1.இந்துமதம் என பெயர் வரக் காரணம் என்ன?
2.பாரதத்தின் எல்லைகள் எவை?
3.இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்.
4. ஆரியர்கள்
5.கோத்திரங்கள்
6.நான்கு ஜாதிகள்
7.தீண்டாமை
8.ஆதிகால மொழி
9.வேதம்
10.உபநிடதங்கள
11.ஸ்மிருதிகள்
12.ஆறு தரிசனங்கள்
13.புராணங்கள்
14.கீதை
15.ஆரிய மதம் தோன்றிய வரலாறு
16.தமிழர் மதம் தோன்றிய வரலாறு
17.நடுகல் வழிபாடுகள்-லிங்க வழிபாடுகள்
18.நான்கு ஆஸ்ரமம்
19.வானப்பிரஸ்தம்
20.சந்நியாச ஆஸ்ரமம்
21.சம்ஸ்காரம்-பதினாறு சடங்குகள்
22.இந்துத் திருமணங்கள்
23.சதி (உடன்கட்டை ஏறுதல்)
24.பத்து பொருத்தங்கள்.
25.இந்து திருமணச் சடங்குகள்
26.ஈமச்சடங்குகள்
27.மூன்றுவித உணவு
28.மாமிச உணவு
29.சூட்சும உடல்
30.ஆத்மா-ஆன்மா-கடவுள்-பிரம்மம்
31.ஆண்டவன்,ஈஸ்வரன்
32.இந்தியத் தத்துவ இயல் நூல்களில் சில
33.வேதாங்கங்கள்
34.உபவேதங்கள்
35.சிறுதெய்வ வழிபாடு
36.மூன்றுவகை கர்மங்கள்
37.விதி
38.மறுபிறவி-அறிவுப்பூர்வமான கருத்துக்கள்
39.மறுபிறவி-நம்பிக்கை அடிப்படையில்
40.தற்கொலை
41.மூன்றுவகை ஆன்மீக சாதகர்கள்
42.திருவிழாக்கள்
43.கோவில் அமைப்பு முறை
44.பஞ்ச மஹா யக்ஞங்கள்
45.பஞ்ச மாபாதகங்கள்-பரிகாரங்கள்
46.உடல் அமைப்பு
47.தீர்த்த யாத்திரைகள்
48.பூஜை செய்யும் முறை
49.கோயிலில் வழிபட செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள்
50.பூஜாரி
51.தேவதாசி அல்லது தேவர் அடியாள்
52.கொடிமரம்
53.தேர்கள்
54.கும்பாபிஷேகம்
55. யுகங்கள்-காலக் கணக்குகள்
56. கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்:
57. ஏழு சக்கரங்கள்
58. மந்திரம்
59. யந்திரம்
60. காயத்திரி மந்திரம்
61.ஓம்
62. சைவ சமயம்
63. வைணவ சமயம்
1. இந்துகளின் மூதாதையா்களும் அவா்களின் மதங்களும்
2. உலகம் எங்கிருந்து எப்படி வந்தது ?
3. இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்
4.புனித நூல்கள்
5. ஆறு தரிசனங்கள்
6. ஜாதி முறைகள்
7.ஆரியர்களின் வாழ்க்கையில் காணப்பட்ட நான்கு படிகள்
8.பழைய காலத்தில் பெண் கல்வி
9.சந்நியாசம்
10.சம்ஸ்காரம்
11.இந்துக்களின் ஈமச்சடங்குகள்.
12.இந்து சமுதாயத்தில் குழந்தைகள் நடத்தப்படும் விதம்
13.உணவு பற்றிய நியதிகள்
14.கடவுள்
15.தெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்
16.செயலின் கோட்பாடு- கர்மா தியரி-விதி
17.இந்து மதக் கண்ணோட்டத்தில் தற்கொலை
18.இந்து மதத்தில் இறையருள்
19.மறு பிறப்புக்கொள்கை
20.இந்துக்களின் நீதி நூல்
21.குருவிற்கும் சீடனுக்கும் உள்ள உறவு
22.இரு வேறு ஆன்மீகப் பாதைகள்
23.நான்கு வகையான யோகப்பயிற்சிகள்
24.இராஜயோகம்-மனஒருமைப்பாட்டு வழி
25.சித்திகள் - குண்டலி சக்தி
26.கர்ம யோகம்
27.இறை வழிபாடு-உருவ வழிபாடு
28.பிராணிகளைப் பலியிடுதல்
29.இந்து மதத்தில் பண்டிகைகள்
30.ஓம்
31.கோயில்கள்
32.கோயில் பூஜாரிகளும்( அர்ச்சகர்களும்) அவர்களது கடமைகளும்.
33.முக்குணங்கள்
34.சிருஷ்டி (படைத்தல்)
35.பிரளயம் அல்லது உலகத்தின் அழிவு
36.மோட்சம்
37.இந்து மதம் விதியின் கைப்பாவையல்ல
1
இந்துகளின் மூதாதையா்கள் ஆரியா்கள் எனப்படுவா். வடமொழியிள் (ஆா்யா) எனப்படும் சொல் ஆங்கிலத்தில் ( ஆா்யன் ) அல்லது ( இந்தோ-ஆா்யன் ) என்று சொல்லப்படுகிறது. ஆரியா்கள் தங்களது மதத்தை (ஆா்ய தா்மம்) என்று அழைத்தனா். ஆர்யன் என்றால் பண்பட்டவன்,ஒளி பொருந்தியவன் என்று அர்த்தம்.இந்து மதம் என்ற சொல்லே அவா்கள் அறியாதது. தா்மம் என்ற சொல் மதம் அல்லது மதச்சார்பான கடமைகளைப் பற்றி விளக்குவதாக இருந்தது.
இந்தோ-ஐரோபிப்பியர்களின் மொழிக் கூட்டத்தைச் சோ்ந்த சமஸ்கிருதம்தான் இந்தோ ஆரியா்களின் மொழியாக இருந்தது. ஆரியா்கள் தங்களது மதத்தை (மானவ தா்மம்) என்று சொல்லிக் கொண்டனா். அதனால் அது மனிதனுக்கான மதம் என்று பொருள்படுகிறது. இதிலிருந்து இந்த மதம் ஆரியா்களுக்கு மட்டுமல்லாது உலகிலுள்ள மனித இனம் முழுமைக்கு பொதுவானது என்றாகிறது. தவிரவும் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் சில நிரந்தர உண்மைகளைக் கொண்டுள்ளமையால் இதனை (சனாதன தா்மம்) என்றும் கூறினார்கள்
–
நமது நாட்டின் அண்டை நாடுகளுள் ஒன்றான பொ்சியா நாட்டின் எல்லையும், நமது நாட்டடின் எல்லையும் பொதுவாக இருந்தது. பழங்காலத்தில் இது
(ஆா்யா வா்த்தம் ) ( ஆரியா்கள் வாழும் நாடு) என்று சொல்லப்பட்டது. இரண்டு
நாடுகளுக்கும் பொதுவான எல்லை கோடாக இருந்தது சிந்து நதி. சிந்து நதியை சமஸ்கிருதத்தில் சிந்து என்றும்,
பொ்சிஸிய மொழியில் (இண்டஸ்) என்றும் கூறுவார்கள். பாரசீகா்கள் (சிந்து) என்று உச்சரிப்பதைக் கடினமாக கருதி (ஹிந்து) என்றே சொன்னார்கள். எனவே சிந்து நதியின் மறுகரையில் வாழ்ந்த ஆரியா்களை (ஹிந்துக்கள்) என்றே அழைத்தனா். இவ்வாறாக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஆரியர்களின் மதம் ‘ இந்துமதம் என்ற பெயரைப் பெற்றது.
2
-
படைப்பவர் என்று ஒருவர் இருந்தால் அவர் எப்படி இருப்பார் ? அவருக்கும் படைக்கப் பட்டவைகளுக்கும் இடையே இருக்கும் உறவு எத்தகையது ? நாம் இறந்தால் நமக்கு என்ன நேரிடுகிறது ? இறப்பிற்குப் பிறகு நாம் இருக்கிறோமா ? பிறப்பதற்கு முன்பு நாம் இருந்தோமா ?
-
நாகரிகம் தோன்றத் தொடங்கிய நாளிலிருந்தே மனிதனின் உள்ளத்தில் மேலே கூறப்பட்ட வினாக்கள் தொல்லை
கொடுக்க ஆரம்பித்தன. மிக அதிக அறிவு கூர்மையுடையவர்களால் கூட அதற்கான பொருத்தமான விடைகளை அளிக்க முடியவில்லை. ஆன்மீகத் துறையில் ஈடுபட்ட சிலரது தூய்மை மிகுந்த மனத்தில் சில உண்மைகள் தோன்றின.
-
அவற்றைத் தொகுத்துப் புத்தக வடிவில் அழித்தனா் . அவையே சமய நூல்கள் எனப்பட்டன.
-
இந்து சமய நூல்களில் காணப்படும் உண்மைகளை தூய்மையற்ற மனமுடையவா்களால் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய சிறப்பு வாய்ந்தவை இந்து சமய நூல்கள்.
தூய்மையான மனம் , தூய்மையற்ற மனம் ஆகிய இரண்றிற்கும் இடையே உள்ள வேற்றுமையை கீழ்க்காணும் உவமையால் விளக்கலாம். நீர்,பனிக்கட்டி,நீராவி, ஆகிய முன்றுமே ஒரே ரசாயனப் பொருளைச் சோ்ந்தது. ஆனாலும் அவற்றின் தன்மையைப் பொருத்து வேறுபடும். இந்த முன்றினுள்ளும் பனிக்கட்டிக்கு சுதந்திரமே கிடையாது. அது அசையவே முடியாது. தண்ணீருக்கு அதை விடச்சற்று சுதந்திரம் உண்டு. அது சுலபமாகப் பாயும். பரவும் தன்மை கொண்டது. நீராவிக்கு அதிக பட்ச உரிமை உண்டு. அது எந்தத் திசையை நோக்கி வேண்டுமானாலும் பரவலாம். கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் நுண்ணியதும் கூட. பனிக்கட்டியும் தண்ணீரும் புக முடியாத இடத்திற்கும் கூட அதனால் போக முடியும். அது போன்றதே மனித மனமும் . எவ்வளவு தான் அறிவின் ஆழம் அதிகமிருப்பினும் அந்த மனத்திற்கு அநேக வரையறைகள் உண்டு. அந்த மனத்திற்கு புலன்களால் அறிந்து கொள்ளக் கூடியவற்றைத் தாண்டி எதையும் அறிந்து கொள்ள முடியாது. வெளியையும் காலத்தையும் கடந்து என்ன நேரிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த விநாடி என்ன ஏற்படப் போகிறது என்பதையோ , கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையோ அதனால் கூற முடியாது. உள்ளம் பற்றிய விளக்கவியல் கூறும் உண்மைகள் அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை உணரக்கூடிய அறிவு போன்றவை அத்தகைய மனத்திற்கு அப்பாற்பட்டவையாகும்.இதே மனத்தை ஆன்மீக க் கோட்பாடுகளால் சிறந்த பயிற்சிகள் அளித்து தூய்மை ஆக்கி விடலாம். அப்போது அது புலன்களுக்கு எட்டாத எல்லைகளைக் கடக்கும் வல்லமை பெற்றுவிடும். அத்தோடு அசாதாரணமான வலிமையும் பெற்று விடுவதால் புலனின்பங்களைக் கடந்து என்ன இருக்கிறது என்ற அறிவும் ஏற்பட்டு விடும். அப்போது எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் தகுதி வரும். அதனால் கடந்த காலத்தில் நடந்தவை , தற்போது நடப்பவை , எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் ஆகிய அனைத்தையும் ஞானக்கண்ணினால் காண முடியும். ஓா் உண்மையான முனிவரிடம் அத்தகைய தூய்மையான உள்ளம் இருக்கும். அத்தகைய மனத்தில் துணைகொண்டு அவா் கடவுளைப்பற்றிய உண்மைகள் , ஆன்மாவைப்பற்றிய அறிவு , படைப்பு ஆகியவற்றை அறிகிறார்.( அவா்கள் முக்காலமும் உணா்ந்தவா்கள்)
3
-
இன்னாரால் நிறுவப்பட்டது என்று தெரிந்த எந்த ஒருவரையும் குறிப்பிட முடியாமல் இருப்பது தான் இந்து மதத்தின் சிறப்பாகும். அந்த ஒரு சிறப்பே அதன் தனித்தன்மைக்கு ச் சான்றாகும். பண்டைய இந்திய முனிவா்கள் கண்டறிந்த புலனறிவுக்கு எட்டாத உண்மைகளே இந்து மதத்தின் அஸ்திவாரம். அவா்கள் தாம் கண்டறிந்த உண்மைகளைக்கூறி அதன்முலம் தங்களது பெயா்களை பறைசாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவா்கள் அந்த உண்மைகள் எப்பொழுதும் இருந்து வந்தவைகளே என்று கருதினார்கள். நிறுவனா் யார் என்று தெரியாது இருப்பதாலேயே இந்து மதத்திற்கு ஏனைய மதங்களை விட சில அனுகூலங்கள் ஏற்படுகின்றன. இந்து மதத்தை நிறுவியவா் யார் என்று தெரிந்திருக்குமேயானால் கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களில் இந்து மதத்தில் ஏற்பட்டுள்ள எத்தனையோ மாற்றங்களைச் செய்ய முடியாமல் போயிருந்திருக்கும். பல அவதாரங்கள், வகை வகையான முனிவா்கள் பல்வேறு காலங்களில் இந்த உலகமாகிய மேடையில் தோன்றி தங்களது வாழ்க்கையின் முலம் வாழ்ந்துக் காட்டியும், உபதேசங்களாலும் இந்து மதத்தை வளப்படுத்தியுள்ளனா். அதனோடு அந்தந்தக் காலத்திற்கு ஏற்றபடி மக்களுக்கு ஏற்புடைய வழியில் மதச்சம்பந்தமான நூல்களில் பல விளக்கவுரைகளையும் அளித்து சென்றுள்ளனா். மேலும் தங்களது சொந்த ஆன்மீக அனுபவங்களின் முலம் அவற்றின் தகுதியையும் நிரூபித்து விட்டனா். மதங்களில் காலத்திற்கேற்ற படியான மாற்றங்களைக் கொண்டு வராவிடில் அது வழக்கினின்றும் மறைந்து விடும்.-
-
இறையனுபூதி தவிர்க்கக் கூடாத குறிக்கோள்
-
மனிதரது வாழ்வில் அடையப்பட வேண்டியதாக நான்கு இலக்குகளை அல்லது குறிக்கோள்களை இந்து மதம் உணர்த்துகிறது . அவை முறையே காமம் , அர்த்தம் , தர்மம் மற்றும் மோட்சம் எனப்படுகின்றன . புலனின்பங்களின் நுகர்ச்சியே காமம் எனப்படுவது . உலக வாழ்க்கைக்கு தேவையான பணம் மற்றும் சொத்துக்கள் அர்த்தம் என்றாகிறது . மதம் சம்பந்தப்பட்ட கடமைகளைச் செய்வது தர்மம் ஆகும் . இறைத்தன்மையை உணர்த்து அதன்மூலம் வீடு பேற்றை அடைவதே மோட்சம் . மேலே கறிப்பிட்ட நான்கில் காமம் கடைப்பட்டது . ஏனெனில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் காம உணர்ச்சி பொதுவானது . அர்த்தம் அதைவிடச் சற்று மேலான இடத்தைப் பெறுகிறது . எப்படியெனில் பொருள் சேர்க்கும் பழக்கம் மனிதனிடம் மட்டும் உள்ளது . மூன்றாவது தர்மம் மனிதனைத் தன்னையே அா்பணிக்கவல்ல தியாக உணா்ச்சியின் பால் இட்டுச் செல்லும். காமமும் அா்த்தமும் சுயநலத்திற்கு முதலிடம் அளிப்பவை. தா்மம் அப்படிப்பட்டதல்ல . எனவே தா்மமானது , காமம், அா்த்தம் ஆகிய இரண்டையும் விட உயா்ந்தது. இந்து மதமானது புனித நூல்களில் கூறியுள்ளபடி தொடா்ச்சியான சில கடமைகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் உலக சம்பந்தமான பொருட்களை ஈட்டுவதிலும், சேமித்து வைத்துக் கொள்வதிலும் தா்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது. தனது இன்ப நுகா்ச்சிகளை அனுபவிப்பதற்குக் கூட தா்ம வழிகளில் செல்ல வேண்டும் என்று சொல்கிறது. எனவே தான் சில கற்றறிந்த பெரியவா்கள் காமத்தையும் , அா்த்தத்தையும் தா்மத்தின் இரு பிரிவுகளாகக் கருதுகின்றனா். மோட்சம் என்பது எளிதில் அடையக்கூடியது அல்ல. இறையனுபூதி பெற்றவருக்கு மட்டுமே முக்தி அல்லது விடுதலை என்ற பொருளை உடைய மோட்சம் கிட்டும்.
-
கடவுள் எங்கும் எதிலும் நிறைந்து இருக்கிறார் என்பதை இந்து மதம் நம்புகிறது. ஒவ்வோர் உயிரிலும் தெய்வத்தன்மை இருக்கிறது என்று சொல்கிறது. தெய்வத்தன்மையானது அனைவரிடமும் சரிசமமான அளவில் காணப்பட்டாலும் அதன் வெளிப்பாடு சரிசமமாக இருப்பதில்லை. இத்தகைய இயற்கையாக அமைந்த தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தவே அல்லது தெளிவாக்கவே ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதன் நோக்கமாக அமைகிறது. இவ்வாறாக இடையறாதப் பயிற்சிகள் முலம் இறைத்தன்மையைத் தெளிவுபடுத்திக் கொண்டவா்களையே “இறையனுபூதி” பெற்றவா்கள் என்பார்கள். அவா்களால் தான் மோட்சத்தை அடைய முடியும். தெய்வீகத்தன்மை என்பது மனிதனின் உண்மையானநிலை“ அதுதான் மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது. ஒருவா் வெளிப்படையாக இருக்கும் எந்த ஒன்றையும் எளிதில் விட்டுவிடலாம்.ஆனால் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றான இந்த தெய்வீகத்தன்மையை எளிதில் விட்டு விட முடியாது. மனிதனுக்குள் இருக்கும் இந்தத் தெய்வீகத் தன்மையானது விரைவாகவோ அல்லது காலம் கடந்தோ வெளிப்பட்டு விடும். அனைவருமே எந்த ஒரு விதி விலக்கும் இல்லாமல் மோட்சத்தை அடையலாம். மிகவும் உயா்ந்த ஆன்மீக நிலையை எய்தியவா்கள் இப்பிறவியிலேயே மோட்சக்தை அடைவார்கள். சிலா் அவா்களது மரணத்திற்குப் பின் அடைவார்கள். ஆன்மீகப்பயிற்சியை விரிவுபடுத்திக் கொள்ளாதவா்கள். மேலும் பல பிறவிகளை எடுக்க நேரலாம். இலக்கை விரைவாக அடைய ஆன்மீகப் பயிற்சியை உண்மையுடன் செய்ய வேண்டும். ஒவ்வொருவருமே அவா்களை அறியாமலேயே இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
-
இந்து மதக்கொள்கையின் படி ”எல்லையற்ற இன்பம்” என்பது தெய்வீகத் தன்மை என்பதன் முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக அமைகிறது. மனிதன் காமத்திற்கும், அா்த்தத்திற்கும் பின்னால் செல்வது போல் தோன்றினாலும் அவனது முயற்சி இந்தத் தெய்வீகத்தன்மை என்னும் பேரின்ப நிலையை நோக்கியே இருக்கும். மனிதனுக்குப் பணமோ, மகிழ்ச்சியோ எவ்வளவு கிட்டினாலும் அதனால் அவன் திருப்தி அடையாமல் மேலும் அவற்றைப் பெறவே விரும்புவான். அதற்கான முயற்சிகளும் செய்வான். அவ்வாறு அவன் அடையும் பணத்திற்கு இன்ப நுகா்ச்சிகளுக்கும் ஓா் எல்லை இருக்கும் . முடிவில் அவன் இவற்றின் முலமே நிலையான இன்பத்தை அடைய முயன்று இது எந்த நிலையிலும் இல்லை என்று சொல்லும் படி ஆகி விடுவான். இத்தகைய விழிப்புணா்வு ஏற்பட்டவுடன் தன்னுள் இருக்கும் ”பேரின்பம்” என்னும் நீருற்றைத் தேடத் தொடங்குகிறான். வற்றாத இந்தப் பேரின்ப ஊற்றை வந்து அடைந்தவுடன் அவனது தேவைகள் யாவும் (விருப்பமும் ஆசைகளும்) அவனை விட்டு மறைந்து விடும். அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்பா். ஆசைகள் அற்றுப்போனவுடன் அவனது மனம் தனக்குள்ளும், வெளியேயும் இருக்கும் எங்கும் நிறைந்த கடவுளை உணரும். பிறகு அவன் எந்தப்பொருளிலும் அனைத்து ஜீவராசிகளிலும் கடவுளே சாராம்சமாக விளங்குவதை உணா்வான். அத்தகைய நிலையை எய்திய அவன் அனைவரிடமும் அன்பு செலுத்துவான். ஏன் பகைவா்களிடம் கூட நேசக்கரம் நீட்டுவான். ஏனெனில் அவனுக்கு எங்கும் பகைவா்களே கிடையாதே! அவன துன்பம்,பயம்,கஷ்டம் ஆகிய எதையும் உணரும் நிலைக்கு அப்பார்பட்டவனாகிறான். இத்தகைய நிலைக்கு வந்தவுடன் அவன் உலகியல் சம்பந்தப்பட்ட எந்த செயலில் ஈடுபடாலும் அதனால் அவனுக்கு இன்பமே கிட்டும். அனைத்துமே மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். ஏனெனில் இத்தகைய நிலையானது இறையோடு கலந்து உறவாடுவதாகும். அவன் தன்னை கடவுள்நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமாக காண்பான. கடவுளே அனைத்துப் பாத்திரங்காளாக விளங்குவதையும், தன்னுடைய பாத்திரத்தையும் அவரே எற்று நடத்துவதையும் உணருவான். இந்த நிலையை எட்டியவுடன் அவனால் பிறப்பு, இறப்பு , மாற்றம் என்பவற்றோடு தொடா்புடைய உடல், மனம், பிரிவு மனப்பான்மை ஆகியவற்றை பார்க்க முடியாது. அவன் தான் நிரந்தரமான தெய்வதன்மை கொண்டவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை.ப் பெற்று விடுவான். எனவே பிறப்பும்,இறப்பும் இனி இல்லை என்ற உறுதியோடு இருப்பான். இதுவே மோட்சம். புலனின்பங்களில் பற்று அற்று விடும். அவற்றின் பால் சுவை அற்று விடும். எனவே இந்து மத நூல்கள் இந்த நிலையை எய்தவே முயற்சி செய்ய வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.
4
-
வேதங்கள் என்பது தெய்வீக உண்மைகளின் வெளிப்பாடு . சமஸ்கிருதத்தில் வேதம் ” என்ற சொல் அறிவைக் குறிக்கும். இந்து மத முனிவா்கள் இவ்வுண்மைகளை மிகவும் புனிதம் வாய்ந்ததாக கருதினார்கள். எனவே நீண்ட காலம் வரை இதற்கு வரி வடிவத்தை அளிக்கவில்லை. அவா்கள் வேதங்களைத் தங்களது நினைவிலேயே பத்திரமாக வைத்துப் பாதுகாத்து வந்தனர். தகுதி வாய்ந்த மாணவா்கள் கிடைத்தால் அவா்களுக்கு மட்டும் வாய் வழியாக கற்றுக் கொடுத்தனா். முனிவா்கள் இல்லற வாழ்வில் ஈடுபடாது தனிமையில் தவம் புரிந்து வியக்கத்தக்க நினைவாற்றலைப் பெற்றிருந்தார்கள். பிரம்மசாரியத்தைக் கடைபிடித்தால் நினைவாற்றலும், மனஆற்றலும் வளரும் என்பதை நன்கு உணா்ந்திருந்தனர். அத்தோடு ஆயுளும் அதிகரிக்கும் . தெய்வீக நூல்களில் கூறப்பட்டுள்ள உண்மைகளை உணா்ந்து கொள்ளும் திறமையும் அதிகரிக்கும். இத்தகைய திறமையை வளா்த்துக் கொண்டு வேதங்களில் கூறப்பட்டுள்ள எண்ணற்ற உண்மைகளைக் காதால் மட்டுமே கேட்டு தங்களது நினைவில் தக்கவைத்துக் கொண்டனா். நூல்களைப் பார்த்துப் படிக்காமல் செவிவழியாகக் கேட்டு அறிந்து கொண்டதால் இந்த உண்மைகள் “ஸ்ருதி” என்று அழைக்கப்பட்டன. ஞானிகளால் பிறா் கண்களில் படாமல் வைக்கப்பட்ட உண்மைகளைத் தமிழில் ”மறை” என்கிறோம்.
-
ஆரம்ப காலத்தில் ஆசிரியா்கள் ஒத்த பண்புகளையுடைய ஒரே நாட்டினராக இருக்கவில்லை. பல்வேறுபட்ட இனங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா். அதிஷ்டவசமாக தெய்வீக உண்மைகளை உணா்ந்த முனிவா்கள் ஒரு சில வம்சத்தார்களின் வழியில் தோன்றினர். இவா்கள் தங்களது தூயநெறியினால் உண்மைகளை நேரில் கண்டவா்கள். அதனால் அவா்கள் ”ரிஷிகள்” எனப்பட்டனா். ரிஷிகள், முனிவா்கள, ஞானிகள் மறைகளைப்போற்றிப் பாதுகாத்து செவிவழியாகவே கற்பித்து வந்தனா். நல்ல காரியங்களைச் செய்யும் சான்றோர்களை இந்து மதம் பாராட்டும். நாளடைவில் வேத உண்மைகளைச்(மறைப் பொருள்களை) சேகரித்து , தொகுத்து வைக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.
-
கிருஷ்ணதுவைபாயனவியாசா் என்ற முனிவா் பல்வேறு வழிகளில் முயன்று வேத உண்மைகளைச் சேகரித்து தொகுத்து புத்தக வடிவில் அமைத்தார். அவையே வேதங்கள் எனப்பட்டன.வேதங்களை ரிக் வேதம் , சாம வேதம், யஜுர் வேதம் , அதா்வண வேதம் என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். வேதத்தின் பழைய நூல்களில் தற்போது வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தில் ரிக் வேத பாசுரங்கள் எழுதப்பட்டிருந்தன. வேதங்களைச் சீரிய முறையில் தொகுத்தளித்த
”கிருஷ்ண துவைபாயன வியாசரை” வேத வியாசா் என்று பெருமைப்படுத்தினார்கள். இன்றும் இந்துகள் நன்றி மறவாது அவரைக் கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடுகின்றனா். அந்த நாள் ”குருபூா்ணிமா” என்று சொல்லப்படுகிறது. குரு என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆசிரியர் என்ற பொருள் . இங்கு ‘ குரு ’ என்பது வியாசபகவானை குறிக்கும் .
-
உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் , ஏனைய பொருள்களும் தெய்வீகத்தன்மை பொருந்தியது என்பதே மறைகள் கூறும் மிக முக்கியமான செய்தியாகும் . அஹம் ப்ரம்மாஸ்மி ( நான் பிரம்மம் )
தத்வமஸி ( நீதான் அது )
அயம் ஆத்மா ப்ரம்ம ( உள்ளே வசிக்கும் ஆத்மாவே பிரம்மம் ) ப்ரஞானம் பிரம்ம ( உயர்ந்த அறிவே பிரம்மம் ) . என்ற நான்கு முக்கியமான கூற்றுக்கள் வேதங்களில் உள்ளன. அவை ‘ மகாவாக்கியங்கள் ’ எனப்படுகின்றன .
இந்த நான்கு பெரிய வாக்கியங்களள் மூன்று ஆன்மாவின் தெய்வீகத் தன்மையையும் நான்காவது கடவுளின் இயல்பையம் கூறுவதாக உள்ளது . கடவுள் எங்கும் எதிலும் இருந்தபோதிலும் , அவர் ஒவ்வொரு பொருளிலிருந்தும் ஒவ்வொர் இடத்திலிருந்தும் சமமாக வெளிபடுத்துவதில்லை . இதை விளக்க100 வாட் பல்புகள் நான்கினை எடுத்துக்கொள்வோம் . அவை நான்கும் ஒரே மாதிரியான அளவிலேயே வெளிச்சத்தைக் கொடுக்கும். எந்தவிதமான வேறுபாடும் இருக்காது.முதல் பல்பை ஒரு காகிதத்தாலும் இரண்டாவதை இரண்டு காகிதங்களாலும் சுற்றிவைத்துவிட்டு நான்காவதை காகிதம் எதுவும் சுற்றாமல் வைத்து ஸ்விட்சை போட்டால் நாம் நான்கிலிருந்தும் ஒரே அளவான ஒளியைப்பெற முடியாது.ஆனாலும் பல்புகளின் ஒரே அளவான வெளிச்சத்தைக் கொடுக்கும் திறன் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.அதே போன்றே கடவுள் எங்கும்,எதிலும் நிறைந்திருந்தாலும் வெளிப்படும் வகையில் மாற்றம் காணப்படுகிறது.
தெய்வீக அவதாரங்களிடமும் ஆன்மீக ஒளிபெற்றவர்களிடமும்,ஆன்மீக ஒளி பெற்றவர்களிடமும் கடவுளின் வெளிப்பாடு அதிகமாகத் தெரியும்.பாறை போன்ற உயிரற்ற பொருட்களில் மிகவும் குறைவான அளவிலேயே வெளிப்படும்.வேத சம்மந்தமான இலக்கிங்கள் மனிதனின் தெய்வீக இயல்பை உறுதிப்படுத்துவதுடன் அதன் வெளிப்பாட்டிற்கான வழிமுறைகளை அளிக்கின்றன
பல்வேறு அறிஞர்களின் கணிப்பின்படி வேத சம்மந்தமான நூல்கள் சற்றேறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.வியாவர் எப்போது வாழ்ந்தார் என்பதைப்பற்றிய பல்வேறு சர்ச்சைகள் உள்ளன.நிச்சயமாக அவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.கி.மு.4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினி இலக்கண ஆச்சிரியர் மகாபாரதத்தைப்பற்றிய தன்னுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.எனவே மகாபாரதத்தின் ஆசிசரியரான வியாசர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.இந்து மதத்தின் சிறப்பினை விளக்கவல்ல வேறு எத்தனையோ புனித நூல்கள் இருப்பினும் வேதங்களில் காணப்படுபவை கண்டுணர்ந்தவர்களால் கூறப்பட்டதால் அதற்கு தனி கௌரவம் கொடுக்கப்படுகிறது. மகான்களின் கூற்றாகையால் அது நம்பகத்தன்மையுள்ள நூல்தானா என்ற கேள்விக்கே இடம் கிடையாது.மேலும் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய ரிஷிகளும்,முனிவர்களும் வேதங்களின் உண்மையை தங்களது சொந்த அனுபவத்தைக்கொண்டு நிரூபித்துச் சென்றுள்ளனர்
வேதங்கள் நான்கு பிரிவுகளைக் கொண்டது என்பதைக் கண்டோம். அவை ஒவ்வொன்றும் சம்ஹிதை, பிரம்மணம் என்ற பிரிவுகளைத் தம்முள் கொண்டவை. சம்ஹிதையில் துதிப்பாடல்கள் உள்ளன. பிரம்மணம் அப்பாடல்களை
விளக்குவதோடு அவற்றை எப்படி எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை த் தெளிவாக்குகிறது. மிகவும் உயா்ந்த தத்துவங்கள் அடங்கிய பகுதிகள் சில வேதங்களில் உண்டு. அவற்றை உபநிடதங்கள் என்று கூறுவார்கள். உபநிடதங்களை வேதாந்தம் என்றும் சொல்வார்கள்.அது அறிவின் உயா்ந்தநிலை அல்லது எல்லை என்று பொருள்படும். இன்று நமக்கு 108 உபநிடதங்களே கிடைத்துள்ளன. அவற்றுள் ஈச, கேன, கட, முண்டக,மாண்டூக்ய ,ஐதரேய,தைத்திரிய ,சாந்தோக்ய,ப்ரச்ன,ஸ்வேதாஷ்வதர,பிருஹதாரண்யக போன்றவை மிகவும் புகழ்பெற்றவை. ஸ்மிருதிகள்
தர்சனம் மற்றும் தந்திர சாஸ்திர நூல்களை விடுத்து மற்ற புனித நூல்களை ‘ வேதங்கள் என்றும் , ‘ ஸ்மிருதிகள் ’ என்றும் இருவகைப் பிரிவகளுக்குள் கொண்டு வந்துவிடலாம் . இவற்றில் வேதங்களே அதிகார பூர்வமானவை அதாவது வேதங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் . ‘
-
ஸ்மிருதி(சட்ட நூல்)
-
‘ஸ்மிருதி ’ என்பது ஒரு சட்ட நூல் . இந்துக்கள் பின்பற்றப்பட வேண்டிய சட்டத்தொகுப்பாகும். இத்தகைய சட்டநூல்கள் பல இருப்பினும் மனுவினால் ஆக்கப்பட்டது மிகவும் பிரசித்திபெற்றது யாக்ஞவல்கியர் , பௌதாயனர் , ஆபஸ்தம்பர் , வஷிஸ்டர் , கௌதமர் போன்றவர்கள் பண்டைய காலத்தில் சட்ட நூல்களை ஆக்கித்தந்தவர்கள் . இந்த வரிசையில் மிகக் கடைசியாக சட்டநூலைத் தந்தவர் ரகுநந்தனர் ஆவார் .பல்வேறு காலங்களில் வாழ்ந்த முனிவா்கள்
5
-
ஆறுவகையானத் தத்துவங்களை அளித்துள்ளனா். அவை வட மொழிகளில் தா்சனங்கள் எனப்படும். அவற்றின் அடிப்படை வேதங்களைச் சார்ந்து இருப்பதால் அவை மத சம்பந்தமான தத்துவங்களாகும்.அவை ஆறு வகைப் படும். 1.கபிலா் அளித்தது சாங்கியம்.
2.ஜைமினி என்பவா் பூா்வ மீமாம்சையின் ஆசிரியர் 3.வியாசர் உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தத்தைத் தந்தவா்.4. பதஞ்சலி முனிவா் யோக சூத்திரங்களை அளித்தார்.5.கௌதமா் நியாயம் என்றதைத் தந்தார். 6.கணாதா் வைசேஷிகம் என்பதை அளித்தார். இதில் வரும் வேதாந்தத்தையும் உபநிடதத்தையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது. மேலே கூறப்பட்ட ஆறு பேரும் மத சம்பந்தப் பட்டத் தத்துவங்களை ஒவ்வொரு தலைப்பில் ஒருபொருளைப் பற்றிய விஷயங்களைச் சொந்தமாக எழுதி வைத்துள்ளனா்.அவை பொன்மொழிகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன. அவை வடமொழியில் ”சூத்திரங்கள்” எனப்படுகின்றன. இந்த சூத்திரங்கள் சாரமுடனும் சுருங்க உரைக்கும் வகையிலும் உள்ளன. எனவே இவற்றைத் தெளிவாக விளக்க வல்ல உரைகள் தேவைப்பட்டன. பின்னாளில் வந்த அறிஞா்கள் அவற்றுக்கு பல விளக்க உரைகளை அளித்துச் சென்றுள்ளனா்.
-
உத்தர மீமாம்சையின் அடிப்படையின் வியாசா் இயற்றியது வேதாந்த சாரம் அதுவே பிரம்ம சூத்திரம். என்றும் சொல்லப்படுகிறது. இதற்குப் பலா் உரை எழுதி இருக்கிறார்கள். சங்கராச்சாரியார் , ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார் ஆகியோர்களது உரைகள் மிகவும் பிரபலமானவை. இந்து மத உண்மைகள் ஆழம் காண முடியாதவை,கடினமானவை. அவற்றின் பொருளும் தெளிவாகப் புரியாது. பெரும்பான்மையான மக்களின் அறிவுக்கு எட்டாதவை.
இந்து மத உண்மைகள் ஆழம் காண முடியாதவை,கடினமானவை. அவற்றின் பொருளும் தெளிவாகப் புரியாது. பெரும்பான்மையான மக்களின் அறிவுக்கு எட்டாதவை.
இக்குறையைப் போக்குவதற்கு இந்திய முனிவா்கள் ஒரு சிறப்பான மத சம்பந்தமான இலக்கியத்தைப் படைத்தனா். அவையே புராணங்கள் எனப்பட்டன. அவை சுவையோடும் , எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் இருந்தன. அதற்காகக் கதைகளாகவும் , நீதிக் கதைகளாகவும் கூறிக் கருத்துக்களைப் புரியவைத்தனா். பதினெட்டு புராணங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள் பாகவத புராணம் , ஸகந்த புராணம் ,வாயு புராணம், பத்ம புராணம், மார்கண்டேய புராணம் மற்றும் அக்னி புராணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்துக்களிடையே மிகவும் பிரபலமான சண்டி எனப்படும் தேவி மகாத்மியம் மார்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியே. இந்து மதத்தின் பெருமைக்குரிய இரண்டு இதிகாசங்கள் வால்மீகி இயற்றிய இராமாயணமும், பகவான் வியாசா் அருளிய மகாபாரதமும் ஆகும். இவை இரண்டிலும் ஆரிய இனம் ,அரச வம்சம் ஆகியவற்றை சார்ந்த கதைகளும்.,நீதி நூல்களின் அறிவுரைகளும் காணப்படுகின்றன. இலக்கண ரீதியாகவும் புராண விஷயங்களைக் கொண்டவை என்ற அடிப்படையிலும் இந்த இரண்டு இதிகாசங்களும் பாராட்டப்படத்தக்கவை்
-
மகாபாரதத்தில் வரும் கீதையின் பெருமை யைப் பற்றிப் பேசத்தேவையில்லை. அது மகாபாரதத்தில் அடக்கம். இராமாயணம் மற்றும் மகாபாரத நாயகா்கள் என்றென்றும் முன்மாதிரியாக வைத்துப் பின்பற்றப்படவேண்டியவா்கள். மகாபாரதத்தின் நடுவே வரும் பகவத்கீதையானது உலகம் முழுவதும் பிரபலமானது. கடவுளின் ஒரு அவதாரமான கண்ணபிரானுக்கும் , ஆரிய அரசகுமாரனான அா்ச்சுணனுக்கும் இடையே நடைபெற்ற சம்பாஷிணையே கீதையாகும். சிறந்த சீடனான அா்ச்சுணன் கேட்கும் கேள்விகளுக்குச் சிறப்பான ஆன்மீக உபதேசங்களை விடையாக அளிக்கிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் . இது உண்மையில் இந்து மதத்திற்கான அரும் பெரும் பொக்கிஷமாக இருக்கிறது. அவற்றில் உபநிடதங்கள் கூறும் சிறப்பான போதனைகள் அடங்கி இருப்பதால் கீதையும் உபநிடதங்களின் தரத்திற்கு ஈடாக உயா்த்தப்பட்டுள்ளது.
-
-
எந்த ஒரு மத சம்பந்தமான நீதி நூலினால் அறிவு பரப்பப்படுகிறதோ அதுவே தந்திர நூல் எனப்படுகிறது. வேத நூல்களின் அடிப்படையில் அவை கடவுளை ஆண், பெண் என்ற இருபால் தெய்வங்களாக எடுத்துக்காட்டுகின்றன. அதுவே சிவ சக்தி தத்துவமாகும். சிவனின் ஆக்கும் திறனே சக்தி எனப்படுகிறது. நவீன அறிவியல் கண்ணோட்டத்தில் சிவனை நிலைச் சக்தியாகும், சக்தியை இயக்கு சக்தியாகவும் குறிப்பிடலாம். நிலைச் சக்தி சுறுசுறுப்பாக செயல்படும் போது இயக்கு சக்தியாகிறது. சிவன் செயல்படும் போது சக்தி எனப்படுகிறார். அதே போன்று சக்தி செயலற்று இருக்கையில் சிவனாக அழைக்கப்படுகிறது.
-
சக்தியினால் இவ்வுலகம் படைக்கப்பட்டது. சிவனுக்கும், சக்திக்கும் இடையே உள்ள உறவு , தீக்கும் அதன் எரியும் திறனுக்கும் இடையே காணப்படுவது போன்றதே. சிவனும் சக்தியும் ஒன்றே, என்றும் பிரிக்க முடியாது. சக்திக்குப் பல பெயா்கள் உண்டு. அதில் ஒன்று தான் பார்வதி. தாந்திரிக நூல்களில் கூறப்படும் விஷயங்கள் சிவனுக்கும், பார்வதிக்கும் இடையே நடைபெறும் சம்பாஷணை வடிவிலேயே இருக்கும். சிவன் ஆன்மீக அறிவுரைகளை அளிக்க பார்வதி அவற்றைக் கேட்பது போல் அமைபவை ஆகமங்கள் எனப்படும். பார்வதி ஆசானாகவும் சிவன் பார்வதி கூறும் அறிவுரைகளைக் கேட்பது போல் அமைபவை நிகமங்கள்.
-
எத்தகைய நிலையில் இருப்பினும் ஒருவனது ஆன்மீக வளா்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாய் இருக்கக் கூடிய தகுதி வாய்ந்தது தந்திர சாஸ்திரம். பண்டிதனும் பாமரனும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. விரிவான இலக்கிய வளத்துடன் கூடியது தந்திரம். அவற்றில் 64 நூல்கள் பிரபலமானவை. அதிலும் மகாநிர்வாணம் , குலசாரம்,பிரபஞ்ச சாரம், குலார்ணவம், ருத்ரயாமளம், விஷ்ணுயாமளம் ,பிரம்மயாமளம் , தந்திரராஜம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சிவாகமங்கள் தந்திர நூல்களுடன் தொடா்புடையவை. 28-சிவாகம நூல்களில் தற்போது 20 நூல்களே கிடைத்துள்ளன.
-
இந்து மதத்தில் வைணவா்கள் என்ற ஒரு பிரிவினா் உள்ளனா். வைணவத்தில் ஒரு சில பிரிவினா்கள் பஞ்சராத்ர சம்ஹிதையைத் தங்களுடையது என்பார்கள். சம்ஹிதைகள் என்று 250 நூல்கள் உள்ளன. பிருஹத் பிரம்மம் , ஈஸ்வரன்,ஞானாமிர்தசார சம்ஹிதைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்தோ ஆசிரியா்களின் பூா்வீகம் பற்றிய தெளிவான ஒரு முடிவு எடுப்பது மிக மிகக் கடினம். அவா்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றிச் சான்றோர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளா்கள் , மானிட வளா்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்பவா்கள் , வரலாற்று ஆசிரியா்கள் மொழி வல்லுனா்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்தோ ஆசிரியா்களின் பூா்வீகம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். இவா்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தும் வெவ்வேறு பல கருத்துக்களைக் கூறுகின்றனரேயன்றி ஒரு பொதுவான முடிவிற்கு வர இயலவில்லை.
-
எவருடைய கருத்து எப்படி இருந்தால் என்ன? இந்து மதத்தை விளக்கியவா்களுள் தலைசிறந்தவா் சுவாமி விவேகானந்தா். அவா் இந்தோ ஆசிரியா்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களே என்றும் எங்கிருந்தோ வந்து இங்கு குடியேறியவர்கள் அல்லர் என்றும் நம்புகிறார்.
-
பண்டையகாலத்தில் ஆரியர்கள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். நகரத்தார் போன்ற சமூக அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் கால்நடைகளைப் பேணி வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். அதுவே அவர்களது செல்வம். கால்நடைகளின் மேய்ச்சலுக்காகப் பசுமையான புல்வெளிகளை நாடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று விடுவார்கள். இயற்கையின் சீற்றங்களிலிருந்து கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
-
வட மொழிகளில் கால்நடைகளைப் பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தை ”கோத்ரா” என்பர். இவை அளவைப் பொறுத்து குறைவான எண்ணிக்கையில் தான் இருந்தன. இந்தோ- ஆரிய இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒரே கோத்ராவில் தங்களது கால்நடைகளை வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள். இதனால் ஒருகுடும்பத்தினரின் கால்நடைகள் வேறு ஒரு குடும்பத்தின் கால்நடைகளுடன் கலந்து போக நேரிட்டது. எனவே கால்நடைகளைச் சொந்தம் கொண்டாடுவதையொட்டி சண்டை சச்சரவுகள் வலுத்தன. இவற்றைத் தீர்த்து வைத்துச் சரியான தீர்ப்பை வழங்குவதற்காகச் சில மேற்பார்வையாளர்களை நியமித்தனர். அவர்களும் நீதிபதியைப் போல் பூசல்களைத் தீர்த்து வைத்தனர்.
-
அறநெறியிலும் , ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கியவர்களே மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது உயர்ந்த குணங்களின் சிறப்பால் கோத்ரபதி என்றழைக்கப்பட்டனர். அவ்வாறு தலைவர்களாகத் திகழ்ந்தவர்களில் ஒரு சிலர் பிற்காலத்தில் சிறந்த ஆன்மீகவாதிகளாகப் புகழ்பெற்றனர். அவர்களில் மரியாதைக்குரியவர்களாகத் திகழ்ந்தவர்கள்தான் சாண்டில்யர்,பரத்வாஜர்,காஸ்யபர் ஆகியோர். இவர்கள் ஞானிகளாகக் கருதப்பட்டார்கள். ரிஷிகள் என்றும் அழைக்கப்பட்டனர். ஓர் ஆரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேறு ஓர் ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்திக்க நேர்ந்தால் , தான் இந்த கோத்ரபதியின் கூட்டத்தைச்சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வார்கள் .
-
எங்கள் கோத்ரபதி பாரத்வாஜர் , எங்கள் கோத்ரபதி சாண்டில்யர் என்பது போன்று கூறிக் கொள்வார்கள். இந்த கோத்ரபதிகளின் வம்சாவளியினரே இன்று இந்துக்கள் எனப்படுகின்றனர். தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள கோத்ரபதியின் பெயர்களை க் கூறிக்கொள்கிறார்கள். எனவே இந்துக்கள் தங்களது முன்னோர்களது கோத்திரத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஒரே கோத்திரத்திற்குள் இனப்பெருக்கம் செய்து கொள்வது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே வேற்று கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுடன் தான் சம்பந்தம் வைத்துக் கொள்வார்கள். பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்காலத்தில் இந்தக் கொள்கை அவ்வளவு கடுமையாகப் பின்பற்றப்படுவதில்லை.
6
-
பழைய காலத்தில் செய்யும் தொழில் மற்றும் குணத்தைப் பொறுத்தே ஜாதி முறைகள் பின்பற்றப்பட்டன. அத்தோடு அனைத்து ஜாதியினரும் சமமாகவே நடத்தப்பட்டனர். இந்தோ-ஆசிரியர்கள் ஜாதியின் அடிப்படையில் அதாவது சமூகத்தில் வாழும் வகையினையொட்டி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இந்த வகையான பிரிவானது தனிப்பட்ட மனிதனின் இயற்கையில் அமைந்த திறமை , தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது.
-
உண்மையில் , நாட்டம் . மனத்தெளிவு, கொல்லாமை, கருணையுள்ளம், தன்னலமற்ற தன்மை ஆகிய சிறந்தக் குணநலன்களைக் கொண்டவர்கள் பிராம்மண சமூகத்தினர் எனப்பட்டனர். பொதுவாக பூசாரிகளின் ஜாதியாகப் கருதப்பட்டது. அறநெறியிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்குபவர்களே பிறருக்குப் போதிக்கவும் , ஆன்மீகப் பாதைக்கு வழிகாட்டியாகவும் இருக்கத் தகுந்தவர்கள் என்று கருதப்பட்டது.
-
இயற்கையிலேயே போர்புரிவதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள் சத்திரியர்கள் எனப்பட்டனர். எனவே இராணுவப்பிரிவினரும் , அரசர்களும்,நிர்வாகத்திறமை கொண்டவர்களும் அந்தப் பிரிவிலிருந்தே வந்தவர்கள்.
-
வியாபார நுணுக்கமும் பொருளீட்டுவதில் வல்லவர்களும் வைசியர்கள் எனப்பட்டனர். ஏனையோர் சூத்திரர்கள் எனப்பட்டனர். அதில் குடியானவர்களும் , கலைஞர்களும் அடங்குவர்.
-
ஜாதிப் பிரிவுகளிலிருந்தும், தீண்டாமைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்ட குருமார்கள் அனைவருமே ஜாதிப்பிரிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாகக் கூறுவோமேயாகில் உலகைத் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்ட சந்நியாசிகள் ஜாதிக்கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.
-
அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையை சேர்ந்தவர்கள் அல்ல இருந்தாலும் அனைவராலும் மதிக்கப்பட்டார்கள்.
-
தீண்டத்தகாதவர்கள்
-
ஆரிய சமூகத்தினரது வாழ்க்கைக்குரியச் சட்டதிட்டங்களை மீறி நடந்து கொண்டவர்களும், அதிலும் உணவு, திருமணம் சம்மந்தமான விஷயங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டவர்கள் என்றும் கூறினார்கள்.
ஒரு ஜாதியின் நெறி முறைகளை பின்பற்றாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்தவர்களை ஜாதியிலிருந்து விலக்கிவைக்கும் பழக்கம் இருந்தது.இவர்களுடன் மற்றவர்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று புறக்கணித்தார்கள்.அதன்பின் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள்,பழங்குடிகள் போன்ற ஆரியர் அல்லாதவர்களும் தீண்டத்தகாதவர்கள் என்றே கருதப்பட்டார்கள்.ஆரம்ப காலத்தில் தீண்டத்தகாதவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்பட்டார்கள்.பிற்காலத்தில் இவர்கள் எண்ணிக்கை அதிகமாகியது.
-
மனுவின் கூற்றுப்படி காளான், பன்றி, நாட்டுக்கோழி, வெங்காயம், அட்டை ஆகியவற்றைச் சாப்பிடுபவர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டவர்கள். ஜாதிப்பிரிவுகள் தீவிரம் குன்றிய பின்னாட்களில் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டவர்கள் இழிவானவர்களாக நடத்தப்பட்டு ” தீண்டத்தகாதவர்கள்” என்ற பெயரையும் கொடுத்து விட்டனர்.
-
ஆரம்பத்தில் அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் சம அந்தஸ்து அளிக்கப்படும் வகையில் தான் நடந்துகொண்டார்கள் ஒவ்வொருவரது பங்கும் ஆரியச் சமூகத்திற்குத் தேவையாய் இருந்தது. பதவியிலும் அதிகாரத்திலும் இருந்தவர்கள் தங்களது நிலைமையைப் பயன்படுத்தி தகுதியும் , மன ஈடுபாடும் கொண்டவர்களைக் குறிப்பிட்ட ஜாதியினர் என்ற முத்திரையிட்டு அவர்களது ஜாதி பரம்பரை பரம்பரையாக வரும் என்ற நிலையை ஏற்படுத்தினர். அவர்கள் ஜாதியின் அடிப்படையில் அனுபவிக்கும் சமூகச் சலுகைகளை நிரந்தரமாக்கிக் கொள்ள விரும்பினார்கள். அதன் பலனாகத்தான் ஜாதிப் பிரிவுகள் இழிந்த நிலைக்குப் போகத் தலைப்பட்டனர்.
-
அந்தணர்கள் எனப்பட்டவர்கள் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். அறிஞர்களான பூசாரிகளைக் கொண்டவர்கள். அவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்லர். பெரிய பதவிகளையோ சமூக அந்தஸ்தையோ பெறவில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக உயர்ந்த ஜாதியினர் ஷத்திரியர்கள் . அரசர்கள், போர்வீரர்கள், அதிகாரிகள் போன்றோர் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்களே . அவர்களால் செல்வத்தையும், அதிகாரத்தையும் அனுபவிக்க முடிந்தது. வைசியர்கள் அதற்கு அடுத்த கீழ் ஜாதியினர் ஆவார்கள். இவர்களால் பண்டிதர்களாகவோ , மன்னர்களாகவோ, புரோகிதர்களாகவோ ஆக முடியாமல்போனாலும் தங்களது திறமையால் வியாபாரத்தில் ஈட்டிய பொருளைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடிந்தது.
-
அதிகமாக சலுகைகளை இழந்து நின்ற சூத்திரர்கள் வேதங்களையும் மற்ற கல்விப் பிரிவுகளில் எதையுமே. கற்பதிலிருந்தும் வஞ்சிக்கப்பட்டவர்கள். இந்த ஏற்ற த் தாழ்வுகளால் சமூகத்தில் கேடு விளையத் தலைப்பட்டது. ஜாதிகளின் இடையே பொறாமை , பகைமை,போட்டி போன்றவை வளரத்தலைப்பட்டன. இத்தருணங்களில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்களின் நிலைமை படுமோசமானது.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் ஆரியர்களது சமூகத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கி.மு. 327-லிருந்து இந்தியாவின் மீது அந்நியர்கள் முற்றுகையிடத் தொடங்கினர். கிரேக்கர்கள் ,ஹீணர்கள்,அரேபியர்கள்,துருக்கியர்கள்,ஆப்கானியர்கள் . பாரசீகர்கள்,மங்கோலியர்கள்,போர்ச்சுகீசியர்கள் . பிரெஞ்சுக்காரர்கள் , ஆங்கிலேயர்கள் போன்ற அந்நியர்களது படையெடுப்பு தொடர்ந்து இருந்து வந்தது. கி.பி-13-ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 600 ஆண்டுகள் முகம்மதியர்கள் இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர்.புத்தமதம் தோன்றிய பிறகு பெரும்பாலானவர்கள் துறவிகளாக மாறினர்.அதனால் இந்தியாவில் மக்கள் தொகை குறைந்தது.வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடிளேறியவர்கள் எண்ணிக்கையில் அதிகரித்தனர்.அவர்கள் ஆரியர் அல்லாதவர் என்று கருதப்பட்டனர்.ஆரியர்களின் சட்டதிட்டங்கள் இவர்களை கட்டுப்படுத்தவில்லை.ஆரியர்கள் இவர்களை தங்களுடன் இணைத்துக்கொள்ள தயாராக இல்லை. இந்தியாவை சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் மக்கள் தொகையில் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தனர்.அந்த காலத்தில் ஆரியர்,வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்,பழங்குடியினர் என்ற மூன்று பெரும் பிரிவினராக மக்கள் பிரிக்கப்பட்டிருந்தர்.ஆரியர்களின் கல்வி,பண்பாடு.ஆன்மீகம் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
-
18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர். 1947-ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திர நாடானது. மேலே கூறப்பட்ட படையெடுப்புகள் , அந்நியர்களது ஆட்சி ஆகியவற்றின் தாக்கம் இந்து சமூகத்தின் மீது பெரிய பாதிப்பையே ஏற்படுத்திவிட்டது. அதனால் சமூகத்திலும் மாற்றம் ஏற்பட்டது.அத்தோடு ஜாதிப்பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
-
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆங்கிலக்கல்வியைக் கற்று பயனடைந்தவர்கள் பிராம்மணர்களே.பரம்பரையாகச் செய்து வந்து புரோகிதத்தையும் , கல்வி கற்பிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு ஆங்கிலம் கற்றுக் கொண்டு மருத்துவர்கள் , பொறியியல் வல்லுனர்கள் , வியாபாரிகள், அரசாங்க ஊழியர்கள் , சட்ட நிபுணர்கள் என்று மாறி விட்டனர்.ஏன் ராணுவத்திலும் கூடச் சேர்ந்து விட்டனர். அந்தணர்களுக்கு அடுத்த மேல் ஜாதியினரும் ஆங்கிலக் கல்வியைக் கற்றுக்கொண்டு சமூகத்தில் உயர்ந்த வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், மிகவும் இழிந்த நிலையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இனம் கண்டு கொள்ள முடியாதபடி ஜாதிகளின் மூல நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும் இந்தியாவின் சில பகுதிகளில் இன்றும் கூட கீழ் ஜாதியினர் என்று ஒரு சிலரைத் துன்புறுத்தி வருகின்றனர்.
-
சுவாமி விவேகானந்தரின் கருத்தின்படி உயர்ஜாதியினர் பெற்றிருக்கும் கல்வி,பண்பாடு,ஆன்மீகம் அனைத்தும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.இதன் மூலம் ஜாதிகளிடையே சமத்துவம் ஏற்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி , கலாச்சாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடையப் பாடுபட வேண்டும். அது உயர்ந்த ஜாதி என்று மதிக்கப்படும் பிராம்மணர்களின் அந்தஸ்திற்கு உயர்த்தப்படவேண்டும். அதைவிட்டு அவர்களைக் கீழ்நிலைக்கு வரச் செய்வதால் தகுந்த பரிகாரம் அமையாது. அதற்குப் பதில் பல்வேறு வகையில் இந்து சமூதாயம் கீழ்நிலைக்குப் போகும் வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.
7
-
பண்டைய காலத்தில் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட இந்துக்கள் தங்களது வாழ்க்கையில் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியிருந்தது. மாணவர்களாக இருக்கும் போது பிரம்மசரியம் என்ற நிலை. கல்வி முடிந்து இல்வாழ்க்கையில் ஈடுபடும் போது கிருஹஸ்தாஸ்ரமம் என்ற நிலை. வாழ்க்கையில் நன்கு அனுபவித்தப் பிறகு அனைத்தையும் துறந்து எளிய வாழ்க்கையை மேற்கொள்ள காடுகளை நோக்கிச் செல்லும் போது வானப்பிரஸ்தம் என்னும் நிலை. வீடு பேறு வேண்டி துறவு மேற்கொள்வது சந்நியாசம் எனப்பட்டது. இவ்வாறாக பழங்கால ஆரியர்கள் வாழ்ந்து வந்தனர்.
-
கல்வி கற்பதற்காக ஏழிலிருந்து பதினோரு வயதுக்குட்பட்ட ஒவ்வோர் ஆரியப்பையனும் ஓர் ஆசிரியரை அணுகி அவரது வீட்டிலேயே வசிக்க வேண்டும். கல்வி கற்பது முடியும் வரை அவன் அங்கு தான் தங்க வேண்டும்.பொதுவாக கல்வி கற்கும் காலம் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கல்வி கற்கும் காலம் முழுவதும் அவன் பிரம்மச்சரியத்தையே கடைபிடிக்க வேண்டும். நற்குணங்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டும்.சீரிய ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்வதும் வற்புறுத்தப்படும். மாணவர்களது முன்னோடி அவர்களது ஆசிரியர்களே. எனவே அவர்கள் ஒழுக்கம் ஆன்மீகம் மற்றும் பல சீரிய நற்பண்புகளை ப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
-
மாணவர்களுக்கு வெறும் கல்வி புகட்டுவது மட்டுமல்லாது சிறந்த ஆன்மீக வாழ்க்கைக்கும் வழி காட்ட வல்லவராக இருக்க வேண்டும். மாணவர்கள் வேதம் பயில வேண்டும். அதனோடு இலக்கணம், செய்யுள் , தர்ம சாஸ்திரங்கள் , கணிதம், வான சாஸ்திரம் போன்றவற்றையும் கற்க வேண்டும்.
-
கடவுளின் காட்சியைப் பெற்று அதன் மூலம் வீடு பேறு பெறுவது தான் முடிவான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டது. ஆசிரியர்களும் தங்களிடம் கல்வி கற்க வரும் மாணவர்களைத் தங்களது சொந்த குழந்தைகளாகவே பாவித்து , அன்பையும் பாசத்தையும் பொழிந்தார்கள். மாணவர்களும் தங்களது ஆசானின் வீட்டை த் தங்களது சொந்த வீடாகவேப் பாவித்தார்கள்.வீட்டிற்கு வேண்டிய அனைத்து விதமான காரியங்களிலும் முழு ஒத்துழைப்பை அளித்தனர். மாணவர்களை அந்தேவாசி என்றும் ஆசிரியரை குரு அல்லது ஆசாரியர் என்றும் வடமொழியில் அழைத்தனர். மாணவனாக வாழும் இந்தக் காலமே ஆரியர்களின் வாழ்க்கைக்கு முதல் நிலை.
-
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே இருந்த உறவு பணத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல.ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து சம்பளமாக எந்த ஒன்றையும் பெற மாட்டார்கள். ஆரியர்களது பரம்பரையில் எந்த வகையான கல்விக்கும் ஊதியம் பெற்றுக் கொள்வது என்பது ஏற்புடையது அல்ல. அது மதச்சார்பற்றதாக இருப்பினும் சரி , ஆன்மீகக்கல்வியானாலும் சரி குருவானவர் மாணவர்களிடமிருந்து எந்த ஒன்றையும் பெற்றுக் கொள்ள மாட்டார். அதாவது மாணவர்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொண்டால் தான் கல்வி கற்பிக்கப்படும் என்ற நியதி வழக்கில் இருக்கவில்லை. பொதுவாக ஆசிரியர் இல்லறவாசியாக இருப்பார். மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.ஆடம்பரம் என்பது அவர்கள் அறியாதது. அவர்களது தேவைகளும் குறைந்தபட்சமான தாகவே இருந்தது, அவையும் அரசர்கள் எப்போதாவது அளிக்கும் அன்பளிப்பைக் கொண்டு நிவர்த்தி செய்யப்படும். மாணவர்களைக் காப்பாற்றுவது ஆசிரியருக்கு எந்த வகையான பொருளாதாரச் சிக்கலையும் ஏற்படுத்தவில்லை.ஏனெனில் மாணவர்கள் தங்களது உணவை அண்டை அயலார்களிடம் இரந்து தான் உண்ண வேண்டும் என்ற நியதி இருந்தது. அவர்களுடைய உடை மான் தோலால் ஆனதாக இருக்கும் அல்லது மரவுரியாக(மரப்பட்டையைச் சீர் செய்து ஆடை போல் அமைப்பது) இருக்கும். ஆசிரியர்களது பசுவை மாணவர்கள் பராமரிப்பார்கள். அது சுத்தமான , சத்தான பாலை ஏராளமாக அளிக்கும். எனவே எளிய உணவும் சுத்தமான பாலும் அவர்களது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தது. புல்லால் ஆன இடுப்புக்கச்சையை அணிந்தார்கள். தலையை ஜடாமுடி அலங்கரித்தது.
-
கல்வியை முடித்த மாணவன் ஸ்நாதகன் என்று அழைக்கப்பட்டான். அறிவு என்னும் நீரில் வெற்றிகரமாக நீராடி முடித்தான் என்று பொருள்படும். அதையே இன்றையக் கல்வி முறையில் கூறுமிடத்து கல்லூரியிலிருந்து பட்டப்படிப்பை முடித்து வெளியேறுவது போலாகும். மாணவர்கள் கல்வி கற்று பட்டம் பெற்று ஆசிரியரிடமிருந்து விடைபெறும் சமயம் தங்களது நன்றியையும், மரியாதையுடன் வெளிப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருள்களை அளிப்பார்கள். அப்போது பிரிவு உபசார விழா நடைபெறும். ஆசிரியர் மாணவர்களுக்கு இறுதி உரை அளிப்பார். தைத்திரீய உபநிடதம் வேதத்தின் ஒரு பகுதி. அதில் ஓர் ஆசிரியர் கீழ்கண்டவாறு பிரிவு உபசார விழாவில் உரை நிகழ்த்தியதாக வருகிறது. அந்த உரை மாணவர்களது கடமைகள், குறிக்கோள் ஆகியவற்றை பற்றியதாக இருக்கும். “உன்னுடைய சரியான செய்கையால் உனது நன்னடத்தை விளங்கட்டும். அதில் ஆன்மீக நூல்களைக் கற்பதும் ,கற்பிப்பதும் உள்ளடங்கும் . பேச்சு, செயல், எண்ணம் ஆகியவற்றில் உண்மை நிரம்பி இருக்க வேண்டும். எளிமையும், தன்னடக்கமும் பின்பற்றப்படவேண்டும். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் இதயபூர்வமான மகிழ்ச்சியுடன் பற்றற்ற மனத்துடனும் செய்யப்பட வெண்டும். உண்மையே பேசு, உன் கடமையைச் செய். ஆன்மீக நூல்களைக் கற்றுக் கொள்வதை நிராகரித்து விடாதே , சந்ததி என்ற நூலை அறுத்து விடாதே. உண்மையினின்றும் விலகி விடாதே. நன்மையைச் தரவல்ல பாதையை விட்டு அகன்று விடாதே. உயர்ந்த தன்மையை உடையவர்களை மதிப்பாயாக.உன்னுடைய தாய் உனது கடவுளாக இருக்கட்டும், உன்னுடைய தந்தையும் உனக்கு கடவுளாக இருக்கட்டும். உனது விருந்தாளியாக வந்திருப்பவரும் ஒரு கடவுளாக இருக்கட்டும். எப்போதும் குற்றமற்ற செயல்களை மட்டும் செய். பெரியவர்களிடம் எக்காலத்தும் உனது மரியாதையைக்காட்டு. எவருக்கு எதை அளித்தாலும் அன்போடும் மரியாதையோடும் அளிக்க வேண்டும். மனநிறைவுடனும், மகிழ்ச்சியோடும், பணிவும் கருணையும் கொண்டு அபரிமிதமாகத் தானம் அளிக்கப்படவேண்டும். எப்போதாவது உனக்கு நல்ல நடத்தை பற்றிய ஐயம் தோன்றினால் கபடமில்லாமல் சிறந்த நீதிமானாகவும், உண்மையின் பால் நாட்டமும் கொண்ட சீரிய ஆத்மாக்கள் வாழ்ந்து பழகிய நெறிகளை மேற்கொண்டு நடப்பாயாக. இவ்வாறாக எப்போதும் உன்னை நீ நடத்திச் செல்வாயாக. இது தான் தீர்ப்பு . இது தான தீர்ப்பு. இது தான் போதனை. இதுவே நீதி நூல்கள் இடும் கட்டளை. “,இவ்வாறு அந்த போதனை உள்ளது.
8
-
பண்டைய காலத்தில் பெண்களும் பையன்களைப்போலவே தங்களுடைய ஆசிரியர்களது வீடுகளிலேயே தங்கி கல்வி கற்று வந்தனர். பிற்காலத்தில் சமூக சட்ட திட்டங்களின் கடுமை காரணமாகப் பெண்கள் வீட்டிலேயே தங்கி கல்வி பயின்றார்கள். அச்சமயங்களில் அப்பெண்களின் உறவினராக விளங்கிய ஆண்களால் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தனர்
-
மான் தோல் உடுப்பது, மரவுரி அணிவது, ஜடாமுடி தரிப்பது போன்றவை பெண்களைப் பொருத்த மட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. சாப்பாட்டிற்கு பிஷை எடுப்பது என்பது அவரவர்களின் வீட்டில் மட்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இருப்பினும் ஏறக்குறைய கி .மு ஐந்தாம் நூற்றாண்டில் ஆண்களைப் போலவே கௌரவத்திலும், பதவியிலும் ஏராளமானப் பெண்மணிகள் கல்வி கற்று சிறந்த ஆசிரியர்களாகத் திகழ்ந்தார்கள் .
-
வேத காலத்தில் வாழ்ந்த கல்வியில் சிறந்த பெண்மணிகளுள் வாசக்னுவின் மகளான கார்க்கியையும் , பத்யஸ்வதீ என்பவரையும் கூறலாம்.இரண்டாவதாகக் கூறப்பட்டவருக்கு கல்விக்கு அதிதேவதை என்ற பொருளை அளிக்கும் “வாச்” என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது. வேத காலத்தின் முற்பகுதியில் விஷ்வவாரா, கோஷா, அபாலா போன்ற பெண் ரிஷிகள் வாழ்ந்தார்கள் . வேத காலத்தில் வாழ்ந்த பெண்கள் பாட்டு, நடனம், இசைக்கருவிகளைப் பயன்படுத்துதல் , வண்ணம் பூசுதல் , தையல்,கவிதை எழுதுதல் தச்சு வேலை, மாலைகள் புனைதல் மற்றும் கவிதை, கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள்.
-
தற்காலத்தில் பழைய மரபு கடைபிடிக்கப்படுவது கிடையாது. மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டில் தங்குவது, அங்கேயே கல்வி கற்பது போன்ற நிலை இல்லை. மான் தோல் அல்லது மரவுரி உடுத்துதல் , புல்லால் ஆன இடுப்புக்கச்சு அணிதல் , ஜடாமுடி தரித்தல் போன்ற வழக்கங்கள் கிடையாது. அண்டை அயல் வீடுகளுக்குச் சென்று பிஷை ஏற்கும் வழக்கமும் இல்லை. இந்தியாவில் இன்று ஏனைய மேல் நாடுகளில் காணப்படுவது போன்ற அதே கல்வி முறை காணப்படுகிறது. மற்ற நாடுகளைப் போன்றே ஆசிரியர்கள் பள்ளியிலும், கல்லூரிகளிலும் கற்பிப்பதற்கான ஊதியத்தைப் பெறுகின்றனர்.
-
1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன் பிரிட்டிஷார் ஆண்ட இருநூறு ஆண்டுகள் தான் அந்தப் பழங்காலக் கல்வி முறைகளில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது. இக்காலத்தில் இந்துப் பெண்கள் மேற்கத்திய பாணியில் உள்ள பள்ளிகளிலும். கல்லூரிகளிலும் கல்வி பயில்கின்றனர்.சில கல்வி நிலையங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலரும் சேர்ந்து படிக்கும் வகையில் இருந்தன. ஆண்களைப் போலவே பெண்களும் மனித இனம் பற்றிய கல்வி ,அறிவியல் ,பொறியியல், மருத்துவம் , கலைகள், கைவினைகள் போன்ற கல்வியைக் கற்கிறார்கள்.ஆண்களோ, பெண்களோ வேதங்களைப் பயில்வதே கிடையாது.அந்தப் பழக்கம் நடைமுறையிலிருந்து அகன்று விட்டது. நாகரிகத்திற்குப் புறம்பாகிவிட்து.இருப்பினும் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான மத சம்பந்தமான பண்டிகைகளைக் கோயில்களுக்கு சென்று முறைப்படி க் கொண்டாடுகிறார்கள்.
-
திருமண வாழ்வில் பெண்ணின் பங்கு
-
பண்டைய ஆரியர்களின் வாழ்க்கை நிலையின் இரண்டாவது கட்டம் கிருகஸ்தம். இந்த நிலை திருமணம் புரிந்துக் கொண்ட பின் துவங்குகிறது. மாணவன் வீடு திரும்பிய பிறகு ஆசிரியரின் அனுமதியுடன் தன்னுடைய ஜாதிப்பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொள்வான். அப்பெண் அவனுடைய கோத்திரத்தினின்றும் வேறுபட்டிருப்பாள். நீதி நூல்கள் இடும் ஆணையின் படி திருமணத்திற்குப்பின் அவன் நடந்து கொள்வான். அதன் படி அவன் தினந்தோறும் மற்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதோடு ”அக்னி ஹோத்திரம்” என்ற செயலைத் தினந்தோறும் செய்ய வேண்டும். அதன்படி நெருப்பானது கடவுளை விளக்குவதாக அமைகிறது.வேதங்களை ஒழுங்காக ப் படிக்க வேண்டும் . நேர்மையான வழியில் பொருளீட்ட வேண்டும். விருந்தோம்பல் பழக வேண்டும். குழந்தைகளைப் பேணிக்காக்க வேண்டும். ஏழைகளுக்கு இரங்கி தருமம் செய்ய வேண்டும்.மூத்தோர்களை மரியாதையோடு நடத்துவதோடு பெற்றோர்களையும் வீட்டில் வசிக்கும் உறவினர்களையும் போற்றி பாதுகாக்க வேண்டும்.
-
பண்டைய காலத்து நீதி நூல் வல்லுனரான மனுவின் கூற்றின்படி பெண்களைப் பாதுகாப்பது , கௌரவமாக நடத்துவது போன்றவை கிருஹஸ்தனின் கடமை. அவர்களுக்கு அவ்வப்போது விடுமுறை நாட்களிலும் பண்டிகையின்போதும் வெகுமதிகள் அளிக்க வேண்டும்.அவரது கூற்றின் படி எங்கு உறவினரான பெண்கள் வருத்தத்துடன் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் முழுவதுமாக அழிந்து விடும்.ஆனால் அதே சமயம் எங்கு பெண்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களோ அந்தக் குடும்பம் செல்வச் செழிப்போடு விளங்கும். கணவனும் மனைவியும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருத்தல் அவசியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வீட்டில் மகிழ்ச்சியானச் சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவர்களது கடமையாகும்.
-
எந்தக் குடும்பத்தில் மனைவியால் கணவன் மகிழ்ச்சியடையச் செய்யப்படுகிறானோ, அதே போன்று கணவனால் மனைவி மகிழ்ச்சியாக வைக்கப்படுகிறாளோ அந்தக் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது என்று மனு கூறுகிறார். குழந்தைகள் நல்லமுறையில் வளரக்கூடிய சூழ்நிலையை அது உருவாக்கும். குழந்தைகளைச் சீரிய முறையில் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மனைவியானவள் “அர்த்தாங்கினி” என்று அழைக்கப்பட்டாள். இலட்சிய மணவாழ்க்கையின்படி கணவனும் மனைவியும் ஓர் உடலின் இரு பிரிவுகளாக விளங்க வேண்டும். எனவே தான் அரை உடலை உடையவள் “ என்ற பொருளைத்தருகின்ற அர்த்தாங்கினி என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.மனைவியை ஆன்மீக வாழ்க்கையின் பங்காளி என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் சகதர்மிணி என்றும் அழைத்தனர். கணவன் மனைவி ஆகிய இருவருமே ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மனிதன் கடவுளை உணரவேண்டும் என்பதே ஆரியர்களின் வாழ்க்கை நியதியாக இருந்தது.அதை பெறுவதற்கு சமுதாயத்தை தயார்படுத்துவதே முன்னோர்களின் பணியாக இருந்தது.ஆரியர்களது சமூகத்தில் ஓர் உறுப்பினர் வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் குறிக்கோள் கடவுளை உணர்தல் என்பது வலியுறுத்தப்படுகிறது.
-
ஆண்கள் பலதார மணமுறையைப் பின்பற்றினர்.ஆண்,மனைவியை இழந்தால் மறுமணம் புரிந்து கொள்ளலாம்.ஆனால் ஒரு கைம்பெண் பிரம்மச்சரியத்தை மெற்கொண்டு ஒரு பெண் துறவியைப்போல் இருக்க வேண்டும். கன்னியான விதவையான பெண்களின் மறுமணம் பழைய வேத காலத்தில் வழக்கில் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் அது நிறுத்தப்பட்டு விட்டது. ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமாக இருந்தது. ஏனெனில் அது ஆணாதிக்கம் மிகுந்த காலமாக இருந்தது.கணவனை இழந்த பெண் மறுமணம் புரிய அனுமதிக்கப்படவில்லை. திருமணம் என்பது மிகவும் புனிதமானதாக கருதப்பட்டது.
-
ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே விதவைகள் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. 1820-1891-ல் வாழ்ந்த பேரறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வரசந்திர வித்யாசாகரால் அது சாத்தியமாயிற்று.விதவா விவாஹம்(விதவைகளின் மறுமணம்) விவாகரத்தின் மூலம் பிரிவு பெற்ற பெண்மணிகளின் நல்வாழ்விற்காக சட்டங்கள் கொண்டு வந்த போதிலும் அதனால் பயனடைந்தவர்கள் வெகு சிலரே, இந்துக்களின் பெரும்பாலானவர்கள் இதை முழுமையாக ஏற்று கொள்ள முன்வரவில்லை. பிற்காலத்தில் இந்த நிலமை வெகுவாக மாறி,தற்போது ஆண்களைப்போலவே பெண்களும் மறுமணம் புரிந்துகொள்கிறார்கள்
-
வனத்தில் சென்று வாழ்தல்
-
ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய சரீரத்தின் தோலில் சுருக்கமும் , தலை முடியில் நரையும் காணத் தொடங்கியதுமே அவன் வானப்பிரஸ்தம் என்ற மூன்றாவது வாழ்க்கை நிலைக்குத் தயாராகிவிட்டான் என்று மனுநீதி நூல் அறிவிக்கிறது. அந்த நிலை எய்திய உடன் அவன் தன் மனைவியைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டோ அல்லது அவளையும் உடன் அழைத்துக் கொண்டோ காட்டிற்குச் சென்று விடுவான். அங்கு அவன் மிக எளிமையான வாழ்க்கையையே மேற்கொண்டான் மரப்பட்டையோ அல்லது மிருகங்களின் தோல் தான் உடை.பெரும்பாலும் காய்கறிகள் , பூக்கள் , பழங்கள் , கிழங்குகள் போன்றவற்றை சமைத்தோ சமைக்காமலோ உட்கொண்டார்கள் . தலை முடி வெட்டப்படாமல் நீண்டு தொங்கும், நீளமான தாடியும் இருந்தது. நகங்களையும் வெட்டாமல் இருந்தனர். கடினமான எளிய வாழ்க்கை வாழ்ந்து பிறவிப் பயனை எய்தவே விரும்பியிருந்தனர். இந்த வாழ்க்கையானது ஏறக்குறைய அடுத்த வாழ்க்கை நிலையான சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளத் தேவையான முன் தயாரிப்பாக இருந்தது.
-
காலம் மாறி விட்டது. தற்போது இந்துக்கள் இந்தப் பழங்கால வாழ்க்கை நிலைகளைப் பின்பற்றுவது இல்லை. எனினும் முதுமை எய்தும் போது இவற்றை எண்ணிப் பார்க்கின்றனர். காட்டிற்குச் செல்லாவிடினும் தனிமையை நாடி ஆன்மீகப்பயிற்சி செய்யவே விழைகின்றனர்.முக்தி அல்லது வீடு பேற்றை அடைய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த உலகை விட்டு நீங்கும் போது கௌரவமாகச் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.இதற்காக பெரும்பாலான ஆண்களும் பெண்களும் வாராணசிக்கு யாத்திரை செல்கின்றனர்.சிலர் அங்கேயே இறுதி வரை தங்கி பிராத்தனையிலும் இறைவழிபாட்டிலும் ஈடுபடுகின்றனர்.
எழுபது வயதைக் கடந்தபின் ஒவ்வொரு இல்லறத்தானும் குடும்பத்தை துறந்து சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நியதி பழைய காலத்தில் இருந்தது.
-
பண்டைய இந்தியாவில் மக்களின் வாழ்க்கை நிலைகளுக்குச் சட்டம் வகுத்தவர்களுள் ஒருவர் பௌதாயனர்.அவர் வகுத்த கோட்பாட்டிற்கேற்ப கீழ் கண்டவர்கள் சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளலாம். 1.ஒரு மாணவன் தன்னுடைய கல்வியை முழுமையாகப் பெற்ற நிலையில் உலகைத் துறக்க வேண்டும் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டிருக்க வேண்டும். 2. சந்ததியற்ற குடும்பஸ்தனாயிருக்கலாம். 3.தாரத்தை இழந்தவனும் தகுதியானவனே. 4.வீடுவாசல் இல்லாத ஒரு நாடோடி,5.தவவாழ்க்கையில் காலத்தை கடத்தும் ஒரு தவசி. இவர்களைக் தவிர 6. எழுபது வயதைக் கடந்தவனும் 7.குழந்தைகள் பெரியவர்களாகி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு எய்திய நிலையில் உள்ளவனும் உலகைத்துறந்து சந்நியாசி ஆகத்தகுதியானவர்கள்.
-
முற்காலத்தில் சிலவகை துறவிகள் ஒழுங்காகத் தலையை மழித்துக் கொண்டான். நகத்தை வெட்டிக் கொண்டான்.சிலர் முடியை வெட்டுவதில்லை. அதிகபட்சமாக ஏழு வீடுகளில் உணவை பிச்சை எடுப்பதன் மூலம் கிடைப்பதைக்கொண்டு உடம்பை வளர்த்து வந்தான். ஒரு மரத்தின் அடியிலோ அல்லது ஒரு கோயிலிலோ அல்லது பாழடைந்த வீட்டிலோ இரவு நேரத்தைக் கழித்தான். கையில் ஒரு தடி , பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் (ஓடு) , தண்ணீருக்கு ஒரு பானை ஆகியவற்றோடு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நிரந்தரமாக அலைந்து கொண்டிருந்தான்.
-
துறவி குடும்பஸ்தனைப் போன்று வெண்மையான ஆடைகளை உடுத்த மாட்டான். ஒவ்வோர் இடத்திலும் ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கினான். மற்ற நிலைகளை மேற்கொண்டவர்களைப் போலல்லாமல் துறவிகள் அக்னிஹோத்திரம்(அதாவது தங்களுக்கான உணவை சமைக்க நெருப்பு மூட்டுவதில்லை) செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் ஒழுங்காக வேதங்களை ப் படிப்பது வற்புறுத்தப்பட்டது.
-
துறவிகள் வாழ்க்கையின் இலட்சியத்தின் படி அவர்கள் உலகம் முழுவதிற்கும் பொதுவானவர்கள். அதன் விளைவுதான் தன் சொந்தக் குடும்பத்தின் பால் உள்ள பாசத்தையும் பற்றையும் விட்டு விடுவது, அஹிம்சை, உண்மையாக இருத்தல் , பிறர் பொருளைக் கவராமல் இருத்தல் , மதுபானம் போன்றவற்றை விலக்குதல் , கோபம் கொள்ளாதிருத்தல் ஆகிய சபதங்களை மேற்கொண்டான். தன்னுடைய ஆன்மீக குருவிற்குக் கீழ்ப்படிந்து நடந்தான். கோபத்தை விட்டான். எண்ணத்தில் நினைவில் , செயல்பாட்டில் துடுக்குத் தனத்தைத் தவிர்த்தான். புனிதத்தையும் சுத்தத்தையும் உணவில் கடைபிடித்தான். அவன் தன்னையே ஒளி பொருந்திய ஆன்மாவாக எண்ணிக் கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டான். தன்னைச் சாதாரண ஓர் உயிரினமாகக் கருதவில்லை. அந்த பிரம்மனை உணர்ந்து கடவுளைக் கண்டவனாக இருப்பதே வாழ்க்கையின் இலட்சியம் எனக் கொண்டான்.,
-
இன்றைய இந்துத் துறவிகள் ஏறக்குறைய பழைய சந்நியாசிகளின் வாழ்க்கை முறைகளையே பின்பற்றுகின்றனர்.சுமார் 2500ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தர் துறவிகளுக்கான ஒரு சங்கத்தை முதன் முதலாக நிறுவினார். பின்னர் இந்து மதத் துறவிகள் அதைத் தழுவி தங்களது மடங்களையும் நிறுவிக் கொண்டனர்.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய , துறவியும் தத்துவ ஞானியுமான ஸ்ரீ ஆதி சங்கரர் தசநாமி தீர்த்தர், ஆசிரமம், வனம், ஆரண்யம், கிரி, பர்வதம், சாகரம், புரி, பாரதி மற்றும் சரஸ்வதி என்ற பத்து பெயர்களை கொண்டது) என்ற துறவிப் பரம்பரையைத் தோற்றுவித்தார். இது புத்த மதத் துறவிகளின் கூட்டமைப்பைப் போல் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஸ்தாபனமாக இருக்கவில்லை. இருப்பினும் இந்து மதத்தைப் பொருத்தமட்டில் அது கடந்த கால நூற்றாண்டுகளில் பல அரியப் பெரிய செயல்களைச் செய்து உதவியுள்ளது. பண்டைய இந்திய ஆசாரத்தின படி புனித நூல்களைப் படிப்பது , போதிப்பது போன்றவற்றுடன் தனி ஓர் ஆத்மாவின் எழுச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று வற்புறுத்தியது.
-
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுவாமி விவேகானந்தர் துறவிகளுக்கான ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அது ”ராமகிருஷ்ணமிஷன் ” என்று மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த இயக்கமானது துறவிகளாகச் சேர விரும்புபவர்களைப் புனித நூல்களைப் படிக்கவும், ஆன்மீக சாதனைகள் பழகவும் ஊக்கிவிப்பதோடு பலவிதமான சமூகத் தொண்டுகளையும் செய்ய வழிகாட்டுகிறது. மனித நேயத்தை வளர்க்க அரும்பாடு படுகிறது.ஜீவ சேவையே சிவ சேவை என்று கூறுவதோடு சொந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அரும்பாடுபடவேண்டும் என்ற குறிக்கோளை உடையது. இன்றைய இந்தியாவில் மிகப்பெரியதும் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டதுமான ஓர் இயக்கமாக விளங்குவது ராமகிருஷ்ணமிஷன்.இது தன்னிச்சையாக விளங்கவல்ல ஒரு நிறுவனம். இருப்பினும் சங்கரரது பரம்பரையைச் சார்ந்தது. இந்த மடத்தின துறவிகள் தசநாமி என்ற வகுப்பைச் சேர்ந்த புரி என்ற பிரிவினராவார்கள். பண்டைய மதங்களைப் போலவே இன்றைய இந்து மதத்திலும் பல்வேறு பாகுபாடுகளும், பிரிவுகளும் உள்ளன. பெரும்பான்மையான பிரிவினர்கள் தங்களுடைய துறவு வாழ்க்கைக்கு வேத கால துறவிகளின் வாழ்க்கை முறைகளையே பின்பற்றுகின்றனர்.
10
இந்து மதம் என்பது வாழும் வழிமுறைகளைக் குறிக்கிறது என்று பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒர் இந்துவின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மத சம்பந்தமான ஒழுங்கு முறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு புனிதப் படுத்தும் செயலை வடமொழியில் சம்ஸ்காரம்” என்பர். மண வாழ்க்கை பற்றிய பத்து சமஸ்காரங்களாவன.1-திருமணம்2- திருமணச்சடங்குகள் முழுமையடைதல்..3- கருவுற்ற பெண்களின் உடல் நலத்திற்காக இறைவனைவழிபடுதல்.4-குழந்தை பிறப்பது 5- குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.6-அன்னப்பிரசனம் செய்தல் (குழந்தைக்கு முதன் முதலாகச் சோறு கொடுத்தல்) 7- முதன் முதலாக குழந்தைக்கு முடியிறக்குதல் 8-அஷராப்பியாசம்(எழுத கற்பித்தல்) 9- உபநயனம் செய்வித்தல்.10- மாணவன் ஆசிரியர் வீட்டில் தங்கிக் கல்வி கற்று முடித்தவுடன் வீடு திரும்புதல். மேலே கூறப்பட்ட ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான பூஜை, வழிபாடு ஆகியவை நிகழ்த்தப்படும்.
-
வேத காலத்தில் மூன்று உயர் ஜாதியினரும்(பிராமண,சத்திரிய,வைசிய) பிள்ளைகளுக்குப் பருவம் எய்துவதற்கு முன் உபநயனம் என்னும் பூணூல் மாட்டும் சடங்கைச் செய்து விடுவார்கள்.புல்,நார்,அல்லது நூலால் செய்யப்பட்ட பூணூலை எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். வேத காலத்தில் படிப்பு முடிந்து வீடு திரும்பும் மாணவனுக்குப் பல்வேறு சடங்குகள் செய்து வரவேற்றனர். காலப் போக்கில் அனைத்தும் மாறிவிட்டன. இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய நாடுகளின் பாணியில் மாற்றப்பட்டுவிட்டது.
-
மேலே கூறப்பட்ட சடங்கு முறைகளைத்தவிர (1) மரணம் அடைந்தவர்களுக்கு நடத்தப்படும் ஈமச்சடங்குகள்.(2) மரணமடைந்தவரின் நினைவாக சிரார்த்தம்(திவசம்) செய்தல்.(3) புது மனை கட்டுவதற்கான விதிமுறைகள்.(4) புதுமனைப் புகுவிழா சடங்குகள்.(5) ஆன்மீக வாழ்க்கையை மேற்கொள்வது பற்றிய சடங்குகள் மற்றும்(6) பெண்கள் பருவம் அடைந்ததும் செய்யப்படும் மஞ்சள் நீராட்டு விழா. தற்காலத்தில் இந்துக்களின் வாழ்க்கை முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.எனவே மேலே கூறப்பட்ட சமஸ்காரங்கள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை. சில சூழ்நிலைகள் காரணமாக அந்தக் குறைபாடுகள் மன்னிக்கப்படுகின்றன. வெளிநாட்டிலோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியிலோ மதச் சடங்குகளைச் செய்ய வசதி இல்லாது இருப்பின் அவற்றைச் செய்யாமல் விட்டு விடலாம் என்று இந்து மதம் அனுமதியளிக்கிறது.
-
மேலை நாட்டினரைக் காட்டிலும் இந்து சமூகக்குடும்பம் மிகவும் நெருக்கமான உறவு முறையுடனும் காணப்படுகிறது. திருமணமானதும் பெண்கள் தங்கள் கணவனுடன் வசிப்பதற்காக ” புகுந்த வீட்டிற்கு செல்வார்கள். குடும்ப கௌரவத்தை க் காப்பது என்பதே குடும்பத்தைச் சார்ந்த அங்கத்தினர்களின் தலையாயக் கடமையாகக் கருதப்பட்டது.ஓர் இந்துக் குடும்பத்தின் கௌரவமானது அக்குடும்பத்தின் செல்வ நிலையால் அல்லாது அக்குடும்ப அங்கத்தினர்களின் சீரய நடத்தை , பண்பாடு ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டது. எனவே குடும்ப கௌரவத்தைக் காப்பது என்பது அக்குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வோர் அங்கத்தினருக்கும் கடமையாகும். திருமணம் போன்ற முக்கியமானச் சடங்குகள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.
-
திருமணம் என்பது இந்து மதத்தைப் பொருத்தமட்டில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவு மட்டும் என்றில்லாமல் இரண்டுபக்கக் குடும்பம் முழுவதிலும் உள்ள அங்கத்தினர் அனைவருடனும் கொள்ளும் முடிவற்ற ஒரு பிணைப்பாக உள்ளது. எனவே இந்துத்திருமணம் என்பது இரண்டு பேர்களுக்கு இடையே மட்டும் நடைபெறும் நிகழ்ச்சி அல்ல, இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் உறவு முறை.
-
பொதுவாக இந்துத் திருமணங்கள் பெற்றோர்களால் அல்லது காப்பாளர்களால் நிச்சயிக்கப்படுகிறது. சில சமயம் பெண்ணோ அல்லது பையனோ தாங்களாகவே தங்களுடைய வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அதற்கும் பெற்றோர்களது சம்மதம் பெற்றாக வேண்டும். இல்லாவிடில் இரு தரப்பினருக்கும் மன வருத்தம் ஏற்படலாம். அனுபவம் காரணமாகப் பெற்றோர்கள் தங்களது மகனுக்கோ அல்லது மகளுக்கோ தகுந்த வரனைத் தேர்ந்தெடுப்பார்கள். வரப்போகும் மாப்பிளை அல்லது மருமகளைப் பற்றிய அனைத்து விஷயங்கயையும் நன்கு விசாரித்துத்தான் தேர்ந்தெடுப்பார்கள். திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் மணப்பெண்ணையும் , மணமகனையும் ஒருமுறை அல்லது இரண்டு முறை பெரியவர்கள் முன்னிலையில் சந்திக்கும் வாய்ப்பை அளிப்பார்கள். அவர்கள இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டால், உடனே திருமணத்தை நிச்சயம் செய்து விடுவார்கள். இது பெற்றோர் அல்லது காப்பாளர்களால் செய்யப்படும்.
-
திருமணத்திற்கு முன்பே பையனும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்வது அனுமதிக்கப்படமாட்டாது. மேலை நாடுகளைப் போன்ற அந்தப் பழக்கம் இந்துக்களிடையே கிடையாது. பெரும்பாலும் பெற்றோர்களால் அல்லது காப்பாளர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் ஒருவரையொருவர் விரும்பிக் காதலித்து செய்து கொள்ளும் திருமணங்களை விட நிலைத்து நிற்கும்.
பண்டைய காலத்தில் ஆரியர்களது சமூகத்தில் எட்டு வகையான திருமணங்கள் நடைபெற்றதாக அறிகிறோம். 1. பிரம்ம விவாகம்- வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவனும் சீரிய பண்புடையவனுமான ஒரு மணமகனைத் தேர்ந்தெடுத்து தனது மகளை மிகவும் விலையுயர்ந்த ஆடைஆபரணங்களால் அலங்கரித்து அவனுக்கு மண முடித்து வைப்பது பிரம்ம விவாகம். அத்தோடு தேனைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகைப் பானத்தை மாப்பிளைக்கு அளித்து மணப்பெண்ணின் தகப்பனார் கௌரவிப்பது வழக்கம்.
-
2-தைவ விவாகம்- தனக்குத் தேவையான ஏதாவது ஒரு முக்கியமான சடங்கைத் திருப்தியான முறையில் செய்து முடித்துத் தரும் பூசாரிக்குத் தனது மகளை விலையுயர்ந்த அணிகலன்களால் அலங்கரித்துத் திருமணம் செய்து வைப்பது தைவ விவாகம் எனப்பட்டது. இது நடப்பது வெகு அபூர்வமே.
-
3.ஆர்ஷ விவாகம் மணமகனிடமிருந்து பால் கொடுக்கும் பசுக்களையும் வலுவானக் காளைகளையும் பெண்ணின் தகப்பனார் சீதனமாகப்பெற்றுக்கொண்டு செய்விப்பது ஆர்ஷவிவாகமாகும். இவ்வாறு பெற்றுக் கொள்வது வரதட்சணை அல்ல-என்று புனிதமான சட்ட நூல்கள் கூறுவதுடன் அவ்வாறு அளிப்பது ஒரு வகையில் பெண்ணின் தகப்பனாருக்கு செய்யம் மரியாதை என்று கூறுகிறது.
-
4.பிராஜாபத்ய விவாகம்- நீவீர் இருவரும் ஒற்றுமையாகக் கடமையைச் செய்வீர்களாக! என்ற ஆசியுடன் பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையிடம் ஒப்படைப்பது ப்ராஜாபத்ய விவாகம். மணமகனுக்கு பாரம்பரிய வழக்கப்படி தேனைக் கொண்டு தயாரிக்கப்படும் பானத்தை அளித்தும் கௌரவிப்பார்கள்.
-
5.காந்தர்வ விவாகம்- பெற்றோர்களுக்கும் காப்பாளர்களுக்கும் தெரியாமல் மணமகனும்,மணமகளும் ரகசியமாக மணந்து கொள்வது காந்தர்வ விவாகமாகும்.
-
6.ஆசுர விவாகம்-மணமகன் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்குப் பொருளை மணமகளுக்கும் அவளது உறவினர்களுக்கும் அளித்த பிறகு மணப்பெண்ணை மனைவியாக அடைவது ஆசுர விவாகம்.
-
7. ராட்சஸ விவாகம்- ஒரு பெண்ணை அவளது குடும்பத்தினரிடமிருந்து பலவந்தமாகத் துக்கிச் சென்று அவளைத் தன்னை மணந்து கொள்ளுமாறு சம்மதிக்கச்செய்வது ராட்சஸ விவாகமாகும்.
-
8-பைஷாச விவாகம்- ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது குடிபோதையில் இருக்கும் போதோ அவளது கற்பைச் சூறையாடிய பின் அவளை மணப்பது பைஷாச விவாகமாகும்.
-
மேலே கூறப்பட்ட எட்டு வகையான திருமணங்களுக்குள் பிராம்ம விவாகமே மேலானதாகக் கருதப்படுகிறது. மனுவும் கூட ஆசுர விவாகத்திற்கும் பைஷாச விவாகத்திற்கும் தடைவிதித்துள்ளார்.காந்தர்வ மணத்திலும் , ராட்சஸ விவாகத்திலும் காமத்தின் உத்வேகம் இருப்பதால் அவைக் கீழ் தரமாகவேக் கருதப்பட்டன.ஷத்திரியர்கள் மட்டுமே காந்தர்வ விவாகம் மற்றும் ராட்சஸ விவாகம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
-
மனு வசித்த காலத்தில் ஷத்திரியர்களே அரசர்களாகவோ அல்லது போர் வீரர்களாகவோ இருந்தார்கள். எனவே ராட்சஸ விவாகம் செய்து கொள்வது அவர்கள் வீரத்தைக்காட்டும் செயலாக இருந்தது. ஒருப் பெண்ணைக் கைபற்றுவதற்காக அவளுடைய உறவினர்களிடம் போராட நேரிட்டது.. தனக்குப் பிடித்த ஒரு பெண்ணை அடைய அவர்கள் தங்களது உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தது. மற்றப் பிரிவினரைக் காட்டிலும் ஷத்திரியர்களே இவ்வகையான மணத்ததை மெற்கொண்டனர். அரசர்கள் சமூகநீதியின் காவலர்கள். எனவே மனு குறைவான எதிர்ப்புகள் இருக்கும் வழியையே ஆதரித்தனர்.ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த அரசர்களை அவர் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்துமதத்தின் புனித நூல்களின் படியும் , முனிவர்களின் கூற்றுப்படியும் வரதட்சனை கொடுப்பதும் வாங்குவதும் தவறு.
ஓர் இந்துத் திருமணத்தில் இருக்க வேண்டிய ஐந்து முக்கியச் சடங்குகள்.
-
1.வாக்தானம்- மணமகன், மணமகள் ஆகியவர்களின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர் திருமணம் நிச்சயம் செய்வதற்கு முன் ஒருவர் மற்றொருவருடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம்(நிச்சயதார்த்தம்)
-
.2.கன்யா ஸம்ப்ரதானம்- பெண்ணின் தகப்பனாராலோ அல்லது அவர்களின் காப்பாளர்களாலோ பெண்ணை மணமகனுக்கு அளிப்பது.(திருமண நிகழ்வு)
-
3. வரணம்- மணமகனையும் மணமகளையும் உறவினர்கள் வரவேற்பது.(புகுந்தவீடு செல்லுதல்)
-
4. பாணிக்கிரஹணம்-மணமகனும் மணமகளும் சடங்குகளின் மூலம் ஒருவரது கையை மற்றவர் கைபிடிப்பது
-
5.சப்தபதி- மணமகளும், மணமகனும் ஏழு அடிகள் வைக்கும் சடங்கு .மணமகனுக்கும் மணமகளுக்கும் திருமணம் நடப்பது என்பது ஒரு விரிவான மதச்சடங்கு.
-
உண்ணாநோன்பு, பிரார்த்தனை, வழிபாடு மற்றும் பல கொண்டாட்டங்கள் அடங்கியதே மணவிழா. மாலை மற்றும் மோதிரம் மாற்றிக் கொள்வதும் கூட இந்துத் திருமணத்தில் ஒரு சடங்காகும்.
-
வாக்தானத்தில் தொடங்கும் திருமணச்சடங்குகள் சப்தபதியுடன் முடிவடையும். பொதுவாக திருமணம் மணப்பெண்ணின் வீட்டில் தான் நடைபெறும்.இத்தகைய சடங்குகளின் போது இரு தரப்பினரும் உறவினர்களையும் . நண்பர்களையும் அழைத்து நல்ல முறையில் சுவையான விருந்தளிப்பார்கள். விருந்திற்கு வரும் உறவினர்களும்,நண்பர்களும் மணப்பெண்ணிற்கு பல வகையான இனிப்புகளை அளிப்பார்கள். சிலர் பரிசளிப்பார்கள்
-
பண்டைய புனித நூல்களும், சட்ட புத்தகங்களும் இந்து மதப்படி மணமகன் , மணமகள் ஆகியோர் திருமணம்புரிந்து கொள்ள வேண்டிய வயதைப்பற்றிக் கூறியுள்ளனர். சில நூல்களின் கூற்றுப் படி மணப்பெண்ணின் வயதைப்போல் மணமகனின் வயது இருமடங்காக இருக்க வேண்டும். மற்றொரு நூலின் படி மணமகனின் வயது இருபத்தைந்தாகவும் மணமகளின் வயது பதினாறாகவும் இருத்தல் வேண்டும். மணமகனின் வயது இருபத்தொன்றுக்குக் குறையக்கூடாது என்று நூல்கள் கூறுகின்றன.
-
இன்றைய இந்துக்கள் பழங்கால நூல்களின் படி நடப்பதில்லை. நகரத்தில் வாழும் இளைஞர்கள் தற்காலத்தில் 25 வயதிலிருந்து 30 வயதிற்குள் திருமணம் புரிந்து கொள்கிறார்கள். அதுவும் தனது இல்வாழ்க்கைக்குப் போதுமான அளவு பண வசதி வரும் வரை விவாகம் செய்து கொள்வதைத் தவிர்த்து விடுகிறார்கள் ஒருவன் தனது ஜாதியைச் சேர்ந்த பெண்ணையே மணப்பான்.ஆனால் அவளுடைய கோத்திரம் மட்டும் வேறானதாகத்தான் இருக்கும்.ஒரே கோத்திரத்தில் திருமணம்புரிந்தால் உடல் குறைபாடுள்ள குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. தன்னை விட வயதில் சிறிய பெண்ணை மணப்பதற்கே முதலிடம் அளிப்பார்கள். அத்தோடு மணமகளின் கல்வி, குடும்ப கலாச்சாரம், நிதி வசதி ஆகியவை தனக்கு சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். மாறாக கிராமப் பகுதிகளில் வாழும் குடியானவர்களும், நிலக்கிழார்களும் இன்னும் சிறு வயதிலேயே திருமணம் புரிகிறார்கள்.
-
சிறுவயதில் திருமணம்புரியும் பழக்கம் முற்காலத்தில் இல்லை.அது மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் ஏற்பட்டதாகும்.பெண்களும், பையன்களும் பருவம் அடைவதற்கு முன்னதாகவே அவர்களது விவாகத்தைப் பெரியவர்கள் நிச்சயித்து முடித்து விடுவார்கள். இத்தகைய தம்பதிகள் பருவமடைந்ததும் சிலச் சடங்களைச் செய்து மணவிழாவினை நிறைவு செய்வார்கள். இத்தகைய திருமணங்கள் தற்போது தடை செய்யப்பட்டு விட்டது.1929-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ”சாரதா” சட்டப்படி பெண்களுக்கு 14 ஆண்டு முடிவதற்குள் திருமணம் செய்யக்கூடாது.1955-ஆம் ஆண்டு வந்த இந்து திருமணச்சட்டப்படி பெண்களின் வயதுகுறைந்த பட்சம் 15 ஆகவும் ஆண்களின் வயது 18 ஆகவும் இருக்க வேண்டும். இந்து திருமணங்களின் சில முக்கியச் சடங்குகள் நாடு முழுவதும் பொதுவாக இருந்த போதிலும் வேறு பல சடங்குகள் இடத்திற்கு இடம் மாறுபட்டிருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களை ஒட்டி இருக்கலாம் அல்லது குடும்பத்தின் பாரம்பரிய வழக்கத்திற்காகவும் இருக்கலாம்.
-
வேத காலத்தில் சிறுவயதில் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுமணம் செய்து வைப்பதற்குச்சில வாய்ப்புகள் இருந்தன.ஆனால் விவாகரத்து பெற்ற பெண்ணின் மறுமணத்திற்கு எந்த வித ஆதரவும் தரப்படவில்லை. இந்துக்களின் திருமணம் என்பது அவர்கள் வாழ்நாள் முழுவதற்குமான ஓர் கட்டுப்பாடான ஒப்பந்தம். அது என்றென்றும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்வதற்கே தவிர பிரிவதற்காக அல்ல. திருமணவாழ்க்கையின் அஸ்திவாரம் கற்பு, பரஸ்பர நம்பிக்கை, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருத்தல் போன்றவையாகும்.
-
1955-ஆம் ஆண்டின் திருமணச்சட்டப்படி விவாகரத்து செய்து கொள்வது பார்லிமெண்டாரால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.விவாகரத்து பெற்ற பெண் வேறு ஒருவரை திருமணம் புரிந்துகொள்ளலாம் 1873-ஆம் ஆண்டில் வந்த கௌர் சட்டம்111-ல் கலப்புத் திருமணத்திற்கு வழி செய்திருக்கிறது. கலப்பு திருமணத்திற்கான எல்லாவிதமான தடங்கல்களையும் 1949-ல் வந்த Hindu marriage validating act நீக்கி விட்டது.
இந்து மதத்தில் ஒரு தாயின் இடம் மிகவும் உயர்வானது. குழந்தைகளால் பூஜிக்கப்படுபவள்.குழந்தைகளின் அன்புக்குப் பாத்திரமானவள். தூய்மையே வடிவானவள் என்று குழந்தைகளால் எண்ணப்படுபவள். இந்து மதப் பாரம்பரியக் கதைகளிலும் வரலாற்றிலும் கற்பு நெறியோடு வாழ்ந்த தூய்மையானப் பெண்களையே காணலாம். பெண்கள் தங்களது கற்புக்கு பங்கம் ஏற்படும் என்று அறிந்தால் உடனே விஷம் குடித்தோ அல்லது நெருப்பில் குதித்தோ தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு உடல் தூய்மையையும் , கற்பையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.
-
ஒரு பெண் கணவனை இழக்க நேரிட்டால் அவளது கணவனின் வீட்டைச் சேர்ந்தவர்களோ அல்லது அவளது சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவளையும், அவளது குழந்தைகளையும் பாதுகாக்க முன்வருவார்கள். அவளை நிராதரவாகவோ அனாதையாகவோ யாரும் விட்டு விடுவதில்லை.
11
-
பொதுவாக இந்துக்கள் இறந்து போனவர்களின் உடலை எரித்து விடுவார்கள். இறந்து போனவரின் உடலைக் குளிப்பாட்டி புதிய உடைகளை அணிவிப்பார்கள். சந்தனத்தைக் குழைத்துப் பூசுவார்கள். பின்னர் உடலை மாலைகளாலும் மலர்களாலும் அலங்கரிப்பார்கள். சிறிதளவில் தங்கத் தூளை தலையில் பல பகுதிகளிலும் முகத்திலும் தூவுவார்கள். அதன் பிறகு அதனைத் தூய்மைப்படுத்தவல்ல மந்திரங்களைச் சொல்வார்கள். சில வழிபாடுகளும் நடக்கும் அதைத் தொடர்ந்து அந்த உடலைச் சிதையின் மீது தெற்குப்பக்கமாகவோ அல்லது வடக்குப்பக்கமாகவோ வைப்பார்கள். நெருங்கிய உறவினரோ அல்லது மூத்த மகனோ நெருப்பை எடுத்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தி அடைவதற்காகச்சில மந்திரங்களை உச்சரித்தபடி சுற்றி வருவார்கள். பின்னர் அந்த நெருப்பினால் முதலில் அந்த உடலின் வாயில் வைத்து விட்டு உடலின் மற்ற பாகங்களிலும் வைப்பர்.
-
தற்காலத்தில் பெரிய நகரங்களில் மின்சார எரியூட்டியின் மூலம் சடலத்தை எரித்து விடுகிறார்கள். மேலை நாட்டில் வசிக்கும் இந்துக்களும் இதே வழக்கத்தையே பின்பற்றுகின்றனர். அந்த உடல் எரிந்தபின் உள்ள சாம்பலை ச் சேகரித்து புனிதமான ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவார்கள். புனிதமான நதிகள் அனைத்துமே கடலில் கலந்து விடுவதால் கடல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
-
இந்து மதத்தில் முனிவர்களையும் துறவிகளையும் எரிப்பதில்லை. அவர்களது உடலைப் புதைப்பார்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுவார்கள். தண்ணீரில் போடுவதற்கு முன் அந்த உடலை நீளமான அகன்ற பாறையில் ஜாக்கிரதையாகக் கட்டி எடுத்துச் சென்று ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்தவுடன் மந்திரங்களைச் சொல்லியபடி நீருக்குள் அமிழ்த்தி விடுவார்கள். இந்து மதத்தினர் இறந்தவர்களின் உடலுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக ஈமச்சடங்குகளைச் செய்து முடித்து விடுவார்கள். உடலை விட்டுப்பிரிந்த ஆன்மாவிற்கு விரைவாக விடுதலை அளிப்பதே அதன் நோக்கம். .
-
,இன்றைய இந்து சமூகம் -குடும்பத்தின் அமைப்பு.-வேத காலத்தில் இருந்த சமூக அமைப்பிலிருந்து தற்கால இந்து சமூகம் மிகவும் மாறுபட்டு இருக்கிறது. இருப்பினும் சில பழைய பழக்க வழக்கங்கள் அப்படியே கடைபிடிக்கப் படுகின்றன. ஒரு சிலவற்றை கொஞ்சம் மாற்றி அமைத்து ப்பின்பற்றுகின்றனர். வேத காலத்தில் தங்களது முன்னோர்கள் கடைபிடித்து வந்த நான்கு வாழ்க்கை நிலைகளை அனுசரிப்பதில்லை. மாணவனாக இருந்து கல்வி பயின்ற பின் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் திருமணம் புரிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். இறக்கும் வரை குடும்பஸ்தர்களாகவே இருக்கிறார்கள். இடையே குடும்பத்தை விட்டு விட்டு தவ வாழ்க்கையையும் மேற்கொள்வது கிடையாது, துறவியாகவும் ஆக ஆசைப்படுவதில்லை.ஏறக்குறைய தொண்ணுாறு சதவீத மக்கள் கிராமத்திலேயே வாழ்கின்றார்கள். விவசாயம் தான் அவர்களது முக்கியமான தொழில். இரண்டு தலைமுறையினருக்கு முன்வரை கூட்டுக் குடும்பத்திலேயே வாழ்ந்தனர். திருமணமான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் மற்றும் அத்தை, மாமா, மருமகன் மருமகள் ,சித்தி,தாத்தா,பாட்டி போன்ற உறவினர்களுடன் பெரிய குடும்பத்தில் வாழ்ந்து வந்தனர்.நிலத்திலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டே அவர்களால் குடும்பத்தை நடத்த முடிந்தது. பொருளாதாரச் சிக்கல்கள் காரணத்தினாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் கூட்டுக்குடும்பம் சிதறி விட்டது. சிறு குடும்பங்களாக வாழ்வதே விரும்பப்படுகிறது. எனினும் பெற்றோர்கள் , மணமாகாத சகோதர, சகோதரிகளுடன் வாழ்வதை இன்றும் இந்துக்கள் பின்பற்றுகிறார்கள்.
-
பெருகிக் கொண்டே வரும் குடும்பத்தைச் சமாளிக்க கிராமத்தில் உள்ள பண்ணைகளிலிருந்து கிடைத்த வருவாய் போதவில்லை.எனவே சிறுசிறு குடும்பங்களாகப் பிரிந்து நகரத்தை நோக்கி வரத் தலைப்பட்டனர். இவ்வாறாக நகரத்தில் வாழும் சமூகத்தோடு கிராமக் குடும்பங்களும் இணைந்துவிட்டன.ஓர் இந்துக் குடும்பத்தின் செயல்பாடுகளை உற்று நோக்குவாமேயாகில் அது ஆணாதிக்கம் மிக்கதாகக் காணப்படும். தகப்பனார் ஒருவர் மட்டும் குடும்பத்தின் செலவுகளுக்காகப் பொருள் ஈட்டுபவராக இருப்பதால் அவருடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அவரே குடும்பத்தின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கவனித்துக் கொள்வதால் , சிறுவர் சிறுமியர் அவரைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.
-
உண்மையில் குடும்பத்தை த் தனது தன்னலமற்ற அன்பின் மூலமும் அனுசரணையின் மூலமும் நியாயமானவற்றை நிறைவேற்ற மறைமுகப் பரிந்துரை செய்து ஆட்சி செய்வது அன்னைதான். ஓர் இந்து மகனுக்குத் தாயின் நிலை மிகவும் உயர்வுடையது. தூய்மையின் உருவமாகக் கருதப்படுபவள். அன்னைக்கு இழிவைத்தரும் செயலைச் செய்ய எவரையும் அவன் அனுமதிக்க மாட்டான். அதே சமயம் அவனது தந்தைக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் எதையும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.
-
இந்து சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரது குடும்ப கௌரவத்தைக் கட்டிக்காக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமணமாகும் வரை கற்புடன் வாழக் கற்பிக்கின்றனர். பெண்களுடன் ஆண்கள் நெருங்கிப் பழகுவதை அனுமதிப்பதில்லை. இந்து சமூகத்தில் தகாத உடலுறவு கொள்வது என்பதற்கே இடமில்லை.
-
சமுதாயத்தில் சகோதர சகோதர்களிடையே உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. தேவைப்பட்டால் ஒருவர் மற்றொருவருக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள். தாயார் மரணமடைந்து விட்டால் அக்குடும்பத்தில் உள்ள மூத்த பெண் மற்ற சகோதர சகோதரிகளுக்குத் தாயாக மாறி பரிவுடன் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வான். அதே போன்றே ஒரு குடும்பத்தின் தந்தை இறந்துவிட்டால் மூத்த மகன் தாயையும் மற்ற இளைய சகோதர சகோதரிகளையும் காப்பாற்றும் பணியை மேற்கொள்கிறான். இளமையிலேயே தகப்பனாரை இழந்த குடும்பத்தின் மூத்த மகன் குடும்பப் பொறுப்பை முழுமையாக ஏற்றுத் தன் வருமானத்தையும் குடும்பத்திற்கே செலவளித்து விட்டுத் தன்னையும் தன் சுகத்தையும் எண்ணிக்கூடப் பார்க்காத எத்தனையோ பேரை நாம் காண முடியும்.இத்தகைய தியாகச் செம்மல்களுக்கு இந்து சமூகத்தினரிடையே மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
-
மேற்கூறியவைகளைப்படித்து விட்டு இந்து சமுதாயத்தில் சுயநலம் என்பதே கிடையாது என்ற முடிவிற்கு வந்து விட வேண்டாம். சுய நலம் என்பது உலகெங்கும் காணப்படுவதாகும். எனவே அது இந்து சமூகத்திலும் இருக்கிறது. ஆனால் இந்துப்பண்பாடு அதைக் கடுமையாகக் கண்டிக்கிறது. எடுத்துக்காட்டாகக் கூறுவோமேயாகில் மகன் நல்ல நிலையில் அதிக வருவாயுடன் வாழ்ந்து கொண்டு ஏழ்மையில் அல்லது முதுமையால் வாடும் பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ளாமல் இருந்தால் சமூகம் அவனுக்கும் விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று மதிப்பிட்டுவிடும். இந்து சமுதாயத்தில் பணம் மட்டும் கௌரவத்தை அளிக் ப் போதுமானது அல்ல. ஒரு மனிதனின் கல்வியறிவு , பண்பாடு, நல்ல குணங்கள் ஆகியவையே கௌரவத்தை க் கொடுக்க வல்லவை.
12
-
ஒரு நல்ல இந்து குடும்பத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை போன்ற உறவினர்களுடன் வளரும் குழந்தைகளுக்குப் பல அனுகூலங்கள் உண்டு. அம்மாதிரி வளரும் குழந்தைகளுக்குச் சிறந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். காப்பகங்களில் விடப்படும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள். எனவே வீட்டில் பெரியவர்களுடன் வளரும் குழந்தைகள் அதிஷ்டசாலிகள்.. காப்பகங்களில் குழந்தைகளுக்கு அத்தகைய அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அரிது. எனவே வீட்டில் வளரும் குழந்தைகளின் நன்றாக இருக்கும். இத்துடன் தாத்தா பாட்டிகளுடன் பல கதைகள் கேட்பதால் பல உயர்ந்த பாரம்பரிய கருத்துகளையும் அறிந்து கொள்ள முடியும். பெரிய குடும்பத்தில் வளரும் குழந்தைக்கு மற்றவர்களோடு அனுசரித்துக் கொண்டு போகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய குழந்தைக்குத் தன்னிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கு இருக்கும். பிறருக்காகத் தியாகம் செய்யும் மனப்பான்மை ஏற்படும். இத்தகைய பயிற்சி குழந்தைப் பருவத்திலும் நன்மை பயக்கும். அத்தோடு பெரியவனான பிறகும் பல பயன்களைத் தரும்.ஆனால் நகரத்தில் வாழும் சிறிய குடும்பங்களின் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க வேலைக்குச் செல்லும் தாய் தந்தையைக் கொண்ட குழந்தைகளுக்கு இத்தகைய வாய்ப்புகளே கிடையாது.
-
இந்த சமூகம் வயதில மூத்தவர்களை மதித்து கௌரவிக்கிறது. பெரியவர்களிடம் மரியாதையுடனும் கீழ்படிதலுடனும் இருக்குமாறு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். பெற்றோரையும் பெரியவர்களையும் எதிர்த்துப் பேசும் குழந்தைகளின்போக்கை நாகரிகமற்றதாகக் கருதுவார்கள்.அத்தகைய குழந்தைகளின் நடத்தையால் குடும்பம் முழுவதிற்கும் அவமானம் ஏற்படும்.
-
இந்து மத சம்பந்தமான புராண . இதிகாசங்களில் உள்ள கதைகளைச் சிறுவர்களுக்குக் கூறுவார்கள். அதனால் வீரமும், பண்பும்வாய்ந்த சீரிய கதாநாயகர்களைத் தாங்கள் பின்பற்றுவதற்கு ஏற்புடையவர்களாக கருதுவார்கள். எனவே ராமன், பிரஹலாதன், துருவன்,நசிகேதன்,சீதை,சாவித்திரி, போன்ற பலவேறுபட்ட சீரிய மனிதர்கள் , பெண்மணிகள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் படித்து நேர்மை, ஆன்மீகம்,பண்பு போன்ற சிறந்த நெறிகளைப் பின்பற்றுவார்கள். இதைத்தவிர இந்துப் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை நல்ல வழியில் அழைத்து ச் செல்லப் பாடுபடுவார்கள் .
-
பெற்றோர்கள் நல்லவர்களாகவும் , பண்பானவர்களாகவும் இல்லாமல் போனால் , குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சமூகத்தின் சிறந்த ஒழுக்கமும் , பண்பும் நிறைந்த அங்கத்தினர்களாக வளர்வார்கள் என்பது வெறும் பகற்கனவாகிவிடும். அன்பையும் ஆதரவையும் பொழியும் சுற்றத்தார்களாலும், உறவினர்களாலும் எப்பொழுதும் சூழ்ந்து வாழ நேரிடுவதால் குழந்தைகள் தவறு செய்வது பெரும்பாலும் குறைந்து விடுகிறது.தவறு செய்யும் குழந்தைகளைக் கண்டித்தும், தண்டித்தும், நல்வழிப்படுத்துவார்களேயன்றி தூற்றி துரத்தி விட மாட்டார்கள்.
-
இந்து சமூகத்தில் பெண்களின் தற்கால நிலை
-
இந்துப் பெண் தாய்மை அடைவது பெரும் பேறாகக் கருதப்படுகிறது. “மாத்ருதேவோ பவ” என்று தைத்திரீய உபநிடதம் கற்பிக்கிறது.தாயையும், தாய்நாட்டையும் சுவர்க்கத்தையும் விட பெரிதாக இந்து பாரம்பரியம் பேசுகிறது. இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் ” வேதத்தில் சிறந்த பத்து பிராமணப் புரோகிதர்களுக்கு ஒப்புவமையாகத் தந்தையைக் கூறினால் ஒரு தாய் இதே போன்ற பத்து தகப்பனார்களுக்கு ஈடு ஆவாள் அல்லது அனைத்து உலகிலுள்ளோர்க்குமே ஈடாவாள்” என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்து மதத்தில் கடவுளையே தெய்வீகத் தாயாகக் காண்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக தாய், தந்தை ஆகிய இருவரது ஆசிகளையும் குழந்தைகள் வேண்டுகிறார்கள். தாயின் அன்புதான் சுயநலமற்ற அன்பாகக் கருதப்படுகிறது. ஒரு தாய் தன் குழந்தையை வளர்க்கும் போது அவள் குழந்தையின் நலத்தை மட்டுமே விரும்புகிறாள். அதற்குப் பிரதிபலனாக எதையும் எதிர்பார்ப்பது இல்லை. இதன் காரணமாகவே உலகில் காணப்படும் அனைத்து விதமான அன்பைக் காட்டிலும் தாயன்பே மிகவும் மேலானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய தூய அன்பின் காரணமாகவே இந்துத்தாய் குழந்தைகளால் போற்றப்படுகிறாள். கற்பு , தூய்மை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றின் முழு உருவமே அவள்.
-
தாயாருக்கோ, சகோதரிக்கோ இழைக்கப்படும் எந்த ஒரு அவமதிப்பையும் இந்து சமூகம் பொறுத்துக்கொள்ளாது. ஓர் இந்துத் தாய்க்கோ அல்லது ஓர் இந்துப் பெண்ணுக்கோ அத்துமீறி தீங்கிழைக்கப்பட்டால் திங்கிழைத்தவர்களைத் தண்டிக்க இந்தியாவில் ஒரு கலகமே தோன்றி விடும். ஓர் இந்துத்தாயின் சமூக அந்தஸ்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்து உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். பண்டைய இந்தியாவில் இந்துப் பெண்கள் தங்கள் முகங்களைத் திரையிட்டு மறைத்துக் கொண்டதில்லை. சமூகத்தில் அவர்கள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். இந்தியாவின் மீது திரும்பத் திரும்ப அந்நியர்கள் வந்து தாக்கியதால் பல நூற்றாண்டுகளில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இத்தகைய போராட்டங்களாலும் , இந்தியா அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததாலும் இந்துப் பெண்களின் கற்பிற்கும் , கௌரவத்திற்கும் களங்கம் ஏற்பட்டது. இம்மாதிரியான அநாகரீகச் செயல்கள் அடிக்கடி நடைபெற்றன. கொடுங்கோலர்களது கையில் சிக்கி அல்லலும் , அவமானமும் படுவதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்று கருதிய இந்துப் பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதுபற்றிய பல வரலாற்று சம்பங்களை வடஇந்தியாவில் காணலாம்.இக்காரணங்களால் இந்துப் பெண்களைக் காக்கும் பொறுப்பு இந்து சமூகத்திற்கு அதிகமாயிற்று. விளைவு இந்துப் பெண்களின் சுதந்திரம் சுருங்கிவிட்டது. முகத்திரையிடுதல்,சிறுவயதில் திருமணம் செய்வித்தல்,உடன்கட்டை ஏறுதல்,வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடத்தல் போன்றவை அதிகரித்தது.தங்களை அந்நியரின் பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகத்திரையைப் பயன்படுத்த த் தொடங்கினார்கள். வீட்டைத்தாண்டி வெளியே சென்று முறைப்படி கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டிலேயே தங்கிக் கொண்டு எந்த அளவிற்குக் கிடைத்ததோ அந்த அளவிற்கே கல்வியறிவும் கிடைத்தது. சிலருக்கு அதுவும் இல்லாது போயிற்று. சமூக நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்பது என்பது வெகுவாகக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இவை அனைத்திற்கும் காரணம் அன்னியர் படையெடுப்பாகும்.ஆரிய கலாச்சாரம் உச்சத்தில் இருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டதற்கு காரணம் அன்னியர் படையெடுப்பாகும்.
-
19-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் ஆங்கிலேயரது ஆட்சியில் சில மாற்றங்கள் தலைகாட்ட தொடங்கின. இந்து சமுதாயத்தில் காணப்படும் குறைகளைக் களைய பல சீர்திருத்த இயக்கங்கள்“ துவக்கப்பட்டன. இந்துக்களை பிற மதங்களுக்கு மாற்றச்செய்யும் முயற்சிகளைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராஜாராம் மோகன்ராய் என்பவர் மற்ற விஷயங்களைக் காட்டிலும் பெண்களுக்கு க் கல்வியறிவும் , சமூகத்தில் சுதந்திரமாக நடந்துகொள்ளும் உரிமையும் அளிக்கப்படவேண்டும் என்று விரும்பினார். அவர் பிரம்ம சமாஜம்” என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அது மத சார்புடையது. அது பெண்களுக்கு பல கல்வி கூடங்களைத் துவங்கியது.
-
சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரும் (1824-1883) ”ஆரிய சமாஜம்” என்ற ஒர் இயக்கத்தைத் தோற்றுவித்து பெண்களுக்கு கல்வியளிக்கும் பணியையும் மேற்கொண்டார். ராம கிருஷ்ண மிஷன் ” என்ற இயக்கத்தைத் தோற்றுவித்த சுவாமி விவேகானந்தரும் பெண்களின் நிலை சீர்படாதவரை உலக நன்மைக்கே இடமில்லை என்று கூறினார்.ஒரு பறவை தன்னுடைய ஒரு பக்கத்து இறக்கையை மட்டும் உபயோகித்துப் பறக்க முடியாது. என்று எடுத்துரைத்தார். ராமகிருஷ்ண மிஷன் ” ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சிறப்பான கல்வியை அளிப்பதற்காக முன்மாதிரியான பல கல்வி நிறுவனங்களை இந்தியாவில் நிறுவியுள்ளது.
-
1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. பிரம்ம சமாஜம் , ஆரிய சமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் முயற்சியாலும் அரசியல் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் பெண்களின் நிலையில் மாபெரும் முன்னேற்றம் ஏற்படத்தொடங்கியது. இன்றைய இந்தியாவில் பெண்கள் போதுமான அளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆண்களைப் போன்றே பெண்களும் கல்வி கற்கவும் பல வகையான மனித வளர்ச்சிக்கான பாதையில் செல்லவும் சம வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
இந்தியப் பெண்ணைப் பொருத்த வரை இன்றும் கூட திருமணம் என்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவோ சுய விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அமைவதில்லை. மாறாக அது அவர்கள் தன்னையே கணவனுக்காக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்வியாக அமைகிறது. இன்றளவும் கூட இந்தியப் பெண்ணானவள் தன் கணவனை மணந்துகொண்டு அவனிடம் மட்டும் அன்பைக் காட்டுவதில்லை. திருமணம் செய்து கொள்வதன் மூலம் கணவனது குடும்பம் முழுவதையும் தத்தெடுத்துக்கொள்கிறாள். கணவனது குடும்பத்தினரின் நல்வாழ்விலே தனது இன்பம் இருப்பதாகக் கருதுகிறாள். திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் அவள் தனது கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமல்லாது அவனது பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் , சித்தப்பா, பெரியப்பா குழந்தைகள் போன்ற உறவினர்கள்பால் உள்ள கடமைகளாலும் கட்டுப்பட்டவளாகிறாள். எந்தப் பள்ளியாலும் அளிக்க முடியாத ஒரு கட்டுப்பாட்டைக் குடும்பச்சூழல் தருவதால் அவள் தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொணர்ந்து நல்ல முறையில் நடந்து கொள்கிறாள்.
-
இந்தியப்பெண்ணின் கருத்துப்படி மேலை நாட்டுக் குடும்ப வழக்கங்கள் மிகவும் சுய நலமுடையவை. மேலை நாட்டுக்குடும்பத்தில் விதவைத்தாயார் வயது முதிர்ந்த தந்தை நொடிந்து போன சகோதரர்களின் துன்ப நிலை ஆகியவைகளைப் புதிதாக வரும் மருமகள் கவனிப்பதில்லை. நவீன காலப்பெண்மணி குடும்பத்தின் அடிமையல்ல. குடும்பத்தின் நலம் விரும்பி. ஒரு பெண் சந்தோஷத்துடன் தனது குடும்பத்திற்காகச் சமையல் செய்வது நோய்வாய்ப்பட்டவர்களைப் பாதுகாப்பது . பணிவிடை செய்வது தனது கணவன் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொடுப்பது, மேலும் உறவினர்களுக்கு உதவி செய்வது என்று பணியாற்றுகிறாள். இவ்வாறெல்லாம் செய்தால் அவள் மனக்கஷ்டம் அடைவதில்லை. இத்தகைய சேவைகள் மூலமாக அவளது பெண்மை நிறைவடைகிறது. அதாவது அவை அவளுக்கு முழு மனநிறைவைத் தருகிறது.
-
இந்த உலகில் உள்ள எந்த ஒரு சமூகமும் பண்பாடும் முழுமையானது என்று உரிமை பாராட்ட முடியாது. சமூக அடிப்படையில் முழுமைபெறச் செய்வது என்பது முடியாத காரியம். முன்னேறி வரும் சமூகங்கள் அனைத்தும் முழுமை பெறும் இலக்கை நோக்கியேச் செல்கின்றன. எந்தப் பகுதியில் அதிகமான தீய செயல்கள் நடைபெறுகின்றனவோ அந்தச் சமூகங்கள் முழுமை பெறாத நிலையில் உள்ளன என்பதை அறியலாம். சமூகத்தில நடக்கும் ஒவ்வொரு தீய செயலுக்கும் ஒரு தனிமனிதனின் சுயநலமோ அல்லது அச்சமூகத்தில் பல அங்கத்தினர்களின் சுயநலமோ காரணமாக அமைகிறது.
-
அன்பும் பண்பும் கொண்டு தன்னலமற்று தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் அங்கத்தினர்களால்தான் சமூகம் மேன்மை அடையக்கூடும் . இந்து சமூகம் மேற்கூறிய வகையில் மாற முயற்சி செய்து வருகிறது.
13
-
வேத காலத்திற்கு முன்னரே எத்தகைய உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்தோ-ஆரியர்கள் தீர்மானித்து வைத்திருந்தனர். உணவு உடல் வளர்ச்சிக்கு மட்டும் இன்றியமையாதது அல்ல. அது மனிதனது ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைய வேண்டும் என்று கவனமாக இருந்தார். மனுவும் தன்னுடைய நூலில் உண்ணத்தக்கவை எவை? விலக்க வேண்டியவை எவை என்று விரிவாக விளக்கியுள்ளார்.
-
இந்துக்களின் முன்னோர்கள் வேதகாலத்தில் புலால் உண்டனரா?
-
வேத காலத்தில் வாழ்ந்தவர்கள் மனு ஸ்மிருதி என்ற நூலில் கூறியுள்ளதற்கேற்ப ஒரு சில வகையான மாமிசத்தை மட்டும் ஏனைய உணவப் பண்டங்களுடன் உட்கொண்டனர். புலால் உணவை மனு அனுமதித்திருந்தாலும் ஜீவகாருண்ய (கொல்லாமை) அடிப்படையில் தாவர உணவு உண்பதையே பொதுவாக பரிந்துரை செய்து வந்தனர். மனுவின் கூற்றின் படி புலால் உண்பதில் குற்றமில்லை. ஆனால் அதைத் தவிர்ப்பதால் எவ்வளவோ பெரிய நன்மைகள் ஏற்படும். எத்தகைய உணவானாலும் அதைக் கடவுளுக்குப் படைத்த பிறகே உண்ண வேண்டும்.அடுத்தபடியாக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்று உண்டு.
-
வேத காலத்தில் இந்துக்கள் மாட்டிறைச்சி உட்கொண்டார்களா?
-
வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் மாட்டிறைச்சியை உட்கொண்டார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் பால் கொடுக்கும் பசுக்களை ஒரு போதும் கொல்ல மாட்டார்கள். பால்தரும் பசுவை அக்னயா” என்றனர். ” கொல்லத்தக்கது அல்ல” என்ற பொருளைத் தரும் வார்த்தை அது. காளைகளையும் கன்றுகளையும் பால் தராத மாடுகளையும் மட்டும் மாமிசத்திற்காகக் கொன்றனர்.
-
இன்னைய இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதில்லை.?-
-
இந்து மதத்தில் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்க்கும் மரபு பிற்காலத்தில் ஏற்பட்டதே.சில அறிஞர்கள் அது ஜைன மதத்தின் தாக்கமாக இருக்கலாம் என எண்ணுகின்றனர். தவிர அதிகமாக மக்கள் வாழும் கிராமப் பகுதிகளில் ஒவ்வோர் இந்துவின் வீட்டிலும் பால் கொடுக்கும் ஒரு பசுவை வைத்திருந்தனர். இந்தியப் பசுக்கள் இயற்கையிலேயே மிகவும் சாதுவாளவை. அவை அவர்களது குடும்பத்தின் ஓர் அங்கத்தினர் போலவே நடத்தப்பட்டன.பசுவின் பாலைக் குடித்தே குழந்தைகள் வளர்ந்தன. மேலை நாட்டில் எவ்வாறு நாயை வளர்ப்பு மிருகமாகக் கருதுகின்றார்களோ அது போல் குழந்தைகளும் பசுவை வளர்ப்பு மிருகம் போல் அன்பு செலுத்தினர்.
-
மத சம்பிரதாயப்படி மாட்டிறைச்சி விலக்கப்பட்டதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. இந்துக்கள் நடைமுறையில் எந்த விலங்கினமாயினும் அதன் பெண் பால் மிருகத்தைக் கொன்று உண்பதில்லை.என்ற பழக்கத்தை அனுசரித்து வந்தனர்.
-
பசு புனிதமானதா?-
-
இந்துக்கள் பசுவைப் புனிதமாகக் கருதுவதால் மாட்டிறைச்சியை உண்பதில்லை என்ற எண்ணம் மேலை நாட்டினருக்கு உண்டு. இந்தக் கருத்து சரியானதல்ல. மற்ற மதத்தினரைப் போன்றே இந்து மதத்தினரும் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றே நம்புகிறார்கள். எல்லா உயிரினங்களிலும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் வசிக்கிறார்.ஆனால் அவரது வெளிப்பாடு எல்லாவற்றிலும் சமமாக இருப்பதில்லை. தெய்வீக அவதாரங்களிலும் கடவுளின் வெளிப்பாட்டை அதிக அளவில் உணரலாம். சாதாரண மானுடப் பிறவிகளில் இவருடைய வெளிப்பாட்டை அதிகமாகக் காணமுடியாது. மிருகங்களிடமும், தாவரங்களிலும் மற்றுமுள்ள கீழான உயிரினங்களிலும் அவரது வெளிப்பாட்டை மிகவும் குறைவாகவே காண முடியும்.பாறைகள், கற்கள் போன்ற உயிரற்ற பொருள்களில் கடவுளின் அம்சத்தை மிகச் சிறிய அளவில்தான் காண முடியும். இவ்வாறு பார்த்தோமானால் பசுவிடமும் கடவுள் இருப்பார். அப்படி இல்லாவிட்டால் கடவுள் எங்கிலும் இருப்பார் என்ற வாதம் மறுக்கப்பட்டதாகிவிடும். புனிதமானவற்றுள் புனிதமானதாகக் கடவுளைக் கருதும் போது கடவுள் எதில் இருப்பாரோ அதுவும் புனிதமானது தானே! அதனால் பசுவை ஏன் புனிதமாகக் கருதக்கூடாது.
-
ஆனாலும் ஓர் இந்து மனிதர்களை விட ஒரு பசுவை உயர்ந்ததாகக் கருதமாட்டான். பண்டைய இந்தோ- ஆரியர்களின் நாடோடிக் கலாச்சாரத்தில் பசுவின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. பசுவின் பால் அவர்களுக்குப் போஷாக்கை அளித்தது. வெண்ணையும், நெய்யும் உணவிற்குப் பயன்பட்டது. விளக்கெரிக்கவும் உபயோகித்தனர்.செருப்பு மற்றும் பல தோலால் ஆனப்பொருள்கள் பசுவின் தோலினால் செய்யப்பட்டன. பசுவின் குளம்புகள் பிசின் தயாரிக்க உதவின. பசுவின் சாணியை விறட்டியாகத் தட்டி அடுப்பெரிக்க உபயோகித்தனர். இவ்வாறு பசு பல வகையில் பயன்படுவதால் ஆரியர்கள் பசுவிடம் ஒரு விதமான தனி ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டு விட்டனர். இதே போன்றே மேலை நாட்டினர் குதிரையின் மேல் ஒரு விதமான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் குதிரை ஒரு பெருந்தன்மையுடைய பிராணி என்பர்.
-
நன்றாக வளர்க்கப்பட்ட மிருகமானது அனைவரையும் கவரும்.அதே போன்றே இந்தோ-ஆரியர்களும் பசுவின் மேல் ஒரு தனி நாட்டம் கொண்டனரே தவிர மற்றபடி வேறு எதுவும் கிடையாது..
புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்-
-
சாறுள்ளதும் பசியைப் போக்க வல்லதும் முழுமையானதும் நமக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதுமான உணவு தான் உடலின் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏற்றது என்று இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிகமான கசப்போடு கூடியவை ,காரமானவை,புளிப்பானவை,மிகவும் உவர்ப்பானவை,உஷ்ணமானவை, உலர்ந்தவை மற்றும் எளிதில் எரியக்கூடிய உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் பழைமையானவை, ருசியற்றவை,தூய்மையற்றவை,மற்றும் அழுகியவை ஆகியவற்றையும் உண்ணக்கூடாது.
-
இந்துக்களின் பிரிவுகளான சைவம், வைணவம் ஆகியவற்றின் புனித நூல்களில் தாவர உணவே பரிந்துரைக்கப்பட்டது. மீன், மாமிசம் மற்றும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மதுபானம் ஆகியவற்றை உண்ண சாக்தர்களின் மத நூல் அனுமதிக்கிறது. இதனால் சில இந்துக்கள் தங்கள் மதத்தைச்சார்ந்த வேறு பிரிவினர்கள் மாமிச உணவு உண்பதை வெறுக்கிறார்கள். அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள் . மகான்களும் துறவிகளும் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை மன்னிப்பதில்லை. இந்தியாவில் மதமானது சமையலறைக்குள் புகுந்து விட்டது. என்று சுவாமி விவேகானந்தர் வருத்தப்பட்டிருக்கிறார். பன்றி இறைச்சியைச் சாப்பிடும் ஒருவனால் இடைவிடாது கடவுளை நினைக்க முடியுமேயானால் தாவர உணவை மட்டும் உட்கொண்டு சதாகாலமும் சிற்றின்பங்களில் ஈடுபடும் மனிதனைவிட அவன் மேலானவன் என்று ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவது வழக்கம்.
-
தொடக்கத்திலிருந்தே இந்து மதமானது பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது. இந்துக்களின் முன்னோர்கள் தங்களது நாகரீக வளர்ச்சியின் துவக்க நிலையில் பல கடவுளர்களை வணங்கி வந்ததாக நம்பப்படுகிறது.நிலம்,நீர், நெருப்பு, காற்ற.வெளி,சூரியன்,பகல்,இரவு. இடி மின்னல்களுடன் கூடிய பெருங்காற்று ஆகியவை தெய்வங்களாகக் கருதி வழிபடப்பட்டு வந்தனர். ஆனாலும் வேத மந்திரங்களில் இவை அனைத்துமே மேலான கடவுளர்கள் என்றும், இவ்வுலகை படைத்த பெருமைக்குக் காரணமானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற மத நூலறிஞர் இந்துக்களின் முன்னோர்கள் பல கடவுளர்களை மேலானவர்களாகக் கருதுபவர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சிறப்பான சக்தி இருப்பதாக எண்ணி வழிபட்டனர் என்று கூறியுள்ளார். பல்வேறு வகைப்பட்ட கடவுளர்களிடையே ஏதோ ஒரு பொதுவான பண்பு காணப்படுவதை இந்தோ- ஆரியர்கள் நாளடைவில் கண்டு கொண்டனர்.
-
ரிக் வேதத்தில் படைப்புப் பாடல் (nasadiya hymn or the creation hymn) என்பது அழகானதும் செய்யுள் வடிவமானதுமாகும். அதில் ஒரு முதன்மையான கண்ணுக்குப் புலப்படாத தத்துவம் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்தே அனைத்துலகமும் தோன்றி வளர்ந்து விரிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்று சொல்லப்படும் அத் தத்துவமானது தூய்மையான உணர்வு என்றோ தூய ஆன்மா என்றோ அறியப்படுகிறது. அது இடம் காலம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது. ஆழம் காண முடியாதது. அதன் பல்வேறு பிரிவுகளையும் கூட மனித மனங்களால் புரிந்து கொள்ள முடியாது. அத்தத்துவமானது கடவுளர்கள் மனிதர்கள் ஏன் மற்ற எதுவுமே தோன்றாத காலத்திலும் கூட இருந்திருக்கிறது. அந்த ஒரு தத்துவத்திலிருந்து உலகத்தின் பல விஷயங்கள் உண்டாகியிருக்கின்றன.
-
இந்தோ- ஆரிய மேதைகள் பல வகையில் ஆராய்ந்து பார்த்து அனைத்திற்கும் மூல காரணமான இந்து தத்துவத்தைப் புரிந்து கொண்டனர். அது ஒன்று மட்டுமே கடவுள். அதுவே வேத கால சமஸ்கிருதத்தில் ” பிரம்மன்”(பிரம்மம்) என்று சொல்லப்பட்டது. பிரம்மனின் தெய்வீகத் தன்மை உணரப்பட்ட பின் அந்தப் பிரம்மனின் இருப்பது ஒன்றே என்ற தன்மையானது வேத நூல்களால் திரும்பப் பேசப்பட்டது. வேதங்கள் கூறும் ஏகம் சத் விப்ரா, பஹீதா வதந்தி (இருப்பது ஒன்றே சான்றோர் அதையே பலவாகக் கூறுகின்றனர்) என்ற கூற்றினைப் பார்த்தோமானால் மத நல்லிணக்கத்திற்கான அறிவுரைகளையே இந்து மதம் தனது அஸ்திவாரமாகக் கொண்டிருப்பது தெரிய வரும். எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் அந்த மேலான ஒன்றை ஒருவன் நன்கு உணர வேண்டும். அதுவே அணுவைக்காட்டிலும் சிறியது. பிரகாசமாக இருப்பது, தூய மனம் கொண்டவர்களின் தியானத்தினால் அறியப்படுவது. சிலர் அதனை அக்னி என்பர். சிலர் மனு (சிந்தனையாளர்) என்பர், சிலர் பிரஜாபதி(உயிர்களின் தலைவன்) என்பர். வேறு சிலர் இந்திரன் (பிரகாசமானவன்) என்பர். சிலர் பிராணன் (உயிர் நாடி) என்பார்கள். மற்றும் நிலையான பிரம்மம் (மிகப்பெரியது)என்றும் சொல்வார்கள். என்று மாபெரும் முனிவரான மனு தெரியப்படுத்தியுள்ளார்.
நிர்குணப் பிரம்மம்
-
படைப்புத் தொழில் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது யார்? என்ற வினாவிற்கு படைப்பு கடவுள் அல்லது கடவுள் என்ற விடைதான் தர்க்க ரீதியாகக் கிடைக்கும். படைப்பிற்கு முன்னால் கடவுள் எப்படி இருந்தார்? என்று கேட்டோ மேயானால் மனிதனுடைய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தார் என்று இந்து மதம் பதிலளிக்கும்.
-
வெளி ,காலம், இடம் என்பவை இவ்வுலகுடன் தொடர்புடையவை. எனவே கடவுள் படைப்புத் தொழிலைத் துவக்கியவுடன் காலம், வெளி, இடம் ஆகியவற்றையும் அதனோடு படைத்தார். இதைத் தெளிவு படுத்தும் ஓர் எடுத்துக்காட்டு
–
ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்பதாகக் கருதுவோம். அவனுடைய கனவு உலகில் அவன் கனவு காணும் வெளியிலும் . காலத்திலும் இருக்கிறான். இவை இரண்டும் அவன் கனவு உலகைப் படைத்த போது மனத்தால் உண்டாக்கப்படடவையே . அது அவன் விழிப்போடு இருக்கும் நிலையோடு தொடர்புடையதல்ல. கனவு நிலையின் காலத்தையும் வெளியையும் நனவு உலகில் நடப்பது போன்று எண்ணுகிறான்.இதைப் போன்றே படைப்பிற்கு முன்னதாக இருந்த கடவுளின் நிலையும் இருந்திருக்கும்.அத்தகைய நிலையில் கடவுள் எந்த விதமான எல்லைக்கும் உட்பட்டவராக இல்லை.எனவே அப்போது அவரது நிலை நிரந்தரமானது.மாறுபடாதது, முடிவற்றது. அத்தகைய மாறுபாடுகள் ஏதும் உண்டாகாத நிலையில் உள்ள கடவுளை இந்து மதம் நிர்குணப் பிரம்மம் என்கிறது. அதுவே மேலான பிரம்மம் அல்லது உருவமும் குணங்களும் அற்ற நிலை என்று கூறலாம்.
-
நிர்குணப் பிரம்மத்திற்கு உருவம் கிடையாது. சிறப்பியல்புகளைக் கூறும் போது அது ஓர் எல்லைக்கு உட்பட்டுவிடும். உருவம் அற்று இருப்பதால் ஆணா, பெண்ணா என்று பகுத்து க்கூற முடியாது. எனவே அவன் அல்லது அவள் என்ற பிரதிப் பெயர்ச்சொல்லையும் பயன்படுத்த முடியாது.
-
வேதங்கள் சமஸ்கிருதத்தில் தத்” என்ற ஆணும் பெண்ணும் அற்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றன.ஆங்கிலத்தில் அது” என்று குறிக்கப்படுவதால் அது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்பது தெளிவாகிறது. அளவைப் பொருத்து நிர்குணப்பிரம்மம் எல்லையற்றது, முடிவற்றது, காலத்தைப் பொருத்து அது அழிவற்றது,நிலையானது, உருவாக்கப்படுவதால் ஏற்படும் மாறுதலைப் பொறுத்து அது மாறுபாடற்றது.
-
தன்மை என்பது ஒன்றை மற்றதினின்று பிரிப்பதற்கான காரணமாக அமைகிறது.,. நிர்குணப் பிரம்மம் எனப்படுவது ஒன்றே. அதைப் பகுக்க முடியாது. அதனுள் எந்த விதமான பாகுபாட்டிற்கும் இடமில்லை. எனவே நிர்குணப் பிரம்மம் எனப்படுவது கற்பனை செய்து பார்க்க முடியாதது மற்றும் குணங்களைக் கடந்தது. நிர்குணப்பிரம்மத்தைக் குறிக்க இந்து மதமானது கலப்பற்ற உண்மை” உணர்வு நிலை” மற்றும் வரம்பற்ற பேரானந்தம் போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது. எத்தகைய அடைமொழிகளைப் பயன்படுத்தினாலும் நம்முடைய எல்லைக்கு உட்பட்ட உலகில் பிரம்மத்தை முழுமையாக வர்ணிக்க முடியாது.
-
இந்து மதத்தின் பெரிய துறவியும், தத்துவ ஞானியுமான சங்கராச்சாரியார் வேத நூல்களில் சத்சித்-ஆனந்த பிரம்மமானது என்றும் நிலைத்து நிற்பது, முழுமையான அறிவுப் பெட்டகம் மற்றும் வரம்பற்ற பேரானந்தம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.இவையெல்லாம் நிர்குணப்பிரம்மத்தை முழுமையாக வர்ணிக்கும் சொற்கள் ஆகாது என்று கூறுகிறார். ஈஸ்வரன்-மனிதன் தன்னுடைய எல்லைக்குட்பட்ட அறிவின் துணைகொண்டு அந்த எல்லையற்ற நிர்குணப்பிரம்மத்தை கிரகிக்க முயல்கிறான். அவனறியாமலேயே மனது நிர்குணப்பிரம்மத்திற்கு ஓர் எல்லையை வகுத்து விடுகிறது. அதன் விளைவாக எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பரப்பிரம்மம் அவனைப் பொறுத்த வரையில் எல்லைக்குட்பட்டு விடுகிறது.
-
மனிதனால் மனித மனத்தை த் தாண்டி வேறு விதமாக எண்ண முடியாது. ஆகவே மனிதனின் குணாதிசயங்களை உடையதாக நிர்குணப்பிரம்மத்தை அவன் ஆக்கிவிடுகிறான். இவ்வாறாக உருவமற்ற நிர்குணப்பிரம்மமானது மனிதனையொத்த ஓர் உருவத்தைப் பெற்று விடுகிறது. அருவக்கடவுள் உருவக்கடவுளாக ஆகிவிடுகிறார்.உண்மையில் நிர்குணப்பிரம்மமானது எத்தகைய மாற்றத்திற்கோ அல்லது மாறுதலுக்கோ ஆட்படுவது கிடையாது. உருவக்கடவுள் எனப்படுவதும் அருவக்கடவுளே தான். அருவக்கடவுளுக்கு இடம் காலம், குணம் ஆகிய போர்வையைச் சுற்றினால் உருவக்கடவுளாக உணரமுடியும்.
-
ஈஸ்வரன் அல்லது சகுண பிரம்மம்
-
உருவக்கடவுளும், அருவக்கடவுளும் எந்த வகையிலும் வேறுபாடுகள் கொண்டவை அல்ல. ஒரேக் கடவுளே எல்லையற்றதாக கருதும் போது நிர்குணப் பிரம்மமாகவும் , வரையறைக்குட்பட்டதாகக் கருதும் போது சகுணப் பிரம்மமாகவும் தெரிய வருகிறது.
-
இந்து மதத்தில் உருவக்கடவுள் சகுணப்பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் மனிதன் இடம் , காலம், காரணம் ஆகியவற்றினால் கட்டுப்பட்டவன். அவனது கணிப்பின் படி ஈஸ்வரன் அல்லது சகுணப் பிரம்மம் தான் இவ்வுலகத்தைப் படைத்தது.அவன் எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன்.அவன் தன்னுடைய விருப்பத்தினால் தன்னையும் படைத்து பலவகைப்பட்ட உலகத்தையும் படைக்கிறான். அவனுக்கென்று ஓர் உருவமும் கிடையாது. ஆனாலும் மாயை எனப்படும் தன்னுடைய தெய்வீக சக்தியின் துணைகொண்டு பல்வேறு வகையான தோற்றத்தில் காட்சியளிக்கிறான். தன்னுடைய மாயா சக்தியினால் நல்லனவற்றையும் தீயனவற்றையும் சேர்த்து இவ்வுலகைப் படைத்தான். இந்த உலகம் அவனால் படைக்கப்பட்ட போதிலும் அவன் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டவன்.
-
ஈஸ்வரன் படைப்பவன் மட்டுமல்லாது, படைக்கப்பட்ட உலகைக் காப்பதுடன், அழிக்கவும் செய்கிறான்.படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களுமே இவ்வுலகில் தொடர்ந்து நடைபெறுகின்றது. ஈஸ்வரனுடைய தோற்றங்கள் அடிப்படையில் (1) படைப்பது (2) காப்பது (3) அழிப்பது என்ற மூன்றாக உள்ளன. ஈஸ்வரனின் இந்த மூன்று அடிப்படைத் தோற்றங்கள் முறையே பிரம்மா. விஷ்ணு, சிவன் என்று சொல்லப்படுகிறது. ஈஸ்வரன் படைப்புத் தொழிலைச் செய்யும் போது பிரம்மா என்றும் ,காக்கும் தொழிலைப் புரிகையில் விஷ்ணு என்றும் , அழிக்கும் தொழிலைப்புரிகையில் சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். ஈஸ்வரன் , பால் பாகுபாட்டிற்கு அப்பாற்பட்டவன்.இருப்பினும் இந்துக்கள் அவனைத் தாயாகவும் , தந்தையாகவும் பாவிக்கிறார்கள். மேலும் பக்தன் தனது மனதின் விருப்பத்திற்கேற்றாற்போல் ஈஸ்வரனுடன் தனது உறவை அமைத்துக் கொள்கிறான். ஈஸ்வரனை ஒரு நண்பனாகவோ, குழந்தையாகவோ, கணவனாகவோ அல்லது காதலியாகவோ எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளலாம்.இவை யாவும் ஈஸ்வரனின் மேல் ஏற்றப்படும் மன எழுச்சிகளே.
-
இந்து மதத்தைச் சார்ந்த பல் பெரிய பெண் துறவிகள் கடவுளையே தங்களது கணவனாக கருதியுள்ளனர்.ஒரு சிலர் கடவுளைத் தங்களது தெய்வீக குழந்தையாகப் பாவித்து உள்ளனர். கமலாகாந்தர், ராம்பிரசாத், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற இந்து மத சாதுக்கள் கடவுளைத் தெய்வீக அன்னையாகக் கருதினார்கள். மேலே கூறப்பட்ட உறவுகள் அனைத்தும் மனத்தளவில் ஏற்பட்டவையே தவிர உடலால் எத்தகைய தொடர்பும் கொண்டவை அல்ல.
-
19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியத்துறவியான ஸ்ரீராமகிருஷ்ணரின் கூற்றுப்படி இத்தகைய உறவு முறைகளைக் கொண்ட கடவுளை நெருக்கமாகக் கருத முடியும். அதனால் கடவுள் காட்சியைப் பெறுவது துரிதப்படுத்தப்படுகிறது. இறைக்காட்சி அடைய வேண்டும் என்று எண்ணும் சாதகர்களுக்கு இந்த உறவு முறைகள் கடவுளிடம் நெருக்கத்தை உண்டு பண்ணுவதால் அவர்கள் விரைவில் தங்களது இலட்சியத்தை அடைய முடியும். இவ்வுலகில் காணப்படும் அறநெறிகளைத் தோற்றுவித்தும் அவற்றை நிலைநிறுத்தவும் செய்பவர் ஈஸ்வரனே. இந்த அடிப்படை சட்டங்களே வடமொழியில் ரிதம் என்று சொல்லப்படுகிறது. இதனால் கோள்களும் , விண்மீன்களும் ஓர் ஒழுங்குத் தன்மையுடன் இயங்குகின்றன.இந்து மதக் கடவுள்கள்- மூன்று தத்துவங்களிலும் அடிப்படையில் கடவுளை வணங்கிய போதிலும் கடவுளின் சக்தியானது மிகவும் அபரிமிதமானது. கடவுளின் சக்திக்கு எல்லையே கிடையாது. எனவே ஓர் இந்து ஈஸ்வரனிடம் ஏதோ ஒரு சக்தி அதிகமாகக் காணப்படுவதாக கருதினால் அதற்கேற்ப கடவுளுக்கு ஒரு பெயர் அளிக்கப்படும் ஈஸ்வரன் அறிவைக் கொடுப்பவனாகக் கருதும் போது சரஸ்வதி என்றும் செல்வத்தை வாரி வழங்கும் போது லக்ஷ்மி என்றும் பெயர் சூட்டப்பட்டான். இதிலிருந்து தேவதேவதைகள் பல்வேறு கடவுளர்கள் அல்லர் என்பதையும் , அவை ஒரே ஈஸ்வரனின் வெவ்வேறு வகையான தோற்றங்களே என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தேவர்களும் தேவிகளும் ஒளியுடன்கூடிய உடலை உடையவர்கள்- கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சில உயிர்கள் இந்த நில உலகில் வாழ்ந்த போது பல செயற்கரிய செயல்களைச் செய்ததால் அவை இறந்த பிறகு புகழ் மிக்க பதவியானது அளிக்கப்படுகிறது.அவை ஒளி பொருந்திய உடலைப் பெற்று ஒளியையும் வீச வல்லதாகிறது.“திவ்” என்ற வடமொழிச் சொல்லுக்கு ஒளிவீசுதல் என்று பொருள் . எனவே அவை ஆண்களாக இருந்தால் தேவன் என்றும் , பெண்ணாக இருந்தால் தேவி என்றும் கருதப்பட்டார்கள்.
-
தேவர்களுள் மிகவும் பெரியவருக்கு ஹிரண்யகர்பர் என்று பெயர். அவருக்கு எல்லையற்ற சக்தி உண்டு. கடவுளால் முதலன் முதலாகப் படைக்கப்பட்ட உயிர் அவர். படைக்கப்பட்டவராக இருந்தாலும் கடவுளைப் போன்றே எல்லா விதமான சக்திகளையும் கொண்டவர்.இவர் இந்தப் பிரபஞ்ச சம்பந்தமான நுண்ணறிவு ஆவார். ஈஸ்வரனின் விருப்பப்படி ஹிரண்யகர்பர் இந்த உலகத்தைப் படைத்தார். கடவுளால் படைக்கப்பட்ட முதல் உருவம் ஹிரண்யகர்பர் எனவே அவர் அனைவரது வழிபாட்டிற்கும் உரியவர். அவருக்குள் இந்த உலகம் முழுவதும் அடங்கும்.ஏனைய தேவ தேவதைகள் அவருக்குள்ளேயே இருக்கின்றனர். ஆகையால் எந்த ஒரு தேவ தேவதையைப் போற்றிப் புகழ்வதும் ஹிரண்யகர்பரைப் புகழ்வதற்கே ஒப்பாகும். சில சமயங்களில் புராணங்கள் ஹிரண்யகர்பரைத் தெய்வமாக்கி ஈஸ்வரனின் தரத்திற்கு உயர்த்தி விடுகின்றன. அப்போது அவர் படைப்புக்கடவுள் அல்லது பிரம்மா(நான்கு தலைகள் கொண்டவர்) என்று அழைக்கப்பட்டார்.
-
ஹிரண்யகர்பரைத் தவிர மீதி உயிர்கள் தெய்வத் தன்மையால் ஒளி கொண்டதாகவோ அல்லது முக்தி அடைந்ததாகவோ ஆகாது. இவ்வுலகில் வாழ்ந்த போது அவர்கள் செய்த பொற்றத் தகுந்த நற்செயல்கள் காரணமாக உயர்ந்த பதவிகள் அளிக்கப்படும். அவர்கள் செய்த நற்பயனின் தீவிரம் குறைந்தவுடன் அவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து மனிதப்பிறவி எடுத்தாக வேண்டும்.
-
இந்து மதத்தில் இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு வகைப்பட்டதான உயிருள்ளதும் உயிரற்றதுமான ஜீவன்களைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ள தேவ தேவதைகளுக்கு வடமொழியில் அதிஷ்டதாரி தேவா, அதிஷ்டதாரி தேவி என்று பெயர். இவர்களுக்கு உட்பட்ட பகுதி மிகவும் சிறியதாகவோ, பெரியதாகவோ, மிகப் பெரியதாகவோ அல்லது மிகச்சிறியதாகவோ கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக இந்திரனை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு அதிஷ்டான தேவன். அவர் அனைத்து மக்களின் போர்க்கருவிகளுக்கும் போரிடுபவரின் திறமைக்கும் அதிகாரி ஆவார். அதே போன்று ஹிரண்யகர்பரும் ஒரு அதிதேவன். அவர் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் அனத்திற்கும் அதிகாரி ஆவார். அவர் அனைவரது மனத்தையும் தன் மனதாகவே எண்ணுபவர்.
-
“விராட்” என்பவர் அனைத்து உலகிலுள்ள பொருள்களையும் தன்னுடைய உடலாகவே கருதுகிறார்.இதை விளக்கும் வகையில் நம்முடைய மனித உடலையே எடுத்துக்கொள்வோம். ஓர் உடலானது தோலால் பாதுகாக்கப்பட்ட உலகமாகிறது. அந்த உடலுக்குள் எலும்புகள், நரம்பு மண்டலம், இரத்த ஓட்டம் மற்றும் பல நுண்ணிய திசுக்கள் அடங்கி உள்ளன. இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் இருப்பதை நாம் அறிவோம். அது வெளியிலிருந்து நோய்க் கிருமிகளால் நம் உடல் பாதிக்காமல் இருக்க ஒரு பாதுகாவலனாக வேலை செய்கிறது. ஏதாவது நோய்க் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அவற்றுடன் போராடி அவற்றை அழித்து விடுகிறது. யாராவது அந்த வெள்ளை அணுவிடம் இதோ பார்? நீ இந்தத் தோலால் சூழப்பட்ட பிரபஞ்சத்திற்குள் இருக்கிறாய்.இங்கே ஓர் உயிர் இருக்கிறது. அதற்கு இந்த உடலே உலகம். அதுவே நீ வாழும் பிரபஞ்சத்திற்கு அதிதேவதை என்று கூறினால் அந்த வெள்ளை அணு அநேகமாக நீ என்ன கதை விடுகிறாயா? என்று கேட்கலாம். நாம் அந்த வெள்ளை அணுக்களைப் போன்றவர்கள் தான். நம்முடைய மன இயல்பானது அதிஷ்டான தேவ தேவதைகளை ஒப்புக் கொள்ளாது. ஆனாலும் இந்த விஷயமானது நகைப்பிற்குரியது என்று தள்ளிவிட எண்ணுவது மதியீனம். நம்மிடம் பாரபட்ஷம் இல்லாது இருப்பின் இவ்வாறாக விஷயங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்து மதமானது இத்தகைய விஷயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது.
15
-
மதமானது சீர் குலைந்து அநீதிகள் தலைவிரித்து ஆடும் போது கடவுள் கருணைக் கொண்டு பூமியில் அவதரித்து அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டி மதத்திற்குப் புத்துயிர்ச்சி அளிக்கிறார் என்பது இந்து மதக் கொள்கையாகும். அவ்வாறு தோன்றும் கடவுளை வட மொழியில் அவதாரம் என்றும் தமிழில் தெய்வம் மானுட உருவில் தோன்றுதல் என்றும் சொல்லப்படுகிறது. உலகம் தோன்றிய காலந்தொட்டே கடவுள் பல முறை மனித உருக்கொண்டு தோன்றியிருக்கிறார். வருங்காலத்திலும் தேவை ஏற்படும் போது கடவுள் மனித உருவில் அவதரிக்கலாம். முதலாவதான சில அவதாரங்களில் மனித உருவில் இல்லாமல் சில கீழான ஜீவராசிகள் போன்று தோன்றினார். முதலாவதாக மீனாகவும் அடுத்த படியாக ஆமை வடிவிலும் , மூன்றாவதாக பன்றியின் வடிவிலும் தோன்றினார். பின்னர் பாதி உடல் மனிதனாகவும் மறு பாதி விலங்காகவும் இருக்குமாறு தோன்றினர். அதனைத் தொடர்ந்து எடுத்த அவதாரங்கள் அனைத்துமே மானுட உருவில் தான். அறிவியல் அடிப்படையில் நோக்குமிடத்து உலகில் தோன்றிய முதல் உயிரினம் மீன் போன்ற நீரில் வாழும் உயிரினங்களே. அதற்குப்பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை போன்றவை தோன்றின. அதைத்தொடர்ந்து நிலத்தில் மட்டும் வாழும் பன்றியினங்கள் தோன்றின. அவர்களுக்குப்பிறகு மனிதனின் மூதாதையர்கள் தோன்றினர். அவர்களிடம் முழுமையான அளவில் மனித இயல்பு இருக்கவில்லை. அவர்களிடம் விலங்கின் இயல்பும் மனிதனின் இயல்பும் கலந்த ஒரு வகையான நடையுடை பாவனைகளே இருந்தன. நாளடைவில் அவர்கள் முழுமனிதனின் இயல்புடையவர்களாக மாறினார்கள். கடவுளின் தெய்வீக அவதாரங்களின் வரிசையையும் பூமியில் மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமக்கு மிகவும் விந்தையாக இருக்கிறது. மனித வடிவில்லாது வேறு இழிந்த உயிரினமாகக் கூட கடவுள் ஏன் அவதரிக்க வேண்டும். என்று தோன்றலாம். அதற்கு விடையாக இந்து மதமானது நமது கவனத்தைக்கடவுளின் கருணை மயமான இதயத்தின் பக்கம் திருப்பி விடுகிறது. அதன் படி இவ்வுலகில் அனைத்து உயிரினங்களையும் அவரே படைத்துள்ளார்.என்பதாலேயேஅந்தக் கருணா மூர்த்தி அனைத்து ஜீவராசியின் வடிவிலும் தோன்றினார் என்பதாகும். இல்லையெனில் அவர் பாரபட்சமுடையவர் என்றாகிவிடும்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசமான பாகவதம் , கடவுளின் எண்ணற்ற அவதாரங்களை எடுத்துள்ளார் என்கிறது.மற்ற மத நூல்கள் வெறும் பத்து அவதாரங்களையே குறிப்பிடுகின்றன..(1)மத்ஸ்ய(2) கூர்ம(3)வராக(4)நரசிம்ம(5)வாமன(6) பார்க்கவ(7)ராம(8)பலராம(8b)கிருஷ்ண(9)புத்த(10)கல்கி என்ற பத்து அவதாரங்களாகும். வேதங்கள் தெய்வத்தின் அவதாரங்களைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.வேதங்கள் ரிஷிகள் அல்லது முனிவர்களைப் பற்றியே பேசுகின்றன. எல்லா முனிவர்களிடமும் ஒரே அளவிலான தெய்வீகத்தன்மை காணப்படுவதில்லை. ஒரு சிலரே தங்களது தவத்தின் மகிமையால் தனிச்சிறப்புடையவர்களாகின்றனர்.
-
பிற்காலத்தில் இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளின் தத்துவ சாஸ்திரங்கள் விரிவடைந்தன.அவற்றின் படி புகழ்பெற்ற முனிவர்களை தெய்வீகத்தன்மை பொருந்தியவர்கள் என்ற பொருள் படும் படி அதிகாரி புருஷர்கள் என்று என்றழைத்தனர்.இத்தகையவர்கள் மனிதப்பிறவி எடுத்திருந்த போதிலும் அவர்களைச் சாதாரண மனிதர்களோடு இணைத்துப் பேசுவதில்லை.மிகப்பழமையான தத்துவ நூல் சாங்கியம். அது அதிகாரி புருஷனை ஈஸ்வர கோடி அல்லது கல்பனியாமக ஈஸ்வரன் என்கிறது. இத்தகைய தெய்வீக அவதாரங்களின் அற்புதக் காட்சிகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.ஆனால் வேத காலத்திலோ அல்லது சாங்கியம் போன்ற தத்துவநூல்கள் வளர்ச்சி அடைந்தபோதோ அதைச்சரியாக விளக்க முடியவில்லை.பிற்காலத்தில் அதாவது புராணங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் தான் அதற்கான சரியான விளக்கம் தரப்பட்டது.
-
வேத காலத்தில் பிற்பகுதியில் கூறப்பட்ட அதிகாரி புருஷர் , ஈஸ்வரகோடி, கல்பனீயாமக ஈஸ்வரன் என்ற அனைத்துமே புராண காலத்து தெய்வீக அவதாரங்களே அன்றி வேறு அல்ல. இது சில இந்து அறிஞர்களின் விளக்கமாகும். நல்வழியில் மக்களை ஊக்குவிப்பது. அவர்களை முக்தி அடையச் செய்வது என்ற இரண்டு காரியங்களை நிறைவேற்றவே கடவுள் பூமியில் அவதாரமெடுக்கிறார். கடவுள் அவராகவே தனது சக்தியையும் மனித நிலைக்கு வரையறுத்து க் கொள்கிறார். பின்னர் கடுமையான ஆன்மீக சாதனைகளை மேற்கொண்டு மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிலையை எய்தி தனது தெய்வீக த் தன்மையை வெளிப்படுத்துகிறார். பிறவியிலேயே அவர் முழுமையானத் தெய்வத்தன்மை உடையவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தெய்வீகத்தன்மையை அடைய அவர் எந்த விதமான ஆன்மீக சாதனைகளும் செய்ய வேண்டியதில்லை. சாதாரண மானுடனுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தவே அவர் சாதனைகள் செய்கிறார். எனவே அவரது குற்றமற்ற வாழ்க்கை மனித சமூகத்திற்கு முன் மாதிரியாக இருப்பதற்காகவே. கோழியானது தனக்குப் பசி இல்லை என்றாலும் தன்னுடைய குஞ்சுகள் இரையை எவ்வாறு கொத்தித் தின்ன வேண்டும் என்பதற்காக நிலத்திலிருந்து தானியங்களைக் கொத்தி விழுங்குவது போன்று, மனிதர்கள் தன்னைப் பார்த்து சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக தெய்வீக அவதாரமெடுத்த கடவுளும் சாதனைகள் புரிகிறார். தன்னை முழுமையாகச் சரணடைந்தவர்களின் பாவங்களைப் போக்கி அவர்களை முக்தி அடையச் செய்கிறார். இதையே பகவான் கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில் கூறியுள்ளார். எல்லா தர்மங்களையும் அறவே விட்டு என்னை மட்டுமே சரணடை நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.
16
-
வட மொழியில் கர்ம வாதம் என்று சொல்லப்படும் செயலும் அதன் விளைவும் என்பதை இந்து மதம் நம்புகிறது. கர்ம என்றால் செயல் என்று பொருள்.சில சமயங்களில் செயலின் விளைவையும் குறிக்கும்.இதன் படி நற்செயல்களினால் நன்மையும் தீய செயல்களினால் தீமையும் விளையும் என்பதே அறியப்படுவது. செயல்களினால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளுமே “கர்ம பலம்” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது.ஒருவன் செய்யும் நல்ல செயல்கள் அவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தீய செயல்களைச் செய்வதால் துன்பமும் மனக்கஷ்டமும் வரும். பௌதிகம் நமக்கு சக்தியின் சேமிப்பு க் கோட்பட்டினைத் தெரிவிக்கிறது. இக்கொள்கையின் படி சக்தியை ஒரு போதும் அழிக்க முடியாது ஒரு வகையான சக்தியை வேறு வகையானதாக வேண்டுமானால் மாற்றி அமைத்து க் கொள்ளலாம். இந்த க் கருத்தின் அடிப்படையில் தான் ஒருவன் செய்யும் செயலின் உருவமானது மாறி கர்மபலன் என்று ஆகிறது. இந்தச் சக்தியானது எய்தவனிடமே திரும்பி வரும் ஆயுதத்தைப் போன்று. செயலைச் செய்தவனிடமே உடனுக்குடனோ அல்லது காலதாமதமாகவோ வந்து சேருவது தவிர்க்க முடியாததாகிறது.செயலின் தன்மையைப் பொறுத்து அத அவனுக்க மகிழ்ச்சியையோ அல்லது வருத்தத்தையோ கொடுக்கிறது. அதனால் மனதும் உடலும் பாதிக்கப்படுகிறது. எனவே இத்தகைய கர்ம பலனிலிருந்து யாரும் தப்ப முடியாது. அதனால் செயலைச் செய்தவனது மனத்தையும், உடலையும் பாதித்த பிறரது கர்மபலன் செலவழிந்து விடுகிறது. அதன் பிறகு அது செயலைச் செய்தவனை விட்டு விட்டு பிரபஞ்சத்தின் விரிந்த பண்டக சாலையான சக்தியின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.
-
இந்தக் கொள்கையின் படி கடவுளால் படைக்கப்பட்ட எந்த ஒரு பிராணியின் இன்ப துன்பத்திற்கும் கடவுள் பொறுப்பாளி அல்ல. பிராணிகளின் சொந்த மகிழ்ச்சிக்கும் , கஷ்டங்களுக்கும் அவரவர்களே காரணமாகிறார்கள். அவர்களது நல்ல செயல்கள் அல்லது கெட்ட செயல்களுக்கு ஏற்றபடி அதன் விளைவான சுகத்தையோ துன்பத்தையோ அனுபவிக்க நேரிடுகிறது. எனவே கடவுள் அவர்கள் செய்யும் கர்மங்களுக்குத் தக்கபடி பலனை அளிப்பவர் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்த செயலுக்கேற்ற பலனை அடையச் செய்வதில் தவறு ஏதும் நடவாது. அவர் பார்த்துக் கொள்கிறார். அதனால் ஒருவன் செய்த கர்மத்தின் பலன் வேறு ஒருவனுக்குப் போகாது. ஒருவன் தனது சராசரியான வாழ்க்கைக் காலத்தில் எண்ணற்ற செயல்களைச் செய்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகளும் எண்ணில் அடங்கா. அவனது செயல்களினால் ஏற்படும் விளைவுகள் உடனுக்குடன் அவனுக்கு வந்து சேராது. ஆனாலும் சில விளைவுகள் வரலாம். எடுத்துக்காட்டாக க் கூறுவோமேயானால் ஒருவன் தனது பழத் தோட்டத்தில் ஓர் ஆப்பிள் மரக்கன்றை நடுவதாக வைத்துக் கொள்வோம். சில சமயங்களில் அது வளர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பழங்களை அளிக்கலாம். ஆனால் அவன் தீயிற்குள் கையை விட்டால் அதன் விளைவு உடனடியாகக் கிட்டும் அதாவது அவனது கை நெருப்பினால் சுடப்பட்டுக் காயமாகிவிடும்.
-
சஞ்சித கர்மம் மற்றும் பிராரப்த கர்மம்-
-
சிலருக்கு இயற்கையாக அமைந்த அவர்களது குணங்களுக்கு ஏற்ப சில செயல்களின் பலன்கள் தாமதமாக ஏற்படுகின்றன. அவற்றைக் காலம் முடிந்த பிறகும் கவனிக்கப்படாத வைப்பு நிதிகளுக்கு ஒப்பிடலாம். சில வைப்ப நிதிகள் தற்போதிலிருந்து சில ஆண்டுகளுக்க ப்பிறகு முடிவடையலாம். இதே போன்றே தாமதமாக விளைவுகளைக் கொடுக்கும் சில செயல்கள் அவற்றைச் செய்தவர்களது வாழ்நாள் முடிவடைவதற்குள் ஏற்படாமல் போகலாம். இத்தகைய செயல்களின் விளைவுகள் அதற்கான காலம் வரும் வரை சேமிப்புக் கணக்கில் பத்திரமாக இருக்கும். அந்தச் செயலைச் செய்தவனது எதிர்காலத்தில் அவனது செயல்களின் விளைவுகள் வரலாம். இவ்வாறாக இந்து மதத்தில் செயல்களைப்பற்றிய கொள்கையானது மறுபிறவிக் கொள்கையுடன் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது.
-
கடந்த பிறவிகளில் ஒருவன் செய்த செயல்களின் கர்ம பலன்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இவையே “சச்சித கர்மங்கள்” அல்லது முற்பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை நிதிநிறுவனங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகின்ற சேமிப்புக் கணக்குகளைப் போல் நிலைச் சக்தியாக இருக்கும். அந்த வைப்புக் கணக்கு முடியும் காலம் வந்தவுடன் அது இயங்கு சக்தியாக மாறி செயல்களைச் செய்தவனின் உடலையும் உள்ளத்தையும் தாக்கும். கர்மத்தின் பலனானது இது போன்று செயல்படத் தொடங்குவதையே “பிராரப்த கர்மம்” . என்பர். இந்து மதக் கொள்கையின் படி இந்தப் பிராரப்த கர்மம் ஒருவன் பிறக்கக் காரணமாவதோடு அவன் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பான் என்பதையும் தீர்மானிக்கிறது. அத்தோடு அவன் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவனது பிராரப்த கர்மத்தின் பலன்கள் முடிவடைந்தவுடன் அவன் மரணத்தை எய்துகிறான்.
-
கடிகாரத்திற்குச் சாவி கொடுத்தால் அது எவ்வளவு காலம் ஓடும் என்பதை நாம் அறிவோம். அத்தனை மணிக்காலம் ஓடிய கடிகாரம் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் நின்று விடும். அதே போன்றே பிராரப்த கர்மமானது ஒருவனைக் குறிப்பிட்ட காலம் வரை ஆட்டி வைத்து விட்டு அதன் பலன்கள் முடிந்தவுடன் ஓய்ந்து விடும்.
-
கிரியா கர்மா- ஆகாமி கர்மா
-
இப்பிறவியில் செய்த எந்த செயல்களாக இருந்தாலும் அல்லது அந்தச் செயல்களின் விளைவுகளை் எப்படிப்பட்டதாயினும் அதை வடமொழியில் கிரியா கர்மா அல்லது ஆகாமி கர்மா என்கிறார்கள். இப்பிறப்பில் செய்த எத்தகைய கிரியமான கர்மத்தினால் உடனடியாக பலன் கிட்டும் என்பதை இந்து மத நூல்கள் கூறுகின்றன.துறவிப் பெருமக்களைக் கொலை செய்தல் அல்லது பெண்களைக் கொலை செய்தல் போன்ற மிகக் கொடிய குற்றங்களைச் செய்பவர்கள் அதனால் விளையும் கெட்ட பலன்களை இப்பிறவியிலேயே அனுபவிப்பார்கள். நற்செயல்களைச் செய்தல் அல்லது மிகவும் மோசமானதல்லாத கெட்ட செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் உடனே கிட்டாது. ஆனால் அச்செயல்களினால் ஏற்படும் பலன்கள் அந்த மனிதனின் வாழ்க்கைக் காலத்திலேயே அவன் கணக்கில் சேமிப்பாக இருக்கும். அப்போது அது கிரியா கர்மம். அதுவே அவனது கணக்கில் சஞ்சித அல்லது திரண்ட கர்மமாக ஆகிவிடும்.
17
-
தன்னுடைய உடல் என்னும் கடிகாரத்தை ஒருவன் அது முழுமையாக ஓடுவதற்குள் அதாவது தானாக மரணம் எய்துவதற்கு முன் தற்கொலை செய்து கொள்வானேயாகில் அவன் மிகப்பெரிய தவற்றை செய்தவனாகிறான். அவனுடைய கர்ம பலன்கள் அத்தோடு நின்று விடாது. வேட்டை நாய் ஒருவனைத் துரத்துவது போல் அடுத்த உலகிற்கும் சென்று துரத்தும். இந்த அகால மரணத்தால் அவன் தனது முழு வாழ்நாள் தீரும் வரை என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருந்திருக்குமோ அதைப் போன்ற பல மடங்கான துன்பங்களை சகிக்க வேண்டி வரும். எனவே இந்து மதமானது தற்கொலையைமிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
-
குழந்தைப்பருவத்தில் இறப்பதைப்பற்றிய இந்து மதக்கருத்து-
-
மறு பிறவி என்பதன் கண்ணோட்டத்தில் புதியதாகப் பிறந்த குழந்தையைத் “தூய்மையான ஆன்மா” என்றோ குற்றமற்ற ஆன்மா” என்றோ இந்து மதம் கருதுவது கிடையாது.பிறந்த உடனேயே இறக்கும் குழந்தைச் சொர்க்கத்திற்குச் செல்கிறது என்றோ அது முக்தி பெற்று விட்டது என்றோ இந்து மதம் நம்பவதில்லை. தனிப்பட்ட ஒவ்வொரு பிறவியும், வாழ்க்கையில் சந்திக்கும் சந்தோஷங்களும் மற்றும் துன்ப அனுபவங்களும் ஆன்மீகப் பாதையில் வளர்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. குழந்தையாகவே இறப்பவருக்கு அந்த வாய்ப்பு போய்விடுகிறது. அதிக அளவில் கெட்ட கர்மங்களைச் செய்தவர்கள் அந்தக் கர்மங்கள் தீரும் வரை பிறந்து பிறந்து குழந்தையாகவே இறந்து விடுவார்கள். அந்தக் கெட்ட கர்மங்கள் காரணமாக மிகவும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியதும் பயனற்றதுமான பிறப்பு-இறப்பு என்கின்ற சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார்கள்.இதனால் உலகில் பிறந்து வாழும் மிகக்குறுகிய கால அளவில் எந்தவிதமான ஆன்மீகவளர்ச்சியிலும் ஈடுபட முடிவதில்லை.
-
பொதுவாக ஒரு துறவிக்கு உடல் கோளாறுகளோ அல்லது மனக் கஷ்டங்களோ வராது என்ற தவறான கருத்து சில மனிதர்களின் மனத்தில் உள்ளது. அவர்களது கருத்தின் படி துறவி முழுவதும் தூய்மையான நிலையில் இருப்பவர். எனவே அவர்கள் சாதாரண மனிதர்களைப்போன்று உடலாலும் மனத்தாலும் துன்பப்படக்கூடாது. ஒரு துறவிக்குக் கடந்த காலம் உண்டு. ஒரு பாவிக்கு எதிர் காலம் உண்டு என்ற ஒரு கூற்று உள்ளது.அதன் படி ஒரு துறவி ஏன் கஷ்டப்பட வேண்டும் என்பதே அவர்களது வாதம். ஒரு துறவி அவரது முற்பிறவிகளில் சில கெட்ட கருமங்களைச் செய்திருக்கலாம். அதனுடைய விளைவாக இந்தப்பிறவியில் அவர் உடலாலோ அல்லது உள்ளத்தாலோ கஷ்டப்படலாம்.தற்போது ஆன்மீக சாதனைகளின் காரணமாக உயர்ந்த நிலையை எய்தப் பெற்றாலும் கடந்த காலத்தில் செய்த பிராரப்த கர்மத்தின் கெட்ட முடிவுகள் தீரும் வரை அவர் கஷ்டங்களை அனுபவித்தே ஆக வேண்டும். கர்மக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் கடுமையான தவங்களைச் செய்து ஆன்மீக முன்னேற்றம் கண்டு சிறந்த முனிவராகத் திகழலாம். அவரது தவமானது அவரது சஞ்சித கர்மங்களை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.ஆனாலும் அவர் சாகும் வரை பிராரப்த கர்மத்தின் பவனை அனுபவிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் இதை விளக்க ஓர் உவமை உள்ளது. ஒரு வேடன் தனது அம்பாறத் துணியில் பல அம்புகளை வைத்திருப்பதாகக் கொள்வோம். இதை சஞ்சித கர்மத்திற்கு ஒப்பிடலாம்.அவன் அதிலிருந்து ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி அதை எய்துவதாகக்கொள்வோம். அவனால் விடப்பட்ட அம்பு பிராரப்த கர்மத்திற்கு எடுத்துக்காட்டாகும் ஒரு முறை அம்பை எய்தவுடன் வேடனுக்கு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் மீது எந்த வித கட்டுப்பாடோ அதிகாரமோ கிடையாது. அந்த அம்பானது வேகத்துடன் காற்றின் வழியே சென்று தனது முழுசக்தியையும் இழந்தவுடன் தரையில் விழுந்து விடும். வேடனுக்குத் தான் எய்த அம்பின் மீது எவ்வாறு எத்தகைய கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாதோ அதே போன்றதே பிராரப்த கர்மமும்..
-
அவதாரம் இத்தகைய கர்ம பலன்களுக்கு அப்பாற்பட்டது,
-
சாதாரணமான முனிவர்கள் அல்லது துறவிகளுக்குப் பிராரப்த கர்மத்திலிருந்து விலக்கு கிடையாது.
அவர்களும் சராசரி மக்களைப் போன்று பிராரப்த கர்ம பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
மேற்கூறப்பட்ட சட்டதிட்டங்களுக்கும் விதி விலக்கு உண்டு. இறைவனின் அவதாரத்தை இத்தகைய கர்மபலன்கள் எந்த வகையிலும் கட்டபடுத்த முடியாது.பூவுலகில் மனித வடிவில் அவதரிப்பதற்காகத் தன்னுடைய மாயா சக்தியைக் கொண்டு தானே ஓர் உலகியலுக்குட்பட்ட உடலைத் தோற்றுவித்து அதனுள் நுழைந்து விடுவார். தன்னிடம் சரணடைபவர்களின் பாவங்களையும் கர்ம பலன்களையும் தனது அளப்பரிய கருணை காரணமாக எடுத்து க் கொண்டு அவர்களுக்கான இந்தப் பூவுலகில் மனித வடிவில் துன்பங்களை அனுபவிக்கிறார். அவர்களுக்கு அந்தப் பாவங்களிலிருந்தும் பிராரப்த கர்மபலன்களினின்றும் விடுதலைக் கிடைக்குமாறு செய்து முக்தியளித்து விடுகிறார்.
அவர் இந்தப் பூவுலகில் வாழும் போது எந்தச் செயலைச் செய்தாலும் அதனால் எத்தகைய கர்ம பலனும் உண்டாகாது.
பிறப்பின் போது துன்பம்-(கர்மம் மற்றும் மறுபிறப்பின் கண்ணோட்டத்தில்)
-
ஒரு குழந்தை பிறக்கும் போதே குருடாக ப் பிறக்கிறது. மற்றொரு குழந்தை உடற்குறைபாடுகள் ஏதுமின்றி பிறக்கிறது. ஏன்?
அது கடவுளின் திருவுளப்படி பிறக்கிறது என்று கூற முடியாது. கடவுள் பாரபட்சம் உடையவராகவோ, தன்னிஷ்டம் போல் எதையும் செய்பவராக இருந்தால் தான் அவ்வாறு கூறலாம்.இந்து மதமானது இத்தகைய வித்தியாசமான செயல்களுக்கு மறுபிறவி மற்றும் கர்மபலன்களின் அடிப்படையில் விளக்கம் அளிக்கிறது.
ஒரு குழந்தை குருடாகப் பிறப்பது அது தன்னுடைய முற்பிறப்பில் செய்த கெட்ட காரியங்களின் பலனாக இருக்கலாம் . கடந்த பிறவிகளில் செய்த செயல்களினால் சேர்த்து வைக்கப்பட்ட கர்மபலனால்தான் இப்பிறவியில் பார்வையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது..
கர்ம பலன்கள் மனித வாழ்வை முழுவதுமாக அடக்கி ஆள்வதில்லை- முற்பிறவிகளில் செய்த கர்மபலன்கள் காரணமாகவே ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்துச் செயல்களும் நிகழ்கின்றன என்பதை இந்து மதம் ஒரு போதும் கூறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
அவன் தன் வாழ்வில் சந்திக்கும் எத்தனையோ சக்திகளுள் கர்மபலனும் ஒன்று. இவ்வாறு அவனை எத்தனையோ சக்திகள் அடக்கி ஆண்டாலும் அவன் தனது. விருப்பத்திற்கு இணங்க நடக்கவல்ல சிறிது சுதந்திரமும் உண்டு . அவன் அந்த சிறிதளவுள்ள உரிமையைப் பயன்படுத்தித் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கஷ்டங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இறையனுபூதியை அடைய முயன்றால் விடுதலைக் கிட்டும்.
இந்து மத நூல்கள் அதிலும் குறிப்பாக பகவத்கீதை ஒருவன் தன்னுடைய பிராரப்த கர்மத்தைத் தவிர மற்ற கர்ம பலன்களின் கொடுமையிலிருந்து விடுபடும் வழி வகைகளைக் கூறுகிறது.
தான் செய்யும் செயல்களின் பலனை எதிர்பாராமல் ஒருவன் கர்மம் புரிய வேண்டும். என்று கூறுகிறது. ஒரு ஆன்மீக சாதகன் தான் செய்யும் செயல்களின் பலன்கள் அவனுக்காக அல்ல. கடவுளை மகிழ்விக்கவே என்ற உணர வேண்டும். இத்தகைய மனப்பக்கவத்தோடு செயல்பட்டால் அவன் இந்த வாழ்க்கையில் செய்யும் கிரியா கர்மங்களினால் விளையும் பாதிப்புகளிலிருந்து விடு பட முடியும்.
(செய்த செயலின் பலன் உடனே கிட்டாமல் காலம் கடந்து கிடைக்கும் பலன்) இதனால் அவனது மனம் தூய்மை அடையும். அது இறைக்காட்சி கிட்ட வழிவகை செய்யும். இறைக்காட்சி கிட்டி விட்டால் அவனது சஞ்சித கர்ம பலன் அழிகிறது. அத்தோடு திரும்பத் திரும்ப பிறந்து பிறந்து இறக்கம் தொல்லையிலிருந்து விடுபட்டு முக்தியும் கிட்டும். இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தப்ப முடியாதபடி தடுத்து நிற்கும் பிராரப்த கர்மத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டும்.
அது ஒருவன் பூரணமாகக் கடவுளைச் சரணடைவதால் மட்டுமே கூடியது. தூய அன்னை சாரதா தேவியார்(1853-1920) இந்தியாவின் பெண்பால் துறவிகளுள் தலை சிறந்தவர். அவர் இந்தக் கூற்றை முழுமையாக ஆதரிக்கிறார். அவர் கூறுவதாவது கடவுளை முழுமையாகச் சரணடைவதால் ஒருவர் தன்னுடைய பிராரப்த கர்மத்தின் கொடுமையான பலன்களைப் பெரும்பாலான அளவில் குறைத்துக் கொள்ள முடியும்.
அவனுக்கு ஒரு வாளினால் பெருங்காயம்(பெரிய காயம்) ஏற்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் அது மாறி ஒரு சிறிய ஊசியினால் குத்திய துன்பம் மட்டும் ஏற்படும் படி ச் செய்து விடும்.
18
-
ஒர மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவனே காரணம் என்பதைக் கண்டோம். கடவுள் தான் மனிதனுடைய கர்ம பலனுக்கு ஏற்றவாறு ஒருவனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் அளிப்பவர். அவரது பங்கு ஒரு வங்கியில் பணிபுரியும் காசாளரின் நிலை போன்றது.
ஒரு மனிதனின் சேமிப்புப் பணத்திற்கு ஏற்றபடி தான் காசாளர் பணம் கொடுக்க முடியும். ஒருவனுடைய கணக்கில் முதலீடும் வட்டியும் இருக்கும் வரைதான் பணம் பெற முடியும். அப்படியிருக்கும் போது இந்து மதத்தில் கடவுளின் அருளுக்கு ஏது வாய்ப்பு?
இக்கேள்விக்கு விடையளிக்கும் வகையில் இந்து மதம் கடவுளின் அருள் என்பது நிபந்தனைக்கு உட்பட்டதன்று என்கிறது. நிபந்தனைக்குட்பட்டுக் கிடைக்கும் பரிசு உண்மையில் அருள் என்று ஒப்புக் கொள்ள முடியாதது.
இவ்வாறு பார்த்தோமானால் கடவுள் அருள் என்பது பாரபட்சமானது. நிபந்தனைக்குட்படாதது.
சூரியனது ஒளியானது நல்லவருக்கும் கெட்டவருக்கும் ஒன்றாகத்தானே கிடைக்கிறது. அதே போன்றேகடவுளும் எந்த வித பாரபட்சமும் இன்றியே தனதருளைப் பொழிகிறார்.
கடவுளின் அருளை நல்ல மனிதர்கள் நல்ல காரியங்களுக்காகச் செலவிடுகிறார்கள். கெட்டவர்கள் அதை கெட்ட வழியில் செலவழிக்கிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் இதை ஒரு அழகிய உவமையால் விளக்குகிறார்.
ஒரு சிறிய அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வெளிச்சத்தில் ஒரு மனிதன் புனித நூலைப் படித்து க் கொண்டிருக்கிறான்.
அதே அறையில் மற்றொரு மனிதன் அதே விளக்கின் ஒளியில் பொய்க் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறான். இந்த உவமையில் விளக்கின் ஒளி என்பது கடவுளின் அருளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அந்த ஒளி பாரபட்சமற்றது. இருவருக்கும் ஒரே மாதிரியான வெளிச்சத்தையே தருகிறது.
அந்த வெளிச்சத்தை இரு மனிதர்களும் இரு வெவ்வேறான செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். ஒருவன் நற்காரியத்தையும் மற்றவன் கெட்ட காரியத்தையும் செய்கிறான். ஆனால் அந்த இருவருள் ஒருவன் துறவி ஆவான். மற்றவன் சிறைக்கு செல்வது உறுதி.
ஸ்ரீராமகிருஷ்ணரின் கூற்றுப்படி கடவுளின் அருள் என்னும் காற்றானது எப்பொழுதும் வீசிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த உலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாய்மரக்கப்பலுக்குச் சொந்தக்காரர்கள். பாய்மரத்தை அவிழ்த்து விடாவிட்டால் படகைச் சரியாகச் செலுத்த முடியாது.
காற்றின் உதவியை முழுமையாக அடைய முடியாது. கடவுளது அருள் என்னும் பாய்மரத்தை அவிழ்த்து விடுவதால் வாழ்க்கை என்னும் படகு செம்மையாகச் செல்ல முடியும். இதில் பாய்மரத்தை அவிழ்த்து விடுவது என்பது ஒருவரது சொந்த முயற்சிக்கு ஒப்பானது. இவ்வாறு பார்த்தோமானால் சுய முயற்சியினால் அன்றி கடவுள் அருளைப் பெறவும் முடியாது. அந்த அருளினால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாது.
-
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவையே நமது செயல்கள் என்னும் கொள்கை
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடக்கும் அன்றாடச் செயல்கள் யாவும் கடவுளின் விருப்பப்படி தான் நடைபெறுகிறது என்ற கொள்கையை நம்புபவர்களும் உண்டு. அவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளில் மனிதன் எந்தவிதத்திலும் தலையிட்டு தன் இச்சைப்படி மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பே கிடைக்காது.
இவ்வாறு இருக்கும் போது செயல்கள் பற்றிய கொள்கை வலுவானது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது தள்ளவும் முடியாது.
எது எப்படியிருந்தாலும் இந்து மதம் மேலே கூறப்பட்ட கொள்கைகளை செல்லத்தக்கதாக ஏற்றுக் கொள்ளுகிறது. இந்து மதத்தின் கொள்கைப்படி எந்த ஒரு மனிதன் தான் செய்யும் காரியங்கள் அனைத்தும் தன் விருப்பப்படி நடக்கிறது என்று எண்ணும் வரை செயல்களின் கோட்பாடு நம்பத்தக்கதாகிறது.
அவ்வாறு நினைக்கும் மனிதன் தான் செய்யம் செயல்களினால் விளையும் நன்மைக்கும் தீமைக்கும் தானே பொறுப்பு என்ற முடிவுக்கு வருவான்.
ஒரு தனிப்பட்ட மனிதன் தன்னடைய இடையறாத ஆன்மீக சாதனைகள் மூலம் மனத்தை மிகவும் தூய்மை உடையதாக மாற்றிக் கொள்ள முடியும். அத்தகைய நிலையானது படிப்படியாக உயர்ந்து சிறந்த தூய்மையைப்பெறுகிறது. இத்தகைய உயர்நிலையை எய்தும் ஒருவனுக்குத்தான் தான் எல்லாவற்றையும் செய்கிறோம் என்னும் எண்ணம் மறைந்து விடும்.
தன்னால் எந்த ஒரு செயலும் செய்யப்படவில்லை என்பதை உணருகிறான். தன்னுடைய உடல் எண்ணம் செயல் யாவற்றையும் இயக்குபவன் கடவுளே என்ற அசையாத முடிவிற்கு வருகிறான். கடவுளின் கையினால் இயக்கப்படுகின்ற ஓர் இயந்திரமாகவே தன்னை எண்ணிக் கொள்கிறான்.
அத்தோடு கடவுள் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கே என்ற முடிவிற்கு வந்து விடுகிறான். இத்தகைய மேலான ஆன்மீகப் பயிற்சியினால் ஏற்பட்ட மனத்தெளிவின் காரணமாக அனைத்துச் செயல்களும் மனிதனின் வாழ்வில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற கொள்கை ஏற்புடையதாகக் கருதப்படும். இந்த நிலை வந்த பிறகு செயல்முறைக் கோட்பாடு ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது.
ஒரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏற்றவாறே மேலே கூறப்பட்ட கொள்கைகள் ஒத்துக்கொள்ளப்படும். இதற்கு இடைப்பட்ட நிலையில் உள்ள சாதகன் ஒரு சில நிகழ்சிகளைக் கடவுளின் விருப்பப்படி நடக்கிறது என்றும் மற்றவைகளை தான் பூர்வ ஜன்மத்தில் செய்த கர்மபலனால் தான் நடைபெறுகிறது என்று முடிவிற்கு வருகிறான்.
19
-
இந்து மதம் தோன்றிய காலந்தொட்டே மறுபிறவி என்ற எண்ணமும் தோன்றியிருக்க வேண்டும். மத சம்பந்தமான கல்வியைப் பயிலும் மாணவனைப் பொறுத்தவரை மறுபிறவி என்பது ஒரு தெய்வீகக் கோட்பாடு .
பெரும்பாலான இந்துக்கள் இதை மெய்யான கருத்து என்றே கருதுகிறார்கள்.
(1)ஜாதிஸ்மரஸ் அதாவது தனது முற்பிறப்பு அல்லது பிறவிகள் பற்றிய நினைப்பு இருப்பவர்கள்.
(2) மத நூல்களில் கூறப்பட்டுள்ள சான்றுகள் அல்லது முனிவர்களின் வாழ்க்கை ஆகிய இரு வழிகளில் இந்த மறுபிறவிக்கொள்கைகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
இந்து மத சம்பந்தமான இலக்கியங்களில் மறு பிறவி பற்றிய எண்ணற்ற சான்றுகள் கிடைக்கும்.
பகவத்கீதை எனப்படுவது பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த போது தன்னுடைய சீடனான அர்ஜீனனுக்கு அளித்த உபதேசமாகும். அதில் அவர் அர்ஜீனனிடம் ஓ அர்ஜீனா! கடந்த காலத்தில் நீயும் நானும் பலமுறை பிறந்து இருக்கிறோம். உனக்கு அப்பிறப்புக்களைப் பற்றிய நினைவு இல்லை.
ஆனால் நான் அவை அனைத்தையும் நினைவில் வைத்து இருக்கிறேன் என்றார். இந்த ஓர் இடத்தில் கூறப்பட்டதை வைத்து கண்ணபிரானை ஜாதிஸ்மரன் அதாவது கடந்த காலப்பிறவிகளின் நினைவை உடையவன் எனலாம். ஆனால் அர்ஜீனனை அவ்வாறு கூற இயலாது.கண்ணபிரானைப் பொன்ற தெய்வீகப்பிறவிகள் மட்டுமல்லாது தூய எண்ணம் கொண்ட முனிவர்கள் கூட அவர்கள் விரும்பினால் அவர்களது கடந்த காலப்பிறவிகளைப் பற்றிய விஷயங்களை நினைவு கூறலாம்.
தெய்வப்பிறவிகளாகவோ அல்லது முனிவர்களாகவோ இல்லாத போதிலும் இத்தகைய அபூர்வமான நினைவாற்றலை உடைய சிலர் இருந்தனர். அத்தகையோரின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருந்தது. இவ்வாறு பல சான்றுகளை நம்பத்தக்க ஆய்வுகளின் மூலம் உண்மையென்று நிரூபித்திருக்கிறார்கள். மறு பிறவி பற்றிய கொள்கையானது பல விஷயங்களை விளக்கிக் கூறினாலும் போதுமான அளவு விளக்கம் இல்லை. மொஜார்ட் போன்ற குழந்தைப்பருவத்திலேயே அதிமேதாவியாக விளங்குபவர்களின் திறமையை அது பரம்பரையானது என்றோ கூறி விளக்க முடியாது.
இதை மறு பிறவி பற்றிய கொள்கையினால் மட்டுமே விளக்கமாகக் கூற முடியும். அதிமேதாவியாக விளங்கும் பாடகர் முற்பிறவியில் ஒரு சிறந்த பாடகனாக இருந்திருக்க வேண்டும்.அந்தத் திறமைகளை இப்பிறவியிலும் தொடர்ந்து கொண்டு வந்திருக்கலாம்.
ஏன் ஒருவர் மறு பிறவி எடுக்க வேண்டும்? என்ற வினாவிற்கு இந்து மதம் கூறும் பதில் இது தான். ஒருவன் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்திருந்தால் அதுவே அவனது மறுபிறப்பிற்கான முக்கியமான காரணமாக அமைகிறது. இதைப்பற்றிய தெளிவான அறிவைப் பெற விரும்புபவர்கள் இறப்பும் அதற்கு அப்பாலும் என்ற இந்துக்களின் கருத்துக்களைப்புரிந்து கொள்ள வேண்டும்.
-
மனிதனின் திடமானதும் நுட்பமானதுமான உடல் மனிதனின் ஸ்தூல சூட்சும சரீரம்
-
இந்து மதத்தின் விளக்கப்படி மனிதனுக்கு ஸ்தூலமானது (நாம் நேரில் காணும் திடமான உடல்) சூட்சும்மானது(கண்ணுக்குப்புலப்படாத உடல்) என இரண்டு வகையான உடல்கள் உள்ளன.நம்முடைய உடல் ஸ்தூல சரீரம் எனப்படுவது.மனம்,அறிவு,உணர்ச்சி உறுப்புகள், செயல் உறுப்புகள், உயிர் சக்தி ஆகியவை சூட்சும சரீரத்தில் அடங்கும்.கண்கள், காதுகள்,மூக்கு , நாக்கு, தோல் ஆகியவை உண்மையில் உணர்வு உறுப்புக்களாகக் கருதப்படுவதில்லை. அவை பார்த்தல் , கேட்டல், நுகர்தல் மற்றும் தொடுதல் போன்றவற்றால் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவல்ல இயங்கும் அலுவலகங்களாகவே கருதப்படுகின்றன. உண்மையான உணர்ச்சி உறுப்புகள் மிகவும் நுட்பமானவை.-
-
இறப்பும் பிற உலகங்களும்(உயிரின் பல்வேறு நிலைகளில்)
-
ஒருவன் இறந்துப் போனால் அவனது ஸ்தூல உடல் கீழே கிடக்கும். அவனது சூட்சும உடல் பல்வேறு வகையான நிலைகளுக்குச் செல்கின்றன. அத்தகைய இடங்களுக்கு வட மொழியில் லோகம் என்னும் சொல் உள்ளது.(பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது மூன்று லோகங்கள்)
அவை சுவர்க்க லோகம்,
மத்ய லோகம்,மற்றும் பாதாளம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ஆனால் புனித நூல்கள் மேலும் பல லோகங்களைப் பற்றிக் கூறுகின்றன.)
இந்தப்பூவுலகானது பூர்லோகா எனப்படுகிறது.
இதையன்றி இன்னும் எண்ணிலடங்கா லோகங்களும் உள்ளன.
அவை பல்வேறு வகைப்பட்ட அதிர்வுகளைக்கொண்ட உலகங்களாகும். அவை அனைத்துமே ஒரே வெளியில் தான் உள்ளன. இந்த உலகம் என்னும் சமதளத்திற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ இல்லை.அதே பரப்பைச் சார்ந்த இடத்திலேயே உள்ளன.இத்தகைய லோகங்கள் எண்ணிக்கைக்கு அதிகமாக இருப்பதால் எவராலும் அவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியாது.
இந்து மதமானது இந்தப் பூலோகத்தையும் சேர்த்து மொத்தம் பதினான்கு லோகங்களைப் பற்றிக் கூறுகிறது.
அவை சத்திய லோகம்,
தபோ லோகம்,
மகர லோகம்,
ஜன லோகம்,
ஸ்வர் லோகம்,
புவர் லோகம்,
பூர் லோகம்,
அதல லோகம்,
விதல லோகம் ,
சுதல லோகம்,
ரசாதல லோகம்,
தலாதல லோகம்,
மகாதல லோகம்,
பாதாளலோகம் என்று சொல்லப்படுகின்றன.
இவற்றுள் முதல் மூன்று லோகங்கள் உயர்ந்த லோகங்களாகவும்,
மீதி ஏழு லோகங்களும் தரம் குறைந்ததாகவும் கூறப்படுகின்றன.
கௌஷீதகீ உபநிடதத்தில் பிரம்ம லோகம், பிரஜாபதி லோகம், இந்திர லோகம்,ஆதித்ய லோகம், வருண லோகம்,வாயு லோகம் மற்றும் அக்னி லோகம் ஆகிய ஏழு உலகங்கள் உயர்வான லோகங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பூர் லோகத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்குத் தக்கபடி தான் மேலான அல்லது தரக்குறைவான என்ற உரிச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
உயர்வானதாகக் கூறப்பட்ட உலகங்களில் பார்த்தோமானால் இப்பூவுலகில் அனுபவிக்கும் இன்பங்கள் ஆன்மீக ஆனந்தம் போன்றவை ஏறுவரிசையில் காணப்படும்.
அதே போல் கீழ் லோகங்களில் இறங்கு வரிசையில் கஷ்டங்களும் துன்பங்களும் அதிகமாக இருக்கும்.இந்த இன்பங்களையும், துன்பங்களையும் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவானது மனத்தினால் மட்டுமே அனுபவிக்க முடியும்.ஒருவனுடைய மனத்தூய்மையின் அளவினைப் பொருத்தே அவன் தன் சூட்சும உடலுடன் அந்தந்த லோகத்தை அடைவான்.கடந்த காலத்தில் அவன் செய்த வினைகளுக்கு ஏற்றபடி உடலைப்பிரிந்த உயிர் மேலே கூறப்பட்ட உலகங்களில் சிறிது காலம் தங்கி துன்பத்தையோ அல்லது இன்பத்தையோ ஒரு குறிப்பிட்ட காலம் வரை அனுபவிக்கும்.
நிறைவேறாத ஆசையே மறு பிறவிக்குக் காரணம்-
-
ஒரு மனிதன் மிகவும் தீவிரமான ஓர்ஆசை நிறைவேறாத நிலையில் இறந்துப் போனால் அந்த ஆசையும் இந்தப் பூவுலகில் தான் நிறைவேற முடியும் என்று இருந்தால் அவனுடைய மனம் வேறு உலகில் இருந்தாலும் நிறைவேறாத ஆசைகள் காரணமாகவே அவன் மறுபடியும் இப்பூவுலகில் பிறக்க நேரிடுகிறது. இதை விளக்க ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். ஒருவன் வசிக்கும் ஊரிலுள்ள உணவகத்தில் மிகச்சுவையுடன் கூடியதும் மணமுள்ளதுமான ஒரு வகை உணவு கிடைப்பதாக எடுத்துக்கொள்வோம்.அவன் வசிக்கும் இடத்திலிருந்து உணவகம் பத்து மைல் தொலைவில் இருக்கிறது. ஒரு நாள் அவனுக்கு அந்த குறிப்பிட்ட வகையான உணவை உண்ணும் ஆசை எழுகிறது.அந்த ஆவலின் தூண்டுதலால் தனது காரை எடுத்துக்கொண்டு அங்கே செல்கிறான்.அவ்வாறே இவ்வுலகை நீத்த ஆன்மா தன் நிறைவேறாத ஆசையைப்பூர்த்தி செய்து கொள்ளத் திரும்பவும் இப்பூமியில் வந்து பிறக்கிறது.
-
மறு பிறப்பு –ஆன்மீக சாதனை செய்ய ஒரு வாய்ப்பு-
மறு பிறவியானது ஒருவனுக்கு ஆன்மீக சாதனைகளைத் தொடர்ந்து செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.இறையனுபூதியின் மூலம் அவன் முடிவில் ஆன்மீகத்தின் உச்சியைத் தொடுகிறான். கடவுளை உணர்ந்து கொள்வதால் அவன் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவனாகிறான். அவனுக்குத் தேவை என்பதே இல்லாது போகிறது.அவன் பிறப்பு, இறப்பு என்ற தளைகளிலிருந்து விடுபட்டு விடுகிறான்.இத்தகையவனை ஜீவன் முக்தன் (முக்தியடைந்த ஆன்மா) என்பார்கள்.
ஆன்மாவின் மறுபிறப்பு-
-
இந்து மதத்தில் ஆன்மாக்களின் மறுபிறப்பு என்பது உள்ளது.சாதாரணமாக ஒரு மனிதனுடைய ஆன்மா முக்தி நிலை எய்தும் வரை திரும்பத் திரும்ப மறு பிறவி எடுக்கிறது. சில சமயங்களில் அபூர்வமான சில விதி விலக்குகளும் இருக்கலாம்.இத்தகைய ஆன்மாக்கள் ஒரு முறையோ அல்லது இரண்டு தடவைகளோ மனிதனல்லாத பிறவியெடுத்து தனது கெட்ட கர்மாக்களின் பலனைத் தீர்த்துக் கொள்ளலாம்.அந்தக் கெட்ட கர்மாக்களின் பலன்கள் தீர்ந்தவுடன் மறுபடியும் மானிடனாகப் பிறந்து முறைப்படி ஆன்மீக சாதனைகள் புரிந்து விடுதலை அடைகிறான்.
-
இனங்களின் பரிணாம வளர்ச்சியும் மறு பிறப்பும்
-
மறு பிறப்பு என்பதை ஒப்புக்கொள்ளாதவர்கள் சில சமயங்களில் வாதம் புரிவார்கள். அவர்களின் வாதப்படி உலகம் தோன்றிய காலந்தொட்டு இது வரை எவ்வளவோ பேர் பல பிறவிகள் எடுத்து முக்தி அடைந்திருந்தால் உலகிலுள்ள மனிதப்பிறவிகளின் எண்ணிக்கை கணிசமாகக்குறைந்திருக்க வேண்டும். அதற்கு மறுப்புக் கூறும் வகையில் இந்து மதமானது இது வரை எவ்வளவோ கீழான பிறவி எடுத்த ஜீவன்கள் மனிதப்பிறவியை அடைந்த காரணத்தினால் தான் மனிதர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்கிறது. அதனால் மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத்தன்மையானது ஒரே அளவில் இருப்பதாக இந்து மதம் உறுதியாகக் கூறுகிறது. அது மனிதனாக இருந்தாலும் சரி அல்லது புழு, பூச்சி, மிருகங்கள் போன்ற எத்தகைய பிறவியாக இருந்தாலும் சரி என்கிறது. இல்லாவிட்டால் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற கூற்று பொருளற்றதாகிவிடும். யோக சாஸ்திரம் என்ற மத சம்பந்தமான தத்துவத்தை விளக்கும் நூலின் ஆசிரியரான பதஞ்சலி என்பவர் ஓர் இனத்திலிருந்து மற்றோர் இனத்திற்கு மாறும் பரிணாம வளர்ச்சியை ப் பற்றி நன்கு விளக்கியுள்ளார். இந்த மாறுதலானது வடமொழியில் ஜாத்யந்தர பரிணாமா” எனப்படுகிறது. பதஞ்சலியின் கூற்றுப்படி ஒரு இனப்பிரிவிலிருந்து.
மற்றோர் இனத்திற்கு மாறக்கூடிய சக்தியானது மறைந்து இருக்கிறது.
அத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டிய தக்க சூழ்நிலை ஏற்படும் வரை அவை காத்திருக்கும்.-
பிரம்மன் எனப்படும் கடவுளும் ஆன்மா என்ற பெயரில் மனிதனுக்குள் இருப்பதும் ஒன்றே என்பது வேதம் கூறும் கோட்பாடாகும். அதுவே இந்துக்களின் நீதி நூலுக்கு அஸ்திவாரம். மனோ தத்துவரீதியில் மன்தனை இயக்குவது ஆன்மாவே. அதுவே தெய்வீகமானது. அயம் ஆத்மா பிரம்ம” என்பதே இந்து நீதி நூல்களின் அடிப்படையில் போதனையாகும். மன்தன் உயிருடன் இருப்பதற்கு ஆன்மாவே முக்கியமாகிறது.
அது அவனுடைய உடலினின்றும்,உயிர் சக்தியினின்றும், புலன்கள் மற்றும் மனத்தினின்றும் மாறுபட்டது. இந்த நான் ” எனப்படும் அகம்பாவமானது ஒரு கருத்து மட்டுமே ஆகும். அது உண்மையில் மனத்தோடு தொடர்புடையது. மனத்தோடு தொடர்புடைய அது ஆன்மாவாக இருக்க முடியாது. மனிதன் நான்” என்று குறிப்பிட்டு சொல்வதே ஆத்மன் என்று வடமொழியில் சொல்லப்படுகிறது.
பிரம்மமானது எல்லையற்ற சமுத்திரத்திற்கு ஒப்பானது. அப்படியானால் ஆன்மாவானது அதிலுள்ள ஓர் அலையாகும். கடலானது அலைகளினின்றும் மாறுபட்டதன்று. அது போலவே அலைகளும் கடலினின்றும் மாறுபட்டதன்று. அவை இரண்டு வெவ்வேறான தோற்றத்துடன் கூடிய ஒரே பொருள்.
பலவகைப்பட்டதான இந்த பிரபஞ்சமாகத் தோன்“றுவது ஆன்மாவே. எனவே நாம் எவரையாவது துன்புறுத்தினால் உண்மையில் என்னை நானே துன்புறுத்திக் கொள்வதாகும். ஆகையால் நான் எவரையும் துன்புறுத்தக்கூடாது.இதை உணர்ந்து கொள்வது மட்டுமே இந்துக்களின் நீதி நூல்களின் அடிப்படைக் கருத்தாகும். ஆன்மாவில் எல்லா உயிரிகளைப் பார்க்கின்றவனும் ஆன்மாவை எல்லா உயிர்களிலும் காண்பவனும் ஒருவரையும் வெறுக்க மாட்டான் என்ற இக்கருத்தை ஈசா உபநிடதம் வெகு அழகாகக்கூறுகிறது.
இந்த ஒருமைப்பாட்டினைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத போது தான் நம்மால் வெறுப்புணர்வைக் காட்ட முடியும்.பிருஹதாரண்யக உபநிடதத்தில் யாஞ்யவல்கிய முனிவருக்கும் அவரது சீலம் மிகுந்த மனைவியான மைத்ரேயிக்கும் இடையே ஒரு சம்பாஷினை உள்ளது. அதில் யாஞ்வல்க்கியர் கூறுகிறார் ” எல்லா உயிர்களிடத்தும் இந்த ஆன்மாவைக் காணும் போது அனைவருமே நமக்கு வேண்டியவர்கள் ஆகிறார்கள். இந்து மதத்தில் ஆன்மீகக் குறிக்கோள் எனப்படுவது அனைவரிலும் இந்த ஆன்மாவை உணருவதேயாகும்.
-
தர்மம் அல்லது மதசம்பந்தமான கடமைகள்
-
தர்மம் எனப்படும் சொல்லானது இந்து மத நீதி நூலின் மிகவும் முக்கியம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக கூறுமிடத்து தர்மம் என்றால் மதம் என்று பொருள் படும். தவிர அறநெறி மற்றும் நீதி சம்பந்தமான நூல்களின் படி கடமை என்றும் சொல்லப்படுகிறது. மற்றும் ஒரு விதத்தில் “dharayati dharma i;ty ahu” என்ற வாக்கியத்தின் படி எது தங்குகிறதோ அதுவே தர்மம்” என்று வரையறுத்துக் கூறப்படுகிறது.
நாம் உயிர் வாழ்வதற்கு அஸ்திவாரமாக இருப்பது அந்தத் தெய்வீக ஆன்மா. அதுவே நம்மைத் தாங்குகிறது. ஆகவே தர்மம் என்ற சொல்லுக்கு உகந்த பொருளாக அமைவது மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக ஆன்மா தான். அதுவே ஆத்மன் எனப்படுவது. அன்றாட வாழ்க்கை முறையில் அறநெறிப்படியும் நீதி நூலின் படியும் பார்த்தாலும் கூட இந்து மதத்தில் தர்மம் என்ற சொல் சிறிது மட்டரகமான பொருளுடையதாகவே கையாளப்படுகிறது. லௌதீக வாழ்க்கையில் பல்வேறு வகையான தர்மங்களைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதாவது வியக்தி தர்மம் எனப்படுவது தனி ஒரு மனிதன் அனுசரிக்க வேண்டிய தர்மமாகும்.பாரிவாரிக தர்மம் என்பது குடும்பத்திற்குரியது.சமாஜ தர்மம் என்பது சமூகத்திற்காக உள்ளது.ராஷ்டிர தர்மம் எனப்படுவது தேச சம்பந்தமானது. மானவ தர்மம் என்பது இனத்திற்காக உள்ள கடமையைக்கூறுவதாகும்.
நீதி மற்றும் அறநெறி சம்பற்தமான கொள்கை க் கடைபிடிப்பதையொட்டியே மனிதன் அறியப்படுகிறான். அதாவது அவன் சிறந்த நீதிமானாகவும் அறநெறியுடன் கூடியவனாக இருந்தால் அது அவனைக் காப்காற்றும். சுகாதாரமானதும் ஆரோக்கியதுமான வழிகளைக் கடைப்பிடித்தால் அது அவனது உடலைப் பாதுகாப்பாக வைக்கும். இத்தகைய கொள்கைகளைத் தனி மனிதன் கடைபிடிப்பது வியக்தி தர்மம் எனப்படுகிறது.
இதைத்தவிர தனி மனிதன் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் கீழே பட்டியலிட்டுக் கூறப்பட்டுள்ளது.அவையும் வியக்தி தர்மத்தில் அடங்கும்.
1)தம- புற உறுப்புகளை அடக்கி ஆள்வது.
2)ஆர்ஜவ -எப்பொழுதும் ஒளிவு மறைவு இல்லாது திறந்த மனத்துடன் இருத்தல்.
3)அஷிம்சா- எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்.
4)அக்ரோதா-கோபப்படாதிருத்தல்
5)சத்ய-எண்ணத்திலும் செயலிலும் வாய்மையைக் கடைபிடித்தல்.
6) பிரம்மச்சர்ய உடல் சம்பந்தமான ஆசைகளையும் உணர்ச்சிகளையும் அடக்குதல்.
7)சந்தோஷ- மன நிறைவு, திருப்தி
8)தியாக-தன்னலத்தைத் துறத்தல்
9)அபைஷீண- புறங்கூறாமலும் இழித்துப் பேசாமலும் இருத்தல்.
10)அலோலுப்த்வ-பேராசைப்படாதிருத்தல்
11)அபரிக்ரஹ-பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்.
12) ஹரீ-அடக்கத்துடன் இருத்தல்
13)மார்தவ-மென்மையுடன் இருத்தல்
14)தயா-கருணையுடனும் இரக்கத்துடனும் இருத்தல்
15)சாந்தி-மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி
16)ஷமா-மன்னிக்கும் தன்மை
17)சௌச-மனம் மற்றும் உடலின் தூய்மை
18)அத்ரோஹ-தீங்கு செய்யும் எண்ணம் இல்லாமல் இருத்தல்.
குடும்ப தர்மம்-பாரிவாரிக தர்மம்
-
தனி நபர்கள் ஒன்று சேர்வது ஒரு குடும்பம் ஆகிறது. அந்தக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நலமாக வாழ அந்தக் குடும்பமானது நல்ல முறையில் பாதுகாக்கப் பட வேண்டும். குடும்பம் சீர் குலையாமல் இருப்பதற்காக ஒரு சில விதி முறைகளைக் குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டி வரும். அதுவே பாரிவாரிக தர்மம் அல்லது குடும்ப தர்மம் எனப்படுகிறது. இந்தக் குடும்ப தர்மத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும் , மரியாதைக் காப்பதும் தன்னை தியாகம் செய்யத் தயாராக இருப்பதும் ஆகும். தைத்தீரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள ” உன்னுடையத்தாயைக் கடவுளைப்போல் எண்ணி வழிபடு” என்ற கோட்பாடுகளையும் குடும்ப தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதி அவற்றையும் சேர்த்துள்ளனர். குடும்பம் நல்ல முறையில் இயங்காவிடில் அதில் ஓர் அங்கத்தினரான தன் நபரும் சுகமாக வாழ முடியாது.
பல குடும்பங்கள் சேர்ந்தது ஒரு சமூகம். சமூகம் சிதறிப் போனால் குடும்பங்கள் நல்ல முறையில் வாழ முடியாது. தனி மனிதர்கள் இத்தகைய கோட்பாடுகளைக் கடைபிடித்தால் தான் நல்ல முறையில் இணைந்த சமூகம் சீரிய முறையில் செயல்படும். இதுவே சமூக தர்மம் எனப்படுகிறது. பல்வேற வகைப்பட்ட தியாகங்களைச் செய்வது என்பது சமுதாய தர்மத்தின் அடிக்கல்லாக அமைகிறது.
கொல்லாமையைக் கடைபிடிப்பது , திருடாமல் இருப்பது, வாய்மையைக்கடைபிடித்தல், பிறருக்குத் துன்பத்தை தரவல்ல உண்மையைத் தவிர்த்தல் , கோபத்தை அடக்குவது, கீழ்தரமான உணர்ச்சிகளை அடக்குவது , அனைவரிடமும் அன்பு காட்டுவது, ஈகையைக் கடைபிடித்தல், புறங்கூறாதிருத்தல், விருந்தோம்பல் போன்றவை சமாஜ தர்மத்தில் அடங்கும்.
-
ராஷ்டிர தர்மம்
-
நாடு சிதறுண்டால் சமூகம் நிலைக்காது. தனது நாடு நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் தனி நபர்களும் ஒரு சில தியாகங்களைச் செய்ய முன் வர வேண்டும்.
இதுவே ராஷ்டிர தர்மம் அல்லது தேசிய தர்மம் எனப்படுகிறது. மனித இனம் இன்றேல் நாடும் இல்லை.ஆகவே மனித இனம் நிலைபெற வேண்டுமென்றால் தனி நபரின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. இதற்காக அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வை மானவ தர்மத்தின் கீழ் வருகிறது. இதற்கும் தன்னைத் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
மேலே கூறப்பட்டவை அனைத்தும் நடுவில் ஒரு மனிதனை வைத்து அவனைச்சுற்றி வரையப்பட்ட வட்டங்களைப் போன்றது. அந்த மனிதன் தான் தர்மங்களைக் கடைபிடிப்பவன். ஒரு முன் மாதிரியான இந்துவானவன் எல்லா வகையான தர்மங்களையும் கடைபிடிக்கக் கடமைப் பட்டவன். உண்மையில் இது மிகவும் கடினமான காரியமே. ஆனாலும் உயர்ந்த குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்யும் வாழ்க்கைதான் பெருந்தன்மையுடையதும் அர்த்தமுடையதுமாகவும் அமையும். இந்த எல்லா வகையான தர்மங்களின் அடிப்படையே பொதுவாகத் தன்னைத் தியாகம் செய்தல் என்பதாகிறது.தன்னைத்தியாகம் செய்யாமல் தனி மனிதன் வாழ முடியாது. இவ்வாறு தன்னைத்தியாகம் செய்வது என்பது உண்மையில் தன்னை வலுவூட்டிக் கொள்வதாகவும் பத்திரமாகத் தன்னைப் பாதுகாப்பதுமாக அமையுமே அன்றி தன்னைப் பறி கொடுப்பதாக ஆகாது.
பஞ்ச ரிண அல்லது ஐவகைக் கடன்கள்
-
இந்து மதத்தில் மனிதனுக்கு ஐந்து வகையான கடன்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1) தேவ ரிண,அதாவது கடவுளுக்காக நாம் படும் கடன்.
2)ரிஷி ரிண- முனிவர்களுக்கு நாம் பட்ட கடன்.
3)பித்ரு ரிண-முன்னோர்களுக்கு பட்ட கடன்.
4)ந்ரு ரிண- மனித சமூகத்திற்கு நாம் பட்ட கடன் ,
( 5 ) பூத ரிண , மனிதனல்லாத உயிர்களுக்கு பட்ட கடன் . இக்கடன்களைத் தீர்க்க ஓர் இந்துவானவன் நீதி நுல்களில் கூறப்பட்ட சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் .
இந்த மத நீதி நுல்களின்படி எல்லா உயிரிணங்களுமே இந்தப் பூமியின் சுற்றுச் சூழலின் ஓர் அங்கமாக இருக்கின்றன . எனவே மனிதன் மனிதர்களுக்கும் , பூமியில் வாழும் மற்ற உயிரிணங்களுக்கும் தான் கடமைப்பட்டுள்ளோம் . என்பதைப் புரிந்து கொள்ளாமல் வாழ முடியாது.
ஒருவரை ஒருவர் சார்ந்த படிதான் அனைவருடைய வாழ்க்கையும் அமைந்திருக்கிறது மனிதர்களையோ அல்லது மற்ற உயிரிணங்களையோ காரணமின்றி கொல்வதை இந்து மதம் அனுமதிப்பதில்லை. தாயினுடைய கருவில் ஜனித்த போதிலிருந்து சுடுகாட்டிற்குப் போகம்வரை இந்துவானவன் நீதி நூல்களில் கூறியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்து மத நூல்களில் ஒன்று கூறுகிறது. “ nishekadi shmashanantah “ – agniveshya grihyasutra 3 \ 10 \ 4
--
நீதி நெறியைத் தாங்கி நிறுத்துபவர் கடவுளே
-
நிரத்தமான இந்த நீதி முறைகளைத் தோற்றுவித்து இதைக் காப்பவரும் கடவுள்தான் என்று வேதங்கள் சூறுகின்றன. அதில உலகமே இந்த நீதி நெறிகளில் கட்டுப்படுத்தப்படுகிறது . இந்த உலகை ஒழுங்காக இயங்க வைப்பதும் , அதைவிடக் குறைந்த நிலையிலுள்ள உலகத்தை இயங்க வைப்பதும் , நிலை நிறுத்துவதம் இந்த சட்டதிட்டங்களே . இவ்வுலகிலுள்ள எவராலும் இந்த நீதிகளிலிருந்து தப்ப முடியாது . எனவே தான் இந்து மதமானது நீதி நுல்களுக்கும் , அறநெறி களுக்கும் கடவுள்தான் அஸ்திவாரமாக இருப்பவர் என்று கருதுகிறது.
21
-
இந்துக்கள் பரம்பரை பரம்பரையாக, மத சம்பந்த மானவற்றைக் கற்பித்தாலும் சரி, மதச் சார்பற்ற விஷயங்களைக் கற்பித்தாலும் சரி ஆசிரியர் என்ற
ஸ்தானத்தை வகிப்பவருக்கு மிகுந்த மரியாதை அழிப்பவா்கள். ஆன்மிக விஷயங்களைக் கற்பிக்கும் ஆசானைக் (குரு) என்பார்கள். அவருக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் அளிக்கபடும். (குரு) என்ற சொல் (இருளை போக்குபவா்) என்று பொருள்படும். மதச் சார்பற்ற விஷயங்களைக் கற்பிப்பவரும் (குரு) என்றே சொல்லப்படுகிறார்.
ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவனுக்கு குருவின்பால் சிரத்தை வேண்டும்.
சிரத்துஎன்ற வடமொழிச் சொல் இரு பொருள்படும். முதலாவது தன்னம்பிக்கை. இரண்டாவது ஆசிரியரின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை வைத்தல் என்று குரிப்பால் உனா்த்தப்படுகிறது. ((சிரத்தை உடையவன் அறிவைப் பெறுவான் )) என்று கீதை கூறுகிறது . ஓர் ஆசிரியர் தனது மாணவனை வழி நடத்திச் செல்லும்போது , அந்த மாணவனுக்கு ஆசிரியரின் மீது நம்பிக்கை வேண்டம் . அது போன்ற நம்பிக்கையுடையவர்கள்தான் வெற்றி அடைய முடியும் . பல்வேறு வகையான உபனிடதங்களும் , இதிகாசங்களும் பரம்பரைக் கதைகளும் சிரத்தையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன .
சாந்தோக்கிய உபனிடதத்தில் சத்தியாகாமனின் கதையின் மூலம் இது விளக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் சத்தியகாமன் தன்னுடைய ஆசிரியரின் வீட்டில் தங்கி ப் படிக்க வேண்டும் என்னும் அவலுடன் அங்கு சென்றான் . அவருடைய ஆசிரியரான கௌதமர் மாணவனுக்கு எந்தப் பாடத்தையும் கற்பிக்கவில்லை .
மாறாக சத்தியகாமனிடம் உடல் மெலிந்தும் நோயுடன் கூடியதுமான நானூறு பசுக்களைக் கொடுத்து அவற்றைப் பராமரித்து வருமாறு கூறினார் . சத்தியகாமனிடம் சிரத்தை இருந்தது. குருவின் வார்த்தைகளில் அளவற்ற நம்பிக்கை இருந்தது . ஆசிரியர் இட்ட கட்டளையை முகமலர்ச்சியுடன் ஏற்றக் கொண்டு மாடுகளைக் காட்டை நோக்கி ஓற்றிச் சென்றான் காட்டிற்குச் சென்றவன் பல ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே தங்கி மாடுகளை மேய்த்து வந்தான் .
மாடுகள் நன்றாக மேய்ந்து ஆரோக்கியமான சூ ழ்நிலையில் நானூறு என்னும் கணக்கிலிருந்து ஆயிரம் என்னும் எண்ணிக்கைக்க எட்டின . அதன் பிறகு பல விநோதமான நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்கின . அந்தக் கால்நடைக் கூட்டத்தில் இருந்து ஒரு காளை மாடு சத்தியகாமனிடம் கால்நடை களைத் திரும்பவும் கௌதமரின் இருப்பிடத்திற்கு ஓட்டச் செல்லும்படி மனிதர்களின் மொழியில் கூறியது . அத்தோடு நில்லாமல் அவனுக்கு பிரம்மத்தைப் ( கடவுளை ) பற்றியும் உபதேசம் செய்தது .
சத்தியகாமனும் காளையின் வேண்டுகோளின் படி குருவின் இருப்பிடம் நோக்கித் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கால்நடைகளுடன் புறப்பட்டான். வழியில் ஒரு நாள் மாலைப்பொழுதில் தீ வளர்க்க நேரிட்டது. அந்தத்தீயும் அவனுக்குப் பிரம்மத்தைப்பற்றி மேலும் பல விஷயங்களைப் போதித்தது.அதன் பிறகு அவனைச் சந்தித்த ஓர் அன்னப்பறவையாலும் ஒரு மூடமனிதனாலும் சத்திய காமனுக்கு பிரம்மத்தைப் பற்றிய அரிய விஷயங்களை் கூறப்பட்டன.கடைசியில் ஒரு வழியாக சத்தியகாமன் குருவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.மாணவனைத் தொலைவில் பார்த்தவுடனேயே கௌதமர் மாணவனின் அறிவுத்திறனைப் புரிந்துக்கொண்டார்.கௌதமர் அவனிடம் குழந்தாய்! உனது முகத்தின் ஒளியைக்கண்டே உனக்கு பிரம்மத்தைப் பற்றிய அறிவு (பிரம்ம ஞானம்) கிடைத்து விட்டது என அறிகிறேன்.
தயவு செய்து உனக்குக் கற்பித்தவர் யார் என்று கூறுவாயாக! என்றார். அதற்கு அவன் குருதேவரிடம் ” மனிதர்கள் அல்லாத பிராணிகள் மூலம் நான் அவற்றை அறிந்து கொண்டேன். இருப்பினும் தங்களிடமிருந்து அவற்றைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏனெனில் ஒருவருடைய குருவினால் மடடுமே சீடனை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியும் என்றான். கௌதமரும் சீடனுக்கு எல்லாவற்றையும் கற்பித்தார்.அவையனைத்தும் ஏற்கனவே மனிதப்பிறவிகளல்லாத ஜீவன்களிடம் கேட்டு அறிந்து கொண்டவையே.
இந்தக்கதையின் மூலம் குருவிடம் சிரத்தையுள்ள மாணவனுக்கு எல்லாவிதமான உயர்ந்த அறிவும் வந்து சேரும் என்பதை அறிகிறோம். மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்திலும் இதே போன்ற கதை ஒன்று உண்டு.
அது நிஷாதன் என்ற கீழ் ஜாதிச்சிறுவனைப்பற்றியது. அச்சிறுவனின் பெயர் ஏகலைவன். அவன் துரோணாசாரியாரிடமிருந்து வில் வித்தையைக் கற்று க் கொள்ள விரும்பினான். அவன் பண்டைய இந்தியாவில் போர் வீரர்களைப் பயிற்றுவிக்கும் ஆரிய ஆசிரியர்களுக்கு தலைசிறந்தவர். கீழ் ஜாதிக்காரர்களுக்கு யுத்த சம்பந்தமான ரகசியப் போர் முறைகளைப் பயிற்றுவிப்பது அக்காலத்தில் வழக்கத்திற்கு புறம்பானது.
எனவே துரோணாச்சாரியார் அச்சிறுவனுக்கு பாடம் கற்பிக்க மறுத்து விட்டார். இருந்த போதிலும் ஏகலைவன் மனதார துரோணரைக் குருவாக வரித்து விட்டான். எனவே துரோணரின் சிலை ஒன்றைச் செய்து காட்டில் வைத்து அதையே உயிருள்ள குருவாக ப் பாவித்து மிகுந்த சிரத்தையுடன் வில் பயிற்சியைச் செய்து வந்தான். வேறு எவருமே அவனுக்கு உதவவில்லை. சிலையின் எதிரில் மிகுந்த சிரத்தையுடன் பயிற்சி செய்து தலை சிறந்த வில்லாளிஆகிவிட்டான். துரோணரின் தலைசிறந்த மாணவனாகிய அர்ச்சுனனையே மிஞ்சும் அளவிற்கு ச் சிறந்த வில்லாளியாளான். எவர் வேண்டுமானாலும் குருவாக ஆகி விட முடியாது. சீரிய வாழ்க்கை முறைகளுடன் உயர்ந்த ஆன்மீக நிலையை எட்டியவர்கள் மட்டுமே குரு ஸ்தானத்தைப் பெற முடியும் .
அப்படி இல்லாது போனால் அவரால் மாணவனுக்கு எதையும் கற்பிக்க முடியாது. மாணவர் ஆசிரியர் கூறும் போதனைகளைக் கடைபிடித்து உண்மையுடன் உழைக்க வேண்டும். அப்போது தகன் ஆன்மீக வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். உண்மையான ஆன்மீக குரு மாணவனுக்கு வழி காட்டும் செயலான போதனைகளுக்கு எவ்விதமான சன்மானத்தையும் எதிர்பார்க்க மாட்டார் . இத்தகைய கௌரவமான செயலைச் செய்பவர் வழக்கத்திற்கப் புறம்பாக நடந்து கொண்டால் அது அவருக்கும் அவரது மதத்திற்கும் இழுக்கை உண்டாக்குவதாக அமையும் . இதிலிருந்து இந்து மதத்தில் குருவின் பெலமையை நன்க உணர்ந்த கொள்ளலாம் .
22
முன்னுரை
-
இந்து மதத்தை பொறுத்தவரை ‘ மனித வாழ்க்கை இறை அனுபூதி பெறுவதற்கே ’ என்று கோட்பாடு முக்கியமானது என்று முன்னரே கூறப்பட்டது .
துறவியாக இருந்தாலும் சரி , இல்லறத்தானாக இருந்தாலும் சரி அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வழியில் ஆன்மீகத்தைக் கடைப்பிடித்தால் நிச்சயமாக இறைவனை உணரலாம் என்று உறுதியாகக் கூறப்பட்டிருக்கிறது . பண்டைய காலத்தில் பாரதத்தில் வாழ்ந்த புண்ணிய சீலர்களின் வரிசையில் கொண்டாடப்படும் அஸ்வதி மஹாராஜாவும் ஜனக மஹாராஜாவும் குடும்பஸ்தர்களே
இந்து மதமானது இல்லறத்தில் வசிப்பவர்களுக்காக ஒரு சில மத சம்பந்தமான கடமைகளையும் , துறவிகளக்காகச் சில கடமைகளையும் தொகுத்து இரு பெரிய அன்மீகப் பாதைகளை வகுத்துள்ளது . இல்லறத்தார்கள் அனுசரிக்க வேண்டியது ” பிரவிருத்தி மார்க்கம் ” எனப்பட்டத .
இதன்படி அவர்கள் சிற்றின்பங்களை அனுபவிக்க உரிமை தரப்பட்டுள்ளது .
துறவிகள் ‘ நிவிருந்தி ’ மார்க்கத்தை அனுசரிக்க வேண்டும் . அதில் காமத்திற்கு இடமில்லை . அதாவது அவர்கள் சிற்றின்பங்களை அறவே விட்டு விட வேண்டும் .
பிரவிருத்தி மார்க்கம் சிற்றின்பங்களை அனுபவிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ள வழி
‘ மகாநிர்வாண தந்திரம் ’ என்ற நூல் கீழே பட்டியலிட்டுக் கூறப்பட்டவைகளை
இல்லறத்தார்களின் கடமைகள் என்கிறது . அவை ‘ பிரவிருத்தி மார்க்கம்’ என்ற தலைப்பில் அடங்கும் .
குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் மனிதனின் குறிக்கோள் இறை அனுபூதி பெறுதலே .
அதை அடைய மத நூல்களில் அவன் செய்ய வேண்டிய கடமைகளாகக் கூறப்பட்டவைகளைச் செய்தே ஆக வேண்டும் . அவன்தான் செய்யும் கடமைகளின் பலன்களைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பது என்பதை நிரந்திரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் .
நேர்மையான வழியில் தான் பொருள் ஈட்ட வேண்டும் . அவனுடைய வாழ்க்கையானது கடவுளுக்கும் , ஏழைகளக்கும் , திக்கற்றவர்களுக்கும் தொண்டு செய்வததான் என்பதை உணர வேண்டும் . எப்போதும் பெற்றோர்களை மகிழச் செய்ய முயற்சி செய்ய வேண்டும் . பெற்றோர்களின் முன்னிலையில் தமாஷாகப் பேசக் கூடாது . குழந்தைத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது . கோபத்தையும் காட்டக் கூடாது. அவன் உட்கார்ந்த கொண்டிருக்கும்போது அவனது பெற்றோர்கள் வந்தால் அவன் உடனே எழுந்து நிற்க வேண்டும் . அவ்வாறு செய்வது அவன் பெற்றோர்போல் வைத்தள்ள மதிப்பையும் , மரியாதையையும் காட்டும் . பெற்றோர்கள் அமரச் சொன்னால் மட்டுமே அவர்கள் முன்னிலையில் உட்காரலாம்.
இல்லற வாழ்க்கை வாழ்க்கை நடத்தபவன் பெற்றோர்களுக்கு இணவு அளிப்பதற்கு முன்னதாக உண்ணக் கூடாது . அதேபோல் மனைவி , கழந்தைகள் மற்றும் ஏழைகளக்கு உணவு அளித்த பின்னரே உண்ண வேண்டும் . ஆயிரம் வகையான இன்னல்களை அனுபவிக்க நேரடினும் பெற்றோர்களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் . ஏனெனில் அவன் தன்னுடைய உடலை அளித்த பெற்றோருக்குக் கடன் பட்டிரக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது .
மனைவியைத் திட்டவும் கூடாது. அவளடைய உணர்வகளை அவமதித்த அவளைத் துன்பத்திற்காளாக்கக் கூடாது . மனைவியை பெற்ற அன்னையைப் பாதுகாப்பது போல் பாதுகாக்க வேண்டும் .
இந்து சமூகத்தின் திருமணமான மகனும் கூடப் பெற்றோர்களுடன் வசிக்கிறார்கள் . வயதான பெற்றோர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள் .
தைத்திரீய உபநிஷமானது மகன் தாயாருக்குத் தொண்டு கடவுளாகப் பாவிக்க வேண்டும் என்கிறது . கணவன் மனைவியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நடந்துகொள்ள வேண்டும் . மனத்தாலும் வேறு ஒரு பெண்ணை விரும்பினால் பயங்கரமான நரகத்திற்கு செல்ல நேரிடும்.
கணவன் எப்பொழுதும் மனைவிக்கு துணி மணிகள் வாங்கிக் கொடுத்தும் பணம் கொடுத்தும் அன்பு செலுத்தியும் உண்மையாக நடந்து கொண்டும், இனிமையான வார்த்தைகள் பேசியும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மனைவியைத் துன்புறுத்தக் கூடிய எந்தவிதமான செயல்களையும் செய்யக்கூடாது.கற்புள்ள மனைவியை அடைந்து அவளது அன்பிற்கும் பாத்திரமான கணவன் உண்மையில் அவனது மதத்தின் ஆசிகளைப் பெற்றவனாவான். ஒரு குடும்பத் தலைவன் பெண்கள் மத்தியில் பேசும் போது தகுதியற்ற சொற்களை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.
அத்தோடு தான் சாதித்தவற்றைப்பற்றிப் பெருமை அடித்துக் கொள்ள க் கூடாது நான் இதைப் பண்ணி விட்டேன் , நான் அதைச்சாதித்து விட்டேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.பொதுப்படையாகத் தன்னுடைய புகழைப்பற்றியோ, தன்னுடைய செல்வச் செழிப்பைப் பற்றியோ சமூகத்தில் தனக்குள்ள பெருமையான இடத்தைப் பற்றியோ சொல்லக்கூடாது.அதே போல் தன்னுடைய ஏழ்மையையும் சொல்லக்கூடாது.பிறர் தன்னிடம் நம்பிக்கை வைத்துக் கூறியவற்றையும் வெளியில் சொல்லக்கூடாது. இல்லறத்தான் தன்னுடைய உணவு,உடை மற்றும் வெளித் தோற்றத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடாது.
உடல் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். அவனுடைய உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும்.எப்பொழுதும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும்.தைரியசாலியாக இருப்பதுடன் ஒரு கதாநாயகனைப்போன்று எதிரிகளைப் போரிட்டுத் தடுக்கத் தெரிய வேண்டும். ஒரு கோழையைப் போல் நடந்து கொள்ளக் கூடாது. தன்னுடைய கோழைத்தனத்தை அகிம்சையின் காரணமாக என்றோ எதிர்த்துப் போராடக் கூடாது என்றோ சப்பை கட்டு கட்ட கூடாது.ஓர் ஆட்டுக் குட்டியைப் போன்று தன்னுடைய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சாதுவாக நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளிடம் ஒரு குடும்பத் தலைவனுக்குள்ள கடமைகள்-
-
மகன் நான்கு வயதை அடையும் வரையில் மிகவும் அன்பு காட்டி வளர்க்க வேண்டும். பின்னர் பதினாறு வயது பிராயத்தை அடையும் வரையில் தகுந்த கல்வியை அளிக்க வேண்டும். இருபது வயது அடைந்த மகனை ஒரு வேலையில் அமர்த்துவதுடன் அவனைத்தனக்குச் சமமானவனாக நடத்த வேண்“டும். மகளையும் கூட அதே போலவே நடத்துவதுடன் கல்வியையும் அளிக்க வேண்டும்.
மகளின் திருமணத்திற்காக அவளுக்கு நகைகளையும் பணத்தையும் அளிக்க வேண்டும். ஒரு குடும்பஸ்தன் தன்னுடைய சகோதர சேகோதரிகளின் நன்மையையும் பாதுகாக்க வேண்டும் . அவர்கள் ஏழைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும் . மற்ற உறவினர்களுடமும் நண்பர்களிடம் , வேலைக்காரர்களிடமும் , சொந்த ஊரைச் சேர்ந்தவர்களிடமும் நல் முறையில் நடந்துதகொள்ள வேண்டும் . பணவசதி படைத்த ஒருவன் தேவைப்பட்ட உறவினருக்கும் , ஏழை மக்களுக்கும் உதவாமல் இருந்தால் அவனை ஒரு மனிதனாக மதிக்காமல் விலங்காகவே கருதுவார்கள்.
இல்லறத்தார்கள் கெட்ட மனிதர்களுக்கு ஒரு போதும் மரியாதைக் காட்டக் கூடாது . அவன் செய்த தீய செயல்களை மன்னிக்கவும் கூடாது . நற்பண்புகள் நிறைந்தவர்களையும் , உயர்ந்த குணங்களைக் கொண்டவர்களையும் மதித்த நடக்க வேண்டும் . நம்பத்தகுந்தவர்களிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும் . அவ்வாறு நட்ப கொள்வதற்கு முன்னரே அவரது நடவடிக்கைகள் மற்ற கனிதர்களுடன் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொள்தல் நலம். நற்பெயரைச் சம்பாதிக்க நேர்மையானதும் , உண்மையானதுமான வழிகளிலேயே முயற்சி செய்ய வேண்டும். அவனுடைய வார்த்தைகள் மகிழ்ச்சியை அளிப்பவையாகவம் , பிறருக்கு நன்மை பயக்கும் விதத்திலும் இருக்க வேண்டும் . அவன் சூதாடக் கூடாது . அவனது நடத்தையால் பிறருக்கு எத்தகைய துன்பமும் வரக் கூடாது . குடும்பஸ்தன் தான் செல்வந்தனாக வேண்டும் என்பதற்காக நேர்மையான வழிகளை நாடாதவன் அறநெறிகளிலிருந்து பிறழ்ந்தவனாகிறான். சோம்பேறியாக வெட்டிப்பொழுது போக்குபவனை பாவியாகக் கருதுவார்கள் .தன்னை அண்டியுள்ளவா்களைக் காப்பாற்றுவதற்காக பொருள் ஈட்டும் முயற்சியில் சுறுசுறுப்புடன் ஈடுபட வேண்டும்.
மக்களின் நன்மைக்காக குடும்பஸ்தன் சேவையில் ஈடுபட வேண்டும்.பொதுமக்கள் தண்ணீா்குடிப்பதா்காகவும், விவசாயம் செய்வதற்காகவும், நீா்த்தேக்கங்களைக் கட்ட வேண்டும்.கால் நடையாகச் சாலைகளில் செல்பவர்களின் நன்மைக்காகச் சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட வேண்டும்.யாத்ரீகர்களுக்காக நிழற்குடைகளை அமைக்க வேண்டும்.மேலும் ஆறுகளைக் கடக்க பாலங்களைக் கட்டுவதுடன் சிறந்த சாலைகளையும் அமைக்க வேண்டும்.இவ்வாறான செயல்களை தன்னலமற்ற உள்ளத்தோடு சேவை மனப்பான்மையுடன் செய்யும் குடும்பஸ்தனும் , ஒரு பெரிய யோகி தன்னுடைய தவத்தின் பயனால் அடையக்கூடிய உயர்ந்த ஆன்மீக நிலையை அடைவான்.
-
-
நிவிருத்தி மார்க்கம்-சிற்றின்பங்களைத் துறக்கும் பாதை
-
எல்லாவற்றையும் துறந்து நிவிருத்தி மார்க்கத்தில் செல்லும் துறவிப் பெருமக்கள் அனைவருக்குமே வகுக்கப்பட்ட பாதையானது குடும்பஸ்தர்களின் பாதையினின்றும் மாறுபட்டது.
பிரம்மசர்ய விரதத்தை மேற்கொள்ளுவதாகச் சபதம் ஏற்ற ஒரு சன்னியாசி உடலாலும், உள்ளத்தாலும் தூய்மையுடன் இருக்க வேண்டும்.அனைத்துப் பெண்களையும் தனது சொந்த தாயைப் பார்ப்பது போல் எண்ணி மரியாதை காட்ட வேண்டும்.குடும்பஸ்தர்கள் வாழும் இடத்தில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து அதன் மூலமே உடலை வளர்க்க வேண்டும். எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதுடன் தனது நேரத்தின் பெரும்பான்மையான பகுதியை நீதி நூல்களைப் படிப்பதிலும் கடவுளைப்பற்றி எண்ணுவதிலும் செலவழிக்க வேண்டும்.
தனக்காக வீடு செல்வம் போன்றவற்றை வைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு குடிசையிலோ, கோயிலிலோ,அல்லது ஒரு மரத்தின் அடியிலோ வசிக்க வேண்டும். உண்மையானவனாக இருக்க வேண்டும்.
கொல்லாமையைக் கைக்கொள்ள வேண்டும். மன அமைதியுடன் வாழ வேண்டும். அனைத்து உயிரினிடங்களிடமும் கருணையுள்ளம் கொண்டிருக்க வேண்டும்.ஓர் அரசரையோ அல்லது அவருக்கிணையான பிரமுகர்களையோ சென்று பார்க்கக் கூடாது. அப்படி அவர்கள் துறவியைப் பார்க்க விரும்பினால் அவர்கள் தான் துறவியின் இருப்பிடம் தேடி வர வேண்டும். அப்படி வருபவர்களை துறவியானவர் மற்றவர்களிடம் காட்டும் அதே அன்பான உள்ளத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.ஏழை,பணக்காரன்,நல்லவன்,கெட்டவன் என்ற எந்தப்பாகுபாட்டையும் பாராது அனைவரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் . போற்றல், தூற்றல், இன்பம், துன்பம், எதையுமே பொருட்படுத்தக்கூடாது.அவரது ஒரே குறிக்கோள் கடவுள் தன்மையை உணர்வது என்பதாக இருக்க வேண்டும்.
23
-
முன்னுரை
-
சென்ற அத்தியாயத்தில் பிரவிருத்தி மார்க்கம், நிவிருத்தி மார்க்கம் ஆகியவை இந்து மதத்தின் படி கடவுளைக் காண உதவுகின்றன என்பது கூறப்பட்டது. இதைத் தவிரவும் பல்வேறு வழிகள் மூலமாகவும் கடவுளை அடைய முடியும் என்று இந்து மதம் கூறுகிறது. அவற்றுள் நான்கு பாதைகள் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. அவையாவன
-
1)பக்தி யோகம்-பக்தியின் மூலம் கடவுளை அடைதல்
2)ஞான யோகம்-பகுத்தறிவின் துணைகொண்டு கடவுளை அறிதல்
3) இராஜ யோகம்- மனத்தை ஒரு முகப்படுத்துவதன் மூலம் இறைவனை அடைதல்.
4) கர்ம யோகம்- சரியான செயல்களைச் செய்வதன் மூலம் இறைவனை அடைதல்.
யோகா என்ற வடமொழிச்சொல்லுக்கு ” இணை என்று பொருள். கடவுளையும், கடவுளை அடைய விரும்புபவனையும் இணைப்பதே யோகம். யோகம் என்றால் மனத்தால் கடவுளுடன் தொடர்பு கொள்ளுவதற்குரிய முறை.அல்லது தொழில் முறை என்றும் சொல்லலாம்.
இந்து மதம் அனைத்து மக்களையும் 1) உணர்ச்சி வசப்பட்ட மனிதர்கள்
2) பகுத்தறிவின் மூலம் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிபவர்கள்
3) தியானத்தில் ஆழ்ந்தவர்கள் மற்றும்
4)வழக்கமாகவே அதிக சுறுசுறுப்பாக இருப்பவர்கள் என்ற நான்கு பெரும் பிரிவுகளுக்குள் கொண்டு வருகிறது. உணர்ச்சி வசப்பட்டவர்களுக்கு ஏற்றது பக்தி யோகம்.
பகுத்தறிவு கொண்டு ஆராய்பவர்கள் நாடவேண்டியது ஞான யோகம். தியானம் செய்யும் மனநிலை கொண்டவர்கள் இராஜயோகத்தை மேற் கொள்ளலாம். இயற்கையாகவே நாட்டம் கொண்டவர்களுக்கு கர்ம யோகம் பரிந்துரைக்கப்படுகிறது.
-
பக்தி யோகம்-பக்தி மார்க்கம்
-
உணர்ச்சி வசப்படுபவர்கள் கடவுளை காண்பதற்கு பக்தி மார்க்கம் உதவுகிறது.உணர்ச்சிபூர்வமான அன்பு ஒவ்வொருவரிடமும் அபரிமிதமாக உள்ளது. அதையே கடவுளைக் காண்பதற்கு மிகவும் திறமையுடன் உபயோகப்படுத்த உதவுவது பக்தி யோகமாகும்.மனிதர்களிடம் அன்பானது சுயநலத்தோடு கூடியதாக உள்ளது. அதையே எப்படியாவது தூய்மைப்படுத்தி கடவுளின் பக்கம் திருப்புவோமேயானால் அது கடவுளை உணர உதவக்கூடிய பயனுள்ள வழியாக அமைந்துவிடும். இவ்வாறு ஏற்பட்டதாகக் கூறும் பல பரம்பரைக் கதைகளையும் இந்திய வரலாற்றில் காணலாம். இந்தியாவின் புகழ்பெற்ற சாதுவான துளசிதாசர் தனது இளம் வயதில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுத் தன்னுடைய இளம் மனைவியின் பால் அதிகமான பற்றுடையவராக இருந்தார்.
ஒரு கணமும் அவளை விட்டு பிரிய மனமில்லாதவராக இருந்தார். முழு மனத்துடன் அவளை நேசித்தார். அவருடைய மனைவிக்குத் தனது பெற்றோர்களை விட்டுப் பிரிந்து சில காலம் ஆகியிருந்ததால் அவர்களைக் காண வேண்டும் என்று மனம் தவியாய் த் தவித்தது.ஆனால் துளசிதாசரோ அவளை விட்டுப் பிரிய மனமின்றி பிறந்த வீடு செல்ல அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.ஒரு நாள் துளசிதாசர் ஏதோ வேலை நிமித்தமாகத் தன் சொந்த கிராமத்தை விட்டு வெளியே சென்றார். அவருடைய மனைவி அவரிடம் கூறாமல் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் வீட்டிற்கு ச் சென்று விட்டாள்.திரும்பி வந்து துளசிதாசர் நடந்ததை அறிந்து உடனே மனைவியைத்தேடிக் கொண்டு மாமனார் வீட்டிற்குச் சென்றார்.
கணவனைக் கண்டதும் அவரது மனைவிக்கு மிகவும் தர்ம சங்கடம் ஆகிவிட்டது. கணவனை நோக்கி இது என்ன வெட்க க் கேடு? என்னை விட்டு ஒரு நாள் கூட பிரிந்து இருக்க முடியாதா? என்னிடம் வைத்துள்ள ஆசையைக் கடவுளிடம் வைத்திருந்தால் நீங்கள் கடவுள் தரிசனத்தைக் கூடப் பெற்றிருக்கலாம் என்று இடிந்துரைத்தாள்.
(ஆசாரமான இந்துக் குடும்பத்தில் மற்றவர்கள் முன்னிலையில் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ கணவனும் மனைவியும் தங்களது பரஸ்பர அன்பை வெளியிடக்கூடாது.அது நெருங்கிய சுற்றத்தாராக இருப்பினும் மிகவும் கீழ்தரமாகவே கருதுவார்கள். அவரவரது சொந்த வீட்டில் அந்தரங்கமாகவே அத்தகைய அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். துளசிதாசரின் எதிர்பாராத வருகை அதுவும் மாமனார் வீட்டிற்கு அழைப்பில்லாமல் வந்தது அவரது காம உணர்ச்சியை அவளது பெற்றோர்களுக்கு முன்னால் காட்டுவதாக அமைந்தது. எனவே துளசிதாசரின் மனைவி வெகுண்டு அத்தகைய கடுஞ்சொற்களைக் கொட்டிவிட்டாள். மனைவியிடமிருந்து கடுஞ்சொற்களைக் கேட்டு துளசிதாசரின் மனம் மிகவும் துணுக்குற்றது. உடனே வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வரவேயில்லை.
அவர் துறவு பூண்டு இறைவனிடம் மாறாத பக்தி பூண்டு விட்டார்.நாளடைவில் இறைக்காட்சி பெற்று சிறந்த முனிவரானார். சுயநலம் மிக்கதும் உணர்ச்சிபூர்வதுமான அன்பைத் தூய்மைப் படுத்தினால் அது கடவுள் க் காட்சி கிடைக்கும் வழியைக் காட்டும் என்பதற்கு துளசிதாசரின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறு உலக மக்களின் பால் காட்டும் அன்பை கடவுளின் பால் காட்டுவது பக்தி எனப்படுகிறது.
பக்தியோகத்தை ப் பொறுத்த வரை உடல் தூய்மை, மனத்தூய்மை, பிராத்தனை, கடவுளின் திருநாமத்தை ஜபித்தல்,பக்திப் பாடல்களைப் பாடுதல் , கடவுளை அலங்கரித்தல், பூஜை செய்தல் ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.
கடவுளை வழிபடுவது 1)வெளிப்படையான சடங்குகள் செய்வது.2) மனத்தால் வழிபடுவது என இருவகைப்படும். மனத்தால் வழிபடுவது என்பது தியானம் செய்வதைப்போன்றது.அது புறச்சடங்குகளால் ஆன வழிபாட்டை விடச் சிறந்தது. ஆன்மீக வாழ்க்கையில் ஓரளவு முன்னேறியவர்களுக்கு ஏற்றது. துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு உருவங்கள் வைத்து புறச்சடங்குகள் மூலம் வழிபடுவது சிறந்த பயனைத்தரும்.
ஜபம் செய்வது அதாவது கடவுளின் திருப்பெயரைச் சொல்வது என்பதைப் பல வழிகளில் செய்யலாம். கடவுளின் பெயரைத் தெளிவாக உச்சரிப்போடு சொல்லி ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும். அவ்வாறல்லாது கடவுளின் பெயரை நாக்கையும் உதடுகளையும் அசைத்து மற்றவர்களுக்கு கேட்காதபடி ஜபிப்பதை உபாம்ஷீ” ஜபம் என்பர். மூன்றாவது வகையான ஜபத்தில், ஜபம் செய்பவர்கள் நாக்கையும், உதடுகளையும் அசைக்காது மனதினால் மட்டும் கடவுளின் பெயரைக் கூறுவார்கள்.
இதற்கு மானஸ ஜபம்”என்று பெயர்.மூன்றாவது வகையான ஜபம் இரண்டாவது வகை ஜபத்தை விடச் சிறந்தது. இரண்டாவது வகை முதல் வகையை விட மேலானது.மனத்தளவில் கடவுளின் அண்மையை அடைவதற்கான சில வழி முறைகள் உள்ளன. நடு நிலையுடன் விருப்பு வெறுப்பற்று அமைதியுடன் கூடிய மனநிலையில் இருப்பது சாந்த மனோபாவம் எனப்படும்.தன்னை ஒரு சேவகனாக எண்ணிக் கொள்வது தாஸ்ய மனோபாவம்.
தன்னையே ஒரு தோழனாக எண்ணிக் கொண்டு வழிபடுவது சக்ய மனோபாவம். ஒர தாய் தன்னுடைய மகனிடம் காட்டும் பரிவுடன் வழிபடுவது வாத்ஸல்ய மனோபாவம். அன்பான மனைவி கணவனிடம் காட்டும் அன்பையொத்து எண்ணி வழிபடுவது மதுர மனோபாவம். மேலே கூறப்பட்ட எந்த ஒரு வகையான பாதையில் சென்றாலும் ஆன்மீக சாதகன் கடவுளின் அண்மையை அடையலாம். ஆனால் இவ்வைந்துமே வெவ்வேறு வகையான தன்மைகளிலும் கடவுளின்பால் கொண்டுள்ள பக்தியின் தரத்திலும் வேறுபட்டிருக்கும்.
சாந்த மனோபாவத்தில் அவர்களுடைய பக்தியானது குறைவாகவே பேசப்படும். தனிப்பட்ட முறையில் கடவுளிடம் எந்த ஒரு உறவையும் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். இருப்பினும் கடவுளை அடைய வேண்டும் என்ற மன ஏக்கம் தீவிரமாக இருக்கும்.
தாஸ்ய மனோபாவத்தில் கடவுளின் சேவகனாகத் தன்னை பாவித்துக் கொண்டு தன்னுடைய அன்பான தொண்டுகளின் மூலம் எஜமானனை மகிழ்விக்க விரும்புவான். வேலைக்காரனாக எண்ணிக் கொள்வதால் தன்னைக் கடவுளின் அருகாமையிலிருந்து சற்றுத் தொலைவிலேயே வைத்துக் கொள்ள விரும்புவான்.
தோழனாக எண்ணி வழிபடும் போது கடவுளுக்கும், சாதகனுக்கும் உள்ள உறவு நெருக்கமானதாக இருக்கும். கடவுளை நண்பனாகக் கருதி அன்பை காட்டுவதுடன் கடவுளும் தன்னிடம் அதே அளவு அன்பைக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். வாத்ஸல்ய மனோபாவத்தில் கடவுளையே தன்னுடைய குழந்தையாகப் பாவித்து அன்பைச் சொரிவார்கள்.ஆனால் கடவுளிடமிருந்து அதற்குப் பிரதிபலனாக எதையுமே எதிர்பார்க்க மாட்டார்கள்.
மதுர மனோபாவத்தினால் கடவுளை வழிபடும் சாதகன் ஒரு மனைவி தன்னுடைய கணவனை எவ்வளவு ஆழமாக நேசிப்பாளோ அதே போன்று உண்மையான அன்புடன் சாதனைகள் புரிவான் . இந்த வகையான வழிபாடு செய்பவர்கள் தான் ஒரு ஆணா அல்லது பெண்ணா என்ற பால் பற்றிய அறிவைக்கூட விட்டு விடுவார்கள்.இது மிகவும் தூய்மையான ஆன்மீக உறவு.
இவற்றைத் தவிர சாதகன் கடவுளைத் தனது தாயாகவோ, தந்தையாகவோ எண்ணி தன்னை அவர்களின் குழந்தையாக எண்ணியும் வழிபடலாம். வங்காளத்தில் வாழ்ந்த ராமபிரசாதர்,கமலாகாந்தர், ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் கடவுளை ஜகன்மாதாவாகவே எண்ணி வழிபட்டனர்.
மேலே கூறப்பட்ட ஆன்மீக சாதனைக்கான பாதைகளின் துணையுடன் பக்தியோகத்திற்கான கோட்பாடுகளைக் கடைபிடித்தால் சாதகனின் கடவுள் பக்தி மேலும் மேலும் பண்பட்டு வளரும். இந்த அன்பானது மேலும் தூய்மை அடைந்து முடிவில் இஷ்ட தெய்வத்தின் அருட்காட்சியைப் பெறச் செய்கிறது.
ஞான யோகம்- பகுத்தறிவின் கூலம் அறிந்து கொள்ளும் வழி
-
ஒருவர் சொல்வதை நம்பி என்னால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.சாதுக்களும் , தீர்க்க தரிசிகளும் கூறுவதை நம்புவது கடினமாக உள்ளது. அவர்கள் தவறான கருத்தைப் பெற்றவர்களாகவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொண்டவர்களாகவோ இருக்க மாட்டார்கள் என்று என்னால் எப்படி உறுதியாகக் கொள்ள முடியும். இது வரை நான் கடவுளை உணரவும் இல்லை. அதனால் அவரை அறிந்து கொள்ளவும் இல்லை. எனவே என்னால் கடவுளை நம்ப முடியாது. மேலும் இந்த உலகம் உண்மையாக இருக்கிறதா என்றே உறுதியாகக் கொள்ள முடியவில்லை. அனைத்துமே போலியான தோற்றமாக இருக்கலாம் அல்லது என்னுடைய பிரமையாகவும் இருக்கலாம் என்று கூறலாம்.
நீ இந்த உலகம் இருப்பதை நம்பவில்லை. சாதுக்களும் தீர்க்க தரிசிகளும் கூறும் அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய். உன்னுடைய பகுத்தறிவானது அவற்றை நம்ப மறுக்கிறது . ஆனால் நீ உன்னை ஐயப்பாட்டுடன் கூடியவனாக இருப்பதை மறுக்க முடியாது. எனவே ஐயங்களுடன் கூடியவனாக நீ இருக்கிறாய். ஆனால் உண்மையில் நீ யார்? நீ உன்னுடைய ஊன் உடம்பா?உயிரா? புலன்களா? அல்லது மனமா? இவை அனைத்தும் இருக்கிறது என்ற விழிப்புணர்வு உனக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.
சொந்தக்காரனும் , சொந்தம் கொண்டாடப்படுவதும் ஒன்றானதாக இருக்க முடியாது. அவை ஒன்றோடொன்று வேறுபட்டே இருக்கும்.எனவே நீ உன்னுடைய ஊன் உடல் அல்ல , சக்தி அல்ல புலன்களும் அல்ல, மனமும் அல்ல , நீ இவை அனைத்தினின்றும் வேறுபடுகிறாய்.
நீ உன்னுடைய உண்மையான அடையாளத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய், உண்மையாக நீ யாராக இருப்பதை அறிய முயற்சி செய் என்று ஞானயோகம் கூறுகிறது. நீ உன்னை அறிந்து கொள் ” ஆத்மானம் வித்தி என்பது தான் ஞானயோகம் கூறும் முதலாவதான அறிவுரை.
இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றுமே தெய்வாம்சம் பொருந்தியது என்ற வேத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. எங்கும் எதிலும் தெய்வீகம் இருக்கும் பட்சத்தில் உயிருள்ள மனிதர்களிடமும் தெய்வீகம் அவசியமாக இருக்கும். மனிதன் உயிரோடு வாழ்வதற்குக் காரணமாக அமைவதே அந்தத் தெய்வாம்சம் உடலினுள் இருப்பது தான். ஆனால் அது அகம் ஆகாது. இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த உண்மையான தான் எனப்படுவது மனத்தளவானதே , ஒரு நோக்கம் மட்டுமே. இந்தத் தெய்வாம்சம் என்பது தான் எனப்படும் அகம் என்பதினின்றும் வேறு பட்டது.
ஞான யோகத்தைப் பயிலும் மாணவன் 100 விழுக்காடு இந்த தெய்வாம்சம் உண்மையானது என்று நம்ப வேண்டும். முதவாவதாக மாணவன் சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அறநெறி சம்பந்தமான கட்டுப்பாடுகள் மனத்தின் தசைகளையும் எண்ணங்களையும் உறுதியாக வைக்கும்.அதன் பிறகு தன்னலமற்ற வேலைகளைச் செய்வதால் மனம் தூய்மையடையும். மாணவனின் மனம் தூய்மை அடைந்து விட்டதை அறிந்து கொண்ட குருவானவர் மாணவனுக்கு அவனுள் இருக்கும் உண்மையான தெய்வத் தன்மையின் மீது தியானம் செய்யும் முறையைக் கற்பிப்பார்.
மாணவன் அவனுடைய ஆசிரியர் காட்டிய வழியில் செல்ல
1)சிரவணம்2)மனனம் 3)நிதித்யாசனம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.
முதலாவதாக ”சிரவணம் எனப்படுவது ஆசிரியர் கற்பிப்பவற்றை முழு மனத்துடன் கேட்க வேண்டும்.அவர் கூறும் ”தத்வமஸி, நீ தான் கடவுள்” என்பதை உணர வேண்டும்.ஆசிரியர் குறிப்பால் உணர்த்தும் வார்த்தைகளை மாணவன் நம்ப வேண்டும். பல வகையான நீதி நெறிகளைக் கடைபிடித்த காரணத்தினால் மாணவனுக்கு மனத் தூய்மை ஏற்பட்டிருக்கும். எனவே அவன் ஆசிரியர் கூறுவதை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவான். தனக்குத்தானே ” என்னுடைய ஆசிரியர் என்னையே தெய்வீகம் என்கிறார். ஆனால் என்னுடைய அனுபவமோ நான் அழியக்கூடியவன். என்னுடைய சக்திகள் ஓர் அளவிற்கு உட்பட்டவை.என்னுடைய அறிவும் ஓர் எல்லைக்குட்பட்டதே என்கிறது.
நான் அமரத்வம் பெற்றவன். எல்லாவற்றையும் அறிந்தவன். சர்வ வல்லமை உடையவன் எங்கும் நிறைந்தவன் என்பதாக என்னால் உணர முடியாதபோது நான் எப்படி தெய்வீகமானவனாவேன்? ஆனால் என்னுடைய குருவின் வாக்கு பொய்க்காது. ஆகவே எனக்குள் எதுவோ தெய்வத்தன்மை உடையதாக இருக்கிறது. அதை முதலில் நான் கண்டறிய வேண்டும். கண்டிப்பாக இந்த உடல் தெய்வீகமானது அல்ல.மறையக்கூடியது. செத்து மடியக் கூடியது. என்னுடைய உயிர்சக்தியும் தெய்வீகமானதல்ல. ஏனெனில் அது முடிவற்றதல்ல எல்லைக்குட்பட்டது. எனவே மனமும் தெய்வீகமானது அல்ல என்று சிந்திப்பான். மாணவன் இவ்வாறாக ஆலோசனை செய்து மனத்தால் தெய்வீகம் இதுவல்ல, இது வல்ல என்று தள்ளி விடுகிறான்.
இத்தகைய முறையே நேதி” இதுவல்ல எனப்படுவது. படிப்படியாக இந்த தெய்வீகம் பற்றிய சிந்தனையானது ஒரு முகப்பட்டு விடுகிறது. இதுவே நிதித்யாசனமாகிறது. அதனால் முடிவில் அவனது தெய்வீகத் தன்மையின் மெய்ப்பாட்டினை உணர வைக்கிறது. இந்த நிலைக்கு வந்த சாதகனுக்குப் புற உலகைப்பற்றிய சிந்தனையோ சொந்த உடலைப் பற்றிய நினைவோ இருக்காது. அவனது மனமும் , அகம்பாவமும் அவனுள் இருக்கும். தெய்வீக சமுத்திரத்தில் கரைந்து போயிருக்கும். அப்போது மனமானது ”நிர்விகல்ப சமாதியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இத்தகைய நிர்விகல்ப சமாதியின் வாயிலாக அவன் அந்த நிர்குணப்பிரம்மம் தானாக இருப்பதை உணருகிறான். இத்தகைய தெய்வீக அனுபவத்தைப் பெறுவது தான் ஞான யோகத்தின் குறிக்கோள் . சாதகன் தன்னுடைய ஆன்மீக தாகத்தை நிர்விகல்ப சமாதியில் தனது தெய்வீகத் தன்மையை உணர்ந்து தீர்த்துக் கொள்கிறான்.
சவிகல்ப சமாதி” எனப்படுவது மேலே கூறப்பட்டதைச் சற்று தாழ்ந்த நிலையில் உள்ளது. இதன்படி சாதகனின் அகமானது சற்று அடங்கிய நிலையில் அவனுள் இருக்கும்.
-
24
-
இராஜயோகத்தின் எட்டு படிகள்
தன்னுடைய மனத்தை ஆராய்ந்து பார்த்து அதன் மீது தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்த விரும்ப இயற்கையாகவே ஆவல் கொண்டவர்களுக்கு இராஜயோகம் ஏற்றது. மிகவும் புகழ்பெற்ற பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது தான் இராஜயோகம் . பொதுவாக இதனை யோகம் என்பர். இதுவே கிரியா யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகத்தைப் பயில்பவர்கள் எட்டு விதமான ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை எட்டு படிகள் என்றும் கூறலாம் .
முதலாவது படி யமம்(Yama)உள்ளக் பட்டுப்பாடு
2)நியமம், நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
(3) ஆசனம் அதாவது அமர்தல்.
(4) பிராணாயாமம், மூச்சைக்கட்டுப்படுத்தும் கலை.
(5)பிரத்யாஹாரம், உணர்ச்சிகளை க் கட்டுப்படுத்துதல்,
(6)தாரணை, தான் விரும்பும் பொருளின் மீது மனதை ஒருங்கிணைத்து செலுத்துதல்.
(7)தியானம்-தியானம், (8)சமாதி-ஆழ்ந்த மன ஒருமைப்பாடு
முதலாவது படி
-
பலாத்காரம்,பொய்,திருடுதல், கீழ்தர உணர்ச்சிகள், பிறரிடமிருந்து அநாவசியமாக.வெகுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றிலிருந்து மனத்தை விலக்குவதே யமம்.
இரண்டாவது படி-
உடல்,மனம்,இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல், எளிமையாக வாழ்தல், பக்தி சம்பந்தமான நூல்களைப் படிப்பதில் ஓர் ஒழுங்கு முறையைக் கடைபிடித்தல் மற்றும் கடவுளை வணங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
மூன்றாவது படி-
தொடர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்வதற்கு வசதியாக இருக்குமாறு உட்காருவது ஆசனத்தில் அடங்கும். இராஜயோகம் வசதியாக உட்காருவதற்குப் பல்வேறு முறைகளை கற்பிக்கிறது.
நான்காவது படி-
பிராணாயாமம் அல்லல்பட்டுத் திரியும் மனத்தை தாளக்கட்டோடு சீராக மூச்சு விடுவதன் மூலம் அடக்க உதவுகிறது.மூச்சை உள்ளே இழுப்பது , இழுக்கப்பட்ட காற்றை உள்ளேயே குறிப்பிட்ட நேரம் தங்க வைத்து பின்னர் வெளியே மூச்சை விடுவது ஆகியவைகளை இராஜயோகம் பயின்ற சிறப்பான ஆசிரியரைக்கொண்டு பயில வேண்டும். தகுதி வாய்ந்த குருவினிடமிருந்து கற்காமல் தாமாகவே இராஜயோகம் பழகினால் உடலுக்கோ, உள்ளத்திற்கோ கேடு விளையும் .அவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியாது.
ஐந்தாவது படி-
புலன் உணர்ச்சிகளையும் ,மனத்தையும் வெளியுலகுக்குச் செல்லாதபடி அடக்கி ஆள்வது பிரத்யாஹாரம் எனப்படுகிறது.
ஆறாவது படி-
தாரணை என்பது மனத்தை நாம் விரும்பும் ஒரு பொருளின் மீது வைத்து ஒரு சிறிது காலத்திற்கு தியானம் செய்யும் கலை.
ஏழாவது படி-
தாரணை என்பதை விட மேலான நிலை தியானம் எனப்படுவது. நம்முடைய மனமானது ஒரு குறிப்பிட்ட பொருளின்மீது நீண்ட நேரம் நிலைத்து நிற்பது தியான நிலை.எந்தவித இடையூறும் இன்றி மனம் ஒருமைப்படுவது தியானம். தியானம் தாரணை ஆகிய நிலைகளில் மனத்தை, தான் குறிக்கோளாகக் கொண்டுள்ள பொருள்களினின்றும் வேறுபடுத்திக் கொள்ள முடியும். தியானமானது மிகவும் பக்குவப்பட்ட நிலையை அடையும் போது சமாதி எனப்படும்.
எட்டாவது படி-
எந்தப்பொருளைக் குறித்து தியானம் செய்கிறோமோ அதன் மீது மிகவும் ஆழ்ந்த ஒருமைப்பாடு கொள்ளும் நிலையே சமாதி எனப்படுகிறது.தியானம் செய்பவரின் மன ஒருமைப்பாட்டிற்கு ஏற்றபடி ஒன்றை விட ஒன்று என்றபடி மேலான நிலைகளில் சமாதி இருக்கிறது. சம்ப்ரஞ்னாத சமாதி எனப்படும் சமாதி நிலை சற்று தரம் குறைவானதாக க்கருதப்படும்.
இயற்கையைக்கட்டுபடுத்தும் சக்தி இந்த சமாதி நிலை அடைபவருக்குக் கிட்டும்.
இவர்கள் சிறிது அகம் என்னும் கர்வத்தை வைத்திருப்பார்கள். மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் சமாதியானது அசம்ப்ரஞ்னாத சமாதி எனப்படும். இந்த நிலையை எய்தியவர்களிடம் அகம் அறவே நீங்கியிருக்கும்.இந்த நிலையில் ஆழ்ந்த தியானம் செய்வதால் மனம் தன்னாலேயே கரைந்துவிடும். தியானம் செய்யும் பொருளிலேயே ஒருமித்துவிடும்.
தான் சுயேச்சையாக இயங்கக்கூடிய ஓர் உயிர் என்பது கூடத் தெரியாது போய்விடும். மனமானது சிந்தனையின்றி இருக்கும்.இத்தகைய சமாதி நிலையை அடைவது தான் இராஜயோகத்தின் குறிக்கோள் கட்டுக்குள் அடங்காமலும் மாசு நிறைந்தும் உள்ள மனிதனின் மனத்தை சிற்றலைகளும் பேரலைகளும் கூடிய ஓர் ஏரிக்கு ஒப்பிடுகிறது இராஜயோகம். அதன் தண்ணீரில் அநேக விதமான தூசு தும்புகள் இருப்பதால் அது சுத்தமான நீர் அல்ல.
அந்த ஏரிக்கு அடிமட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒளி உள்ளது. இந்த உவமையின் படி அலைகள் யாவும் எண்ணங்கள்.குழம்பியுள்ள தண்ணீரானது மனத்தின் தூய்மையற்ற தன்மையைக் குறிப்பிடும் அடிமட்டத்தில் காணப்படும் சக்தி வாய்ந்த ஒளியானது மனிதனின் உள்ளே இருக்கும் தெய்வாம்சத்தைக் குறிக்கும்.
அகத்தில் இருக்கும் ஒளியானது மேல் மட்டத்தில் தெரியாது.ஏனெனில் தண்ணீரில் கரைந்துள்ள சேறும் எண்ணற்ற அலைகளும் அதை மறைத்துவிடும்.ஏரியை அலைகள் இல்லாதபடி செய்து, தண்ணீரிலுள்ள அசுத்தங்களை அகற்றிவிட்டால் அடியிலுள்ள வெளிச்சத்தைக் காணலாம். மனிதனின் மனமானது தூய்மையடைந்து சிந்தனைகளின்றி விடுபடும் போது அவனுள் இருக்கும் தெய்வீகத்தன்மை வெளிப்படும்.இத்தகைய நிலைக்கு மனத்தைக் கொண்டு வருவதே இராஜயோகத்தின் குறிக்கோள்.இந்த மனநிலையே அசம்பிரஞ்னாத சமாதி எனப்படுகிறது.இந்த சமாதி நிலையை அடையப் பெற்றவர்களே உயர்ந்த நிலையில் இருக்கும் முனிவராகக் கருதப்படுகிறார்கள்.
-
கடந்த காலத்தில் ஏற்பட்ட விஷயங்களைப் பற்றிய நினைவுகளும் அவற்றை மனத்தினின்றுநீக்கும் வழிகளும்
-
மனம் மாசுபடுவதற்குக் காரணமே கடந்த கால நிகழ்ச்சிகள் மனத்தில் சேர்ந்து இருப்பது தான். எந்த ஒரு நினைவும் தொலைந்து போவதில்லை என்கிறது இராஜயோகம். ஒவ்வொரு நினைவும் முடிவில் தெளிவற்ற நிலைக்குச் சென்று அங்கே பதிவாகிவிடுகிறது. ஒரு சராசரி மனத்திற்குள் எண்ணற்ற பதிவாகிய நினைவுகள் இருக்கும்.
இந்தப்பதிவு நிலையில் உள்ள எண்ணங்களே சமஸ்காரங்கள் என வடமொழியில் அழைக்கப்படுகின்றன. இராஜயோக முறைப்படி தியானம் பழகுவது இத்தகைய சமஸ்காரங்களின்று மனத்தைத்தூய்மைப்படுத்த உதவுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கதை மூலம் இதைத் தெளிவாக்கலாம்.
ஓர் ஏரியின் கரையில் ஒரு மனிதன் நீரை உறிஞ்சக்கூடிய காகிதத்துண்டுகள் அடங்கிய சுருளுடன் நின்று கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்வோம். அவன் ஒவ்வொரு துண்டாக எடுத்து ஏரியின் தண்ணீருக்குள் போடத் தொடங்குகிறான். முதலில் போட்ட துண்டு ஏரியில் சிறிது நேரம் மிதக்கும் .
சில நிமிடங்களில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். அதே போல் அடுத்தடுத்துப் போடும் துண்டுகள் முதலில் மிதந்து பின்னர் ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்து விடும். அதே போல் மனம் தான் ஏரி.காகிதத்துண்டுகள் தான் நினைவுகள். முதலில் மிதக்கும் காகிதத்துண்டுகள் நினைவு நிலையில் இருக்கும் மனத்தில் உள்ள எண்ணங்கள்.
நீருக்குள் மூழ்கி அடித்தளத்தில் இருப்பவை தெளிவற்ற மனநிலையில் உள்ள கடந்த கால நினைவுகள். இந்தப் பதிவுகள் அனைத்தும் நிழற்படங்களின் மூலங்கள்(Negatives). அவை தேவைப்படும் போது தக்க சூழ்நிலைகளில் பல படங்களை எடுக்க உதவும்.அதே போன்றே இந்த சமஸ்காரங்கள் தகுந்த சூழ்நிலை ஏற்படும் போது மறுபடியும் தெளிவான எண்ணங்களாக மாறும் சக்தி வாய்ந்தவை.
மனத்தை ஒரு முகப்படுத்தி ஒருவன் தியானம் செய்யும் போது அந்தத் தியானத்தின் தன்மையானது லேசர் ஒளிக்கற்றைகளைப் போன்று செயல்பட்டு எண்ணங்களின் அடுக்குகளினூடே ஊடுருவி ச் சென்று அடிமட்டத்தில் கிடக்கும் சமஸ்காரங்களைச் சென்றடையும்.இந்த ஒரு முகப்பட்ட எண்ண அலையானது நீருக்குள் மூழ்கித் தேடுபவர்களைப் போல் அடியில் சென்று சேமித்து வைக்கப்பட்ட சமஸ்காரங்களைத் துன்புறுத்தத் தொடங்கும். அதன் விளைவாக அவை இருக்கும் இடத்தை விட்டுப் புறப்பட்டு ஒவ்வொரு எண்ணமாகத் தெளிந்த மனநிலையின் தன்மைக்கு வந்து சேரும் .மறுபடியும் அவை உயிருள்ள நினைவுகளாக மாறிவிடும். இவ்வாறு புத்துயிர் அளிக்கப்பட்ட எண்ண அலைகளை தியானம் செய்பவர். விருப்பமில்லாதவர் போன்று கவனிக்க வேண்டும்.
அத்தோடு அதன்படி நடக்க முற்படக்கூடாது .அவ்வாறு அலட்சியப் படுத்தப்பட்ட எண்ணங்கள் தெளிந்த மனநிலைக்கு வந்தவுடன் காற்றுக் குமிழிகள் போன்று வெடித்துச் சிதறி மறைந்துவிடும். இவ்வாறு தொடர்ந்து தியானம் பழகுவதால் படிப்படியாக பழைய சமஸ்காரங்களினின்றும் விடுபட்டு மனத்தூய்மை பெற்றவனாகிறான்.அவ்வாறு இல்லாமல் புத்துயிர் பெற்ற எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படத் தொடங்கினால் புதுப்புது சமஸ்காரங்கள் தோன்றிவிடும். மனமும் தூய்மை அடையாமல் போய்விடும்.
-
சித்திகள்(அமானுஷ்ய சக்திகள்)
-
இராஜயோகம் பயிலும் சாதகன் தியானம் பழகும் போது பிறர் மதிக்கும் அளவிற்கு மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் திறமை பெற்றுவிடுவான். அதன் பயனாக அவனுக்கு அஷ்டசித்திகள் எனப்படும் மேலான எட்டு சக்திகள் கிடைத்துவிடும்.
அவையாவன-(1)அணிமா-இந்த சக்தி பெற்றவனுக்கு மிகச்சிறிய மூலக்கூறாக வளர்ந்து திடப்பொருள்களுக்குள் ஊடுருவிச் செல்லும் திறமை கிடைத்துவிடும்.
(2)-லகிமா-இந்த சக்தி பெற்றவனின் உடல் மிகவும் லேசானதாக ஆகிவிடும்.
(3)-இந்த சக்தியைக்கொண்டு (உருவத்தை) உடலை விரிவடையச்செய்யலாம்.
(4)-பிராகாமியா-பிறரால் எதிர்க்க முடியாத விருப்பத்தை உடையவனாவான்.
(5)-மஹிமா-உடலை மிகவும் பெரிதாக்கிக் கொள்ளும் திறமை அடைதல்.
(6)-ஈஷித்வா-இறைச்சக்தி போன்ற திறமையைப் பெறுதல்.
(7)-வசித்வா- ஒருவருடைய ஆணைக்குக் கீழ் அனைத்தையும் கொண்டு வருதல்.
(8)-காமாவசாயிதா-தான் எதை விரும்பினாலும் அதை அடையும் திறமை.
மேலே கூறப்பட்ட எட்டு சக்திகளைத் தவிர மேலும் சில சித்திகளும் கிடைக்கலாம்.அதாவது பறக்கும் திறமை அடைதல் –கேசரி வித்யா(Khechari-vidya).சாவை வெல்லும் திறமை –ம்ருத்யுஞ்ய வித்யா (MRITYUNJAYA-Vidya), புதையல் இருப்பதை அறிந்து அதை அடையும் திறமை –பாதாள சித்தி (Patala-Siddhi) , பிறரது உடலுக்குள் புகும் சக்தி-காய சித்தி (Kaya-siddhi) , கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்வுகள் பற்றிய அறிவு, திரி கால ஞானம்(Trikala-Jnana) விரும்பும் போது மரணம் அடைதல் – இச்சா ம்ருத்யு (Ichchha-Mrithu), தன்னைப் பிறர் கண்காணாமல் ஆக்கிக் கொள்ளுதல்- அந்தர் தான (antnrdhana), பசி தாகம் எடுக்காமல் இருக்கும் தன்மை அடைதல்-சஷீத்பிபாஸ(Kshutpipasa-nivitti), அனைத்துப் பிராணிகளின் மொழிகளை அறிதல்(Sarvabhutarnuta-Jnana) போன்றவற்றையும் அடையலாம்.
ஆனால் சாதகர்கள் மேலே கூறப்பட்ட எந்த ஒரு சக்தியையும் உபயோகப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவை அனைத்தும் ஆன்மீக முன்னேற்றம் என்னும் பாதையில் இருக்கும் மைல்கற்களைப் போன்றவை. அவை அடைய வேண்டிய குறிக்கோளை அடையவிடாமல் தடுக்கும் தடைக்கற்களாகும்.எந்த சாதகனாவது இந்த சித்திகளின் வசீகர சக்திகளின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு எந்த ஒரு மைல் கல்லிலாவது சிக்கிவிட்டால் அவனால் அடைய வேண்டிய குறிக்கோளை அடையவே முடியாது. இந்த சித்திகளின் பக்கம் எண்ணத்தைச் செலுத்தாது அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு சீராக முன்னேற்றப் பாதையில் சென்றால் குறிக்கோளை எளிதாக அடைந்து விடலாம். ஒரு தடவை குறிக்கோளை எட்டி விட்டால் அவனுள் இருக்கும் தெய்வீக சக்தி அதிக ஒளியுடன் வெளிப்படும்.அதன் பிறகு அவன் மனிதனின் எல்லைக்குட்பட்ட சக்திகளினின்றும் விடுபட்டுச் சிறந்த முனிவனாகிவிடுவான்.
-
-
குண்டலி சக்தியும் அதன் ஆறு சக்கரங்களும்
-
மனிதனுக்குள் இருக்கும் ஆன்மீக சக்தியானது வழக்கத்திற்கு மாறா த் துஞ்சும் நிலையில் இருப்பதாக இராஜயோகம் கூறுகிறது. மனிதர்களின் முதுகெலும்பின் அடிப்பகுதியில் தூங்கியபடி இது சுருண்ட நிலையில் நீண்ட உறக்கத்தில் இருக்கும். சுருள் என்பதை வடமொழியில் குண்டல என்பர். குண்டலி என்றால் பாம்பு சுருண்டு படுத்திருப்பதைப் போல் சுருண்ட நிலையில் இருப்பது என்று பொருள்படும். இராஜயோகமானது இந்த குண்டலி சக்தியை , ஆன்மீக சாதனைகளைக் கொண்டும் , தியானம் பழகுவதன் மூலமும் எழுப்புகிறது.
மனிதர்களின் முதுகெலும்பு க் கூடானது 8 என்ற எண்ணின் உருவத்தைப் போன்று ஒன்றன் மீது ஒன்றாக ப் பல எலும்புகளால் அமைந்தது. அதனால் அருகருகே இரண்டு பாதைகள் (வாய்க்கால் போன்று) அமைகின்றன. எலும்புகளின் சக்தியானது அதாவது செயல்பாடுகள் இந்த இரண்டு பாதைகளின் வழியாகவே நடைபெறுகின்றன. இடதுபுறப்பாதை ”இடா” என்றும் வலது புறப் பாதை ” பிங்கலை” என்றும் சொல்லப்படும். ஒரு மனிதன் தனது இடது நாசித்துவாரத்தின் மூலம் வேகமாக மூச்சை வெளிவிட்டால் அந்த சமயத்தில் அவனது உயிர் நாடியானது இடா” என்னும் வழியாகச் செல்வதை அறிவுறுத்தும். அதே போன்றே வேகமாக சுவாசத்தை வலது நாசித்துவாரத்தின் மூலம் செய்வதால் அவனது உயிர் நாடி ” பிங்கலையின் ” வழியாகச் செல்கிறது என்பதை அறியலாம்.
ஒருவன் அதிகமான அளவில் உடலால் வேலை செய்யும் போது அவனது சக்தியானது பிங்கலை” என்னும் பாதையின் வழியாகப் பாயும். ஓய்வாக இருக்கையில் அச்சக்தி ” இடா”வின் வழியாகப் பாயும். முதுகெலும்பில் இடா , பிங்கலை ஆகிய இரண்டிற்கும் இடையே மூன்றாவது பாதை ஒன்று செல்கிறது. அதற்கு சுழுமுனை” நாடி என்று பெயர்.சாதாரண நிலையில் சுழுமுனை நாடி செல்லும் பாதை மூடியிருக்கும் .
குண்டலினி சக்தியைக் தட்டி எழுப்பும் போது அது திறந்து கொள்ளும். எழுப்பப்பட்ட குண்டலி னி சக்தியானது சுழுமுனை நாடி வழியாக மூளையை நோக்கி முன்னேறும். அத்தகைய நிலையில் சாதகன் முற்றிலும் வேறுபட்ட ஒரு மண்டலத்தில் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவான்.அச்சமயத்தில் அவன் உண்மையான ஆன்மீக அனுபவத்தை அடையப் பெறுவான். எழுப்பப்பட்ட குண்டலினி சக்தியானது மூளையை நோக்கி நகரத் தொடங்கும். அச்சமயம் அது பல்வேறு வகையான கதவுகள் வழியாகச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் சாதகன் ஒவ்வொரு தடவையும் புதுப்புது விதமான ஆன்மீக உணர்வுகளைப் பெறுவான். இந்த ஒவ்வொரு ஆன்மீகப் படிகளும் அவனது புதிய அனுபவங்கள் கிடைக்கும் இடங்கள் (அல்லது) சக்கரங்கள் எனப்படுகின்றன. இராஜயோகம் இவ்வாறான ஏழு நிலைகளைப் பற்றிக் கூறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலான நிலையில் இருப்பது “சஹஸ்ராரம்”எனப்படும்.
அது மூளைக்குள் எங்கோ ஓர் இடத்தில் அமைந்துள்ளது. முதுகெலும்பின் கீழ்ப்பகுதியின் முனையில் இருப்பது மூலாதாரம் எனப்படும். அதற்கு அடுத்து மேலான நிலையில் உள்ளது.ஸ்வாதிஷ்டானம்” எனப்படுகிறது.அதற்குச் சற்று மேலே உள்ளவை முறையே மணிபூரகம்,அனாஹதம். விஷீத்தம், ஆக்ஞா, மற்றும் ஸஹஸ்ராரம் என்று சொல்லப்படுகின்றன. மூன்று விதமான ஆகாயங்கள் (வான வெளிகள்) இந்து மதத்தில் சொல்லப்படுகின்றன. நாம் வசிக்கும் பகுதி, விண் மீன்கள் மற்றும் கிரகங்கள் (கோள்கள்) ஆகியவை இருக்கும் இடத்தை மஹாகாசம்” என்பர். நம்முடைய கனவுலகை அல்லது கற்பனாலோகத்தை ”சித்தாகாசம்” என்பர். தூய்மையுடன் கூடிய ஆன்மீக அனுபவங்களை உண்டாக்கும் இடம் ”சிதாகாசம் எனப்படும். எப்பொழுது ஒருவனுடைய குண்டலினி சக்தியானது எழும்பி சுழுமுனை நாடிக்குள் செல்கிறதோ அப்பொழுதுதான் அவன் சிதாகாசத்திற்குள் நுழைய முடியும். சித்தாகாசத்தில் ஒருவன் அடையும் அனுபவங்கள் அனைத்துமே வீண் பிரமையும், கற்பனையுமே தானே தவிர மெய்யானவை அல்ல. சிதாகாசத்தில் கிடைக்கும் அனுபவமே மெய்யான ஆன்மீக அனுபவமாகும்.
குண்டலினி சக்தியானது சுழுமுனை நாடி வழியாக ஸஹஸ்ராரத்தை அடையும் போது அவன் தெய்வீகப் பொலிவோடு காணப்படுவான். அந்த நிலையில் தான் யோக மார்க்கத்தில் அவன் அடைய வேண்டிய குறிக்கோளை அடைந்தவன் ஆவான். அப்போது அவன் அடைவது ”அசம்பிரஞ்னாத” சமாதியாகும். இராஜயோகம் என்ற சொல் அனைத்து யோகங்களுக்கும் அரசன் என்ற பொருளை த் தரும். ஆனாலும் இதைப் பழகுபவர்கள் சில ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிவரும். எண்ணம் செயல் ,சொல் ஆகிய மூன்றிலும் மிகவும் தூய்மையோடு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் இராஜயோகம் பயிலுவது ஆபத்தையே கொடுக்கும். மூளையே கூட பேதலித்து விடலாம். என்று சுவாமி விவேகானந்தர் கூறும் அறிவுரையை சாதகர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
26
கர்ம யோகம்-சரியான செயல்களை மேற்கொள்ளும் பாதை
-
கர்ம” என்ற வடமொழிச்சொல் வேலை” அல்லது செயல் என்ற பொருளைத் தருகிறது.நாம் சிந்திப்பது கூட ஒரு செயலாகவே கருதப்படுகிறது. ஒரு வினாடி கூட எந்தச் செயலிலும் ஈடுபடாமல் ஒருவராலும் இருக்க முடியாது என்று கீதையின் ஒரு சுலோகம் கூறுகிறது. வேலை என்பது மனத்தாலோ அல்லது உடலாலோ செய்யப்படலாம். அது தவிர்க்க முடியாததும் கூட ஆகையால் வேலையின் தாக்கமானது அதைச் செய்பவனின் வாழ்க்கையில் எந்த ஓர் அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. ஒரு வேலையும் செய்யக்கூடாது என்பதற்கான முயற்சி கூட ஒரு வேலையாக மாறிவிடும்.
அதை விளக்கும் ஒரு கதை
-
ஒரு துறவி தனது நாடோடி வாழ்க்கையில் ஒரு கிராமத்திற்கு வர நேர்ந்தது. அங்கு சில நாட்கள் தங்கினார். அவருக்கு உயிருள்ள ஒரு ஜீவனை மரணத்தைத் தழுவச் செய்வதோ அல்லது இறந்து போன ஜீவனின் உயிரைத் திரும்பக் கொணருவதோ மிகவும் எளிய செயலாக இருந்தது. அதற்காக அவர் ஒரு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஜீவனின் உடலின் மீது சிறிது தண்ணீரைத் தெளிப்பார்.அவ்வளவு தான். அவரது அந்த யோகசக்தியின் மகிமையைக் கண்ட கிராமத்தினர் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். துறவி அந்த க் கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில் ஓர் இளைஞன் அவருக்குச் சகலவிதமான சேவைகளையும் செய்து வந்தான். அந்த இளைஞனின் சேவையால் துறவிக்கு அவன் மீது ஒரு வகையான பாசம் ஏற்பட்டு விட்டது.ஒரு நாள் காலையில் துறவி அந்த இளைஞனைத் தனியான ஓர் இடத்திற்கு க் கூட்டிச் சென்று அவனிடம் இதோ பார்! நான் இன்று பிற்பகல் இந்த ஊரை விட்டு போகப்போகிறேன்.நான் போவதற்கு முன் உனக்கு ஒரு வெகுமதி அளிக்க விரும்புகிறேன் .
என்னிடம் இந்த ஜபமாலை நீண்ட நாட்களாக இருக்கிறது. நான் அதை உனக்கு அளிக்கிறேன்.நீ அதை தினசரி உன்னுடைய பிராத்தனை சமயத்தில் பயன்படுத்திக்கொள் என்றார். ஆனால் அந்த இளைஞனோ துறவியைப் பார்த்து ஐயா! நீங்கள் தவறாக எண்ணாமல் இருந்தால் நான் உங்களிடமிருந்து வேறு ஒரு வெகுமதியைப் பெற விரும்புகிறேன் என்றான்.அதற்கு அந்தத் துறவி அவனிடம் ” அப்பா” என்னிடம் வெகு குறைவான பொருள்களையே வைத்துக் கொள்கிறேன். எனவே உனக்கு நான் வேறு எதைக் கொடுக்க முடியும்? என்றார்.
அந்த இளைஞனும் சலிக்காமல் ஐயா! நீங்கள் ஒரு ஜீவனுக்கு உயிரைக் கொடு க்கிறீர்கள், எடுக்கிறீர்கள் . அதை எவ்வாறு செய்வது என்பதை மட்டும் தயவுசெய்து கற்றுத்தாருங்கள். எனக்கு அந்த ஒரு வெகுமதி மட்டுமே வேண்டும் என்றான். துறவியும் தான் வாக்களித்தபடியே அந்த இளைஞனுக்கு அந்த மந்திரங்களைக் கற்பித்தார். அத்தோடு அவனிடம் குழந்தாய்”! நீ இந்த மந்திரங்களைச் சொல்வதற்கு முன் ஒரு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதாவது ஒரு போதும் கறுப்புப் பூனை யை நீ நினைக்கக் கூடாது. அப்படி நினைத்து விட்டால் அந்த மந்திரம் பலிக்காது போய்விடும என்றார். அந்த இளைஞனும் நான் ஒரு போதும்
அவ்வாறு செய்ய மாட்டேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டு விட்டான். தனது ஊரை அடைந்தவுடன் அவன் தன்னுடைய இளம் நண்பர்கள் அனைவரையும் கூவி அழைத்தான். அவர்கள் வந்தவுடன் மிகவும் பெருமை கலந்த குரலில் அவர்களிடம் என்னால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் அதே போல் உயிரோடு இருப்பவர்களை மரணமடையச் செய்யவும் முடியும். அத்தகைய சக்தியை நான் அந்த முனிவரிடமிருந்து பெற்றுள்ளேன் என்று கூறினான். ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பத் தயாராக இருக்கவில்லை. எனவே தான் கற்றுக் கொண்ட வித்தையைச் செய்து காட்ட வேண்டிய நிலை ஏற்படவே அவன் அந்தச் சக்தியை உபயோகித்துக் காட்டத் தீர்மானித்தான்.
அவனிடம் ஒரு வளர்ப்புப் பூனை இருந்தது. அதை அருகிலிருந்த மரத்தில் கட்டிவிட்டு அதன் மீது தண்ணீரைத் தெளித்தான். மந்திரங்கள் உச்சரித்தான். ஆனால் அந்த பூனையிடம் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு மயக்கம் கூட வரவில்லை. அப்புறம் சாவு என்ற பேச்சிற்கே இடமில்லாது போயிற்று. அவன் ஊராரின் நகைப்புக்கு ஆளானான்... உடனே அவன் நேரே சாதுவின் இருப்பிடத்தை அடைந்து நடந்தவற்றைக் கூறினான். அவரும் அவனிடம் நான் சொன்ன நிபந்தனையை மீறினாயா? என்று கேட்டார்.
அவனும் குருதேவா நான் சிறுவனாக இருக்கலாம். ஆனால் நான் முட்டாளாஎன்ன உங்கள் நிபந்தனையை மீற? நான் மந்திரம் ஜபிக்கும் போதெல்லாம் எனக்குள் கறுப்புப் பூனையை நினைக்கக்கூடாது. என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் என்றார். அதைக் கேட்ட துறவி அவனிடம் நீ செய்தது கறுப்பு பூனையை நினைப்பது போலவே ஆகிவிட்டதால் தான் உன் மந்திர சக்தி வேலை செய்யவில்லை என்று சொன்னார்.
இந்து மதத்தைப் பொறுத்த வரையில் இன்றியமையாதது என்று கருதப்படும் வேலை செய்வதில் கூடச் சில பிரதிகூலங்கள் உண்டு. நாம் எந்த ஒரு வேலையையும் இலாபத்தைக் கருத் செய்வோமேயானால் நமக்கு ஒரு வித மான பற்று ஏற்பட்டு உடல் ரீதியான ஒரு பந்தம் தோன்றிவிடுகிறது. ஒரு பூக்காரர் அவனுடைய தோட்டத்தில் மிக அழகானதும் அபூர்வமான வகையைச்சேர்ந்த மென்மையான இதழ்களைக் கொண்ட ரோஜா வகையை வளர்க்கமுயற்சி செய்வதாக எடுத்துக் கொள்வோம்.
ரோஜாச் செடிகள் மொட்டு விட்டுப் பூக்கும் நிலைக்கு வந்த நிலையில் அவனுடைய அணுக்க நண்பன் ஒருவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. நான் ஒரு மாத காலம் ஐரோப்பாவில் சுற்றுலா மேற்கொள்ள விருக்கிறேன். என்னுடன் நீயும் இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மொத்த செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நீ எதற்கும் கவலைப் படத் தேவையில்லை என்று அவரை அழைக்கிறான்.
பூக்காரருக்கோ மிகவும் ஆசைதான். ஆனாலும் அவரால் நண்பரின் அழைப்பை அங்கீகரிக்க முடியாத நிலை. அது ஏறக்குறைய அவருக்கு அவருடைய மலர்களின் மீது ஏற்பட்ட பற்றினால் உண்டானது.மலரும் பூக்களைக் காணத் துடித்த ஆசையே ஒரு தளையாக ஆனது. அவரால் அந்த ரோஜாக்களின் மீது ஏற்பட்ட பற்றினை உதறித்தள்ள முடியுமேயானால் அக்கணமே அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதைப் போன்றே ஒவ்வொரு மனிதன் செய்யும் செயலும் அமைகிறது. ஒரு செயலைச் செய்வதால் ஏற்படும் விளைவின் மீது பற்று வைப்பதால் அது செயல்புரிபவரைக் கட்டுப் படுத்திவிடுகிறது.
-
-
கர்மயோகமானது எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருந்தாலும் எவ்வாறு தனது சுதந்திரத்தைக் (அதாவது பலனின் மீது பற்று ஏற்படாமல் )காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதையே கற்பிக்கிறது. வேலை செய்யும் போது அதனால் ஏற்படும் விளைவுகளைச் சுய நலத்திற்காக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே கர்மயோகம் கற்பிக்கும் ரகசியப்பாடம்.
இதிலிருந்து சுயநலமற்று வேலை செய்வதே பலனை எதிர்பார்க்காமல் வேலை செய்வது என்பது தெளிவாகிறது. சுய நலமில்லாமல் செய்யப்படுவதே கர்மயோகமாகும். சுயநலமில்லாமல் வேலை செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. கர்ம யோகம் பயிலுபவரிடம் கடவுளை மகிழ்விப்பதற்காகச் செய்ய வேண்டும். என்று அடிக்கடி போதிப்பார்கள். ஒரு வேலையைத் தனக்காக அல்லாது கடவுளுக்காக என்று செய்யும் போது அது தன்னலமற்ற வேலை ஆகிறது.
ஒருவர் கடவுளுக்காக எந்த வேலையையும் செய்பவராக இருந்தாலும் அது அவரது சொந்த ஆன்மீக முன்னேற்றத்தில் உள்ள நாட்டமே அவ்வாறு செய்ய ஊக்குவிக்கிறது என்று கூட வாதம் புரியலாம். அப்படி இருக்குமேயானால் அது உண்மையில் சுயநலமற்ற செயல் என்று கருத முடியாது. ஆனால் கர்மயோகக் கூற்றுக்களின் படி சொந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஆவல் சுயநலமுடையது என்று சொல்லப்படுவதில்லை. மாறாக அது தெய்வீக அறிவு பெற்ற” சுய நலம்” அது குற்றமற்றது.
இந்த விஷயத்தை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சிறிய கதையின் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.அவர் கூறுவதாவது வங்காளத்தில் உள்ள சிறிய கிராமங்களில் வசிப்பவர்கள் அமிலத்தன்மை உடைய வயிற்றைக் கொண்டவர்களுக்கு இனிப்பு வகைகளும் கற்கண்டுகளும் கெடுதியை விளைவிக்கும் என்று நம்புகிறார்கள். அவற்றைச் சாப்பிடுவதால் அமிலச்சக்தியால் உண்டாகும் துன்பம் அதிகமாகும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் கட்டிக் கல்கண்டு - அதுவும் இனிப்பு ஏற்றப்பட்டதே- அமிலத்தன்மை உடைய வயிறுக்கு மாற்று மருந்து என்கிறார்கள். இதே போன்றதே ஒருவர் ஆன்மீக முன்னேற்றத்திற்குக் கொள்ளும் ஆவல் சுயநலமுடைய தாயினும் அதுவே சுயநலத்திற்கு மாற்று மருந்தாகவும் அமைகிறது.அது ஒருவரது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும். கடவுளுக்காக என்று செயல்களைச் செய்வது படிப்படியாக செய்பவரின் மனத்தைத் தூய்மை ஆக்கி விடும். அதனால் தான் செய்கிறோம் என்ற எண்ணம் அகன்றுவிடும்.
இத்தகைய மனமே இறைக்காட்சியைப் பெற ஏற்றது. ஏனெனில் இறைக்காட்சி பெறுவதே கர்மயோகத்தின் குறிக்கோள். கர்மயோகமானது ஒருவரை பிறவித்தளையிலிருந்து விடுவித்து விடுகிறது. பிறத்தல் , இறத்தல், என்பது தொடர்ந்து நடைபெறுகிறது. அது ஒரு சங்கிலி போன்றது. அதன் ஒவ்வொரு தொடர்பும் அவரவரது கர்மபலனைக் குறிக்கிறது (அவர்கள் செய்யும் செயலின் விளைவாகக் கிடைக்க கூடிய பலன்) ஒருவர் தான் செய்யும் செயலின் பலன் தன்னை வந்து சேராது என்ற வகையில் வேலை செய்யக் கற்றுக் கொண்டால் அவரது பிறவித்தளையோடு வேறு ஒரு புதுத் தொடர்பும் ஏற்படாது.இதனால் பிறப்பு இறப்பு என்ற சங்கிலியின் தொடர்பு அறுந்து போகும். அப்போது அவன் முக்தி நிலையை எய்துகிறான்.எனவே இத்தகைய விடுதலை பெறுவதற்கான வழி பலனின் மீது பற்று வைக்காமல் பணி புரிவதுதான்.
பலனை எதிர்பாராதபோது அது ஒரு போதும் அவனிடம் வராது.இது எதைப் போன்றதென்றால் ஒருவன் ஒரு மில்லியன் டாலரை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்துள்ளதாகவும், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை அவனது கணக்கில் சேர்க்காமல் கோயிலில் நடைபெறும் தருமத்திற்கு என்று எழுதி வைத்துச் சென்றது போன்றதே! இவ்வாறு செய்கையில் கணக்கு வைத்திருப்பவர் அவரது முதலீட்டிற்காகக் கிடைக்கும் பலனை எதிர்பார்க்க வில்லை. அதிலிருந்து கிடைக்கும் பலன் அதாவது வட்டி அவனுக்குக் கிடைக்காது. அது போன்றே பலனை எதிர்நோக்காமல் செயல் புரிந்தால் அது பிறவித்தளை என்னும் சங்கிலியை அறுத்து நமக்கு விடுதலையை அளிக்கும். வேலை என்பது இயற்கையில் நல்லதோ அல்லது கெட்டதோ அல்ல என்று இந்து மதம் கூறுகிறது. அது செய்பவரின் மன நிலையைப் பொறுத்தே நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைகிறது.
ஒரு மருத்துவர் ஒரு மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்கிறார்.நோயாளி இறந்து விடுகிறார். நோயாளி இறந்து போனாலும் யாரும் மருத்துவரைக் கொலையாளி என்று கருதுவது கிடையாது.
உண்மையில் மருத்துவர் நோயாளிக்கு நன்மை செய்யவே விரும்பினார். அவன் குணமடைவதே அவரது நோக்கம். மற்றொரு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு கொலையாளி வேண்டுமென்றே ஒருவரைக் கொன்றுவிட்டால் அவனைக் குற்றவாளி என்றே கூறுகிறோம். ஏனெனில் அவனது நோக்கம் கொடியது.அவன் திட்டமிட்டு அந்த நபரைக் கொல்கிறான். மேலே கூறப்பட்ட இரண்டு நிகழ்வுகளிலும் விளைவானது ஒன்றுக்கொன்று எதிர்மாறாக அமைகிறது. ஒரு நிகழ்வில் நன்மை விளைகிறது. மற்றதில் தீமையே ஏற்படுகிறது. வேலை செய்யும்போது சரியான மனப்பான்மையைப் பாதுகாப்பது மட்டும் கர்மயோகம் ஆகாது. செயலைப்புரிபவர் வேலையை நன்றாக ச் செய்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் விரும்பிய அளவு ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது. கீழே கூறப்பட்டுள்ள கதை அதைத் தெளிவாக்க வல்லது. ஒரு போர்வீரன் இருந்தான்.
அவன் ஒரு குரங்கைக் செல்ல ப் பிராணியாக வளர்த்து வந்தான். அவன் அந்த க் குரங்கைப்பலவிதமான அறிவுப்பூர்வமான தந்திரமிக்க வேலைகளைச் செய்யப் பழக்கியிருந்தான். கோடை காலத்தில் மிகவும் வெப்பமாக இருந்த ஒரு நாளில் பிற்பகலில் அந்தப் போர்வீரன் ஒரு பெரிய மரத்தின் அடியில் இருந்த நிழலில் புல்வெளியின் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.அ வன் தனது வாளைத் தனது அருகில் புல்வெளியில் வைத்திருந்தான். அந்தக் குரங்கானது அவன் அருகே அமர்ந்தபடி மிகவும் உன்னிப்பாக அவனைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ஈயானது அடிக்கடி பறந்து வந்து அவனது முகத்தின் மீது அமர்ந்து அவனது தூக்கத்திற்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தது. ஈயின் எசயலை குரங்கானது விரும்பவில்லை. எனவே மறுபடியும் ஈ பறந்து வந்து வீரனின் முகத்தின் மீது அமர்ந்த போது குரங்கானது அருகிலிருந்த வாளை உறையினின்றும் எடுத்து ஓங்கி ஈயின் மீது வீசியது. ஈ பறந்து விட்டது. போர்வீரன் இறந்து போனான். குரங்கின் நோக்கம் சரியானது தான் . அது தனது எஜமானனுக்கு உதவ எண்ணியது. ஆனால் அது கையாண்ட முறை தவறாக அமைந்தது. இதே போல் தான் ஒருவர் ஒரு வேலை செய்வதைச் சரியான நோக்கத்தோடு செய்ய விரும்பினாலும் சரியான முறை எது என்று அறிந்து கொள்ளாமல் செய்யும் போது கர்மயோகத்தின் முழுப்பயனையும் அடைய முடியாது.
27
-
இந்துக்கள் கடவுளைப்பல உருவங்களின் மூலம் வழிபடுவதால் பொதுவாக மக்கள் இந்துக்களை உருவ வழிபாடு செய்பவர்கள் என்றே கருதுகின்றனர்.இது முழுவதும் சரியான கருத்தல்ல . உருவங்கள் கடவுளின் வெவ்வேறு வகையான சக்தியையும் புகழையும் உணர்த்துவன. இவ்வாறு தொட்டு உணரக்கூடிய உருவங்களைக் கொண்டு தொட முடியாத ஈஸ்வரனிடம் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
ஒருவரது தந்தையின் புகைப்படம் எப்படி தந்தையாக இருக்க முடியாதோ அதே போன்று கடவுளின் உருவமும் அவரது சக்தியையும், புகழையும் உணர்த்துமே அன்றி உண்மையில் கடவுளாக இருக்க முடியாது என்று ஓர் இந்து கருதுகிறான். அந்த உருவம் கடவுளை நினைக்க உதவி செய்கிறது. அவ்வளவே! உருவமானது கடவுளுக்கும், வழிபடுபவனுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு வழிபடுவதால் அவன் கடவுளோடு மனத்தளவில் தொடர்பு கொள்ள முடிகிறது. அத்தோடு வழிபாடும் முடிந்துவிடுகிறது.
அதன் பிறகு அந்த உருவத்திற்கு எந்த விதமான அவசியமும் இருக்காது. எனவே தான் இந்துக்கள் வழிபாடு முடிந்ததும் பிரதிமையை ஏரிகளிலோ அல்லது ஆறுகளிலோ கரைத்து விடுகிறார்கள். கடவுளின் உருவங்களை களிமண், கல்,மரம் உலோகம் , கலப்பு உலோகம் போன்ற பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு செய்கிறார்கள். செலவு குறைவாக ஆகும் களிமண், மரம் போன்றவற்றால் செய்யப்படும் உருவங்களைப்பூஜை செய்த பின் தூக்கிப் போட்டு விடுவார்கள். மற்றபடி விலை மதிப்புள்ள பொருள்களைக் கொண்டு செய்பவைகளை மீண்டும் உபயோகப்படுத்துவார்கள்.
வேத காலத்தில் இந்தோ- ஆரியர்கள் அக்னியைக் கடவுளின் உருவாக வழிபட்டனர்.கடவுள் இந்த உலகிலுள்ள எந்தப் பொருளிலும் எங்கிலும் இருப்பதால் எதை வேண்டுமானாலும் அவரைக் குறிப்பிடும் அடையாளமாகக் கொள்ளலாம்.எனவே இருட்டைப் போக்கி ஒளியைத் தரும் அக்னியை தூய்மையின் உருவமாகக் கருதி கடவுள் வழிபாட்டிற்கு ஏற்றதென்று தேர்ந்தெடுத்தனர். தனக்கு மிகவும் பிடித்தமானவற்றைத் தான் விரும்புபவருக்கு அளிப்பது என்பது அன்பு கொண்ட உள்ளங்களுக்கு இயற்கையானது. எனவே தான் வேத கால ஆரியர்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நெய்,ஓட்ஸ்,எள்,பழங்கள் மற்றும் சில பொருள்களையும் கடவுளை வழிபடும் போது அவருக்கு அர்ப்பணித்தார்கள்.
அக்னியில் இட்ட பொருள்கள் நன்கு எரிந்து சாம்பலாகிப் போனால் அவர்கள் அதைக் கடவுள் ஏற்றுக் கொண்டு விட்டார். என்று மன நிறைவு பெற்றனர். கடவுளுக்கு எதுவுமே தேவையில்லை என்பதையும் அவர்கள் அறிந்து இருந்தனர்.கடவுள் முழுமையானவர். அவருக்கு எதுவுமே தேவையில்லை.
கடவுளுக்குச் சொந்தமல்லாத எதையுமே அவருக்கு அர்ப்பணிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அக்னியைக் கடவுளாக மதித்து வந்த பழங்கால வழக்கமானது இன்றும் இந்துக்களின் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிற்கால வேதகாலத்தில் பல முனிவர்கள் பலவகையான சடங்குகளைப் புகுத்தி னார்கள்.இருப்பினும் அக்னியைக் கடவுளின் உருவமாக வழிபடும் வழக்கம் மட்டும் சிலரால் பின்பற்றப்படுகிறது.
தியானம், மனத்தால் வழிபடுவது போன்றவற்றில் உருவங்கள் கிடையாது. அடையாளங்கள் இல்லை. எனவே இதுவே உயர்ந்த வகையான வழிபாடாகக் கருதப்படுகிறது.இந்துக்கள் வழிபட்ட கடவுளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைகளும்,பல கைகளும் இருந்தன.
உருவங்களின் வண்ணங்களும் பல்வேறாக இருந்தன. கடவுளின் பலதரப்பட்ட சக்திகளை விளக்கவே பல கைகள் இருந்தன. கடவுளுக்கு எல்லையற்ற சக்தி உண்டு என்பதனால்தான் சில உருவங்களுக்கு நூறு அல்லது ஆயிரம் கைகள் கூட இருந்தன. இதன் காரணமாகத் தங்களது கடவுளின் உருவச் சிலைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைகளை வைத்தனர்.நீல வண்ணமானது கடவுளின் ஆழம் காண முடியாததும் எல்லையற்றதுமான தன்மையை விளக்குகிறது. இதே போன்றே வேறு பலவகையான வண்ணங்களும் கடவுளின் பலதரப்பட்ட தன்மையை விளக்குகின்றன
.
சடங்குகளோடு கூடிய வழிபாடு
-
இந்து மதமானது தியானத்தையும், மனத்தால் வழிபடுவதையும் மேலான வழிபாடாகக் கருதுகிறது.ஆனால் பெரும்பான்மையினருக்கு மனத்தால் வழிபவது அவ்வளவு சிறப்பானது என்ற எண்ணம் இருப்பதில்லை. அந்த முறை கடினமானது என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது. இத்தகையவர்களுக்கு வெளிப்படையாக சடங்குகளோடு கூடிய வழிபாடு ஏற்றது. என்று சமய நீதி நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு சடங்குகள் மூலம் வெளிப்படையான வழிபாடுகள் செய்து படிப்படியாக ஆன்மீகப் பாதையில் முன்னேறி மனத்தால் வழிபடுவதற்கும். தியானம் செய்வதற்கு ம் தகுதியுடையவர்களாகிறார்கள்
பூஜை செய்யும் போது தூங்கி விடாமல் கவனமாக இருப்பதற்காக வயிறு நிரம்ப சாப்பிடாமல் இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். எனவே தான் சிலர் வழிபாடு முடியும் வரை பட்டினியாக இருந்து விடுகிறார்கள்.
ஆனால் உபவாசம் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. கொஞ்சம் பாலும்,பழமும், சாப்பிட்ட பிறகு வழிபாட்டைத் தொடங்கலாம்.வெளிப்படையாக சடங்குகள் மூலம் வழிபடுபவர்கள் பூ, நீர், விளக்கு,கைவிசிறி(சாமரம்), ஒரு துண்டுத் துணி (துணித்துண்டு) ஆகியவற்றை உலகையே ஆட்டிப்படைக்கும் பஞ்ச பூதங்களுக்கு அடையாளமாக உபயோகப்படுத்துகின்றனர்.
பல வகையான உணவுகளையும், வெகுமதிகளையும் கூட கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர். தூய்மைப்படுத்துவது என்பதே வழிபாட்டின் துவக்கமாக அமைகிறது.வழிபாட்டுக்குரிய பொருள்கள் ஒவ்வொன்றையும் மந்திரங்களைச் சொல்லி மனத்தால் தூய்மைப்படுத்த வேண்டும்.
இந்த மலர்கள் தூய்மையானதாகவும் புனிதமானதாகவும் இருக்கட்டும் என்பது போல் ஒவ்வொரு பொருளையும் வழிபாட்டிற்கு உரியதாகச் செய்ய வேண்டும். பின்னர் தன்னுடைய அங்கங்கள் ஒவ்வொன்றின் பெயரையும் சொல்லித் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு தனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையைப் பற்றி எண்ண வேண்டும். பிறகு இறையருளால் தனக்குள் இருக்கும் தெய்வீகம் வெளிப்பட்டு அவன் கடவுள் வழிபாட்டிற்கு ஏற்றவனாக ஆக வேண்டும் என்று பிராத்தனை செய்கிறான். இவ்வாறு எவன் ஒருவனால் செய்ய முடிகிறதோ அவனால் மட்டுமே கடவுளைப் பாராட்டவோ, தொழவோ முடியும் என்று இந்து மதம் கூறுகிறது.
முதலில் தனது அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் மலர்களைத் தூவி வழிபடுகிறான். பின்னர் உணவு மற்றும் வெகுமதியாக வைத்துள்ளவற்றை அர்பணம் செய்கிறான் . கடைசியாக பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு பூஜை செய்கிறான். இதன் மூலம் கடவுளுக்குச் சொந்தமல்லாத எந்த ஒன்றையும் தன்னால் கொடுக்க முடியாது என்பது தெளிவுப்படுத்தப் படுகிறது.
அதனால் இந்த உலகையே கடவுளுக்கு அர்ப்பணித்து விடுகிறான் என்றாகிறது. இவ்வாறு பஞ்ச பூதங்களை உருவகப்படுத்திச் செய்யும் வழிபாடு ஆரதி அல்லது ஆராத்ரிகா எனப்படுகிறது. வழிபாடு செய்பவன் கடவுளிடம் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் நலனுக்காகவும் தனது ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் வேண்டிக் கொள்கிறான். வழிபாடு முடியும் வரை அவன் இடைவிடாது தூய்மை, புனிதம் ஆகியவற்றைப்பற்றி மடடும் எண்ணும் வாய்ப்பைப் பெறுகிறான்.
திரும்பத் திரும்ப சடங்குகளின் மூலம் வழிபாடு செய்வதால் படிப்படியாக அவன் புனிதத்தன்மையை அடைகிறான். ஏனைனில் ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்.
28
சடங்குகளின் மூலம் வழிபடும்போது பிராணிகளைப் பலியிடுதல்.
-
தாந்திரீக முறைப்படி வழிபடும் போது பிராணிகளைப் பலியிடுவது அனுமதிக்கப்படுகிறது. நஹிம்ஸயாத் ஸர்வபூதானி ” என்று மகாபாரதத்தில் உள்ள சாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.எவு்வுயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தாலும் இந்து மதம் எப்போதாவது பிராணிகளை ப் பலியிட அனுமதிப்பது விந்தையே.
பிராணிகள் மட்டுமல்லாது உயிரோடு உள்ள அனைத்துமே புனிதமானவை என்று இந்து மதம் கூறுகிறது. எவ்வுயிருக்கும் தீங்கு விளைவிப்பதை ஆதரிப்பதில்லை.
எல்லாவகையான உணவுமே நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பலாத்காரத்தால் கொள்ளப்படுவதால் அவை தூய்மையற்றவை என்று இந்து மதம் கருதுகிறது.
எடுத்துக்காட்டாகக் கூறுவோமேயானால் கோதுமையிலும்,அரிசியிலும் கூட உயிரோட்டம் உள்ளது. அதே போன்றே மற்ற உணவுப் பொருள்கள், காய்கறிகள்,பிராணிகள் ஆகியவையும். அவற்றைச் சாப்பிடுவது என்பது அவற்றை அழிப்பதற்கு ஒப்பாகும். அத்தோடு பலாத்காரத்தின் மூலம் அவற்றைப்பிடித்துத் தின்பதற்கு ச் சமமாகும். ஏன் தேனையே எடுத்துக் கொள்வோமே! தேனீக்கள் கஷ்டப்பட்டு ப் பலவிதமான மலர்களினின்றும் சேர்த்து வைத்த தேனை நாம் கள்ளத்தனமாக எடுத்துக்கொள்கிறோம். எனவே தான் இந்துக்கள் எந்த ஒன்றையும் சாப்பிடுவதற்கு முன் அதைக்கடவுளுக்குப் படைப்பதால் அந்த உணவு தூய்மை அடைந்துவிடும் என்ற நம்பிக்கையில் மனத்தளவிலோ அல்லது சடங்குகளின் மூலமாகவோ முதலில் உணவுப்பண்டங்களைக் கடவுளுக்குப் படைப்பதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள்.
அன்புடனும் பக்தியுடனும் கடவுளுக்குப் படைக்கப்படும் உணவானது கடவுளால் புனிதப்படுத்தப்பட்டு விடுகிறது. என்கிறது இந்து மதம்.
அத்தகைய உணவு குற்றம் குறை ஏதும் இல்லாமல் தூய்மை அடைந்து விடும். ஓர் இந்துவானவன் தனது உடல் ஆரோக்கியத்திற்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் கடவுளுக்குப் படைத்ததையே உண்ண வேண்டும். பண்டைய காலத்தில் வாழ்ந்த இந்தோ- ஆரியர்கள் ஒரு சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் எத்தகைய மிருகங்களைக் கொன்று உண்ணலாம்.என்பதை த் தெரிந்துக் கொண்டு அத்தகைய மாமிசங்களை மட்டும் உண்டனர். முரட்டுத்தனமான மிருகங்களைக் கொன்று உண்பதைவிட , மிருகங்களைக் கொன்று கடவுளுக்கு அர்ப்பணித்த பிரசாதமாக உண்ணுவது மேலல்லவா? கடவுளுக்குப் படைக்கப்படாத எந்த மாமிசமும் உண்ணத் தகாததாகவே கருதப்பட்டது. இது விருதா மான்சா என்று வடமொழியில் குறிப்பிடப்படுகிறது.
மனிதர்கள் உட்கொள்வதற்கான க் காரணமின்றி பலவந்தமாக மிருகங்களைக் கொல்வதை இவ்வாறாக த் தடை செய்து வந்தனர். கடவுளின் முன் மிருகங்களைப் பலியிடுவதால் பூஜை செய்பவரிடமுள்ள மிருக வெறியானது அழிக்கப்படுவதாகவும் கருதினர். அதனால் பூஜை செய்பவரது உயர்ந்த ஆன்மீக எழுச்சியானது வெளிப்படையாகத் தெரிய வரும் என்றும் நம்பினார்கள். இதிலிருந்து நாம் இந்து மதமானது பிராணிகளைப் பலியிடுவதை எப்போதாவது அனுமதிக்கிறதே தவிர அதை ஆதரிப்பதில்லை என்பதை த் தெளிவாக அறிகிறோம்.
தாந்திரீக சாஸ்திரமானது பூஜை செய்பவரது மிருக இயல்பை விளக்கும் வகையில் பிராணிகளுக்குப் பதிலாக , பூசணிக்காய், பரங்கிக்காய், பழங்கள் போன்ற வற்றை உபயோகிக்க அனுமதிக்கிறது.
பிராணிகளுக்குப் பதிலாக அடையாளம் காட்டப்பட்ட பழங்களை, மிருகபலியாக கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம். இன்றைய இந்தியாவில் பிராணிகளைப் பலியிடுவது என்பதே அரிதாகிவிட்டது.
இந்துக்களில் பெரும்பாலோர் தாவர உணவையே உட்கொள்கிறார்கள். எனவே அவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் மிருகங்களைக் கொல்ல விரும்புவதில்லை. மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள மாமிசம் உண்ணும் இந்துக்களும் மேலைநாட்டினரைப் போன்று மாமிசத்தைக் கசாப்பு கடைகளிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள்.
29
இந்து மதத்தில் பண்டிகைகள்
-
இந்து மதத்தில் எண்ணற்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சிறிய அளவில் கொண்டாடப்படுபவை மற்றும் பெரிய அளவில் கொண்டாடப்படுபவை என்று உண்டு. ஒரே மாதிரியான பண்டிகைகளை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடுவது இல்லை.
தீபாவளியும்,மகா சிவராத்திரியும் இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் பெரிய பண்டிகைகளாகும். தீபாவளியை ” விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் பண்டிகை” என்கின்றனர். வட இந்தியாவிலும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் ”டோல் பூர்ணிமா” அல்லது ”ஹோலி” என்ற பண்டிகையை வசந்தகாலத்தை (இளவேனிற் காலத்தை) வரவேற்கும் வகையில் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அதிலும் குறிப்பாக வங்காளத்தில் துர்க்கா பூஜை, காளி, சரஸ்வதி பூஜை ஆகியவற்றை முக்கியமாகக் கருதுகிறார்கள். துர்க்கா பூஜையை நான்கு நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் பஹாக் பிஹீ(Bahag B IHU), காடீ பிஹீ(Kati Bihu)மற்றும் மாக் பிஹீ (Magh Bihu) போன்றவை மிகவும் பெரிய பண்டிகைகள்.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் கணேஷ் பூஜா அல்லது விநாயக சதுர்த்தி முக்கியமானது. தென்னிந்தியாவில் தீபாவளி, நவராத்திரி,பொங்கல் போன்றவை பெரிய பண்டிகைகள் ஆகும். நவராத்திரியானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். மத்திய இந்தியாவிலும் , வட இந்தியாவிலும் கூட நவராத்திரியை மிகவும் பெரிய பண்டிகையாகக் கருதுகிறார்கள்.
நேபாளத்தில் கொண்டாடப்படும் பெரிய இந்துப்பண்டிகைகளுள் ”பிராட்த்ரி த்விதீயா” எனப்படும் ” சகோதரர்கள் தினம்” மிகவும் பிரசித்தமான ஒன்றாகும். இதுவே பாய் தஜ்” என்று வட இந்தியாவிலும் , இந்தியாவின் கிழக்குப்பகுதியிலும் மிகவும் பிரசித்தமானது. மேலே கூறப்பட்ட பண்டிகைகளைத் தவிர ஜன்மாஷ்டமி(கிருஷ்ணாஷ்டமி) ராம நவமி, ரஷா பந்தன், ரத யாத்திரை, சாட் பாரப், வைஷாகி போன்றவைகளையும்,பல்வேறு வகைப்பட்ட சந்நியாச ப் பெருந்தகைகளின் பிறந்த நாள்களையும் கொண்டாடுகிறார்கள்.
சிறிய பண்டிகைகளும் எண்ண முடியாத அளவுக்குக் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் சில சிறிய அளவில் வழிபாடுகளுடன் கூடிய பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் வெகுமதி அளித்து மகிழ்வார்கள். அதே போன்றே தீபாவளி ,நவராத்திரி, துர்க்கா பூஜை மற்றும் பிராட்த்ரி த்விதீயா போன்ற பண்டிகைகளின் போதும் மேலை நாட்டினர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செய்வது போல் வெகுமதிகள் கொடுத்து மகிழ்கிறார்கள்
-
-
மந்திரங்களும் தெய்வீக அடையாளங்களும்
-
ஓர் இந்து சாது ஒரு நாள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். திரளாக மக்கள் குழுமி இருந்தனர் . அவர் சொற்பொழிவின் இடையே “ கடவுளின் பெயரை (மந்திரத்தை) எவன் ஒருவன் பல ஆண்டுகள் தொடர்ந்து தினந்தோறும் ஒழுங்காகக் கூறி வருகிறானோ அவனது மனம் தூய்மை அடையும்.அதனால் அவனுக்கு இறைக்காட்சியும் கிட்டும் என்றார்.
அப்போது கூட்டத்தினின்று ஒருவன் எழுந்தான். அவன் சாதுவினிடம் ”ஐயா”! என்னால் மந்திரங்களின் பலன் அளிக்கும் சக்தியை ஏற்றுக் கொள்ளமுடியாது. மந்திரம் எனப்படுவது ஒரு சொல் மட்டும் தானே! அது எப்படி ஒருவனது மனத்தைத் தூய்மைப்படுத்தும்? எப்படி இறைக்காட்சியைக் கிடைக்கச் செய்ய முடியும்? என்று கேட்டான். சாதுவிற்கு ஒரே ஆச்சரியமாகி விட்டது.
அவனிடம் என்னப்பா? உனக்கு மந்திரங்களின் சக்தி மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்டார்.
அத்தோடு என் வாழ்நாளில் நான் பார்த்த முட்டாள்களுள் நீயே மிகவும் மோசமானவன் என்றும் கூறினார். கூட்டத்தினரின் முன்னே சாது தன்னை முட்டாள்” என்று குறிப்பிட்டதால் அவன் அவமானத்தால் மிகவும் குன்றிப் போனான். முகம் சிவந்து விட்டது. கோபத்தை அடக்க முற்பட்டதால் அவனது உடம்பே ஆடத்தொடங்கியது.
தான் கூ றியதால் அவனிடம் ஏற்பட்ட தாக்கத்தைக் கண்ட சாது அவனிடம் ”நீ வார்த்தைகளின் சக்தியை நம்ப மறுத்தாய், ஆனால் நான் கூறிய ”முட்டாள்” என்ற சொல்லின் சக்தியைப் பார்த்தாயா? அது அவ்வளவு ஆழமான தாக்கத்தை உன் மனத்தில் ஏற்படுத்திவிட்டது? இப்போது சொல்.
இன்னமும் நீ மந்திரங்களின் சக்தியை ஒப்புக்கொள்ள மறுக்கிறாயா? என்று கேட்டார். இந்து மதத்தை பொருத்த வரையில் மந்திரம் எனப்படுவது மற்ற வார்த்தைகளைப் போல் சாதாரணமானதன்று. தனிச் சிறப்புடையது. கடவுளோடு தொடர்புபடுத்தப்படுவதால் அது புனிதமாகிறது.
மேலும் ஆன்மீக வாழ்க்கைக்கு ப் பயனுடையதாக ஆகிறது. இறைவனிடம் அன்பும் பக்தியும் கொண்டு திரும்பத்திரும்ப மந்திரத்தை ஜபிப்பதால் ஒரு மனிதன் தெய்வீக ஒளி பெறுகிறான். மந்திரம்”என்ற சொல்லின் மூலத்திலிருந்து நாம் பெறும் பொருள் அந்த உலகத்திலுள்ள பந்த பாசத்திலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் காக்க வல்லது என்பதே..
இந்தியாவில் ஆன்மீக வாழ்வு வாழ விரும்புபவர்கள் ஏதாவது ஒரு சாதுவினிடமிருந்தோ அல்லது தூய்மை நிறைந்த மனிதர்களிடமிருந்தோ மந்திரங்களைப் பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு பெறும் புத்தகத்தைப் படித்து எடுத்துக் கொள்ளும் மந்திரத்தைவிட மிகவும் சக்தி வாய்ந்தவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள செவிவழிக்கதை அதை நிரூபிக்கும்.
ஒரு நோயாளி தன்னுடைய உடலைப் பரிசோதனை செய்து கொள்வதற்காக ஒரு மருத்துவரிடம் செல்வதாக வைத்துக்கொள்வோம். அந்த மருத்துவரும் நோயாளியின் உடலில் ஏதோ கெடுதல் உள்ளதாகக் கண்டுபிடிக்கிறார். அதை அறிந்த நோயாளி மிகவும் கவலை அடைகிறான்.வீட்டிற்கு வந்து மனைவியிடம் தனது உடல் நிலைப் பற்றிய மோசமான செய்தியைத் தெரிவித்து விடுகிறான். கணவன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட மனைவி அவனிடம் ”நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்களுக்குப் புற்று நோய் இருப்பதைத் துவக்க நிலையிலேயே கண்டுபிடித்து விட்டார்கள். எனவே உங்களை விரைவில் குணப்படுத்திவிடலாம். என்றாள்.
அவளது ஆறுதல் வார்த்தைகளால் அவளது ஆறுதல் வார்த்தைகளால் அவனது வருத்தத்தையும் வலியையும் போக்க முடியவில்லை. சிறிது நாட்கள் சென்றபின் அவன் ஒரு சிறந்த புற்று நோய் நிபுணரிடம் போகிறான். மருத்துவரும் அவரை நன்றாகப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவனிடம் ”நீங்கள் உண்மையிலேயே ஓர் அதிஷ்டசாலி தான் . உங்களுக்கு வந்துள்ள புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது தான்” என்றார்.
அவரது சொற்கள் மந்திரவாதியின் வார்த்தைகள் போல் அக்கணமே அவனது கவலையையும் வலியையும் போக்கிவிட்டது. புற்றுநோய் நிபுணரும், நோயாளியின் மனைவியும் அவன் காப்பாற்றப்படலாம் என்று தான் சொன்னார்கள். அதில் மருத்துவரின் வார்த்தைகளுக்கு அதிக சக்தி இருந்தது. மருத்துவரின் பயிற்சியும், புற்றுநோயைக் குணப்படுத்துவதில் அவருக்கிருந்த பல வருட அனுபவங்களுமே அவருடைய வார்த்தைகளை நம்பத்தக்கவையாகவும் சக்தி வாய்ந்தவையாகவும் மாற்றின.
அதே போன்று ஆன்மீக வாழ்வில் சிறந்து விளங்கும் ஒரு குருவினிடமிருந்து வரும் மந்திரமும் அவரது வாழ்நாள் முழுவதும் அவர் செய்த சாதனையின் பலனையும் தன்னுள் கொண்டிருக்கும்.. புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட மந்திரமும் சந்தேகத்திற்கிடமின்றி பலனளிக்கலாம்.ஆனால் ஒரு சிறந்த குருவினிடமிருந்து பெறும் மந்திர தீஷையின் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக அது இருக்காது.இதைத்தவிர ஒரு சாதனையாளருக்கு அவர் செய்த மந்திர ஜபத்தின் வாயிலாக கடவுளை அறிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருந்தால் அவரது வாக்கிற்குச் சிறந்த ஆன்மீக சக்தி இருக்கும்.அவர் அளிக்கும் மந்திரத்திற்கு சித்த மந்திரம் என்று பெயர். அவ்வாறு சித்த மந்திரத்தை குருவின் வழியாகச் சீடன் பெற்றுக் கொண்டால் மற்றவர்களிடமிருந்து தீஷை பெறுவதை விட மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
30
புனிதமான அடையாளக்குறி ”ஓம்”
-
இந்து மதத்திலுள்ள மந்திரச் சொற்களுக்குள் ஓர் அசையை உடைய ஓரெழுத்து மந்திரமாகிய ஓம்” எனப்படுவது மிகவும் பழமையானது. அது மிகவும் சிறப்புடையது என்பதிலும் ஐயமில்லை. இந்தப் புனிதச் சொல்லானது வேதங்கள் மற்றும் இந்துமத நூல்கள் ஆகியவற்றில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இது கடவுளைக் குறிக்கும் மந்திரச் சொல்லாகும். இதைப் ”பிரணவம்” என்று கூறுவர்.AUM-அஉம்” என்றும் உச்சரிப்பார்கள்.அ,உ,ம் ஆகிய மூன்று எழுத்திற்கும் சிறப்பான பொருள் உண்டு.
அ என்பது (A)- படைப்புத் தொழிலையும் , உ என்பது (U)- காத்தல் தொழிலையும், ம்-(M)என்பது அழித்தல் தொழிலையும் குறிக்கிறது. இந்து மதம் கடவுள் தான் இந்த உலகத்தை ப் படைப்பவர், காப்பவர்,அழிப்பவர் என்று சொல்கிறது. எனவே ஓம்” என்னும் சொல் கடவுளைக் குறிக்க ஏற்றதே. சிலர் இது சுவர்க்கம், பூவுலகம், பாதாளம் ஆகிய மூன்று உலகத்தையும் குறிக்கிறது என்றும் கூறுவார்கள். கடவுள் எங்கும் எதிலும் உறைபவர்.ஆதலால் அவர் மூவுலகிலும் இருப்பவர். எனவே ஓம்” கடவுளைக் குறிக்கிறது எனலாம்.
-
ஓம்” எனப்படுவது கடவுளை ஒலியால் அறியப்படும் அடையாளமாகும். மனிதனுடைய குரல் ஒலியை எழுப்ப உதவும் அனைத்து உறுப்புக்களாலும் ஓம்” என்பதால் தெரிவிக்கப்படலாம்.மனிதனுடைய குரல் தொண்டையிலிருந்து கிளம்பி உதடுகளில் வந்து முடிகிறது. ”அ” எனப்படுவது தொண்டையிலிருந்து கிளம்புகிறது.”உ”வும் ம்”ம் உதடுகளால் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் வார்த்தைகளால் கூறிவிடலாம். அனைத்து வார்த்தைகளையும் குரல் உறுப்புக்களால் சொல்லிவிடலாம். ஆக அனைத்து உலகையுமே ”ஓம்” என்பதன்மூலம் சொல்லிவிடலாம். கடவுள் எங்கும் எதிலும் உறைவதால் அனைத்து உலகிலும் தான் இருப்பதை உணர்த்துகிறார்.அது போல் ”ஓம்” என்னும் குறியும் கடவுளே.
ஓம்” எனப்படுவது யாருக்கும் சொந்தமானதல்ல. எந்த விதமான பட்டம் பதவியையோ குறிக்காத அடையாளமாகும். எனவே இந்து மதத்தைச் சார்ந்த எந்தப் பிரிவினரும் அதை உபயோகப்படுத்தலாம். சிலுவை கிறிஸ்தவ மதத்தாருக்குப் பொதுவானது. டேவிட்டின் நட்சத்திரம் யூதர்களுக்கும் (Judaism)ஓம்” என்ற சொல்லின் குறி இந்துக்களுக்கும் பொதுவானது.
-
காயத்ரி மந்திரம்
-
காயத்ரி மந்திரம் எனப்படுவது ” சாவித்ரி மந்திரம்” என்றும் சொல்லப்படுகிறது.இந்து மத நுல்களில் குறிப்பிடப்படும் மந்திரங்களுக்குள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது ”ரிக்” வேதத்தில் காணப்படுகிறது. இது ஒரு வேண்டுதல் அல்லது பிராத்தனையாக உள்ளது. ஓம் பூர்லோகம்” புவர் லோகம்,ஸ்வரலோகம் ஆகிய மூன்று உலகையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய , வணக்கத்திற்குரிய ஒருவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான மேலான உண்மையை உணர அந்தப்பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
ஓம் பூர் புவஸ்ஸீவ
தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந-ப்ரசோதயாத்
இந்த மந்திரமானது உபநயனம் செய்யப்பட்ட மூன்று மேல் ஜாதியினராலும் தினமும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு வேத மந்திரமும் ஒரு இறைவனைக் குறித்து ச் சொல்லப்படுகிறது. அதே போல் ஒவ்வொரு மந்திரமும் எந்த முனிவருக்கு முதலில் தோன்றி அவரால் வெளிப்படுத்தப் பட்டதோ அவரோடு தொடர்புடையதாக இருக்கும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. காயத்ரி” என்னும் ஒலியின் அளவைக் கொண்டு அந்த மந்திரம் இயற்றப்பட்டதால் அதற்கு ”காயத்ரி” மந்திரம் என்ற பெயர் ஏற்பட்டது.
-
தாந்திரீக மார்க்கத்தில் மந்திரங்களும் , யந்திரங்களும்
-
தாந்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த முறையில் உள்ள மந்திரங்களில் மற்ற அம்சங்களை விட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்றும் ”சக்தி மந்திரம்” என்றும் சொல்லப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறு வகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒரு பீ ஜ மந்திரத்துடன் தான் தொடங்கும்.
பீஜ மந்திரத்துடன் தொடர்புடைய மந்திரங்களே அதிக சக்தி உடையதாக க் கருதப்படுகிறது. ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் கடவுள் காட்சி கிட்டுவது எளிதாகும். அத்தோடு இத்தகைய மந்திர உச்சரிப்புக்களோடு கடவுளுக்குப் படைக்கப்படும் பொருள்களையும் கடவுள் உடனேயே ஏற்றுக் கொண்டு விடுவதாகவும் நம்பப்படுகிறது. யந்திரங்கள் தாந்திரீக வழிபாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்ததுமான விளக்கப் படங்களாகும். சில யந்திரங்கள் கடவுளின் அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
31
-
வேதகாலத்தில் வாழ்ந்த இந்துக்கள் நெருப்பை தெய்வத்தின் அடையாளமாக வழிபட்டனர்.திறந்த வெளிகளில் ஒரு மேடையை அமைத்து அதில் புனிதமான அக்னியை வளர்த்து நிவேதனப்பொருள் களை அதில் அர்பணம் செய்வார்கள். எனவே கடவுள் வழிபாட்டிற்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு கோயிலின் அவசியம் இருக்கவில்லை.
இந்தோ-ஆரியர்கள் எப்பொழுது கோளில்கள் அமைத்து, கடவுள் வழிபாட்டை முதன்முதலாகத்துவங்கினார்கள் என்பதை வரலாற்று வல்லுனர்களாலும் கூற முடியவில்லை. முதன்முதலாக எழுந்தகோயில்கள் சேறு அல்லது மரத்தினால் செய்யப்பட்டிருந்தன.ஆனால் இவற்றால் ஆன கோயில்கள் நீண்ட நாட்கள் நிலைக்காது என்பதை நாமறிவோம். இதனால் பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் செங்கற்களையும், கற்களையும் உபயோகித்துக் கட்டப்பட்டன. கட்டிடக் கலை வல்லுநர்களின் ஆராய்ச்சியின்படி இவை அனைத்தும் கி்பி முதல் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டிருக்கலாம். கோயிலுக்கான இடம்
இந்துக்கோயில்கள் அநேகமாக அழகான சூழ்நிலை இருக்கும் இடத்தில்தான் கட்டப்பட்டன.ஆற்றங்கரைகள், குன்றுகளின் மீது,ஏரிக்கரைகள், கடற்கரை ஓரம் என்று மனத்தைக்கவரக்கூடிய இடங்களில் தான் கோயில்களைக் கட்டுவார்கள். செங்குத்தான பாறைகளில் அழகிய குகைக்கோயில்களையும் காணலாம்.
கோயில்களின் கட்டிடக்கலை
இந்து கோயில்களில் பல்வேறு வகைப்பட்ட கட்டிடக்கலையைக்காணலாம். ஆனாலும் பொதுவாக (1) கவிந்த விதானம் அல்லது கோபுரம், (2)கடவுள் உறையும் கருவறை,(3)மக்கள் அமர்ந்து கொள்வதற்கேற்ற மண்டபங்கள்,(4)நுழைவாயில் அல்லது முகப்பு,(5) மனிதனால் கட்டப்பட்ட குளம் அல்லது நீர்தேக்கம்.(கோயிலுக்கு அருகில் அல்லது கோயிலைச்சேர்ந்த இடத்தில்) .கோயிலுக்கு அருகே ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகள் அமையாதபோது மக்கள் நீர்தேக்கங்களை அமைப்பார்கள். சுத்தமான தண்ணீரைக்கொண்டு தான் கோயிலைச்சுத்தம் செய்வார்கள்.இறை வழிபாட்டிற்கும் சுத்தத் தண்ணீர் தான்தேவை. கோயிலுக்கு அருகே உள்ள குளத்தில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு இறைவழிபாட்டிற்குச் செல்வதும் உண்டு.
கோயில் கோபுரத்தை அல்லது விதானத்தை “சிகரம்” என்று சொல்வார்கள்.உலகிலேயே மிகப்பெரிய மலையான மேருவைக்குறிப்பாக எண்ணி அதை வைக்கிறார்கள். உள்ளே இருக்கும் அறை ”கர்ப்பக்கிரகம்” அல்லது ”கருவறை” எனப்படுகிறது. இது ஒரு குகையைப்போன்று காணப்படும். பக்தர்கள் அமரும் இடம் ”நட மந்திரம்” என்றும் மண்டபம்” ”ஆயிரங்கால்மண்டபம்” என்றும் அழைக்கப்படும். அது கோயிலில் நடமாடுபவர்களின் உபயோகத்திற்காக இருக்கும். பண்டைய காலத்தில் கோயிலில் நடனமாடும் பெண்கள் ”தேசதாசிகள்” (கடவுளின் கைப்பாவைகள்) என்று சொல்லப்பட்டனர். அவர்கள் நடனமண்டபத்தில் கடவுளை மகிழ்விக்கப் பார்வையாளர்களின் முன்னிலையில் நடனமாடுவார்கள்.
சிகரம் எனப்படுவது தான் கோயிலின் உயரமான இடம். அது ஆன்மீக நாட்டமுடையவர்கள் தங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் மிக உயர்ந்த நிலையை அடையும் ஆவலை விளக்குவதாக அமைகிறது.பக்தர்கள் பார்வையாளர்கள் அமர உதவியாக இருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு பக்தி சம்பந்தமான நூல்களைப்படிப்பது , பஜனை செய்வது, தியானம் செய்வது அல்லது வெறுமனே அமர்ந்துகொண்டு பூஜை செய்பவர் செய்யும் சடங்குகளைக் கவனிப்பது போன்றவற்றைச்செய்வார்கள்.பொதுவாக கர்ப்பகிரகத்தில் (கருவறையில்) சன்னல்கள் இருக்காது. ஆனால் முன் பக்க வாசல் கதவு அகலமாக இருக்கும். கருவறைக்கதவு திறக்கப்பட்டால் வெளியில் இருக்கும் பக்தர்கள் கருவறையில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளைக்காண முடியும். சிலகோயில்களில் பார்வையாளர்கள் அமரும் இடம் கருவறையின் முன்னால் இல்லாமல் வேறு இடத்தில் இருக்கும். இரண்டு இடங்களிலும் வெவ்வேறான தெய்வங்களின் உருவங்கள் சுவற்றில் உள்ள பிறைகளில் இருக்கும்.
சில கோயில்களில் பக்தர்கள் வலம் வருவதற்கு உதவி செய்யும் வகையில் பிரகாரத்தில் இடம் விட்டிருப்பார்கள்.கடவுளைச்சுற்றி வருவது எப்பொழுதும் வலம் புறத்திலிருந்து புறப்பட்டு இடப்புறமாக வருவார்கள். கோயிலை வலம் வருவது என்பது கடவுளுக்குச்செய்யும் மரியாதையாகும்.கோயிலின் நுழைவாயிலில்(முகப்பில்) சிலகோயில்களில் மேற்கூரையில் உலோகத்தினால் ஆன பெரிய மணியைக் கட்டித்தொங்க விட்டிருப்பார்கள்.பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும் பொழுதோ அல்லது வெளியே போகும் சமயத்திலோ அந்த மணியை ஓரிரு முறை அடித்துச்செல்வார்கள்.
இந்துக்கோயில்களில் கட்டிடக்கலை பல்வேறு வகைப்பட்டதாக இருக்கும். சில கோயில்களில் செவ்வக வடிவில் இருக்கும்.சிலகோயில்கள் எண்கோணவடிவில்இருக்கும். சிலகோயில்கள் அரைவட்ட வடிவிலும், மற்றும் பலவகையான வடிவங்களிலும்,, பல்வேறு அளவுடையவைகளாகவும் இருக்கும். கோயிலின் விதானமும்(மேல்தளமும்) மாறுபாடு உடையவைகளாக இருக்கும். தென்னிந்தியக்கோயில் கோபுரங்கள் ”விமானம்” என்று சொல்லப்படும் வகையைச்சேர்ந்தவை. வட இந்தியக்கோயில் கோபுரங்கள் ”நகர” வகையைச்சேர்ந்தவை. சில தென்னிந்தியக்கோயில்களின் சுற்றுச்சுவர்கள் செவ்வக வடிவிலோ அல்லது சதுர வடிவிலோ அமைந்திருக்கும். சுவர்களில் கோபுரங்களைப்போன்ற அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வாயில்கள் இருக்கும்.
-
-
கோயில் பூஜாரிகளும்( அர்ச்சகர்களும்) அவர்களது கடமைகளும்.
-
கோயிலில் பூஜை அதாவது வழிபாடு செய்பவர் களைப்பூஜாரிகள், அர்ச்சகர்கள் அல்லது சிவாச்சாரியார்கள், என்று சொல்வார்கள். இவர்கள் கோயிலின் நிர்வாக அதிகாரிகளால் சம்பளத்திற்காக அமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் அந்தந்தக்கோயிலின் வழிபாட்டு முறைகளைப்பின்பற்றிப் பலவகையான சடங்குகளோடு கூடிய வழிபாட்டினைச்செய்வார்கள். இவர்களை சந்நியாசிகளோடு ஒப்பிடக்கூடாது.
சந்நியாசிகள் அதாவது துறவிகள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் அல்லர். கோயில் அர்ச்சகர்கள் திருமணம் புரிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்துபவர்கள். இவர்கள் கடவுள் வழிபாடு செய்வதில் கைதேர்ந்த வர்களாக இருப்பார்கள். பொதுவாக அவர்கள் அந்தண வகுப்பைச்சேர்ந்த பரம்பரை பரம்பரையாக பூஜை செய்பவர்களாக இருப்பார்கள். தென்னிந்தியாவில் சில கோயில்களில் அந்தண வகுப்பைச்சேராத பூசாரிகளும் இருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள கோயில்களில் சில கோயில்கள் தனிப்பட்ட குடும்பங்களுக்கு உரிமையுடையவைகளாக இருக்கும்.ஆனாலும் பொது மக்கள் அங்கு சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள். மற்ற கோயில்கள் ஆதாயத்தை மட்டும் எதிர் நோக்காத நிறுவனங்களின் கீழ் செய்ல்படும். அவை இந்தியாவில் மதச்சார்புடைய சங்கங்கள் என்று அழைக்கப்படும். தர்மகர்த்தாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கோயிலின் நிர்வாகத்தைப்பார்த்துக்கொள்வார்கள்.
கோயில் சொந்தக்காரர்களுக்காகவோ அல்லது நிர்வாக அதிகாரிகளின் சார்பிலோ பூஜை செய்வதுதான் பூஜாரியின் கடமை. இறைவழிபாடு விடியற்காலையில் தொடங்கி இரவு 9 அல்லது 10 மணி வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அர்ச்சகர் வழிபாடு செய்யும்போது கடவுளுக்குப் பலதரப்பட்ட தொண்டுகளைச்செய்வார். அது ஒருவர் தான் மிகவும் விரும்பும் ஒருவருக்குச்செய்யும் அன்பையும், போற்றுதலையும் காட்டுவதாக அமையும். மனிதனுடைய மனம், மனிதனைப்பற்றி மட்டுமே, எண்ணும் என்னதான் பக்தியும் மரியாதையும் காட்டினாலும், கடவுளையும் ஒரு மனிதனாக பாவித்து உணவு, நீர், பூ, வாசனைத்திரவியங்கள் போன்றவற்றையே அவன் அர்ப்பணிக்கிறான். கடவுளுக்கு எதுவுமே தேவையில்லை என்பதை பூஜை செய்பவர் நன்கு அறிவார்.இருப்பினும் தன்னைப் பணியில் அமர்த்தியிருக்கும் கோயில் சொந்தக்காருக்காகவோ அல்லது கோயில் நிர்வாகியின் பக்தியையும், அன்பையும் காட்டும் வகையில் எல்லாவற்றையும் படைக்கிறார். கோயில் நிர்வாகியாகவும் அல்லது கோயில் சொந்தக்காரராகவும் இல்லாது போனாலும் பக்தர் என்ற முறையில் வருபவர்களும் கடவுளுக்குப்டைக்க உணவு பண்டங்களைக்கொண்டு வருவார்கள். அவர்களுக்காக அதை கொண்டு வருவார்கள். அவர்களுக்காக அதை வாங்கி அர்ச்சகர் கடவுளுக்குப்படைப்பார். கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவு ”பிரசாதம்” என்று சொல்லப்படுகிறது. அதைக்கோயிலின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவகையில் அர்ச்சகரானவர் பக்தர்களுக்கோ, துறவிகளுக்கோ, பிச்சைக்காரர்களுக்கோ, விநியோகம் செய்யவேண்டும். கடவுளுக்குப் படைக்கப்பட்ட பின் ”பிரசாதம்” என்று வழங்கப்படும் உணவு ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. எனவே ஒரு சில பக்தர்கள் பிரசாத உணவைப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கோயிலுக்குச்செல்வார்கள். கடவுளுக்குப் படைப்பதற்காக உணவு ஏதும் கொண்டுவராதவர்களுக்காகச் சில கோயில்களில் படைக்கப்பட்ட பிரசாதங்களை விலைக்கு விற்கிறார்கள்.
கடவுளின் திரு உருவச்சிலைக்குத் தினந்தோறும் அபிஷேகம் செய்யப்பட்ட நீரும் கூட மிகவும் புனிதமாகக்கருதப்படுகிறது. அந்த அபிஷேக ஜலத்தை கொஞ்சம் எடுத்து மனத்தையும், உடலையும் தூய்மைப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் குடிக்கிறார்கள். அந்த அபிஷேக நீரை ஓர் உலோகப் பாத்திரத்தில் எடுத்துத் தங்களுடைய உபயோகத்திற்காக உள்ளே வைத்துக்கொள்வார்கள். இந்த நீர் ”மகாஸ்நான ஜலம்” அல்லது ”சரணாமிர்தம்” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது.
இந்து சமூகத்தில் கோயில்களின் இடம்
இந்துக்களுக்கு கோயிலுக்குப்போக வேண்டும்என்ற கட்டாயம் கிடையாது. ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய கோயில்( பூஜை அறை) இருக்கும். தினமும் அங்குவழிபாடு செய்வார்கள். எனவே பொதுவாக மத சம்பந்தமான பண்டிகைகள் அல்லது திருவிழாக்களின் போது கோயிலுக்குப்போவார்கள். கிறிஸ்தவர்களின் மாதா கோயில், யூதர்களின் மதக்கூட்டம் போன்றவற்றிற்கு அங்கத்தினர்கள் இருப்பார்கள். அது போன்ற ஒரு அமைப்பு இந்துக் கோயில்களுக்குக் கிடையாது. எனவே இந்து சமூகத்தினர் கோயிலை மையமாக வைத்துச்செயல்படுவதில்லை. கோயில் களில் மத சம்பந்தமான செயல்பாடுகள் மட்டும் நடக்கும். மாதா கோயில்களில் கிறிஸ்தவர்கள் திருமணம் நடத்துவார்கள். ஈமச் சடங்குகள் செய்வார்கள். அது போல் இந்துக்கோயில்களில் நடைபெறாது. ஆனால் பொது மக்களுக்காக அடிக்கடி பஜனைகள், தெய்வீக சம்பந்தமான சொற்பொழிவுகள், கதாகாலஸேபங்கள் ஆகியவற்றை நிகழ்த்துவார்கள்.
(மூன்றுவகையான குணங்கள்)
-
பிரகிருதி அல்லது இயற்கை என்பது மூன்றுவகை குணங்களால் ஆனது
இந்து மதத்தில் ”குணங்கள்” என்று சொல்லப்படும் தன்மைகள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. பொதுவாக ”குணம்” என்றால் இயல்பு அல்லது தன்மையைக்குறிக்கும். ஆனால் இந்து மதத் தத்துவ சாஸ்திரத்தின்படி தொழில் ரீதியான மற்றொரு பொருளும் உண்டு. இந்த இரண்டாவது பொருள் சாங்கிய தத்துவ சாஸ்திரத்தினின்று தோன்றியது. இதன் படி இவ்வுலகை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று சக்தி சம்பந்தப்பட்டது.மற்றது பொருள் சம்பந்தப்பட்டது.பொருள் சம்பந்தப்பட்டவை இயற்கை அன்னையிடமிருந்து தோன்றியவை.
இயற்கை அல்லது பிரகிருதி” எனப்படுவது மூன்று வகையானது. மிகவும் நுண்ணியதும் தொட்டு உணர முடியாத பொருள்களான சத்துவ , ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களால் ஆனது. இயற்கையை ஒரு கயிறு என்றால், அதில் உள்ள மூன்று பிரிகளே இந்த மூன்று குணங்கள், கயிறு, நாண் போன்றவை வடமொழியில் ”குணா” என்று சொல்லப்படுகின்றன. எனவே தான் அவை சத்வ குணம், ரஜோகுணம்,, தமோ குணம் என்று சொல்லப்படுகின்றன.
இந்த ஆன்மீக உலகம் எனப்படுவது எண்ணற்ற பிரத்யஷ (உண்மையான) பொருள்களைக்கொண்ட தாயினும் அவை ஒவ்வொன்றும் முடிவற்றது. குற்றம் குறையில்லாதது. அத்தகைய ஒருநிதரிசனப்பொருள் தான் ”புருஷன்” எனப்படுகிறது. நாம் பேச்சுவழக்கில் எதை ஆன்மா” என்கிறோமோ அதுவே சாங்கிய தத்துவ சாஸ்திரத்தில் புருஷன்” என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு புருஷர்கள்” உண்டோ அந்த எண்ணிக்கையில் இப்பிரபஞ்சத்தில் உயிரினங்கள் இருக்கின்றன.
பிரபஞ்சத்தை நிர்ணயிப்பது குணங்களே
உலகம் படைக்கப்படுவதற்கு முன்னர் சத்துவம்,ரஜஸ், தமஸ் ஆகிய மூன்றுமே சமநிலையில் இருந்தன. படைப்புக்கு முந்தைய நிலையில் பிரகிருதியை (இயற்கையை) ஒரு ஆற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தோமே யானால் சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்றுமே அந்த ஆற்றில் ஒன்றுக்கொன்று பக்கத்திலேயே ஓடும் நீரோடைகள் போன்று இருந்தன. அந்த நிலையில் அவை மூன்றுமே எந்தவித வேறுபாடுமின்றி ஒன்றை யொன்று மிஞ்சாத அளவில் நீரோட்டத்தைக்கொண்டதாக இருந்தன.
அவை ஒன்றோடொன்று கலந்து அதிக நீர்பெருக்கோடு ஓடத் தொடங்கிய போது அந்தச் சமநிலை அழந்தது. படைப்புத்தொழில் துவங்கியது. பரிணாம வளர்ச்சி முறைக்கு உட்பட்டு இயற்கையானது படிப்படியாக பலவகைப்பட்டதான பிரபஞ்சமாக ஆகியது. இந்த உலகில் காணப்படும் பொருள்கள் சக்தி, மனம் ஆகிய அனைத்துமே இயற்கையினால் உருவாக்கப்பட்டவையே. பிரகிருதி எனப்படுவது மூன்று குணங்களால் ஆனது. எனவே இவ்வுலகில் காணப்படும் அனைத்திலும் இந்த மூன்று குணங்களும் கண்டிப்பாக இருக்கும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18-ஆவது அத்தியாயம் 40-ஆவது சுலோகத்தில் கூறப்படுவதாவது, இந்த உலகத்திலோ அல்லது ஒளியுடன் கூடிய உடல்களுடைய தேவர்கள் வாழும் சுவர்க்கத்திலோ இயற்கையினின்று தோன்றிய இந்த மூன்று குணங்களினின்றும் விடுபட்டவர்கள் கிடையாது.
மிகவும் நுண்ணியதுமான இந்த மூன்று குணங்கள் பண்படாததும் தொட்டுணரத்தக்கதுமான உலகமாக எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைகிறது என்பது விந்தையாக இருக்கிறதல்லவா?சக்தியைப்போன்ற நுண்ணிய து கூட திடப்பொருளாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. என்று இன்றைய பௌதிகம் ஊர்ஜிதப்படுத்துகிறது. பலதரப்பட்ட இவ்வுலகின் முதன்முதலான கட்டிடப்பகுதிகள் கூட இந்த மூவகைப்பட்ட நுண்ணியப்பொருள்களால் ஆனவையாக இருக்கலாம். என்று சில பௌதிக வல்லுனர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.
மூவகை குணங்கள் இருப்பதை மறைமுகமாகத்தான் உணரமுடியும்
எவராலும் தொட்டுணரமுடியாத இந்த மூன்று குணங்களும் மிகவும் நேர்த்தியானவை. நுண்ணியவை. அணுவைப்பிளந்து கிடைக்கும் எலெக்ட்ரான்கள், நியூட்ரான்கள் கூட திடப்பொருள் என்று கூறும் அளவிற்கு அவை நுண்ணியவை. எனவே இந்த உலகில் நாமறிந்த எல்லாவற்றையும் விட மூன்று குணங்களும் நுண்மையானவை என்று தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் சாங்கிய தத்துவ சாஸ்திரத்தின்படி இவ்வுலகில் உள்ள அனைத்துமே மூன்று குணங்களால் ஆனவையே.
இவை மிக மிக நுண்மையானவைகளாக இருப்பதால் அவை இருப்பதை நம்மால் நேரிடையாக உணர்ந்து கொள்ள முடியாது. மின்சாரத்தை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதனால் செயல்படும் கருவிகளின் செயல்பாட்டின் மூலம் மின்சக்தி இருப்பதை அறிகிறோம். அதைப்போல் நாம் குணங்கள் இருப்பதை மறைமுகமாக பலவகையாகக் காணப்படும் வெளிப்பாடுகளின் மூலம் உணரலாம். ஒவ்வொரு குணத்திற்கும் தனித்தனியான தன்மைகள் உண்டு. இவ்வுலகிலுள்ள பொருள்களின் மூலம் அவை வெளிப்படும். அதனதன் குணாதிசயங்களைக்கண்டு அது இத்தகையது என்ற முடிவிற்கு வர முடியும்.
-
குணங்களின் விசேஷத்தன்மைகள்
-
சத்துவ குணமானது இலேசானது, மிதக்கும் தன்மையது, ஒளியுடன் பிரகாசிப்பது. அதற்கு மகிழ்ச்சியாக இருக்கும் தன்மை உண்டு. பொருள்களை உணர்த்தவல்ல திறமையும் உண்டு. ஒளியின் பிரகாசிக்கும் தன்மை, மனத்தில் திறமை, பொருள்களை உணரத்தக்க அறிவும், மனமும் இருத்தல், ஓர் ஆடியின் ஒளி பிரதிபலிக்கும் தன்மை, ஒரு கண்ணாடியிலும், படிகத்திலும் ஒளி ஊடுருவும் தன்மை ஆகிய அனைத்துமே சத்துவ குணம்”. அவற்றில் இருப்பதைக் காட்டுகிறது. அதே போலவே மகிழ்ச்சி, போதுமென்ற மனம், திருப்தியுடன் இருத்தல், மனத்தில் மேலான ஆனந்தத்தை உணர்தல் போன்றவையும் சத்துவகுணம் இருப்பதைக்காட்டும். தக்கை போன்ற பொருள்களில் லேசான தன்மை காணப்படுவதும் சத்துவ குணம் . அவற்றில் இருப்பதையே காட்டும்.
ரஜோ குணமானது அசைவு, செயல், நிம்மதியற்ற தன்மை ஆகியவற்றிற்குக் காரணமாகிறது. பேராசை, விருப்பம், கோபம், தற்பெருமை அகந்தை, பிறரை அடக்கி ஆள எண்ணுவது போன்றவையும் ரஜோ குணத்தின் இயல்பாகும். வலிமையும், துன்பத்தையும் உணர்த்தும் குணமுடையது.அதாவது நமக்கு ஏற்படும் எல்லா விதமான துன்பமயமான அனுபவங்கள் ரஜோ குணத்தால் ஏற்படுகின்றன. உலகில் எங்காவது துரிதமான செயல்பாடுகள், அமைதியற்ற தன்மை, துன்பங்கள் ஆகியவை காணப்பட்டால் அதற்கெல்லாம் காரணமாக அமைவது ரஜோ குணமே.
தமோ குணம் மந்தமாக இருப்பது, செயலற்ற தன்மை. சோம்பேறித்தனம் பாரமாக இருக்கும் தன்மை, எதிர்மறையாக ச் செயல்படுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அசைவதையோ செயல்படுவதையோ தடுப்பது தமோகுணம், மனத்தைச்சோம்பல் கொள்ளச்செய்து எந்த ஒன்றையும் தெளிவாகப்புரிந்து கொள்ளாதபடி, தடுப்பது தமோ குணத்தின் இயல்பு. குழப்பத்திற்கு க் காரணமாக அமைவது தமோகுணம். மன அழுத்தம் ஏற்படுவது, திகைப்படையச்செய்வது, அறியாமை போன்றவையும் தமோ குணத்தால் ஏற்படுவதே. அது தூக்கத்தையும் மயக்க நிலையையும் ஏற்படுத்தும்........
குணங்கள் மூன்றினுக்கும் ஒரு பொதுவான தன்மைஉண்டு. அவை மூன்றும் இடைவிடாது ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டு சண்டையிட்டுக்கொண்டே இருக்கும். அவற்றுள் ஏதாவது ஒன்று முதன்மை பெற விரும்பி மற்றதை அடக்கி ஆளுவதற்கான முயற்சியைச்செய்து கொண்டேயிருக்கும். அதே சமயம் அவை ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் கொடுக்கும். ஒரு மெழுகுவர்த்தியின் சுடரானது அதிலுள்ள திரி, மெழுகு, நெருப்பு ஆகிய மூன்றின் ஒத்துழைப்பையும் பெற்று இருக்கிறது. இந்த மூன்றின் கூட்டுறவும் இல்லாமல் மெழுகுவர்த்தி ஒளிர முடியாது.அதே போலவே இந்த மூன்று குணங்களின் ஒத்துழைப்பின் காரணமாகவே இந்த உலகம் இயங்கி வருகிறது. இந்த உலகில் படைப்புத்தொழில் ஏற்படுவதற்கு முன்பு இந்த மூன்று குணங்களும் ஒன்றையொன்று மிஞ்சாத தன்மையுடன் சமநிலை உடையவனாக இருந்தன. இந்த உலகம் அழிந்த பின்னர் மறுபடியும் அவை தன்னுடைய பழைய நிலையை அடைந்துவிடும்.அடுத்த படைப்புத்தொழில் ஆரம்பமானால் மறு படியும் அந்தச் சமநிலை அழிந்துவிடும்.
-
-
சத்துவ குணத்தின் துணைகொண்டு இறைக்காட்சி பெறமுடியும்.
ஒருவனுக்கு சத்துவ குணம் அதிகமாக இருந்தால் அது அவனது ஆன்மீக வாழ்க்கை வளர்ச்சியடைய உதவியாக இருக்கும். அவ்வாறு சத்துவகுணத்தை அதிகமாகப்பெற்றவன் தெய்வீக குணங்களைப்பெற்று கடவுள் காட்சி பெறும் அனுக்கிரகத்தையும் பெறுகிறான். பகவத்கீதையில் கூறியுள்ளபடி சத்துவகுணத்தை அதிகமாகப்பெற்ற மனிதன் பயமற்று, தூய்மையான மனத்துடன் இருப்பான். தன்னிடம் அமைந்துள்ள தெய்வீகத்தன்மையை அறிவான். தன் வெளி உறுப்புகளின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பான். மதசம்பந்தமான நூல்களைப்படிப்பதில் ஈடுபாடு இருக்கும். மகத்தையும், உடலையும் தாங்கும் சக்தி இருக்கும். எப்பொழுதும் நேரான பாதையில் நடப்பவனாக இருப்பான். பிறரைக் காயப்படுத்தாமல் இருத்தல், பிறர் பொருள் கவராதிருத்தல், மிருதுவான தன்மை, அடக்கமாக இரத்தல், நிம்மதியாக இருத்தல், மன்னிக்கும் தன்மை, பலசாலியாக இருத்தல், பொறுமையோடு இருத்தல், பிறருக்கு த் தீங்கிழைக்காடை, அகந்தையற்று இருத்தல், போன்ற நற்குணங்கள் சத்துவகுணம் உடையவனிடம் அபரிமிதமாக இருக்கும்..
சத்துவ குணம் ஆன்மீக விடுதலைக்கு உதவும் ரஜோ குணமானது செயல்களின் மீதுள்ள பற்றுதல் காரணமாக பந்தத்தைத்தோற்றுவிக்கும். தமோ குணம் குழப்பமான சிந்தனைகளையும், அர்த்தமற்ற பலாத்காரம் போன்றவற்றையும் உண்டாக்கும். ஸ்ரீராம கிருஷ்ணர் சொன்ன நீதிக்கதையொன்று இதனை எளிதில் விளக்கவல்லது.
ஒரு நாள் ஒரு பணக்காரன் ஒரு காட்டின் வழியாக செல்ல நேர்ந்தது. வழியில் அவனை மூன்று திருடர்கள் பிடித்துக்கொண்டனர். அவர்கள் அவனிடமிருந்த பொருள்களை் அனைத்தையும் அபகரித்துக்கொண்டனர். உடனே அவர்களில் ஒருவன், இந்த மனிதனை இனி உயிருடன் வைத்திருப்பதால் என்னபயன்? என்று சொல்லியபடி தன் கையிலிருந்த வாளைக்கொண்டு அவனைக்கொல்லப்பார்த்தான். அப்பொழுது இரண்டாமவன் ” அநாவசியமாக இவனைக்கொல்வதால் என்ன நன்மை ஏற்படப்போகிறது? இவனது கைகளையும் கால்களையும் நன்றாக கட்டி விட்டு இங்கேயே விட்டுவிடுவோம். அப்போது அவனால் காவல் நிலையத்திற்குச்சென்று புகார் கொடுக்க முடியாது” என்றான். அவர்கள் பேசிக்கொண்டபடியே பணக்காரனின் கைகளையும் , கால்களையும், கயிற்றினால் நன்றாகக் கட்டிப்போட்டுவிட்டுச்சென்றுவிட்டனர்.
கொஞ்ச நேரம் சென்ற பிறகு மூன்றாவது திருடன் அந்த மனிதனிடம் திரும்பி வந்தான். நீ இவ்வளவு இன்னல்கள் பட நேர்ந்ததைக்கண்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் உன் கட்டுக்களை அவிழ்த்து விடப்போகிறேன்” என்று கூறியபடி அவன் கட்டுக்களை அவிழ்த்ததுடன் அவனைக் காட்டிற்கு வெளியே அழைத்துச்சென்றான். ஊரைநோக்கிச்செல்லும் நெடுஞ்சாலையை அடைந்ததும் திருடன், அவனிடம், நீ இந்த சாலையின் வழியே சென்றால் உன் கிராமத்தை அடையலாம். என்று கூறினான். பணக்காரனின் மனது நன்றியுணர்ச்சியில் நிரம்பி வழிந்தது.திருடனைத் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தான். அந்த அழைப்பை ஏற்க மறுத்த திருடன் அவனிடம், என்னால் அங்கு வர இயலாது. உன்னுடைய கிராமத்தில் ஒரு காவல் நிலையம் உள்ளது.நான் அங்கே வந்தால் அவர்கள் என்னைக்கைது செய்து விடுவார்கள்” என்று சொல்லியபடி தனது வழியில் திரும்பிச்சென்றுவிட்டான.
இதில் பணக்காரனைக்கொல்ல விரும்பியவன் தமோ குணமுடையவன்.தமோ குணமானது குழப்பமான சிந்தனையையும், தேவையற்ற பலாத்காரத்தையும் ஏற்படுத்துகிறது. இரண்டாவது திருடன் ரஜோ குணம் படைத்தவன். அது ஒரு மனிதனை உலக விஷயங்களில் ஈடுபடச்செய்து பலவகையான செயல்களைச்செய்ய வைக்கிறது. ரஜோ குணமானது கடவுளை மறக்க வைக்கிறது. மூன்றாவது திருடன் சத்துவ குணமுடையவன். அது ஒன்றுதான் கடவுளை அடையும் பாதையைக்காட்டுகிறது. உலக பந்தங்களை அறுத்து விடுகிறது. பணக்காரன் வீட்டிற்குச்செல்வத என்பது கடவுளை அடைவதற்கு ஒப்பானது, சத்துவகுணம் ஒரு மனிதனைக்கடவுளிடம் அழைத்துச்செல்லும்.ஆனால் அதனால் அங்குபோகமுடியாது.கடவுள் என்பவர் எல்லாப் பொருள்கள் அல்லது முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். திருடன் ஏன் பணக்காரனின் வீட்டிற்குப்போக முடியவில்லை என்பதை இந்த நிகழ்ச்சி நன்கு விளக்குகிறதல்லவா?
விடுதலை பெற்ற ஆன்மா முக்குணங்களை கடந்து செல்லும்
ஆன்மீக விடுதலையை விரும்பும் சாதகன் இந்த மூன்று குணங்களையும் கடந்து செல்லவேண்டும். பகவான் கண்ணன் ஸ்ரீமத் பகவத் கீதையில், அர்ஜீனனிடம் ”முக்குணங்களையும் கடந்து செல்” என்று கூறினார். அதாவது எல்லாப் பொருள்களையும் கடந்து தெய்வீக ஆன்மாவை நம்மிடம் நிலைபெறச்செய்யவேண்டும்.
34
சிருஷ்டி (படைத்தல்)
-
இவ்வுலகம் படைக்கப்பட்டதைப்பற்றி பல்வேறு கருத்துக்களை இந்து மதம் கொண்டுள்ளது. சாங்கியம், வைசேஷிகம், மீமாம்சம் , வேதாந்தம் மற்றுமுள்ள பல சாஸ்திரங்களும் படைத்தல் பற்றிய பற்றிய வெவ்வேறு வகையான கருத்துக்களையே கூறுகின்றன. சாங்கியம், யோகம்., நியாயம், வைசேஷிகம் ,வேதாந்தம் ஆகியவை படைத்தல் என்பதற்குத் துவக்கமும் கிடையாது. முடிவும் கிடையாது. என்று கூறுகின்றன. அவ்வகையான கருத்தின் படிஇதுவரை எண்ணற்ற படைப்புக்கள் ஏற்பட்டு, அழிந்து மறுபடியும் தோன்றி, மறைந்து என்றபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படைப்புத்தொழில் துவங்குவதற்கு முன்னால் உலகமனைத்தும் அசைவற்ற நிலையில் விதை போன்று கடவுளுக்குள் இருந்தது. இந்த நிலைக்கு” அவ்யக்த நிலை” அதாவது தெளிவாக த்தோன்றாத நிலை என்று பெயர். கடவுள் எப்பொழுது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறாரோ அப்பொழுது இந்த உலகம் வெளிப்படையாகத்தெரியும். இத்தகைய படைத்தல் என்ற செயல் ஏற்பட்ட பிறகும் அது கடவுளுக்கு உள்ளேயே பலவகையான பரிணாம வளர்ச்சிக்கு உட்படுகிறது. இவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்த பின் கடவுள் அதை வெளியே வர அனுமதிக்கிறார்... வெளியே வந்த உலகத்தைப்பல கோடி வருஷங்கள் நிலைபெறச்செய்தபின் அதைத் தனக்குள்ளேயே வருமாறு திரும்ப இழுத்துக்கொள்கிறார். இதை வடமொழியில் சிருஷ்டி” என்றும் ”பிரளயம்” என்றும் சொல்கிறார்கள்.
வெளியில் வரும் உலகம் தற்காலிகமாக இருப்பது , அது திரும்பவும் கடவுளுக்கு உள்ளே திரும்பச்செல்வது என்பது ஒரு கல்பம்”(காலச்சக்கரம்) என்று சொல்லப்படுகிறது.
இதைத்தெளிவாக விளக்கவல்ல ஒரு சிறிய உவமை, ஒரு மனிதன் தன்னுடைய மருத்துவரிடம் ஆண்டுக்கொருமுறை வழக்கமாகப் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். ஒரு முறை அவ்வாறு சென்றபோது எக்ஸ்ரேயில் அவனது வயிற்றிற்குள் ஒரு கட்டி தோன்றி வளர்ச்சியுறுவது கண்டுபிடிக்கப்பட்டது. நாளடைவில் அது வளர்ந்து ஒரு கோழிமுட்டையின் அளவிற்கு வந்து விடுகிறது. சிறிது காலம் அப்படியே இருந்துவிட்டு எந்தவித சிகிச்சையுமின்றித்தானாகவே கரைந்து மறைந்து விடுகிறது.
மேலே கூறப்பட்ட உவமையில் மனிதன் தான் கடவுள். அந்தக்கட்டி உலகத்தைக் குறிப்பிடுகிறது. கடவுள் வெளிப்படுத்திய பிறகு அது பரிணாம வளர்ச்சிக்கு உட்படுகிறது. மறுபடியும் கடவுளுக்குள்ளேயே போய்விடுகிறது. அதே போன்றதே கட்டி மனிதனின் உடலுக்குள் தோன்றுவது,பல மாற்றங்களுக்கு உட்பட்டுப்பெரிதாக வளர்கிறது. பின்னர் மறுபடியம் வந்த இடத்திற்கே போய்விடுகிறது.இவ்வாறு கட்டி தோன்றி, வளர்ந்து மறைந்துவிடுவது ஒரு கல்பத்தைக்குறிக்கிறது. இதனை ஒரு தடவை காலச்சக்கரம் சுழன்றது என்றும் சொல்லலாம். இது போன்ற எண்ணற்ற கல்பங்கள் தோன்றியுள்ளதாக இந்துமதம் சொல்கிறது. ஆகவே தான் படைப்புத்தொழிலுக்கு ஆரம்பம். முடிவு எப்போது என்பதைச்சொல்லமுடியாது. ஒவ்வொரு கல்பமும் அதற்கு முந்தைய கல்பத்தைப்போன்றோ அல்லது அடுத்து வரும் கல்பத்தைப்போன்றோ இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கடவுள் படைப்புத்தொழிலைச்செய்வதன் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகள் இந்து மதத்தில் எழுப்பப்பட்டன. எப்பொழுதுமே தேவை இருந்தால் தான் ஒரு செயல் தூண்டப்படும். கடவுளுக்கு எந்தவிதமான தேவையுமே கிடையாது. அப்படியிருக்க அவர் ஏன் படைப்புத்தொழிலைச்செய்யவேண்டும்? ஒரு மத சம்பந்தமான நூலானது செய்யுள் வடிவில் தரும் பதிலாவது- நான் பலவாக இருப்பேன், நான் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட வகையில் வெளிப்படலாம், பஹீஸ்யாம் ப்ரஜாயே யேதி” என்று சாந்தோக்கிய உபநிடதம் (6.23) கூறுகிறது. அதாவது கடவுள்ஒரே முழு முதல் பொருளாக இருந்தபோதிலும், தன்னை வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளவே இந்த உலகைப்படைக்கிறார். இது உண்மையில் அவரது விருப்பம் ஆகாது. கடவுளைப்பொருத்த வரை படைத்தல் தொழில் ஒரு விளையாட்டு அல்லது லீலை.
கடவுள் மெய்யாகவே இந்த உலகமாக ஆகி விட்டாரா? என்று கேட்டால் சில இந்து தர்ம சாஸ்திரங்கள் ஆம்” என்ற விடையையே தருகின்றன. பால் எப்படி தயிராக மாறுகிறதோ அதே போலவே கடவுளும் இவ்வுலகமாக மாறிவிடுகிறார். வேறு சில தத்துவ நூல்கள் அதை மறுத்து, அது வெறும் தோற்றமே தவிர உண்மையல்ல என்கின்றன. ஒரு கயிறானது குறைந்த வெளிச்சத்தில் பாம்பாகத்தோற்றமளிப்பது போல் தான் இதுவும். அவர் ஒரு போதும் தன்னை இந்த உலகமாக மாற்றிக்கொள்வது இல்லை என்பர்.
ஆஸ்திகம், நாஸ்திகம் ஆகிய இரண்டு விதமான கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் சிறப்பு இந்து மதத்திற்கு உண்டு. சாங்கிய தத்துவம் இந்து மதத்தின் ஒரு பிரிவானாலும் அது நாத்திகவாதம் புரிவது. ஆனாலும் மற்ற ஆஸ்திகவாதிகளின் நடுவே அதுவும்ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாத்திக வாதம் பேசினாலும் சாங்கிய தத்துவம் மக்களின் முக்திக்கு வழிவகுக்கிறது.
-
இனி சாங்கியக்கொள்கையின் படி கடவுளே இல்லாமல் படைப்புத்தொழில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக்காண்போம்.
சாங்கியர்களின் படைத்தல் கோட்பாடு
இந்து மத தத்துவ நூல்களுள் சாங்கியர்களின் தத்துவம் மிகவும் பழமையானது. அது முடிவானதாக இரண்டு மெய்ப்பொருள்கள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறது.(1) புருஷன்.(2) பிரகிருதி.
புருஷன் என்று, தூய்மையான உணர்வு சொல்லப்படுகிறது. அது காரணத்திற்கு அப்பாற்பட்டது. மாற்றமில்லாதது, நிலையான தன்மையுடையது மற்றும் எங்கும் நீக்கமற பரவி இருப்பது, எனவே அது எந்தப் பொருளும் தன்னுள் கொள்ளாத சூன்யத்தன்மை கொண்டது. அது அசைவற்றது. எண்ணற்ற புருஷர்கள் உள்ளனர். எத்தனை புருஷர்கள் உள்ளனரோ அத்தனை சுய உணர்வுடைய ஜீவன்கள் இருக்கலாம்.பிற தத்துவ ஞானிகள் சாங்கிய தத்துவப்படி பல புருஷர்கள் இருக்கும் கருத்து தவறானது என்று குரல் எழுப்பினார்கள். அவர்களது கூற்றுப்படி எங்கும் நிறைந்துள்ள ஒரு புருஷன் என்பதை விடுவித்து பல புருஷர்கள் இந்த ஒரு வெளியை அடைத்துக்கொள்வார்கள் என்பது ஒப்புக்கொள்ள முடியாதது. ஆனால் சாங்கினர்களோ பல வகைப்பட்ட மெழுகுவர்த்திகளை ஒரே வெளியில் ஏற்றிவைத்தால் அத்தனை மெழுகுவர்த்திகளிலிருந்தும் வரும் ஒளியானது எந்த விதமான முரண்பாடுமின்றி அதே வெளியை ஒளிமயமாக்கி நிறைத்துக்கொள்ளும் என்ற பதிலை அளிக்கிறார்கள். அத்தோடு பல புருஷர்கள் இருப்பதற்கான ஆதாரங்களையும் தருகிறார்கள்.ஒரே ஒரு புருஷன் மட்டும் இருந்தால் ஒரு நினைவுள்ள பிராணியின் பிறப்போ அல்லது இறப்போ மற்ற பிராணிகளின் பிறப்பு அல்லது இறப்பிற்கும் காரணம் ஆக வேண்டுமல்லவா? அப்படி ஆவதில்லையே! எனவே பல புருஷர்கள் இருக்க வேண்டும்.
பிரகிருதி என்பது புருஷனுக்கு நேர்மாறானது. உணர்ச்சியற்றது.வெறும் பொருள், பிரகிருதியைக் காரணமற்றது. என்று சொன்னாலும் இந்த உலகிலுள்ள எல்லாம் இருக்கக் காரணமாகிறது. அது பொருளாக இருக்கலாம், சக்தியாக இருக்கலாம், அல்லது மனமாகக்கூட இருக்கலாம். இந்துமத மனநூலானது மனம் எவ்வளவு நுண்ணியது என்று கருதினாலும் அதை ஒரு மூலப்பொருளாகவே கருதுகிறது. புருஷன் என்பது தூய உணர்வாக இருப்பதால் அது உண்டாவதற்கு பிரகிருதி காரணமாக அமையாது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
சாங்கியர்களின் கருத்துப்படி பிரகிருதியானது சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று நுண்ணிய பொருள்களால் ஆனது. பிரகிருதியானது உணர்வை புருஷனிடமிருந்து கடனாக வாங்கிக்கொண்டு உயிரோட்டமுள்ள பொருளாகமாறி படைத்தல் தொழிலை மேற்கொள்கிறது. பிரகிருதியினிடம் உணர்வு ஏற்பட்டுச்செயல் படுவதற்கான அறிகுறி, அது தானாக மாறுவது அது படிப்படியாக மாறி முடிவில் பிரத்யட்சமான உலகமாக ஆகிவிடுகிறது.வேறு வகையாகக்கூறுமிடத்து முதன் முதலாக உண்டான பொருள், பிரகிருதியின் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு உலகமாக ஆகிவிடுகிறது.
பரிணாம வளர்ச்சியினால் முதலில் ஏற்படுவது பிரபஞ்ச சம்பந்தமான நுண்ணறிவு. அது ”மஹத்” எனப் படும். அகங்காரம் எனப்படும் பிரபஞ்ச சம்பந்தமான ”அஹம்” என்பது இரண்டாவதாக உண்டாவது.
இந்த உலகரீதியான ”அஹம்” மூன்று விதமானது.(1)சத்துவ குணம் நிரம்பிய அஹம்.(2) ரஜோ குணம் நிரம்பிய அஹம்.(3) தமோ குணம் நிரம்பிய அஹம்.
முதலாவதிலிருந்து உருவாக்கப்பட்டவை ஐந்து உணர்ச்சி உறுப்புகள். ஐந்து செயல் உறுப்புகள் மற்றும் மனம். மூன்றாவதிலிருந்து உருவானவை நுண்ணிய உடல் சம்பந்தமான சத்துக்கள். அவை தன் மாத்திரைகள் எனப்படும். இரண்டாவது அகமானரஜோ குணம் நிறைந்தது முதலாவதற்குச் சக்தியைத் தருவதுடன் மூன்றாவது உருவாவதற்கும் சக்தியளிக்கிறது.
தன் மாத்திரைகளிலிருந்து உருவானவை ஐந்து பௌதிக ரீதியான பொருள்கள். அவை மகா பூதங்கள் எனப்படும். அவையாவன.(1) ஆகாசம்-வெளி சம்பந்தமானது., (2) வாயு-காற்று சம்பந்தமானவை. (3) அக்னி- நெருப்போடு தொடர்புடையவை..(4) ஆப- தண்ணீரோடு தொடர்புடையவை..(5) ஷிதி(அல்லது) பிருதிவி-நிலத்தோடு தொடர்புடையவை. இந்த மூலப்பொருள்கள் பலவேறு வகையான அளவில் அதாவது தொகுதி வரிசையின் மாற்றம் மற்றும் சேர்க்கை ஆகிய விதிகளுக்கு உட்பட்டு சேர்ந்து பல வகைப்பட்ட இந்த உலகமாக மாறுகிறது.
-
-
வேதாந்த தத்துவத்தின்படி படைப்புத்தொழில்
அத்வைதக்கொள்கையை உடைய வேதாந்த மானது கடவுளை படைப்பாளி என ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அது கடவுளின் வெளிப்படையான மாற்றமே என்ற கண்ணோட்டத்தைக்கொண்டுள்ளது.
கடவுள் எவ்வாறு உலகத்தைப்படைத்தார். என்பதை விளக்க ஓர் உவமையைக்கூறலாம். ஒரு மந்திரவாதி தன்னுடைய மந்திரசக்தியால் பார்வையாளர்களை மனோவசியப்படுத்தி வைத்திருப்பதாகக்கொள்வோம். அந்த நிலையில் அவன் மேடையில் ஓர் ஆப்பிள் மரத்தை உண்டாக்கியிருக்கிறான். பார்வையாளர்கள் அனைவருமே ஆப்பிள் மரத்தை மட்டுமே பார்ப்பார்கள். மந்திரவாதியைப்பார்க்கமாட்டார்கள்.ஏனெனில் அந்த மனோவசிய சக்திக்கு அவன் ஆடபடுவதில்லை. அதே போலவே கடவுள் தன்னுடைய மந்திரசக்தி அல்லத மாயையைக்கொண்டு இந்த உலகத்தைப்படைக்கிறார். கடவுளின் மாயைக்கு ஆட்பட்டவர்கள் இந்த உலகத்தை உண்மையானது என்று நம்புகிறார்கள். கடவுளைப்பொறுத்தவரை அது உண்மையல்ல. கடவுளின் எண்ணப்படி உண்மையில் அவர் உலகத்தைப்படைக்கவில்லை. அவரது மாயைக்கு உட்பட்ட நமக்கு உலகம் உண்மையானதாக த்தோன்றுகிறது. அதனால் உலகத்தைப்படைத்த கடவுளும் உண்மையானவர்தான் என்று கருதுகிறார்கள்.
ரிக் வேதத்தில் உள்ள படைப்பு” பற்றிய துதி” இதனை அழகாக வர்ணிக்கிறது.
உயிரில்லாதது அல்ல, அது உயிருள்ளதும் அல்ல
அந்த சமயத்தில்
வாயுமண்டலம் இருக்கவில்லை, சுவர்க்கமும் இல்லை.
அனைத்திற்கும் அப்பாற்பட்டவை அவை.
எது உயிருடன் இருந்தது? எங்கே இருந்தது.?
யாருடைய மேற்பார்வையில்?
அது தண்ணீரா? ஆழங்காணமுடியாத பாதாளமா?
இறக்கக்கூடியவை அங்கே இல்லை. பின்னர் மரணமற்றவர்களும் இல்லை.
இரவுக்கும் பகலுக்கும் எவ்வித வேறுபாடும் இருக்கவில்லை. அது மட்டும் காற்றில்லாமலே சுவாசித்து
தன்னுள் இயற்கையாக அமைந்த சக்திகொண்டு
அதைத் தவிர அங்கு வேறு எதுவுமேயில்லை. அங்கு இருட்டாக இருந்தது இருள் மறைந்திருந்தது.
துவக்கநிலையில்
அங்கு அனைத்துமே பிரிக்கப்படாத கடல்
மயம் தான்
எல்லாவற்றிற்கும் தேவையான மூளையானது
சூனியத்தில் மூடப்பட்டுக்கிடந்தது.
அது மட்டும் சக்தியின் துணைகொண்டு
ஆழ்ந்து சிந்திக்கும் எண்ணம் பிறந்தது.
அதன் மீது முதலில் ஆசைதோன்றியது.
அது தான் சிந்தனையின் முதல் குழந்தை.
முனிவர்கள் கண்டனர். இந்த ஆசைதான் ஒரு தொடர்பு.
உயிரோடு இருப்பதற்கும், உயிர் இல்லாததற்கும் இடையே என்று
அவர்களது இதயத்திற்குள் இருந்த அறிவின் துணைகொண்டு தேடியதன் பயனாக
அவர்களது காட்சியினின்றும் குறுக்காக
விரிவாக்கப்பட்ட சிந்தனைதான் அது.
கீழே இருந்ததா அது? அல்லது மேலே இருந்ததா?
விதைகள் விதைப்பவர்கள் இருந்தார்கள்
அங்கே சக்திகள் இருந்தன அங்கே
நிலையான சக்தி கீழே இருந்தது.
தூண்டும் சிந்தனை சக்தி மேலே இருந்தது.
மொத்தத்தில் அறிந்தவர் யார்?
இங்குள்ளவர்களில் எவர் அது எப்போது எழுந்தது.
என்பதைத்தெரிவிப்பார்கள்.?
இந்த உலகம் எப்போது தோன்றியது?
பின்னர் தான் கடவுள்கள் இருப்பதா
இந்த உலகத்தைப்படைக்க?
அது நடைமுறைக்கு வந்ததை எவர்தான் அறிவர்?
எப்போது வந்தது.
எப்போதிலிருந்து இயங்குகிறது இவ்வுலகம்?
செய்யப்பட்டதா அது அல்லது இல்லையா என்று
மிக உயரத்திலுள்ள சுவர்க்கத்திலிருந்து எவர் பார்க்கிறாரோ
அவரே நிச்சயமாக அறிவார்.
அல்லது
ஒருக்கால் அவர் அறியாமலும் போகலாம்!
மேலே இருக்கும் ரிக்வேதச்செய்யுளில் உள்ள கடைசிப்பத்தி உலகில் உண்மையான படைப்பைப்பற்றிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. உயரமான இடமான சுவர்க்கத்தில் இருந்து பார்ப்பவர் என்பவர் கடவுளைத்தவிர யாரும் இல்லை. அவர் எல்லாவற்றையும் அறிந்திருப்பவர். உலகம் படைக்கப்பட்டதா என்பதை அவர் அறிவார். அப்படி அவர் அறிந்திருக்காவிடில் அவரைப்பொறுத்தவரை வேறு எந்த உலகமுமே உண்மையில் படைக்கப்படவில்லை. உண்மையில் அங்கு எதுவுமே இல்லை என்றால் , அது அங்து இருக்கிறது என்ற கேள்வி எழுவதற்கே இடமில்லை. ஆகையால் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை மறுக்கமுடியாது.
இருந்தபோதிலும் கடவுளின் மாயைக்கு உட்பட்டு அழியக்கூடிய உடலை உடைய மானிடர்கள் இந்தஉலகம் உண்மையானது என்றும், அதைப்படைத்த ஒரு படைப்பாளியும் (உலகம் உண்டாக காரணமாக இருப்பவர்) உண்டு என்று நம்புகிறார்கள்.அவர்களது கண்ணோட்டத்தின் படி கடவுள் தான் எண்ணிய மாத்திரத்தில் முதல் உயிரினமாக ”ஹிரண்யகர்பா”வைப்படைத்தார்.
ஹிரண்யகர்பா கடவுளால் படைக்கப்பட்ட போதிலும் அவருக்கு அனைத்துவிதமான தெய்வீகசக்திகளும் அளிக்கப்பட்டிருந்தன. அவருக்கு எல்லையற்ற அறிவாற்றல், விருப்பம், செயல்திறன் ஆகியவை இருந்தன. ஹிரண்யகர்பா தன்னுடைய தியானத்தின் துணைக்கொண்டு முந்தைய கல்பங்களைப்பற்றி அறிந்து கொள்கிறார். அதன்பிறகே முந்தைய கல்பங்களில் இருந்தது போன்ற வரிசைக்கிரமத்தைப்பின் பற்றி மீதி உலகத்தையும் படைக்கிறார்.
-
-
முதன்முதலாக ஆகாயம்(வெளி) என்னும் மூலம் படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாயு எனப்படும் காற்றும், அக்னி எனப்படும் நெருப்பும் , ஆப என்னும் தண்ணீரும் மற்றும் பிருதிவி எனப்படும் பூமியும் படைக்கப்பட்டன. உயிருடன் இருப்பதற்காக வெளி வந்தவற்றை வடமொழியில் பூதம் என்பர். ஆக வெளியே வந்த இந்த ஐந்தும் ”பூதங்கள் எனப்பட்டன. எனவே இவற்றை பஞ்சபூதங்கள்” என்கிறோம். இவை மிகவும் நுண்ணியவை. வடமொழியில் ஐந்து” என்பதை ”பஞ்ச” என்றும் ”நுண்ணிய” என்பதை ”சூஷ்ம” என்றும் சொல்வார்கள். ஆகவே இவ்வைந்து நுண்ணிய மூலப்பொருள்கள் ”பஞ்ச சூஷ்ம பூதங்கள்” எனப்படுகின்றன.
“ இவ்வைந்து நுண்ணிய மூலப்பொருள்களும் ஐந்து வெவ்வேறு வகைகளில் கலந்து ஐந்து ஸ்தூலப்(திட)ப்பொருள்களை உண்டாக்கின.இவை பஞ்ச ஸ்தூல பூதங்கள் எனப்படுகின்றன. ஐந்து நுண்ணிய மூலப்பொருள்கள், ஐந்து ஸ்தூலப்பொருள்களை உண்டாக்குவதற்காகக் கலக்கும் முறைக்கு ”பஞ்சசீகரணம்” என்று வடமொழியில் சொல்வார்கள். இவ்வாறு கலக்கும் முறையானது கீழே தரப்பட்டுள்ளது.
(இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய வெளி-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணியகாற்று-( எட்டில் ஒரு பங்கு )நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்-(எட்டில் ஒரு பங்கு)-நுண்ணிய நிலம்-ஆகிய முறையில் கலந்து திடமான வெளியின் மூலமாயிற்று.
இரண்டில் ஒருபங்கு) நுண்ணிய காற்று-எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய வெளி-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்- (எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நிலம்-சேர்ந்தது திடமான காற்று மூலம்.
(இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு)நுண்ணிய வெளி-(எட்டில் ஒருபங்கு) நுண்ணிய காற்று-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்-எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நிலம் கலந்தது திடமான நெருப்புமூலம்.
(இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய நீர்- எட்டில் ஒரு பங்கு) நுண்ணியவெளி-( எட்டில் ஒரு பங்கு) நுண்ணியகாற்று- ( எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணியநிலம் சேர்ந்தது திடமான” நீர் மூலம்.
இரண்டில் ஒரு பங்கு) நுண்ணிய நிலம்-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய வெளி- (எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய ஆகாயம்-(எட்டில் ஒரு பங்கு) நுண்ணிய நெருப்பு-(எட்டில் ஒருபங்கு) நுண்ணிய நீர்-சேர்ந்தது திடமான நில மூலம்.
மனிதனின் சூஷ்ம உடல் ஐந்து நுண்ணிய மூலப் பொருள்களாலும் , அவனது ஸ்தூல உடல் மற்றும் இயற்கையில் தோன்றும் எல்லா திடப்பொருள்களாலும் , திடமான மூலப்பொருள்களின் சேர்க்கையாலும் ஆனவை.
35
பிரளயம் அல்லது உலகத்தின் அழிவு
..
`ஹிரண்யகர்பர் படைக்கப்பட்ட உயிரினத்தைச்சேர்ந்தவர். அவருக்கு எவ்வளவோ அதிகாரங்கள் மற்றும் சிறப்புக்களைக்கொடுத்திருந்த போதிலும் அவரது ஆயுட்காலம் என்பது வரையறுக்கப்பட்டிருந்தது. அவருடைய வாழ்நாளில் ஒரு நாள் என்பது ஒரு கல்ப காலமாகும். அது 4,320,000, 00 மனித ஆண்டுகள் ஆகும். இந்த கால அளவின்படி அவர் 100 ஆண்டுகள் வாழலாம். மற்றும் சிலரது அபிப்பிராயப்படி ஒரு கல்பம் எனப்படுவது 8,640, 000, 000 மனித ஆண்டு களாகும். ஹிரண்யகர்பர் உயிர் வாழும் காலத்தை மகா கல்பம் என்பார்கள்.
ஹிரண்யகர்பர் ஒரு நாள் முழுவதும் வேலை செய்த பிறகு தூங்கப்போவார். அப்போது இந்தப் பிரபஞ்சமானது அழிந்துவிடும். பிரளயம் ஏற்பட்டு விடும். இதற்கு நைமித்தகப் பிரளயம் என்றுபெயர். அவர் விழித்து எழுந்தவுடன் மறுபடியும் படைத்தல் தொழில் துவங்கிவிடும்.மகா கல்பத்தின் முடிவில் ஹிரண்யகர்பா இறந்து விடுவார்.அது வரை படைத்தலும் அழித்தலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும்.
ஹிரண்யகர்பர் இறந்தவுடன் கடவுளோடு கலந்து அவருடன் ஐக்கியமாகி விடுகிறார். வேறு விதமாகக்கூறுவோமேயானால் அவருக்கு முக்தி கிடைத்து விடுகிறது. எனவே அவர் மறுபடியும் பிறக்கமாட்டார். ஹிரண்யகர்பர் இறக்கும் பொழுதோ அல்லது அவருக்கு முக்தி கிடைக்கும் பொழுதோ இந்த உலகம் அழிய முற்படுகிறது. அப்போது அதற்கு ”பிராகிருத பிரளயம்“ என்று பெயர். அத்தோடு மகா கல்பம் முடிந்து விடுகிறது.
கடவுளின் விருப்பப்படி அடுத்த படைப்புத்தொழில் துவங்கும் பொழுது வேறு ஓர் உயர்வானவரும் அழியக்கூடிய ஒருவர் கடந்த கல்பங்களில் அவர் பெற்றஅளவு கடந்த தகுதியின் காரணமாக ”ஹிரண்யகர்பரை”ப் போல் தோன்றுவார். இவ்வாறாக படைத்தல், தொடர்தல், அழித்தல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கும்.
-
-
இந்து மதக் கொள்கையின் படி படைத்தல் தொழில் பற்றிய கோட்பாடுகளும் அவற்றிற்கு மறுப்பும்
இந்து மதத்தைப்பொறுத்தவரை உலகம் தோன்றியதைப் பற்றிய உறுதியான கோட்பாட்டைக்கூற முடியவில்லை. அப்படி முடிந்திருக்குமேயானால் உலகம் தோன்றியதைப் பற்றிய ஒரே ஒரு கோட்பாட்டைக்கொடுத்திருக்கமுடியும்.ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடுகளைக் கொண்டிருப்பதால் எல்லாமே தவறானதா அல்லது ஏதாவது ஒன்று தான் சரியானதாக இருக்குமா என்று வாதம் புரியலாம்.
அத்வைதக்கொள்கையை உடைய வேதாந்தத்திற்கு இத்தகைய மறுப்புக்களில் எந்தவிதமான பிரச்சனையும் உண்டாகாது. மிகப்பெரிய ஞானியும், அத்வைதக்கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய சங்கரர் , . இந்த உலகம் இயங்குவதைப் பிரத்யட்சமாக காண்கிறோம்.ஆனால் அது நிலைத்து இருப்பது முடிவானதல்ல. என்கிறார்.அதாவது இந்த உலகமானது தற்போதைக்கு மட்டும் உண்மையானது. நிரந்தரமாக உண்மையானது அல்ல. இந்த உலகம் உண்மையானதல்ல என்று நிரூபிக்கப்பட்ட பிறகு மற்ற எல்லாக்கோட்பாடுகளுமே செல்லாத தாகி விடுவதுடன் அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகிறது. எனவே எண்ணற்ற கோட்பாடுகள் இருந்தால் என்ன? ஒரே ஒரு கோட்பாடு மட்டும் இருந்தால் என்ன? அதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
சங்கரருடைய அத்வைதக்கொள்கையைப்புரிந்து கொள்ள வேண்டு மானால் உண்மையானது” என்று சொல்லப்படும் வார்த்தையின் பொருளை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தின் தத்துவப்படி உண்மையானது என்றால் அது நிலையானதாக இருக்கமுடியும். அத்தோடு அதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படக்கூடாது.
எடுத்துக்காட்டாகக் கூறுவோமேயானால் ஒருவர் அவருடைய வீட்டின் புறக்கடையில் ஒரு டைனாசர்” தோன்றி ஒரு நிமிடத்தில் மறைந்து விடுவதாக எடுத்துக்கொண்டால், அவர் தான்பார்த்த பிராணி உண்மையானது அல்ல என்று உணர்வார். தான் கண்ட காட்சி கண்களினால் ஏற்பட்ட மாயத்தோற்றமாக இருக்கலாம் அல்லது தன்னுடைய கற்பனையில் கண்ட காட்சி யாகவும் இருக்கலாம் என்று எண்ணலாம். அப்படியல்லாது அந்த டைனாசர்” அங்கேயே எப்போதும் இருந்திருந்தால் அது உண்மையாகாது என்று அவர் எண்ணியிருப்பார். இந்த விஷயத்தில் டைனாசர்” நிலைத்து இருப்பதைப்பொறுத்து அவரது தீர்மானம் அமைகிறது.
இப்பொழுது ஒரு பார்வையாளர் ஒவ்வொரு நிமிடமும் தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு பிராணியைக் கவனித்துக்கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்வோம். முதல் நிமிடத்தில் ஒரு நாயாகவும் அதன்பிறகு அடுத்தடுத்த நிமிடங்களில் வெவ்வேறு பிராணியாகவும் காட்சியளிக்கிறது. இவ்வாறு நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மையுடைய பிராணி எத்தகையது என்பதைப் பார்வையாளரால் நிர்ணயிக்க முடிவதில்லை. உண்மையில் அது என்ன என்பதை யும் அவர் அறியவில்லை. அந்தப் பிராணி அவ்வாறு அடுத்தடுத்து வெவ்வேறு உருவில் வராமல் இருந்திருந்தால் அவரால் அது உண்மையில் என்ன வகையான பிராணி என்று கண்டு பிடித்திருக்கமுடியும். மாறாத தன்மையை வைத்துத்தான் அது என்ன பிராணி என்று கண்டு கொள்ளமுடியும்.
ஏதோ ஒரு காலத்தில் (நாள், வருடம்) இந்த உலகம் தோன்றி இருக்கிறது. எனவே அது நிரந்தரமாக இருக்க வாய்ப்புக்கிடையாது. தற்காலிகமானதாகத்தான் இருக்க முடியும். நிலைத்து இருக்க முடியாத ஒன்று உண்மையானதாக இருக்கவே முடியாது. எனவே இவ்வாறாக எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தின் தன்மையை வைத்து இது உண்மையானது அல்ல என்ற தீர்மானத்திற்கு வரலாம்.
இந்த உலகத்தின் இத்தகைய போலியானத் தன்மையை சங்கரர், கயிறு இருட்டில் பாம்பாகத்தெரியும் எடுத்துக்காட்டின் மூலம் விளக்குகிறார். உண்மை” என்பது கயிறு.ஆனால் அது ஒரு பாம்பாகக் கவனிக்கப்படுகிறது. அத்தகைய பிரமை நம்மிடம் இருக்கும் வரையில் கயிறு பாம்பாகவே தோற்றமளித்துக் கொண்டிருக்கும். இருட்டு மறைந்து வெளிச்சம் வந்தவுடன் பாம்பு மறைந்துவிடும். இது வரை அதைப்பாம்பாக எண்ணி கவனித்துக்கொண்டிருந்த பார்வையாளர் அங்கு பாம்பு இருந்ததாகக் கருதியதை விட்டு, உண்மை யாக அங்கு பாம்பு இருக்கவில்லை என்பதை உணர்கிறார்.
சங்கரரின் தத்துவமானது ”கயிற்றை“ நிர்குணப்பிரம்மம் அதாவது ”உருவமற்ற கடவுள்” என்கிறது. மேலும் பாம்பை உலகம் என்கிறது.நிர்குணப் பிரம்ம மானது மாறாதது. ஏனெனில் அது நிரந்தரமாக இருப்பது. அது ஒன்றே உண்மையாக நிலைத்து நிற்பது. நிர்குணப் பிரம்மத்தைப் பற்றி அறிந்து கொண்ட மனிதன் இந்த உலகத்தை உண்மையானது என்று ஒரு போதும் எண்ணமாட்டான். அத்தோடு இந்த உலகமானது படைக்கப்பட்டதல்ல என்றும் உணர்கிறான். எனவே படைக்கப்படாத” உலகத்தைப் பற்றியோ அதன் மூலக்கூறு பற்றியோ எந்த விதமான வினாவும் எழாது.
மோட்சம் அல்லது சம்சாரத்திலிருந்து விடுதலை-முக்தி
ஸ்தூலம், சூஷ்மம் என்று சொல்லப்படுகின்ற உலகங்களில் திரும்பத்திரும்ப பிறந்து, வளர்ந்து, மறைகின்ற ஆன்மாவின் செயல்தான் வடமொழியில் ”சம்சாரம்” என்று சொல்லப்படுகிறது.பிறப்பது, இறப்பது என்று தொடர்ச்சியாக நடைபெறும் தொழிலுக்குள் மாட்டிக்கொள்வதே சம்சாரமாகும். இவ்வாறு மனிதர்கள் தொடர்ச்சியாகப் பிறப்பு-இறப்பு பந்தத்தில் மாட்டிக்கொள்ளாமல் விடுபடுவதே இந்து மதத்தில் வாழ்க்கையின் குறிக்கோளாகக்கூறப்படுகிறது. இத்தகைய நிலையை அடைவதுதான் ”மோட்சம்” அல்லது ”முக்தி” என்று வடமொழியில் சொல்லப்படுகிறது. இறைக்காட்சி கிட்டுவதால் மட்டுமே மோட்சத்தை அடையலாம்.
மோட்சத்தைப் பற்றிய விஸயத்தில் இந்து மத தத்துவ நூல் பிரிவாளர்கள் பல்வேறு எண்ணங்களைக்கொண்டுள்ளனர். சிலரது கருத்துப்படி மோட்சமானது ஒருவரது மரணத்திற்குப் பின்னர் ான் கிட்டும்.வேறு சிலரது கூற்றின்படி மனிதர்கள் உயிருடன் இருக்கும் போதே மோட்சத்தை அடைந்து விடலாம். மோட்சத்தின் தன்மையைப் பற்றிக்கூட வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இனி அத்தகைய கருத்துக்களைப் பற்றிக் கீழே காண்போம்.
36
துவைதக் கோட்பாட்டின் படி மோட்சம் பற்றிய விளக்கம்.
வேதாந்த தத்துவங்களில் துவைதக்கோட்பாட்டின்படி மரணத்திற்குப் பின்னரே மோட்சம் கிட்டும். ஒரு மனிதன் அறநெறியிலிருந்து வழுவாமல், நேர்மையான அறிவு, நேர்மையான செயல், பற்றற்ற தன்மை, பக்தியோடு கூடிய தியானம் ஆகியவற்றைின் மூலம் விஷ்ணுவை அனுதினமும் வழிபட்டு வந்தால், கடவுள் கிருபையால் அவன் மோட்சத்தை அடைவதற்குத் தகுந்தவன் ஆகிறான். இம்மாதிரியான கோட்பாட்டில் மோட்சத்திற்கு (1)ஸா லோக்ய, (2)சாமீப்யஅல்லது சாந்நித்ய,(3) ஸாரூப்ய,(4)ஸாயுஜ்ய என்ற நான்கு நிலைகள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவதாகக் கூறப்பட்டுள்ளது மிகவும் இழிந்ததாகவும், நான்காவதாக உள்ளது மிகவும் உயர்ந்ததாகவும் கருதப்படுகிறது. உடலை விட்டுப்பிரியும் ஆன்மாவின் தரத்திற்கு ஏற்றபடி இந்த நான்கில் ஏதாவது ஒரு மோட்சம் கிட்டலாம்.
ஸாலோக்ய முக்தி எனப்படுவதில் உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா தன் இஷ்ட தெய்வமான விஷ்ணுவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரது முன்னிலையில் பேரின்பத்தைஅனுபவிக்கும். சாமீப்ய அல்லது சாந்நித்ய முக்தியில் ஆன்மாவானது தன் இஷ்ட தெய்வத்திற்கு வெகு அருகில் சென்று ஆனந்தத்துடன் இருக்கும்.ஸாரூப்ய முக்தியில் ஆன்மாவானது தன்னுடைய இஷ்ட தெய்வத்தின் உருவத்தைப்பெற்று மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஸாயுஜ்ய முக்தியில் ஆன்மாவானது தன்னுடைய .இஷ்ட தெய்வத்தோடு ஒன்றிவிடுகிறது.
அத்வைத தத்துவத்தில் மோட்சம் பற்றிய செய்திகள்
மனிதன் சம்சாரத்திலிருந்து உயிருடன் இருக்கும் போதே முக்தியடையலாம் என்பத அத்வைத வேதாந்தக்கருத்தாகும். இவ்வாறு முக்தி அடைவதை ”ஜீவன் முக்தி” என்று வடமொழி கூறுகிறது. ஓர் ஆன்மீக வாதி முதன்முதலில் பலவகையான அறநெறிக்கோட்பாடுகளைக் கடைபிடித்தல், தன்னுடைய இஷ்டதெய்வத்தை வழிபடுதல் போன்ற பலவகையான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும். இவ்வாறு செய்வதால் மனமானது படிப்படியாகத்தூய்மையாகி, தியானத்தில் ஆழ்ந்து மூழ்க முடிகிறது. அத்தகைய நிலையில் உருவமற்ற இறை நிலையை உணரமுடியும். அதனால் உண்மையான அறிவை மூடியிருக்கும் அறியாமை என்னும் திரை மறைத்துவிடும். அறியாமை அகன்ற உடனேயே விடுதலை கிடைத்து விடும். பிறகு அவன் ஜீவன் முக்தன்” ஆகி விடுகிறான். அந்த நிலையை அடைந்த ஒருவனுக்கு தான் உடலோடு இருக்கும் ஆன்மா” என்ற நினைவு அகன்று விடுகிறது.
ஜீவன் முக்தனுக்கு உலகிலுள்ள மற்ற பொருள்கள் மாயைக்குட்ப்பட்டது. என்று எண்ணுவது போல்தன்னுடைய உடலும் பொய்யானது என்ற எண்ணம் வந்துவிடும். ஜீவன் முக்தி நிலை அடைந்தஒருவனது உடலானது அவனது பிராரப்த கர்ம பலன் முடியும் வரை இருந்து பிறகு இறந்து விடும். இவ்வாறு உடலை விட்டு நீங்கிய ஜீவன் முக்தனின் நிலைக்கு ”விதேக முக்தி” என்று பெயர்.
மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது ஜீவன் முக்தர்கள் தங்களுடைய மயாமயமான உடலின் மீதுள்ள பற்றை உ்னேயே விட்டு விடுவார்கள். அதன்பயனாக சில காலத்திற்குள்ளேயே “ஸ்த்யோ முக்தி” கிடைப்பதால் உடலை விட்டுவிடுவார்கள். அதாவது உடனேயே விடுதலை கிடைத்து விடுகிறது.
மேலும் ஆன்மீக முன்னேற்றமடையாத ஒருவன் தற்கொலை செய்து கொள்வதை இந்து மதம் கண்டிக்கிறது. ஏனெனில் இறந்த பிறகும் அவன் சில கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். ஜீவன் முக்தர்கள் தங்கள் உடலின் மீதுள்ள பற்றினை விட்டுவிடுவதால் சரியான உணவின்றி உடல் மரணமடைவது அவனைப்பாதிக்காது. ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியுள்ளபடி நிர்விகல்ப சமாதியின் மூலம் ஜீவன் முக்தியை அடைந்த பெரும்பாலானவர், களால் தங்களுடைய மனத்தை இப்பூவுலக வாழ்க்கைக்குக் கொண்டு வர முடியாது. அவர்களது மனம் பிரம்மனைப்பற்றிய நினைவிலேயே மூழ்கி இருக்கும். அந்த நிலையில் அவர்கள் தங்களது உடலைப்பற்றிய எண்ணத்தை அறவே இழந்து விடுவார்கள். அதன் காரணமாக உடலுக்கு வேண்டிய உணவு கிடைக்காமல்சில நாட்களில் அது மடிந்து விடுகிறது.
மற்றும் சில அறிஞர்கள் ஆன்மஞானத்தை அடைந்தவர்களை அதாவது ஸத்யோமுக்தி அல்லது உடனடியான விடுதலை பெறுதல் என்பதே ஜீவன் முக்தி என்கிறார்கள்.ஆன்ம ஞானத்தைப்பெற்றவர்கள் தங்கள் உடலை தங்கள் ஆன்மாவோடு தொடர்புபடுத்திக்கொள்ள மாட்டார்கள். அவர்களைப்பொறுத்த மட்டில்அந்த உடலும் உலகத்திலுள்ள மற்ற பொருள்களைப்போல் பொய்யானதே. அவர்களைப்பொறுத்தவரை அவர்களது உடல்கள் அங்கே இல்லை. எனவே அவர்கள் தாங்கள் ஸ்த்யோ முக்தி அடைந்து விட்டதாக கருதிக்கொள்கிறார்கள். இத்தகையவர்களைக்காணும் பார்வையாளர்கள் அவர்களை ஜீவன் முக்தர்கள்” என்றே அழைக்கிறார்கள்.
மேற்கூறியவைகளைத் தவிர ”கிரம முக்தி” அல்லது அவாந்தர முக்தி (படிப்படியாக முக்தியை அடைதல்) என்ற ஒரு கருத்தும் உண்டு. இந்தக்கருத்தின் படி சகுணப் பிரம்மத்தை ஓம்” என்னும் சப்தத்தைக்கொண்டோ அல்லது தகர வித்யா”, சாண்டில்ய வித்யா” போன்ற சில குறிப்பிட்ட வழிகளின் வாயிலாக ஆழ்ந்த தியானம் புரிவதால் இறந்த பிறகு பிரம்ம லோகத்தை அடையலாம். அங்கு அவர்கள் ஹிரண்யகர்பாவின் துணை கொண்டு ”நிர்குணப் பிரம்மம்” பற்றிய அறிவைப்பெறலாம். ஒரு கல்பத்தின் முடிவில் எங்கும் அழிவு ஏற்படும்போது அவர்கள் பிரம்மத்துடன் கலந்துவிடுவார்கள். மேலும் மறுபடியும் பிறக்கமாட்டார்கள். சம்சாரத்தில் இருந்து கொண்டு இவ்வாறான முக்தியைப் பெறுவது கிரம முக்தி” அல்லது ”அவாந்தர முக்தி” எனப்படுகிறது.
-
-
விசிஷ்டாத்வைத தத்துவத்தின் படி மோட்சம் பற்றிய செய்திகள்
வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதக்கொள்கையானது ஜீவன் முக்தி பற்றிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு மனிதன் சாவிற்குப்பிறகு தான் முக்தி அடைய முடியும் என்பது அவர்கள் கருத்து. அவர்களைப் பொறுத்தவரை அவர்களது இஷ்ட தெய்வம் இருக்கும் இடம் வைகுண்டமாகும். அங்குதான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கடவுளின் முன்னிலையில் ஆன்மீக உடலுடன் வைகுண்டத்தில் சந்தோஷமாக வசிப்பார்கள். அவர்கள் பல வகையான தெய்வீக சக்திகளைப் பெறுவார்கள். அதனால் அவர்களால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் கடவுள் செய்வதைப்போல் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச்செய்ய முடியாது. எவ்வளவோ உயர்ந்த நிலையில் வைக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் கடவுளுக்குத் தொண்டு செய்து கொண்டு மட்டும் தான் இருக்கமுடியும்.
அத்வைத தத்துவவாதிகள் ஆன்மஞானம் பெறுவதால் முக்தியை அடைய முடியும் என்று கூறுவதை விசிஷ்டாத்வைதம் மறுக்கிறது. இவர்களது தத்தவத்தின்படி கர்மயோகமும், ஞானயோகமும், பக்தியோகத்திற்கு உதவக்கூடியவையே , அத்தோடு கடவுளின் கிருபையால் மட்டுமே ஒருவர் இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுபட முடியும் என்கிறது. தெய்வீக அருளைப்பெற ஒரே வழி பக்தியோகத்தைக் கடைப்பிடிப்பது தான் என்று தெரிவிக்கிறது.
” சாங்கியர்களின் தத்துவப்படி மோட்சம்” என்பது என்ன?
இவர்களது தத்துவத்தில் ஆன்மா” எனப்படுவது ”புருஷன்” மனம்” உடல் என்னும் சிக்கலான பொருளானது ”பிரகிருதி” எனப்படும். தன்னுணர்வு இல்லாத நிலையில் முதலில் இருந்த சக்தியிலிருந்து தோன்றியதே அது.”புருஷன்” என்பது தூய்மையான உணர்வு,பிரகிருதி இயற்கையில் உணர்வு இல்லாத தன்மையைப்பெற்றிருந்த போதிலும் அது, புருஷ” னிடமிருந்து கொஞ்சம் உணர்வைக்கடனாகப்பெற்றுச்செயல்படுகிறது. புருஷன்” இவ்வாறு பந்தத்திற்குள் கிடந்து உழலுவது அறியாமையால் ஏற்படுவது.பிரகிருதியின் செயல்பாட்டையும் அதனால் உருவான மனம், உடல், ஆகியவற்றை புருஷ”னுடைய செயல் என்ற தவறான கருத்துக்கொண்டு பார்ப்பதால் ஏற்படுகிறது.
இத்தகைய கருத்தும் கூட புருஷனின் அறியாமையால் தோன்றுவது. மனம் –உடல் ஆகியவற்றிற்குள் கட்டுப்பட்ட புருஷ” னானது உடலாலும் மனத்தாலும் கஷ்டப்படுவதும் கூட அது பொய்மையான மனம், உடல் ஆகிய சிக்கலான விஷயத்தில் மாட்டிக்கொண்டதாக நாம் அடையாளம் கொள்வதால் தான். இவ்வாறான தவறான அடையாளத்திலிருந்து விடுபட வேண்டுமானால் ஆன்மா” என்ற நிலையில் அது பிரகிருதியிலிருந்தும், அதனால் உருவாக்கப்பட்ட சிக்கலைக்கொண்ட மனம்-உடல் என்னும் அமைப்பிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது என்ற அறிவை புருஷன்” அடையவேண்டும். இத்தகைய அறிவு விவேக- ஞானம் எனப்படுகிறது. சாங்கியர்களது தத்துவத்தில் மோக்ஷத்தைக் ”கைவல்யம்” என்று கூறுகிறார்கள். கைவல்யம்” என்றால் வலி” மற்றும் துன்பங்களினின்றும் முற்றிலும் விடுபடுவது ஆகும்.பிரகிருதியின் பிடியிலிருந்து விடுபட்டு புருஷனை மோட்சத்திற்கு இட்டுச் செல்வதற்குக் காரணமாக அமைவது விவேக ஞானமே.
அத்வைதவாதிகளின் கருத்தான ஆன்மா” உயிருடன் இருக்கையிலேயே உடலினின்றும் விடுதலை பெற்று விடுகிறது. என்ற கருத்தை சாங்கிய தத்துவமும் ஏற்றுக் கொள்கிறது. ஜீவன் முக்தன் இறந்து விட்டால் அவன் விதேக முக்தி அடைந்து விடுவான்.
பூர்வ மீமாம்ஸை என்று தத்துவத்தில் மோட்சம் பற்றிய கருத்து
மனிதன் இறந்த பிறகு ஆன்மா விடுதலை அடைவதாகவே பூர்வ மீமாம்ஸ” தத்துவம் நம்புகிறது. இவர்களுக்கு ஜீவன் முக்தி” என்ற கருத்தில் நம்பிக்கை கிடையாது. இந்த தத்துவத்தின்படி வேதங்களில் கூறிய படி சடங்குகளைச் சரியாகச் செய்வதாலேயே மோட்சம் கிட்டும். முன்னர் இருந்த பூர்வ மீமாம்ஸ தத்துவத்தில் விடுதலை” பெற்ற ஆன்மாவானது சுவர்க்கத்திற்குச்சென்று அங்கேயே தங்கி நிலையான பேரின்பத்தில் மூழ்கித்திளைத்துக் கொண்டிருக்கும் என்ற கருத்து நிலவியது. பின்னர் ஏற்பட்ட பூர்வ மீமாம்ஸ தத்துவத்தில் மறுபிறப்பு என்பது ஏற்படாத நிலையே மோட்சம் என்றும் அதனால் மறுபடியும் பிறந்து வலி, துன்பம் ஆகியவற்றை அனுபவிக்க வேண்டிவராது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி ”மோட்சம்” எனப்படுவது சுவர்க்கத்தில் காணப்படும் மகிழ்ச்சியான நிலை அல்ல என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.
நிறைவுக்குறிப்புகள்.
இந்து மதம் உண்மையானது, அது நம்பிக்கை உடையது அன்று, நம்பிக்கை அற்றதும் அன்று
இந்து மதமானது நம்பிக்கையில்லாத மதம் என்பது சில அறிஞர்களது கருத்து. இந்த உலகத்தைப்பற்றிய நல்லவிதமான நம்பிக்கை ஏதும் அதற்குக்கிடையாது.ஏனெனில் நாம் வாழ்கின்ற இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் விட்டுவிட்டு வேறு உலகத்தைப்பற்றி அதிகமாக உத்திரவாதத்தை அளிக்கிறது. ஆனால் ரிக் வேதம் மற்றும் யஜீர் வேதம் போன்ற நம்பத் தகுந்த இந்துமத நூல்கள் முற்றிலும் வேறான கருத்துக்களையே அளிக்கின்றன. அவற்றைப்படித்தால் வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர்கள் மிக உயர்ந்த வகையான வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்ததாகத் தெரிய வருகிறது. அவர்களைப்பொறுத்தவரையில், இவ்வுலகம் மிக வும் நல்லது. அனுபவிக்க ஏற்றது. கெட்டது அல்ல, மனிதன் நூறாண்டு காலம் வாழ ஆசைப்பட வேண்டும் என்று ஈச உபநிடதம் கூறுகிறது. ஆரியர்கள் நேர்த்தியான உடைகளையும் பொன்னாலான ஆபரணங்களையும் அணிந்திருந்தனர். சங்கீதம், நடனம் போன்ற கலைகளை அனுபவித்து ரசித்தனர். மதுபானம், சுவையான உணவுஆகியவற்றையும் உட்கொண்டனர். கறவை மாடுகள் தான் அவர்களுடைய சொத்து. எனவே எண்ணற்ற பசுமாடுகளை வளர்த்து வந்தனர். சுவர்க்கத்தைப் பற்றிய விஷயங்கள் மட்டுமே கூறப்பட்டன. நரகம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
பாரபட்சமின்றி பார்த்தோமேயானால் இந்து மதம் நம்பிக்கையற்ற தன்மையையும் ஆதரிக்கவில்லை. மித மிஞ்சிய நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அதிகமான ஆசை, நம்பிக்கை ஆகியவற்றால் அடிக்கடி ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அதே சமயத்தில் நம்பிக்கையற்ற தன்மை இருந்தால் அது மக்களை எதையும் தொடங்கவிடாமல் தடுத்துவிடுகிறது. இந்து மதம் இத்தகைய மனப்பான்மையை ஆதரிப்பதில்லை. அது முழுமையான உண்மைத்தன்மையை உடையது. அது உலகின் இயற்கையான தன்மையை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்கிறது.
-
-
மனிதன்(1) மகிழ்ச்சி தரக்கூடியவை (2) நல்லவை ஆகிய இரண்டு குறிக்கோள்களை இலக்காக வைத்து அதை அடையவே துடிப்பதாக இந்து மத நூல்கள் கூறுகின்றன. இன்பத்தை தரவல்லதுநல்லதாக இருக்க வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கலாம். நல்லதாக இருப்பது இன்பத்தைத் தரமுடியாததாகவும் போகலாம். தவிரவும் தற்சமயத்தில் இன்பம் தரக்கூடியவை பிற்காலத்தில் இன்பத்தைத் தராமலும் போகலாம். சாக்லேட், ஜஸ்கிரீம் ஒன்று, சாப்பிடுவது இன்பத்தைத் தரலாம். ஆனால்அதே மனிதனைத்துப்பாக்கி முனையில் தொடர்ந்து எட்டு சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்தினால் அது அவனைச்சித்திரவதை செய்வதற்குஒப்பாகும். ஒரு குடிகாரனுக்கு குடிப்பது என்பது மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் உண்மையில் அவனுக்கு அது நல்லதல்ல.தினமும் உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சியான செயல் அல்ல.ஆனால் அது உடல் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.சில செயல்களை மனத்தாலும் உடலாலும் செய்யும்போது இன்பமாக இருக்கலாம். ஆனால் அதனால் உடலுக்கோ அல்லது உள்ளத்திற்கோ நன்மை ஏற்படாது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை இந்து மதம் வன்மையாகக் கண்டிக்கிறது. நேர்மையற்ற வாழ்க்கை வாழ்வதை விட்டுவிடச்சொல்கிறது. கெட்ட செயல் , நல்லது போன்ற பூச்சோடு விளங்கும் மாயா ஜாலத்தில் விழக்கூடாது என்று எச்சரிக்கிறது. துன்பத்தைத் தரக்கூடியவற்றை நன்மையானவை என்று கற்பனையாகக் கருதுவதன் காரணம், அது மகிழ்ச்சி தருவதாக இருப்பது தான். இந்து மதம் நல்லனவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளவும், மகிழ்ச்சி தரக்கூடியவை என்றாலும் நல்லது அல்லாதவற்றை ஒதுக்கி விடும் படியும் புத்தி கூறுகிறது.
...
இந்து மதம் விதியில் நம்பிக்கை வைக்கவில்லை. கர்ம” கோட்பாட்டின் படி ஒரு மனிதனின் எதிர்காலம் அவனுடைய செயலைப்பொறுத்தே அமைகிறது. நிகழ்காலத்தில் ஒருவர் செய்யும் நல்லசெயல்கள் அல்லது கெட்ட செயல்களைப்பொறுத்தே எதிர்காலத்தில் சுகமோ துக்கமோ ஏற்படும். சிறந்த எதிர்காலம் வேண்டுமென்றால் நிகழ்காலத்தை வீணாக்காமல் நல்ல செயல்களையே செய்ய வேண்டும். தன்னுடைய துன்பங்கள் யாவும் மற்றவர்களாலேயே ஏற்படுகிறது என்பதை இந்து மதம் ஒரு நாளும் மன்னிப்பதில்லை. ஒரு செயலைச்செய்பவன், தான் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கும், அவற்றினால் விளையப்போகும் இன்பம் அல்லது துன்பத்திற்கான பொறுப்பை யும் அவனே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
உடலை வருத்தித்தூய்மை பெறுவதைப்பற்றிய இந்து மதக்கருத்து
இந்து மதத்தின் முக்கியப் பிரிவுகள், நரம்புக்கோளாறுகளுக்கு மருந்தாகவும், காரணமின்றியும் தன்னை வருத்திக்கொண்டு தூய்மை பெறுவதை ஆதரிக்கவில்லை. மனத்தை வலுப்படுத்த உடலைச் சில கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் வைப்பது சிறந்தது தான்.வெப்பம் அல்லது குளிர் , இன்பம் அல்லது துன்பம் ஆகியவற்றால் எவன் எளிதில் பாதிக்கப்படாமல் இருக்கிறானோ அவன் மனத்தளவில் பல மானவன், அதாவது மனோவலிமையுடையவன்.
அவன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளையும் வெகு எளிதாகச் சமாளித்துவிடுவான். தன்னுடைய உடலைப்பற்றிய சிந்தனையில் இருப்பவனின் மனம் பலவீனமாகிவிடும். எதிலுமே ஒரு எல்லைக்கு மேல் போவதை இந்துமதம் தடுக்கிறது. வடமொழியில் ”ஸ்ர்வம் அத்யந்த கர்ஹிதம்” என்று சொல்வதன் படி எதுவுமே அளவுக்கு அதிகமானால் கெடுதலே ஏற்படுத்தும். உடலை அலட்சியப்படுத்துவது தர்மமாகாது, ஷாரீர மாத்யம்கலு தர்ம ஸாதனம்” – தர்மத்தை அதாவது மதத்தைப்பின்பற்றி சாதனைகள் புரிய முதலாவதாக வேண்டிய உபகரணம் உடல் தான் என்கிறது இந்து மதம். எனவே உடலைப் பாதுகாப்பது மிகமிக அவசியம்.ஆன்மா அல்லது உள்ளுறையும் தெய்வீகமானது. ஒவ்வொருவரது உடலுக்குள் இருப்பதால் உடலே ஓர் ஆலயம் என்று இந்துமத நூல்கள் கூறுகின்றன.
கொல்லாமை பற்றிய எண்ணமும் அதைக்கடைப்பிடித்தல் பற்றிய இந்துமதக்கருத்துக்களும்.
அஹிம்சைவ ஹி ஸர்வேப்யோ தர்மேப்யோ ஜ்யாயஸீ மதா” எல்லா அறந்களிலும் கொல்லாமையே சிறந்தது. என்று மகாபாரதம் சாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.இந்து மதமானது அஹிம்சையே மற்ற அறங்களைக்காட்டிலும் சிறப்பானது என்று சொல்கிறது. அதே சமயத்தில் நாம் உயிர் வாழ்வதற்காக ஏதாவது ஒரு விதத்தில் பலாத்காரமாகப் பிறரைத்துன்புறுத்த நேரிடுகிறது என்பதையும் இந்துமதம் மறுக்கவில்லை.நாம் சுவாசிக்கும்போது ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. நாம் உணவாக உண்ணும் ஒவ்வொரு தானியத்திற்கும் உயிர் இருக்கிறது. எனவே முற்றிலும் ”பிறருக்குத்துன்பம் விளைவிப்பது கூடாது” என்பதைப் பின்பற்றமுடியாது. மகத்திலுள்ள துன்பம் தரவேண்டும் என்ற எண்ணத்தைக்கூடிய வரை விட்டுவிட வேண்டும் என்பதையே இந்துமதம் கூறுகிறது.
-
-
சில உயர்ந்த செயல்களை உத்தேசித்து செய்யப்படும் கொலைகளை (பலிகளை) இந்து மதம் மன்னித்து ஏற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான மன்னிப்புக்கள் மத நூல்களின் உத்தரவுப்படியான முகாந்திரங்களிலிருந்து வரவேண்டும். மற்றபடி வேறு விதமாக வந்தால் ஒப்புக்கொள்ள முடியாது. ஒரு நாட்டை அதன் எதிரிகள் முற்றுகையிட்டால் சிப்பாய்கள் எதிர்த்துப்போராடி அடக்கி, முறியடித்து, அவர்களைக்கொன்று வெற்றிவாகை சூடவேண்டும். நாட்டைக்காப்பது சிப்பாய்களின் தார்மீகக் கடமை, ஓடி ஒளிகின்ற, காயமடைந்த, பாதுகாவலற்ற அல்லது தகுதியில்லாத எதிரிகளைக்கொல்வதை மதநூல்கள் அனுமதிக்கவில்லை. ஒரு சிப்பாய் போர்களத்தில் எதிரிகளைக்கண்டு திகிலடைந்து ஓடி வந்துவிட்டு அஹிம்சையைப்பற்றிப்புகழ்ந்து பேசித் தன்னுடைய செயலுக்கு விளக்கம் கற்பிப்பவன் தன் கடமையிலிருந்து தவறியவன் ஆவான் . அவன் ஒரு போலி ஆசாமியாகக்கருதப்படுவான்.
உண்மையில் அஹிம்சையைக் கடைப்பிடிப்பவன் மனம் , வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் எவ்வுயிருக்கும் தீங்குவிளைவிக்கக்கூடாது.சிறந்த ஆன்மீக ஞானம் பெற்றவர்களால் மட்டுமே முற்றிலும் அஹிம் சாவாதியாக இருக்கமுடியும். இவ்வாறு ஆத்மானுபூதி பெற்றவர்கள் தங்களுடைய உடல்-மனம் பற்றியசிக்கலானதும், பொய்யானதுமான கருத்தை முற்றும் மறந்து விடுவதுடன் தங்களுடைய தெய்வீகத்தன்மையையும் உணர்ந்து கொள்வார்கள். தங்களிடமும் தங்களைச் சுற்றியுள்ள எல்லாப்பொருள்களிலும் மற்றும் உயிரோடுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் சாரமாக இருப்பது கடவுள் தான் என்பதை உணர்ந்து, கொள்வார்கள்.அத்தகையநிலையை எட்டியவர்களால் எவரையும், வெறுக்கவோ துன்புறுத்தவோ
முடியாது.
எவரையும் பகைவர்களாகப் பார்க்காத நிலையில் அவர்களால் எதிரிகளிடமும் அன்பு செலுத்த முடியும். எங்கும், எதிலும், எவரிடமும் கடவுளின் வெளிப்பாட்டைத்தான் உணர்வார்கள்.உடல், அறிவு, தான் செய்கிறோம் என்ற எண்ணம் எல்லாம் போய் விடுவதால், அவர் ஹிம்சை புரிய வேண்டும் என்ற எண்ணத்தினின்றும் விடுபட்டுவிடுகிறார். இதையே பகவத்கீதை 18-ஆவது சர்க்கம் 17-வது பாடலில் பகவான் கூறியுள்ளார்.
சர்வ சமய சமரசம் என்பது இந்து மதத்தில் இயற்கை யாகவே அமைந்தது என்பதைப்பற்றிய கருத்து
அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை இந்துமதத்தில் வேரூன்றியுள்ளது என்பதை ”ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி” அதாவது கடவுள் ஒருவரே அதை ஞானிகள் பல்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர். என்றரிக் வேத வாக்கியம் தெளிவு படுத்துகிறது. இந்தியாவில் வாழ்ந்த எத்தனையோ முனிவர்களாலும் கடவுளைக் கண்டறிந்த தபஸ்விகளாலும். பல்வேறு வகைப்பட்ட ஆன்மீகப் பாதைகளின் வழியாகச் சென்றாலும் கடவுளை அடைய முடியும்.” என்று போதிக்கப்பட்டது.ஆனாலும் எல்லா மதங்களும் மக்களை ஒரே கடவுளிடம் அழைத்துச்செல்கிறது என்ற தத்துவத்தைப்போதித்தவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தான். மத நல்லிணக்கத்திற்கான தீர்க்கதரிசி என்று அனைவராலும் அறியப்பட்டவர். அவரது போதனைகள் சிலவற்றை மக்கள் படித்து நலம் பெற்று மத நல்லிணக்கமும், அமைதியும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
கடவுளுக்குப் பல பெயர்கள் உண்டு. அவருக்கு எண்ணற்ற உருவங்களும் உண்டு. எதன் மூலமாகவும் அவரை வழிபடலாம். நீ எந்தப்பெயரில் வழிபடுகிறாயோ, எந்த உருவத்தில் வழிபடுகிறாயோ அதன் மூலமாகவே நீ அவரை உணர்ந்து கொள்ளமுடியும்.
பலவிதமாக ஆசைப்படுபவர்களுக்காகவும், பல்வேறுபட்ட காலங்களுக்காகவும், பலவகையான நாடுகளுக்காகவும் கடவுள் பல மதங்களைத்தோற்றுவித்திருக்கிறார். எல்லா மதக் கொள்கைகளும் கடவுளையே அடைய உதவும் பாதைகளே. முழு மனத்தோடு கூடிய பக்தி கொண்டு எந்தப்பாதையின் வழியாகக் சென்றாலும் கடவுளை அடையலாம். ஓர் இனிப்புப் பண்டத்தை நேராகவோ, பக்கவாட்டிலோ கடித்துச்சுவைக்கலாம். எந்த பக்கத்தில் சுவைத்தாலும் அது இனிப்பான சுவையுடன் தான் இருக்கும்.
ஒருவன் ஒரு மதத்தை உண்மையாகக் கடைப்பிடிப்பவனாயின் அவன் பிற மதங்களையும் கடவுள் என்ற உண்மைக்கு இட்டுச் செல்லும் பாதைகளாகக் கருத வேண்டும். எப்போதும் பிற மதங்களைப்பற்றிய மரியாதையோடு கூடிய எண்ணத்தைக் கடைபிடிக்க வேண்டும். பல்வேறு வகையான கொள்கைகளாக இருந்தாலும் அவை ஒரே கடவுளை அடைய உதவக்கூடிய பாதைகளே.
பொன்னைக்கொண்டு விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஒரே பொருளைக் கொண்டு செய்யப்பட்ட போதிலும் அவற்றின் உருவங்கள் பல வகைப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றுக்குப் பல பெயர்களும்அளிக்கப்படுகின்றன. இதே போலவே தான் கடவுளே பல்வேறு நாடுகளில், பல்வேறு வடிவங்களிலும், பெயர்களிலும் வழிபடப்படுகிறார்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சொந்த மதத்தையே பின்பற்ற வேண்டும். கிறிஸ்தவன் கிறிஸ்தவ மதத்தையும், ஒரு முஸ்லிம் இஸ்லாத்தையும் பின்பற்றி நடக்கவேண்டும். இதே போன்றே பிற மதத்தினரும் அவரவர்களது மதத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும். இந்துக்களுக்கு ஆரிய முனிவர்கள் காட்டிய சநாதன தர்மம் தான் சிறந்த பாதை.
தர்க்கம் செய்யாதே நீ உன்னுடைய சொந்த மதத்தில் இருந்துகொண்டு, உன்னுடைய மதமே சிறந்தது என்ற எண்ணம், கொண்டிருந்தால் அப்படியே இரு. மற்றவர்களுக்கும், அவர்களுடைய எண்ணங்களுக்கும், மதக்கொள்கைகளுக்கும் சம உரிமை கொடு. நீ சண்டை செய்வதாலோ, தர்க்கம் புரிவதாலோ பிறரை அவர்களது தவற்றை எடுத்துக்கூறி நம்பச்செய்ய முடியாது. கடவுள் திருவருள் இறங்கி வரும்போது ஒவ்வொருவரும் தங்களது தவறுகளை உணர்ந்து கொள்வார்கள்.
பலவகையான வழிபாட்டு முறைகளை ஏற்படுத்திக்கொடுத்ததே கடவுள் தான். இந்தப் பிரபஞ்சத்திற்கே தலைவனான அவர் பலவகை மனிதர்களின் அறிவு நிலைக்கேற்ப அவர்களுக்குப் பொருத்தமான நிலையில் இருப்பதற்காகப் பல வடிவங்களை தோற்றுவித்துள்ளார். ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளின் வயிற்றின் ஜீரண சக்திக்கு ஏற்றபடி பலவகையான உணவுப்பண்டங்களைச் சமைக்கிறாள். சமைப்பதற்கு மீன் இருந்தால், அந்தத் தாயானவள் குழந்தைகளின் ருசி, செரிக்கும் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப புலவு, மீன் ஊறுகாய், மீன் வறுவல், என்று பல விதமாக சமைத்துப்போடுவாள்.
-
-
கடவுள் உருவமற்றவர்தான், இருப்பினும் அவர் பலவேறு வடிவங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஒருதுறவியானவர்
பூரி ஷேத்திரத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலுக்குச்சென்றார். கோயிலுக்குள் சென்ற அவருடைய மனத்தில் பல ஐயங்கள் எழுந்தன. கடவுள் உருவமற்றவரா, இல்லை உருவத்தோடு கூடியவரா, என்று ஆச்சரியப்பட த் தொடங்கினார். அவர் ஒரு நாடோடியான துறவி.
எனவே அவர் கையில் ஒரு தண்டம் இருந்தது. அந்தத் தண்டத்தைக்கொண்டு பகவான் ஜகன்னாதரின் உருவத்தை தொட்டுப்பார்க்க விரும்பினார். எனவே தன் கையிலிருந்த தடியின் ஒரு நுனியைக் கடவுளுடைய சிலையின் இடப்பக்கத்தில் வைத்து வலது பக்கமாக நகர்த்தினார். அந்தத் தடியும் எந்த விதமான இடர்ப்பாடும் இன்றி நகர்ந்து வலப்புறம் சென்றுவிட்டது. சிலை இல்லாமல் வெறும் காற்றில் தடி நகருவது போல் இருந்தது. அவர் மறுபடியும் தனது தடியை வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக நகர்த்தினார். ஆனால் தடியானது சிலையால் தடுக்கப்பட்டு விட்டது.அப்போது தான் துறவிக்கு கடவுள் உருவமற்றவர் என்றும் உருவத்தோடு கூடியவர் என்றும் புரிந்தது.
ஒரு மனிதன் காட்டிற்குச்சென்றான். அங்கே அவன் ஒரு மரத்தில் அவனது வாழ்நாளில் முதன் முறையாக ஒரு பச்சோந்தியைப்பார்த்தான். பிறகு அவன் வேறு ஒரு மனிதனிடம், சகோதரா! நான் அந்தக் காட்டிலுள்ள ஒரு மரத்தில் ஒரு விநோதமான பிராணியைப்பார்த்தேன். அது சிவப்பு வண்ணத்தில் இருந்தது என்றான். அதற்கு அந்த மனிதன் நானும் கூட அந்தப் பிராணியைப்பார்த்தேன் அது சிவப்பு வண்ணமுடையதல்ல.அது பச்சை வண்ணமுடையது என்றான். வேறு ஒருவன் அங்கிருந்தான் அவன் அது ஏன் பச்சை வண்ணம் என்கிறாய், நானும் கூட அதைப் பார்த்தேன்.அது மஞ்சள் வண்ணமுடையது. என்றான். வேறு ஒருவன் அது ஊதா நிறமுடையது தான் என்றான். மற்றும் பலர் அது கருப்பு அல்லது நீல வண்ணமுடையது என்றனர். ஒவ்வொருவரும் தான் சொன்னவண்ணமுடையது தான் அந்தப்பிராணி என்றனர். ஒரு வழியாகத் திரும்பவும் அந்த மரத்திற்கே சென்று பார்க்க லாம் என்று தீர்மானித்து மரத்தடியை அடைந்தனர். அங்கே ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவன் அவர்களிடம், நான் இந்த மரத்தடியில் வசிப்பவன். எனக்கு இந்தப் பிராணியை நன்றாகத்தெரியும். நீங்கள் அனைவரும் கூறியது உண்மையே அது சில சமயங்களில் சிவப்பாக இருக்கும், சில சமயம் மஞ்சளாகவும், சில சமயம் பச்சையாகவும், சில சமயம் நீலநிறத்திலும் காணப்படும். எவன் ஒருவன் எப்போதும் கடவுளைப் பற்றியே தியானித்துக்கொண்டிருக்கிறானோ அவன் மட்டுமே பச்சோந்திக்குப் பல வண்ணங்கள் இருப்பதை அறிவான். சில சமயங்களில் அதற்கு எந்த வண்ணமும் இருக்காது. என்பதையும் அவன் அறிவான். இதை அறியாதவர்கள் தான் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொண்டு துன்பமடைகிறார்கள். கடவுளுக்கு உருவம் உண்டு, அவர் உருவமற்றவரும் கூட, அவர் எல்லையற்ற சமுத்திரத்திற்கு ஒப்பானவர்.
ஆன்மீகத்தில் ஆசைகொண்டு கடவுள்மேல் பக்தி கொண்டவர்களின் குளிர்ச்சியான பண்பின் தாக்கத்தால் , தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆவதைப்போன்று உருவமற்ற கடவுள் உருவமுடையவராகிறார். ஆனால் உண்மை அறிவு என்னும் கதிரவன் உதித்ததும் பனிக்கட்டி உருகிமறுபடியும் உருவமற்ற தண்ணீராக ஆவதைப்போன்று மீண்டும் உருவமற்றவராகிறார்.
Copyright © 2020 hindumatham.in - All Rights Reserved.
swami vidyananda-Guruji