இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துசமயம் தான் நமது தேசிய பண்பு

இந்துமதம் சில கருத்துக்கள்

 


ஓர் இந்து ஆன்மீக உணர்வின்றி இருப்பானானால், அவனை நான் இந்து என அழைக்க மாட்டேன் பிற நாடுகளில் மனிதனுக்குப் பெரும்பாலும் அரசியல்தான் முதன்மையானதாக இருக்கும் அதனுடன் ஏதோ சிறிது சமயமும் இருக்கும் ஆனால் இந்தியாவில் நமது வாழ்க்கையின் முதற்கடமை முக்கியக் கடமை ஆன்மீகம் தான். அதற்குப் பிறகு நேரம் இருந்தால் மற்றவை இடம் பெறும். 
-
சிதறிக் கிடக்கின்ற ஆன்மீக சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை கொண்டுவர முடியும். ஆன்மீகம் என்ற ஒரே ராகத்திற்கு ஏற்ப இசைந்து துடிக்கின்ற இதயம் கொண்டவர்களின் சங்கமத்தால்தான் இந்த நாட்டைஉருவாக்க முடியும்.
--
-
இந்துசமயம் தான் நமது தேசிய பண்பு, இதை யாரும் அசைக்க முடியாது. வாளுடனும் நெருப்புடனும் வரும்(முஸ்லீம்) காட்டுமிரண்டிகளும் சரி மிருகத்தனமான சமயங்களைப் பரப்ப வரும்(கிறிஸ்தவ) காட்டுமிராண்டிகளும் சரி இவர்களில் யாராலும் அந்தச் சாரத்தை அந்த மாணிக்கத்தைத் தொட முடியாது
-
இந்த இனத்தின் உயிர் இருக்கின்ற பறவை யைக் கொல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை. இதுவே இந்த இனத்தின் உயிர்நாடி இந்த உயிர்நாடி இருக்கும்வரை சூரியனின் கீழ் உள்ள(வெள்ளைக்காரர்கள்) எந்தச் சக்தியாலும் இந்த இனத்தை அழிக்க முடியாது , உலகின் எல்லா சித்திரவதைகளும் துன்பங்களும் நம்மை வருத்தாமல் கடந்து சென்றுவிடும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றவை அனைத்திலும் மகோன்னதமான ஆன்மீகத்தை நாம் பற்றிக்கொண்டிருக்கும் வரை நாமும் பிரகலாதனைப்போல் அக்கினியில் குளித்தெழுந்து வெளிவந்து விடுவோம்.
-
மிஞ்சிப்போனால் அறிவியல்கள் நமக்கு உணவும் உடையும் தரலாம், பிறர்மீதுசெலுத்துவதற்கான அதிகார பலம் தரலாம்; சக மனிதர்களை எப்படி வெல்வது, எப்படி ஆள்வது பலவீனர்களைப் பலமானவர்கள் எப்படி அடக்குவது என்பதையெல்லாம் கற்றுத் தரலாம். நமது முன்னோர்கள் விரும்பியிருந்தால் கட்டாயமாக இத்தகைய அறிவியல்களைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவற்றை நாடாததற்காக நாம் இறை வனைப் போற்றுவோம். அந்த அறிவியல்களை நாடாமல் அவற்றைவிட மேன்மையான அளவற்ற மடங்கு உன்னத மான அளவற்ற மடங்கு ஆனந்தம் தருகின்ற சமயத்தை அவர்கள் கண்டு அவர்கள் பிடித்துக் கொண்டார்கள்.
-
இன்று அது தேசியப் பண்பாகிவிட்டது. தந்தையிடமிருந்து மகனுக்கு என்ற ரீதியில் பரம்பரைபரம்பரையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து இன்று அது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. ,நம் வாழ்வோடு வாழ்வாகியுள்ளது நம் நரம்புகளில் ஓடுகின்ற ரத்தத்தில் கலந்து ஒவ்வொரு துளியிலும் அதிர்ந்து, நம் இயல்பாகவே ஆகிவிட்டது. அதன் காரணமாக சமயம், இந்து இந்த இரண்டும் ஒரே பொருளைத் தருகின்ற சொற்களாகி விட்டன.
-
நமது இந்தப் பொன்னாட்டின் மீது காட்டு மிராண்டிகளின் படையெடுப்புகள் அலை அலையாகப் புரண்டு வந்தன, அல்லாஹு அக்பர் என்னும் ஒலி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வானையே நிறைத்துப் பரவியது, தன் உயர் எந்தக் கனம் போகுமோ என்பது தெரியாமல் ஒவ்வொர் இந்துவும் உறைந்து போயிருந்தான்.
-
சரித்திரப் பிரசித்தி பெற்ற உலக நாடுகளில் மிக அதிகமான துன்பங்களுக்கு உள்ளானதும் மிக அதிகமான முறை கீழடக்கப் பட்டதுமான நாடு இது. என்றாலும் நாம் ஏறக்குறைய அப்படியே , அதே இனமாக தேவையானால் அத்தகைய துன்பங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சந்திப்பதற்குத் தயராக இருக்கிறோம். அது மட்டுமல்ல நாம் வலிமையோடு இருப்பதுடன் , வெளிநாடுகளுக்குச் செல்லவும் தயராக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் சமீப காலத்தில் தெரியும் செய்கின்றன. ஏனென்றால் விரிவடைவது தானே வாழ்வின் அறிகுறி.
-
நமது லட்சியங்களும் சிந்தனைகளும் முன்புபோல் நம் நாட்டு எல்லைக்குள் அடங்கிக்கிடக்கவில்லை என்பதை இன்று காண்கிறோம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவை அணிவகுத்து வெளியே செல்கின்றன, பிற நாடுகளின் இலக்கியங்களில் ஊடுருவுகின்றன, மற்ற நாடுகளில் தனக்குரிய இடத்தைப் பெறு கின்றன, சில நாடுகளில் அதிகார பீடத்தில் கூட இடம் பிடித்திருக்கின்றன. இதற்கான விளக்கம் என்னவென்றால் உலகின் ஒட்டுமொத்த முன்னோற்றத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது, மேன்மையதனது, மனிதனின் மனத்தை ஆக்கிரமிக்க முடிந்தவற்றுள் மிகமிக நுண்மையானது.
-
-
நாம் இந்துக்கள். இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. அந்தச் சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத்தையும் நான் ஏற்றுக் கொள்ள வில்லை.
-
பழங்காலத்தில் அந்தச் சொல் சிந்து நதியின் மறுகரையில் வாழ்பவர்கள் என்று பொருள்பட்டது நம்மை வெறுப்பவர்களுள் பலர் தற்போது அதற்கு மோசமான பொருள் கூறலாம். ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை.
-
இன்று இந்து என்ற சொல் மோசமான எதையாவது குறிப்பதாக இருக்குமானால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடியாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம்.
-
நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கைக் கோட்பாடுகளுள் ஒன்றாக உள்ளது. இதுவரை பிறந்ததுள்ள கர்வம் மிக்கவர்களுள் நான் ஒருவன் உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன் – இந்து என்ற கர்வம் என் பெருமையின் காரணமாக அல்ல எனது பாரம்பரியத்தின் பெருமைக்காகவே ஆகும்.
-
கடந்த காலத்தைப்பற்றி நான் அதிகமாகப் படிக்குந்தோறும், நான் பின்னோக்கிப் பார்க்குந்தோறும் இந்தக் கர்வம் என்னிடம் மேலோங்குகிறது. அது எனக்கு வலிமையைத்தருகிறது; ஆழ்ந்த நம்பிக்கை நிறைந்த தைரியத்தைத் தருகிறது; பூமியின் தூசியிலிருந்து என்னை உயர்த்துகிறது; நமது அந்த மகத்தான முன்னோர்கள் வகுத்துச்சென்றுள்ள சீரிய திட்டங்களைச் செயல்படுத்த வைத்திருக்கிறது.
-
புராதான இந்து குழந்தைகளே! என்னைப்போலவே நீங்களும் அத்தகைய கர்வம் கொள்ளுங்கள்! உங்கள் முன்னோர்களிடம் அத்தகைய நம்பிக்கை உங்கள் ரத்தத்தில் பொங்கட்டும், அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொர் அம்சத்திலும் கலந்து பரவட்டும், உலகின் கதிமோட்சத்திற்காக அது செயல்படட்டும்!
-
--
இறைவன் ஒருவன் தான் மகான்கள் அதைப் பல பெயர்களால் வழங்குகிறார்கள் (ரிக்வேதம்). இந்த ஒரு வாக்கியத் திலிருந்து பெரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
-
இந்திய நாடு ஒன்றில் தான் சமய சம்பந்தமான கொடுமைகள் நடக்கவில்லை என்பதைக் கேட்க உங்களுள் சிலருக்குத் திகைப்பாக இருக்கலாம் . ஆத்திகன், நாத்திகன் , அத்வைதி , துவைதி எல்லோரும் அங்கே ஒரு தீங்கும் இல்லாமல் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். கோயில்களின் படிகளில் நின்று , கடவுளுக்கு எதிராகவே பேச உலோகாயதர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கடவுள் என்பதே ஒரு மூட நம்பிக்கை தேவர்கள், வேதங்கள், சமயம் எல்லாமே தங்கள் நலத்திற்காகப் புரோகிதர்கள் புனைந்த கதைகள் என்றெல்லாம் நாடு முழுவதும் அவர்கள் பேசினார்கள் அவர்களை யாரும் ஒன்றும் செய்யவில்லை.
-
புத்தர் தாம்சென்ற இடமெல்லாம் இந்துக்களுக்குப் புனிதமான ஒவ்வொன்றையும் பழித்துக் கீழே தள்ள முயன்றார். ஆயினும் நீண்ட ஆயுள் வாழ்ந்து தான் புத்தர் இவ்வுலகம் நீத்துச் சென்றார். கடவுள் என்றால் சிரித்துப் பரிகசித்த சமணர்களும் அப்படித்தான். கடவுள் என்று ஒருவர் எப்படி இருக்க முடியும்? அது வெறும் மூட நம்பிக்கை ! என்றார்கள் அவர்கள். இப்படி எவ்வளவோ உதாரணங்கள் உள்ளன.
-
முகமதியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு சமய சம்பந்தமான கொடுமை என்றால் என்ன என்பது அங்கே யாருக்கும் தெரியாது. அன்னியர் அங்கு வந்து அதைச் செய்த பிறகுதான் இந்துக்களுக்கு அதுபற்றியே தெரிய வந்தது.
-
கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளைக் கட்டுவதற்கு இந்தியர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் உதவி செய்தார்கள் இப்பொழுதும் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அங்கு ஒரு போதும் ரத்தம் சிந்தப்பட்டதில்லை; வைதீக சமயத் திற்குப் புறம்பாகவுள்ள பௌத்தம் போன்ற சமயங்கள் கூடத் தாக்கப்பட்டதில்லை.
---
-
நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து!
-
பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது . உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்கு பவர்களைநான் காணும்போது,' பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா? என்று என்னை நானே கேட்டுக் கொள்றேன்.
-
மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது
--
---
-
இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை புலன்வசப்பட்ட சாதரானவாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால் அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான் ஜடப் பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான் அவன் அவரைக் காண வேண்டும் அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும் ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன் நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அவர் கூறுவதுதான் நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி இந்து சமயம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்ச்சிகளிலும் அடங்கிவிடாது வெறும் நம்பிக்கை அல்ல உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து சமயம்.
----
ஆன்மா தெய்வீகமானது ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறை நிலையை அடைகிறது அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
-
கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிலும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும் எனவே அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படி செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம் தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர் அப்போதுதான் இதயக் கோணல்கள் நேராகின்றன. சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
-
இதுதான் இந்து சமயத்தின் மையமும் அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
---
அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! ஆ, ஆ! எவ்வளவு இனிமையான எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சதோதரர்களே அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாதபேரின்பத்தின் வாரிசுகளே ஆம் உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள் புனிதமானவர்கள் பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே வீறுகொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள்.(கிறிஸ்தவர்கள் மனிதர்களை ஆடு என்றும் ஏசுவை ஆடுகளை மேய்ப்பவர் என்றும் கூறுவார்கள்) நீங்கள் அழியாத ஆன்மாக்கள்! நீங்கள் ஜடப்பொருள் அல்ல நீங்கள் உடல் அல்ல; ஜடப்பொருள் உங்கள் பணியாள் .நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.
--
மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது மரணம் என்பது ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது பிறப்புக்குப்பின் இறப்பு இறப்புக்குப் பின் பிறப்பு என்று ஆன்மா மேல்நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்,
-
தான் ஒர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான் ஆன்மாவை வாள் வெட்ட முடியாது நெருப்பு எரிக்க முடியாது நீர் கரைக்க முடியாது , காற்று உலர்த்த முடியாது, ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம் இந்த மையம் ஓர்உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான்
-
ஜடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல அது இயல்பாகவே சுதந்திரமானது தளைகள் அற்றது வரம்பற்றது, புனிதமானது தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது தான் ஜடத்துடன் கட்டுப்பட்டதாகத் தன்னைக் காண்கிறது எனவே தன்னை ஜடமாகக் கருதுகிறது. 


 வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதம் இந்துமதம் .இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைச் சமயங்கள் உண்டாயின. அவை வேதநெறியின் அடித்தளத்தை உலுக்கி விடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டடால், எப்படிக்கடல் சிறிது பின்னோக்கி சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்து கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளைச் சமயங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்ச் சமயத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
-

அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல் உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக்கதைகள் கொண்ட மிகச்சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பவுத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திகவாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்று சேரும் பொது மையம் எங்கே இருக்கிறது. ஒன்று சேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது. இந்த கேள்விக்கு தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.

அருள்வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் சமயத்தை பெற்றுள்ளனர். வேதங்களுக்கு துவக்கமும், முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்கு துவக்கமும், முடிவும் இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்கு தோன்றும், ஆனால் வேதம் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால் வெவ் வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள்,
---
-
சுவாமி விவோகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பு வரை.அமெரிக்காவில் இந்துக்கள் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிகக்கேவலமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.இந்துக்கள் காட்டுமிராண்டிகள்,அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்,இந்துமதம் பண்பாடற்ற காட்டுவாசிகளின் மதம் என்றே போதிக்கப்ட்டது.அது மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளின் பாடத்திலும் இது சேர்க்கப்பட்டிருந்தது. சுவாமிஜியிடம் பலமுறை இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
--
கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:
--
கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்? கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது
அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? …. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது …
----
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்.ஆகவே எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
----
வேதத்தின் மீது அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தான் வேதம் படிக்க வேண்டும் என்று எந்த வேதங்களிலும் இல்லை.
----
நாம் இனத்தால், மொழியால், ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நமது மதமாகும். அது தான் நமது பொதுவான அடித்தளம்.

image77

 இந்துக்களின் உருவ வழிபாடு தவறானதா?

சுவாமி விவேகானந்தர்

-----
🌿 நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார். 
அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து!
----
🌿 மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான் ? சிலுவை ஏன் புனிதமானது ? பிராத்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் ? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும் போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
---
🌿 என் சகோதரர்களே சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல் உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி. நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவு படுத்துகிறது. 
அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச் சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான் 
---
🌿 அந்த உருவம்கடவுள் அல்ல அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப்போல் அவனுக்கும் தெரியும் 
🌿 ' எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்துகொள்ள முடியும்? அது ஒரு சொல் சின்னம் மட்டுமே . இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமாஎன்ன? எங்கும் நிறைந்தவர்என்று நாம் திரும்பத்திரும்பச் சொல்லும் போது, மிஞ்சிப் போனால் விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம் அவ்வளவுதான்.
---
🌿 சிலர் சர்ச்சியின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக்கொண்டு அதற்குமேல் வளராமல் நின்று விடுகிறார்கள் அவர்களைப் பொறுத்தவரை சமயம் என்றால் சில கோட்பாடுளை ஒப்புக்கொள்வது. பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான்.
---
🌿 இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து மனிதன் தெய்வமாக வேண்டும்.
---
🌿 இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை .அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான் .
---
🌿 குழந்தை மனிதனின் தந்தை குழந்தை பருவம் பாவமானது அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?
---
🌿 ஒரு விக்கிரகத்தின் மூலமாக தனது தெய்வீக இயல்பை ஒருவன் உணர முடியும் என்றால் , அதைப் பாவம் என்று கூறுவது சரியா? அந்த நிலையைக் கடந்த பிறகு அவனே அதைப் பிழை என்று கூறலாமா?
---
🌿 இந்துவின் கொள்கைப்படி மனிதன் தவறிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையிலிருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலைக்கு உண்மைக்கு பயணம் செய்கிறான். அவனைப் பொறுத்தவரை மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம்பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள்
---
🌿 வேறுபாட்டில் ஒருமைதான் இயற்கையின் நியதி அதை இந்து உணர்ந்துள்ளான். பிற சமயங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றன;. ஒரே ஒரு சட்டையைவைத்துக்கொண்டு சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான் ,ஹென்றி எல்லோருக்கும் அந்த ஒரு சட்டை பொருத்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் சட்டையில்லாமல் தான் இருக்கவேண்டும்.
---
🌿 திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் ஆணிகளே என்பதை இந்துக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல ஆனால் தேவைப்படாதவர்கள் அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அல்ல.
---
🌿 இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள். இந்து சமய வெறியன் தன்னைத் தீயில் கொளுத்திக் கொள்வானே தவிரப் பிறரையல்ல.
--
🌿 இந்துக்கள் மட்டுமே காப்பாற்றபடுவார்கள். , மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருதத் தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன்
---
🌿 சுவாமி விவேகானந்தர் 


 உலகம் தழுவிய சமயம்
----
உலகம் தழுவிய சமயம் என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது இடத்திலும் காலத்தாலும் எல்லைப்படுத்த படாததாக இருக்க வேண்டும். அந்த சமயம் யாரைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறதோ அந்தக் கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும்.
----
🌿 சூரியன் தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாகப் வீசுவதுபோல் அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் ,அது பிராமண சமயமாகவோ பௌத்த சமயமாகவே கிறிஸ்தவ சமயமாகவோ முகமதிய சமயமாகவோ இருக்காமல் இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும்.
----
🌿 அந்த சமயத்தில் பிற சமயத்தினரைத் துன்புறுத்தலும் சகிப்புத்தன்மையற்று நடந்துகொள்ளுதலும் இருக்காது.
அது ஆண் பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும் . அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
---
🌿 அத்தகைய சமயத்தை அளியுங்கள், எல்லாநாடுகளும் உங்களைப் பின்பற்றும் .
---
🌿 சுவாமி விவேகானந்தர் 


 

உலகத்தை துறந்து செல்வது எப்படி?
----

🌿 உலகத்தைத் துறப்பது என்பதை, அதனுடைய பழைய வளர்ச்சியுறாத பொருளில் புரிந்துகொண்டால், அது இப்படித்தான் இருக்கும்: வேலை செய்யக் கூடாது; சோம்பேறிகளாக இருக்க வேண்டும்; எதையும் சிந்திக்காமல், எதையும் செய்யாமல், பிடித்துவைத்த களிமண் போல் இருக்க வேண்டும்; விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதன் கைதியாக இருக்க வேண்டும்; இயற்கையின் விதிகளால் இடத்திற்கு இடம் பந்தாடப்பட வேண்டும். இதுதான் பொருள்.
---
🌿 உலகத்தைத் துறப்பது என்பதற்கு அது பொருளல்ல. நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன் தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன் தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்.
---
🌿 ஓவியத்தை ரசிப்பது யார்? விற்பவனா, பார்க்க வந்தவனா? விற்பவன், அந்தப் படத்தை விற்பதால் தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கணக்கு வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறான்; அதை ஏலத்திற்கு விடலாமா, விலை எப்படி ஏறுகிறது, எந்த இடத்தில் மூன்றாம் தரம் கூறினால் லாபம் அதிகமாகும் என்பதில் கவனமாக இருக்கிறான். அவனது மனம் முழுவதிலும் அந்த எண்ணமே நிறைந்திருக்கிறது. அந்தப் படத்தை வாங்கும் எண்ணமோ விற்கும் எண்ணமோ இல்லாமல் அங்கே போயிருக்கும் ஒருவன் தான் அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும். அவனே அந்தப் படத்தை அனுபவிக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.
---
🌿 இந்தப் பிரபஞ்சமே ஓர் ஓவியம். ஆசைகள் மறையும் போது மனிதன் உலகை அனுபவிக்கிறான். வாங்குவது, விற்பது, சொந்தம் கொண்டாடுவது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் அப்போது மறைந்து விடுகின்றன. கடன் கொடுப்பவன், வாங்குபவன், விற்பவன் எல்லோரும் மறைந்து, உலகம் மட்டுமே ஒரு சித்திரமாக ஓர் அழகிய ஓவியமாக எஞ்சி நிற்கிறது.
---
🌿 ஆசைகளை ஒழித்தால்தான் இறைவனின் இந்த அழகிய பிரபஞ்சத்தை புரிந்துகொண்டு, அதில் நாம் ஆனந்தமாகத் திளைக்க முடியும். அப்போது எல்லாம் தெய்வீகமாகிவிடும். மூலைமுடுக்குகள் மற்றும் தீய, தூய்மையற்ற இடங்களும்கூட தெய்வீகமாகிவிடும். எல்லாமே அவற்றின் உண்மை இயல்பை வெளிப்படுத்தும். நமது அழுகையும் கதறலும் எல்லாமே குழந்தைத்தனமானவை. நாம் இவற்றிற்கெல்லாம் வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறோம் என்பதை அப்போது புரிந்துகொள்வோம், நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்வோம்.
---
🌿 ஆகவே உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்கிறது வேதாந்தம். எப்படி வேலை செய்வது என்பதை அது முதலில் போதிக்கிறது. எப்படி?
துறப்பதன் மூலம், பொய்த் தோற்றமான இந்த உலகை விட்டுவிடுவதன்மூலம். இதன் பொருள் என்ன? எங்கும் இறைவனைக் காணல் என்பது தான். அப்படித்தான் நாம் செயல்புரிய வேண்டும்.
---
🌿 நூறுவருடங்களாக வாழ ஆசைப்படலாம். விரும்பினால் எல்லா உலக ஆசைகளுக்கும் நம் மனத்தில் இடம் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தெய்வீமாக்கி விடுங்கள், சொர்க்கமாக்கிவிடுங்கள், அவ்வளவுதான். பிறருக்கு உதவி செய்துகொண்டு ஆனந்தமான நீண்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று நாம் ஆசைப்படலாம். இவ்வாறு செயல்புரிந்தபடிதான் முக்திக்கான வழியைத் தேட முடியும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.
---
🌿 உண்மையை அறிந்துகொள்ளாமல், ஒருவன் உலக போகங்களில் முட்டாள்தனமாக மூழ்கினால் அவ்ன வழிதவறிவிட்டான், அவனால் லட்சியத்தை அடைய முடியாது. இனி, உலகைச் சபித்துக்கொண்டு அதை விட்டு விட்டுக் காட்டிற்குப்போய், உடலை ஒடுக்கி, பட்டினியால் உடலை அணு அணுவாகக் கொன்று, நெஞ்சை ஈரமற்ற கல்லாக்கிக் கொண்டு, கடின சித்தமுள்ளவனாக ஆகின்றவனும் வழி தவறியவனே. இவை இரண்டும் இரண்டு துருவங்கள். இரண்டுமே தவறான நோக்குடையவை. இருவரும் வழி தவறியவர்களே. இருவரும் லட்சியத்தை அடைய முடியாது.
---
🌿 எனவே எல்லாவற்றிலும் இறைவனை இணைத்துச் செயல்புரியுங்கள் என்று வேதாந்தம் சொல்கிறது. வாழ்க்கையைத் தெய்வீகமாக்கி, தெய்வமாக ஆக்கி, இடைவிடாமல் வேலை செய்யுங்கள். நாம் செய்ய வேண்டியதும், கேட்டுப் பெற வேண்டியதும் இவ்வளவுதான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கும் இறைவன் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கே போவது? ஒவ்வொரு செயலிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் உணர்ச்சியிலும் அவர் ஏற்கனவே உள்ளார். இதை உணர்ந்து செயல்புரிய வேண்டும். அது ஒன்றுதான் வழி. வேறு வழியே இல்லை. அப்போதுதான் நமது கர்மபலன்கள் நம்மைக் கட்டுப்படுத்தாது.
---
சுவாமி விவேகானந்தர்

image78

சுவாமிஜி எழுதிய கடிதம்

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நீக்க சுவாமிஜி எடுத்த முயற்சி


அனுப்புனர்
சுவாமி விவேகானந்தர்
இந்தியா.
---
பெறுநர்
மிஸ் நோபிள்(சகோதரி நிவேதிதா)
இங்கிலாந்து.
--
3.4.1897
--
அன்பார்ந்த மிஸ் நோபிள்,
-
இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு முக்கியமான பணியை நீ செய்ய வேண்டியுள்ளது. இங்கிலாந்திலுள்ள ஒருவரை உனக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன்..மலபாரிலுள்ள தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் அவர்.்டியாசின் சார்பில் அங்கே வாழ்கிறார் தாழ்ந்த ஜாதி என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி மக்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நீ இவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம்.

மாநிலங்களில் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை என்ற போக்கை காரணம் காட்டி இந்திய அரசாங்கம்(கிழக்கிந்திய பிரிட்டிஷ் அரசாங்கம்)இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டது. எனவே இவர்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை லண்டனில் உள்ள ஆங்கிலேய பாராளுமன்றமே.இந்த பிரச்சினையை இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேய சமுதாயத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு உன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்.
---
என்றும் உண்மையுள்ள
விவேகானந்தா

image79

கடவுளை மனத்தால் அறிய முடியுமா?

ஹிந்து

-----
🌿நமது மக்களையும் நமது மதத்தையும் குறிப்பதற்கு சாதாரணமாக ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது - இந்து.
----
🌿நான் வேதாந்தம் என்று எதைக் கூறுகிறேனோ அதைப் புரிந்துகொள்வதற்கு, இந்து என்ற சொல்லைச் சற்று விளக்க வேண்டியுள்ளது
----
🌿பழங்கால பாரசீகர்கள் ஸிந்து நதியை #ஹிந்து நதி என்று அழைத்தார்கள். சம்ஸ்கிருதத்தின் ஸ என்ற சப்தம் பழங்கால பாரசீகத்தில் ஹ என்று மாறிற்று. எனவே ஸிந்து ஹிந்து வாயிற்று. கிரோக்கர்களுக்கு ஹ வை உச்சரிப்பது கஷ்டமாயிருந்தது. ஆதலால் ஹ வையும்அவர்கள் விட்டுவிட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எனவே இந்தியர்களானோம். சிந்து நதிக்கு மறுகரையில் வாழ்பவர்கள் ஹிந்து என்று அழைக்கப்பட்டனர்.
----
🌿பழங்காலத்தில் அந்த வார்த்தையின் பொருள் எதுவாகவும் இருந்திருக்கலாம் ஆனால் இன்று அது தன் எல்லா வேகத்தையும் இழந்துவிட்டது. எனெனில் சிந்துநதிக்கு இக்கரையில் இன்று வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; இந்துக்கள் உள்ளனர், அவர்களைத் தவிர முகம்மதியர்கள்,பார்சிகள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் சமணர்கள் முதலியவர்களும் வசிக்கினறனர். எனவே ஹிந்து என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால் அது இவர்கள் அனைவரையும் குறிக்க வேண்டும், மதக்கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அனைவரையும் ஹிந்து என்று சொல்ல முடியாது. எனவே நமது மதத்திற்கு ஒரு பொதுப் பெயர் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
----
🌿பல்வேறு நெறிகள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு சடங்குகள் ,பல்வேறு வழிபாட்டு முறைகள் இவற்றின் ஒரு தொகுப்புபோல் உள்ளது நமது மதம். ஒரு தனித் தலைமை இல்லை ஒரு தனி பெயரில்லை, ஒரு தனி அமைப்பு எதுவும் இல்லை . நமது மதப் பிரிவுகள் எல்லாம் ஒப்புக் கொள்ளும் விஷயம் ஒரு வேளை இது ஒன்றுதான் சாஸ்திரங்களாகிய வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்..
----
சுவாமி விவேகானந்தர் 


 

 🌿 மனத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
---
🌿 குரங்குகள் இயற்கையாகவே சஞ்சல மனம் படைத்தவை. அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதனால் அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்? அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதனைப் பிடித்துக் கொண்டது. இப்போது அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும், படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன?
--
🌿 மனித மனம் அந்தக் குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததனால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கின்றன. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கொண்டு பொறாமை கொள்கிற குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லா பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!...ஆனால் இது முடியக்கூடியதா? ஆம், கண்டிப்பாக முடியும்.
---
🌿 எனவே முதல் பாடமாக வருவது இது: சிறிது நேரம் அமர்ந்து மனத்தை அதன் போக்கிலேயே அலையவிடுங்கள். அது எப்போதும் குமுறிக் கிளம்பியவண்ணமே உள்ளது. குரங்கு குதித்துத் தாவுவதைப் போன்றது அது. எவ்வளவு வேண்டுமானாலும் அது குதிக்கட்டும். நீங்கள் பொறுமையாக அதைக் கவனிக்க மட்டும் செய்யுங்கள். அறிவே வலிமை.. மனம் என்ன செய்கிறது என்பதை அறியாமல் அதைக் கட்டுப்படுத்த முடியாது. கடிவாளத்தை விட்டுப்பிடியுங்கள். தீய எண்ணங்கள் பல அதில் எழலாம். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் இருந்ததைப் பற்றி நீங்களே திகைப்படைவீர்கள். நாள் செல்லச் செல்ல மனத்தின் வெறித்தனமான போக்கு குறைவதையும், அது மெள்ள மெள்ள அமைதி பெறுவதையும் காண்பீர்கள். ஆரம்பத்தில் சில மாதங்கள் மனத்தில் பல எண்ணங்கள் எழுவதைக் காண்பீர்கள். பிறகு அவை குறையத் தொடங்கும். சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து கொண்டே போகும். கடைசியாக மனது பூரணக் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் தினமும் பொறுமையுடன் பயிற்சி செய்யவேண்டும்...இது ஒரு பெரிய வேலைதான், ஒருநாளில் செய்துமுடிக்கின்ற வேலையல்ல. பொறுமையாகத் தொடர்ந்து வருடக்கணக்காகப் பயிற்சி செய்தால் நாம் வெற்றி பெறுவோம்.


🌿 சுவாமி விவேகானந்தர் 🌿 


கடவுளை மனத்தால் அறிய முடியுமா?
-----

🌿 நாம் சாதாரணமாக அறிவு என்று சொல்வதற்கு என்ன பொருள்?
--
🌿 அறிவு என்பது, நம் மனத்தின் எல்லைக்கு உட்பட்டது, நாம் அறிவது.
--
🌿 அறிவு மனத்தைக் கடந்ததாக இருக்கும்போது அதை அறிவு என்று சொல்ல முடியாது. மனத்தின் எல்லையை கடந்து இருப்பதை மனத்தால் அறிய முடியாது
--
🌿 பரம்பொருள், மனத்தின் எல்லைக்குள் வந்து விட்டால் அது பரம்பொருளாக இருக்க முடியாது, எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடும்.
--
🌿 மனத்தால் அறியக்கூடியது,மனத்தினால் கட்டுப்பட்டது எதுவுமே எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடுகிறது.
---
🌿 மனத்தின் எல்லையை கடந்து இருக்கும் பரம்பொருளை மனத்தால் எப்படி அறிய முடியும்?
---
🌿 ஆகவே பரம்பொருளை அறிவது என்று சொல்வதே முரணானது. அதனால்தான் இந்தக் கேள்விக்கு ஒரு போதும் பதிலே கிடைக்கவில்லை.
--
🌿 கடவுளை அறிய முடியுமானால் அவர் கடவுள் அல்ல; அவரும் நம்மைப்போல் எல்லைக்கு உட்பட்டவராக ஆகிவிடுகிறார். அவரை அறிந்து கொள்ள முடியாது. அவர் அறிந்து கொள்ள முடியாதவராகவே என்றும் இருக்கிறார்.
--
🌿 மனத்தால் அறிந்துகொள்ள முடியாத கடவுளை அறியவே முடியாதா?
--
🌿 அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் நாம் இந்த நாற்காலியையே அறிய முடிகிறது இந்த உலகை பார்க்க முடிகிறது. அவர் சாட்சிப் பொருள், எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக அவர் இருக்கிறார். நாம் அறிவதையெல்லாம் அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் அறிய முடியும்.
---
🌿 நமது சொந்த ஆன்மாவின் சாரமாக இருப்பவர் அவர். நான் உணர்வின் சாரமாக இருப்பவரும் அவரே. இந்த நான்- உணர்வின் உள்ளேயும் மூலமாகவும் அல்லாமல் நாம் எதையும் அறிய முடியாது.
---
🌿 அவர் அறியக் கூடியவரும் அல்ல; அறியப்பட முடியாதவரும் அல்ல. இந்த இரண்டு நிலைகளையும்விட எல்லையற்ற மடங்கு உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார்.
---
🌿 அவரே நமது ஆன்மா. அந்தப் பரம்பொருள் நிறைந்திருக்காவிட்டால், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கணம்கூடயாரால் வாழ முடியும்? யாரால் மூச்சுவிட முடியும்?
--
🌿 ஏனென்றால் அவருள்ளும் அவர் மூலமாகவும் தான் நாம் மூச்சுவிடுகிறோம். அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் வாழ்கிறோம்.
--
🌿 அவர் எங்கேயோ நின்றுகொண்டு என் உடலில் ரத்தத்தை ஓடச் செய்கிறார் என்பது பொருளல்ல. எல்லாவற்றின் சாரமாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் அவர் இருக்கிறார் என்பதே பொருள்.
---
🌿 எந்தக் காரணத்தைக் கொண்டும் கடவுளை அறிவதாக நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அவரைத் தாழ்த்திப் பேசுவதே ஆகும்.
---
🌿 நாம் நம்மை விட்டு வெளியே குதிக்க முடியாது. அதுபோல் நாம் கடவுளை அறியவும் முடியாது.
---
🌿 அறிவு என்றால், ஒன்றை நம்மிலிருந்து வேறுபடுத்தி அறிவது உதாரணமாக, நாம் ஒன்றை நினைக்க வேண்டுமானால் அதை மனத்திற்கு வெளியே கொண்டுவந்து, அதாவது அதை மனத்திலிருந்து வேறுபடுத்திதான் பார்க்க முடியும்.
கடவுள் விஷயத்தில் இம்மாதிரி செய்ய முடியாது. ஏனெனில் அவர் நம் ஆன்மாவின் சாரமாக இருப்பவர். அவரை நமக்கு வெளியே கொண்டு நிறுத்த முடியாது.
---
🌿 வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்துக்களில் ஒன்று இதோ இருக்கிறது. உன்னுடைய ஆன்மாவின் சாரமாக இருப்பவரே மெய்ப்பொருள். அவரே பரமாத்மா. நீயே அது. நீயே கடவுள் என்பதன் பொருள் இதுவே.அஹம் பிரம்மாஸ்மி. நான் கடவுளாக இருக்கிறேன்
--
🌿 நம் ஆன்மாவின் சாரமாகவும் மெய்ப்பொருளாகவும் இருப்பவரை, நம்மிலிருந்து நாம் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?
--
🌿 கடவுள் நம்மோடு இரண்டறக் கலந்தவர். நம்மோடு இரண்டறக் கலந்து நாமாகவே இருப்பவர் . நம்மை நாமே புறத்தில் கொண்டுவந்து பார்க்க முடியாது. நம்மை வெளியே கொண்டு வந்து அறிய முடியாது. ஏனெனில் நாமே அதுவாக இருக்கிறோம். அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
--
🌿 நாம் நம்மைவிட நன்றாக வேறு எந்தப் பொருளையும் அறிந்திருக்க முடியாது, நமது அறிவின் மையமே நாம்தானே.-
----
🌿 சுவாமி விவேகானந்தர் 🌿


 இந்தியா உலகை வெல்லும்
-
நல்வாழ்த்துக்கள் தான் இந்தியா உலகிற்கு விடுக்கும் முதல் செய்தி. தனக்கு செய்த தீமைகள் அனைத்திற்கும் அது நன்மையையே திருப்பிக் கொடுத்தது. இதன் மூலம் இந்த உன்னதமான கருத்தை உலகிற்கே வழங்கியது. தீமைக்குப் பதிலாக நன்மை செய்தல் என்ற கருத்து உருவாகியதே இந்தியாவில்தான்.இறுதியாக அமைதி,நன்மை,பொறுமை,மென்மை இவையே கடைசியில் வெல்லும் என்பது தான் இந்தியாவின் செய்தி. இந்தப் பூமியையே ஒரு காலத்தில் அரசாண்ட கிரேக்கர்கள் எங்கே? தனது படைவீரர்களால் உலகையே நடுங்கச்செய்த ரோமானியர்கள் எங்கே? எல்லோரும் மறைந்துவிட்டார்கள்.அட்லாண்டிக்முதல் பசிபிக் வரை ஐம்பது வருடங்களாக கொடிகட்டி பறந்த அரேபியர்கள் எங்கே? லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஸ்பானிஷ்காரர்கள் எங்கே? ஆனால் இந்திய மக்களின் ஒழுக்கம் சிறப்பு வாய்ந்தது. கருணைமிக்க இனம் ஒருபோதும் அழிவதில்லை.எனவே இந்தியா வெற்றிபெறவே செய்யும்.
--
சுவாமி விவேகானந்தர் 

image80

கிறிஸ்தவர்கள் பற்றி

சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள்.

 

ஏசு இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள்.அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ , என் நண்பர்களே! ஏசுவும் வர வில்லை , யஹோவாவும் வரவில்லை, அவர்கள் வரப் போவதும் இல்லை. இப்போது அவர்கள் தங்கள் வீட்டை காப்ப்ற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை.இந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவ பெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றெண்டும் இருப்பார், அன்னை காளி மிருக பலியை என்றென்றும் பெற்று வருவாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்துவர்கள் வழிபடுகின்றனர். ஆசை கண்ணன் எப்போதும் குழலூதி கொண்டிருப்பான்.உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய உங்களுக்காக நாடே பொறுத்து பொறுத்து, நலிவுற்று நாசமாக வேண்டும் நினைக்கிரிகளா? மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது? உலகம் தான் பரந்து விரிந்து கிடைக்கிறதே! போவதற்கென ?ஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம்! இத்தகைய அந்நியர்களிடம் சென்று, ‘அந்தோ ! நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில் கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை’ என்று புலம்புகிரிகள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் ‘நாங்கள்’ அற்பர்கள் என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் ? இது என்ன நியாயம் நண்பர்களே?
----
---சுவாமி விவேகானந்தர் 


 ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியுமா?
-----
புத்தரையும் ஏசுவையும் வழிபடுவது பிரதீக வழிபாடு.(இறந்துபோன முன்னோர்களை வழிபடுவது)இது இறைவழிபாட்டிற்கு அருகில் உள்ள நிலை. ஒரு புத்தரையோ ஒரு ஏசுவையோ வழிபடுவது மனிதனைக் காப்பாற்றாது. அவர்களைத் தாண்டி ஏசுவாகவும்,புத்தராகவும் அவதரித்த கடவுளை அவன் அடைய வேண்டும்.ஏனெனில் கடவுள் மட்டுமே நமக்கு முக்தி தர முடியும்.
ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.
ஓர் உருவத்தையோ,ஆவிகளையோ அல்லது இறந்துபோன முன்னோர்களையோ வழிபட்டால் ஒருவன் காப்பாற்றப்படுவான் என்று எண்ணினால் அது பிழையே.
ஆனால் அனைத்து உருங்களிலும் கடவுள் உள்ளார் என்ற எண்ணத்துடன் எதையும் வழிபடலாம்.
உருவத்தை மறந்து அதில் கடவுளைக்காணவேண்டும்.
---
----சுவாமி விவேகானந்தர்(வீரமொழிகள் பகுதி1. பக்கம்302 


 

சீடர்: சுவாமிஜி அமெரிக்காவில் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்கள் உங்களை எதிர்க்கவில்லையா?
--
சுவாமிஜி; எதிர்க்காமல் என்ன செய்வார்கள்? மக்கள் எனக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்ததும் பாதிரிகள் என்னை எதிர்த்தார்கள் என்னைப்பற்றிப் பல அவதூறுகளைப் பரப்பினார்கள் செய்தித்தாள்களில் அவற்றை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்தார்கள் அவற்றை மறுக்கும் படி அப்போது பலர் என்னிடம் கூறிய துண்டு நான் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை ஏமாற்று வேலைகளால் இந்த உலகில் மகத்தான எதையும் சாதிக்க முடியாது என்பது என் திட நம்பிக்கை. எனவே இத்தகையகேவலமான பிரச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் என் பணியைத் தொடர்ந்தேன் இதன் விளைவாக நான் கண்டது என்ன வென்றால் அப்படி என்மீது பழி சொல்லியவர்களே பிறகு என்னிடம் வந்து தங்கள் செயல்களுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டார்கள்; முன்பு என்னைப்பற்றி வெளியிட்ட அவதூறுகளை மறுத்துச் செய்தித்தாள்களில் வெளியிட்டு அப்படிச் செய்ததற்காக வருத்தமும் தெரிவித்தார்கள்.

சிலவேளைகளில் நான் ஏதாவது வீட்டிற்குவிருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பேன் அதை அறிந்துகொண்டு நான் போவதற்கு முன்பாக அங்கு போய் என்னைப் பற்றிய ஏதாவது அவதூறுகளைச் சொல்லிவிடுவார்கள் என்னை அழைத்தவர்கள் இதைக் கேட்டதும் கதவுகளைப் பூட்டிக்கொண்டு வீட்டைவிட்டே போய்விடுவார்கள் நான் அங்கே சென்றால் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும் யாரும் இருக்க மாட்டார்கள் ,சில நாட்கள் கழியும். அனைத்தும் பொய் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள் என் சீடர்களாகவும் ஆவார்கள்.
மகனே இந்த உலகம் முழுவதுமே உலகியல் மனிதர் களால் நிரம்பி இருக்கிறது. ஆனால் ஒழுக்கமும் தைரியமும் விவேகமும் உள்ளவர்களை இது ஏமாற்ற முடியுமா என்ன? இந்த உலகம் எதைச் சொல்கிறதோ சொல்லட்டும் நான் என் கடமையைச் செய்கிறேன் இதுதான் ஒரு வீரனின் செயல்முறையாக இருக்க வேண்டும் அப்படியில்லாமல் இவன் என்ன சொல்கிறான் அவன் என்ன எழுதுகிறான் என்பதிலேயே இரவும் பகலும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தால் இந்த உலகத்தில் பெரும் காரியங்கள் எதையும் சாதிக்க முடியாது
--
சுவாமி விவேகானந்தர் 


 புதிய மதப்பிரிவை உருவாக்க போகிறாரா?
---
சீடர்..சுவாமிஜி,உங்கள் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.(ஸ்ரீராமகிருஷ்ணருக்காக விழாவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்)ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாக வைத்து அவர் பெயரால் ஒரு மதப்பிரிவை உண்டாக்குகிறீர்களோ என்று எனக்கு சிலவேளைகளில் தோன்றுகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த பிரிவையும் சேர்ந்தவர் அல்ல,அவர் சைவம்,வைணவம்,சாக்தம்,முகமதியமதம்,கிறிஸ்தவம் ஆகிய அனைத்திற்கும் மரியாதை அளிப்பது அவரது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
--.
சுவாமிஜி..எங்களுக்கும் எல்லா மதங்களிடமும் அப்படிப்பட்ட மரியாதை இல்லையென்பதா உன் எண்ணம். நீ என் சொற்பொழிகளை நிச்சயமாக படித்திருக்க வேண்டும்.அதில் எங்காவது நான் ஸ்ரீராமகிருஷ்ணரை மையாமாகவைத்து எதையாவது உருவாக்கியிருக்கிறேனா? கலப்பற்ற உபநிடத மதத்தையே நான் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்திருக்கிறேன.
கணக்கில் அங்காத மதப்பிரிவுகள் அனைத்துமே ஒவ்வொரு பாதை தான். ஏற்கனவே பிரிவுகளால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மற்றுமொரு மதப்பிரிவை உண்டாக்குவதற்காக நான் பிறக்கவில்லை.
--
சுவாமி விவேகானந்தர் 


 மதத்தை பரப்புவது என்றால் ஒவ்வொருவர் மீதும், வொவ்வொன்றின்மீதும் குறைசொல்வதே என்று நினைத்துக்கொள்ளாதே.உடல்,மனம்,ஆன்மீகம் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களுக்கு உடன்பாட்டுக் கருத்துக்களை தரவேண்டும்.யாரையும் வெறுக்கக்கூடாது. நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்ததால்தான் இவ்வளவு இழிநிலையை அடைநதிருக்கிறீர்கள்.இப்போது உடன்பாட்டுக் கருத்துக்களை மட்டுமே பரப்பி மனிதர்களை உயர்த்த வேண்டும்.முதலில் இந்த வகையில் இந்துக்களை எழுச்சி பெறச்செய்ய வேண்டும். பிறகு உலகம் முழுவதையுமே விழிப்புற செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் செய்தார். யாருடைய கருத்தையும் அவர் அழித்ததில்லை.மிகமிகக் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு கூட அவர் நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உயர்த்தி இருக்கிறார். நாம் அவரது வழியை பின்பற்றி அவர்களை மேலே தூக்கி உற்சாகப்படுத்தவேண்டும்.புரிகிறதா?


----சுவாமி விவேகானந்தர்

உங்கள் வரலாறு,இலக்கியம்,புராணங்கள் என்று எல்லா சாஸ்திரங்களுமே மக்களைப் பயமுறுத்த மட்டுமே செய்கின்றன. ”நரகத்திற்குத்தான் போவாய்.உனக்கு கதியே இல்லை” என்றே அவை மனிதர்களிடம் சொல்கின்றன.அதனால் தான் இந்தியாவில் இந்தவிதமான மந்தநிலை நாடி நரம்புகளில் புகுந்துவிட்டது. எனவே வேதவேதாந்தத்தின் உயர்ந்த கருத்துக்களை எளிய மொழியில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லவேண்டும். ஒழுக்கம்,நன்னடத்தை,கல்வி முதலியவற்றை அளித்து அனைவரையும் பிராமணர்களின் நிலைக்கு உயர்த்தவேண்டும். இதை உன்னால் செய்ய முடியுமா?
----
சுவாமி விவேகானந்தர்

---

சுவாமி விவேகானந்தர்..உங்களை நான் நேசிக்கிறேன்.ஆனால் பிறரது நன்மைக்காக வேலைசெய்துசெய்து நீங்கள் இறந்துபோவதையே விரும்புகிறேன்.
--
சீடன்.. நாங்கள் செத்துபோனால் எங்களை நம்பி வாழ்பவர்களின் கதி என்ன ஆவது?
---
சுவாமிஜி..நீ உன் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்யத்தயாரானால், உன்னை சார்ந்தவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக வழிசெய்வார். உன் வாசற்படியில் இறைவனே பிச்சைக்காரன் வடிவில் வந்து நிற்கிறான் அவனுக்கு முதலில் சேவை செய்.வாழ்க்கை தான் எத்தனை நாள்! நீ இந்த உலகிற்கு வந்துள்ளாய்.ஓர் அடையாளத்தை விட்டுச்செல்.இல்லையென்றால் உனக்கும் இந்த மரங்களுக்கும்,கற்களுக்கும் என்ன வித்தியாசம்?அவையும் தோன்றுகின்றன,வாழ்கின்றன,சாகின்றன.அதுபோல பிறந்து சாகவா விரும்புகிறாய்?


---சுவாமி விவேகானந்தர்


 

துறவிகள் இந்த நாட்டிற்கு தேவையா?
----
சீடர்..துறவிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பதால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாக பலரும் குறைகூறுகிறார்கள்.துறவிகளால் இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் உபயோகம் இல்லை என்று பலர் கருதுகிறார்கள்.
----
சுவாமி விவேகானந்தர்..உண்மையான துறயரே இல்லறத்தாரின் வழிகாட்டிகள்.துறவியரில் உபதேசத்தாலும் ஞான ஒளியாலும்தான் இல்லறத்தார் வாழ்க்கைப்போரில் பலமுறை வெற்றி முரசுகொட்டியிருக்கிறார்கள். சாதுக்களின் இந்த விலைமதிப்பற்ற உபதேசங்களுக்கு பதிலாக இல்லறத்தார்கள் அவர்களுக்கு உணவும் உடையும் தருகிறார்கள்.இந்த கொடுக்கல் வாங்கல் மட்டும் இல்லையென்றால் இதற்குள் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இல்லாமல் போனதுபோல் இந்தியர்களும் இங்கு ஏறக்குறைய மறைந்துபோயிருப்பார்கள்.
--
துறவிகள் சோம்பேரிகள் அல்ல. எல்லா வேலைகளுக்கும் அடி ஊற்றாக இருப்பது அவர்களே.துறவியின் வாழ்விலும் செயலிலும் உயர்ந்த லட்சியங்களின் வெளிப்பாட்டை கண்டும்,அவர்களிடமிருந்து உயர் கருத்தை பெற்றும் தான் இல்லறத்தார் இந்த கர்ம பூமியில்,வாழ்க்கை போரில் திறம்பட போராடினார்கள், போராடுகிறார்கள். புனித துறவியரைக் கண்டு தான் அவர்கள் தங்கள் வாழ்வில் புனிதமான லட்சியங்களை பின்பற்றுகிறார்கள்.துறவிகள் இறைவனுக்காகவும் உலக நன்மைக்காவும் அனைத்தையும் துறந்து,தியாகம் என்பதை தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டி,இல்லறத்தார்களையும் நன்முயற்சிகளை மேற்கொள்ள உத்வேகப்படுத்துகிறார்கள்.அதற்கு பதிலாக அவர்களுக்கு சிலபிடி உணவை இவர்கள் தருகிறார்கள்.இந்த நாட்டில் இல்லறத்தார்களின் வாழ்வெனும் கப்பல் கவிழாமல் இருப்பதற்கு காரணம் துறவியர் அந்த கப்பல் கவிழாமல் வழிநடத்திசெல்கிறார்கள்.
----
சீடர்..ஆனால் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணம் செய்துகொள்ளும் உண்மையான துறவியர் எத்தனைபேரை காணமுடியும்?
---
சுவாமிஜி..ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற ஒரு துறவி தோன்றுவதே போதுமானது.அத்தகைய ஒருவர் விட்டுச்சென்ற உயர்லட்சியத்தையும் மேலான கருத்துக்களையும் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆண்டுகாலம் மக்கள்வாழ முடியும்.
இதுபோன்ற சன்னியாச ஆசிரமங்கள் இந்த நாட்டில் இருந்ததால் அல்லவா அவரைப்போன்ற மாமனிதர்கள் இங்கே தோன்றினார்கள்.
உண்மையான துறவியர் தங்கள் சொந்த முக்தியைக்கூட துறந்துவிட்டு உலகிற்கு நன்மை செய்து வாழ்கின்றார்கள்.அவர்கள் உலகிற்கு நன்மை செய்வதற்காகவே பிறக்கிறார்கள்.அத்தகையை மேன்மைமிக்க சன்னியாச ஆசிரமங்களுக்கு நீங்கள் நன்றியோடு இல்லையென்றால், நீங்கள் கேவலமானவர்கள்

(சுவாமிஜி இதை பேசும்போது அவரது முகமண்டலம்கொழுந்துவிட்டு எரிவதுபோல் இருந்தது. துறவின் மொத்த உருவமே அவர் வடிவத்தில் காட்சியளிப்பதுபோல் சீடருக்கு தோன்றியது)
----
சுவாமி விவேகானந்தர் 

image81

Site Content

கொள்கைவெறி

 
வெறியர்களில் பலவகையினர் இருக்கிறார்கள்.பிறருடைய பெட்டியையோ,பணத்தையோ திருடுவது ஒரு திருடிக்கு தவறாக தோன்றாது,ஆனால் அவளுக்கு சிகரெட் பிடிக்காது.ஆகவே சிகரெட் பிடிப்பவர்களை கடுமையாக வெறுக்கிறாள்.பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக்கொண்ட ஒருவன் இருக்கிறான்,ஆனால் அவனுக்கு குடிகாரர்களை கண்டால் பிடிக்காது.சாராயம் குடிப்பவன் நல்லவனே அல்ல என்று அவன் பேசுவான்.தான் செய்கின்ற ஏமாற்று வேலைகளை பற்றி அவர்கள் எண்ணுவதில்லை 
--
கொள்கை வெறியர்களுக்கு நூற்றுக்கு தொண்ணுறுபேருக்கு கல்லீரல் நோயோ அல்லது ஜீரணகோளாறு நோயோ,வேறு வகை நோயோ இருக்க வேண்டும்.எந்த வகை வெறியானாலும் சரி,வெறியின் அடிப்படையில் தோன்றுகின்ற சீர்திருத்தங்களை விலக்குவதே அறிவுடைமை.இதை நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
--
உலகம் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. அவசரப்படாதீர்கள். நன்றாக தூங்குங்கள்,நரம்புகளை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்,தகுந்த உணவை உட்கொள்ளுங்கள்,உலகிடம் அனுதாபம் கொள்ளுங்கள்.வெறியர்கள் வெறுப்பையே வளர்க்கிறார்கள்.வெறியர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறிய பிறகே அன்பும் பரிவும் காட்டுவது எப்படி என்பதை அறிவீர்கள்.
--
மனிதனுக்கு நம்பிக்கை மட்டும்போதாது,அது அறிவுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். எல்லாவற்றையும் ஒருவன் நம்பவேண்டும் என்று சொல்வது அவனை பைத்தியமாக்கிவிடும்.

---சுவாமி விவேகானந்தர் 


எது கல்வி?
-----
மனிதனுக்குள் ஏற்கெனவே இருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.
---
நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று செல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.
--
காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.
---
பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல் நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் ஒரு தூண்டுதலாக மட்டும் அமைகிறது; அது உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
---
நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.
----
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
---
உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
---
சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும்.
கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். 
---
கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.
வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல மனதை ஒருமுகப்படுத்துவதுதான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும்.
----
தாழ்ந்த நிலையில் இருக்கும் நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்யவேண்டிய ஒரே சேவையாகும்... உயர்ந்த கருத்துகளை அவர்களுக்குக் கொடுங்கள். அந்த ஒரே ஒரு உதவிதான் அவர்களுக்கு இப்போது தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும்.
தலைமுறை தலைமுறையாக நிலவிய, வெளியே ஓடும் மனதைத் தடுத்து நிறுத்திய கல்வி முறை இப்போது கிட்டதட்ட அழிக்கப்பட்டுவிட்டது. 
---
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.
---
கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
---
குருகுல முறையில் ஆசிரியனோடு நேரடியாகத் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவதுதான் சிறந்த கல்விமுறை.
ஆசிரியரின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக அமையாமல் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.
----
சமுதாயத்தில் ஆண் பெண் அனைவருக்கும், உண்மையான கல்வியை அளிப்பது நமது கடமையாகும். அந்தக் கல்வி மூலமாக அவர்கள் தங்களுக்கு, நல்லது எது, கெட்டது எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்; அதன் மூலம் கெட்டதை நீக்கி விடுவார்கள்.
----
தாழ்ந்த மக்களுக்குப் பண்பாட்டையும் கல்வியையும் அளித்து, அவர்களை அறியாமை என்ற தூக்கத்திலிருந்து விழிக்கச் செய். 
---
கல்வி கற்பிக்கும் போது ஆன்மிகம், நல்லொழுக்கம், பிரம்மசரியம் ஆகியவற்றைச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும்
----
சுவாமி விவேகானந்தர் 


ஸ்மிருதியும், ஸ்ருதியும்
----
நமது சாஸ்திரங்கள் இரண்டு வகையான உண்மைகளைக் கூறுகின்றன.
----
ஒன்று, மனிதனின் அழியாத இயல்பை அடிப் படையாகக் கொண்டது; இறைவன் ஆன்மா, இயற்கை - இவற்றுக்கிடையிலான மாறாத உறவைப்பற்றி ஆராய்கிறது.(ஸ்மிருதி)
மற்றொன்று, வட்டாரச் சூழ்நிலைகள், காலச் சூழ்நிலைகள், குறிப்பிட்ட அந்தக் காலத்தின் சமுதாய அமைப்புகள் முதலியவற்றைப் பற்றிய தாக உள்ளது.
முதல்வகை உண்மைகள் பெரும்பாலும் நமது சாஸ்திரங்களான வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
----
. இரண்டாவது வகை, ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் கூறப்படுகின்றன.
---
எல்லா காலங்களுக்கும் வேதங்களே இறுதியான லட்சியம், முடிவான அதிகாரம் உள்ளவை என்பவை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எதிலாவது புராணங்கள் வேதங்களிலிருந்து மாறுபடுமானால் புராணத்தின் அந்தப் பகுதியை இரக்கமின்றி ஒதுக்கிவிட வேண்டும்.
---
இந்த ஸ்மிருதிகள் அனைத்திலும் கூறப்படும் போதனைகள் வெவ்வேறாக உள்ளன என்பது நமக்குத் தெரியும்.
---
ஸ்ருதிகள் மனிதனின் அழியாத இயல்பை அடிப்படையாகக் கொண்ட நிரந்தர உண்மைகள் பற்றி பேசுகின்றன.. 
----
மனிதனின் இயல்பை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் மனிதன் வாழும்வரை இந்த உண்மைகளும் மாறவே மாறாது. அவை எல்லா காலங்களுக்கும் உரியவை, எல்லா இடங்களுக்கும் பொதுவானவை, உலகம் தழுவியவை.
---
ஆனால் ஸ்மிருதிகள் பொதுவாக வட்டாரச் சூழ்நிலைகளையும், அங்கு நிலவுகின்ற பல்வேறான சூழ்நிலைகளின் காரணமாக எழுகின்ற கடமைகளைப் பற்றியுமே கூறுகின்றன. இவை கால ஓட்டத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகின்றன.
---
ஆனால் ஏதோ ஒரு சிறிய சமுதாய வழக்கம் மாறுவதால் உங்கள் மதமே அழிந்துவிடப் போவதில்லை, அப்படி ஒரு போதும் நடக்காது. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.அந்தப் பழக்க வழக்கங்கள் ஏற்கனவே மாறிக் கொண்டிருப்பவை என்பதை மறக்காதீர்கள்.
---
மாட்டிறைச்சி தின்னாத பிராமணன், பிராமணனே அல்ல என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்பு இதே இந்தியாவில் இருந்தது. சன்னியாசியோ அரசனோ அல்லது யாராவது மகானோ வீட்டுக்கு வந்தால் ஆடும் காளையும் கொல்லப்பட்ட விவரங்களையும், ஆனால் பயிர்த்தொழில் செய்யும் இனமாகிய நாம், மிகச்சிறந்த காளைகளைக் கொல்வது இறுதியில் நம் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதையும் நாம் வேதங்களில் படிக்கிறோம். எனவே பசு வதைக்கும் எதிராகக் குரல்கள் எழுந்தன ; அந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.
---
கொடிய வழக்கங்கள் என்று இப்போது நாம் கருதுகின்ற பல பழக்கங்கள் முன்பு சமுதாயத்தில் நிலவியதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் வேறு விதிகளை உருவாக்க நேர்ந்தது. இந்த விதிகளும் காலப்போக்கில் மறையும். உடனே புதிய விதிகள் தோன்றவும் செய்யும்.
----
எனவே வேதங்கள்(ஸ்ருதிகள்) எல்லா காலங்களிலும் ஒன்றே. அவை நிலையானவை
ஸ்மிருதிகள்(உதாரணம்.மனு ஸ்மிருதி) காலத்திற்குக் காலம் மாறுபவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
---
காலம் செல்லச்செல்ல ஸ்மிருதிகளில் கூறப்பட்ட விதிகள் மறைந்து கொண்டே போகும். மகான்கள் வருவார்கள்.அவர்கள் சமுதாயத்தை மாற்றி,இன்னும் நல்ல பாதைகளிலும் காலத்திற்குத் தேவையான கடமைகளிலும் வழிகளிலும் சமுதாயத்தைச் செலுத்துவார்கள். இத்தகைய நிலை இல்லையெனில் சமுதாயம் வாழ்வது என்பது முடியாமல் போய்விடும் 
---.
. உலகிலுள்ள வேறெந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதேவேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்தருப்போம். எவ்வாறு இப்படி இருப்பது என்பது இந்துக்களுக்குத் தான் தெரியும்.
இதை தெளிவான வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் ஒவ்வொன்றிலும் முக்கியம் மற்றும் முக்கியமற்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
----
முக்கியமானவை என்றும் இருப்பவை. முக்கியமற்றவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுபவை; அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீக்கப்பட்டு, முக்கியமானவற்றால் நிரப்பப்படவில்லை என்றால், கட்டாயமாக அவை ஆபத்தானவையாகிவிடும்.
---
உடனே நீங்களெல்லாம் எழுந்து நின்று, உங்கள் பழங்கால வழக்கங்களையும் அமைப்புகளையும் தூற்ற வேண்டும் என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள்.நான் சொல்வது அது அல்லவே அல்ல. அவற்றுள் மிகவும் தீய ஒன்றைக் கூட நிந்திக்காதீர்கள், எதையும் தூற்றாதீர்கள்.
இன்று மிகக் கொடிய ஒன்றாகத் தோன்றுகின்ற பழக்கங்கள், கடந்த காலத்தில் வாழ்வை வளப்படுத்திய பழக்கங்களாக இருந்திருக்கும். அவற்றை நாம் நீக்க நேருமானால் கூட சபித்துக் கொண்டே நீக்கக் கூடாது.
நம் இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக, கடந்த காலத்தில் அவை செய்த மகத்தான காரியங்களுக்காக அவைகளை வாழ்த்தியும் அவைகளிடம் நன்றியுணர்வுடனும் நீக்க வேண்டும்.
--
சுவாமி விவேகானந்தர் image82

அசைவ உணவு பற்றி சுவாமி விவேகானந்தர் கருத்து....

சுவாமி விவேகானந்தரின் கருத்து


1898..பேலூர்மடம்,கல்கத்தா
---
சீடர்..சுவாமிஜி,உணவிற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
--
சுவாமிஜி..சிறிது தொடர்பு இருக்கிறது.
சீடர்..மீன் அல்லது இறைச்சியை சாப்பிடுவது சரியானதா?அது அவசியமானதா?
---
சுவாமிஜி..வேண்டிய அளவு சாப்பிடு என் மகனே! அதனால் பாவம் ஏதாவது வருமானால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உன் நாட்டு மக்களை ஒருமுறை உற்றுப்பார்.அவர்கள் முகத்தில் எவ்வளவு வேதனையின் கீற்றுகள். நெஞ்சில் உரமோ துணிவோ இல்லாத நிலை! வயிறு மட்டும் பெரிதாக உள்ளது. கைகால்களிலோ பலம் இன்றி கிடக்கிறது. கோழைகள், ஆண்மையற்றவர்கள்.
---
சீடர்..இறைச்சியையும் மீனையும் சாப்பிடுவதால் நன்மை வருமானால் புத்த மதமும், வைணவமும் கொல்லாமை மிகச்சிறந்த பண்பு என்று ஏன் போதிக்கின்றன?
---
சுவாமிஜி..வைணவமும் பௌத்தமும் வெற்வேறு அல்ல.புத்தமதம் அழிந்துகொண்டிருந்த போது அதிலிருந்து இந்துமதம் சில முக்கிய கொள்கைகளை எடுத்துக்கொண்டது.அதில் கொல்லாமையும் ஒன்று. கொல்லாமை மிகச்சிறந்த பண்பு என்பது நல்லது தான். ஆனால் மக்களின் தகுதியை பார்க்காமல் எல்லோரும் இதை கடைபிடிக்கவேண்டும் என்று சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தியதால் இந்தியாவே நாசமாகிவிட்டது. விளைவு? அந்த தார்மீக கொக்குகள்(கொக்குகள் அஹிம்சாவாதிகள் போல் தண்ணீரில் ஒற்றைகாலில் நிற்கும்,சிறிய மீன்களை கண்டுகொள்ளாது,ஆனால் பெரிய மீன்களை லபக் என்று பிடித்துக்கொள்ளம்) நாள்தோறும் எறும்புகளுக்கு சர்க்கரை வைப்பார்கள்,அதே நேரத்தில் பணத்திற்காக சொந்த சகோதரனையே அழிக்க தயங்க மாட்டார்கள்.
---
சீடர்..வேதங்களிலும்,மனு போன்ற சாஸ்திரங்களிலும் மீனையும்,இறைச்சியையும் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே!
---
சுவாமிஜி..ஆமாம்.சாப்பிடுவதற்கு மட்டுமல்ல,கொல்வதற்கும் தடை உள்ளது.
---
சீடர்..இப்போதெல்லாம் ஆன்மீக வாழ்வு என்று ஆரம்பித்த உடனே மீனையும் இறைச்சியையும் விட்டுவிடுகிறார்கள். பலருக்கு இவற்றை சாப்பிடுவது.விபச்சாரம் போன்ற பாதகங்களை விட மகாபாவமாக தெரிகிறது.இத்தகைய கருத்துக்கள் எங்கிருந்து தோன்றியது?
---
சுவாமிஜி..அவை எங்கிருந்து வந்தது என்று அறிந்துகொள்வதால் என்ன லாபம்? அத்தகைய கருத்துக்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் நாசமாக்கிக்கொண்டிருப்பதை நேரடியாகக் காண்கிறாயே!. கிழக்கு வங்காளத்தில் மீன் இறைச்சி,ஆமை முதலியவற்றை உண்கிறார்கள்,அதனால் மேற்கு வங்காளத்தை விடமக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.கிழக்கு வங்காளத்தில் அஜீரணகோளாறு இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
---
சீடர்..ஆம் சுவாமி எங்கள் பகுதியில்(கிழக்கு வங்காளத்தில்,தற்போது பங்ளாதேஷ்)அஜீரண நோய் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.இங்கே வந்த பிறகு தான் அதை பார்க்கிறேன்.நாங்கள் காலையிலும் இரவிலும் மீனும் சோறும் தான் சாப்பிடுவோம்.
---
சுவாமிஜி..நன்றாக சாப்பிடு, வெறும் காய்கறிகளை உண்டு,வயிற்று நோய் பிடித்த பாபாஜிக்கள் இந்த நாட்டில் பெருகிவிட்டார்கள். இது சத்வ குணத்தில் அடையாளம் அல்ல,மிதமிஞ்சிய தமோ குணத்தின் அடையாளம்.சோம்பல்,தூக்கம்,மந்தநிலை,மோகம் இவை தமோ குணத்தின் அடையாளங்கள்
---
சீடர்..மீனும் இறைச்சியும் மனிதனிடம் ரஜோ குணத்தை அதிகமாக்காதா?
(ரஜோ குணம் என்பது தீவிரமாக செயல்புரியும் மனநிலை)
---
சுவாமிஜி..நீங்கள் எல்லாம் அந்த ரஜோ குணத்தை பெற வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.இப்போது ராஜசம் தான் தேவைப்படுகிறது. சாத்வீக குணம்(அமைதியான மனநிலை) என்று நீ யாரையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அவர்களுள் தொண்ணுறு சதவீதம் பேர் ஆழ்ந்த தமோ குணத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நாடு முழுவதும் தமோ குணத்தில் மூழ்கிக்கிடப்பதை நீ பார்க்கவில்லையா?. இந்த நாட்டு மக்களை மீனும் இறைச்சியும் உண்ண வைத்து அவர்களை விழித்தெழ செய்ய வேண்டும், செயல்வீரர்களாக்க வேண்டும். இல்லையென்றால் ஜடங்களை போல மாறிவிடுவார்கள்.ஆகவே மகனே மீனையும் இறைச்சியையும் நன்றாக சாப்பிடு.
---
சீடர்..சத்வகுணம் முழுமையாகத் தோன்றுமானால் ஒருவரால் மீனையும் இறைச்சியையும் விரும்ப முடியுமா?
---
சுவாமிஜி..முடியாது. விரும்ப முடியாது. உண்மையான சாத்வீக குணம் தோன்றும் போது மீன் இறைச்சி இவைகள் மீது உள்ள ஆசைகள் எல்லாம் மறைந்துவிடும். ஆனால் சத்வகுணம் தோன்றும் போது பிறருக்காக அனைத்தையும் தியாகம் செய்தல், காமம் மற்றும் பணத்தாசை முற்றிலும் இல்லாதிருத்தல்,கர்வமின்மை,அகங்காரமின்மை ஆகியவை உண்டாகியிருக்கும். இதையும் நீ கவனிக்க வேண்டும். இத்தகைய குணங்கள் இல்லாமல் அஹிம்சை அஹிம்சை என்று ஒருவன் சொல்லித்திரிந்தால் அவன் அயோக்கியன்,ஏமாற்றுக்காரன் என்று தெரிந்துகொள். நீயும் சத்தவகுணம் நிறைந்தவனாகும்போது மீனும் இறைச்சியும் சாப்பிடுவதை முழுமையாக விட்டுவிடு.
---
--சுவாமி விவேகானந்தர் 

.. 


இப்போதுள்ள சூழ்நிலையில் மனிதன் செயல்திறன் மிக்கவனாக வேண்டுமானால் மாமிசம் உண்பதை தவிரவேறு வழியில்லை. மாமிசம் உண்ணாததன் விளைவாகவே ஆயிரம் ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். சில ஆடுகளின் உயிரை பிரிப்பது பாவமா,அல்லது தாவர உணவை உண்டு மனைவி மற்றும் மகளின் மானத்தை காக்கவும் கொள்ளையர்களின் கையிலிருந்து (அன்னிய ஆட்சியாளர்கள்)குழந்தைக்கான உணவை காப்பாற்றவும் சக்தியற்றிருப்பதா- எது பாவம்? உடலுழைப்பால் வாழாத உயர்வகுப்பினர் மாமிசம் உண்ண வேண்டாம். ஆனால் அல்லும்பகலும் உழைப்பதன் மூலம் தங்கள் உணவை பெறுபவர்களுக்கு தாவர உணவே சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது தான் நாம் சுதந்திரத்தை இழந்து அன்னியர்களிடம் அடிமைப்பட்டதற்கு காரணம். 

image83

யார் ஆன்மீகவாதி?

இறைவன் இந்த உலகை ஏன் படைக்க வேண்டும்?


இறைவன் பூரணமானவன்.அவனுக்கு தேவை எதுவும் இல்லை .அவன் ஏன் படைக்க வேண்டும்? தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம்.தேவை இருக்கும் வரை நிறைவு இல்லை,நாம் குறையுள்ளவர்கள் தான். இதேபோல் பிரபஞ்சத்தை படைக்க வேண்டிய தேவை கடவுளுக்கு இருக்கிறதா?கடவுளோ முழுநிறைவானவர் தேவையற்றவர் என்கிறோம்,அப்படி இருக்க தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த படைப்புத்தொழிலை அவர் ஏன் செய்ய வேண்டும்?அவரது நோக்கம் தான் என்ன? ஏதோ சில நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக இறைவன் இந்த உலகத்தை படைத்தான் என்ற நமது கற்பனைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கலாம்.அதற்கு மேல் அவை எதுவும் இல்லை.


---சுவாமி விவேகானந்தர்(பக்திநெறி பற்றி) 


 யார் உயர்ந்தவர்?சிவனா?திருமாலா?
------------------------
இந்தியாவில் ஒருசமயம் பல மதப்பிரவுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வழக்காடதொடங்கினார்கள்.சிவபெருமான் தான் ஒரே கடவுள் என்றார் ஒருவர்.அதற்கான ஆதாரங்களை பல நூல்களிலிருந்து காட்டினார்,அதே போல் திருமால்தான் ஒரே தெய்வம் என்றார் இன்னொருவர்.அதற்கார ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார்.அப்போது இந்த வழியாக ஒரு முனிவர் வந்துகொண்டிருந்தார். சிவனே மேலான தெய்வம் என்று கூறியவனிடம்,நீ சிவனை கண்டிருக்கிறாயா? என்று கேட்டார். இல்லை என்றான் அவன். அதேபோல் திருமாலே உயர்ந்தவர் என்று கூறியவனிடமும்,திருமாலை கண்டிருக்கிறாயா? என்று கேட்டார்.அவனும் இல்லை என்றான்.
முதலில் நீங்கள் குறிப்பிடும் இறைவனை காணுங்கள் அதன்பிறகு வந்து வாதம் செய்யுங்கள் என்றார்.நூல்களை படித்தவர்கள் மட்டுமே வாதபிரதிவாதங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.இந்த உலகில் மேலும் மேலும் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.இறைவனை கண்டவன் அமைதியாகிவிடுகிறான்.


---சுவாமி விவேகானந்தர்(பக்திநெறி பற்றி) 

-------------------

 யார் ஆன்மீகவாதி?
-----------------
ஒரு அறையில் திருடன் ஒருவன் தனியாக இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அடுத்த அறையில் ஒரு பொற்குவியல் பாதுகாப்பின்றி இருப்பதாக அவனுக்கு தெரியவருகிறது.இரண்டு அறைக்கும் இடையே ஒரு மெல்லிய சுவர் மட்டுமே இருக்கிறது.அந்த திருடனின் நிலை என்னவாக இருக்கும்?அவனால் உறங்கமுடியுமா? சரியாக உண்ணமுடியுமா?வேறு எதையாவது சிந்திக்கமுடியுமா?அவனது மனம் முழுவதும் அந்தபொன்னை பற்றியே இருக்கும்.
---
பேரானந்தமும்,பெருநன்மையும் மகிமையும் கொட்டிக்கிடக்கின்ற சுரங்கமாகிய இறைவன் இங்கே இருக்கிறான் என்று மக்கள் உண்மையிலேயே நம்பினால்,அந்த பேரானந்தத்தை அடைய முயலாமல் சும்மா இருப்பார்களா?
---
இறைவனைக்காண்பது தான் பேரானந்தம் என்பதை ஒருவன் உண்மையிலேயே நம்பினால் அவரைக்காண ஏக்கத்தால் பித்தனாவான்.எப்போதும் அவரைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பான்.இந்த பைத்தியம்,இந்த தாகம்,இந்த வெறிதான் ஆன்மீக விழிப்புணர்வு எனப்படுகிறது.இது தொடங்கிய பிறகுதான் ஒருவன் ஆன்மீகவாதியாகிறான்.இந்த விழிப்புணர்வு தோன்றாதவர்களை ஆன்மீகவாதி என்று அழைக்க முடியாது.
--
---சுவாமி விவேகானந்தர்(பக்திநெறி பற்றி) 

-------------------

 பக்தன் - பன்றி இறைச்சி
------------------
பசு எங்கேயும் இறைச்சி சாப்பிடுவதில்லை,ஆடும் மாமிசம் சாப்பிடுவதில்லை,அதனால் அவைகள் யோகியாகிவிடுமா?அல்லது அகிம்சைவாதிகளாகிவிடுமா?
--
அதேபோல் இலை தளை காய்கறிகளை உண்டு வாழ்கின்ற மனிதன் மிருகங்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவனாகிவிட மாட்டான். மற்றவர்களை ஏமாற்றி,பணத்திற்காக எதையும் செய்ய துணிகின்ற ஒருவன் புல்லை மட்டுமே உண்டு வாழ்ந்தாலும் அவன் கொடிய மிருகத்தைவிட கேவலமானவன். 
--
மனத்தாலும் கூட யார் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதில்லையோ,பகைவனின் வளர்ச்சியை கண்டும் யார் மகிழ்கிறாறோ அவனே பக்தன்.அவன் அன்றாடம் பன்றி இறைச்சியை தின்று வாழ்ந்தாலும் அவனே அனைவருக்கும் குரு.
---
எனவே அகத்தூய்மை தான் முக்கியம்,உண்மையான ஆன்மீக சாரத்தை மறந்து,புறப்பழக்கங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு,எந்திரகதியில்,உணர்ச்சியில் செத்து,இரக்கமற்று வாழும் மனிதனின் நிலையும்,அவன் வாழும் நாடும் அய்யோ பாவம்!. உங்கள் புறபழக்கங்களால் அகவாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் அவற்றை இரக்கமின்றி அழித்துவிடுங்கள்.
-
---சுவாமி விவேகானந்தர்(பக்தியோகம் வழிமுறைகள்) 

----

 மதஉணர்வு 
---
உலகத்தை அது இருக்கின்றவாறே பாருங்கள். உங்களால் முடிந்தவரை அமைதியாக, வசதியாக இருந்து கொள்ளுங்கள். எல்லா துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள். அடி விழும்போது அது அடியல்ல. மலர் அர்ச்சனையே என்று சொல்லிக் கொள்ளுங்கள். அடிமைகளாக விரட்டப்படும்போது, நீங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இரவும் பகலும் பொய் சொல்லி உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது ஒன்று தான் இன்பமாக வாழ்வதற்கு ஒரே வழி என்று இந்த வழியைப் போதிப்பவர்கள் சொல்கிறார்கள்.
---
இதுதான் நடைமுறைக்கு ஏற்ற அறிவாம்! இந்தக் கருத்து இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டைவிட அதிகமாக எப்போதும் உலகில் பரவியிருக்கவில்லை. ஏனென்றால் இப்போதைப்போல் அடிகள் இவ்வளவு பலமாக முன்பு எப்போதும் விழுந்ததில்லை. இவ்வளவு தீவிரமான போட்டியும் இருந்ததில்லை. மனிதனுக்கு மனிதன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதில்லை. ஆகவே இந்த ஆறுதலை மட்டும்தான் சொல்ல முடியும். இந்தக் காலத்தில் மிகவும் தீவிரமாக வற்புறுத்தப்படுகிறது. 
-----
இந்த வழி தோல்வியைத்தான் தரும். அப்படியேதான் நடந்துகொண்டும் இருக்கிறது. பிணத்தை மலர்களால் மறைக்க முடியாது; அது முடியாத காரியம். அது பலநாள் தாங்காது. மலர்கள் சீக்கிரம் வாடி உதிர்ந்துவிடும்; பிணம் முன்பைவிட அதிகமாக அழுகி நாற்றமெடுக்கும். நம் வாழ்க்கையும் இப்படித்தான். நாறுகின்ற நமது புண்களைத் தங்கக் கவசத்தை நீக்கும் நாள் வரும்போது, புண்கள் இன்னும் துர்நாற்றத்தோடு வெளிப்படுகின்றன.
-----
அப்படியானால் நம்பிக்கையே கிடையாதா? நாம் எல்லோரும் மாயையிலே பிறந்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாம் அதன் அடிமைகள் என்பது உண்மைதான். அப்படியானால் இதிலிருந்து வெளியேற வழியே இல்லையா? விடிவே கிடையாதா?
நாம் துன்பத்தில் உழல்கிறோம். இந்த உலகம் உண்மையில் ஒரு சிறைச்சாலை. அழகு என்று நாம் சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு சிறைச்சாலையே. 
---
நம் அறிவு, மனம் எல்லாம் கூட உண்மையில் சிறைச் சாலைகளே. இவையெல்லாம் பல காலமாக அறிந்த விஷயங்கள் தான். எப்படிப் பேசினாலும், என்ன பேசினாலும் இந்த உண்மையை எப்போதாவது ஒருமுறை உணர்ந்திராத மனிதனே இருக்க முடியாது. வயதானவர்கள் இதை அதிகமாக உணர்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு ஒரு முழு வாழ்க்கையில் அனுபவம் இருப்பதும், இயற்கையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாது என்பதுமே ஆகும்.
----
இதிலிருந்து தப்ப வழியே இல்லையா? நிலைமை இப்படியெல்லாம் இருந்தாலும், கண் முன்னாலுள்ள உண்மை பயங்கரமானதாக இருந்தாலும், இந்தத் துன்ப துயரங்களின் நடுவில், வாழ்வும் சாவும் ஒரே அர்த்தமுடையவையாக இருக்கின்ற இந்த உலகில் காலங்காலமாக எல்லா நாடுகளிலும் எல்லா இதயங்களிலும் ஒரு சிறிய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது;
----
எனது இந்த மாயை தெய்வீகமானது. குணங்களால் ஆக்கப்பட்டது. கடக்க மிகவும் கடினமானது. ஆனாலும் என்னிடம் வருபவர்கள் பிறவிக் கடலைக் கடந்து விடுகிறார்கள். பெரும் சுமையைத் தாங்கித் துன்பப்படுபவர்களே, என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிக்கிறேன். இந்தக் குரல்தான் நம்மை வழிகாட்டி முன்னே அழைத்துச் செல்கிறது.
மனிதன் இந்தக் குரலை முன்பே கேட்டிருக்கிறான்; காலங்காலமாகக் கேட்டுக் கொண்டும் இருக்கிறான்.
----
மனிதனுக்கு எல்லாமே இழந்தது போலாகி, எல்லா நம்பிக்கைகளும் அற்றுப்போய், தன் சக்தியில் வைத்திருக்கும் அனைத்து நம்பிக்கைகளும் அழிந்து, எல்லாமே கைவிரல்களுக்கிடையே கரைந்துபோவது போல் மறைந்துபோய், வாழ்க்கையே பாழான நிலையில் இந்தக் குரலைக் கேட்கிறான். இதைத்தான் மதஉணர்வு என்று சொல்கிறார்கள். 


 சுவாமி விவேகானந்தர்
---
🌿 சூழ்நிலைகளை வெற்றிகொள்வது எப்படி?
---
🌿 புறச் சூழ்நிலைகள் எல்லாவற்றையும் வெற்றிகொள்வது என்பது இயலாத ஒன்றுதான். அது நம்மால் முடியாத காரியம்தான்.
---
🌿 மீன், நீரிலுள்ள தன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க விரும்புகிறது. அது எப்படித் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? இறக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு பறவையாவதன் மூலம்தான்.
---
🌿 நீரையோ காற்றையோ அந்த மீன் மாற்றவில்லை; மாற்றம் அதனிடமே உண்டாகிறது. மாற்றம் எப்பொழுதும் அகச்சார்பு உடையது. பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், எல்லா உயிர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன்மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம்.
-----
🌿 இந்த உண்மையை மத உணர்வுக்கும் ஒழுக்கக் கோட்பாட்டிற்கும் பொருத்திப் பார்த்தால், தன்னை மாற்றிக் கொள்வதன்மூலம் மட்டுமே ஒருவர் தீமையை வெல்ல முடியும் என்றாகிறது
---
துன்பமும் தீமையும் வெளியே இல்லை; ஆகவே அவற்றைப்பற்றிப் பேசுவது பொருளற்றது.
கோபத்தின் வசப்படாதிருக்கப் பழகிவிட்டால் எனக்குக் கோபம் வராது. வெறுப்பு என்னை அணுகாமல் பார்த்துக் கொண்டால் வெறுப்பே எனக்கு வராது. ஏனெனில் அவை என்னைத் தொடவே முடியாது.
----
வெற்றியடைவதற்கு இதுதான் வழி; அதாவது அகச் சார்பின்மூலம் நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வதுதான்.
---
🌿 சுவாமி விவேகானந்தர் 🌿 

image84

சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று!

சுவாமி விவேகானந்தர்

 

----
சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக பாவித்தவர். அவர் ஒரு நாட்டுக்கு, ஒரு இனத்துக்கு, ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக்காரராகப் பார்க்க முடியாது. யாரையும் எதிரியாகவோ, வேற்றாளாகவோ கருதியது கிடையாது. அன்பு மட்டுமே அவரை உலக மக்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார வைத்திருந்தது எனலாம்.
----
பிறப்பால் வங்காளியான அவருக்கு தமிழ் மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் இருந்த அன்பும் அக்கறையும் பல நேரங்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அவரது சிகாகோ பயணத்தின் முதல் கட்டத்தில் அவர் பயணம் செய்த கப்பல் சென்னை நோக்கி வரும் செய்தியைத் தொடர்ந்து அவரது தென்னக மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தும் பகுதியும் வருகிறது. அவரது பயணத்தை மட்டும் சொல்லாமல், பயணம் செய்யும் இடங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். அவர் காலத்தில் தமிழ்பேசும் நல்லுலகம் மட்டுமல்ல, ஆந்திரப் பகுதிகளின் பெரும்பாலான இடங்கள், கர்நாடகத்தின் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவற்றை உள்ளடக்கியிருந்தது பழைய சென்னை மாகாணம்.
-------
சுவாமிஜி சொல்கிறார் "தென்னிந்தியாவின் பெரும் பகுதி சென்னை மாகாணத்தைச் சேர்ந்தது. நிலம் மட்டும் பரந்து கிடப்பதில் என்ன பயன்? அதிர்ஷ்டம் உள்ளவனிடம் பாலைவனம் கிடைத்தாலும் அது சொர்க்கமாக ஆகிவிடும்" என்று தென்னக மக்களின் உழைப்பை உயர்வுபடுத்திச் சொல்லுகிறார். தென்னக மக்களைக் குறிப்பாக தமிழக மக்களை அவர் வர்ணிக்கும் காட்சி அற்புதமானது. அவர் சொல்கிறார்: "மழித்த தலை, குடுமி, பல்வேறு வண்ணங்களைப் பூசிய நெற்றி, கட்டைவிரலை மட்டுமே நுழைத்து அணியக்கூடிய செருப்பு. பொடி போட்டு இளகிய மூக்கு - இத்தகைய தோற்றம், உடம்பு முழுவதும் சந்தனம் அப்பிய தனது குழந்தைகள், என்று நால் கல்கத்தாவின் ஜகந்நாத கட்டத்தில் ஒரிசா பிராமணனைக் காண்கிறோமே, அது தென்னிந்தியக் காட்சியின் ஒரு நகல்தான்" இங்கு சுவாமிஜி வந்து தங்கி பழகிய மனிதர்களின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
----
தென்னிந்திய பிராமணர்கள் திருஷ்டி கழிப்பதற்கென்று மண்குடத்தில் வெள்ளையடித்து வண்ணம் பூசி வீட்டுமுன்பு வைத்திருப்பார்களாம். அதை வர்ணிக்கும் சுவாமி சொல்லுகிறார்: "தூரத்திலிருந்து பார்க்கும்போது இராமானுஜ நெறியினரின் (வைஷ்ணவர்கள்) நெற்றியில் திகழும் அந்த நாமம் சாட்சாத் அப்படியேதான் தெரிகிறது". நல்ல ரசனை.

----
தமிழ்நாட்டு உணவுப் பண்டங்களையும் சுவாமி வர்ணிக்கத் தவறவில்லை. நம்முடைய 'ரசம்' முதலான உணவுப் பண்டங்கள் பற்றிய அவர் விளக்கம் இதோ: "மிளகுத் தண்ணீர்" ரசத்துடன் கூடிய அந்த 'ஸாப்பாடு' ஒவ்வொரு கவளம் உள்ளே போகும்போதும் நெஞ்சம் ஒருமுறை நடுங்கித் தணியும்! அந்த அளவிற்கு காரமும், புளிப்பும். கடுகும் கருவேப்பிலையும் வறுத்துச் சேர்த்துள்ள தயிர்சாதம், நல்லெண்ணெய்க் குளியல், நல்லெண்ணெயில் பொரித்த மீன் -- இவற்றையெல்லாம் விட்டுவிட்டு தென்னிந்தியாவை நினைக்க முடியுமா?" என்கிறார்.
-----
"சென்னை மாநிலத்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நாகரிகம் மிகமிகப் பழமையானது. யூபிரட்டஸ் நதிக்கரையில் மிகப் பழங்காலத்தில் பரவியிருந்த பெருநாகரிகம் இந்தத் தமிழர்களில் ஒரு பிரிவினராகிய சுமேரியர்கள் பரப்பியதே" இப்படி உலக நாகரிகம் தமிழகத்திலிருந்து பரவிய கருத்தை சுவாமிஜி அழகாக விவரிக்கிறார். "ஜோதிடமும், அறநெறியும், நீதிநெறியும், ஆசாரங்களும்தான் அசிரிய, பாபிலோனிய நாகரிகங்களுக்கு அடிப்படை. இவர்களின் புராணங்களே கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு மூலம். இவர்கலின் மற்றொரு பிரிவினர் மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்து அற்புதமான எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர். தென்னகத்தில் உள்ள இவர்களது பிரம்மாண்டமான கோயில்கள் வீர சைவ, வீர வைணவ நெறிகளின் கீர்த்தியைப் பறைசாற்றுகின்றன. இவ்வளவு சிறப்பான வைணவ நெறி உள்ளதே, "முறம் விற்பவரும் அதே வேளையில் பெரும் யோகியாகத் திகழ்ந்தவரும்" தாழ்ந்த குலத்தில் பிறந்தவருமாகிய ஒரு தமிழர் ஆரம்பித்தது அது. தமிழ் ஆழ்வார்கள், வைணவர் அனைவராலும் இன்றும் வழிபடப் படுகின்றனர். த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத வேதாந்தங்கள் பற்றி மற்ற இடங்களைவிட இங்குதான் இன்றும் அதிக ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன. மற்ற இடங்களைவிட அறவழியில் நாட்டம் அதிகமாக உள்ளது." அவர் எழுதிய கடிதங்களைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழர்களுக்கு எழுதியிருக்கிறார்.
----
அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பட்டியலில் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார், அளசிங்கப் பெருமாள், 'லோகோபகாரி' எனும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும் சுவாமிஜியின் சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தை மொழிபெயர்த்தவருமான வி.நடராஜ ஐயர், நாட்டராம்பள்ளி கே.வெங்கடசாமி நாயுடு ஆகியோரைச் சொல்லலாம்.
-----

image85