²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
சித்துப் பிராணன் யோகிகளின் கருத்துப்படி முதுகுத்தண்டில் பிங்கலை, இடை என்ற இரண்டு நாடிகள் இயங்குகின்றன. முதுகுத் தண்டின் வழியாக உள்ளே கழுமுனை என்ற ஒரு நாளம் செல்கிறது. சுழுமுனையில் கீழ் நுனியில் யோகிகள் கூறுகின்ற குண்டலினிக் கமலம் உள்ளது. அது முக்கோண வடிவமாக இருப்பதாகவும், அதில் குண்டலினி சக்தி சுருண்டு இருப்பதாகவும் யோகிகள் உருவகமாகக் கூறுவார்கள். குண்டலினி விழித்து எழும் போது, அது கழுமுனை வழியாக ஒரு பாதையை உருவாக்கி மேலே செல்ல முயல்கிறது. அது படிப்படியாக மேலெழும்போது மனத்தின் திரைகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகுவது போலாகின்றன. பல்வேறு காட்சிகளும் அற்புதமான ஆற்றல்களும் யோகிக்குக் கைகூடுகின்றன குண்டலினி சக்தி மூளையை அடையும் போது யோகி, உடல் மற்றும் மனத்திலிருந்து முற்றிலுமாகப் பிரிந்தவனாகிறான்; ஆன்மா, சுதந்திரமாக இருப்பதை உணர்கிறது. முதுகுத்தண்டு ஓர் அதிசயமான வகையில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். எட்டு என்ற எண்ணை சமதள நிலையில் எழுதினால் (8) அதில் இரண்டு பகுதிகள் உள்ளன, அவை நடுவில் இணைந்துள்ளன, இத்தகைய எட்டுகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்கொண்டே போனால், அதன் சேர்க்கை முதுகுத்தண்டு போல் தோன்றும். இடது பக்கம்இடை, வலதுபக்கம் பிங்கலை. முதுகுத்தண்டின் ஊடே செல்லும் நாளம் சுழுமுனை. முதுகுத்தண்டின் கீழ்ப் பாகம் முடிகின்ற இடத்தில் எலும்பில் ஒரு மிக நுண்ணிய நரம்பின் வழியாகவும் சுழுமுனை நாடி செல்கிறது; அது மிகமிக நுட்பமானது. சுழுமுனையின் கீழ்நுனியின் துளை மூடியிருக்கும். அது மூலக்கிரந்தி என்ற நரம்பு மண்டலத்திற்கு அருகில் உள்ளது. தற்கால உடலியல் வல்லுனர்கள் அது முக்கோண வடிவத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். முதுகுத் தண்டில் உள்ள வெவ்வேறு நரம்பு மண்டல மையங்களை, யோகி கூறும் வெவ்வேறு தாமரை களோடு ஒப்பிடலாம். அடியிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி மேலே மூளையிலுள்ள ஆயிரம் இதழ்த் தாமரையாகிய சகஸ்ரா ரத்தில் முடிவு பெறும் முதுகுத்தணடில் பல சக்கரங்களாகிய மையங்களை யோகி உணர்கிறான். இந்த நரம்பு மண்டல மையங்கள் தாமரைகளைக் குறிக்கின்றன என்று கொண்டால், யோகியின் கருத்தை நவீன உடலியல் வல்லுனர்களின் மொழியில் எளிதில் புரிந்துகொள்ளலாம். இந்த நரம்புகளில் இருவகைச் செயல்கள் நடைபெறுவது நமக்குத் தெரியும். ஒன்று உள்முகமாகச் செல்வது, மற்றொன்று வெளிமுகமாகச் செல்வது; ஒன்று ஞானேந்திரியத்தின் வழிப்பட்டது; மற்றது கர்மேந்திரியத்தின் வழிப்பட்டது; ஒன்று மையத்தை நோக்கிச் செல்வது, மற்றது மையத்திலிருந்து விலகிச் செல்வது; ஒன்று உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச் செல்வது. மற்றது மூளையிலிருந்து வெளி உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வது. இறுதியில் இந்த அதிர்வுகளெல்லாம் மூளையோடு இணைக்கப்பட்டுள்ளன. இனி வரும் விளக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு முன் பல உண்மைகளை நினைவுகூர வேண்டியுள்ளது. முதுகுத்தண்டு, மூளையிலல் ஒருவகைக் குமிழ் வடிவம் கொண்ட முகுளம் என்ற பகுதியில் முடிவடைகிறது. முகுளம் மூளையோடு ஒட்டிக்கொண்டு இல்லை, மூளையிலுள்ள ஒரு திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தலையில் ஏதாவது அடிபட்டால், அந்த வேகம் திரவத்தால் சமன் செய்யப்பட்டுவிடும்; முகுளத்தைத் தாக்காது. இது நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை. அடுத்ததாக எல்லா மையங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மூன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவை மூலாதாரம் (அடியிலிருப்பது), சகஸ்ராரம் (மூளையிலுள்ள ஆயிரம் இதழ்த் தாமரை), மணிபூரகம் (தொப்புளிலுள்ள தாமரை). அடுத்து இயற்பியலிலிருந்து ஓர் உண்மையை எடுத்துக் கொள்வோம். மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சக்திகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் மின்சாரம் என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்ததெல்லாம் அது ஒரு வகையான இயக்கம் என்பது மட்டுமே. பிரபஞ்சத்தில் வேறு பலவித இயக்கங்களும் உள்ளன. அவற்றிற்கும் மின்சாரத்திற்கும் என்ன வேறுபாடு? இந்த மேஜை எதனால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த மூலக்கூறுகள் எல்லாம் வெவ்வேறு திசைகளில் இயங்குகின்றன. அவற்றை ஒரே திசையில் இயங்கச் செய்ய வேண்டுமானால் அது மின்சாரத்தின் வழியாகத்தான் முடியும். மின்னியக்கம் ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளை ஒரே திசையில் இயங்கச் செய்கிறது. ஓர் அறையிலுள்ள எல்லாக் காற்று மூலக்கூறுகளையும் ஒரே திசையில் இயங்கச் செய்தால், அந்த அறை ஒரு பெரிய மின்சாரக் கொள்கலனாகிவிடும். அடுத்து, உடலியலிலிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொள்வோம். சுவாச உறுப்புக்களை ஒழுங்குப்படுத்தும் மையம், நரம்பு மண்டலம் முழுவதையுமே ஒருவிதமாக அடக்கியாளும் ஆற்றல் பெற்றுள்ளது. சுவாசப் பயிற்சி ஏன் அவசியம் என்பதை இப்போது பார்ப்போம். முதலாவதாக, லயத்துடன் கூடிய சுவாசத்தினால் உடலிலுள்ள மூலக்கூறுகள் எல்லாம் ஒரே திசையில் இயங்கத் தலைப்படுகின்றன. மனம் சுயேச்சையாக மாறும்போது நாடி இயக்கங்கள் மின்சக்தியைப் போன்றதோர் இயக்கமாக மாறுகின்றன. மின்னோட்டத்தின் கீழ், நரம்புகளின் இருமுனைப் பகுதிகளிலும் எதிர் சக்திகள் உருவாகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்கல்பம், நரம்பு இயக்கமாக மாறும்போது அது மின்சக்தி போன்ற ஒன்றாக மாறுகிறது என்பதையே இது காட்டுகிறது. உடலின் இயக்கங்கள் எல்லாமே பரிபூரண லயத்துடன் செயல்படும்போது உடலே சங்கல்பத்தின் ஒரு மாபெரும் கொள்கலன்போல் ஆகிவிடுகிறது. அபரிமிதமான இந்தச் சங்கல்பமே யோகி வேண்டுவது. இது சுவாசப் பயிற்சியின் ஓர் உடலியல் விளக்கம். உடலில் ஒரு லயத்துடன் கூடிய செயல்பாட்டை உருவாக்க இது தலைப்படுகிறது; சுவாச மையம் வழியாக, உடலின் வேறு மையங்களைக் கட்டுப்படுத்த நமக்கு உதவுகிறது. சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வதே. காண்பது கற்பனை செய்வது, கனவு காண்பது எல்லாவற்றையுமே ஆகாசத்தில் தான் செய்ய வேண்டும். சாதாரண வெளியாகிய இது மஹாகாசம் அல்லது பூதாகாசம். ஒரு யோகி மற்றவர்களின் எண்ணங்களை அறியும்போது, புலன் கடந்தவற்றை உணரும்போது அவற்றை மற்றொருவிதமான வெளியில் அதாவது சித்தாகாசத்தில், மனவெளியில் அதாவது சித்தாகசத்தில், மனவெளியில் காண்கிறேன். காட்சியானது தனக்கு விஷயமாகிய பொருளற்றிருக்கும் போது, ஆன்மா தனது சொந்த இயல்பில் பிரகாசிக்கும் போது அது சிதாகாசம் அல்லது அறிவுவெளி என்று அழைக்கப்படுகிறது. குண்டலினி விழித்தெழுந்து சுழுமுனை நாடியில் நுழையும்போது காட்சிகள் எல்லாம் மனவெளியில் உண்டாகின்றன. மூளையில் விரிவதான சுழுமுனையின் மறுமுனையை அது அடையும்போது அறிவு வெளியில் உருவமற்ற காட்சி உண்டாகிறது. இங்கே மின்சாரத்தின் உவமையை எடுத்துக் கொள்வோம். மனிதன் கம்பி மூலமாகத்தான் மின்சாரத்தை அனுப்ப முடியும். ஆனால் தனது பிரம்மாண்டமான சக்திகளை அனுப்ப இயற்கைக்குக் கம்பிகள் எதுவும் தேவைப்படவில்லை. எனவே கம்பி அவசியமில்லை. கம்பியின்றிச் செயல்பட முடியாத காரணம்தான், அதை உபயோகிக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்துகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதேபோல், உடலின் உணர்ச்சிகள், இயக்கங்கள் எல்லாமே நரம்புகளாகிய கம்பிகள் மூலமாக மூளைக்கு அனுப்பப்படுகின்றன, மூளையிலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றன. முதுகுத் தண்டிலுள்ள ஞானேந்திரிய மற்றும் கர்மேந்திரிய நரம்புத் திரள் தான் யோகிகள் கூறும் இடை, பிங்கலை என்பவை. உணர்ச்சியும், அவற்றிற்குப் பதில் செய்தியும் இவை வழியாகவே செல்கின்றன. கம்பி இல்லாமல் மனம் ஏன் செய்திகளை அனுப்பக் கூடாது? கம்பியின்றி செய்திகள் ஏன் மனத்தை அடையக் கூடாது? இயற்கையில் இது நிகழ்வதை நாம் காண்கிறோம். இதை நீங்கள் செய்ய முடிந்தால், நீங்கள் ஜடப் பொருட்களின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் என்கிறான் யோகி. இதை எப்படி செய்வது? தண்டிலுள்ள சுழுமுனை நாளம் வழியாகச் சக்தியைச் செலுத்த முடியுமானால் காரியம் கைகூடி விட்டது. மனம்தான் இந்த நரம்பு மண்டலப் பின்னலை உண்டாக்கியுள்ளது. மனமே அதை அறுக்க வேண்டும். அதன்பின் செயல்பட கம்பி தேவைப்படாது. அப்போதுதான் எல்லா அறிவும் நமக்கு கிடைக்கும். உடலாகிய தளையே அதன்பின் இருக்காது. அதனால்தான் நாம் சுழுழுனை மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். மனப் பிரவாகத்தை, நரம்புகளாகிய கம்பியின் உதவியின்றி இந்த நாளம் வழியாகச் செலுத்த முடியுமானால் பிரச்சனை தீர்ந்தது, இதை நாம் சாதிக்கவும் முடியும் என்கிறான் யோகி. சாதாரண மனிதர்களிடம் இந்தச் சுழுமுனையின் கீழ்முனை மூடி இருக்கிறது; இதன் வழியாக எந்தச் செயல்பாடும் நடைபெறுவதில்லை. அதைத் திறந்து, அதன் மூலமாக நரம்பு ஓட்டம் செல்வதற்கான ஒரு பயிற்சியைக் கூறுகிறான் யோகி. ஓர் உணர்ச்சி, ஒரு மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது எதிர்விளைவு உண்டாகிறது. தானியங்கி மையங்களில் இந்த எதிர்விளைவைத் தொடர்ந்து அசைவு உண்டாகிறது. உணர்வுள்ள மையங்களில் முதலில் காட்சியும், பிறகு அசைவும் உண்டாகிறது. பிரத்தியட்ச அறிவு எல்லாமே வெளியிலிருந்து வரும் செயலுக்கு எதிர்விளைவுதான். ஆனால் கனவில் எப்படிக் காட்சிகள் உண்டாகின்றன! புறத்திலிருந்து வரும் செயல்கள் எதுவும் அங்கு இல்லையே. அப்படியானால் ஏற்கனவே உள்ளே வந்தவை எங்கேயோ சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, நான் ஒரு நகரத்தைப் பார்க்கிறேன். நகரத்திலுள்ள பொருட்கள் உண்டாக்கிய உணர்ச்சியின் எதிர்விளைவாக எழுந்ததுதான் நான் காணும் காட்சி அதாவது புறப்பொருட்கள் உணர்ச்சி நரம்புகளில் ஓர் இயக்கத்தை உண்டாக்குகின்றன. அதனை நரம்புகள் உள்ளே எடுத்துச் சென்று மூளையின் மூலக் கூறுகளில் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை உருவாக்குகிறது. இப்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகும் நான் இந்த நகரத்தை நினைவுகூர முடியும். இந்த நினைவும் முன்பு கூறப்பட்டதுபோல்தான். ஆனால் அதன் வேகம் சற்று குறைவு, ஆனால் அவ்வளவுதான். அப்படி வேகம் குறைந்ததானாலும் மூளையில் சம அதிர்வுகளை உண்டாக்கிய செயல் எங்கிருந்து வந்தது? கட்டாயமாக புறபொருள்- உணர்ச்சி நரம்புத் தொடர்பால் அல்ல. அப்படியானால் இந்த உணர்ச்சிகள் எங்கேயோ சுருட்டி வைக்கப் பட்டிருக்க வேண்டும். இவற்றின் செயலினால், வேகம் குறைந்த எதிர்ச் செயல் உண்டாகிறது. அதைத்தான் கனவுக்காட்சி என்று கூறுகிறோம். இந்த உணர்ச்சிகள் சேமித்து வைக்கப்படுவதுபோல் வைக்கப்பட்டுள்ள இடமே மூலாதாரம். அங்கு சுருண்டு கிடக்கும் சக்தியே குண்டலினி. செயல்படும் சக்தியும் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நாம் கொள்வது சரியே. ஏனெனில் வெகுநேரம் படித்த பிறகு அல்லது தியானம் செய்த பிறகு உடலில் மூலாதாரப்பகுதி வெப்பமடைவதை உணரலாம். சுருண்டு கிடக்கின்ற குண்டலினி சக்தியை விழித்தெழச் செய்து, செயல் நிலைக்குக் கொண்டுவந்து சுழுமுனை நாளத்தின் வழியே உணர்வுபூர்வமாகச் செலுத்த வேண்டும். அது ஒவ்வொரு மையத்தினூடே சென்று செயல்படும்போதும் ஓர் அளப்பரிய எதிர்ச் செயல் உண்டாக்கிறது. சிறிதளவு சக்தி நரம்பு வழியே சென்று சக்கரங்களில் எதிரியக்கம் உண்டாகும் போதுதான் கனவு அல்லது கற்பனை உண்டாகும். ஆனால் சேமித்து வைக்கப்பட்ட சக்தி வெகுநேர அகதியானத்தின் மூலம் சுழுமுனை நாளம் வழியே அதிக அளவில் சென்று சக்கரங்களைத் தாக்கும்போது உண்டாகும் எதிரியக்கம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அது கனவு, கற்பனை, இவற்றைவிட மிகவும் சிறந்த எதிரியக்கம்; பொறிகளின் உணர்வைவிட மிகவும் தீவிரமானது. இது புலன்கடந்த உணர்வாகும். அது எல்லா உணர்ச்சிகளுக்கும் தலைமை நிலையமாக இருக்கும் மூளையை அடையும்போது, மூளை முழுவதும் எதிரியங்குவது போலாகிறது. அதனால் அனுபூதிப் பேரொளி உண்டாகிறது; ஆன்ம தரிசனம் கிடைக்கிறது. குண்டலினி சக்தி மேலே ஒவ்வொரு சக்கரத்தின் வழியே செல்லும்போதும்,, மனத்தின் ஒவ்வோர் அடுக்குகள் திறக்கப்பட்டது போலாகிறது. அப்போது பிரபஞ்சத்தை அதன் நுட்பமான காரண நிலையில் யோகி காண்கிறான். அப்போது மட்டுமே பிரபஞ்சத்தின் காரணங்களை, உணர்ச்சி மற்றும் எதிர்ச்செயல் என்ற இருநிலைகளிலும் அமைந்துள்ள காரணங்களை அவற்றின் உண்மை நிலையில் அவன் அறிந்துகொள்கிறான். அதனால் எல்லா அறிவும் அவனுக்குக் கிடைக்கிறது. காரணங்களை அறிவதால் காரியங்கள் அதாவது விளைவுகளைப் பற்றிய அறிவும் அவனுக்குப் புலப்படுகிறது. தெய்வீக ஞானத்தை, உணர்வுகடந்த நிலையை, ஆன்ம ஞானத்தை, அடைவதற்கு ஒரே வழி இவ்வாறு குண்டலினியை எழுப்புவதே. பகவானிடம் தூய பக்தி, நிறைநிலை எய்திய மகான்களின் அருள், தத்துவ ஞானியின் விவேக வலிமை என்று பல வழிகளில் அது விழித்தெழலாம். அனுமாஷ்யமானது என்று பொதுவாகக் கூறப்படுகின்ற சக்தியோ அறிவோ எங்காவது காணப்படுமானால் அங்குச் சிறிது குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாகச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய சம்பவங்களுள் பெரும்பான்மையிலும் சாதகர்கள் ஏதேச்சையாக ஏதோ சில சாதனைகளைச் செய்து அதன் விளைவாக ஒருசிறிது குண்டலினி சக்தியைச் சுழுமுனை நாடியில் செலுத்தியிருக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ எல்லா வழிபாடுகளும் இந்த இடத்திற்கே அழைத்துச் செல்கின்றன. தனது பிரார்த்தனைக்குப் பதில் இறைவனிடமிருந்து வருகிறதென்று கருதுபவன், தனது சொந்த இயல்பிலிருந்தே அந்தப் பதில் வந்தது என்பதை, தன்னிடமே அடங்கியுள்ள எல்லையற்ற சக்தியின் ஒரு சிறு பகுதியைப் பிரார்த்தனைக்குரிய மனநிலையின் மூலம் எழுப்புவதில் தான் வெற்றியடைந்திருக்கிறோம் என்பதை அறிவதில்லை. பயத்தாலும் கவலையாலும் மனிதன் அறிவிழந்து வெவ்வேற பெயரிட்டு வழிபடுவது உண்மையில் ஒவ்வொரு வரிடத்தும் சுருண்டுக் கிடக்கின்ற, நிரந்தர ஆனந்தத்தின் அன்னையாகிய அந்தச் சக்தியையே என்று யோகி முழுங்குகிறான். அவளை அணுகுவது எப்படி என்பது மட்டும் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான். மதத்தின் விஞ்ஞானமே ராஜயோகம்; அதாவது எல்லா வழிபாடுகள், எல்லா பிராத்தனைகள், வடிவங்கள் சடங்குகள், அற்புதச் செயல்கள் என்று எல்லாவற்றினுடையவும் பகுத்தறிவுத் தத்துவமே ராஜயோகம்.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.