Join WhatsApp Group 9789 374 109

Hindumatham.in

Hindumatham.inHindumatham.inHindumatham.in
  • Home
  • About Us
  • Sri Ramakrishna
  • vivekananda
  • Hindumatham
  • RK2
  • RK3
  • TITLES
  • More
    • Home
    • About Us
    • Sri Ramakrishna
    • vivekananda
    • Hindumatham
    • RK2
    • RK3
    • TITLES

Hindumatham.in

Hindumatham.inHindumatham.inHindumatham.in
  • Home
  • About Us
  • Sri Ramakrishna
  • vivekananda
  • Hindumatham
  • RK2
  • RK3
  • TITLES

63.வைணவ சமயம்

Additional Information

  

63.வைணவ சமயம்

-

வைணவ சமயம்(Vaishnavism) விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். 

இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இச்சமயம் தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.

-

உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். 

திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

-

வைணவ சமயத்தின் முக்கிய நூல்கள் 

-

வேதம், உபநிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட, நாரதிய, பத்ம, வராஹ புராணங்கள் ஆகும்.

-

வைணவ தத்துவம்

-

இராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். 

அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். 

பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், 

மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.

இதற்கு பிரமாணம் பிருஹதாரண்யக உபநிஷத்து(3-7-22):

யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:.

இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன்.

உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை(ஸ்வகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையாது. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் ஸஜாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும்(விஜாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்வைதம்(இரண்டற்றது) தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்டாத்வைதம்(விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்.

-

ஸ்ரீ

-

விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர். அன்னை தத்துவத்தை"தாயார்" என்று வைணவர்கள் அன்பொழுக அழைப்பர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும்(முழுவதும் வேதாந்தம் பேசும் ஸ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, திருமாலின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர். அதனாலாயே இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆசாரியனை தொழுத பின் தாயார் ஆகிய திருமகளை தொழுது பின் கோயில் மூலவரை தொழும் வழக்கமுள்ளது.

-

வைணவத்தில் மோட்சம்

-

படைத்தல் ஒரு மாயையல்ல, அது கடவுளின் ஒரு உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையை யொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். 

மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவதில்லை. பிறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோட்சம். 

மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான் முடியும்.

-

வைணவத்தில் கடவுள் 

-

இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணு, இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும்.. யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் இச்சுவையை நிறைய ருசிக்கலாம். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை.

-

வைணவ ஆச்சாரியர்கள்

-

புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்கள் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.

சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன்(956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். 

நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். இராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்த தேசிகர்.

இராமானுசரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.

தமிழ் பாசுரங்ளை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் எழுதி வைத்து, அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுஜர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார். திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

-

ஆழ்வார்கள்

-

வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள்12 பேர்.

1) பொய்கை ஆழ்வார்

2) பூதத்தாழ்வார்

3) பேயாழ்வார்

4) திருமழிசை ஆழ்வார்5) நம்மாழ்வார்

6) திருமங்கையாழ்வார்

7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்

8) பெரியாழ்வார்

9) ஸ்ரீ ஆண்டாள்

10) குலசேகர ஆழ்வார்

11) மதுரகவி ஆழ்வார்

12) திருப்பாணாழ்வார்

இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.

-

வைணவ சமய நூல்கள்:-

-

பொய்கையாழ்வார்- முதல் திருவந்தாதி

பூதத்தாழ்வார்- இரண்டாம் திருவந்தாதி

பேயாழ்வார்- மூன்றாம் திருவந்தாதி

திருமழிசையாழ்வார்- திருச்சந்தவிருத்தம், நான் முக திருவந்தாதி

பெரியாழ்வார்- பெரியாழ்வார் திருமொழி, திருப்பல்லாண்டு

ஆண்டாள்- நாச்சியார் திருமொழி, திருப்பாவை

தொண்டரடி பொடியாழ்வார்- திருமலை திருப்பள்ளியெழுச்சி

திருமங்கையாழ்வார்- சிறிய திருமடம், பெரிய திருமடம், பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்

திருப்பாணாழ்வார்- அமலாதி பிரான் என்று தொடங்கும் பதிகம்

குலசேகர ஆழ்வார்- பெருமாள் திருமொழி முகந்த மாலை(வட மொழி)

நம்மாழ்வார்- திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி

மதுரகவியாழ்வார்- கண்ணிநுன் சிறுதாம்பு என்ற பதிகம்

-

திருமண்

-

வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்

-

திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாளின் நாமங்கள்:

கேசவாய நம என்று நெற்றியிலும்

நாராயணாய நம என்று நாபியிலும்

மாதவாய நம என்று மார்பிலும்

கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்

விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்

மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்

த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்

வாமனாய நம என்று இடது நாபியிலும்

ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்

ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்

பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்

தாமோதராய நம என்று பிடரியிலும்

திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.

-

வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் வடகலை

தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் தென்கலை

-

வைணவ பிரிவுகள்

-

ஸ்ரீவைணவம், பிரம்ம வைணவம், ருத்ர வைணவம், குமார வைணவம் என பிரிவுகள் உண்டு. 

ஸ்ரீவைணவத்தில் வடகலை, தென்கலை, ராமாநந்தி, ஸ்வாமிநாராயண் என்று நான்கு பிரிவுகள் உள்ளன. 

பிரம்ம வைணவத்தில் தத்வவாதம், கெளடீய வைணவம் என்று இரு பிரிவுகள் உள்ளன.


64.சாக்த சமயம்

Additional Information

  

64.சாக்த சமயம்

-

வேதத்தில் புருஷன்-பிரகிருதி என்ற இரண்டு தத்துவங்கள் உள்ளன.

பிரகிருதி என்பது உலகத்தில் நிகழும் எல்லா சக்திகளின்,இயக்கங்களின் மொத்தம்.

புருஷன்(பிரம்மம்) என்பது செயலற்ற நிலை.

புருஷனை இயங்காத ஆண் என்றும். பிரகிருதியை இயங்கும் பெண் என்றும் கூறுவார்கள்.

இதை விளக்குவதற்காக எழுந்த உருவமே சவம்போல் வீழ்ந்து கிடக்கும் காலன்மீது காளி ஏறி நிற்கும் காட்சி

-

இந்த உலகத்தை இயக்கும் சக்தியை பெண் வடிவமாக போற்றி வணங்கும் வழிபாடு ஆதிகாலத்திலிருந்தே உள்ளது.

-

இந்த சக்தியை பொதுவாக இரண்டாக பிரிக்கிறார்கள்.1.வித்யாசக்தி2.அவித்யாசக்தி

நல்லவைகள் அனைத்தும் இணைந்த சக்தி வித்யாசக்தி

தீயவைகள் அனைத்தும் இணைந்த சக்தி அவித்யாசக்தி

-

சாக்தசமயம் இந்த இரண்டு சக்திகளையும் பத்தாக பிரிக்கிறது.இதை தசமகாவித்யா என்று அழைக்கிறார்கள்.

இந்த பத்து வழிபாடுகளும் உலகத்தில் உள்ள பத்து சக்திகளைக் குறிக்கிறது.

இந்த பத்து சக்திகளையும் மாயை என்று அழைக்கிறார்கள்

-

1.காளி 

-

காளி என்ற பெயர் வடமொழியில் உள்ள'காலா' என்ற வார்த்தையில் இருந்து எடுக்கபட்டதாகும். காளி தேவி காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாக கருதப்படுகிறார். காளி என்பதற்கு'காலம்' மற்றும்'கருப்பு' என்று பொருள். காலனின்(காலத்தைக்கடந்தவன்) துணைவி தான் காளி. 

இவரே ஆதி பராசக்தி(சக்தியின் ஆதி) என்றும் அழைக்கப்படுகிறார். இவரை வழிபடும் முறைகள் தந்திரங்கல் கூறபட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

தாந்திரீகர்கள் பெரும்பாலும் காளி தேவியையும், காளி தேவியின் யந்திரத்தையும் வைத்து வழிபடுகின்றனர்.வங்காளத்தில் காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது.

-

2.தாரா 

-

தாரா என்பது பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தியாகக் கூறப்படும் தெய்வம் ஆவாள். 

சாக்த மரபில்,பாற்கடல் கடைந்தபோது, ஆலகால நஞ்சை உண்ட சிவன், அதன் வீரியம் தாங்காமல் மயங்கியதாகவும், அப்போது, தாரையின் உருவெடுத்து ஈசனைத் தன் மடியில் தாங்கிய உமையவள், அவருக்குத் தன் ஞானப்பாலை ஊட்டி, அவரை சுயநினைவுக்குக் கொணர்ந்ததாகவும் ஒரு கதை சொல்கின்றது.

-

தாராவின் உருவவியல், காளியை ஒத்தது. இருவருமே, சிவன் மீது நின்ற நிலையிலேயே காட்சி தருவர். எனினும் தாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும் காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை. இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள்.

காளியிலிருந்து தாராவை வேறுபடுத்துவது, அவள் கரங்களில் தாங்கியிருக்கும் தாமரையும் கத்தரிக்கோலும் ஆகும். தாராவின் கரங்களில், கத்தி, கபாலம், தாமரை, கத்தரிக்கோல் என்பன காணப்படும். உலக இச்சைகளிலிருந்து தன் அடியவனை வெட்டி விடுவிப்பதை, கத்தரிக்கோல் குறிக்கின்றது

-

3.திரிபுரசுந்தரி 

-

திரிபுரசுந்தரி சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள். லலிதை, இராஜராஜேஸ்வரி முதலான பெயர்களிலும் அழைக்கப்படுபவள், பத்து மகாவித்யாக்களில் ஒருத்தியாவாள். ஸ்ரீவித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மிகவுயர் அம்சமான லலிதையே பார்வதியாகத் திகழ்கின்றாள். தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். பாசம், அங்குசம், கரும்புவில், ஐம்மலர் அம்புகள் என்பன ஆயுதங்கள்

திரிபுரசுந்தரி என்பது, மூவுலகிலும் பேரழகி என்றும், லலிதா என்ற அவள் பெயர், அவள் திருவிளையாடல்கள் புரிபவள் என்றும், இராஜராஜேஸ்வரி என்பது, அரசர்க்கெல்லாம் அரசி என்றும் பொருள்படும். பதினாறு பேறுகளையும் அருளும் இவள், பதினாறு வயது இளமடம்தையாக விளங்குவதால், சோடசி ஆகின்றாள். வடமொழியில் ஷோடசீ என்பது பதினாறாகும்

-

4.புவனேஸ்வரி 

-

புவனேஸ்வரி இந்து சமய நம்பிக்கைகளில் மகாவித்யா சக்தியின் பத்து அம்சங்களில் நான்காவது சொரூபமாக விளங்குகின்றாள். பௌதீக உலகின் தோற்றத்திற்கு காரணமான மகா சக்தியாக வர்ணிக்கப்படுகின்றாள். மேலும், உலகின் தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் போற்றப்படுகின்றாள். . புராணக்கதைகளும் இந்து மத ஐதீககங்களும் இவளை சக்தி வாய்ந்த பெரும் தெய்வமாக வர்ணிக்கின்றன.

-

5.பைரவி 

-

பைரவி என்பவர் ஒரு கொடூரமான மற்றும் திகிலூட்டும் இந்து தெய்வமும் தச மகாவித்யாக்களுள் ஒருவரும் ஆவார். அவர் கால பைரவரின் துணைவியார். பார்வதி தேவியின் அம்சமான பைரவி இந்துக்களால் வணங்கப்படுகிறாள். அஞ்சத்தகும் அன்னையின் வடிவம்.

திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடன் சேர்ந்து பார்வதி தேவி பைரவியாக நடனமாடியதாக நம்பப்படுகிறது. அவள் பயங்கர தோற்றத்துடன் கழுதையை வாகனமாக கொண்டவள். சிவரூபம் என்பதால் நெற்றிக்கண்ணும், நான்கு கரங்களும், புலித்தோல் ஆடையும் உடையவள்.

சுவர்ண பைரவரின் அரவணைப்பில் பைரவின் மடியில் அமர்ந்திருக்கும் பைரவி சொர்ண பைரவி என்று அழைக்கப்பெறுகிறாள்.

-

6.சின்னமஸ்தா

-

சின்னமஸ்தா அல்லது அரிதலைச்சி, பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தி. தன் தலையைத் தானே அரிந்து கையிலேந்தி, மறு கையில் கூன்வாள் ஏந்திக் காட்சி தரும் மிகக் குரூரமான வடிவம் இவளுடையது. "பிரசண்ட சண்டிகை" எனும் திருநாமமும் இவளுடையதே!

"தன்னைத் தியாகம் செய்தல்" என்ற கோட்பாட்டின் உருவகமே அரிதலைச்சி. சுயகட்டுப்பாடு, கலவி வேட்கை, கலவியாற்றல் முதலான பல கோட்பாடுகளின் உருவகமாகவும் இவள் கொள்ளப்படுகிறாள். தேவியின், வரமருளும்- வாழ்வைச் செறுக்கும் இரு குணங்களும் அரிதலைச்சிக்குப் பொருந்துகின்றன. குரூரமான தோற்றமும், ஆபத்தான வழிபாட்டு முறைகளும், உலகியலாளர்களுக்கும் சாதாரண தாந்திரீகர்களுக்கும், சின்னமஸ்தையின் வழிபாட்டைத் தடை செய்கின்றன.

செம்பருத்திப்பூ நிறத்தவளாக வருணிக்கப்படும் அரிதலைச்சி, பதினாறு வயதும், விரித்த கூந்தலும், பிறந்த மேனியுமாய்க் காட்சிதருவள். நாகத்தைப் பூணூலாகவும், கபாலமாலையும் அணிந்து, அரிந்த தன் தலையை இடக்கையில் ஏந்தி, அதை அரிந்த கத்தரிக் கோலை வலக்கையில் ஏந்தி அகோரமாய் நிற்பாள். அரிந்த முண்டத்திலிருந்து ஊற்றெடுக்கும் மூன்று குருதிப் பீய்ச்சல்களில் ஒன்றை அவளது அரிந்த தலையும், ஏனைய இரண்டை அவள்தன் தோழியரான இடாகினியும் வாருணியும் அருந்துவர். அவளுக்குப் பீடமாக, கலவியில் ஈடுபடும் சிவன் படுத்திருக்க, சிவனுடன் உறவாடும் கோலத்திலும் அரிதலைச்சி காட்சியளிப்பதுண்டு.

-

7.தூமாவதி 

-

தூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். "புகைத்தேவதை" எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். அசிங்கமான- வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள். அமங்கலகரமான சந்தர்ப்பங்கள், தீய சகுனங்களுக்குரிய பறவையான காகம், பீடமாதங்கள் முதலியவை இவளுக்குரியவையாகச் சொல்லப்படுகின்றன.

பெருவூழிக்குப் பின்னும், படைப்புக்கு முன்னும் விளங்கும் வெறுமையை தூமாவதி குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. தலைசிறந்த குருவாகவும், வரங்களை அள்ளித் தருபவளாகவும், தூமாவதியைச் சொல்வது வழக்கம்.

வறுமை, விரக்தி, நம்பிக்கையின்மை என்பவற்றின் தேவதையான, இவளை, வேத காலத் தெய்வம் நிர்ரித்ரீயுடனும் அமங்கலத்தைக் குறிக்கும் அலட்சுமி, மூதேவி போன்ற பழந்தெய்வங்களுடனும், இணைத்துப் பார்ப்பதுண்டு

தூமாவதி தந்திரமானது, அன்னை தூமாவதியை, வயதான அசிங்கமான கைம்பெண்ணாக வருணிக்கின்றது. மெல்லிய, உயரமான நோய்பீடித்தவளாக கானப்படும் அவள், மிகக் கொடியவள். கலைந்த கூந்தலும் அழுக்காடைகளுமே அவளது அலங்காரங்கள். பல்லுதிர்ந்து போனவளாக, ஒருகையில் முறமும், மறுகையில் அஞ்சேல் முத்திரையும் தாங்கி அவள் அமர்ந்திருப்பாள். காகத்தால் இழுக்கப்படும் தேரில் ஊரும் அவள், அடங்காப் பசியும் பெருவிடாயும் கொண்டவள்.

"பிரபஞ்ச சராசர சங்கிரகம்" நூலின் படி, கருநிறத்தவளான தூமாவதி, பாம்பணிந்து காணப்படுவாள். கத்தியும் கபாலமும் அவள் கைகளில் துலங்க, துடைப்பமும் முறமும் விளக்கும் தண்டமும் தாங்கியவளாக, பிச்சைக்காரி போல் ஆடையுடுத்து, அச்சமூட்டும் கூரிய கண்களுடன் காட்சி தருவாள். எலும்புகளைக் கடிக்கும் அச்சமூட்டும் ஒலி, அவள் வாயிலிருந்து எழுந்துகொண்டிருப்பதாக, "சாக்தப் பிரமோதம்" நூல் துதிக்கின்றது. அசுரப் பிணங்களை இரசித்துண்பவளாகவும், குருதிவிடாய் கொண்டவளாகவும் அவள் போற்றப்படுகிறாள்.

கைம்பெண்கள், அமங்கலத்தையும் கெட்ட சகுனத்தையும் குறிக்கும் இந்தியப் பண்பாட்டில், தெய்வீகக் கைம்பெண்ணான தூமாவதி, அச்சமூட்டுபவளாக வலம்வருகிறாள். ஏழைகள், பசித்தோர், நோயாளிகள், வறுமை, அழிந்த ஊர்கள், வனாந்தரங்கள், பாலைவனங்கள் அனைத்தையும் ஆளும் கட்டற்ற தெய்வம் அவள்.

கைம்பெண்ணாயினும், எழிலோடு விளங்குபவளாக, காமரூபிணியாக பிற்காலச் சித்தரிப்புக்களில் அவள் கூறப்படுகிறாள். போதையில் வழிபடப்படும் தேவதையாகவும், மது, மாமிசம்,மச்சம், மைதுனம், தானியம் சேர்த்த"பஞ்சமகார பூசை" மூலம் திருப்திப்படுத்த வேண்டியவளாகவும் அன்னை தூமாவதி சொல்லப்படுகின்றாள்.

சிவனே மறைந்த பின்னும் எஞ்சுபவள் இவளென்றும் காலத்தைக் கடந்தவள் என்றும் தூமாவதி போற்றப்படுகின்றாள். பிரபஞ்சம் எரிந்தழிந்த பின் எஞ்சும் பெரும்புகையே தூமாவதி. கொடியவளாயினும் இளகிய மனம் படைத்தவள். பெண்களால் சூழப்பட்டவள். மூதாட்டியாக சிறுவர்களுக்குப் பேரறிவை வழங்கும் குருவும் அவள்.தீமையில் விளைகின்ற, அல்லது தீமையின் முடிவைக் கட்டியம் கூறுகின்ற நன்மையை, அவள் குறிப்பால் உணர்த்துகின்றாள்.

-

8.பகளாமுகி 

-

பகளாமுகி பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி. தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும் அழித்தொழிப்பதாகச் சொல்லப்படுகிறது. வடநாட்டில்"பீதாம்பரி அம்மை" என்ற பெயரில் இவள் வழிபடப்பட்டு வருகிறாள்.

மஞ்சளாடை உடுத்து, இளம்பிறை சூடி, மஞ்சட் தாமரைகள் பூக்கும், தேன்கடல் நடுவேயுள்ள பொற்சிம்மாசனத்தில் பகளாமுகி அன்னை வீற்றிருக்கிறாள். பொதுவாக இருகரத்தவளாக சித்தரிக்கப்படும் அன்னையின் வடிவம், ஒருகரத்தால், அசுரன் ஒருவனைத் தாக்கும் தண்டத்தையும், மறுகரத்தால், அவன் நாவைப் பிடித்து இழுத்தபடியும் காட்சிதரும். அன்னையவள் எதிரிக்கு ஏற்படுத்தும் செயலிழப்பை இவ்வடிவம் சுட்டிக்காட்டுகின்றது. நாற்கரத்தவளாக விளங்கும் பகளாவின் திருவுருவம் பற்றியும் சில நூல்கள் சொல்கின்ற

"பீதாம்பரா தேவி", "பிரம்மஸ்திர ரூபிணி" என்ற பெயர்கள் தாங்கும் பகளா, எந்தப் பொருளையும் அதன் எதிர்மாறு நிலைக்கு மாற்றும் வல்லமை கொண்டவள். பேசுவோரை ஊமையாக்குவாள். அறிவை அஞ்ஞானம் ஆக்குவாள், தோல்வியை வெற்றி ஆக்குவாள். வெற்றியி மறைந்துள்ள்ளா தோல்வியையும், வாழ்க்கையில் மறைந்துள்ள மரணத்தையும், துன்பத்தில் மறைந்துள்ள இன்பத்தையும் சுட்டிக் காட்டி, அவளது பக்தர்களுக்கு, பேரறிவூட்ட அவளால் முடியும்.

-

9.மாதங்கி 

-

மாதங்கி ஆங்கார அம்சமாக கருதப்படுகிறார். சரசுவதியைப் போலவே, மாதாங்கியும், பேச்சு, இசை, அறிவு மற்றும் கலைகளை நிர்வகிக்கிறார். அமானுஷ்ய சக்திகளைப் பெறுவதற்கும், குறிப்பாக எதிரிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், மக்களைத் தன்னிடம் ஈர்ப்பதற்கும், கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கும், உயர்ந்த அறிவைப் பெறுவதற்கும் மாதங்கி தேவியின் வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது.

மாதங்கி வழிபாடு பெரும்பாலும் மாசுபாடு, தீங்கு விளைவித்தல் மற்றும் இந்து சமுதாயத்தின் கடைநிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது, இது அவரது மிகவும் பிரபலமான வடிவத்தில் காணப்படுகிறது. இவ் வடிவம்'உச்சிஷ்டா- சண்டலினி' அல்லது'உச்சிஷ்டா-மாதாங்கினி' என அழைக்கப்படுகிறது( உச்சிஷ்டா) என்பது சாப்பிட்ட பிறகு கழுவப்படாத கைகள் அல்லது இடது கையில் உணவு உண்பது போன்ற பொருளில் உள்ளதால் இவை இரண்டும் பண்டைய இந்து மதத்தில் தூய்மையற்றதாகக் கருதப்பட்டன.

மாதங்கி என்பது மரகத பச்சை வண்ணத்தைக் குறிக்கிறது. உச்சிஷ்டா மாதங்கினியின் கைகளில் உடுக்கை, வாள், மண்டையோடு போன்றவை காணப்படுகிறது. இவரின் இன்னொரு தோற்றமான ராஜ மாதங்கியின் உருவம் வீணை வாசிப்பவராகவும், கிளியை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்படுகிறது.

-

மாதங்கி என்று அழைக்கப்படும் இவரின் வழிபாடு முதன்மையாக இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெறப் பரிந்துரைக்கப்படுகிறது. 'மகா-பாகவத புராணத்தில்' ஒரு பாடல் ஒருவரின் எதிரிகளைக் கட்டுப்படுத்த இவரது அருளைக் கேட்கிறது, அதே நேரத்தில்'தந்திரசர' எனச் சொல்லப்படும் இவரின் மந்திரத்தை ஓதுவது, இவரது வடிவத்தைப் பற்றி தியானம் செய்வது மற்றும் இவரது சடங்கு வழிபாடு ஆகியவை மக்களைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுக்கும் என்று நம்மப்படுகிறது. அவரது பக்தர்கள், குறிப்பாக தாந்த்ரீக சாதகாக்கள்'(சாதுக்கள்), மாதங்கி தேவிக்கு படைக்கப்பட்ட மீதமுள்ள அல்லது ஓரளவு சாப்பிட்ட உணவை வழங்குவதன் மூலம் தங்களின் இழிநிலையைக் கடந்ததாகக் கருதப்படுகிறது( உச்சிஷ்டா) இதனால் அவர்களின் கர்வம் அழிகிறது. மாதாங்கியின் வழிபாடு அவரது பக்தருக்கு தடைசெய்யப்பட்ட மற்றும் மாசுபாட்டை எதிர்கொள்ள அனுமதிக்கும் வகையில் விவரிக்கப்படுகிறது. அவரை வழிபடும் பக்தர்களை இரட்சிப்பிற்கு இட்டுச் செல்கிறது அல்லது உலக இலக்குகளுக்கு அமானுஷ்ய சக்திகளைப் பெற அனுமதிக்கிறது எனக் கருதப்படுகிறது.

'புராச்சார்யனவா' என்பது மாதங்கி தேவியின் தோத்திரங்களை அவள் காதுகளில் கிசுகிசுப்பதன் மூலம் தேவி மகிழ்வதை விவரிக்கிறது. பக்தரின் அனைத்து கேள்விகளுக்கும் தெய்வம் பதிலளிக்கும் என நம்பப்படுகிறது.

-

10.கமலாத்மிகா

-

தசமஹா தேவியரில் பத்தாவது தேவி இவள். அதேநேரம், அனைத்து சக்திகளின் ஆற்றலும் உடையவள், கமலாத்மிகா. இவளே மஹாலட்சுமி. இவள் பரப்ரஹ்ம ஸ்வரூபிணி. இந்த சக்தி சுவர்ண நிறத்தினள். தங்கம், வெள்ளியாலான ஆபரணங்கள் அணிந்தவள். சந்திரனைப் போன்று மக்களை மகிழ்விப்பவள். இந்த சக்தியின் சாந்நித்தியமானது எங்கு குதிரைகள், நண்பர்கள், குழந்தைச் செல்வம் ஆகியன நிறைந்திருக்கும். ராஜ சம்பத்தை அள்ளி அருள்பவள். இவள் முறுவல் பூத்த முகத்தினள். ஆபரணங்களாலும் உயர்ந்த குணங்களாலும் ஜொலிப்பவள். இந்த தேவி நறுமணம் உடைய இடத்தில் வசிப்பவள். தான் திருப்தியாய் இருந்து, அனைவருக்கும் திருப்தியை அளிப்பவள். சூரியன் போன்று பிரகாசிப்பவள். உள்ளும் புறமுமாயுள்ள துன்பம் வறுமை ஆகியவற்றை போக்குபவள்.

இந்த தேவியை வழிபடும் அடியவர்களை குபேரசம்பத்து வந்தடையும். பசி, தாகம், பாப ரூபமாக விளங்கும் அனைத்தும் இந்த தேவியை துதித்தால் விலகும். வீட்டில் உள்ள வறுமை நீங்கும். மனதில் தோன்றிய ஆசைகள் நிறைவேறும் என்று விளங்குகின்றன சாஸ்திரங்கள். நித்யையான இந்த மகாலட்சுமி தேவி, விஷ்ணுவை விட்டுப் பிரியாது இருப்பவள். முக்குணங்களும் கொண்டவள். இவள் கண்ணுக்குப் புலப்படக் கூடியதும், கண்ணுக்குப் புலப்படாததுமான ரூபம் உடையவளாக இருந்துக்கொண்டு, இந்த அகில உலகங்களையும் வியாபித்து அருளுகிறாள். இந்த சக்தியே ஸமஸ்த வித்யா பேதங்களாகவும் திகழ்கிறாள். சவுந்தர்யம், சீலம், நன்னடத்தை, சவுபாக்கியம் எல்லாம் இவளேயாம்

-

தேவி பாகவதம்

-

தாய் உலகம் அனைத்திற்கும் அன்னை என்பதில் இருகருத்துக்கு சிறிதேனும் இடமில்லை. தேவி பாகவதம் தேவிதான் முழுமையான பராசக்தி என்கிறது. தேவி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் படைத்தார். தன்னுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் சரஸ்வதி, லஷ்மி, பார்வதி ஆகிய மூவரையும் படைத்தார். இந்த மூவரையும் மூன்று கடவுளர்கட்கும் அவரவர் படைப்பு முதலான தொழிலினை செம்மையாய் செய்ய அனுசரணையாக இருப்பதற்கென திருமணம் செய்து வைத்தார். படைப்புத் தொழில் செய்பவரான பிரம்மாவிற்கு சரஸ்வதியையும் காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு லக்ஷ்மியையும் அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு பார்வதியையும் மணம் முடித்து வைத்தார்.

-

சாக்த மதப்பிரிவுகள்

-

சாக்த மதத்திலும் இருபிரிவு உண்டு. ஒன்று வாமாசாரார்கள், மற்றொன்று தட்சிணசாரர்கள். சைவ தந்திரம்(தட்சணாசார தந்திரம்), அசைவ தந்திரம்(வாமாசார தந்திரம்) என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. உயிர் பலி கொடுத்து காளிபோன்ற தெய்வங்களுக்கு படையல் போட்டு வழிபடுபவர்கள் வாமாசாரர்கள்(அசைவ வழி) அதைபோல் எலுமிச்சை கனியை பலி கொடுத்து அதே காளியை வழிபடுபவர்கள் தட்சிணாசாரர்கள்

-

வாமாசாரர்கள் வேதங்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப விதிகளை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். தட்சிணாசாரர்களை ஸ்ரீ வித்யோபாசகர்கள் என்றும் வைதிகர்கள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் வேதத்தை முழுமையாக பின்பற்றுகிறார்கள் சந்தியாவந்தனம், மூதாதையர்களுக்கு கிரியை செலுத்துதல் வேள்விகள் போன்றவற்றைப் பின்பற்றுகிறார்கள்.

-

சாக்த ஆகமங்கள்

-

மற்ற மத பிரிவுகளை விட சாக்த மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத ஆகமங்கள் அதாவது தந்திரங்கள் உண்டு. அதனாலேயே காலப்போக்கில் சாக்தத்தை தாந்த்ரீகம் என்று கூறி மக்கள் அழைக்கலானார்கள்.

சாக்த தந்திரங்கள்

தந்திரங்கள் மொத்தம்500 உள்ளதாக கூறுவர். அதில் சாக்த தந்திரங்கள்64,சமய தந்திரங்கள்5, கலப்பு தந்திரங்கள்8,என மொத்தமாக77 உள்ளன என கூறுவர். இவற்றுள் முக்கியமானவை என கீழ்கண்டவற்றைக் குறிப்பிடலாம். முதலில் வைதீகர்கள் ஏற்காத சாக்த ஆகம தந்திரங்கள் சில….

1) மஹா மய சம்பார தந்திரம்

2) யோகினி சம்பார தந்திரம்

3) சந்திரஞான தந்திரம்

4) மாலினி தந்திரம்

5) வீணா தந்திரம்

6) தோடாலா தந்திரம்

சமய தந்திரங்கள்7:-

1 சந்திரகலா தந்திரம்

2 ஜ்ஞானார்னவ தந்திரம்

3 கூலேஸ்வரி தந்திரம்

4 ப்ரஹஸ்பதி தந்திரம்

5 புனேஸ்வரி தந்திரம்

6 துர்வாச தந்திரம்

7 தக்ஷிணாமூர்த்தி தந்திரம்

தவிர

1) பிரம்மி தந்திரம்.

2) மஹேஸ்வரி தந்திரம்

3) கெளமாரி தந்திரம்

4) வைஷ்ணவி தந்திரம்

5) வராஹி தந்திரம்

6) இந்திராணி தந்திரம்

7) சாமுண்டா தந்திரம்

8) சிவ தூதி தந்திரம்

9)பூதடாமர தந்திரம்

10)மகா நிர்வாண தந்திரம்.

11)குலர்ணவ தந்திரம்.

12) குலசாரம்.

13) பிரபஞ்சசாரம்.

14) தந்திரசாரம்.

15)குப்ஜிக தந்திரம்.

16) நில ஆகமம்.

17) காயத்ரி தந்திரம்.

18) யோகினி தந்திரம்.

19) மகா மாயா தந்திரம்.

20) தேவிபாத தந்திரம்

21)ருத்ர யாமளம்

22) பிரம்ம யாமளை,

23) விஷ்ணு யாமளம்.

24) லக்ஷ்மி யாமளம்

25) உமா யாமளம்

26) ஸ்கந்த யாமளம்

போன்றவைகள் சில…..

இப்போது நம் சித்தர்கள் எழுதிய தந்திரங்களோடு தொடர்புடையவைகள் சில:-

தக்ஷிணாமூர்த்தி தந்திரம், 

புவனேஸ்வரி தந்திரம், 

தேவி பாத தந்திரம், 

போன்ற பல சமஸ்கிரத தந்திர நூல்கள் நம் சித்தர் நூல்களான தக்ஷிணாமூர்த்தி ஞானம், புவனை கலை ஞானம், பூஜா விதி& மணோன்மணி பூஜா விதி போன் பல சித்தர்களின் தந்திர நூல்களுடன் தொடர்புடையது.

யோக மார்க்கத்தில், குண்டலினி, சக்தியார் விளங்கும் அம்பிகை மூலாதாரச் சக்கரம் தொடங்கி, மேல் நோக்கிய பயணத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் சகஸ்ரார சக்கரம் சென்று அடையும் பெரு நிலையை சிவசக்தி ஐக்கியம் என்று குறிக்கப்படுகிறது. தற்போது வங்காளத்தில் மட்டுமே சாக்த மதம் வலிமையுடன் திகழ்ந்து வருகிறது.

-

51 சக்தி பீடங்களும்- அவை அமைந்த இடங்களும்

தேவி பாகவதம் என்ற நூல், அம்பாளுக்கு108 சக்தி பீடங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் தந்திர சூடாமணி என்ற நூலில்51 சக்தி பீடங்கள் என்று தெளிவாக இருக்கின்றன. இந்த நூலை பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சக்தி பீடங்களையும், அவை அமைந்த இடங்களையும் வரிசையாகப் பார்க்கலாம்.

1. கொல்லூர் மூகாம்பிகை(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா.

2. காஞ்சி காமாட்சி(காமகோடி பீடம்), தமிழ்நாடு.

3. மதுரை மீனாட்சி(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு.

4. காசி விசாலாட்சி(மணிகர்ணிகா பீடம்), உத்தரபிரதேசம்.

5. மகாகாளம் சங்கரி(மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம்.

6. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி(சேது பீடம்), தமிழ்நாடு.

7. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி(ஞானபீடம்), தமிழ்நாடு.

8. திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள்(அருணை பீடம்), தமிழ்நாடு.

9. திருவாரூர் கமலாம்பாள்(கமலை பீடம்), தமிழ்நாடு.

10. கன்னியாகுமரி பகவதி(குமரி பீடம்), தமிழ்நாடு.

11. உஜ்ஜையினி மகாகாளி(ருத்ராணி பீடம்), மத்திய பிரதேசம்.

12. கும்பகோணம் மங்களாம்பிகை(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு.

13. ஜம்மு வைஷ்ணவி(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்.

14. விந்தியாசலம் நந்தாதேவி(விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்.

15. ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள்(சைல பீடம்), ஆந்திரா.

16. ருத்ரகோடி மார்க்கதாயினி(ருத்ரசக்தி பீடம்), இமாசலப்பிரதேசம்.

17. காளகஸ்தி ஞானாம்பிகை(ஞான பீடம்), ஆந்திரா.

18. கவுகாத்தி காமாக்யா(காமகிரி பீடம்) அசாம்.

19. ஸ்ரீநகர் சம்புநாதேஸ்வரி(ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்.

20. திருக்கடையூர் அபிராமி(கால பீடம்), தமிழ்நாடு.

21. கொடுங்கலூர் பகவதி(மகாசக்தி பீடம்), கேரளா.

22. கோலாப்பூர் மகாலட்சுமி(கரவீரபீடம்) மகாராஷ்டிரா.

23. குருஷேத்திரம் ஸ்தாணுபிரியை(உபதேச பீடம்) அரியானா.

24. திருவாலங்காடு மகாகாளி(காளி பீடம்) தமிழ்நாடு.

25. கொல்கத்தா பிரதான காளி(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்.

26. பூரி பைரவி(பைரவி பீடம்) ஒடிசா.

27. திராட்சவரமா மாணிக்காம்பாள்(மாணிக்க பீடம்) ஆந்திரா.

28. துவாரகை பத்ரகாளி(சக்தி பீடம்) குஜராத்.

29. திருக்குற்றாலம் பராசக்தி(பராசக்தி பீடம்), தமிழ்நாடு.

30. அஸ்தினாபுரம் முக்திநாயகி(ஜெயந்தி பீடம்) அரியானா.

31. குளித்தலை லலிதா(சாயா பீடம்) தமிழ்நாடு.

32. புஷ்கரம் காயத்ரி(காயத்ரி பீடம்) ராஜஸ்தான்.

33. சோமநாதம் சந்திரபாகா(பிரபாஸா பீடம்) குஜராத்.

34. பாசநாசம் உலகநாயகி(விமலை பீடம்), தமிழ்நாடு.

35. திருநெல்வேலி காந்திமதி(காந்தி பீடம்), தமிழ்நாடு.

36. திருவெண்காடு பிரம்மவித்யா(பிரணவ பீடம்), தமிழ்நாடு.

37. திருவையாறு தர்மசம்வர்த்தினி(தர்ம பீடம்), தமிழ்நாடு.

38. திருவொற்றியூர் திரிபுரசுந்தரி(இஷீபீடம்), தமிழ்நாடு.

39. தேவிபட்டினம் மகிஷமர்த்தினி(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு.

40. நாகுலம் நாகுலேஸ்வரி(உட்டியாணபீடம்) இமாசலப்பிரதேசம்.

41. ஜலாந்திரம் திரிபுரமாலினி(ஜாலந்திர பீடம்) பஞ்சாப்.

42. திரியம்பகம் திரியம்பகதேவி(திரிகோணபீடம்) மகாராஷ்டிரா.

43. மைசூர் சாமுண்டீஸ்வரி(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா.

44. பிரயாகை ஸ்ரீலலிதா(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்.

45. சிம்லா நீலாம்பிகை(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்.

46. துளஜாபுரம் பவானி(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா.

47. பசுபதி காட்மாண்ட் பவானி(சக்தி பீடம்) நேபாளம்.

48. கயை மந்த்ரிணி(திரிவேணி பீடம்) பீகார்.

49. கோகர்ணம் பத்ரகர்ணி(கர்ண பீடம்) கர்நாடகா.

50. ஹஜ்பூர் விரஜை ஸ்தம்பேஸ்வரி(விரஜா பீடம்) உ.பி.

51. மானசரோவர் தாட்சாயிணி(தியாக பீடம்) திபெத்.


65. இரண்டு பாதைகள் - நிவிருத்தி,பிரவிருத்தி

Additional Information

  

65. இரண்டு பாதைகள் - நிவிருத்தி,பிரவிருத்தி

-

இவ்வுலகில் சாங்கியர்களுக்கு ஞானயோகம் என்றும், 

யோகிகளுக்கு கர்மயோகம் என்றும் இரண்டுவிதமான நன்னெறிகள் என்னால் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது 

என்று பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

உலகத்தையும்,உடலையும்,எல்லாவற்றையும் விடும் வழிக்கு சந்நியாசம் என்று பெயர். இதை நிவிருத்தி மார்க்கம் என்றும் அழைக்கிறார்கள்.

உலகத்தையும்,அனைத்தையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதற்கு யோகம் என்று பெயர்.இதற்கு பிரவிருத்தி மார்க்கம் என்று இன்னொரு பெயர் உள்ளது.

-

சில உபநிடதங்கள் யோக சாஸ்திரம் என்று அழைக்கப்படுகின்றன. 

சில உபநிடதங்கள் சந்நியாச சாஸ்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உபநிடதங்களில் மிகச்சிறந்ததாக கருதப்படுவது பகவத்கீதை.இது ஒரு யோக சாஸ்திரம்.

-

திருமணமானவன் தன் கடமையை புறம்தள்ளிவிட்டு, சந்நியாச மார்கத்திற்கு செல்ல முடியாது. 

யாருக்கு எல்லா கடமைகளும் முடிந்துவிட்டதோ அவர்களே சந்நியாச மார்க்கத்திற்கு தகுதியானவர்கள்.

சிலர் சிறு வயதிலேயே சந்நியாச மார்க்கத்திற்கு செல்கிறார்கள்.

-

கடமையை செய்துகொண்டே ஞானம் அடைய விரும்புபவர்களுக்கு யோக மார்க்கமே சிறந்தது

அதனால் ஸ்ரீகிருஷ்ணர் யோக மார்க்கத்தை அர்ஜுனனனுக்கு உபதேசித்தார்.

-

மகாபாரத காலத்தில்கூட யோக மார்க்கம் பிரபலமாக இல்லை. சந்நியாச மார்க்கமே பிரபலமாக இருந்திருக்கிறது.அதை கிருஷ்ணரே கூறுகிறார்.காலத்தால் யோக மார்க்கம் மறக்கப்பட்டுவிட்டது.எனவே மீண்டும் இன்று உனக்கு இதை உபதேசிக்றேன் என்கிறார்.

பொதுவாக தமிழ்நாட்டில் சந்நியாச மார்க்கமே பிரபலமாக இருக்கிறது. குடும்பத்தில் தீராத தொல்லை ஏற்படும்போது அதை அப்படியே விட்டுவிட்டு சந்நியாசத்திற்கு சென்றவர்கள் ஏராளம்.இது கோழைத்தனம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். 

-

பிரச்சினைகள் ஏற்படும்போது துன்பங்களை அனுபவிப்பதை தவிர வேறு வழி இல்லை.இந்த துன்பங்கள் ஏன் ஏற்படுகின்றன? நாம் முன்பு செய்த தீய செயல்களால். இதை சரி செய்ய வேண்டும்.அல்லது துன்பங்களை அனுபவித்து அந்த வினையை தீர்க்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு பாதியில் ஓடுவதால் பிரச்சினை தீராது.அப்படி பாதியில் ஓடினால் தன்னாலும் ஞானம் பெற முடியாது. குடும்பத்தில் உள்ள எல்லோரும் மேலும் துன்பத்தில் சிக்கிக்கொள்வார்கள்.

-

ஞானம் பெற வேண்டுமானால் மனம் சமநிலையில் இருக்க வேண்டும். மனதிற்கு திருப்தி ஏற்பட வேண்டும். நான் எனது எல்லா கடமைகளையும் முடித்துவிட்டேன்.இப்போது திருப்தியாக இருக்கிறேன் என்ற மனநிறைவும்.மனஅமைதியும் ஏற்பட வேண்டும். பாதியில் குடும்பத்தைவிட்டு ஓடுபவர்களுக்கு இது கிடைக்காது. காலம் முழுவதும் மனஅமைதியில்லாமல் வாழ்ந்து,மீண்டும் மறுபிறவியை அடைவார்கள்.

-

சந்நியாச மார்க்கமே சிறந்தது என்று நினைப்பவர்கள்,முதலில் தங்கள் கடமைகள் அனைத்தையும். முடிக்கவேண்டும். பெற்றோர்களுக்கு செய்யும் கடமை,மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை,குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமை,நாட்டிற்கு செய்ய வேண்டி கடமை,இயற்கைக்கு செய்ய வேண்டிய கடமை,குருவுக்கு(ரிஷி யக்ஞம்) செய்ய வேண்டிய கடமை என்று கடமைகள் ஏராளம் உள்ளன.

-

இரண்டு பாதைகளும் முடிவில் ஒரே இடத்தைநோக்கியே செல்கின்றன.

-

சந்நியாசம், யோகம் இரண்டும் சிறப்பானதுதான், என்னினும் கர்மத்தை துறப்பதைவிட அதாவது சந்நியாசத்தைவிட கர்மத்தை செய்வது(கர்மயோகம்) மேலானது(5.2) என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்

இரண்டு பாதைகள் இருக்கின்றன என்று பார்த்தோம்

-

1. உலகியல் வாழ்க்கையிலிருந்து, உலக கடமைகளிலிருந்து, அனைத்து செயல்களிலிருந்தும் விடுபட்டு வாழும் நிலை சந்நியாசம்..இதை முற்காலத்தில் சாங்கிய மார்க்கம் என்று அழைத்தார்கள்

2.உலகியல் வாழ்க்கையில் இருந்துகொண்டு,உலகியல் கடமைகளை செய்துகொண்டு, 

செயல்கள் செய்துகொண்டே மேலான நிலையை அடையும் நிலை.

இதை யோகம் அல்லது கர்மயோகம் என்று அழைக்கிறோம்

-

உலகத்தில் வாழும் மனிதர்கள் பல்வேறுஅனுபவங்களையும், துன்பங்களையும் அனுபவித்தபிறகு உலகத்திலிருந்து விலகி சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

துன்பத்திற்கு காரணம் ஆசை.

துன்பத்தை நீக்க வேண்டுமானால் ஆசைகளை அனுபவிப்பதைவிட அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்று சந்நியாச மார்க்கம் கூறுகிறது.

-

இந்த இரண்டு பாதைகளும் வேறுவேறானாலும் சேரும் இடம் ஒன்றுதான்

குழந்தைகள்தான் சாங்கியத்தையும்(சந்நியாச மார்க்கம்) யோகத்தையும்(கர்ம மார்க்கம்) வெவ்வேறானவை என்று பேசுவார்கள். பண்டிதர்கள் அவ்வாறு பேசுவதில்லை. எதையாவது ஒன்றை உறுதியாக கடைபிடிக்கிறவன் இவ்விரண்டினுடைய பலனையும் பெறுகிறான்(5.4) என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்

சந்நியாச மார்க்கத்தில் செல்பவன் உடலை செயல்புரிவதிலிருந்து நிறுத்துகிறான்.

பின்னர் மனத்தை கவனிக்கிறான்.மனத்தில் எழும் எண்ணங்களை படிப்படியாக கவனித்து அடக்குகிறான்.

எனவே வாழ்க்கையில் பெரும்பாலன நேரம் தியானத்திலேயே கழிகிறது

முடிவில் அவனது ஆன்மா உடலிலிருந்து விடுதலைபெற்று எல்லையற்றதாகிவிடுகிறது.

உடலை செயல்புரிவதிலிருந்து நிறுத்தவேண்டுமானால் படிப்படியாக உணவை குறைத்துக்கொண்டே வரவேண்டும். சத்வ உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும்.

.

யோக மார்க்கத்தில் செல்பவன் தொடர்ந்து செயல்புரிந்துகொண்டே இருக்கிறான்.உணவு விசயத்தில் அதிக கட்டுப்பாடுகள் தேவையில்லை.உடல் நன்றாக இயங்குவதற்கு தேவையான உணவுகளை உட்கொள்கிறான்.

மனத்தில் எழும் ஆசைகளைஅனுபவிப்பதற்கு தடைகள் இல்லை.

எந்த ஆசைகளை அனுபவிக்கவேண்டும்,எதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற அனுபக அறிவு அவனிடம் இருக்கும்.

எனவே மனம் அவனது முழுகட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆனால் உடல் இயங்கிக்கொண்டே இருப்பதால் பிரம்மத்தை அடைவது கடினமாகிறது.

உடலை ஓரிடத்தில் அப்படியே நிலையாக வைத்திருப்பது என்பது கர்மயோகிக்கு சுலபத்தில் முடியாத காரியம்.

.

யோகயுக்தன் என்ற நிலையை அடைந்தபிறகு அவனது உடல் கர்மம் செய்வதிலிருந்து விலகிநிற்கிறது.

அப்போது எளிதில் பிரம்மத்தை அடைகிறான்.

-

கர்ம யோகத்தை செய்யாமல், சந்நியாசத்தை அடைவது எளிதல்ல. 

யோகயுக்தன் (யோகத்தில் நிலைபெற்றவன்) முனிவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.(5.6) என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்

.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை சம்மாளிக்க முடியாமல் சிலர் சந்நியாச வாழ்க்கைக்கு வருகிறார்கள்.அவர்கள் சந்நியாசத்தின் எல்லையை அடைய முடியாது.

மனத்திலிருக்கும் எண்ணங்களை நீக்கினால்தான் சந்நியாசத்தை அடைய முடியும். 

அனைத்து கடமைகளையும் முறையாக நிறைவேற்றியவனது மனம் அமைதியாக இருக்கும்.

தியானத்தில் ஈடுபடும்போது எந்த கடமைகளை செய்யாமல் புறக்கணித்தோமோ அந்த கடமைகள் பற்றிய பதிவுகள் மனத்தில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கும்.

.

யோகயுக்தன் என்பவன் யார். கடமைகளை எல்லாம் முறையாக செய்து முடித்து நிறைவு கண்டவன்.

அவன் முனிவன் என்று அழைக்கப்படுகிறனான்.அந்த முனிவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

-

புத்தமதம் இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பு மக்கள் கர்மயோகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டார்கள்.பல்வேறு கடமைகளை செய்து வந்தார்கள்.இந்த கடமைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து அதிலிருந்து விடுபட முடியாமல் தவிர்த்தார்கள்.கர்மயோகத்தின் வழியாக எல்லா கடமைகளையும் முடித்து பிரம்மத்தை அடைவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது.

புத்தமதம் தோன்றிய பிறகு சந்நியாச மார்க்கம் முக்கியத்துவம் பெற்றது. ஒரு மனிதன் உலகத்தைவிட்டு விலகி சந்நியாசம் பெற்று மடங்களில் வாழ்ந்தால்தான் விடுதலை(முக்தி) அடைய முடியும் என்று போதிக்கப்பட்டது

சுமார் ஆயிரம் ஆண்டுகளில் வடஇந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் துறவிகளாகி இல்லற,உலகியல் கடமைகளை புறக்கணித்து துறவிகளானார்கள்.இல்லறத்தார்களின் எண்ணிக்கையைவிட துறவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

புத்தமதம் தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்குள் சந்நியாச மார்க்கம் கடும் தோல்வியை சந்தித்து.அதற்கு காரணம் மக்கள் ஒழுக்கம் தவறியவர்களானார்கள். விரைவில் உலகத்தைவிட்டு விலகி சந்நியாசியாகிவிட வேண்டும் என்பதே அனைவரின் கடமை என்று நினைத்தார்கள்.

-

நிவிருத்தி மார்க்கம்-சிற்றின்பங்களைத் துறக்கும் பாதை

...

எல்லாவற்றையும் துறந்து நிவிருத்தி மார்க்கத்தில் செல்லும் துறவிப் பெருமக்கள் அனைவருக்குமே வகுக்கப்பட்ட பாதையானது குடும்பஸ்தர்களின் பாதையினின்றும் மாறுபட்டது. 

..

1.பிரம்மசர்ய விரதத்தை மேற்கொள்ளுவதாகச் சபதம் ஏற்ற ஒரு சன்னியாசி உடலாலும், உள்ளத்தாலும் தூய்மையுடன் இருக்க வேண்டும்.

2.அனைத்துப் பெண்களையும் தனது சொந்த தாயைப் பார்ப்பது போல் எண்ணி மரியாதை காட்ட வேண்டும்.

3.குடும்பஸ்தர்கள் வாழும் இடத்தில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து அதன் மூலமே உடலை வளர்க்க வேண்டும். 4.எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதுடன் தனது நேரத்தின் பெரும்பான்மையான பகுதியை நீதி நூல்களைப் படிப்பதிலும் கடவுளைப்பற்றி எண்ணுவதிலும் செலவழிக்க வேண்டும். 

5.தனக்காக வீடு செல்வம் போன்றவற்றை வைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு குடிசையிலோ, கோயிலிலோ,அல்லது ஒரு மரத்தின் அடியிலோ வசிக்க வேண்டும். 

6.உண்மையானவனாக இருக்க வேண்டும்.உயிரே போவதானாலும் ஒருபோதும் பொய் சொல்லக்கூடாது

7.கொல்லாமையைக் கைக்கொள்ள வேண்டும். மன அமைதியுடன் வாழ வேண்டும். அனைத்து உயிரினிடங்களிடமும் கருணையுள்ளம் கொண்டிருக்க வேண்டும்.

8.ஓர் அரசரையோ அதிகாரிகளையோ அல்லது அவருக்கிணையான பிரமுகர்களையோ சென்று பார்க்கக் கூடாது. அப்படி அவர்கள் துறவியைப் பார்க்க விரும்பினால் அவர்கள் தான் துறவியின் இருப்பிடம் தேடி வர வேண்டும். அப்படி வருபவர்களை துறவியானவர் மற்றவர்களிடம் காட்டும் அதே அன்பான உள்ளத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.ஏழை,பணக்காரன்,நல்லவன்,கெட்டவன் என்ற எந்தப்பாகுபாட்டையும் பாராது அனைவரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். 

9.போற்றல், தூற்றல், இன்பம், துன்பம், எதையுமே பொருட்படுத்தக்கூடாது.அவரது ஒரே குறிக்கோள் கடவுள் தன்மையை உணர்வது என்பதாக இருக்க வேண்டும்.

10.துறவி பணத்தையோ,பொருட்களையோ சேர்த்துவைக்கக்கூடாது.நாளைக்கு தேவைப்படலாம் என்ற எண்ணத்துடன் எதையும் சேர்க்கக்கூடாது.

11.இல்லறத்தார்களுடன் நெருங்கி பழகக்கூடாது. தன்னைப்போன்ற துறவிகளுடன் பழகலாம்

..

பிரவிருத்தி மார்க்கம் சிற்றின்பங்களை அனுபவிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ள வழி 

....

‘ மகாநிர்வாண தந்திரம்’ என்ற நூல் கீழே பட்டியலிட்டுக் கூறப்பட்டவைகளை 

இல்லறத்தார்களின் கடமைகள் என்கிறது. அவை‘ பிரவிருத்தி மார்க்கம்’ என்ற தலைப்பில் அடங்கும். 

1.குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் மனிதனின் குறிக்கோள் இறை அனுபூதி பெறுதலே. 

அதை அடைய மத நூல்களில் அவன் செய்ய வேண்டிய கடமைகளாகக் கூறப்பட்டவைகளைச் செய்தே ஆக வேண்டும் அவன்தான் செய்யும் கடமைகளின் பலன்களைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பது என்பதை நிரந்திரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். 

.

2.நேர்மையான வழியில் தான் பொருள் ஈட்ட வேண்டும். அவனுடைய வாழ்க்கையானது கடவுளுக்கும், ஏழைகளக்கும், திக்கற்றவர்களுக்கும் தொண்டு செய்வததான் என்பதை உணர வேண்டும். 

.

3.எப்போதும் பெற்றோர்களை மகிழச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். பெற்றோர்களின் முன்னிலையில் தமாஷாகப் பேசக் கூடாது. குழந்தைத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. கோபத்தையும் காட்டக் கூடாது. அவன் உட்கார்ந்த கொண்டிருக்கும்போது அவனது பெற்றோர்கள் வந்தால் அவன் உடனே எழுந்து நிற்க வேண்டும். அவ்வாறு செய்வது அவன் பெற்றோர்போல் வைத்தள்ள மதிப்பையும், மரியாதையையும் காட்டும். பெற்றோர்கள் அமரச் சொன்னால் மட்டுமே அவர்கள் முன்னிலையில் உட்காரலாம். 

.

4.இல்லற வாழ்க்கை வாழ்க்கை நடத்தபவன் பெற்றோர்களுக்கு உணவு அளிப்பதற்கு முன்னதாக உண்ணக் கூடாது. அதேபோல் மனைவி, குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு உணவு அளித்த பின்னரே உண்ண வேண்டும். 

5.ஆயிரம் வகையான இன்னல்களை அனுபவிக்க நேரடினும் பெற்றோர்களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். ஏனெனில் அவன் தன்னுடைய உடலை அளித்த பெற்றோருக்குக் கடன் பட்டிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. 

.

6.மனைவியைத் திட்டவும் கூடாது. அவளுடைய உணர்வகளை அவமதித்து அவளைத் துன்பத்திற்குள்ளாக்கக் கூடாது. மனைவியை பெற்ற அன்னையைப் பாதுகாப்பது போல் பாதுகாக்க வேண்டும். 

.

7.இந்து சமூகத்தின் திருமணமான மகனும் கூடப் பெற்றோர்களுடன் வசிக்கிறார்கள். வயதான பெற்றோர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். 

தைத்திரீய உபநிஷமானது மகன் தாயாருக்குத் தொண்டு கடவுளாகப் பாவிக்க வேண்டும் என்கிறது. 

.

8.கணவன் மனைவியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நடந்துகொள்ள வேண்டும். 

மனத்தாலும் வேறு ஒரு பெண்ணை விரும்பினால் பயங்கரமான நரகத்திற்கு செல்ல நேரிடும். 

.

9.கணவன் எப்பொழுதும் மனைவிக்கு துணி மணிகள் வாங்கிக் கொடுத்தும் பணம் கொடுத்தும் அன்பு செலுத்தியும் உண்மையாக நடந்து கொண்டும், இனிமையான வார்த்தைகள் பேசியும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மனைவியைத் துன்புறுத்தக் கூடிய எந்தவிதமான செயல்களையும் செய்யக்கூடாது.

10.ஒரு குடும்பத் தலைவன் பெண்கள் மத்தியில் பேசும் போது தகுதியற்ற சொற்களை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.அத்தோடு தான் சாதித்தவற்றைப்பற்றிப் பெருமை அடித்துக் கொள்ள க் கூடாது நான் இதைப் பண்ணி விட்டேன், நான் அதைச்சாதித்து விட்டேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.பொதுப்படையாகத் தன்னுடைய புகழைப்பற்றியோ, தன்னுடைய செல்வச் செழிப்பைப் பற்றியோ சமூகத்தில் தனக்குள்ள பெருமையான இடத்தைப் பற்றியோ சொல்லக்கூடாது.அதே போல் தன்னுடைய ஏழ்மையையும் சொல்லக்கூடாது.பிறர் தன்னிடம் நம்பிக்கை வைத்துக் கூறியவற்றையும் வெளியில் சொல்லக்கூடாது. இல்லறத்தான் தன்னுடைய உணவு,உடை மற்றும் வெளித் தோற்றத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. 

-

11.உடல் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். அவனுடைய உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும்.எப்பொழுதும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும்.தைரியசாலியாக இருப்பதுடன் ஒரு கதாநாயகனைப்போன்று எதிரிகளைப் போரிட்டுத் தடுக்கத் தெரிய வேண்டும். ஒரு கோழையைப் போல் நடந்து கொள்ளக் கூடாது. தன்னுடைய கோழைத்தனத்தை அகிம்சையின் காரணமாக என்றோ எதிர்த்துப் போராடக் கூடாது என்றோ சப்பை கட்டு கட்ட கூடாது.ஓர் ஆட்டுக் குட்டியைப் போன்று தன்னுடைய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சாதுவாக நடந்து கொள்ள வேண்டும்.

-

12.மகன் நான்கு வயதை அடையும் வரையில் மிகவும் அன்பு காட்டி வளர்க்க வேண்டும். பின்னர் பதினாறு வயது பிராயத்தை அடையும் வரையில் தகுந்த கல்வியை அளிக்க வேண்டும். இருபது வயது அடைந்த மகனை ஒரு வேலையில் அமர்த்துவதுடன் அவனைத்தனக்குச் சமமானவனாக நடத்த வேண்டும். மகளையும் கூட அதே போலவே நடத்துவதுடன் கல்வியையும் அளிக்க வேண்டும். 

-

13.மகளின் திருமணத்திற்காக அவளுக்கு நகைகளையும் பணத்தையும் அளிக்க வேண்டும். ஒரு குடும்பஸ்தன் தன்னுடைய சகோதர சேகோதரிகளின் நன்மையையும் பாதுகாக்க வேண்டும். அவர்கள் ஏழைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். மற்ற உறவினர்களுடமும் நண்பர்களிடம், வேலைக்காரர்களிடமும், சொந்த ஊரைச் சேர்ந்தவர்களிடமும் நல்ல முறையில் நடந்துதகொள்ள வேண்டும். பணவசதி படைத்த ஒருவன் தேவைப்பட்ட உறவினருக்கும், ஏழை மக்களுக்கும் உதவாமல் இருந்தால் அவனை ஒரு மனிதனாக மதிக்காமல் விலங்காகவே கருதுவார்கள். 

-

14.இல்லறத்தார்கள் கெட்ட மனிதர்களுக்கு ஒரு போதும் மரியாதைக் காட்டக் கூடாது. அவன் செய்த தீய செயல்களை மன்னிக்கவும் கூடாது. நற்பண்புகள் நிறைந்தவர்களையும், உயர்ந்த குணங்களைக் கொண்டவர்களையும் மதித்த நடக்க வேண்டும். நம்பத்தகுந்தவர்களிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். அவ்வாறு நட்ப கொள்வதற்கு முன்னரே அவரது நடவடிக்கைகள் மற்ற மனிதர்களுடன் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொள்தல் நலம். நற்பெயரைச் சம்பாதிக்க நேர்மையானதும், உண்மையானதுமான வழிகளிலேயே முயற்சி செய்ய வேண்டும். அவனுடைய வார்த்தைகள் மகிழ்ச்சியை அளிப்பவையாகவம், பிறருக்கு நன்மை பயக்கும் விதத்திலும் இருக்க வேண்டும். 

-

15.குடும்பஸ்தன் ஒருபோதும் சூதாடக் கூடாது.மது அருந்தக்கூடாது. அவனது நடத்தையால் பிறருக்கு எத்தகைய துன்பமும் வரக்கூடாது. குடும்பஸ்தன் தான் செல்வந்தனாக வேண்டும் என்பதற்காக நேர்மையான வழிகளை நாடாதவன் அறநெறிகளிலிருந்து பிறழ்ந்தவனாகிறான். சோம்பேறியாக வெட்டிப்பொழுது போக்குபவனை பாவியாகக் கருதுவார்கள்.தன்னை அண்டியுள்ளவா்களைக் காப்பாற்றுவதற்காக பொருள் ஈட்டும் முயற்சியில் சுறுசுறுப்புடன் ஈடுபட வேண்டும்.

-

16.மக்களின் நன்மைக்காக குடும்பஸ்தன் சேவையில் ஈடுபட வேண்டும்.பொதுமக்கள் தண்ணீா்குடிப்பதா்காகவும், விவசாயம் செய்வதற்காகவும், நீா்த்தேக்கங்களைக் கட்ட வேண்டும்.கால் நடையாகச் சாலைகளில் செல்பவர்களின் நன்மைக்காகச் சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட வேண்டும்.யாத்ரீகர்களுக்காக நிழற்குடைகளை அமைக்க வேண்டும்.மேலும் ஆறுகளைக் கடக்க பாலங்களைக் கட்டுவதுடன் சிறந்த சாலைகளையும் அமைக்க வேண்டும்.இவ்வாறான செயல்களை தன்னலமற்ற உள்ளத்தோடு சேவை மனப்பான்மையுடன் செய்யும் குடும்பஸ்தனும், ஒரு பெரிய யோகி தன்னுடைய தவத்தின் பயனால் அடையக்கூடிய உயர்ந்த ஆன்மீக நிலையை அடைவான்.

  

நாம் ஒரு நபரிடம் பற்றுவைப்பது எளிது.அவரிடமிருந்து மனத்தை விலக்குவது கடினம்.

பற்று வைப்பதைப்போலவே பற்றை விலக்கும் பயிற்சியையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

-

யோகம் என்ன சொல்கிறது? பற்றின் அளவை அதிகரிக்க சொல்கிறது.

எந்த அளவுக்கு அதிகரிக்கவேண்டுமென்னால், உலகத்திலுள்ள அனைத்துமே என்னுடையது.என்னைத்தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நானே அனைத்துமாகியிருக்கிறேன் என்கிறது. 

நானே அனைத்துமாயிருந்தால் இந்த சிறிய உடல்மீதுகொண்டுள்ள சிறிய பற்று மறைந்துவிடும். 

இந்த சிறிய உடலை பாடுபட்டு காப்பாற்றவேண்டும் என்ற கவலையும் மறைந்துவிடும். 

ஏனென்றால் உலகத்திலுள்ள கோடிக்ககணக்கான உடல்களும் என்னுடையதுதான். 

ஒரு உடல் அழிந்தாலும் கோடிக்கணக்கான உடல்கள் மூலம் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

எனக்கு மரணமே இல்லை. இதை அனுபவத்தில் உணரவேண்டும்.

ஒவ்வொரு உயிரும் அனுபவிப்பது சிற்றின்பம். நானே அனைத்து உயிர்ககளுமாயிருக்கிறேன் என்பதை அறியும்போது கிடைப்பது பேரின்பம்.

-

சந்நியாசம் என்ன சொல்கிறது? பற்றை படிப்படியாக விடச்சொல்கிறது

நான் என்பது என்ன? உடலா? இல்லை.

நான் என்பது எண்ணங்களா? இல்லை.

நான் என்பது உருவமற்ற,எல்லையற்ற நிலை.

நான் ஆன்மா. ஆன்மாவைத்தவிர அனைத்தையும் விட்டுவிட வேண்டும்.

முதலில் இந்த உலகத்தைவிட்டுவிட வேண்டும்.

பின்பு சொந்தங்களை விடவேண்டும்.

பிறகு உடலைவிட்டுவிட வேண்டும்

கடைசியில் மனத்தையும் விட்டுவிட வேண்டும்.

அப்போது நான் ஆன்மா என்பது அனுபவமாகும்.

-

இப்போது பற்றை அதிகரிப்பதும் கடினம், பற்றை விடுவதும் கடினம் என்பது புரிந்திருக்கும்.

-

பற்றின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்ல வேண்டும். 

அதே நேரம் படிப்படியாக ஒவ்வொரு பற்றையும் விட்டுக்கொண்டே வரவேண்டும்.

-

இந்த இரண்டும் இரண்டு முரண்பாடுகள்.

மேற்கே செல்பவன் கிழக்கிலிருந்து விலகுகிறான்.

கிழக்கே செல்பவன் மேற்கிலிருந்து விலகுகிறான்.

அதுபோலத்தான் இந்த இரண்டு பாதைகளும்

-

ஆனால் மேற்கு,கிழக்கு இரண்டு பாதைகள் வழியாக சென்றவன் எல்லாம் அறிந்தவனாகிறான்.

-

எல்லாம் அறிந்தவன் இறைவனாகிறான்


66.தத்துவம்

Additional Information

  

66.தத்துவம்

-

இந்த உலகத்தில் உள்ள மொத்த அறிவுக்கும் வேதம் என்று பெயர்.

அதை பிரபஞ்சஅறிவு அல்லது மஹத் என்றும் அழைக்கிறோம்

-

வேதத்தை இரண்டாக பிரிக்கலாம்.

1.உலகியல் ஞானம். 

2.இறைவனைப்பற்றிய ஞானம்.

அதையே கர்மகாண்டம்,ஞானகாண்டம் என்று கூறுகிறார்கள்.

எந்த ஞானத்தைக்கொண்டு இந்த உலகத்திலும் மேல் உலகங்களிலும் சுகமாக வாழ முடியுமோ அந்த ஞானத்தை வழங்குவது கர்மகாண்டம்.

எந்த ஞானத்தைக்கொண்டு இந்த உலகத்திலிருந்தும்,மேல் உலகங்களிலிருந்தும் விடுதலைபெற்று முக்தியடைய முடியுமோ அந்த ஞானத்தை வழங்குவது ஞானகாண்டம்

-

ஞான காண்டத்தை மூன்றாக பிரிக்கலாம்

-

1.துவைதம்.2.விசிஷ்டாத்வைதம்.3.அத்வைதம்.

-

ஞான காண்டத்தின் முக்கிய விவாதப்பொருள் மூன்று

1.இறைவன் 2.ஆத்மா 3. உலகம் 

ஆத்மா என்பது ஒவ்வொரு உயிரின் மூலம்.நான் என்பது துவங்கும் இடம்

இறைவன் என்பவர் உலகத்தின் மூலம்.அனைத்து உயிர்களின் துவக்கம் மற்றும் முடிவு.

உலகம் அல்லது இயற்கை என்பது பல்வேறு உலகங்களையும் உயிர்களையும் உள்ளடக்கியது.

-

துவைதம் என்றால் இரண்டு-நான் வேறு கடவுள் வேறு என்று கூறும் தத்துவம் .

நானும் கடவுளும் ஒன்று என்று கூறும் தத்துவம் அத்வைதம்.

நான் கவுளின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி என்று கூறுவது விசிஷ்டாத்வைத தத்துவம்.

-

தத்துவம் என்றால் தத்+த்வம்=அது நீயே. 

அது எது? நாம் தேடிக்கொண்டிருக்கும் கடவுள். 

த்வம் என்றால்-தேடி அலைந்துகொண்டிருக்கும் நீ

நீ கடவுள் என்பதே தத்துவம் என்பதன் அர்த்தம்

-

மகாவாக்கியங்கள்

--------------

மகாவாக்கியங்கள்என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:

-

1. பிரக்ஞானம் பிரம்ம - "பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்])

-

2. அயம் ஆத்மா பிரம்ம - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)

-

3. தத் த்வம் அஸி - "அது(பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்)

தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது 'நீ அதுவாக உளாய்' என்றும் சொல்லலாம்.

-

4. அஹம் பிரம்மாஸ்மி- "நான் பிரம்மன்" (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்) 

-

மேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் 'பிரம்மத்தை' குறிக்கிறது தமிழில் கடவுள்,இறைவன் என்பதைக் குறிக்கிறது.

இந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது.

-

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் சுவேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேதசாத்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வாலிபனிடம் "எதனால் கேள்விக் கெட்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ்வுபதேசத்தை குருவிடம் தெரிந்துகொண்டாயா?"என்று கேட்கிறார். 

இதைத்தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, 

முடிந்தமுடிவாக இதே மகாவாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.

ஒன்பது எடுத்துக்காட்டுகளில் சில

-

"எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகிவிடுகின்றனவோ, 

மற்றும் அவை அந்நிலையில் 'நான் இது'என்று எங்ஙனம் அறியமாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம்பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்"

-

"ஆலம்பழம் ஒன்றைப்பிளந்தால் அணுவடிவான விதைகள் காணப்படுகின்றன. அவ்விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த சூட்சுமப் பொருளிலிருந்தே பெரிய ஆலமரம் உண்டாகி நிற்கிறது. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்"

-

"உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக்கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல்பாகத்தையோ நடுப்பாகத்தையோ அடிப்பாகத்தையோ உண்டுபார்த்தால் அது உப்பாகவேயிருப்பது தெரியும். அதேபோல் முக்காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணுமாத்திரமான அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"

-

"ஒருவனை கண்ணைக்கட்டி காந்தாரதேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய்விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஆத்ம ஞானம் பெற்று அப்பரம்பொருளுடன் ஒன்றுபடலாம். அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்.


67.பல்வேறு உலகங்கள்(லோகம்)

Additional Information

  

67.பல்வேறு உலகங்கள்(லோகம்)

-

இந்த உலகத்தின் மூல சக்திக்கு பிராணன் என்று பெயர்.அதேபோல இந்த உலகத்தின் மூல ஜடப்பொருளுக்கு ஆகாசம் என்று பெயர்.

இந்த ஆகாசமும் பிராணனும் இணைந்து பல்வேறு உருவங்களாக பரிணமிக்கின்றன.

ஆகாசம் உடலாகவும்,மனமாகவும் பரிணாமம் அடைகிறது.

பிராணன் உயிர்சக்தியாகவும் பல்வேறு சக்திகளாகவும் பரிணாமம் அடைகிறது.

பிராணன் என்பது மூச்சு அல்ல.

-

பிராணனின் அதிர்வு ஒவ்வொரு உயிரினத்திலும் வேறுபடுகிறது.

ஒரு இரும்பை அதிக அளவு அதிர்வுக்குள்ளாக்கினால் அதன் வெப்பம் அதிகமாகி அக்னியையும் வெளிச்சத்தையும் வெளியிடும் நிலைக்கு செல்கிறது.

அதேபோல ஒளிவீசிக்கொண்டிருக்கும் நட்சத்திரத்தின் அதிர்வு குளைந்தால் அது தன் ஒளியை இழந்து, சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறிவிடுகிறது.

-

பிராணனின் அதிர்வுக்கு ஏற்ப உடல் வேறுபடுகிறது.

அந்த அதிர்வு மிகஅதிகமாக இருக்கும் உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன.அவைகள் நம் கண்களுக்கு தெரியாது.அதேபோல அவைகள் கண்களுக்கு நாமும் தெரிய மாட்டோம்.

பிராணனின் மிககுறைந்த அதிர்வுள்ள உயிரினங்களையும் நம்மால் காண முடியாது.அவைகள் நம்மை சுற்றி இருக்கலாம் ஆனால் அவைகள் கண்களுக்கு நாம் தெரிய மாட்டோம் நம் கண்களுக்கு அவைகள் தெரியாது.

-

இதன் அடிப்படையில் உயிர்கள் வாழும் உலகத்தை பலவாக பிரித்தார்கள்.

அதிர்வு அதிகம் உள்ளவைகள் மேல் உலகம் என்றும், குறைவான அதிர்வு உள்ளவை கீழ் உலகம் என்றும் பிரித்தார்கள்.

மேல் என்பது கண்களை நோக்கி மேலே பார்க்கும்போது தெரியும் மேல் அல்ல.

பிராணனின் அதிர்வின் அடிப்படையில் மேல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

-

ஒவ்வொரு உயிரினமும் இந்த உலகத்தை ஒவ்வொரு விதமாக பார்க்கிறது.

ஐம்புலன்கள் கொண்ட மனிதனின் உலகம் ஒருவிதமாக தரிகிறது.

நான்கு புலன்கள் கொண்ட விலங்கிற்கு இந்த உலகம் வேறுவிதமாகத்தெரிகிறது.

மூன்று புலன்கள் கொண்ட உயிரினத்திற்கு இன்னும் வேறு விதமாகத்தரிகிறது.

ஒரு புலன்கொண்ட தாவரம் இந்த உலகத்தை எப்படி உணர்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.அதேபோல நாம் காணும் உலகத்தையும் தாவரங்களால் காண முடியாது.

தாவரங்கள்,விலங்குகள் மனிதர்கள் எல்லோருமே ஒரே உலகத்தில்தான் வசிக்கிறோம் ஆனால் ஒவ்வொருவரும் இந்த உலகத்தை ஒவ்வொரு மாதிரி காண்கிறோம்.

இதற்கு காரணம் பிராணன் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வேறு மாதிரி இருக்கிறது.

பிராணனின் அதிர்வு மனிதர்களிடம் ஒரே போல இருக்கிறது. நாயிடம் ஒரு மாதிரி இருக்கிறது. மாடுகளிடம் இன்னொருவிதமாக இருக்கிறது.

-

சில உயிரினங்களுக்கு நிறங்கள் தெரியாது. மூன்று பரிமாணங்கள் தெரியாது. சில உயிரினங்களுக்கு நாம் காண்பது போல ஒளி தெரியாது.இவ்வாறு எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன.

-

இறந்துபோனமனிதர்கள் பேய்களாக அலைகிறார்கள். அவர்களும் நாம் வாழும் உலகத்தில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களை நம்மால் காண முடிவதில்லை. அவர்களும் நம்மைக் காண்பதில்லை. பேயைக் காண வேண்டுமானால் பேய்களின் உடல் எந்த அதிர்வுநிலையில் செயல்படுகிறதோ அதே அதிர்வுநிலைக்கு நம் உடலையும் கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல பேய்கள் மனிதர்களைக் காண வேண்டுமானால் மனிதர்களின் உடல் அதிர்வு நிலைக்கு வந்தாக வேண்டும்.

-

இதேபோல புண்ணியம் செய்த ஆத்மாக்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்.அவர்களின் அதிவுநிலை மனிதர்களைவிட அதிகமாக இருப்பதால் அவர்கள் கண்களுக்கு இந்த உலகம் வேறுமாதிரி தெரிகிறது. சூரியனும்.சந்திரனும் பிற நட்சத்திரங்களும் அவர்களை சுடுவதில்லை.வெம்மையை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால் அவர்களது உடலே ஒளிவீசும் உடலாக மாறிவிட்டது.

-

தெய்வங்கள் வாழும் உலகம் என்பது இன்னும் உயர்வானது.மிகப்பெரியது.அதிக ஒளிவீசும் தன்மையுடையது.

-

இந்த அதிர்வின் அடிப்படையில் பல உலகங்கள் இருக்கின்றன.

-

7. சத்யலோகம்

6. தபோலோகம்

5. ஜனோலோகம்

4. மஹர்லோகம்

3. சுவர்லோகம்

2. புவர்லோகம்

-

↑ மேல் உலகங்கள் ஏழு

____

1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகு

__

↓கீழ் உலகங்கள் ஏழு

-

1.அதலலோகம்

2.விதலலோகம்

3.சுதலலோகம்

4.தலாதலலோகம்

5.மகாதலலோகம்

6.ரஸாதலலோகம்

7.பாதாளலோகம்

-

சத்யலோகம் என்பது மிகஉயர்ந்த லோகம். பாதாள லோகம் என்பது மிகவும் கீழான உலகம்

-

இந்த பல்வேறு உலகங்களில் வாழும் உயிர்கள் பாவபண்ணிய பலனுக்கு ஏற்ப இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.இன்று பூலோகத்தில் இருக்கும் உயிர் சில ஆண்டுகளுக்குப்பிறகு புவர்லோகத்தை அடையலாம் அல்லது அதலலோகத்தை அடையலாம். புண்ணியம் அதிகம் உள்ள உயிர்கள் மேல் உலகங்களை அடைகின்றன. பாவம் அதிகம் உள்ள உயிர்கள் கீழ் லோகத்தை அடைகின்றன.

-

பூலோகத்தில் எப்படி பல நாடுகளும் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான மனிதர்களும் இருக்கிறார்களோ அதேபோல மேல் உலகங்களிலும் பல்வேறு உயிரினங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

-

வைணவர்கள் சென்று சேரும் வைகுண்டமும், சைவர்கள் சென்று சேரும் கைலாயமும், இன்னும் பிற சமயத்தவர் சென்று சேரும் இடங்களும் ஒரே லோகத்தில் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும்.

வைணவ சமயத்தின் கொள்ளைகளையும்,சடங்குகளையும் முறையாக பின்பற்றுபவன் வைகுண்டத்தை அடைகிறான்.அதேபோல சைவ மதத்தினர் கைலாயத்தை அடைகிறார்கள்.இரண்டும் ஒரே லோகத்தில் தனித்தனியாக இருக்கின்றன.

சக்திமிக்க மகான்கள் தோன்றும்போது புதிய உலகத்தை படைத்துக்கொள்கிறார்கள்.அவர்களது மதத்தை பின்பற்றுபவர்கள் இறந்தபிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.

பூமியில் அவர்கள் தோற்றுவித்த மதம் அழியும்போது அவர்கள் உருவாக்கிய மேல் உலகமும் அழிந்துபோகிறது.


67.பல்வேறு உலகங்கள்(லோகம்)

Additional Information

  

67.பல்வேறு உலகங்கள்(லோகம்)

-

இந்த உலகத்தின் மூல சக்திக்கு பிராணன் என்று பெயர்.அதேபோல இந்த உலகத்தின் மூல ஜடப்பொருளுக்கு ஆகாசம் என்று பெயர்.

இந்த ஆகாசமும் பிராணனும் இணைந்து பல்வேறு உருவங்களாக பரிணமிக்கின்றன.

ஆகாசம் உடலாகவும்,மனமாகவும் பரிணாமம் அடைகிறது.

பிராணன் உயிர்சக்தியாகவும் பல்வேறு சக்திகளாகவும் பரிணாமம் அடைகிறது.

பிராணன் என்பது மூச்சு அல்ல.

-

பிராணனின் அதிர்வு ஒவ்வொரு உயிரினத்திலும் வேறுபடுகிறது.

ஒரு இரும்பை அதிக அளவு அதிர்வுக்குள்ளாக்கினால் அதன் வெப்பம் அதிகமாகி அக்னியையும் வெளிச்சத்தையும் வெளியிடும் நிலைக்கு செல்கிறது.

அதேபோல ஒளிவீசிக்கொண்டிருக்கும் நட்சத்திரத்தின் அதிர்வு குளைந்தால் அது தன் ஒளியை இழந்து, சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறிவிடுகிறது.

-

பிராணனின் அதிர்வுக்கு ஏற்ப உடல் வேறுபடுகிறது.

அந்த அதிர்வு மிகஅதிகமாக இருக்கும் உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன.அவைகள் நம் கண்களுக்கு தெரியாது.அதேபோல அவைகள் கண்களுக்கு நாமும் தெரிய மாட்டோம்.

பிராணனின் மிககுறைந்த அதிர்வுள்ள உயிரினங்களையும் நம்மால் காண முடியாது.அவைகள் நம்மை சுற்றி இருக்கலாம் ஆனால் அவைகள் கண்களுக்கு நாம் தெரிய மாட்டோம் நம் கண்களுக்கு அவைகள் தெரியாது.

-

இதன் அடிப்படையில் உயிர்கள் வாழும் உலகத்தை பலவாக பிரித்தார்கள்.

அதிர்வு அதிகம் உள்ளவைகள் மேல் உலகம் என்றும், குறைவான அதிர்வு உள்ளவை கீழ் உலகம் என்றும் பிரித்தார்கள்.

மேல் என்பது கண்களை நோக்கி மேலே பார்க்கும்போது தெரியும் மேல் அல்ல.

பிராணனின் அதிர்வின் அடிப்படையில் மேல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

-

ஒவ்வொரு உயிரினமும் இந்த உலகத்தை ஒவ்வொரு விதமாக பார்க்கிறது.

ஐம்புலன்கள் கொண்ட மனிதனின் உலகம் ஒருவிதமாக தரிகிறது.

நான்கு புலன்கள் கொண்ட விலங்கிற்கு இந்த உலகம் வேறுவிதமாகத்தெரிகிறது.

மூன்று புலன்கள் கொண்ட உயிரினத்திற்கு இன்னும் வேறு விதமாகத்தரிகிறது.

ஒரு புலன்கொண்ட தாவரம் இந்த உலகத்தை எப்படி உணர்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.அதேபோல நாம் காணும் உலகத்தையும் தாவரங்களால் காண முடியாது.

தாவரங்கள்,விலங்குகள் மனிதர்கள் எல்லோருமே ஒரே உலகத்தில்தான் வசிக்கிறோம் ஆனால் ஒவ்வொருவரும் இந்த உலகத்தை ஒவ்வொரு மாதிரி காண்கிறோம்.

இதற்கு காரணம் பிராணன் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வேறு மாதிரி இருக்கிறது.

பிராணனின் அதிர்வு மனிதர்களிடம் ஒரே போல இருக்கிறது. நாயிடம் ஒரு மாதிரி இருக்கிறது. மாடுகளிடம் இன்னொருவிதமாக இருக்கிறது.

-

சில உயிரினங்களுக்கு நிறங்கள் தெரியாது. மூன்று பரிமாணங்கள் தெரியாது. சில உயிரினங்களுக்கு நாம் காண்பது போல ஒளி தெரியாது.இவ்வாறு எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன.

-

இறந்துபோனமனிதர்கள் பேய்களாக அலைகிறார்கள். அவர்களும் நாம் வாழும் உலகத்தில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களை நம்மால் காண முடிவதில்லை. அவர்களும் நம்மைக் காண்பதில்லை. பேயைக் காண வேண்டுமானால் பேய்களின் உடல் எந்த அதிர்வுநிலையில் செயல்படுகிறதோ அதே அதிர்வுநிலைக்கு நம் உடலையும் கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல பேய்கள் மனிதர்களைக் காண வேண்டுமானால் மனிதர்களின் உடல் அதிர்வு நிலைக்கு வந்தாக வேண்டும்.

-

இதேபோல புண்ணியம் செய்த ஆத்மாக்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்.அவர்களின் அதிவுநிலை மனிதர்களைவிட அதிகமாக இருப்பதால் அவர்கள் கண்களுக்கு இந்த உலகம் வேறுமாதிரி தெரிகிறது. சூரியனும்.சந்திரனும் பிற நட்சத்திரங்களும் அவர்களை சுடுவதில்லை.வெம்மையை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால் அவர்களது உடலே ஒளிவீசும் உடலாக மாறிவிட்டது.

-

தெய்வங்கள் வாழும் உலகம் என்பது இன்னும் உயர்வானது.மிகப்பெரியது.அதிக ஒளிவீசும் தன்மையுடையது.

-

இந்த அதிர்வின் அடிப்படையில் பல உலகங்கள் இருக்கின்றன.

-

7. சத்யலோகம்

6. தபோலோகம்

5. ஜனோலோகம்

4. மஹர்லோகம்

3. சுவர்லோகம்

2. புவர்லோகம்

-

↑ மேல் உலகங்கள் ஏழு

____

1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகு

__

↓கீழ் உலகங்கள் ஏழு

-

1.அதலலோகம்

2.விதலலோகம்

3.சுதலலோகம்

4.தலாதலலோகம்

5.மகாதலலோகம்

6.ரஸாதலலோகம்

7.பாதாளலோகம்

-

சத்யலோகம் என்பது மிகஉயர்ந்த லோகம். பாதாள லோகம் என்பது மிகவும் கீழான உலகம்

-

இந்த பல்வேறு உலகங்களில் வாழும் உயிர்கள் பாவபண்ணிய பலனுக்கு ஏற்ப இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.இன்று பூலோகத்தில் இருக்கும் உயிர் சில ஆண்டுகளுக்குப்பிறகு புவர்லோகத்தை அடையலாம் அல்லது அதலலோகத்தை அடையலாம். புண்ணியம் அதிகம் உள்ள உயிர்கள் மேல் உலகங்களை அடைகின்றன. பாவம் அதிகம் உள்ள உயிர்கள் கீழ் லோகத்தை அடைகின்றன.

-

பூலோகத்தில் எப்படி பல நாடுகளும் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான மனிதர்களும் இருக்கிறார்களோ அதேபோல மேல் உலகங்களிலும் பல்வேறு உயிரினங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

-

வைணவர்கள் சென்று சேரும் வைகுண்டமும், சைவர்கள் சென்று சேரும் கைலாயமும், இன்னும் பிற சமயத்தவர் சென்று சேரும் இடங்களும் ஒரே லோகத்தில் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும்.

வைணவ சமயத்தின் கொள்ளைகளையும்,சடங்குகளையும் முறையாக பின்பற்றுபவன் வைகுண்டத்தை அடைகிறான்.அதேபோல சைவ மதத்தினர் கைலாயத்தை அடைகிறார்கள்.இரண்டும் ஒரே லோகத்தில் தனித்தனியாக இருக்கின்றன.

சக்திமிக்க மகான்கள் தோன்றும்போது புதிய உலகத்தை படைத்துக்கொள்கிறார்கள்.அவர்களது மதத்தை பின்பற்றுபவர்கள் இறந்தபிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.

பூமியில் அவர்கள் தோற்றுவித்த மதம் அழியும்போது அவர்கள் உருவாக்கிய மேல் உலகமும் அழிந்துபோகிறது.


68.ஆத்மஞானம்

Additional Information

  

68.ஆத்மஞானம்

-

ஆத்மஞானம் என்பது தன்னைப்பற்றி அறிதல்.நம்மை நாமே அறிந்துகொள்தல்

-

நான் என்பது என்ன? 

-

நான் என்பது உடலைக்குறிக்கிறதா? மனத்தைக்குறிக்கிறதா?ஆவி உடலைக்குறிக்கிறதா? அல்லது வேறு எதைக்குறிக்கிறது என்பதை நமக்குள்ளே தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

-

இதைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுவதைப் பார்க்கலாம்

-

ஆத்மாவால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டுள்து. அது எங்கும் பரந்து விரிந்துள்ளது.அது அழியாதது என்று உறுதியாக தெரிந்துகொள். மாறாத தன்மையுள்ள அதை யாராலும் அழிக்க இயலாது.॥ 2.17 ॥

-

எப்போதும் இருக்கும், அழியாத, அளவிடமுடியாத உடலில் குடியிருக்கும் ஆத்மாவிற்கு, சொந்தமான உடல்கள் அழியக்கூடியது, ஆனால் ஆத்மாவிற்கு அழிவில்லை . ஆகவே பாரதா, யுத்தம் செய்॥ 2.18 ॥

-

ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு ஆத்மா இல்லாமல் போவதுமில்லை. 

ஆத்மா பிறப்பற்றது, நித்தியமானது, என்றும் நிலைத்திருப்பது, மரணமற்றது, மிகப்பழையானது. 

உடல் அழிக்கப்படுவதால் ஆத்மா அழிக்கப்படுவதில்லை.॥ 2.20 ॥

-

பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே, 

பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.॥ 2.22 ॥

-

மரணம் என்பது உபயோகமற்ற ஒரு ஆடைய எறிந்துவிடுவது போன்றது.

-

வெப்பமும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே,

சுகம்-துக்கம் போன்றவை தோன்றி மறைகின்றன.

அர்ஜுனா, கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும், 

அதற்குரிய 

பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,சுவைத்தல்,உணர்தல் போன்ற ஐந்து இந்திரியார்த்தங்களில் உள்ள இணக்கத்தினால் இவை உண்டாகின்றன.

தோன்றி மறையும் நித்தியமில்லாத இவைகளை பொறுத்துக்கொள்.॥ 2.14 ॥

-

மனிதனின் சிறந்தவனே, இந்த சுக-துக்கங்களை சமமாக ஏற்றுக்கொண்ட தீரனான மனிதன் எதற்கும் அசைவதில்லை. அவன் நிச்சயமாக அமிர்தம்போன்ற சாகாநிலையை அடைய தகுதியானவன்.॥ 2.15 ॥

-

ஆத்மா எங்கே இருக்கிறது?

-

ஆத்மா உடல் முழுவதும் பரவியிருப்பது.அது அழிவற்றதென்று அறிவாய்

அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை.॥ 2.17 ॥

-

ஆன்மா உடல் முழுவதும் பரவியிருக்கிறது.ஆன்மாதான் உடலாக மாறியிருக்கிறது.உடல்தான் ஆன்மாவாக மாறி இருக்கிறது.உடலை காணும்போது ஆன்மா தெரியாது.ஆன்மாவைக் காணும்போது உடல் தெரியாது.

பால்தான் தயிராகிறது.தயிரான பின்னர் பாலை காண முடியாது

-

ஆன்மாவை காணும் ஒருவன் உடலை காண்பதில்லை. அவனால் உலகத்தைக் காண முடியுமா? முடியாது.

உடல் மறையும்போது கூடவே உலகமும் மறைந்துவிடும்.

-

பார்த்தனே! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில்லாததென்று அறிந்த ஒருவன் 

யாரையாகிலும் கொல்வானா?, கொலை செய்யப்படக் காரணமாக இருப்பானா?॥ 2.21 ॥

-

ஆத்மாவை அறிந்தவன் ஞானி. அவன் யாரையும் கொல்வதும் இல்லை.யாரும் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் இருப்பதில்லை.

இந்த உலகத்திலுள்ள எல்லாம் அதன் அதன் இயல்புபடி நடந்துகொள்கின்றன. தீயவன் தீய வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பான். நல்லவன் நல்ல வேலைகளை செய்துகொண்டிருப்பான்.

ஞானியின் கண்களுக்கு இவைகள் எல்லாம் இயற்கையின்கூறுகளாக தெரியும். நல்லவனை ஊக்கப்படுத்தவேண்டும். தீயவனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஞானியிடம் இருப்பதில்லை.

எந்த செயலுக்கும் அவர் காணமாக இருப்பதில்லை.புதிய கர்மங்களை உண்டுபண்ணுவதிலிருந்து விலகி இருக்கிறார்.

அவரது கண்களுக்கு பெரும்பாலான நேரம் இந்த உலகம் நாம் பார்ப்பதுபோல தெரிவதில்லை. எல்லாமே உணர்வுமய உருவங்களாக தெரிகிறது. 

ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகம் எப்படி தெரிகிறது?

அது ஒரு விஷப்பாம்பின் பக்கத்தின் சென்று அதை தொட்டு விளையாடும்.உருவங்களுக்கு பின்னால் இருக்கும் இயல்புகள் பற்றி அதற்கு தெரியாது.

ஒரு திருடன் ஞானியின் பக்கம் வரும்போது திருடன் என்ற இயல்பை இழந்துவிடுகிறான்.அதேபோல நல்லவன் ஞானியின் பக்கம் வரும்போது நல்லவன் என்ற இயல்பை இழந்துவிடுகிறான். 

அவரது அருகில் இருவரும் குணங்கள் அற்ற உருவங்களாக தெரிகிறார்கள். 

எனவே அவரால் பாகுபாடு பார்க்காமல் அன்பு செலுத்த முடிகிறது.

-

நமது கண்களுக்கு இன்னும் இந்த உலகத்தின் தீமை தெரிகிறது என்றால் நாம் இன்னும் தீயவர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

ஞானியின் நிலையும் குழந்தையின் நிலையும் ஒன்று.

இந்த உலகத்திலுள்ள தீமையை நம்மால் நீக்க முடியாது. ஆனால் ஞானியின் நிலையை நாம் அடையும்போது நம்மைப்பொறுத்தவரை தீமை மறைந்துவிடும். நன்மையும் மறைந்துவிடும்.

-

அப்படியென்றால் செயல்களையெல்லாம் விட்டுவிட்டு ஒதுங்கிவிட வேண்டுமா? அப்படி ஒதுங்க முடியாது.அர்ஜுனன் அப்படி ஒதுங்க வேண்டும் என்று நினைக்கிறான்.

உடனே அது முடியாது. 

முதலில் ஞானம் என்றால் என்ன? ஞானி எப்படி நடந்துகொள்வான்? போன்றவற்றையெல்லாம் ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும்.

-

முழுக்க நிறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் சமுத்திரத்தில், எப்படி ஆறுகள் ஒன்று கலக்குமோ,( ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றுநீர் சமுத்திரத்தில் கலந்ததும் அடங்கிவிடுகிறது) அப்படியே, எல்லா ஆசைகளும் முனிவனுள் பிரவேசித்தாலும் அவன் அமைதியில் நிலைத்திருப்பான். ஆசையை அனுபவிக்க நினைப்பவனுக்கு இது கிடைக்காது.॥ 2.70 ॥

-

இந்த ஞான நிலையை ஒருமுறை அடைந்தபின்தான் மயக்கங்கள் எல்லாம் விலகும்.

இந்த நிலையை அடையும்வரை வாழ்க்கை துன்பமாகவே தெரியும். 

உலகம் வேதனை நிறைந்த இடமாகவே தெரியும்.

-

பல சமய குருமார்கள் ஆனந்தமாக வாழுங்கள்,வாழ்க்கை ஆனந்தமானது,ஆனந்தத்தை கற்றுத்தருகிறோம் என்றெல்லாம்கூறுகிறார்கள்.மக்களை கவர்வதற்காக இவ்வாறு பேசுகிறார்கள்.

உண்மையில் ஞானம் பெற்ற பிறகுதான் வாழ்க்கை ஆனந்தமானதாகும்.அதற்கு முன்பு துன்பமாகவே இருக்கும்

-

முற்காலத்தில் ரிஷிகள்,பிரம்மச்சர்ய படிப்பை முடித்தபின் தவ வாழ்க்கைக்கு சென்றுவிடுவார்கள்.

பல ஆண்டுகள் கடினதவம்புரிந்து ஞானம் பெற்றபிறகே சாதாரண உலக வாழ்க்கைக்கு திரும்பி வருவார்கள். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் குருவாக வாழ்வார்கள்.

-

ஸ்ரீராமகிருஷ்ணர் அதனால்தான் முதலில் ஞானத்தைபெறு,அதன்பிறகு இல்லற வாழ்வில் ஈடுபடு என்கிறார்

-

ஞானம் பெறாமல் இல்லற வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால்,முடிவில் ஞானம் கிடைக்காதா? கிடைக்கும்

-

பலருக்கு வாழ்க்கையின் முடிவில்தான் ஞானம் கிடைக்கும்.

நாம் பற்றிப்பிடித்திருக்கும் பிடிகள் ஒன்வொன்றையும் விடவேண்டியிருக்கும்.

இதை விடுவதற்கு பல காலம் ஆகும்.

-

பற்றுக்களை பெருக்குவதில் அதிக காலத்தை செலவிட்டுவிட்டார்கள்,

இனி அதை விடுவது என்பது உடனே நடக்குமா?

-

ஞானம் அடைவது என்பது நரகத்தின் வழியே செல்வதைப்போன்றது.

ஞானம் அடைந்தபின் கிடைக்கும் வாழ்க்கை என்பது சொர்க்கத்தின் நடுவே செல்வது போன்றது.

பலருக்கு ஞானம் கிடைத்தபின் வாழ்க்கை கிடைக்காது.

அவர்கள் முக்தி அடைந்துவிடுவார்கள்.


69.வேதாந்தத் தத்துவம்

Additional Information

  

69.வேதாந்தத் தத்துவம்

-

வேதாந்த தத்துவம் மூன்று படிகளைக்கொண்டது

1.துவைதம்

2.விசிஷ்டாத்வைதம்

3.அத்வைதம்

-

வேதாந்த தத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு முன்பாக சாங்கிய தத்துவத்தை நன்றாக படித்து புரிந்துகொள்ள வேண்டும்.

-

சாங்கிய தத்துவம்

-

ஸ்ரீகிருஷ்ணரது காலத்திற்கு முன்பே உருவானது சாங்கியத் தத்துவம்.

-

ஆகாசம்-பிராணன்

-

ஆகாசம், என்ற மூல ஜடப்பொருள் ஒன்றிலிருந்து தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும் காணப்படும் ஜடப்பொருள். புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விலக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர் சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை. 

-

படைப்பு

-

பிராணன் ஆகாசத்தின் மீது செயல்படுவதால் பிரபஞ்சம் படைக்கப் படுகிறது, அல்லது வெளிப்படுகிறது. 

படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி, மாறுதலின்றி இருந்தது, அதன் மீது பிராணன் அதிக அளவில் செயல்பட்டு, அதிலிருந்து செடிகள், பிராணிகள், மனிதர்கள் , விண்மீன்கள் போன்ற தூலப் பொருட்களைப் படைத்தது. கண்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்தவிரிவு அல்லது தோற்றம் ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூல நிலையிலிருந்து படிப்படியாக சூட்சும நிலைக்கு மாறி, கடைசியில் முதற் பொருளாக ஆகாசமாகவும் பிராணனாகவும் மாறி ஒடுங்கிவிடுகிறது. பிறகு மீண்டும் ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. 

-

மஹத்

-

இந்த ஆகாசத்திற்கும் பிராணனுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய மகத் என்பதற்குள் சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம். இந்த ப் பிரபஞ்ச மனம் ஆகாசத்தையும் பிராணனையும் படைப்பதில்லை. தானே அவையாக மாறுகிறது.

-

உடல்

-

மனிதன் தொட்டு உணரக்கூடிய கண்ணுக்குத் தெரியும் தூலமான உடல் உள்ளது. 

இதில் தான் கண், மூக்கு, காது, போன்ற புலன் உணர்ச்சிக் கருவிகள் இருக்கின்றன.(பொறிகள்) 

இது வெறும் கருவி தான். இதற்குப் பின்னால் தான் புலன் இருக்கிறது(மூளை மையங்கள்). 

வடமொழியில் புலன்கள் இந்திரியங்கள் எனப்படுகின்றன.

-

மனம்

-

கண்களை இயக்குகின்ற புலன் மையம் அழிந்து விட்டால், கண்கள்(பொறிகள்) பார்க்கும் சக்தியை இழந்து விடும். எல்லா புலன்களின் விஷயமும் இப்படித்தான். புலன்களும் தாமாகவே உணர்வதில்லை. இவற்றுடன் இன்னொன்று இணைய வேண்டும். அந்த இன்னொன்று மனம். 

-

நான்-உணர்வு

-

உங்கள் மனம் எதிலாவது ஆழ்ந்திருக்கும்போது உங்கள் அருகில் கடிகார மணியடிப்பதைக் கூடப் பல வேளைகளில் நீங்கள் கேட்பதில்லை? ஏன்? காது இருக்கிறது, மணியோசை அதிர்வுகள் காதினுள் புகுந்து மூளைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனாலும் நீங்கள் அதைக் கேட்க வில்லை, ஏன்? ஏனெனில் மனம் புலனுடன் இணையவில்லை. புறப்பொருட்களின் பதிவுகள் புலன்களுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. அப்போது புலன்களுடன் மனம் இணைந்திருந்தால், இந்தப் பதிவுகளை வாங்கி அதற்கு மனம் ஒரு நிறத்தை, ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது. இதையே நான்- உணர்வு என்கிறோம்.

-

புத்தி

-

நான் ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு கொசு என் விரலைக் கடிப்பதாக வைத்துக் கொள்வோம். புலன்களால் கிடைத்த பதிவோடு மனம் தொடர்பு கொள்ளும் போது ஒரு பிரதிச் செயல் உண்டாகிறது. அந்தப் பிரதிச் செயலின் காரணமாக நான் கொசுவை உணர்கிறேன். எனவே மனம் புலனுடன் ஈடுபடுவது மட்டும் போதாது, சங்கல்பம் என்ற உருவில் இதற்கு ஒரு பிரதிச் செயலும் ஏற்பட வேண்டும். இந்தப் பிரதிச் செயல் எதிலிருந்து வருகிறதோ அதுவே புத்தி.

-

1. முதலில் வெளி உறுப்பு அல்லது பொறி இருக்க வேண்டும். 

2.பிறகு புலன். 

3.பிறகு மனம் புலனுடன் இணைய வேண்டும். 

4.பிறகு புத்தியின் பிரதிச் செயல் ஏற்பட வேண்டும். 

5.இவையனைத்தும் முடிந்த உடனே, ” நானும் புறப்பொருளும்” என்ற கருத்து மின்னுகிறது. 

அப்போதே ஓர் உணர்ச்சி, ஒரு கருத்து, ஓர் அறிவு உண்டாகிறது. 

-

இந்தச் செயல் தொடர் முழுவதும் சில ஆற்றல்களாக நடைபெறுகின்றன. 

6.இவற்றை உயிர்ச் சக்திகள் எனலாம். சம்ஸ்கிருதத்தில் இவற்றைப் பிராணன் என்கிறார்கள். 

-

தூலசரீரம்

-

மனிதனின் வெளிப் பொறிகள் அமைந்துள்ள இந்த உடல் தூலவுடல் எனப்படுகிறது. 

சம்ஸ்கிருதத்தில் இதை ஸ்தூல சரீரம் என்பர். 

-

சூட்சும சரீரம்

-

தூல உடலுக்கு பின்னால் தான் புலன், மனம், புத்தி, நான்- உணர்வு என்ற தொடர் அமைகிறது. 

இவையும் உயிர்ச் சக்திகளும்(பிராணன்) இணைந்த ஒன்றே நுண்ணுடல் அல்லது சூட்சும சரீரம். 

இந்தச் சக்திகள் மிக நுட்பமான அணுக்களால் ஆனவை. எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் இந்தஉடம்பு அழியாத அளவுக்கு அவை நுட்பமானவை. எந்தவிதமான கேடும், அதிர்ச்சியும் சூட்சும உடலைப் பாதிப்பதில்லை.

-

ஆத்மன் அல்லது ஆன்மா

-

இந்த நுண்ணுடலின் ஒரு பகுதி மனம், ஒரு பகுதி புத்தி, நான் பகுதி நான்- உணர்வு.ஆனாலும் இவற்றில் எந்த ஒன்றும் ” அறிபவன்”(ஆத்மா) ஆக முடியாது. இவற்றுள் எதுவும் பார்ப்பவனாக , சாட்சியாக, யாருக்காக அறிவுச் செயல் நடக்கிறதோ அவனாக, நடக்கும் செயலைப் பார்ப்பவனாக ஆக முடியாது. 

-

எடுத்துக் காட்டாக, இந்த மேஜையை எந்த ஜடப் பொருளும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே இவற்றிற்கெல்லாம் பின்னால் யாரோ ஒருவர் இருக்க வேண்டும். இவரே எல்லா தோற்றங்களுக்கும் உண்மைக் காரணமானவர். உண்மையாகவே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். இவரையே வடமொழியில் ஆத்மன் என்கிறார்கள். இவரே மனிதனின் உண்மை ஆன்மா.

உண்மையில் எல்லாப் பொருட்களையும் பார்ப்பவர் இவரே. 

-

1.வெளிப் பொறிகளும் புலன்களும் புறப்பொருட்களின் பதிவை மனத்திற்குஅனுப்புகின்றன. 

2.மனம் இவற்றைப் புத்திக்கு அனுப்புகிறது. 

3.புத்தி இவற்றை முகம் பார்க்கும் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது. 

4.இதற்குப் பின்னால் உள்ள ஆன்மா இந்த பிரதிபலிப்பைப் பார்த்து, தன் கட்டளைகளையும் செயல் யோசனைகளையும் விடுக்கிறது. 

இவைகள் அனைத்தும் கணக்கிடமுடியாத அதிவேகமாக நடந்து முடிந்துவிடுகிறது.

-

இந்தக் கருவிகளை எல்லாம் ஆள்வது ஆன்மாவே. உடலாகிய வீட்டிற்குத் தலைவன் அதுவே. உடம்பினுள் உள்ள அரசன் அதுவே. 

நான்- உணர்வு, புத்தி, சித்தம், பொறிகள், உடல் எல்லாமே ஆன்மாவின் கட்டளைக்கு அடங்கி நடக்கின்றன. இவற்றையெல்லாம் தோற்றுவிப்பதும் அதுவே. அது தான் மனிதனின் ஆன்மா. அல்லது ஜீவாத்மா

-

எண்ணம் என்னும் உள் உலகம்-ஜடப்பொருள் என்னும் வெளி உலகம்

-

இப்படிப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியில் என்ன இருக்கிறதோ அது பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கும் என்பதை நாம் காண முடியும்.ஏனெனில் பிரபஞ்சத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் அது எந்த அமைப்பில் உருவாக்கப் பட்டிருக்கிறதோ, அதே அமைப்பில் தான் அதன் ஒவ்வொரு பகுதியும் கட்டப் பட்டிருக்கும் என்பது பிரபஞ்ச நியதி. 

எனவே பிரபஞ்சம் என்று நாம் வழங்கும் இந்தத் தூல பொருளான அமைப்பிற்குப் பின்னால் நுண் ஜடப் பொருளால் ஆன ஒரு சூட்சுமப் பிரபஞ்சம் இருக்க வேண்டும். இதையே நாம் சிந்தனை அல்லது கருத்து என்கிறோம்.

சாங்கியத் தத்துவப்படி, மனம் எதிர்ச்சொல் புரிகின்ற நிலையாகிய புத்தி என்பது மகத் அல்லது பிரபஞ்ச மனத்தின் ஒரு மாறுதல் அல்லது குறிப்பிட்ட வெளிப்பாடு ஆகும். 

மகத், இயங்கும் எண்ணமாக மாறுகிறது. 

இந்த எண்ணத்தின் ஒரு பகுதி உறுப்புகளாகவும்,மற்றொரு பகுதி ஜடப் பொருளின் நுண்ணிய பகுதிகளாகவும் மாறுகின்றன. 

-

அவ்யக்தம்

-

மஹத்திற்கும் அப்பால் அவ்யக்த நிலை அல்லது தோன்றா நிலை ஒன்று இருப்பதாகவும் , அங்கே மனம் கூடத் தோன்றா நிலையிலேயே உள்ளதாகவும், ஆனால் தோன்றுதற்கான காரணங்கள் இருக்கின்றன என்றும் சாங்கியத் தத்துவம் கூறுகிறது. இந்த நிலை பிரகிருதி என்றும் அழைக்கப் படுகிறது. 

-

புருஷன் அல்லது பிரம்மம்

-

இந்தப் பிரகிருதிக்கும் அப்பால், இதனுடன் ஒரு போதும் எந்தத் தொடர்பும் இல்லாமல், குணமற்றதான, எங்கும் நிறைந்த புருஷன் அல்லது சாங்கியர்கள் கூறுகின்ற புருஷன் இருக்கிறது. புருஷன் எதையும் செய்பவன் அல்ல, சாட்சி மட்டுமே. புருஷனை விளக்குவதற்குப் படிக உதாரணம் காட்டப் படுகிறது. படிகம் தனக்கென்று எந்த நிறமும் இல்லாதது. அதன் முன் நிறப் பொருட்களை வைத்தால் அந்த நிறத்தை ஏற்று அந்தநிறம் படிகம் போல் காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அது எந்த நிறத்தையும் ஏற்பதில்லை.

-

ஜீவாத்மா-இறைவன்

-

இப்படி ஒவ்வோர் உடலுக்கும் மனத்திற்கும் பின்னால் இருக்கும் ஆன்மாவைப் பிரத்யகாத்மன் அல்லது ஜீவான்மா என்றும், இதை இயக்குகின்ற ஆள்கின்ற, செயல்படுத்துகின்ற பிரபஞ்ச ஆன்மாவை இறைவன் என்றும் பிரம்மம் என்றும் சொல்கிறோம்.

-

இதுவரை சாங்கிய தத்துவத்தை சுருக்கமாக பார்த்தோம்


70.உலகத்தில் உள்ள இந்தப் பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வருக

Additional Information

  

70.உலகத்தில் உள்ள இந்தப் பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? 

....

வருவது என்பதன் பொருள் என்ன என்பது தான் இதற்கு விடை. 

சூன்யத்திலிருந்து ஏதாவது ஒன்றை உண்டாக்க முடியும் என்பது இதன் பொருளானால், இது முடியாத காரியம், இந்தப் படைப்பை, இந்த வெளிப் பாட்டை சூன்யத்திலிருந்து தோற்று வித்திருக்க முடியாது. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் தோன்றாது. 

-

இதோ ஒரு கண்ணாடி இருக்கிறது, இதைத் துண்டுதுண்டாக உடைத்து, பொடியாக்கி, ரசாயணப் பொருட்களின் உதவியால் ஏறக் குறைய அழித்து விடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அது சூன்யமாகி விடுமா? 

கண்டிப்பாக இல்லை. முன்பிருந்த உருவம் போய்விடும்.என்றாலும் அந்தப் பொருளின் துகள்கள் இருக்கவே இருக்கும். இந்தத் துகள்கள் ஒரு வேளை நாம் புலன்களால் அறிய முடியாத அளவுக்கு நுட்பமாகி விடலாம். என்றாலும் அவை இருக்கத் தான் செய்கின்றன. இருக்கும் அந்த அணுக்களைக் கொண்டு வேறொரு கண்ணாடியை ஒரு வேளை செய்யவும் முடியலாம். ஒரு பொருளின் விஷயத்தில் இது உண்மையானால், எல்லாவற்றின் விஷயத்திலும் உண்மையாகத் தான் இருக்க வேண்டும்.

-

சூன்யத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது. அதுபோல் இருக்கும் எதையுமே இல்லாமல் செய்யவும் முடியாது. அது மிக மிக நுட்பமாக மாறலாம். மீண்டும் தூலப் பொருளாகவும் மாறலாம். 

-

கடல் நீர் நீராவியாகி மேலே சென்று மழைத் துளியாகிறது. அது காற்றின் வழியாக மிதந்து மலையை நோக்கிச் செல்கிறது. பிறகு நீராக மாறி, பூமிக்கு வந்து, பல நூறு மைல் ஓடிச் சென்று மீண்டும் தாய்க் கடலை அடைகிறது. விதை மரத்தை உண்டுபண்ணுகிறது. பின்னர் விதையை விட்டு விட்டு மரம் அழிகிறது. இந்த விதை திரும்ப மரமாகிறது. மறுபடியும் விதை உண்டாகிறது. இப்படியே இந்த வட்டம் சுழல்கிறது. 

-

எல்லாமே சில விதைகள், சில கருத்துக்கள், சில நுட்பமான அணுக்கள் இவற்றில் தொடங்குவது போலுள்ளது. பின்னர் பருமை பெற்று வளர்கிறது.மறுபடியும் படிப்படியாக நுண்மை பெற்றுப் பழைய கருஉருவில் ஒடுங்கி விடுகின்றன. பிரபஞ்சம் முழுவதும் இப்படியே தான் நடைபெறுகிறது.

-

இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே உருகுவது போல், படிப்படியாகக் கரைந்து, நுட்பத்தன்மை பெற்று, முடிவில் முற்றிலும் மறைந்தே விடுகின்ற ஒரு காலம் வருகிறது. ஆனால் அப்போதும் அது மிக மிக நுட்பமான ஜடப் பொருளாக இருக்கவே செய்கிறது. 

-

இந்தப் பூமி குளிர்ந்து கொண்டே வருகிறது. நாளா வட்டத்தில் இது மிகக் குளிர்ந்துவிடும். பிறகு இது துண்டு துண்டாக உடைந்து, தூள் தூளாகி, நுட்பமாகி அதி நுட்பமாகி மீண்டும் ஆகாசமாகி விடும் என்று நவீன விஞ்ஞானமும் வான இயலும் கூறுகின்றன என்றாலும் இந்த நுட்பமான அணுக்கள் எல்லாம் இருக்கவே செய்கின்றன. இந்த அணுக்கள் சேர்ந்து உண்டாகின்ற பொருளிலிருந்தே மீண்டும் பிரபஞ்சம் வெளிப் படுகிறது. அது மீண்டும் மறையும். மீண்டும் வேறொன்று வெளிப் படும்.

-

உருவம் அழிவதும், திரும்ப மேலெழுந்து உருவம் பெறுவதும் போல் ஓயாமல் நடந்து கொண்டே இருக்கும். காரியம் காரணம் ஆவதையும், மீண்டும் காரணம் காரியம் ஆவதையும் வடமொழியில் ஸ்ங்கோசம் ( சுருங்குதல்), விகாஸம்( விரிதல்) என்பர். 

-

பிரபஞ்சம் முழுவதுமே ஆகாச நிலைக்குச் சுருங்குகிறது. பிறகு பழைய நிலைக்கு விரிகிறது. இக்கால விஞ்ஞான மொழியில் சொல்வதானால், பிரபஞ்சம் ஒடுங்குகிறது. பின்னர் பரிணமிக்கிறது, 

-

தாழ்ந்த நிலை உயிர்கள் மெதுவாக படிப்படியாக வளர்ந்து உயர்நிலை உயிராவதே பரிமாணம் என்று நாம் கேள்விப் படுகிறோம். இது உண்மை தான். ஆனால் இத்தகைய பரிணாமம் ஒவ்வொன்றிற்கு முன்னரும் ஓர் ஒடுக்கம் இருக்கவே செய்தது.

-

அதேபோல உலகிலுள்ள சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒன்று தான் .

சக்தியின் மிகக் குறைந்த அளவைக் கூட நம்மால் அழிக்கவும் முடியாது. கூட்டவும் முடியாது. சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒரு போலவே இருக்கும்.

ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சக்தியை அழிக்க முடியாது. 

-

இந்தப் பிரபஞ்சம் முன்னால் ஒடுங்கிய பிரபஞ்சத்தின் பரிணாம விரிவே. மீண்டும் இது நுட்பமாகி, மிக நுட்பமாகி ஒடுங்கிவிடும். அதிலிருந்து மீண்டும் புதிய யுகம் தோன்றும். பிரபஞ்சமே இப்படித்தான் நடை பெறுகிறது.

-

சூன்யத்திலிருந்து ஏதோ ஒன்று படைக்கப் பட்டது என்ற பொருளில் படைப்பு என்பது எதுவுமே ஏற்படவில்லை என்பதைக் காண்கிறோம். படைப்பு என்பதை விட வெளிப் பாடு என்பது தான் தகுந்த சொல்லாக இருக்கும். பிரபஞ்சம் என்பது வெளிப்பாடு. அதை வெளிப்படுத்தியவர் இறைவன். பிரபஞ்சம் அவர் மூச்சின் வழியே வெளி வருவது போல் உள்ளது. திரும்பவும் அது அவருள்ளேயே ஒடுங்குகிறது. திரும்பவும் அவர் அதை வெளிப் படுத்துகிறார்.

-

வேதங்களில் அழகான உவமையால் இதனை விளக்கி யிருக்கிறார்கள் . எல்லையற்றவனாகிய இறைவன் பிரபஞ்சத்தை மூச்சாக வெளி விடுகிறான். திரும்பவும் மூச்சாக அதை உள்ளே இழுத்துக் கொள்கிறான். நாம் ஒரு சிறு தூசியை நம் மூச்சால் உள்ளே இழுத்து வெளியே விடுவது போன்றது இது.

-

இதெல்லாம் சரி தான். ஆனால், முதன் முதலாக ப் படைப்பு எப்படி எங்கே இருந்தது? என்ற கேள்வி எழலாம். 

முதலில் என்பதன் பொருள் என்ன, என்பது தான் பதில். 

முதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. 

காலத்திற்கு ஒரு தொடக்கத்தைக் குறிப்பிட்டால், காலம் என்ற கருத்தே அழிந்து விடும், 

காலம் தொடங்கிய எல்லை ஒன்றை நிறுவ முயலும் போது, அந்த எல்லைக்கும் அப்பால் உள்ள காலத்தை நினைத்தாக வேண்டும். அதே போல் இடம் தொடங்கிய எல்லையை நினைக்க எண்ணினால், அந்த எல்லைக்கும் அப்பால் உள்ள இடத்தை நினைக்க வேண்டும். காலமும் இடமும் எல்லையற்றவை. 

எனவே இவற்றிற்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. 

-

இறைவன் ஐந்தே நிமிடத்தில் பிரபஞ்சத்தைப் படைத்து முடித்து விட்டுப் பிறகு உறங்கப் போய்விட்டார். அப்போது முதல் உறங்கிக்கொண்டே இருக்கிறார் என்ற கருத்து தவறானது. அலைகள் தொடர்ச்சியாக எழுவதும் விழுவதுமாக உள்ளன. இறைவன் முடிவற்ற இந்த நிகழ்ச்சியை இயக்கி வருகிறார்.

எப்படிப் பிரபஞ்சத்திற்குத் தொடக்கமும் முடிவும் இல்லையோ, அப்படியே இறைவனும் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். 

-

தூல உருவிலோ நுண்ணுருவிலோ பிரபஞ்சப் படைப்பு இல்லாத காலம் ஒன்று உண்டு என்று நாம் சொன்னால், அப்போது கடவுளும் இல்லை என்று ஆகிவிடும். ஏனெனில் கடவுளை நாம் பிரபஞ்ச சாட்சி என்றல்லவா சொல்கிறோம்? 

-

பிரபஞ்சம் எப்படி முடிவற்றதோ, அப்படியே இறைவனும் முடிவற்றவர் .


71.மத்வரின் துவைத வேதாந்தம்

Additional Information

  

71.மத்வரின் துவைத வேதாந்தம்

-

மத்வரின் துவைத வேதாந்தம்

-

பிரம்மம்- பிரபஞ்சம்-ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். 

பிரம்மமே பிற அனைத்தும் என்ற சங்கரவேதாந்தத்தை துவைதம் முற்றாக மறுக்கிறது. 

இறுதிநிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைதித கொள்கையையும் அது ஏற்பது இல்லை. 

பிரம்மம் நாம் காணும் அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிரிருப்பு என்பது துவைதத்தின் கொள்கை.

-

துவைத மதத்தின் நிறுவனர் மத்வாச்சாரியார். இவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி அருகே பிறந்தார். மத்வர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய மத்வ பாஷ்யம் முக்கியமான நூலாகும். கீதாபாஷ்யம், பாகவத தால்பரிய நிர்ணயம், பாரத தால்பரிய நிர்ணயம் ஆகியவை முக்கிய நூல்கள். ஜய தீர்த்தர், வியாசதீர்த்தர் ஆகிய சீடர்கள் மத்வ தத்துவத்தை விளக்கியுள்ளார்கள். மத்வரும் அத்வைதம் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து தன் தத்துவத்தை அமைத்துள்ளார்.

-

மத்வரின் கோட்பாடுகள் இவை.

-

1] பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றல்ல. பிரம்மம் அறிபடுபொருள், ஆத்மா அறிவது. அவை இரண்டாக இருப்பதனாலேயெ ஞானம் உருவாகிறது.

-

2] பிரம்மம் அனைத்தையும் படைத்து காத்து அழிக்கும் சக்தி. ஆகவே அது அனைத்துமறிந்தது, அனைத்து வல்லமையும் கொண்டது. ஆனால் அது பிரபஞ்சத்தை கடந்த பெரும் சக்தி

-

3] ஞானம் பிரம்மத்தை அறியும் வழியாக உள்ளது.புறவுலகு புலன்களில் பதிவதனால்மட்டுமே ஞானம் உருவாகும். ஞானம் உண்மையாக இருக்கவேண்டுமென்றால் புறவுலகும் புலன்களும் உண்மையாக இருந்தாகவேண்டும்.

-

4] புறவுலகு என்பது மூலஇயற்கையின் வளர்ச்சி நிலையாக உருவாகியுள்ள உண்மைவடிவமே.

-

5] புறவுலகு உருவாக ஆதிஇயற்கையே வேர்நிலைக் காரணம், பிரம்மம் தூண்டுகை காரணம்.

-

6] ஆகவே பிரம்மம் தன்னை மூலப்பொருளாக அல்லது மூலக்காரணமாக ஆக்கி பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை. பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் உள்ளன. அக்குணங்கள் பிரம்மத்தில் இருக்க நியாயமில்லை.

-

7] எல்லா உயிர்களும் சமமல்ல. ஆத்மாகளின் படிநிலைகள் வேறுபட்டவை. ஆத்மாக்கள் படிப்படியாக தங்களை மேம்படுத்திக் கொண்டு முத்தி நோக்கி செல்கின்றன

-

8] முத்தி என்பது இயற்கை உருவாக்கும் அலைகள் அடங்கி பிரம்மத்தை உணர்ந்து அதற்கு முழுமையாக ஆட்பட்டு நிற்கும் நிலையேயாகும்.

-

மத்வ தரிசனத்தின் அடிப்படை இதுவே. 

ஒருமையால் அல்ல பிரிவுகளால் தான் பிரபஞ்சம் இயங்குகிறது. 

ஞானம், கருமம், முத்தி ஆகியவை அப்பிரிவிலிருந்து உருவாகின்றவை. 

ஒருமையே உண்மையென்றால் இவை தேவையே இல்லை. 

-

மத்வர் ஐவகை பிளவுகளை முன்வைத்து பிரபஞ்ச இயக்கத்தை விளக்குகிறார். 

முக்தி என்பது அப்பிளவு இல்லாமலாகும்நிலையல்ல, அவற்றை தாண்டி பிரம்மத்தை அறியும்நிலையே. 

அதற்கு மத்வ மதம் முன்வைக்கும் வழி உணர்ச்சிகரமான தூய பக்தியேயாகும்

-

தலைப்புகள்

ஐம்பெரும்பிளவு[பஞ்சபேதம்]

-

மத்வரின் வேதாந்தத்தின்படி பிரம்மத்துக்கும் ஆத்மா மற்றும் இயற்கைக்கும் இடையே ஐந்து முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

-

1]பிரம்மமும் ஆத்மாவுக்கும் கொள்ளும் வேறுபாடு. ஆத்மாவுக்கு காமகுரோதமோகங்கள் உள்ளன. அது மும்மலங்களால் மூடப்பட்டுள்ளது. அது குறைவும் முழுமையும் கொண்டது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்றால் அந்த் இயல்புகள் பிரம்மத்துக்கும் உரியன என்றகிறது. அப்படி அல்ல, பிரம்மம் தூயது, எந்நிலையிலும் முழுமை குறையாதது.

-

2] பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்துக்கு குணம்,கருமம்,தர்மம் ஆகியவை உள்ளன. அவ்வியல்புகளுக்கு அது கட்டுப்பட்டது. பிரம்மம் அத்தகைய அறியப்படும் இயல்புகள் கொண்ட ஒன்று அல்ல. அது நிர்ணயிக்க முடியாதது.

-

3] ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. பருப்பிரபஞ்சத்தின் இயல்புகளான குணம்,கருமம் ஆகியவற்றுடன் ஆத்மா இணைவதில்லை. ஆத்மா அதன் சாட்சியாகவே உள்ளது, அதன் பகுதியாக அல்ல. ஆகவே பருப்பொருள் ஆத்மாவுக்கு தொடர்பில்லாமல் வெளியே தனித்தியங்குகிறது.

-

4] ஒரு ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு. ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் நன்மை தீமை என்பதற்கு வேறுபாடே இல்லாமலாகிவிடும்

-

5] ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. எல்லா பருப்பொருட்களும் ஒன்றல்ல. அப்படி ஒன்று என்றால் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே குணம்-கருமம் ஆகியவைதானே இருக்கும்? ஆனால் இங்கே ஒவ்வொரு பருப்பொருளுக்கும் அதற்கான குணமும் செயலும் உள்ளது.

-

மத்வர் உள்ளிட்ட வேதாந்திகள் அடிப்படைக் கருவியாக பயன்படுத்தும் சில கருதுகோள்களை சுருக்கமாக

முதலில் பிரம்மத்தின் மீது உருமயக்கவாதம், வளர்ச்சிநிலை வாதம் இரண்டையுமே துவைதர்கள் போடுவது இல்லை.பிரம்மம் இவையனைத்துக்குமே அப்பாற்பட்டது என்பதே துவைதத்தின் சாரம்.

-

உருமயக்கவாதம் [விவர்த்த வாதம்]

-

பிரம்மம் எந்நிலையிலும் இன்னொன்றாக மாறுவதில்லை அதன் பிற தோற்றங்களெல்லாம் மாயையே என்று வாதிடும் கொள்கை. அத்வைதத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று இது. பிரம்மம் கடல். அலைகள், துளிகள், துமிகள் என பிற. அலைகளையே நாம் பார்க்க முடிகிறது, ஆனால் அதுதான் கடல் என்பது சங்கரரின் உவமை.

-

இன்றைய சொற்களில் சொல்லப்போனால் நாம் காணும்,நாம் பகுதியாக உள்ள இப்பிரபஞ்ச வெளியை உருவாக்கிய ஆற்றல் எதுவோ அதுவேதான் இப்பிரபஞ்சமாகவும் உள்ளதா அல்லது அது இப்பிரபஞ்சத்தை உருவாக்கியபின் இதற்கு அப்பாற்பட்டதாக உள்ளதா என்ற கேள்வி. உருமயக்க வாதத்தைப்பொறுத்தவரை பிரபஞ்ச சாரம் எப்போதும் அதுவாகவே உள்ளது நாம்தான் அதை இப்பிரபஞ்சத்தின் விரிவான தோற்றமாக எண்ணிக்கொள்கிறோம்

-

உருமயக்கவாதத்தின் நவீன உதாரணமாக இப்படிச் சொல்லலாம். பிரபஞ்சத்தில் உள்ளது ஆற்றல் மட்டுமே. அதையே நாம் துகள்களாக அணுக்களாக மூலக்கூறுகளாக பொருட்களாக கோள்களாக விண்மீன்களாக பால்வழிகளாக பர்க்கிறோம். அது ஆற்றல் என்ற வடிவிலேயே உள்ளது, அதை பொருண்மையாக பார்ப்பது நாம்தான்.

-

வளர்ச்சிநிலை வாதம்[பரிணாமவாதம்]

-

பிரம்மம் தன்னை பிரபஞ்சமாக ஆக்கிக் கொள்கிறது என்று வாதிடும் கொள்கை. பண்டையவேதாந்தத்தின் கொள்கை இது. சிலந்தி தன் உடலில் இருந்து வலையை பின்னுவதுபோல பிரபஞ்சம் பிரம்மத்தால் உருவாக்கப்படுகிறது என்பது இக்கொள்கை. அதாவது பிரபஞ்சத்தின் மூலமாக இருப்பது தன்னை இப்பிரபஞ்சமாக மாற்றிக்காட்டுகிறது. ஒரு நடிகன் கதாபாத்திரமாக ஆவதுபோல, விதை மரமாக ஆவது போல.

-

உதாரணமாக இப்பிரபஞ்சத்தின் சாரம் ஆற்றல் என்றால் ஆற்றல்தான் பருப்பொருளாக மாற்றம் அடைந்து இந்தப்பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கிறது என்ற வாதம் வளர்ச்சிநிலை வாதம் எனலாம்.

-

இந்தபிரபஞ்சம் ஒரு காரியம், அதாவது விளைவு. நாம் காணும் இயற்கையும் ஒரு விளைவே. இவற்றை விளைவித்தது முதற்பொருள். அதை காரணம் என்கிறார்கள் வேதாந்திகள். அந்த காரணம் முதன்மையாக இருவகை

-

வேர்நிலைக் காரணம்[உபதான காரணம்]

-

ஒன்றை உருவாக்க அடிப்படையான பொருட்களை, கருத்துக்களை அளிக்கும் முதற்பொருள் வேர்நிலைக் காரணம். மோருக்கு பால் வேர்நிலைக் காரணம். சாங்கிய மரபுப்படி ஆதி இயற்கையே பிரபஞ்சத்துக்கு வேர்நிலைக் காரணம். ஆதிப்பேரியற்கையில் இருந்து நாம் காணும் இந்த இயற்கை உருவாகி வந்தது. மத்வவேதாந்தமும் அதை ஏற்கிறது

-

தூண்டுகைக்காரணம்[நிமித்திக காரணம்]

-

ஒன்றை உருவாக்குவதற்கான விதியாகவோ, முகாந்தரமாகவோ, முன்னோடியாகவோ, தீர்மானிக்கும் வல்லமையாகவோ உள்ள இன்னொரு பொருள் அல்லது கருத்து தூண்டுகைக் காரணம். புயல் என்ற நிகழ்வுக்கு காற்றழுத்தத்தில் உள்ள ஏற்றதாழ்வு தூண்டுகைக்காரணம் எனலாம். புயலை நிகழ்த்தும் பருண்மையான அனைத்தும் வேறாக உள்ளன. ஆனால் காற்றழுத்தம் அதிகமான இடத்தில் இருந்து காற்றழுத்தம் குறைவான இடம் நோக்கி காற்று சென்றாகவேண்டும் என்று இயற்கையில் உள்ள விதியே புயலுக்கான காரணம்.

-

ஆதிஇயற்கை குணங்கள் ஏதும் அற்ற ஒரு பருப்பொருள் வெளி. அதில் மூன்று குணங்களும் அந்த குணங்கள் கொண்ட தனித்தனிப் பொருட்களும் உருவாக புருஷன் காரணமாக அமைகிறான். மத்வவேதாந்தம் அந்த ஆதிஇயற்கை உருவாக தூண்டுகைக் காரணம் பிரம்மமே என்கிறது

-

இன்றைய சொற்களில் சொல்வதாக இருந்தால் மத்வர் சொல்வது இதுவே. இந்த பிரபஞ்சவெளியை உருவாக்கிய மூலகாரணமானது தன்னை இதுவாக நமக்கு காட்டவில்லை. தன்னை உருமாற்றிக்கொள்ளவும் இல்லை. இந்தபிரபஞ்சம் வேறு அது வேறு. அது இப்பிரபஞ்சம் உருவாவதற்கான ஒரு தூண்டுதல்தான். அதாவது இப்பிரபஞ்சத்தை ஒரு நாற்காலி என்று வைத்துக்கொள்வோம். நாற்காலி என்ற கருத்தை உருவாக்கிய மனமே அதற்கான மூலகாரணமாகிய பிரம்மம்.

-

பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றம் அல்ல, உண்மை. அந்த உண்மை உருவாவதற்கான கருத்தாகவும் விதிகளாகவும் உள்ளதே பிரபஞ்ச சாரமான பிரம்மம். அது எந்தவகையிலும் மானுடனின் தர்க்கத்தால் அறிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அப்படி ஒன்று உள்ளது என்பதற்கு இந்தபிரபஞ்சத்தின் செயல்முறையே சான்றாகும்– இதுவே மத்வரின் வாதம். 


72.விசிஷ்டாத்வைதம்

Additional Information

  

72.விசிஷ்டாத்வைதம்

-

விசிஷ்டாத்வைதம் என்பது வேதாந்தத்தை அடிப்படையாக உடைய மதம். 

வேதம் என்றும் உள்ளது என்று கருதப்படுவதால் இம்மதமும் என்றும் உள்ளது என்றே கருதப்பட வேண்டும். 

வேத சுருதிகளே அடிப்படை என்பதால் வேதச் சுருதிகளைப் போல ஆரம்பமில்லாதது இம்மதத்தின் கொள்கைகள்.

-

ஸ்ரீ ராமனுஜர் வந்து ஏதோ ஒரு புதிய மதம் எதையும் தொடங்கிவிடவில்லை. அவருக்கு முன் பிருந்த போதாயனர், வியாசர், பாருசி, குஹதேவ், டங்கர், திரமிடாசார், ஸ்ரீ பாராங்குசர், ஸ்ரீமந் நாத முனிகள், பிரும்ம நந்தி, ஸ்ரீ ஆளவந்தார் முதலிய மகான்களின் கொள்கைகளையே சேகரித்து, ஒவ்வொரு செய்தியிலும் அவர்களது மொழிகளையே மேற்கோள்களாக்கி மதத்தை நிலைநாட்டியுள்ளார். அதற்காக, தம் கொள்கைகளை விளக்கும் முகமாக பகவத்கீதை, பிரும்ம சூத்திரங்களுக்கு விளக்கமும் பொருளும் எழுதினார். அவையிரண்டிலும் உபநிடதக் கருத்துக்கள் வந்துவிடுவதால் தனியாக உபநிடதங்களுக்கு எழுதவில்லை. ஆனால் தம் கருத்துக்களைத் தொகுத்து பெரிய விளக்கவுரை நூல்களில் எழுதியதையே சாறாக எடுத்து தனி தத்துவ நூல்களைத் தமது தரிசனப் பாதுகாவலாக எழுதி வைத்தார். 

-

அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும்

-

தமக்கு முன்பிருந்த ஸ்ரீ சங்கரரின் அத்வைதத்தில் மனம் சமாதானமடையாத அவர், தமக்கு முன் வைணவ ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்த ஸ்ரீமத் ஆளவந்தாரின் மனக்குறையைப் போக்கும் வண்ணம் விசிஷ்டாத்வைத மதத்தைக் கண்டார். அதற்காகவே பிரஸ்தானத்திரயத்திற்குப் பொருளும் விளக்கமும் செய்து அருளினார். ஸ்ரீ சங்கரர், சொன்னது அத்வைதம். அதாவது இரண்டற்றது என்று பொருள். ஸ்ரீ ராமானுஜர் கண்டது விசிஷ்டாத்வைதம். சிறப்பு உள்ள அத்வைதம். 

-

ஜீவன்-பிரும்மம்-பிரக்ருதி ஆகிய மூன்று தத்துவங்கள் தனித்தனியாக உள்ளன. அவை மூன்றுமே உண்மை, அழிவற்றவை, பிரும்மத்துடன் மற்ற இரண்டும் தொடர்பு கொண்டு உள்ளன. இத்தொடர்பு ஒன்பது விதங்களாகும். அதாவது சித்-அசித் தை தன்னைச் சேர்ந்த விசிஷ்டமாகக் கொண்ட பிரும்மமே உண்மை என்றார் இராமானுஜர்.

-

மோட்சம்

-

ஸ்ரீமந் நாராயணனே அந்தப்படி உள்ள பிரும்மம், 

பக்தியும், சரணாகதியுமே அவனைச் சேர்ந்து அடைய வழிகள். 

பௌதிகத்திற்கு அப்பாற்பட்ட வைகுந்தமாகிய அவனுடைய உலகத்தில் என்றென்றும் அவனுக்குக் குற்றேவல்களைக்(கைங்கர்யம்) செய்து கொண்டு அவனை அனுபவித்துக் கொண்டு ஆனந்தமாக இருப்பதுதான் மோட்சம் முக்தி மேலான நிலை ஆகும். 

இதையே பரம புருஷார்த்தமாக எல்லா சாத்திரங்களும் கூறுகின்றன. ஸாயுஜ்யம் என்றும் சொல்லுவர். அனுபவிப்பவனுடைய தன்மை அடைவதே ஸாயுஜயம் எனப்படும். 

அப்படிப்பட்ட அனுபவிக்கும் தன்மையை அடைகிறவனை ஸயுக் என்கிறார்கள். 

மோட்சத்தில் பிரும்மத்துடன் முக்தனாகிய ஜீவனும் ஐக்கிய போக ஆனந்தம் அடைவதால் இருவருமே ஒருவரை ஒருவர் அனுபவிக்கும் ஸயுக் ஆகிறார்கள் என்கிறார் சாகடாயனர். 

அதாவது பால் தயிராகி விடுவது போல ஜீவன் பிரும்மமாகி விடுவதில்லை. நாயகியும் நாயகனும் ஒன்றுபட்டு(ஐக்கியப்பட்டு) ஒருவரை ஒருவர் அனுபவிப்பது போல, தன்னுணர்வோடு பிரும்மானுபவம் கண்டு ஆனந்தத்தில் பிரும்மத்திற்கு சமமாகும் ஸாம்யமே, ஸமானரஸம் இல்லை எனப்படுகிறது. 

பகவத்கீதையில் கூட ஸ்ரீ கிருஷ்ணர், மம ஸாதர்ம்ய மா கதா ஹ என்றே கூறினார். எனக்கு ஒத்தவர்களாக எனக்கு சமமான நிலையை அடைந்தார்கள்(தர்மத்தை) என்றுதான் பொருள். நானாகி விட்டனர் என்று கூறவில்லை. எனவே ஸாயுஜ்யம் ஆகிய இறுதி நிலைக்கு கடவுளைப் போல அவருடைய ஆனந்தம் ஞானம் முதலியவற்றில் அவருக்கு சமமாகிச் சேர்ந்திருந்தனர் என்றே பொருள்!

-

வழியும் பயனும்

-

விசிஷ்டாத்வைதி இப்படி மதானுஷ்டானம் புரிய வேண்டும். தினசரிக் கடன்கள், செய்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்ட கடன்கள் முதலியவற்றை இறைவனின் கட்டளையாக விடாமல் இயற்ற வேண்டும்.

அப்போது கர்ம பலன்களில் இச்சை வைக்கக் கூடாது. கடமையாற்றுவதே இன்பமாகச் செய்துவர வேண்டும். இவ்வாறு நாட்களைக் கழிக்கையில் இறைவனுக்கு அபச்சாரம் செய்துவிடக் கூடாது. இறைவனுக்கு அபச்சாரமாவது, மேற்படி கடமைகளில் தவறுவது, ஆன்மீக மற்ற அசுரத்தனமான விலக்கப்பட்ட கருமங்களைச் செய்வது, இறைவனுக்குப் பிரியமற்றதும் விரோதமானதும் ஆகும். அவற்றை விலக்காமல் ஈடுபடுவது இறைவனிடம் அபச்சாரப்படுவதாகும். அடுத்து அதேபோல, இறைவனின் அடியாரிடம் அபச்சாரப்படக்கூடாது. 

இறைவனுக்கு பிரியமானவற்றைச் செய்து கொண்டு வருபவர், அவனது அடியார்களாவர். அவர்களை மதியாததும், துன்புறுத்துவதும், தடை செய்வதும் அபச்சாரமாகும். இப்படி எவரிடமும் அபச்சாரப்படாமல் ஒழுகுபவன் மரண காலத்தில் உடலை விடும்போது, தன் னுடைய இருதயத்திலுள்ள பரமாத்மாவிடம் ஓய்வு கொள்ளுகிறான். 

அப்போது அந்த ஜீவனின் பாவங்கள் அவனுக்குத் துன்பம் தந்தவருக்கும், புண்ணியங்கள் அவனுக்கு நலம் செய்தவர்களுக்கும் போய் சேர்ந்து விடுகின்றன. பிறகு முக்திக்குப் போகும் வழியான சூட்சும நாடியில் நுழைந்து, இதயத்திலிருந்து தலையிலிருக்கும் பிரம்ம மந்திரம் சென்று உடலை விட்டு வெளியேறுகிறான். 

அச்சமயம் விஷ்ணுகிங்கரரான அமானவன் அழைத்துச் செல்ல அர்ச்சிராதி வழியில்(ஒளிமிக்க வழியில்) சென்று பௌதீக உலகிற்கும் அப்ராக்ருத வைகுந்த உலகிற்கும் எல்லை நிலமான விரஜா நதியைக் கடந்து சூட்சும உடலை விட்டுவிடுகிறான்.

-

பஞ்ச பூதங்களில்லாத அப்ராக்ருத உடலைப் பெறுகிறான். அலங்காரங்களுடன் ஞானம் விரிவடைந்து வைகுண்டத்தில் நுழைகிறான். அங்கே நித்ய சூரிகளான பந்தமே அற்றவரும், முக்தியடைந்தவரும் ஆன ஆன்மாக்கள் புதிதாக வந்த முக்த ஜீவனை வரவேற்கின்றனர். 

அழகிய அலங்கார மணி ஒளிவீசும் ஆயிரக்கால் மண்டபத்தில் சப்ரமஞ்ச கட்டிலில் சேஷ(நாக) ஆசனத்திலிருக்கும் இறைவன் ஸ்ரீமந் நாராயணனை வணங்கி அனுபவித்து எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும், எல்லாக் காலத்திலும் ஏற்ற கைங்கர்யங்களைச் செய்து வருவதில் ஆனந்தமுடையவனாக, கடவுளைப் போலவே எட்டு குணங்கள், நான்கு புஜங்கள் உடையவனாக, சிருஷ்டி ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலைத் தவிர மற்றதில் பகவானுடன் ஜீவனம், ஞானம், ஆனந்தம் இவைகளில் ஒன்றாகி சம்சார சுகதுக்க உலகத்திற்குத் திரும்பியே வராமல் இறைவனைத் தவிர வேறானவனாகவே இருந்தபடி என்றும் நிரந்தர ஆனந்தத்தை அனுபவிப்பான். இந்த முக்தி விசிஷ்டாத்வைதிகளுக்கே!

தலைப்புகள்

-

கடவுள் ஒருவரே

-

இந்தத் தத்துவத்தில் பரமாத்மா, ஸ்ரீமந் நாராயணனே! அவனைத் தவிர ஏகப்பட்ட ஜீவர்கள் உண்டு. 

பிரக்ருதி தனியே உள்ளது. ஜீவர்கள் ஞானமுள்ள அனுப்பிரமாணம்(அளவு) உள்ளவர்கள். 

பிரக்ருதி ஜடம், அறிவில்லாதது. ஜீவர்களுக்கு முன்வினைத் தொகுதி என்ற கருமாக்கள் என்று தொடங்கியது என்பது தெரியாமல் அநாதி காலமாகவே உண்டு. இந்த பிரக்ருதியை அசித் என்பர். ஜீவர்கள் சித் எனப்படுவர். பரமாத்மா ஈஸ்வரன்-இறைவன் எனப்படுவார். இந்த வேறு வேறான தத்துவங்கள் மூன்றிற்குள்ளும் விட்டுப்போகாத தொடர்பு உண்டு. ஜீவர்கள் என்ற சித்தும், பிரக்ருதி என்னும் அசித்தும் பரமாத்வான இறைவனுடன் சரீரமாகத் தொடர்பு கொண்டு உள்ளனர். இதனாலேயே சித்தையும், அசித்தையும் விசிஷ்டமாகக் கொண்ட கடவுளே இருக்கிறார் என்பதே விசிஷ்டாத்வைதமாகும். இப்படித் தான் மட்டும் ஒருவராக இருக்கும் பரமாத்மாவிற்குக் கலியாண குணங்கள்(ஆஸ்பீசியஸ் குவாலிட்டிஸ்) உண்டு.

-

ஒரே தெய்வ வழிபாடு

-

கற்புள்ள பெண் தன் கணவனைத் தவிர வேறு யாரையும் அன்பாக நினைத்துப் போற்றமாட்டாள் என்பது போல விசிஷ்டாத்வைதிகள் ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு தேவதைகளைப் போற்றித் துதிக்க மாட்டார்கள். 

ஒரே மேலான உலக சுகத்திற்கானவற்றையும், முக்தியையும் தானே நேரடியாக அளிக்கவல்ல பரதேவதையான எல்லாவற்றிற்கும் மேம்பட்ட தாள பிரும்மமான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறெந்தத் தெய்வத்தையும் தொழ மாட்டார்கள். 

-

பரமாத்மாவின் ஐந்து நிலைகள்

-

இப்படிப்பட்ட மேலான பரமாத்மா ஐந்து நிலைகளில் இருக்கிறார். இது பஞ்சராத்ர கருத்து. இதுவும் வேதமே. இறைவனை ஐந்து இரவுகளில் தம்மை வழிபடும் வழியையும், தனது நிலைகளையும் ரிஷிகளுக்கு உபதேசித்ததே பஞ்சராத்ரம் ஆகும். இது ஆகமமும் ஆகும். பரமாத்மாவின் ஐந்து நிலைகள்1. பரம்2. வியூஹம்3. விபவம்4. அந்தர்யாமி5. அர்ச்சை எனப்படும்.

-

1. பரம்: 

அகராக்ருதமான (பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட) முக்காலமும் ஒரு காலமாக இருக்கும் ஸ்ரீ வகுந்த உலகில் ஸ்ரீமந்நாராயணனின் திருக்கோலம். பூமிதேவி, நீளாதேவி உடன் அழகிய மணி மண்டபத்தில் வீற்றிருப்பது. புனிதமான சங்கு, சக்ர, கதை முதலிய ஆயுதங்களுடனும், விதவிதமாகிய நகை அலங்காரங்களுடனும் இருத்தல், அப்போது ஸ்ரீ கருடர், அநந்தர்(ஆதிசேஷன்) விஸ்வ÷க்ஷனர் போன்ற சம்சாரத்திலேயே சிக்காத நித்யசூரிகள் எனப்படுவோரால் எப்போதும் ஸாமகானங்களால் போற்றப்படும், முக்தி அடைந்து வந்த ஆத்மாக்களால் கைங்கர்யங்களால் அனுபவிக்கப்பட்டும் உள்ள திவ்ய மங்கல வடிவம் சுத்த சத்துவமான ஞான வடிவம். இதையே பரப்பிரும்மம், வாசுதேவர் என்று சொல்வது.

-

2. வியூஹம்: 

உலகத்தைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும், தியானிக்கப்படவும் பூஜை செய்யப்படவும் நான்கு வடிவில் இருப்பது. 1) வாசுதேவன், 2) பிரத்யும்நன்3) அநிருத்தன்4) சங்கர்ஷணன் ஆகியவை ஆகும். பிரும்மா, விஷ்ணு, மகேஷ்வரன் போல வாசுதேவரே ஸ்ரீமந்நாராயணர் ஆகும். பாஞ்சராத்யதிகரணத்தினால் ஜீவோத்பத்தி செய்தியைத் தவிர ஸ்ரீசங்கராச்சாரியாரும் எதையும் கண்டிக்கவில்லை என்பர்.

-

3. விபவம்: 

இது பரமாத்மா எடுத்த அவதார வடிவங்களைக் குறிக்கும். ஆமை வடிவில் கூர்மமாகவும், மீன் வடிவில் மச்சமாகவும், வராகமாகவும், நரசிம்ம வடிவிலும், ராமர் கிருஷ்ணர் என்றும் அந்தந்த உடலிலும், அலங்காரத்திலும்<<உலகில் அவதரிப்பது. இதைப் பற்றிக் கண்ணனே கீதையில் கூறியுள்ளார். தருமத்தைக் காப்பாற்றி, சாதுக்களுக்கு அருளவும், துன்மார்க்கரைத் தண்டிக்கவும் அவதாரங்கள் எடுக்கப்படுகின்றன.

-

4. அந்தர்யாமி: 

எல்லா உயிர்களுக்கும் உள்ளே உறைபவராக இருத்தல், அதாவது ஜீவாத்மாவிற்கும் உள்ளே பரமாத்மா உடலுள் உயிர்போல இருத்தல், இதயத்தில் வாழும் வடிவம், ஜீவனின் குற்றங்குறையால் பாதிக்கப்படாதவன்.

-

5. அர்ச்சாரூபம்: 

பலப்பல விக்ரஹங்களாக நாம் கோயில்களில் தொழும் உருவங்கள் கல்லில், பொன்னில், செம்பில், ஐம்பொன்னில் என்று கடவுளுக்குச் செய்யப்பட்ட அடையாள மூர்த்தங்களில் இருப்பது. இந்த தத்துவத்தில் தான் கோயிலில் உள்ள வணங்கப்படும் சில வடிவங்களில் முழுமையாக உண்மையான கடவுள் வாசம் செய்கிறார் என்பது பொருந்தும். பரவாசுதேவருக்குச் சமமான கடவுளின் முழுமை குடியிருப்பது அர்ச்சாவதாரத்தில் தான். பக்தர்களுக்கு அருள என்று அவர்களால் அமைக்கப்பெறும் சில மூர்த்தங்களில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அதே மூர்த்தங்களின் வடிவில், அமைப்பில் பௌதீகத்திற்கு அப்பாற்பட்டதான திருமேனியை மேற்கொண்டு, காலம் இடம் இவற்றை மீறி இருந்தபடி உள்ள நிலை. அர்ச்சகர்களால் குளியல், உணவு, படுக்கை, ஊர்வலம் முதலியவற்றுடன் மக்களிடையே ஊருக்குள் கோவில்களில் வாழ்பவர். பக்தருக்கு விருப்பப்பட்ட பொருளால் வடிவம் பெறுபவர்.

-

பரமாத்மா

-

இவ்வாறு எல்லாவற்றுக்கும் இறைவனாய், எல்லாம் உடையவனாய், அனைத்திற்கும் அதிபதியாய் இருக்கிறான். காலத்தினால் கணக்கிட முடியாதவனாக, எப்பொருளாலும் அளக்கப்படாதவனாக, தானே அளவிற்குட்படாதவனாகவும் இறைவன் இருக்கிறான். எல்லாச் செயல்களாலும் அவனே துதிக்கப்படுபவனாகவும் உள்ளான். எல்லாப் பயன்களையும் தருபவனாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் ஆதாரம் அவனே. எல்லாம் செய்விப்பவனும் அவனே. எல்லா ஒலிகளாலும் குறிப்பிடப்படுபவன் எல்லா ஒலிகளுக்கும் பொருளானவன் அவனே. எங்கும் எப்போதும் உள்ள ஞானமுடையவனாக இருப்பவன், நினைத்தவுடனேயே எல்லாம் முடிக்கும் திறமையுடன் உள்ளவன். சித் எனும் ஜீவனையும், அசித் எனும் பிரக்ருதியையும் தனது உடைமையாக வைத்திருப்பவனாக உலகத்திற்குத் தானே காரணமாக இருக்கிறான். உபாதான(பானை உருவாக மண் உதவியாவது போல) காரணமாகவும் இருக்கிறான். படைக்க வேண்டும் என்று நினைப்பதால் நிமித்த(பானை உருவாக குயவனைப் போலவும்) காரணமுமாகிறான். காலம் ஜீவர்களுக்கு எல்லாம் உள்ளுறைபவனாக(அந்தர்யாமி) இருப்பதால் துணையாகியும் காரணமாகிறான். (பானை செய்ய கோல், நீர் முதலியவை துணைப்பொருள் ஆவது போல) இவ்வாறான பரமாத்மா கல்யாண குணங்கள் பல உள்ளவன். எந்நிலையிலும் லக்ஷ்மி பிராட்டியுடன் கூடியுள்ளவன். காரணமே இல்லாத சிறப்புக்களைக் கொண்டவன். இவனையே பரப்பிரும்மம், பரமாத்மா என்றும் கூறுவர். இவ்வாறு பல சிறப்புகளை வேதமும் வேதாந்தமும், சாத்திரங்களும், சான்றோரும் தருவது சாட்சாத் ஸ்ரீமந் நாராயணருக்கே! இவரே படைப்பு, காத்தல், அழித்தலை செய்பவர்.

-

பிரம்மாண்டத்தைப் படைத்து நான்முகன், தக்ஷப்ரஜாபதி, காலம் இவர்களிலும் உள்ளே அந்தர்யாமியாகிப் பிற படைப்புகளையும் செய்பவர். அவரே விஷ்ணுவாகவும் அவதரித்தும், மனு, லோக பாலகர்கள் ஆகி உலகை அளித்துக் காக்கிறார். மன்னர், தாய், தந்தை, காலம் ஆகியவர்களில் அந்தர்யாமியாக இருந்து உயிர்களை ஆதரிக்கிறார். மன்னன் மக்களைக் காப்பதும், தாய் தனது தாய்மையினால் சுமந்து பெற்று பாலூட்டி குடும்பத்தைப் பேணுவதும் இறைவன் அவளுள் இருந்து அங்ஙனம் இயக்குவதாலேயே! தந்தை தன் கடமையைச் செய்வதும் அதனாலேயே காலம் வளர்க்கிறது. தேய்மானத்தைச் சரிக்கட்டி நோயைப் போக்குகின்றது. பரிமாண வளர்ச்சியைத் தருகின்றது. இதெல்லாம் விஷ்ணு காக்கும் தன் லீலையைச் செய்வதுவே! அதேபோல ருத்ரன் அரனுக்குள்ளேயும் காலத்திலும் புகுந்து அந்தர்யாமியாக இருவரையும் அழிக்க வைக்கிறார். இப்படி அனைத்துத் தொழில்களும் செய்பவர் ஸ்ரீமந் நாராயணரே! அதனால் அவர்தான் அத்வைதம் எனப்படும் தத்வம்.

-

விசிஷ்டபிரும்மம்

-

சித்தும், அசித்தும் பிரும்மத்திற்கு விசேஷணங்கள் ஆகும் அதாவது தன்மை குணங்கள் போல! ஒரு பொருளுக்குத் தன்மை என்பது அதாவது கண்ணால் காணமுடியாத குணங்கள் விசேஷணம் சிறப்பு எனப்படலாம். வடிவமுள்ளவையான சித்தும், அசித்தும் அப்படிச் சிறப்புத் தன்மை ஆகிவிட முடியுமா? முடியும். பால் வெள்ளையாக இருக்கும். இந்த வெள்ளை நிறம் அதற்கு தன்மை குணம் ஆகிறது. விட்டுப் பிரிக்க முடியாதது ஒரு பொருளின் தன்மை ஆகிறது! யானை கருப்பாக உள்ளது. கருப்பு வண்ணம் யானையை விட்டுப் பிரியாதது. அதே போல பிரும்மத்தை விட்டு சேதனனான சித்தை, அசேதனமாகிய அசித்தைப் பிரிக்கவே முடியாது. மானசீகமாகத்தான் பிரிக்க முடியும். அதனால் ஒன்றிற்கு விசேஷணமானது திரவியமாகவும்(சப்ஸ்டேனக்) இருக்க முடியும். எனவே சித், அசித், பிரிக்க முடியாத விசேஷணமாக, உள்ள விசிஷ்ட பிரும்மமே உண்மையானது.

-

சகுண பிரும்மமே!

-

பிரும்மத்திற்கு உள்ள ஞானம், செல்வம், பலம், ஒளி, கருணை, வீர்யம் முதலிய உயர்ந்த கலியாண குணங்களையும் பிரித்தெடுக்க வழியில்லை. ஆகவே அது சகுணப் பிரும்மமே! ஸ்ரீ சங்கரர் பிரும்மம் நிர்குணம் என்றிருக்கிறார். பல வேதச் சுருதி வரிகள், பிரும்மம் நிர்குணம்-மற்றது என்ற பொருள். கொள்ளும்படி உள்ளன என்கிறார்கள் அத்வைதிகள். ஆனால் அது அப்படி இல்லை. ஸத்யம் ஞானமனந்தம், பிரும்மம் என்கிறது சுருதி. பிரும்மம் ஞான வடிவமானது, ஞானத்தாலே நிரூபிக்கத் தக்கது என்கிற சுருதிகளும் உள்ளன. இதனாலே எல்லாம் பிரும்மம் ஞான மாத்ரமே ஆனது என நிரூபிக்க முடியாது. அறிகிறவனுக்கு அறிவே தன் வடிவம் ஆகும். ஞான வடிவில் உள்ள பிரும்மமே ஞானத்தை உடையதாக உள்ளது என்று சொல்வதே பொருத்தம். சூரியன் ஒளிமயமாக, ஒளி வடிவினனாக உள்ளான். அதே சமயத்தில், ஒளியை உடையவனாக சூரியன் இருக்கிறான். அந்த விதத்தில் பிரும்மம் ஞானமுள்ளதாக இருக்கிற ஒன்று எனலாம். அறிகிறவன் என்று பிரும்மத்தை அதன் அறிகிற தன்மையால்(ஞாத்ருவத்தை) கூறலாம். சுருதிகளும் அப்படியே சொல்கின்றன.

-

சர்வக்ஞன் என்று எல்லாம் அறிந்தவன் என்ற பொருளிலும், பிரும்மம் சொல்லப்படுகிறது. பிரும்மத்தை அளிக்கிறவன் என்றும், ஆளுகிறவன் என்றும் சுருதி கூறுகின்றது. ஆகவே ஞானத்தை உடைய, அறிவைக் கருவியாகக் கொண்டு அறியும் ஒருவனே பிரும்மம் எனத் தீர்மானிக்கப்படுகிறது. இந்த பிரும்மத்திற்கு ஏகப்பட்ட மேலான விந்தைமிகு சக்திகள் உள்ளன. ரஜோ, தமோ குணங்களற்றது என்றும், முதுமை, மரணம், பாவம், துன்பம், தாகம், பசி, போஹம் போன்ற தீய குணங்கள் இல்லாதது என்றும் குறிப்பிடவே பிரும்மம் நிர்குணம் என்று கூறும் சுருதிகள் உள்ளன. ஸத்ய காமத்வம்-ஸத்ய சங்கல்பம் போன்ற நற்குணங்களை உடையவன் பிரும்மம் என்றும் சுருதி வாக்கியங்கள் சொல்லுகின்றன. அதை வைத்துச் சிந்தித்தால், நிர்குண சுருதிகள் பிரும்மம் குணங்களற்றது என்று சொல்லி கெட்ட குணங்களற்றதே பிரும்மம் என்கின்றது எனப்புரியும். அதே சமயம் சின்ன சின்ன நல்ல குணங்கள் உள்ளன என்று காட்டி மங்களமான குணங்களை உடையதே பிரும்மம் என்று உறுதியாக முழங்குகின்றன என்றும் அறியலாம். ஆகவே சித், அசித்துடன் மங்கலமான கல்யாண குணங்களையும் விசேஷணமாக உடைய ஒரே விசிஷ்ட பிரும்மமே தத்துவம். இதுவே விசிஷ்டாத்வைத வேதாந்த உண்மை! இதுவே, விசிஷ்டாத்வைதப் பொருள்! அசித்! என்ற அசேதனத்தில் பிரக்ருதி, காலம், சுத்த சத்துவம் என்ற மூன்றும் உள்ளன. சித் என்ற சேதனரில் நித்யசூரிகள், முக்தாத்மாக்கள், பந்தாத்மாக்கள் என மூவகையினருள்ளனர்.

-

தலைப்புகள்

ஸ்ரீ பாஷ்யம்

-

இந்த மூன்று மூன்று வகையினரான அசேதனம், சேதனம் ஆகியவற்றின் தன் வடிவம், இருப்பு, நடவடிக்கை என்ற மூன்று சமாச்சாரங்களையும் உடையவன் பிரும்மம் என்பது பாஷ்யக்காரர் எனப் புகழ்பெற்ற ஸ்ரீ ராமானுஜரின் அருள்வாக்கு. ஸ்ரீ ராமானுஜர் பிரும்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம்(விளக்கவுரை) இயற்றினார். அதன் சிறப்பை எண்ணி பாஷ்யக்காரர் என்றாலேயே ஸ்ரீ ராமானுஜர் என்ற அர்த்தம் உண்டானது. அவரின் விளக்கவுரைக்கும் ஸ்ரீபாஷ்யம் எனப்பெயரும் புகழும் கிட்டியது. இதில் காலம் என்றுமுள்ளது(எடெர்னல்) என விளக்கப்பட்டுள்ளது. சுத்த சத்துவம் என்பது பௌதிகத்திற்கு அப்பாற்பட்டது. அதுவே பரமபதம்-ஸ்ரீவைகுந்தம் ஆகும். அதாவது அப்ராக்ருத உலகம் எனப்படும். இதையே தமிழில் தெளிவிசும்பு என்பர்.

-

ஜீவன் : 

உடல் சித் எனப்படும் ஆத்மாவல்ல. நாத்திகராகிய சாருவாகர்கள் இங்கே மறுக்கப்படுகின்றனர். ஜைனர் கூறுவது போல ஆத்மா ஒரு சரீரத்தின் அளவே உள்ளது இல்லை. அதாவது, யானை உடலில் யானை அளவும் எறும்பின் உடலில் எறும்பின் அளவும் உள்ளதாக ஆத்மா இல்லை. உதாரணமாக எறும்பாக இருந்த ஆன்மா கர்ம பலனால் ஒரு யானையின் உடலெடுத்தால் எறும்பு அளவு போக மீதி யானை உடலில் ஆன்மா இல்லாத இடம் மீறும். யானை அளவுள்ள ஆன்மா கரும பலனால் எறும்பின் உடலில் வரவேண்டி இருந்தால் உள்ளே நுழைய முடியாது. அதனால், உடல் அளவே ஆன்மா என்ற கருத்து முரணானது. பாஸ்கர மதம் கூறுவது போல ஜீவன் பிரும்மத்தின் கண்டம் அல்ல. யாதவப் பிரகாசர் சொல்வது போல ஜீவன் பிரும்மத்தின் அம்சமுமில்லை. ஜீவனே பிரும்மம், மாயையினால் ஜீவனாக மயங்கி எண்ணிக் கொண்டுள்ளான் என்று கூறும் சங்கரரின் அத்வைதப்படியும் ஜீவன் இல்லை. ஜீவன் பிரும்மத்தை விட்டு வேறானவன். ஞானமுள்ளவன். அளவில் அணுவானவன். ஒரு தலைமுடியின் நுனியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவானவன்.

-

நித்யோ நித்யானாம் சேதன ஸ்வேதனானாம் ஏகோ பஹுனாம்

என்றும் உள்ள பல ஜீவர்களுக்குள் ஒரு ஜீவன் என்றும்

விஞ்ஞானம் யஞ்ஞம் தனுதே

-

ஜீவனானவன் வேள்வியைச் செய்கிறான் என்றும் சுருதிகள் கூறுவதால் ஜீவன் ஒன்றல்ல, பலருள்ளனர். அதுவும் அணு அளவானவர் என்றும் ஏற்படும். கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனா, நீ, நான் இவர்கள் எல்லாம்(பீஷ்மர், துரோணர், துரியோதனர்களைக் காட்டி) என்று பன்மையில் பிரித்துப் பேசுவதே ஜீவர் பலர் என்ற கொள்கையை உண்மையாக்கும். உன் அறிவு மயக்கப்படத்தக்கது. என் அறிவு மயக்கமில்லாதது. இவர்களை எல்லாம் நீ விட்டு விட்டாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று கண்ணன் கீதையில் கூறுவதையும் கவனிக்க வேண்டும். ஆனாலும் பல இடங்களில் சுருதிகளும் ஜீவர்கள் பன்மையாக இருந்தாலும் ஒருமையிலேயே குறிப்பிடுகின்றன. காரணம் ஜீவன்களுக்கிடையே உள்ள பொது இயற்கை(ஜெனரிக் நேச்சர்) ஒன்றாக இருப்பது தான். ஒரு ஜீவனைப் போலவே இன்னொரு ஜீவனும் ஞானவடிவில் ஒன்றாக இருக்கிறது. ஓர் அரிசியைப் போலவே இன்னொரு அரிசியும் இருப்பதால் இங்கே ஒரு மூட்டை அரிசி உள்ளது என்றே பொதுவாக ஒருமையில் குறிப்பிடுகிறோம். அதே போலவே ஒரு வண்டி நிறைய பல அரிசி மூட்டைகள் வந்திறங்கினாலும், அரிசி வந்துவிட்டது என்று ஒருமையிலேயே சொல்லுகிறோம். காரணம் இரண்டு அல்லது பல அரிசிகளுக்கு இடையில் வேற்றுமை இல்லை. அதனாலேயே அரிசிகள் வந்து விட்டன என்றோ லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அரிசிகள் மூட்டையில் இருக்கின்றன என்றோ கூறுவதில்லை. அரிசி என்றே ஏகாரத்தில் குறித்துப் பேசுகிறோம். அதே போலவே சுருதிகளும், சில இடங்களில் ஜீவனை ஒருமையில் பேசுகின்றன. எந்த ஒன்றினால் இந்த உலகில் விவகாரம் நடக்கிறதோ, அது அழிவற்றது என்று ஜீவனை ஒருமையில் குறித்து அவற்றின் அழிவற்ற தன்மையைக் கூறுகின்றன.

-

ஜீவன் அழிவற்றவன். உண்மையாக இருப்பவன். பன்மையிலுள்ளவன். தனித்தனியானவர்கள் என்றெல்லாம் தீர்மானமாகியது. மூவகையினராவர் ஜீவர் என்றும் கண்டோம். ஈரேழு பதினான்கு அண்டங்களுள் அவரவர் கர்ம வினைப்படி நான்முகன் முதல் சிற்றுயிர் செடி கொடி வரையிலான ஜீவர்களாகிய அனைவருமே பக்தர் எனப்படும் பந்தத்திலுள்ளவரே. வேத விதிப்படி விடுதலை அடைந்தவரே முக்தர்கள். என்றென்றும் பந்தப்படாதவர்கள் தாம் நித்யசூரிகள் ஆவர். இறைவனைப் போல ஞானத்தால் பரவி உள்ள இந்த ஜீவன் என்றும் தனக்குள்ள கர்மவினையால் தனது ஞானம் சுருக்கமடைந்த நிலையில் சக்தி குறைந்த பக்தர்கள் ஆகின்றான். கர்ம நீக்கம் உண்டானதும் சுருங்கிய ஞானம் பழையபடி விரிவடைவதால் முக்தனாகிறான். ஞானம் சுருங்காமல் கருமத் தளையில் சிக்காமலேயே இருப்பதால் நித்யர்களாகிய நிலையிலேயே இருக்கிறான்!

-

அசித் எனும் பிரக்ருதி

-

ஜடப்பொருள் இது, தன்னை உணரும் ஞானமில்லாததால் ஜடம் எனப்படுகிறது. ஏற்கனவே பார்த்தபடி மூன்றுவிதமாக உள்ளது. முக்குணங்களாக, முக்காலங்களாக ஸத்துவம், மிச்ர ஸத்துவம், தமஸ் என்று மூவிதங்களாக உள்ளது. இது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. ஆனால் அழிவற்றது. உண்மையாக உள்ளது. இறைவனைக் காணவிடாமல் மறைத்து, தன்னை அனுபவிக்கும்படி ஜீவனைத் தூண்டி வருவது. இதன் மறுபெயர் மாயை. ஆனால் பொய் என்று பொருளில்லை. குணமயி மம மாயா துரத்யயா என்று கீதையில் கண்ணன், முக்குணமயமான என்னுடைய மாயை கடத்தற்கரியது என்கிறார். மாயா என்பதற்கு அத்வைதிகள் சொல்லும் பொருள் இல்லை.

-

மாயா என்றால் கடவுளின் ஆச்சரியமான சக்தி என்றே பொருள். உண்மையான கடவுளின் சக்தி மட்டும் பொய்யாகி(மித்யை) விடுமா? உண்மையான நெருப்பிற்குப் பொய்யான புகை எங்காவது உண்டா? மாயை என்றால் ஒருவிதமான பொருளை இன்னொரு விதமாக மாற்றிவிடும் சக்தி. பால் பாக்டிரியாக்களினால் தயிராவது போல்! இந்திரஜால வித்தை என்பது, ஒருவிதமாக இருக்கும் பொருளை இன்னொரு விதமாகக் காட்டுவது. இங்கு உண்மையில் உள்ள பொருள் மாறிவிடுவது இல்லை! இந்த இரண்டு விதங்களிலும் பிரக்ருதி உலகங்கள் உண்டாகக் கருவியாக இருந்து விசித்திரங்களைச் செய்கிறது. இதனால் இதற்கு மாயை என்று பெயர். பொய் என்பதால் அல்ல இறைவனுக்கு இந்த மாயை அடங்கி அவனால் ஆளப்படும் பொருளாக இருப்பதால் மாயையே சொத்தாக உடையவன் என்ற பொருளில் இறைவன் மாயாவி எனப்படுகிறான். இறைவன் பொய்யானவன் என்பதால் அல்ல. கீதையில் மாயையை என்னுடைய வசப்படுத்திக் கொண்டு உலகில் நான் அவதரிக்கிறேன் என்று4வது அத்யாய, ஆறாவது செய்யுளில் கண்ணன் கூறுகிறார். கடவுள் உண்மையானவர். மாயைக்கு வசப்படாமல் அதைத் தனக்கு வசப்படுத்திக் கொண்டு அவதரிக்கிறார். எங்கே, எனில் உலகில். அப்போது அந்த அவதாரமும், உலகமும் உண்மையாக, நிகழுவதாக இருப்பதாகத் தானே ஆகும்! பொய்யை வசப்படுத்திக் கொண்டு பொய்யாக, பொய்யில் அவதாரம் செய்தார் என்றால் பொருந்துமா? தேவை என்ன? ஆகவே உலகம் பொய்யில்லை. கடவுளைப் போல இதுவும் உண்மையானதே. அதனாலேயே மக்களைத் திருத்த, காக்க தரும வழியை உபதேசித்து நிலைக்கச் செய்ய உலகில் அவதாரம் செய்ய வேண்டிய தேவை கடவுளுக்கு உள்ளது. அதுவும் இந்த கடவுளின் விந்தை சக்தியான மாயையால் ஜீவனுக்கே பாதிப்பு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே பஞ்சபூதங்கள், முக்குணங்கள், காலம் ஆகிய பிரக்ருதியான மாயை உள்ள பொருளே:

-

பிரபஞ்சப் பொருள்கள் எல்லாம் மாறிக்கொண்டே உள்ளன என்பதால் பொய் எனலாகாது. நிரந்தரமற்ற தற்காலிகம் எனலாம். இவ்வாறு மாறி இறுதியில் பஞ்சபூதங்களும் பிரக்ருதியான மூலப்பொருளின் நிலையையே எட்டுகிறது. அது, பிரபஞ்சத்தின் சூட்சும கதி. அது ஒரு போதும் இல்லாமல் மறைந்து, அழிந்து போய் விடுவதில்லை. காலமும் அப்படியே இயங்காமல் ஒரே காலமாக நின்றுவிடுமே தவிர இல்லாமற் போவதில்லை.

-

தலைப்புகள்

விசிஷ்டாத்வைத வாதம்

-

கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத் தெரிகிறது. இதேபோல பிரும்மம் மட்டுமே இரண்டாவது அற்றதாக உள்ளபோது அது உலகாகத் தோன்றுகிறது என்பது அத்வைத விளக்கம்.

-

1. அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு? பிரும்மத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது விசிஷ்டாத்வைதக் கொள்கை.

-

2. பாம்பிடம் உள்ள நஞ்சு பாம்பை விட்டுத் தனியாக இல்லாமலும், அதைப்பாதிக்காமலும் உள்ளது போல மாயை பிரும்மத்துடனேயே அந்த பிரும்மத்தைப் பாதிக்காமல் உள்ளது என்பது அத்வைத விளக்கம். அப்படியானால் மாயை பாதிப்பது யாரை? அது ஜீவனைத் தானே. அவன் பிரும்மத்தை விட்டு வேறொருவனாகத் தானே இருந்தாக வேண்டும். அந்த மாயை பிரும்மத்தையே பாதிக்கிறது எனில் மோட்சம் எவ்வாறு உண்டாக முடியும்? அந்த பிரும்மம் அப்படியே பிராந்தி ஞானத்துடனிருக்க வேண்டியதுதான்! என்பது விசிஷ்ட அத்வைத வாதம். ஆகவே பிரும்மத்தைத் தவிர்த்து ஜீவன் உண்டு.

-

3. ஆத்மாக்கள் மூன்று வகை என்கிறது வேதம். நித்யசூரி, முக்தர், பக்தர் என்ற ஒரே ஆத்மாவே எங்கும் பரந்ததாக அதைத் தவிர வேறொன்றும், குணம், குறி இல்லாததாகவுமிருப்பதனால் இது எப்படி பொருந்தும்? ஒரு ஓரத்தில் நித்யசூரியாகவும், நடுவில் முக்தராகவும், கடைசியில் பக்தராகவும் ஒரே நேரத்தில் இருக்கமுடியுமா? இது இயலாது. ஆகவே ஆன்மாக்கள் பலருண்டு.

-

4. பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர்க் காட்சியில் போல உலகத்தோற்றம் பொய் என்கின்றனர். இது தவறு. அந்த கானல் நீரிலும் நீர் இருப்பது உண்மையே. பிரபஞ்சம் முழுவதும் ஐம்பூதக் கலப்பால் உண்டாகி உள்ளது. எனவே எங்கும் எல்லாம் பூதங்களும் கலந்தே உள்ளன. ஆகவே பாலைவனத்திலும் நீர் உள்ளது அந்த அம்சத்தை மட்டும் தொலைவிலிருந்து நமது கண்கள் பார்த்தறிவதே கானல் நீரின் காட்சி உண்டாதல், அதில் அருகில் சென்றால், அள்ளிக் குடிக்கும்படித் தண்ணீர் இல்லையே தவிர, கண்ணால் காண முடியாவிடினும் நீர் அம்சம் உண்டு. ஆகவே உண்மையே!

-

5. அதேபோலவே சிப்பியில் வெள்ளி காணலும், சிப்பியிலும், வெள்ளியிலும் கலந்திருக்கும் அம்சப் பொருள்கள் ஒன்றேதான். விகிதாச்சாரமே வேறு. அசப்பிலோ, தொலைவிலிருந்து காணும்போதோ அந்த இரண்டிலுமுள்ள குறிப்பிட்ட ஒரே அம்சமே பார்த்தறிப்படுவதாலேயே சிப்பி வெள்ளியாகக் காணப்படுகிறது. சிறிது அருகில் சென்று கவனித்துப் பார்க்கையில் மற்ற வேறுபாட்டு அம்சங்களும் உணரப்படுவதால் வேறு வேறு பொருள்களாய் தெளியப்படுகிறது. இங்கும் வெள்ளியே காணப்படுதால் காட்சி உண்மையே!

-

6. இப்படி இரண்டிலும் ஒரே அம்சப் பொருள் உள்ளவற்றில் தான் ஒன்று இன்னொன்றாய்க் காணப்படுகின்றது. கயிறுக்கும், பாம்பிற்கும் ஒற்றுமையாக உள்ள நீண்ட, மெல்லிய, வளைவுகள் என்ற பொதுவான இலட்சணங்களே கயிறைப் பாம்பாகக் கருதச் செய்கின்றன. ஒரு கல்லோ, கட்டிடமோ பாம்பாகத் தெரியாது. மண் ஓடு வெள்ளியாகக் காணப்படாது. ஒன்றை இன்னொன்றாகக் காண்கையிலும் இரண்டிலும் உள்ள அந்த உண்மையான அம்சமே காணப்படுவதால் பிரத்யட்சமான அறிவிலும் பொய் எனப்படும் இல்லாத ஒன்று அறியப்படுவதில்லை. கயிறு, பாம்பு, சிப்பி, வெள்ளி ஆகிய இரண்டிரண்டு ஒரே தன்மையுள்ள பொருள்கள் உண்மையில் இருந்தால் தான் ஒன்றை இன்னொன்றாகக் காணும் அத்யாசமும் உண்டாக முடியும்.

-

7. சிப்பியில் தோன்றும் வெள்ளி ஒரு வேலைக்கும் உதவுவது இல்லை. பாலைவன கானல் நீரும் அப்படியே. ஆனால் பூமியைத் தோண்டி எடுக்கப்படும் வெள்ளியில் பல பண்டங்கள் செய்யப்பட்டு பல வேலைகளில் புழங்கப்படுகின்றன. எனவே உலகைப் பொய் எனில் பொருந்தாது. ஆறு, குளங்களில் காணப்படும் நீரும் குளிக்க குடிக்கப் பயன்படுகின்றன. ஆதலால் பொய் என்க வழியில்லை.

-

8. பொய் படைக்கப்பட வேண்டியதில்லை. உலகமோ கடவுளால் படைக்கப்படுவதாக வேதத்தில் கூறப்படுகிறது.

-

9. கீதை14-ஆவது அத்யாய3ஆவது செய்யுளில் பிரபஞ்சத்திற்கு மூல காரணமான என்னுடைய பிரக்ருதியில் ஜீவாத்ம தொகுதியை சேர்ப்பவன் நானே. இதனாலேயே எல்லாப் பூதங்களும் உண்டாகின்றன என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். ஆகவே, இந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திடம் உள்ள அறியாமையால் உண்டாகும் ஒரு கற்பனைத் தோற்றம் என்று அத்வைதி கூறுவது பிழையாகும்.

-

10. அத்வைதத்தில் சொல்வது படி, தங்கம் தான் எல்லா நகைகளாகவுமாகின்றன. மண்தான் சட்டி, மடக்கு, குடங்கள் ஆகின்றன. நூல் தான் துணியாகின்றது. சக்கரை தான் அத்தனை இனிப்புகளுமாகின்றது. ஒரு மூலப்பொருளிலிருந்தே எல்லாம் வந்துள்ளன. இப்படி காற்று, தீ, நீர், நிலம், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் கலப்பால் அனைத்துப் பொருள்களும் உண்டாகின்றன. அந்த பிரக்ருதி ஐந்து பூதங்களும் காலம், முக்குணங்களாகின்றது. தைத்ரியோபநிஷத்து உலகின் காரணம் எதுவோ அது பிரும்மம் என்று பிருகுவல்லியில் கூறுகிறது. நாராயணோபநிஷத்தி<<லும் இன்னும் சிலவற்றிலும், நாராயணனே உலக காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீமந் நாராயணனே பிரும்மம் ஆவார். பெரியதான, (புனித) குணங்கள் இருப்பதால் அது பிரும்மம் எனப்படுகிறது என்கிறது உபநிஷத்து. ஆகவே, அந்த உள்ள ஒரே பொருளான விசிஷ்டபிரும்மமே கலியாண குணங்களுடையது ஆகும். இப்படி, பிரத்யட்ச, அனுமான ஆகம பிரமாணப்படி உண்மை இதுவே ஆகிறது. இதிலிருந்து நிர்குண பிரும்மம் என்று எதுவும் இல்லை என்று தள்ளப்படுகின்றது.

-

ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் உள்ள அங்க வேறுபாட்டு விசேஷமே(சிறப்பு) பொருளைப் புலன்களால் அறிய வைப்பது. இல்லாவிடில், ஒரு பசுமாட்டிற்குப் பதிலாகப் பன்றியைக் கொண்டு வந்துவிட நேரும். ஆகவே நேரடிப் புலனறிவில் ஸ்ரீசங்கரர் கூறுவது போல, பொருள் பற்றிய தனி ஞானம் மட்டும் உண்டாக வழியே இல்லை. இதை வைத்தே உண்டாகும் அனுமான அறிவிலும் அப்படித்தான். பொருளின் அறிவு மட்டும் தனியாக உண்டாகாது. புகையுடன் நெருப்பைக் காண்கிறோம். வேறெங்காவது புகை மட்டும் கண்டால் நெருப்பு அங்கு இருக்கும் என ஊகித்தறிகிறோம். இது அனுமானித்தல், நெருப்பு என்றால் சூடுள்ள பொருள் என்றே அறிகிறோம். சப்தம் எனும் ப்ரமாணமும் இதுவரை சொன்னதையே நிலை நாட்டுகிறது. பகுதி, விகுதிகளோடு சேர்ந்தே ஒரு சொல் என்பது பகுதியும் விகுதியும் பொருளில் வேறுபடுவன. ஆகவே சொல்லும் விசேஷணமற்ற தனிப்பொருளைச் சொல்லாது. பாடுகிறான் என்ற சொல்லில் பாடுவது ஆணா, பெண்ணா என்ற கேள்வியின் பதிலாக ஆண் என்ற விவரமும், எப்போது? என்ற கேள்விக்கு நிகழ்காலத்தில் இப்போது என்ற விவரமும் கூடவே இருக்கிறது. பாடுதல் என்ற தொழிலைச் செய்வது பொருள் ஒன்று அதை மட்டும் தனியாக உணர்த்துவதில்லை. இவ்வளவு விசேஷணங்கள் ஒரு சொல்லிலேயே உண்டு. பல சொற்களால் ஆனது ஒரு வாக்கியம் பல வாக்கியங்களால் ஆனது சப்த பிரமாணம். அதனால் விசேஷமான ஒரு பொருளையும் அறிவிக்க முடியாது. நான் என்பதன் உரியவன் ஆத்மா. இல்லாவிடில் கர்ம பயன் ஆத்மாவைச் சேர வழியில்லை. இந்த நான் ஐ அடிப்படையாக வைத்தே எல்லா அறிவும் உண்டாகிறது.

-

விழிப்பில் : 

நான் ஆணாக இருக்கிறேன் நான் கருப்பு, குண்டு என்பது போன்ற விசேஷம் உள்ளதாகவே அறிவு உண்டாகிறது.

-

கனவில் : 

நான் கனவு கண்டேன், சில சமயம் கனவு காணும்போதே நான் கனவு காண்கிறேன் என்ற அறிவு ஏற்படுகிறது. இதுவும் ஸவிசேஷமே! இதுவும் இறைவனால் கர்ம பயன்படி, அருளப்பட்ட சுகதுக்கம் உண்டாகும் வாழ்க்கையே! அத்வைதி சொல்வது போல தானே ஒருவன் உண்டாக்கிக் கொள்வதல்ல(படைத்துக் கொள்வதல்ல) கனவு வாழ்வு. ஏனெனில் தனக்குத் தானே எவரும் கெட்ட, பயங்கர கனவுகளைப் படைத்துக் கொள்ள மாட்டார்.

-

தூக்கம் : 

தூங்கும் போது ஒன்றும் தெரியாவிட்டாலும், தூங்கி விழித்ததும் இவ்வளவு நேரம் நான் தூங்கினேன் என்ற அறிவு உண்டாகிறது. அனுபவிக்கப்பட்ட அறிவே இவ்வாறுண்டாகும். அங்கே அனுபவம் என்னும் போதே அனுபவித்தவனும் அனுபவிக்கப்பட்ட விசேஷமான விஷயமமும் உண்டு.

-

மயக்கம் : 

நான் மயங்கி இருந்தேன். இதுவரை, நினைவு இன்றி இருந்தேன் என்ற அறிவு உண்டாகிறது. மற்ற பிரக்ஞை நிலையிலிருந்து மூர்ச்சை பிரித்தறியப்படுவதே ஸவிசேஷ அனுபவத்தால் தான். ஒவ்வொரு உணர்வு நிலையிலும் நமக்கு விசேஷண விசிஷ்ட அறிவே உண்டாகிறது. அப்படிப்பட்ட அறிவிற்குப் பாத்திரமான பொருளும் விசேஷண விசிஷ்டமானவையே. அப்படியே இந்தப் பிரபஞ்சத்திற்குக் காரணமான பிரும்மமும் குணமுடையதே. அதாவது, விசேஷண விசிஷ்டமே! பிரும்மத்தின் விசேஷணங்களாக முதலிலேயே பார்க்கப்பட்டவையே சித்தும், அசித்தும். (சோல் அண்டு மேட்டர்). சிதசித்ஐ விசேஷணங்களாகக் கொண்ட விசிஷ்ட பிரும்மமே விசிஷ்டாத்வைத தத்துவம்.

-

லக்ஷ்மி : 

இதில் ஸ்ரீ எனப்படும் லக்ஷ்மி ஆகிய பெரிய பிராட்டி பிரும்மத்திற்கு மிகவும் பிரியையான ஜீவாத்மா. நித்யசூரி வகுப்பைச் சேர்ந்தவள். ஸ்ரீமந் நாராயணனின் கைங்கர்ய ஆனந்தம் என்றென்றும் உள்ளவள். இவளில்லாமல் நாராயணன் இல்லை. புருஷாகாரம் உள்ளவள். அதாவது, பிரும்மத்தின் தயை என்னும் தைவீகக் குணமாகவே இருக்கிறாள். ஜீவர்களை-அவர்களின் பாவ கர்மாக்களை மன்னிருக்கும்படி பெருமாளிடம் சிபாரிசு செய்பவள். பிரும்மத்தின் விசேஷணங்கள் உயிருக்கு உடல் போன்றவை. இதுவரை பிரும்மம், சித், அசித் என்று உயிர், இயற்கை, இறைவன் என்ற மூன்று தத்துவங்களைக் கண்டோம். இது விசிஷ்டாத் வைதம் எப்படி ஆகும்? அதாவது, சிறப்புப் பொருந்திய ஒரே தத்துவம் எப்படி ஆகும்? மஹாபாராத ஸஹஸ்ரநாம அத்தியாயத்தில் சரீரமாக மூன்று உலகங்களையும் உடைய விஷ்ணுவை வணங்குகிறேன் என்று வருகிறது. பிருஹதாரண்ய கோபநிஷத்தில்... யஸ்வ ப்ருதீவி சரீரம், யாருக்கு பூமி சரீரமோ.... என்றும், பஞ்ச பூதங்களையும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், பிராணன், ஐந்து புலன்கள், மனம் முதலிய ஜடப்பொருள்களையும் பரமாத்மாவிற்கு சரீரம் எனச் சொல்லப்படுகிறது. எவன் ஜீவாத்மாவை உடலாகக் கொண்டு அடக்கி ஆள்கிறானோ என்றும் சொல்கிறதால், சேதன, அசேதனங்களை என்றும் சொல்கிறதால், சேதன, அசேதனங்களைத் தனித்தனியே பிரும்மத்தின் உடலாகச் சொன்னதாகிறது. இதே போல இராமாயணம், விஷ்ணு புராணம் பல உபநிஷத்துக்களிலும், பகவத் கீதையிலும் பரமாத்மாவிற்கு ஜீவனும், பிரக்ருதியும் சரீரங்கள் என்ற கருத்து வெளிப்படையாக வருகிறது.

-

இதனால் பரமாத்மா சரீரி என்ற கொள்கையும் அவருக்கு சரீரமாக இருப்பவை ஜீவனும், பிரக்ருதியும் என்பதும் விளங்குகின்றது. சரீர இலக்கணம் உடல் என்பது பாம்பு, பறவை, மனிதன், மலை, மரம் என்ற வடிவிலும், இயல்பிலும் வேறு வேறாயிருப்பதால் பொதுவான இலக்கணம் தேவைப்படுகிறது. பஞ்சபிராணன் உள்ளதென்றோ, சுகமனுபவிக்க ஏற்றதென்றோ, கருவியென்றோ, கர்ம பலனனுபவத்திற்கு என்றோ, பஞ்சபூதச் சேர்க்கை என்றே கூற இயலாது. இந்த இலக்கணங்கள் இறைவனுக்கு உடல் என்னும் செய்தியில் பொருந்தாது. தாவர வகையில் பஞ்சபிராணன்கள் இயங்குவதில்லை. இறைவன், முக்தர்களின் இச்சைப்படி தரிசிக்கும் உடல்களிலும், அர்ச்சா மூர்த்திகளுக்கும் இது பொருந்தாது. பரமாத்மாவின் சரீரம் பஞ்சபூதச் சேர்க்கையால் உண்டானதல்ல என்கிறது சுருதி. கடவுள் முதல் பூச்சி, புழுவரை தாவரங்களுட்படப் பொருந்தக்கூடிய இலக்கணம் சரீரம் என்பதற்கு கூறப்பட வேண்டும். எப்போதும் தரிக்கப்பட்டதாகவும், நம்முடைய வேலைகளைச் செய்ய ஏவப்படுகிறதாகவும், தன்னுடைய சாதனைகளுக்குச் சாதாரண கருவியாகவும் உள்ள பொருளாக இருப்பதே சரீரம் ஆகும். இந்த இலக்கணப்படி இறைவன் ஜீவாத்மாக்களையும், பிரக்ருதியையும் எப்போதும் தரித்துக் கொண்டுள்ளான். அவனிட்ட வேலைகளையே ஜீவர்களும், பிரக்ருதியும் உலகில் இயற்றுகின்றனர். அவன் கைக்கருவிகளாகவே ஏவப்படுகின்றனர். அவனுடைய லீலா அதிசயங்களை நிறைவேற்றுவதாகவே எல்லாம் பிரபஞ்சத்திலுள்ளன. ஆகவே ஜடமான, அறிவுள்ள எல்லாப் பொருளும் இறைவனின் உடலே! நினைவு பலத்தால் ஒரு மனித ஜீவன் விழிப்பில் தன் உடலைத் தூக்கி நிறுத்திக் கொண்டுள்ளான். மயக்கம், தூக்கம் ஆகிய நிலைகளில் ஜீவஸ்வரூபத்தாலேயே தரித்துக் கொண்டிருக்கிறான். அதேபோல இறைவன் ஸ்ரீமந் நாராயணன் சங்கல்ப சக்தியால் படைப்பில் எல்லாவற்றையும் தரித்துக் கொண்டுள்ளார். பிரளய காலத்தில் சூட்சும தசையில் தமது சொரூபத்தால் ஜீவர், பிரக்ருதிகளை சூட்சும நிலையில் தரித்தபடி காரண பிரும்மமாக இருக்கிறார். ஆகக்கூடி எப்போதும் அவரால் அவரது சரீரமாக ஜீவர், பிரக்ருதி தரிக்கப்படுகின்றனர்.

-

படைப்பு : 

-

சித்தமான ஜீவனும், அசித்தான பிரக்ருதியும் எப்போதும் விட்டுப் பிரியாமல் பரமாத்மாவுடனிருந்தால் இறைவன் உலகைப் படைத்தார் என்பதன் பொருள் என்ன? இப்படி படைப்பு உண்டாகாத நிலையில் காரண நிலையில் பிரும்மமாக, பெயர் வடிவமற்ற இன்னதென்று புரிந்து கொள்ளும்படி வெளிப்படாத பிரக்ருதியையும், ஞானத்திற்கு விஷயமில்லாமல் ஜடம் போன்று மெழுகில் பொன் துகள் போல பிரும்மத்தில் ஒட்டிக்கிடந்த ஜீவர்களையும் சேர்த்தே, சுருதிகள் அபேதமாகச் சொல்லின. இதுவே காரணபிரும்மன். வெளிப்பட்டபோது படைக்கப்பட்ட உலகமாயிற்று. எப்போதும் அது விசிஷ்டாத்வைதப் பிரும்மம் எனும் ஒரே தத்துவப் பொருளேதான்! இதுவே காரிய பிரும்மன். இவ்வாறு பிரும்மம் என்னும் தத்துவம் ஒன்றே என்றும், அதனுள் உடல், உயிர் வேறுபாடு இருக்கிறது என்றும், ஆனாலும் விடமுடியாத தொடர்பால் அது ஒரே தத்துவம் என்றும் விசிஷ்டாத்வைதப் பொருள் விளக்கப்பட்டது. இது தான் தத்தவமஸியின் பொருள். கெட்ட குணங்கள் பிரும்மத்திலில்லை என்பதால் நிர்குணத்தைச் சொல்லும் சுருதிகளும், தொடர்பைச் சொல்வதால் அபேதச் சுருதிகளும், உள்ளுக்குள் உள்ள வேறுபாட்டைச் சொல்வதால் பேதச் சுருதிகளும், உடல் உயிர் தொடர்பைப் பேசும் கடகச் சுருதிகளாலனைத்தும் விசிஷ்டாத்வைத மதத்திற்கே பொருந்தி இருக்கிறது.

-

இறைவனுக்கும் ஜீவனுக்கும் உள்ள உறவு

-

இந்த ஜீவ-பர சம்பந்தம் ஒன்பது விதமாகும்.

-

1. தந்தையும் மகனான தொடர்பு.

2. காப்பாற்றுகிறவனுக்கும் காக்கப்படுகிறவனுக்கும் இடையே உள்ளது.

3. உடையவனுக்கும் உடைமைக்கும் உள்ள தொடர்பு.

4. கணவன் மனைவிக்குள்ள சம்பந்தம்.

5. அறியத் தகுந்தவனுக்கும் அறிபவனுக்கும் உள்ளது.

6. ஆண்டாள்-அடிமை பாவ தொடர்பு.

7. உடல்-உடலுடையவனின் உறவு. (உயிர் உடல்)

8. ஆதாரம்-அவனைச் சார்ந்திருப்பவனின் உறவு.

9. அனுபவிப்பவனுக்கும் அனுபவிக்கப்படுவோனுக்கும் உள்ள சம்பந்தம் ஆகியவை ஆகும்.

-

மோட்ச வழி: 

-

இதுவரை சொன்ன தொடர்புகளை மறவாதிருத்தல். கர்ம, ஞான யோகங்களைச் செய்து நல்ல பண்பட்ட சமஸ்காரமுடைய மனத்தினனாகி அஷ்டாங்க யோகம் இயம, நியமங்களுடன் செய்ய வேண்டும். வருணாஸ்ரம தர்மங்களை விடாமல் செய்வது அவசியம். பிறகு இடைவிடாமல் பயிற்சி செய்வதால் உண்டாகும் இடைவிடாத எண்ணை ஒழுக்குப் போன்ற ஸ்ரீமந் நாராயணனின் நினைவு தியானமாகக் கிட்டி பக்தியும் அதே ஆகிறது. இந்த பக்தி உபநிஷத்தில் கூறப்படும் முப்பத்திரண்டு வித்தைகளாக உள்ளது. இதில் ந்யாஸ வித்தை தான், சரணாகதி எனப்படுவது. பிரபத்தி என்பர். பிரார்த்தனையோடு சேர்ந்த ஆத்ம சமர்ப்பணமே இது. இதை ஆச்சர்யமுகமாக அறிய வேண்டும். இறை நம்பிக்கையே இதன் முதுகெலும்பு. பக்தி-பிரபத்தியாய் சரீர யாத்திரையின் முடிவில் மோட்சம் இறைவனால் அவனிச்சைப்படி அருளப்படுகிறது இதுவே, ஸ்ரீமந் ராமானுஜாச்சாரியாரின் ஆழ்வார், பூர்வாச்சாரியார்கள், வேத சம்பந்தமான ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை உள்ளீடான விசிஷ்டாத்வைத வைணவ சித்தாந்தச் சுருக்கமாகும்.


73.அத்வைதம்

Additional Information

  

73.அத்வைதம்

-

முழுமுதன்மையான பிரம்மமே உண்மை பிறவெல்லாம் மாயை என்று வாதிடும் வேதாந்த தரப்புக்கு அத்வைதம் என்று பெயர். அ+த்வைதம் என்றால் இரண்டின்மை என்று பொருள்.

-

அத்வைதம் வேதத்தைச் சார்ந்ததே. உத்தர மீமாம்சை எனப்படும் ஞான காண்டமான உபநிடதப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கர்ம காண்டமான வேதப்பகுதி பூர்வமீமாம்சையை அனுசரித்து கடவுளை மறந்து பெரும்பாலான வேதியர்கள் இருந்த பொழுது ஆதி சங்கராச்சாரியார் அவதரித்து நிலை நிறுத்திய மதம் அத்வைதம்.

-

ஏறத்தாழ உலகம் முழுவதையுமே பௌத்த மதம் விழுங்கிக் கொண்டு வந்த பொழுது வேதாந்தக் கொள்கையை நிலை நாட்ட வந்தவர் ஸ்ரீசங்கரர். ராமானுஜரும், மாத்வரும் தங்களுக்கு முன் பரவியிருந்த ஸ்ரீசங்கரின் வேதாந்தக் கொள்கையையே பயின்று மாற்றுக் கருத்துக்களைப் பரப்ப வேண்டியிருந்தது போல், சங்கரர் காலத்தில் அவருக்கும் முன்னிருந்த பௌத்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கொள்கையைக் கண்டார். அது வேதத்தைச் சார்ந்த கடவுள் கொள்கையாக இருந்தது. அவரும் வேதாந்தத்தின் கருத்தாக தாம் கண்ட தரிசனமாகவே அத்வைதக் கொள்கையை உலகில் பரப்பினார். தம்முடைய கருத்தாக அத்வைதத்தை தனி மனித சிந்தனையில் உதித்த மதமாக கூறிக் கொள்ளவில்லை. என்றுமுள்ள வேதாந்த கருத்தாகவும், தமக்கு முன்னிருந்த பூர்வ ஞானியரின் கொள்கையாகவும் இருப்பது அத்வைதமே என்றே சாதித்தார். அதற்காகவே பிரும்ம சூத்திரம், பகவத்கீதை, பத்து உபநிஷத்துக்கள் சேர்ந்ததாகிய பிரஸ்தானத்திரயத்திற்கு பொருளும், விளக்க உரையும் அத்வைத கொள்கைக்கேற்ப எழுதி தமது மதத்தை வைதீக மதமாக நிறுவினார். 

-

ஆனாலும் இவர் உலகை பொய்யென்று கூறியதாலும், பௌத்தரைப் போலவே துறவறத்தை முக்கியமாக போதித்து தலையை முண்டனம் செய்து கொண்டதாலும் இவரை பிற வைதீகர்கள் பிரச்சன்ன பௌத்தர் என்றே கூறுவதுண்டு. இவர் நெற்றியிலும் எந்த மத சின்னமும் அணியாதவர் என்கிறார் வித்யாரண்யர். ஏனெனில், சகுண பிரும்மத்திற்கும் மேலாக நிர்குண நிராகார, நிராவயவ பிரும்மத்தை போதித்தார். அதுவே உண்மை என்றும், அதை தவிர்த்த உலகம் இல்லாதது என்றும் சாதித்தார். பிற்காலத்தில் அத்வைதிகள் மதச் சின்னங்களை அணியலாயினர். ஸ்ரீமத் சங்கரர் முக்தியை வழங்கக்கூடிய எல்லா தேவதைகளுக்கும் மேலான சகுண பிரும்மமாக ஸ்ரீமத் நாராயணனையே கருதி போதித்தார். அதையே தமது பகவத்கீதை உரையிலும், உபநிடந்தங்களின் உரையிலும் பிரும்ம சூத்திர உரையிலும், விஷ்ணு சகஸ்ரநாம உரையிலும் ஆணித்தரமாக எழுதியிருக்கிறார்.

அபேதசுருதி: ஆனால் அவரது அத்வைதக் கொள்கையில் சகுண பிரும்மனுக்கும் மேலாக நிர்குண பிரம்மன் ஒன்று உண்டு என்கிறார். பிரம்மனுக்கு எந்த குணமும் இல்லை என்கிறார். சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் மட்டும் இருப்பதே நிர்மண பிரம்மம் என்கிறார். இவ்வாறு அபேதக் கொள்கையை அதாவது பிரிவுகளை மறுக்கும் கருத்தையே தத்துவமாகப் போதித்தார். 

-

முப்பட்டைக் கண்ணாடி (பிரிசம்) போல ஒரே பிம்மம் சத், சித், ஆனந்தமானது என்றார். 

ஏகம் சத் விப்ர பகுதா வதந்தி என்கிறது சுருதி. இதன் பொருளாவது, உண்மை ஒன்றுதான்; அது பலவாகச் சொல்லப்படுகிறது என்பதுவே! இதுபோல பேதத்தை மறுக்கும் அபேத சுருதிகளை சாதகமாகக் கொண்டு பேதச் சுருதிகளைத் தள்ளி தமது மதத்திற்கேற்ப விளக்க நூல்களை எழுதினார். 

-

வேதம் சொல்கிறது என்றால் அப்படியே ஒப்புக்கொள்வது வைதீகர் வழக்கம். வேதம் சொல்லும் ஒரு கொள்கையை ஒப்புக் கொள்ளும் போது, அதைக் கொண்டே அக்கொள்கைக்கு நேர் எதிராக இன்னொரு கொள்கையை அதே வேதம் சொன்னால் கூட தள்ளி விடலாம் என்பது ஒரு நியாயம். இந்த நியாயப்படித்தான் சங்கராச்சாரியார் அதே சுருதிகளை வைத்து பேதச் சுருதிகளைத் தள்ளியதும் சரியாகிறது. ஆகவே, பிரும்மம் சத்தியம் : உலகம் மித்தை, எல்லாம் கற்பனை. ஞானமே உண்மை! என்பதுவே சுருக்கமான அத்வைத விளக்கமாகும். இருக்கருத்தையே தமது எல்லா நூல்களிலும் அழுத்தமாக நிலை நாட்டியிருக்கிறார்.

-

மாயத்தோற்றம்: 

-

இந்த மையக்கருத்தை ஆதரிக்கவே தமது, மாயா கொள்கையை விரிவாகச் சொல்லியிருக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. அதாவது இருப்பதும் அதே சமயத்தில் இல்லாமலிருப்பதும் ஆகியது என்கிறார். 

வேறு வார்த்தையில் சொன்னால், இந்த உலகம் என்பது வெறும் தோற்றம் மாத்திரமே உண்மையில் இல்லை என்பதே கருத்து. இது பற்றி ஆதிசங்கரர் சொல்வது இங்கு இரண்டாவது இல்லாமல் பிரும்மம் மாத்திரமே இருக்கிறது. 

அதை உணராமல்-அறியாமையால், ஒன்றை இன்னொன்றாக அறியும் அத்யாசத்தால் உலகமாகப் பார்க்கிறோம். அதனாலேயே துன்பம், சம்சார துக்கம் எல்லாம் உண்டாகிறது. உண்மையில் இருப்பது பிரும்மமே என்ற ஞானம் உண்டானால் சம்சாரத் துயரம் நீங்கி விடும் என்பது தத்துவ கருத்து. 

-

இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறார். கயிறு மாத்திரமே இருக்கிறது. அது பாம்பாகத் தெரிகிறது. காரணம் அறியாமை. ஒன்றை இன்னொன்றாகப் பார்க்கும் அத்யாசம், இருட்டால் உண்டாகிறது. அப்படி பாம்பு என்று நினைத்ததால் பயம், படபடப்பு, துக்கம் உண்டாகிறது. ஒளிவந்த பொழுது பார்த்தது பாம்பில்லை வெறும் கயிறுதான் என்று தெரிகிறது. அந்த நிலையில் எந்த துக்கமும் இருப்பதில்லை. அந்த கயிற்றில் ஒருபோதும் பாம்பு உண்மையில் இல்லை. கயிறாக இருந்தது பாம்பாக மாறி, பிறகு மீண்டும் கயிறாகவுமில்லை. கயிறு எப்போதும் கயிறாகத்தான் இருக்கிறது. அது பாம்பு என்கிற கருத்து பார்க்கிறவன் மனத்தில்தான் ஒரு தோற்றமாக உண்டாகிறது. அது பார்ப்போனின் கற்பனை. பாம்பு என்பது மித்தை. கயிறு மாத்திரமே உண்மை. அது கயிறுதான் என்கிற ஞானமே உண்மை என்பதே அத்வைத விளக்கம்.

-

இதை ஒட்டியே நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி வந்தது. இதன் பொருள், ஒரு பளிங்கு கல்லினால் ஆன நாய் சிலை இருந்தது. அது கல்லைத் தவிர நாய் இல்லை. ஆனால் நாயின் வடிவாக செதுக்கப்பட்டிருப்பதால் நாயாகப் பார்க்கப்படுகிறது. அப்படி நாயாகப் பார்க்கப்படும் போது, அது பளிங்குக்கல் என்பது அறியப்படுவதில்லை. அதை நல்ல பளிங்கு கல்லாக பார்க்கும் போது நாயாக அறிவதில்லை. அங்கே கல்தான் நாயாகத் தோன்றுகிறது. நாய்தான் கல்லாக நிற்கிறது. ஒன்றாக பார்க்கையில் இன்னொன்றாக அறியப்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றுதான் இன்னொன்றாகத் தோன்றுகிறது.

-

இதேபோல திருமூலரின் திருமந்திரத்தில், மரத்தை மறைத்தது மாமர யானை என்று வருகிறது. மரத்தால் செய்யப்பட்ட யானை மரத்தையே மறைத்து விடுகிறது. ஒரு மர யானைப் பொம்மையை பலர் பலவிதமாகப் பார்க்கின்றனர். குழந்தை ஒன்று யானை பொம்மையாகப் பார்க்கிறது. அப்போது மரம் மறைந்து விடுகிறது. மர வியாபாரி ஒருவர் ஒருவகை மரமாக காணுகிறார். சிற்பி ஒருவன் நல்ல யானை சிற்பம் என்று கலையை மட்டும் அறிந்து ரசிக்கிறான். இது போலதான் கடவுள் ஒருவன் மட்டும் இரண்டாவதாக எதுவும் இல்லாத பொழுது உலகமாக காணப்படுகிறார். இந்த கடவுளால் உண்டான உலகமே கடவுளை மறைத்து விடுகிறது. இதற்கு விளக்கமாக ஈசாவஸ்ய உபநிடத சாந்தி மந்திரம் ஒன்றின் பொருள் கூறப்படுகின்றது.

-

பூர்ண மிதம் பூர்ண மதம் பூர்ணா பூர்ணமு தச்யதே

பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வஸிஷ்யதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி!

இதன் பொருள்: இதுவும் முழுமை, அதுவும் முழுமை. அந்த முழுமையிலிருந்து இந்த முழுமை வந்திருக்கிறது. மிஞ்சியிருப்பதும் முழுமையே! மூன்று வழியிலும் அமைதி உண்டாகுக!

-

பிரும்மம் முழுமையாக இருக்கிறது. அது முழுமையான இந்த உலகமாக தோன்றுகிறது. எப்படி எனில், கயிறு பாம்பாக தோன்றுவது போல், அப்போதும் முழு பிரும்மம் முழுமையான பிரும்மமாகயிருக்கிறது. ஏனெனில் ஒரு பொருள் இன்னொன்றாக தோன்றுகையில் அப்பொருள் அளவில் குறைந்துவிடுவது இல்லை. அதனால் இந்த உபநிடதக் கணக்கில் ஒன்றிலிருந்து ஒன்று வந்த போதிலும் மிஞ்சுவதும் ஒன்றாகவே இருக்கிறது. ஆகவே உலகில் படைப்பு என்பது தோற்றமுண்டாவதில் மட்டுமே உள்ளது; உண்மையில் இல்லை. படைப்பு இல்லாதபொழுது ஜீவாத்மா, பரமாத்மா என்பது தனித்தனியாக இல்லை. உலகம் என்பதும் இல்லை. இருக்கும் ஒரே பொருளான பிரும்மமே ஜீவனாகவும், உலகமாகவும் தோன்றுகிறது. இந்தத் தோற்றத்திற்கு காரணம் மாயை. இதுதான் இருப்பதாக தோன்றுவதும், உண்மையில் இல்லாமல் மறைவதும் ஆகும். தோற்றம் என்பது தோன்றி விடுவதால், சிறிது நேரம் இருப்பது போல் படுவதால் உள்ளது ஆகிறது.

உண்மையில் அதற்கு இருப்பு இல்லாததால் இல்லாததாகும்.

-

கடவுள் ஒருவரே உண்மை

-

அப்போது கடவுள் எனப்படும் பிரும்மம் மட்டும் தான் ஒரே உண்மையா? அதை மட்டும் உண்மை என்று ஒப்புக்கொள்வது எப்படி? சந்தேகமில்லாமல் கடவுள் ஒருவரே. ஒரே உண்மை தோற்றங்கள் ஏதாவதொரு உண்மையான பொருளை அடிப்படையாக வைத்துத்தான் உண்டாகின்றன. வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாய் தோற்றங்கள் என்று சொல்லிக்கொண்டே போக முடியாது. அதற்கு ஒரு முடிவும் வராமற்போகும். ஏதாவது ஒன்று ஆதாரமாக, முதற்பொருளாக இருக்கத்தான் வேண்டும். அந்த ஆதாரப்பொருளே கடவுள்-பிரும்மம் என்கிறது உபநிஷத்து. 

உதாரணமாக, கானல் நீருக்குப் பாலைவனமும், பாம்புத் தோற்றம் உண்டாகக் கயிறும் போல, உலகம் என்ற ஒரு தோற்றத்திற்குக் கடவுளே அடிப்படை உண்மைப் பொருள். பிரபஞ்சம் இருப்பது போல பிரமை உண்டாவதற்கு அடிப்படைப் பொருள் பிரும்மமே, அது உண்மைப் பொருளே என்பது உறுதியாயிற்று. இந்த உண்மைப் பொருள் தெரியாமல் மறைக்கப்படுவது. அதனுடைய மாயையாலேயே. மாயைக்கு தனக்கு ஆதாரமான உண்மைப் பொருளை மறைப்பதும் இயல்பு. மாயை மறைப்பதாலேயே கடவுள் யாருக்கும் தெரிவதில்லை.

-

பிரும்மம் முக்காலத்திலும் இருக்கிற பொருளாவதால் உண்மை ஆகிறது. தோற்றமான கானல் நீருக்கு ஆதாரமான பாலைவனம், கானல் நீர் தோன்றுவதற்கு முன்பும், தோன்றும் போதும், தோன்றி மறைந்த பின்பும் இருக்கிறது. அதேபோல உலகம் தோன்றாத படைப்பிற்கு முந்திய காலத்திலும், படைப்பில் உலகம் தோன்றிக் கொண்டிருக்கும் போதும், உலகம் அறிந்த பின்வரும் பிரளய காலத்திலும் பிரும்மம் இருக்கக்கூடியது. அதனால் பிரும்மம் என்பதே உண்மையான பொருள். இதனால் அனுமானப் பிரமாணம் பிரும்மத்தை உறுதி செய்கிறது. உண்மையான இருப்பு, ஒளி, ஆனந்தம் என்ற மூன்றும் பிரும்மத்தை விட்டு வேறுபடாததாக இருக்கிறது. இப்படி சத், சித், ஆனந்தமாக இந்த பிரும்மம் உண்மையாக இருக்கிறது. உண்மையாகவும் விஞ்ஞானமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது பிரும்மம். பிரும்மத்தைப் பற்றி வேதம் கூறுவதால் அதுவே பிரமாணம் மூச்சு போல் குற்றமற்றதாக வேதம் பிரும்மத்திலிருந்து வெளியே வருகிறது. இவை போன்ற பலப்பல சுருதிகளால் ஆகமப் பிரமாணத்தால் பிரும்மம் உண்மைப்பொருள் என்பது நிச்சயமாகிறது. 

-

அத்வைதிகள் ஆறு பிரமாணங்களைக் கூறுகின்றனர். ஆனால் பிரத்யட்சம், அனுமானம், ஆகமம் என்ற மூன்றிலேயே மற்ற மூன்றும் அடங்கி விடுகின்றன. இந்த மூன்று பிரமாணப்படியும் நிரூபணமாகம் பிரம்மமே உண்மை. நிரூபணம் செய்யப்பட முடியாத பிரபஞ்சமே மித்வித-மாயை என்பத அத்வைத சித்தாந்தம். மண், உலகம், பொறிகள் என்ற படைப்பில் உள்ளவற்றைப் பற்றியெல்லாம் பல விதத்தில் சொல்வது இங்கே இருக்கும் பிரிவுகளை பல பொருள்களை அறிவிப்பதற்கல்ல; ஞானக் கண்ணால் அவற்றிற்கு அடிப்படையான ஒரே உண்மைப் பொருளை காணவே வழிகளாகச் சொல்லப்பட்டன. ஆகவே உற்பத்தி, இருப்பு, லயத்தைச் சொல்லும் அநேக வேத வாக்கியங்களும் பரமாத்மாவுடன் ஐக்கிய அறிவை உறுதிப்படுத்தவே வந்துள்ளன என்று அறிய வேண்டும். எல்லா உபநிஷத்துகளிலும், விஞ்ஞான ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவே உரைக்கப்படுகிறது என்பது அத்வைதிகளின் வாதமாகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று தனித்தனியே அறியப்படும் ஐந்து பூதங்களும் இந்த உலகின் அடிப்படை. பிரக்ருதி எனப்படும். இவற்றின் விகிதக் கலப்பால் பஞ்சீகரணத்தால் இந்த உலகம் ஆகியிருப்பதாகக் காணப்படுகிறது. இதில் அசைவன-அசையாதனவெல்லாம் தென்பட்ட போதிலும் உண்மையில் இல்லாதவையே! வெறும் தோற்றமே!

-

கயிற்றில் பாம்பு இருப்பதாகப் பிரமை உண்டாவது போல, பிரும்மத்தில் உலகம் இருப்பதாகப் பிரமை ஏற்படுகிறது. இதேபோல ஒரு பொருளில் முதல் பிரமை உண்டானதும் வேறு பொருளாக காணப்படுகுடறது. இப்படியே அந்தந்தப் பொருள்களிலெல்லாம் பிரம்மம் உண்டாகவே வேறு வேறு பொருள்களாக-பலவாக பிரம்மத்தின் மீதே தோற்றம் உண்டாகிறது. எனவே கடவுள் ஒருவரே உண்மை! ஆக, எல்லாவற்றின் அடிப்படைப் பொருளும் பிரும்மன் ஒன்றுதான். இதுவே எப்போதும் காணப்படுவது. ஆகவே அதுவே பரமார்த்த சத்தியம்!

-

தலைப்புகள்

உலகம் மித்தை: 

-

உலகத்தின் உண்மையில் இல்லாத தற்காலிகத் தோற்றமே. அதை மித்தை என்று சொல்லக் காரணம். எப்போதும் எனப்படும் மூன்று காலங்களிலும் காணப்படும் பொருளே உண்மையாகும். இந்த பிரபஞ்சமாகிய உலகம் அப்படி எப்போதும் அறியப்படவில்லை. அதனால் இது, பரமார்த்த சத்தியம் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருளுமே உற்பத்தி உடையதாக இருக்கின்றது. அழியக்கூடியதாகவும் உள்ளது. இந்த உற்பத்திக்கு முன்பும், அழிவிற்குப் பின்பும் உலகப்பொருள்கள் காணப்படுவன அல்ல, இடைப்பட்ட காலத்திலேயே காணப்படும்படி உள்ளன. ஆகவே, ஒரு காலத்தில் உண்டாகி, இடையில் இருந்து, ஒரு சமயத்தில் அழிந்துவிடும். சில காலமே தோற்றிக்கொண்டிருக்கும் பிரபஞ்சம், தற்காலிய வியவகாரங்களுக்கே உதவுவதால் விவகார சத்தா, வியவகாரம் நடக்கும் சமயத்தில் மட்டுமே உண்மை எனப்படுகின்றது.

-

இந்திர ஜாலம் போன்ற மாய வித்தையால் ஒரு மந்திரவாதி காட்டும் காட்சி போலத் தோன்றுவதே இந்தப் பிரபஞ்சமும் என முடிவு செய்யப்படுகிறது. மூன்றே முக்கால் நாழிகையில் மட்டுமே தெரியும் கண்கட்டு வித்தை சமாச்சாரம் போலத் தோன்றி மறைவதால் இது மாயையால் தோன்றுகிறது என்கிறார்கள். செத்த பாம்புத் தோலில் பாம்பையும், மாங்காயுடன் மாஞ்செடியையும் வரவழைத்து மந்திரவாதி காட்டி நம்மை மயக்குகிறான். இந்த மாயைச் சக்தியை உடையவன் ஒருவன் இருக்க வேண்டுமல்லவா! அவனே அதாவது மாயையால் உலகத்தைத் தோன்றச் செய்பவனே கடவுள்-பிரும்மம் எனப்படுகிறார். இதையே, வேத சுருதிகள் பரமாத்மா மாயையால் பல வடிவங்களுள்ளவனாகத் தெரிகிறான் என்றும், மாøயை உடையவன் ஒருவனால் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுகிறது என்றும் முழங்குகின்றன. அந்த ஒருவனே உண்மை பிரபஞ்சம் மித்தை. இந்த மாயைதான் பிரக்ருதி எனப்படுகிறது. சத்துவம், ராஜஸயம், தாமஸம் என்று மூன்று குணங்களாக உள்ளது. மூன்று காலங்கள் ஆகவும், பரந்த இடமாகவும் தோன்றுகின்றது.

-

ஆவரண சக்தி: 

-

இதனுடைய முதல் குணமே தனக்கு அடிப்படையான உண்மைப் பொருளை மறைப்பதுதான். 

இதை ஆவரண சக்தி என்பர். உண்மையாக இருக்கும் வெண்திரையில் இல்லாத நிகழ்ச்சிகள் திரைப்படமாக விழுந்தவுடனேயே முதல் காரியமாக அங்கே வெண்திரை மறைந்து போய்விடுகின்றது. அங்கே நிகழாத நிகழ்ச்சிகள், இல்லாத இடங்கள் இவற்றின் தோற்றம் தான் தோன்ற ஆதாரமான வெண்திரையைக் காண முடியாமல் செய்து விடுகின்றது. இதை அஞ்ஞானம் (அறியாமை), அவித்தை, மோஹம் என்றும் குறிப்பிடுவர்.

சிறிய மேகம் பெரிய சூரியனையே மறைத்து விடுகிறது போல, மாயை பிரும்மத்தை மறைத்து விடுகிறது. அதாவது சூரியனால் உறிஞ்சப்பட்ட கடல் நீர் மேகமாக உருவாகிறது. பிறகு தான் உருவாகக் காரணமான சூரியனையே மறைத்துவிடுகிறது. அதுபோல, பிரும்மத்தில் தோன்றும் மாயை தனக்கு ஆதாரமானதையே மறைத்து விடுகின்றது. அளவிருந்த துக்கங்கள் நிறைந்த சம்சாரத்தால் பாதிக்கப்படாத ஆத்மாவை, அறியும் தன்மையுள்ள புத்திக்கே இந்த மாயை மறைத்து விடுகின்றது. நெருப்பிலிருந்து உண்டாகும் புகை அல்லது நெருப்புடன் சேர்ந்து உண்டாகும் புகை நெருப்பைச் சூழ்ந்து மறைத்து விடுவது போன்றது இந்நிகழ்ச்சி. இதனால் தான் நான் செய்பவன், நான் அனுபவிப்பவன் என்று எண்ணம் உண்டாகி சுகத்தையும், துக்கத்தையும் அடையச் செய்து மோகம் என்கிற அறிவு குழப்பத்தையும் கொள்ள நேருகிறது. இதனாலேயே ஒன்றை இன்னொன்றாக நினைக்கும் அத்யாசமும் ஏற்படுகிறது.

-

விக்ஷப சக்தி: 

-

விக்ஷபம் என்றால் மாறுதலடைவது என்று பொருள். 

உதாரணமாக, தண்ணீரே குமிழ்களாகின்றன. நூலே துணியாக ஆகின்றது. வெறும் தங்கமே மோதிரமாகவும், சங்கிலியாகவும், கங்கணமாகவும் மாறுகின்றது. மண்ணே தட்டு, பானை, மடக்கு போன்ற பல பாண்டங்களாகிறது. சர்க்கரையே பலப்பல இனிப்பு தின்பண்டங்களாக மாறுகின்றது. இதெல்லாம் விக்ஷபம் அடைந்த நிலையே. 

தண்ணீர், தங்கம், நூல், மண், சர்க்கரை-ஆகிய மூலப்பொருள்கள் எல்லாம் பற்பலப் பெயர்களில் பலவிதப் பொருள்களாக குறிப்பிடப்படும் காரணம், அந்தந்த மூலப்பொருளில் உண்டாகிய வடிவ அமைப்புகளே. இது மூலப்பொருளில் உண்டாகிய மாறுதலே. மற்றபடி மூலப்பொருளைத் தவிர உண்டாகிய பொருள்களில் ஒன்றுமில்லை. மூலப்பொருளுக்கு மாறுதலாக உண்டாகிய உருவங்களே பல பெயர்களையும் பெற்றுத் தந்தன. உதாரணமாக, ஒரு தங்க மோதிரத்தை எடுத்துக் கொள்வோம். அதில் மூலப்பொருளான தங்கத்தை தவிர வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதை தங்கம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. மோதிரம் என்றே பெயரிட்டு வழங்குகின்றனர். இது ஏன் என்றால், மூலப்பொருளான தங்கத்திற்கு மோதிரம் என்று சொல்லதக்க ஒரு வடிவம் வந்திருப்பதனாலேயே! ஆனால் அது உண்மையில் மூலப்பொருளான தங்கமே, அதைத் தவிர வேறு இல்லை. அந்த தங்கத்திற்கு மோதிரம் என்ற மாறிய நிலை முதலிலும் இல்லை. பிறகும் மாறி விடக்கூடியதே இடையில் தற்காலிகமாக உண்டானதே.

-

இதேப் போலத்தான் தண்ணீரிலும் குமிழ் உண்டாகிறது. நூலும் ஒரு அமைப்பில் இருந்து துணியாகிறது. மண்ணும் இப்படியே பலப்பல வடிவங்களில் பல்வேறு பொருள்களாக காட்சியளிக்கின்றது. அதே போலவே சர்க்கரையே பல வடிவில் பல இனிப்புக்களாகின்றது. அங்கேயெல்லாம் மூலப்பொருளில் ஏற்படும் மாற்றத்தின் தோற்றமே பல பெயர்களில், பல பொருள்களை உண்டாக்கி இருக்கின்றது. இதைப் போலத்தான் பிரும்மத்திலும் அஞ்ஞானத்தின் விக்ஷப சக்தி மூலப்பொருளான பிரும்மம் ஒன்றே இருக்கையில் அதை பலப்பல வடிவங்கள் உள்ள வேறுபட்ட பெருள்களாக காட்டுகின்றது. ஆனால் உண்மையில் பிரும்மத்தைத் தவிர இங்கே ஒன்றுமில்லை. மனத்தில் தோன்றும் தோற்றமே, மாறுதலே உலகமென்பது. இந்த பிரும்மம் உண்மையில் ஒரு காலத்தில் மாறாதது. பால் தயிராவது போல், பிரும்மம் உலகமாவது இல்லை. கள் பாலாக தோன்றுவது போல், பிரும்மம் உலகமாக தோன்றுவது மட்டுமே நிகழ்கின்றது. ஆகவே, உள்ள ஒரே பொருள் பிரும்மம் என்று உணர வேண்டும். இந்த விக்ஷப சக்தியாலே ஆவாரண சக்தியால் உண்மையான சுயவடிவம் மறைக்கப்பட்ட பின் ஜீவனுக்கு பல நிலைகள் உண்மை போல் உண்டாகின்றன. அவை 1. தூக்கம், 2. கனவு, 3. விழிப்பு என்னும் பிரக்ஞை நிலைகளே! இந்த மூன்று நிலைகளிலும் ஒருவன் தினமும் பல அனுபவங்களை அடைகிறான்.

-

1. தூக்கம் : 

-

தூக்கத்தில் உலகம் இல்லாமல் போய் விடுகிறது. ஒருவன் தனது சமூக நிலையை இழந்து விடுகிறான். நான் என்கிற எண்ணமே இல்லாத நிலையில் சுக-துக்க அனுபவங்கள் ஒன்றுமின்றி மாறுதலற்ற ஆனந்தமான நிலையில் இருக்கிறான். அவன் அப்போது வெளியைப் பற்றிய விவரமின்றி உள் பற்றிய உணர்வு இன்றி இருக்கிறான். இங்கே உலகமே இல்லை. ஆனாலும் ஜீவனே பிரும்மம் என்ற ஞானமும் இல்லை. காரணம், அறியாமையின் ஆவர்ண சக்தி ஞானத்தை மறைத்து இருப்பதுதான். அங்கே வி÷க்ஷப சக்தி வேலை செய்யாததால் பல என்ற அறிவும் இல்லை. அதனால் மாறுதலின்றி ஆனந்தமாக மட்டும் இருக்கிறான்.

-

2. கனவு : 

-

இதில் ஜீவனுக்கு விசித்திரமான ஞானம் இருக்கிறது. தனக்குள்ளேயே ஓடுவதும், நிற்பதும், அழுவதும், சிரிப்பதும், தானே பலவாகியும் மங்கலமான பற்பல அனுபவங்களை அரையும் குறையுமாக அடைகிறான். இந்நிலையில் தூக்கத்திலிருந்த ஆத்ம சுகமும், இல்லை. விழிப்புணர்வில் அறியும் உலக வாழ்க்கையும் இல்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட பாதி சுகமும் பாதி விழிப்பைப் போன்ற அனுபவமும் உடையவனாக இருக்கிறான். விழித்தெழுந்ததும் கனவு பிரக்ஞையில் கண்டதெல்லாம் மாயம் என்கிற உணர்வடைகிறான்.

-

3. விழிப்பு நிலை : 

-

இந்நிலையில் ஐம்புலன்களின் மூலம் எல்லா நடவடிக்கையிலும் ஜீவன் ஈடுபடுகிறான். சுக துக்கத்தில் விழுகிறான். இந்நிலைக்கு வந்ததும் கனவில் கண்டவை மாயம் என்று அறிகிறான். தூக்க நிலையில் கனவு நிலை மாயமாக மறைந்து விடுவதை சிந்திக்கிறான். கனவு நிலையில் தூக்கம் தந்த சுகம் மாயமாகி விடுவதையும் அறிகிறான். இந்த மூன்றும் ஒரு நிலையில் மற்ற நிலை இல்லாமல் போவதை உணர்கிறான். ஆகவே இந்த விழிப்பு நிலையைத் தாண்டி ஒரு நிலை உண்டானால் இதுவும் மறைந்து விடும் என்று அறிவடைகிறான். தூக்கம் கனவிலும், கனவு விழிப்பிலும் காணாமல் போய்விடவது போல் நாலாவது நிலையில் மூன்றாவதான விழிப்பும் கலைந்து போகலாம் என்று அறிகிறான். ஆகவே இறுதியான நான்காவது தூய நிலையே உண்மை என்றும், மற்ற மூன்று நிலைகளும் உண்மையில்லாதவை என்றும் தீர்மானிக்கிறான். விழிப்பு நிலையில் புலன்கள் மூலம் இயங்குவதால் ஜீவன் வைஸ்வானரன் எனப்படுகிறான். உலகில் எல்லா உடல்களுமாக இருப்பவன் விராட் எனப்படுகிறார். கனவு நிலையில் ஜீவன் தன்னொளியில் உலகைக் காண்பதால் தைஜஸன் எனப்படுகிறான். ஒட்டு மொத்தமான அனைத்துயிர்களின் கனவு நிலையையும் காணும் சூத்ராத்மா ஹிரண்யகர்பர் எனப்படுகிறார். தூக்கத்தில் ஒன்றுமறியாமல் இருக்கும் ஜீவன் பிராக்ஞன் எனப்படுகிறான். ஒட்டுமொத்தமான அசையும், அசையாத பிரபஞ்ச உயிர்களை வெளிப்படாமல் அடக்கி, பிறகு விளங்க வைப்பவர் ஈஸ்வரன் எனப்படுகிறார். இப்படி பிரும்மமே விக்ஷப சக்தியால் பல நிலைகளில், பல பெயர்களில் இதுவரை குறிப்பிட்டவர்களாகத் தோன்றுகிறார்கள்.

-

இதுவரை சொல்லப்பட்ட மாறுதல்கள் எல்லாம் உண்மை அல்ல; இதுவே மாயை. இதற்கு சில வேத சுருதிகள் அழிவு உண்டு என்கின்றன. ஆகவே இது எல்லா காலத்திலும் இருக்கும் பிரும்மம் போன்று ஸத் தும் இல்லை. அதே சமயத்தில் ஒரு காலத்திலும் இல்லாத முயல் கொம்பு, மலடி வயிற்று மகன் போன்ற அஸத் தும் இல்லை. முயல் கொம்பு என்ற பொருள், உலகில் எங்கும் எப்போதும் இல்லாதது. அதே போலவே பிள்ளையே பெறாதவள் தான் மலடி எனப்படுவதால், மலடி வயிற்று மகன் என்பதும் ஒருபோதும் இல்லாத ஒன்றே. ஆகவே, இவற்றைப் போன்று மாயை ஒரேயடியாய் இல்லாத பொருளும் இல்லை. பிரும்மத்தைப் போல முக்காலத்திலும் இருக்கும் பொருளும் இல்லை. பஞ்ச பூதங்களாக ஆக்கப்பட்டது உலகம். இறுதியில் மூலப்பொருளான பிரக்ருதி என்னும் மாயை என்ற காரணமாகிறது. அப்போது மாயா காரியமான இந்த பிரபஞ்சம் பொய்யாகப் போய்விடும். பலபலவாகத் தோன்றும் பொருள்கள் ஒன்றுமில்லை என்று சுருதிகளும் சொல்லுகின்றன. அனுபவமும், அனுமானமும் இதையே ஒத்திருப்பதால் இந்த பிரபஞ்சம் மித்தை எனப்படுகிறது. கோடையில் பாலைவனத்தில் சூரியக் கதிர்களால் தோன்றும் கானல் நீருக்கும், பிரும்மத்தில் தென்படும் பிரபஞ்சத்திற்கும் ஒற்றுமை உண்டு. இந்த பிரபஞ்சம் விவகாரிக உண்மையாகும். கானல் நீர், சிப்பியில் வெள்ளி, கயிறில் பாம்பு முதலியவற்றின் தோற்றம் பிராதிபாஸிக ஸத் என்பதாகும்.

-

மூன்றுவித உண்மை : அத்வைதிகள், நாங்கள் உலகை பொய்யென்று கூறவில்லை என்றும் சொல்லுவார்கள். காரணம், எல்லாவற்றையும் ஒவ்வொருவித உண்மையாகச் சொல்வது தான். உண்மை எனப்படுவது ஸத் எனப்படும். அது மூன்று வகைப்படும். அவை: 1. ப்ராதிபாஸிகம், 2. விவகாரிகம், 3. பரமார்த்திகம் எனப்படும்.

-

1. ப்ராதிபாஸிக ஸத் : 

-

பிரும்மம் தவிர வேறு பொருள்களில் இது உண்டாகும். அதாவது பாலைவனம், சிப்பி, கட்டை, கயிறு முதலியவற்றில் உண்டாவது. பாலைவனத்தில் தான் கானல் நீர் தோற்றம் உண்டாகிறது. சிப்பியில் தான் வெள்ளி என்ற பிரமை உண்டாகிறது. கட்டையில் தான் திருடன் என்ற எண்ணம் உண்டாகிறது. கயிற்றில் தான் பாம்பு என்ற மயக்கம் ஏற்படுகிறது. நேரடியாக பிரும்மத்தில் இந்த பிரமை உண்டாவதில்லை. அதனால் அது பாலைவனம் தான். அங்கே நீர் இல்லை என்ற உண்மை தெரிந்தவுடன் மேற்படி பிரமை நீங்கிவிடுகிறது. அதைப் பால, தொலைவிலிருந்து பார்க்கும்போது சிப்பி வெள்ளி போல் தெரிகிறது. அருகில் சென்று கவனித்தவுடன் அது வெறும் சிப்பிதான் என்று தெரிந்தவுடன் வெள்ளி என்ற மயக்கம் நீங்கிவிடுகிறது. இருட்டில் கயிறைப் பார்த்து விட்டு பாம்பு என்று நினைத்ததும் இப்படித்தான். கயிறு என்ற உண்மை புலப்பட்டவுடன் மயக்கம் நீங்கி விடுகிறது. இதற்கு ப்ராதிபாஸிக ஸத் என்று சொல்வார்கள். அதாவது பலன்களை வழித்ததும், அறிவில் மயக்கம் உண்டாவது இப்படிக் கூறப்படுகின்றது. பிரம்ம தத்துவ அறிவைத் தவிர வேறு ஞானத்தால் இல்லாமல் போவதாகும்.

-

2. விவகாரிக ஸத் : 

-

பிரும்ம ஸ்வரூபத்தில் தோன்றுவது, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதப் பிரபஞ்சம் ஆகும். பிரும்ம சொரூபம் மறைந்து இவை தோன்றுகிறது. காரணம் அஞ்ஞானம். இந்த அறியாமை பிரும்மத்தின் உண்மையான ஞானம் உண்டான பிறகே நீங்குகின்றது. பிறகுதான் இரண்டாவதற்ற பிரும்மம் நேரடி அனுபவமாக உடனடியாக அபரோட்க்ஷ அனுபூதியாக உணரப்படுகிறது. ஆகவே பிரும்மத்தின் தத்துவ அறிவினால் மட்டும் இல்லாமல் போவது விவகாரி கஸத் எனப்படும்.

-

3. பரமாத்திக ஸத் : 

-

இது எதனுடைய ஞானத்தினாலும் இல்லாமல் போகாது. அதாவது இவை அழிக்க எவ்வித ஞானமும் இல்லை. இவ்வுண்மை நேற்று, இன்று, நாளை என்று முப்போதும் எப்போதும் முடிவில்லாமல் இருந்து கொண்டு இருக்கிறது. இதன் ஞானத்தால் மற்றதெல்லாம் மறந்து, மறைந்து போகும். இதுதான் குணமில்லாத, வடிவ கல்வெட்டுப் போல பல இடங்களில் அறிவுறுத்தி உள்ளார். மோட்ச பலனும் இவரே தரத் தக்கவர். சின்ன சின்ன தேவதைகளாக இருந்து அவற்றை பூஜிப்பவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப மற்ற உலகாயதப் பலன்களையும் அளிப்பவர் இவரே என்றும் கீதை முதலிய விளக்க நூல்களில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அத்வைதப் படியும் இறுதியான மோட்சம் நல்கும் சகுணப் பிரும்மம் ஸ்ரீமந் நாராயணனே ஆகிறார்.

-

ஜீவன்: 

-

ஸத்வம் குறைந்த மாயையானதில் பிரும்மம் பிரதிபலிப்பதால் ஜீவனாகத் தோன்றுகிறது. இதற்கு அடிப்படையான அவித்தையான அந்தக்கரணம் சத்வகுணத்தின் குறைவால் ஞானமும், சக்தியும் கொஞ்சமாக இருப்பவனாக ஜீவன் தோன்றுகிறான். இதனாலேயே கட்டுப்படாத பிரும்மம் கட்டுப்பட்ட ஜீவனாகத் தோன்றுவதும் ஆகும். அந்தகரணங்களின் விகாரங்களே மாயையின் பரிமாண மாறுதல்கள் தான். அவை இச்சை, முயற்சி, வெறுப்பு, சுகம்-துக்கம் முதலியவைகளாம். இவை தோன்றுவதால் ஜீவன், நான் அனுபவிப்பவன், நான் செய்பவன், அதிருஷ்டிக்காரன், துர்ப்பாக்கியவான் என்றெல்லாம் சொல்லும்படி விவகாரங்கள் நிகழுகின்றன. நீரில் தோன்றும் நிலவும், நீர் அசைகையில் அசைவது போலத் தோன்றும். பார்ப்பவரும் நிலா அசைகிறது என்று சொல்லக்கூடும். அதே போல, அந்தகரணத்தில் உண்டாகும் பிரதி பிம்பம் சலனப்படுவதாக, விகாரப்படுவதாக சொல்லும்படி இருக்கிறது. இதனாலேயே ஜீவன் உலகில் சஞ்சாரம் செய்வதாகவும் சொல்கின்றனர். உலகிலிருந்து இறப்பதாகவும், பிறப்பதாகவும், சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அலைவதாகவும், தேவையானம், பித்ருயானம் என்ற ஒளி மிகுந்த வழியிலும், இருளடைந்த வழியிலும் போவதாகவும், வருவதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறு ஜீவன் இந்த உலகத்திலும், மற்றைய உலகங்களிலும் சஞ்சாரம் செய்கிறான் என்னும்படி காரியங்கள் நடக்கின்றன. ஜீவனுக்கு அறிவும், திறமையும் குறைவாகக் காணப்படுகிறது. அதனால் விருப்பு, வெறுப்புக்கள் ஏற்படும்பொழுது விரும்பியதை அடையமுடியாமலும், வெறுப்பதை ஒதுக்க முடியாமலும் துக்கப்படுகிறான். அப்போது தன் இச்சை நிறைவேற இறைவனை ஆராதிக்கிறான். பலவாறு பூஜித்துத் தொழுகிறான். இறைவனின் கருணையால் தொழில், செல்வம், புகழ், மனைவி, மக்கள் இன்னபிற உலக வாழ்க்கை நலன்களையும் அடைந்து சுகமாக வாழ்கிறான். மற்றும் இம்மைப் பயனுடன் மறுமை நலமான சொர்க்க வாழ்வையும் கூட அடைகிறான். இது சம்சாரிக பயன்களாகும். எந்த பயனையும் எதிர்பாராமல் ஆசையற்றவனாய் இறைவனை தியானித்தால் அவருடைய கருணைக் கொடையால் மனத் தூய்மைப் பெற்று குருவிடம் வேதாந்த கல்வி கேள்விக்கு தகுதி உடையவனாகிறான்.

-

பந்த மோட்ச வழி: 

-

அந்தகரணத்தில் பிரும்மம் பிரதிபலித்ததால் உண்டான ஜீவாத்மா உண்மையில் மாறாத ஸாட்சாத் பிரும்மமே ஆகும். ஒரு நிறமற்ற படிக மணியின் அருகில் வைக்கப்பட்ட பூவின் செந்நிறம் அந்த மணிக்குள் இருப்பது போல் தோன்றும். பிரதிபலனத்தால் ஜீவன் உண்டாக ஆதாரமான அதாவது ஜீவனுக்கு உபாதியான அந்தகரணத்தின் விகாரமே விருப்பும், வெறுப்பும் ஆகும். அவை ஜீவனிடத்தில் தோன்றுகின்றன. இந்த பிராந்திதான் ஜீவனுக்கு சம்சாரமாகும். இம்மாதிரி வந்த பந்தமாகிய சம்சாரம் நீங்குவதற்கு வழிகள் உண்டு. அவை தானம், ஹோமம், வேள்வி போன்ற வேதத்தில் சொல்லப்பட்ட கருமங்களாகும். இவற்றுடன் ஜீவாத்மாவானவன் இறைவனை போற்றி தொழுதால் இறைவனின் கருணையால் மனத்தூய்மை உண்டாகிறது. அதன் பிறகு முக்தியில் இச்சைப் பிறக்கிறது. இந்த காரணத்திற்காக வேதாந்தம் கேட்பதிலும் ஈடுபடுகிறான். அப்புறம் குருவினுடைய உபதேசத்தால், அபேதத்தைச் சொல்லும் வாக்கியங்களின் பொருளறிவு உண்டாகிறது.

-

ஜீவனும் பிரும்மமும் ஒன்றே!

-

தத்த்வமஸி என்ற சாம வேத மகா வாக்கியத்தின் பொருளறிவு பிறக்கிறது. தத் என்கிற சொல்லுக்கு இந்த வாக்கியத்தில் ஸத்சித் ஆனந்த வடிவமாய் ஒரு மாறுதலும் இல்லாத தாய், இரண்டாக இல்லாத பிரும்மம் என்றே பொருள்! தவம் என்ற சொல்லுக்கு, இயற்கையாக இல்லாமல் இடையில் உண்டான உடல், புலன்கள் முதலியவற்றோ சேர்ந்திருக்கும் ஜீவாத்மாவே விவேகத்தால் வேறுபடுத்திக் கண்ட தூய ஆத்ம வடிவம் என்று பொருள். இந்த இரண்டிற்கும் பேதமில்லை என்பதே தத்த்வமஸி வாக்கியத்தின் பொருள் ஆகும். இதை குருவிடம் உபதேசமாகக் கேட்டு அறிவதால் ப்ரோக்ஷ்ஞானம் உண்டாகிறது. ஐம்புலன்களில் ஏதேனும் ஒன்றால் அல்லது எல்லாவற்றாலும் நம்மால் ஒரு செய்தியை அறியமுடியும் போது உண்டாவதற்கு பிரத்யட்க்ஷ ஞானம் என்று பெயர். அல்லது அபரோட்க்ஷ ஞானம் என்பர். அனுமானம் அல்லது சாத்திரத்தில் ஏற்படுவதற்கு பரோட்க்ஷ ஞானம் என்று பெயர். இங்கே குருவிடமிருந்து கேள்விப்பட்டு அறியும் ஞானமாதலால் பரோட்க்ஷஞானம் எனப்பட்டது. இது ஒருவித குணமும், தருமமும் அற்ற பிரும்மாத்ம ஐக்கிய அறிவு ஆகும். ஜீவனே பிரும்மம். அதுவும் குணம் குறி எதுவுமில்லாத பிரும்மம் என்று சீடர் குருவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான் என்று பொருள். இப்படிக் கேட்டறிந்ததை சிரவணம் என்பர். பிறகு அதை இடைவிடாமல் மனத்திலேயே உருட்டிக் கொண்டிருக்கும் அதாவது நன்கு நினைவில் பதித்துக் கொள்ளும் மனனம் செய்ய வேண்டியதாகிறது. அதற்குப் பின் கேட்டதை கேட்டபடி பொருளோடு இடைவிடாமல் பாவனை புண்ணுதல் என்னும் நிதித்யாசனம் வருகிறது. இதன் மூலம் தத்த்வமஸி வாக்கியப் பொருள் அறிவாக ஞானம் உண்டாகிறது. அதன் பின் எல்லா பிரமையும் ஒழிந்து அதற்குக் காரணமான அவித்தையும் அழிந்து அபரோபக்ஷ் அனுபூதி எனும் பிரும்ம சாட்சாத்கார ஞானம் சீடனுக்கு ஏற்படுகிறது. அவனும் ஞானகுரு ஆகிவிடுகிறான். உடனடியாக அப்போதே ஜீவன் முக்தியடைந்த நிலை வாய்க்கிறது. ஆனாலும் சக்கரத்தை சுழற்றி விட்டுவிட்டு கையை எடுத்துவிட்டாலும் சிறிது சுற்றி விட்டே சக்கரம் நிற்பது போல், அந்த ஜீவன் முக்தனின் உடலும் சில காலம் வாழ்ந்துவிட்டே ஓயும். வேகமாக செலுத்தப்பட்டு வந்த வண்டி நிறுத்தப்பட்டு விட்ட போதும் சிறிது தொலைவு ஓடிவிட்டு நிற்பது போன்றதாகும். இன்னும் ஓர் உதாரணமும், பஞ்சதஸியிலே வித்யாரண்ய ஸ்வாமிகள் கூறுகிறார். அடிபட்ட இடத்தில் காண்பது போல ஜீவன் முக்தனின் உடல் மட்டும் வாழும் என்கிறார்.

-

விவேக சூடாமணியில் ஸ்ரீ சங்கராச்சாரியார் பழுத்து காய்ந்த இலை காற்றில் அங்கும் இங்கும் அலைவது போல, ஜீவன் முக்தனும் உடல் மட்டுமாய் அலைவர் என்கிறார். ஜீவன் முக்தி அடைந்து விட்ட போதும் உடலில் சில காலம் தங்கியிருக்கிறார். இது பழுத்து காய்ந்து விட்ட இலை மரத்தில் சிறிது காலம் ஒட்டிக் கொண்டிருப்பது போன்றது. இவ்வாறு கருமத்தால் ஆரம்பிக்கப்பட்ட உடல் மாத்திரம் சில காலம் தரிக்கப்படுகிறது. இது பிராரப்த கருமம் எனப்படும் விளைவைத் தரத் தொடங்கிய முன் செய்த புண்ணிய பாவங்கள். தீர்ந்து போனதும், உடலும் விழுந்து விடுகிறது. இந்நிலைக்கு கைவல்யம், விதேக முக்தி என்று பெயர். இதுவே மோட்சம், அதாவது மாயை தன் ஆவரண, விட்ஷேப சக்திகளுடன் நீங்கி விட்ட நிலை. முழு ஆனந்த அதுவரை மறைந்திருந்த பிரும்மம் உணரப்படுகின்றது. இத்தகைய விடுதலை அடைவதற்கு ஜீவன் எங்கும் போய் வர வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே கிடைத்து விடுகிறது. இது கொடியிலேயே வெள்ளரி பழுத்து காம்பு விடுபட்டும் கொடியிலேயே இருப்பது போல இருந்த இடத்திலேயே மோட்சம் அடைந்ததாகும். இதை வெள்ளரிப்பழ மோட்சம் என்பர். இந்த அத்வைதப் பிரகரணத்தில் பிரும்மம் மட்டுமே உண்மையானது. மற்ற ஒன்றும் உண்மையில்லை. ஜீவனும், பிரம்மமும் இரண்டில்லை; ஒன்றே என்று கூறுகிறபடியால் இதற்கு இரண்டில்லாதது என்ற பொருளில் அத்வைதம் என்று பெயர் வைக்கப்பட்டது. இங்கே அத்வைத தத்துவத்தின் பொருள் முடிகிறது.

-

அத்வைதச் செய்யுள்

-

இந்த தத்துவத்தை கீழே உள்ள செய்யுள் விளக்குகிறது.

-

ப்ரஹ்மைகம் பரமார்த்த ஸத் ததிதரன் மாயா மயத்வான் ம்ருஷா

ப்ரஹ்மைவைக முபாதி பிம்பித மதோ ஜுவேச பாவம் கதம்

ப்ராந்நிஸ் ஸம்ஸ்ருதி ரஸ்ய தத் ப்ரசமனம் முக்திஸ் தத ப்யாத்மநோ

ப்ரஹ்மைக்யா வகமாத் க்ருதி ச்ரவண ஜாத் இத்யாஹி ரத்வைதிந:

-

பொருள் : பிரும்மம் எனப்படும் ஆத்மப் பொருள் ஒன்றே. இது எக்காலத்திலும் மேலானதாக இருக்கும் உண்மைப் பொருள். இந்த ஆத்மப் பொருளுக்கு இரண்டாவதாக எதுவும் கிடையாது. அதாவது ஸஜாதியமாக, இந்த ஆத்மாவைப் போலவே இன்னொரு ஆத்மாவும் இல்லை. விஜாதியமாக, இந்த ஆத்மாவைக் காட்டிலும் வேறு விதமான பொருள் ஒன்றும் இல்லை. இதன் மூலம் இதைத் தவிர இன்னொரு ஆத்மா இல்லையென்றும், இந்த ஆத்மாவைத் தவிர வேறுவிதமாகக் கூட இன்னொரு பொருள் இல்லையென்றும் இந்த ஆத்மாவிலேயே கூட ஒரு தருமம் இல்லையென்று தெளிவாக சொல்லலாகிறது. இங்கே விவகாரிக ஸத், பிரதிபாஸிஹ ஸத் என்று இரண்டு விதம் தோன்றுவதால் உண்மையான ஆத்மப் பொருளை வேறுபடுத்திக் காட்ட பரமார்த்த ஸத் என்று இது சொல்லப்படுகிறது. பிரம்மத்தைக் காட்டிலும் வேறாக இருக்கும் மாயையின் செயல் எல்லாம் பொய். ஒரே ஆத்மாவே இடையில் உண்டாகும் மாயைத் தோற்றமான அவித்தை. அந்த கரணங்களால் பிரதிபலிக்கப்பட்டதாய் ஜீவனாகவும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பலவாகவும், இறைவனாகவும் தோன்றுகிறது. ஜீவாத்மாவுக்கு நான் செய்பவன், நான் அனுபவிப்பவன், நான் அறிபவன் முதலிய பிரமைதான் சம்சார துக்கம். அபேத வாக்கிய தத் த்வமஸி போன்ற ஞானத்தால் மயக்க அறிவு நீங்குதலே மோட்சம். இவ்வாறு அத்வைதிகளின் தத்துவம் உள்ளது.

-

தத் த்வமஸி விளக்கம் : 

-

அதற்கான குருவின் உபதேசமாக, ஆருணி, சுவேத, கேதுவான தம் பிள்ளைக்கே தத் த்வமஸி என்று உபதேசித்த வேத மகா வாக்கியமுள்ளது. பிருஹதாரண்ய உபநிடதத்தில் இறைவனைச் சொல்ல ஆரம்பித்து, எல்லாம் இவன் வசத்திலுள்ளது. அனைத்திற்கும் இவன் இறைவன். இவனுக்குள் பூதங்கள் எல்லாம் அடக்கம். அவற்றைக் காப்பாற்றுகிறவன் என்று அநேக குணங்களைச் சொல்லிப் பிறகு இந்த ஆத்மா அப்படியெல்லாம் இல்லை. இவனிடத்தில் ஒன்றும் தங்குவதில்லை என்று முன்னால் சொன்ன நல்ல தருமங்களையே கழித்துவிடுவதால் ஒரு குணம்-தருமம் கூட இல்லாத சுத்த சைதன்யம் ஒன்றே பரமார்த்தம் என்று நிற்கிறது. அங்கு ஈஸ்வர ஸ்ரூபம் வேறுபடுத்தப்படுகிறது. ஜீவன் விழிப்பு-கனவு-தூக்கம் என்ற மூன்று நிலைகளை மாறிமாறி அடைபவன். விழிப்பில், வெளி உலகம் அனுபவிக்கப்படுகிறது. கனவில், விழிப்பில், கண்ட உலக அனுபவத்தால் ஏற்பட்ட வாசனைப் பதிவை யதார்ந்தங்களாக அனுபவித்தல், இம்மூன்று நிலைகளிலும் இருப்பது சைதன்யமே. வெளி உலகமும் சொப்பன உலகமும் உண்மையில்லாதவை. ஏனெனில், எப்போதும் இருப்பதில்லை. தூக்கத்தில் அந்தக் கரணம் அழிந்து போய் அறியாமை மட்டுமே உள்ளது. சமாதியில் இந்த அறியாமையும் மறைந்து விடுகிறது. துரியத்தில் சைதன்யமே உண்மை என்று வாய்க்கிறது. அந்த சைதன்யத்திற்கே அஞ்ஞானத் தொடர்புள்ளதால் அஞ்ஞானமே அந்தக்கரணமாகவும், அந்த அந்தக்கரணமே கனவில் உள்ளுலகமாகவும், நினைவில் வெளி உலகமாகவும் மாறுகிறது. ஆகவே, அஞ்ஞான முதலான உலகம் வரை உள்ளதெல்லாம் சைதன்யத்தைத் தவிர மித்தையாகி விடுகின்றன. இப்படி ஜீவன் என்று குறிப்பிடப்படுபவனிடத்தில் உள்ளதை எல்லாம் கழித்தால் சைதன்யமே மிஞ்சுவது. இப்படிப் பகுத்து என்றுமுள்ள ஒன்றை மட்டுமே உணர வேண்டும்.

-

தத் என்ற சொல்லிற்கு சுத்த சைதன்யமே பொருள். த்வம் என்ற சொல்லிற்கு ஜீவாத்மாவிலுள்ள மித்தையான சமாச்சார்ங்களைக் கழித்த பின்னர் மிஞ்சும் சுத்த சைதன்யமே பொருள். ஆகவே, தத், த்வம் ஆகிய இரண்டு சொற்களுக்கும் பொருள் சுத்த சைதன்யமே. நேரடி புலனனுபவத்தால் இவ்வுண்மை அறிய முடியாதாகையினால் தெரியாததை தந்தை பிள்ளைக்குப் போதிப்பதாக பிரும்மாத்ம-ஐக்யத்தைச் சொல்லவே வருவதாக, தத் த்வமஸி எனும் வாக்கியம் வருகின்றது. தூய ஜீவ-சைதன்யத்திற்கும், தூய பிரும்ம சைதன்யத்திற்கும் பிரிவில்லை-அபேதம் என்பதே இந்த தத் த்வமஸி வாக்கியப் பொருள் எனச் சொல்லுவதால் இவர்களின் தத்துவத்திற்கு சுத்தாத்வைத சித்தாந்தம் எனப் பெயரிடப்பட்டது. அதாவது ஜீவனாக உள்ளவனுக்கும், பிரும்மத்திற்கும் வேறுபாடு இல்லை. ஜீவனே பிரும்மம் இதைத் தவிர, மற்றவை இருப்பது போலத் தோன்றும் மாயையின் காரியங்கள் இல்லாமல் போய்விடுவன என்பதே அத்வைதம்.

-

அத்வைதக் கருத்துக்கள் சில: கொள்ளிக்கட்டையைச் சுழற்றுவதால் இல்லாத நெருப்பு வட்டம் ஒன்று இருப்பது போல உண்டாகிறது. இதே போலத்தான் இருக்கும், பிரும்மத்தை வைத்து இல்லாத உலகம் தோன்றுகிறது. பானைக்குள்ளிருக்கும் ஆகாயத்திற்கும், வெளியிலிருக்கும் ஆகாயத்திற்கும் பிரிவு உள்ளது போலத் தோன்றுகிறது. ஆனால் பானையினாலேயே அப்படிப்படுகிறது. பானை உடைந்துவிட்டால் ஆகாயம் பழையபடி ஒன்றாகவே இருக்கும் உண்மை புலப்படுகின்றது. அதேபோல ஜீவனாகவும், பிரும்மமாகவும் பிரிந்துள்ளது போலத் தோன்றுகிறது. இது மாயையால் மாயை நீங்கி ஞான நிலையில் இரண்டும் வேறில்லை என்ற அத்வைத உண்மை புரியும். ஏகத் தத்வமே அத்வைதம். அதைப் போலவோ, அதைவிட வேறாகவோ, அதனிடத்திலேயே மாறுதல்களோ, தருமமோ, பகுதிகளோகூட இல்லாததால் இரண்டாவது இல்லாதது பிரும்மம்.


74.சைவ சித்தாந்தம்

Additional Information

  

74.சைவ சித்தாந்தம்

-

கேள்வி-பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது

-

1. சமயம் என்றால் என்ன?

மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

2. சைவம் என்றால் என்ன?

சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

3. சைவ சமயம் எப்போது தோன்றியது?

சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது(தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

4. யார் சைவர்?

சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?

பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

6. சமயக் குரவர்கள் யாவர்?

1. திருஞான சம்பந்த நாயனார்

2. திருநாவுக்கரசு நாயனார்

3. சுந்தரமூர்த்தி நாயனார்

4. மாணிக்கவாசகர்.

7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?

1. திருநந்தி தேவர்

2. சனற் குமாரமுனிவர்

3. சத்திய ஞான தரிசினிகள்

4. பரஞ்சோதி முனிகள்.

8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?

1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்

2. அருள்நந்தி சிவாச்சாரியார்

3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்

4. உமாபதி சிவாச்சாரியார்.

9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?

திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.

சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?

முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.

இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?

பன்னிரு திருமுறையில் முதல் பாடல்’தோடு’ என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில்’உலகெலாம்’ என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.

இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?

திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.

மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

15. அகத்தியர் தேவாரத் திரட்டு குறிப்பு தருக

அகத்திய முனிவர்’அடங்கள் முறை’ முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில்8 நிலைகள் உள்ளன.

1. குருவருள்

2. பரையின் வடிவம்

3. அஞ்செழுத்து

4. கோயில் திறம்

5. சிவன் உருவம்

6. திருவடிகள் பெருமை

7. அருச்சனைச் சிறப்பு

8. அடிமைத் திறம்

16. தேவார அருள்முறைத் திரட்டு குறிப்பு தருக.

மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில்99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்? 18,497 பாடல்கள்.

18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?

மொத்தம் பாடியவை கிடைத்தவை

திருஞான சம்பந்த சுவாமிகள்16,000 383

திருநாவுக்கரசு சுவாமிகள்49,000 312

சுந்தரமூர்த்தி சுவாமிகள்38,000 100=மொத்தம்1,03,000 79.5

19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?

திருஞான சம்பந்த சுவாமிகள் சீர்காழி

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாமூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநாவலூர்

மாணிக்கவாசகர் திருவாதவூர்.

20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

திருஞான சம்பந்த சுவாமிகள்16 ஆண்டுகள்

திருநாவுக்கரசு சுவாமிகள்81 ஆண்டுகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்18 ஆண்டுகள்

மாணிக்கவாசகர் 32 ஆண்டுகள்

21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்? சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்? அறுபத்து மூவர்.

23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?

சாத்திரத்தில் தோத்திரம் போற்றிப் பஃறொடை

தோத்திரத்தில் சாத்திரம் திருமந்திரம்

24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்? பரஞ்சோதி முனிகள்

25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?

49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். ’துகளறுபோதம்’ என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை? திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?

1. சிவஞான சித்தியார்

2. இருபா இருபது.

28. சித்தாந்த அட்டகம் விளக்குக

பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.

1. சிவப்பிரகாசம்

2. திருவருட்பயன்

3. உண்மை நெறி விளக்கம்

4. போற்றிப் பஃறொடை

5. கொடிக்கவி

6. வினா வெண்பா

7. சங்கற்பநிராகரணம்

8. நெஞ்சு விடுதூது

என்பவையே அந்த எட்டு நூல்கள்.

29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்? வாகீச முனிவர்.

30. வேதங்கள் குறிப்பு தருக.

வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

31. ஆகமங்கள் குறிப்பு தருக.

ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள்28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.

அகச்சமயம் அகப்புறச்சமயம்

1. பாடாணவாத சைவம்1. பாசுபதம்

2. பேதவாத சைவம்2. மாவிரதம்

3. சிவசமவாத சைவம்3. காபாலம்

4. சிவசங்கிராந்தவாத சைவம்4. வாமம்

5. ஈசுவர அவிகாரவாத சைவம்5. பைரவம்

6. சிவாத்துவித சைவம்6. ஐக்கியவாத சைவம்

புறச்சமயம் புறப்புறச்சமயம்

1. நியாயம்1. உலகாயதர்

2. சாங்கியம்2. சமணர்

3. யோகம்3. சௌத்திராந்திகர்

4. மீமாஞ்சை4. யோகசாரர்

5. வேதாந்தம்5. மாத்யமிகர்

6. பாஞ்சராத்திரம்6. வைபாடிகர்

33. சைவசித்தாந்தம் ஒரு வார்த்தையில் விளக்கம் தருக. முடிந்த முடிபு.

34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?

திருமந்திரம்

‘கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்

முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே

சொற்பதங் கடந்து துரிசற்று மேலான

தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே.

35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?

1. தர்க்க ரீதியானது(ஃணிஞ்டிஞி)

2. அறிவியற் பூர்வமானது(குஞிடிஞுணtடிஞூடிஞி)

3. வரலாற்றுத் தொன்மையுடையது(ஏடிண்tணிணூடிஞி)

4. நடைமுறைக்கு இயைந்தது(உச்ண்தூtணி அஞீச்ணீt)

5. உலகளாவியது(க்ணடிதிஞுணூண்ச்டூ)

6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது(Oணீtடிட்டிண்tடிஞி) இன்னும் பல.

36. சற்காரிய வாதம் சிறுகுறிப்பு தருக. ’உள்ளது அழியாது, இல்லது தோன்றாது’ என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

37. அளவை குறிப்பு தருக.

நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.

1. காட்சி அளவை (பிரத்தியட்சப் பிராமணம்)

2. கருதல் அளவை(அனுமானப் பிராமணம்)

3. உரை அளவை (ஆகமப் பிராமணம்)

மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?

1. இறைவன் பதி

2. உயிர் பசு

3. மலம் பாசம்

இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.

‘பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு, பாசம் அநாதி

பதியினைச் சென்று அணுகா பசு பாசம்

பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே‘

39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?

இறைவன் தாமே அறியும் பேரறிவு உடையவன்.

உயிர்கள் அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.

மலங்கள் அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?

பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.

பொது இயல்பு

ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.

(எ.கா) நீரில் வெம்மை

சிறப்பு இயல்பு

ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.

(எ.கா) நீரின் குளிர்ச்சி

41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

42. மும்மூர்த்திகள் யாவர்?

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமன்

காத்தல் தொழிலைச் செய்யும் திருமால்

அழித்தல் தொழிலைச் செய்யும் உருத்திரன்

இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள்.

43. இறைவனின் எண்குணங்கள் யாவை?

1. தன் வயம் உடைமை.

2. தூய உடம்பு உடைமை.

3. இயற்கை உணர்வு உடைமை.

4. முற்றுணர்வு உடைமை.

5. இயல்பாகவே பாசமின்மை.

6. பேரருள் உடைமை.

7. முடிவில் ஆற்றல் உடைமை.

8. வரம்பில் இன்பம் உடைமை.

44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?

உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?

ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

46. கேவலம், சகலம், சுத்தம் குறிப்பு தருக.

கேவலம்:

உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.

சகலம்:

கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.

சுத்தம்:

உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?

1. நனவு சாக்ரம்

2. கனவு சொப்னம்

3. உறக்கம் கழுத்தி

4. பேருறக்கம் துரியம்

5. உயிர்ப்பு அடங்கல் துரியாதீதம்

48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?

ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?

இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில்’இருள்’ என்ற சொல்லால் பேசப்படும்.

50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?

சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.

சஞ்சிதம்: (பழவினை)

பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்

பிரார்த்தம்: (நுகர்வினை)

இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள்(நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)

ஆகாமியம்: (வருவினை)

இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

தலைப்புகள்

51. வினை என்றால் என்ன?

நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.

52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?

முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?

வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?

மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

55. மாயை குறிப்பு தருக.

மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள்36 தத்துவங்களாக விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?

சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது? ’அத்துவிதம்’ என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?

இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.

உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?

குரு, லிங்க, சங்கம், வழிபாடு.

குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.

லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.

சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.

60. சரியை, கிரியை, யோகம், ஞானம் விளக்குக

சரியை: உடலால் வழிபடுவது.

கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.

யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.

ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.

திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.

சிசிவன்

வசக்தி(அருள்)

யஉயிர்

நமறைப் பாற்றல்

மஆணவ மலம்

என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.

திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

62. தீக்கை என்றால் என்ன?

தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.

தீகெடுத்தல் ஷைகொடுத்தல்

பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.

இது மூன்று வகைப்படும் அவை

1. சமயம்2. விசேடம்3. நிருவாணம்

63. இருவினை ஒப்பு என்றால் என்ன?

நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

64. மலபரிபாகம் என்றால் என்ன?

கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.

65. சத்திநிபாதம் என்றால் என்ன?

மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை? மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

67. முத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு சமயமும் அதன் வழிபாடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?

உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

69. சீவன் முக்தர் குறிப்பு தருக. முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

70. தசகாரியம் என்றால் என்ன?

ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.

தத்துவரூபம்,

தத்துவ தரிசனம்

, தத்துவ சுத்தி

ஆன்ம ரூபம்,

ஆன்ம தரிசனம்,

ஆன்ம சுத்தி

சிவரூபம்,

சிவ தரிசனம்

, சிவயோகம்

சிவபோகம்.

-

இந்த சித்தாந்தத்தை முழுமையாகப்படிக்க சைவசமய குருமார்களிடம் சீடர்களாக சேரவேண்டும்

-

தலைப்புகள்

..

worry.jpg



இறைவன் ஏன் மனிதர்களைப் படைக்கவேண்டும்?

Additional Information

 இறைவன் ஏன் மனிதர்களைப் படைக்கவேண்டும்? 


அவர்களுக்கு ஏன் துன்பத்தைக்கொடுக்கவேண்டும்? எதற்காக தீயவர்களை படைக்கவேண்டும்?கடவுள் நினைத்தால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைக்கலாமேஎதற்காக இப்படிப்பட்ட நோயையும்,இயற்கை சீற்றங்களையும் கொடுத்து உயிர்களை துன்புறுத்தவேண்டும்?இவைகள் எல்லோர் மனதிலும் உள்ள கேள்விகள்.-நாம் அடிக்கடி படிக்கும் ஒரு விஷயம் உண்டு.கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார்.அவர் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார்.அவர் இல்லாத இடமே இல்லை. என்றெல்லாம் அடிக்கடி படிக்கிறோம்.ஆனால் அதுபற்றி சிறதும் சிந்திப்பதில்லை.மேலும் அதுபற்றி ஆழமாக படிப்பதும் இல்லை.-கடவுளே தேவர்களாகவும்,மனிதர்களாகவும்,விலங்குகளாகவும்,செடிகொடிகளாகவும்,அனைத்துமாகவும் ஆகியிருக்கிறார்.கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவனையும்,வைகுண்டத்தில் வீற்றிருக்கும் விஷ்ணுவையுமே நாம் இறைவன் என்று வழிபட பழக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் இதையும் தாண்டி எங்கும் நிறைந்துள்ள கடவுளைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோம்.-இறைவன் மாயை(அறியாமை)யின் துணையினால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுமாக ஆகியிருக்கிறார்.அவரே படைக்கும் தொழிலை செய்பவராகவும்.காக்கும்தொழிலை செய்பவராகவும்,அழிக்கும் தொழிலை செய்பவராகவும்,கோடிக்கணக்கான தேவர்களாகவும்,கிரகங்களாகவும்,சந்திர சூரியர்களாகவும்,பற்பல உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்.இதில் பல படிநிலைகள் உள்ளன. சக்திக்கு ஏற்றபடி உயர்வு தாழ்வு உள்ளது.அதிக சக்தியை பெற்றிருப்பவர்கள் மேல் உலகங்களில் வாழ்கிறார்கள்.குறைந்த சக்தியைப்பெற்றிருப்பவர்கள் கீழ் உலகங்களில் வாழ்கிறார்கள்.அதுதான் வேறுபாடு.-கடவுள் ஏன் இப்படி செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்ப முடியாது. ஏனென்றால் இந்த கேள்வியைக் கேட்பவரும் கடவுள்தான்.இதற்கு பதில் சொல்பவரும் கடவுள்தான்.கண்களை இறுக மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று கத்தினால் இருட்டு விலகிவிடுமா? கண்களில் உள்ள துணியை நீங்கள்தான் கட்டினீர்கள். நீங்களே அதை அகற்ற வேண்டும்.நாமே கடவுள் என்பதை அறியும்போது மாய உலகம் மறைந்துவிடும்.அப்போது நம்மைநாமே கண்களால் கட்டிக்கொண்டோம் என்பது புரியும். யாரும் நமது கண்களைக்கட்டி இந்த உலகிற்குள்கொண்டுவிடவில்லை.-நமது சொந்த இயல்பை அறியவேண்டும்.அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நமது சக்தியை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். மனிதனாக இருப்பவன் தெய்வமாக உயரவேண்டும் பின்பு இன்னும் உயர்ந்து பிரம்மமாகவேண்டும்.அப்போது நானே அனைத்துமாக இருக்கிறேன் என்ற அனுபவம் உண்டாகும். நமது உடல் பிரபஞ்ச உடலாக,எல்லையறற்ற உடலாக மாறிவிடும்.இதை பகவத்கீதை யோகமார்க்கம் என்கிறது.-இன்னொரு வழி, நமது சக்தியை குறைத்துக்கொண்டே வரவேண்டும். முடிவில் சக்தியற்ற நிலையை அடையவேண்டும். சக்தியை சூன்யநிலைக்கு கொண்டுவரவேண்டும். அப்போது நமது சொந்த இயல்பு வெளிப்படும். நான் செயலற்றவன் என்பது அனுபவமாகும்.இதை சந்நியாச மார்க்கம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்-முதல் வழியில் செல்பவன் எல்லையற்ற சக்தியை அடைகிறான்.இன்னொரு வழியில் செல்பவன் சக்தியின் ஒடுக்கநிலையை அடைகிறான்.சிலர் சூன்யம் என்கிறார்கள்..இந்த இரண்டு வழிகளில் செல்பவர்களும் நானே கடவுள் என்பதை அனுபவத்தில் உணர்கிறார்கள்.-முதல் வழியில் செல்பவர் தேவைப்பட்டால் மீண்டும் மனிதனாகப்பிறந்து மனித குலத்திற்கு நன்மை செய்ய முடியும். அவரையே அவதாரபுருஷர்கள் என்று மக்கள் வழிபடுகிறார்கள்.இன்னொரு வழியில் செல்பவர் மீண்டும் பிறப்பதில்லை.…உயிருக்கு உயிரான சொந்தங்களின் இழப்பு ஈடுகட்ட முடியாதது. அப்படிப்பட்ட நிகர்வுகள் எதிர்பாரவிதமாக நிகழும்போது இறைவன்மீது கோபம் ஏற்படுகிறது.இறைவன் ஏன் இப்படி செய்தார்? அது அநியாயம் என்று தோன்றுகிறது.மேலே இருக்கும் தெய்வம் ஒன்று எப்போதும் நம்மை காத்துவருவதாக நம்புகிறோம்.நம்மைச்சுற்றி பலபேர் துன்பப்படுவதைப் பார்க்கிறோம்.அப்போது கடவுள் அவர்களை கைவிட்டுவிட்டான் ஆனால் நம்மை காப்பாற்றிக்கொண்டிருக்கிறான் என்று நம்புகிறோம்..நமக்கும் அதேபோல துன்பம் வரும்போது கடவுள்மீதே கோபம் எழுகிறது.தினமும் கடவுளை வழிபட்டுக்கொண்டிருக்கும் எனக்கு இந்த நிலமையா?இது அநியாயம் என்று தோன்றுகிறது.அறியாமையின் காரணமாகவே இப்படிப்பட்ட கோபம் எழுகிறது.உண்மையில் இந்த உலகத்தில் இறைவனே அனைத்து மனிதர்களுமாக ஆகியிருக்கிறான்.பிறப்பதும் அவரே இறப்பதும் அவரே.இறைவனைத்தவிர இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,செடி.கொடிகள்.கல்,மண் என்று அனைத்தும் கடவுளைத்தவிர வேறு எதுவும் இல்லை.அறியாமை காரணமாக மனிதர்களால் இதை புரிந்துகொள்ளமுடிவதில்லைஞானம் ஏற்படும்போது நமக்கும் கடவுளுக்கும் வேறுபாடு தெரியாது. இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் கடவுளாகவே தெரியும்.அந்த நிலையில் பிறரது துன்பங்கள் நமது துன்பங்களாகவும். பிறரது இன்பங்கள் நமது இன்பங்களாகவும் தெரியும்.-ஒருவரது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு தொடர் நிகழ்வின் தொடர்ச்சியாகும்.ஒரு நிகழ்வு நடக்கும்போது அதற்கு பல காரணங்கள் இருக்கும்.தனது முற்பிறவி கர்மங்கள்,நம்மை சுற்றியிருப்பவர்களின் கர்மங்கள்.சமுதாயத்தின் கர்மம்,நாட்டின் கர்மம் இன்னும் பிறரது கர்மங்கள் என்று எத்தனையோ கர்மங்கள் காரணமாக இருக்கலாம்.அவைகளை கண்டுபிடிப்பது கடினம்.-மனிதர்களைக் காக்க சிவன்,விஷ்ணு,முருகன்,கணபதி போன்ற தெய்வங்கள் இல்லையா?இருக்கிறார்கள்.முற்றிலும் அகங்காரம் அற்றவனை, பக்தி நிறைந்தவனை,உலகின்மீது பற்று இல்லாதவனைகுழந்தையைப்போன்ற மனநிலையுள்ளவனை தாய்தந்தை காப்பதுபோல் அவர்கள் காக்கிறார்கள்.ஆனால் அப்படிப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு...📷இந்துமதம் என்ற தலைப்பில் கற்கவேண்டிய பாடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.. 

Copyright © 2013 hindumatham.in - All Rights Reserved.

  • Sri Ramakrishna
  • SriRamakrishna_Life
  • vivekananda
  • Hindumatham
  • H2
  • H3
  • H4
  • V1
  • V2
  • V3
  • V4
  • R1
  • R2
  • S1
  • SM1
  • MA1
  • SW1
  • P1
  • SW2
  • SW3
  • SW4
  • SW5
  • RK1
  • TITLES

Powered by hindumatham