²õ£ñ¤ õ¤«õè£ùï¢îó¤ù¢ õö¤ò¤ô¢ Þñîî àôèñ¢ º¿õ¶ñ¢ ðóð¢¹õîø¢è£ù ðí¤ ïìªè£í¢®¼è¢è¤ø¶
சென்னையில் சுவாமிஜி முக்கியமான ஏழு சொற்பொழிவுகள் நிகழ்தினார். 7 பிப்ரவரி 1897 அன்று விக்டோரியா ஹாலில் அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. 1.வரவேற்புக்கு பதிலுரை; நாம் ஒன்று நினைக்கிறோம். தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார்- சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரததிலிருந்து கீதை பாணியில் பேசுகிறேன். இப்படிதான் நடந்திருக்க வேண்டும், எனவே அதற்கு நமது நன்றி. இது சொற்பொழிவிற்கு ஓர் உத்வேகத்தை கொடுக்கும். நான் உங்களுக்குச் சொல்லப் போகின்றவை எல்லாம் வலிமையுடன் வெளிவரும். என் குரல் அனைவருக்கும் கேட்குமா என்பது சந்தேகமே. எனினும் இயன்ற அளவு முயற்சி செய்கிறேன். திறந்த வெளியில் இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் இதுவரை பேசியதில்லை. கொழும்பிலிருந்து சென்னைவரை என்னிடம் மக்கள் காட்டி வருகின்ற அற்புதமான கனிவும், ஊக்கமும் உற்சாகமும் உறுதியும் நிறைந்த வரவேற்பும். எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் கடந்ததாக உள்ளது. இந்தியா முழுவதும் இப்படி இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. ஏனெனில் இது, கடந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததை மெய்ப்பிப்பதாகவே உள்ளது- ஒவ்வொரு நாட்டிற்கும், அதற்கே உரிய பாதை ஒன்று உண்டு; அது போலவே ஒவ்வொரு நாட்டிற்கும் உயிர்நாடியான லட்சியமும் ஒன்று உள்ளது; இந்திய மனத்தின் வளர்ச்சி மதத்தைப் பொறுத்தே அமைகிறது. பிற நாடுகளில் மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்று; உண்மையைச் சொல்வதானால், அது மிகச் சாதாரண அம்சமே. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மதம். ஆங்கில சர்ச் , ஆளும் வர்க்கத்தினரின் உடைமை. எனவே மக்கள் தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தங்களுடைய சர்ச் என்று கருதி அதை ஆதரிக்கிறார்கள். கனவான்களும் சீமாட்டிகளும் சர்சைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். பெரிய மனிதத்தனத்திற்கு அது அடையாளம். இவ்வாறுதான் இதர நாடுகளிலும் அரசியல், அறிவுத் தேடல்கள், போர்க்கலை, வாணிபம் என்று ஏதாவது ஒன்று மகத்தான தேசிய ஆற்றலாகத் திகழ்கிறது. அதுவே அந்த நாட்டின் இதயமாகத் துடிக்கிறது. இரண்டாம்பட்ச மான எத்தனையோ அலங்காரங்களுள் மதம் என்பதும் ஒன்று, அவ்வளவுதான். இங்கே இந்தியாவிலோ நாட்டின் இதயமே மதத்தால்தான் உருவாகியுள்ளது. இதுவே முதுகெலும்பு,இதுவே அடிப்படை, இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் நமது தேசிய வாழ்வாகிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரம், ஏன், அறிவுகூட இரண்டாம் பட்சமே ; மதம் ஒன்றே முக்கியமானதாக இங்குக் கருதப்படுகிறது. நமது நாட்டுப் பாமர மக்கள் எதுவும் தெரியாதவர்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஒருமுறையல்ல, நூறுமுறை கேட்டிருக்கிறேன். அது உண்மைதான். கொழும்புவில் வந்து இறங்கியது முதல் அதையே நான் காண்கிறேன் .ஐரோப்பாவில் நடை பெறுகின்ற அரசியல் கிளர்ச்சிகள் பற்றியோ மாற்றங்கள் பற்றியோ அல்லது, மந்திரிசபைகளின் வீழ்ச்சி பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை ; சோஷலிசம் , அனார்க்கிசம் என் பவைப்பற்றியோ ஐரோப்பாவின் பிற அரசியல் மாற்றங்கள் பற்றியோ அவர்களுள் ஒருவர்கூட கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் சர்வசமயப் பேரவைக்கு இந்திய சன்னியாசி ஒருவர் அனுப்பப்பட்டது பற்றியும் அவர் அங்கு ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றார் என்பது பற்றியும் இலங்கையில் உள்ள ஆண், பெண், சிறுவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது அப்படியானால் மக்கள் எதுவும் தெரியாதவர்களா, இல்லை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களா? இரண்டும் இல்லை. அவர்களின் பண்புடன் எது ஒத்துப் போகுமோ, எது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இருக்குமோ அதைப்பற்றி அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசியலும் பிறவும் வாழ்க்கைத் தேவைகளாக இந்தியாவில் ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய வாழ்க்கை வாழ்ந்ததும் வளம் பெற்றதும் மதம், ஆன்மீகம் என்ற அடிப்படைமீது மட்டுமே; இனியும் அவ்வாறே அது வாழும், வளம் பெறும் உலக நாடுகளின் முன் இரண்டு பிராச்சினைகள் உள்ளன. இவற்றிற்குத் தீர்வு காண இந்தியா ஒருபுறமும், பிற நாடுகள் மறுபுறமுமாக நின்று முயற்சியில் ஈடுபடுகின்றன. பிரச்சினை இதுதான் -யார் வாழ வேண்டும்? ஒரு நாட்டை வாழவைப்பதும் பிற நாடுகளை அழிய வைப்பதும் எது? வாழ்க்கைப் போரில் வெற்றி பெற வேண்டுவது எது- அன்பா, பகையா? போகமா, துறவா ? ஜடமா உணர்வா? வரலாறு காணாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் என்ன எண்ணினார்களோ அவ்வாறே நாமும் சிந்திக்கிறோம். எந்தப் பரம்பரையும் தலைநீட்ட முடியாத அந்தத் தொலைநாளில், மேன்மை மிக்கவர்களாகிய நமது முன்னோர்கள் இந்தப் பிரச்சினையில் தங்கள் பக்கத்தை எடுத்துக்கொண்டு, உலகிற்கு சவால் விட்டுள்ளனர் நமது தீர்வு துறவு, விட்டுவிடுதல், அச்சமின்மை, அன்பு. இவையே வாழத் தக்கவை. புலனின்பங்களை விடுவது ஒரு நாட்டை வாழச் செய்யும். இதற்கு வரலாறே சான்று ஏறக்குறைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன. சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன. ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் சூழ்நிலை மாற்றங்கள் என்று எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத் தாங்கியுள்ளது; இருந்தும் பிழைத்திருக்கிறது. ஏன்? ஏனெனில் அது துறவு என்ற பக்கத்தை எடுத்துள்ளது. துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ? ஆனால் ஐரோப்பியநாடுகளோ பிரச்சினைக்கு மறுபக்கத் தீர்வை எடுத்துள்ளன - நல்ல வழியோ, தீய வழியோ ஒருவன் எவ்வளவு அதிகம் பொருள் சேர்க்கலாம், எவ்வளவு அதிகமாக அதிகாரம் இருக்க வேண்டும் போட்டி -இதுவே ஐரோப்பியச் சட்டம் ஆனால் நமதுதாகும், போட்டியின் ஆற்றல்களைத் தடுப்பதாகும், அதன் கொடுமைகளைக் குறைப்பதாகும், புதிரான இந்த வாழ்க்கைப் பாதையில் மனிதனின் பயணத்தை மென்மையாக்குவதாகும். இந்த வேளையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. சொற்பொழிவு காதில் விழவில்லை. எனவே பின்வருமாறு கூறி முடிந்தார் சுவாமிஜி. நண்பர்களே! உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணி விடாதீர்கள். மாறாக , உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்பதியையே அளிக்கிறது. அளவு கடந்த உற்சாகமே நமக்குத் தேவை.ஆனால் இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தீ அணையாமல் இருக்கட்டும். இந்தியாவில் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை. இத்தகைய உற்சாகம் வேண்டும். இனியும் இந்தச் சொற்பொழிவைத் தொடர முடிகிறது. ஆர்வ மிக்க உங்கள் கனிவான வரவேற்ப்புக்கு நன்றி. அமைதியும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்வோம். நண்பர்களே, இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கேட்கக்கூடிய வகையில் பேச முடியாது. எனவே இன்றைக்கு என்னைப் பார்த்தவரையில் திருப்தியடையுங்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவேன். உற்சாகம் மிக்க உங்கள் வரவேற்புக்கு நன்றி.

Copyright © 2017 by Swami Vidyananda . All rights reserved.