தியாக வளர்ந்தன. அங்கு அவர் தியானத்தில் அமரும் போது வெளியிலிருந்து யாரும் அவரைப்பார்க்க முடியாத அளவுக்கு அவை காடுபோல் வளர்ந்து விட்டிருந்தன.

காளிகோயிலைக் கட்டிய ராணி, அங்கு வந்துத் தங்கிச் செல்கின்ற யாத்திரிகர்களுக்கும் துறவிகளுக்கும் வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.

இதைப்பற்றிக்கேள்விப்பட்டவர்கள் புரி,கங்காசாகர், போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்கின்ற வழியில் அங்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கிச் செல்லலாயினர். 

மகான்களும், சிறந்த சாதகர்களும் தட்சிணேசுவரத்திற்கு வருவது வழக்கம் என்று குருதேவர் கூறியுள்ளார். 

இவர்களுள் ஒருவரின் அறிவுரைப்படி குருதேவர் பிராணாயாமம் போன்ற ஹடயோகப் பயிற்சிகளைச் செய்ததாக அறிகிறோம். 

ஒரு நாள் ஹிலதாரியைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்தபோது குருதேவர் இதைத் தெரிவித்தார். ஹடயோகத்தைப்பயின்று அதனால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்திருந்த அவர் எங்களை அந்தப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்தார். 

சிலர் அவரிடம் ஹடயோகப் பயிற்சி பற்றி அறிவுரை கேட்பதற்காகச் சென்றபோது அவர், இக்காலத்திற்கு இந்தப் பயிற்சிகள் ஏற்றவையல்ல, கலியுகத்தில் வாழ்நாள் குறுகியது. வாழ்க்கையும் உணவை அடிப்படையாகக்கொண்டுள்ளது. அகவே ஹடயோகப் பயிற்சிகளில் ஈடுபட்டு உடம்பைத் தகுதியுடையதாக்கி, ராஜயோகத்தின் உதவியுடன் இறைவனை அழைப்பதற்கு நேரம் எங்கே உள்ளது? ஹடயோகப் பயிற்சிகளை ஒருவர் செய்ய விரும்பினால் யோகத்தில் நன்கு பயிற்சி பெற்ற குருவுடன் தங்கி நீண்ட நாட்கள் பயிற்சி பெற வேண்டும். உணவு போன்ற விஷயங்களில் அவரது உபதேசப்படி கடுமையான நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும். 

நியமங்களிலிருந்து சிறிது வழுவினால் கூட உடலில் நோய்கள் ஏற்படக்கூடும். ஏன், மரணமே நேரலாம். எனவே இந்தப் பயிற்சிகள் அவசியமில்லை. 

மனத்தை அடக்குவதற்காகத்தானே மூச்சைக் கட்டுப்படுத்திப் பிராணாயாமம் செய்ய வேண்டியிருக்கிறது! ஆனால் பக்தியுடன் தியானம் செய்தால் அதன் மூலமாகவே படிப்படியாக மனம் மூச்சு இரண்டும் தானாகவே கட்டுப்பட்டு விடுகின்றன. 

கலியுகத்தில் மக்களின் வாழ்நாளும் குறைவு, ஆற்றலும் குறைவு. அதனால் தான் கடவுள் எல்லையற்ற கருணைகொண்டு தம்மை அடைவதற்கான வழியை எளிதாக்கி உள்ளார். 

மனைவியையோ மக்களையோ இழக்கும்போது உண்டாகும் துயரமும் ஏக்கமும் அவன் ஒரு நாள் முழுவதும் கடவுளுக்காக ஏற்கி அழுதால் இறைவன் அவனுக்குக்காட்சி அளித்தே தீருவான்.

ஸ்மிருதிகளைப் பின்பற்றுகின்ற பக்த சாதகர்களுள் பலரும் செயல்முறையில் தந்திர சாதனைகளிலேயே ஈடுபடுகின்றனர். 

வைணவப் பிரிவைச்சேர்ந்த அத்தகைய சில சாதகர்கள் பரகீய பிரேம சாதனைகளைச் செய்கின்றனர். வைணவ நெறியில் ஈடுபாடு கொண்ட ஹலதாரி, ராதாகோவிந்தர் ஆலய அர்ச்சகர் பொறுப்பை ஏற்ற சில நாட்களுக்குப்பின் ரகசியமாக பரகீய சாதனைகளில் ஈடுபட்டார். 

இந்த விஷயம் மெதுவாகப் பரவியது. பலரும் இது பற்றி ஒளிவுமறைவாகப்பேசத் தொடங்கினர். ஹலதாரிக்கு வாக்குசித்தியிருந்தது. அவர் எது சொன்னாலும் அப்படியே பலித்துவிடும். அப்படியொரு பிரசித்தி இருந்ததால் ஹலதாரி யின் கோபத்திற்கு ஆளாக அஞ்சி, அவரது பரகீய சாதனை பற்றி அவரெதிரில் பேசவோ கேலிசெய்யவோ யாரும் துணிந்து முன்வரவில்லை.

நாளடைவில் ஹலதாரியின் விஷயம் குருதேவருக்குத் தெரியவந்தது.தங்களுக்குள் எதையெதையோ கற்பனை செய்து கொண்டு மக்கள் அவரைத்தூற்றுவதைக்கண்ட குருதேவர் ஹலதாரியிடம்,ஒன்றையும் மறைக்காமல் சொல்லிவிட்டார்.

ஹலதாரி அதற்கு விபரீதமாகப்பொருள் கொண்டு கடுங்கோபத்துடன் என்னைவிடச் சிறியவனான நீ என்னைப்பற்றி அவதூறு பேசுகிறாயா நீ ரத்தமாக வாந்தியெடுப்பாய் என்று சாபமிட்டார். தாம் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களை எடுத்துச்சொல்லி ஹலதாரியை அமைதிப்படுத்த குருதேவர் எவ்வளவோ முயன்றும் ஹலதாரியின் கோபம் தணியவில்லை.

ஒருசில நாட்களுக்குப் பிறகு இரவு சுமார் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு குருதேவருக்குக் குமட்டல் ஏற்பட்டு அவர் ரத்தவாந்தி எடுக்க நேர்ந்தது. 

இதைப்பற்றி குருதேவர் கூறினார், 

அந்த ரத்தத்தின் நிறம் அவரையிலைச் சாறு போன்று கறுப்பாக இருந்தது. வாயிலிருந்து கட்டியாக வெளிப்பட்ட அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. இன்னொரு பகுதி உள்ளே சுற்றிக்கொண்டு ஆலம் விழுது தொங்குவது போல் முன்பல் அருகில் உதடுகளிலிருந்து வழிந்து தொங்கியது. துணியை வைத்து ரத்தம் வருவதைத்தடுக்க நான் முயன்றும் அது நிற்கவில்லை. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. அக்கம்பக்கத்திலிருந்த எல்லோரும் ஓடி வந்தனர். 

ஹலதாரி அப்போது கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். விவரமறிந்து அவரும் விரைந்தோடி வந்தார். அவரைக் கண்டதும், நான் ”அண்ணா உங்கள் சாபத்தால் எனக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பாருங்கள் என்று கண்களில் நீர் ததும்பக்கூறினேன்.எனது பரிதாப நிலையைக் கண்டு அவரும் அழத்தொடங்கிவிட்டார்.

வயதான அனுபவம் மிக்க சாது ஒருவர் அன்று கோயிலுக்கு வந்திருந்தார். கூக்குரல் கேட்டு அவரும் என்னருகில் ஓடி வந்தார். ரத்தத்தின் நிறத்தையும் ரத்தம் வெளிப்பட்ட இடத்தையும் உன்னிப்பாகக் கவனித்த அவர், அச்சம். வேண்டாம் ரத்தம் வெளியேறியது நல்லதாகப்போயிற்று. நீங்கள் யோகப் பயிற்சிகள் செய்துவந்தீர்கள் அல்லவா? 

யோகப் பயிற்சிகளின் விளைவாக சுழுமுனை நாடி திறந்து தலையை நோக்கி ரத்தம் வேகமாகப்போகத் தொடங்கியது. அந்த வழியாக ரத்தம் மேலே போவதற்குப் பதிலாக பாதை மாறி வாய்வழியாக வந்தது நல்லதாயிற்று.

ஹடயோகத்தின் இறுதியில் ஒருவர் ஜடசமாதி நிலையை அடைகிறார். நீங்களும் அந்த நிலையைத்தான் நெருங்கிக் கொண்டிருந்தீர்கள். ரத்தம் மட்டும் உங்கள் தலையை அடைந்திருந்தால் ஜடசமாதிநிலையிலிருந்து நீங்கள் திரும்பியிருக்கவே முடியாது. அன்னை உங்கள் மூலமாக ஏதோ ஒரு தலையாய பணியை நிறைவேற்ற எண்ணியிருக்கிறாள். அதனால் தான் உங்களைக் காப்பாற்றி இருக்கிறாள் என்று நினைக்கிறேன் என்றார். 

அந்த சாதுவின் சொற்களைக்கேட்ட பிறகு தான் எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது, குருவி உட்காரப் பனம்பழம் விழுந்தது போல் ஹலதாரியின் சாபமும் தற்செயலாக ஒரு பெரிய நன்மையில் முடிந்தது.


  

ஹலதாரியிடம் குருதேவர் கொண்ட தொடர்பில் ஓர் இனிமையான மறைபொருள் இருந்தது. ஹலதாரி குருதேவரின் சித்தப்பாவின் மகன் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அவர் குருதேவருக்கு மூத்தவர். ஏறக்குறைய 1858-ஆம் ஆண்டில் அவர் தட்சிணேசுவரத்திற்கு வந்திருக்கக்கூடும். ராதாகோவிந்தர் ஆலய அர்ச்சகராக நியமிக்கப்பட்ட அவர் அந்தப் பொறுப்பை 1865- ஆம் ஆண்டு வரை வகித்தார். ஆகவே அவர் குருதேவரின் இரண்டாவது நான் காண்டு சாதனைக்காலத்தில் அதிகமாகவும், தட்சிணேசுவரத்தில் தங்கியிருக்க வேண்டும். குருதேவரிடம் நெருங்கிப் பழகுகின்ற பேறு பெற்றிருந்தாலும் குருதேவரைப்பற்றி எந்தவித முடிவான கருத்தும் அவருக்கு ஏற்படவில்லை. 

சாஸ்திரங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் ஹலதாரி.ஆகவே குருதேவர் பரவச நிலையில் இருக்கும் போது அணிந்திருக்கின்றஉடை , பூணூல் முதலியவற்றைக் களைந்து எறிந்து விடுவது ஹலதாரிக்குப் பிடிக்கவில்லை. 

தன் சகோதரன் ஒரு பைத்தியம் அல்லது சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவன் என்று நினைத்தார்.

ஹிருதயர் கூறினார்.சிலவேளைகளில் அவர் என்னிடம் ”ஹிருதய்! அவன் தனது ஆடை,பூணூல் முதலியவற்றைக் களைந்துவிடுகிறான். இது மிகவும் மோசம். முந்தைய பிறவிகளில் செய்த நற்கருமங்களின் காரணமாகவே அந்தணப் பிறவி வாய்க்கிறது. அதனைச் சாதாரணமாக எண்ணி” அந்த அபிமானத்தை விட்டுவிடநினைக்கிறானாம்.

அப்படியென்ன உயர்ந்த நிலை அவனுக்கு வந்துவிட்டது.?எதன் காரணமாக இப்படிச்செய்யத் துணிந்து விட்டான். ஹிருதய்! உன் வார்த்தைகளில் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவன் இவ்வாறு செய்யாமல் பார்த்துக்கொள்வது உன் கடமை. இத்தகைய செயல்களைச் செய்யாமல் தடுப்பதற்காக அவனைக் கட்டிப்போட நேருமானால் அதைக்கூடச் செய்ய த் தயங்காதே“ என்று கூறுவார்.

அதே சமயம் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாகப் பெருகி வழிய குருதேவர் பூஜை செய்வது, மனமகிழ்ச்சி பொங்கி ப் பெருக அவர் இறைவனின் திருப்பெயரையும் புகழையும் பாடுவது, தீவிர மன ஏக்கத்துடன் இறைக்காட்சி பெறத்துடிப்பது ஆகியவை ஹலதாரியை பெருவியப்பில் ஆழ்த்தாமலும் இருக்கவில்லை. 

இவை கட்டாயமாக இறையருளினால் தான் ஏற்பட்டிருக்கவேண்டும். சாதாரண மனிதர்களிடம் இத்தகைய நிலைகள் ஒருபோதும் காணப்படுவது இல்லையே என்றும் எண்ணுவார்.

சிலநேரங்களில் அவர் ஹிருதயரிடம் ஹிருதய்! அவனிடம் ஏதோவோர் அசாதாரணமான சக்தியிருப்பதை நீ உணர்ந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனுக்கு இவ்வளவு மனப்பூர்வமாக சேவை செய்ய முடியாது, என்றும் கூறுவதுண்டு.

பலவகை ஐயங்களால் குழம்பிய ஹலதாரியின் மனம் குருதேவரின் உண்மை நிலையை அறிந்து கொள்ள இயலாமல் தடுமாறியது.

குருதேவர் கூறினார், 

நான்கோயிலில் ஸ்ரீஜை செய்வதைப்பார்த்து வியப்புடன் எத்தனையோ தடவை, ராமகிருஷ்ணா, இப்போது நான் உன்னை அறிந்து கொண்டேன், என்று சொல்வார். 

அதற்கு நான் கேலியாக அண்ணா. ஜாக்கிரதை! 

மீண்டும் குழம்பிவிடாதீர்கள், என்று பதில் சொல்வேன். 

அவரும் விடாமல், நீ இனிமேலும் என் கண்களில் மண்ணைத்தூவ முடியாது, உன்னிடம் நிச்சயமாக தெய்வீக சக்தி உள்ளது. இந்ததடவை நான் அதனை முற்றிலுமாக அறிந்து கொண்டேன். என்பார். 

நல்லது, இந்த உறுதி எத்தனை நாள் பார்க்கலாம், என்பேன் நான், ஆனால் அவர் கோயிலில் பூஜையை முடித்துக்கொண்டு ஒரு சிட்டிகை பொடியை மூக்கில் இழுத்துக்கொண்டு பாகவதம் கீதை அத்யாத்ம ராமாயணம் போன்ற ஏதாவதொரு நுஸலைப்பற்றி விவரிக்கத் தொடங்குவாரோ இல்லையோ, ஆவணம் தலைக்கேறிவிடும்.முற்றிலும் வேறுபட்ட மனிதராக மாறிவிடுவார் அவர்

.ஒரு நாள் நான் அவரிடம் சென்று அண்ணா சாஸ்திரங்களில் நீங்கள் படித்த எல்லா நிலைகளையும் நான் உணர்ந்திருக்கிறேன். இவை அனைத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, என்று சொன்னேன். 

உடனே அவர், அடேய் நீ ஒரு முழுமுட்டாள்.நீயாவது இவற்றைப்புரிந்து கொள்வதாவது! என்று கூறிவிட்டார். 

நான் உண்மையில் சொல்கிறேன் .இதோ இதனுள்( தம் உடலைக்காட்டி) இருப்பவர் அனைத்தையும் எனக்கு விளக்கி க் கூறுகிறார். என்னுள் தெய்வீக சக்தி இருப்பதாகச் சற்றுமுன் கூறினீர்களே, அந்த சக்தி தான் எனக்கு எல்லாவற்றையும் புரிய வைக்கிறது. என்றேன். 

இதைக்கேட்டது தான் தாமதம் , கொதித்தெழுந்துவிட்டார்.விலகிப்போ முட்டாளே! கலியுகத்தில் கல்கி அவதாரத்தைத் தவிரவேறு அவதாரம் உண்டு என்று எந்த சாஸ்திரம் சொல்கிறது? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அதனால் தான் நீ இவ்வாறு நினைக்கிறாய்? என்று ஓங்கிய குரலில் கத்தினார்.

நான் சிரித்துக்கொண்டே இனிமேல், குழப்பமே வராது என்று சற்று முன்பு கூறினீர்களே! என்று கேட்டேன். அதனை யார் செவி கொடுத்துக்கேட்பது? 

இது போல் ஒரு முறையல்ல. இருமுறையல்ல, பலமுறை நிகழ்ந்ததுண்டு.

ஒரு நாள் நான் பரவச நிலையில் மரக்கிளை ஒன்றில் ஆடையேதுமின்றி ஒரு சிறுவனைப்போல் அமர்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை ஹலதாரி கண்டார்.

சந்தேகத்திற்கு இடமின்றி என்னை ஒரு பிரம்மதைத்யன் பிடித்துக் கொண்டதாக அன்றிலிருந்து ஹலதாரி முடிவு செய்து கொண்டார்.

ஹலதாரியின் மகன் காலமான செய்தியை முன்பே குறிப்பிட்டுள்ளோம். அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஹலதாரி காளியைத்தமோ குண தேவி என்று முடிவு செய்து கொண்டார். 

ஒரு நாள் அவர் குருதேவரிடம் தமோ குண தேவியை வழிபடுவதன் மூலம் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுமா? அத்தகைய தேவியை நீ ஏன் வழிபடுகிறாய், என்று கேட்டுவிட்டார். இதற்கு குருதேவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. 

ஆனால் இஷ்டதெய்வத்தை அவமதித்ததைக்கேட்டதால் புண்பட்ட மனத்துடன் காளி கோயிலுக்குச் சென்று அன்னை காளியிடம் கண்ணீருடன் அம்மா, சாஸ்திரங்களில் ஆழ்ந்த அறிவு பெற்றவர் ஹலதாரி, நீ தமோ குண வடிவினள், என்று சொல்கிறாரே! உண்மையிலேயே நீ தமோ குண வடிவினள் தானா? என்று கேட்டார். 

அன்னை குருதேவருக்கு உண்மையை அறிவித்து அருளினாள். உடனே அவர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஹலதாரியிடம் ஓடிச்சென்று, ஆனந்த மேலீட்டால் ஒரே தாவலில் அவரது தோளின் மீது எறி அமர்ந்து கொண்டு அன்னையையா தமோ குண வடிவினள் என்கிறீர்?

அன்னையா தமோ குண வடிவினள்.? அவளே அனைத்தும். முக்குணங்களில் திருவுருவம் அவளே! தூய சத்வ குண வடிவினளம் அவளே! என்று திரும்பத் திரும்ப உணர்ச்சி்ப் பெருக்குடன் கூறினார். பரவச நிலையிலிருந்த குருதேவரின் சொற்களாலும் ஸ்பரிசத்தாலும் ஹலதாரியின் அகக்கண் அப்போதைக்குத் திறந்தது போல் தோன்றியது! 

ஹலதாரி அப்போது பூஜை செய்து கொண்டிருந்தார்.குருதேவர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி குருதேவரிடம் அன்னையின் வெளிப்பாட்டையும் கண்டார். 

சந்தனத்தையும் மலரையும் எடுத்து அவரது தாமரைத் திருவடிகளில் அர்ப்பணித்து வணங்கினார். 

சிறிது நேரம் கழித்து ஹிருதயர் அங்கே வந்து ஹலதாரியிடம், மாமா, அவரை ஏதோ பேய் பிடித்திருப்பதாக எல்லாம் கூறினீர்களே! இப்போது ஏன் வணங்குகிறீர்கள்? என்று கேட்டார். ஏனென்று எனக்கே தெரியவில்லை. காளி கோயிலிலிருந்து வந்த அவன் என்னை ஏதோ செய்து விட்டான் எல்லாமே எனக்கு மறந்துவிட்டது போல் தோன்றுகிறது. இறைவனின் சக்தி அவனிடம் மிளிர்வதை நான் கண்டேன். 

காளி கோளிலில் நான் ராமகிருஷ்ணனிடம் சொல்லும் போதெல்லாம் இத்தகைய உணர்வை என்னிடம் அவன் தோற்றுவிக்கிறான் .ஆகா! என்ன அற்புதம் இது! என்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லையே! என்று ஹிலதாரி பதிலளித்தார். 

இவ்வாறு ஹலதாரி குருதேவரிடம் தெய்வீக சக்தியைப் பன்முறை உணர்ந்தாலும், பொடிபோட்டுக் கொண்டு சாஸ்திர விளக்கம் சொல்ல அமர்ந்து விட்டால் எல்லாம் பறந்து விடும். கல்விச் செருக்கால் மதிமயங்கி மறுபடியும் தன் பழைய நிலைக்கே சென்றுவிடுவார். 

பெண்ணாசை, பொன்னாசை விடுபடும் வரை புறச்சடங்குகள் சாஸ்திர அறிவு ஆகியவற்றால் எந்த பயனும் இல்லை. பரம்பொருளை உணர்வதும் இயலாது ஹலதாரியின் நடத்தையிலிருந்து இந்தக் கருத்துக்கள் தெளிவாகின்றன. 


 MAIN PAGE (TOP) 

image67

திருமணமும் தட்சிணேசுவரத்திற்குத் திரும்புதலும்

திருமணமும் தட்சிணேசுவரத்திற்குத் திரும்புதலும்

   

தட்சிணேசுவர ஆலயத்திற்கு வரும் ஏழைகளை நாராயணனின் வடிவமாகவே குருதேவர் கருதினார். 

அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் அவர்கள் உண்டது போக எஞ்சியதை த் தாம் உண்ணவும் செய்தார். இதனால் வெறுப்புற்ற ஹலதாரி குருதேவரிடம் , நீ உன் குழந்தைகளுக்கு எப்படித் திருமணம் செய்து வைக்கப்போகிறாய் என்பதை நான் பார்க்கிறேன், என்று சொன்னார். 

அறிவுச்செருக்கு மிக்க ஹலதாரியின் இந்தச்சொற்களால் ஆத்திரமுற்ற குருதேவர், மடையா, அங்கே சாஸ்திர விளக்கம் செய்யும் போது உலகம் பொய், அனைத்தையும் பிரம்மமாகக் காண வேண்டும். என்றெல்லாம் நீதானே நீட்டி முழக்கினாய்,? 

நானும் உன்னைப்போல இந்த உலகம் பொய் என்று சொல்லிக்கொண்டு, அதே சமயம் குழந்தைகளையும் பெற்றுக்கொள்வேன் என்றா நினைத்தாய்? உன் சாஸ்திர அறிவைக்குப்பையில் போடு என்று கடிந்து கொண்டார்.

குழந்தை உள்ளம் கொண்ட குருதேவர் சிலவேளைகளில் ஹலதாரியின் சாஸ்திர அறிவால் குழப்பம் அடைவதும் உண்டு. உடனே அவர் அன்னை காளியிடம் ஓடிச்சென்று தெளிவு பெற்றுவிடுவார். இவ்வாறு தான் ஒருமுறை, குருதேவர் உயர் உணர்வு நிலையில் பெற்ற இறை அனுபவங்கள் அனைத்தையும் பொய் என்று சொல்லி அவரைக்குழப்பி விட்டார் ஹலதாரி. அது மட்டுமல்ல சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி, இறைவன் இத்தகைய அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நிரூபிக்கவும் செய்து விட்டார். 

இது பற்றி குருதேவர் கூறினார், அப்படியானால் உயர் உணர்வு நிலையில் நான் கண்ட கடவுட்காட்சிகளும் , கேட்ட வார்த்தைகளும் வெறும் பொய்தானா,என்று ஐயம் என்னுள் எழுந்தது. 

அன்னை உண்மையிலேயே என்னை ஏமாற்றி விட்டாளா? இந்த எண்ணம் தோன்றியதும் துயரம் என்னை ஆட்கொண்டு விட்டது.கதறி அழுதுகொண்டே நான் அன்னையிடம் அம்மா, நான் படிப்பறிவற்ற பாமரன் என்பதற்காக என்னை இவ்வாறு ஏமாற்ற வேண்டுமா? என்றுகேட்டேன். மனவேதனை தாளாமல் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். சிறிது நேரம் ஆயிற்று. திடீரென என் முன்னே தரையிலிருந்து பனிப்புகை போன்ற படலம் தோன்றி அந்த இடம் முழுவதும் பரவிப்படர்ந்து அந்தப்புகை மண்டலத்தின் நடுவே மார்பளவு நீண்ட வெண்தாடி உடைய சாந்தமான தோற்றமுடைய ஒருவர் தோன்றினார். 

கருணை பொங்க அவர் என்னை உற்றுநோக்கி கம்பீரமான குரலில், நீ பாவமுகத்தில் இரு, பாவமுகத்தில் இரு, பாவமுகத்தில் இரு என்று மும்முறை கூறிவிட்டு அந்தப் பனிப்புகையில் கலந்து கரைந்து விட்டார். 

அந்தப்புகையும் எங்கேயோ மறைந்து விட்டது. இந்தக்காட்சி பெற்ற பின்னர் என் குழப்பம் நீங்கி மனம் தெளிவு ம் அமைதியும் பெற்றது.

ஒரு நாள் குருதேவரே இந்த நிகழ்ச்சியை சுவாமி பிரேமானந்தரிடம் சொன்னார், ஹலதாரி கூறியதை நினைத்த குருதேவருக்கு வேறொரு சமயத்திலும் இத்தகைய ஐயம் எழுந்தது.குருதேவர்கூறினார், ஹலதாரியின் வார்த்தைகள் இன்னொரு முறையும் என்னிடம் குழப்பத்தை உண்டாக்கியது. 

பூஜை வேளையில் அழுதபடியே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஒன்றை அருளும்படி அன்னையிடம் வேண்டினேன். அன்னை இந்த முறை ரதியின் தாயைப்போல் பூஜாகலசத்திற்கு அருகில் தோன்றி, நீ பாவமுகத்தில் இரு, என்று சொன்னாள்.

குருதேவருக்கு வேதாந்த ஞானத்தைப்புகட்டிய பரிவிராஜக குருவான தோதாபுரி, தட்சிணேசுவரத்திலிருந்து சென்ற பின்னர் குருதேவர் நிர்விகல்ப நிலையிலேயே தொடர்ந்து ஆறுமாதங்கள் இருந்தார் 

அதன் முடிவில் மீண்டும் குருதேவர் தம் இதயத்துள்ளே அன்னை அசரீரியாக நீ பாவமுகத்தில் இரு, என்று சொல்லக்கேட்டார்.

ஹலதாரி தட்சிணேசுவரக்கோயிலில் சுமார் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தார். எனவே பேய் போல் திரிந்த பூரண ஞானி, பைரவி பிராம்மணி , ராமாயத் சாது, வான ஜடாதாரி, ஸ்ரீமத்தோதாபுரி, போன்றோர் தட்சிணேசுவரம் வந்ததையும், அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது. 

ஹலதாரியும் தோதாபுரியும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து அத்யாத்ம ராமாயணம் போன்ற நூல்களைப் படித்தது பற்றி குருதேவர் சொல்லியிருக்கிறார்.

ஹலதாரியின் தொடர்புடைய மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தட்சிணேசுவரக்கோயிலில் அவ்வப்போது நிகழ்ந்தனவாகும். 

வாசகர்களின் வசதிக்காக அவற்றை இங்கே தொகுத்து வழங்கினோம்.

குருதேவரின் ஆன்மீக சாதனைகள் பற்றி இதுவரை சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து அந்நாளில் சாதாரண மக்கள் அவரைப் பித்தர் என்று எண்ணியிருந்தாலும், உண்மையில் அவர் பித்தர் அல்லர், அவருக்கு எவ்வகையான நோயோ மூளைக்கோளாறோ இல்லை. என்று உறுதியாகக்கூறலாம். 

கடவுளைக்காண வேண்டும் என்ற தீவிர தாகம் அவரிடம் இருந்தது. அந்த தாகத்தின் வேகத்தால் அவர் தம்மைப்பராமரித்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார். 

தன் தலைமுடி பற்றியெரியும் போது ஒருவனால் அமைதியாக இருக்க முடியுமா? அது போல இறைவனுக்காக அசாதாரணமான தீவிரத்துடன் மனம் ஏங்கி நின்றதால் உலக மக்களோடு சேர்ந்திருக்கவோ உலகியல் விஷயங்களில் ஈடுபடவோ அவரால் முடியவில்லை. மற்றவர்கள் இதனைப்பைத்தியம் என்று எண்ணிவிட்டனர். ஆனால் யாரால் அப்படியிருக்க முடியும்? 

இதயத்தின் தீவிர வேதனை பொறுமையின் எல்லையை மீறும் போது பேச்சில் ஒன்றும் மனத்தில் வேறொன்றுமாக எல்லோருடனும் சேர்ந்து அவர்களைப்போல வாழ எல்லோராலும் முடியாது. 

பொறுமையின் எல்லை எல்லோரிடமும் ஒரே மாதிரி இல்லை. சிறுசிறு இன்பதுன்பங்களிலேயே சிலர் ஆடிப்போய் விடுகின்றனர். வேறு சிலரோ. எந்த வேகத்தில் அவை பொங்கி வந்தாலும் அனைத்தையும், தாங்கிக்கொண்டு, கடல் போல் கலங்காமல் இருக்கின்றனர். 

குருதேவரின் பொறுமையின் எல்லையை நாம் எவ்வாறு அறிவது? இதற்கு அவரது வாழ்வே விடை. அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக்கூர்ந்து நோக்கினால் அவை சாதாரணமானவை அல்ல என்பது நமக்குப்புரியும். 

நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் சரியான உணவின்றியும், பட்டினியாகவும் , உறக்கம் இன்றியும் இருந்தும் அவரால் நிலைகுலையாமல் வாழ முடிந்தது. 

இறை வாழ்வில் தடை என்பதற்காக, தம்மை நாடி வந்த அளவற்ற பெரும் செல்வத்தை எத்தனையோ முறை அவர் உதறித்தள்ள முடிந்தது. 

இது போன்ற பல நிகழ்ச்சிகளைச்சொல்லிக்கொண்டே போகலாம்.அவரது உடலும் உள்ளமும் பெற்றிருந்த அசாதாரணமான பொறுமையைப்பற்றி எவ்வளவு தான் கூறுவது?

இந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஆராயும்போது பெண்ணாசை பொன்னாசைகளில் கட்டுண்ட சாதாரண மனிதர்கள் மட்டுமே குருதேவரின் நிலை ஏதோ நோயின் விளைவு என்று கருதியது தெரியவரும். மதுர்பாபு எப்படி எண்ணினார்? அறிவுபூர்வமாகச் சிந்தித்து குருதேவரின் மனநிலையை ஒரு சிறிதாவது புரிந்து கொள்ளும் திறன் வாய்ந்தவர்கள் மதுர்பாபுவைத் தவிர வேறு யாரும் தட்சிணேசுவரத்தில் அப்போது இல்லை. 

குருதேவருக்கு மந்திரோபதேசம் அளித்தபின் கேனாராம் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது. 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரைப்பற்றி ஹிருதயர் அல்லது வேறு யாரிடமிருந்தும் எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. குருதேவரின் செயல்கள், மனநிலை ஆகியவைபற்றி அறிவற்ற ஆசைவயப்பட்ட சாதாரண ஆலயப் பணியாட்கள் கூறிய கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்க முடியாது. ஆகவே அந்த நாட்களில்காளிகோயிலுக்கு வந்து சென்ற சித்தர்களும் சாதகர்களும் அவரைப்பற்றிச் சொல்லிச்சென்றது ஒன்றுதான் இந்த விஷயத்தில் நம்பிக்கைக்குரிய பிரமாணம் 

குருதேவரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் இது தொடர்பாக அறிந்து கொண்டவற்றிலிருந்து அவர்கள், குருதேவரைப் பைத்தியம் என்று சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அவரைப்பற்றி மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தனர் என்பதும் தெரிகிறது.

தீவிர ஆன்மதாகத்தின் காரணமாக உடலுணர்வு இல்லாமல் கிடந்த நாட்களில் குருதேவர் தம் உடல்நலத்தைக் காப்பாற்றிக்கொள்ள யார் எந்த அறிவுரை கூறினாலும்அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டு பின்பற்றினார். இது குருதேவரின் சாதனைக்காலத்திற்குப்பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது தெரிகின்றது, சிகிச்சை செய்ய வேண்டுமென்று யாரோ சொன்னார்கள், அதற்கு இசைந்தார்.காமார் புகூருக்குத் தாயிடம் அழைத்துச்செல்ல வேண்டும் என்றார்கள், அதற்கு இசைந்தார். திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கும் மறுக்கவில்லை. இவற்றை எண்ணிப் பார்க்கும் போது அவரைப்பித்தன் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

இறைபித்துப் பிடித்திருந்த நாட்களில் உலகப்பற்றுக் கொண்டவர்களிடமிருந்தும் லௌகீக ஆசைகள் தொடர்பான வற்றிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டு தனியாக இருக்கவே குருதேவர் முயன்றார். 

இருப்பினும் பலர் கூடி இறைவனை வழிபடுகின்ற இடங்களுக்குச் சென்று அந்த வழிபாட்டில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டியதை நாம் காண்கிறோம். 

வராக நகரிலிருந்த தசமகா வித்யை கோவில், மற்றும் காளிகட்டத்திலிருந்த காளிகோயில்களுக்குச் செல்வது ஒவ்வோர் ஆண்டும் பானிஹாட்டியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வது போன்றவற்றிலிருந்து இது நன்கு விளங்கும். 

இந்த இடங்களில் பண்டித சாதகர்களை அவர் சந்தித்து உரையாடியதும் உண்டு. நாங்கள் அறிந்த வரையில் அந்த சாதகர்களும் குருதேவரை மிகவும் மதித்திருந்தனர்.

இந்த நான்காண்டுகாலத்தில் குருதேவர் பணத்தாசையை விடுவதற்காக சில நாணயங்களையும் மண்ணையும் ஒன்றாகக்கையில் எடுத்துக்கொண்டு இரண்டும் சமமதிப்பு உடையவை என்பதை அறியும் சாதனையில் ஈடுபட்டார். சச்சிதானந்த வடிவினனான இறைவனை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளவன். மண்ணைப்போலவே பணத்திலிருந்தும் எந்த நன்மையையும் பெறுவதில்லை. அவனுக்கு மண், பணம், இரண்டும் ஒன்றுதான். இந்த எண்ணத்தில் திடமான உறுதி உண்டாகஅவர், பணம்-மண், மண்-பணம் என்று திரும்பத்திரும்பச்சொல்லி அவற்றை கங்கையில் எறிந்தார். பிரம்மனிலிருந்து சிறு புல் வரை இவ்வுலகத்தில் அனைத்து உயிர்களும், அனைத்துப் பொருட்களும் அன்னையின் வெளிப்பாடே அவளது அம்சமே என்ற எண்ணத்தை உறுதிப்படுத்த ஏழை, எளியவர்களின் எச்சில் உணவை அவர்கள் உண்ட இலைகளிலிருந்தே எடுத்துஉண்டார். அவர்கள் சாப்பிட்ட இடத்தைச்சுத்தம் செய்தார். சாதாரணமான மக்களால் வெறுக்கப்படுகின்ற தோட்டியைவிடத் தாம் எள்ளளவும் உயர்ந்தவன் அல்ல என்ற நம்பிக்கையை வலுப்படுத்தமிகவும் அசுத்தமான அருவருக்கத் தக்க இடங்களைத் தம் கையாலேயே சுத்தம் செய்தார். சந்தனம் முதல் மலம் வரை எல்லாப்பொருட்களும் ஐம்பூதங்களின் வெவ்வேறு வடிவங்களே என்று அறிந்து விருப்பு வெறுப்பு களைத்துறக்க மற்றவர்களின் மலத்தை நாக்கினால் எவ்வித வெறுப்புமின்றி தொட்டுப்பார்த்தார்.

இது வரை கேள்விப்பட்டிராத இத்தகைய சாதனைகளை குருதேவரின்வாழ்வில் நாம் காண்கிறோம். இவை இந்த நான்கு ஆண்டுகளுள் நிகழ்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் குருதேவர் மெற்கொண்ட சாதனைகளையும் அவருக்குக் கிடைத்த தெய்வீகக் காட்சிகளையும் நினைத்துப்பார்க்கும் போது, கடவுளைக் காண வேண்டும் என்ற ஓர் அசாதாரண தாகம் அவரை ஆட்கொண்டிருந்ததையும், அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவர் சாதனையில் முன்னேறியதையம் தெளிவாக உணர முடிகிறது. 

புற உதவி எதுவும் இல்லாமல் ஆழ்ந்த மன ஏக்கம் ஒன்றினாலேயே அவர் அன்னையின் தரிசனம் பெற்றார். சாதனைகளின் முடிவான நோக்கம் அவருக்குக் கைகூடியது . தம் அனுபவங்களை குருவின் போதனைகளோடும் சாஸ்திரங்களுடனும் ஒப்பு நோக்கவும் அவர் தவறவில்லை.

தியாகத்தாலும் கட்டுப்பட்டின் மூலமும் ஒரு சாதகன் தன் மனத்தைத் தூய்மைப்படுத்தி விட்டால் அந்த மனமே அவனது குருவாக அமைகிறது என்று குருதேவர் கூறுவதுண்டு. இத்தகைய தூய மனத்திலிருந்து தோன்றும் உணர்வு அலைகள் சாதகனை எப்போதும் நல்வழியில் நடத்துகின்றன. விரைவில் லட்சியத்தை அடையும்படிச் செய்கின்றன. பிறப்பிலிருந்தே தூயதான குருதேவரின் மனம் குருவைப்போல் வழிகாட்டி, சாதனைக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளிலேயே அவர் இறைக்காட்சியைப்பெறச்செய்தது.

இந்தக் காலகட்டத்தில் தமது தூய மனமே குருவாகி தம்மை வழி நடத்தியதாக குருதேவர் கூறினார். எதைச்செய்வது, எதைச்செய்யக்கூடாது என்று கற்பித்ததுடன் அவரது மனம் சிலவேளைகளில் ஒரு மனித வடிவம் தாங்கி அவர்முன் தோன்றி சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு முன்னேறுமாறு உற்சாகப்படுத்தும். 

ஒரு குறிப்பிட்ட சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடாவிட்டால் அந்த உருவம் தோன்றி அந்த சாதனையில் எவ்வாறு ஆழ்ந்து ஈடுபடவேண்டும் என்றும் அதில் ஈடுபட்டால் கிடைக்கின்ற பலனைப் பற்றியும் எடுத்துக்கூறும். தியானத்தில் ஆழ்ந்து மூழ்காவிட்டால் தண்டனை தருவதாகப் பயமுறுத்தவும் செய்யும். 

அவர் தியானம் செய்ய அமரும் போது, ஒரு துறவி கையில் கூரிய திரிசூலத்துடன் வெளிவந்து, வேறு நினைவுகள் அனைத்தையும் விட்டு, இஷ்டதெய்வத்தை மட்டும் நினைத்து தியானம் செய், இல்லையெனில் இந்த திரிசூலத்தால் உன் நெஞ்சைப் பிளந்து விடுவேன். என்று பயமுறுத்துவதும் உண்டாம். 

வேறொரு சமயம் தம் உடலிலிருந்து ஆசை, போகமயமான பாவபுருஷன் வெளிப்பட்ட போது இந்த இளம் துறவியும் உடனே வெளிப்பட்டு, அந்தப் பாவ புருஷனைக் கொன்றதை குருதேவர் கண்டார். 

தொலைதூரத்திலுள்ள கோவில்களுக்குச் செல்லவோ, எங்காவது நடைபெறும் பஜனை மற்றும் கீர்த்தனைகளில் கலந்து கொள்ளவோ வேண்டுமென்ற ஆவல் குருதேவரிடம் தோன்றினால் அவருள், இருந்து அந்த இளம் துறவி வெளிப்பட்டு, ஒளிப் பாதையொன்றில் அந்த இடங்களுக்குச் சென்று சிறிது நேரம் ஆனந்தம் அனுபவித்து விட்டு, மீண்டும் அதே ஒளிப்பாதையில் திரும்பிவந்து குருதேவரின் உடலில் புகுந்து விடுவார். 

இது போன்ற பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டதுபற்றி குருதேவர் எங்களிடம் சொல்லி இருக்கிறார்.

சாதனையின் தொடக்கக் காலத்திலிருந்தே குருதேவர் இந்த இளம் துறவியின் தோற்றத்தைக் கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம் போலத் தம்முள் பார்த்திருக்கிறார். 

படிப்படியாக அந்தத் துறவியின் அறிவுரைக்கு ஏற்ப, எது செய்ய வேண்டும் , எது செய்யக்கூடாது என்பவற்றை எல்லாம் அவர் பின்பற்றியும் இருக்கிறார். 

ஒரு நாள் குருதேவர் எங்களிடம் கூறினார், என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம் துறவி ஒருவர் என்னுள்ளிலிருந்து அடிக்கடி வெளிப்பட்டு எல்லா விஷயங்களிலும் எனக்கு அறிவுரை சொல்வதுண்டு. 

அவர் வெளிப்படும்போது எனக்குச் சிலவேளைகளில் புறவுலக நினைவு சிறிது இருக்கும். ஒரு சில நேரங்களில் முழுவதுமாக நினைவிழந்து ஜடம்போல் விழுந்து கிடப்பேன். அந்தத்துறவியின் செயல்களையும் சொற்களையும் மட்டுமே அப்போது என்னால் அறிய முடிந்தது. அவர் அப்போது எனக்கு போதித்ததையே பின்னர் வந்த பைரவி பிராம்மணி,தோதாபுரி ஆகியோரும் கற்பித்தனர். 

சாஸ்திர நியதிகளின் உண்மையை நிரூபிப்பதற்காகவே அவர்கள் குருவாக என் வாழ்வில் வந்து அமைந்தனர்.என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இல்லையெனில் தோதாபுரி முதலியவர்களை குருவாக எற்றுக் கொண்டதற்கு வேறு எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்கமுடியாது.

இந்த நான்காண்டு சாதனையின் நிறைவுப்பகுதியில் குருதேவர் காமார்புகூரில் இருந்தபோது மேற்கூரிய விஷயத்தைத் தெளிவாக்குவது போன்ற அசாதாரணமான காட்சி ஒன்று அவருக்கு கிடைத்தது. 

அப்போது அவர் காமார்புகூரிலிருந்து ஹிருதயரின் ஊரான சிகோருக்குப் பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். வழியெங்கும் இயற்கை தனது அற்புதங்களை எல்லாம் திரட்டி வைத்திருந்தது போல் தோன்றியது. நிர்மலமான நீலவானம் அதன் கீழே பச்சைப்பட்டு விரித்தாற்போன்ற நெல் வயல்கள், சாலையின் இருமருங்கிலும் உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பி நின்ற ஆல அரச மரங்கள், அவற்றின் கிளைகளில் அமர்ந்து புள்ளினங்கள் இசைத்தகானம். தேன் சிந்தும் வண்ண மலர்களைத் தாங்கி நின்ற செடிகள், மலர்கள் பரப்பிய நறுமணம் இவை அனைத்தையும் மெய்மறந்து அனுபவித்துக்கொண்டே பல்லக்கில் ஆனந்தமாகச் சென்று கொண்டிருந்தார் குருதேவர். 

அப்போது திடீரென்று அவரது உடலிலிருந்து அழகான இருசிறுவர்கள் வெளிவந்தனர். அவர்கள் சிறிது நேரம் சிற்றடி எடுத்து நடந்தனர். பின் இங்குமங்கும் ஓடி விளையாடினர். வயல் வெளிகளில் வெகுதொலைவு சென்று காட்டுப் பூக்களைத்தேடினர். அதன் பின் பல்லக்கின் அருகில் நடந்து வந்து சிரித்து மகிழ்ந்து வேடிக்கை பேசி, மகிழ்ந்து களித்தனர். இவ்வாறு நெடுநேரம் சென்ற பின் குருதேவரின் உடலுள் புகுந்துவிட்டனர். 

இந்தக் காட்சி பெற்ற சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பைரவி பிரம்மாமணி தட்சிணேசுவரக்கோயிலுக்கு வந்தார். பேச்சுவாக்கில் ஒரு நாள் குருதேவர் இந்தக்காட்சியை ப் பற்றி அவரிடம் கூறினார். அதற்கு பிரம்மாமணி . குழந்தாய், நீ சரியாகத்தான் கண்டுள்ளாய். இப்போது நித்யானந்தரின் உடலில் சைதன்யர் தோன்றியுள்ளார். அதாவது நித்யானந்தரும் சைதன்யரும் ஒன்றாக வந்து உன்னுள் உள்ளனர், அதனால் தான் உனக்கு இத்தகைய காட்சி கிட்டியது. என்று சொன்னார். இவ்வாறு கூறிய பிராம்மணி சைதன்ய பாகவதத்திலிருந்து பின்வரும் இரண்டு பகுதிகளை மேற்கோள் காட்டியதாக ஹிருதயர் கூறினார். 

அவர் கூறியதாவது-

அத்வைத ஆசாரியரின் கழுத்தைக் 

கைகளால் கட்டிக்கொண்டு

சைதன்யர் மீண்டும் மீண்டும்

சொல்வார்

நான் மீண்டும் ஒரு முறை திருவிளையாடல் புரிவேன்

அப்போது நான் இறைவன் நாமத்தைப்

பாடும்போது என் உருவம்

பரமானந்த வடிவாய் இருக்கும்.

இன்றைக்கும் சைதன்யர் தன் விளையாட்டை நடத்துகிறார்

மிகப்பெரும் பேறு பெற்றவர்களெ 

அதனைக்காண முடியும்

ஒரு நாள் நாங்கள் குருதேவரிடம் அந்தக் காட்சியைப் பற்றிக்கேட்ட போது அவர், நான் அந்தக்காட்சியை க் கண்டது உண்மை. பிராம்மணி அதைக்கேட்டு இவ்வாறு சொன்னதும் உண்மை. அதன் உண்மைப்பொருள் என்னவென்று நான் எப்படிச்சொல்ல முடியும்? என்று கூறிவிட்டார். ஆதிகாலத்திலிருந்தே உலகத்துடன் தொடர்புள்ள ஓர் உன்னத 

ஆத்மா ஒரு பெரிய நோக்கத்துடன் தமது உடலில் உறைகின்றன என்பதை இந்தச் சமயத்திலிருந்து குருதேவர் அறிந்து கொண்டார் என்பதை நாம் ஊகிக்க முடியும். 

இவ்வாறு தம்மைப் பற்றிய தெய்வத் தன்மையின் அறிகுறிகளைக் கண்டது, காலப்.போக்கில் தாம் யார் என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தியது. 

சென்ற யுகங்களில் தர்மத்தை நிலைநாட்ட அயோத்தியிலும் பிருந்தாவனத்திலும் ஜானகி மணாளரான ஸ்ரீராமராகவும் ராதாவல்லபரான ஸ்ரீகிருஷ்ணராகவும் யார் அவதரித்தாரோ அவரே இப்போது மறுபடியும் பாரதத்திற்கும் உலகிற்கும் புதிய ஆன்மீக லட்சியத்தை எடுத்துக்காட்ட புதிய உடல் தாங்கி ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்துள்ளார். 

யார் ராமராக அவதரித்தாரோ யார் கிருஷ்ணராக அவதரித்தாரோ அவரே இப்போது (தம் உடலைச் சுட்டிக்காட்டி) இந்த உறையில் வந்துள்ளார். சிலவேளைகளில் அரசர் மாறுவேடத்தில் நகர சோதனைக்குச் செல்வது போல அவரும் இம்முறை ரகசியமாக இவ்வுலகத்தில் அவதரித்துள்ளார். என்று குருதேவர் அடிக்கடி கூறுவதுண்டு.

குருதேவரின் இந்தக்காட்சி பற்றிய உண்மையை அறிவதற்கு அவர் தமது நெருங்கிய பக்தர்களிடம் கூறியுள்ளதை நம்புவதைத்தவிர வேறு வழி இல்லை. இந்தக் காட்சி ஒன்றை மட்டும் தவிர இந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்திருந்த பிற காட்சிகள் உண்மை என்பதில் உறுதியான ஒரு முடிவுக்கு வர முடியும்.

ஏனெனில் இத்தகைய காட்சிகள் நாங்கள் குருதேவரிடம் சென்ற காலத்தில் கூடத் தினமும் நிகழ்ந்ததை நாங்கள் அறிவோம். ஆங்கிலப் படிப்பின் காரணமாக சந்தேக இயல்பு கொண்ட சீடர்கள் அந்தக் காட்சிகளின் உண்மையைப் பரிசோதிக்கச் சென்றுதோற்றுப்போய், திகைத்து நிற்பது நாள்தோறும் நடைபெறும் ஒன்று. 

இதனை உறுதிப்படுத்த ஏற்கனவே பல எடுத்துக்காட்டுகளை் வேறொரு பகுதியில் கொடுத்துள்ளோம்.ஒன்றை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

பிரம்மசரியத்தை உறுதியாகக் கடைப்பிடித்ததால் தான் குருதேவருக்கு மூளைகுழம்பி இறை ஏக்கம் என்ற உருவத்தில் அது வெளிப்பட்டுள்ளது என்று ராணி ராசமணியும் மதுர்பாபுவும் குருதேவரின் முதல் நான்காண்டு சாதனைக்காலத்தில் ஒரு சமயம் கருத நேர்ந்தது. 

குருதேவரின் பிரம்மசரியத்தைக் குலைத்து விட்டால் மறுபடியும் அவர் உடல் நலம் பெறக்கூடும் என்ற கற்பனையில் அவர்கள் லட்சுமிபாய், முதலான சில விலை மாதர்களை முதலில் தட்சிணேசுவரத்திலும் பின்னர் கல்கத்தாவிலும் மேசுவா பஜார் என்ற இடத்திலும் குருதேவரிடம் அனுப்பி வைத்து அவரது மனத்தைக் கலைக்க முயன்றனர். அந்த விலைமாதர்களிடம் அருள் மிக்க அன்னையையே கண்ட குருதேவர், அம்மா அம்மா என்று கூறிக்கொண்டே வெளியுலக நினைவை இழந்தார். அவரது உறுப்புக் கூடச்சுருங்கி, ஆமை தனது ஓட்டுக்குள் செல்வது போல உடலினுள் சென்றுவிட்டது. 

அவரது சமாதி நிலையைக்கண்டும் குழந்தை போன்ற இயல்பான மனம் கவரப்பட்டும் அந்தப் பெண்களிடம் தாய்மையுணர்வு மேலெழுந்தது.குருதேவரின் பிரம்மசாரியத்திற்கு ஊறு விளைவிக்கமுயன்றது பெரும் பாவச்செயல் என்று எண்ணி கண்களில் நீர் ததும்ப அவர்கள் அவரிடம் மன்னிப்புக்கோரினர். மீண்டும் மீண்டும் அவரை வணங்கி கலங்கிய மனத்துடன் விடைபெற்றுச்சென்றனர்.திருமணமும் தட்சிணேசுவரத்திற்குத் திரும்புதலும்


குருதேவர் பூஜைப் பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டார். என்ற செய்தி காமார்புகூரில் அவரது தாய். சகோதரர் ஆகியோர் செவிகளுக்கு எட்டியது. அது அவர்களை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியது. ராம்குமார் காலமாகி இரண்டாண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் இளையமகனும் மூளைக்கோளாறு என்ற செய்தி கேட்டு, சந்திரமணி தேவியும், ராமேசுவரரும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் கொண்டனர்.

துரதிஷ்டத்தால் வரும் துன்பங்கள் ஒருபோதும் தனியாக வருவதில்லை. அவை பல்வேறு திசைகளிலிருந்து பற்பல உருவங்களில் வந்து கவிந்து வாழ்க்கையையே இருள்மயமாக்கி விடும். சந்திரமணியின் வாழ்க்கையும் இப்போது இவ்வாறு தான் அமைந்துவிட்டது. அவளுக்கு மிகவும் காலந்தாழ்த்திப் பிறந்த பிள்ளை குருதேவர். அதனால் அவர்மீது அவள் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தது இயல்பே. 

ஆகவே சந்திரமணி அவரை உடனடியாகக் காமபர்புகூருக்கு அழைத்து வந்தாள். அவரது உதாசீனம், படபடப்பு, அம்மா அம்மா என்ற கதறல் எல்லாம் அவளை மிகவும் வேதனையுறச் செய்தன. அவரை குணப்படுத்த பலவகை மருத்துவ முயற்சிகளுடன் சாந்தி ஸ்வஸ்த்யயனம் போன்ற சடங்குகளையும் செய்தாள். அது 1858-ஆம் ஆண்டில் கடைசிப்பகுதியாக இருக்கலாம்.

குருதேவர் வீட்டிற்கு வந்தபின் பொதுவாக முன்புபோல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தாலும் சிலவேளைகளில் அவர் அம்மா அம்மா என்று மனஏக்கத்துடன் அழுவதும் பரசவப்பெருக்கினால் வெளியுணர்வை இழப்பதும் தொடரவே செய்தது.

ஒரு கணம் சாதாரணமாக இருப்பார்.மறுகணம் எல்லாம் தலைகீழாகிவிடும். ஒரு புறம் உண்மை, எளிமை தெய்வபக்தி தாயன்பு நண்பர்களிடம் பிரியம், ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததுபோல மறுபுறம் உலகியல் விஷயங்களில் உதாசீனம், பிறரால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு குறிக்கோளை அடையவேண்டும். என்ற ஏக்கம், நாணமோ, அச்சமோ வெறுப்போ அற்ற மனத்துடன் அந்தக் குறிக்கோளை அடைவதற்கான விடாமுயற்சி இவையும் எப்போதும் அவரிடம் காணப்பட்டன. அவரிடம் ஏதோ உபதேவதையின் ஆவேசம் ஏற்பட்டிருக்கிறது.என்ற எண்ணத்தை இது மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது.

கள்ளங்கபடமற்ற சந்திரமணிதேவியின் மனத்தில் ஆரம்பத்திலேயே இந்த எண்ணம் அவ்வப்போது தோன்றியதுண்டு. இப்போது மற்றவர்களும் அவ்வாறு பேசியபோது அவளது எண்ணம் உறுதிப்பட்டது. எனவே மந்திரவாதி ஒருவரை அழைத்துச்சிகிச்சை அளிக்க எண்ணினாள். இது பற்றி குருதேவர் கூறினார், ஒரு நாள் மந்திரவாதி ஒருவர் வந்தார். மந்திரம் ஜபித்த திரி ஒன்றைக்கொளுத்தி என்னை முகரச்செய்து , பேய் பிடித்திருந்தால் அது ஓடிவிடும் என்று சொன்னார். ஆனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. அதன்பின் ஒருநாள் இரவு கைதேர்ந்த மந்திரவாதிகள் பூஜை முதலியன செய்து சண்டனை அழைத்தனர். சண்டனும் வந்து பூஜை பலி முதலியவற்றை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் இவனைப்பேயும் பிடிக்கவில்லை. இவனுக்கு எவ்வித நோயும் இல்லை, என்று சொல்லிற்று, பின்னர் எல்லோர் முன்னிலையிலும் அது என்னிடம், கதாய் நீ ஒரு சாதுவாக விரும்புகிறாய், அதிகம் பாக்கு போடாதே.பாக்கு அதிகம் தின்றால் காமம் அதிகரிக்கும்! என்று சொல்லிற்று. உண்மையிலேயே பாக்கு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி பாக்கு போடுவேன். அன்று முதல் சண்டனின் சொற்படிநான் பாக்கு போடுவதை நிறுத்திவிட்டேன்.

அப்போது குருதேவருக்கு இருபத்துமூன்று வயது நிறைவு பெறும் காலம். காமார்புகூரில் சில மாதங்கள் தங்கியதில் அவர் ஏறக்குறைய பழைய நிலைமைக்கு வந்துவிட்டார். அன்னை காளியிடம் அற்புதமான காட்சியைப்பலமுறை பெற்றதால் தான் அவர் இப்போது சஞ்சலமின்றி சாந்தமாகக் காணப் பட்டிருக்க வேண்டும். இந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது உறவினர்களிடமிருந்து அறிந்ததிலிருந்து தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். அதை இப்போது கூறுகிறோம்.

அந்த நாட்களில் குருதேவர் பகலிலும் இரவிலும் அதிகநேரம் காமார்புகூருக்கு மேற்கிலும் வடகிழக்கிலும் இருந்த பூதிர்கால், பூதிமொரால் என்ற மயானங்களில் தன்னந்தனியாகக் கழித்தார். இச்சமயம் அவரிடம் இதுவரை கண்டிராத அபூர்வமான சக்தி இருப்பதை உறவினர்கள் அறிந்தனர். மயானங்களில்வாழும் நரிகளுக்கும், உறையும் உபதேவதைகளுக்கும் அவர் அவ்வப்போது பலி கொடுப்பதுண்டு. புதிய பானை ஒன்றில் இனிப்புப் பண்டங்களை எடுத்துக்கொண்டு அவர் அந்த மயானங்களுக்குச் செல்வார். உடனே நரிகள் கூட்டங்கூட்டமாக நாலா பக்கங்களிலிருந்தும் வந்து அவற்றை உண்ணும். உபதேவதைகளுக்கு உணவு ப் பண்டங்களைப் படைக்கும் போது அந்தப்பண்டங்கள் வைத்திருக்கின்ற பானையும் அப்படியே காற்றில் மிதந்து ஆகாயத்தில் மறைந்து விடுமாம்! அவர் அடிக்கடி இந்த உபதேவதைகளைக் கண்டதும் உண்டு.

சில நாட்கள் குருதேவர் நள்ளிரவுக்குப் பின்னும் வீடு திரும்பாதிருப்பார். அப்போது ராமேசுவரர் மயானத்திற்குச் சென்று கூப்பிடுவார். உடனே குருதேவர் இதோ வந்து விட்டேன் அண்ணா, நீ இன்னும் முன்னால் வந்து விடாதே! உபதேவதைகள் உனக்குத்துன்பம் விளைவிக்கக்கூடும். என்று உரக்கக்கூவி எச்சரிப்பார். இந்த நாட்களில் அவர் பூதிர் கால் அருகிலுள்ள மயானத்தில் தம் கைகளால் ஒரு வில்வச் செடியை நட்டார். அந்த மயானத்தின் நடுவில் நின்ற அரசமரத்தின் கீழ் நீண்டநேரம் அமர்ந்து ஜப , தியானங்களில் ஈடுபடுவதும் உண்டு. அவருக்குக் கிடைத்த சில மேலான இறைக்காட்சிகளாலும் அனுபவங்களாலும், அன்னையின் காட்சிக்காக முன்பு அவர் ஏங்கித் தவித்த நிலை இப்போது நீங்கிற்று. வாளும் மனிதத் தலையும் ஏந்தி நிற்பவளும் வர அபய முத்திரைகளைத் தாங்கியவளும், சாதகர்களுக்கு அருள் பாலிப்பவளும் சின்மயியுமான உலக அன்னையை இப்போது அவர் எந்நேரமும் கண்டார் என்பதை இந்தக்காலகட்டத்தில் அவரது வாழ்க்கையைக்கவனிக்கும் போது அறிய முடிகிறது. அவரது கேள்விகளுக்கும் அன்னை காளி உடனுக்குடன் பதில் தந்தாள். அதற்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார் அவர், இனி இடையீடின்றி அன்னையின் தொடர்ந்த காட்சி தமக்குக் கிடைக்கும் என்ற உறுதி இப்போதிலிருந்து அவரிடம் நிலைபெற்றது என்று தோன்றுகிறது.

எதிர்காலமறியும் ஆற்றல் இக்காலத்தில் குருதேவரின் வாழ்க்கையில் வெளிப்படுவதைக்காண முடிகிறது. ஹிருதயரும், காமார்புகூரையும் ஜெயராம்பாடியையும் சேர்ந்த பலரும் இதனை உறுதிப்படுத்தினர். குருதேவரும் அவ்வப்போது இது பற்றி சூசகமாகக்கூறியது உண்டு.

குருதெவரின் சற்றே அமைதியான போக்கும் செயல்களும் சந்திராவுக்கும் பிறருக்கும் சிறிது நம்பிக்கையை ஊட்டியது. தெய்வாதீனமாக அவரது பைத்தியம் தெளிந்து விட்டது என்று அவர்கள் ஆறுதல் அடைந்தனர். அவர் முன்பு போல் இப்போது ஏங்கி அழுவதில்லை. வேளாவேளைக்கு உணவு உட்கொள்கிறார். எல்லாச் செயல்களிலும் சாதாரண மக்களைப்போல் நடந்து கொள்கிறார். இவையனைத்தும் அவர்களுக்குப் பெரிதும் நிம்மதியை அளித்தது. எப்போதும் இறைவழிபாட்டில் ஈடுபடுவது மயானத்தில் அலைந்து திரிவது, சிலவேளைகளில் உடைகளின்றி பூஜை, தியானங்களில் ஈடுபடுவது யாருடைய குறுக்கீடுகளையும் பொருட்படுத்தாதது போன்ற சில செயல்கள் அசாதாரணமானவையாக இருந்தாலும், பொதுவாக அவர் சிறுவயதிலிருந்தே இவ்வாறு தான் நடந்து கொள்வார் என்ற காரணத்தால் இவற்றையாரும் பெரிதுபடுத்தவில்லை. எனினும் உலகியல் விஷயங்களில் சிறிதும் ஈடுபாடின்றி அவர் முற்றிலும் ஒதுங்கியிருப்பதும் எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதும் அவரது தாயையும் உறவினர்களையும் கவலையுறச் செய்தன. இந்த நிலை மாறி உலகியல் விஷயங்களில் கவனம் ஏற்பட்டாலன்றி அவர் முற்றிலும் குணமடைந்து விட்டதாகக் கருத முடியாதென்று அவர்கள் எண்ணினர். எப்போது வேண்டுமானாலும் அவர் மீண்டும் பாதிக்கப்படலாம். அவரை உலகியலுக்குத் திருப்ப ஒரே வழி திருமணம் தான் என்று அவரது தாயும் தமையனும் முடிவு செய்தனர். பண்புள்ள நல்ல மனைவியின் மீது அன்பு உண்டாகுமானால் அவரது மனம் வேறு எதனையும் நாடாமல் உலகியல் வாழ்க்கையில் ஆழ்ந்து ஈடுபடும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.

திருமணத்தைப் பற்றி குருதேவர் அறிந்தால் மறுப்பு தெரிவிக்கக்கூடும் என்று சந்திராவும் ராமேசுவரரும் மணப்பெண் தேடும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டனர். குருதெவர் இதனை எப்படியோ அறிந்து கொண்டார். அதிசயமாக அவர் அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. வீட்டில் விழாவோ விசேஷமோ நடந்தால் குழந்தைகள் எப்படி குதூகலிக்குமோ அவ்வாறே திருமணம் பற்றிக்கேள்விப்பட்ட குருதேவரும் மகிழ்ந்தார்.


  

குருதேவர் கூறியதில் தாய்க்கும் தமையனுக்கும் அவ்வளவு நம்பிக்கையில்லை. எனினும் ஜெயராம்பாடிக்கு ஒருவரை அனுப்பி விசாரிக்கச் செய்தனர்.அவர் கூறியது உண்மையாக இருந்தது. 

எல்லாம் பரவாயில்லை.ஆனால் பெண் மிகவும் சிறியவள் ஐந்தே வயது தான் . எனினும் இந்தப்பெண்ணை சந்திரா ஏற்றுக்கொண்டு, உடனே மகனுக்கு மணமுடிக்க இசைந்தாள். 

ஓரிரு நாட்களுள் பேச்சுவார்த்தைகள் முடிந்தன. ஒரு நல்ல நாளில் சுபமுகூர்த்த வேளையில் காமார்புகூருக்குமேற்கே நான்கு மைல் தொலைவிலிருந்த ஜெயராம்பாடிக்கு ராமேசுவரர் கதாதரரை அழைத்துச்சென்று ராமசந்திரரின் ஒரே மகளைத் திருமணம் செய்து விட்டுத் திரும்பினார். 

வரதட்சணையாக முன்னூறு ரூபாய் பெண் வீட்டாருக்குக் கொடுக்கப்பட்டது.

இது நிகழ்ந்தது 1859, மே மாதத்திலாகும் அப்போது குருதேவருக்கு வயது இருபத்திநான்கு.

குருதேவரின் திருமணத்திற்குப் பின் சந்திரமணியின் கவலை பெருமளவிற்குக் குறைந்தது. 

திருமண விஷயத்தில் மகன் தன் சொற்படி நடந்து கொண்டது இறைவனின் பேரருளால் தான் என்று மனநிறைவு எய்தினாள். அவள், எதிலும் பற்றற்ற மகன் திருமணம் செய்து கொண்டான், கௌரவமான குடும்பத்தைச்சேர்ந்த பெண் மருமகளாக வாய்த்துள்ளாள், பணக்கஷ்டமும் சமாளிக்கப்பட்டு விட்டது. சுருக்கமாகச் சொன்னால் மகன் உலகியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துவிட்டான், இறையருள் அன்றிவேறு எதனால் இத்தனையையும் சாதிக்க முடியும்? இதனை எண்ணியெண்ணி மகிழ்ந்தாள் சந்திரா.ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

மணமகளின் தந்தையை மகிழ்விக்கவும் ஆடம்பரத்திற்காகவும் பல நகைகளை இரவல் வாங்கி மணமகளை அலங்கரித்திருந்தனர். 

புதிய மருமகளைச் சொந்த மகளாகவே பாவித்தாள் சந்திரா. எனவே நகைகளைத் திருப்பிக்கொடுக்க வேண்டிய நாள் வந்த போது மிகவும் வருந்தினாள்.ஆனால் தன் வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.தாயின் வருத்தத்தை குருதேவர் புரிந்து கொண்டார். 

தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் உடம்பிலிருந்து அவள் அறியாமல் நகைகளைக் கழற்றினார். 

புத்திமதியான அந்தச்சிறுமியோ விழித்தவுடன் என் உடம்பில் பல நகைகள் இருந்தனவே, அவை எங்கே? என்று கேட்டாள். சந்திராவின் கண்களில் நீர் ததும்பியது. மருமகளை மடிமீது அமர்த்திக்கொண்டு என் கண்ணே, இவற்றை விட எவ்வளவோ நல்ல நகைகளை கதாதரன் உனக்குக் கொடுக்கப்போகிறான். பாரேன், என்று ஆறுதல் கூறினாள்.

பிரச்சனை இத்துடன் நிற்கவில்லை. மணப்பெண்ணின் சித்தப்பா அன்று அங்கு வந்திருந்தார். அவருக்கு விஷயம் தெரியவந்தது. ஆத்திமுற்ற அவர் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். 

சந்திராவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.தாயின் மனவருத்தத்தைப் போக்க குருதேவர், அவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், செய்யட்டும் நடந்த திருமணத்தை யாராலும் மாற்ற முடியாது அல்லவா? என்று வேடிக்கையாகக் கூறினார்.

திருமணத்திற்குப் பின்னர் குருதேவர் பத்தொன்பது மாதங்கள் காமார்புகூரில் தங்கியிருந்தார். 

பரிபூரணமாக மகனுக்கு மீண்டும் பத்திசுவாதீனம் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய சந்திரமணி அவர் செல்ல எளிதில் அனுமதிக்கவில்லை. மனைவி ஏழாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது, குடும்ப வழக்கப்படி மாமனார் வீட்டிற்குச் சென்று சிலநாட்கள் குருதேவர் தங்கினார்.

பின்னர் ஒரு சில நாளில் அவளுடன் காமார்புகூருக்குத் திரும்பினார். சில நாட்கள் கழித்து கல்கத்தாவிற்கு திரும்ப முடிவு செய்தார். 

சகோதரனும் தாயும் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கும்படி வற்புறுத்தினர். குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை உணர்ந்திருந்த குருதேவரின் கனிந்த மனம், மேலும் அவர்களுக்குச்சுமையாக இருக்க விரும்பவில்லை. 

எனவே அவர்களது வேண்டுகோளை நிராகரித்து விட்டு கல்கத்தா திரும்பினார். மீண்டும் காளிகோயில் அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பூஜைப்பொறுப்பை ஏற்ற சில நாட்களில் குருதேவரின் மனம் அதில் லயித்து விட்டது. தாய், தமையன், மனைவி, இல்லறம், வறுமை எல்லாம் மூலையில் தள்ளப்பட்டுவிட்டன. எல்லா உயிர்களிலும் எப்போதும் அன்னை பராசக்தியைக் காண்பது என்ற ஒரே எண்ணம் மனத்தை முழுக்கமுழுக்க ஆட்கொண்டது.

இரவு பகலாக இடையீடின்றி இறைவன் புகழ் பாடுதல், சிந்தனை, ஜபம், தியானம் என்று உயர்ந்த உணர்ச்சி வெள்ளங்களில் திளைத்ததால் அவரது மார்பு எப்போதும் சிவந்தே காணப்பட்டது. உலகியல் பேச்சுக்கள் அவரது காதுகளில் நாராசமாகஒலித்தன. 

உடம்பின் பழைய எரிச்சல் மீண்டும் பற்றிக்கொண்டது.உறக்கம் அடியோடு கண்களிடமிருந்து விடைபெற்று விட்டது போல் தோன்றியது. இத்தகைய நிலைகளை அவரது மனமும் உடலும் ஏற்கனவே அனுபவித்து இருந்ததால் இப்போது அவர் அதிகம் பாதிக்கப்படவில்லை.

மதுர்பாபுவின் கட்டளைப்படி பிரபல மருத்துவரான கவிராஜ் கங்காபிரசாதர் குருதேவரின் உறக்கமின்மை, வாய்வுக்கோளாறு, உடல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்துவதற்காக அவருக்குச் சிகிச்சையளித்தார். உடனடியாகப்பெரிய நன்மை எதுவும் ஏற்படவில்லை எனினும் தாம் மனம் தளராமல் அடிக்கடி அவரைக் கல்கத்தாவிற்கு அழைத்துச்சென்று மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டிருந்ததாக ஹிருதயர் கூறினார். குருதேவரும் அதைப்பற்றிச்சொன்னதுண்டு. அ

வர் சொன்னார், ஒரு நாள் இவ்வாறு கங்காபிரசாதரின் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன்.தன் சிகிச்சையால் முன்னேற்றம் எதுவும் இல்லாதது கண்டு கங்காபிரசாதர் மிகவும் வருந்தினார்.

மீண்டும் சோதித்துப்பார்த்துவிட்டு புதிய மருந்துகளும் தந்தார். அன்று அவருடன் கிழக்கு வங்காளத்தைச்சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இருந்தார்.நோயின் அறிகுறிகளைப்பற்றி கவனமாகக்கேட்ட அவர், இவர் தீவிர தெய்வீக உணர்வால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இது யோகப் பயிற்சியின் விளைவாக தோன்றிய நோய். இதனைமருந்தால் தீர்க்க முடியாது என்று சொன்னார். 

உடல் நோய் போன்று தோற்றமளித்த என் வியாதிக்கு உண்மையான காரணத்தைக்கூறிய முதல் மருத்துவர் அவர் தான். அப்போது இதனை யாரும் நம்பவில்லை.குருதேவரிடம் அக்கறை கொண்டிருந்த மதுர்பாபு போன்றவர்கள் அவரது நோயைக்கண்டு மனம் கலங்கி மருத்துவ முறைகளைத்தொடர்ந்து வந்தனர். ஆனால் நோய் குறைவதற்குப் பதில் அதிகரித்தது.

இந்தச் செய்தி காமார்புகூரை எட்டியது. வேறு வழியற்ற சந்திரா, மகன் குணமடைவதற்காக சிவபெருமானை் சன்னதியில் சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்வதான ஹத்யா விரதத்தைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டாள். காமார்புகூரில் குடிகொண்டுள்ள முதிய சிவபெருமான்” மிகவும் சக்திவாய்ந்தவர். அன்ன ஆகாரமின்றி அவரது திருமுன்னர் வீழ்ந்து கிடந்தாள். அங்கே” முகுந்த பூரிலிருக்கும் சிவபெருமானின் ”திருமுன்னர் இந்த விரதத்தை மேற்கொண்டால் உன் விருப்பம் நிறைவேறும்,என்ற அருளாணையைப்பெற்றாள். 

அதன்படி அங்குச்சென்று விரதத்தை மேற்கொண்டாள்.முகுந்தபூர் சிவாலயத்தில் இதற்குமுன் யாரும் இத்தகைய விரதத்தை மேற்கொண்டதில்லை. என்பது சந்திரமணிக்குத் தெரிந்திருந்தும், சிவபெருமானின் அருளாணையை ஏற்று அங்குச்சென்று விரதத்தை மேற்கொண்டாள். இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.ஒரு நாள் வெள்ளியைப் பழிக்கின்ற வெண்மேனியனான எம்பெருமான்,புலித்தோல் உடுத்தி சடாமுடி ஒளியை அள்ளிவீச சந்திராமணியின் கனவில் தோன்றி, அஞ்சாதே! உன் மகன் பித்தன் அல்லன்.தெய்வீக உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால் தான் அவனுக்கு இத்தகைய நிலைஎற்பட்டுள்ளது என்று கூறியருளினார். 

இதனால் மனம் தெளிந்த சந்திராமணி சிவபெருமானுக்கு மனமார்ந்த வழிபாடுகள் செய்து வீடு திரும்பினாள். மகனின் மனஅமைதிக்காக குலதெய்வங்களான சீதளாவிற்கும், ஸ்ரீரகுவீரருக்கும் தொடர்ந்து சேவைகளைச் செய்வதில் ஈடுபட்டாள். சந்திரமணி பயன்பெற்றபின்னர் முகுந்தபூர் ஆலயத்தில் இவ்வாறு பிராத்தனை செய்து பலரும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.

அந்த நாட்களில் தமது இறைப்பித்து நிலையைப்பற்றி சம்பவங்களை நினைவுகூர்ந்து எங்களுக்கு அவ்வப்போது குருதேவர் சொல்வதுண்டு. 

இத்தகைய தெய்வீக உணர்வுப்பெருக்கை சாதாரண மக்களின் உடலும் உள்ளமும் தாங்கமுடியாது. இந்த அனுபவத்தில் கால்பங்கு ஏற்பட்டால் கூட அவர்களின் உடல் அழிந்து விடும். இரவும் , பகலும் நாளில் பெரும்பகுதி நேரமும் நான் அன்னையின் ஏதோனும் ஒரு வகைக்காட்சியில் திளைத்திருப்பேன். அது தான் என்னைக் காப்பாற்றியது. இல்லையெனில் இந்தக்கூடு( தம் உடலைக்காட்டி) வாழ்ந்திருக்க முடியாது. நீண்ட ஆறு ஆண்டுகள் எனக்குத் தூக்கம் என்பது துளிகூட இல்லாமல் போயிற்று. இமைக்கும் சக்தியைக் கண்ணிமைகள் இழந்துவிட்டன. சிலவேளைகளில் நான் முயன்றாலும் கண்களை மூட முடியாது. காலம் எப்படிக் கழிந்தது என்பதே எனக்குத்தெரியாது. உடலைக்காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறந்து விட்டது. எப்போதாவது உடல் பற்றிய கவனம் திரும்பும்போது எனது நிலை எனக்கு புரியாது, எங்கே நான் பைத்தியக்காரன் ஆகிவிடுவேனோ என்ற அச்சம் என்னை வாட்டும். கண்ணாடியின் முன் நின்று என் விரலைக் கண்ணுக்குள் வைத்து இமைகள் மூடுகின்றனவா என்று பார்ப்பேன். ஆனால் அவை படபடக்கக்கூட இல்லை. பயத்தினால் அழுவேன், அன்னையிடம் அம்மா! உன்னிடம் பிராத்தித்ததன் பலன் இதுவா? உன்னையே நம்பியிருந்ததன் விளைவு இது தானா? என்று முறையிடுவேன். 

அடுத்த கணமே எதுவும் நேரட்டும் . என் உடம்புவேண்டுமானால் அழியட்டும். நீ மட்டும் என்னைக்கைவிட்டு விடாதே. உன் திருக்காட்சியை எனக்குக்கொடுத்து உன் அருளைப்பொழிவாயாக! அம்மா, நான் என்னை முழுவதுமாக உன் திருப்பாதகமலங்களில் அர்ப்பணித்துவிட்டேன். உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை, என்று விம்மிவிம்மி அழுவேன். உடனே மனம் லேசாகி சொல்லொணாத அருளானந்தத்தில் திளைக்கும். அப்போது உடம்பு பொருளற்றதாகத் தோன்றும். அன்னையின் திருக்காட்சியும் அபய மொழிகளும் மனத்தில் சொல்லொணா சாந்தியை நிறைக்கும்.

இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் மதுர்பாபு குருதே