1.இந்துமதம் என பெயர் வரக்காரணம்
..
வடமொழியில் ஹிந்து என்பதை தமிழில் இந்து என்று அழைக்கிறோம்
தமிழில் இந்து என்றால் நிலா என்று ஒரு அர்த்தம் உள்ளது.
பாரசீகர்கள் பாரததேசத்தை சிந்துநதியை மையப்படுத்தி அழைத்தார்கள்.
சிந்துஸ்தான் என்று அழைத்தார்கள் பின்பர் அது மருவி ஹிந்துஸ்தான் என்று ஆனது.
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,கஜகிஸ்தான் போன்ற பெயர்களில் வரும் ஸ்தான் என்பது ஸ்தலம்(இடம்) என்ற வடமொழியின் மருவு ஆகும்.ஆங்கிலத்தில் ஸ்டான்ட் என்று மருவியுள்ளது.
..
சிந்து நதியின் மறுகரையில் வாழ்ந்த மக்களை அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஹிந்துஸ்தான்.
இந்த வார்த்தை பிற்காலத்தில் பாரதம் முழுவதும் வாழ்ந்த மக்களை குறிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.
.
வெளிநாட்டு மக்களைப்பொறுத்தவரை பாரதத்தில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்.
ஹிந்துக்கள் பின்பற்றிய மதம் ஹிந்துமதம்.
.
பாரசீகர்கள்,அரேபியர்கள்,யூதர்களுக்கு ஒரு மதம்தான் இருந்தது. பிறமதங்கள் வளர்ச்சியடையாமல் நசுக்கப்பட்டுவிட்டன.
ஆனால் பாரததேசத்தில் பல மதங்கள் பலரால் பின்பற்றப்பட்டு வந்தது.
அவைகள் பற்றி பாரசீகர்களுக்கு தெரியாது. பொதுவாக அனைவரையும் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் பின்பற்றும் மதத்தை ஹிந்துமதம் என்றும் அழைத்தார்கள்.
..
பாரசீகர்களின் பார்வையில் புத்தமதம்,சமண மதத்தை பின்பற்றியவர்களும் ஹிந்துக்கள்தான்.
ஆப்கானிஸ்தானில் அந்த காலத்தில் புத்த மத்தினரே அதிகம் வாழ்ந்தார்கள்.முஸ்லீம்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒரு மலை இருக்கிறது.அந்த மலைக்கு ஹிந்துகுஷ் என்றே பெயர்.ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட மலை என்று பெயர்.
..
தற்போது பாரசீகர்கள் மிகசிறிய அளவில்தான் இருக்கிறார்கள்.மற்றவர்கள் முஸ்லீம்களாக மதம்மாறிவிட்டார்கள்.ஆனால் ஒரு காலத்தில் ஆசியாவின் பெரும்பகுதியை பாரசீகர்கள் ஆண்டுவந்தார்கள்.
பல பாரசீக அறிஞர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்கள்
..
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் பாரததேசத்தின் பெயர் ஹிந்துஸ்தான்.
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்
பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானின் மதம் ஹிந்துமதம்
..
முஸ்லீம்கள் ஹிந்துஸ்தானிற்குள் வந்தபோது அவர்கள் பார்வையில் எல்லோருமே அவர்களுக்கு எதிரிகளாகவும்,காபிர்களாகவும், கொலைசெய்யப்பட வேண்டிவர்களாகவும்,அவர்களது வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட வேண்டிவையாகவுமே தெரிந்தது.அவர்களது மதம் அதைத்தான் போதிக்கிறது
எனவே முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவேண்டும்,அவர்கள் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் ஹிந்துஸ்தானிற்குள் வந்தார்கள்.
அவர்களால் ஹிந்துஸ்தானில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். புத்தமதம்,சமணமதம்,வேதமதத்தை பின்பற்றிவர்கள் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள்.
-
புத்த மதத்தினர் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர்.திபெத்,பூடான்,இமாச்சல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கு தப்பிச்சென்றார்கள்.
பிராமணர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர் தென்இந்தியா பக்கம் வந்தார்கள்.
இது தவிர உயிருக்கு பயந்து மதம் மாறியவர்கள் ஏராளம்
.
பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டார்கள்.
மதம் மாற மறுத்த ஆண்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.
பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.
ஹிந்துக்களின் தலைகள் மலைகள் அளவுக்கு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டன.
..
ஐநூறு ஆண்டுகால முகமதியர்களின் கொடுமையால் வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இந்துக்களே இல்லை.
அதன் பின்னர் வடஇந்தியாவில் பல்வேறு மகான்கள் தோன்றினார்கள்.மதம்மாறியவர்களை மீண்டும் படிப்படியாக தாய் மதத்திற்கு கொண்டு வந்தார்கள்.அவர்களின் கடின முயற்சியால் ஓரளவு ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
..
ஹிந்துமதம் என்ற பெயரை நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை.அன்னியர்கள் நம்மீது திணித்த வார்த்தை இது. எனவே இதை நீக்க வேண்டுமா?
.
சைவர்களுக்கு சைவன் என்ற பெயர் இருக்கிறது. வைணவர்களுக்கு வைணவன் என்று பெயர் உள்ளது. சீக்கியர்களுக்கு சீக்கிய மதம் உள்ளது. இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.அப்படி இருக்கும்போது ஹிந்துமதம் என்ற பெயரை ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
.
ஹிந்துமதம் என்ற ஒரு தனியான மதம் இல்லாதபோது அந்த பெயரை ஏன் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
.
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி.
காபிர்கள் என்ற முத்திரையோடு கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
அவர்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை.
..
இந்த சம்பவத்தை நீங்கள் உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு கும்பல் கையில் வாளுடன், அல்லாகு அக்பர் என்ற முழக்கத்துடன் வந்து வீட்டில் உள்ள ஆண்களைக்கொன்று,பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி,அவர்களையும்,குழந்தைகளையும் கையில் விலங்கு பூட்டி மிருகங்களை இழுத்து செல்வதுபோல சென்று வெளிநாட்டுசந்தைகளில் வியாபாரம் செய்யப்படுதை உங்கள் மனக்கண்முன் கொண்டுவரவேண்டும்.
அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
தன் கண்முன் கணவன் கொலை செய்யப்படுவதையும்,குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்படுவதையும், வலுக்கட்டாயமாக பாலியல் உறவுக்கு உட்படுத்துவதையும் சந்திக்கும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்.
இவைகளை மறக்க வேண்டுமா?
ஒன்றிரண்டுபேர் அல்ல சுமார் 500 ஆண்டுகளுக்கும்மேலாக கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த வரலாறுகளைப்பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
..
இறந்தவர்களின் சாபம் நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.
அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை வைத்துக்கொள்ளலாம்.
அதற்கு முன்பு யாராவது ஹிந்து என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களின் சாபம் அவர்களை தண்டிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அது மட்டுமல்ல இந்து என்ற பொதுப்பெயரிலிருந்து விலகி தனியாக செல்லும் மதங்கள் படிப்படியாக அழிவையே சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
2. பாரதத்தின் எல்லைகள் எவை?
..
பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா?
பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பிற்குள் பல சிறு தேசங்கள் இருந்தன.மகாபாரத யுத்தத்தில் கலந்துகொண்ட அரசர்களும் அவர்களது தேசங்கள் பற்றியும் பாரதம் கூறுகிறது.
..
அப்படியானால் ஒரே நாடு.ஒரே அரசர் இல்லையா?
உண்டு.
இந்த பாரத தேசத்தை முழுவதும் ஆளும் தகுதி உள்ளவன் சக்கரவர்த்தி.அஷ்வமேத யாகம் என்ற யாகம் நடத்தக்கூடிய அளவுக்கு யாருக்கு வலிமை உண்டோ அவர்தான் பாரதம் முழுவதற்கான சக்கரவர்த்தி.
யுதிஷ்டிரர் உட்பட பல அரசர்கள் அஷ்வமேத யாகம் புரிந்து சக்கரவர்த்திகளாக ஆகியுள்ளார்கள்.
-
பாரதம் என்ற மிகப்பெரிய நாடு.அதற்குள் பல சிறிய நாடுகள்.
பாரதத்தை ஆள ஒரு சக்கரவர்த்தி. சிறிய தேசங்களை ஆள பல அரசர்கள்.
இது தான் பண்டைய இந்தியா
..
திருதராஷ்டினன் சஞ்சயனிடம் கேட்டான்
-
எது பரதனின் பெயரால் அழைக்கப்படுகிறதோ, அப்படிப்பட்ட இந்த கண்டத்தை - பாரதக்கண்டத்தைக் குறித்த உண்மையை (ஓ! சஞ்சயா) எனக்குச் சொல்வாயாக
நீ புத்திக்கூர்மையுள்ளவன் என்பதால், இதை எனக்குச் சொல்வாயாக."
சஞ்சயன் கூறத்தொடங்கினான்
-
நான் இப்போது உமக்கு, பரதனின் பெயரால் அறியப்படும் நிலப்பகுதியைக் {பாரதக்கண்டத்தைக்} குறித்துச் சொல்கிறேன்.
நான் குறிப்பிடப்போகும் மாகாணங்களின் பெயர்களைக் குறித்துக் கேளும்.
குரு-பாஞ்சாலம், சால்வம், மாத்ரேயம், ஜாங்கலம், சூரசேனம், கலிங்கம், போதம், மாலம், மத்ஸ்யம், சௌவல்யம், குந்தலம், காசிகோசலம், சேதி, கரூசம், போஜம், சிந்து, புளிந்தகம், உத்தமம், தசார்ணம், மேகலம், உத்கலம், பாஞ்சாலம், கௌசிஜம், நைகபிருஷ்டம், துரந்தரம், சோதம், மத்ரபூஜிங்கம், காசி, அதிகாசி {அபரகாசி}, ஜடரம், குகுரம்,
ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, குந்தி, அவந்தி, தசார்ணம், அதிகுந்தி {அபரகுந்தி}, கோமந்தம், மந்தகம், சண்டம், விதர்ப்பம், ரூபவாஹிகம், அஸ்வகம், பான்சுராஷ்ட்ரம், கோபராஷ்ட்ரம், கரீதியம், அதிராஜ்யம், குலாத்யம், மல்லராஷ்டிரம், கேரளம், வாரத்ராஸ்யம், ஆபவாஹம், சக்ரம், வக்ரதபம், சகம், விதேகம், மகதம், ஸ்வக்ஷம், மலயம், விஜயம், அங்கம், வங்கம், களிங்கம், யகிருல்லோமம், மல்லம், சுதேளம், பிரனராதம், மாஹிகம், சசிகம், பாஹ்லீகம், வாடதானம், ஆபீரம், காலஜோஷகம், அபராந்தம், பராந்தம், பாநாபம், சர்மமண்டலம், அடவீசிகரம், மகாபூதம்,
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உபாவிருத்தம், அநுபாவிருத்தம், சுராஷ்ட்ரம், கேகயம், குதம், மாஹேயம், கக்ஷம் சமுத்ரநிஷ்குடம், ஆந்திரம்,
மேலும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையில் இருக்கும் பல மலை நாடுகள், மலைகளின் அடிவாரத்திலும் வெளிப்புறத்திலும் உள்ள பல நாடுகள், அங்கமலஜங்கள், மானவர்ஜகம், பிராவிருஷேயம், பார்க்கவம்,
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புண்ட்ரம், பர்க்கம், கிராதம், சுதேஷ்ணம், யாமுனம், சகம், நிஷாதம் {நிஷதம்}, ஆனர்த்தம், நைருதம், துர்க்காலம், பிரதிமத்ஸ்யம், குந்தலம், குசலம், தீரக்ரஹம், ஈஜிகம், கன்யககுணம், திலபாரம், சமீரம், மதுமாதம் {மதுமான்}, சுகந்தகம், காஸ்மீரம், சிந்துசௌவீரம், காந்தர்வம், தர்சகம், அபீசாரம், உதூலம், சைவலம், பாஹ்லிகம், தார்வி, வானவம்தர்வம், வாதகம், அமாரதம், உரகம், பஹுவாத்யம், கௌரவ்யம், சுதாமானம், சுமல்லிகம், வத்ரம், கரீஷகம், களிந்தம், உபத்யகம், பதயானம், குசபிந்து, கச்சம், கோபாலகக்ஷம், குருவர்ணகம், கிராதம் பர்ப்பரம், சித்தம், வைதேஹம், தாம்ரலிப்தகம், ஔண்ட்ரம், பௌண்ட்ரம், சைசிகடம், பார்வதீயம் ஆகியன இருக்கின்றன.
மேலும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தெற்கில் பிற நாடுகளும் இருக்கின்றன. அவை, திராவிடம், கேரளம், பிரச்யம், மூஷிகம், வனவாசிகம், கர்நாடகம், மஹிஷகம், விகல்பம், மூஷகம், ஜில்லிகம், குந்தலம், சௌன்ருதம், நளகானனம், கான்குட்டகம், சோழம் {சோழ நாடு}, மாலவயகம், சமங்கம், கனகம், குகுரம், அங்கார-மாரிஷம், திவஜினி, உத்ஸவம், ஸங்கேதம், திரிகர்த்தம், சால்வசேனம், வகம், கோகரகம், பாஷ்திரியம், லாமவேகவசம், விந்தியசுலிகம், புளிந்தம், வல்கலம், மாலவம், வல்லவம், அதிவல்லவம் {அபரவல்லவம்}, குளிந்தம், காலவம், குண்டௌகம், கரடம், மிருஷகம், தனபாலம், சனீயம், அளிதம், பாசிவாடம், தநயம், சுலன்யம், ரிஷிகம், விதர்ப்பம், காகம், தங்கணம், அதிதங்கணம் {அபரதங்கணம்} ஆகிய நாடுகள் இருக்கின்றன.
மேலும் இங்கே(பாரதகண்டத்தில்), சூத்திர-ஆபீரம், தரதம், காஸ்மீரம், பட்டி, காசீரம், ஆத்ரேயம், பரத்வாஜம், ஸ்தனபோஷிகம், புஷோகம், களிங்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த வேடர்கள் வசிக்கும் நாடு, தோமரம், ஹன்சமார்க்கம், கரமஞ்சகம் ஆகியவையும் இருக்கின்றன. இவையும், இன்னும் பிற நாடுகளும் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கின்றன
..
(மகாபாரதம்-பீஷ்ம பர்வம்)
..
முற்காலத்தில் பாரததேசம் முழுவதும் செழிப்பான காடுகளால் நிறைந்திருந்தது.
எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. தற்காலத்தைப்போல போக்குவரத்து வசதிகள் இல்லாததால்,ஒவ்வொரு பகுதியும் பிற பகுதிகளிலிருந்து சற்று தனித்தே இருந்தது.
..
காசி,ரிஷிகேஷ்,ராமேஸ்வரம் போன்ற பல புண்ணிய ஸ்தலங்கள் பாரத தேசம் முழுவதும் காணப்படுகிறது.
இந்த இடங்களுக்கு செல்லும் யாத்ரீகர்கள்,துறவிகள் போன்றோர் சுதந்திரமாக அனைத்து நாடுகளையும் கடந்துசெல்ல அனுமதிக்கப்படார்கள்.அத்துடன் அனைத்து நாடுகளிலும் அவர்கள் விருந்தினராக கருதி உபசரிக்கப்பட்டார்கள்.
..
பாரதகண்டம் முழுவதும் ஒரேவிதமான கலாச்சாரம் இருந்ததே இதற்கு காரணம்
3.இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்.
-
இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒவ்வொரு மதத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மதங்கள் புதிதாக தோன்றுகின்றன.
பெரிய மதங்கள் பல பிரிவுகளாக பிரிவதுண்டு,
சைவம்,வைணவம் போன்ற மதங்கள் பல பிரிவுகளாக பிரிந்து வளர்ந்தது
அதேபோல காலப்போக்கில் பல மதங்கள் ஒன்றிணைந்து ஒரே மதமாக உருவாதும் உண்டு.
ஆதிசங்கர் வாழ்ந்த காலத்தில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட 78 மதங்கள் இருந்தன.
ஆதி சங்கரர் அவைகளை ஒன்றிணைத்து ஆறு மதங்களுக்குள் கொண்டு வந்தார்.
பல மதங்கள் காலப்போக்கில் அழிந்துபோனதும் உண்டு
..
வேதத்தை சாராத மதங்களும் இந்தியாவில் இருந்தன.அவைகளில் முக்கியமானது புத்தமதம்,சமணமதம்
இந்தியாவில் எண்ணற்ற மதங்கள் தோன்றியுள்ளன.இனியும் பல மதங்கள் தோன்றும் என்பதைப் பார்க்கிறோம்.
..
எண்ணற்ற மதங்கள் புதிதாக தோன்றும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுவதும் இயல்பானதுதான்.
வெளிநாடுகளில் இப்படி புதிய மதம் தோன்றும்போது,தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறந்துபோவார்கள்.
இந்தியாவிலும் ரிக் வேத காலத்திலேயே இந்த பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்துவிட்டது.
அந்த காலத்தில் இதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுதான் “ஏகம் சத் விப்ரா பகூதா வதந்தி”
இறைவன் ஒருவன்தான்.மகான்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைக் காட்டுகிறது.
எல்லா நதிகளும் சமுத்திரத்தை சென்றடைந்து அதில் ஒன்றாகிவிடுகிறது.
எனவே மதத்தின் பெயரில் யாரும் சண்டையிடத்தேவையில்லை.
எல்லா பாதைகளும் அந்த ஒரே இறைவனையே சென்று சேர்கின்றன.
என்பதை ரிஷிகள் ஆதி காலத்திலேயே கண்டு,மக்களிடம் போதித்துள்ளார்கள்.
எனவே இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒன்றுமையாக வாழ முடிகிறது.
..
இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையை காட்டினாலும்,
சில அடிப்படைகள் அனைத்திலும் ஒன்றுபோலவே இருக்கின்றன.
இவைகள் எக்காலத்திலும் மாறுவதில்லை.
உதாரணமாக மறுபிறப்புக்கொள்கை,கர்மகோட்பாடு,முக்தி,பிறருக்கு சேவை செய்வது,உயிர்களிடம் கருணை,நற்குணங்கள்,விருந்தினர்களை உபசரிப்பது,உயிர்களைக் கொல்லாமை போன்ற பலவற்றை கூறலாம்.
இந்த தர்மம் என்பது எப்போதுமே மாறுவதில்லை
ஒரு மனிதன் மதம் மாறலாம்.ஆனால் தர்மங்கள் மாறுவதில்லை.
உதாரணமாக உயிர்களைக்கொல்வது பாவம் என்ற தர்மம் நிரந்தரமான உண்மை.
எந்த மதத்தை ஒருவன் பின்பற்றினாலும் இது பொருந்தும்.
பொய் சொல்வது பாவம் என்ற தர்மம் எல்லா மதத்திற்கும் பொதுவானது.
எனவே எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தோற்றினாலும், இந்த தர்மங்கள் என்றும் நிலையாக இருக்கின்றன.
எனவே இதற்கு சனாதன தர்மம் என்று பெயர்
இந்தியாவில் ஒருவன் ஒரு மதத்தைவிட்டு இன்னொரு மதத்திற்கு மாறினால்கூட பாவமாக கருதப்படுவதில்லை.
அவனுக்கு பிடித்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளான் என்று விட்டுவிடுகிறோம்.ஆனால் தர்மத்தை விட்டுவிட்டால் அது பாவமாகக் கருதப்படுகிறது.
..
இந்த சனாதன தர்மம் என்பதைத்தான் இந்துமதம் என்று அழைக்கிறோம்.
சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,புத்தம்,சீக்கியம் என்று எத்தனை மதங்கள் இருந்தாலும்,இவைகள் அனைத்தும் சனாதன தர்மத்திற்கு உட்பட்டவைதான்.
சனாதன தர்மம் நிரந்தரமானது.தொன்றுதொட்டு வருவது.
இவைகளை எந்த மனிதனும் தோற்றுவிப்பதில்லை.
பொய் சொல்வது பாவம்,உயிர்களைக்கொல்வது பாவம் என்பதை ஒரு மனிதன் கண்டுபிடிக்கத்தேவையில்லை.
இவைகள் நிரந்தரமான உண்மைகள்.
எனவே இந்துமதம் என்பது மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல.
அது காலம் காலமாக இருந்துவருகின்றன தர்மம்
..
இந்தியாவில் தோன்றிய,இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு வார்த்தைதான் சனாதன தர்மம் அல்லது இந்துமதம்.
மதம் என்றால் என்ன? நம்பிக்கை
இந்தியாவின் நம்பிக்கை என்ன?
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு.
இதுதான் ஹிந்துமதம்.
ஹிந்து மதம் என்ற உடன் தனியான வழிபாடு,சடங்குள்,கடவுள் என்று எதுவும் இல்லை.
இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு என்று யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்.
அவர்கள் சிவனை வழிபடலாம்,விஷ்ணுவை வழிடலாம்,காளியை வழிபடலாம், மேலான ஒளியை வழிபடலாம் எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையால் ஹிந்துக்கள்.
-
எனது மதம்தான் உயர்ந்தது. எனது கடவுள்தான் உயர்ந்தவர். எனது பாதைதான் உயர்ந்தது.மற்றது எல்லாமே தாழ்ந்தது.மற்ற வழிபாடுகள் தாழ்ந்தது.பிற பாதைகள் தாழ்வானவை அல்லது தவறானவை என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.மூடநம்பிக்கை உடையவர்கள்.கொள்கை வெறி பிடித்தவர்கள்.அவர்களை நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டும்
-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹிந்து என்பது யாரைக்குறிக்கும்?
என்ற கேள்வி ஆட்சியல் இருந்தவர்களிடம் ஏற்பட்டது.
அப்போது அவர்கள் அதற்கு ஒரு தெளிவாக விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.
இந்தியாவில் வசிக்கும் மக்களில் முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் அல்லாத அனைவரும் ஹிந்துக்கள்.
இதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி யாரெல்லாம் ஹிந்துக்கள்?
முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் தவிர வேறு எல்லோரும் ஹிந்துக்கள்
-
ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவை நம்மால் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
அவர்களின் எண்ணங்களை இங்குள்ள அரசில்வாதிகள்மூலம் செயல்படுத்த நினைக்கிறார்கள்.
அதாவது சைவர்கள் ஹிந்துக்கள் அல்ல. வைணவர்கள் ஹிந்துக்கள் அல்ல. தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல.சிறு தெய்வங்களை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் அல்ல.ஹிந்துதமதம் என்பது பிராமணமதம்,அது இந்தியாவின் மதம் அல்ல,அது தமிழ்நாட்டின் மதம் அல்ல இதுபோல பொய் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுத்துள்ளார்கள்.
இது ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது
..
4. ஆரியர்கள்
..
முற்காலத்தில் மக்கள் காடுகளில் வசித்தார்கள்.எங்கெல்லாம் மக்கள் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் ஏதாவது ஒரு வழிபாடு நடந்துள்ளது.மதம் இல்லாத காலம் என்ற ஒன்று இல்லை.
காடுகளில் மனிதன் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே மதம் இருந்திருக்கிறது.
முற்காலத்தில் பாரத கண்டம் முழுவதும் காடுகளால் நிறைந்திருந்தது.அந்த காடுளில் பல்வேறு மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்கென்று தனியான வழிபாடுகளைக் கொண்டிருந்தது.
..
காடுகளிலிருந்து மனிதன் சமவெளியை நோக்கி பயணிக்கத் தொடங்கியபிறகு,
பல்வேறு குழுக்கள் ஒன்றிணைய ஆரம்பித்தன,வழிபாடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சிந்து நதியை மையமாக வைத்து வாழ்ந்த மக்கள் இயற்றிய ரிக்வேதம்தான் காலத்தில் மிகவும் பழமையானது.
இவர்கள் தங்களை ஆரியர்கள்.அதாவது ஒளிபெற்றவர்கள்,பண்பட்டவர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள்.
..
பல்வேறு இனங்கள் ஒன்று சேர்ந்து புதிய இனம் உருவாகிறது.
இனங்கள் ஒன்று சேர்வதும்,ஒன்று சேர்ந்த இனங்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பல இடங்களுக்கு பயணிப்பதும்,தங்கள் கருத்துக்களை பிறரிடம் பரப்புவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
வடஇந்தியாவில் அவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இனம்தான் ஆரியஇனம்
..
நாம் எதற்கு ஆரியர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்?
நமக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? நாம் ஆரியர்களா?
..
நாம் அனைவரும் ஆரியஇனத்திலிருந்து வந்தவர்கள் என்று நம்பத்தேவையில்லை.
ஆனால் நாம் பின்பற்றி வரும் வேதவழக்கங்கள் ஆரிய இனத்திலிருந்து வந்தவை.
அதனால் அதைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம்
ஆரியர்கள் உருவாவதற்கு முன்பும் சரி,அதற்கும் பிறகும் சரி இந்தியா முழுவதும் பல்வேறு இனமக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
மகாபாரதத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்த பல்வேறு இனமக்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் திராவிடநாடு இருப்பதைப்பற்றிய குறிப்புகளும் உள்ளது.தென்னிந்தியா முழுவதும் திராவிடநாடு என்று மகாபாரதம் கூறவில்லை. சோழம்,பாண்டியம்,சேரம்,கேரளம்,ஆந்திரம் போன்ற பல நாடுகளின் வரிசையில் திராவிடம் என்ற நாடு இருப்பதைப்பற்றி கூறுகிறது.(இந்துமதம்-வகுப்பு-2யை பார்க்கவும்)
..
ஆரியர்களைத்தவிர மற்றவர்கள் பண்படாத காட்டுவாசிகளாக வாழ்ந்து வந்தார்களா?
இல்லை.
எல்லா பகுதிகளிலும் மதங்கள் இருந்தன.வழிபாடுகள் இருந்தன
சிறுதெய்வ வழிபாடுகள்,குலதெய்வ வழிபாடுகள்,முன்னோர் வழிபாடுகள்,இயற்கை வழிபாடுகள் என்று பல வழிபாடுகள் இருந்துள்ளன.
ஆனால் மிக உயர்ந்த தத்துவங்கள் ஆரியர்களிடமிருந்தே மற்றவர்களுக்கு சென்று சேர்ந்தது.
ஆரியர்களுக்கு இந்த தத்துவங்கள் எங்கிருந்து கிடைத்தன?
தவத்தின் மூலம் இதனைப்பெற்றார்கள்.
..
ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தார்களா?
..
வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது.
ஆனால் மஹாபாரத காலத்திலேயே இது வற்றிச்சுருங்கி விட்டது.
..
சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலாற்றையே மாற்றிவிட்டது.
நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது,
வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!
-
ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது.
ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன.
..
அந்த காலத்தில் சிந்து,கங்கை,யமுனை,சட்லெஜ் நதிகள் பாய்ந்த இடங்களில் எல்லாம் மக்கள் வசித்துள்ளார்கள்.
ஆகவே ஆரியர்கள் சரஸ்வதி நதி பாயும் இடம் மட்டும் அல்லாமல் கங்கை நதி ஓடிக்கொண்டிருந்த இடங்களிலும் வாழ்ந்துள்ளார்கள்.
..
இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் பேசுகிறது(வனபர்வம்)
..
(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)
1998 மே11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது,
அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது.
அப்போது8000 முதல்14000 ஆண்டுப் பழமையான குடிநீர் பூமியின் கீழ் மட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.
இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:
கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலம் ஹரப்பா நாகரீகம் .
அதற்கும் முந்தைய நாகரீகம் அதாவது 10,000ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் சரஸ்வதி நதிதீர நாகரீகம் . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன.
பின்னர் அந்த நாகரீகம் படிப்படியாக அழிந்து பின்னர் சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் தோன்றியது.
-
ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன.
இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் ஐசடோப்புகளை ஆராய்ந்தனர்.
ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன.
ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.
..
நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.
.
இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.
மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது
சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)
.
ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது
ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகம்பத்தின் காரணமாக அழிந்துபோனது.பெரும் பகுதி பாலைவனங்களாக மாறிவிட்டன.
.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பது தெளிவாகிறது.
...
5.கோத்திரங்கள்
..
முற்காலத்தில் மக்கள் ஆடு,மாடுகளை மேய்ப்பதை முக்கிய தொழிலாக கருதினார்கள்.
கால்நடைகள் செல்வமாக கருதப்பட்டன.
அதிகம் மாடுகளை வைத்திருப்பவன் பணக்காரனாக கருதப்பட்டான்.
திருடர்கள் பசுக்களை கவர்ந்து செல்வது பற்றி பழைய இலக்கியங்களில் படிக்கிறோம்.
ஒரு நாட்டுடன் வலிய சென்று போர்புரிய விரும்புபவர்கள் அங்குள் பசுக்களை திருடிச்செல்வார்கள்.
அரசனின் பொறுப்பில் பல பசுக்கள் இருக்கும்.
ஸ்ரீகிருஷ்ணரின் வளர்ப்பு தந்தை ஒரு சிற்றரசர்.அவர்களிடம் பல பசுக்கள் இருந்தன.
கிருஷ்ணர் மற்றும் அவரது நண்பர்களின் முக்கிய வேலை பசுக்களை மேய்ப்பது
கோ என்றால் பசு,அரசன் போன்ற அர்த்தங்கள் உள்ளது.
கோவில் என்றால் அரசன்,ஆள்பவன் வசிக்கும் இடம்.
..
ஒவ்வொரு வீட்டிலும் பசுக்கள் வளர்க்கப்பட்டன.
பசுக்களை மேய்ப்பதற்கு பணியாட்கள் நியமிக்கப்ட்டார்கள்.
பசுக்களை இரவில் அடைப்பதற்கென்று பொதுவான தொழுவம் இருந்தன.அவைகளுக்கு கோத்ரா என்று பெயர்.
சில நேரங்களில் ஒருவரது பசு இன்னொருவரின் மந்தையுடன் கலந்துவிடும்,அப்படிப்பட்ட வேளைகளில் சிறுசிறு சண்டைகள் ஏற்படுவதுண்டு.
அவைகளை தீர்த்துவைப்பதற்கு நீதிமான்களை அணுகுவார்கள்.
பொதுவாக அந்த ஊரில் உள்ள சிற்றரசரே நீநிவழங்குபவராக இருப்பார்.
எனவே அவர் பசுபாதுகாவலன்,கோமகன்,கோத்ரபதி என்று அழைக்கப்பட்டான்.
..
இப்படி ஆரியர்களில் பல கோத்ரபதிகள் இருந்தார்கள்.அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் இருந்தார்கள் சாண்டில்யர்,பாரத்வாஜர்,காஸ்யபர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
ஒவ்வொரு குழுவினரும் தங்கள் கோத்திரத்தின் பெயருடனேயே அறியப்படார்கள்.
திருமண உறவுகள் மேற்கொள்ளும்போது தங்கள் கோத்ரத்தில் பெண் எடுக்காமல் வேறு கோத்ரத்தில் பெண் எடுப்பார்கள்.இதன் மூலம் பரம்பரை நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.
ஆரியர்கள் தங்கள் கோத்ரத்தின் பெயரை நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
.
காலம் செல்லச்செல்ல ஆரியர்கள் மாடுமேய்க்கும் தொழிலை குறைத்துக்கொண்டு விவசாயம்,வியாபாரம்,புரோகிதம் போன்ற தொழில்களையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொரு கோத்ரமும் பெரிதாக வளர ஆரம்பித்தது.
....
இவர்களில் சிலர் ஆழ்ந்த சிந்தனை சக்தி உடையவர்களாகவும்,தனக்குள்ளே சென்று ஆழ்ந்து தியானிப்பதில் வல்லவர்களாகவும் விளங்கினார்கள்.அவர்களது மனதில் பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டது.
கடவுளை தனக்குள்ளே அறிந்துகொண்டார்கள்.அவர் கூறும் வார்த்தைகள் வேதம் என்று அழைக்கப்பட்டது
அவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்த மனிதனை ரிஷி,பிராம்மணன் என்று அழைத்தார்கள்.
-
அந்த ரிஷி மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் நீதிபதி பணியைவிட உயர்ந்ததான இறைவனைப்பற்றி போதிக்கும் குரு நிலையை அடைந்தார்.
..
இப்போது மூன்று நிலைகள் உருவாகிவிட்டன. 1. மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் தலைமை பண்புள்ள சிலர். 2. அதைவிடவும் உயர்ந்ததான கடவுளைப்பற்றி போதிக்கும் குருநிலையை அடைந்துள்ள சிலர்.3. மாடுமேய்த்தல்,விவசாயம்,வியாபாரம் செய்யும் சாதாரண மக்கள்
-
தலைமைப் பண்புள்ளவர் சத்திரியர் என்றும் குருநிலையை வகிப்பவர் பிராம்மணர் என்றும் அழைக்கப்பட்டார் மற்றவர்கள் குடி மக்கள் .
இவ்வாறு ஆதி காலத்தில் பல கோத்திரங்கள் இருந்தன.
ஒவ்வொரு கோத்திரத்திரமும் ஒரு ரிஷியை தலைவராக ஏற்றுக்கொண்டது.
ஒவ்வொரு கோத்திரமும் தங்களுக்னென்று தனியாக வேதத்தை வைத்திருந்தது.
பிற்காலத்தில் இந்த வேதங்கள் அனைத்தும் ஒன்றாக கோர்க்கப்பட்டு இருக்வேதம்(ரிக்) என்று அழைக்கப்பட்டது.
இருக் என்றால் இருக்கிறது,நிலையாக இருக்கிறது என்று பொருள்.
வேதம் ஒன்றாக இணைந்ததுபோல பல கோத்திரங்களை உடைய சமூகம் ஆரியர் என்ற பெயரில் ஒன்றாக அறியப்பட்டது.
-
இடம் பெயர்தல்
-
ரிக் வேத காலத்தில் சரஸ்வதி நதியை சுற்றி வாழ்ந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று பார்த்தோம்.அதன்பிறகு அவர்கள் படிப்படியாக விரிவடைந்து பல இடங்களுக்கு பயணப்பட்டார்கள்.
பூமியின் நிலப்பரப்புகள் எப்போதும் ஒரேபோல இருப்பதில்லை.பருவநிலை மாற்றத்தால் பசுமையாக இருக்கும் இடங்கள் பாலைவனமாக மாறுகின்றன. பாலைவனங்கள் பசுமையாகின்றன.
மனிதர்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
ஆரியர்கள் பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள்.
அவ்வாறு அவர்கள் செல்லும்போது வேதத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள்.
வேதத்தை கற்ற இனம் புதிய இடங்களுக்கு பயணித்தது.
புதிய இடங்களில் ஏற்கனவே அங்கே வாழும் பூர்வீக குடிமக்கள் இருப்பார்கள்.அவர்களிடம் வேதம் இல்லை.
ஆனால் நிலம் அவர்களுடையது. ஆட்சி அவர்களுடையது.
அவர்களை அனுசரித்து சென்றால்தான் அங்கே வாழமுடியும்.
அவர்களது வழிபாடுகள் வேறுவிதமாக இருக்கும்.
பூர்வ குடிமக்கள் வேதம் அறிந்தவர்களைப்போல உலகஞானம்,இறைஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
எனவே அவர்களது வழிபாடுகளை,பழக்க வழக்கங்களை மாற்றிவிடக்கூடாது.அதே நேரத்தில் வேதத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் கூடாது.அவர்களை தங்களுக்கு இணையாக கருதவும் கூடாது என்ற எண்ணம் ஆரியர்களிடம் இயல்பாகவே இருந்திருக்கும்.
-
இப்போது இரண்டு பெரும் இனங்கள் ஒன்றாக கலந்தன.
ஆரியர்கள் தங்களுக்குள்ள அதிகாரத்தையும்,அறிவையும் மற்ற இனத்தினருடன் பகிர்ந்துகொள்ள தயாராக இல்லை.
ஆட்சி,அதிகாரம்,வேதம்,கல்வி,வியாபாரம் அனைத்தையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள விரும்பினார்கள்.
...
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள்,ஆனால் சில ஆயிரம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அவர்களிடமிருந்து பிடுங்கி தங்கள் வசம் வைத்து நாட்டை ஆண்டார்கள். இது எப்படி சாத்தியமானது?
ஆங்கிலேயர்களிடம் நவீன கருவிகள் இருந்தன,தொழிற்சாலைகள் இருந்தன,நவீன கல்வி இருந்தது,அதிக உலக ஞானம் இருந்தது. அறிவு அதிகம் உள்ள இனத்தினர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தால்கூட அவர்களே வெற்றிபெறுவார்கள் என்பதை வரலாறுகள் மூலம் அறிகிறோம்.
6.நான்கு ஜாதிகள்
மனிதர்கள் முதலில் காடுகளில் வாழ்ந்தார்கள்.
இந்தியா முழுவதும் உள்ள காடுகளில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வந்தார்கள்.
ஒவ்வொரு இனமும் ஒரு ஜாதியாக கருதப்பட்டது.
சமவெளியை நோக்கி வந்தபோது பல இனங்கள் ஒன்று சேர்ந்து பெரிய சமுதாய அமைப்பு உருவானது.
வலிமை மிக்க இனத்தின் கையில் அதிகாரம் இருந்தது.
சிலர் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.
ஆரியர்கள் பிறபகுதிகளுக்கு வருவதற்கு முன்பே மிகப்பழம் காலத்திலேயே இனங்களின் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தன.
ஜாதி என்ற பெயர்தான் ஆரியர்களிடமிருந்து வந்ததே தவிர, இன வேறுபாடுகள் முற்காலத்திலேயே இருக்கின்றன.
இவைகள் பாரத தேசத்திற்கு வெளியேயும் இருந்துள்ளன,என்பதை வரலாறுகளின் மூலம் அறிகிறோம்
ஜா- என்றால் பிறப்பு .ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வரும் படிநிலை.
எனவே பிறப்பின் அடிப்படையில் உருவான வேறுபாடுகள் காலம் காலமாக இருந்துவருகிறது.
..
ஒரு மனிதன் மொழியை மாற்றிக்கொள்ளலாம், மதத்தை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் பிறப்பை மாற்றிக்கொள்ள முடியாது.பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியை மாற்றிக்கொள்ள முடியாது.
குணத்தின் அடிப்படையில் வரும் ஜாதிகளும் உண்டு.
ஒரு மனிதன் இரண்டு முறை பிறக்கிறான் என்று ஆரிய இலக்கியங்கள் கூறுகின்றன.
பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதி ஒன்று. குணத்தின் அடிப்படையில் வரும் ஜாதி ஒன்று.
இதுபற்றி பிற்பகுதியில் பார்க்கலாம்.
..
ஆரியர்கள் புதிய இடங்களுக்கு பயணித்தபோது,தங்களுடன் வேதத்தை கொண்டு சென்றார்கள்.
ஆரியர்,ஆரியர் அல்லாதவர்கள் என்ற இரண்டு இனங்கள் ஒன்றாக கலந்தன.
..
ஒவ்வொரு இனத்தினரும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு வந்தார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஜாதியாக அறியப்பட்டார்கள்.
பல்வேறு ஜாதிகளையும் நான்கு முக்கிய ஜாதிகளுக்குள் வகைப்படுத்தினார்கள்.
அவைகள்1.பிராமணன்2.ஷத்திரியன்3.வைசியன்4. சூத்திரன்.
..
ஆரியர்கள் தங்களுக்குள்ள அதிகாரத்தையும்,அறிவையும் மற்ற இனத்தினருடன் பகிர்ந்துகொள்ள தயாராக இல்லை.
ஆட்சி,அதிகாரம்,வேதம்,கல்வி, வியாபாரம் அனைத்தையும் தங்கள் வசம் வைத்துக்கொண்டார்கள்
-
முதல் மூன்று ஜாதியினர் ஆரியர்.அவர்கள் வேதம் கற்க அனுமதிக்கப்பட்டார்கள்.
சூத்திரனுக்கு வேதம் கற்க அனுமதி இல்லை.
சூத்திரன் என்று யாரெல்லாம் அழைக்கப்பட்டார்களோ அவர்கள் ஆரியர் அல்லாதவர்களாக இருக்கலாம்.
-
மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது.
பல்வேறு வேலைகள் பெருகியது.ஜாதி அமைப்புகளை இன்னும் பலமாக கட்டமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
-
ஒவ்வொரு ஜாதியில் பிறப்பவரும் அந்த ஜாதிக்கென்று உள்ள நடைமுறையை பின்பற்றியே வளரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
பிராமணருக்கு பிறக்கும் குழந்தைகள் பிராமணனாகவே கருதப்பட்டார்கள்.
சத்திரியனின் குழந்தைகள் சத்திரியனாக கருதப்பட்டார்கள்
வைசியனின் குழந்தை வைசியனாகவும்,
சூத்திரனின் குழந்தைகள் சூத்திரனாகவும் கருதப்பட்டார்கள்.
-
ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் இன்னொரு ஜாதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இவைகள் எல்லாம் பழம் காலத்திற்கு முற்பட்ட பழக்கங்கள்.
-
காலங்கள் மாறமாற ஜாதி பற்றிய கருத்துக்களும் மாறத்தொடங்கின.
ஆரியர்கள் அல்லாத பிற இனத்திலும் அறிவாளிகள் இருந்தார்கள்.பிற இனங்களில் முக்கியமாக சூத்திரஜாதியிலும் ரிஷிகள் தோன்றினார்கள்.அவர்களின் வாயிலிருந்து வேதம் வெளிப்பட்டது
எனவே பிறப்பின் அடிப்படையில் மட்டும் ஜாதியை பிரிக்கும் நடைமுறை சற்று வளர்ச்சியடைந்து குணத்தின் அடிப்படையிலும் பிரிக்கப்படுவதாக மாறியது.
..
எந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஞானம் பெற்றால்கூட அவர் பிராமணராகவே கருதப்பட்டார்.
பிராமண சமுதாயம் அவரை தங்களுடன் இணைத்துக்கொள்ளும். அவரது உபதேங்களை தங்கள் வேதத்துடன் இணைத்துக்கொள்வார்கள். அவரது குழந்தைகள் பிராமணராகவே கருதப்பட்டார்கள்.
உதாரணமாக வால்மீகியை கூறலாம்.
சூத்திர ஜாதியை சேர்ந்த ஒருவர் பிராமண சமுதாயத்துடன் இணைவதால் பிராமணர்கள் இன்னும் நன்மை அடைவார்கள்.
ஆனால் சூத்திர ஜாதியினருக்கு அதனால் ஒரு நன்மையும் இல்லை.
-
மகாபாரத காலத்தில் சூத்திரர்- பிராமணராகலாம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது
..
ஸ்ரீகிருஷ்ணருடைய கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.
-
பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.
-
பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை.
..
இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
சிலர் பகவத்கீதையினால்தான் ஜாதி வளர்ந்தது என்று கூறுகிறார்கள்.
ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் அவ்வாறு கூறவில்லை. பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் பிரிக்கப்பட்டதாக கூறவில்லை. ஸ்வபாவத்தில் பிறந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக கூறுகிறார்.
முதலில் ஜாதிகள் பிறப்பை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன.பிறகு அது பரிணமித்து குணத்தை அடிப்படையாகக்கொண்டவையாக மாறியது.
-
18.42 அந்தக்கரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல்,தவம்,தூய்மை,பொறுமை,நேர்மை,சாஸ்திரஞானம்,விக்ஞானம்,கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணனுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்
-
பிறக்கும்போதே ஒருவன் மேலே கூறப்பட்டுள்ள குணங்களுடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே சாஸ்திர ஞானத்துடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே ஐம்புலன்களையுடம் அடக்கியவனாகவா பிறக்கிறான்?
ஏதோ ஒருசிலர் அப்படி பிறக்கிறார்கள்.
மற்றவர்கள் அனைவரும் கடுமையான தவத்திற்கு பிறகே பிராமணநிலையை அடைகிறார்கள்.
எனவே ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பின் அடிப்படையில் ஜாதி வருவதில்லை என்பதை தெளிவாக கூறுகிறார்.
-
வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?
-
சாமவேதம்- வஜ்ரஸுசிகோபநிடதம்
-
1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது
-
2. பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும்.
பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?
-
3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)
-
4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது
-
5.ஆனால் பிறப்பால் வந்த ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது
-
6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது
-
7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை
-
8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.
-
9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்?
இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.
-
இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.
-
சாரம்சம்
-
1.ஒரே ஜீவன்தான் பல பிறவிகளில் பிறந்தாலும் ஜீவன் பிராம்மணன் அல்ல.
2.எல்லோரது உடலும் ஒரேபோல் இருப்பதால் உடல் பிராம்மணன் அல்ல.
3.எல்லா ஜாதியிலும் ரிஷிகள் பிறப்பதால்.பிறப்பால் ஒருவன் பிராம்மணன் அல்ல.
4.எல்லா ஜாதியிலும் அறிவாளிகள் இருப்பதால் அறிவை வைத்து ஒருவனை பிராம்மணன் என்று கூறமுடியாது.
5. செய்யும் தொழிவை வைத்து பிராமணன் என்று கூறமுடியாது. ஏனென்றால் அந்த தொழிலை எல்லோராலும் செய்ய முடியும்.
6.தான தர்மங்கள் எல்லோரும் செய்கிறார்கள்.அதனால் அதைவைத்தும் கூறமுடியாது
7. பிரம்மத்தை உணர்ந்து,உடல் இருந்தாலும் உடலற்ற நிலையில் ஜீவன்முக்தனாக வாழ்பவன்தான் பிராமணன்.
-
மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்।
தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥
18.43 சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டமை,தானம், ஈஸ்வரத்தன்மை இவைகள் சத்திரியங்களுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்
-
க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்।
பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥
18.44 உழவும், கால்நடை காத்தலும், வணிகமும் இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்கள்.
முதலாளி சொல்லும் பணியை செய்வது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டான கர்மம்
-
விவசாயம் என்பது வைசியருக்குரிய தொழில். கால்நடைகள் வளர்ப்பதும் வைசியருக்குரிய தொழில்.
அரச சபைகளில் சாமரம் வீசுவது, அரண்மனையில் உள்ள துப்புரவு பணிகள் செய்வது,அரசர் இடும் கட்டளைகளை மக்களிடம் பறை மூலம் தெரிவிக்கும் பணிகள் போன்றவை சூத்திரர்களின் முக்கிய பணியாக இருந்தது.
அத்துடன் வசதியானவர்களின் கீழ் சூத்திரர்கள் வேலை செய்தார்கள்.
யார் முதலாளி? வசதி இருப்பவன் முதலாளி.
தனக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவும்,உடையும் கொடுத்து காப்பவன் முதலாளி.
முதலாளிக்கு கீழ் வேலை செய்வதுதான் சூத்திரர்களின் கர்மம் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே தவிர, கண்டவனின் கீழ் எல்லாம் வேலை செய்யும்படி கூறவில்லை.
ஆனால் காலம் மாறமாற சூத்திரர்கள் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
-
ஆதிகாலத்தில் ஜாதி என்பது குணத்தை அடிப்படையாக கொண்டதாவே கருதப்பட்டது.
பிரம்மஞானம் பெற்றவர் குரு.அவர் பிராமணனாக கருதப்பட்டார்
பிரம்மஞானம் பெறுவதற்கு முன்பு அவர் எந்த ஜாதியில் பிறந்தவராகவும் இருக்கலாம்.
ஒருவர் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், பிரம்மஞானம் பெற்றுவிட்டால் அவர் பிராம்மணன்.
அவருக்கு பிறக்கும் குழந்தைகள் பிராமணனாகவே கருதப்பட்டார்கள்.
-
ஒருவன் பிறக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் கீழ்தான் பிறந்து அவர்களின் கட்டுப்பாட்டுடன் தான் வளர்கிறான்.ஆனால் வளர்ந்த பிறகு அவனிடம் உயர்ஜாதிக்கான திறமைகள் இருந்தால்,அதை நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவன் மேல் ஜாதியாக கருதப்படுவான்.
உதாரணமாக சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவனிடம் போர்புரியும் திறமைகள் இருந்தால், சத்திரியனாக மாறி, ஒரு நாட்டையே ஆட்சி செய்ய முடியும்.பழைய காலத்தில் பலர் அவ்வாறு நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.அதேபோல் சூத்திரன் சுயமாக தொழில்புரிந்து வைசியனாகவும் மாற முடியும். அதேபோல் உயர் ஜாதியில் உள்ள ஒருவன் தாழ்ந்த ஜாதிக்கும் செல்ல வாய்ப்புள்ளது.
ஒரு சத்திரியன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்யாவிட்டால், மக்கள் கலகத்தில் ஈடுபட்டு அவனை சிறைபிடித்து, வேலைக்காரன் (சூத்திர)நிலைக்கு இறக்கிவிடுவார்கள்.
ஒரு பிராமணன் தன் கடமையை சரியாக செய்யாவிட்டால், பிராமண ஜாதியிலிருந்து விலகி வைத்துவிடுவார்கள்,
-
இதை கீழ்கண்ட உதாரணங்கள் மூலம் பார்ப்போம். துரோணாச்சாரியர் பிறவியில் பிராமணர்,ஆனால் பழிவாங்கும் எண்ணம் கொண்டதால்,அவர் சத்திரியராக மாறவேண்டியிருந்தது.
விதுரர் பிறவியில் சூத்திரர், ஆனால் சத்திரியனுக்குரிய வீரம் இருந்ததால் சத்திரியனாகவும், பிறகு அதை துறந்து பிராமணலட்சியத்தை ஏற்றுக்கொண்டு பிராமணனாகவும் உயர்ந்தார்.
கர்ணன் வளர்ப்பில் சூத்திரராக இருந்த போதும்,அவரது வீரம் காரணமாக சத்திரியராக மாறினார்.இவ்வாறு மகாபாரதத்தில் பல உதாரணங்களை காணலாம்.
-
அப்படியானால் இந்த ஜாதிமுறைகள் எப்படி சீர்கெட்டன?
-
ஒரு ஜாதியில் பிறக்கும் ஒருவன் ,அந்த ஜாதிக்குரிய பண்புகள் இல்லாதவனாக இருந்தால், எந்த ஜாதிக்குரிய பண்புகள் அவனிடம் இருக்கின்றனவோ, அந்த ஜாதியில் சேர்த்துவிடும் பழக்கம் பின்பற்றப்படவில்லை. உதாரணமாக பிராமண ஜாதியில் பிறக்கும் ஒருவன், பிறந்த உடனேயே பிராமணனுக்குரிய பண்புகளை பெற்றுவிடுவதில்லை. பல ஆண்டுகள் கடின தவம் புரிந்த பிறகு தான் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் பண்புகளை பெற்று பிராமணனாக மாறுகிறான். ஆனால் வளர்ந்த பிறகும் இந்த பண்புகளை பெறாமல் ஒருவன் தன்னை பிராமணன் என்று கூறிக்கொண்டு, அரசர்கள் தரும் சலுகைகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்ததும், அவனை அந்த பிராமண சமுதாயம் ஆதரித்ததும் முதல் தவறு.
தங்களை பிராமணர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், அதற்கான தகுதிகள் இருப்பதை முதலில் நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த ஜாதியின் சேர்ந்துகொள்ள வேண்டும். .
-
அறிவு எதுவரை சுயநலம் அற்றதாக இருக்குமோ அது வரை நமக்கும் பிறருக்கும் நல்லது. எப்போது அறிவு தன்நலத்தில் கவனம் செலுத்துமோ, அப்போது அனைத்தும் கெட்டுவிடும். சத்திரியர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் தங்கள் சுயநலத்தை நாடியது தான் இந்த ஜாதிமுறைகள் கெட்டுப்போனதற்கான முதல் காரணம்.
முற்காலத்தில் ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு ஜாதிக்கு எளிதாக செல்ல முடிந்தது என்பதை பார்த்தோம். சிலரின் சுயநலத்தால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, ஜாதிகள் கடக்கமுடியாத சுவர்களாக மாற்றப்பட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவைகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட்டார்கள்.
இது சில ஜாதியினர் முன்னேறுவதற்கும்,சலுகைகளை பெறுவதற்கும் வசதியாக இருந்தது. சில ஜாதியிர் தொடர்நது பின்னோக்கி சென்று, கடைசியில் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்பட்டார்கள்.
சூத்திரர்கள் தினமும் மாடுகளைவிட அதிகமாக வேலை வாங்கப்பட்டார்கள். அவர்களின் சுதந்திரம் பறிக்கபட்டது.
..
முற்காலத்தில் மகாபாரதத்தில் கர்ணன் ஒரு சூத்திரனாக இருந்தபோதும் அரசர்கள் கூடிய சபையில் பேச அனுமதிக்கபட்டன். அந்த காலத்தில் இருந்த நிலையை பிற்காலத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். சூத்திரர்கள் சில ஜாதியினர் வாழும் தெருவில் கூட நடந்துசெல்ல அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அந்த காலத்தில் நிலவிய அற்புதமான ஜாதி என்ற அமைப்பு பிற்காலத்தில் தீமைநிறைந்ததாக மாறிவிட்டது.
-
இப்படிப்பட்ட ஜாதி அமைப்புகள் எல்லா நாடுகளிலும் இருந்துள்ளது. பெயர்கள் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்.
ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்குள் குடியேறினார்கள். அங்குள்ள செவ்விந்தியர்களை கொன்று குவித்தார்கள்.மீதியிருந்தவர்களை அடிமைகளாக்கினார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை கொண்டுவந்து அடிமைவேலை செய்ய வைத்தார்கள். அடிமைகள் வேலைசெய்ய திறனற்றுபோகும்போது ஈவிரக்கமின்றி கொலைசெய்தார்கள்.
-..
அரேபியர்கள் முஸ்லீம் அல்லாதவர்களை அடிமைகளாக பிடித்துக்கொண்டு சென்றார்கள். சந்தைகளில் விற்றார்கள். அரேபியர்களின் வீடுகளில் அடிமைகளை வைத்துக்கொண்டார்கள்.
-
பிராமண,சத்திரிய,வைசிய,சூத்திர ஜாதியை சட்டங்கள் மூலம் இந்தியாவிலிருந்து நீக்கிவிட்டாலும்,
வேறு பெயர்களில் வேறு இடங்களில் அவைகள் எப்போதும் வேலைசெய்துகொண்டே இருக்கும்.
அன்றைய பிராமணன் இன்றைய பலதுறை விஞ்ஞானியாக பரிணமித்துள்ளான்
அன்றைய சத்திரியன் இன்றைய அதிபர்,பிரதமர்,முதல்வர்
அன்றைய வைசியன் இன்றைய தொழிலதிபர்
அன்றைய சூத்திரன் இன்றைய தொழிலாளி
-
ஜாதி என்ற பெயர் மறையலாம்.
ஆனால் பிறப்பின் அடிப்படையில் வரும் இனவேறுபாடுகளும்
மொழியின் அடிப்படையில் வரும் இனவேறுபாடுகளும்
நாட்டின் அடிப்படையில் வரும் இனவேறுபாடுகளும்
வளர்ந்த பிறகு குணத்தின் அடிப்படையில் வரும் குணவேறுபாடுகளும் எல்லா காலத்திலும் இருந்துகொண்டே இருக்கும்.
7.தீண்டாமை
ஆதி காலத்தில் நான்கு ஜாதிகள் இருந்தன என்பதைப்பார்த்தோம்.
ஆரம்ப காலங்களில் சிந்துசமவெளியை ஒட்டிய பகுதிகள் ஆரியர்களின் இருப்பிடாக இருந்தது.
பின்பு படிப்படியாக வடஇந்தியா முழுவதும் அவர்கள் பயணித்து தங்கள் இருப்பிடங்களை விரிவுபடுத்திக்கொண்டார்கள்.
புதிய இடங்களில் ஏற்கனவே வாழ்ந்த மக்களையும் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள்.
இதன்பிறகு ஆரியம் என்பதற்கான அர்த்தங்கள் மாற ஆரம்பித்தன.
ஆரியர்களின் சாஸ்திரங்களான ஸ்ருதி(வேதம்),ஸ்மிருதி(சட்டங்கள்) இவைகளை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஆரியர்கள் என்ற நிலை ஏற்பட்டது.
ஆரியர்கள் எங்கெல்லாம் பயணித்தித்தார்களோ அங்குள்ள மக்கள் அனைவரையும் ஆரிய கலாச்சாரத்திற்குள் கொண்டு வந்தார்கள்..ஸ்மிருதியின் ஆளுகைக்குள் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.
பாரததேசம் முழுவதும் ஆரியசட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
..
வேதம்,ஸ்மிருதி இவைகளை பின்பற்றிய அனைவரும் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்
ஆரியர் என்றால் பண்டபட்டவர்,ஒளிமிக்கவர் என்று அர்த்தம்
ஆரியர்களின் லட்சியம் முக்தி.
மகாபாரத காலத்தில் பாரதத்தில் வாழ்ந்த நாகரீகமுள்ள மக்கள் அனைவரும் ஆரியர் என்றே அறியப்பட்டார்கள்
..
ஆரியர்களது சட்டங்களை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்.
பிராமணர்களைத்தவிர பிற ஜாதியினர் தவறு செய்தால் அவர்களுக்கு சிறை தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கும் அதிகாரம் அரசனுக்கு இருந்தது.
ஆனால் பிராமணன் தவறு செய்தால் அவரை தண்டிக்கும் அதிகாரம் அரசனுக்கு இல்லை.
பிராமணர்கள் ஒன்றுகூடி தவறு செய்தவர்களை சமுதாயத்தைவிட்டு விலக்கி வைப்பார்கள்.
இவ்வாறு விலக்கி வைக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
அவர்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது,குடிக்க தண்ணீர்கூட கொடுக்கக்கூடாது.பிராமணர்கள் வசிக்கும் பகுதிக்குள் அவர்கள் வரக்கூடாது.
தண்டிக்கப்படும் நபர் தனது எஞ்சிய நாட்களை தவவாழ்க்கையாக மாற்றி பாவபரிகாரம் தேடிக்கொண்டு படிப்படியாக உடலை உகுத்து முக்தி அடையவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
.
பிராமணர்களின் கருத்துப்படி.பிராமணன் என்பவன் முக்தியைத்தவிர வேறு எதையும் விரும்பக்கூடாது.
அந்த நிலையில் இருக்கும் ஒருவன் உலக ஆசையால் தூண்டப்பட்டு சிறுதவறு செய்தாலும் பெரும் தண்டனையை பெற வேண்டியிருந்தது.
உதாரணமாக பிராமணர்கள் உண்பதற்கு தடைவிதிக்கப்பட்ட உணவுகளை உண்டால்கூட சமுதாயத்தைவிட்டு,ஜாதியைவிட்டு விலக்கிவைத்துவிடுவார்கள்.
ஆரியர் அல்லாத பிறரது பார்வையில் இவைகள் மிகக்கொடுமையான தண்டனைகளாக தெரியும்.
..
இவ்வாறு சமுதாயத்திலிருந்து,ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படார்கள்.
பிராமண சமுதாயத்தில் இருந்த இந்த பழக்கம் படிப்படியாக பிறஜாதியிலும் புகுந்தது. பிறஜாதியினரும் இதேபோல தவறு செய்யும்போது அவர்களை இவ்வாறு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்.
இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகத்தொடங்கியது.
..
சூத்திரர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்களா?
..
ஆரிய சமுதாயத்தில் சூத்திரர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.
பெரும்பாலான பணிகளை சூத்திரர்களே செய்து வந்தார்கள்.
அரச சபையில் மன்னனுக்கு சாமரம் வீசும் பெண்கள்,அரசிக்கு பணிவிடை செய்யும் பெண்கள்,அரண்மனைக்காவலர்கள் உட்பட அனைவரும் சூத்திரர்களே.
போர்வீர்ரகளில்,சேனாதிபதி போன்ற உயர்பதவியில் உள்ளவர்கள் தவிர பிறர் அனைவரும் சூத்திர்களே
அத்துடன் வைசியர்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்தவர்கள் சூத்திரர்களே.
.
தீண்டத்தகாதவர்களுடன் யாரும் பேசவோ,பழவோ,அவர்களை ஊருக்குள் அனுமதிக்கவோ தடைவிதிக்கப்பட்டிருந்தது என்பதைப் பார்த்தோம்
சூத்திரர்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்தால் அவர்களை எப்படி இந்த வேலைகளில் அனுமதிக்க முடியும்?
எனவே சூத்திரர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற கருத்து தவறாகும்.
...
ஆரியர்கள் உணவு விஷயங்களுக்கும்,திருமண உறவுகளுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஜாதிவிட்டு,ஜாதி திருமணம் செய்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்.
விலக்கப்பட்ட உணவுகளை உண்பவர்களையும் ஜாதியைவிட்டு விலக்கி வைத்தார்கள்.
இவ்வாறு விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ஜாதி கிடையாது.
...
பல்வேறு படையெடுப்புகள்
..
இவ்வாறு இயங்கிக்கொண்டிருந்த ஆரிய சமூகத்தில் மிகப்பெரும் சோதனைகாக வந்தது,அன்னியர் படையெடுப்புகள்.சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் இந்தியாவின்மீது படையெடுத்து வந்தார்கள்.அதன்பிறகு படிப்படியாக ஹுணர்கள்,மங்கோலியர்,பாரசீகர் என்று பலர் படையெடுத்து வந்தார்கள்.
இந்த படையெடுப்புகளில் ஆரியர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.அத்துடன் பிற நாட்டினர் ஏராளமாக இநத்தியாவிற்குள் நுளைந்தார்கள்.
பல இடங்களில் ஆரியர்கள் அல்லாதவர்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள்.
ஆக்கியமாக ஆரியர்களின் பூர்வீக இருப்பிடங்களான காந்தார சேதம் அதாவது தற்போதைய Afghanistan, Iran, Kazakhstan, Uzbekistan,Pakistan போன்ற பகுதிகள் ஆரியர்களின் கைவிட்டு அகன்றது.
வெளிநாட்டினரின் படையெடுப்பிற்குப்பிறகு ஆரியர்களின் சட்டங்கள் கேள்விக்குறியானது.
...
ஆரியர்கள் அல்லாதவர்களை தங்களுக்குள் சேர்த்துக்கொள்ள ஆரியர்கள் விரும்பவில்லை.
1.ஆரியர் அல்லாதவர்கள் வேதத்தையும்,ஸ்மிருதிகளையும் பின்பற்ற விரும்புவதில்லை
2.உணவு விஷயத்தில் ஆரியர் அல்லாதவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாதவர்களாக இருந்தார்கள்.முக்கியமாக விலக்கி வைக்கப்பட்ட உணவுகளான பன்றி,கோழி,வளர்ப்பு பிராணிகள் போன்றவைகளை உண்டார்கள்.
..
எனவே ஆரியர் அல்லாதவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றே கருதினார்கள்.
...
தீண்டத்தகாதவர்கள்
..
1.ஆரியர் அல்லாத பிற நாட்டைச்சேர்ந்தவர்கள்.
2.பிறநாட்டிலிருந்து பிழைப்புக்காக இந்தியாவிற்குள் வந்தவர்கள்.
3.இடம்விட்டு இடம்சென்று நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள்
4.இந்தியாவை பூர்வீகமாக்கொண்ட நாகரீகமற்ற மக்கள்
5.ஜாதியிருந்து விலக்கிவைக்கப்படுபவர்கள்
...
பல நூற்றாண்டுகள் கடந்தபிறகு தீண்டத்தகாதவர்களின் எண்ணிக்கை பெருமளவிற்கு உயர்ந்திருந்தது.
அவர்களுக்கு ஆரிய சமூகத்தில் உரிய இடம் வழங்கப்படாததால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த முஸ்லீம்,கிறிஸ்தவ மதங்களை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
...
8.ஆதிகால மொழி.
பழைய காலத்தில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.ஒவ்வொரு காடுகளில் வாழும் மக்கள் பேசும் மொழியும் வேறுபடுகிறது.தற்போதுகூட இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் மக்களால் பேசப்படுகிறது.மிகப்பழைய காலத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டிருக்கும்...இனங்கள் ஒன்று சேரும்போது,மொழிகளும் ஒன்றுசேர்கின்றன. ஒரு பொருளுக்கு பல பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளில் பல இனங்கள் ஒன்று கலந்து மிகப்பெரிய மொழி ஒன்று உருவானது.அதற்கு வேதமொழி என்று பெயர்.இந்த மொழியில்தான் வேதம் பேசப்பட்டது.வேதமொழிக்கு எழுத்துக்கள் இல்லை...எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்திலேயே வேதங்கள் வழக்கத்தில் இருந்தன.எழுத்துக்கள் இல்லாமல் ஒரு மொழி எப்படி இருக்க முடியும்?காடுகளில் வாழும் மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.ஆனால் அவர்களிடம் எழுத்துக்கள் இல்லை.அதுபோல பல ஆயிரம் ஆண்டுகளாக எழுத்துக்கள் இல்லை.ஆனால் மொழி இருந்தது...குரு வாய் மூலம் கூறுவார்.சிஷ்யன் காது வழியாக கேட்டுக்கொள்வான். எனவே வேதங்களுக்கு ஸ்ருதி என்று பெயர்இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளாக வேதங்கள் வாய் மூலமாகவே ஒரிவரிடமிருந்து இன்னொருவருக்கு போதிக்கப்பட்டது.வேதத்தை மனப்பாடம் செய்வது பிராமணர்களின் முக்கிய வேலைவேதத்தின் ஒவ்வொரு வரியையும் ஓசை பிசகாமல் அப்படியே ஒப்பிக்க வேண்டும்.சிறிது ஓசை மாறினாலும் பொருளே மாறிவிடும்...அரசர்கள் ஒரு தகவலை இன்னொருவரிடம் தெரிவிக்க வேண்டுமானால் ஆதாரப்பூர்வமாக ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. மன்னரிடம் ஒன்றைக்கேட்டுவிட்டு இன்னொருவரிடம் இன்னொன்றை சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே மொழிக்கு எழுத்துக்கள் உருவாக ஆரம்பித்தன. ஆதிகாலத்தில் வாழ்ந்த அரசர்கள் தகவல் பரிமாற்றத்திற்கான பொதுவான மொழியை உருவாக்கினார்கள்.இது படிப்படியாக வளர்ச்சியடைந்தது.தென்னிந்தியாவில் காணப்படும் ஆதிகால எழுத்துகளுக்கும் வடஇந்தியாவில் காணப்படும் ஆதிகால எழுத்துக்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.மக்கள் பல மொழிகளை பேசினாலும் தகவல்பரிமாற்றத்திற்கான எழுத்துக்கள் பொதுவாக இருந்திருக்கலாம்...தற்காலத்தில் ஆங்கிலம் இணைப்புமொழியாக இருப்பதுபோல ஆதிகாலத்தில் பிராமி அல்லது பிராமணமொழி இணைப்பு மொழியாக இருந்திருக்கலாம். உலகம் முழுவதும் பிராமி மொழியின் கல்வெட்டுகள் கிடைத்திருப்பதே இதற்கான ஆதாரமாகும்.-ஒரு மொழி என்பது தனிமனிதன் உருவாக்குவதல்ல.பல இனங்களில் பேசப்படும் மொழிகள் ஒன்று சேர்ந்து புதிய மொழிகள் உருவாகின்றன...வடஇந்தியாவில் எழுத்துக்களுடன்கூடிய பிராகிருதம் என்ற மொழி உருவானது.தென்னிந்தியாவில் ஆதிதமிழ் மொழி உருவானது.இந்த இரண்டு மொழியின் எழுத்துக்களுக்கும் பல ஒன்றுமைகள் உள்ளன.இலக்கணங்களில்கூட அதிக ஒற்றுமைகள் உள்ளன.எழுத்துக்களிலும் இலக்கணங்களிலும் ஒன்றுமை இருந்தாலும் பெயர்கள்,உச்சரிப்புகளில் வேறுபாடுகள் உள்ளன...பிராகிருதமொழி படிப்படியாக வளரச்சியடைந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பாணினி என்ற முனிவரால் சமஸ்கிருதமொழி உருவாக்கப்பட்டது.தமிழ்மொழியும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது.இவ்வாறு பாரததேசத்தில் இரண்டுபெரும் மொழிகள் உருவாகின.வடஇந்தியாவில் காணப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது.தென்னிந்தியாவில் காணப்படும் மொழிகள் தமிழிலிருந்து உருவானது...ஹிந்திமொழியின் எழுத்துக்களும் சமஸ்கிருதமொழியின் எழுத்துக்களும் ஒன்றே.வாங்காள மொழியின் எழுத்துக்களும்,உச்சரிப்பும் வேறுபட்டிருந்தாலும் பிறவற்றில் அது சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.உருது என்பது ஹிந்தியும் அரேபிய மொழியும் கலந்து உருவானது.தமிழும்,சமஸ்கிருதமும் கலந்து மலையாளம்,தெலுங்கு,கன்னடம் என்ற தென்னிந்திய மொழிகள் உருவானது.எனவே சமஸ்கிருதம் என்பது அழிந்துபோனமொழி என்று யாராவதுகூறினால் அது தவறு...மரப்பட்டைகள்,மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் எழுத ஆரம்பித்தார்கள்.இவ்வாறு மொழி படிப்படியாக வளர்ச்சியடைந்தது.எழுத ஆரம்பித்தபிறகு மனப்பாடம் செய்வது குறைந்துபோனது...
9.இந்துக்களின் சாஸ்திரம்
வேதம்
..
பிற மதங்களுக்கு புனித நூல்கள் இருக்கின்றன.
இந்துக்கள் புனித நூல்கள் என்று அழைக்காமல் சாஸ்திரங்கள் என்று அழைக்கிறார்கள்.
நூல்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது. சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு காணாமல் போய்விடும்.
ஆனால் சாஸ்திரம் என்பது சாஸ்வதமானது,எப்போதும் இருப்பது.காலத்தால் அழியாதது.
..
இந்துக்களின் சாஸ்திரங்களுக்கு வேதம் என்று பெயர்
வேதம் என்றால் அறிவு என்று பொருள்.
-
அறிவு இரண்டு வழிகளில் கிடைக்கிறது. ஒன்று புறஉலகை ஆராய்வது.
இரண்டாவது அக உலகை ஆராய்வது. புற உலகை ஆராய்வதால் கிடைக்கும் அறிவு பற்றி நாம் அறிவோம்.
அது தான் தற்கால விஞ்ஞானஅறிவு.
.
அகஉலக அறிவு என்றால் என்ன?
-
ரிஷிகள் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது இந்த உடல் உணர்வை கடந்து செல்கிறார்கள். அப்போது நாம் காணும் சூரியன்,சந்திரன், உட்பட சூரியமண்டலம்,அதை தாண்டியவை எல்லாம் காட்சிகளாக கிடைக்கிறது.
சூரிய மண்டலம் பிற கிரகங்களையும்,நட்சத்திர மண்டலங்களையும்,அதைத்தாண்டிய உலகங்களையும் அவர்கள் அகக்காட்சியில் காண்கிறார்கள்.
இதிலிருந்து வானஇயல்ட சாஸ்திரம், ஜோதிடம் போன்றவை உருவானது.
பூமி சூரியனை சுற்ற இந்தனை நாட்கள் ஆகின்றன.பிற கிரகங்கள் சூரியனை சுற்ற இத்தனை நாட்கள் ஆகின்றன. என்பதை நுண்ணோக்கிகள் இல்லாமல் அவர்களால் எப்படி நுல்லியமாகக் கணக்கிட முடிந்தது? சாதாரண கண்களால் வானத்தை நோக்கினால் நட்சத்திரங்களையும்,கிரகங்களையும் நம்மால் பிரித்தறிய முடியாது.
அவர்கள் அகக்காட்சியில் அனைத்தையும் காண்கிறார்கள்.
இதிலிருந்து உருவாவது தான் அகவிஞ்ஞானம்.
-
இந்த புறவிஞ்ஞானம் என்பது எவ்வளவு பெரியதோ, அதே போல் மிகவும் பெரியது அகவிஞ்ஞானம். தூரத்தில் நடப்பதை கேட்க வேண்டுமா? முடியும். தூரத்தில் நடப்பதை பார்க்க வேண்டுமா? அதுவும் முடியும். ஆகாயத்தில் பறக்க வேண்டுமா? முடியும். வெட்டுபட்ட உடலின் பாகங்களை மீண்டும் இணைக்க முடியுமா?முடியும். இன்று புறவிஞ்ஞானத்தில் எவையெல்லாம் சாத்தியமோ, அவை அனைத்தும் அகவிஞ்ஞானத்தாலும் சாத்தியம்.
-
இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக அகவிஞ்ஞானம் சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்தது. ஆனால் புறவிஞ்ஞானத்தில் நாம் அதிகம் வளரவில்லை. ஐரோப்பியர்கள் அகவிஞ்ஞானத்தில் வளரவில்லை. ஆனால் புறவிஞ்ஞானத்தில் அதிகம் வளர்ச்சியடைந்துள்ளார்கள்.
-
இந்தியாவில் வேதம் என்பது பொதுவாக அகவிஞ்ஞானத்தை பற்றியதாகவே உள்ளது.
ஆனால் வேதம் என்பதை அதன் உண்மையான பொருளில் பார்த்தால் எவையெல்லாம் நிலையான அறிவோ,
எந்த அறிவு ஒருபோதும் மாறுவதில்லையோ அது வேதம்.
இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் புறவிஞ்ஞானம், அகவிஞ்ஞானம் இரண்டுமே வேதம் தான்.
அகவிஞ்ஞானம் மட்டுமே வேதம்,மற்றது வேதம் இல்லை என்று ஒதுக்க முடியாது.
ஏனென்றால் புறவிஞ்ஞானத்தின் மூலமும் நிலையான அறிவு கிடைக்கிறது
-
இனி இன்னொரு விசயத்தை ஆராய்வோம்.
-
தகவல் என்ற ஒன்று உண்டு, அறிவு என்ற ஒன்று உண்டு.
உங்களுக்கு சூரியமண்டலத்தை பற்றி தெரியுமா? என்று ஒருவர் கேட்டால். தெரியும் நான் அவைகளை பற்றி ஆராய்ந்து அறிந்துள்ளேன் என்று உங்கள் அனுபவத்தை சொன்னால் அது அறிவு.
எனக்கு சூரியமண்டலத்தை பற்றி தெரியும்,பிறர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் ஆனால் இதுவரை பார்த்ததில்லை என்று சொன்னால் அது தகவல் .நீங்கள் சூரியமண்டலத்தை பற்றி படித்திருக்கிறீர்கள். ஆனால் இதுவரை டெலஸ்கோப் மூலமாக நேரடியாக ஆராயவில்லை பார்த்ததில்லை.
--
ஆகவே தகவல் என்பது, பிறர் சொல்வதை நம்புவது, அல்லது படித்தறிவது.
அறிவு என்பது ஆராய்ந்து அறிந்த அனுபவத்தை ஆதாரமாக கொண்டது.
-
இன்று நமது பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பல தகவல்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் அறிவு ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. இந்த தகவலை அவர்கள் அனுபவத்தில் கொண்டுவரும் போது அறிவு கிடைக்கிறது.
இந்த தகவல்களை உரியமுறையில் பின்பற்றினால் அறிவை அடையலாம் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு வேதம். இந்த வேதத்திற்கு அளவே இல்லை. இது எல்லையற்றது. வேதம் தொடக்கமும் முடிவும் இல்லாதது. வேதங்கள் என்பது இவ்வளவு தான், இதற்கு மேல் எதுவும் இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. இவைகள் அனைத்தையும் புத்தகத்தில் கொண்டுவர முடியாது.
ஆகவே வேதங்கள் என்பவை புத்தகங்கள் அல்ல. அவைகள் இயற்கையின் மாறாத நியதிகள்.
இந்த நியதிகள் எப்போதும் இருக்கின்றன. மனிதன் அவைகளை கண்டுபிடிக்கிறான்.
-
மேகங்களின் மீது சில ரசாயண பொடிகளை தூவி, மழையை உருவாக்கினால் மழை வருகிறது. இது புறவிஞ்ஞானம்.இதையே ஒரு ரிஷி சில பிரார்த்தனைகள் செய்தால் மழைவருகிறது.இது அகவிஞ்ஞானம்.
-
ரிக்,யஜுர்,சாம,அத்ரவண வேதம் என்பவை அகவிஞ்ஞானத்தை பற்றி சொல்கின்றன.
-
அகவிஞ்ஞானத்தை பற்றி சிறிது ஆராய்வோம்.
-
ஒரு ரிஷி கடுமையான தவ வாழ்க்கை வாழ்ந்து, முடிவில், இயற்கையின் கட்டுகளிலிருந்து விடுதலை அடைகிறார். சுதந்திரர் ஆகிறார்.
அதன் பிறகு இயற்கை அவருக்கு அடிமையாகிறது. அவர் இயற்கைக்கு அடிமையில்லை. சாதாரண மனிதர்கள் இயற்கைக்கு அடிமைகளாக வாழ்கிறார்கள். இயற்கையால் பந்தாடப்படுகிறார்கள். ஆனால் இந்த ரிஷியை இயற்கை கட்டுப்படுத்த முடியாது.
-
இந்த ரிஷி, பல மாதங்கள் மழையே இல்லாமல் வாழும் பகுதிக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். மக்கள் இவரிடம் தங்கள் குறைகளை சொல்கிறார்கள். இவரும் மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு மழை பெய்ய வேண்டி, இயற்கையிடம் பிரார்த்திக்கிறார். உடனே மழை பொழிகிறது. ரிஷியின் வாயிலிருந்து வெளிப்பட்டதே அந்த பிரார்த்தனை, வேண்டுதல் இது ஒரு வேதம்.
-
இது வேதம் என்பது எப்படி தெரியும்?
-
யாருடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் ,அவர் விரும்பிய பலனை அப்படியே பலனை தருமோ அது தான் வேதம்.
ரிஷியின் சீடர்கள் இந்த பிரார்த்தனையை குறித்துக்கொள்கிறார்கள். அந்த ரிஷி காலமான பிறகு, பல வருடங்கள் கழித்து, சீடர்கள் இதே வார்த்தையை சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனால் மழை பொழியவில்லை.
ஏன்?
அந்த ரிஷி சொன்ன போது பெய்த மழை இப்போது ஏன் பெய்யவில்லை? ஏனென்றால் ரிஷி, இயற்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இந்த சீடர்கள் இயற்கையின் அடிமைகள். அவர்கள் இயற்கையை கடந்து சென்று சுதந்திரர்கள் ஆகவில்லை.
-
அப்படியானால் வேதங்களை உச்சரிப்பதால் பலன் கிடைக்காதா? கிடைக்கும்
-
நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த வேதங்கள் நமக்கு தகவல் போன்றது, இந்த வழியை முறையாக பின்பற்றினால் அவைகள் அறிவை தருகின்றன. ரிஷிகள் தங்களுக்குள் ஆழ்ந்து மூழ்கி உடல் உணர்வை கடந்து சென்றது போல, வேதங்களை ஓதுபவர்கள், உடல் உணர்வை கடந்து செல்ல முடியுமானால்,அவர்கள் பிரார்த்தனைகள் பலன் அளிக்கின்றன.
--
வேதம் என்றால் எக்காலத்திலும் இருக்கக்கூடிய அறிவுத்தொகுதி.
தொடக்கமும் முடியும் அற்ற வேதங்களின் மூலமே உலகம் முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது.
-
இந்த உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே.
எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
-
தோன்றா நிலையில் இருந்த எண்ணம் எந்த சொற்களின் மூலம் வெளிப்பட்டதோ,
அந்த சொற்களின் தொகுதியே வேதங்கள்.
-
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால்,புறவுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் வேதங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஏனெனில் ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அதைக்குறிக்கும் சொல் இல்லாமல் இருக்க முடியாது.(சொல்லுக்குப் பின்னால் எண்ணம் உள்ளது) எண்ணம்,அதிலிருந்து சொல்,அதிலிருந்து புறப்பொருள் உருவாகிறது.
-
இந்த சொல் என்பது என்ன? வேதங்களே.
வேதத்தின் மொழி என்ன? சமஸ்கிருதம் இல்லை.
வேதத்தின் மொழி வேதமொழி.(அதற்கு எழுத்துக்கள் இல்லை)
வேதமொழியைவிட பழைய மொழி எதுவும் இல்லை.
-
வேதங்களை எழுதியது யார் ? என்று நீங்கள் கேட்கலாம்.
வேதங்கள் எழுதப்படவே இல்லை.
சொற்களே வேதங்கள்.
ஒரு சொல்லை நான் பிழையின்றி உச்சரித்தால் அதுவே வேதம்.
விரும்பிய பலனை அது உடனே அளிக்கும்.
-
வேதத்தொகுதி என்னென்றும் உள்ளது.
உலகம் எல்லாம் அந்தச் சொல்தொகுதியின் வெளிப்பாடே.
வெளிப்பட்டு காணப்படுகின்ற சக்தி ஒரு கல்பம் முடியும்போது சூட்சும நிலையை அடைந்து, சொல் வடிவையும், பின்பு எண்ண வடிவையும் அடைகிறது. அடுத்த கல்பத்தில் மீண்டும் எண்ணங்கள் சொல்லாகி, அதிலிருந்து உலகம் பிறக்கிறது.
-
வேதங்களில் அடங்காதது என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் மனமயக்கமே.
அப்படி எதுவும் இருக்க முடியாது.இந்த உலகம் வேதத்திற்குள் அடக்கம்
-
வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. மற்ற மதங்களின் நூல்கள் அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவை,ஆனால் வேதங்கள் மனிதரால் எழுதப்படவில்லை.
-
மனிதரால் உருவாக்கப்ட்டவை எதுவாக இருந்தாலும் அவை வேதங்கள் அல்ல.
ஏனென்றால் வேதங்களுக்கு துவக்கமும் இல்லை,முடியும் இல்லை.
அவை எல்லையற்ற காலம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
-
மிகப்பழைய காலத்தில் இயற்கையின் ரகசியங்களை அறிய நினைத்த ரிஷிகள், பல தவங்களை இயற்றி, இயற்கையை கடந்து, சுதந்திர நிலையை அடைந்தார்கள். அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்டது வேதம்.
இவ்வாறு பல காலங்களில் பல ரிஷிகளிடமிருந்து வேதம் வெளிப்பட்டது.
-
அவர்கள் கூறிய கருத்துக்களை சீடர்கள் மனப்பாடம் செய்து கொண்டார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறு மனப்பாடம் செய்வதன் மூலம் இவை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன.
-
வேதங்களில் என்ன இருக்கும்?
-
பிரார்த்தனைகள், யாகங்கள், சடங்குகள்,அறிவுரைகள் போன்றவை.
சுருக்கமாக கர்மகாண்டம்,ஞான காண்டம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது
-
கர்மகாண்டத்தை சற்று விளக்குவோம்.
-
சடங்குகளும் பல தேவதைகளைப்பற்றிய பலவகையான துதிப்பாடல்களும் அதில் உள்ளன.
சடங்குகள் பல கிரியைகள் அடங்கியவை.
அவற்றுள் சில மிக விரிவானவை.அவற்றைச்செய்ய பல புரோகிதர்கள் தேவை.
சடங்குகளின் விரிவால் புரோகிதத் தொழிலே தனியொரு சாஸ்திரமாயிற்று.
படிப்படியாக இந்த சடங்குகளிலும் துதிகளிலும் பொதுமக்களுக்கு மதிப்பு வளர்ந்தது.
தேவதைகள்கூட மறைந்து அவர்களது இடத்தை இந்தச்சடங்குகள் பிடித்துக்கொண்டன.
-
இந்த கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்களில் மீமாம்சகர்கள் என்ற ஒரு பிரிவினர் .
இவர்கள் வேதத்தையே தெய்வமாக வழிபடுகிறார்கள்.
-
புரோகிதர்கள் இந்த துதிகளைப்பாடி,அக்கினியில் ஆஹுதி அளிப்பார்கள்.அவற்றின் சொற்களுக்கே பல பயன்களை அளிக்கும் சக்தியுண்டு . இயற்கைக்கு உட்பட்ட மற்றும் இயற்கையை மீறிய அனைத்து சக்திகளும் அங்கு உள்ளன.
-
வேதங்கள் ஒரு அபூர்வசக்தியுள்ள வெறும் வார்த்தைகள் மட்டுமே.
அவற்றை சரியாக உச்சரித்தால் விளைவுகளை உண்டாக்கவல்லது.
ஓர் உச்சரிப்பு தவறானாலும் பலன் தராது.
மற்ற மதங்களின் பிரார்த்தனைகள் போல் அல்லாமல் வேதங்களே இவர்களை பொறுத்தவரை தெய்வங்கள்.
வேதங்களின் சொற்களுக்கு எவ்வளவு உயர்வான இடம் அளிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து நீங்கள் உணரலாம்.
மழைபொழிய வேண்டுமா? இன்ன இன்ன பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.
குழந்தை பிறக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
யுத்தத்தில் ஜெயிக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
இன்ன இன்ன பலன் கிடைக்க வேண்டுமா?இப்படி இப்படி யாகம் செய்ய வேண்டும்.
திருமணமா இந்த சடங்கை செய்ய வேண்டும்.மரணமா? இந்த சடங்கை செய்ய வேண்டும்.
சொர்க்கம் செல்ல வேண்டுமா? அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டுமா? பலசாலியாக வேண்டுமா? பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமா? இன்னும் பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள் அங்கே சொல்லப்பட்டுள்ளன
-
இவ்வாறு மனப்பாடம் செய்யப்பட்டவைகளை,முறைப்படுத்தி வரிசைப்படுத்தினார்கள்.
அவைகளை ரிக்வேதம் என்று அழைத்தார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு இன்னும் பல ரிஷிகளின் வாரத்தைகளை சேர்க்க வேண்டியிருந்தது. அவைகளை தொகுத்து யஜுர் வேதம் என்றார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாமவேதம்,
மகாபாரத காலத்திற்குபிறகு வியாசர் வேதத்தை நான்காக தொகுத்தார்
அவை ரிக்வேதம்,யஜுர்வேதம்,சாமவேதம்,அதர்வணவேதம்
-
அந்த காலத்தில் நடந்த இயற்கை பேரிடரிலோ, போர்களாலோ,நோய்களாலோ, வேதத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒருவரோ,அல்லது ஒரு சமுதாயமோ அழிந்துவிட்டால், வேதத்தின் அந்த பகுதி முழுவதும் அழிந்துவிடும். பிறகு அது திரும்ப கிடைக்காது. இவ்வாறு வேதத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
முற்கால வேதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியே தற்போது நம்மிடம் உள்ளது என்று சொல்லப்படுகிறது
ஆகவே இதை சரிசெய்ய எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது.
-
அதன் பிறகு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரப்பட்டைகள்,மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் வேதங்களை எழுத ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு மொழி படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
வேதத்தை மனப்பாடம் செய்வது குறைந்துபோனது.
வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகவில்லை.
அப்போது எழுதப்பட்ட மொழி பிராமண மொழி அல்லது பிராமி மொழி என்று அழைக்கப்படுகிறது
பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இந்த மொழி வளரச்சியடைந்து உலகின் பல பகுதிகளுக்கு சென்றது
உலகம் முழுவதும் பிராமி மொழியின் கல்வெட்டுகளைக் காணலாம்
பிராமி மொழியுடன் சேர்ந்து வேதமும் உலகம் முழுவதும் பரவியது
-
வேதத்தின் சில வார்த்தைகளை பிராமி மொழியில் உச்சரிப்பது கடினமாக இருந்தது மேலும் பிராமி மொழியில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி பாணினி என்ற ரிஷி சமஸ்கிருதம் என்ற மொழியை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்
-
அதன்பிறகு வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
-
வேதங்கள் எழுதப்பட்ட பிறகு அவைகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது.
அதன் கூடவே பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
வேதங்களில் பல கருத்துக்கள் இருந்தன. ஒருவர் அவைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆகவே தங்களுக்கு பிடித்த பகுதிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு வேதங்களை பின்பற்றிய மக்கள் பல்வேறு மதப்பிரிவுகளை உருவாக்கினார்கள்.
-
சிலர் சொர்க்கத்திற்கு செல்வது குறித்த கருத்துக்களை ஆதரித்தார்கள்.
சிலர் முக்தி பற்றிய கருத்தை ஆதரித்தார்கள்.
சிலர் இந்த உலக இன்பங்களை அனுபவிக்கும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களில் கூறப்படும் பல்வேறு கருத்துக்களை பற்றி விவாதிக்கிறார்.
இதில் வேதாந்தம் என்று சொல்லப்படும் நெறி கடைசியாக உருவானது. இது தான் தற்கால இந்துமதம்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் பகவத்கீதை, வேதாந்தத்தின் சிறந்த நூலாக கருதப்படுகிறது.
இது வேதத்தின் பல கருத்துக்களை விளக்கிகூறுகிறது. எதையும் குறைகூறவில்லை.
சொர்க்கம் செல்வதோ,மற்றஉலக இன்பமோ,மனிதனின் துன்பத்தை முற்றிலும் நீக்காது ,முக்தி என்பது தான் மனிதனின் லட்சியம் என்பதை போதிக்கிறது.
-
முக்தி என்ற லட்சியத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு மதங்கள் உருவானது.
-
வேதம்= கர்மகாண்டம்+ ஞானகாண்டம்
ஞான காண்டம்(வேதாந்தம்)=உபநிடதங்கள் +பகவத்கீதை+பிரம்மசூத்திரம்(தத்துவசாஸ்திரம்)
-
வேதாந்தம்= சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,காணபத்யம்,சூர்யம் என்ற ஆறு மதங்கள்
கர்மகாண்டத்திற்கு எதிராக தோன்றிய மதம் = புத்தம், சமணம். இந்த இரண்டு மதங்களும் ஞான காண்டத்தில் உள்ள கடவுள் கருத்தை தவிர பிற பகுதிகளை ஏற்றுக்கொள்கிறது
-
இவைகள் தவிர இன்னும் பல மதங்கள் இந்தியாவில் தோன்றிக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் சில மதங்கள் தோன்றுகின்றன.
-
..
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மனம் இருக்கிறது.
அனைவரின் மனமும் மஹத் அல்லது பிரபஞ்ச மனத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரபஞ்ச மனத்திற்கு வேதம் என்று பெயர்.
இந்த வேதத்தை அறிந்தவர்,பிரபஞ்சத்திலுள்ள உயிர்கள் அனைத்தையும் அறிந்தவர் ஆகிறார்.
..
இறைவனிடமிருந்துதான் வேதம் வெளிப்பட்டது. வேதத்தை அவர் அறிவார்.அவரே வேதமாகவும் இருக்கிறார்
ஆனால் இறைவனை யாராலும் அறியமுடியாது?
ஏன்?
முதலில் வேதம் வெளிப்பட்டது, அதன் பிறகு உலகத்திலுள்ள சூரியன்,சந்திரன்,கிரகங்கள்.மனிதர்கள்,மிருகங்கள் உட்பட அனைத்தும் வெளிப்பட்டன.
நமது மனம் பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதி. நமது மனத்தின் எல்லையை படிப்படியாக விரிவுபடுத்திக்கொண்டே சென்றால் பிரபஞ்ச மனத்தை அடையும். அப்படி பிரபஞ்ச மனத்தை அடைந்தவன் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவன் ஆகிறான்.வேதத்தை அறிந்தவன் ஆகிறான். அப்படி வேதத்தை அறிந்தால்கூட வேதத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனை அறியமுடியாது.
ஏனென்றால் வேதத்தை கடந்து செல்லும்போது அறியவேண்டிய மனிதனே இருக்க மாட்டான்.
அங்கே இறைவன் மட்டுமே இருக்கிறார்.
உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச் சென்றது, கடலில் இறங்கியதும் அதில் கரைந்து ஒன்றாகிவிட்டது. பிறகு யார் வந்து தகவல் சொல்வது?
அதேபோல இறைவனை அறிய நினைத்து செல்லும் ஒருவன் முடிவில் இறைவனில் ஒன்றாக கலந்துவிடுகிறான்.
பிறகு யார்? இறைவனைப்பற்றி சொல்வது?
எனவேதான் இன்றுவரை இறைவனைப்பற்றி யாராலும் விளக்க முடியவில்லை.
10.உபநிடதங்கள்
-
வேதத்தை பரஞானம்,அபரஞானம் என இரண்டாக பிரிக்கிறார்கள்.
இந்த உலகத்திலும்,மேல் உலகங்களிலும் இன்பத்தை அனுபவித்து வாழ்வதற்குரிய வழிகளைக்கூறுவது
அபரஞானம்.
இந்தஉலகம்.மேல் உலகம் அனைத்திலிருந்தும் விடுபட்டு முக்தி அடைவதற்குரிய வழிகளைப்போதிப்பது பரஞானம்.
வேதங்களில் பரஞானத்தை போதிக்கும் பகுதிக்கு உபநிடதங்கள் என்று பெயர்.
..
உப-நிஷத் என்றால் குருவின் அருகில் அமர்ந்து கேட்டது என்று அர்த்தம்.
..
உபநிடதங்கள் (உபநிஷத்துகள்) இந்துதர்மத்தின் உயரிய உண்மைகளின் உறைவிடமாக அமைந்துள்ளன. உபநிடதங்கள் மிகவும் தொன்மையானவை. வேதம் வேறு உபநிடதம் வேறு என்று சிலர் கூறுகிறார்கள்.இது தவறு.
உபநிடமும் வேதமும் ஒன்றுதான்.
ரிஷிகள் சீடர்களுக்கு பல்வேறு உபதேசங்களைக்கூறுவார்கள்.
அதில் உலக ஞானமும் இருக்கும்,ஆன்மீக ஞானமும் இருக்கும்.
சிலர் அபரஞானத்தை படித்து பயன்பெறுவார்கள்.சிலர் பரஞானத்தை படித்து பயன்பெறுவார்கள்.
இரண்டுமே தேவையானவை.
...
1) பிரஜ்ஞானம் பிரம்ஹா – உணர்வுநிலை தான் பிரம்மம் (ஐத்ரேய உபநிடதம்)
2) அஹம் பிரம்ஹாஸ்மி – நான் (ஆத்மன்) தான் பிரம்மம் (பிரகதாரண்யக உபநிடதம்)
3) தத் த்வம் அஸி – நீ (ஆத்மன்) தான் அது (பிரம்மம்) (சாந்தோக்ய உபநிடதம்)
4) அயமாத்மா பிரம்ஹா – ஆத்மன் தான் பிரம்மம் (மண்டூக்ய உபநிடதம்)
போன்றவை மகாவாக்கியங்கள் என்று சொல்லப்படுகின்றன.
..
உபநிடதங்களில் எல்லா கருத்தும் சொல்லப்பட்டுவிட்டனவா?இனிமேல் புதிதாக சொல்வதற்கு எதுவுமே இல்லையா?
..
நானும் இறைவனும் ஒன்று என்னும் கடைசிநிலையை உபநிடதங்கள் கூறுகின்றன.இதற்குமேலும் புதிதாக கண்டுபிடிக்க எதுவும் இல்லை.
அந்த இறைவனை அடைவதற்கான புது வழிகள் கண்டுபிடிக்கப்படலாம்
.
உபநிடதங்கள் ஆத்மவித்யை (தன்னைப் பற்றிய அறிவு) மற்றும் பிரம்மவித்யை (இறைவனைப் பற்றிய அறிவு) ஆகியவையைப் புகட்டுபவை என ஸ்ரீ ஆதிசங்கரர் குறிக்கின்றார். 12 முக்கிய உபநிடதங்கள் உள்ளன:
க) ரிக் வேதம்
- ஐத்ரேய உபநிடதம்
௨) சாம வேதம்
- கேன உபநிடதம்
- சாந்தோக்ய உபநிடதம்
௩) யஜுர் வேதம்
- கட உபநிடதம்
- சுவேதாஷ்வதர உபநிடதம்
- தைத்திரீய உபநிடதம்
- மைத்ராயணி உபநிடதம்
- ஈஷா உபநிடதம்
- பிரகதாரண்யக உபநிடதம்
௪) அதர்வண வேதம்
- மாண்டூக்ய உபநிடதம்
- முண்டக உபநிடதம்
- பிரஷ்ன உபநிடதம்
..
பகவத் கீதை, பிரம்மசூத்திரம் மற்றும் மேற்குறிப்பிட்ட 12 முக்கிய உபநிடதங்கள் ஆகியவை மொத்தமாக ’பிரஸனஸ்த்ரயி’ என அழைக்கப்படுகின்றன. அதாவது மூன்று மூலங்கள் எனப் பொருள்படும். இவை இந்துதர்மத்தை முழுமையாக அறிய வேண்டுவோருக்கு மூலமாக அமைகின்றன. இவை தான் இந்துதர்மத்தின் ஞானநூலாகவும், அடிப்படை தத்துவச் சுவடுகளாகவும் திகழ்கின்றன.
”உபநிடதங்கள் தான் ஞானப் பால் கொடுக்கும் பசுக்கள், பகவத் கீதை தான் அப்பசுக்களின் பால். பகவத் கீதை எனும் ஞானப்பாலை பருகி எல்லா மனிதர்களும் பயனடைய வேண்டும்.” என்பது சான்றோர் கூற்று.
..
108 உபநிஷத்துக்கள்
...
சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
ரிக் வேதத்தைச் சார்ந்தவை மூன்று:
1.ஆத்மபோதம்
2.கௌஷீதகீ
3.முத்கலம்
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:
4.அக்ஷி
5.ஏகாக்ஷரம்
6.கர்ப்பம்
7.பிராணாக்னிஹோத்ரம்
8.சுவேதாசுவதரம்
9.சாரீரகம்
10.சுகரகசியம்
11.ஸ்கந்தம்
12.ஸர்வஸாரம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:
13.அத்யாத்மம்
14.நிராலம்பம்
15.பைங்களம்
16.மந்த்ரிகா
17.முக்திகம்
18.ஸுபாலம்
சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:
19.மஹத்
20.மைத்ராயணீ
21.வஜ்ரஸூசி
22.சாவித்ரீ
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
23.ஆத்மா
24.சூர்யம்
சன்னியாச உபநிடதங்கள்
ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
25.நிர்வாணம்
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை மூன்று:
26.அவதூதம்
27.கடருத்ரம்
28.பிரம்மம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:
29.ஜாபாலம்
30.துரீயாதீதம்
31.பரமஹம்ஸம்
32.பிக்ஷுகம்
33.யாஞ்ஞவல்க்யம்
34.சாட்யாயணி
சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:
35.ஆருணேயம்
36.குண்டிகம்
37.மைத்ரேயீ
38.ஸன்னியாஸம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:
39.நாரத பரிவ்ராஜகம்
40.பரப்பிரம்மம்
41.பரமஹம்ஸ பரிவ்ராஜகம்
யோக உபநிடதங்கள்
ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
42.நாதபிந்து
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை பத்து:
43.அமிருதநாதம்
44.அமிருத பிந்து
45.க்ஷுரிகம்
46.தேஜோபிந்து
47.தியான பிந்து
48.பிரம்ம வித்யா
49.யோக குண்டலினீ
50.யோகதத்வம்
51யோகசிகா
52.வராஹம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை நான்கு:
53..அத்வயதாரகம்
54.த்ரிசிகிப்பிராம்மணம்
55.மண்டலப்பிராம்மணம்
56.ஹம்ஸம்
சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
57.ஜாபலதர்சனம்
58.யோகசூடாமணி
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:
59.பசுபதப்பிரம்மம்
60.மஹாவாக்யம்
61.சாண்டில்யம்
சாக்த உபநிடதங்கள்
ரிக்வேதத்தைச் சார்ந்தவை மூன்று
62.த்ரிபுரா
63.பஹ்வ்ருசா
64.ஸௌபாக்யலக்ஷ்மி
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
65.ஸரஸ்வதிரஹஸ்யம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:
66.அன்னபூர்ணா
67.த்ரிபுராதாபனீ
68.தேவீ
69.பாவனா
70.ஸீதா
சைவ உபநிடதங்கள்
ரிக்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று
71.அட்சமாலா
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:
72.காலாக்னிருத்ரம்
73.கைவல்யம்
74.தட்சிணாமூர்த்தி
75.பஞ்சப்பிரம்மம்
76.ருத்ரஹ்ருதயம்
சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
77.ஜாபாலி
78.ருத்ராட்ச ஜாபாலம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஆறு:
79.அதர்வசிகா
80.அதர்வசிரம்
81.கணபதி
82.பிருஹஜ்ஜாபாலம்
83.பஸ்மஜாபாலம்
84.சரபம்
…………….
வைணவ உபநிடதங்கள்
…………
கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
85.கலிஸந்தரணம்
86.நாராயணம்
சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
87.தாரஸாரம்
சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
88.அவியக்தம்
89.வாஸுதேவம்
அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:
90.கிருஷ்ணம்
91.கருடம்
92.கோபாலதாபனீ
93.த்ரிபாத்விபூதி மஹாநாராயணம்
94.தத்தாத்ரேயம்
95.நரசிம்மதாபனீ
96.ராமதாபனீ
97.ராமரஹஸ்யம்
98.ஹயக்ரீவம்
முக்கிய உபநிஷத்துக்கள்.
99.ஈசா வாஸ்ய உபநிடதம்
(சுக்ல யசூர்வேதம் - வாஜஸனேய சாகை)
100.கேன உபநிடதம்
(சாம வேதம் - தலவகார சாகை)
101 கடோபநிடதம்
(கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
102 பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)
103 முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)
104 மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)
105 ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)
106 தைத்திரீய உபநிடதம்
(கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
107 பிரகதாரண்யக உபநிடதம்
(சுக்லயஜுர் வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)
108 சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)
..
11. ஸ்மிருதிகள்
..
ஸ்ருதி என்றால் வேதம். ஸ்மிருதி என்றால் சட்டங்கள்.
.
மநு ஸ்மிருதி, பராசரர் ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, கௌதம ஸ்மிருதி, ஹாரீத ஸ்மிருதி, யம ஸ்மிருதி, விஷ்ணு ஸ்மிருதி, சங்க ஸ்மிருதி, லிகித ஸ்மிருதி, பிருஹஸ்பத ஸ்மிருதி , தக்ஷ ஸ்மிருதி, அங்கிர ஸ்மிருதி, பிரசேத ஸ்மிருதி, ஸம்வர்த்த ஸ்மிருதி, அசன ஸ்மிருதி, அத்ரி ஸ்மிருதி, ஆபஸ்தம்ப ஸ்மிருதி, சாதாதப ஸ்மிருதி.
என்று பல ஸ்மிருதிகள் உள்ளன.
ஸ்மிருதிகளை உருவாக்கியவர்கள் ரிஷிகள்
தற்காலத்தில் பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றுகிறார்கள்.
முற்காலத்தில் ரிஷிகள் சட்டங்களை இயற்றினார்கள்.
..
இந்த ஸ்மிருதிகள் என்பது என்ன என்பதை ஆராய்வோம்.
-
பழைய காலத்தில் ரிஷிகள் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் சுயநலம் இல்லாதவர்கள். இறைவனை அடைவதையே வாழ்க்கையில் லட்சியமாக கொண்டவர்கள்.
தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது. இந்த உலகத்தில் உள்ள அனைவரும் இறைவனை காணவேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள்.
அதே நேரத்தில் அனைவராலும் ஒரே பிறவியில் இறைவனை அடையமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.
சிலர் சொல்வது போல இன்ன இன்ன கொள்கைகளை நம்புங்கள்.
அவ்வாறு நம்பும் அனைவரும் சொர்க்கம் செல்லலாம் மற்றவர்கள் நரகம் செல்வார்கள் என்றெல்லாம் கூறி மக்களை குழப்பவிரும்பவில்லை.
இறைவனை அடைவதற்கென்று சில தகுதிகளை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அது சிலருக்கு ஒரு பிறவியில் சாத்தியமாகலாம், சிலருக்கு பல பிறவிகள் ஆகலாம்.
-
ஆகவே இந்த ரிஷிகள் மனித சமுதாயம் முழுவதும் இறைவனை நோக்கி செல்ல வேண்டும்,
அதே நேரத்தில் மெதுவாக படிப்படியாக செல்ல வேண்டும் என்பதை தெரிந்துவைத்திருந்தார்.
வேகமாக செல்பவர்களுக்கு ஒரு பாதை, சுமாரான வேகம் உள்ளவர்களுக்கு இன்னொரு பாதை,
மெதுவாக செல்பவர்களுக்கு ஒரு பாதை என பல பாதைகளை உருவாக்கினார்.
-
அரசர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பார்கள்.
மாறிக்கொண்டிருக்கும் அரசர்கள் தங்கள் விருப்பப்படி சட்டங்களை இயற்றிக்கொண்டிருந்தால் சமுதாயம் அதை ஏற்றுக்கொள்வதிலும்,அதை உடனே நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.
ஒரு அரசர் சில சட்டங்களை இயற்றியிருப்பார்,அவரை வீழ்த்திவிட்டு வரும் இன்னொரு அரசர், முன்பாக உள்ள அரசர் இட்ட சட்டங்கள் எதுவும் செல்லாது. உங்களுக்கென்று புதுசட்டம் இயற்றுகிறேன் என்று சொன்னால், மக்களின் தொடர்முன்னேற்றம் பாதிக்கப்படும், பிறகு இன்னொருவர் வேறு சட்டத்தை கொண்டுவருவார்.
ஆகவே இதை தடுப்பதற்காக சட்டங்கள் இயற்றுவது அரசர்கள் கையில் இல்லை.
அவைகளை அந்த ரிஷிகள் தான் இயற்றினார்கள்.
அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான் அரசர்களின் வேலை.
ஏதாவது புதிய சட்டம் இயற்ற வேண்டுமானாலும்,இருக்கின்ற சட்டத்தை நீக்க வேண்டுமானாலும் அரசர் ரிஷிகளுடன் கலந்து ஆலோசிப்பார்.
இவ்வாறு பல நூற்றாண்டுகளாக பல மன்னர்கள் மாறியபோதும் சட்டம் மாறுவதில்லை.
மக்களின் வாழ்க்கையும் ஒரே போல தான் இருக்கும். பெரியமாறுதல்கள் எதுவும் இருக்காது.
-
இவ்வாறு நடைமுறையில் இருக்கும் இந்த சட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளவையாக இல்லை.
அல்லது சில சட்டங்கள் காலாவதியாகிவிட்டன.பயன்படுத்த தகுதியில்லாதவையாகிவிட்டன என்பதை அதற்கு பின் வரும் ரிஷிகள் தெரிந்து கொள்வார்கள்.
ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து,புதிய சட்டத்தை உருவாக்குவார்கள்.
இந்த புதிய ஸ்மிருதி அந்த ரிஷியின் பெயரால் அழைக்கப்படும்.
இவ்வாறு ஸ்மிருதிகள் என்ற சட்டங்கள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டுகொண்டே இருக்கும்.
நிலையான சட்டங்கள் என்று எதுவும் இல்லை. காலத்திற்கு ஏற்ப இவைகள் மாறிக்கொண்டே இருக்கும்.
அந்தந்த காலத்தில் வாழும் ரிஷிகள் இவைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
-
இந்த ஸ்மிருதிகளில் என்ன என்ன இருக்கும்?
-
நமது நாட்டில் தற்போது இருக்கும் சட்டம் எப்படியோ அதே போல தான் ஸ்மிருதிகளும்.
அரசர்களின் கடமைகள் என்ன? பிராமணர்களின் கடமைகள் என்ன?
பாமர மக்களின் கடமைகள் என்ன?
எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று அவைகள் ஆணையிட்டு கூறுகின்றன.
இவை தவிர இன்னும் பல அற்புதமான கருத்துக்கள் ஸ்மிருதிகளில் உள்ளன.
இந்த ஸ்மிருதிகள் பெரும்பாலும்,இறைவனை நோக்கி மக்கள் செல்வதை குறிக்கோளாக கொண்டிருப்பதால்,மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை காணலாம்.
-
ஸ்மிருதிகளால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளும்,தீமைகளும்
-
எந்த ஒரு சட்டமும் முழுமையாக எல்லோருக்கும் நன்மை செய்யும் என்று சொல்ல முடியாது.
சிலருக்கு அதிக நன்மையையும்,சிலருக்கு அதிக தீமையையும் கொண்டுவருகின்றன.
அவைகளில் முக்கியமானது ஜாதி பற்றிய கட்டுப்பாடுகள்.
அந்த காலத்தில் தொழில்கள் அடிப்படையில் ஜாதிகள் பிரிக்கப்பட்டன.
ஒரு ஜாதியில் இருப்பவர் திறமைவாய்ந்தவராக இருந்தால் இன்னொரு ஜாதிக்குரிய தொழிலை செய்யும் நடைமுறை இருந்ததை பற்றி வேறொரு கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.அதை படிக்கவும்....
-
சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவனுக்கு பிராமணஜாதிக்குரிய குணங்கள் இருந்தால்,அவன் பிராமணனாக கருதப்பட்ட காலம் மாறி, அவனை தொடர்ந்து தாழ்ந்தவனாகவே கருதிய நிலையை சமுதாயத்தில் ஏற்பட்டது.
இதற்கு ஸ்மிருதிகளின் சட்டங்கள் தான் காரணம்.
ஒருவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை சிறப்பாக செய்தால்,இறைவனை அடையலாம் என்னும் போது,அவர்கள் ஏன் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாறவேண்டும்?
என்று கேட்டார்கள்.
ஒரு ஜாதியில் பிறப்பவன் அந்த ஜாதிக்குரிய கடமைகளை சிறப்பாக செய்தால் அடுத்த பிறவியில் இன்னொரு ஜாதியில் பிறக்கலாம், பிறகு அந்த ஜாதியில் சிறப்பாக கடமைகள் செய்து அடுத்த பிறவியில் இன்னொரு ஜாதியில் பிறக்கலாம்.
பிராமணஜாதி என்பது உயர்ந்த ஜாதி. பிராமணஜாதியில் பிறப்பவர்கள் பெரும்பாலும் முக்தியடைவார்கள்.அதற்கு ஏற்றவாறே அந்த ஜாதியின் சட்டதிட்டங்கள்,வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டிருக்கும்.
தாழ்ந்த ஜாதியில் பிறந்த ஒருவர் பிராமணனாக வேண்டுமானால்,படிப்படியாக பலபிறவிகள் எடுத்து கடைசியில் பிராமண ஜாதியில் பிறக்க வேண்டும்.
-
ஆகவே ஸ்மிருதிகளில் நான்கு ஜாதிகளுக்கும் தனித்தனி சட்டங்களை இயற்றினார்கள்.
அவைகளை கடக்க முடியாதவாறு கடுமையாக்கினார்கள்.இந்த பிறவியில் பிறக்கும் ஒருவன் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாற முடியாது. இந்த ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
பிற ஜாதியினருடன் உணவு உண்ணக்கூடாது. அவர்களுடன் பழகக்கூடாது. ஒருவேளை ஒரு ஜாதியில் உள்ளவன், இன்னொரு ஜாதிக்கு செல்ல வேண்டுமா? அடுத்துவரும் பிறவியில் அது நடக்கலாம்.
இந்த பிறவியில் இவ்வளவு தான்.
-
அதே வேளையில் ஒரேபிறவியில் இறைவனை அடைவதற்கும் வழிகள் உள்ளன.
சூத்திரனுக்கு இறைவனை அடையவேண்டும் என்ற ஆவல் தீவிரமாக இருந்தால் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம்.பக்தியுள்ள,ஞானமுள்ள சூத்திரன், பிராமணனுக்கு நிகரானவன் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.
இவ்வாறு பலர் தாழ்ந்த ஜாதியில் பிறந்து இறைவனை அடைந்திருக்கிறார்கள்.
தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் ரிஷிகளாக இருந்திருக்கிறார்கள்.
-
-
நான்கு ஜாதியை சேர்ந்தவர்களும் தத்தம் ஜாதியில் ,தங்களுக்குரிய கடமைகளை சிறப்பாக செய்துவருவதன் மூலம் இறைவனை அடைய முடியும் என்றால், ஒருவர் ஒரு ஜாதியிருந்து இன்னொரு ஜாதிக்கு ஏன் மாறவேண்டும்?
..
ஆன்மீக ரீதியில் எல்லாம் சரிதான்.பிறகு பிரச்சினை எங்கே ஏற்பட்டது?
-
இந்த உலகத்தில் உள்ள சிறப்பான பொருட்கள் அனைத்தையும் அரசரிடம் சமர்ப்பிக்கிறார்கள்.
அவர் எதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தாலும்,அவைகள் உடனே கிடைத்துவிடுகின்றன.
அவருக்கு சேவை செய்ய பலர் இருக்கிறார்கள். அவர் சொர்க்கத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள். வைசியஜாதியில் உள்ள பெரும் செல்வந்தர்கள் கூட கிட்டத்தட்ட பல இன்பங்களை அனுபவித்து மகிழ்கிறார். பிராமணன் விரும்பினால்,மன்னர்கள் அனைத்து வசதிகளையும் செய்து தரதயாராக இருப்பார்கள்.
ஆகவே மூன்று ஜாதியினருக்கும்,இந்த வாழ்வில் அனுபவிப்பதற்கு பல பொருட்கள் கிடைக்கின்றன.அவர்களை யாரும் தடைபோடுவதில்லை. ஆனால் சூத்திரனுக்கு?
-
பானை செய்யும் தொழிலை பரம்பரையாக செய்யும் ஒரு சூத்திரனை எடுத்துக்கொள்வோம். அவனுக்கு பானை செய்துவியாபாரம் செய்வதில் அதிக வருமானம் கிடைக்கவில்லை. ஆகவே அதிக வருமானம் கிடைக்கும் தொழிலை செய்ய விரும்புகிறான்.ஆனால் இந்த ஸ்மிருதிகள் அவனுக்கு தடைபோடுகின்றன. பரம்பரை தொழிலைவிடக்கூடாது என்கின்றன. ஏன் அவைகள் அப்படி சொல்கின்றன? பானை செய்வது பற்றிய அறிவு உங்கள் பகுதியில் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த தொழிலை விட்டுவிட்டால், பானைகள் கிடைக்காமல்,மற்றவர்கள் திண்டாடநேரும், மற்றவர்களுக்கு அந்த தொழிலும் தெரியாது. இதே போல ஒவ்வொருவரும்,தங்களது குலத்தொழிலை விட்டுவிட்டால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படும். ஆகவே உங்கள் குலத்தொழிலை எக்காரணத்தை கொண்டும்விடக்கூடாது. உங்கள் தொழிலுக்குள் வேறுயாரும் குறுக்கே வரமாட்டார்கள் என்கிறது.
-
சில தொழில்களை செய்பவன் குறுகிய காலத்தில் அதிகம்சம்பாதித்து,வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்கிறான். சில தொழில்களை செய்பவன் குறைந்த ஊதியத்தை பெற்று வறுமையில் வாடுகிறான். இதில் அடிமை தொழில்கள் வேறு இருக்கின்றன. அடுத்தவனுக்கு அடிமையாக வேலை செய்பவனை எக்காரணத்தை கொண்டும் முன்னேறவிடமாட்டான்.முன்னேறினால் பிறகு இவனுக்கு சேவகம் செய்வது யார்? ஆகவே ஏதாவது சூத்திரன் அதிகம் சம்பாதித்து பணக்காரன் ஆகநினைத்தாலும்,மற்ற ஜாதியினர் அதை விடமாட்டார்கள். எங்கே தங்களைவிட உயர்ந்துவிடுவானோ என்ற எண்ணம் தான்.
-
ஆகவே சூத்திரனாக பிறப்பவன் பரம்பரை பரம்பரையாக அடிமைவேலை செய்ய வேண்டும். அவன் இந்த உலகத்தின் இன்பங்கள் எதையும் அனுபவிக்க கூடாது. தொடர்ந்து அவமானப்பட்டுக்கொண்டே வாழவேண்டும். சுயமாக சிந்திக்க கூடாது. மற்ற ஜாதியினரை கேள்விகேட்க கூடாது என்று எத்தனையெத்தனையோ கட்டுப்பாடுகள்.
-
காலம் மாறமாற சூத்திரர்கள் எண்ணிக்கையில் அதிகரித்தார்கள்.அதே அளவு அவர்களை அடக்கியாள சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. இறைவனை காண்பதே மனிதனின் லட்சியம் என்று சூத்திரர்களிடம் போதித்தார்கள்.
ஜயா எங்களுக்கு இறைவனும் வேட்டாம் வேறு எதுவும் வேண்டாம். உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி, இருக்க இடம் இன்றி சாகிறோம்.இறைவனை பற்றி எங்களிடம் சொல்லி ஏன் எங்களை மேலும் மேலும் கொல்கிறீர்கள்.. நீங்கள் எதுவும் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் எங்கள் வழியிலேயே செல்கிறோம். உங்கள் சட்டங்களை காட்டி எங்களை கொடுமைப்படுத்தாதீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
-
இவர்களை இப்படியே விட்டால், ஸ்மிருதிகளை பின்பற்ற மாட்டார்கள், மதத்தை பின்பற்ற மாட்டார்கள், இவர்கள் முன்னேறினால் நம்மையும் மதிக்க மாட்டார்கள். நம்மிடம் அடிமைவேலை செய்ய மாட்டார்கள் என்று பயந்து, மேலும் மேலும் இவர்கள் மீது அடக்குமுறையை ஏவினார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் கடைசியில் நீங்களும் வேண்டாம். உங்கள் ஸ்மிருதியும் வேண்டாம். உங்கள் மதமும் வேண்டாம், உங்கள் கடவுளும் வேண்டாம் என்று அவற்றை ஒதுக்கி தள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.அவர்கள் முன்னேறுவதற்கு எவையெல்லாம் தடைகள் என்று நினைத்தார்களோ அவைகளை ஒதுக்கி தள்ளினார்கள். சுதந்திரம் பெற்றதாக உணர்ந்தார்கள்.
-
சூத்திரர்கள் ஸ்மிருதிகளை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்கள்
-
எல்லோரும் இறைவனை நோக்கி தான் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
-
இறைவன் தேவையில்லை என்று ஒருவன் ஏன் இந்த உலகத்தில் வாழக்கூடாது?
-
இந்த உலகத்தில் உள்ள இன்பங்களை முதலில் அனுபவிக்க விடுங்கள். பிறகு இறைவன்,மற்றவைகள் பற்றி யோசிக்கலாம் என்று ஒருவன் ஏன் சொல்லக்கூடாது?
-
இறைவனே வாழ்க்கையில் லட்சியம் என்று சொல்லும் நீங்கள் எந்த அளவுக்கு அதில் முன்னேறியிருக்கிறீர்கள்?
-
மனிதர்கள் அனைவருக்குள்ளும் ஒரே இறைவன் சமமாக உறைகிறார் என்று அறியும் மகான் அனைவரையும் சமமாக காண்கிறார் என்று தானே வேதம் சொல்கிறது. மனிதர்களுக்குள் வேறுபாட்டை காணும் நீங்கள் ஆன்மீகவாதியில்லை என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்.
-
ஒரு ஜாதியினரின் நம்மைக்காக இன்னொரு ஜாதியை சேர்ந்தவர் என் உழைக்கவேண்டும்? உங்களுக்கு அடிமைவேலை செய்ய உங்கள் ஜாதியிலிருந்தே ஒருவரை தேர்ந்தெடுக்கலாமே?
-
பசுமாட்டை தெய்வம் என்று பூஜிக்கும் நீங்கள் ,சூத்திரர்களை பசுமாட்டைவிட கேவலமாக தானே நடத்தினீர்கள். இது தான் ஸ்மிருதிகள் உங்களுக்கு கற்றுத்தந்த பாடமா?
-
கடுமையாக வேலை செய்து,வாழும் மக்கள் மாமிசம் உண்கிறார்கள்.அதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு உயிரை கூட கொல்லாமல் யாராவது இந்த உலகத்தில் வாழமுடியுமா? ஒரு மனிதனுக்கு செய்யும் பாவத்தைவிட மாமிசம் உண்பது பெரியபாவமா?
-
தாழ்ந்த ஜாதியினர் வேதம் படிக்க கூடாது என்று வேதத்தில் எங்கே கூறப்பட்டுள்ளது?தாழ்ந்த ஜாதியினர் வேதம் படிக்க கூடாது என்ன சட்டம்போட நீங்கள் யார்?
-
ஸ்மிருதிகளில் உங்களுக்கென்று கூறப்பட்ட சட்டங்களை எந்த அளவு நீங்கள் பின்பற்றினீர்கள்?அடுத்தவனை அடக்குவதற்காக தானே ஸ்மிருதியை பயன்படுத்தினீர்கள்?
--
ஒரு காலத்தில் ஸ்மிருகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகள் செய்திருக்கலாம், ஆனால் அதுவே பிற்காலத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கேடுவிளைவிப்பதாக மாறிவிட்டது.அதை ஏன் நீங்கள் நீக்க முயற்சிக்கவி்ல்லை
-
இந்த ஸ்மிருதிகள் தீயவை இவைகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள்.
அது தவறு. இந்த ஸ்மிருதிகள்தான் இந்தனை ஆயிரம் ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்தது.
இந்தியாவின் வரலாறு மக்களின் வாழ்க்கைமுறை இவைகளை அறிந்துகொள்ள ஸ்மிருதிகளை படிப்பது அவசியம்.
ஸ்மிருதிகளில் உள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
..
ஸ்ருதிக்கும் ஸ்மிருதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? சுவாமி விவேகானந்தர் இதுபற்றி கூறுவதைப் பார்ப்போம்
-
இறைவன் ஆன்மா, இயற்கை - இவற்றுக்கிடையிலான மாறாத உறவைப்பற்றி ஆராய்கிறது.(ஸ்மிருதி)
ஸ்மிருதி என்பது வட்டாரச் சூழ்நிலைகள், காலச் சூழ்நிலைகள், குறிப்பிட்ட அந்தக் காலத்தின் சமுதாய அமைப்புகள் முதலியவற்றைப் பற்றிய தாக உள்ளது.
முதல்வகை உண்மைகள் பெரும்பாலும் நமது சாஸ்திரங்களான வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
----
இரண்டாவது வகை, ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் கூறப்படுகின்றன.
---
எல்லா காலங்களுக்கும் வேதங்களே இறுதியான லட்சியம், முடிவான அதிகாரம் உள்ளவை என்பவை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எதிலாவது புராணங்கள் வேதங்களிலிருந்து மாறுபடுமானால் புராணத்தின் அந்தப் பகுதியை இரக்கமின்றி ஒதுக்கிவிட வேண்டும்.
---
இந்த ஸ்மிருதிகள் அனைத்திலும் கூறப்படும் போதனைகள் வெவ்வேறாக உள்ளன என்பது நமக்குத் தெரியும்.
---
ஸ்ருதிகள் மனிதனின் அழியாத இயல்பை அடிப்படையாகக் கொண்ட நிரந்தர உண்மைகள் பற்றி பேசுகின்றன..
----
மனிதனின் இயல்பை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் மனிதன் வாழும்வரை இந்த உண்மைகளும் மாறவே மாறாது. அவை எல்லா காலங்களுக்கும் உரியவை, எல்லா இடங்களுக்கும் பொதுவானவை, உலகம் தழுவியவை.
---
ஆனால் ஸ்மிருதிகள் பொதுவாக வட்டாரச் சூழ்நிலைகளையும், அங்கு நிலவுகின்ற பல்வேறான சூழ்நிலைகளின் காரணமாக எழுகின்ற கடமைகளைப் பற்றியுமே கூறுகின்றன. இவை கால ஓட்டத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகின்றன.
---
ஆனால் ஏதோ ஒரு சிறிய சமுதாய வழக்கம் மாறுவதால் உங்கள் மதமே அழிந்துவிடப் போவதில்லை, அப்படி ஒரு போதும் நடக்காது. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.அந்தப் பழக்க வழக்கங்கள் ஏற்கனவே மாறிக் கொண்டிருப்பவை என்பதை மறக்காதீர்கள்.
---
மாட்டிறைச்சி தின்னாத பிராமணன், பிராமணனே அல்ல என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்பு இதே இந்தியாவில் இருந்தது. சன்னியாசியோ அரசனோ அல்லது யாராவது மகானோ வீட்டுக்கு வந்தால் ஆடும் காளையும் கொல்லப்பட்ட விவரங்களையும், ஆனால் பயிர்த்தொழில் செய்யும் இனமாகிய நாம், மிகச்சிறந்த காளைகளைக் கொல்வது இறுதியில் நம் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதையும் நாம் வேதங்களில் படிக்கிறோம். எனவே பசு வதைக்கும் எதிராகக் குரல்கள் எழுந்தன ; அந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
---
கொடிய வழக்கங்கள் என்று இப்போது நாம் கருதுகின்ற பல பழக்கங்கள் முன்பு சமுதாயத்தில் நிலவியதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் வேறு விதிகளை உருவாக்க நேர்ந்தது. இந்த விதிகளும் காலப்போக்கில் மறையும். உடனே புதிய விதிகள் தோன்றவும் செய்யும்.
----
எனவே வேதங்கள்(ஸ்ருதிகள்) எல்லா காலங்களிலும் ஒன்றே. அவை நிலையானவை
ஸ்மிருதிகள்(உதாரணம்.மனு ஸ்மிருதி) காலத்திற்குக் காலம் மாறுபவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
---
காலம் செல்லச்செல்ல ஸ்மிருதிகளில் கூறப்பட்ட விதிகள் மறைந்து கொண்டே போகும். மகான்கள் வருவார்கள்.அவர்கள் சமுதாயத்தை மாற்றி,இன்னும் நல்ல பாதைகளிலும் காலத்திற்குத் தேவையான கடமைகளிலும் வழிகளிலும் சமுதாயத்தைச் செலுத்துவார்கள். இத்தகைய நிலை இல்லையெனில் சமுதாயம் வாழ்வது என்பது முடியாமல் போய்விடும்
---.
. உலகிலுள்ள வேறெந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதேவேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்தருப்போம். எவ்வாறு இப்படி இருப்பது என்பது இந்துக்களுக்குத் தான் தெரியும்.
இதை தெளிவான வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் ஒவ்வொன்றிலும் முக்கியம் மற்றும் முக்கியமற்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
----
முக்கியமானவை என்றும் இருப்பவை. முக்கியமற்றவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுபவை; அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீக்கப்பட்டு, முக்கியமானவற்றால் நிரப்பப்படவில்லை என்றால், கட்டாயமாக அவை ஆபத்தானவையாகிவிடும்.
---
உடனே நீங்களெல்லாம் எழுந்து நின்று, உங்கள் பழங்கால வழக்கங்களையும் அமைப்புகளையும் தூற்ற வேண்டும் என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள்.நான் சொல்வது அது அல்லவே அல்ல. அவற்றுள் மிகவும் தீய ஒன்றைக் கூட நிந்திக்காதீர்கள், எதையும் தூற்றாதீர்கள்.
இன்று மிகக் கொடிய ஒன்றாகத் தோன்றுகின்ற பழக்கங்கள், கடந்த காலத்தில் வாழ்வை வளப்படுத்திய பழக்கங்களாக இருந்திருக்கும். அவற்றை நாம் நீக்க நேருமானால் கூட சபித்துக் கொண்டே நீக்கக் கூடாது.
நம் இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக, கடந்த காலத்தில் அவை செய்த மகத்தான காரியங்களுக்காக அவைகளை வாழ்த்தியும் அவைகளிடம் நன்றியுணர்வுடனும் நீக்க வேண்டும்.
--
சுவாமி விவேகானந்தர்
..
12.ஆறு தரிசனங்கள்
-
வேதம் என்றால் அறிவு என்று பார்த்தோம். எந்தெந்த வழிகளில் எல்லாம் அறிவு கிடைக்கிறது?
..
1. பிரத்தியட்சம் - நேரடியாக கண்கள் மூலம் காணும் காட்சி.
.
2. அநுமானம் -நேரடியாகக் அனுபவிக்காவிட்டாலும் அனுமானத்தால் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக தீ இருந்தால் அங்கே வெப்பம் இருக்கும் என்று அனுமானிப்பது.
.
3. ஆப்தவாக்கியம் - நம்பிக்கைக்குரிய முன்னோர்கள் சொன்ன வார்த்தைகளை நம்புதல்
..
4. உபமானம் - ஒப்பிட்டு தெரிந்துகொள்வது.பொதுவாக இப்படித்தான் நடக்கும் என்ற பொதுப்புத்தி
..
5. அருத்தாபத்தி - நேரில் பார்க்காமல்,யாரும் கூறாமல் நாமாக ஒரு முடிவுக்கு வருவது. (உ) - பகலில் உண்ணாத ஒருவன் பருத்து இருக்கிறான் எனில் அவன் இரவில் உண்கிறான் என நேரில் காணாமேலேயே, யாரும் உரைக்காமல் பொருள் கொள்ளுதல்
..
6. அனுபலப்தி- எதிர்மறை நிரூபணம் மூலம் ஒரு உண்மையை அறிதல். ஒரு பொருள் .அதாவது, ஒரு பானையை இங்கே காண முடியவில்லை என்றால் இங்கே பானை இல்லை என்று பொருள். இப்படி அறியும் முறைக்கு அனுலப்தி என்று பெயர்
..
இந்த ஆறு வழிகளில் மனிதனுக்கு அறிவு ஏற்படுகிறது.
..
வேதங்களில் அறுதி உண்மையைப்பற்றி என்ன சொல்லியிருக்கின்றன என்பதை
பல்வேறு விதமாக ஆராய்ந்து தெளிந்து ஆறு தத்துவ ஞான பிரிவாக கூறப்படுபவையே ஆறு தரிசனங்கள்.
இவை பல்வேறு காலகட்டங்களில் உருவானவை.
1.சாங்கியம்
===========
சாங்கிய தரிசனத்தை முதலில் முறைப்படுத்தியவர் 'கபில முனிவர்'.
சாங்கியம் கூறும் மூல காரணம்
=============================
இப்பிரபஞ்சம் தோற்றத்திற்க்கு மூல காரணம் அறிவா? அல்லது பொருளா? என்ற கேள்விக்கு இரண்டுமே என சமநோக்கு பார்வை கொண்ட தரிசனம் சாங்கியம் ஆகும்.
சாங்கிய கோட்பாட்டின் படி அறிவு எனப்படுவது ஆக்கம், அழிவு, மாற்றம் இதற்கு அப்பாற்பட்டது, அதை முறையே 'புருஷன்' எனவும், அறிவற்ற ஆனால் இயங்ககூடியதான பொருட்கள் அனைத்தும் முறையே 'பிரகிருதி' எனவும் கொள்கிறது.
சாங்கியத்தின்24 தத்துவங்கள்
1.பிரகிருதி
2.மஹத்
3.அகங்காரம்
4.மனஸ்
5-9.பஞ்சஞானேந்திரயங்கள்-5
10-14.பஞ்ச கர்மேந்திரியங்கள்-5
15-19.பஞ்ச தன்மாத்திரைகள்-5
20-24-பஞ்ச மகாபூதங்கள்-5
..
சாங்கியம் ஏற்கும் பிரமாணங்கள்
===============================
சாங்கியம் மூன்று பிரமாணங்களை அடிப்படையாக கொண்டது அவை பிரத்தியட்சம், அநுமானம் மற்றும் ஆப்த வாக்கியம் ஆகும். சாங்கியம் கடவுள் இருப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஆப்தவாக்கியத்தை ஒரு பிரமாணமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
.
சாங்கிய தரிசனத்தின் தத்துவ மையம்
===================================
மாற்றம் அடையக்கூடிய பிரகிருதியும், மாற்றம் அடையாத புருஷனும் சேர்ந்த இணைப்பே இவ்வுலகம் தோன்றுவதற்க்கு, ஒடுங்குவதற்க்கும் மூலம் ஆகும். இம்மூலப்பிரகிருதியில் இருந்து இவ்வுலகம், இயற்கை எவ்வாறு தோன்ற முடியும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சாங்கிய கொள்கையே "சத்காரியவாதம்" ஆகும். மேலும், பிரகிருதியினால் உருவான இப்பொருட்கள் அனைத்து முக்குணங்களால் ஆனவை. அவை சத்வ, ரஜோ, தமோ ஆகும் இங்கு குணம் என்பது பகுதி என குறிப்பிடப்படுகின்றது. புருஷன் அறிவே சொரூபமான பேரறிவு ஆகும். இப்புருஷன் ஒன்று அல்ல பல வாகும். சாங்கிய தத்தவங்களின் படி புருஷன் செயலை புரிவதல்ல, அனுபவிப்பது மட்டுமே, இதனால் புருஷன் ஒரு போக்தா மட்டுமே. போக்தா என கருதப்படும் புருஷன் பிரகிருதியுடன் கொண்ட இணைப்பின் காரணமாக ஏற்பட்ட அறியாமையினால் இப்பிரகிருதியினால் உருவான உடலை தன் உடலாக நினைத்துக்கொள்கிறது இதனால் துயரங்களையும் அடைகிறது.
.
சாங்கியம் தரிசனத்தின் முடிவு
=============================
அறியாமையினால் போக்தாவாக பிரகிருதியினால் ஏற்பட்ட உடலை கொண்டு உயிராக இருக்கும் புருஷன் இதிலிருந்து விடுபட உயிராக இருக்கும் தனக்கும், உடலாக இருக்கும் பிரகிருதிக்கும் உள்ள வேறுபாட்டை பிரித்தறியே வேண்டும். இந்த விடுதலையே சாங்கியம் கூறும் முக்தியாகும்.
..
2.யோகம்
=========
யோக தரிசனம் முன்பே இருந்திருந்தாலும் இதை முதலில் வரையறுத்தவர் 'பதஞ்சலி முனிவர்'.
யோகம் கூறும் மூல காரணம்
============================
யோக தரிசனம் சாங்கிய தரிசனத்தின் நீட்சியாகவே கருதப்படுகிறது. இதை ஒருங்கே இணைத்து பார்ப்பதற்க்கான காரணம் அதன் அடிப்படை தத்துவங்களின் ஒற்றுமையே ஆகும். சாங்கிய தரிசனத்தின் அடிப்படை தத்துவமான "புருஷன்" மற்றும் "பிரகிருதி" இரண்டையும் ஏற்றுக்கொள்வதோடு முன்றாவதாக "ஈஸ்வரன்" எனும் "விசேஷ புருஷன்" ஒன்று உள்ளான் என்பதை ஏற்றுக்கொள்கிறது.
யோக தரிசனத்தின் தத்துவ மையம்
==================================
இங்கே யோகம் என்பது "பிரிதல்" எனும் பொருள் கொண்டது. அதாவது "புருஷன்" தன் நிலை மறந்து பிரகிருதியின் உடலில் இணைந்து இருப்பதால், பிரகிருதியை விட்டு பிரிந்து தன் நிலையை உணர்வதயே வலியுறுத்துகிறது. அதோடு ஈஸ்வரன் - விசேஷ புருஷன் என்ற தத்துவத்தையும் முன்னிருத்துகிறது. யோக தரிசனத்தை பொறுத்தவரை இறைவன் படைப்பவன் அல்ல, எல்லாம் அறிந்தவன் அதேபோல் பிரகிருதியின் படைப்புக்கு துணை புரிபவன் மட்டுமே. "புருஷன்" பிரகிருதியின் இணைப்பில் அறியாமையால் இருப்பவன், "விசேஷ புருஷன்" அந்த இணைப்பில் ஒருபோதும் சேராமல் இருப்பவன்.
..
யோகம் கூறும் "அஷ்டாங்க யோக பயிற்சி"
========================================
சாங்கியம் புருஷன், பிரகிருதி என பகுத்தறிந்து அறியும் ஞானம் முக்திக்கு வழிவகுக்கும் என கூறுகிறது. யோகம் ஞானத்தோடு அந்த முக்திக்கான பயிற்சியையும் அளிக்கிறது. இதற்க்கு எட்டு விதிகள் வகுத்தது அதுவே
"அஷ்டாங்க" யோகம் ஆகும். ,
1.யமம்,
2.நியமம்,
3.ஆசனம்,
4.பிராணாயாமம்,
5.பிரத்தியாகாரம்,
6.தாரணம்,
7.தியானம்,
8.சமாதி என்பதாகும்.
.
யோக தரிசனத்தின் குறிக்கோள்
==============================
சித்தி, சுத்தி ஏற்பட்டு நான் எனும் நினைவை ஒழித்தலே யோகம் கூறும் தியானம் ஆகும். அதற்கான பயிற்சியாக அஷ்டாங்க யோகத்தினை கடைபிடிப்பதால், புருஷன் தன் நிலை உணர்ந்து பிரகிருதியின் தளையிலிருந்து விடுபட்டு சமாதி நிலையின் "உறக்கம் அற்ற உறக்கம்" எனும் உணர்வை அடைகிறது. அந்த உணர்வை அடைய "விசேஷ புருஷன்" எனும் "ஈஸ்வரன்" துணைபுரியும். இதுவே யோகம் கூறும் "ஜிவன் முக்தி" யாகும்
..
3. வைசேஷிகம்
==============
அணு தத்துவம் பேசும் வைசேஷிகம் தரிசனத்தை முறைபடுத்தி இயற்றியவர் கணாத முனிவர் ஆவர். இன்று, அணு தத்துவத்தை முதலில் பேசுபவர்களாக கருதப்படும் 2ம் நூற்றாண்டு கிரேக்க ஞானிகளை விட காலத்தால் முந்தியவர் கணாத முனிவர். அணுக்களின் இரட்டைத்தன்மை, கோள வடிவம், காலம்-இடம் தொடர்பை பேசும் ரிலேட்டிவிட்டி தியரி போன்ற கருத்துக்களையும் வைசேஷிகம் எடுத்துரைப்பது விசேஷம்.
.
வைசேஷிகம் கூறும் மூலக்காரணம்
==================================
மெய்மைவாதம் ஏற்கும் வைசேஷிகம் பல்வேறு இயல்புகளை உடைய இப்பிரபஞ்சம், உலகம் தோற்றத்திற்க்கு மூலப்பொருள் ஒன்று அல்ல பல என கூறுவது இயல்பானது. இந்த மூலப்பொருள் என்ன என்ற கேள்விக்கு விடையாக வைசேஷிக தரிசனம் கூறுவது "அணு" மற்றும் "பரமாணு" ஆகும். அணு அழியாதவை. அணுக்களே பொருள், உலகம் முதலிய அனைத்தையும் ஆக்கியும் அழிப்பனவையும் ஆகும். இவை பற்றி அறிந்துகொள்ள வைசேஷிகள் ஏற்கும் பிரமாணங்கள் இரண்டு அவை பிரத்தியட்சம் மற்றும் அநுமானம் ஆகும்.
.
வைசேஷிக தரிசனத்தின் தத்துவ மையம்
=======================================
ஒவ்வொரு பொருளுக்கும் பிரிபடாத நிலை என்ற ஒன்று உண்டு அதுவே அணுவாகும். இவ்வணுக்கள் பலவாகும். இவ்வணுக்களின் கூட்டுத்தொகையே அனைத்து பொருட்களுக்கும் ஆதாரமாகும். இத்தொகைக்கு ஏற்ப பொருட்களின் அளவும் வேறுபடும் என கூறுகிறது. இங்ஙகனம் அணுக்கள் பலவும் ஒன்று சேர்வதும், பிரிவதும், உற்பத்தி ஆவதும், அழிவதும் என அது இயங்குவது எவ்வாறு எனும் கேள்விக்கு வைசேஷிகள் கூறிய விடை "அதிர்ஷ்டம்" எனப்படும் அணுக்களின் தனிப்பட்ட விசேஷமான இயக்கம் என்பதாகும். பிற்காலத்தில் அறிவற்ற அதிர்ஷ்டம் எவ்வாறு அறிவார்ந்த இயக்கத்திற்க்கு காரணம் என்ற கேள்விகள் எழும்பியபோது அந்த விசேஷ இயக்கத்தின் காரணம் "ஈஸ்வரன்" என்ற பதிலை முன்வைத்தது.
.
வைசேஷிக தரிசனத்தின் ஒன்பது திரவியங்கள்
============================================
மூலப்பொருள் அணு என்றும் அவை பல என்றும் கூறும் வைசேஷிக தரிசனம். இவ்வுலகம் தோற்றத்திற்க்கு தேவைப்படும் கருப்பொருள்களை "திரவியம்" எனவும் அவை ஐம்பூதங்கள், காலம், இடம், மனம், ஆத்மா என்பதாகும்.
.
வைசேஷிக தரிசனத்தின் குறிக்கோள்
===================================
ஆத்மா தன் மனதின் செயல்பாட்டால் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. தன் அறியாமையினால் செய்யப்படும் செயல்களின் பலனாக நல்வினை மற்றும் தீவினை என இரண்டையும் அனுபவிக்கிறது. இதிலிருந்து விடுபட தன் செயல்களை நிறுத்துவதினாலும், ஏற்கனவே செய்த செயல்களின் பலனாக விளைந்த நல்வினை, தீவினை முடிப்பதினாலும், ஆன்மாவுக்கு "விடுதலை" கிடைக்கும் என்பதே வைசேஷிகள் கூறும் முடிவாகும்
..
4.நியாயம்
==========
எந்த ஒரு உண்மையையும் விளக்க அதை முதலில் தர்க்க ரீதியாக சரியாக தர்கிக்க வேண்டும். அலசி ஆராயந்து அணுகவேண்டும். இதற்கான கோட்பாட்டை முன்னெடுத்தவர் கெளதம மகரிஷி ஆவார்.
.
நியாயம் கூறும் அம்சங்கள்
========================
தர்க்க ரீதியாக அணுக வேண்டிய அறிவு நிகழ்வதற்க்கு கீழ்காணும் அம்சங்கள் இன்றியமையாதவை. அவை,
.
1. அறிய வேண்டிய "அறிபவன்" - பிரமாதா
.
2. அறிபவன் அறிய வேண்டிய பொருள் - "அறிபொருள்" - பிரமேயம்
.
3. அறிபடும் பொருளை அறிந்துகொள்ள அறிபவனுக்கு வேண்டிய அறிவை தரும் வழிகள் - பிரமாணம்
.
4. ஆராயும் அறிவு - பிரமிதி
.
இதில் நியாய தரிசனம் பிரமாணத்தை முன்னிலை படுத்துகிறது. காரணம் அறிவை தரும் வழிகள் சரியானதாக இருந்தால்தான் அதனை ஆராயும் பிரமிதி சரியான முடிவை தரும் என்பதே, இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரமாணம் மொத்தம் ஆறு ஆகும். அதில் நான்கு பிரமாணங்களை மிக முக்கியமாக நியாய தரிசனம் ஏற்றுக்கொள்கிறது. [ பிரமாணங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.]
.
நியாய தரிசனத்தின் தத்துவமையம்
================================
வைசேஷிக தரிசனத்தின் அணுக்கொள்கையை ஏற்பதுடன் இறைவன் இருப்பை தர்க்க ரீதியாகவும் வலியுறுத்துகிறது நியாய தரிசனம். எப்படி உலக தோற்றத்திற்க்கு அணு காரணமாக இருக்கிறதோ அதே போல் அந்த அணுக்களின் இயக்க காரணமாக 'ஈஸ்வரன்' இருப்பதை தெளிவுபடுத்துகிறது நியாய தரிசனம். அணுக்கள் போலவே 'ஈஸ்வரன்' நிரந்தரமானது. வைசேஷிகம் கூறும் திரவியங்களை தோற்றுவிக்கவில்லை ஆனால் இயக்ககூடிய பேரறிவாக 'ஈஸ்வரன்' இருப்பதை ஒன்பது சான்றுகளாக கூறி தர்க்கரீதியாக வாதிடுகிறது.
.
ஈஸ்வர இருப்புக்கான 9 சான்றுகள்
=================================
நியாயம் கூறும் ஈஸ்வர இருப்புக்கான சான்றுகள் 9 ஆகும் அவை கார்யாத் (விளைவு), அயோஜனாத் (அணு சேர்க்கை), த்ரிதே (பிரபஞ்சம் இருப்பை தாங்குவது), பதாத் (வாக்கு), பிரத்யதஹ் (நம்பிக்கை), ஸ்ருதே (வேதம்), வாக்யாத் (வேத கூற்று), சங்க்யாவிசேஷாத் (விசேஷ எண்கள்), அதிருஷ்டாத் (கர்ம பலன்) என்பனவாகும். இக்காரணங்களை வைத்தே ஈஸ்வர இருப்பை நிலைநிறுத்துகிறது நியாய தரிசனம்.
.
நியாய தரிசனத்தின் குறிக்கோள்
==============================
தர்க்க ரீதியாக அணுகும் நியாயம் தரிசனம் அறிவே ஆன்மா என்கிறது. அந்த அறிவை மழுங்க செய்யும் உலகப்பொருட்களிலிருந்து விடுபட்டு எல்லாவற்றையும் அறிந்த பேரறிவாக கூறப்படும் ஈஸ்வர நிலையை சார்வதே நியாயம் கூறும் முக்தியாகும்.
..
5. பூர்வ மீமாம்சம்
=================
மீமாம்சை தரிசனங்கள் இரண்டு ஆகும். அவை பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகும். அதில், வேத பிரமாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதே பூர்வ மீமாம்சை. வேதம் ஆராய்வுக்கு அப்பாற்ப்பட்டது என்றும் அதற்க்கு கொடுக்கம் விளக்கம் ஆராய்வதற்க்குரியது என விளக்கங்களை அலசுவதே சரியான வழியாகும் என எடுத்துரைப்பதே "பூர்வ மீமாசை" நூலான "மீமாம்ச சுத்திரம்" இதனை இயற்றியவர் ஜைமினி முனிவர் ஆவர்.
.
கர்ம மார்க்கம்
=============
வேதம் தெய்வீகமானது என முன்னிறுத்தும் பூர்வமீமாசை தரிசனம். வேதம் மூலமாக அறியும் ஞானத்தை விட, அதில் சொல்லப்பட்டுள்ள தர்மத்தையே முக்கியமானதாக கருதுகின்றது. உயிர்கள் நல்ல பலன்களை அடையவேண்டி கிரியை கள், சுவர்க்கம் பூக வேண்டி செய்ய வேண்டிய கிரியைகள், யாகங்கள் அதன் பலன்கள் என கர்மத்தை முன்னிறுத்துவதால் இத்தரிசனத்தை "கர்ம காண்டம்" என்றும் கூறுவர்.
.
பூர்வ மீமாம்ச தரிசனத்தின் தத்துவ மையம்
=========================================
உலகம் உருவான விதம் பொறுத்தமட்டில் பூர்வ மீமாம்சம் தரிசனம் வைஷிக தரிசனத்தின் கோட்பாட்டை கொண்டதாகும். அதிலும் வேத வாக்கின்படி கண்ணுக்கு புலனாகும் மூவினை கோட்பாடு வரையே ஒப்புக்கொள்ளும். முந்தைய தரிசனங்கள் போல ஆன்மா நித்தியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறது. பூர்வ மீமாம்ச தரிசனம் வேதம் நித்தியமானது என சொன்னாலும், இறைவன் கொள்கையில் உண்டா? இல்லையா? என்பதை பற்றி ஏதும் விவரிக்கவில்லை. ஆனால், கன்மத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை துன்பத்திற்க்கு காரணம் ஆன்மாக்களின் செய்த கன்மங்களே என கூறுவதில் தெரிந்துக்கொள்ளலாம்.
.
பூர்வ மீமாம்சை குறிக்கோள்
===========================
வேதம்"அபெளருஷ்யத்துவம்" அதாவது யாராலும் இயற்றப்படமுடியாதது என கூறுகிறது. அதனால் வேதத்தில் சொல்லப்படும் தர்மத்தையும், சடங்குகளையும் பின்பற்றுவதே ஆன்மாவின் கடமையாக கூறுகிறது. அக்கடமையை தவறாமல் செய்வதால் நரகத்தை அடையாமல் சொர்க்கத்தை அடைவதே குறிக்கோள் என வலியுறுத்துகிறது. உலக பந்ததிற்க்கு கன்மமே காரணம் எனில் கன்மம் செய்து முக்தி அடைவது எப்படி என்ற கேள்விக்கு பூர்வ மீமாம்சை 3 வித கன்மங்களை கூறுகிறது அவை, காமிய கன்மம், பிரதிசித்த கன்மம் மற்றும் நித்திய கன்மம் ஆகும். இதில் முக்தி அடைய முதல் இரண்டு கன்மங்களாஅன காமிய மற்று பிரதிசித்த கன்மத்தை விடவேண்டும், அதோடு நித்திய கன்மத்தை விடாமல் செய்தால் முக்தி கைக்கூடும் என்று பதில் அளிக்கிறது.
--
6. உத்தர மீமாம்சை (எ) வேதாந்தம்
=================================
பூர்வ மீமாம்சை மற்றும் உத்தர மீமாம்சை இவை இரண்டும் வேதத்தின் இரு பெரும் பிரிவுகளை வைத்துதான். அதில் முந்தைய பிரிவான பிரமாணங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது பூர்வ மீமாம்சை. பிந்தைய பிரிவான உபநிடதங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது உத்தர மீமாம்சை. வேத உபநிடத கருத்துக்கள் அனைத்தும் கொண்டு வர எண்ணி சுருக்கமாகவும் எழுதப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" ஆகும்.
.
ஞான மார்க்கம்
===============
பாதராயணர் வேதாந்த சுத்திரத்தில் மூலப்பொருள் ஒன்றே என நிலைநாட்டுகிறார். வீடுபேற்றை பெற முக்கிய்மானது கன்மமா? ஞானமா? என்பதில் பூர்வ மீமாம்சை கன்மம் முக்கியம் என்கிறது. இதற்க்கு மாறாக உத்தர மீமாம்சை ஞானமே முக்கியம் என்கிறது.
.
வேதாந்தத்தின் தத்துவ மையம்
==============================
பிரம்மத்திற்க்கு இருநிலை இருப்பதாக கூறுகிறது. அதாவது, குணத்தை கடந்த நிலை "நிர்க்குண பிரம்மம்" என்றும், குணத்தோடு சேர்ந்து இருக்கும் நிலை "சகுண பிரம்மம்" என்றும் வழங்கப்படுகிறது. இந்த இருநிலைகளின் வேறுபாட்க்கு காரணம் "மாயை". மாயையினால் பிரம்மத்திற்க்கு எந்த பாதிப்பும் இல்லை. பிரம்மத்தை ஜீவர்களாக தோன்ற காரணம் "அவித்தை". வித்தை என்றால் அறிவு, அவித்தை என்றால் அறியாமை. அவித்தையால் பாதிக்கப்பட்ட நிலையே ஜீவர் கள் எனவும், ஜீவாத்மா எனவும் வழங்கப்படுகிறது.
.
வேதாந்ததின் தத்துவ பிரிவுகள்
==============================
விரிந்து கிடந்த வேத, உபநிடத கருத்துக்களை சுருக்கி விளக்கப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" என பார்த்தோம். பிரம்ம சூத்திரம் சுருக்கி எழுதப்பட்ட காரணத்தினால் அதை புரிந்துகொள்ள பெரும் விளக்கங்கள் கொடுக்க வேண்டியதாயிற்று. அப்படி எழுதியதின் விளைவுதான் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் போன்ற தத்துவ விளக்கங்கள் உருவான காரணமாகும். இவ்வுருவாகிய விளக்கங்கள் இன்று பல பிரிவாக இருக்கின்றன. உதாரணமாக - வடகலை, தென்கலை.
.
உத்தர மீமாம்சை குறிக்கோள்
============================
அவித்தையால பாதிக்கப்பட்டதும், மூன்று குணங்களை கொண்டதுமான ஜீவர்கள் என்கிற ஜீவாத்மாக்கள் இதிலிருந்து விடுபட்டு தெளியும் நிலையே மோட்சமாகும். ஏகேமாயான அந்நிலையை அடைய ஞானமே முக்கிய வழியாகவும் கூறுகிறது. ஞானத்தை அடைய அஞ்ஞானத்தினால் அல்லல்படும் ஜீவாத்மாக்கள் அதை விடுபட்டு ஞானத்தை அடைய தர்மம், நல்லொழுக்கம், இறைவழிபாடு துணையாக உறுதுனை செய்யும் என விளக்கம் கொடுக்கிறது உத்தர மீமாம்சை எனப்படும் வேதாந்த தரிசனம்.
13.புராணங்கள்
-
புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.
--
புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துல்லியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன.
...
இப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர் -அரக்கர்களின் போர்கள் போன்றவைகள் பலவற்றினையும் விவரிக்கின்றன.
..
புராணங்களில்18 பெரிய புராணங்களும் 18 சிறிய உபபுராணங்களும் இருக்கின்றன.
விஷ்ணுவையும் அவரது அவதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டவை:
1.விஷ்ணு புராணம்.
2.மத்ஸ்ய புராணம்.
3.கூர்ம புராணம்.
4.வராஹ புராணம்.
5.வாமன புராணம்.
6.கருட புராணம்.
7.ஸ்ரீமத் பாகவத புராணம்.
..
சிவபெருமானைக் குறித்த புராணம்:
லிங்க புராணம்.
.
பிரம்மனுடன் தொடர்புடைய புராணங்கள்:
1.பிரம்ம புராணம்.
2.பத்ம புராணம்.
3.பிரம்ம வைவர்த்த புராணம்.
4. பிரம்மாண்ட புராணம்.
.
மற்ற புராணங்கள்:
1.அக்னி புராணம்.
2.வாயு புராணம்.
3.பவிஷ்ய புராணம்.
4.நாரதீய புராணம்.
5.ஸ்காந்தம் (கந்த புராணம்).
6.மார்க்கண்டேய புராணம்.
..
🌿விஷ்ணு புராணம்
இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.
..
🌿மத்ஸ்ய புராணம்
விஷ்ணுவின் முதலாவது அவதாரமான ‘மத்ஸ்யம்’ (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
..
🌿கூர்ம புராணம்
விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில்தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
..
🌿வராஹ புராணம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.
.
🌿வாமன புராணம்
பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்-பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.
🌿கருட புராணம்
மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
..
🌿ஸ்ரீமத் பாகவத புராணம்
வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.
.
🌿லிங்க புராணம்
சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
.
🌿பிரம்ம புராணம்
பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
.
🌿பத்ம புராணம்
ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
.
🌿பிரம்மவைவர்த்த புராணம்
பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
.
🌿பிரம்மாண்ட புராணம்
பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.
.
🌿அக்னி புராணம்
அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.
.
🌿வாயுபுராணம்
பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.
🌿பவிஷ்ய புராணம்
வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
.
🌿நாரதீய புராணம்
நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
.
🌿ஸ்காந்தம்
முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
.
🌿மார்க்கண்டேய புராணம்
மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.
..
18 உப புராணங்கள்
..
1.சூரிய புராணம் 2.கணேச புராணம் 3.காளிகா புராணம் 4.கல்கி புராணம் 5.சனத்குமார புராணம்
6.நரசிங்க புராணம் 7.துர்வாச புராணம் 8.வசிட்ட புராணம் 9.பார்க்கவ புராணம்
10.கபில புராணம் 11.பராசர புராணம் 12.சாம்ப புராணம் 13.நந்தி புராணம்.14 பிருகத்தர்ம புராணம்
15.பரான புராணம் 16.பசுபதி புராணம் 17.மானவ புராணம் 18.முத்கலா புராணம்
14.கீதை
கீதா(கீதம்) என்றால் பாடல் என்று அர்த்தம்.மகான்கள் உணர்வு கடந்த நிலைக்கு செல்லும்போது அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பாடல் வடிவில் வருகின்றன.
இவைகளில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத்கீதை பிரபலமானது.இவைகள் தவிர இன்னும் பல கீதைகள் உள்ளன.
..
கீதைகள்
=======
1. *குரு கீதை* – சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆசானின் (குரு) அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மையப்படுத்தி அவரது மகத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. இது ஸ்கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
--
2. *அஷ்டவக்ர கீதை* – ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது. இது அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது. இது மனித உடலின் பலவீனங்களுக்கு அப்பால் உள்ளார்ந்த ஆத்மாவின் மேன்மையையும், அதற்கு அஷ்டவக்ரரை அடையாளப்படுத்த, அதன் துன்பங்களையும் வலியுறுத்துகிறது. இது மஹாபாரதத்தின் வன பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
-
3. *அவதூத கீதை* – ரிஷி தத்தாத்ரேயருக்கும் ஸ்கந்தனுக்கும் (கார்த்திகேயன்) இடையிலான உரையாடல். இது ஜீவன்முக்தா அல்லது முக்தியடைந்த ஆன்மாவின் மிக உயர்ந்த உணர்தல்களை வலியுறுத்துகிறது.
--
4. *பகவத் கீதை* – மஹாபாரத போருக்கு முன்னதாக கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். வாழ்வின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கீதையின் மிகப்பிரபலமான வடிவம் இது.
--
5. *அனு கீதை* – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின் தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார்.
--
6. *ப்ரம்ம கீதை* – வசிஷ்ட முனிவருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையிலான உரையாடல். இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதையில், பிரம்மம், உலகம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
--
7. *ஜனக கீதை* – அரண்மனைக்கு அருகே சித்தர்கள் பாடிய பாடலைக் கேட்டபின் ஜனக மஹாராஜர் எழுதிய தனிப்பாடல்.
--
8. *இராம கீதை – I* – ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரரான ஸ்ரீ லக்ஷ்மணருக்கும் இடையிலான உரையாடல். இது அத்வைத வேதாந்தத்தில் இருக்கும் ஜீவா, அவித்யா, ஈஸ்வர, மாயா போன்ற பல்வேறு கொள்கைகளையும், நித்திய ஜீவனான, ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளும் வழிமுறையையும் விளக்குகிறது. இது ஆதியாத்மா இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
9. *இராம கீதை – II* – ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் இடையிலான உரையாடல். இது உலகத்தை துறப்பதை காட்டிலும் ஞானத்தை ஈட்டுவதை வலியுறுத்தும் அனுபத்வைதிகளின் வேதமாகும். இது தத்வ சாரண்யத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
10. *ரிபு கீதை* – ரிபு முனிவர் அவரது சீடர் நிதாகருக்கு அறிவுத்தியவை. இது அத்வைத வேதாந்தத்தை கையாளும் ஒரு பாராட்டுக்குரிய கீதை. மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு தொடர்பான உபபுராணங்களில் ஒன்றா சிவரஹஸ்ய புராணத்தின் இதயத்தை இது உருவாக்குகிறது.
--
11. *சித்த கீதை* – ஜனக மஹாராஜனின் அரண்மனைக்கு அருகே பல சித்தர்கள் பாடிய பாடல். அதன் சாராம்சம் என்னவென்றால் – முடிவெளிக்குள் சுயஉணர்வை விரிவாக்கும் வழி அக-புற பொருள் வேறுபடுத்தலும் சுயகட்டுப்பாடும் தான் என்பது. இது யோக-வசிஷ்டத்தின் உபசாந்தி ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
12. *உத்தர கீதை* – பகவத் கீதையின் இணைப்பாக இது பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இது ஞானம், யோகாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி பேசுகிறது.
--
13. *வசிஷ்ட கீதை* – நித்ய சத்தியங்களை குறித்து ஸ்ரீராமருக்கு வசிஷ்ட முனிவர் அறிவுறுத்தியது. இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
14. *பாகா கீதை* – இந்திரதேவருக்கும் பாகா முனிவருக்கும் இடையிலான உரையாடல். இதில் முனிவர், நீண்ட காலம் வாழும் ஒரு நபர் பார்க்க வேண்டிய உலகின் துக்ககரமான நிலையைப்பற்றிய விளக்கத்தை அளிக்கிறார். இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
15. *பிக்ஷு கீதை* – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர், பின்னர் ஒரு முனிவராகி உத்தவருக்கு ஒரு பாடலைப் பாடுகிறார். சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையை அதில் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
16. *கோபி கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த கோபியரின் பாடல். இந்த கீதை ஆதிமூலத்திடம் கொண்ட மிக உயர்ந்த பக்தியால் நிறைந்துள்ளது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
--
17. *ஹம்ஸ கீதை* – ஓர் அன்னபக்ஷியின் வடிவில் ஸ்ரீ விஷ்ணு பிரம்ம குமாரர்களுடன் உரையாடியது. இந்த கீதை உலகை ஒரு மாயையாகவும், ஆத்மா மட்டுமே நிரந்தர யதார்த்தமாகவும் கருதுகிறது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படுகிறது. இதை உத்தவ கீதை என்றும் குறிப்பிடுகின்றனர்.
--
18. *ஜீவன்முக்தா கீதை* – ஜீவன்முக்தத்தின் (முக்தி அடைந்த ஜீவன்) இயல்பை ரிஷி தத்தாத்ரேயர் விவரிப்பது.
--
19. *கபில கீதை* – தாய் தேவாஹுதிக்கு மகன், கபில மஹரிஷி போதிப்பது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
20. *நஹுஸ கீதை* – நஹுஸன் மற்று யுதிஷ்டிரருக்கு இடையிலான உரையாடல். மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
--
21. *நாரத கீதை* – ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆர்வலரின் பொதுவான தேவைகளை கூறுகின்றது. இது குரு அல்லது ஆன்மீக போதகரின் ஆதிபத்யத்தை வலியுறுத்துகிறது.
--
22. *பாண்டவ கீதை* – ஆதி நாராயணனின் வெவ்வேறு பக்தர்கள் வழங்கும் பல்வேறு பிரார்த்தனைகளின் தொகுப்பு. இது ப்ரபண்ண கீதை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கீதை, சரணடைதலின் பாடல் என்று குறிப்பிடப்படுகிறது. வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட அழகான வசனங்களின் தொகுப்பு. இந்த கீதையில் விவரிக்கப்பட்டுள்ள பாடலை அனைத்து பாவங்களையும் அழித்து விடுதலையை வழங்குவதற்காக பாண்டவர்கள் பாடியுள்ளனர்.
--
23. *ரிஷப கீதை* – உலக நன்மைக்காக நித்ய சத்தியங்கள் மற்றும் விடுதலைக்கான வழி குறித்து ரிஷப முனிவர் தனது குழந்தைகளுக்கு அறிவுறுத்தியது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நோக்கத்தையும், மனதின் மாறுபாடுகளை அகற்றிவைத்து, சுயத்தை பற்றுகளிலிருந்து விடுவித்து விடுதலையை அடைவது எப்படி என்பதை மனிதகுலத்திற்குக் கற்பிக்கிறது.
--
24. *சௌனக கீதை* – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து யுதிஷ்டிரருக்கு சௌனக முனிவர் அறிவுறுத்தியது. இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
--
25. *ஸ்ருதி கீதை* – ஸ்ருதிகள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி செய்த ப்ராத்தனை. ஸ்ரீமத் பாகவதத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
--
26. *யூகல கீதை* – ஸ்ரீ கிருஷ்ணனின் மகத்துவத்தை கோபியர்கள் விளக்குவது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் இடம்பெறுகிறது.
--
27. *வியாத கீதை* – கௌஷிக முனிவருக்கு வேடன் வியாதன் ஆற்றிய உரை இது. இது மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
--
28. *யுதிஷ்டிர கீதை* – யுதிஷ்டிரருக்கும் ஒரு யக்ஷனுக்கும் இடையிலான உரையாடல். இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதை நல்லொழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்க்கையின் அடித்தளத்தை உருவாக்கும் அடிப்படை நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது.
--
29. *ஈஸ்வர கீதை* – கூர்மபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவபெருமானின் போதனைகள். ஈஸ்வர கீதை என்பது சிவபெருமானை மையமாகக் கொண்ட ஒரு சைவ போதனை தத்துவமாகும். பகவத் கீதையைப் போலவே அத்வைத வேதாந்தம், பக்தி, ஒருமுகப்படுதல் மற்றும் சிவபெருமானிடம் சரணடைதல் ஆகியவை சம்ஸார கடலைக் கடந்து தெய்வீக பேரின்பத்தையும் விடுதலையும் அடையச் செய்கிறது என்பதை விளக்குகிறது.
--
30. *கணேஷ கீதை* – அரசன் வாரேண்யனுக்கு ஸ்ரீ கணபதி உரையாற்றியது. கணேஷ புராணத்தின் க்ரீட கண்டத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
--
31. *தேவி கீதை* – தேவி பாகவதத்தில் ஒரு பாகமான இந்த கீதை, இமாவானின் வேண்டுகோளின் பெயரில் தேவியே தன்னுடைய முக்கிய ரூபங்களைப் பற்றி அவருக்கு விளக்குவது.
--
32. *பராசர கீதை* – வியாஸரின் தந்தையான பராசர ரிஷிக்கும் மிதிலை அசரனான ஜனக மஹாராஜனுக்கும் இடையிலான உரையாடல் இது. மஹாபாரத இதிகாசத்தில் சாந்தி பர்வத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது.
--
33. *பிங்கல கீதை* – மீண்டும் மஹாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம் பெற்ற ஒன்று இது. பிங்கலை எனும் ஆடல் பரத்தைக்கு கிட்டிய ஞானத்தையும் அறிவொளியையும் இக்கீதை கொண்டுள்ளது.
-
34. *போத்ய கீதை* – யயாதி மன்னனுக்கு ரிஷி போத்யருக்கும் இடையிலான உரையாடல். மஹாபாரத்ததில் சாந்தி பர்வத்தில் ஒரு பகுதியான மோக்ஷ பர்வத்திலிருந்து எடுக்கப்பட்டது.
-
35. *யம கீதை* – ஒரு விஷ்ணு பக்தனின் குணங்கள், சுயத்தின் தன்மை, பிரம்மத்தின் கருத்தாக்கம், பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து மோட்சம் அல்லது விடுதலையை அடைவதற்கான முறை ஆகியவற்றை இது விரிவாக விளக்குகிறது. இதை விஷ்ணு புராணம், அக்னி புராணம் மற்றும் நரசிம்ம புராணங்களில் விவகிர்ர்ரப்படுவதை காணலாம்.
--
36. *விசாக்க்ஷு/விசக்னு கீதை* – அஹிம்சை பற்றி மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் யுதிஷ்டிரருக்கு பீஷ்மர் உரைத்த கதை. தியாகத்தின் வெளிப்புற அம்சங்களில் கவனம் செலுத்துவதையும் விலங்குகளை பலி கொடுத்து பாவங்களைச் செய்வதற்கு மாறாக, மனிதனில் இருக்கும் அனைத்து வன்முறை அல்லது விலங்கு குணங்களையும் தியாகம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
--
37. *மன்கி கீதை* – மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், மன்கி எனும் முனிவரின் கதையை பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு கூறுவது.
-
38. *வியாஸ கீதை* – பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ரிஷிகளுக்காக வியாஸ மஹரிஷியின் சொற்பொழிவு. வியாஸ கீதை மிகவும் கருத்தியல் வாய்ந்தது. ஆகவே, யோகிகளுக்கும் மேம்பட்ட தேடுதலில் ஈடுபடும் ஆர்வலருக்கும் ஏற்றவாறு அமைந்தது. இருப்பினும் பிரம்மத்தை அடைய விரும்புவோருக்கும் சிரத்தையுடன் யோக அனுஷ்டானங்களை உறுதியாகவும் விடாமுயற்சியுடன் செபவருக்கும், வேதங்களை விடாமுயற்சியுடன் கற்று பாகுபாடு அறிபவர்களுக்கும் இந்த கீதை பொருந்துகிறது.
-
39. *வ்ரித கீதை* – அசுரகுரு சுக்ராச்சாரியருக்கும் வ்ரிதாசுரனுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடல் மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம்பெற்றுள்ளது.
-
40. *சிவ கீதை* – பத்ம புராணத்தில் இடம் பெற்றுள்ள, சிவபெருமான் ஸ்ரீராமசந்திரருக்கு போதித்தவை.
-
41. *சம்பக கீதை* – ஒரு கற்றறிந்த பக்திமானான ப்ராமணன், சம்பகன் துறவறத்தினால் மட்டுமே ஒருவர் நித்ய மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியை அளிக்கிறார். இது மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் விவரிக்கப்படுகிறது.
-
42. *சூத கீதை* – ஸ்கந்தபுராணத்தின் யாக வைபவ கண்டத்தில் உள்ளது. இது ஒற்றுமையை ஆதரித்து இரட்டை வாதத்தை மறுக்கிறது.
-
43. *சூர்ய கீதை* – இது பிரம்மனுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் இடையிலான உரையாடல். இதில் சூர்யன் தனது சாரதியான அருணனிடம் சொற்பொழிவு செய்த கதையைச் சொல்கிறார். இது குரு ஞான வசிஷ்டத்தில் உள்ள தத்வ சாராயணத்தில் காணப்படுகிறது.
-
44. *ஹரித கீதை* – பீஷ்மரின் கூற்றுப்படி, ஹரித முனிவர் கற்பித்ததாகக் கூறப்பட்ட போதனைகள் சன்யாச தர்மம், ஒரு சாதகனின் உண்மையான பாதை, மோக்ஷம் அல்லது விடுதலையை அடைய இருக்க வேண்டிய குணங்கள் பற்றியது. இது மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
-
45. *விபீஷன கீதை* – இந்து இதிகாசமான இராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமருக்கும் விபீஷணனுக்கும் இடையிலான உரையாடல் இது. விபீஷணனுக்கு இராமர் ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மனதில் வைத்து வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் துன்பங்களை கடந்து செல்ல, விபீஷண கீதை நமக்கு உதவுகிறது.
-
46. *ஹனுமத் கீதை* – இராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி திரும்பி, ஸ்ரீராமரும் தேவி சீதையும் ஹனுமனுக்கு அளித்த உரை.
-
47. *அகஸ்திய கீதை* – அகஸ்திய முனிவர் மோக்ஷ தர்மத்தின் கருத்துகளையும், ஜீவத்மா பக்தி, துறவறம் மற்றும் குருவின் அருளால் பரமாத்மாவை அடையக்கூடிய வழிகளையும் விளக்குகிறார். இது வராஹ புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
-
48. *பாரத கீதை* – ஸ்ரீமத் பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதை இறைவனின் மகிமையை அழகாக வெளிப்படுத்துகிறது. மனம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் ஒரு ஆர்வலர் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை விளக்குகிறது. அதேவேளை பாரதனின் மகத்துவத்தை நமக்குக் காட்டுகிறது, பாரத வர்ஷா என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் நாட்டிற்கு வழங்கப்பட்ட பொருத்தமாக பெயர்.
-
49. *பீஷ்ம கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதையில், மகேஸ்வரர், விஷ்ணு மற்றும் நாராயணன் என பல்வேறு பெயர்களை உச்சரிக்கும் பீஷ்மரின் பாடல்கள் உள்ளன. மேலும் இந்த பாடல்களை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாடும் ஆர்வலருக்கு பேரின்பம், அமைதி மற்றும் வளம் ஆகியவற்றை அளிப்பதாக கூறப்படுகிறது.
-
50. *ப்ராமண கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதை, மாயா மற்றும் மாயையின் பிணைப்புகளிலிருந்து எவ்வாறு தப்பிப்பது அதோடு அனைத்து மனித இருப்புக்கும் இலக்காக இருக்கும் மிக உயர்ந்த விடுதலையை அடைவது பற்றி ஒரு கற்றறிந்த பிராமணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் உள்ளது.
-
51. *ருத்ர கீதை* – பாகவத புராணத்தில் முக்திக்காக விஷ்ணுவைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் ருத்ரனால் விளக்கப்பட்டுள்ளது. வராஹ புராணத்தில் அது விஷ்ணு பற்றிய ஒரு பாடல் உட்பட ருத்திரனால் வழங்கப்பட்ட பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் இவர்களின் அடையாளத்தை விவரிக்கிறது.
-
52. *சனத்சுஜாதா கீதை* – இது மஹாபாரதத்தின் உத்யோக பர்வத்தில் காணப்படுகிறது. திருதிராஷ்டிரனுக்கும் ரிஷி சனத்சுஜாதாவுக்கு இடையிலான உரையாடலிலும் அதன் தன்மையிலும் வெளிப்படுகிறது இக்கீதை. இது பிரம்மம், மனம், புத்தி மற்றும் பிரம்மத்தை அடைவதற்கான முறைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
-
53. *யோகி கீதை* – இது சுவாமி நாராயணனின் நான்காவது ஆன்மீக வாரிசான ஸ்ரீ யோகிஜி மஹாராஜரின் பிரார்த்தனை மற்றும் ஆன்மீக போதனைகளின் தொகுப்பாகும். ஆன்மீக உணர்வை அடைவதற்கும், பிரம்மருவாக மாறுவதற்கும் அல்லது கடவுளை உணர்வதற்கும் ஒரு ஆர்வலருக்கு தேவையான அனைத்து பண்புகளையும் இது விளக்குகிறது.
-
54. *வல்லப கீதை* – இது ஷோதசா கிரந்தங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஸ்ரீ வல்லபாச்சார்யரின் பதினாறு படைப்புகளின் தொகுப்பாகும். இதில் அனைத்து வகையான தலைப்புகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. மோக்ஷம் அல்லது விடுதலை என்ற வாழ்க்கையின் உண்மையான இலக்கை நாட அவர் தனது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
-
55. *விதுர கீதை* – பொதுவாக விதுர நீதி என்று இது குறிப்பிடப்படுகிறது. மஹாபாரத இதிகாசத்தில், விதுரருக்கும் மன்னன் திருதிராஷ்டிரனுக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் சரியான நடத்தை, நியாயமான விளையாட்டு, ஆளும் கலை மற்றும் அரசியல் குறித்த தகவல்களை உள்ளடக்கியது.
-
56. *வித்யா கீதை* – இதில் திரிபுர ரஹஸ்யமானது அடங்கியுள்ளது. அதோடு தத்தாத்ரேயர் பரசுராமருக்கு விவரிக்கும் ஒரு கதையின் வடிவத்தில் இது உள்ளது. திரிபுரா அல்லது மூன்று புரங்களுக்கும் தலைமை தாங்கும், மிக உயர்ந்த ஞானமுடையவளான ஆதி சக்தியை வித்யா என்றும் அழைப்படுகிறாள். ஆகவே இந்த கீதையை, வித்யா கீதை என்றும் அழைப்பதுண்டு.
-
57. *ப்ராமர கீதை* – ஒரு இடைத்தரகராக ‘தேனீ’ (ப்ராமரா) மூலம் கோபியர்களுக்கும் உதவருக்கும் இடையிலான உரையாடல். இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
-
58. *வேணு கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் (வேணு) சத்தம் கேட்டதும் கோபியர்களின் ஆழ்ந்த உணர்ச்சி கொந்தளிப்பில் எழுந்த அந்தரங்கமான உரையாடல்கள் கொண்டது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
-
59. "பூதநாத கீதை" - ஐயப்ப அவதாரத்தில் பிறவி பெருங்கடல் நீந்தி முக்தி அடையவேண்டி வந்த ராஜசேகர பாண்டியனுக்கு குருவாக இருந்து ஞானமார்க்கத்தின் தத்துவங்களை கீதையாக உபதேசிக்கலானார் அதுவே "பூதநாத கீதை".
-
இவைகள் தவிர இன்னும் பிற்காலத்தில் தோன்றிய பல மகான்கள் பல கீதைகளை அருளியுள்ளார்கள்.
15.ஆரிய மதம் தோன்றிய வரலாறு
..
மதம் என்றால் நம்பிக்கை என்று அர்த்தம்
உலகம் முழுவதுமே பல்வேறான மதங்கள் தோன்றியிருக்கின்றன.
பல மதங்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன.பல மதங்கள் அழிந்துபோயிருக்கின்றன.
.
பொதுவாக மதம் என்பது எப்படி தோன்றுகிறது என்பதை பார்ப்போம்.
..
ஆதிகாலத்தில் மக்கள் காடுகளில் வாழ்ந்தார்கள்.ஒவ்வொரு காட்டிலும் வாழ்ந்தவர்கள் தங்களை ஒரு இனமாக கருதிக்கொண்டார்கள். பிற இனங்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்கொண்டார்கள்.
ஒவ்வொரு இனத்தையும் ஆள்வதற்கு தலைவன் இருந்தான்.
இந்த தலைவன் திடீரென்று இறந்துவிட்டால் அத்தோடு அழிந்துவிடுவதில்லை,அவன் .ஆவியாக அலைந்துகொண்டிருப்பான்.
அந்த ஆவியை சமாதானப்படுத்தி,தங்களுக்கு வேண்டிதை செய்வதற்காக,எதிரிகளை அழிப்பதற்காக பலிகளும்,வழிபாடுகளும் செய்வதுண்டு.
இறந்தவர்களின் நினைவிடத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டன.
..
இவ்வாறு ஒவ்வொரு இனத்திலும் உள்ள தலைவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு மண்டபங்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.பலிகள் கொடுக்கப்பட்டன.
இந்த பழக்கம் இன்னும் பல நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது.குறிப்பாக இந்தியாவில் இன்னும் பரவலாக காணப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் திருமணமாகாத பெண் அல்லது ஆண் திடீரென்று இறந்துவிட்டால் அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை இன்னும் காணலாம்.
அதேபோல கட்சித்தலைவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் நினைவிடத்தில் மண்டபங்கள் எழுப்பி வழிபாடு நடத்துவதையும் காண்கிறோம்.
..
குலதெய்வம்,இனதெய்வம்,நாட்டார்தெய்வம்,காவல்தெய்வம்,புனிதர்,தீர்க்கதரிசி,மகான்,சித்தர்,அவதாரபுருஷர் என்று பல நிலைகளில் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது..
..
முற்காலத்தில் இரண்டு இனங்களுக்கு இடையே போர் மூளும்போது.வெற்றிபெறும் இனத்தின் தெய்வம் பெரும்தெய்வமாகவும்.தோற்கும் இனத்தின் தெய்வம் சிறுதெய்வமாகவும் மாறிவிடுகிறது.
இப்படி பல இனங்கள் ஒன்றுகலக்கும்போது,அனைவரின் வழிபாட்டு தெய்வங்களும் ஒரே இடத்தில் வைத்து வழிபடப்படுகின்றன.
சில நேரங்களில் இப்படிப்பட்ட பல தெய்வ வழிபாடுகளை சில தெய்வம் விரும்புவதில்லை.தன்னைத்தவிர பிற தெய்வங்களை வணங்கக்கூடாது என்று ஆணையிடுகிறது.அது மட்டுமல்ல பிற தெய்வங்களின் நினைவிடங்கள்,உருவங்கள் அனைத்தும் இடித்து அழிக்கவும் ஆணையிடுகிறது.
பலதெய்வ வழிபாடு ஒரு தெய்வ வழிபாடுகளாக மாறுகின்றன.
இவ்வாறு பல இடங்களில் தோன்றிய வழிபாடுகள் சில காலத்திற்கு பிறகு அழிந்துபோகிறது.
..
இந்தியாவிலும் இதேபோன்று பல இனத்தினர் பல தெய்வங்களை வணங்கும் நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது.
இன்று தேவர்கள் என்று குறிப்பிடப்படும் பல பெயர்கள் ஒரு காலத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் உரிய தெய்வமாக இருந்தது.
உதாரணமாக இந்திரனை வணங்குபவர்கள் ஒரு இனமாக இருந்தார்கள்.தங்கள் தெய்வமே உலகத்தை படைத்து காத்து அழித்து வருவதாக கருதினார்கள்.அதேபோல வருணன் என்ற பெயரில் உள்ள தெய்வமே உலகத்தில் சிறந்தது.அந்த தெய்வம்தான் உலகத்தை படைத்து,காத்து,அழித்து வருகிறது என்று கருதினார்கள்.
இப்படி ஒவ்வொரு இனத்தினரும் தங்கள் தெய்வம்தான் உலகத்தில் உயர்ந்தது என்றே கருதினார்கள்.
பல இனத்தவர் ஒன்று சேர்ந்த போது வழிபாடு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டன.
ஆனால் நாம் பிற நாட்டினர்போல ஒரு தெய்வத்தைத்தவிர பிற தெய்வங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.மாறாக அனைத்தையும் ஒன்று சேர்க்கும் நிலையை பின்பற்றினோம்.
..
நாம் தெய்வங்களுக்கு பதவிகளைக் கொண்டுத்தோம்.
இந்திரன் என்பது ஒரு பதவி.வருணன் என்பது ஒரு பதவி,இதேபோல இயற்கையை ஆட்சி செய்ய பல பதவிகள் உருவாக்கப்பட்டன.ஒவ்வொரு நதிக்கும் ஒரு தெய்வம். ஒவ்வொரு மலைக்கும் ஒரு தெய்வம். சூரியன்,சந்திரன்,பல கிரகங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தெய்வம்.இப்படிப்பட்ட தெய்வங்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை.
ஆனால் இவைகள் எல்லாமே பதவிகள்தான்.
ஒரு பிரதமர் ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆள்வார்.அதன்பிறகு இன்னொருவர் நாட்டை ஆள்வார். பிரதமர் என்ற பெயர் மாறாது.ஆனால் ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
..
அதேபோல இந்திரன் என்ற பெயரும்,வருணன்,ஆதித்யன்,யமன் போன்ற பெயர்கள் மாறுவதில்லை. அந்த பதவியை அடையும் ஆன்மாக்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
அரசர்கள் ஒவ்வொருவரும் பல யாகங்களை செய்து தெய்வபதவியை அடைந்து இன்புற்றிருந்தார்கள்.
பெண்கள் நதி தெய்வங்களானார்கள்.
சிலர் நட்சத்திரங்களாகி வானில் ஜொலித்தார்கள்.
..
இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை முற்காலத்தில் ஆரியர்கள் மேற்கொண்டார்கள்.
ஒரு மன்னனுக்கு இந்திர பதவி வேண்டுமா?ஏற்கனவே இருக்கும் இந்திரனுடன் சண்டையிடத்தேவையில்லை.இந்திர பதவியை அடைவதற்குரிய புண்ணிய கர்மங்களை செய்தல்போதும்.ஏற்கனவே உள்ள இந்திரனின் பதவி முடிந்தவுடன் இவனுக்கு இந்திரபதவி கிடைத்துவிடும்.
இப்படியே பிற பதவிகளும்..
பிறநாடுகளில் நடந்ததுபோல என்னை மட்டுமே வழிபட வேண்டும்.பிறரை வழிபட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என்ற அதிகாரதெய்வங்கள் இங்கே இல்லை.
மனிதன் தெய்வங்களைவிட மேல்நிலையில் இருந்தான்.
தவம் செய்பவனைக்கண்டு தெய்வங்கள் பயப்பட்டன.எங்கே தங்கள் பதவி பறிபோய்விடுமோ என்று நினைத்தார்கள்.
தவயோகிகள் அனைத்து தெய்வங்களையும்விட உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டார்கள்.
..
இந்த காலத்தில் பல தத்துவங்கள் உருவானது.சிலர் வழிபாடுகளிலிருந்து விலகி தத்துவங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.சாங்கியம்,யோகம் போன்ற தத்துவங்களை பின்பற்றியவர்கள் மனிதர்களிடமிருந்து விலகி காடுகளில் சென்று தவவாழ்க்கை வாழ்ந்தார்கள்.
..
சிறுதெய்வங்கள்,காவல் தெய்வங்கள் இவர்களை வழிபடும் பழங்குடி மகக்ள் ஒரு பக்கம்
தேவர்களை வணங்கும் பொதுஜனங்கள் ஒரு பக்கம்.
சமுதாயத்திலிருந்து விலகி தத்துவங்களில் நாட்டம் ஏற்பட்டு தவவாழ்வில் ஈடுபட்டவர்கள் ஒருபக்கம்
..
காலம் செல்ல செல்ல இந்த தெய்வங்கள் மனிதர்மீது அதிக ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள்.
தெய்வங்களின் எண்ணிக்கை கணக்கில்லாமல் இருந்ததால், யாகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பல்வேறு உயிரினங்கள் பலியிடப்பட்டன.
இவைகள் சாதாரணமனிதர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது.
..
இந்த காலகட்டத்தில் புத்தமதமும்,சமண மதமும் தோன்றியது.
தத்துவங்களில் இருந்த சில அம்சங்களை ஏற்றுக்கொண்டு.புதிய மதங்களை உருவாக்கினார்கள்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த அனைத்து வழிபாடுகளையும் எதிர்த்தார்கள்.
..
புத்தரை மையமாக வைத்து புதிய வழிபாடுகள், சடங்குகள்,கோவில்கள் உருவானது.
பல தேவர்களின் வழிபாடுகளுக்கு பதிலாக புத்தர் மட்டுமே வழிபடப்பட்டார்.
உயிரினங்களை பலியிடுதல் இல்லை.யாகங்கள் இல்லை.எளிமையான வழிபாடு,
மக்களுக்கு இருந்த சுமை மறைந்துவிட்டதால் ஏராளமானோர் புத்தமதத்தை பின்பற்றினார்கள்.
அதேபோல சமண மதமும் வளர்ச்சியடைந்தது.
..
ஒரு மனிதன் தவம் செய்து தேவனாக மாறியதுபோல, புத்தமதத்தில் ஒருவன் தவம் செய்து புத்தனாக மாறலாம்.புத்தனாகிவிட்டால் உலகத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.மனித உடலிலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.
..
சொர்க்கம் நரகம் என்று எதையும் நம்பத்தேவையில்லை.
புத்தமதம்,சமண மதம் இந்த இரண்டும் முன்னோர் வழிபாடுகள்,குலதெய்வ வழிபாடு,இன வழிபாடு,தேவ வழிபாடு போன்ற பல தெய்வ வழிபாடுகளை எதிர்க்கிறது.
..
புத்தம்,சமணம் இவைகளை எல்லோராலும் பின்பற்ற முடியவில்லை.
அந்த காலத்தில் நன்கு படித்த,நாகரீகமடைந்த மக்களிடம் மட்டுமே புத்தமும்,சமணமும் சென்று சேர்ந்தது.
பல்வேறு இடங்களில் சிறுதெய்வங்களையும்,குல தெய்வங்களையும், காவல் தெய்வங்களையும் வழிபட்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.அவர்களை புத்தமதம் ஏற்றுக்கொள்ளவில்லை.தன்னுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.
வெளிநாட்டிலிருந்து பலர் இந்தியாவை நோக்கி வந்தார்கள். அவர்கள் பல தெய்வங்களை வழிபடுபவர்களாக இருந்தார்கள். அவர்களையும் புத்தமதம் ஏற்றுக்கொள்ளவில்லை.
..
ஒரே சட்டம்.ஒரே தத்துவம்,ஒருதெய்வ மனிதர்
அதற்குள் அனைவரும் வரவேண்டும்.அப்படி இல்லாதவர்களுக்கு எதுவும் கிடைக்காது.
இப்படிப்பட்ட மதங்கள் சிலகாலம் சிறப்பாக வளர்கின்றன.பிறகு படிப்படியாக அழிவை சந்திக்கின்றன என்பதை வரலாறுகளிலிருந்து பார்க்கிறோம்
...
புத்தமும்,சமணமும் ஆரியமதம் அல்ல என்று சிலர் நினைக்கிறார்கள்.அது தவறு.
1.புத்தரும்.சமணமதத்தை தோற்றுவித்தவர்களும் ஆரிய வம்சத்தை சேர்ந்தவர்கள்தான்.
2.உபநிடதங்களில் உள்ள கருத்துக்களை ஏற்றுக்கொண்டுதான் புத்தமும்,சமணமும் தங்களை உருவாக்கிக்கொண்டன.
3.அந்த காலத்தில் தேவர்களை வழிபட்ட ஆரியர்கள்தான் புத்தமதத்திற்கும்,சமண மதத்திற்கும் மாறினார்கள்.
16..தமிழர் மதம் தோன்றிய வரலாறு
தமிழர் என்றொரு தனிஇனம் உண்டு என்று சிலர் தற்காலத்தில் பேசி வருகிறார்கள்.
இது முற்றிலும் தவறு.
பல நூறு இனங்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தென்னிந்தியா.
அதிலும் ஒவ்வொரு இனத்தினருக்குத் தனிப்பட்ட மொழிகள் இருந்திருக்கின்றன.
பிற்காலத்தில் தமிழ் என்ற அடையாளத்தின் கீழ் அவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இன்று நாம் காணும் ஒவ்வொரு ஜாதியும் முற்காலத்தில் ஒவ்வொரு இனமாக இருந்தது.
ஒவ்வொரு இனத்தினருக்கும் தனிநாடு இருந்தது.
..
மகாபாரத காலத்தில் தென்னிந்தியாவில் இருந்த நாடுகளின் பெயர்களைப்பார்ப்போம்
..
திராவிடம், கேரளம், பிரச்யம், மூஷிகம், வனவாசிகம், கர்நாடகம், மஹிஷகம், விகல்பம், மூஷகம், ஜில்லிகம், குந்தலம், சௌன்ருதம், நளகானனம், கான்குட்டகம், சோழம், பாண்டியம்,ஆந்திரம்,மாலவயகம், சமங்கம், கனகம், குகுரம், அங்கார-மாரிஷம், திவஜினி, உத்ஸவம், ஸங்கேதம், திரிகர்த்தம், சால்வசேனம், வகம், கோகரகம், பாஷ்திரியம், லாமவேகவசம், விந்தியசுலிகம், புளிந்தம், வல்கலம், மாலவம், வல்லவம், அதிவல்லவம் {அபரவல்லவம்}, குளிந்தம், காலவம், குண்டௌகம், கரடம், மிருஷகம், தனபாலம், சனீயம், அளிதம், பாசிவாடம், தநயம், சுலன்யம், ரிஷிகம், விதர்ப்பம், காகம், தங்கணம், அதிதங்கணம் {அபரதங்கணம்} ஆகிய நாடுகள் இருக்கின்றன.
..
தற்காலத்தில் தென்னிந்தியா முழுவதும் திராவிடர்கள் வாழ்ந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் மகாபாரத காலத்தில் திராவிடநாடு என்பது சிறுபகுதிதான்.
ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுவதும் காடுகளால் சூழ்ந்த பகுதிகளாக இருந்தது.
ஒவ்வொரு காட்டிலும் தனித்தனி இனங்கள் வாழ்ந்தது.அவர்களின் எண்ணிக்கை சிலநூறாக இருந்திருக்கலாம்.ஆனால் அவர்களுக்கென்று தனி வழிபாடு,தனி மொழி.தனி கலாச்சாரம் இருந்தது.
ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு பெயர் உண்டு.தற்காலத்தில் அதையே நாம் ஜாதி என்று குறிப்பிடுகிறோம்
..
இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டையின் காரணமாக நாடுகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
சில இனங்கள் ஆளும் இனங்களாகவும் சில இனங்கள் அடிமை இனங்களாகவும் மாறுகின்றன.
மொழிகள் ஒன்று கலக்கின்றன.வழிபாடுகள் ஒன்றுகலக்கின்றன.
இதிலிருந்து புதிய மொழிகள் உருவாகின்றன.
மிகப்பழங்காலத்தில் தென்னிந்தியாவில் உருவான மொழி தமிழ்.
ஆனால் இது தனியாக சிலர் அமர்ந்து சிந்தித்து உருவாக்கிய மொழி அல்ல.
பல இனத்தினரின் மொழிகள் ஒன்று கலந்து உருவானது.
ஆதிகால தமிழ் மொழிக்கு எழுத்துக்கள் இல்லை.
...
ஒவ்வொரு இனத்தினருக்கும் தனித்தனி வழிபாடுகள் இருந்திருக்கின்றன.
இதுபற்றி ஆராய்வோம்..
.
தற்காலத்தில் சுடலைமாடன்,மாரியம்மா,பேச்சியம்மா,முனி,ஐயனார் என்ற பெயரில் ஒவ்வொரு ஊர்களிலும் கோவில்கள் இருப்பதை பார்க்கிறோம்.
இந்த பெயர்கள் அனைத்தும் பொதுப்பெயர்கள்.
ஒரு ஊரில் உள்ள சுடலைமாடன் தெய்வத்திற்கும் இன்னொரு ஊரில் உள்ள சுடலைமாடன் தெய்வத்திற்கும் தொடர்பு இருக்காது.
சுடலை என்றால் சுடுகாடு- மாடன் என்றால் தலைவன்.
முற்காலத்தில் அல்ப ஆயுளில் இறந்துபோனவர்கள் பேயாக மாறி ஊரில் உள்ளவர்களை துன்புறுத்துவார்கள்.
இதை தடுப்பதற்காக சுடுகாட்டில் அமைந்திருக்கும் தெய்வம் சுடலைமாடன்.
இந்த சுடலைமாடன் என்பது ஒரு பொதுப்பெயர். இது ஒரு பதவி.
பேயாக அலைந்துகொண்டிருப்பவர்களை ஊருக்குள் செல்லவிடாமல் தடுத்து சுடுகாட்டு பகுதிக்குள்ளே கட்டுப்படுத்தி வைப்பதுதான் சுடலைமாடனின் முக்கிய வேலை.
..
ஒவ்வொரு ஊரிலும் தலைவர் பொறுப்பில் இருந்து,மக்களால் போற்றப்படுபவர்கள் இறந்தபிறகு சுடலைமாடன் பொறுப்பிற்கு வருகிறார்கள். ஒரு சுடலைமாடன் பதவியில் இருப்பவர் வினையின் காலம் முடிந்த பிறகு அவர் மனிதனாக பிறக்கிறார்,இன்னொருவர் அந்த பொறுப்பிற்கு வருகிறார்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுடலைமாடன் வேறுவேறு.
கோவிலில் திருவிழா காலகட்டத்தில் சாமி ஆடிகள் என்று சிலர் இருப்பார்கள்.
சுடலைமாடன் ஆவி அவர்கள் மீது ஏறி குறி சொல்வார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் இதேபோன்ற நிகழ்வுகள் நடக்கும்.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி கேட்டுப்பார்த்தால் அவர்களால் சொல்ல முடியாது.ஆனால் சமீக காலங்களில் நடந்த நிகழ்வுகளைக்கூட முடியும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுடலைமாடன் வேறு தற்போது பொறுப்பில் உள்ள சுடலைமாடன் வேறு.
..
சுடலைமாடனுக்கென்று சில கதைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த கதைக்கும் ஊரில் வழிபடும் சுடலைமாடனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
..
இது தவிர ஒவ்வொரு ஊரிலும் பேச்சியம்மா,மாரியம்மா என்ற பெயரில் பல கோவில்கள் இருக்கும்.
இவர்கள் ஒரு காலத்தில் குடும்ப தெய்வங்களாக இருந்து பிறகு ஊர்தெய்வங்களாக வளர்ச்சியடைந்தவர்கள்.
அந்த காலத்தில் வாழ்ந்த மாவீரர்களுக்கு கோவில் அமைப்பதுண்டு.
எல்லை காக்கும் வீரர்களுக்கு கோவில் அமைப்பதுண்டு.
இப்படி ஆதிகாலத்திலேயே ஒரே பெயரில் பல தெய்வ வழிபாடுகள் இங்கே இருந்திருக்கின்றன.
..
இந்த சிறு தெய்வங்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து பெரும் தெய்வமாக மாறுவதுண்டு.
உதாரணமாக இரண்டு இனங்களுக்கு இடையே போர் நிகழும்போது, வெற்றி பெறும் இனத்தவருடைய தெய்வம் அனைவருக்குமான தெய்வமாக மாறுகிறது.
..
சிறுசிறு இனங்கள்.அவர்களுக்கென்று வழிபாடுகள்.அவர்களை ஆட்சி செய்யும் அரசன் இது ஒரு காலத்தில் இருந்தது.
பின்பு இந்த இனங்கள் படிப்படியாக ஒன்று சேர்ந்து சிறுசிறு தேசங்களாக மாறின.
அரசர்கள் இறந்தபிறகு அவரை வழிபடுவதற்கு பெரிய கோவில்கள் கட்டப்பட்டன.
கோவிலின் கீழ் பகுதியில் அரசரது உடல் புதைக்கப்பட்டது.
...
உலகத்திலிருந்து விடுபட்டு தனிமையில் வாழ்ந்து ஞானத்தை பெற்ற சித்தர்களும்,வரை பின்பற்றிய சீடர்களும் அந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
..
மிகப்பழங்காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வழிபாடுகள்
..
1.குலதெய்வம்,சிறுதெய்வம்,ஊர்தெய்வம்,காவல்தெய்வம் போன்ற வழிபாடுகள்
2.அரசன் இறந்தபிறகு அவனை தெய்வமாக கருதி வணங்கும் வழிபாடுகள்
3.சித்தர்களை குருவாக வழிபடுபவர்கள்.சித்தர்களின் ஞான உபதேசங்களை பின்பற்றியவர்கள்.
..
மகாபாரத காலத்திற்கு முன்பே தென்னிந்தியர்களுக்கும் வடஇந்தியர்களுக்கும் இடையே பல தொடர்புகள் இருந்திருக்கின்றன.
இங்குள்ள பாண்டிய மன்னன் மகாபாரதபோரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டதைப்பற்றி மகாபாரதம் விரிவாகப்பேசுகிறது.
அதேபோல பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது தென்னிந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி ஒரு புனித இடமாக மகாபாரதகாலத்திலேயே கருதப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் ஒரு புனித இடமாக கருதப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல தென்னிந்தியாவின் பல நதிகளை, புனித நதிகள் என்று மகாபாரதம் கூறுகிறது.
வடஇந்தியர்கள் தென்னிந்தியாவிற்கு புனித பயணம் வருவதும், தென்னிந்தியவர்கள் வட இந்தியாவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்வதும் மகாபாரத காலத்திற்கு முன்பே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அத்துடன் இரண்டு பேருக்கும் இடையே வணிகத்தொடர்பும் இருந்துள்ளது.
...
இந்த காலத்தில் ஆரிய இனத்தின் மதங்கள்
தென்னிந்தியாவில் பரவ ஆரம்பித்தன.
17.நடுகல் வழிபாடுகள்-லிங்க வழிபாடுகள்
..
..
நடுகல் என்றால் நடும்-கல்.ஆதிகாலத்தில் இறந்தவரின் உடலை புதைப்பது வழக்கம்.அப்படி புதைக்கப்பட்ட இடத்தில் கல் நடுவார்கள்.இதற்கு நடுகல் என்று பெயர்.
அவரவர் வசதிக்கு தக்கபடி நடுகல்லின் உயரம்,அகலம் அதிகமாக இருக்கும்.
அரசர்கள் இறந்தால் அழகான வேலைப்பாடுகளுடன் நடுகல் நடப்படும்.அதைச்சுற்றி மண்டபம் எழுப்பப்படும்.அந்த நடுகல்லிற்கு வழிபாடுகள் செய்யப்படும்.
பிற்காலத்தில் இந்த வழிபாடுகள் சற்று பெரிய அளவில் நடைபெற ஆரம்பித்தன.மண்டபங்கள் கோவில்களாக உயர்ந்தன.
நடுகலிற்கு அபிஷேகங்கள் நடந்தன.மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன.
சித்தர்கள் சமாதி அடைந்த இடத்திலும் இதேபோல வழிபாடுகள் நடைபெற்றன.
..
இந்த நடு கல்லை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்து செல்வதற்கு வசதியாக கல் † போன்று செதுக்கப்பட்டது. இதுவே தற்காலத்தில் சிலுவை சின்னமாக மாறியுள்ளது.
..
புத்தர் காலத்தில் இந்த கல் ஸ்தூபி என்று உருமாறியது.
பழைய கால வழிபாடுகள் காலம் செல்ல செல்ல பரிணாமம் அடைந்தது.
வழிபாடுகளுக்கு தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகள் ஒன்றிணைக்கப்பட்டன.
நடுகல் வழிபாடு லிங்க வழிபாடாக பரிணாமம் அடைந்தது.
சித்தர்களின் சமாதியில் நடுகல் நடுவதற்கு பதிலாக லிங்கம் நடப்பட்டது.
..
சாதாரண மக்கள் இறந்த இடத்தில் நடுகல் நடப்பட்டது
சித்தர்கள் மற்றும் அரசர்கள் இறந்த இடத்தில் லிங்கம் வைத்து வழிபடப்பட்டது.
..
லிங்க வழிபாட்டிற்கு தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டது
பழைய காலத்தில் நிலவிய பல சின்னங்கள் இன்று வழிபடும் பொருளாக மாறியிருக்கின்றன.
உதாரணமாக உடல் என்பது ஆன்மா உறையும் கோவில் என்று வேதாந்தம் சொல்கிறது.
அதை விளக்கும் விதமாக கோவில்கள் கட்டப்பட்டன.
ஆன்மா என்பது தேரில் வீற்றிருக்கும் அரசன் போன்றது என்பது ஒரு உவமை.
இதை விளக்கும் விதமாக பிற்காலத்தில் தேர் உருவாக்கப்பட்டது.
..
குண்டலி சக்தி என்பது பாம்புவடிவில் இருக்கும் சக்தி என்று சொல்லப்பட்டது.
இதை விளக்குவதற்காக சிவனின் தலையில் பாம்பும், திருமால் பாம்பில் படுத்திருப்பதாகவும், சித்தரிக்கப்பட்டது.
யோகத்தின் மிகஉயர்ந்த கோட்பாடான குண்டலினி சக்தி என்பது பாம்புபோல உள்ளது.ஆகவே அதை வழிபடலாம் என்பது யோகிகளின் கருத்து. இது சாதாரணமக்களிடம் சென்றபோது, அவர்கள் பாம்புகளை பிடித்து வழிபட ஆரம்பித்துவிட்டார்கள்.பாம்பு புற்றுகளை வழிபடுகிறார்கள்.
பாம்புக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் வழிபடுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆனால் பாம்பு பற்றிய இந்த கருத்தை முறைப்படுத்தி ஆராய்ந்து பார்த்தால், உயர்ந்த தத்துவத்தை குறிக்க பயன்படுத்திய சின்னம் என்பதை புரிந்துகொள்ளலாம்.இவ்வாறு ஆதி காலங்களில் சின்னங்களாகவும், உதாரணமாகவும் சொல்லப்பட்டவை பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து வழிபடும் பொருளாக மாறியுள்ளது.
..
அதேபோல நினைவு சின்னமாக இருந்த நடுகல் வழிபடும் லிங்கமாக பரிணமித்துள்ளது..
லிங்கத்தின் தத்துவ விளக்கம் என்ன?
லிங்கம் என்பது சமஸ்கிருத சொல். அதன் அர்த்தம் உடல்.
பும்லிங்க என்றால் புருஷஉடல் அதாவது ஆண்உடல்.
ஸ்திரீலிங்க என்றால் பெண் உடல்.
வெறும் லிங்கம் என்றால் உடல் என்று பொருள். ஆகவே உறுப்பு என்ற பொருள் இல்லை என்பது தெளிவு.
..
லிங்கம் எதை குறிக்கிறது?
-
இந்த படைப்பு தோன்றுவதற்கு முன்பு, ஆணும் இருக்கவில்லை,பெண்ணும் இருக்கவில்லை.
இறைவன் ஒடுக்கநிலையில் இருந்தார்.
அப்போது இயக்கம் இல்லை.
இந்த உலகங்கள் இல்லை.உருவமுள்ள எதுவும் இல்லை.
..
சாங்கிய தத்துவம் கூறும் புருஷனும்(கடவுள்) பிரகிருதியும் சேர்ந்து இயங்கஆரம்பிக்கும்போது உலகங்கள் உருவாகிறது.
புருஷனும் பிரகிருதியும் சேர்ந்து இயக்கத்தை நிறுத்தும்போது உலகங்கள் ஒடுங்கிவிடுகின்றன.
இந்த ஒடுக்கநிலையை அவ்யக்தம் என்று அழைக்கிறார்கள்.
இதற்கான ஒரு குறியீடு லிங்கம்.
..
லிங்கம் என்பது இறைவனது உடலை குறிக்கிறது. ஒடுங்கிய நிலையில் உடல் இயக்கம் நிற்கிறது. மனத்தின் இயக்கம் நிற்கிறது.அப்போது இறைவன் தனது சொந்த நிலையான சத்சித்ஆனந்தம் எனப்படும் உருவமற்ற நிலையை அடைகிறார். சில தத்துவங்களில் இதை அவ்யக்தம் என்கிறது. லிங்க உடல் இயங்காத நிலையை குறிக்கிறது.
-
இறைவனின் லிங்க உடலை யாராலும் காண முடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் அது படைப்பு ஒடுங்கியிருக்கும் நிலை. அப்போது மனிதர்கள், விலங்குகள்,சூரிய சந்திரன் உட்பட பிரபஞ்சம் முழுவதுமே ஒடுங்கியிருக்கும். எதுவுமே இல்லாத அந்த நிலையை காண்பது யார்?அப்போது யாருமே இல்லை. இந்த பிரபஞ்சமே அந்த லிங்கத்திற்குள் ஒடுங்கிவிட்டது. அடுத்து துவங்கவிருக்கும் படைப்பும் அந்த லிங்கத்திலிருந்தே தான் ஆரம்பமாகும்.அப்போதும் அதை காணமுடியாது ஏனென்றால் அப்போது அது ஆணாகவும் பெண்ணாகவும் பரிணமித்திருக்கும். ஆகவே இறைவனின் லிங்க உடலை யாராலும் காணமுடியாது.அது நமது அறிவை கடந்தது என்று பொருள் அல்ல. அதை காணமுயலும் போது நமே அதற்குள் அடங்கிவிடுவோம்.
..
ஒரு உயர்ந்த தத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது, அதன் உள் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இறைவன் எப்படி இருப்பார் என்று ஒரு மகானை பார்த்து படிக்காதவன் கேட்டால், அவர் ஒரு லிங்கத்தை அவனுக்கு கொடுத்து, இது இறைவனை குறிக்கிறது என்பார். அந்த பாமரனும் இது இறைவனை நியாபகப்படுத்துவதால்,இதை வழிபடலாம் என முடிவுசெய்து பல்வேறு வழிகளில் வழிபடுகிறான்.
..
லிங்கம் என்பது ஆண்குறியா?
..
லிங்கம் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று உடல்.
இன்னொன்று ஆண்உறுப்பு.
இந்த ஆண் உறுப்பு என்ற அர்த்தம் பிற்காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம்.
நாம் இதுவரை பார்த்த லிங்க வழிபாடு என்பது ஆண்உறுப்பு தொடர்பான வழிபாடு அல்ல.
அது நடுகல் வழிபாட்டின் பரிணாமம் என்று பார்த்தோம்.
..
வட இந்தியாவில் இன்னொரு வழிபாடும் உள்ளது.
..
இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே இறைவனால் சூழப்பட்டுள்ளது.இறைவன் இல்லாத இடமே இல்லை.ஆண், பெண்,மிருகங்கள்,தாவரங்கள் அனைத்தும் இறைவனைத்தவிர வேறு இல்லை என்று உயர்ந்த தத்துவங்கள் போதிக்கின்றன.
எனவே ஆண்பெண் இணையும் காமத்தைக்கூட விலக்க வேண்டியதில்லை.என்பதை சில இந்துமத சமய பிரிவுகள் ஏற்றுக்கொள்கின்றன.
காமத்தையும் கடவுளின் வெளிப்பாடாக காணும்படி போதிக்கின்றன.
ஆண் உறுப்பையும் பெண் உறுப்பையும் வழிபடும் பொருளாக ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் போதிக்கிறார்கள்.
அதன் நோக்கம் என்னவென்றால் காமத்தின் மூலம் காமத்தை கடந்துசெல்வதாகும்.
சிலர் இதை அருவெறுப்பாக பார்க்கிறார்கள்.அப்படி பார்ப்பவர்கள் எந்த அளவு காமத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்,ரகசியமாக காமத்தை எந்த அளவு போற்றுகிறார்கள் என்பது நமக்குத்தெரியும்.
..
வெளியில் நல்லவர்போல பேசுவது.உள்ளுக்குள்ளே அனைத்து கெட்ட சிந்தனைகளையும் வைத்துக்கொள்வது.
இது வேண்டாம். உள்ளே உள்ள தீய சிந்தனைகளை வெளியோ கொண்டு வாருங்கள் என்று அந்த சமய பிரிவினர் கூறுகிறார்கள்.
மனிதனை மயக்குவது எது. காமம்,மது,மாமிசம்
இவைகளை ஞானத்துடன் அனுபவியுங்கள்.பிறகு இதிலிருந்து வெளியேறுங்கள் என்று அவர்கள் போதிக்கிறார்கள்.
காமம் சார்ந்த வழிபாடுகள் ஆதிகாலத்திலிருந்தே தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் அவைகளை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதில்லை.
..
இந்துமதம் என்பது எல்லைகாண முடியாத சமுத்திரம்போன்றது.
அதில் பலவித கருத்துக்கள் இருக்கின்றன.யாருக்கு எது தேவையோ அவர்கள் அதை பின்பற்றும் சுதந்திரமும் உள்ளது.
ஆனால் சமுதாயம் என்று வரும்போது புனிதமான,நல்ல வழிபாடுகளை மட்டுமே பெரும்பாலானமக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
.
18.நான்கு ஆஸ்ரமம்
.
ஆஸ்ரமம் என்றால் தங்குமிடம்
ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் ஒரே இடத்தில் தங்கக்கூடாது.
நான்கு இடங்களில் அவன் மாறிச்செல்ல வேண்டியிருக்கிறது.
பிறந்தபிறகு பெற்றோரின் இல்லத்திலும்,வளர்ந்த பிறகு குருவின் இல்லத்திலும்,திருமணம் புரிந்தபிறகு மீண்டும் பெற்றோருடனும்,பேரக்குழந்தை பிறந்த பிறகு வனத்தில் குடிசையிலும், மனைவி இறந்தபிறகு முழுவதும் தவத்திலும் ஈடுபட வேண்டும்.
..
1. பிரமச்சர்யம்
2. கிருஹஸ்தம்
3. வனபிரஸ்தம்
4. சன்யாசம்
..
1.பிரம்மச்சர்யம்
.
குழந்தை பிறந்து ஏழு முதல் பத்து வயது ஆன பிறகு, அவனை குரு வசிக்கும் இடத்திற்கு பாடம் பயில்வதற்காக அனுப்பி வைக்கிறார்கள்.அங்கே பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி பாடம் பயில வேண்டும்.
..
சொல்லிக்கொடுப்பவர் குரு
கற்றுக்கொள்பவர் சீடர்
சீடர்களுக்கு குரு பூணூல் அணிவிக்கிறார்.
கல்வி முடியும் பன்னிரண்டு ஆண்டுகளும் சீடன் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்கிறான்
அனைத்து நற்குணங்களையும் வளர்த்துக்கொள்கிறான்
மாணவர்கள் வேதம்,இலக்கணம்,செய்யுள்,தர்ம சாஸ்திரங்கள்,கணிதம்,வானசாஸ்திரம்,ஆயுத பயிற்சிகள் போன்ற பல கலைகளை கற்றுக்கொள்கிறார்கள்.
குரு ஒவ்வொருவனது தனித்திறமையையும் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கல்வி போதிக்கிறார்.
..
குரு வசிக்கும் இடம் உலக தொடர்பிலிருந்து விடுபட்ட கானகத்தில் அமைந்திருக்கும்.
பொதுவாக குரு இல்லறவாசியாக இருப்பார்.மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பார்.
தங்களிடம் கல்வி கற்க வரும் மாணவர்களை தங்களது சொந்த குழந்தைகளாகவே பாவித்து அனைவரிடமும் அன்பை பொழிவார்.
மாணவர்கள் ஆசிரியரையும் அவரது மனைவியையும் தாய்,தந்தையர்போல கருதுவார்கள்
வீட்டிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் மாணவர்களே செய்துகொடுப்பார்கள்.
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள உறவு பணத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல.
ஆசிரியர் தனக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் இலவசமாகவே போதிப்பார்.
மாணவர்களிடமிருந்து எந்தவித வெகுமானத்தையும் எதிர்பார்க்க மாட்டார்.
..
ஆஸ்ரமத்தில் அதிக எண்ணிக்கையில் பசு வளர்ப்பார்கள்
படிக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் மாடு மேய்ப்பது,கானத்திலிருந்து உணவு சேகரிப்பது,குருவுக்கு சேவைசெய்வது போன்ற அனைத்து பணிகளையும் மாணவர்களே செய்துவருவார்கள்
அனைவருக்கும் தேவையான உணவுகளை மாணவர்களே தயார்செய்வார்கள்
..
கல்வியை முடித்த மாணவன் ஸ்நாதகன் என்று அழைக்கப்பட்டான். அறிவு என்னும் நீரில் வெற்றிகரமாக நீராடி முடித்தான் என்று பொருள்படும்
பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பு நிறைவடைந்தபிறகு பிரிவு உபசாரவிழா நடக்கும்.
அதில் மாணவனின் பெற்றோர்கள் கலந்துகொள்வார்கள்.ஆசிரியருக்கு பரிசுபொருட்கள் வழங்குவார்கள்.
..
பொதுவாக ஆண் குழந்தைகள் மட்டுமே குருவிடம் தங்கி பாடம் பயின்று வந்தார்கள்.
திருமணத்திற்கு பிறகு கணவன்தான் பெண்ணிற்கு குருவாக இருந்து அனைத்தையும் அவளுக்கு சொல்லிக்கொடுப்பான்.
.
அதே நேரம் குருவின் பெண் குழந்தைக்கு அனைத்து கல்வியையும் குரு வழங்குவார்.
சிறுவயதிலேயே அனைத்து ஞானத்தையும் பெற்று ஆண்களுக்கு நிகரான சில பெண்களும் இருந்திருக்கிறார்கள்.
..
2. கிருஹஸ்தம்
..
பண்டைய ஆரியர்களின் வாழ்க்கை நிலையின் இரண்டாவது கட்டம் கிருகஸ்தம். இந்த நிலை திருமணம் புரிந்துக் கொண்ட பின் துவங்குகிறது. மாணவன் வீடு திரும்பிய பிறகு ஆசிரியரின் அனுமதியுடன் தன்னுடைய ஜாதிப்பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொள்வான்.
.
இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும்.
மேலும் தவம், யாகம், யக்ஞம், தானம், அகிம்சை, பொருமை ஆகிய நற்பண்புகளை இல்லற தர்மத்தில் கடைபிடிக்க வேண்டும்.
இல்லறத்தார்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் எனும் கர்மங்கள் செய்யவேண்டும்
..
1. தேவ யக்ஞம்:- தெய்வங்ளை வழிபடுவது.
.
2. ரிஷி யக்ஞம்:- ரிஷிகளை வணங்குதல்.அவர்கள் அருளிய சாஸ்திரங்களை படித்தல் மற்றும் பிறருக்கு போதித்தல்
..
3. பித்ரு யக்ஞம்:- நீத்தார் வழிபாட்டின் மூலம் தமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.
..
4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு உணவு படைப்பது.
..
5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.
.
பண்டைய காலத்து நீதி நூல் வல்லுனரான மனுவின் கூற்றின்படி பெண்களைப் பாதுகாப்பது , கௌரவமாக நடத்துவது போன்றவை கிருஹஸ்தனின் கடமை. அவர்களுக்கு அவ்வப்போது விடுமுறை நாட்களிலும் பண்டிகையின்போதும் வெகுமதிகள் அளிக்க வேண்டும்.அவரது கூற்றின் படி எங்கு உறவினரான பெண்கள் வருத்தத்துடன் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் முழுவதுமாக அழிந்து விடும்.ஆனால் அதே சமயம் எங்கு பெண்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களோ அந்தக் குடும்பம் செல்வச் செழிப்போடு விளங்கும். கணவனும் மனைவியும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருத்தல் அவசியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வீட்டில் மகிழ்ச்சியானச் சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவர்களது கடமையாகும்.
-
எந்தக் குடும்பத்தில் மனைவியால் கணவன் மகிழ்ச்சியடையச் செய்யப்படுகிறானோ, அதே போன்று கணவனால் மனைவி மகிழ்ச்சியாக வைக்கப்படுகிறாளோ அந்தக் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது என்று மனு கூறுகிறார். குழந்தைகள் நல்லமுறையில் வளரக்கூடிய சூழ்நிலையை அது உருவாக்கும். குழந்தைகளைச் சீரிய முறையில் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மனைவியானவள்“அர்த்தாங்கினி” என்று அழைக்கப்பட்டாள். இலட்சிய மணவாழ்க்கையின்படி கணவனும் மனைவியும் ஓர் உடலின் இரு பிரிவுகளாக விளங்க வேண்டும். எனவே தான் அரை உடலை உடையவள் “ என்ற பொருளைத்தருகின்ற அர்த்தாங்கினி என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.மனைவியை ஆன்மீக வாழ்க்கையின் பங்காளி என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் சகதர்மிணி என்றும் அழைத்தனர். கணவன் மனைவி ஆகிய இருவருமே ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மனிதன் கடவுளை உணரவேண்டும் என்பதே ஆரியர்களின் வாழ்க்கை நியதியாக இருந்தது.அதை பெறுவதற்கு சமுதாயத்தை தயார்படுத்துவதே முன்னோர்களின் பணியாக இருந்தது.ஆரியர்களது சமூகத்தில் ஓர் உறுப்பினர் வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் குறிக்கோள் கடவுளை உணர்தல் என்பது வலியுறுத்தப்படுகிறது.
19.நான்கு ஆஸ்ரமம்-வானப்பிரஸ்தம்
..
ஒரு இல்லறத்தானுக்கு பேரக்குழந்தை பிறந்த பிறகு வானப்பிரஸ்தம் என்ற அடுத்தநிலையை நோக்கி செல்ல வேண்டும்.
முற்காலத்தில் கணவனும் மனைவியும் கானகம் சென்று குடில் அமைத்து வாழ்வார்கள்.
அங்கே கிடைக்கும் கிழங்கு,பழம் இவைகளை உண்டு வாழ்வார்கள்.
ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.முக்தி அடைவது ஒன்றே அவர்களது நோக்கமாக இருந்தது.
வானப்பிரஸ்த வாழ்க்கை என்பது முற்றிலும் பற்றற்று வாழ்வதற்கான ஒரு பயிற்சி.
காலம் மாறமாற காடுகளில் சென்று வசிப்பது இயலாமல் போயிற்று.
அதன்பின் வீட்டிற்கு அருகே இன்னொரு குடில் அமைத்து(out-house) அங்கே தவவாழ்க்கையை மேற்கொண்டு வந்தார்கள்.
தற்போது அந்த நிலையும் மாறிவிட்டது.
..
4.சந்நியாசம்
..
வானப்பிரஸ்த ஆஸ்ரம வாழ்க்கையில் மனைவி இறந்துபோனால் கணவன் சந்நியாசம் என்ற அடுத்த ஆஸ்ரமத்தை நோக்கி செல்கிறான்.ஊர்ஊராக சுற்றி அலையும் சந்நியாசம் அல்ல.
ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து,உணவை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு முக்தி அடைவது.
ஒருவேளை கணவன் முதலில் இறந்துவிட்டால்.மனைவி உடன்கட்டை ஏறி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்வாளா? இல்லை.
அவளும் சந்நியாச நிலையை அடைகிறாள்.மீதி இருக்கும் சிறிது காலத்தை அங்கேயே கழிக்கிறாள்.
..
இவ்வாறு பண்டைய காலத்தில் மக்கள் நான்கு ஆஸ்ரமங்களை கடைபிடித்தார்கள்.
ஒருவர் முக்தி அடைய வேண்டுமானால் கண்டிப்பாக சந்நியாச ஆஸ்ரமத்தை அடைந்தே ஆகவேண்டும்.
முற்றிலும் பற்றற்ற நிலையை அடைவதற்கான பயிற்சிகளே படிகளே இந்த நான்கு ஆஸ்ரமங்களும்.
..
பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்தில் குருவுடன் தங்கி அறம் பயில்கிறான்.எப்படி பொருள் ஈட்ட வேண்டும். எப்படி அதை செலவிட வேண்டும். கிரகஸ்த தர்மங்கள் போன்றவற்றை பயில்கிறான்.சுருக்கமாக சொன்னால் கிருகஸ்த ஆஸ்ரதத்திற்கு தேவையான பயிற்சிகளை கொடுக்கும் இடம் பிரம்மச்சர்ய ஆஸ்ரமம்.
..
கிரகஸ்த ஆஸ்ரமத்தில் அறத்தை பின்பற்றுகிறான்.தொழில் செய்கிறான்.பொருள் ஈட்டுகிறான்.பிறருக்கு தான தர்மங்கள் செய்கிறான்.பல்வேறு கடமைகளை மேற்கொள்கிறான்.காமத்தை அனுபவிக்கிறான்.உண்மையான அன்பு என்பது இங்கேதான் உதயமாகிறது.கிருகஸ்த ஆஸ்ரமம் என்பது வனப்பிரஸ்த ஆஸ்ரமத்திற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் ஒரு இடம்.
..
இல்லறத்தில் ஈட்டிய பொருள்,குழந்தைகள்,சொந்தங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு கானகம் நோக்கி செல்கிறான்.இங்கே கணவன் மனைவி இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.
இவர்களுக்குள் காமம் இல்லை.உண்மையான அன்பு என்பது காமத்தை கடந்த பிறகே ஏற்படுகிறது.
வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில்தான் உண்மையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சரியான அன்பு ஏற்படுகிறது.
அந்த அன்பு அடுத்த கட்டமான சந்நியாசத்திற்கு அழைத்துசெல்கிறது.
அன்பே கடவுள் என்று நாம் கூறுகிறோம்.
அந்த அன்பை அடைவதற்காகத்தான் இந்த வாழ்க்கேயே இருக்கிறது.
ஒரு மனிதனிடம் முழுமையான அன்பு வெளிப்படும்போது இந்த உடல் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.அந்த அன்பில் நிலைத்திருக்கவேண்டுமானால் உடலைவிடுவதைத்தவிர வேறு வழியில்லை.
சந்நியாசம் என்பது உடலைவிடுவது.அது பழம் பழுத்து தானாக மரத்திலிருந்து கீழே விழுவதுபோன்றது.
..
பிரம்மச்சர்ய ஆஸ்ரமம்-அறம் பயிலும் இடம்
கிருஹஸ்த ஆஸ்ரமம்-பொருள் ஈட்டுவது.அதை செலவிடுவது
வனப்பிரஸ்தம்-இன்பம் அடையும்நிலை
சந்நியாசம்-வீடு அடையும் நிலை
..
காலம் மாறமாற இவைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
20.சந்நியாச ஆஸ்ரமம்
..
முற்காலத்தில் இந்தியாவில் நிலவிய பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம்,வனப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற நான்கு படிகள் இருந்ததை பார்த்தோம்.
படிப்படியாக ஒவ்வொரு நிலையையும் கடந்து சந்நியாச நிலையில் வீடு பேற்றை அடையாமல் சிலர் இறந்துவிடுவதுண்டு.
அப்படி இறப்பவர்கள் மீண்டும் பிறக்கும்போது சிறுவயதிலேயே பூரணஞானத்துடன் பிறக்கிறார்கள்.
எனவே அடுத்த பிறவியலும் அவர்கள் படிப்படியாக பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம் என்று முன்னேறத்தேவையில்லை.
முற்பிறவியில் எங்கே நிறுத்தினார்களோ அங்கிருந்து தொடங்கலாம்.
சிறுவயதிலிலேயே சிலரிடம் சந்நியாசத்திற்கான எண்ணங்கள் எழும்புகின்றன.
முக்தி அடைவதற்காக வீட்டை துறந்து காடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.
இவ்வாறு காட்டை அடையும் இளம்துறவிகள் ஏற்கனவே அங்கு வசிக்கும் பிற துறவிகளுடன் சேர்ந்து ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
இப்படி இளம் வயதில் துறவு வாழ்க்கைக்கு வருபவர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் இடம் மடம் என்று அழைக்கப்பட்டது.
ஆதிகாலத்திலேயே இப்படிப்பட்ட இளம் துறவிகள் பலர் இருந்திருக்கிறார்கள்
இதற்கு உதாரணமாக சுகர் என்பவரைக்கூறலாம்.
..
சிலர் பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்தில் பாடம் பயின்று முடித்த பிறகு இல்லறவாழ்க்கைக்கு திரும்ப விரும்புவதில்லை. நேரடியாக சந்நியாச வாழ்க்கை வாழ விரும்பி காடுகளுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
ஆதிகாலத்தில் இப்படிப்பட்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.
..
சிலர் இல்லற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று துறவு எண்ணங்களுக்கு ஆட்படுகிறார்கள்.மனைவியின் சம்மதத்தோடு இல்லறவாழ்க்கையை துறந்து நேராக சந்நியாச வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறார்கள்.
...
1. பிரம்மச்சர்யம்,கிருஹஸ்தம்,வானப்பிரஸ்தம் வழியாக சந்நியாச ஆஸ்ரமத்தை அடைபவர்கள்
2.இல்லறத்தில் நிறைவு ஏற்பட்டு மனைவியின் அனுமதியோடு சந்நியாச ஆஸ்ரமத்தை அடைபவர்கள்.
(மனைவியின் அனுமதி இல்லாமல் சந்நியாச வாழ்க்கைக்கு செல்ல சாஸ்திரம் அனுமதிப்பதில்லை)
3.பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலிருந்து நேராக சந்நியாச ஆஸ்ரமத்தை அடைபவர்கள்
4.பிறவியிலேயே சந்நியாச ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள்.
..
இவைகள் எல்லாம் இந்து சமூகத்தில் அந்த நாளில் நிலவிய சந்நியாச நிலைகள்.
..
இவைதவிர இன்னும் சிலர் சந்நியாச ஆஸ்ரமத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவைகள் பிற்காலத்தில் ஏற்பட்ட வழக்கங்கள்.
.
1.கணவனை இழந்த பெண்கள்.
இவர்கள் சந்நியாச ஆஸ்ரமத்தை அடைவதற்கான காடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை.வீட்டிலேயே வாழலாம்.ஆனால் சந்நியாசிகளுக்குரிய நியமங்களை கடைபிடிக்க வேண்டும்.
(முற்காலத்தில் சிறுவயதில் பெண்கள் கணவனை இழந்தால் மறுமணம் செய்ய அனுமதி இருந்திருக்கிறது.மகாபாரதத்தில் இதற்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன.)
.
2.தீரத நோய் உள்ளவர்கள்.
முற்பிறவியில் இவர்கள் செய்தபாவம். அல்லது இவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த பாவம் காரணமாக சிலருக்கு இளம் வயதிலேயே தீராத நோய் ஏற்படுகிறது. சிலருக்கு மனநலம் பாதிக்கப்படுகிறது.அவர்கள் குடும்பத்தில் வாழ்ந்து பிறருக்கு தொல்லைகள் கொடுக்காமல் இருப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிச்சை ஏற்று வாழும் பிச்சைக்கார வாழ்க்கை வாழ்கிறார்கள்.
.
3.திருமணம் செய்ய தகுதியற்றவர்கள்
சிலருக்கு திருமணம் செய்வதற்கான தகுதிகள் இருக்காது. அப்படிப்பட்டவர்களையும் சமூகம் அங்கிகரிப்பதில்லை. வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.அவர்கள் பிச்சைஏற்று வாழ்கிறார்கள்..
.
4.கடும் ஏழை
ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்கள்,உண்பதற்கு உணவில்லாத,தங்குவதற்கு இடம் இல்லாத ஏழைகள் பிச்சைஏற்று வாழும் வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறான்.
..
5.இல்லறவாழ்க்கையில் அமைதியின்மை.மனைவியடன் தீராத பகை. நிம்மதியற்ற வாழ்க்கை. இவை காரணமாக மனைவியை பிரிந்து வீட்டைவிட்டு துறவு வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறார்கள்.
..
முக்தி அடைவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
.
ஒரு மனிதன் படிப்படியாக வளர்ச்சியடைந்து பூரணத்துவத்தை அடைவது ஒருவகை.
மனிதன் படிப்படியாக பின்னோக்கி சென்று ஆரம்பித்த இடைத்தை அடைவது இன்னொருவகை
..
நமது சாஸ்திரங்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து பூரணத்துவத்தை அடையும் துறவுநிலையைத்தான் ஆதரிக்கின்றன.
படிப்படியாக பின்னோக்கி சென்று ஆரம்பநிலையை அடையும் துறவு வாழ்க்கையை ஆதரிக்கவில்லை.
புத்தமதமும் சமண மதமும் வளர்ந்த காலத்தில் பிச்சைஏற்று வாழும் துறவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
..
ஒரு மனிதன் எந்த வேலையும் செய்யாமல் பிச்சைஏற்று வாழ்ந்துகொண்டே இருந்தால் படிப்படியாக அவனது புண்ணியபலன் குறைந்து கடைசியில் மனிதவாழ்க்கைக்கு தேவையான புண்ணியத்தையே இழந்துவிடுகிறான்.
அப்படிப்பட்டவர்களை யாரும் மதிப்பதில்லை.
உலகத்தை துறந்து பிச்சையேற்று வாழும் துறவிகளை மக்கள் மதிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.
.
இன்னொருவகை துறவிகள் இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு தெரிந்த ஆன்மீக அறிவை மக்களுக்கு போதிக்கிறார்கள்.
பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதனால் புண்ணியத்தை பெருக்கிக்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட துறவிகளை நாடியே மக்கள் செல்கிறார்கள்.
21.சம்ஸ்காரம்-பதினாறு சடங்குகள்
..
சம்ஸ்காரம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. அவற்றில், “நினைவுச் சுவடு”, “சுத்திகரிப்பு”, “ஏதோ ஒரு நன்மை செய்வது” என பல பொருள்கள் உள்ளன
..
முற்பிறவியில் சேர்த்துவைக்கப்பட்டடுள்ள நினைவுகளுக்கு சம்ஸ்காரம் என்று பெயர் உண்டு
..
வாழ்வியலில் சம்ஸ்காரம் என்பதற்கான அர்த்தம் இவ்வாறாக உள்ளது. அதாவது ஒரு மனிதன் ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்திற்கு செல்லும்போது செய்யப்படும் சடங்குகள்,சம்பிரதாயங்கள் அல்லது நடைமுறைகள்
..
சம்ஸ்காரத்தின் நோக்கம் பழைய வாசனைகளை,நினைவுகளை சுத்தம் செய்து தூய்மைப்படுத்துவது
உடல், உள்ளம், புத்தி முதலானவற்றை சுத்திகரித்து புனிதமாக்கும் நோக்கம் கொண்ட பழக்க வழக்கங்களே சம்ஸ்காரங்கள்.
.
ஒரு மனிதனை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு அழைத்து செல்ல செய்யப்படும்
புனிதச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்களின் தொடரே சம்ஸ்காரங்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் உரிய குறிப்பிட்ட ஒரு சம்ஸ்காரம் அல்லது ஒருசில சம்ஸ்காரங்கள் உண்டு.
..
சாதி, சமய நம்பிக்கை, சமூக நிலை எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு இந்துவும் ஒருசில சம்ஸ்காரங்களைத் தன் வாழ்நாளில் செய்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
..
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு இடத்திற்கு இடம் இவைகளில் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் உண்மையில், தாமறியமாலே நம்மில் ஏராளமானவர்கள் இந்த சம்ஸ்காரங்களை இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
..
சம்ஸ்காரங்களின் நோக்கம்
..
வெளியிலிருந்து பார்க்கும்போது, சமூக-சமயச் சடங்குகள் போல் தெரிந்தாலும், சம்ஸ்காரங்கள் அடிப்படையில் ஆன்மிக சாதனையின் நடைமுறைத் தொகுப்பாக இருக்கிறது. ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கின்றன.மனிதனை முக்தியை நோக்கி அழைத்து செல்வதே இந்த சம்ஸ்காரங்களின் நோக்கம்.
..
சமஸ்காரங்க்ளின் நடைமுறைப் பயன்பாடு என்ன என்று பார்த்தால், ஒரு மனிதனின் வளர்ச்சிப் பாதையில் மிகப் பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும் இவை ஏற்படுத்துகின்றன. தனி மனித அளவில் ஆன்மீக நெறிப்படுத்துதலை அளித்து, ஒரு சமூகத்தின் முதிர்ச்சியடைந்த கலாச்சாரத்தின் உறுப்பினன் ஆகும் தகுதியை அவனுக்குக் கொடுக்கிறது.
..
கருவுற்ற நாள் முதல் துவங்கும் இந்த சம்ஸ்காரங்கள் ஒரு மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் தொடர்ந்து தேவைக்குத் தகுந்த நற்பண்புகளைத் தோற்றுவித்து, வாழ்நாள் முழுமையும் தொடர்ந்து அவனது ஆளுமை வளர்ச்சியடையத் துணை செய்கின்றன.
..
நவீன உலகில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தீவிர மதநம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளின் தொகுப்பு என்று இழிவு செய்யப்பட்டாலும் அவற்றுக்கு ஆழமான, மிக உயர்ந்த அர்த்தம் உள்ளது. அது, வெளிப்பார்வைக்கு எளிதில் புலப்படாது.
..
கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றியவற்றைத் தவிர பிற அனைத்து இந்து சமயச் சடங்குகளுக்கும் சமூக, பண்பாட்டு, ஆன்மீக, மறைஞான முக்கியத்துவம் உள்ளது- மனிதனின் மன வளர்ச்சியின் தேவைகளையும் இவை பெரும்பாலான சமயம் நிறைவு செய்கின்றன.
..
எந்த ஒரு கடவுளையோ அல்லது குறிப்பிட்ட சில கடவுளரையோ திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை.
..
உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, மனிதனுள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவனுக்குரிய இடத்தை அவன் வெற்றிகரமாக அடையச் செய்து, அவனுக்குச் சாத்தியப்படும் ஆன்மீக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன.
..
இந்தியாவெங்கும் உள்ள பிராந்திய மொழி நூல்கள் ஏராளமானவற்றில் சம்ஸ்காரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன, வெவ்வேறு வடிவங்களில் அவை கடைபிடிக்கப்படுகின்றன.
...
சடங்குகளும் சமயச் சம்பிர்தாயங்களுமாக தொகுத்துப் பார்த்தால் சம்ஸ்காரங்கள் தொன்மையானவை.
உலகின் மிகப் புராதான சடங்குகளாகக்கூட இவை இருக்கலாம்.
ஏனெனில், காலத்தில் மிக முற்பட்ட ரிக் வேத சம்ஹிதையில் இவை பேசப்படுகின்றன.
..
காலம் செல்ல செல்ல இவை மிகப் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களைக் காட்டிலும் இன்று இன்னும் பல சமூகக் குழுவினருக்கு உரியதாய் வளர்ந்தும் உள்ளது. ரிக்வேதத்திலேயே இவை ஓரளவு விரிவாக விளக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, இந்த நூல்கள் எழுதப்படுவதற்கும் முன்னதாகவே இவை நடைமுறையில் இருந்தன என்று தெரிகிறது.
..
அனைத்து பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் போலவே சம்ஸ்காரங்கள் எழுத்தில் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் அதிகாரத்தைக் காட்டிலும் முன்னோர்களின் வழிவந்த, பழக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவில்தான் கடைபிடிக்கப்படுகின்றன.
..
வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட நூல்களில், கிருஹ்ய சூத்திரங்களும் புராணங்களும் சம்ஸ்காரங்கள் குறித்து நேரடியாகவும் விரிவாகவும் பேசுகின்றன. இல்லறத்துடன் தொடர்புடைய சடங்குகளைப் பேசுவதால், சம்ஸ்காரங்கள் குறித்த முதன்மை நூலாக கிருஹ்ய சூத்திரங்களே கருதப்படுகின்றன.
..
ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கு ஏற்ப இந்த சடங்குகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இந்த சடங்குளின் பெயர்கள் மாறியிருக்கலாம் .
..
சம்ஸ்காரங்களின் எண்ணிக்கை காலத்திற்கு காலம்,இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.மிகப்பழைய காலத்தில் நாற்பத்தாறு சம்ஸ்காரங்கள் பின்பற்றப்பட்டிருக்கின்றன.சில இடங்களில் பத்து சம்ஸ்காரங்கள் பின்பற்றப்படுகின்றன.சில இடங்களில் ஐந்து சம்ஸ்காரங்கள் நடைமுறையில் உள்ளன.
..
பதினாறு சம்ஸ்காரங்கள் அல்லது சோடஷ சம்ஸ்காரங்கள்
..
1.கர்ப்பதானம்– கருவுறுதலுக்கு சமய அங்கீகாரம் அளிக்கும் சடங்கு இது.
சாந்தி முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.நல்ல நேரம் பார்த்து உரிய மந்திரங்கள் சொல்லி கணவனும் மனைவியும் சேரும் நிகழ்வு இது. மனம் அலைபாயாமல்,தீய எண்ணங்கள் இல்லாமல் ஒருமித்த மனத்துடன்,இறைவனை வழிபட்டு,காம இன்பத்தை கருதாமல் நல்ல குழந்தையை பெற்றடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சேரும் சடங்கு கர்ப்பதானம்.
காமசுகத்திற்காக கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லவனாக இருக்கமாட்டான்.அப்படி காமத்தின் மூலம் பிறக்கும் குழந்தை ஆரியன் அல்ல. கடவுளின் அருளால் பிறக்கும் குழந்தையே ஆரியன்.
நல்ல குழந்தையை பெறுவதற்காக பெற்றோர்கள் பல நாட்கள் விரதம் இருக்கிறார்கள்.அதன்பிறகு ஒரு நல்ல நாளில் இருவரும் ஒன்றுகூடுகிறார்கள்.அதன்விளைவாக தெய்வமே தாயின் வயிற்றில் குழந்தையாக வந்து தங்குகிறது.
..
2.பும்சவனம் – கருவில் உள்ள குழந்தையை இவ்வுலகில் பிணைத்து, அதற்கு ஊட்டம் அளிக்கும் நோக்கத்தில், கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதத்தில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கருத்தரித்த அன்னை, வேத மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு மணி பார்லியையும், இரு மணி கருப்பு எள்ளையும் சிறிது தயிரையும் உட்கொள்கிறாள். அரச மர வேரைக் குழைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறிது பாலையும் வலது நாசிக்குள் பூசுவதும் உண்டு.கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிற்கும்வரை தாய் தொடர்ந்து பல விரதங்களை கடைபிடிக்க வேண்டும்.தீய சிந்தனைகள் மனதில் எழக்கூடாது. எப்போதும் நல்லதையே கேட்கவேண்டும்.நல்லதையே பார்க்கவேண்டும்.நல்லதையே நினைக்கவேண்டும்.ஆரோக்கியமான உணவுகளையே உண்ணவேண்டும்.
..
3.சீமந்தம்– கர்ப்ப காலத்தின் முக முக்கிய கட்டத்தில் தாயையும் கருவையும் பாதுகாக்கச் செய்யப்படும் சடங்கு இது. வழக்கமாக, கர்ப்ப காலத்தின் நான்காம் மாதத்தில் வளர்பிறை நாட்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சந்திரன் பிரவேசிக்கும்போது இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம், அல்லது பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் ஒலிக்க, ஒன்றாய்க் கட்டப்பட்ட மூன்று தர்ப்பை புற்களைக் கொண்டு அன்னையின் உச்சியில் வகிடெடுத்தல் இந்தச் சடங்கு.
..
4.ஜாடகர்மம்– குழந்தை பிறந்தபின் ஒன்றை நாட்களுக்குள் நிகழ்த்தப்படும் சடங்கு இது. பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவுவது உண்டு.
..
5.நாமகரணம்– இது குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு. பஞ்சாங்கத்தின் துணையோடு குழந்தைக்குப் பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன்பின், அந்தப் பெயரை, தாயின் வலது செவியில், தந்தை மும்முறை கூறுகிறார். தாய், குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெயரை மும்முறை கூறுகிறார். குழந்தை பிறந்த நாள், அல்லது அது பிறந்த பத்தாம் அல்லது பன்னிரண்டாம் நாள் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம்.
..
6.நிஷ்க்ரமணம்– குழந்தை முதல் முறை வீட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும்போது செய்யப்படும் சடங்கு. இதை நான்காம் மாதம் செய்வது வழக்கம்.
பிறந்த குழந்தையை கண்டவர்கள் கையில் எடுத்து கொஞ்சுவது தவறு.இப்படி செய்வதால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.தீயவர்களின் தீயநினைவுகள் குழந்தையின் ஆழ்மனதில் பாதிப்பை உண்டாக்குகிறது.
எனவே குழந்தையை தீயவர்களிடமிருந்து பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு.
..
7.அன்னப்பிரசனம்– குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபின் செய்யப்படும் சடங்கு இது. சமைக்கப்பட்ட உணவு, முதல் முறையாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. வேக வாய்த்த அரிசியை நெய்யிலும் தேனிலும் பிசைந்து தந்தை குழந்தைக்கு ஊட்டுக்கிறார், அதன்பின் தாயும் அதை உட்கொள்வார். தற்காலத்தில், குழந்தை ஒரு கோவிலுக்கோ திருத்தலத்துக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அர்ச்சகர்களின் முன்னிலையில் இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
..
8.சூடாகரணம்– குழந்தையின் தலைமுடியை முதல்முறையாக மழிக்கும் சடங்கு இது. இதை, சௌலம் அல்லது முண்டனம் என்றும் சொல்வதுண்டு. குழந்தைக்கு ஒன்று, அல்லது மூன்று அல்லது ஐந்து வயது ஆனபின் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. புனர்வசு நட்சத்திரத்தில் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம். அதைவிட முக்கியமாக, இந்தச் சடங்கு நவமி, அல்லது அமாவாசையை அடுத்த ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது.
..
9.கர்ணவேதனம்– காது குத்தும் சடங்கு. ஆண் குழந்தைகளின் வலது காதிலும், பெண் குழந்தைகளுக்கு இடது காதிலும் முதலில் துளை இடப்படுகிறது. தந்தை தன் மடிவில் குழந்தையை வைத்துக் கொண்டு காது குத்துவது வழக்கம். ஆனால், தற்போது, ஆசாரி ஒருவரைக் கொண்டு இது செய்யப்படுகிறது.
..
10.வித்யாரம்பம்– குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதானதும், அதன் கல்வியைத் துவக்கும் சடங்கு இது. குழந்தைக்கு அகரமுதலியின் முதல் சில எழுத்துக்கள் கற்றுத் தரப்படுகின்றன. உலோகத்தாலான ஒரு பாத்திரத்தில் அரிசி குவிக்கப்பட்டு, அதில் இந்த எழுத்துக்களையும் சில மந்திரங்களையும் உரக்கச் சொல்லிக்கொண்டே, குழந்தை எழுதுகிறது.
..
11.உபநயனம்– யக்ஞோபவீதம் என்று அழைக்கப்படும் பூணூல் அணிவிக்கப்படும் சடங்கு இது. ஐந்து வயது அடைவதற்குமுன் ஆண் குழந்தைக்கு உபநயனம் செய்யப்படுகிறது. முடியிடப்பட்ட முப்புரி நூலொன்று இடம் வலமாக தோளில் அணிவிக்கப்படுகிறது. பிரம்மோபதேசம் என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரோபதேசமும் அளிக்கப்படுகிறது. உபநயனம் என்ற சொல்லின் பொருள்- உப என்பதன் பொருள் அருகில், நயனம்- கொணர்தல், என்ற பொருள் உள்ளவை. எனவே உபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும்.
பிரம்மோபதேசம் முடிந்தபின் உபநயனம் அளிக்கப்படுகிறது. இது அவனுக்கு இன்னொரு கண் கொடுத்து, புதிய பிறவி அளிப்பதாக நம்பப்படுகிறது.இது இரண்டாவது பிறவி.இருபிறப்பாளன்
..
12.ப்ரைஸார்த்தம்– வேதக்கல்வியின் துவக்கம்.இந்த சடங்கு குருகுலத்தில் நடைபெறுகிறது. இந்தச் சடங்குக்குப்பின் குழந்தைக்கு வேதங்களும் உபநிடதங்களும் கற்பிக்கப்படுகின்றன. குருகுலவாசமும் இனி துவங்குகிறது.
..
13.ருதுசுத்தி– பெண்ணின் முதல் மாதவிடாயின்போது நடத்தப்படும் சடங்கு. இது தொடர்பாக எண்ணற்ற சடங்குகளும் பழக்க வழக்கங்களும் உண்டு.இந்த காலத்திற்கு பிறகு உரிய பாதுகாப்பின்றி பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
..
14.சமாவர்த்தனம்– பிரம்மச்சரிய ஆசிரமம் என்று சொல்லப்படும் மாணவ பருவம் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்கு இது.பிரிவு உபச்சாரவிழா.இந்த விழாவில் பெற்றோர்கள் கலந்துகொண்டு குருவுக்கு பரிசுகளைக் வழங்குவார்கள்.
..
15.விவாகம்– திருமணச் சடங்கு. ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் கூடுவதற்கு சமய அந்தஸ்து கொடுக்கும் புனிதச் சடங்கு இது. வாழ்வில் வளர்ச்சி காண இது ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது.
திருமணம், புலன் இன்பங்களைத் துய்ப்பதற்கு மட்டமான ஏற்பாடு அல்ல. காம விழைவுக்கு நிறைவு காணும்போதே, இல்லற வாழ்வின் பொறுப்புகளையும் கடமைகளையும் சமபங்கு பகிர்ந்து கொள்ளவும் அறிவுருத்தப்படுகிறது.
..
16.அந்த்யேஷ்டி– நீத்தார்களுக்காகச் செய்யப்படும் சடங்கு. மரணத்தின்போது செய்யப்படும் சடங்குகள் மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் பிற முன்னோர்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஸ்ராத்த்ங்கள் என்னென்ன என்று வெவ்வேறு சாஸ்திரங்களில் இந்த சம்ஸ்காரம் குறித்து விளக்கமாக விவரிக்கப்படுகின்றன.
.
22.இந்துத் திருமணங்கள்
---
இந்து திருமண உறவுகள் மிகவும் அர்த்தம் வாய்ந்தவை.காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் திருமணங்கள் கீழ்தரமானவையாக கருதப்படுகின்றன.
வீட்டிற்கு வரும் மணமகளை மகாலெட்சுமியாகவே பார்க்கிறார்கள்.
மனைவி இல்லாத வீட்டை வீடாக கருதுவதில்லை.
குடும்பத்தை வழிடத்துவது பெண்ணின் முக்கிய கடமையாகும்.அவளே குடும்பத்தின் ஆணிவேராக இருக்கிறாள்.குடும்பத்தின் கௌரவம் என்பது பெண்ணின் நடத்தையை சார்ந்து இருக்கிறது.
சில இடங்களில்ஆணின் நடத்தை சரியாக இருக்காது.அப்படி இருந்தால்கூட குடும்பம் அழிவதில்லை.ஆனால் பெண்ணில் நடத்தை சரியில்லாவிட்டால் மொத்த குடும்பமும் அழிந்துபோகிறது.
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான புதிய உறவு மட்டுமல்ல,குடும்பத்திலுள்ள அனைவருக்கும் புதிய உறவுகள் இதனால் உண்டாகின்றன.எனவே மணப்பெண் நல்ல குடும்பத்தை சார்ந்தவாளாக இருக்கவேண்டியது அவசியமாகிறது.
-
திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் மிகவும் அவசியம்.பெற்றோர்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் ஆலோசனைகளைப்பெற்று திருமணத்தை முடிவுசெய்வார்கள்.ஒரு ஆணும்பெண்ணும் காதலிக்கிறார்கள் என்பதற்காக உடனே திருமணம் செய்துவைப்பதில்லை.மாப்பிள்ளையின் வீட்டினர் எப்படிப்பட்டவர்.அவரது குலம் என்ன?வசசி உள்ளவரா ?கடைசிவரை பெண்ணை காப்பாற்றும் திறமை உள்ளவா?ராசி பொருத்தம் இருக்கிறதா? போன்ற பல பொருத்தங்களை ஆராய்ந்து பார்த்தே பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள்.
அப்படி இல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக திருமணம் செய்துகொள்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் துன்பமாகவே அமைகிறது.
..
இந்தியா முழுவதும் மிகப்பழங்காலத்திலேயே பல்வேறு வகையான திருமணங்கள் நடந்துள்ளன.
அவைகளை தரத்திற்கு ஏற்றவாறு முன்னோா்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
பிரம்மநிலை முதல் பேய் நிலைவரை எட்டு நிலைகள் உள்ளன.இவைகள் குணத்தை அடிப்படையாகக்கொண்டது.
..
1.பிரம்மம்-
பிரம்மத்தை நோக்கி செல்லும் ரிஷி செய்துகொள்ளும் திருமணம்.பிரம்மச்சர்ய ஆஸ்ரம வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரம்மச்சாரி அடுத்து கிரஹஸ்த ஆஸ்ரமத்திற்கு செல்லாமல் நேராக சந்நியாச ஆஸ்ரமத்திற்கு சென்று தவ வாழ்க்கையில் ஈடுபடுகிறான்.அவ்வாறு பல ஆண்டுகள் தவவாழ்க்கை மேற்கொண்டு ஞானம் பெற்ற பிறகு திருமணம் செய்து வனப்பிரஸ்த ஆஸ்ரமத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வது பிரம்மவகை திருமணம்.
.
இந்த திருமணத்தில் மணப்பையன் எல்லோராலும் போற்றி வழிபடப்படக்கூடிய,ஞானியாக இருப்பான்.அவனது வயது நாற்பதிற்கு மேல்கூட இருக்கலாம்.சில ரிஷிக்கு ஐம்பது வயதுகூட இருக்கலாம்.மணப்பெண் மிகவும் சிறியவளாக இருப்பாள் பொதுவாக பதினைட்டு வயதுக்கும் குறைந்த பெண்ணாக இருக்கலாம்.
.
இப்படிப்பட்ட திருமணங்களைப்பற்றி புராணஇதிகாசங்களில் படிக்கிறோம்.இராமகிருஷ்ணர்-சாரதாதேவிக்கு நடந்த திருமணம் இப்படிப்பட்டது.
இதில் காமத்திற்கு முக்கியத்துவம் இல்லை.பெண் மனைவியாக இல்லாமல் சிஷ்யையாக இருக்கிறாள்.முற்றும் அறிந்த ஞானி தனக்கு தெரிந்த ஞானத்தை பெண்ணிற்கு கற்றுக்கொடுக்கிறார்.
.
உண்மையில் இவர்தான் குரு.இவரிடம் கற்வி கற்பதற்கே மாணவர்கள் அந்த நாட்களில் வருவார்கள்.இவரிடம் அசாதாரணமான புலன் அடக்கமும்,ஞானமும் காணப்படும்.இவர் வெறும் பாடங்களை பயிற்றுவிப்பவர் அல்ல.தன்னுடைய சக்தியை மாணவர்களுக்கு கொடுத்து அவர்களது வாழ்க்கையை உயர்ந்த லட்சியத்தை நோக்கி திருப்பிவிடுகிறார்.
இப்படிப்பட்ட திருமணங்கள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன.
..
2.தெய்வம்
முற்காலத்தில் தன்னிடம் பாடம் பயிலும் மாணவர்களில் நல்ல திறமையுள்ள,வேதம் கற்ற பிரம்மச்சாரிக்கு,தன்னுடைய மகளை, குரு திருமணம் செய்து வைக்கிறார்.
இதில் பையனுக்கும்,பெண்ணிற்கும் சமவயது இருக்கும்.
இருவருமே வேதம் கற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வாழ்க்கை தெய்வத்தன்மையுடன் இருக்கிறது.
முற்காலத்தில் பிராமணர்களிடையே இந்தவகை திருமணங்கள் நடைபெற்றன.
பணம் வாங்குவது,கொடுப்பது போன்ற எந்த நடைமுறையும் இருக்காது.மிகவும் எளிமையாக இந்த திருமணம் நடைபெறும்.திருமணத்திற்கு பிறகு மணப்பையன் பிராமணர்களுக்குரிய கடமைகளை செய்வான்.
..
3.அரசர்(அர்சம்)
அரசர்கள்,நிலக்கிழார்கள் செய்துகொள்ளும் திருமணம்.
அரசர்களும்,நிலக்கிழார்களும் பல திருமணங்கள் செய்துகொள்கிறார்கள்.
அழகான பெண் எங்கே இருந்தாலும் அவரது தந்தைக்கு அதிக பணத்தை,பொன்னை,நிலத்தை,அதிகாரத்தை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ளுதல்.
அரசனுக்கு பயந்து தந்தை தன்னுடைய பெண்ணை திருமணம்செய்துகொடுப்பதும் உண்டு.
இதில் பெண்ணின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை.
இந்த திருமணங்கள் மிக எளிமையாக நடந்தது.இதில் மணப்பெண்ணிற்கு வயது குறைவாக இருக்கும்.
பையனுக்கு வயது அதிகமாக இருக்கும்.
அவனுக்கு ஏற்கனவே பல திருமணங்கள் இதேபோல நடந்திருக்கும். திருமணமான பெண் அந்தப்புறத்தில் பிற பெண்களோடு வாழ்வாள்.
பெண்ணிற்கு எந்த சுதந்திரமும் இருக்காது.அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு கடைசிவரை அங்கேயே வாழவேண்டும்.
..
4.பிரஜை(பிரஜாவத்யம்)
-
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம்செய்து வைக்கும் முறை.
இதில் பெண்ணின் தந்தை தரகர் மூலமாக வரன் தேடுகிறார். அதேபோல ஆணின் தந்தையும் பெண் தேடுகிறார்.
சரியான பொருத்தம்,அந்தஸ்து போன்ற அனைத்தும் பொருந்தி வந்தால் இருவீட்டாரின் சம்மத்துடன் இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.
அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை பொதுமக்களிடையே இந்த திருமணம்தான் நடைமுறையில் உள்ளது.
-
5.கந்தர்வன்(காந்தர்வம்)
முற்காலத்தில் கந்தர்வர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்தார்கள்.மனிதனைவிட சற்று உயர்ந்த நிலையில் வசிப்பர்கள்.
பல்வேறு கலைகளில் ஈடுபாடு உடையவர்கள்.பல அற்பு ஆற்றல்கள் பெற்றவர்கள்.கந்தர்வர்களில் ஆணும் உண்டு. பெண்ணும் உண்டு(தேவகன்னி).
அழகான மனிதர்களிடம் பழகி,அவர்களது மனதை மயக்கி காதல் புரிந்து ,யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள். சில வருடங்கள் இப்படியே மறைவாக வாழ்ந்தபிறகு அவர்களைவிட்டு பிரிந்துசென்றுவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட திருமணங்களைப்பற்றி புராணங்களிலும் இதிகாசங்களிலும் பார்க்கலாம்.
அரசர்கள் சிலர் காந்தர்வ முறையில் திருமணம்செய்துகொண்டதைப்பற்றிய வரலாறும் உள்ளது.
--
6.சூரன்-அசூரன்(அசுரம்)
சூரன் என்றால் வீரர்.அசூரன் என்றால் வீரர்களில் நல்லொழுக்கம் இல்லாதவன்.
முற்காலத்தில் பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு போட்டிகள் நடத்தப்படுவதுண்டு.
இந்த போட்டியில் வீரமுள்ள ஆண்கள் கலந்துகொள்வார்கள்.அவர்களில் சூரரும் இருப்பார்,அசூரரும் இருப்பார்.
மணப்பெண்ணிற்கு மாலையிடும் மணமகன் யார் என்பது கடைசிவரை யாருக்கும் தெரியாது.
யார் வெற்றி பெறுகிறாரோ அவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்.
பழைய காலத்தில் இப்படிப்பட்ட திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ளது.
.--
7.ராட்சஸம்
முற்றிலும் தீயவன் ராட்சஸன்.
பெண்ணின் தந்தையை அடித்துக்கொன்று திருமணம் செய்துகொள்வது.இவ்வாறு திருமணம் செய்யப்படும் பெண்கள் அடிமைகளாக இருப்பார்கள்.இவனிடம் இரக்கமே இருக்காது.
ஏற்கனவே திருமணமான பெண்ணைக்கூட கவர்ந்துசென்றுவிடுவான்.
முஸ்லீம் மன்னர்களும் அவர்களது படையில் உள்ளவர்களும் பெரும்பாலம் இந்தவகை திருமணங்களை செய்திருக்கிறார்கள்.
எதிரி நாட்டிற்குள் செல்வார்கள்.அங்குள்ள ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு.பெண்களையெல்லாம் திருமணம் செய்துகொள்வார்கள்.முகமதுநபி கூட அப்படிப்பட்ட திருமணங்களை செய்திருப்பதாக வரலாறு கூறுகிறது.
இவர்கள் ராட்சஸ கூட்டத்தை சேர்ந்தவர்கள்
--
8.பிசாசு
குடிபோதையிலும் சிலர் பெண்களை கடத்திசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதுண்டு.
பெண்ணை மயக்கி தூங்கிக்கொண்டிருக்கும்போது பலாத்காரம் செய்வதுண்டு
.இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்களுக்கு தற்காலத்தில் மரணதண்டனை உறுதி.
ஆனால் முற்காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை வேறு யாரும் திருமணம்செய்துகொள்ள மாட்டார்கள் என்பதால் ,குற்றவாளிக்கே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்.
இப்படிப்பட்ட திருமணங்கள் காட்டுவாசிகளிடமும்,பண்பாடற்ற மக்களிடையே அதிகம் நடைபெற்றுள்ளன.