இன்று சிலர் ஹிந்து மதம் என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்காக இந்த பதிவு
-
மகாபாரத காலத்திலிருந்து துவங்குவோம்.
-
மகாபாரத காலத்தில் இந்தியாவிற்கு என்ன பெயர்? பாரதம்
-
பாரதத்தின் எல்லைகள் எவை?
மேற்கில் காந்தாரம். தற்போதைய ஆப்கானிஸ்தான். கிழக்கில் வங்கம்.தற்போதைய பங்களாதேஷ்
தெற்கில் பாண்டிய தேசம்.தற்போதைய தமிழ்நாடு. வடக்கில் இமயம். தற்போதைய நேபாளம்
இதன் எல்லைகள் இவைதான் என்பது நமக்கு எப்படி தெரியும்?
மகாபாரத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா?
பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பிற்குள் பல சிறு தேசங்கள் இருந்தன.மகாபாரத யுத்தத்தில் கலந்துகொண்ட அரசர்களும் அவர்களது தேசங்கள் பற்றியும் பாரதம் கூறுகிறது.
அப்படியானால் ஒரே நாடு.ஒரே அரசர் இல்லையா?
உண்டு.
இந்த பாரத தேசத்தை முழுவதும் ஆளும் தகுதி உள்ளவன் சக்கரவர்த்தி.அஷ்வமேத யாகம் என்ற யாகம் நடத்தக்கூடிய அளவுக்கு யாருக்கு வலிமை உண்டோ அவர்தான் பாரதம் முழுவதற்கான சக்கரவர்த்தி.
யுதிஷ்டிரர் உட்பட பல அரசர்கள் அஷ்வமேத யாகம் புரிந்து சக்கரவர்த்திகளாக ஆகியுள்ளார்கள்.
-
பாரதம் என்ற மிகப்பெரிய நாடு.அதற்குள் பல சிறிய நாடுகள்.
பாரதத்தை ஆள ஒரு சக்கரவர்த்தி. சிறிய தேசங்களை ஆள பல அரசர்கள்.
இது தான் பண்டைய இந்தியா
-
பாரதத்தின் மதம் எது?
-
ஒவ்வொரு தீர்க்கதரிசிகளும் ஒரு மதத்தை உருவாக்கினார்கள்.
புதிய மதங்களை உருவாக்குதற்கான சுதந்திரம் எல்லா காலத்திலும் இங்கு உண்டு.
மகாபாரத காலத்திலேயே பல நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இதுபற்றி பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார்.
-
ஆதிசங்கர் வாழ்ந்த காலத்தில் வேதத்தை பின்பற்றிய பிலபலமான மதங்கள் 78 ம். வேதத்தை சாராத புத்த மதத்தில் பல பிரிவுகளும்,சமண மதத்தில் பல பிரிவுகளும் இன்னும் பல மதங்களும் பாரதம் முழுவதும் பரவியிருந்தன.
ஆதிசங்கரர் 78 மதங்களை இணைத்து ஆறு மதங்களாக உருவாக்கினார்.
புதிய மதங்கள் உருவாவதும்,பழைய மதங்கள் இணைவதும் இங்கு இயல்பான ஒன்று
-
ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் பாரத தேசத்திற்கு வெளியே வாழ்ந்த மக்கள் யார்?
காந்தார தேசத்திற்கு வெளியே பார்சி மதத்தை பின்பற்றிய பாரசீகர்கள் அதிக அளவில் வாழ்ந்தார்கள்.
யூதர்கள் அதிக அளவில் வாழ்ந்தார்கள்.
-
பாரசீகர்கள் பாரததேசத்தை சிந்துநதியை மையப்படுத்தி அழைத்தார்கள்.
சிந்துஸ்தான் என்று அழைத்தார்கள் பின்பர் அது மருவி ஹிந்துஸ்தான் என்று ஆனது.
-
பாரசீகர்கள்,யூதர்களுக்கு ஒரு மதம்தான் இருந்தது.
பாரததேசத்தில் பல மதங்கள் இருந்தன.
அவைகள் பற்றி பாரசீகர்களுக்கு தெரியாது. பொதுவாக அனைவரையும் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் பின்பற்றும் மதத்தை ஹிந்துமதம் என்றும் அழைத்தார்கள்.
பாரசீகர்களின் பார்வையில் புத்தமதம்,சமண மதத்தை பின்பற்றியவர்களும் ஹிந்துக்கள்தான்.
ஆப்கானிஸ்தானில் அந்த காலத்தில் புத்த மத்தினரே அதிகம் வாழ்ந்தார்கள்.முஸ்லீம்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒரு மலை இருக்கிறது.அந்த மலைக்கு ஹிந்துகுஷ் என்றே பெயர்.ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட மலை என்று பெயர்.
-
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் பாரததேசத்தின் பெயர் ஹிந்துஸ்தான்.
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானின் மதம் ஹிந்துமதம்
-
முஸ்லீம்கள் ஹிந்துஸ்தானிற்குள் வந்தபோது அவர்கள் பார்வையில் எல்லோருமே அவர்களுக்கு எதிரிகளாகவும்,காபிர்களாகவும், கொலைசெய்யப்பட வேண்டிவர்களாகவும்,அவர்களது வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட வேண்டிவையாகவுமே தெரிந்தது.அவர்களது மதம் அதைத்தான் போதிக்கிறது
எனவே முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவேண்டும்,அவர்கள் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் ஹிந்துஸ்தானிற்குள் வந்தார்கள்.
அவர்களால் ஹிந்துஸ்தானில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். புத்தமதம்,சமணமதம்,வேதமதத்தை பின்பற்றிவர்கள் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள்.
-
புத்த மதத்தினர் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர்.திபெத்,பூடான்,இமாச்சல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கு தப்பிச்சென்றார்கள்.
பிராமணர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர் தென்இந்தியா பக்கம் வந்தார்கள்.
இது தவிர உயிருக்கு பயந்து மதம் மாறியவர்கள் ஏராளம்
பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டார்கள்.
மதம் மாற மறுத்த ஆண்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.
பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.
ஹிந்துக்களின் தலைகள் மலைகள் அளவுக்கு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டன.
-
இப்படிப்பட்ட கொடூரக்கொலை உலகம் இதுவரை சந்தித்ததில்லை.
-
ஐநூறு ஆண்டுகால முகமதியர்களின் கொடுமையால் வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இந்துக்களே இல்லை.
அதன் பின்னர் வடஇந்தியாவில் பல்வேறு மகான்கள் தோன்றினார்கள்.மதம்மாறிய ஹிந்துக்களை மீண்டும் படிப்படியாக ஹிந்து மதத்திற்கு கொண்டு வந்தார்கள்.அவர்களின் கடின முயற்சியால் ஓரளவு ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
-
ஹிந்துமதம் என்ற பொதுப்பெயரை நாம் உருவாக்கவில்லை. நம்மை அழிக்க நினைத்தவர்கள் அதை உருவாக்கினார்கள்.
-
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி.
காபிர்கள் என்ற முத்திரையோடு உயிரிழந்த கோடிக்கணக்கான பாரத மக்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை.
அது நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை நாம் வைத்துக்கொள்ளலாம்.அதற்கு முன்பு யாராவது ஹிந்துக்கள் என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களின் சாபம் அவர்களை தண்டிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
ஹிந்து என்பது நாம் கொடுத்த மதம் அல்ல. சைவர்களுக்கு சைவம் என்ற பெயர் இருக்கிறது. வைணவர்களுக்கு வைணவன் என்று பெயர் உள்ளது. சீக்கியர்களுக்கு சீக்கிய மதம் உள்ளது. இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.அப்படி இருக்கும்போது ஹிந்துமதம் என்ற பெயரை ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
ஹிந்துமதம் என்ற ஒரு தனியான மதம் இல்லாதபோது அந்த பெயரை ஏன் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
-
நமது நாட்டில் மதச்சண்டை என்பது எல்லா காலத்திலும் இருந்துள்ளது.ரிக் வேத காலத்திலேயே அந்த சண்டை இருந்துள்ளது.ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி.
இறைவன் ஒருவன்தான் மகான்கள் அவரை பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
இறைவன் ஒருவன்தான் அவனை அடையும் பாதைகள் பல. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதை.
இந்த கருத்து மிகமிக பழைய காலத்திலிருந்தே இந்தியாவில் இருந்து வந்துள்ளது.
அதனால்தான் ஒரே ஊரில் பலர் பல மதங்களை பின்பற்றினாலும் அமைதியாக வாழ முடிகிறது.
எந்த மகானாக இருந்தாலும்,அந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் மேலே கூறப்பட்டுள்ள கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
உன்னுடைய பாதை வேறு,என்னுடைய பாதை வேறு.
உன்னுடைய வழிபாடு வேறு என்னுடைய வழிபாடு வேறு
ஆனால் இந்த உலகத்தில் இறைவன் ஒருவன்தான்.என்னைப்படைத்த அதே இறைவன்தான் உன்னையும் படைத்திருக்கிறார். எனக்கு ஒரு வழியைக்காட்டி இறைவன் உனக்கு வேற வழியைக் காட்டியிருக்கிறான் என்ற கருத்து சைவர்கள்,வைணவர்கள்,சாக்தர்கள்,சீக்கியர்கள் என்று எல்லோரிடமும் ஒரேபோல உள்ளது.
இதுதான் இந்தியாவின் மதம்.
மதம் என்றால் என்ன? நம்பிக்கை
இந்தியாவின் நம்பிக்கை என்ன?
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு.
இதுதான் ஹிந்துமதம்.
ஹிந்து மதம் என்ற உடன் தனியான வழிபாடு,சடங்குள்,கடவுள் என்று எதுவும் இல்லை.
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு என்று யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்.
அவர்கள் சினை வழிபடலாம்,விஷ்ணுவை வழிடலாம்,காளியை வழிபடலாம், மேலான ஒளியை வழிபடலாம் எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையால் ஹிந்துக்கள்.
-
எனது மதம்தான் உயர்ந்தது. எனது கடவுள்தான் உயர்ந்தவர். எனது பாதைதான் உயர்ந்தது.மற்றது எல்லாமே தாழ்ந்தது.மற்ற வழிபாடுகள் தாழ்ந்தது.பிற பாதைகள் தாழ்வானவை அல்லது தவறானவை என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.மூடநம்பிக்கை உடையவர்கள்.கொள்கை வெறி பிடித்தவர்கள்.அவர்களை நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டும்
-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹிந்து என்பது யாரைக்குறிக்கும்? என்ற கேள்வி ஆட்சியல் இருந்தவர்களிடம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் அதற்கு ஒரு தெளிவாக விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.
இந்தியாவில் வசிக்கும் மக்களில் முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் அல்லாத அனைவரும் ஹிந்துக்கள்.
-
இதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி யாரெல்லாம் ஹிந்துக்கள்?
முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் தவிர வேறு எல்லோரும் ஹிந்துக்கள்
-
ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவை நம்மால் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
அவர்களின் எண்ணங்களை இங்குள்ள அரசில்வாதிகள்மூலம் செயல்படுத்த நினைக்கிறார்கள்.
அதாவது சைவர்கள் ஹிந்துக்கள் அல்ல. வைணவர்கள் ஹிந்துக்கள் அல்ல. தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல.சிறு தெய்வங்களை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் அல்ல.ஹிந்துதமதம் என்பது பிராமணமதம் இதுபோல பொய் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுத்துள்ளார்கள்.
இது ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது
ஹிந்துக்கள் தனித்தனியாக பிரிந்தால் அவர்களை வீழ்த்துவது மிக எளிது.
இந்தியாவை ஒருங்கிணைப்பது இந்துமதமாகும்.
இந்து மதம் பலவீனமானால் இந்தியா பலவீனமாகும்.
இந்துமதம் பல பிரிவுகளா பிரிந்தால் இந்தியா பல துண்டுகளாக பிரிந்துவிடும்
இந்துவின் எழுர்ச்சி இந்தியாவின் எழுச்சி
இந்து மதத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி
-
இந்தியாவில் உள்ள அனைவரும் ஹிந்துமதத்தின் மூலம் ஒன்றுபடுவோம். எதிரிகளை வீழ்த்துவோம்
மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?
-
1.நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது. எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை .பிற மதங்கள் அந்த மதத்தை தோற்றுவித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது
-
2. நமது மதத்தின் புனிதநூல் என்று குறிப்பிட்ட ஒன்றைமட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எண்ணற்ற நூல்கள் புனிதநூல்களாக உள்ளன
-
3.நமது மதம் எழுத்துக்கள் கண்டுபிடித்த காலத்திற்கு முன்பே உள்ளது.அதாவது முற்காலத்தில் மக்கள் கருத்துக்களை குருவிடமிருந்து காதுகொடுத்து கேட்டு தெரிந்துகொண்டார்கள்.அதனால்தான் அதற்கு ஸ்ருதி என்று பெயர்.வாய்மொழி மூலமாகவே பல ஆயிரம் ஆண்டுகள் கற்பிக்கப்பட்டன.மற்ற மதங்கள் இந்த அளவு தொன்மையானது அல்ல
-
4. வேதங்கள் கூறும் தத்துவங்கள் மிகவும் பண்பட்டவர்களால் மட்டுமே படித்து தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.அந்த தத்துவங்களை படித்து புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகும்.
-
5. நமது மதம் வேதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. அவைகளின் மொழி சமஸ்கிருதம் இல்லை. அவை வேதமொழி. வேதங்கள் இதுவரை எழுதப்படவில்லை. இறைவனின் வார்த்தைகளே வேதம். ...
-
6. நமது மதம் , இதுவரை உலகில் தோற்றிய அனைத்து மதங்களையும், இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மகாசமுத்திரம் போல உள்ளது. அதாவது இதில் இல்லாத எந்த புதிய கருத்துக்களையும் வேறு மதத்தில் நீங்கள் காணமுடியாது.
-
7. நமது மதத்தில் மட்டுமே மனிதன் இறைவனாக மாற முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு இறைவனுடன் ஒன்று கலக்கும் முக்தி நிலை பற்றி கருத்து இங்கு மட்டுமே உள்ளது.
-
8.உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்ட்ட மிக உயர்ந்த தத்துவமான அத்வைத தத்துவம் வேறு மதங்களில் இல்லை.
-
9. நமது மதத்தில் மட்டுமே எண்ணற்ற அவதாரங்கள் ஏற்கனவே வந்திருப்பதாகவும்,இனியும் வரப்போகிறார்கள் என்ற கருத்து உள்ளது. மற்ற மதங்களில் இனி புதிய தீர்க்கதரிசிகள் வரமுடியாது
-
10.நமது மதம், கடவுள் நன்மை,தீமை இரண்டையும் கடந்தவர் என்கிறது. மற்ற மதங்களில் கடவுள் நல்லவர் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தீமையை அவரால் தடுக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சாத்தான் என்பது கடவுளுக்கு கட்டுப்படாத தன்னிச்சை பெற்ற வேறு ஒரு சக்தி.
-
11.நமது மதத்தில், மறுபிறப்பு பற்றிய கருத்து உள்ளது. ஒரு உயிர் பரிணாமம் அடைந்து வேறு உயிர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்கிறது.இது விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்துவருகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிமணமிப்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
-
12. நமது மதத்தின் கடவுள், அனைத்து இனங்களின், அனைத்து உயிர்களின் கடவுள். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலக்குகளுக்கும் அவரே கடவுள்.அவர் மனிதர்களை மட்டும் நேசிப்பவரல்ல, இந்த உலகில் உள்ள அனைவரையும் நேசிப்பவர். அவர் நல்லவர்களை நேசிக்கிறார்,தீயவர்களை வெறுக்கிறார் என்று கருத்து நமது மதத்தில் இல்லை. அவர் அனைவரையும் சமமாக நேசிக்கிறார்.மற்றமதங்களில் அந்த இறைவன் தன்னை நேசிப்பவர்களை நேசிப்பார் மற்றவர்களை வெறுப்பார்.
-
13.நமது மதத்தில் கர்மா தியரி இருக்கிறது. அதாவது ஒரு செயல், அதற்கு சமமான எதிர் செயலை உருவாக்கும். ஒருவர் துன்படுவதற்கு காரணம், அவர் அதற்கு முன்பு செய்த தீய செயல். இனி ஒருவர் இன்பமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இனிமேல் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு மனிதனின் இன்பத்திற்கும்,துன்பத்திற்கும் மனிதனே காரணமாகிறான்.மற்ற மதங்களில் மனிதன் துன்பப்படுவதற்கு காரணம் இறைவன் என்று கூறுகிறார்கள். ஒருவன் ஏன் குருடனாக பிறந்தான் என்றால்,அது இறைவனின் விருப்பம் என்பார்கள்.
-
14. பிறமதங்களில் மனிதன் சூன்யத்திலிருந்து தோன்றினான் என்று சொல்கிறது. நமது மதம் மனிதன் இறைவனிலிருந்து தோன்றினான்,இறைவனில் வாழ்கிறான்,இறைவனில் ஒடுங்கி முடிவில் இறைவனாகிறான் என்கிறது.
-
15. எல்லையற்ற காலம் பற்றிய கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சம் எல்லையற்ற காலம் வரை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஒருநாள் திடீரென தோன்றியது .ஒரு நாள் திடீரென அழிந்துவிடும் என்ற கருத்து இல்லை., நாம் காலத்தை கடந்து வாழ்ந்துகொண்டே இருப்போம்.
-
16. மனிதனின் உடல்தான் மரணிக்கிறதே தவிர.உண்மையின் மனிதனுக்கு மரணம் இல்லை என்பது இந்துமதத்தின் கருத்து. மற்ற மதங்களில் இந்த கருத்து இல்லை
-
17.ஆன்மாவுக்கு உருவம் இல்லை ,அதே போல் இறைவனுக்கும் உருவம் இல்லை என்ற கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களின் கடவுள் ஏதோ ஒரு உருவத்தை உடையவராகவே இருக்கிறார். உருவங்களுக்கு அழிவு உண்டு என்று நமது மதமும்,விஞ்ஞானமும் கூறுகிறது.அதன் படி பார்த்தால் மற்ற மதங்களின் இறைவன் ஒரு நாள் அழிந்துவிடுவார்.
-
18. நமது மதத்தில் மனிதன் இந்த வாழ்க்கையிலேயே முக்தியடைய முடியும் என்று சொல்கிறது. மற்ற மதங்களில் மனிதன் இறந்த பிறகு கல்லறையில்,கடைசி நாள்வரும் வரை காத்திருக்க வேண்டும்.
-
19.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது.
-
20.சூன்யத்திலிருந்து எந்தபொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.
-
21. அனைத்தும் வட்டம்போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம்,ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது
-
22. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது.
-
23. ஒரு உயிர்தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு,ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர்நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது.இந்த பரிணாமம் மேலிருந்து கீழாகவும்.கீழிலிருந்து மேலாகவும் மாறிமாறி வட்டம்போல் நடைபெறுகிறது. உதாரணமாக மனிதனிலிருந்து குரங்கு தோன்றலாம்.குரங்கிலிருந்து மனிதன் தோன்றலாம்.இரண்டும் சரி
-
24. இந்த உலகில் எப்போதும் சத்வம்(சமச்சீர் சக்தி),ரஜஸ்(விலக்கும் சக்தி),தமஸ்(கவரும் சக்தி) என்ற மூன்று சக்திகள் உள்ளன.உதாரணமாக சூரியன் பூமியை தன்னை நோக்கி இழுப்பது தமஸ், பூமி வேகமாக சுழன்று சூரியனிலிருந்து விலகிச்செல்வது ரஜஸ், சூரியனில் ஒன்றிவிடாமலும்,சூரியனிலிருந்து விலகிவிடாமலும் சமதூரத்தில் சமப்படுத்தி வைப்பது சத்வம்.ஒரு அணுவில் கூட இந்த மூன்று சக்திகளும் இருக்கும்
-
25. இந்த உலகிற்கு எது தேவையோ அதை இந்த உலகமே உருவாக்கிக்கொள்ளும் படைப்பாற்றல்.உதாரணமாக ஒரு இடத்தில் காற்று சூடாக இருந்தால்,வேறு இடத்திலிருந்து குளிர்ந்த காற்று அந்த இடத்தை நோக்கி பாய்ந்து வரும்.அதேபோல பல உதாரணங்கள் உள்ளன
-
26. தொடர்மாற்றம் பற்றிய கருத்து ,இன்று நமது உடலில் உள்ள அணுக்கள் நாளை இன்னொருவரின் உடலுக்குள் செல்கிறது, இவ்வாறு உடல் தொடர்ந்து மாறுகிறது. அதே போல் மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஆனால் நாம் மாறுவதில்லை
-
27. உடலும்,மனமும் ஜடப்பொருள் ,உணர்வு இல்லாதது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குவது உணர்வுப்பொருள்.
-
28. அனைவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.அதனால் ஒருவர் நினைப்பதை இன்னொருவரால் கூறமுடியும்.
-
29.மனத்தின் மூலம் புதியபொருட்களை உருவாக்க முடியும். மனத்தின் மூலம் மனிதனைக்கூட உருவாக்க முடியும்.
-
30.மிருகத்தின் உடல் உறுப்புகளைகூட மனிதனின் உடலில் பொருத்தலாம். உதாரணமாக கணபதியின் தலையை எடுத்து அங்கே யானையின் தலையை பொருத்தியதுபோல
-
31.டெஸ்ட் டியூப் பேபி பற்றிய கருத்து மகாபாரதத்திலேயே உள்ளது.கௌரவர்கள் அவ்வாறு பிறந்தவர்கள்தான்.
-
32.உடலை இயக்கமற்ற நிலைக்கு கொண்டுசெல்வதன் மூலம் பல ஆண்டுகள் உணவின்றி வாழமுடியும். குளிர்பிரதேசத்தில் சில உயிர்கள் வாழ்வதுபோல
-
33. ஒரு மூல உடலிலிருந்து அதேபோல பல உடல்களை உருவாக்க முடியும் என்று பதஞ்சலி முனிவர்கூறுகிறார்
-
34. கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை இன்னும் விஞ்ஞானம் கற்றுக்கொள்ளவில்லை
-
35 .தூல உடலை,ஒளி உடலாக மாற்றி ஆகாயத்தில் பறக்கலாம்,வேறு உலகங்களுக்கு விரைவாக செல்லலாம்
-
36. பிரம்மயோனி பற்றி ரிஷிகள் கூறியிருக்கிறார்கள்.இந்கிருந்துதான் பல பிரம்மாண்ட சூரியர்கள் ,சந்திரர்கள், கோள்கள் வெளிவருகின்றன.
-
37.பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான ஆண்டு ஆயுள்பற்றிய கருத்து வேதங்களில் கூறப்பட்டுள்ளது
-
38. பிராணன்,ஆகாசம் என்ற இரண்டும் ஒன்று கலந்து இந்த பிரபஞ்சம் உருவாகியுள்ளது.அதேபோல் ஒரு காலத்தில் இந்த பிரபஞ்சம் மறுபடி பிராணனாகவும்,ஆகாசமாகவும் மாறிவிடும்
-
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானம் நம்மிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன.
மஹாபாரதத்தில் அர்ஜுனனை பார்த்து,ஆர்யனே என்று கிருஷ்ணர் கூறுகிறார்.ஆர்யன் போரின்போது பின்வாங்கமாட்டான்.ஆர்யன் தீர்க்கமாக முடிவெடுப்பவன் போன்ற பொருளில் அவர் பயன்படுத்துகிறார்.இனத்தை குறிக்க பயன்படுத்தப்படவில்லை. அந்த காலத்தில் பல இனங்கள் இருந்தன விருஷ்ணி குலம்,யாதவகுலம் போன்ற பல பெயர்கள் மஹாபாரதத்தில் வருகின்றன.ஆனால் ஆரிய குலம் என்ற ஒன்று காணப்படவில்லை. பாரதபோரில் பாண்டிய மன்னனும் கலந்துகொண்டுள்ளான்.அவன் ஆரியல் அல்லாதவன் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.பாண்டிய மன்னனை சிறந்தவீரன் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பண்டைய காலத்தில் அச்வமேதயாகம் என்ற ஒன்று நடத்துவார்கள். பல அரசர்களில் சக்கரவர்த்தி யார் என்பதை நிர்ணயிப்பதற்கான நடத்தப்படும் யாகம்தான் அது.யாரை அனைவரும் சக்கரவர்த்தி என்று ஏற்றுக்கொள்கிறார்களோ அவரே அனைத்து தேசத்து அரசரைவிட உயர்ந்தவர்.அவ்வாறு சக்கரவர்த்தியால் ஆளப்படும் நாடு பாரதம் . மஹாபாரதம் என்பது பல்வேறு நாட்டு அரசர்களுக்கிடையே நடந்த போரைப்பற்றி கூறுகிறது.மகாபாரத்தில் பாண்டிய மன்னன் இடம்பெற்றிருக்கிறான் என்றால் அவன் பாரத நாட்டின் சொந்தக்காரன்தானே!. அவ்வாறு பாரதத்தின் ஒரு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனை திராவிடன் என்று சொல்வது பாண்டினை அவமதிப்பதாகும்.
-
மகாபாரத காலத்தில் வடஇந்திய மக்கள் பேசிய மொழி என்பது சமஸ்கிருதத்திற்கு முன்பு இருந்த மொழியாகும்.
அது தற்போதுள்ள தமிழுக்கு முன்பு இருந்த மொழி. அந்த பழைய காலத்து மொழி ஒரே மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும். தற்காலத்தில் உள்ள வடஇந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்தவை.தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்தவை.ஆனால் மகாபாரத காலத்து மொழி என்பது ஒரேமொழிதான். தெற்கிலிருந்து சென்ற பாண்டி மன்னனால் மற்ற மன்னர்களுடன் கலந்து பழக முடிந்துள்ளது. அவர்களுக்கிடையில் மொழி பாகுபாடு இருந்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை.அதேபோல் ராவணன் பேசிய மொழியும் ராமர் பேசிய மொழியும் ஒன்றாகவே இருந்துள்ளது. ராவணனின் தம்பி விபீஷணன், ராமரிடம் அடைக்கலம் வந்த பிறகு அவர்களுக்கிடையில் பல உரையாடல்கள் நடக்கின்றன. அப்போது விபீஷணன் வேறு மொழி பேசியதாக ராமாணத்தில் சொல்லப்படவில்லை
-
சமஸ்கிருதம் சிறிதளவு படித்தவன் என்ற முறையில் தற்கால சமஸ்கிருதத்திற்கும் ,தற்கால தமிழுக்கும் இடையில் உள்ள இலக்கணம் பெரும்பாலும் ஒத்து காணப்படுகிறது. வெளிநாட்டு மொழியான சீன மொழியையும் தழிழையும் ஒப்பிடமுடியாது.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். அதேபோல் அரேபிய மொழியையும் தமிழையும் ஒப்பிட முடியாது. பக்கத்திலே வராது. ஆனால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் ஒப்பிட முடியும். அவைகளுக்கிடையில் ஒள்ள வேறுபாடு மிகக்குறைவுதான். தற்போதுள்ள சமஸ்கிருதம் தோன்றி 3000 ஆண்டுகள் ஆகிறது. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சமஸ்கிருதத்திற்கு முந்தைய மொழியான வேதமொழியும்,தொல்காப்பிய காலத்து தமிழும் மிக நெருங்கிய மொழியாக இருந்திருக்கும். தொல்காப்பிய இலக்கணமும்.பண்டைய சமஸ்கிருத இலக்கணமும் பெருமளவு ஒத்து காணப்படுவதாக இரண்டையும் கற்றறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.
-
ஆகவே மகாபாரத காலத்தில் பாரதம் முழுவதும் ஒரே மொழிதான் பேசப்பட்டன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக தெரிகிறது. அவர்களுக்கிடையே ஒரு பண்பாடு நிலவியதையும் காணலாம்.உதாரணமாக ராமர் சிவபெருமானின் பக்தர்.அதேபோல் ராவணனும் சிவபெருமானின் பக்தர். அர்ஜுனன் சிவபக்தர்,பாண்டிய மன்னன் சிவபக்தர். ஆகவே பழைய காலத்தில் வழிபாட்டு முறைகளில்கூட வேறுபாடு இல்லை. பண்டைய தமிழ் இலக்கியத்தில் இந்திரனை வழிபட்டது பற்றிய குறிப்பு உள்ளது. மகாபாரத்திலும் இந்திரவழிபாடு உள்ளது.
முற்கால பாரதம் என்பது தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,நேபாளம்,இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.
-
இந்த வேறுபாடுகள் எப்படி உருவாகின? சமஸ்கிருதம் தோன்றிய பிறகு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம். பண்டைய மொழியைவிட சிறப்பான மொழியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் பாணிணி முனிவர் சமஸ்கிருதத்தை உருவாக்கினார்.அதன்பிறகு சமஸ்கிருதத்தில் பல இலக்கியங்கள் உருவாக ஆரம்பித்தன. பண்டைய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் மொழிரீதியாக வேறுபாடு தோன்றியது. தென் இந்திய இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டன. வட இந்தியர்களால்,தென்இந்திய இலக்கியத்தை படிக்கமுடியவில்லை. தென் இந்தியவர்களால் வடஇந்திய இலக்கியத்தை படிக்க முடிக்கவில்லை. இவ்வாறு மொழி அடிப்படையில் இரண்டு இனங்கள் உருவாகின.சமஸ்கிருதம் அதன்பிறகு ஹிந்தி,பெங்காலி போன்ற பல மொழிகளாக பிரிந்துபோனது. தமிழ் மொழியும் தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளாக பிரிந்துபோனது.
-
கலாச்சாரரீதியாக ஒரே இனத்தவராக இருந்த இந்தியரை, மொழிரீதியாக தனித்தனியே பிரிப்பதற்கு வெள்ளைக்காரன் திராவிடன் என்ற பெயரை பிரபலப்படுத்தினான். அதன்பிறகு நமது பிரிவினைவாதிகள் அந்த பெயரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
-
முடிவுரை
-
ஆரியன் என்பது ஒரு இனத்தை குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல என்பதை மகாபாரதம் படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.ராவணன்,பாண்டிய மன்னன் உட்பட தென் இந்தியாவில் வாழ்ந்த அனைவரும் பேசிய மொழி ஒரே மொழிதான்,இருவருக்குள் உள்ள கலாச்சாரம் ஒன்றேதான். பாரதம்,மஹாபாரதமாக உயரவேண்டுமானால் திராவிடம் என்ற போலி சித்தாந்தம் ஒழிய வேண்டும். பிரிவினைவாதிகளின் கருத்துக்களை மக்கள் ஒதுக்கவேண்டும்.
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவமதம் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது.கிறிஸ்தவர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் அங்குள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மதம்மாற்றுவது அவர்களது முக்கிய பணி. கிறிஸ்தவர்கள் குடியேறிய பெரும்பாலான நாடுகளில் நாகரீகம் இல்லாத மக்கள்தான் வாழ்ந்து வந்தார்கள்.ஆகவே அவர்களை மதம்மாற்றுவது எளிதாக இருந்தது.அவர்களை எதிர்த்தவர்களை மொத்தமாக கொன்றுகுவித்த வரலாறுகளும் உண்டு.ஆனால் இந்தியாவில் கிறிஸ்தவர்களைவிட பலமடங்கு மேன்மைபெற்ற நாகரீகம் பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வந்தது.
-
இந்தியாவில் உள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன.அவற்றுள் ஒன்றுதான் இந்துமதம் என்பது ஒரு கற்பனை மதம்,முன்னோர்களின் கற்பனையில் உதித்தது,உண்மையில்லாதது,மேல்சாதியினர் கீழ்சாதியினரை அடக்க உருவாக்கப்ட்டது போன்ற கருத்துக்களை இந்தியார்கள் மனத்தில் விதைக்கவேண்டும் வேண்டும் என்பது. பல கோடி டாலர் நிதி அதற்காக செலவிடப்பட்டது. அப்போது துவக்கப்பட்ட இந்திய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், என் முன்னோர் முட்டாள்,என் முன்னோர் உருவாக்கியமதம் போலி,கற்பனை என்று அவர்கள் படிக்கும்படி பாடதிட்டங்கள் உருவாக்கப்ட்டன. அவர்கள் உருவாக்கிய கல்லூரிகளில் படித்து வெற்றி பெற்றவர்களுக்குதான் பதவி தரப்பட்டது. இதில் படித்து வெற்றி பெற்ற பலர் ஆங்கில அடிவருடிகளாகவும்,இந்துமத எதிர்ப்பு எண்ணம் கொண்ட அடிமைகளாகவும் உருவானார்கள்.இந்த திட்டம் வெற்றிபெற்றுக்கொண்டிருப்பதை கண்ட கிறிஸ்தவர்கள் இந்தியா முழுவதும் இதை நடைமுறைப்படுத்த முயன்றார்கள். பாதிரிகள் தலைமையில் கல்லூரிகள் நடைபெற்றன.கிறிஸ்தவர்களாக மதம்மாறுபவர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. பணத்திற்காக படித்த இளைஞர்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். பலர் இந்துமத எதிர்ப்பாளர்களானார்கள். நம் கண்ணைக்கொண்டே நம்மை குத்துவது என்பது இதுதான்.நமக்குள்ளேயே எதிரிவை உருவாக்கி நம்மை அழிக்கவேண்டும் என்பதுதான் அவர்கள் திட்டம்
-
அந்த காலத்தில் கல்கத்தாவில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார். கடவுளைக் காணவேண்டும் என்ற தீவிர ஏக்கத்தால் உந்தப்பட்டு இரவும் பகலும் இறைநினைவாகவே வாழ்ந்தார். தேவி கோவில் பூஜாரியாக இருந்ததால்,தேவியின் காட்சியை பெறுவதற்காக தீவிரமாக முயன்றார். முடிவில் காளியின் காட்சி கிடைத்தது.அதன் பிறகு காளிதேவி அவரிடம் பேசிளாள்.அவருக்கு இந்துமதத்தின் அற்புதமான கருத்துக்கள் பலவற்றை உபதேசித்தாள்.மனித குருக்கள் பலரை அவரிடம் அனுப்பி அவர்கள் மூலம் பல்வேறு நெறிகளை அறிந்துகொள்ளும் படி செய்தாள். அவருக்கு சிவபெருமானின் காட்சி கிடைத்தது. கிருஷ்ணரின் காட்சி,ராதை ராமர்,சீதை, உட்பட இந்து தெய்வங்கள் அனைவின் காட்சியும் கிடைத்தது. மனிதர்கள் எப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்களோ அதேபோல் அவர் அந்த தெய்வங்களிடம் பேசினார் பழகினார். அவர்கள் மூலம் பல்வேறு அறிவரைகளை பெற்றார். இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது.எப்படி மறைகிறது உட்பட பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் அவருக்கு காட்சிகளாக கிடைத்தது.
இரண்டு மனிதர்கள் எப்படி பேசிக்கொண்டே நடந்துசெல்வார்களோ அதேபோல் ராமகிருஷ்ணர்,காளி தேவியுடன் கைகோர்த்தபடி நடந்து செல்வார். அப்போது காளிதேவி பல்வேறு காட்சிகளை அவருக்கு காட்டி,அவைகள் மூலம் பல விஷயங்களை புரியவைப்பாள்.
-
இதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் பல்வேறு அனுபவங்களை அவரிடமிருந்து சுவாமி விவேகானந்தர் கேட்டு அறிந்துகொண்டார். இந்தியாவையும்,இந்துமதத்தையும் காக்க வேண்டுமானால் இவைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்
-
அந்த நாட்களில் சைவம்,வைணவம்,சாக்தம்,அத்வைதம் என்று இந்தியமதங்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.ஸ்ரீராமகிருஷ்ணர் இவைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி முடிவில் ஒரு சமரசத்தை எட்டினார். அது இதுதான் இறைவன் ஒருவன்தான்,பாதைகள்தான் பல. சைவர்கள் அடையும் இடமும்,வைணவர்கள் அடையும் இடமும்,சாக்தர்கள்,அத்வைதிகள் அடையும் இடமும் ஒன்றுதான் பாதைகள் வேறு. ஒரு தாய் தன் பல குழந்தைகளுக்கு அவர்களின் ஜீரணசக்திக்கு ஏற்ப பல வகைளில் சமைப்பதுபோல.மக்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப பல மதங்கள் இருக்கின்றன.எந்த மதத்தை ஒருவன் தீவிரமாக பின்பற்றினாலும்,அந்த மதத்தின் மூலம் முக்தி அடைய முடியும்,இறைக்காட்சி பெற முடியும்.அனைத்து மதங்களின் கடைசி எல்லை ஒன்றுதான் என்று போதித்தார்.
-
இந்தியாவில் இந்த கருத்து மிகவும் தேவையான ஒன்றாகும்.புதியஇந்தியாவை உருவாக் இந்த கருத்து அவசியம்.பல மதங்கள் தேவை ஆனால் அவைகளுக்குள் சண்டை தேவையில்லை.இவர்களுக்குள் ஒன்றுமையையும் ஒருமித்த கருத்தையும் உருவாக்குவது எப்படி? மக்களிடம் எதைபோதித்து ஒற்றுமையை உருவாக்க முடியும் என்று சுவாமி விவேகானந்தர் யோசித்தார்.அனைத்து மதங்களும் சிலமுக்கிய விஷயங்களில் பொதுவான கருத்தை கொண்டிருக்கின்றன அதை அவர் நம்முன் வைக்கிறார்.
-
1. எல்லாமதங்களும் இந்த உலகத்தை படைத்ததாக ஒரு இறைவனை நம்புகின்றன
2.எல்லா மதங்களும் எப்போதும் நிலையாக இருக்கும் வேதத்தை நம்புகின்றன
3. ஓம்- என்ற பிரணவமந்திரத்தை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன
4.முக்தி என்ற வீடுபேற்றை எல்லா மதங்களும் ஏற்கின்றன
5.மறுபிறப்பை எல்லா மதங்களும் ஏற்கின்றன
6. கர்மாதியரி(விதி) அதாவது தீமை செய்தால் தீமை நடக்கும்.நமது பாவங்களுக்கு நம்முன்வினையே காரணம் என்பதை ஏற்கின்றன
7.இறைவனே ஆதிகுரு என்ற கருத்தும் எல்லா மதங்களிலும் உள்ளது
8.இந்த பிரபஞ்சம் எப்போதும் இருக்கும் என்ற கருத்தையும் ஏற்கின்றன
9.பஞ்சபூத தத்துவமும் பொதுவானதுதான்
10.இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்.இந்த உயிர்களை ஆள்வதும் அதே இறைவன்தான் என்ற கருத்தும் பொதுவானது
11. இறைவன் இந்த உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறார்,வெளியிலும்,பிரபஞ்சத்திற்கு அப்பாலும் இருக்கிறார்
-
இன்னும் பல....
---
அப்படியானால் வேறுபாடு எங்கு உள்ளது? சிவன்தான் உலனை படைத்தார் என்று சைவர்களும், விஷ்ணுதான் உலகை படைத்தார் என்று வைஷ்ணவர்களும்,தேவிதான்உலகை படைத்தாள் என்று சாக்தர்களும் கூறுகிறார்கள்.இதை விளக்குவதற்கு அவர்கள் பல தத்துவங்களை கூறுகிறார்கள்.அவைகளை படித்து பார்த்தால் மேலே கூறப்பட்ட பொதுவான கருத்துக்கள்தான் அதில் இருக்கும்.
-
சுவாமி விவேகானந்தர் வேதத்தின் ஞானகாண்டத்தை(உபநிடதங்களை) நன்கு கற்றார்.அவைகளில் உள்ள துவைதம்(நான் வேறு கடவுள் வேறு) ,விசிஷ்டாத்வைதம்(நான் கடவுளின் ஒரு பகுதி),அத்வைதம் (நானும் கடவுளும் வேறுவேறு அல்ல) என்ற மூன்று தத்துவங்களை அடிப்படையாக கொண்டே அனைத்து மதங்களும் உருவாகியிருப்பதை கண்டார். ஆகவே மதங்களின் அடிப்டையாக உள்ள இந்த தத்துவங்களை மக்களிடம் போதித்தார்.
-
சுவாமி விவேகானந்தர் புதிய மதத்தை உருவாக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் புதிய பிரிவையும் உருவாக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் மதங்களுக்கிடையில் ஒரு சமரசத்தை உருவாக்கினார்.வேதாந்தத்தை தெரிந்துகொண்டால் யாரும்.யாருடனும் சண்டையிடத்தேவையில்லை,ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்,மற்றவர்கள் மதத்தை பற்றியும் தெரிந்துகொள்ளலாம் என்பதை தெளிவுபடுத்தினார்
-
வெளிநாட்டில் வேதாந்த கருத்துக்களை பிரச்சாரம் செய்ய தொடங்கியபோது,வெளிநாட்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சுவாமி விவேகானந்தரின் பின்னால் சென்றார்கள்.அவரது கருத்துக்களால் ஈர்க்கப்படார்கள். பழமைவாத கிறிஸ்தவர்கள்,பாதிரிகள் அதை கடுமையாக எதிர்த்தார்கள்,அவரைபற்றி பல அவதூறுகளை பரப்பினார்கள்,,இந்தியாவில் இருந்தபோது அவரை கைதுசெய்யவும், சிறையில் அடைக்கவும் முயன்றார்கள்.பிரிஷ்டிக்காரர்கள் அதை செய்ய தயங்கியதற்கு காரணம் இருந்தது,அன்றைய காலத்தில் இந்தியாவின் எழுர்ச்சி நாயகனாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர். அவர் மேல் கைவைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே எழுந்துநின்று பிரிட்ஷ்காரர்களை சட்டினி ஆக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்து வைத்திருந்தார்கள்.அதனால் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள். வெளிநாடுகளில் பல கிறிஸ்தவ அறிஞர்கள் சுவாமி விவேகானர்நதின் கருத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு சீடராக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். முடிவில் கிறிஸ்தவர்களின் சதி முறியடிக்கப்ட்டது. வெளிநாட்டு பத்திரிக்கைகள் உலகில் சிறந்த தத்துவம் வேதாந்தம்தான் என்று எழுதின. வெளிநாட்டு பேராசிரியர்கள் வேதாந்தம்தான் எதிர்கால உலகை உருவாக்கப்போகிறது.இந்தியாவிற்கு கிறிஸ்தவ பாதிரிகளை அனுப்புவதற்கு பதிலாக அந்த பாதிரிகளை வேதாந்தம் கற்க சொல்லவேண்டும் என்று பேசினார்கள்.
-
சுவாமி விவேகானந்தரின் பணியின் காரணமாக இந்தியாவில் மட்டுல்ல ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவமதம் சரிவை சந்தித்தது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக அறிஞர்கள் பலர் இந்துமதம் என்ற பெயர் நாமாக ஏற்படுத்தியது அல்ல.பிறர்நம்மீது திணித்தது, ஆகவே,சைவ சமயம்,வைணவ சமயம் என்ற பெயரிலேயே அழைக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் சைவம்,வைணவம் என்ற இரண்டு சமயங்கள் மட்டும் இல்லை. பல முக்கிய மதங்களும், நூற்றுக்கணக்கான மதபிரிவுகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரையும் சைவம்,வைணவம் என்ற பெயரின் கீழ் கொண்டுவர முடியாது. உதாரணமாக வங்காளம்,ஒரிசா,அஸ்ஸாம் போன்ற கிழக்கு இந்தியாவின் முக்கிய மதமாக இருப்பது சாக்தம்.காளி வழிபாடு. காளி சிலையின் கீழ் சிவன் சவம் போல் படுத்துகிடப்பதாகவும், சிவன்மேல் காளி ஏறி நிற்பதாகவும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும். இது சாக்த தத்துவத்தை விளக்குவதற்காகஅமைக்கப்பட்டது. இந்த வழிபாட்டை தென்னிந்திய சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? வட இந்திய துறவிகள் சிவோகம்-நானே சிவன் என்று கூறிக்கொள்வார்கள். நானே சிவன் என்று கூறிக்கொள்வதை தென்இந்திய சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? புத்தரை ஒரு அவதாரமாக வடஇந்திய வைணவர்கள் வழிபடுகிறார்கள்.தென் இந்திய வைணவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?
-
சீக்கியர்களின் தனிசமயமாக இயங்கிவருகிறார்கள். அவர்கள் சைவத்தையும்,வைணவத்தையும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? வள்ளலாரை பின்பற்றுபவர்கள் ஜோதியாண்டவர் என்கிறார்கள்,ரமணரை பின்பற்றுபவர்கள் அத்வைதிகளாக இருக்கிறார்கள். வைகுண்டரை பின்பற்றுபவர்கள் அய்யாவழி என்ற சமயத்தை பின்பற்றுகிறார்கள்.ஆகவே குறைந்தபட்டம் தமிழ்நாட்டில் உள்ளவர்களை கூட சைவம்,வைணவம் என்ற இரண்டு பிரிவுக்குள் கொண்டுவர முடியாது. சிவனை வழிபடுபவர்கள் எல்லோரும் சைவர்கள்,கிருஷ்ணரை வழிபடுபவர்கள் எல்லோரும் வைணவர்கள் என்று நினைத்தால் அது தவறு. சைவசமயத்தின் ஆச்சார்யர்கள் உருவாக்கிய கோட்பாடுகளை பின்பற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள்தான் சைவர்கள். அதேபோல் வைணவ சமய ஆச்சார்யர்களின் கோட்பாடுகளை பின்பற்றி நடப்பவன்தான் வைணவன். இஸ்கான் என்ற ஒரு பிரிவு இருக்கிறது.இவர்கள் வைணவ கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள் அல்ல.அவர்களுக்கென்று தனி சித்தாந்தம் உள்ளது. பிரம்மகுமாரிசங்கம் போன்ற பல சமயங்கள் உள்ளன.இவர்களின் வழிபாடுகள் சடங்குகள் போன்றவை சைவ மற்றும் வைணவ சமயத்தை சார்ந்தவை அல்ல. தமிழ்நாட்டில் மிக குறைவாகவே சமணர்கள் இருந்தால்கூட அவர்களை சைவத்திற்குள்ளோ,வைணவத்திற்குள்ளோ சேர்க்க முடியாது.
-
இந்திய அரசியல் அமைப்பு சட்டதின்படி எது இந்துமதம்? இந்தியாவில் தோன்றிய அனைத்தும் இந்துமதம்.அது சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் சரி, பெரிய வழிபாடுகளாக இருந்தாலும் சரி,அத்வைதமாக இருந்தாலும் அனைத்தும் இந்துமதம்தான். சிலருக்கு இந்துமதம் என்று கூறுவது பிடிப்பதில்லை. இந்து சமயம் என்று கூறுங்கள் என்கிறார்கள். நல்லது. சமயம் என்ற வார்த்தையை இந்தியாமுழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்துவார்களா?
-
இந்துமதம் என்பதற்கு சிறு விளக்கம். இந்தியாவில் தோன்றிய மதம். இதுதான் இந்தியாவின் மதம். இந்தியாவில் பல மொழிகளை மக்கள் பேசினாலும், பல கலாச்சாரத்தை பின்பற்றினாலும் நமக்குள்ள ஒரே ஒற்றுமை நாம் பின்பற்றும் மதம் இந்தியாவில் தோன்றிய மதம்.இந்த அடிப்படையில் ஒன்றுபடலாம்.
-
இந்தியாவில் தோன்றிய மதங்களை பின்பற்றிய அனைவரும் ஒரேபோல் பிறநாட்டினரால்,பிறநாட்டு மதங்களை பின்பற்றுபவர்களால் கொடுமையை அனுபவித்தார்கள்.
-
முஸ்லீம் அரசர்கள் இந்துக்களை காபிர்கள்(அல்லாவின் எதிரிகள்) என்று கூறி கொன்று குவித்தார்கள். கோடிக்கணக்கில் உயிரிழந்த அவர்களின் உயிருக்கு யார் பதில் சொல்லப்போகிறார்கள்?
-
கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு சலுகைகளும், மற்றவர்களுக்கு கொடுமைகளும் இழைக்கப்பட்டன.அதை மூடிமறைக்க நினைக்கிறீர்களா?
-
இந்துக்கள் என்ற பெயரில்தான் நமது முன்னோர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அதே பெயரில்தான் நாம் எழுர்ச்சிபெற வேண்டும். இந்துக்கள் என்ற பெயரில் நாம் ஒன்றுபடாமல் போனால் அது நமது முன்னோர்களுக்கு செய்யும் அநீதி. நாம் வலிமைபெற்று உலகை வெற்றிகொள்ளும்வரை இந்தபெயரிலேயே தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால் வேறு பெயரை பரிசீலிக்கலாம்....
இந்தியாவில் முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகரித்தால் மற்ற மதங்கள் அழிந்துவிடும், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் அதிகரித்தால் இந்துமதம் களவாடப்படும்,இந்து பெயர்கள் மாற்றம்பெற்று அவர்களால் பயன்படுத்தப்படும். உதாரணமாக திருள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூறுகிறார்களே, வேதம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தம் என்று கூறுகிறார்களே, தேர்இழுத்தல்,வாகன பவனி,கொடிமரம் போன்ற பலவற்றை திருடி பயன்படுத்துகிறார்களே அதேபோல். இந்து ஊர்கள் பெயர் மாற்றம் பெறும் உதாரணமாக ராமன் துறை என்று இருந்த ஊர் இரமயன்துறை என்று மாற்றம் பெற்றதுபோல. கன்னியாகுமரி கன்னிமேரி என்ற மாற்ற வேண்டும் என கோரியதுபோல. இந்துக்களின் பெயர்கள்,பண்டிகைகள்,வழிபாடுகள்,சடங்குகள் அனைத்தையும் திருடிவிட்டு,ஏசுகிறிஸ்துதான் இந்த நாட்டின் முக்கிய தெய்வம் என்னும் நிலையை கொண்டுவந்துவிடுவார்கள்
-
நமக்குள் முதலில் ஒற்றுமை இருக்க வேண்டும். இந்தியாவில் தோன்றிய மதங்களை பின்பற்றும் நாம் நமக்குள் பிளவுபட்டால் வேற்று நாட்டில் பிறந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும்.நமக்கு இந்த உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு ஒரு இடம் வேண்டும். காஷ்மீர் போன்ற பகுதிகளில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததால் அங்கு இந்துக்கள் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்ததால் அவர்களுக்கான உரிமைகள் குறைந்துகொண்டே வருகிறது. இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணி்ககை குறைந்தால் நமது சந்ததிகள்இந்தியாவில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டடுவிடும்.
-
பல நாடுகளில் லிங்க வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று ஒருவர் கூறினார். அப்படியானால் அந்த நாடு அவர்களின் தாய்நாடாக இருந்திருக்கம். இன்று அவர்கள் எங்கே? உயிருக்கு பயந்துமதம் மாறியிருப்பார்கள் அல்லது கொல்லப்பட்டிருப்பார்கள். இதே நிலை இந்தியாவில் வராமல் இருக்கவேண்டுமானால் இந்தியாவில் இந்துமதம் வளர்ச்சியடைய வேண்டும்.
-
இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன.இதில் ஏதாவது ஒருமொழிஉயர்வானது என்று கூறினால் மற்றவர்கள் விடுவார்களா? மாட்டார்கள். அதேபோல் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மதத்தை உயர்வானது என்று கூறினால் மற்ற மதத்தை பின்பற்றுபவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்கள். சைவமாக இருந்தாலும் சரி,வைணவமாக இருந்தாலும் இந்தியாவில் தோன்றிய எந்த மதமாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் சமஉரிமையும்.சுதந்திரமும் உண்டு. மற்றவர்களைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.
-
எப்படி இந்தியாவற்கு ஒரு அரசியல் அமைப்பு இருக்கிறதோ,அதேபோல் அனைத்து மதங்களுக்குமான ஒரு மதஅமைப்புதான் இந்துமதம். அது என்ன சொல்கிறது? எந்த மதமும் மற்ற மதங்களைவிட உயர்ந்ததும் அல்ல தாழ்ந்ததும் அல்ல. யாருக்கு எந்த மதத்தை பின்பற்ற விருப்பம் உள்ளதோ அதை பின்பற்ற சுதந்திரம் உள்ளது. யாருக்கு எந்த வழிபாடு பிரியமானதோ அந்த வழிபாட்டை அவர்கள் செய்யலாம். ஆனால் இந்த சுதந்திரம் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கம்வரை ஏற்றுக்கொள்ளப்படும்
துறவிகள் காட்டிலோ அல்லது மடங்களிலோதானே இருக்க வேண்டும். மக்களிடம் அவர்களுக்கு என்ன வேலை?
இந்த கேள்வி பொதுவாக பலர் கேட்கும் கேள்விதான். ஞானம் பெற வேண்டுமானால் மனிதர்களின் தொடர்பைவிட்டு
புத்தரைபோல தனி இடத்திற்கு சென்று வாழவேண்டும்.பல ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சியின் காரணமாக ஞானம் கிடைக்கும். அவ்வாறு ஞானம் கிடைக்கும்வரை பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.ஒருவேளை இந்த பிறவியல் ஞானம் கிடைக்காமலும் போகலாம். சிலருக்கு விரைவில் ஞானம் கிடைத்துவிடும்.அதற்கு குருவின் அருள் காரணமாக இருக்கலாம் அல்லது முற்பிறவிகளில் அவர்கள் செய்த தவத்தின் காரணமாக இருக்கலாம்.அவ்வாறு ஞானம் கிடைத்த பின் அதில் நிலைத்திருக்க வேண்டுமா அல்லது அந்த ஞானத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமா என்பது அவர்களது விருப்பம்
-
சிலர் ஞானம் பெற்ற பிறகும் சில ஆண்டுகள் தனிமையிலேயே வாழ்ந்து உடலைவிட்டு விட்டு முக்தி அடைவார்கள். சிலர் ஞானம் பெற்ற பிறகு அந்த ஞானத்தை மக்களுக்கு கொடுப்பதற்காக மக்களிடம் வருவார்கள். மக்கள் எல்லோரும் ஞானம் பெற தகுதி உடையவர்களாக இருக்கமாட்டார்கள்.பலர் பல படிகளில் இருப்பார்கள்,அவர்களுக்கு ஏற்றாற்போல உபதேசமோ,அல்லது வழிகாட்டவோ செய்வார்கள்.
-
அவ்வாறு மக்களிடம் வந்து உபதேசம் செய்தாலும்,அவர்கள் மற்றவர்களை போல இருக்கமாட்டார்கள்.இந்த உலகத்தில் மக்கள் சிக்கிக்கிடக்கிறார்கள்,ஆனால் அந்த துறவிகள் அப்படியல்ல.அவர்கள் ஜீவன்முக்தர்கள்,இந்த உலகத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள்.இவ்வாறு மக்களிடம் வந்து உபதேசம் செய்யும் துறவிகளை சிலர் தவறாக விமர்சிப்பார்கள்.அவ்வாறு தவறாக விமர்சிப்பவர்கள், பாவம் உண்மை அறியாதவர்கள்.
-
உலக வாழ்க்கையை விட்டு விலகி முதலில் ஞானம்பெற வேண்டும்.பிறகு மக்களிடம் வந்து அவர்களுக்கு சேவைசெய்ய வேண்டும். இது ஒரு பாதை.
-
இன்னொரு துறவு பாதை உள்ளது.அதை சுவாமி விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.துறவிகளே முதலில் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.அந்த சேவையின் மூலம் உங்களை படிப்படியாக தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்,பிறகு ஞானம் கிடைக்கும்.அதன்பிறகு மக்களிடமிருந்து விலகிவிடுங்கள்,உலகத்திற்கு மீண்டும் வரத்தேவையில்லை.முக்தி பெற்றுவிடலாம்.
-
இந்த பாதை மெதுவான பாதை இந்த பாதை வழியாக சென்று ஞானம் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்,இருந்தாலும் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.அவை என்ன?
-
1.. பல துறவிகள் ஓரிடத்தில் சேர்ந்து வாழலாம் அதனால் ஒரேயடியாக தனிமை வாழ்க்கைக்கு செல்லாமல் படிப்படியாக முன்னேறலாம்.
-
2. சிறுசிறு ஆசைகள் எதாவது இருந்தால் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
-
3.மூத்ததுறவிகளின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்
-
4. சாஸ்திரங்களை படித்து நமது சந்தேகங்களை போக்கிக்கொள்ளலாம்
-
5. மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நமது பாவத்தை போக்கிக்கொள்ளலாம்
-
6. வீட்டில் உள்ளவர்கள் தேவைப்பட்டால் வந்து பார்த்து செல்லலாம் . இன்னும் பல நன்மைகள் உள்ளன.
-
இங்கே இரண்டு விதமான துறவிகள் பற்றி பார்த்தோம் 1. முதலில் தனிமையான வாழ்க்கைக்கு சென்று ஞானத்தை பெற்ற பிறகு மக்களிடம் வந்து சேவை செய்பவர்கள். 2. மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் படிப்படியாக தனிமை வாழ்க்கைக்கு தயார்படுத்திக்கொண்டு,ஞானத்தை பெறுவது
-
மக்களிடம் பழகிக்கொண்டிருக்கும் இந்த இரண்டு வகையான துறவிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.
-
1. ஞானம் பெற்றவர்கள் பெண்களிடம் பழகினாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஞானம் பெறாதவர்கள் பெண்களிடமிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும்.
-
2. ஞானம் பெற்றவர்கள் அனைவரையும் சமமாக நேசிப்பார்கள். ஞானம் பெறாதவர்களுக்கு வேறுபாட்டு உணர்ச்சி இருக்கும்.சிலரை நேசிப்பார்கள்,சிலரை வெறுப்பார்கள்
-
3.ஞானம் பெற்றவர்களால் தனிமையிலும் வாழமுடியும்,மக்களோடு சேர்ந்தும் வாழமுடியும். ஞானம் பெறாதவர்களால் இந்த இரண்டும் முடியாது.அவர்கள் தங்களை போன்ற துறவிகளுடன் மட்டுமே சேர்ந்து வாழமுடியும்
-
4.ஞானம் பெற்றவர்கள் ஆச்சார்யர்கள். உணர்வு கடந்த நிலையை அடைந்தவர்கள். அவர்கள் சுயமாக கருத்துக்களை சொல்லும் ஆற்றல் படைத்தவர்கள். ஞானம் பெறாதவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை மேற்கோள் சொல்லி பேசுவார்கள்.
-
5.ஞானம் பெற்றவர்களை மக்கள் பின்தொடர்ந்து செல்லலாம்,அது அவர்களுக்கு நன்மை செய்யும். ஞானம் பெறாதவர்களை மக்கள் பின்தொடர்ந்து செல்லக்கூடாது.அது அவர்களுக்கு நன்மை தராது
-
இன்னும் இதேபோல் பல வேறுபாடுகளை காட்ட முடியும்.
1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது
-
2. பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும். பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?
-
3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)
-
4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது
-
5.ஆனால் பிறப்பால் வந்த ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது
-
6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது
-
7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை
-
8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.
-
9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்? இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எனனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.
-
இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.
-
சாரம்சம்
-
1.ஒரே ஜீவன்தான் பல பிறவிகளில் பிறந்தாலும் ஜீவன் பிராம்மணன் அல்ல.2.எல்லோரது உடலும் ஒரேபோல் இருப்பதால் உடல் பிராம்மணன் அல்ல.3.எல்லா ஜாதியிலும் ரிஷிகள் பிறப்பதால்.பிறப்பால் ஒருவன் பிராம்மணன் அல்ல.4.எல்லா ஜாதியிலும் அறிவாளிகள் இருப்பதால் அறிவை வைத்து ஒருவனை பிராம்மணன் என்று கூறமுடியாது. 5. செய்யும் தொழிவை வைத்து பிராமணன் என்று கூறமுடியாது. ஏனென்றால் அந்த தொழிலை எல்லோராலும் செய்ய முடியும்.6.தான தர்மங்கள் எல்லோரும் செய்கிறார்கள்.அதனால் அதைவைத்தும் கூறமுடியாது 7. பிரம்மத்தை உணர்ந்து,உடல் இருந்தாலும் உடலற்ற நிலையில் ஜீவன்முக்தனாக வாழ்பவன்தான் பிராமணன்.
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்செயல் உண்டு என்பது கர்மாதியரி.தற்கால விஞ்ஞானமும் இதைதான் சொல்கிறது. முன்பு ஒருவனுக்கு நன்மை செய்தால் எதிர்காலத்தில் அதற்கு சமமான நன்மை நடக்கும்.முன்பு தீமை செய்தால் அதற்கு சமமான தீமை பிற்காலத்தில் நடக்கும். இவ்வாறு பிற்காலத்தில் நடக்கும் நிகழ்வை விதி என்கிறோம். ஒருவன் வாழ்க்கையில் மிகவும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தால் அது அவனது விதி என்கிறார்கள். அதேபோல் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்தால் அது அவனது விதி என்று சொல்வதில்லை.ஆனால் அதுவும் அவனது விதிதான். இந்த விதியை உருவாக்கியது யார்? நாம் தான். முற்காலத்தின் விதைத்ததை தற்போது அறுவடை செய்கிறோம்
-
இதிலிருந்து இனனொரு அற்புதமான கருத்தும் கிடைக்கிறது என்ன வென்றால், இன்று நாம் துன்பப்படுவதற்கு காரணம் நமது முந்தைய செயல்கள் என்றால், நாளை நாம் துன்பப்படாமல் இருக்க வேண்டுமானால்,இன்று நல்ல செயலை செய்ய வேண்டும் என்ற கருத்தும் வருகிறது. ஆகவே இப்போது நாம் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்,நாளை எப்படி இருக்க வேண்டும் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.அது இன்றைய நமது செயல்களைப் பொறுத்து அமைகிறது. இன்று நல்ல செயல்களை செய்தால் நாளை நன்றாக இருப்போம்.ஆகவே நமது விதியை வேறு யாரோ உருவாக்கவில்லை. நாம் தான் உருவாக்குகிறோம்.
-
உங்கள் விதியை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
Copyright © 2020 hindumatham.in - All Rights Reserved.
swami vidyananda-Guruji