²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
இந்தியாவின் எதிர்காலம் 14பிப்ரவரி 1897 அன்று மாலை ஹார்ம்ஸ்டன் சர்க்கஸ் வளாகத்தில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. உலகில் வேறெந்த நாட்டையும் அறிவு என்பது தன் இருப்பிடமாகக் கொள்ளுமுன் குடிபுகுந்த தாயகம் நமது புராதன கடல்போல் பொங்கிப் புரண்டோடுகின்ற பேராறுகளும், அடுக்கடுக்காய் உயர்ந்தெழுந்த சிகரங்கள்மீது பனிமுடி தரித்து ஏதோ வானுலக ரகசியங்களைஎட்டிப்பார்க்க விழைவது போல் விண்முட்ட நிற்கின்ற நிலையான இமயமலைத் தொடர்களும் அதன் ஆன்மீக மாட்சிமையைப் புறத்தில் காட்டுவது போல் உள்ளது இதுவரை வாழ்ந்தவர்களுள் மகத்தான ரிஷிகளின் திருப்பாதங்கள் இதோ இந்த பாரத மண்ணில்தான் நடைபோட்டன. மனிதனின் இயல்பு பற்றியும் அகவுலகம் பற்றியும் இங்கு தான் முதலில் ஆராய்ச்சிகள் தொடங்கின ஆன்மாவின் அமரத்துவம் அனைத்தையும் ஆட்சி புரிகின்ற கடவுள் இயற்கையிலும் மனிதனிலும் ஊடுருவி நிற்கின்ற இணைவன் போன்ற கோட்பாடுகள் இங்குதான் முதலில் எழுந்தன. இங்குதான் மதம் மற்றும் தத்துவத்திலுள்ள மிகவுயர்ந்த லட்சியங்கள் உச்ச நிலைகளை எட்டின இந்த நாட்டிலிருந்துதான் ஆன்மீகமும் தத்துவமும் அலைபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்துசென்று உலகை ஆக்கிரமித்தது. நலிந்து கொண்டிருக்கின்ற மனித குலத்திற்கு உயிரையும் உத்வேகத்தையும் ஊட்டுவதற்கு இந்தப் பூமியில் இருந்துதான் மறுபடியும் அலைகள் புறப்பட்டுச் சென்றாக வேண்டும் நூற்றுக்கணக்கான அன்னியர் படையெடுப்புகளும் நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களின் ஏற்படுத்திய அதிர்ச்சிகளை ஏற்றும் நிலைகுலையாமல் நிற்பதும் அதே இந்தியா தான் என்றும் குன்றாக சக்தியுடன் அழியாத வாழ்வுடன் உலகின் எந்தப் பாறையை விடவும் உறுதியாக இருப்பது அதே நாடுதான். ஆன்மாவைப்போல் நமது நாடும் தோற்றம் முடிவும் இல்லாததாக நித்தியமானதாக உள்ளது. இத்தகைய நாட்டின் அருமைக் குழந்தைகள் நாம். இந்தியாவின் குழந்தைகளே சில செயல்முறை விஷயங்களைப்பற்றிப் பேசுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். கடந்த காலப் பெருமைகளை உங்களுக்கு நான் நினைவுபடுத்துவதன் காரணம் இதுதான் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது சீரழிவிற்கே வழிவகுக்கும் அது வெறும் வீண் வேலை எனவே நாம் எதிர்காலத்தைப்பற்றி எண்ண வேண்டும் என்று பலர் கூறக் கேட்டதுண்டு உண்மைதான் ஆனால் கடந்த காலத்திலிருந்து தான் எதிர்காலம் உருவாகிறது. எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள் பின்னால் உள்ள வற்றாத அந்த ஊற்றுக்களிலிருந்து நன்றாக பருகுங்கள். அதன்பின்னர் முன்னே பாருங்கள் .பீடுநடை போட்டுச் செல்லுங்கள்முன்பிருந்ததைவிட ஒளிமயமானதாக சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள் நம் முன்னோர்கள் மகத்தானவர்களாக இருந்தார்கள். முதலில் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் , நாம் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம் நமது ரத்தக் குழாய்களில் ஓடுகின்ற ரத்தம் எது என்பதை அறிய வேண்டும் அந்த ரத்தத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். பழங்காலத்தில் நமது முன்னோர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையிலிருந்தும் பழம் பெருமையைப் பற்றிய உணர்விலிருந்தும் உணர்விலிருந்தும் முன்னை விடச் சிறப்பான தொரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். வீழ்ச்சியும் அழிவும் உள்ளகாலகட்டங்களும் வரலாற்றில் இருக்கவே செய்தன, நான் அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை ; அவை நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமும்தான் . அத்தகைய காலகட்டங்களும் தேவையாகவே இருந்தன. ஒரு பெரிய மரத்தில் அழகிய பழம் ஒன்று பழுக்கிறது அந்தப்பழம் பூமியில் வீழ்ந்து கெட்டு அழுகுகிறது. அந்த அழுகலிலிருந்துதான் எதிர்கால மரத்திற்கான முளை வருகிறது ஒருவேளை இந்த மரம் முதல் மரத்தைவிடப் பெரிதாகக் கூட இருக்கலாம். எனவே நாம் கடந்து வந்த வீழ்ச்சியும் அழிவும் நிறைந்த கால கட்டமும் மிகவும் தேவையே இந்த வீழ்ச்சியிலிருந்து தான் எதிர்கால இந்தியா பிறகும். அது முளைவிட்டு கொண்டிருக்கிறது, அதன் முதல் தளிர்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன, ஒரு மாபெரும் மரமான ஊர்த்வ மூலம் வளரத் தொடங்கி விட்டது. அதைப்பற்றித் தான் நான் இன்று உங்களிடம் பேச உள்ளேன். இந்தியாவில் பிரச்சினைகள் மற்ற எந்த நாட்டுப் பிரச்சினைகளைவிட மிகவும் சிக்கலானது முக்கியமானதும் ஆகும். இனம் மதம்மொழி அரசாங்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாட்டை உருவாக்குகின்ற உலகத்தின் ஒவ்வோர் இனத்தையும் இந்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் அந்த நாடுகளை உருவாக்கிய அடிப்படைகள் இந்த நாட்டை உருவாக்கியவற்றைவிட மிகவும் குறைவாகவே இருக்கும் ஆரியர், திராவிடர், தார்த்தர் துருக்கியர், மொகலாயர், ஐரோப்பியர் என்று உலகத்தில் உள்ள எல்லா இனங்களின் ரத்தமும் இங்கே இந்தப் பூமியில் கலந்திருப்பது தோன்றுகிறது மொழிகளில் கூட இங்கே அற்புதமான கலப்பு உள்ளது. பழக்க வழக்கங்களைப் பொறுத்த வரை ஐரோப்பியர்களுக்கும் கீழை இனங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைவிட அதிகமாக உள்ளன. நமது பொதுவான அடிப்படை நமது புனிதமான பாரம்பரியம் நமது மதம் தான். அது ஒன்றுதான் நமக்கு பொதுவாக உள்ள அடித்தளம். அதன்மீதுதான் கட்டிடத்தை எழுப்ப வேண்டும் ஐரோப்பாவில் அரசியல் கொள்கைகள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கின்ற ஆசியாவில் மத லட்சியங்கள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன. எனவே எதிர் கால இந்தியாவிற்கு நிறைவேற்றப்பட வேண்டிய முதல் நிபந்தனை மத ஒற்றுமை. இந்த நாடு முழுவதும் ஒரேயொரு மதம் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். ஒரு மதம் என்பதன் மூலம் நான் எதைக் குறிப்பிடுகிறேன்? கிறிஸ்தவர்களோ முகமதியர்களோ பௌத்தர்களோ கருதுகின்ற பொருளிலுள்ள ஒரு மதத்தை அல்ல. நம்மிடையே உள்ள மதப் பிரிவுகள் பல்வேறு விதமான முடிவுகளை கொண்டிருக்கின்றன, வேறுபட்ட உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. எனினும் அவை எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில விஷயங்கள் உள்ளன. இந்தப் பொது விஷயங்களாகிய எல்லைகுள்நமது மதம் அற்புதமான வேறுபாடுகளை அனுமதிக்கிறது ; நம் சொந்த வாழ்கையைச் சிந்திக்கவும் நடத்தவும் அளவற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. நமது மதத்தின் உயிரோட்டத்தை அளிப்பதான இந்தப் பொதுக் கருத்துக்களை வெளியே கொண்டுவர வேண்டும், ஆண் பெண் குழந்தை என்று இந்த நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் அவற்றை அறிய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் புரிந்துகொண்டதைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் இதுவே நாம் வேண்டுவது, இங்குள்ள நம் அனைவருக்கும், குறைந்த பட்சம் நம்முள் சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்காவது இது தெரியும். இதுதான் முதல்படி எனவே அதனை முதலில் செய்துமுடிக்க வேண்டும். ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் இனப் பிரச்சினைகள் மொழிப் பிரச்சினைகள் சமுதாயப் பிரச்சினைகள் தேசியப் பிரச்சினைகள் எல்லாமே எவ்வாறு மதத்தின் ஒருங்கிணைக்கின்ற சக்தியின் முன்னால் மறைந்து விடுகின்றன என்பதை நாம் காண்கிறோம். இந்தியா மனத்தைப் பொறுத்தவரை மத லட்சியங்களை விட உயர்ந்தது எதுவும் இல்லை அதுவே இந்திய வாழ்வின் அடிப்படை அம்சம், அதன் மூலம்தான் மிகவும் குறைவான எதிர்ப்புக்களோடு நாம் வேலை செய்ய முடியும் மத லட்சியமே மிகவுயர்ந்த லட்சியம் என்பது உண்மை மட்டுமல்ல , இந்தியாவைப் பொறுத்தவைரையில் செயல் புரிவதற்கான ஒரே வழி இதுதான். இதை பலப்படுத்திக் கொள்ளாமல் மற்ற எந்த வழியிலாவது வேலை செய்து பாருங்கள் முடிவு விபரீதமாகவே இருக்கும். எனவே எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்குகான முதல் முயற்சி, யுகயுகங்களாக உறுதியாக இருக்கின்ற அந்தப் பாறையைக் கடைந்து பெற வேண்டிய முதல் படி மத ஒற்றுமை ஆகும் இந்துக்களாகிய நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று உண்டு துவைதிகள் விசிஷ்டாத்வைதிகள் அத்வைதிகள் ஆகட்டும், இல்லை மற்ற பிரிவுகளான சைவர்கள், வைணவர்கள், பாசு பதர்கள் என்று நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் அடிப்படையான சில கருத்துக்கள் உள்ளன. நமது நன்மைக்காகவும் நம் இனத்தின் நன்மைக்காகவும் நம்மிடைய உள்ள சின்னஞ்சிறு சச்சரவுகளையும் வேற்றுமைகளையும் விடுவதற்கான வேளை வந்து விட்டது இந்தச் சண்டைகள் எல்லாம் முற்றிலும் தவறானவை என்பதில் உறுதி கொள்ளுங்கள் அவை நம் சாஸ்திரங்களால் கண்டிக்கப்பட்டிருக்கின்றன, நம் முன்னோர்களால் தடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த மாமனிதர்களை நாம் நமது முன்னோர்கள் என்று உரிமை கொண்டாடுகிறோமோ, யாருடைய ரத்தம் நம் ரத்தக் குழாய்களில் ஓடுகிறதோ , அவர்கள் தங்கள் குழந்தைகளான நாம் சிறுசிறு வேற்றுமைகளுக்காக அடித்துக்கொள்வதைக் கண்டு நம்மை வெறுப்புடன் பார்க்கின்றனர். இந்தச் சண்டைகளை விட்டுவிட்டால் போதும், மற்ற எல்லா முன்னேற்றங்களும் வரும். ரத்தம் புஷ்டியாகவும் தூய்மையாகவும் இருக்குமானால் நோய்க் கிருமிகள் எதுவும் அந்த உடம்பில் வாழ முடியாது. நமது ஜீவ ரத்தம் ஆன்மீகம் அது தெளிவாக ஓடு மானால், புஷ்டியாக தூய்மையாக உத்வேகத்துடன் ஓடுமானால் எல்லாம் சரியாக இருக்கும். அந்த ரத்தம் தூய்மையாக இருக்குமானால் உத்வேகத்துடன் ஓடுமானால் எல்லாம் சரியாக இருக்குமானால் அரசியல் சமுதாயம், மற்ற பொருளாதாரக் குறைபாடுகள் எல்லாம் சீர் செய்யப்பட்டுவிடும் ஏன் நாட்டின் வறுமைகூடத் தீர்க்கப்பட்டுவிடும் . ஏனென்றால் நோய்க்கிருமி வெளியே எறியப்பட்டுவிடுமானால் , வேறெதுவும் ரத்தத்தில் கலக்க முடியாது. தற்கால மருத்துவத்திலிருந்து ஓர் உவமையை எடுத்துக் கொள்வோம் நோய் உண்டாக இரண்டு காரணங்கள் இருந்தாக வேண்டும் : ஒன்று வெளியிலுள்ள நச்சுக் கிருமி , மற்றொன்று உடம்பின் நிலைமை. உடம்பு அந்தக் கிருமிகளை உள்ளே அனுமதிக்கும் நிலையில் இருக்காதவரை உடம்பின் எதிர்க்கும் சக்தி குறைவாகி அதனால் அந்தக் கிருமிகள் உடம்பினுள் நுழைந்து செழித்துப் பெருகுகின்ற ஒரு நிலை உருவாகாதவரை எந்தக் கிருமிக்கும் உடம்பினுள் ஒரு நோயை உண்டாக்குகின்ற சக்தி இல்லைஉண்மையில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கிருமிகள் உடம்பைப் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன , ஆனால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்வரை அவற்றைப் பற்றிய உணர்வே ஏற்படுவதில்லை. உடம்பு பலவீனமாகும் போது மட்டுமே இந்தக் கிருமிகள் உடம்பைக் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன. தேசிய உடல் பலவீனமாக இருக்கும் போது அரசியல் சமுதாயம் கல்வி அறிவு போன்ற எல்லா நிலைகளிலும் எல்லா வகையான நோய்க் கிருமிகளும் ஆக்கிரமித்து நோய்களை உண்டாக்குகின்றன. இதைக் குணமாக்க வேண்டுமானால் நோயின் வேருக்கே செல்ல வேண்டும் ரத்தத்திலுள்ள எல்லா அசுத்தங்களையும் நீக்க வேண்டும் நாம் செய்ய வேண்டுவதெல்லாம் மனிதனைப் பலப்படுத்தும், ரத்தத்தைத் தூய்மையாக்குவதும் வெளியேயிருந்து வருகின்ற விஷங்களை எதிர்த்து அவற்றை வெளியில் தள்ளுவல்லதாக உடம்பை வலமைபெறச் செய்வதும்தான். நமது பலமும் நமது உத்வேகமும் மட்டுமின்றி நம் தேசிய வாழ்வும் மதத்தில்தான் இருக்கிறது என்பதைப் பார்த்தோம் இப்படி நாட்டின் ஆதாரமே மதத்தில் இருப்பது சரியா தவறா? காலப்போக்கில் அதனால் நன்மை விளையுமா விளையாதா என்பதைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை ஆனால் நல்ல தற்கோ கெட்டதற்கோ அது அங்கே இருக்கிறது. நீங்கள் அதிலிருந்து விலகி ஓட முடியாது .இன்றைக்கும் என்றென்றைக்குமாக நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள். எனக்கு நமது மதத்தில் உள்ளது போன்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றாலும் நீங்கள் அதனுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் அதனுடன் நீங்கள் கட்டப்பட்டு இருக்கிறீர்கள், அதை விட்டுவிலகினால் தூள்தூளாகி விடுவீர்கள் அதுதான் நம் இனத்தின் ஜீவாதாரம் அதை நாம் பலப்படுத்த வேண்டும். அந்த மதம் என்பதை மிகுந்த அக்கறையுடன் பேணிக்காத்தால் தான் வேறு எல்லாவற்றையுமே அதற்காகத் தியாகம் செய்ததால்தான் பல நூற்றாண்டுகளாக வந்தஅதிர்ச்சிகளை எல்லாம் உங்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது. உங்கள் முன்னோர் அதைக் காப்பதற்கு எல்லா துன்பங்களையும் ஏன் சாவையும் கூடத் தைரியமாகச் சந்தித்தார்கள். அன்னியர் படைகள் நமது கோயில்கள் ஒவ்வொன்றையும் தரைமட்டமாக்கின. ஆனால் அந்த அலை ஓய்ந்ததுமே கோயில்களும் கோபுரங்களும் மீண்டும் எழுந்தன. தென்னிந்தியாவின் இத்தகைய சில புராதனமான கோயில்களும், குஜராத்தின் சோமநாதர் கோயில் போன்றவையும் எத்தனையெத்தனையோ விஷயங்களை உங்களுக்கு உணர்த்த முடியும் ; உங்கள் இனத்தின் சரித்திரத்தைப்பற்றி அடுக்கடுக்கான நூல்கள்கூறுவதை விட ஆழ்ந்த விஷயங்களைத் தர முடியும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்கள் இந்தக் கோயில்களில் உள்ளன நூற்றுக்கணக்கான முறையும் அவை புதுப்பிக்கப்பட்டன. தொடர்ந்து அவை அழிக்கப்பட்டன. அந்த அழிவிலிருந்து மீண்டும் முன்னைவிடப் புதுமையோடும் வலிமையோடும் எழுந்து நின்றுள்ளன அந்தக் கோயில்கள் இதுதான் நம் தேசிய சிந்தனை தேசிய வாழ்க்கை நீரோட்டம் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள், அது உங்களைப் பெருமைக்கு அழைத்துச் செல்லும். அதை விடுங்கள், நீங்கள் அழிந்து விடுவீர்கள், சாவுதான் அதன் ஒரே விளைவு. வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு நீங்கள் விலகுகின்ற அந்தக் கணமே அழிவு உங்களைப் பற்றிக் கொள்ளும். மற்ற எதுவும் தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை : அதாவது அரசியலோ சமூக முன்னேற்றங்களோ தேவையற்றவை என்பதல்ல நான் சொன்னதன் பொருள். நான் சொல்வதெல்லாம், மதம் முதன்மையானது, மற்றவையெல்லாம், அதற்கு அடுத்தபடி என்பதுதான். இந்திய மனம் மற்ற எதைவிடவும் மதத்தைச் சார்ந்தது. எனவே அதை வலுப்படுத்தியாக வேண்டும் அதை எப்படிச் செய்வது? என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன் இந்தக் கருத்துக்கள் நெடுங்காலமாக நான் சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்படும் முன்னரே என் மனத்தில் இருந்தன. நான் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவுக்கும் சென்ற தெல்லாம் இந்தக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவே சர்வசமயப் பேரவையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ எனக்கு அக்கறையி ல்லை அது ஒரு வாய்ப்பாக இருந்தது, அவ்வளவுதான். ஆனால் உண்மையில் எனது இந்தக் கருத்துக்களே என்னை உலகம் முழுவதும் வலம்வரச் செய்தன. என் எண்ணம் இது : நமது நூல்களில் புதைந்து கிடக்கின்ற, மடங்களிலும் காடுகளிலும மறைந்தே விட்டதுபோல் ஏதோ சிலரின் சொத்தாக இருக்கின்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை முதலில் வெளியே கொண்டுவர வேண்டும். அந்த ஏதோ சிலரின் கைகளிலிருந்து மட்டுமல்ல அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, அணுகமுடியாத கவசம் போலுள்ள அந்த மொழியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வளமை பெற்று வந்துள்ள சம்ஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கருத்துக்களைப் பிரபலமாக்க வேண்டும் இந்தக் கருத்துக்களை வெளியே கொண்டுவர நான் விரும்புகிறேன். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் ஆனாலும் சரி, தெரியாதவர்கள் ஆனாலும் சரி, இந்தக் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுச் சொத்தாக வேண்டும். பெருமை மிக்க நமது சம்ஸ்கிருத மொழி இருக்கிறதே, அதுதான் வழித்தடையாக இருக்கிறது. இயலுமானால் நம் நாட்டிலுள்ள அனைவரும் சம்ஸ்கிருத வல்லுனராக வேண்டும் அதுவரை இந்தக் தடையை நீக்க முடியாது. சம்ஸ்கிருத மொழியை என் ஆயுள் முழுவதும் படித்து வருகிறேன். என்றாலும் ஒவ்வொரு புதிய நூலும் புரிந்துகொள்ள முடியாததாகவே எனக்கு உள்ளது. அவ்வளவு கடினமான மொழி அது. இப்படி இருக்கும்போது அந்த மொழியை முழுக்கப் படிப்பதற்கு நேரமில்லாத மக்களுக்கு இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும் ? எனவே இந்தக் கருத்துக்களை மக்களின் மொழியில் போதிக்க வேண்டும். ஏனென்றால் சம்ஸ்கிருத வார்த்தைகளில் ஒலியே நம் இனத்திற்கு ஒரு மதிப்பையும் ஆற்றலையும் வலிமையையும் தருகிறது. மகத்தான ராமானுஜரும் சைதன்யரும் கபீரும் இந்தியாவின் தாழ்ந்த வகுப்பினரை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் மாபெரும் வெற்றியைக் கண்டன. ஆனால் அது அவர்கள் காலத்தில் மட்டுமே. அந்த மாபெரும் ஆச்சாரியர்கள் போதித்த உபதேசங்களின் வேகம், அவர்கள் மறைந்த ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே மறைந்து விட்டன, அவை தோல்வியைத் தழுவின. ஏன்? அதன் காரணம் என்ன? அதை நாம் இங்கே விளக்கத்தான் வேண்டும். காரணம் இதுதான்: அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தினார்கள், அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார்கள்: ஆனால் பாமர மக்களிடையே சம்ஸ்கிருதக் கல்வியைப் பரப்புவதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை மகத்தான புத்தர் கூட சாதாரண மக்கள் சம்ஸ்கிருத மொழியைப் படிக்க வேண்டாம் என்று தடுத்தபோது ஒரு தவறான அடியையே எடுத்து வைத்தார். அவர் விரைவான உடனடியான விளைவுகளை விரும்பினார். அதனால் அன்றைய பேச்சுமொழியான பாலியில் மொழி பெயர்த்தே பிரச்சாரம் செய்தார். அது பெரிய விஷயம்: அவர் மக்களின் மொழியில் பேசினார், மக்கள் புரிந்து கொண்டார்கள். அது சிறப்பானது, அது கருத்துக்களை விரைவாகப் பரப்பியது. நெடுந்தொலைவில் உள்ளவர்களையும் அவரது கருத்துக்கள் சென்றடைந்தன. ஆனால் அதனுடன் சம்ஸ்கிருதமும் பரப்பப்பட்டிருக்க வேண்டும். அங்கே அறிவு வந்தது, ஆனால் பெருமைவரவில்லை, பண்பாடு வரவில்லை. பண்பாட்டுதான் அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியும், எவ்வளவு தான் ஆனாலும் அறிவினால் அது முடியாது. உலகிற்கு நீங்கள் அறிவுரையைப் பொழியலாம் அதனால் பெரிய நன்மை எதுவும் விளைந்துவிடப் போவதில்லை ரத்தத்தில் பண்பாடு வர வேண்டும் தற்காலத்தில் கல்வியில் உன்னத வளர்ச்சி கண்ட பல நாடுகளை நாம் அறிவோம். அதனால் என்ன! அவர்கள் புலிகளைப்போல் உள்ளார்கள், காட்டுமிராண்டிகளைப் போல் இருக்கிறார்கள், ஏனெனில் அங்கே பண்பாடு இல்லை. நமது நாகரீகத்தைப் போலவே அறிவும் அங்கே தோலை மட்டும் தொட்டுள்ளது, சிறு சிராய்ப்பு போதும், பழைய காட்டுமிராண்டித்தனம் வந்துவிடும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இது தான் ஆபத்து. சாதாரண மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் போதியுங்கள். கருத்துக்களைக் கொடுங்கள், அதனால் அவர்கள் விஷயங்களை அறிந்து கொள்வார்கள், ஆனால் அதை விட மேலான ஒன்று அவர்களுக்குத் தேவை , பண்பாட்டை அளியுங்கள். அவர்களுக்கு அதைக்கொடுக்காத வரையில் அந்த உயர்த்தப்பட்ட நிலையில் அவர்களால் நிலையாக இருக்க முடியாது. அப்போது சம்ஸ்கிருத மொழியால் மேன்மை பெற்ற ஒரு தனி ஜாதி உருவாகவே செய்யும், அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்து மற்றவர்களை அடக்கியாளவே செய்தார்கள். உங்களுள் தாழ்ந்த ஜாதியினரிடம் சொல்கிறேன்: உங்களுக்கு ஒரே வழி உங்கள் நிலை உயர ஒரே உபாயம் சம்ஸ்கிருதம் படிப்பதே. உயர்ந்த ஜாதியினருடன் சண்டையிடுவதும் எழுதுவதும் நிந்திப்பதும் வீண். அது எந்த நன்மையையும் தராது. துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் நமது இனம் மேலும் பிளவுபடவே இந்தச் சண்டைகள் வழிவகுக்கும். ஜாதிகளுக்கிடையே சமத்துவம் நிலவுவதற்கான ஒரே வழி மேல் ஜாதியினரின் வலிமைக்குக் காரணமான கல்வியறிவையும் பண்பாட்டையும் எல்லோருக்கும் பொதுவாக்குவதே. அதைச் செய்துவிட்டால் நீங்கள் விரும்பியதைப் பெறுவீர்கள். இது தொடர்பாக சென்னை சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய விஷயத்தை நான் பேச விரும்புகிறேன்.தென்னிந்தியாவில் திராவிடர் என்ற இனத்தினர் இருந்ததாகவும், அவர்கள் வட இந்தியாவில் வாழ்ந்த ஆரியர் என்ற இனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டடவர்கள் என்றும் தென்னிந்திய பிராமணர்கள் மட்டுமே வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும் பிற தென்னிந்தியர்கள் எல்லாம் இந்தப் பிராமணர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஜாதியையும் இனத்தையும் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது திருவாளர் மொழியியல் அறிஞரே, உங்கள் கருத்தை மறுப்பதற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. ஆதாரத்திற்காக ஒரே ஒரு நிரூபணம் காட்ட முடியும் என்றால் அது வட நாட்டிற்கும் தென்னாட்டிற்கும் இடையே மொழியில் அமைந்துள்ள வேற்றுமை மட்டுமே, வேறு எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. இங்கே நாங்கள் வட இந்தியர்களும் பலர் இருக்கிறோம். எங்களுள் யார் வட இந்தியர், யார் தென்னிந்தியர் என்று பிரிக்குமாறு இங்கே இருக்கும் என் ஐரோப்பிய நண்பர்களிடம் நான் சொல்கிறேன். அவர்களால் முடியாது. வேற்றுமை எங்கே? மொழியில்தான் ஏதோ சிறு வேறுபாடு இருக்கிறது ஆனால் இங்குள்ள பிராமணர்கள் சம்ஸ்கிருதம் பேசிய இனத்திலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு எப்படி சம்ஸ்கிருதம் தெரியாமல் போயிற்று ! அவர்கள் இங்கு வந்ததும் திராவிட மொழியைப் பேசத் துவங்கி சம்ஸ்கிருதத்தை மறந்து விட்டார்களாம். மற்ற ஜாதியினர் விஷயத்திலும் ஏன் அப்படி நடந்திருக்கக் கூடாது? வட இந்தியாவிலிருந்து ஒருவர்பின் ஒருவராக வந்த மற்ற எல்லா ஜாதியினரும் திராவிட மொழியைப் பேசத் தொடங்கியதால் ஏன் சம்ஸ்கிருதத்தை மறந்திருக்கக் கூடாது? எனவே இந்த வாதத்தை இரண்டு பக்கமிருந்தும் பேசலாம். பொருளற்ற இத்தகைய பேச்சுக்களை நம்பாதீர்கள். திராவிடர்கள் இங்கே இருந்திருக்கலாம்: ஆனால் அவர்கள் காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும். எஞ்சியிருந்த ஏதோ சிலர் காடுகளிலும் மற்ற இடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும், அவர்களின் மொழியை இங்குள்ளவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இங்குள்ள அனைவரும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களே. இந்தியா முழுவதிலும் இப்போது இருப்பவர்கள் ஆரியர்களே, வேறுயாருமில்லை. மற்றொரு கருத்தும் இங்கே நிலவுகிறது - சூத்திரர்கள் எல்லாம் ஆதிவாதிகளாம் ! அவர்கள் யார்? அடிமைகள்! அமெரிக்கர் , ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர் ஆகிய அனைவரும், அப்பாவி ஆப்பிரிக்கர்களைப் பிடித்துக் கொண்டுவந்து கடினமாக வேலை வாங்கினார்கள். அவர்கள் இறந்தபிறகு அவர்களுக்குப் பிறந்த கலப்பின் மக்களையும் நெடுங்காலம் வரை அதே நிலையில் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அந்த விசித்திரமான உதாரணத்தைப் படித்த இவர்களின் மூளையில், இங்கேயும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற செயல் நடந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமே கறுப்புக் கண்களோடு கூடிய ஆதிவாசிகளால் நிறைந்திருந்தது என்று கனவு காண்கிறார் நம் தொல்பொருள் ஆய்வாளர். சிவந்த நிற முடைய ஆரியர்கள் பின்னால் வந்தனராம்! எங்கிருந்து? கடவுளுக்குத்தான் வெளிச்சம். சிலருடைய கருத்துப்படி அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்தார்கள். மற்றும் சிலரே, அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தாகக் கூறுகிறார்கள். சிவப்புத் தலைமையிரை உடையவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று நினைக்கின்ற,தேச பக்தர்களான சில ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள். தங்கள் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் அவர்கள் கறுப்பு நிறத் தலைமயிரை உடையவர்கள் என்று நினைக்கிறார்கள். எழுதியவர் கறுப்பு முடியள்ள மனிதராக இருந்தால், ஆரியர்கள் எல்லாரும் கறுப்பு முடியுள்ளவர்கள். இனி ஆரியர்கள் சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரைகளில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமீப காலத்தில் தோன்றியுள்ளன. இத்தகைய கொள்கைகளுடன் அவர்களும் சேர்ந்தே அந்த ஏரியில் மூழ்கினால் கூட எனக்கு வருத்தமில்லை. ஆரியர்கள் வட துருவத்தில் வாழ்ந்ததாக இப்போது சிலர் கூறுகின்றனர். ஆரியர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பராக! இந்தக் கொள்கைகளில் உண்மை இருக்கிறதென்றால் நம் சாஸ்திரங்களில் அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டுமே! ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்தார்கள் என்பதை நிரூபிக்கும் படியான ஒரு வார்த்தைகூட நமது சாஸ்திரங்களில் இல்லை பழங்கால இந்தியா ஆப்கானிஸ்தானமும் சேர்ந்த பகுதியாகும், அவ்வளவுதான் இது போதும் அதுபோலவே சூத்திரங்கள் எல்லாம் ஆரியர் அல்லாதவர்கள் அவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள் என்ற கொள்கையும் தர்க்கரீதியானதோ அறிவு பூர்வமானதோ அல்ல. ஒருசில ஆரியர்கள் வந்து குடியேறி லட்சக்கணக்கான அடிமைகளை அடக்கியாண்டார்கள் என்பது அந்தக் காலத்தில் நடக்கக்கூடிய ஒன்றா என்ன! அப்படி அடக்கி ஆண்டிருந்தால், அந்த அடிமைகள் அவர்களை ஐந்தே நிமிடத்தில் சட்னி செய்து சாப்பிட்டிருப்பார்கள். ஒரே ஒரு விளக்கம் மகாபாரதத்தில் காணப்படுகிறது; சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் பிராமணர்கள் என்ற ஒரு ஜாதியினரே இருந்தார்கள். அதன்பிறகு பல்வேறு தொழில்களைச் செய்ததன் காரணமாக அவர்கள் தங்களுக்குள் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தார்கள். இது தானக ஜாதிப் பிரச்சினைக்கு உண்மையான அறிவுபூர்மான ஒரே விளக்கம், இனி வரப்போகின்ற சத்திய யுகத்திலும் ஜாதிகள் எல்லாம் சிறிதுசிறிதாக மாறி முதலில் இருந்த நிலைக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள ஜாதிப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி இது தானே தவிர உயர்ந்த ஜாதியினரைக் கீழ் நிலைக்குக் கொண்டுவருவதோ பிராமணர்களை நசுக்குவதோ அல்ல. பிராமணத்துவம்தான் இந்திய மக்களின் லட்சியம் என்பதை சங்கரர் தமது கீதை விளக்கவுரையின் முன்னுரையில் அற்புதமாக விளக்கியுள்ளார்; ஸ்ரீகிருஷ்ணர் உபதேசகராக வந்ததன் காரணத்தைக் கூறும்போது, இந்த பிராமணத்துவத்தை, பிராமண நிலையை நிலை நிறுத்தவே அவர் அவதரித்தார் என்று கூறுகிறார். அது தான் மகத்தான லட்சியம் மனிதனான பிரம்மத்தை அறிந்தவனான, லட்சியமனிதனான, நிறை மனிதனான இந்தப் பிராமணன் கட்டாயம் இருக்க வேண்டும் அவன்மறைந்து போகக் கூடாது. இன்று அந்த ஜாதி சீர்கெட்டுப் போயிருக்கலாம். இருப்பினும்பிற எல்லா ஜாதியினரும் தயாராக இருக்க வேண்டும். அது உண்மை. பிற எல்லா ஜாதியினரிடமிருந்தும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையுள்ள மதிப்பு அது. அவர்களுடைய குறைகளைப்பற்றிப் பேச தைரியமும் துணிச்சலும் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டும் அதே வேளையில் அவர்களுக்கு உரியதைக் கொடுங்கள் என்னும் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் எனவே நண்பர்களே, ஜாதிகளுள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை. அது என்ன நன்மை செய்யும்? நமக்குள் இன்னும் அதிகமான பிளவுகளை உண்டாக்கும் நம்மை மேலும் பலவீனப்படுத்தும், மேலும் இழிநிலையில் ஆழ்த்தும், அவ்வளவுதான். தனிச் சலுகைகள் மற்றும் தனி உரிமைகளின் காலம் மலையேறிவிட்டது அவை இந்திய மண்ணிலிருந்து ஒரேயடியாகப் போய்விட்டன இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியால் விளைந்த மகத்தான நன்மைகளுள் இதுவும் ஒன்று தனிச் சலுகைகளை ஒழித்ததான பெரும் பணிக்காக நாம் முகமதியர் ஆட்சிக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். முகமதிய ஆட்சிகூட அப்படியொன்றும் முற்றிலுமாகத் தீயதல்ல. செல்லப்போனால் எதுவுமே முற்றிலும் நல்லதும் அல்ல, முற்றிலும் கெட்டதும் அல்ல. முகமதியர்கள் இந்தியாவை வெற்றி கொண்டது, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் கதிமோட்சமாக அமைந்தது. அதனால் தான் நம் மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர் ஆனார்கள் எல்லாவற்றையுமே வாள் மட்டுமே சாதித்தது என்பதில்லை. வாளாலும் நெருப்பாலும் மட்டுமே இந்த அனைத்து வேலைகளும் நடைபெற்றாக நினைப்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டம். இனி நீங்கள் எச்சரிக்கையாக இல்லை என்றால் உங்கள் சென்னை மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் ஏன் பாதிபேர் கிறிஸ்தவர்களாகி விடுவார்கள், நான் மலபாரில் பார்த்ததைவிட மடத்தனம் உலகில் வேறு எங்காவது இருக்க முடியமா? பாவம்! கீழ்ஜாதியினர் மேல் ஜாதியினர் நடக்கும் தெருக்களில்கூட நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவனே தன் பெயரை தாட்பூட்டென்று ஓர் ஆங்கிலப் பெயராக மாற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் முகமதியப் பெயரை வைத்துக்கொண்டாலும் போதும், எல்லாம் சரியாகி விடும் அந்த மலபார்வாசிகளைப் பைத்தியங்கள் என்று நினைப்பதைத் தவிர அவர்கள் வீடுகளையெல்லாம் பைத்தியக்கார விடுதிகள் என் பதைத் தவிர வேறு என்னவென்று நினைப்பது? அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டு , நல்ல வழியில் நடக்கும் வரைஇந்தியாவில் உள்ள ஒவ்வோர் இனத்தினரும் அவர்களை வெறுப்பாக நடத்த வேண்டும் என்பதை தவிர வேறு எந்த முடிவுக்கு வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த முடிவுக்கு வருவது ? இத்தகைய கொடூரமான மிருகத்தனமான பழக்கங்களை அனுமதித்திருக்கிறார்கள். சாந்தக் குழந்தைகளே பட்டினியில் சாகுமாறு விட்டுவிடுகிறாள், ஆனால் அவர்கள் மதம் மாறி விட்டார்களானால் சாப்பாடு போடுகிறார்கள். என்ன வெட்கக்கேடு!ஜாதிகளிடையே இனியும் சண்டை இருக்கக் கூடாது.  உயர்ந்ததைத் தாழ்த்துவதல்ல தாழ்ந்ததை உயர்த்துவதே தீர்வு இதுதான் நமது நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் மார்க்கம். சொந்த சாஸ்திர அறிவும் முன்னோர்களின் மகத்தான திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கான திறனும் சுத்த சூன்யமாக இருக்கின்ற சிலர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை ஆனால் மூளையுள்ளவர்களுக்கு , புத்திக்கூர்மை உடையவர்களுக்கு நம் முன்னோர்களின் செயல்திட்டத்தின் முழுப் பரிமாணமும் விளங்கும் , அவர்கள் தனியாக நின்று பல நூற்றுண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற அந்த அற்புதமான தேசிய வாழ்வைப் பின்பற்றுவார்கள். பழைய மற்றும் புதிய நூல்களைப் படிப்படியாக ஆராய்ந்து அவர்களால் அதனைக் கண்டறிய முடியும். அந்தத் திட்டம்தான் என்ன? ஒரு கோடியில் பிராமண லட்சியம். மற்றொரு கோடியில் உள்ளது சண்டாள லட்சியம் நமது வேலையெல்லாம் சண்டாளனைப் பிராமண நிலைக்கு உயர்த்துவதுதான் சிறிதுசிறிதாக அதிகமான சலுகைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை நீங்கள் காணலாம். சில நூல்கள் இருக்கின்றன அவற்றில் சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள்: ஒரு வரிகூட நினைவில் வைத்திருந்தால் அவனது நாக்கை வெட்டுங்கள். பிராமணனைப் பார்த்து ஏ பிராமணா என்று அவன் அழைத்தால் அவனுடைய நாக்கை வெட்டி விடுங்கள் என்பன போன்ற கொடூரமான கருத்துக்கள் இருக்கின்றன இவை மிருகத்தனமான பழங்காலக் காட்டுமிராண்டித்தனம். அதில் சந்தேகமே இல்லை இதை யாரும் சொல்ல வேண்டியது இல்லை. அதற்காக விதிமுறைகளை எழுதியவர்களைப் பழிக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் அப்போது சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடைமுறையில் இருந்ததை அப்படியே குறித்து.வைத்தார்கள் அவ்வளவுதான் முன்னோர்களுள்ளும் சிலவேளைகளில் இத்தகைய பிசாசுகள் தோன்றவே செய்தன. அத்தகைய பிசாசுகள் பெரும்பாலும் எங்கும் எல்லா காலங்களிலும் இருந்தே வருகின்றன. இந்தக் கொடுமைக்குரலின் வேகம் பிற்காலத்தில் சிறிது குறைந்திருப்பதைக் காணலாம்: உதாரணமாக சூத்திரர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். ஆனாலும் உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குப் போதிக்காதீர்கள் என்ற கருத்து வருகிறது பின்னர் படிப்படியாக பிற்கால ஸ்மிறுதிகளில் குறிப்பாக சூத்திரர்கள் பிராமணர்களில் குறிப்பாக இன்னும் முழுமையாகப் பின்பற்றப்படும் ஸ்மிருதிகளில் சூத்திரர்கள் பிராமணர்களின் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால் அது நல்லது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் இது போன்ற கருத்துக்களைக் காண்கிறோம். அதன் போக்கு அப்படி போகிறது. இந்த விஷயங்களையோ அவற்றை எங்கெல்லாம் தேடிக் காணலாம் என்பதையோ விவரிப்பதற்கு எனக்கு நேரமில்லை. ஆனால் இன்றைய உண்மை நிலையைப் பார்க்கும்போது எல்லா ஜாதிகளும் மெல்லமெல்லவே உயர வேண்டியிருப்பதை நாம் காணலாம். ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. அவற்றுள் சில பிராமணத் துவத்தினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். தங்களைப் பிராமணர்கள் என்று ஒரு ஜாதியினர் அறிவித்துக் கொள்வதை யார் தடுக்க முடியும்? இவ்வாறாக ஜாதி அதனுடைய எல்லா வேகத்தோடும் தோற்றுவிக்கப்பட்டது. இங்கே ஒவ்வொரு ஜாதியிலும் பத்தாயிரம் பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதாகத் தீர்மானித்தால் எதுவும் அவர்களைத் தடுக்க முடியாது இதை என் வாழ்விலேயே கண்டிருக்கிறேன். சில ஜாதிகள் வலிமைபெற்றுவருகின்றன, அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் கூடாது என்று யார் சொல்ல முடியும்? ஏனென்றால் ஒவ்வொரு ஜாதியும் மற்ற ஜாதிகளிலிருந்து விலகியே இருக்கிறது.ஒன்று மற்றதன் செயல்களில் தலையிடுவது இல்லை. ஏன் ஒரே ஜாதியில் பல பிரிவுகள்கூட ஒன்று மற்றொன்றின் விஷயத்தில் தலையிடுவது இல்லை. மாபெரும் சாகப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராச்சாரியரும் பிறரும்தான் ஜாதிகளையும் உருவாக்கியவர்கள். அவர்கள் கட்டிவிட்ட வினோதக் கதைகளை எல்லாம் உங்களுக்குச் சொல்ல முடியாது சொன்னாலும் உங்களுள் சிலருக்குக் கோபம் வரலாம். எனது பயணங்ளின்மூலமும் அனுபவங்களின் வாயிலாகவும் அவைகளைக் கண்டுபிடித்து, ஆச்சரியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். சில வேளைகளில் அவர்கள் பலுசிஸ்தானத்தின் நாடோடிக் கும்பல்களைப் பிடித்து க்ஷத்திரியர்கள் ஆக்குவார்கள். மீனவர்களைப் பிடித்து பிராமணர்கள் ஆக்குவார்கள் அவர்கள் ரிஷிகள் மகான்கள். அவர்களின் நினைவிற்கு நாம் அஞ்சலி செய்ய வேண்டுமும் நீங்களும் ரிஷிகள் ஆகுங்கள், மகான்கள் ஆகுங்கள் அதுதான் ரகசியம் மொத்தத்தில் நாம் ரிஷியாக வேண்டும். ரிஷி என்றால் என்ன? தூயவர். முதலில் தூயவர் ஆகுங்கள்,நீங்கள் ஆற்றலைப் பெறுவீர்கள். வெறுமனே நான் ரிஷி என்று சொல்லிப் பயனில்லை நீங்கள் ரிஷி என்றால் மற்றவர்கள் தாமாகவே உங்களைப் பணிவார்கள். அனுமானுஷ்யமான ஏதோ ஒன்று உங்களிடமிருந்து வெளிப்படும் அது அவர்கள் உங்களைப் பின்பற்றும்படிச் செய்யும்; தங்களை அறியாமலே தங்கள்விருப்பத்திற்கு மாறாகக்கூட உங்கள் திட்டங்களை நிறைவேற்றும்படிச் செய்யும் அதுதான் ரிஷி நிலை. இவற்றிக்கான விளக்கங்களைப் பொறுத்தவரை அவை பல தலைமுறைகளாகச் செய்து முடிக்க வேண்டிய ஒன்று. நான் இப்போது கூறியவை, ஜாதிச் சண்டைகள் தீர வேண்டும் என்பதற்கான ஒரு ஆலோசனை மட்டுமே. குறிப்பாக இந்த நவீன காலத்தில் ஜாதிகளுக்கிடையே இவ்வளவு சச்சரவுகள் இருப்பது குறித்து நான் வருந்துகிறேன். இது நிறுத்தப் பட்டே தீர வேண்டும். இந்தச் சண்டை இரு தரப்பினருக்கும், குறிப்பாக உயர்ந்த ஜாதியினரான பிராமணர்களுக்குப் பயனற்றது. ஏனென்றால் இன்று தனிச் சலுகைகளும் தனி உரிமைகளும் பறிபோய்விட்டன. தங்கள் கல்லறையைத் தாங்களே தோண்டிக்கொள்வது தான் ஒவ்வோர் உயர்ந்த பிரிவினருடையவும் கடமை. எவ்வளவு சீக்கிரம் அதைச்செய்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது காலம் நீடிக்கநீடிக்க அவை கெட்டுக் குட்டிச்சுவராகி மிக மோசமான முடிவைப் பெறநேரும். எனவே பிராமணர்களின் முதல் கடமை இந்தியாவிலுள்ள மற்ற சமுதாயத்தினரின் நன்மைக்காகப் பாடு படுவதுதான் . அவன் அதைச் செய்வானானால் அதைச் செய்யும் காலம் வரையில் அவன் பிராமணன் அதைச் செய்யாமல் பணம் சம்பாதிக்கத் திரிபவன் பிராமணன் அல்ல. நீங்களும் உண்மையில் தகுதியுடைய பிராமணனுக்கு மட்டுமே உதவ வேண்டும். அது உங்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். தகுதி இல்லாத ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம் சிலவேளைகளில் நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லௌகீகத்தொழில் செய்யாமல் இருப்பவன் மட்டுமே பிராமணன். லௌகீகத் தொழில் பிராமணர்களுக்கு அல்ல மற்ற ஜாதியினருக்குத்தான். பிராமணர்களை நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்ததைக் கற்பிப்பதன் மூலமும் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள். உண்மை பிராமணத்துவம் என்ன என்பதை நினைத்துப் பார்ப்பது இந்தியப் பிராமணர்களின் முக்கியக் கடமை. மனு சொல்வதைப் போல், எல்லா சலுகைகளும் பெருமைகளும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டது ஏனென்றால் அவனிடம் தர்மம் என்னும் கருவூலம் இருக்கிறது. அவன் அந்தக் கருவூலத்தைத் திறந்து அதில் உள்ள மதிப்பு வாய்ந்த பொருட்களை உலகிற்கு வழங்க வேண்டும். அவன் இந்திய இனங்களுக்கு முதல் போதகன் என்பது உண்மைதான் தியாகம் என்ற கருத்தைப் பிறர் அடைவதற்கு முன்னரே வாழ்க்கையின் மிகவுயர்ந்த நிலையை அடைவதற்காக எல்லாவற்றையும் முதலில் துறந்தவன் அவன் என்பதும் உண்மையே பிற ஜாதியினரைவிட அவன் அதிக முன்னேற்றம் அடைந்தால் அது அவனுடைய தவறு அல்ல. உண்மையைப் புரிந்து கொண்டு மற்ற ஜாதியினரும் ஏன் அவனைப்போல் செல்லக் கூடாது? அவர்கள் சோம்பேறியாக இருந்து கொண்டு பந்தயத்தில் பிராமணர்களை ஏன் முன்னேற விட்டார்கள்? ஆனால் முன்னேற்றம் அடைவது என்பது வேறு அதைத் தீய செயல்களுக்காகப் பாதுகாத்து வைப்பது என்பது வேறு அதிகாரம் தீமைகளுக்காகப் பயன்படுத்தபடும்போது அது மிருகத்தனமாகி விடுகிறது, அது நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். காலங்காலமாகச் சேர்ந்து வைக்கப்பட்டுள்ளன பண்பாட்டிற்கு காவலனாக இருப்பவன் பிராமணன் அவன் இப்போது அதை எல்லா மக்களுக்கும் வாரி வழங்க வேண்டும் அப்படி அவன் கொடுக்காததால் தான் முகமதியர்கள் நம்மை ஆக்கிரமிக்க முடிந்தது ஆரம்பக் காலத்திலிருந்தே இந்தக் கருவூலத்தை மக்கள் அனைவருக்குமாக அவன் திறந்து விடவில்லை அதனால் தான் இந்தியாவிற்கு வந்தவனின் காலிலெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மிதிபட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே நமது பொது முன்னோர்கள் சேமித்து வைத்திருக்கின்ற அரும் பொக்கிஷங்கள் மறைந்து வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்துத் திறக்க வேண்டும் அவற்றை வெளியே கொண்டு வரவேண்டும், அனைவருக்கும் வாரி வழங்க வேண்டும். பிராமணனே இதை முதலில் செய்ய வேண்டும் கடித்த பாம்பே விஷத்தை உறிஞ்சி விடுமானால் கடிபட்டவன் பிழைத்துக் கொள்வான் என்ற பழைய நம்பிக்கை வங்காளத்தில் நிலவுகிறது. அதுபோல் பிராமணன் செலுத்திய விஷத்தை பிராமணனே உறிஞ்ச வேண்டும். பிராமணர் அல்லாத நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் சில விஷயங்கள் உண்டு. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அவசரப்படாதீர்கள் பிராமணர்களோடு சண்டையிடுவதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் தவறுகளாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்பதை நான் முன்னரே எடுத்துக்காட்டி விட்டேன். ஆன்மீகத்தையும் சம்ஸ்கிருதம் கற்பதையும் அலட்சியம் செய்யும் படி உங்களிடம் யார் சொன்னார்கள்? இவ்வளவு காலமாக என்ன செய்து கொண்டிருக்காதீர்கள் ? எதற்கு இந்த பொறுப்பற்ற தன்மை ? இன்று மற்றவர்கள் உங்களைவிட அதிக அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர்களாக இருப்பதைப் பார்த்து ஏன் எகிறிக் குதிக்கிறீர்கள் ? பத்திரிகைகளில் வாதங்களையும் சண்டைகளையும் வளர்ப்பதில் உங்கள் ஆற்றலை வீணாக்குவதற்குப் பதிலாக உங்கள் வீடுகளிலேயே சண்டைகளையும் சச்சரவும் செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக இந்தப் பாவச் செயல்களுக்குப் பதிலாக பிராமணர்கள் பெற்றிருக்கும் பண்பாட்டைப் பெற உங்கள்எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள், அப்போது உங்கள் காரியம் கைகூடிவிடும் ஏன் நீங்கள் சம்கிருத பண்டிதர்கள் ஆகக் கூடாது? இந்தியாவில் உள்ள எல்லா ஜாதியினரும் சம்ஸ்கிருதம் படிப்பதற்காகச் சில லட்சங்களை நீங்கள் ஏன் செலவழிக்கக் கூடாது? இதுதான் கேள்வி. இவற்றை யெல்லாம் செய்கின்ற அந்தக் கணமே நீங்கள் பிராமணர்களுக்குச் சமமாகி விடுவீர்கள். இந்தியாவில் ஆற்றலின் ரகசியம் இதுவே. இந்தியாவில் சம்ஸ்கிருதமும் மதிப்பும் கைகோர்த்துச் செல்கின்றன. அது இருந்தால் போதும் உங்களுக்கு எதிராக எதையும் சொல்கின்ற தைரியம் யாருக்கும் வராது. அதுதான் பெரிய ரகசியம். எனவே அதைக் கற்கத் தொடங்கங்கள். அத்வைதியின் ஒரு பழைய உவமையின் மூலம் சொல்வது என்றால் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு மயக்க நிலையிலேயே இந்த உலகம் முழுவதும் உழல்கிறது சங்கல்பம்தான் பலம். வலுவான சங்கல்பம் படைத்தவன் தன்னைச் சுற்றிலும் ஓர் ஒளியை வெளிப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும் தன் மனம் எந்த நிலையில் இருக்கிறதோ அந்த நிலைக்கு அவன் பிறரையும் கொண்டு வருகிறான். அத்தகைய மாபெரும் மனிதர்கள் தோன்றவே செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? ஆற்றல் மிக்க ஒருவர் தோன்றும்போது அவரது ஆளுமை அவரது எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது, நமக்கும் அதே எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது நமக்கும் அதே எண்ணங்கள் எழுகின்றன, இவ்வாறு நாமும் ஆற்றல்மிக்கவர்கள் ஆகிறோம் இயக்கங்கள் இவ்வளவு ஆற்றல்மிக்கவையாக இருப்பது ஏன்? இயக்கம் ஜடப்பொருள் என்று சொல்ல வேண்டாம் அவை அப்படிஇல்லை. பிரபலமான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் நான்கு கோடி ஆங்கிலேயர்கள் இங்கே முப்பது கோடி மக்களை ஆட்சி செய்கிறார்கள். அது ஏன்? இதற்கான மன இயல் விளக்கம் என்ன? அந்த நான்கு கோடி பேரும் தங்கள் சங்கல்பத்தை ஒன்றாகக் குவிக்கிறார்கள். அதனால் எல்லையற்ற சக்தி உண்டாகிறது ஆனால் முப்பது கோடி மக்களான உங்கள் சங்கல்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றன எனவே மகத்தானதோர் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதிலும் ஆற்றலைச் சேர்ப்பதிலும் சங்கல்பங்களை இணைப்பதிலும்தான் இருக்கிறது. அதர்வ வேத சம்ஹிதையில் உள்ளதோர் அற்புத மானபாடல் என் நினைவில் வருகிறது - நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவர்களாக இருங்கள். நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவராக இருங்கள். ஒரே மனத்துடனிருந்த காரணத்தால்தான் தேவர்கள் ஆஹுதிகளைப் பெற முடிந்தது. ஒரே மனத்தவராக இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபட முடிந்தது ஒரே மனத்தவராக இருப்பது சமுதாயத்தின் ரகசியம். திராவிடன் ஆரியன் முதலான அற்ப விஷயங்கள் பற்றியும் பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்றெல்லாமும் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந் தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் எதிர்கால இந்தியா முற்றிலும் அதையே சார்ந்திருக்கிறது சங்கல்ப ஆற்றலைச் சேமித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல் அவை அனைத்தையும் ஒரே மையத்தில் திரட்டுதல் இதுதான் ரகசியம். ஒன்வொரு சீனனும் தான் விரும்புகின்ற வழியில் சிந்திக்கிறான் ஆனால் எண்ணிக்கையில் குறைந்த ஜப்பானியரோ அனைவரும் ஒரே வழியில் சிந்திக்கின்றனர். விளைவு உங்களுக்கே தெரியும். உலக வரலாறு முழுவதும் இவ்வாறே நடந்துள்ளது கட்டுக்கோப்பான சிறிய நாடுகளே கட்டுப்பாடற்ற, பெரிய நாடுகளை எப்போதும் ஆள்கின்றன. இது இயல்பானதுதான் ஏனெனில் சிறிய கட்டுக்கோப்பான நாடுகளுக்குத் தங்கள் கருத்துக்களை ஒரே மையத்தில் குவிப்பது எளிதாக உள்ளது அதன்மூலம் அவை வளர்ந்து விடுகின்றன. ஒரு நாடு எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கட்டுப்பாடற்றதாக இருக்கிறது. கட்டுப்பாடற்றவர்கள்போல் பிறந்த அந்த மக்களால் ஒன்றாகச் சேரவும்முடிவதில்லை. இந்தக் கருத்துவேற்றுமைகள் எல்லாம் விலகியே தீர வேண்டும். மற்றொரு குறைபாடும் நம்மிடம் உள்ளது பெண்கள் என்னை மன்னிக்க வேண்டும் - பல நூற்றாண்டுகளின் அடிமை வாழ்வின் காரணமாக நாமெல்லாம் பெண்களைப் போலவே ஆகிவிட்டோம். இந்த நாட்டிலும் சரி வேறு நாட்டிலும் சரி மூன்று பெண்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் சேர்ந்திருக்க முடியாது, அதற்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய சங்கங்களை உருவாக்குவார்கள் பெண்சக்தி முதலியவை பற்றியெல்லாம் பெரிய அறிக்கைகளை வெளியிடுவார்கள், அவ்வளவுதான் அதற்குள் சண்டை வந்துவிடும் பின்னர் ஆண்கள் வந்து அவர்களை அடக்கியாள நேரும். இன்னும் உலகம் முழுவதிலும் அவர்களை ஆள்வதற்கு ஆண்கள் தேவைப்படுகிறார்கள். நாம் அவர்களைப் போலவே இருக்கிறோம் நாம் பெண்களே. பெண்களை நடத்திச் செல்ல ஒரு பெண் முன்வந்தாலோ, எல்லோருமாகச் சேர்ந்து விமர்சித்து, கிழி கிழியென்று கிழித்து அவளை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் ஆண் ஒருவன் வரட்டும் அவன் அவர்களை அவ்வப்போது திட்டியதும் சற்று கடினமாக நடத்தியதும் எல்லாம் சரியாகிவிடும் அவர்கள் அத்தகைய மயக்க நிலைக்குப் பழகிவிட்டார்கள். இந்த உலகம் முழுவதும் அத்தகைய மயக்க நிலைக்கு உட்பட்டவர்களே இருக்கிறார்கள். நம் நாட்டிலும் நம்மவருள் ஒருவர் எழுந்து மகத்தானவராக மாற முயற்சிப்பாரானால் உடனே நாம் எல்லோரும் சேர்ந்து அவரை அமுக்க முயற்சிப்பாரானால், ஓர் அன்னியன் வந்து நம்மை எட்டி உதைத்தால் கூட அது பரவாயில்லை. நாம் இப்படியே பழக்கப்பட்டு விட்டோம் இல்லையா! அடிமைகள் சிறந்த எஜமானர்கள் ஆகு வேண்டும். எனவே அடிமையாக இருப்பதை விட்டுவிடுங்கள். இனிவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே ஈடிணையற்ற நமது இந்தியத் தாய் அதுவரை மற்ற எல்லா வீண் தெய்வங்களும் நம் மனத்திலிருந்து மறைந்து விடட்டும் நமது சொந்த இனம் இது ஒன்று மட்டுமே விழிப்புற்ற தெய்வம் எங்கும் அவரது கைகள் எங்கும் அவரது கால்கள் எங்கும் அவரது செவிகள் அவரே அனைத்திலும் வியாபித்திருக்கிறார் மற்ற எல்லா தெய்வங்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் நம்மைச் சுற்றிலும் காண்கின்ற விராட் தெய்வத்தை வழிபடாமல் வேறு வீண் தெய்வங்களை நாம் தேடிச் செல்ல வேண்டுமா? இந்த தெய்வத்தை முதலில் வணங்கினால் பிற எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம் அரை மைல் ஊர்ந்து செல்லவே முடியவில்லை அதற்குள் அனுமனைப்போல் கடலைத் தாண்ட விரும்புகிறோம். அதுமுடிகிற காரியமில்லை. எல்லோரும் யோகியாக முடியுமா? எல்லோரும் தியாணம் செய்ய முடியுமா? அது நடக்காது. நாள் முழுவதும் உலக வாழ்க்கையில் கர்ம காண்டத்துடன் அல்லாடுகிறோம்மாலையில் உட்கார்ந்து மூக்கின் வழியாகக் காற்றை இழுத்து விட்டால் எல்லாம் ஆயிற்றா? இல்லை காற்றை இழுத்தவுடன் ரிஷிகள் எல்லோரும் காற்றில் பறந்து உங்களிடம் வர வேண்டுமா? என்ன வேடிக்கை இது! சுத்த முட்டாள்தனம். தேவை சித்த சுத்தி , இதயத் தூய்மை. அது எவ்வாறும் வரும்? முதலில் விராட்டை அதாவது உங்களைச் சுற்றி இருபணபவர்களை வழிபடுங்கள். வழிபடுங்கள், வழிபாடு - அதுதான் அந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்குச் சரியான பொருள். வேறு எந்த வார்த்தையும் பொருந்தாது. மனிதர்கள் மிருகங்கள் எல்லாமே நம் தெய்வங்கள். நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள் நம்நாட்டு மக்கள் .ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு சண்டையிடுவதற்குப் பதிலாக இவர்களை நாம் வழிபட்டாக வேண்டும் . கொடிய தீவினைப் பயனால்தான் நாம் துன்பப்படுகிறோம்: என்றாலும் நம் கண்கள் திறக்கவில்லையே! நல்லது நாம் இன்று எடுத்துக் கொண்டுடிருக்கும் விஷயமோ மிகப் பெரியது எங்கே நிறுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனவே சென்னையில் நான் செய்ய விரும்புகின்ற சில திட்டங்களை உங்களிடம் கூறிவிட்டு என் பேச்சை நிறைவு செய்கிறேன் நமக்கு நாட்டின் ஆன்மீகக் கல்வி மீதும் லௌகீகக் கல்வி மீதும் நல்ல பிடிப்பு இருக்க வேண்டும் நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அதைக் கனவு காண வேண்டும் அதைப்பற்றிப் பேச வேண்டும் அதைச் சிந்திக்க வேண்டும் அதைச்செய்து முடிக்கவும் வேண்டும் அதுவரை நம் இனத்திற்குக் கடைத்தோறும் வழியே இல்லை. தற்போதைய கல்வியில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் மிக அதிகமா அந்தத் தீமைகள் இருக்கின்றன. மிக அதிகமாக தீமைகள் கொஞ்சமான நன்மையைக் கீழே அமுக்குகின்றன. முதலாவதாக அது மனிதனை உருவாக்குகின்ற கல்வி அல்ல. அது முழுக்க முழுக்க வெறும் எதிர்மறையான கல்வி, எதிர்மறைக்கல்வியும் சரி, அல்லது எதிர் மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் எந்தப் பயிற்ச்சியும் சரி அது சாவை விடக் கொடியது. குழந்தையை பள்ளிக்கு அனுப்பு கிறோம். அங்கே அவன் முதலில் படிப்பது தன் தந்தை ஒரு முட்டாள் இரண்டாவது தன் பாட்டன் பைத்தியக்காரன் ; மூன்றாவாதாக தன் ஆசிரியர்கள் அனைவரும் பாசக்காரர்கள் நான்காவதாக எல்லா சாஸ்திரங்களும் பொய் இப்படித்தான் அவனதுபடிப்பு உள்ளது. அவனுக்கு பதினாறு வயதாகும்போது அவன் உயரற்ற உணர்வற்ற எதிர்மறை உணர்ச்சிகளின் ஒரு பிண்டம் போலாகிறான். விளைவு ? ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இத்தகைய கல்வி இந்தியாவின் மூன்று முக்கிய மகாணங்களிலும் சுயசிந்தனையுள்ள ஒருவனைக்கூட தோற்றுவிக்கவில்லை அத்தகைய தனித்தன்மை வாழ்ந்தாக இங்கு இருக்கின்ற ஒவ்வொருவனும் வேறு எங்கோ கல்வி பெற்றவனாக இருக்கிறான் இந்த நாட்டில் படித்தவனாக இல்லை அல்லது நம் நாட்டில் இன்னும் ஏதோ சில இடங்களில் இருக்கின்ற பழைய பல்கலைக்கழகங்களில் மேலும் ஒருமுறை கற்று மூட நம்பிக்கைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டவனாக இருக்கிறான். வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி வாழ்க்கையை வளப்படுத்துகின்ற மனிதனை உருவாக்குகின்ற குணத்தை மேம்படுத்துகின்ற கருத்துக்களை ஜீரணம்செய்யதக்க கல்வியே நாம் வேண்டுவது நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துக்களை நன்கு கிரகித்து ,அவை உங்கள் வாழ்க்கையாக நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால் ஒரு புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனை விட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர். யதா கரச்சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேத்தாநது சந்தனஸய - கட்டுக்கட்டாகச் சந்தனக் கட்டைகளைச் சுமந்து செல்லும் கழுதை அதன் பாரத்தை மட்டுமே உணர்கிறது மதிப்பை அறிவதில்லை செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள் கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள் ! எனவே நம் நாஙட்டன் ஆன்மீகம் மற்றும் லௌகீகக் கல்வி எல்லாமே நம் சொந்தக் க=கைகளில் இருக்க வேண்டும் முடிந்தவரை அது தேசிய வழியிலும் தேசிய அமைப்புகளின் மூலமும் தரப்பட்ட வேண்டும். இது மிகப்பெரிய விஷயம், மிகப் பெரிய திட்டம் தான். இதை என்றைக்காவது செயல்படுத்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வேலையை நாம் கட்டாயம் தொடங்கியதாக வேண்டும் . ஆனால் எப்படி? உதாரணத்திற்குச் சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு அவசியம் ஒரு கோயில் வேண்டும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை முதலில் வேண்டியது மதம், அப்படி என்றால் பிற நெறியினர் அதுபற்றிச் சண்டையிடுவார்களே என்று நீங்கள்சொல்லாம். ஆனால் நாம் அதை எந்த நெறியும் சாராத கோயிலாகக் கட்டுவோம் எல்லா பிரிவினரும் ஏற்றுக்ö காள்ளக்கூடிய ஓம் மட்டுமே அங்கே சின்னமாக இருக்கும் எந்தப் பிரிவாவது ஓம் என்பதைச் சின்னமாக வைப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கருதுமானால் தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளும் உரிமை அதற்குக் கிடையாது தங்கள் நெறியின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்து மதத்தை விளக்க எல்லோருகும் உரிமைஉண்டு. ஆனால் கட்டாயமாக நமக்கு பொதுக் கோயில்கள் வேண்டும். நீங்கள் விரும்பு கின்ற விக்கிரகங்கள் மற்றும் சின்னங்கள் எல்லாவற்றையும் மற்ற இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கொள்கையிலிருந்து மாறுபடுபவர்களுடன் அதைச் குறித்து இங்கே சண்டையிடக்கூடாது . இங்கே நமது பல்வேறுணு நெறிகளுக்கும் பொதுவான அடிப்பபடைகள் போதிக்கப்பட வேண்டுமுஞூ அதே வேளையில் வெவ்வேறான நெறியினர் எல்லோருமே இங்கே வந்து தங்கள் கோட்பாடுகளைப் போதிப்பதற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். இருக்க வேண்டிழய ஒரே கட்டுப்பாடு எந்தப் பிரிவும் மற்றொன்றுடன் சண்டையிடக் கூடாது என்பது மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள் உலகத்திற்கு அது தேவை ஆனால் நீங்கள் பிறரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்க உலகத்திற்கு நேரமில்லை, அதை நிங்களே வைத்துக் கொள்ளலாம். இரண்டாவதாக அந்தக் கோயிலோடு தொடர்புடைய ஒரு பயிற்சி நிலையம் இருக்க வேண்டும் நம் மக்களுக்கு மத போதனை செய்யவும் பொதுக் கல்வியை அளிக்கவும் ஆசிரியரிகளுக்கு அதில் பயிற்சி அளிக்க வேண்டும் அவர்கள் இரண்டையுமே கற்பிக்க வேண்டும் நாம் ஏற்கனவே வீடுகள் தோறும் சென்று மதக் கல்வி அளித்தே வருகிறோம் அதனுடன் பொதுக் கல்வியையும் எடுத்துச் செல்வோம் இதை எளிதாகச் செய்ய முடியும் பிறகு இந்த ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் மூலம் இந்த வேலை விரிவடையும். இத்தகைய கோயில்களை மற்ற இடங்களிலும் நிறுவ வேண்டும் . படிப்படியாக இந்தியா முழுவதும் இது போன்ற கோயில்கள் உருவாக வேண்டும் இதுதான் என் திட்டம் இது மாபெரும் ஒன்றாகத் தோன்றலாம் ஆனால் இது மிகவும் தேவையான ஒன்று இதற்கான பணம் எங்கே என்று நீங்கள் கேட்கலாம், பணம் தேவையில்லை பணம் என்பது ஒன்றுமே இல்லை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தேவையான பணமும் மற்ற எல்லாமே என்னிடம் வந்து கொண்டுதான் இருக்கிறது ஏனென்றால் அவை என் அடிமைகள் நான் அவைகளின் அடிமை அல்ல பணமும் பிறவும் கட்டாயம் வரும், கட்டாயம் இதுதான் வார்த்தை. ஆனால் மனிதர்கள் எங்கே? இதுவே கேள்வி. சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்குச் செவிசாய்ப்பீர்களா? என்னை நம்புவதற்கான துணிவு உங்களிடம் இருக்குமானால் உங்கள் ஒவ்வொரு வருக்கும் பொன்னான எதிர்காலம் இருக்கும். குழந்தையாக இருந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கை, இப்போது நான் செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதுபோன்ற அசைக்க முடியாதநம்பிக்கையை உங்களிடம் நீங்கள் கொள்ளுங்கள். அத்தகைய மகத்தான நம்பிக்கையை ஒவ்வோர் ஆன்மாவிலும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டீர்களானால். இந்தியா முழுவதையும் நீங்கள் புதுப்பித்து விடலாம். ஆகா! அதன்பிறகு சூரியனின் கீழ் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் நாம் போவோம் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் உருவாக்குகின்ற பல சக்திகளுள் ஒன்றாக நமது கருத்துக்களும் விளங்கும் இந்தியாவிலும் வெளியிலும் இருக்கின்ற ஒவ்வோர் இனத்தின் வாழ்க்கையிலும் நாம் புகு வேண்டும் இதற்காக இப்போது நாம் பாடுபட்டாக வேண்டும். அதற்காக எனக்கு இளைஞர்கள் தேவை, இளமையும் வலிமையும் ஆரோக்கியமும் கூர்மையான அறிவும் உள்ளவர்களே இறைவனை அடைய முடியும் என்று வேதங்கள் கூறுகின்றன எதிர்காலத்தைப்பற்றி முடிவுசெய்ய ஏற்ற தருணம் உங்களிடம் இளமைத் துடிப்பு ததும்புகின்ற இந்த நேரம்தான் களைத்து ஓய்ந்து போகும் போது அல்ல. இளமையின் வேகமும் உற்சாகமும் இருக்கும் இந்த நேரம்தான் உங்கள் எதிர் காலத்தைத் தீர்மானிப்பதற்கு உரிய நேரமாகும். வேலை செய்யுங்கள் அதற்கான நேரம் இதுதான் புத்தம் புதிய தொடப்படாத முகரப்படாத மலர்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளில் சமர்பிக்கப்படும் அத்தகைய மலர்களையே அவர் ஏற்றுக்கொள்கிறார். எனவே கிளர்ந்தெழுங்கள். வாழ்க்கை குறுகியது. வழக்கறிஞர்களாகி சண்டைசச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற வேலைகளை விட நாடுவதற்கான மகத்தான வேலைகள் பல உள்ளன. உங்கள் இனத்தின் நன்மைக்காக மனித சமுதாயத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களைத் தியாகம் செய்து கொள்வது அவற்றைவிட எவ்வளவோ உயர்ந்த வேலை! இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது ? நீங்கள் இந்துக்கள். வாழ்க்கை நிலையானது என்பதில் இயல்பானதொரு நம்பிக்கை உங்களிடம் இருக்கும் சில நேரங்களில் இளைஞர்கள் சிலர் என்னிடம் வந்து நாத்திகம் பேசுகிறார்கள், ஓர் இந்து நாத்திகன் ஆவான் என்பதை நான் நம்பவில்லை அவன் ஐரோப்பிய புத்தகங்களைப் படிக்கலாம் தன்னை ஓர் உலகாயதனாகக் கருதவும் செய்யலாம் ஆனால் அவையெல்லாம் குறுகிய காலத்திற்குத்தான். நாத்திகம் உங்கள் ரத்தத்தில் இல்லை. உங்கள் அமைப்பில், உங்களுள் இல்லாத ஒன்றை உங்களால் நம்ப முடியாது. அப்படி நீங்கள் நம்ப முயல்வது ஒரு பயனற்ற வேலை . அத்தகைய காரியங்களைச் செய்ய முயலாதீர்கள். நான் இளைஞர்னாக இருந்தபோது ஒரு முறை நானும் இந்த முயற்சியில் இறங்கினேன். ஆனால் முடியவில்லை, வாழ்க்கை குறுகியது: ஆன்மா அழியாதது என்றும் இருப்பது ஒன்று மட்டும் நிச்சயம் அது மரணம் எனவே உயர்ந்ததோர் லட்சியத்தைக் கைக்கொள்வோம் அதற்காக நம் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்போம். இது நமது தீர்மானமாக இருக்கட்டும் தன் மக்களின் மோட்சத்திற்காக மீண்டும் மீண்டும் வருகின்ற இறைவன் இவை நமது சாஸ்திரங்களின் வார்த்தைகள் - மகத்தான அந்த ஸ்ரீகிருஷ்ணர் நம்மை ஆசீர்வதிப்பாராக நம் லட்சியங்கள் நிறைவேறும் பாதையில் அழைத்துச் செல்வாராக!

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.