²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
ராஜயோகம்- பதஞ்சலியோக சூத்திரங்கள் 19. பவ ப்ரத்யயோ விதேஹ ப்ரக்ருதி லயானாம் (இந்தச் சமாதி தீவிரமான பற்றின்மையைத் தொடர்ந்ததாக இல்லாதபோது) தேவர்களும் பிரகிருதிலயர்களும் மீண்டும் பிறக்கக் காரணமாகிறது. இந்திய நெறிகளின் தத்துவ சாஸ்திரத்தில் தேவர்கள் எனப்படுபவர்கள் குறிப்பிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்கள். ஒருவர்பின் ஒருவராகப் பல உயிர்கள் இந்தப் பதவிகளை வகிப்பர். இவர்களுள் யாரும் நிறைநிலை அடைந்தவர்கள் அல்ல. 20. ச்ரத்தா வீர்ய ஸ்ம்ருதி ஸமாதி ப்ரஜ்ஞா பூர்வக இதரேஷாம் (இந்தச் சமாதி) நம்பிக்கை, ஆற்றல், ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு, விவேகம் இவற்றின் மூலமாகவும் வேறு சிலருக்கு இவர்கள் தேவ பதவியையோ புவனங்களை ஆளும் பதவியையோ விரும்பாதவர்கள். இவர்கள் முக்தி பெறுகின்றனர். 21. தீவ்ர ஸம்வேகானாமாஸன்ன: தீவிர வேகத்துடன் முயல்வோருக்கு விரைவில் வெற்றி கிடைக்கிறது. 22. ம்ருதுமத்யாதி மாத்ரத்வாத் ததோஷபி விசேஷ: பின்பற்றுகின்ற சாதனை மெதுவாகவும் நடுத்தரமாகவும் விரைவாகவும் இருப்பதற்கேற்ப யோகியரின் வெற்றியும் வேறுபடும். 23. ஈச்வரப்ரணிதானாத்வா அல்லது இறைவனிடம் பக்தி கொள்வதால். 24. க்லேச கர்ம விபாகாசயைரபராம்ருஷ்டபுருஷவிசேஷ ஈச்வர: துன்பம், செயல்கள், அதன் பலன்கள், ஆசைகள் இவற்றால் தீண்டப்படாத ஒரு விசேஷ புருஷன் ஈசுவரன் (எல்லாவற்றையும் ஆள்பவர்) எனப்படுகிறார். பதஞ்ஜலி முனிவரின் யோகத் தத்துவம் கபில முனிவரது சாங்கியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மீண்டும் நாம் நினைவுகூர வேண்டும். சாங்கியத்தில் கடவுளுக்கு இடமில்லை. யோகத் தத்துவத்தில் கடவுளுக்கு இடம் உண்டு; ஆனால் அவர் படைத்தல் போன்ற தொழில்கள் புரிவதாக அவர்கள் கூறுவதில்லை. யோகியர் ஈசுவரன் என்று குறிப்பிடுவர் உலகைப் படைப்பவரான கடவுள் அல்ல. வேதங்களின் படி இறைவன் பிரபஞ்சத்தைப் படைப்பவர்; பிரபஞ்சத்தில் ஓர் இயைபு நிலவுவதால் அது ஒருவரது சங்கல்பத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் யோகிகள் கடவுள் என்று ஒருவரை ஒப்புக்கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் அந்த முடிவிற்கு வரும் விதம் அலாதியாக இருக்கிறது. அவர்கள் கூறுகிறார்கள்: 25. தத்ர நிரதிசயம் ஸர்வஜ்ஞத்வ பீஜம் உயிர்களிடம் விதை போன்று (மட்டும்) உள்ள, எல்லாம் அறிகின்ற தன்மை ஈசுவரனிடம் எல்லையற்றதாக உள்ளது. மனம் எப்பொழுதும் இரண்டு எல்லைகளுக்கு இடையில் செயல் புரிய வேண்டியுள்ளது. எல்லைக்குட்பட்ட ஓர் இடத்தை நம் கருத்தில் கொள்ளலாம். ஆனால் அந்த எண்ணமே எல்லையற்ற ஆகாசத்தைப் பற்றிய எண்ணத்தையும் தருகிறது. கண்களை மூடுங்கள். ஒரு சிறிய வட்ட வெளியை நினையுங்கள். அதை நினைக்கும் போதே அதைச் சூழ்ந்து எல்லையில்லா வட்டவெளியையும் உணர்கிறீர்கள். காலமும் இதைப் போன்றதே. ஒரு நொடிப் பொழுதைச் சிந்திக்க முயலுங்கள். அதை உணரும் போதே எல்லையில்லா காலமும் உங்கள் சிந்தனையில் வருகிறது. அறிவும் இது போன்றதே. அது மனிதனிடம் சிறு விதையாக உள்ளது. அந்தச் சிற்றறிவைச் சுற்றியுள்ள எல்லையில்லா பேரறிவையும் நாம் எண்ண வேண்டியிருக்கிறது. எல்லையற்ற அறிவு இருக்கிறது என்பதை நமது மனத்தின் அமைப்பே காட்டுகிறது. அந்த எல்லையில்லா பேரறிவையே ஈசுவரன் என்று யோகிகள் அழைக்கின்றனர். 26. ஸ பூர்வேஷாமபி குரு: காலேனானவச்சேதாத் ஈசுவரன் காலத்தால் கட்டுப்படாததால் புராதன குருமார்களுக்கும் குரு அவர். எல்லா அறிவும் நம்முள் இருக்கிறது என்பது உண்மையே. அதை வெளிப்படுத்துவதற்கு மற்றோர் அறிவு வேண்டியிருக்கிறது. அறிவதற்கான திறமை நமக்குள் இருந்தாலும் அதை வெளிக்கொணர வேண்டும், அப்படி ஓர் அறிவை வெளிப்படுத்த மற்றோர் அறிவால் தான் முடியும் என்கிறான் யோகி. உயிரற்ற, உணர்ச்சியற்ற ஜடப்பொருள், அறிவை வெளிப்படுத்த முடியாது. அதற்கு மற்றோர் அறிவு வேண்டும் என்பது யோகியின் கருத்து. நம்முள் இருப்பதை விழிப்புணர்த்த குருமார்கள் நம்முடன் இருக்க வேண்டும். இத்தகைய குருமார்கள் எப்போதும் தேவை. அவர்கள் இல்லாமல் உலகம் ஒரு போதும் இருந்ததில்லை. அவர்கள் இல்லாமல் எந்த ஞானமும் வராது. கடவுளே குருமார்கள் அனைவருக்கும் குரு. ஏனெனில் மற்ற குருமார்கள், எவ்வளவு மேலானவர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும், தேவதூதர்களாக இருந்தாலும் காலத்தால் கட்டுப்பட்டவர்கள். கடவுள் அவ்வாறு இல்லை. யோகிகளின் இரண்டு சிறப்பான முடிவுகள் உள்ளன- முதல் முடிவு எல்லைக்கு உட்பட்டதை நினைக்கும் போது மனம் எல்லை இல்லாததையும் நினைத்தே தீரும். அனுபவத்தின் ஒரு பகுதி உண்மையாக இருந்தால் மற்றப் பகுதியும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மனத்தின் அனுபவம் என்ற அளவில் இரண்டும் ஒரே தன்மை படைத்தவைதாம். மனிதனுக்குச் சிற்றறிவு உள்ளது என்பதே அறிவு எல்லையற்றதாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஒன்றை ஏற்றுக்கொண்டால் மற்றதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? இரண்டையும் விடவேண்டும் என்றே அறிவும் வற்புறுத்துகிறது. சிற்றறிவுடன் மனிதன் என்ற ஒருவன் இருந்தால், அவனுக்கு மேல் பேரறிவுடன் ஒருவர் இருக்கிறார் என்பதையும் ஒத்துக்கொண்டேயாக வேண்டும். ஆசிரியர் இல்லாமல் அறிவு பெற முடியாது என்பது இரண்டாவது முடிவு. தற்காலத் தத்துவ அறிஞர்கள் கூறுவதுபோல் ஏற்கனவே அவனுள் இருக்கின்ற ஒன்று தான் வெளிப்படுகிறது, எல்லா அறிவும் மனிதனுள்ளேயே இருக்கிறது. உண்மைதான் ஆனால் அதை வெளியே கொண்டுவர, குறிப்பிட்ட சூழ்நிலைகள் வேண்டும். ஆசிரியர் இல்லாமல் நாம் எந்த அறிவையும் பெற முடியாது. ஆசிரியர் மனிதராகவோ தேவராகவோ தேவதூதராகவோ இருந்தாலும், அவர்களின் ஆற்றல் வரம்புக்கு உட்பட்டது. அவர்களுக்கு முன்னரே இருந்த ஆசிரியர் யார்? அவர் காலவரம்புக்கு உட்படாத கடவுளே; எல்லையற்ற ஞானம் படைத்த ஆதியந்தம் இல்லாத அந்த ஒரே ஆசிரியர்தான் கடவுள் என்ற முடிவை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டியுள்ளது. 27. தஸ்ய வாசக: ப்ரணவ: அவரது சொல் வடிவமே ஓம். மனத்தில் கொள்ளும் ஒவ்வொரு கருத்துக்கும் இணையான ஒரு சொல் உண்டு. சொல்லும் கருத்தும் இணைபிரியாதவை. ஒரே பொருளின் புறப் பகுதி, சொல்; அகப் பகுதி, கருத்து. சொல்லையும் கருத்தையும் ஆராய்ச்சியின் மூலம் ஒருவராலும் பிரிக்க முடியாது. மொழியை மனிதன் உருவாக்கினான் என்றொரு கருத்து நிலவுகிறது; சிலர் கூடி உட்கார்ந்து மொழியை முடிவு செய்தனர் என்ற இந்தக்கருத்து தவறென்று நிரூபிக்கப்பட்டு விட்டது. மனிதன் தோன்றிய காலம் முதல் சொற்களும் மொழியும் இருந்துவருகின்றன. ஒரு கருத்திற்கும் சொல்லிற்கும் உள்ள தொடர்பு என்ன? சொல் எப்போதும் எண்ணத்துடன் தொடர்புடையதாக இருப்பதை நாம் காண்கிறோம். ஓர் எண்ணம் ஒரே சொல்லுடன்தான் இணைந்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரே கருத்தை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சொற்களால் குறிப்பிடலாம். ஒவ்வொரு கருத்தைக் குறிப்பிட ஒவ்வொரு சொல் வேண்டும் என்றாலும் அந்தச் சொல் எல்லா நாடுகளிலும் ஒரே ஒலியுடன் இருக்க வேண்டியதில்லை. நாட்டிற்கு நாடு ஒலி வேறுபடுகிறது. எண்ணத்திற்கும் சொல்லிற்கும் உள்ள தொடர்பு முற்றிலும் இயற்கையானது என்றாலும் ஓர் ஒலிக்கு ஒரு கருத்துதான் இருக்க வேண்டும் என்ற கட்டாய நியதி எதுவுமில்லை என்று உரையாசிரியர்கள் கூறுகிறார். ஒலி வேற்றுமை இருந்தாலும் சொல்லுக்கும், அது குறிக்கும் கருத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு இயற்கையாய் அமைந்தது. ஒரு பொருளுக்கும், அதைக் குறிக்கும் சின்னத்திற்கும் இடையில் உண்மையான தொடர்பு இருந்தால், கருத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு பொருத்தமுடையதாகும் அதுவரை, அந்தச் சின்னம் ஒருபோதும் பழக்கத்திற்கு வராது. ஒரு சின்னம் ஒரு குறிப்பிட்ட பொருளை வெளிப்படுத்துகிறது. குறிப்பிட்ட பொருள் ஏற்கனவே இருந்தாலும் அந்தச் சின்னம் அந்தப் பொருளைப் பல தடவை வெளிப்படுத்துவதை நாம் அனுபவத்தில் உணர்ந்திருந்தோமானால் பொருளுக்கும் சின்னத்திற்கும் உண்மையான தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். அந்தப் பொருட்கள் கண்முன்னால் காணப்படாவிட்டாலும் அவற்றின் சின்னங்களின் மூலம் அவற்றைப் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் அறிந்துகொள்வார்கள். பொருளுக்கும் அதன் சின்னத்திற்கும் இயற்கையான தொடர்பு இருக்க வேண்டும்; அப்போது சின்னத்தைக் கேட்டவுடன் அது குறிக்கும் பொருள் நினைவிற்கு வரும். கடவுளின் சொல்வடிவம் ஓம் என்கிறார் உரையாசிரியர். இந்தச் சொல்லை அவர் ஏன் வற்புறுத்திக் கூற வேண்டும்? கடவுளைக் குறிக்க நூற்றுக்கணக்கான சொற்கள் உள்ளன. ஒரு கருத்தைக் குறிக்க ஆயிரக்கணக்கான சொற்கள் உள்ளன. கடவுள் என்ற கருத்தைக் குறிக்கவும் பல சொற்கள் உண்டு. ஒவ்வொன்றும் கடவுளைக் குறிக்கும் சின்னமாக உள்ளது. மிகவும் நல்லது. ஆனால் இந்தச் சொற்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று இருக்க வேண்டும்; இந்தச் சின்னங்கள் எல்லாவற்றிற்கும் ஓர் ஆதாரம், ஒருபொதுவான அடிப்படை இருக்க வேண்டும். அந்தப் பொதுச் சின்னமே எல்லாவற்றுள்ளும் சிறந்தது; உண்மையில் அது எல்லாவற்றையும் குறிப்பதாகவும் இருக்கும். ஒலியை எழுப்ப குரல்வளையையும் அண்ணத்தையும் அடிப்படையாகப் பயன்படுத்துகிறோம். எல்லா ஒலிகளும் பிறக்கக் கூடியதும், மிகவும் இயற்கையானதுமான ஓர் ஒலி இருக்கிறதா? ஆம், அத்தகைய ஒலி, ஓம் (அ+உ+ம்). எல்லா ஒலிகளுக்கும் ஆதாரமாக உள்ளது அதுவே. இதில் முதல் எழுத்தான அ மூல ஒலியாக, அடிப்படையாக உள்ளது. நாக்கையோ அண்ணத்தையோ தொடாமல் இது உச்சரிக்கப்படுகிறது. ம் என்ற ஒலி, மூடிய உதடுகளால் உச்சரிக்கப்படுகிறது; எழுத்துக்களின் வரிசையில் கடைசியாக உள்ளது இது. இடையிலுள்ள உ குரல்வளையிலிருந்து உதடுவரை உருண்டு செல்கிறது. இவ்வாறு ஓம் என்பது ஒலி உண்டாகும் முறையே முழுவதுமாகக் காட்டுகிறது. எனவே இதுதான் சின்னங்களுள் மிகவும் இயற்கையானதும், பல்வேறான ஒலி அனைத்திற்கும் அச்சும் ஆகும். உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுள்ள எல்லா வார்த்தைகளின் வரிசைகளையும் குறிப்பதாக உள்ளது இது. இந்த ஊகங்களைத் தவிர இந்தியாவிலுள்ள பல்வேறு மதக் கருத்துக்கள் எல்லாமே இந்த ஓம் என்ற சொல்லை மையமாகக் கொண்டுள்ளன. வேதங்களிலுள்ள மதக்கருத்துக்களும் ஓம் என்ற சொல்லையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்காவிற்கோ இங்கிலாந்திற்கோ பிற நாட்டிற்கோ ஆவது என்ன? இதற்கு எளிய பதில் இதுதான்; இந்தியாவின் சமய வளர்ச்சியில் ஒவ்வொரு படியிலும் இந்தச் சொல் கையாளப்பட்டு வருகிறது. கடவுளைப் பற்றிய எல்லாவிதமான கருத்துக்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்வைதிகள், துவைதிகள், துவைதாத்வைதிகள், பேதாபேதவாதிகள், ஏன், நாத்திகர்கள் கூட இந்த ஓம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்கின்றனர். மனித இனத்தின் மிகப் பெரும்பாலனோரின் மதஉணர்வுக்கு இது ஒரே சின்னமாக இருக்கிறது. குட் என்ற ஆங்கிலச் சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இது எல்லைக்கு உட்பட்ட செயல்பாட்டை மட்டுமே குறிக்கிறது. இன்னும் அப்பால் செல்லவேண்டுமானால் மேலும் விளக்கச் சொற்களைச் சேர்க்க வேண்டும்; அதாவது சகுணம், நிர்க்குணம், தனித்தது போன்ற சொற்களைச் சேர்க்க வேண்டும். மற்ற மொழிகளிலும் இவ்வாறே கடவுளைக் குறிக்கும் சொற்கள் இறை இயலின் சிறுபகுதியை மட்டும் விளக்குவதாக உள்ளன. ஆனால் ஓம் என்ற சொல் பல்வேறு கருத்துக்கள் பொதிந்தவையாக உள்ளது. ஆதலால் இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வது நல்லது. 28. தஜ்ஜபஸ்ததர்த்தபாவனம் (ஓம் என்ற சொல்லை) மீண்டும்மீண்டும் உச்சரிப்பதும், அதன் பொருளைச் சிந்திப்பதுமே வழி. ஏன் மீண்டும்மீண்டும் உச்சரிக்க வேண்டும்? சம்ஸ்காரம் பற்றிய கோட்பாடு உங்களுக்கு நினைவிருக்கும். மனத்திலுள்ள பதிவுகளின் மொத்தமே சம்ஸ்காரங்கள். அவை மிகவும் சூட்சுமமாகி இருக்கலாம், ஆனாலும் அவை அங்கேதான் இருக்கின்றன. தக்கத் தூண்டுதல் ஏற்பட்டால், உடனே அவை வெளிப்படுகின்றன. மூலக் கூற்றின் அதிர்வுகள் ஒருபோதும் ஓய்வதில்லை. இந்தப் பிரபஞ்சம் ஒடுங்கும்போது பெரிய அதிர்வுகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன; சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், பூமி இவை கரைந்து மறைகின்றன. ஆனால் அணுக்களில் அதிர்வு இருக்கவே செய்கிறது. பெரிய உலகங்கள் செய்யும் செயல்களை ஒவ்வோர் அணுவும் செய்துகொண்டுதான் இருக்கும். ஆகவே சித்தத்தில் அதிர்வுகள் அடங்கினாலும் மூலக்கூறுகள் அதிர்ந்து கொண்டுதான் இருக்கும். தூண்டுதல் ஏற்படும்போது அவை வெளிப்படுகின்றன. மீண்டும்மீண்டும் உச்சரிப்பது என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். ஆன்மீக சம்ஸ்காரங்களுக்குக் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய தூண்டுதல் இவ்வாறு மீண்டும்மீண்டும் சொல்வதே. கணநேரமானாலும்கூட தூயவர்களுடன் கொள்ளும் தொடர்பு வாழ்க்கைப் பெருங்கடலைக் கடக்க உதவுகிறது. தொடர்பின் ஆற்றல் இத்தகையது. எனவே, ஓம் என்பதை மீண்டும்மீண்டும் உச்சரிப்பதும் அதன் பொருளைச் சிந்திப்பதும் உங்கள் மனத்துடனேயே நீங்கள் கொள்ளும் சிறந்த தொடர்பாகும். கற்றுக் கொள்ளுங்கள், கற்றதைச் சிந்தியுங்கள். இவ்வாறு நீங்கள் ஒளி பெறுவீர்கள். ஆன்மா வெளிப்பட்டுத் தோன்றும். ஓம் என்பதைச் சிந்திக்க வேண்டும், அதனுடன் அதன் பொருளையும் சிந்தியுங்கள். தீயவர்களின் தொடர்பை விலக்குங்கள். ஏனெனில் பழைய தழும்புகள் போல் தீய சம்ஸ்காரங்கள் ஏற்கனவே உங்களிடம் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்துவதற்கான தூண்டுதலே தீயவர் சகவாசம். அதுபோலவே நல்லோர் தொடர்பு நம்மிடமுள்ள நல்ல சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நல்லோர் தொடர்பைப் போல் புனிதமானது இந்த உலகில் வேறொன்றும் இல்லை. அது நல்ல சம்ஸ்காரங்களை மேலே கொண்டு வருகிறது. 29. தத: ப்ரத்யக் சேதனாதிகமோஷப்யந்தராயோ பாவச்ச அதிலிருந்து அகக் காட்சி (பற்றிய அறிவு) உண்டாகிறது. தடைகள் அகல்கின்றன. ஓங்கார ஜபத்தினாலும் அதனைச் சிந்தனை செய்வதாலும் முதலில் அகநோக்கு ஆற்றல் மேன்மேலும் வெளிப்பட்டு, மனத்தளவிலும் உடலளவிலும் ஏற்படும் தடைகள் எல்லாம் மறையத் தொடங்கும். யோகிக்கு வரக்கூடிய தடைகள் எவை? 30. வ்யாதிஸ்த்யான ஸம்சய ப்ரமாதாலஸ்யாவிரதி ப்ராந்திதர்சனாலப்தபூமிகத்வானவஸ்திதத்வானி சித்த வி÷க்ஷபாஸ்தேஷந்தராயா நோய், மனச்சோர்வு, சந்தேகம், ஊக்கமின்மை, சோம்பல், புலனின்பங்களில் பற்று, மதிமயக்கம், மனம் குவியாதிருத்தல், பெற்ற நிலையிலிருந்து வழுவுதல் இவை தடைகள். நோய்: வாழ்க்கை என்னும் பெருங்கடலில் நம்மை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கின்ற படகு உடல். இதனை நாம்பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியம் இல்லாதவர்கள் யோகிகளாக முடியாது. மனச்சோர்வு: இதனால் யோகப் பயிற்சியில் ஊக்கம் குறைந்துவிடும். ஊக்கம் இல்லாவிடில் பயிற்சிக்கு வேண்டிய மனவுறுதியோ ஆற்றலோ இருக்காது. சந்தேகம்: ஒருவன் அறிவால் எய்திய முடிவு எவ்வளவுதான் வலிமையுடையதாக இருந்தாலும் தூரத்தில் நிகழ்பவற்றைப் பார்த்தல், கேட்டல் முதலிய சந்தேகங்கள் வரும்வரை யோக சாஸ்திரத்தைப் பற்றிய சந்தேகங்கள் எழவே செய்யும். இந்த ஆற்றல்கள் மனத்தில் நம்பிக்கையை வளர்த்து, ஒருவனை முயற்சியில் ஈடுபடுத்துகின்றன. பெற்ற நிலையிலிருந்து வழுவுதல்: ; நீங்கள் பயிற்சி செய்யும்போது, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மனம் அமைதி அடைந்து, எளிதில் ஒருமுகப்பட்டிருக்கும் நீங்கள் விரைவில் முன்னேற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் முன்னேற்றம் நின்று விடும். வழி தவறியதுபோல் திக்குத்தெரியாமல் நிற்பீர்கள். ஆனாலும் விடாமுயற்சியுடன் தொடருங்கள். எழுச்சியும் வீழ்ச்சியும் எல்லா வகை முன்னேற்றங்களிலும் உண்டு. 31.து:க்க தௌர்மனஸ்யாங்மேஜயத்வ ச்வாஸ ப்ரச்வாஸா வி÷க்ஷபஸஹபுவ: துக்கம், மனக் கலக்கம், உடல் நடுக்கம், மூச்சுத் தடுமாற்றம், மன ஒருமைப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமை. மன ஒருமைப்பாட்டைப் பழகும் ஒவ்வொரு முறையும் மனத்திற்கும் உடலுக்கும் பூரண ஓய்வு கிடைக்கிறது. ஆனால் முறைதவறிச் செய்தாலும், மனம் போதிய அளவு அடக்கப்படாமல் இருந்தாலும் இத்தகைய இடையூறுகள் ஏற்படுகின்றன. அப்போது ஓங்காரத்தை ஜபிப்பதும், இறைவனிடம் சரண்புகுதலும் மனத்தை வலுப்படுத்தி புதிய சக்தியைத் தரும். உடல் நடுக்கம் அனேகமாக அனைவருக்கும் வருவதே. அதைப் பொருட்படுத்தாமல் பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். பயிற்சியே இந்த இடையூறுகளை நீக்கி ஆசனத்தை உறுதியாக்கும். 32. தத் ப்ரதிஷேதார்த்தமேகதத்வாப்யாஸ: இதற்குப் பரிகாரம் மனத்தை ஒரு பொருளின்மீது ஒடுக்கிப் பழகுவதே. சிறிது காலத்திற்கு ஒரு பொருளின் உருவை மனம் எடுக்கச் செய்வதால் இந்தத் தடைகள் நீங்கும். இது பொதுவான அறிவுரை. இனிவரும் சூத்திரங்களில் இது விரிவாகவும் தனித்தனியாகவும் கூறப்படும். ஒரே பயிற்சி எல்லோருக்கும் ஏற்றதாகாது. எனவே பல்வேறு முறைகள் கூறப்படும். அவற்றுள் எது யாருக்கு அதிகமாக உதவும் என்பதை அனுபவத்தால் அறிந்துகொள்ள வேண்டும். 33. மைத்ரீ கருணா முதிதோபேக்ஷõணாம் ஸுக து:க்க புண்யாபுண்யவிஷயாணாம் பாவனாதச்சித்த ப்ரஸா தனம் இன்பம், துன்பம், புண்ணியம், பாவம் போன்ற விஷயங்களில் முறையே நட்பு, கருணை, மகிழ்ச்சி, அலட்சியம் இவற்றைக் கைக்கொள்வதால் சித்தம் அமைதியடைகிறது. இந்த நான்குவிதக் கருத்துக்கள் நம்மிடம் இருக்க வேண்டும். எல்லோரிடமும் நட்புக்கொள்ள வேண்டும். துன்பப்படுபவர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும். பிறர் மகிழ்ச்சி அடைந்தால் நாமும் மகிழ வேண்டும். தீயவர்களிடம் அலட்சியமாக இருக்க வேண்டும். நம்முன் வரும் எல்லா விஷயங்களிலும் இந்த நான்கு வித மனப்பான்மைகளைக் கொள்ள வேண்டும். நல்ல பொருளாய் இருந்தால் நட்பும், துன்பத்தில் இரக்கமும், நல்ல விஷயத்தில் மகிழ்வும், தீய விஷயங்களில் அலட்சியமும் கொள்ள வேண்டும். நம்முன் வரும் விஷயங்களில் இத்தகைய மனப்பான்மைகளைக் கொள்வது மனத்திற்கு அமைதியைத் தரும். தினசரி வாழ்க்கையில் நமக்கு வரும் சிக்கல்களுள் பலவும் மனத்தை இந்த வழியில் நிறுத்த முடியாததால் ஏற்படுபவையே. உதாரணமாக ஒருவன் நமக்குத் தீமை செய்தால் உடனே நாமும் அவனுக்குத் தீமை செய்ய எண்ணுகிறோம். தீய எதிர்ச் செயல்கள் ஒவ்வொன்றும் சித்தத்தை நாம் அடக்கிப் பழகவில்லை என்பதையே காட்டுகிறது. சித்தம் வெளி வந்து அலைகளாகி புறப்பொருளை நோக்கிச் செல்லுந் தோறும் நாம் நமது வலிமையை இழக்கிறோம். வெறுப்பாகவோ தீய எண்ணமாகவோ வரும் ஒவ்வோர் எதிரியக்கமும் மனத்தின் ஆற்றலைக் குறைக்கிறது. வெறுப்பு மற்றும் தீமையாக வெளிப்படும் ஒவ்வோர் எதிர்ச் செயலும் மனத்திற்கு இழப்பாகிறது. ஒவ்வொரு தீய எண்ணமும் வெறுப்புச் செயலும், எதிர்ச் செயல் எண்ணமும், தடுக்கப்படும்போது மனத்திற்கு அனுகூலமாகிறது. நம்மை நாமே அடக்குவதால் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை. மாறாக நாம் எதிர்பார்த்ததற்கு மேல் எல்லையற்ற மடங்கு நன்மையையே அடைகிறோம். ஒவ்வொரு முறை நாம் வெறுப்பையும் கோப உணர்ச்சியையும் அடக்கும்போது அந்த அளவிற்கு நல்ல ஆற்றலைச் சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த சக்திகளாக மாற்றப்படுகின்றன. 34. ப்ரச்சர்தன விதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய சுவாசத்தை வெளியே விடுவதாலும் அடக்குவதாலும் பிராணன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது பிராணன் என்பதற்கு மூச்சு என்பது சரியான பொருள் அல்ல. பிரபஞ்சத்தில் நிலவும் சக்திக்குப் பிராணன் என்று பெயர். பிரபஞ்சத்தில் எவையெல்லாம் காணப்படுகிறதோ, எவையெல்லாம் இயங்குகிறதோ, செயல்புரிகிறதோ, உயிர் வாழ்கிறதோ அவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே, பிரபஞ்சத்தில் காணப்படும் சக்திகளின் மொத்தமே பிராணன் என்று அழைக்கப்படுகிறது. கல்பம் ஆரம்பிக்குமுன் இந்தப் பிராணன் ஏறக்குறைய செயலற்ற நிலையில் இருக்கிறது. கல்பம் ஆரம்பிக்கும்போது வெளிப்பட ஆரம்பிக்கிறது. இந்தப் பிராணனே இயக்கமாக வெளிப்படுகிறது. மனிதனிலும் பிராணிகளிலும் நாடி நரம்புகளில் இயக்கமாக வெளிப்படுகிறது. எண்ணமாக வெளிப்படுவதும் இதே பிராணன்தான். பிரபஞ்சம் முழுவதும் பிராணன் மற்றும் ஆகாசம் இவை இரண்டின் சேர்க்கையால் ஆகியது. மனிதனின் உடலும் அவ்வாறு ஆகியதே. நாம் உணர்கின்ற, பார்க்கின்ற பொருட்கள் எல்லாமே ஆகாசத்திலிருந்து வருகின்றன. பலவகைச் சக்திகள் பிராணனிலிருந்து வருகின்றன. இந்தப் பிராணனை வெளியே விடுவதும், உள்ளே நிறுத்தி வைப்பதும் பிராணாயாமம் எனப்படும். யோகத் தத்துவத்தின் தந்தையான பதஞ்சலி முனிவர் பிராணாயாமத்தைப் பற்றி அவ்வளவாக விவரிக்கவில்லை. ஆனால் அவருக்குப் பின் தோன்றிய யோகிகள் பிராணாயாமத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை விவரித்து அதை ஒரு பெரிய விஞ்ஞானமாக ஆக்கியுள்ளனர். பதஞ்சலி முனிவரைப் பொறுத்தவரையில் பல வழிகளுள் பிராணாயாமமும் ஒன்று. இதை அவர் அதிகம் விலியுறுத்த வில்லை. காற்றை வெளியேவிட்டு உள்ளிழுத்துச் சிறிது நேரம் அடக்குங்கள், இதனால் மனம் சற்று அமைதியடையும் என்று மட்டுமே கூறுகிறார். பிற்காலத்தில் இதிலிருந்து பிராணாயாமம் என்னும் தனி விஞ்ஞானமே உருவாகியதை நீங்கள் காண்பீர்கள். பிற்கால யோகிகள் கூறியதைச் சற்று பார்ப்போம். இவற்றுள் சிலவற்றை ஏற்கனவே நான் கூறியுள்ளேன். மீண்டும் சொல்வதால் மனத்தை அதில் ஈடுபடுத்த உங்களுக்கு உதவும். பிராணன் என்பது மூச்சல்ல என்பதை முதலில் நீங்கள் நினைவுகூர வேண்டும். சுவாசித்தலைத் தூண்டுவது எதுவோ, சுவாசத்தின் உயர்நாடியாக இருப்பது எதுவோ அதுவே பிராணன். பிராணன் என்ற சொல் புலன்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எல்லா புலன்களும் பிராணன் என்றே அழைக்கப்படுகின்றன. மனமும் பிராணன் என்று அழைக்கப்படுகிறது. எனவே பிராணன் என்பது ஒரு சக்தி என்பது நமக்குத் தெரிகிறது. எனினும் பிராணனை சக்தி என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் சக்தி என்பது பிராணனின் ஒரு வெளிப்பாடு மட்டுமே, சக்தியாகவும் பல்வேறு இயக்கங்களாகவும் வெளிப்படுவது பிராணன். சித்தம் ஓர் எந்திரம் போல் சுற்றுப்புறத்திலிருந்து பிராணனைத் தன்னுள் இழுத்துக்கொண்டு அதிலிருந்து வெவ்வேறு ஆதார சக்திகளை உண்டாக்குகிறது. உடலைப் பாதுகாக்கும் சக்தி, சிந்தனை சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி முதலிய பல்வேறு சக்திகளும் இவ்வாறு தோன்றியவை. மேலே கூறியதான பிராணாயாமத்தால் உடலில் வெவ்வேறு இயக்கங்களையும் நரம்பு ஓட்டங்களையும் நாம் அடக்கி ஆளலாம், உடலில் செல்லும் உணர்ச்சி ஓட்டங்களையும் வசப்படுத்தலாம், முதலில் நாம் அவற்றை உணர்கிறோம். அதன்பின் மெள்ளமெள்ள அவற்றை அடக்குகிறோம். மனித உடலில் பிராணனின் மூன்று முக்கிய ஓட்டங்கள் இருப்பதாக இந்தப் பிற்கால யோகிகள் கருதுகின்றனர். அவற்றை இடை, பிங்கலை, சுழுமுனை என்று அழைக்கின்றனர். பிங்கலை முதுகெலும்புக்கு வலது பக்கத்திலும், இடை இடது பக்கத்திலும் உள்ளன. முதுகெலும்பின் நடுவில் வெறும் துளையாக உள்ளது சுழுமுனை. இடையும் பிங்கலையும் எல்லா மனிதர்களிலும் செயல்படுகின்றன. வாழ்க்கையின் செயல்பாடுகள் அனைத்தையும் நாம் இவை மூலமே செய்கிறோம். சுழுமுனை எல்லோரிலும் உள்ளது. செயல்படுவதற்கான சாத்தியக்கூறு இருந்தும் அது யோகியிடம் மட்டுமே செயல்படுகிறது. யோகம் உடம்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பயிற்சி செய்துகொண்டே போகுந்தோறும் உங்கள் உடம்பு மாறுகிறது. உங்கள் இப்போதைய உடம்பு பயிற்சிக்கு முன்னிருந்த உடம்பு அல்ல. இப்படி நாம் விளக்கவும் முடியும். ஏனெனின் ஒவ்வொரு புது எண்ணமும் மூளையில் ஒரு புதிய பாதையை உண்டாக்குவது போலுள்ளது. மனித இயல்பு மாறாதிருப்பதன் காரணத்தை இது விளக்குகிறது. ஏற்கனவே உள்ள தடங்கள் வழியாக ஓடுவதையே மனித இயல்பு விரும்புகிறது. ஏனெனில் அது எளிது. மனத்தை ஓர் ஊசியாகவும், மூளையை ஒரு மிருதுவான பொருளாகவும் கருதுவோம். எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் மூளையில் ஒரு பாதையை அமைக்கிறது. மூளையில் உள்ள சாம்பல் நிறப்பொருள் இதை மூடிப் பாதுகாப்பதால் பாதை அழிவதில்லை. இந்தப் பாதைகள் பாதுகாக்கப்படாவிட்டால் ஞாபக சக்தி இருக்காது. ஏனெனில் பாதையில் திரும்பிச் செல்வது போன்று, எண்ணிய எண்ணத்தை மீண்டும் நினைப்பதே ஞாபகம் ஆகும். எல்லோரும் அறிந்த சில விஷங்களை எடுத்து அவற்றைச் சேர்த்தும் பிரித்தும் ஒருவன் பேசும்போது, அவனது கருத்தைப் பின்பற்றுவது நமக்கு எளிதாகிறது. ஏனெனில் இந்த எண்ணப் பாதைகள் எல்லோருடைய மூளையிலும் உள்ளன, ஆனால் புதிய கருத்து ஒன்றை ஒருவன் கூறும்போது புதிய பாதைகளை உருவாக்க வேண்டியிருப்பதால் அது உடனே புரிவதில்லை. அதனால்தான் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு மனிதன் அறியாமலே அவனது மூளை மறுத்துவிடுகிறது. மறுப்பது மூளையே தவிர மனிதன் அல்ல. அது மறுக்கிறது. புதிய பாதை அமைப்பதற்குப் பிராணன் முயற்சி செய்தாலும், மூளை அதை மறுக்கிறது. ஒருவன் பழைய முறையிலிருந்து மாற மறுப்பது இதனால்தான். ஏற்கனவே மூளையில் பழைய பாதைகள் குறைவாக இருந்து, ஊசி யாகிய பிராணன் பாதைகள் அமைப்பதும் குறைவாக இருக்குமானால் அந்த அளவிற்கு மூளை பழைமை முறையிலேயே ஆழ்ந்திருக்கும். புதிய எண்ணங்களை எதிர்க்கும் ஒரு மனிதனிடம் சிந்தனை சக்தி அதிகரிக்கும் அளவுக்கு, அவனது மூளையில் எண்ணப் பாதைகள் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு அவன் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வான். புரிந்துகொள்வான். ஒவ்வொரு புதிய எண்ணத்தை எண்ணும்போதும் மூளையில் ஒரு பதிவை உண்டாக்குகிறோம். புதிய பாதையை உருவாக்குகிறோம் அதனால்தான் யோகப் பயிற்சியில் முதலில் மூளையிடமிருந்து அவ்வளவு எதிர்ப்பை நாம் காண்கிறோம். (ஏனெனில் அது முற்றிலும் புதிய கருத்துக்களாக, புதிய நோக்கங்களாக உள்ளது) அதனால்தான் மதங்களிலும் மனித இயற்கையின் லவுகீகப் பகுதியைத் தொடுகின்ற பகுதிகளை மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்கின்றனர். மறுபகுதியை அதாவது மனிதனின் அக இயல்பைப் பற்றிக் கூறுகின்ற தத்துவம், மன இயல் இவற்றைப் பொதுவாக மறுத்துவிடுகின்றனர். இனி நாம் வாழும் உலகத்தைப்பற்றி ஆராய்வோம். எல்லையற்ற இருப்பில் நம் உணர்வுக்குத் தோன்றுகின்ற பகுதிதான் உலகம் என்பது. எல்லையற்ற தன் ஒரு சிறுபகுதி நமது உணர்வில் தோன்றுகிறது. அதை நாம் நமது உலகம் என்கிறோம். எனவே அப்பால் ஓர் எல்லையற்றது உள்ளது. மதம் என்பது, நாம் உலகம் என்று அழைக்கின்ற சிறிய பகுதி, அப்பால் உள்ள எல்லையற்ற பகுதி இரண்டையும் ஆராய வேண்டியிருக்கிறது. இரண்டினுள் ஒன்றை மட்டும் ஆராய்கின்ற மதம் குறைபாடு உடையது. அது இரண்டையும் ஆராய வேண்டும். எல்லையற்றதன் ஒரு பகுதி உணர்வுநிலைக்குள் வரும் போது, உணர்வுநிலையால் கட்டப்பட்டது போலாகிவிடுகிறது. இவ்வாறு உணர்வுநிலையில் கட்டுப்பட்ட காலம், இடம், காரணகாரியம் என்ற கூண்டிற்குள் அடைபட்ட, எல்லையற்ற இருப்பின் லவுகீகப் பகுதியைப் பற்றிக் கூறுகின்ற மதக் கருத்துக்கள் நமக்கு நன்றாகத் தெரிந்தவையே. நாம் ஏற்கனவே அதில்தான் இருக்கிறோம். நினைவுக்கு எட்டாத காலம் முதல் இவ்வுலகைப் பற்றிய கருத்துக்கள் நம்மிடம் உள்ளன. அப்பாலுள்ள எல்லையற்றதைப் பற்றிய மதக் கருத்துக்கள் நமக்கு முற்றிலும் புதியவை. அவை நமது மூளையில் புதிய எண்ணப் பாதைகளை ஏற்படுத்தும்போது மொத்த அமைப்பும் நிலை குலைந்துவிடுகிறது. அதனால்தான் சாதாரண மக்கள் யோகப் பயிற்சியின் ஆரம்பத்தில் வழி தவறிவிட்டதாக உணர்கிறார்கள். இதுபோன்று இடையூறுகளை இயன்ற அளவு குறைப்பதற்காகவே பதஞ்ஜலி முனிவர் இத்தகைய வழிகளையெல்லாம் கூறுகிறார். அவற்றுள் நமக்கு மிகவும் பொருத்தமானதை நாம் பயிலலாம். 35. விஷயவதீ வா ப்ரவ்ருத்திருத்பன்னா மனஸ: ஸ்திதி நிபந்தினீ எத்தகைய சமாதி நிலைகள் அபூர்வமான புலன் அனுபவங்களை உண்டாக்குமோ அத்தகையவை மனத்தை நிலைநிறுத்தக் காரணமாக அமைகின்றன. இது இயல்பாகவே தாரணையினால் அதாவது ஒருமைப்பாட்டினால் வருகின்றது. மூக்கு நுனியில் மனத்தைக் குவித்துப் பழகினால், சில நாட்களுக்குப் பிறகு ஒருவர் அற்புதமான நறுமணங்களை முகரலாம் என்று யோகிகள் கூறுகின்றனர். நாக்கின் அடிநுனியில் குவித்துப் பழகினால், சில ஒலிகளைக் கேட்கலாம். நாக்கின் நுனியில் குவித்தால், அரிய சுவைகளை உணரலாம். நாக்கின் நடுவில் குவித்தால், ஏதோ ஒன்றுடன் தொடர்பு கொள்வது போன்ற உணர்ச்சி ஏற்படும். அண்ணத்தில் குவித்தால் அற்புதமான பொருட்கள் தெரிய ஆரம்பிக்கும். யோகப் பயிற்சியில் ஈடுபட்டு, அதேவேளையில் அதன் உண்மையில் சந்தேகம் உள்ளவர்கள், இந்தப் பயிற்சிகளைச் செய்தால், அவர்களின் சந்தேகம் நீங்கப்பெற்று, அவர்கள் சாதனையில் மேலும் முயற்சியுடன் ஈடுபடுவார்கள்.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.