வகுப்பு-1 நாள்-17-12-2019
-
இந்துமதத்தின் புனித சாஸ்திரம் என்ன என்று யாராவது கேட்டால் நாம் உடனே எதை சொல்ல வேண்டும்?
வேதம்.
வேதம்தான் இந்துக்களின் புனித சாஸ்திரம்
-
அப்படியானால் பகவத்கீதை?
இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்
-
வேதம் என்றால் என்ன?
-
வேதம் என்றால் எக்காலத்திலும் இருக்கக்கூடிய அறிவுத்தொகுதி.
தொடக்கமும் முடியும் அற்ற வேதங்களின் மூலமே உலகம் முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது.
-
இந்த உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே.
எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
-
தோன்றா நிலையில் இருந்த எண்ணம் எந்த சொற்களின் மூலம் வெளிப்பட்டதோ,
அந்த சொற்களின் தொகுதியே வேதங்கள்.
-
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால்,புறவுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் வேதங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஏனெனில் ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அதைக்குறிக்கும் சொல் இல்லாமல் இருக்க முடியாது.(சொல்லுக்குப் பின்னால் எண்ணம் உள்ளது) எண்ணம்,அதிலிருந்து சொல்,அதிலிருந்து புறப்பொருள் உருவாகிறது.
-
இந்த சொல் என்பது என்ன? வேதங்களே.
வேதத்தின் மொழி என்ன? சமஸ்கிருதம் இல்லை.
வேதத்தின் மொழி வேதமொழி.(அதற்கு எழுத்துக்கள் இல்லை)
வேதமொழியைவிட பழைய மொழி எதுவும் இல்லை.
-
வேதங்களை எழுதியது யார் ? என்று நீங்கள் கேட்கலாம்.
வேதங்கள் எழுதப்படவே இல்லை.
சொற்களே வேதங்கள்.
ஒரு சொல்லை நான் பிழையின்றி உச்சரித்தால் அதுவே வேதம்.
விரும்பிய பலனை அது உடனே அளிக்கும்.
-
வேதத்தொகுதி என்னென்றும் உள்ளது.
உலகம் எல்லாம் அந்தச் சொல்தொகுதியின் வெளிப்பாடே.
வெளிப்பட்டு காணப்படுகின்ற சக்தி ஒரு கல்பம் முடியும்போது சூட்சும நிலையை அடைந்து, சொல் வடிவையும், பின்பு எண்ண வடிவையும் அடைகிறது. அடுத்த கல்பத்தில் மீண்டும் எண்ணங்கள் சொல்லாகி, அதிலிருந்து உலகம் பிறக்கிறது.
-
வேதங்களில் அடங்காதது என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் மனமயக்கமே.
அப்படி எதுவும் இருக்க முடியாது.இந்த உலகம் வேதத்திற்குள் அடக்கம்
-
வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. மற்ற மதங்களின் நூல்கள் அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவை,ஆனால் வேதங்கள் மனிதரால் எழுதப்படவில்லை.
-
மனிதரால் உருவாக்கப்ட்டவை எதுவாக இருந்தாலும் அவை வேதங்கள் அல்ல.ஏனென்றால் வேதங்களுக்கு துவக்கமும் இல்லை,முடியும் இல்லை.அவை எல்லையற்ற காலம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
-
எழுத்துக்கள் என்பது கண்டுபிடிக்கப்படாத, பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் வாழ்வை பார்ப்போம்.
-
அந்த காலத்தில் இயற்கையின் ரகசியங்களை அறிய நினைத்த ரிஷிகள், பல தவங்களை இயற்றி, இயற்கையை கடந்து, சுதந்திர நிலையை அடைந்தார்கள். அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்டது வேதம்.
இவ்வாறு பல காலங்களில் பல ரிஷிகளிடமிருந்து வேதம் வெளிப்பட்டது.
-
அவர்கள் கூறிய கருத்துக்களை சீடர்கள் மனப்பாடம் செய்து கொண்டார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறு மனப்பாடம் செய்வதன் மூலம் இவை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன.
-
வேதங்களில் என்ன இருக்கும்?
-
பிரார்த்தனைகள், யாகங்கள், சடங்குகள்,அறிவுரைகள் போன்றவை.
சுருக்கமாக கர்மகாண்டம்,ஞான காண்டம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது
-
கர்மகாண்டத்தை சற்று விளக்குவோம்.
-
சடங்குகளும் பல தேவதைகளைப்பற்றிய பலவகையான துதிப்பாடல்களும் அதில் உள்ளன.
சடங்குகள் பல கிரியைகள் அடங்கியவை.
அவற்றுள் சில மிக விரிவானவை.அவற்றைச்செய்ய பல புரோகிதர்கள் தேவை.
சடங்குகளின் விரிவால் புரோகிதத் தொழிலே தனியொரு சாஸ்திரமாயிற்று.
படிப்படியாக இந்த சடங்குகளிலும் துதிகளிலும் பொதுமக்களுக்கு மதிப்பு வளர்ந்தது.
தேவதைகள்கூட மறைந்து அவர்களது இடத்தை இந்தச்சடங்குகள் பிடித்துக்கொண்டன.
-
இந்த கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்களில் மீமாம்சகர்கள் என்ற ஒரு பிரிவினர் .இவர்கள் வேதத்தையே தெய்வமாக வழிபடுகிறார்கள்.
-
புரோகிதர்கள் இந்த துதிகளைப்பாடி,அக்கினியில் ஆஹுதி அளிப்பார்கள்.அவற்றின் சொற்களுக்கே பல பயன்களை அளிக்கும் சக்தியுண்டு . இயற்கைக்கு உட்பட்ட மற்றும் இயற்கையை மீறிய அனைத்து சக்திகளும் அங்கு உள்ளன.
-
வேதங்கள் ஒரு அபூர்வசக்தியுள்ள வெறும் வார்த்தைகள் மட்டுமே.
அவற்றை சரியாக உச்சரித்தால் விளைவுகளை உண்டாக்கவல்லது.
ஓர் உச்சரிப்பு தவறானாலும் பலன் தராது.
மற்ற மதங்களின் பிரார்த்தனைகள் போல் அல்லாமல் வேதங்களே இவர்களை பொறுத்தவரை தெய்வங்கள்.
வேதங்களின் சொற்களுக்கு எவ்வளவு உயர்வான இடம் அளிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து நீங்கள் உணரலாம்.
மழைபொழிய வேண்டுமா? இன்ன இன்ன பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.
குழந்தை பிறக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
யுத்தத்தில் ஜெயிக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
இன்ன இன்ன பலன் கிடைக்க வேண்டுமா?இப்படி இப்படி யாகம் செய்ய வேண்டும்.
திருமணமா இந்த சடங்கை செய்ய வேண்டும்.மரணமா? இந்த சடங்கை செய்ய வேண்டும்.
சொர்க்கம் செல்ல வேண்டுமா? அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டுமா? பலசாலியாக வேண்டுமா? பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமா? இன்னும் பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள் அங்கே சொல்லப்பட்டுள்ளன
-
இவ்வாறு மனப்பாடம் செய்யப்பட்டவைகளை,முறைப்படுத்தி வரிசைப்படுத்தினார்கள்.
அவைகளை ரிக்வேதம் என்று அழைத்தார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு இன்னும் பல ரிஷிகளின் வாரத்தைகளை சேர்க்க வேண்டியிருந்தது. அவைகளை தொகுத்து யஜுர் வேதம் என்றார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாமவேதம்,
மகாபாரத காலத்திற்குபிறகு வியாசர் வேதத்தை நான்காக தொகுத்தார்
அவை ரிக்வேதம்,யஜுர்வேதம்,சாமவேதம்,அதர்வணவேதம்
-
அந்த காலத்தில் நடந்த இயற்கை பேரிடரிலோ, போர்களாலோ,நோய்களாலோ, வேதத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒருவரோ,அல்லது ஒரு சமுதாயமோ அழிந்துவிட்டால், வேதத்தின் அந்த பகுதி முழுவதும் அழிந்துவிடும். பிறகு அது திரும்ப கிடைக்காது. இவ்வாறு வேதத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
முற்கால வேதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியே தற்போது நம்மிடம் உள்ளது என்று சொல்லப்படுகிறது
ஆகவே இதை சரிசெய்ய எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது.
-
அதன் பிறகு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரப்பட்டைகள்,மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் வேதங்களை எழுத ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு மொழி படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
வேதத்தை மனப்பாடம் செய்வது குறைந்துபோனது.
வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகவில்லை.
அப்போது எழுதப்பட்ட மொழி பிராமண மொழி அல்லது பிராமி மொழி என்று அழைக்கப்படுகிறது
பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இந்த மொழி வளரச்சியடைந்து உலகின் பல பகுதிகளுக்கு சென்றது
உலகம் முழுவதும் பிராமி மொழியின் கல்வெட்டுகளைக் காணலாம்
பிராமி மொழியுடன் சேர்ந்து வேதமும் உலகம் முழுவதும் பரவியது
-
வேதத்தின் சில வார்த்தைகளை பிராமி மொழியில் உச்சரிப்பது கடினமாக இருந்தது மேலும் பிராமி மொழியில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி பாணினி என்ற ரிஷி சமஸ்கிருதம் என்ற மொழியை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்
-
அதன்பிறகு வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
-
வேதங்கள் எழுதப்பட்ட பிறகு அவைகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது.
அதன் கூடவே பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
வேதங்களில் பல கருத்துக்கள் இருந்தன. ஒருவர் அவைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆகவே தங்களுக்கு பிடித்த பகுதிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு வேதங்களை பின்பற்றிய மக்கள் பல்வேறு மதப்பிரிவுகளை உருவாக்கினார்கள்.
-
சிலர் சொர்க்கத்திற்கு செல்வது குறித்த கருத்துக்களை ஆதரித்தார்கள்.
சிலர் முக்தி பற்றிய கருத்தை ஆதரித்தார்கள்.
சிலர் இந்த உலக இன்பங்களை அனுபவிக்கும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களில் கூறப்படும் பல்வேறு கருத்துக்களை பற்றி விவாதிக்கிறார்.
இதில் வேதாந்தம் என்று சொல்லப்படும் நெறி கடைசியாக உருவானது. இது தான் தற்கால இந்துமதம்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் பகவத்கீதை, வேதாந்தத்தின் சிறந்த நூலாக கருதப்படுகிறது.
இது வேதத்தின் பல கருத்துக்களை விளக்கிகூறுகிறது. எதையும் குறைகூறவில்லை.
சொர்க்கம் செல்வதோ,மற்றஉலக இன்பமோ,மனிதனின் துன்பத்தை முற்றிலும் நீக்காது ,முக்தி என்பது தான் மனிதனின் லட்சியம் என்பதை போதிக்கிறது.
-
முக்தி என்ற லட்சியத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு மதங்கள் உருவானது.
-
வேதம்= கர்மகாண்டம்+ ஞானகாண்டம்
ஞான காண்டம்(வேதாந்தம்)=உபநிடதங்கள் +பகவத்கீதை+பிரம்மசூத்திரம்(தத்துவசாஸ்திரம்)
-
வேதாந்தம்= சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,காணபத்யம்,சூர்யம் என்ற ஆறு மதங்கள்
கர்மகாண்டத்திற்கு எதிராக தோன்றிய மதம் = புத்தம், சமணம். இந்த இரண்டு மதங்களும் ஞான காண்டத்தில் உள்ள கடவுள் கருத்தை தவிர பிற பகுதிகளை ஏற்றுக்கொள்கிறது
-
இவைகள் தவிர இன்னும் பல மதங்கள் இந்தியாவில் தோன்றிக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் சில மதங்கள் தோன்றுகின்றன.
-
எது இந்துமதம் என்று யாராவது கேட்டால் நாம் சொல்ல வேண்டியது என்ன?
இந்தியாவில் தோன்றிய மதங்களில் கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்தும் இந்துமதம்
-
இந்துமதத்திற்கு என்று உள்ள நம்பிக்கை என்ன?
கடவுள் ஒருவரே. மகான்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
அவரை அடைவதற்கான பாதைகள் பல. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதை
ஏகம் சத். விப்ரா பஹுதா வதந்தி (ரிக்வேதம்)
-
-
சுவாமி வித்யானந்தர்-குருஜி
வாட்ஸ்அப் 9789374109
-
ஸ்ரீமத்பகவத்கீதை
-
வாழ்க்கைக்கான பாடங்கள்
-
வகுப்பு-2 நாள்-18-12-2019
-
இந்த உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள்.
நாம் தனியாக அமர்ந்து நமது மனத்தை ஆராய்ந்து பார்த்தால் பாதி நல்ல சிந்தனைகளும்,பாதி கெட்ட சிந்தனைகளும் நிறைந்திருப்பதை பார்க்கலாம்
நமது குடும்பங்களைப் பார்த்தால் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள்,சிலர் கெட்டவர்களாக இருப்பார்கள்
இந்த நல்லது,கெட்டது என்பது இந்த உலகம் முழுவதும் எங்கும் பரந்து கலந்துள்ளது
நல்லதை மட்டும் தனியாக பிரிக்க முடியாது.கெட்டதை மட்டும் தனியாக பிரிக்க முடியாது.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதுபோல.ஒவ்வொரு செயலிலும்கூட நல்லது,கெட்டது இரண்டும் கலந்துள்ளது.
-
இரண்டு அணுவிஞ்ஞானிகளை எடுத்துக்கொண்டால், ஒருவர் அறிவை பயன்படுத்தி அணு உலைகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வார். இன்னொருவர் அணு குண்டுகளை செய்து உலகத்தைஅழிக்க முயற்சி செய்வார்.
-
முற்காலத்தில் தேவர்கள்,அசுரர்கள் என்று இரண்டுவிதமானவர்கள் இருந்தார்கள்.
ஒரு அரசன் இந்த உலகத்தில் தானதர்மங்கள் செய்து நல்லவனாக வாழ்ந்தால் பின்பு தேவனாகிறான்
அதேபோல ஒரு அரசன் நல்லவர்களை துன்புறுத்தி வாழ்ந்தால் பின்பு அசுரனாக மாறுகிறான்
தேவனிடம் எப்படி அதிக அளவு அறிவு இருக்குமோ அதே அளவு அறிவு அசுரனிடமும் உண்டு.ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் விதத்தில் இருவரும் மாறுபடுகிறார்கள்
-
முற்காலத்தில் அரசர்கள் இந்த உலகை ஆட்சி செய்வதுடன் நின்றுவிட விரும்பவில்லை.
இந்த உலகத்தைவிட்டு சென்றபிறகுகூட இந்த உலகின்மீது அதிகாரம் செலுத்த விரும்பினார்கள்.
இதற்கான வழிகள் வேதத்தில் கூறப்பட்டுள்ளன.
வாழும்போது அதிக அளவு புண்ணியத்தை சம்பாதிப்பதுதான் அதற்கான வழி
அதிகம் புண்ணியத்தை சம்பாதிப்பவன் ஒளி உடலில் நீண்டகாலம் வாழ்கிறான்.
அவனுக்கு தேவன் என்று பெயர். அதேபோல ஒளி உடலில் வாழும் பெண் தெய்வத்திற்கு தேவி என்று பெயர்
-
இந்த பூமி பல்வேறு இயற்கை சக்திகளால் நிரம்பியது.
கடலும்,மலையும்,காற்றும்,மழையும்கூட இயற்கை சக்திகள்தான்
இது தவிர பூமிக்கு வெளியேயுள்ள சூரியன்,சந்திரன்,செவ்வாய் போன்ற பல கிரகங்கள்,நட்சத்திர மண்டலங்கள் பூமியின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
-
இந்த இயற்கை சக்திகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற தேவர்களுக்கு உண்டு.யார் அதிகம் புண்ணியம் செய்திருக்கிறார்களோ அவர்கள் தேவர்களில் உயர்ந்தவன். அவருக்கு பெரிய பதவி கிடைக்கும்
-
உதாரணமாக சூரியனை கட்டுப்படுத்தும் சக்தி வேண்டுமானால் அதிக அளவு தான தர்மங்களை ஒரு அரசன் செய்திருக்க வேண்டும். அப்போது சூரியதேவன் என்ற பதவி கிடைக்கும்.சனிக்கு ஒரு தேவன்.வியாழனுக்கு ஒரு தேவன்.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தேவன் உண்டு
அதேபோல ஒரு கடல் அரசனாகவோ,நதி தேவதையாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஏற்ப தான தர்மங்கள் செய்திருக்க வேண்டும்.
மழை மிகவும் முக்கியம். எனவே அந்த பொறுப்பை தேவர்களில் உயர்ந்தவரான இந்திரன் வைத்துக்கொண்டான்.
மழை வேண்டுமானால் இந்திரனை வணங்கவேண்டும். அப்போது அவர் மனம் மகிழ்ந்து மழைய உண்டு பண்ணுவார். அந்த தேவனை மகிழ்விக்காவிட்டால் மழையை தடுத்துவிடுவார்.
-
இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம்.ஏனென்றால் தற்காலத்தில் அப்படி எதுவும் இல்லை.முற்காலத்தில் இப்படித்தான் நடந்தது
கடலில் இறங்க வேண்டுமானால் கடல் தேவனை வணங்க வேண்டும். நதியில் நீராட வேண்டுமானால் நதி தேவதையை வணங்க வேண்டும்.
மலையின் மிது ஏற வேண்டுமானால் மலை அரசனை வணங்க வேண்டும்.
கட்டிடம் கட்ட வேண்டுமா? அதற்கு ஒரு தேவனை வணங்க வேண்டும்
மருந்து தயாரிக்க வேண்டுமா? அதற்கு ஒரு தேவனை வணங்க வேண்டும்
-
இந்த நடைமுறைகளை சரியாக பின்பற்றாமல் தங்கள் விருப்பம்போல செயல்படுபவர்கள் மீது தேவர்கள் கடும்கோபம் கொள்வார்கள். அவர்கள் முயற்சிகளை நாசம் செய்வார்கள்.
எனவே ஒரு காலத்தில் மக்கள் இந்த தேவர்கள்மீது உள்ள பயத்திலேயே வாழ்ந்தார்கள்
-
காலை முதல் இரவு வரை தேவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன.
அந்த காரியத்தை செய்ய வேண்டுமானலும் யாகம் வளர்த்து,தேவர்களுக்கு கொடுக்க வேண்டியதை அந்த யாகத்தில் கொடுப்பார்கள்.
சில தேவர்கள் சோமபானம் கேட்பார்கள். சில தேவர்கள் ஆடுகளை பலியிட கேட்பார்கள். சில தேவர்களுக்கு பல்வேறு பழங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
இந்த யாகங்களை சாதாரண மனிதர்கள் செய்ய முடியாது. புரோகிதர்களுக்கு கொடுக்க வேண்டிதை கொடுத்து,அவர்கள் மூலமாக இதை செய்ய வேண்டும். புரோகிதர்கள் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார்கள்
-
மகாபாரத காலம் என்பது இப்படிப்பட்ட தேவர்கள் ஆட்சி செய்த காலம்
-
சிலர் தேவ பதவியை அடைவதற்காக குறுக்கு வழிகளை கையாண்டார்கள்.அது தான் தவம்
தவத்தின் மூலம் அதிகஅளவு சக்தி கிடைக்கிறது.மிக குறுக்கிய காலத்திலேயே தேவபதவி கிடைத்துவிடும்
இவ்வாறு தவம் செய்து தேவ பதவியை அடைய நினைத்தவர்கள் அசுரர்கள்.
தேவலோகத்தை விட உயர்ந்த உலகங்கள் இருந்தன. கைலாயம்,வைகுண்டம்,சத்தியலோகம் போன்ற பல உலகங்கள் இருந்தன
அந்த உலகத்தின் அதிபதிகளை நினைத்து கடுமையான தவம் செய்வார்கள்.
-
ஒரு காலத்தில் தேவர்களை வீழ்த்துவதற்காக அசுரர்கள் பலர் பூமியில் பிறந்தார்கள்.
வேறு உலகங்களில் இல்லாத பெருமை பூமியில் உண்டு.இது கர்மபூமி. இங்கேதான் நல்லதும் செய்ய முடியும் கெட்டதும் செய்ய முடியும்.
தேவ லோகத்தில் நல்லது செய்ய முடியாது. ஏனென்றால் அங்கே இருப்பர்கள் எல்லோரும் தேவைகள் இல்லாதவர்கள்.ஒருவரின் உதவி இன்னொருவருக்கு தேவைப்பாடாது
பூலோகத்தில் மனிதர்களுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. இந்த தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பவன் உயர்நிலையை அடைகிறான்
-
அசுரர்கள் பலர் பூமியில் மனிதர்களாக பிறந்தார்கள்.அவர்கள் சக்திகளை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேவர்களும் தங்கள் பிரதிநிதியாக குழந்தைகள் பிறக்கும்படி செய்தார்கள். சூரியதேவனின் மகன் கர்ணன்,இந்திரனின் மகன் அர்ஜுனன்,வாயுதேவனின் மகன் பீமன் உட்பட இன்னும் பலர்.
வகுப்பு-3 நாள்-19-12-2019
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
-
இந்த பூமியில் அசுரர்கள் மனிதர்களாக பிறந்தார்கள்.
அவர்களை தடுக்க தேவர்களின் குழந்தைகள் பிறந்தார்கள்.
நல்லவர்கள் எப்போதும் தர்மத்தின் பாதையில் செல்வார்கள்.
தீயவர்கள் அதர்மத்தின் பாதையில் செல்வார்கள்.
நல்லவர்கள் பொதுவாக எல்லா இடங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள்.
தீயவர்கள் நல்லவர்களின் சொத்துக்களை பிடுங்கிக்கொள்கிறார்கள்
ஒரு நாட்டை மொத்தமாக எடுத்து பார்த்தால், சிலவருடங்கள் நாட்டில் அதர்மங்கள் அதிகரித்து காணப்படும்.
ஆட்சியாளர்களே அதர்மத்தை கண்டுகொள்ளாமலும்,அதை ஆதரிப்பது போல காணப்படுவார்கள்.
தர்மவான்கள் துன்பப்படுவார்கள்,அதர்மவான்கள் இன்பமடைவார்கள்.
இது ஒரு உச்சநிலையை அடையும்போது, அங்கே மிகப்பெரிய மாற்றம் நிகழும்
அப்போது மகான் ஒருவர் அங்கே பிறக்கிறார்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.அப்போது
ஒட்டுமொத்தமாக, அதர்மத்திலிருந்து தர்மத்தை நோக்கி நாடு பயணப்படும்.
அதர்மம் புரிந்தவர்கள் வேதனையடைவார்கள்.
தர்மவழியில் செல்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
சில வருடங்களுக்கு பின் மீண்டும் தர்மம்குன்றி அதர்மம் தலை தூக்க ஆரம்பிக்கும்.
இது ஒரு வட்டம் போல தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.
இது இயற்கையின் நியதியாகும்.
-
ஏன் இவ்வாறு நிகழ்கின்றது என்று நீங்கள் கேட்கலாம்.
துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்தை பெறமுடியாது.
இன்பத்திலேயே இருப்பவன் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் இது நியதி.
ஒரு நாட்டிற்கும் இது பொருந்தும்.
நாம் மிகவும் அவசரப்படுகிறோம்.பொறுமையாக சிந்தித்துப்பார்த்தால் உண்மை புலப்படும்
-
அதர்மத்தின் பக்கம் துரியோதனனும் அவனது படைகளும் இருக்கிறார்கள்.
தர்மத்தின் பக்கம் தர்மரும் அவரது படைகளும் இருக்கின்றன.
இரண்டும் சம பலத்தோடு இருக்கின்றன. அதர்மத்தை அழிக்க கூடுதலாக இன்னொன்று தேவை.
அது தர்மம் அதர்மம் இரண்டையும் நன்கு அறிந்து,தர்மம் அதர்மம் இரண்டிற்கும் மேலானதாக இருக்க வேண்டும்.
-
ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார்.
அவருக்கு நண்பனும் இல்லை,எதிரியும் இல்லை
ஆனால் தர்மத்தை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.
தர்மம் தோற்கக்ககூடாது.அப்படி தோற்றால் மக்கள் நம்பிக்கையை இழந்துபோவர்கள்.உலகம் அழிந்துபோகும்.
-
ஸ்ரீகிருஷ்ணர் யார்?
அவரை ஏன் அவதாரம் என்று அழைக்கிறார்கள்?
-
யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள்,
அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர்,
கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக
அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்.அவருக்கு இன்னொரு பெயர் பகவான்
-
ஒரு மனிதனுக்கு உயிரோடு இருக்கும்போது கண்களால் பார்க்ககூடிய தூல உடலில் இருக்கிறான்.
இந்த துல உடல் அழிந்துபோனால்(இறந்துபோனால்) சூட்சும உடலில் வாழ்கிறான்
சூட்சும உடலும் அழிந்துபோனால் உடலற்ற நிலையில் ஆத்மாவாகிறான்
-
இந்த உலகத்திற்கும் மூன்று நிலைகள் உண்டு கண்களால் காணும் தூலஉலகம்
சூட்சும உடலில் வாழும் மனிதர்கள் காணும் உலகம் சூட்சும உலகம்
ஆத்மாவான பின் இந்த உலகமும் ஆத்மாவாக காட்சியளிக்கும். உருவங்கள் அனைத்தும் மறைந்து எல்லாம் ஒன்றாகிவிடும்
-
பொதுவாக நமக்கு நமது உடல்மீது பற்று ஏற்படுகிறது
சிலருக்கு குடும்பத்தில் உள்ள அனைவர்மீதும் பற்று ஏற்படும்
சிலருக்கு தங்கள் நாட்டின்மீது பற்று ஏற்படும்
சிலருக்கு மனிதர்கள் அனைவர்மீதும் பற்று ஏற்படும்
சிலருக்கு இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின்மீதும் பற்று ஏற்படும்
இந்த மொத்த உலகத்தின்மீதும் யாருக்கு பற்று ஏற்படுகிறதோ அவர் பகவான்.
-
ஒரு மனிதன் தன் சக்தியை முழுவதுமாக ஒடுக்கினால் அவன் பிரம்மமாகிறான்
பற்றற்றவன் பிரம்மத்தை அடைகிறான்
அதே மனிதன் சக்தியை பிரபஞ்ச அளவு விரிவுபடுத்தினால் பகவான் ஆகிறான்
அவனது பற்று பிரபஞ்சம் அளவு விரிவடைந்துவிட்டது
-
ஆதியில் இருந்த பகவானுக்கு ஆதிபகவான் என்று பெயர்.
இந்த பகவான் என்பது மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த நிலையை குறிக்கிறது.
பலர் இந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
பகவான் என்ற நிலை ஒன்றுதான் உள்ளது.
ஆனால் அந்த நிலையை பலர் அடைகிறார்கள்.
-
பகவான் என்ற நிலையை அடைய வேண்டுமானால் மனித உடலோடு பிறக்க வேண்டும்.
பல்வேறு தவங்கள் மேற்கொள்ள வேண்டும்.
படிப்படியாக சக்தியின் அளவை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
-
பகவான் புத்தர்,பகவான் சங்கரர்,பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்,பகவான் ரமணர் என்று இந்த பட்டியல் நீள்கிறது
இவர்கள் உலகத்தின் சக்திகள் முழுவதையும் அடக்கி ஆளத் தெரிந்தவர்கள்.
-
வைகுண்டத்தில் வீற்றிருந்த மகாவிஷ்ணு மனிதனாக பிறந்தார்
பிறக்கும்போதே பல்வேறு சக்திகளுடன் பிறந்தார்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர் அர்ஜுனன்
போர்க்களத்தில் பகவத்கீதை ஆரம்பமாகிறது
-
இரண்டு பக்கத்திலும் படைகள் அணிவகுத்து நிற்கின்றன.
தேவர்கள் அசுரர்கள் இருவரும் தனித்தனியாக இரண்டு அணிகளாக நிற்கவில்லை
தேவர்களில் பலர் இப்போது அசுரர்களின் படையில் இருக்கிறார்கள்.கர்ணன்,பீஷ்மர் போன்றவர்கள் தேவர்கள்.
நல்லவர்கள் சில வேளைகளில் தீயவர்களின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் நல்லவர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் அல்லது பயமுறுத்தப்படுகிறார்கள்.எல்லா காலத்திலும் இப்படி நடக்கிறது
-
பதிமூன்று ஆண்டுகள் கழித்தபின் வந்தால் நாடு தருவதாக பேச்சு
ஆனால் நாடு கொடுக்கவில்லை. போர்புரிந்து நாட்டை பெற்றுக்கொள்ளும்படி துரியோதனன் கூறிவிட்டான்.
போர்புரிவதைத்தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் போர்க்களத்தில் இரண்டு படைகளும் அணிவகுத்து நிற்கின்றன.
-
போர் துவங்குவதற்கு முன்பு எதிர் அணியில் உள்ள நல்லவர்களை அர்ஜுனன் பார்க்கிறான்
தாத்தா பீஷ்மர், குரு துரோணாச்சாரியர்,கிருபர் இன்னும் பலரை கொல்வது என்பது முடியாத காரியம்.
ஆனால் அவர்கள் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள்
-
போர்புரிய வேண்டுமானால் அதற்குரிய மனநிலை அவசியமாகும்.
போர் துவங்கும் முன் போர்வீரர்களின் மனதில் போர்குணத்தை ஏற்றுவார்கள்.
அர்ஜுனனுக்கு போர்புரியும் மனம் இல்லை.அவனது மனத்தில் பாசம் தலைதூக்குகிறது.
இவர்களை கொல்வதைவிட தான் கொல்லப்படுதல் சிறந்தது அல்லது பிச்சையெடுத்து வாழ்வது சிறந்தது என்று நினைக்கிறான்.
இந்த எண்ணத்தோடு வில்,அம்புகளை தேரில் வைத்துவிட்டு அமர்ந்துவிடுகிறான்.
-
இதன் பிறகுதான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசம் துவங்குகிறது
-
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
-
எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற மனச்சோர்வு எங்கிருந்து வந்தன?
வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை.
இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.
பார்த்தா, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல.
இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
-
எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற மனச்சோர்வு எங்கிருந்து வந்தன?
வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை.
இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.
பார்த்தா, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல.
இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.
-
கடமை போர் செய்யும்படி தூண்டுகிறது. பாசம் போர்செய்ய மறுக்கிறது
-
துரியோதனது படையில் நியாயம் தெரிந்த பலர் இருக்கிறார்கள்.
தாங்கள் அநியாயத்தின் பக்கம் நிற்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.
இருந்தாலும் அவர்கள் போர்செய்ய வந்திருக்கிறார்கள்.
பீஷ்மர்,துரோணர்,கிருபர் போன்றவர்கள் இந்த போரைவிட்டுவிட்டு பிச்சையெடுத்து வாழும் வாழ்க்கைக்கு சென்றிருக்கலாம்.அவ்வாறு செய்திருந்தால் போர் நிகழாமல் போயிருக்கும்.சமாதானம் ஏற்பட்டிருக்கும்.
அநியாயத்தின் பக்கம் நல்லவர்களும் நிற்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.
-
நமது வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்.
ஒரு அலுவலகத்தில் சாதாரண பணியில் நாம் இருக்கலாம்.
நமக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் அநியாயத்தின் பக்கம் நிற்பார்கள்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள்.சில நல்லவர்களும் அவர்களோடு அதற்கு துணையாக இருப்பார்கள்.
இது நமக்கு வேதனையைத் தருவதாக இருக்கும்.
நமது மனம் அவர்களோடு சேர்ந்து தவறு செய்ய அனுமதிக்காது.
அதனால் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்
அவர்களை எதிர்க்கவும் முடியாது.அவர்களோடு உடன்படவும் முடியாது
இப்போது மனத்தில் பெரிய போராட்டம் நிகழும்
இந்த வேலையை விட்டுவிட்டு பிச்சை எடுத்து வாழ்வது மேல் என்ற எண்ணம் வரும்
-
இப்போது என்ன செய்வது? பகவத்கீதை நமக்கு எந்த விதத்தில் உதவும்?
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥
ஒரு சத்திரியன் என்ற முறையில் உனது முக்கிய கடமையைப் பற்றிக் கருதுவாயேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவையில்லை.
-
சத்திரியனுடைய கடமை என்ன? அநீதியை எதிர்த்து போர்புரிவது.
அதனால் மரணம் நேர்ந்தாலும் அது நல்லதுதான்.
ஏனென்றால் அநீதியை எதிர்த்து போர்புரிபவனுக்கு சொர்க்கம் கிடைக்கும்.
அநீதியை எதிர்த்து போர்புரியும் ஒருவனை மக்கள் தெய்வம் என்று வணங்குவார்கள்.
அவனுக்கு கோவில் கட்டுவார்கள்.வழிபாடு நடத்துவார்கள்.
சுதந்திரப்போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து போராடி அந்த போராட்டத்தில் உயிரை நீத்த பலரை மக்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள்.
அவர்களைத்தவிர அந்த காலத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோனார்கள்.
அநீதியை எதிர்த்து போராடியவர்கள் எப்போதும் வாழ்வார்கள்.
அவர்கள் சூட்சும உடலில் நீண்டகாலம் வாழ்வார்கள்.இதுதான் சொர்க்க வாழ்க்கை
-
இவ்வாறு அநீதியை எதிர்க்க வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல் அநீதியுடன் சமாதானம் செய்துகொண்டால் என்னவாகும்?
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥
இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோடு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பாய்.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥
மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர்.
மதிக்கப்பட்ட ஒருவனுக்கு அவமானம் மரணத்தைவிட மோசமானதே.
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥
உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெருமதிப்புக் கொண்டுள்ள பெரும் போர்த்தலைவர்கள்,
பயத்தால் நீ களம் விட்டதாக எண்ணி, உன்னைக் கோழையாய்க் கருதுவர்.
அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥
உனது எதிரிகள் அன்பிலாதவற்றைக் கூறி உன்னைத் தூற்றுவர்.
இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தருவது வேறு என்ன இருக்க முடியும்?
-
அநீதியை எதிர்த்து நிற்க வேண்டும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.
நாம் ஒரு சாதாரண வேலையில் இருக்கலாம். நமது மேல் அதிகாரி தவறு செய்பவராக இருக்கலாம்
எடுத்த உடனேயே மேல் அதிகாரிகளை எதிர்த்து சிலர் போராடுகிறார்கள்.இது தவறு.
கடைசியில் இருக்கின்ற வேலையையும் இழந்து தெருவில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும்.
நாம் இப்போது இருக்கும் நிலையிலிருந்தே தொடங்க வேண்டும்.
ஒரு எறும்பு இன்னொரு எறும்பை எதிர்க்கலாம். யானையை எதிர்க்கலாமா?
எனவே நாம் இப்போது இருக்கும் நிலையிலிருந்து நம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டே வரவேண்டும்.
ஒருவன் தனது கடமையை சிறப்பாக செய்ய ஆரம்பித்தால்.உயர்ந்த கடமைகள் படிப்படியாக வந்துகொண்டே இருக்கும்.
கடைசியில் உயர்ந்த அதிகாரியாகும் வாய்ப்பு கிடைக்கும்.
-
ஒரு அரசன் இன்னொரு அரசனை எதிர்த்து போர்புரியலாம்.
ஒரு சாதாரண படைவீரன் ஒரு ராஜாவை எதிர்த்து போரிட முடியாது.
அப்படி அந்த படைவீரனுக்கு ராஜாவை எதிர்க்க வேண்டும் என்று தோன்றினால்.
முதலில் ஒரு நாட்டிற்கு ராஜாவாக மாறவேண்டும்.பின்பு எதிர்த்து போரிடலாம்
-
எனவே நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலையில் நமக்கு சமமானவர்களை எதிர்த்து படிப்படியாக முன்னேற வேண்டும்.
-
சில வேளைகளில் இந்த உலகத்திலுள்ள யாரையும் பிடிக்காமல் போய்விடும். அப்போது பிச்சை எடுத்து வாழ்வது சிறந்தது என்று தோன்றும்.
ஒரு நாள் பிச்சை எடுத்து பார்த்தால் தெரியும்.
இந்த உலகத்தில் மிகமிக கீழாக மதிக்கப்படக்கூடிய ஒருவன் பிச்சைக்காரன்.
பிச்சைக்காரனின் முகத்தைக்கூட யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள்.மிகவும் அலட்சிய மனப்பான்மையுடனேயே பலர் பிச்சையிடுவார்கள்.
பிச்சையெடுப்பதை எண்ணி பிச்சைக்காரனால் பெருமைப்பட முடியாது.
சாதுக்கள் பலர் பிச்சை எடுக்கிறார்கள்.அவர் போதிய ஞானம் பெற்றவர்கள்.
அவர்கள் பிச்சையெடுப்பதை பெருமையாக நினைப்பவர்கள்.
மக்கள் அவர்களை வெறுப்புடன் நடத்துவதில்லை.அவர்கள் வேறு ரகம்.
உணவுக்காக பிச்சையெடுப்பவர்களைப்பற்றி கூறுகிறேன்
-
இங்கே அர்ஜுனன் போதிய ஞானம் பெறவில்லை. உலகியல் ஆசைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.பல்வேறு சபதங்களை நிறைவேற்ற வேண்டி பொறுப்பு இருக்கிறது.இவனை நம்பித்தான் மற்றவர்கள் இருக்கிறார்கள்.இவன் போர் செய்ய மறுத்தால் இவனோடு சேர்ந்து மற்றவர்களும் பலவந்தமாக பிச்சைக்காரர்களாக செல்ல வேண்டியதுதான்.
-
ஒருவரது முன்னேற்றம் என்பது அவரோடு நிற்பதில்லை. அவரது குடும்பமும் அதனால் முன்னேறுகிறது.
அந்த குடும்பம் முன்னேறும்போது சமுதாயம் முன்னேறுகிறது. நாடு முன்னேறுகிறது.
ஒரு தனிமனித முன்னேற்றம் என்பது நாட்டின் முன்னேற்றம்
-
அர்ஜுனன் பாசத்தின் காரணமாக போரிலிருந்து பின்வாங்கினால் எதிரிகள் என்ன கூறுவார்கள்?
அர்ஜுனன் நல்லவன் போர்புரிந்து எங்களை கொல்ல விரும்பவில்லை.அதனால் போர்புரியாமல் விலகிவிட்டான் என்றா கூறுவார்கள்? இல்லை
அர்ஜுனன் ஒரு கோழை. போர்புரிந்தால் இறந்துவிடுவோம் என்று பயந்துவிட்டான். உயிர் பயத்தால் போரிலிருந்து விலகிவிட்டான் என்று இகழ்வார்கள்.
அது மட்டுமல்ல இது நாள்வரை, அர்ஜுனனை பெரிய வீரன் என்று கூறிவந்த பலர் நம் எதிரிலியே இகழ்ந்து பேசுவார்கள்.கோழை என்பார்கள்.
அது இன்னும் கொடுமையாக இருக்கும்.வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்
-
எனவே வாழ்க்கையில் போராட வேண்டும். தர்மத்தின் பக்கம் நின்று போராட வேண்டும். அதுவும் சாதுர்யமாக போராட வேண்டும். நமது வலிமை எது என்று பார்க்க வேண்டும். நமக்கு சமமானவர்களுடன் போராட வேண்டும்.படிப்படியாக வலிமையை கூட்டிக்கொண்டே வரவேண்டும். ஒரு நாள் நாட்டின் பிரதமர் ஆகும் அளவுக்கு நமது வலிமை கூடலாம். அது பலநாள் உழைப்பை பொறுத்தது.
-
இப்படி படிப்படியாக முன்னேறி என்ன பயன்? அதனால் ஞானம் பெற முடியுமா? இந்த உலக வாழ்க்கையை விட்டுவிட்டு தனிமையான இடத்திற்கு சென்று வாழ்ந்தால்தானே ஞானம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.
வேலை செய்து கொண்டே ஞானத்தை பெறும் வழியை ஸ்ரீகிருஷ்ணர் போதிக்கிறார்
-
முதலில் ஞானம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.பின்பு உலகத்தில் வாழ்ந்துகொண்டே அதை அடைவது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்
வகுப்பு-5 நாள்-21-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥
நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலம் என்று எதுவும் இல்லை.
நாம் எக்காலத்திலும் இருக்கிறோம்.
எதிர்காலத்திலும் நாமெல்லோரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை.
தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥
எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம்
ஏற்படுகிறதோ அதேபோல்தான் வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை
வாழ்க்கையில் மிகப்பெரிய பயம் மரணபயம்.
ஒருவேளை நாம் இறந்துவிட்டால் என்ன செய்வது?
நமது குடும்பத்தில் உள்ள யாராவது இறந்துவிட்டால் என்ன செய்வது?
இந்த பயம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
இதற்கு காரணம் அறியாமை.
முதல் அணுவிலிருந்து படிப்படியாக பரிணமித்து நாம் மனித உடலை அடைந்திருக்கிறோம்.
இந்த லட்சக்கணக்கான பிறவிகளில் மரணபயம் நம்மை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
அவ்வளவு எளிதில் இது விலகாது.யாருக்கு இது கடைசி பிறவியோ அவர்களுக்குத்தான் மரணபயம் அகலும்
நாம் இறந்துவிட்டாதக மனதில் கற்பனை செய்தால் எப்படி இருக்கும்?
நமது ஆவி இறந்த உடலை பார்த்துக்கொண்டிருக்கும்.
உறவினர்கள் உடலைச்சுற்றி அழுதுகொண்டிருப்பார்கள் அதை நாம் ஆவியாக இருந்து பார்த்துக்கொண்டிருப்போம்.
இது உண்மை.நமது எதிர்காலம் நமது கற்பனையின்படிதான் நடக்கிறது.
அப்போதுகூட உடல்தான் அழிகிறதே தவிர நாம் ஆவி உடலில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.
மறுபடி மனித உடலில் பிறப்போம்.பழைய படி ஆவி உடல் கிடைக்கிறது.
இதேபோல் மனிதன் பல முறை மனித உடலுக்கும் ஆவி உடலுக்கும் சென்றுகொண்டே இருக்கிறான்
-
இதற்கு முடிவே இல்லையா?
இருக்கிறது. ஞானம் கிடைக்கும்போது,நான் ஆத்மா என்பதை உணரும்போது மறுபிறவி ஒரு முடிவுக்கு வருகிறது.அப்போதும் நாம் வாழ்ந்துகொண்டுதான் இருப்போம்.
ஞானிக்கு மரணபயம் இல்லை. ஞானம் அடையும்வரை மரண பயம் இருக்கும்.
இதுபற்றி ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்
-
அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥
எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அது அழியாதது என்று உறுதியாக தெரிந்துகொள்.
மாறாத தன்மையுள்ள அதை யாராலும் அழிக்க இயலாது
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥
எப்போதும் இருக்கும், அழியாத, அளவிடமுடியாத உடலில் குடியிருக்கும் அதற்கு(ஆன்மாவிற்கு), சொந்தமான உடல்கள் அழியக்கூடியது, ஆனால் ஆத்மாவிற்கு அழிவில்லை . ஆகவே பாரதா, யுத்தம் செய்
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥
ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை.
அவன் பிறப்பற்ற, நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான்.
உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை.
எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டுள்ளது? ஆத்மாவால்
நமக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?நானே ஆத்மா. அஹம் ஆத்மா
ஆத்மாவை உணர்ந்தவன் இவ்வாறு கூறிக்கொள்வான்
நானே இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறேன்.
நான் அழியாதவன்.என்னை யாராலும் அழிக்க முடியாது.
உடல்கள் அழியக்கூடியது.ஆனால் எனக்கு அழிவில்லை.
அதேபோல பிறரது உடல்களும் அழியக்கூடியது.ஆனால் அவர்களுக்கும் அழிவில்லை.
ஏனென்றால் அவர்களும் ஆத்மா
-
முதலில் இந்த ஞானத்தைப்பெற வேண்டும்.
இதைக்குறித்து மீண்டும் மீண்டும் சிந்தனை செய்ய வேண்டும்.
நான் ஆன்மா அல்லது ஆத்மா (இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான்)
நான் உடல் அல்ல. நான் மனம் அல்ல. நான் ஆத்மா
நான் பிறப்பற்றவன்.இறப்பற்றவன். எக்காலத்திலும் இருக்கக்கூடியவன்
இவ்வாறு ஆத்மாவைக்குறித்து எப்போதும் சிந்தித்துவரவேண்டும்
படிப்படியாக அக்ஞானம் மறைந்து ஞானம் உதிக்கும்
எப்போதெல்லாம் வாழ்க்கையில் மரணபயம் வருகிறதோ,
எதிரிகளால் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்
அஹம் ஆத்மா. நான் ஆத்மா
-
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥
பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே,
பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.
வகுப்பு-6 நாள்-23-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥
வெப்பமும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே,
சுகம்-துக்கம் போன்றவை தோன்றி மறைகின்றன.
அர்ஜுனா, கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும்,
அதற்குரிய
பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,சுவைத்தல்,உணர்தல் போன்ற ஐந்து இந்திரியார்த்தங்களில் உள்ள இணக்கத்தினால் இவை உண்டாகின்றன.
தோன்றி மறையும் நித்தியமில்லாத இவைகளை பொறுத்துக்கொள்.
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥
மனிதனின் சிறந்தவனே, இந்த சுக-துக்கங்களை சமமாக ஏற்றுக்கொண்ட தீரனான மனிதன் எதற்கும் அசைவதில்லை. அவன் நிச்சயமாக அமிர்தம்போன்ற சாகாநிலையை அடைய தகுதியானவன்.
-
இமய மலையின் கடும் குளிரில் சிலர் ஆடைகளின்றி தவத்தில் ஈடுபடுகிறார்கள். குளிர் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. நான்கு புறமும் தீ மூட்டி சுடும் வெயிலில் சிலர் தவம் செய்கிறார்கள். சூடு அவர்களை தாக்குவதில்லை.
அதற்கு காரணம் இந்திரியங்களை உள்முகமாக திருப்பி இந்திரியார்த்தங்களிலிருந்து அவைகளை விலக்கியுள்ளார்கள்.
அப்படி இந்திரியங்களை இந்திரியார்த்தங்களிலிருந்து விலக்க தெரிந்தவர்கள் சுகம்,துக்கம் இரண்டினாலும் பாதிக்கப்படுவதில்லை ..அவர்கள் சாகாநிலையை அடைய தகுதியானவர்கள்
ஆனால் சாதாரண நிலையில் உள்ள மனிதன் என்ன செய்ய வேண்டும்?
இவைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
துன்பம் எதனால் வருகிறது?
அது ஒரு பாடத்தை கற்றுத்தருவதற்காக.
அந்த பாடத்தை கற்றுக்கொண்டபின் மீண்டும் அந்த துன்பம் வருவதில்லை.வேறு துன்பம் வருகிறது.அதிலிருந்து வேறு பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படி வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
ஒரே துன்பம் மீண்டும் மீண்டும் ஏன் வருகிறது? அதிலிருந்து உரிய பாடத்தை கற்றுக்கொள்ளாததால்
உதாரணமாக சீட்டு கம்பெனியில் பணம் போட்டால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை நம்பி பணம் போடுகிறார்கள் . கடைசியில் போட்ட பணம் கிடைப்பதில்லை.அதனால் துன்பம் வருகிறது.
இப்போது அதிக ஆசை துன்பத்தை கொண்டுவரும் என்ற பாடத்தை கற்றுக்கொண்டோம்.
சிலர் மீண்டும் வேறு சீட்டு கம்பெயினில் பணம் போடுவார்கள்.மீண்டும் துன்பப்படுவார்கள்.
சிலர் ஜாக்கிரதையாக இவைகளிலிருந்து விலகியிருப்பார்கள்.
பலருடைய வாழ்க்கை அனுபவங்களை ஆராய்ந்து அதிலிருந்து அறிவை பெற்றிருப்பார்கள்
-
எனவே மற்றவர்களின் அனுபவத்திலிருந்தும் நாம் அறிவைப்பெறலாம்.
அறிவு அதிகமாக அதிகமாக துன்பங்களிலிருந்து விடுபடுகிறோம்
துன்பத்திற்கு காரணம் அறியாமை
அறியாமையை எப்படி விலக்குவது?
நாம் ஆன்மாவை நோக்கி செல்ல செல்ல அறியாமை விலகுகிறது.துன்பங்கள் குறைகிறது.
-
ஆத்மா எங்கே இருக்கிறது?
அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥
ஆத்மா உடல் முழுவதும் பரவியிருப்பது.அது அழிவற்றதென்று அறிவாய்
அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை.
-
ஆன்மா உடல் முழுவதும் பரவியிருக்கிறது.
ஆன்மாதான் உடலாக மாறியிருக்கிறது
உடல்தான் ஆன்மாவாக மாறி இருக்கிறது.
உடலை காணும்போது ஆன்மா தெரியாது.
ஆன்மாவைக் காணும்போது உடல் தெரியாது.
பால்தான் தயிராகிறது.தயிரான பின்னர் பாலை காண முடியாது
-
ஆன்மாவை காணும் ஒருவன் உடலை காண்பதில்லை. சரி.
அவனால் உலகத்தைக் காண முடியுமா? முடியாது.
உடல் மறையும்போது கூடவே உலகமும் மறைந்துவிடும்.
-
ஆன்மா அழிவற்றது. உடல் அழியக்கூடியதா?
உடல்கூட அழிவற்றதுதான்.
உடலில் இருக்கும் கோடிக்கணக்கான மூலக்கூறுகள் பிரிந்து சென்றுவிடும். சில மூலக்கூறுகள் வேறு உயிர்களின் உடலுக்கு செல்கிறது. சில காற்றில் கலக்கிறது. சில நீரில் கலக்கிறது. சில வேறு மிருகங்களில் உடலில் கலக்கிறது. சில மூலக்கூறுகள் தாவரங்களின் உடலில் கலக்கிறது.
எனவே எந்த உடலும் அழிவதில்லை.அது பல்வேறு மூலக்கூறுகளாக மாறிவிடுகிறது.
இந்த உலகத்திலுள்ள அதையும் யாராலும் அழிக்க முடியாது.
ஒரு உருவம் இன்னொரு உருவமாக மாறுகிறது.
ஒரு மூலக்கூறு இன்னொரு மூலக்கூறாக மாறுகிறது.
ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறுகிறது.
-
வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥
பார்த்தனே! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில்லாததென்று அறிந்த ஒருவன்
யாரையாகிலும் கொல்வானா?, கொலை செய்யப்படக் காரணமாக இருப்பானா?
-
ஆத்மாவை அறிந்தவன் ஞானி. அவன் யாரையும் கொல்வதும் இல்லை.யாரும் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் இருப்பதில்லை.
இந்த உலகத்திலுள்ள எல்லாம் அதன் அதன் இயல்புபடி நடந்துகொள்கின்றன. தீயவன் தீய வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பான். நல்லவன் நல்ல வேலைகளை செய்துகொண்டிருப்பான்.
ஞானியின் கண்களுக்கு இவைகள் எல்லாம் இயற்கையின்கூறுகளாக தெரியும். நல்லவனை ஊக்கப்படுத்தவேண்டும். தீயவனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஞானியிடம் இருப்பதில்லை.
எந்த செயலுக்கும் அவர் காணமாக இருப்பதில்லை.புதிய கர்மங்களை உண்டுபண்ணுவதிலிருந்து விலகி இருக்கிறார்.
அவரது கண்களுக்கு பெரும்பாலான நேரம் இந்த உலகம் நாம் பார்ப்பதுபோல தெரிவதில்லை. எல்லாமே உணர்வுமய உருவங்களாக தெரிகிறது.
ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகம் எப்படி தெரிகிறது?
அது ஒரு விஷப்பாம்பின் பக்கத்தின் சென்று அதை தொட்டு விளையாடும்.உருவங்களுக்கு பின்னால் இருக்கும் இயல்புகள் பற்றி அதற்கு தெரியாது.
ஒரு திருடன் ஞானியின் பக்கம் வரும்போது திருடன் என்ற இயல்பை இழந்துவிடுகிறான்.அதேபோல நல்லவன் ஞானியின் பக்கம் வரும்போது நல்லவன் என்ற இயல்பை இழந்துவிடுகிறான்.
அவரது அருகில் இருவரும் குணங்கள் அற்ற உருவங்களாக தெரிகிறார்கள்.
எனவே அவரால் பாகுபாடு பார்க்காமல் அன்பு செலுத்த முடிகிறது.
-
நமது கண்களுக்கு இன்னும் இந்த உலகத்தின் தீமை தெரிகிறது என்றால் நாம் இன்னும் தீயவர்களாக இருக்கிறோம் என்று பொருள்.
ஞானியின் நிலையும் குழந்தையின் நிலையும் ஒன்று.
இந்த உலகத்திலுள்ள தீமையை நம்மால் நீக்க முடியாது. ஆனால் ஞானியின் நிலையை நாம் அடையும்போது நம்மைப்பொறுத்தவரை தீமை மறைந்துவிடும். நன்மையும் மறைந்துவிடும்.
-
அப்படியென்றால் செயல்களையெல்லாம் விட்டுவிட்டு ஒதுங்கிவிட வேண்டுமா? அப்படி ஒதுங்க முடியாது.அர்ஜுனன் அப்படி ஒதுங்க வேண்டும் என்று நினைக்கிறான்.
உடனே அது முடியாது. முதலில் ஞானம் என்றால் என்ன? ஞானி எப்படி நடந்துகொள்வான்? போன்றவற்றையெல்லாம் ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும்.
-
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஷந்தி யத்வத்।
தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே
ஸ ஷாந்திமாப்நோதி ந காமகாமீ॥ 2.70 ॥
முழுக்க நிறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் சமுத்திரத்தில், எப்படி ஆறுகள் ஒன்று கலக்குமோ,( ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றுநீர் சமுத்திரத்தில் கலந்ததும் அடங்கிவிடுகிறது) அப்படியே, எல்லா ஆசைகளும் முனிவனுள் பிரவேசித்தாலும் அவன் அமைதியில் நிலைத்திருப்பான். ஆசையை அனுபவிக்க நினைப்பவனுக்கு இது கிடைக்காது.
வகுப்பு-7 நாள்-24-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥
பார்த்தனே! வலியவரும் போர்வாய்ப்புகள் சுவர்க்கலோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால்,
அவற்றைப் பெறும் அரசகுலத்தோர் மகிழ்கின்றனர்.
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥
ஆனால், இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோடு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பாய்.
அரசரின் கடமை எது?
குடிமக்களை பாதுகாப்பது,மக்களின் உடமைகளை பாதுகாப்பது.
முற்காலத்தில் மக்கள் காடுகளில் பல்வேறு குழுக்களாக வசித்தார்கள்.
ஒவ்வொரு குழுவையும் வழிநடத்துவதற்கு ஒரு தலைவன் இருந்தான்.
அவனது முக்கிய வேலை குழுவில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பிற்காக உழைப்பது.
அதற்கு பிரதியாக மக்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கொடுப்பார்கள்.
படிப்படியாக தலைவனின் அதிகாரம் அதிகரித்தது.
போர்வீரர்களை உருவாக்குவது,போர் கருவிகளை தயாரிப்பது.கோட்டைகளை அமைப்பது அரண்மனை அமைப்பது என்று தலைவனின் நிலை உயர்ந்தது.
-
நான்கு ஜாதிகளில் அரசன் சத்திரிய ஜாதியை சேர்ந்தவன்
சத்திரியன் செய்ய வேண்டிய செயல்கள் எது.செய்யக்கூடாத செயல்கள் எது என்பதை தெரிந்துவைத்திருக்க வேண்டும்
இந்த கடமையை செய்யாமல் பின்வாங்கினால் அது மக்களுக்கு செய்யும் துரோகம்
அதனால் பெரும் பாவம் வந்துசேரும்
-
ஒருவேளை அரசன் போரில் வீரமரணம் அடைந்தால் சொர்க்கத்தில் நீண்டகாலம் வாழ்வான் என்பது முற்கால மக்களின் நம்பிக்கை
அர்ஜுனனுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் உண்டு. ஒன்று போரில் ஈடுபட்டு வெற்றியடைவது அல்லது போரில் வீரமரணம் அடைவது.வேறு வழியில்லை.
போரைவிட்டு விட்டு துறவறம் செல்வது என்பது கடமையை மீறியது.அது மக்களை ஏமாற்றும் செயல்.அதனால் பெரும் பாவம் வந்துசேரும்.
கடமையை செய்யாமல் அதை பாதியில் விட்டுவிட்டு சன்னியாசம் சென்றால் ஞானம் கிடைக்காது. பெரும் பாவம்தான் கிடைக்கும்
சிலர் மனைவியை தவிக்கவிட்டுவிட்டு சன்னியாசம் செல்கிறார்கள்.மனைவியின் அனுமதி இல்லாமல் சன்னியாசம் சென்றவனுக்கு ஞானம் கிடைக்காது.
மனைவிக்கு செய்ய வேண்டி கடமைகளை எல்லாம் செய்து முடித்தபின் சன்னியாசம் செல்ல வேண்டும்.
அதேபோல தாய்,தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் சந்நியாசம் செல்பனுக்கும் ஞானம் கிடைக்காது. அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தபின்புதான் சந்நியாசம் செல்ல வேண்டும்.
குருவின் அருள் இருந்தால் இதில் விதிவிலக்கு உண்டு.
-
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய:॥ 2.37 ॥
குந்திமகனே! போரில் மாய்ந்து நீ மேலுலகை அடையலாம் அல்லது வெற்றிபெற்று இவ்வுலகை அரசாளலாம்.
எனவே எழுந்து, உறுதியுடன் போர்புரிவாயாக.
ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி॥ 2.38 ॥
இன்ப, துன்ப, லாப நஷ்டம், வெற்றி, தோல்வி இவைகளைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக.
இவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ தீய விளைவுகளை அடையமாட்டாய்.
போர்புரிய வேண்டியது சத்திரியனது கடமை அதில் வெற்றி கிடைக்கலாம் அல்லது தோல்வி கிடைக்கலாம்.
ஒரு வேளை தோல்வி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே போரை தவிர்த்துவிடலாம் என்று நினைக்கக்கூடாது.
வெற்றி தோல்வி என்பது முழுவதும் நமது கையில் இல்லை. நமக்கு மேலே வேறு பல சக்திகள் உள்ளன.
சில வேளைகளில் மிகச்சிறிய படைகளுடன் செல்லும் அரசர்கள் பெரும்படையை எதிர்த்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
எனவே நம் பக்கம் நியாயம் இருந்தால் போர்புரிவது கடமை.
வலிய சென்று போர்புவரிவது சத்திரியனுக்கு தர்மம் அல்ல.வருகின்ற போரைக்கண்டு பயந்து ஓடுபவனும் .
சத்திரியன் அல்ல.
நாட்டை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் போர்புரிவது சத்திரிய தர்மம் அல்ல.
அதேநேரத்தில் எதிரி அரசன் அதர்ம வழியில் சென்றால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது. போர்புரிந்து அந்த அரசனை வீழ்த்த வேண்டும்.அது சத்திரியனின் கடமை.
-
தற்போது சத்திரியன் என்று யாரை கூறலாம்?
நாட்டின் ஆட்சி யாரிடம் இருக்கிறதோ அவர் மட்டும்தான் சத்திரியர்.
இந்த நாட்டின் பிரதமர் மட்டுமே சத்திரியர்.
நான்கு ஜாதிகள் பற்றி வேதம் குறிப்பிடுகிறது
அதில் பிரம்மத்தை உணர்ந்த ஞானி - பிராமணன்.
ஒரு நாட்டில் ஒரு சில பிராமணர்கள் மட்டுமே இருப்பார்கள்.
-
சத்திரியன் யார்?
அரசன் மட்டுமே சத்திரியன்.
ஒரு நாட்டில் ஒருசில சத்திரியர்கள்தான் இருப்பார்கள்.
-
சத்திரியன்தான் பிராமணனாக உயருகிறான்.
ஒரு பிராமணனிடம் நாட்டை ஆளும் திறமை இருக்கும்.
ஸ்ரீகிருஷ்ணர் சிறந்த போர்வீரர். சிறிந்த சத்திரியர்.
அந்த நிலையிலிருந்து உயர்ந்து பிராமணநிலையை அடைந்துள்ளார்.
பிராமணர்கள் போர்புரிவதில்லை. ஆனால் போர்திறமைகள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும்.
-
முற்காலத்தில் அரசர்கள் ஒரு குறிப்பிட காலத்திற்கு பின் நாட்டை துறந்து தவம்புரிந்து பிராமண நிலையை அடைவார்கள்.அவர்கள்தான் உண்மையில் பிராமணர்கள்.
-
--
வகுப்பு-8 நாள்-26-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥
உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு.
செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை.
உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே.
செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥
யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா!
வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய்.
இதுபோன்ற மன ஒருமையே யோகம் என்று அழைக்கப்படுகின்றது.
-
கடமையைச் செய். பலனை எதிர் பாராதே.
வேலையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று பலர் கூறுகிறார்கள்.
வேலை செய்ய வேண்டும் சம்பளம் எதிர்பார்க்ககூடாதா? என்று கேட்கிறார்கள்
இதன் அர்த்தம் அதுவல்ல
கடமையைச் செய். பிரதிபலனை எதிர்பார்க்காதே என்பதாகும்
நாம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன.
பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
பெற்றோர்களின் வயதான காலத்தில் அவர்களை கண்ணியத்துடன் நடத்துவது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
பிள்ளைகள் உரிய வயது வரும் வரை அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து காப்பது
கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை.மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
ஒருவருக்கொருவர் நட்பாக,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு கடைசிவரை வாழ்வது
தொழிலாளி முதலாளிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? நஷ்டம் ஏற்பட அவன் காரணமாக இருக்கக்கூடாது.விசுவாசமாக உழைக்க வேண்டும்.
முதலாளி தொழிலாளிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? அவனது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை உரிய காலத்தில் கொடுப்பது.
ஒரு குடிமகன் நாட்டிற்கு செய்ய வேண்டி கடமை என்ன?
நாட்டின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற அளவு உதவியாக இருப்பது
நாட்டை ஆள்பவர்களின் கடமை என்ன?
குடிமக்களை பாதுகாப்பது
மனிதன் இயற்கைக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
நிலம்,நீர்,காற்று போன்றவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது.பிற உயிர்களை அழிக்காமல் இருப்பது
இயற்கை மனிதனுக்கு செய்ய வேண்டி கடமை என்ன?
உணவு,நீர்,காற்று,ஒளி,இடம் போன்றவற்றைக் கொடுப்பது
இப்படி எல்லோருக்கும் பல கடமைகள் இருக்கின்றன.சிலவற்றை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன்.
மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பது வரை கடமைகளால் கட்டப்பட்டுள்ளான்.
இந்த உலகத்தில் வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ள எல்லோருக்கும் கடமைகள் உண்டு.
எப்போதாவது ஒரு காலத்தில் கடமைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு.
தனிமையான இடத்திற்கு சென்று தவம் செய்யும் யோகிகளுக்கும் கடமைகள் உண்டு.
தான் பெற்ற ஞானத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை அவனுக்கு உண்டு.
இந்த வாழ்க்கையே வேண்டாம்.வாழ்ந்தது போதும் இனி முக்தி அடைவது மட்டுமே எஞ்சியுள்ளது என்று யார் நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கடமை இல்லை.
இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவன் தனது கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும்.
ஆனால் அதனால் கிடைக்கும் பலனில் ஆசைப்படக்கூடாது
உதாரணமாக
பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிப்பது அவர்களது கடமை.ஆனால் பிள்ளைகள் வயதான காலத்தில் தங்களை கவனிக்க வேண்டும்,பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
அப்படி பிரதிபலனை எதிர்பார்த்து வளர்க்ககூடாது.
அதை செய்யாதே என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
உனது கடமையை முறையாக செய். அத்துடன் விட்டுவிடு. எதிர்காலத்தில் கவனிக்க வேண்டும் என்று கணக்குப்போட்டுக்கொண்டிருந்தால் நீ ஒருநாளும் யோகியாக முடியாது.
நாளை நடப்பதையே எண்ணிக்கொண்டிருந்தால் இன்றைய வாழ்க்கையை வாழமுடியாது
மக்கள் பொதுவாக எதிர்காலத்தை நினைத்து கவலையில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் என் பிள்ளையின் கதி என்னவாகுமோ தெரியவில்லையே!
அல்லது எங்கள் கதி என்வாகுமோ தெரியவில்லையே! என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் சோகத்தில் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்
அப்படியே பல ஆண்டுகள் கழிந்த பிறகு அவர்கள் நினைத்ததுபோல மோசமாக அமையவில்லை என்று வைத்துக்கொள்வோம் இப்போது இத்தனை ஆண்டுகள் வீணாக கவலைப்பட்டு கழிந்துவிட்டே.அந்த ஆண்டுகள் இனி மீண்டும் கிடைக்குமா? கிடைக்காது.
இனி கவலைப்பட எதுவும் இல்லை என்ற நிலையை அடையும்போது வாழ்க்கை முடியும் கட்டத்திற்கு வந்துவிடுகிறது.
அதன்பிறகுதான் மரணத்திற்குபின் என்னவாகுமோ என்ற கவலை வரத்தொடங்குகிறது.
-
எல்லா சந்தேகங்களும் நீங்கியபின்,எல்லா கவலைகளும் நீங்கியபின் யார் உடலை விடுகிறார்களோ அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
பெரும்பாலான மக்களின் கடைசி கால வாழ்க்கை மிக மோசமாக இருக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்ந்து வந்தார்கள். இப்போது அவைகள் எதுவும் நிறைவேறவில்லை. நிறைவேறாத ஆசைகளால் மனம் சஞ்சலப்பட்டு வேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.வாழும்போதே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்திருந்தால் இந்த நிலையை அடைந்திருக்கமாட்டார்கள்.
ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது என்ன?
உனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமையைச்செய்.
அதன் பிரதிபலனை எதிர் பார்க்காதே.
ஒருவேளை அதன்பிரதி பலன் நல்லதாக இருக்கலாம் அல்லது தீயதாக இருக்கலாம்
ஒருவேளை நான் செய்யும் செயல் எதிர்காலத்தில் தீமையைக்கொண்டுவந்தால் என்ன செய்வது?
ஒரு மனிதனுக்கு உதவுகிறோம். இதற்கு பதிலாக எதிர்காலத்தில் இவன் நமக்கு உதவுவானா? அல்லது நமக்கு தீங்கு செய்வானா?
ஒருவேளை தீங்கு செய்தால் என்ன செய்வது?
எனவே அந்த மனிதனுக்கு எந்த உதவியும்செய்யாமல் இருப்பதே நல்லது என்று நினைத்து கடமையைச் செய்வதிலிருந்து பின்வாங்காதே
செயல்களை செய்வதிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ளாதே
செயல்களை செய்யாமல் இருக்காதே.
அப்படி இருந்தால் கடமையை செய்யாமல் இருப்பதால் விளையும் குற்றம் உன்னை வந்தடையும்.
ஒரு பெண்ணை சில ரவுடிகள் துரத்திச் செல்கிறார்கள். அந்த பெண் உன்னிடம் பாதுகாப்பு கேட்டு உன்னை அடைக்கலம் தேடி வந்துள்ளது. ரவுடிகள் உன்னை சூழ்ந்துள்ளார்கள்.இப்போது என்ன செய்வது?
அந்த ரவுடிகளை எதிர்த்தால் மரணம் நிச்சயம் என்பது உனக்குத்தெரியும்.
ஆனால் அந்த பெண்ணை பாதுகாக்க ரவுடிகளை எதிர்ப்பது ஒன்றே இப்போது உனது கடமை.
நீ என்ன செய்யப்போகிறாய்?
கடமையிலிருந்து விடுபட்டு உன்னை பாதுகாத்துக்கொள்ளப்போகிறாயா ?
அல்லது கடமையைச் செய்து உயிரை மாய்க்கப்போகிறாயா?
உயிர்போய்விடும் என்ற பயத்தினால் அதை செய்யாமல் விட்டால்,அந்த பெண்ணை ரவுடிகள் கொன்றுவிடலாம். அதனால் வரும் பாவத்தின் பெரும்பகுதி உன்னை வந்து சேரும்.
ஒருவேளை நீ ரவுடிகளை எதிர்த்து வீரமரணம் அடைந்தால் பெரிய புண்ணியம் உன்னை வந்துசேரும்.
எதிர்காலத்தில் உயர்ந்த பிறவி கிடைக்கலாம். மக்கள் தெய்வமாக வணங்குவார்கள்.
எப்படியும் அந்த பெண் ரவுடிகளால் இறக்கத்தான் போகிறாள் எனவே நமது உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்றுமட்டும் நினைக்காதே.
எனவே எதிர்காலத்தில் என்னநடக்கும் என்பதை நினைத்து உன்னை நியே குழப்பிக்கொள்ளாதே. இப்போது உனது கடமை என்ன? அதில் மட்டும் கவனம் செலுத்து அதை செய். கடமையிலிருந்து விலகி ஓடாதே
இப்படி கடமையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் கிடைக்கும் பலன் என்ன?
யோகம் கிடைக்கும்.
யோகம் என்றால் என்ன என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்...
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக।
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்॥ 3.3
இவ்வுலகில் சாங்கியர்களுக்கு ஞானயோகம் என்றும்,
யோகிகளுக்கு கர்மயோகம் என்றும் இரண்டுவிதமான நன்னெறிகள் என்னால் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது
-
சாங்கியர்கள் யார்? யோகிகள் யார்?
கபிலர் என்ற ஒரு முனிவர் ஸ்ரீகிருஷ்ணரது காலத்திற்கு முன்பு வாழ்ந்தார்.
அவரது தத்துவம் சாங்கிய தத்துவம் என்று அழைக்கப்பட்டது.
பகவத்கீதையில் இரண்டாவது அத்தியாயத்தின் பெரும்பகுதி கபிலரது சாங்கிய தத்துவத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான்.
-
சாங்கியர்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகி தனிமையில் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டார்கள்.
காடுகளில் குடிசைகள் அமைத்து அங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு,நாள் முழுவதும் தியானத்தில் பொழுதைக் கழித்தார்கள்.
தற்காலத்தில் மடங்கள் இருப்பதுபோன்று அந்த காலத்திலேயே மடங்கள் இருந்திருக்கின்றன.
சாங்கியர்கள் சிறிய கூட்டமாக மடங்களில் வாழ்ந்து வந்தார்கள்
-
சாங்கியர்களும் வேதத்தைதான் பின்பற்றினார்கள்.ஆனால் வேதங்களில் கூறப்பட்டுள்ள யாகங்கள்,பல்வேறு கடமைகள் போன்றவற்றை செய்யவில்லை.அதற்கு மாறாக உபநிடதங்களை மட்டும் ஏற்றுக்கொண்டார்கள்.
-
ஸ்ரீகிருஷ்ணரது காலத்திலேயே சாங்கியர்கள் தனிபிரிவாக சற்று புரட்சிகர சிந்தனை உள்ளவர்களாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.ஆத்மாவை தியானிப்பதிலேயே நாள் முழுவதையும் செலவிட்டார்கள்.
ஸ்ரீகிருஷ்ணரது காலத்தில் முக்தி அடைவதற்காக உலக வாழ்விலிருந்து விடுபட்டு வாழ்ந்தவர்கள் ஞானயோகத்தை பின்பற்றினார்கள்.
அதேபோல பல்வேறு கடமைகளைச் செய்துகொண்டே முக்தியை நோக்கி சென்றவர்கள் கர்மயோகத்தை பின்பற்றினார்கள்.
-
இதில் எந்த பாதை சிறந்தது?
-
அர்ஜுனன் சொல்கிறான்
-
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந।
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1
ஜனார்தன! கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்த என்று உங்களால் கருதப்பட்டால் கேசவா
பின்னர் என்னை பயங்கரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்கிறீர்கள்?
-
ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தின் உயர்வைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.அதை அடைய நினைப்பவர்கள் எல்லா செயல்களையும் விட்டுவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.அப்படி இருக்கும்போது அதை அடையாமல் கர்மத்தில் ஏன் ஈடுபட வேண்டும்?
-
வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை சந்திக்கும்போது இதைவிட்டுவிட்டு ஞானத்தைத்தேடி ஏன் செல்லக்கூடாது?
இந்த உலகியல் வாழ்க்கையில் ஏன் மீண்டும் ஈடுபட வேண்டும்.ஏன் இதைத் துறக்கக்கூடாது?
-
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்
-
ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே।
ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4
3.4 மனிதன் வேலைகள் எதுவும் செய்யாமல் இருப்பதால் கர்மமற்ற நிலையை (பிரம்மத்தை)அடைவதில்லை. வெறுமனே சந்நியாசம் (கர்மத்தை துறப்பது) பெறுவதால் நிறைநிலையை அடைவதுமில்லை
-
ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்।
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5
3.5 எப்பொழுதும், கணப்பொழுதேனும்கூட யாரும் கர்மம் செய்யாமல் சும்மா இருப்பதில்லை.
ஏனென்றால் இயற்கையிலிருந்து உதித்த குணங்களால்(சத்வம்,ரஜஸ்,தமஸ்), ஒவ்வொரு உயிரும் தன் வசமின்றி தானாக கர்மம் செய்விக்கப்படுகிறது
-
எல்லோரும் கர்மம் செய்துதான் ஆகவேண்டும். கர்மம் செய்யாமல் யாராலும் ஒரு கணம்கூட இருக்க முடியாது.
இந்த உலகத்தை துறந்து செல்பவர்கள்கூட ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டுதான் இருப்பார்கள்.
மடத்தில் வாழ்பவர்கள்கூட எப்பொழுதும் கர்மம் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்
பிறருக்கு உபதேசம் செய்வதுகூட கர்மம்தான். இறைவனது புகழை பாடுவதும்,வழிபாடுகள் செய்வதும்,பிரார்த்தனை செய்வதும்கூட கர்மம்தான். தியானம் செய்வதுகூட கர்மம்தான்
கர்மம் செய்யாமல் யாராலும் ஒரு கணம்கூட இருக்க முடியாது.
ஏனென்றால் இயற்கையிலிருந்து உதித்த குணங்கள் காரணமாக தன் விருப்பம் இன்றியே கர்மம் நடக்கிறது.
-
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6
அறிவிலியான எவன் புலன்கள் அனத்தையும் வலுவில் - வெளித்தோற்றத்தில் அடக்கி விட்டு மனதினால் அந்தப் புலன்நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் பொய் நடத்தயுள்ளவன் - ஆஷாடபூதி எனக் கூறப்படுகிறான்.
எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன்கூட ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சிந்தித்துக்கொண்டிருப்பான். அந்த சிந்தனையில் சிலரை புகழ்ந்துகொண்டிருப்பான் அல்லது யாரையாவது இகழந்துகொண்டிருப்பான்.இதுவும் கர்மம்தான்
ஒவ்வொரு கர்மமும் ஒரு எதிர் கர்மத்தை உருவாக்குகிறது.அதாவது ஒவ்வொரு செயலும் அதற்கு சமமான ஒரு எதிர்ச்செயலை உருவாக்குகிறது.
மனதால் ஒருவரை நிந்திப்பதால்கூட புதிய கர்மம் உருவாகிறது.மனதால் ஒருவரை புகழ்வதாலும் புதிய கர்மம் உருவாகிறது.
மனதால் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும்கூட பிரதிபலன் உண்டு.
-
எனவே எல்லோரும் எப்போதும் கர்மம் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.
இந்த உலகத்தைவிட்டு சென்றால் விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைப்பது தவறு.
-
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:।
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8
3.8 நீ நித்திய கர்மத்தை செய். ஏனென்றால் கர்மம் செய்யாமல் இருப்பதைவிட கர்மம் செய்வது சிறந்தது.
கர்மம் செய்யாதிருந்தால் உன்னுடைய உடலைகூட பாதுகாக்க முடியாது.
-
நித்திய கர்மத்தை செய்வது நல்லது.
புண்ணியத்தை தரக்கூடிய கர்மத்தை செய்வது நல்லது
வேலை எதுவும் செய்யாமல் இருந்தால் உடலைக்கூட காப்பாற்ற முடியாது.
வேலை செய்யாதவர்களுக்கு உணவு கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள்.
-
-
வகுப்பு-10 நாள்-29-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9
3.9 யக்ஞத்திற்கான கர்மத்தை தவிர மற்ற கர்மத்தினால் இந்த உலகம் கட்டுப்பட்டிருக்கிறது.
குந்தியின் மைந்தா, அதனால் பற்றற்று கர்மத்தை நன்கு செய்
கர்மம் மூன்றுவகை 1.பறித்தல் 2. பங்கிடுதல் 3. படைத்தல்.
மிருகங்கள் உணவு உண்ணும்போது ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும்.சகவிலங்குகளை உணவு உண்ண அனுமதிக்காது.தனது வயிறு நிறைந்தபிறகுதான் மற்றவைகள் உண்ண முடியும்.வலிமையான விலங்கிற்கு எல்லாம் கிடைக்கும்.வலிமையில்லாத உயிர் உணவின்றி சாக வேண்டியதுதான்.இங்கே உயிர் வாழ்வதற்கு உடல் வலிமை முக்கியம்
இந்த உலகத்தில் சில மனிதர்கள் இதேபோல இருக்கிறார்கள்.அனைத்தும் தனக்குத்தான் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.வலிமையில்லாதவர்களிடமிருந்து முடிந்தவரை பிடிங்கிக்கொள்கிறார்கள்.
பெரும்பாலான மனிதர்கள் பங்கிட்டு வாழும் இயல்புடையவர்கள்.
கூட்டாக சேர்ந்து வாழ்தல்,கிடைப்பதை பங்கிட்டு உண்தல்.
இதைவிடவும் உயர்ந்த ஒன்று உண்டு.அது படைத்தல்.
தனக்கு கிடைப்பதை பிறருக்காக கொடுத்தல்.
இந்த பண்பு தான் யக்ஞம்
தான் துன்பப்பட்டாலும் பரவாயில்லை மற்றவர்கள் சந்தோசமாக வாழட்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
இவர்கள் மனிதர்களில் உயர்ந்தவர்கள்.இவர்கள் செய்யும் செயல் யக்ஞம்
நமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் யக்ஞமாக செய்யும்படி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
இது முடியுமா? முடியும்.
ஒரு மருத்துவர் தன்னலம் கருதாமல் தனது மருத்துவ ஞானத்தை பிறரது நன்மைக்காக முழுமையாக பயன்படுத்தி வாழ்ந்தால் அது யக்ஞம்.
ஒரு வக்கீல் தனது தொழில்ஞானத்தை பிறரது நன்மைக்காக பயன்படுத்தினால் அது யக்ஞம்
ஒரு ஆசிரியர் தன்னலம் கருதாது மாணவனின் நலனில் அக்கரை செலுத்தினால் அது யக்ஞம்.
ஒவ்வொரு தொழிலையும் யக்ஞமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
தான் இறந்தாலும் பரவாயில்லை மற்றவர்கள் வாழட்டும் என்ற பொதுநலம் யக்ஞம்
உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவன் கோவிலுக்குசென்று வழிபாடு செய்தால் அது யக்ஞம்.தனக்காக வழிபாடு செய்தால் அது யக்ஞம் அல்ல.
உலக நன்மைக்காக யாகம் செய்தால் அது யக்ஞம்.
எங்கெல்லாம் தன்னத்தை துறக்கும் செயல் நிகழ்கிறதோ அதெல்லாம் யக்ஞம்
-
எனவே யக்ஞம் மேற்கொள்ளும் ஒருவனை உலகம் கட்டுப்படுத்தாது. அவன் விரைவில் யோகநிலையை அடைகிறான்.
-
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:।
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:॥ 3.14
3.14 உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன.
மழையிலிருந்து உணவு உண்டாகிறது.
யக்ஞத்திலிருந்து மழை உண்டாகிறது.
யக்ஞம் கர்மத்திலிருந்து உண்டாகிறது.
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்।
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15
3.15 கர்மம் வேதத்திலிருந்து உண்டாகிறது. வேதம்(அறிவு) ப்ரம்மத்திலிருந்து உண்டாகிறது என்று அறிந்துகொள். ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம்,எப்பொழுதும் யக்ஞத்தில் நிலைபெறுகிறது
-
உயிர்கள் எப்படி உண்டாகின்றன?
உணவிலிருந்து.உணவு இல்லாவிட்டால் உயிர்களால் வாழ முடியாது
உணவு எங்கிருந்து உருவாகிறது? மழையிலிருந்து
மழை பெய்யாவிட்டால் கடல்வாழ் உயிரினங்கள்கூட வாழ முடியாது
மழை எப்படி உண்டாகிறது யக்ஞத்திலிருந்து
கடல்நீர் ஆவியாகி,மேகமாகி மழையாகப்பெய்கிறது.இந்த நிகழ்வு ஒரு யக்ஞம்.
யக்ஞம் என்பதன் அர்த்தம் என்ன? தனக்காக செய்யாமல் பிறருக்காக செய்தல்.
நீர் ஆவியாகி,மேகமாகி,மழையாகப் பெய்கிறதே! இந்த நிகழ்வு முழுவதும் பிறரது நன்மைக்காக நடக்கிறது.
சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் தருகிறது.இது ஒரு யக்ஞம். இப்படி வெப்பத்தையும் ஒளிமையும் தருவதால் உயிர்கள் வாழ்கின்றன.இதனால் சூரியனுக்கு ஏதாவது லாபம் ஏற்படுகிறதா?இல்லை
பிரதிபலன் கருதாமல் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் யக்ஞம்
யக்ஞம் எதிலிருந்து உருவாகிறது?
கர்மத்திலிருந்து(செயலிலிருந்து)
பிறருக்கு நன்மை நிகழவேண்டுமானால் செயல்புரியவேண்டும். ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு பிறருக்கு நன்மை நடக்கட்டும் நன்மை நடக்கட்டும் என்று வெறுமனே சொல்லிக்கொண்டிருந்தால் நன்மை நடக்காது.
நன்மை தரக்கூடிய செயல்களை செய்யவேண்டும்
எனவே யக்ஞம் கர்மத்திலிருந்து உருவாகிறது.
கர்மம்(செயல்) எங்கிருந்து உருவாகிறது?
வேதத்திலிருந்து
வேதம் என்பது என்ன?
பிரபஞ்ச அறிவு.
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அறிவுதான் வேதம்.
இந்த பிரபஞ்ச அறிவிலிருந்துதான் செயல்கள் யாவும் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் அறிவு இருக்கிறது.இந்த அறிவு அனைத்தின் ஒட்டுமொத்தம் வேதம்
வேதம் எதிலிருந்து வந்தது?
பிரம்மத்திலிருந்து
பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறது
பிரம்மம் அழிவில்லாதது
வேதம் எதில் நிலைபெற்றுள்ளது யக்ஞத்தில்
எப்படி?
வேதத்திலிருந்து பிரபஞ்சம் அல்லது இயற்கை உருவானது
இயற்கை சக்திகள் பிரதிபலனை எதிர்பார்த்தா இயங்குகிறது?
காற்று ஏதாவது பலன் கருதியா வீசுகிறது?
சூரியன் உட்பட பிற கிரகங்கள் பிரதிபலன் கருதியா இயங்குகின்றன
இந்த பூமி பிரதிபலன் கருதியா இயங்குகிறது,
இல்லை. இந்த இயற்றை முழுவதுமே யக்ஞம் செய்துகொண்டிருக்கிறது
-
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:।
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி॥ 3.16
3.16 பார்த்தா,யார் இவ்வுலகில் இவ்விதம் இயங்கிக்கொண்டிருக்கும் சக்கரத்தை பின்பற்றுவதில்லையோ அவன் பாபவாழ்க்கை வாழ்பவன். அவன் இந்திரியங்களில் பொருந்தியவனாய் வீணே வாழ்கிறான்.
-
இயற்கை முழுவதும் எப்படி பிறருக்காக தியாகம் செய்யும் நிலையில் இயங்குகிறதோ.அதேபோல மனிதனும் தியாக உணர்வுடன் செயல்களைச்செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவனிடம் பாபம் வருவதில்லை.தனது சுயநலனுக்காக வேலை செய்தால் பாவம் வருகிறது.
வகுப்பு-11 நாள்-30-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோ அபிஜாயதே॥ 2.62 ॥
2.62 இந்திரிய விஷயங்களை நினைக்கின்ற மனிதனுக்கு அவைகளிடமிருந்து பற்று உண்டாகிறது.
பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வளர்கிறது.
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:।
ஸ்ம்ருதிப்ரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி॥ 2.63 ॥
2.63 கோபத்தால், மனக்குழப்பம் உண்டாகிறது.
குழம்பியபின் சுயநினைவை இழக்கிறான், பின் புத்தி செயல்படுவதில்லை.
புத்தி இல்லாமல் அழிந்துபோகிறான்.
ஒரு மனிதன் ஏன் அழிந்துபோகிறான்?
அவனது புத்தி வேலை செய்யவில்லை.
புத்தி ஏன் வேலைசெய்யவில்லை?
மனக்குழப்பம் உருவாகியதால்
மனக்குழப்பம் ஏன் உருவானது?
கோபம் வந்ததால்
கோபம் ஏன் வந்தது?
ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்தால்
ஆசை ஏன் வந்தது?
உலகியல் பொருட்களை நினைத்துக்கொண்டிருந்ததால் அவைகள்மீது ஆசை வந்தது
-
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இன்னொரு ஜீவனை கவர்ந்துகொண்டே இருக்கிறது
விளம்பரங்களை பார்க்கும்போது அதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது
இனிப்பு வகைகளை பார்க்கும்போது அதை சுவைக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது
நல்ல இசையை சிறிது கேட்கும்போது இன்னும் அதிகம் கேட்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
கண் எப்போதும் எதையாவது பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறது
காது எதையாவது கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறது
ஒவ்வொரு புலன்களும் வெளி உலகத்திலிருந்து எதையாவது பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறது.
ஒரு ஆசை பூர்த்தியானபின் இன்னொன்றின்மீது ஆசை எழுகிறது
அது நிறைவேறியபின் இன்னொன்று.
மூன்றுவேளை சாப்பாடு கிடைத்தால் போதும் என்று ஏழை நினைக்கிறான்.
அது நிறைவேறியபின். நல்லவீடு வேண்டும் என்று நினைக்கிறான்.அது நிறைவேறியபின் கார் தேவைப்படுகிறது
பலகோடி சம்பாதித்த மனிதனின் ஆசைகூட அடங்கவில்லை
பெரிய நாடுகள் இன்னும் தங்கள் நாட்டை பெரிதாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறன்றன.
இதற்கு ஒரு முடிவே இல்லை.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைவேறாத ஆசைகள் கணக்கிலடங்காமல் இருக்கின்றன.
இவைகளில் நிறைவேறுவது கொஞ்சம் மட்டுமே.நிறைவேறாத ஆசைகளுடன் மனிதன் இறந்துபோகிறான்.
பிறகு மீண்டும் பிறக்கிறான்.மீண்டும் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கிறான்.மீண்டும் இறக்கிறான்
இந்த உலகத்திலுள்ள எல்லாமே எனக்கு சொந்தம் என்ற ஞானம் யாருக்கு வருகிறதோ அவர்கள் எதற்கும் ஆசைப்படுவதில்லை.
இந்த உலகத்திலுள்ள ஒவ்வொன்றும் பிரம்மதின் வெளிப்பாடு
நமது இயல்பு பிரம்மம்
நாமே உலகத்திலுள்ள ஆண்களாகவும்,பெண்களாகவும்,பொருட்களாகவும் ஆயிருக்கிறோம்.
இந்த ஞானம் யாருக்கு வருகிறதோ,அவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை
ஏனென்றால் அவன் ஆசைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவனே அனைத்துமாக இருக்கிறான்
-
ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே॥ 2.65
2.65 மனம் அமைதியடைந்தவனுக்கு எல்லா துக்கங்களுக்கும் அழிந்துபோகின்றன.
ஏனெனில் மனம் தெளிந்தவனுடைய புத்தி விரைவில் ஆத்மாவில் நிலைபெறுகிறது.
-
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா।
ந சாபாவயத: ஷாந்திரஷாந்தஸ்ய குத: ஸுகம்॥ 2.66 ॥
2.66 யோகம் பயிலாதவனுக்கு புத்தி தன் வசம் இருப்பதில்லை.
யோகம் பயிலாதவனால் தியானம் செய்ய முடியாது.
தியானம் இல்லாதவனுக்கு அமைதி கிடைக்காது.
அமைதி இல்லாதவனுக்கு சுகம் எப்படி கிடைக்கும்?
-
துன்பத்தை நீங்ஙவேண்டுமானால் மனம் அமைதியாக வேண்டும்.
பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டே வருவதால் துன்பம் போய்விரும் என்று சொல்ல முடியாது
மனம் அமைதி அடைய வேண்டும்.
மனம் அமைதியானபிறகுதான் ஆத்மாவில் நிலைபெற முடியும்
நிலையான இன்பம் என்பது ஆத்மாவிலிருந்து மட்டுமே கிடைக்கும்
அந்த இன்பத்தைப்பெற தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்ய வேண்டுமானால் யோகம் பயிலவேண்டும்
யோகம் பயிலாதவனுக்கு புத்தி தன்வசம் இருக்காது
-
யோகம் என்பது என்ன?
யோக: சித்த சுத்தி நிரோத: என்று பதஞ்சலியோக சாஸ்திரம் கூறுகிறது
சித்தத்தில் உள்ள எண்ணங்களை எல்லாம் நிறுத்துதல்
தியானத்தில் ஆழ்ந்து சென்று எதையும் சிந்திக்காமல் இருத்தல்.
அதை அடைய முதலில் கர்மயோகம் பயில வேண்டும்
நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை பிரதிபலன் கருதாமல் செய்வதுதான் கர்மயோகம்
-
-
வகுப்பு-12 நாள்-31-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥
2.53 எப்பொழுது பலவற்றை கேட்டு கலக்கமடைந்துள்ள உன்னுடைய புத்தியானது,
சமாதியில் அசைவற்றதாய், உறுதியாக, நிற்குமோ அப்பொழுது யோகத்தை அடைவாய்
காலையில் எழுந்து அமைதியான உட்காரலாம் என்று நினைத்தால் முடிவதில்லை.
சமுதாய பிரச்சினை, நாட்டு பிரச்சினை,உலகப்பிரச்சினை என்று எல்லா செய்திகளும் நம்மை தேடி வருகிறது.
இவைகளையெல்லாம் கேட்டு மனம் இன்னும் கலக்கமடைகிறது.
ஏற்கனவே குடும்பபிரச்சினை,நமக்குள்ளே நடக்கும் பிரச்சினைகள் என்று ஏராளம் இருக்கின்றது.
இதில் வெளியில் நடக்கும் பிரச்சினைகளை கேட்டு மனம் கலங்குகிறது.
இப்படியே காலையிலிருந்து இரவு வரை பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி நினைத்துக்கொண்டும்,பேசிக்கொண்டும் இருந்தால் மனநிலை பாதிக்கப்படுவது நிச்சயம்
நாம் முதலில் அமைதியான இருக்க வேண்டும்.அப்போதுான் குடும்பம் அமைதியாக இருக்கும்.
இப்போது என்ன செய்வது?
உலக பிரச்சினைகளைப்பற்றி சிந்திக்காமல் நமது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமா?
அது சுயநலம் ஆகாதா?
நமது கடமை என்னவோ அதை முறையாக செய்துவிட வேண்டும்.இன்னொருவரின் செயல்களைப்பற்றி விவாதித்முதுக்கொண்டிருப்பது நமது வேலையல்ல.
நான் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருப்பவனாக இருந்தால்,அந்த வேலையைப்பற்றி நினைப்பதும்,பேசுவதும் நல்லது. ஆனால் ரானுவத்தில் உள்ள ஒருவர் என்ன செய்கிறார்? நாட்டின் பிரதமர் என்ன செய்கிறார்? அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விவாதித்துக்கொண்டிருப்பது வீணான வேலை.
அது நமது கடமை அல்ல.
நான் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் ஆளும் கட்சியை விமர்சிக்கும் கடமை உண்டு.
ஆனால் தினசரி கூலி வேலைசெய்யும் ஒருவன் முதல்வரைப்பற்றி விமர்சிப்பது அவனது கடமை அல்ல.
அது கடமையை மீறிய செயல்
யாருக்கு என்ன கடமை கொடுக்கப்பட்டுள்ளதோ,அதை மட்டுமே செய்ய வேண்டும்.
அதையும் ஒழுங்காக திறமையாக செய்ய வேண்டும்.
சமாதி என்பது மனத்தின் சமநிலை.
ஸ்ரீகிருஷ்ணர் ஒரு யோகி.அதேநேரம் அவர் ஒரு அரசர்.
எதிரிகளை எதிர்த்து போரிட்டு பல முறை வெற்றி பெற்றவர்
தன்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் எப்போதும் விழிப்புடன் கவனித்துக்கொண்டிருப்பது ஒரு அரசனின் முக்கிய வேலை.அப்படி இருக்கும்போது ஸ்ரீகிருஷ்ணரால் எப்படி யோகியாக முடிந்தது?
கர்மயோகம் போதிப்பது அதுதான். செயல்களை செய்துகொண்டிருக்கும்போதே நீ யோகியாக முடியும்.
ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்ற நுணுக்கத்தை தெரிந்துகொள்ள வேண்டும்
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50 ॥
2.50 புத்தியுள்ளவன், இவ்வுலகில் நன்மை தீமை இரண்டையும் கடக்கிறான்.
ஆகையால் யோகத்தில் நிலைபெற்றிரு.
திறமையாக கர்மம் செய்தல் யோகம் எனப்படுகிறது
திறமையாக செயல்புரிவதே யோகம்.
யோகம் என்பது எல்லா செயல்களையும் விட்டுவிட்டு இந்த உலகத்தைவிட்டே அகன்றுவிடுவதல்ல
திறமையாக செயல்புரிவதால் யோகம் அடையப்படுகிறது
நாம் பொதுவாக வேலை செய்யும்போது என்ன செய்கிறோம்?நமது மனம் என்ன செய்துகொண்டிருக்கிறது?
நமது மனம் அந்த வேலையில் முழு ஈடுபாட்டோடு செய்கிறதா? இதை கவனித்திருக்கிறோமா?
சிலர் வேலை செய்துகொண்டிருக்கும்போதே எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள்.
சிலர் வேலை செய்யும்போது எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்
நாம் முதன்முதலில் காரை சாலையில் ஓட்டும்போது எவ்வளவு கனவமாக கார் ஓட்டியிருப்போம்.
அந்த நேரத்தில் மனம் முழுவதும் ரோட்டின்மீதே இருக்கும். படிப்படியாக அந்த செயல் அனிச்சை செயலாக மாறியிருக்கும்.அதன்பிறகு கார் ஓட்டும்போது எதையெதையோ சிந்தித்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருப்போம்.
இதனால் என்ன ஆகிறது?
கார் ஓட்டும்போது கிடைத்திருக்கவேண்டிய அமைதியை,ஓய்வை இழந்துவிட்டோம்
கார் ஓட்டும்போது எதையும் சிந்திக்காமல் மனத்தை சமநிலையில் வைத்து ஓட்டிப்பாருங்கள்
ஒருவித அமைதியும்,ஓய்வும் கிடைப்பதை உணர்வீர்கள்.இதுதான் யோகம்
நாம் புதிதாக ஒரு வேலையை செய்ய துவங்கும்போது மனத்தின் பெரும்பகுதி அந்த வேலையில் சென்றுவிடும்.ஆனால் படிப்படியாக அதை நன்கு பழகியபின்னர் மனம் ஓய்வாகிவிடும்.
அந்த நேரத்தில் மனத்தை ஓய்வாக இருக்கவிடுங்கள்
யார் எந்த வேலையை செய்தாலும் சரி.சமையல் வேலை செய்யும் பெண்கள் டி.வி. பார்த்துக்கொண்டே அந்த வேலையை செய்கிறார்கள்.இது சரியல்ல. இதனால் மனத்தில் சஞ்சலம் அதிகமாகிறது
டி.வி பார்க்க வேண்டுமானால் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு முழு மனத்தையும் அதில் செலுத்தி பாருங்கள்.
எந்த வேலையைாக இருந்தாலும் சரி.அந்த வேலையோடு நம்மை முழுமையாக ஒன்றிணைத்துவிட்டால் அது யோகம்
அந்த நேரத்தில் மனத்தில் எண்ணங்கள் எதுவும் எழுவதில்லை.
கர்மயோகத்தின் ரகசியம் இதுதான். வேலைசெய்துகொண்டிருக்கும்போதே யோகத்தை அடைவது
இந்த உலகத்தில் இறைவன் அப்படித்தான் செயல்புரிந்துகொண்டிருக்கிறார்.
அவர் தொடர்ந்து செயல்புரிந்துகொண்டே இருக்கிறார்.அதேநேரத்தில் யோகத்திலும் இருக்கிறார்.
-
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிம்சந।
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி॥ 3.22
3.22. பார்த்தா, எனக்கு செய்யவேண்டிய கடமை எதுவும் இல்லை.
மூன்று உலகங்களிலும், இன்னும் அடையாத ஒன்றை இனி அடையவேண்டும் என்ற அவசியம் கொஞ்சமும் இல்லை.ஆயினும் கர்மம் செய்துகொண்டேயிருக்கிறேன்.
வகுப்பு-13 நாள்-2-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27
3.27 பிரகிருதியின்(இயற்கையின்) குணங்களால் எப்போதும் கர்மங்கள் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மதியிழந்தவர்கள் “நான் கர்மங்கள் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:।
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே॥ 3.28
3.28 ஆனால், அர்ஜுனா, குணகர்மத்தை(குணத்தின் போக்கை) அறிந்த தத்துவவாதியானவன், குணங்கள்(சத்வம்,ரஜஸ்,தமஸ்) குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து,
அதில்(இயற்கையில்) பற்றுவைப்பதில்லை.
ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு।
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்॥ 3.29
3.29 பிரகிருதியினுடைய குணங்களால் மோகமடைந்தவர்கள், குணங்களின் செயல்களில் பற்றுவைக்கின்றனர்.
அந்த அறிவற்ற மந்த புத்தியினரை தெளிந்தஅறிவுடைய ஞானிகள் குழப்பக்கூடாது
-
தத்துவவாதி உண்மையை அறிந்தவன்
தத்துவம் என்ன சொல்கிறது?
சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களால் இந்த இயற்கை படைக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கையின் ஒரு பகுதியாகிய உடலும் மனமும்கூட மூன்று குண்ஙகளால் படைக்கப்பட்டது.
இந்த குணங்களுக்கு அப்பால் இருப்பது ஆன்மா
ஆன்மா செயல்புரிவதில்லை
உடலும்,மனமும் செயல்புரிகிறது.
-
நமது உண்மை இயல்பு ஆன்மா
ஆன்மா ஒருபோதும் செயல்புரிவதில்லை.
ஆனால் நாம் நம்மை ஆன்மாவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல் உடலுடனும் மனத்துடனும் ஐக்கியப்படுத்திக்கொள்கிறோம்.
எனவே நாம் செயல்புரிவதாக நினைக்கிறோம்.
-
ரயில் ஓடுகிறது.சில வேளைகளில் ரயில் நிற்பதாகவும் ரயிலின் அருகில் உள்ள மரங்கள் ஓடுவதுபோலவும் தோன்றுகிறது
சூரியன் எங்கும் செல்வதில்லை.ஆனால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக தோன்றுகிறது.
உண்மையில் சூரியன் கிழக்கில் தோன்றுவதும் இல்லை.மேற்கில் மறைவதும் இல்லை.
பூமி சூரியனை சுற்றுவதால் இப்படி ஒரு காட்சி நமக்கு தெரிகிறது.
பல காலம் இது உண்மை என்றே நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்
-
உடல் இயங்குகிறது. மனம் வேலை செய்கிறது.
வேலை செய்யாத நாம் அதற்குள் இருந்துகொண்டு நாம் வேலை செய்வதாக கருதுகிறோம்.
நாம் உண்மையில் வேலை செய்வதில்லை. நமது முன்னிலையில் உடலும் மனமும் வேலை செய்கிறது.
தத்துவவாதி இந்த உண்மையை நன்கு அறிவான்
-
அப்படியானால் உண்மையை அறிந்த தத்துவாதி வேலை செய்யமல் சும்மா இருப்பானா?
இல்லை
நான் உடல் அல்ல ,மனம் அல்ல என்பதை அவன் உணர்ந்திருப்பதால்,
உடலின் வேலையை தனது வேலையாக அவன் கருதுவதில்லை
இயற்கை தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கிறது. இயற்கையின் ஒரு பகுதியான எல்லா உடல்களும் அதனுடன் இணைந்து வேலை செய்துகொண்டே இருக்கிறது.
தனதும் உடலும் மனமும் இயற்கையின் போக்கில் வேலை செய்யட்டும் என்று விட்டுவிடுகிறான்.
ஆனால் நான் வேலை செய்வதில்லை. நான் உடல் அல்ல என்பதை அவன் உணர்ந்துள்ளதால்
உடலின் வேலையை தனது வேலையாக அவன் கருதுவதில்லை.
-
அகங்காரத்தால் மதியிழந்தவர்கள் நான் செய்கிறேன் என்று நினைக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை தத்துவவாதி குழப்பக்கூடாது.
அப்படி குழப்பினால் அவர்கள் உண்மையை புரிந்துகொள்வதைவிட்டுவிட்டு
வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள்.
ஒரு காலத்தில் இந்த உலகம் மாயை.உண்மையில்லாதது.மனத்தின் கற்பனை என்றெல்லாம் ஞானிகள் கூறுவதை மக்கள் நம்பினார்கள்.இதன் விளைவாக தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யாமல் சோம்பேரியாக காலம் கழிக்கத்தொடங்கினார்கள்.
வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள்.பலரை கொலை செய்தார்கள்.அவர்களை எதிர்க்க இந்த மாயாவாதிகள் துணியவில்லை.
அவர்களை எதிர்த்து போர்புரியவேண்டிய கடமை உள்ளதை அறியவில்லை
எல்லாம் மாயை. எல்லாம் மயக்கம் என்ற நிலையிலேயே வாழ்ந்து அழிந்துபோனார்கள்.தங்கள் இனம் அழிவதற்கும் காரணமானார்கள்
-
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத।
குர்யாத்வித்வாம்ஸ்ததா அஸக்தஷ்சிகீர்ஷுர்லோகஸம்க்ரஹம்॥ 3.25
3.25 பார்த்தா,கர்மத்தில் பற்றுள்ளவர்களாய் அறிவற்றவர்கள் எப்படி கர்மம் செய்கிறார்களோ, அப்படி ஞானி பற்று இல்லாதவனாய், உலகத்தை நல்வழியில் நடத்த விருப்பம் உள்ளவனாய், கர்மம் செய்ய வேண்டும்.
எனவே உண்மையை உணர்ந்த தத்துவவாதி சாதாரண மக்கள் எப்படி பற்றோடு வேலை செய்கிறார்களோ அதேபோல பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும்.
வேலை செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாது.
உலகை வழிநடத்தும் பொறுப்பு ஞானிகளிடம் உண்டு.எனவே அந்த கடமையை செய்ய வேண்டும்
ஏனென்றால் மேலோர் எதை செய்கிறார்களோ அதையே மற்றவர்களும் பின்பற்றுவார்கள்.
யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே॥ 3.21
3.21 மேலானவர்கள் எதை எதை செய்கிறார்களோ மற்ற மனிதர்கள் அதையே பின்பற்றுவார்கள்.
அந்த மேலானவன் எதை பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது
-
-
வகுப்பு-14 நாள்-4-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய: பரதர்மோ பயாவஹ:॥ 3.35
3.35 நன்கு செய்யப்படும் பிறருடைய தர்மத்தை காட்டிலும்(பிறருடைய தர்மத்தை பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் அதை பின்பற்றாமல்),
குறையுடையதாயினும் தன்னுடைய தர்மத்தை பின்பற்றுவதே சிறந்தது.
தன்னுடைய தர்மத்தில் மரணமடைவது சிறந்தது.
பிறருடைய தர்மமானது(அவனுக்கு) பயம் தருவதாகும்
நமக்கு விதிக்கப்பட்ட தர்மம் எதுவோ அதை சிறப்பாக செய்ய வேண்டும்.
பிறர் பின்பற்றும் தர்மம் இதைவிட நல்லது என்பதற்காக இதைவிட்டுவிடுவது நல்லதல்ல.
உதாரணமாக ராணுவத்தில் ஒருவர் பணியாற்றுகிறார்.அவரது தர்மம் எதிரிகளைக்கொல்வது. இன்னொருவர் ஒரு ஆசிரமத்தில் தபம் செய்கிறார். அவரது தர்மம் உயிர்களைக்காப்பது
உயிர்களைக் கொல்வதைவிட காப்பது சிறந்தது என்பதற்காக ராணுவவீரன் அந்த பணியைவிட்டுவிட்டு.ஆசிரமத்தில் சென்று தவ வாழ்க்கை வாழ்வது நல்லதல்ல.
அப்படி செய்தால் எதிரிகளை வீழ்த்தும் பணியை யார் செய்வது?
தனது தர்மத்தில் குறைபாடு இருந்தால்கூட அதை முழுமனதோடு செய்வதே நல்லது.
ஏனென்றால் எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல.
நாம் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை தொடர்ந்து சிறப்பாகசெய்து வந்தால் அதுவே மேலான நிலைக்கு நம்மை அழைத்துச்செல்லும்
இதற்கு உதாரணமாக பல சம்பவங்களைக்கூடலாம்.
மிருகங்களைக்கொன்று அதை சந்தையில் வைத்து விற்பனை செய்யும் ஒரு கசப்புக்கடைகாரன் அந்த வேலையை செய்துகொண்டிருக்கும்போதே ஞானியாக மாறியதைப்பற்றி மகாபாரத்தில் படிக்கிறோம்.
வியாதகீதை என்பது அவன் போதித்தது.
எனவே எந்த வேலையும் கீழானது அல்ல.அதை எந்த மனநிலையில் செய்கிறோம் எப்படி செய்கிறோம் என்பது முக்கியம்.
சுவதர்மம் என்பது நமது இயல்புக்கு ஏற்ற வேலை.
சிறுவயதிலிருந்தே ஒருவன் மண்பனை செய்து கொண்டிருக்கிறான்.அது அவனுக்கு இயல்பாகவே எளிதாக இருக்கிறது.
அவன் அந்த தொழில் தாழ்ந்தது என்ற எண்ணத்தில் அதைவிட்டுவிட்டு, மருத்துவம் போன்ற உயர்ந்த தொழிலுக்கு சென்றால் அது சிறந்ததாக அமையாது. அது பயம் தருவதாகும்.அதை சிறப்பாக செய்ய பல ஆண்டுகாலம் பயிற்சி தேவைப்படும்.
மண்பானை செய்யும் தொழில் செய்பவன் திறமைசாலியாக இருந்தால் அதில் பல புதுமைகளைப்புகுத்தி அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்க்கமுடியும்.அதில் மிகுந்த லாபமும் சம்பாதிக்க முடியும்.
பரம்பரைத்தொழில் என்பது இயல்பாகவே ஏற்பட்டது.இதில் தொழில் போட்டி இல்லை.
சிறுவயதிலிருந்தே தங்கள் பரம்பரைத் தொழிலை செய்துவருவார்கள்.
வேலைக்காக யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லை.
அந்த தொழில் பற்றிய ஞானம் பரம்பரை பரம்பரையாக அப்படியே வருகிறது.
எனவே அந்த தொழில் நுணுக்கங்களைக் கற்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை.
வெளி நபர்களை நாடிசெல்ல வேண்டியதில்லை.
வேலை இல்லாத திண்டாட்டம் என்பது அறவே இருக்காது.
தற்காலத்தில் உயர்ந்த தொழிலை செய்யும் ஒருன் தன் குழந்தைகளும் அந்த தொழிலையே செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்.மிகவும் சாதாரணமான தொழிலை செய்வதற்கு ஆள் இல்லை
உதாரணமாக கிராமங்களில் வயல்களில் வேலை செய்ய போதிய ஆள் இல்லை.
அதற்கு காரணம் வயல்வேலை என்பது தாழ்ந்தது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.தங்கள் குழந்தைகள் மருத்துவராகவோ,வக்கீலாகவே ஆகவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.எனவே மிகச்சாதாரண வேலையை செய் ஆள் இல்லாத நிலை ஏற்படுகிறது
இந்த வேலைகளை செய்ய வேறு மாநிலங்களிலிருந்து கூலிக்கு ஆட்கள் இங்கே வருகிறார்கள்.
அவர்கள் படிப்படியாக இங்கே நிலையான வசிப்பிடத்தை அமைத்து வருகிறார்கள்.
நமது பகுதியில் உள்ளவர்கள் உயர்ந்த வேலையைச்செய்ய வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள்.
அவர்களால் இங்கே வாழ முடியாத நிலை ஏற்படுகிறது
-
சித்த வைத்தியத்தில் நன்கு புலமைபெற்ற பல குடும்பங்கள் முற்காலத்தில் இருந்தன. எந்த நோயாக இருந்தாலும் அதை சரி செய்யும் ஞானம் அவர்களிடம் இருந்தது.பிற்காலத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த தொழிலைவிட்டுவிட்டு வேறு தொழில்களைசெய்ய சென்றதால் சித்தவைத்திய தொழில் பற்றிய அறிவு மங்கிப்போனது.
இதேபோல பல தொழில்கள் அழிந்துபோனது
-
பரம்பரைத் தொழிலில் உள்ள ஒரே குறை என்னவென்றால்,பரம்பரை தொழில் காரணமாக ஒரு இனம் உயர்ந்ததாகவும் இன்னொரு இனம் தாழ்ந்ததாகவும் கருதப்பட்டதுதான்.
மகாபாரத காலத்திலேயே பரம்பரை தொழில் காரணமாக ஒருவர் உயர்ந்தவராகவும் இன்னொருவர் தாழ்ந்தவராகவும் கருதப்பட்டார்கள்.
முற்கால மக்கள் மறுபிறவி கொள்கையை தீவிரமாக நம்பினார்கள்.
ஒருவன் இந்த பிறவியில் அதிக புண்ணியம் செய்தால் அடுத்தபிறவியில் இதைவிட உயர்ந்த பிறவி கிடைக்கும் என்று நம்பினார்கள்.
அரசன் வீட்டில் பிறப்பவன் முற்பிறவியில் அதிகம் புண்ணியம் செய்திருப்பான்
பிராமண குலத்தில் பிறக்கும் ஒருவன் முற்பிறவியில் அதிகம் புண்ணியம் செய்திருப்பான் என்று மக்கள் நம்பினார்கள்
எனவே தாழ்ந்த வேலையை செய்யும் ஒருவன் அதற்காக தன்னையே குறை சொல்லிக்கொள்வானே தவிர இந்த சமுதாயத்தை குறை சொல்வதில்லை.
இந்த பிறவியில் இந்த வேலையை சிறப்பாக செய்து அடுத்த பிறவியில் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தது
எனவே முற்காலத்தில் ஜாதி தொடர்பான பிரச்சினைகள் எழவில்லை.
மனிதன் விருப்பம் இல்லாவிட்டால்கூட ஏன் பாவத்தை செய்கிறான்?
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:।
மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்॥ 3.37
3.37 ரஜோகுணத்தில் உதித்த இந்த காமமும்,கோபமும் எதையும் உண்ணவல்லது.
பெரும்பாபமுடையது. இதை விரோதி என்று தெரிந்துகொள்
காமமும் கோபமும் ரஜோ குணத்திலிருந்து உருவாகிறது.
ரஜோ குணம் என்பது தீவிரமான செயலைக் குறிக்கிறது.
ஒரு மனிதன் சமுதாயத்தில் வெற்றிபெற வேண்டுமானால் ரஜோகுணம் தேவை.
ஆனால் அந்த குணத்தின் இயல்பு காமமும்,கோபமும்.
காமத்தையும்,கோபத்தையும் ஒருவன் கடந்து செல்ல வேண்டுமானால் ரஜோகுணத்தை கடந்து சத்வ முணத்தில் நிலைபெற வேண்டும்.
தினசரி வேலை செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒருவன் சத்வகுணத்தில் நிலைபெறுவது என்பது இயலாத ஒன்று.
அனைத்து தேவைகளும் நிறைவேறியபின் அனைத்து ஆசைகளும் நிறைவேறியபின்,மனம் அமைதி அடைந்தபிறகு தான் சத்வகுணம் வருகிறது.
சத்வகுணத்தில் ஒருவன் நிலைபெற்ற பிறகுதான் காமத்தையும்.கோபத்தையும் கடந்துசெல்ல முடியும்.
காமமும் கோபமும் விரோதி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்॥ 3.38
3.38 எப்படி நெருப்பானது புகையினால் மூடப்பட்டிருக்கிறதோ,
கண்ணாடி அழுக்கினாலும், கர்பத்தில் இருக்கும் குழந்தை கர்ப்பபையினாலும் மூடப்பட்டிருக்கிறதோ,
அப்படியே காமம், குரோதத்தினால் ஞானம் மூடப்பட்டிருக்கிறது
ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச॥ 3.39
3.39 குந்தியின் மைந்தா, ஞானியின் நித்திய எதிரியும்,
காமமே வடிவெடுத்த, நிரப்ப முடியாத, திருப்தியடையாத இதனால்(காமம்,குரோதம்) ஞானமானது மூடப்பட்டிருக்கிறது
ஒரு இடத்தில் புகை சூழ்ந்துள்ளது என்றால் அதற்குள் நெருப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால் நெருப்பை எரியவிடாமல் புகை சூழந்துள்ளது.
நெருப்பு எரிய என்ன செய்ய வேண்டும்?
புகையை நீக்கிவிட்டால் நெருப்பு தானாக எரியத்தொடங்கும்.
அதேபோல ஞானம் நமக்குள்ளே இருக்கிறது.ஆனால் அதை காமமும்,கோபமும் மூடியுள்ளது.
ஞானம் வரவேண்டுமானால் காமத்தையும்,கோபத்தையும் நீக்கினாலே போதும்.
கண்ணாடியில் முகம் பார்க்க வேண்டுமானால் கண்ணாடி தெளிவாக இருக்க வேண்டும்.
அழுக்கு மூடியிருந்தால் முகம் பார்க்க முடியாது.
இதின் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
மகாபாரத காலத்தில் மக்கள் பரவலாக முகம் பார்ப்பதற்கு கண்ணாடியை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கண்ணாடியை வெளிநாட்டினர் கண்டுபிடித்ததாக சிலர் கூறுகிறார்கள்.அது தவறு.
-
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்॥ 3.40
3.40 இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவை அதற்கு(காமம்,குரோதம்) இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இவைகளால் ஞானத்தை மறைத்து தேகத்தில் இருப்பவனை மயக்குகிறது.
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப।
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்॥ 3.41
3.41 ஆகையால் அர்ஜுனா, நீ முதலில் இந்திரியங்களை அடக்கி, ஞானத்தையும், ஞான விக்ஞானத்தையும் அழிக்கின்ற பாபவடிவமுள்ள இந்த (காமம்,குரோதத்தை) உறுதியுடன் ஒழித்துவிடு
-
காமம்,கோபம் இவற்றிற்கு இருப்பிடம் எது?
கண்,காது, போன்ற இந்திரியங்கள்.
பலவற்றை சிந்தித்துக்கொண்டிருக்கும் மனம்.
தெளிவாக முடிவெடுக்கும் புத்தி இவைகள்
இவைகள் எல்லாமே ஞானத்தை மறைத்திருக்கின்றன.
தேகத்திற்குள் இருப்பது யார்?ஆத்மா.
அதாவது நாம்தான்
நமது சுய ஸ்வரூபம் எல்லையற்றது
அதை உணராமல் இருப்பதற்கு காரணம் நம்மிடம் காமம்,கோபம் இவைகள் இருக்கின்றன.
காமத்தை கட்டுப்படுத்த முயற்சிசெய்தால் கோபம் செயல்பட ஆரம்பிக்கும்
கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்தால் காமமம் தலைதூக்க ஆரம்பிக்கும்
இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல சேர்ந்தே இருக்கும்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதுபற்றிய நல்ல அனுபவம் இருக்கும்
மனைவி அல்லது கணவன் கோபமாக இருந்தால் அதை நீக்குவதற்கு காம வயப்பட வேண்டியிருக்கும்.
அதேபோல அவர்கள் காமத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருந்தால் சமுதாயத்தின்மீதோ அல்லது வேறு எதன்மீதோ அடிக்கடி கோபப்படுபவர்களாக இருப்பார்கள்.
ஒன்றை அடக்கும்போது இன்னொன்று தலைதூக்குகிறது
இந்த இரண்டையும் அடக்க வேண்டுமானால் என்ன செய்வது?
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா।
ஜஹி ஷத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்॥ 3.43
3.43 அர்ஜுனா. இங்ஙனம் புத்தியைவிட மேலானதை அறிந்து, தன்னைத்தானே அடக்கி காமவடிவானதும், வெல்வதற்கு கடினமானதுமான எதிரியை அழித்துவிடு.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥ 3.42
3.42 இந்திரியங்கள் மேலானவை என்று சொல்கிறார்கள்.
இந்திரியங்களைவிட மனம் மேலானது, மனத்தைவிட புத்தி மேலானது.
புத்தியைவிட மேலானது எது? அதை அறிய வேண்டும்.
புத்தியயைவிட மேலானது ஆத்மா. அதாவது நமது உண்மை ஸ்வரூபம்.
அதை அறிய வேண்டும்.
தன்னை அறிந்தால்,நமது உண்மை ஸ்வரூவம் எது என்பதை அறிந்தால்,காமத்தையும்,கோபத்தையும் கடந்து செல்ல முடியும்.
-
காமத்தையும்,கோபத்தையும் அடக்குவது மிகவும் கடினம் என்பது இதிலிருந்து தெரிகிறது
-
இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் சிறிதாவது காமமும் கோபமும் இருக்கும்.
இந்த இரண்டையும் கடந்துவிட்டால் உடல் உணர்வை கடந்துவிடலாம்.
உடல் உணர்வை கடந்த நிலையில் அதிக நாட்கள் உலகத்தில் வாழ முடியாது.
இது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும்போது. உலகத்தில் வாழவேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் காமத்தையும் கோபத்தையும் குறைக்க மட்டுமே முயலவேண்டும்.முழுவதும் நீக்க முயற்சிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
எதுவரை காமமும் கோபமும் இருக்கிறதோ அதுவரை உடல் இயங்கும்
உடல் இயங்குவதற்கு இந்த இரண்டும் அத்தியாவசிய தேவையாகும்.
-
ஸ்ரீகிருஷ்ணர் எப்போதும் காமத்தையும் கோபத்தையும் கடந்த நிலையில் இருக்கவில்லை.
துரியோதனது செல்பாடுகளால் பலமுறை அவர் கோபமடைகிறர்.
சிசுபாலனை கொல்கிறார்,பீஷ்மர்மீது கோபப்படுகிறார்.இன்னும் பல உதாரணங்களை கூற முடியும்.
அதேபோல அவருக்கு பல மனைவிகள் இருந்தார்கள்.பல குழந்தைகள் இருந்தார்கள்.
அதேநேரத்தில் காமத்தையும் கோபத்தையும் கடந்து செல்லவும் அவரால் முடிந்தது.
விஷ்வரூப தரினத்தின் போது தானே இறைவன் என்பதை அர்ஜுனனுக்கு காட்டினார்.
அவரிடம் எல்லாம் இருந்தது.
-
முக்தி அடைய வேண்டுமானால் காமத்தையும் கோபத்தையும் கடந்துசெல்ல வேண்டும்
ரஜோ குணத்தை கடந்து சத்வ குணத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.
ஆன்மாவில் நிலைபெற்றிருக்க வேண்டும்
-
-
வகுப்பு-16 நாள்-6-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:।
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா॥ 4.12 ॥
4.12 கர்மங்களுடைய பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை(ஒளியுடலில் வாழும் முன்னோர்கள்) வணங்குகிறார்கள். ஏனென்றால் இவ்வுலகில் கர்மபலன் விரைவில் கிடைக்கிறது
இறைவனை வழிபடும் மனிதர்கள் எல்லோரும் ஒரே நோக்கத்தில் வழிபடுவதில்லை.பல்வேறு பலன்களைக்கருதி பல வழிபாடுகள் செய்யப்படுகிறது.
கர்ம பலன்கள் நான்கு வகைப்படும்.
1.மற்றவர்களுக்கு தீங்கு நேரவேண்டும் என்று வழிபாடு செய்வது(கீழ்நிலை)
2. எனக்கும்,என்னை சார்ந்தவர்களுக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது(இடைநிலை)
3.எனக்கும் நன்மை ஏற்பட வேண்டும் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது(உயர்நிலை)
4. எனக்கு நன்மை ஏற்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறருக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது(தெய்வநிலை)
-
இந்த நான்கு வழிபாடு செய்பவர்களும் உலகத்தில் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள்.
இவர்கள் வழிபடும் தெய்வங்கள் வேறுபடுகின்றன.
இந்த உலகத்தை படைத்து,காத்து,அழிக்கும் ஈஸ்வரனிடம் பிறருக்கு தீங்குநேரவேண்டும் என்ற நோக்கத்தில் யாராவது வழிபாடு செய்தால்,அப்படி வழிபடுபவர்களுக்குத்தான் தீங்கு நேரும்.எனவே ஈஸ்வரிடனிடம் அந்த நோக்கத்தில் யாரும் வழிபட முடியாது.
பிறருக்கு தீமை மட்டுமே செய்யக்கூடிய ஆவிகள் இந்த உலகத்தில் இருக்கின்றன.சிலர் வாழும்போது தீயவர்களாக வாழ்ந்து அகால மரணம் அடைந்திருப்பார்கள். அந்த ஆவிகளை மந்திரவாதிகள் வசியப்படுத்தி தீய செயல்களை செய்ய பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இந்த ஆவிகளை சிலர் வழிபடுகிறார்கள். மிருகபலி கொடுத்து பூஜிக்கிறார்கள்.மிகவும் கீழ்த்தரமான மக்கள் இந்த வேலையை செய்கிறார்கள்.இதனால் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் ஒரு காலத்திற்கு பிறகு அழிந்துபோவார்கள்.
-
சிலர் குலதெய்வம் ஊர்காவல் தெய்வம் போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள்.இந்த தெய்வங்கள் யார்?
முற்காலத்தில் வீரத்துடன் வாழ்ந்தவர்கள்,உதாரணமாக வாழ்ந்தவர்கள்,தலைவர்களாக வாழ்ந்தவர்கள்.
இவர்கள் இறந்த பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லது அந்த இனத்தை சார்ந்தவர்கள் வழிபடுகிறார்கள்.
அந்த குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் நன்மை அடைய வேண்டும் என்பதற்காக வழிபாடு செய்கிறார்கள்.
தற்காலத்தில் மக்கள் வழிபடும் ஜாதி தலைவர்கள்,கட்சி தலைவர்கள்,இனத்தலைவர்கள் போன்றவர்கள்.
-
சில ரிஷிகள் அல்லது மகான்கள் உடலைவிட்டு சென்றபிறகு உலக நன்மைக்காக சூட்சும உடலில் வாழ்கிறார்கள்.இந்த மகான்களை வழிபடுவது சற்று உயர்ந்த நிலை வழிபாடு.இந்த மகான்களை மையமாக வைத்து சில மதப்பிரிவுகள்கூட உருவாகியிருக்கும். இந்த மகான்களை வழிபடுபவர்கள் சற்று உயர்ந்த மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.உலக நன்மைக்காக வழிபடும் இயல்பு அவர்களிடம் இருக்கும்.
-
உலக நன்மைக்காக தன்னையே தியாகம் செய்யும் இயல்புள்ள மகான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களும் வழிபாடு செய்கிறார்கள். அவர்கள் இறைவனுக்காக தன்னிடமுள்ள அனைத்தையும் இழக்கும் இயல்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.இறைவனை உண்மையில் உணர்ந்து வழிபடுபவர்கள் இவர்கள்தான்.
தனக்காக ஒருபோதும் எதையும் பிரார்த்திப்பதில்லை.
-
இங்கே வழிபடுபவர்கள் எந்த இயல்புள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களைப்பொறுத்து வழிபாடும் வேறுபடுகிறது.
தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்பவர்கள் அதற்குரிய தெய்வத்திடம் வழிபாடு செய்ய வேண்டும்.அப்போது அது பலன் கொடுக்கும்.
இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,அழிக்கும் இறைவனிடம் அந்த நோக்கத்தில் வழிபாடு செய்ய முடியாது.
இறைவனை வழிபடும் துகுதி யாருக்கு உண்டு என்றால் இறைவனுக்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் இழக்கும் மனநிலை யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் இறைவனை வழிபடும் தகுதி உள்ளவர்கள்.
-
சுயநல நோக்கம் உள்ளவர்கள் அதற்குரிய தெய்வத்தை வழிபடலாம்.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் குடும்பதெய்வம் உள்ளது.இதைத்தவிர ஊர்க்காவல் தெய்வம்,ஏரி காவல் தெய்வம், இனத்தின் தெய்வம்,கட்சியின் காவல் தெய்வம் என்று பல தெய்வங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு ஊரிலும் பல கோவில்கள் உள்ளன.அங்கெல்லாம் தனித்தனி தெய்வங்கள் இருக்கின்றன.
இயற்கையின் ஒவ்வொரு சக்தியையும் தெய்வமாக வழிபடும் மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு தெய்வம்.
ஒவ்வொரு மகான்களையும் தெய்வமாக வழிபடுகிறார்கள்.
இப்படி கோடனகோடி தெய்வங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
இந்த தெய்வங்கள் நிரந்தரமானவர்கள் அல்ல. அவர்களது புண்ணிய பலனுக்கு ஏற்ப சில நூறு ஆண்டுகள் சூட்சும உடலில் வாழ்ந்து பிறகு மனிதர்களாக மீண்டும் பிறக்கிறார்கள்.
-
சில நாடுகளில் ஒரு தெய்வ வழிபாடு இருக்கிறது.
இந்தியா ஒட்டு மொத்தத்தையும் எடுத்துப்பார்த்தால் இந்தியாவில் இருப்பது பல தெய்வ வழிபாடு.
இந்துக்களின் வழிபாடு பல தெய்வ வழிபாடாகும்.
பிரபஞ்சத்தை படைத்து,காத்து.அழிக்கும் ஈஸ்வரனையும் வழிபடுவார்கள், சிறுசிறு காவல் தெய்வங்களையும் வழிபடுவார்கள்.
இந்துக்கள் இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று யாரும் கட்டளையிடுவதில்லை.எனவே ஒவ்வொரு இயல்பு உள்ளவர்களும் தங்களது இயல்புக்கு ஏற்றபடி வழிபாடு செய்கிறார்கள்.
மனிதன் முன்னேற முன்னேற அவனது வழிபாடும் முன்னேறுகிறது.
முடிவில் நானே கடவுள். அஹம் பிரம்மாஸ்மி,சிவோஹம்.நானே சிவன்
இந்த உலகத்தை படைத்து.காத்து.அழிக்கும் இறைவன் நானே என்பதை மனிதன் உணர்கிறான்.
வகுப்பு-17 நாள்-8-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஷ:।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்॥ 4.13 ॥
4.13 குணம் மற்றும் செய்யும் தொழிலை பொறுத்து நான்கு வர்ணங்கள்(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) என்னால் படைக்கப்பட்டது. அதற்கு நான் கர்த்தா (நானே உருவாக்கினேன்) எனினும், என்னை படைப்பை கடந்தவன்(பிரம்மம்) என்றும் கர்த்தா அல்ல(உருவாக்கியவன் நான் அல்ல) என்றும் அறிந்துகொள்.
இறைவனுக்கு இரண்டு நிலைகள் உள்ளன.
ஒன்று படைப்பை கடந்த நிலை. இன்னொன்று படைத்து,காத்து.அழிக்கும் நிலை
படைப்பை கடந்த நிலையில் இறைவன் செயலுக்கு அப்பாற்பட்டபர்
படைத்து,காத்து,அழிக்கும் நிலைக்கு வேதாந்தத்தில் ஈஸ்வரன் என்று பெயர்.பல்வேறு மதங்களில் பல பெயர்கள் உள்ளன.
-
ஜாதிகள் என்பது என்ன? .
-
ஒவ்வொரு தொழிலை செய்பவர்கள் தங்களை ஒரு பிரிவாக (ஜாதியாக) கருதிக்கொண்டார்கள்.
உதாரணமாக மீன்பிடி தொழில் செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், நெசவு வேலை செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், சிற்பவேலை செய்பவர்கள் ஒரு பிரிவு. மண்பானை செய்பவர்கள் ஒரு பிரிவு
இவ்வாறு ,அவர்கள் செய்யும் வேலையை வைத்து தனித்தனி பிரிவுகளாக பிரிந்துகொண்டார்கள்.
இது யாரும் உருவாக்கவில்லை. தானாக ஏற்பட்ட ஒன்று.
இந்த பிரிவுகளில் யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடு எழுவது இயல்பானது .
அறிவு அதிகம் உள்ளவன், சிறந்த குணம் கொண்டவன் யாரோ அவன் உயர்ந்த பிரிவாக கருதப்பட்டான்.
-
அந்த காலத்தில் ஆட்சிசெய்பவர்கள் மக்களிடமிருந்து வரிபணத்தை பெற்றுவந்தார்கள். அனைவரிடமும் ஒரு போல் வரியை பெறமுடியாது.ஆகவே இந்த பிரிவுகளை முறையாக வகைப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.
இதை அவர்கள் நான்காக பிரித்தார்கள். அதை அவர்கள் ஸ்மிருதி அல்லது நாட்டின் சட்டங்கள் என்று அழைத்தார்கள்.மக்களை ஆளும் மன்னர்களே சட்டங்களை இயற்றினார்கள். ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களுக்கு ஏற்றார்போல் சட்டங்களை மாற்றி அமைத்துக்கொண்டார்கள்.எல்லா காலத்திலும் ஒரே சட்டம் பின்பற்றப்படவில்லை.
-
ஸ்மிருதிகளில் கூறப்படும் ஜாதிமுறைகள் எவ்வாறு மனிதர்களை பிரித்தது?
-
ஒரு மனிதனின் உடலை எடுத்துக்கொள்ளுங்கள்.
மேல்பாகம் தலையில் மூளை உள்ளது. மூளையில் வேலை சிந்திப்பது. சிந்திப்பவர்கள்,அதிகம் வேலை செய்வதில்லை,ஆனால் அவர்களிடம் மிகப்பெரிய அளவில் அறிவாற்றல் உள்ளது.அவர்கள் மருந்துகளை கண்டுபிடித்து ஆயுர்வேதத்தை உருவாக்குவார்கள். மனிதனை ஆராய்ந்து ஜோதிட சாஸ்திரத்தையும்,
விண்வெளியை ஆராய்ந்து வானவியலையும் கண்டுபிடிப்பார்கள்.
அல்லது மனிதனின் உடலை ஆராய்வார்கள், மனிதனின் மனத்தை ஆராய்வார்கள்,
பூமியை ஆராய்வார்கள், இன்னும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தேவையான புதியவற்றை கண்டுபிடித்துகொண்டே இருப்பார்கள்.
அவர்கள் கண்டுபிடித்ததை மன்னரிடம் கொடுத்து,மக்களுக்கு பயன்படும் படி செய்வார்கள்.
அவர்களிடமிருந்து அரசாங்கள் வரி வாங்க முடியாது,பதிலுக்கு அரசாங்கம் தான் அவர்களுக்கு தேவையான உதவிளை செய்து,அவர்களின் அறிவை பெற்றுக்கொள்ளவேண்டும்.இவ்வாறு அறிவை உபயோகித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
-
பிராமணர்கள் என்றால் பிரம்மம் அதாவது இறைவனை குறித்து சிந்திப்பவர்கள். அவ்வாறு இறைவனை குறித்து சிந்திக்கும் போது இயற்கையின் ரகசியங்கள் அனைத்தையும் அறிகிறார்கள். அதையே பல்வேறு சாஸ்திரங்களாக உருவாக்கி மக்களுக்கு பயன்படும் படி செய்கிறார்கள். இவர்கள் ரிஷி என்றும் சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் சுயமாக சம்பாதிக்கக்கூடாது,அந்த நாட்டின் அரசர்கள் தரும் உணவை பெற்றுக்கொண்டு, பதிலுக்கு தங்கள் அறிவை அரசர்களுக்கு கொடுத்து வாழவேண்டும்.
-
அடுத்தது நமது உடலில் தலைக்கு கீழ் உள்ள பாகம் இங்கே இதயம் உள்ளது. இதயம் என்பது மற்றவர்களுக்காக இரங்குவது,உதவுவது,நல்லவர்களை காப்பது.தர்மத்தை நிலை நாட்டுவது. இவர்கள் நல்லோரை காக்கவும் தீயோரை அளிக்கவும் தங்கள் வாழ்நாளை செலவு செய்கிறார்கள். பொதுவாக அரசர்கள், மந்திரிகள் போன்ற ஆட்சியாளர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்களை சத்திரியர்கள் என்று அழைத்தார்கள்.
-
அடுத்து நமது உடலில் இருக்கும் முக்கிய பாகம் வயிறு. இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் உணவு அளித்தல். சமுதாயத்தில் உணவு உற்பத்தி, இதனுடன் தொடர்புள்ள தொழிற்சாலைகள், கலைக்கூடங்கள் உட்பட அனைத்து தொழில் செய்பவர்களும் ஒருவரோடு ஒருவர் வாழ்வின் பின்னிப்பிணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வைசியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். யாருக்கும் அடிபணியாமல் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் அனைவருமே வைசியர்கள் என்று அழைக்கப்படார்கள்.இவர்களுக்கு வரி விதிக்கப்பட்டது. சமுதாயத்தில் உற்பத்தியை பெருக்குபவர்கள் இவர்கள் மட்டுமே.
-
அடுத்து நமது உடலில் முக்கியமான உறுப்பு கால்கள். கால்கள் நடந்து செல்ல உதவுகிறது.
மேலே உள்ளவர்கள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதை ஏற்று நடப்பது தான் கால்களின் வேலை.
வைசியர்கள் மற்றும் சத்திரியர்களின் கீழ் வேலை செய்யும் அனைவரும் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சூத்திரர் என்றால் முக்கியமானவர் என்று பொருள்.
கிருஷ்ணரை மகாபாரதத்தின் சூத்திரதாரி என்று சொல்வார்கள்.
உடலின் எல்லா பாகங்கள் நன்றாக இருந்தாலும் கால்கள் இல்லாவிட்டால் ,அவன் முழுமனிதனாக முடியாது.
ஆகவே சூத்திரர்கள் ஒரு நாட்டிற்கு முக்கியமானவர்கள்.
சூத்திரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்து அவர்களை சுதந்திரமாகவும் அன்பாகவும் நடத்த வேண்டியது,சத்திரியர்கள் மற்றும் வைசியர்களின் கடமை.
-
பிராமணர்கள் தங்கள் அதிகாரத்தை சத்திரியர்கள்மீது மட்டுமே செலுத்த வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் இறைவனை மட்டுமே நாடி வாழ்கிறார்கள்.
சத்திரியர்களுக்கு கூட அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல, இறைவனைத்தவிர இந்த உலகத்தில் அவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.அவர்களுக்கு தேவைகள் குறைவு, சத்திரியர்கள் அவர்களது தேவைகளை தீர்த்துவிடுவதால்,மற்ற பிரிவினர்களுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்கக்கூடாது.
வியாபாரிகளிடமிருந்து பணமோ பொருளோ வேறு எதையுமே வாங்கக்கூடாது, அது மட்டுமல்ல சூத்திரர்களை தங்களின் வேலைகளை செய்வதற்காக அமர்த்தக்கூடாது.அவர்கள் சுயமாக சம்பாதிக்ககூடாது. சொந்தமாக நிலமோ, ,உடமைகளோ எதுமே இருக்ககூடாது. இறைவனை மட்டுமே சார்ந்து வாழ்பவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
-
சத்திரியர்கள், பிராமணர்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள், பிராமணர்களிடம் அறிவை பெற்றுக்கொண்டு, நல்லாட்சி நடத்துவார்கள். தங்கள் படைகளில் உள்ள சூத்திர்கள்(போர்வீரர்கள்) மற்றும் தங்களின் கீழ் உள்ள வைசியர்களிடம் அன்பாகவும் நடந்துகொண்டு, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு.
-
இந்த ஜாதிமுறைகள் பிறப்பை அடிப்படையாக கொண்டதா?
-
கண்டிப்பாக இல்லை. ஒருவன் பிறக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் கீழ்தான் பிறந்து அவர்களின் கட்டுப்பாட்டுடன் தான் வளர்கிறான்.ஆனால் வளர்ந்த பிறகு அவனிடம் உயர்ஜாதிக்கான திறமைகள் இருந்தால்,அதை நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவன் மேல் ஜாதியாக கருதப்படுவான். உதாரணமாக ஒரு போர்வீரன் சிறந்த திறமைகளை உடையவனாக இருந்தால், சத்திரியனாக மாறி, ஒரு நாட்டையே ஆட்சி செய்ய முடியும்.அதேபோல் சூத்திரன் சுயமாக தொழில்புரிந்து வைசியனாகவும் மாற முடியும்.
-
அதேபோல் உயர் ஜாதியில் உள்ள ஒருவன் தாழ்ந்த சாதிக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஒரு சத்திரியன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்யாவிட்டால், மக்கள் கலகத்தில் ஈடுபட்டு அவனை சிறைபிடித்து, வேலைக்காரன் (சூத்திர)நிலைக்கு இறக்கிவிடுவார்கள். ஒரு பிராமணன் தன் கடமையை சரியாக செய்யாவிட்டால், பிராமண ஜாதியிலிருந்து விலகி, சத்திரிய ஜாதியை அடைய வாய்ப்புள்ளது.
-
இதை கீழ்கண்ட உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.
துரோணாச்சாரியர் பிறவியில் பிராமணர்,ஆனால் பழிவாங்கும் எண்ணம் கொண்டதால்,அவர் சத்திரியராக மாறவேண்டியிருந்தது.
விதுரர் பிறவியில் சூத்திரர், ஆனால் சத்திரியனுக்குரிய வீரம் இருந்ததால் சத்திரியனாகவும், பிறகு அதை துறந்து பிராமணலட்சியத்தை ஏற்றுக்கொண்டு பிராமணனாகவும் உயர்ந்தார்.
கர்ணன் வளர்ப்பில் சூத்திரராக இருந்த போதும்,அவரது வீரம் காரணமாக சத்திரியராக மாறினார்.இவ்வாறு மகாபாரதத்தில் பல உதாரணங்களை காணலாம்.
-
ஸ்ரீகிருஷ்ணர் ஏன் ஜாதிகளை ஆதரித்து பேசினார்?
-
அந்த காலத்தில் ஜாதி முறைகள் சிறப்பாக இயங்கி வந்திருக்கின்றன. அந்தந்த ஜாதியினர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வந்ததால்,சமுதாயம் சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அதனால் தான் கிருஷ்ணர் இந்த பிரபஞ்சத்தில் சிறப்பான அனைத்தையும் தானே உருவாக்கினேன் என்று ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வரும்போது ஜாதியையும் சேர்த்து சொன்னார்.
-
கிருஷ்ணர் தனது நாட்டை ஆளும்போது சிறந்த சத்திரியராகவும், அர்ஜுனனுக்கு வேதாந்த போதனை செய்யும்போது பிராமணனாகவும், அர்ஜுனனுக்கு தேரோட்டும்போது சூத்திரனாகவும் வாழ்ந்தார் என்று சொல்லலாம்.
-
அப்படியானால் இந்த ஜாதிமுறைகள் எப்படி சீர்கெட்டன?
-
ஒரு ஜாதியில் பிறக்கும் ஒருவன் ,அந்த ஜாதிக்குரிய பண்புகள் இல்லாதவனாக இருந்தால், எந்த ஜாதிக்குரிய பண்புகள் அவனிடம் இருக்கின்றனவோ, அந்த ஜாதியில் சேர்த்துவிடும் பழக்கம் பின்பற்றப்படவில்லை. உதாரணமாக
பிராமண ஜாதியில் பிறக்கும் ஒருவன், பிறந்த உடனேயே பிராமணனுக்குரிய பண்புகளை பெற்றுவிடுவதில்லை. பல ஆண்டுகள் கடின தவம் புரிந்த பிறகு தான் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் பண்புகளை பெற்று பிராமணனாக மாறுகிறான். ஆனால் வளர்ந்த பிறகும் இந்த பண்புகளை பெறாமல் ஒருவன் தன்னை பிராமணன் என்று கூறிக்கொண்டு, அரசர்கள் தரும் சலுகைகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்ததும், அவனை அந்த பிராமண சமுதாயம் ஆதரித்ததும் முதல் தவறு.
-
தங்களை பிராமணர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், அதற்கான தகுதிகள் இருப்பதை முதலில் நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த ஜாதியின் சேர்ந்துகொள்ள வேண்டும். .
-
இது பற்றி வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
-
பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியினால் ஒருவன் பிராம்மணனா என்றால் இல்லை.
பிறப்பின் அடிப்படையில் வருபவன் பிராமணன் அல்ல. ருஷ்ணசிருங்கர்,கௌசிகர்,வால்மீகி,வியாசர்,கௌதமர்,வசிஷ்டர்,அகத்தியர்,வியாதர் போன்ற பல ரிஷிகள் பிராம்மண குலத்தில் பிறக்கவில்லை.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வருபவன் பிராம்மணன் இல்லை. -சாமவேதம்-வஜ்ரஸுசிகோபநிஷத்-ஸ்லோகம்-5
-
அறிவு எதுவரை சுயநலம் அற்றதாக இருக்குமோ அது வரை நமக்கும் பிறருக்கும் நல்லது.
எப்போது அறிவு தன்நலத்தில் கவனம் செலுத்துமோ, அப்போது அனைத்தும் கெட்டுவிடும்.
சத்திரியர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் தங்கள் சுயநலத்தை நாடியது தான் இந்த ஜாதிமுறைகள் கெட்டுப்போனதற்கான முதல் காரணம்.
பிராமணர்கள் தங்கள் முன்னோர்களால் வழங்கப்பட்ட வேதத்தை ரகசியமாக்கினார்கள்.
பிராமணர்கள் செய்ய வேண்டிய தொழில் ஆறு.
வேதம் கற்றல், கற்பித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல், வேள்விகளைச் செய்தல், செய்வித்தல்.
இந்த ஆறும் பிராமணர்கள் தங்களுக்குள் செய்து கொள்வார்கள்.
பிற ஜாதியினருக்கு வேதம் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். பிற ஜாதியினருக்கு யாகம் செய்விக்கமாட்டார்கள். பிற ஜாதியினரிடமிருந்து தானம் வாங்க மாட்டார்கள்.
-
முற்காலத்தில் ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு ஜாதிக்கு எளிதாக செல்ல முடிந்தது என்பதை பார்த்தோம். சிலரின் சுயநலத்தால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, ஜாதிகள் கடக்கமுடியாத சுவர்களாக மாற்றப்பட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவைகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட்டார்கள். இது சில ஜாதியினர் முன்னேறுவதற்கும்,சலுகைகளை பெறுவதற்கும் வசதியாக இருந்தது. சில ஜாதியிர் தொடர்ந்து பின்னோக்கி சென்று, கடைசியில் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படார்கள்.
-
சூத்திரர்கள் தினமும் மாடுகளைவிட அதிகமாக வேலை வாங்கப்பட்டார்கள். அவர்களின் சுதந்திரம் பறிக்கபட்டது. முற்காலத்தில் மகாபாரதத்தில் கர்ணன் ஒரு சூத்திரனாக இருந்தபோதும் அரசர்கள் கூடிய சபையில் பேச அனுமதிக்கபட்டன். அந்த காலத்தில் இருந்த நிலையை பிற்காலத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.
உயர்சாதியினர் வாழும் தெருக்களில் செல்ல சூத்திரர்கள் அனுமதிக்கப்படவில்லை.அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. வேதம் படிக்க அனுமதி இல்லை. இவ்வாறு அந்த காலத்தில் நிலவிய அற்புதமான ஜாதி என்ற அமைப்பு பிற்காலத்தில் தீமைநிறைந்ததாக மாறிவிட்டது.
-
ஜாதியை நீக்க முடியுமா?
-
ஜாதி என்றால் என்ன என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.
ஜாதி என்பது தொழில் காரணமாகவும், குணத்தில் காரணமாகவும் ஏற்படுகின்ற ஒன்று.
தற்காலத்தில் இந்த ஜாதிமுறைகள் உருவம் மாறியிருக்கின்றன.
-
1.அந்த காலத்து பிராமணர்கள்,அறிவை பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் தற்கால விஞ்ஞானிகளாக மாறியிருக்கிறார்கள். பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள்.அரசாங்கம் அவர்களை பாதுகாத்துவருகிறது. அவர்களது அறிவு அரசாங்கத்திற்கு பயன்பட்டுவருகிறது.
-
2. நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பிரதமர், முதல்வர்,அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தான் சத்திரியர்கள்.இவர்கள் தான் ஸ்மிருதிகளை(சட்டங்களை)உருவாக்குகிறார்கள்.
-
3.சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வியாபாரிகள்,விவசாயிகள் அனைவரும் வைசியர்கள்.இவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வரியாக செலுத்துகிறார்கள்.
-
4. போர்வீரர்கள் மற்றம் தொழிற்சாலை உட்பட அனைத்து இடங்களிலும் சம்பளத்திற்காக வேலை செய்யும் அனைவரும் சூத்திரர்கள்.இவர்களுக்கு சுயமாக சிந்திக்க உரிமை இல்லை. மேலே உள்ள முதலாளிகள் இட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும். தொழிற்சாலை நிர்வாகிகள் இவர்களையும் காப்பாற்றுகிறார்கள்.
-
இப்போது முற்காலத்தை போலவே ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு எளிதாக மாறமுடியும். ஒரு தொழிலாளி ,திறமையுள்ளவனாக இருந்தால் வைசியனாக,அதாவது முதலாளியாக மாற முடியும். ஒரு வைசியன் திறமையானவனாக இருந்தால் நாட்டை ஆளும் சத்திரியனாக முடியும். அறிவுள்ள யாரும் பிராமணனாக அதாவது விஞ்ஞானியாக முடியும்.
-
ஜாதி அல்லது பிரிவு என்பது எக்காலத்திலும் இருக்கக்கூடியது.ஆனால் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளை உருவாக்குவது வேதத்திற்கு எதிரானது.மனித குலத்திற்கே எதிரானது.
வேறுபாடுகள் என்பது எல்லா நாட்டிலும் இருக்கக்கூடியது. ஆனால் அவர்களுக்குள்ளே சுதந்திரமும், முன்னேறுவதற்கான வாய்ப்பும் இருக்கவேண்டும்.-
-
இந்த ஜாதி அமைப்புகளை சமுதாயம் தான் ஏற்படுத்துகிறதே தவிர மதம் ஏற்படுத்தவில்லை.
அந்த காலத்திலம் சரி எந்த காலத்திலும் சரி இந்துமதம் ஜாதிகளை உருவாக்கவில்லை.
ஜாதிகளின் விசயத்தில் தலையிடவும் இல்லை. இனிமேலும் அது தலையிடாது.
ஆகவே யாராவது ஜாதிக்கும் மதத்திற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால் அவர்கள் உண்மை அறியாதவர்கள்,வரலாறு தெரியாதவர்கள்.
-
தொழில் காரணமாக ஏற்படும் ஜாதிகள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன.எல்லா காலத்திலும் இருக்கின்றன.
மன்னனின் மகன்தான் அந்த நாட்டின் மன்னனாக மீண்டும் வரமுடியும் என்ற நிலை அந்த காலத்தில் இருந்தது.
பரம்பரை தொழில் என்பது முற்காலத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.ஒரு பரம்பரையை சேர்ந்தவன் அந்த பரம்பரை தொழிலைவிட்டு இன்னொரு தொழிலை செய்ய அந்த காலத்தில் முடியாது.
இப்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.
-
தற்காலத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு.திடீரென்று ஜாதிகள் உருவாகவில்லை.
ஒவ்வொரு ஜாதியும் ஆயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரியத்தை உடையது.
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ அப்யத்ர மோஹிதா:।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 4.16 ॥
4.16 கர்மம் எது, செய்யக்கூடாத கர்மம் எது என்றும், இன்னும் இதுகுறித்து ஞானிகள்கூட குழப்பமடைகிறார்கள்.
எதை அறிந்து கேடுகளிலிருந்து விடுபடுகிறாயோ அந்த கர்மத்தை உனக்கு சொல்கிறேன்.
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:।
அகர்மணஷ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:॥ 4.17 ॥
4.17 ஏனென்றால் கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்,
விலக்கப்பட்ட கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
செய்யக்கூடாத கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கர்மத்தின்போக்கை அறிவது கடினம்
-
கர்மம் என்றால் செயல் என்று அர்த்தம்.
எல்லா செயல்களும் கர்மம்தான்.இதில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது?
இதை எப்படி அறிந்துகொள்ளவது?
தன்னுடைய மதத்தை சாராதவர்களை கொல்லலாம் என்று ஒரு நூல் கூறுகிறது.
அந்த மதத்தில் நம்பிக்கை உள்ளவன் அதேபோல செய்கிறான்.அவனைப்பொறுத்தவரை இது செய்ய வேண்டிய கர்மம் என்று நினைக்கிறான்.இதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்புகிறான்.
இன்னொரு மதத்தை பின்பற்றுபவனைப் பொறுத்தவரை இது மகாபாவம்.
இப்படியே ஒவ்வொருவரும் தாங்கள் எதை நம்புகிறார்களோ அதன்படியே செய்யலாமா?
இதில் செய்ய வேண்டிய கர்மம் எது? செய்யக்கூடாத கர்மம் எது என்பதை எப்படி அறிவது?
-
மிருகங்களின் வசிப்பிடங்களை மனிதர்கள் கைப்பற்றிக்கொண்டே வருகிறார்கள்.
சில வேளைகளில் மிருகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து மனிதர்களை கொல்கிறது.
இதனால் மனிதன் மிருகங்களைக் கொல்கிறான்.
இதில் எது கர்மம்? எது அகர்மம்?
மிருகங்களின் நோக்கத்தில் பார்த்தால் மனிதர்கள் செய்வது அகர்மம்
மனிதர்களின் பார்வையில் மிருகங்கள் செய்வது அகர்மம்
-
மனிதர்கள் காய் கனிகளை பயிரிடுகிறார்கள்.நன்றாக வளர்க்கிறார்கள். குறிப்பிட்ட காலம் வந்ததும் அவைகளை அறுவடை செய்கிறார்கள்.இதனால் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுகிறது.ஆனால் அந்த தாவரங்களுக்கும் உயிர் உள்ளதே! அதனுடைய பார்வையில் இது சரியா?
இதில் கர்மம் எது? அகர்மம் எது?
-
ஒரு ஊரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.மனிதர்கள் உணவின்றி சாகும் நிலைக்கு சென்றார்கள்.
அந்த ஊரில் ஒரு கோவில் இருந்தது.சாமிக்கு படைப்பதற்காக தானிய தானிய கிடங்கு ஒன்று இருந்தது.
அதில் ஒரு வருடத்திற்கு தேவையான தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிலர் அந்த கோவில் உணவுக்கிடங்கிலிருந்து திருட்டுத்தனமாக தானியங்களை கொண்டு வந்து தங்கள் ஊரில் உள்ள எல்லோருக்கும் கொடுத்தார்கள்.இதனால் ஊரில் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
இந்த விசயம் அரசனுக்கு தெரிய வந்தது. கோவில் பண்டக சாலையிலிருந்து உணவை திருடியவர்களை பிடித்து மரண தண்டனை விதித்தார் அரசர்.
திருடர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அரச நீதி.
அதை நிறை வேற்றாவிட்டால் மக்கள் அவரை நீதிதவறியவர் என்பார்கள்.
இதை உதாரணமாக வைத்து பலர் திருட முற்படுவார்கள்
திருடாமல் இருந்திருந்தால் பல உயிர்கள் இறந்துபோயிருக்கும்.உயிர்களை காப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை
இதில் செய்ய வேண்டிய கர்மம் எது? செய்யக்கூடாத கர்மம் எது?
எனவே அறிஞர்கள்கூட எது செய்ய வேண்டிய கர்மம்? எது செய்யக்கூடாத கர்மம்? என்று தெரியாமல் குழம்பிப்போகிறார்கள்.
-
கர்மத்தின் போக்கை அறிவது கடினம்.
-
ஒரு காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவி உயிரைவிட்டுவிடுவாள்,அல்லது கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிரைவிடுவாள்.இது நல்ல கர்மம் என்று மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் காலம் செல்ல செல்ல கணவன் இறந்த உடன் மனைவி கண்டிப்பாக உடன்கட்டை ஏற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. கணவன் எழுவது வயதை உடைய கிழவனாக இருப்பான்.மனைவி இருபது வயதை உடைய இளம் பெண்ணாக இருப்பாள். கணவன் இறந்த உடன் இவள் வலுக்கட்டாயமாக உடன் கட்டை ஏற வைக்கப்பட்டாள்.இவைகள் நமது சமுதாயத்தில் நடந்தன.
கணவன் இறந்தஉடன் மனைவி உடன்கட்டை ஏறுவது நல்ல கர்மம் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
பிற்காலத்தில் அதுவே தீய கர்மம் என்று ஒதுக்கும்படியாக ஆகிவிட்டது.
ஒரு காலத்தில் நல்லதாக தெரிவது இன்னொரு காலத்தில் தீயதாக மாறிவிடுகிறது.
-
கொல்லாமை என்பது உயர்ந்த பண்பு. எந்த உயிர்களையும் கொல்லக்கூடாது.
ஒரு ஊரில் உள்ள மக்கள் கொல்லாமையை தீவிரமாக பின்பற்றினார்கள்.
அவர்கள் யாரையும் எதற்காகவும் துன்புறுத்த விரும்புவதில்லை.
இன்னொரு கிராமத்தில் தீயவர்கள் பலர் இருந்தார்கள்.
அவர்கள் இந்த நல்ல கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ளவர்களை அடித்து,துன்புறுத்தி,கொலை செய்து,அந்த கிராமத்திலுள்ள பொருட்களை களவாடி,பெண்களை அடிமைகளாக இழுத்து சென்றார்கள்.
-
கொல்லாமை என்பது செய்ய வேண்டிய கர்மம் தான்.
அந்த கிராமத்தினர் அதைத்தான் பின்பற்றினார்கள்.ஆனால் அவர்களுக்கு ஏன் இந்த தண்டனை?
-
காலம்,இடம்,காரணம் இவைகளுக்கு ஏற்ப அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது.
இன்று ஒரு செயல் செய்ய வேண்டிய செயலாக இருக்கும்.நாளை அது செய்யக்கூடாத செயலாக மாறிவிடும்.
ஒரு இடத்தில் ஒரு செயல் நல்ல வரவேற்றை பெறும்.அதே செயல் இன்னொரு இடத்தில் பலத்த எதிர்ப்பை கொடுக்கும்.
-
இதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறும் முடிவு என்ன?
-
கர்மண்யகர்ம ய: பஷ்யேதகர்மணி ச கர்ம ய:।
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்॥ 4.18 ॥
4.18 யார் செய்யவேண்டிய கர்மத்தில், செய்யக்கூடாத கர்மத்தையும்(அகர்மம்), செய்யக்கூடாத கர்மத்தில் செய்யவேண்டிய கர்மத்தையும் (நன்மையில் தீமையையும், தீமையில் நன்மையையும்) காண்கிறானோ அவன், மனிதர்களுள் புத்திமான். அவன் யுக்தன் ஏற்கனவே எல்லா கர்மங்களையும் செய்தவன்.
-
எந்த செயலாக இருந்தாலும் அதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்.
ஒரு செயலில் நன்மை அதிகமாகவும் தீமை குறைவாகவும் இருந்தால் அது நல்ல செயல் அதைச்செய்யலாம்.
அதே வேளையில் தீமை அதிகமாகவும் நன்மை குறைவாகவும் இருந்தால் அதைச் செய்யக்கூடாது.அது அகர்மம்.
-
எந்த செயலைச் செய்தால் புண்ணியம் அதிகமாகவும் பாவம் குறைவாகவும் வருமோ அந்த செயல் நல்ல செயல் அது செய்ய வேண்டிய செயல்.
வகுப்பு-19 நாள்-13-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 4.11 ॥
4.11 யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ,அவர்களுக்கு நான் அப்படியே(அவர்கள் விரும்பியபடியே) இருக்கிறேன். பார்த்தா மனிதர்கள் எல்லா இடங்களிலும் என்னுடைய மார்க்கத்தையே(எல்லா மார்க்கமும் இறைவனுடையது) பின்பற்றுகிறார்கள்
இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோரும் இறைவனை வழிபடுகிறார்கள்.ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியாக வழிபடுவதில்லை.
காட்டில் வேட்டையாடி வாழ்ந்துவரும் மனிதனும் இறைவனை வழிபடுகிறான்.மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் வைத்து விலங்குகளை பலியிட்டு வழிபடுகிறான்.அவனைப்பொறுத்தவரை அதுதான் தங்கள் இனத்தை காக்கும் தெய்வம்.அது மட்டுமல்ல அந்த தெய்வம்தான் இந்த உலகத்தையே காக்கிறது என்று நினைக்கிறான்.
சமவெளியில் வாழும் மனிதன் கல்லினால் சிறு உருவம் வைத்து வழிபடுகிறான்.தனக்கு எது பிடிக்குமோ அவைகளையெல்லாம் படைத்து வணங்குகிறான்.அவனைப்பொறுத்தவைரை அவன் வழிபடும் தெய்வம்தான் உலகத்திலேயே உயர்ந்த தெய்வம்
இன்னும் சிலர் உருவம் வைத்து வழிபடுவதில்லை.ஆனால் தினமும் பல தடவை மண்டியிட்டு இறைவா! இறைவா என்று பிரார்த்திக்கிறார்கள்.அவர்களைப்பொறுத்தவரை அந்த தெய்வம்தான் உலகத்திலேயே உயர்ந்த தெய்வம்.
சிலர் எல்லா உயிர்களிலும் இறைவன்தான் இருக்கிறார் என்ற எண்ணத்தில் எல்லா உயிர்களையும் வழிபடுகிறார்கள்.அவர்களைப்பொறுத்தவரை இறைவன் எல்லா உயிர்களுமாக இருக்கிறார்.
இன்னும் சிலர் இறைவன் இந்த உலகத்தில் இல்லை.சொர்க்கத்தில் இருக்கிறார் .அங்கே சென்றால் பார்க்கலாம் என்கிறார்கள்
எந்த மனிதனை எடுத்துக்கொண்டாலும் அவன் வழிபடும் தெய்வம் உயர்ந்தது என்றே நினைக்கிறான்.
தான் வழிபடுவது தாழ்ந்தது என்ற எண்ணம் ஏற்படுமானால் பின்னர் அவனால் முழுமனத்துடன் வழிபட முடியாது.
யார் எந்த எந்த மனநிலையில் இருக்கிறார்களோ அந்த அந்த மனிநிலைக்கு ஏற்ப தெய்வத்தை உருவாக்கி வழிபடுகிறான்.
ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொல்கிறார்?
எல்லோரது மனத்திலும் இருப்பது ஒரே எண்ணம்தான். தான் வழிபடும் இறைவனே இந்த உலகத்தை படைத்து.காத்து.அழித்து வருகிறார். அந்த இறைவனே மழையை பெய்விக்கிறார்.மனிதர்களையும் விலங்குகளையும் படைத்துள்ளார் என்பதாகும்.
ஒரு காட்டுவாசியைக்கேட்டாலும் இதைத்தான் சொல்வான்,நகர வாசியைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வான்.
மனிதன் வளர்ச்சி அடைய அடைய அவனது வழிபாடுகளும் வளர்ச்சி அடைகிறது.ஆனால் இந்த உலகத்தை படைத்தது கடவுள்தான் என்ற கருத்து மாறுவதில்லை.
ஸ்ரீகிருஷ்ணர் உலகத்தில் உள்ள மார்க்கங்கள் எல்லாம் என்னுடைய மார்க்கமே என்று கூறுகிறார்.மனிதர்கள் எல்லா இடங்களிலும் என்னையே வெவ்வேறு விதமாக வழிபடுகிறார்கள் என்கிறார்.
வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஷ்ரிதா:।
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:॥ 4.10 ॥
4.10 ஆசை, அச்சம், கோபம் நீங்கியவனாய் என்மயமாய் , என்னை அடைக்கலம் புகுந்தவர்களாய்,
ஞான தபசால் புனிதர்கனான பலர் என் இயல்பை அடைந்தார்கள் .
ஆசை,அச்சம்,கோபம் நீங்கியவர்கள் என் இயல்பை அடைகிறார்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
அவரது இயல்பு என்ன?
இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு என்று பார்த்தோம். ஒன்று செயல்படாத நிலை. இதற்கு பிரம்மம் என்று பெயர் .
இன்னொன்று பிரபஞ்சத்தை தனது உடலாகவும்,பிரபஞ்ச மனத்தை தனது மனமாகவும் கொண்டுள்ள பரமாத்மா
இந்த நிலைக்கு வேதாந்தத்தில் ஈஸ்வரன் என்று பெயர்.
ஈஸ்வரனது உடலை யாராலும் பார்க்க முடியாது.கோடான கோடி அண்டஙகளையும்.சந்திர சூரியர்களையும் தனக்குள்ளே கொண்டிருக்கும் அந்த உடலை அறியும் வல்லமை யாருக்கும் இல்லை.
அதேபோல ஈஸ்வரனின் மனத்தையும் யாராலும் அறிய முடியாது.உலகிலுள்ள மனிதர்கள்,விலங்குகள்,செடி.கொடிகள்,தேவர்கள் உட்பட இயங்கும்,இயங்காத அனைத்தையும் பற்றிய அறிவு பிரபஞ்ச அறிவு.இந்த அறிவை தன்னிடம் கொண்டுள்ளவரைப்பற்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாது.
-
இந்த மிக உயர்ந்த நிலையை அடைய முடியுமா என்றால் முடியும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
ஆசை,அச்சம்,கோபம் நீங்கி பிரபஞ்ச இயல்பை நோக்கி செல்ல வேண்டும்.அத்துடன் இறைவனை சரணடைய வேண்டும்.அகங்காரம் உடையவர்களால் உயர்ந்த நிலையை நோக்கி செல்ல முடியாது.ஞானத்தால் தன்னை புனிதமாக்கிக்கொண்டவர்கள் ஈஸ்வர இயல்பை அடைகிறார்கள்.
-
இறைவனை நோக்கி செல்லும் பாதை இரண்டு என்று பார்த்தோம்.
1.ஒன்று உடல் மற்றும் மனத்தை விட்டுவிட்டு ஆத்மாவை நோக்கி செல்லும் பாதை.இதைப்பற்றி சாங்கிய யோகம் என்ற அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
2.இன்னொன்று நமது சிறிய உடலை பிரபஞ்ச உடல் அளவுக்கு விரிவுபடுத்தி, நமது மனத்தை பிரபஞ்ச மனத்தின் அளவு விரிவுபடுத்தி பரமாத்மாவை நோக்கி செல்லும் பாதை.இதை அவர் யோகம் என்கிறார்.இதைப்பற்றி இன்னும் விரிவாக கூற இருக்கிறார்.
-
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:।
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுந॥ 4.9 ॥
4.9 அர்ஜுனா,இவ்வாறு யார் என்னுடைய இந்த திவ்யமான பிறப்பையும்
செயலையும் உள்ளபடி அறிகிறானோ அவன்
உடலைவிட்டு மறுபடியும் பிறப்பை அடைவதில்லை.
என்னையே அடைகிறான்.
இறைவனைப்பற்றியும்,இறைவனது செயல்களைப்பற்றியும் அறிய வேண்டுமானால் இறைவனைக்குறித்து தவம் செய்ய வேண்டும்.இறைவனை சரணடைய வேண்டும்.அப்படிப்பட்ட புனிதவான் உடலை விட்ட பிறகு இறைவனையே அடைகிறான்.அவன் இறைவனுடன் ஒன்றாகிவிடுகிறான். மறுபடி பிறப்பதில்லை.
-
சாங்கிய மார்க்கத்தில் செல்பவனும் மறுபடி பிறப்பதில்லை. யோக மார்க்கத்தில் செல்பவனும் மறுபடி பிறப்பதில்லை.
சாங்கிய மார்க்கத்தில் செல்பவன் பிரம்மத்துடன் ஒன்றாகிவிடுகிறான்.
யோக மார்க்கத்தில் செல்பவன் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுகிறான்.
-
இப்போது இவர்கள் இரண்டுபேரும் அடையும் நிலை வேறா? இடம் வேறா?
இல்லை. பிரம்மமும்,பரமாத்மாவும் ஒன்று தான்.
-
-
-
வகுப்பு-20 நாள்-14-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஷ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரம்தப।
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே॥ 4.33 ॥
4.33 எதிரிகளை வாட்டுபவனே, பொருட்களைக்கொண்டு செய்யும் யக்ஞத்தைவிட,
ஞானத்தை பிறருக்கு கொடுக்கும் யக்ஞம் மேலானது. பார்த்தா,
உலகில் உள்ள கர்மம் எல்லாம் ஞானத்தில் முற்றுப்பெறுகிறது
யக்ஞம் என்றால் என்ன?
பிரதிபலன் பார்க்காமல் தன்னிடம் உள்ளவற்றை கொடுப்பது யக்ஞம்
யக்ஞம் மூன்று வகைப்படும்
1.பிரதிபலன் பார்க்காமல் உயிர்களுக்கு உணவிடுதல்
2.பிரதிபலன் பார்க்காமல் மனிதர்களுக்கு வாழ்க்கை கல்வியை போதித்தல்
3.பிரதிபலன் பார்க்காமல் தகுந்த சீடர்களுக்கு ஞானத்தை கொடுத்தல்
-
வாசலில் ஒரு பிச்சைக்காரன் நிற்கிறான்.அவனுக்கு உணவிடுகிறோம்.பதிலுக்கு அவனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.இது ஒரு யக்ஞம்.
சிலர் உயிர்களுக்கு உணவிடுவதையே முழுநேரமும் மேற்கொள்வார்கள்.அது சிறந்த பணி.
அடுத்து
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கைக் கல்வி அல்லது தொழில் கல்வியை பிரதிபலன் பார்க்காமல் போதிப்பது மிகச்சிறந்த செயல்
சிலர் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு சுயதொழில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
அனைத்தையும் விட உயர்ந்தது
மனிதனின் அறியாமையை நீக்குவது.அதை குருவால் மட்டுமே செய்ய முடியும்.யாரிடம் அறியாமை இல்லையோ அவரால்தான் பிறரது அறியாமையை நீக்க முடியும்
உணவு தானம் கொடுத்தல் ஒருவனது ஒரு நாள் பசி துன்பம் நீக்கும்
கல்வியை தானமாகக் கொடுத்தால் அந்த பிறவி துன்பம் நீங்கும்
ஞானத்தை தானமாகக் கொடுத்தால் பல பிறவி துன்பம் நீங்கிவிடும்.
-
இந்த ஞானத்தை எப்படி பெறுவது?
-
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா।
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந:॥ 4.34 ॥
4.34 பணிந்தும், கேட்டும்,பணிவிடைசெய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள்.
தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்
-
குருவிடம் ஞானம் இருக்கிறது. சீடன் அதை எப்படி பெற வேண்டும்?
பணிந்தும்,கேட்டும்,பணிவிடை செய்தும் அந்த ஞானத்தைப்பெற வேண்டும்.
அவ்வப்போது குருவை சந்திக்க வேண்டும். அவருடன் சிறிது நேரமாவது செலவிட வேண்டும். பணிவாக இருக்க வேண்டும். தனது மனத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க வேண்டும்.அத்துடன் குருவுக்கு பணிவிடை செய்யவும் வேண்டும்.
எதற்காக குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும்?
இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை.
ஒன்றை கொடுத்தால் அதற்கு இணையான இன்னொன்றைப் பெறலாம்.
குருவால் மற்ற மனிதர்களைப்போல தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
எப்போதும் உயர்ந்த மனநிலையிலேயே இருப்பதால் அவரது உடல் மிகவும் மென்மையாக இருக்கும்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்வதற்கே சிரமமாக இருக்கலாம்.
உலகியல் மனிதர்களுடன் தொடர்புகொள்வது இயலாத ஒன்றாக இருக்கும்.
இதனால் குருவுக்கு சீடர்களின் உதவி தேவைப்படுகிறது.
சில சீடர்கள் குருவிடம் அடிக்கடி தேவையில்லாத கேள்விகளைக்கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
அதுவும் தவறு.அது பணிவு அல்ல
ஒவ்வொரு சீடனின் மனநிலை என்ன என்பது குருவுக்கு தெரியும்.
ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரத்தில் பத்து லிட்டர் பாலை நிரப்ப முடியுமா? முடியாது.
அதேபோல சீடனின் மனநிலைக்கு ஏற்பவே குரு ஞானத்தை போதிப்பார்.
உயர்ந்த ஞானத்தை பெறும் தகுதி எல்லோருக்கும் உடனே கிடைப்பதில்லை.
எனவே ஞானம் உடனே வேண்டும் என்று குருவிடம் கேட்கக்கூடாது.
-
ஞானத்தை அடைய ஒரு மனிதன் நூறு படிகளை தாண்டி செல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
தற்போது சிலர் பத்தாவது படியில் இருப்பார்கள்.சிலர் ஐம்பதாவது படியில் இருப்பார்கள். குருவின் தொடர்பினால் யார் எந்த படியில் இருக்கிறார்களோ அந்த படியிலிருந்து முன்னேறுவார்கள்.
பத்தாவது படியில் இருக்கும் ஒருவர் ஒரே தாவலில் நூறாவது படியை அடைய முடியாது.
-
சில நேரங்களில் குருவின் தொடர்பினால் சீடர்களுக்கு ஞானம் தானாக ஏற்படும்.
குரு எதையும் போதிக்க வேண்டிய தேவையில்லை. குருவின் அருகில் இருந்தாலே போதும்.
-
குரு அப்படி என்ன ஞானத்தை போதிப்பார்?
-
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ।
யேந பூதாந்யஷேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி॥ 4.35 ॥
4.35 அப்போது எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும், அப்படியே என்னிடத்திலும் பார்ப்பாய்.
ஞானத்தை அறிந்து மறுபடியும் இப்படி மயக்கமடையமாட்டாய்.
இறைவன் எங்கும் நீக்கமற நிநை்திருக்கிறார்.அவர் இல்லாத இடமே இல்லை.இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார் என்பது புரியும்.அது மட்டுமல்ல தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதும் அப்போது புரியும்.
அதன்பிறகு மயக்கம் நீங்கிவிடும். துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடும். இந்த உலம் சொர்க்கமாகத்தெரியும்.தனக்கு மரணம் இல்லை என்பதை ஒருவன் அறியும்போது அவனுக்கு அளவற்ற ஆனந்தம் கிடைக்கிறது.
இந்த உலகம் வேடிக்கை வினோதங்கள் நிறைந்த விளையாட்டு மைதானம்போல தோன்றும்.
வகுப்பு-21 நாள்-16-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஸம்ந்யாஸ: கர்மயோகஷ்ச நி:ஷ்ரேயஸகராவுபௌ।
தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே॥ 5.2 ॥
5.2 சந்நியாசம், யோகம் இரண்டும் சிறப்பானதுதான், என்னினும் கர்மத்தை துறப்பதைவிட அதாவது சந்நியாசத்தைவிட கர்மத்தை செய்வது(கர்மயோகம்) மேலானது
இரண்டு பாதைகள் இருக்கின்றன என்று பார்த்தோம்
-
1. உலகியல் வாழ்க்கையிலிருந்து, உலக கடமைகளிலிருந்து, அனைத்து செயல்களிலிருந்தும் விடுபட்டு வாழும் நிலை சந்நியாசம்..இதை முற்காலத்தில் சாங்கிய மார்க்கம் என்று அழைத்தார்கள்
2.உலகியல் வாழ்க்கையில் இருந்துகொண்டு,உலகியல் கடமைகளை செய்துகொண்டு,
செயல்கள் செய்துகொண்டே மேலான நிலையை அடையும் நிலை.
இதை யோகம் அல்லது கர்மயோகம் என்று அழைக்கிறோம்
-
உலகத்தில் வாழும் மனிதர்கள் பல்வேறுஅனுபவங்களையும், துன்பங்களையும் அனுபவித்தபிறகு உலகத்திலிருந்து விலகி சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
துன்பத்திற்கு காரணம் ஆசை.துன்பத்தை நீக்க வேண்டுமானால் ஆசைகளை அனுபவிப்பதைவிட அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்று சந்நியாச மார்க்கம் கூறுகிறது.
-
இந்த இரண்டு பாதைகளும் வேறுவேறானாலும் சேரும் இடம் ஒன்றுதான்
ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:।
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்॥ 5.4 ॥
5.4 குழந்தைகள்தான் சாங்கியத்தையும் (சந்நியாச மார்க்கம்) யோகத்தையும் (கர்ம மார்க்கம்) வெவ்வேறானவை என்று பேசுவார்கள். பண்டிதர்கள் அவ்வாறு பேசுவதில்லை. எதையாவது ஒன்றை உறுதியாக கடைபிடிக்கிறவன் இவ்விரண்டினுடைய பலனையும் பெறுகிறான்
சந்நியாச மார்க்கத்தில் செல்பவன் உடலை செயல்புரிவதிலிருந்து நிறுத்துகிறான்.
பின்னர் மனத்தை கவனிக்கிறான்.மனத்தில் எழும் எண்ணங்களை படிப்படியாக கவனித்து அடக்குகிறான்.
எனவே வாழ்க்கையில் பெரும்பாலன நேரம் தியானத்திலேயே கழிகிறது
முடிவில் அவனது ஆன்மா உடலிலிருந்து விடுதலைபெற்று எல்லையற்றதாகிவிடுகிறது.
உடலை செயல்புரிவதிலிருந்து நிறுத்தவேண்டுமானால் படிப்படியாக உணவை குறைத்துக்கொண்டே வரவேண்டும். சத்வ உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும்.
யோக மார்க்கத்தில் செல்பவன் தொடர்ந்து செயல்புரிந்துகொண்டே இருக்கிறான்.உணவு விசயத்தில் அதிக கட்டுப்பாடுகள் தேவையில்லை.உடல் நன்றாக இயங்குவதற்கு தேவையான உணவுகளை உட்கொள்கிறான்.
மனத்தில் எழும் ஆசைகளைஅனுபவிப்பதற்கு தடைகள் இல்லை.எந்த ஆசைகளை அனுபவிக்கவேண்டும்,எதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற அனுபக அறிவு அவனிடம் இருக்கும்.
எனவே மனம் அவனது முழுகட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆனால் உடல் இயங்கிக்கொண்டே இருப்பதால் பிரம்மத்தை அடைவது கடினமாகிறது.
உடலை ஓரிடத்தில் அப்படியே நிலையாக வைத்திருப்பது என்பது கர்மயோகிக்கு சுலபத்தில் முடியாத காரியம்.
யோகயுக்தன் என்ற நிலையை அடைந்தபிறகு அவனது உடல் கர்மம் செய்வதிலிருந்து விலகிநிற்கிறது.
அப்போது எளிதில் பிரம்மத்தை அடைகிறான்.
-
ஸம்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:।
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி॥ 5.6 ॥
5.6 தோள்வலிமையுடையவனே கர்ம யோகத்தை செய்யாமல்,
சந்நியாசத்தை அடைவது எளிதல்ல.
யோகயுக்தன் (யோகத்தில் நிலைபெற்றவன்) முனிவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை சம்மாளிக்க முடியாமல் சிலர் சந்நியாச வாழ்க்கைக்கு வருகிறார்கள்.அவர்கள் சந்நியாசத்தின் எல்லையை அடைய முடியாது.
மனத்திலிருக்கும் எண்ணங்களை நீக்கினால்தான் சந்நியாசத்தை அடைய முடியும்.
அனைத்து கடமைகளையும் முறையாக நிறைவேற்றியவனது மனம் அமைதியாக இருக்கும்.
தியானத்தில் ஈடுபடும்போது எந்த கடமைகளை செய்யாமல் புறக்கணித்தோமோ அந்த கடமைகள் பற்றிய பதிவுகள் மனத்தில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கும்.
யோகயுக்தன் என்பவன் யார். கடமைகளை எல்லாம் முறையாக செய்து முடித்து நிறைவு கண்டவன்.
அவன் முனிவன் என்று அழைக்கப்படுகிறனான்.அந்த முனிவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.
-
புத்தமதம் இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பு மக்கள் கர்மயோகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டார்கள்.பல்வேறு கடமைகளை செய்து வந்தார்கள்.இந்த கடமைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து அதிலிருந்து விடுபட முடியாமல் தவிர்த்தார்கள்.கர்மயோகத்தின் வழியாக எல்லா கடமைகளையும் முடித்து பிரம்மத்தை அடைவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது.
புத்தமதம் தோன்றிய பிறகு சந்நியாச மார்க்கம் முக்கியத்துவம் பெற்றது. ஒரு மனிதன் உலகத்தைவிட்டு விலகி சந்நியாசம் பெற்று மடங்களில் வாழ்ந்தால்தான் விடுதலை(முக்தி) அடைய முடியும் என்று போதிக்கப்பட்டது
சுமார் ஆயிரம் ஆண்டுகளில் வடஇந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் துறவிகளாகி இல்லற,உலகியல் கடமைகளை புறக்கணித்து துறவிகளானார்கள்.இல்லறத்தார்களின் எண்ணிக்கையைவிட துறவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
புத்தமதம் தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்குள் சந்நியாச மார்க்கம் கடும் தோல்வியை சந்தித்து.அதற்கு காரணம் மக்கள் ஒழுக்கம் தவறியவர்களானார்கள். விரைவில் உலகத்தைவிட்டு விலகி சந்நியாசியாகிவிட வேண்டும் என்பதே அனைவரின் கடமை என்று நினைத்தார்கள்.
-
கர்மயோகம் என்பது முக்கியம்.ஆனால் கர்மத்திலிருந்து விலக முடியாதநிலைக்கு சென்றுவிடக்கூடாது.
கர்மங்கள் ஒருகாலத்தில் முடியும் முடியும் என்று எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
அது முடிவடைவது எப்போது என்று தெரியவில்லை.
எனவே அவ்வப்போது கடமைகளிலிருந்து விலகி தனிமையில் சென்று சந்நியாச மார்க்கத்திற்குரிய பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பிறகு சில காலம் கடமைகளை முறையாக செய்ய வேண்டும்.
இவ்வாறு இரண்டையும் சமஅளவில் கொண்டுசெல்ல முடிந்தால் விரைவில் இரண்டிலும் முழுமை அடைந்துவிடலாம்.
வகுப்பு-22 நாள்-19-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
நைவ கிம்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்।
பஷ்யஞ்ஷ்ருண்வந்ஸ்ப்ருஷஞ்ஜிக்ரந்நஷ்நம்கச்சந்ஸ்வபந்ஷ்வஸந்॥ 5.8 ॥
ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி।
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்॥ 5.9 ॥
5.8,9 யுக்தன், தத்துவத்தை அறிந்தவன்
பார்த்தாலும், கேட்டாலும், தீண்டினாலும், நுகர்ந்தாலும், அருந்தினாலும், நடந்தாலும், உறங்கினாலும், சுவாசித்தாலும், பேசினாலும், உபாதைகளை கழித்தாலும், பிடித்தாலும், கண்விழித்தாலும், கண்மூடினாலும் கூட இந்திரியங்கள், இந்திரியார்த்தங்களில் செல்கின்றன என முடிவுசெய்து,
நான் ஒன்றையும் செய்யவில்லை என்று நினைப்பான்
யுக்தன் என்பவன் யார்?
யோகத்தை கடைபிடித்து அதில் வெற்றி கண்டவன்.
தான் ஆன்மா என்பது யோகிக்கு தெரியும்.
ஆன்மா செயல்புரிவதில்லை.
இந்த உலகம் நியதிகளின் படி இயங்குகிறது.எல்லோரது உடலும் அந்த நியதிக்கு கட்டுப்பட்டது.
ஆனால் ஆன்மா உலகத்திற்கு அப்பாற்பட்டது.நியதிகளுக்கு அப்பாற்பட்டது.
கண் வெளி உலகைப்பார்க்கிறது.ஆன்மா பார்ப்பதில்லை.
காது கேட்கிறது. ஆன்மா எதையும் கேட்பதில்லை.
கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும் அதற்குரிய பார்த்தல்,கேட்டல்,முகர்தல்,சுவைத்தல்,தொடுதல் போன்ற இந்திரியார்த்தங்களில் செல்கின்றன.
ஆன்மா இவைகளிலிருந்து அப்பாற்பட்டது.
-
இந்த உடலை இயக்குவது யார்? கண்கள் மூலம் உலகத்தை பார்ப்பது யார்?
காதுகள் மூலம் ஓசைகளை கேட்பது யார்?
நமது விருப்பம் இன்றி தானாக நிகழ்கின்றனவா?
-
இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் தத்துவத்தை தெரிந்திருக்க வேண்டும்.
24 தத்துவங்களைப்பற்றி சாங்கியம் கூறுகிறது
புருஷன்-பிரகிருதி
-
புருஷன் மாற்றமடையாதது
பிரகிருதி 24 தத்துவங்களாக மாறுகிறது
1. அவ்யக்தம்(சத்வம்,ரஜஸ்,தமஸ் இயங்காதநிலை)
2.மஹத்-புத்தி
3.அகங்காரம்-நான் உணர்வு
4.மனம்
5-9. ஞானேந்தரியங்கள்(கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்)
10-14-கர்மேந்திரியங்கள்(வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் ஆண்,பெண் பிறப்புறுப்புக்கள்
15-19 தன்மாத்திரைகள் அல்லது சூட்சும பிரபஞ்சம்
19-24 பஞ்ச பூதங்கள் அல்லது தூல பிரபஞ்சம் (நிலம்,நீர்,காற்று,வெப்பம்,ஆகாயம்)
-
பிரபஞ்சம் என்றால் என்ன?பஞ்சபூதம் என்பது என்ன?
-
நிலம்(திடப்பொருட்கள்),நீர்(திரவங்கள்),காற்று(வாயுக்கள்),தீ(வெப்பம்),ஆகாயம்(வெளி)
இந்த ஐந்தும் அடிப்படை மூலங்கள்.சமஸ்கிருதத்தில் பஞ்சபூதம்
-
இந்த ஜந்தும் சேர்ந்து உண்டான கலவையால் இந்த உலகிலுள்ள அனைத்தும் உருவாகியிருக்கிறது அல்லது விரிவடைந்துள்ளது.அதனால் இதற்கு பிரபஞ்சம் என்று பெயர்.
-
ஒவ்வொரு பொருளிலும் இந்த ஐந்தும் கலந்திருக்கும்.எது அதிகமாக உள்ளதோ அதை வைத்து அது.திடம் அல்லது திரவம் என்று கூறுகிறோம்.
-
உதாரணமாக ஒரு கல்லை எடுத்துக்கொள்வோம்
-
கல் திடம் என்பது நமக்குத்தெரியும்.
கல்லை நுண்ணோக்கி மூலம் பார்த்தால் கோடிக்கணக்கான அணுக்கள் அதனுள் சுற்றிக்கொண்டிருப்பது தெரியும்.
இந்த அணுக்களின் இயக்கத்திற்கு காரணம் வாயு.
இந்த கல் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையுடன் இருக்கும்.
சூடாக இருந்தால் ப்ளஸ் என்றும் குளிராக இருந்தால் மைனஸ் என்றும் கூறுகிறோம்
இந்த கல்லின் உள்ளே உள்ள அணுக்களுக்கு இடையே இடைவெளி இருக்கும்.
இது ஆகாசம்
இந்த கல்லை அதிகமாக சூடாக்கினால் அணுக்கள்விரிவடைந்து அது உருகிவிடும்.
அதாவது கல் திரவப்பொருளாக மாறிவிடும். திரவமாக மாறும் தன்மையும் அதனுள் இருக்கிறது.
நீரின் வெப்பத்தை குறைத்தால் அது பனிக்கட்டி என்ற திடமாக மாறிவிடும்.அதேபோல திடப்பொருட்களின் வெப்பத்தை கூட்டினால் அது திரவப்பொருளாக மாறிவிடும்.
எனவே ஒரு சாதாரண பொருளில் ஐந்து மூலம்பொருட்களும் கலந்துள்ளன.
-
ஒரு கல் எப்படியோ அப்படித்தான் மிகச்சிறிய மணல் துகளும்.அதேபோல்தான் மிகச்சிறிய அணுவும்.
அதேபோல்தான் மிகப்பெரிய கிரகங்களும் அமைந்துள்ளது.
-
பூமி நீர் கிரகம்.நீரின் அளவு அதிகமாக உள்ளது.சூரியன் வெப்ப கிரகம்,சில கிரகங்கள் வாயு கிரகம்.வாயுக்களால் நிறைந்திருக்கும்.
-
இந்த பிரபஞ்சம் மொத்தமும் இந்த ஐந்தின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது.
-
இவைகள் அனைத்தும் ஐடம் என்று அழைக்கப்படுகிறது.
-
திடப்பொருளை திரவப்பொருளாக மாற்றலாம்.திரவப்பொருளை வாயுப்பொருளாக மாற்றலாம்.வாயுப்பொருளை வெப்பஅலைகளாக மாற்றலாம்.வெப்பஅலைகள் ஆகாயத்தில் நிலைகொள்கின்றன.
-
ஆகாயம் என்பது பொருள்களின் இடைவெளி.அது மட்டும்தான் எந்த அணுக்களாலும் ஆக்கப்படாதது.
-
இந்த ஐடப்பிரபஞ்சத்தை இயக்குவதற்கு சக்தி தேவைப்படுகிறது.
-
காற்று வீச வேண்டுமானால் சக்தி தேவை.நீர் பாய வேண்டுமானால் சக்தி தேவை. பூமி சுற்ற வேண்டுமானால் சக்தி தேவை.சூரியன் ஒளிர வேண்டுமானால் சக்தி தேவை.
-
இந்த சக்தியின் ஆதாரம் எது?
-
அது பிராணன்.
-
இந்த பிராணன் பல்வேறு சக்திகளாக மாறுகிறது.
-
கவரும் சக்தி,விலக்கும் சக்தி,சமன்படுத்தும் சக்தி என்ற மூன்று சக்திகள் பல்வேறு விதங்களில் கலந்து
-
காந்த சக்தி,மின்சக்தி,ஈர்ப்பு சக்தி,சுழலும் சக்தி என்று பல்வேறு சக்திகளாக இயங்குகிறது.
-
எங்கெல்லாம் இயக்கம் இருக்கிறதோ அவைகள் அனைத்தும் பிராணிலிருந்து வெளிப்பட்டவை
-
இப்போது ஒரு முடிவுக்கு வருவோம்.
-
பிரபஞ்சம் முடியும்போது திடப்பொருட்கள் எல்லாம் கடைசியில் ஆகாயத்தில் முடிகிறது. அதேபோல சக்திகள் அனைத்தும் பிராணனில் முடிகிறது.
-
பிரபஞ்சம் விரிவடையும்போது ஆகாயத்தில் நிலைபெற்றவைகள் மீண்டும் விரிவடைகின்றன.பிராணனிலிருந்து அனைத்து சக்திகளும் வெளிப்படுகின்றன.
-
இந்த ஆகாயம்,பிராணன் இந்த இரண்டும் தனித்தனியாக இருப்பதில்லை.இரண்டும் சேர்ந்தே இருக்கிறது.
-
ஒரு ஜடப்பொருளிலிருந்து அனைத்து சக்திகளையும் பிரிக்க முடியாது.சக்தியிலிருந்து ஜடப்பொருளை தனியாக பிரிக்க முடியாது.இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தே இருக்கும்.
-
ஒவ்வொரு அணுவும் இயங்கிக்கொண்டிருக்கிறது.அதை இயங்காமல் யாராலும் நிறுத்திவைக்க முடியாது.
அதேபோல இயங்கிக்கொண்டிருக்கும் அணுவின் இயக்கத்திற்கு காரணமான சக்தியை யாராலும் தனியாக பிரிக்க முடியாது.
-
சரி இந்த ஆகாயம்,பிராணன் இவைகள் எங்கிருந்து வந்தன?
இந்த உலகத்தில் உள்ள பொருட்கள் எதுவும் சுயமாக இயங்காது.
அதை இயக்குவதற்கு ஒரு சக்தி தேவை.
-
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு உருவம் உண்டு.
காற்றிற்கு உருவம் உண்டா? ஒளிக்கு ஒருவம் உண்டா? என்று கேட்கலாம்
-
காற்று என்பது என்ன?
-
மின்விசிறி வேகமாக சுழலுகிறது.அப்போது அதன் அருகில் உள்ள அணுக்கள் வேகமாக தள்ளப்படுகிறது.
அவ்வாறு தள்ளப்படும் அணுக்கள் நம்மீது படுகிறது.அதை காற்று என்கிறோம்.
-
காற்றில் என்ன உள்ளது? வேகமாக இயங்கும் அணுக்கள்.
இந்த அணுக்களுக்கு உருவம் உண்டா? உண்டு.
-
அதேபோல பல்ப் எரிகிறது.
அதன் ஒளி பக்த்தில் உள்ள அணுக்களை ஒளிரச்செய்கிறது.
அணுக்களே இல்லை என்றால் ஒளி ஊடுருவ முடியாது.
-
எனவே ஒளியில் உள்ளதும் அணுக்கள்தான்.
இந்த அணுக்களுக்கு உருவம் உண்டு.
-
நமது கண்ணுக்கு தெரியாத பல உருவங்கள் இந்த உலகத்தில் உண்டு.
ஆனால் அவைகளுக்கும் உருவம் உண்டு
-
மிகப்பெரிய நட்சத்திரங்கள் முதல் மிகச்சிறிய அணுக்கள் வரை அனைத்திற்கும் உருவம் உண்டு.
-
சில உருவங்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பதால் நம்மால் அதை ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடிவதில்லை.நம் கண்ணால் காண முடியவில்லை என்பதற்காக உருவம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
-
இந்த உலகத்தில் உருவம் இல்லாத எதுமே இல்லை.
இந்த உருவங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியினால் இயக்கப்படுகிறது.
அது ஈர்ப்பு சக்தியாக இருக்கலாம்,மின்சக்தியாக இருக்கலாம்,காந்த சக்தியாக இருக்கலாம் அல்லது வேறு பல சக்திகளாகவும் இருக்கலாம்
-
இந்த சக்திகள் எதுவும் தனியாக இயங்காது.
ஏதாவது ஒரு உருவம் இருந்தால்தான் அதனால் இயங்க முடியும்.
-
எனவே சக்தி,ஜடம் இரண்டும் சேர்ந்தது உருவம்
-
இந்த சக்தி எப்போதும் ஒரேபோல இயங்காது.
சில சேரம் அதிக சக்தி வெளிப்படும்,சில நேரம் குறைந்த சக்தி வெளிப்படும்.
இதனால் உருவங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
-
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
-
நமது உடல் குழந்தையாக இருக்கும்போது ஒரு உருவத்திலும் இப்போது வளர்ந்து வேறு உருவத்திலும் உள்ளது.
-
இவ்வாறு தொடர்ந்து மாற்றங்கள் எங்கெல்லாம் உள்ளதோ,அங்கெல்லாம் அழிவு உள்ளது
-
எந்த உருவமும் நித்தியமாக அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது
-
மனித உடலாக இருந்தாலும்சரி, தேவ உடலாக இருந்தாலும் சரி,தெய்வ உடலாக இருந்தாலும் சரி. உடல் என்ற ஒன்று எங்கு இருக்கிறதோ அங்கே மாற்றம் இருந்துகொண்டே இருக்கும்
இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் ஜடம் மற்றும் சக்தியின் சேர்க்கையால் உருவானது என்று பார்த்தோம்.
-
இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது?
-
ஒரு அணுவை ஆராய்நதால் பிரபஞ்சம் முழுவதையும் பற்றி அறியலாம்
-
ஆனால் ஒரு அணுவைப்பற்றிய முழு அறிவு நம்மிடம் உள்ளதா?
-
என்றாவது ஒரு நாள் முழுவதுமாக நம்மால் அறிந்துகொள்ள முடியுமா?
-
முடியாது...
-
ஒரு சாதாரண அணுவைக்கூட எந்த காலத்திலும் முழுமையாக அறிய முடியாது
-
ஏன்?
-
ஏனென்றால் அதன் தொடக்கம் தெரியாது. முடிவு தெரியாது.அதை தெரிந்துகொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லை.ஏன் இல்லை என்பதை பிறகு பார்க்கலாம்
-
ஒரு அணு எங்கிருங்து வந்தது என்று ஆராயத்தொடங்கினால்,முடிவில் தெரியாது என்ற பதில்தான் வரும்.
-
ஒரு அணு கடைசியில் முடியும் இடம் எது என்று ஆராயத் தொடங்கினால், முடிவு தெரியாது என்ற பதில்தான் வரும்
-
-
ஒரு அணுவைக்கூட இந்த உலகிலிருந்து அழிக்க முடியாது. ஒரு அணு இன்னொரு அணுவாக பரிணாமம் பெறுமே தவிர அதை இல்லாமல் செய்ய முடியாது.
-
இந்த பிரபஞ்சத்தில் ஏற்கனவே என்ன உள்ளதோ அதிலிருந்து ஒன்றை கூட்டவோ ஒன்றை குறைக்கவோ யாராலும் முடியாது.
-
ஒன்று இன்னொன்றாக மாறுமே தவிர,ஒரு நாளும் இல்லாமல் போகாது.
-
ஒரு நாற்காலியை எடுத்துக்கொள்ளுங்கள்.
-
நாற்காலி என்பது பல அணுக்களின் சேர்க்கை.
நாற்காலியை அரைத்து பொடிப்பொடியாக்கினால் நாற்காலி என்ற அமைப்பு அழிந்துவிடும்,
ஆனால் அணுக்கள் இருக்கும்.
-
நாற்காலியை தீயிலிட்டு எரித்தால்கூட அதன் அணுக்கள் நுண்மையான அணுக்களாக மாறுமே தவிர முற்றிலும் இல்லாமல் போகாது.
-
பருமனாக சேர்க்கைகள் நுண்மையான சேர்க்கையாக மாறும்.நுண்மையான சேர்க்கைகள் பருமனான சேர்க்கையாக மாறும்.இது தான் பிரபஞ்சம்
-
இந்த உலகத்தில் உள்ள ஜடப்பொருட்கள் ஒரு நாளும் அழியாது.ஒன்று இன்னொன்றாக மாறும்.
-
அதேபோல இந்த உலகத்திலுள்ள சக்திகள் எதுவும் அழியாது. ஒன்று இன்னொன்றாக மாறும்
-
இந்த சக்தியும்,ஜடப்பொருட்களும் எங்கிருந்து வந்தன?
இதற்கு முன்பு ஏதாவது உண்டா?
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜடப்பொருளுக்கும் ஒரு உருவம் உண்டு என்று பார்த்தோம்
-
இந்த உருவங்கள் ஒன்வொன்றிற்கும் ஒரு அடையாளம் உண்டு.அதை பெயர் என்று குறிப்பிடுகிறோம்.
-
பத்து மனிதர்கள் கூட்டமாக நடந்துசெல்லும்போது கந்தா என்று ஒருவர் தூரத்திலிருந்து அழைக்கும்போது கந்தன் என்ற பெயர் உள்ளவன் திரும்பிப் பார்ப்பான்.அது அவனுக்கான பெயர்.அவனது அடையாளம்
-
ஒரு வேளை அந்த பத்துபேரில் ஒருன் மட்டும் சிவப்பு கலர் சட்டை அணிந்திருக்கிறான்.தூரத்தில் ஒருவர் சிவப்பு கலர் சட்டை போட்டவரே என்று அழைத்தால்,அவன் மட்டும் திரும்பிப் பார்ப்பான் அதுவும் அவனுக்கான ஒரு அடையாளம்
-
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் உண்டு.அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புதிதாக ஊருக்குள் வந்த ஒருவர் ,அந்த ஊரிலுள்ளவர்களை முதலில் அடையாளம் காணும்போது பெரிய உருவம்.சிறிய உருவம்,கறுப்பானவன்,வெள்ளையானவன் என்ற ரீதியில் மனதில் நியாபகம் வைத்திருப்பார்.படிப்படியாக பெயர் மனதில் நிற்கும்
-
எனவே மனிதர்களைப்பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு.இது ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனை வேறுபடுத்துகிறது. தத்துவவாதிகள் இதை நாமம்(பெயர்) என்று அழைக்கிறார்கள்.
-
பல நாட்டுக்காரர்கள் செல்லும் ஒரு கூட்டத்தில் பத்து இந்தியர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஹே இன்டியன்ஸ் என்று ஒருவர் அழைத்தால் பத்துபேரும் திரும்பிப் பார்ப்பார்கள்.இதுவும் அவர்களுக்கான ஒரு அடையாளம்.
-
ஒரு கூட்டத்தில் மனிதர்கள்,ஆடு,மாடு எல்லாம் செல்வதாக வைத்துக்கொள்வோம். மே..மே.. என்று ஆடுபோல் கத்தினால் ஆடுகள் திரும்பிப் பார்க்கும்.இது ஒரு குறிப்பிட்ட விலங்கிற்கான அடையாளம்.
-
இதேபோல ஒவ்வொரு விலங்கும் தங்களுக்குண்டான ஒரு அடையாளத்தை வைத்துள்ளது.இது மனிதர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.ஆனால் அதை சுற்றியுள்ள அந்த இனத்தைசேர்ந்த விலங்குகளுக்கு புரியும்.
-
அபோல ஒவ்வொரு மரங்களும் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை வைத்துள்ளது.
-
ஒவ்வொரு சிறிய அணுக்களும்கூட தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை வைத்துள்ளது.
-
அடையாளம் இல்லாத உருவம் எதுவும் இல்லை.இதை தத்துவமொழியில் சொன்னால் ஒவ்வொரு உருவத்திற்கும் ஒன்றோ அல்லது பலவோ நாமங்கள்(பெயர்கள்) உள்ளன.
-
தத்துமொழியில் உருவத்திற்கு ரூபம் என்று பெயர்.அடையாளத்திற்கு நாமம் என்று பெயர்.
-
நாம் தத்துவமொழியை பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம். எளிய தமிழ்மொழியையே பயன்படுத்துவோம்
-
எனவே ஒவ்வொரு உருவமும் ஒரு அடையாளத்தை வைத்துள்ளது. இது மற்ற உருவத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டுகிறது.தன்னை ஒத்த அன்னொரு உருவத்துடன் இணைவதற்கும் இந்த அடையாளம் பயன்படுகிறது.
-
இந்த பெயர் மற்றும் உருவம் உடைய அனைத்தும் சுதந்திரமானது அல்ல..இவைகள் இதைவிட பெரிய உருவம் உடையவைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
-
சுதந்திரமான உருவம் என்ற ஒன்று இந்த உலத்தில் இல்லை. பெயரில்லாத உருவம் என்ற ஒன்று இந்த உலத்தில் இல்லை
இந்த உலகத்தில் உள்ள அனைத்திற்கும் உருவம் உண்டு என்று பார்த்தோம்.இவைகளை இரண்டாக பிரிக்கலாம்.
1.உணர்ச்சி உள்ளவை.2.உணர்ச்சியற்றவை
-
மனிதனுக்கு உணர்ச்சி உள்ளது.மிருகங்களுக்கும்,புழு,பறவைகள் அனைத்திற்கும் உணர்ச்சி உண்டு,தாவரங்களுக்குகூட உணர்ச்சி உள்ளது.
-
ஒரு மனிதனின் காலில் தொட்டாலும்,கையில் தொட்டாலும், தன்னை தொட்டதாகவே உணர்வான்.இதற்கு தன் உணர்ச்சி அல்லது நான்-உணர்ச்சி என்று பெயர்.தத்துவமொழியில் அகங்காரம்.
இந்த உணரச்சி உடல் முழுவதும் பரவியிருக்கிறது.
-
ஒரு உடலை ஒன்றாக இணைத்து வைப்பது,இந்த தன்-உணர்ச்சி
-
கல்,மண்,இரும்பு போன்ற உலோகங்களுக்கு உணர்ச்சி இல்லை.
-
இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களும்,உயிரினங்களும் காலம்,இடம்,காரணம் என்ற மூன்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
-
உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் இயங்குகிறது.ஆனால் தானாக இயங்குவதில்லை.அதற்குமேல் உள்ள ஏதோ ஒன்று அதன் இயக்கத்திற்கு காரணமாக இருக்கிறது
-
உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும் பஞ்சபூதம் எனப்படும்.ஐந்தின் கலவை என்பதை பார்த்தோம்
-
ஜடப்பொருள் சக்தி இந்த இரண்டும் சேர்ந்தே இருக்கும். சக்தியில்லாத ஜடப்பொருள் என்ற ஒன்று உலகில் இல்லை.அதேபோல ஜடப்பொருள் இல்லாமல் சக்தியால் இயங்க முடியாது என்பதையும் பார்த்தோம்
-
எதற்கும் அழிவில்லை.ஒன்று இன்னொன்றாக மாறுமே தவிர இல்லாமல் போகாது என்பதை பார்த்தோம்.
-
ஒவ்வொரு உருவத்திற்கும் உரு அடையாளம் உண்டு என்பதை பார்த்தோம்
-
இனி உயிர்களுக்கு உண்டான இந்த உணர்ச்சி எங்கிருந்து வந்தது என்பதை பார்க்கப்போகிறோம்....
நான்-உணர்வு எங்கிருந்து வருகிறது?
-
மனம்
-
மனம் என்ற வார்த்தைக்கு (mind) என்று பொருள் கொள்ளக்கூடாது.
மனம் என்பது மூளை அல்ல..மூளைக்கு சித்தம் என்று பெயர்.அது மனத்தின் ஒரு பகுதி.
மனம் என்பது உடல் முழுவதும் பரவியிருக்கிறது.
-
மனம் மூன்று நிலைகளை உடையது.
-
விலங்குகளிடம் உள்ள மனத்திற்கு இயல்புணர்ச்சி அல்லது ஆழ்மனம் என்று பெயர்
-
சிந்திக்கும் மனிதனிடம் செயல்படுவது பகுத்தறிவு.அல்லது உணர்வுள்ள மனம்
-
தியானத்தில் மூழ்கியுள்ள யோகியிடம் செயல்படுவது புத்தி, அல்லது உணர்வு கடந்த மனம்.
-
புத்தியின் இருப்பிடம் புருவமத்தி.யாரிடம் புத்தி விழிப்படைந்துள்ளதோ அவன் யோகி,ஞானி
-
ஓர் உயிர் முதல் ஆறறிவு உள்ள மனிதன் மேலும்,தேவர்கள்,ஆவிகள் உட்பட அனைவரின் மனமும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த மனமும் சேர்ந்து பிரபஞ்ச மனம் அல்லது மஹத் என்று பெயர்.
-
மஹத்தின் என்பது ஒரு சர்வர்போல் உள்ளது.
இந்த உலககின் துவக்க காலம் முதல் கடைசி காலம் வரை உள்ள அனைத்து பதிவுகளும் அங்கே உள்ளது.
மஹத் என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளது.
-
ஆயிரம் வருடங்களுக்கு பின் என்ன நடக்கும் என்று பார்க்க வேண்டுமா?
பிரபஞ்ச மனத்தை ஆராய்ந்தால் போதும்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளும் அங்கே பதியப்பட்டுள்ளது.
மஹத்தைப்பற்றிய ஒட்டுமொத்த அறிவையும் யாராலும் பெற முடியாது
-
பல கோடி ஆண்டுளுக்கு முன் பின் உள்ள அனைத்து பதிவுகளும் ஏற்கனவே மஹத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.அதில் இருப்பதுபோல்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
படைப்பிற்கு காரணம் பிரபஞ்ச மனம் அல்லது வேதம் என்று பார்த்தோம்
-
பிரபஞ்சமனம் எங்கிருந்து வந்தது?
-
முழுமையான வளர்ச்சியடைந்த ஒரு தென்னை மரம் காய்கிறது.
பழுத்துவிழும் காயை உரிய முறையில் பத்திரப்படுத்தி வைத்து.பல ஆண்டுகளுக்கு பின் முளைக்க வைத்தால் முளைவிடும்.
சில விதைகளை பல ஆயிரம் ஆண்டுகள் பத்திரப்படுத்தி பின் முளைக்க வைத்தால் முளைவிடும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
-
இந்த விதை என்பது பெரிய மரத்தின் ஒடுங்கிய அம்சம்.பெரிய மரத்தின் அத்தனை பண்புகளும் அதில் ஒடுங்கியிருக்கிறது.
-
இந்த ஒடுக்க நிலையில் அது காலம் என்ற தன்மையை கடந்துநிற்கிறது.
முளைவிட்ட பின்புதான் அதன் காலம் செயல்பட ஆரம்பிக்கிறது.
அதுவரை காலத்தை கடந்து இருக்கிறது
-
ஒரு மரத்திற்கு எப்படி விதை உள்ளதோ அதேபோல பிரபஞ்சத்திற்கும் ஒரு விதை உள்ளது.
-
அதை ஆதிமூலம் என்று அழைக்கிறார்கள்.
தத்துவத்தில் அவ்யக்தம் என்று பெயர்.இன்னும் பல பெயர்கள் உள்ளன.
-
இந்த ஆதிமூலம் என்பது ஒடுங்கியநிலையில் உள்ள பிரபஞ்சம்.
காலத்தை கடந்து நிற்கும் நிலை.
-
இந்தநிலையைக் கடந்து ஏதாவது உண்டா என்று நாம் கேள்வி கேட்க முடியாது.
ஏனென்றால் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒடுங்கிய பிறகு என்பதை ஏற்றுக்கொண்டால்,அதற்கு வெளியே என்ன என்று சிந்திக்க முடியாது.அப்படி சிந்தித்தால் அனைத்தும் ஒடுங்கியது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிறது.
ஒரு அணுவை ஆராய்ந்தால் அது எல்லையற்றநிலையை அடைந்துவிடும் பிரபஞ்சத்தின் எல்லையை நோக்கி சென்றால் அதுவும் எல்லையற்ற நிலையை அடைந்துவிடும் என்று பார்த்தோம்.
-
அணுவை துளைத்து செல்லும்போது கிடைக்கும் எல்லையற்றநிலையும் பிரபஞ்சத்தின் எல்லையை கடந்துசெல்லும்போது கிடைக்கும் எல்லையற்ற நிலையும் வேறு வேறா?
-
இல்லை... இரண்டு எல்லையற்றது என்று கிடையாது. எல்லையற்றது எப்போதுமே ஒன்றுதான்.
-
இந்த எல்லையற்ற நிலைக்கு பிரம்மம் என்று தத்துவத்தில் பெயர்.
-
ஒரு அணுவை ஆராய்தால் அது பிரம்மமாகிவிடுகிறது(எல்லையற்றதாகிறது) பிரபஞ்சத்தை கடந்தால் அது பிரம்மமாகிவிடுகிறது(எல்லையற்றது)
-
ஒவ்வொரு அணுவிற்கும் ஒரு மையப்புள்ளி இருக்கும்.ஒரு மனித உடலை எடுத்துக்கொள்வோம்.அதற்கும் ஒரு மையப்புள்ளி உண்டு.
-
மனிதனின் அமையப்புள்ளி எங்கே இருக்கிறது? உடலின் மையத்தில் இருக்கிறது.
-
அந்த மையத்தை ஆராந்தால் அது எல்லையற்றதை(பிரம்மத்தை) நோக்கி அழைத்துசெல்கிறது.
-
மனிதனுக்கு ஒரு வெளி எல்லை இருக்கிறது.அது எங்கே இருக்கிறது? பிரபஞ்சத்தின் வெளி எல்லைதான் மனிதனுக்கும் வெளி எல்லை.
-
பிரம்மம் என்றால் ப்ர+அஹம் . அஹம் என்றால் தன்உணர்வு அல்லது நான் உணர்வு. ப்ர என்றால் எல்லையற்ற. நான் உணர்வு எல்லையற்ற நிலையை அடைந்தால் பிரம்மம்
-
ஆத்மா என்றால் அஹம்+மா. அஹம் என்றால் நான உணர்வு .மா என்றால் மிகப்பெரிய. நான் உணர்வு மிகப்பெரிய அளவு எல்லையற்றதாக விரிவடையும்போது அது ஆத்மா
-
எனவே ஆத்மா,பிரம்மம் இரண்டும் ஒரே பொருள்தான்.பகவத்கீதையில் இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஜ்ஞேய: ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி।
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே॥ 5.3 ॥
5.3 பெருந்தோளுடையவனே, யார் விருப்பு வெறுப்பு இல்லாதவனோ, அவன் நித்திய சந்நியாசி என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில் இருமைகளற்றவன் எளிதில் பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.
இருமைகள் என்பது என்ன?
-
இந்த உலகம் சமநிலையில் இயங்கவேண்டுமானால் எதிர் எதிர் நிலைகளை உடைய இரண்டு தேவைப்படுகிறது
ஆண்-பெண்
ஈர்ப்பு-எதிர்ப்பு
வலது-இடது
மேடு-பள்ளம்
வரவு-செலவு
நண்பன்-எதிரி
வடதுருவம்-தென்துருவம்
இன்பம்-துன்பம்
மேல்-கீழ்
அழுகை-சிரிப்பு
நல்லவன்-கெட்டவன்
இனிப்பு-கசப்பு
இருள்-ஒளி
வரவு-செலவு
இப்படி முடிவில்லாமல் இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
-
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பதுபோல இந்த இரண்டும் சேர்ந்து இருக்கிறது.
பொதுவாக எல்லோருமே நல்ல அம்சங்களை விரும்புகிறோம்,கெட்ட அம்சம் அதனுடன் சேர்ந்தே வருகிறது.
எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும் .நாம் எப்போதும் ஆனந்தத்தில் இருக்கவேண்டும்.எப்போதும் தேவையானவைகள் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம்.ஆனால் அப்படி நடப்பதில்லை.
-
எதற்காக இந்த இருமைகள் படைக்கப்பட்டுள்ளன?
-
இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம்.
நான்கு பக்கத்திலிருந்தும் ஆபத்து வந்துகொண்டே இருக்கும்.ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியாது.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
இடையிடையே சிறிது ஓய்வு கிடைக்கும்.அப்போது சற்று இன்பம் கிடைக்கும்.
மறுபடியும் ஓட்டம்.
நம்மிடமுள்ள சக்தி முழுவதும் தீரும்வரை ஓட வேண்டும்
-
நாம் இந்த உலகத்தை,உலக பொருட்களை இறுக பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
சிலர் புதிதாக கட்டிய வீட்டின்மீது பற்று வைத்திருப்பார்கள்.அதனால் எல்லா பிரச்சினைகளும் அவர்களை தாக்கும்.
சிலர் தங்கள் குழந்தைமீது பற்று வைத்திருப்பார்கள்.அந்த குழந்தையினால்தான் எல்லா துன்பங்களும் வரும்.
இதுபோல எதன்மீது பற்று வைத்திருக்கிறோமோ அதிலிருந்து எல்லா துன்பங்களும் வருகின்றன.
அந்த பற்றை விடும்வரை துன்பம் வந்துகொண்டே இருக்கும்.
ஒன்றை விட்டுவிட்டால் இன்னொறு பற்று வந்துவிடும்.
முடிவில் இந்த உலகத்தையே விட்டுவிடும் படி இயற்கை கட்டாயப்படுத்துகிறது.
பற்றிலேயே பெரிய பற்று நமது உடல்மீது நாம் வைத்திருக்கும் பற்று.
வயது ஆனபிறகு எல்லோரும் உடலை விடவேண்டிய காலம் வருகிறது.
-
இந்த இருமைகளை விடுவது எளிதல்ல.
அப்படி யாராவது விட்டிருந்தால் அவன்தான் சந்நியாசி.
சந்நியாசிக்கு உடல்மீது பற்று இருக்காது. நான் உடல் என்ற உணர்வும் இருக்காது.
சந்நியாசம் என்பது ஒரு நிலையைக் குறிக்கிறது.அது ஒரு காரணப்பெயர்.
சந்நியாச நிலையை அடைவதற்காகத்தான் எல்லோரும் போராடிக்கொண்டிருக்கிறோம்.
மகான்களிடம்கூட சிறிதளவு உடல்பற்று இருக்கும். உலகிற்கு நல்லதுசெய்ய வேண்டும் என்பதற்காக அந்த பற்று உன்னது..
எனவே முழுமையாக சந்நியாச நிலையை அடைந்தவன் இந்த உலகைவிட்டு சென்றுவிடுவான்.
-
இல்லறம் என்பது பற்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான இடம் அல்ல.
அது படிப்படியாக பற்றை விடுவதற்கான இடம்.
அனுபவிக்க வேண்டிவைகளையெல்லாம் அனுபவித்து முடித்தபிறகு அவைகளை விட்டுவிட வேண்டும்.
சந்நியாச நிலையை உடனே அடைந்துவிட முடியாது. பல பிறவிகளில் பாடுபட்டு அடைய வேண்டிய நிலை அது.
-
இந்த இருமைகளுக்கு இடையில் ஒரு நிலை இருக்கிறது.
இன்பம்-துன்பம் என்ற இருமைகளுக்கு இடையே ஒரு நிலை உள்ளது.
அது இன்பத்தில் மூழ்காத, துன்பத்தில் துடிக்காத நிலை.
மேடு-பள்ளம் இந்த இரண்டிற்கு ஒரு சமநிலை உள்ளது.
தெற்கு-வடக்கு இந்த இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலை உள்ளது.
பகல்-இரவு இந்த இரண்டிற்கு இடையே ஒரு சமநிலை உள்ளது.
அதேபோல இருமைகள் அனைத்திற்கும் இடையே ஒரு சமநிலை உள்ளது.
அந்த சமநிலையை அடைவதுதான் சந்நியாசம்
இன்பத்தை விட்டு விலகி ஓடுவதோ,துன்பத்தை விட்டு விலகி ஓடுவதோ அல்ல.
இந்த இரண்டும் மனிதனை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
இந்த இரண்டிலும் சமநிலை குலையாமல் இருப்பது.
-
வருவதை ஏற்றுக்கொள்,தருவதை பெற்றுக்கொள் எங்கிருந்தும் விலகி ஓடாதே என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
சிலருக்கு துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முடிவு உண்டா? இல்லை.
ஆனால் துன்பம் மேலும்மேலும் மனிதனை பக்குவப்படுத்தி சமநிலையை நோக்கி கொண்டு செல்கிறது
செயலுக்கும்,செயல்புரியாமல் இருப்பதற்கும் இடையே ஒரு நிலை உள்ளது.
இந்த உலகத்தில் ஒருவன் வெற்றிபெற வேண்டுமானால் தொடர்ந்து தீவிரமாக செயல்புரிந்துகொண்டே இருக்க வேண்டும்.அப்படி தீவிரமாக செயல்புரிபவன் ஒருநாளும் சமநிலையை அ்டைய முடியாது.
அதே நேரம் செயலிலிருந்து முற்றிலும் விலகி இருப்பவனுக்கு இந்த உலகத்திலுள்ள எதுவும் கிடைக்காது.யாரும் அவனை விரும்பமாட்டார்கள்.அவனாலும் சமநிலையை அடைய முடியாது.
இந்த தீவிர செயல் மற்றும் செயல் அற்ற நிலைக்கு இடையே இருக்கும் நிலையை யாரால் அடைய முடிகிறதோ அவனே சமநிலையை அடைய முடியும்.
அதற்கு உதாரணமாக ஸ்ரீகிருஷ்ணரை கூறலாம்.
அவர் ஆயுதம் எடுத்து போர்புரியவில்லை.அதே நேரத்தில் போர்களத்தை விட்டு வெளியேயும் செல்லவில்லை.
போர்க்களத்திற்குள் சும்மா இருப்பவன்கூட உயிரோடு திரும்பிப்போக முடியாது.
தீவிரமான செயல்.செயலற்றநிலை.அதன் நடுவே உள்ள சமநிலை.
அந்த சமநிலையிலேயே இருந்ததால்தான் சிறந்த உபதேசங்களை அவரால் கொடுக்க முடிந்தது.
-
நாம் துன்பப்படுவதற்கு என்ன காரணம்?
துன்பத்திற்கு காரணம் அறியாமை.அறியாமையிலிருந்துதான் ஆசை பிறக்கிறது.
-
நாம் எப்போதெல்லாம் துன்பப்பட்டோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அப்போதெல்லாம் நமது அறிவு சரியாக வேலைசெய்யவில்லை என்பது தெரியவரும்.இப்போது இருப்பதுபோல அறிவு முன்பு இல்லை.
நமக்கு அறிவு வளர வளர துன்பங்கள் வருவது தெரிகிறது.அதைவிட்டு விலகி செல்ல முடிகிறது.
-
சமநிலை என்பது அறிவு நிலை.
தீவிரமான செயலில் இருப்பவனது புத்தி வேலை செய்யாது.
வேலை செய்யாமல் இருப்பவது புத்தியும் வேலை செய்யாது.
சமநிலையில் இருப்பவனது புத்தி வேலை செய்கிறது.
புத்தி வேலை செய்யும்போது இந்த உலகத்தின் இயல்புகள் தெளிவாக தெரிகிறது.
-
-
வகுப்பு-24 நாள்-22-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:।
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே॥ 5.14 ॥
5.14 இறைவன் உலகின் செயலுக்கு கர்த்தா அல்ல, கர்மங்களை செய்வதில்லை, கர்ம பலனோடு பற்று வைப்பதையும் உண்டுபண்ணவில்லை. ஸ்வபாவத்தால் (சத்வ,ரஜஸ்,தமஸ் என்ற முக்குணத்தால் உதித்த இயற்கையால்) தான் இங்ஙனம் நடக்கிறது
நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:।
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:॥ 5.15 ॥
5.15 எங்கும் நிறைந்துள்ள (பிரம்மம்) ஒருவனுடைய பாபத்தை பெற்றுக்கொள்வதில்லை. புண்ணியத்தையும் வாங்கிக்கொள்ளவதில்லை. அறியாமையால் அறிவு மூடப்பட்டுள்ளது. ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன.
-
புருஷன்-பிரகிருதி என்று இரண்டு தத்துவம் இருக்கிறது.
புருஷனை வேதாந்திகள் பிரம்மம் என்கிறார்கள்
பிரம்மத்தின் இயல்பு என்ன?
பிரம்மம் உருவமற்றது.அதற்கு உடல் இல்லை.அது எங்கும் நிறைந்தது.ஆதி அந்தம் இல்லாதது.
ஆனால் பிரம்மம் மட்டும் தனியாக இருப்பதில்லை.அதனுடன் பிரகிருதியும் சேர்ந்தே இருக்கிறது.
பிரகிருதியின் இயல்பு என்ன?
பிருகிருதி என்பது வெளிப்பட்டு,இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அண்ட சராசரங்கள்,
அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் சேர்ந்தது.
மூன்று குணங்கள் அல்லது தன்மைகளால் ஆனது பிரகிருதி.
தமஸ்-கவரும் நிலை
ரஜஸ்-விலக்கும் நிலை
சத்வம்-சமநிலை
-
இந்த மூன்றும் இயங்காத நிலையை அடையும்போது அவ்யக்தம் என்ற மூலநிலையை அடைகிறது.
ஒரு மரத்தின் விதை எப்படி இயங்காத நிலையில் இருக்கிறதோ, அதேபோல
இந்த உலகம் ஒரு நாள் விதை நிலைக்கு செல்கிறது.அப்போது இந்த உலகம் ஒடுங்கிய நிலையில் இருக்கும்.பிரகிருதியின் அந்த நிலைக்கு அவ்யக்தம் என்று பெயர்
பின்பு படிப்படியாக மீண்டும் பரிணமித்து இந்த உலகம் உருவாகிறது.
-
1.அவ்யக்தம்-பிரகிருதியின் இயங்காத நிலை அல்லது ஒடுங்கியநிலை
சத்வம்,ரஜஸ்,தமஸ் மூன்றும் மூலநிலையில் இருக்கும் நிலை
2.மஹத்-
சத்வம்,ரஜஸ்,தமஸ் மூக்றும் இயங்க ஆரம்பிக்கிறது .பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கிறது.உறுதி, அறிவு, ஆற்றல், பண்புகள் இவையெல்லாம் மஹத்தின் தன்மையே. மகிழ்ச்சி, வேதனை, மயக்கம் (மாயை) ஆகியவை மஹத் எனப்படும் புத்தியோடு தொடர்புடையவை.
3.அஹங்காரம் தோன்ற ஆரம்பிக்கிறது.
அகம் என்றால் நான் என்று பொருள், கார என்றால் தன்மை என்று பொருள். ஆக, அகங்காரம் என்பது எல்லா உயிரினங்களிலும் உள்ள நான் என்ற சுய உணர்வைக் குறிக்கிறது
4.மனம் உருவாகிறது.
எண்ணம், சிந்தனை ஆகியவற்றை உருவாக்குவதாகவும், அவற்றின் தொகுப்பாகவும் இந்த மனம் உள்ளது.
5 – 9. பஞ்ச ஞானேந்திரியங்கள் உருவாகின்றன.
கண் (சக்ஷு), கேட்பதற்குப் பயன்படும் செவி (ஸ்ரோத்ரம்), முகர்வதற்குப் பயன்படும் மூக்கு (க்ராண), சுவை அறியப் பயன்படும் நாக்கு (ரஸனா), தொடு உணர்வை அறியப் பயன்படும் தோல் (த்வக்) ஆகியவை
10 – 14. பஞ்ச கர்மேந்திரியங்கள் தோன்றுகின்றன
பேச உதவும் வாய் (வாக்), பொருள்களைக் கையாள உதவும் கை (பாணி), நடமாட உதவும் கால் (பாத), மலஜலம் வெளியேற்ற உதவும் அங்கம் (பாயு), உற்பத்திக் கருவி அதாவது பிறப்புறுப்பு (உபஸ்த) ஆகியவை
15 - 19. பஞ்ச தன்மாத்ரா தோன்றுகிறது சப்தம் (ஓசை), ஸ்பரிசம் (ஊறு அல்லது தொடு உணர்வு), ரூபம் (வடிவம்), ரஸம் (சுவை), கந்தம் (வாசனை)
20 – 24. பஞ்ச மகாபூதங்கள் தோன்றுகின்றன-
தூல பிரபஞ்சம் (நிலம்,நீர்,காற்று,வெப்பம்,ஆகாயம்)
-
பிரகிருதியின் இந்த பரிணாமம் மிகவேகமாக நடைபெறுகிறது.
உலகம் ஒடுங்க ஆரம்பிக்கும்போது மிக வேகமாக ஒடுக்க நிலையை அடைகிறது.
-
பிரம்மம் செயல்புரிவதில்லை. இந்த உலகத்தின் செயல்களுக்கு காரணமாக இருப்பதில்லை.
அப்படியென்றால் எது செயல்படுகிறது?
பிரகிருதிதான் செயல்படுகிறது.
ஆனால் பிரகிருதியால் தனியாக செயல்பட முடியாது.
பிரம்மத்தின் முன்னிலையில் பிரகிருதி செயல்படுகிறது.
நமது உடலை எடுத்துக்கொள்வோம். இந்த உடல் செயல்புரிந்துகொண்டே இருக்கிறது.
உடலிலிருந்து ஆன்மா பிரிந்துவிட்டால்.உடலால் செயல்பட முடியாது.
உடலுக்குள் ஆன்மா எங்கே இருக்கிறது என்று தேடியால் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் அந்த ஒன்று விலகியதும் செயல் நின்றுவிடுகிறது.
அதேபோல பிரம்மம் இருப்பதால்தான் பிரகிருதியால் செயல்பட முடிகிறது.
பிரம்மம் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
-
பிரகிருதி என்பது இந்த இயங்கிக்கொண்டிருக்கும் உலகம் என்று பார்த்தோம்.
நமது உடல் இயங்குவதற்கு ஆன்மா தேவைப்படுவதுபோல,இந்த உலகம் இயங்க பிரம்மம் தேவை.
ஆனால் பிரம்மம் செயல்புரிவதில்லை.
செயல்கள் அனைத்தும் பிரகிருதியிலிருந்தே வருகின்றன.
-
பிரகிருதி இயக்கம் இல்லாமல் ஒடுங்கி நிற்கும்போதும் பிரம்மம் இருக்கிறது
முழு இயக்கத்தோடு இருக்கும்போதும் பிரம்மம் இருக்கிறது.
இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பிரம்மம் மறைக்கப்பட்டுள்ளது.
எப்படி நமது உடல் இயங்கிக்கொண்டிருக்கும்போது ஆன்மா மறைக்கப்பட்டுள்ளதோ அதேபோல.
எனவே பிரம்மத்தை அடைய வேண்டுமானால், பிரகிருதியின் அவ்யக்தத நிலை அதாவது இயங்காத நிலையை அடைய வேண்டும்.அப்போது பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.
-
பிரம்மத்தையே நாம் இறைவன் என்று அழைக்கிறோம்.
நாம் ஏன் பிரம்மத்தை உணர முடியவில்லை.
நாம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறோம்.இயக்கமற்ற நிலையை அடையும்போது பிரம்மத்தை உணர முடியும்.
-
பிரம்மம் என்பது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.ஆனாலும் அதை நம்மால் காண முடிவதில்லை.ஏன்?
ஒரு சினிமா திரையரங்கில் வெள்ளை திரை கட்டப்பட்டுள்ளது. முதலில் அதை நாம் காண்கிறோம். சினிமா ஆரம்பித்தபிறகு அதில் வரும் கதாபாத்திரத்தின்மீது மனம் சென்றுவிடுகிறது. அப்போது வெள்ளைத்திரையை மட்டும் யாராலும் பார்க்க முடியாது.
திரை அங்கேதான் இருக்கிறது. ஆனால் அதன்மீது பல காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பதால் அதை காண முடிவதில்லை.
-
அதேபோல இந்த உலகம் பிரம்மத்தின்மீது இயங்கிக்கொண்டிருக்கிறது.உலக இயக்கம் நிற்கும்போது பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.அதாவது இறைக்காட்சி கிடைக்கிறது.
-
வகுப்பு-25 நாள்-23-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யோகயுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:।
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே॥ 5.7 ॥
யோகத்தில் வெற்றிபெற்றவன்,சுத்தமனமுடையவன்,உடலை அடக்கியவன்,மனத்தை வென்றவன், எல்லா உயிர்களின் ஆத்மாவையும் தனது ஆத்மாவாக காண்பவன், கர்மம் செய்தாலும் கட்டுப்படுவதில்லை
-
யோகத்தில் வெற்றிபெற்றவன்கூட கர்மம் செய்கிறான்.ஆனால் எப்படிப்பட்ட மனநிலையில் அவனிடம் இருக்கிறது?
எல்லா உயிர்களின் ஆத்மாவும் தனது ஆத்மா என்ற நிலை.
-
இந்த உலகத்தில் ஆத்மா ஒன்றுதான் இருக்கிறது.அந்த ஆத்மாவுக்கு கோடிக்கணக்கான உடல்கள் இருக்கின்றன.
நமது ஆன்மாவும்,மிருகங்களின் ஆத்மாவும்,மரம் செடி கொடிகளின் ஆத்மாவும் ஒன்றுதான்.
சாதாரமனிதர்களுக்கு இந்த உண்மை தெரியாது.யோகிக்கு தெரியும்.
எனவே யாரிடமும் விருப்பு,வெறுப்பை வெளிப்படுத்தாமல் அவனால் வேலை செய்ய முடிகிறது.
-
அவரிடம் அளவற்ற ஆற்றல் வெளிப்படுகிறது.இயற்கை சக்திகள் அவருக்கு கட்டுப்பட்டிருக்கின்றன.அவர் யாரையும் அடக்கி ஆள்வதில்லை.
-
மகான்கள் இந்த நிலையில்தான் வேலை செய்கிறார்கள்.
அப்படியானால் அவர் தீயவர்களையும் வெறுப்பதில்லையா? தீயவர்கள் செய்யும் தீய செயல்களையும் ஏற்றுக்கொள்கிறாரா?
நல்லவன்,கெட்டவன் என்று எல்லோருமாக நானே ஆகியிருக்கிறேன்.எனது ஆன்மாவும் அவர்களது ஆன்மாவும் ஒன்றுதான் என்பது அவருக்கு தெரியும்.
அதே நேரத்தில் நல்லது செய்தால் நல்லதும்,கெட்டது செய்தால் கெட்டதும் நடக்கும் என்ற விதி இந்த உலகத்தில் இருக்கிறது.அந்த விதியின்படி தீயவர்களுக்கு கிடைக்கும் தண்டனையை அவர் தடுப்பதில்லை.
-
சுவாமி விவேகானந்தர் இந்தகருத்தை செயல்முறை வேதாந்தம் என்ற சொற்பொழிவில் விரிவாகக்கூறியிருக்கிறார்.
-
எல்லா மனிதர்களையும் தனது ஆத்மாவாகவே கருதி ஒருவன் வேலைசெய்ய தொடங்கினால் முடிவில் ஒருநாள் உண்மையாகவே அவ்வாறு பார்க்கும் நிலையை அடைகிறான்.
நாம் எதை நினைக்கிறோமோ அதை அடைகிறோம்
-
வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி।
ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஷிந:॥ 5.18 ॥
5.18 உண்மையை உணர்ந்த பண்டிதன், கல்வியும் பணிவும் பொருந்திய பிராமணர்களிடத்தும்(ரிஷிகளிடமும்), பசுவிடமும், யானையிடமும், நாயிடமும், நாயை சமைத்து உண்ணும் (பண்பாடற்ற) மனிதனிடமும் சமமான பார்வை உள்ளவனாக இருப்பான் (ஏற்றத்தாழ்வு பார்க்கமாட்டான்)
-
எல்லா உயிர்களிலும் தானே இருப்பதை காணும் யோகி யாரிடமும் வேறுபாடு பார்க்க மாட்டான். அவனைப்பொறுத்தவரை பிராமணனும் ஒன்றுதான் நாயும் ஒன்றுதான்,நாயை சமைத்து உண்ணும் மனிதனும் ஒன்றுதான்.
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:।
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:॥ 5.19 ॥
5.19 யாருடைய மனமானது சமநிலையில் உறுதியாயிருக்கிறதோ அவர்களால் இங்கேயே (இப்பிறப்பிலேயே) பிறப்பு இறப்பை ஜயிக்கிறார்கள்(முக்தி அடைகிறார்கள்). உண்மையில் பிரம்மம் ஸமமானது, தோசமற்றது. ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்திருக்கிறார்கள்.
இந்த பிறவியிலேயே இந்த மேலான நிலையை அடைய வேண்டும். ஜீவன்முக்தர்கள் இந்த உடலைவிடும்போது பிரம்மத்தில் ஒன்றுகலக்கிறார்கள்.மீண்டும் பிறப்பதில்லை
-
வகுப்பு-26 நாள்-27-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
அநாஷ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய:।
ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய:॥ 6.1 ॥
6.1 யார் கர்மபலனை சாராமல் செய்ய வேண்டிய கர்மத்தை செய்கிறானோ அவன் சந்நியாசியும் யோகியும் ஆகிறான். அக்கினியை பயன்படுத்தாதவனும். கர்மத்தை செய்யாதவனும் சந்நியாசி அல்ல.
-
சந்நியாசம் மேற்கொள்பவர்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
-
1.அக்னியை பயன்படுத்தக்கூடாது. உணவை சமைப்பதற்கு அக்னி தேவை. தானே உணவை சமைத்து உண்ணக்கூடாது.பிற வீடுகளில் பிச்சை ஏற்றுத்தான் வாழ வேண்டும்
2. உடலை சூடுபடுத்திக்கொள்வதற்காக அக்னி ஏற்றக்கூடாது
3.இருள் சூழ்ந்துள்ளபோதும் ஒளிக்காக அக்னி ஏற்றக்கூடாது
4.யாகம் வளர்ப்பதற்காக,இறை வழிபாட்டிற்காக அக்னி ஏற்றக்கூடாது.
-
இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடாது என்பற்காக ஒரு கையில் தண்டம் வைத்துக்கொள்வார்கள்.ஒரு கையால் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும்.
தண்டத்தை கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளால் செய்யக்கூடிய வேலைகளை செய்யக்கூடாது.
-
கூரையுடன்கூடிய வீடுகளில் தங்கக்கூடாது.
ஒரு ஊரில் மூன்று நாட்களுக்குமேல் தங்கக்கூடாது.
ஒரு வீட்டில் ஒரு கைப்பிடி அன்னம் மட்டுமே பிச்சை ஏற்கவேண்டும்.
முடி வெட்டிக்கொள்ளக்கூடாது.
மடங்களை உருவாக்கக்கூடாது
-
சந்நியாசிகளுக்கு எந்த கடமையும் இல்லை. எனவே அவர்கள் எதுகுறித்தும் கவலைப்படக்கூடாது.
இயற்கை சீற்றத்தால் மக்கள் மடிந்துபோகிறார்களா? கவலைப்படக்கூடாது
எதிரே ஒரு சிங்கம் வந்து சிறிதுநேரத்தில் தனது உடலை சுக்குநூறாக்கப்போகிறதா? கவலைப்படக்கூடாது
உணவு கிடைக்காமல் பட்டினியால் சிறது நேரத்தில் இறந்துவிடும் சூழ்நிலை வரப்போகிறதா? கவலைப்படக்கூடாது.
தனக்காகவும் பிறருக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்ககூடாது.ஏனென்றால் எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கிறது.அதை தடுக்க முயற்சிக்ககூடாது
சிலர் இல்லறத்தில் இருந்துகொண்டே இப்படிப்பட்ட மனநிலையில் வாழ்வார்கள்.
-
இன்னும் பல விதிமுறைகள் முற்காலத்தில் பின்பற்றப்பட்டன.
தற்காலத்தில் மடத்தில் வாழும் துறவிகள் முற்காலத்தைப்போல வாழும் சந்நியாசிகள் அல்ல.
அதேபோல தற்காலத்தில் வாழும் இல்லறத்தார்கள் முற்காலத்தைப்போன்றவர்கள் அல்ல.
-
இப்படிப்பட்ட சந்நியாசத்தை ஸ்ரீகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை.
-
நாம் முக்தி பெற வேண்டும் பிறரும் முக்தி பெற வேண்டும்.
ஒருவனுக்கு ஞானம் வந்தவுடன் செயல்களை விட்டுவிடுவதால் அவனுக்கு முக்தி கிடைக்கலாம்.ஆனால் பிறருக்கு ஒரு பயனும் இல்லை.
ஞானம் ஏற்பட்டபிறகு செயல்களில் ஈடுபட்டால் பிறருக்கும் ஞானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்
-
எனவே கடமையை செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்க கூடாது.
இந்த மனநிலையில் ஞானி செயல்புரியும்போது,அது மற்றவர்களுக்கும் ஊக்கத்தைக்கொடுக்கிறது.
-
முற்காலத்தில் இருந்த சந்நியாச முறைகளுக்கு மாற்றாக ஒரு புதியசந்நியாச முறையை ஸ்ரீகிருஷ்ணர் இங்கே அறிமுகம் செய்து வைக்கிறார்.
பலனை எதிர்பார்க்காமல் யாரால் வேலை செய்ய முடியும்?
ஞானிகளால் மட்டுமே முடியும்.
பலனை எதிர்பார்க்காமல் யார் வேலை செய்கிறானோ அவனும் சந்நியாசிதான்.
அப்படிப்பட்டவன் அக்னியை பயன்படுத்தலாம்.தனது உடலை காப்பாற்றுவதற்காக உணவை சமைத்து உண்ணலாம்
கூரையுள்ள வீட்டில் தங்கலாம். ஒரே இடத்தில் வசிக்கலாம்.பிறருக்கு ஞான உபதேசங்கள் வழங்கலாம்.பிறரின் துன்பத்தில் பங்குகொண்டு துன்பப்படலாம். கொடிய மிருகங்கள் வரும்போது உடலை காப்பாற்றிக்கொள்ளலாம். பிறருக்காக பிரார்த்தனை செயல்லாம். உலக நன்மைக்காக உழைக்கலாம்.
உடலை பாதுகாப்பாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம்.
இந்த உடல் பலமாகவும்,ஆராக்கியமாகவும் இருந்தால் அதனால் பிறருக்கு நன்மை செய்ய முடியும்.
-
யம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ।
ந ஹ்யஸம்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந॥ 6.2 ॥
6.2 பாண்டவா, எதை சந்நியாசம் என்று சொல்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை துறக்காதவன் யோகியாவதில்லை
-
சங்கல்பம் என்பது ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற ஆசையால், எழும் உறுதியான எண்ணம்.
யோகம் என்பது ஜீவத்மா பரமாத்மாவுடன் இணைவது
-
சந்நியாசி இந்த உலகத்தில் பல்வேறு வேலைகளைச் செய்தாலும் அவனிடம் சங்கல்பம் இருக்கக்கூடாது.
சில துறவிகள் இந்த நாட்டில் உள்ள துன்பங்கள் அனைத்தையும் நீங்குவேன் என்று சங்கல்பம் மேற்கொள்வார்கள்.
இன்னும் சிலர் வேறு சங்கல்பங்களை வைத்துக்கொள்வார்கள்.
-
சந்நியாசி இப்படிப்பட்ட சங்கல்பங்களை வைத்துக்கொள்ளக்கூடாது.
-
சதாரண மக்கள் ஒரு சங்கல்பத்தை ஏற்று வேலை செய்வது நல்லது.
எல்லாம் இறைவனது விருப்படி நடக்கிறது நான் வெறும் கருவி மட்டுமே என்ற எண்ணம் துறவியின் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.
தனது உடலைக்கொண்டு இறைவன் சில வேலைகளை செய்யலாம்.அந்த வேலை என்னுடையது அல்ல அது இறைவனுடையது என்ற எண்ணம் துறவிடம் இருக்கும்.
-
ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதாரபுருஷர்களிடம் சங்கல்பம் இருக்குமா?
இருக்கும்.
இறைவனது சங்கல்பத்தால்தான் இந்த உலகமே இயங்குகிறது.
சங்கல்பம் இருந்தால் மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும்
-
-
வகுப்பு-27 நாள்-28-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்।
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥ 6.5 ॥
6.5 தன்னைத்தானே உயர்த்திக்கொள். தன்னை தாழ்த்திக்கொள்ளக்கூடாது.
ஏனென்றால் தனக்கு தானே நண்பன், தனக்கு தானே பகைவன்
-
நமக்கு உதவி வேண்டி தெய்வத்திடம் பிரார்த்திக்கிறோம். எல்லோரும் பிரார்த்திக்கிறார்கள்.அனைவரது பிரார்த்தனைகளும் நிறைவேறியிருந்தால்,யாருக்கும் எந்த தேவையும் இல்லாமல் போயிருக்கும்.
எல்லோருடைய பிரச்சினைகளும் தீர்ந்திருக்கும்.
ஆனால் அப்படி நடப்பதில்லை.
வெளியிலிருந்து யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு தெய்வம் உதவிசெய்ய வேண்டும் என்று காத்துக்கிடக்கிறோம்.
இவ்வாறு காத்திருந்து காத்திருந்து காலம் கடந்ததுதான் மிச்சம்.
இவ்வாறு பிறரது உதவியை நாடி அலைவதைவிட, தன்னைதானே உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
பலவீனமானவர்கள்தான் பிறரது உதவியை நாடி ஓடுகிறார்கள்.
முதலில் நம்மை பலசாலிகளாக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை.
ஒரு மனிதரிடமிருந்து உதவியை பெறும்போது அதற்கு சமமான ஏதோ ஒன்று நம்மிடமிருந்து அவருக்கு செல்கிறது.
உதவியை கொடுப்பவர் புண்ணியத்தை பெறுகிறார். உதவி பெறுபவர் பாவத்தை பெறுகிறார்.
பாவிகளுக்கு தெய்வங்கள்கூட உதவுவதில்லை.புண்ணியவான்களுக்கு எல்லா தெய்வங்களும் உதவ தயாராக இருக்கிறது.
நம்மிடம் ஏராளம் செல்வம் இருந்தால் எல்லோரும் நம்மைத்தேடி வருவார்கள்.
ஒன்றும் இல்லாதவனைத்தேடி சொந்தங்கள்கூட வருவதில்லை.
நம்மைநாம் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
எப்படி?
உழைக்காமல் எதையும் பெற முடியாது. தெய்வத்தின் அருளால் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைத்தால் அது தவறு.
உடலளவில் ,மனதளவில், ஆன்மீகத்தில் அனைத்திலும் நம்மைநாமேதான் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலையிலிருந்து படிப்படியாக முன்னேற வேண்டும்.
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக செய்யத்தொடங்கவேண்டும்.படிப்படியாக உயர்ந்த கடமைகள் வரும்.ஒருநாள் இந்த உலகத்தையே ஆளும் நிலை வரும்.
இவைகள் எல்லாம் நமது உழைப்பினால்தான் வருகிறதே தவிர, வேறு குறுக்கு வழியில் வருவதில்லை.
அதிர்ஷ்டத்தினால் ஒருவன் திடீரென்று உயர்ந்த நிலையை அடையலாம்.ஆனால் அந்த உயர்ந்த நிலையில் நிலைத்து நிற்கும் அளவுக்குரிய திறமை இல்லாவிட்டால்,அதே வேகத்திலேயே தாழ்ந்த நிலையை அடைந்துவிடுவான்.
-
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:।
அநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத்॥ 6.6 ॥
6.6 யார் தன்னைத்தானே ஜெயித்தவனோ. அவன் தனக்குதானே உறவினன்.
ஆனால் தன்னை தானே ஜெயிக்காதவன் தனக்குதானே பகைவன்போல்,
பகைமையை எதிர்கொள்ள வேண்டிவரும்
தன்னை ஜெயிப்பது என்றால் என்ன? நமது மனத்தை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.
நிம்மதியான வாழ்க்கை அல்லது சொர்க்க வாழ்க்கை என்பது எது?
அதிகசெல்வம்,அதிக புகழ்,அதிக அதிகாரம் கொண்ட வாழ்க்கையா?
இல்லை.
நமது மனம் நமக்கு கட்டுப்பட்டிருந்தால் அதுதான் நிம்மதியான வாழ்க்கை.
மனத்தை அடக்கியவனை நாடி பிறர் வருகிறார்கள்
நரக வாழ்க்கை என்பது என்ன?
சிறுவயது வாழ்க்கை,நிறைவேறாத ஆசைகள்,முற்காலத்தில் செய்த தவறுகள்,பிறர் நமக்கு இழைத்த கொடுமைகள்,உறவினர்கள் செய்த துரோகம் இன்னும் பல்வேறு நினைவுகளை மனம் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருப்பது.
அலையாயும் மனத்தை வைத்திருப்பவனிடம் யாரும் வருவதில்லை.அவன் பேசுவதை யாரும்கேட்க விரும்புவதில்லை
எனவே மனத்தை அடக்கியவனுக்கு அவனது மனமே நண்பனாக மாறிவிடுகிறது.அடங்கிய மனத்தில் உலகத்தின் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்படுகிறது. அந்த மனம் எப்போதும் சரியான வழியை காட்டுகிறது.
-
-
-
வகுப்பு-28 நாள்-30-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித:।
ஏகாகீ யதசித்தாத்மா நிராஷீரபரிக்ரஹ:॥ 6.10 ॥
6.10 யோகி, யாருக்கும் தெரியாதவனாக தன்னந்தனியாக இருந்துகொண்டு சித்தத்தையும்,
தன்னையும் அடக்கிக்கொண்டு, ஆசையற்றவனாய், பொருட்கள் எதுவும் இல்லாதவனாய்,
எப்பொழுதும் தன்னை ஒன்றுபடுத்த வேண்டும் (தன்னில் நிலைபெற்றிருக்க வேண்டும்)
-
யோகி என்றால் யார்?
செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்து,புலன்களை அடக்கியவன்.
அவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாக இருக்கவேண்டும்.
பலரது முன்னிலையில் தியானிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் ஒவ்வொரு எண்ணம் புறப்படுகிறது.
இவர் உண்மையிலேயே தியானம் செய்கிறாரா அல்லது தியானிப்பவர்போல நடிக்கிறாரா என்று ஒருவர் நினைப்பார்.
இன்னொருவர் ஆகா! இவர் பெரிய யோகி என்று நினைப்பார்.
இன்னொருவர் பணம் சம்பாதிப்பதற்காக நடிக்கிறார் என்று நினைப்பார்.
இப்படி ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் ஒவ்வொரு எண்ணம் வெளிப்படும்.இவைகள் தியானிப்பவரை சென்றடைகிறது. அவரது மனத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.
ஆனால் சமாதி நிலையில் நிலைபெற்றிருப்பவர்களை இப்படிப்பட்ட எண்ணங்கள் தாக்காது
-
பக்கத்தில் எந்த பொருட்களும் இருக்கக்கூடாது.அப்படி இருந்தால் அந்த பொருட்கள் தொடர்பான எண்ணங்கள் உருவாகும். பக்கத்தில் ஒரு பாத்திரம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது அந்த பாத்திரத்தை யாராவது எடுத்து சென்றுவிட்டால் என்ன செய்வது? அந்த பாத்திரம் இல்லாவிட்டால், தண்ணீர் பிடித்து வைப்பதற்கு வேறு பாத்திரம் இல்லையே என்றெல்லாம் சிந்தனை தோன்றும்
-
மனத்தை தனது ஆத்மாவில் நிலை நிறுத்தவேண்டும். வெளியே ஒரு பொருளை வைத்துக்கொண்டு அதில் மனத்தை நிலைநிறுத்தக்கூடாது.அப்படி செய்தால் மனம் வெளி முகமாக செல்லும். அவ்வப்போது அந்த பொருள் இருக்கிறதா என்று கண்ணை திறந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
-
ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந:।
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஷோத்தரம்॥ 6.11 ॥
6.11 சுத்தமான இடத்தில், உறுதியானதும், அதிக உயரமில்லாததும்(உயரமான இடத்தில் அமர்ந்தால் கீழே விழலாம்), மிக தாழ்வல்லாத (தாழ்வான இடத்தில் அமர்ந்தால் பூச்சிகள் தொந்தரவு செய்யலாம்), துணி,தோல், தர்ப்பை இலைகளை மேலே விரித்து அமர்ந்து, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
-
சுத்தமான இடமாக இருக்க வேண்டும். உறுதியான இடமாக இருக்க வேண்டும். அதிக உயரம் இருக்கக்கூடாது. தாழ்வான இடமாக இருக்ககூடாது.துணி அல்லது மான்தோல் அல்லது புலித்தோல் அல்லது தர்ப்பை இலைகளை விரித்து அதில் அமர்ந்துகொள்ளலாம்.
சில துணிகள் உடலை சூடாக்கும் இயல்புடையது.அதன்மீது அமரக்கூடாது.கல்,மண்,பிற உலோகங்கள் உடலை குளிர்விக்கும் தன்மை உடையது.அதன்மீதும் உட்காரக்கூடாது.
உடலின் சூடு அதிகரிக்காமலும், அளவுக்கு அதிகமாக குறையாமலும் இருக்க வேண்டும்.
-
தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:।
உபவிஷ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஷுத்தயே॥ 6.12 ॥
6.12 அந்த ஆசனத்தில் அமர்ந்து மனதை ஒருமைப்படுத்தி சித்தம், இந்திரியம் இவைகளின் செயல்களை அடக்கி, தன்னை தூய்மைப்படுத்துவதற்காக யோகம் பயிலவேண்டும்.
-
பல்வேறு எண்ணங்கள் தொடந்து எழுந்துகொண்டே இருக்கும்.அவைகளை ஒருமைப்படுத்தவேண்டும். எண்ணங்களை நீக்குவதற்கு முயற்சித்தால் அதனால் மனம் சோர்வடையும்,தியானிக்க முடியாது.
அப்படி செய்யமல் மனத்தின் எண்ணங்களை ஒருமைப்படுத்த வேண்டும்.
அதனாவது அனைத்து எண்ணங்களும் ஒரு இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும்.
வீட்டில் மிக நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டால்,அந்த நேரத்தில் வரும் அனைத்து எண்ணங்களும் அவரைப்பற்றியதாக மட்டுமே இருக்கும்.வேறு எண்ணங்களை நினைக்க முயற்சித்தாலும் முடியாது.
காதலன்-காதலி பிரிந்துவிட்டால் அதன் பிறகு அவர்களுக்குள் எழும் எண்ணங்கள் அனைத்துடம் அதைப்பற்றியதாகவே இருக்கும்.
இதுதான் மனத்தை ஒருமைப்படுத்துவது.
ஒரே இலக்கை நோக்கி அனைத்து எண்ணங்களையும் திருப்புவது.
பக்தி மார்க்கத்தில் மனத்தை ஒருநிலைப்படுத்துவது எளிது.இஷ்டதெய்வத்தின்மீது தீவிர அன்பு இருக்க வேண்டும்.ஞான மார்க்கத்தில் சற்று கடினம்.
கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் இவைகள் மூலம் நடைபெறும் செயல்களை முற்றிலும் நிறுத்தவேண்டும்.
கண்களால் வெளி உலகைப்பார்க்கக்கூடாது.காதுகளால் எதையும் கேட்கக்கூடாது.
யோகம் என்பது என்ன?
ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிணைவது
-
ஒருமித்த எண்ணங்கள் படிப்படியாக சமநிலையை அடைகின்றன.
மிக ஆழந்த வேதனை வரும்போது சில நொடிகள் அப்படியே மனம் எதையும் சிந்திக்காமல் நிற்கிறது.
அந்த வேளையில் ஒரு பேரமைதியை உணர்கிறோம்.
உயிரின் அருகில் சென்றதுபோன்ற நிலை ஏற்படுகிறது. சிலருக்கு இதயத்துடிப்பு நின்று மரணம் ஏற்படுகிறது.
யோகிகள் இதயத்துடிப்பை நிறுத்துகிறார்கள்.ஆனால் மரணம் நேர்வதில்லை.
முறையான பயிற்சியினால் மட்டுமே இதை அடைய முடியும்.
பயிற்சி இல்லாதவர்களுக்கு மரணம் ஏற்படும்
-
ஸமம் காயஷிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:।
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ்சாநவலோகயந்॥ 6.13 ॥
-
6.13 உடல், தலை, கழுத்து இவைகளை நேராகவும் அசையாமலும் வைத்துக்கொண்டு உறுதியாய் இருந்துகொண்டு, தன்னுடைய மூக்குநுனியை பார்த்துக்கொண்டு,வெளிஉலகை பாராமல் இருக்க வேண்டும்.
-
தியானிக்கும்போது பலர் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.அப்படி செய்தால் மனம் கனவுலகை நோக்கி சென்றுவிடும். விழித்திருந்தால் நாம் காண்பது நனவுலகம். கண்களை மூடியபின் வருவது கனவுலகம்.
இந்த இரண்டிற்கும் இடையில் கண்களை முழுவதும் திறக்காமலும்.கண்களை முழுவதும் மூடாமலும் இருக்க வேண்டும்.
அதேபோல அதிக வெளிச்சம்,முழு இருட்டு இரண்டையும் தவிரக்கவேண்டும். மிகமிக லேசான வெளிச்சம் இருக்க வேண்டும்.
உடல்,தலை,கழுத்து இவைகளை நேராக வைத்துக்கொள்ள வேண்டும்.
தியானிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில்கூட இதேபோல அமர்வதற்கு பழகவேண்டும்.
சமமாக நாற்காலியில் உட்காரவேண்டும்.தற்காலத்தில் எந்த அலுவலகத்திலும் அப்படிப்பட்ட நாற்காலிகள் வைப்பதில்லை.
மரத்தினால் ஆன சமதளத்துடன்கூடிய நாற்காலியில் அமர வேண்டும்.அந்த நாற்காலியின்மேல் பஞ்சுபோன்ற அமைப்புகள் எதுவும் இருக்கக்கூடாது.
நேராக அமரும்போது மூச்சு மிக இயல்பாக வருகிறது. மனத்தில் தேவையற்ற எண்ணங்கள் வருவதில்லை.
உடலில் இரத்த ஓட்டம்,இதயத்துடிப்பு போன்றவை இயல்பாக இருக்கும்.
உடல் குறைபாடுகள் நீங்குகின்றன.ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
-
ப்ரஷாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:।
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:॥ 6.14 ॥
-
6.14 அமைதியான உள்ளத்தையுடையவன், பயம் நீங்கியவன், பிரம்மச்சர்யத்தில் நிலைபெற்றவன். மனதை அடக்கி, சித்தத்தை என்பால் வைத்தவன், என்னையே குறிக்கோளாக கொண்டு, யுக்தனான(ஏற்கனவே கர்மயோகத்தை நிறைவுசெய்தவனாக) அமர்ந்திருக்க வேண்டும்.
-
பயம் இருக்கக்கூடாது. தனிமையான இடத்தில் சென்று தியானிக்கும்போது, ஒருவேளை மிருகங்கள் ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது? தீயவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது பூச்சிகள் ஏதாவது கடித்துவிட்டால் என்ன செய்வது? இப்படிப்பட்ட பயம் இருக்கக்கூடாது.
யார் மூலமாகவோ.எந்த மனிதர்கள் மூலமாகவோ,எந்த விலங்குள் மூலமாகவோ, எந்த பூச்சிகள் மூலமாகவோ பாதிப்பு ஏற்படாத இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.
-
பிரம்மச்சர்யம் மிக முக்கியம். இது அவ்வளவு எளிதில் அமையாது.
பெண் அருகில் இருந்தாலும் யார் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கிறானோ அவனே பிரம்மச்சர்யத்தில் நிலைபெற்றவன்.
காமத்திற்கு காரணம் என்ன?
ஆணுக்கு பெண்மீதும், பெண்ணுக்கு ஆண்மீதும் ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.
ஆண் பெண்ணைப்பற்றி முழுவதும் தெரிந்துகொண்டால் அந்த ஈர்ப்பு மறைந்துவிடும்.அதேபோலவே பெண்ணிற்கும்.
ஆண்,பெண் இந்த இரண்டு உடல்களையும்,அதற்கு பின்னால் உள்ள மனத்தையும் சேர்த்து வைத்தால்
-அது அம்சப் பிரபஞ்சம்.
முழு பிரபஞ்சம் எப்படி அமைக்கப்பட்டுள்ளதோ அதே போல அம்சப்பிரபஞ்சமும் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு உடல்களையும் பற்றி முழுமையாகத் தெரிந்தவன் பிரபஞ்சத்தைப்பற்றி தெரிந்தவனாகிறான்.
இரண்டு உடல்களைப்பற்றிய பூரண ஞானம் யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களால் மட்டுமே பிரம்மச்சர்யத்தில் நிலைபெற முடியும்.
பிரம்ம+ச்சர்யம் என்றால் பிரம்மத்தை நோக்கி செல்வது.
பிரம்மச்சர்யத்தில் நிலைபெற்றவனால் மட்டுமே பிரம்மத்தில் நிலைபெற முடியும்.
மற்றவர்களால் அந்த அளவு உயரத்தை அடைய முடியாது.
-
ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடும் சிலர் ஓரளவு உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.
அதற்கு மேல் அவர்களால் செல்ல முடிவதில்லை.அதற்கு காரணங்களில் முக்கியமானது,
ஆண்,பெண் இரண்டு உடல்கள்.இரண்டு மனங்கள் பற்றிய பூரண ஞானம் ஏற்படாததே.
-
பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் ஏதாவது ஒரு பெண் தெய்வத்தை தியானிப்பார்கள்.படிப்படியாக அந்த தெய்வமும் தானும் ஒன்நே என்ற நிலையை அடைவார்கள்.இவ்வாறு பெண் இயல்புகள் அவர்களிடம் முழுமையடையும்.
அதேபோல பெண் பக்தைகள் ஆண் தெய்வத்தை தியானிப்பதன் மூலம் ஆண்மையில் முழுமையடைய முடியும்.
-
இல்லறத்தில் கணவனை மனைவி தெய்வமாகவும், அதேபோல மனைவியை கணவன் தெய்வமாகவும் பாவித்து வாழ்ந்து வந்தால் இரண்டு உடல்களைப்பற்றிய ஞானம் பெற்று முழுமையடைய முடியும்.முற்காலத்தில் ரிஷிகள் இந்த மனநிலையில் வாழ்ந்து வந்தார்கள்.
-
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ:।
ஷாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி॥ 6.15 ॥
6.15 இவ்விதம் எப்பொழுதும் மனதை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தையடக்கிய யோகியானவன், என்மேலான நிலையான, நிர்வாணத்தை பெற்று சாந்தியை அடைகிறான்
-
இதில் வெற்றிபெற்றவன் இறைவனது மேலான நிலையை அடைகிறான்.
இறைவனுக்கு பல நிலைகள் உள்ளன.
அதில் மிக மேலான நிலை எது?
பிரம்மம்.
உருவமற்ற நிலையை அடைவது.
நிர்வாணம் என்பது இன்னொரு பெயர்.
புத்தமதத்தினர் குறிப்பிடும் நிர்வாண நிலையும் இதுதான்.
இந்த மேலான நிலையை அடைந்தவன் மறுபடி பிறப்பதில்லை.
அவன் அழிந்துபோவதில்லை, எல்லையற்ற நிலையை அடைந்து எப்போதும் இருக்கிறான்.
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
நாத்யஷ்நதஸ்து யோகோ அஸ்தி ந சைகாந்தமநஷ்நத:।
ந சாதிஸ்வப்நஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந॥ 6.16 ॥
6.16 அர்ஜுனா, அதிகமாக உண்பவனுக்கு யோகம் கைக்கூடுவதில்லை.
ஒன்றுமே உண்ணாதவனுக்கும் யோகம் கைக்கூடுவதில்லை.
அதிகநேரம் தூங்குபவனுக்கும் அதிகமாக விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை
-
யோகம் என்பது உடலை இயக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லுதல்.
உடல் இயக்கமற்ற நிலைக்கு செல்ல வேண்டுமானால் மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
மனம் அமைதியாக இருக்க வேண்டுமானால் பிராணன் அமைதியடைய வேண்டும்.
-
ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை யோகி உண்ணக்கூடாது.
அப்படி உண்டால் பிராணன் அமைதியடைவதற்கு அதிக நேரம் ஆகும்.
பிராணனை தனக்குள்ளேயே கட்டுப்படுத்த முடியாது.
தியானிக்கும்போது உடல் உறுப்புகளின் செயல்பாட்டை நிறுத்துகிறோம்.
உணவு செரிமானம் நடந்துகொண்டே இருந்தால் உடல் இயக்கத்தை நிறுத்த முடியாது.
உணவு இல்லாமல் இருந்தால் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.வயிற்றில் அமிலங்கள் சுரக்கத்தொடங்கிவிடும்.
அந்த நேரத்தில் உடல் இயக்கத்தை நிறுத்தினால் வயிற்றில் அதிக அமிலம் சேர்ந்து வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.
ஒருவேளை நன்றாக உணவு உண்டபின் ஏதோ ஒரு உபாயத்தால் உடலை இயக்கமற்ற நிலைக்கு கொண்டு சென்றால் என்னவாகும்?
உடலில் தேங்கியுள்ள உணவுகள் செரிக்காமல் விஷத்தன்மையை அடையும். அதனால் உடல்நலம் பாதிக்கப்படும்
-
தியானிப்பதற்கு எது சரியான நேரம்?
உணவு நன்றாக ஜீரணித்தபின்- பசி எடுப்பதற்கு முன், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியே சரியான நேரம்
யோகி குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்துமுறை தியானிக்க வேண்டும்.
காலையில் 5 முதல் 6 மணி வரை
மதியம் 11.30 மணி முதல் 12.30 மணிவரை
மாலை 4 முதல் 5 வரை
அடுத்து 7 முதல் 8 வரை
இரவு 12 மணி முதல் 2 மணிவரை
சரியான நேரங்களாக இருக்கலாம்
-
யோகிக்கு தூக்கம் வராது. சில வேளைகளில் கனவு வரலாம்.கனவு மூலமாக சில பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். சில அனுபவங்கள் கிடைக்கும்.
தூக்கம் வராவிட்டாலும் அவ்வப்போது படுத்திருக்க வேண்டும்.இதனால் உடல் முழுவதும் ரத்தஓட்டம் சீராக செல்கிறது.
தியானிக்கும்போது ரத்தஓட்டத்தை நிறுத்துகிறோம். தொடர்ந்து ரத்த ஓட்டத்தை நிறுத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்..உலகத்தில் வாழ வேண்டுமானால் நடு நிலையை பின்பற்ற வேண்டும்.
எனவே தியானம், வேலை, ஓய்வு போன்றவை மாறிமாறி இருக்க வேண்டும்.
-
அதிக நேரம் விழித்திருப்பவனுக்கும் யோகம் கைக்கூடாது
ஏன்?
இந்த உலகம் என்பது மனத்தின் படைப்பு.இதில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தால் மேலும் மேலும் அதிகமான சிக்கலில் மாட்டிக்கொள்வோம். தியானத்திற்கு இடையே சிறிது நேரம் மட்டுமே விழித்திருக்க வேண்டும்.
உலகியல் மனிதர்கள் ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் விழித்திருக்கிறார்கள். எட்டு மணிநேரம் தூங்குகிறார்கள்.
யோகிகள் மாலை 6 மணி முதல் பகல் 6 மணிவரை தியானத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.அதன்பின் பகலில் ஓய்விலும் சிறிதுநேரம் விழித்தும் இருப்பார்கள்.
யோகிகளைப் பார்க்கும் உலகியல் மக்கள் பகலில் சோம்பேரியாக தூங்கிக்கொண்டிடுப்பதாக நினைப்பார்கள்.யோகிகள் தூங்குவதில்லை. ஓய்வில் இருப்பார்கள்.
-
யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு।
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா॥ 6.17 ॥
6.17 உண்பதிலும், உடல்வேலைகள் செய்வதிலும் அளவுடன் இருப்பவனுக்கு,
கர்மங்களை செய்வதில் யுக்தனாக இருப்பவனுக்கு, உறங்குவதிலும், விழித்திருப்பதிலும் முறையாக இருப்பவனுக்கு யோகமானது, துன்பத்தை போக்குவதாக அமைகிறது
-
அதிகமான உடல்வேலைகளை யோகி செய்யக்கூடாது. உடல் வேலை செய்யாமலும் இருக்கக்கூடாது.
அதிகமான உடல்வேலைகளைச்செய்தால் அதற்கு ஈடான அளவு உணவு உண்ண வேண்டும்.
பிராணசக்தி அதிகமாக செலவழியும் எனவே மனத்தை அடக்க முடியாது
மனத்தை அடக்க முடியாமல்போனால் மூளை அதிக அளவு சூடாகும்.
-
யுக்தன் என்பவன் யார்?
யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே।
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா॥ 6.18 ॥
6.18 எப்பொழுது. நன்றாக அடக்கப்பட்ட சித்தம் தன்னிலேயே நிலைபெற்றிருக்கிறதோ,
எப்பொழுது எல்லா கர்மங்களிலிருந்தும் ஆசை நீங்கியவனாகிறானோ,
அப்பொழுது யுக்தன் என்று சொல்லப்படுகிறான்
-
சித்தம் என்பது என்ன? மூளை
மூளையில்தான் எல்லா எண்ணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூளையிலிருந்துதான் பல்வேறு எண்ணங்கள் தோன்றுகின்றன.
ஏதாவது வேலை செய்யும்போது அதனால் எனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா என்றுதான் பொதுவாக மக்கள் நினைப்பார்கள்.லாபம் இல்லாத வேலையை யாரும் செய்ய முன் வருவதில்லை.
யோகியும் வேலை செய்கிறான். ஆன்மீகத்தைப்பற்றி பேசுவதும் வேலைதான்,உலகிலுள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் வேலைதான்.
றர் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பதில் தனக்கு என்ன லாபம் என்று யோகி நினைப்பதில்லை.
கர்மத்திலுள்ள ஆசை நீங்கிவிட்டால் அவன் யுக்தன் என்று அழைக்கப்படுகிறான்.
இந்த நிலையை அடைவது அவ்வளவு எளிதல்ல.
யோகம் பயிலும் பலரும் பல்வேறு ஆசைகளில் மாட்டிக்கொள்வார்கள். யோகி நினைத்தால் சொர்க்கத்தில் அதிக நாட்கள் வாழ முடியும். அல்லது இன்னும் உயர்ந்த உலகங்களுக்கு சென்று நீண்ட நாட்கள் வாழ முடியும்.
அவைகளும் ஆசைதான். அந்த ஆசைகள் இருந்தால்கூட பிரம்மத்தை அடைய முடியாது. மீண்டும் பிறக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
-
-
வகுப்பு-30 நாள்-2-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யதோ யதோ நிஷ்சரதி மநஷ்சம்சலமஸ்திரம்।
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஷம் நயேத்॥ 6.26 ॥
6.26 சஞ்சலமானதும், அசையக்கூடியதான மனமானது எக்காரணத்தினால் அலைகிறதோ,
அதை அதிலிருந்து எடுத்து, தன்வசத்தில்(ஆத்மாவிடம்) கொண்டுவர வேண்டும்.
தியானத்தின்போது உடலை அசையாமல் சிலைபோல வைக்கவேண்டும்.
ஆத்மாவின் இயல்புகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
நான் ஆத்மா.நான் பிறப்பற்றவன்.நான் மரணமற்றவன்.நான் எங்கும் நிறைந்தவன் என்று சிந்திக்க வேண்டும்.
சிறிது நேரத்தில் மனத்தில் பல எண்ணங்கள் தோன்றும்
மனம் என்பது அலைபாயும் எண்ணங்களையுடையது.
மனத்திற்கு மேலே இருப்பது புத்தி.புத்தியின் இயல்பு சாட்சி.
அனைத்து செயல்களையும் சாட்சிபோல நின்று கவனிப்பது புத்தியின் செயல்.
புத்தி எப்போதும் விழிப்பாக இருக்கும்..புத்தியில் நின்று அலைபாயும் எண்ணங்களை கவனிக்க வேண்டும்
-
மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழுந்துகொண்டே இருக்கும்,சிறிது நேரத்தில் மனத்தை கவனிப்பதை மறந்துவிட்டு,அந்த எண்ணத்தின்போக்கிலேயே சென்றுவிடுவதை காண்போம்.
அப்போது நாம் புத்தியில் இல்லை.
சிறிது நேரத்திற்கு பிறகு சற்று விழிப்புற்று, மீண்டும் மனத்தை கவனிக்க தொடங்குகிறோம், மீண்டும் மனத்தின்போக்கில் சென்றுவிடுகிறோம்.
புத்தியில் நிற்பதற்கு எப்படிப்பட்ட பயிற்சி செய்ய வேண்டும்?
நாம் தியானம் செய்ய அமர்ந்தபோது ஒரு எண்ணம் தோன்றும் சிறிது நேரத்தில் அது மறைந்து இன்னொன்று தோன்றும் பின்பு அது மறைந்து இன்னொன்று தோன்றும் இவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ந்து பல எண்ணங்கள் தோன்றியிருக்கும்..
திடீரென்று விழிப்புநிலைக்கு மீண்டும் வருவோம்.அப்போது இதுவரை எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் மறந்துவிடும்.
நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்.
கடைசியாக எதை எண்ணினோம்,அதற்கு முன்பு எதை எண்ணினோம்,அதற்கு முன்பு எது என்று ஒவ்வொன்றாக நியாபகப்படுத்திக்கொண்டே வரவேண்டும்.
மீண்டும் ஆத்மாவைக்குறித்து சிந்திக்க வேண்டும். ஆத்மாவை தியானிக்க வேண்டும்.
என்ற முடிவுடன் இருப்போம்.
மீண்டும் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழும்.
மீண்டும் எண்ணங்களை பின்னோக்கி கவனித்து வரவேண்டும்
இவ்வாறு பல வருடங்கள் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
சிலருக்கு மிக விரைவில் இந்த நிலை கைக்கூடும்.
புத்தியில் நின்று மனத்தை கவனிப்பவன் புத்தன்.
புத்தியில் நிலைபெற்ற பிறகு நமது விருப்பம் இல்லாமல் எந்த எண்ணங்களும் வராது.
நாம் எதை குறித்து சிந்திக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதுகுறித்த எண்ணங்கள் மட்டுமே வரும்.
-
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ:।
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஷமத்யந்தம் ஸுகமஷ்நுதே॥ 6.28 ॥
6.28 இவ்விதம் எப்பொழுதும் மனதை தன்னிடமே நிலைநிறுத்திய பாபம் நீங்கப்பெற்ற யோகியானவன், எளிதில் பிரம்மத்தை அடைவதால்வரும் பேரானந்தத்தை அடைகிறான்
முழுவதும் பாபம் நீங்கிய பிறகே எண்ணங்கள் அற்ற நிலையை அடைய முடியும்
எண்ணங்கள் இல்லாமல் விழிப்புற்ற நிலையில் இருக்கும்போது உள்ளுக்குள் இருந்து ஆனந்தம் சுரக்கிறது
இந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் முடிவில் பிரம்மஞானம் ஏற்படும்.
-
-
.
வகுப்பு-31 நாள்-9-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
அஸம்ஷயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்।
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே॥ 6.35 ॥
6.35 மனமானது அடக்க முடியாதது. அலைந்து திரிவது. இதில் சந்தேகமில்லை.
ஆனால் குந்தியின் மைந்தா, தொடர்ந்த பயிற்சியினாலும்,
உலகியல் பற்றின்மையாலும் அடக்கமுடியும்.
-
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:।
வஷ்யாத்மநா து யததா ஷக்யோ அவாப்துமுபாயத:॥ 6.36 ॥
-
6.36 மனதை அடக்க முடியாதவனால் யோகமானது அடைய முடியாதது என்பது என் கருத்து.
தன்னை வசப்படுத்தியவனால், பல வழிகளில் முயற்சி செய்பவனால், அடக்க இயலும்
-
மனத்தை அடக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
-
உலக விவகாரங்களிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருப்பவர்கள்,
மனத்தில் எழும் எண்ணங்களை அவ்வப்போது அகற்றி எண்ணங்கள் அற்ற நிலையில் மனத்தை வைக்கிறார்கள்.
-
உலக விவகாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், இறைசிந்தனையை மட்டும் வைத்துக்கொண்டு பிற எண்ணங்களை அகற்றி எப்போதும் இறைநினைவில் மூழ்கியிருக்கிறார்கள்
-
தொடர்ந்த பயிற்சியினால் மட்டுமே இந்த நிலையை அடைய முடியும்.
இறைவன்மீதுகொண்டுள்ள பக்தியால் விரைவில் இந்த நிலையை அடையலாம்.
மேலும் உலகத்தின்மீது உள்ள பற்றற்ற தன்மையாலும் இந்த நிலையை அடையலாம்.
உலகத்தின்மீது,உலகத்திலுள்ள பொருட்கள்மீது பற்று இருந்தால் மனம் எப்போதும் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும்.எனவே மனத்தை அடக்க பற்றற்ற நிலை அவசியம்.
எந்த வழியை பின்பற்றினாலும் சரி, மனத்தை அடக்க முடியாதவனால் யோகத்தை அடைய முடியாது.
-
மனத்தை அடக்கியவன், யோகத்தை அடைந்தவனது மனநிலை எப்படி இருக்கும்?
-
ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி।
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஷந:॥ 6.29 ॥
6.29 யோகத்தில் நிலைபெற்றவன் எங்கும் சமமான பார்வையுடையவன்,
தன்னை எல்லா உயிர்களிடத்திலும், எல்லா உயிர்களையும் தன்னிடத்திலும் காண்கிறான்.
(தானே எல்லா உயிர்களாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்)
-
யோகத்தில் நிலைபெற்றவன் ஆத்மாவை நேசிக்கிறான். ஆத்மாவே அனைத்து உயிர்களுமாக ஆகியிருக்கிறது என்பதை காண்கிறான். எனவே அனைத்து உயிர்களையும் நேசிக்கிறான். எல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பதால் அவன் எப்போதும் அன்பு நிறைந்தவனாகிறான்.
-
ஸ்ரீகிருஷ்ணர் யோக நிலையில் வாழ்ந்தவர். அப்படியானால் தீயவர்களை ஏன் அழித்தார்? அனைவரிடமும் சமமான அன்பு காட்டுபவர்களால் இப்படிப்பட்ட செயலை செய்ய முடியுமா?
இதற்கு பதில் நமது வாழ்க்கையிலேயே இருக்கிறது.
தந்தை தன் மகன்மீது அன்பு வைத்திருக்கிறார்.அதேநேரத்தில் மகன் தவறு செய்தால் தண்டிக்கிறார்.
அப்படி தண்டிப்பது மகனின் நன்மைக்காகவே.
அதேபோல யோகத்தில் நிலைபெற்றவர்கள்கூட தீயவர்களை நல்வழிக்கு கொண்டுவருவதற்காக அவர்களை தண்டிப்பதுண்டு.
தீயவர்கள்மீதுள்ள அன்பினால்தான் இதை செய்கிறார்களே தவிர வெறுப்பினால் அல்ல.
-
வகுப்பு-32 நாள்-11-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
யோக மார்க்கம், சந்நியாச மார்க்கம் என்று இரண்டு பாதைகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் விவரித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த பாதைகளில் சென்று முக்தி பெறுவதற்கு சிலருக்கு ஒரு பிறவி ஆகலாம்.சிலருக்கு பல பிறவிகள் ஆகலாம்.
ஒருவேளை இந்த பாதையில் செல்லும் ஒருவர் இலக்கை அடையாமல் பாதியில் இறந்துவிட்டால் என்னவாகும்?
அடுத்த பிறவியில் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டுமா?
முற்பிறவியில் செய்த தவம் நியாபகத்தில் இருக்குமா?
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:।
ஷுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே॥ 6.41 ॥
6.41 யோகத்திலிருந்து வழுவியவன் புண்ணியம் செய்தவர்களுடைய உலகங்களை அடைந்து நீண்ட வருடங்கள் வாழ்ந்து, நன்னெறியுள்ள, செல்வமுள்ளவர்களுடைய வீட்டில் மீண்டும் பிறக்கிறான்.
-
அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்।
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஷம்॥ 6.42 ॥
6.42 அல்லது ஞானிகளுடைய, யோகிகளுடைய குலத்திலேயே பிறக்கிறான். இதுபோன்ற பிறப்பு எதுவோ, அது நிச்சயமாக இந்த உலகத்தில் பெறுவதற்கு அரிது
-
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்।
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந॥ 6.43 ॥
6.43 குருவம்சத்தில் பிறந்தவனே, அந்த பிறவியில் முற்பிறவியில் உண்டான, அந்த யோகத்தை பற்றிய அறிவை திரும்பவும் பெறுகிறான். மேலும் அதைவிடவும் அதிகமாக பூரணநிலையை அடைவதற்காக முயற்சிசெய்கிறான்.
-
பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஷோ அபி ஸ:।
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஷப்தப்ரஹ்மாதிவர்ததே॥ 6.44 ॥
6.44 அவன் முயற்சி செய்யாவிட்டாலும் அந்த பூர்வஜென்ம பழக்கத்தால் (யோகசாதனையை நோக்கி) இழுக்கப்படுகிறான். யோகத்தின் ஆரம்பநிலையில் உள்ளவன்கூட சப்த பிரம்மத்தை (வாக்கை) கடந்து செல்கிறான்.
-
ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஷுத்தகில்பிஷ:।
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்॥ 6.45 ॥
6.45 ஆனால் ஈடுபாட்டோடு முயற்சிக்கின்ற யோகியானவன், பாபங்களிலிருந்து விடுபட்டு, பல பிறவிகளில் பக்குவமடைந்திருப்பதால் ,பிறகு (இப்பிறவியில்) மேலான நிலையை அடைகிறான்.
-
இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டே, உலக கடமைகளை செய்துகொண்டே முக்தி அடையும் வழியைக்கூறுகிறது யோக மார்க்கம்.
மனிதன் ஆன்மாவை உணர்வதற்கு பல பிறவிகள் தேவைப்படுகிறது. நமக்கு முன்னால் இருக்கும் கடமைகளை பற்றற்ற மனநிலையில் செய்துகொண்டே சென்றால் மிக விரைவில் ஆன்மாவை உணரலாம்.
ஒரு வேளை இந்த பிறவியில் உணர முடியாவிட்டால்.அடுத்த பிறவியில் உணரலாம்.
அடுத்த பிறவியில் முடியாவிட்டால் அதற்கு அடுத்த பிறவியில் முடியலாம்.பிறவிகளுக்கு கணக்கே இல்லை.மனிதன் செல்லும் வேகத்தைப்பொறுத்து பிறவிகளின் எண்ணிக்கை அமைகிறது.
-
சந்நியாச மார்க்கம் அப்படிப்பட்டது அல்ல.
-
மனித பிறவி கிடைக்க வேண்டுமானால் அதிக புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
-
முதன் முதலில் மனிதப்பிறவி கிடைக்கும் மனிதன் முற்பிறவியில் எப்படி புண்ணியம் செய்திருப்பான்? அதற்கு முன்பு மிருகமாக அல்லவா பிறந்திருப்பான்?
உண்மைதான்.
வீடுகளில் வளர்க்கப்படும் பசு, நாய் போன்ற மிருகங்கள்தான் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கிறது.
நாம் பசுவுக்கு அதிக நன்மைகள் செய்திருக்கிறோமோ அல்லது பசு நமக்கு அதிக நன்மைகள் செய்திருக்கிறதா என்று யோசித்துப்பார்த்தால் பசுதான் நமக்கு அதிக நன்மைகள் செய்திருக்கும் எனவே அது மனிதனாக பிறக்க தேவையான புண்ணியம் பெறுகிறது.
அதேபோல நன்றியுள்ள பிற உயிரினங்களும்.
விலங்குகளைக்கொன்று உண்ணக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு.
எந்த விலங்கை கொல்கிறோமோ அந்த விலங்கு மனிதனுடைய புண்ணியத்தைப்பெற்று அடுத்த பிறவியில் மனிதனாகப்பிறக்கிறது. விலங்குகளைக்கொல்பவன் அதனுடைய பாவத்தைப்பெற்று மிருகமாகப்பிறக்கிறான்.
-
சந்நியாச மார்க்கத்தில் செல்பவன் உலகத்திலிருந்து விலகி வாழ்கிறான்.எல்லா கர்மங்களையும் துறக்கிறான். பிறரிடமிருந்து உணவை யாசகமாகப்பெற்று உண்கிறான் .
யாரிடமிருந்தெல்லாம் உதவியைப்பெறுகிறானோ அவர்களுக்கெல்லாம் தன்னுடைய புண்ணிய பலனைக்கொடுக்கிறான்.
பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதால் பாவ கர்மங்கள் நீங்கிக்கொண்டே வருகின்றன. பிறரிடமிருந்து உணவைப்பெறுவதால் புண்ணிய பலன் குறைந்துகொண்டே வருகிறது. பாவம்புண்ணியம் இரண்டும் நீங்கியபின் முக்தி கிடைக்கிறது.
ஒருவேளை இந்த லட்சியத்தில் வெற்றி கிடைக்காவிட்டால், அடுத்த பிறவியில் மனிதனாகப்பிறக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் மனிதனாகப்பிறக்க ஓரளவு புண்ணிய பலன் வேண்டும். சந்நியாச மார்க்கத்தில் செல்பவர்களிடம் அது இருக்காது.
-
-
எனவே யோக மார்க்கம் என்பது எப்போதும் நன்மை தரக்கூடியது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் யோக மார்க்கத்தை பின்பற்றினால் ,அது அந்த குடும்பத்திற்கு நல்லது.
பலர் யோக மார்க்கத்தை பின்னபற்றினால் அது அந்த நாட்டிற்கு நல்லது.
-
ஒரு காலத்தில் யோக மார்க்கத்தில் பாரதம் நன்கு முன்னேறியிருந்தது.
அதன் பிறகு சந்நியாச மார்க்கத்தை நோக்கி சென்றது.
இனிவரும் காலத்தில் யோக மார்க்கத்தை நோக்கி செல்லும்.
அதன் பிறகு மீண்டும் சந்நியாச மார்க்கம் முக்கியத்துவம் பெறும்.
இவ்வாறு மாறி மாறி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த உலகத்திற்கு இந்த இரண்டும் தேவைப்படுகிறது.
யோக மார்க்கத்தில் செல்லும் ஒருவன் இயற்கையை அடக்கி ஆளும் வல்லமையைப்பெறுகிறான்.
அந்த நிலையை அடைந்த ஒருவன் அவைகளை விட்டுவிட்டு,புண்ணிய பலனை துறந்து முழுத்துறவு நிலையை அடைய வேண்டும்.ஆனால் பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை.
பல்வேறு சக்திகளைப்பெறுவார்கள்.மற்றவர்களை அடக்கி ஆள அவைகளை பயன்படுத்துவார்கள்.
தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொள்வார்கள்.உலகத்தை அழிப்பார்கள்.
சந்நியாச மார்க்கம் பிரபலமாகும்போது ஏற்றத்தாழ்வுகள் நீங்குகிறது.
சக்தி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஆனால் அதில் உள்ள முக்கிய குறைபாடு , நாடு படிப்படியாக ஏழ்மை நிலைக்கு சென்றுவிடும். பிற நாடுகளை எதிர்க்ககூட சக்தி இல்லாமல் அழிவை நோக்கி சென்றுவிடும்.
-
யோக மார்க்கம், சந்நியாச மார்க்கம் இந்த இரண்டையும் ஒரு நாடு ஏற்றுக்கொண்டு. இரண்டிற்கும் தேவையான முக்கியத்துவத்தை கொடுக்குமானால் சிறப்பாக இருக்கும்.
வகுப்பு-33 நாள்-12-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
இறைவனுடைய இயல்பு என்ன? இறைவன் என்பவர் யார்? அவர் எங்கே இருக்கிறார்?
இவைகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் ஒவ்வொருவரும் தேடிப்பெற வேண்டும்.
இன்னொருவர் எவ்வளவுதான் விளக்கினாலும் புரிந்துகொள்ள முடியாது.
இறைவனைத்தேடித்தேடி அலைந்து முடிவில் நானும் இறைவனும் ஒன்றே என்ற அனுபவத்தை அடைகிறோம்.
இந்த நிலையை அடைவதுவரை மனிதனின் தேடல் நிற்காது.
-
இறைவன் பற்றிய தத்துவக் கருத்தை ஸ்ரீகிருஷ்ணர் இங்கே விளக்குகிறார்.
-
பூமிராபோ அநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச।
அஹம்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா॥ 7.4 ॥
7.4 நிலம், நீர், அக்னி,காற்று,ஆகாயம்(இவை பஞ்சபூதங்கள்) மற்றும்,
மனம்,புத்தி, அகங்காரம் என்று என்னுடைய பிரகிருதி எட்டுவிதமாக பின்னப்பட்டிருக்கிறது
பஞ்சபூதங்கள் மூலப்பொருள்
வானம் அல்லது ஆகாயம் என்பது அணுக்களுக்கிடையே உள்ள இடைவெளி.
இந்த வெளி எல்லா இடத்திலும் பரந்துள்ளது.
வெளி இல்லாவிட்டால் அணுக்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து நகரமுடியாமல் அப்படியே நின்றுவிடும்.
உலகம் முழுவதும் வானம் அல்லது இடைவெளியால் நிரம்பியுள்ளது.
அக்னி என்பது வெப்பம்.
வெப்பம் நுண்ணியதாகும்போது வெப்ப அலைகளாக, ஒளி அலையாக மாறிவிடுகிறது.
வெப்பத்திற்கு இரண்டு இயல்பு உண்டு. ஒன்று ஒளி இன்னொன்று சூடு.
ஏதாவது ஒரு அணுவின்மீது ஒளி செயல்படும்போது அந்த அணு சூடாகிறது.அப்போது ஒளியைக் காண்கிறோம்
ஒருவேளை எந்த அணுக்களும் இல்லாவிட்டால் ஒளி மட்டும் நிற்கும்.
தனி ஒளியை யாராலும் காண முடியாது. ஏதாவது ஒரு அணுவில் பட்டு பிரதிபலிக்கும்போது மட்டுமே அதைக்காண இயலும்.
-
வாயு என்பது அணுக்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செலுத்தும் சக்தி
மிகப்பெரிய சந்திர சூரியர்கள் முதல் மிகச்சிறிய அணுக்கள் வரை உள்ள அனைத்தையும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகர்த்துவதற்கு சக்தி தேவைப்படுகிறது. அது வாயு.
வாயு பல்வேறு இடங்களில்,பல்வேறு நிலைகளில் பல்வேறு சக்தியாக இயங்குகிறது.
நிலம், நீர் இந்த இரண்டும் கூட்டுப்பொருள்
ஒரு மரக்கட்டையை பொடிப்பொடியாக அரைத்தால் அவைகள் நுண்ணிய துகள்களாகின்றன.
மேலும் அவைகளை அரைத்தால் இன்னும் நுண்ணியதாகிறது.
இன்னும் அரைத்தால் அவைகள் வெப்ப அலைகளாக மாறிவிடுகின்றன.
அதற்குமேல் நுண்ணியதாக்க முடியாது.
அதேபோல நீர்த்துளிகளை மேலும் மேலும் நுண்ணியதாக்கிக்கொண்டே சென்றால் கடைசியில் அவைகளும் வெப்ப அலைகளாக மாறிவிடுகின்றன.
-
இந்த பஞ்ச பூதங்களைத் தாண்டியிருப்பது
மனம்,புத்தி, அகங்காரம்
-
அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்।
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்॥ 7.5 ॥
7.5 ஆனால் இது (மேலே சொன்ன எட்டும் ) கீழானது.
இதிலிருந்து வேறானதும் உயிர்களின் ஜீவனான என்னுடைய மேலான பிரகிருதியை
அறிவாயாக.
தோள்வலிமையுடையோய், இந்த பிரபஞ்சம் இதனால் தாங்கப்படுகிறது.
-
மேலே கூறப்பட்ட எட்டு தத்துவங்களும் தாழ்ந்தது.
அதைவிட உயர்ந்தது எது?
எதிலிருந்து இந்த உலகம் உற்பத்தியாகிறதோ அது உயர்ந்தது.
எதிலிருந்து இந்த ஜீவன் உற்பத்தியாகிறதோ அது உயர்ந்தது.
ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய।
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா॥ 7.6 ॥
7.6 எல்லா உயிர்களும் இந்த இரண்டு யோனிகளை பிறப்பிடமாக கொண்டுள்ளது என்று அறிந்துகொள்
(மேலே சொன்ன எட்டுக்கும் ஒரு யோனி . அவ்யக்தம் இன்னொரு யோனி ).
நான் பிரபஞ்சம் முழுவதற்கும் வெளிப்படுவதற்கும்,அதுபோல பிரபஞ்சம் முழுவதும் ஒடுங்குவதற்கும் காரணம்
-
இந்த உலகத்தில் பல்வேறு சூரிய சந்திரர்கள் இருக்கின்றன.இவைகள் எங்கிருந்து வெளிப்படுகின்றன?
தற்காலத்தில் வெள்ளைத்துளையிலிருந்து பல கிரகங்கள் வெளி வருகின்றன. கருப்புதுளைக்குள் பல கிரகங்கள் உள்ளே செல்கின்றன என்று கூறுகிறார்கள்.
முற்காலத்தில் இதை பிரபஞ்ச யோனி என்று அழைத்தார்கள். இந்த யோனியிலிருந்து பல்வேறு கிரகங்கள் வெளி வருவதை யோகி காண்கிறான்.
இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இரண்டு யோனிகளைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.
மனிதர்கள்,விலங்குகள் உட்பட அனைத்தும் தாயின் கருப்பையிலிருந்து உருவாகி யோனி வழியாக வெளியே வருகிறோம்.இது இரண்டாவது யோனி.
முதல் யோனி எது?
இந்த உயிர்கள்,விலங்குகள் உட்பட கிரகங்கள் அனைத்தும் எதிலிருந்து வெளி வந்ததோ
அது முதல் யோனி
அது பிரபஞ்சயோனி.
நிலம்.நீர்,காற்று,தீ,ஆகாயம்,மனம்,புத்தி,அகங்காரம் என்ற எட்டும் பிரபஞ்ச யோனியிலிருந்து வெளிவருகிறது.
அதற்கு முன்பு அது எப்படி இருந்தது?
இயங்கா நிலையில் இருந்தது.மூலநிலையில் இருந்தது
மத்த: பரதரம் நாந்யத்கிம்சிதஸ்தி தநம்ஜய।
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ॥ 7.7 ॥
7.7 தனஞ்சயா, என்னைவிட மேலானது வேறு ஒன்றும் இல்லை. நூலிலே மணிகளை கோர்த்துவைத்ததுபோல, இவையாவும் என்னிடம் கோர்க்கப்பட்டிருக்கின்றன
-
பிரம்மத்தை இறைவன் என்கிறோம்.பிரம்மம் எப்போதும் இருக்கிறது. இந்த உலகத்திலுள்ள உயிர்கள்,கிரகங்கள் உட்பட அனைத்தும் பிரம்மத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.
-
-
மேலே கூறப்பட்டுள்ள தத்துவங்களை தியானித்து அறிந்துகொள்ள வேண்டும்.
தத்+த்வம்=தத்துவம்
தத் என்றால் அது
த்வம் என்றால் நீ
நீயே அதுவாக ஆகிறாய்
-
-
இந்த தத்துவத்தை அறிந்துகொண்டால் சந்தேகங்கள் அகல்கின்றன. சந்தேகங்கள் அகன்றால் இறைக்காட்சி கிடைக்கிறது.
-
-
வகுப்பு-34 நாள்-13-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஷ்ச யே।
மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி॥ 7.12 ॥
7.12 சத்துவகுணத்தில், ரஜோ குணத்தில்,தமோ குணத்தில் உருவான பொருட்கள் அனைத்தும்
என்னிடமிருந்தே தோன்றியவைகள் என்று அறிக.
ஆனால் நான் அவைகளை சார்ந்து இல்லை. அவைகள் என்னை சார்ந்துள்ளன.
-
சத்வம்,ரஜஸ்,தமஸ் என்று மூன்று குணங்கள் இருக்கின்றன.
ரஜஸ் என்பது விலக்குதல்
தமஸ் என்பது கவர்தல்
சத்வம் என்பது சமநிலைப்படுத்துதல்
இந்த உலகத்தில் உள்ள எல்லா பொருட்களிலும், எல்லா மனிதர்களிடமும்,விலங்குகளிடமும் இந்த மூன்றும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பூமி, சூரியனை சுற்றுவதற்கு காரணம் இந்த ரஜஸ்.
பூமி, சூரியனின் எல்லையைத்தாண்டி செல்லாமல் உள்ளுக்குள்ளே இழுப்பது தமஸ்
இந்த இரண்டையும் சரியான சமநிலையில் வைத்திருப்பது சத்வம்
ஒரு அணுவை எடுத்துக்கொண்டால்கூட அதிலும் இந்த மூன்று சக்திகளும் செயல்படுகின்றன.
இவைகள் மனிதர்களிடம் குணங்களாக செயல்படுகின்றன
வேலை செய்யும்போது ரஜஸ் செயல்படுகிறது
தூங்கும்போது தமஸ் செயல்படுகிறது
தியானிக்கும்போது சத்வம் செயல்படுகிறது
-
இனி பொருட்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இயல்பு உள்ளது
இயங்கிக்கொண்டே இருக்கும்பொருட்கள் ரஜஸ்
ஜடமாக இருக்கும்பொருட்கள் தமஸ்
ஒளியாக பிரகாசிப்பவை சத்வம்
-
விலங்குகளிடம் தமோ குணம் மேலோங்கியிருக்கிறது
மனிதர்களிடம் ரஜோ குணம் மேலோங்கியிருக்கிறது
தேவர்,தேவிகளிடம் சத்வ குணம் மேலோங்கியிருக்கிறது
இந்த மூன்றையும் கடந்து நிற்பவர் இறைவன்
-
த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத்।
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்॥ 7.13 ॥
7.13 இந்த முக்குணங்களால் உருவான (சத்வம்,ரஜஸ்,தமஸ்) பொருட்களால் மயங்கி,
இதற்கு மேலாக இருக்கும் அழிவற்றவனான என்னை அறிவதில்லை.
-
உலகத்தில் உள்ள அனைத்துமே இந்த முக்குணங்களால் ஆனவை.
ஆனால் இறைவன் இந்த முக்குணங்களுக்கு அப்பால் இருக்கிறார்.
இந்த மூன்று குணங்களுக்கு அப்பால் இருக்கும் இறைவனை அறிய வேண்டுமானால் மூன்று குணங்களையும் கடந்துசெல்ல வேண்டும்.
தியானத்தில் ஈடுபட வேண்டும். அப்போது ரஜஸ் மற்றும் தமஸ் அடக்கப்படுகிறது. சத்வ குணம் மேலோங்குகிறது.
பின்பு படிப்படியாக சத்வ குணத்தையும் தாண்டி சென்று இறைவனை அடைய முடிகிறது.
-
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா।
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே॥ 7.14 ॥
7.14 உண்மையில் குணங்களால் ஆன என்னுடைய இந்த தேவமாயை தாண்டமுடியாதது.
யார் என்னையே சரணடைகிறார்களோ அவர்களே இந்த மாயையை தாண்டுகிறார்கள்.
-
இறைவனை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
நானே இறைவன் என்று தியானிப்பது ஒரு வழி
நான் இறைவனின் பக்தன் என்று தியானிப்பது இன்னொரு வழி.
இறைவனின் பக்தன் என்று கருதிக்கொள்பவன் இறைவனிடம் சரணடைகிறான்.
இதனால் முக்குணங்களையும் கடந்துசெல்கிறான்.
பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பக்தி மார்க்கத்தை பின்பற்றுவது நல்லது.
தேவ மாயை என்பது என்ன?
இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம்
இதில் விளையாடி யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே விளையாட்டை விட்டு வெளியே செல்ல முடியும்.
இறைவன் பாரபட்சமற்றவர்.
தகுதியானவர்களே வெற்றி பெறுவார்கள்
மிருகங்கள் இந்த உலகத்தில் வாழவேண்டுமானால் உடல் வலிமை தேவை. எந்த விலங்கு அதிக உடல் வலிமையுடன் திகழ்கிறதோ அவைகள் வாழ்க்கைப்போராட்டத்தில் தொடர்ந்து நீடிக்கும்.
மனிதனைப்பொறுத்தவரை மனவலிமை தேவை. யாருக்கு அதிக மனவலிமை இருக்கிறதோ அவன் இந்த வாழ்க்கை போராட்டத்தில் தொடர்ந்து நீடிக்க முடியும்.
இந்த விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆன்ம வலிமை தேவை.
அது எப்படி வரும்?
இந்த உலக விளையாட்டை விளையாடி முடித்தவர்களுக்கு இதைப்பற்றிய பூரணஞானம் ஏற்படுகிறது.
அவர்களால் மட்டுமே இதைவிட்டு வெளியேற முடியும்.
இந்த உலக விளையாட்டாகிய தேவ மாயையை யார் உருவாக்கியது? ஏன் உருவாக்கப்பட்டுள்ளது? போன்ற கேள்விகளுக்கு பதில் எப்போது கிடைக்கும்?
இந்த விளையாட்டை கடந்து செல்லும்போது மட்டுமே கிடைக்கும். இந்த விளையாட்டிற்குள்ளே இருக்கும்போது தெரியாது.
பக்தர்கள் வழிபடும் இறைவனும் ஞானிகள் வழிபடும் இறைவனும் வேறு வேறா? இல்லை.
-
ஒரு மனிதன் படிப்படியாக முன்னேறி முடிவில் இறைவனாகிறான்.
இறைவனான பிறகு உருவம் மறைந்துவிடுகிறது.
உருவம் மறைவதற்கு சற்று முன்புவரை,இறைவனுடன் ஒன்று கலப்பதற்கு சற்று முன்புவரை ஒரு உருவம் இருக்கிறது.இந்த உருவம் தெய்வீகமானது.
இந்த தெய்வீக உருவத்தை பக்தர்கள் தியானிக்கிறார்கள்.
தெய்வீக உருவங்களின் எண்ணிக்கை கடக்கில் அடங்காது.
இது பக்தி மார்க்கம்.
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ அர்ஜுந।
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப॥ 7.16 ॥
7.16 அர்ஜுனா, துன்புற்றவன், ஞானத்தை தேடுபவன், பொருட்களை தேடுபவன், ஞானத்தை அடைந்தவன் என நான்குவிதமாக நல்லவர்கள் என்னை போற்றுகிறார்கள்.
-
எல்லோருக்கும் தேவைகள் இருக்கின்றன.தேவைகள் இல்லாத மனிதனே இல்லை.
தேவைகள் இருக்கும்வரை நம்மைவிட உயர்ந்த சக்தியிடம் பிரார்த்திப்பதும் இருக்கும்.
இறைவனை நம்புபவர்கள் எல்லோரும் நங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இறைவனை பிரார்த்திக்கிறார்கள்.
நோயினால் துன்புறுபவர்கள் கோடிக்கணக்கில் உள்ளார்கள், ஏழ்மைநிலையில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறிவிடுகிறதா?
இல்லை.
அனைத்து பிரார்த்தனைகளும் ஏன் நிறைவேறுவதில்லை?
குழந்தை கேட்கும் அனைத்தையும் தாய் நந்தையர் வாங்கிக்கொடுப்பதில்லை.அப்படி குழந்தை கேட்கும் அனைத்தையும் யாராவது வாங்கிக்கொடுத்தால் அவர்களை உலகம் பைத்தியம் என்றுதான் கூறும்.
ஏனென்றால் குழந்தைக்கு எது தேவை.எது தேவையில்லை என்பது தெரியாது.
குழந்தைக்கு எது தேவையோ அதை மட்டுமே பெற்றோர் வாங்கிக்கொடுக்கிறார்கள்.
நன்கு வளர்ந்த ஒருவன் பெற்றோரிடம் பலவற்றை கேட்கிறான்.பெற்றோர் அவைகளை வாங்கிக்கொடுக்கிறார்களா? இல்லை. நீயே சம்பாதித்து அவைகளை வாங்கிக்கொள் என்கிறார்கள்.
-
அதேபோல்தான் இறைவன் மனிதனின் தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்திசெய்வதில்லை.
அப்படி நாம் கேட்பது கிடைக்க ஆரம்பித்துவிட்டால் யாரும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.
நமது தேவைகளை நாம்தான் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். இறைவனிடம் பிரார்த்திப்பதால் பயன்இல்லை.
அவர் அவைகளை கண்டுகொள்வதில்லை.
ஆனால் தன்தேவைகளை தன்னால் பூர்த்திசெய்ய முடியாத நிலையில் சிலர் இருப்பார்கள். அவர்கள் மனத்திலிருந்து எழும் பிரார்த்தனைகளை இறைவன் கேட்கிறார்.அந்த பிரார்த்தனைகள் படிப்படியாக நிறைவேறுகிறது
-
மகான்கள் குழந்தை நிலையில் இருக்கிறார்கள்.
நாம் குழந்தை நிலையில் இருந்தால் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் அவைகள் தானாகவே பூர்த்தியாகிவிடும்.
அவைகளுக்காக கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய அவசியம்கூட இல்லை.
-
நமது பிரார்த்தனைகளில் பெரும்பாலானவை சுயநலம் சார்ந்தவை. நான் நன்றாக இருக்கவேண்டும். எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். என்னை சார்ந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்னை யாரும் எதிர்க்கக்கூடாது அப்படி யாராவது எதிர்த்தால் அவர்கள் அழிந்துபோக வேண்டும். இப்படிப்பட்ட பிரார்த்தனைகள் சுயநலமானவை.
-
நோயினால் துன்பப்படுபவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள்.
அந்த பிரார்த்தனை இறைவனை சென்றடைகிறது. ஆனால் நோய் ஏன் குணமாவதில்லை?
இந்த பிறவியில் செய்த தீய செயல்கள்,முற்பிறவிகளில் செய்த செயல்கள்,நமது குடும்பத்தை சேர்ந்தவர்கள் செய்த தீய செயல்கள் போன்ற நமக்குத்தெரியாத பல பாவகர்மங்களுக்கான பலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
பாவத்தின் விளைவாக துன்பம் வருகிறது.நோய் வருகிறது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. மன அமைதி குலைகிறது.
பாவத்தின் கணக்கு முடியும்வரை இவைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும்.
இறைவன் பாவிகளின் பாவத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று சிலர் நம்புகிறார்கள்.
அப்படி அந்த பாவத்தை இறைவன் ஏற்றுக்கொண்டால் அவர் பாவியாகிவிடுவார்.
பாவத்தின் விளைவாக அவர் மனிதப்பிறவி எடுக்க வேண்டியிருக்கும் துன்பப்பட வேண்டும்.
இறைவனே ஏற்படுத்தி வைத்திருக்கும் சட்டதிட்டங்களுக்கு அவரும் உட்பட்டவராக இருக்கிறார்.
ஒரு நாட்டின் அரசன் உருவாக்கி வைத்திருக்கும் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அவர் நடக்காவிட்டால் மக்கள் அவரை மதிக்கமாட்டார்கள்.
எனவே பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி.
துன்பப்படுபவர்கள் இறைவனை பிரார்திப்பதால் சிறிது நேரத்திற்கு மனஅமைதி கிடைக்கலாம்.ஆனாலும் துன்பங்கள் தீர்வதில்லை.
-
மனத்தில் சந்தேகங்கள் இருக்கும்வரை மனஅமைதி கிடைப்பதில்லை. ஞானம் சந்தேகங்களை நீக்குகிறது. மன அமைதியைத்தருகிறது.
ஞானத்தைத் தேடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஞானத்திற்காக இறைவனிடம் பிரார்திக்கிறார்கள்.
அவர்களது பிரார்த்தனை உண்மையானது. ஆனாலும் அவைகள் உடனே நிறைவேறுவதில்லை.
ஞானம் ஒரே நாளில் கிடைப்பதில்லை. சிலருக்கு பல பிறவிகள்கூட ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து முயற்சிசெய்துகொண்டே இருக்க வேண்டும்.
உண்மையான தாகம் இருக்குமானால் இறைவனே குருவாக வந்து ஞானத்தை போதிக்கிறார்.
இந்த நவீன காலத்தில் ஞானத்தைப்பெறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
பல்வேறு மகான்களின் வாழ்க்கை வரலாற்றைப்படிக்கலாம். அவர்களது உபதேங்களைப்படித்து அதன்படி நடக்கலாம். இவைகள் எல்லாம் ஞானத்தைப்பெறுவதற்கான வழிகள்.
ஆன்மீக புத்தகங்களை படிக்க வாய்ப்பிருந்தும் அவைகளைப்படிக்காமல், சிந்திப்பதற்கு மூளை இருந்தும் அதைச்செய்யாமல். மகான்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பிருந்தும் அவர்களை நேரில் சந்திக்காமல்,
இறைவா எனக்கு ஞானத்தைக்கொடு என்று பிரார்த்திப்பதால் என்ன பயன்?
எல்லா வழிகளிலும் முயற்சித்தும் ஞானம் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களின் மன ஏக்கத்தை இறைவன் புரிந்துகொள்கிறார்.அவர்களது பிரார்த்தனை விரைவில் பலனளிக்கலாம்.
-
பணம் வேண்டும்,சொத்து வேண்டும் என்பதற்காக பலர் இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள்.
ஏற்கனவே இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்குவதற்காக சிலர் பிரார்த்திக்கிறார்கள்.
சிலர் இறைவனுக்கு சிறிது கொடுத்தால் தனக்கு பல மடங்காகத்திரும்ப கிடைக்கும் என்பதற்காக கோவிலில் சென்று காணிக்கை கொடுக்கிறார்கள்.
ஒருவர் ஏழ்மை நிலையில் இருப்பதற்கு காரணம் முற்பிறவிகளில் செய்த பாவங்கள்.
அதை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? புண்ணிய கர்மங்களைச்செய்ய வேண்டும்.
வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று கோவிலை தூய்மைப்படுத்தும் பணியைச்செய்யலாம்.
வேலையே இல்லாதவர்கள் தினசரி இப்படிப்பட்ட வேலைகளைச்செய்யலாம்.
இப்படி தினமும் பணிசெய்தால் பாவ கர்மங்கள் விலகும். படிப்படியாக புண்ணியம் சேரும். புண்ணியத்தின் பலனாக தேவையான பணம் கிடைக்கும்.
புண்ணிய கர்மங்களை செய்துகொண்டே இருக்கவேண்டும்.பணம் தானாக வரும். சிலர் எந்த நல்ல காரியத்தையும் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள்.
இறைவன் யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துதான் கொடுக்கிறார்.
சோம்பேரிகள் எவ்வளவுதான் பிரார்த்தித்தாலும் எதுவும் கிடைக்காது.
வேலை செய்வதற்கு மட்டுமே நமக்கு அதிகாரம் இருக்கிறது. யாருக்கு எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும்.
மரணம் வரும்வரை புண்ணிய கர்மங்களை செய்துகொண்டே இருங்கள். படிப்படியாக உங்கள் தேவைகள் நிறைவேறும்.
பாவிகளின் பிரார்த்தனைகள் பலன் தருவதில்லை. முதலில் பாவத்தின் பலனை அனுபவித்து முடிக்க வேண்டும்.
-
ஞானத்தை அடைந்தவர் இறைவனை வணங்குகிறார்.
அவர் இறைவனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.எதையும் பிரார்த்திப்பதில்லை.
ஏனென்றால் இறைவனின் இயல்புகளைப்பற்றி அவருக்கு தெரியும்.
இந்த உலகத்திலுள்ள எதுவும் தனக்கு தேவையில்லை என்ற நிறைவை அவர் அடைந்துவிட்டார். எனவே தனக்காக எதையும் பிரார்த்திப்பதில்லை.
மற்றவர்களுக்கு எது தேவை என்பது இறைவனுக்கு தெரியும் எனவே மற்றவர்களுக்காகவும் பிராத்திக்க வேண்டியதில்லை.
முக்தி வேண்டும் என்ற ஒரு பிராத்தனை மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்கும்
ஒருவேளை ஞானி, பிறருக்காக பிரார்திக்க ஆரம்பித்தால் என்னவாகும்?
மாயையின் வலைக்குள் அகப்பட்டுக்கொள்வார்.மறுபடியும் பிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
சில மகான்கள் மறுபடி பிறப்பதற்கு கவலைப்படுவதில்லை. பிறருடைய துன்பங்களை போக்குவதற்காக இறைவனிடம் பிரார்திக்கிறார்கள்.
இவர்கள்தான் நடமாடும் தெய்வங்கள். பிறருடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு அதற்காக துன்பப்படுகிறார்கள்.
பிறருடைய துன்பங்களை நீக்குவதற்காக பலமுறை பிறக்க வேண்டிய நிலை வந்தாலும் பரவாயில்லை என்ற பரந்த மனம் கொண்டவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் அன்புக்கு எல்லேயே இல்லை.
-
இந்த நான்குவிதமான மனிதர்களும் நல்லவர்கள்தான்.ஆனால் இதில் யாரை இறைவனுக்கு பிடிக்கும்?
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:॥ 7.17 ॥
7.17 அவர்களுள் நித்தியயுக்தனான. மாறாத பக்தியுள்ள,ஞானி மேலானவன். ஏனெனில் நான் ஞானிக்கு மிகப்பிரியமானவன் அவனும் எனக்கு பிரியமானவன்.
-
உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்।
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்॥ 7.18 ॥
7.18 இவர்கள் எல்லோரும் நல்லவர்களே ஆயினும் ஞானி என் சொரூபமோனவன் என்பது என் கருத்து.
ஏனென்றால் யோகத்தில் நிலைபெற்றிருக்கும் அவன், மிகஉயர்ந்த நிலையில் இருக்கும் என்னில்
நிலைபெற்றிருக்கிறான்.
-
ஞானி எப்படிப்பட்ட மனநிலையில் வாழ்கிறான்?
பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே।
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:॥ 7.19 ॥
7.19 பல பிறவிகளின் இறுதியில் ஞானி எல்லாம் இறைவனே என்று உணர்ந்து என்னை வந்தடைகிறான்.
அந்த மகாத்மா கிடைப்பதற்கு அரியவன்.
-
எல்லாம் இறைவன். இந்த உலகத்தில் உள்ள எல்லாம் இறைவன்.
இறைவனே மனிதர்களாகவும்,விலங்குகளாகவும்,மரம்,செடி,கொடிகளாகவும்,சந்திர,சூரியர்களாகவும் ஆகியிருக்கிறார் என்ற ஞானம் ஏற்பட்ட பிறகு, ஞானி அனைத்திடமும் அன்பு செலுத்துகிறார். இறைவன் உருவம் உள்ளவராகவும், உருவம் அற்றவராகவும், அனைத்துமாகவும் ஆகியிருக்கிறார் என்பதை ஞானி உணர்ந்ததனால்
அவரது அன்பு எல்லையற்றதாகிறது.
அந்த நிலையை அடைந்தபிறகு ஞானி இறைவனுடன் ஒன்றுகலந்துவிடுகிறான்.
சிலர் இந்த நிலையை அடைந்திருந்தாலும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எனவே புதிய மதப்பிரிவை ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் இறைவனுடன் ஒன்று கலக்கவில்லை. மிகஉயர்ந்த ஒளி உடலில் வாழ்கிறார்கள்.
வகுப்பு-36 நாள்-16-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
சாதாரண பாமரனை பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் ஆக்குகிறது பகவத்கீதை
-
பகவத்கீதையின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை
-
1.சந்நியாசம் மற்றும் யோகம் என்ற இரண்டு பாதைகளையும் சமரசப்படுத்தி இரண்டின் வழியாகவும் இறைவனை அடையலாம் என்று போதிக்கிறது.
2.துவைதம்,விசிஷ்டாத்வைதம்,அத்வைதம் என்ற மூன்று தத்துவங்களையும் போதிக்கிறது
3.ஆத்ம தத்துவத்தைப்பற்றி விரிவாக கூறுகிறது
4.தியானம் செய்ய செயல்முறை விளக்கங்களை கூறுகிறது.
5.இல்லறத்தார்கள் தினசரி கடமைகளை செய்துகொண்டே இறைவனை அடையும் வழியைப்போதிக்கிறது.
6.சந்நியாசிகள் எப்படி வாழவேண்டும் என்று போதிக்கிறது.
7.எது ஞானம் எது அஞ்ஞானம் என்பதை விளக்குகிறது.
8.பல்வேறு வழிபாட்டு முறைகளைப்பற்றி போதிக்கிறது.
9. மூன்று குணம்கொண்ட மனிதர்களையும் அவர்கள் இயல்புகளைப்பற்றியும் போதிக்கிறது
10.பல்வேறு மக்களின் உணவு பழக்கத்தை விவரிக்கிறது.
11. பிரபஞ்சத்தின் தோன்றத்தைப்பற்றிய தத்துவங்களைக்கூறுகிறது
12.தன்னை சரணடைவதன் மூலம் முக்திபெறலாம் என்று கூறி புதிய பாதைய காட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
-
இன்னும் கணங்கிலடங்காத கருத்துக்கள் பகவத்கீதையில் அடங்கியிருப்பதால்தான் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபிறகும் இன்றும் புதுமையாக காட்சியளிக்கிறது.
-
பகவத்கீதை என்பது ஒரு மதநம்பிக்கை கொண்டோருக்கானது அல்ல.ஸ்ரீகிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்களும் இதை பின்பற்றலாம், சைவர்கள்,சாக்தர்கள்,வேதாந்தம் இன்னும் பிறமதங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களும் இதை பின்பற்றலாம்.
ஒரு மதத்தை போன்றுவதும்,பிற மதங்களை இகழ்வதுமான கருத்துக்களை பகவத்கீதையில் எங்கு தேடினாலும் காண முடியாது.
-
ஜாதி வேறுபாடுகளை பகவத்கீதை போதிப்பதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
-
இந்த உலகத்தை படைத்தது நான்தான் என்று ஸ்ரீகிருஷ்ணர்கூறுகிறார்.
இந்த உலகத்திலுள்ள, நல்லவகைள் தீயவைகள் அனைத்தையும் படைத்தது இறைவன்தான்
இந்த உலகம் இயங்குவதற்கு இரண்டும் தேவை.
நல்லவைகளை இறைவன் படைத்தார்.தீயவைகளை சாத்தான் படைத்தார் போன்ற கருத்துக்கள் நமது மதத்தில் எங்கும் இல்லை.
எல்லாவற்றையும் நானே படைத்தேன் என்று ஸ்ரீகிருஷ்ணர் ஒவ்வொன்றாக கூறிக்கொண்டே வரும்போது. ஜாதிகளையும் நான்தான் படைத்தேன் என்று கூறுகிறார்.
ஜாதிகள் நல்லதாக இருந்தாலும்சரி கெட்டதாக இருந்தாலும் சரி, அவைகள் அனைத்தையும் படைத்தது இறைவன்தான்.
இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஸ்ரீகிருஷ்ணர் ஜாதிகளை மட்டும் படைத்தார் என்று கூறுவதை ஏற்க முடியாது.
ஸ்ரீகிருஷ்ணர் கூறும் கருத்துக்களை நம்பினால் எல்லாவற்றையும் நம்பவேண்டும். அல்லது எதையும் நம்பாமல் இருக்கவேண்டும். ஏதோ ஒன்றை நம்புவதும் பிறவற்றை நம்பாமல் இருப்பதும் அறிவற்றோர் செய்வது.
-
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் தனது கருத்துக்களை பின்பற்றினால் நான்கு ஜாதிகளைச் சேர்ந்தவர்களும்,பெண்களும் முக்திபெற முடியும் என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, சூத்திரர்கள் முக்திபெற முடியாது,பெண்கள் முக்திபெற முடியாது என்று ஒரு இடத்தில்கூட கூறவில்லை.
மிகவும் தீயவர்கள்கூட, தீய பழக்கங்களைவிட்டுவிட்டு நல்லவழியில் செல்லத்தொடங்கினால் முக்திபெறலாம் என்பதுதான் அவரது கருத்து
எந்த ஒரு மனிதனுக்கு எதிராகவோ,ஜாதிக்கு எதிராகவோ,இனத்திற்கு எதிராகவோ,மொழிக்கு எதிராகவோ பகவத்கீதையை பயன்படுத்த முடியாது.அதில் அப்படிப்பட்ட கருத்துக்களை எவ்வளவு தேடினாலும் காண முடியாது.
-
வெளிநாட்டு மதங்கள்கூறும் கருத்துக்களைப்போன்ற வெறுப்பு கருத்துக்களை பகவத்கீதை கூறவில்லை.
எங்கள் தெய்வத்தை நம்பினால் காப்பாற்றப்படுவீர்கள்,இல்லாவிட்டால் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்ற கருத்தை பகவத்கீதை போதிக்கவில்லை.
பல்வேறு மனிதர்களின் மனநிலைக்கு ஏற்ப பல்வேறு மதங்கள் இருப்பதையும்,அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரே இறைவனையே வழிபடுகிறார்கள் என்றே ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
அது மட்டுமல்ல அந்த மதங்களை உருவாக்கி,அவர்கள் மனத்தில் அப்படிப்பட்ட நம்பிக்கையை விதைத்ததும் தான்தான் என்று கூறுகிறார்.
எனவே மதச்சண்டைகளுக்கு பகவத்கீதையை பயன்படுத்த முடியாது.அது மதங்களை வெறுக்கும் மனப்பான்மையைப்பற்றி பேசவில்லை.
யூத இனத்தை முற்றிலும் எங்கள் இறைவன் அழிப்பார் என்று சில மதவெறியர்கள் நூல்களில் போதிக்கப்பட்டுள்ளது
ஆனால்
ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள்,அதாவது ஆரியர்கள் மட்டுமே உயர்வடைய முடியும் பிற இனத்தினர் உயர்வடைய முடியாது போன்ற இனம் சார்ந்த கருத்துக்களை பகவத்கீதையில் காண முடியாது.
யாரெல்லாம் பண்பட்டவர்களோ அவர்கள் எல்லோரும் ஆரியர்கள். ஆரியம் என்பது இடத்தை சார்ந்தது அல்ல அது மனிதன் பெற்றிருக்கும் பக்குவத்தை சார்ந்தது.
ஒளி பொருந்தியன்,தெய்வத் தன்மை பெற்றிருப்பவன் எல்லோரும் ஆரியன்.
மகாபாரதத்தில் தென் இந்தியாவை சேர்ந்த பாண்டிய மன்னனைப்பற்றி கூறப்படுகிறது. அவர் ஸ்ரீகிருஷ்ணரது படையில் சேர்ந்து அதர்மத்திற்கு எதிராக போரிடுகிறார்.அவரும் ஆரியன்தான்.
எனவே தென் இந்தியர் ஆரியல் அல்லாதவர் என்றும் வட இந்தியர் ஆரியர் என்றும், வட இந்தியரை புகழ்ந்தும்,தென் இந்தியரை இகழ்ந்தும் பகவத்கீதை பேசுகிறது என்று யாரவாது கூறினால் அது தவறு,ஆதாரம் அற்றது.
அப்படி ஒரு இனத்தை உயர்வாகவும்.பிற இனத்தை இகழ்வாகவும் பேசும் கருத்துக்களை பகவத்கீதை முழுவதும் தேடினாலும் கிடைக்காது.
-
ஒரு சமுதாயத்தில் பல்வேறு மனநிலை உள்ள மனிதர்கள் வாழ்வார்கள். அவர்களது மனநிலைக்கு ஏற்ப பல்வேறுவிதமான உணவுகளை உண்பார்கள். அதில் பல படிநிலைகள் உள்ளன. அமைதியானவன் காய்கறி உணவை உண்பான். செயல்வீரன் காரம்மிக்க உணவுகளை உண்பான். தமோ குணம் கொண்டவன் மாமிச உணவுகளை விரும்பி உண்பான்.
அவரவர் இயல்புக்கு ஏற்ற உணவுகளை உண்கிறார்கள் என்று கூறுகிறார்.இதில் எல்லோரும் ஒரே உணவை உண்ணவேண்டும் என்று ஒரு இடத்தில்கூட கூறவில்லை.
சமீப காலங்களில் அனைவரும் ஒரே மாதியான காய்கறி உணவுகளை உண்ணவேண்டும் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரது கருத்து அது அல்ல.
ஒவ்வொரும் தங்கள் இயல்புக்கு ஏற்ற உணவுகளை உண்கிறார்கள். மனிதர்களின் இயல்பு உயர்வடையும்போது உணவு முறைகளும் உயர்வடைகிறது. வலுக்கட்டாயமாக உணவுமுறைகளை மாற்றி அமைப்பதால் பயன் விளையாது.
தமோ குணம் கொண்ட ஒருவன் மிகப்பெரிய பாரத்தை தூக்கி செல்லும் வலிமை பெற்றவனாக இருப்பான்.எதிரிகளை போர்க்களத்தில் கொல்லும் திறமை உள்ளவனாக இருப்பான்.
மதுவும்,மாமிசமும் அவனுக்கு தேவை.
அப்படிப்பட்ட ஒருவனுக்கு காய்கறி உணவைக்கொடுப்பதால் அவன் பலவீனமாகி, தன் இயல்புக்கு ஏற்ற வேலையை செய்ய முடியாதவனாகிவிடுவான்.
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் காய்கறி உணவு கட்டாயமாக்கப்பட்டது. விளைவு என்ன? வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் புகுந்து கட்டாயமதமாற்றம் செய்தார்கள்,கோவில்களை இடித்தார்கள்,பெண்களை கற்பழித்தார்கள்
பகவத்கீதையை சரியாக படிக்காததால் வந்த விளைவு இது.
அவரவர் இயல்புக்கு ஏற்ற உணவுகளை உண்ண அனுமதியுங்கள். அவரவர் கடமைகளை செய்யவிடுங்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
உயர்ந்த கருத்துக்களை எல்லோருக்கும் கட்டாயமாக்காதீர்கள்,அவரவருக்கு ஏற்ற கருத்துக்களையே போதியுங்கள் என்பது இன்னொரு முக்கிய போதனை.
நம் நாட்டில் கடந்த காலத்தில் இது மிகவும் தவறாக பின்பற்றப்பட்டது.
உயர்ந்த கருத்துக்களை ஒரு ஜாதியினர் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்காமல் மறைத்தார்கள்.
ஸ்ரீகிருஷ்ணர் இதையா கூறினார்?
இல்லை.
சாதாரண பாமர மனிதன் ஒருவித தர்மத்தை பின்பற்றிக்கொண்டிருப்பான். ஞானியின் தர்மம் வேறுவிதமாக இருக்கும்.
இந்த உலகமே மாயை,கனவு போன்றது அனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஞானி சுற்றிக்கொண்டிருப்பான்.
ஆனால் பாமர மனிதன் உலம் உண்மை.உலகத்தில் உற்ற உறவுகள் உண்மை, அனைத்து உணர்ச்சிகளும் உண்மை என்ற மனநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பான்.அந்த தர்மத்தின்படி அவனது அன்றாட கடமைகள் இருக்கும்.
ஞானியின் தர்மத்தை,பாமரனிடம் திணிக்காதீர்கள்,அது அவனை பாதிக்கும் என்பது ஸ்ரீகிருஷ்ணரின் கருத்து.
ஆனால் நடந்தது என்ன?
இந்த உலகம் மாயை,எல்லாவற்றையும் துறந்து துறவியாகிவிடுங்கள் அதுதான் முக்திக்கு ஒரே வழி என்று எல்லோருக்கும் போதித்தார்கள். விளைவு இந்தியா ஓருவிதமான மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. எதை போதிக்கக்கூடாது என்று சொன்னாரோ அது போதிக்கப்பட்டது.
-
ஒரு குறிப்பிட்ட ஜாதியிருக்கானதா பகவத்கீதை?
தனது கருத்துக்களை உயர்ஜாதியினர் மட்டுமே படிக்க வேண்டும், வேறு யாரும் படிக்கக்கூடாது என்று ஸ்ரீகிருஷ்ணர் எங்கேயாவது கூறியிருக்கிறாரா?
சிரத்தை உள்ளவன்,நம்பிக்கை உள்ளவனுக்கு இந்த கருத்தை போதி,யாராக இருந்தாலும் தனது கருத்துக்கள்மீது நம்பிக்கை வைத்து அதை சிரத்தையுடன் பின்பற்றினால் முக்தி கிடைக்கும் என்றுதான் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்.
எந்த ஒரு பிரிவினரும்,ஜாதியிரும் பகவத்கீதை எங்களுக்கு மட்டும் போதிக்கப்பட்டது என்று கூறமுடியுமா? முடியாது.
இந்த கருத்துக்கள் அனைவரிடம் சென்று சேரவேண்டும் என்பது கிருஷ்ணரது விரும்பம். ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் என்ன ஆனது?
நம்பிக்கை உள்ள எல்லோருக்கும் பகவத்கீதை போதிக்கப்பட்டதா?
இல்லை. பிற ஜாதியினர் படிக்க முடியாதபடி மறைக்கப்பட்டது.
-
ஸ்ரீகிருஷ்ணரின் மகத்தான போதனைகள் உலகம் முழுவதும் சென்றடையட்டும்.
-
வகுப்பு-37 நாள்-17-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா:।
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா॥ 7.20 ॥
7.20 பல்வேறு ஆசைகளால் தூண்டப்பட்டவர்கள், அறிவற்றவர்கள், அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அதற்குரிய நியமத்தை கடைபிடித்து, தங்களது இயல்பினால் தூண்டப்பட்டு பிற தேவதைகளை(தன்னை அல்லாத) போற்றுகிறார்கள்
-
மக்கள் எல்லோருக்கும் ஆசைகள் இருக்கின்றன.அந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தங்களைவிட மேலான சக்திகளிடம் பிரார்த்திக்கிறார்கள்.
பிறர் நன்றாக வாழ்வது சிலருக்கு பிடிக்காது. பிறர் குடும்பத்தை அழிப்பதற்காக பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஈடுபடுகிறார்கள்.
பேய் பிசாசுகளுக்கு மிருக பலியிட்டு,தங்கள் வசப்படுத்தி,தங்கள் தேவைகளுக்காக அவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கிறார்கள்.
சிலர் காவல் தெய்வங்கள்,சிறுதெய்வங்கள், குலதெய்வங்களை தங்கள் வசப்படுத்தி தங்கள் சுயநல தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்கள் மனிதர்களில் மிகவும் கடைப்பட்டவர்கள். யாரை வசப்படுத்தி வைத்திருக்கிறார்களோ ,அந்த சிறு தெய்வங்களாலேயே இவர்களும் அழிந்துபோவார்கள்
-
இன்னும் சிலர் தங்கள் முன்னோர்களை வழிபடுகிறார்கள்.
குடும்பத்தில் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்து நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்களை வழிபடுகிறார்கள்.
மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை உணவுகளை படைத்து வழிபடுவதும் உண்டு.
பொதுவாக ஒரு குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர் பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.பித்ரு வழிபாடு என்று இதை கூறுகிறார்கள்.
-
இயற்கை சக்திகளை வழிபடும் மக்கள் இருக்கிறார்கள்.
தினமும் காலையில் எழுந்ததும் சூரியனைப் பார்த்து வழிபடுவது, இரவில் சந்திரனை வழிபடுவது, வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது, கடலை பார்த்து அதில் மனத்தை ஒன்றச்செய்வது, இயற்கை சக்திகளை ஆராதிப்பது என்று முழுவதும் இயற்கையையே மிகப்பெரிய சக்தியாக நினைத்து மனத்தை அதில் பதிய வைக்கிறார்கள்.
அவர்களைப்பொறுத்தவரை இயற்கைதான் தெய்வம்
நிலம்,நீர்,காற்று,அக்னி,ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் மதித்து,அவைகளை மாசுபடுத்தாமல் அவற்றுடன் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதுகூட ஒருவகையில் சிறந்த வாழ்க்கைதான்.
முற்காலத்தில் இந்த இயற்கை சக்திகளை அடக்கிஆளும் வல்லமை பெற்ற சிலர் இருந்தார்கள்.
அவர்களை தேவர்கள்,தேவிகள் என்று மக்கள் வணங்கினார்கள்.
ஒவ்வொரு மலைக்கும் ஒரு தெய்வம். ஒவ்வொரு நதிக்கும் ஒரு தெய்வம்.
இயற்கையின் ஒவ்வொரு சக்திக்கும் ஒரு தெய்வம்
இப்படி கோடனகோடி தெய்வங்களை மக்கள் வழிபட்டார்கள்.
உலக நன்மைக்காக இந்த தெய்வங்களை வேண்டி, யாகங்களைச் செய்வார்கள், பல்வேறு உணவுகளைப் படைப்பார்கள்.
நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் அரசன் பல்வேறு யாகங்களைச்செய்து, இயற்கையை அடக்கி ஆளும் தேவ பதவியைப்பெற்று நீண்ட காலம் வாழ்ந்து வந்தான்.தேவர்களை வணங்கி மனிதர்கள் பல்வேறு பயன்களைப்பெற்றார்கள்.
புத்தர் காலத்திற்கு பிறகு இப்படிப்பட்ட வழிபாடுகள் நின்றுபோனது.
-
சிலர் இறைவனுக்கு நற்குணங்கள் கொடுத்து,பல்வேறு சக்திகளைக்கொடுத்து வழிபடுகிறார்கள்.
இறைவன் உலகத்தைப் பார்க்கிறார். உலக மக்களின் செயல்களை கவனிக்கிறார்.அவரது சக்தியால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.அவர் நீதி நிறைந்தவர். நல்லவர்களை காக்கிறார். தீயவர்களை தண்டிக்கிறார்.
நமது பிரார்த்தனைகளைக் கேட்கிறார். அவ்வப்போது மனித உருவில் காட்சிகொடுக்கிறார்.
சொர்க்கத்தில் வாழ்கிறார். மனிதர்களைவிட உயர்ந்தவர், தேவர்களைவிட உயர்ந்தவர்.
மனிதர்களைக்காக்க அவ்வப்போது அவதரிக்கிறார் அல்லது தீர்க்கதரிசிகளை அனுப்பி வைக்கிறார் என்று நம்புகிறார்கள்.
இந்த வழிபாட்டை ஈஸ்வர வழிபாடு என்று வேதாந்தம் கூறுகிறது.
ஒவ்வொரு மதநம்பிக்கை உள்ளவர்களும் தங்கள் இறைவன்தான் உலகத்தைப் படைத்தார் என்றும் பிற மதத்தினரின் தெய்வங்கள் அனைத்தும் தங்கள் தெய்வத்திற்கு அடிமை என்றும் கூறிக்கொள்கிறார்கள்.
மதச்சண்டைகள் இதனால் வளருகின்றன.
-
இன்னும் சில ஞானிகள் இறைவனை இன்னும் உயர்ந்த நிலையில் தியானிக்கிறார்கள்
இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள குணங்களில் முக்கியமானது என்ன?
அவருக்கு உருவம் இல்லை.அவர் எங்கும் நிறைந்தவர்.
கண்,காது,போன்ற உடல் உறுப்புகள் எதுவும் இல்லை.
அவர் யாரையும் பார்ப்பதும் இல்லை, யாருடைய வார்த்தைகளைக் கேட்பதில்லை.
இந்த பிரபஞ்சத்தை அவர் பார்ப்பதில்லை. இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் செயல்களை தெரிந்துகொள்வதில்லை.
அவர் உலகத்துடன் தொடர்பில்லாதவர்.
அவருக்கு பெயர்,உருவம் எதுவும் இல்லை
பிரம்மம் என்பது வேதாந்தம் கொடுத்துள்ள பெயர்.
அந்த பிரம்மத்திலிருந்து, பிரபஞ்சம் வெளிப்பட்டுள்ளது.
சக்திகள் எதுவும் அவ்ளே இல்லை.முழுவதும் ஒடுங்கியிருக்கிறது
உடல் உணர்வு இருக்கும்வரை அந்த இறைவனைக் காண முடியாது.
யாரால் உடல் உணர்வைக்கடந்து,இந்த பிரபஞ்சத்தை கடந்து செல்லும் ஆற்றல்பெற்றவர்களோ அவர்களால் மட்டுமே அந்த இறைவனைக் காணமுடியும்.
மனத்தில் சிறு ஆசைகள்கூட இல்லாதவர்கள்,
உலகப்பற்று இல்லாதவர்களால் மட்டுமே அந்த இறைவனை தியானிக்க முடியும்
.
புற வழிபாடுகளில் ஈடுபடுபடுவதன் மூலம் பிரம்மத்தைக்காண முடியாது
தன் உயிருக்கு உயிராக வழிபட வேண்டும்.
இப்படி வழிபடும் மனநிலை கோடியில் ஒருவருக்குகூட இருப்பதில்லை.
பிரம்மத்தை அதன் இயல்பிலேயே வழிபடுவது என்பது கோடியில் ஒருவரால் மட்டுமே முடிகிறது.
வழிபடுவது என்று கூறுவதுகூட தவறு. நானும் பிரம்மமும் ஒன்றே என்று தியானிப்பதுதான் சரியானது.
-
1. தீராத ஆசைகளுடன் சுற்றி அலையும் பேய்,பிசாசுகளை வழிபடுபவர்கள்.
2. நல்லவர்களாக வாழ்ந்து,இறந்த பின் வேறு உலகில் வாழும் முன்னோர்கள்
3.இந்த இயற்கையின் சில பகுதிகளை ஆளும் தேவர்கள்,தேவிகள்
4.சர்வசக்திவாய்ந்த, தர்மத்தைக் காத்து அதர்மத்தை அழிக்கும் ஈஸ்வரனை வழிபடுபவர்கள்
5.இந்த உலகத்துடன் தொடர்பில்லாத. உருவமற்ற. எங்கும் நிறைந்துள்ள பிரம்மத்தை தியானிப்பவர்கள்
-
-
வகுப்பு-38 நாள்-18-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:।
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்॥ 7.24 ॥
7.24 என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற மேலான நிலையை அறியாத அறிவற்றவர்கள், கண்ணுக்கு தென்படாத என்னை, கண்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக(மனிதனாக) எண்ணுகின்றனர்.
-
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:।
மூடோ அயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்॥ 7.25 ॥
7.25 யோகமாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை.
இந்த மூட உலகம்(மக்கள்) பிறவாத அழியாத என்னை அறிவதில்லை
-
வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந।
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஷ்சந॥ 7.26 ॥
7.26 அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவாவும் ஆகிய உயிர்களை நான் அறிவேன்.
ஆனால் என்னை யாரும் அறியார்
-
இறைவனுக்கு உருவம் இல்லை.அவர் எல்லையற்றவர்
கண்களால் அவரைக் காண முடியாது.
அதேநேரத்தில் இந்த உலகத்திலுள்ள எல்லா உருவங்களாகவும், மனிதர்களாகவும், அனைத்து ஜீவராசிகளாகவும் ஆகியிருப்பது இறைவன்தான்.
உருவமற்றவரே உருவமாகவும் இருக்கிறார்.
அப்படியானால் மாற்றமற்ற இறைவன் மாறிவிட்டாரா?
எல்லையற்ற இறைவன் எல்லைக்கு உட்பட்டுவிட்டாரா?
இல்லை.
அப்படி மாறியிருப்பதாக நாம் காண்பது நமது மயக்கம்.
இதை கிருஷ்ணர் தேவமாயை என்று அழைக்கிறார்.
இந்த மாயையும் இறைவனுடையதுதான்.அவரே இந்த தேவமாயையாகவும் ஆகியிருக்கிறார்.
சூரியன் காலையில் கிழக்கில் உதித்து பின்பு மாலையில் மேற்கில் மறைவதைக் காண்கிறோம்.
பூமி அப்படியே இருப்பது போலவும் சூரியன் வானத்தில் நகர்ந்து செல்வதுபோலவும் காண்கிறோம்.
இதுதான் மாயை
உண்மையில் சூரியன் மேற்கில் உதிப்பதும் இல்லை. கிழக்கில் மறைவதும் இல்லை.
சூரியன் ஒரே இடத்தில்தான் இருக்கிறது. பூமிதான் சூரியனைச்சுற்றுகிறது.
ஆனால் பூமியில் வசிப்பவர்கள் பூமி சுற்றுவதை காண்பதில்லை.பூமி நிலையாக இருப்பதையே காண்கிறார்கள்.
பூமிக்கு மேல ஆகாயத்தில் நின்று பார்த்தால்தான் உண்மை விளங்கும்
-
அது போல இறைவன் எப்போதும் உருவமற்றவராகவே இருக்கிறார்.ஆனால் அவரே பல்வேறு உருவங்களாக மாறிவிட்டதாக நாம் காண்கிறோம். இது தேவமாயை.
நாம் நமது ஆத்மாவிடம் செல்லும்போது இறைவன் மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறார் என்பது புரியும்.
-
அப்படியானால் இறைவன் பக்தர்களுக்காக உருவத்தில் காட்சி கொடுப்பதில்லையா?
பக்தர்களுக்காக உருவத்தில் காட்சி கொடுக்கிறார்.அவர்களுடன் பேசுகிறார்.
அதே நேரத்தில் அனைத்து மனிதர்களாகவும் இருப்பதும் அவர்தான்.
-
ஸ்ரீகிருஷ்ணர் பிறவாத அழியாத நிலையில் இருக்கிறார்.அதேநேரம் மனிதனாகவும் இருக்கிறார்.
துரியோதனன் உட்பட பலரும் அவர் சாதாரண மனிதன் என்றே நினைத்தார்கள். சில ரிஷிகள் மட்டுமே அவர் மனிதஉடலில் இருந்தாலும் உடல் அற்றவர் என்பதை உணர்ந்துகொண்டிருந்தனர்
-
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மனம் இருக்கிறது. அனைவரின் மனமும் மஹத் அல்லது பிரபஞ்ச மனத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்ச மனத்திற்கு வேதம் என்று பெயர்.
இந்த வேதத்தை அறிந்தவர்,பிரபஞ்சத்திலுள்ள உயிர்கள் அனைத்தையும் அறிந்தவர் ஆகிறார்.
இறைவனிடமிருந்துதான் வேதம் வெிளப்பட்டது. வேதத்தை அவர் அறிவார்.
ஆனால் இறைவனை யாராலும் அறியமுடியாது?
ஏன்?
முதலில் வேதம் வெளிப்பட்டது, அதன் பிறகு உலகத்திலுள்ள சூரியன்,சந்திரன்,கிரகங்கள்.மனிதர்கள்,மிருகங்கள் உட்பட அனைத்தும் வெளிப்பட்டன.
நமது மனம் பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதி. நமது மனத்தின் எல்லையை படிப்படியாக விரிவுபடுத்திக்கொண்டே சென்றால் பிரபஞ்ச மனத்தை அடையும். அப்படி பிரபஞ்ச மனத்தை அடைந்தவன் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவன் ஆகிறான்.வேததத்தை அறிந்தவன் ஆகிறான். அப்படி வேதத்தை அறிந்தால்கூட வேதத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனை அறியமுடியாது.
ஏனென்றால் வேதத்தை கடந்து செல்லும்போது அறியவேண்டிய மனிதனே இருக்க மாட்டான்.
அங்கே இறைவன் மட்டுமே இருக்கிறார்.
உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச் சென்றது, கடலில் இறங்கியதும் அதில் கரைந்து ஒன்றாகிவிட்டது. பிறகு யார் வந்து தகவல் சொல்வது?
அதேபோல இறைவனை அறிய நினைக்கு செல்லும் ஒருவன் முடிவில் இறைவனில் ஒன்றாக கலந்துவிடுகிறான். பிறகு யார்? இறைவனைப்பற்றி சொல்வது?
எனவேதான் இன்றுவரை இறைவனைப்பற்றி யாராலும் விளக்க முடியவில்லை.
இனிமேலும் யாராலும் விளக்க முடியாது.
-
-
வகுப்பு-39 நாள்-19-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே।
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:॥ 8.3 ॥
8.3 அழிவற்றதாகவும் மேலானதாகவும் இருப்பது பிரம்மம். அது அத்யாத்மம் என்று சொல்லப்படுகிறது.
உயிர்களை உண்டுபண்ணி நிலைத்திருக்கச் செய்வதாகிய வேள்விக்கு அல்லது கர்மம் எனப்படுகிறது.
-
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஷ்சாதிதைவதம்।
அதியஜ்ஞோ அஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர॥ 8.4 ॥
-
8.4 அர்ஜுனா, அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்ப்படுகிறது. புருஷன் அதிதெய்வம் எனப்படுகிறான். இனி தேகத்தினுள் நானே அதியக்ஞமாகிறேன்
-
அத்யாத்மம்,அதிபூதம்,அதிதெய்வம்,அதியக்ஞம் என்று நாக்கு இருக்கிறது இவைகள் பற்றி பார்ப்போம்
-
அதியக்ஞம்
-
யக்ஞம் என்றால் பிரதியாக எதையும் எதிர்பார்க்காமல் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பது.தியாகம் செய்வது
இயற்கை முழுவதையும் பார்த்தால் எங்கும் யக்ஞம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
சூரியன் ஒளி தந்துகொண்டே இருக்கிறது.பதிலுக்கு எதையும் எதிர்பார்ப்பதில்லை.
பூமி மனிதர்களையும் உயிரினங்களையும் தாங்குகிறது.அவைகள் வாழ வழி செய்கிறது. பதிலுக்கு எதையும் எதிர்பார்ப்பதில்லை.
இயற்கை முழுவதும் இப்படியே நடந்துகொண்டிருக்கிறது.
-
மனித உடலை எடுத்துக்கொண்டால்கூட அந்த உடலுக்குள்ளேயும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது.
இதயம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது,இரத்தத்தை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது..யாரும் அதற்கு சம்பளம் கொடுப்பதில்லை.
நுரையீரல் காற்றை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறது. அதற்கும் சம்பளம் கிடைப்பதில்லை.
இரைப்பை உணவை ஜீரணிக்கிறது.பதிலுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
-
அப்படியானால் நமது உடலுக்குள் நடக்கும் இந்த செயல்கள் யாருக்காக நடைபெறுகின்றன?
இந்த உடல் உறுப்புகள் அடிமைகள்போல எதற்காக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறன?
-
அதிதெய்வம்
-
இந்த உடலின் செயல்கள் யாருக்காக நடைபெறுகிறதோ அதற்கு தெய்வம் என்று பெயர்.
ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் தெய்வத்திற்காக இந்த செயல்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
இதன் பலன்களை அனுபவித்துக்கொண்டிருப்பதும் தெய்வம்.
எங்கெல்லாம் அதியக்ஞமாகிய செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வம் இருக்கிறது.
இந்த உடலுக்குள் தெய்வம் இருப்பதுபோல,
பிரபஞ்சம் ஒட்டுமொத்ததிற்கும் ஒரு தெய்வம் இருக்கிறது.
பல்வேறு மதங்களில் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
திருக்குறளிலும் தெய்வம் என்ற வார்த்தை உள்ளது.
வேதத்தில் ஹிரண்யகர்பர், சுயம்பு,ஈஸ்வரன்,பிரம்மதேவன் என பல பெயர்கள் உள்ளன.
-
அதிபூதம் என்றால் என்ன?
-
திடப்பொருட்கள்,திரவப்பொருட்கள்,வாயுக்கள்,வெப்பம்,ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களினால் உருவாக்கப்பட்ட உடல்கள்,மனம் உட்பட அனைத்தும் அழியும் தன்மை உடையவை.
இவைகள் அனைத்தும் அதிபூதம் என்று சொல்லப்படுகிறது.
இந்த அதிபூதம் இருப்பதால்தான் அதிதெய்வம் இருக்கிறது.அதிதெய்வம் இருப்பதால்தான் அதியக்ஞம் நடைபெறுகிறது.
-
வேள்வி அல்லது கர்மம் என்பது என்ன?
உயிர்களை உண்டுபண்ணுதல், அவைகளை காப்பாற்றுதல்,அழித்தல் என்று மூன்று செயல்படுகளுக்கும் வேள்வி என்று பெயர்.
ஒவ்வொரு உடலுக்குள்ளும் வேள்வி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
உடலுக்குள்ளே ஒவ்வொரு கணமும் புதிய அணுக்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.அவைகள் காக்கப்படுகின்றன. அழிக்கப்படுகின்றன.
அதேபோல மனிதன் புதிய குழந்தையை உருவாக்குகிறான்.குழந்தையை காப்பாற்றுகிறான்.பலரது அழிவிற்கு காரணமாகவும் மனிதன் இருக்கிறான்.
-
இதேபோல இந்த பிரபஞ்சம் முழுவதும் படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற மூன்று செயல்களும் எங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த செயலுக்கும் வேள்வி அல்லது கர்மம் என்று பெயர்.
-
இந்த கர்மத்தின் துவக்கம் எது? பிரபஞ்சம் எங்கிருந்து துவங்கியதோ அங்கிருந்துதான் அதுவும் துவங்கியது.
அத்யாத்மம் என்று சொல்லபடும் அழிவற்ற தன்மையிலிருந்து கர்மம் துவங்குகிறது.
-
இந்த அத்யாத்மம் என்பது என்ன?அதன் இயல்புகள் என்ன?
எல்லாவற்றிற்கும் மேல் இருக்கும் ஆத்மா,பரமாத்மாவிற்கு அத்யாத்மம் என்று பெயர்
அத்யாத்மம் என்பது அழிவற்றது.
வேதத்தில் அதற்கு பிரம்மம் என்று பெயர்.
பிரம்மத்தின் இயல்புகள் பற்றி ஏற்கனவே பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
இனியும் பார்க்க இருக்கிறோம்.
-
அத்யாத்மம்,கர்மம்,அதிபூதம்,அதிதெய்வம்,அதியக்ஞம் இந்த நான்குமாக இருப்பது இறைவன்.
இறைவன் கர்மத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் பிரம்மமாக இருக்கிறார்
எங்கும் நடைபெறும் கர்மமாகவும்
அழியும்தன்மையுடைய அதிபூதமாகவும்
ஒவ்வொரு உடலுக்குள்ளும் உறையும் அதிதெய்வமாகவும்
அனைத்து உடலுக்குள்யேயும்,உடலுக்குவெளியேயும் நடக்கும் அதியக்ஞமாகவும்
எங்கும் இறைவன். எதிலும் இறைவன் இருக்கிறார்
-
-
-
வகுப்பு-40 நாள்-20-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யம் யம் வா அபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்।
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:॥ 8.6 ॥
8.6 குந்தியின் புதல்வா, மரணதருவாயில் எந்த எந்த பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை விடுகிறானோ, எப்பொழுதும் அப்பொருளையே நினைத்துக்கொண்டிருப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்.
-
மரணமடையும்போது எதை நினைத்துக்கொண்டு உயிரைவிடுகிறான்,என்பதைப்பொறுத்து அடுத்தபிறவி அமைகிறது
-
இதைப்பற்றி சற்றுவிரிவாக விளக்கலாம் என நினைக்கிறேன்.
-
மரணமடைந்தபிறகு ஒருவன் அடுத்தபிறவியில் எப்படி பிறப்பான்?
மரணத்திற்கு பிறகு நடப்பது என்ன?
ஒருவரின் மரணத்திற்குபிறகு நடப்பவைகள் ஏன் நமக்குதெரிவதில்லை?
இவைகள் போன்ற பல கேள்விகளுக்கு வேதங்களில் பல பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன,
இருந்தாலும் கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கிறது.
உண்மையிலேயே மரணத்திற்கு பிறகு இன்னொரு வாழ்க்கை உள்ளதா?
மறுபிறவி உள்ளதா?
-
பலகோடி உயிரினங்கள் இருக்கின்றன.இவைகளுக்கெல்லாம் மறுபிறவி இருக்கிறதா?
இவைகள் இறந்தபிறகு என்னவாகும்?
-
பல்வேறு கேள்விகளில் எனக்குதெரிந்த ஒருசில கேள்விகளுக்கு விடைகூற முயற்சிக்கிறேன்.
இவைகளை அப்படியே நம்பவேண்டும் என்ற அவசியம் இல்லை.
முடிந்தவரை சிந்தித்து பார்க்கலாம்.
பகுத்தறிவுக்கு ஒத்துவரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம் மற்றவற்றை விட்டுவிடலாம்
இவைகள் குறித்து சிந்திக்க சிந்திக்க சந்தேகங்கள் விலகுவதற்கு பதிலாக மேலும் புதிய சந்தேகங்கள் ஏற்படலாம்.
-
மனிதனின் உடலில் ஆறு சக்கரங்கள் இருக்கின்றன.
அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஜா, சஹஸ்ராரம்.
இந்த ஆறும் ஆறு உலகங்கள்
இந்த ஆறும் உயிர்களின் ஆறு இருப்பிடங்கள்.
இவைகள்பற்றி விரிவாக பின்பு பார்க்கலாம்
-
மிகவும் கீழ்நிலையில் இருப்பது மூலாதாரம்.
மிருகங்கங்களுக்கு உயிர் மூலாதாரத்தில் இருக்கிறது.
உயிர் என்பது என்ன?
நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் மொத்த சக்திகளும் சேர்ந்து பிராணசக்தி என்று பெயர்.
தமிழில் உயிர்
பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகலன், தேவதத்தன், தனஞ்செயன் இந்த சக்திகள் அனைத்தும் சேர்ந்து பிராணசக்தி
-
உயிர் என்பது உடல் முழுவதும் வியாபித்துள்ளது.
மரணமடையும்போது அது ஏதாவது ஒரு சக்கரத்திற்குள் செல்கிறது.
சஹஸ்ராரத்திற்கு சென்றால் பிரம்மமாகிறது.
ஆக்ஜாவிற்குள் சென்றால் உலகை ஆளும் ஈஸ்வரநிலையை அடைகிறது.
மிருகங்களை ஒத்த மனிதர்கள் மரணமடையும்போது மூலாதாரத்திற்குள் செல்கிறது.
அந்த மனிதன் தூக்கநிலைக்கு சென்றுவிடுகிறான்.
என்றாவது ஒருநாள் வேறுபிறவி கிடைக்கலாம்,அல்லது அப்படியே அழிந்தும்போகலாம்.இதைப்பற்றி உறுதியான முடிவுக்கு வரமுடியாது.
ஒருவேளை அவன் அழிந்துபோனால்,மறுபடி பிறக்காமல் போனால் அவன் செய்த பாவங்களை யார் அனுபவிப்பது?
அவர்கள் குழந்தைகள் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் அனுபவிக்கலாம்.
விலங்கு ஒன்று மரணமடையும்போது அது தூக்கநிலைக்கு சென்றுவிடுகிறது.
தூக்கத்தில் காலம் இல்லை.இடம்,காரண காரியங்கள் எதுவும் இல்லை.உணர்வு இல்லை.
எதையும் அனுபவிப்பதற்கோ,உணர்வதற்கோ எதுவும் இல்லை.
புலி ஒன்று மானைத் துரத்திசென்று அதைக்கொல்வதாக வைத்துக்கொள்வோம்.
மான் உயிரிழக்கும்போது புலியைப்பற்றிய பயத்திலேயே உயிரைவிடுகிறது.
உயிர் மூலாதாரத்திற்குள் சென்று தூக்கநிலைக்கு சென்றுவிடுகிறது.தூக்கநிலை என்பது சூன்யநிலை.
எதுவும் அற்ற நிலை
மானின் உடலை புலிகள் உண்கின்றன. மானின் உடல் அணுக்கள் புலியின் உடல் அணுக்களுடன் கலக்கிறது.
இப்போது அந்த மானின் உடல் என்னவானது?
புலிகளின் உடல்களோடு ஒன்றாகிவிட்டது. மான் அழிந்துவிட்டதா? இல்லை
இறந்துபோன மானின் உடல்தான் புலியின் ரத்தமாகிறது,அதிலிருந்துதான் புதிய உயிர் உருவாகிறது.
இப்போது அந்த மான்தான் புலிக்குட்டியாக பிறக்கிறது.
-
மனிதன் இறந்துபின் என்னவாகிறான்?
-
-
அடுத்த நான் இதுபற்றி பார்க்கலாம்...
-
இதுகுறித்து கேள்விகள் இருந்தால் கேட்கலாம்...அடுத்துவரும் வகுப்புகளில் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்...
-
-
வகுப்பு-41 நாள்-22-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
மரணமடையும்போது எதை நினைத்துக்கொண்டு உயிரைவிடுகிறான்,என்பதைப்பொறுத்து அடுத்தபிறவி அமைகிறது
-
மனிதனால் மட்டுமே கனவு காண முடியும். பிற உயிரினங்களால் முடியாது.
வாழ்க்கை முழுவதும் ஒருவன் எதைக் கனவு காண்கிறானோ,அதற்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறது.
தனது குடும்பத்தைப்பற்றிய சிந்தனைகளிலேயே எப்போதும் மூழக்கிக்கொண்டிருப்பவன் இறந்தபிறகு மறுபடியும் அதே குடும்பத்தில் பிறக்கிறான்.
-
இந்தியாவில் தோன்றிய மதங்களை பின்பற்றுபவங்கள் அனைவரும் மறுபிறவியை நம்புகிறார்கள்.
சாதாரண பாமர மனிதனைக்கேட்டால்கூட மீண்டும் பிறக்க விரும்புவதாக தெரிவிப்பான்.
இந்த பிறவியில் சாதிக்க முடியாத,நிறைவேற்ற முடியாத ஆசைகளை அடுத்தபிறவியிலாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வயதானபின் ஏற்படுகிறது.
-
ஆசைகள் நிறைவேறாதவர்கள் மரணத்திற்கு பிறகு என்ன ஆகிறார்கள்?
மரணமடையும்போது பிராணசக்திகள் ஒன்றிணைந்து உடலைவிட்டு வெளியேறி சூட்சும உடலை எடுக்கின்றன.
இதை ஆவி உடல் என்று பொதுவாக அழைக்கிறோம்.
இந்த ஆவி உடல் என்பது மனித உடலைப்போன்றது அல்ல.
சூட்சும உடலால், தூல உடலின் செயல்களைச் செய்ய முடியாது.
அவைகளால் காற்றில் பறந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல முடியும்.
இறந்துபோன உடலைச்சுற்றி உறவினர்கள் அழுவதைக் காணமுடியும்.
யார் உண்மையிலேயே அழுகிறார்கள்.யார் அழுவதுபோல நடிக்கிறார்கள் எல்லாம் அதற்குத்தெரியும்.