இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்

இந்துமதத்தின் தத்துவங்கள்இந்துமதத்தின் தத்துவங்கள்

முக்குணங்கள்

முக்குணங்கள்

  32


(மூன்றுவகையான குணங்கள்)

-

பிரகிருதி அல்லது இயற்கை என்பது மூன்றுவகை குணங்களால் ஆனது

இந்து மதத்தில் ”குணங்கள்” என்று சொல்லப்படும் தன்மைகள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. பொதுவாக ”குணம்” என்றால் இயல்பு அல்லது தன்மையைக்குறிக்கும். ஆனால் இந்து மதத் தத்துவ சாஸ்திரத்தின்படி தொழில் ரீதியான மற்றொரு பொருளும் உண்டு. இந்த இரண்டாவது பொருள் சாங்கிய தத்துவ சாஸ்திரத்தினின்று தோன்றியது. இதன் படி இவ்வுலகை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று சக்தி சம்பந்தப்பட்டது.மற்றது பொருள் சம்பந்தப்பட்டது.பொருள் சம்பந்தப்பட்டவை இயற்கை அன்னையிடமிருந்து தோன்றியவை.

இயற்கை அல்லது பிரகிருதி” எனப்படுவது மூன்று வகையானது. மிகவும் நுண்ணியதும் தொட்டு உணர முடியாத பொருள்களான சத்துவ , ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களால் ஆனது. இயற்கையை ஒரு கயிறு என்றால், அதில் உள்ள மூன்று பிரிகளே இந்த மூன்று குணங்கள், கயிறு, நாண் போன்றவை வடமொழியில் ”குணா” என்று சொல்லப்படுகின்றன. எனவே தான் அவை சத்வ குணம், ரஜோகுணம்,, தமோ குணம் என்று சொல்லப்படுகின்றன.

இந்த ஆன்மீக உலகம் எனப்படுவது எண்ணற்ற பிரத்யஷ (உண்மையான) பொருள்களைக்கொண்ட தாயினும் அவை ஒவ்வொன்றும் முடிவற்றது. குற்றம் குறையில்லாதது. அத்தகைய ஒருநிதரிசனப்பொருள் தான் ”புருஷன்” எனப்படுகிறது. நாம் பேச்சுவழக்கில் எதை ஆன்மா” என்கிறோமோ அதுவே சாங்கிய தத்துவ சாஸ்திரத்தில் புருஷன்” என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு புருஷர்கள்” உண்டோ அந்த எண்ணிக்கையில் இப்பிரபஞ்சத்தில் உயிரினங்கள் இருக்கின்றன.

பிரபஞ்சத்தை நிர்ணயிப்பது குணங்களே

உலகம் படைக்கப்படுவதற்கு முன்னர் சத்துவம்,ரஜஸ், தமஸ் ஆகிய மூன்றுமே சமநிலையில் இருந்தன. படைப்புக்கு முந்தைய நிலையில் பிரகிருதியை (இயற்கையை) ஒரு ஆற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தோமே யானால் சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்றுமே அந்த ஆற்றில் ஒன்றுக்கொன்று பக்கத்திலேயே ஓடும் நீரோடைகள் போன்று இருந்தன. அந்த நிலையில் அவை மூன்றுமே எந்தவித வேறுபாடுமின்றி ஒன்றை யொன்று மிஞ்சாத அளவில் நீரோட்டத்தைக்கொண்டதாக இருந்தன.

அவை ஒன்றோடொன்று கலந்து அதிக நீர்பெருக்கோடு ஓடத் தொடங்கிய போது அந்தச் சமநிலை அழந்தது. படைப்புத்தொழில் துவங்கியது. பரிணாம வளர்ச்சி முறைக்கு உட்பட்டு இயற்கையானது படிப்படியாக பலவகைப்பட்டதான பிரபஞ்சமாக ஆகியது. இந்த உலகில் காணப்படும் பொருள்கள் சக்தி, மனம் ஆகிய அனைத்துமே இயற்கையினால் உருவாக்கப்பட்டவையே. பிரகிருதி எனப்படுவது மூன்று குணங்களால் ஆனது. எனவே இவ்வுலகில் காணப்படும் அனைத்திலும் இந்த மூன்று குணங்களும் கண்டிப்பாக இருக்கும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18-ஆவது அத்தியாயம் 40-ஆவது சுலோகத்தில் கூறப்படுவதாவது, இந்த உலகத்திலோ அல்லது ஒளியுடன் கூடிய உடல்களுடைய தேவர்கள் வாழும் சுவர்க்கத்திலோ இயற்கையினின்று தோன்றிய இந்த மூன்று குணங்களினின்றும் விடுபட்டவர்கள் கிடையாது.

மிகவும் நுண்ணியதுமான இந்த மூன்று குணங்கள் பண்படாததும் தொட்டுணரத்தக்கதுமான உலகமாக எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைகிறது என்பது விந்தையாக இருக்கிறதல்லவா?சக்தியைப்போன்ற நுண்ணிய து கூட திடப்பொருளாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. என்று இன்றைய பௌதிகம் ஊர்ஜிதப்படுத்துகிறது. பலதரப்பட்ட இவ்வுலகின் முதன்முதலான கட்டிடப்பகுதிகள் கூட இந்த மூவகைப்பட்ட நுண்ணியப்பொருள்களால் ஆனவையாக இருக்கலாம். என்று சில பௌதிக வல்லுனர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

மூவகை குணங்கள் இருப்பதை மறைமுகமாகத்தான் உணரமுடியும்

எவராலும் தொட்டுணரமுடியாத இந்த மூன்று குணங்களும் மிகவும் நேர்த்தியானவை. நுண்ணியவை. அணுவைப்பிளந்து கிடைக்கும் எலெக்ட்ரான்கள், நியூட்ரான்கள் கூட திடப்பொருள் என்று கூறும் அளவிற்கு அவை நுண்ணியவை. எனவே இந்த உலகில் நாமறிந்த எல்லாவற்றையும் விட மூன்று குணங்களும் நுண்மையானவை என்று தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் சாங்கிய தத்துவ சாஸ்திரத்தின்படி இவ்வுலகில் உள்ள அனைத்துமே மூன்று குணங்களால் ஆனவையே.

இவை மிக மிக நுண்மையானவைகளாக இருப்பதால் அவை இருப்பதை நம்மால் நேரிடையாக உணர்ந்து கொள்ள முடியாது. மின்சாரத்தை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதனால் செயல்படும் கருவிகளின் செயல்பாட்டின் மூலம் மின்சக்தி இருப்பதை அறிகிறோம். அதைப்போல் நாம் குணங்கள் இருப்பதை மறைமுகமாக பலவகையாகக் காணப்படும் வெளிப்பாடுகளின் மூலம் உணரலாம். ஒவ்வொரு குணத்திற்கும் தனித்தனியான தன்மைகள் உண்டு. இவ்வுலகிலுள்ள பொருள்களின் மூலம் அவை வெளிப்படும். அதனதன் குணாதிசயங்களைக்கண்டு அது இத்தகையது என்ற முடிவிற்கு வர முடியும்.


-

குணங்களின் விசேஷத்தன்மைகள்

-

சத்துவ குணமானது இலேசானது, மிதக்கும் தன்மையது, ஒளியுடன் பிரகாசிப்பது. அதற்கு மகிழ்ச்சியாக இருக்கும் தன்மை உண்டு. பொருள்களை உணர்த்தவல்ல திறமையும் உண்டு. ஒளியின் பிரகாசிக்கும் தன்மை, மனத்தில் திறமை, பொருள்களை உணரத்தக்க அறிவும், மனமும் இருத்தல், ஓர் ஆடியின் ஒளி பிரதிபலிக்கும் தன்மை, ஒரு கண்ணாடியிலும், படிகத்திலும் ஒளி ஊடுருவும் தன்மை ஆகிய அனைத்துமே சத்துவ குணம்”. அவற்றில் இருப்பதைக் காட்டுகிறது. அதே போலவே மகிழ்ச்சி, போதுமென்ற மனம், திருப்தியுடன் இருத்தல், மனத்தில் மேலான ஆனந்தத்தை உணர்தல் போன்றவையும் சத்துவகுணம் இருப்பதைக்காட்டும். தக்கை போன்ற பொருள்களில் லேசான தன்மை காணப்படுவதும் சத்துவ குணம் . அவற்றில் இருப்பதையே காட்டும்.

ரஜோ குணமானது அசைவு, செயல், நிம்மதியற்ற தன்மை ஆகியவற்றிற்குக் காரணமாகிறது. பேராசை, விருப்பம், கோபம், தற்பெருமை அகந்தை, பிறரை அடக்கி ஆள எண்ணுவது போன்றவையும் ரஜோ குணத்தின் இயல்பாகும். வலிமையும், துன்பத்தையும் உணர்த்தும் குணமுடையது.அதாவது நமக்கு ஏற்படும் எல்லா விதமான துன்பமயமான அனுபவங்கள் ரஜோ குணத்தால் ஏற்படுகின்றன. உலகில் எங்காவது துரிதமான செயல்பாடுகள், அமைதியற்ற தன்மை, துன்பங்கள் ஆகியவை காணப்பட்டால் அதற்கெல்லாம் காரணமாக அமைவது ரஜோ குணமே.

தமோ குணம் மந்தமாக இருப்பது, செயலற்ற தன்மை. சோம்பேறித்தனம் பாரமாக இருக்கும் தன்மை, எதிர்மறையாக ச் செயல்படுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அசைவதையோ செயல்படுவதையோ தடுப்பது தமோகுணம், மனத்தைச்சோம்பல் கொள்ளச்செய்து எந்த ஒன்றையும் தெளிவாகப்புரிந்து கொள்ளாதபடி, தடுப்பது தமோ குணத்தின் இயல்பு. குழப்பத்திற்கு க் காரணமாக அமைவது தமோகுணம். மன அழுத்தம் ஏற்படுவது, திகைப்படையச்செய்வது, அறியாமை போன்றவையும் தமோ குணத்தால் ஏற்படுவதே. அது தூக்கத்தையும் மயக்க நிலையையும் ஏற்படுத்தும்........

குணங்கள் மூன்றினுக்கும் ஒரு பொதுவான தன்மைஉண்டு. அவை மூன்றும் இடைவிடாது ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டு சண்டையிட்டுக்கொண்டே இருக்கும். அவற்றுள் ஏதாவது ஒன்று முதன்மை பெற விரும்பி மற்றதை அடக்கி ஆளுவதற்கான முயற்சியைச்செய்து கொண்டேயிருக்கும். அதே சமயம் அவை ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் கொடுக்கும். ஒரு மெழுகுவர்த்தியின் சுடரானது அதிலுள்ள திரி, மெழுகு, நெருப்பு ஆகிய மூன்றின் ஒத்துழைப்பையும் பெற்று இருக்கிறது. இந்த மூன்றின் கூட்டுறவும் இல்லாமல் மெழுகுவர்த்தி ஒளிர முடியாது.அதே போலவே இந்த மூன்று குணங்களின் ஒத்துழைப்பின் காரணமாகவே இந்த உலகம் இயங்கி வருகிறது. இந்த உலகில் படைப்புத்தொழில் ஏற்படுவதற்கு முன்பு இந்த மூன்று குணங்களும் ஒன்றையொன்று மிஞ்சாத தன்மையுடன் சமநிலை உடையவனாக இருந்தன. இந்த உலகம் அழிந்த பின்னர் மறுபடியும் அவை தன்னுடைய பழைய நிலையை அடைந்துவிடும்.அடுத்த படைப்புத்தொழில் ஆரம்பமானால் மறு படியும் அந்தச் சமநிலை அழிந்துவிடும்.

-


-

சத்துவ குணத்தின் துணைகொண்டு இறைக்காட்சி பெறமுடியும்.

ஒருவனுக்கு சத்துவ குணம் அதிகமாக இருந்தால் அது அவனது ஆன்மீக வாழ்க்கை வளர்ச்சியடைய உதவியாக இருக்கும். அவ்வாறு சத்துவகுணத்தை அதிகமாகப்பெற்றவன் தெய்வீக குணங்களைப்பெற்று கடவுள் காட்சி பெறும் அனுக்கிரகத்தையும் பெறுகிறான். பகவத்கீதையில் கூறியுள்ளபடி சத்துவகுணத்தை அதிகமாகப்பெற்ற மனிதன் பயமற்று, தூய்மையான மனத்துடன் இருப்பான். தன்னிடம் அமைந்துள்ள தெய்வீகத்தன்மையை அறிவான். தன் வெளி உறுப்புகளின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பான். மதசம்பந்தமான நூல்களைப்படிப்பதில் ஈடுபாடு இருக்கும். மகத்தையும், உடலையும் தாங்கும் சக்தி இருக்கும். எப்பொழுதும் நேரான பாதையில் நடப்பவனாக இருப்பான். பிறரைக் காயப்படுத்தாமல் இருத்தல், பிறர் பொருள் கவராதிருத்தல், மிருதுவான தன்மை, அடக்கமாக இரத்தல், நிம்மதியாக இருத்தல், மன்னிக்கும் தன்மை, பலசாலியாக இருத்தல், பொறுமையோடு இருத்தல், பிறருக்கு த் தீங்கிழைக்காடை, அகந்தையற்று இருத்தல், போன்ற நற்குணங்கள் சத்துவகுணம் உடையவனிடம் அபரிமிதமாக இருக்கும்..

சத்துவ குணம் ஆன்மீக விடுதலைக்கு உதவும் ரஜோ குணமானது செயல்களின் மீதுள்ள பற்றுதல் காரணமாக பந்தத்தைத்தோற்றுவிக்கும். தமோ குணம் குழப்பமான சிந்தனைகளையும், அர்த்தமற்ற பலாத்காரம் போன்றவற்றையும் உண்டாக்கும். ஸ்ரீராம கிருஷ்ணர் சொன்ன நீதிக்கதையொன்று இதனை எளிதில் விளக்கவல்லது.

ஒரு நாள் ஒரு பணக்காரன் ஒரு காட்டின் வழியாக செல்ல நேர்ந்தது. வழியில் அவனை மூன்று திருடர்கள் பிடித்துக்கொண்டனர். அவர்கள் அவனிடமிருந்த பொருள்களை் அனைத்தையும் அபகரித்துக்கொண்டனர். உடனே அவர்களில் ஒருவன், இந்த மனிதனை இனி உயிருடன் வைத்திருப்பதால் என்னபயன்? என்று சொல்லியபடி தன் கையிலிருந்த வாளைக்கொண்டு அவனைக்கொல்லப்பார்த்தான். அப்பொழுது இரண்டாமவன் ” அநாவசியமாக இவனைக்கொல்வதால் என்ன நன்மை ஏற்படப்போகிறது? இவனது கைகளையும் கால்களையும் நன்றாக கட்டி விட்டு இங்கேயே விட்டுவிடுவோம். அப்போது அவனால் காவல் நிலையத்திற்குச்சென்று புகார் கொடுக்க முடியாது” என்றான். அவர்கள் பேசிக்கொண்டபடியே பணக்காரனின் கைகளையும் , கால்களையும், கயிற்றினால் நன்றாகக் கட்டிப்போட்டுவிட்டுச்சென்றுவிட்டனர். 

கொஞ்ச நேரம் சென்ற பிறகு மூன்றாவது திருடன் அந்த மனிதனிடம் திரும்பி வந்தான். நீ இவ்வளவு இன்னல்கள் பட நேர்ந்ததைக்கண்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் உன் கட்டுக்களை அவிழ்த்து விடப்போகிறேன்” என்று கூறியபடி அவன் கட்டுக்களை அவிழ்த்ததுடன் அவனைக் காட்டிற்கு வெளியே அழைத்துச்சென்றான். ஊரைநோக்கிச்செல்லும் நெடுஞ்சாலையை அடைந்ததும் திருடன், அவனிடம், நீ இந்த சாலையின் வழியே சென்றால் உன் கிராமத்தை அடையலாம். என்று கூறினான். பணக்காரனின் மனது நன்றியுணர்ச்சியில் நிரம்பி வழிந்தது.திருடனைத் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தான். அந்த அழைப்பை ஏற்க மறுத்த திருடன் அவனிடம், என்னால் அங்கு வர இயலாது. உன்னுடைய கிராமத்தில் ஒரு காவல் நிலையம் உள்ளது.நான் அங்கே வந்தால் அவர்கள் என்னைக்கைது செய்து விடுவார்கள்” என்று சொல்லியபடி தனது வழியில் திரும்பிச்சென்றுவிட்டான.

இதில் பணக்காரனைக்கொல்ல விரும்பியவன் தமோ குணமுடையவன்.தமோ குணமானது குழப்பமான சிந்தனையையும், தேவையற்ற பலாத்காரத்தையும் ஏற்படுத்துகிறது. இரண்டாவது திருடன் ரஜோ குணம் படைத்தவன். அது ஒரு மனிதனை உலக விஷயங்களில் ஈடுபடச்செய்து பலவகையான செயல்களைச்செய்ய வைக்கிறது. ரஜோ குணமானது கடவுளை மறக்க வைக்கிறது. மூன்றாவது திருடன் சத்துவ குணமுடையவன். அது ஒன்றுதான் கடவுளை அடையும் பாதையைக்காட்டுகிறது. உலக பந்தங்களை அறுத்து விடுகிறது. பணக்காரன் வீட்டிற்குச்செல்வத என்பது கடவுளை அடைவதற்கு ஒப்பானது, சத்துவகுணம் ஒரு மனிதனைக்கடவுளிடம் அழைத்துச்செல்லும்.ஆனால் அதனால் அங்குபோகமுடியாது.கடவுள் என்பவர் எல்லாப் பொருள்கள் அல்லது முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். திருடன் ஏன் பணக்காரனின் வீட்டிற்குப்போக முடியவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி நன்கு விளக்குகிறதல்லவா?

விடுதலை பெற்ற ஆன்மா முக்குணங்களை கடந்து செல்லும்

ஆன்மீக விடுதலையை விரும்பும் சாதகன் இந்த மூன்று குணங்களையும் கடந்து செல்லவேண்டும். பகவான் கண்ணன் ஸ்ரீமத் பகவத் கீதையில், அர்ஜீனனிடம் ”முக்குணங்களையும் கடந்து செல்” என்று கூறினார். அதாவது எல்லாப் பொருள்களையும் கடந்து தெய்வீக ஆன்மாவை நம்மிடம் நிலைபெறச்செய்யவேண்டும்.

image103

சிருஷ்டி

சிருஷ்டி

  34


சிருஷ்டி (படைத்தல்)

-

இவ்வுலகம் படைக்கப்பட்டதைப்பற்றி பல்வேறு கருத்துக்களை இந்து மதம் கொண்டுள்ளது. சாங்கியம், வைசேஷிகம், மீமாம்சம் , வேதாந்தம் மற்றுமுள்ள பல சாஸ்திரங்களும் படைத்தல் பற்றிய பற்றிய வெவ்வேறு வகையான கருத்துக்களையே கூறுகின்றன. சாங்கியம், யோகம்., நியாயம், வைசேஷிகம் ,வேதாந்தம் ஆகியவை படைத்தல் என்பதற்குத் துவக்கமும் கிடையாது. முடிவும் கிடையாது. என்று கூறுகின்றன. அவ்வகையான கருத்தின் படிஇதுவரை எண்ணற்ற படைப்புக்கள் ஏற்பட்டு, அழிந்து மறுபடியும் தோன்றி, மறைந்து என்றபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படைப்புத்தொழில் துவங்குவதற்கு முன்னால் உலகமனைத்தும் அசைவற்ற நிலையில் விதை போன்று கடவுளுக்குள் இருந்தது. இந்த நிலைக்கு” அவ்யக்த நிலை” அதாவது தெளிவாக த்தோன்றாத நிலை என்று பெயர். கடவுள் எப்பொழுது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறாரோ அப்பொழுது இந்த உலகம் வெளிப்படையாகத்தெரியும். இத்தகைய படைத்தல் என்ற செயல் ஏற்பட்ட பிறகும் அது கடவுளுக்கு உள்ளேயே பலவகையான பரிணாம வளர்ச்சிக்கு உட்படுகிறது. இவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்த பின் கடவுள் அதை வெளியே வர அனுமதிக்கிறார்... வெளியே வந்த உலகத்தைப்பல கோடி வருஷங்கள் நிலைபெறச்செய்தபின் அதைத் தனக்குள்ளேயே வருமாறு திரும்ப இழுத்துக்கொள்கிறார். இதை வடமொழியில் சிருஷ்டி” என்றும் ”பிரளயம்” என்றும் சொல்கிறார்கள்.

வெளியில் வரும் உலகம் தற்காலிகமாக இருப்பது , அது திரும்பவும் கடவுளுக்கு உள்ளே திரும்பச்செல்வது என்பது ஒரு கல்பம்”(காலச்சக்கரம்) என்று சொல்லப்படுகிறது.

இதைத்தெளிவாக விளக்கவல்ல ஒரு சிறிய உவமை, ஒரு மனிதன் தன்னுடைய மருத்துவரிடம் ஆண்டுக்கொருமுறை வழக்கமாகப் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். ஒரு முறை அவ்வாறு சென்றபோது எக்ஸ்ரேயில் அவனது வயிற்றிற்குள் ஒரு கட்டி தோன்றி வளர்ச்சியுறுவது கண்டுபிடிக்கப்பட்டது. நாளடைவில் அது வளர்ந்து ஒரு கோழிமுட்டையின் அளவிற்கு வந்து விடுகிறது. சிறிது காலம் அப்படியே இருந்துவிட்டு எந்தவித சிகிச்சையுமின்றித்தானாகவே கரைந்து மறைந்து விடுகிறது.

மேலே கூறப்பட்ட உவமையில் மனிதன் தான் கடவுள். அந்தக்கட்டி உலகத்தைக் குறிப்பிடுகிறது. கடவுள் வெளிப்படுத்திய பிறகு அது பரிணாம வளர்ச்சிக்கு உட்படுகிறது. மறுபடியும் கடவுளுக்குள்ளேயே போய்விடுகிறது. அதே போன்றதே கட்டி மனிதனின் உடலுக்குள் தோன்றுவது,பல மாற்றங்களுக்கு உட்பட்டுப்பெரிதாக வளர்கிறது. பின்னர் மறுபடியம் வந்த இடத்திற்கே போய்விடுகிறது.இவ்வாறு கட்டி தோன்றி, வளர்ந்து மறைந்துவிடுவது ஒரு கல்பத்தைக்குறிக்கிறது. இதனை ஒரு தடவை காலச்சக்கரம் சுழன்றது என்றும் சொல்லலாம். இது போன்ற எண்ணற்ற கல்பங்கள் தோன்றியுள்ளதாக இந்துமதம் சொல்கிறது. ஆகவே தான் படைப்புத்தொழிலுக்கு ஆரம்பம். முடிவு எப்போது என்பதைச்சொல்லமுடியாது. ஒவ்வொரு கல்பமும் அதற்கு முந்தைய கல்பத்தைப்போன்றோ அல்லது அடுத்து வரும் கல்பத்தைப்போன்றோ இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கடவுள் படைப்புத்தொழிலைச்செய்வதன் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகள் இந்து மதத்தில் எழுப்பப்பட்டன. எப்பொழுதுமே தேவை இருந்தால் தான் ஒரு செயல் தூண்டப்படும். கடவுளுக்கு எந்தவிதமான தேவையுமே கிடையாது. அப்படியிருக்க அவர் ஏன் படைப்புத்தொழிலைச்செய்யவேண்டும்? ஒரு மத சம்பந்தமான நூலானது செய்யுள் வடிவில் தரும் பதிலாவது- நான் பலவாக இருப்பேன், நான் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட வகையில் வெளிப்படலாம், பஹீஸ்யாம் ப்ரஜாயே யேதி” என்று சாந்தோக்கிய உபநிடதம் (6.23) கூறுகிறது. அதாவது கடவுள்ஒரே முழு முதல் பொருளாக இருந்தபோதிலும், தன்னை வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளவே இந்த உலகைப்படைக்கிறார். இது உண்மையில் அவரது விருப்பம் ஆகாது. கடவுளைப்பொருத்த வரை படைத்தல் தொழில் ஒரு விளையாட்டு அல்லது லீலை.

கடவுள் மெய்யாகவே இந்த உலகமாக ஆகி விட்டாரா? என்று கேட்டால் சில இந்து தர்ம சாஸ்திரங்கள் ஆம்” என்ற விடையையே தருகின்றன. பால் எப்படி தயிராக மாறுகிறதோ அதே போலவே கடவுளும் இவ்வுலகமாக மாறிவிடுகிறார். வேறு சில தத்துவ நூல்கள் அதை மறுத்து, அது வெறும் தோற்றமே தவிர உண்மையல்ல என்கின்றன. ஒரு கயிறானது குறைந்த வெளிச்சத்தில் பாம்பாகத்தோற்றமளிப்பது போல் தான் இதுவும். அவர் ஒரு போதும் தன்னை இந்த உலகமாக மாற்றிக்கொள்வது இல்லை என்பர்.

ஆஸ்திகம், நாஸ்திகம் ஆகிய இரண்டு விதமான கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் சிறப்பு இந்து மதத்திற்கு உண்டு. சாங்கிய தத்துவம் இந்து மதத்தின் ஒரு பிரிவானாலும் அது நாத்திகவாதம் புரிவது. ஆனாலும் மற்ற ஆஸ்திகவாதிகளின் நடுவே அதுவும்ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாத்திக வாதம் பேசினாலும் சாங்கிய தத்துவம் மக்களின் முக்திக்கு வழிவகுக்கிறது.

-


இனி சாங்கியக்கொள்கையின் படி கடவுளே இல்லாமல் படைப்புத்தொழில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக்காண்போம்.

சாங்கியர்களின் படைத்தல் கோட்பாடு

இந்து மத தத்துவ நூல்களுள் சாங்கியர்களின் தத்துவம் மிகவும் பழமையானது. அது முடிவானதாக இரண்டு மெய்ப்பொருள்கள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறது.(1) புருஷன்.(2) பிரகிருதி.

புருஷன் என்று, தூய்மையான உணர்வு சொல்லப்படுகிறது. அது காரணத்திற்கு அப்பாற்பட்டது. மாற்றமில்லாதது, நிலையான தன்மையுடையது மற்றும் எங்கும் நீக்கமற பரவி இருப்பது, எனவே அது எந்தப் பொருளும் தன்னுள் கொள்ளாத சூன்யத்தன்மை கொண்டது. அது அசைவற்றது. எண்ணற்ற புருஷர்கள் உள்ளனர். எத்தனை புருஷர்கள் உள்ளனரோ அத்தனை சுய உணர்வுடைய ஜீவன்கள் இருக்கலாம்.பிற தத்துவ ஞானிகள் சாங்கிய தத்துவப்படி பல புருஷர்கள் இருக்கும் கருத்து தவறானது என்று குரல் எழுப்பினார்கள். அவர்களது கூற்றுப்படி எங்கும் நிறைந்துள்ள ஒரு புருஷன் என்பதை விடுவித்து பல புருஷர்கள் இந்த ஒரு வெளியை அடைத்துக்கொள்வார்கள் என்பது ஒப்புக்கொள்ள முடியாதது. ஆனால் சாங்கினர்களோ பல வகைப்பட்ட மெழுகுவர்த்திகளை ஒரே வெளியில் ஏற்றிவைத்தால் அத்தனை மெழுகுவர்த்திகளிலிருந்தும் வரும் ஒளியானது எந்த விதமான முரண்பாடுமின்றி அதே வெளியை ஒளிமயமாக்கி நிறைத்துக்கொள்ளும் என்ற பதிலை அளிக்கிறார்கள். அத்தோடு பல புருஷர்கள் இருப்பதற்கான ஆதாரங்களையும் தருகிறார்கள்.ஒரே ஒரு புருஷன் மட்டும் இருந்தால் ஒரு நினைவுள்ள பிராணியின் பிறப்போ அல்லது இறப்போ மற்ற பிராணிகளின் பிறப்பு அல்லது இறப்பிற்கும் காரணம் ஆக வேண்டுமல்லவா? அப்படி ஆவதில்லையே! எனவே பல புருஷர்கள் இருக்க வேண்டும்.

பிரகிருதி என்பது புருஷனுக்கு நேர்மாறானது. உணர்ச்சியற்றது.வெறும் பொருள், பிரகிருதியைக் காரணமற்றது. என்று சொன்னாலும் இந்த உலகிலுள்ள எல்லாம் இருக்கக் காரணமாகிறது. அது பொருளாக இருக்கலாம், சக்தியாக இருக்கலாம், அல்லது மனமாகக்கூட இருக்கலாம். இந்துமத மனநூலானது மனம் எவ்வளவு நுண்ணியது என்று கருதினாலும் அதை ஒரு மூலப்பொருளாகவே கருதுகிறது. புருஷன் என்பது தூய உணர்வாக இருப்பதால் அது உண்டாவதற்கு பிரகிருதி காரணமாக அமையாது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

சாங்கியர்களின் கருத்துப்படி பிரகிருதியானது சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று நுண்ணிய பொருள்களால் ஆனது. பிரகிருதியானது உணர்வை புருஷனிடமிருந்து கடனாக வாங்கிக்கொண்டு உயிரோட்டமுள்ள பொருளாகமாறி படைத்தல் தொழிலை மேற்கொள்கிறது. பிரகிருதியினிடம் உணர்வு ஏற்பட்டுச்செயல் படுவதற்கான அறிகுறி, அது தானாக மாறுவது அது படிப்படியாக மாறி முடிவில் பிரத்யட்சமான உலகமாக ஆகிவிடுகிறது.வேறு வகையாகக்கூறுமிடத்து முதன் முதலாக உண்டான பொருள், பிரகிருதியின் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு உலகமாக ஆகிவிடுகிறது.

பரிணாம வளர்ச்சியினால் முதலில் ஏற்படுவது பிரபஞ்ச சம்பந்தமான நுண்ணறிவு. அது ”மஹத்” எனப் படும். அகங்காரம் எனப்படும் பிரபஞ்ச சம்பந்தமான ”அஹம்” என்பது இரண்டாவதாக உண்டாவது.

இந்த உலகரீதியான ”அஹம்” மூன்று விதமானது.(1)சத்துவ குணம் நிரம்பிய அஹம்.(2) ரஜோ குணம் நிரம்பிய அஹம்.(3) தமோ குணம் நிரம்பிய அஹம்.

முதலாவதிலிருந்து உருவாக்கப்பட்டவை ஐந்து உணர்ச்சி உறுப்புகள். ஐந்து செயல் உறுப்புகள் மற்றும் மனம். மூன்றாவதிலிருந்து உருவானவை நுண்ணிய உடல் சம்பந்தமான சத்துக்கள். அவை தன் மாத்திரைகள் எனப்படும். இரண்டாவது அகமானரஜோ குணம் நிறைந்தது முதலாவதற்குச் சக்தியைத் தருவதுடன் மூன்றாவது உருவாவதற்கும் சக்தியளிக்கிறது.

தன் மாத்திரைகளிலிருந்து உருவானவை ஐந்து பௌதிக ரீதியான பொருள்கள். அவை மகா பூதங்கள் எனப்படும். அவையாவன.(1) ஆகாசம்-வெளி சம்பந்தமானது., (2) வாயு-காற்று சம்பந்தமானவை. (3) அக்னி- நெருப்போடு தொடர்புடையவை..(4) ஆப- தண்ணீரோடு தொடர்புடையவை..(5) ஷிதி(அல்லது) பிருதிவி-நிலத்தோடு தொடர்புடையவை. இந்த மூலப்பொருள்கள் பலவேறு வகையான அளவில் அதாவது தொகுதி வரிசையின் மாற்றம் மற்றும் சேர்க்கை ஆகிய விதிகளுக்கு உட்பட்டு சேர்ந்து பல வகைப்பட்ட இந்த உலகமாக மாறுகிறது.

-


-

வேதாந்த தத்துவத்தின்படி படைப்புத்தொழில்

அத்வைதக்கொள்கையை உடைய வேதாந்த மானது கடவுளை படைப்பாளி என ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அது கடவுளின் வெளிப்படையான மாற்றமே என்ற கண்ணோட்டத்தைக்கொண்டுள்ளது.

கடவுள் எவ்வாறு உலகத்தைப்படைத்தார். என்பதை விளக்க ஓர் உவமையைக்கூறலாம். ஒரு மந்திரவாதி தன்னுடைய மந்திரசக்தியால் பார்வையாளர்களை மனோவசியப்படுத்தி வைத்திருப்பதாகக்கொள்வோம். அந்த நிலையில் அவன் மேடையில் ஓர் ஆப்பிள் மரத்தை உண்டாக்கியிருக்கிறான். பார்வையாளர்கள் அனைவருமே ஆப்பிள் மரத்தை மட்டுமே பார்ப்பார்கள். மந்திரவாதியைப்பார்க்கமாட்டார்கள்.ஏனெனில் அந்த மனோவசிய சக்திக்கு அவன் ஆடபடுவதில்லை. அதே போலவே கடவுள் தன்னுடைய மந்திரசக்தி அல்லத மாயையைக்கொண்டு இந்த உலகத்தைப்படைக்கிறார். கடவுளின் மாயைக்கு ஆட்பட்டவர்கள் இந்த உலகத்தை உண்மையானது என்று நம்புகிறார்கள். கடவுளைப்பொறுத்தவரை அது உண்மையல்ல. கடவுளின் எண்ணப்படி உண்மையில் அவர் உலகத்தைப்படைக்கவில்லை. அவரது மாயைக்கு உட்பட்ட நமக்கு உலகம் உண்மையானதாக த்தோன்றுகிறது. அதனால் உலகத்தைப்படைத்த கடவுளும் உண்மையானவர்தான் என்று கருதுகிறார்கள்.

ரிக் வேதத்தில் உள்ள படைப்பு” பற்றிய துதி” இதனை அழகாக வர்ணிக்கிறது.

உயிரில்லாதது அல்ல, அது உயிருள்ளதும் அல்ல 

அந்த சமயத்தில்

வாயுமண்டலம் இருக்கவில்லை, சுவர்க்கமும் இல்லை.

அனைத்திற்கும் அப்பாற்பட்டவை அவை.

எது உயிருடன் இருந்தது? எங்கே இருந்தது.? 

யாருடைய மேற்பார்வையில்?

அது தண்ணீரா? ஆழங்காணமுடியாத பாதாளமா?

இறக்கக்கூடியவை அங்கே இல்லை. பின்னர் மரணமற்றவர்களும் இல்லை.

இரவுக்கும் பகலுக்கும் எவ்வித வேறுபாடும் இருக்கவில்லை. அது மட்டும் காற்றில்லாமலே சுவாசித்து 

தன்னுள் இயற்கையாக அமைந்த சக்திகொண்டு

அதைத் தவிர அங்கு வேறு எதுவுமேயில்லை. அங்கு இருட்டாக இருந்தது இருள் மறைந்திருந்தது.

துவக்கநிலையில்

அங்கு அனைத்துமே பிரிக்கப்படாத கடல்

மயம் தான்

எல்லாவற்றிற்கும் தேவையான மூளையானது

சூனியத்தில் மூடப்பட்டுக்கிடந்தது.

அது மட்டும் சக்தியின் துணைகொண்டு

ஆழ்ந்து சிந்திக்கும் எண்ணம் பிறந்தது.

அதன் மீது முதலில் ஆசைதோன்றியது.

அது தான் சிந்தனையின் முதல் குழந்தை.

முனிவர்கள் கண்டனர். இந்த ஆசைதான் ஒரு தொடர்பு.

உயிரோடு இருப்பதற்கும், உயிர் இல்லாததற்கும் இடையே என்று

அவர்களது இதயத்திற்குள் இருந்த அறிவின் துணைகொண்டு தேடியதன் பயனாக

அவர்களது காட்சியினின்றும் குறுக்காக

விரிவாக்கப்பட்ட சிந்தனைதான் அது.

கீழே இருந்ததா அது? அல்லது மேலே இருந்ததா?

விதைகள் விதைப்பவர்கள் இருந்தார்கள்

அங்கே சக்திகள் இருந்தன அங்கே

நிலையான சக்தி கீழே இருந்தது.

தூண்டும் சிந்தனை சக்தி மேலே இருந்தது.

மொத்தத்தில் அறிந்தவர் யார்?

இங்குள்ளவர்களில் எவர் அது எப்போது எழுந்தது.

என்பதைத்தெரிவிப்பார்கள்.?

இந்த உலகம் எப்போது தோன்றியது?

பின்னர் தான் கடவுள்கள் இருப்பதா

இந்த உலகத்தைப்படைக்க?

அது நடைமுறைக்கு வந்ததை எவர்தான் அறிவர்? 

எப்போது வந்தது.

எப்போதிலிருந்து இயங்குகிறது இவ்வுலகம்?

செய்யப்பட்டதா அது அல்லது இல்லையா என்று

மிக உயரத்திலுள்ள சுவர்க்கத்திலிருந்து எவர் பார்க்கிறாரோ

அவரே நிச்சயமாக அறிவார்.

அல்லது

ஒருக்கால் அவர் அறியாமலும் போகலாம்!

மேலே இருக்கும் ரிக்வேதச்செய்யுளில் உள்ள கடைசிப்பத்தி உலகில் உண்மையான படைப்பைப்பற்றிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. உயரமான இடமான சுவர்க்கத்தில் இருந்து பார்ப்பவர் என்பவர் கடவுளைத்தவிர யாரும் இல்லை. அவர் எல்லாவற்றையும் அறிந்திருப்பவர். உலகம் படைக்கப்பட்டதா என்பதை அவர் அறிவார். அப்படி அவர் அறிந்திருக்காவிடில் அவரைப்பொறுத்தவரை வேறு எந்த உலகமுமே உண்மையில் படைக்கப்படவில்லை. உண்மையில் அங்கு எதுவுமே இல்லை என்றால் , அது அங்து இருக்கிறது என்ற கேள்வி எழுவதற்கே இடமில்லை. ஆகையால் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை மறுக்கமுடியாது.

இருந்தபோதிலும் கடவுளின் மாயைக்கு உட்பட்டு அழியக்கூடிய உடலை உடைய மானிடர்கள் இந்தஉலகம் உண்மையானது என்றும், அதைப்படைத்த ஒரு படைப்பாளியும் (உலகம் உண்டாக காரணமாக இருப்பவர்) உண்டு என்று நம்புகிறார்கள்.அவர்களது கண்ணோட்டத்தின் படி கடவுள் தான் எண்ணிய மாத்திரத்தில் முதல் உயிரினமாக ”ஹிரண்யகர்பா”வைப்படைத்தார். 

ஹிரண்யகர்பா கடவுளால் படைக்கப்பட்ட போதிலும் அவருக்கு அனைத்துவிதமான தெய்வீகசக்திகளும் அளிக்கப்பட்டிருந்தன. அவருக்கு எல்லையற்ற அறிவாற்றல், விருப்பம், செயல்திறன் ஆகியவை இருந்தன. ஹிரண்யகர்பா தன்னுடைய தியானத்தின் துணைக்கொண்டு முந்தைய கல்பங்களைப்பற்றி அறிந்து கொள்கிறார். அதன்பிறகே முந்தைய கல்பங்களில் இருந்தது போன்ற வரிசைக்கிரமத்தைப்பின் பற்றி மீதி உலகத்தையும் படைக்கிறார்.

-


-

முதன்முதலாக ஆகாயம்(வெளி) என்னும் மூலம் படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாயு எனப்படும் காற்றும், அக்னி எனப்படும் நெருப்பும் , ஆப என்னும் தண்ணீரும் மற்றும் பிருதிவி எனப்படும் பூமியும் படைக்கப்பட்டன. உயிருடன் இருப்பதற்காக வெளி வந்தவற்றை வடமொழியில் பூதம் என்பர். ஆக வெளியே வந்த இந்த ஐந்தும் ”பூதங்கள் எனப்பட்டன. எனவே இவற்றை பஞ்சபூதங்கள்” என்கிறோம். இவை மிகவும் நுண்ணியவை. வடமொழியில் ஐந்து” என்பதை ”பஞ்ச” என்றும் ”நுண்ணிய” என்பதை ”சூஷ்ம” என்றும் சொல்வார்கள். ஆகவே இவ்வைந்து நுண்ணிய மூலப்பொருள்கள் ”பஞ்ச சூஷ்ம பூதங்கள்” எனப்படுகின்றன.

“ இவ்வைந்து நுண்ணிய மூலப்பொருள்களும் ஐந்து வெவ்வேறு வகைகளில் கலந்து ஐந்து ஸ்தூலப்(திட)ப்பொருள்களை உண்டாக்கின.இவை பஞ்ச ஸ்தூல பூதங்கள் எனப்படுகின்றன. ஐந்து நுண்ணிய மூலப்பொருள்கள், ஐந்து ஸ்தூலப்பொருள்களை உண்டாக்குவதற்காகக் கலக்கும் முறைக்கு ”பஞ்சசீகரணம்” என்று வடமொழியில் சொல்வார்கள். இவ்வாறு கலக்கும் முறையானது கீழே தரப்பட்டுள்ளது.

(இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய வெளி-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணியகாற்று-( எட்டில் ஒரு பங்கு )நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்-(எட்டில் ஒரு பங்கு)-நுண்ணிய நிலம்-ஆகிய முறையில் கலந்து திடமான வெளியின் மூலமாயிற்று.

இரண்டில் ஒருபங்கு) நுண்ணிய காற்று-எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய வெளி-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்- (எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நிலம்-சேர்ந்தது திடமான காற்று மூலம்.

(இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு)நுண்ணிய வெளி-(எட்டில் ஒருபங்கு) நுண்ணிய காற்று-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்-எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நிலம் கலந்தது திடமான நெருப்புமூலம்.

(இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்- எட்டில் ஒரு பங்கு) நுண்ணியவெளி-( எட்டில் ஒரு பங்கு) நுண்ணியகாற்று- ( எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணியநிலம் சேர்ந்தது திடமான” நீர் மூலம்.

இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய நிலம்-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய வெளி- (எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய ஆகாயம்-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒருபங்கு) நுண்ணிய நீர்-சேர்ந்தது திடமான நில மூலம்.

மனிதனின் சூஷ்ம உடல் ஐந்து நுண்ணிய மூலப் பொருள்களாலும் , அவனது ஸ்தூல உடல் மற்றும் இயற்கையில் தோன்றும் எல்லா திடப்பொருள்களாலும் , திடமான மூலப்பொருள்களின் சேர்க்கையாலும் ஆனவை.

image104

பிரளயம் அல்லது உலகத்தின் அழிவு

பிரளயம் அல்லது உலகத்தின் அழிவு

  35


பிரளயம் அல்லது உலகத்தின் அழிவு


`ஹிரண்யகர்பர் படைக்கப்பட்ட உயிரினத்தைச்சேர்ந்தவர். அவருக்கு எவ்வளவோ அதிகாரங்கள் மற்றும் சிறப்புக்களைக்கொடுத்திருந்த போதிலும் அவரது ஆயுட்காலம் என்பது வரையறுக்கப்பட்டிருந்தது. அவருடைய வாழ்நாளில் ஒரு நாள் என்பது ஒரு கல்ப காலமாகும். அது 4,320,000, 00 மனித ஆண்டுகள் ஆகும். இந்த கால அளவின்படி அவர் 100 ஆண்டுகள் வாழலாம். மற்றும் சிலரது அபிப்பிராயப்படி ஒரு கல்பம் எனப்படுவது 8,640, 000, 000 மனித ஆண்டு களாகும். ஹிரண்யகர்பர் உயிர் வாழும் காலத்தை மகா கல்பம் என்பார்கள்.

ஹிரண்யகர்பர் ஒரு நாள் முழுவதும் வேலை செய்த பிறகு தூங்கப்போவார். அப்போது இந்தப் பிரபஞ்சமானது அழிந்துவிடும். பிரளயம் ஏற்பட்டு விடும். இதற்கு நைமித்தகப் பிரளயம் என்றுபெயர். அவர் விழித்து எழுந்தவுடன் மறுபடியும் படைத்தல் தொழில் துவங்கிவிடும்.மகா கல்பத்தின் முடிவில் ஹிரண்யகர்பா இறந்து விடுவார்.அது வரை படைத்தலும் அழித்தலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும்.

ஹிரண்யகர்பர் இறந்தவுடன் கடவுளோடு கலந்து அவருடன் ஐக்கியமாகி விடுகிறார். வேறு விதமாகக்கூறுவோமேயானால் அவருக்கு முக்தி கிடைத்து விடுகிறது. எனவே அவர் மறுபடியும் பிறக்கமாட்டார். ஹிரண்யகர்பர் இறக்கும் பொழுதோ அல்லது அவருக்கு முக்தி கிடைக்கும் பொழுதோ இந்த உலகம் அழிய முற்படுகிறது. அப்போது அதற்கு ”பிராகிருத பிரளயம்“ என்று பெயர். அத்தோடு மகா கல்பம் முடிந்து விடுகிறது.

கடவுளின் விருப்பப்படி அடுத்த படைப்புத்தொழில் துவங்கும் பொழுது வேறு ஓர் உயர்வானவரும் அழியக்கூடிய ஒருவர் கடந்த கல்பங்களில் அவர் பெற்றஅளவு கடந்த தகுதியின் காரணமாக ”ஹிரண்யகர்பரை”ப் போல் தோன்றுவார். இவ்வாறாக படைத்தல், தொடர்தல், அழித்தல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கும்.

-


-

இந்து மதக் கொள்கையின் படி படைத்தல் தொழில் பற்றிய கோட்பாடுகளும் அவற்றிற்கு மறுப்பும்

இந்து மதத்தைப்பொறுத்தவரை உலகம் தோன்றியதைப் பற்றிய உறுதியான கோட்பாட்டைக்கூற முடியவில்லை. அப்படி முடிந்திருக்குமேயானால் உலகம் தோன்றியதைப் பற்றிய ஒரே ஒரு கோட்பாட்டைக்கொடுத்திருக்கமுடியும்.ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடுகளைக் கொண்டிருப்பதால் எல்லாமே தவறானதா அல்லது ஏதாவது ஒன்று தான் சரியானதாக இருக்குமா என்று வாதம் புரியலாம்.

அத்வைதக்கொள்கையை உடைய வேதாந்தத்திற்கு இத்தகைய மறுப்புக்களில் எந்தவிதமான பிரச்சனையும் உண்டாகாது. மிகப்பெரிய ஞானியும், அத்வைதக்கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய சங்கரர் , . இந்த உலகம் இயங்குவதைப் பிரத்யட்சமாக காண்கிறோம்.ஆனால் அது நிலைத்து இருப்பது முடிவானதல்ல. என்கிறார்.அதாவது இந்த உலகமானது தற்போதைக்கு மட்டும் உண்மையானது. நிரந்தரமாக உண்மையானது அல்ல. இந்த உலகம் உண்மையானதல்ல என்று நிரூபிக்கப்பட்ட பிறகு மற்ற எல்லாக்கோட்பாடுகளுமே செல்லாத தாகி விடுவதுடன் அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகிறது. எனவே எண்ணற்ற கோட்பாடுகள் இருந்தால் என்ன? ஒரே ஒரு கோட்பாடு மட்டும் இருந்தால் என்ன? அதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

சங்கரருடைய அத்வைதக்கொள்கையைப்புரிந்து கொள்ள வேண்டு மானால் உண்மையானது” என்று சொல்லப்படும் வார்த்தையின் பொருளை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தின் தத்துவப்படி உண்மையானது என்றால் அது நிலையானதாக இருக்கமுடியும். அத்தோடு அதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படக்கூடாது.

எடுத்துக்காட்டாகக் கூறுவோமேயானால் ஒருவர் அவருடைய வீட்டின் புறக்கடையில் ஒரு டைனாசர்” தோன்றி ஒரு நிமிடத்தில் மறைந்து விடுவதாக எடுத்துக்கொண்டால், அவர் தான்பார்த்த பிராணி உண்மையானது அல்ல என்று உணர்வார். தான் கண்ட காட்சி கண்களினால் ஏற்பட்ட மாயத்தோற்றமாக இருக்கலாம் அல்லது தன்னுடைய கற்பனையில் கண்ட காட்சி யாகவும் இருக்கலாம் என்று எண்ணலாம். அப்படியல்லாது அந்த டைனாசர்” அங்கேயே எப்போதும் இருந்திருந்தால் அது உண்மையாகாது என்று அவர் எண்ணியிருப்பார். இந்த விஷயத்தில் டைனாசர்” நிலைத்து இருப்பதைப்பொறுத்து அவரது தீர்மானம் அமைகிறது.

இப்பொழுது ஒரு பார்வையாளர் ஒவ்வொரு நிமிடமும் தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு பிராணியைக் கவனித்துக்கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்வோம். முதல் நிமிடத்தில் ஒரு நாயாகவும் அதன்பிறகு அடுத்தடுத்த நிமிடங்களில் வெவ்வேறு பிராணியாகவும் காட்சியளிக்கிறது. இவ்வாறு நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மையுடைய பிராணி எத்தகையது என்பதைப் பார்வையாளரால் நிர்ணயிக்க முடிவதில்லை. உண்மையில் அது என்ன என்பதை யும் அவர் அறியவில்லை. அந்தப் பிராணி அவ்வாறு அடுத்தடுத்து வெவ்வேறு உருவில் வராமல் இருந்திருந்தால் அவரால் அது உண்மையில் என்ன வகையான பிராணி என்று கண்டு பிடித்திருக்கமுடியும். மாறாத தன்மையை வைத்துத்தான் அது என்ன பிராணி என்று கண்டு கொள்ளமுடியும்.

ஏதோ ஒரு காலத்தில் (நாள், வருடம்) இந்த உலகம் தோன்றி இருக்கிறது. எனவே அது நிரந்தரமாக இருக்க வாய்ப்புக்கிடையாது. தற்காலிகமானதாகத்தான் இருக்க முடியும். நிலைத்து இருக்க முடியாத ஒன்று உண்மையானதாக இருக்கவே முடியாது. எனவே இவ்வாறாக எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தின் தன்மையை வைத்து இது உண்மையானது அல்ல என்ற தீர்மானத்திற்கு வரலாம்.

இந்த உலகத்தின் இத்தகைய போலியானத் தன்மையை சங்கரர், கயிறு இருட்டில் பாம்பாகத்தெரியும் எடுத்துக்காட்டின் மூலம் விளக்குகிறார். உண்மை” என்பது கயிறு.ஆனால் அது ஒரு பாம்பாகக் கவனிக்கப்படுகிறது. அத்தகைய பிரமை நம்மிடம் இருக்கும் வரையில் கயிறு பாம்பாகவே தோற்றமளித்துக் கொண்டிருக்கும். இருட்டு மறைந்து வெளிச்சம் வந்தவுடன் பாம்பு மறைந்துவிடும். இது வரை அதைப்பாம்பாக எண்ணி கவனித்துக்கொண்டிருந்த பார்வையாளர் அங்கு பாம்பு இருந்ததாகக் கருதியதை விட்டு, உண்மை யாக அங்கு பாம்பு இருக்கவில்லை என்பதை உணர்கிறார்.

சங்கரரின் தத்துவமானது ”கயிற்றை“ நிர்குணப்பிரம்மம் அதாவது ”உருவமற்ற கடவுள்” என்கிறது. மேலும் பாம்பை உலகம் என்கிறது.நிர்குணப் பிரம்ம மானது மாறாதது. ஏனெனில் அது நிரந்தரமாக இருப்பது. அது ஒன்றே உண்மையாக நிலைத்து நிற்பது. நிர்குணப் பிரம்மத்தைப் பற்றி அறிந்து கொண்ட மனிதன் இந்த உலகத்தை உண்மையானது என்று ஒரு போதும் எண்ணமாட்டான். அத்தோடு இந்த உலகமானது படைக்கப்பட்டதல்ல என்றும் உணர்கிறான். எனவே படைக்கப்படாத” உலகத்தைப் பற்றியோ அதன் மூலக்கூறு பற்றியோ எந்த விதமான வினாவும் எழாது.

மோட்சம் அல்லது சம்சாரத்திலிருந்து விடுதலை-முக்தி

ஸ்தூலம், சூஷ்மம் என்று சொல்லப்படுகின்ற உலகங்களில் திரும்பத்திரும்ப பிறந்து, வளர்ந்து, மறைகின்ற ஆன்மாவின் செயல்தான் வடமொழியில் ”சம்சாரம்” என்று சொல்லப்படுகிறது.பிறப்பது, இறப்பது என்று தொடர்ச்சியாக நடைபெறும் தொழிலுக்குள் மாட்டிக்கொள்வதே சம்சாரமாகும். இவ்வாறு மனிதர்கள் தொடர்ச்சியாகப் பிறப்பு-இறப்பு பந்தத்தில் மாட்டிக்கொள்ளாமல் விடுபடுவதே இந்து மதத்தில் வாழ்க்கையின் குறிக்கோளாகக்கூறப்படுகிறது. இத்தகைய நிலையை அடைவதுதான் ”மோட்சம்” அல்லது ”முக்தி” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது. இறைக்காட்சி கிட்டுவதால் மட்டுமே மோட்சத்தை அடையலாம்.

மோட்சத்தைப் பற்றிய விஸயத்தில் இந்து மத தத்துவ நூல் பிரிவாளர்கள் பல்வேறு எண்ணங்களைக்கொண்டுள்ளனர். சிலரது கருத்துப்படி மோட்சமானது ஒருவரது மரணத்திற்குப் பின்னர் ான் கிட்டும்.வேறு சிலரது கூற்றின்படி மனிதர்கள் உயிருடன் இருக்கும் போதே மோட்சத்தை அடைந்து விடலாம். மோட்சத்தின் தன்மையைப் பற்றிக்கூட வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இனி அத்தகைய கருத்துக்களைப் பற்றிக் கீழே காண்போம்.

image105

மோட்சம்

மோட்சம்

  36


துவைதக் கோட்பாட்டின் படி மோட்சம் பற்றிய விளக்கம்.


வேதாந்த தத்துவங்களில் துவைதக்கோட்பாட்டின்படி மரணத்திற்குப் பின்னரே மோட்சம் கிட்டும். ஒரு மனிதன் அறநெறியிலிருந்து வழுவாமல், நேர்மையான அறிவு, நேர்மையான செயல், பற்றற்ற தன்மை, பக்தியோடு கூடிய தியானம் ஆகியவற்றைின் மூலம் விஷ்ணுவை அனுதினமும் வழிபட்டு வந்தால், கடவுள் கிருபையால் அவன் மோட்சத்தை அடைவதற்குத் தகுந்தவன் ஆகிறான். இம்மாதிரியான கோட்பாட்டில் மோட்சத்திற்கு (1)ஸா லோக்ய, (2)சாமீப்யஅல்லது சாந்நித்ய,(3) ஸாரூப்ய,(4)ஸாயுஜ்ய என்ற நான்கு நிலைகள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவதாகக் கூறப்பட்டுள்ளது மிகவும் இழிந்ததாகவும், நான்காவதாக உள்ளது மிகவும் உயர்ந்ததாகவும் கருதப்படுகிறது. உடலை விட்டுப்பிரியும் ஆன்மாவின் தரத்திற்கு ஏற்றபடி இந்த நான்கில் ஏதாவது ஒரு மோட்சம் கிட்டலாம்.

ஸாலோக்ய முக்தி எனப்படுவதில் உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா தன் இஷ்ட தெய்வமான விஷ்ணுவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரது முன்னிலையில் பேரின்பத்தைஅனுபவிக்கும். சாமீப்ய அல்லது சாந்நித்ய முக்தியில் ஆன்மாவானது தன் இஷ்ட தெய்வத்திற்கு வெகு அருகில் சென்று ஆனந்தத்துடன் இருக்கும்.ஸாரூப்ய முக்தியில் ஆன்மாவானது தன்னுடைய இஷ்ட தெய்வத்தின் உருவத்தைப்பெற்று மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஸாயுஜ்ய முக்தியில் ஆன்மாவானது தன்னுடைய .இஷ்ட தெய்வத்தோடு ஒன்றிவிடுகிறது.

அத்வைத தத்துவத்தில் மோட்சம் பற்றிய செய்திகள் 

மனிதன் சம்சாரத்திலிருந்து உயிருடன் இருக்கும் போதே முக்தியடையலாம் என்பத அத்வைத வேதாந்தக்கருத்தாகும். இவ்வாறு முக்தி அடைவதை ”ஜீவன் முக்தி” என்று வடமொழி கூறுகிறது. ஓர் ஆன்மீக வாதி முதன்முதலில் பலவகையான அறநெறிக்கோட்பாடுகளைக் கடைபிடித்தல், தன்னுடைய இஷ்டதெய்வத்தை வழிபடுதல் போன்ற பலவகையான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும். இவ்வாறு செய்வதால் மனமானது படிப்படியாகத்தூய்மையாகி, தியானத்தில் ஆழ்ந்து மூழ்க முடிகிறது. அத்தகைய நிலையில் உருவமற்ற இறை நிலையை உணரமுடியும். அதனால் உண்மையான அறிவை மூடியிருக்கும் அறியாமை என்னும் திரை மறைத்துவிடும். அறியாமை அகன்ற உடனேயே விடுதலை கிடைத்து விடும். பிறகு அவன் ஜீவன் முக்தன்” ஆகி விடுகிறான். அந்த நிலையை அடைந்த ஒருவனுக்கு தான் உடலோடு இருக்கும் ஆன்மா” என்ற நினைவு அகன்று விடுகிறது.

ஜீவன் முக்தனுக்கு உலகிலுள்ள மற்ற பொருள்கள் மாயைக்குட்ப்பட்டது. என்று எண்ணுவது போல்தன்னுடைய உடலும் பொய்யானது என்ற எண்ணம் வந்துவிடும். ஜீவன் முக்தி நிலை அடைந்தஒருவனது உடலானது அவனது பிராரப்த கர்ம பலன் முடியும் வரை இருந்து பிறகு இறந்து விடும். இவ்வாறு உடலை விட்டு நீங்கிய ஜீவன் முக்தனின் நிலைக்கு ”விதேக முக்தி” என்று பெயர்.

மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது ஜீவன் முக்தர்கள் தங்களுடைய மயாமயமான உடலின் மீதுள்ள பற்றை உ்னேயே விட்டு விடுவார்கள். அதன்பயனாக சில காலத்திற்குள்ளேயே “ஸ்த்யோ முக்தி” கிடைப்பதால் உடலை விட்டுவிடுவார்கள். அதாவது உடனேயே விடுதலை கிடைத்து விடுகிறது.

மேலும் ஆன்மீக முன்னேற்றமடையாத ஒருவன் தற்கொலை செய்து கொள்வதை இந்து மதம் கண்டிக்கிறது. ஏனெனில் இறந்த பிறகும் அவன் சில கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். ஜீவன் முக்தர்கள் தங்கள் உடலின் மீதுள்ள பற்றினை விட்டுவிடுவதால் சரியான உணவின்றி உடல் மரணமடைவது அவனைப்பாதிக்காது. ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியுள்ளபடி நிர்விகல்ப சமாதியின் மூலம் ஜீவன் முக்தியை அடைந்த பெரும்பாலானவர், களால் தங்களுடைய மனத்தை இப்பூவுலக வாழ்க்கைக்குக் கொண்டு வர முடியாது. அவர்களது மனம் பிரம்மனைப்பற்றிய நினைவிலேயே மூழ்கி இருக்கும். அந்த நிலையில் அவர்கள் தங்களது உடலைப்பற்றிய எண்ணத்தை அறவே இழந்து விடுவார்கள். அதன் காரணமாக உடலுக்கு வேண்டிய உணவு கிடைக்காமல்சில நாட்களில் அது மடிந்து விடுகிறது.

மற்றும் சில அறிஞர்கள் ஆன்மஞானத்தை அடைந்தவர்களை அதாவது ஸத்யோமுக்தி அல்லது உடனடியான விடுதலை பெறுதல் என்பதே ஜீவன் முக்தி என்கிறார்கள்.ஆன்ம ஞானத்தைப்பெற்றவர்கள் தங்கள் உடலை தங்கள் ஆன்மாவோடு தொடர்புபடுத்திக்கொள்ள மாட்டார்கள். அவர்களைப்பொறுத்த மட்டில்அந்த உடலும் உலகத்திலுள்ள மற்ற பொருள்களைப்போல் பொய்யானதே. அவர்களைப்பொறுத்தவரை அவர்களது உடல்கள் அங்கே இல்லை. எனவே அவர்கள் தாங்கள் ஸ்த்யோ முக்தி அடைந்து விட்டதாக கருதிக்கொள்கிறார்கள். இத்தகையவர்களைக்காணும் பார்வையாளர்கள் அவர்களை ஜீவன் முக்தர்கள்” என்றே அழைக்கிறார்கள்.

மேற்கூறியவைகளைத் தவிர ”கிரம முக்தி” அல்லது அவாந்தர முக்தி (படிப்படியாக முக்தியை அடைதல்) என்ற ஒரு கருத்தும் உண்டு. இந்தக்கருத்தின் படி சகுணப் பிரம்மத்தை ஓம்” என்னும் சப்தத்தைக்கொண்டோ அல்லது தகர வித்யா”, சாண்டில்ய வித்யா” போன்ற சில குறிப்பிட்ட வழிகளின் வாயிலாக ஆழ்ந்த தியானம் புரிவதால் இறந்த பிறகு பிரம்ம லோகத்தை அடையலாம். அங்கு அவர்கள் ஹிரண்யகர்பாவின் துணை கொண்டு ”நிர்குணப் பிரம்மம்” பற்றிய அறிவைப்பெறலாம். ஒரு கல்பத்தின் முடிவில் எங்கும் அழிவு ஏற்படும்போது அவர்கள் பிரம்மத்துடன் கலந்துவிடுவார்கள். மேலும் மறுபடியும் பிறக்கமாட்டார்கள். சம்சாரத்தில் இருந்து கொண்டு இவ்வாறான முக்தியைப் பெறுவது கிரம முக்தி” அல்லது ”அவாந்தர முக்தி” எனப்படுகிறது.

-


-

விசிஷ்டாத்வைத தத்துவத்தின் படி மோட்சம் பற்றிய செய்திகள்

வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதக்கொள்கையானது ஜீவன் முக்தி பற்றிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு மனிதன் சாவிற்குப்பிறகு தான் முக்தி அடைய முடியும் என்பது அவர்கள் கருத்து. அவர்களைப் பொறுத்தவரை அவர்களது இஷ்ட தெய்வம் இருக்கும் இடம் வைகுண்டமாகும். அங்குதான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கடவுளின் முன்னிலையில் ஆன்மீக உடலுடன் வைகுண்டத்தில் சந்தோஷமாக வசிப்பார்கள். அவர்கள் பல வகையான தெய்வீக சக்திகளைப் பெறுவார்கள். அதனால் அவர்களால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் கடவுள் செய்வதைப்போல் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச்செய்ய முடியாது. எவ்வளவோ உயர்ந்த நிலையில் வைக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்து கொண்டு மட்டும் தான் இருக்கமுடியும்.

அத்வைத தத்துவவாதிகள் ஆன்மஞானம் பெறுவதால் முக்தியை அடைய முடியும் என்று கூறுவதை விசிஷ்டாத்வைதம் மறுக்கிறது. இவர்களது தத்தவத்தின்படி கர்மயோகமும், ஞானயோகமும், பக்தியோகத்திற்கு உதவக்கூடியவையே , அத்தோடு கடவுளின் கிருபையால் மட்டுமே ஒருவர் இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுபட முடியும் என்கிறது. தெய்வீக அருளைப்பெற ஒரே வழி பக்தியோகத்தைக் கடைப்பிடிப்பது தான் என்று தெரிவிக்கிறது.

” சாங்கியர்களின் தத்துவப்படி மோட்சம்” என்பது என்ன?

இவர்களது தத்துவத்தில் ஆன்மா” எனப்படுவது ”புருஷன்” மனம்” உடல் என்னும் சிக்கலான பொருளானது ”பிரகிருதி” எனப்படும். தன்னுணர்வு இல்லாத நிலையில் முதலில் இருந்த சக்தியிலிருந்து தோன்றியதே அது.”புருஷன்” என்பது தூய்மையான உணர்வு,பிரகிருதி இயற்கையில் உணர்வு இல்லாத தன்மையைப்பெற்றிருந்த போதிலும் அது, புருஷ” னிடமிருந்து கொஞ்சம் உணர்வைக்கடனாகப்பெற்றுச்செயல்படுகிறது. புருஷன்” இவ்வாறு பந்தத்திற்குள் கிடந்து உழலுவது அறியாமையால் ஏற்படுவது.பிரகிருதியின் செயல்பாட்டையும் அதனால் உருவான மனம், உடல், ஆகியவற்றை புருஷ”னுடைய செயல் என்ற தவறான கருத்துக்கொண்டு பார்ப்பதால் ஏற்படுகிறது.

இத்தகைய கருத்தும் கூட புருஷனின் அறியாமையால் தோன்றுவது. மனம் –உடல் ஆகியவற்றிற்குள் கட்டுப்பட்ட புருஷ” னானது உடலாலும் மனத்தாலும் கஷ்டப்படுவதும் கூட அது பொய்மையான மனம், உடல் ஆகிய சிக்கலான விஷயத்தில் மாட்டிக்கொண்டதாக நாம் அடையாளம் கொள்வதால் தான். இவ்வாறான தவறான அடையாளத்திலிருந்து விடுபட வேண்டுமானால் ஆன்மா” என்ற நிலையில் அது பிரகிருதியிலிருந்தும், அதனால் உருவாக்கப்பட்ட சிக்கலைக்கொண்ட மனம்-உடல் என்னும் அமைப்பிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது என்ற அறிவை புருஷன்” அடையவேண்டும். இத்தகைய அறிவு விவேக- ஞானம் எனப்படுகிறது. சாங்கியர்களது தத்துவத்தில் மோக்ஷத்தைக் ”கைவல்யம்” என்று கூறுகிறார்கள். கைவல்யம்” என்றால் வலி” மற்றும் துன்பங்களினின்றும் முற்றிலும் விடுபடுவது ஆகும்.பிரகிருதியின் பிடியிலிருந்து விடுபட்டு புருஷனை மோட்சத்திற்கு இட்டுச் செல்வதற்குக் காரணமாக அமைவது விவேக ஞானமே.

அத்வைதவாதிகளின் கருத்தான ஆன்மா” உயிருடன் இருக்கையிலேயே உடலினின்றும் விடுதலை பெற்று விடுகிறது. என்ற கருத்தை சாங்கிய தத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. ஜீவன் முக்தன் இறந்து விட்டால் அவன் விதேக முக்தி அடைந்து விடுவான்.

பூர்வ மீமாம்ஸை என்று தத்துவத்தில் மோட்சம் பற்றிய கருத்து

மனிதன் இறந்த பிறகு ஆன்மா விடுதலை அடைவதாகவே பூர்வ மீமாம்ஸ” தத்துவம் நம்புகிறது. இவர்களுக்கு ஜீவன் முக்தி” என்ற கருத்தில் நம்பிக்கை கிடையாது. இந்த தத்துவத்தின்படி வேதங்களில் கூறிய படி சடங்குகளைச் சரியாகச் செய்வதாலேயே மோட்சம் கிட்டும். முன்னர் இருந்த பூர்வ மீமாம்ஸ தத்துவத்தில் விடுதலை” பெற்ற ஆன்மாவானது சுவர்க்கத்திற்குச்சென்று அங்கேயே தங்கி நிலையான பேரின்பத்தில் மூழ்கித்திளைத்துக் கொண்டிருக்கும் என்ற கருத்து நிலவியது. பின்னர் ஏற்பட்ட பூர்வ மீமாம்ஸ தத்துவத்தில் மறுபிறப்பு என்பது ஏற்படாத நிலையே மோட்சம் என்றும் அதனால் மறுபடியும் பிறந்து வலி, துன்பம் ஆகியவற்றை அனுபவிக்க வேண்டிவராது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி ”மோட்சம்” எனப்படுவது சுவர்க்கத்தில் காணப்படும் மகிழ்ச்சியான நிலை அல்ல என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

நிறைவுக்குறிப்புகள்.

இந்து மதம் உண்மையானது, அது நம்பிக்கை உடையது அன்று, நம்பிக்கை அற்றதும் அன்று

இந்து மதமானது நம்பிக்கையில்லாத மதம் என்பது சில அறிஞர்களது கருத்து. இந்த உலகத்தைப்பற்றிய நல்லவிதமான நம்பிக்கை ஏதும் அதற்குக்கிடையாது.ஏனெனில் நாம் வாழ்கின்ற இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் விட்டுவிட்டு வேறு உலகத்தைப்பற்றி அதிகமாக உத்திரவாதத்தை அளிக்கிறது. ஆனால் ரிக் வேதம் மற்றும் யஜீர் வேதம் போன்ற நம்பத் தகுந்த இந்துமத நூல்கள் முற்றிலும் வேறான கருத்துக்களையே அளிக்கின்றன. அவற்றைப்படித்தால் வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் மிக உயர்ந்த வகையான வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்ததாகத் தெரிய வருகிறது. அவர்களைப்பொறுத்தவரையில், இவ்வுலகம் மிக வும் நல்லது. அனுபவிக்க ஏற்றது. கெட்டது அல்ல, மனிதன் நூறாண்டு காலம் வாழ ஆசைப்பட வேண்டும் என்று ஈச உபநிடதம் கூறுகிறது. ஆரியர்கள் நேர்த்தியான உடைகளையும் பொன்னாலான ஆபரணங்களையும் அணிந்திருந்தனர். சங்கீதம், நடனம் போன்ற கலைகளை அனுபவித்து ரசித்தனர். மதுபானம், சுவையான உணவுஆகியவற்றையும் உட்கொண்டனர். கறவை மாடுகள் தான் அவர்களுடைய சொத்து. எனவே எண்ணற்ற பசுமாடுகளை வளர்த்து வந்தனர். சுவர்க்கத்தைப் பற்றிய விஷயங்கள் மட்டுமே கூறப்பட்டன. நரகம் என்ற பேச்சிற்கே இடமில்லை.

பாரபட்சமின்றி பார்த்தோமேயானால் இந்து மதம் நம்பிக்கையற்ற தன்மையையும் ஆதரிக்கவில்லை. மித மிஞ்சிய நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அதிகமான ஆசை, நம்பிக்கை ஆகியவற்றால் அடிக்கடி ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அதே சமயத்தில் நம்பிக்கையற்ற தன்மை இருந்தால் அது மக்களை எதையும் தொடங்கவிடாமல் தடுத்துவிடுகிறது. இந்து மதம் இத்தகைய மனப்பான்மையை ஆதரிப்பதில்லை. அது முழுமையான உண்மைத்தன்மையை உடையது. அது உலகின் இயற்கையான தன்மையை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்கிறது.

-


-

மனிதன்(1) மகிழ்ச்சி தரக்கூடியவை (2) நல்லவை ஆகிய இரண்டு குறிக்கோள்களை இலக்காக வைத்து அதை அடையவே துடிப்பதாக இந்து மத நூல்கள் கூறுகின்றன. இன்பத்தை தரவல்லதுநல்லதாக இருக்க வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கலாம். நல்லதாக இருப்பது இன்பத்தைத் தரமுடியாததாகவும் போகலாம். தவிரவும் தற்சமயத்தில் இன்பம் தரக்கூடியவை பிற்காலத்தில் இன்பத்தைத் தராமலும் போகலாம். சாக்லேட், ஜஸ்கிரீம் ஒன்று, சாப்பிடுவது இன்பத்தைத் தரலாம். ஆனால்அதே மனிதனைத்துப்பாக்கி முனையில் தொடர்ந்து எட்டு சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்தினால் அது அவனைச்சித்திரவதை செய்வதற்குஒப்பாகும். ஒரு குடிகாரனுக்கு குடிப்பது என்பது மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் உண்மையில் அவனுக்கு அது நல்லதல்ல.தினமும் உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சியான செயல் அல்ல.ஆனால் அது உடல் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.சில செயல்களை மனத்தாலும் உடலாலும் செய்யும்போது இன்பமாக இருக்கலாம். ஆனால் அதனால் உடலுக்கோ அல்லது உள்ளத்திற்கோ நன்மை ஏற்படாது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை இந்து மதம் வன்மையாகக் கண்டிக்கிறது. நேர்மையற்ற வாழ்க்கை வாழ்வதை விட்டுவிடச்சொல்கிறது. கெட்ட செயல் , நல்லது போன்ற பூச்சோடு விளங்கும் மாயா ஜாலத்தில் விழக்கூடாது என்று எச்சரிக்கிறது. துன்பத்தைத் தரக்கூடியவற்றை நன்மையானவை என்று கற்பனையாகக் கருதுவதன் காரணம், அது மகிழ்ச்சி தருவதாக இருப்பது தான். இந்து மதம் நல்லனவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளவும், மகிழ்ச்சி தரக்கூடியவை என்றாலும் நல்லது அல்லாதவற்றை ஒதுக்கி விடும் படியும் புத்தி கூறுகிறது.

image106

இந்து மதம் விதியின் கைப்பாவையல்ல

இந்து மதம் விதியின் கைப்பாவையல்ல

  37


இந்து மதம் விதியில் நம்பிக்கை வைக்கவில்லை. கர்ம” கோட்பாட்டின் படி ஒரு மனிதனின் எதிர்காலம் அவனுடைய செயலைப்பொறுத்தே அமைகிறது. நிகழ்காலத்தில் ஒருவர் செய்யும் நல்லசெயல்கள் அல்லது கெட்ட செயல்களைப்பொறுத்தே எதிர்காலத்தில் சுகமோ துக்கமோ ஏற்படும். சிறந்த எதிர்காலம் வேண்டுமென்றால் நிகழ்காலத்தை வீணாக்காமல் நல்ல செயல்களையே செய்ய வேண்டும். தன்னுடைய துன்பங்கள் யாவும் மற்றவர்களாலேயே ஏற்படுகிறது என்பதை இந்து மதம் ஒரு நாளும் மன்னிப்பதில்லை. ஒரு செயலைச்செய்பவன், தான் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கும், அவற்றினால் விளையப்போகும் இன்பம் அல்லது துன்பத்திற்கான பொறுப்பை யும் அவனே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

உடலை வருத்தித்தூய்மை பெறுவதைப்பற்றிய இந்து மதக்கருத்து

இந்து மதத்தின் முக்கியப் பிரிவுகள், நரம்புக்கோளாறுகளுக்கு மருந்தாகவும், காரணமின்றியும் தன்னை வருத்திக்கொண்டு தூய்மை பெறுவதை ஆதரிக்கவில்லை. மனத்தை வலுப்படுத்த உடலைச் சில கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் வைப்பது சிறந்தது தான்.வெப்பம் அல்லது குளிர் , இன்பம் அல்லது துன்பம் ஆகியவற்றால் எவன் எளிதில் பாதிக்கப்படாமல் இருக்கிறானோ அவன் மனத்தளவில் பல மானவன், அதாவது மனோவலிமையுடையவன்.

அவன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளையும் வெகு எளிதாகச் சமாளித்துவிடுவான். தன்னுடைய உடலைப்பற்றிய சிந்தனையில் இருப்பவனின் மனம் பலவீனமாகிவிடும். எதிலுமே ஒரு எல்லைக்கு மேல் போவதை இந்துமதம் தடுக்கிறது. வடமொழியில் ”ஸ்ர்வம் அத்யந்த கர்ஹிதம்” என்று சொல்வதன் படி எதுவுமே அளவுக்கு அதிகமானால் கெடுதலே ஏற்படுத்தும். உடலை அலட்சியப்படுத்துவது தர்மமாகாது, ஷாரீர மாத்யம்கலு தர்ம ஸாதனம்” – தர்மத்தை அதாவது மதத்தைப்பின்பற்றி சாதனைகள் புரிய முதலாவதாக வேண்டிய உபகரணம் உடல் தான் என்கிறது இந்து மதம். எனவே உடலைப் பாதுகாப்பது மிகமிக அவசியம்.ஆன்மா அல்லது உள்ளுறையும் தெய்வீகமானது. ஒவ்வொருவரது உடலுக்குள் இருப்பதால் உடலே ஓர் ஆலயம் என்று இந்துமத நூல்கள் கூறுகின்றன.

கொல்லாமை பற்றிய எண்ணமும் அதைக்கடைப்பிடித்தல் பற்றிய இந்துமதக்கருத்துக்களும்.

அஹிம்சைவ ஹி ஸர்வேப்யோ தர்மேப்யோ ஜ்யாயஸீ மதா” எல்லா அறந்களிலும் கொல்லாமையே சிறந்தது. என்று மகாபாரதம் சாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.இந்து மதமானது அஹிம்சையே மற்ற அறங்களைக்காட்டிலும் சிறப்பானது என்று சொல்கிறது. அதே சமயத்தில் நாம் உயிர் வாழ்வதற்காக ஏதாவது ஒரு விதத்தில் பலாத்காரமாகப் பிறரைத்துன்புறுத்த நேரிடுகிறது என்பதையும் இந்துமதம் மறுக்கவில்லை.நாம் சுவாசிக்கும்போது ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. நாம் உணவாக உண்ணும் ஒவ்வொரு தானியத்திற்கும் உயிர் இருக்கிறது. எனவே முற்றிலும் ”பிறருக்குத்துன்பம் விளைவிப்பது கூடாது” என்பதைப் பின்பற்றமுடியாது. மகத்திலுள்ள துன்பம் தரவேண்டும் என்ற எண்ணத்தைக்கூடிய வரை விட்டுவிட வேண்டும் என்பதையே இந்துமதம் கூறுகிறது.

-


-

சில உயர்ந்த செயல்களை உத்தேசித்து செய்யப்படும் கொலைகளை (பலிகளை) இந்து மதம் மன்னித்து ஏற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான மன்னிப்புக்கள் மத நூல்களின் உத்தரவுப்படியான முகாந்திரங்களிலிருந்து வரவேண்டும். மற்றபடி வேறு விதமாக வந்தால் ஒப்புக்கொள்ள முடியாது. ஒரு நாட்டை அதன் எதிரிகள் முற்றுகையிட்டால் சிப்பாய்கள் எதிர்த்துப்போராடி அடக்கி, முறியடித்து, அவர்களைக்கொன்று வெற்றிவாகை சூடவேண்டும். நாட்டைக்காப்பது சிப்பாய்களின் தார்மீகக் கடமை, ஓடி ஒளிகின்ற, காயமடைந்த, பாதுகாவலற்ற அல்லது தகுதியில்லாத எதிரிகளைக்கொல்வதை மதநூல்கள் அனுமதிக்கவில்லை. ஒரு சிப்பாய் போர்களத்தில் எதிரிகளைக்கண்டு திகிலடைந்து ஓடி வந்துவிட்டு அஹிம்சையைப்பற்றிப்புகழ்ந்து பேசித் தன்னுடைய செயலுக்கு விளக்கம் கற்பிப்பவன் தன் கடமையிலிருந்து தவறியவன் ஆவான் . அவன் ஒரு போலி ஆசாமியாகக்கருதப்படுவான்.

உண்மையில் அஹிம்சையைக் கடைப்பிடிப்பவன் மனம் , வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் எவ்வுயிருக்கும் தீங்குவிளைவிக்கக்கூடாது.சிறந்த ஆன்மீக ஞானம் பெற்றவர்களால் மட்டுமே முற்றிலும் அஹிம் சாவாதியாக இருக்கமுடியும். இவ்வாறு ஆத்மானுபூதி பெற்றவர்கள் தங்களுடைய உடல்-மனம் பற்றியசிக்கலானதும், பொய்யானதுமான கருத்தை முற்றும் மறந்து விடுவதுடன் தங்களுடைய தெய்வீகத்தன்மையையும் உணர்ந்து கொள்வார்கள். தங்களிடமும் தங்களைச் சுற்றியுள்ள எல்லாப்பொருள்களிலும் மற்றும் உயிரோடுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் சாரமாக இருப்பது கடவுள் தான் என்பதை உணர்ந்து, கொள்வார்கள்.அத்தகையநிலையை எட்டியவர்களால் எவரையும், வெறுக்கவோ துன்புறுத்தவோ

முடியாது.

எவரையும் பகைவர்களாகப் பார்க்காத நிலையில் அவர்களால் எதிரிகளிடமும் அன்பு செலுத்த முடியும். எங்கும், எதிலும், எவரிடமும் கடவுளின் வெளிப்பாட்டைத்தான் உணர்வார்கள்.உடல், அறிவு, தான் செய்கிறோம் என்ற எண்ணம் எல்லாம் போய் விடுவதால், அவர் ஹிம்சை புரிய வேண்டும் என்ற எண்ணத்தினின்றும் விடுபட்டுவிடுகிறார். இதையே பகவத்கீதை 18-ஆவது சர்க்கம் 17-வது பாடலில் பகவான் கூறியுள்ளார்.

சர்வ சமய சமரசம் என்பது இந்து மதத்தில் இயற்கை யாகவே அமைந்தது என்பதைப்பற்றிய கருத்து

அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை இந்துமதத்தில் வேரூன்றியுள்ளது என்பதை ”ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி” அதாவது கடவுள் ஒருவரே அதை ஞானிகள் பல்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். என்றரிக் வேத வாக்கியம் தெளிவு படுத்துகிறது. இந்தியாவில் வாழ்ந்த எத்தனையோ முனிவர்களாலும் கடவுளைக் கண்டறிந்த தபஸ்விகளாலும். பல்வேறு வகைப்பட்ட ஆன்மீகப் பாதைகளின் வழியாகச் சென்றாலும் கடவுளை அடைய முடியும்.” என்று போதிக்கப்பட்டது.ஆனாலும் எல்லா மதங்களும் மக்களை ஒரே கடவுளிடம் அழைத்துச்செல்கிறது என்ற தத்துவத்தைப்போதித்தவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தான். மத நல்லிணக்கத்திற்கான தீர்க்கதரிசி என்று அனைவராலும் அறியப்பட்டவர். அவரது போதனைகள் சிலவற்றை மக்கள் படித்து நலம் பெற்று மத நல்லிணக்கமும், அமைதியும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

கடவுளுக்குப் பல பெயர்கள் உண்டு. அவருக்கு எண்ணற்ற உருவங்களும் உண்டு. எதன் மூலமாகவும் அவரை வழிபடலாம். நீ எந்தப்பெயரில் வழிபடுகிறாயோ, எந்த உருவத்தில் வழிபடுகிறாயோ அதன் மூலமாகவே நீ அவரை உணர்ந்து கொள்ளமுடியும்.

பலவிதமாக ஆசைப்படுபவர்களுக்காகவும், பல்வேறுபட்ட காலங்களுக்காகவும், பலவகையான நாடுகளுக்காகவும் கடவுள் பல மதங்களைத்தோற்றுவித்திருக்கிறார். எல்லா மதக் கொள்கைகளும் கடவுளையே அடைய உதவும் பாதைகளே. முழு மனத்தோடு கூடிய பக்தி கொண்டு எந்தப்பாதையின் வழியாகக் சென்றாலும் கடவுளை அடையலாம். ஓர் இனிப்புப் பண்டத்தை நேராகவோ, பக்கவாட்டிலோ கடித்துச்சுவைக்கலாம். எந்த பக்கத்தில் சுவைத்தாலும் அது இனிப்பான சுவையுடன் தான் இருக்கும்.

ஒருவன் ஒரு மதத்தை உண்மையாகக் கடைப்பிடிப்பவனாயின் அவன் பிற மதங்களையும் கடவுள் என்ற உண்மைக்கு இட்டுச் செல்லும் பாதைகளாகக் கருத வேண்டும். எப்போதும் பிற மதங்களைப்பற்றிய மரியாதையோடு கூடிய எண்ணத்தைக் கடைபிடிக்க வேண்டும். பல்வேறு வகையான கொள்கைகளாக இருந்தாலும் அவை ஒரே கடவுளை அடைய உதவக்கூடிய பாதைகளே.

பொன்னைக்கொண்டு விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஒரே பொருளைக் கொண்டு செய்யப்பட்ட போதிலும் அவற்றின் உருவங்கள் பல வகைப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றுக்குப் பல பெயர்களும்அளிக்கப்படுகின்றன. இதே போலவே தான் கடவுளே பல்வேறு நாடுகளில், பல்வேறு வடிவங்களிலும், பெயர்களிலும் வழிபடப்படுகிறார்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சொந்த மதத்தையே பின்பற்ற வேண்டும். கிறிஸ்தவன் கிறிஸ்தவ மதத்தையும், ஒரு முஸ்லிம் இஸ்லாத்தையும் பின்பற்றி நடக்கவேண்டும். இதே போன்றே பிற மதத்தினரும் அவரவர்களது மதத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும். இந்துக்களுக்கு ஆரிய முனிவர்கள் காட்டிய சநாதன தர்மம் தான் சிறந்த பாதை.

தர்க்கம் செய்யாதே நீ உன்னுடைய சொந்த மதத்தில் இருந்துகொண்டு, உன்னுடைய மதமே சிறந்தது என்ற எண்ணம், கொண்டிருந்தால் அப்படியே இரு. மற்றவர்களுக்கும், அவர்களுடைய எண்ணங்களுக்கும், மதக்கொள்கைகளுக்கும் சம உரிமை கொடு. நீ சண்டை செய்வதாலோ, தர்க்கம் புரிவதாலோ பிறரை அவர்களது தவற்றை எடுத்துக்கூறி நம்பச்செய்ய முடியாது. கடவுள் திருவருள் இறங்கி வரும்போது ஒவ்வொருவரும் தங்களது தவறுகளை உணர்ந்து கொள்வார்கள்.

பலவகையான வழிபாட்டு முறைகளை ஏற்படுத்திக்கொடுத்ததே கடவுள் தான். இந்தப் பிரபஞ்சத்திற்கே தலைவனான அவர் பலவகை மனிதர்களின் அறிவு நிலைக்கேற்ப அவர்களுக்குப் பொருத்தமான நிலையில் இருப்பதற்காகப் பல வடிவங்களை தோற்றுவித்துள்ளார். ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளின் வயிற்றின் ஜீரண சக்திக்கு ஏற்றபடி பலவகையான உணவுப்பண்டங்களைச் சமைக்கிறாள். சமைப்பதற்கு மீன் இருந்தால், அந்தத் தாயானவள் குழந்தைகளின் ருசி, செரிக்கும் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப புலவு, மீன் ஊறுகாய், மீன் வறுவல், என்று பல விதமாக சமைத்துப்போடுவாள். 

-


-

கடவுள் உருவமற்றவர்தான், இருப்பினும் அவர் பலவேறு வடிவங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஒருதுறவியானவர் 

பூரி ஷேத்திரத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலுக்குச்சென்றார். கோயிலுக்குள் சென்ற அவருடைய மனத்தில் பல ஐயங்கள் எழுந்தன. கடவுள் உருவமற்றவரா, இல்லை உருவத்தோடு கூடியவரா, என்று ஆச்சரியப்பட த் தொடங்கினார். அவர் ஒரு நாடோடியான துறவி. 

எனவே அவர் கையில் ஒரு தண்டம் இருந்தது. அந்தத் தண்டத்தைக்கொண்டு பகவான் ஜகன்னாதரின் உருவத்தை தொட்டுப்பார்க்க விரும்பினார். எனவே தன் கையிலிருந்த தடியின் ஒரு நுனியைக் கடவுளுடைய சிலையின் இடப்பக்கத்தில் வைத்து வலது பக்கமாக நகர்த்தினார். அந்தத் தடியும் எந்த விதமான இடர்ப்பாடும் இன்றி நகர்ந்து வலப்புறம் சென்றுவிட்டது. சிலை இல்லாமல் வெறும் காற்றில் தடி நகருவது போல் இருந்தது. அவர் மறுபடியும் தனது தடியை வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக நகர்த்தினார். ஆனால் தடியானது சிலையால் தடுக்கப்பட்டு விட்டது.அப்போது தான் துறவிக்கு கடவுள் உருவமற்றவர் என்றும் உருவத்தோடு கூடியவர் என்றும் புரிந்தது.

ஒரு மனிதன் காட்டிற்குச்சென்றான். அங்கே அவன் ஒரு மரத்தில் அவனது வாழ்நாளில் முதன் முறையாக ஒரு பச்சோந்தியைப்பார்த்தான். பிறகு அவன் வேறு ஒரு மனிதனிடம், சகோதரா! நான் அந்தக் காட்டிலுள்ள ஒரு மரத்தில் ஒரு விநோதமான பிராணியைப்பார்த்தேன். அது சிவப்பு வண்ணத்தில் இருந்தது என்றான். அதற்கு அந்த மனிதன் நானும் கூட அந்தப் பிராணியைப்பார்த்தேன் அது சிவப்பு வண்ணமுடையதல்ல.அது பச்சை வண்ணமுடையது என்றான். வேறு ஒருவன் அங்கிருந்தான் அவன் அது ஏன் பச்சை வண்ணம் என்கிறாய், நானும் கூட அதைப் பார்த்தேன்.அது மஞ்சள் வண்ணமுடையது. என்றான். வேறு ஒருவன் அது ஊதா நிறமுடையது தான் என்றான். மற்றும் பலர் அது கருப்பு அல்லது நீல வண்ணமுடையது என்றனர். ஒவ்வொருவரும் தான் சொன்னவண்ணமுடையது தான் அந்தப்பிராணி என்றனர். ஒரு வழியாகத் திரும்பவும் அந்த மரத்திற்கே சென்று பார்க்க லாம் என்று தீர்மானித்து மரத்தடியை அடைந்தனர். அங்கே ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவன் அவர்களிடம், நான் இந்த மரத்தடியில் வசிப்பவன். எனக்கு இந்தப் பிராணியை நன்றாகத்தெரியும். நீங்கள் அனைவரும் கூறியது உண்மையே அது சில சமயங்களில் சிவப்பாக இருக்கும், சில சமயம் மஞ்சளாகவும், சில சமயம் பச்சையாகவும், சில சமயம் நீலநிறத்திலும் காணப்படும். எவன் ஒருவன் எப்போதும் கடவுளைப் பற்றியே தியானித்துக்கொண்டிருக்கிறானோ அவன் மட்டுமே பச்சோந்திக்குப் பல வண்ணங்கள் இருப்பதை அறிவான். சில சமயங்களில் அதற்கு எந்த வண்ணமும் இருக்காது. என்பதையும் அவன் அறிவான். இதை அறியாதவர்கள் தான் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொண்டு துன்பமடைகிறார்கள். கடவுளுக்கு உருவம் உண்டு, அவர் உருவமற்றவரும் கூட, அவர் எல்லையற்ற சமுத்திரத்திற்கு ஒப்பானவர். 

ஆன்மீகத்தில் ஆசைகொண்டு கடவுள்மேல் பக்தி கொண்டவர்களின் குளிர்ச்சியான பண்பின் தாக்கத்தால் , தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆவதைப்போன்று உருவமற்ற கடவுள் உருவமுடையவராகிறார். ஆனால் உண்மை அறிவு என்னும் கதிரவன் உதித்ததும் பனிக்கட்டி உருகிமறுபடியும் உருவமற்ற தண்ணீராக ஆவதைப்போன்று மீண்டும் உருவமற்றவராகிறார்.

image107